Powered By Blogger

Thursday, March 18, 2021

8347 கிலோமீட்டர்கள் !!

நண்பர்களே,

வணக்கம். 8347 கிலோமீட்டர்கள்  !! இலண்டனுக்கும் - சிவகாசிக்கும் இடையிலான தூரம் 8347 கிலோமீட்டர்கள் என்று கூகுள் சொல்லுகிறது ! அந்தத் தொலைவினில் ஒரு ஐநூறைக் கழித்து மீத ஏழாயிரத்துச் சொச்சம் கி.மீ.க்களை  ஜம்மென்று விமானப் பயணத்தில் செலவிட்டன - நமக்கான சில புத்தக பார்சல்கள் ! ஆனால் அந்த இறுதி 500 கிலோமீட்டரின் பயணத்தில் எண்ணிலடங்கா சிக்கல்கள் ; இடர்கள் ; சோதனைகள் ; செலவினங்கள் ; சுங்க வரிகள் ; இத்யாதி..இத்யாதி என நாய் படாத பாடு பட்டுவிட்டு, இறுதியாய் இந்தத் திங்களன்று தான் நம் அலுவலகம் வந்து சேர்ந்தன அவை ! Phewwww !! 

வேறொன்றுமில்லை folks - நாம் இறக்குமதி செய்த CINEBOOK ஆங்கில காமிக்ஸ் அடங்கிய பார்சல்களின் பயணத்தைக் பற்றிய வர்ணிப்பே மேற்படிப் பத்தி ! Anyways - புத்தகங்கள் பத்திரமாய் வந்திறங்கி விட்டுள்ளன எனும் போது இனி அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான் !



அடுத்த சில நாட்களுக்குள் இவற்றின் முழுமையையும் நமது 2 ஆன்லைன் விற்பனைத்தளங்களிலும் upload செய்திடுவார்கள் நம்மவர்கள் ! அதன் பின்னே ஆன்லைனில் வாங்கிடலாம் ; அல்லது நம்மிடம் நேரடியாகவுமே வாங்கிடலாம் ! 

And லிஸ்டிங் போட்ட பிற்பாடு, maybe ஒரு ஆன்லைன் CINEBOOK புத்தக விழாவையும் போட்டுத் தாக்கிடலாமா ? என்று பார்க்கலாம் ! 

Of course - விலைகள் பாக்கெட்டுக்குள் பொத்தல்களைப் போடவே செய்யும் தான் ; இன்றைய அன்னியச் செலாவணியின் மதிப்பையும், இங்கு கட்ட அவசியப்படும் இறக்குமதி வரிகளையும், CINEBOOK விலைகளையும் கணக்கில் கொள்ளும் போது - விலை நிர்ணயத்தினில் இதற்கு மேலாய் சகாயங்கள் சாத்தியப்படவில்லை ! ஆனால் இந்தியாவில் இந்த CINEBOOK டைட்டில்களை விற்பவர்களுள் - நமது விலைகளை அடிச்சுக்க வேறு யாரும் நஹி என்பதை மட்டும் சொல்லிடலாம் ! AMAZON பக்கமாய் ஒருவாட்டி பார்வைகளை ஓட விட்டீர்களெனில் நிலவரம் புரிந்திடும் ! 

நமது ஆதர்ஷ லக்கி லூக்கின் முழு செட் (ஆல்பம் 71 நீங்கலாக) தற்சமயம் நம் கைவசம் !! And இதுவரையிலும் படித்திரா கதைகள் எக்கச்சக்கமிருப்பதைப் பார்க்கும் போது கடைவாய் ஓரமாய் ஜொள் வடிகிறது தான் ; ஆனால் ஏப்ரல் இதழ்களின் பணிகள் கையைக் கட்டி வைத்திருப்பதால், புக்ஸை ரசிப்பதைத் தாண்டிப் பெரிதாய் எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை !! 

கார்ட்டூன்கள் வரிசையில் நமது ப்ளூகோட் நண்பர்களின் ஆல்பங்களும் கைவசமுள்ளன - நாமின்னமும் தமிழில் முயற்சித்திருக்கா ஆல்பங்களுடன் !! 

அப்படியே - ரொம்ப காலமாய் தமிழுக்கு கூட்டி வரச் சொல்லி ஒரு சிறு அணி கோரி வந்த YAKARI கதைகளுள் 10 ஆல்பங்களும் உள்ளன ஸ்டாக்கில் ! உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல இது அற்புதத் தேர்வாக இருக்கக்கூடும் - along with லக்கி லூக் !

தொடரும் சரக்கெல்லாமே கொஞ்சம் heavyweights !!

பராகுடா - 6 தனித்தனி ஆல்பங்களில் !

DAMOCLES - 2 தனித்தனி ஆல்பங்களில் ! 

LADY S - 5 ஆல்பங்கள் 

KENYA - முழு செட் 

அப்புறம் மறதிக்கார XIII-ன் full set + 2 XIII Mystery ஆல்பங்களும் கைவசமுள்ளன ! 

ஆக light reading + heavyweight reading - என இரு வசதிகளுக்கும் ஏதேனும் தேறக்கூடும் இந்தப் பட்டியலுள் ! So பட்ஜெட் ஒத்துழைக்கும் பட்சங்களில், தொடரும் நாட்களில் - try browsing the list people !

Happy Shopping & Happier Reading !! Bye for now all !

150 comments:

  1. பீட்சாகடை பீட்டர் வணக்கம் வைச்சுக்குறேனுங்க !!

    ReplyDelete
  2. தோர்கல் மட்டும் வரலை போல.

    ReplyDelete
  3. யகாரி மற்றும் லக்கி ஒரு செட் வாங்கி விடுவேன். . சில நாட்களுக்கு முன்பு க்ளிப்டனும் தோர்கலும் வாங்கினேன். நேரிடையாக சினிபுக்கிலிருந்து வாங்குவதை விடவே நமது விலை குறைவுதாங்க சார்.

    ReplyDelete
  4. WOW. Super news.

    Will order many titles... Curious to know the prices.. is there any special discounts for full set orders sir?

    Thank you for bringing the world famous books to our homes. Much appreciated.

    ReplyDelete
  5. Is Lucky Luke Complete Collection Volume 1,2,3 available sir?

    ReplyDelete
  6. வரும் நாட்கள் லக்கியின்நாட்கள் என்பது புத்தகங்களைப்பார்த்தாலே தெரிகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே,வாழ்க வளமுடன்,நலமும் பெற்று,🌹🌹🌹🌹🌹🍡🍡🍡🍡🍡🍡🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    ReplyDelete
  8. ஆங்கிலத் காமிக்ஸ் கள் நமது விற்பனையில். நான்லாம் எஏ, பிபீ, சிசீ, டிடீன்னு இங்கிலீஷ் படிக்கிறவாசகனுங்க இதெல்லாம்சீக்கிரம் லயன்ல கொண்டுவாங்கசார் . கரூர் ராஜ சேகரன் .

    ReplyDelete
  9. அருமையான தகவல் சார். நானும் சில புத்தகங்கள் வாங்கி கொள்கிறேன்.

    ReplyDelete
  10. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐
    .

    ReplyDelete
  11. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐

    ReplyDelete
  12. நமது அன்பு ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களிடம் நாங்கள் கற்றுக் கொண்டது பல நல்ல விசயங்கள். என்றுமே நீங்கள் எங்களுடன் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐

    ReplyDelete
  14. நான் 18வது

    கொஞ்சம் முன்னேற்றம்தான் எனக்கு......

    ReplyDelete
  15. இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்... சார்...

    இந்த வருடம் நமது தமிழ் காமிகஸ் உலகம் போல்... நீங்களும் ஜொலிக்க... எனது வாழ்த்துகள்... சார்...

    போன ஆண்டு முழுவதும் உங்களை ஒரு முறை கூட நேரில் சந்திக்க இயலவில்லை... இந்த ஆண்டு அந்த குறையை நீங்கள் வரும் ஈரோடு புத்தக விழாவில் தீர்த்து வைப்பீர்கள்... என நம்புகிறேன்... நன்றி...!!!

    ReplyDelete
    Replies
    1. போன ஆண்டு முழுவதும் உங்களை ஒரு முறை கூட நேரில் சந்திக்க இயலவில்லை... இந்த ஆண்டு அந்த குறையை நீங்கள் வரும் ஈரோடு புத்தக விழாவில் தீர்த்து வைப்பீர்கள்... என நம்புகிறேன்... நன்றி...!!!//

      அதே அதே...ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறோம் சார்...

      Delete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே...
    வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே...🌹🌹🎂🎂
    வாழ்வில் எல்லா வளமும்,நலமும் பெற்று வாழவும், இன்னும் கணக்கில் அடங்கா காமிக்ஸ்களை வாரி வழங்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..💐

    ReplyDelete
  21. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐

    ReplyDelete
  22. சினிபுக்கின் ஆங்கில காமிக்ஸ் இதழ்களின் அறிவிப்பு மிக மகிழ்ச்சியாக உள்ளது...

    நமக்கு தெரியாவிட்டாலும் நமது வாரிசு அவர்கள் பல நாட்களாக ஆங்கில காமிக்ஸ் வாங்கி தர சொல்லி கேட்டுக்கொண்டு இருந்தான்...இதழ் ,விலை பார்த்து விட்டு அவருக்கு வாங்கி கொடுத்து விட காத்திருக்கிறேன் சார்...:-)

    ReplyDelete
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  24. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐

    ReplyDelete
  25. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. சார்

    ReplyDelete
  26. ஆசிரியருக்கும், எடிட்டருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். சார். வணக்கம். இரும்புக்கை மாயாவி கலர்அட்டை மறந்துவிட்டீர்களே. கரூர்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  30. இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  31. நீண்ட ஆயுளுடனும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், நீடித்த புகழுடனும், நல்ல சுகத்துடனும் தாங்கள் என்றென்றும் இன்பமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே.. 💐💐💐

    ReplyDelete
  32. ////ரொம்ப காலமாய் தமிழுக்கு கூட்டி வரச் சொல்லி ஒரு சிறு அணி கோரி வந்த YAKARI கதைகளுள் 10 ஆல்பங்களும் உள்ளன ஸ்டாக்கில் ! உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல இது அற்புதத் தேர்வாக இருக்கக்கூடும் - along with லக்கி லூக் !////

    யகாரியை தமிழில் கண்டிடவே ஆசைகொண்டோம் (உபயம் : நமது வரலாற்று டாக்டர்)! சரி இப்போதைக்கு ஒன்னோ ரெண்டோ இங்கிலீசுலயே வாங்கிப் படிச்சுப் பார்த்திடலாம்னு இருக்கேன்!

    லக்கியின் ஆங்கில இதழ்களில் ஒரு சிலது என்னிடம் ஏற்கனவே உள்ளது.. அவற்றுள் மிகச் சிலதை மட்டும் படித்திருக்கிறேன்! ஆனால் நமது எடிட்டர் தரும் தமிழ் வசனங்களில் இருக்கும் ஹாஸ்யம் அதில் இல்லை என்பது உண்மையிலும் உண்மை!

    ஆங்கிலத்தை பிரதான மொழியாகக் கொண்டு படிக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்த சினிபுக் இதழ்கள் துளியூண்டாவது காமிக்ஸின் சுவையை அறிமுகப்படுத்துமே எனில், சினிபுக்கை வரவேற்கலாம் தான்!

    ReplyDelete
  33. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  34. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆசானே!!!

    ReplyDelete
  35. என்னுடைய மூத்த அண்ணன் நிரந்தர ஆசிரியர் காமிக்ஸ் தந்த கலைவள்ளல் திரு ஸ்ரீகாந்த் முத்து விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂 ‌

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..🎊🎉🎉🎉🎉
    உங்களது பிறந்தநாள் ஸ்பெஷல் அறிவிப்பாக இதை எடுத்துக்கொள்கிறோம் சார்..

    //அப்புறம் மறதிக்கார XIII-ன் full set + 2 XIII Mystery ஆல்பங்களும் கைவசமுள்ளன ! //

    ReplyDelete
  37. வழியனுப்ப வந்தவன்:

    இவன் ஒரு வெட்டியான் ஆனால் மனித உடலை கூறு போட்டு ஆராய்ச்சி செய்யும் நேர்த்தியை பார்த்தால் ஒரு மருத்துவராகவும் ஒரு துப்பறிவாளனாகவுன் தெரிகிறான்.

    மோரிஸன் நகரில் சார்லஸ் என்பவர் மட்ட ரகமான சலூனில் இறந்து விடுகிறார். அவர் எப்படி இறந்தார் அது கொலையா அல்லது இயற்கையான மரணமா? என்ற ஆராய்ச்சி மண்டையில் ஓடினால் அது தவறு இல்லை. அது கொலை என்று எதிர்பாராத விதத்தில் ஒரு கட்டத்தில் தெரிய வரும் போது வயதான அவரை கொல்ல காரணம் என்ன என அடுத்த கேள்வி மண்டையில் உதிக்கிறது.

    கதையின் ஆரம்பத்தில் லாரன்ஸ் நகரில் நடக்கும் ஒரு படைபிரிவின் வெறியாட்டம் அதில் ஒரு தாய் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க பக்கத்தில் அழுது கொண்டு இருக்கும் சிறுவன் அதனை பார்க்கும் மற்றும் ஒரு சிறுவன் துப்பாக்கியுடன். யார் இவர்கள் கதைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை கடைசி நான்கு பக்கங்களில் சொல்லிய விதம் அருமை.

    சார்லஸின் மனைவி, அவர் மனைவியின் தம்பி, சார்லஸின் நண்பர் லென்னி மற்றும் செல்லப்பிள்ளை கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படி கதாசிரியர் செதுக்கி உள்ளார்.

    கதையின் அடிநாதமாக உள்ளது ஓவியம். கார்டூன் பாணியில் இருந்தாலும் மனித மனதில் ஏற்படும் பல விஷயங்களை அழகாக காட்டியுள்ளார் ஓவியர். பல இடங்களில் வசனங்கள் இல்லாமல் நகரும் காட்சிகள் பிரமாதம்.

    கதையின் கடைசி பேனலில் உள்ள ஒரு காட்சியை பார்த்து விட்டு கதையை படித்து பாருங்கள் கதை இன்னும் சுவாரசியமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.

    அப்பறம் ஆசிரியர் குறைந்த நாட்களில் இதனை தமிழாக்கம் செய்ததாக சொன்னார் ஆனால் அப்படி தெரியவில்லை ஆச்சரியமாக உள்ளது. அற்புதமான இயல்பான சுருக் நருக் என மொழிநடையில் அமர்க்களமாக உள்ளது. பாராட்டுக்கள் ஆசிரியர் அவர்களுக்கு.

    வெட்டியானின் உண்மையான பெயர் என்ன? இன்னும் பல சுவாரஸ்யமான ரசிக்கும் விஷயங்கள் உள்ளன. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வெட்டியான் இவன் எனது மனதை கனமாக்கி விட்டான்.

    ReplyDelete
    Replies
    1. வெட்டியான் வசிக்கும் குடிசையை கவனியுங்கள் அதன் உட்புறம் உள்ள பொருட்கள் அதனை காட்டிய விதம் ஆகா ஆகா! இந்த கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் ரசிக்க உரையாட பல விஷயங்கள் உள்ளன! நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்!

      Delete
    2. ///கதையின் அடிநாதமாக உள்ளது ஓவியம். கார்டூன் பாணியில் இருந்தாலும் மனித மனதில் ஏற்படும் பல விஷயங்களை அழகாக காட்டியுள்ளார் ஓவியர்////

      சூப்பரா சொன்னீங்க PfB! கதையின் தன்மைக்கேற்ற கலரிங் பாணியும் மிகப் பொருத்தம்!

      அப்புறம்.. அந்த வெட்டியான் ஸ்டெர்னைப் பார்க்கும்போது உங்களுக்கு நம்ம காமிக்ஸ் வட்டத்தில் யாராவது நினைவுக்கு வராங்களா? அந்த ஒடிசலான உருவம்.. முன் வழுக்கை.. உருண்டை விழிகள்.. புத்தகங்களே கதி என்று கிடக்கும் பழக்கம்.. எந்த பந்தாவும் இல்லாத இயல்பான அனுகுமுறை.. 'பணியின் போது மட்டும்' கோட்-சூட் போட்டுக்கொள்ளும் நேர்த்தி...

      உங்களுக்கு யாராச்சும் ஞாபகம் வராங்களா?!! :P

      Delete
    3. அட அவரைத்தான் தமிழ் காமிக்ஸ் படிக்கும் அனைவருக்கும் தெரியுமே, எங்க ஊரு பக்கம்தான் ! ஆனா நான் அவர் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்! :-)

      Delete
    4. ஸ்டெர்ன் நிச இதயத்தை தோண்டி எடுப்பாரு;

      இவரு நம்ம இதயத்தில் பொதிந்துள்ள ரகசியத்தை மீட்டுடுவார்!

      Delete
    5. ஆமாம் விஜயராகவன்.

      Delete
  38. புதிய சினி புத்தகங்கள் - மகிழ்ச்சி!
    யகாரி எனது குழந்தைகளுக்கு முயற்சி செய்து பார்க்கவேண்டும்!
    முடிந்தால் இந்த பெரிய குழந்தைக்கு (அது நான் தானுங்கோ) யகாரியை தமிழில் கொடுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகளைப் பற்ற வைக்கும் ரகமல்ல Yakari எனும் போது - தமிழில் அதன் வெற்றி வாய்ப்புகள் எவ்விதமிருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுகிறேன் சார் !

      Delete
    2. Yakari ..
      மெய்யாலுமே குழந்தைகளுக்கானது பரணி..!

      Delete
    3. Not just for kids - each Yakari story carries many subtle messages hidden as a lesson for adults who refuse to learn. You must read it twice to understand this !

      I am definitely going for Yakari full set and all Lucky Lukes I dont have.

      Dear Editor,

      What is our new - post pandemic price per book?

      Delete
    4. I will try to buy them on next month for my kids!!

      Delete
  39. அடுத்து டிடெக்ட்டிவ் ஸ்பெஷலை கையில் எடுக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ராபின் கதையை தனிமையில் படித்து இன்புற்றிருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஞாபகமாக ஜொள்ளிக் கொள்கிறேன் PFB ஜார் 😌😁🤪😝😛

      Delete
    2. // ராபின் கதையை தனிமையில் படித்து இன்புற்றிருக்க வேண்டும் //

      அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ராசா இக்கட :-)

      Delete
  40. முடிந்தால் இந்தமாத இதழ்களோடு ஒரு cinebook கேட்லாக் அனுப்பினால் இந்த விஷயம் அனைவரையும் சென்றடையும் என்பது எனது கணிப்பு சார்.. வாய்ப்பிருந்தால்...கொடுங்க சார்...

    ReplyDelete

  41. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂💐💐💐

    ReplyDelete
  42. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்.🌹🎂💐🍫

    எத்தனை சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் அநாயசமாக தாண்டி வெற்றிகரமாக தமிழ்காமிக்ஸ் தலைமகனாக(ராக) பீடுநடைபோடும் தங்களது பயணம் என்றென்றும் சிறக்கவும் இந்த நாளில் வாழ்த்துகிறேன்.


    14-15வயதில் இருந்து தங்களது காமிக்ஸ்களே என் வாழ்க்கை துணை!
    என்றென்றும் இது தொடரும்....!!!

    ReplyDelete
  43. சார் நம்ம வயசை உத்தேசமா வெளியே சொல்லப்புட்டீங்களே!!! நம்ம கிளப் மானம் எப்பாடுபட்டாவது காக்கப்பட வேண்டும் என்பது நமது பிரதான கொள்கை அல்லவா சார்??? அ.அ.எ.யூ.பா.கி 💪💪💪

    ReplyDelete
  44. அ.அ.எ.யூ.பா.கிளப் அமைய காரணகர்த்தாவாக விளங்(கிய)கும் அன்பு எடிட்டருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்🎉🎊🎉🎊🎉🎊🎉

    ReplyDelete
  45. என்றென்றும் எடி சார்.... புட்டின ரோசூ சுபகாங்ஷாலு...

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சுந்தர தெலுங்கில் செப்பினேன் கண்ணரே. .. 🤣

      Delete
    2. சுபகாங்ஷாலு - கன்னடம் மாதிரி தெரியுது :-)

      Delete
    3. கன்னட இல்லை தெலுங்கு தான் பரணி. Shubhakankshalu என்று ஒரு தெலுங்கு படம் கூட வந்திருக்கு

      Delete
    4. சுபகாங்ஷா - kannaDA
      சுபகாங்ஷாலு - teLUgu

      :-D

      Delete
  46. 💐💐💐💐
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன் ஆசிரியர் அவர்களே!
    💐💐💐💐

    ReplyDelete
  47. ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  48. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆசிரியரே...

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.
      🎂🎁💐🌹🌈🎆🎉💥🌈🎇🍰

      Delete
  49. உங்கள் பிறந்த நாள் அன்று ஒரு சூப்பர் நியூஸ் சார் - வாழ்த்துக்கள்.

    கரெக்டா எனக்கு சம்பளம் வரும் ஒரு வாரத்துக்கு முன்னாடி இப்டி போட்டு தாக்கி இருக்கீங்க சார். ஒரே ஜொள் பிரவாகம் சார்.

    ஒரே கஷ்டம் என்னென்ன வீட்டுக்கு வர புக்க invisible ஆக்க என்ன பண்றதுங்கற யோசனை தான் சார் !!! ஒரே கொயப்பம்பா !!

    ஏற்கனவே வாங்கியவன் என்ற முறையில் தற்போது சற்றே விலை அதிகரித்திருப்பினும் (இவனுக்கு எப்பட்றா தெரியும்?) உங்கள் ரேட் அடுச்சுக்க ஆளே கிடையாது சார்.

    இதுல போன வருஷம் டிஜிட்டல் காமிக்ஸ்-ல 10 புக்கு லக்கி வாங்கினப்போ வீட்டுக்காரம்மாவிடம் "இனிமே பிரிண்ட் புக்கு நஹி நஹி - உனக்கு ரொம்ப இடம் save ஆகும்"னு அள்ளி விட்ட வாக்குறுதி இந்த லிஸ்ட்டை பார்தோடனே பறந்து போயிருச்சு சார். (45 வயசுல கட்டி வெச்சு அடிக்க போறாய்ங்களே ... என்ன பண்ணுவேன் !!).

    ReplyDelete
    Replies
    1. ///ஒரே கஷ்டம் என்னென்ன வீட்டுக்கு வர புக்க invisible ஆக்க என்ன பண்றதுங்கற யோசனை தான் சார் !///

      சப்பை மேட்டர்! வீட்டு அட்ரஸ் சொல்லுங்க ராக் ஜி... சட்டுபுட்டுனு எல்லா புக்ஸையுமே invisible பண்ணிப்புடலாம்! :D

      Delete
    2. ராகவன் எங்க வீட்டு முகவரிக்கு அனுப்ப சொல்லவும். நீங்கள் படிக்க நினைக்கும் போது எனக்கு வீடியோ கால் செய்யுங்க நான் புத்தகங்களை காண்பிக்கிறேன் நீங்கள் படித்து கொள்ளுங்கள் :-)

      Delete
    3. நீங்க வேற ஸ்டேட்ல இருக்கிங்க தல ..நான் பக்கத்துலதான் இருக்கேன்...ஸோ என்னோட முகவரி தான் சரியாஇருக்கும்...

      Delete
    4. பழனி @ இங்க சிக்னல் நல்லா வரும்! அதனால் புத்தகங்கள் இங்குதான் அனுப்ப போவதாக ராகவன் சொல்லிவிட்டார்! :-)

      Delete
  50. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    எடிட்டர் சார்.
    என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  51. பிறந்த நாள் வாழத்துக்கள் ஐயா...

    ReplyDelete
  52. காமிக்ஸ் கொடைவள்ளல் எடிட்டர் சமூகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டு, இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் சந்தா எக்ஸ்பிரஸில் இணைந்த சந்தோஷ செய்தியையும் பதிவு செய்துகொள்கிறேன். 🙏😍😀

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கார்த்திகேயன் சார்.

      Delete
  53. இந்த மாத புத்தகப் பார்சலுடன் வந்த "சந்தா 2021" டால்டன் சகோதரர்களின் டயலாக் மற்றும் BIG THANK YOU மற்றும் BIG REQUEST அட்டகாசமான முயற்சி. மிகவும் நன்று.

    பாட்டுப்பாடி முடிச்சாக்கா பூவா கண்ணிலே காட்டுவாங்களா மாட்டாங்களா. அட்டகாசமான சிரிப்பு கலந்த விளம்பரம் மற்றும் நன்றி நவிளல்.

    ReplyDelete
  54. தமிழில் , சுந்தர தெலுங்கில் வாழ்த்திய all நட்பூஸ்க்கும் ; போஜ்பூரியிலோ, துளுவிலோ வாழ்த்த நினைத்திருப்போருக்கும் நன்றிகள் ஒரு லோடு ! Muchas Gracias!

    ReplyDelete
  55. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயன் சார்... iii

    ReplyDelete
  56. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  57. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்! நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  58. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.. பிறந்தநாள் special issue எதுவும் இல்லையா சார்...?😊😊😊

    ReplyDelete
  59. விஜயன் சார், சிறு வயதில் முதன் முதலாகப் படித்த டெக்ஸின் எரிந்த கடிதத்திலிருந்து, இற்றைக்குப் பரகுடா எனும் காவியம் தாண்டிக் காமிக்ஸை எமது உற்ற நண்பனாக்கிவிட்ட உங்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். நேரடியாகச் சந்திக்க முடியவில்லை என்றாலும், கி.நா போன்ற உங்கள் உறவு தனித்துவமானது சார். இன்னும் பல்லாண்டு வாழ்ந்து எம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள். அப்புறம் வரும் ஆண்டில் கி.நாக்களை அதிகரிக்க அன்பாக வேண்டுகோள் வைக்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. // வரும் ஆண்டில் கி.நாக்களை அதிகரிக்க அன்பாக வேண்டுகோள் வைக்கிறேன் சார். // அருமை அருமை

      Delete
    2. ஐயா நிலவரே@ ///சிறு வயதில் முதன் முதலாகப் படித்த டெக்ஸின் எரிந்த கடிதத்திலிருந்து,////

      --- ரொம்ப சின்ன வயதாக காட்டிக்கொள்ள செம யுக்தி.

      "எரிந்த கடிதம்" சமீபத்திய கதை... அது வந்தபோது நீங்க சிறுவரா..நம்பிட்டோம்.

      Delete
  60. *லயன் காமிக்ஸ் ஆசிரியரும், நம் பால்யத்து ஆதர்ஷ நாயகரும், நம்மை எல்லாம் உடன்பிறப்புகளாகவே பாவிக்கும் மூத்த சகோதரர் விஜயன் சாருக்கு உள்ளங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்*. இறைவன் நல்ல சுகத்தோடும் செல்வத்தோடும் மேன்மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.நீடுழி வாழ்க. 💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

    ReplyDelete
  61. ஐயா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.....

    ReplyDelete
  62. இன்று பிறந்த நாள் காணும் சிங்கமுத்து வாத்தியார் அவர்களை வாழ்த்த வயதில்லை , இரு கரம் கூப்பி வணங்குகிறேன் !!!

    ReplyDelete
  63. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.வாழிய பல்லாண்டு மன நிறைவுடன்.

    ReplyDelete
  64. நமது லயன் விற்பனை தளத்தில் சுடசுட cinebook அனைத்தும் வந்துவிட்டது நண்பர்களே...ஒரு நல்ல விலையிலும் கூட போட்டுத்தாக்குங்கள்... சந்தாதார்களுக்கு எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் வேறு..ம்ம் கிளப்புங்கள்....

    ReplyDelete
  65. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடி

    ReplyDelete

  66. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்.

    ReplyDelete
  67. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  68. நமது அருமை நண்பர் ஹசன் அவர்களின் தாயார் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
    அன்னையாரின் ஆன்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் மடியில் அமைதியுற பிரார்த்தனை செய்வோமாக.
    ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன்
    😔😔😔😞😞😞

    ReplyDelete
    Replies
    1. ஈடு செய்ய இயலாத இழப்பு
      RIP 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    2. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன் ஜீ..

      Delete
    3. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன்!

      Delete
    4. ஈடுசெய்ய முடியாத இழப்பு. நண்பருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! 😔😔🙏🏼🙏🏼

      Delete
    5. நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது இரங்கல்கள்.

      Delete
    6. ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஹசன்.

      Delete
    7. எனது ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன். 🙏🙏🙏🙏.

      Delete
    8. எனது ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன். RIP

      Delete
    9. ஆழ்ந்த இரங்கல்கள்

      Delete
    10. ஆழ்ந்த இரங்கல்கள் ஹாசன் ஜி!
      🙏🙏🙏🙏

      Delete
  69. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன்ஜி..

    ReplyDelete
  70. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன் சார் !

    ReplyDelete
  71. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன்!

    ReplyDelete
  72. எனக்கு english காமிக்ஸ் பிடிக்காது....
    Only tamil dubbed....

    ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. நேக்கும் தான் ஹிஹி! :)

      Delete
  73. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு .....





    இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்ல

    வயது பற்றாததால்.........

    ஈரோடு விஜய் வயதையும்....கூட்டி கொண்டு....அப்பால வாழ்த்துகிறேன்....

    ஈ.வி......உங்க வயசு பிலீஸ்....
    என்னோடது 26....😊😊😊😊😊😊

    ReplyDelete
    Replies
    1. என்னுது ஒற்றைப்படை தான் மந்திரியாரே.. ஹிஹி! :)

      Delete
    2. வயது முதிர்ந்த வாசகர்கள் யாரேனும் வாரியளா......

      Delete
    3. தலீவரே உங்களை மந்திரியார் கூப்பிடறாரு

      Delete
  74. Many more happy returns of the day editor sir.

    ReplyDelete
  75. /// ஈ.வி......உங்க வயசு பிலீஸ்....
    என்னோடது 26..///

    அந்த 2ம் 6ம் கூட்டினா வர்ற வயசுதான் ஈவிக்கு.. சரிதானே ஈவி.
    ஈரோட்டுக்கு ஒரு லாலிபாப் பார்சேல்ல்...

    ReplyDelete
  76. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  77. இப்போதுதான் லயன் முத்து 2021 சந்தாவை கட்ட முடிந்தது. சினிபுக் தற்போது எட்டாத கணிதான்.

    டியர் எடி, சந்தா இலக்கு 1300ஐ தாண்டிவிட்டது போலவே? 'எக்ஸ்ட்ரா நம்பர்' இல்லையென்றால் உங்கள் "1000 சந்தா" கனவை இந்த ஆண்டு எட்டிவிட்டோமா?!

    ReplyDelete
    Replies
    1. Rafiq சார் சந்தா எண் 1001 இல் இருந்து தான் தொடங்குகிறது எனவே உங்கள் சந்தா எண்ணை வைத்து கணித்து கொள்ளுங்கள்.

      Delete
    2. தெய்வமே ...ஆயிரம் சந்தாக்களைத் தாண்டியிருப்பின் இந்நேரத்துக்கு அத்தனை பேரையும் இங்கு வரவழைத்து 3 வேளை தடபுடல் கிடாவெட்டோடு ஜமாய்த்திருக்க மாட்டேனா - என்ன ? அதுவும் 1300 ஐ தொட்டிருப்பின், ஆளுக்கொரு கட்டவுட் வைத்திருப்பேனே - எலெக்ஷன் கமிஷனின் கையில, காலிலே விழுந்தாச்சும் ?! அந்த நாலு இலக்க நம்பரில் முதலாவது சந்தாப் பிரிவை உணர்த்துவது ; பாக்கி மூன்று எண்ணிக்கையினை !

      முந்நூறு தொடவே இம்புட்டு நேரமெடுத்துள்ளது இம்முறை !

      Delete
    3. எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா moment, தாங்க எடி :)

      அது தொடங்கும் இலக்கம் என்று ஒரு சந்தேகம் இருந்தாலும் ஒருவேளை சென்னை புத்தகவிழாவில் கணிசமான சேர்க்கைகளாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்திலேயே அந்த கேள்வி.

      500 கூட தாண்டாதது சோக நிகழ்வே. எனக்கு தெரிந்த பல வாசகர்கள், சந்தா வேண்டாம், தனி தனி இதழ்கள் வாங்கி கொள்கிறோம் என்று ஒதுங்கி இருப்பதை கண்கூடாக பார்க்கிறேன்.

      கொரோனா காலகட்டத்தில் இதுதான் வருத்தமான New Normal போல.

      Delete
  78. ஆழ்ந்த இரங்கல்கள் ஹசன் சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  79. சார் இன்று பதிவுக் கிழமை......

    ReplyDelete
  80. இன்று பதிவுக்கிழமை ஆசானே....

    ReplyDelete
  81. 4500 விநாடிகள்.. பதிவை நோக்கி...!

    மாறுதலுக்குட்பட்டது.

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete