Powered By Blogger

Saturday, August 01, 2020

ஒரு பெருமூச்சுப் பதிவு ..!

நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் ! அந்தக் காலத்துக் கரி எஞ்சின் ரயில் ஏதேனும் இந்த நொடியினில் என்னருகே இருந்திருந்தால், மலைத்தே போயிருக்கும், நான் விடும் பெருமூச்சைப் பார்த்து ! என்னப்பு சமாச்சாரம் என்கிறீர்களா ?

நார்மலானதொரு நாளாய் இது இருந்து ; நார்மலானதொரு லோகமாகவும் இது இருந்திருந்தால் – நேற்றைக்கு ஈரோட்டுப் புத்தகத் திருவிழா துவங்கியிருக்கும் ; மாலை ரயிலைப் பிடித்து சாமத்துக்கு நானும் ஈரோட்டில் ஐக்கியமாகியிருப்பேன் & இன்றைய பகல் பொழுதில் நமது வாசக சந்திப்பு அரங்கேறியிருக்கும் -ஒரு வண்டி ஸ்பெஷல் இதழ்களோடு :

- ஒற்றை நொடி ஒன்பது தோட்டா!

- கென்யா!

- T & T ஸ்பெஷல் (Tex & Tesha)

  (+)

- ஒரு சஸ்பென்ஸ்  B&W இதழ்

நாம் போட்டிருக்க வேண்டிய வாண வேடிக்கைகளில், பக்ரீதோடு தீபாவளியும், கிறிஸ்துமஸுமே, முன்கூட்டி இணைந்து கொண்டுவிட்டனவோ என்ற சந்தேகமே எழுந்திருக்கும் ! ஆனால் கண்ணுக்கே தெரியா ஒரு நுண்கிருமி பூமியையே புரட்டிப் போடுவதென்பது தான் divine design எனும் போது வாண வேடிக்கைகளை விடுவதற்கு ஏது வழி – பெருமூச்சே கதி ! So Phewwwwww !!

நோய்த் தாக்கங்களின் எதிரொலிகள் ஏதேதோ விதங்களில் ; ஏராள ஜனங்களைப் படுத்தியெடுத்து வரும் நிலையில் – காற்றில் கரைந்து போய்விட்ட விற்பனை வாய்ப்புகள் + வியாபார முனைப்புகள் பற்றியெல்லாம் இப்போது பெருசாய் தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுவதில்லை ! அங்கே பிய்க்கவும் பெருசாய் ஏதுமில்லை தான் என்றாலுமே இந்த வருஷத்தை ஆரோக்கியத்தோடு ; உசிரோடு கடத்தினாலே தம்புரானுக்கு நன்றி சொல்லியாக வேண்டும் என்ற புரிதல் புலர்ந்து விட்டுள்ளதால், எனது பெருமூச்சுப் படலம் பண இழப்புகளுக்கோசரமல்ல ! மாறாக – 2013 முதலாய் ஒவ்வொரு ஆகஸ்டின் முதல் வாரயிறுதினையும், ஈரோட்டுப் புத்தக விழாவினிலும், வாசகச் சந்திப்பினிலும், செம குஷியாய்ச் செலவிட்டுப் பழகியபின் பிற்பாடு இந்த திடீர் லீவு மண்டை காயச் செய்கிறது ! ஆண்டுதோறும் ஈரோடும், சென்னையுமே நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு தரும் களங்கள் என்றிருந்தாலும் – ஈரோட்டில் முறையானதொரு அரங்கு ; சந்திப்பு ; கலந்துரையாடல் என்று செட் ஆகியிருக்க – ஆகஸ்டில் சார்ஜ் ஆகும் நமது பாட்டரிகள் ஜனவரி வரையிலும் வண்டியை இழுத்துப் போய் விடும் & ஜனவரியின் சென்னைப் புத்தக விழா அடுத்த 7 மாதங்களுக்கான ‘தம்‘மை நமக்கு வழங்கிடும் ! இம்முறையோ இறைவனின் சித்தம் வேறுவிதமாய் இருப்பதால் பழசை அசைபோட்டே பொழுதைப் போக்கிட வேண்டும் போலும் ! Phewwwwww!!

முதன்முறையாக ஈரோட்டுக்குப் பயணமானது 2013-ல் என்று ஞாபகமுள்ளது ! நண்பர் ஸ்டாலினின் முயற்சிகளின் பலனாக 2012-ல் வேறு பதிப்பகங்களோடு கூட்டுக் குடித்தனம் பண்ணியிருந்த நாம் – 2013-ல் தனி ஸ்டால் பெற்றிடும் அளவுக்குத் தேறியிருந்தோம் ! நமது பதிவுகளில் பின்நோக்கிப் பயணித்தால் ஏழு வருடங்களுக்கு முன்பான அந்தச் சின்னத் துவக்கத்தை அழகாய் நினைவு கூர்ந்திட முடிகிறது : http://lion-muthucomics.blogspot.com/2013/08/blog-post_14.html !நேரம் கிடைத்தால் நீங்களுமே அந்தப் பதிவுக்குள் புகுந்து தான் பாருங்களேன்!! இதோ over the years – ஈரோடு நாட்களின் ஒரு அணிவகுப்புமே : 

ஏழெட்டு ஆண்டுகளின் ஓட்டத்தில் அங்காங்கே ரிவர்ஸ் கியர் போட்டிருக்கும் முன்மண்டைகளையும்; பார்வார்ட் கியர் போட்டுள்ள மத்தியப் பிரதேசங்களையும் கவனித்தீர்களெனில், அவையே ஒரு தனிக்கதை சொல்லும் !! Phewwww!

When it all began - 2013 :





2013 
Followed by 2014 :





And this is 2015 :






எழுத்தாளர் திருமிகு.N சொக்கன் அவர்கள் பங்கேற்ற 2016








HERE'S 2017 :









FROM இரத்தப்படல  2018 :





பின்னோக்கிய நினைவுகள் கொணரும் உணர்வுகள் ; சந்தோஷங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கிடும் ரகமல்ல எனும் போது நான் அதனைச் செய்திட முனைந்திடக்கூடப்போவதில்லை ! ஒரு குண்டாச் சோற்றுக்கு ஒரேயொரு சோறை உதாரணமாக்கிடுவதாயின் - கலப்படமிலா மகிழ்வும், ஆனந்தமும் தாண்டவமாடும்  2017 -ன் அந்த இரும்புக்கவிஞரின் போட்டோவை மட்டுமே சொல்லுவேன் !! இப்போது சொல்லுங்களேன் - எனது பெருமூச்சுகளுக்குப் பின்னணி உள்ளதாயென்று !! Phewwww !!

Looking ahead – இந்த ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களைப் பற்றிய preview-க்குள் புகுந்திடலாமா? இதுவொரு '4 புக் மாதம்' எனும் போது எங்களுக்கு ஜுலையின் காலாட்டும் அவகாசம் லேது ; மாறாக காலில் வெந்நீரை ஊற்றியது போலவே சுற்றித் திரிய வேண்டியுள்ளது ! ஆனால் வாசிப்பில் இம்முறை உங்களுக்கு choice அதிகம் என்பதால் சுவராஸ்ய மீட்டர் எகிறும் வாய்ப்புகளுமே அதிகம் என்பேன் ! Moreso because – இம்மாதத்து சந்தா A-வின் சார்பில் ஆஜராகிடுவது நமது மறதிக்கார XIII ! இரத்தப் படலத்தின் மூன்றாம் சுற்று : 2132 மீட்டர் என்ற விசித்திரமான பெயருடன் துவங்குகிறது ! 

நிஜத்தைச் சொல்வதானால் ”இ.ப.” ஆல்பங்களின் எடிட்டிங் என்பது கடுங்காப்பியைக் காலையும், மாலையும் 'கபக் கபக்'கென்று குடிக்கும் அனுபவங்களுக்குச் சமானம் என்பேன் ! துவக்க நாட்களின் முதல் சுற்றில், கதைகளில் ஒரு அசுர வேகம் இருந்தாலுமே நாம் அவற்றைத் தனித்தனிப் பாகங்களாய்ப், பெரிய இடைவெளிகளில் வெளியிட்டு வந்தோம் எனும் போது – முந்தைய ஆல்பங்களின் கதைப்போக்கை நினைவு கூர்வது ; கதை மனிதர்களை ஞாபகம் வைத்திருந்து, சொதப்பாது பணியாற்ற முயற்சிப்பதென்பது ஏகமாய் குடலை வாய்க்கு வரச் செய்திடும் ! And அந்நாட்களில் “இ.ப.”வின் ஆங்கிலப் பதிப்புகளும் கிடையாதெனும் போது சாத்தியப்பட்ட ப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளின் மீது ஊன்றிக் கொண்டே தான் தட்டுத் தடுமாறி நடை போட்டிட வேண்டி வரும் ! வருடங்கள் ஓட்டமெடுத்த நிலையில் – “இ.ப.” இரண்டாம் சுற்றினை நாம் சமீபத்தில் கலரில் வெளியிட்ட போதுமே Cinebook-ன் ஆங்கிலப் பதிப்புகள் வந்திருக்கவில்லை தான் ; ஆனால் சந்தேகங்கள் எழுந்திடும் இடங்களிலெல்லாம் இன்டர்நெட்டின் சகாயத்தோடு ப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளை ; எனது புரிதல்களைச் சரிபார்க்கச் சாத்தியப்பட்டதால் நோவு குறைந்திடுமென்று நம்பினேன் ! ஐயகோ !! அந்த நம்பிக்கையைப் பணால் பணாலென பொடனியிலேயே போட்டுச் சாத்தியது - புதுக்கதாசிரியர் போட்டுத் தந்திருந்த “மேபிளவர்” என்ற  புது ரூட்! அமெரிக்கக் குடியேறிகளின் இஸ்திரி...ஜாக்கிரபி என்று எங்கெங்கோ சுற்றிய கதையின் / கப்பலின் பயணத்தைப் புரிவதற்குள் பொறுமைகளின் கையிருப்புகள் பரபரவென்று காலாவதியாகின ! So முதல் சுற்றிலாவது ஞாபகங்களைத் தூசி தட்டுவதோடு முடிந்த பணிகளானவை, இரண்டாம் சுற்றின் போது திணறத் திணற அடிப்பது போலிருந்தது ! 

இது தான் நிலவரம் என்றிருக்கும் போது ”2132 மீட்டர்” என்று “இ.ப.” சுற்று # 3 பற்றிய அறிவிப்பைப் போன வருஷம் பார்த்த போது கலவையான உணர்வுகள் உள்ளுக்குள் தலைதூக்கின ! "ஆஹா... தொங்கலில் இரண்டாம் சுற்று நிற்கும் நிலையில் இந்தச் சுற்றினை நாம் கண்டும், காணாது இருக்க இயலாதே !!" என்று புரிந்தது. அந்த நொடியில் “மறுபடியும் மேபிளவர்” என்றவுடன் மலங்க மலங்க முழிக்காதிருக்கவும் முடியவில்லை ! சரி... இருக்கவே இருக்கிறார் நமது கருணையானந்தம் அங்கிள் & இருக்கவே இருக்கிறார் கூகுள் ஆண்டவர் என்ற தைரியத்தில் அட்டவணையில் நமது மறதிக்காரரைச் சேர்த்து வைத்தேன் !

2020-ம் புலர்ந்து, மாதங்களும் ஓட்டமெடுத்து வந்தாலும், உள்ளுக்குள்ளிருந்த பீதி காரணமாய் ”2132 மீட்டர்” ஆல்பத்தை டிக் அடிக்கத் தயக்கம் நிறையவே இருந்தது ! 'இன்னிக்கு அஷ்டமி. நாளன்னிக்கு தசமி...' என்ற கதையாய்த் தள்ளிப் போட்டுக் கொண்டே போக – ஒரு கட்டத்தில் this is the moment ; இனியும் ஒத்திப் போட வழி லேது என்பது புரிந்தது ! So ஒரு சுபயோக சுபதினத்தில், சுமார் 45 பக்கங்களை கொண்ட பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பும் தயாராகியது & அதை அப்படியே நமது கருணையானந்தம் அவர்களுக்கு கைமாற்றி விட்டேன் ! And அவரும் சிரத்தையோடு எழுதியனுப்பியிருந்தார் – குழப்பமான இடங்களை மட்டும் blank ஆக விட்டபடிக்கு ! டைப்செட்டிங் மூன்றே நாட்களில் நிறைவுற்று – பிரிண்ட் அவுட்கள் ஜுனின் இறுதியிலேயே என் மேஜையில் செட்டில் ஆகிவிட்டன ! நல்ல நாளைக்கே நாழிப்பால் கறப்பவன் – அடுத்த ஒரு மாதத்துக்கு அவற்றை quarantine-ல் போட்டு வைத்த மாதிரி ஓரம் கட்டிவிட்டேன் ! And இனிமேலும் லேட் பண்ணினால் ஆகஸ்ட் இதழ்கள் ‘அரோகரா‘ ஆகிடும் என்ற நிலையில், புதன் மாலை (29-ஜுலை) இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிய கையோடு XIII-க்கு  ஹலோ சொல்லத் தயாராகினேன் !

முதல் பக்கத்திலேயே... முதல் ப்ரேமிலேயே ஏதோ செல்போன் டவர் மாதிரியான உசரத்தில், நம்மாள் கையில் ஒரு உயர்ரகத் துப்பாக்கியோடு சுடத் தயாராக இருக்க, ‘அட... கப்பலைக் காணோம்... இஸ்டரி.. ஜாக்கிரபியைக் காணோம் !‘ என்று மனசு துள்ளியது. மெதுமெதுவாய் பக்கங்கள் நகர்ந்திட, வேக வேகமாய் எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது ! ‘இந்தவாட்டி தெளிய வைத்துச் சாத்த மாட்டார்கள் போலும் !‘ என்று !! ஓவியர் வில்லியம் வான்ஸ் சித்திர ஜாலங்களில் இந்தத் தொடருக்கென ஒரு புது உச்சத்தை நமக்குக் கண்ணில் காட்டிச் சென்றிருக்கிராரெனில், அவரது மறைவுக்குப் பின்னே பொறுப்பேற்றிருக்கும் இந்தப் புது ஓவியர் முற்றிலும் வேறொரு லெவலில் மிரட்டி வருவது நாம் அறிந்ததே ! அதிலும் இந்தப் பாகத்தின் ஓவிய துல்லியம் கூரை மேலேறி நின்று கொண்டாட வேண்டியதொரு அற்புதம் ! கதை நெடுக நடமாடும் பெண்களின் முகங்களின் நுணுக்கங்களிலிருந்து, வாஷிங்டனின் வீதிகளைப் படம் பிடித்திருக்கும் லாவகம் வரை மனுஷன் செய்துள்ள அதகளங்களைக் கல்லறையிலிருக்கும் அமரர் வான்ஸ் கூட ஆரவாரமாய்க் கொண்டாடியிருப்பார் ! பக்கத்துக்குப் பக்கம், பாட்டம் பாட்டமாய் ஆளாளுக்கு வரலாற்றுப் பாடம் நடத்தியதே முந்தைய இதழ்களின் நடைமுறை என்ற போது, ஓவியரின் மாயாஜாலம் மழுங்கியே தென்பட்டது எனக்கு ! ஆனால் surprise... surprise... இம்முறை வசனங்களில் ஏகச் சிக்கனம் என்றதால், சித்திரங்கள் வீறுகொண்டு எழுந்து உலவியது போல் எனக்குத் தோன்றியது ! So மிரண்டு கிடந்தவனுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள, 14 பக்கங்களைத் தொட்டு விட்டேன் ஒன்றரை மணி நேரங்களுக்குள் !

அங்கே சின்னதாய் நெருட, பிரெஞ்சு ஸ்க்ரிப்டில் எனது குழப்பத்துக்கு விடை தெரியக் காணோம் ! சரி... பார்த்துக் கொள்ளலாமென்று பக்கங்களை புரட்டினால், சில இடங்களில் கருணையானந்தம் அவர்களும் சில வசனங்களை blank ஆக விட்டு வைத்திருப்பதைக் கவனித்தேன் ! அங்கே நிரப்ப வேண்டிய சமாச்சாரம் என்னவோ என பிரெஞ்சு ஸ்க்ரிப்டை மறுக்கா உருட்டினால் எனக்கும் முட்டி தட்டியது ! நமது மொழிபெயர்ப்பாளர் பிரெஞ்சில் ஆற்றல் கொண்டவர் தான் எனினும், ஒரு தேர்ந்த எழுத்தாளரல்ல எனும் போது அவரது ஸ்கிரிப்ட் எப்போதுமே ஒரு கம்பியூட்டர் பாடத்தைப் போலவே இருந்திடும் ! சில நேரங்களில், நமக்கு கிட்டும் ஸ்கிரிப்ட்டில் ஒரு கதை சொல்லும் பாங்கு இழையோடினால் மொழிபெயர்ப்பினில் ரொம்பவே உதவிடும் - அதிலும் மர்ம மனிதன் மார்ட்டின் ; XIII போன்ற கதைத்தொடர்களில் ! கொஞ்ச நேரம் ப்ரிண்ட் அவுட்களையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் மலங்க மலங்க பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன் ! மணி 11 ஆகியிருந்தது ! ரைட்டு... விஷப்பரீட்சைக்கு இது களமுமல்ல...அதற்கான நேரமுமல்ல என்ற தீர்மானத்தில் பரபரவென்று பாரிஸில் உள்ள நமது படைப்பாளிகளுக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் : “இ.ப. புது ஆல்பத்தின் பணிகளில் எனக்குக் கொஞ்சம் கேள்விகள் உள்ளன... நெடுந்தொடரில் குத்துமதிப்பாய் எதையேனும் பூசி மெழுகி வைத்து, நாளைக்குக் கதையின் போக்கில் அதுவே பிழையான புரிதல்களுக்கு வழிவகுத்திடக் கூடாதே என்று பயமாக உள்ளது ! ‘இதற்கான Cinebook இங்கிலீஷ் pdf கிடைக்குமா - ப்ளீஸ் ?‘ என்று எழுதிவிட்டு கட்டையைக் கிடத்தினேன்.

வியாழன் காலையில் முட்டைக் கண்களைத் திறந்ததே லாப்டாப்பில் முகத்தில் தான் !  ஆங்கிலப் படிவம் இருந்தால், தடுமாற்றமின்றிப் பணிகளை முடித்து விட முடியுமே என்ற நினைப்போடே படுத்தவனுக்கு விடியற்காலையில் வேறு சிந்தனைகள் ஓடவேயில்லை ! மின்னஞ்சலைப் பார்த்தால் – எனது மெயில் கிடைத்த இருபதாவது நிமிடமே நான் கோரியிருந்த pdf சகிதம் அவர்களது பதிலும் கிட்டியிருந்தது : "Of course –இதோ நீ கேட்ட இங்கிலீஷ் pdf ! ஒத்தாசைகள், எப்போது தேவைப்பட்டாலும் கேட்கத் தயங்க வேண்டாம்  ! All the best !’ என்று எழுதியிருந்தனர் ! 'அட்றா சக்கை' என்றபடிக்கே pdf-ஐ டவுன்லோட் செய்த கையோடு பக்கங்களை எடுத்துக் கொண்டு மறுபடியும் துவக்கத்திலிருந்தே புறப்பட்டேன் ! ஒரு ஒரிஜினல் பிரெஞ்சு எழுத்தாளர் பேனா பிடிப்பதற்கும், அந்த மொழியினைக் கற்ற நம்மவர் பேனா பிடிப்பதற்குமிடையே புரிதல்களில் பெரிதாய் வேற்றுமை எனக்கு கண்ணில்படவில்லை தான் ! ஆனால் பேனா பிடிப்பவர் ஒரு எழுத்தாளராய் ; கதை சொல்பவராய் இருக்கும் போது வரிகளில் தென்படும் சுலபத்தன்மை தான் தூக்கலாய்க் கொடி பிடித்துத் தெரிந்தது !  ஏற்கனவே ப்ளூ கோட்ஸ் ; தோர்கல் போன்ற சில ஆல்பங்களிலும் இது போன்ற அனுபவம் எனக்கிருந்துள்ளது தான்; ஆனால் அவை எல்லாமே நேர்மறையான கதைகள் என்பதால் பெரிதாய் எந்தவொரு குழப்பங்களும் அன்றைக்குத் தோன்றியதில்லை ! ஆனால் இதுவோ ஒரு தடதடக்கும் இடியாப்ப கிராபிக் நாவல் எனும் போது, சின்னச் சின்ன வித்தியாசங்கள் கூட ஏதேனும் குழப்பிடக் கூடுமோ ? என்ற பயம் தலைதூக்கியதால் முதற் பக்கத்திலிருந்தே redo செய்து கொண்டே புறப்பட்டவன் மதியத்திற்குள் பாதிப் பக்கங்களை முடித்திருந்தேன் !

கொஞ்ச நேரம் காலாட்டிக் கொண்டிருக்கலாமென எழுந்த போது தான் சில விஷயங்கள் பிடரியில் சாத்துவதை உணர முடிந்தது ! Without a doubt - மூன்றாம் சுற்றின் இந்த முதல் ஆல்பம் ஒரு அசாத்தியத் த்ரில்லர் ! இதற்கு முந்தைய ஆல்பங்களில் தென்பட்ட தொய்வுகளையெல்லாம் ஈடு செய்திடும் விதமாய் இந்தப் புதுச் சுற்றில் தெறிக்க விட்டிருக்கிறார் கதாசிரியர் ! வழக்கமாய் ஆடியில் ஆரம்பிக்கும் புதிர்களை, மறு சித்திரைக்கு சாவகாசமாய் முடிச்சவிழ்க்க முனைந்திடும் பாணிகளைக் கடாசி விட்டு, இந்த ஆல்பத்தினில் ஆங்காங்கே jigsaw puzzle போலத் துளிர்விட்ட முடிச்சுகள் ஒவ்வொன்றுக்குமே இந்த ஆல்பத்தினிலேயே புரிதல்களும் கிடைத்திட கதாசிரியர் வழிசெய்திருப்பதை உணர்ந்த போது எனக்கு மூஞ்சியெல்லாம் பல் ! சம்பந்தமே இல்லாது தோன்றும் சமாச்சாரங்களைக் கூட கதைக்கு crucial ஆன லிங்க்களாய் உருமாற்றும் லாவகத்தைப் பார்த்த போது பிரமிக்காது இருக்க முடியவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாய் முன்னே இடப்பட்டிருந்த புள்ளிகளெல்லாம் என்ன மாதிரியானதொரு ரங்கோலிக்கென Yves Sente திட்டமிட்டிருந்தார் என்பதை இந்த ஆல்பத்தில் செமையாய் புரிந்திட முடிகிறது ! என்ன ஒரே சமாச்சாரம் – இரண்டாம் சுற்றின் முந்தைய இதழ்கள் சகலத்தையும் ஒருவாட்டி 'தம்' கட்டிப் படித்து விட்டு இந்த ஆல்பத்தினுள் புகுந்தால் – “இந்தாள் அந்நாளைய வில்லன் ஆனந்தராஜா ? அல்லது இந்நாளைய காமெடியன் ஆனந்தராஜா ? என்ற ரீதியிலான கதைக்குழப்பம் எழாதிருக்கும் ! Cinebook-ன் ஆங்கிலப் பதிப்பின் உதவியோடு எடிட்டிங்கில் மறுக்கா புகுந்த போது, சில இடங்களில் திருத்தங்களும், கதையின் க்ளைமேக்ஸ் பகுதிகளில் மொத்தமாகவே மாற்றி எழுதவும் தேவைப்பட்ட போதிலும், கதையின் விறுவிறுப்பின் புண்ணியத்தில் பெரிதாய் சோர்வு தலைதூக்கிடவில்லை ! In fact இத்தனை பக்கங்களை அலுப்பின்றி நான் மாற்றி எழுதியது ரொம்ப ஆண்டுகளுக்கு பின்பாக இப்போது தான் என்று சொல்வேன் ; இல்லையேல் முக்கியபடிக்கே தான் வேலைகள் ஓடிடும் ! (கடைசியாக இம்மாதிரி ஜாலியாய் redo செய்தது மார்டினின் “கனவுகளின் குழந்தைகள்”!)
Yves Sente - கதாசிரியர் 

ஓவியர் Youri Jigounov
Coloring : Bruno Tatti
கதையின் ஓட்டத்தோடு ஏகப்பட்ட புதுப்புதுச் சமாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது ! "Designated Survivor" என்றால் என்ன? தலைநகர் வாஷிங்டன் D.C.யில் வானளாவிய உசரமான கட்டிடங்கள் ஏன் கிடையாது ? அமெரிக்க அரசியல் சாசனங்களின் புதிரான விதிமுறைகள் என்ன ? என்றெல்லாம் தெரிந்து கொண்ட திருப்தியோடு க்ளைமேக்ஸுக்கு வந்தால் ஒற்றைப் பக்கத்தில் தெறிக்கும் காமெடியும், மறுபக்கத்தில் தெறிக்கச் செய்யும் ஆக்ஷனும் இடம்பிடிப்பதைப் பார்க்க முடிந்த போது – “ஆஹா. இந்த கதாசிரியர் மனுஷன் - ஜாம்பவானான வான் ஹாமிற்கே செம tough fight” தந்திடுவார் போலிருக்குதே என்று பட்டது !! Phewwwww !!!

பொதுவாய் ஒரு கதை ஹிட்டடிக்கும் என்பது உறுதிபடத் தெரிந்தாலுமே அதற்கு over the top பில்டப்களைத் தர முயற்சிப்பதில்லை ! ஓவராய் வாயைச் செலவழித்து விட்டு, ஓவராய் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு, அப்பாலிக்கா ஓவராய் முட்டுச்சந்துகளைத் தேடிப் பயணம் பண்ணுவானேன் ? என்ற முன்ஜாக்கிரதையில் மேலோட்டமாய் நாலு பிட்டைப் போட்ட கையோடு அடுத்த இதழுக்குத் தாவுவது என் வழக்கம். ஆனால் முதன்முறையாக அந்தப் பழக்கத்துக்கு ஒரு விதிவிலக்கு இருந்து போகட்டுமே என்ற எண்ணம் ”2132 மீட்டர்” ஆல்பத்தின் புண்ணியத்தில் எனக்குள் தோன்றுவதால் – இந்த வாரம் the preview’s focus will be on XIII & nobody else ! 'அது சரி, வாங்குன காசை விட ஜாஸ்தியாய் இந்தவாட்டி தம்பி கூவுறாப்டி... ஏன்னு தான் தெரியல!‘ என்ற லேசான அல்லது பலமான எண்ணம் உங்களுக்குள் ஓடினால் தப்பில்லை தான் ! Simply becos - "இ.ப" இரண்டாம் சுற்றின் முந்தைய பாகங்களின் கதையோட்டம் என்மட்டிற்காவது ரொம்பவே படுத்தி எடுத்தது போலத் தோன்றியதால் – மிரண்டு கிடந்தவனுக்கு, இந்த ஆல்பம் அடிக்கும் பரபரப்பு சிக்ஸர் ஒவ்வொன்றுமே 12 ரன்கள் பெறுமானமானதாய்த் தெரிகிறது ! அதனால் தான் “வருங்கால சனாதிபதி அண்ணன் XIII வாழ்க!” என்று தம் கட்டிக் கூவிடுகிறேன் ! அதுவும் அந்தக் கடைசி 2 பக்கங்களில் ரஃபேல் போர்விமானமாய் சீறிடும் கதையானது வேறு லெவல் ! அடுத்த அத்தியாயத்தோடு இந்தச் சுற்று நிறைவுறுகிறது என்பது போல காதில் சேதிகள் விழுந்தன! ஆனால் தற்போது கோடை விடுமுறைகளில் உள்ள படைப்பாளிகள் ஆகஸ்ட் மத்தியில் திரும்பிய பிற்பாடு விசாரித்தால் தான் சரியான தகவல்கள் தெரியும் ! எது எப்படியோ – செல்போன் டவரை ரிப்பேர் பண்ண டுப்பாக்கியும் கையுமாய் நம்மாள் ஏறுவது ஏனோ ? என்ற கேள்விகளுக்குத் காத்திருக்கும் விடைகள் இந்தத் தொடருக்கு ஒரு லோடு பூஸ்ட்டைத் தந்துள்ளது மட்டும் நிஜம் ! Phewwwwww !!

இதோ – ஒரிஜினல் டிசைனுடனான நமது அட்டைப்படம் & உட்பக்கப் preview ! செவ்வாயன்று அச்சுக்குச் செல்கின்றன – ஜம்போவின் ஜேம்ஸ் பாண்டுடன் ஜோடி சேர்ந்து கொண்டு ! 2019-ல் ரிலீஸ் ஆன இந்த 2132 மீட்டர் இதழுக்கு state of the art கலரிங் பாணி எனும் போது அதிலும் ரகளை காத்துள்ளது ! So 'வந்துட்டாருன்னு சொல்லு... 10 வருஷத்துக்கு முந்தைய ஜேஸனாகவே வந்துட்டாருன்னு சொல்லு !' என்று தகிரியமாய்க் கூவுகிறேன் !! 

Moving on, ‘இ.ப.‘ & ஸ்பைடரார் முன்பதிவுகள் பற்றி :

- இ.ப. தற்போதைய புக்கிங் # 92 தான் ! அந்த துவக்கத்து euphoria வடியத் துவங்கிய பின்னரும் ஆர்வங்கள் தொடர்ந்திடுமா ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி ! இன்னமும் மூன்று மாத அவகாசமுள்ளது எனும் போது we'll wait & watch !

- And ஸ்பைடர் முன்பதிவின் number : 22 !

ஸ்பைடர் இதழானது சின்ன விலையிலானது என்பதால் இதழ் வெளியாகும் தருணத்தில் வண்டி வேகம் கண்டிடும் என்று நினைக்கிறேன் ! XIII ஸ்பெஷல் தான் காத்திருக்கும் 90 நாட்களில் எவ்விதம் பயணிக்கவுள்ளது என்று அறிந்திட ஆர்வமாய்க் காத்திருப்பேன்! For now உங்களது முன்பதிவுத் தொகைகள் பத்திரமாய் டெப்பாஸிட்டாய் துயின்று வருகின்றன !
கிளம்பும் முன்பாய் - பல முறைகள் நாம் (சு)வாசித்துள்ளதொரு தலைப்பினில் சமீபமாய்க் கிட்டியதொரு லெட்டர் பற்றி : 
=================================================================
அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம். நீங்களும் நம் காமிக்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம் என நம்புகிறேன்.

வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். மிகவும் துயரமான இந்தக் காலக்கட்டத்தைக் கடந்து வருவதில் நம் காமிக்ஸ் எனக்குப் பெருந்துணையாக உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. கொரோனா ஆரம்பித்த காலத்தில் பொள்ளாச்சி அருகேயிருந்த பழங்குடி இன மக்களுக்கு என்னுடைய பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷின் சகாயத்தோடு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் நாட்கள் நகர நகர எங்களுடைய நிலைமையும் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. உளச்சோர்வு பெரிதாக என்னை ஆக்கிரமிக்கும் சமயங்களில் எல்லாம் நம்முடைய காமிக்ஸிடம்தான் தஞ்சம் புகுகிறேன். அதிலும் குறிப்பாக அதிகாரியின் கதைகள் அனைத்தையுமே கிட்டத்தட்ட மறுவாசிப்பு செய்து விட்டேன். எத்தனைதான் டைகரின் மிகப்பெரிய விசிறியாக இருந்தாலும் இருண்ட காலங்களில் நம் முகங்களில் சிறிதளவு ஒளியையேனும் கொண்டு வருபவை கார்ட்டூன்களும், அதிகாரியும் மட்டுமே. அதற்காக உங்களுக்கு என் நன்றி. இந்தப் பயணம் தடையின்றி தொடர என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். அண்மையில் நம்மை நீங்கிச் சென்ற வாசகர் ஜே எஸ் கே-வின் பொருட்டு ஒரு காமிக்ஸை வெளியிடுவதென்பது மகத்தான காரியம். தேவையின்றி உங்களைக் காயப்படுத்தும் சங்கதிகளைத் தவிர்த்து காமிக்ஸ் பணிகளில் தொய்வின்றி ஈடுபடுங்கள். உங்களோடு நாங்கள் எப்போதும் இருக்கிறோம். உங்களுக்கு மீண்டும் என் நன்றியும், அன்பும்.

பிரியமுடன்,

கார்த்திகைப் பாண்டியன்
=================================================================

நண்பர் ஒரு தீவிர டைகர் அபிமானி என்பதில் ரகசியங்கள் இல்லை எனும் போது, அவரது மின்னஞ்சலில் 'தளபதி' vs 'தல' என்ற போட்டி நோக்கெல்லாம் இருப்பதாய் நான் நினைக்கவேயில்லை ! மாறாக - இந்த சிரம நாட்களில் அந்த 'feel good factor ' க்கு அதிகாரியாரே ஒரு மிடறு உசத்தி என்ற கருத்தை அடிக்கோடிடுவதாய் மட்டுமே பார்த்திடுகிறேன் ! So பாயசங்களுக்கு பரணை உருட்டாதீங்கோ சம்முவம்ஸ் !!  And கார்ட்டூன்கள் பற்றியும் நண்பர் எழுதியுள்ளது செம்மையாய் மனத்தைக் குளிர்விக்கிறது !! துரதிர்ஷ்டவசமாக  வெகுஜன ஆதரவு நம் சிரிப்பு பார்ட்டிகளுக்கு இல்லாது போயினும் - அவர்களின்பால் அவ்வப்போது பாய்ந்திடும் கனிவான ஒளிவட்டங்கள் warms the heart !! நன்றிகள் கா.பா. சார் !! 

Bye guys... See you around !  2021-ன் கேட்லாக் பணிகள் அழைப்பதால் நடையைக் கட்டுகிறேன் !!  Have a cool weekend &  Do Stay Safe !!

266 comments:

  1. எதிரிகள் ஓராயிரம்:

    ஆயிரம்
    இரண்டாயிரம்
    முவாயிரம்
    நாலாயிரம்
    ஐய்யாயிரம்

    இவருக்கு எதிரிகளும் அதிகம்
    இவரின் மதிப்பும் அளவிட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. எதிரிகளும் அதிகம்,சாகஸங்களும் அதிகம்...
      "கும்,ணங்,சத்" துகள் அதிகமோ அதிகம்,தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் நமக்கு மிக,மிக அதிகம்....

      Delete
    2. உண்மை.

      நான்கு பாகங்களும் அருமை.

      Delete
  2. XIII ஐ வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்கும் பத்து.
    இரண்டாம் பாகம் 4264ங்களா?

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. // 2021-ன் கேட்லாக் பணிகள் அழைப்பதால் நடையைக் கட்டுகிறேன் !! //
    நாவில் ஜலம் ஊறும் தகவல் இதுதான் சார்...

    ReplyDelete
  5. 2132 மீட்டர் உங்கள் முன்னோட்டம் இ.ப. வண்ண தொகுப்புக்கு பின்னர் XIIIன் இந்த கதை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதையில் மேப்பிளவர் history & geography இல்லை என நீங்கள் சொன்னது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது சார்.

      Delete
  6. சின்னத்தலக்கு தனி சந்தா போடும் நேரம் வந்துடுச்சு. பெரிய தல கதைகள் எல்லாத்தையும் படிச்சு முடிக்க முடியுமான்னு தெரியல. அட்லீஸ்ட் சின்னத்தல கதைகளாவது அனைத்தும் படிக்க ஏற்பாடு செய்யுங்க ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. நச்சுனு கேட்டீங்க போங்க!

      Delete
    2. சந்தாவே சின்னதாய்ப் போட வேண்டிய நெருக்கடியில் இருக்கும் இந்த வேளையில் சின்னதலைக்கொரு சந்தாவுக்கு நான் எங்கே போவேன் கோப்பால்ல்ல் ??

      Delete
    3. சந்தாவை சின்னாத போடுங்கள் கோபால்ல்ல் வேண்டாம் ஏன சொல்ல வில்லை கோபால்ல்ல்

      இந்த வருடம் வரவேண்டிய ஈரோடு ஸ்பெஷல் மற்றும் அடுத்த வருட ஈரோடு ஸ்பெஷல் இரண்டும் ஸ்பெஷல் சந்தாவாக அடுத்த ஜூன் மாதம் ஒரு ஆறு புத்தகங்களாக அறிவிப்பு செய்யுங்கள் கோபால்ல்ல் :-)

      Delete
  7. மீண்டும் கிங் கோப்ரா:

    தங்கள் எதிரி கிங் கோப்ராவை அழித்து விட்டோம் என நினைத்து ஓய்வெடுக்கும் லாரன்ஸ் மற்றும் டேவிட் ஜோடிகளுக்கு கிங் கோப்ராவால் மீண்டும் ஒரு சவால். அது என்ன? பக்கத்துக்கு பக்கம் கதாசிரியர் அசாதாரணமான கற்பனை கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. 50 பக்க கதையில் லா & டே எத்தனை முறை மயங்கி விழுந்தார்கள் என்பதை விட எத்தனை விதமான வித்யாசமான பொறிகள் இருந்தன என ஒரு போட்டி வைக்கலாம்; அனைத்துமே சுவாரசியமாக இருந்தது.

    குறை என நினைப்பது அட்டைப்படத்தில் கிங் கோப்ராவை வரைவதற்கு பதில் வேறு யாருடைய படத்தை வரைந்து.

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் கிங் கோப்ரா அட்டைப்படமே நாம் பயன்படுத்தியுள்ளது ! உட்பக்கங்களில் உள்ள கிங் கோப்ராவின் மூக்கு ஆக்சிடெண்டில் நெளிந்தது போயிருப்பது தான் மிஸ்ஸிங் ! இங்கே பாருங்களேன் :

      Delete
    2. மேலுள்ள பின்னூட்டத்தினில் Please click on : இங்கே பாருங்களேன் !!

      Delete
    3. அப்போ இது ஒரிஜனல்தானா கோப்ப்ப்பால்??

      Delete
    4. அக்மார்க் ஒரிஜினலே தான்!

      Delete
    5. வில்லனின் முகம் அல்லது சனாதிபதியின் கிராப் முகம் ஏதாவது ஒன்று வந்திருக்க வேண்டும்.. இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் அடித்திருக்கிறது.. ஓவியர் கதையை வாசிக்காமல் வரைந்திருந்திருப்பாராயிருக்கலாம்..

      Delete
  8. நண்பர் கா பா...உங்கள் சேவையில் உங்களுக்கு இறைவனும் எங்கள் பிரார்த்தனைகளும் துணை நிற்கும்.

    ReplyDelete
  9. விஜயன் சார், 007 மற்றும் லாரன்ஸ் டேவிட் கதைகளில் அந்த கதையில் வரும் நாயகர்கள் அல்லது வில்லன்களின் படங்களை முடிந்தால் அட்டைப்படமாக போடுங்களேன் சார்.

    007 - சுரூல் முடி ஜேம்ஸ் படத்தை போடலாம், ஆங்கில படத்தில் வந்த 007 ஹீரோவை போட வேண்டாமே சார்?

    லாரன்ஸ் டேவிட் - கிங் கோப்ரா என்று சம்பந்தமே இல்லாத ஒரு முகம் இந்த மாத அட்டைப்படத்தில்.

    முடிந்தால் இதனை consider பண்ணுங்க சார். Just a kind request.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் வாலில் இப்போதுள்ள image பக்கமாய் சித்தே பார்வையை ஓட விடுங்களேன் சார் !

      Delete
    2. பார்த்து விட்டேன் சார். நன்றி. புரிந்து கொண்டேன்.

      Delete
    3. உட்பக்கங்களின் கதை மாந்தர்கள் எவ்விதமிருந்தாலுமே அட்டைப்படங்களில் இயன்றமட்டுக்கு அவர்களை அழகாய்க் காட்ட முனைவதென்பது உலகெங்குமான பொதுவான நடைமுறைகளே ! டெக்ஸ் வில்லரின் உட்பக்க சித்திரங்களை கீச்சல் பாணியிலான Ortiz போட்டிருந்தாலும் அட்டைப்படங்களில் ஓவியர் கிளாடியோ வில்லாவின் கம்பீரமாய் மிளிரும் டெக்ஸ் தான் இடம்பிடித்திருப்பார் ! ஹெர்மன் போன்ற ஜாம்பவான்களோ உள்ளே உள்ளது அழகோ, சுமாரோ - அதையே மாற்றமின்றி அட்டையிலும் வழங்கிடுவர் ! அது அவர்களின் பெயரிலேயே ஓடிவிடக்கூடிய வண்டிகளுக்கு சிக்கல்களின்றி பொருந்தும் ! இங்கேயும் நாம் கோப்ராவின் மூக்கை நெளித்து ; பவுடர் போடாது, பரட்டையாகவே விட்டு, அட்டையில் போடலாம் தான் ; ஆனால் லாரன்ஸ் - டேவிட் யாரென்றே தெரியா ஒரு casual வாசகர் கடைகளில் புக்கைப் பார்க்கும் போது அது வாங்கிடத் தூண்டுமென்று தோன்றுகிறதா சார் ?

      Delete
    4. // லாரன்ஸ் - டேவிட் யாரென்றே தெரியா ஒரு casual வாசகர் கடைகளில் புக்கைப் பார்க்கும் போது அது வாங்கிடத் தூண்டுமென்று தோன்றுகிறதா சார் ? //

      Point taken.

      Delete
    5. அச்சச்சோ...நீங்கபாட்டுக்கு 'டப்பென்று' நிஜத்தைப் புரிந்து கொண்டு ஒத்துக்கிட்டா எப்படி சார் ? "அஸ்க்கு..புஸ்க்கு....இது ஒரிஜினலாவே இருந்து, நீ வெறுமனே பின்னணி கலரை மட்டும் மெருகூட்டியிருந்தாலுமே தப்பு..தப்பு தான்"னு சொன்னால்லே பொதுவெளியிலே கெத்தா இருக்கும் ?

      Delete
    6. நமக்கு இந்த ஆட்டம் எல்லாம் சரிபாடாது சார்.

      உங்கள் ஆதங்கம் மற்றும் வலி புரிகிறது சார்.

      Delete
    7. வலியெல்லாம் இல்லை சார் ; இந்த கெத்துப் படலங்களின் வியர்த்தங்களை எண்ணிய அயர்வு மட்டுமே !!

      இந்தக் கொரோனா ஆண்டில் சுற்றிலும் கண்ணில்படும் இழப்புக்களை ; வேதனைகளைப் பார்க்கும் போது நமது மாமூலான பஞ்சாயத்துக்கள் ஒரு விஷயமாகவே தென்படுவதில்லை ! வறுமையில் உழலும் ஒரு அசாமிய தகப்பன் தனது 15 நாள் குழந்தையை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு விற்றதையெல்லாம் படித்த பிறகும், நாம் பார்த்திடும் இந்த 'கையைப் பிடிச்சு இழுத்தியா ?'க்களை வலியென்று சொல்வதாயின் அந்தப் பெற்றோர் மனசு பட்டிருக்கக்கூடிய பாட்டையெல்லாம் என்னென்பது ?

      Delete
    8. // வறுமையில் உழலும் ஒரு அசாமிய தகப்பன் தனது 15 நாள் குழந்தையை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு விற்றதையெல்லாம் படித்த பிறகும், நாம் பார்த்திடும் ///

      :-( கடவுளே.. 🙏

      Delete
  10. எடிட்டர் சார்..

    2132 குறித்த உங்கள் சிலாகிப்புகள் எங்களது உற்சாக மீட்டரையும் ஏகத்தும் எகிறச் செய்கின்றன! கதையின் விறுவிறுப்பும், வான்ஸுக்கே சவால்விடும் கதை சொல்லலும், சித்திரங்களின் துள்ளியமும் அமர்க்களமான ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு இட்டுச் செல்லப்போவதை உணர்த்துகின்றன! மறதிக்காரர் ஏன் அத்தாப்பெரிய டவர் மேல ஏறறார்னு தெரிந்துகொள்ள ஆவலோ ஆவல்! சீக்கிரமே புத்தகங்களை அனுப்பிவைக்க வேண்டுகிறோம்! (காமிக்ஸ் படிச்சு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்)

    EBF-2020.. ஹூம்!!

    இ.ப முன்பதிவு நிலவரம் - ஹம்!!

    இஸ்பைடர் முன்பதிவு நிலவரம் - அஹ்!!

    ReplyDelete
  11. கிங் கோப்ரா லாரன்ஸ் ஒரு காட்சியில் தலை ஒரு வளையத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் அவரின் கைகால் மறுபுறம் இருக்கும், அங்கு ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கும்.

    Incredible-2 படத்தில் எலாஸ்டிக் girlன் கால், உடம்பு, கை மற்றும் தலை எல்லாம் தனித்தனியாக அடுத்தடுத்த கதவுகளில் மாட்டி இருக்கும். அட்டகாசமான கற்பனை காட்சி அதில் இருந்து தப்பிக்கும் இடமும் அருமையாக இருக்கும்.

    அதுபோல ஒரு காட்சிதான் லாரன்ஸ் டேவிட் கதையில் நான் மேலே குறிப்பிட்டது.

    இந்த ஜோடியின் போராடும் குணம் தற்போது வரும் டெக்ஸ் மற்றும் 007 2.0 க்கு சற்றும் குறைந்தது இல்லை என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதையில் பரபர வென்ற ஆக்சன் வசனங்கள் குறைவு; ஒரு வேளை கதாசிரியருக்கு இன்னும் அதிக பக்கங்கள் அல்லது வசனங்கள் அதிகம் வரலாம் என சுதந்திரம் கொடுத்து இருந்தால் தற்போது வரும் மற்ற கதைகளை போல் அமைந்து இருக்கும்.

      லாரன்ஸ் டேவிட் அவர்கள் யாருடைய ஆலோசனை கேட்காமல் பட பட வென்று முடிவெடுத்து செயல்படுவது ப்ளஸ்.

      Delete
  12. ///
    - ஒற்றை நொடி ஒன்பது தோட்டா!

    - கென்யா!

    - T & T ஸ்பெஷல் (Tex & Tesha)

    (+)

    - ஒரு சஸ்பென்ஸ் B&W இதழ்
    ///


    ஹூம்.. போச்சே.. போச்சே...!!

    ReplyDelete
  13. அதுக்குள்ள இத்தன பதிவா

    ReplyDelete
  14. விஜயன் சார்,

    ஒரு சஸ்பென்ஸ் B&W இதழ் என்ன என சொல்லுங்கள் சார்? ஸ்பைடர்+ஆர்ச்சி கதை? ஈரோடு புத்தகத் திருவிழாதான் இல்லை அந்த சஸ்பென்ஸ் கதை என்ன என்று மட்டுமாவது சொல்லுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்க நினைத்ததை நீங்க கேட்டு விட்டீங்களே

      Delete
    2. ஆனால் நம்ப பத்மநாபன் இதை வைத்து காமெடி பண்ணிவிட்டார் கோபால்ல்ல் :-)

      Delete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
    மறைந்த நமது காமிக்ஸ் ரசிகர்
    ஜேடர்பாளையம் சரவணகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
    தாங்கள்
    வெளியிடும் ஸ்பைடர் சிறப்பு இதழுக்கு எனது வாழ்த்துக்கள் .

    இது தாங்கள் எங்கள் மீது வைத்துள்ள பிரியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது .

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    என்னுடைய ஒரு சிறிய விண்ணப்பம் ....

    இரத்தப்படலம் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு முன்பின் தெரியாத யாரோ ஒரு சிறுமியின் மருத்துவ செலவிற்கு உதவுவதாக தாங்கள் தெரிவித்தது தங்கள் இளகிய மனத்தைக் காட்டுகிறது .
    அதுபோலவே
    தாங்கள் வெளியிடும் ஸ்பைடர் இதழிலிருந்து
    கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறு பகுதியையாவது
    நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கச் செய்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் .

    இதற்காக தாங்கள் ஸ்பைடர் இதழின் விலையை சற்று அதிகரித்தாலும் நன்று .

    இது என்னுடைய சிறிய ஆலோசனை மட்டுமே ..

    தங்களுக்கு தவறாக தெரிந்தால் தயவுசெய்து கடந்து சென்று விடுங்கள். நன்றி .

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனசு புரிகிறது நண்பரே ; ஆனால் இனி வரும் காலங்களில் நல்லதோ, கெட்டதோ - நான் செய்திட எண்ணும் உதவிகளை, என்னால் இயன்ற மட்டோடே திட்டமிட எண்ணியுள்ளேன் ! அவற்றிற்கு உங்களின் பங்களிப்புகளையும் கோரிட எண்ணும் போது நேர்மறையாய் பார்த்திடும் ஆற்றல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பது புலனாகிறது ! So சன்னமான தேங்காயாய் பார்த்து, ஓசையின்றி அவரவர் சக்திகளுக்குட்பட்டு புள்ளையாருக்கு உடைத்திடுவோம் சார் ; நிச்சயமாய் அவர் புரிந்து கொள்வார் !

      Delete
    2. // சன்னமான தேங்காயாய் பார்த்து, ஓசையின்றி அவரவர் சக்திகளுக்குட்பட்டு புள்ளையாருக்கு உடைத்திடுவோம் சார் //

      +1

      Delete
  16. 11 manikku varum endru parthal ippadi seekirama vanthuduchuu

    ReplyDelete
    Replies
    1. 11 மணிக்கு கொட்டாவி தான் வருது நண்பரே ! So முந்திக்கொள்கிறேன் இப்போதெல்லாம் !

      Delete
    2. சிக்கு புக்கு ரயிலே பாட்டுல வர்ர மாதிரி தான் சார்..
      நாங்க எட்டு மணிக்கு வந்தாக்கா..பத்து மணிக்கு தான் போடுறீங்க...
      பத்து மணிக்கு வந்தாக்கா..ரெண்டு மணிக்கு தான் போடுறீங்க...

      Delete
  17. ///ஈரோடு புத்தகத் திருவிழாதான் இல்லை அந்த சஸ்பென்ஸ் கதை என்ன என்று மட்டுமாவது சொல்லுங்கள் சார்.///
    விடுங்க பாஸ். கல்யாணமே இப்போ இல்லேன்னு ஆகிப்போச்சு. விருந்துல என்னென்ன மெனுன்னு கேட்டு என்ன பண்றது?

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...அதானே..? இனி அது ஜாங்கிரியாய் இருந்தாலென்ன ? மைசூர்பாகாய் இருந்தாலென்ன சார் ?

      Delete
    2. ஆமாம் சார்.
      ஒ.நொ.ஒ.தோ..இல்ல.
      கென்யா.. இல்ல,
      டெக்ஸ் & தேஷா..இல்ல..
      சஸ்பென்ஸ் இதழ்...
      நம்ம கவுண்டமணியார் சொல்ற மாதிரி,
      இனிமே வயசுக்கு வந்தா என்ன,
      வரலேன்னா என்ன...

      Delete
  18. 2,13,2 பிரமிக்கவைக்கிறது😍

    ReplyDelete
  19. இந்த அதிகாரிக்கு "அதிகாரி" என்ற பெயர் வைத்ததே தங்க தலைவன் பாசறையிலிருந்து தான் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன் யுவர்ஆனர்.. அப்புறம் இந்த அதிகாரி பெயம் சூட்டலுக்குமே ஒரு காரணம் உண்டு... அந்த காரணம் என்னளவில் ஒரு பெரிய வெற்றி.. அந்த காரணத்தை எப்போதும் தளத்தில் சொல்ல விரும்பவில்லை..

    ReplyDelete
    Replies
    1. அதிகாரி பெயர்சூட்டலுக்கான காரணம் எனக்குத்தெரியுமே. அதிகாரத்தில் கிரிமினல்சிப்பாயை விட உயர்ந்த இடத்தில் இருப்பவர் என்பதைக் குறிக்கவே அதிகாரி என பெயர்வைக்கப்பட்டுள்ளது 🤪

      Delete
    2. அப்போ கார்சனின் நணபர்?!

      Delete
    3. // அப்போ கார்சனின் நணபர்?! //

      அது டைகர்தானே :-)🤔

      Delete
    4. அப்போ கார்சனின் நணபர்?!//
      அது வந்து...அது வந்து...ஜிம்மியின் நண்பர்னு சொன்னா ஜிம்மியை கிண்டல் பண்றதா அவருக்கு கோவம் வந்துடும். ஆனா கார்சனின் நண்பர்னு தலய சொன்னா அது கார்சனுக்கு பெருமை. அதுனால தான்கார்சனின் நண்பர்.

      Delete
    5. செம பதில் மகேந்திரன்.

      Delete
  20. 2132 மீயை நானுமே அடித்தல் திருத்தலோடு மொழிபெயர்த்த உணர்வு.. அருமையான பதிவு சார்..

    ReplyDelete
  21. மேலே பதிவில் Coloring artist - Bruno Tattiயின் படத்தைப் பார்க்கும்போது 'அட! இது நம்ம XIIIன் அதி தீவிரக் காதலர் - டாக்டர் பிரசென்னா மாதிரியே இருக்கே!!'னு தோனுச்சு!

    ReplyDelete
  22. கௌபாய் கலைஞன்: செவ்விந்திய தலைவர் வீட்டில் எலி வெளியே புலி
    ஹியாவாத்தா வரைய விரும்பும் ஆர்டிஸ்ட் ரெமிங்டனுடன் லக்கி லூக் மற்றும் ஜாலி ஜம்பர் பயணம் செய்யும் செம காமெடியான கதை.

    பார்ட் ஒரே நேரத்தில் பார் சப்ளையர் மற்றும் ஹோட்டலில் சப்ளையராக எதிர்பாராத காமெடி. அதுவும் பாரில் சண்டை வர போகிறது என்றால் உடையும் பொருட்கள் எல்லாவற்றையும் அகற்றும் இடம் செம. பார்ட்க்கு பணம் கொடுப்பதற்கு பதில் ரெமிங்டன் படமாக வரைந்து கொடுத்து அது மலை போல் குவிந்து கிடக்கும் இட காமெடியின் உட்சம்.

    வான்கோழி பிரியர் ரெமிங்டன் மிகவும் ரசிக்கப் செய்தார். அதுவும் செவ்விந்திய குடிசைகளுக்கு அவர் அடித்த பெயிண்ட் கற்பனையின் உட்சம்.

    சில்வர் ஸ்பர் சலூனில் நடக்கும் கூத்துக்கள் ஒவ்வொன்றும் சிரிக்க வைத்தது. சண்டை போட்டு விட்டு வரிசையாக உட்கார்ந்து குடிக்கும் சாரி இரண்டாம் முறை அந்த படத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது அவர்கள் நின்று கொண்டு குடிப்பது. :-)

    கர்லி செம காமெடி பீஸ் இவன் வரும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு உத்திரவாதம்.

    கதையில் வசனங்கள் ஒரு பக்கம் நம்மை சிரிக்க வைக்கிறது என்றால் அங்கே உள்ள படங்களை கவனித்து பார்த்தால் அதுவும் ஒருபக்கம் நம்மை சிரிக்க வைக்கிறது.

    கௌபாய் கலைஞன் நம்மை மனம் விட்டு சிரிக்க செய்த கலைஞன்.

    ReplyDelete
  23. உட்பக்க ப்ரியூவிலே இருக்கிறது நம்ம கிம் காரிங்கடனுங்க அத்தைங்களா??

    ReplyDelete
    Replies
    1. நம்ம பென்னோட சகோதரிங்கறப்போ ஆருக்கு என்ன ஒறவுமுறைன்னு நீங்களே பாத்துக்கோங்கண்ணா !

      அப்புறம் அந்த ஆப் டிராயர் பாப்பாவை பத்தி கேள்விங்க ஏதும் இல்லீங்களாக்கும் ?

      Delete
    2. // ஆப் டிராயர் பாப்பாவை பத்தி கேள்விங்க ஏதும் இல்லீங்களாக்கும் ? //

      அதுக்கு புனையார் விஜய் வருவார் :-)

      Delete
    3. கிம்மு நம்முளுக்கு மாமன் புள்ளைன்னா இவிங்க நம்மளுக்கு பெரியம்மா முறை ஆகுதுங்க..

      Delete
    4. தடி தடியா நாலு நாலு பேரா வந்து கண்ணிலே படுறே அழகான புள்ளீங்களை அலேக்கா தூக்கிட்டு போறாப்டி....நீங்கபாட்டுக்கு கிம்முக்கு முறை மாமன்னு சொல்லிப்போட்டுத் திரிஞ்சாக்கா கண்ணு முழிக்கிறப்போ ஏதாச்சும் ஒரு செல்போன் டவரிலே தான் குந்தியிருப்பீங்கண்ணா !

      பாத்து சூதானமா இருந்துக்கோங்க !

      Delete
    5. வேற வழியில்லீங்களே.. மொறைப் புள்ளைக்கோசரம் முண்டாவை ஏத்தி உட்டுத்தானுங் ஆகோனுங்க... வரட்டுங்க பார்த்துக்கலாங்க..

      Delete
    6. ///கண்ணு முழிக்கிறப்போ ஏதாச்சும் ஒரு செல்போன் டவரிலே தான் குந்தியிருப்பீங்கண்ணா !///

      ஒஹோ...அதுக்குதான் பதிமூன்றார் செல்போன் டவர்ல ஏறுறாரா?

      Delete
  24. ஆகஸ்ட் மாத புத்தகம் எப்போது வரும்?

    ReplyDelete
  25. Replies
    1. கௌபாய் கலைஞன் கதையை பற்றி நிறைய எழுதலாம். இந்த கதையை விக்ரம் அழகாக மொழிபெயர்த்து உள்ளார். காமெடி கதையை மொழி பெயர்ப்பது எளிதல்ல, படிப்பவர்களுக்கு சிரிப்பை கொண்டு வர வேண்டும். அதில் வெற்றி கொடியை நாட்டி விட்டார்.

      மனம் நிறைந்த வாழ்த்துக்கள் விக்ரம்

      Delete
  26. எல்லா வருடமும் உங்களை மட்டுமல்ல காமிக்ஸ் வட்டத்தில் உள்ள நிறையப் பேரை குதுகலப்படுத்துவது ஈரோடு புத்தக திருவிழாதான் அதை யாரும் மறுக்க முடியாதுதான் சார்! இதை சரிக்கட்ட அடுத்த வருடமாவது வழி கிடைக்குமென்று நம்புவதை விட வேறுவழி கிடையாது! இரத்தப்படலம் திகில் காமிக்ஸில் முதன்முதலாக வெளிவந்த காலத்திலிருந்தே இதன் மீதுள்ள ஈர்ப்பு குறையாமலேயே உள்ளது! போதாக்குறைக்கு கதையைப்பற்றிய விவரத்தை கூறி நீங்கள் வேற இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டீர்கள்! போதாக்குறைக்கு ஸ்பைடர் & அடுத்த வருட பட்டியல்னு 2132 மீட்டர் இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடரில் இன்னும் கொஞ்சம் சேதிகள் உள்ளன சார் ; அது வேறொரு நாளுக்கு / பதிவுக்கு !

      Delete
    2. இன்னும் செய்திகளா நாவில் ஜலம் ஊறும் படங்கள் 1000

      Delete
    3. ஆயிரம் ஜலம் ஊறிய அபூர்வ சிகாமணி.

      Delete
    4. அடடே அடுத்த ஸ்பைடர் கதைக்கும் அச்சாரம் உள்ளதோ? 😍 அப்போ அடுத்து வர்ர பதிவின் வெப்பமும் அதிகரிக்கப் போகிறது என்று சொல்லுங்க சார் 😊

      Delete
  27. 2132 மீட்டர் எங்க ஆதர்ஷ நாயகனைகாண ஆவல்....ஈரோடு நினைவுகள் அருமை சார்....

    ReplyDelete
  28. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு அட்டகாசமான பதிவு சார். ஈரோடு புத்தக விழாவில் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

    நீங்கள் கொடுத்த 2132 முன்னோட்டம் அருமை. பாண்ட் vs ஜேசன் க்கு வெயிட்டிங்.

    நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு நமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. Replies
    1. நம்மாளுங்களுக்கு இது தான் கண்கள் அகலமாய்த் திறந்திருக்கும் நேரம் ; so never late !!

      Delete
    2. தாங்க்ஸ் சார் நான் இன்னும் Mayflower படிக்கவில்லை. எந்த காரணத்தினால் அதை தள்ளி போட்டேன் எனக்கே மறந்து போச்சு. இந்த தடவை அதுவும் சேர்த்து வாங்கிடுவேன். சமீபத்தில் வெளியான Rin Tin Can's Inheritance படிச்சீங்களா??? ஸ்பைடர் மிரட்டுறார்!!! பாம்பு படம் பார்த்தாலே எனக்கு பயம். அநேகமா கையில் க்ளோவ்ஸ் மாட்டி படிக்கணும்.

      Delete
    3. நம்மாட்கள் ரின்டின் கேனை 'ரிஜிட்' கேனாக்கி விட்டதிலிருந்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருத்தம் எனக்கு ! ஆனால் சமீபத்தில் The Godfather படித்தேன் ; கலக்கல்ஸ் ! நம்ம 4 கால் ஞானசூன்யம் ஆல்பம் தான் !

      Delete
    4. சார் ப்ளீஸ். ரின் டின் வேண்டும் சார். 4 கால் ஞானசூன்யத்தை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சார். ஏதாவது பார்த்து செய்யுங்கள் சார்.

      Delete
    5. ஒரு வேளை ரின் டின் தமிழில் வரவில்லை என்றால் "The Godfather" ஆங்கிலத்தில் எங்கே கிடைக்கும் என சொல்லுங்கள்.

      Delete
    6. So sad.... I love Rin Tin Can. Still have the book. But Rin Tin Can's Inheritance English translation isn't very good. We can do a better job in Tamil.

      Delete
    7. // English translation isn't very good. //

      :-( அந்த பக்கமும் போக முடியாது போல.

      Delete
    8. ரின் டின் கேனுக்கு எல்லா பக்கங்களிலும் கேட்டா கோபால்ல்ல்.🤔

      Delete
    9. எல்லா பக்கமும் கோபால்ஸ் தான் PFB. என் ஆத்துகாரர் பெயர் கோபாலகிருஷ்ணன் 😁

      Delete
    10. ///I love Rin Tin Can. ///

      சகோவும் ரின்டின்கேனின் ரசிகை என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது!

      Delete
  30. /// டேய் யப்பா காலின் வாயை மூடித்தொலை ஈ உள்ளே போய்விடப்போகுது// செம சார்...

    ReplyDelete
    Replies
    1. அந்த பிரேமைப் பார்த்தப்போ தோன்றிய முதல் வரி !! சாத்தியமா நம்ம ஈ.வீ.யை மனசிலே வைச்சுலாம் எழுதலை பழனி !

      Delete
    2. புரிஞ்சுடுச்சுங்க எடிட்டர் சார்.. புரிஞ்சுடுச்சு!!

      Delete
    3. உடுங்க ஈவி இல்லாததயா சொல்லிட்டார் நம்ம ஆசிரியர்...போகட்டும் போகட்டும்...

      Delete
  31. /2019-ல் ரிலீஸ் ஆன இந்த 2132 மீட்டர் இதழுக்கு state of the art கலரிங் பாணி எனும் போது அதிலும் ரகளை காத்துள்ளது///

    ஆனால் எடிட்டர் சார்.. நீங்க கொடுத்திருக்கும் ப்ரிவியூ பக்கத்தைப் பார்த்தால் அப்படியொன்னும் புருவத்தை உயர்த்தும்படியான கலரிங் பாணியாகத் தெரியவில்லையே?!! simple & plain colouring பாணியைத்தானே உபயோகப் படுத்தியிருக்காங்க?!!

    குழப்புதுங்களே..?!!

    ReplyDelete
    Replies
    1. பத்து நாளில் புத்தகம் கைக்கு வந்த பிறகு விடை கிடைக்கும் கோபால்ல்ல் :-) ஆராய்ச்சியை அதுவரை நிறுத்தி வையுங்கள் கோபால்ல்ல் :-)

      Delete
    2. எக்சாக்ட்லி கோபாலல் !

      Delete
  32. சந்தாவை சின்னாத போடுங்கள் கோபால்ல்ல் வேண்டாம் ஏன சொல்ல வில்லை கோபால்ல்ல்

    இந்த வருடம் வரவேண்டிய ஈரோடு ஸ்பெஷல் மற்றும் அடுத்த வருட ஈரோடு ஸ்பெஷல் இரண்டும் ஸ்பெஷல் சந்தாவாக அடுத்த ஜூன் மாதம் ஒரு ஆறு புத்தகங்களாக அறிவிப்பு செய்யுங்கள் கோபால்ல்ல் :-)

    ReplyDelete
    Replies
    1. இது திருச்செந்தூருக்கான பின்னூட்டமா சார் ?

      Delete
    2. இது விஜயன் சாருக்கான பின்னூட்டம் கோப்பால்ல்ல் :-)

      Delete
  33. ஹூம்...

    நேசம்மிக்க நண்பர்களின் சந்திப்புகள், எடிட்டர்களின் சந்திப்பு, சிறப்பு வெளியீடுகள், சர்ப்ரைஸ் இதழ்கள், கை நிறைய ரவுண்டு பன்னுகள், ஒரு குதூகலமான குழந்தையின் மனநிலை - இதையெல்லாம் அனுபவித்த பகல் பொழுதை மனதில் உற்சாகத்துடனும், உடலில் சற்றே அயர்ச்சியுடனும் ஹோட்டல் அறையொன்றில் சிறப்பு வெளியீடுகளைப் புரட்டியபடியே நண்பர்களோடு பேசிக் களித்திடும் நேரமிது - இந்த வருடம் EBF நடந்திருந்தால்!

    ஹூம்....


    அந்த கொரோனா பயபுள்ள யாருன்னு யாராவது எனக்குக் காட்டுங்க.. கொன்னுபுட்டு ஜெயிலுக்கு போயிடறேன்.. ஜெயிலுக்கு! கிர்ர்ர்ர்...

    ReplyDelete
    Replies
    1. மொட்டை மாடியினில் கான மழை பொழிய வேண்டிய நேரமல்லவா இது ?

      Delete
    2. ஹீம் ஈரோடு நண்பர்களை சந்தித்த பின்னர் பெங்களூர் ரயிலை பிடிக்க நான் ஸ்டேஷனில் காத்திருக்கும் நேரம் இது.

      Delete
    3. அன்றைய ஈரோடு ஸ்பெஷல் பதிவை படிக்க ஆரம்பிக்கும் நேரமும் இதுவே எனக்கு.

      Delete
  34. 13 ஐ பற்றிய உங்கள் சிலாகிப்பு ஆர்வத்தை ரொம்பவும் தூண்டுகிறது வாழ்க ஜேசன்

    ReplyDelete
  35. ஈரோடு புத்தகதிருவிழா

    என் வரையில் அது என் குடும்பத்திருவிழா..
    சொந்தபந்தம் வீட்டுக்கூட தனியாக போக விரும்பும் எனக்கு ஏனோ அங்கு எப்போதும் குடும்பத்துடன் வருவதே பிடிக்கும்...அதிலும் எட்டுமாத வர்ஷாவோடு

    என்னால் வரமுடியாத சூழ்நிலையில் எனக்குபதிலாக எனது மனைவி குழந்தைகளுடன்...

    கர்னல் அமோஸ் முதல் இதழை ஸ்டீல்கையால் மறக்க இயலாது.. அனைத்திற்க்கும் சிகரம் வைத்தாற்ப்போல் எனது ஆதர்ஷ நாயகன் இரத்தப்படல வெளியீடு கணேஷ் அண்ணா சகோதரர் பிரசன்னா சான்சே கிடையாது இவையனைத்தும் மீண்டும் நிகழுமா என் வாழ்வில் என ஏங்க துடிக்கும் மனது...நமது காமிக்ஸ் மற்றும் ஜேஸன் என்ற ஒற்றைநபர் எனக்கு என் வாழ்க்கை முழுவதும் உடன்வரும் சொந்தங்களை கொடுத்துள்ளது.. இது அனைத்துக்கும் அச்சாணி. எங்களது ஆசிரியரே... மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  36. //2021-ன் கேட்லாக் பணிகள் அழைப்பதால் நடையைக் கட்டுகிறேன்//

    27-11-2020 அன்று XIII- 27 Memory recharge வருதாம் சார் ஒரு சீட்டு போட்டுவையுங்களேன் எங்காளுக்கு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்...

      Delete
  37. மீண்டும் கிங் கோப்ரா:

    நண்பர்கள் முதல் 2 பக்கங்களில் வந்த சம்பவங்களை குறிப்பிட்டு கலாய்த்ததை கண்டு சிறிதளவு சந்தேகத்துடன் தான் கையில் எடுத்தேன்.

    ஆனால், அடுத்தடுத்த பக்கங்களில் ராஜநாகத்தின் வலையில் லாரன்ஸ் டேவிட் வீழ்வதும், விடை தெரியாத வில்லனை லாரன்ஸ் ஊடகத்தில் கண்டறிவதும் நேர்த்தியாக கதையை தூக்கி நிறுத்தியது. பழைய கதைகளின் பலமே விலலனும், அவன் பயன்படுத்தும் விசித்திர பொறிகளும் என்பதை மீண்டும் உணர வைத்தது மீ.கி.கோ.

    வலுவான வில்லன், வஞ்சகமான அல்லக்கை, அசந்தால் வீழ வைக்கும் பொறிகள் என நிறைவாக நகர்ந்து சென்றது கதை.

    லாரன்ஸின் தோற்றுப் போன முயற்சியின் நோக்கத்தை, மயக்கத்திலிருந்து மீளும் டேவிட் உணர்ந்து கொள்வது இந்த ஜோடி எந்த அளவிற்கு எண்ணவோட்டத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது அழகான பஞ்ச்.

    என்ன ஒரு குறை, வழக்கமான அ.கொ.தீ.க இங்கே மிஸ்ஸிங்😎

    ReplyDelete
    Replies
    1. // லாரன்ஸின் தோற்றுப் போன முயற்சியின் நோக்கத்தை, மயக்கத்திலிருந்து மீளும் டேவிட் உணர்ந்து கொள்வது இந்த ஜோடி எந்த அளவிற்கு எண்ணவோட்டத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது அழகான பஞ்ச். //

      +1

      Delete
    2. லாஜிக் ஓட்டைகள் கொஞ்சம் இல்லாதிருந்தால் இன்னும் கவர்ந்திருந்திருப்பார் லாரன்ஸ் & டேவிட் இருந்தாலும் கதை ஏமாற்றமில்லை ஒகே ரகம் இதே போல நீண்ட வருட தொங்கலில் உள்ள பனியில் ஒரு அசுரன் கதையும் வந்தால் நல்லாயிருக்கும் அதுவர எத்தனை வருடம் காத்திருக்கணுமோ 😳

      Delete
    3. அப்போ விண்வெளி பிசாசு????

      Delete
  38. நேற்று ஸ்பைடர் sarpathin saaval book செய்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. குட்!

      //sarpathin saaval //

      கிராமப்புறங்களில் சேவலை 'சாவல்' என்று சொல்வதுண்டு!

      பேசாம தலைப்பை 'சர்ப்பமும் சாவலும்'னு வச்சிருக்கலாம் போல!

      இல்லேன்னா ஈசாப் கதைகளில் வர்றமாதிரி 'சவால்விட்ட சர்ப்பமும் சமாளித்த சாவலும்'னு கூட வச்சிருக்கலாம்!

      Delete
  39. நீங்காத நினைவுகள்.. மகிழ்ச்சி.. இரத்தப்படல வெளியீட்டில் நாங்கள் செய்த அலப்பறைகளில் சின்னதொரு பதிவைக் கண்டு மகிழ்ந்தேன்..
    கொரோனா... உயிர்வரை ஊடுருவும் இருமலும், மண்டையைக் குடையும் மரணாவஸ்தையும் போட்டுத்தாக்கும் வேகத்திலிருக்க சக வாசக தோழமைகள் அனுப்பி வைத்த அருமருந்துகளும் ஆறுதல் வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் எங்கோ ஒரு மூலைவாசியாகிவிட்ட காலத்திலும் அரவணைப்புக்கும் அன்புக்கும் பாத்திரமாகி கொரோனா பாதிப்பிலிரூந்து மீண்டெழுந்து விட்டேன்.. அனைவருக்கும் நன்றி.. கொரோனாவின் பாதிப்பு கொடுமையானதுதான் தோழமைகளே.. உரிய இடைவெளி, முகக்கவசம், அருந்தும் நீர் குறித்த கவனம்..வெளியே போகவர சுத்தபத்தம், நோயெதிர்ப்பு சக்திக்கான முன்னெச்சரிக்கைகளே நம்மைக் காக்கும்.. அனைவரும் கவனமாக இருக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு ஆற்றிடும் மகத்தான பணியில் கொடுங்கோலன் கொரோனாவை உள்வாங்கிக் கொண்டு, சிலபல அவஸ்தைகளுக்குப் பின்னே நீங்கள் அதிலிருந்து மீண்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது @jscjohny

      Delete
    2. Zincovit தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் சார் !

      கொரோனாவுக்கு என்று தானில்லை ; பொதுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன் தருமாம் ! டாக்டராக உள்ள நண்பன் சொன்னது.. !

      அண்ணாமலையார் மண்ணில் நிச்சயம் நல்லதே நடக்கும் சார் !

      Delete
    3. ///Zincovit தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் சார் !///

      நல்ல ஐடியா, எடிட்டர் சார்!!

      நானும் இன்றிலிருந்து இதைச் செயல்படுத்துகிறேன்!

      Delete
    4. ஜானி சார். திருவண்ணாமலையில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் பிறந்ததும், வளர்ந்ததும், படித்ததும் அங்கேயே. 1963 செப்டம்பர் முதல் 1984 ஜனவரி வரை. 1984 பிப்ரவரி ஒன்று முதல் இன்றுவரை கரூர்.

      Delete
    5. கொரானாவில் இருந்து நீங்கள் மீண்டதற்கு வாழ்த்துக்கள். அங்கே எங்கள் நண்பரின் தாயார் கொரானாவில் இறந்துவிட்டார். நண்பரும் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டார். எங்கள் தெருவில் பலருக்கும் கொரானா .சுற்றி சுழன்று அடிக்கிறது. நல்ல வேளையாக என் அண்ணன் அங்கே இல்லை. பிப்ரவரியில் வெளியூர் வந்தவர் இன்னும் ஊர் திரும்பாமல் பெரியஅண்ணன் மகள் வீட்டிலேயே இருக்கிறார்.

      Delete
    6. ஜானி @ கொரோனாவில் பிடியில் இருந்து நீங்கள் மீண்டு வந்தது மகிழ்ச்சி. உங்கள் சேவை மகத்தானது. கவனமாக இருங்கள்.

      Delete
  40. இரத்தப்படல புதுவரவு ஆர்வத்தின் ஸ்பீடா மீட்டரை ஏற்றி விடுகிறது.. ஆவலை அடக்கவியலவில்லை.. கம்மான் Xiii...

    ReplyDelete
  41. சார் ஸ்பைடர் கதையை பழைய பாக்கெட் சைசில் அல்லது குமுதம் சைசில் வெளியிடுங்கள்.அப்போதுதான் அந்த பழைய காமிக்ஸ் படிச்ச feeling ...pls

    ReplyDelete
  42. சார் அதிரடி ஆர்ச்சி என்று வந்த கதையைத்தான் ஆர்ச்சி இருக்க பயமேன் என்று பெயர் மாற்றி..ஒரே படத்தை வெவ்வேறு பெயர்களில் டப் பண்ணி வெளியிடுவது போல் செய்து விட்டீர்களே நியாயமா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு மாற்றியது தான் பிரச்சனையா ?

      " அதிரடி ஆர்ச்சி "என்பது ஏற்கனவே வந்துவிட்ட தலைப்பு என்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டியதால் பெயரை மாற்ற நேர்ந்தது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்தது தானே ? இதில் புதுசாய் ஏழு மாதங்களுக்குப் பின்பாய் விசனம் கொள்ள என்ன உள்ளதோ ?

      Delete
    2. அதிரடி ஆர்ச்சி கதையும் ஆர்ச்சி இருக்க பயமேன் கதையும் வெவ்வேறு கதைகள் நண்பரே

      Delete
  43. நண்பர் திருப்பூர் பிரபாகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பர் சிபிஜி (எ) திருப்பூர் பிரபாகருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

      Delete
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரபாகர்!!!

      Delete
    3. சிபி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

      Delete
    4. மிக்க நன்றி நண்பரே 🙏🏼🙏🏼🙏🏼
      .

      Delete
    5. மிக்க நன்றி ஷெரிப் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
      டெக்ஸ். விஜய் பாசு 🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி மருத்துவரய்யா 🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி சத்யா ஜி 🙏🏼🙏🏼🙏🏼
      .

      Delete
  44. நண்பர் திருப்பூர் பிரபாகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. அன்புக்குரிய நண்பர் திருப்பூர் பிரபாகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!! 💐💐💐
      வாழ்த்த வயதுண்டு.. அதனால் வாழ்த்துகிறேன்!!

      Delete
    2. அன்பு நண்பருக்கு நமது வாழ்த்துக்களும் ! 2025 ல் மீண்டும் ஒரு சனிக்கிழமையன்று ஈரோட்டில் கேக் வெட்டி விடுவோம் சார் !

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிபி@பிரபாகர்.வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்...

      Delete
    4. // 2025 ல் மீண்டும் ஒரு சனிக்கிழமையன்று ஈரோட்டில் கேக் வெட்டி விடுவோம் சார் ! //
      ஙே,ஙே,ஙே.....!!!!???

      Delete
    5. 2025 ல் தான் நண்பரின் பிறந்தநாளும், ஈரோடு புத்தக விழாவின் சனிக்கிழமையும் ஒத்துப் போகின்றன சார !

      Delete
    6. ரொம்ப்ப்பவே முன்ன்யோசனை சார்.

      Delete
    7. சிபி சித்தருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
    8. // 2025 ல் தான் நண்பரின் பிறந்தநாளும், ஈரோடு புத்தக விழாவின் சனிக்கிழமையும் ஒத்துப் போகின்றன சார் ! //
      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் சார்...ஹி,ஹி...

      Delete
    9. நண்பர் திருப்பூர் பிரபாகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

      Delete
    10. மிக்க சரோ பாசு🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி செயலரே 🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி ரவி பாசு🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி குமார் பாசு🙏🏼🙏🏼🙏🏼
      மிக்க நன்றி ரட்ஜா பாசு 🙏🏼🙏🏼🙏🏼
      .

      Delete
    11. // அன்பு நண்பருக்கு நமது வாழ்த்துக்களும் ! 2025 ல் மீண்டும் ஒரு சனிக்கிழமையன்று ஈரோட்டில் கேக் வெட்டி விடுவோம் சார் //

      அவ்வளோ நாளா 😲

      என்ன தவம் செய்தனை எனம் பாடல்தான் நினைவுக்கு வருகிறது சார்

      தங்களின் கனிவான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
      .

      Delete
  45. Over the top பில் டப்புகள்பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. மாறாக அந்தவாரம் முழுவதும்எனக்கு சார்ஜ்ஏற்றுகின்றன. விதிவிலக்கு ஜடாமுடியார் மட்டுமே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  46. லா. டே. நண்பர்களின் பாசிட்டிவ்வான விமர்சனங்கள். சந்தோசங்கள் பொஙகுகிறது மக்களே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  47. விஜயன் சார், ரின் டின் கேனின் the Godfather cine Book versionல் உண்டா? அதில் காமெடி எப்படி உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; என்னிடமிருப்பது பிரெஞ்சிலிருந்தான மொழிபெயர்ப்பே !

      Delete
    2. இங்கேயும் கேட்டா கோபால்ல்ல்

      Delete
    3. ரின் டின் மக்கள் ஒதுக்கினாலும் நீங்கள் தொடர்ந்து அவைகளின் மொழிபெயர்ப்பை படிப்பதன் ரகசியம் என்ன சார். சஸ்பென்ஸாக ரின் டின் கேன் கதையை எங்களை போன்ற கார்டூன் வெறியர்களுக்கு கொடுக்க போறீங்களா 🤔. ப்ளீஸ். சரியான தருணத்தில் கொடுங்கள் சார். அதுவரை வெய்டிங்.

      Delete
  48. மீள் நினைவு புகைப்படங்கள் ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைத்தது சார்,புகைப்படங்களை பார்த்துக் கொண்டே பழைய சம்பவங்களை அசைபோடுவதும் இனிமையான நினைவலைகள்தான்...
    என்னையும் அறியாமல் ஏனோ உதட்டில் புன்னகை தானாகவே மலர்ந்ததை உணரமுடிந்தது,அடுத்த வருடமாவது காமிக்ஸ் கொண்டாட்டம் அரங்கேறுவதை காலம் அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.....

    ReplyDelete
  49. Replies
    1. 2014ல் முதன் முறையாக ஈரோடு புத்தகத் திருவிழா வந்தேன் என நினைக்கிறேன். காலையில் intercity express பிடித்து சுமார் 11.30 மணிக்கு நமது ஸ்டாலுக்கு வந்து நண்பர்கள் மற்றும் ஆசிரியரை சந்தித்து அன்று மதியம் 4 மணிக்கு நானும் பிரசன்னாவும் சேலம் வந்து அங்கிருந்து kpn பஸ்ஸை பிடித்து பெங்களூக்கு இரவு 10மணிக்கு திரும்பி விட்டோம். அதற்கு அடுத்த வருடத்தில் இருந்து வீட்டில் முழுமையாக ஒரு நாள் பெர்மிஷன் வாங்கி சனிக்கிழமை இரவு வரை இருந்து விட்டு இரவு நேர ரயிலைப் பிடித்து ஞாயிறு காலை வீட்டில் இருப்பது போல் நடந்து வருகிறது.

      ம்ம் இரண்டு நாட்கள் பெர்மிஷன் எல்லாம் தற்போது நினைத்து பார்க்க முடியாது.

      Delete
    2. ///இரண்டு நாட்கள் பெர்மிஷன் எல்லாம் தற்போது நினைத்து பார்க்க முடியாது.///

      எல்லாத்துக்குமே ஒரு விலையுண்டுங்க PfB! அந்த விலையைக் கொடுக்க சாத்தியமாகணும்.. சில நெளிவு சுளிவுகள் தெரியணும் - அவ்ளோதான்!!

      என்ன.. விலைதான் ஆளுக்கு ஆள் மாறுபடும்! சிலருக்கு - ஒரு புடவை, சிலருக்கு - நகை, சிலருக்கு - ஒரு குடும்பச் சுற்றுலா!

      சிலருக்கு 'உன்னிய மாதிரி ஒரு வைஃப் கிடைக்க நான் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும் செல்லம்'ன்ற ஒற்றை வார்த்தை கூட பலனளிக்கும்! இத்தோடு 'அன்பான-அழகான' போன்ற பதங்களும் சேருமானால் - நான்கு நாள் விடுமுறை கூட சாத்தியமே! ;)

      Delete
    3. இங்கு அந்த ஐடியா வேலை பார்க்காது விஜய். ஒரே வழி இ.படலம் வெளியீட்டுக்கு குடும்பத்துடன் வந்தது போல் ஒவ்வொரு வருடமும் plan பண்ண வேண்டும்; பட்ஜெட் அதற்கு ஒதுக்கினால் நடைமுறை படுத்த முடியும் :-) ஜெய் தோர்கல்.:-)

      Delete
    4. இதுவரையிலும் ஒரு புத்தக விழாவில் கூட ஈரோட்டில் கலந்து கொண்டதில்லை. சென்னையில் சாதாரண நாட்களில் கலந்து கொண்டதுண்டு 2014-ல். அப்புறம் ஒருமுறை பெங்களூரு காமிக் கான்... ஊருவிட்டு ஊருவந்து பொழப்பு நடத்தும் என்னை மாதிரி ஆளுகளுக்கு எப்போதான் ஈபுவி, செபுவி-க்கு சான்ஸ் கிடைக்குமோ...

      Delete
    5. நான் போன வருடம் கலந்து கொண்ட புத்தக விழா தான் முதல் முறை. அந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்.

      Delete
    6. // ஒருமுறை பெங்களூரு காமிக் கான் //

      பார்த்தீங்களா பார்த்தீங்களா காமிக் கான் நானும் வந்தேன் ஆனால் உங்களை போல் பல நண்பர்களை சந்தித்து பேச முடியவில்லை!

      Delete
  50. // - ஒற்றை நொடி ஒன்பது தோட்டா!

    - கென்யா!

    - T & T ஸ்பெஷல் (Tex & Tesha)

    (+)

    - ஒரு சஸ்பென்ஸ் B&W இதழ் //
    அடடா,அடடா போச்சே,போச்சே வடை போச்சே...
    வருகிற ஜனவரியில் கூட சென்னை புத்தக விழா நடப்பது சந்தேகம் என்றே தகவல்கள் சொல்கின்றன,உண்மையா சார் ???
    அப்படியிருப்பின் வருகின்ற ஜனவரியில் புத்தக விழா நினைவாக இந்த இதழ்களில் எவை எல்லாம் இயலுமோ,அவற்றை முன்பதிவில் வெளியிட இயலுமா சார்....
    வேண்டுமெனில் இவற்றுக்கு கொரோனா ஸ்பெஷல்,லாக் டவுன் ஸ்பெஷல்,குவாரண்டைன் ஸ்பெஷல் என்று ஏதேனும் பெயர் வைத்துக் கொள்வோம் சார்...
    (ஹி,ஹி,இவ்வளவு இரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான்னு கேட்க நினைக்கறது புரியுது....)

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஐடியா அண்ணா. அடுத்த ஜனவரி க்கு ஏதாவது ஒன்று try பண்ணலாமே சார்?

      Delete
  51. Replies
    1. எதிரிகள் ஓராயிரம்.‌...

      காஃபின் தனது நண்பர்களுடன் விலாங்கு மீனை (வேறு யார் இளம் டெக்ஸ் தான்) பிடிக்க காத்திருக்கும் இடத்தில் ஆரம்பிக்கும் கதை, குதிரை திருடன் ஜிம்மி, கோசைஸ், உல்ஃப் டூத், க்ரே பியர், தேஷா மற்றும் செவ்விந்தியர்களின் புதையல் இவைகளை இணைத்து அழகான மனக்கும் பூமாலையாக கொடுத்து உள்ளார்கள். மேலே குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் தகுந்த காரணத்துடன் உருவாக்கி கதை நெடுக உலவவிட்டது கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் இருந்தது.

      கோசைஸ் டெக்ஸை மதிக்க தனது சகோதரனாக பாவிக்க உள்ள காரணங்கள் இயல்பானது. இளம் இரத்த டெக்ஸ் யோசிக்காமல் செயல் பட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் இடத்தில் கோசைஸ் வந்து காப்பாற்றுவது சூப்பர்.

      குதிரை திருடன் ஜிம்மி ஒரு கட்டத்தில் டெக்ஸை காப்பாற்ற எடுக்கும் ரிஸ்க் செம.

      தங்கள் இனத் தலைவரின் மகளான தேஷாவுக்காக உயிரை விடும் இரண்டு காவலர்களின் தியாக உள்ளம் மெய்சிலிர்க்க செய்தது.

      புதையல் கதைகளில் பெரும்பாலும் புதையல் அழிந்து விடுவது போல இருக்கும், ஆனால் இங்கு அதனை பத்திரமான இடத்தில் இடம் மாற்றி அதனை காப்பாற்றும் முடிவை ரசித்தேன்.

      இந்த கதையின் மற்றும் ஒரு முக்கிய நபர் டைனமைட். தனது எஜமான் டெக்ஸ் அவரின் எதிரிகளிடம் எப்படியும் தப்பி விடுவார், அப்படி தப்பித்து எங்கே வருவார் என சரியாக கணித்து குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பது செம. டெக்ஸ் மற்றும் டைனமைட் இடையேயான கெமிஸ்ட்ரி கதை முழுவதும் அழகாக வலம் வருகிறது.

      இது போன்ற டெக்ஸின் பெரிய கதைகளின் ஆங்காங்கே தொய்வு ஏற்படும் ஆனால் இந்த கதையில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கதை நான்கு கால் பாய்ச்சலில் சிட்டாக பறக்கிறது.

      எதிரிகள் ஓராயிரம் கதைக்கு ஏற்ற சரியான தலைப்பு.

      Delete
    2. கதை அருமையானதுதான்!!!

      ஆனால் புதையல் விஷயம்தான் இடிக்கிறது...

      பானி இனத்தவரின் வாழ்க்கை வரலாற்றை உற்று வாசித்தால் இவ்வகை புதையல் அவர்களிடம் இருக்க வாய்ப்புகள் இல்லை.

      கற்பனை கதாசிரியரின் உரிமை என்றாலும் தங்க பாளங்கள் என்றாவது குறிப்பிட்டு இருக்கலாம்...

      நவரத்னங்கள் உள்ள புதையல் என்பது உறுத்துகிறது...

      கிரே பியர் - கதை நடக்கும் காலத்தில்- அமெரிக்காவின் வடக்கே உள்ள மத்திய புல்வெளி பகுதிகளான நெப்ராஸ்கா, கன்சாஸ் பிராந்தியத்தில் இருந்து லகோட்டா இன பழங்குடியினரால் (இவர்கள் சியோக்ஸ் இன வழியில் வந்தவர்கள்) துரத்தப்பட்டு வந்ததாக கதையில் சொல்லப்பட்டு இருப்பது சரித்திர உண்மை..

      கதையில் 54-ம் பக்கம் காண்பிக்கப்படும் மண் பூசப்பட்ட பானி இனத்தவரின் ஓவல் வடிவ வீடுகள் வரலாற்று தடங்களி்ல் இடம் பெற்று இருப்பவை...( ஆரம்பத்தில் செவ்வக வடிவில் இருந்து பின் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓவல் வடிவில் மாறின)

      ஒக்லஹோமா விற்கு தற்போது இடம் பெயர்ந்து ரிசர்வேஷன் பகுதியில் வாழும் இவர்களின் இவ்வகை வீடுகளை இப்போதும் காணலாம்..

      நவஹோக்களின் ஹோகன் வகை வீடுகளும் இது போலத்தான் எனினும் மற்ற பழங்குடியினர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தபோதே நிலையான வாழிடம் கொண்டு விவசாயம் ,வேட்டை என வாழ்ந்தவர்கள் பானீக்கள்..

      பின் குறிப்பு : தேஷாவின் மேல் அதிகம் பார்வையை செலுத்துவோர் கவனத்துக்கு:

      பானி இனத்தவர் நரபலி கொடுக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.

      வெளியில் தெரிந்து 1838- வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..

      அதிக விவசாய மகசூல் பெற இது நடத்தப்பட்டது..

      தனது இனத்தவர் யாரையும் நரபலி கொடுக்க மாட்டார்கள்..

      தேஷாவை புத்தகத்தில் பக்கத்தில் போய் பார்க்கையில் எதற்கும் பின்புறம் ஒருமுறை பார்த்து கொள்ளவும்..

      Delete
    3. // தேஷாவை புத்தகத்தில் பக்கத்தில் போய் பார்க்கையில் எதற்கும் பின்புறம் ஒருமுறை பார்த்து கொள்ளவும்.. //

      விஜய் நோட் திஸ் பாயிண்ட்!

      Selvam abirami @ ஆச்சரியப்பபட வைக்கும் தகவல்கள்!


      Delete
    4. விஜயின் பதில் என்னவாக இருக்கும் என சரியாக சொல்லும் நண்பர்களுக்கு ஒரு ரவுண்டு பன் கண்டிப்பாக உண்டு! :-)

      Delete
    5. ///// தேஷாவை புத்தகத்தில் பக்கத்தில் போய் பார்க்கையில் எதற்கும் பின்புறம் ஒருமுறை பார்த்து கொள்ளவும்.. ///

      ஷ்யூர்.. ஷ்யூர்! ஆனா தேஷாவுக்கு இதுல அப்ஜெக்ஷன் ஏதும் இருக்காதுதானே?!! :P

      Delete
    6. @ PfB

      ரவுண்டு பன்னும் எனக்கே!! ஹிஹி!!

      Delete
    7. // கற்பனை கதாசிரியரின் உரிமை என்றாலும் தங்க பாளங்கள் என்றாவது குறிப்பிட்டு இருக்கலாம் //

      உண்மைதான்! ஒரு இடத்தில் மெச்சிகன்களிடம் இருந்து சண்டை இட்டு வாங்கியது என சொல்வது போல் இருக்கும், ஒருவேளை கதாசிரியர் அதற்காக தங்க நகைகளை காண்பித்து இருக்கலாம் :-)

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. ///பின் குறிப்பு : தேஷாவின் மேல் அதிகம் பார்வையை செலுத்துவோர் கவனத்துக்கு:///

      நீங்க சிம்ப்பிளா 'எடிட்டரின் கவனத்திற்கு'ன்னே சொல்லியிருக்கலாம் செனா அனா! :D

      Delete
  52. டியர் சார் 2012 என நினைக்கிறேன் ,நீங்கள் பணியில் ஒரு அசுரன் என்ற லாரன்ஸ் அண்ட் டேவிட் கதையை விளம்பரம் செய்தீர்கள் என்ன ஆயிற்று அந்த புத்தகம், வெளியிடும் வாய்ப்பு உண்டா .

    ReplyDelete
  53. K. S. அடையாளம் தெரிந்தவுடன் நண்பர்ளிடையே எழுந்த ஆரவாரம் நினைவில் உள்ளதுங்களாஜி. டெக்ஸ் வில்லருக்கான அந்தஅஒருவரி விமர்சனம் உங்களுக்குஏற்படுத்தியஅங்கீகாரம் அல்லவாஅது. நெகட்டிவானாலும் தல தல தானே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  54. 2132 மீட்டர் அட்டை படம் வேற லெவல் சார்! அந்த முன்பக்க அட்டை படம் டாப் கிளாஸ்! வெண்மை & ஊதா கலந்த மேகம், அருகே ஒரு டவர் மேக மண்டலத்தின் வண்ணத்தை ஒட்டியவாறு, அந்த டவரில் XIIIஇல் ஊதா ஜீன்ஸ் மற்றும் பிரவுன் கலர் ஜெர்கின், பின்புறம் அழகிய மலை தொடர் உயரமான பசுமையான மரங்கள்! அருமையான வண்ண சேர்க்கைகள் கண்ணனுக்கு இதமாக. XIII கதைகளில் ஓவியம் மற்றும் அதன் வண்ண சேர்க்கை எனக்கும் எப்போதும் மிகவும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த டவரில் பொருத்தபட்ட கண்காணிப்பு கேமராவை கவனியுங்கள், ஓவ்வொரு விஷயத்தையும் கவனித்து வரைந்துள்ளார் ஓவியர்!

      அது சரி XIII டவரில் ஏறுவதை இந்த கண்காணிப்பு கேமரா படம் பிடித்து காண்பித்து விடாது? இதற்கு கதாசிரியர் என்ன விளக்கம் வைத்துள்ளார் என படித்து தெரிந்து கொள்ள ஆவல் பொங்கி வழிகிறது எனக்கு!

      Delete
  55. // நார்மலானதொரு நாளாய் இது இருந்து ; நார்மலானதொரு லோகமாகவும் இது இருந்திருந்தால் – நேற்றைக்கு ஈரோட்டுப் புத்தகத் திருவிழா துவங்கியிருக்கும் //

    அந்த அழகான தருணம் மிஸ்ஸாகிடுச்சு சார் ☹️

    இதையும் சேர்த்து அடுத்த வருடம் கலக்கிடலாம் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .


    ReplyDelete
  56. //
    Bye guys... See you around ! 2021-ன் கேட்லாக் பணிகள் அழைப்பதால் நடையைக் கட்டுகிறேன் !! Have a cool weekend & Do Stay Safe !! //

    வாவ் மகிழ்ச்சியான செய்தி சார்

    அப்போ தீபாவளிக்கு வழக்கம்போல ரிலீசுன்னு சொல்லுங்கோ 💃🏻💃🏻💃🏻
    .

    ReplyDelete
  57. இன்னிக்கு எல்லோரும் பிஸியாக இருப்பது போல் தெரிகிறது. அல்லது மக்கள் எல்லோரும் வாட்ஸ் அப் குழுவில் பிஸியாக இருப்பாங்கலோ 🤔🤔🤔 ஒன்னுமே புரியலை :-)

    ReplyDelete
    Replies
    1. ஆங் கண்டு பிடித்து விட்டேன். இன்று ஆடிப்பெருக்கு மக்கள் அதில் பிஸியாக இருப்பார்கள்.

      Delete
    2. எல்லோரும் ஹேங் ஓவரில்- ஸாரி-ஹேங் அவுட்டில் வீடியோ மீட்டிங் போட்டு ஜாலியாக இருந்தனர்..ஜனா சார் முயற்சி..எடிட்டரும் பங்குற்றார்..என்னால் முடியவில்லை ...பர்சனல் வேலைகள் தடை செய்து கொண்டே இருக்கின்றன.

      Delete
    3. I was there in the meeting! We can have one more with all the friends, if possible on next month some Saturday/Sunday for an hour ONLY!!

      Delete