Powered By Blogger

Saturday, February 15, 2020

கொஞ்சம் முன்னோட்டங்கள்..கொஞ்சம் கேள்விகள் !

நண்பர்களே,

வணக்கம். சீனத்துத் தென்னைமரத்தினில் கொட்டிடும் தேளானது தமிழகத்துப் பனைமரங்களிலுமே நெரி கட்டக் செய்யுமோ ? தூரத்து சீன வுஹான் பிரதேசத்தில் ரணகளத்தைத் துவங்கியுள்ள கரோனா வைரஸ் ஊரெல்லாம் ஏற்படுத்திடும் ஆரோக்கியக் கோளாறுகள் ஒரு சோகக் கதையெனில், அதன் எதிரொலியாய் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிடும் பொருட்களுக்குத் திடுமென விழுந்துள்ள பிரேக்கானது நமக்கும் குமட்டோடு ஒரு குத்து விட்டுள்ளது ! "அண்ணாச்சி...லயன் காமிக்சிலேர்ந்து பேசுறேன்...ஆர்ட் பேப்பர் ஒரு டன் வேணுமே ?" என்று வழக்கம் போல் போன் அடித்தால் மறுமுனையில் மௌனம் ! "சர்தான்...ரேட் கொஞ்சம் போல கூடியிருக்கும் போல !" என்று நினைத்துக் கொண்டே "இப்போ என்ன ரேட் அண்ணாச்சி ?" என்று கேட்டேன் ! தயங்கியபடியே மறுமுனையிலிருந்து ஒரு நம்பரைச் சொன்னார் ! எனக்கு காதில் லேசாய் ஈயத்தை ஊற்றியது போலிருந்தது !! "இன்னாது ? டன்னுக்கு அறுபத்தியெட்டாயிரமா ??????? அதுக்கு மேலே 12 % GST போடுவீங்கள்லே !!  போன மாசம் கூட இவ்ளோ இல்லியே ?" என்று அலறினேன் ! ரொம்ப காலம் உள்ளாற இருந்துவிட்டு வெளியே வரும் கவுண்டர் "ஒத்த ரூபாய்க்கு ஒரு தேங்கா குடு" என்றபடிக்கே கடைக்குப் போய் நிற்பாரில்லியா ? அவரைப் பார்த்த மாதிரியே என்னையும் பேப்பர்ஸ்டோர்காரரும் பார்த்திருக்க வேண்டும் ! "மூணு வாரமா சைனாலேர்ந்து சரக்கே வர்றதில்லீங்க அண்ணே ! புதுசா ஆர்டர் எதுவுமே எடுத்துக்க மாட்டேங்கிறாங்க ! இப்போ இது தான் ரேட்டு ! இனி அடுத்த மாசம் மார்க்கெட்டில் சரக்கே இருக்காது போல் தெரியுது - என்ன விலைக்குனாலும் !!" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் !! 

So இந்தப் பதிவை டைப்பும் அதே சமயத்தில் நம்மாட்கள் கடை கடையாய் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள் - இருபது நாட்களுக்கு முந்தைய விலைக்கே விற்றிட யாரேனும் நியாயவான் கண்ணில் தட்டுப்படுகிறாரா ? என்று கண்டறிய ! சத்தியமாய் அதற்கெல்லாம் சாத்தியம் இராதென்பது புரிகிறது தான் ; ஆனால் பாழும் மனசும், டைட்டான பட்ஜெட்டும் கேட்டுத் தொலைக்கணுமே ?!! எது எப்படியோ - ஒண்ணும் கிடைக்காத பட்சத்தில் "புரட்சித் தீ" கதையில் வருவது போல ஊருக்கொரு வெள்ளைப் பசு மாட்டைப் பிடித்து அதன் மீதாவது படங்களையும், வசனங்களையும் வரைந்து சந்தாதாரர்கள் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் இட்டுப் போவதென்றுள்ளேன் ! 'இந்தந்தத் தெருக்களில்  இத்தினி மணிலேர்ந்து இத்தினி மணிவரைக்கும் மாடார் நிற்பார் ; அஜீஸ் பண்ணிப் படிச்சுக்கோங்களேன் !!' என்று Facebook ; Instagram ; Twitter-ல் பதிவுகளை போட்டால் படிச்சிற மாடீர்களா...சாரி..சாரி..மாட்டீர்களா - என்ன ? இதிலே ஒரு கூடுதல் ப்ளஸ் என்னான்னா - "குண்டு புக்" பிரியர்களுக்கு செம திருப்தியா இருக்கும் !! தோராயமாய் 350 - 400 கிலோ எடை எனும் போது 'இதுக்கு மேலே குண்டு புக் போடணும்னா ஜம்போ சர்க்கசுலேர்ந்து ஆனையைத் தான் இரவல் வாங்கிக்கணும் folks" என்று சமாளித்துக் கொள்ள முடியுமே !  அப்புறம் "என் புக்கிலே பைண்டிங் சரி இல்லை ; அச்சுத் தரத்தைக் கூட்டலாம் ; hardcover இல்லியா ? !' போன்ற சங்கடங்களுக்கும் இடமிராது தானே ?! So மாடு பிடிக்க சந்தையைத் தேடி நான் இன்னொரு பக்கம் புறப்பட உத்தேசம் ! Jokes apart - இதில் கொடுமை என்னவெனில் இந்த கரோனா வைரஸ் என்ற தற்காலிகச் சிக்கல்கள் ஒரு சில மாதங்களில் சரியாகிவிட்டாலும் - 'ஏறின விலை, ஏறினது தான் !' என்று இங்குள்ள வியாபாரிகள் உடும்புப்பிடியாய் நின்று விடுவார்கள் !! திரும்பவும் சகஜத்துக்கு விலைகளைத் திரும்பிட அனுமதிப்பார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !

Marching on, March is just around the corner ! இதோ - காத்திருக்கும் மாதத்தின் ஒரே black & white இதழினில் தலைகாட்டக்காத்திருக்கும் 'தங்கத் தலைவி பிளைசியின்' அட்டைப்பட முதல்பார்வை !
ஏற்கனவே நான் எழுதியது தான் ; but still இன்னொரு மறுஒலிபரப்பு  செய்தால் தப்பில்லை தான் ! அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுபக்கம் வசிக்கும் ஓவியையே தற்சமயமாய் நமது அட்டைப்படங்களுக்கு டிசைன் போட்டுத் தருகிறார் ! டிஜிட்டலாகவே வரைந்து, டிஜிட்டலாகவே வர்ணம் தீட்டுவதும் இவரது பாணி என்பதால் - அழகாய் ஒரு ஒரிஜினலை மட்டும் ஒப்படைத்தால், ஒரே வாரத்தில் பின்னியெடுத்து விடுகிறார்  ! இங்கொரு குட்டி இடைச்செருகல் : நடப்பு மாதத்தின் ஆர்ச்சி அட்டைப்பட டிசைனும் அவர் கைவண்ணமே ; ஆனால் background ரொம்பவே நாடக பாணியில் இருந்ததால், நமது DTP கோகிலா வேறொரு பின்னணியைப் புகுத்தி ; அந்த நட் + போல்ட் + பற்சக்கர டிசைனில் எழுத்துருக்களையும் ; கீழே ஸ்பான்னரில் "ஆர்ச்சி is back !" என்ற டிசைனையும் ரெடி செய்திருந்தார் ! அட்டைப்பட டிசைனை படைப்பாளிகளிடம் காட்டி approval வாங்கிட வேண்டியது அவசியம் என்பதால் மின்னஞ்சலில் லண்டனுக்கு அனுப்பினோம் ! மின்னல் வேகத்தில் ஓ.கே சொன்னவர்கள் - "இந்த டிசைன் ஏதேனும் பழைய Fleetway ஆக்கத்தின் மீது இப்போது வர்ணம் பூசியதா ?" என்று வினவினார்கள் ! "இல்லீங்கோ ; புதுசாய் இப்போது போட்டது !" என்ற போது மெய்யாலுமே சந்தோஷ ஆச்சர்யம் அவர்களுக்கு !! So கதைகள் தான் அசலூர் ; அயல்நாடு என்றால், இப்போதெல்லாம் அட்டைப்படங்களுமே made in மேல்நாடு தான் ! And அவரது திறனில் தயாராகியுள்ள இந்த மாடஸ்டி ராப்பர் - அந்த பெரிய சைசில் வெளியாகி, வழக்கமான மினுமினுக்கும் ஜிகினாக்களோடு கடைகளில் தொங்கிடும் போது நிச்சயமாய் காமிக்ஸ் ஆர்வலர்களைத் தாண்டியோரின் கவனங்களையும் ஈர்க்கும் என்றொரு நம்பிக்கை எனக்கு ! அப்புறம் இது ஒரு மாடஸ்டி வீடியோ கேஸட்டின் டிசைனை மறுக்கா வரைந்தது !! "அதை அப்டியே சுட்டுப்புட்டு அமெரிக்கால வரைஞ்சது ; ஆப்ரிகாலே வரைஞ்சதுன்னு கதை விட்றாண்டோய் !" என FB -ல் பறைசாற்றி மகிழ எண்ணும் நண்பர்கட்கு - sorry guys !! மாற்றி ; மறுக்கா வரைந்துள்ள image என்வசம் உள்ளதென்ற சேதியைச் சொல்லிக்கொள்கிறேன் ! கதையுமே இம்முறை fast paced & இந்த பெரிய சைசில் படிக்கும் போது ரொம்பவே ரசிக்க முடிகிறது - at least என்னளவில் ! So 'தங்கத் தலைவி' பேரவையினரைத் தாண்டியுமே இந்த ஆல்பம் ஹிட்டடிக்கும் என்று பட்சி சொல்கிறது ! And இந்த ஆல்பத்தைத் திறக்கும் போதே இன்னொரு சுவாரஸ்ய சேதி உங்களுக்குக் காத்திருக்கும் என்பது கொசுறுத் தகவல் !

மார்ச்சில் கார்ட்டூன் லூட்டியும் உண்டென்பது எனக்கும், சக கார்ட்டூன் காதலர்களுக்கும் ஜாலி நியூஸ் ! And இம்முறை ஆஜராகவிருப்பதோ உட்ஸிடியின் சிரிப்பு டீம் ! அடிக்கடி உச்சரிக்கும் வரிகளே ஆனாலும், இன்னொருக்கா இங்கே repeat செய்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன் ! பக்கத்துக்குப் பக்கம் ;  பிரேமுக்கு பிரேம் கிச்சு கிச்சு மூட்டலை எதிர்பாராது, அழகாய், இலகுவாய், ஜாலியாய்ப் பயணிக்கும் கதையினை, சித்திரங்களை ரசித்தபடிக்கே உள்வாங்கிட்டால் - ஒரு அரை மணி நேரத்துக்காவது காற்றில் பறக்கும் உணர்வு உத்தரவாதமாய் உண்டென்பேன் !  இதோ - நடப்பாண்டின் one & only கிட் ஆர்டின் + டாக் புல் சாகசத்தின் அட்டைப்பட preview !
ஒரிஜினல் டிசைன், சன்னமான வர்ண மாற்றங்களோடு என்பதால் இது கோகிலாவின் ஆக்கமே ! And உட்பக்கங்கள் எல்லாமும் ரெடியாகி, இந்த இதழ் அச்சாகியே ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது ! துரதிர்ஷ்டவசமாக உட்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புகளை வாங்கி வைக்க மறந்து போய் விட்டதால், உட்பக்கத்துப் preview இப்போது சாத்தியம் நஹி !

இனி தொடர்வது கொஞ்சம் கேள்விகள் guys !!

***நடப்பு மாதத்தில் வில்லரின் இடி முழக்கத்தை தாண்டியும் "தனியே தன்னந்தனியே" தனி ஆவர்த்தனம் செய்திருப்பதை நிரம்பவே ரசித்துப் பார்த்து வருகிறேன் ! நம்மைப் பொறுத்தவரையிலும் 'ஹாரர்' எனும் ஜானர் மறந்து போனதொன்றே ! கடைசியாய் எப்போது ஒரு அக்மார்க் திகில் கதையினை வெளியிட்டோம் என்று கூட சட்டென்று நினைவுபடுத்திப் பார்க்க எனக்கு இயலவில்லை ! So வரும் நாட்களில் இந்த ஓரம்கட்டப்பட்ட கதை பாணிக்கு முக்கியத்துவம் தந்து நம் தேடல்களை முடுக்கி விடலாமா ? என்ற சிந்தனை உள்ளுக்குள் ! What is your take on this folks ? "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? 

***ரொம்பவே சீக்கிரமே இந்தக் கேள்விக்கு ! ஆனால் கடந்த சில வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் வேகம் காணும் விற்பனை ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படலம்" + "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" ஆல்பங்களே ! கடைகளின் விற்பனை நிலவரம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை - but ஆன்லைனின் போக்கு கடைகளிலும் தொடரின், இந்த black & white ; மித விலை ; நேர்கோட்டுக் கதைகள் இன்னமும் கொஞ்சம் விரிவாக்கிடலாமா ? I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? சாகச வீரர் ரோஜர் ; LADY S ; கமான்சே ; டிடெக்டிவ் ஜெரோம் போன்றோர் பளிச் என நினைவுக்கு வருகின்றனர் ! உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? 

***"குண்டு புக் "மோகம் ; "ஏக் தம்மில் படித்து விட வேண்டும்" என்ற வேகம் - நமக்கு எப்போதுமே கையருகே உலவிடும் சங்கதிகள் ! ஆனால் எல்லாத் தொடர்களிலும், எல்லாத் தருணங்களிலும் இது நடைமுறை சாத்தியமாவதில்லை ! So அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாமே நான் செய்வது - அத்தகைய தொடர்களை நம் ரேடாருக்கே கொணராது விலகிப் போவதே ! ஆனால் ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? Say ஆறு பாகங்கள் கொண்ட தொடர் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; மாதமொரு பாகம் என 6 மாதங்களுக்கு இதனைத் திட்டமிட்டால், மாதா மாதம் ஒரு சஸ்பென்சோடு வாசிப்புகள் இருந்திடாதா ? முன்னாட்களில் ஆடிக்கும், அமாவாசைக்கும் நாம் பிக்குகள் வெளியிட்டு வந்த நிலையில் தொடர்கள் - தொ-ட-ர்-க-ள் ஆகிப் போகும் ஆபத்திருந்தது வாஸ்தவமே ! ஆனால் இப்போது நாம் பங்க்சுவாலிட்டி பரமானந்தங்களாய்ப் பரிணமித்துள்ள நிலையிலும்  இந்தத் தொடர் பாணி  ஒரு no-no என்றே சொல்லுவீர்களா ? 'மணந்தால் குண்டு புக் தேவி தான் !" என்ற நம் வைராக்கியங்களின் உபயத்தால் நிறையவே கதைகளை நாம் உதறிடுகிறோமோ ? என்ற நெருடல் என்னுள்  ! Hence இந்தக் கேள்வி ! 

***அப்பாலிக்கா சித்தே லைட்டான கேள்விகளும் : முதல் தபா சிவகாசிக்கு வந்தது ; முதல்வாட்டி புத்தக விழாக்களில் சந்தித்தது என்ற ரேஞ்சில் போன பதிவினில் அகஸ்மாத்தாய் ஆளாளுக்குப் பரிமாறிக் கொண்டது வாசிக்க சுவாரஸ்யமாக இருந்ததாய் நினைத்தேன் ! நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ? அதே போல நீங்கள் நேரில் சந்தித்த முதல் சக நண்பர் பற்றியும் கூடச் சொல்லுங்களேன் ? எங்கே ? எப்போது ? எந்தச் சூழலில் ? 

***Before I sign off - உங்களின் தேர்வு அவசியமாகிறது எனக்கு ! லக்கி லூக்கின் MAXI மறுபதிப்புகளில் அடுத்தாண்டிற்குத் தேவையான கதைகளை shortlist செய்து வருகிறேன் ! (Oh yes - 2021 அட்டவணை உருட்டல்கள் என்னளவிற்கு துவங்கியாச்சு !!) இப்போதைக்கு நான் குறித்து வைத்துள்ள பெயர்கள் "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? அல்லது வேறேதேனும் ? 

Bye all...have a super weekend !! See you around !!

P.S.நாள்தோறும் லோகத்தில் நல்லது நடக்கிறதோ ; கரோனா கதை ஓடுகிறதோ - "அதைப்பற்றியெல்லாம்  கவலையில்லை எங்களுக்கு  !! கருமமே கண்ணாய் - நாளொன்றுக்கு இந்த வலைப்பக்கத்துக்கு 7000+ பார்வைகளைத் தந்து பம்ப் அடிப்பதை நாங்க விடுவதாக இல்லை !" என்று அந்த அனாமதேயப் பரோபகாரிகள் பிசியாக  இருக்கிறார்கள் ! கடந்த ஒற்றை மாதத்துப் பார்வைகள்  மட்டுமே  208,000 !! So ஐந்தே மாதங்களுக்கொரு மில்லியன் ஸ்பெஷல் போட நாங்கள் முஸ்தீபுகள் செய்தாகணும் போலும் !! பின்றீங்கோ சார்ஸ் !! 

324 comments:

  1. பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் போதும்னு அந்த காலத்துலயே முடிவு பண்ணதுக்கு காரணமே மார்ச்சு மாதம் சீக்கிரம் வரணும் தங்கத் தலைவியை சீக்கிரமாக தரிசிக்க வேண்டும் என்பதுக்காகத்தான்.
    ஜெய் இளவரசி!
    ஜெய் இளவரசி!

    ReplyDelete
    Replies
    1. ஓப்பனிங்லாம் "இளவரசிப் பேரவை" கிட்டே நல்லாத் தான் இருக்கு ! ஆனா நடுவாக்கிலே ஆளுக்குக் கொஞ்சம் விமர்சனங்களை முன்வைக்கிறச்சே காணாமலே போய்டுறது தான் கவலையே !

      Delete
    2. அது போன வருஷம்..!இது இந்த வருஷம் சார்...நீங்களே பாருங்க....!

      Delete
    3. பாத்துட்டாப் போச்சு பழனி !

      Delete
  2. 10 க்குள்...வாரே வாவ்...

    ReplyDelete
  3. வாழை நாரிலே மாலையை வேணும்னா கட்டலாம்... மாடஸ்தியையோ மத யானையையோ கட்ட முடியாது..

    ReplyDelete
    Replies
    1. ஒரு டீமே ரூம் போட்டு வேலை பாக்குமோ சார் - இந்தப் பழமொழிகளைத் தூசு தட்டித் தருவதற்கு ?

      அது சரி, சிவனேன்னு கிடக்கிறே வாழை நாரை - தேமேன்னு வலம் வரும் மாடஸ்டிக்குக் கட்டுவானேன் ?

      Delete
    2. அதிகாரியின் பஞ்ச்சுகளை நாங்களும் இப்பிடித் தானே குழன்பி பார்ப்போம்..

      Delete
    3. அதிகாரி hangover ன்னு இதுக்கு பேர் !! அவர் குத்து விட்றா மேரியே அடிக்கடி காதுக்குள்ளாற ஒலிக்கும் !!

      Delete
    4. நாளைக்கு ஒரு துளி துரோகத்துக்கு ஒரு பாயசத்தைப் போட்டிர வேண்டியத தான்... தலைப்பு கூட ரெடி..
      ஒரு துளி துரோகம் - ஒரு விளக்கு சரம்

      Delete
    5. பாயாசத்துல பல்லி கிடந்தாலும் தூக்கிபோட்டு தூர்வாருரவங்க நாங்க.
      போங்க தம்பி.போய் மாடஸ்திய கர ஏத்துர வழிய பாருங்க.

      Delete
    6. //பாயாசத்துல பல்லி கிடந்தாலும் தூக்கிபோட்டு தூர்வாருரவங்க நாங்க.//

      ஹி...ஹி...ஹி...!

      Delete
  4. மாடஸ்டி அட்டையே அட்டகாசம்.அள்ளுது போங்க...

    ReplyDelete
  5. அப்டியே கோயமுத்தூர் விலாசத்தையுமே பேரோட சேர்த்துப்பூடீங்கன்னா - இன்னும் 'நச்'னு இருக்குமில்லையா ஸ்டீல் ?

    ReplyDelete
  6. 'எதிர்காலம் எனதே' அட்டைப்படத்தில் வசீகர முக அமைப்புடன் (குறிப்பாக அந்தக் கண்கள்) மாடஸ்டியைக் காண ஜிவ்வென்றிருக்கிறது! உடல்தான் ரொம்பவே மெலிந்து பரிதாபத் தோற்றமளிக்கிறது! மாடஸ்டியை கொரோனா வைரஸ் எதுவும் தாக்கவில்லைதானே?

    வழக்கமாக மாடஸ்டிக்கு அருகே தரையில் குத்துக்காலிட்டபடிக்கே சும்மாக்காச்சும் கத்தியை கையில் பிடித்தபடி போஸ் கொடுக்கும் வில்லி கார்வினையும் காணோமே?!!

    மாடஸ்டி வெற்றிவாகை சூட அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பின்புலத்தில் சட்டையைத் திறந்து போட்டபடிக்கே துப்பாக்கியை ஏந்திப் பிடித்து நிற்பது கிட் ஆர்டின் இல்லீங்கோ !!

      Delete
    2. சார்.. கார்வினுக்கு துப்பாக்கியைப் பிடிக்கக்கூட தெரியாதே?!! எங்களையே ஏமாத்தப் பாக்குறீங்களா?!!

      Delete
    3. "இளவரசிப் பேரவை" : அதுக்குள்ளாற தூங்கப் போயாச்சா ? தலீவரின் விழுதுகளாய் இருக்கிறார்களே ?

      Delete
  7. //கடைகளின் விற்பனை நிலவரம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை//

    முதலில் கொஞ்சம் மந்தம் சார் ஆனால் ஆர்ச்சி வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. பழைய ஹூரோக்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் சார்....!

    ReplyDelete
  8. ஹாரர் ?

    ஒன்றிரண்டு போதும் ..டூ மச் ஆப் எனிதிங் பேக்டர் ................

    ///////////////////////////////////////////////////////////////////////////////////////


    கருப்பு வெள்ளை -நாற்பத்திஎட்டு பக்கம் ....????

    ஓ | எஸ் !!! கதை செலக்ஷன் புதுசா எதுவும் இருந்தா தேவலை !!!!

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


    குண்டு புக்கே வேணுமா ????



    மாசம் ஒண்ணு -ன்னு ஆறு ,பத்து பாகம் வந்தாலும் பரவால்ல!!!


    ///////////////////////////////////////////////////////////////////////



    லக்கி மறுபதிப்பு ....???

    சூ ..மந்திரகாளி ,கௌபாய் எக்ஸ்ப்ரஸ்...நல்ல தேர்வுகள்தான்

    ////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. //மாசம் ஒண்ணு -ன்னு ஆறு ,பத்து பாகம் வந்தாலும் பரவால்ல!!!//

      ஹை !!

      Delete
    2. சூ ம.கா, கௌ.எ. +5678

      Delete
  9. சார். அட்டைப் படங்கள் அருமை...கோகிலா அவர்களுக்கு வாழ்த்துக்களும்நன்றிகளும்.... ெஷரீப்பின் சாசனம் போன வாரம்தான் படித்தேன்...அட்டகாசமான கதை...கிட்ட எதிர் பார்க்கிறேன் அதே ஆவலோடு.....


    மாடஸ்டி ஆவலக் கூட்டுறார்...

    ஆர்ச்சியும் கலக்குவது மகிழ்ச்சி
    ....
    தொடர்கள் வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கலாம் .....

    ஆர்ட் பேப்பருக்கு பதிலா உயர்தர தாளில் விடலாமே....
    H வரட்டும்...

    ReplyDelete
  10. வேறு யாரேனுமாக இருந்திருந்தால் டவுசரோடு உச்சா போயிருப்பார்கள்! அப்படியொரு சூழ்நிலையிலும் கெக்கபிக்கேன்னு சிரிக்கும் கலையெல்லாம் ஆர்டினுக்கு மட்டுமே சாத்தியம்!!

    'காமெடி கிங்கரன்' கிட்ஆர்டின்- வாழ்க வாழ்க!

    ReplyDelete
  11. தொடர் பாணி வெற்றியடையும் வாய்ப்புகள் குறைவு என்றே எண்ணுகிறேன். முதல் பாகம் சரியில்லை என்றால் அடுத்த பாகம் வாங்க யோசிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் பாகமே சரியில்லாததொரு கதையின் மீது சுட்டு விரலையாச்சும் வைப்பேன் என்று நினைக்கிறீர்களா நண்பரே ?

      Delete
  12. ஹாரர் ?
    H நான்கைந்து இதழ்கள்னா சூப்பர்!


    கருப்பு வெள்ளை -நாற்பத்திஎட்டு பக்கம் ....????

    தாராளமாக வெளியிடலாம்!


    குண்டு புக்கே வேணுமா ????

    மாசம் ஒண்ணு -ன்னு ஆறு ,பத்து பாகம் வந்தாலும் பரவால்ல!!! யெஸ்!!!


    லக்கி மறுபதிப்பு ....???

    லக்கில எதுனாலும் ஓகே தான்!

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்தி அட்டைப்படம் தூள்!


      என்னமோ போங்க சார்!
      கிட் & டாக்புல்ல பார்த்தாலே மனம் குதூகலிக்கிறது!

      Delete
    2. நான் படிச்ச முதல் லக்கிலூக் கதை "பூம் பூம் படலம்"

      பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரு நிறுவனங்கள் என்னன்ன தில்லாலங்கடி வேலைகளைச் செய்யும்! பங்குதாரர் கூட்டம் எப்படி நடக்கும்! ஒரு கம்பெனி தன் போட்டி கம்பெனியை காலி பண்ண எந்த எல்லைக்கும் போகும்!

      இதையெல்லாம் ஆய்வு செய்து தரமான கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்குவதில் தான் எனது ஜீவனம் நடக்கும் என்பது நிச்சயமா அன்றைக்கு எனக்கு தெரியாதுங்க சார்!

      ஆனால் நான் படித்த முதல் காமிக்ஸே எனது வாழ்நாள் முழுமைக்கும் பயனளிக்க போகிறதாய் அமைந்தது ஆச்சர்யம் தான்!

      லக்கியும் அரசியல் பொருளாதார பகடிகளும் பிரிக்க முடியாதது!

      அதிலும் 'திசைக்கொரு திருடன்' சான்ஸே இல்லை! வேற லெவல்!!

      அந்த நிதியாலோசனை சொல்லும் பங்குத் தரகரின் முகத்தில் தெரியும் கள்ளத்தனம் அற்புதமான ஓவியம்!

      Delete
    3. //அந்த நிதியாலோசனை சொல்லும் பங்குத் தரகரின் முகத்தில் தெரியும் கள்ளத்தனம் அற்புதமான ஓவியம்!//

      நான் மார்க்கெட்ல இது போல ஏகப்பட்ட புரோக்கர்களை பார்த்திருக்கிறேன்!

      Delete
  13. பகலவன் புண்ணியத்தில் அடுத்த மாதம் அடிக்கப்போகும் வெய்யிலில் கரோனாவாவது ஒன்றாவது எந்த வைரஸ் தாக்குதலும் நமது தங்கத் தமிழ்நாட்டில் பரவப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம்! (வெய்யில் நல்லது ஹிஹி)

    ஆனாக்க பேப்பர் விலை குறையுமாங்கறது நிச்சயமில்லாம போயிருச்சே!

    ReplyDelete
    Replies
    1. //வெய்யில் நல்லது //

      +1001

      Delete
  14. பூம் பூம் படலம் & சூப்பர் சர்க்கஸ் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே சார் 🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. முதல் (வண்ண) லக்கி மறுபதிப்பே "சூப்பர் சர்க்கஸ் " தானே சார் ?

      Delete
  15. மாடஸ்டி & கார்வின் அட்டையில் இல்லாதது போலவே உள்ளது சார் 😰😨😤

    ReplyDelete
  16. ஆனால் பின் அட்டை அசத்தல் 👍👍👍

    ReplyDelete
  17. ஹாரர் :- தனிச்சந்தா வேண்டாம். கி.நா சந்தாவினில் இடைச்செருகிடலாம்.

    க.வெள்ளை 48 பக்கம் :- தாரளமாக..ஜானி, ஜில் ஜோர்டான், சிக் பில் போன்றோரைக் கூட பரிசீலிக்கலாம்.

    லக்கி மறுபதிப்பு: பூம் பூம் படலம் தான். (டெக்ஸில் கழுகு வேட்டை ஒரு கிளாசிக். அக்கதையும் கொஞ்சம் பரிசீலியுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. "பூம் ..பூம் படலம்" ரெண்டாவது ரவுண்ட் தான் வந்து விட்டதே சார் ?

      Delete
  18. மாடஸ்டி அட்டைப்பம் அருமை சார், waiting for இளவரசி.

    Maxi Lion மறுமதிப்பு "கௌபாய் எக்ஸ்பிரஸ்" வந்தால் நன்றாக இருக்கும்.

    B/w இதழ்கள் 48 பக்கம் வரவேற்கத்தக்க முயற்சி சார், பழைய நாயகர்கள் இந்த மட்டிலாவது வருவது மகிழ்ச்சியே, இந்தவகையில் ஏதாவது புதிய அறிமுகங்கள் சாத்தியமா சார்?

    ஹாரர் கதைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் சார், தனித்தடம் Nops.

    குண்டு புக் = தொடராக ஒரு பரீட்சாத்த முயற்சியாக ok சார், பெரும்பான்மை வரவேற்பைப் பொறுத்துத் தொடரலாம் சார்...

    ReplyDelete
    Replies
    1. //குண்டு புக் = தொடராக ஒரு பரீட்சாத்த முயற்சியாக ok சார், பெரும்பான்மை வரவேற்பைப் பொறுத்துத் தொடரலாம்//

      Nice !

      Delete
  19. குண்டு புக்தான் ஓ.கே.ஒரே தடவையில் வாங்கினோமா படித்து முடித்தோமா என்று இருப்பதை விட்டு இந்த மாதம் வாங்கவில்லை யே அடுத்ததையும் தவறாமல் வாங்க வேண்டுமே என்று அல்லோகொல்லோ படக்கூடாது.ஒரு புத்தகம் தவறினாலும் மற்ற புத்தகங்கள் நம்மை பார்த்து கே என்று விழிக்கும்

    ReplyDelete
    Replies
    1. குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கேனும் எல்லா இதழ்களையும் குட்டி போட்ட குரங்கைப் போல வயிற்றோடு சுமந்து திரிய நாங்கள் இருக்கும் போது - எதை மிஸ் செய்திருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமே நண்பரே ?

      Delete
  20. ஹைய்யா புதுப் பதிவு......

    ReplyDelete
  21. ஒரு துளி துரோகம்,
    விர்ஜீனியாவின் ரிச்மண்டை நோக்கிய தடதடக்கும் இரும்புக் குதிரையின் ஒரு பயணப் பொழுதில் கதை நம் கண்முன் விரிகிறது,
    ஹோவர்ட் வால்காட் எனும் பெரும் புள்ளியை சந்திக்க செல்லும் வில்லர் அவரைப் பற்றிய பின்புலத்தையும்,கடந்த காலத்தில் அவருடனான தொடர்பை பற்றியும் பயணத்தினூடே கார்ஸனுக்கு சொல்லச் சொல்ல இரும்புக் குதிரையின் வேகத்தை விட கதை வேகமாக பயணிக்கிறது.....

    வடக்கத்தியர்களுக்கும், தெற்கத்தியர்களுக்குமான போரில்
    வால்காட் குடும்பத்தினர் ஜான்,லெஸ்லி இருவரும் வடக்கும்,தெற்குமாய் நிற்க
    தெற்கிற்கு செல்லும் மஞ்சள் உலோக கட்டிகளை வடக்கும்,தெற்குமாய் மாறி மாறி கைப்பற்ற நடக்கும் குழப்பங்களில் மஞ்சள் உலோக கட்டிகள் மாயமாக "பூலோக எமலோகம்" என்றழைக்கப்படும் ஆண்டர்வில் சிறையில் அடைக்கப்படுகிறார் ஜான் வால்காட்......
    தொடர் நிகழ்வுகளில் மேஜர் டார்க்கின் கோரிக்கையை ஏற்று ஜான் வால்காட்டை விடுவிக்க செல்லும் டெக்ஸின் முயற்சி வென்றதா?
    மாயமான மஞ்சள் உலோகத்தின் மர்மம் என்ன?
    ஜான்,லெஸ்லி என்னவாயினர்?
    ஹோவர்ட் வால்காட் டெக்ஸை அழைத்ததன் நோக்கம் என்ன?
    இப்படியான பல புதிர் கேள்விகளுக்கு விடையை தடதடக்கும் கதையின் போக்கு நமக்கு சொல்கிறது......

    வில்லர் எட்கர் டென்னிசன் எனும் பெயரில் தெற்கே உலாவரும் நிகழ்வுகள் எல்லாம் பரபரப்பான நகர்வுகள்......

    அட்லாண்டா பேரழிவு,ஷிலோ யுத்தம்,டெக்ஸான் உச்சரிப்பு,வடக்கு கேரலினா,ஆண்டவில் சிறைச்சாலை,வடக்கு தெற்கு உள்நாட்டு யுத்தம் போன்ற தகவல்களை வில்லர் கார்ஸனிடம் சொல்வதை கேட்கும்போது நமக்கு பெரும் வியப்பே ஏற்படுகிறது,வரலாற்றை புரட்டி பார்ப்பதான உணர்வும்,ஒரு வரலாற்று நாயகனுடன் பயணிப்பதான உணர்வும் ஏற்படுகிறது.....

    வில்லருக்கும் நீக்ரோ நண்பன் டாமுக்கும் உண்டான அன்பு பிணைப்பும்,ஜான் வால்காட் உடனான நட்பின் பிணைப்பும் கதை நெடுக சிறப்பாக கையாளப்பட்டுள்ளது....
    வில்லரின் பாதையில் வரும் திருப்பங்களை விட கதையில் வரும் திருப்பங்கள் அதிகம்....
    நம்ம கார்ஸன் தாத்தாவுக்கு பின்புலக் கதையை கேட்பதை தாண்டி பெரிதாக ஒன்றும் வேலையில்லை......
    நம்பமுடியாத சாகஸத்தை நம்பும்படியாக கொடுத்திருப்பதே கதாசிரியரின் வெற்றி,க்ளாடியோ நிஸ்ஸியின் கதை உத்தி அசர வைக்கிறது......
    அதேநேரத்தில் கதையின் போக்கில் நிகழப்போகும் சில திருப்பங்களை கணிக்க முடிந்தது,இதை எமது வாசிப்பின் மீதான வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.....
    எனினும் பரபரப்பான வாசிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது கதைக்களம்,அபாரமான கதையோட்டம்....
    நினைவில் நிற்கும் டெக்ஸின் கதைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது......
    பிறகென்ன வழக்கமா சொல்ற மாதிரி டெக்ஸ் டெக்ஸ்தான்......
    எமது ரேட்டிங்-10/10.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் எழுதிட்டு ஈ.வி யோடதை படிச்சி பார்த்தா இரண்டுக்கும் சில ஒற்றுமைகள் அடடே........

      Delete
    2. "அதிகாரியின் அதிரடிகள்" என்று பின்னாட்களில் இதை வண்ணத்தில் போட்டுக் கலக்குவோம் சார் !

      Delete
    3. // இதை வண்ணத்தில் போட்டுக் கலக்குவோம் சார் ! //
      கலக்கிடுவோம் சார்......

      Delete
  22. இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ?

    ஒன்று இரண்டு இப்போதைக்கு போதும் சார்

    48 பக்க பிரான்ஸ் பெல்ஜிய தொடர்களுக்கு B& W ok தான் சார். கதை தேர்வு தங்களுடையது.

    ReplyDelete
  23. கருப்பு வெள்ளை, 40 ரூபாயில், பெரிய சைஸில், ஜிகுஜிகு வண்ண அட்டைப்படங்களுடன் நல்லதொரு முயற்சியே சார். காமிக்ஸ் வாங்காதவர்கள் கூட வாங்குவார்கள்! அதுவும் ஜேம்ஸ்பாண்ட், ஆர்ச்சி என மறந்து போன நாயகர்களை பார்த்த பரவசத்தில் இதைப்பற்றி படித்து சிலாகிப்பவர்கள் ஏராளம்! இதன் விலையை 50 ஆக்கி 48 பக்கத்தில் கொண்டு வந்தால் புத்தகம் இன்னும் கொஞ்சம் பார்க்க தடிமனாக தெரியவரும்! கூடவே சாகஸ வீரர் ரோஜர்,ப்ரூனோ பிரேசில், விங் கமாண்டர் ஜார்ஜ்,மாண்ட்ரெக்,ஸ்பைடர், ஜான் சில்வர்,ஜெரோம்,ஜெஸ்லாங், சிஜடி மார்ஷல், சார்லி சாயர் னு களத்தில் இறக்கி விட்டும் பார்க்கலாம்! பழமை புதுமை கைகோர்த்து வருவதே நம் காமிக்ஸ்களுக்கு ஆரோக்கியமான விஷயம் என்பதை ஆர்ச்சி & ஜேம்ஸ்பாண்டே நிருபித்துள்ளனர்! இன்னும் பழமை புராண நெடினு சொல்லிக்கிட்டு இருக்காமல் கலந்து கட்டி அடிச்சி விடுங்க சார்!ஒருத்தர் இரண்டு பேர் (பிடிக்காதவர்கள்) காமிக்ஸ் வாங்கவில்லையென்றால் காமிக்ஸ் என்னும் கப்பல் மூழ்கிடாது என்பதையும் இங்கே அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //ஜேம்ஸ்பாண்ட், ஆர்ச்சி என மறந்து போன நாயகர்களை பார்த்த பரவசத்தில் இதைப்பற்றி படித்து சிலாகிப்பவர்கள் ஏராளம்!//

      மிகையாய் இராது, இது மெய்யாய் இருந்திட்டால் - இந்தாண்டின் highlight இந்த முயற்சியே என்பதில் ஐயமிராது சார் !

      Delete
  24. // கடந்த ஒற்றை மாதத்துப் பார்வைகள் மட்டுமே 208,000 //
    அடடே அருமை அருமை......

    ReplyDelete
    Replies
    1. அதில் ஒரு 48,000 நம்மவர்களின் முயற்சி ; பாக்கி 160,000 கடமையாய் காரியமாற்றும் பரோபகாரிகளின் உபயம் சார் !

      என்னிக்காச்சும் மெய்யாலுமே 10 மில்லியன் என்ற மைல்கல்களையெல்லாம் இந்தப் பதிவு பாத்துக்-கீத்து வைத்ததென்றால் சங்கடமாகிப் போயிடும் இல்லியா ? "அவ்ளோவுமே போங்கு !! எங்களுக்குத் தெரியாதாக்கும் ?" என்று அன்றைக்கு சொல்லிக்க இன்றிலிருந்தே இன்னா மாரி முஸ்தீபுகள் !

      Delete
  25. My choice ஜேன் இருக்க பயமேன்.

    ReplyDelete
  26. டான்ஸ் ஆட ரெடியா இருக்கும் மாடஸ்டி கையில் துப்பாக்கிய கொடுத்திருக்கிங்களே நியாயமாரே........

    ReplyDelete
    Replies
    1. லெதர் ஜாக்கெட்டில் டான்சா ? புது மாரியா இருக்கே ?

      Delete
    2. மாடஸ்டி அக்காவோட ஹேர் ஸ்டைலும்,நிக்கற தோரணையும் அப்படி நினைக்க வெச்சிடுச்சிங்க சார்........

      Delete
  27. எதிர்காலம் எனதே..

    முன்னட்டையைவிட பின்னட்டை கவர்ச்சியாய் தெரிவது எனக்கு மட்டும்தானா..!?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தூரப் பார்வை போல.
      :-))

      Delete
  28. // ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys // பார்க்கலாம் சார். Go ahead

    ReplyDelete
  29. ///நான் குறித்து வைத்துள்ள பெயர்கள் "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? அல்லது வேறேதேனும் ? ///

    கௌபாய் எக்ஸ்ப்ரஸ் ஓகே.!
    சூ மந்திரக்காளி, ஃபிங்கர்ஸின் மாஜிக் விரல்கள் படு தமாசாக இருக்கும்தான். ஆனாலும் சமீபத்தில் வந்ததைப் போன்ற ஒரு உணர்வு.!
    சூ மந்திரக்காளிக்கு பதிலாக ஜேன் இருக்கப் பயமேன் ஓகே.!

    ReplyDelete
    Replies
    1. "ஜேன் இருக்க பயமேன் " & "சூ மந்திரகாளி" இதழ்களுக்கு மத்தியினில் மிஞ்சிப் போனால் ஓரிரு ஆண்டுகளின் வித்தியாசம் இருக்கக்கூடும் சார் !

      Delete
  30. // "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? // ஓ கே தான் சார்

    ReplyDelete
  31. 1. "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ?

    ஒன்று இரண்டே இப்போதைக்கு போதும் சார் .. இந்த genre ல் வந்த MAGIC WIND, DYLAN DOG சரியா REACH ஆகலியே SIR ..BUT BOTH WERE GOOD IN MY OPINION ..

    2. பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ?

    கமான்சே ,ஜெரோம் , MAGIC WIND வந்தால் மகிழ்ச்சி சார்.. புதிதாய் கூட ஏதும் ட்ரை பண்ணலாம் சார் ..

    3.ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys //

    முன்பே TEX இப்படி வந்துள்ளதே சார்.. JASON BRYCE கூட இப்படி வந்து தானே ஹிட் ஆனது .. TRY KARO JI. .

    4."சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ?

    OK SIR ..

    5.நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ?

    TEX "நள்ளிரவு வேட்டை" பழைய புக் கடையில் கிடைத்தது .. அப்போ எல்லாம் இந்த BLACK மார்க்கெட் BLUE மார்க்கெட் பிரச்னை இல்ல சார் ..

    ReplyDelete
    Replies
    1. //ஹாரர் genre ல் வந்த MAGIC WIND, DYLAN DOG சரியா REACH ஆகலியே //

      அவை இரண்டுமே அக்மார்க் ஹாரர் அல்லவே சார் ; முன்னது வெஸ்டர்ன் + noir என்ற கலவை ! பின்னது டிடெக்டிவ் + noir என்ற கூட்டணி ! இரண்டுமே எனக்கும் பிடித்தமானவைகளே ; பரவலாய் சாதிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கும் உண்டு !

      Delete
  32. Bangalore comic conல் (நிலவொளியில் ஒரு நரபலி in colour வந்த வருடம்) எடிட்டரிடம் 'இதே மாதிரி வண்ணத்தில் மின்னும் மரணத்தை வெளியிடலாமே' சார் என்று கேட்டதும் (அதாவது ஜனங்களே!!! மின்னும் மரணத்தை முதலில் வண்ணத்தில் கேட்டது யார் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும்) அதற்கு எடிட்டர் 'பார்க்கலாம்மா, இன்னும் எவ்வளவோ இருக்கு' என்று பதில் சொன்னதும் (அப்புறம் வண்ணத்தில் மின்னும் மரணம் அதிரி புதிரி ஹிட்டானது தனி கதை) நன்றாக நினைவில் உள்ளது.

    இதை விட முக்கியமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது.
    வழக்கம் போல ஒரு ஓரமாக நான் நின்று கொண்டிருந்த போது, சிரித்த முகத்துடன் நெடுநாட்களாக பழகிய நண்பரைப்போல நட்புடன் அருகில் வந்து காமிக்ஸ் ஆர்வலர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர் சொன்ன அடுத்த விஷயம் என்னை மலைப்பில் ஆழ்த்தியது. அவர் சொன்ன அந்த விஷயம் 'நான் தான் ஸ்பைடரின் எதிரிக்கு எதிரி எதிரி கதையின் எழுத்தாளர் மற்றும் ஓவியர் என்பதே'.
    அந்த கால கட்டத்தில் (in 90s) லயனில் வாசகர் ஸ்பாட் லைட் என்று சில பக்கங்கள் வரும். ஆனால் இந்த நண்பரின் கதை தரத்தில் மிகவும் உயர்ந்திருந்ததால் (எடிட்டரே சொன்னது) அந்த கதையை கோடை மலரில் (தீபாவளி மலர்?) எடிட்டர் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்!
    எடிட்டருக்கு நன்றி!!!!!!!!
    மற்றும் இந்த நண்பரை நான் பல வருடங்களாக தேடி வருகிறேன் (எதற்காக அவரிடம் அன்று அவரது phone number கேட்கவில்லை என்று எனக்கு இன்றும் தெரியவில்லை).

    அந்த நண்பரை பற்றி தகவல் தெரிந்த யாராவது அவரது contact விவரங்கள் தந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
    மேலும் இரண்டு பிரிந்த நண்பர்களை சேர்த்து வைத்த புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  33. // "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? //

    க்ராபிக் நாவல் தடத்தில் வருடம் ஒன்று அல்லது இரண்டு கதைகள்.

    H-ஹாரர் தனித்தடம் வேண்டும். 1. பட்ஜெட் 2.ஒருகதை நன்றாக உள்ளது என்ற காரணத்திற்காக தனிதடம் என முடிவு செய்ய வேண்டாம்.

    ReplyDelete
  34. காலை வணக்கங்கள் காமிக்ஸ் சொந்தங்களே...

    ReplyDelete
  35. 1.

    ஒன்றிரண்டு ஓ.கே.

    2:

    ரூ 40 என்பது கையக்கமான விலை சார்.இதில் கை வைக்க வேண்டாமே.

    3:

    குண்டு புக் 'தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //கதைகளில் merit இல்லையேல் கையில் தொடவாச்சும் செய்வேனா சார் - தொடர்கதை எனும் option க்கு ? //

      Sure sir..

      Delete
  36. Horror கதைகளை இன்னும் 2, 3 ஆக அதிகரிக்கலாம்.
    லக்கி லூக் Maxi - பூம்பூம் படலம்
    தொடர் , குண்டு புக் - இரண்டையும் கதைகளைப் பொறுத்து பரிசீலிக்கலாம் !!

    ReplyDelete
    Replies
    1. கதைகளில் merit இல்லையேல் கையில் தொடவாச்சும் செய்வேனா சார் - தொடர்கதை எனும் option-க்கு ?

      Delete
  37. கௌபாய் எக்ஸ்பிரஸ் ஓ.கே.

    ReplyDelete
  38. // black & white ; மித விலை ; நேர்கோட்டுக் கதைகள் இன்னமும் கொஞ்சம் விரிவாக்கிடலாமா ? I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு //

    இந்த புத்தகங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் அதன் வடிவமைப்பு, சைஸ் மற்றும் விலை என்பது எனது எண்ணம். எனவே இதனை மாற்றுவது பற்றி 2022 அட்டவணையில் முடிவெடுப்பது நலம். இந்த விலை பள்ளி குழந்தைகள் வாங்கும் வசதியில் உள்ளது. கொஞ்சம் நன்றாக உள்ள வாத்தை உடனே அறுத்து விட வேண்டாமே.‌ப்ளீஸ்.

    தற்போது உள்ள இந்த டெம்ப்ளேட்டில் வித்தியாசமான நேர்கோட்டு கதைகளை முடிந்த அளவு கொடுங்கள்.

    தற்போது கைவசம் உள்ள லேடி-s முழுவதும் காலியாகட்டுமே சார்.

    ReplyDelete
    Replies
    1. //தற்போது கைவசம் உள்ள லேடி-s முழுவதும் காலியாகட்டுமே//

      Year 2050 சரிப்படும் என்பேன் சார் !

      Delete
  39. குண்டு புத்தகம்:
    மணந்தால் குண்டு புக் தேவி தான்.

    ReplyDelete
    Replies
    1. இழந்து வருவதும் கடலளவுக் கதைகளைத் தான் !

      Delete
    2. // இழந்து வருவதும் கடலளவுக் கதைகளைத் தான் ! //
      எல்லாத்தையும் சேர்த்து குண்டு புக்கில் போட்டுடுவோம் சார்,
      3 மாதத்திற்கு ஒரு புக் என தனி டிராக்கில் வெளியிடுவது சாத்தியமா சார்,புத்தக விழாக்களை கருத்தில் கொண்டு மேக்ஸி லயன் வெளியிடுவதை போல குண்டு ஸ்பெஷல் லயன் என வெளியிடலாமா.....
      தடம் ”K” எப்பூடி ?????
      இது பேராசையா கூட இருக்கலாம்,ஏதோ தோணிச்சி சொன்னேன்.......

      Delete
  40. // லக்கி லூக்கின் MAXI மறுபதிப்புகளில் அடுத்தாண்டிற்குத் தேவையான கதைகளை shortlist செய்து வருகிறேன் ! (Oh yes - 2021 அட்டவணை உருட்டல்கள் என்னளவிற்கு துவங்கியாச்சு !!) இப்போதைக்கு நான் குறித்து வைத்துள்ள பெயர்கள் "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? //

    ஓ.கே. டபுள் ஓ.கே.

    ReplyDelete
  41. எடிட்டரின் தரமான கேள்வி:
    ரொம்பவே சீக்கிரமே இந்தக் கேள்விக்கு ! ஆனால் கடந்த சில வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் வேகம் காணும் விற்பனை ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படலம்" + "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" ஆல்பங்களே ! கடைகளின் விற்பனை நிலவரம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை - but ஆன்லைனின் போக்கு கடைகளிலும் தொடரின், இந்த black & white ; மித விலை ; நேர்கோட்டுக் கதைகள் இன்னமும் கொஞ்சம் விரிவாக்கிடலாமா ?

    Ans:
    முதலில் இந்த கேள்வி கேட்டதற்கு எடிட்டருக்கு நன்றி.
    Xiii குண்டு புக்கின் முதல் எதிரியான நான் (வந்தால் வழக்கம் போல் 2 copy வாங்குவேன் என்பது தனிக்கதை) பல நண்பர்களிடம் கூவும் விஷயம் இதுதான். மித விலை with நேர் கோட்டு கதை என்பதே காமிக்ஸ் என்பதை பெரும்பாண்மையினரிடம் கொண்டு செல்ல ஒரே வழி என்பதே!!!!!!!
    எடிட்டர் சார் இதை கேள்வியுடன் நிறுத்தாமல் உடனடியாக செயலில் இறங்கி செயல்படுத்தினார்கள் என்றால் தமிழின் ஓரே ஒரு காமிக்ஸ் மட்டுமல்ல தமிழில் குமுதம், தினத்தந்திக்கு நிகராக விற்பனை ஆகும் காமிக்ஸ் நமது லயன் காமிக்ஸ் என்ற பெயரும் கிடைக்கும்.

    செய்வீர்களா???
    நீங்கள் செய்வீர்களா???

    ஜேம்ஸ்பான்ட் நாமம் வாழ்க!
    ஆர்ச்சி நாமம் வாழ்க!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //குமுதம், தினத்தந்திக்கு நிகராக விற்பனை ஆகும் காமிக்ஸ் நமது லயன் காமிக்ஸ் என்ற பெயரும் கிடைக்கும்.//

      இது ஆசை இல்லீங்கோ ; பேராசையும் இல்லீங்கோ ; அசுர ஆசைங்கோ !!

      Delete
    2. உங்க ஏணிய வானத்துக்கு போடுங்கன்னு சாட்டை படத்துல வாத்தியார் சொல்லுவார்.
      நான் சொர்க்கத்திற்கு ஏணியை போடுறேன்.
      தமிழில் வரும் ஒரே காமிக்ஸ் நமது லயன் காமிக்ஸ் என்பதால் அசுர ஆசை கண்டிப்பாக அவசியமே!!!

      Delete
  42. பேப்பர் விலை ஏற்றம் உண்மையில் கஷ்டமான விஷயம் அதுவும் நம்மை போன்ற பட்ஜெட் வாசிகளுக்கு மிகவும் கடினமான விஷயம் சார். நமது மறு வருகைக்கு பின்னர் எவ்வளவோ பார்த்து விட்டோம் சார் அதனை நீங்கள் அழகாக சமாளித்து எழுந்து வந்தீங்க, இதனையும் வெற்றிகரமாக சமாளித்து நமது வெற்றி நடை தொடரும் என நம்பிக்கை உள்ளது சார்.

    ReplyDelete
    Replies
    1. துரதிர்ஷ்டவசமாக நம்பிக்கையை பேப்பர்ஸ்டோர்களில் சீந்த மாட்டேன்கிறார்களே சார் ; ரோஸ் நிறக் காகிதத்துக்குள்ள மதிப்பு, நமது நம்பிக்கைகளுக்கு இருக்க மாட்டேன்கிறதே !!

      Delete
  43. 1. //What is your take on this folks ? "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? //

    எனக்கு எப்போதாவது என்றால் சரி


    2. //I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? //

    அருமை! டபுள் ஓகே.


    3. // ஆனால் ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? //

    ஒரு முறை முன்னோட்டம் பார்ப்பதில் தவறில்லை. We can try it out.

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முறை முன்னோட்டம் பார்ப்பதில் தவறில்லை. We can try it out.//

      2021 maybe sir !

      Delete
  44. லெதர் ஜாக்கெட் ல அட்டையில் தலைவி பின்றாப்ல. பின்னட்டையில் சித்திரங்கள் பார்க்கையில் சுமாராகவே படுகிறது.

    கி நாவலில் ஹாரர் ஓரிரெண்டு போதும். லக்கி மாக்ஸி எதுனாலும் ஓகே.
    நீண்ட ஆல்பங்களை பிரித்து தொடராக வெளியிடுங்கள். அதிலுள்ள த்ரில் அலாதி.
    கதையில் சோபிக்காத Lady S, காமான்ஸே etc., திரும்பவும் b/w கொண்டுவர வேண்டிய அவசியமென்ன? Rejected என்ற பின் வண்ணத்தை களைத்து b/w ல் அதே கதை எடுபடுமா? ரூ. 20/ மிச்சம் பிடித்து ஆகப்போவது என்னவோ? முதலில Rs.40/- விலையில் வரக்கூடிய கதைகளை இதுதான் என்பதை வரையறுக்க வேண்டும். இல்லையெனில் இந்த track மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமே!

    M H MOHIDEEN

    ReplyDelete
    Replies
    1. //முதலில Rs.40/- விலையில் வரக்கூடிய கதைகளை இதுதான் என்பதை வரையறுக்க வேண்டும். //

      Simple & very clear sir...ஜேம்ஸ் பாண்ட் கணிசமாய் ; டயபாலிக் 2 ஸ்லாட்களில் ; மாடஸ்டி & தேர்வாகும் இதர newspaper strip நாயக / நாயகியர் (AXA ; ரிப் கிர்பி
      etc ) ஆளுக்கொரு ஸ்லாட்டில் என்பதே இந்த 36 பக்க template க்கு சுகப்படக்கூடிய கதை மாந்தர்கள் ! Of course ரொம்பவே ரிவர்ஸ் கியரை போடாது, சமகாலக் கதைகளில் எவற்றை இந்தப் page count / விலை விகிதத்துக்குள் புகுத்திட இயலும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்தும் வருகிறது !

      Delete
    2. அய்..கெர்பியும் வர்றாரா ..சூப்பர் சார்..:-)

      Delete
    3. அட்டவணையை இத்தினி காலமாய் பாக்கலியாக்கும் ?

      Delete
  45. ஹாரர் கதைகள்...


    எப்பொழுதாவது அவ்வப்பொழுதே போதுமானது சார்...அடிக்கடி பாத்து நம்ம பேயும் அப்புறம் காமெடி பேய் மாதிரி போயிற போகுது...

    ******

    நாற்பது ரூபாய் லயனில் 48 பக்கம் என்பது சிறப்பே..புத்தகமும் கொஞ்சம் பருமனாக தோன்றி சந்தோசபடுத்தும்..இதில் லேட்டஸ்ட் ஹீரோக்களை விட விங்கமாண்டர் ஜார்ஜ்..மாண்ட்ரேக் போன்ற நாயகர்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்..

    ******

    மாதம் ஒன்றாக தொடர்...


    தயவு செய்து அந்த யோசனையை கூட இனி யோசிக்க வேண்டாம் சார்..வேண்டாம் சார்..வேண்டாம் சார்..அது மூணு மாச தொடராய் இருந்தால் கூட வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு..

    ReplyDelete
    Replies
    1. "குறைந்த பட்சமாய் 3 பாகங்கள் ; அதிக பட்சமாய் 6 வால்யூம்கள்" என்று பயணிக்கும் அழகான தொடர்களில் குறைந்த பட்சம் எட்டாவது shortlist செய்யப்பட்டு என் டயரியில் வெறும் பெயர்களாகவே தொடர்கின்றன ! அவற்றை ஏதேனுமொரு நல்ல நாள் - பண்டிகைக்கு மட்டுமே வெளியிடுவது தான் மார்க்கமெனில் உங்க பேர பிள்ளை காலத்தில் தான் அவற்றைக் கண்ணில் காட்டத் தோதுப்படும் ! இன்னிக்கே கொஞ்சம் பொடியெழுத்து உதைக்கிது ; பேர பிள்ளை காலத்தில் ??

      "படிச்சா முழுசாத் தான் ' என்ற ஒரே சிந்தனையின் பலனாய் நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னிக்கேனும் உணரும் பொது ரொம்பவே வருத்தம் கொள்வீர்கள் தலீவரே !

      Delete
    2. ///"படிச்சா முழுசாத் தான் ' என்ற ஒரே சிந்தனையின் பலனாய் நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னிக்கேனும் உணரும் பொது ரொம்பவே வருத்தம் கொள்வீர்கள் தலீவரே !///

      +999 999 999

      Delete
    3. உம்ம்...யோசிக்க வேண்டிய பதிலா கொடுத்து இருக்கீங்களே சார்..:-)

      கொஞ்சம் சிறிய கதைகளாக ( மூன்று பாக இதழ்கள் போல..)இருப்பின் ஒரே தொகுப்பாகவும்..ஆறு பாக தொகுப்பாக இருப்பின் பராகுடா போல இரு தொகுப்பாகவும் வெளியிட்டு பார்க்கலாம் சார்..இரண்டு ,மூன்று மாத பாக தொடர்ச்சி என்றால் கூட பரவாயில்லை சார்..ஆனால் ஆறு ,ஏழு மாதம் என்பதுதான் ரொம்பவும் உதைக்கிறது..

      ( ஹீம்..இதற்கான தங்களின் பதில் கண்டு திரும்பவும் மனம் மாறிவிடுமோ..:-()

      Delete
    4. ட்யுராங்கோ தொடரின் பாகம் 13-க்கும் ; பாகம் 14-க்கும் மத்தியிலான இடைவெளி 4 ஆண்டுகள் / 48 மாதங்கள் தலீவரே !

      Delete
    5. /////"படிச்சா முழுசாத் தான் ' என்ற ஒரே சிந்தனையின் பலனாய் நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னிக்கேனும் உணரும் பொது ரொம்பவே வருத்தம் கொள்வீர்கள் தலீவரே !///


      யோசிக்க வேண்டிய விஷயமே சார்..்..

      பச்சை கொடி சார்... 👍👍👍

      Delete
  46. /// 48 பக்கத்தில் கொண்டு வந்தால் புத்தகம் இன்னும் கொஞ்சம் பார்க்க தடிமனாக தெரியவரும்! கூடவே சாகஸ வீரர் ரோஜர்,ப்ரூனோ பிரேசில், விங் கமாண்டர் ஜார்ஜ்,மாண்ட்ரெக்,ஸ்பைடர், ஜான் சில்வர்,ஜெரோம்,ஜெஸ்லாங், சிஜடி மார்ஷல், சார்லி சாயர் னு களத்தில் இறக்கி விட்டும் பார்க்கலாம்!///
    ( நன்றி-கலீல்)
    இதில் காரிகனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கமான்சே, லேடி எஸ்-கண்டிப்பாக வேண்டாம் please🙏

    ReplyDelete
  47. தொடர் இதழ்கள் தொடர்ந்தால் பதுங்குகுழிக்கே செல்லாமல் போராடவும் லட்சக்கணக்கானோர் தயார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....உங்க போராட்டங்கள் என்ன ஆட்டம் ஆடுதென்று ஊருக்கே தெரியுமே ! புதுசாய் ஒரு கம்பிளி வாங்கி கொடுத்தால் போர்த்திக்கினு சாயந்திரம் ஆறரைக்கே குறட்டை கச்சேரி ஆரம்பம் ஆகிடுமில்லியா ?

      Delete
    2. //தொடர் இதழ்கள் தொடர்ந்தால் பதுங்குகுழிக்கே செல்லாமல் போராடவும் லட்சக்கணக்கானோர் தயார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்..//

      தலைவரே அந்த லட்சக்கணக்கானோர் புத்தகம் வாங்கும் போராட்டம் நடத்தினால் ஒரே நாளில் நமது குடோன் காலி ஆகுமே....

      Delete
  48. லக்கி மறுபதிப்பு: பூம் பூம் படலம் தான். (டெக்ஸில் கழுகு வேட்டை ஒரு கிளாசிக். அக்கதையும் கொஞ்சம் பரிசீலியுங்கள்)

    +1

    ReplyDelete
    Replies
    1. 'பூம் பூம் படலம்' தான் வண்ணத்தில் ரெண்டு / மூணு ஆண்டுகளுக்கு முன்பாய் மறுபதிப்பிட்டு விட்டோமே ?

      Delete
  49. மாத மாதம் ஒன்று என தொடர் நீள்வது அவ்வளவு உசிதமாகத் தெரியலை.

    ஜேம்ஸ்பாண்டின் வெற்றி மற்ற எல்லா பழைய நாயகர்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை. லாரன்ஸ்டே&விட், ஜாக்கி ஜட்டி ஜானியின் கதைகள் 50 ரூபாய்க்கு வந்தது. விற்பனை எப்படி எனத் தெரியவில்லை. யோசித்து முடிவெடுங்கள் சார். மிகப் பழைய நெடி அடிக்கும் கதைகள் ரிப் கெர்பி, காரிகன் எல்லாம் என்னால் படிக்க முடியவில்லை. மற்ற நண்பர்களுக்கு எப்படியோ. ஒரு கதை ஓகே. தொடர்ந்து வந்தால் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.

    ஹாரர் கதைகள் வருடத்திற்கு ஒன்றிரண்டு ஓகே.

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கதை ஓகே. தொடர்ந்து வந்தால் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.//

      புராதனங்கள் எவையாக இருப்பினும் ஒற்றை ஸ்லாட்டுக்கு மேல் ஏதும் இராது சார் ! ஆர்ச்சிக்குக் கூட நல்கும் ஆண்டின் இரண்டாவது ஸ்லாட் "விலையில்லா இதழிலேயே " !

      Delete
  50. நான் படித்ததாக நினைவில் இருக்கும் முதல் இதழ் இரும்பு மனிதன் தான். ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். ஏற்கனவே சொன்னது தான்.
    எதிர் வீட்டில் நண்பனுடன் விளையாடி கொண்டு இருந்த என்னை எனது சித்தப்பா இந்த புத்தகத்தை காட்டி கூப்பிட மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவரிடம் இருந்து புத்தகத்தை பிடுங்கி படித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அந்த கதை எனக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும் ராட்சச பற் சக்கரத்தை ஆர்ச்சி தடுத்து நிறுத்துவது இன்று வரை ஞாபகம் இருக்கிறது.

    ReplyDelete
  51. டியர் எடி,

    மாடஸ்தி அட்டை ஓவியம் கனகச்சிதம். அயல்நாட்டு ஓவியர், நமக்கு கிடைத்த வரபிரசாதம். புராதண பிரிட்டீஸ் தொடர்களுக்கு இப்படி வசீகரமான நவீன டிஜிட்டல் அட்டைபாணி ஒரு அட்டகாசமான காம்போ... தொடரட்டும் 40 விலையிலான வெற்றிநடை... இதற்கு என்று மாதம் ஒரு இதழ் என்ற ஒரு தனி வருடாந்திர சந்தா வரிசைக்கு எனது முழு ஆதரவு உண்டு.

    ஆனால், இப்பாணியை சோடைபோகாத நவீன காலதொடரகளுக்கு உபயோகபடுத்த வேண்டாமே ப்ளீஸ்... இது நம் பயணத்தை பின்னோக்கி அடி எடுத்து வைப்பது போலாகிவிடும். நவீன கால இதழ்கள் அதன் ஆக்கம் போல, நமது தற்கால ஆர்டபேப்பர் வண்ண பாணியிலேயே தொடரட்டும். விற்பனை ஆகாத தொடர்கள் பின்னொரு காலத்திலோ, அல்லது புத்தக்கண்காட்சிகளிலோ மறுபிரவேசம் செய்யலாம்.... 40 விலை வரிசையின் சக்சஸ் ஃபார்முலா தடம் மாற கூடாது.

    மாண்ட்ரேக், முகமூடி மாயாவி, டார்ஜான், ப்ளாஷ் காரடன், ரிப் கிர்பி, காரிகன் போன்ற அமர சித்திரதொடர்கள் இவற்றில் தோன்றும் நாளை நான் ஆவலுடன் எதிரபாரக்கிறேன். 40 விலை இதழ்களின் பரிணாம வளர்ச்சி, அவ்வகையில் காலசாத்தியமாவதே உகந்தது.

    ReplyDelete
    Replies
    1. டார்ஜான் ! இதுவரையிலும் நாம் பரிசீலித்திருக்கா ஒரு நாயகன் !

      What say guys ?

      Delete
    2. டார்ஜான் கொண்டு வர முடியுமா.. அப்படீன்னா கண்டிப்பா கொண்டு வாங்க சார்

      Delete
    3. வரலாம் சார்..வெற்றியை பொறுத்து பின் தொடரலாம்..:-)

      Delete
    4. டார்ஜான் ஓகே தான் சார். Try panalaame

      Delete
  52. ஒரு டம்ளர் பால் ப்ரீயா?

    ReplyDelete
    Replies
    1. பால் கறக்குமா ? கோமியம் வழங்குமா ? என்பது உங்க தெருவுக்கு அது வருகை தரும் நேரத்தைப் பொறுத்திருக்கும் சார் !

      Delete
    2. //பால் கறக்குமா ? கோமியம் வழங்குமா ? என்பது உங்க தெருவுக்கு அது வருகை தரும் நேரத்தைப் பொறுத்திருக்கும் சார்//

      :-)))

      அவலச்சுவையை நகைச்சுவையாய் ஆசிரியர் சொன்னால் அதை எசப்பாட்டு என கருதி எதிர்ப்பாட்டு படித்தால் எடிட்டர் பதில் எசகுபிசகாக இப்படித்தானே இருக்கும்?

      பேப்பர் விலை நம்மையும் பாதிப்பதுதானே?

      எடிட்டருக்கு உதவி செய்யவேண்டுமாயின் இயன்றவர்கள் - இயன்றவர்கள் மட்டுமே- சந்தா தொகையுடன் ஒரு கூடுதல் தொகையினை நிர்ணயம் செய்து இயன்றவர்கள் அனுப்பி வைக்கலாம் ..

      சுகத்தை பகிர்ந்து கொண்டோம் ..சுமையையும் பகிர்ந்து கொள்வோமே..

      !!!!

      Delete
    3. மாட்டில் ப்ரிண்ட் போட்டுத்தான் அனுப்புனும் என்ற பதிவுக்காக டம்ளர் பால் ப்ரீயா என்று (just joking) கேட்டுவைத்தேன் அதை ஏன் தவறுதலாக எடுத்துக் கொள்கிறீர்களோ தெரியவில்லை. நீங்கள் சொன்னால் சரி என்றும் நாங்கள் சொன்னால் தவறென்றும் கருதுகிறீர்கள்.
      நான் கேட்டது அப்படியொன்றும் தவறாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறீர்கள் அதனாலென்ன பரவாயில்லை.

      Delete
    4. அச்சச்சோ ; நான் விலையேற்றத்துக்கு அடிபோட்டெல்லாம் இதனை எழுதிடவில்லை சார் ! சனிக்கிழமை காலையின் நிகழ்வென்பதால் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை பதிவினில் இறக்கி வைத்தேன் ! மற்றபடிக்கு இந்த இக்கட்டைச் சமாளிக்க ஏற்கனவே கொஞ்சம் ரூட்களை ஆராய்ந்து வருகிறேன் ! இறக்குமதித் தொழிலில் இருக்கும் நாமே, ஓராண்டின் தேவைக்கு மொத்தமாய் பிரேத்யேகமாய் வாங்கிப் போட முடிந்தால் all will be well !

      மற்றபடிக்கு no offence taken sirs !!

      Delete
    5. // எடிட்டருக்கு உதவி செய்யவேண்டுமாயின் இயன்றவர்கள் - இயன்றவர்கள் மட்டுமே- சந்தா தொகையுடன் ஒரு கூடுதல் தொகையினை நிர்ணயம் செய்து இயன்றவர்கள் அனுப்பி வைக்கலாம் .. // கண்டிப்பாக அபிராமி சார். செய்து விடலாமே

      Delete
  53. முதன் முதலில் நான் சந்தித்த காமிக்ஸ் நண்பர் என்பதை விட நண்பர்கள் என்பது தான் சரி. ஈரோடு புத்தக விழாவில் நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் ரம்மி இருவரையும் சந்தித்தது நேற்று போல நினைவில் இருக்கிறது.

    அது எந்த வருடம் என்று நினைவில் இல்லை, ஆனால் அப்போது தான் மின்னும் மரணம் முன்பதிவு நடந்தது. விஜய் ஜாலியாக பேசினார். அப்போது எடிட்டர் சாரும் அங்கே வர பத்து நண்பர்கள் அங்கே இருந்தனர். விஜய் எடிட்டர் சாரிடம் அறிமுகமும் படுத்தி வைத்தார். ஆனால் முதல் சந்திப்பு என்பதால் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சற்று நேரம் நண்பர்களும் ஆசிரியரும் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பி விட்டேன்.
    இது ரம்மி மற்றும் விஜய்க்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  54. சார் அந்தியின் ஓர் அத்தியாயம் கதையின் தலைப்பும் அட்டைப்படமுமே கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறது . அட்டையின் முன்னாலிருப்பவர் மறைந்தால் பின்னாலிருப்பவர்தானே முன்னால் ! நமக்குக் களமோ கதையோ புதிதல்லதான் .முன் பக்கமே அந்த மரங்களையொட்டி செல்லும் ஒற்றையடிப் பாதையும் , படிந்த நாயகனின் நிழலும் ,சூழ்ந்த காட்டுச் செடிகளும் புக்களும் அந்த ஒற்றை விடும் , காதில் விழும் ஏகாந்த அமைதியும் ....இரண்டாம் பக்கமும் நம்மக் கொல்லும் வெயில் கூசும் வெளிச்சத்தில் படிக்க அமர்ந்திருந்தால் நீங்களும் பாக்கியவான்களே என்னைப் போல....சலனமிலா ஒற்றை வீடும் ஓற்றைப் பசுவும் ஓற் றைக் கோழியும் ஒற்றைக் குதிரையும் ஒற்றை ஊஞ்சலும் ஒற்றைச் சக்கரமும் ஒற்றை கோடரியும் ஒற்றை கல்லறையும் ஓற்றை சன்னலும் ஒற்றை சன்னலும் ஒற்றை பெட்சீட்டும் சட்டென அமைதி விலகி ஒற்றைச் சிறுவன் குரலால் தனிமையின் கொடுமையும் இனிமையும் மாற மாற துள்ளலாய்த் துவங்குது கதை நம்மை ஓங்கியறையப் போவத உணர்த்தாமலே...

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் போது எது நடக்கக் கூடாதுன்னு அஞ்சுவோமோ அதுவே நடக்க....சரிதான் கெட்டவங்க அப்படித்தானே இருப்பாங்க நாமதான ஜாக்கிரதயா இருக்கனும் ...கூடி வாழ்ந்தா கோடி நன்மையோன்னு பாயுது கதை அசுரப் பாய்ச்சலா பரபரவென .ஆனா காலகாலமா அயோக்கியனுக கூடி ஆர்ப்பாட்டம் பன்றானுக ....ஆனா நல்லவங்க ஒன்னு கூடவே மாட்டார்களோ என கேள்வி எழுந்தா வல்லவவர்கள் இருசாரியா பிரிஞ்சி அடிச்சிக்கிறாங்க...அதுல வேடிக்கை பார்ப்போர் போல கதையெங்கும் இயற்கையின் கொடைத்தாண்டவமாய் குன்றுகள் தொடர் மலைகள் நீர் வீழ்ச்சிகள் ஆறுகள் அது தரும் பசுமைகள் என கண்களின் காரணத்தை தந்து கட்டிப் போடும் படைப்பாளிகளான கடவுளயும் அத தூரிகைல தந்தவரயும் என்ன சொல்லிப் பாராட்ட...

      Delete
    2. பின்றீங்க ஸ்டீல் !

      Delete
    3. கெட்டவர்கள தூண்டுவது ...நிலங்கள பறிக்க ஆட்சியாளர்களே என்பத ஜீரணிக்கவே முடியல....நேர்மையாளர்கள பாக்கவே முடியாது அல்லது அற்பக் கால ஆட்சியே பொற்காலம்...சைக்சின் முடிவு அதிர்ச்சியே...ஆனாலும் நம்ம பயககையால விரும்பிச் சாய்வது நிம்மதி...வாழ்கையெனும் புத்தகமே இணையில்லாதது...நினைத்த மாத்திரத்தில் அதனைத் திறப்பதோ மூடுவதோசாத்தியமாகாது...நம் விதி முடியும் கதை சொல்லும் அத்தியாயமோ தவறாமல் வந்து நிற்க்கும்...நம் மனதை கொள்ளை கொண்ட அத்தியாயத்த திரும்ப புரட்ட விரல்கள் துடிக்கும்...ஆனா நம் மரணத்தின் நிழலோ ஏற்கனவே படிந்திருக்கும்.....அவன அலை கொண்டு போயிருக்கக் கூடாது....இருள் வானங்களின் கீழே ஆண்டவனால் கைவிடப் பட்ட ஆத்மாக்கள் அவர்கள்...ஏன் நாளய பொழுதே சுவடின்றி மறையலாம் அவர்கள்.....என எழுத்தோவியமும் வலி மிகுந்திருந்தாலும் காட்சிகள போல வேடிக்கை பாக்கயில் அழகே....ஓவியம் எழுத்தோவியம் கதை வேற லெவல்...நம்முள் எழுப்பி உலுப்பும் கேள்விகளும் தாராளம்...விழிப்போமா ...அல்லது கண் மூடி தூங்குவது போல நடிப்போமா....சைக்ஸ் முன்னே நிற்பது நியாயமென வந்தாலும் கூலிக் கொலையாளிகளே ....என கடந்த கால இழப்ப உணர்ந்து வேட்டையாட வருவது அழகு....ஓட்டையில்லா கதை...படிங்க அற்புதத்த உணர

      Delete
    4. சார் நீங்க பின்னுனதுதான்....இது போல அற்புத உணர்வுகள தரும் கதைகள் குறிஞ்சிதானே

      Delete
  55. 40ரூபாய் காமிக்ஸ் இப்படியே தொடரட்டும் சார்.
    இந்த வரிசையில் 5 பாக தொடர் ஒரு ஸ்பெஷல் இத்ழாக ரூபாய் 200ல் வருடம் ஒன்று. அது இளம் டெக்ஸாக இருக்கும்போது 🐴 ஓடிக்கொண்டிருக்கும்
    தொடர்ந்து.

    ReplyDelete
  56. மார்ச் மாதத்தில் "மாட ஸ்டி" யின் அட்டைப்படம் அருமை. அட்டை பட டிசைனில் முகம் மட்டுமே இளவரசி சாயல்_ மற்றபடி ஓவியம் புதிய வாசகர்களை கவர்ந்திலுக்கும் வண்ணம் உள்ளது. அதுதானே வேண்டும்.

    இந்த வடிவமைப்பில் மாட் ஸ்டி சாதனை படைத்து அடுத்த ஆண்டு மேலும் இரண்டு Slot களை வாங்க வேண்டும். சாரே ..
    உங்களது ஹாரர்கதைகளுக்கு .இது தான் எனது பதில் .ஒரு தடவை படிக்கலாம். ஏதோ ஒரு கதை படிக்கலாம்.. திரும்பத் திரும்ப Uடிக்க வேண்டுமானால் அது மாட ஸ்டி, ஜேம்ஸ் பாண்ட் போன்றவர்களே எனது ரசனை.
    B & W இதழின் பக்கத்தை கூட்டி விலையை
    கூட்டுவது..
    ஏன் சார் , முதலில் நன்கு ஆலோசித்துத் தானே இந்த தடத்தை உருவாக்கினீர்கள்...
    இதில், "ஒரு சின்ன தொழில் ரகசியம் .. என்னன்னா " - முதலாளி - கடைசி இரண்டு பக்கங்களில் அடுத்த வெளியீடு விளம்பரங்களை தவிர்த்துவிட்டு -- சிங்கத்தின் சிறுவயதில் தொடரை - தொடர்ந்தால் - பழைய லயன் காமிக்ஸை மீட்டெடுத்தது போலவும் இருக்கும் - . விற்பனையிலும் ஒரு தொடர்ச்சி இருக்கும்..? ii.
    அதன் பின் அடுத்த ஆண்டு இதழின் எண்ணிக்கையை 12 யிருந்து 24 (அல்லது) இடையிடையே மட்டும் பக்க எண்ணிக்கை கூடுதலான இதழ்களை (விலையிலும்)வெளியிட்டுக் கொள்ளலாம்.
    உங்களது அடுத்த கேள்வியான ஆறு பாகம் கொண்ட கதைகளை தனித்தனியாக வெளியிடலாமா ii என்பதற்கு விடையாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்... முதலாளி...iii

    ReplyDelete
    Replies
    1. சிங்கத்தின் சிறுவயதில் தொடரை - தொடர்ந்தால் - பழைய லயன் காமிக்ஸை மீட்டெடுத்தது போலவும் இருக்கும்

      #######


      வாரே வாவ்....அப்டீ சொல்லுங்க சார்..:-)

      Delete
    2. சிங்கத்தின் சிறுவயதில் வரட்டும்.. சந்தோசம்தான்.! ஆனால் அதற்காக அடுத்த வெளியீடு, விரைவில் வருகிறது போன்ற விசயங்களைத்தான் காவு கொடுக்க வேண்டுமா.!?
      புத்தகத்தை பிரித்ததும் இந்த அடுத்த வெளியீடு விளம்பரங்களை ரசித்துப் பார்க்க என்னைப் போல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்..!

      எனவே சி.சி. வயதில் கூடுதல் பக்கங்களில் வரட்டுமே..!!

      Delete
    3. பேக்கரியிலே முதல்லே "கதைகள்"ங்கிற பன்னும், ஜாமும், சுவையா செஞ்சு வித்துக்குவோமுங்கண்ணா ! அப்பாலிக்கா "பக்க நிரப்பிகள்"ங்கிற ரஸ்க் ; பஃப்ஸ்லாம் பாத்துக்கலாம் !

      Delete
    4. //பழைய லயன் காமிக்ஸை மீட்டெடுத்தது போலவும் இருக்கும்//

      தலீவரே...குழிக்குள்ளாற நல்லா தேடிப் பாருங்க ; எங்கினியாச்சும் பட்டாப்பட்டியைக் காய போட்ட இடத்திலே புக்குகளை போட்டுப்புட்டு மறந்து போயிருப்பீங்க !

      Delete
    5. // புத்தகத்தை பிரித்ததும் இந்த அடுத்த வெளியீடு விளம்பரங்களை ரசித்துப் பார்க்க என்னைப் போல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்..! //
      நானும் முதலில் அதைத்தான் பார்ப்பேன் கண்ணன்.......

      Delete
    6. நானும்தான்...அதற்குத்தான் அந்த மாதத்தில் வெளியிடும் மீதி மூன்று புத்தகங்கள் இருக்கின்றனவே.சார்.
      ரூ 40 இதழில் அந்த 38பக்கங்களை எப்படி சாமர்த்தியமாய் பயன்படுத்துவது என்பதே எனது ஆசை. - காமிகஸ் சார்ந்த வேறுதொடர் கட்டுரை என்றாலும் எனக்கு சம்மதமே..

      Delete
  57. ///இந்தத் தொடர் பாணி ஒரு no-no என்றே சொல்லுவீர்களா ? 'மணந்தால் குண்டு புக் தேவி தான் !" என்ற நம் வைராக்கியங்களின் உபயத்தால் நிறையவே கதைகளை நாம் உதறிடுகிறோமோ ? என்ற நெருடல் என்னுள் ! Hence இந்தக் கேள்வி ! ///

    அடுத்தடுத்த மாதங்களில் என்பதால் தாராளமாக முயற்ச்சிக்கலாம் சார்.!
    கடைசியாக இந்த பாணியில் நாம் படித்தது ஜேசன் ப்ரைஸின் கதை. அடுத்தடுத்து மூன்று மாதங்களில் வெளியானது. (மூன்றாம் பாகம் ஒரு மாதம் தள்ளி வெளியானைதாக ஞாபகம்) .

    பராகுடா கூட இரண்டு பாகங்களாகத்தானே வெளியானது.. வெற்றி பெறவில்லையா என்ன.!?

    ஆறு பாக, ஐந்து பாக கதைகளை அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு பாகமாக வெளியிடும் முடிவை வரவேற்கிறேன் சார்.!

    இதன் மூலம் நாம் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தையும் பெறும் வாய்ப்புண்டு.. அதை தவறவிடுவானேன்..!?

    ReplyDelete
    Replies
    1. //இதன் மூலம் நாம் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தையும் பெறும் வாய்ப்புண்டு.. அதை தவறவிடுவானேன்..!?//

      Exactly my point too !!

      Delete
    2. பராகுடா கூட இரண்டு பாகங்களாகத்தானே வெளியானது.. வெற்றி பெறவில்லையா என்ன.!?

      #####

      அது இரண்டு பாகங்கள் மட்டுமே..

      இதையும் நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்..:-)

      Delete
  58. ///பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் கிச்சு கிச்சு மூட்டலை எதிர்பாராது, அழகாய், இலகுவாய், ஜாலியாய்ப் பயணிக்கும் கதையினை, சித்திரங்களை ரசித்தபடிக்கே உள்வாங்கிட்டால் - ஒரு அரை மணி நேரத்துக்காவது காற்றில் பறக்கும் உணர்வு உத்தரவாதமாய் உண்டென்பேன் ! ///

    உட்சிட்டியையும் அதன் பிரஜைகளையும் பார்ப்பதே அலாதி சுகம்தான் சார்.!

    கிட் ஆர்டீன், டாக்புல் கதையில் இருப்பதே எனக்குப் போதுமானது..கதையே இல்லையென்றாலும் கூட..!!

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்டீன், டாக்புல் கதையில் இருப்பதே எனக்குப் போதுமானது..கதையே இல்லையென்றாலும் கூட..!!

      ######

      ஆனா எங்க இளவரசி கதையில கதையே இருந்தாலும் இல்லைன்னு சொல்லி வெற்றியை தடுக்க பார்க்கிறது..

      நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்..:-)

      Delete
    2. No worries...அழகானதொரு கதை உள்ளது இங்கே !

      Delete
  59. ///I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? சாகச வீரர் ரோஜர் ; LADY S ; கமான்சே ; டிடெக்டிவ் ஜெரோம் போன்றோர் பளிச் என நினைவுக்கு வருகின்றனர் ! உங்கள் சிந்தனைகள்///

    டிடெக்டிவ் ஜெரோம் ட்ரிபிள் ஓகே.! லேடி Sஐ ப்ளாக் அண்ட் வொய்ட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.. சாரி சார்.! கமான்சேவும் அப்படித்தான்.!

    ₹40 விலையில் ஜேம்ஸ் பாண்ட், ஆர்ச்சி, மாடசட்டி, டயபாலிக் போன்றோர் இருக்கட்டும். ஜெரோம் போன்றோர் கூடுதல் விலையில் வரட்டுமே..!?

    ReplyDelete
    Replies
    1. அதென்ன கிட் ஆர்டின் கண்ணன் சார்..

      மாடஸ்டின்னு எழுதாம மாடசட்டின்னு கிண்டல்..
      😡😡😡😡

      உங்களுக்கு பிடிக்கலைன்னா, மத்தவிங்க மனசு நோகாம, நாசூக்கா சொல்லிப் பழகுங்க..
      😖😖😖

      கொஞ்சம் பின்னட்டையில் இருக்கும் மாடஸ்டியின் மயங்க வைக்கும் கண்களை ஜூம் செய்து பார்த்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள்..
      🥰🥰🥰🥰🥰

      Delete
    2. ///மாடஸ்டின்னு எழுதாம மாடசட்டின்னு கிண்டல்..
      😡😡😡😡

      உங்களுக்கு பிடிக்கலைன்னா, மத்தவிங்க மனசு நோகாம, நாசூக்கா சொல்லிப் பழகுங்க.///

      ஸ் வடமொழி எழுத்துங்கிறதாலே.. அப்படி எழுதிட்டேன் சரவணரே..!!

      இதுக்கெல்லாம் மனசு நோகறதா இருந்தா, வாழ்க்கையில எதையுமே ஃபேஸ் பண்ணமுடியாது சரவணரே.!

      Delete
  60. ///"H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? ///

    H for ஹைய்யைய்யோ ..!
    எப்பவாச்சும் ஒண்ணு போதும் சார்.!
    எல்லோரும் கொண்டாடும் தனியே தன்னந்தனியே கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.! கி.நா தடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து எனக்கு சுகப்படாத முதல் கி.நா இந்த தனியே தன்னந்தனியே தான்.!

    ReplyDelete
  61. நெடுநாள் கழித்து இன்று இங்கு எழுதுவதற்கு சந்தர்ப்பம் அமைகிறது

    கோரோனோ வைரஸினால் இப்படி பேப்பருக்கு பாதிப்பு வரும் என்று யார் கண்டார்கள். சீக்கிரமே அந்த பயங்கர வைரஸ் எதிராக மருந்து கண்டுபிடித்து அந்த நாடு சகஜ நிலைக்கு வரவேண்டும் கடவுளே. இல்லை என்றால் அந்த கால சிறுவர் மலரில் வந்த "உயிரை தேடி" கதை நிஜத்தில் நடக்க கூடும்.

    1. இளம் கேப்டன் டைகரின் அணைத்து கதைகளும் சேர்ந்த குண்டு புக் வருமா?
    2 அல்லது ஏற்கனவே வெளியிட்ட சில இளம் கேப்டன் டைகரின் கதை விடுத்து மற்ற கதைகள் மட்டும் தான் வருமா?

    இதில் சாய்ஸ் 2 என்றால் நான் வாங்க முடியாது என் என்றால் முன்னாள் கதைகள் அனைத்தும் என்னிடம் இல்லை.

    modesty அட்டைப்படம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. //ஏற்கனவே வெளியிட்ட சில இளம் கேப்டன் டைகரின் கதை விடுத்து மற்ற கதைகள் மட்டும் தான் வருமா?.//

      Yes sir ! முதல்லேர்ந்து போடுவதாயின் மொத்தம் 21 பாகங்கள் கொண்ட இதழாய் வெளியிட்டாக வேண்டும் ! விலையும் எகிறி விடும் ; அந்த முதல் 9 பாகங்களை வைத்திருப்போரின் பாக்கெட்டுகளில் வீணாய் பெரியதொரு பொத்தல் போட்டது போலவும் ஆகிப் போகும் !

      Delete
    2. அந்த 9 புத்தகங்கள் கிடைக்குமா?
      please list out them

      Delete
  62. எதிர்காலம் எனதே..

    பின்னட்டை இளவரசியின்
    காந்தக் கண்ணழகு
    பேசும் வார்த்தைகள்
    ஆயிரம் அற்புதங்கள்...

    😍😍😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. தற்காலிகமாய் ஜப்பானில் குடி இருப்பதாய் நினைத்துக் கொண்டே புக்கை பின்னிருந்து முன்னே புரட்டுங்க சார் ; பின்னாடி - முன்னாடியாகிடும் !!

      Delete

  63. 1. //"H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? //

    எப்போதாவது ஒன்றிரெண்டே சிறப்பு..

    இந்த மாதம் வந்தயையே படிக்க பயந்துபோய் ஒதுக்கி வைத்துள்ளேன்..


    2. // பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? //

    தற்போதைய பாணியையே இந்த வருட முடிவுவரை மாற்றாமல் தொடர்ந்து பிறகு முடிவெடுத்தலே நலம்..


    3. // ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? //

    அருமையான திட்டம்.. 2021ல் தொடங்கலாம்..

    4. "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ?

    டபுள் ஓகே..

    ReplyDelete
  64. //தற்போதைய பாணியையே இந்த வருட முடிவுவரை மாற்றாமல் தொடர்ந்து பிறகு முடிவெடுத்தலே நலம்..//

    நடப்பாண்டினில் எவ்வித மாற்றங்களுக்கும் இடமில்லை சார் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி எடிட்டர் சார்.. 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
  65. Replies
    1. முந்திரி..கிஸ்மிஸ்லாம் சித்தே தூக்கலா இருக்கட்டும் !!

      Delete
  66. எடிட்டர் கேள்விகள்

    எ) "H " for ஹாரர் சுகப்படுமா ?

    எனக்கு ரொம்ப ரொம்ப சுகப்படும். உங்களிடம் இரண்டு வருடமாக ஈரோடு விழாவில் நான் ஹாரர் ஜானர் வெளியிடுங்கள் என்று கேட்டு கொண்டே தான் இருந்தேன். நீங்கள் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி வந்தீர்கள். சரி இனி கேட்டு பிரயோஜனம் இல்லை என்று விட்டு விட்டேன். இப்பொழுது நீங்களாக ஹாரர் விடலாமா என்று கேட்கிறீர்கள், எல்லோரும் முடியாது என்கிறார்கள். இப்பொழுது புரிகிறது நீங்கள் ஏன் இத்தனை வருடம் தயங்கினீர்கள் என்று.

    சரி எனக்கு பிடித்ததை ஹாரரை தனியே தன்னந்தனியே கூகிளில் தேடி எடுத்து கொள்ள வேண்டியது தான்.

    பி) சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? சாகச வீரர் ரோஜர் ; LADY S ; கமான்சே ; டிடெக்டிவ் ஜெரோம் போன்றோர்

    கமான்சே வேண்டாம்... இட்ஸ் டூ boring .. மற்றது ஓகே.

    [Important : சார், இந்த 40 ருபாய் காமிக்ஸ் நான் மாதா மாதம் வாங்கும் பாரதி புக் ஸ்டோரில் போய் பார்த்தால் காணவில்லை. ஏன் அந்த புத்தகங்கள் இல்லை என்று கேட்டதற்கு, அது வெறும் கிராமம், காமிக்ஸ் இல்லாத ஊர்களுக்கு மட்டும் தான் அனுப்புவார்கள் என்று சொன்னார்களாம். ஏன் 80 , 100 , 150 , 250 என்று புக் வாங்கும் நாங்கள் 40 ருபாய் புக் வாங்க மாட்டோமா என்ன? என்ன லாஜிக் இது .... புரியமாட்டேன்கிறதே. சார், "பட்டாம்பூச்சிப் படலம்" + "ஆர்ச்சி இருக்க பயமேன் பாரதி புக்ஸ் ஸ்டோரிற்கு வரவில்லை. கொஞ்சம் அனுப்ப சொல்லுங்க சார்.]

    சி) இந்தத் தொடர் பாணி ஒரு no-no என்றே சொல்லுவீர்களா ? 'மணந்தால் குண்டு புக் தேவி தான் !"

    மணந்தால் குண்டு புக் தேவி தான் .. ஏன் என்றால் ஒரே பூக்காக படித்தால் தான் அது ஒரு முழுமை பெரும். ஒரு கேள்வி suppose

    1 ) ஜேஸன் ப்ரைஸ் 3 பாகங்களாக வந்த சூப்பர் கதை, அதுவும் திடீரென்று ஒரு மாதம் கேப் விழுந்தது. அது ஒரு குண்டு பூக்காக வந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும்?

    2 ) தோர்களின் கடவுளரின் தேசம் எப்படி பட்ட ஒரு collection . அது ஒரே புக் இல்லாமல் தனி தனியாக வந்து இருந்தால் இப்படி ரசித்திருக்க முடியுமா? வெறுப்பாகி இருக்காது ....!!!

    இந்த இரு கேள்விகளுக்கும் விடை தேட முயற்சித்தால், எந்த விடை வருமோ அதன்படி செய்து கொள்ளலாம்

    டி) முதல் காமிக்ஸ் நான் (படித்தது ?) பார்த்தது இரும்பு கை மாயாவி தான், எந்த கதை என்று ஞாபகம் இல்லை. 6 வயது இருக்கலாம்.

    சிவகாசிக்கு இதுவரை வரமுடியவில்லை.

    முதல் காமிக்ஸ் நண்பர் நம் டெக்ஸ் விஜயராகவன். நம் இதே ப்ளாகின் ஆரம்ப கட்டத்தில், நான் லயன் முத்து comeback அப்புறம் மிஸ் பண்ணிய பல புத்தகங்களில் ஓர் 6 புத்தகம் அவர் எனக்கு காசு எதுவும் கேட்காமலே கூரியர் செய்து வைத்தார். அப்பொழுது நேரில் பார்த்தது கூட கிடையாது.

    முதல் முதலாக ஈரோடு திருவிழா XIII , நண்பர் பெங்களூரு பாஸ்கருடன் கட் பஸ்ஸில் பெங்களூரில் டு ஈரோடு வந்து சேர்ந்தோம் அதிகாலை 1 மணிக்கு.

    அங்கு வந்த போது அந்த நேரத்திலும் சிரித்த முகத்தோடு பல வருடம் பழகியது போல முழு சுறுசுறுப்புடன் நலம் விசாரித்த J அவர்கள்.

    அடுத்த நாள் XIII ரிலீஸ் function , நான் ஒரு காமிக்ஸ் வெறியன் என்று நினைத்து இருந்த என் எண்ணத்தை புரட்டி போட்டது. அவர் அவர்கள் பேனர், டீ ஷர்ட், விசிட்டிங் கார்டு என்று அடித்து இருக்க, ஆளாளுக்கு 2 , 3 புக் வாங்குகிறார்கள். ஒருவர் XIII பச்சை குத்தி இருக்கிறார். நான் அரண்டுவிட்டேன்.

    மேலும் முதல் முறையாக விஜயன் சார் உங்களை நேரில் பார்த்து பேசி புக்கில் ஆட்டோகிராப் வாங்கினது மறக்க முடியாத சந்தோஷம். One Week i was having ஈரோடு function hangover .

    இ) லயன் மாக்ஸி - இது வெறும் மறுபதிப்பிற்கான தடம் மட்டும் தானா? மறுபதிப்பில்லாத புது கதைகள் வந்தால் வாங்குவேன்.

    ReplyDelete
    Replies
    1. // One Week i was having ஈரோடு function hangover . // True true it's applicable for everyone who have attended the function

      Delete
  67. 1. //"H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? //

    இப்போதைக்கு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போதும் சார்......


    2. // பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? //

    இப்போதைய விலையும்,பக்க அளவுமே சில மாதங்களுக்கு தொடர்வது நல்லது என்று தோன்றுகிறது சார்,குறைந்த பட்சம் இந்த ஆண்டு இறுதிவரையாவது.....
    நல்ல நிலையான விற்பனையும்,பாதுகாப்பான இடமும் கிடைத்த பிறகு மாற்று திட்டங்களை பரிசீலிக்கலாமே சார்......


    3. // ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? //

    வேண்டவே வேண்டாம் சார்........

    4. "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ?

    தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை,ஏதேனும் பார்த்து போடுங்கள் சார்......

    ReplyDelete
  68. 1) H for Horror double OK
    2) மாதம் ஒரு 40ரு புக் அவசியம், சன்னமாக விலை கூட்டினால் 50ரு அதற்கு மேல் சென்றால் நம் பிடிக்க நினைத்த மார்கேட்டை பிடிக்க முடியாது
    3) தொடர் புக்குகள் ஒரு மாதம்கூட இடைவெளி இல்லாமல் வந்தால் மட்டுமே ok (no excuses even for Tsunami or earthquake), 3 பாகமாக இருக்கும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் 6 பாகம் வரை ok .

    முன் அட்டையில் மாடஸ்த்தியின் டூப் தான் உள்ளார், அந்த இரண்டு கவர்ச்சி கண்கள் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  69. மாடஸ்டி ..

    புன்னகைக்க ....

    மிகையில்லை மின்னொளியாள் மிடுக்கான சிகையழகு
    வகையில்லை வர்ணிக்க வஞ்சியின் நகையழகு
    தொகை யாரும் கொடுத்ததனால் சொல்லவில்லை
    துடியிடையாள் துப்பாக்கி விடும் புகையும்அழகு

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    கேடில் விழுச்செல்வம் காதை ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை ..

    தீர்க்கதரிசி திருவள்ளுவர் பிற்காலத்தில் சித்திரக்கதை தொகுப்பாளர்கள் வருவார்கள் ..மற்றவை இருப்பினும் மாடஸ்டிதான் சிறப்பான செல்வமாக இருப்பாள் என சொல்லியிருக்கார்
    மாடஸ்டி யின் சுருக்கமே மாடு என அறிக

    காதை ( கதை ) கல்வி என மாறியது காலத்திரிபு

    மற்றுமோர் உதாரணம்
    உள்ளினும் தீராப் பெருரு மகிழ் செய்தலால்
    கள்ளினுமிக் காரிகை பெரிது
    கள்ளினை உண்டால்தான் மயக்கம் வரும் ..காரிகையாகிய மாடஸ்டியை நினைத்தாலே மயக்கம் வரும் என பூடகமாக சொன்னார்

    காரிகை காமம் என மாறியது இடைச்செருகல் எனக் கொள்க
    ( மேச்சேரியார் , ஷெரீப் போன்றோர் பின்னாலேயே வந்து மாடஸ்டிய நினைச்சா எங்களுக்கும் மயக்கம் வரும் ..காரணம்தான் வேற எனப் பகர்வர் ..அவர்கள் மாடஸ்டி புகழ் குலைக்க முயலும் இல்லுமினாட்டி விங்கை சேர்ந்தவர்கள் என்பது தெளிபு )

    அவ்வளவு ஏன் ??
    மீன் கொண்டு ஊடாடும் வேலை
    மேகலை உலகம் ஏத்த,
    தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்,
    துடிஇடைஉடை மாடத்திஎனும்
    மான் கொண்டு ஊடாடு நீ;
    அப்படின்னு – மாடஸ்டி என்னும் மானை கொண்டாடுன்னு – கம்பரே சொல்லியிருக்காருன்னா பாத்துக்குங்களேன் ..

    .கம்பரின் தீர்க்க தரிசனம் பாரீர்

    ReplyDelete
  70. H for Horror வேண்டவே வேண்டாம்.

    C 1 for Cowboy series அவசியம் வேண்டும்.

    ReplyDelete
  71. 48 pages.. left out stories.. Really a good idea sir.

    ReplyDelete
  72. நான் தனியாக என் காசில் வாங்கி. படிக்க ஆரம்பித்தது " எத்தனுக்கு எத்தன்".ஆனால் சிறு வயதில் கால் பரிட்சை, அரை பரிட்சை ' முழு ஆண்டு விடுமுறையில் என் தாத்தா வீட்டில் பசி மறந்து மாயாவி, லாரன்ஸ், ஜானியோடுதான் உலகம் சுற்றுவேன் 80 களில்.

    ReplyDelete
  73. // நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ? //

    சரியாக நினைவில் இல்லை சார்,இரும்புக் கை நார்மனோட கதையா இருக்கலாம்னு நினைக்கிறேன்.....
    ஆனால் திருச்சி பஸ்நிலையத்தில் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்க்ப்பட்டிருந்த பாட்டில் பூதம் கதையை ஏக்கத்தோடும்,ஆர்வத்தோடும் பார்த்த நினைவு மட்டும் பசுமையாக நினைவில் உள்ளது......

    // அதே போல நீங்கள் நேரில் சந்தித்த முதல் சக நண்பர் பற்றியும் கூடச் சொல்லுங்களேன் ? எங்கே ? எப்போது ? எந்தச் சூழலில் ? //
    முதலில் சந்தித்த நல்லதொரு சக நண்பர் எனில் நம்ம அருமை தலைவரேதான்.....
    அவரை சந்திச்சது பெரிய கதையாச்சே சார்.......
    ஆனால் சந்திக்க காரணமாய் அமைந்த சூழல் சற்று விநோதமான,எதிர்பாராத சூழல்தான் சார்......

    ReplyDelete
  74. 1. H வகை கதைகள் ok.
    2. 40 விலை காமிக்ஸ்களை 50 ஆக மாற்றுவது ok. ஆனால், ஜேம்ஸ்பாண்ட் போல பழைய நாயகர்களும் கலக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆர்ச்சியின் கதையை படித்து முடிக்க ஆர்வம் இல்லை. தூக்கம் வருகிறது. ஒருகாலத்தில் ஆர்ச்சி எனது ஆதர்ஷ நாயகர்களில் ஒருவர் என்றாலும் கூட. ஆர்ச்சி, ஸ்பைடர் வகையறாக்களை தவிர்க்கலாம். எழுத்துருகளின் அளவை மற்ற காமிக்ஸ்களை போல அமைக்கவேண்டும். படிக்க சிரமமாக இருக்கிறது. (45 வயசுக்காரன்!).

    3. நமது வலைத்தளத்தில் இரண்டு ஸ்கிரீன்களுக்குள் தங்களது கருத்துகளை தெரிவித்தால் அல்லது Summary யாக தனியே கடைசியில் முக்கியமான கருத்துகளை மட்டும் சொன்னால் நல்லது. முன்பு போல அனைத்தையும் படிக்க பொறுமை இல்லை. நன்றி!


    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் வருகை..

      வாழ்த்துக்கள் சார்..:-)

      Delete
  75. // மாதமொரு பாகம் என 6 மாதங்களுக்கு இதனைத் திட்டமிட்டால், மாதா மாதம் ஒரு சஸ்பென்சோடு வாசிப்புகள் இருந்திடாதா ? //

    இதில் உள்ள முக்கியமான விஷயம், முதல் இரண்டு மாதங்களில் வரும் கதைகள் சரியில்லை என வாசகர்கள் நினைக்க ஆரம்பித்து அது விற்பனையை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

    இதனால் குடோனை இவைகளும் குத்தகைக்கு பல வருடங்கள் எடுத்து கொள்ள வாய்ப்புண்டு.

    எனவே ஒரே ஆல்பமாக போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அல்லது இதுபோன்ற தொடர்களை தனி சந்தாவில் போடுங்கள்.

      Delete
  76. ட்யுராங்கோ தொடரின் பாகம் 13-க்கும் ; பாகம் 14-க்கும் மத்தியிலான இடைவெளி 4 ஆண்டுகள் / 48 மாதங்கள் தலீவரே

    #######

    நினைச்ச மாதிரியே கேட் போட்டுட்டாரே..:-(


    ஓகே சார்..ஒரு நெடுங்கதை ..இடைவெளி இல்லாமல்..தொடர்ந்து ...ஒரு முறை முயற்சித்து தான் பார்த்து விடலாம்...இதுவும் சுவையாக இருப்பின் தொடரலாம்..இல்லை எனில் மகாதேவி ...

    :-)

    ReplyDelete
  77. Sir, மாடஸ்டி ஓவியம் , ஸ்கேர்லெட் ஜோஹென்சனை ( Scarlett Johansson)
    மாடலாக கொண்டு வரைந்தது போல தெரிகிறது சார்.

    ReplyDelete
  78. மாதமாதம் தொடர்ச்சியாக இளம் டெக்ஸ் தொடரும் வெளியிடலாமே சார். குண்டு புத்தகம் அதற்கும் பொருந்தாது தானே???

    ReplyDelete
  79. 50 ரூவாய்க்கு ஜெரோம் கதைகள் ஓகே..

    ReplyDelete
  80. டைகர் கதைகள் ஜனவரிக்கு மாத்தியாச்சாம்.. அப்போ ஈரோட்டுக்கு வேற பிளானா

    ReplyDelete
  81. //நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ?//

    கடந்த பொங்கலின் போது எழுதிய முகநூல் பதிவு. ஆர்ச்சி திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.

    #இரும்புமனிதன்_ஆர்ச்சி.

    இங்குள்ள பெரும்பான்மை வாசகர்களை போல் முத்து முதல் இதழில் இருந்தெல்லாம் ஆரம்பிக்க வில்லை, 'அப்படியா?' என கொஞ்சம் ஜெர்க் ஆகியிருந்தால்.. அதற்கு பதில், நான் அப்போது பிறக்கவே இல்லை.�� (ஜோக் சொன்னா சிரிக்கனும்.)

    கீழுள்ள படம் இடம்பெற்ற கதையிலிருந்துதான் என் முதல் காமிக்ஸ் பயணம் ஆரம்பம்.. இதற்குமுன் அம்புலிமாமா வாசித்துள்ளேன் என்றாலும், காமிக்ஸ் என்பதன் சுவை அப்போது தெரியாது. ஒரு சமயத்தில் அம்மா சில காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி வந்திருந்தார்.. ராணி காமிக்ஸில் வந்த இதயக்கனி, படகோட்டி, அதிசய தீவில் ஆர்ச்சி, காமெடி கர்னல். ஆகிய நான்கு புத்தகங்கள்... அந்த நான்குமே என்னை கட்டிப்போட்டன.. குறிப்பாக அந்த ஆர்ச்சி கதை அவ்வளவு பிடித்திருந்தது. அப்போது எத்தனை முறை வாசித்துள்ளேன் என்று கணக்கே இல்லை, (டைகரின் தங்க கல்லறை வந்த போது எப்படி பிரமித்து போய், நம் அனைவரும் வாசித்தோமோ அதுபோல்.) பின்னாளில் அந்த புத்தகம் எங்கு போயிற்று என்று தெரியவில்லை, என்னிடமிருந்து காணாமலே போய் விட்டது.. அதன் பிறகு இந்த நாள் வரை கண்ணில் கூட சிக்க மாட்டேன்கிறது. ☹️

    இங்கு முகநூலில் வந்த பிறகு.. இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் எப்படியும் வாங்கி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.. என் கண்ணில் இதன் விற்பனை விளம்பரம் தென்படவே இல்லை. தென்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கில் விலை சொல்வார்கள் என்பதால் வாங்கியிருக்க மாட்டேன்.

    2016 ஈரோடு புத்தக விழா சென்றிருந்த போது எடிட்டர் திரு விஜயன் அவர்களை காணும் வாய்ப்பு கிடைத்தது, அவரை சுற்றி அவரது பிளாக்கில் பதிவிடும் நண்பர்கள் நின்றிருந்தார்கள், சற்றே தயங்கிவாறே அந்த கும்பலில் இடம்பிடித்து நின்று கொண்டேன்.. அனைவரும் tex பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் பேச்சில் சற்று இடைவெளி கிடைத்தபோது..டைகர் ஜோவின் மீத கதைகளையும்.. ரோஜரின் நடக்கும் சிலை மர்மத்தையும்.. மும்மூர்த்தி கதைகளோடு ஆர்ச்சி கதைகளையும் வெளியிடுங்கள் sir என்று வேண்டுகோள் வைத்தேன்.. அவரும் அசுவாரஸ்யமாக கேட்டு கொண்டு.. 'டைகர் ஜோ கதைகள் 3தான், அதையும் வெளியிட்டு விட்டோம், ஆர்ச்சி கதை எல்லாம் பூச்சுற்றல்.. இப்போது ஒத்துவராது.' என்றார்.. அப்போது கையில் கட்டு போட்டிருந்த ஒரு வாசக நண்பரும் ஆர்ச்சி பிரியர் போலிருக்கிறது, அவரும் இணைந்து வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம்.. எந்த பலனுமில்லை.. மீண்டும் அவர்கள் texல் மூழ்க ஆரம்பித்த சமயத்தில் நைஸாக கழற்றிக்கொண்டு வந்து விட்டேன்.

    பின்னர் ஆர்ச்சியை நவஜோ கிராமத்திற்கே texடம் அனுப்பிய படம் ஒன்று போட்டிருப்பேன் பார்த்திருப்பீர்கள், அது எடிட்டரின் பிளாக்கிலும் இடம்பிடித்தது, நினைவிருக்கும்.. (ம்க்கூம்.. அது பெரிய இது, நெனப்பு வேற வைக்கணுமாக்கும்? ��)

    இனி ஆர்ச்சி கதைகள் வரவே போவதில்லை என்று வருத்தம் இருந்தது. தற்போது ஆர்ச்சியின் கதை ஒன்று வரப்போவதாக எடிட்டர் அறிவித்துள்ளது, வரவேற்க தக்கதும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் மாறிய திரு விஜயன் அவர்களுக்கு நன்றி.

    Ok.. இந்த கதைப்பற்றி கொஞ்சம்.. காலகட்டம் மாறி வேறொரு காலகட்டத்தில் அவர்களது கோட்டை இறங்குகிறது, தோழர்கள் மூவரும் வெறிச்சோடி போன ஊருக்குள் வருகிறார்கள்.. அந்த ஊர் முழுமையும் க்ரூள்ஸின் ஆக்கிரமிப்பில் உள்ளது.. நண்பர்களின் வருகையை அறிந்த க்ரூள்ஸ்.. காட்டு மிருகங்களை நண்பர்கள் மீது ஏவிவிட்டு தாக்குதல் தொடுக்கிறார்கள், அதிலிருந்து தப்பி, ஒளிந்து வாழும் மனிதர்களை கண்டுபிடித்து க்ரூள்ஸை விரட்டியடிப்பதுதான் மொத்த கதை.

    நீர்யானை போன்ற ரோபோட், அதற்குள் தோழர்கள் அமர்ந்து வருவது, சில மணி நேரத்தில் பள்ளத்தாக்கில் மரவீடு கட்டுவது என ஆர்ச்சி ஒவ்வொரு ஸீனையும் அதகளப் படுத்தும்.

    ஆர்ச்சியின் கதைகள் சில Dutch மொழியில் கலரில் வந்துள்ளது என்றாலும், என் ஆல்டைம் பேவரைட் கதையான இது ஏனோ வரவில்லை, மாறாக இந்த கதையை வெளியிட்ட நிறுவனமே ரீமேக் செய்து கலரில் வெளியிட்டார்கள். அது எனக்கு அவ்வளவாக பிடிக்க வில்லை.

    சரி புத்தகம் தான் இல்லை என்றாலும், அதன் ஆங்கில ஸ்கேன் தான் நம்மிடம் இருக்கிறதே அதை கலர் செய்து பார்ப்போம் என்று ஒரு பேணல் கலர் செய்து பார்த்தேன் அது.��

    (மன்னிக்கவும் வண்ணம் செய்த படத்தை இங்கு இணைக்க முடியவில்லை.)

    ReplyDelete
  82. // "படிச்சா முழுசாத் தான் ' என்ற ஒரே சிந்தனையின் பலனாய் நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னிக்கேனும் உணரும் பொது ரொம்பவே வருத்தம் கொள்வீர்கள் //

    இந்த வார்த்தைகள் எனது இத்தனை நாள் வைராக்கியத்தைக் கூட கை விடும்படி செய்து விடும் போல் உள்ளது. உள்ளபடியே தொடர்களாகவும் சிலவற்றை முயற்சி செய்து பார்த்துவிடுவது காலத்திற்கேற்ற சிந்தனைதான். இறுதியாக ஓகே சார்! ஆரம்பிக்கலாம் அமர்க்களமாக!!

    ReplyDelete
  83. Ladiss லேடி எஸ் கதைகள் 40 ரூபாய் விலைகளில் போடலாம். காமன்சே கதைகளும் 40 ரூபாய் விலைகளில் போடலாம்

    ReplyDelete