Powered By Blogger

Sunday, February 10, 2019

ஒரு சாவகாச sunday !

நண்பர்களே,

வணக்கம் ! நேற்றைக்குத் தான் "புது அட்டவணை-புது வருஷம் - புதுப் பயணம்" என்றெல்லாம் பெனாத்திக் கொண்டு திரிந்தது போலுள்ளது ! ஆனால் கண் மூடித் திறப்பதற்குள், மார்ச்சின் பணிகள் நிறைவு பெறும் தருவாயை நெருங்கி நிற்பதைப் பார்க்கும் போது -  "ஆண்டின் முதல் க்வாட்டர் நிறைவு பெறுகிறதுடோய் !" என்ற புரிதல் ஒருவித த்ரில்லையும், பயத்தையும் ஒருங்கே ஓடச் செய்கிறது !! த்ரில் - for obvious reasons : தோர்கல் துவக்கி வைத்த பயணத்தில் பராகுடா எனும் புதுவரவு அதிரடியாய் இணைந்து கொள்ள - ஜனவரியே ஜாலிவரிகளின் சங்கமமாயிற்று ! "சிகரங்களின் சாம்ராட்" நம்மிடையே உருவாக்கிய அலசல்கள் இன்றைக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்க்கின் தருணமாய்த் தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் ஒரு சோம்பலான நாளில் பின்திரும்பிப் பார்க்கும் போது - இந்த நொடி நம் பயணத்தில் ஒரு மைல்கல் நொடி என்பது நிச்சயமாய் புரிந்திடாது போகாது !! "காலப் பயணம் ; பிரபஞ்சக் கோட்பாடுகள் ; இணையுலகங்கள்" என நாம் ரவுண்டு கட்டி அடித்துள்ளதெல்லாமே ஒரு "பொம்மை புக்" ரசிகக் குழுவின்  ரேஞ்சே கிடையாது !!! பிப்ரவரியில் ரிப்போர்ட்டர் ஜானியின் புத்தம் புது பாணி, சிந்தைகளைக் கவர்ந்திட ;  மேக் & ஜாக் கார்ட்டூனில் கதக்களி ஆடிட ; வண்ண மறுபதிப்பில் டெக்ஸ் ஜாலம் பண்ண ;  ஜெரெமியாவோ "படிக்கப் - படிக்கப் புடிக்கும்" என்ற பாணியில் ரவுசு விட, ஆண்டின் இரண்டாம்  மாதமுமே உற்சாகத்துக்கு குறை வைக்கா பொழுதாகிப் போயுள்ளது - at least until now !! மார்ச்சில் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள மட்டினைக் கொண்டே கணிப்பதாயின் - அதுவுமொரு செம பட்டாசு மாதமாயிருக்கப் போகின்றதென்பேன் ! ஆக த்ரில்லுக்கான காரணம் புரிகிறது !! Why then பயம் ? 

சொல்கிறேனே....! ஒரு காலத்தில், நாலு ரகளையான ஆக்ஷன் sequences ; சுலபமாய் - நேர்கோட்டில் ஓடும் கதையென்று இருந்தாலே போதும், நாமெல்லாம் குஷியாகி அதனை ஹிட்டாக்கி விடுவோம் ! சிறுகச் சிறுக XIII ; கேப்டன் டைகர் போன்ற கதைகள் களம் காணத் துவங்கிய பிற்பாடு - பைப்பாஸைப் பிடித்து ஓடும் கதைகளையும் ரசிக்கத் துவங்கினோம் ! And தற்போது ரிங் ரோடைச் சுற்றி வரும் கி.நா.பாணியாகவே இருந்தாலும் அதை மடித்து அக்குளுக்குள் செருகிக் கொள்ளும் லாவகம் நமக்குத் துளிர்த்து விட்டது என்பது தான் நிதரிசனமாகத் தெரிகிறது ! ஒரு காலத்தில் "சிகரங்களின் சாம்ராட்" போலான கதைகளை தெரியாத்தனமாக தொட்டு விட்டிருப்பின், அதை அப்படியே பத்திரமாய் பீரோவுக்குள் போட்டுப் பூட்டியிருப்பேன் - காசு முடங்கினாலுமே பரவாயில்லையென்று !! (The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது ! அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது !!) "பராகுடா " - என்று காதில் விழுந்திருந்தாலும் - "போடா..போடா.." என்று நகன்றிருப்பேன் ! "கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் " ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன் ! கம்யூனிசம் பேசும் ரிப்போர்ட்டர் ஜானியை கண்ணில் முழிக்கவே அனுமதித்திருக்க மாட்டேன் !! ஜெரெமியா நம் தெருவில் நடந்து வந்து மணி கேட்டிருந்தால் கூட - "நேக்கு மணி பாக்கவே தெரியாதுடா தம்பி !" என்று அனுப்பியிருப்பேன் ! ஆனால் இன்றைக்கு நீங்கள் தொட்டு நிற்கும் ரசனைகளின் லெவெல்களைப் பார்க்கும் போதுதான் பயமே பூக்கிறது - நம் பயணமானது, உங்களுக்கு  துளியும் ஏமாற்றத்தைத் தந்திடாது, மேலும் மேலும் சுவாரஸ்யங்களோடு தொடர்ந்திட வேண்டுமே என்று !  தொடர்களின் தேர்வுகளில் ; கதைகளின் தேர்வுகளில் ; கதைகளைக் கையாளும் விதங்களில் ; மொழியக்கத்தின் தரங்களில் ; அட்டைப்படங்களின் டிசைனிங்கில் ; தயாரிப்பின் பரிமாணங்களில் துளிகூட சறுக்க, இனித் தொடரும் காலங்களில் leeway இருக்கவே செய்யாதெனும் போது - ஒவ்வொரு இதழையும் விராட் கோலியின் சதங்களை போல ரம்யமாக செதுக்கிடும் பொறுப்பு, வழுக்கைத் தலைமீது குடிகொண்டு நிற்பது புரிகிறது !! At this point of time - முன்வைக்க வேண்டிய முக்கிய கேள்வி "ஜெரெமியா" பற்றியே ! 

மாதத்தில் 10 தேதிகள் ஓடியிருக்கும் நிலையில், ஹெர்மனின் இந்தப் பரட்டை நாயக ஜோடியின் ஆல்பத்தை வாசிக்கும் வாய்ப்பு உங்களுள் பெரும்பான்மைக்காவது கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் ! So படித்தவுடன் பிடித்திருந்தாலும் சரி...படிக்கப் படிக்கப் பிடித்திருந்தாலும் சரி - அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ! அதே போல - ஜெரெமியாவைப் பார்த்த (படித்த_ கையோடு), கும்ப மேளாவில் ஒருமுழுக்குப் போட காசி புறப்பட்டிருப்போரும் தங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிப் பதிவிடலாமே ? எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது ! "ஊம்" என்றீர்களெனில் ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு ஒதுக்கிடலாம் ! "ஊஹும்" என்றீர்களெனில் மனதின் ஒரு ஓரத்தை அவர்களுக்கு ஒதுக்கிடலாம் !   தேர்தல் நேரம் guys ; so பட்டியலை இனியும் தாமதிக்க சுகப்படாது !! ஜம்போ சீசன் 2-ன் மொத்த இதழ்களையும் இந்த மார்ச் இதழ்களில் நாம் திரைவிலக்கிக் காட்டிட வேண்டுமென்பதால் decision making time right now !! 

ஜம்போவின் முதல் சீஸனின் இறுதி இதழில் தற்போது பணியாற்றி வருகிறேன் !!  பக்கத்துக்குப் பக்கம் சும்மா அனல் பறக்கிறது ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் இரண்டாம் சாகசத்திலும் !! And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys !! கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன !! மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை - இம்முறை yet another விதத்தில் சவால் ! ஒரிஜினலில் இங்கிலீஷில், நாலே வார்த்தைகளில் செம அழுத்தத்தோடு  வசனங்களை கதாசிரியர் அமைத்திருக்க  - அதனை அதே crisp பாணியில் தமிழ்ப்படுத்த நாக்கார் தரையைக் கூட்டியது தான் மிச்சம் !! And பற்றாக்குறைக்கு - அந்த வறண்ட பிரிட்டிஷ் நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே தலைகாட்டிட வேண்டுமெனும் போது - நிறையவே மண்டையைப் பிய்த்துக் கொண்டேன் - இயன்ற நியாயத்தைச் செய்திட !! எது-எப்படியோ - இதுவொரு "டைனமைட்" பதிப்பகத் தயாரிப்பு மாத்திரமல்ல ; பாணியிலும் டைனமைட் தான் ! பாருங்களேன் இதன் அட்டைப்பட first look - ஒரிஜினல் டிசைனோடே !! 
இங்கொரு சின்ன கொசுறுத் தகவலும் !! ஜேம்ஸ் பாண்டின் ஒவ்வொரு முழு சாகசமும் 132 பக்கங்களில் அமைத்துள்ளனர் ! அவை 22 பக்கங்கள் கொண்ட 6 தனித்தனி மாதாந்திர இதழ்களாய் வெளிவந்திடுகின்றன அமெரிக்காவில் ! So நாம் முழுசாய் ஒரே  தொகுப்பாய் வெளியிடும் போது - அவர்களது 6 இதழ்களின் முன் + பின்னட்டை டிசைன்கள் என்று மொத்தமாய் ஒரு பத்துப் பன்னிரண்டு அதிரடி  டிசைன்கள் நமக்கு கிட்டுகின்றன !! Variant covers என்றதொரு பாணி அவ்வப்போது மேலைநாடுகளில் நடைமுறையில் உண்டு ! அதாவது ஒரே கதைக்கு ; ஒரே பதிப்பின் போது வெவ்வேறு வித அட்டைப்படங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் ; இஷ்டப்பட்ட கவரை வாசகர்களே  தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் !! சேகரிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களோ - எல்லா டிசைன்களிலும் ஒரு புக் என்று வாங்கிப்போடுவதும் உண்டு !! Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட்   புக்குக்கு இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா ? முன்னொரு காலத்தில் முத்து காமிக்சில் ஒரு இதழுக்கு இது நிகழ்ந்தது ! நினைவுள்ளதா - எந்த இதழென்று ?

ஜம்போவின் சீசன் 1 நிறைவுறும் தருணத்தில் - இந்த அனுபவம் சார்ந்த உங்களின் எண்ணங்களும் எனக்குப் பெரிதும் உதவிடக்கூடும் - சீசன் 2-வின் 2 காலி ஸ்லாட்களை ரொப்பிட !! How has the JUMBO experience been guys ? இயன்றமட்டிற்கும் இதனை ஜனரஞ்சகக் கதைகளோடு - நல்ல தரத்தில் உருவாக்க முனைந்துள்ளோம் ! உங்களின் மதிப்பீடுகள் தொடரும் சீசனுக்குச் செய்திட அவசியமாகிடக்கூடிய திருத்தங்களை சுட்டிக்காட்ட உதவிடக்கூடும் என்பதால் - இத்தருணத்தில் no to மௌனம் ப்ளீஸ் !!

Before I sign off - சின்னச் சின்ன updates :

1 .சென்றாண்டின் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - "பவளச் சிலை மர்மம்" காலி !! தோட்டா மழை பொழியோ பொழியென நம்மவர்கள் பொழிந்ததை நீங்கள் ஏகமாய் ரசித்து விட்டதன் பலனிது !

2 அதே போல "விரட்டும் விதி" - COLOR TEX முதல் மூன்று சிறுகதைகளின் தொகுப்பானது sold out ! இதன் அடுத்த edition (சிறுகதைகள் 4 ; 5 & 6 கொண்டதை ) அடுத்து கையிலெடுக்கலாமா ?

3 . இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !! தமிழ் இதழ்கள் மாத்திரமின்றி, நம்மிடமிருந்த CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களும் பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன !! ஆரிசியாவின் ஆதர்ஷ நாயகர் நமக்கும் செம தோஸ்த் ஆகி விட்டிருப்பது செம ஹாப்பி !!

4 . ஏற்கனவே பலமுறைகள் சொன்னதே தான் ; but மறுக்கா ஒலிபரப்பில் தவறில்லை என்றே தோன்றுகிறது !! ஜனவரியிலும் சரி, பிப்ரவரியிலும் சரி - உங்களின் அலசல்கள் இங்கே களை கட்டியதன் நேரடிப் பிரதிபலிப்பு ஆன்லைன் விற்பனையில் தெறிக்கிறது !! "வாங்குவோமா-வேணாமா ?" என்ற விளிம்பில் நிற்கும் நண்பர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பின்னூட்டமும் செமத்தியாய்ப் பயனாகிறது guys !! கிராம் கூப்பிய நன்றிகள், இங்கே நேரம் செலவிட மெனெக்கெடும் ஒவ்வொரு நண்பருக்கும் !! Keep it going folks !!!

5 திருப்பூர் புத்தக விழா இன்றோடு நிறைவு காண - அப்பாலிக்கா நமது கேரவன் பயணிக்கவிருப்பது நாகர்கோவில் நோக்கி ! நம் ஸ்டால் விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் பிப்ரவரி 15 to 25 வரையிலான நாகர்கோவில் விழாவில் நாமும் கலந்திடுவோம் !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a great Sunday !! நானோ முடிவிலா மூடுபனிக்குள் மூழ்கிடப் புறப்படுகிறேன் !! Bye for now !! 

223 comments:

  1. மிரண்ட விழிகள்:-
    கர்டி மற்றும் ஜெரெம்யா ஊர் ஊராகச் செல்லும் இந்த ஜோடி லெர்பின்ஸ் கோட்டையில் உள்ள நபரை தேடும் இடத்தில் கதை தொடர்கிறது. போகும் வழியில் ஒரு குடும்பத்திற்கு உதவிசெய்யும் போது ஒரு ஜாலவித்தைக்காரன் (களைக்கூத்தாடி) மற்றும் அவனது உதவியாளன் (இன்டியானா) அறிமுகமாகிறான், ஆனால் இருவரும் வந்த வேகத்தில் மறைந்து விடுகிறார்கள். இவர்கள் போகும் பாதை எல்லாம் ஏதுவோ பின் தொடர்கிறது? அது என்ன என்ற கேள்வியை மனதில் எழுப்பி கதையை நகர்த்திய விதம் அருமை.

    கதையில் இடையில் நுழையும் இராணுவம் அங்கே எதிர்பாராத விதமாக இவர்கள் காப்பாற்றும் நபர்கள்; அதில் ஒரு இன்ப அதிர்ச்சி, தனது அழிந்து போன கிராமத்தில் இருந்து தப்பிய பென்டஸ் ஹேட்ச் என்ற பக்கத்து வீட்டு அம்மணி. தனது கிராமத்தில் உள்ள அனைவருமே இறந்து விட்டார்கள் நமக்கு யாரும் இல்லை என்ற ஜெரெமயா நிலையில் இருந்து யோசித்தால் கண்களில் நீர் நிச்சயம்.

    அதே நேரம் ராணுவத்தில் தப்பிச்செல்லும் கைதிகளை சுட்டுத்தள்ளும் வீரர்களுக்கு இடையில் நெஞ்சில் ஈரத்துடன் ஒரு வீரன். நணபர்கள் இருவருடன் இணைந்து தப்பிய கைதிகளை காப்பாற்றும் இடம். இறுதியில் அவன் எடுக்கும் முடிவு மற்றும் அந்த வசனம் சூப்பர்.

    கதை நெடுக ஓவியரின் தூரிகை நமது கண்களுக்கு ஒரு விருந்தே படைத்துள்ளது என்று சொல்லலாம். பாலைவனம், முள்காடுகள், இராணுவத்துடன் போதும் இடம் அதுவும் மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ண சேர்க்கையை மிகவும் ரசித்தேன். இரவு நேர நிகழ்வுகளை நிலவொளி வெளிச்சத்தில் வரைந்ததை மிகவும் ரசித்தேன்.

    கர்டி மற்றும் ஜெரெமயாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம்.

    அந்த காலத்தில் ஜெயிலில் இருந்து தப்பிய நபர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை ஊர் ஊராகச் செல்லும் தெருக்களில் கூத்து (இங்கு ஜாலவித்தை) நடத்துபவர்கள் மூலம்
    கண்காணிப்பது செம.

    மிரண்ட விழிகள் யதார்த்தத்தின் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. //கர்டி மற்றும் ஜெரெமயாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம். //

      அட.. இது கூட நல்லாயிருக்கே ?
      அப்டியே இதில யாரு கரடி ...சாரி..கர்டி என்பதையும் சொல்லிடுங்களேன் ?

      Delete
    2. கர்டி - விஜய்
      ஜெரெமயா - தாரை பரணி

      Delete
    3. க்கும்....நான் ஜெராமியா...

      ஒவ்வொரு நடிகர்,நடிகை பேட்டி கொடுப்பாங்க..நான் நடிச்ச படத்தை நானே பாக்கலைன்னு...


      என் நிலைமை இப்படியா ஆகனும்..:-(

      Delete
    4. விஜயன் சார் ,
      சந்தாவில் இருந்தும் இதழ்கள் 1 ம் தேதி கிடைக்கமாட்டேன்கிறது.
      என்ன தான் கம்யூட்டர் மயமென்றாலும் நோட்டு போட்டு சந்தாபிரிவு - களுக்கு ஏற்ப அனுப்பியாச்சா என்று சரிபார்த்தலே சாலச் சிறந்தது.
      முன்பு சந்தா நண்பர்கள் 1 ம் தேதி இதழ் கிடைக்கவில்லை என்றதும் தளத்தில் பொங்குவதைப் பார்த்து (மனத்தில்) சிரித்திருக் கிறேன்.
      இப்பொழுது நானும், புத்தகம் இல்லாமல் வலைத்தளத்தில் இதழ் விமர்சனங்கள் படிக்கும் போது அதிலும் - நட(ன) மாடும் கொரிலாக்ககள் -படிக்கும் போது சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
      ஒரு வழியாக 7 ஆம் தேதி இதழ்கையில் கிடைத்து முதலில் "நடனமாடும் கொரிலாக்கள்" படிக்டும் போது நான் பாதி கதை _யிலேயே நம் வலைத்தள நண்பர்களை கதைக்குள் கொண்டு வந்து விட்டேன்.. எனவே வாய் விட்டு சிரித்ததில் எனது பங்கு இரண்டு மடங்காகிவிட்டது .. (நீங்கள் நிச்சயமாக நமது வலைத் தள நண்பர்களை மனதில் கொண்டு மொழிபெயர்க்கவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா?..) என்னைப் பொறுத்தவரை சிறையிலிருந்து தப்பிய கைதி நீங்கள் தான்..
      செமத்தியான காமெடி கலாய்த்தல் கதை சார்...ii
      "சிகரங்ககளின் சாம்ராட்" அளவுக்கு புதுசு புதுசா யோசிக்க செம கலாய்ப்பா இருக்கு சார்..ii
      (அடுத்து என் கூட வேலை பார்க்கும் சிலரை மனதில் வைத்து படிக்ககவேண்டும்.. ஹா..ஹா... )| . நன்றி சார். ( யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நினைக்கிகிறேன்..)

      Delete
    5. ///கர்டி மற்றும் ஜெரெமயாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம். ////

      ///கர்டி - விஜய்
      ஜெரெமயா - தாரை பரணி///

      பாத்தீங்களா தலீவரே! இதுக்கு முன்னாடி நான் ஜெரெமயாவைக் கன்னாபின்னான்னு திட்டியிருக்கேன்.. இனிமே திட்ட முடியுமா சொல்லுங்க? இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா? கடிச்சு வச்சுடுவேன்ல கடிச்சு!
      ப்ப்ளான் பண்ணுறாங்க தலீவரே.. ப்ப்ளான் பண்ணுறாங்க! எல்லாமே சிவகாசி சதின்னு தோனறது!

      Delete
    6. // பாத்தீங்களா தலீவரே! இதுக்கு முன்னாடி நான் ஜெரெமயாவைக் கன்னாபின்னான்னு திட்டியிருக்கேன்.. இனிமே திட்ட முடியுமா சொல்லுங்க? இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா? கடிச்சு வச்சுடுவேன்ல கடிச்சு! //

      அட நான் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை! இது கூட நல்லா இருக்கு! :-)

      Delete
  2. நடனமாடும் கொரிலாக்கள்: மேக் & ஜாக்குக்கு சிறையில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றார்களா? இதனை நகைச்சுவை மற்றும் உண்மை சம்பவத்தை இணைத்து சொன்னது சிறப்பு. கதையில் நகைச்சுவையில் முக்கிய பங்கு படங்களே, கதாபாத்திரங்களின் முகம் முதல் கால் வரை உள்ள அசைவுகளை படிக்கும் போது கவனித்தால் சிரிப்பு உத்தரவாதம்.

    கதை அந்த ஒரே ஹோட்டலை சுற்றி வருவது நன்றாக இல்லை. அதே போல் கைதியை தேடி அடுத்து அடுத்து அனைவருக்கும் ஒரே டெம்ப்ளேட் உபயோகப்படுத்தி கதையை நகர்த்தியது போரடிக்கிறது.

    ஆனால் கதையின் முடிவு யதார்த்தமானது, வரவேற்கிறேன்.

    மேக் & ஜாக்கின் முதல் கதையான வாடகைக்கு கொரிலாக்களை இதனுடன் compare செய்தால் இந்த கதை கொஞ்சம் சுமார்.

    நடனமாடும் கொரிலாக்கள் ஆகா ஓகோ ரகமில்லை என்றாலும் ஆகா ஆகா ரகம்.

    ReplyDelete
  3. Goodmorning sir.. And friends.. Have a joyfull Sunday...

    ReplyDelete
  4. // இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !!//

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அப்படி போடு.

    ReplyDelete
    Replies
    1. பிரபஞ்சம்தின் புதல்வர் தமிழ் காமிக்ஸ் க்கு பதிய பரிமானம் கொடுத்து இருக்கிறார்.

      Delete
  5. மிரண்ட விழிகள்: சில கேள்விகள்.

    1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா? அப்படி என்றால் அது குரங்கா?
    2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்?
    3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேரெமயா மற்றும் கர்டி தேடுவது யாரை?
    4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி? அவனின் மாயாஜாலம் மகிமை?

    ReplyDelete
  6. ஜம்போ சீசன்2ல் ஜரமியாவுக்கும் ஒரு சீட் போடலாம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வேண்டும்.

      Delete
    2. வேண்டும் வேண்டும்..டும் டும்

      Delete
  7. // And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys !! கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன //

    விஜயன் சார், நீங்கள் பில்டப் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை. இவரின் முதல் கதை வெற்றி என்பதால் கவலைப்படேல்

    ReplyDelete
  8. அய்யாடிக்கய்யாடியோவ்!!!

    007ன் அட்டைப் படம் மிரட்டுகிறது!! 007 முகத்தை வரைந்திருக்கும் விதமும், அந்தக் கண்களில் தெரியும் உயிர்ப்பும், உடல் மொழியும் - ப்ப்பா!

    பின்னட்டைப் படமும் பிரம்மிக்கச் செய்கிறது!! வரையப்பட்ட அந்தக் கோணம் அசத்தல்!! ('பறவைப் பார்வை' மாதிரி இது 'மண்புழுப் பார்வை'யோ?!)

    அப்புறம்.. அப்புறம்.. முன்னட்டையில் 007க்குப் பின்னே துப்பாக்கியேந்தி நிற்கும் அந்தப் பெண் - நிழலா?.. நிஜமா? ப்பா.. செம!!

    ReplyDelete
    Replies
    1. அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள். எனது எண்ணமும் இதுவே.

      Delete
  9. ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு தாராளமாக ஒதுக்கிடலாம். இந்த யதார்த்த நாயகர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  10. இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !!\\\

    I very happy.

    ReplyDelete
  11. ////Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட் பூக்கும் இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா ? ///

    சூப்பர்.. சூப்பர்!! அதுவும் 007ன் அட்டைப் படங்கள் எல்லாமே அசத்தல் ரகம் எனும்போது - உற்சாகம் பிச்சிக்கிது!

    ReplyDelete
    Replies
    1. Yes yes and big yes for variant covers. I'm waiting for the surprise which cover I will get.

      Delete
  12. பத்து மணிக்கு முன் பதிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங் சார்! பத்துமணிக்கு டாண்ணு தூக்கம் வந்திடுது! ஆபீஸ் டைமோல்லியோ!!

      Delete
    2. //ஆமாங் சார்! பத்துமணிக்கு டாண்ணு தூக்கம் வந்திடுது! ஆபீஸ் டைமோல்லியோ!!//

      ROFL..

      Delete
    3. கிண்டலா பன்றிங்க...

      வடிவேலு சொல்லுவாரே

      "இருங்கடா ஆறு மணிக்கு மேல் தண்ணிய போட்டுவிட்டு உங்ககிட்ட பேசுறேன்னு"

      அதே மாதிரி

      "இருங்க வைக்கிங் தீவு மர்மம் மை படிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்."

      Delete
  13. ஜெராமய்யா ஊஹூம்.
    பராகுடா ஊஹூம்.

    ReplyDelete
  14. 1. டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - நல்ல செய்தி

    2. Color TEX அடுத்த எடிஷன் சிறுகதைகள் (4,5 & 6)

    சாமியோவ் அதை நிறுத்தி புடாதீங்க. அதுக்காக நான் சீரியசாக வைட்டிங்.
    விரட்டும் விதி என் டாப் 5 லிஸ்டில் உள்ளது.

    3. தோர்கலுக்கு ஜே

    ReplyDelete
  15. ஞாயிறு காலையில் சூடான டீ யுடன் நமது Blog போனால் இந்த வாரப் பதிவைக் காணாமல் ஏமாற்றம், எதையே இழந்தது போல, இப்பதான் சரியாச்சு 😄😄😄😄

    ReplyDelete
  16. Dear editor Sir there is a thing I want to share with you. I'm really happy with your announcement that barracuda comes in lion graphic novel and you haved moved "pralayam" to another slot. It's a move to please everyone. Which shows your good heart Sir. As I'm working in Coimbatore and Comics comes home to Salem so yesterday only I got the February books in my hands. Except Jeremiah I've read all the books and I'm really pleased with all the three books thus far. Mack and Jack and Johnny 2.0 both stole the show for me. Really good. That too Mack and Jack made me laugh like anything. Cartoons really are the stress busters in this busy and stressful life. As far as jumbo books I'll give two thumbs up for it. Except for the dynamite special all the other books are awesome where as it is only good. There is still so much more to share wilhich I'll do in due course. Waiting to March books and your announcement for jumbo

    ReplyDelete
    Replies
    1. ///That too Mack and Jack made me laugh like anything. Cartoons really are the stress busters in this busy and stressful life.////

      +1111111

      Delete
  17. ஜெரேமியா பிடித்துள்ளது.டெக்ஸ் மறுபதிப்பு மகிழ்ச்சி, ஜம்போவில் ஒரே ஒரு கதை மட்டும் பிடிக்கவில்லை. மற்றபடி ஜம்போவுக்கு சிவப்புக் கம்பளம்.

    ReplyDelete
  18. No more Jeremiah please.. Till now I haven't skipped reading any of your comic books. For the first time I have skipped reading Jeremiah part 1 and 2.

    ReplyDelete
  19. ****** ஜெரெமயா : பயணங்கள் முடிவதில்லை *******

    முதல் கதை : முந்தைய பாகங்களோடு ஒப்பிட்டால் 'கொஞ்சம் தேவலாம்' ரகம்! அந்த ஜாலவித்தைக்காரன் + அவனுடைய வினோத ஜந்து ஆகியோரது பாத்திரப்படைப்பும், அவர்களை வரைந்திருக்கும் விதமும் - மிரட்டல்!

    இரண்டாவது கதை: சூப்பர்!! இதே கதையை கர்டிக்குப் பதிலாக கேப்டன் பிரின்ஸையும், ஜெரெமயாவுக்குப் பதிலாக பொடியன் ஜின்னையும், அந்தப் பாட்டீம்மாவுக்குப் பதிலாக பார்னேவையும் போட்டு தயாரித்திருந்தால் இன்னுமொரு அக்மார்க் 'கேப்டன் பிரின்ஸ் சாகஸம்' ரெடியாகியிருக்கும்!

    மூன்றாவது கதை: நல்ல கதைக்கரு - ஆனால், சொன்ன விதத்தில் கொஞ்சம் சிதைக்கப்பட்டிருக்கிறது. 100 பக்கங்களில் சொல்ல நினைத்த கதையை, அதில் பாதி பக்கங்களுக்கும் குறைவாய் சொன்னால்?!! நல்ல க்ளைமாக்ஸ் இருந்தும் 'சொதப்பிட்டீங்களே ஹெர்மன்' என்ற ஆதங்கமே எழுகிறது!

    சித்திரங்கள் செம! வண்ணக்கலவைகள் நம் கண்களின் நிறமி செல்களுக்கு 100% வேலையைக் கொடுக்கின்றன! இரவில் படிக்கும்போது வீட்டில் லைட் எரியவேண்டும் என்ற அவசியமில்லை!

    ஹெர்மனின் சித்திரங்களுக்கு அதிதீவிர ரசிகன் நான்! ஆனால் அவரது கதை சொல்லும் பாணிக்கல்ல!!

    என்னுடைய ரேட்டிங் : 8/10

    ReplyDelete
  20. பதிவை காணவில்லை....காலை...



    தலைப்பை காணவில்லை...இப்பொழுதும்...:-)

    ReplyDelete
  21. விஜயன் சார், நிழலும் நிஜமும் என்ற பெயரில் நமது காமிக்ஸில் இதற்கு முன்னர் ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் கதை வந்துள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. நிழலும் கொல்லும் என்ற பெயரில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதை வந்துள்ளது. அது ராணி காமிக்ஸில் வந்த மிஸ்டர் K என்ற கதைதான்

      Delete
    2. நன்றி திருச்சி விஜய்

      Delete
  22. மீண்டும்....


    மீண்டும் ...


    கேட்பதால் சொல்கிறேன் சார்...



    ஜெராமியா விற்கு பதிலாக ஒரு கிராபிக் நாவலாவது வெளியிடுங்கள் சார்...


    மனசை தேத்திக்கிறேன்...:-(

    ReplyDelete
  23. இரண்டாவது முறை படிக்கும் போது ஜெராமியா பிடிக்க ஆரம்பித்து விட்டது.

    ஏதுவுமே இல்லாத ஜெராமியா ஏதோ ஒன்று பிடிக்க வைக்கிறது.

    அதில் இருக்கும் ஏதார்த்தம் என்னை கட்டி போடுகிறது. தந்தராகாரனை முதல் கதையில் கொண்டு வந்தாலும் அதில் துளி மசாலா கிடையாது.

    இரண்டாவது கதை அருமை. அதுவும் 73 ம் பக்கம் வரையபட்ட இயற்கை காட்சி அருமை.
    மாதம் ஒன்னரை லட்சம் வங்கும் concept artist எங்கள் நிறுவனத்தில் உள்ளனர். யாரை வேண்டுமானாலும் அரை மனி நேரத்தில் வரைய கூடிய அசாத்திய திறைம உள்ளவர்கள். மற்ற காமிக்ஸ் களில் பெரிதாக கண்டு கொள்ளதவர்கள், ஜெராமியா பார்த்த உடன் realistic க்கில் வித்தியாசமாக உள்ளது. இது reference க்கு வேண்டும் என்று கேட்டனர். ஜெராமியா வின் சித்திரம் மதிப்பு வாய்த்தது.

    முன்றாது கதை " இரத்த கோட்டை" போன்று வந்திருக்க வேண்டியது. பதிப்பளர்கள் தலையிட்டால் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறை படிக்கும் போது நன்றாககவே இருந்தது.

    ஜெராமியா மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே என் விருப்பம்.

    ReplyDelete
  24. ஜெரிமையா தாங்க முடியல.
    தயவு செய்து வேண்டாம் சார்

    ReplyDelete
  25. எல்லா ஆபிசருக்கும் வணக்கம்

    ReplyDelete
  26. ஜெரிமீயா முடியல சார்.
    இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் சார்.

    ReplyDelete
  27. The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது ! அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது !!) \\\\

    தற்போது insiders ஜ முயற்சிக்கலாமே?.

    ReplyDelete
  28. போன முறை வறன்ட பாலைவனமாக 007 இருந்தது.

    தற்போதய அட்டை படத்தை பார்க்கும் போது பூத்து குலுங்கும் பூஞ்சோலையாக இருக்கும் என்று தோன்றியது.

    உண்மை தானே சார்??

    ReplyDelete
  29. அனைவருக்கும் வணக்கம். ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் . மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே எனது விருப்பமும்.

    ReplyDelete
    Replies
    1. ///ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் ///

      நன்றாகப் பிடிக்க எத்தனைமுறை படிக்கவேண்டும்? :P

      Delete
  30. மிரண்ட விழிகள்: சில கேள்விகள்.

    1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா? அப்படி என்றால் அது குரங்கா?
    2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்?
    3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேரெமயா மற்றும் கர்டி தேடுவது யாரை?
    4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி? அவனின் மாயாஜாலம் மகிமை?

    Reply
    குரங்கு தான்... Nuclear war ல் gene mutant ஆகி
    அதிவேகமாக ஓடும்திறனும், infrared அல்லது தகிக்கும் பார்வை விழிகளும் அமையப்பெற்ற , nuclear war க்கு முன்பே ஜாலவித்தையால் பழக.கப்படுத்தப்பட்ட குரங்கு. தன் master க்கு விசுவாசமாக உள்ள gene mutant gorilla
    Nuclear war னால் பாதிக்கப்பட்டு அதிவேகமாக தன் masterஐயும் சுமந்து கொண்டு வேகமாக ஓடும் திறன் அடைந்த
    குரங்கு.

    ReplyDelete
  31. Gene mutant ஆன குரங்கு nuclear warல் radiation ஆல் பாதிக்கப்பட்டு அல்லது கிரகிக்கப்பட்டு தேவையான போது அதை வெளியிடவும், தன் master's ஆக்ஞையின் படி செயல் புரியவும் செய்கிறது. கழைகூத்தாடி எப்படி தன் குரங்கை வைத்து ஜாலவித்தை செய்கிறானோ அப்படி. இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று Hermann நினைக்கிறார் என்பது என் கருத்து

    ReplyDelete
  32. லெர்பின்ஸ் கோட்டை யில் தேடுவது யாரை என்கிற கேள்விக்கு ஜெரமையா முதல் புத்தகத்தை refer செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நேற்று வேகமாக பழைய பாகத்தை புரட்டிய போது தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும்.

      இராணுவத்திடம் இருந்து காப்பாற்றும் மூன்று நபர்களில் ஒருவர் மேல் ஜெரெமயா சண்டை போட தயாராக இருப்பான், ஒரு வேளை அந்த நபர்தான் இவரோ?

      Delete
  33. ricky_tbm Ramesh10 February 2019 at 13:19:00 GMT+5:30
    அனைவருக்கும் வணக்கம். ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் . மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே எனது விருப்பமும்.

    உண்மைதான் நண்பரே. ஜெரமையா படிக்க, படிக்க முடிக்கும். இந்த கதைகளை படிக்க அதற்கான ஒரு mood and mindset உருவாகும்.
    Apocalyptic genreக்கு உரித்தான மனநிலை அது.
    இந்தகதையில் சில விஷயங்கள் உள்ளன
    சாதாரன அமெரிக்காவில் செவ்விந்தியர் களை வெள்ளை யினத்தினர் வேட்டையாடுவார்கள, அல்லது ஒதுக்கி வைப்பது வழக்கம்.
    ஆனால் apocalyptic America வில் செவ்விந்தியர் power ல் உள்ளார்கள்
    வெள்ளையர.களை வேட்டையாடுகிறார்கள்

    Reply

    ReplyDelete
    Replies
    1. // இந்த கதைகளை படிக்க அதற்கான ஒரு mood and mindset உருவாகும்.
      Apocalyptic genreக்கு உரித்தான மனநிலை அது.//

      +1

      Delete
  34. 1)மரபணு மாற்றத்திற்கு உட்பட்ட மனிதன்.
    (அணுகுண்டு போரின் பிந்தைய காலம்)
    2)கண்களில் இருந்து அகச்சிவப்பு கதிர்கள் வெளிப்படுத்தியதால் (அகச்சிவப்பு கதிர்கள் வெப்பம் தரும், இன்டியான உமிழும் அளவிற்கு ஏற்ப பாதிப்பு) அதை கொண்டு தான் கர்டியை கொல்ல பட்ட மரத்தின் கிளையை உடைத்து விழ செய்தது.
    நம் விழி cornea வழியே அதன் கதிர்கள், நம் விழித்திரையின் செல்களான rods and cones ஐ பொசுக்க கூடும்.

    4)அவன் இன்டியானா தோள்களிலே பயணிக்கிறான். அதற்கு அசாத்திய வேகம் உண்டு

    ReplyDelete
    Replies
    1. idellam neenga sollitan theriyuthu ....First time padikum pothu onnum puriyale ...indiyana sethu pochu kirathe padichi oru varam kalichi tan theriyum :)

      Delete
    2. விளக்கங்களுக்கு நன்றி நவநீதன்.

      Delete
    3. அருமையான விளக்கம்.

      Delete
  35. ஜெராமியா மிக அழகான ஆர்ப்பாட்டம் இல்லா கதை களம்..2 ம் பகுதி இன்னும் படிக்கவில்லை .முதல் பகுதியை படித்த போதே எழுந்த வரிகள்...சிலர் அதிருப்தி கொள்வதால் இது போன்ற கதைகளை விட்டு விடாதீர்கள்...தோர்கலும் ஆரம்பத்தில் இப்படி தான் சிலர் சொன்னார்கள் .ஆனால் இப்போதுவிற்பனையில் முதல் இடம்...வாவ்.....
    ஒரு இதழுக்கு 2 அட்டைகள்...நல்ல விசயம். .வரவேற்க தகுந்தது.இந்த.ஐடியாவை 20+ ஆண்டுகளுக்கு முன்பே அஞ்சல் அட்டையில் எழுதியவன்.அதற்கு இப்போது செயல் வடிவம் கொடுக்க நினைத்ததற்கு நன்றி. .ஆனால் ஒரு வேண்டுக்கோள் இதனை ஸ்பெஷல் இதழ்களில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது (டெக்ஸ் கதைகளில் அதிகமாக)என் எண்ணம்...007 கதைகளை 2 யாக வாங்க ஒர்த் இருப்பதாக தெரியவில்லை. ..நன்றி

    ReplyDelete
  36. I vote for Jeremiah for one slot(pokkisam,Hermann arts)I will buy two copies sir....sir u told that,u will give two slots for 007 in jumbo 2...if possible make it another one slot to 007...thank u sir

    ReplyDelete
    Replies
    1. திகட்டி விடக்கூடாதல்லவா நண்பரே ?!!

      Delete
  37. ///இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !! ///


    ஈஸ்வரா... லோகத்துல இப்படியெல்லாம் கூட நடக்குறதே!!!

    சார்.. bar code scannerல ஏதோ தப்பிருக்கும்னு நினைக்கிறேன்! அதனாலதான் எல்லா டெக்ஸு புக்ஸையும் தோர்கல் புக்ஸு மாதிரியே காட்டியிருக்கு!

    இல்லேன்னா பில்லிங் சாஃப்வேர் corrupt ஆகியிருக்கலாம்.. கம்ப்யூட்டர்ல வைரஸ் புகுந்திருக்கலாம்..

    அதுவும் இல்லேன்னா நம்ம பெங்களூரு பரணிகிட்டேர்ந்து உங்களுக்கு ஒரு மிரட்டல் ஃபோன் காலோ அல்லது உங்க அக்கெளண்ட்டுக்கு கணிசமான ஒரு தொகையோ கூட வந்திருக்கலாம்!!

    உப பதிவு(லயாவது) உண்மையப் போட்டுவுடுங்க சார்...

    டெக்ஸ், லக்கிய மிஞ்சி விற்பனையில சாதிக்கிறாங்களாம்.. அதுவும் ஆருசியா ஹஸ்பேண்டாம்!! ஹோ.. ஹோ.. ஹோ.. நாங்கல்லாம் யாரு.. எங்ககிட்டயேவா..

    ReplyDelete
    Replies
    1. // அதுவும் இல்லேன்னா நம்ம பெங்களூரு பரணிகிட்டேர்ந்து உங்களுக்கு ஒரு மிரட்டல் ஃபோன் காலோ அல்லது உங்க அக்கெளண்ட்டுக்கு கணிசமான ஒரு தொகையோ கூட வந்திருக்கலாம்!!//

      நல்ல கற்பனை. எங்க ஆள் நேர்வழியில் வெற்றி பெற்று விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எழுதிய உங்கள் வயித்தெரிச்சல் சரியாக ஜெலுசில் குடிங்க விஜய் :-)

      Delete
    2. ஒரு டாப் கியர் தோர்கலும், ஒரு average "சாத்தானின் சீடர்கள்" இதழும் ஒரே மாதத்தில் வெளியானது தான் 'தல' பின்னுக்குப் போயிருக்க முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் ! But மார்ச் இதழில் மனுஷன் தீயாய்த் திரும்புகிறார் !!

      Delete
  38. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். இந்த மாதத்தின் நான்கு புத்தகங்களும் Fab Four என்கிற இடத்தைத் தொட்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வைக்கிங் தீவு மர்மம் தன்னளவில் ஒரு கிளாசிக் எனில் இரண்டாமிடத்தை தனதாக்கிக் கொள்கிறான் ஜெரேமயா. சரியாகச் சொல்வதெனில், இந்தத் தொடரின் உண்மையான நாயகன் கர்டியே. முதல் வருகையில் சற்றுக் குழப்பத்தை உண்டு பண்ணினாலும் இந்த முறை ஜெரேமயா வெற்றிக் கோட்டைத் தொட்டு விட்டதாகவே எண்ணுகிறேன். மாயஜாலக்காரன் - இளமை கிளினிக் - மதவெறிக் கும்பல் என மூன்று தெளிவான களங்கள். கதையில் அங்கங்கே விடப்பட்டிருக்கும் open endings சில நண்பர்களுக்குக் குழப்பமேற்படுத்தலாம், ஆனால் அவையே இந்தக் கதைகளின் பலமும் கூட. ஓவியங்களின் வண்ணச் சேர்க்கை மட்டும் அவ்வப்போது முகத்தில் அறைகிறது, என்றாலும் ரசிக்க முடிகிறது. ஜம்போவில் தாராளமாக ஜெரேமயா வரலாம். இதன் மூலம் கண்டிப்பாக வாங்க வேண்டிய தேவையை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

    ஜானி 2.0 ஒரு அற்புதமான அரசியல் திரில்லர், ஒரே சிக்கல் - அதனை ஜானியின் மறு அவதாரம் என்பதை மட்டும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கிட்டத்தட்ட கார்ட்டூன்களைப் போன்ற சித்திரங்கள், பிரதானமாகப் பயன்படும் வானின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் என கிளாசிக் ஜானியின் வழக்கங்கள் யாவும் தவிர்க்கப்பட்டிருப்பதால் இதை ஜானி என்று மட்டும் என்னால் சொல்ல முடியவில்லை. என்னுடைய நம்பிக்கைகளை வலியுறுத்தும் அற்புதமான அரசியல் காமிக்ஸாக மிகவும் பிடித்திருந்தது. புதிய ஜானியோடு சேர்த்து பழைய ஜானிக்கும் ஒரு ஸ்லாட் கொடுத்தால் மகிழ்வேன்.

    இறுதியாக - மேக் அண்ட் ஜேக். வழக்கமான நகைச்சுவை காமிக்ஸ்களில் காணக்கிடைக்காத களம். அருமையான கிளைமாக்ஸ் மற்றும் அங்கங்கே தென்படும் நகைச்சுவை. கொண்டாட முடியாவிட்டாலும் ரசிக்க முடிந்தது. கொரில்லாக்களின் அட்டகாசம் தொடரட்டும்.

    பிரியமுடன்,
    கா.பா.

    ReplyDelete
    Replies
    1. ///மேக் அண்ட் ஜேக். வழக்கமான நகைச்சுவை காமிக்ஸ்களில் காணக்கிடைக்காத களம். ///

      உண்மை!!

      Delete
    2. //கதையில் அங்கங்கே விடப்பட்டிருக்கும் open endings சில நண்பர்களுக்குக் குழப்பமேற்படுத்தலாம், ஆனால் அவையே இந்தக் கதைகளின் பலமும் கூட//

      Very true...!

      // புதிய ஜானியோடு சேர்த்து பழைய ஜானிக்கும் ஒரு ஸ்லாட் கொடுத்தால் மகிழ்வேன்//

      நடப்பாண்டிலேயே மே அல்லது ஜூன் மாதத்தில் பழைய பாணி ஜானி - வண்ண மறுபதிப்பாய் வருகிறார் சார் - "தலைமுறை எதிரி" வாயிலாக !!

      Delete
    3. தாங்க்யூ சார். பழைய பாணி ஜானி முழுமையாக தமிழில் வெளியாகிவிட்டதா? ஏதேனும் பாகங்கள் மீதமிருக்கிறதா?

      Delete
  39. கோயம்புத்தூரில் இருந்து ஸ்டீல் க்ளா:

    இருவது பக்கம் படிச்சேன்...என்னயும் கூட பயணிக்க செய்யும் பயணமும் ௐவியமும் வண்ணங்களும் அதகளம்...வரட்டும்...படிச்சதும் பகிர்கிறேன்

    அவரு இப்ப எல்லாம் ரொம்ப பிஸியாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. பிட்டு பிட்டாய்ப் அடித்தால் ஜெரெமியா புரிஞ்சா மாதிரித் தான் !! ஹுக்க்ம்ம்ம் !!

      Delete
  40. ஜெராமய்யா வேண்டாம் என்று எடுத்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.அந்த இடத்தில் நம்ம வெட்டியான் அண்டர்டேக்கர் வந்திருந்தால் ?பிப்ரவரியின் இதழ்கள் ஓஹோ என்று கொண்டாட்டமாக இருந்திருக்கும்..அந்த ஒற்றைக்கை பவுன்சரோ அல்லது ஒற்றைக்கண்ணன் பராகுடாவின் அடுத்த பாகமோ வந்திருந்தால் கூட செமையாக இருந்திருக்கும்.ஆகவே ஜெராமையா வை அடுத்த ஒரு வருடத்திற்கு கண்ணிலேயே காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ததாஸ்து ..

    ReplyDelete
    Replies
    1. இந்நேரத்துக்கு நீங்கள் ராஜஸ்தான் பார்ட்ரைக் கடந்திருப்பீர்களென்று நினைக்கிறேன் சார் !! இன்னுமும் குளிர் ஜாஸ்தியோ அக்கட ?

      Delete
    2. And by the way, பராகுடாவின் climax பாகத்தினை ஏப்ரல் அல்லது / மே மாதத்தில் கண்ணில் காட்டி விடுவோம் சார் !

      Delete
  41. கடையில் புத்தகம் கிடைக்கவே தேதி 10 ஆகி விடுகிறது, ஆகையால் கிடைக்கிற அவகாசத்தில் படித்து முடிக்கவே அடுத்த மாதத்தை தொட்டு விடுகிறது.
    ஆகையால் எனது மிக தாமதமான
    ஜனவரி மாதத்து ரேட்டிங்.,

    1. பராகுடா - 9.5/10
    2. சிகரங்களின் சாம்ராட் - 9.5/10
    3. சாத்தானின் சீடர்கள் - 8.5/10

    ReplyDelete
    Replies
    1. லேட்டானாலும், ஆர்வத்தோடு பதிவிடுவதற்கு ஒரு thumbs up சார் !

      Delete
  42. டியர் எடிட்டர்

    Feb என்னைப் பொறுத்தவரை Fab 3 அண்ட் Flop 1.

    ஆகச்சிறந்தது ஜானி 2.0. நமது மிஸ்ஸிங் டிடெக்ட்டிவ் தளத்திற்கு ஏற்ற கதை.

    மேக் அண்ட் ஜாக் are here to stay !

    Tex - எனக்கு முதல் வாசிப்பு என்பதால் கவர்ந்து விட்டது.

    ஜெரெமியா - இரண்டாம் கதை பரவாயில்லை. மற்றவை இவ்விலைக்கு ஏற்ற எதிர்பார்ப்பினை ஈடு செய்யவில்லை என்பதே என் கருத்து. காசிக்கு டிக்கெட் போட்டு விட்டேன் :-)

    --

    புக்பேரில் Thorgal on top என்பது வரவேற்க வேண்டிய விஷயம். மிக்க மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டுக்கு ஆவலுடன் waiting.

    PS : அந்த 'இன்னும் 4 கார்ட்டூன்களுக்கு ஒரு வழி செய்வோம்' விஷயம் என்னாச்சு சார்? ஹி ஹி !!

    ReplyDelete
    Replies
    1. காசிக்கு போகும் வழியில் படித்துக் கொண்டே போக maybe ஜெரெமியா -3 ஆகுமோ ?!!

      அப்புறம் - கவலையே வேணாம் சார் ; ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி !

      Delete
    2. கார்ட்டூன்ஸ் கலெக்ஷன்..மினி லயன் ஸ்பெஷல் போல அசத்தணும் சார்..

      Delete
    3. சார்...கார்ட்டூன் கலெக்சன் ஆகஸ்ட்ல வந்தா சிறப்பா இருக்கும்.

      Delete
    4. /அப்புறம் - கவலையே வேணாம் சார் ; ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி !/
      I'm waiting.

      Delete
  43. நாகர் கோவிலா..ஆஹா..ஷல்லூம் அலார்ட்ட்ட்....வாசக படையை ஒன்று திரட்டி மாபெரும் வரவேற்பை நல்குங்கள்..

    ReplyDelete
  44. ஜெராமையா - மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் சார்...
    மதிப்பெண் - 8/10


    மேக் & ஜாக்
    மதிப்பெண் - 9/10


    டெக்ஸ் வில்லர்
    மதிப்பெண் - 9/10

    ஜானி 2.0
    மதிப்பெண் - 9/10

    ReplyDelete
  45. 1.jeremiah- After thorough introspection,despite good 2nd story,my answer is no need to continue.
    2.Need more cartoons
    3.Jumbo season one was average.I didnt like james bond .But second season books show hope.I am already in.
    Regards
    Arvind
    Regards
    Arvind

    ReplyDelete
  46. போன தடவை வானத்தைப் பார்த்தபடிக்கு டெர்ரர் லுக் கொடுத்த பாண்ட், இப்பதான் ஃபார்முக்கு வந்திருக்காரு (ராப்பரைச் சொன்னேன் )

    மேலே செக்கச் சிவந்தவளும் ,கீழே மஞ்சள் நிறத்தழகியும் சூழ ,நடுவில் ஜேம்ஸ் பாண்ட் என காம்பினேஷன் கனகச்சிதம்.

    ஆறு புல்லட் இருக்குமிடத்தில் ஒன்றில் மட்டும் சிரிக்கும் மண்டையோடு, சின்ன வட்டங்களில் பாண்டின் குட்டியூண்டு குட்டிக்கரணங்களின் அமைப்பு, சில வெடிகுண்டுகளின் தாண்டவம் என ராப்பரே டைட்டில் சாங் போலவே ஆக்ரமிக்கிறது.

    முன்னட்டை அட்டகாசம் என்றால் ,பின்னட்டை அற்புதம்..!

    ReplyDelete
  47. ///இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !! ///


    கடவுள் இருக்கான் குமாரு..!

    ReplyDelete
  48. ஜேம்ஸ்பாண்ட் கதைகளில் கும்மாங்குத்து மற்றும் டமால்டுமீல் சமாச்சாரங்கள் சவுண்ட் எபக்ட்டில் அவசியம் வேண்டும்.அப்புறம் டெக்ஸ் மறுபதிப்பில் வண்ணத்தில் கழுகுவேட்டை எனது சாய்ஸ் .தோர்கல் விற்பனையில் முதலிடம் பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை.பயலுக்கு இந்த வருடம் விபரீத ராஜ யோகம் நடக்கிறது.அப்படிதான் இருக்கும்.

    ReplyDelete
  49. Just now read Jeremiah superb it's not a regular story but really it's very good all the three stories I like very much. As one of our friends said the author left them with open ends. That too these stories were written almost 40years back Uffff how creative the author is and all the drawings were so good and all the people know about the artist. I'll vote Jeremiah for a spot in jumbo season 2. 👍

    ReplyDelete
  50. My ratings for February Books
    Jeremiah -9.5/10
    Johnny 2.0 -9/10
    Mack and Jack 9/10
    Tex -9/10
    This month is really fabulous February.

    ReplyDelete
  51. It looks like we have got three books for erode book fair as I think
    1. Lone Ranger
    2. Cartoon special
    3. Pralayam may be?

    And what about the two spots in jumbo guys?
    1. Jeremiah (my choice)
    2. ??????????

    ReplyDelete
  52. தோர்கல் விற்பனையில் முதலிடம் என்பது சந்தோசமான செய்தியே. இதுக்கு போன மாதம் ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அனைவரின் ஒட்டு மொத்த விவாதங்களே காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் என்ன.

    நிறய கதாநாயகர்கள் பிரபலாமவது வரவேற்கத்தக்க விசயம். ஒட்டு மொத்த காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவும்.

    நண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் பிப்ரவரியிலான இதழ்கள் டெக்ஸாஸ் நோக்கி புறப்பட்டு விட்டது. முதலில் படிக்க இருப்பது ஜெரமையாவே. எனக்கு முதல் தொகுதியும் பிடித்தே இருந்தது.

    ஜேம்ஸ்பாண்டின் அட்டைப்படம் கலர்புல்லாக 😉 இருக்கிறது. கார்ட்டூன் கலெக்‌ஷன் ஆகஸ்டில் நான்கோ ஐந்தோ கதைகளுடன் ஹார்ட்பவுண்ட் அட்டையில் வருமாறு இருக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ReplyDelete

  53. ///எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது !///

    ஜெரெமயா ...
    1. ஹெர்மன் ஒரு நல்ல ஓவியர் ...நல்ல கதாசிரியர் ஆக பரிமளிக்கவில்லை ....

    2. வசனங்களில் தெளிவில்லை ..


    3. நல்ல ஒரு கதை கருவையும் அவிழ்த்து ,நடத்திசெல்வதில் தோல்வியுற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் .

    4. ஓவியங்கள் நன்றாக இருப்பினும் பின்னணி களங்கள் மற்றும் கதாமாந்தர்கள் இடையே ஒப்பு வேற்றுமை இல்லாதபடியால் சித்திரங்கள் வலுவிழக்கின்றன...


    5. வண்ண சேர்க்கை தரம் ஒரு இயல்பான ரசிகர் கதையோடு ஒன்றுமாறு சோபிக்கவில்லை .

    6. இதுவரை வந்த கதைகள் ‘’பேரழிவுக்கு பிந்தைய மனித குலம்’’ என்ற சித்தாந்தத்துக்கு பெரிய நியாயம் செய்யவில்லை என்பது என் எண்ணம்

    .எனவே

    நோ டு ஜெரெமயா ....வேறு பிரெஞ்சு கதைகள் இருப்பின் போடலாம் ..

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஆறாவது பாய்ண்ட் பற்றி சென்ற பதிவினில் வேறு வார்த்தைகளில் சொல்லி இருந்தேன். பேரழிவிற்குப் பின்னான அமெரிக்க உலகை ஒரு வளர்ந்த ஐரோப்பிய தேசத்தின் கதை சொல்லி எண்பதுகளில் சொல்லிய கதை ஜெரேமியா. தற்போதைய நடப்புக்களில் ஐரோப்பியா ஒரு சற்று இடறி அமெரிக்கா முன்னணியில் (குழப்பங்கள் இருந்தாலும் முன்னணி வகிப்பது அமெரிக்காவே) இருப்பது, தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதைகளை ரசிக்கத் தடையாய் உள்ளது.

      மற்றபடி என் மனதில் தோன்றிய ஆனால் ஏனோ விவரிக்கவியலாத மற்ற பாய்ண்டுகளையும் செறிவாய் அடுக்கி உள்ளீர்கள் டாக் !

      Delete
    2. சூப்பரா சொன்னீங்க செனாஅனா!!

      Delete
    3. வரிக்கு வரி வழிமொழிகிறேன் செனா அனா..!

      கூடுதலாக ஒரு போயிண்ட் ...

      கதையில் வரும் லேடி கேரக்டர்கள் கூட ஜெரெமயா சாயலிலேயே தெரிகின்றார்கள் ..!:-)

      Delete
    4. கதையில் வரும் லேடி கேரக்டர்கள் கூட ஜெரெமயா சாயலிலேயே தெரிகின்றார்கள் ..!:-)

      ####

      அப்ப அது லேடிதானா...?!

      நான் கூட ஜெராமியா டபுள் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்காரேன்னு நினைச்சுட்டு இருந்தேன்...:-(

      Delete
  54. 112வது.அட்டை படம் அசத்தலாக உள்ளது .

    ReplyDelete
  55. கூகுள் + இன் செயட்பாடுகள் வரும் ஏப்ரல் உடன் முடிவதாக மெயில் வந்துள்ளது . இந்த காலக்கெடு, அந்த கணக்கில் உள்ள படங்கள், தகவல்களை எடுப்பதுக்கு மட்டுமே . சில கணங்களுக்கு மட்டுமே பதிவிட முடியும் . எந்த வழியில் தொடந்து பதிவிடுவது என்று நண்பர்கள் உதவி செய்வார்களா ?

    ReplyDelete
  56. இயக்குனர் சிகரம் K.B அவர்களின் படைப்புகள் உங்கள் பீரோவில் சிக்கிக்கொள்ள கூடியவைகளெ. ஆனால் அதை ஆதரித்து நமக்கு ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் கிடைத்த பெருமை நம் தமிழ் ரசிகர்களையெ சாரும். நம் comicsஇல் எந்த சூப்பர் ஸ்டாரை மிஸ் பண்ணினோமொ தெரியவில்லை. ஆனால் 8 வயதில் தில்லுமுல்லு படத்தில் சண்டை காட்சிகள் இல்லாமல் ஏமாற்றம் அடைந்த எனக்கு இன்று பல முறை பார்த்தும் திரும்ப பார்க்க ரசனை மாறி விட்டது :)

    ReplyDelete
  57. யுகமெலாம் பரிசோதனைகளே

    ஒரு பரிசோதனை கூடத்தில் ஆரம்பிக்கும் கதை இறுதியில் பரிசோதனை கூடத்தையே ஜெரெமயா மற்றும் கர்டியால் முழுவதும் அழிக்கபடுகிறது? ஏன் எப்படி என்பதுதான் கதை! பணம் கிடைக்கும் என்ற காரணத்தால் என்ன வேலை என்று முழுவதும் தெரியாமல் கர்டி ஸ்டோனுடன் கிளம்புகிறான்! செல்லும் இடத்தில் நடக்கும் தில்லு முல்லை ஓரளவு புரிந்து தப்பிக்க நினைக்கும் போது கர்டியை மடக்கி அவனையும் தங்களின் தொழிலுக்கு நன்கொடையாளனாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்! அவர்களின் தொழில் இளமையாக வாழ விரும்புவர்களுக்கு, மற்றவரின் (இவர்கள் நன்கொடையாளனாக கதையில் சித்தரிக்க படுகிறார்கள்) ரத்தத்தில் உள்ள சீரத்தை எடுத்து அடுத்தவர் உடம்பில் செலுத்துவது!

    ஜெரெமயாவையும் நன்கொடையாளனாக பயன்படுத்த பரிசோதனை கூடத்திற்கு வலை விரித்து கொண்டுவரும் இந்த கூட்டத்தில் இருந்து ஜெரெமயா தனது நண்பன் கர்டியை காப்பாற்றி வெளியே கொண்டு வருவது மசாலா அதிகம் இல்லாத இயல்பான விறுவிறுப்பான கிளைமாக்ஸ்!

    இங்கே செரில் என்ற பெண்ணுடன் நண்பர்கள் நட்புடன் இருக்கிறார்கள்! செரில் யார், இந்த பரிசோதனை கும்பலில் இளமையாக இருக்க மருத்துவம் பெரும் ஒரு பெண்! இந்த சஸ்பென்ஸை கிளைமாக்ஸில் வசனம் இல்லாமல் சித்திரம் மூலம் அவிழ்த்து இருப்பது சிறப்பு!

    சில கேள்விகள்:
    1) அவள் இது போன்று நன்கொடையார்களை கண்டுபிடித்து பரிசோதனை கூடத்திற்கு தகவல் சொல்பவள் என்று புரிந்து கொண்டேன்! ஆனால் செரில் எப்படி இந்த நண்பர்கள் கூடத்தில் இணைத்தாள் என்பது சொல்ல படவில்லை! இதனை நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என கதாசிரியர் நினைக்கிறாரோ?
    2) மிரண்ட விழிகள் கதையில் காப்பாற்றபடும் சிறுமி மற்றும் மற்றொரு நபர் எங்கே? பயணத்தில், அவர்கள் வேறு பாதையை தேர்தெடுத்து இவர்களிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்களோ? இதனை நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என கதாசிரியர் நினைக்கிறாரோ?

    கதையில் சில விஷயம்களை கதாசிரியர் நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தார் என்றால் அதுவே இந்த கதையில் ப்ளஸ் அண்ட் மைனஸ். ஒரு சில நண்பர்களுக்கு கதை புரியாமல்/பிடிக்காமல் இருப்பதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்!

    இல்லை கதையில் இது போன்ற சில விஷயம்களை கதாசிரியர் கவனிக்கவில்லை என்று எடுத்து கொண்டால் இது மைனஸ்.

    ReplyDelete
    Replies
    1. // இளமையாக வாழ விரும்புவர்களுக்கு, மற்றவரின் (இவர்கள் நன்கொடையாளனாக கதையில் சித்தரிக்க படுகிறார்கள்) ரத்தத்தில் உள்ள சீரத்தை எடுத்து அடுத்தவர் உடம்பில் செலுத்துவது! //

      My guess! can someone confirm this?

      Delete
    2. @ PfB

      தானாக முன்வந்து கொடுத்தால் அது 'நன்கொடை'! வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை'!:)
      பணம்படைத்த பெரிசுகளின் இளமையை மீட்டெடுக்க, துடிப்பான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு (அதாவது கர்டியைப் போல ஏமாற்றி அழைத்துவரப்பட்டு) அவர்களின் உடலிலிருந்து ஏதோ ஒரு சமாச்சாரத்தை(??!!)) உறிஞ்சியெடுத்து, இளமையை மீட்டெடுக்கும் மருந்தைத் தயாரிக்கிறார்கள்!!
      செரிலுக்கு வேறு வழியில்லை - தன் இளமைக்கான மருந்தைத் தொடர்ந்து பெறுவதற்காகவாவது அவள் அந்த டாக்டருக்கு ஊழியம் செய்தாகவேண்டிய நிலை!

      நல்லவேளையாக செரிலுக்கும் ஜெரெமயாவுக்கும் இடையே 'அப்படி இப்படி' எதுவும் நடந்துவிடவில்லை! இல்லேன்னா ஜெர்'ரின் நிலைமை டர்ர்ர் ஆகியிருக்கும்..ஹிஹி!!

      Delete
    3. ////ஆனால் செரில் எப்படி இந்த நண்பர்கள் கூடத்தில் இணைத்தாள் என்பது சொல்ல படவில்லை! ////

      சொல்லப்படாத சங்கதிகள் பலப்பல! எல்லாத்தையும் நமக்கு விளக்கிச் சொல்லிக்கிட்டிருப்பதெற்கெல்லாம் ஹெர்மனுக்கு நேரமில்லைங்க! அவருக்கு நேரமில்லைன்றதாலதான் இம்முறை கலரிங் பண்ற வேலையையும் வேறு ஒரு ஓவியரிடம் கொடுத்து - அவரும் ஹெர்மனிடம் நல்லபேர் எடுக்கவேண்டுமென்ற முஸ்தீபில் கொஞ்சம் தூக்கலாய் வண்ணங்களைப் பூசி... இப்போ சிவகாசியில் எல்லா மையும் காலியாகிற அளவுக்குப் போய்டுச்சு!

      எடிட்டர் சார்.. கவர்ன்மென்ட்டுகிட்டே எப்படியாவது பர்மிஷன் வாங்கி, பிரின்ட்டிங் மையோடு கொஞ்சம்போல ரேடியத்தையும் கலந்துவுட்டு அடுத்த ஜெரெமயா புத்தகத்தைப் போட்டீங்கன்னா.. எல்லார் வீட்டிலேயும் கரண்ட் செலவு மிச்சம் பாருங்க? :D

      Delete
    4. // அவரும் ஹெர்மனிடம் நல்லபேர் எடுக்கவேண்டுமென்ற முஸ்தீபில் கொஞ்சம் தூக்கலாய் வண்ணங்களைப் பூசி... இப்போ சிவகாசியில் எல்லா மையும் காலியாகிற அளவுக்குப் போய்டுச்சு! //

      Ha Ha ! :-D

      கண்ணுக்கு ரொம்ப டாலடிக்குது. இனிமேல் வந்தால் coolers போட்டுக்கிட்டுதான் படிப்பேன் :-)

      // பிரின்ட்டிங் மையோடு கொஞ்சம்போல ரேடியத்தையும் கலந்துவுட்டு அடுத்த ஜெரெமயா புத்தகத்தைப் போட்டீங்கன்னா.. எல்லார் வீட்டிலேயும் //

      எல்லார் வீட்டிலேயும் ஒப்பாரி தான் கேக்கும் விஜய். அதுக்கு முன்னாடி புக்ஸ் அச்சாகுமா என்பதே சந்தேகமாகிடும் - அப்புறம் வருந்துகிறோம் போஸ்டர் அவரவர் புகைப்படம் போட்டு சந்தாவில் வரும் :-( :-D

      Delete
    5. // தானாக முன்வந்து கொடுத்தால் அது 'நன்கொடை'! வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை'!:) //

      Vijayan sir, note this point :-)

      Delete
    6. எனக்கு வடிவேலுக்கு பஞ்சாயத்து பண்ண முற்படும் சங்கிலி முருகன் பீலிங்கு தான் எழுகிறது - மாறி மாறி ஜெரெமியா FOR அணியும் AGAINST அணியும் த்த்தம் வாதங்களை முன்வைப்பதைப் படிக்கும் போது !!

      Delete
  58. டியர் எடி, நான் சந்தாவில் இல்லை என்றாலும் தங்கள் தீவிர வாசகன். 23 பாகங்கள் ெகாண்ட ஜெர மயாவை சீக்கிரம் ேபாட்டு முடித்துவிடுங்கள். உலகின் பல ெமாழிகளில் ஹிட்டடித்த ெதாடர் இது.ஒரு சின்ன ேவண்டுகாள். இது போன்ற நீண்ட ெதாடர் களை கையில் எடுத்தால் ஈரோடு புத்தக விழாவ மனதில் கொண்டு முன்பதிவின்படி (இரத்தப் படலம் ேபான்று) ஒரே ெதாகுப்பாக வெளியிடுங்கள் . ஏற்கனே வ பல கதைகள் ெதாங்கலில். Lady S , கமான்சே, இப்படி,

    ReplyDelete
    Replies
    1. திருத்தம் சார் ; ஜெரேமியா தொடரில் இதுவரைக்கும் வந்துள்ள ஆல்பங்கள் 36 ! அக்டோபர் 2018 -ல் தான் லேட்டஸ்ட் ஆல்பம் வெளியாகியுள்ளது & இதுவொரு தொடர்ந்திடும் தொடர் ! So இப்போதைக்கு 36 பாகங்கள் கொண்ட ஜெரெமியாவை ஒரே தொகுப்பாய் வெளியிடுவது சாத்தியம் தானென்று நினைக்கிறீர்களா ?

      And தொங்கலில் உள்ள தொடர்கள் நமக்குத் பிடிக்கவில்லை என்பது தானே நிதரிசனம் ? அதன் பொருட்டு நான் செய்யக்கூடியது என்னவாக இருக்க முடியும் சார் ? "ஒரு தொடரை ஆரம்பிச்சாச்சு ; so அவற்றை முடித்தே தீர வேண்டுமென்று "நான் தீர்மானித்தால் - முடிந்திடக்கூடியது வாசகர்களின் பொறுமைகளாக மாத்திரமே இருக்க முடியுமல்லவா ?

      Delete
    2. கண்டிப்பாக தங்கள் கருத்தை ஏற்றுக் ெகாள்கிறேன். முடிந்த வரை மிக நீண்ட ெதாடராக இல்லாமல் one shot ஆல்பங்கள் மிகப் பெரியதாக இருந்தாலும் முயற்சிக்கலாமே சார். ஆறு முதல் 10 பாகங்கள் ெகாண்ட ெதாடர்கள் , தற்ேபாதைய Bouncer. BarraCuda , ேபான்று. தற்போது முத்து மினி காமிக்ஸ் மீண்டும் சாத்தியமா?. B/w oneshot மொழி பெயர்பபு ஆல்பங்கள் பிரபல வார இதழின் விலையில் சாத்தியமா? இது விற்பனை அதிகரிக்க உதவும். பரிசீலித்தல் சாத்தியமா?

      Delete
    3. Editor Sir,

      மூன்று ஆல்பம் ஜெரேமியா தொகுப்புக்களுக்கே நீங்கள் 500 bookings முறையை ட்ரை பண்ணலாமே சார். 50-50 விருப்பு-வெறுப்பு சூழ்நிலை உருவானால் இந்த வகையில் வேண்டியவர்கள் காத்திருந்து வாங்கிக் கொள்ளட்டுமே - of course விலை இன்னும் சற்றே கூடுதலாகும்.

      Delete
    4. சார்..கதைகளின் நீளமோ ; தொடர்களின் விசாலமோ துவக்கத்தில் பரிசீலனைக்கே வருவதில்லை - எப்போதுமே ! கதைகளின் தரம் மட்டுமே பிரதானமாகிடும் - எனக்கும், உங்களுக்கும். So அதனில் அடிப்படையில் சமரசம் செய்து கொள்ளும் முகாந்திரங்களில்லை எனில் - அந்தத் தொடர் தண்டவாளத்தில் ஏறிடும் - தானாய் - இதோ தற்போது தட தடத்து வரும் தோர்கல் எக்ஸ்பிரஸ் போல !! ஆனால் ஏதேதோ காணங்களின் பொருட்டு உங்களின் மத்தியில் அந்தத் தொடர் தண்ணீர் குடிக்கத் துவங்கினால் - அப்புறம் நான் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை ! பெயரளவிற்கே லகான் அடியேன் கைகளில் சார் ; கோச்வண்டியினை இயக்கும் ரிமோட் உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலுமே !! நான் சும்மாக்காச்சும் "ஹை..ஹை...டுர்..டுர்.." என்று சத்தம் கொடுப்பதெல்லாமே லுல்லாயிக்கு தான் !!

      Delete
    5. //மூன்று ஆல்பம் ஜெரேமியா தொகுப்புக்களுக்கே நீங்கள் 500 bookings முறையை ட்ரை பண்ணலாமே //

      ஒருமித்த கருத்து இல்லா சூழ்நிலையில் - "வேணும்னா வாங்கிக்கலாம்" பாணியே சுகப்படும் என்பது புரிகிறது சார் ! பார்க்கலாமே...!

      Delete
    6. // வேணும்னா வாங்கிக்கலாம்" பாணியே சுகப்படும் //

      +1

      Delete
    7. //வேணும்னா வாங்கிக்கலாம்" பாணியே சுகப்படும் //
      +2

      Delete
  59. நான் எப்போதாவதுதான் பதிவிடுகிறேன். இந்த மாத இதழ்கள் சிறப்பு. ஜெரமயா, ஒரு மாதிரி எதிர்மறை எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. வண்ணங்கள் கலவை மூஞ்சியில் அடித்தாற்போல் ரசிக்க இயலவில்லை. கதையும் அப்படி ஒன்றும் பிரமாதம் அல்ல. எனவே இதை தொடரவேMண்டாம் என்பது தனிப்பட்ட கருத்து.

    மேக் அண்ட் ஜாக் சிறப்பு. ஜானி 2.0 நல்லா இருந்தாலும், ஒரிஜினல் ஜானியின் இடியாப்ப சிக்கலும் வேண்டும்தான்.

    ReplyDelete
    Replies
    1. என்ன தான் பர்கர் ; பீட்ஸா என்று காலம் மாறியிருந்தாலும், அந்தப் பாரம்பர்ய இடியாப்பத்துக்கு இன்னமுமே மவுசு உள்ளதைப் பார்க்க சந்தோஷமே !! புது பாணியில் கையிருப்பு ஜாஸ்தி லேது என்பதால் பழைய பாணியும் தொடர்ந்திடும் சார் !

      Delete
    2. ஆனாலும் புது பாணி ஒரு கலக்கு கலங்கிவிட்டது சார். Just loved it !

      Delete
    3. Raghavan @ // புது பாணி ஒரு கலக்கு கலங்கிவிட்டது சார் //

      பார்த்து ரொம்ப கலக்கிட போகுது! :-)

      Delete
    4. ஜானி


      புதுசு



      பழசு



      ரெண்டும் பெஸ்ட்...எனவே ஜானி எப்படி வந்தாலும் டபுள் வரவேற்பு...ஜானியின் அந்த அழகான சித்திரங்களே மயங்க வைக்கிறதே...

      Delete
  60. //The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது ! அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது !!)//
    என்ன kindof story sir இது? If possible இப்போ try பண்ணலாமே?

    ReplyDelete
  61. சார் அப்புறம் ஒரு விஷயம் : Thorgal-ன் அடுத்த நெடும் சாகசம் நெருங்கிக்கொண்டிருப்பதால் இந்த பகிர்வு. அடுத்த இரு கதைகள்:

    17. La Gardienne des Clés (1991)
    18. L'épée-soleil (1992)

    அதன் பின்னர் வருவதோ ஒரு ஐந்துபாக சாகசம் :

    19. La Forteresse Invisible (1993) (start of the Shaigan story arc)
    20. La Marque des Bannis (1994)
    21. La Couronne d'Ogotaï (1995)
    22. Géants (1996)
    23. La Cage (1997) (end of the Shaigan story arc)

    நீங்கள் பிளான் செய்யும்போது 17,18ஐ 2020க்கும் 19-23ஐ 2021க்கும் தயவு செய்து கடத்தாமல் ஒரே குண்டாய் போடுங்கள் சார் - ஒரு மெகா Thorgal - ஆண்டுமலராய்.

    அல்லது ஜம்போவில் 17,18ஐ ஒரே தொகுப்பாய் நுழைத்து விட்டு ஆண்டுமலராய் அந்த ஐந்து பாக குண்டு புஸ்தகம் போடவும். குண்டு போட்டு நாளாகியாச்சோலியோ? (That கட்டை விரல் moment).

    ReplyDelete
    Replies
    1. Raghavan +1

      செம்ம ஐடியா!!

      Delete
    2. நினைவூட்டலுக்கு நன்றிகள் சார் ; ஜனவரியில் தோர்கல் & நம்மவர்கள் time travel என்ற ரகளையைத் துவக்கிய போதே இந்தத் தொடரின் அடுத்த காலப்பயண episode எதுவென்றே தேடலில் பின்னுள்ள இதழ்களில் கணிசத்தைப் படித்து விட்டேன் ! So அந்த 5 பார்ட் குண்டோதர ஆல்பம் எட்டும் தொலைவிலேயே இருப்பதைக் கவனிக்க முடிந்தது !!

      காலும், வாயும் இருந்தென்ன புண்ணியம் சார் - ஒன்றோடு ஒன்று சங்கமித்துக் கொள்ளாது போயின் ?!! :-) :-)

      Delete
  62. // ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி ! //

    ஈரோடு புத்தகத் திருவிழா? அல்லது நமது ஆயிரமாவது இதழாக போட்டுத் தாக்கலாமே? இந்த காரணத்தை கொண்டு நாங்கள் எல்லோரும் சிவகாசிக்கு ஒரு விசிட் அடித்து சீனியர் எடிட்டருக்கு வாசகர்கள் சார்பில் ஒரு விழா எடுக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே மாதா மாதம் அட்டவணையில் ஏதேனுமொரு தடி புக் இடம்பிடித்து நிற்க - மூச்சிரைக்கிறது சார் அவற்றோடு பயணிப்பதில் ! இதோ பார்த்திருக்க - ட்யுரங்கோ -3 ; பராகுடா -2 ; ஜம்போ சீசன் 2 என்று மேற்கொண்டும் கிங்கர இதழ்கள் வெயிட்டிங் !! So கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் - இன்னும் புதுசாய் ஓட்டமெடுக்கத் திட்டமிடும் முன்பாய் !!

      Delete
    2. எது எப்படியோ... ஆனால் ஆயிரமாவது இதழ் வருவதற்கு ஒரு மாதம் முன்பு எங்களுக்கு தெரிவிக்கவும். இது எங்களின் சிவகாசி விஜயத்தை முன் கூட்டியே திட்டமிட உதவும்.

      Delete
  63. எடிட்டர் சார்

    2013 முதல் ஏறக்குறைய தினமும் XIII முழுவண்ணத்தில் வேணும், Thorgal வேணும் என்று நச்சரித்தது நமது கோவைப் புலவர் தான் சார் - when most of us were skeptical about Thorgal - நம்மவர்களுக்கு என்று வரும்போது and "XIII இப்போதானே போட்டோம் முழுத்தொகுப்பாய் etc etc " Kudos to Steel Claw.

    இவை இரண்டும் பேய் ஹிட் அடித்த இவ்வேளையில் உங்கள் அலமாரியில் துயில் கொண்டிருக்கும் ஒரு புஸ்தகத்தை அவருக்கு celebratory பரிசாக அனுப்புங்களேன் - இந்த விஷயத்தை குறிப்பிட்டு.

    ReplyDelete
    Replies
    1. மெய்யாக அவருக்குப் பரிசளிப்பதாயிருப்பின் - அது இஸ்பைடரின் "அந்தக் கதையை" வெளியிடுவதன் வாயிலாகத்தானிருக்க முடியும் சார் !

      Jokes apart - ஸ்டீலாரின் பங்களிப்பை என்றைக்குமே நானும், இந்தத் தளமும் மறந்திட இயலாது !!

      Delete
  64. டியர் விஜயன் சார் , பல வருடங்களுக்கு பிறகு நமது காமிக்ஸின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வலை பின்னலை அழுத்தினேன்...ஆச்சர்யம் லயன் காமிக்ஸ் இன்னும் அதே பொலிவுடன் ஏகப்பட்ட ரசிகர்களுடன் வலம் வந்து கொண்டிருந்தது ..
    அடுத்த ஆச்சர்யம் நான் சிறுவதில் மிகவும் படித்து ரசித்த மரணத்தின் நிறம் பச்சை மறுபதிப்பாக வெளிவந்திருந்தது..உடனே எந்தவித second thought ம் இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து படித்ததில் மீண்டும் என்னை சிறுவயதிற்கே அழைத்து சென்றுவிட்டது பர பரவென online இல் பல மிக்ஸ்களை ஆர்டர் செய்தேன் அதிகம் ஆர்டர் செய்தது reprint editions..ஒரு சிறு வேண்டுகோள் CID லாரென்ஸ் & டேவிட்டின் "காணாமல் போன கடல்" காமிக்ஸ் ஐ reprint செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் காரணம் இந்த காமிக்ஸ் புத்தகத்தை நான் பழைய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து எனது பாட புத்தகத்தினுள் வைத்து படித்துமொண்டிருக்கும் பொது கவனித்துவிட்ட என் தந்தை பாதியிலே (அதை பிடுங்கி அடுப்பில் போட்டுவிட்டார்.
    ஏற்கனவே அந்த புத்தகத்திற்கு முன் பக்கங்கள் இல்லை , முடிவும் தெரியவில்லை. நானும் பல பழைய மார்க்கெட் கடைகளில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் காலஓட்டத்தில் காமிக்ஸ்களை மறந்தே விட்டேன், எதேச்சையாக அன்றைக்கு காமிக்ஸ்களை தேட இன்னும் அதே உயிர்ப்புடன் செயல் பட்டு வருவதை கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.
    மேலும் நீங்கள் பழைய காமிக்ஸ்களை reprint செய்வதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தயவு செய்து காணாமல் போன கடல் காமிக்ஸ் ஐ reprint செய்யவும் மீண்டும் ஒரு முறை கிங் கோப்ராவை(பாட்ச்சா படத்தில் வர்ர ரகுவரன் மாதிரி ) பற்றி படிக்கச் ஆர்வமாக உள்ளேன் எதிர்பார்ப்புடன் - sunder

    ReplyDelete
    Replies
    1. Profile name சூப்பருங்க சுந்தர்! இதுக்காண்டியே 'கா.போ.க'வை மறுபதிப்பாப் போடலாம்! :)

      Delete
    2. உடனே இல்லாவிடினும் அடுத்த மறுபதிப்புச் சுற்று active ஆகத் துவங்கும் தருணத்தில் உங்களது கோரிக்கையை செயல்படுத்திட முயற்சிப்போம் சுந்தர் சார் !

      Delete
  65. மிரண்ட விழிகள்(ஜெரேமியா-1) நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம் சார். கதை ஏகமாக ஜம்ப் அடிக்கிறது. Open ending கதை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    கதை 2 - அருமை
    கதை 3 - ok compared to 1

    ReplyDelete
  66. //23 பாகங்கள் ெகாண்ட ஜெர மயாவை சீக்கிரம் ேபாட்டு முடித்துவிடுங்கள். உலகின் பல ெமாழிகளில் ஹிட்டடித்த ெதாடர் இது.//

    பல மொழிகளில்.. ஐரோப்பாவில் என வைத்து கொள்ளலாம்.. ( ஐரோப்பாவில் 40- க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன)

    ஐரோப்பிய ரசனைகளை நமது ரசனையாக - எல்லாவற்றையும் - ஏற்று கொள்வதில்லை.

    தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காமிக்ஸ்களில்..

    கலெக்டட் எடிஷன் என்றவகையில் 12வது இடத்தையும்

    தனி காமிக்ஸ் இதழ்கள் என்றவகையில் 7 வது இடத்தையும்

    பெற்று இருப்பதும் இதுவரையில் சுமார் 150 மில்லியன் - க்கும் மேற்பட்டு விற்பனையாகி இருப்பதுமான

    இத்தாலியின் டயபாலிக் காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் உலகில் இருந்து அப்புறப்படுத்த விட்டது...

    ( அமெரிக்காவில் ஜெரெமயா வெற்றி பெற இயலவில்லை)

    If European folks enjoy a comics that doesn't necessarily mean that comics shall be enjoyed everywhere too..


    ReplyDelete
    Replies
    1. அதன் ரிவர்சுமே சில நேரங்களில் பிரமிப்பூட்டும் !! இங்கே ஒரு காமிக்ஸ் கலாச்சாரத்துக்கே வித்திட்ட இரும்புக்கை மாயாவி - ஒரிஜினலாய் வெளியான இங்கிலாந்திலும் சரி ; மொழிபெயர்ப்புகளாய் வெளியான நாடுகளிலும் சரி - just about average தான் !

      So கதையின் கருத்து :

      உலகமே கொண்டாடும் டயபாலிக்கை "அப்பாலிக்கா போயி விளையாடு நயினா !" என்று சொன்ன வேளையிலும் தவறில்லை நம் ரசனைகளில் ; அங்கே மிதமாய் நடை போட்டு வந்த மாயாவியை இங்கே சிரம் மீது கொண்டு கொண்டாடிய கட்டங்களிலும் மிகையில்லை நம் ரசனைகளில் !

      நமக்கு ருசித்தால் மட்டுமே அது மெய்யாலும் பிரியாணி ; இல்லாங்காட்டி முட்டை திணிக்கப்பட்ட புளிச்சோறு தானே ?

      Delete
    2. நமக்கு ருசித்தால் மட்டுமே அது மெய்யாலும் பிரியாணி ; இல்லாங்காட்டி முட்டை திணிக்கப்பட்ட புளிச்சோறு தானே ?

      ########


      தக்காளி பிரியாணின்னு கூட சொல்லலாம் சார்...:-))

      Delete
  67. ஜெராமயா மிகவும் அருமை!
    கண்டிப்பாக தொடரலாம்!

    ஹெர்மன் ஓவியங்கள் ஒருவிதமான இனம்புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது!

    ஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது!

    ஆத்மார்த்தமான பயணம் தான் கைகொடுக்கும்!

    வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத போது மேற்கொள்ளும், இலக்கில்லா, எதிர்பார்ப்பில்லா பயணங்கள் என்றுமே அலாதியானவை!

    அதை அனுபவித்திருந்தால் உணர முடியும்!

    அந்த தருணங்களே 'கர்டி மலாய்' போன்றோரை ஹீரோவாய் காட்டுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீங்க மிதுன்.

      Delete
    2. ///ஜெராமயா மிகவும் அருமை!
      கண்டிப்பாக தொடரலாம்!///

      உங்ககிட்டேர்ந்து எதிர்பார்த்ததுதான்!

      ///
      ஹெர்மன் ஓவியங்கள் ஒருவிதமான இனம்புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது!///

      உண்மங்க!

      ///ஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது!///

      ஹெர்மனுக்கே கூட தெரியாதுன்னுதான் தோனுது!


      ///அந்த தருணங்களே 'கர்டி மலாய்' போன்றோரை ஹீரோவாய் காட்டுகிறது!!///

      நிஜ வாழ்க்கையில் இந்தமாதிரி யாரையாவது சந்திச்சோம்னா அவன் பெயர் 'ரவுடி'!

      Delete
    3. ஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது!

      ######


      விடையே இல்லாத படைப்பு இலக்கியவாதிகள் போன்றோருக்கு வேண்டுமானால் ஜீரணமாகலாம் சார்..வாசகர்களுக்கு கண்டிப்பாக ஜீரணமாகாது...

      Delete
    4. தலீவரே..ஆனானப்பட்ட வான் ஹாமின் முடிச்சுகளையே சும்மா அலேக்கா அவிழ்த்த உங்ககிட்டே இன்னும் ஜாஸ்தியா எதிர்பார்க்கிறேன் !!

      Delete
    5. :-))))))


      சார்...


      எனக்கு முடிச்சே தெரிலைங்கிறது தான் ப்ளஸ் பாய்ண்ட்...:-))

      Delete
  68. ///"கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் " ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன்!///

    இந்த கதைக்கு 'for matured audience only' tag போட்டிருக்க வேண்டும். குழந்தைகள் படிப்பார்கள் என்று பெண்களின் படங்களைக் கூட சென்சார் செய்யும் நீங்கள் இந்த கதையை எப்படி கார்டூனில் எந்த வித எச்சரிக்கையும் தராமல் வெளியிட்டீர்கள் என்று தெரியவில்லை 😏

    ReplyDelete
    Replies
    1. வயது வந்தோருக்கு மட்டும் என போடும் அளவுக்கு அந்தக் கதையில் எந்த விரசமும் இருந்ததாகத் தெரியவில்லையே. கிராஸ் டிரெஸிங்கின் பின்புலத்தில் பல அர்த்தங்களை நாமே புரிந்துகொள்வதால்தான் இந்த குழப்பம். குழந்தைகளும் அதே போல் சிந்திப்பார்களா என்ன?

      Delete
    2. @ வழிப்போக்கன்

      அருமையான, ஏற்புடைய பதில்!

      (அடிக்கடி இந்த வழியாவும் வந்துட்டுப்போங்க சார்!)

      Delete
    3. Very true ...கதையில் பக்கம் 18 & 19-ல் வரும் வசனங்களைப் படித்தாலே க்ராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் பற்றிய யதார்த்தம் புரிந்திடும் ! யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது, தத்தம் கனவுகளை சத்தமின்றி வாழ்ந்து விட்டுப் போக முற்படுவதாக மாத்திரமே கதாசிரியர் காட்டியிருக்க, இங்கே சென்சார்களுக்கு அவசியமிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை !

      Delete
    4. அடுத்த முறை ஒவ்வொரு புக்கோடும் "for mature audience only" என்று ஒரு ஸ்டிக்கர் போட்டு கொடுத்துவிடவும் :-D யாருக்கு வேணுமோ ஒட்டிக்கலாம் :-D :-D

      Delete
    5. இல்லேன்னா டாக்டர்ஸ் கிளினிக் கதவுகளில் ஒரு ஸ்லைடு வச்சிருப்பாங்களே 'Doctor in/out'னு - அதுமாதிரி புத்தக அட்டையிலும் ஒரு ஸ்லைடு 'for mature audience only / 7 முதல் 77 வரை' அப்படீன்னு வச்சுட்டீங்கன்னா அவங்கவங்க தேவைக்குத் தகுந்தா மாதிரி நகர்த்திக்கிடலாம்! பொழுது போகலைன்னா இப்படியும் அப்படியுமா இழுத்து இழுத்து விளையாடவும் உபயோகமா இருக்கும்!

      Delete
  69. மிரண்ட விழிகள்: சில கேள்விகள்.

    1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா? அப்படி என்றால் அது குரங்கா?
    2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்?
    3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேரெமயா மற்றும் கர்டி தேடுவது யாரை?
    4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி? அவனின் மாயாஜாலம் மகிமை?

    Reply
    குரங்கு தான்... Nuclear war ல் gene mutant ஆகி
    அதிவேகமாக ஓடும்திறனும், infrared அல்லது தகிக்கும் பார்வை விழிகளும் அமையப்பெற்ற , nuclear war க்கு முன்பே ஜாலவித்தையால் பழக.கப்படுத்தப்பட்ட குரங்கு. தன் master க்கு விசுவாசமாக உள்ள gene mutant gorilla
    Nuclear war னால் பாதிக்கப்பட்டு அதிவேகமாக தன் masterஐயும் சுமந்து கொண்டு வேகமாக ஓடும் திறன் அடைந்த
    குரங்கு.

    இதற்காக தான் படத்துடன்

    ReplyDelete
  70. Replies
    1. ஹெர்மன் ஸ்டைல்ல ஓப்பன் எண்டிங்கா பதிவு போட்டிருக்கீங்கன்னு ஒரு நிமிஷம் மேல போட்டிருக்கும் உங்க பதிவை பாத்து பயந்து போய்ட்டேன்..:-)

      Delete
    2. @செனா அனா

      ஹா ஹா! நானும் அப்படித்..

      (ஓப்பன் எண்டிங்)

      Delete
  71. சார்....

    ஜெரேமியா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    கண்டிப்பாக தொடரலாம்..

    அழகிய ஓவியங்களும் அசாத்திய கதை சொல்லலும் அதோடு அழகிய தமிழாக்கமும் சேர்ந்து மிகவும் ரசிக்க வைத்தன..

    ஹெர்மான் கதையின் ஊடே தூவிச்செல்லும் புதிர்களும் இன்னுமொரு காரணம்...

    மொத்தத்தில் அழகானதொரு இதழ்..

    ReplyDelete
  72. ஹெர்மனின் பாணியில் இனிமே நானும் ஓப்பன் எண்டிங்காகவே என் கமெண்ட்டுகளை..

    ReplyDelete
  73. எடிட்டர் சார்.. திருப்பூர் புத்.. ஆருசியாவின் ஆத்துக்காரர்தான் விற்ப..

    (மல்ட்டிபிள் ஓப்பன் எண்டிங்ஸ்)

    ReplyDelete
    Replies
    1. வாசகர் ஸார்... பூத் பார்த் மேரி இந் தபா திருப்பூர் புத் !

      Delete
    2. அச்சச்சோ.. ஒன்னுமே புரிய..
      இருங்க நான் போய் ஜெரெமயாவை இன்னும் ரெண்டுதபா படிச்

      (ஈஸீலி அன்டர்ஸ்டேன்டபுள் மல்ட்டிபில் ஓப்பன் எண்டிங்ஸ்)

      Delete
    3. நவ் ஒரிஜினல் கி.நா.வில் பணி .....! ஓபன் எண்டிங் ; கிளோஸ்ட் எண்டிங்...ஆல் கமிங் !

      Delete
    4. சார், எனி டவுட் கமிங், ப்ளீஸ் கால் தலீவர் இம்மீடியட்லி! 24X7 கி.நா டவுட்டு க்ளீயரன்ஸ் சர்வீஸ்!

      Delete
  74. காணாமல் போன கடல் ஒருவேளை மறுபதிப்பாகும் பட்சத்தில் அதன் தொடர்ச்சியும் சேர்த்து வண்ணத்தில் ஒரு குண்டு புத்தகம் ப்ளீஸ்

    ReplyDelete
  75. அமைதியா இருந்த ஊரும் ஆறு ஜெரேமயா கதைகளும்
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    ஒருவர் : அந்த தியேட்டர்ல என்னங்க ஒரே பரபரப்பு?
    மற்றொருவர் : டைரக்டர் ஹெர்மன் இயக்கிய படமாம் ...இண்டர்வல் வரைக்கும் படம் போடுறாங்க ...அதுக்கு அப்புறம் வெறும் பிளான்க் திரைதான் ..ஆடியன்ஸ் அவங்களுக்கு புடிச்சமாதிரி எப்படி வேணா கற்பனை பண்ணிக்கலாமாம் ..
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    லயன் காமிக்ஸ் சந்தாதாரரான ஒரு கண் டாக்டர் ..( தனது ஆலோசனை அறையில் நுழையும் இருவரை பார்த்து பரபரப்பு அடைகிறார் )
    கண் டாக்டர் : அதே மாதிரி இன்ப்ரா ரெட் உமிழ்ற மாதிரி சிவந்த கண்கள் .
    அதே மாதிரி முக்காடு .....அதே குரங்கு ..( உடன் வந்தவரை பார்த்து ) ஏங்க இது உங்க வளர்ப்பு குரங்கா ? ரேடியேஷன் –க்கு இது எப்படி எக்ஸ்போஸ் ஆச்சு ? ஏதாவது அணு உலையில் தவறி நுழைஞ்சிடுச்சா?

    உடன் வந்தவர்: என்ன டாக்டர் உளர்றீங்க ? இது என்னோட பிரண்டு .பேரு செல்வம் அபிராமி ...ரெண்டு கண்லயும் மெட்ராஸ் ஐ –ன்னு சொன்னாங்க..அதான் உங்க கிட்ட கூட்டியாந்தேன் ...அவர் குளிருதுன்னு முக்காடு போட்டிருக்கார் ..அப்புறம் அவர் முகம் அப்படித்தான் ..
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.
    பூமியில் இருந்து 6௦௦ கிமீட்டர் வெளியே இருக்கும் ஒரு–ஸ்பேஸ் ஸ்டேஷன் –ல்
    விண்வெளி வீரர் 1 : அதோ பிரான்ஸ் –ல் ஒரு பெரிய ரோஸ் கார்டன் தெரிகிறது ..ஒரே நேரத்தில் பூத்திருக்கும் போல ..

    விண்வெளி வீரர் 2 : அட ! நீ வேற ! ஜெரமயா காமிக்ஸ் புக்ஸ் அடுக்கி வச்சிருக்கும் குடோனில் பெரிய பைப் உடைஞ்சு தண்ணி புகுந்திருச்சாம்..
    புக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெயில்ல காய வச்சுருக்காங்க !

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    கணக்கு வாத்தியார் :
    ஏண்டா ! எட்டாவது வாய்ப்பாடு வீட்டு பாடமா எழுதிட்டு வாங்கடான்னு சொன்னா
    1x 8 = 8
    2x8= 1?
    3x8= 2?
    4x8=3?
    5x8=4?
    இதே மாதிரி எழுதிட்டு வந்திருக்கே ..என்ன நினைப்பு உனக்கு

    மூணாப்பு பையன் : இப்ப இதான் சார் ட்ரெண்ட்...ஓப்பன் எண்டிங் வாய்ப்பாடு
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. செனா. அனா...

      சிரிச்சு மாளலை...

      Delete
    2. ஹா ஹா ஹா.. செனாஅனா!!

      காலங்காத்தால கெக்கபிக்கேன்னு சிரிச்சுவச்சு, வீட்டுக்காரம்மாவின் 'தகிக்கும் பார்வை'க்கு ஆளாகிட்டேன்!

      முறிந்த மரக்கிளையாய் நான்!

      Delete
    3. ///அமைதியா இருந்த ஊரும் ஆறு ஜெரேமயா கதைகளும் ///

      தலைப்பே கெக்கபிக்கே தான்! :))))))

      Delete
  76. சிலுவரு பேட்டரி...சிலுவரு பேட்டரி...நண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான லயன் வெளியீடுகள் வந்தடைந்ததன😍😍😍😍😍.

    வைகிங் தீவு மர்மம் ஆரம்பிச்சாச்சு...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் ஷெரீப்...என்ஜாய்..:-)

      Delete
    2. காமிக்ஸ் படிக்கும் நேரம் கவலைகள் மறக்கும் நேரம் Enjoy மகி ஜி

      Delete
  77. ஜெரமயா நன்றாக உள்ளது.

    தொடர்ந்து வெளியிடவும்

    ReplyDelete
  78. Editor sir...any book exhibition planned near Bangalore? (Long back once it happened in Comic con in Bangalore...) or else maybe in Hosur? At least cant you send a van full of books to all major cities every month so that people can buy from the van instead of paying courier charges! (Like tirunelveli halwa van coming to Bangalore)

    ReplyDelete