Powered By Blogger

Monday, September 17, 2018

தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்..!

நண்பர்களே,

வணக்கம். "முன்னூறு வரும் முன்னே ; உபபதிவு வரும் பின்னே.." என்பது தான் எழுதப்படா விதிமுறையாச்சே ? மீறிட இயலுமா ?

And இம்முறை கொஞ்ச காலமாகவே உங்களிடம் கேட்க நினைத்திருந்ததொரு கேள்வியே உ.ப.வின் subject !! அதாகப்பட்டது, நமது ஆதர்ஷ பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டிலும் சரி ; டெக்சின் இத்தாலிய மார்க்கெட்டிலும் சரி - அங்குள்ள காமிக்ஸ் வாசகர்களுக்கொரு unique பெருமையுண்டு ! பெரும்பான்மையான ஆல்பங்கள் / கதைகள் தொடர்களாகவே நீண்டு செல்லும் ரகங்களாய் இருப்பினும் ; அவை ஒரு மாத இடைவெளியிலோ ; ஓராண்டு கால இடைவெளியிலோ வெளிவந்தாலுமே, துளி கூடப் பொருட்படுத்தாது ரசித்து வருகின்றனர் ! உதாரணத்திற்கு புது லார்கோ சாகசத்தின் முதல் பாகம் வெளியானது ஆக்டொபர் 2017-ல் ! அதன் கிளைமாக்ஸ் பாகமோ இன்னமும் வெளியான பாடைக் காணோம் ! Probably இந்த நவம்பரில் வரக்கூடும் ! டெக்சின் கதைகளிலும் ஒரு மாதம்  அல்லது இரண்டோ / மூன்றோ மாதங்களின் காத்திருப்புக்குப் பின்பாகவே பெரும்பாலான கதைகள் முழுமை காணும் !! So இடைப்படும்  நாட்களை பொறுமையோடு கொண்டு செல்லும் திறனை அவர்கள் வளர்த்துக் கொண்டு விட்டுள்ளனர் என்பது கண்கூடு !!

நாமுமே ஜேசன் ப்ரைஸின் ஆல்பத்தினில் இந்த wait & read யுக்தியினை ஓரளவுக்கு வெற்றியோடு கையாண்டோம் என்பது சமீப வரலாறு ! So ஐரோப்பியர்களின் அசாத்தியப் பொறுமை லெவெல்களை எட்டிப் பிடித்திராவிடினும் நாமும் பொறுமைசாலிகளே என்று காட்டியுள்ளோம் ! இந்த பாணியை எப்போதாவது மறுக்கா கையில் எடுப்பது பற்றி உங்களது அபிப்பிராயங்கள் என்னவோ ? என்பதே எனது இந்தப் பதிவிலான கேள்வி ! 

கொஞ்ச காலம் முன்பாய் புதியதொரு கார்ட்டூன் ஆல்பம் 3 பாகங்களுக்கு ஓடும் விதத்திலிருந்ததைப் பார்க்க நேரிட்டது ! அதனை புரட்டிக் கொண்டிருந்த வேளையில் - இந்த "தொடர் மாதங்கள் - தொடரும் ஆல்பங்கள்" concept நமக்கும் சாத்தியமாகின் எவ்விதமிருக்கும் என்ற யோசனை தலைக்குள் ஓடியது ! என்றைக்கேனும் ஒரு ஓய்வான நாளில் அதை பற்றி உங்களது அபிப்பிராயங்களைக் கோரினால் தேவலாம் என்றபடிக்கே அப்போதைக்கு அடுத்த வேலைக்குள் புகுந்திருந்தேன் ! இன்றைக்கு அது நினைவுக்குத் திரும்ப - இதோ கேள்வி உங்கள் முன்னே !!

"தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ?  உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ? Bye all !! See you again !! 

And please try sharing this image too !!

276 comments:

  1. தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள் - Sorry! I am not!!

    ReplyDelete
  2. Replies
    1. ///தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்!///

      காா்ட்டூனில் தொடா்கதையா!!

      சூப்பா் சாா்! Ok!!!

      காா்ட்டூனைப் பொருத்தவரை அதுதான் சாத்தியமான வழிமுறையும் கூட!!

      OK Sir!! 👌👌👍👍

      Delete
    2. கார்ட்டூனில் தொடர்கதை ..,, ரொம்ப நீளமில்லையே மிதுன்.! மூன்னே முன்று ஆல்பங்கள்தானே ...அவை மூன்றையும் இணைத்து ஒரே புக்காக வெளியிட்டால் எப்படியிருக்கும்னு யோசிச்சிப்பாருங்க ..செம்ம இல்ல..!!


      எடிட்டர் சார்...!

      இதுவரை கார்ட்டூனில் அவ்வளவு பெரிய கதையை நாங்கள் படித்ததேயில்லை...! ப்ளீஸ் ..எப்படியாச்சும் மனசுவெச்சி ஒரே புக்கா போடுங்க சார் .அட்டகாசமா இருக்கும்...அய்யோ நினைச்சாலே ஜிவ்வுன்னு இருக்கே..!!

      Delete
  3. டைகர் கதைகளில் இதுபோன்று தொடர்கதையாக ஆரம்பித்து அவை முடிய சில வருடங்கள் ஆனது! எனக்கு அவைகளின் அடுத்த பாதகத்தை படிக்கும் போது முந்தைய பாகத்தில் என்ன நடந்தது என்ற தொடர்பு விட்டு போனது! எனவே அவைகளை முழுமையாக ரசிக்க முடியவில்லை!

    எனவே எனக்கு தொடர்கதையாக ஆல்பங்கள் விருப்பமில்லை!

    தோர்கல் முடிந்தால் அடுத்த வருடம் customized எடிஷன் போட்டு ஒரு குண்டு புத்தகமாக கொடுத்தால் சந்தோசம்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். தோர்கல் கடவுளர்களின் தேசம் தனித்தனியா வந்திருந்தா படிக்கிற ஆர்வமே தணிஞ்சிருக்கும். குண்டு குண்டு ஆல்பமா போட்டு கதையே முடிப்பதே சாலச்சிறந்தது.

      Delete
  4. விஜயன் சார் ,
    கார்ட்டூன் ஆல்பம் 3 பாகங்களுக்கு ஓடுவதாக இருந்தால் ஒரே குண்டு புத்தகமாக கார்ட்டூன் ஸ்பெஷல் என அடுத்த வருடம் போட்டு விடலாமே?

    ReplyDelete
  5. Sathish Kumar @
    நமது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க இந்த புத்தக முகவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

    S.ANANTHAN,
    ANAND BOOK PARK,
    14-Periyasamy Towers,
    Chatram Bus Stand,
    Trichy - 620 002.
    Mobile : 94434 55320, 99521 53457

    S.SARAVANAKUMAR
    Vijay Books & Music Centre
    No.87-A, North Andar Street,
    Trichy - 620 002.
    Mobile : 89039 06896, Ph: 0431 - 2706896

    A.PALANIVEL
    8/20- Ennam Venkatanatham,
    Sri Rama Sumuthiram (P.O)-621 207.
    Thottyam T.K
    Trichy (Dist)
    Mobile : 97892 14198

    ReplyDelete
    Replies
    1. தற்போது பரமத்தி வேலூர் புகளூர் கொடுமுடி பகுதிகளிலும் A.PALANIVEL
      9344861389
      9789214198
      நன்றி பரணி சார்

      Delete
  6. காப்பிரைட் செலவினங்கள் அதிகமாக இருப்பதை குறைக்க ஒரு சிறு ஆலோசனை. ஏற்கனவே காப்பிரைட் வாங்கி வைத்து வெளியிடாமல் இருக்கும் நிறைய கதைகளை எடி சொல்லி இருக்கிறார். ரிப் கெர்பி மாண்ட்ரேக் மற்ற சில ஹீரோக்கள். அவைகளை வெளியிடலாமே. வாசகர்கள் வாங்குவார்களா மாட்டார்களா என்று யோசிக்க வேண்டாம். புது ஹீரோ கதைகள் வெளியிடும் போது என்ன ரிஸ்க் எடுக்கிறோமோ அதே ரிஸ்க்த்தான் இங்கேயும். இந்த எவர் க்ரீன் ஹீரோக்கள் நமது புதிய அவதாரில் எடுப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையை ரொம்பச் சோதிக்காத slow pace கதைகளாக இல்லாவிட்டால், மூன்று நான்கு கதைகளைக் கொண்ட ஒரு காம்போ இதழை ஒரே ஒரு தடவை மட்டும் விட்டுப் பார்ப்பதில் தவறில்லைதான்!
      பிக்அப் ஆச்சுன்னா கன்ட்டினியூ பண்ணலாம்!! இல்லேன்னா நிரந்தரமா ஒரு டாட்டா காமிக்ஸுடலாம்!

      Delete
    2. // பிக்அப் ஆச்சுன்னா கன்ட்டினியூ பண்ணலாம்!! இல்லேன்னா நிரந்தரமா ஒரு டாட்டா காமிக்ஸுடலாம்! //
      சரிதான் ஒருதடவை முயற்சித்து பார்க்கலாம் தவறில்லை, வித்தியாசமான ஒரு காம்போ பேக் நமக்கு கிடைக்கும்.

      Delete
  7. சார்... போன பதிவுல ரோலர்கோஸ்டர்ல ஏறி சர்ர்ரு புர்ர்ருன்னு பயணம் பண்ணி கிர்ர்ரடிச்சுப் போனதுனால, நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப் படத்தைப் பற்றி சொல்லாம வுட்டுட்டேன்!

    சமீப காலங்களில் வெளியான ரி.ஜா அட்டைப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் சொல்ற அளவுக்கு அசத்துது! அந்தக் காற்றாலையும், அதையொட்டிய செவப்பு செடியும், ஓவியர் சிகாமணி வடித்த எழுத்துருவும் - அப்பப்பா...செம்ம!!
    முன்னட்டையோடு ஒப்பிட்டால் பின்னட்டை அவ்வளவாய் எடுபடவில்லை! ஆனாலும் அதனால் பாதகமில்லை!

    ReplyDelete
    Replies
    1. Exactly... best cover of Johnny. Paathavudane summa adhirudhu

      Delete
  8. உள்ளேன் அய்யா _/|\_
    .

    ReplyDelete
  9. ///தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ? //

    சுகப்படாது...(இவ்வளவு சுருக்கமான பதில் எனக்கே அதிர்ச்சியா இருக்கு..)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கூட. உங்களிடமிருந்து இப்படியொரு
      சுருக்கா..

      Delete
    2. ம்ஹூம்! இதுவேற யாரோ டூப்ளிகேட் செனாஅனா!! :D

      Delete
    3. சுருக்கமான பதில் மட்டுமல்ல.

      சுருக் பதிலும் கூட.

      Delete
    4. // இதுவேற யாரோ டூப்ளிகேட் செனாஅனா!! //
      இவரு செனா அனா 2.0 ஆக இருப்பாரோ ???!!!!!

      Delete
  10. 🙏🙏🙏🙏🙏
    வணக்கம் ஆசிரியரே

    ReplyDelete
  11. Nope..! Already waiting too long for consecutive parts... No more delayed parts...

    ReplyDelete
  12. கேப்டன் டைகர் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சி பிச்சி போட்ட மாதிரி இல்லாமல் அடுத்தடுத்த மாதங்களில் கதைகள் வருமேயானால் நிச்சயமாக வரவேற்போம் சார் !

    ஆனால் ஒரு கண்டிஷன் !

    டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் எங்களுக்கு முழுசாக வேண்டும்.தளபதிக்கு நேர்ந்த கதி தலை'க்கு நேர்ந்துவிடக் கூடாது.

    ஏதோ , பாத்து செய்யுங்க சார் !

    ReplyDelete
  13. Sir, வேண்டாம் தொடர் ஆல்பங்கள்.

    ReplyDelete
  14. ///தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ?////

    'ஜேசன் ப்ரைஸ்' நமக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளின் லெவலே வேறு!! (கடைசி ஆல்பம் கொஞ்சம் சொதப்பலே என்றாலும்) முதலிரண்டு பாகங்கள் மூச்சை இழுத்துப் பிடிக்கவைக்கும் ரகத்திலிருந்ததே அந்த தொடரை அடுத்தடுத்த மாதங்களிலும் ஏக எதிர்பார்ப்பில் வைத்திருந்தது! தவிர, அந்தமாதிரியான த்ரில்லரை ஒவ்வொரு மாத இடைவெளியில் காத்திருந்து படிப்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்தது!
    நீங்கள் இப்போது 'கண்ணு வைத்திருக்கும்' தொடர்களும் அப்படியாப்பட்ட அதிரவைக்கும் ரகமென்றால் தொடராகக் களமிறக்கலாம். இல்லாவிட்டால், மொத்த தொடரும் முடியும்வரை காத்திருந்து (அது ஷ்யூர் ஹிட் என்று உறுதியானால் மட்டும்) ஒரே தொகுப்பாகப் போட்டு அசத்தலாம்!

    ReplyDelete
    Replies
    1. அதே ஜேசன் ப்ரைஸ் ஒரே புக்கா வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் குருநாயரே ..!!

      Delete
    2. இரவே இருளே கொல்லாதே., தேவரகசியம் தேடலுக்கல்ல ..இவையெல்லாம் தொடராக வந்திருந்தால் இப்படியொரு வரவேற்பு சந்தேகமே ...!!

      அப்புறம் அந்த சிப்பாயின் சுவடுகளில் கூட .....சரி சரி ...கோவப்படாதிங்க மக்களே ..!! :-)

      Delete
    3. /* இரவே இருளே கொல்லாதே., தேவரகசியம் தேடலுக்கல்ல ..இவையெல்லாம் தொடராக வந்திருந்தால் இப்படியொரு வரவேற்பு சந்தேகமே ...!! */

      +1 Both the above albums were a hit only because they were single collects!

      Delete
    4. //இரவே இருளே கொல்லாதே., தேவரகசியம் தேடலுக்கல்ல ..இவையெல்லாம் தொடராக வந்திருந்தால் இப்படியொரு வரவேற்பு சந்தேகமே ...!!
      ?/+1

      Delete
  15. // இம்முறை கொஞ்ச காலமாகவே உங்களிடம் கேட்க நினைத்திருந்ததொரு கேள்வியே உ.ப.வின் subject !! அதாகப்பட்டது, நமது ஆதர்ஷ பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டிலும் சரி ; டெக்சின் இத்தாலிய மார்க்கெட்டிலும் சரி - அங்குள்ள காமிக்ஸ் வாசகர்களுக்கொரு unique பெருமையுண்டு ! பெரும்பான்மையான ஆல்பங்கள் / கதைகள் தொடர்களாகவே நீண்டு செல்லும் ரகங்களாய் இருப்பினும் ; அவை ஒரு மாத இடைவெளியிலோ ; ஓராண்டு கால இடைவெளியிலோ வெளிவந்தாலுமே, துளி கூடப் பொருட்படுத்தாது ரசித்து வருகின்றனர் ! உதாரணத்திற்கு புது லார்கோ சாகசத்தின் முதல் பாகம் வெளியானது ஆக்டொபர் 2017-ல் ! அதன் கிளைமாக்ஸ் பாகமோ இன்னமும் வெளியான பாடைக் காணோம் ! Probably இந்த நவம்பரில் வரக்கூடும் ! டெக்சின் கதைகளிலும் ஒரு மாதம் அல்லது இரண்டோ / மூன்றோ மாதங்களின் காத்திருப்புக்குப் பின்பாகவே பெரும்பாலான கதைகள் முழுமை காணும் !! So இடைப்படும் நாட்களை பொறுமையோடு கொண்டு செல்லும் திறனை அவர்கள் வளர்த்துக் கொண்டு விட்டுள்ளனர் என்பது கண்கூடு !! //

    விஜயன் சார் அதுக்கு நாங்க சரிப்பட்டு வரமாட்டோம் :(
    .

    ReplyDelete
  16. // தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ? //
    ஜேசன் ப்ரைஸ் மாதிரி வலுவான எதிர்பார்ப்பை கிளப்பக் கூடிய கதை எனில் ஓகேதான்,கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு எதிர்பார்ப்பு குறைந்தாலும் சுவராஸ்யம் இருக்காது சார்,அதேபோல் நீண்ட இடைவெளி ஒரு அயர்ச்சியை உண்டாக்க வாய்ப்புண்டு,பொதுவாக இதில் ஆர்வமும் எழுவதில்லை சார்,எளிதான வழி 3 பாகமோ 4 பாகமோ குண்டு புக்கா ஹார்ட் பைண்டில் வெளியிட்டு விட்டால் பிரச்சினை இல்லை, வெற்றி வாய்ப்பின் சதவீதமும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு,பொதுவில் குண்டு புக்,ஹார்ட் பைண்ட் நல்ல விற்பனை அளவை கொண்டுள்ளது எல்லோருக்கும் தெரிந்ததே.இதில் உங்களுக்கு ரிஸ்க்கும் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. //ஜேசன் ப்ரைஸ் மாதிரி வலுவான எதிர்பார்ப்பை கிளப்பக் கூடிய கதை எனில் ஓகேதான்,//+1

      Delete
  17. நோ சார் ..பேடவே பேட சார்..நஹி சார்..வேண்டாம் சார்..சுடசுட வாங்கினோமா படிச்சோமா ரசிச்சோமா .அது!

    ReplyDelete
  18. சுகப்படாது என்பதே எனது கருத்து

    ReplyDelete
  19. Dear sir, 2 or 3 pagam enil, ore album aga varuvathu than nallathu. 4 and 4+ enil, pirikkalaam. aanaal, minimum 2 pagamavathu ore albathil varuvathu nallathu. illainaa, padicha thirupthiye irukathu sir.

    ReplyDelete
  20. கண்டிப்பா எனக்கு சுகப்படாது சார்🙏🙏🙏

    ReplyDelete
  21. "தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" ! இது நமக்கு சுகப்படுமா??

    பதில்: எ பிக் பிக் நோ! சுகப்படாது என்பதே என்னுடைய நிலையும்.

    ReplyDelete
  22. இப்போதெல்லாம் ஆல்பங்கள் படிச்சு பழகியாச்சு. சிங்கிள் ஆல்பம் வந்தாலே பொக்குண்ணு இருக்கு.இதில தொடர்கதையாக வேறு வருவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணி பழகிட்டு பேசிக் மாடல் போகலாமா என்று கேட்கிற மாதிரி இருக்கு.

      Delete
  23. தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ? உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ? Bye all !! See you again !!

    நோ சுகபடாது.

    ReplyDelete
  24. // தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ? //

    சுகப்படாது..

    XIII, டைகர் கதைகள் வந்த காலகட்டம் வேறு.. தற்போதைய நிலமை வேறு..

    பரிட்சார்த்தமே வேண்டாம்.. அதற்கு மூன்று கதைகளையும் சேர்த்து குண்டு புக்காக போட்டுவிடலாம்...

    ReplyDelete
  25. ///கொஞ்ச காலம் முன்பாய் புதியதொரு கார்ட்டூன் ஆல்பம் 3 பாகங்களுக்கு ஓடும் விதத்திலிருந்ததைப் பார்க்க நேரிட்டது ///


    இது சுகப்படும்னு நேக்கு தோண்றது..!!


    ///தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! ///

    இது சுகப்படும்னு நேக்குத் தோணலை..!!

    ReplyDelete
  26. 15 ஆம் தேதியில் ஹிந்து நாளிதழில் கார்த்திகை பாண்டியன் அவர்களின் கவிதை தொகுப்புக்கு ஆத்மா நாம் விருது கிடைத்திருக்கிறது என்பதை அவரது போட்டோவுடன் செய்தியாக வெளியிட்டுள்ளனர். வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. அட..தமிழ் நாளிதழிலா ? இங்கிலீஷிலா சார் ?

      Delete
    2. தமிழில் சார்.7 ஆம் பக்கத்தில் நூல்வெளி என்னும் தலைப்பின் கீழ் வந்துள்ளது சார்.

      Delete
  27. தொடர் மாதங்கள் ஜேசனை ரசிக்க செய்ததுதானே சார்! அதெல்லாஞ் சரி லார்கோ அடுத்த வருட அட்டவணைல இருக்காருதான?

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே....க்ளைமாக்ஸ் பாகம் இன்னும் அங்கேயே வெளியேறி இருக்கா நிலையில் நம் அட்டவணையில் இடம்பிடிப்பது எப்படியாம் ?

      Delete
    2. சார் நவம்பர்ல இரண்டாம் பாகம் வந்திருமே

      Delete
    3. +2
      ஒரு சீட் புடிச்சுவைங்க சார் வந்தவுடனே ஏத்திக்கலாம்

      Delete
  28. தொடர்கதைனாவே ஓரடி டப்புனு நம்ம நண்பர்கள் பேக்கடிக்க பழைய சூடு தான் காரணம்.

    எப்படி ஒரு நல்ல ஹீரோவை தொடர் கதைகள் காலி செய்தன என்பதற்கு டைகரே நம்முன் உள்ள சாட்சி.

    எப்படி டைகர் காலியானார்...???
    இப்படித்தான்.......,

    இரும்புக்கையார்,
    மும்மூர்த்திகள்,
    ஸ்பைடர்
    வரிசையில் அடுத்த ஸ்டார் என,

    டெக்ஸ் Vs டைகர் இடையே கடும்போட்டி தரும் அளவு டைகரின் அறிமுக கதையான தங்க கல்லறை சாதித்து இருந்தது.

    *அந்த தங்க கல்லறை வந்தபோதும் கூட தொடரும் என போட்டு இருந்தது பாகம்1ன் முடிவில்; வந்ததே உலக கடுப்பு, "தொடரும்" னு போட்டா,.... (இப்பவா இருந்தா ஆசிரியர் சாரோட நிலைமை...ஹி..ஹி...).

    *டெக்ஸ்க்கு இணையான கதைக்களத்தோடு அறிமுகம் ஆகி, மிரட்டலான யுக்திகளோடு எடுத்த எடுப்பில் டாப்பில் போட்டி போட்டார் டைகர். பகீர்னு ஆகிப்போச்சு எனக்கு.

    ஆனா, அந்த பயத்துக்கு அவசியமே எழல!

    *டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்-முத்து250ல் வரவும் செம எதிர்பார்ப்பை கிளறி இருந்தார் டைகர்.
    ஆனால் பரலோகப்பாதை என்ற 2ம், பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் சார்.

    ###டைகருக்கு முதல் சறுக்கல..###

    *இதற்கு நடுவே, குறுக்கால அந்த 2வது பாகம் பரலோகப் பாதையை, ஆசிரியர் சார் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்"னு மாதா மாதம் வரும் சின்ன சின்ன மினி புரோட்டோ போடவும், பதிலுக்கு நம்ம ஆளுங்க அவரை கொத்து புரோட்டோ போட்டாங்க- அது தனி கதை....!!!

    *அட அந்த மின்னும் மரணத்தைதான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லையே. அதை அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை ஆரம்பிச்சுட்டார். (இப்படி பிச்சி பிச்சி கொத்து புரோட்டா போடவும் அந்த டைகர் பயலால டெக்ஸ்க்கு சமமான சரியான போட்டியை தரமுடியல, அதில் எனக்கு ஒருவித குரூர திருப்தி,)



    *மின்னும் மரணத்தை அந்தரத்துல் விட்டுட்டு, புதுசா ஆரம்பித்சதுதான் டன்ட ட ட டன் டட டைன் " இரத்த கோட்டை... இரத்த கோட்டை.... இரத்த கோட்டை ".

    க்கும்... கிழிஞ்சது கிருஷ்ணகிரி என டைகர் ரசிகர்கள் இரத்தம் கக்காத குறைதான்,ஹி...ஹி..!!!

    * முதல்லயே அறிவிச்சிட்டாரு, "மற்ற தொடர்கள் போல அந்தரத்தில் தொங்காது இரத்தக்கோட்டை,தொடர்ந்து போட்டு முடிக்கப்படும்னு". ஒருவித நிம்மதி கலந்த ஆர்வத்தோடு இந்த தொடரை நண்பர்கள் அனுகினார்கள்

    *அப்புறம்,
    அப்புறம்,
    அப்புறம்,

    ஆங்

    அதேதான்- புளியமரம் ஏறாம விடுமா தொடர்கதை எனும் பேய்.

    -இரத்தக்கோட்டை 4ம் பாகமத்திற்கும் க்ளைமாக்ஸ் பாகத்திற்கும் இடையேயும் இந்த தொடர்கதை ஆட்டத்தை ஆடினார். குறுக்கே ஒரு மாசம் வேறு கதை வந்தது. ஐத்தலக்கா ஐ---னு குத்தாட்டம் போட்டேன். பின்னே , நல்லா போயிட்டு இருந்த இதற்கு நடுவேயும் பிரேக்னா....!!!

    *ஏதோ பொழச்சி போறங்க டைகர் ரசிகர்கள் என க்ளைமாக்ஸ் ஒருவழியாக வந்தது.

    *இப்படி கொலையா கொன்னதே அந்த டைகர் பய ஒழிய மொத காரணம்.

    *இன்னும் இருக்குது ஆட்டம்... மெயின் தொடரை கொத்துபரோட்டா போட்டார்னு பார்த்தமா, அடுத்து யங்டைகரையும் ஏன் விடனும்னு, கொத்து கறிபோட்டார் அதை.

    *3பாகங்கள் மட்டுமே இளமையில் கொல் என கெளபாய் ஸ்பெசல் ல போட்டுட்டு அதை அத்தோட மறந்து போயிட்டார். அதிர்ஷ்டம் இருந்தா மறுபடி வரும்னு...(கம்பேக்கிற்கு பிறகு அது WWSல் தொடர்ந்தது...)

    *இப்படி வெச்சி செஞ்சே, போட்டுத் தள்ளப்பட்டது தான் டைகர் கதை...ஹி...ஹி.....அதில் விழுந்த டைகரால் டெக்ஸை நெருங்க கூட முடியல.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமை நண்பரே :-) இது போன்ற கமெண்டுகளே இந்த blogspot ன் உயிர் :-0 awesome

      Delete
    2. Tex விஜய் சார்,

      டைகர் தொடர் கதைகளை தொங்கவிட்டது நம்ம எடியோட தவறு, ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது.

      இப்படிக்கு,

      tex ரசிகன்

      Delete
    3. @ டெக்ஸ்...எல்லாம் சர்தான்..

      ஆனா...


      பாம்பை அடிக்கறதா நினைச்சு நீங்க பாம்பாட்டியை அடிக்கறதா ஒரு பீலிங்..

      Delete
    4. "டைகர் தொடர் கதைகளை தொங்கவிட்டது நம்ம எடியோட தவறு, ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது"

      True True True

      Delete
    5. நண்பர்களே....!!!

      1995டூ2005 களில் இந்த கதைகள் வெளியானபோது எப்படி நாம ஃபீல் பண்ணினோம் என்பதை தெரிவிக்கும் படியான நிறைய நண்பர்களின் எண்ணவோட்டங்களை தந்துள்ளேன்.

      ஆசிரியர் சாருக்கு நம்ம எண்ணங்களை தெரிவிக்கும் இப்ப மாதிரியான வசதி,அப்ப இருந்து இருக்குமானால் இது வேறு மாதிரி போயிருக்கும். டைகர் இன்னும் சாதித்து இருக்கக் கூடும். யங் டைகருக்கு இத்தனை முறை யோசிக்கும் நிலை இருந்து இருக்காது.

      பொருளர் ஜி@ அய்யய்யோ அப்படி எல்லாம் துளியும் இல்லை...
      இதில் என்னுள் உள்ள டெக்ஸ் வெறியனை கொண்டு இந்த சூழலை பார்த்து உள்ளேன். சத்தியமாக வேறு எண்ணமே இல்லை.

      Delete
    6. மகேஷ் ஜி@ ///ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது.///----

      "கார்சனின் கடந்த காலம்".... என்ற காவியம். ஆயிரம் மின்னும் மரணங்களையும், தங்க கல்லறையை யும் உள்ளடக்கியது.....

      "பன்னாக்"----
      தங்கம்,
      சூழ்ச்சி,
      அப்பாவிகள்,
      காதல்,
      மோதல்,
      நட்பு,
      பாசம்,
      துணிச்சல்,
      என நடமாடும் நரகம் அது....

      அங்கே நெளியும் பூன், வாகோ போன்ற விரியன்களையும்,
      நினைத்து பாருங்க...!!!!

      கார்சனின் கடந்த காலம் vs மின்னும் மரணம்--- ஒரு மெகா அல்ட்ரா இன்ட்ரஸ்ட் தரும் கான்டஸ்ட்....!!!

      Delete
    7. // ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது. //
      எனக்கென்னமோ டெக்சையும் டைகரையும் ஒப்பிடுவதே தவறோன்னு தோணுது,இரு கேரக்டர்களுமே நிறைய வேறுபாட்டுடன் உள்ளவர்கள்,உதாரணமாக பெண்களிடம் டெக்ஸின் அணுகுமுறை வேறு,டைகரின் அணுகுமுறை வேறு.இது ஒரு உதாரணம் மட்டுமே,
      அதேபோல் டைகரின் தோஸ்த் ஜிம்மி,டெக்ஸின் தோஸ்த் கார்சனையும் ஒப்பிட முடியுமா என்ன.
      டைகர் வெற்றி நாயகர்தான்,ஆனால் தொடர் வெற்றி நாயகன் யார்????
      எது எப்படி இருந்தாலும் வெற்றியை பரவலான அளவில் தொடர்ந்து கொடுத்து வருவதில் டெக்ஸ் சளைத்தவர் இல்லை.
      டைகர் இங்கே சரியான வெற்றியை ஈட்ட தவறியதற்கு ஆசிரியரின் தொங்கல் படலம் ஒரு காரணமாய் காட்டப்படுவது ஒருவேளை நம் தமிழ் காமிக்ஸ்ற்கு பொருந்தலாம்,
      தற்போதைய காலக் கட்டம் வரை அனைத்து நாடுகள் மற்றும் மொழிகளில் வெற்றியைக் கோலோச்சி வருவது யார்????
      அது இருவரும் எனில் மகிழ்ச்சியே.ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியவில்லை.

      Delete
    8. // பாம்பை அடிக்கறதா நினைச்சு நீங்க பாம்பாட்டியை அடிக்கறதா ஒரு பீலிங்.. //
      கொஞ்சம் கவனமா இருங்க,நீங்க தடிய கையில் வெச்சிகிட்டு இருக்கும் போது உங்களுக்கு பின்னாடியே நைசா யாரவது தடிய வெச்சிகிட்டு இருக்கப் போறாங்க.அடிக்கறது நீங்களா இருக்கும்,புடைக்கறது உங்க தலையா இருக்கும்.

      Delete
    9. ரவி@ ஆமாமா.. நிறைய தடவை அப்படித்தான் நடக்கும். புடைச்சி புடைச்சி அவ்வப்போது வலிக்கும்...!
      பல தடவை வலிக்காத மாதிரியே போயிடறது...ஹி...ஹி...!!!


      டெக்ஸ், டைகர் கம்பேரிசனே பொருத்தமான ஒன்று அல்லதான்!
      தமிழ் காமிக்ஸ்ல முந்துவது தலதான். உலக லெவல்ல இத்தாலி மேல எப்பவும் ஒரு கண்ணு இருப்பதால், அதே பார்வையில் தான் டெக்ஸ்யும் பார்ப்பாங்க!

      Delete
    10. ////அடிக்கறது நீங்களா இருக்கும்,புடைக்கறது உங்க தலையா இருக்கும்.////

      அருமை! அருமை!! பிரமாதம்!!!

      Delete
    11. //எப்படி டைகர் காலியானார்...???
      இப்படித்தான்.......,//நிச்சயமாக இல்லை...இகோ , மிம, தக போன்ற விறுவிறுப்பான அதிரடி கதைகள் எதிர்பார்க்க வைக்கலையா....இளமை கதைகள் விறுவிறுப்பு குறைவு அதனாலதான் அது எதிர்பார்க்கபடலை...இதனை ஒரே தொகுப்பா விடலாம்

      Delete
    12. //டைகர் தொடர் கதைகளை தொங்கவிட்டது நம்ம எடியோட தவறு, ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது"//நண்பரே அது மெகா ஹிட்தான

      Delete
    13. அதே போல ஆசிரியர் கேட்டது தொடரும் மாதங்களில் அடித்தடுத்த பாகங்கள முடிப்பேன்னுதான

      Delete
    14. @ STV

      ஹா ஹா!! டைகரை எப்படியெல்லாம் நம்ம எடிட்டர் வச்சு வச்சு செஞ்சார் என்பதை செமயா எழுதியிருக்கீங்க! உங்க எழுத்துத் திறமை + ஞாபக சக்தி அபாரம்! :)

      ///ஆனா...


      பாம்பை அடிக்கறதா நினைச்சு நீங்க பாம்பாட்டியை அடிக்கறதா ஒரு பீலிங்..///

      ஹா ஹா!! இதுவும் சர்தான்! :)

      Delete
    15. //டைகர் இங்கே சரியான வெற்றியை ஈட்ட தவறியதற்கு ஆசிரியரின் தொங்கல் படலம் ஒரு காரணமாய் காட்டப்படுவது ஒருவேளை நம் தமிழ் காமிக்ஸ்ற்கு பொருந்தலாம்//
      அதே காகடந்த காலமும், மிம, இகைஎ என்ன நடக்கும்னு எதிர்பார்ப்ப கிளப்ப வச்சு காவியமாகலயா

      Delete
  29. சமீபத்தில் யு டர்ன் எனும் தமிழ் படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது,அருமையான ஒரு திரைக்கதை,அற்புதமான ஒரு திரை அனுபவம் கிடைத்தது.
    சரி அதை ஏன் இங்கே சொல்றிங்கன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது,அந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் வீட்டின் டேபிளில் நம்ம சீனியர் ஸ்மர்ப்பின் சிலை தனியாக பிரதான இடம் பிடித்திருக்கும்,அதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.திரைத் தொடர்புகளில் நம்ம காமிக்ஸ் இன்னும் வலுவா இடம் பிடிச்சா மிக சிறப்பா இருக்கும்.

    ReplyDelete
  30. the challenge is - we may not have patience in between those albums. i prefer to have single shot albums - "Thoadarum" - is not the word , I like to see at the end of the story!!!

    ReplyDelete
    Replies
    1. + 1.
      Even I want to wait and get all the continuing stories in one single book. Having food with Sambar one day and then with Rasam one day.. :(.. , will not work for many of us.

      Delete
  31. விஜயன் சார்,

    இப்பொழுது மாதம் 4 புத்தகங்கள் என்று வருகிறது, இதில் நல்ல தொடர் கதையாக (2-4 பாகங்கள்) இருக்கும் கதைகளை, மாதம் ஒன்று என்று தொடரும் மாதங்களில் முடியும்மாறு வெளியிட்டு பார்க்கலாம், நண்பர்கள் பயப்படுவதே எங்கே கதைகளை அந்தரத்தில் விட்டுவிடுவீர்களோ என்ற பயத்தினில் தான். நல்ல கதைகளை இதனால் நாம் தவற விடுவதற்கும் வாய்பிருக்கிறது. அடுத்த வருடம் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
  32. எடிட்டர் அவர்களுக்கு,
    புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க,கதைகளைத் தொடராக தர எண்ணாதீர்கள்.
    குமுதம் இல்லைனா விகடன் இல்லைனா பாக்யா இல்லை முத்தாரம் இல்லை குங்குமம் அடுத்த கடைசிக்கு சினிக்கூத்தாவது தீணி போடும் வெகுஜன வாசிப்பிற்கு...
    எங்கள் காமிக்ஸ் பசிக்கு நீங்க போடறதே அளவு சாப்பாடு. அதையும் ஆறி, அவலாக்கி பிச்சு வைக்காதீங்க...
    அப்படியே மொத்தமா கொட்டுங்க, அள்ளி விட்டுக்கிறோம்.

    ReplyDelete
  33. விடுதலையே உன் விலையென்ன?

    வாவ்! சூப்பா்!!

    இன்றைய நாள் ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருக்கிறது!!

    "டில்மான் ராஸைன்" நம் எல்லோருக்குள்ளும் இப்படியொரு ஆள் இருக்கவே செய்கிறாா்!

    பல நேரங்களில் நாம் நமது கருத்துக்களை சொல்லும்போது கூட "இது நான் சொன்னதில்லைங்க! அந்த மேதை சொன்னது!!" என்று சொல்வதுண்டு!

    மேதைகள் என்னும் பிம்பம் கருத்துகளை ஏற்கச் செய்யும் மனோதத்துவ யுக்தி!!

    இன்னும் சிலா் தம் கருத்துகளை ஒத்த கருத்துகளை பெரும்தலைகள் யாவரும் சொன்னதுண்டா? என தேடிக் கண்டறிந்து துணைக்குச் சோ்த்துக் கொள்வதுண்டு!!

    ஆனால் அவா்கள் முன்பே தம் கருத்தில் பிக்ஸ் ஆகியிருப்பாா்கள்! தேடும் படலத்தில் எதிா்கருத்துகள் தென்பட்டால் லாவகமாக அவற்றை கழற்றிவிட்டு விடுவாா்கள்!

    எப்படியோ நல்ல விஷயங்கள் நடக்கும் என்றால் "டில்மான் ராஸைன்" களும் தான் இருந்துவிட்டுப் போகட்டுமே!

    கி.நா.க்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்!!

    ReplyDelete
    Replies
    1. சிறைச்சாலை, கைதிகள், விடுதலை, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற வாா்த்தைகள் எல்லாம் ஒற்றை திரைப்படம் காட்டியது போல இதுநாள் வரை வேறெதிலும் நான் கண்டதில்லை!

      உண்மையை சொல்ல வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையையே புரட்டப் போட்ட திரைப்படம்!

      ஆயிரம் கி.நா.க்கள் அதற்கு நிகராகாது!!

      THE SHAWSHANK REDEMPTION

      Delete
    2. தொடா்வது,

      "ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!"

      Delete
    3. அலோ 2வெவ்வேறு மீடியங்களை எப்படி சார் கம்பேர் பண்ணி முடிவு சொல்ல முடியும்???

      என்னதான் ஓவியங்கள் பார்த்தாலும், நேரடியாக காட்சிகளாக காட்டும்போது அதன் எஃபெக்ட் வேறு தானே!!

      அய்யா பாலகுமாரன் அவர்கள், ஒரு பேட்டியில் சினிமாவின் பலத்திற்கும், புத்தகங்களின் லிமிட்டையும் அழகாக விளக்கியிருப்பார்...

      அவர் சொன்னது, "வசந்தா அழகா இருக்கிறாள்- என எழுதினா, எல்லோரும் அவுங்களுக்கு தெரிந்த பெண்ணை நினைத்து பார்ப்பான். கற்பனையில் அழகு மிளிரும். திரையில் ஒரு வசந்தாவைத் தான் காட்ட முடியும்.

      அதே என்னதான் கத்தி, ரத்தம்னு கதையில் வந்தாலும், திரையில் தெறிக்கும் இரத்தத்தின் வீரியம் வேறு"-----என!

      2ம் வெவ்வேறு வசதிகளை பெற்று அவற்றிற்குரிய பலம் , பலவீனங்களோடு உள்ளது. எனவே சினிமாவோடு கதையை ஒப்பிடுவது தர்மம் ஆகாது சார்.

      Delete
    4. //இன்னும் சிலா் தம் கருத்துகளை ஒத்த கருத்துகளை பெரும்தலைகள் யாவரும் சொன்னதுண்டா? என தேடிக் கண்டறிந்து துணைக்குச் சோ்த்துக் கொள்வதுண்டு!!

      ஆனால் அவா்கள் முன்பே தம் கருத்தில் பிக்ஸ் ஆகியிருப்பாா்கள்! தேடும் படலத்தில் எதிா்கருத்துகள் தென்பட்டால் லாவகமாக அவற்றை கழற்றிவிட்டு விடுவாா்கள்!//
      சூப்பர் ....எல்லோரும் அப்படிதான் மிதுன்

      Delete
    5. எல்லார் மனதிலும் சில விஷயங்கள் Fix ஆகி இருக்கும் ஏறத்தாள சரியாகவே ....சரியான விஷயங்கள எதிராளி சொல்வதை மதிப்பு கொடுத்து மாற்றிக் கொள்வதாய் நடித்து விவாதத்தை வளர்க்காமல் oவிலகுவோர் அதிகம்தானே

      Delete
    6. ///2ம் வெவ்வேறு வசதிகளை பெற்று அவற்றிற்குரிய பலம் , பலவீனங்களோடு உள்ளது. எனவே சினிமாவோடு கதையை ஒப்பிடுவது தர்மம் ஆகாது சார்.///

      நண்பரே! நான் ஒப்பீடு செய்யவில்லைங்க!

      அப்படம் அவ்ளோ நல்லாயிருக்கும்!

      அவ்ளோ தான்!!

      மத்தபடி காமிக்ஸ், சினிமா இரண்டுக்கும் தனித்தனியே பலங்கள் உள்ளன! அதை மறுக்க முடியாது!!

      Delete
    7. நாங்களும் கோர்த்து விடுவோம்ல மிதுனரே!

      எல்லாரும் பார்த்துக்கங்க, கி.நா.வைவிட படம் ஆயிரம் மடங்கு சிறந்ததாம்...!!!

      கி.நா.னா அப்ப ???????

      ஏதோ பார்த்து செய்ங்க நண்பர்களே!

      ஹி...ஹி...ஹி...!!!

      Delete
  34. //நாமுமே ஜேசன் ப்ரைஸின் ஆல்பத்தினில் இந்த wait & read யுக்தியினை ஓரளவுக்கு வெற்றியோடு கையாண்டோம் என்பது சமீப வரலாறு ...//

    ஜேசன் ப்ரைஸில் ஒரு சஸ்பென்ஸ் factor இருந்தது .. அதனால் அது ஒர்க் அவுட் ஆனது சார் நமக்கு .. ஆனா இது ஒரு TEX கதைக்கோ ,லார்கோ விற்கோ TIGER கோ சரி வரும் என்று தோன்றவில்லை சார் .. ஏற்கனவே இரும்புக்கை எத்தன் கடைசி இரண்டு பாகங்கள் நீண்ட நாட்களாக வராமல் இருந்து பின்னர் நமது come back இல் முழு தொகுப்பாக வந்தது... மின்னும் மரணமும் , XIII நீண்ட தொடர்க்கதையாக வந்தது ..தங்க கல்லறை இரண்டு பாகங்களாக வந்த போது என் இரண்டாம் பாகம் தொலைந்து விட்டது...மீண்டும் கலரில் முழுதாக வந்த போது தான் கிளைமாக்ஸ் என்ன வென்று தெரிந்தது .. அதனால் பிரித்து போடாமல் ஒரே பாகமாக வந்தால் நன்றாக இருக்கும்.. தோர்கல், லார்கோ, ஷெல்டன் அப்படி வந்ததினால் தான் வெற்றி அடைந்தது .. மேலும் book fair இல் வாங்கும் புதிய வாசகர்களுக்கு முழு கதையும் இருந்தால் தான் நன்றாக இருக்கும் சார் .. Whatever ur decision I ll support u Sir ..
    ஆனால் ஒரே தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் ..

    ReplyDelete
    Replies
    1. //ஜேசன் ப்ரைஸில் ஒரு சஸ்பென்ஸ் factor இருந்தது .. அதனால் அது ஒர்க் அவுட் ஆனது சார் நமக்கு ..//s அதப்போல கதைகளை

      Delete
    2. கார்சனின் கடந்த காலம் பட்டய கிளப்பியது நினைவில்

      Delete
  35. சார்,...
    X111 போன்ற நீண்ட...தொடரை வேண்டும்மானால் தொடராக போடலாம்...
    லார்கோ,டெக்ஸ் போன்ற கதைகளுக்கு சரிப்பட்டு வராது...
    அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விலை உயர்வு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் இந்த வேளையில் தனி தனி இதழாக பிரித்து ஒவ்வோன்றுக்கும் "காமிக்ஸ் டைம்,அட்டைப்படம்"என்று செலவை ஏத்துவானேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. \\அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விலை உயர்வு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் இந்த வேளையில் தனி தனி இதழாக பிரித்து ஒவ்வோன்றுக்கும் "காமிக்ஸ் டைம்,அட்டைப்படம்"என்று செலவை ஏத்துவானேன் சார்...\\

      Pointu, pointu

      Delete
  36. சார்...,
    சந்தா R...
    போன்று வேறு சந்தாவை வெளியிடுங்கள்
    நான் கதை எழுத ரொம்பவும் ஆசையாக உள்ளேன்!!!

    ReplyDelete
  37. முழுக்கதையாகவே வெளியிடுங்கள் சார், தொடர்கதை வேண்டாம்.

    தனிப்பட்ட முறையில் டெக்ஸ் MASS தான் அதில் இருவேறு கருத்துக்கே இடமில்லை. ஆனால் கதையோடு ஒன்றி பயணிக்கும் டைகரின் தங்கக்கல்லறை, மிண்ணும் மரணம், என் பெயர் டைகர் ஏற்படுத்தும் தாக்கம் அசாதாரனமானது என்பதையும் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பா்! ரத்தன சுருக்கமாக அருமையான கருத்து!

      Delete
  38. @ tex விஜய் ஜி

    //கார்சனின் கடந்த காலம்".... என்ற காவியம். ஆயிரம் மின்னும் மரணங்களையும், தங்க கல்லறையை யும் உள்ளடக்கியது.....//

    உண்மை தான் விஜய் சார், ஆனால்....

    பெரும்பான்மையான டைகர் கதைகளில் ஒரு இனம் புரியா ஈர்ப்பு உள்ளது. நாம் பார்த்த டைகர் ஒரு போராளி, அழுக்கு மூட்டை போல் இருந்தாலும் அவர் ஒரு பட்டை தீட்ட படா வைரம்.Almost he is a one man army.

    நமது tex ஒரு சூப்பர் ஸ்டார், அவர் ஒரு பட்டை தீட்டிய வைரம், அவர் சட்டை கூட கசங்காமல் பகைவர்களை சொல்லி அடிப்பதில் கில்லி.

    என்னை பொறுத்த மட்டில் நாம் tex போல் வாழ்க்கையில் இருக்க ஆசைப்படுகிறோம், ஆனால் டைகர் போல் வாழ்க்கையில் போராடுகிறோம்.

    அதனால் தானோ என்னவோ நமக்கு இருவரையும் பிடித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்டீல்

      \\டைகர் தொடர் கதைகளை தொங்கவிட்டது நம்ம எடியோட தவறு, ஒரு மின்னும் மரணம் அல்லது தங்க கல்லறை அளவுக்கு இன்றுவரை ஒரு டெக்ஸ் கதையை ஒப்பிடமுடியாது"//நண்பரே அது மெகா ஹிட்தான\\

      கண்டிப்பாக அது ஒரு மெகா மெகா ஹிட் தான் ஜி, அதை தான் சொன்னேன்.

      Delete
    2. @mahesh ஜி...
      என்னை பொறுத்த மட்டில் நாம் tex போல் வாழ்க்கையில் இருக்க ஆசைப்படுகிறோம், ஆனால் டைகர் போல் வாழ்க்கையில் போராடுகிறோம்./
      சூப்பர் நா
      நாம் வாழ்க்கை தத்துவத்தை டெக்ஸ்,டைகர் ர வச்சு சொல்லிடிங்களே...

      Delete
    3. மகேஷ் ஜி@

      செம👏👏👏👏👏

      ரியாலிட்டியை தெறிக்க விட்டுட்டீங்க.

      நாம வாழவிரும்பும் விதமாக டெக்ஸ் இருப்பதும்,
      நிஜத்தை பிரிதிபலிக்கும் மெய்யாக டைகர் இருப்பதையும் அருமையாக சொன்னீங்க. சூப்பர்.

      Delete
    4. // என்னை பொறுத்த மட்டில் நாம் tex போல் வாழ்க்கையில் இருக்க ஆசைப்படுகிறோம், ஆனால் டைகர் போல் வாழ்க்கையில் போராடுகிறோம். //

      Sema ji!! super!

      Delete
    5. //// என்னை பொறுத்த மட்டில் நாம் tex போல் வாழ்க்கையில் இருக்க ஆசைப்படுகிறோம், ஆனால் டைகர் போல் வாழ்க்கையில் போராடுகிறோம். //

      நச்!!

      செம & உண்ம!

      Delete
  39. லயன் ஆன் லைன் விற்பனை நிலையத்தில் இப்போ இருக்கும் ஸ்டாக் விபரம்....!!!!

    1.தங்க கல்லறை-403
    2.இரத்த தடம்-404
    3.என்பெயர் டைகர்-922-கலர்
    4.என்பெயர் டைகர்-957-கறுப்பு-வெள்ளை
    5.இரும்புக்கைஎத்தன்&பரலோகப் பாதை-414
    6.இரத்தக்கோட்டை-329
    7.தோட்டா தலைதகரம்-957
    8.மின்னும் மரணம்-452

    ----இந்த 8கதைகளும் மெயின் சீரியஸ்ல வந்தவை... இத்தனை மலையாக ஸ்டாக் மீந்திருப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல.

    //எப்படி டைகர் காலியானார்...???
    இப்படித்தான்.......,//----

    ஜாலியாக ரசித்து விட்டு, இந்த கதைகளை கொஞ்சம் புஷ் பண்ண வழி ஏதும் இருக்கானு பாருங்க நண்பர்களே!

    அதைவிடுத்து, அப்படியில்லை, இப்படியில்லை என அர்த்தமற்ற வாதம் வேணாம்.

    இவைகள் வரும்போது ரசித்தோம், எதிர்பார்த்தும், பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனா, அதையும் தாண்டி விற்பனையிலும் சக்சஸ் ஆக்க நாம ஏதும் செய்யவேண்டும்.

    இவைகளை கணிசமாக காலியாக ஏதாவது நாம் செய்ய தவறினால்,யங் டைகர் என்பதே எட்டாக் கனவாகவே போயிடும் அபாயம் உண்டு. இந்த இடத்தில் காமிக்ஸ் ரசிகர்களாக இணைந்து செயல்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. Super! இளம் டைகர தொகுப்பா தர்றதா ஆசிரியர் கூறியுள்ளார்....நண்பர்களும் ஈரோட்டில் கோரிக்கை வைத்துள்ளோம்....வாய்ப்பிருந்தால் இந்த வருடம் புதிய அதிரடி கதையோ அல்லது ஆசிரியரின் அதிரடியோ, டைகர் தொகுப்போ நிச்சயம் நண்பரே

      Delete
    2. நிச்சயமா ஏதும் பண்ணுவோம் நண்பரே..

      Delete
    3. ஆளுக்கு ஒரு புக்கோ, இரண்டு புக்கோ வாங்கி விட்டால் டைகர் புக்ஸ் GONE & SOLD.

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. எடிட்டர்ஸ் மற்றும் நண்பர்ஸ் கவனத்திற்கு:

    அடுத்து வரயிருப்பது எடிட்டரின் 500வது பதிவு!!!

    நிச்சயமாய் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய, கொண்டாட வேண்டிய சமாச்சாரமில்லையா?!

    ஆகவே, அடுத்த பதிவு - ஸ்பெஷலாக - ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான சங்கதிகளோடு இருந்தால் செமையாக, நியாயமாக இருந்திடும்!

    ஆவனம் செய்யுங்கள் எடிட்டர் சார்.. ப்ளீஷ்ஷ்ஷ்...!!

    ReplyDelete
    Replies
    1. //அடுத்து வரயிருப்பது எடிட்டரின் 500வது பதிவு!!!//

      அப்படியா சமாச்சாரம்..தூள்!!

      //.ஆகவே, அடுத்த பதிவு - ஸ்பெஷலாக - ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான சங்கதிகளோடு இருந்தால் செமையாக, நியாயமாக இருந்திடும்! ///

      +100


      Delete
    2. அடடா....தமிழ் காமிக் உலகை புரட்டிய நாயகனின் குண்டு புக் குறித்த பதிவாயினுஞ் செரியே

      Delete
    3. 500வது பதிவுக்கு 500 மலர்க் கொத்துக்களோடு, வாழ்த்துகள் சார்.

      💐💐💐💐💐

      Delete
    4. 500வது பதிவுக்கு வாழ்துக்கள் சார், 3 மில்லியன் ஹிட்ஸ் பற்றிய ஒரு மெகா அறிவிப்பை எதிர்பார்க்கிறோம் சார்.

      500 பதிவுகளுக்கு உற்ற துணையாக இருந்த நண்பர்களுக்கும் வாழ்துக்கள்.

      Delete
    5. எப்படித்தான் அந்த சின்ன பூனைக்கண்ணுக்கு இதெல்லாம் தெறியுதோ ஓகே தெறிக்கவிடலாம்..

      Delete
    6. சிங்கத்தின் சிறுவயதில் ஏற்றதா இருக்கும். கேட்போம்

      Delete
  42. ///அடுத்து வரயிருப்பது எடிட்டரின் 500வது பதிவு!!! ///


    ஆஹா...வாழ்த்துகள் எடிட்டர் சார்..!!

    இவ்ளோ நல்ல சமாச்சாரத்தை சாதாரணமா விட்றலாமா நண்பர்களே...!?

    500 ஆவது பதிவு ஷ்பெசல்னு 500 பக்கத்துல ஒரு குண்டு புக் வாங்கினாத்தானே நம்ம எடிட்டருக்கும் பெருமை..நம்ம ப்ளாக் ஃபாலோயர்ஸ்க்கும் பெருமை ..நம்ம லயன்ப்ளாக்குக்கும் பெருமை..அவ்வளவு ஏன் நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கே பெருமை..!

    என்ன.. நான் சொல்றது ...சரிதானே..!?

    ReplyDelete
    Replies
    1. இந்த 500வது பதிவின் சிறப்பிதழாக நாம இதுவரை காணாத ஒரு சீரியஸ் முன்மொழிகிறேன்.


      போனெல்லியில் ஹிஸ்டரி ஆஃப் வெஸ்ட் என்ற தொடர் ஒன்று நம்ம டெக்ஸின் கோல்டன் பீரியடில்,சமகாலத்தில் சக்கைபோடு போட்டது.

      பெஸ்ட் இத்தாலியன் காமிக்ஸ் கிரியட்டர் ஆக இதன் படைப்பாளிகள் பெயர் வாங்கினர்.

      இத்தாலியில் 75புக்குனா நம்ம யங் டெக்ஸ் "காற்றுக்கு ஏது வேலி" மாதிரி போட்டா ஒரு 20டூ 25புக்குகள்ல முடிஞ்சிடும். நெடுந்தொடர் எனும்போது சுவையாகவும் இருக்கும்

      வெஸ்ர்ன் நமக்கு ஆதர்ஷமான சப்ஜெக்ட் வேறு.

      நமக்கு தோதான கதையம்சம் எனில் இதில் ஒரு பார்வை பார்க்கலாம் சார்.

      நானும் தலைகீழாக தேடி பார்த்துட்டேன் இதைபற்றிய போட்டோக்கள் கூட கிடைக்கல.

      ஆசிரியர் சார் இதை புத்தகங்களாகவே பார்த்து இருப்பார்.
      அவரின் தொடர் போடும் ஆசையும் நிறைவேறியது போலாகிடும்.

      இதைபற்றிய, போனெல்லி தளம் சொல்லும் தகவல்.....:


      "History of the West" is anItalian comic series of western genre designed by Gino D'Antonio and published by Edizioni Araldo (future Sergio Bonelli Editore ) from June 1967 within the Rodeo Collection for a total of 73 books (during reprinting, the series was later expanded to reach 75 albums). It is considered one of the best western comic series of the period and has consecrated its creator as one of the masters of Italian comics.

      Delete
    2. @ Tex விஜய்

      நீங்க சொன்ன history of west கதைக்கான website படங்களுடன்.
      https://westernsallitaliana.blogspot.com/2018/01/european-western-comic-books-storia-del.html

      Delete
    3. தேங்யூ ஜி. சார்ட் &சுவீட் ஆக நச்சுஉ தகவல் இருக்கு. ஒரே பக்கம் ஓவியம், என்றாலும் நன்றாகவே இருக்கிறது....!!!

      Delete
    4. சார் அடுத்த வருடம் குண்டு போட்ருவமா....ஒங்க ஆசப்படி புத்தம் புதிய கதை...இப போல...

      Delete
    5. // 500 ஆவது பதிவு ஷ்பெசல்னு 500 பக்கத்துல ஒரு குண்டு புக் வாங்கினாத்தானே நம்ம எடிட்டருக்கும் பெருமை. //
      500 வது பதிவா அருமை,ஏதேனும் ஸ்பெஷல் அறிவிப்பு வந்தால் மகிழ்ச்சி, 500 பக்க குண்டு ஸ்பெஷல் வந்தா இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.

      Delete
    6. ///
      போனெல்லியில் ஹிஸ்டரி ஆஃப் வெஸ்ட் என்ற தொடர் ஒன்று நம்ம டெக்ஸின் கோல்டன் பீரியடில்,சமகாலத்தில் சக்கைபோடு போட்டது.

      பெஸ்ட் இத்தாலியன் காமிக்ஸ் கிரியட்டர் ஆக இதன் படைப்பாளிகள் பெயர் வாங்கினர்.///

      அடடே....!! நமக்கு சரிபட்டு வரும்னா ட்ரை பண்ணலாமே சார்...!!

      Delete
  43. தொடர் கதைகள் நமக்கு ஒத்து வராது என்பது என் கருத்து....மேலும் அதை நாம் விரும்பவில்லை என்பதே உண்மை...

    ReplyDelete
  44. டைகரின், young blueberry இளமையில் கொல் 3 பாகங்களுடன் அந்தரத்தில் நிற்பது மிகப்பெரிய குறையாக தோன்றுகிறது. பாக்கியுள்ள டைகர் கதைகளை குண்டு புத்தகமாக வெளியிட்டுவிட்டால் ஒரு mission
    Accomplish ஆன திருப்தி உங்களுக்கும், எல்லா டைகர் கதைகளையும் படித்துவிட்டோம் அல்லது சேகரித்து விட்டோம் என்ற திருப்தி எங்களுக்கும் ஏற்படும்....

    ReplyDelete
    Replies
    1. அதைத் தொடர்ந்து கம்பேக்கிற்கு பின்பு வந்த6பாகங்கள் சேர்த்து,
      மொத்தமாக 9வந்துட்டன நண்பரே.
      பாக்கி 12பாகங்கள் வெயிட்டிங்ல இருக்கு...!!!

      Delete

  45. தோர்கல் மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

    இப்ப மத்த விமர்சனங்கள் குறைந்ததால் மர்மக் கத்தி பத்தி.

    செனா. அனா. வோட விளக்கமான கனவு, மற்றும் கனவுலகத்தில் டிராவல் பண்ணலாங்கிறது தவிர வேற ஏதாவது அதிக விஞ்ஞானம் இல்லாத தர்கக ரீதியான விளக்கம் இருக்குமா?

    உதாரணமா...இவங்க ஏன் ஒரு டைம் லூப்ல மாட்டி இருக்கக் கூடாது. வில்லன் மெசினைத் தூக்கிட்டு வந்துட்டான். மறுபடியும் யாராவது மெசினை வில்லன் கிட்ட இருந்து கைப்பற்றி மறுபடி போயி அவங்க தூங்கிட்டு இருக்கும் போதே கொண்டுவந்து படுக்க வைச்சு அடுத்த நாள் காலைல வந்து பாத்துக்கலாமனு போயிருக்கலாம அல்லவா? இரவில்ம வந்த புரபசர் மறுபடி காலையில்வருவது அதனால் இருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. //மறுபடியும் யாராவது மெசினை வில்லன் கிட்ட இருந்து கைப்பற்றி மறுபடி போயி அவங்க தூங்கிட்டு இருக்கும் போதே கொண்டுவந்து படுக்க வைச்சு அடுத்த நாள் காலைல வந்து பாத்துக்கலாமனு போயிருக்கலாம அல்லவா? //

      மர்ம கத்தி 2 - க்கான கதைக்கரு கிடைச்சாச்சு...:-)

      கதையில் வரும் டைம் மெஷின் ஸ்பேஸ்ஷிப் மாதிரி இருப்பதும்,

      பக்கம் 8-ல் பயன்படுத்தப்படும் " ஹைப்பர் ஸ்பேஸ்" என்ற வார்த்தையும்

      கதை விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்பதாக உணரவைக்க மட்டுமே கையாளப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது..

      அப்படி இருப்பின் வில்லனை வீழ்த்தி ரோஜர்,பில் இருவரும் டைம் மிஷின் மூலமாக திரும்புவதாக காண்பித்து இருக்க முடியுமே...

      Delete
    2. நீங்க சொன்ன முத விளக்கத்தை மறுக்கலை செனா. அது தவிர கதையில் உள்ள குறிப்புகளைக் கொண்ட வேற விளக்கங்களும் இருக்குமான்னு தேடறேன்.

      Delete
    3. மறுத்தாலும் தப்பில்லை மகிஜி! ..அது ஒரு ஹேஷ்யம்தான் ...

      அறிவியல்பூர்வமாக விளக்கம் அளிக்க இயலவில்லை ...

      இணை பிரபஞ்சம் அதிக சர்ச்சையுள்ள டாபிக் ..

      குவாண்டம் பிஸிக்ஸ் இதை வெகுவாக சப்போர்ட் செய்ய இயலும்

      இறப்பதற்கு முன் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இணை பிரபஞ்ச சாத்திய கூறுகள் பற்றி சாதகமாக எழுதி போய் இருக்கிறார் ..



      ..ஆனால் டைம் மெஷின் இல்லாமல் எப்படி திரும்ப முடியும் என கேட்டால்

      என்ன செய்வது ?


      ஒன்று






      கதாசிரியர் சென்சேஷனல் முடிவுக்காக எவ்வித அடிப்படையும் இல்லாமல் அப்படி எழுதிஇருக்கலாம் ...


      அல்லது அவர் எழுதியதன் உள்நோக்கம் நமக்கு பிடிபடாமல் இருக்கலாம் ..

      அதற்காகவே மாற்று கருத்து இருப்பின் முன் வைக்குமாறு வேண்டி இருந்தேன்...


      உங்கள் கருத்தினை தர்க்கரீதியாக வைத்து பார்ப்பதில் ஆட்சேபம் இல்லை ..

      ஆனால் only drawback is there are so many ''ifs''.

      Delete
    4. ஸ்டீபன் ஹாக்கின்ஸ்>>>> கரெக்ஷன் >> ஹாகிங்

      Delete
    5. நான் வலைல வலை வீசிப் பாத்துட்டு வரேன். 🙏🙏🙏🙏

      Delete
  46. எடிட்டர் சார்,

    இப்போதுதான் இரண்டு ட்ரெண்ட் ஆல்பங்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கையை கொடுங்கள் சார். மேக்கிங் அசத்தலாக இருக்கிறது. ஓவியம், கலரிங், பிரின்டிங் தரம் எல்லாமே சூப்பர்.

    சின்ன சின்ன டீடைலிங் அற்புதம். உதாரணமாக, முதல் ஆல்பத்தில் அக்னெஸ் ட்ரெண்டுக்கு முத்தம் கொடுக்கும் இடத்தில், முச்ச்ச் என்று சத்தத்தில் ச் எழுத்துக்கு மேலே புள்ளிக்கு பதில் ஹார்ட் இருப்பது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இரண்டு கதைகளுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தெளிந்த நீரோடை போன்ற கதைக்களம், போட்டோ போன்ற சித்திரங்கள், தேர்ந்த மொழிபெயர்ப்பு, வேறென்னன வேண்டும்! சூப்பர் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. ///தெளிந்த நீரோடை போன்ற கதைக்களம், போட்டோ போன்ற சித்திரங்கள், தேர்ந்த மொழிபெயர்ப்பு, வேறென்னன வேண்டும்!///

      +111

      Delete
    2. அட்டகாசமான விமர்சனம்.

      Delete
    3. ரசிச்சு ரசிச்சு படிச்சிருக்கீங்க ரட்ஜா! :)

      Delete
  47. ஆவாது.ஆவாது.ஆவாது. ஒரே டேக் ஓகே.

    ReplyDelete
  48. எல்லா புக்கும் நிலவொளி சைஸ் இருந்தால் ஓகே
    கை கடிக்காது...

    ReplyDelete
  49. I had 2 x Minnum Maranam at the time release. One was for my brother and one for me as well. after wear and tear , I plan to buy an another copy for my collector;s shelf.!!

    ReplyDelete
  50. தொடர தொடராதீங்க சார். ஒரே குண்டா போட்ருங்க

    ReplyDelete
  51. கார்ட்டூனுக்கு தொடர் வேண்டாம் சார்.முடிஞ்சா ஒரே புக்.ரொம்ப காலத்திற்க்கு வந்த ஆக்ஷன் டைனமைட் ரெக்ஸ் தொடர் இன்னும் நிக்குது புயல்படலம் ரவுடி ராஜ்யம் நல்லகதை...

    ReplyDelete
  52. 500th post?
    Great
    My advance wishes vijayan sir😀

    ReplyDelete
  53. வேய்ன் ஷெல்டன்

    -லார்கோ

    மாடஸ்டி

    கையில் இருக்கும் செல்போனையும் தாண்டி இன்றளவும் நாம் காமிக்ஸ் பின்னால் செல்கிறோம் என்றால்
    நவீனங்கள் இல்லாத வித்தியாசமான ஏதோ ஒன்றை தேடி தான் நான் தேடிய வரை அது எனக்கு கிடைத்தது இந்த படக்கதைகள் மூலம் மட்டுமே.ஆனால் அங்கேயும் நாம் திரைப்படத்திலோ அல்லது செல்போனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ தினமும் பார்த்து சலித்துப்போன நிகழ்கால கதைகளை அல்லது நாயகர்களை சந்திக்கும் போது ஏற்படும் ஒருவித சலிப்பை தவிர்க்க முடியவில்லை.
    என்னைப் பொருத்தவரை அதனுடைய தாக்கமே மேலே குறிப்பிட்டுள்ள நாயகர்களின் ஸ்டாக். இந்த stock தான் அனைத்திற்கும் காரணம்.கதைத் தேர்வு சரியாக இருந்தால் விலையைப்பற்றியோ விற்பனையை பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.40 ருபாய்க்கு விற்ற பெட்ரோல் விலை இன்றைக்கு 90 ரூபாய் என்பதால் அடிக்காமல் விட்டு விடுகிறோமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனை! ஏற்புடையதும்கூட!!

      Delete
    2. /.40 ருபாய்க்கு விற்ற பெட்ரோல் விலை இன்றைக்கு 90 ரூபாய் என்பதால் அடிக்காமல் விட்டு விடுகிறோமா என்ன?./

      Wrong comparison... So many times told in this blog..of these two petrol is an essential commodity; comics is not.

      Delete

    3. //நவீனங்கள் இல்லாத வித்தியாசமான ஏதோ ஒன்றை தேடி தான் நான் தேடிய வரை அது எனக்கு கிடைத்தது இந்த படக்கதைகள் மூலம் மட்டுமே.ஆனால் அங்கேயும் நாம் திரைப்படத்திலோ அல்லது செல்போனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ தினமும் பார்த்து சலித்துப்போன நிகழ்கால கதைகளை அல்லது நாயகர்களை சந்திக்கும் போது ஏற்படும் ஒருவித சலிப்பை தவிர்க்க முடியவில்லை.//

      ஒரு பெரும் கார்ப்பொரேட் முதலாளி சந்திக்கும் பிரச்சனைகள் /பொருளாதார சிக்கல்கள் சார்ந்த நீங்கள் பார்த்த / படித்த கதைகள் / படங்கள் சொல்ல இயலுமா?


      ஒரு தலைநரைத்த ப்ரீலேன்ஸ் அட்வென்சரின் சாகசங்கள் குறித்த படங்கள்,கதைகள் சொல்ல இயலுமா?

      மாடஸ்டியை விட்டுவிடலாம்..

      ஜஸ்ட் க்யூரியாஸிட்டி...

      Delete
    4. நவீனம் இல்லாத கதைகள்
      கவ்பாய் மற்றும் வரலாற்று பின்னனி கொண்ட கதைகள் தான்.
      அதனால் தான் டெக்ஸ் டைகர் எல்லோருக்கும் பிடிக்கிறது.

      Delete
    5. //
      ஒரு பெரும் கார்ப்பொரேட் முதலாளி சந்திக்கும் பிரச்சனைகள் /பொருளாதார சிக்கல்கள் சார்ந்த நீங்கள் பார்த்த / படித்த கதைகள் / படங்கள் சொல்ல இயலுமா?
      //அதான நல்லா கேளுங்க

      Delete
    6. நான் சொல்ல வந்ததே இந்த சிக்கல்கலே இல்லாத காலத்தை காண்பதை பற்றியே.
      முதலில் தண்ணீர் தண்ணீர் என்ற ஒரு படத்தைப்பாருங்கள் பிறகு ப்ரீலேன்ஸ் அட்வென்சர்களையும் கார்பரேட் முதலாளிகளின் பிரச்சனைகளை பற்றிய படங்களையும் அப்புறம் பார்க்கலாம்.

      Delete
    7. ///மாடஸ்டியை விட்டுவிடலாம்..////

      அதான் மணிக்கணக்குல மீன் புடிச்சு அப்பயே வுட்டுட்டீங்களே, செனா அனா?!! :D

      Delete
    8. ///நான் சொல்ல வந்ததே இந்த சிக்கல்கலே இல்லாத காலத்தை காண்பதை பற்றியே.///

      அப்பாடா!! நான் புரிஞ்சுக்கிட்டது சரிதான்!!

      Delete
    9. @ ayya sun ..நீங்கள் கோபமுறுவதாக தெரிகிறது..வருந்துகிறேன்...

      லார்கோ,ஷெல்டன் ஸ்டாக் குறித்த உங்கள் பார்வை மெய்யாகவே ஆச்சர்யமளித்தது..

      லார்கோ,ஷெல்டன்( other side of fifty-ல் இருந்து கொண்டு செய்பவை) கதைக்களங்கள் நான் அனுபவப் படாத ஒன்று..

      அதனால் விளைந்த வியப்பினால் வினவிய வினா அது..

      நிஜமாக வருத்தம் தெரிவிக்கிறேன்..

      Delete
    10. //அதான் மணிக்கணக்குல மீன் புடிச்சு அப்பயே வுட்டுட்டீங்களே, செனா அனா?!! :D//


      ஹா..ஹா..தான் போனாலும் தனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை டெபுடேஷனில் அனுப்பும் தங்கமான குணம் மாடஸ்டியை தவிர யாருக்கு வரும்?

      Delete
    11. இந்த கார்பரேட்,பொருளாதாரம், GST,புகை,மாசு,தூசு,செல்போன்,ட்ராபிக்,ஜனத்தொகை,அவசரம்,போட்டி,வஞ்சகம்,ஒப்பீடு,வாழ்க்கையை விற்று பணத்தை தேடும் பயணம்,
      போதும் நண்பரே ஒரு கொஞ்சநேரம் இவற்றை மறந்து இவையெல்லாம் என்னவென்றே அறியாத மனிதர்களை,அவர்கள் வாழ்ந்த இடங்களை கால எந்திரம் இல்லாமல் காமிக்ஸ் மூலம் காணச்செல்வோம் வாருங்கள்.அதிலே எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அனுபவம்,ஒரு அமைதி இருக்கு நண்பரே!

      Delete
    12. இருக்கு ayya sun ji.

      அப்படி ஒரு உலகம் இருக்கு...

      நீலப் பொடியர்களின் குட்டி உலகம்,

      காளான் உயரத்தை விட குட்டையான மனிதர்கள். குட்டியூண்டு ஓடை, எத்தனை எத்தனை பாலங்கள், அவர்களின் உருவங்கள் ஒன்றாக இருந்தாலும், சிந்தைகளிலே எத்தனை வேறுபாடுகள்.

      நம்ம கவலை மறக்கச் செய்யும் ஆனந்த உலகம் தான் பொடியர்களின் ஸ்மர்ஃப் வில்லா எனும் சோலை.

      வாருங்கள் அங்கே போய் இளைப்பாறி வருவோம்.

      Delete
    13. //நம்ம கவலை மறக்கச் செய்யும் ஆனந்த உலகம் தான் பொடியர்களின் ஸ்மர்ஃப் வில்லா எனும் சோலை.

      வாருங்கள் அங்கே போய் இளைப்பாறி வருவோம்//+1 //இந்த கார்பரேட்,பொருளாதாரம், GST,புகை,மாசு,தூசு,செல்போன்,ட்ராபிக்,ஜனத்தொகை,அவசரம்,போட்டி,வஞ்சகம்,ஒப்பீடு,வாழ்க்கையை விற்று பணத்தை தேடும் பயணம்,
      போதும் நண்பரே ஒரு கொஞ்சநேரம் இவற்றை மறந்து இவையெல்லாம் என்னவென்றே அறியாத மனிதர்களை,அவர்கள் வாழ்ந்த இடங்களை கால எந்திரம் இல்லாமல் காமிக்ஸ் மூலம் காணச்செல்வோம் //
      நண்பரே இவை இல்லாத கதைகளை காட்டுங்கள் , விற்பனை சார்ந்து சிறப்பெனில் ஆசிரியர் முடிவெடுக்க உதவலாமே

      Delete
    14. ayya sun "நிஜங்களின் நிசப்தம்" போன்ற கி.நா.க்களை எதிா்பாா்ப்பாா் போல தொியுது!! 😁😁🤔🤔👏👏

      Delete
    15. பாகம் 2ஐ கேட்டு வாங்கித் தந்துடுவோம். நண்பர்களாக இது கூட செய்ய மாட்டமா, என்ன!!!
      ஹி...ஹி...!!!

      Delete
  54. 12 டெக்ஸ்
    12 கார்ட்டூன்
    12 புதிய முயற்சியில் success ஆன தொகுப்புகள்
    12 கிராபிக் நாவல் (இதில் புதிய முயற்சிகளை செய்து பார்க்கலாம். நன்றாக இருப்பவைகளை மெயின் ஸ்ட்ரீம் -ல் களம் இறக்கலாம் லைக் தோர்கல், ஜூலியா,ட்ரென்ட்...புதிய பரீச்சார்த்தமான முயற்சிகளை கைவிட வேண்டாம்.
    ஸ்பைடர் மாயாவி கதைகள் வெளிவந்த போது டெக்ஸ் வில்லர் புதிய முயற்சி என்பதை மறக்க வேண்டாம்.)
    டெக்ஸ் வில்லர் கதைகள் வந்தபோது டைகர் புதிய முயற்சி தான்.
    புதிய முயற்சிகள் இல்லையெனில் இவர்களின் அறிமுகம் நமக்கு கிடைத்திருக்காது.

    தொடர்கதை தனி தனியாக வேண்டாம். மூன்று மாதத்திற்கொரு முறை காலாண்டு மலர் என ஒரே ஷாட்டில் வெளிவருவது தான் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  55. என்ன வேணா செய்யவும். தயவுசெய்து புது தொடர் இரண்டு வருடங்களுக்கு வாங்க வேண்டாம். பின் டாலர், பேப்பர், பெட்ரோல் அழ வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. With due respect sir,i disagree.

      If a crisis emerges the most logical way should be to find the solution to nullify the crisis and learn from the event and to adopt and evolve.

      To be inert or inactive is suicidal..new ventures with a calculated risk is better than idleness.

      We would be left behind..

      would be an unpleasant scenario..

      Delete
    2. Infact i realised just now that above notion has been self declared by the editor himself..

      At this time of dollar crisis he called for discussion about "new series".

      Most welcomed the series;only said " no" to the mode of publishing.

      Delete
  56. அடுத்த நடையில் "500 " ஆவது அடியை எடுத்து வைக்கும் ஆசிரியருக்கு ஆளுயிர மாலையை போராட்ட குழுவின் (?) சார்பாக அணிவித்து மகிழ்கிறோம்.இச்சமயத்தில் அதனை மறவாமல் நினைவுபடுத்திய போராட்ட குழுவின் செயலருக்கு ஓர் அழகான பூங்கொத்தை அளித்து மகிழ்கிறோம்...


    500 வது பதிவு ஐநூறு பக்கங்களில் வருவது போல இல்லாவிட்டாலும் ஐந்து பக்கங்கள் வரும் அளவிற்கு "குஷியான" அறிவிப்புகளை குவித்து கொட்டுமாறு ஆசிரியரை வேண்டிகொள்கிறோம். அது 500 வது பதிவு சிறப்பிதழோ ,500 பக்க சிறப்பிதழோ ,500 விலை சிறப்பிதழோ ,வருட அட்டவணை பதிவு சிறப்பிதழோ என அனைத்தும் கலந்து கட்டி வரும் அந்த பதிவிற்கு விழி நோக்கி காத்திருக்கிறோம்.


    ஒரு தாமதமான குறு எண்ணங்கள்....


    * எந்த காரணங்களினாலும் மாதம் ஒரு டெக்ஸ் என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டாம்.

    *விலையை குறைக்க வண்ண இதழ்களை கறுப்பு வெள்ளையில் வெளியிடுவது சிறப்பே.ஆனால் அது கார்ட்டூனோ ,இறுதி சாகஸ ஷெல்டனோ இல்லாமல் அறிமுக நாயகர்களுக்கு அதை கடைப்பிடிக்கலாம்.வண்ண டெக்ஸை விட கறுப்பு வெள்ளை டெக்ஸ் இன்னும் ஆழமாக மனிதில் பதிவதால் வண்ணமில்லா டெக்ஸ் அவர்களுக்கு "அதிக " முன்னுரிமை அளிக்கலாம்..

    *தயவு செய்து இதழின் அளவை குறைத்தாலும் "எழுத்துருவின் " அளவை குறைக்காத அளவிற்கு இதழ் வெளிமாறு இருக்குமாறு வேண்டிகொள்கிறேன் .இப்பொழுதே சில சமயங்களில் இதழ்களை தூரமாக ,பக்கமாக என நகர்த்தி படிக்கும் நிலைமை இருக்க எப்பொழுதும் படைப்புகளில் வரும் " கையெழுத்து போன்ற எழுத்துருக்களை " ( உம் : ட்ரெண்ட் சாகஸ கவிதைகள் போல ..) அருகில் ,தூரமாக ,இடதாக ,வலதாக என எங்கெங்கோ இதழை கொண்டு சென்று கூர்ந்து படிக்க நேர்கிறது .இளமை ஊஞ்சலாடுகறது என்று இன்னமும் இங்கே பொய்மை வாய்த்து கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிடும் நிலைமை என்ற நிலையில் வயதாகிறது என்ற நிஜத்தை நிசப்தம் இல்லாமல் சொல்லி கொள்கிறோம் சார்.

    *அடுத்து இதழின் எண்ணிக்கையை தயவு செய்து குறைக்க வேண்டாம் என்பதும் எனது கருத்து .இங்கு ஏற்கனவே நாலு புக்கு வந்தால் ரெண்டு நாளில் முடித்து விட்டு அவ்ளோ தானா என்ற நிலையில் இன்னமும் குறைத்தால் ....?! :-(


    * மொத்தத்தில் இன்றைய தரத்தில் என்றும் தொடருங்கள்.ஏறுநடையில் ....




    இப்பதிவின் வினாவான

    " தொடர்கதை " பற்றி....?




    "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் " நினைவலைகள் மறந்து விட்டதா சார் ..( இதற்கு தான் சி.சி.வயதில் மறவாமல் தொடர வேண்டும் என்பது )..

    தொடர் கதைகளையே முழுகதையாக தான் வேண்டும் என அனைவரும் விரும்பி கொண்டு இருக்கும் நிலையில் தொடரா.....


    ஒரு மாதமோ ,இருமாதமோ ,ஆறு மாதமோ சின்ன கதையோ பெரிய கதையோ ,ஆக்‌ஷன் கதையோ ,கிராபிக் கதையோ ...இதற்கு எனது ஓட்டு




    மிகப் பெரிய நோஓஓஓஓஓஓஓஓஓஓ

    என்பதே....

    ReplyDelete
    Replies
    1. ஒரே வாரத்துல ரெண்டு உபபதிவா???

      Delete
    2. ////இப்பொழுதே சில சமயங்களில் இதழ்களை தூரமாக ,பக்கமாக என நகர்த்தி படிக்கும் நிலைமை இருக்க எப்பொழுதும் படைப்புகளில் வரும் " கையெழுத்து போன்ற எழுத்துருக்களை " ( உம் : ட்ரெண்ட் சாகஸ கவிதைகள் போல ..) அருகில் ,தூரமாக ,இடதாக ,வலதாக என எங்கெங்கோ இதழை கொண்டு சென்று கூர்ந்து படிக்க நேர்கிறது ////

      தலீவரே... நாங்க எது கேட்டாலும் வேறெங்கோ பார்த்துப் பேசுவீங்களே... அதுக்கு அர்த்தம் இப்பத்தான் புரியுது! :D

      Delete
    3. ?/500 வது பதிவு ஐநூறு பக்கங்களில் வருவது போல இல்லாவிட்டாலும் ஐந்து பக்கங்கள் வரும் அளவிற்கு "குஷியான" அறிவிப்புகளை குவித்து கொட்டுமாறு ஆசிரியரை வேண்டிகொள்கிறோம். அது 500 வது பதிவு சிறப்பிதழோ ,500 பக்க சிறப்பிதழோ ,500 விலை சிறப்பிதழோ ,வருட அட்டவணை பதிவு சிறப்பிதழோ என அனைத்தும் கலந்து கட்டி வரும் அந்த பதிவிற்கு விழி நோக்கி காத்திருக்கிறோம்.//+1

      Delete
  57. இரத்தப்படலம் அடுத்த சீரியஸ் ஆரம்பம் போல....! போட்டோலாம் கண்ணில் பட்டது.

    தகவல்கள் தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கவும்...!!!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த சீரியல் இல்ல ஜி புலன்விசாரணை பாகம 2 வரும் 10-11-2018 Dargaud ல ரிலீஸ் ஜி

      Delete
    2. வெறும் 32 பக்கம்தான் ஜி

      Delete
    3. அடுத்த இறுதி ஸ்பின்ஆப் எண் 13 ஜூடித் அடுத்தமாதம் ரிலீஸ்.

      Delete
    4. தேங்யூ!

      நான் பெரிய சீரியஸ் போலனு ஆவலா இருந்தேனே...ஹூம்... வடை போச்சே!

      வான் ஹாம்மே கதாசிரியர் என் போட்டு இருந்ததால் அப்படி நினைச்சி உற்சாகமாக இருந்தேன்...

      ஸ்பின் ஆப்புக்கே பெருந்தலை வருதுனா, கதை நச்சுனு இருக்கும்!

      Delete
  58. பழனி நோட் திஸ் பாயின்ட்

    ReplyDelete
  59. மகிழ்ச்சியான செய்தி,
    வருகிற நவம்பர் 9ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அளவில் சேலம் போஸ் மைதானத்தில் நடத்துவதற்கு மாவட்ட கலெக்டர் ரோஹிணி அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
    அவரது முயற்சி நல்லபடியாக நிறைவேற வாழ்த்துகள், புத்தக விழா சாத்தியமானால் நமது லயன் காமிக்ஸ் நிறுவனமும் அதில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டும் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
    Replies
    1. அட டே...👏💐👏💐👏💐

      சூப்பர் ரவி...

      மகிழ்ச்சி யான செய்திதான்...

      புத்தக திருவிழா நடைமுறை காணும் பட்சத்தில் லயன்-முத்து வும் கலந்து கொண்டால் பெருமகிழ்ச்சி😁😁😁

      Delete
    2. அருமையான செய்தி!! மாவட்ட கலெக்டர் ரோஹினிக்கு நம் அட்வான்ஸ் நன்றிகள்!!

      Delete
    3. ஈ.வி.@

      சேலம்2014 ஞாபகம் இருக்கா?

      மாடர்ன் மங்கூஸ்ங்கிற பெயர் அப்பத்தான் பிரசித்தம்???.


      ஆஹா மீண்டும் லஞ் பாக்ஸ்க்கு வேலை வந்துட்டது, 4வருடம் கழித்து...!!!

      Delete
    4. ///மாவட்ட கலெக்டர் ரோஹினிக்கு நம் அட்வான்ஸ் நன்றிகள்!!///

      வில்லங்கமான பூனையா இருக்கும் போலிருக்கே!

      Delete
    5. வாவ்.....சார்ந்தோருக்கு பாராட்டுகள்.!

      ///சேலம்2014 ஞாபகம் இருக்கா?

      மாடர்ன் மங்கூஸ்ங்கிற பெயர் அப்பத்தான் பிரசித்தம்???.///

      யாருய்யா அந்தாளு ..!? பேரே டெர்ரரா இருக்கே.!?

      Delete
    6. யோவ் மாம்ஸ்!

      அந்தாளு பெயர் மட்டுமே அப்படி வைப்பாரு. ஆனா பிஞ்சி மூஞ்சி. பெயரை பார்த்து ஏமாந்துட வேணாம்.

      Delete
    7. அட்டகாசமான செய்தி...

      நம்ம ஊரு ஏரியா புத்தக திருவிழா ..


      கலக்கிரலாம்...

      Delete