நண்பர்களே,
வணக்கம். ரொம்ப காலத்துக்குப் பின்னே, தாமதப் பேயின் மறுவருகையுடன் பிப்ரவரி புக்ஸ் இன்றைக்குக் கிளம்புகின்றன ! காரணங்களாய் FFS பணிகள், ஆன்லைன் புத்தக விழா இதழ்களின் தயாரிப்பு etc என்று சொல்லலாம் தான் ; ஆனால் பிரதான காரணி - "வேதாளர் ஸ்பெஷல்" சார்ந்த பணிகளின் பளுவினை நான் சற்றே குறைத்து மதிப்பீடு செய்து விட்டது தான் என்பது புரிகிறது. நேர்கோட்டுக் கதைகள் தானே ; பரிச்சயமான நாயகர் தானே ; black & white இதழ் தானே - 200 பக்கங்கள் தானே ; பார்த்துக் கொள்ளலாம் !! என்றதொரு அசட்டை எப்படியோ உள்ளுக்குள் குடிபுகுந்திருந்ததை மறுக்க மாட்டேன் ! ஆனால் பணிகளைக் கையில் எடுத்த பின்னே தான் ஒரு கானகப் புதுமொழி புரிந்தது :
"நடமாடும் மாயாத்மாவினை light ஆக எடுத்துக் கொள்பவன் பிரகாசமான பல்ப் வாங்கியே தீருவான்"
தவிர, hardcover இதழ் என்பதால் பைண்டிங்கிலும் காலில் வெந்நீரை ஊற்றும் படலம் ஒர்க் அவுட் ஆகிடுவதில்லை ; பொறுமை காத்திட வேண்டியுள்ளது ! Ever so sorry guys for the delay !!
And at this point - ஒரு முக்கிய குறிப்புமே !! தொடரும் காலங்களில் இந்த hardcover புக்ஸ் மீதான லயிப்புக்குக் கொஞ்சம் விடுமுறை தந்திட வேண்டி வரும் போலும் ! எந்த நேரத்தில் 'ஹார்ட்கவருக்கு ரூ.30 to ரூ.35 தான் கூடுதலாய் ஆகுமென்று' சில மாதங்களுக்கு முன்பாக திருவாய் மலர்ந்து தொலைத்தேனோ - தெரியலை ; டிசம்பரில் ஏறியுள்ள செலவினங்களின் கிரயம் நாக்குத் தொங்கச் செய்கிறது ! இறக்குமதி செய்யப்படும் அந்த கனத்த அட்டைகளின் விலைகளில் துவங்கி, அட்டைப்பட நகாசு special effects-களுக்கு நாம் செய்திடும் வேலைகளுக்கான (இறக்குமதி செய்யப்படும்) உட்பொருட்கள் வரை அத்தனையும் ஒரு புது உச்ச விலையினில் குந்திக் கிடக்கின்றன ! இதோ - இந்த MAXI சைசிலான வேதாளர் புக்கின் hardcover அட்டைக்கென ஆகியிருப்பது குறைந்த பட்சமாய் ரூ.50 இருக்கும் !! இன்னுமொரு முப்பதோ, நாற்பது ரூபாய்களை சேர்த்துச் செலவிட்டால், ஒரு ரெகுலர் லக்கி லூக் மாதிரியான இதழையே உங்களிடம் தந்துவிடலாம் எனும் போது இனியும் இந்த hardcover விரயங்கள் தேவையா ? என்ற கேள்வி எழுகின்றது ! Of course - அறிவிக்கப்பட்டுள்ள எல்லா SMASHING '70s இதழ்களும் ஹார்ட் கவரில் தான் வெளியாகிடும் & தொடரவுள்ள TEX க்ளாசிக்ஸ் 2-ம் தான் ! அவை தவிர்த்து இனி திட்டமிடவுள்ள ஸ்பெஷல் இதழ்களுக்கு ஒரு dust jacket மட்டும் போட்டு விட்டால் போதுமே என்று தோன்றியது ! தாக்குப் பிடிக்க இயலா உச்சங்களில் அத்தனை உட்பொருள்களுமே தெறிக்க விட்டு வரும் நிலையில், இயன்ற இடங்களில் எல்லாம் இனி சிற்சிறு சிக்கனங்கள் அத்தியாவசியமாகிடும் folks ! எல்லா விலையேற்றங்களுக்கும், (நம் தரப்பிலான) இன்னொரு விலையேற்றம் பதிலாகிடாது என்பது எனது எண்ணம் ; so இயன்ற சர்க்கஸ் வேலைகளை செய்திட உங்களின் புரிதல் நமக்கு அத்தியாவசியம் !
Of course, நாமிங்கே அஞ்சு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் சட்டையைக் கிழித்துக் கொண்டு திரியும் அதே வேளைகளில் - அசால்ட்டாய் "ரூ.35,000 ஒன்லி ; GST கிடையாது ; பேக்கிங் சார்ஜஸ் கிடையாது" என்று ஸ்டாக்கில் இல்லாத ஸ்பெஷல் இதழ்களில் சகாயமாய்க் கடைவிரிக்கும் கூத்துக்களும் அரங்கேறி வருகின்றன தான் ! கூட்டணி போட்டு வெவ்வேறு பெயர்களில் அவற்றை அவ்வப்போது மொத்தமாய் வாங்கி வைத்து, ஒரு மூணு, நாலு வருஷங்களுக்குப் பின்னே வெளியே எடுத்து விட்டால், விநாயகர் கடாட்சங்கள் சுபிட்சமாய்க் கிடைக்குமென்பதைப் புரிந்திருக்கும் அசாத்தியர்கள் இருந்திடும் வரையிலும் இரத்தப் படலங்களும், டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல்களும், LMS-களும் பணம் காய்க்கும் மரங்களாய் இருந்திடவே செய்திடும் ! இதோ லேட்டஸ்ட்டாய் அந்தப் பட்டியலில் இணைந்திடவிருக்கும் வேதாளர் ஸ்பெஷல் இதழினில், வாசிப்புக்கென புக்கிங் ஆகியுள்ளது எவ்வளவு ? அவரவரது எதிர்கால ஷேம நிதிகளுக்கான முதலீடுகள் எவ்வளவு ? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் !
And தொடரும் நாட்களில் SMASHING 70's பெயரைச் சொல்லி கம்பு சுற்றும் படலங்கள் ஆங்காங்கே அரங்கேறிடுவதைப் பார்க்க நேரிட்டால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் - simply becos ஸ்பெஷல் இதழ்களோடு ஏகப்பட்ட மறைமுக agenda-க்கள் புழங்கிடுவது இப்போதெல்லாம் சகஜமாகியுள்ளது ! 'சந்தா கட்டிப்புடாதீங்க மக்களே ; உங்களுக்கு வேதாளர் மட்டும் வேணும்னா அதை கடைகளில் வாங்கிக்கலாமே ?" என்று கூரையேறிக் கூவி வந்த ஆர்வலர்கள், வேதாளர் புக் மட்டும் தனியா விற்பனைக்கு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பர் என்பதிலுமே no secrets ! Oh yes, வேதாளர் புக் ஏஜெண்ட்களிடமிருந்தும் விற்பனைக்கு வரும் தான் - ஆனால் அவை எல்லாமே, 4 இதழ்களுக்கும் சேர்த்து நம்மிடம் commit செய்திருக்கும் முகவர்களிடமிருந்து மாத்திரமே ! இந்த க்ளாஸிக் நாயகர்களின் தடத்தைப் பொறுத்தவரையிலும், இந்த நடப்பு ஆண்டிற்கு மட்டுமாவது 'all or nothing' என்றே முகவர்களுக்குமே வலியுறுத்தி வந்திருக்கிறோம் ! இது வரைக்கும் ஆர்டர் செய்துள்ள முகவர்கள் அதற்கேற்பவே முன்பதிவுகள் செய்துள்ளனர் and, இனி தொடரவுள்ள ஆர்டர்களுக்குமே அதுவே template ஆக இருந்திடும் ! Maybe இந்த SMASHING '70s அட்டவணையிலுள்ள இதழ்களை முகவர்கள் / வாசகர்கள் தேர்வு செய்து மட்டும் வாங்கிட எண்ணும் பட்சத்தில் அது இந்த அக்டொபரில் சாத்தியமே ! 4 இதழ்களும் வெளியான பின்னே, ஸ்டாக் உள்ளவற்றினுள்ளிருந்து தெரிவு செய்து வாங்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் நிச்சயமாய் இருக்கவே செய்திடும் !
அப்புறம் இன்னொரு மாற்றமுமே - விற்பனையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் விதமாய், இம்மாதத்தினில் !! "FFS மற்றும் பொங்கல் விடுமுறைகளின் போது வெளியான TEX க்ளாசிக்ஸ் இதழ்களை விற்றுக் கொள்ள கொஞ்சமேனும் அவகாசம் இருந்தால் தேவலாமே ; பின்னாடியே அடுத்த புது டெக்ஸ் இதழ் தொடர்ந்திடும் பட்சத்தில் எங்கள் விற்பனை திணறிடும்..... and ஏற்கனவே வேதாளர் எனும் மாஸ் நாயகரின் ஸ்பெஷல் இதழும் இம்மாதம் வெளியாவதால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் அவசியம் !" என்பது முகவர்களின் பரவலான அபிப்பிராயமாக இருந்தது. So இம்மாதத்து டெக்ஸ் மார்ச்சுக்கென மாற்றம் காண்கிறார் ; ஆகையால் பார்சலில் டெக்ஸைக் காணோமே - என்று தேடாதீர்கள் ப்ளீஸ் ! Smashing '70s சந்தாவிலோ ; ஜம்போ சீசன் 4 சந்தாவிலோ இல்லாத நண்பர்களுக்கு இம்மாதம் ஒரேயொரு ப்ளூ கோட் இதழ் மட்டுமே கூரியரில் இருந்திடும் ! Sorry guys ; நியாயமானதாய்த் தோன்றிய விற்பனையாளர்களின் கோரிக்கைக்கு இசைவு சொல்ல நேரிட்டதை புரிந்து கொள்வீர்களென்று fingers crossed !!
And இனி வரும் பொழுதுகளில், இடைச்செருகலான ஸ்பெஷல் இதழ்களை "முன்பதிவுகளுக்கு மட்டும்" என்று கொண்டு சென்றுவிடுவது தான் இதற்கான தீர்வென்றுபடுகிறது ! நடுவாக்கில் உட்புகும் இதழ்களை சமாளிக்க முகவர்கள் திண்டாடுவதைப் பார்க்கும் போது சங்கடமாக உள்ளது ! Next in line - "சுஸ்கி & விஸ்கி" + "உயிரைத் தேடி" தான் எனும் போது அவற்றை எவ்விதம் கையாள்வதென்ற மகா சிந்தனை ஓடிவருகிறது ! யோசிக்கணும்....தெளிவாய் யோசிக்கணும் !
Moving on to brighter stuff, இம்மாதத்து கலர் இதழ்கள் சகலமும் சும்மா தீயாய் மிளிர்வதையும் நாளை நீங்கள் ரசிக்காது போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு ! அண்டர்டேக்கர் ரொம்ப, ரொம்ப சமீபத்தைய ஆக்கம் எனும் போது அந்த லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பின்னிப் பெடல் எடுக்கிறது ! அதே போல ப்ளூகோட் பட்டாளத்தினர் கண்ணைப் பறிக்கும் கலரில் லூட்டியடிக்கின்றனர் ! கதையிலுமே கொஞ்சம் 'கலர்' உண்டு என்பதை நாளை பார்க்கலாம் ! சமீபத்தைய Blue Coats கதைகளுள் இது அட்டகாசமானதொரு addition என்பேன் !
And கறுப்பு-வெள்ளையினில் இருந்தாலுமே 'வேதாளர் ஸ்பெஷல் 'பளிச்' என்று வந்திருப்பதாகப்பட்டது எனக்கு ! Oh yes - நமக்கு 'வெடிக்க மறந்த வெடிகுண்டு' கூட செமையாய்த் தெரிவதுண்டு தான் ; ஆனால் "வே.ஸ்பெ." நிஜமான collector's edition ஆக மிளிர்வதாய்ப்பட்டது ! க்ளாஸிக் கதைகளெனும் போது இவற்றை இந்திரஜாலிலோ ; ராணியிலோ ; வேறெங்கோ நீங்கள் பார்த்து இருக்கக்கூடும் ; but நம்மளவில் அவையெல்லாமே புதியனவே ! அந்த maxi format-ல் வள வள வசனங்களின்றி, ஓவியர் Sy Barry-ன் சித்திரங்களில் ஒரு மெகா தொகுப்பாய் இது ரொம்ப காலத்துக்கு நிலைத்திருக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது எனது நம்பிக்கை ! And more importantly - பத்து வயதை அனுசரித்த உங்கள் இல்லங்களது ஜுனியர்களுக்கு இவை அற்புதமானதொரு வாசிப்புத் துவக்கப் புள்ளியாய் அமைந்திடக்கூடும் ! சிம்பிளான மொழிநடையில் ; நேர்கோட்டுக் கதைகளை ; ஒரு ஜாம்பவான் நாயகரோடு ; பசங்களை ஈர்க்கும் கானகப் பின்னணியில் சொல்லிடும் இந்த முயற்சியினை உங்களது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ? And வேதாளரின் இதழோடு ஒரு சின்ன சர்ப்ரைஸ் + ஒரு போஸ்டர் + ஒரு bookmark + இலண்டனுக்குப் போகவொரு இலவச டிக்கெட்டும் இருந்திடும் ! So பொட்டி, படுக்கையெல்லாம் கட்டி வைத்து ரெடியாக இருங்கோ guys ! பாஸ்போர்ட்டே இல்லாங்காட்டியும், ரேஷன் கார்டையோ ; மண்ணெண்ணெய் கார்டையோ தூசி தட்டி எடுத்து வைத்துக் கொண்டால் கூட ஓ.கே. தான் ! நாளைய பொழுதில் தெரியும் நான் சொல்வதன் பொருள் !
Bye for now !! பார்சல்களை வாங்கிய கையோடு நாளைக்கு சந்திப்போம் guys ; have a great day !! See you around !!
அருமை அருமை சார் 🙏
ReplyDeleteNaan 2
ReplyDelete3rd( first time)
ReplyDeleteI am in 3rd Position
ReplyDelete4. Th. ( FirstTime)Dekshnamoorthy
ReplyDeleteவந்துட்டேன் :-)
ReplyDeleteWaiting for smashing Friday...
ReplyDeleteChennai book dates also got finalised..
May be Uyirai thedi for exhibition?! As it is well known story ?
👌🏻
ReplyDeleteI am waiting for Chennai Book Fair
ReplyDeleteமாலை வணக்கம்
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteஇந்த ஸ்பெஷல் இதழ்களில் hardcover வந்தால் நல்லது. வராவிட்டால் பரவாயில்லை என்பதே என் கருத்து.
பழைய மொழி என்றாலும் சொல்லி வைப்போம்.
ReplyDeleteலேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வருகிறார் வேதாளர்.
சார் வேதாளர் ஒரு மாதம் தள்ளி வருவது போல மற்ற s70 புத்தகங்களும் தள்ளி போகுமா ஒரு மாதம்?
சார் போனெலி குழுமத்தில் இருந்து க்ராபிக் நாவல்களாக கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வந்த புத்தகங்கள் ஏன் நின்று போனது என்று நினைவில் இல்லை சார். ஒவ்வொன்றும் வித்தியாசமாக அளவான விலையில் நன்றாக இருந்ததாக நினைவு. அது மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளதா சார்.
லாக்டௌனின் முகாரி தினங்களின் போது - கொஞ்ச காலத்துக்கேனும் அழுகாச்சிகள் வேண்டாமே என்ற பொதுவான தீர்மானத்தின் காரணமாய் உள்ளே வைக்க நேர்ந்த கதைகளை வெளியே எடுக்க இன்னும் தீரலை கிருஷ்ணா ! கைவசமே 3 கதைகள் உள்ளன !
Deleteஉண்மை சார், ஆனால் அவைகளில் நல்ல த்ரில்லர்கள் கூட இருந்தது அவை நல்ல லையிட் ரீடிங் செய்ய உதவியது. அவ்வாறு இருந்தால் தக்க சமயத்தில் முயலுங்கள் சார்.
Deleteவந்தாச்சு
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்.
ReplyDelete🙋♂️🙋♂️🙋♂️
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteலண்டனுக்கா...
Deleteஙே...
வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஹார்ட் கவர் லக்சுரிகளை 250 பக்கங்களை விட குறைவான இதழ்களுக்கு தவிர்த்துவிட வேண்டியது தான். வேறுவழி இல்லை.
Deleteசூப்பர் சார்....காலைல அள்ளிடுவோம்
ReplyDeleteலண்டன்????
ReplyDeleteவணக்கம்
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeleteபுத்தகத் திருவிழா ஸ்பெஷல் எதும் உண்டுங்களா ஆசிரியரே
ReplyDeleteஇருக்கு ஸ்பைடர் எத்தனுக்கு எத்தன்
Delete//எத்தனுக்கு எத்தன்// ரூபாய் 50/- இதழ்களே இன்னமும் ஸ்டாக் அவுட் ஆகாமல் உள்ளன... ஆசிரியரா பார்த்து ஏதாவது செய்யட்டும்.
DeleteHard cover for specials is mandate sir....50 rs is not too much expense compare to special issues...
ReplyDeleteயெஸ்.....
Deleteசார் நீங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் அது என்னவென்றால் ஹாட் கவர் கிடையாது என்பதுதான். எனக்குமே ஹாட் கவர் சுத்தமாக பிடிக்கவில்லை. ஹாட் கவர் எந்தவிதத்திலும் கதை வாசிப்பை மேம்படுத்துவது இல்லை.
ReplyDeleteHard cover is not to Improve Story Line sir but to enhance the book life and safety....
Delete29வது
ReplyDelete//தாக்குப் பிடிக்க இயலா உச்சங்களில் அத்தனை உட்பொருள்களுமே தெறிக்க விட்டு வரும் நிலையில், இயன்ற இடங்களில் எல்லாம் இனி சிற்சிறு சிக்கனங்கள் அத்தியாவசியமாகிடும் folks ! எல்லா விலையேற்றங்களுக்கும், (நம் தரப்பிலான) இன்னொரு விலையேற்றம் பதிலாகிடாது என்பது எனது எண்ணம் ; so இயன்ற சர்க்கஸ் வேலைகளை செய்திட உங்களின் புரிதல் நமக்கு அத்தியாவசியம் !//
ReplyDeleteஉங்களின் இக்கட்டான நிலை புரிகிறது சார் அன்போடு ஏற்று கொள்கிறேன்.
Hi..
ReplyDeleteUyiraithdi, Suski wisky ellam Hard cover Iruntha thaan sir Nalla irukum...we r ready to bear Extra cost for Hard cover...Dont give up sir...
ReplyDelete100% true...
Delete+1000...
Delete+1
Delete+1
Delete+1
DeleteEdi Sir..நான் ரெடி லண்டன் போகறதுக்கு.ஆனா அதுக்கு முன்னாடி டெங்காலி காட்டுக்கு போயிட்டு வந்துடறேனுங்க.
ReplyDeleteLondon Flight ah Miss Pannidama Seekirama Bengali Tour Mudichutu vanthudunga ji...😀🤩😀
Deleteபொண்ணு நல்லா இருந்தா லெஹெங்காவில் வந்தாலும் சரி நைட்டியில் வந்தாலும் சரி தாலி கட்ட கசக்குமா என்ன?
ReplyDeleteகூந்தல் இருந்தது அள்ளி முடிச்சோம்
இப்ப இல்ல;விசனப்பட வேண்டியதில்லை
ஹார்ட் கவர் #
எப்போவுமே இருந்தது இல்லை சார் ; ஹி...ஹி..ஹி..!!
Deleteவிஜயன் சார் @ சிவகாசி குசும்பு :-)
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// ஆகையால் பார்சலில் டெக்ஸைக் காணோமே - என்று தேடாதீர்கள் ப்ளீஸ் //
ReplyDeleteஎன்ன கொடுமை சாரே இது...!!!
// இனி திட்டமிடவுள்ள ஸ்பெஷல் இதழ்களுக்கு ஒரு dust jacket மட்டும் போட்டு விட்டால் போதுமே என்று தோன்றியது ! //
ReplyDeleteகடினமான முடிவு...
இலண்டனுக்குப் போகவொரு இலவச டிக்கெட்டும் இருந்திடும்
ReplyDeleteநீங்க லண்டனுக்கு போகும்போது இந்த டிக்கட்டை வைத்து என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க டியர் எடி .. 😉😉
ஊர சுத்திப்பார்த்த மாதிரியும் ஆச்சு என் மனம் விரும்பும் உங்களோட கொஞ்ச நாள் இருந்தமாதிரியும் ஆச்சு .. ❤💛💙💚💜
உங்களுக்கு வெகுமதி கொடுத்தா அவருக்கு தண்டனை தரீங்களே! இது நியாயமா??
Deleteஅட, நண்பர்களோடு பொழுதைக் கழிக்கக் கிட்டிடும் வாய்ப்புகளில் ஏது சார் தண்டனை ?
Delete48th
ReplyDelete/// இலண்டனுக்குப் போகவொரு இலவச டிக்கெட்டும் இருந்திடும் ///
ReplyDeleteஜானி in லண்டன்.
புக்ஃபேர் ஸ்பெஷல் ரீபிரிண்ட் உண்டா சார்???
ReplyDeleteஅதாவது தங்க கல்லறை ( பழைய மொ.பெ ) இல்லைன்னா , புரட்சி தலைவன் பிரின்ஸ் , அதுவும் முடியாதுன்னா நெப்போலியன் பொக்கிஷம் ( கிளாஸிக் ) இப்படி ஏதாவது ????
மூணாவதா, புதூசா ஒரு மொழிபெயர்ப்பு ரெடி பண்ணுவோமா சார் தங்கக் கல்லறைக்கு ?
Deleteஹாஹா...நம்ம ஸ்டீல் கிளா பொன்ராஜ் சாரை மொழிபெயர்ப்பாளரா போட்டுறலாம் சார் ;)
Deleteதங்கக்கல்லறை முதல் வண்ண மறுபதிப்பு இங்கே பழைய மொழிபெயர்ப்புக்காக சூடாக விவாதிக்கப்பட்ட முதல் விவாதம் என்று நினைக்கிறேன்... சரிதானே, செயிண்ட் satan நண்பரே?😊
Deleteவேதாளருக்காக waiting...
ReplyDeleteSMASHING 70’s இற்காக ஆவலுடன் waiting . நடமாடும் வேதாள மயாத்மா இனை தரிசிக்க உள்ளதை எண்ணி பூரிப்பாக உள்ளது. “களமெங்கும் காதல்” அட்டைபடம் அசத்தல். அதுவும் ரூபி மணமகனாக இருக்க ஸ்கூபி கத்தியைத் தீட்டி நம்பியார் போல வில்லன் லுக் விடுவது அருமை. அண்டர்டேக்கர் உட்பக்க பிரீவியூ - சித்திரங்கள் உயிரோடமாக உள்ளன.
ReplyDeleteP.Rajasekar
ReplyDeleteWhat is the meaning of LMS
Lion Magnum special
Deletehttp://tamilcomics-soundarss.blogspot.com/2014/08/125-lion-magnum-special.html?m=1
Deleteமேலும் அறிய
This comment has been removed by the author.
Delete
ReplyDeleteஒரு வானவில்லைத் தேடி..
மிகவும் கவித்துவமான தலைப்பு..
( கதை ஏற்கனவே படித்தது..அற்புதம்தான்)
முதல் வானவில் கிறிஸ்துவ வேதாகமம் கூற்றின்படி அதற்கு முன் மழை என்பதே இல்லை என்பதாகவும் 40 இரவுகள், 40 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்து நிற்கும் தருவாயில் நோவாவின் முன் ஜெகோவா தோன்றி மழையினால் ஏற்பட்ட ஊழிப்பெருவெள்ளம் ஒட்டுமொத்த உலகின் உயிரினங்களை அழித்தது போல் இனி நேராது என வாக்களித்து அதன் அடையாளமாய் தோன்றியதுதான்
இந்த வானவில் என்பதாகும்.
நல் நம்பிக்கையின் அடையாளம்.
நேர்மறை எண்ணங்களின் தூண்டுதல்.
Wizard of oz படத்தில் ( 1939) நடிகை ஜூடி கார்லண்ட் பாடும் somewhere over the rainbow பாடல் உலகப்பிரசித்தமானது..
தனது கனவுகள் மெய்ப்பட வல்ல, தனது துயர நிலை நீங்கி அமைதி நிலை கொள்ள தோதான ஓரிடம் வானவில்லின் அருகில் இருப்பதாய் நாயகி பாடும் பாடல்...யூடுயூப்பில் இருக்கிறது.
( இதே பாடலை 2010 களில் பாடி பல லட்சம் இசைப்பிரியர்களின் மனதை வென்றெடுத்த ஒரு பாடகரும் உண்டு)
கதையிலும் "வானவில்லைத் தேடித்தான் புறப்பட்டேன்" என அக்ளி பர்ரோ பாடுவதாக உள்ளது.
ஆனால் சினிபுக்கில் வெளியீட்டு எண் 9 wagon train எனத் தலைப்பிட்ட இதன் மூலத்தில்
அக்ளி பர்ரோ
Violets are blue
Roses are red
Who made the wagons move
Its the brave lucky Luke who led
என்று உள்ளது..
எனவே வானவில்லைத் தேடி என்பது எடிட்டரின் சிந்தனையில் உதயமானதாக இருக்க வேண்டும்
ஒரு அறிந்திராத வசிப்பிடம் நோக்கி கனவுகளுடன் பிரயாணம் மேற்கொள்ளும் ஒரு குழுவின் கதை என்பதால் இத்தலைப்பு பொருத்தமானது மட்டுமல்ல எழில்நயம் மிக்கதும் கூட..
செம எடிட்டர் சார்..
/கதையிலும் "வானவில்லைத் தேடித்தான் புறப்பட்டேன்" என அக்ளி பர்ரோ பாடுவதாக உள்ளது./
Deleteபக்கம் 46
சார்....பத்தாண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும், அந்தப் பணிநாட்கள் நினைவில் உள்ளன !
Deleteதொடர்ந்த வருடங்களில் "ஓக்லஹோமா " ; ஒரு பட்டாப் போட்டி" ; "பந்தம் தேடிய பயணம்" ' "புத்தம் புது பூமி வேண்டும்" போலான புது வசிப்பிடம் தேடிடும் Wild West கதைகளை வெளியிட்டிருக்கிறோம் தான் ! So லக்கியின் இந்த Wagontrain கதையினைப் பின்னாட்களில் கையிலெடுக்க நேர்ந்து, அதற்கான பெயரிட வேண்டியிருந்திருப்பின், கொஞ்சம் யதார்த்தத்துக்கு நெருக்கமான பெயரைத் தேர்வு செய்திருப்பேனோ, என்னவோ ! But பத்தாண்டுகளுக்கு முன்னே ஒட்டுமொத்தமாய் ஒரு புது வாழ்க்கையைத் தேடித் போகும் அந்த ஜனத்தின் கதை எனக்கு ரொம்பவே exotic ஆகத் தென்பட்டது ! So தலைப்பும் கொஞ்சம் வித்தியாசமாய் அமைந்து போனது !
அப்புறம் அந்தக் கவிதைகள் எல்லாம், ஹி...ஹி...ஹி..!! பொழிப்புரை சொல்ல பாட்டு கிளாஸ் முடித்த பின்னே செயலர் வருவார் சார் !
வேதாள மாயாத்மாக்கீ ஜே..!
ReplyDeleteவேதாளருக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteலண்டனா... இங்க பக்கம் தான் சார்.. சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க.
ஹார்ட் கவர் 250 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகங்களுக்கு நன்றாக இருக்கும். இட நெருக்கடியை கணக்கில் கொண்டால் TPB தான் நன்று. உங்கள் முடிவை வரவேற்கிறேன்.
வேதாளருக்காக waiting...நாளை எனக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா சார்
ReplyDeleteசார் எனது மரியாதை கலந்த கண்டனமாக இதை பாவித்துக் கொள்ளுங்கள்.,
ReplyDeleteஇது குறை கூறும் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்..,
Point No 1
2022 ல் மாதம் ஒரு டெக்ஸ் என்பது நமது நிலைப்பாடு, இதை அட்டவணை வெளியிடும் போதே உறுதியும் செய்தாயிற்று. சென்னை புத்தக விழா தள்ளிப்போன (திட்டமிடப்பட்ட) நாளிலேயே ஆன்லைன் புத்தக விழாவையும் வைத்திருந்தால் இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். இதை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் இரண்டு டெக்ஸ் கதைகளை ஏதாவது ஒரு மாதத்தில் குண்டு புக்காக வெளியிடலாம். ஆனால் மாதம் ஒரு டெக்ஸ் என்ற எதிர்பார்ப்பு கனவை கலைத்து விட்டீர்களே சார்.
Point No 2
ரெகுலர் தடம், நமது அச்சாணி என்று கருதப்படும் சந்தா புத்தகங்களுக்கு முன்னுரிமை அவசியம். அனைத்தும் நமது ஆக்கங்களே என்றாலும், நீங்கள் மேலே குறிப்பிடது போல் ரெகுலர் சந்தா மட்டும் கட்டியிருக்கும் வாசகர்களின் நிலை சங்கடம் தான். முகவர்களுக்காக வாசகர்கள் வருந்த வேண்டி உள்ளது.
மேலும் இவ்வகை ஸ்பெசல் இதழ்கள் ரெகுலர் தடத்தை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை. ஆனால் தங்களின் துல்லிய திட்டமிடலையுன் மீறி இது போல் அவ்வப்போது நடப்பது சற்று வருத்தமளிக்கிறது. உதாரணம் smashing 70's அறிவித்தபோது நீங்கள் கூறியது யாதெனில் "இத்தடம் வந்து கொண்டிருக்கும் எந்த தடத்தையும் பாதிக்காது, மேலும் இவை வராவிட்டாலும் அந்த இடத்தை எதை கொண்டும் நிரப்பப் போவதும் இல்லை."
ஆனால் smashing 70's வேலைப்பளுவும், பட்ஜெட்டும் ஜம்போவை 2022 ல் இல்லாமல் செய்து விட்டதே. கிராபிக் நாவலுக்கும் மூடுவிழா போட்ட பிறகு வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட ஜம்போவாவது ஆறுதலாக இருந்திக்கும்.
மெல்ல மெல்ல பழமையும், மறுபதிப்புகளும், புதிய முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் வேட்டு வைத்து விடுமோ என்று அஞ்ச தோன்றுகிறது.
ஒருவகையில் பார்த்தால் வேதாளருக்காக டெக்ஸ் தள்ளிப்போவது போலவும் தெரிகிறது.
மற்றபடி நானும் நாளைய பார்சலுக்காக waiting. நன்றி
Beg to differ sir...!
Deleteசில தருணங்களில் உடும்பென ஒரு நிலைப்பாடினில் தொடர்வதும் அவசியம் ; பல வேளைகளில் சூழலுக்கேற்ப flexible ஆக இருத்தலும் முக்கியம். ரூ.1275 விலைக்கான ஜனவரியின் துவக்கம் + ரூ.550-க்கான பொங்கல் ஸ்பெஷல் இதழ்கள் - ஆக மொத்தம் ரூ.1825 என்ற ஒற்றை மாதத்து பட்ஜெட்கள் தினசரி நிகழ்வுகள் அல்லவே ! So அப்படியொரு மாதத்தினைத் தொடர்ந்திடும் மாதத்தினில், ஒரு அணியினரின் நஷ்டங்களைத் தவிர்க்க கொஞ்சமே கொஞ்சமாய் விட்டுக் கொடுத்துப் போவதில் தப்பில்லை என்பதே எனது நிலைப்பாடு ! நாம் இயங்குவது ஆகச் சிறிய வட்டத்தினில் எனும் போது ஏஜெண்ட்களோ ; வாசகர்களோ - அனைவரது நலன்களுமே, பராமரிக்கப்பட வேண்டியதொன்று ! So ஒரு நிலைப்பாட்டிலிருந்து தவறியதாய் இருப்பதன் மூலம், இன்னொரு தரப்பின் கஷ்டங்களை லேசாய் மட்டுப்படுத்திட சாத்தியமாகின், why not ?
அப்புறம் ஜம்போ..கிராபிக் நாவல் ...வேதாளர் என்ற உங்களின் ஆதங்கங்களையும் புரிந்திட முடிகிறது ! சின்னதாய் ஒரேயொரு விஷயம் நண்பரே : ஜம்போ 4 சீசன்களாய் நிறைய topnotch ஆல்பங்களோடு பயணிக்கிறது தான் - மறுக்க இயலாது ! வித்தியாசமான வாசிப்புக்கு வழி கோலுகிறது - மறக்க இயலாது தான் !
ஆனால்.........
ஜம்போவிற்கான சந்தாக்களின் எண்ணிக்கை SMASHING '70s சந்தாக்களில் சரி பாதியே என்பது தான் யதார்த்தம் !
என் கையிலுள்ள கிராபிக் நாவல்களில் முடங்கிக்கிடக்கும் தொகை மாத்திரமே நெருக்கி 3.5 லட்சங்களுக்கானது !! விதை நெல்லில் இத்தனை பணத்தை முதலீடு செய்த பின்னரும் அதனை நடவுக்கு கொண்டு செல்ல வழியின்றிப் போயின், அதனில் கவலை கொள்ள வேண்டிய முதல் ஆசாமி நானன்றி வேறு யாராக இருக்க முடியும் நண்பரே ?
Truth to tell, இந்த வண்டியின் டிரைவர் நானாக இருக்கலாம் தான் ; ஆனால் எந்த ரூட்டில் பயணிக்க அநேகர் விரும்புகின்றனரோ, அந்த ரூட்டில் பஸ்ஸை விட்டாலொழிய , காலி பஸ்ஸில் நானும், நீங்களும், இன்னும் சொற்ப நண்பர்களும் மட்டுமே பயணித்த கதையாகிப் போகும் ! கிராபிக் நாவல்ஸ் என்ற ஜானர் எனக்கு ரொம்பவே இஷ்டமானது தான் ; வம்படியாய் கடந்த 4 ஆண்டுகளாய் அவற்றுள் நண்பர்களை லயிக்கச் செய்ய பிரயத்தனங்கள் செய்து வந்திருக்கிறேன் தான் ! ஆனால் 48 மாதங்களுக்குப் பின்னரும் அந்த லயிப்பு என் வற்புறுத்தல்களின் பொருட்டு மட்டுமே துளிர் விடும் என்பதாக இருப்பின், நான் செய்திடக்கூடியது தான் என்னவாக இருக்க முடியும் ?
நேற்றைக்குக் கூட ஒரு அசாத்தியமான black & white கிராபிக் நாவலை வரவழைத்து, தற்சமயமாய் அதைத் தான் வாசித்தும் வருகிறேன் சார் ! புரட்டும் ஒவ்வொரு பக்கத்தோடும், "இதைத் தமிழுக்குக் கொண்டு வந்தே தீரணும் !" என்ற ஆசை அலையடிக்கிறது தான் ! எப்போது ? - எவ்விதம் ? - எதனில் ? என்ற கேள்விகள் தான் மிரட்டுகின்றன !
Deleteஎன்ன சார் பண்ணுவது எங்கள் ரசனை முற்றிலும் மாறிவிட்டது. அதற்கு உங்கள் பெருமுயற்சியும், தேடல்களுமே காரணம். பொருமையாக காத்திருக்கிறேன். தங்களின் நிலையும் புரிகிறது. மிக்க நன்றி சார்.
Delete//நேற்றைக்குக் கூட ஒரு அசாத்தியமான black & white கிராபிக் நாவலை வரவழைத்து, தற்சமயமாய் அதைத் தான் வாசித்தும் வருகிறேன் சார் ! புரட்டும் ஒவ்வொரு பக்கத்தோடும், "இதைத் தமிழுக்குக் கொண்டு வந்தே தீரணும் !" என்ற ஆசை அலையடிக்கிறது தான் ! எப்போது ? - எவ்விதம் ? - எதனில் ? என்ற கேள்விகள் தான் மிரட்டுகின்றன !//
Deleteவித்தியாசமான கதை களங்கள் எல்லோரும் விரும்புவது தானே சார்.
புதிய கதைகளை வாகான ஒரு தருணம் பார்த்து களம் இறக்குங்கள்.
அதே போல நீங்கள் ஒரு வித்தியாசமான/த்ரில்லர் கதையை (மருத்துவர் சம்பந்தமான கதை என்பதாக ஞாபகம்) இன்னமும் வெளியிடாமல் வைத்து உள்ளீர்கள் அது சம்பந்தமாக அறிவிப்பு வருமா??!!
Point 1. இந்த மாச புக்குகளை படிக்கவே ஒரு அ=மாதம் போதாது ஜி. டெக்ஸ் எங்க போகப்போறார். அடுத்த மாசம் வந்துடுவார்.
DeletePoint2. நம்மாளாவது கிராபிக் நாவல்/புதுமையை வேணாம்னு சொல்றதாவது. தொல்ல தாங்காம தான் Smashing 70யே. இதுக்கே விலை அதிகமானாதுனால, இப்ப கிராபிக் நாவல் கொஞ்சம் ரெஸ்ட். அவ்ளோதான். அடுத்த சீசன்ல வந்துடும்.
அண்டர் டேக்கர் மெரட்ட...ப்ளூ கோட்ஸ் கலகலக்க...வேதாளர் கலக்க நாளை வரும்
ReplyDeleteஅண்டர் டேங்கர் இதுவரை வந்த சித்திரங்கள் தூக்கிச் சாப்பிடும் போல உள்ளதே சார்...நாளை ஏக எதிர்பார்ப்பான நாள்
Deleteஸ்பெஷல் இதழ்களுக்கு hardcover வேணும் சார். அதுவும் உயிரைத் தேடி ஒரு கலெக்ஷன். கட்டாயம் hardcover வேணும். பாத்து பண்ணுங்க சார்.
ReplyDeleteசீனாக்காரர்கள் பார்த்துப் பார்த்துப் "பண்ணுகிறார்கள்" !! சிக்கலே அது தான் !
Deleteவணக்கம் வேதாளர் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteபழைய இந்திரஜால் காமிக்ஸ் அனைத்தும் கலர் பிரின்டிங் இல் வந்ததாக ஞாபகம்
ReplyDelete. சின்னவயசில் சேர்த்தது இன்னும் என்னுடைய லைப்ரரியில் உள்ளது
இந்த மாதம் வரவுள்ள மூன்று புத்தகங்களும் ஒவ்வொரு வகையில் எனக்கு பிடிக்கும். கொண்டாட்டம் ஆரம்பம்:-) எடுடா மேளம் அடிடா தாளம் :-)
ReplyDeleteமாதம் ஒரு டெக்ஸ் கண்டிப்பாக உண்டு என சத்தியம் செய்ததாக ஞாபகம்.ஃ😁😁😁😂😂🙏🙏
ReplyDeleteகவலை வேண்டாம் சென்னை புத்தகக் திருவிழாவில் நமக்கு ஸ்டால் கிடைத்தால் டெக்ஸை சர்ப்ரைஸாக களமிறக்க வாய்ப்புகள் அதிகம் :-)
Deleteசெய்வன தில்லாச் செய் - மேரி கேரிஸன் சர்பிரைஸ் இந்த மாதம் :-)
ReplyDeleteநண்பர்களது பெட்டி போட்டோக்கள் வந்த வண்ணம் உள்ளது, பெரும்பாலும் இரண்டு போட்டிகள் இருப்பது பார்க்க முடிகிறது அனைவரிடமும் 😀 சர்ப்ரைஸ் இதழ் பற்றியும் அறிய முடிந்தது. பெட்டி, அட்டைபடம் போஸ்டர் அனைத்துமே நன்றாக உள்ளது. எனது பெட்டி இன்றே கிடைக்க பிரார்த்தனை தொடர்கிறது 😀
ReplyDeleteசார் ஒரு பொதுவான கருத்து சமீப கிளாசிக் மறுபதிப்பு பற்றி கிளாசிக் ஜேம்ஸ் இப்பொழுது வேதாளர் ஆகியோர் கதைகளின் பெயரில் ஒரு ஈர்ப்பு இல்லையோ என்று தோன்றுகிறது எனக்கு மட்டும் தானா தெரியவில்லை.
அதுவே கதைகளை படிக்கும் ஆர்வத்தை குறைப்பது போல உள்ளது.
செய்வன தில்லாய்ச் செய் புத்தகம் தாங்க. லண்டனில் நடக்கும் கதைங்க இது.இது தான் சர்ப்ரைஸ் லண்டனுக்கான பயணச்சீட்டு.
ReplyDeleteஹார்ட் கவர் நோ ப்ராப்ளம் சார்..அறிவித்த இதழே சாதாரண அட்டையில் வந்தாலும் எனக்கு ஓகே தான்..( எனக்கு எப்பொழுதுமே ஹார்ட் கவர் அட்டையில் விருப்பமில்லை தான் :-)
ReplyDelete******
மாதம் ஒரு டெக்ஸ் தொடங்கிய மறுமாதமே தள்ளி போவது வருத்தமே..
******
மற்றபடி இதழ்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
"****
Wow,
ReplyDeleteGot books so early, Vedhalar inside papers are rustic and feels good, One more new hero as gift is a surprise, Not but not least the box cover is printed ang looks great, I dont know how i am going to find space to save all these boxes. All together a happy month.
S.Mahesh
DeleteChennai.
ஆசிரியர் சார் மன்னிக்க வேண்டுகின்றேன். சில ஸ்பெஷல் இதழ்களுக்கு மற்றும் டெக்ஸ்வில்லரின் கிளாஸிக் இதழ்களுக்கு ஹார்ட்கவர் படு பாந்தமாகவும் அழகாகவும் படிக்க ஏதுவாகவும் இருக்கிறது. ஹார்ட் கவர் தொடர வேண்டுகின்றேன். கூடுதல் விலை தரத் தயாராகவும் உள்ளேன் சார்.
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteபுத்தகங்களைக் கைப்பற்றியாச்சு. கலர் டப்பியிலேயே வேதாளரைப் பார்த்தபோது கொரியர் ஆபீஸிலேயே ஊய்ய்ய் என்று விசிலடிக்காத குறைதான்! உள்ளே பிரித்தால் வேதாளரின் அட்டைப்படமாகட்டும், அந்த நகாசு வேலைகளாகட்டும், அந்த புத்தக சைஸ் ஆகட்டும், அந்த உள்பக்க க்ளாசிக் பேப்பர்களாகட்டும் - 'இதெல்லாம் நிஜமாவே நடக்குதா.. இல்ல கனவு கினவு காண்றேனா?' என்ற உணர்வை ஏற்படுத்தியது! புத்தகத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு நான் எதிர்பார்த்ததை விடவும் பலமடங்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை சார்! தமிழ்காமிக்ஸ் வரலாற்றின் ஒரு அரும்பெரும் பொக்கிஷமாக இந்தப் புத்தகம் திகழப் போவது உறுதியிலும் உறுதி!!
100 ரூபாய் மதிப்புள்ள 'செய்வன தில்லாய் செய்' புத்தகத்தை சந்தாதாரர்களுக்கு இலவசமாய் அளித்திருப்பது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்!! அன்புக்கு நன்றிகள் சார்!!
அண்டர்டேக்கரும், ப்ளூகோட்ஸும் ஒரு ரகளையான வண்ண விருந்தென்பதை முதல் புரட்டலிலேயே புரிந்துகொள்ள முடிகிறது! அபாரமான பிரின்டிங் தரம்!!!
எலியப்பாவின் அட்டைப்பட டயலாக்கே சிரிக்க வைத்திடுகிறது. சீனியரின் தொடரைப் படித்திடவும் ஆவல். என் முதல் வாசிப்புக்கு இந்தப் புத்தகம் தான்!!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமாய் களமிறங்கியிருக்கும் வேதாளரால் நம் நண்பர்கள் பலருக்கும் இதுவொரு மறக்கமுடியாத மாதமாக அமையப்போவது உறுதி சார்!!
அருமையாக எழுதி இருக்கீங்க விஜய் :-)
Deleteஎலியப்பா படிச்சாச்சு!
ReplyDeleteஇந்தவாட்டி எலியப்பாவுக்கு நையாண்டி வசனங்கள் சற்று குறைவு என்பதாலோ என்னமோ கதைநகர்வும் சுமாராகவே இருந்தது!
சீனியர் எடிட்டரின் 'அந்தியும் அழகே' தொடரில் முத்து காமிக்ஸ் உதயமாகக் காரணமாய் அமைந்த இரண்டு ஃபீளீட்வே கதைகள் பற்றிச் சொல்லியிருக்கிறார் - சுவாரஸ்யம்! ஆனால், இரண்டாவது பக்கத்தில் எடிட்டிங்கில் பிரச்சினையா அல்லது என் புரிதலில் பிரச்சினையா என்று தெரியவில்லை - ஏனோ அவ்வளவு சுவாரஸ்யமாய் இல்லை! ஒரு தொடரின் ஒரு பாகத்தைப் படித்து முடிக்கும்போது இயற்கையாய் எழ வேண்டிய 'அடுத்து என்ன நடக்குமோ?' என்ற எண்ணம் இதில் எழவில்லை! ஒருவேளை இன்னும் ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதாலாகக் கொடுக்கப்பட்டால் இன்னும் நன்றாகத் தொடரை நடத்திச் செல்ல முடியுமோ என்னவோ?!! என்னைக் கேட்டால் 'கானகக் கூத்துகள்' பக்கங்களில் ஒன்றிரண்டைக் குறைத்துக் கொண்டு, சீனியர் எடிட்டர்(அடித்து விளையாடுவதற்)க்கான பக்கங்களைக் கூட்டுவது சுகப்படுமென்று தோன்றுகிறது! ஓவர் டு எடிட்டர்!
அது வந்துங்க சார் ...வெல் ...என்ன சொல்ல வர்றேன்னா...யு நோ வாட் ஐ மீன்...அதாச்சும் ...எலியப்பா புக்கில் முதலில் திட்டமிடல் என்பதே மருந்துக்கும் நஹி !
Deleteஎலியப்பா எல்லாமே 2 அல்லது 4 பக்க குட்டி சாகசங்களே எனும் போது இஷ்டத்துக்கு ஒட்டிக் கொள்ளலாம் ; வெட்டியும் விடலாம் ! அப்புறமா கானகக் கூத்துக்கள் சகலமுமே one pagers தான் ! குட்டீஸ் கார்னரும் அதே அதே !
அவ்விதமிருக்க பக்க நெருக்கடி நேரக்கூடுமோ ? படங்களாகப் போட்டு கட்டுரைக்கு முட்டுக் கொடுக்க அவசியங்கள் நேருமோ ? நேருகிறது என்றால் காரணம் என்னவாக இருக்கக்கூடும் ?
/// நேருகிறது என்றால் காரணம் என்னவாக இருக்கக்கூடும் ? ///
Deleteகொஞ்சம் புரியுதுங்க எடிட்டர் சார்!
ReplyDelete"ஏங்க ! தியேட்டர் ரெடி பண்ண சொல்லட்டுமா?" என்றாள் மனைவி.
அவள் குரலில் பொங்கி வழிந்த நையாண்டியை பொருட்படுத்தாமல் சிஸர்ஸை கையாளுவதில் கவனமாய் இருந்தேன்..
"பாத்து! பாத்து ! யுரீட்டர் டேமேஜ் ஆயிடப் போகுது " என்றாள் மறுபடியும்..25 வருஷமாய் சிஸேரியன் செக்ஷன் பண்ணிக் கொண்டிருப்பவளிடம் மல்லுக்கட்ட நம்மால் ஆகாது என மௌனமாக வேலையிலாழ்ந்தேன்..
அப்பாடி! பெட்டிக்கு சேதாரம் இல்லாமல் உள்ளே இருந்த " பேபியை " வெளியே எடுத்தாகி விட்டது..
" ஆம்னியாட்டிக் மெம்பரேன் இருக்கு.
பனிக்குடத் தண்ணிதான் இல்ல " என்ற நையாண்டிக் குரல் மீண்டும் கேட்டது...(புத்தகங்கள் மேலே இருந்த பிளாஸ்டிக் கவரை பாத்துதான் )
நிஜமாக வேதாளர் பெட்டியை கருப்பை மாதிரிதான் நடத்த வேண்டியதா போச்சு..
போக
வேதாளர் மேக்கிங் அபாரம்..சைஸ் பிரமாண்டம்...
எல்லா புக்ஸையும் மேலோட்டமா புரட்டிப் பாத்தாச்சு..
மேகி கேரிசன் முதலில்....
செம செம உங்கள் மருத்துவ உதாரணத்துடன் :-)
Deleteபோன மாதம் படித்த பாடத்தின் effect சார் ! பேபியை கூரியர்வாலாக்களிடமிருந்து காப்பாற்றிடவே அந்த amniotic sac இந்தவாட்டி !
DeleteThanks so much sir - this time also they have scribbled with marker pen but your plastic cover saved the box !!!
Deleteசெனா அனா :)))))
Delete//போன மாதம் படித்த பாடத்தின் effect சார் ! பேபியை கூரியர்வாலாக்களிடமிருந்து காப்பாற்றிடவே அந்த amniotic sac இந்தவாட்டி !//
Deleteஅற்புதமான பார்சல் சார் இம்முறையும்... அப்படியும் பெரிய ஊசியால் துளை போட்டுள்ளனர் இந்த கூரியர் மக்கள்...
செனா அனா 🤣🤣🤣🤣
Deleteஎடிட்டர் சார். ப்ளாஸ்டிக் கவருக்கு நன்றி.
புத்தகம் வந்து சேர்ந்தது....
ReplyDeletePhantom is just astonishing.
அற்புதமான making...
ஒவ்வொரு Page ல் தங்களின் கடின உழைப்பு தெரிகிறது ..Thanks a ton sir.
வேதாளர் புத்தகம் வந்து சேர்ந்தது. அட்டைப்பெட்டியே கண்ணைப் பறிக்கிறது.
ReplyDeleteமற்ற நண்பர்களுக்கு வேதாளர் பார்சலில் ரெகுலர் சந்தா புக்ஸ் வந்துள்ளது போலிருக்கிறது, ஆனால் எனக்கு வரவில்லை sir. சந்தா எண் குறிப்பிட்டு லயன் office வாட்சப் எண்ணில் பார்சாலை போட்டோ எடுத்து அனுப்பி விவரம் கூறியுள்ளேன். எனக்கு ரெகுலர் புக் அனுப்பப்பட்டு விட்டதா, இல்லை லயன் ஆபிஸில் மிஸ்ஸிங் ஆகி விட்டதா என்று ஒரே குழப்பமாக உள்ளது.
Got it :-) Will unfurl tomorrow !!
ReplyDeleteஅட்டைப்பெட்டி எதிர்பார்க்காதது கண்ணைப் பறிக்கிறது
ReplyDeleteவேதாளரின் தயாரிப்பு தரம் சும்மா அள்ளுது.
திக்கான தாளின் தரம் சும்மா பட்டைய கிளப்புது and முத்து கொண்டாட்டம் தொடருது.
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்குது.
அப்புறம்...
ReplyDeleteஒரு சின்ன அவா வேதாளர் கதைகளும் ஒவ்வொரு ஆண்டும் வந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பு தான்.
எனக்கு இன்று பார்சல் வந்துவிட்டது. மாயாத்மாவையே இரசித்துக் கொண்டு இருக்கிறேன் இன்னும் பார்சலை உடைக்கவில்லை.
ReplyDeleteGot books..first thought color la mattuk vanthurunthaa...
ReplyDeleteInnamum semaya irunthurukkum
எனது இல்லத்திற்கு இன்று வேதாள மகாத்மா விஜயம் செய்துள்ளார். முதன் முதலாக 1964 ஆம் ஆண்டு இந்திரஜால் காமிக்ஸ் மூலம் அறிமுகமாகிய வேதாளரை
ReplyDeleteஇத்தனை ஆண்டுகள் கழித்து மிகச்சிறந்த முறையில் தயாராகி உள்ளதைக்காணும்போது goosebumps இந்த வயதிலும் ஏற்படுகிறது.
அடுத்த ஆண்டு 2023 ல் smashing 70's ல் நான்கு ஆல்பங்களிலும் வேதாளரே இடம் பெறுவாராயின் மகிழ்ச்சிக்கு அளவேது?
காத்திருக்கும் க்ளாஸிக் நாயகர்கள் மூவருமே முத்திரை பதிக்கவுள்ளனர் சார் - அதில் சந்தேகமே வேண்டாம் ! அதிலும், ரிப் கிர்பி & காரிகன் கதைகள் very classy!
Deleteமுதலில் எடுத்த புத்தகம் மேகி கேரிசன்
ReplyDeleteவாழ்க்கையில் தோற்று போய் ஓய்ந்து போகாமல் நம்பிக்கையுடன் எதிர்நீச்சலடிக்கும் அத்தனை கதைகளும் என்னை கவர்ந்திழுக்கும் தூண்டில் முள் தான்.
ஏனோ அந்த புத்தகம் எடுத்து படிடா என்று எனக்கு கட்டளையிட்டது. மொத்தம் 25 நிமிடங்கள் 48 பக்கங்களை படிக்க..
சர சர என்று பக்கங்கள் புரள, கதை என்ன என்று புரிவதற்குள் கடைசி பக்கமும் வந்து சேர்ந்திருந்தது...
இது கதையா இருக்குமோ
அது கதையா இருக்குமோ
என்று யோசித்துக் கொண்டு
இந்த கதைக்கு கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று யோசிக்க விடாமல் இந்த கதையை நகர்த்திக் கொண்டு சென்ற விதம் அருமை.
கதை நடுவில் அந்த நாட்டின் மக்களின் வாழ்வியலையும் சொல்வது கதைக்கு எப்பொழுதும் உரம் சேர்க்கும்.
எனக்கு பிடித்திருக்கிறது.
Good to hear this!
Deleteஇரண்டாவது புத்தகம் எலியப்பா
ReplyDeleteபுத்தகத்தை முழுவதும் படிக்க 10 நிமிடங்கள் பிடித்தது.
எலியப்பா simply rocks
கானகக் கூத்துகளும் ரசிக்கும்படியாகவே உள்ளது.
சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
கடைசி பக்கத்துக்கு குட்டீஸ் கார்னர் பெரியவர்களுக்கே சவால் விடும் வகையில் தான் இருக்கிறது.
பதில்களை அதே பக்கத்தில் தராமல் அடுத்த இதழில் இந்த இதழின் விடைகளை சொன்னால் interesting கா இருக்குமோ என்று யோசனை.. பதில் கிடைக்கலேன்னா நம்ம குட்டீஸ் கண்டிப்பா answer பாத்துட்டு போங்காட்டம் ஆடுவாங்க (பல நேரங்களில் பெரியவர்களும் அதே தான் செய்றாங்க)
சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே இந்த தடவை தொடங்கிய வேகத்திலேயே முடிந்து விட்ட feeling.. ஆனால் என்னுடைய நினைவலைகளை மீட்டி சென்றது.. கையில் காசில்லாமல் ரயில் நிலைய ஹிக்கின் போதம்ஸில் ஹார்டி பாய்ஸ் nancy drew புத்தகங்களை ஏக்கங்களுடன் பார்த்து சென்ற நினைவுகள் தோன்றி மறைந்தது.
இன்றும் பல சினிமாக்களை பார்க்கும் பொழுது அந்த லொகேஷன்களை பார்க்க எப்ப போவோம் என்ற எண்ணம் வராமல் இருந்ததில்லை. ஆனால் தேடிப் போய் பார்க்க காமிக்ஸ் கதைகளில் வரும் லொகேஷன்கள் கூட உதவும் என்று சீனியர் எழுத்துக்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன். யாருக்குத் தெரியும் என் retirement வயதில் நானும் இதே போல் தேடி தேடி சென்று பார்ப்பேன் எனும் என் கற்பனை நிஜமாக்கிடலாம் என்ற நம்பிக்கையை ஐயாவின் எழுத்துக்கள் தருகின்றது.
நன்றி சீனியர் சார்
பார்சல் இல்லத்தில் வந்து விட்டதாக தகவல்..
ReplyDeleteமாலை அலுவலகம் முடிந்து இல்லம் திரும்பியவுடன் பொக்கிஷத்தை ரசிப்பதே வேலை..:-)
வேதாளர் - வாரிசைத் தேடி..!
ReplyDeleteபடிச்சா..ச்சூ..
இப்பவே 100 ரூபாய் ஸ்நாக்ஸ் காலி!
(ஒரு கதைக்கு 100 ரூபாய்னா புக்கை விட டபுள் ரேட் ஆகிடுமே!)
டைம் மிஷினில் ஏறி 30 ஆண்டுகள் பின்னோக்கி போன மாறி ஒரு பிலிங்கு!
தயாரிப்பு மட்டுமல்லாமல் கதையும் அருமையாகவே உள்ளது!
களமெங்கும் காதல் - இது வேற லெவல் காமெடி கதையப்பா! இந்த முறையும் ப்ளூ கோட் காமெடியில் கலக்கி விட்டார்கள்!
ReplyDeleteஎலியப்பா - நீ கலக்கு தல! செம செம! குழந்தைகளுக்கு செம வாசிப்பு அனுபவம் கிடைக்கும்!
///இந்த முறையும் ப்ளூ கோட் காமெடியில் கலக்கி விட்டார்கள்///
Deleteயெஸ்! இப்பத்தான் படிச்சு முடிச்சேன்! சிரிச்சு முடியல!! :)
மேகி கேரிசன் : SODA பாணி யில் நச்சுன்னு ஒரு கதை ...அட்டகாசமான புது வரவு.
ReplyDelete**** களமெங்கும் காதல் *****
ReplyDeleteபதுங்கு குழியினுள் சிவனே என்று சீட்டு விளையாடிக்கொண்டிருந்த நம் கார்ப்பொரல் ஸ்கூபியை வடக்கத்தியர்களின் பீரங்கிக் குண்டு ஒன்று சின்னாபின்னப்படுத்திவிட, இடது காலில் பலத்த காயத்துடன் ராணுவ மருத்துவக் கேம்ப்பில் உயிருக்கு அல்லாடுகிறான்! 'அடக்கடவுளே! ஆரம்பப் பக்கத்திலேயே ஸ்கூபியை போட்டுத்தள்ளிட்டாங்களே.. இனி கதையில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுதோ?' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே.. போர்களத்தில் காயமடையும் வீரர்களுக்கு நர்ஸ் வேலை செய்து உதவ அங்கே வந்து இறங்குகிறது ஒரு தன்னார்வ இளம் பெண் குழு! அதன் பிறகு அங்கே நடப்பதெல்லாம் ரகளையின் உச்ச கட்டம்!!
இம்முறையும் ஸ்கூபியோ, ரூபியோ நம்மைச் சிரிக்க வைக்கவில்லை. மாறாக, கதையில் வரும் மற்ற மாந்தர்களும், கதையின் கோணங்கித்தனமான சூழ்நிலைகளுமே நம்மை பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்திருப்பது ஒரு வினோதம் தான்!
என்னைக் கேட்டால் இதுவரை வெளியான ப்ளூகோட் கதைகளில் இது டாப்-3யில் இடம் பிடிக்குமென்பேன்!
சித்திரங்களில் தெறிக்கும் பச்சை நிறங்களும், பிங்க் நிற உடைகளும் கண்களுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி!!
களமெங்கும் காதல் - செம ஜாலியான ஒரு வாசிப்பு அனுபவம்!
10/10
இன்னைக்கு ஒபிஸ் விடுமுறையா நண்பரே உங்களுக்கு, புத்தகம் வந்த உடனே விமர்சனம் போட்டுடீங்களே!!!!
Deleteஹிஹி! கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டீங்களே?!! :)))
Deleteகாலையில் ஓபீஸ் பக்கம் போய் எட்டிப் பார்த்துட்டு உடனே வீட்டுக்கு ஓடியாந்துட்டேன்! :)
இதுக்குதான் கவர்மென்ட் வேலைல இருக்கனும்ங்கிறது..இல்லையா செயலரே
Delete:-)
ஒரு விஷயம் கவனிச்சீங்களா நண்பர்களே அட்டையில் வேதாளம் பெயருக்கு பின்புறம் அந்த முகமூடி படம் லைட் கலர்ல சும்மா பட்டைய கிளப்புது.
ReplyDeleteயெஸ்! கவனிச்சேன்!!
Deleteஅடுத்த ஈரோடு புத்தக விழா சந்திப்புல கம்பேனி சார்பில் அப்படியொரு மாஸ்க் நம்ம எல்லாருக்கும் வழங்கப்பட்டால் செமயா இருக்காது?!! உள்ளே போடும் சமாச்சாரத்தை அன்னிக்குமட்டும் பேன்ட்டுக்கு மேலே போட்டுட்டு வந்திட்டோம்னா இருநூறு மாயாத்மாக்கள் இம்மீடியட்டா ரெடியாகி ஈரோட்டையே கதிகலக்கிப்புடமாட்டோம்?!!
//உள்ளே போடும் சமாச்சாரத்தை அன்னிக்குமட்டும் பேன்ட்டுக்கு மேலே போட்டுட்டு வந்திட்டோம்னா இருநூறு மாயாத்மாக்கள் இம்மீடியட்டா ரெடியாகி ஈரோட்டையே கதிகலக்கிப்புடமாட்டோம்?!!//
Deleteஅங்கே வர்றவா எல்லாம் தெறிச்சு ஓடாத வரைக்கும் நன்னா இருக்கும்.
எடிட்டர் சார்..
ReplyDeleteவேதாளர் புத்தகத்தில் அந்த ப்ளூ கலர் லங்கோடு பார்ட்டி நீங்கதானா சார்?!! செம செம!! :)))
ஹ்ஹஹ்ஹா...
Deleteஅவரிடத்திவ் ஈரோட்டு பூனையை லங்கோட்டில் நினைத்தேன்...முடியல சிரிச்சி ...
சார் ஒரு சந்தேகம். மேகி கேரிசன் வேதாளர் இதழுக்கு இலவசமா???
ReplyDeleteஆமாங்க நண்பரே.
Deleteநன்றி சரவணரே
Deleteஜொலிக்கிறார் வேதாளர், முத்தாளர்... உண்மையில் இதுவே முத்து 50 ஸ்பெசல் போல பிரம்மாத சர்வதேச தரத்துடன்... இரட்டிப்பு திக்கான (120 gsm???) தரமான காகிதத்தில் கருப்புவெள்ளை பக்கங்கள்... அற்புதமான matt லேமினேஷனில், ஜொலிக்கும் சில்வர் foiling உடன் nightingale diary போல கலக்கும் அட்டைப்பட ஓவியம், முதல் முறையாக மெகா சைசில் (demi/Letter சைஸில்) பட்டையை கிளப்பும் ஹார்ட் cover வேறு லெவல் (என்ன ஆனாலும் ஹார்ட் கவர் கைவிட வேண்டாம் சார்)... பிளஸ் அற்புதமான அழகான ஒரு 48 பக்க முழுவண்ண புக் இணைப்பு...
ReplyDeleteமொத்தத்தில் இந்த புக்கை விட்டு நகராமல் மேஜிக் செய்து விட்டார் ஆசிரியர்.
இப்போதைக்கு எலியப்பா படித்தேன், சிரித்து முடியவில்லை...
வாழ்க முத்து காமிக்ஸ் அண்ட் டீம்..
இப்ப கொஞ்சம் செலவு அதிகம் ஆனாலும் நீண்ட நாள் பாதுகாப்புக்கு ஹார்ட்கவர் மிகவும் உதவுகிறது. அதனால 200+ பக்க புத்தகங்களுக்கு ஹார்ட் கவர் மிகவும் நல்லது.
ReplyDeleteExactly - also for the same reason Lucky Luke please publish as 4 in 1 hard covers pleesh !
DeleteLucky 4 in 1 will be an awesome collector edition.
Deleteதாமதமாக வந்தாலும் தரமாக வந்து இருக்கு வேதாளர் புத்தகம்.
ReplyDeleteவேதாளர் புக் மேக்கிங் அபாரம். மேக்சி சைஸ், தரமான தாள், ஹார்ட் பவுண்ட் என அருமையாக உள்ளது.
ReplyDeleteஅட்டைப்பெட்டி மேல் பாலிதீன் கவர் செம்ம ஐடியா... இம்முறை கொரியர் கிறுக்கல்கள், ஸ்டிக்கர்கள் ஏதுமின்றி பளபளப்புடனே கைக்கு வந்து சேர்நதுவிட்டது.
***** செய்வன தில்லாய் செய் *****
ReplyDeleteஇலவச இதழ் என்பதாலும், முதல் புரட்டலில் உட்பக்க சித்திரங்கள் சற்று சுமாராகத் தோன்றியதாலும் கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன். பிறகு படிக்கத் தொடங்கிய சில கணங்களிலேயே 'இது ஜாலியான வேற லெவல்' என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன். கதை எதை நோக்கி நகர்கிறது என்ற சந்தேகம் நடுநடுவே லேசாக எட்டிப்பார்த்தாலும், 'லேடி டிடெக்டிவ்' மேகி கேரிஸனின் ரொம்பவே இயல்பான, ரசிக்கும்படியான வசனங்கள் ஒரு நெருங்கிய நண்பனைப் போல கையைப் பிடித்து இழுத்துச் சென்று வழிநெடுக கிச்சுகிச்சு மூட்டியபடியே பயணிக்க வைத்தது!
பக்கத்துக்குப் பக்கம் நையாண்டியான, நகைச்சுவை இழையோடும் வசனங்கள் மிகமிகமிக அதிக கவனக்கோரல்களைப் பெறுகின்றன! முதல் பக்கத்தின் முதல் வரியில் 'வேலைக்குப் புறப்படற முதல் நாளில்தானா வயிறு சரியில்லாத யானையாட்டம் வானத்துக்கு ஊற்றித்தள்ளத் தோன்றணும்?' என்ற வசனமே கற்பனையைக் கிளறிச் சிரிப்பு மூட்டுகிறதென்றால், "பெரிசு! மணி 12ஐ தாண்டிடுச்சு.. பர்த்டே பார்ட்டி முடிஞ்சது! வீட்டிலே போய் பாட்டிம்மாவைக் கட்டிக்கோ!" வரியைப் படித்தபோது பத்து நிமிடங்களுக்கு விடாமல் சிரித்துக் குலுங்கினேன்!
"ரைட்டு! ராஜகுமாரன்களா.. உங்களை வேட்டையாட ரெடியாகிட்டேன். எல்லாப் பயல்களும் இந்தப் பப்புக்கே வந்துப்புட்டா என் வேலை சுலபமாகிடும்!" டயலாக்கை படித்தபோதும் அப்படியே! ஒரு இளம் பெண்ணின் மனவோட்டத்தை எத்தனை இயல்பாய், நகைச்சுவையோடு வெளிப்படுத்த முடிந்திருக்கிறது!!!
"குப்பை கொட்ட வேண்டிய இடத்திலே குப்பையாச்சும் பொறுக்கலாம் முதல்லே!" - எத்தனை ரசணையான மொழிமாற்றம்!!! அபாரம் எடிட்டர் சார்!! ரொம்பவே ரசிச்சு செஞ்சுருக்கீங்க!!
மேற்கண்ட வசனங்கள் மட்டுமல்லாது, இதுபோல வசனங்கள் வழிநெடுகவே - பக்கத்துக்குப் பக்கம்!!
முதல் கதையிலேயே பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டாள் மேகி!!
ஐ லவ் மேகி!!
10/10
நிஜத்தைச் சொல்வதனால் கண்ணான கண்ணே-க்கு அப்புறமாய் ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து பேனா பிடிக்கும் வாய்ப்பு இது சார் ! மாடஸ்டி, லேடி S , ஜூலியா போன்றோர் க்ரைம் பார்ட்டிஸ் எனும் போது அங்கே பெரிதாய் வேற்றுமை காட்டிட அவசியப்பட்டதில்லை ! ஒரு ரெகுலர் டிடெக்டிவ் ; ஆக்ஷன் ஹீரோவுக்கு எழுதுவது போலவே அவர்களுக்கு வரிகளைத் தந்து விடலாம் . ஆனால் இங்கோ சமாச்சாரம் வேறு ! மேகி ; ஷீனா - என இரு இளைஞிகள் ஜாலியாய் வலம் வரும் போது ஓரளவுக்காவது அவர்களை கண் முன்னே கொணர்ந்திட வேண்டும் வசனங்களில் !
Deleteஅந்த வகையில் இந்த ஆல்பம் ஒரு சவாலே ! :-)
செம ஈவி! நானும் படிச்சிட்டேன்...
Deleteநமக்கு மேகின்னா அந்த காட்டான் கூட்டம் தான்ஞாபகம் வந்தது...
Delete///செம ஈவி! நானும் படிச்சிட்டேன்...///
Deleteஇப்படிச் சொல்லி அப்படியே எஸ்கேப் ஆயிடாம, விமர்சனத்தைப் போட்டுத்தாக்குங்க செனா அனா - உங்க பாணியில!
நானும் படிச்சிட்டேன்... the fastest ever that I have read Tamil Comics !
Deleteஐ லவ் மேகி too - 3-4 albums per year would be good - so breezy !!
சார் என்ன சார் இது ..?!
ReplyDeleteஇப்படி அசத்தி விட்டீர்கள் ..அடேங்கப்பா போன முறை போலவே பார்சல் கவரே ஒரு பொக்கிஷமாய் மாறி விட எப்பொழுதும் அசால்டாக பார்சலை பிரிக்கும் நான் இந்த முறை கத்திரிக்கோலை கொண்டு அட்டைப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பொறுமையாக பிரித்து உள்கவரை வெளியே எடுத்தேன்..( பின் காலத்தில் அந்த பெட்டியின் மதிப்பு எங்கோ செல்லும் என்ற முன்ஜாக்கிரதையே..)
ஆமா எனக்கு ஒரு டவுட்டு சார் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை ப்ளுகோட் அட்டைப்படமும் சரி ,அண்டர்டேக்கரின் அட்டைப்படமும் சரி தடவினால் இந்த வழுக்கு வழுக்குகிறதே ..எப்பொழுதும் இப்படித்தானா இல்லை இந்த மாதம் இப்படியா என ஓர் சந்தேகம் சார்.இரு இதழ்களின் அட்டைப்படமும் சரி ,தரமும் ,உள்பக்கங்களின் தரமும் சரி வேற லெவலாக மின்னுகிறது..
எலியப்பா ,வேதாளர் போஸ்டர் புக் மார்க் என இந்த மாதமும் சந்தா நண்பர்களுக்கு செம கொண்டாட்டம் தான் .
இறுதியாக வேதாளரை எடுத்து பிரித்தேன்..வாவ் என்று தன்னால் மனம் ஓலமிட்டது ..அட்டைப்பட நகாசு வேலைகள்..அட்டைப்படம் சித்தரமே பட்டையை கிளப்புகிறது எனில் புத்தகத்தை பிரித்தால் ஐயோ என்ன அட்டகாசமான சித்திரத் தரத்தில் ,என்ன அசத்தலான தாளின் தரத்தில் என ஒவ்வொரு பக்கமாக பிரிக்க பிரிக்க பரவசம் ..ஒவ்வொரு கதையின் முன் வேதாளரின் குறிப்பு செம சார்.
ஒண்ணே ஒண்ணு உறுதி சார் ..முகப்புத்தகத்தில் சிலசமயம் இந்த இதழின் விலைகளை பற்றி ஒவ்வொரு கதைக்கு இவ்வளவு என போட்டால் என கணக்கெல்லாம் போட்டு இருந்தார்கள் .ஆனால் இப்படிப்பட்ட தரத்தில் இப்படி ஒரு சித்திரக்கதை புதையலை வேறு மொழியில் வந்தாலும் சரி ,வேறு வழியில் வந்தாலும் இவ்வளவு சிறப்பான விலைக்கு எங்குமே கிடைக்க நூறு சதவீதம் வாய்ப்பில்லை சார்..இதில் பெரிய அளவில் ஒரு வண்ண சித்திரக்கதை இதழை வேறு இலவசமாக அளித்துள்ளீர்கள் ..எப்படி சார் இப்படி கலக்கி எடுக்க முடிகிறது உங்களால் மட்டும்.
அப்புறம் முக்கியமான பின்குறிப்பு சார் ..காலையில் தான் மேலே எனக்கு ஹார்ட்கவர் எல்லாம் பிடிப்பது இல்லை என தெரிவித்து இருந்தேன் ..உண்மையே ஆனால் இந்த வேதாளரின் இவ்வளவு பெரிய மெகா அளவில் ,அட்டகாசமான தரத்தில் இப்படிப்பட்ட ஓர் இதழுக்கு ஹாரட்கவர் தான் சரியாக வரும் என தோன்றுகிறது சார்..இது ஆசையே .சூழல்களை கொண்டு முடிவு எடுத்தாலும் ஓகே தான் சார்..
அனைத்து இதழ்களையும் இதுவரை புரட்டி ,புரட்டி ரசித்து தான் வந்து உள்ளேன் ..இம்மகிச்சியை தெரிவத்து விட்டே இதழ்களை படிக்க எடுக்க இருக்கிறேன் சார்.
முதலில் எலியப்பா வுடன்.
போன மாசம் போலவே இந்த மாசமும் கொண்டாட வைத்து விட்டீர்கள் என தெரிவிக்க மறந்து விட்டேன் சார்..சூப்பர்..டெக்ஸ் இல்லா குறை கூட இப்பொழுது தெரியவில்லை..
ReplyDeleteபார்சல்......
ReplyDeleteசெம்ம வெயிட்டு.....😍😍😍😍
ஈடன் தீவுக்கு ஒரு வாக் போயிட்டு அப்பாலிக்கா வாரேனுங்..😍😍😍😍😍
எப்போ தனித்தீவு எல்லாம் வாங்குனீங்க :-)
DeleteExcellent preparation... Your effort is seen in each and every pages, including the packing, box etc., The quality is at the best..Keep rocking Sir...This is truly special for fifty years celebration... This edition will be another feather in Muthu's cape...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete'' சினம் கொண்ட வேதாளரின் முன்னே மதயானையும் வெருண்டோடும்'' _கானகப் பழமொழி. படிக்கும்போது உண்டான உணர்வு சத்தியமாய் இன்னதென்று சொல்ல முடியவில்லை. முதல் கதை வாரிசைத்தேடி அருமையான கதைத்தேர்வு. 53 வருடங்களுக்கு முந்தையகதை புராதன நெடி எங்கும் தென்படவில்லை. லாஜிக் ஓட்டைகளும் எங்கும் இல்லை. மிகவும் விறுவிறுப்பு. வேதாளரின் அதிரடிக்கான ஓவியங்கள் வேதாளரின் "தனி முத்திரை". 70's நிச்சயம் அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் மொத்தத்தில் வேதாளர் செமஹிட் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎந்தக்காலத்திலும் கெட்டவர்களை நல்லவர்கள்அடித்து நொறுக்கும்போதுநமக்குவரும் கொண்டாட்டம் கோடிரூபாய்கொடுத்தாலும் கிடைக்காது. உ_ம் இன்றளவும்எங்கவீட்டுப்பிள்ளை. இதோ வேதாளரின் வளர்ப்பு ரெக்ஸ் வில்லனை பந்தாடும்காட்சி. அதிலும் கணவன் அடிவாங்குவது தெரியாமல்மனைவி சிறுவனை அடிக்காதீர்கள் என்றுகதற உள்ளேயோ ரெக்ஸ் வெளுத்துக்கட்ட வேதாளர்டா என்று கத்தத்தோன்றுகிறது. இதெல்லாம் அக்மார்க் டெக்ஸ் ட்ரேட் மார்க் அல்லவா. ஐய்யோமறந்துட்டனே டெக்ஸுக்கு சீனியரல்லவா வேதாளர். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவணக்கம் விஜயன் sir.. வேதாளர் ஸ்பெஷலின் முதல் கதையான 'வாரிசை தேடி' வாசித்து விட்டேன். கதையின் ஆரம்பம் முதலே பரபர வேகம். என்னதான் வேலை பளு, வாசிப்பு சோம்பல் இருப்பினும் மதியம் பார்சலை பார்த்ததும் ஒருவித பரவசம் தொற்றிக் கொண்டது உண்மை. இதோ முதல் கதையை வாசித்து மகிழ்வுடன் கருத்திட ஓடி வந்து விட்டேன்.
ReplyDeleteகதையில் ரெக்ஸ் அந்த தடியனை புரட்டி எடுக்கும் காட்சிகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைத்தது. (ஒரு படத்தில் கதவை சாத்திக் கொண்டு கோவை சரளா வடிவேலுவை மொத்தி எடுத்துக் கொண்டிருப்பார் வெளியே வடிவேலு அம்மா மருமகளைப் போட்டு இந்த அடி அடிக்கிறானே என்று பதறும் காட்சி நினைவில் வந்து போனது.)
மிகவும் ரசிக்க தக்க எழுத்து நடை மற்றும் வேதாளர் கானக பழமொழிகள் என அனைத்தும் மிகவும் அருமைங்க sir. புத்தகத்தின் தரமும் அபாரம், தங்களது மொழிப் பெயர்ப்பில் அடுத்த மைல்கல் இந்த ஸ்மாஷ் 70ஸ் ஸ்பெஷல்கள் sir. அடுத்த வெளியீடு ரிப் கிர்பி ஸ்பெஷலுக்காக இப்போதே ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நம்ம முத்துவில் கேப்டன் டைகர் எனும் ஈடிணையற்ற சிங்கம் ஒன்று இருந்தது அவரின் கதைகள் முடிந்து போன பிறகு ஒரு பெரும் வெற்றிடம் இருந்தது, இதோ முத்துவை மீண்டும் உயரத்துக்கு கொண்டு செல்ல வேதாள மாயத்மா வந்து விட்டார். லயன் டெக்ஸ் வில்லருக்கு ஈடு கொடுக்க அவரை விட அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு உலக சூப்பர் ஸ்டார் முத்துவில் மீண்டும் வந்தாயிற்று. வில்லருக்கு இணையாக வேதாளரும் நிச்சயம் விற்பனையில் சாதிப்பார்.
ஒரே ஒரு அன்பு வேண்டுகோள் விஜயன் sir. ஸ்மாஷ் 70ஸ் முதல் சுற்று முடிந்ததும் அடுத்த ரவுண்டை வண்ணத்தில் கொணர முயலுங்கள்.
வேதாளரின் கானகத்திற்கு மீண்டும் ஒரு அற்புதமான சுற்றுலா அழைத்து சென்றமைக்கு தங்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும் sir.
Edi Sir..
ReplyDeleteஇன்று
எனக்கு வந்த புத்தகங்கள்:
*Smashing '70 சந்தா*
1)வேதாளர்
2)மேகி(free)
3)வேதாளர் போஸ்டர் (free)
4)மேகி புக் மார்க்(free)
*ONOC சந்தா*
1)ப்ளூ கோட்
2)எலியப்பா (free)
Edi Sir..
ஆனால், *அண்டர்டேக்கர் புக்* வரலிங்களே..
*அண்டர் டேக்கர்* புக் சந்தாவுல வராதுங்களா?..
தனியே பணம் கட்டனுங்களா?..🤔
Undertaker is JUMBO 2021 Sandhaa - not ONOC !!
Deleteஆமாம் சார் ; அண்டர்டேக்கர் ஜம்போ காமிக்ஸ் சந்தாவின் அங்கம் !
Deleteஅட ஆண்டவனே...
Deleteஜம்போ மகாதேவா!!?
Edi Sir..
ReplyDeleteஇன்று வாரிசைத்தேடி, ஜும்போவை கொன்று,நாளை முகமூடித் திருவிழாவிலும், கானக ஒலிம்பிக்ஸிலும் கலந்து கொள்ள முடிவு செய்து வேதாளரும்,நானும் டெங்காலி காட்டில் நித்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஜமாயுங்கோ ஜி !
DeleteKudos to your team for the Phantom landmark sir - truly a world class effort !
ReplyDeleteNever thought I would hold Tamizh Comics in this format in my hands - so deligtful and satisfying it was. Next milestone should be Phantom in color ;-)
All in all Muthu 50 efforts so far have been glittering icings blocks on the cake that is comics !
சென்ற முறையைவிட எலியப்பா என்னை இன்னும் கவர்ந்தது - அந்த டாக்டர் தன்னையே நட்டு கழண்ட கேஸ் என்று நினைக்கும் இடமும், எலியப்பா breakfast கபளீகரம் பண்ணும் இடமும் - நடு நிசி என்பதையும் தாண்டி உரக்க சிரிக்க வைத்த இடங்கள் !!
//Next milestone should be Phantom in color ;-)//
Delete2024 hopefully !
இப்ப என்ன குழப்பம்னா: இந்த மாதம் கிளம்ப வேண்டிய புத்தகங்களை புத்தக விழா வரை நிறுத்தி வைக்கறதா என்பதே. ஏதுனா ஸ்பெசல் இதழ்கள் வரும்னா அப்பறம் இன்னும் 6 மாசம் வெயிட் பண்ணனும் அதைப்படிக்க. ஓ. வா. உலகநாதர் அடுத்த பதிவுல தலை காட்டினா அபாரமா இருக்கும்.
ReplyDeleteவெறும் பத்து நாட்கள் சார் - புத்தக விழாவுக்கென தயாராகிட உள்ள அவகாசம் ! அதனில் ஸ்டால் கிடைக்குமா ? என்றறிவதில் பாதி நாட்கள் காலியாகிப் போகும் ! So அப்பாலிக்கா இருக்கக்கூடிய 5 நாட்களில் என்ன பெருசாயக் கம்பு சுத்தி விடப்போகிறேன் சார் ? மிஞ்சிப் போனால் ஏதேனும் மாயாவிகாரு மறுபதிப்பு - புத்தக விழா faithful வாசகர்களின் பொருட்டு ! ஏதேனும் டெக்ஸ் மறுபதிப்பு !
Deleteஎன்னது “ஏதேனும் டெக்ஸ் மறுபதிப்பு” ன்னு சாதாரணமா சொல்லிட்டீங்களே. டெக்ஸ் க்ளாசிக் 2 சொக்கத் தங்கமாச்சே.
Deleteமறுபதிப்பு = கையில இல்லாத ஏதாச்சும் புக்ஸ் !
DeleteThis comment has been removed by the author.
Deleteலயன் 250 லைன் 300 வாய்ப்பு இருக்குமாசார்
Deleteசீனியர் எடிட்டரின் பயண நிரலைப் பார்த்தபோது அசந்து போனேன் சார் - தொழில் நிமித்தம் சிலவிடங்கள், காமிக்ஸ் காதலால் சில இடங்கள், ஊர் சுற்றி பார்க்க சில இடங்கள் என்று - அந்த டாலர் அனுமதிகள் சுலபமாகக் கிட்டிடாத நாட்களிலேயே பிரித்து மேய்ந்திருக்கிறார் ! இதனில் பிசினஸ் பயணங்கள் சற்றே சறுக்கி இருந்தாலும் மற்றவை கசந்து விடக்கூடிய அபாயம் இருந்தது - அதுவும் 70களில் ! ஆனால் நடந்தது என்னவோ - தமிழ் பதிப்பக உலகில் ஒரு காமிக்ஸ் பயணத்தின் அடிக்கோல் !
ReplyDeleteNo wonder நீங்கள் வாய்க்குள் 10 விரல் பார்ட்டியாய் இருக்கிறீர்கள் -chip off old block!!
ஹி ஹி - அப்புறம் அந்த phantom இதழில் அந்த ஊதா லங்கோடு பார்ட்டி ... செம்ம டச் சார் ... it needs guts for this level of self-dig !
//Self-dig// நாமெல்லாம் இமேஜ் பற்றி கவலைப்பட ஏது சார் அவசியம் - வார்டு கவுன்சிலர் எலெக்ஷனுக்குக் கூட நிற்கப்போவதில்லையே ?! அப்டியே நின்னுப்புட்டாலும், ஓட்டுக்களை அறுத்திடப் போறோமா - என்ன ? ஜாலியாய் ஓடுற வண்டி தானே இது !
Delete:-)
சார் நான் ஜம்போ சந்தாதாரர் கிடையாது சார் - undertaker அனுப்பி விட்டார்கள் - இன்று 250 அனுப்பி விடுகிறேன் !!
ReplyDeleteநண்பருக்கு கடிட்டியிருந்தேன் - அவருக்கு போச்சோ இல்லியோ :-)
நான் கிண்டுற சாம்பாரில் நம்மாட்கள் சின்னாபின்னமாகும் தருணங்களில் இதுவும் ஒன்று சார் !
Delete1 புக் SMASHING '70 s சந்தா
1 புக் ஜம்போ சீசன் 4
1 புக் ரெகுலர் 2022 சந்தாவின் கார்ட்டூன்
ஸ்மாஷிங் சந்தா மட்டும் கட்டியிருப்போர் ; ஜம்போவில் மட்டுமே இருப்போர் ; சந்தாவிலும், ஜம்போவிலும் இருப்போர், ஜம்போவிலும் ஸ்மாஷிங்கிலும் இருப்போர், ஸ்மாஷிங்கிலும், ரெகுலர் சந்தாவிலும் இருப்போர் etc etc என்று ஒரு வண்டி combinations இம்மாத டெஸ்பாட்ச்சில் ! போன ஞாயிறு இதற்கெனவே ஆபீஸ் வந்திருந்தனர் நம்மாட்கள் ! So இம்மாத டெஸ்பாட்ச்சில் கொஞ்சம் சொதப்பல்கள் இருக்குமென்பதை எதிர்பார்க்கவே செய்திருந்தேன் !
ரமணா
Deleteரகுநாதா
ராகவா
ஹ்ருஷீகேசா
பத்மநாபா
அனந்த சயனா
ஜனார்த்தனா
கேசவா
மாதவா
சகடாசுரபஞ்சனா
தாமோதரா
பார்த்த சாரதே
இன்னும் அநேக நாமா
உங்கள் நேர்மைக்கு வணக்கம்...
இந்த காலத்தில் எத்தனை பேர் உண்மையை சொல்கிறார்கள்...
சத்தியவான்கள் இன்னும் உளர்.
வணக்கம் சார்.... வேதாளர் ஸ்பெஷல் உருவாக்கத்தில் ஒரு உலக தரம்.... மற்றுமொரு மைல்கல்...₹450 விலையில்.. என்னை பொறுத்தவரை....விலை ₹1000 கூட போகலாம்...அந்த அளவிற்கு தரம் உள்ளது. உங்களுக்கு எங்களது பாராட்டுகள்..
ReplyDeleteமுத்து வில் வந்த வேதாளர் கதைகளை தொகுத்து digest வெளியிட சாத்தியங்கள் உண்டா சார்.
இல்லை சார்... இயன்றமட்டுக்கு, தெரிந்தமட்டுக்குப் புதுக் கதைகளையே தேடிட முனைவேன் ! அந்நாட்களது ராணி காமிக்ஸை நான் follow செய்ததில்லை ; படித்திருந்தால் அங்கே வெளியானவற்றைக் கூடத் தவிர்த்திட முயன்றிருப்பேன் !
DeleteSir... ராணி காமிக்சில் வந்தது என ஒதுக்கி விடாதீர்கள். தங்களது மொழிநடையில் ஒவ்வொரு கதையும் மிக சிறப்பாக இருக்கிறது, இதோ அதிகாலையில் எழுந்து இப்போது ஜும்போவை கொல் வாசித்து விட்டேன், கதைக்கு அருமையான கவனிப்பு வழங்கியுள்ளீர்கள். ஆகையால் தயவுசெய்து ஒதுக்கி விட வேண்டாம்.
Deleteவேதாளர் ஸ்பெஷல்! கதை 2. ஜும்போவைக் கொல்! மிகவும் அருமை. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராணியில் யானைப் பையன் எனும் தலைப்பில் வாசித்த கதையாயினும் தற்போதைய வாசிப்பில் துளியும் அலுப்பில்லாது பிரெஷ்ஷாக இருந்தது. ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வாசித்தேன். ஜும்போ மதம் பிடித்து அந்த கிராமத்தையும் கானகத்தையும் நாசம் செய்யும் பொழுது ஜும்போவின் நியாயங்களை அதன் கண்ணோட்டத்தில் எழுதியிருந்தது அருமை. மிகவும் ஈடுபாட்டோடு ரசித்து மொழி பெயர்த்துள்ளீர்கள்.
ReplyDeleteவேதாளர்
ReplyDelete1. வாரிசைத் தேடி
2. ஜம்போவைக் கொலை
3. ஒரு முகமூடிக் திருவிழா
4. கானக ஒலிம்பிக்ஸ்
5. வாரிசுக்கு வலை
6. வேதாளரின் மேடை
7. க்ரைம் ஸ்கூல்
படிச்சாச்சு!
இதில் வாரிசைத் தேடி, வாரிசுக்கு வலை இரண்டும் முன்பே படித்தது போல் உள்ளது!
கானக ஒலிம்பிக்ஸ், வேதாளரின் மேடை முற்றிலும் புதிய வாசிப்பனுபவம்! இதுவரை படித்ததிலே கானக ஒலிம்பிக்ஸ் தான் டாப்னு சொல்லலாம்!
க்ரைம் ஸ்கூல் முழுக்கதையும் இன்றளவும் நியாபகம் உள்ளது. அத்தனை முறை இக்கதையை படித்திருப்பேன் என சொல்லவே முடியாது!
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteEdi Sir...Not even Single Negative Comments about S70 So far...So we all can understand How BIG HIT this S70 is. Congrats for you and your Team for bringing this Wonderful Evergreen S70 Edition...So Never Ever Give Up Hardcover# For Special issues...Thnks.
ReplyDeleteமிகவும் அருமையான பெரிய சைஸ் டப்பா. அதில் அருமையான ஓவியங்கள். நீங்கள் வேதாளன் என சொன்னாலும், ராணி காமிக்ஸில் இவர் பெயர் மாயாவி. ஒரு ஐநூறு மாயாவி கதைகளாவது படித்திருப்பேன். அவரை பெரிய அட்டையில் பார்க்க மிக்க மகிழ்ச்சி. ஆனால், இது போன்ற டப்பாவில் உள்ள படங்கள், சந்தா ஆட்களைத்தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்களே. கொரியர்காரனும் பார்க்க மாட்டான். செலவு இல்லையேல் இப்படி தொடரலாம். இதற்காக பணம் செலவாகிறது என்றால், முத்து ஐம்பதாம் ஆண்டு என்றால் சரி, otherwise not needed since it wont reach other people. அந்த டப்பாவை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. பீரோ மேல் ரெண்டு டப்பா வைத்திருக்கிறேன். ஐம்பது வருடம் கழித்து நல்ல ரேட் போகுமா பாக்கணும்.
ReplyDeleteமுதலில் ஆரம்பித்தது எலியப்பா. போன மாதமே இது செய்த அட்ராசிட்டியைப் பார்த்து திகைத்தேன். இம்முறை என் பெரிய மகனை வரச்சொல்லி, குந்த வைத்து [படித்து காண்பித்தேன். முதல் பக்கம் சிரிக்க ஆரம்பித்தவன், கடைசி பக்கம் வருவதற்குள் வயிற்று வலி வந்து விட்டது. ஆரம்பமே அதிரடி ("லிப்டில் மூணு பேர் போலாம்னு தான போட்ருக்கு பாட்டி" எனும் எலியப்பா ஜோக்கை வீடே ரசித்து சிரித்தோம்). ஆனால் நடுவில் வரும் சில வார்த்தைகள் என் 9 வயது மகனுக்கு ஏற்றார் போல இல்லை, அதனால் மாற்று வார்த்தைகள் சொல்ல வேண்டியதாகி இருந்தது. சில வசவு வார்த்தைகள், அங்கலாய்ப்பு வார்த்தைகளை நான் அந்த வயதில் கேட்டிருக்கிறேன். என் மகன் இன்னமும் கேட்கவில்லை, அதனால் தான். அடுத்த மாதம் வரும் எலியப்பா இதழில் இன்னும் <9yr வயதிற்கு உரிய வசன வார்த்தைகள் வரும் என நம்புகிறேன். ஆனாலும் சிரிச்சு முடியல.
அடுத்தது ப்ளுகோட்ஸ். இந்த நீல சட்டை வீரர்கள் வரிசையில் ஒன்று மட்டும் தான் காமெடி இல்லாமல் இருந்ததாக நினைவு. இந்த மாத ப்ளுகோட்ஸ் இதழ் அதற்கும் சேர்த்து திருப்தி தந்து விட்டது. ரூபி எப்பவும் ரூபி தான் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் இதழ்.எளியப்பாவும் சரி, ப்ளுகோட்சம் சரி, அட்டைப்படம் மற்றும் மொழிப்பெயர்ப்பில் தூள் கிளப்புகிறார்கள்.
அடுத்து வெட்டியான். டைகருக்கு பின் சீரியஸ் வெஸ்டர்ன் ஆட்களில் என் மனதிற்கு நெருக்கமானவன். இவனின் கடந்த இதழ்களும் வேற லெவல் என்றால், இந்த இதழிலும் அதே திகைப்பை வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வில்லி அம்மணியின் புன்னகை ஒன்றே போதும், கதாசிரியர் மற்றும் ஓவியரின் திறமையை தெரிந்து கொள்ள. வாவ். செம இதழ். லவ் யூ வெட்டியான். தல தளபதிகள் கொஞ்சம் இவனைப் பார்த்து திருந்தி கொஞ்சம் கற்பனையை தட்டி விட்டு கதைகள் எழுதினால் தேவலை. Young Blueberry, Mister Blueberry என்று மின்னும் மரணத்துடன் டைகரின் கற்பனை ஓய்ந்து விட்டது. அதன் பின் வந்த கதாசிரியர்கள், OK corral, ஆயுத கடத்தல் என கும்மியடிக்கிறார்கள், ஆனால் மிக சுமாராக தான் உள்ளது. அன்டர்டேக்கர் தான் லயனில் வெஸ்டர்ன் கதைகளில் நம்பர் 1.
அடுத்து மேகி. மாதாமாதம் எதையாவது தந்து வாசகர்களை கவர்ந்து விட மாட்டோமோ என ஆசிரியர் துடிப்பது தெரிகிறது. கிரீன் மேனர், பராகுடா, சில கிராபிக் நாவல்கள், தாத்தாஸ், டெட்வுட் கோமாளி, எலியப்பா போன்று மாதம் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் என அஜெண்டா உள்ளது போல. மேகி வேற லெவல். டிரை ஹ்யூமர், டிரை ஹ்யூமர் என கர்னல் க்ளிப்டனையும், ஹெர்லாக் ஷோம்சையும் தந்து ஏமாற்றியிருக்கிறார் ஆசிரியர். மேகி தான் உண்மையான தற்காலிக ஆங்கில டிரை ஹ்யூமர். Greenstreet hooligans மற்றும் சில படங்கள் மட்டுமே உண்மையான தற்போதைய ஆங்கில வாழ்வை கூறும் படங்கள். ஜேசன் ஸ்டாத்தம் படங்கள் ஒகே ரகம் தான். பழைய டேனியல் கிரைக் படங்கள், தற்போது இருக்கும் பிரிட்டிஷ் டிவி ஷோக்கள் ஆகியவை கொஞ்சம் நிஜத்திற்கு அருகில் வரும். மேகி இதில் one of the best. சமயோசிதம் என்றால் ஜேம்ஸ்பாண்ட் தான். மேகி அதிவிட பெட்டராக ஜொலிக்கிறார். அழகிலா, நடுத்தர வயது, காதலர் இல்லா, வேலையில்லா, துட்டு இலா என பல இல்லைகளுக்கு மத்தியில், sense of humor உள்ளது தான் உண்மையான பிரிட்டிஷ் ஹீரோவின் தேவை. அது அத்தனையும் மேகிக்கு உண்டு. வெஸ்டர்ன் மற்றும் கிளாசிக் கதைகளில் இருந்து நவீன யுகத்திற்கு நம் ரசனைகளை மாற்ற ஆசிரியர் படும் மெனக்கெடல் இப்போது நன்றாகவே புரிகிறது. நம் ரசனையிலும் மாற்றம் வருகிறது. வாழ்க முத்து 50yrs agenda.பல சுவாரசிய கதைகள் கிடைத்த ஆண்டு என 2022ஐ சொல்லலாம்.
மாயாவி இன்னும் ஓபன் செய்யவில்லை. வழக்கம் போல் விறு விறு என படித்தோமா தூக்கிப்போட்டோமா என தான் இருக்கும் என நினைக்கிறேன். பார்ப்போம்.
//ஐம்பது வருடம் கழித்து நல்ல ரேட் போகுமா பாக்கணும்.//
Deleteஹாஹாஹா
Hard cover- i love it. but i respect ur perspective and decision sir
ReplyDeleteகானகக் கூத்துகள்-Not interesting even for my son
வேதாளன் - வாரிசைத் தேடி - கதை ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை... ரெக்ஸ் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் கதை சென்றது. மொழிபெயர்ப்பு மிகப்பெரிய ப்ளஸ். கதை க்ளாஸிக் கதை என்றாலும் இப்ப படிக்கும் போதும் எந்த நெருடலும் இன்றி கதையுடன் ஒன்றிப் போக முடிவதற்கு உங்கள் மொழிபெயர்ப்பு ஒரு காரணம். வேதாளன் செம.. கானகப் பழிமொழி சூப்பர்.
ReplyDeleteஉபயோக படுத்திய தாள் அபாரம், புத்தகம் பெரியதாக தெரிந்தாலும் எடை அவ்வளவாக தெரியாத காரணத்தால் கையில் வைத்து படிக்க மிகவும் வசதியாக உள்ளது.
அடுத்த கதையை மத்தியான சாப்பாட்டுக் பின்னர் படிக்க வேண்டும்.
புத்தகங்கள் வந்து கிடைத்தன சார்...
ReplyDeleteமீண்டும் ஓரு கலர்பாக்ஸ்....
வேதாளர் இதழ் ஜொலிஜோலிக்குது...
முத்து50ஆவது ஆண்டே இப்படினா லயன் 50வது ஆண்டு 2034ல எப்படி இருக்கும்???
ஒரு ஓரோபோரஸ் கிடைச்சா போய் பார்த்துட்டு வந்துடலாம்....
நெல்லுக்கு பாயுற நீரு புல்லுக்கும் பாய்வதுபோல ப்ளூகோட்லாம் தக தகனு மின்னுறாரு.....
அண்டர்டேக்கரும் டாப் டக்கரு....
கலர் பாக்ஸே கொஞ்சம் நேரம் தடவிபார்க்கத்தோணுது....😍
Deleteஇதில் என்னா பியூட்டினா டிசம்பர்2021ல ஒரு கலர் பாக்ஸ்- அது ஜனவரி 2022க்கு உரியது... பிப்ரவரி 2022ல ஓரு கலர்பாக்ஸ், ஆனா அதுவும் ஜனவரி2022க்கு உரியது...
ஜனவரியில் வராத ரெண்டு கலர்பாக்ஸம் ஜனவரி புகழ்பாடும்...!!!
இந்த கலர் பாக்ஸ் பார்க்க பார்க்க ஆசையாத்தான் இருக்கு.. தீபாவளி டெக்ஸ்க்கும் ஒரு கலர் பாக்ஸ் போடுங்க சார்னு----டெக்ஸ் பாக்ஸில் பார்த்தா சும்மா மெரட்டும்....
ஆனா
ஆனா
சாரைப்பார்த்தாலும் பாவமா இருப்பதால் கேட்க மனசுவர்ல....😉
💞💕டெக்ஸ் 75ல கேட்டுப்போம்...💞💕
டியர் எடிட்டர்...கடந்த சில மாதங்களாக நோட் செய்தது..நண்பர்களும் தங்கள் அனுபவங்களை உறுதிப்படுத்தியத்திலிருந்து பொதுவாக வாட்ஸாப்ப் மெஸ்ஸேஜ்க்களுக்கு பதில் சரியாக வருவதில்லை...சில சமயம் பார்க்கப்படுவதே இல்லை..பல சமயம் பார்த்தாலும் பதில் வருவதில்லை..சரி எதாவது புகார் கூறினால் தான் இப்படி என்று நினைத்தால் சந்தா கட்ட விபரம் கேட்டால் கதை தான்...வியாபார வாய்ப்புகளை கூட தவற விடும் போக்கு ஆபத்தானது..எனவே உங்கள் பார்வைக்கு இதை கொண்டு வருகிறேன்..We know they are busy at dispatch times only.But this has become habitual in normal days also. Please have a word with them. Thank you
ReplyDeleteThanks for bringing it to my notice sir...வரும் வாரமே கூடுதலாய் ஒரு staff ஒதுக்கிடலாம் !
DeleteThank you sir.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவேதாளம் - அட்டைப்படம், மொழிபெயர்ப்பு, அருமையான பேப்பர், கதை வந்த வருடம், ஆங்காங்கே சில துணுக்குகள் என ஒவ்வொரு விஷயமும் அருமை. உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு சிறந்ததை தரவேண்டும் என்ற உங்களின் தாகம் பாராட்டுக்குரியது.
Deleteமுத்துவில் வந்த வேதாளர் கதை புத்தகங்கள் சில நண்பர்கள் விற்பனை என முகநூலில் விளம்பரம் செய்யும் போது விலையை கேட்டு பின்வாங்கிய போது வேதாளர் கதை எல்லாம் நமக்கு எட்டா தூரம் என நினைத்தேன். ஆனால் அந்த கனவு நனவாகி விட்டது இந்த வேதாளன் கதை புத்தகம் மூலம். எனக்கு இந்த வேதாளன் புத்தகம் மிகப்பெரிய பொக்கிஷம் இதுவே போதும். நன்றிகள் கோடி.
Same here - always longed for Tamil Phantom and finally !!
DeleteVijayan5 February 2022 at 08:36:00 GMT+5:30
ReplyDeleteஇல்லை சார்... இயன்றமட்டுக்கு, தெரிந்தமட்டுக்குப் புதுக் கதைகளையே தேடிட முனைவேன் ! அந்நாட்களது ராணி காமிக்ஸை நான் follow செய்ததில்லை ; படித்திருந்தால் அங்கே வெளியானவற்றைக் கூடத் தவிர்த்திட முயன்றிருப்பேன் !
பெரும்பாலான தற்காலத்திய வாசகர்களுக்கு பழைய முத்து வேதாளர் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது..அது எங்களை பொறுத்தவரை. புதிய கதைகள் தான் சார்.ஒரு தூரத்து நாளில் consider pl
This comment has been removed by the author.
ReplyDeleteவேதாளன் படத்தை கொரியர் அட்டைப் பெட்டியில் அடித்து நல்ல விளம்பரம் சார். ST கொரியர் ஆபீஸ் சென்ற போது என பார்சல் இல்லை என சொன்னார்கள். அப்போது வேதாளர் டப்பா கண்ணில் பட விரைந்து சென்று என பார்சலா என பார்த்தேன் ஏமாற்றம். அங்கு உள்ளவர்களிடம் இதுபோன்ற பார்சல் என சொன்னேன் அவர்கள் சார் இது போல் இன்று பல டப்பாக்கள் வந்தது எல்லாம் டெலிவரி செய்ய எடுத்து சென்று விட்டார்கள் என சொன்னார்கள் அதேநேரம் அவர்கள் எல்லோரும் என்ன சார் உள்ளே என கேட்ட போது நமது காமிக்ஸ் பற்றி சொல்லி விட்டு கிளம்பினேன். 3 மணிக்கு கொரியர் டெலிவரி செய்ய வந்த நபருக்கு ஆர்வம் தாங்க வில்லை பார்சல் என்ன என தெரிந்து கொள்ள அவரை கொஞ்சம் நேரம் காத்திருக்க சொல்லி பார்சலை சானிட்டைஸ் செய்து நமது புத்தகங்களை காண்பித்தேன் வேதாளம் புத்தக சைஸ் அவரை வியப்பில் ஆழ்த்தியது. இது எல்லாம் அட்டைப் பெட்டியின் மகிமை. நமது அட்டைப் பெட்டி பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. சூப்பர் ஐடியா சார்.
ReplyDeleteஎன்ன தவம் செய்தனை நண்பீர்...
ReplyDeleteஎங்கும் நிறை காமிக்ஸினை முத்துவிஜயா நீ எமக்களித்திட...
யாம் என்ன தவம் செய்தனை...
நன்றி ஐயா...
எமது பால்யங்களை தங்கதட்டினில் வைத்து காமிக்ஸாய் வழங்கி இச்சிறிய ரசிகர் குழாம் இச்சை கொண்டு ரசித்திட இவ்வகவையிலும் முயலும் நீவிர் வாழ்க பல்லாண்டு...
எங்கள் எண்ணமெல்லாம் முத்து
அதை தந்திட்ட எங்கள் முத்தான விஜயா...
பித்தான எங்கள் காமிக்ஸ் ரசனைக்கு
வித்தான மூலத்தை தருமருமை
சிவகாசி புகழ் கற்பகமே
தருவே
சௌந்தரம் பெற்ற சித்திரமே
யௌவனம் கொண்டு நீ வையகத்தில் நீடூழி வாழ்கவென்று வாழ்த்தும்
அன்பன்
J
கிடைக்கப் பெற்றேன் ஐயா
Deleteவேதாளன் மற்றும் காமிக்ஸ் பொக்கிஷங்களை...
சார்....அன்புக்கு ஓராயிரம் நன்றிகள் ; ஆனால் இத்தனை பெரிய வார்த்தைகளுக்கு நிச்சயமாய் ஒர்த் ஆகிட மாட்டேன் !!
Deleteசெக்கு மாடுகளாய் வாழ்க்கைச் சக்கரங்களோடு சுற்றி வரும் நம்மையெல்லாம் அவ்வப்போது புத்துணர்வு கொள்ளச் செய்யும் இந்த பொம்ம புக் காதலுக்கு தான் நன்றிகள் உரித்தாகிட வேணும் என்பேன் ! அந்தக் காதலையும், காதல் மேலோங்கியதொரு நட்பு வட்டத்தையும் வழங்கியுள்ள புனித மனிடோவுக்கும் மெகா நன்றிகள் !