நண்பர்களே,
வணக்கம்.சில முயற்சிகளை தடபுடலாய்த் திட்டமிட்டு ; விடிய விடிய வேலை செய்தும் - அவை ஜவ்வு மிட்டாய்களாய் இழுப்பதுண்டு ! ஒரு சிலவோ அப்டிக்கா திட்டமிடப்படும் வேகத்துக்கே, இப்டிக்கா ரெடி ஆகிடுவதுண்டு ! நம்ம 'தல' பெரும்பாலும் எந்த ரகத்தினைச் சார்ந்திருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டியிராதென்பேன் !
இதோ நாலே நாட்களுக்கு முன்பாய் உதித்த ஞானோதோயம் இன்றைக்கு டப்பிகளுக்குள் 'ஜிலோ'வென்று குந்தியபடியே உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன ! So பண்டிகை rush ஓரிரு தினங்களது தாமதங்களை ஏற்படுத்தினாலுமே, துளிச் சந்தேகங்களுமின்றி தீபாவளிக் கொண்டாட்டங்களில் உங்களோடு டெக்சும், ராபினும் இணைந்து கொள்வது உறுதி ! "ஆட்றா ராமா" என்றபடிக்கே நான் நடையைக் கட்டி விட்டாலும், பிரின்டிங் & பைண்டிங் & டெஸ்பாட்ச்சில் நம்மாட்கள் "தாண்ட்றா ராமாவைக்' கனகச்சித்தமாய் செய்து முடித்திருப்பது இந்த திடீர் ஸ்பெஷலின் ரியல் ஹைலைட் ! எங்கேனும் ஒற்றைப் புள்ளியில் சறுக்கியிருந்தாலும் சிரிப்பாய் போயிருக்கும் இந்த சிறப்பு அறிவிப்பு ! Anyways, all's well that ends well ! அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள் all !
இன்னமும் முன்பதிவு செய்திருக்காத நண்பர்கள் இப்போதே ஆர்டர் செய்திட்டால் இன்னமுமே அவகாசம் உள்ளது - பண்டிகையினை 'தல' ரகத்து வாண வேடிக்கைகளோடு கொண்டாடிட ! Give it a shot folks ?
Maybe இந்த ஸ்பெஷல் இதழ்களை காசு செலவிடாமலே இல்லம் தேடி வரச் செய்ய ஆர்வமிருப்பின் - இதோ அதற்குமே ஒரு ரூட் ! போனெல்லி எடிட்டரின் அறை ! உள்ளாற டெக்ஸ் போயிருக்கார் ! வெளியே நம்ம ஸாகோர் அண்ணாத்தே ; ஜூலியா அக்கா மற்றும் டைலன் டாக் சித்தப்பு வெயிட்டிங் ! இந்த situation க்குப் பொருத்தமாய் ஒரு கேப்ஷன் போட்டுத் தாக்குங்களேன் ? தேர்வாகும் TOP 3 get the Diwali specials!
Bye all...see you around !
Me first
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete👌👌👌👌🔥🔥🔥🔥
ReplyDeleteவணக்கம் நண்பர்களே..
ReplyDeleteHi..
ReplyDeleteதீபாவளி சரவெடி ஸ்பெஷலுக்குப் பணம் கட்டியாச்சுங்க. ஆனால் முன்பதிவு எண் வரவில்லைங்க சார் ?
ReplyDeleteதீபாவளி சரவெடி ஸ்பெஷல் 2ன் படப்பெட்டி கிளம்பிடுச்சுங்கோ !!! ஹை...ஜாலி..ஜாலி.
ReplyDeleteசூப்பர் நியூஸ் !
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete10குள்ள
ReplyDeleteஸாகோர்: (மனதிற்குள்) இந்த டெக்ஸு நம்ம கூட சேர்ந்து சாகஸம் பண்ண விருப்பமில்லனு சொல்வாரோ?
ReplyDeleteஜூலியா: (மனதிற்குள்) தமிழ் வாசகர்களிடம் நமக்கு வருஷத்துக்கு 1 சீட்டாவது வேணும்னு அண்ணன் டெக்ஸிடம் நாம சொன்னத, எடிட்டர்ட்டயும் சொல்வாரா?
டைலன் : (மனதிற்குள்) இந்த டெக்ஸூக்கு எப்பவுமே எல்லாத்திலயுமே முந்திக்கிறது வழக்கமாப் போச்சு! எப்ப வெளிய வருவாரோ?
மாலை நேரத்து வணக்கம்
ReplyDelete// இன்றைக்கு டப்பிகளுக்குள் 'ஜிலோ'வென்று குந்தியபடியே உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன ! //
ReplyDeleteஇன்றைய சிறப்பான செய்தி...
வணக்கம் ஆசானே
ReplyDeleteThanks to the team for executing it so fast sir ! Wish you all a very Happy Deepavali !
ReplyDelete+1
Deleteசித்தப்பு : சிவகாசியில் என்னோட புக்ஸையும், ஜூலியாவோட புக்ஸையும் ரேக்கில் வெக்க இடம் பத்தலேன்னு பிராது வந்துருக்குன்னு சொல்றாங்களே இப்ப என்ன பண்றது...
ReplyDeleteஜூலியா :மகளிருக்கு நிறைய இட ஒதுக்கீடு தர்றேன்னு சொல்றானுங்க,ஆனா நமக்கு ரேக்கில்தான் நிறைய இட ஒதுக்கீடு கொடுத்துக்கானுங்களாம் இந்த சிவகாசி பய புள்ளைக,இப்ப போனெல்லி மாமாகிட்ட என்ன சொல்லி சமாளிக்க ?!
ஸாகோர் :டெக்ஸ் அண்ணாத்த வெளிய வர்றதுக்குள்ள சிவகாசியில் இருக்கற அண்ணாத்தவோட தீபாவளி மலர் எல்லாம் காலி ஆயிடும் போலயே...!!!
சித்தப்பு : டெக்ஸ் அண்ணத்த உள்ள போய் 1 மணி நேரம் ஆச்சி,கதையில தான் இந்த ஆளுக்கு அதிர்ஷ்ட தேவதை அருள் பாலிக்கிறான்னு பார்த்தா இங்கேயுமா,ஹூம் நம்ம பாடுதான் திண்டாட்டம்,2023 லாவது நமக்கு 1 சீட்டு கிடைக்குமா,இல்ல வழக்கம் போல தலையில துண்டுதானா...!!!
ReplyDeleteஜூலியா : நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சிவகாசியில சொல்லிடாங்க,ஆனா எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு போனெல்லி மாமாகிட்டதான் கேட்கனும்...
ஸாகோர் : ஜூலியா கண்ணு,டைலன் தம்பி அடுத்த வருஷம் டெக்ஸ் அண்ணாத்தவோட 75 வது வருஷமாம்,மறந்து கூட போனெல்லி மாமா உங்களை சிவகாசி பக்கம் அனுப்ப மாட்டாரு...போய் ஒரமா விளையாடுங்க போங்க...!!!
ஆஹா பெட்டி கிளம்பிடுச்சு.
ReplyDeleteரொம்ப சந்தோஷம்.
*** கேப்ஷன் போட்டி ****
ReplyDelete(விழுந்தாலும் நண்பர்களுக்கு, விழாவிட்டாலும் நண்பர்களுக்கு!)
கோடரி மாயாத்மாவின் குமுறலை அறிந்துகொள்ள "இங்கே கிளிக்குங்க பாஸு!"
ரொம்ப நாளுக்கு பிறகு சிரிக்கும் படி ஒரு நல்ல கேப்சன் உங்களிடம் இருந்து விஜய். பாராட்டுக்கள்
Deleteபூனையார் back to form
Delete🤣🤣🤣🤣🤣
Deleteஅருமை சகோ
சூப்பர் விஜய் ! பலூனெல்லாம் போட்டு வசனம் எழுதிய உங்களின் உழைப்புக்காகவே ஒரு வந்தனம் !
Deleteபாராட்டுக்கு நன்றி நண்பர்களே! 🙏
Deleteபூனக்குட்டிக்கு ஆனாலும் அலும்பு ஜாஸ்தி .. 😆😆
Deleteசெம செயலரே
Delete@EV அண்ணா
Deleteடைலன் டாக்க சொல்றதா நினைச்சி உங்களை பத்தி சொல்லிட்டீங்களே செயலர் அண்ணா😁😆😅😅😂
This comment has been removed by the author.
ReplyDeleteமூவரும் (mindvoice): அவருக்கு மட்டும் சீட் கொடுத்துவிட்டு, நமக்கெல்லாம் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறேன்னு சொல்லிடுவாரோன்னு கொஞ்சம் சந்தேகமாவேயிருக்கு
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஜூலியா: சும்மாவே இடம் கிடைக்காது, இதுல Tex75 வேற, எனக்கில்லை!! எனக்கில்லை!! 2023 எனக்கில்லை!!! பேசாம VRS வாங்கிட வேண்டியதுதான்.
ReplyDeleteடிலான்: குறளிவித்தை காட்ற கதை மட்டும்தான் என்னான்ட இருக்கு, அதையும் மெஃபிஸ்டோன்னு ஒரு பென்சில் மீசையன வச்சு என் பொழப்புள கைவைக்காம இருந்தா சரி
ஸாகோர்: தமிழ்ல வந்தாச்சு "சோழர் பரம்பரையில் ஒரு M.L.A" நிம்மதியா தூங்குடா கோடாறிபுள்ளை.
:)))))) ஹா ஹா!! அட்டகாசம் அட்டகாசம் @Giridharasudarsan
DeleteSuper giri sago samma 😁😁
DeleteNice!
Delete😂😂😂
Deleteஜாகோர் : (யோசனையோடு) ஒரு வேள நாம டமீலுல எண்டர் ஆகி பெரபலமா ஆனாதால எடிட்டர்ட்ர்ட்ட ஏதாவது போட்டுக் கொடுக்கப் போயிருப்பானோ இந்த டெக்ஸ் பய ..??!!!! 😇😇
ReplyDeleteஜூலியா : (மகிழ்ச்சியான சிந்தனை லயத்துடன்) டமீலுல பெயிலான மடஸ்கா க்கு பதிலா என் கதைய போடச் சொல்லி சிங்கமுத்து வாத்தியார் டெலகிராம் அடிச்சிருப்பாரு அதான் எடிட்டர் நம்பள கூப்பிட்டிருக்காரு ...😍😍
டைலன் டாக் : (அதி தீவிர சிந்தனையோடு) இண்டியாவுல நானு பெரபலம் ஆகாத ஆளுன்னு ப.கு.தலைவர் ரெகமண்ட் செய்ததால லாங் லீவு கேட்டிருந்தேன் கொடுப்பாரா மாட்டாரான்னே தெரியலையே 😒😒😒
ஹா ஹா! செம!!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சம்பத் சகோ!
// ஒரு வேள நாம டமீலுல எண்டர் ஆகி பெரபலமா ஆனாதால எடிட்டர்ட்ர்ட்ட ஏதாவது போட்டுக் கொடுக்கப் போயிருப்பானோ இந்த டெக்ஸ் பய ..??!!!! //
Delete:-) :-)
மிக்க மகிழ்வும் அன்பும் பூனக்குட்டி .. 😍😍
Deleteஇன்னொன்னும்
Delete👇👇👇
ஜாகோர் : (யோசனையோடு) ஒரு வேள நாம டமீலுல எண்டர் ஆகி பெரபலமா ஆனாதால எடிட்டர்ட்ர்ட்ட ஏதாவது போட்டுக் கொடுக்கப் போயிருப்பானோ இந்த டெக்ஸ் பய ..??!!!! 😇😇
ஜூலியா : (மகிழ்ச்சியான சிந்தனை லயத்துடன்) டமீலுல பெயிலான மடஸ்கா க்கு பதிலா என் கதைய போடச் சொல்லி சிங்கமுத்து வாத்தியார் டெலகிராம் அடிச்சிருப்பாரு அதான் எடிட்டர் நம்பள கூப்பிட்டிருக்காரு ...😍😍 ( ஆமா இந்த ரெண்டு வெட்டிபயலுங்களுமே என்ன பண்றானுங்க இங்க?? 😎😎)
டைலன் டாக் : (அதி தீவிர சிந்தனையோடு) இண்டியாவுல நானு பெரபலம் ஆகாத ஆளுன்னு ப.கு.தலைவர் ரெகமண்ட் செய்ததால லாங் லீவு கேட்டிருந்தேன் கொடுப்பாரா மாட்டாரான்னே தெரியலையே 😒😒😒
( ஆமா இந்த ரெண்டு வெட்டிபயலுங்களுமே என்ன பண்றானுங்க இங்க?? 😎😎)
DeleteGood!
இப்படி மாற்றினால் எப்படி இருக்கும் சம்பத் :-)
( ஆமா வெட்டியான்களுக்கு வருஷம் முழுவதும் வேலை கொடுக்கிற இந்த ரெண்டு பயல்களும் என்ன பண்றானுங்க இங்க?? 😎😎)
நாஜ் வெளியே இருக்கிறவங்களை சொன்னேன் சகோ .. டெக்ஸப்பத்தி ஏன் பேசனும்னேன் .. வெளியே உள்ள மூணுபேர்தானே இங்கே டார்கெட்
Deleteஆமாம். கரெக்ட்.
Delete😂😂
DeleteThank you for you and your team members hard-working!
ReplyDeleteZagor : ஹ்ம்ம்..
ReplyDeleteடீ ஆத்தாத கடையில்ல!
ஈ ஓட்டாத நாளில்லை!
என் கோடாரி பாக்காத ரத்தமில்லை!
ஹ்ம்ம்..
ஜுலியா :
இரும்பு அடிக்கிற எடத்துல ஈ -க்கு கூட சீட்டு கொடுத்திடுவாங்க போல!
பாலுக்கு காவல் பூன! வேலிக்கு காவல் ஓணா! ஹ்ம்..
டைலன் டாக் :
காத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போகுதடி., ஏ.. என் அம்பே ஜூலியா ...
நல்லதுக்கு காலமில்லை! நல்ல நல்ல கதைக்கும் இங்கே ரசிகர் இல்ல!
தமிழ் தெரியாது போடா !
41st
ReplyDelete42....
ReplyDeleteகேப்சனா எஸ்கேப்...!!!
அப்ப உங்கள நடுவரா போடுங்க என விஜயன் சார் கிட்ட போட்டு கொடுத்திட வேண்டியதுதான் :-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletezagor
ReplyDeleteகுண்டு தீராத துப்பாக்கின்னு ஓட்டுறாங்கன்னு பிராது கொடுக்க உள்ள ஒருத்தர் போயிருக்காரு, அவருக்கே அந்த நிலைமைன்னா, கயிறு மட்டுமே கட்டியிருக்கும் குண்டு கோடாலி அடிபட்டு கயிறு அறுந்துடாதான்னு நம்மளையும் ஓட்டுவாங்களே. எடிட்டர் கிட்ட இப்பவே சொல்லிடனும். கயிருக்கு பதிலா கம்பி கட்ட சொல்லணும்.
dylan
நம்மளும் தான் 400 சொச்சம் கதை வச்சிருக்கோம்.. ஆனா தமிழ்ல இதெல்லாம் போடாம ஒப்புக்கு சப்பானியா இருக்க காரணம் 18+ காரணம் தான். நம்ம கதையில கொஞ்சம் கவர்ச்சிய குறைக்க சொல்லி விண்ணப்பம் போடலாமா எடிகிட்ட.
ஜூலியா
ஒருத்தனுக்கு childhood trauma , என்னையே குறுகுறுன்னு பாத்துகிட்டு இருக்கிறவனோ பேய் பிசாசுன்னு நம்புற anxiety stress உள்ள ஒரு ஆளு, நம்ம கிளினிக்குக்கு கூட்டிகிட்டு போய் கவுன்சிலிங் கொடுக்கலாம் தான். ஆனா அன்பே ஆருயிரே படத்துல வர ஊர்வசி ரேஞ்சுக்கு நம்மள சிதைச்சிடுவாங்களோ.
// நம்மளையும் ஓட்டுவாங்களே. எடிட்டர் கிட்ட இப்பவே சொல்லிடனும். கயிருக்கு பதிலா கம்பி கட்ட சொல்லணும். //
Deleteசிரிப்பு.
thanks brother
DeleteSurya
DeleteArumai sago.. 😆😆
ஆசம்
Delete///ஒருத்தனுக்கு childhood trauma , என்னையே குறுகுறுன்னு பாத்துகிட்டு இருக்கிறவனோ பேய் பிசாசுன்னு நம்புற anxiety stress உள்ள ஒரு ஆளு, நம்ம கிளினிக்குக்கு கூட்டிகிட்டு போய் கவுன்சிலிங் கொடுக்கலாம் தான். ஆனா அன்பே ஆருயிரே படத்துல வர ஊர்வசி ரேஞ்சுக்கு நம்மள சிதைச்சிடுவாங்களோ///
Deleteஹா ஹா! அருமை!! :))))
Thanks sheriff
DeleteThanks erode vijay sir
DeleteEdi Sir..
ReplyDeleteMe present..
இம்முறை ஜனவரி 2023 சென்னை புத்தக விழா " சர்வதேச புத்தக கண்காட்சி " விழாவாக மாற வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
ReplyDeleteபிரபல பதிப்பாளர் ஆழி. செந்தில்நாதன் முகநூல் பதிவு இதைத் தெளிவுபடுத்துகிறது.
இது உறுதியானால் எடிட்டர் சார் CBF -ல் ஸ்டால் கிடைப்பதை முன்கூட்டியே உறுதி செய்வார் என நம்புவோம்..
https://m.facebook.com/groups/2563733947186727/permalink/3716096835283760/
Deleteநல்ல செய்தியை ஆசிரியர் விரைவில் சொல்லுவார் என ஆவலுடன் காத்திருப்போம் செல்வம் அபிராமி சார்.
Deleteநல்ல செய்திதான்! ஆனா மங்கி பாக்ஸ், மலைப்பாம்பு பாக்ஸ்'னு நம்ம நண்பர்கள் எடிட்டருக்கு ஈமெயில் அனுப்பி பயமுறுத்தாம இருக்கணுமே?!! ;)
Deleteஜாகோர்
ReplyDeleteஇந்த தீபாவளிக்கு ஒரு நல்ல குண்டு தீராத துப்பாக்கியை எடிட்டர் கிட்ட கேட்டுடனும். எத்தனை நாள் தான் கோடாலியை வச்சே சமாளிக்கிறது.
ஜூலியா
இந்த மாசம் போனஸ் எவ்வளவு கொடுப்பாங்க.
டிலான்
இந்த ஜாகோர் பயலுக்கும் ஜூலியாவுக்கும் நடுவுல ஒரு உருவம் உக்காந்துகிட்டு இருக்கிறது எனக்கு மட்டும் தான் தெரியுதா?
///டிலான்
Deleteஇந்த ஜாகோர் பயலுக்கும் ஜூலியாவுக்கும் நடுவுல ஒரு உருவம் உக்காந்துகிட்டு இருக்கிறது எனக்கு மட்டும் தான் தெரியுதா?///
ஹாஹா! செம!! :)))
Thanks brother
DeleteSuper..
Deleteசூப்பர் சார்.....தீபாவளி அன்னைக்கு ஏதாவது ஸ்பெசல் மலர் இல்லையா....
ReplyDeleteஉன்னோட பட்சி கிட்ட கேளுலே பொன்ராசு :-)
Deleteஒரு சூப்பரான பதிவு ஸ்பெஷல் நீங்க கேட்ட மாதிரி போடுவாரு புல்லட் ஸ்டீல்ஸ் 😆😆
Deleteதீபாவளி மலருக்கு தலைய மட்டும் அனுப்புறாரேன்னு நாலு கேள்விய நறுக்கா கேக்க காத்துள்ள மூனு பேரும் ...ரெண்டூரு எடிட்டரும்...காத்துள்ள ஒரு தீபாவளி மலரும்
ReplyDeleteஸாகோர்: எடிட்டர் அறைக்குள்ளே போனவருடைய படம், சுவற்றிலே இவ்வளவு பெருசா ஒட்டியிருக்காங்க..ஒரு வேளை இவர் தான் முதலாளியாயிருக்கலாம்...இவர்கிட்ட சான்ஸ் கேட்க வேண்டியதுதான்....
ReplyDeleteடைலன்: டெக்சுகிட்ட சொல்லி, மபிஸ்டோவுக்கு பதிலாக சான்ஸ் வாங்கிட வேண்டியதுதான்
ஜூலியா: இப்ப பாத்து, கார்ஸன் இல்லாம போயிட்டாரு...இருந்திருந்தா, என்னை பாத்தவுடனே ரெகமண்ட் பண்ணியிருப்பாரு...
😆😆😆 செம்ம சகோ
Delete// இப்ப பாத்து, கார்ஸன் இல்லாம போயிட்டாரு...இருந்திருந்தா, என்னை பாத்தவுடனே ரெகமண்ட் பண்ணியிருப்பாரு...//
Deleteகுட்
சிறப்பு...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete😂😂😂 தெறிக்க விடறீங்க சகோ
Deleteஆனா போனெல்லி எடிட்டர் உள்ள இருக்கார்ன்னு இங்கன இருக்கிற வாத்தியார் சொல்லிட்டாரே ..!!!
Deleteஸாகோர்: இந்த டெக்ஸ் மட்டும் , சீனியர்னு சொல்லி, தீபாவளிக்கு டுப்பாக்கியும், ரோல் கேப்பும் வாங்கிகிறாரு...நாம கேட்டா காட்ல பட்டாசு வெடிக்க கூடாதுங்கறாங்க...
ReplyDeleteடைலன்: தீபாவளிக்கு நாம ஒரு கிலோ முறுக்கு கேட்க வேண்டியது தான்...அப்ப தான், வட்ட வட்டமா இருக்கறதை காட்டி பிளாஸ் பேக் கதை சொல்ல முடியும்...
ஜூலியா: தீபாவளிக்கு பாவாடை, தாவணி கேட்க வேண்டியதுதான்...அப்பவாவது, அடுத்த வருஷ அட்டவணையில எடம் கெடைக்குமா பாப்போம்...
சிரிப்பு
Delete😂😂😂
Deleteசெம! :))))
Deleteஸாகோர்: இந்த காந்தாரா படத்தை அமெரிக்காவில் டப் செஞ்சா, நான் தான் ஹீரோ ரோல் பண்ணுவேன்..அந்த ஹீரோ கொஞ்ச நேரம்தான் துப்பாக்கி வெச்சிருப்பாரு...மத்த நேரமெல்லாம் கோடாரி தான்...டெக்சுக்கு வேணா, க்ளைமாக்ஸ்ல துப்பாக்கி வச்சுகிட்டு இருக்கும் வில்லன் வேஷம் கொடுத்திடலாம்....
ReplyDeleteடைலன்: இல்ல, டெக்சுக்கு காட்டிலாக்கா அதிகாரி ரோல் கொடுத்திடலாம்...
ஜூலியா: எனக்கு ஹீரோயின் வேஷமும், மாடஸ்டிக்கு ஹீரோவோட அம்மா வேசமும் கொடுக்கலாம்...
மூவரும்: நம்ம எடிட்டரையே டைரக்ட் பண்ண சொல்லிடுவோம்..படம் பட்டாசா இருக்குமுல்ல..
அப்படீன்னா ஜூலியாவுக்கு அந்த கண்காணிப்பு கோபுர சீன் உண்டுதானுங்களே டாக்டர் சார்?!! ;)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸாகோர் : டைலன் சித்தப்பு.ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க. மஞ்ச சட்ட மாவீரன் உள்ளே போயிருக்காருல்ல .இப்போதைக்கி வர மாட்டாரு. "டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலா டைலாமோன்னு "பாடீட்டே வந்து உக்காருங்க.
ReplyDelete(அப்போது உள்ளேயிருந்து போனெல்லி எடிட்டர் தெறித்து வெளியே ஓடுகிறார்)
ஜூலியா : ஸாகோர் அண்ணாத்தே. ஏன் இப்படி எடிட்டர் தலை தெறிக்க ஓடுறாரு. என்ன நடக்குது.
டைலன் : ம்க்கும்.ஜூலியாக்கா. கேட்டீங்களே ஒரு கேள்வி. அவருக்கு முன்னாடியே உள்ள போன சிவகாசி எடிட்டர் 2023 அட்டவணைய பைனலைஸ் பண்ற பஞ்சாயத்த
சொல்லிருக்காரு. அதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடுறாரு.( காத்திருந்து காத்திருந்து ஸ்லாட்டுகள் போனதடி)...
டைலன்: தல'ய்க்கு அடுத்த வருட அட்டவணையில், 12 ஸ்லாட்டாவது கிடைத்துவிடும். நாமும் ஒரு நல்ல Ghost அல்லது Devilஐ பிடித்து, அதனுடன் சாகசம் செய்து ஒரு இடமாவது வாங்கிவிடவேண்டும்.
ReplyDeleteஜூலியா:எனது டைரியிலுள்ள இந்த சாகசத்தை காட்டி ஒரு ஸ்லாட்டாவது வாங்கிவிடவேண்டும். தமிழில்
பேசி வருடங்கள் ஆகின்றன.
ஜாகோர்: எடிட்டர்ட்ட கேட்டு "கொண்டாடிடும் கவ்பாய்ஸ்; திண்டாடிடும் டிடெக்ட்டிவ்ஸ்"னு ஒரு சிறப்பிதழை வெளியிட சொல்லணும். ஹி! ஹி!
ஐடியா நல்லாருக்கே. 🤔
Delete//கொண்டாடிடும் கவ்பாய்ஸ்; திண்டாடிடும் டிடெக்ட்டிவ்ஸ்"னு ஒரு சிறப்பிதழை வெளியிட சொல்லணும். ஹி! ஹி!//
Deleteசூப்பர ஜீ! சூப்பர் ஜீ! , சைனாலேந்து தமிழ் டப்பிங் படங்களுக்கு டைட்டில் வைக்கிறார் யாரேனும கண்டுபுடுச்சுட்டேன்
கிரி ஹிஹிஹி
Delete///"கொண்டாடிடும் கவ்பாய்ஸ்; திண்டாடிடும் டிடெக்ட்டிவ்ஸ்"னு ஒரு சிறப்பிதழை///
Deleteஹா ஹா ஹா! 'Crouching Tiger - Hidden Dragon' டைட்டில் ரேஞ்சுக்கு இருக்குங்க KS! :)))))
தற்போது வர இருக்கும் பாலைவனத்தில் பரலோகம் 1995 லயன் டாப் 10 ஸ்பெஷலில் வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் லயனில் படித்த முதல் இதழும் இதுதான் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கதை வெளியாகி 27 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் இந்தக்கதை பேனல் பை பேனல் ஆக எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போதெல்லாம் டெக்ஸ் கதை அரிதாகத்தான் வரும். ஆனால் பட்டாசாக இருக்கும். இங்கே யாரெல்லாம் இந்த பாலைவனத்தில் பரலோகம் படித்து இருக்கிறீர்கள் இன்னும் அந்த கதையை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். மலை சிங்கங்களுடன் டெக்ஸ் போராடும் காட்சி அட்டகாசமாக இருக்கும். இந்தக்கதை என்னை விட்டுப் போன போது நான் வருந்தாத நாளே இல்லை. மீண்டும் இந்தக் கதை கிடைத்த போது ஏதோ பொக்கிஷமே எனக்கு கிடைத்தது போல் இருக்கிறது
ReplyDeleteஎன்னிடம் லயன் டாப்-10 புத்தகம் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒருமுறை டெக்ஸ் மலைச் சிங்கங்களோடு மோதுவதை ரசித்துப் படித்தேன்!
Deleteஅது எனக்கு பழைய புத்தக கடையில் கிடைத்தது அரிய பொக்கிஷம் அப்படியே உதிர ரமாதிரி இருக்கு அப்படியே பாதுகாப்பா வைத்திருக்கிறேன் கலரில் பார்க்கணும்.
Deleteஸாகோர்: டெக்ஸ்....எங்கள் மூவரின் புகழ் பரவாமல் சதிசெய்து தடுத்துவிட்டாயல்லவா. நீ வெளியே வந்ததும் இன்றோடு உன் கதையை முடிக்கிறேன் பார். கர்..ர்....
ReplyDeleteஜூலியா: டெக்ஸ்....உடல் பலத்தில் வேண்டுமானால் நீ வல்லவனாக இருக்கலாம். ஆனால் மனவலிமையில் உன்னையும் விஞ்சியவள் நான். டைலன்,ஸாகோருக்கு முன்பாக எனது புத்திகூர்மையால் நானே உன் கதையை முடிக்கிறேன் பார்!
டைலன்: அய்யய்யோ.... ஒட்டுக்கேட்டதால்தான் உண்மை புரிந்தது! எங்கள் மூவரின் பிழைப்பை கெடுத்தவன் நீதான் என்று தவறாக எண்ணி உன்னை போட்டுத்தள்ள இவர்கள் இருவரையும் கூட்டு சேர்த்து வந்தால் எங்கள் மூவருக்கும் சமமான வாய்ப்பு தந்திருந்தால் அவர்களும் என்னைப்போல் புகழ் பெற்றிருப்பார்களே என்று எங்களுக்காக எடிட்டருடன் வாதாடிக் கொண்டு இருக்கிறாயே டெக்ஸ்! என்னை மன்னித்துவிடு. "அங்கே"தான் சிலர் உன்னை சரியாக புரிந்து கொள்ளாமல் பாயாசம் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நாங்கள் அதையும்விட பெரிய தவறை செய்துவிட இருந்தோமே. இப்போதுதான் தெரிகிறது டெக்ஸ். உன்னை ஏன் எல்லோரும் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என்று! மனிதர் உணர்ந்துகொள்ள நீ மனிதப்பிறவி அல்ல. அதையும்தாண்டிய தெய்வப்பிறவி...!தெய்வப்பிறவி...!தெய்வப்பிறவி....!!!
ஸாகோர்: வருது வருது விலகு விலகு...
ReplyDeleteஅடுத்த வருஷம் நானும் வருது...
ஒல்லி பெல்லி: அந்த வானத்த போல மனம் படைச்ச பொன்னவனே
பனித்துளியளவு பங்கு கொடு சின்னவனே...
டைலன் : ஒரு பொய்யாவது சொல் கண்ணா...
ஸ்லாட் மனசுலன்னாச்சும் சொல்லு தலைவா
:-)
Deleteபோனெல்லி எடிட்டர் அறையில் இன்னிசை:
ReplyDeleteகும்... சத்... தட்... ணங்....டம்... டமால்...!
ஸாகோர், ஜூலியா & டைலன் டாக் - மனக் கு(ரல்/முறல்):
படுபாவி, இப்பவே ஆறு ஸ்லாட்டு வாங்கிட்டான்.. அந்த டமாலுக்கு ஒரு மேக்சி டெக்ஸ் உறுதி!
லயன் எடிட்டர் அறைக்கு வெளியே ராபின்:
அந்த பெரிய "டம்" அவனோட திடீர் தீபாவளி மலருக்காக இருக்கும், கூடவே ஒரு சின்ன "டுப்" - எனக்கு!
ha ha :-)
Deleteடைலன் : மேகி காரிசனுக்கு (நந்தினி)ஸ்லாட் அரண்மனையில் இடம் கொடுத்துவிட்டார் பழுவேட்டரையர்...
ReplyDeleteஒல்லி பெல்லி : ஆண்டவனே வந்தியத்தேவனும் (சின்ன எடிட்டர்) திரும்பி பார்க்கலையே...
ஸாகோர் (மதுராந்தகன்): வாங்கப்பா கடம்பூர்ல (கள்ளஓட்டு) போயாச்சும் சதி திட்டம் தீட்டுவோம்...
(உள்ளேயிருந்து டெக்ஸ் - ஆதித்த கரிகாலன்)எல்லாம் அவளை மறைப்பதற்குத் தான்.(மாசத்துக்கு ஒண்ணு)
போனெல்லி எடிட்டர் குரல் ( அதிருப்தி பிரம்மராயர்) :
எங்கப்பா என் ஆழ்வார்கடியான் (மார்டின்)...
ஒல்லி பெல்லி - மணிமேகலை
Deleteஸாகோர் : புதுசா தச்சதா...
ReplyDeleteஜூலியா : நல்லா தெரியுதே...
டைலன் : அட ஏம்ப்பா ! ஏற்கனவே ஸ்லாட் இல்லாம அங்கங்க கிழிஞ்சி போனத ஊசி நூல் வச்சி வைச்சிருக்கேன்.
ஸாகோர் & ஜூலியா : (கோரஸாக) அதத்தான் கேட்டோம் புதுசா தைச்சதான்னு...
ஸாகோர் ; என்னம்மா தங்கச்சி உன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு ? ஜூலியா: இல்லண்ணே , நாம மூணு பேரும் ஒண்ணாத் தான் வந்தோம். ஆனா முதல்ல நம்ம எடிட்டரை பேட்டி காணும் வாய்ப்பு அவருக்கே கிடைத்தது.
ReplyDeleteஸாகோர் : ஆமாம்மா.அவரோட புகழ் அப்படி. இரவுக் கழுகுன்னா சும்மா அதிரும்ல.நானே அவருக்குக் கீழே தான் இருக்கேன். சரிம்மா இரவுக் கழுகார் உள்ளே போகும் போது நீயும் அவரும் குசுகுசுனு ஏதோ பேசினீங்களே, என்ன விஷயம் ?
ஜூலியா ; தமிழ்ல என் பொழப்பு ரொம்ப அடிமட்டத்தில கிடக்கு. சற்று நேரத்தில தமிழ் லயன் எடிட்டர் வேற வர்றாராம். அடுத்து டெக்ஸ் கதை கொள்முதல் பண்ணறப்ப ஜூலியா வாங்கினாத் தான் டெக்ஸ் கதை கிடைக்கும்னு டிமாண்ட் பண்ணச் சொன்னேன். என்ன செய்யக் காத்திருக்கின்றாரோ ?
ஸாகோர் ; ஏம்மா இது உனக்கே நல்லாருக்கா? உயர உயரப் பறக்கிற இரவுக் கழுகார் கூட போட்டி போட நினைக்கிற ?! தப்பும்மா தப்பு. அவராவது சொந்தக் காசில் சூனியம் வச்சுக்குவாரா என்ன ? போம்மா அங்கிட்டு.
டைலன் : மாப்பு வைச்சிட்டாய்யா ஆப்பு...(ஸ்லாட் நஹி)
ReplyDeleteஸாகோர் : இந்த கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன் (ஒரு ஸ்லாட்).நீயும் வரக்கூடாது.வந்தே!!!
ஜீலியா : ஏதேய்.
உள்ளே டெக்ஸ்- என்னம்மா அங்க சத்தம் .
நம்ம எடிட்டர்: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரு. இவரு ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கெப்பா...(பூஊஊஊஹூஊஊ)
போனெல்லி எடி: ஹலோ பிரபா ஓயின்ஸ் ஓனரா - எப்பங்க கடை திறப்பீங்க ( டெக்ஸ் மாசம் ஒண்ணு போக குண்டூஸ்)
ReplyDeleteகோடரி மாயாத்மா : 'மாதம் ஒரு ஸாகோர் வேணும்'னு கேட்டு தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் போராட்டத்துல குதிச்சுட்டதா போனெல்லி பாஸ்ட்ட ஒரு புருடாவை அள்ளிவிடப்போறேன். அதிகாரியின் நம்பர்-1 அந்தஸ்த்துக்கு ஆழமா ஒரு குழிதோண்டிட்டேன்னா அப்புறம் ஐயாதானே இத்தாலியின் ஆல்-டைம் சூப்பர் ஸ்டார்?!!
ஜூலியா : பூ ஒன்று புயலாகிடும் நேரம் வந்திடுச்சு மக்களே! எனக்கும் அவ்வப்போது ஸ்லாட் கிடைக்கணும்னா இனி மாடஸ்டி அக்கா மாதிரியே நானும் ஆக்ஸன் அதகளத்துல இறங்கப்போறேன்னு போனெல்லி பாஸுகிட்ட கண்டீஸனா சொல்லிடப் போறேன். #$@*&%$@ ஒருவேளை அப்படியே ஸ்லாட் கிடைக்கலேன்னாலும், சில தொழிலதிபர்கள், டாக்டர்களின் சகவாசமாவது கிடைக்கும் பாருங்க?!
டைலன் : எனக்கு ஸ்லாட் கிடைக்கலேன்னாலும் பரவாயில்லை... அந்தப்பய டெக்ஸ் வெளியே வந்ததும் 'லிலித்தோட ஆவி உன்கிட்டே ஏதோ பேச ஆசைப்படுது வா'ன்னு நைஸா என்னோட ஆபீஸுக்குக் கூட்டிப்போய், வழக்கமா ஆவி ஸீனுக்குப் போடுற சாம்பிராணி புகைக்கு பதிலா விஷப்புகையைப் போட்டுடப்போறேன். அப்புறமென்ன.. அடுத்த சில நொடிகள்லயே அதிகாரியின் டெம்ப்ளேட் கதை ஒரு முடிவுக்கு வந்திடுமில்ல?!
ஒருவேளை அப்படியே விஷப்புகைக்கு சாகலேன்னாலும் நம்ம அஸிஸ்டண்ட் க்ரெளச்சோவை ஒரு பத்து நிமிசம் பேசவச்சா யாராயிருந்தாலும் ரத்தம் கக்கி சாகத்தானே வேணும்?!!
ஸாகோர் ; ஏம்மா ஜூலியா தமிழ்நாட்ல உன் பப்பு வேகல போல ?!
ReplyDeleteஜூலியா ; உம்ம பப்பு வெந்த திமிர்ல பேசுகிறீராக்கும். நான் அமெரிக்கால பேமசு. ஆப்பிரிக்கால பேமசு. இத்தாலில பேமசு. இங்கிலாந்துல பேமசு. இந்தக் குட்டியூண்டு தமிழ்நாடு தான் பெரிசாக்கும்.
ஸாகோர் ; என்னாது தமிழ்நாடு குட்டியூண்டா ? தமிழ் லயன் முத்து காமிக்ஸ் வாசகர்கள் உலகக் காமிக்ஸையே கரைச்சுக் குடிச்சவாங்களாக்கும்.நீ எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும் உம் பாச்சா பலிக்காது. பேசாம போம்மா அங்கிட்டு.
Nice!
Deleteஸாகோர் ; என்னம்மா , ஒரே சோகமாக இருக்க?
ReplyDeleteஜூலியா ; நான் இத்தாலில பேமசு. அமெரிக்காவுல பேமசு. ஆப்பிரிக்கால பேமசு. இங்கிலாந்துல பேமசு. இந்தத் துக்கிளியூண்டு தமிழ்நாடு எம்மாத்திரம் ?
ஸாகோர் ; என்னாது துக்கிளியூண்டு தமிழ்நாடா ? எம்மோ அவங்க உலகக் காமிக்ஸ்களையே கரைச்சுக் குடிச்சவங்க . நீ தலைகீழா நின்னாலும் உன் ஆட்டம் அங்கிட்டு செல்லாது. பேசாம ஓடிரு.!!!
டைலன் : (கடுப்புடன்) நான் கால் கடுக்க கால் மணி நேரத்துக்கு மேல நின்னுனுக்கிட்டுக்கேன், ஒரு வார்த்தைக்காவது இந்த ஜூலியாவும், சாகோர் பயலும் நம்மல compel பண்ணி உட்கார சொல்றாங்களா?
ReplyDeleteஇம்மா நேரமாச்சு மஞ்சள் சட்டை வெளிய வரக்காணோமே?
ஜூலியா : (மனக்குமுறல்) வர வர பெண்களுக்கு முன்னுரிமையே எதிலுமே தர மாற்றங்க? கௌபாய்ஸ் மட்டும்தான் அவ்ளோ ஒசத்தியா போய்ட்டாங்களா?
போனெல்லி சாப் கிட்ட சொல்லி நமக்கும் 2023 ல போனஸா கம்பேக் writeup தர சொல்லணும்.
சாகோர் : இத்தாலி மாதிரி, தமிழ் மொழி பெயர்ப்புலையும் 'தல' க்கு tough (கனவு)கொடுத்தாச்சு. அதே போல தீபாவளி மலர் 2022ல், இளம் Texum ப்ரெசிடெண்ட் லின்கனும் meet பண்ண மாதிரி நாமளும் future ல ஒபாமா கூட ஓட்ஸ் சாப்பிடுற மாதிரியோ, or டிரம்பு கூட கம்பு சுத்துற மாதிரியோ எழுத சொல்லி போனெல்லி கிட்ட வற்புறுத்தணும், மறுத்தா நம்ம கோடாரி வச்சு வித்தை காட்டணும்.
ம்ம்ம் அப்புறம், போனெல்லி ஆபீஸ்ல Tex போட்டோ மாதிரி நம்ம போட்டோவையும் பெருசா பிரேம் பண்ணி மாட்ட சொல்லணும்.
(Tex எடிட்டர் ரூமை விட்டு வெளியே வந்து, தன் தொப்பியை மாட்டி கொண்டு மூவரிடமும் சினேகத்துடன் நலம் விசாரித்து விட்டு தீபாவளி வாழ்த்தும் தெரிவிக்கிறார்.)
Happy தீபாவளி 🎉to All my dear Comics காதலர்களே.
Nice!
Delete////இளம் Texum ப்ரெசிடெண்ட் லின்கனும் meet பண்ண மாதிரி நாமளும் future ல ஒபாமா கூட ஓட்ஸ் சாப்பிடுற மாதிரியோ, or டிரம்பு கூட கம்பு சுத்துற மாதிரியோ எழுத சொல்லி போனெல்லி கிட்ட வற்புறுத்தணும், மறுத்தா நம்ம கோடாரி வச்சு வித்தை காட்டணும்.///
Deleteஹா ஹா ஹா!! செம செம!! :))))))
நன்றி Parani sir,
Deleteநன்றி E V sir.
டைலன்: அமானுஷ்யத்தை ஆராய்வோம். அட்டவணையில், இடம் பிடிப்போம்.
ReplyDeleteஜூலியா: நளினமாய் புலனாய்வு செய்வேன். நானுமே தேர்வாவேன்.
ஜாகோர்: பல்டியடித்து பழி வாங்குவேன். தல'ய்க்கு போட்டியாய் புகைப்படத்தில் புன்னகைப்பேன்.
Super
Deleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteதீபாவளி அதிரடி ஸ்பெஷல்
பாலைவன பரலோகம்
நடுநிசி வேட்டை
பார்சலை தற்போது கைப்பற்றி விட்டேன்.
super!
Delete100.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
கொரியர் பொட்டி வந்தாச்சு
ReplyDeleteEnjoy sir
Deleteதீபாவளி சரவெடி வந்துடுச்சாம்,அலுவல் பணியில் பிஸியாக இருப்பதால் நைட் தான் போய் பார்க்கனும்...
ReplyDeleteWOW super!
DeleteDeepavali saravedi received today. Thank you
ReplyDeleteGood to know!
Deleteவந்தாச்சாம்....பதினோரு மணிக்கே....போனதும் டப்பிய
ReplyDeleteவாங்கனும்
காலைல போகலையாலே :-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு எடிட்டர் sir,
ReplyDeleteநாளை சிவகாசி வந்து நம் அலுவலகத்தில் special இதழ்கள் பெற்றுக்கொள்ளமுடியுமா?
நீங்க ஊஹூம் சொல்ற type இல்லனு பேசிக்கிறாங்க!
சரிதானே sir..
தாரளமாக போகலாம். ஆசிரியரை சந்திக்க முடிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி:-)
Deleteபார்ப்போம் சார், அதிர்ஷ்ட காற்று வீசுதானு.
Delete🤗
டெக்ஸ் உள்ளே போய் நாலு மணிநேரம் ஆச்சு
ReplyDeleteபழம் பழுத்து ,பஞ்சாமிர்தம் ஆகிக்கொண்டிருந்தது ,உள்ள என்ன பண்ணறாங்களோ அது வேற கதை ,
நம்ம ஆட்கள் சிந்தனைகளில் .....
டிலான்: நம்ம" ஒரு slot கே OK பண்ண முடியல" ,Tex ,12 மாசத்துக்கும் சேர்த்து பேசிமுடிக்காரரோ .
ஜூலியா:"பழைய புக்கே ,பாதி Rack இருக்காம் ", எடிட்டர் கிட்ட நா என்னத்த சொல்ல ,இதுல இவனுங்க வேற
zagor: அடுத்து நம்ம "பொங்கலுக்கு பொங்க வச்சிடனும் " ,But இப்போதைக்கு (Tex ) தலைவர் முடிக்கமாட்டார் போல,நம்ம கொஞ்சம் தூக்கத்தை போடுவோம்
Nice
Deleteசரவெடி ஸ்பெஷல் வந்து விட்டது !!!
ReplyDeleteComics சந்தா Express 2023 !
ReplyDelete(Blog comments)
Zagor : me the RAC for the first time.
ஜூலியா : me the WL2040 as always
டைலன் டாக் : me in the REGRET
அப்ப, உள்ள போயிருக்கிற டெக்ஸ் வில்லரோட கமெண்ட்ட தான தேடறிங்க ப்ரண்ட்ச்?!
அவர் TTE post வாங்க போனெல்லி கிட்ட ஒரு மணி நேரமா பேச்சு வார்த்தை நடத்திட்டுருக்காராம் !
தீபாவளிக்கு ரயிலில் தட்கள் டிக்கேட் வாங்கும் போது வந்த ஐடியாவா சார்?
Deleteசூப்பர் சார்! பாராட்டுகள்!!
Deleteரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருக்கும் போது வந்த ஐடியா !
Zagor : ம்.. என்ன சார் பாக்கறிங்க.. மூஞ்சிய இப்படியும் திருப்பாம, அப்படியும் திருப்பாம - உம்மனாங்கொட்டான் மாதிரி வெச்சிருக்கேன்னு தானே?
ReplyDeleteபின்ன என்ன சார்? ஃபர்ஸ்ட் லேண்டிங்கிலேயே - டேக் ஆஃப் ஆன ஆளு சார் நானு.. என்ன போயி கேப்ஷன் போட்டியில உக்கார வெச்சா எப்படி சார்?
என் கதை விமர்சனம் எப்படி பட்டைய கிளப்பிச்சின்னு நீங்களும் தான் பார்த்திங்களே.. அந்த அதிரி புதிரி ஆக்ஷன் மேளாவுல அந்த அதிகாரியே இருந்த இடம் தெரியல அன்னைக்கு...
அதுக்கு போய் ஒரு மணி நேரமா போனெல்லி கிட்ட வத்தி வைச்சுட்டு இருக்காருப்பா உங்காளு...
ஹா.. ஹா.. ஹு.. ஹு.. ஹெ.. ஹெ ஹோ.. ஹோ..
தொடரும்..
டைலன் டாக் : என்ன கர்மம்டா இது? ரெண்டு பேரும் NEET exam ல ஃபெயிலான மெடிக்கல் ஸ்டுடெண்ட் மாதிரி உக்காந்துட்டு இருக்காங்க..
Deleteஇவங்க கூட எப்படி தான் அடுத்த வருஷம் குப்ப கொட்டப் போரேனோ தெரியல !
உள்ள போன ஆபிசர் வேற இன்னும் வெளிய வரல.. கட்டதொரைகிட்ட ரொம்ப நேரமா பேச்சு வார்த்தை போல..
ஹி.. ஹி.. ஹி..
தொடரும்..
ஜூலியா : கலக்கடி.. ஜூலியா.. இந்த கெட்டப்ல நீ அப்படியே எடிட்டர் போனெல்லி'யோட பெர்சனல் செக்கரெட்ரி மாதிரியே இருக்க..
Deleteஇதுங்க இரண்டும் மூஞ்சிய ஒரேடியா தொங்கப் போட்டு இருக்கும் போதே கன்ஃபார்ம் ஆயிடுச்சு டோய்..
இந்த அலப்பறையே எனக்கு போதும்.. ப்பா.. செம கெத்தா இருக்கு!
சீன் : டெக்ஸ் ரொம்ப நேரமா உள்ளேயிருப்பது பற்றி மூன்று பேருக்கும் வயிற்றெரிச்சல்
ReplyDeleteZagor : Mind Voice கல்லுல கோடரி செஞ்சு வித்த காட்டினா மட்டும் போதாது போலருக்கு. புல்லட் பறக்கணும், மிஸ்சே ஆகக்கூடாது போல.
Dylan Dog: Mind Voice துப்பாக்கி தூக்காம நாமும் அமானுஷ்ய புலனாய்வு செஞ்சிகிட்டிருந்தா, நம்ம கதையும் அமானுஷ்யமாகிடுமோ? யோசிடா குமாரு. தோட்டா தீராத துப்பாக்கி எங்க கிடைக்கும் விசாரி.
Julia : Mind Voice. புத்திசாலித்தனத்துக்கும் ஒரு குற்றத்தை deconstruct செஞ்சு உண்மைக்கு அருகாமையில் கதை சொல்வதற்கும் இன்னிக்கி மதிப்பே இல்ல. வந்துருக்குற மூணு பேர பாரு. ஒருத்தன் சாகவே மாட்டான்; அடுத்தவன் கல்லுல கோடரி செஞ்சா செமையா வேலை செய்யும்னு நம்புற முட்டாள் (அவன் டிரஸ்ஸை பாரு); இன்னொருத்தன் இல்லாத விஷயத்தை இருக்குனு சொல்ற டுபாக்கூர் பார்ட்டி. இதில் லாஜிக்கா இருக்குறது நான் மட்டும் தான். ஒரு வேளை அதனால் தான் புட்டுகினோமோ?
// Julia : Mind Voice. புத்திசாலித்தனத்துக்கும் ஒரு குற்றத்தை deconstruct செஞ்சு உண்மைக்கு அருகாமையில் கதை சொல்வதற்கும் இன்னிக்கி மதிப்பே இல்ல. //
Deleteஉண்மை. இதுவரை நமது காமிக்ஸில் வந்த அனைத்து ஜூலியா கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தலீவரின் தீபாவளி பரிசு வந்து சேர்ந்தது..😍😍😍
ReplyDeleteஅன்புக்கு நான்அடிமை தலீவரே..!
தல தலதான் :-)
Deleteஎனது புத்தகமும் வந்து விட்டது. தீபாவளி முன்னமே வந்து விட்டது. நன்றிகள் சார். மிக்க மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஎல்லா புத்தகங்களையும் உடனே படித்து விட்டு நாளைக்கு வந்து தீபாவளிக்கு படிக்க புத்தகம் இல்லை சார் என பின்னூட்டம் போடக்கூடாது குமாரு :-)
Deleteமன்னிக்கவும் பரணி ராபின் படித்து முடித்து விட்டேன். இன்னும் டெக்ஸ் மட்டுமே உள்ளது.
Deleteபிச்சு பிச்சு:-)
Deleteயாருயா நீங்க சிட்டி ரோபோவுக்கு அண்ணணா? :-)
Deleteஅடுத்து உங்க அண்ணன் வந்து இப்ப விமர்சனம் போடுவாரு பாருங்க:-)
Deleteஇன்னிக்கு காலையில் தான் பெட்டியை பிரிச்சேன் PFB,இனிதான் வாசிக்கனும்...
Deleteஎன்ஜாய் அறிவரசு அவர்களே.
Deleteநான் இன்று காலை பாலைவனப் பரலோகம் படித்து முடித்து விட்டேன். அட்டகாசம்
Deleteகச்சிதமான பார்சல் கையில
ReplyDeleteதீபாவளி திடீர் ஸ்பெஷல் இதழ் கைகளுக்கு வந்து விட்டது சார்...இரண்டு இதழ்களின் அட்டைப்படமும் அட்டகாசமே ஆனாலும் ராபின் அட்டைப்படம் இன்னமும் சூப்பர்..ராபினை பார்த்தும் நாளாகி விட்டதால் மிக ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்..ஆனால் தீபாவளி அன்று இந்த இரு இதழ்களையும் வாசிக்க நேரம் இருப்பதால் வெயிட்டிங்..
ReplyDeleteஅடுத்த இரண்டு நாட்கள் பலகாரம் சுடுவதில் பிஸியா தலைவரே :-)
Deleteஅடுத்த இரண்டு நாட்கள் பலகாரம் சுடுவதில் பிஸியா தலைவரே :-)
Delete😆😆😆😆😆
பாலைவனப் பரலோகம்.
ReplyDeleteபெட்டியைப் பிரித்து புத்தகங்களை கையிலேந்தியவுடன் உடனே படிக்க தூண்டிவிட்டது.
இப்போது படித்தும் முடித்தாயிற்று. முதன்முதலில் டாப் டென் ஸ்பெஷலில் வந்தபோது தவிர்த்து பின்னர் மறுவாசிப்பு செய்த ஞாபகம் இல்லை. அப்போது இந்த கதையை படிக்கும் போது எப்படி உணரந்தோமோ அப்படியே இப்போதும் உணர முடிந்தது.
டெக்ஸின் சோலோ சாகசம். நல்ல வேகமான கதையோட்டம். குத்தீட்டிகள் மேலிருந்து இறங்குவதை படிக்கும்போது 1995க்கே போய்விட்டேன். காலெப்பினியின் கிளாசிக் சித்திரங்கள் வண்ணத்தில் மிளிர்கின்றன. நன்றாக ரசிக்க முடிந்தது.
ஒரே குறை. மெலிதான அட்டை. இரண்டு கதைகள் சேர்த்து ஹார்ட் பைண்டாகவே வெளிவந்து இருக்கலாம். கொஞ்சம் நெருடுகிறது.
தீபாவளிக்கு ராபினையாவது விட்டு வைக்கனும். இல்லைன்னா படிக்காத பழசு ஏதாச்சும் எடுக்கனும்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு பழைய பள்ளித்தோழனைப் பார்த்த உணர்வு.. C.I.D ராபினைப் பார்க்கையில்..!
ReplyDeleteஅட்டைப்படமும்.. இந்தப் புத்தக அமைப்பும் பிரமாதமாக இருக்கின்றன..!
பலிகேட்ட புலி(ளி)களை ஊறவைத்து இன்னொரு நாளைக்கு ரசம் வெச்சிக்கலாம்.. இன்னிக்கு ராபினோடும் மார்வினோடும்தான்... கன்பார்முடு..!
முதல்ல நான் இந்த தீபாவளிக்கு இரசிக்க இருப்பது மிக நீண்ட நாள் கழித்து மை டியர் ராபினின் கதை யையே ..
ReplyDeleteஅப்புறம்தான் தல தரிசனம்லாம் .. பட் தல கததான் இங்க கெத்து ..
புத்தகத்த கண்ணால பாத்து கலர ரசிச்சாச்சு
ராபினின் 32 பக்கத்தில் நான்
அப்ப நீங்க.??!!
இரண்டு அட்டைகளும் பட்டய கிளம்புவது....வண்ணம் அருமை....தீபாவளி வாழ்த்து அட்டை அதகளம்
ReplyDeleteToday one to one meeting with editor.
ReplyDeleteAgenda : தமிழ் நாட்டில் தங்களுடைய தற்போதைய நிலைப்பாடு.
Participants : டெக்ஸ், ஸேகோர், டைலன், ஜூலியா with போனொலி எடிட்டர்.
Zagor : அடம் பிடித்து 4 பாகத்த, ஆறு பாகமா மாத்தி ஒரு அதிரி, புதிரி ஹிட் கொடுத்தாலும், பாதி blach & white ல வந்துமே அசால்டா இந்த ஆளு நமக்கு நிகரா சாதிச்சுட்டு போயிட்டானே. இனி இந்த எடிட்டருக்கு என்ன பதில் சொல்றது.
Julia : ம்ஹூம், உள்ள போய் பேசி என்ன பயன், அங்க ஒரு குரூப் மகளிர் என்றாலே மாடஸ்டி தான், இடம் கொடுத்தால் இளவசரசிக்கு தான் என்று போர்கொடி பிடித்துக் கொண்டிருக்கும் வரை நம் பாடு திண்டாட்டம் தான்.
டைலன் : தனியா வந்தா விட மாட்டீங்கறாங்கனு மார்டினோடு கூட்டு சேர்ந்து வந்தா, அதுக்கும் தடையா. இது சரிபட்டு வராது, இன்னைக்கு பேசி ஒரு முடிவுக்கு வரலனா, வழுக்குபாறை திருநாவுக்கரசுக்கு ஒரு போன போட்டு, சரமாரியா ஈ மெயில் கனைகளை எடிட்டர் மீது ஏவி விட வேண்டியது தான்.
நான் கேட்கலாமா என்று தெரியவில்லை. கொஞ்சம் அறிவியல் புனைவு மற்றும் magic type comic books போடுங்க அண்ணா
ReplyDeleteவணக்கம் நண்பரே. தயங்காமல் எழுதுங்கள்.
DeleteToday one to one meeting with editor.
ReplyDeleteAgenda : தமிழ் நாட்டில் தங்களுடைய தற்போதைய நிலைப்பாடு.
Participants : டெக்ஸ், ஸேகோர், டைலன், ஜூலியா with போனொலி எடிட்டர்.
Zagor : நம்ம புக் வந்ததும், சிரிச்சுட்டு இருக்கிற அந்த போஸ்டருக்கு பதில் நம்ம போஸ்டர ஒட்டி வைப்பாங்கனு நினைச்சேன், ஆனா தமிழ் நாட்டுல இந்தாளோட இடத்த அசச்சு கூட பார்க்க முடியாது போலிருக்கே.
Julia : தமிழ் நாட்டுல இப்பெல்லாம் க்ளாஸிக் நாயகர்களுக்கும், மறுபதிப்புகளுக்கும் தான் மார்கெட்டாம். அது புரியாம இந்த லூசு தனக்கும் ஒரு இடம் கிடைக்கும்கிற ஆவல்ல கால் கடுக்க நின்னுட்டு இருக்கு.
Dylan : வேறு வழியில்லை. நமக்கு ஒரு இடம் வேண்டுமென்றால், டெக்ஸ் கதையில் வரும் மெபிஸ்டோ கேரக்டருக்கு, இன்றே எடிட்டரை பிடித்து ஒரு அப்ளிகேசனை போட்டு விட வேண்டியது தான்
// நம்ம புக் வந்ததும், சிரிச்சுட்டு இருக்கிற அந்த போஸ்டருக்கு பதில் நம்ம போஸ்டர ஒட்டி வைப்பாங்கனு நினைச்சேன், //
Deleteகுட்
தோர்கலுக்காக waiting
ReplyDeleteஸாகோர் ; என்னம்மா உன் மூஞ்சி அழுது வடியுது ?
ReplyDeleteஜூலியா ; இத்தாலில பேமசாக இருந்து என்னத்துக்கு? தம்மாத் துண்டு தமிழ்நாட்ல எடுபடலையே என் ஆட்டம்னு ஒரே கவலையாக்கீதுண்ணே ?
ஸாகோர் ; எனக்கே இப்பத் தான் வழி பொறந்திருக்கு. நீ வேற பொலம்பா போம்மா அங்கிட்டு.
ஸாகோர் : "அந்த கார்சன் அங்கிளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் சொன்னே.. உள்ளே அவருக்கு பட்டி டிங்கரிங் பலமா நடக்குதே..?" ஜூலியா'ஆண்ட்டி' : "தம்பி.. இந்த டெக்ஸ் அண்ட் கோ குரூப்புக்கு வாக்கப்படுற லேடீஸ் பேரெல்லாம் காலத்துக்கும் நெலச்சு நிக்குதாம்' டைலான் : (மனதிற்குள்) "ஆமா.. செத்துப் போயிருவாங்கல்லே..?" (நீங்க பீல் அதான் நிஜம்)
ReplyDeleteஸாகோர்: தமிழ் நாட்டுல நாம இப்பத் தான் நம்ம கோட்டாவுக்கு துண்டு போட்டு இருக்கோம், அப்புறம் நம்ம யூனி பார்மையும் மஞ்சளுக்கு மாத்திபுட்டா (காவல் கழுகு - அடை மொழி (இரவு கழுகு போல)) நமக்கு நிரந்தர கோட்டா கிடைச்சுப்புடும்.
ReplyDeleteஜுலியா: இந்த தமிழ் மக்கள புரிஞ்சுக்கிட முடியலையே, நம்ம அழகுக்கும், திறமைக்கும் எனக்கு தானே ரசிகர்கள் கொடி பிடிச்சு இருக்கனும். ஆனா நிலைமை தலைகீழாக இருக்குதே!?
டைலன்: அமானுஷ்ய சக்திகளையே அடக்கி வைக்குற என்னையவே வெளிவர முடியாத மாதிரி அடக்கி வைச்சுபுட்டாங்களே இந்த தமிழ் மக்கள், என்ன பண்ணலாம்.
நடுநிசி வேட்டை
ReplyDeleteஅற்புதமான கதை .. யார் எங்கே ஏன் என்கிற கேள்விகளுக்கு குழம்பித்திரியும் வேளையில் அற்புதமான திருப்பங்களுடன்
ரொம்ப நாள் கழித்து ஒர் அருமையான கதை படித்த திருப்தி .. 10/10
உண்மையில் கதை செம வேகமாக மனது படபடக்க ஓடுகிறது.
Deleteஅடடே! சூப்பர் ஹிட் கதைதான் போலிருக்கே!!
Deleteமகிழ்ச்சி மகிழ்ச்சி!!
*ராபினின் கதை படித்த திருப்தி
ReplyDeleteஇன்னும் பார்சலை உடைக்கவில்லை. தீபாவளி அன்று தான் உடைக்க வேண்டும். இப்போது என் நினைவில் நின்ற பாலைவன பரலோகத்தின் கதைச்சுருக்கம்.
ReplyDeleteகாயமடைந்த கார் சென்னை நண்பர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஜிலா பாலைவனம் நோக்கி புறப்பட்டார் டெக்ஸ்.
சத்திய வழியில் வித்தியாசமான சின்னங்கள் கொண்ட மரத்தடிகள் பல இடங்களில் காண்கிறார். அதை உடைத்து போடுகிறார். அந்த நேரத்தில் ஒரு இளைஞனை கொள்ள சிலர் முற்படுகிறார்கள். டெக்ஸ் அந்த இளைஞனை காப்பாற்றுகிறார். யார் அந்த இளைஞன்? அவனுக்கு அங்கே என்ன வேலை? அந்த வித்தியாசமான மரத்தை அடிக்கும் அந்த இளைஞனுக்கு என்ன தொடர்பு? அவர்கள் இருவரும் இரவு தங்கி இருக்கையில் அவர்களுக்கு ஒரு ஆபத்து வருகிறது அந்த ஆபத்து என்ன? மீதிக்கதை புத்தகத்தில் காண்க. நிச்சயமாக நான் இந்த கதையில் எந்த சஸ்பெண்ஸையும் இப்போது உடைக்கவில்லை.
படிக்கத் தூண்டிடும் பதிவு!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதூத்துக்குடி வந்து இறங்கிய உடன் ராபின் மற்றும் டெக்ஸ் வருக வருக என வரவேற்றார்கள். அவர்களுடன் கொஞ்சநேரம் செலவிட்ட பின்னர் ஆபிஸ் வேலையை தொடங்கிவிட்டேன்.
Deleteவிஜயன் சார்,
இதுவரை வந்த டெக்ஸ் கிளாசிக் கதைகள் எல்லாம் குண்டாக+ஹார்ட் பௌன்டில் வந்ததால் இந்த இதழ் கைகளில் ஏந்தும் போது வித்தியாசமாகபடுகிறது.
நன்றி.
ஆசிரியர் சார்,
ReplyDeleteடெக்ஸ் எப்படி போட்டாலும் வாங்கிடுவாங்கன்னு போட்ட மாதிரி இருக்கு.
இந்த மாதிரி வல வல ன்னு போட்டு, நன்றாக வந்து கொண்டிருந்த டெக்ஸ் க்ளாசிக்ஸ் ஹார்ட் கவர் பார்மட்டையும் சொதப்பி, ஏன் சார் இப்படி?
I also thought so. But if it can bring smiles on faces why not?
Delete/// But if it can bring smiles on faces why not?///
Deleteயெஸ்! நூறுபேரை சிரிக்க வைக்க ஒருவர் அழுதாத் தப்பில்லை!!
This comment has been removed by the author.
ReplyDeleteபாலைவன பரலோகம் தயாரிப்பு தரம் அருமை அட்டை படங்கள் சூப்பரோ சூப்பர், டெக்ஸ் கதைகளில் இதை எனது பேவரைட் கதை வண்ணத்தில் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு வந்தது சந்தோஷத்தை அதிகப்படுத்தி உள்ளது.
ReplyDeleteபாலைவன பரலோகம் :
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு முன் க & வெ-யில் படித்ததாய் நினைவு, தற்போது கலரில் வாசிக்க கலக்கலாய் இருக்கு...
இதன் ப்ளஸ்-கலரில் இருப்பது,சேகரிப்புக்கு ஏற்றது,
இதன் மைனஸ்-மெல்லிய அட்டைப்படம்,முந்தைய டெக்ஸ் லைப்ரரி கலெக்ஷனோடு வைத்து பார்க்கையில் தீனி இல்லாத குதிரையாய் இளைத்துப் போய் தெரிகிறது...
நடுநிசி வேட்டை :
ReplyDeleteபரபரப்பான சினிமாத்
த்ரில்லருக்கு உரிய கதைக்களம்,முடிந்தளவு விறுவிறுப்பாய் கதையை நகர்த்தியிருக்கின்றனர்,நிறைய காட்சிகள் இருள் பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கொஞ்சமே எபெக்ட் குறைவான ஓவியங்கள் அமைந்து விட்டாற் போல ஒரு பீல்...
மனித மனத்தின் குரூர சிந்தனைகளும்,எல்லா நிகழ்வுகளையும் தனக்கான வாய்ப்பாக மாற்றி புகழ் ஏணியில் வேகமாய் ஏறுபவர்கள்,தன்னை பிரபலபடுத்த அறம் தாண்டிய செயல்புரியும் குரூர சிந்தனையாளர்கள் மனித சமூகத்திற்கு கேடு...
அவர்களுக்கான முடிவும் மோசமாகவே அமையும்...
இவற்றை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு...
நடுநிசி வேட்டை நிறைவான வாசிப்பு,கொஞ்சம் சிந்திக்கத் தூண்டிய வாசிப்பும் கூட...
எமது மதிப்பெண்கள்-8/10.
நச்!
Deleteதீபாவளி ஸ்பெஷலை தீபாவளி அன்னைக்கு தான் படிக்கணும்னு இருக்கேன்...!
ReplyDeleteபார்ப்போம் சரக்குகாரக வழி விடுவாகலானு...!
அப்பாடா! கொரியர் ஆபீஸுக்குப் போய் பட்ஷணங்களைக் கைப்பற்றியாச்சு!
ReplyDeleteகல் சுத்தி: இப்ப போனஸ் வாங்குனாத்தான் நமக்கு பொங்கல் ஸ்வீட்டு.
ReplyDeleteபென்சில் பெல்லி: போன தீபாவளி க்கு செஞ்ச ஸ்வீட்டே இன்னும் தீரலைங்கிறாரு...
டைலர்: எனக்கு அந்த அல்வாவைத் தான் குடுத்தாரு...
:)))
Deleteகேப்ஷன் ஜாலிக்காண்டி!!!
ReplyDeleteடெக்ஸ் போஸ்டர் சுவரில்...
1.ஸாகோர்: ". "
2.ஜூலியா: " "
3.டைலன்: ". "
மகாமனிதர் ஒருவர் அருகில் இருக்கையில் மற்றவர்கள் சரளமாக பேசும் மொழி மௌன மொழியேயாகும்.
In the vicinity of a legend every other person will become fluent in the language of "silence"
எனக்கு டவுட்டுங்க செனா அனா! ஸாகோருக்கும், டைலனுக்கும் கொட்டேஷன் மார்க்குக்குள்ள ஒரு 'புள்ளி' வச்சிருக்கீங்க. ஜூலியாவுக்கு மட்டும் புள்ளி வைக்கலை!
Deleteஇதுக்கு ஏதாவது உள்ளார்ந்த விளக்கம் ஏதாவது இருக்குங்களா?
டைலன்: டெக்ஸ் உள்ளே போய் நேரமாகிவிட்டதே! மன்ஹாட்டன் மனமோகினி கேஸை விசாரிக்க நான் போயாகணுமே!!
ReplyDeleteஜூலியா: டெக்ஸ் வெளிவந்து டைலன் உள்ளே போய்..பின்
நம் முறை வருவதற்குள் டைரியிலுள்ள இந்த மன்ஹாட்டன் மன்மதக்கொலை கேஸை படித்து குற்றவாளியை யூகிக்க முயற்சிப்போம்.
ஜாகோர்: மன்மதன், மோகினி இருவரையும் டெக்ஸ்சும் நானும் சேர்ந்து பிடிச்சிட்டதும் , அவர்களுக்கு என்ன climax வைக்கலாம்னு எடிட்டர்ட்ட கேட்கத்தான் டெக்ஸ் உள்ள போயிருக்கறதும் தெரியாம இவங்க என்னமா feel பண்ணி film காட்டுறாங்க பார்றா ?!!!!
ஹா ஹா!! அந்த 'மன்ஹாட்டன் மனமோகினி' கான்செப்ட் - செம்ம!! :)))))
Delete//மன்ஹாட்டன் மன மோகினி, மன்ஹாட்டன் மன்மதக் கொலை //செமயா இருக்குங்கசார். பி. டி.சாமி கதைத்தலைப்புமாதிரியே இருக்குங்க. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநடுநிசி வேட்டை:
ReplyDeleteநீண்ட நாள் கழித்து ராபின் .. வழக்கமான robin serial killer template தான் .. ஆனால் அதை சொன்ன விதம் செம .. கதையின் வேகம் , போக்கு s racy , fast paced .. நமது line upல் மீதம் இருக்கும் ஒரு சில genuine detectivesல் ராபினும் ஒருவர் .. So வருடம் ஒரு slot ராபினுக்கு கொடுக்கலாம் ..
sounds great!!
Deleteசார்.. நாளை பதிவுமுதியமை! (நன்றி: ராக் ஜி!)
ReplyDeleteஅடுத்த வருட அட்டவணை பற்றிய ஒரு முன்னோட்டமாவது...?
அட்டைவணையே முன்னோட்டம் தானே ? :-)
Deleteஸாகோர் : நான்தான் லேட்டஸ்ட் சென்ஷேனல் பிளேயர் சூர்யகுமார் யாதவ்
ReplyDeleteஜூலியா: நம்மள மித்தாலிராஜ் மாதிரி ரிடையர்மண்ட் குடுத்துடுவாகளோ.
டைலன் : நம்ம நெலைமை விரட்டுன கோழி - விராட் கோலி மாதிரி ஆயிடுச்சே.
ஜுலியா : ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம்...
ReplyDeleteடைலன் : லாங் லாங் அகோ...
ஜாகோர்: ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி இருந்தாங்க.
டெக்ஸ் (உள்ளேயிருந்து) ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா தான் இருந்தாரு.