Powered By Blogger

Sunday, December 22, 2019

ஒரு வலைப்பயணம் !!

நண்பர்களே,
வணக்கம். வருஷ இறுதி கூப்பிடு தொலைவில் நின்றிருக்க, உலகமே விமர்சையாய்க் கொண்டாடிடும் கிருஸ்துமஸ் பண்டிகை கூட தொட்டுவிடும் அண்மையில் !! 'ரைட்டு...ஜனவரியின் இதழ்களின் அறிமுகத்தைக் கொண்டே இந்த வாரத்தை ஒட்டிடலாமா ? அல்லது "ஆர்ச்சி" என்ற நொடியில் அயர்ச்சியைத் தூக்கிக் கடாசிவிட்டு 300+  பின்னூட்டங்களைப் போட்டுப் பின்னியெடுத்த உங்களின் "பழமைக் காதலை " சிலாகிக்கலாமா ?' என்ற சிந்தனையில் மூழ்கிக் கிடந்ததொரு  சோம்பலான தருணத்தில் இந்த வலைப்பக்கத்தின் flashback பக்கமாய் மனசும், ப்ரவுசரும் பயணித்தன !! கைக்குச் சிக்கும் முந்தைய பதிவுகளுக்குள் கோவை ஸ்டீல் க்ளாவின் வரிகளைப் போலவே ரைட்லேயும் , லெப்ட்லேயும்  ரவுண்ட் அடித்த போது தான் உரைத்தது -  2011-ன் இதே போன்றதொரு டிசம்பர்  தான் இந்த blog துளிர்விட்டுள்ளதென்பது ! விளையாட்டாய்த்  துவங்கிய நமது மறுவருகையும்  சரி ; அதனை சல்லிசானதொரு வழிமுறையில் உங்களுக்குத் தெரிவிக்க நான் முனைந்ததுமே சரி - சரியாக 96 மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள் என்பதை திரும்பிப் பார்க்கும் இந்த நொடியில் நம்பச் சிரமமாகவே உள்ளது ! So ஜனவரியின் இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை பாய விடும் முன்பாய் கொஞ்சமாய் இந்த 96 மாதங்களது "வலை நினைவுகளோடு" ஒரு வாடகைச் சைக்கிள் சவாரியினைச் செய்து கொளக்கிறேனே guys ? (ஆரம்பிச்சுட்டான்யா ; ஆரம்பிச்சுட்டான்யா !!)

எல்லாமே ஆரம்பித்தது ஒரு சிலுசிலுப்பான சனியன்று தான் ! 2011 கிருஸ்துமஸுக்கு முந்தைய அந்த மதியப் பொழுதில் ஜூனியரின் சிலபல நாட்களது நச்சரிப்புக்கு ஒரு சமாதானமாய் இருக்கட்டுமே என்று நாலைந்து வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் டைப் செய்து முதல் பதிவாய்ப் போட்டது ; 'என்னமோ சொல்றே ; போட்டுப்புட்டேன்' என்று வெளியே காட்டிக்கொண்டாலும் ஓசையின்றி நிமிஷத்துக்கு மூணுவாட்டி யாரேனும் கவனித்துள்ளார்களா என்று எட்டி, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது  ;   ஊஹூம்...ஒரு மணி நேரமாகியும்  no ஈ ; no காக்காய் என்றான பின்னே - 'பாத்தியா ? பாத்தியா ? இதுலாம் நமக்கு செட் ஆகாதுன்னு சொன்னேனிலே ?' என்று ஏமாற்றத்தை ஜூனியரிடம் பகிர்ந்துவிட்டு மூட்டையைக் கட்டி விட்டு சாப்பிடக் கிளம்பியது என்று அந்தப் பொழுதின் நிகழ்வுகள் எல்லாமே  இன்னமும் நினைவில் உள்ளன  ! மதியம், மாலை , இரவு என்று அந்த சனிக்கிழமையும் ஓட்டமெடுத்தது தான் மிச்சம் ; பெருசாய்ப் பருப்பு ஏதும் வேகவில்லை என்றான போது காலத்தில் கட்டையைக் கிடத்தினேன் ! அப்போதெல்லாம் சாமக் கோடாங்கி உத்தியோகம் தான் கிடையாதல்லவா ? So சாவகாசமாய் ஞாயிறு காலையில் எழுந்து பார்த்த போது 4 பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன ! "ஹைய்யோ ..தெய்வமே... மானம் கப்பலேறாது காப்பாற்றியதற்கு நன்றி !!" என்றபடிக்கு இங்கிலீபீஷில் முதன்முதலாய்ப் பதில் போட முனைந்ததுமே நினைவில் நிற்கிறது ! ஐந்தாறு பின்னூட்டங்களைக் கண்ட குஷியில் அந்த கிருஸ்துமஸ் பகலில் மேற்கொண்டு 2 பதிவுகளைப் போட்டுத்  தாக்கிய அந்த ரணகளத்தை இன்றைக்கு நினைவுகூர்ந்திடும் போது தரையில் புரண்டு சிரிக்காத குறை தான் !! மேற்கொண்டும் கொஞ்சூண்டு பின்னூட்டங்கள் வரவேற்பாகவும், பகடியாகவும் அன்றைய பகலில் பதிவான  போது, நிறைய யோசித்து ராவினில் தமிழில் பதிலிட ஜூனியரையே நாட வேண்டியிருந்தது - நேக்கு தமிழ் டைப்பிங் தெரியாதென்பதால் ! நான் சொல்லச் சொல்ல  ஜூனியர் டைப்படிக்க ஒரு மாதிரியாய் முக்கால் மணி நேரத்திற்குப் பிற்பாடு ஓரளவுக்கு நீளமானதொரு பின்னூட்டம் ரெடியாகியிருந்தது  ! அதைப் போட்ட கையோடு ஒரு இருபது தபாவாவது  வாசித்திருப்பேன் - பிழை ஏதும் கண்ணில் தென்படுகிறதாவென்று தேடிட !! அதற்குள்ளாக மூன்று பதிவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் வருகைகள் பதிவாகியிருக்க - "நாங்க தான் சொன்னோமிலே !!" என்ற ரீதியில் ஜூனியர் முகத்தில் புன்னகை !  தமிழில் டைப்படிக்க நானாய் எப்போது பழகினேன் என்பது நினைவில் இல்லை ; ஆனால் சீக்கிரமே கற்றுக்கொண்டேன் என்றே ஞாபகம் ! ஏதேதோ தலைக்குள் தோன்றிய சமாச்சாரங்களையெல்லாம் போட்டுத் தாக்கிட - ராக்கூத்துப் படலங்கள் துவக்கம் கண்ட முதல் தருணம் அதுவே !! அன்றைக்கு அகலமாய்த் திறந்த ஓட்டைவாய் இன்றுவரைக்கும் சலசலத்து வருகிறது - பதிவு ; உபபதிவு என்று !

சிறுகச் சிறுக ஏதேதோ எழுத்தில் பரிமாறிட, அதற்கு மத்தியில் நமது Comeback ஸ்பெஷல் இதழ் வெளியாகி அட்டகாச வரவேற்பினைப் பெற்றிருக்க - பொங்கல் 2012 க்கு "உஷார்...நீளமான பதிவு" என்று 30 வரிகளில் ஒரு பதிவைப் போட்டுத் தாக்கும் அளவுக்குத் தேறியிருந்தேன் !! இன்றைக்குப் படித்தால் இதனை உபபதிவு கிரேடில் கூடச் சேர்த்துக்க மாட்டீர்கள் என்றாலும் - அன்றைக்கு இதெல்லாம் மெகா சமாச்சாரங்கள் !! படித்துப் பாருங்களேன் :
=================================================================
உஷார்..சற்றே நீளமானதொரு பதிவு !!

நண்பர்களே,

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு நமது காமிக்ஸ்களை display செய்திட முடிவெடுத்த போது பெரியதொரு எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது..... விற்பனை ஆகிறதோ இல்லியோ, கொஞ்சமாவது ஒரு exposure கிடைக்குமே என்ற நம்பிக்கை மட்டுமே என்னுள்.அதுவும் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டால் பகிர்ந்து கொள்வதால், எவ்வளவு பிரதிகள் அங்கே எடுத்துச் செல்வது...எவ்வளவு விற்பனை ஆகும் என்றெல்லாம் சுத்தமாய் ஒரு கணக்கும் போடத் தெரியவில்லை என்பதே நிஜம்...!

முதல் நாள் 4600 ரூபாய் collection என்ற போது ,'சரி ...இது தான் ஒரு விற்பனை அளவுகோல் போல' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்.........

தொடர்ந்திட்ட நாட்களில் நீங்கள் காட்டிட்ட வரவேற்பு எங்களது wildest imaginationக்கும் அப்பாற்பட்டது !! அப்படியொரு ஆத்மார்த்தமான ; உற்சாகமான, துள்ளலான வரவேற்பு !

ஒவ்வொரு இரவும் நமது பணியாளர்கள் சொல்லும் 'கல்லாப்பெட்டி கணக்கை' விட, நான் மிக ஆவலாய் கேட்டிடுவது அன்றைய தினம் வந்திட்ட வாசக நண்பர்களின் பட்டியலை ...அவர்களது எண்ணங்களைப் பற்றியே !!

நம்மிடையே இருப்பது 'ஒரு பதிப்பகம்.....அதன் வாசகர்கள்' என்ற சராசரி உறவுச் சங்கிலி அல்ல என்பது எனக்கு முன்பே தெரியும் தான்..!ஆனால் கடந்த 10 நாட்களாய், அகன்ற விழிகளோடு நாங்கள் அனுபவித்து வரும் வெறித்தனமான இந்த அன்பு மழையை விவரித்திட, நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !

"Thanks everybody " என்று கூலாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நான் கிளம்பி விட்டால், 'ஆயுசுக்கும் தூர்தர்ஷன் டப்பிங் சீரியல்களைப் பார்க்கக் கடவது' என்ற தண்டனையை விட பாடாவதியான தண்டனைக்கு நான் தகுதியானவன் ஆகிடுவேன்...!!

So எங்களது நன்றிகளை வார்த்தைகளில் மட்டும் அல்லாது, செயலிலும்  காட்டிடுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி...!!

இந்த 2012 ஐ நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு மறக்க முடியா phase ஆக செய்திட என் மண்டையில் மிச்சம் மீதி இருக்கும் சொற்பமான கேசத்தை பிய்த்துக் கொண்டு இருக்கிறேன்! நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !  

 பின்குறிப்பு : 

புத்தகக் கண்காட்சி முடிவடைய இன்னும் 3  நாட்கள் உள்ள போதிலும் இந்தப் பகுதியை இப்போதே எழுதிடும் அவசியமென்ன என்று எண்ணிடலாம்...but மனதில் பட்டதை அப்போதே எழுத்தாக்கிப் பார்ப்பதும் ஒரு சுகமான திருப்தி தானே ! THANKS GUYS  .....THANKS FOR EVERYTHING !!!   பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்குறிப்பு -2 :


இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில் ! 
=================================================================

சிறுகச் சிறுக நண்பர் வட்டம் அதிகரிக்க, சிறுகச் சிறுக நம் பதிவுகளின் நீளங்களும் அதிகரிக்க, சிறுகச் சிறுக இங்கு நான் செலவிடத் துவங்கிய அவகாசங்களும் அதிகரிக்க ; சிறுகச் சிறுக உங்களின் பின்னூட்ட அலசல்களும் வீரியம் பிடிக்க, ஜாலியாக வண்டி ஓடிய அந்தத் துவக்க நாட்கள் இன்னமும் fresh in the mind ! எல்லோருக்கும் ; எல்லாக் கருத்துக்களுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டுமென்ற குடைச்சல் மண்டைக்குள் தீவிரமாய்க் குடியிருந்த நாட்களவை ! மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ, தாண்டிச் செல்லும் முதிர்ச்சியோ வீசம்படி எவ்வளவு ? என்று கேட்ட நாட்களுமே அவை ! So சிறுகச் சிறுக பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கைகளுமே அதிகமாகி வந்தது தவிர்க்க இயலா நிகழ்வுகளாகிப் போயின ! ஆனால் "காமிக்ஸ் நேசம்" எனும் சகலரோக சர்வநிவாரணி கையில் இருக்கப் போய் - வாங்கிடும் சாத்துக்களின் வடுக்கள் நொடியில் மாயமாகிடும் அதிசயமும் நிகழ்ந்தது ! குட்டியும், படுக்குட்டியுமாய் ஒரு 30 பதிவுகளைத் தள்ளுபடி செய்துவிட்டுப் பார்த்தால் இந்த 96 மாதப் பயணத்தினில் சுமார் 550 + பதிவுகள் ; அவற்றிற்கான உங்களின் பல்லாயிரப் பின்னூட்டங்கள் என்று ஏதேதோ ரகளைகளை அரங்கேற்றியுள்ளோம் என்பது அப்பட்டம் ! அதிலும் NBS ; LMS ; லயன் 250 ; மின்னும் மரணம் ; இரத்தப் படலம் ; டைனமைட் ஸ்பெஷல் ; என் பெயர் டைகர் ; ஈரோட்டில் இத்தாலி  போன்ற மெகா இதழ்களின் வெளியீட்டு வேளைகளிலும்  ; சென்னைப் புத்தக விழாக்கள் ; ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களிலும்  இங்கே நாம் நடித்துள்ள லூட்டிகள் one for the ages !! இன்றளவில் 'தல'...'தளபதி'...திருவிழா..' என்ற LMS  ரிலீஸ் சார்ந்த பதிவே பார்வைகளின் எண்ணிக்கைகளில் முதலிடம் பெற்று நிற்கிறது ! (http://lion-muthucomics.blogspot.com/2014/08/blog-post_2.html)

வண்டி வண்டியாய் நினைவுகள் ; வண்டி வண்டியாய் அனுபவங்கள் என்று வழங்கியுள்ள இந்தப் பதிவுப் பக்கத்தினில் இந்தாண்டு அக்டோபரில் ஒரே பதிவிற்கு ஆயிரம்+ பின்னூட்டங்கள் போட்டுத் தாக்கி நீங்கள் அடித்த கூத்துக்கள் மறக்கவியலா தருணங்களில் இன்னொன்று ! Moreso because அந்த கனடா பயணப் பதிவினை (பணியும்..பனியும்..!" : http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_34.html#comment-form ) எழுதிடும் போது ஆந்தை விழியனின் ஆரோக்கியம் சொல்லிக்கொள்ளும் விதமாய் இருந்திருக்கவில்லை ! And கையில் லேப்டாப்பும் இல்லாது வெளியூரில் சிகிச்சையின் பொருட்டு சிக்கிக் கிடந்தவனுக்கு அந்தப் பதிவை எழுதிட எப்போதையும் விட இருமடங்கு நேரம் எடுத்தது !! கவிழ்ந்தடித்துப் படுத்துக் கிடந்த போதிலும் எழுதிடத் துவங்கியது ஒரு சுவாரஸ்யமான பயணம் பற்றியது என்பதாலும், அன்றைக்கு எழுத்தினில் flow ஒரு மார்க்கமாய் அமைந்து போனதாலும்,  நீட்டி முழக்காது, பதிவினை சுருக்கமாய் முடிக்கவும் மனசு ஒப்பவில்லை  ! ஆனது ஆச்சு...உருப்படியாய் எழுதிடுவோமென்ற வைராக்கியத்தில் பேனா பிடித்தால் - பக்கங்கள் எகிறிக் கொண்டே சென்றன - மிரட்சியூட்டும் வேகத்தில் !! இந்தா முடிந்து விடும் ; அந்தா முடிந்து விடுமென்று பார்த்தால், நீள்கிறது - நீண்டு கொண்டே செல்கிறது - அசாத்தியமாய் ! நெருக்கமான கோடுகள் போட்ட A 4 பக்கங்களில் சுத்தமாய் 19 பக்கங்களுக்கோ ; 20 பக்கங்களுக்கோ ஓடிய அந்தப் பதிவை படுத்துக் கொண்டே எழுதி ஒரு வழியாய் முடித்து ஜூனியரைக் கொண்டு சாமத்தில் போட்டோ எடுக்கச் செய்து வாட்சப்பில் சிவகாசிக்கு அனுப்பி, அதனை டைப்படித்து வாங்கி, செல்போனிலேயே பிழைத்திருத்தங்கள் போட்டு upload செய்வதற்குள் சட்னியாகிப் போயிருந்தேன் ! எப்போதுமே இதுபோன்ற பணிகளை கம்பியூட்டர்களில் மட்டுமே செய்து பழகியவனுக்கு போனில் இவற்றைச் செய்து முடிப்பதற்குள் பிராணன் போகாத குறைதான் ! மறுநாள் காலையில் பதிவைப் படித்த கையோடு நீங்கள் ஆரவாரமான வரவேற்பினைத் தந்திருந்த போது நோவெடுத்த விரல்கள் தாளமிடத் துவங்கின ஜாலியாய் ! And பாதியில் நின்ற அந்தப் பதிவின் follow up ஐ எதிர்பார்த்து நீங்கள் ரணகளம் செய்து கொண்டிருந்த ராவினில் ஆயுதபூஜை விடுமுறைகளின் பொருட்டு சிவகாசியில் 2 நாட்களுக்கு ஆளில்லை என்பதால் டைப்படிக்க  வழியின்றிப் போனது ! So ஊருக்கு நான் திரும்பிய பிற்பாடே அந்த இறுதி பாகத்தை 4 நாள் இடைவெளிக்குப் பின்பாய் உங்கள் கண்களில் காட்ட சாத்தியமானது ! அந்தப் பதிவினை எழுதும் போதுமே வலிக்குப் பஞ்சமிருக்கவில்லை தான் என்றாலும், பூசி மெழுகி ஒப்பேற்றப் பிடிக்கவில்லை ! ஆரம்பித்ததை எப்படியேனும் உருப்படியாய் முடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகத்தில் இன்னொரு ஆஞ்சநேய வால்ப் பதிவை மாங்கு மாங்கென்று எழுதிய அனுபவம் இப்போதைக்குள் மறவாது ! அந்த ரகளைகள் அரங்கேறிய 2 வாரங்களுக்குள்ளாகவே 2020-ன் அட்டவணைப் பதிவுமே due என்ற போது அங்கொரு 27 பக்கங்களை எழுதித் தள்ளி இந்த அக்டோபர் 2019-ஐ ஒரு "பேப்பர் துவம்ச மாதம்" ஆக்கியது எனது இந்தாண்டின் நினைவலைகளுள் ஒரு முக்கிய பங்கு வகித்திடும் !! Phew !!

வயதாக வயதாக நோவுகள் கைகோர்த்துக் கொள்ளும் நாட்கள் அதிகமாவதெல்லாம் இயல்பே என்பதால் அன்றைக்கே இதையெல்லாம் பதிவினில் ஒப்பித்து, உங்களது அன்றைய விடுமுறைப் பொழுதுகளை நொய் நொய்யென்று ஆக்கிட மனசு கேட்கவில்லை ! இன்றைக்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் தான் - ஆனால் இந்தத் 96 மாதப் பதிவுப் பயணத்தினில் எனது சந்தோஷங்கள் ; சங்கடங்கள் ; உச்சங்கள் ; பாதாளங்கள் ; ஏமாற்றங்கள் ; ஏற்றங்கள் என சகலத்தையும் பகிர்ந்திட முனைந்துள்ளேன் !  என்றைக்கேனும் இந்தப் பதிவுகளை எல்லாம் ஓய்வாய் வாசிக்கும் தருணம் புலரும் போது ஒரு டயரியைப் போல எனது பொழுதுகளை நினைவுகூர்ந்திட சாத்தியப்படும் என்பது எனது நம்பிக்கை ! So அந்த "ஆயிரம் பின்னூட்ட அதிசய ராப்பொழுது" சார்ந்த நினைவுகளோடு எனது backend அனுபவத்தினையும் இணைத்துள்ளேன் ! Nothing more than that guys ! பதிவுகளுடன் ஆன இந்தப் பயணத்தினை நினைவுகூர்ந்திடும் பொருட்டு random ஆக முந்தைய பதிவுகளுக்குள் புகுந்திடும் போது ஏராளமான சந்தோஷ நினைவுகள் துள்ளிக் குதிக்கின்றன ! நண்பர்கள் டிசைன் செய்த அட்டைப்படங்கள் ; செய்த மொழிபெயர்ப்புகள் ; உருவாக்கிய போஸ்டர்கள் ; எழுதிய captions ; அடித்த காமெடி தோரணங்கள் ; செய்துள்ள வீரிய அலசல்கள் என்று மெர்ச்சலூட்டுகின்றன உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளும் ! இதோ - சின்னதாயொரு recap !!
















பழசுக்குள் புகுந்தால் மூச்சிரைக்கிறது உங்களின் பங்களிப்புகளை பார்த்திடும் போது ! லட்சங்களில் சர்குலேஷன் கொண்டிருக்கும் நிறைய பத்திரிக்கைகளுக்கு கூட இது போன்ற ரகளையான வாசக வட்டம் அமைந்திராதென்பது திண்ணம் ! Thanks for all the riveting fun & rocking memories guys !! தொடரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் கலக்குங்கள் ! And நடுவே ஏதேதோ காரணங்களின் பொருட்டு கழன்று கொண்ட நண்பர்களுக்கும் நமது நன்றிகளின் ஒரு பகுதியேனும் உரித்தாகட்டும் !  ஊர்கூடி இழுத்துவரும் தேர் இது ; so வடம்பிடித்த கரங்கள் அனைத்துமே நம் அன்புக்குரியவைகளே !

Before I sign out - இதோ ஜனவரியின் மௌன அதிரடிக்காரரின் ஹார்ட் கவர் ஆல்பத்தின் முதல் பார்வை !! நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது ! As always - அட்டையில் ஏகமாய் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ; புக்கைக் கையில் ஏந்திப் பார்த்திடும் போது உணர்ந்திட முடியும் !! And உட்பக்க டிரெய்லருமே இங்குள்ளது ! மூன்றே ஆண்டுகளை நமது அட்டவணையினில் ஒரு fixture ஆகி விட்டுள்ள ட்யுராங்கோ இந்த ஜனவரியை light up செய்திட்டால் - ஆண்டுக்கொரு அட்டகாசமான துவக்கம் கிட்டியது போலிருக்கும் ! Fingers crossed !!

அச்சு முழுக்கவே முடிந்து பைண்டிங் துவங்கியுள்ளது ஜனவரியின் எல்லா இதழ்களுக்கும் ! ஆண்டின் இறுதி என்பதால் டயரி ; தினசரி காலெண்டர் பணிகளென்று சிவகாசியே பிசியோ-பிசி !! முன்கூட்டியே அச்சை முடித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டதால் இம்மாதத்தின் இறுதித் தேதியிலேயே 2020 -ன் முதல் கூட்டணியை உங்கள் கைகளில் ஒப்படைத்திட சாத்தியப்படுமென்று நம்புகிறேன் ! Fingers crossed again !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful weekend ! And அட்வான்ஸ் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

P.S : சந்தா நினைவூட்டலுமே !!!

284 comments:

  1. Replies
    1. EV தூங்க மாட்டீங்களா

      Delete
    2. நாங்களல்லாம் லெப்ட்டு கண்ணுல தூங்கிகிட்டே ரைட்டு கண்ணுல கமெண்ட்டு போடுற ஆளுங்களாக்கும்! ;)

      Delete
    3. எனக்கு தெரிந்து கண்ணுல மை போடலாம், மருந்து போடலாம்... நீங்க கமெண்ட் எல்லாமா போடறீங்க...
      ;-)

      Delete
    4. //நாங்களல்லாம் லெப்ட்டு கண்ணுல தூங்கிகிட்டே ரைட்டு கண்ணுல கமெண்ட்டு போடுற ஆளுங்களாக்கும்! ;)//

      :-)))

      Delete
    5. இஸ்கோல் படிக்கும் போதிருந்தே ஈவிக்கு ஒரு கண்ணும் கரும் பலகையிலும் இன்னொரு கண்ணு வேற பக்கமுந்தான் இருக்குமாமாம். அதுனால இதெல்லாம் பூனையாருக்கு சர்வ சாதாரணம்.

      Delete
    6. இது போங்கு ஆட்டம்...2 மணி வரைக்கும் வெயிட் பண்ணிட்டு...காலையில் தான் போலன்னு போயிட்டு வந்தா 3:24 க்கு போட்டு...67க்கு தான் வர முடிஞ்சுது...

      Delete
    7. ஈவி படிச்ச இஸ்கோல் கோ எஜுகேஷனுங்களா? அப்போ ஒரு கண்ணு வேற பக்கம் தான் இருக்கும்.

      Delete
    8. கோ எஜுகேசன்இல்லன்னா அவரு ஸ்கூலுக்கே போயிருக்க மாட்டாரே.

      Delete
    9. அஞ்சாப்பு வரைக்கும் கோ-எட் தான்! கூடப்படிச்ச ருக்கு மேல எனக்கு ஒரு கிக்கு! காமிக்ஸ் புக்குல ஒரு கடுதாசிய வச்சுக்குடுத்தேன்.. அவங்கப்பன் பார்த்துட்டான்! புக்கை ஆட்டையை போட்டுட்டு கடுதாசிய மட்டும் ஹெட்மாஸ்ட்டர்ட்ட கொடுத்துட்டான்! சிலபல பஞ்சாயத்துக்குப் பிறகு ஆறாப்புலேர்ந்து கடுவன்கள் படிக்கிற ஸ்கூல்ல என்னை சேர்த்துவுடறதுதான் ஊர்ஒலகத்துக்கு நல்லதுன்னு எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணாங்க!
      ருக்குவும் கிடைக்கல - என்னோட அந்த புக்கும் கிடைக்கல!

      (காலையிலயே என்னோட சோகக்கதையச் சொல்லி உங்க மனசை பாரமாக்கியதுக்கு என்னை மன்னிச்சுடுங்க ப்ரண்ட்ஸ்)

      Delete
  2. பெரிய பதிவு படிக்க நேரமாகும்

    ReplyDelete
  3. பாதிதான் படித்துள்ளேன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பெரிய பதிவு என்றதும் புது நாயகர்களோ அல்லது பழைய நாயகர்களையோ விவரிக்கப் போகிறீர்கள் என நினைத்தேன். ப்ளாஸ் பேக்கா?👍

    ReplyDelete
  6. புது வருட காலண்டர் உண்டா?😁😁😁

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. காலை வணக்கம் ஆசிரியர் சார். அழகான பதிவு.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. இதுவரைக்கும் மே மாதத்தில் கோடை மலரில் அதகளம் செய்து வந்த ட்யூராங்கோ இப்போது வருட ஆரம்பத்தில் ஜனவரியிலேயே சாகசம் செய்ய வந்து விட்டார், ஆரம்பமே அட்டகாசம்! ஆண்டு முழுவதும் தொடரட்டும்...

      Delete
    2. ட்யூராங்கோவின் முதல் சாகசத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவர் வருகையின் போது எக்கச்சக்க எதிர்பார்ப்பு தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

      அதிலும் வருட ஆரம்ப இதழாக இதை ஆசிரியர் தேர்வு செய்திருப்பதால் இன்னுமே தூக்கி அடிக்கிறது. வெல்கம் ட்யூராங்கோ 2020!

      Delete
    3. வழிமொழிகிறேன்..:-)

      Delete
    4. // ட்யூராங்கோவின் முதல் சாகசத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவர் வருகையின் போது எக்கச்சக்க எதிர்பார்ப்பு தோன்றுவது எனக்கு மட்டும்தானா? // உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான் அது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ய படுகிறது.

      Delete
    5. //ஒவ்வொரு முறையும் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ய படுகிறது//

      நிச்சயமாக நண்பரே!

      Delete
  10. Durango preview superb. 2020 ஆர்ப்பாட்டமாக துவங்க போவது உறுதி. 9 நாட்கள் மட்டுமே. Durango ஒரு தவிர்க்க முடியாத கௌபாய் ஆக மாறிவிட்டார் நமக்கு டெக்ஸ் டைகர் க்கு அடுத்து நினைவுக்கு வருவது இவர் தான்.

    ReplyDelete
    Replies
    1. // Durango ஒரு தவிர்க்க முடியாத கௌபாய் ஆக மாறிவிட்டார் //

      ஆர்ப்பாட்டம் இல்லாத, அதிகம் பேசாத, யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு தன்னிச்சையான துப்பாக்கி வீரன் ட்யூராங்கோ. கடந்த 10 ஆல்பங்களில் எதுவும் சோடை போகவில்லை. 100% வெற்றி.

      Delete
    2. ௨ண்மை டை௧ருக்கு மாற்றாய்

      Delete
  11. காலை வணக்கம் நண்பர்களே☺️☺️

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Durango அட்டைப்படம் முந்தைய Durango அட்டை படங்களை விட பளிச் ரகம்.

    ReplyDelete
  14. ///
    நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !
    ////

    ஊவ்!!! எத்தனை தீர்க்கமான வரிகள்!! ஏதோவொரு திட்டமிடலின் பொருட்டோ, ஏதோவொரு நம்பிக்கையின் பொருட்டோ அன்று எழுதப்பட்ட இவ்வரிகளை இன்று படிக்கும்போது அதன் வீரியத்தை உணர்ந்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. // வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! // வந்த ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிட்டு விட்டது சந்தேகத்திற்கு இடமின்றி

      Delete
    2. அக்காலத்தில் புத்தகங்களின் வரவுக்காய் நிதம் புத்தகக்கடையை விசிட் அடித்து கடை அண்ணாச்சியை கடுப்பேத்தியதை மறக்க முடியாது. Golden era.

      Delete
    3. சொன்னது அப்படியே நடந்தது.... ஸாரி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது

      Delete
  15. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்............. 2020 சந்தா கட்டியாச்சு...............
    டிசர்ட் கிடைக்குமா............இல்ல பல்ப் கிடைக்குமா

    ReplyDelete
  16. காலை வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே!!
    💐💐💐💐💐

    ReplyDelete
  17. இந்த பயணம் தொடரும் ,தொடர்ந்து கொண்டே இருக்கும்..

    வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  18. காலை வணக்கம் சார் 🙏🏼

    நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கும் ,தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் பனி பொழியும் குளிரான வணக்கம்..:-)

      Delete
    2. வணக்கம் அண்ணா

      Delete
  19. லார்கோவின் இந்த புகைப்படத்தை தளத்தில் முதன்முறையாக பார்த்த பொழுது

    "ஹீரோ செம ஸ்டைலாக ,பந்தாவாக போஸ் கொடுத்து உட்கார்ந்து உள்ளார் .ஆனால் ரொம்ப அமைதியாக அமர்ந்து உள்ளது போல உள்ளதே ..சாதிப்பாரா என்று சந்தேகப்பட்டதை மறக்க முடியாது..ஆனால் முதல் சாகஸத்திலியே மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து அசத்தியதும் மறக்க முடியாது.:-)

    ReplyDelete
    Replies
    1. பரணி வழக்கம் போல ஒரே அலை வரிசை. . . .. . ஆனா அந்த வண்ணமயமான ஒரு பக்கம் முன்னோட்டம் அதிரச் செய்தது

      Delete
  20. சினம் ஆறாது 2020 ஜனவரியில் ஆரம்பித்து அதகளம் செய்து டிசம்பரில் முடிக்க அன்பான வாழ்த்துக்கள் அட்வான்சாய்.
    ஆயிரம் பின்னூட்ட இரவைப் பற்றி உங்களிடமும் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளதாக சொன்னீர்களே என்னாச்சு.

    ReplyDelete
  21. அந்திரிக்கி நமஸ்காரம்..!!

    ReplyDelete
    Replies
    1. கண்ணா உங்களை முன்பு போல தளத்தில் காண வில்லையே .

      Delete
    2. இங்கேயேதான் இருக்கேன் குமார்..!

      தேனீ தேன்கூட்டை விட்டு வேறெங்கே வசித்திடப் போகிறது..!!

      Delete
    3. என்ன ஒரு அழகான உதாரணம். அருமை கண்ணா முன்பு போல் நீங்கள் பதிவிடுவதில்லை அதனால் தான் கேட்டேன்.

      Delete
  22. Good morning editor sir and my dear friends 😁😁😁😃😃😃😃😃

    ReplyDelete
  23. விஜயன் சார், இந்த பதிவை மிகவும் ரசித்தேன். நமது காமிக்ஸ் வராத காலத்தில் காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என அடிக்கடி Googleல் தேடுவேன். அப்போது ஒரு நாள் நமது தளத்தின் பெயரை பார்த்தவுடன் உள்ளே வந்து தவறாமல் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முதலில் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட ஆரம்பித்தேன், நீங்கள் ஒரு முறை தமிழில் பின்னூட்டம் இடலாமே ஏன்று எனது கேள்வி ஒன்றுக்கு பதில் சொன்ன போது கேட்டு இருந்தீர்கள்; அன்று இரவு தமிழில் பதிவிடுவது எப்படி என்று கண்டுபிடித்து Google translator மூலம் தமிழில் பின்னூட்டம் இட ஆரம்பித்தேன்.

    இந்த தளம் மூலம் Bangalore comic-conக்கு நீங்கள் வருவது அறிந்து எனது மகளுடன் வந்து உங்களை முதன் முதல் சந்தித்தேன்; அண்ணாச்சி தான் என்னை உங்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பல காமிக்ஸ் நண்பர்களை அன்று தான் நேரில் பார்த்தேன். Sriராமின் டெக்ஸ் வில்லர் வேடத்தை பார்த்து எனது மகள் மிரண்டு அழுதது தனிக்கதை.கலீல் புதுச்சேரி நண்பர்களுக்காக பை நிறைய காமிக்ஸை சுமந்து சென்றது ஞாபகம் உள்ளது. மதியில்லா மந்திரி பெயரில் பதிவிடுவது நண்பரை அங்கே சந்தித்ததாக ஞாபகம். இரண்டாம் நாள் comic-con வரும் போது நண்பர் ஷலூமை முதல் முதலாக பஸ்ஸில் சந்தித்தேன். அடுத்த மாதம் வந்த புத்தகத்தில் comic-conல் நமது ஸ்டாலை நான் பார்வையிட்ட படம் வந்த போது எனது மனைவியிடம் காண்பித்து கொண்டாடியது நினைவில் உள்ளது.

    பொதுவாக பிரச்சினை என்றால் எனக்கு பிடிக்காது, பிரச்சினை என்றால் முடிந்த அளவு தள்ளி நிக்க முயற்சிப்பேன் அதேநேரம் யாருடைய மனத்தையும் காயப்படுத்த கூடாது என்ற எனது இயல்பான சுபாவம் இங்கு பின்னூட்டம் இட மிகவும் உதவியது. ஆனால் அதையும் மீறி நண்பர்கள் சிலர் எனது சட்டையை பிடித்ததும் நன்றாக ஞாபகம் உள்ளது. அது முதல் சில பின்னூட்டங்களை தாண்டி செல்ல ஆரம்பித்தேன்.

    தளத்தில் அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்தித்தது ஈரோடு புத்தகத் திருவிழாவில். நண்பர் சிபியின் பிறந்த நாள் போட்டோவை பார்த்து இவர்தான் ஈரோடு விஜய் என நினைத்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் முதலில் அவரை பார்த்து பெரிய குண்டு பல்பு வாங்கியதும் நினைவில் உள்ளது :-)

    இந்த தளத்தில் உங்களை பல நண்பர்கள் தங்களின் *திறமையை* காட்ட அடித்த கூத்துக்கள் அதனால் நீங்கள் காயப்பட்ட சம்பவங்கள் என்றும் மனதைவிட்டு அகலவில்லை, அதேநேரம் பல நண்பர்களின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டேன்.

    இங்கே நண்பர்களால் பலமுறை காயப்பட்ட நீங்கள் ஒவ்வொரு முறையும் குதிரை போல் துள்ளி குதித்து எழுந்து வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அந்த வலிகளை பொறுத்து கொண்டு இங்கே தொடர காரணம் உங்களின் இந்த காமிக்ஸ் காதல் தான், காதல் வலிமையானது அதுவும் உங்களின் காமிக்ஸ் காதல் மிகவும் வலிமையானது.

    நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது; எடுக்கு மடக்கான பின்னூட்டங்களுக்கு அதே பாணியில் பதில், சீரியஸான பின்னூட்டங்களுக்கு அதே பாணியில் பதில் என பதில் சொல்லும் உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறேன்.

    விக்ரம், அப்பாவை இணையதளம் பக்கம் கொண்டு வந்து காமிக்ஸுக்கு புதிய பாதையை காண்பித்தற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //இங்கே நண்பர்களால் பலமுறை காயப்பட்ட நீங்கள் ஒவ்வொரு முறையும் குதிரை போல் துள்ளி குதித்து எழுந்து வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அந்த வலிகளை பொறுத்து கொண்டு இங்கே தொடர காரணம் உங்களின் இந்த காமிக்ஸ் காதல் தான், காதல் வலிமையானது அதுவும் உங்களின் காமிக்ஸ் காதல் மிகவும் வலிமையானது//

      சிறப்பான வரிகள்...ஆழமான உண்மை பொதிந்தவை..

      Delete
    2. //நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது; எடுக்கு மடக்கான பின்னூட்டங்களுக்கு அதே பாணியில் பதில், சீரியஸான பின்னூட்டங்களுக்கு அதே பாணியில் பதில் என பதில் சொல்லும் உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறேன்//

      ஒரு ஆயிரம் ப்ளஸ் போட்டுக்குங்க..

      Delete
    3. @ PfB

      இந்தத் தளத்தில் நீங்கள் இதுவரை போட்ட கமெண்ட்டுகளிலேயே மிகச் சிறந்த கமெண்ட் இதுதான்!

      Delete
    4. ஓவர் ஆலாக அனைத்து வாசகர்களின் மனோ நிலையும் இவ்விதமே இருக்கும்! சூப்பர்!!
      👏👏👏

      Delete
    5. அருமையான பதிவு பரணி. ஒத்த அலைவரிசை கொண்ட நமது நண்பர்களின் ஒட்டு மொத்த உணர்வை எழுத்துகளில் வடித்து விட்டீர்கள்.

      👏👏👏👏

      Delete
    6. நன்றி நண்பர்களே. இன்னும் நிறைய எழுத உள்ளது.

      ஆசிரியர் போன்று பின்னூட்டம் இட்ட ஒரு நபரின் பதிவை படித்த போது முதலில் குழப்பமாக இருந்தது மீண்டும் ஒருமுறை படித்த போது இன்னும் அதிகமாக குழம்பினேன்... காரணம் நமது விஜயன் சாரின் எழுத்துக்கள் இப்படி இருக்காது இப்படி எழுத மாட்டார் என மனம் சத்தமாக சொன்னது. ஈரோடு விஜயை தொடர்பு கொண்டு பேசிய உடன் எனது எண்ணம் சரியென்று சொன்னார். ஆசிரியரின் எழுத்துக்கு அடிமையான நண்பர்கள் அனைவரும் இந்த உண்மையை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் அதனாலேயே நண்பர்கள் பலர் அந்த *நபரின்* தாண்டி சென்றார்கள் என நம்புகிறேன்.

      பலமுறை உங்களின் எழுத்து வலிமை எங்களை கட்டிப்போட்டு விட்டது என்பதே உண்மை விஜயன் சார்.

      Delete
    7. அட்டகாசமான பதிவு பரணி EV சொன்னது போல உங்களுடைய சிறந்த பதிவு. சும்மா சூப்பர்

      Delete
    8. சார்...அன்பான வரிகளுக்கும், ஆத்மார்த்த அன்புக்கும் நிறையவே நன்றிகள் ! அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்னை நானே பெரியதொரு 'பேனாப் பார்ட்டி'யாகவெல்லாம் பார்த்திட்டதே கிடையாது ! நிஜத்தைச் சொல்வதானால், ஒருசில முந்தைய பதிவுகளை நேற்றிரவு மேலோட்டமாய்ப் படித்த போது எழுத்தினில் கொஞ்சம் melodrama-வை ; கொஞ்சம் தெலுங்குப் பட பாணியிலான flashiness-ஐக் குறைத்திருக்கலாமோ ? என்ற எண்ணமே தலைதூக்கியது ! So "வரிகளில் வலிமை" என்பதைவிட, வரிகளில் இழையோடியிருக்கக்கூடிய நேர்மை தான் நீங்கள் ரசித்திடவொரு காரணியாக இருந்திடக்கூடுமென்பது எனது அபிப்பிராயம் ! எது-எப்படியோ இந்த 8 ஆண்டுப் பதிவுப் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரிடமும் எதையேனும் கற்றுக் கொண்டுள்ளேன் & எனது எழுத்துக்களை மெருகேற்றிட அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளேன் என்பது நிஜமே !

      அப்புறம் இங்கு அவ்வப்போது நேர்ந்த சங்கடங்கள் + சர்ச்சைகளைத் தாண்டிச் செல்ல உதவியது நமது பொதுவான காமிக்ஸ் நேசம் என்பதைத் தவிர்த்து இன்னொரு பிரதான காரணமும் உள்ளது சார் ! நிறைய முறைகள் ' இந்தப் பதிவுப் புராணம் எல்லாம் போதும் ; மங்களம் பாடிவிட்டு வழக்கம் போல் 'ஹாட்லைன்' பகுதியின் வாயிலாக மட்டும் தொடர்பில் இருக்கலாம் !' என்ற எண்ணம் என்னுள் சீரியஸாகவே துளிர்விட்டுள்ளன ! ஆனால் ஒவ்வொருமுறையும் என்னை இங்கே மறுக்கா ஈர்த்தது - எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் மீது அன்பைப் பொழியும் உங்களை போலான நண்பர்களின் முகங்களில் இந்தப் பதிவுப் பக்கமானது கொணரக் கூடிய சன்னமான புன்னகைகளே ! சிறுவட்டமே என்றாலும் அன்பில் நீங்கள் ஒவ்வொருவரும் அசுரரே !! அந்த அன்பின் அண்மையை இழக்க மனமின்றியே ஒவ்வொருமுறையும் இங்கு நான் யு-டர்ன் அடித்தேன் !!

      And last but not the least - வயதின் ஓட்டத்தோடு வருகை தந்திடும் முதிர்ச்சியையும் ஒரு காரணமாய்ச் சொல்லுவேன் ! துவக்க நாட்களில், நடுமூக்கில் பொளேரென குத்து வாங்கி, இரத்தம் கசிந்தாலும், குத்தியவர்களைப் பார்த்து 'ஹை...வலிக்கலியே !!' என்று டிராமா போடுவதற்கோசரமாவது all is normal என்பது போலாய்த் தொடர்ந்திடுவேன் ! ஆனால் நாளாசரியாய் எல்லாமே பழகிப் போய்விட - ஒரு ரப்பர் மூக்கை முன்கூட்டியே மாட்டிவைத்துக் கொண்டு குத்து வாங்கிடும் தருணங்களில் "no குருதி" என்று வண்டியோட்டப் பழகி விட்டது !அட...போகும் போது இங்கிருந்து சந்தோஷங்களை மட்டுமே எடுத்துச் செல்லும் வரம் கிட்டின் - அதைவிடவொரு சாதனை இருக்க முடியாதல்லவா guys ? அதை 50 +ல் கூட நான் புரிந்து கொள்ளாது போனால் என்னை மங்குணி smurf கூட ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டானே ?

      End of the day "ஆயிரம், ரெண்டாயிரம் புக்குகளைப் போட்டவன்" என்ற லேபிலை விடவும் 'அன்பான மனுஷன்' என்ற பெயரோடு நடையைக் கட்டச் சாத்தியமானால் - I would take that any day & every day !! Fingers crossed big time !!

      Delete
    9. // பொதுவாக பிரச்சினை என்றால் எனக்கு பிடிக்காது, பிரச்சினை என்றால் முடிந்த அளவு தள்ளி நிக்க முயற்சிப்பேன் அதேநேரம் யாருடைய மனத்தையும் காயப்படுத்த கூடாது என்ற எனது இயல்பான சுபாவம் இங்கு பின்னூட்டம் இட மிகவும் உதவியது. // பரணி அதே சுபாவம் கொண்ட எனக்கு இதுவே பின்னூட்டம் இட தடை ஆக இருந்தது. ஏன் என்றால் நான் மௌன வாசகனாக இருந்த போது பல அனல் பறக்கும் சண்டை கட்சிகளை இந்த தளத்தில் பார்த்து இருக்கிறேன். நான் ஏதாவது பதிவு இட்டு அதன் மூலம் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று பலமுறை யோசித்து இருக்கிறேன்.

      Delete
    10. // அன்பான மனுஷன்' // மட்டுமல்ல மிக நேர்மையான மனிதரும் கூட எடிட்டர் சார்.

      Delete
    11. பரணி சார்.

      அருமை...:-)

      Delete
    12. விஜயன் சார், ஆமாம் சார்.
      உங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மை மற்றும் உண்மை மற்றும் ஒரு முக்கிய காரணம் உங்கள் எழுத்துக்களை நாங்கள் ரசிக்க.

      உங்களுடனான இந்த பந்தம் நீடிக்க ஆழமாக அதுவும் ஒரு முக்கிய காரணம்.

      Delete
    13. // ஆனால் ஒவ்வொருமுறையும் என்னை இங்கே மறுக்கா ஈர்த்தது - எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் மீது அன்பைப் பொழியும் உங்களை போலான நண்பர்களின் முகங்களில் இந்தப் பதிவுப் பக்கமானது கொணரக் கூடிய சன்னமான புன்னகைகளே ! //

      உண்மைதான் சார்........

      Delete
    14. // பலமுறை உங்களின் எழுத்து வலிமை எங்களை கட்டிப்போட்டு விட்டது என்பதே உண்மை விஜயன் சார். //
      PFB அழகான வரிகள்,ஆத்மார்த்தமான வார்த்தைகள்,மகிழ்ச்சி,மகிழ்ச்சி.......
      எதிர்பார்ப்பு இல்லாத செயல்கள் என்றும் நேசத்திற்கு உரியவை.....
      தேவைகளையும்,பொருள் ஈட்டல்களையும் நாடி அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் எதிர்பார்ப்பில்லாத அன்பும்,செயல்களுமே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது....
      நமது காமிக்ஸ் நண்பர்களிடம் பேசுவதும்,பழகுவதும் சமயங்களில் ஆலமரத்தின் நிழலில் ஓய்வெடுப்பதுபோல் உணர்வை தந்துள்ளது.........
      ஈ.வியும்,ஷெரீப்பும் சொன்னது போல மிகச் சிறப்பான பதிவு,உண்மையான காமிக்ஸ் வாசகர்கள்,நேசமிகு நண்பர்களின் மனவோட்டங்களை அழகாய் பதிவு செய்துள்ளீர்கள்....
      இதுபோன்ற பதிவுகளை காணும்போது மனம் ஏனோ பெரும் உவகை அடைகிறது....
      மீண்டும் மகிழ்ச்சி,மகிழ்ச்சி........

      Delete
    15. எல்லோருக்குமே காமிக்ஸ் நினைவுகள், அது தந்த சந்தோஷ உணர்வுகள் நிறைய இருக்கு! சமயம் வாய்க்கும் போது ஒவ்வொருவராக இது போல பகிர்ந்து கொண்டால் சிறப்பாகத்தான் இருக்கும் போல 😍

      Delete
    16. கலீல் @
      //
      சமயம் வாய்க்கும் போது ஒவ்வொருவராக இது போல பகிர்ந்து கொண்டால் சிறப்பாகத்தான் இருக்கும்
      //

      இதனை பற்றி சில வருடங்களுக்கு முன்னால் ஆசிரியர் எழுதி உள்ளார். ஆனால் நண்பர்கள் அதில் அந்த அளவு ஈடுபாடு காட்டவில்லை என நினைக்கிறேன்.

      Delete
    17. //சிறுவட்டமே என்றாலும் அன்பில் நீங்கள் ஒவ்வொருவரும் அசுரரே !!//

      மிகவும் இரசித்த வரிகள். ஆசிரியருக்கு நன்றிகள்😁🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    18. Parani from Bangalore ..

      இங்கே உலவும் பெரும்பான்மை நண்பர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள் பரணி..!

      பாராட்டுகள் நண்பா..!!

      Delete
    19. ///End of the day "ஆயிரம், ரெண்டாயிரம் புக்குகளைப் போட்டவன்" என்ற லேபிலை விடவும் 'அன்பான மனுஷன்' என்ற பெயரோடு நடையைக் கட்டச் சாத்தியமானால் - ///

      உங்களுக்கு அந்தப் பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டுவிட்டது சார்..!

      உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு பெயர் வைத்து ஹேப்பி பர்த்டே கொண்டாடியதற்கு நண்பர்களின் சார்பாக அப்பாலஜைஸ் சார்..! :-)

      Delete
    20. // ஆனால் ஒவ்வொருமுறையும் என்னை இங்கே மறுக்கா ஈர்த்தது - எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் மீது அன்பைப் பொழியும் உங்களை போலான நண்பர்களின் முகங்களில் இந்தப் பதிவுப் பக்கமானது கொணரக் கூடிய சன்னமான புன்னகைகளே ! //

      +1
      உண்மை.

      Delete
    21. //இந்தப் பதிவுப் பக்கமானது கொணரக் கூடிய சன்னமான புன்னகைகளே ! //

      இந்த தளமும் உங்கள் பதிவுகளும் சன்னமான புன்னகைகள் தருவதையும், பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வாழ்க்கையில் ஒரு அங்கமாகவும் மாறிடுச்சுங்க சார். எவ்வளவு தலை போகிற பிசியாக இருந்தாலும் எப்படியாவது நேரம் ஒதுக்கி பதிவு, பின்னூட்டங்கள் என அனைத்தையும் படித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. பல நட்புகளை பூக்கச் செய்ததும் இந்தத் தளமே.

      Delete
    22. //இந்த தளமும் உங்கள் பதிவுகளும் சன்னமான புன்னகைகள் தருவதையும், பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வாழ்க்கையில் ஒரு அங்கமாகவும் மாறிடுச்சுங்க சார்.// 100% உண்மை. சனி மாலையில் இருந்தே பதிவினை எதிர்நோக்கி காத்திருப்பு தொடங்கி விடும். பதிவு வெளிவந்த பிறகு தான் மனது நிம்மதி ஆகும்.

      Delete
    23. எல்ல தம்பி... சார். . . நெகிழ்ச்சி

      Delete
  24. சார்
    இந்த மாத கிராப்பிக் நாவல்
    கதை சொல்லும் கானகம்
    தான் சார் இந்த வருடத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை...
    கதைக்கு எதாற் போல் ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது...🖤
    ...
    கிராப்பிக் நாவல் வாழ்க...☺️💯

    ReplyDelete
    Replies
    1. தலீவரே ...தம்பி அகில் என்னமோ பேசணுமாம் உங்ககிட்டே !

      Delete
    2. பலர் கதையை படிச்சிட்டு புரியல புரியலன்னு சொல்லிட்டு திரிகிறார்கள்! நீங்க மட்டும்தான் கதையை புரிந்திட்டு சூப்பர்னு சொல்லியிருக்கிங்க பிரதர் இதற்காகவே உங்களுக்கு ஏதாவது பரிசு தரணும் போல 😊

      Delete
    3. Yes akkil. 2 நாட்களின் முன்தான் வாசித்தேன். Thriller! The X files பாணியில், flashback உடனான கலவை, பெரும்பாலும் இருளிலேயே நகர்வது போன்ற பிரமையை ஏற்படுத்தும் சித்திரங்கள். பல நாட்களின் பின் கிடைத்ததோர் வித்தியாசமான படைப்பு. Thank you so much Editor.

      Delete
    4. இந்த வருடம் எனக்கு பிடித்த கதையும் இந்த கதை சொல்லும் கானகமே என அறிவித்து பல மாமாங்கம் ஆகி விட்டது சார்

      எனக்கு புரிந்த மட்டில்..:-)

      Delete
  25. ட்யூராங்கோவின் அட்டைப்படமும்,முன்னோட்டமும் அசத்தல்....
    உண்மையில் வேற லெவலில் இருக்கும் போல,முன்னோட்டத்தில் கலரிங் பாணிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் போல....

    ReplyDelete
    Replies
    1. உறுத்தாத இதமான கலரிங் பாணிகளில் ட்யுராங்கோ தொடருக்கொரு ஸ்பெஷல் 'ஓ' போடலாம் தான் சார் !

      Delete
  26. ட்யுரங்கோ அட்டைப்படம் அதகளம் அதுவும் பின் அட்டையில் வண்ணக் கலவை சூப்பர். முன் அட்டையில் ட்யுரங்கோ நிழல் முகத்தை தொப்பி உடன் பின்புறத்தில் போட்டு அதன் முன்னால் தொப்பி இல்லாமல் ட்யுரோங்கோவை காண்பித்தது சிறந்த சிந்தனை.

    கடந்த சில வருடங்களாக ஜனவரியை தோர்கலுடன் கொண்டாடிய நமக்கு இந்த முறை ட்யுங்கோவுடன், இருவருமே ஆர்பாட்டம் இல்லாமல் அதிரடியாக எனது மனதை கொள்ளையடித்தவர்கள். இருவருமே எனக்கு பிடித்த நாயகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள். 2020ஐ கலக்கலாக ஆரம்பிப்பது சந்தோஷமே.

    ReplyDelete
    Replies
    1. அதே அதே பரணி தோர்கல் மற்றும் durango வரும் வருடமும் பின்னி பிடில் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்

      Delete
  27. Dear Edi,

    Incredible Journey on Blogosphere, and it's no wonder that our issues quality increased in printing and story selections, during this decade, with a more direct feedback mechanism this media was able to unveil.

    If something could be changed from the decade which passed by, I would say it is a regulation in commenting on this blog, which pushed new minds to turn recluse. But, to be honest, that's what kept this blog more active, so can understand your choices to let it be.

    ReplyDelete
    Replies
    1. இங்கு நான் முதன்முதலாய்ப் பதிலளித்தது உங்களுக்கே என்பது நினைவில் உள்ளது சார் ! காலம் தான் எத்தனை வேகமாய் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது ?! திரும்பிச் சென்று எதையேனும் மாற்றி அமைக்கும் வரம் வாய்ப்பின் இந்தப் பக்கத்தினில் மாற்றிச் செய்திருக்க கூடிய செயல்களுக்கென ஒரு பட்டியலே உண்டு என்னிடம் ! யாரையும் வருத்திடக் கூடாதே & இங்கே positivity மாத்திரமே தழைத்திட வேண்டுமென்பதே எனது அவாக்களாய் இருந்தாலும், ஏதேதோ சூழல்களில் யார் யாரின் கால்களிலெல்லாமோ மிதித்திட நேர்ந்தது எனது ஆயுட்கால சங்கடமாய்த் தொடர்ந்திடும் ! Apologies to each one of them !

      Delete
    2. // during this decade, with a more direct feedback mechanism this media was able to unveil. // Very well said Rafiq Sir.

      Delete
  28. டியர் விஜயன் சார்...

    ட்யூராங்கோவின் முகப்பு பக்கம் மற்றும் உட்பக்கங்கள் அருமை. முத்து காமிக்ஸ் 48 ஆவது ஆண்டு மலர் இது ... இடையில் ஒரு வருடம்... 50 ஆவது ஆண்டு மலர் எப்படி இருக்குமோ ? எத்தனை பக்கங்களோ? எத்தனை புத்தகங்களோ?? என்றெல்லாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை....

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
    Replies
    1. 48 -ன் முழுமை + 49 -ன் முழுமை எனும் போது சுத்தமாய் 2 வருடங்கள் & possibly ஒரு நூறு இதழ்கள் அதற்கு முன்பாய்க் காத்துள்ளன சார் ! So ரொம்பத் தொலைவுக்கு இப்போதே யோசிக்க இக்கட 'தம்' நஹி !

      God willing - ஐம்பதாவது ஆண்டுமலரை அட்டகாசப்படுத்திவிடுவோம் !!

      Delete
    2. நீங்க அட்டகாச படுத்த வேண்டும் நாங்கள் அதனை ரசிக்க வேண்டும்.

      Delete
    3. // God willing - ஐம்பதாவது ஆண்டுமலரை அட்டகாசப்படுத்திவிடுவோம் !! //
      கண்டிப்பாக அசத்த வேண்டும் சார்,ஏனோ மனப்பறவை இப்போதே சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது......
      இன்றைய பதிவும் அசத்தல் சார்,பழம் நினைவுகளை அசைபோடுவது எப்போதுமே அலாதியானது தான்......
      அவை நல்நினைவுகளாக இருப்பின் இன்னும் கூடுதல் சிறப்பு.....
      ஏனோ இன்றைய உங்கள் பதிவும்,நண்பர் PFB யின் இதயப்பூர்மான எழுத்துகளும் காலைப் பொழுதை மிக அழகாகவும்,மகிழ்ச்சியாகவும் மாற்றி விட்டன....
      புத்தம் புதிய காற்றை சுவாசித்தது போல் ஓர் உணர்வு சார்.....
      பல்வேறு பணிகள் சார்ந்த அழுத்தத்தில் இதுபோன்ற வார்த்தைகள் நம்மை மயிலறகாய் வருடும் உணர்வை தருவதில் எந்த வியப்பும் இல்லைதான்.......

      Delete
    4. //
      God willing - ஐம்பதாவது ஆண்டுமலரை அட்டகாசப்படுத்திவிடுவோம் !!//
      சார் எப்பவுமே ௨லக கோப்பை எதிர்பார்ப்பு போல. .. ௨ற்ச்சாக எதிர்பார்ப்பு ௭கிறச் செய்தீர்கள் வருடாவருடம்... இந்த வருடம் தோர்கள் 5 பாகம்

      Delete
  29. அந்த ஆயிரம் பின்னூட்ட இரவினில் நீங்கள் வராததற்கு இது போல ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தேன் அது இப்பொழுது உண்மை என்று தெரிகிறது.

    பதிவுகளை விட உங்கள் உடல் நலம் மிக முக்கியம் சார். சாம கோடாங்கி வேலையை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  30. அந்த நாலு ல மூணு அறிவிப்பீங்கன்னு எதிர் பார்த்தேன் க ரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  31. சார். 1.டெக்ஸ்.எரிந்த கடிதம் 2மாண்ட்ரேக் நடுநிசி நாடகம் 3ரிப்கிர்பி மணாளனை மன்னிப்பும் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. புரியலையே சார் ? இவற்றை மறுபதிப்பு செய்யக் கேட்கிறீர்களா ?

      Delete
    2. சந்தா D யில் காலியாக இருக்கும் 3 ஸ்லாட்டுகளுக்கு சொல்கிறார் ஆசிரியரே

      Delete
    3. அதற்கு இந்த நாயகர்களின் புதிய கதையே உள்ளதே நண்பரே...:-)

      Delete
  32. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விஜயன் சார் அவர்களுக்கு!
    தற்போது என்னிடம் உள்ள காமிக்ஸ் சேகரிப்புகளை பார்வையிட்ட போது அதில் பொருந்தாமல் காணப்பட்டவை…
    1.தலையில்லா போராளி (டெக்ஸ்)
    2.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் (டெக்ஸ்)
    3.பழிவாங்கும் பாவை (டெக்ஸ்)
    4.மனதில் உறுதி வேண்டும் (லக்கி)
    5.விசித்திர சவால் (ஸ்பைடர்)
    6.கழுகு மலைக்கோட்டை (மாடஸ்டி)
    இதில் கழுகு மலைக்கோட்டையினை மட்டும் விதிவிலக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவை காட்சிப்பொருளாக பார்க்க மட்டுமே ஏற்றதாக உள்ளது. வாசிப்பிற்கோ, சேகரிப்பிற்கோ உகந்ததாக இல்லை.
    உதாரணத்திற்கு லக்கியின் கதைகளை மட்டும் பைண்டிங் பண்ணி பாதுகாக்க எண்ணினால், இது போன்ற சைஸ் மாறாட்டங்களினால் இயலாமல் போகிறது. 1 முதல் 4 வரையுள்ள கதைகள் நார்மல் சைஸில் வந்திருந்தால் இதழுக்கு ரூ.50/- குறைவான விலையில் வாசகர்களுக்கு கிடைத்திருக்கும்.எனவே, ஒரு ஹீரோ சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் அவை சைஸில் மாற்றம் இல்லாமல் ஒரே சைஸில் வெளி வருவதே சேகரிப்பிற்கு நன்று!
    கமான்சேவிற்கு வருடம் ஒரு இடமாவது ஒதுக்கி எஞ்சிய கதைகளை தமிழில் படிக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.
    மறுபதிப்பு கோரிக்கைகள்:-
    1.ஜான் மாஸ்டரின் சதிவலை, மாஸ்கோவில் மாஸ்டர் இரண்டினையும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    2.இரும்புக்கை நார்மனின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    3.இரட்டை வேட்டையரின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    4.அதிரடிப்படையின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    5.அதிரடி வீரர் ஹெர்குலஸின் சாகஸம் வண்ணத்தில் வர வேண்டும்.(தமிழில் வராத 10 பக்க சாகஸமும் சேர்த்து)
    6.கேப்டன் டைகரின் இளமையில் கொல்லின் அடுத்த இரண்டு பாகங்கள் அதே சைசில் தனித்தனியாக வரவேண்டும்.
    7.ரிப்போர்ட்டர் ஜானியின் இரத்தக்காட்டேரி மர்மம் வண்ணத்தில் வரவேண்டும்.
    8.கேப்டன் பிரின்ஸின் எஞ்சிய கதைகள் வண்ணத்தில் வரவேண்டும்.
    9.கமாஞ்சேவின் ஓநாய் கணவாய் வண்ணத்தில் வரவேண்டும்.
    எனது கோரிக்கைகளில் எத்தனை சதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரியாவிட்டாலும், எனது கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தவே இப்பதிவு! நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. சார்...நீளமான அலசலுக்கு நன்றிகள் ! சைசில் ஒற்றுமை என்ற பார்வை ஓ.கே. தான் ; ஆனால் இன்றைய கெட்டி அட்டை கொண்ட இதழ்களை யாரும் பைண்டிங் செய்திடுவதாய் எனக்குத் தோன்றவில்லை ! லக்கி லூக்கே ஆனாலும் சில ஹார்ட் கவரோடும் வந்துள்ளன ; சில டபுள் ஆல்பங்களாய் வந்துள்ளன ! So அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து முன்போல பைண்ட் செய்வது நடைமுறை சாத்தியமாகாது ! ஆகையால் "சைஸ் ஒற்றுமை" என்ற ஒற்றைக் காரணத்தின் பொருட்டு ஒரு மெகா சைஸ் 'தலையிலாப் போராளி' கொணர்ந்திட்ட wow factor களை இழக்க மனசில்லை சார் ! And ஒரிஜினலாய் லக்கி லூக் ஆல்பங்கள் எல்லாமே MAXI சைசிலானவை தானெனும் போது - இயலும் ஓரிரு சந்தர்ப்பங்களிலாவது நாமும் அதனை அரவணைத்திட நினைக்கிறேன் ! So MAXI லயனில் வந்திடும் லக்கி மறுபதிப்புக் கதைகள் மட்டுமாவது மெகா சைஸிலேயே தொடர்ந்திடும் சார் !

      கமான்சே ஒருவிதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷாப் பண்ட் போலென்பேன் ! நிறையவே வாய்ப்புகள் அமைந்தும் சோபிக்காது போன விதத்தில் இருவரிடையிலும் ஒற்றுமை உண்டு ! ஆண்டின் ஓட்டத்தில் நூற்றுக்கு நூறு எடுக்கும் அவா ஒரு வெறியாகவே உருமாறி வரும் இந்நாட்களில் ஒரு slow தொடருக்குள் தெரிந்தே கால்விட சாத்தியங்கள் குறைவே !

      ஜான் மாஸ்டர் ; இரும்புக்கை நார்மன் & இரட்டை வேட்டையர் & அதிரடிப்படை : இவை எவற்றிற்கும் டிஜிட்டல் கோப்புகள் படைப்பாளிகளிடம் இல்லை சார் ! So அவர்களாய் இந்தக் கதைத் தொடர்களை வெளியிடும் எண்ணம் கொண்டு, இந்தப் பக்கங்களைத் தேடிப்பிடித்து ஸ்கேன் செய்து ; remaster செய்து வெளியிடத் தயார் ஆனாலொழிய நாம் அவற்றை தமிழில் கொணர்வது அசாத்தியம் ! Ditto for அதிரடிவீரர் ஹெர்குலஸ் ! டிஜிட்டல் யுகங்களுக்கு முந்தைய காலங்களின் இதுபோன்ற one shot ; பிரசித்தி பெற்றிரா கதைகளை அவர்களாய் வெளியிட நினைக்கும் வேளைகளிலேயே நமக்கும் வழி பிறக்கும் !

      கேப்டன் பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி இத்யாதி மறுபதிப்புகள் காலப்போக்கில் அட்டவணையினில் அமைந்திடும் வெற்றிடங்களைப் பொறுத்து வெளிவந்திடும் சார் !

      Delete
    2. வினாவும் ,விடையும் நமது பழைய இதழ்களில் வாசகர் ஹாட் லைன் படித்த மகிழ்ச்சியை கொடுத்தது ..:-)

      Delete
    3. //வினாவும் ,விடையும் நமது பழைய இதழ்களில் வாசகர் ஹாட் லைன் படித்த மகிழ்ச்சியை கொடுத்தது ..:-)

      //+1

      Delete
  33. சார்!
    கதைகளில் 1.ப்ரோ,2.சார்வாள்,3.புண்ணியவாளா போன்ற வார்த்தைகளுக்கு பதில் தமிழில் வேறு வார்த்தைகளை பயன்படுத்துங்களேன்.(1.ப்ரோ,2.சார்வாள்,3.புண்ணியவாளா-இந்த வார்த்தைப்பிரயோகங்கள் நெருடலாக தெரிவது எனக்கு மட்டும்தானா?)

    ReplyDelete
    Replies
    1. மாற்றுக்களை suggest செய்யுங்களேன் சார் ?

      Delete
    2. ப்ரோ-க்கு பதில் நண்பா உபயோகிக்கலாம்.

      கார்த்திகை பாண்டியனிடம் பேசும் போது நொடிக்கு ஒருமுறை நண்பா நண்பா என்பார்.

      சார்வாள் என்பதற்கு பதில் சார் என சொல்லலாம்:-)

      Delete
    3. @Parani from Bangalore
      @செந்தில் சத்யா
      +1

      Delete
  34. சார்!லார்கோ 21&22 வர வாய்ப்புண்டா?

    ReplyDelete
    Replies
    1. அப்டீன்னா ... சார்

      Delete
    2. ///அப்டீன்னா ... சார் ///

      இல்லை + அப்புகளா

      NO + அப்பூஸ்

      Nopes

      Delete
  35. Editor sir take care of your health.long live editor sir who brings the golden era of comics again👍👍👏👏👏

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், கரிசனத்துக்கும் நன்றிகள் சார் !

      Delete
  36. நல்ல பதிவு.
    அருமையான பின்னூட்டங்கள்.
    அருமை.

    ReplyDelete
  37. இங்கே நண்பர்களால் பலமுறை காயப்பட்ட நீங்கள் ஒவ்வொரு முறையும் குதிரை போல் துள்ளி குதித்து எழுந்து வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அந்த வலிகளை பொறுத்து கொண்டு இங்கே தொடர காரணம் உங்களின் இந்த காமிக்ஸ் காதல் தான், காதல் வலிமையானது அதுவும் உங்களின் காமிக்ஸ் காதல் மிகவும் வலிமையானது.)
    அருமை சகோதரர் பரணி அவர்களே நமது ஆசிரியர் 13 ஜேஸன் மக்லேன் போல எல்லா கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் திட மனதோடு எதிர் கொள்கிறார்

    ReplyDelete
  38. டியர் சார்,
    2009 - 10 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி - நாகர்கோவில் செல்லும் போதெல்லாம் கடை கடையாக நமது காமிக்ஸ் வந்து விட்டதா?i என்று தேடி அலைந்த காலமும் உண்டு.
    2010 - 11 ஆம் ஆண்டுகளில் சைனா செட்(கீபேட்) - யை வாங்கிக் கொண்டு Net_ கனெக்ஷன் கிடைக்காமல் - அடுத்தவர்கள் செல்லை வாங்கி தங்களது வலைத்தளத்தை படித்த காலமும் - நினைவில் வந்து போகின்றன.
    அதன் பின் Nokia - செல் வாங்கி தங்கள் பதிவை படித்தது - ஆனாலும் அதில் பின்னூட்டங்களை படிக்க இயலாது.
    ஒரு வழியாக 2016 போல் moto - e- ஆன்ட்ராய்ட் செல் வாங்கிய பின் தான் பின்னூட்டங்களை Uடிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் மெளனப் பார்வையாளராகவே இருந்து ஒரு வருடமாகத்தான் பின்னூட்டமிடுகிறேன்.
    இப்போது எனது ஆசை அந்த முதல் Uதிவு + பின்னூட்டங்களை படிப்பது எப்படி? i_Link எது? ப்ளீஸ் தெரிவிக்கவும்..

    ReplyDelete
  39. ஆசிரியரே உடல்நலத்தின் மீதும் சிறிது அக்கறை காட்டுங்கள் உங்களின் மனதின் வலிமை உடலிலும் வேண்டுமல்லவா 🙏🙏🙏

    ReplyDelete
  40. உறுத்தாத இதமான கலரிங் பாணிகளில் ட்யுராங்கோ தொடருக்கொரு ஸ்பெஷல் 'ஓ' போடலாம் தான் சார் !////
    கரெக்ட்... வண்டி வண்டியா மஞ்ச பெயின்ட்டை ஊத்திட்டு வர்ற கதையை படிச்சிட்டு வாசல்ல போயி நின்னா தடத்திலே போறவங்கெல்லாம் கண்ணை பார்த்துட்டு மஞ்சக் காமாலையா இருக்கப் போகுது ஆசுப்பத்திரிக்கு போ கண்ணுன்னு பீதியை கெளப்பி விட்டுறுறாங்க..

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் ப்ளாக் & வைட் ல தான் நிறைய டெக்ஸ் கதை வந்துச்சு. க. வெள்ளையிலே படிச்சே கண்ணு மஞ்சளா இருந்தா அதுக்குப்பேரு டெக்ஸ்மேனியா. உண்மையாலுமே டாக்டர் கிட்ட காட்டனும் போல இருக்கே. செனா அனா இது என்ன வியாதியா இருக்கும்.

      Delete
    2. இதுக்கு ஒரே மருந்து நீலகலர்ல இருக்கிற ஸ்மர்ப்ஸ் புக்ஸ தினமும் மூணு வேளை ஒருவாரத்துக்கு படிக்கணும்.(அப்புறம் கண்ணு நீல கலராயிடும். அதுக்கு வேற மருந்து அப்புறமா யோசிச்சி சொல்றேன்.)

      Delete
    3. அதுக்கு டைகர் மருந்து...

      Delete
    4. ஸ்டீல் செம்ம செம்ம 🤣😂

      Delete
  41. சார்!தங்களின் பதிலுக்கு நன்றிகள்!
    //So MAXI லயனில் வந்திடும் லக்கி மறுபதிப்புக் கதைகள் மட்டுமாவது மெகா சைஸிலேயே தொடர்ந்திடும் சார் !//
    ஓ.கே சார்!ஆனால் மறுபதிப்புகளில் மொழிபெயர்ப்பில் மாற்றமில்லாது வந்தால் நன்று!இது குறித்து நண்பர் பரணி(பெங்களூர்), நான் உட்பட ஏற்கெனவே பல நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
    //மாற்றுக்களை suggest செய்யுங்களேன் சார் ?//
    1.ப்ரோ - சகோதரா, நண்பா அல்லது தோழா
    2.சார்வாள் - சார் அல்லது ஐயா, கார்ட்டூன் கதை என்றால் அண்ணாத்தே
    3.புண்ணியவாளா - புண்ணியவானே

    ReplyDelete
  42. ஆகா...என்னவொரு பொருத்தமான பதிவு...
    ஆம் நேற்று இரவு ஏதோ ஒரு யோசனையில் நம் பழைய பதிவுகளை ஒரு ப்ளாஷ்பேக்கில் சென்று பார்க்கலாம் என்று பின்னோக்கி சென்றேன்.அதற்கு சான்றாக நான் எடுத்த குறிப்புகள்..(.நான் இன்னும் பதிவை முழுவதும் படிக்கவில்லை.)...
    1.டிசம்பர் 24-2011. ஆங்கிலத்தில் டைப் செய்து முதன்முதலில் வந்த பதிவு நம் பதிவு..தட்டுதடுமாறி ஒரளவுக்கு படித்து ஆனந்தம் அடைந்த பதிவு.லயனின் மீள் வருகை பதிவு ஆயிற்றே சந்தோஷத்தை கேட்கவும் வேண்டுமா!!!!
    2.டிசம்பர் 25.2011. லாரன்ஸ். டேவிட் புதுக் கதை காணாமல் போன கடல் வரிசையில் வரபவதாக சொன்னீர்கள் ....இது வரை வரவில்லையே????
    3.ஜனவரி 26 2012....இந்த பதிவை படித்த போது பகீர் என்றது.இதற்கு எடுத்த முடிவை நம் லயனுக்கு எடுத்து இருந்தால்!!!!!
    திகில் லைப்ரரியை பிரிந்தது சற்று வருத்தம் தான்...மீண்டும் முயற்சிக்காலாமே...
    4.பிப்ரவரி 12 2012...தோர்கல் பொருந்தாத கதை லிஸ்ட்....ஆனால் இப்போது தவிர்க்க முடியா கதை தொடர்..
    5.பிப்ரவரி 19 2012....டெக்ஸ் இன்று வரை தோல்வி அறியா நாயகராக வலம் வரகிறார்...எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். .அப்படி இருந்தும் அதிகம் உபயோகிக்கிக்காமல் அவருக்கென்று ஒரு பாதையை உருவாக்க இத்தனை வருடம் ஆயிற்று. .....

    இதுதான் நேற்று இரவு நான் பதிவுகள்......மீண்டும் தொடரும்...நண்பர்களும் படித்து தங்கள் எண்ணங்களை தெரிய படுத்தலாமே...நன்றி

    ReplyDelete
    Replies
    1. ௧ாணாமல் போன கடல் +1

      Delete
    2. காணாமல் போன கடல் +100

      Delete
  43. இந்த ஒருவாரம் அலுவலகம் விடுமுறை. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சந்தா கட்டி விடுவேன். (பெங்களூர் கணேஷ் குமார்)

    ReplyDelete
  44. லேட்டா (னாலும்) வந்திட்டேன்..!

    ReplyDelete
  45. திரும்பிப் பார்க்கும் படலங்கள் எப்போதுமே மனசுக்கு தித்திப்பானவையே.

    ReplyDelete
  46. சுறாவேட்டை :

    காமிக்ஸ் படிக்கும் உணர்வே எழவில்லை..! ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரைப்படத்தில் இருப்பது போன்ற உணர்வே கதைமுழுக்க ஏற்பட்டது.!
    மெல்ல மெல்ல நம் மனதில் பதிந்திருக்கும் பழைய பாண்டின் சாயல் இந்த புது அவதாரில் வெளிப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது..(உதாரணம் : நெற்றியில் விழும் சிறு முடிக்கற்றை) .!


    ஆக்ஷன் ஆக்ஷன் மேலும் ஆக்ஷன்..!

    எனக்கு ஒரு சின்ன டவுட்டு..

    இந்த விக்டோரியா ஹண்ட் அக்கா அறிமுகம் ஆகுற சீன்ல பாவடை போட்டிருக்காங்களா இல்லை பேண்ட் போட்டிருக்காங்களா..!?

    ஏன்னா..

    பக்கம் எண் 20,23 ல பாவாடை மாதிரியும்
    பக்கம் எண் 22,24ல் பெல்பாட்டம் பேண்ட் மாதிரியும் தெரியுது..அதான் டவுட்டே..!

    இதைத்தான் கதையில கவனிச்சியா நீயின்னு கேக்காதிங்க.., நான் எதையுமே உன்னிப்பா கவனிச்சிப் படிக்கிறவனாக்கும்..!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி விமர்சனத்துக்கு தான் நான் காத்து இருந்தேன். மறுபடி பழைய பன்னீர் செல்வமா வந்துட்டீங்க

      Delete
    2. //பக்கம் எண் 22,24ல் பெல்பாட்டம் பேண்ட் மாதிரியும் தெரியுது..அதான் டவுட்டே..!//

      வயதாகும் பொழுது இது போன்ற பார்வை குறைபாடுகள் வருவது இயற்கையே...

      Delete
    3. ஆக.. யாருக்கும் பதில் தெரியலை போல..!! :-)

      Delete
    4. ட்ராயிங்கப் பார்த்தா ரசிச்சு அனுபவிக்கோனும்.. ஆராயக்கூடாது பெரியவரே...

      Delete
    5. ///ஆக.. யாருக்கும் பதில் தெரியலை போல..!! ////

      இன்னிக்கு நைட்டுதான் படிக்க டயம் கிடைக்கும்னு தோனுது!! படிச்சுட்டு வரேன்!

      Delete
    6. இவ்வளவு உன்னிப்பா படிக்குற தங்களுக்கு சங்கத்தின் சார்பாக ஒரு " பட்டாப்பட்டி " ட்ராயரை அன்பளிப்பாக அளிப்பதில் நமது சங்கம் பெருமைப்படுகிறது ரவிகண்ணன் அவர்களே..!

      Delete
    7. பெல்பாட்டம்தா அப்டி தெர்து நண்பரே

      Delete
  47. ரௌத்திரம் மற :

    நல்லதொரு தமிழ்சினிமாவுக்குரிய சப்ஜெக்ட்.! 48 பக்கங்கள் போனதே தெரியவில்லை.!
    விலையில்லா மாணிக்கம்.!

    சூது கொல்லும்..!

    ப்ப்ப்ப்பா.. என்னா ட்ராயிங்கு..!?
    டெக்ஸூம் கார்சனும் சும்மா தகதகன்னு மின்னுறாங்கப்பா.!

    கதை.. அட அதைவிடுங்க பாஸூ..!
    ஒரு நகரம்.. ஒரு வில்லன் கோஷ்டி.. ஆப்போசிட்ல நம்ம வில்லரும் கார்சனும்.. இந்த ஃபார்முலாவுல இன்னும் ஆயிரம் கதைகள் வந்தாலும் படிக்க ஜாலியாத்தான் இருக்கும்..!

    கொஞ்சமும் போரடிக்காத கதையோட்டம். சுவாரஸ்யமான ஆக்சன் காட்சிகள்..!
    வில்லர் , கார்சன் வெற்றி நாயகர்களா இருக்காங்கன்னா அதுக்கு இதுதான் காரணம்..!

    ReplyDelete
    Replies
    1. உண்மை ...உண்மையோ உண்மை...:-)

      Delete
    2. உண்மை ...உண்மையோ உண்மை...:-

      Delete
  48. நண்பர்களின் ஆத்மார்த்தமான பின்னூட்டங்களை காணுங்கால், நாமும் களத்திலே குதித்து அன்பு மழை பொழிய வேண்டுமென பேரவா தூண்டிடினும், பணிச்சுமை பாடாய் படுத்துங் காரணத்தால், அன்பர்கள் தம் அலுவலாவலில் கலந்து கொள்ளவியலா மனதோடு எனையாட்கொள்ளும் நித்திராதேவியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நான் .... 😴😴😴

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அழகா இருப்பாங்களோ?!!

      Delete
    2. ஈ வி நீங்க தூங்னாதேன்...

      Delete
    3. EV இந்த டைமிங் தான் உங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். சிரிச்சு மாளலை

      Delete
  49. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்.
    என்னுடைய முதல் பதிவிது. சிங்கப்பூரில் பணியாற்றுகிறேன்.
    நானொரு Golden period வாசகன்
    பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, பின்னூட்டம் எதுவும் போடாமல் படித்து மட்டுமே வந்திருக்கிறேன்.
    Tex, Tiger, XIII, Largo, Bouncer, Durango, Under taker and some graphic novels என்ற 50 முதல் 60 இதழ்கள் வரை அடுக்கி வைத்திருக்கிறேன் (சிங்கப்பூர் வீட்டு அலமாரியில் )

    நன்றி
    S. கோபி

    ReplyDelete
    Replies
    1. நல்வரவும், முதல் பின்னூட்டத்திற்கு வாழ்த்துகளும் சார்!

      Delete
    2. Gopi, நல்வரவும், முதல் பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்களும்!

      Delete
    3. தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே..

      வாழ்த்துக்கள்..:-)

      Delete
    4. தூள். . ௺ண்பரே

      Delete
    5. வருக வருக நண்பரே!!

      Delete
    6. கோபி சார் வாருங்கள் இதே போல தொடர்ந்து பதிவு இடுங்கள்.

      Delete
    7. வருக....வருக...நண்பரே.
      வந்து எமது ஜோதியில் ஐக்கியமானதற்கு நன்றிகள் நண்பா!

      Delete
  50. // Apologies to each one of them//
    இது உங்க பெருந்தன்மைய காட்டுது ஆனா நீங்க எந்த தவறும்( யார் காலயும் மிதிக்காத போது) செய்யாத போது இது எதுக்கு தேவையில்லாம

    ReplyDelete
  51. குமார் சார் டைகர் படத்தை பாருங்கள் ஆயிரம் விலையில் கவ்பாய் கதையாம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வாங்கிய... அந்த காவியத்தில். . மின்னும் மரணம்

      Delete
    2. பார்த்து விட்டேன் பாலன் சார். 1000 ரூபாய்க்கு ஒரு wild west special Editor Sir மனது வையுங்கள்.

      Delete
  52. சார் ௮ட்டைப்படம் இது வரை வந்ததிலேயே டாப். . . . இப்பவே பட்டய கிளப்பும் போது... நகாசுகௗயும் சேத்து நேரில் பாக்களில் வாய் பிளப்பதுறுதி.. .. சும்மா ஜிகுனாத்தூளெல்லா ம் தூவி மின்னியாகனும். .. .ஆமா ! புத்தாண்டு களை கட்டனுமே lms அட்டை போல


    ஸ்டீல்

    ReplyDelete
    Replies
    1. "இதுவரைக்கும் வந்த அட்டைப்படங்களிலேயே டாப்பு " என்று ஆரம்பிக்கும் போதே அது யாராக இருக்குமென்று மக்களுக்குத் தெரியாதா - என்ன ஸ்டீல் ?

      Delete
    2. ஆசிரியர் சார் ஹிஹிஹி எங்க ஸ்டீல் ஐ ஓட்டு வதில் நீங்கள் தான் நம்பர் ஒன்.

      Delete
  53. சுறா வேட்டை!

    வாவ்! மெய்யாலுமே சூப்பர்!! ஒரு முழுநீள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் பார்த்த உணர்வை ஒரு காமிக்ஸ் புத்தகம் தரும் என்பதை நம்பவே முடியவில்லை! இதுவரை வந்த 007 கதைகளிலேயே A1 இதுதான்!!

    குறை என்று பார்த்தால் முக்கிய கதாபாத்திரங்களின் முகங்களை தவிர அங்காங்கே ஓவியங்கள் கொஞ்சம் சுமார் ரகத்தில் இருக்கிறது! கலரிங்கை அள்ளித் தெளித்து அதை சரிகட்டியிருக்கிறார்கள் போலும்!!!

    மற்றபடி கதை ஓட்டம் பிரமாதம்!!!

    மார்க் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. சார்....இந்தத் தொடரில் இன்னமும் அதகளம் செய்து கொண்டிருக்கிறார்கள் ! You haven't seen anything yet !!

      Delete
    2. சார் சார் please சார் ஜம்போ 3 இல் ஜேம்ஸ் பாண்ட் ஒன்றுக்கு இரண்டாக எதேனும் வாய்ப்பு பிளீஸ் சார்

      Delete
    3. சரி தான் மிதுன் // இதுவரை வந்த 007 கதைகளிலேயே A1 இதுதான்!! // அடி தூள்.

      Delete
    4. அது என்னமோ தெரியல.
      என்ன மாயமோ தெரியல.இன்னமும் படிக்காமலேயே பெண்டிங்ல இருக்கிறார் 007.😞😞😞

      Delete
    5. // குறை என்று பார்த்தால் முக்கிய கதாபாத்திரங்களின் முகங்களை தவிர அங்காங்கே ஓவியங்கள் கொஞ்சம் சுமார் ரகத்தில் இருக்கிறது //

      +1

      Delete
  54. அருமையான பதிவு.
    ஆத்மார்த்தமான பதிவு.
    இனிக்கும் உங்கள் பதிவு வரும் நாளே நல்நாள் எங்களுக்கு.உங்கள் சுய எள்ளல் கலந்த உண்மை உரைக்கும் நட்பு மிளிரும் எழுத்துக்கு நான் அடிமை.பதிவு தாமதாக வந்தால் கூடதவிக்கும் என்மனது.சனி என்றாலே இன்று பதிவு வரும் நாள் என்று ஆவலோடு காத்திருப்பவன்.உங்களை வாழ்த்த வயதில்லை,வணங்குகின்றேன் ஆசானே!!!

    ReplyDelete
    Replies
    1. // பதிவு தாமதாக வந்தால் கூடதவிக்கும் என்மனது.சனி என்றாலே இன்று பதிவு வரும் நாள் என்று ஆவலோடு காத்திருப்பவன் // சரவணா என்னையும் சேர்த்து கொள்ளுங்கள். நானுமே

      Delete
  55. இனி போடறதெல்லாம் Load more

    ReplyDelete
  56. சிவிடெல்லியோட புண்ணியத்தில் தல 'யோட தலைதப்பியது.😊😊😊😊

    ReplyDelete