Powered By Blogger

Friday, July 01, 2022

செய்வன டெரராய்ச் செய் !

 நண்பர்களே,

வணக்கம். அது என்னமோ தெரியலை - ஆண்டுமலர் மாதமென்றாலே கொஞ்சம் தாமதங்கள் ; கொஞ்சம் தலைதெறிக்கும் ஓட்டங்கள் என்பது 1984 முதலாகவே வாடிக்கையாகி விட்டது ! சொல்லப்போனால் நமது முதல் வெளியீடான "கத்தி முனையில் மாடஸ்டி" வந்திருக்க வேண்டியது ஜூன் 1984-ல் ! ஆனால் ஏதேதோ சுணக்கங்களின் பெயரைச் சொல்லி, ஜூலையில் தான் கரை சேர்ந்தார் இயவரசி ! அதே பாணியில் இந்த ஜூலை இதழ்களும் 'இழுத்துக்கோ-பறிச்சுக்கோ' என்ற கதையாகத் தான் இன்றைக்கு டெஸ்பாட்ச் ஆகியுள்ளன ! 

நிஜத்தைச் சொல்வதானால் - இந்தத் தாமதத்தின் பிரதம காரணம், ஜூன் நடுவாக்கில் கிட்டத்தட்ட ஒரு முழு வாரத்தினை 2023-ன் 'தல' & other தேர்வுகளுக்கென செலவிட்டதே ! நமது 2023 அட்டவணையினை உங்களிடம் ஒப்படைக்க இன்னும் கணிசமான அவகாசம் இருப்பது போல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலுமே, behind the scenes அதற்கென நாங்கள் தயாராகிட ஏகப்பட்ட lead time அவசியம் ! தவிர, ஜூலை இறுதி முதலாய் ஐரோப்பிய சம்மர் விடுமுறைகள் துவங்கிடுவதால், படைப்பாளிகளை அரக்கப் பரக்க அனற்றும் கொடுமைகளைத் தவிர்த்திட இப்போதே நமது திட்டமிடல்களுக்கு இறுதி வடிவம் தந்திடல் அவசியமாகிறது ! So அதற்கென எடுத்துக் கொண்ட வாரமானது - மாதயிறுதியினில் பணிகளைப் பூர்த்தி செய்வதில் பிரதிபலித்திட, கடைசி நிமிடம் வரைக்கும் காலில் சுடுகஞ்சை ஊற்றியபடிக்கே கதக்களி ஆடிய கதையாகிப் போனது !

Anyways, முக்கூட்டணி இதழ்கள் கிளம்பியாச்சூ ! And இங்கே இன்னொரு தகவலும், ஒரு apology-ம் கூடவே ! எலியப்பா டாட்டா காட்டிக் கிளம்பிய பின்னே, அந்த மாதாந்திர விலையில்லா இதழுக்கென நாம் திட்டமிட்டிருந்த புது வரவினை வீடு கொணர்ந்து சேர்த்திடுவதிலும் கொஞ்சம் சுணக்கமாகிப் போய்விட்டது ! நிஜத்தைச் சொல்வதானால் பாக்கெட்டுக்குள் கைவிடும் போது கணிசமான காற்று மட்டுமே அகப்படும் வேளையிது என்பதால், புதுப்பார்ட்டிக்கான ராயல்டியினை ரெடி செய்து அனுப்பிட நிறையவே  டான்ஸ் தான் ! தர்மபுரியின் புத்தக விழாவினில் நமது ஆரம்பத்து வேகம் தந்த நம்பிக்கையில், "அண்ணாச்சி அனுப்பிடப்போகும் காசை அப்டிக்கா ராயல்டி ஆக்றோம் ; இப்டிக்கா கதை(கள்) வந்துப்புடும் !" என்று மல்லாக்கப்படுத்த கனவினில் ஆழ்ந்திருந்தேன் ! ஆனால் அண்ணாச்சியோ  'பாதாள பைரவி' பாணியிலேயே நாளுக்கு நாள் விற்பனைத் தகவல்களைச் சொல்ல ஆரம்பிக்க, கேராகி சோபாவில் சாயும்படியாகிப் போனது ! கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டே ஏற்பாடுகளைச் செய்து, புதியவரை இன்று காலை தான் நமது ஆபீசுக்கு வரவேற்க முடிந்தது ! So இந்த ஜூலை மாதம் மட்டும் அந்த விலையில்லா இதழ் இடம்பிடித்திடாது folks - sorry !! 

ஆகஸ்ட் முதலாய் நமது அணிவகுப்பினில் இடம்பிடிக்கவுள்ளது இதோ - இந்தக் குள்ள கௌபாய் தான் !! LOSER JACK நமது ரேடாரில் 2 ஆண்டுகளாகவே இடம்பிடித்து வரும் ஒரு ஜாலி சுள்ளான் ! ஆனால் இவரது கதைகள் எல்லாமே எலியப்பா பாணியினில் குட்டிக் குட்டி தான் என்பதால் உங்களிடம் அறிமுகம் செய்திட தயங்கியபடியே இருந்து வந்தேன் ! ஆனால் இந்த விலையில்லா இதழின் ஸ்லாட் இதற்கு செட் ஆகும் என்று பட்டதால் ஆசாமியை அலேக்காய்த் தூக்கியாந்தாச்சு ! அம்மாக்கு ஒரே புள்ளை ; லக்கி லூக் போல தில்லான கௌபாய் ஆகணும் என்பது ஜாக்கின் இலட்சியம் ; ஆனால் வில்லன்களைப் பார்த்த நொடியிலேயே 'தில்லானா தில்லானா' என்று டான்ஸ் ஆடும் பேஸ்மாண்ட் தான் யதார்த்தம் ! இந்த வன்மேற்கின் குட்டிச்சிங்கம் தான் அடுத்த 5 மாதங்களுக்கு நமது கூரியர் டப்பிக்களை சிறப்பிக்கவுள்ள ஸ்பெஷல் பார்ட்டி ! 


இந்த குட்டிப்புயலுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பீர்களோ guys ? நானொரு பெயர் நினைத்துள்ளேன் தான் ; ஆனால் அதை விடவும் ஷோக்காயொரு பெயர் கிட்டிடும் பட்சத்தில் சூப்பராய் அதனையே சூட்டி விடலாம் ! So சொல்லுங்களேன் - LOSER JACK தமிழில் என்னவாக வலம் வரலாமென்று ?

And இந்தத் தருணத்தில் ஒரு முக்கிய மேட்டருக்கும் பிள்ளையார் சுழி போட்டுவைக்கத் தோன்றுகிறது ! விஷயம் இது தான் :

மிட்டாய்க்கடைக்குள் புகுந்த சர்க்கரை நோயாளியாட்டம், கண்ணில் படும் கதைகளையெல்லாம் வாங்கிக் குவிக்கச் சொல்லி ஆட்டிப் படைக்கும் அந்த mania-வுக்கு ஏதேனுமொரு வைத்தியசாலை இருந்தால், அங்கே அட்மிட் ஆக வேண்டிய முதல் பார்ட்டி நானாகத்தானிருப்பேன் ! இந்த இரண்டாவது இன்னிங்சின் 10 ஆண்டு கால அவகாசத்தினில் ஏதேதோ திட்டமிடல்களுடன், ஏதேதோ தருணங்களில் நான் வாங்கி உள்ளுக்குள் அடுக்கி வைத்திருக்கும் கதைகளைக் கொண்டு ரொம்ப ஈஸியாய் மூணாயிரத்துக்கோ, நான்காயிரத்துக்கோ புக்ஸ் ரெடி செய்திட முடியும் ! ஆனால் வெவ்வேறு காரணங்களால் அவற்றை வெளியிட சந்தர்ப்பங்கள் வாய்க்காமலே போயிருக்க, இன்றைக்கு அதனுள் முடங்கி நிற்கும் பணமானது தோள்களில் ஒரு பளுவாகத் தென்படும் நிலை வந்து விட்டது ! So முன்பதிவு இதழ்களாகவோ, சந்தாக்களில் உட்புகும் ரெகுலர் இதழ்களாகவோ ; புத்தக விழா ஸ்பெஷல்களாகவோ அவற்றை சன்னம் சன்னமாய் களமிறக்கிட இயன்றால், அவற்றினுள் துயில் கொண்டு வரும் ராயல்டி பணங்கள் நமக்குப் பிரயோஜனம் நல்கிடக்கூடும் ! இன்னான்றீங்கோ இந்த யோசனைக்கு ? 

And ஆட்டத்தைத் துவக்குறது நமது பால்யங்களது அண்ணாத்தேயோடு - என்று இருப்பின் உங்களின் ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமோ ? தானைத்தலீவரின் இதுவரை வெளிவந்திரா 150 பக்க நெடும் ஜாகஜம் - THE SINISTER SEVEN - முன்பதிவுக்கான ஸ்பெஷல் இதழாய் கணிசமான அவகாசத்தோடு அறிவிப்பின், டீலா ? No டீலா ? உங்களின் பதில்கள் என்னவாக இருக்கும் folks ? 

"ஐயே....இவையெல்லாமே நாம் தாண்டி விட்டுள்ள ரசனைகள்" என்று ஒரு அணியும்..."ஆகா...ஆகாகாகா ..."என்று கொண்டாடக்கூடிய அணியும் நம் மத்தியில் இருப்பதில் no secrets ! "முன்பதிவுகளுக்கு மாத்திரமே" - என்ற அடையாளத்தோடு இதனை அறிவிக்கும் பட்சத்தில், முதல் அணியினர் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கலாம் தான் ! எனது இந்த வேளையின் சிந்தனையோ - "கொண்டாடும் அணியின் பலம் என்னவாக இருக்குமோ ?" என்பதே !! So மெய்யான பதில்ஸ் ப்ளீஸ் !! 

And இங்கொரு மெகா குறிப்புமே : "இது எக்ஸ்டரா நம்பரா ? இதுலாம் இப்போ தேவையா ? இந்த நேரத்துக்கு / பணத்துக்கு ஒரு கி.நா.போட்ருக்கலாமே ? ஒரு கார்ட்டூன் போட்ருக்கலாமே ?" என்ற ரீதியிலான அலசல்களுக்கு - this isn't the place nor the time guys ! தொடரும் சந்தர்ப்பங்களில் பீரோவிலிருந்து வெளிப்படக்கூடிய கதைக்குவியல்களில் சகல ஜானர்களுமே இடம்பிடித்திடக்கூடும் ! So இன்றைக்கு ஒரு கமர்ஷியல் நாயகர் ; நாளையொரு கார்ட்டூன் நாயகர் ; நாளன்னிக்கு கதையே நாயகரெனும் கதை - என வரிசை கட்டி இறங்கிட உள்ளன ! 

இந்த நொடியின் கேள்வி : 'தானைத் தலைவர்" முன்பதிவு இதழாய் வெளிவந்திடும் பட்சத்தில், நீங்கள் வாங்குவீர்களா - மாட்டீர்களா ? என்பது மட்டுமே ப்ளீஸ் !

Bye for now ! See you around all ! 

308 comments:

  1. Replies
    1. பொருந்தி வர வேண்டும் நண்பரே - கதாப்பாத்திரத்தின் தன்மையோடு !

      Delete
    2. ஜகா வாங்கும் ஜாக்

      Delete
  2. எனக்கு கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தானைத் தலைவனின் சினிஸ்டர் செவன். போடுங்கள் வெடியை

      Delete
  3. புக்கு ரெடி ..


    நன்றி சார்...


    ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. தானைத் தலைவருக்கு ஜே

    ReplyDelete
  5. சார் இந்த முறையும் அட்டவணை அக்டோபர் தானா?

    அந்த ரெடி ஆன அட்டவணையை கண்ணில் காட்டலாமா?

    ReplyDelete
  6. போன முறை ஸ்பைடர் கதை கொஞ்சம் இழுத்து கொண்டே போனது போல் ஒரு பீலிங் தான் சார்..ஆனாலும் இந்த இதழ் வருமாயின் அது போல் இது இருக்காது என்ற நம்பிக்கையுடன் கண்டிப்பாக வாங்குவேன் சார் ..:-)

    ReplyDelete
  7. ////இழுத்துக்கோ-பறிச்சுக்கோ' என்ற கதையாகத் தான் இன்றைக்கு டெஸ்பாட்ச் ஆகியுள்ளன ! ////

    ----ஆஹா... அருமையான செய்திங் சார்...

    பிறந்தநாள் பரிசாக இதை விடச் சிறந்தது உண்டோ??!!💃💃💃💃

    ReplyDelete
  8. ///முக்கூட்டணி இதழ்கள் கிளம்பியாச்சூ ///

    ---போடு வெடியை...💞💕

    இம்முறை ஆல்ஃபாவுக்கு ஓட்டு!

    ReplyDelete
  9. ///ஆகஸ்ட் முதலாய் நமது அணிவகுப்பினில் இடம்பிடிக்கவுள்ளது இதோ - இந்தக் குள்ள கௌபாய் தான் !! LOSER JACK நமது ரேடாரில் 2 ஆண்டுகளாகவே இடம்பிடித்து வரும் ஒரு ஜாலி சுள்ளான் ! //

    ----சுள்ளானுக்கு வெயிட்டிங் சார்

    ReplyDelete
  10. ///இந்த குட்டிப்புயலுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பீர்களோ guys///

    Crack Jack

    ReplyDelete
    Replies
    1. தமிழில் 'கிறுக்குப் பய.சாக்'

      Delete
  11. // ஸ்பெஷல் இதழாய் கணிசமான அவகாசத்தோடு அறிவிப்பின், டீலா ? No டீலா ? உங்களின் பதில்கள் என்னவாக இருக்கும் folks ? //

    -- வெல்கம் பேக் ஸ்பைடர்....💐

    ReplyDelete
  12. ///இந்த குட்டிப்புயலுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பீர்களோ guys ?///

    சோப்ளாங்கி ஜாக்

    ReplyDelete
    Replies
    1. ///இந்த குட்டிப்புயலுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம் என்பீர்களோ guys ?///

      சோதா ஜாக் அல்லது சோதாப்பயல் ஜாக்

      Delete
    2. சூப்பர் கிட்!!

      Delete
    3. அப்படியே..

      சுள்ளான் ஜாக் ன்னும் வைக்கலாம் சார்..!

      Delete
    4. ///சோப்ளாங்கி ஜாக்///

      நான் சூப்பர்னு சொன்னது இதை!

      Delete
    5. அல்லது சொங்கி ஜாக்..

      Delete
    6. ///நான் சூப்பர்னு சொன்னது இதை!///

      பாக்கியம் குருநாயரே..😍

      Delete
    7. //சோப்ளாங்கி ஜாக்//---

      சூப்பர் மாம்ஸ்.. செல பெயர் சுள்ளானுக்கு...

      Delete
  13. ///தானைத் தலைவர்" முன்பதிவு இதழாய் வெளிவந்திடும் பட்சத்தில், நீங்கள் வாங்குவீர்களா - மாட்டீர்களா ? என்பது மட்டுமே ப்ளீஸ் !//

    தங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு நிச்சயமாக உண்டுங் சார்..

    ஸ்பைடரை உறுதியாக வாங்குவேன்!

    ஸ்டீல்க்ளாவுக்காக.....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவும் நிச்சயமாக வாங்கலாம் விஜயராகவன் ப்ரோ... ஸ்பைடர் கதைகள் என்றும் நம்மை "ஸ்ட்ரெஸ் பஸ்டர்" செய்திடும் கவலை நிவாரணிகள் தாம்.

      Delete
  14. Edi Sir..
    Friday வணக்கங்கள் ..

    ReplyDelete
  15. ஸ்பைடர் Sinister Seven வந்தால் கண்டிப்பாக வாங்குவேன், நண்பர்களையும் வாங்கத் தூண்டுவேன்

    பழைய Style ஓவியங்களை பார்க்கவே காணக் கண் கோடி வேண்டும்

    எனக்கு மிகவும் பிடிக்கும் Sir, பொதுவான ஆதரவைப் பார்த்து முடிவெடுங்கள், வியாபார ரீதியாக வெற்றியடைதும் மிக முக்கியம்

    ReplyDelete
  16. சினிஸ்டர் செவன் - கண்டிப்பாக வாங்குவேன்! (ஆனால் படிப்பேனா தெரியாது!)

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்றேன் நீங்க கலாய்க்குறதுக்குன்னாவது படிப்பீங்க விஜய் ப்ரோ...!

      Delete
    2. ஹிஹி உண்மைதான்! ஆனா உயிரைப் பணயம் வச்சு அப்படியென்ன கலாய்ப்பு வேண்டிக்கிடக்குன்னு ஒரு பக்கம் யோசிக்கவேண்டியதிருக்குங்களே உதய் ப்ரோ! :)

      Delete
  17. Edi Sir..
    Sinister 7.. முன்பதிவுக்கு என் ஓட்டு O.k..

    ReplyDelete
  18. ஸ்பைடருக்கு எனது ஓட்டு கண்டிப்பாக உண்டு.

    அப்படியே அந்த மிஸ்டர் z பாலன்ஸ் கதையும் கொண்டு வாருங்கள் சார் ப்ளீஸ்.

    ஆர்ச்சியை விட எனக்கு விருப்பமானவர் அவரே.

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே Z மிகவும் பிடித்தமானவரே .. ஏனோ எடி இதை களமிறக்க ரொம்பவே தயங்குகிறார் .. 😒😉😉

      Delete
  19. தானைத் தலைவர்" முன்பதிவு இதழாய் வெளிவந்திடும் பட்சத்தில், நீங்கள் வாங்குவீர்களா - மாட்டீர்களா ? என்பது மட்டுமே ப்ளீஸ் !

    கண்டிப்பாக வாங்குவேன்

    ReplyDelete
  20. சூப்பர் சுள்ளான்

    ReplyDelete
  21. THE SINISTER SEVEN - முன்பதிவுக்கான ஸ்பெஷல் இதழாய் கணிசமான அவகாசத்தோடு அறிவிப்பின், டீலா ? No டீலா ? உங்களின் பதில்கள் என்னவாக இருக்கும் folks ?

    Deal - எனக்கு இப்பவே படிக்கணும்னு தோணுதே...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வார்த்தை வாட்சப் குரூப்பில் பகிர்ந்திருக்கலாம் ஐயா நீங்க. ரொம்பவும் லேட்டா இந்த பதிவை படிக்கிறேன்.

      Delete
  22. /// 'தானைத் தலைவர்" முன்பதிவு இதழாய் வெளிவந்திடும் பட்சத்தில், நீங்கள் வாங்குவீர்களா - மாட்டீர்களா ? என்பது மட்டுமே ப்ளீஸ் !///

    வாங்கிடுவேன் சார்.!

    என்னிக்காச்சும் போரடிக்கிறப்போ "விமர்சனம்"எழுத யூஸ் ஆகும்.!:-)

    ReplyDelete
  23. ஏமாளி ஜாக்

    பச்ச புள்ள ஜாக்

    கொயந்த பய ஜாக்

    பால்வாடி புள்ள ஜாக்

    ReplyDelete
    Replies
    1. தெரிச்சோ தெரியாமயோ 'பெயர் சூட்டும் போட்டி'யை அறிவிச்சுட்டீங்க எடிட்டர் சார்.. நாளைக்குள் எத்தனை உப பதிவு போடப்போறீங்களோ...

      Delete
  24. பக்கி ஜாக்
    மட்டி ஜாக்
    லிட்டில் ஜாக்

    ReplyDelete
  25. Waiting for spider...welcome back...

    ReplyDelete
  26. சினிஸ்டர் செவன் வாங்குவேன்.

    காரணங்கள்

    1. நிஜமாகவே படிக்க( இப்போதெல்லாம் காமிக்ஸ் தமிழில்
    புதுசு எதுவா இருந்தாலும் படிக்க தோன்றுகிறது. அது பழைய புதுசா இருந்தாலும் சரி.

    2. உறங்கி கிடக்கும் ராயல்டி தொகை பணமாக மாற ஒரு வாசகனாய் பங்களிப்பு செய்யும் ஆர்வம்.

    3.ஸ்டீல் க்ளா


    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் சரிதானுங்க.. மொதல்ல ஸ்டீல்க்ளா வாங்குவாரா?!!

      Delete
    2. ///உறங்கி கிடக்கும் ராயல்டி தொகை பணமாக மாற ஒரு வாசகனாய் பங்களிப்பு செய்யும் ஆர்வம்.////--+1000

      Delete
    3. ஈவி பேச முடியாம சிரிச்சமே ஒரு நிமிடம் அது வச்சி சொல்றீங்க.....மறுவாசிப்பில் அசத்திட்டார் மெய்யாலுமே.....இதுக்காக காத்திருந்தது நான் மட்டுமல்ல....எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார்...லிமிட்டெட்ல வந்தா போதும்னு தான் நெனச்சேன்....எத்தனை குரல்கள் வலை மன்னனுக்காய்

      Delete
  27. தானை தலைவன், பொட்டியில் துயிலும் அனைத்து ஆட்களையும் முன்பதிவுக்கென இறக்குங்கள் சார். நிச்சயமாக பல முத்துகள் உள்ளே ஒளிந்திருப்பது உறுதி. Super 6, Sun Shine library, Jumbo 6 இப்பொழுது முன்பதிவு மட்டும்.. அத்தனை தடங்களிலும் பிரதானமான ஒன்று புதிய தேடல்கள். கூடவே ராயல்டி தொகையினை ஓரளவேனும் மீட்க உதவும் எனில், I am in sir.

    ReplyDelete
  28. இந்த ஸ்னிஸ்டர் செவன் ஸ்பைடர் கதைக்கு என் ஆதரவு கண்டிப்பாக உண்டு...

    ---மகேந்திரன் பரமசிவம்!

    ReplyDelete
  29. ///பீரோவிலிருந்து வெளிப்படக்கூடிய கதைக்குவியல்களில் சகல ஜானர்களுமே இடம்பிடித்திடக்கூடும் ! So இன்றைக்கு ஒரு கமர்ஷியல் நாயகர் ; நாளையொரு கார்ட்டூன் நாயகர் ; நாளன்னிக்கு கதையே நாயகரெனும் கதை - என வரிசை கட்டி இறங்கிட உள்ளன ! ///

    பீரோலு.. பீரோலு.. ஹைய்யோ..ஹஹ்ஹ்ஹஹா.. பீரோலு..
    ஹைய்யய்யோ..இங்க பார்ரா..ஊறுகா பாட்டிலு...
    அய்யோ.... அடாஅடாஅடா... சிலுவரு பேட்ரீ சிலுவரு பேட்ரீ..
    ஆங்.. சிலுவரு தட்டு..சிலுவரு டம்ளரு..
    அடடா.. பீரோலுக்குள்ள பேக்கு.. பீரோலுக்குள்ள பேக்கு.. அய்யோ, அலிபாபா குகைக்குள்ள வந்தமாதிரி இருக்கே...
    ஆங்.. கீழ ஒரு பீரோ கிழ ஒரு பீரோ.. அடப்போங்கடா.. என்னால தாங்கமுடியலடா....

    சுந்தரப்புருசன் வடிவேலு நிலையில் நாம்..!

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் கண்ணா ROFL...

      Delete
    2. ஹா ஹா!! செமப் பொருத்தமான சீன்!! :)))

      Delete
  30. சினிஸ்டர் செவன் வாங்குவேன்.

    சர்பப்பத்தின் சவால் படிக்கும்போது இதையும் படிச்சிடுவேன்.:-)

    ReplyDelete
  31. Yes for spider, only because I am curious about what other stories that might come out in this track.

    ReplyDelete
  32. மாக்கான் ஜாக்

    டம்மி பீஸ் ஜாக்

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Edi Sir..
    நீங்க என்ன போட்டாலும் வாங்குவேன்..
    எதை போட்டாலும் வாங்குவேன்..
    என் பால்யத்தை மீட்டெடுக்கும் காமிக்ஸ் உலகிற்கு என் இறுதி வரை தோள் கொடுப்பேன்..

    ReplyDelete
  35. பீரோவுக்குள் துயிலும் கதைகளை பார்க்கும் போது.,.. ஒரு வாசகனாய்,
    பார்த்தாலே பரவசம்.. (இதழ்க்கடையோரம் நயாகரா .) பதிப்பாசிரியராய்,
    பார்த்தாலே திகில் ரகம் (அடிவயிற்றில்)
    அவைகளை துயில் எழுப்புங்கள் சார்.
    ' துயிலெழுந்த பிசாசு' ஆக வரட்டும்.
    இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  36. இம்சை இளவரசன் ஜாக்

    ReplyDelete
  37. சுட்டி சுள்ளான்

    ReplyDelete
  38. ஸ்பைடர் - வாங்குவேன்

    ReplyDelete
  39. இந்த ஸ்னிஸ்டர் செவன் ஸ்பைடர் கதைக்கு என் ஆதரவு கண்டிப்பாக உண்டு...

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  40. தோத்தாங்குளி ஜாக்
    சோப்ளாங்கி ஜாக்
    சின்ன பட்டூ ஜாக்
    லிட்டில் ராஸ்கல் ஜாக்

    ReplyDelete
  41. ராஜா ஜாக் மாதிரி இவரை கூஜா ஜாக் ன்னு சொல்லலாமா?

    ReplyDelete
  42. சூ(ப்பர்) டூ(ப்பர்) ஜாக்(கிரதை)
    சூடு ஜாக்

    ReplyDelete
  43. வாங்கிருவோம்....அதுவும் இந்த அழகிய ஸ்பைடர் தான் எனக்கு மிகமிக பிடித்தவன்...ஓவியருக்கு ஓர் சல்யூட்.....எப்படியாவது விட்டுடுங்க....புண்ணியமா போகும்

    ReplyDelete
  44. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  45. தானைத் தலைவர் ஸ்பைடர் கண்டிப்பாக வேண்டும். வாழ்க தானைத் தலைவர். வளர்க அவர் புகழ்..

    ReplyDelete
  46. ஸ்பைடர் உடனே வெளியிடுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. + கூடவே அந்த ஸ்பைடர் போஸ்டர் மறந்திடாதீங்க

      Delete
  47. அன்பு ஆசிரியருக்கு🙏...

    38 வது பிறந்த நாள் கொண்டாடும், எங்களின் சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும், இனிய/
    பிரியமான லயன் காமிக்ஸ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐.

    LOSER JACK சாம்பிள் & ஓவியம் அட்டகாசம்.
    நிச்சயம் சோடை போகாது.
    முதல் முறையா லக்கி அறிமுகம் என விளம்பரப்படுத்தியதை ஞாபகப்படுத்துகிறது இந்த ஜாக்.
    இதை மாத இதழாக, பெரிய காமிக்ஸாகவே வெளியிடலாம் சார்.

    படத்தை பார்த்தால் சுட்டித் தனங்கள் அதிகம் இருக்கும்போல தோணுது.
    "மினி லக்கி",
    "சுட்டி லக்கி",
    "சுட்டி ஜாக்",
    "குட்டி ஜாக்",
    "பொடியன் ஜாக்",
    "வால் பையன் ஜாக்",
    "சுட்டி பையன் ஜாக் ",
    "ஜூனியர் லக்கி",
    இதில் ஏதாவது பொருந்துமா பாருங்கள்.

    பழைய கதைகளை, வாங்க யார்சார் தயங்குவார்கள்?.
    சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தீர்களே,
    எது எது வேண்டாம் இனி அதை வெளியிட கூடாது என. க்ராபிக் நாவல், "ஒருமுறை கொன்று விடு" போன்ற கதைகள் மாதிரி,
    இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது சார்.
    மற்றபடி ஸ்பைடரோ, லாரன்ஸ்ஸோ,அல்லது வேறு யாராவதோ இருந்தால் கண்டிப்பாக வரவேற்பு உண்டு சார். அடுத்த வருட ஸ்லாட்டில் கூட சேர்ந்தலாம். அல்லது ஸ்பெஷல் இதழாக வெளியிடலாம்.
    ஆண்டு மலர் லயன்&முத்து,
    கோடைமலர்,
    லயன் லைப்ரரி,
    என அதற்கென ஒரு லைன் ஒதுக்கலாம் சார். முன் பதிவுன்னா, வாங்காமலும் பலர் இருக்கிறார்கள்.
    அதற்கு பதில் இப்படி மாதாமாதம் வெளியிடலாம். எல்லோருக்கும் போய் சேரும்.
    வெளியிடாமல் இருந்தால் யாருக்குமே பயன் இல்லை. அது கதையோ, வேறு எதாவதோ. நீங்க சொன்னதுக்கு முழு ஆதரவு சார்.
    இந்த யோசனை சென்ற வருடமே வந்திருந்தால், பாதி கதை வெளியே வந்திருக்கலாம் என்பது என் கருத்து.
    மறுபதிப்பு, மறுமறுபதிப்புக்களை வெளியிடுவதற்க்கு இது எவ்வளவோ தேவலை சார். படிக்காத கதைகளை படிக்கலாமே. நல்ல முயற்சி சார்.
    வரவேற்கிறோம்.
    நன்றி சார். 🌹🌹🌹.

    ReplyDelete
  48. ###THE SINISTER SEVEN - முன்பதிவுக்கான ஸ்பெஷல் இதழாய் கணிசமான அவகாசத்தோடு அறிவிப்பின், டீலா ? No டீலா ? உங்களின் பதில்கள் என்னவாக இருக்கும் folks ? ###

    Deal 👍🤩😎

    ReplyDelete
  49. லயன் காமிக்ஸ் ஆண்டுமலர்கள்....

    தன்னுடைய செல்லப்பிள்ளை லயன் காமிக்ஸின் ஒவ்வொரு பிறந்தநாளையும் செலிபரேட் பண்ணும் விதமாக லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு விஜயன் அவர்களால் ஜூலையில் சிறப்பிதழாக லயன் மலரும்.....

    முக்கிய கதைகளை லயன் கோடைமலரும் தீபாவளிமலரும் அள்ளிக்கொள்ளும். கிடைத்ததை வைத்து ஆண்டுமலர்களும் சாதித்து வந்தன...!!

    ஆண்டுமலரின் பிரதான நாயகி மாடஸ்தி ப்ளைசியாக ஒருகாலத்தில் இருந்தார். கம்பேக்கிற்குப் பிறகான காலங்களில் ஆண்டுமலர்னா லக்கிலூக்னு சொல்லும் விதமாக லக்கி ஆக்ரமிப்பு செய்து கொண்டார்.
    ..

    இன்று பிறந்த 39வது ஆண்டின் ஆண்டுமலர் நாளை கையில் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பறியது.

    இந்த 39ஆண்டுகளில் ஓருசில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் இந்த ஸ்பெசல் வெளியாகி நம்மை மகிழ்வித்தது...

    ReplyDelete
    Replies

    1. 1.சைத்தான் விஞ்ஞானி-1985
      2.பவளச்சிலை மர்மம்-1986
      3.அதிரடிப் படை-1987
      4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
      5.நடுக்கடலில் அடிமைகள்-1989
      6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
      7.மர்ம முகமூடி-1991
      8.மின்னலோடு ஒரு மோதல்-1992
      9.கானகக் கோட்டை-1993
      10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
      11.பூம் பூம் படலம்-1995
      12.இரத்தப் படலம்-VI-1996
      13.பேங்க் கொள்ளை-1997
      14.கானகத்தில் கலவரம்-1998
      15.தலைவாங்கும் தேசம்-1999
      16.இரத்த பூமி-2000
      17.மெக்சிகோ படலம்-2001
      18.பயங்கரப் பயணிகள்-2002
      19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
      20.----------------------------2004
      21.----------------------------2005
      22.சூ மந்திரகாளி-2006
      23.----------------------------2007
      24.----------------------------2008
      25.----------------------------2009
      26.----------------------------2010
      27.----------------------------2011
      28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
      29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
      30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
      31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
      32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
      33.லயன் 300 ஸ்பெசல்-2017
      34.லூட்டி வித் லக்கி-2018
      35.தி லக்கி ஆண்டுமலர்-2019
      36.லக்கி’s லயன் ஆண்டு மலர்-2020
      37.லயன் ஜாலி ஆண்டுமலர்-2021
      38.லயன்&லக்கி ஆண்டுமலர்-2022

      நாளை நம் கையில் தவழப்போகும் லயன்& லக்கி ஆண்டுமலரை ஆவலுடன் எதிர் நோக்கி.....💞

      Delete
    2. அற்புதம் சகோ.
      அருமையான பதிவு 👏👏👏.
      ஒட்டுமொத்த ஆண்டு மலர்களையும் படிப்பது ஆனந்தம்தான். மகிழ்ச்சி சகோ.

      Delete
    3. லயன்ல கோடைமலர், ஆண்டுமலர், தீபாவளிமலர்னு 3முக்கிய இதழ்கள் எப்போதும் எதிர்பார்ப்பைக் கிளப்பும்...
      நாளை மலரும் 38வது லயன் லக்கி ஆண்டுமலரின் தனி சிறப்பு என்னனு பார்ப்போம்....

      """லக்கிலூக் இடம்பெறம் தொடர்ச்சியான 5வது ஆண்டுமலர் இது."""

      ஒரே நாயகரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட மலரில் இப்படி தொடர்ச்சியாக வெளயாகி சாதனை புரிவதில் இது 2வது தொடர் வரிசை....!!!


      அதிக முறை தொடர்ச்சியாக ஒரு மலரில் இடம்பெற்ற சாதனையாளர் நம்ம டெக்ஸ் வில்லரே.... கோடைமலர்களில் வரிசையாக 10 இதழ்களில் டெக்ஸ் கதைகள் வெளியாகியுள்ளன...

      லக்கி 11முறை தொடர்ச்சியாக ஆண்டுமலர்கள்ல இடம்பெற்று அச்சாதனையை முறியடிப்பாரானு பார்ப்போம்...💕

      Delete
    4. லிஸ்ட் களஞ்சியம் விஜயராகவன் வாழ்க... 🥰

      Delete
  50. 10 வருடங்களுக்கு முன், பீரோவுக்குள் என நீங்க சொல்லும் போது, மினிலயனில் , ஜூனியர் லயனில்,
    வந்த மாதிரி எதாவது பொக்கிஷ புதையல்கள் இருந்தால் தேவலை என ஆர்வமாக உள்ளதுங்க.
    பொதுவாக காமிக்ஸ் என்றால், இது வாங்கலாம் இது வாங்க கூடாது என்றில்லை சார். வந்தால் வாங்கியதால். பிடிக்குது, பிடிக்கலை.
    இந்த 2 விசியம் தான் சார்.
    ஆகவே ஸ்பைடரை தாரளமாக வெளியிடுங்கள் சார். இரட்டை வேட்டையர், மிஸ்டர் Z, ஜான்சில்வர் ,
    இப்படி இருந்தாலும் ஓகே.இவைகள் இல்லாது வேறு இருந்தாலும் சரிங்கசார்.
    நன்றி 🙏

    ReplyDelete
  51. // தானைத் தலைவர்" முன்பதிவு இதழாய் வெளிவந்திடும் பட்சத்தில், நீங்கள் வாங்குவீர்களா - மாட்டீர்களா //

    கண்டிப்பாக வாங்குவேன்.

    ReplyDelete
  52. சினிஸ்டர் செவன் நிச்சயமாக வாங்குவேன்... உடனடியாக இல்லையென்றாலும் நேரம் கிடைத்து படிக்கத் தோன்றும்போது கண்டிப்பாக படித்து விடுவேன்.

    இந்த 'முன்பதிவுக்கு மட்டும்' டிராக் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புதிய கதைகள் எது வந்தாலும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. ///உடனடியாக இல்லையென்றாலும் நேரம் கிடைத்து படிக்கத் தோன்றும்போது கண்டிப்பாக படித்து விடுவேன்.///

      என்னவொரு புத்திச்சாலித்தனமான பதில்!!!

      அதாவது,

      //உடனடியாக இல்லையென்றாலும்///

      (கண்டிப்பா உடனடியால்லாம் படிக்க மாட்டேன்!)

      ///நேரம் கிடைத்து ///

      (க்கும்! அது எங்க கிடைக்கப்போகுது?!!)

      ///படிக்கத் தோன்றும்போது ///

      (தோன்றாதே.. தோன்றாதே..)

      இதுக்குப் பேசாம 'படிக்கப்போறதில்லை'ன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம் நண்பரே! :)

      Delete
    2. ஹா... ஹா.. செம ஈ.வி.

      Delete
  53. டுபுக்கு ஜேக்
    டுபாக்கூர் ஜேக்

    ReplyDelete
  54. "செல்லப்பிசாசு"ஜாக்.

    ReplyDelete
  55. ஸ்பைடர்க்கு டபுள் ok. சினிஸ்டர் செவன், 8, 9 எது இருந்தாலும் போட்டுத் தாக்குங்க. தாங்குறோம்.

    ReplyDelete
  56. ஜூஜுபி ஜாக்
    ஜிலேபி ஜாக்
    ஜக்கு மக்கு ஜாக்
    கைப்புள்ள
    டங்குவார் ஜாக்

    ReplyDelete
    Replies
    1. டோங்கிரி ஜாக்
      போங்கு ஜாக்

      Delete
  57. தானைத்தலைவர் கண்டிப்பாக வேண்டும்.அதே போல ஆர்ச்சி கதையுடன் மிஸ்டர் Z-ன் கதையையும் 'இரும்பு மனிதர்கள்' ஸ்பெஷல் என்று புத்தகம் வரலாமே..?

    ReplyDelete
  58. Triple jack
    Jack sparrow 😉😉
    Little jack
    Trinity jack
    Trouble jack
    Shinny jack
    Pitty jack
    Triple gun jack
    Licky jack

    ReplyDelete
  59. எனக்கு டீல் ஓகே சார்.

    கண்டிப்பாக வாங்குவேன் & படிப்பேன்.

    ReplyDelete
  60. //So சொல்லுங்களேன் - LOSER JACK தமிழில் என்னவாக வலம் வரலாமென்று//
    ம்ம்ம்.... லூசர் ஜாக்?

    மற்றபடி, எங்களை மாங்கு மாங்கென்று பெயரிடச் சொல்லிவிட்டு, இலவச இணைப்பாக இருபத்தியேழு பெயர்களை இப்பதிவின் இடையிடையே அள்ளித் தெளித்திருக்கும், பேர் வைக்கும் பெரியவரே, நீவிர் மனதில் மறைத்து வைத்திருக்கும் மங்கள நாமத்தையே மக்கு ஜாக்கிற்கு சூட்டுவீராக :) 

    //இந்தக் குள்ள கௌபாய் தான்//
    குள்ளன் ஜாக்

    //இடம்பிடித்து வரும் ஒரு ஜாலி சுள்ளான்//
    ஜாலி ஜாக்
    சுள்ளான் ஜாக்

    //வன்மேற்கின் குட்டிச்சிங்கம் //
    குட்டிச்சிங்கம்  ஜாக்

    //இந்த குட்டிப்புயலுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம்//
    குட்டிப்புயல் ஜாக் 

    //அதை விடவும் ஷோக்காயொரு பெயர் கிட்டிடும் பட்சத்தில் சூப்பராய் அதனையே சூட்டி விடலாம் //
    ஷோக் ஜாக்

    அது சரி அதென்ன, comicology.in? அது, ரஃபிக்கின் தளமாயிற்றே?!

    ReplyDelete
    Replies
    1. //எங்களை மாங்கு மாங்கென்று பெயரிடச் சொல்லிவிட்டு, இலவச இணைப்பாக இருபத்தியேழு பெயர்களை இப்பதிவின் இடையிடையே அள்ளித் தெளித்திருக்கும், //

      அட ஆமாம் :-)

      Delete
    2. கார்த்தி, பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல... :D

      Collage பண்ணி பகிர்ந்ததை பெருந்தன்மையுடன் எடி பகிர்ந்திருக்கிறார்.

      Delete
    3. // எங்களை மாங்கு மாங்கென்று பெயரிடச் சொல்லிவிட்டு, இலவச இணைப்பாக இருபத்தியேழு பெயர்களை இப்பதிவின் இடையிடையே அள்ளித் தெளித்திருக்கும் //

      அதே அதே :-)

      Delete
  61. Loser Jack நீங்கள் மனதில் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாகவே இருக்கும் சார்.. கண்டிப்பாக இந்தப்பயலின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  62. Loser jack கோக்கு மாக்கு ஜாக்கு

    ReplyDelete
  63. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஆரம்பத்திலிருந்தே சில பல தங்கள் பதிவுகளில் தங்கள் மேஜை மற்றும் பீரோவில் உறங்கிக் கிடக்கும் கதைகளை துயில் எழுப்பச் சொல்லி வலியுறுத்தியுள்ளேன். அதற்கான வேளை இப்போது தான் புலர்ந்துள்ளது. தங்கள் தேர்வுகள் என்றும் சோடை போகாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு. வரவேற்கின்றேன். இன்றைய கொரோனா தரும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இது மீள தங்களுக்கு உதவும். ஆதரிக்கின்றேன் .நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  64. தானைத் தலைவனை வரவேற்க பேராவலோடு காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  65. அப்படியே அந்த துயில் பயிலும் மற்ற கதைகளையும் இதே (தனி)தடத்தில் முன்பதிவுகளுக்காக பயணிக்க ஆவண செய்யுங்கள் எடியாரே.!

    ReplyDelete
  66. தானை தலைவரை இன்முகத்தோடு வரவேற்கிறோம்.

    ReplyDelete
  67. டியர் எடி,

    ஸ்பைடர் கதைகளை களம் இறக்க ஒரு கேள்வியா?! ரெகுலர் சந்தாவில் இல்லாமல், புக் ஃபேர், விடுமுறை காலங்கள் சமயத்தில் 4 மாதங்கள் முனபதிவுற்கு அறிவித்து விட்டு, இப்படி தூங்கி கொண்டிருக்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். கட்டிய ராயல்டியை காசாக்க, விற்பனைக்கு இடாமல் வைத்திருப்பது பெரும்பான்மை ரசனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் தொழில் நேரத்திக்கு உதவாது. தயங்காமல் முன்பதிவுகளை 4 மாத இடைவெளியில் வரிசையாக அறிவியுங்கள்.

    புதிய குட்டி புயலுக்கு, என்னளவில் பொருத்தமான பெயர்... "சுட்டி ஜக்கு". ஜக்கு என்ற பெயர் அபத்த களஞ்சியங்களுக்கு, மனோரமாவின் 'ஜாம்பஜார் ஜக்கு' பாட்டு காலத்தில் இருந்தே பெயர் போனது என்பதாலும், கூடவே "சுட்டி" என்ற துணைபெயர் - இந்த சின்னவருக்கு சரியாக பொருந்தும் என்று தோன்றுகிறது.

    இன்னொரு சாய்ஸ், "லிட்டில் லூட்டி". நமது லக்கிக்கு மிக அருகாமை என்பதால், இந்த தேர்வு.

    ஜூலை மாத இதழ்களை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  68. ஹைய்யா புதிய பதிவு....

    ReplyDelete
  69. தானைத் தலைவனின் முன்பதிவுக்கான தொகையை குறிப்பிட்டால் இன்றே அனுப்பிட ஏதுவாக இருக்கும் சார்...

    ReplyDelete
  70. தனி தடம் என முன்பதிவுக்கென தனி சந்தாவை கொண்டு வந்திடுங்க சாரே

    ReplyDelete
  71. சூரப்புலி ஜாக் கைப்புள்ள ஜாக் ஸ்பைடர், wel come, ஸ்பைடர் வாங்க, ஸ்பைடரைவரவேற்க நானும்ரெடி

    ReplyDelete
  72. Sinister Seven....Super Tile Sir. Eagerly Waiting to Buy the Spider Book....It Could be any form sir...Book Fair Special or Spider Classics or Regular subscription...(But One small request sir...it will be fine if book size is in Regular Tex Size or Pocket Size. This request is optional only sir...You can proceed as per majority votes)

    ReplyDelete
  73. The following suggestion of Karthik looks good:

    சுள்ளான் ஜாக்

    Another name could be Kaippulla Jack !

    As for SPIDER - yes - 2 copies I will surely take. Please ensure the quality of images come good on print sir. The last one was not upto expectations with respect to image quality.

    ReplyDelete
    Replies
    1. ///சுள்ளான் ஜாக்///

      யெஸ்! நச்சுனு இருக்கு!

      போட்டிக்கான பரிசை எடிட்டரும், கா.சோவும் சரிசமமா பகிர்ந்துக்கட்டும்!

      Delete
    2. நேத்து நைட்டு 9:48க்கே சொல்லியாச்சு குருநாயரே..! 😝

      Delete
    3. ஆமாங்க கிட்! இப்பத்தான் கவனிச்சேன்! ஐயாம் சோ சொரி!

      Delete
  74. ஸ்பைடர் கதையை தாராளமாக வெளியிடுங்கள் முன்பதிவு என்று சொல்லி, மேலும் உங்கள் அலமாரியில் இருக்கும் கதைகளை ஒவ்வொன்றாக இறக்கி விடுங்கள்

    ReplyDelete
  75. அந்த பொடியனுக்கும் கூட பேசாம 'சினிஸ்டர் ஜாக்'னே பேர் வச்சுடுடலாம் போலிருக்கே!!

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா ஸ்பைடர் ஜாக்'னு கூட பேர் வைக்கலாம் தான்! ஸ்பைடர் சாகஸம் பண்ண வரும்போது போட்டிக்கு வந்த பொடியன்றது ஒரு காரணம்.. பயபுள்ளட்ட லைட்டா நம்ம ஸ்பைடரின் சாயல் தெரிவது இன்னொரு காரணம்!

      யாரையும் நம்பறதுக்கில்லே!

      Delete
    2. சினிஸ்டர் ஜாக்...
      நல்லாருக்கே..

      Delete
  76. இன்னிக்கு புத்தகங்களைக் கைப்பற்றப்போகும் முதல் அதிர்ஷ்டசாலி யார்?!!!!!

    (வெளியூரில் ஜாகை என்பதால் கண்டிப்பாக நான் கிடையாது!)

    ReplyDelete
  77. தானைத் தலைவர்: Big No.

    ReplyDelete
  78. பெயர் வைக்கும் படலத்தை நம்ம தலீவர் செயலர் குருநாயகர் போன்ற "இளைஞர்கள்". பார்த்துக்கொள்ளட்டும்.
    நான் குழந்தை ஸ்பைடர் ஐ வரவேற்க கிளம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///குழந்தை ஸ்பைடர்///

      பாத்தீங்களா.. அந்தப் பொடியனின் முகத்தில் ஸ்பைடரின் சாயல் தெரியுதுன்னு நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு!

      Delete
  79. EBF 2022 நண்பர்கள் சந்திப்பு ரத்தானது பெரும் வேதனை..
    ஆனாலும் மருத்துவ நண்பர்கள் கருத்தும் ஏற்புடையதே..

    எடியின் வருகை தேதியின் போது ஒரு விசிட் அடிக்கலாம் மஞ்சள் மாநகருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ///எடியின் வருகை தேதியின் போது ஒரு விசிட் அடிக்கலாம் மஞ்சள் மாநகருக்கு..///

      பொறுங்க பொறுங்க.. எப்படியும் நம்ம மருத்துவர் குழு 'மரத்தடியில் கூடுவது மிக மிக ஆபத்தானது. மரக் கிளைகளில் கொரோனா கூடுகட்டி வாழ்ந்துவருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது'ன்னு அறிக்கை விடத்தானே போறாங்க! 😛😝

      Delete
    2. ஈவி@ 🤣🤣🤣🤣 டாக்டர்களின் பதிலடி காண ஆவலுடன்....

      Delete
  80. சார் ஸ்பைடர் உடனடியாக வெளியிடுங்கள். அதேபோல் மற்ற கதைகளையும் வெளியிடுங்கள் நான் வாங்குவதற்கு தயாராக உள்ளேன்

    ReplyDelete
  81. yes for spider.
    ஸ்பைடரின் sinister seven!
    விரைவில் எதிர்பார்க்கிறேன்.
    -----
    புல்லட் பொடியன்.

    ReplyDelete
    Replies
    1. ///புல்லட் பொடியன்///

      அட!!

      Delete
  82. ஆமாங்க.பதிவுக்கிழமைங்க.

    ReplyDelete
  83. //THE SINISTER SEVEN - முன்பதிவுக்கான ஸ்பெஷல் இதழாய் கணிசமான அவகாசத்தோடு அறிவிப்பின், டீலா ? No டீலா ?//
    ரொம்பவும் லேட்டான அறிவிப்பு... டீல் ஒகே. இதழ் நிச்சய ஹிட் அடிக்க, நீதிகாவலன் ஸ்பைடரையும் சேர்த்தால் செம்ம ஜாலி...ஒரு டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ஆக இதில் என்ன உதவி என்னால் செய்ய முடியுமோ செய்ய நான் ரெடி சார்.

    ReplyDelete
    Replies
    1. //LOSER JACK தமிழில் என்னவாக வலம் வரலாமென்று ?//
      அப்பாவி ஜாக்!

      Delete
    2. அப்பாவி குள்ளன்!

      Delete
    3. ஜாக் தம்பு
      ஜித்தன் ஜாக்

      Delete
    4. சொதப்பல் ஜாக்

      Delete
  84. பொடியன் ஜாக்
    டம்மி ஜாக்
    டகால்டி ஜாக்
    உட்டாலங்கடி ஜாக்

    ReplyDelete
  85. பெயர் வைக்கும் படலம் இந்த பதிவை லோட் மோருக்கு லீட் பண்ணுது... மதியத்துக்குள் 300, 400கமெண்டுனு போக கூடும், ஆசிரியர் சார்...


    மதியத்துக்கு மேல பெயரை அறிவிச்சி போட்டியை நல்லபடியாக முடிச்சு வைச்சுடுங்க...ஹி..ஹி...


    புத்தகங்களை கைப்பற்றியோர் ஏதோச்சும் போட மாலை வழக்கமான சனிக்கிழமை பதிவை வாகாக போடுங்க....அஃப்கோர்ஸ் புதிய இதழ் விமர்சனங்கள், கருத்துகளுக்குனு டேக் உடன்....

    ReplyDelete
  86. ஸ்பைடருக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு...

    ReplyDelete
  87. ஸ் பைடர் வேணும்...

    ReplyDelete
  88. ஒரு ஊரில் ஒரு அழகான நடிகை இருக்காங்க, அழகோட சேர்த்து திமிர் உள்ளவங்க. அவங்களை கடத்த போறதா தகவல் வருகிறது. அவருக்கு மெய்காப்பாளனாக ஈரோடு விஜய் போகிறார். அந்த நடிகை தனது அழகை காட்டி கிறங்கடிக்க பார்க்கிறார் விஜய்க்கு ஆசைதான் என்ன கதைப்படி இவரு தான் இதற்கு எல்லாம் மயங்காதவர் என காண்பிக்க வேண்டும்:-) அப்புறம் இருவருக்கும் இடையில் லடாய் ஏற்பட அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிட் கண்ணன் நடிகையை கிடத்திவிட்டு போய் பணம் கேட்டு கடுதாசி அனுப்புகிறார். கண்ணனால் கடத்தப்பட்ட நடிகை அவரின் அழகில் மயங்கி விடுகிறார் :-)

    இறுதியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள படியுங்கள் டேஞ்சர் டார்லிங்

    உண்மையில் செம டேஞ்சர் டார்லிங்:-)

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறாக தன் திட்டப்படியே லடாய் செய்த நடிகையை கிட்கண்ணரிடமே சாமர்த்தியமாகத் தள்ளிவிட்ட ஈவி அதன்பிறகு நிம்மதியாக வாழலானார்!

      Delete
    2. // ஈவி அதன்பிறகு நிம்மதியாக வாழலானார்! //

      ஆமாம்பா ஆமா :-) சொன்னா நம்புங்க :-). அந்த நடிகை தனக்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டு மனதைத்தேத்திக் கொண்டு இயல்பாக வாழ பழகி வருகிறார் :-)

      Delete
    3. /// அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிட் கண்ணன் நடிகையை கிடத்திவிட்டு போய் பணம் கேட்டு கடுதாசி அனுப்புகிறார்.///

      கிடத்திவிட்டு யாராவது போய் பணம் கேப்பாங்களா PFB..? 😆

      Delete
  89. தானைத் தலைவருக்கு... Evergreen இளவரசி ரசிகர் மன்ற சார்பில்... என்றென்றும் இனிய வரவேற்புண்டு....

    ReplyDelete
  90. Hello sir.. ஜூலை மாத இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் எப்போ???
    கைப்புள்ள ஜாக்...
    ஸ்பைடர் தலைவருக்கு எப்போதும் வெல்கம்தான் sir.....

    ReplyDelete
  91. "விடாக்கண்டன் ஜாக்.". ஸ்பைடருக்கு வெல்கம்.

    ReplyDelete
  92. பார்சலை கைப்ப்ற்றியாச்சே..!!

    ZAGOR அறிமுகம் மற்றும் சுஸ்கி விஸ்கியின் மறுவருகை.. ஆகஸ்டில்..!

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. PFB நம்புவதற்காக போட்டோவும் அனுப்பியாச்சி..😜

      Delete