Powered By Blogger

Friday, April 24, 2020

அத்திந்தோம்....!!

நண்பர்களே,

வணக்கம். இதோ ஜட்ஜ் 'J ' அவர்களின் தீர்ப்பு !!

------------------------------------------------------------------------------------------------------------

முதல் பரிசு:

செல்வம் அபிராமி மற்றும் பார்த்தீபன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இரண்டாம் பரிசு

பத்மநாபன்.

மூன்றாம் பரிசு: அனு மற்றும் குமார் சேலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஐவருக்கும் வாழ்த்துக்கள்.

எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐவருக்கும் எம் சார்பில் பரிசளிக்க உள்ளோம் என்பதை பணிவோடு சமர்ப்பிக்கின்றேன்.

J
------------------------------------------------------------------------------------------------------------

போகிற போக்கில் அரசவையில் நம்ம வித்வான்கள் அனைவரையும் அமரச் செய்யவே ஒரு புது மண்டபம் கட்ட வேண்டி வரும் போலும் !! அப்புறம் ஒவ்வொரு தீர்ப்பின் போதும், நமது ஜட்ஜமார்கள் காட்டி வரும் பரோபகாரமும் மிரளச் செய்கிறது !!  நன்றிகள் J சார் ; நன்றிகள் முந்தைய ஜட்ஜ் சார்ஸ் !! 

ரைட்டு...பாட்டெழுதப் புலவர்கள் ரெடி ; கவி பாட ஒரு க்ரூப் ரெடி ; இனி அடுத்து டான்ஸ் போட்டி ஒண்ணை போட்டு விட வேண்டியது தானோ ? '' So பயிற்சியை ஆரம்பிக்கிறீர்களா கலைஞர்களே ? அத்திந்தோம்....!! Open Kangnam style !!!

Bye all for now !!
ஏ.இ.பி.கு.

அப்புறம் டான்ஸுக்கும் தோழிமார்  இருந்தாக்கா முன்கூட்டியே கம்பெனிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கணும் அப்பு ! திடு திடுப்புன்னு வீடியோ -கீடியோ அனுப்பி சில பல பிஞ்சு மனசுகளை இங்கே பஞ்சர் ஆக்கிடப்படாது !! 

258 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி, பார்த்திபன், குமார், அனு அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete
  2. போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    வெற்றி பெற்ற செல்வம் அபிராமி, பார்த்தீபன், பத்மநாபன், அனு மற்றும் குமார் சேலம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

    சிறப்பாக தீர்ப்பு வழங்கிய நாட்டாமை ஜனார்தனனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பிற்கு நன்றி பரணி

      Delete
  3. பரிசில் இரண்டாமிடம் பதிலில் மூன்றாமிடம். நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் பத்து சார்.

      Delete
    2. நன்றி குமார் வாழ்த்துக்களும் கூடவே.

      Delete
  4. Replies
    1. அப்போ நான் பரிசில் 3ஆம் இடம் பதிவில் 4 ஆம் இடம்

      Delete
  5. வீட்டில் பூரி கட்டையை எங்கள் மேல் ஏறியும் போது அடிபடாமல் தப்பிக்க நங்கள் செய்யும் முயற்சிகள் கூட ஒரு நடனம் போல் இருக்கும்! அதனை அனுப்பலாமா :-)

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன திருத்தம் PFB. கொரோனா புண்ணியத்துல நிறைய வீட்டுல பூரிக்கட்டையும், கரண்டியும் கை மாறி விட்டதாக தகவல்.

      Delete
    2. ஒரு டவுட் , ஸுப்ஸ்டிடுட் போட்டு ஆடலாமா? பூரி கட்டை புண்ணியத்தில் என் வீடுக்காரரை களம் இறக்கிடறேன்

      Delete
    3. ஓடுறா..கைப்புள்ள.. ஓடிடு...

      Delete
    4. //பூரி கட்டை புண்ணியத்தில் என் வீடுக்காரரை களம் இறக்கிடறேன்//

      ஆனாலும் இந்தத் தளத்திலே பல உண்மைகள் வெளிவருகுது !!

      Delete
  6. ஆகா ஆஹகா எனக்கு பரிசா J அண்ணா நன்றி நன்றி நன்றிகள் கோடி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

      Delete
    2. சொக்கா ஆயிரம் பொண்ணு....!!!😊😊😊

      Delete
    3. உண்மை தான் பழனி

      Delete
    4. //சொக்கா ஆயிரம் பொண்ணு....!!!//

      வூட்டிலே இருக்குற 3 பொண்ணுங்களைக் கவனிங்க சாமி ; அப்பாலிக்கா "1000 பொண்ணு " பக்கமா யோசிக்கலாம் !

      Delete
  7. ஹைய்யா புதிய பதிவு.......

    ReplyDelete
  8. செனா அனா ஜி
    பார்த்திபன்
    பத்து சார்
    அனு மேடம்
    நண்பர் குமார் அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள் இன்னும் பல உச்சங்கள் தொட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  9. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. போட்டியில் வென்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
    🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊

    ReplyDelete
  11. பர்த் டே பேபி ஜட்ஜ் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள் நல்ல தேர்வுகள்

    ReplyDelete

  12. போட்டியில் வெற்றி பெற்ற செனாஅனா, பார்த்தி, பத்து, அனு மற்றும் KS ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

    சிறப்பாக தீர்ப்பு வழங்கிய நாட்டாமை ஜனா ஜிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!

    போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் கம்பேனி சார்பாக ஈரோட்டில் இஸ்பெஷல் ரவுண்டு பன்னு பரிசாக வழங்கப்படும்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் EV. எடிட்டர் பாணியில், icing on the cake.

      Delete
  13. பரிசு பெற்ற நண்பர்கள்
    செனா அனா
    பார்த்தீபன்
    பத்து சார் மற்றும் சகோதரி அனு
    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ஜட்ஜ் ஐயா J அவர்களுக்கு எனது நன்றிகள்

    ReplyDelete
  14. வெற்றி பெற்ற நண்பர்களை
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்!

    ReplyDelete
  15. கண்ணைக் கட்டிகாட்டில் விட்ட மாதிரி இருக்கிறது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். நடப்பதெல்லாம் நிஜமா என்று. இரண்டு வாரங்களில் இரண்டு பரிசுகள். நம்பமுடியவில்லை. சந்தேகமாகவே இருக்கிறது. உண்மையில் என்னிடமும் ஏதோ பரம்பரை வாசம் ஒளிந்துகொண்டு இருக்கிறதா? இல்லையேல் மாண்புமிகு நீதிபதிகள் தவறாக தேர்ந்தெடுத்து விட்டார்களா?
    " ஒண்ணுமே புரியலே, உலகத்துேலே..
    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.."

    EBF க்கு அவசியம் வர வேண்டிய காரணங்கள் கூடிவிட்டன.
    ஆசிரியர்க்கும், நீதிபதி மதிப்பிற்குரிய 'J' அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து டான்ஸ் போட்டியிலும் ஜெயிச்சுட்டீங்கன்னா ஈரோட்டுல உங்களை வச்சு ஒரு கலை நிகழ்ச்சியே நடத்திப்புடலாம்!!

      Delete
    2. நீங்க என்னிய வச்சு எதுவும் காமெடி,கீமெடி பண்ணலியே..
      மைண்ட் வாய்ஸ்: ஏம்ப்பா..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது?

      Delete
    3. ஏனோ, வெற்றிக்கொடி படத்தில் பார்திபன் - ஆடு - அருவாள் ஞாபகம் வேறு வந்து தொலைக்குது..

      Delete
    4. உடாதீங்க பத்து சார் ; இதே ஸ்பீடிலே டான்ஸ் போட்டியிலேயும் கலக்கிபுட்டா ஹாட்ரிக் ஆகிடும்லே ?

      Delete
    5. எல்லாருமே ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாங்க போலிருக்கு.

      Delete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐

    டான்ஸ் போட்டியில் (ஜோடியுடன்) கலக்க போகும் பழனிவேல் ஆறுமுகத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்👍

    ReplyDelete
    Replies
    1. மாப்பு ... வச்சுட்டாங்கய்யா ஆப்பு..

      Delete
    2. தலைவர் அவர்களே.. கொதிக்கும் நெருப்பு இவருக்கு குளிர் நிலவு என்பதை பணிவுடன் தெரிவித்துக் 'கொல்'கிறேன்.

      Delete
    3. அடங்கப்பா ஜோடிக்கு நான் எங்க போவேன்....😢😢😢

      Delete
    4. கவலையேபடாதீங்க பழனி ; ஒரு அவ்வை பொன்முகியை ரெடி பண்ணிட்டப் போச்சு ! சரி தானே மக்கா ?

      Delete
  17. Wow!!! அனைவருக்கும் நன்றி. முக்கியமாக ஜட்ஜ் J அவர்களுக்கு. Selvam Abirami, Parthiban, Padhu sir, Kumar Anna ஹை பைவ்✋ to all. எடி sir, நல்ல வெடி வெச்சிட்டீங்க. யார் அங்கே? ஆட்டத்தை ஆரம்பியுங்கள் 💃

    ReplyDelete
    Replies
    1. ஹை ஃபைவ் சகோதரி. வாழ்த்துக்கள்

      Delete
    2. நன்றிகளும்,வாழ்த்துக்களும் அனு சிஸ். (அதான் மேடம்ன்னு சொல்லக்கூடாதுன்னு தடா போட்டுட்டீங்களே. )

      Delete
    3. பத்து சார் நீங்க அனு என்று சொன்னாலே போதும்.

      Delete
    4. அப்படி சொல்லுங்க குமார் ...

      Delete
    5. நாட்டாமை தீர்ப்பே நம்ம தீர்ப்பு.

      Delete
  18. நன்றி நண்பர்களே...
    ஆசிரியருக்கும் தேர்ந்தெடுத்த நண்பருக்கும் ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
    எனக்கும் இது இரண்டாவது லட்டுதான்.
    🤝🤝🤝

    ReplyDelete
  19. வாழ்த்துகள் டாக்டர் மற்றும் நண்பர்களே..
    அடுத்து வரும் போட்டியிலும் முதல் பரிசு பெறப் போகும் டாக்டர் அவர்களை முன்கூட்டியே வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அட..பொருளாளருமே 'அத்திந்தோம்' போடுவாரா ? இது தெரியாமப் போச்சே !

      Delete
  20. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ///முதல் பரிசு:

    செல்வம் அபிராமி மற்றும் பார்த்தீபன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இரண்டாம் பரிசு:

    பத்மநாபன்.

    மூன்றாம் பரிசு: அனு மற்றும் குமார் சேலம் பகிர்ந்து கொள்கின்றனர்.///


    வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்..!

    நடுவருக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete
  22. வாவ் சூப்பர் சார்

    பரிசு பெற்றவர்கள் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும்
    வாழ்த்துகள் 🙏🏼💐💐💐
    .

    ReplyDelete
  23. நண்பர்கள் செனா , பார்த்தி ,பத்மநாபா , குமார் ,அனு மற்றும் ஜேவுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்...
    ஜவரும்
    உய்ய
    கவிமழை
    பெய்ய

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.

      Delete
    2. உண்மை தான் பத்து சார்

      Delete
    3. விடாதீங்க கவிஞரே ; வெற்றி பெற்ற ஒவ்வொருவர் மீதும் ஒரு கவிதையைப் போட்டுத் தாக்குங்க !

      Delete
    4. எடிட்டர் சார் உங்களுக்கு என் மீது ஏன் இந்த கொலை வெறி!!!!!!!

      Delete
    5. எதையும் தாங்குவேன்அன்புக்காக..
      நான் இதையும் தாங்குவேன் ஸ்டீலுக்காக.

      Delete
  24. ////அப்புறம் டான்ஸுக்கும் தோழிமார் இருந்தாக்கா முன்கூட்டியே கம்பெனிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கணும் அப்பு ! திடு திடுப்புன்னு வீடியோ -கீடியோ அனுப்பி சில பல பிஞ்சு மனசுகளை இங்கே பஞ்சர் ஆக்கிடப்படாது !! ////


    இதைப் படிச்சு கெக்கபிக்கேன்னு சிரிச்சுப்புட்டேன்! :))))))

    ReplyDelete
    Replies
    1. அறிவுரை சொன்னா ஆராயணும் ; சிரிக்கப்படாது !

      Delete
  25. பரிசு பெற்றவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. செல்வம் அபிராமி, பார்த்திபன், குமார், அனு அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. வெற்றி பெற்ற
    செல்வம் அபிராமி சார்
    பார்த்தீபன் சார்
    பத்மநாபன் சார்
    சகோதரி அனு
    ஆகியவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  29. வெற்றி பெற்ற சேலம் குமார் சார் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
    Replies
    1. சார் எல்லாம் வேண்டாமே சரவணன். நன்றி

      Delete
  30. தனியாக ஆட வேண்டுமா?
    அல்லது
    ஜோடி கட்டாயமா?

    ReplyDelete
    Replies
    1. அது நீங்க மறுக்கா வீட்டுக்குப் போணுமா - இல்லியாங்கிறதை பொறுத்தது நண்பரே !

      Delete
    2. ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு.

      Delete
  31. எந்த பாட்டுக்கு ஆடனும்....?

    ReplyDelete
    Replies
    1. நீங்கபாட்டுக்கு ஆடுங்க..

      Delete
    2. பாட்டெல்லாம் தேவையில்லை.. காலைல எந்துருச்சு மேக்கபெல்லாம் போட்டுகிட்டு தெம்பா பயமில்லாம ( அப்படி எதாச்சும் இருந்தாலும் மூஞ்சில மட்டும் காட்டாம) "இன்னிக்கு எந்த வேலையும் செய்யமாட்டேன், ஸ்ட்ரைக்" ன்னு ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்கள்.. பாட்டே தேவையில்லை .. தன்னால டான்ஸ் வரும்..

      Delete
    3. //எந்த பாட்டுக்கு ஆடனும்..//

      ஒரு மூனு முடிச்சால முட்டாள ஆனேன் கேளு கேளு தம்பி

      Delete
    4. எவ்ளோ சோகம்?.. பரிமளம்..நீ மேல பாடு..

      Delete
    5. கம்பெனில டூட்டில சாப்பாடு கெடைக்கும் ப்ரோ.. ஆனா வீட்டுக்கு போனா சாப்பாடு கெடைக்கனுமே...

      Delete
    6. //எந்த பாட்டுக்கு ஆடனும்..//

      இந்தப்புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்.
      '.. வசந்த முல்லை போலே வந்து..'

      Delete
    7. // ஒரு மூனு முடிச்சால முட்டாள ஆனேன் கேளு கேளு தம்பி // சத்யா செம்ம டைமிங்

      Delete
  32. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்..!

    நடுவருக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete
  33. /// டான்ஸுக்கும் தோழிமார் இருந்தாக்கா முன்கூட்டியே கம்பெனிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கணும் அப்பு ! ///

    முதல்ல சம்பந்தப்பட்டவங்ககிட்ட பர்மிஷன் வாங்கிக்கலாம்னு, கொல்லங்குடி கருப்பாயி, பரவைமுனியம்மா (நம்ம ரேஞ்சுக்கு அவிங்க தான் செட்டாகும்) ன்னு போன் போட்டா," நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் "ன்னு வருது. (பாவம்.அதுக்குள்ள போய்ட்டாங்க.)

    ReplyDelete
    Replies
    1. காந்திமதி மேடம் ?

      Delete
    2. ///முதல்ல சம்பந்தப்பட்டவங்ககிட்ட பர்மிஷன் வாங்கிக்கலாம்னு, கொல்லங்குடி கருப்பாயி, பரவைமுனியம்மா (நம்ம ரேஞ்சுக்கு அவிங்க தான் செட்டாகும்) ன்னு போன் போட்டா," நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் "ன்னு வருது.///

      தலீவருக்கு லேடி கெட்டப் போட்டு ஜமாய்ச்சுடலாம்.! மனம் தளராதிங்க பத்து சார்.!

      Delete
    3. ///காந்திமதி மேடம்///
      புதுப்பட்டி பொன்னுத்தாயி ok.

      Delete
  34. Congratulations friends 💐💐💐🏆🏆🏆🏆🏆🎁🎁🎁🎁🎁🎁🎁

    ReplyDelete
  35. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. வாழ்த்துகள் நண்பர்களே....!

    ReplyDelete
  37. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்

    ReplyDelete
  39. மை ஃப்ரண்ட் மைக்கேல் போனதுக்கு அப்புறம் நான் டான்ஸ் ஆடறதை நிறுத்திட்டேன்.!

    ReplyDelete
    Replies
    1. Bad.. Dangerous.. Thriller..
      ஹூம்.. அதெல்லாம் ஒரு காலம்..!

      Delete
    2. Kit
      வாங்க நாம ஜோடி போட்டு ஆடுவோம்.

      லுங்கி டான்ஸ்...
      லுங்கி...

      ஏ லுங்கி

      ஏ லுங்கி...

      Delete
    3. நான் Beyoncéக்கு மெயில் போட்டு All the Single ladiea பாட்டுக்கு ஆடலாம் வான்னு கூப்பிட்டேன். சோசியல் டிஸ்டன்ஸ் ஆறு அடி தள்ளி தான் நின்னு ஆடனும்னு சொல்லிட்டா. அப்படின்னா ஆடவே வேண்டாம்னு போட்டில கலந்துக்கறதை கேன்சல் பண்ணிட்டேன்.

      Delete
    4. ஆஸ்டின் பக்கமா "ஐயோ...அம்மா....ன்னு ஈனஸ்வரத்தில் ஏதோவொரு கரகரத்த குரல் கேட்டுச்சாமே சார் - ட்விட்டர்லே ட்வீட் பாத்தேன் ! அப்புறம் புதுசா 4 பூரிக்கட்டை வேணும்னு நம்ம ஆத்து விலாசத்திலேர்ந்து அமேசானிலே ஆர்டர் பதிவாகியிருக்காமே ?

      Any help ?

      Delete
    5. ஒருக்கால் நீங்க டான்ஸ் ஆடுறதை நிறுத்தின சேதியைக் கெட்ட புளகாங்கிதத்திலே அவரோட இருதயமும் நின்னு போச்சோ ?

      Delete
    6. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னுட்டீங்க.

      Delete
    7. நம்ம சங்க ரகசியத்தையெல்லாம் யாரோ சிவகாசிக்கு அனுப்பிட்டிருக்காங்க போல. யாருன்னு கண்டுபிடிக்கனும்.

      Delete
    8. நாமதான் திறந்த புத்தகமாச்சே மஹி..!

      அத்தரும் ஜவ்வாதும் மணக்கும்னு தெரியாதா.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் புகைக்கும்னு தெரியாதா.. தேனும் பாலும் ருசிக்கும்னு தெரியாதா.. அதையெல்லாம் யாராவது சொல்லித்தான் ஆகவேண்டுமா என்ன.!?

      Delete
    9. விம் லிக்விடும், பாத்திரங்களும் சந்திக்கிறச்சே ஜொலிக்கும்னு தெரியாதா ?

      சர்ப் எக்சலும், துணிமணிகளும் கைகுலுக்குறச்சே சலவை சிறக்கும்னு தெரியாதா ?

      சர்வோதய சங்கத்தில் வாங்கிய பூரிக்கட்டைகளும், முன்மண்டைகளும் மீட் பண்றச்சே புடைக்கும்னு தெரியாதா ?

      எல்லாமே ஒரு திவ்ய டிசைன் தானே ?

      Delete
    10. நான் சொல்ல வந்தேன்.

      Delete
    11. சார் what is the procedure for ordering பூரிக்கட்டை? லாக்டவுனில் அவசியம்தான். அனுவிற்கு நாலு கட்டை ஸ்பெஷலா பார்சல் பண்ணச் சொல்லுங்க.

      Delete
    12. ஸ்பெஷலாய் இன்று போடப்பட்டிருக்கும் அவசரச் சட்டத்தின் கீழே பூரிக்கட்டைகளும் "அத்தியாவசியங்கள்" பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனவாம் சிஸ் ! So தயங்காது அமேசானில் ஆர்டர் போடுங்க !! அப்புறம் அம்மிக்குழவிகளுமே "Essentials " பட்டியலாம் !! ஒரே ஆர்டராப் போட்டாக்கா டெலிவரி சார்ஜ் குறையுமில்லியோ ?

      Delete
    13. கண்டிப்பா. ஆர்டர் பண்ணிட்டு தான் மறு வேலை. எதுக்கும் mediclaim பாலிசி எடுத்து இன்னொரு முறை படிச்சிடரேன். டெலிவரி சார்ஜ் போனால் பரவாயில்லை. Fracture எல்லாம் செலவு செய்ய முடியாது. தவிர திறமையாக பேப்பர் roast தோசை சுட ஆள் கிடைப்பது கஷ்டம்.

      Delete
    14. /// திறமையாக பேப்பர் roast தோசை சுட ஆள் கிடைப்பது கஷ்டம்.///
      Note that point your honour.

      Delete
    15. ////தவிர திறமையாக பேப்பர் roast தோசை சுட ஆள் கிடைப்பது கஷ்டம்.///

      :)))))

      Delete
    16. "மாவுக்கட்டுப் போடும் அவசியங்களின்றி அடுப்பங்கரையில் ஆயுதப் பிரயோகம் செய்வது எப்படி ?" என்றொரு புக் லேட்டஸ்ட்டாய் சக்கை போடு போட்டு வருதாமே..?

      நீங்க ஏதும் கேள்விப்பட்டீங்க ? சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்குறதுக்கோசரம் தான் கேட்டேன் !

      Delete

    17. சார். காமிக்ஸிற்கு வாசகிகளை விட வாசகர்கள் தான் அதிகம். இப்படி எல்லா ரகசியங்களையும் போட்டு குடுத்திட்டீங்கன்னா எங்க நிலைமை நெம்ப சிரமம். காமிக்ஸுக்காவாண்டி நாங்க பொழைச்சுப் போறோம். . விட்டுடுங்கோ...

      அத்தரும் ஜவ்வாதும் மணக்கும்னு தெரியாதா.. //

      போன்ஒயரு அந்து ரொம்ப நாளாச்சு கண்ணரே. நீங்க வேற எடிட்டருக்கு எடுத்து குடுத்துட்டிருக்கீங்க. அப்படியோ மாமன் மகள் கவுண்டரு்மாதிரி ஒரு ஓரத்துல போய் உக்காந்துக்கலாம் வாங்க.

      Delete
  40. பத்மநாபன் சார் மிக்கநன்றி தாமத்திற்க்குமன்னிக்கவும்தற்போது நான்ரெகுலராக தளத்திற்க்குவராததால் தகவல் தாமதமாகவே தெரிந்து கொண்டேன்மன்னிக்கவும் கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  41. நான் வேணா ஒரு பாட்டைப் பாடுறேன்.அதுக்கு யாராவது டான்ஸ் ஆடிட்டா போதும்ல.

    ReplyDelete
    Replies
    1. நீங்க பாடினாலே பலபேரு ஆடிப்பூடுவாங்களே?!! :)

      Delete
  42. வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.....!!! சிறப்பாக தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ் ஐயா வாழ்க!

    ReplyDelete
  43. எனக்கு என்னமோ ப்ரைஸ் பத்தின விவரம் தெரிஞ்சா கொஞ்சம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். Actually 1963 ஆம் வருஷம் எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம். ஃபேமிலி மெம்பெர்ஸ்க்குள்ள ஒரு டான்ஸ் போட்டி. பல contestants உடன் பத்து வயது சிறுமியான என் அம்மா அபாரமாக ஆடி ஃபர்ஸ்ட் ப்ரைஸாக வாங்கியது ஒரு நெல்லூர் ஸ்பெஷல் சோப்பு டப்பா. அந்த அமர காவியத்தை இன்னும் மறக்காமல் வச்சுக்கிட்டு இருக்கார். இங்கு எப்படியோ???

    ReplyDelete
    Replies
    1. ச்சே...ச்சே...கம்பெனியை அவ்ளோ சீப்பா எடை போடலாமா ? நாங்க நெல்லூர் பக்கம்லாம் போறது இல்லீங்கோ ! ஏழு கம்மாய் தாண்டி ; ஏழு ஊரணி தாண்டி, பயணம் போயி கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்தின சோப்பு டப்பியை ஸ்பெஷலா இட்டாந்து வைச்சிருக்கோமாக்கும் !!

      Delete
    2. ////கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்தின சோப்பு டப்பியை ஸ்பெஷலா இட்டாந்து வைச்சிருக்கோமாக்கும் !!////

      சார்.. சோப்பு டப்பியை யார்க்கு வேணாலும் பரிசா கொடுங்க.. ஆனா உள்ளேயிருக்கும் சோப்பை மட்டும் எனக்குக் கொடுத்துடுங்க!! அதைப் பயன்படுத்தி நாங்களும் கொஞ்சம் 'தமிழகத்து பைங்கிழன்' ஆகிக்கறோமே?!!

      Delete
    3. ///தமிழகத்து பைங்கிழன்' ஆகிக்கறோமே?!!///

      தங்களது கருத்தில் சொற்குற்றம் பொருட்குற்றம் இரண்டும் இருக்கிறது குருநாயரே.!

      பைங்கிழம் என்றோ பைங்கிழவன் என்றோ இருந்திருக்க வேண்டும்.. இது சொற்குற்றம்.!

      ஏற்கனவே கிழமாக இருக்கும் தாங்கள் மீண்டும் எப்படி கிழமாக முடியும்..!? தொண்டுகிழமாக வேண்டுமானால் ஆகமுடியும்.. இது பொருட்குற்றம்.!

      Delete
    4. KOK..

      கிழங்களில் கிழங்கு போல அழகாக இருப்பவர்களை 'பைங்கிழன்' என்று வகைப்படுத்தியிருப்பதாக முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே சேக்கிழார் தன் ஓலைகளில் குறிப்பிட்டிருக்கிறாரே?!!

      Delete
    5. ஓஓஓ.... அம்புட்டு பழசா..!? :-)

      சேக்கிழார் எழுதியிருந்தா சரியாத்தான் இருக்கும்.! ஏன்னா அவரோட ஓலை ஒண்ணுல என்னைக்கூட அறிவும் அழகும் ஒருங்கே பெற்ற அரிமா ன்னு குறிப்பிட்டிருக்காரே.!

      Delete
    6. அரிமா'வா.. கரிமா'வா?!! நல்லா பாருங்க KOK!!

      Delete
    7. அரிமா தான்.! காலப்போக்குல மருவி அதாவது கருகி கரிமா ஆயிடுத்து.!

      Delete
    8. உங்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க பாணபத்திரர் காலங்கார்த்தாலே ஆஜராகிடுவார் புலவர்களே ! அதுவரையிலும் பொறுமை !

      Delete
    9. நைட்டோட நைட்டா நைஜீரியா போறதுக்கு எதுனா பஸ்ஸு இருக்குது..??

      Delete
    10. சார்.. நைட்டோட நைட்டா கைலாஷா போறதுக்கு எதுனா பஸ்ஸு இருக்குது..??

      Delete
    11. கைலாஷான்னா நானும் ரெடி.

      Delete
    12. FLASH NEWS : அரசவையில் E-பாஸ் வழங்கும் வழிமுறைகள் தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன !

      Delete
    13. // கைலாஷா போறதுக்கு எதுனா பஸ்ஸு இருக்குது..?? // கைலாஷ் போக கப்பல் தானே?

      Delete
    14. Kok. ஈவி சொன்னது சரிதான். கையில பையோட வந்தா அவர் தான் பைங்கிழன்.

      /// அரிமா'வா.. கரிமா'வா?!! நல்லா பாருங்க///

      ஹி.ஹி.. கரிஷ்மா.

      Delete
    15. ///கைலாஷ் போக கப்பல் தானே?///

      தேவையில்லை!! ஏதாவது நேஷனல் பர்மிட் லாரி போதும் - நேரே கைலாஷா தான்!! :P

      Delete
    16. ஹிஹிஹி அதே அதே

      Delete
    17. எல்லாரும் உயிரை கையில பிடிச்சிகிட்டு ஓடியாவது தப்பிக்க முயற்சி செய்யலாம் வாங்க 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

      Delete
  44. இந்த கட்டுரை போட்டி, நண்பனுக்கு கடிதம் வரைதல், ஹீரோ தன் வரலாறு கூறுதல், பேவரைட் ஹீரோவுக்கு இடம் கேட்டு விண்ணப்பம் வரைதல், காமிக்ஸ் சுற்றுலா பற்றி குறிப்பு வரைதல்....போன்ற போட்டிகள்லாம் எப்போது எடிட்டர் சார்??????? பூராவும் லெஜண்டு களுக்கான போட்டி ஆகவே வைக்கிறீங்க! B&C centerக்குலாம் எப்போது????

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய ஐட்டங்கள் காத்திருக்கு சார் ! பாண்டி ; பச்சைக் குதிரை தாண்டும் போட்டி ; கோலப் போட்டி ; குலை குலையா முந்திரிக்கா ; லெமன் in the ஸ்பூன் ரேஸ்...இத்யாதி..இத்யாதி...! ஒண்ணொண்ணா ஜமாய்த்திட மாட்டோம் ?

      Delete
    2. நெடுநாள் ஆசை ஒன்று..
      எந்தன் நெஞ்சினில் உதித்ததின்று..

      Delete
    3. சார் அந்த மியூசிக்கல் சேர்...

      ஹிஹி.. நாங்க அதுல சாம்பியனாக்கும்..!

      Delete
    4. அப்படியே Frisbee விடறது, லாக் அண்ட் கீயும் சேர்த்துடலாம்.

      Delete
    5. பாம்புத் தாயத்தை மறந்துட்டீங்களே ?

      Delete
    6. Frisbee... தட்டு, தாம்பாளம். , குக்கர் மூடின்னு வீசுன அனுபவத்தால நீங்க இந்த கேம்ல சாம்பியனா இருக்கலாம்னு நினைக்கிறேன்.. சரியா மேம்..!?

      Delete
    7. கம்பெனி ரகசியத்தை முன்னிட்டு நான் ஏதும் கன்பர்ம் செய்வதில்லை 🤣 Frisbee மட்டும் விதிவிலக்கு.

      Delete
    8. யாரார்க்கு எது என்று விதி போடும் பாதை..
      வீசினாலும், புடிச்சாலும் அதுதான்..

      Delete
    9. சின்ன தம்பி பாடல் மெட்டில் எழுதி இருக்கிறீர்கள்.
      யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
      போனாலும் வந்தாலும் அது தான்.
      சூப்பர் 👌

      Delete
    10. பத்து சார்.. நீங்க எழுதின கவிதை ஒன்னு 'சின்னத்தம்பி' படத்துல பாட்டா வந்திருக்குன்னு நான் அப்பவே சொன்னேன்ல?!!

      Delete
    11. // Frisbee... தட்டு, தாம்பாளம். , குக்கர் மூடின்னு வீசுன அனுபவத்தால நீங்க இந்த கேம்ல சாம்பியனா இருக்கலாம்னு நினைக்கிறேன்.. சரியா மேம்..!? // கண்ணா ஃபுல் ஃபார்ம் ல இருக்கீங்க

      Delete
    12. /// சரியா மேம்..!? //

      மேம் இல்லே குமார். மேரி கோம்.

      Delete
    13. /// பத்து சார்.. நீங்க எழுதின கவிதை ஒன்னு 'சின்னத்தம்பி' படத்துல பாட்டா வந்திருக்குன்னு நான் அப்பவே சொன்னேன்ல ///

      புறநானூறுலயே வந்திருக்கு.முதல்ல புற399 தான் இருந்துச்சு.நான் எழுதினதை சேர்த்ததுக்கு அப்புறம் தான் புறநானூறு ஆச்சு.
      சந்தேகம் இருந்தா காலையில செந்தூர் புலவர் ஸ்டீலார் வருவார். கேட்டுப் பாருங்க.

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. Editor sir April 20. Mudal Eyangi Anandavigatan=Juniarvigatan varum viyalan mudal April23. Kadaikalil. Kiddaikkum. Ena vilambaram seithullarkal. Kavanikkavum

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு காலையே அவை கடைகளில் உள்ளன சார் ; இதில் புதுசாய் ஏதுமில்லையே ? நேற்றைக்கே குமுதமும், குமுதம் ரிப்போர்ட்டரும் வந்திடுச்சே ! பத்திரிகைகளுக்கும், TV சேனல்களுக்கு தடை கிடையாது !

      Delete
  47. Kudos to செல்வம் அபிராமி, பார்த்தீபன், பத்மநாபன், அனு மற்றும் குமார்.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  48. கவிதை போட்டியில் வெற்றி பெற்ற
    திரு: செல்வம் அபிராமி சார்
    பார்த்தீபன் சார்
    பத்மநாபன் சார் மற்றும் திருமதி:அனு
    ஆகியவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    முந்தைய பாடல் போட்டியில் வெற்றி பெற்ற திரு: ஈ.வி க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
    பத்மநாபன் சாரின் டாக்டர்,
    ஜூவாலைகள் பிரயோகம் வேற லெவல் 👌👌👌💥🔥

    ReplyDelete
    Replies
    1. @Puthagapriyan0

      நன்றி நண்பரே! இன்னும் பலப்பல போட்டிகளில் நான் ஜெயிக்க வேண்டியிருப்பதால் தவறாமல் இங்கே வருகைதந்து வாழ்த்த வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்!!

      Delete
    2. நீங்களும் தவறாம செக் அனுப்பிடணும் குருநாயரே..!

      PuthagapriyanO @

      just fun sir.. don't mistake pls.!

      Delete
    3. ஆனாலும் அந்த ஈ.வி யின் செக் இன்னும் வரவில்லை என்று சொல்வது சபை நாகரிகம் ஆகாது என்பதால் 😜😁😉😛😝

      Delete
    4. முப்பது ரூபாயக்கெல்லாம் செக் கொடுத்திட்டிருக்க முடியாது! EBFக்கு வந்து நாலு பன்னுகளை சேர்த்து வாங்கிக்கோங்க!!

      Delete
    5. இந்த கடைத் தேங்காய்...வழிப் பிள்ளையார் .....அந்த ரவுண்டு பன் ..போட்டிக்குப் பரிசுகள் : ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு நினைக்கறீங்க ?

      Delete
    6. ஹிஹி!! சீக்ரெட் சமாச்சாரங்களை சிக்கென்று கவ்வ நம்ம கம்பேனியை அடிச்சுக்க ஆள் கிடையாது!!

      Delete
    7. /// முப்பது ரூபாயக்கெல்லாம் செக் கொடுத்திட்டிருக்க முடியாது! EBFக்கு வந்து நாலு பன்னுகளை சேர்த்து வாங்கிக்கோங்க! ///

      மூணு வாங்கினா ஒண்ணு ஃப்ரியாமே..

      Delete
    8. ஈ.வி!!! முப்பது ரூபாய்க்கு மூணு நாள் ராவு கண்ணு முழிச்சு வேலை பார்க்கும் ஆளாச்சே நாம்... பப்ளிக் பப்ளிக் 😉😜😁😝😛

      Delete
  49. நடுவர் J jiக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete
  50. இந்தவாரம்

    காசு பணம் துட்டு மற்றும் விண்ணில் ஒரு பொடியன் மற்றும் வேட்டையாடு விளையாடு படித்தேன்.. (காலத்தின் கட்டாயம்)
    Smurfs.. One of the most underrated series in tamil.!

    அடுத்து கழுதையின் கல்யாணம் (கிட் ஆர்ஹியூ) மற்றும் மேற்கே ஒரு சுட்டிப்புயல் (சுட்டி லக்கி) . சுட்டி லக்கி ரொம்ப நாட்களுக்குப் பிறகு பரணில் இருந்து இறக்கப்பட்டார் (இதுவும் காலத்தின் கட்டாயமே).
    லக்கி லூக்கிற்கு சிறிதும் குறைவில்லாத வகையில்தான் சுட்டி லக்கியும் இருக்கிறது.. ஆனால் லக்கி அளவுக்கு ரீச்சாகவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.!

    நாளைய கட்டாயம் சிக்பில் கிளாசிக்ஸ் 2

    ReplyDelete
    Replies
    1. இந்த கட்டாயம் கட்டாயம்ன்னு நீங்க சொல்லறதுல ஏதாவது உள்குத்து வெளிக்குத்து இருக்குதுங்களா, கிட் அண்ணா???

      Delete
    2. உங்களுக்கு தெரியாததாண்ணே..!!:-)

      Delete
  51. /// சார் அந்த மியூசிக்கல் சேர்...

    ஹிஹி.. நாங்க அதுல சாம்பியனாக்கும்///

    சார்.. அத்தஆடியன்ஸ்..
    அதுல ஐயா சேம்பியனாக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இப்போ அதுக்கெல்லாம் சாம்பியன்ஷிப் தராங்களா.. பலே பலே..!

      Delete
    2. பத்து சார் ஆடியன்ஸ் ஆக இருந்தே அலட்டாமல் இரண்டு பரிசு பெற்ற நீங்கள். Contestant ஆக இருந்தது இருந்தால்???

      மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசிக்கும் படங்கள் நூறு

      Delete
    3. இப்படி உசுப்பி உசுப்பியே ...
      ஓடிர்ரா..கைப்புள்ள.

      Delete
    4. // சார்.. அத்தஆடியன்ஸ்..
      அதுல ஐயா சேம்பியனாக்கும். //

      :-)

      Delete
    5. ம்யூசிக்கல் சேர்ல 2018 வருட சேம்பியன்ஷிப் (அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே நடந்த போட்டி) நான் தானே ஜெயிச்சேன்.

      Delete
    6. வீடியோ ஆதாரம் இருக்கு சாரே..! டை ப்ரேக்கர்ல ஜெயிச்சி கோப்பையை வென்றது நானாக்கும்.!

      Delete
    7. மிஸ்டர ஷெரீப்...

      நீங்க ஜெயிச்சீங்களா இல்ல உடைச்சீங்களான்னு ஒரு குரூப்பே பாத்துட்டு தான் இருந்தது...!?

      Delete
  52. //டான்ஸுக்கும் தோழிமார் இருந்தாக்கா முன்கூட்டியே கம்பெனிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கணும் அப்பு ! //

    தோழியோடு ஆடலாம் ஆடி ஜெயிச்சிடலாம் சார் ஆனா அந்த பரிச வாங்க நான் உயிரோட இருக்க வேணாமா சார் குறைந்த பட்சம் தண்டனையா ஆடின கால் போயிடும் ஆசிரியரே

    ReplyDelete
  53. இது போங்கு.. கள்ளாட்டம். மறுபடியும் முதல்லேர்ந்து நம்பர் போடுங்க

    ReplyDelete
  54. கவிதை போட்டியில் வெற்றி பெற்ற
    திரு: செல்வம் அபிராமி சார்
    பார்த்தீபன் சார்
    பத்மநாபன் சார் மற்றும் திருமதி:அனு
    ஆகியவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    நடுவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...:-)

    ReplyDelete