Powered By Blogger

Friday, January 03, 2020

சென்னைப் புத்தக விழா '20 !

நண்பர்களே,

வணக்கம். அடுத்த வாரம் வியாழனன்று (ஜனவரி 9) சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் துவங்கவுள்ள BAPASI யின் 43-வது புத்தக விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் ! இம்முறை நமக்கு டபுள் ஸ்டால் கிட்டியுள்ளதென்பது கூடுதல் சந்தோஷம் ! 

கடைசியாக 2017-ல் இதே போல இரட்டை அரங்கினை எடுத்தோமென்று ஞாபகம் ! சற்றே விசாலமான இடமெனும் போது, வருகை தரக்கூடிய ஜனங்கள்  இடித்துப் பிடித்து நிற்கும் அவசியங்களின்றி, நிதானமாய் புக்குகளைப் புரட்டவும், பரிசீலனை செய்யவும் உதவிடும் என்பதை அந்தாண்டே புரிந்து கொண்டேன் !  And இம்முறை நம் வசமுள்ள டைட்டில்கள் 230+ என்பதால் இரட்டை ஸ்டால் கிட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம் ! BAPASI நிர்வாகமும் அன்புடன் நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க - ஸ்டால் நம்பர் 440 & 441-ல் இம்முறை நாம் காத்திருப்போம் - நமது காமிக்ஸ் குவியலோடு ! 

வெள்ளியன்று (10th ஜனவரி ) ஜூனியர் எடிட்டரும் ; சனியன்று (11th Jan) நானுமே ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளோம்  - உங்களைச் சந்திக்கும் ஆவலோடு ! குடும்பத்துடன் நீங்களும் வருகை தந்தால் அட்டகாசமாய் இருக்கும் guys !! Please do drop in !!  

அப்புறம் COLOR TEX சமீபத்துக் கதைகளின் தொகுப்பும்  + ஜனவரியின் புது இதழ்களும்  முன்வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு hi சொல்லிட ! Hope to see you soon guys ! Bye for now !

167 comments:

  1. Dear Vijayan Sir,
    My long term wish to meet you in person may finally come true this time at Chennai. பெரும் தேவன் மானிடோ அருளால்...;-)

    ReplyDelete
  2. ஸ்டால் கிடைத்தது சந்தோஷம் ஆசிரியரே விற்பனை உச்சத்தை தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ட்யூராங்கோ...

    பின் அட்டையின் விசித்திர ஜாலம்...

    சிகுகுவா சில்க்- ன் கன்னம் போல் வழுவழுப்பாக ஒரு இடம்..

    அதே பின் அட்டையின் வேறு இடம் சவரம் செய்யா டைகரின் முகம் போல சுரசுரப்பாக..

    சுருக்கம் விழுந்த குபி பால்மரின் கன்னம் போல அதே அட்டையின் வேறு ஒரு இடம்..

    க.த.கோ(கே)டி முடித்து

    ப.பூ.ப முடித்து

    ட்யூராங்கோவிலும் முப்பது பக்கம் ஓடிவிட்டது....

    அப்புறம் வருகிறேன்..எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டு..

    ReplyDelete
    Replies
    1. மினுமினுப்பா்இருக்குங்கறதை பாத்தாலே சொல்லிடலாம். வழுவழுப்பு, சொர சொரப்பெல்லாம் பாத்தா சொல்ல முடியாதே...எதுக்கும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைச்சுக்குவோம். டாக்டருக்கே வைத்தியம் பாக்க பின்னாடி உதவும்.

      Delete
    2. அட்டகாசமான மின்னும் *வாழ்க்கைய தரட்டூம்

      Delete
    3. மகிஜி..
      /// மினுமினுப்பா இருக்குங்கிறதைப் பாத்தாலே சொல்லிடலாம். வழுவழுப்பு, சொர சொரப்பெல்லாம் பாத்தா சொல்ல முடியாதே...///

      இதே எண்ணம் தான் படிக்கும் போது எனக்கும் வந்தது.. நீங்கள் கேட்டு விட்டீர்கள்.. மார்கட்டுல ஏதாச்சும் புது gadget வந்துருக்குமோன்னு நினைக்கிறேன்.. 😍😍😍

      Delete
    4. //பின் அட்டையின் விசித்திர ஜாலம்...//

      ஏழு கழுதை வயசான பின்னேயும் உள்ளுக்குள் ஒரு நமைச்சல் எடுத்துக் கொண்டேயிருக்கும் - 'புதுசாய் என்னமாச்சும் கோக்கு-மாக்கு வேலைகளை செய்து உங்களை ரசிக்கச் செய்ய வேண்டுமே" என்று !!

      இந்த அட்டைப்பட லூட்டிகள் எல்லாமே அதன் நீட்சி சார் !

      Delete
    5. @ செனாஅனா

      ///
      சிகுகுவா சில்க்- ன் கன்னம் போல் வழுவழுப்பாக ஒரு இடம்..////

      ஒஹோ!! கிர்ர்ர்ர்ர்...

      ///
      சிகுகுவா சில்க்- ன் கன்னம் போல் வழுவழுப்பாக ஒரு இடம்..///

      ஆஹ்!! இதுவுமா?!!


      நீங்க இன்னும் இந்தப் புத்தகத்தின் முனைகளைத் தடவிப்பார்க்கலை போலிருக்கே...? தடவினால் மாடஸ்டியின் அந்த கூரிய விழிகள் - ஆமா விழிகள் தான் - ஞாபகம் வர வாய்ப்புகள் அதிகம்!! :D

      Delete
    6. தடவலே இப்படின்னா, இன்னும் பிரிச்சு, புரட்டி. திருப்பி.... மின்னல் ஒரு கோடி எந்தன் விழி தேடி வந்ததே...

      Delete
  4. பத்து என்றதுக்குள்ள...

    ReplyDelete
  5. இரண்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி!!

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தணைகளும், வாழ்த்துகளும்!!

    ReplyDelete
  6. இரண்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி!!

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தணைகளும், வாழ்த்துகளும்!

    ReplyDelete
  7. கொரியர் டப்பியை ஓபன் பண்ணியாச்சு! பாத்தா...

    * டெக்ஸ் ஸ்நேகமாய் புன்னகைத்திடும்- புத்தாண்டு வாழ்த்து மடல்!! அழகான வாழ்த்துக்கு நன்றி எடிட்டர் சார்! ( நண்பர்களுக்கு : இந்த வாழ்த்து மடல் ஒரு ஸ்டிக்கர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!)

    * புத்தகங்களை வெளியே உருவியதும் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது - இருளின் மைந்தர்கள் பாகம்-2ன் அட்டைப் படம்!! ப்பா என்னவொரு பிரம்மாண்டம், அடர்த்தியான வண்ணங்கள்!! இந்த அட்டைப்படத்துடன் ஒப்பிட்டால் பாகம்-1ன் அட்டைப் படம் ஒருமாற்று குறைவே! எதில் பிரச்சினை என்று உற்று நோக்கியபோது - டெக்ஸின் இருபுறமும் விழும் ஒளிக்கற்றையே என்பது புரிந்தது!! அந்த ஒளிக்கற்றை இல்லாத அட்டையை கற்பனை பண்ணியபோது விழிகள் விரிந்து மூச்சிரைத்தது!! இரண்டு பாக புத்தகங்களிலுமே உள்பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபோது அந்த பிரம்மாண்ட வடிவமும், வண்ணங்களும், அச்சுத்தரமும் 'அட்ராசக்கை' என்று மனசுக்குள் ஒரு கூக்குரலெழுப்பியது!

    * அடுத்ததாய் கண்கள் நிலைகொண்டது - 007ன் பட்டாம்பூச்சி படலத்தின் மீது!! உண்மையில் 40 ரூபாய்க்கு இப்படியொரு தரமான புத்தகத்தை எதிர்பார்க்கவில்லை!! அட்டைப்பட ஓவியமாகட்டும்.. தங்க நிறத்தில் டாலடிக்கும் அந்த 007 எழுத்துருவாகட்டும்.. டைட்டிலில் பறக்க விடப்பட்ட பட்டாம்பூச்சிகளாகட்டும் - ரசித்து ரசித்து செதுக்கப்பட்டிருக்கிறது!!
    உள்பக்கங்களில் அந்த ஓவிய பாணியைப் பார்த்தபோது உடனே ஒருவித ஸ்நேகம் வந்து ஒட்டிக்கொண்டது!! ராணி காமிக்ஸில் பார்த்ததைவிடவும் தரமான, துள்ளியமான அச்சுத்தரம் - அட்டகாசம்.. அட்டகாசம்!! mark my words - இந்த இதழ் விற்பனையில் ஒரு புதிய உச்சத்தைத் தொடப்போவது உறுதி உறுதி உறுதி!!
    சின்னதொரு குறை : சின்ன எழுத்துரு! ஒரிரு வினாடிகள் கண்கள் focus ஆன பின்பே எழுத்துக்கள் கிளியராகத் தெரியத் தொடங்குகின்றன! எடிட்டர் இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்துவிட்டாலும், அடுத்த இதழில் இதை நிவர்த்தி செய்ய ஏதாவது பண்ணமுடியுமா பாருங்கள் சார்! ஒருவேளை font sizeஐ பெரிதுபடுத்த முடியாமல் போனாலும், font thicknessஐ கூட்ட முயற்சிசெய்யுங்கள்.. ஒரளவுக்கு பலன் கொடுக்கும்!

    * ட்யூராங்கோ - அட்டைப்படம் எப்போதுமே அம்சமாய் அமைந்துவிடுகிறது! நீலவண்ணப் பின்னணியிலும், அட்டகாசமான நகாசு வேலைகளாலும் முன் பின் - இரண்டு அட்டைகளுமே அசத்தல் அசத்தல் அட்டகாசம்!! பின்னட்டை ஒவியத்தில் என்னவொரு துள்ளியம்!!! பிரம்மிக்க வைத்திடுகிறது!!

    * மேற்கண்ட பிரம்மிப்புகளோடே 'மேக்&ஜாக்' அட்டைப்படத்தைப் பார்க்கும்போது - சற்றே சவலைப்பிள்ளையாய் காட்சிதருவது இயல்புதானே!! ஆனால் உள்பக்க கலரிங் - அம்மாடியோவ்.. செம்ம!!

    * ட்யூராங்கோ புக்மார்க் - வாவ்!!!!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய். புத்தகங்கள் படிப்பதற்கு முந்தைய இந்த முன்னோட்டத்தை கலக்கலாக எழுதி உள்ளீர்கள்.

      Delete
    2. வணக்கம்..பூனையாரே..
      எதிர்பார்ப்புகளை எகிர வைக்கிறது உங்களின் ரசனையான விமர்சனம்!!👌👌
      இன்னும் இரண்டொரு நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் என்பதே நிதர்சனம்..
      ஹும்...

      Delete
    3. வாங்க குணா! சீக்கிரமே புத்தகங்கள் கிடைத்து பரவசத்தில் மூழ்க என் வாழ்த்துகள்!!

      Delete
  8. ////துவக்க நாளன்று ஜூனியர் எடிட்டரும், வெள்ளி & சனிக்கிழமைகளில் (10 & 11) நானும் ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளோம் - உங்களைச் சந்திக்கும் ஆவலோடு ! ////

    வழக்கமாக CBF ஜனவரி முதல் வாரத்தில் துவங்கும் என்று கணித்து சுமார் ஒன்னறை மாதங்களுக்கு முன்பே 3ம் தேதிக்கு ட்ரெயின் டிக்கெட் புக் செய்திருந்ததும் - என் கணிப்புப் பொய்யாகிட, சிலநாட்களுக்கு முன்பு அதை கேன்சல் செய்யவேண்டியதாகிப் போனதும் = சமீபத்திய என் சோகங்கள்!! :(

    ReplyDelete
  9. பட்டாம்பூச்சி படலம் புத்தக வடிவமைப்பு:
    அட்டைப்படம் இங்கே தளத்தில் பார்த்த போது பிடிக்க வில்லை, ஆனால் புத்தகங்களை நேரில் பார்த்த உடன் எனது முடிவை மாற்றிக்கொண்டு விட்டேன். அருமையான ஒரு அட்டைப்படம். அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

    புத்தகத்தின் சைஸ் செம சப்ரைஸ் மார்கெட்டில் உள்ள மற்ற ஜனரஞ்சக புத்தகங்களுக்கு போட்டியாக போட்டி போட அருமையான வடிவமைப்பு.

    விச்சு கிச்சு சூப்பர். குழந்தை பருவ நினைவுகளை கிள்ள மற்றும் இன்றைய குழந்தைகளையும் இவர்கள் குஷி படுத்துவார்கள்.

    Font size முதலில் படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ஆனால் சில பக்கங்கள் சென்ற பின் பழகிவிட்டது.

    இனிவரும் புத்தகங்களில்: பான்ட் சுருள் மூடி மற்றும் துப்பாக்கியுடன் இருப்பது மாதிரி லோகோ இருந்தால் முன்பக்க அட்டையில் ஒரு ஓரத்தில் அதனை பிரிண்ட் செய்தால் பலருக்கு அதனைப பார்த்தவுடன் ஏய் நம்ப பான்ட் என கத்திக்கொண்டே வாங்க வாய்ப்புகள் இன்னும் அதிகம்.

    ReplyDelete
    Replies

    1. புத்தகத்தின் சைஸ் செம சப்ரைஸ் மார்கெட்டில் உள்ள மற்ற ஜனரஞ்சக புத்தகங்களுக்கு போட்டியாக போட்டி போட அருமையான வடிவமைப்பு//
      +1ல

      Delete
    2. சிறய font size மற்றும் குறுகிய இடத்தில் கதைக்கு பொருந்தும் வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு அதற்கு ஒரு கைதட்டல் எழுந்து நின்று கொண்டே.

      Delete
    3. ///இனிவரும் புத்தகங்களில்: பான்ட் சுருள் மூடி மற்றும் துப்பாக்கியுடன் இருப்பது மாதிரி லோகோ இருந்தால் முன்பக்க அட்டையில் ஒரு ஓரத்தில் அதனை பிரிண்ட் செய்தால் பலருக்கு அதனைப பார்த்தவுடன் ஏய் நம்ப பான்ட் என கத்திக்கொண்டே வாங்க வாய்ப்புகள் இன்னும் அதிகம்.///

      ஹா ஹா.. உண்ம!!

      Delete
  10. Replies
    1. ஆமால டைப்புரதுல என்றும் பதினாறுல :-)

      Delete
  11. விஜயன் சார்,
    அதிரடி ஆர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு ஆர்ச்சி கதை வந்துள்ளது என நினைக்கிறேன். அப்படி என்றால் இது மறுபதிப்பு கதையா? இல்லை என்றால் இந்த புதிய கதைக்கு புதிய தலைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. "அதிரடி ஆர்ச்சி" டைட்டில் ஏற்கனவே வந்ததுதான் சார். லயன் காமிக்ஸில் 57வது வெளியீடு என்று பார்த்திருக்கிறேன்

      Delete
    2. அச்சுக்குச் செல்லும் முன்பாய் அந்தப் பெயரை மாற்றிடுவோம் சார் !

      Delete
    3. சார் 80களின்
      Palyangala உயிர்ப்பாய் வைத்த உங்க irumbu மநிதன்...yena ஜிகுநா minna varanum... முதல் ithal

      Delete
    4. // அச்சுக்குச் செல்லும் முன்பாய் அந்தப் பெயரை மாற்றிடுவோம் சார் ! //

      Super!

      Delete
  12. சார் புத்தக விழா இம்முறை 2020 துள்ளல் வருடம் போலவே புதிய உத்வேகத்தை துள்ளலாய்த் தர செந்தூர் முருகன் அருளை வேண்டுகிறேன் .

    ReplyDelete
  13. புத்தக பேக்கிங் மெனக்கெடலுக்கு ஒரு சபாஷ்.

    பெரிய புத்தகங்களை வெளிப்பகுதியில் வைத்து நடுவில் சிறிய புத்தகங்களை வைத்து, பெரிய அட்டைப் பெட்டியில் அவைகள் கசங்காமல் அனுப்பியுது சரியான ஐடியா.

    நமது அலுவலக நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் சார்.

    ReplyDelete
  14. உங்களோடு சண்டை பிடிக்கணும்னா இதை சொல்றேன்..சென்னையை ஓரம் கட்டிட்டீங்க சார்.. ஈரோடுக்கு முன்னால் பெரிய வெளியீடுகளை சென்னையில்தான் கொண்டு வருவீங்க. கடந்த ஒரு சில வருடங்களாக சென்னையை அத்தனை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேங்குறீங்க.. புக் பேர்...ரெண்டு ஸ்டால்..பெரிய வாய்ப்புக்கள்.. ஸ்பெஷல் இஷ்யூ ஏதாவது கொண்டு வந்திருக்கலாம். போன்னெலி ஸ்பெஷல் போன்ற அட்டகாசமான தொகுப்பு ஏதாயினும்.. அடுத்த ஆண்டு ட்ரை பண்ணுங்க ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. ஒரு புக் ரிலீசோ ; வாசக சந்திப்போ எனது முயற்சியில் மட்டுமே சாத்தியப்படுவதில்லையே சார் !

      Delete
    2. திரட்டுங்க நல்ல நண்பர்களை... சாத்தியமே

      Delete
  15. அடடே,புதிய பதிவு......

    ReplyDelete
  16. // இம்முறை நமக்கு டபுள் ஸ்டால் கிட்டியுள்ளதென்பது கூடுதல் சந்தோஷம் ! //
    டபுள் ஸ்டால்,டபுள் சந்தோஷம்.....

    ReplyDelete
  17. இரட்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி..!!

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்..!!

    ReplyDelete

  18. இரட்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி..!!💃🏻🕺🏻

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  19. அருமையான தகவலுடன் தொடங்கி உள்ளது. இரட்டை ஸ்டால் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த வருடம் நல்ல விற்பனை உடன் துவங்க வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  20. இரட்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி..!!💃🏻🕺🏻

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் சார் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சார்..சென்னை புத்தகவிழாவில் பலமான விற்பனைக்கு எனது மனமார்ந்த வேண்டுதல்கள்..

    ReplyDelete
  23. *கதவை தட்டும் கேடி*


    கண்ணை மூடி இந்த மாத இதழை எதை படிக்கலாம் தேர்ந்தெடுத்தால் முதலில் தேர்வானது கதவை தட்டும் கோடியே..நான் ரொம்ப கெட்டவன் ..எனக்கு சொத்து வேணுமுன்னா என்னை நல்லவனாக்க உதவுங்கள் என இரட்டை நாயகர்கள் மேக் அன்ட் ஜாக்குக்கு ஓர் நபர் அழைப்பு விடுவிக்க அவர் வசிக்கும் மாளிகை (இல்லம்) சென்று கதவை தட்ட கதவே படாரென்று உடைந்து கீழே விழும் அந்த சமயத்தில் இருந்து முடிவு வரை புன்னகைக்க வைத்தே கொண்டு இருந்தனர் ..நாயகன் மட்டுமா மாபியா பாஸ் அவர்களும் நாயகனுக்கு போட்டியாக பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்க அழகான ,அமர்க்களமான ,எதிர்பாரா ஓர் முடிவு..முதல் சாகஸத்திலியே மனம் கவர்ந்த மேக் அன்ட் ஜாக் இந்த முறை இந்த முறை இன்னும் இறங்கி ஆடி மனதிற்கு நெருக்கமாகி விட்டார்கள் .மீண்டும் மற்றும் ஒரு அட்டகாசமான ஓர் கவுண்டமணி செந்தில் ஜோடி இந்த காமிக்ஸ் உலகிற்குள் நுழைந்து விட்டார்கள் என்பது உண்மை..


    கதவை தட்டும் கேடி க்கு கோடி மதிப்பெண் வழங்க அனுமதி இல்லாத காரணத்தால் பத்திற்கு பத்து எனும் முழு மதிப்பெண்ணை வழங்குகிறேன்..

    நல்வரவு காமெடி இரட்டையர்களே


    💐💐💐💐

    ReplyDelete
  24. 007 ன் பட்டாம்பூச்சி படலம்..

    முதலில் ஜிகுஜிகு என மின்னும் அட்டைப்படத்திற்கு கையை கொடுங்கள் சார்..ஏற்கனவே படித்தது போல ஓர் எண்ணம் ..அந்த கதையா இல்லையே ,இந்த கதையா இல்லையே என்ற ஆரம்ப குழப்பத்தை தள்ளி வைத்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பிக்க பார்க்கத்தான் மினி இதழ் போல ..ஆனால் ஓர் நெடுங்கதையை படித்த திருப்தி ..அதுவும் பரபரவென அரைமணி நேரம் சென்றதே தெரியவில்லை..இப்படி ஓர் 007 ஐ பார்த்து தான் எத்தனை நாட்களாயிற்று..அட்டகாசம்.நாற்பது ரூபாய்க்கு மிக அருமையான பொக்கிஷம்.மாதந்தோறும் இதே பாணியில் ஓர் இதழ் வரப்போகிறது என எண்ணும்பொழுதே மனம் மிக மிக சந்தோசமடைகிறது சார்..அடுத்த இதழ் ஆர்ச்சி வேறு ..தூள் கிளப்ப இப்பொழுதே வாழ்த்துக்கள் சார்..மறவாமல் இந்த நாற்பது ரூபாய் இதழ் பழையபடி அனைத்து புத்தக கடைகளிலும் விற்பனைக்கு வருமாயின் மிகப்பெரிய வெற்றி அடையும் சார்..

    மலரும் விரும்பும் பட்டாம்பூச்சி (படலம்)


    🌹🌹🌹🦋🦋🦋

    ReplyDelete
    Replies
    1. கடைசில கவித்துவமா ஒரு டச் கொடுத்து - பூ, பட்டாம்பூச்சி படம்லாம் போட்டீங்க பாருங்க.. அங்க நிக்கறீங்க தலீவரே!

      Delete
    2. //மாதந்தோறும் இதே பாணியில் ஓர் இதழ் வரப்போகிறது என எண்ணும்பொழுதே மனம் மிக மிக சந்தோசமடைகிறது //

      இந்தப் புதுத்தடத்தின் பிரதான நோக்கமே இது தான் தலீவரே...ஒரு T20 மேட்சைப் பார்த்தது போல் நச்சென்ற entertainment இங்கே கிட்டிட வேண்டுமென்று விரும்பினேன் !

      Delete
  25. அடுத்து வாசிக்க காத்து கொண்டிருக்கும் இதழ்களும் படா படா..நாயகர்களும் படா ,படா ..

    எந்த படாவை தேர்ந்தெடுக்க ..என்பாடு சந்தோஷபாடு..:-)

    ReplyDelete
  26. இரட்டை ஸ்டால் - இரட்டிப்பு மகிழ்ச்சி..!!💃🏻🕺🏻

    விற்பனை எண்ணிக்கை புதிய உச்சம் தொட அடியேனின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் சார் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  27. இரட்டை ஸ்டால் -இரட்டிப்பு மகிழ்ச்சி..!

    விற்பனையும் இரட்டிப்பாக வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  28. Edi sir, I have a query for which I may already know the answer. Can we get Minnum Maranam [மின்னும் மரணம்] @ the 2020 chennai the book fair ? I'm curious though!!

    ReplyDelete
  29. இம்மாத புத்தகங்களில் முதலிடம் - ட்யூராங்கோ. கதை, ஓவியம், வண்ணம் எல்லாவற்றுக்கும் மேலாக அருமையான அட்டைப்படம் என எந்தவிதத்திலும் குறை காண முடியாத இதழாக அமைந்த இதழென்ற காரணத்தால்.
    இரண்டாமிடம் - ஜேம்ஸ்பாண்ட். புதுயுக நாயகர்களின் நடுவே களத்தில் இறக்கப்பட்டு நானும் ஆட்டத்திலிருக்குறேன் என்று நிரூபணம் செய்த காரணத்தாலும், சிக்கனமான விலை, குழப்பமில்லாத கதை, சி(தி)றந்த ஓவியம்!( எடிட்டர் அணிவிக்காமல் விட்டுவிட்ட பட்டாபட்டியும் ஒரு காரணம்!) இவையெல்லாம் சேர்ந்து இரண்டாமிடம் இவருக்கு.
    மூன்றாமிடம் - 1. டெக்ஸ். கதை! மாயாவியும், ஸ்பைடரும் காதில் பூ சுற்றுகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு என்னாலும் பூ சுற்ற முடியும் என்று அவர்களுடன் டெக்ஸ் போட்டிபோட்ட கதை, ஓவியங்களும் சுமார்தான். வண்ணமும், சைசும் ப்ளஸ் பாயிண்டுகளாக அமைந்து மூன்றாமிடம் - 2.
    மேக் அன்ட் ஜாக்.
    ( என்னதான் வடிவேலுவும், சந்தானமும் ஹீரோவாக முயற்சித்தாலும் முன்னணிக்கு வரமுடியாததைப் போல மேக் அன்ட் ஜாக்கை குறை சொல்லி ஒதுக்க முடியாவிட்டாலும் முதலிரண்டு இடத்தை கொடுக்க முடியவில்லை. அவரவர்க்கு எண்ணம் மாறுபடலாம். இது என்னுடைய கருத்து! அவ்வளவுதான்!!

    ReplyDelete
    Replies
    1. //என்னாலும் பூ சுற்ற முடியும் என்று அவர்களுடன் டெக்ஸ் போட்டிபோட்ட கதை, //

      மெபிஸ்டோவையும், யுமாவையும் களமிறக்கிட நான் மறுப்பது இதன் பொருட்டே சார் !

      Delete
    2. முதல்முறை என்றால்கூட பரவாயில்லை சார்.மறுபதிப்பு, மெகா சைஸ் அதில் இந்த கதை இடம் பெற்றதுதான் கொஞ்சம் குறையாக தெரிகிறது சார். தவறாக எண்ண வேண்டாம்.
      அப்புறம் ஜேம்ஸ்பாண்ட் எழுத்துக்கள் படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது சார்.

      Delete
    3. Vijayan
      சார் இருளின் மைந்தர்கள் கதையே அமானுஷ்யம் கலந்த கலவை தான் ஆனால், ஒரேடியாக போர், மொக்கை என்று ஒதிக்கிட முடியாது! அது ஒரு வித்தியாசமான கதைக்களம் ஒருத்தரோட முடிவை வைத்து அதுக்கு முடிவு கட்டாதீங்க! இதோட விற்பனையின் நிலைமையை பார்த்து யுமா, மெபிஸ்டோ போடலாமா வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்!அப்புறம் இன்னொன்றையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் இதே போல்தான் நீங்கள் பூத வேட்டை & திகில் நகரில் டெக்ஸ் கதைகள் ஜொலிக்காதுன்னு 17 வருடமாக ஒரங்கட்டி வைத்திருந்தீர்கள். ஆனால் வந்த பிறகு இப்படி ஹிட் அடிக்கும்னு நீங்களே எதிர்பார்க்கவில்லை தானே சார்? அது போலத்தான் யுமாவும், மெபிஸ்டோவும் ஹிட்டடிக்க வாய்ப்புள்ளது! எப்படியும் கலரில் நீங்க போடப்போவதில்லை கருப்பு வெள்ளையில் தான் போடப் போகிறீர்கள் ஒரு கதை போட்டுத்தான் பார்க்கலாமே ஹிட்டடிக்கும் பட்சத்தில் தொடருங்கள்! இல்லையென்றால் யுமாவையும், மெபிஸ்டோவையும் பரணுக்கு அனுப்பி விடுங்கள்! ஒரு கதையை போடுவதற்கு முன்பே அது சரி வராதுனு முடிவெடுப்பது சரியா சார்? லயனில் 150 வெளியிடாக மந்திர மண்டலம் வெளிவந்து விற்பனையில் சாத்து வாங்கியதா? அது வந்தே 30 வருடங்களிருக்கும் போல இன்னமும் அந்த கதைகளை கேட்டாலே மொக்கை வாங்கும்னு ஒதுக்கியே வைக்கிறீங்க மாயாஜாலம், மந்திரஜாலத்தையும் ரசிப்பவர்களும் இன்னமும் இருக்கிறார்கள் சார் அதனால்தான் சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற கதைகள் மறுபதிப்பிலும் விற்பனையில் சாதிக்கிறதே

      Delete
    4. அதே அதே. ஸ்பெஷல் வெளியீடாக லிமிடெட் ரன் பிரிண்ட் போட்டு முயற்சி செய்யலாமே??? தேவைப்பட்டால் மறுபடியும் ரீபிரிண்ட் போடாலாம். விலை 5% முதல் 10% வரை அதிகமாக இருந்தாலும் விற்பனை குறையாது. ஆதனால் தாராளமாக மெபிஸ்டோ யுமா கதைகளை களமிறக்கலாம். யாரும் எதிர்பார்க்காமல் ஹிட் அடித்த பிஸ்டலுக்கு பிரியாவிடை மாதிரி டெக்ஸின் மெபிஸ்டோவும் சாதிப்பார்.

      Delete
    5. டெக்ஸின் க்யூபா படலத்திலும் மாந்திரிகம் உண்டே. அது நன்றாகத்தானே இருந்தது.

      Delete
    6. Vijayan
      சார் இருளின் மைந்தர்கள் கதையே அமானுஷ்யம் கலந்த கலவை தான் ஆனால், ஒரேடியாக போர், மொக்கை என்று ஒதிக்கிட முடியாது! அது ஒரு வித்தியாசமான கதைக்களம் ஒருத்தரோட முடிவை வைத்து அதுக்கு முடிவு கட்டாதீங்க! இதோட விற்பனையின் நிலைமையை பார்த்து யுமா, மெபிஸ்டோ போடலாமா வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்!அப்புறம் இன்னொன்றையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் இதே போல்தான் நீங்கள் பூத வேட்டை & திகில் நகரில் டெக்ஸ் கதைகள் ஜொலிக்காதுன்னு 17 வருடமாக ஒரங்கட்டி வைத்திருந்தீர்கள். ஆனால் வந்த பிறகு இப்படி ஹிட் அடிக்கும்னு நீங்களே எதிர்பார்க்கவில்லை தானே சார்? அது போலத்தான் யுமாவும், மெபிஸ்டோவும் ஹிட்டடிக்க வாய்ப்புள்ளது! எப்படியும் கலரில் நீங்க போடப்போவதில்லை கருப்பு வெள்ளையில் தான் போடப் போகிறீர்கள் ஒரு கதை போட்டுத்தான் பார்க்கலாமே ஹிட்டடிக்கும் பட்சத்தில் தொடருங்கள்///


      சூப்பர் கலீல் ஜி....இதை வரிக்கு வரி நானும் வழிமொழிகிறேன் ..+12345678910

      Delete
  30. நண்பர்கள் சொல்வதை பார்த்தால் JAMES BOND என்பதற்கு பதிலாக JAMES FONT என அழைக்க வேண்டுமோ என நினைத்தேன்..

    அட்டையில் உள்ள ' பாவை'யை அருகே வைத்து பார்த்தமையால் கண் பாவை சுருங்கி எழுத்துரு அளவு சிறிதாக தெரிகிறதோ என்னவோ?:D

    எனக்கு சாதாரணமாகத்தான் தெரிகிறது..

    பாண்ட் சைஸ் சிறிது என கருதுவோர் அதை சொல்வதில் தவறில்லை..

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். வயசுப் பயலாக இருந்த போது போட்ட பாண்ட் வளர்ந்த பிறகு சைஸ் சிறியதாகத்தான் இருக்கும். (ஏம்ப்பா, நான் கரெக்ட்டா தானே பேசுறேன்.)

      Delete
    2. அட்டையில் உள்ள பாவையை அருகே வைத்து பார்த்ததை வீட்டுக்காரம்மா, பார்த்ததால்.அவங்க பூரிக்கட்டை தலையை பதம் பார்த்ததால் கண்பார்வை சுருங்கி, கண்முன்னே பட்டாம்பூச்சி (பறக்கும்) படலம் Starts.

      Delete
    3. ////அட்டையில் உள்ள பாவையை அருகே வைத்து பார்த்ததை வீட்டுக்காரம்மா, பார்த்ததால்.அவங்க பூரிக்கட்டை தலையை பதம் பார்த்ததால் கண்பார்வை சுருங்கி, கண்முன்னே பட்டாம்பூச்சி (பறக்கும்) படலம் Starts.///

      ஹா ஹா ஹா!! செம்ம!! :))))

      Delete
    4. ஹா...ஹா..ஹா

      உங்களுக்கு ரொம்பவே நகைச்சுவை உணர்வு சார்.!

      Delete
    5. பட்டாம்பூச்சி படலம் சூப்பர். புத்தகம் எடுத்த கையோடு படித்து முடித்துவிட்டேன். விறுவிறுப்பான கதை. 007 2.0ல் கலரில் தான் கலக்குகிறார் என்றால், கருப்பு-வெள்ளையிலும் பட்டைய கிளப்புகிறார். தொடரட்டும்.

      Delete
    6. பத்மநாபன் சார். சிரிச்சு முடில.

      Delete
  31. எனக்குகூட படிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது செனா அனா சார்.

    ReplyDelete
  32. Vijayan sir,

    Great, good to know. Another strong reason to visit Book fair. I do need to visit book fair to buy the books got released in 2019.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. பட்டாம் பூச்சிகளுடனும், பாட்டில் சரக்குகளுடனும் புகை மண்டலத்தினூடும் தினமும் சொர்க்கலோகத்தில் சஞ்சரிக்கிறார் கோடீஸ்வரக் கோமானின் ஒரே வாரிசு.சிவலோகப் பதவியை எதிர்பார்த்து 'சிவனே 'என காத்திருக்கும் அந்தக் கோடீஸ்வரர் தன் வாரிசு 'சுத்தபத்தமாக' இருந்தால் 'சொத்துபத்திரம் ' சொந்தமாகும் என கண்டீசன் போட மேற்படி திருவாளர் எப்படி'டீடோட்டலர் 'ஆகிறார் (ஆக முயல்கிறார்) மீதிக் கதை.

    ReplyDelete
  35. அல் கபோனை கண்ணில் காட்டாமல்
    மேக் & ஜாக் கோஷ்டி பாதி பக்கங்களுக்கு தனி இருவராக சமாளிப்பது ஹி...ஹி... என கிச்சுமுச்சூட்டும் ரகம்.அல் கபோன் தலைகாட்டிய பின்னே ஹி...ஹி... ரகம்,
    ஹா..ஹா...ஹா..,
    ஹோ...ஹோ...ஹோ..
    என சிரிப்பின் டெசிபல் கூட, வாயோடு சேர்ந்து பல்லெல்லாம் வலித்தது.
    மிகப் பெரிய டான் என்றும் பாராமல் அல் கபோனை வேலை வாங்கும் இடங்கள் ஹா...ஹா...!இறுதியில் அல் கபோனே பலியாடு ஆவதும் ஹா...ஹா..

    பேசாமல் அடுத்த கதையை 'அல் கபோன் மிரட்டி சிரிக்க வைக்கும் ' சாகஸம்னே விளம்பரப்படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. செமயா எழுதறீங்க GP! :)))

      Delete
  36. //புத்தக விழாக்களின் போது மட்டும் மாயாவி கதைகளில் ஒன்றிரண்டை வெளியிட்டுக் கொள்ளலாம் – அவற்றையும் சந்தாக்களில் ஒரு அங்கமாக்கிடாது என்பது தீர்மானம் !//
    எடிட்டர் சார்
    மேலே உள்ளது நீங்கள் 2020 அட்டவணை பற்றிய உங்களது பதிவினில் குறிப்பிட்டது. இப்போது சென்னை புத்தக விழாவில் மாயாவி கதைகள் வெளியிடும் எண்ணம் உள்ளதா?

    ReplyDelete
  37. இரட்டை ஸ்டால் கிடைத்திருப்பது விற்பனை அளவீடுகளில் பெரியதொரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கவில்லை என்று கடந்தகால அனுபவங்களைக் கொண்டு ஏற்கனவே எடிட்டர் கூறியிருந்தாலுமே கூட, புத்தகம் வாங்க வரும் பொதுமக்களுக்கு - குறிப்பாக பீக் ஹவர்களில் - தள்ளுமுள்ளு நெருக்கடிகளின்றி புத்தகங்களைத் தேர்வு செய்திட நிறையவே உதவியாய் இருந்திடும் என்பது உறுதி! 230+ டைட்டில்கள் என்ற விஸ்தார எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருக்கும் நிலையில், இனி CBFக்கு மட்டுமாவது இரட்டை-ஸ்டால் என்பது அத்தியாவசியமாகிறது!
    சிங்கிள் ஸ்டால் - ரொம்பவே நெருக்கடி - அதிகபட்சமாக ஒரு ஏழெட்டு பேர் மட்டுமே நின்று புத்தகங்களைப் பார்வையிட முடிகிறது! இந்த நெருக்கடியின் காரணமாகவே கடந்தவருடங்களில் நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்த - தீவிர காமிக்ஸ் ரசிகையும், நடிகையுமான - கஸ்துரியோடு ஸ்டாலுக்குள் நின்றபடியே நான் செல்ஃபி எடுத்தபோது வேறுவழியில்லாமல் ஒட்டிஉரசியபடியே நிற்கவேண்டியதாகிப் போனது.. ஹிஹி! ;)

    ReplyDelete
  38. ///கஸ்துரியோடு ஸ்டாலுக்குள் நின்றபடியே நான் செல்ஃபி எடுத்தபோது வேறுவழியில்லாமல் ஒட்டிஉரசியபடியே நிற்கவேண்டியதாகிப் போனது.. ஹிஹி! ;)///

    இதுதாங்க பாஸிடிவ் எனர்ஜி..!நாமும் பாஸிடிவாக இருந்தால், நமக்கும் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்க வாய்ப்பிருக்கு.:-)

    ReplyDelete
    Replies
    1. சென்னை செல்லும் நண்பர்கள் இந்த பாயிண்டை நினைவுகூர மறந்துவிடாதீர்கள்...!

      Delete
  39. இரட்டை ஸ்டால் -இரட்டை சந்தோஷம் ஆசானே!
    விற்பனை உச்சம் தொட எம்பெருமான் முருகனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  40. மேக்& ஜாக்..!

    ஒரே கதையில் நிறைய கிளைகதைகள் நிறைந்துள்ளது.

    1.கோடீஸ்வரரின் சொத்தை பித்தலாட்டமாக கைப்பற்ற முயலும் மருமானின் மர்மக் கதை.

    2.குடிகார, பெண்பித்தனை திருத்தி நல்வழிப்படுத்த முனையும் மனிதநேயக் கதை.

    3.மருமாளின் காதலைப் பிரிக்க வரும் வில்லன் , மருமாளின் மணவாளன் எதிர்கால மில்லியனர் என அறிந்து, எதிர்கால சொத்தை ஆட்டையை போட நிகழ்கால திட்டம் போடும் கள்ளக்கதை.

    4. காதலுக்கு கண்ணில்லை.கூடவே கரன்சியும் தேவையில்லை என்ற காதல்கதை.

    தான் தோண்டிய குழியில் தானே விழும் அல் கபோனின் சோகக் கதை...!

    மேலும்...!

    ReplyDelete
    Replies
    1. கதையில் ஒட்டாதது தலைப்பு மாத்திரமே.!

      எனக்குத் தோன்றிய தலைப்புகள்..!

      பணம் படுத்தும் பாடு..!

      காசேதான் கடவுளடா ..!

      Delete
    2. //கதையில் ஒட்டாதது தலைப்பு மாத்திரமே//

      நோ! ஒட்டுகின்ற தலைப்பு மட்டுமல்ல..பொருத்தமான தலைப்பு மட்டுமல்ல..ரசிக்க வைத்த தலைப்பும் கூட!!!!

      Delete
  41. தற்போது வாசிப்பில் - கதவைத் தட்டும் கேடி!

    மொன மொன மொன...

    ReplyDelete
    Replies
    1. க.த.கோ(கே)டி...!!! ட்யுயல் தலைப்பு

      Delete
  42. **** கதவைத்தட்டும் கே/கோடி ******

    முதல் பக்கம் முதல் பேனலில் ஆரம்பிக்கும் சிரிப்புமேளா கடைசிபக்க கடைசி பேனல் வரை நான்-ஸ்டாப்பாக தொடர்கிறது!! ஆனால் அதற்காக பேனலுக்குப் பேனல் வெடிசிரிப்பு இருக்குமென்று எதிர்பார்த்திட வேண்டாமே!
    மாறாக, கதைப்படிக்க ஆரம்பித்த கணத்திலிருந்தே கீழ்கண்ட மாற்றங்கள் நம்மில் பெரும்பாலானோர்க்கு உறுதி :

    * இறுக்கமான மனதும் இலேசாகும்
    * வாய் - பிறைநிலா அமைப்புக்கு மாறி இறுதிவரை அது தொடரும்!
    * நம்மையறியாமல் நம் தொந்தி குலுங்கும்
    * 'குடிகாரப்பயலை எப்படித்தான் திருத்தப் போகிறார்களோ' என்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும்
    * 'இப்படிப்பட்ட காமெடிக் களங்களை எப்படித்தான் இந்தப் படைப்பாளிகள் புடிக்கறாங்களோ' என்ற அவ்வப்போது ஆச்சரியப்படத்தோன்றும்!!

    இரட்டை அர்த்தம் தரும் இந்தத் தலைப்பு - கதைக்கு அழகாய் பொருந்தி - நம்மை ஆச்சரியப்படுத்துகிறது!!

    ஒரே மாதிரியான உடல்வாகின் காரணமாக அவ்வப்போது 'மேக் யார்? அந்த குடிகாரப்பயல் டேவ் யார்?'என்ற சிறுகுழப்பம் ஏற்படுவதைத்தாண்டி - நிறைவான ஒரு சிரிப்புத்தோரணம் இந்த கலர்ஃபுல் கார்ட்டூன் மேளா!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. // வாய் - பிறைநிலா அமைப்புக்கு மாறி இறுதிவரை அது தொடரும்! // சந்தேகமின்றி

      Delete
    2. ///இரட்டை அர்த்தம் தரும் இந்தத் தலைப்பு - கதைக்கு அழகாய் பொருந்தி - நம்மை ஆச்சரியப்படுத்துகிறது!!///

      அதே அதே..!

      சீமானின் சொத்தும் அல் கபோனும்

      Delete
    3. "சீமான்!"
      "நா.த.க" சீமானா சார்?

      Delete
    4. ங்ஙே..!

      சீமான் - மகா கோட்டீஸ்வரன்

      Delete
    5. "மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே..!"
      அந்த சீமானா(பாலையா இல்லைதானே!) சார்?
      எலக்‌ஷன் ரிசல்ட் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேனா! அதான் நான் தப்பா நெனச்சுட்டேன்! Sorry!!

      Delete
    6. ஆளு அம்பு சேனை வெச்சி
      காரு வெச்சி போரடிக்கும் கோமானே தான்
      இந்த சீமானும் சார்...!

      Delete
  43. பட்டாம்பூச்சி படலம் :

    ஜேம்ஸ் பாண்ட் படங்களின் போஸ்டர்களே தனி அழகுதான்.! டைட்டிலை அவர்கள் எழுதும் விதங்களும் இடங்களும் செம்ம கவர்ச்சியாக இருக்கும்.!

    நம்முடைய அட்டைப்படமும் அப்படித்தான் இருக்கிறது.! கால்மணி நேரம் கழித்தே கதைக்குள் நுழைய முடிந்தது.! பின்னட்டையில் கதையின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும் அருமை.!

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்டை லயன் பேனரில் பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி.! 40 ரூபாய்க்கு தரமான தயாரிப்பு.!

    என்னதான் புதுபாணி, கலர், ஆக்சன் மேளான்னு முன்னேறியிருந்தாலும் கூட, நம்ம பழைய பாண்டை (முக்கியமாக கிளிகளை) ரசிப்பது தனி கலை.!

    சமீபத்தில் தமிழில் மெகா ஹிட்டடித்த ஒரு திரைப்படத்தை நினைவுபடுத்தும் கதை.!

    கதையின் தொடக்கத்தில் சூப்பரான கிளியான சூஸி க்யூவும் ஜேம்ஸ் பாண்ட்டும் சேர்ந்து அந்த வில்லனை போட்டுத்தள்ளும் விதம் சூப்பர். ஆனால் மெயின் வில்லனோ இவர்களைவிட கில்லாடியாக இருக்கிறான்.!

    டக்கரான கிளியான அன்டைனை (நமக்கு வில்லனுக பேர் மட்டும்தான் ஞாபகத்துல இருக்காது.. மத்தபடி.. ஹிஹி) கடல்கன்னியாக அனுப்பி ஜேம்ஸை கடத்திவந்து தனக்காக வேலை செய்ய நிர்பந்திக்கிறான்., ஜேம்ஸ் அதிலிருந்து மீண்டாலும்,
    ஜேம்ஸையே தன்னுடைய வேவு பார்க்கும் கருவியாக மாற்றி உளவுத்துறையின் உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறான்.!

    அதை யூகித்துத் தெரிந்துகொண்ட ஜேம்ஸ்.. அவனுடைய வழியிலேயே போய்..
    அழகான இளங்கிளியான விஞ்ஞானி மிஸ் லாண்ட் வாக்கை கடத்துவது போல் நாடகமாடி வில்லன் கோஷ்டியான பட்டாம்பூச்சி கும்பலை துவம்சம் செய்கிறார்..!

    பிறகென்ன.. வழக்கம்போல விடுமுறைக்கு மிஸ் லாண்ட்வாக் துணையோடு கிளம்புகிறார் ..!

    32 பக்கங்களில் ஒரு அருமையான திரைப்படத்திற்கான கதையை அட்டகாசமாக கொடுத்திருக்கிறார்கள்.!

    சந்தா D யை ஜேம்ஸ் பாண்ட் வெகுசிறப்பாகத் தொடங்கிருக்கிறார்.

    என்ன.. கொஞ்சம் பெரிய சைஸ் படங்களோடு, முழுவண்ணத்தில்., (முக்கியமாக வசன பலூன்களின் இடையூறு இல்லாமல் ) வந்திருந்தால் மாதம் பூராவும் படித்து(பார்த்து)க்கொண்டே இருக்கலாம்.!

    பட்டாம்பூச்சி படலம் - பஞ்சவர்ண கிளிகளின் படலம்.

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
  44. ட்யூராங்கோவின் ஆறாது சினத்தை கையிலெடுத்து முன்னட்டை, பின்னட்டை உட்பக்க சித்திரங்கள்னு அன்னிக்கு லேசா புரட்டிப்பாத்துட்டு வெச்சிட்டேன்.!

    இப்போதான் உள்ளே பார்க்கிறேன்..அடுத்த நாலு பாக வெளியீட்டோடடு ட்யூராங்கோ தொடர் முடியுதாமே.. !?

    அடக்கடவுளே ஆனந்தத்தை அட்டையில வெச்சிட்டு, ஆப்பை உட்பக்க விளம்பரத்துல வெச்சிட்டீங்களே.!!

    டெக்ஸ், டைகருக்கு அடுத்து நல்லதொரு கௌபாய் தொடராக ட்யூராங்கோ இருந்துவருகிறது. இத்தனை சீக்கிரத்தில் தொடர் முடியப்போபோது சற்று வருத்தமே.!

    ReplyDelete
    Replies
    1. யெஸ்!! இதே வருத்தம் நேற்றைக்கு எனக்கும் ஏற்பட்டது!! இதே பாணியிலான வேறொரு தொடரை படைப்பாளி தொடங்கியிருக்கிறார் என்ற செய்தி துளியூண்டு ஆறுதலளித்தாலும், சோகம் முழுசாய் மறைந்தபாடில்லை!!

      டெக்ஸ், டைகரின் வரிசையில் ட்யூராங்கோவுக்கும் நம் மனதில் என்றுமே ஒரு இடமுண்டு!!

      Delete
    2. அந்த சோகத்தை மறக்க சென்றாண்டு ஸ்டாலில் எடுத்துக் கொண்ட special selfie -ஐ மறுக்கா பார்த்து மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள் பூனையாரே !

      Delete
    3. //அந்த சோகத்தை மறக்க சென்றாண்டு ஸ்டாலில் எடுத்துக் கொண்ட special selfie -ஐ மறுக்கா பார்த்து மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள் பூனையாரே !//

      :-))))))) Super

      Delete
    4. இந்தவருஷமும் சிலபல ஷெலுப்பிகளை போட்டாத்தான் கொஞ்சமாவது மனசு ஆறும்ங்க சார்!

      Delete
    5. நம்ம பொன்வண்ணன் சாரும் வருவார்லல ஈ வி

      Delete
  45. விஜயன் சார் ii
    முத்து காமிக்ஸ் - ன் "48_வது ஆண்டு மலராக "ட்யூராங்கோ"வை வெளியிட்டு நினைவில் நிற்கும் இதழாக - சிறப்பாக தயார் செய்து அமர்களப் Uடுத்தி இருக்கிறீர்கள்.
    காமிக்ஸ் என்றால் ஓவியம் தான் என்றால் - டியூ ராங்கோவில் ஓவியர் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் - படிக்கும் போது - ஒரு திரைப்படம் பார்ப்பது போல் அல்லது நாமே அந்த ஊரில் இருப்பது போல், மெய் மறக்க வைத்து விடுகிறார்.
    ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பு ஓவியத்தையும், கலரிங் - கையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    அதில் நீங்கள் இரண்டு படங்களை எடுத்துக் கொண்டு அட்டைப்படமாக செய்திருக்கும் நகா சு வேலைகள் -பார்பதற்கு இது என்ன சாதாரண படக்கதை புத்தகம் தானா. நமக்கு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறதே என்ற சந்தோசத்தையும்- புத்தகத் திருவிழாவிற்கெல்லாம் வந்து மற்றவர்கள் இந்த புத்தகத்தை புரட்டிப் பார்பதையும் - தடவிப் பார்ப்பதையும் ரசிக்க ஆசையாக உள்ளது. ( எங்க - ஜனவரி என்றாலே நான்கு _ ஐந்து நாள் லீவ் ஆகி விடுகிறது. விசேஷ வீடு + பொங்கல் என்று ) கண்டிப்பாக வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    அடுத்தது என் அபிமான 007-
    சின்ன சைஸில்- பக்கத்துக்கு ஆறு படங்கள் என்று விரும்பியது உண்மை தான்.
    ஆனால், இதுவும் ஒரு வகையில் வித்தியாசமான படிப்பு அனுபவத்தை தந்தது.
    ௹ 40 -க்கு என்னும் போது பேப்பரின் தரம் அருமை. பெரிய சைஸில் அட்டகாசமான கலரிங்கில் திக்கான அட்டையில் - அட்டைப்படம் தயாரிப்பு அருமை.
    ரூ 40யில் " லயன் காமிக்ஸ் " -யை தங்கமாய் ஜொலிக்கச் செய்து விட்டீர்களே ii
    (எழுத்துருக்கள் அளவு சரிதான்.என்ன நமது B& W - இதழ்களில் போல் அழுத்தமான எழுத்துக்களாக இருந்தால் பளிச்சென்றிருக்கும்.)
    அப்றம் மொழிபெயர்ப்பில் தான் - ஜேம்ஸ் பாண்ட் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட்- போலீஸ் -க்கே தெரிவிக்க மாட்டார்கள் - ஹோட்டல் மேனேஜரிடம் கூட சூஸி - 007 என்று குறிப்பிடுவது - அப்றம் M_ அவருக்கு கிழே உள்ள அதிகாரி வில்லியம் என்றே பழகிவிட்டோம். நீங்கள் ஏதாவது ஒரே பெயரில் குறிப்பிட்டு வந்தால் ஏதுவாக இருக்கும்.

    அப்றம் நீண்ட நாட்களுக்கு பிறகு விச்சு & கிச்சு .இதுவரை படிக்காத கதையாக உள்ள தே .மொத்தத்தில் இந்த இதழ்கடைகளிலும் விற்பனையானால். மிகவும் மதிப்பான இதழாகவே கருதப்படும்.சார்.
    அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இதழின் அட்டை படத்தை தரிசிக்க இப்போதே ஆவலாக உள்ளது சார். ii
    மேக் & ஜாக் - நிச்சயம் தரமான காமெடிக்கு உத்திரவாதமான கதைத் தொடர் சார். கார்டூன் சந்தாவை 12 இதழ்களாக்கினால் கண்டிப்பாக இரண்டு வாய்ப்புகள் தரலாம் சார்.. போன கதையிலும், இந்த கதையிலும் ஒரே சீக்வென்ஸ் - தொடர்வது போல் அமைந்தாலும் நாமும் அதையே விரும்புகிறோமே. கதை முடிந்த பின்னும்.மேக் & ஜாக் - கின் கதவைத் தட்டி (அதே )பொறுப்பு கொடுத்து அடுத்து நடக்கும் கூத்துக்களை கற்பனை செய்ய தோன்றுகிறதே. சூப்பர் சார். ஜனவரி 2020- அமர்க்களம்.ii

    ReplyDelete
    Replies
    1. //அப்றம் M_ அவருக்கு கிழே உள்ள அதிகாரி வில்லியம் என்றே பழகிவிட்டோம். நீங்கள் ஏதாவது ஒரே பெயரில் குறிப்பிட்டு வந்தால் ஏதுவாக இருக்கும்.//

      William Tanner என்பது அவரது முழுப் பெயர் சார் ! "வில்லியம்" என்ற பெயர்களை "பில்" என்று சுருக்கி அழைக்கும் பழக்கம் அங்கு நடைமுறை ! So "பில்" என்று informal ஆக ஜேம்ஸ் பாண்ட் அழைக்கிறார் ! அவரே இவர்..இவரே அவர் !

      Delete
    2. அருமை இளங்கோவன்.

      Delete
  46. நான் தான் சொன்னேன்ல்ல ஸ்டால் கிடைச்சிடும்ன்னு கிடைச்சிடுச்சி எடி ஃப்ரோகிராம் கன்பார்ம் ஆயிடிச்சி.

    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  47. கடைகளில் இன்னும் பாண்ட் கிடைக்கவில்லையே சார்?

    ReplyDelete
    Replies
    1. வெகுஜன ஊடகங்களுக்கான விற்பனை வாய்ப்புகள் நமக்கு கிடையாதென்பதால் - குமுதம், விகடன் போல பட்டி, தொட்டியெல்லாம் நம் இதழினை எதிர்பார்க்க இயலாது தான் ! But still முயற்சித்து வருகிறோம் சார் ! நீங்களிருப்பது எந்த ஊரில் ?

      Delete
    2. நன்றி சார்.என் ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் சார்.முகவர் ஜெகன் அண்ணா அவர்கள் பாண்ட் வந்துவிட்டதாக இப்போது தான் தெரிவித்தார்கள் .நன்றி சார்.

      Delete
  48. மகிழ்ச்சி டபுள் ஸ்டால் டபுள் கொண்டாட்டம்

    ReplyDelete
  49. ஒரு கோடிக்கு ஒரே ஒரு கேடி...

    ஒரு ஊர்ல ஒரு பணக்காரர் இருந்தார்.அவருக்கு வயசாகிட்டதால தனக்கு அப்புறம் தன்னோட சொத்துக்களை பத்திரமா பாத்துக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சார்.காரணம் அவருக்கு புள்ளகுட்டிங்க இல்லை.ஒரே ஒரு மருமகன் மட்டுமே சொந்தம்னு சொல்லிக்க இருந்தாலும் அவனோ சொல்லிக்கிற மாதிரி இல்ல.புட்டி கூடவே குட்டீன்னு இருந்தான்.
    யோசிச்சாரு பெரியவரு.குட்டி-புட்டி இல்லாம சுத்தபத்தமா குடித்தனமா இருந்தாதான் சொத்து சுகம்ன்னு -அதுவும் அவரு போய் சேர்றதுக்கு முன்னாடியேன்ற கண்டிசன் கெத்தா உயில் போட்டுட்டாரு.
    நம்ம மருமகப் புள்ளாண்டான் வேற வழி தெரியாம , நம்ம கணைஷ் வசந்த்த் ஜோடிய அக்ரிமெண்ட் போட கூப்பிடுகிறான்.
    7*24 சதா பிசியா!!!இருக்குற நம்ம விச்சு கிச்சு ஜோடி அதைக்கேட்டு அங்கே போய் பார்த்தாலோ, மருமகனோட நெலமை சொல்லிக்கிற மாதிரி இல்ல.

    கைல பணமும் தரலை.வேற வழி இல்லாம தலைவிதியேன்னு ஓத்துக்கிட்டு,அவன காயபோட்டு
    சுத்தப்படுத்தி மனுசனாக்குறாங்க.

    பொண்டாட்டி சகிதமா-யோக்கியதாம்ச குடும்பஸ்தனா பெரியவர்ட்ட போயி நின்னா நல்லா இருக்கும்னு இராஜ தந்திர யோசன உதிக்குது .
    நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் கட்டிக்கிட செலக்ட் பண்ணிட்டு வெற்றியோடு வான்னு அனுப்புறாங்க.

    அங்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.
    நம்ம மருமகன் போய் மருமகளோட வர்றான் டக்கரா.
    டக்கர் மருமகள் யார்ரான்னு பாருங்க- ஆல்டைம் ரௌடி அல்கஃபானோட மருமகள்-அதுவும் அல்கஃபானுக்கு தெரியாமலேயே.
    தேடிக்கொண்டு வந்து மிரட்டும் , அல்கஃபானிடம் பணக்காரின் சொத்து விவகாரத்தை போட்டு உடைக்கிறார்கள் துப்பறியும் ஜோடி - மருமகப்புள்ளையாண்டான் படு அயோக்கியமான குடிகார் என்பதை சொல்லாமல்
    விட்டு விடுகிறார்கள்.
    நம்ம அல்கஃபானோட கம்யூட்டர் சர்வர் மூளை உடனே 12கிகாபைட்ஸ் ராம் வேகத்தில் வேலை செய்கிறது.பத்தாயிரம் டாலர் கொடுத்து ஒத்துங்க-ஒத்துக்கங்க என்று மிரட்டி விரட்டிவிடுகிறான்.
    வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, மருமகனின் சுயரூபம் வெளியானவுடன், தன் மருமகளும் வெறுத்து வெளியேறிய நிலையில், வேறு வழி தெரியாமல் டேவ் ஜோடியிடம் சரணாகதியாகிறான் அல்கஃபான்.

    படுபாடுபட்டு- தண்ணி குடிக்காத குறையாக மருமகனை திருத்துகின்றனர் மூவேந்தர்களும்.
    இறுதியாக உன் மருமகளை அழைத்து வா என்று சொல்லும் நெட்டேகுட்டையரின் சொல்லுக்கிணங்கி , அல்லக்கை களை அனுப்பி அல்லக்கைகள் வராமல் போகவே தோற்கிறான் அல்கஃபான்.துப்பறியும் மன்னர்கள் கிளம்பி போய் நைசாக பேசி, காரியம் சாதித்து திரும்பும் வேளையில், காரியம் செய்கிற மாதிரி ஆகிவிடுகிறது- பணக்காரர் பரலோகப் பிராப்தி அடைந்துவிடுகிறார்.
    வழியில் ஒரு ஹோட்டல் ஒன்றில் அல்கஃபானின் மருமகள் - மருமகன் மீது உண்மையான காதலில் இருப்பதை அறிந்து கொண்டு - அவளை அங்கேயே இருத்தி வைத்துவிட்டு - அவள்மேல் பித்தனாக இருக்கும்
    மருமகனிடம் அவள் அந்த ஹோட்டலில் காத்திருப்பதை சொல்லி நைசாக கிளப்பிவிடீடு விடுகின்றனர்.
    இலவுகாத்த கிளியாக இருக்கும் அல்கஃபானிடம் அவன் மருமகள் ஓடிப்போய் விட்டதாக கயிறுதிரித்துவிட்டு நடையைக் கட்டுகிறார்கள்.
    அல்லக்கைகளும் இல்லாமல் கையறுந்த நிலையில் இருக்கும் அல்கஃபான் - டங்காமாதிரி ஊதாரியாகி குடிக்க ஆரம்பித்து மருமகனின் இடத்தை ஃபில் அஃப் த ஃபிளாங்ஸ் பண்ணுகிறான்.

    J


    ReplyDelete
    Replies
    1. யே.. யப்பா!! முழுக்கதையும் ஒரே மூச்சுல!!!

      Delete
    2. இல்லையே.. நடுவுல ஒரு நாலு பக்கத்தை விட்டுட்டாரே..!

      Delete
    3. J! சிறப்பு!!!

      இப்படி முழுசா கதைய எழுதிட்டா படிக்காதவங்க பாடு கஷ்டம்..

      அப்படி எழுதனும்னா ஸ்பாயிலர் வார்னிங் கொடுத்துடுங்க..

      கலீல் ஒரு முகவராய் இதைப் பற்றி வருத்தப்பட்டு எழுதியிருந்தார்..

      இந்த நேரத்தில ஹைலைட்ஸ் மட்டும் - கதையை லேசாக - தொட்டும் தொடாமலும் - சொன்னால் சிறப்பு..

      இல்லாட்டி அறிவரசு ரவி சொல்ற மாதிரி -இன்டர்வல். - வரைக்கும் சொல்லிட்டு க்ளைமாக்ஸை சொல்லாம விட்டுறலாம்..

      இது தளத்தில் பலமுறை சொல்லப்பட்டதுதான்...மறுக்கா ஒருவாட்டி..

      Delete
    4. குட் சச்சச்சன்!

      Delete
    5. நன்றி.

      அஃப் கோர்ஸ் நீங்கள் சொல்வது சரி.ஆனால் கதையை முழுமையாக படித்தவர்களுக்கு மட்டுமே , நான் எழுதிய திரைக்கதை புரியுமென்றே நினைக்கிறேன்...

      எனிஹவ் ஐ வில் ஸ்டிக்ஆன் டு யுவர் ரிக்வெஸ்ட்ஸ் அன்டு சஜ்ஜசன்ஸ்...

      தேங்க்ஸ் அகெய்ன்...

      Delete
    6. இது வரை நிறைய ரிவியூஸ் இந்த கார்ர்ர்ட்ட்டூன் காமிக்ஸுக்குத் தான் ஆசிரியரே ...
      கவனித்திருப்பீர்கள் நிச்சயமாக...
      கார்ட்டூன் கோட்டாவை கூட்ட இது நிச்சயமாக கை கொடுக்கும்...

      Delete
    7. கதவைத் தட்டும் கோ(கே)டி- 9.99/10

      Delete
    8. ஆமா. J..இம்மாத்த்தின் பெஸ்ட் எனக்குமே ..மேக் & ஜாக்தான்..

      செம எண்டர்டெயின்மெண்ட்.. பின்னிரவில் படித்த போதும் களிப்பினால் களைப்பை நீக்கிய இதழ்..

      Delete
    9. அலுவல்முடித்து சோர்வாக - போய் இரவு உணவுமுடித்தபின் , ரிலாக்ஸ்டாக -ஆட்டோமேட்டிக்காக கையிலெடுத்தால், கோடிகள் குவித்து கொடுத்தாலும் கேடிகள் திருந்தப்போவதில்லை என்பதை நகைப்போடு கையாண்டிருந்தவிதம் அருமை.கதாசிரியரின் நுணுக்கமே பிரதானம்.

      புத்தாண்டிற்கு ஏற்ற புன்னகை பூ...

      ரிஃப்ரெசிங்....உண்மையிலேயே...

      Delete
    10. ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி...

      எல்லா hatsஐயும் hats off செய்துவிட்ட hats...

      Delete
    11. உண்மை J அண்ணா அருமையான அழகான விமர்சனம். சும்மா பின்னிடீங்க

      Delete
    12. ///இது வரை நிறைய ரிவியூஸ் இந்த கார்ர்ர்ட்ட்டூன் காமிக்ஸுக்குத் தான் ஆசிரியரே ...
      கவனித்திருப்பீர்கள் நிச்சயமாக...
      கார்ட்டூன் கோட்டாவை கூட்ட இது நிச்சயமாக கை கொடுக்கும்...///

      கூட்டல் குறி ஒன்று

      Delete
  50. கதவை தட்டும் கோ(கே)டி..9.5/10

    ஆறாது சினம்..9/10

    ப.பூ.படலம்.. 8.75/10

    இருளின் மைந்தர்கள்..9/10
    ( மறுவாசிப்பு)..(six points for sheer size.

    Fantastic reading experience.. Kudos to editor for selecting this story...i have no aversion for fantasy elements in a story)

    ReplyDelete
    Replies
    1. ///ப.பூ.படலம்.. 8.75/10///

      1.25 மார்க் ஏன் குறைச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் செனா..!:-)

      Delete
    2. ///ப.பூ.படலம்.. 8.75/10///

      நான் கூட ஒரு மைக்ரோ செகண்ட்ல பூம்பூம் படலம்னு படிச்சிட்டேன்..!😊😊😊

      Delete
    3. செனா சார் இந்த வருட ஆரம்பத்திலேயே நிறைய மதிப்பெண்கள் பெற்று விட்டோம் போல இருக்கிறதே.

      Delete
    4. //1.25 மார்க் ஏன் குறைச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் செனா..!:-)//

      புக்சைஸ்..2/2

      அன்டைன்..2/2

      சூஸி..2/2

      மிஸ் கிரிஸ்டன் லாண்ட்வாக்..2/2

      பாண்ட்..0.25/2..பின்னே? பாண்டை ஸ்விம்சூட்ல பாக்கவா புக் வாங்கினேன்?

      :D

      Delete
    5. ///பாண்ட்..0.25/2..பின்னே? பாண்டை ஸ்விம்சூட்ல பாக்கவா புக் வாங்கினேன்?///

      ஹிஹி.. அதே அதே..!

      நானும் அதுக்குதான் ஒரு மார்க் குறைச்சிருந்தேன்..! நீங்க என்னைவிட கோவக்காரர் போலிருக்கு செனா..!:-)

      Delete
  51. Editor Sir,

    I already got the Quote for All Subscription from Feb 2020 to Dec 2020 (I bought the Jan 2020 Books separetly). Please give me your Bank Details to send the money for Subscription Sir.

    ReplyDelete
    Replies
    1. அலுவலகத்துக்கே மெயில் அனுப்புங்கள் சார் ; விபரங்களை அனுப்புவார்கள் !

      Delete
  52. Replies
    1. சனியன்று மாலை தேவலாம் சத்யா !

      Delete
  53. இருளின் மைந்தர்கள் பாகம் 1&2 படித்து முடித்தாகிவிட்டது. எம் ஜி ஆரை ஹீரோவாக நடிக்க
    வைத்து விட்டலாச்சார்யா எடுத்த படத்தை பார்த்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது. இரண்டு பாகங்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கலாம். அட்டைப்படம், கலரிங் அருமை. மேக்ஸி சைசுக்கு ஏற்ற கதை.

    ReplyDelete
  54. டெக்ஸ் இம்முறை லாஸ்ட். காரணம் டெக்ஸ் சுமார் இல்லை. மற்றவை செம சூப்பர். அதிலும்இரட்டை வேட்டையர்கள் மேக் அண்ட் ஜாக் கலக்கல். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்.. கவனிச்சீங்களா..? அதே சாயல்!! இன்னொரு 'வாசகர் ஸ்பெஷலுக்கும்' ஆள் ரெடியாகிட்ட மாதிரி இருக்கே..!! :D

      Delete
  55. சந்தா, மும்மூர்த்திகள் என்ற ஒரே டெம்ப்லேட்டில் சுழன்றதாலேயே வாசகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. 2.0வில் ஜேம்ஸ் பாண்டியைமட்டும் நம்பியிராமல் செருப்பு கிழவி மண்டே ராக் ஸாரி ரிப்கிர்பி மாண்ட்ரேக் போன்றோரை களமிறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. சார்...சத்தியமாய் என்ன சொல்ல வருகிறீர்களென்று புரியவில்லை ! மும்மூர்த்திகளை வூட்டுக்கு அனுப்பித் தான் ஆண்டுகள் 2 ஆகப் போகின்றனவே ; இன்றைய சூழலுக்கும் அவர்கட்கும் என்ன சம்பந்தம் ?

      Delete
    2. ஜேம்ஸ் பாண்டி..:-)


      மண்டே ராக்...:-))

      செருப்பு கிழவி..:-))))

      Delete
    3. ராஜசேகர் ஜி... ஸ்டீல்க்ளா'கூட ஃபோன்ல ஏதாவது பேசுனீங்களா?!! :)

      Delete
    4. மொழிப்போர் தியாகச் செம்மல்

      Delete
  56. ராஜசேகரன் சார். மதியம் KTVல் எங்க வீட்டு பிள்ளை படம் பார்த்த பாதிப்போ.

    ReplyDelete
  57. எ. வீ பிள்ளை நாகேஷ் மாதிரியே தமிழில விளையாடுறீங்க.

    ReplyDelete
    Replies
    1. Padmanaban சார் உங்கள் டைமிங் சென்ஸ் டாப் க்ளாஸ். :D

      Delete
    2. 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் பார்த்து ரொம்ப வருசங்களாச்சுன்றதுனால சரியா விளங்கலை எனக்கு! :(

      Delete
    3. உடனடியாப் பாருங்க குருநாயரே ..!
      நானெல்லாம் நூறு முறையாவது பார்த்திருப்பேன்.!

      முதல் காரணம் நாகேஷ் + தங்கவேலு காமெடி.
      ரெண்டாவது காரணம் பாடல்கள் + இசை
      மூன்றாவது காரணம் சலிக்காத கதையோட்டம் + நடித்திருக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு நடித்திருக்கும் எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், ரங்காராவ், மாதவி, ரத்னா போன்றோரின் சிறப்பான பங்களிப்பு.

      Delete
    4. பார்க்கறேன் கிட் & பத்து சார்!

      பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட்டும், படிக்கவேண்டிய புத்தகங்களின் லிஸ்ட்டும் ரொம்பவே பெரிசு!!

      ஹூம்.. ரிடையர்மெண்டுக்கு அப்புறம் தான் இதெல்லாம் சாத்தியமாகும்னு நினைக்கிறேன்!

      Delete
    5. அருமையான திரைக்கதை. மூன்று மணி நேரம் போவதே தெரியாது. இரண்டு எம் ஜி ஆர்.களின் ஹோட்டல் காமெடி சூப்பராக இருக்கும்.

      Delete
  58. அதில் நாகேஷ் கொலையப்பன். மலையப்பன், ரகளை, மகளை, அப்டின்னு தமிழை கடிச்சு குதறுவார். அது போல..

    ReplyDelete
    Replies
    1. மலையப்பன் உங்க ஜிப்பாவா? அவருக்கு நான் ஒரு ஸ்வெட்டர் கொண்டு வந்திருக்கேன்.!

      Delete
    2. இங்கே யாரு டேமேஜர்..ச்சே..மேனேஜர்.

      அவன் காலை ஒடி..ச்சீ..புடி..

      இன்றும் விலா நோக சிரிக்க வைக்கும் காமெடி.

      Delete
  59. ஆறாது சினம்..

    36 பக்கங்களை கடந்திருக்கிறேன்..!

    செம்ம களம் .. அருமையா விறுவிறுப்பா போய்ட்டு இருக்கு..!

    ஸெலியா நார்ட்டன் கதையில் முக்கிய பங்கு வகிப்பாங்க போலத் தெரியுது... நல்ல விசயம் நல்ல விசயம்..!


    ட்ராயிங்கும், கலரிங்கும் சும்மா பின்னுது..!
    அதைச் சொல்லிட்டு கதையைத் தொடரலாமேன்னு வந்தேன்.!

    ReplyDelete
  60. பட்டாம்பூச்சி படலம்! அட்டை படம் ரோஜர் மூர் பாண்ட்'டாக நடித்த Spy who loved Me பட போஸ்டரின் உட்டாலக்கடி. நான் பார்த்த முதல் பாண்ட் படம் என்பதாலும், கடலூக்கடியுலும் பயணிக்கும் கார் மறக்க இயலாதது.
    கதையில் இருக்கும் பாண்ட் சித்திரை ஸடைலே அட்டையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    ரஜினி பில்லா பட DVDல் அஜித் பில்லா போஸ்டர் ஒட்டிய பீலிங்.

    ReplyDelete
  61. ஆசானின் புதிய பதிவு ரெடி நண்பர்களே....

    ReplyDelete
  62. சென்னை புத்தக விழாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம் சார்...

    ReplyDelete
  63. வணக்கம்,
    எப்பொழுதும் ஆசிரியர் புத்தக விழாவின் இறுதி விடுமுறை நாளில் தானே வருவார் என்று, 18Jan2020 அன்று குடும்பத்துடன் வர திட்டமிட்டுள்ளேன். அனால் என் மகள் (நன்முகை கோபி, வயது 5) ஆசிரியரை பார்க்க முடியாது போலுள்ளது.
    சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் என்பதால், 2016 ஆண்டிற்கு பிறகு புத்தக விழாவிற்கு வரவே முடியவில்லை.
    இந்த வருடம்/மாதம் கட்டாயம் சந்திக்கலாம் நண்பர்களே

    நன்றி
    கோபி

    ReplyDelete
  64. Dear Editor,

    சனிக்கிழமை தர்பார் பாக்கணுமே ... கண்காட்சியில் எத்தனை நேரம் இருப்பீர்கள் சார் ?

    ReplyDelete