It's GOLDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDD
நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் பொன்மொழிகள் கண்ணில்படுவது அரிய அறிஞர்களின் படைப்புகளிலோ ; முக்கியமான சொற்பொழிவுகளிலோ லேது - at least என்னளவிற்கு ! மாறாக - ஆங்காங்கே மீம்ஸ் மூலம் மிஸ்டர்.பொதுஜனம் போட்டுத் தாக்குவதையெல்லாம் வாசிக்கும் போது, 24 காரட் பொன்மொழிகளாய்த் தோன்றுகின்றன ! இதோ சித்தே முன்னே படித்தது : "பணமும் சரி, ஞாயிறும் சரி - வர்றதும் தெரிலே....போறதும் தெரிலே !!" என்றொரு மீம்ஸ் ! How true !!!
இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலும் "பதிவுக்கு நேரமாச்சுடோய்" - என்ற அலாரம் தலைக்குள் ஒலிக்கும் போது தான் - yet another ஞாயிறு புலரவுள்ளது உரைக்கிறது ! கடந்த கொஞ்ச மாதங்களாகவே, WORK FROM HOME என்றதொரு வாடிக்கை செட் ஆகியிருக்க ; எழுதிடவும் வண்டி- வண்டியாய்க் குவிந்திருக்க, ஆபீசில் போய் அமர்ந்து பணியாற்றும் பழைய நாட்களெல்லாம் - நீங்கள் சுஸ்கி-விஸ்கியை அரை நிஜார் போட்டபடியே படித்த புராதன நினைவுகளாய் எனக்கிப்போது தென்படுகின்றன ! நிர்வாகப் பணிகளின் பெரும்பான்மையை ஜூனியர் வசம் ஒப்படைத்திருக்க, அதன் பொருட்டும் என்னை யாரும் பெருசாய் ஆபீசில் தேடுவதில்லை எனும் போது - இதழின் இறுதிக்கட்டப் பணிகளின் போது ஆபீசில் தலை காட்டுவதோடு சரி !! So எனது பொழுதுகளில் இப்போதெல்லாம் மாறிடுவது கதை நாயகர்கள் மட்டுமே எனும் போது - நாளென்ன ? பொழுதென்ன ? என்ற ஞாபகங்கள் மண்டையில் இம்மியூண்டே இருக்கின்றன ! And இதோ - உங்களின் புண்ணியத்தில் இது பதிவுக்கிழமை என்பது புரிவதால், தீக்கோழியைப் போல பேப்பர் கத்தைகளுக்குள் புதைத்து வைத்திருக்கும் மண்டையை வெளியே உருவிக் கொண்டு - கோலி சோடா விழிகளை உருட்டியபடிக்கே என்ன எழுதுவதென்று யோசிக்கிறேன் !
ஆகஸ்ட் !! மாமூலாய்ப் பார்த்தால் இந்நேரம் ஈரோட்டில் ஸ்டாலில் விற்பனைகளைப் பார்த்தபடிக்கே ; 'இன்னிக்கு இன்னார் இன்னாருலாம் வந்தாக ; இன்னார் இன்னார்லாம் போனாக !!" என்று அண்ணாச்சி சொல்லும் கதைகளுக்குக் காது கொடுத்திருப்பேன் ! ஆனால் இப்போதோ - அந்த யோகம் லேது எனும் போது - நமது ஆபீஸின் மாடியே தயாராகி வருகிறது - E ROAD ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு ! அடுத்த சனி & ஞாயிறுக்கெனத் திட்டமிட்டுள்ள இந்த மினி ஜாலி மேளாவிற்கென நம்மவர்கள் இப்போதே ரேக்கை செட் பண்ணி ; புக்ஸை அடுக்கி தயாராகி வருகின்றனர் என்பதால் ஆபீசில் பர பரப்புக்குப் பஞ்சமில்லை ! And "இரத்தப் படலம்" புக்ஸுக்கென தடிமனான டப்பிக்கள் ஒரு பக்கம் ; ரெகுலர் (சந்தா) இதழ்களின் டப்பிக்கள் இன்னொரு பக்கம் ; E ROAD புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்களுக்கு கிட்டக்கூடிய ஆர்டர்களுக்கென இன்னொரு குவியல் - என்று டப்பிக்களும் குவிந்து கிடக்க, அவற்றினுள் ஆளாளுக்கு நர்த்தனம் ஆடி வருகின்றனர் !
டப்பிக்கள் ரெடி ; ஆனால் அவற்றினுள் ரொப்பிட வேண்டிய சமாச்சாரங்களை இன்னும் ரெடியில்லா என்பதால், எனக்கும், மைதீனுக்கும், கடந்த ஒரு வாரமாய் குட்டிக்கரணங்கள் அன்றாடம் என்றாகி விட்டுள்ளன ! திங்கள் முதலாய் 2 bookfair special இதழ்களும் அச்சுக்குச் செல்லவுள்ளன எனும் போது, அடுத்த வாரத்தில் நமது பைண்டிங் நண்பரும் குட்டிக்கரண ஜோதியினில் ஐக்கியம் ஆகிட வேண்டி வரும் ! இப்போது தான் "இரத்தப் படலம்" ஹார்டகவர்களை ஒரு மாதிரியாய்ப் பூர்த்தி செய்தவர் - பின்னாடியே லயன் # 400 ஹார்ட்கவர் புக்சின் வேலையில் பிசியாகி விட்டிருக்க, அடுத்த வாரத்தில் இன்னமும் பிதுங்கிட வேண்டி வரும் ! பாவம் மனுஷன் !!
எது எப்படியோ - 'Bookfair ஸ்பெஷல் இதழ்கள் எவையென்பதை யூகிக்கிறேன் பேர்வழி' என்று ஸ்டீல் எதை எதையேனும் அள்ளி விடும் முன்பாய் நானே கொஞ்சமாய் hints தந்து விடுகிறேன் folks ! இரண்டுமே மறுபதிப்புகளே என்பது பிரதான hint ! இது போன்ற இடைச்செருகல் தருணங்களில் நுழைக்கும் புது இதழ்கள் பெருசாய் சோபிப்பதுமில்லை & கையில் தங்கியும் விடுகின்றன என்பதால் இத்தகைய வேளைகளுக்கு மறுபதிப்புகளே மதி ! என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம் !
Of course - "உயிரைத் தேடி" இங்கே இடம்பிடித்திருக்க வேண்டும் தான் ; ஆனால் 189 பக்க நெடும் கதையினை உரிய கவனங்களின்றி வெளியிட மனம் ஒப்பவில்லை & MUTHU ஆண்டுமலர் 50 + SMASHING '70s புண்ணியத்தில் கைவசம் அதிக அவகாசங்களும் இருக்கவில்லை ! தவிர, தீவிர "உயிரைத் தேடி" ஆர்வலரானதொரு நெருங்கிய நண்பர் முன்வைத்த கோரிக்கையுமே செம சுவாரஸ்யமானதாய்த் தோன்றிட, அதன் பொருட்டு கவனம் தந்திடும் முனைப்பில் இந்த இதழினை அடுத்த ஆன்லைன் bookfair-க்கென மாற்றிடத் தீர்மானித்துள்ளேன் ! அந்தக் கோரிக்கை வேறொன்றுமில்லை : இதழினை black & white-ல் போடுவதை விடவும், விலை கூடினாலும், வண்ணத்தில் வெளியிடலாமே என்பது தான் ! எப்போதுமே நமது முதல் பார்வைகள் நிலைகொள்வது விலையினில் தான் எனும் போது, விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆர்வமே எல்லாப் புதுத் திட்டமிடல்களிலும் பிரதானமாகிடுவதுண்டு ! Likewise in this case too ! ஆனால் இந்த one-shot தினமலரில் வெளியான நாட்களில் வண்ணம் + 2 வண்ணம் என்று வந்திருக்க, இன்றைக்கு அதனை plain ஆக கருப்பு-வெள்ளையில் வெளியிடுவதில் பெருசாய் ஈர்ப்பு இராதென்பது நண்பரின் எண்ணம் ! So இதனை வண்ணத்தில் வெளியிட படைப்பாளிகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, கொஞ்சமாய் மூச்சு விட நேரம் கிட்டும் போது தயாரிப்புகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் !
Moving on, நடப்பு மாதத்தின் ரெகுலர் இதழ்களின் slim பார்ட்டியான "தோர்கல்" பற்றி ! சமீப ஆண்டுகளாய் இவர் புஷ்டியாய் ; ஆகிருதியாய் மூன்றல்லது , நான்கு கதைகள் கொண்ட தொகுப்புகளாய் வலம் வந்திட, இந்தமுறையோ தவிர்க்க இயலா 9 மாத சந்தா தருணத்தில் தடிமனான ஸ்லாட்டை அவருக்கு வழங்கிட தோதுப்படவில்லை ! ஜனவரியில் தான் "அழகிய அகதி" hardcover வந்திருக்க, இம்முறை அவர் சிங்கிள் சிங்கமாய் சோலோ கெத்து காட்டுகிறார் ! And கதையும் one shot தான் எனும் போது - ஜாலியான சிங்கிள் வாசிப்புக்கு பெருசாய் நெருடாதென்பேன் ! In fact - அழுத்தமான கதைக்களத்தோடு பயணிக்கும் தோர்கல் தொடரினில் இது சற்றே லைட்டான சாகஸமே எனும் போது - இந்த சிங்கிள் ஆல்பம் treatment சுகப்படுமென்றே நினைக்கிறேன் ! பார்ப்போமே !! இதோ - சற்றே வர்ணங்களில் மாற்றங்களுடனான அட்டைப்படம் :
Before I wind up some updates :
1 ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் வியாழன் காலையில் (ஆகஸ்ட் 12) இங்கிருந்து புறப்பட்டிடும்.
2 இரத்தப் படலம் டெஸ்பாட்ச் வெள்ளியன்றிருக்கும் ! (ஆகஸ்ட் 13 )
3 ஆகஸ்ட் 14 & 15 தேதிகளில் E-ROAD புத்தக விழாவினில் புது இதழ்கள் நீங்கலாய் கைவசமுள்ள பாக்கி அனைத்து இதழ்களுக்கும் வெவ்வேறு சதவிகித டிஸ்கவுண்ட்ஸ் இருந்திடும் - ஆங்கில CINEBOOK உட்பட !
4 E-Road ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்கள் இரண்டும் எவையாக இருக்கக்கூடுமென்று சரியாய் யூகிக்க முயற்சிக்கலாமே guys ? உங்கள் யூகம் சரியெனில் - அந்த இரு புக்ஸும் எங்கள் அன்புடன் உங்களுக்கு ! இந்தப் போட்டி இந்த ஞாயிறு வரையிலும் மட்டுமே ! And யாரேனும் சரியாய் யூகித்திருப்பினும், அது சனி காலையில் தான் அறிவிக்கப்படும் ! முடிந்தமட்டும் கொண்டையை மறைக்கப் பார்ப்போம் ; நம்மாட்கள் சொதப்பி வைக்காத வரையிலும் !!
5 SMASHING 70's முன்பதிவுகள் தட தடத்து வருகின்றன ! இன்னமும் இரண்டே கால் மாத முன்பதிவு அவகாசம் இருக்க - 500 என்ற அந்த இலக்கைத் தொட்டு விட சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது ! புனித மனிடோ அருள்வாராக !!
Bye all...see you around !! Have a great weekend !!
Gold
ReplyDeleteHi
ReplyDeleteSir
ReplyDeleteஎன்னவாயிரூக்கும் புக்ஃபேர் ரெண்டு புக்ஸூ
Deleteஒண்ணு மாயாவி
Deleteஇன்னொண்ணு லக்கி
ஒருவேளை பழிக்கி பழியும்...ச்சூ மாதிரி காளியோ
Deleteச்சூ மந்திர காளி
Deleteலந்துட்ேடேன்
ReplyDeleteவணக்கம் 💓 சார்
ReplyDeleteHi..
ReplyDeleteபடலத்திற்காக படையெடுத்தவர்கள் சங்கம் சார்பில் வணக்கம்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஹா...!
ReplyDeleteE -Road ஆன்லைன் புக்ஸ் 1 டெக்ஸ் 1 லக்கிலூக் சரியா சார்
ReplyDeleteபழிக்கு பழி
ReplyDeleteSuper Edi,
ReplyDeleteWaiting for 13 and 14
ஈ ரோடு ஆன்லைன் ஸ்பெஷல் புத்தங்கள்
ReplyDeleteலக்கி - சூப்பர் சர்க்கஸ்
டெக்ஸ் - ??
சூப்பர் சர்க்கஸ் வந்துவிட்டது நண்பரே...
Deleteஏனுங்கண்ணா ...ஒருவாட்டி மறுபதிப்பான சமாச்சாரங்கள் ரெண்டாவதுவாட்டி ரீபிரிண்ட் பாக்குறது நமக்கு தான் புதுசில்லீங்களே ?
Deleteஆஹா...ம்ம் நடக்கட்டும் சார்...
Deleteபழனி, சார் எப்படி உங்களை மடக்கிட்டார் பாருங்க?... 😊
Delete//தவிர, தீவிர "உயிரைத் தேடி" ஆர்வலரானதொரு நெருங்கிய நண்பர் முன்வைத்த கோரிக்கையுமே செம சுவாரஸ்யமானதாய்த் தோன்றிட, அதன் பொருட்டு கவனம் தந்திடும் முனைப்பில் இந்த இதழினை அடுத்த ஆன்லைன் bookfair-க்கென மாற்றிடத் தீர்மானித்துள்ளேன் ! அந்தக் கோரிக்கை வேறொன்றுமில்லை : இதழினை black & white-ல் போடுவதை விடவும், விலை கூடினாலும், வண்ணத்தில் வெளியிடலாமே என்பது தான் ! எப்போதுமே நமது முதல் பார்வைகள் நிலைகொள்வது விலையினில் தான் எனும் போது, விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆர்வமே எல்லாப் புதுத் திட்டமிடல்களிலும் பிரதானமாகிடுவதுண்டு ! Likewise in this case too ! ஆனால் இந்த one-shot தினமலரில் வெளியான நாட்களில் வண்ணம் + 2 வண்ணம் என்று வந்திருக்க, இன்றைக்கு அதனை plain ஆக கருப்பு-வெள்ளையில் வெளியிடுவதில் பெருசாய் ஈர்ப்பு இராதென்பது நண்பரின் எண்ணம் ! So இதனை வண்ணத்தில் வெளியிட படைப்பாளிகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, கொஞ்சமாய் மூச்சு விட நேரம் கிட்டும் போது தயாரிப்புகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் ! //
ReplyDeleteWoww... Great news!
இரத்தப்படலம் எடிட்டரின் புண்ணியத்தில் நியாயமான விலையில் வாங்கி படிக்கப்போகிறேன்.. Special Thanks sir
ReplyDelete... வந்துவிடு ஆகஸ்ட் 13 னே ... நொயிடா வந்து சேர 21 ஆயிடும்..பொரு மனமே...
சூ மந்திரக்காளி & பழிக்கு பழி
ReplyDeleteபக்கா நீங்கள் சொல்வதே தான். ஆனால் J அண்ணன் மேலே சொல்லிவிட்டார்.
Deleteடைம் பாருங்க குமார். அந்த தாத்தாக்கு முன்னேயே இந்த பேராண்டி சொல்லிட்டேன்.
Deleteநம்ம காமிக்ஸ் கணவுலகம் குரூப்பில் நான் எப்பவோ சொன்னேன் மகி ஜி அதை காப்பியடிச்சு சொல்லியிருக்கார் j என்கிற படையப்பர்
Deleteநீங்கள் சொல்வது சரிதான் ஷெரீஃப். நீங்க தான் ஃபர்ஸ்ட்
Delete22nd
ReplyDeleteசூ மந்திரக்காளி & பழிக்கு பழி
Deleteமெபிஸ்டோவா இருந்தா எடிக்கு 5 கிலோ தங்க பஸ்ப லேகியம் அனுப்பலாம்ன்னு இருக்கேன்.
ReplyDeleteஇல்லீங்கண்ணா...தங்கம்லாம் மாவீரர்களுக்கு தான் சுகப்படும் ! நம்பள மெரி சாமன்யர்களுக்கு சுக்கு கஷாயங்களே மதி !
DeleteNiz
ReplyDelete//ஸ்டீல் எதை எதையேனும் அள்ளி விடும் முன்பாய் நானே கொஞ்சமாய் hints தந்து விடுகிறேன் folks ! இரண்டுமே மறுபதிப்புகளே என்பது பிரதான hint !//
ReplyDeleteசூப்பர் நியூஸ் ! பெத்த சைஸ் 'கொலைப்படை' மறுபதிப்பு உண்டுதானே சார்.! மிக்க்க்க்க்க்க மிக்க நன்றிகள் சார்!
ஸ்டீலே தேவலாமோ ?
Deleteடெக்ஸின் "பழிக்குப்பழி" எனக்கு மிகவும் பிடித்தமான கதை, ஆனால் ஏற்கனவே 400வது ஸ்பெஷல் மெகா கதை, இலவச இணைப்பு டெக்ஸ் என்று இம்மாதம் 2 கதைகள் இருப்பதால் 3வது ஒரு டெக்ஸ் மறுபதிப்பாக வராது என்று தான் நினைக்கிறேன்... (அது தானே நியாயம்?)
Deleteமறுபதிப்பாக ஒரு லக்கிலூக் நிச்சயம், இன்னொரு மறுபதிப்பு ஸ்பைடரின் கொலைப்படை போன்று இருக்கும் என நினைத்தேன்... இல்லாவிட்டால் வேறு என்னவாக இருக்கும்? விஜயன் சார் சஸ்பென்ஸ் வைப்பதை பார்த்தால் ஏதேனும் குட் நியூஸ் கண்டிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
Book fair special:
ReplyDelete1.டெக்ஸ்-பழிக்கு பழி
2.லக்கி லூக்-சூ மந்திரகாளி
E road online sale, விபரங்கள் எப்போது எதில் வெளியிடப்படும் போன தடவை விவரங்களை சேகரித்து ஆடர் செய்யும் முன் திருவிழா முடிந்து விட்டது
ReplyDeleteதிங்களன்று இங்கே upload செய்யப் பார்க்கின்றேன் நண்பரே !
Deleteமிக்க நன்றி சார், அப்படியே உங்கள் அட்டவணையில் புத்தகங்களின் நம்பரையும் சேர்த்து பதிவிட்டால் என்னுடைய புத்தக நம்பர்களை பார்த்து வாங்க மிகவும் வசதியாக இருக்கும்
Deleteபழிக்கு பழி யே தான் .. 😍😉😉
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க...!!!
ReplyDeleteDear editor,
ReplyDeleteWhether we can purchase RathaPadalam 2.o in E-Road?
Conform pl.
தெரியலை சார் மீதம் இருக்குமாவென்று ! அப்படியே இருந்தாலும் அதனில் டிஸ்கவுண்ட் இராது ! ஏஜெண்ட்களிடம் வாங்கிடல் சுலபமாக இருக்கக்கூடும் !
Deleteஒரு புக் முன்பதிவில் மீதி உள்ளது நண்பரே தேவையெனில் தொடர்புகொள்ளுங்க..
Deleteபழனிவேல்
லயன் முத்து ஏஜென்ட்
9789214198
🙏🙏
ReplyDelete38th
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஎன்னை யாரும் பெருசாய் ஆபீசில் தேடுவதில்லை எனும் போது ///
ReplyDeleteவயதாகிட்டாலே அப்படித்தான் .. டியர் விஜயன் சார். 😉😉😉
சிலருக்கு அதிகாரங்களை பகிர்ந்து தருவதில் சம்மதம் இராது ; எனது நண்பனின் தந்தையெல்லாம் இறுதி வரைக்குமே தங்களது மெகா நிறுவனத்திற்கு sole proprietor ஆக இருந்து வந்தார் ! இத்தனைக்கும் அவருக்கு 4 பசங்கள் !
Deleteஆனால் நம்பளுக்கு அப்படியெல்லாம் நாற்காலி மோகம் நஹி சம்பத் ; சந்தோஷமாய் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஜாலியாக பேனா பிடிப்பதை மட்டும் தொடர்ந்திடுவேன் - உங்களுக்கோ, எனக்கோ அது சலிக்கும் வரையிலும் !
அதுக்கு இன்னும் ரொம்பநாள் இருக்குசார்..
Deleteடெக்ஸின் பழிக்குப்பழியும்
ReplyDeleteலக்கிலூக்கின் சூ மந்திரக்காளியும் வந்தா நல்லா இருக்கும்..
அப்போ ஸ்பின்ஆப் கிடையாது..சரி வேறு என்ன...?? டெக்ஸ் மறுபதிப்பு பழிக்குப்பழி..தான்..
ReplyDelete//அப்போ ஸ்பின்ஆப் கிடையாது//
Deleteமிடிலே...!
சூ மந்திரகாளி
ReplyDeleteடெக்ஸ் இதழ்..
ஒரு லக்கிலூக்...
ReplyDeleteஒண்ணு டெக்ஜ் வில்லர்...
ReplyDeleteஇன்னொண்ணு..
அது வந்து.. இரத்தப்படலமும் மறுபதிப்புதானே..ஒருவேளை அதுவா இருக்குமோ..?
அந்த இன்னொண்ணு தான் இதுவோ ?
Deleteஅப்போ...இதுதான் அதுவா..? இல்ல அதுதான் இதுவா...?
Delete13 is maru-maru-maru pathippu ! One more will come in 2024.
Delete13 is maru-maru-maru pathippu ! One more will come in 2024.//
Deleteசங்கத்துக்கு வருக வருக நண்பரே...
சொல்லுங்க சார் ; இந்த பதிமூனிலேயே புக்கிங் ஆரம்பிச்சிடலாம் !
Delete:-)))) lol
Deleteடெக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி
ReplyDeleteஅந்த இரண்டு இதழ்கள் டெக்ஸின் பழிக்கு பழி மற்றும் லக்கி லூக்கின் சூமந்திரகாளி :-)
ReplyDelete
ReplyDeleteமதி 'ங்கிற வார்த்தை ரெண்டு தடவை வந்திருக்கு..
மண்டை..கொண்டை னு ஒரு ரைமிங் இருக்கு...
ஆக..ரெண்டு Hint கிடைச்சிருக்கு.ரெண்டையும் இணைக்கும் இணைப்புச்சாலை எதுவோ.?
என்ன சார் பதிவு ஆரம்பிபதற்குள் முடிந்துவிட்டது. இடைப்பட்ட நாளில் ஒரு பெரிய பதிவு வேண்டும்
ReplyDeleteஇந்த மாசத்துக்கு சித்தே அஜீஸ் பண்ணிக்கோங்க கிருஷ்ணா ; தொங்கலில் நிற்கும் முக்கிய கதைகளின் பெரும்பான்மையை செப்டம்பருக்கு முன்னே நிறைவு செய்திருப்பேன் ! So இந்த நெருக்கடிகள் இராது !
Deleteகண்டிப்பாக சார் 😊 வரும் புத்தகங்களுக்காக காத்திருப்பு ஆரம்பிக்கிறது.
Deleteதடகள தங்கம் இன்றே கண்டோம்!
ReplyDeleteகாமிக்ஸ் தங்கம் (டெக்ஸ்400) வெள்ளி அன்றி காண்போம்....ஆஹா!
இன்று இரட்டை தங்க நாள்....💞💞💞💞
3வது தங்கம் (இ.ப.2.0) இ.ப. ரசிகர்களுக்கு அடுத்த சனிக்கிழமை... அற்புதம்...
பழிக்குப் பழியும் ஆன்லைன் புக்ஃபேர்ல வந்தா 4வது தங்கமாக இருக்கும்😍😍😍😍
Book Fair special
ReplyDelete1. லக்கி லூக்
2. தொங்கலில் உள்ள இளம் புலியின் வண்ண மறுபதிப்பு or
பைன்டிங்கில் இருக்கிறது என்பதால் டெக்ஸாக இருக்கவும் வாய்ப்புண்டு.
அது என்ன கணக்கு சார் - பைண்டிங்கில் இருப்பதால் டெக்ஸ் என்று ?
Deleteஏதுவாயிருப்பினுமே பைண்டிங் சென்று வரும் தானே ?
சார் பசைபோட்டு ஒட்டுவதை மட்டுமே பைண்டிங் ஆகவும், பின் அடித்து வரும் புத்தகங்களை அந்த லிஸ்டில் சேர்க்க மனம் மறந்துவிடுகிறது. சிறு வயது பள்ளி புத்தக பைன்டிங்கின் effect எனவும் எடுத்து கொள்ளலாம்
Delete57th
ReplyDeleteதோர்கலுக்கு ஒரு கதைதான் இந்த முறை அதிலும் அட்டைபடத்தை மட்டும் காண்பிக்கிறீங்க உட்பக்க டீசர் எல்லாம் கிடையாதா :-) என்னமோ மாதவா வரவர டீசர் பக்கத்தில் கூட எடிட்டர் சஸ்பென்ஸ் வைக்கிறார் :-)
ReplyDeleteகுண்டா இருப்பவங்க ஒல்லியான நல்லாயிருக்கும்தான்..ஆனா..தோர்கல் கதை குண்டு ..? புக்காக படித்துவிட்டு ஸ்லிம்மா பார்க்க கஷ்டமாயிருக்கு..
ReplyDeleteஅட்டைப்படத்திலிருக்கும் ஜோலனின் குறி தவறாமல் இருக்க வேண்டுவோம்..
ReplyDeleteசின்ன திருத்தமுங்கோ ; கதையின் பெயரை இன்னொருக்கா படிச்சிட்டு அட்டைப்படத்தை இன்னொருக்கா பாருங்கோ !
Deleteஅப்ப அது ஜோலன் இல்லையா? தலைமுடி கலரை வச்சி கணிச்சிட்டேன் சார்.
Deleteஅடுத்த சாய்ஸ் சூமந்திரகாளி மற்றும் டெக்ஸின் இரத்த முத்திரை :-)
ReplyDeleteசூமந்திரகாளி இல்லை என்றால் கண்டிப்பாக தாயில்லாமல் டால்டன் இல்லை தான். மறுபதிப்பு செய்ய மிகச்சிறந்த சிரிப்பு மேளா கதை இது.
Delete///4 E-Road ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்கள் இரண்டும் எவையாக இருக்கக்கூடுமென்று சரியாய் யூகிக்க முயற்சிக்கலாமே guys ?////
ReplyDelete1.சுஸ்கி விஸ்கி மறுபதிப்பு
2.ரோஜர் மறுபதிப்பு
இது ஆசிரியரோட லிஸ்ட்லேயே இருக்காதே..!
Deleteஎல்லாம் டெக்ஸ் & லக்கியே சொல்றாங்க.... சரி நாம கொஞ்சம் மாத்தி சொல்வம்னு....!!!!
Delete😜
Book fair special:
ReplyDelete1.டெக்ஸ்-பழிக்கு பழி
2.லக்கி லூக்-சூ மந்திரகாளி🥰
E-Road special.
ReplyDelete1.டெக்ஸ்வில்லர்.
2.லக்கி லூக்
//இரத்தப் படலம் டெஸ்பாட்ச் வெள்ளியன்றிருக்கும் ! (ஆகஸ்ட் 13 )//
ReplyDeleteசார் எனது இளைய மகளின் பிறந்தநாளில் எனது ஆதர்ஷ நாயகன் XIII வருவது நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் நகழ்வு...
கடந்த ஆகஸ்ட் 13 ல் 2132மீட்டர்...என்ன ஒரு ஒற்றுமை..
அநேகமாக 2025 ஆகஸ்ட் ல் குப்புறப்போட்ட ஒரே தொகுப்பாக வந்தால் மகிழ்ச்சி சார்..
வசூல்ராஜா MBBS படத்திலே வர்ற அந்த "லக்கி ரூம் நம்பர் காமெடி" நேத்து தான் ஏதோ சேனலில் ஓடியது ! நீங்களுமே பாத்தீங்களோ பழநி ?
Deleteஹிஹி சார்..
Deleteஉயிரைத் தேடி வண்ணத்தில் வருகிறதா?
ReplyDeleteமிக்க சந்தோஷமான மகிழ்ச்சியான அட்டகாசமான ஆர்ப்பரிப்பான இனிப்பான செய்தி.
நன்றியோ நன்றி சார்.
//ஆகஸ்ட் 14 & 15 தேதிகளில் E-ROAD புத்தக விழாவினில் புது இதழ்கள் நீங்கலாய் கைவசமுள்ள பாக்கி அனைத்து இதழ்களுக்கும் வெவ்வேறு சதவிகித டிஸ்கவுண்ட்ஸ் இருந்திடும் - ஆங்கில CINEBOOK உட்பட ! //
ReplyDeleteசார் ப்ளீஸ் இதைமட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டிங்கன்னா மிக்க மகிழ்ச்சி...
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete😳😳😳😳
Deleteஆட்டத்துல ஆயிரம் உண்டுங்க GP!😉
Deleteஅந்த ரெண்டு புக் என்னான்னு கண்டுபிடிக்கிறதுல்லாம் ரொம்பவே ஈஸி. ஆசிரியரே கண்டுபுடிச்சி சொல்லிடுவார் பாருங்களேன்.
ReplyDeleteம்ஹூம்! அவர் அதெற்கெல்லாம் சரிப்பட மாட்டார்!!
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete//அழுத்தமான கதைக்களத்தோடு பயணிக்கும் தோர்கல் தொடரினில் இது சற்றே லைட்டான சாகஸமே எனும் போது - இந்த சிங்கிள் ஆல்பம் treatment சுகப்படுமென்றே நினைக்கிறேன் ! பார்ப்போமே !!//
Deleteபார்க்கலாம் சார்... வெயிட்டிங்....!!
இரவு வணக்கம் நண்பரே SK
Deleteவணக்கம் நண்பரே STVR.
Delete
ReplyDeleteஆமா.... E Road புக் ஸ்பெஷலாக என்னென்ன வருது..?
இரத்தப் படலம் வர்துன்றாங்க..
ஆகா...சூப்பர்..சூப்பர்...
தோர்கல் வருதுன்றாங்க...
அடடே..அட்டகாசம்..!
அதுபோக...ரெண்டு மறுபதிப்பு வருதுன்றாங்க..
ஹையா..ஜாலிதான்.
மின்னும் மரணம் மேக்சி சைஸ் + ரத்தக் கோட்டை மேக்சி சைஸ்..
ReplyDelete+1 போடாதவங்க ரத்தம் கக்கிச் சாவாங்க..!☺☺☺
Deleteமேக்ஸி சைஸூல டைகரை பாக்கறவங்களும்தான்!! :D
Deleteஏப்பா இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்க.
Delete///மேக்ஸி சைஸூல டைகரை பாக்கறவங்களும்தான்!! ////
Delete:))))))))))
///மேக்ஸி சைஸூல டைகரை பாக்கறவங்களும்தான்!! :D///
Deleteசெனா.. 😂😂😂😂😂
வைத்தியமே கிடையாதாமே..?
இரண்டுமே காமிக்ஸ் புக்ஸ் ஆசிரியரே.. சொக்கநாதா பரிசு எனக்கே.. 😇
ReplyDeleteஇரண்டும் ரீபிரிண்ட் காமிக்ஸ்
Deleteஇரண்டும் தமிழ் ரீபிரிண்ட் காமிக்ஸ்
Deleteஒரு குட் நியூஸ்..
ReplyDelete'உயிரைத்தேடி கலர்ல வரப்போகுது.'
ஒரு பேட் நியூஸ்..
'அடுத்த ஆன் லைன் புக்ஃபேருக்குதான் வரப் போகுது..'
Book fair special :-
ReplyDelete1.டெக்ஸ் - இரத்த வெறியர்கள்
2.லக்கி லூக் - ஜேன் இருக்க பயமேன்
சார் புக் fair புத்தகங்கள் மாத புதகங்களோ அல்லது ரத்தப்படலம் உடனோ அனுப்பினால் கொரியர் காசு மிச்சமே என யோசிக்கிறேன். அல்லது பணம் அனுப்பி அடுத்த மாத புத்தகங்களோடு சேர்த்து அனுப்ப கேட்டால் முடியுமா. அப்படியே ஒரு குறிப்பிட்ட பணத்துக்கு மேல் ஆர்டர் செய்தால் கொரியர் தள்ளுபடி என்ற ஆபர் அளிக்கமுடியுமா
ReplyDeleteஎடை கூடக் கூட, கூரியர்களில் கட்டணங்களும் கூடிடும் எனும் போது - புக்ஸ் கூட்டணிகளில் பெரிதாய் சேமிப்பு இராது நண்பரே !
Deleteஅப்புறம் நிறைய புக்சிற்கு 35 % வரையிலும் தள்ளுபடி உண்டு ; இதனில் கூரியர் கிரயங்களையும் வஜா செய்வதாயின் பட்டாப்பெட்டி கழன்று போயிடும் !
வணக்கம்
ReplyDeleteபழிக்கு பழி
ReplyDeleteசூ மந்திர காளி
இரண்டும் களம் காண போகிறது என அனுமானிக்கிறேன்
இரண்டுமே படங்கள் நிறைந்த புத்தகமுங்கோ !!!
ReplyDeleteபரிசு நிச்சயமுங்கோ.😀😀😀😀
😀😀😀😀 என்னா புத்திசாலித்தனம்!!!
Delete///SMASHING 70's முன்பதிவுகள் தட தடத்து வருகின்றன ! இன்னமும் இரண்டே கால் மாத முன்பதிவு அவகாசம் இருக்க - 500 என்ற அந்த இலக்கைத் தொட்டு விட சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது !///
ReplyDeleteஅருமை சார்! நிச்சயம் தொட்டுவிடும்! வேதாளரின் மகிமை!!
///வேதாளரின் மகிமை!!///
Deleteவேதாளருக்காக மட்டுமே!
புக் ஃபேர் ஸ்பெஷல்:1.மாயாவி தோன்றும் இரும்புக் கை மாயாவி 2.பழிக்கு பழி-டெக்ஸ்
ReplyDeleteஇரத்தப்படலத்தையே ஒரே மூச்லே படிக்கிற அளவுக்கு உனக்கு காமிக்ஸ் வெறி இருக்கலாம்.. அதுக்காகவெல்லாம் அதிகாரி கதைகளை படிச்சுட முடியாது.. தமிழ் காமிக்ஸு பரம்பரையிலியே அதிகாரிக்கு இருக்கிறே ஒரே டெம்ளேட் கதைக யாருக்குமே கெடையாது.. இருபது பக்கம் படிக்கிறதுக்குள்ளயே கண்ணு சொக்குற மேரி இருக்கும்.. அதனால் தான் பேரே ஸ்லீப்பிங் டோஸு... அதிகாரி கதையே படிக்காதவனைக் கூட தூக்கம் வரனும்ன்னா தன்னோட கதையை படிக்க வெச்சிறுவான் ஸ்லீப்பிங் டோஸு..
ReplyDeleteசார்பட்டா பரிதாபங்கள்..
///ஸ்லீப்பிங் டோஸு///
Delete///சார்பட்டா பரிதாபங்கள்..///
ஹாஹாஹா! சூப்பர்!
///சார்பட்டா பரிதாபங்கள்..///
DeleteWhy this kolaveri?
7 stages of grief ல அவரு இன்னும் denial stage ல இருக்காருங்க பத்து சார். டவுசர் ரசிகர்களுக்கு hope ங்கற கடைசி ஸ்டேஜ் வரது கொஞ்சம் சிரமம் தான்.
Deleteபூனை குளோசிங் த ஐஸ்.. அண்ட் கத்திங் ஹே திஸ் வேர்ல்ட் ஈச் ஒரே இருட்டு..
Deleteரம்மியப் பாத்தா அப்பத்தான் தோணுது..:-)
தங்கத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்! 👍👍👍
Delete🥇🇮🇳 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🇮🇳🥇
ReplyDeleteஹா ஹா!! மீம்ஸ் எல்லாம் செம!!
ReplyDeleteஅட்டகாசம் கிரிதரசுதர்ஸன்!
நன்றி🙏💕
Deleteசுஸ்கிவிஸ்கிய பின்னாடி நிக்கவச்சீங்க பாருங்க - அங்க நிக்கறீங்க! :):):):)
DeleteBook fair special:
ReplyDelete1.டெக்ஸ்-பழிக்கு பழி
2.லக்கி லூக்- தாயில்லாமல் டால்டன் இல்லை! (கொஞ்சம் வித்தியாசமா கேட்டு வைப்போமே! விழுந்தால் வீட்டுக்கு; விழாவிட்டால் நாட்டுக்கு!)
தாயில்லாமல் டால்டன் எனது எண்ணமும் அதுவே விஜயன். இது இலவச இணைப்பாக வந்த கதை எனவே பல நண்பர்களிடம் இந்த கதை இருக்க வாய்ப்புகள் குறைவு. இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு காத்துக்கொண்டு இருப்போம் :-)
DeleteeRoad BF Spl:
ReplyDeleteலக்கியின் சூமந்திரகாளி
ஸ்பைடர்'ரின் கதை
முடிந்தால் eRoad புத்தக விழாவிற்கு நேரில் செல்ல முயற்சிப்பேன்
ReplyDeleteSorry sir ; முழுக்கவே ஆன்லைனில் மாத்திரமே அந்த இரு தினங்களிலும் ஆபீசினர் இயங்கிடுவர் ! நேரில் வருவதாயின் அந்த வார இறுதிக்குப் பின்பான திங்களுக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !
Deleteபுக் பேர் ஸ்பெஷல்:
ReplyDeleteஇரும்பு கை மாயாவி-முதல் சாகசம்
லக்கி லூக்-சூ மந்திர காளி அல்லது தாயில்லாமல் டால்டன் இல்லை...
டெக்ஸோட பழிக்கு பழி ரியல் புக் பேரில் வெளிவரும் On line புக் பேரில் அல்லன்னு பட்சி சொல்லுது...
பாப்போம்....
இரத்த வெறியர்கள் and பழிக்கு பழி
ReplyDeleteநியூயார்க்கில் மாயாவி ..!
ReplyDeleteஎன்னவொரு மிரட்டலான கதை.
மிரட்டலான கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன அட்டகாசமான சித்திரங்களும் அற்புதமான மொழிப்பெயர்ப்பும்.
வில்லனாக சாகசம் புரிகின்றார் இரும்புக்கை மாயாவியார்.
10/10 மதிப்பெண்கள்.
ஏதோ எழுத நினைத்து இப்படியாகிவிட்டது.
100% அதகள சாகசம், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நகரும் hi tempo கதை...
Deleteஉண்மை உதய் ப்ரோ.
Deleteஆமாம் சரவணன் ப்ரோ... அட்டைப்படமும் புத்தகத் தரமும் வேறு லெவல் தான்... எனக்கென்னமோ அந்த பாக்கெட் சைஸ் தந்த செமத்தியான விறுவிறுப்பும் மெகா விருந்துமாக அமைந்தது.
Delete///ஏதோ எழுத நினைத்து இப்படியாகிவிட்டது.///
Deleteஹா ஹா ஹா! :)))))))
இல்லை விஜய் ப்ரோ. முழு விமர்சனம் மற்றும் கதைச் சுருக்கம் தான் எழுத நினைத்தேன்.பல நண்பர்களுக்குப் பயந்து பயந்து வரும் என்பதால் எழுதவில்லை.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமறுபதிப்பு எந்தக் கதையாக இருந்தால் என்ன.?
ReplyDeleteஒரு இனிப்புப் பண்டம் அதன் எல்லா பக்கங்களிலுமே சுவைக்கத்தான் செய்யும்..
தானைத் தலைவனின் விண்வெளிப் பிசாசு என்று நினைக்கிறேன்..
ReplyDeleteமறு பதிப்பு ஈ புக் ஸ்பெஷல்..
இன்னொரு மறு பதிப்பு தல யின் இரத்த வெறியர்கள் அல்லது பலி கேட்ட புலிகள் .
ReplyDeleteதடதடக்கும் 70's முன் பதிவுகள்..
ReplyDeleteமகிழ்ச்சியோ மகிழ்ச்சி...
வழியனுப்பவந்தவன் முதலில் படித்தபோது பெரிதாக ஈர்க்கவில்லை.தளத்திலும் ஆசிரியர் கேட்டிருந்த போது எனக்குப் பிடிக்கவில்லை என்றே குறிப்பிட்டிருந்தேன்.
ReplyDeleteசமீபத்தில் நமது தளத்தில் டாக்டர் செனா அனா சாரின் விமர்சனம் படித்த போது வ வ புக்கை இன்னொரு முறை வாசிக்கத் தோன்றியது.ஒரு வாகான விடுமுறை நாளில் எலீஜா ஸ்டெர்னை ஆற அமரப் படித்தேன்.பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டார் வெட்டியான் ஸ்டெர்ன்.புத்தகங்களை வாசித்தே போஸ்ட்மார்ட்டம் செய்கின்றார் ஸ்டெர்ன்.ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகம் எல்லாம் அலசப்படுகிறது.
ஆர்ப்பாட்டமான கதைக்கு சித்திரங்களும் மொழிபெயர்ப்பும் உயிர் கொடுக்கின்றன.
இதன் இரண்டாவது ஆல்பம் வெளிவந்தால் மகிழ்வேன்.
வித்தியாசமான வெட்டியான் கதை.
10/10 மதிப்பெண்கள்.
அப்படி வாங்க வழிக்கு :-)
Deleteலக்கி லூக் சூ மந்திரக்காளி
ReplyDeleteடெக்ஸ் வில்லர் மறுபதிப்பாகாத ஏதாவது ஒரு கதை
மீம்ஸ்கள் அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteவளமையான கற்பனைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDelete///பிரிக்கப்பட்ட நேசமும், அன்பும்,ஆவலும், வளருமே தவிர என்றுமே குறையாது///
Delete+1
//E-Road ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்கள் இரண்டும் எவையாக இருக்கக்கூடுமென்று சரியாய் யூகிக்க முயற்சிக்கலாமே guys ?//
ReplyDeleteமுத்து காமிக்ஸில் ஒரு புக் -
விண்வெளி ஒற்றர்கள் அல்லது
விசித்திர வேந்தன் அல்லது
கல் நெஞ்சன்
லயன் காமிக்ஸில் ஒரு புக் -
இரும்பு மனிதன் அல்லது
கொலைப்படை அல்லது
உலகப்போரில் ஆர்ச்சி
எப்படி பூபதி இப்படி???
Deleteஒரு வேளை வேதாளரின் கதை ஏதும் புக்பேரில் வருமோ வண்ணத்தில் :-)
ReplyDeleteSmashing 70s வேதாளர் இருப்பதால் இப்போது வர 99% வாய்பில்லை ராசா அப்படி என்று புத்தி சொல்லுது :-)
சொல்லுங்க இன்னும் நல்லா சொல்லுங்க
Deleteடெக்ஸ் மற்றும் லக்கி லூக்
ReplyDeleteசீரியஸ் மஞ்சள் சட்டை மற்றும் சிரிப்பு மஞ்சள் சட்டை
ReplyDeleteகாமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கும் 🙏.
ஞாயிறு...
இத்தனை பணிகளுக்கு(ம்) இடையே,
ஞாயிறு புலரும் போது வாசகர்களை
சந்திக்க வேண்டும் என்ற உங்களின் மதித்தலுக்கு 💐.
பழைய காலம் போய்,
புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, யாருடைய தொந்தரவும் இல்லாது, பழைய நினைவுகளை அசை போட்டபடியே அலுவலகம் வந்து போவதும் ஒரு அழகான சுகமே💞.
முகநூல் காமிக்ஸ் குழுக்களில், அறிமுகமான நட்புக்கள், வருடம் தோறும் நடக்கும் ஈரோடு காமிக்ஸ் சங்கமத்தை சொல்லியபோது, இந்த வருடத்தில் நான் மட்டுமல்ல,யாருமே கலந்து கொள்ள முடியாதபடி போனது கொ....னா எனும் கொடிய அசுரனால்.
இருக்கட்டுமே.
பிரிக்கப்பட்ட நேசமும், அன்பும்,ஆவலும், வளருமே தவிர என்றுமே குறையாது என்பது இந்த அரக்கனுக்கு புரியவில்லை விரைவில் புரியும்.
ஆன்லைன் புத்தக கண்காட்சியில், "என்ன புத்தகம் வாங்கலாம்"என, முகநூல் நட்புக்களிடம் கேட்டபோது,
"இது படிங்க,இதை வாங்கலாம் "என எனக்கு ஆவலாகவும், தெளிவாகவும் பதில் தந்தனர்.
அதுமட்டுமின்றி பகிரி தளத்திலும்,
புக் விலை அதிகமாக இருந்தாலும்,
"சார் இது வாங்காதீங்க, விலை அதிகம்
காத்திருங்கள்" என, பலமுறை குறைந்த விலையில் வாங்க உதவினர்.
நடக்க துவங்கும் குழந்தையை,
கையை பிடித்து அழைத்து செல்வது போன்ற உணர்வே அவர்களிடம் இருப்பதை கண்டேன்.
இந்த முகமறியா அன்புக்களை காண, மனதில் நேசம் இன்னும் அதிகமாகிறது.
மத்தபடி....
தோர்கல் இன்னும் தொடவே இல்லை இனிதான். அதுபற்றி எதும் தெரியலை.
இந்த மாத பதிப்புக்களை எதிர் பார்க்கிறேன் மிகமிகமிகமிகமிகமிகமிகமிகஆவலுடன்.
400 வது இதழாயிற்றே.💞❤️💞😍.
முதல்முறையாக இந்த ஆன்லைன் திருவிழாவில் கலந்து கொள்வதால்,
"யார் இதழ் போடுவீர்கள்" என யூகிக்க
முடியவில்லை.
பொத்தம் பொதுவாக சொல்லி,
"ஏம்பா உனக்கென்ன தெரியும்"என கேப்பாங்களோ (கேக்க மாட்டாங்க)
என தயக்கம்.தயக்கமும் நாளடைவில் சரியாகும்.🤝
இரத்தப் படலம்,70s ஸ்பெஷல் வரவுகளை எதிர் பார்க்கிறேன்.
மேலும்...
லயன் காமிக்ஸ் பற்றிய புதிய செய்திகள், வெளிவரும் வெளியீடுகள் பற்றி,அதிக பார்வையாளர்களை சென்றடைய,
தங்களின் முகநூல் பக்கமான,
"முத்து-லயன் பக்க"த்தை மீண்டும் இயக்குவதன் மூலம் இன்றைய லயன் நிகழ்வுகளை அவர்கள் காண ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.❤️
இது வேண்டுகோளே தவிர வேறென்றுமில்லை.
இதெல்லாம் படித்துவிட்டு...
யாராவது நம்மை கேலி செய்வதற்கு முன்,
நம்மை நாமே கேலி செய்து கொண்டால்,
எந்த கேலியும் நம்மை பாதிக்காது என்ற கூற்றுப்படி,
நீங்களே மீம்ஸ் போட்டு விட்டீர்கள்.
இனி வரும் வாரங்களில் தங்களின் பதிவுக்காக காத்திருக்கும்,
வாசக அன்புள்ளங்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.
மீண்டும் அடுத்த பதிவில்🌹...
ஸ்நேகத்துடன் ஸ்ரீ.
தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள் சிவகுமார்.
Deleteமீம்ஸ் சகலமும் யதார்த்தங்களின் வெளிப்பாடே எனும் போது அவற்றை உங்களோடு சேர்ந்து நானும் ரசிக்கிறேன் சார் ! தவிர பகடியாகவே இருக்கும் வேளைகளிலுமே - சொல்லும் விதத்திலுள்ள நயமும், ஹாஸ்யமும் அதன் கூர்முனைகளை மிருதுவாக்கிடுகின்றன ! So no problems at all !
Delete// SMASHING 70's முன்பதிவுகள் தட தடத்து வருகின்றன ! இன்னமும் இரண்டே கால் மாத முன்பதிவு அவகாசம் இருக்க - 500 என்ற அந்த இலக்கைத் தொட்டு விட சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது ! //
ReplyDeleteமகிழ்ச்சி. விரைவில் 500 என்ற இலக்கை தொட்டு விடுவோம்.
மீம்ஸ் எல்லாமே அருமை கிரி.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteவிற்று தீர்ந்து விட்டதால் டெக்ஸ் ன் ஒரு பிரளய பயணம் மற்றும் லக்கி மறுபதிப்பு.
ReplyDelete***** முடிந்தால் உதவுங்கள் *****
ReplyDeleteநமது நெடுநாள் வாசகர் மேட்டூர் ஜெயக்குமார் ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கிடும் பழக்கமுள்ளவர். 'ஒரு பிரளயப் பயணம்' புத்தகம் படுவேகமாக ஸ்டாக்அவுட் ஆகிவிட்டதால், ஆன்லைனில் வாங்கிட இயலவில்லை. லயன் ஆபீஸிலும், முகவர்களாக செயல்படும் நமது நண்பர்கள் சிலரிடமும், சேலத்திலுள்ள கடைகளிலும் - என பல்வேறு இடங்களில் விசாரித்தும் பலன் கிடைக்கவில்லை!
உங்களில் யாரிடமேனும் இரண்டு பிரதிகள் வைத்திருந்தால், டெக்ஸை பிரிந்து வாடும் அவருக்கு இரண்டில் ஒன்றை விலைக்குக் கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
பழநி
Deleteor
நமது சின்னமனூர் ஏஜெண்ட் VMR Bookshop
or
பாண்டியில் நண்பர் கலீல்
or
Chennai Higginbothams
or
Bellco Publishers Chennai
இவர்களுள் யாரிடமாச்சும் நிச்சயம் கிடைக்கும் !
ஜெயக்குமார் @ உங்கள் முகவரியை அனுப்புங்கள். எனது புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
Deleteதகவலுக்கு நன்றிகள் எடிட்டர் சார்!
Deleteதனது புத்தகத்தைக் கொடுத்து உதவ முன்வந்த PfTக்கும் என்னுடைய + நண்பர் ஜெயக்குமார் சார்பாக நன்றிகள் பலப்பல!! _/\_
எனக்கென்னமோ அந்த இரண்டு மறுபதிப்புகள்ல ஒன்னு 'ஒரு பிரளயப் பயணம்'ஆக இருக்குமோன்னு தோனுது!
ReplyDeleteகத்திமுனையில் இல்வர்சீ (முழு வண்ணத்தில்)
Deleteஇல்வர்சீ இன் இஸ்தான்புல் (மூணு வண்ணத்தில்)
செம selection கண்ணா.
Deleteநாடி நரம்பு ரத்தம் எல்லாம் மாடஸ்டி என ஊறிப்போன ஒரு வராமல் தான் இப்படி சரியாக சொல்ல முடியும் :-)
///நாடி நரம்பு ரத்தம் எல்லாம் மாடஸ்டி என ஊறிப்போன ஒரு வராமல் தான் இப்படி சரியாக சொல்ல முடியும் ///
Deleteஹா ஹா ஹா! :)))))
அன்பு ஈரோடு விஜய்க்கு...
Deleteகாலையில் நான் செய்த பதிவில் கருத்து தெரிவித்து இருந்தீர்கள்.🙏.
அது தவறுதலாக வந்த பதிவாகையால் அதை டெலிட் செய்தேன்.அப்பதான் நீங்கள் செய்த கமெண்ட் பார்த்தேன்.
நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.🙏
///E-Road ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்கள் இரண்டும் எவையாக இருக்கக்கூடுமென்று சரியாய் யூகிக்க முயற்சிக்கலாமே guys///
ReplyDeleteசூ மந்திரக்காளி
பழிழ்கு பழி
இவையிரண்டுக்குத்தான் வாய்ப்பு அதிகம்..!
அடுத்த வாய்ப்பு..
ஜேன் இருக்க பயயேன்
இரத்த வெறியர்கள்
அடுத்த வாய்ப்பு..
தலைவாங்கும் தேசம்
பழிக்குப்பழி
வாய்ப்பே இல்லாதது..
ராமையா படலம்
டயபாலிக் மர்மம்
ஒரு ராமையா பாயசம் போட்ற வேண்டியது தான் போலும் !
Deleteமறுபதிப்பில் டெக்ஸ் வருமென்று நண்பர்கள் சொல்வது ஆறுதல். கூர்மண்டை, ஸ்அடீல் னா நம்மால முடியாது. இன்னும் எத்தனை காலத்துக்கு இவர்களை வைத்து குண்டுச்சட்டி குதிரையோ..... வேதாளர் வண்ணத்தில் மறுபதிப்பு ஒரிசனல் பிரிண்ட் என்றால் கேட்கவே ஆனந்தமாக உள்ளது.. நம்ம கையிலயா இருக்கு...... ???? சொக்கா பாத்து செய்....
ReplyDeleteWhatever it may be i am purchasing it.
ReplyDeleteI justify no cartoon.
May be one in spider or irumbukai
and one in modesty
Friends
Am I right?
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//ஸ்லீப்பிங் டோஸ் சார்பட்டா பரிதாபங்கள்//ஹாஹா சூப்பர்ஜீ சூப்பர் சூப்பர். எதிர்மறை விமசனம்தான்னாலும் ரசிக்கவைக்கறீங்களே சூப்பர் சூப்பர். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎனது சார்பாக ஒரு பிரளய பயணம் வேண்டி வேண்டுகோள் விடுத்த நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கும் அதனை ஏற்று புத்தகம் அளிக்கும் Parani from Bengalore அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஈ-ரோடு ஸ்பெஷல்
ReplyDelete1 லக்கிலுக்கின் சூ மந்திரகாளி
2
இளம்டைகரின் முழு தொகுப்பு.
எல்லோரும் ஒரு ரூட்டில் போனால் நாம வேற ரூட்ல போவோம்
எடிட்டர் சார் ஈரோடு ஸ்பெஷல் புத்தகங்களின் விலை என்ன?எப்பொழுது முன்பதிவு செய்யலாம்.
ReplyDelete(கதை என்னனனு தெரிந்துகொள்ள எனக்கு வேற வழி தெரியல ஆத்தா)
195
ReplyDeleteகொஞ்சநாளா டயபாலிக் அகில் தம்பியக்காணாமே. என்ன ஆனார்.. கரூர் ராஜ சேகரன்
ReplyDelete// ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் வியாழன் காலையில் (ஆகஸ்ட் 12) இங்கிருந்து புறப்பட்டிடும். //
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி...
// SMASHING 70's முன்பதிவுகள் தட தடத்து வருகின்றன ! //
ReplyDeleteஅருமை,அருமை...
// இரத்தப் படலம் டெஸ்பாட்ச் வெள்ளியன்றிருக்கும் ! (ஆகஸ்ட் 13 ) //
ReplyDeleteஇனியாவது காற்று வரட்டும்...
// ஆகஸ்ட் 14 & 15 தேதிகளில் E-ROAD புத்தக விழாவினில் புது இதழ்கள் நீங்கலாய் கைவசமுள்ள பாக்கி அனைத்து இதழ்களுக்கும் வெவ்வேறு சதவிகித டிஸ்கவுண்ட்ஸ் இருந்திடும் //
ReplyDeleteஆவலுடன்...
இந்த மாதம் மூன்று முறை கொரியர் வர போகிறது செம்மையான அனுபவமாக இருக்க போகிறது
ReplyDeleteநானும் மாடஸ்தி ஆளுதான்
ReplyDeleteBitter memories!!!
ReplyDeleteAround this time last year editor sir struggled a lot and went for near bankruptcy with most of his bucks buried in the new machinery which yet to see the daylight then and we had the wondrous opportunity to prove this whole world that editor sir can sustain the evil effects of an electron microscopic organism with much ease and sail through the catastrophic events of the yesteryear with a smile on his face and with a pride that his followers are more than mere fans simply by giving up xiii and funding for the future...perhaps xiii can be included in the longlist of late complications of 1st wave of the damned virus by the WHO restricted to this little Tamil comic kingdom..
After all XIII seems to be an unlucky number ...
Sorry ! Resentment.. Nothing else..editor sir is being deprived of monetary help of major book festivals for the 2nd consecutive year..
DeleteOne comirade wrote he skipped the annual subscription for the sake of xiii..I wonder how many more???
It causes agony..
The arrival of xiii opened the old scar