Sunday, February 18, 2018

இது "ரமணா" நேரம் !!

நண்பர்களே,

வணக்கம். உஷாருங்கோ உஷாரு - இதுவொரு 'ரமணா' பதிவு - உஷாருங்கோ !!  'தம்' பிடித்துக் கொண்டே புள்ளி விபரங்களை அள்ளி விட்டு ரொம்ப நாளாச்சே என்று சமீபமாய்த்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் & சொல்லி வைத்தார் போல  நமது பிரெஞ்சுப் பதிப்பகங்களிலிருந்து மாமூலாய் வரும் மின்னஞ்சலில் 2017 சார்ந்த தகவல்கள் நிறையவே கொட்டிக் கிடந்தன ! பொதுவாய் நான் அவர்களை சந்திக்கும் வேளைகளில், நமக்குத் தேவையான கதைகள்  ; தொடர்கள் பற்றிய அளவளாவல்கள் 15 நிமிடங்களில் நிறைவு பெற்றிடும் ; பாக்கி 45 நிமிடங்களில் அவர்களது மார்க்கெட் பற்றி ; புது projects பற்றி ; விற்பனைகள் பற்றி ; படைப்பாளிகள் பற்றி, என எதை எதையாவது கிண்டிக் கொண்டேயிருப்பேன் ! 'இதையெல்லாம் தெரிஞ்சு இவன் என்ன பண்ணப் போறான் ?' என்ற கேள்விகள் அவர்களுக்கு ஒருநாளும் எழுந்ததில்லை ! மாறாக, எங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து ஆஜராகி நிற்கும் ஆந்தைக்கண்ணனுக்கு இத்தனை சுவாரஸ்யமா - நமது நடப்புகள் மீது ? என்ற  ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள் ! நமக்கோ பேசி விட்டுப் புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில்,  விளக்குமாற்றால் 'வர்..வர்' என்று கழுவிப்போடப்பட்ட தோசைக் கல்லாய் மண்டை blank ஆகிப் போய்விடுமென்பதால், அவர்கள் பேசுவதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பேன் ! கேட்டார்கள் ஒருமுறை - 'இந்தக் குறிப்புகள் எதற்காகவென்று ?!' பரந்து விரிந்த பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் பிரபஞ்சத்தின்  ஒரு தம்மாத்துண்டு அங்கமாய் நாம் இருந்தாலுமே - அந்த உலகம்  சார்ந்த தகவல்களில் நமக்கெல்லாம் ஒரு இனமறியா நேசம் ; ஒரு பெருமிதம் இருப்பதைச் சொன்ன போது அவர்களது முகத்திலிருந்த புன்னகையின் அளவு விசாலமானதை கவனிக்கத் தவறவில்லை ! So ஆண்டுக்கொருமுறை அவர்கள் ஒவ்வொருவரது பதிப்பகம் சார்ந்த திட்டமிடல்கள் ; புது வரவுகள் ; விற்பனை சாதனைகள் என்ற ரீதியில் தகவல்கள் நம்மை எட்டிப் பிடிக்கும் போது அவற்றுள் முக்கியமானவற்றை இங்கே போட்டுத் தாக்குவது வாடிக்கை ! And இது 2017 பற்றிய தகவல்கள் எனும் போது - fairly recent stuff !! அவர்களது newsletter களைப் படித்த கையோடு - கூகிளையும் கொஞ்சம் நோண்டிப் பார்த்த பின்பாய், ஜீனியஸ் smurf போல விரலை ஆட்டி, ஆட்டி உங்களுக்குத் தகவல் சொல்லும் ஆர்வம் அலையடித்தது ! "ச்சை...எனக்கு புள்ளிவிபரமும் புடிக்காது ;  விரலை ஆட்டி ஆட்டிப் புள்ளிவிபரம் சொல்றவனையும் புடிக்காது !" எனும் அணியாக நீங்கள் இருப்பின், நேராகப் பதிவின் இறுதிக்குப் போய் விடல் க்ஷேமம் என்பேன் ! Here goes:

உலகின் TOP 3 காமிக்ஸ் தேசங்கள் - எப்போதும் போலவே அமெரிக்கா ; பிரான்ஸ் & ஜப்பான் தான் ! And எட்டிப் பிடிக்க இயலா உச்சாணியில் குந்தியிருப்பது டிரம்பின் தேசமே ! அமெரிக்காவில் 2017-ன் காமிக்ஸ் விற்பனையின் மதிப்பு தோராயமாய் 1.1 பில்லியன் டாலர்கள் ! (அதாச்சும் வாய் பிளக்கச் செய்யும் 7200 கோடி ரூபாய் !!!!)  பிரான்சில் சென்றாண்டின் விற்பனைத் தொகை : 260 மில்லியன் டாலர்களாம் !! (ரூ.29619400000 ; அதாச்சும் : மூவாயிரம் கோடி ரூபாய்க்கு சித்தே குறைவு !!) ஜப்பானில் 2017-ல் சுமார் 12% வீழ்ச்சி கண்டுள்ளதாம்  மங்கா விற்பனை ! புதுத் தொடர்கள் பெரியளவிற்கு ஹிட் அடிக்காதது ; பிரபல தொடர்களில் சில நிறைவுற்றது - என இதற்குக் காரணங்கள் சொல்கிறார்கள் ! சரி, அமெரிக்காவும், ஜப்பானும் நமக்கு சற்றே அந்நிய மார்க்கெட்கள் என்பதால் - நாம் அன்னம்-தண்ணி புழங்கும் பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டிலேயே கவனம் பதிப்போமே ?

2017-ல் பிரெஞ்சு காமிக்ஸ் மார்க்கெட்டில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் மையமே இந்த ஆச்சர்யமூட்டும் தகவல் தான் என்னைப் பொறுத்தவரை : அதாவது, அங்கே வெளியாகும் காமிக்ஸ் ஆல்பங்களில், சற்றேற பாதிக்கும் மேலானதொரு பங்கை (53%)  வாங்குவது பெண்கள் தானாம் !!! கிட்டத்தட்ட 15000 பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயின் சேதி இது ! கிராபிக் நாவல்கள் ; மங்கா ; ரெகுலர் காமிக்ஸ் என எல்லா பாணிகளிலும் இவர்களது கைவண்ணம் உள்ளதாம் ! இதில் ஒரே 'இக்கன்னா' என்னவெனில் - இவர்களுள் அறுபத்திஐந்து சதவிகிதத்தினர் காமிக்ஸ்  வாங்குவது தமக்காக அல்ல !! வீட்டிலுள்ள யாருக்கேனும் வாங்கிச் செல்கிறார்கள் ! அந்த "யாருக்கேனும்" நிச்சயமாய் குட்டீஸ்களே என்பதில் ஐயமேது ? So பிள்ளைகளின் பொழுதுபோக்குகளுக்கென பிரெஞ்சுத் தாய்மார்கள் காமிக்ஸ் இதழ்களை பரிந்துரைக்க கணிசமான அக்கறை காட்டுவது அப்பட்டம் ! Vive la France !! வாழ்க french அம்மணீஸ் !! 

அப்புறம் ஒரு பிரெஞ்சு காமிக்ஸினை கொள்முதல் செய்திடும்  வாசக / வாசகியின் சராசரி வயது 41 ! அவர்களுக்கேயான வாங்குகிறார்களோ ; அன்பளிப்பாய்த் தரும் பொருட்டு வாங்குகிறார்களோ ; வீட்டிலுள்ள சிறார்களின் வாசிப்புகளுக்கென வாங்கிப் போகிறார்களோ - அது முக்கியமல்ல என்பேன் ! மாறாக - ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனோ / தலைவியோ, காமிக்ஸ்களை தம் வாழ்க்கையின் ஒரு ஆடம்பரமாய்ப் பார்த்திடாது - அத்தியாவசியப் பட்டியலிலேயே வைத்திருக்கும் அந்தப் பாங்கே நம்மை ஏக்கப் பெருமூச்சு விடச் செய்கிறது !! இன்னும் கொஞ்சம் ஆழமாய்ப் புள்ளிவிபரப்  புலியாகிடும் பட்சத்தில் - பிரான்சின் ஜனத்தொகை : 67 மில்லியன் ! (அதாச்சும் 6 .7 கோடி மக்கள் !! ப்பூ !!) இந்தத் தம்மாத்துண்டு நம்பரை வைத்துக் கொண்டே இந்தப் போடு போடுகிறார்களே - உப்ப் !! 

டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் ; smurfs (!!!) வாங்குவது பெரும்பாலும் 50+ வயதிலான பெண்களாம் !!! மங்கா வாங்குவது இளவட்டங்கள் - இரு பாலினங்களிலுமே ! பிரெஞ்சுப் பசங்களின் ஆதர்ஷ இதழ்களாய் இருப்பது அமெரிக்கக் கரைகளிலிருந்து ஒதுங்கிடும் சூப்பர் ஹீரோ கதைகளின் பிரெஞ்சு ஆக்கங்களேயாம் !! உள்ளூர் படைப்புகளை அசைத்துப் பார்க்கும் அளவுக்கெல்லாம் இந்த சூப்பர் ஹீரோ மோகம் இன்னமும் விற்பனை எண்ணிக்கையில் பிரதிபலித்திடவில்லை என்றாலும், மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் பிரிவு இதுதான்  !!  Batman ;  Superman : Justice league ; Avengers ; Spiderman ; The Walking Dead ; Doompatrol etc இவையெல்லாமே  பிரெஞ்சு ஆண்களின் மத்தியில் popular !! மார்வெல் காமிக்ஸின் திரைப்படப் பிரிவு ஐரோப்பிய மண்ணிலும் கால்பதிக்கத் துவங்கி, ஹாலிவுட் அதிரடிகளை பிரான்சிலும் வெற்றியாக்கியதைத் தொடர்ந்து, சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களின் விற்பனை நான்கு மடங்காகியுள்ளதாம் பிரெஞ்சு மொழியில் !! திரையில் பார்த்த அதிரடி நாயகர்களை ஆல்பங்களிலும் ரசித்திட முனைவது அமெரிக்காவில் வெற்றி கண்ட பார்முலா ! History repeating itself ?!!

வளர்ச்சி கண்டுவரும் இரண்டாவது பிரிவு - பிரெஞ்சில் உருவாக்கப்படும் சிறார் தொடர்களாம் ! முன் எப்போதையும்விட இப்போது பிரெஞ்சு குட்டீஸ்கள் காமிக்ஸ் வாசிப்பினில் மூழ்கி வருகின்றதால் - அந்தத் திக்கில் உற்சாகம் போங்க நிற்கின்றனர் பதிப்பகங்கள் ! ஒரு புது தலைமுறை வாசிக்கத் துவங்கும் போது all is well தானே ?

"எல்லாம் சரி தான் - ஆனால் மக்களின் மனதுக்குள் காமிக்ஸ் இத்தனை சுலபமாய்ப் புகுந்து கொண்டதன் காரணம் என்னவோ - இந்தச் சிறு தேசத்தில் ?" என்ற கேள்விக்கு அங்குள்ள புத்தகக்கடைக்காரர்களே சொல்ல முனையும் பதில் இது : "Something for everybody !' என்ற தாரக மந்திரமே அந்த வெற்றிக்கு அச்சாணி !! ஓ.யெஸ்...நாற்பது, ஐம்பது, அறுபது ஆண்டுகளாய்த் தொடரும் தொடர்களும் வெளியாகத் தான் செய்கின்றன ; புத்தம் புதுசாய் ஆல்பங்களும் ஆஜராகத் தான் செய்கின்றன !! ஆனால் கார்ட்டூன் ; வரலாறு ; இலக்கியம் ; கௌபாய் ; த்ரில்லர் ; டிடெக்டிவ் ; கிராபிக் நாவல் ; மங்கா ; காதல் ; அடல்ட்ஸ் ஒன்லி ; ஹாரர் ; அமானுஷ்யம் ; fantasy ; யுத்தம் ; மதம் ; பகடி ; அரசியல் ; sci-fi என பிரெஞ்சு காமிக்ஸ் படைப்பாளிகள் கிட்டத்தட்ட 30 வகை ஜானர்களில் வாரம்தோறும், மாதம்தோறும் போட்டுத் தாக்கிக் கொண்டே செல்லும் போது, வாசகர்களும் ஆர்வத்தோடே பின்தொடர்வதில் ஆச்சர்யமென்ன ? Variety என்ற அளவுகோலைக் கையில் எடுத்தால் - பிரான்க்கோ-பெல்ஜிய படைப்பாளிகளைத் தொனிக்க, பெரும் தேவன் மனிடோவுக்கு மட்டுமே சாத்தியமாகிடலாம் !! இத்தனை ஒரு அசாத்திய விருந்து அட்டகாசத் தரத்தில் தொடர்ச்சியாய் சாத்தியமாவது தான் அங்குள்ள காமிக்ஸ் ஈடுபாட்டுக்கொரு முக்கிய காரணம் என்கிறார்கள் விற்பனையாளர்கள் !! 

டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் & லக்கி லூக் தான் இவர்களது "மும்மூர்த்திகள்" ! அதிலும் நடுவில் சொல்லப்பட்டிருக்கும்  ஆஸ்டெரிக்ஸ் எனும் அசகாயர் கண்டிடும் விற்பனைகள் வாயை உத்திரம் வரைக்கும் விரியச் செய்யும் ரகம் !! சமீபமாய் வெளியான ஆல்பம் இதுவரைக்கும் விற்றுள்ளது 50 லட்சம் பிரதிகளாம் !!! (ஆத்தா.....மகாமாயீ...இந்த நம்பரிலிருந்து ஒரு நாலைந்து முட்டைகளைக் குறைத்துக் கொண்டாவது ஒரு எண்ணிக்கையை நமக்கு சாத்தியமாக்கக் கூடாதா ??) ASTERIX புது ஆல்பம் வெளியாகும் ஆண்டினில் - பாக்கி அத்தனை பதிப்பகங்களும் 'அப்டி ஓரமாய் போய் விளையாட வேண்டி வருமாம் !! But - கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பழம் நாயகர்கள் பிரிவு, மந்த வளர்ச்சியோடே தொடர்கிறதாம் ! ஆண்டுக்காண்டு sales graph உசக்கே செல்லாது, விற்பனை எண்ணிக்கை தேங்கியே நிற்கிறதாம் !! (பாவம் தான்...ஐம்பது லட்சத்திலேயே தொடர்ச்சியாய் விற்பனை நிற்கும் போது பதிப்பகத்தின் பாடு பாவம்தான் !!! ஷப்பா !!!

And எப்போதும் போலவே - பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் தொடர்களில் ஒரு TOP 50 கொண்ட தேர்வையும் செய்ய முனைந்துள்ளனர் !! முதலிடங்களில் பிரெஞ்சு மும்மூர்த்திகள் ஆராமாய் அமர்ந்திருக்க, ஏகப்பட்ட புது வரவுகள் பட்டியலுக்குள் புகுந்துள்ளனர் ! புதுப் புதுப் படைப்பாளிகள் உத்வேகத்தோடு களமிறங்கி வர, இன்றைய தலைமுறையின் நாடித்துடிப்பை அவர்களால் அழகாய் கணித்திட முடிகிறது போலும் !! அந்தப் பட்டியலுள் உள்ள "நம்மவர்கள்" யாரென்பதை பார்ப்போமா :
  • லக்கி லூக்
  • XIII 
  • SMURFS (!!!)
  • கேப்டன் டைகர்
  • ப்ளூ கோட் பட்டாளம் (!!!!)
  • தோர்கல்

ஐம்பது கொண்ட பட்டியலுக்குள் இந்தாண்டு இருக்கும் "நம்மாட்கள்" ஆறே பேர் எனும் போது - maybe ரசனைகளின் ஓட்டத்தில் நாம் லேசாகப் பின்தங்கி நிற்கிறோமோ என்று தோன்றுகிறது ! எதிர்காலக் கதைகளுக்கு நாம் இன்னும் நெருக்கம் காட்டிடவில்லை ; fantasy எனும் பனிக்கட்டியின் ஒரு துளியூண்டு முனையினை மட்டுமே அரவணைத்துள்ளோம் ; சமகால உலக நிகழ்வுகள் சார்ந்த படைப்புகளுக்கும், நமக்கும் தற்சமயம் தூரம் அதிகமாகவே உள்ளது ! So அந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான தொடர்களை நாம் சுவாசிக்க இன்னமும் நேரம் பிடிக்கக் கூடும் தான் ! Guess we still have miles to go !!

சரி, புள்ளிவிபர புலிவேஷம் போதுமென்பதால் - நம் கரை பக்கமாய்த் திரும்புவோமே ?! ஆண்டின் மிகக் குட்டியான மாதத்தினுள் நாமிருப்பதால் - கண்மூடிக் கண்திறப்பதற்குள் புது இதழ்களை டெஸ்பாட்ச் செய்திடும் தருணம் புலர்ந்திருக்கும் ! சொல்லப் போனால் 2018-ன் அட்டவணை ஆலோசனையே நேற்றைய நிகழ்வாய் மனதில் நின்றிருக்க.ஆண்டின் முதல் quarter இதழ்களை பூர்த்தி செய்திடும் தருவாயில் உள்ளோம் ! பிப்ரவரி இதழ்களை படித்திட உங்களுக்கின்னும் பத்தே நாட்கள் தான் உள்ளன guys - 28-ம் தேதியே மார்ச்சின் இதழ்கள் உங்கள் கைகளில் இருக்குமென்பதால்!! தற்செயலாகவோ, திட்டமிடலின் பலனாகவோ - சில பல இலகுவான இதழ்கள் மார்ச்சின் அட்டவணையில் அமைந்து போக - சர சரவென்று போட்டுத் தாக்கி வருகிறது எங்களது டீம் !! And எங்களது டீம் பற்றியான topic-ல் இருக்கும் போதே சொல்லி விடுகிறேனே - நமது front desk-ல் பணியாற்றிய வாசுகிக்கு நாளைக்குத் திருமணம் (பிப்ரவரி 21). என்ற செய்தியை ! கடல் கடந்த தேசத்தில் குடித்தனம் என்பதால் ஜனவரியில் இறுதியோடு பணியில் தொடரவில்லை ! காலேஜ் முடித்த கையோடு வேலைக்குச் சேர்ந்த சின்னப் பெண் ; மணிக்கணக்கில் நாள்தோறும் போனில் உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னபொறுமைசாலி ;     நாணயத்தின் மறு உருவாய் இரண்டரையாண்டுகள் பணியாற்றிய கெட்டிக்காரி - இனி வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தினுள் அடியெடுத்து வைக்கவிருப்பதால் - lets wish her well !! God be with you vasuki !!

மார்ச்சில் ஒரு மறுவருகையாளர் காத்திருக்கிறார் - ஜில் ஜோர்டனின் ரூபத்தில் ! மனுஷன் எனக்கொரு favorite ! சீக்கிரமே களமிறங்கவிருக்கும்  "கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்" ஒரு டிடெக்டிவ் த்ரில்லர் ! இதனை சென்றாண்டின் ஏதோ ஒரு தருணத்தில் ஆங்கிலத்தில் படித்த போதே, ஜில்லாரை உங்கள் முன்னே உலாப் போகச் செய்யும் ஆசை தோன்றியது ! இதற்கு முன்பான "காவியில் ஒரு ஆவி" ; "தேடி வந்த தொல்லை" கதைகளில் அந்த துப்பறியும் feel அத்தனை தூக்கலாய் இருந்திருக்கவில்லை தான் ! ஆனால் இம்முறையோ ஜில் ஜோர்டனின் "டிடெக்டிவ் " என்ற நேம் பிளேட்டுக்கு நியாயம் கிட்டுவதை பார்க்கப் போகிறீர்கள் ! அந்த டின்டின் பாணியிலான ஓவியங்கள் ; பளிச் வர்ணங்கள் - சுவாரஸ்ய வாசிப்புக்கு கியாரண்டி தருமென்ற நம்பிக்கையுள்ளது! Of course - அந்த மொட்டைத் தலை அல்லக்கை அசிஸ்டன்ட் கதை நெடுக "கடித்துக்" கொண்டே வருகிறான் தான் - but இயன்றமட்டுக்கு கதையினை தொய்வு கண்டிட அனுமதிக்காது வரிகளை அமைக்க முனைந்துள்ளேன் ! வழக்கமாய் நன் எழுதும் கதைகளை உருட்டு உருட்டென்று உருட்டி - ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பாய் முடித்துக் கொடுத்து விட்டு பேண்டுக்குள் பூரானை வீட்டுக் கொண்டது போல் குதிப்பது வாடிக்கை !! ஆனால் இம்முறையோ ஒரு மாற்றம் !!! தொலைவாய் ; வெகு தொலைவாய் ஆகஸ்ட் தெரிந்தாலுமே, அந்த மாதத்தில் காத்திருக்கும் பணிகளின் பரிமாணமானது இப்போதிலிருந்தே வயிற்றைக் கலக்க - வாலைச் சுருட்டிக் கொண்டு ஒழுங்காய், மரியாதையாய் வேலைகளை செய்து முடிக்கும் புத்தி புலர்ந்துள்ளது  ! So எழுதிய கையோடு - சுடச் சுட டைப்செட்டிங் & எடிட்டிங் நிறைவு காண  - நாளை அச்சுக்குச் செல்கிறது ! இதோ அதன் அட்டைப்பட first look + உட்பக்க preview !! 


அட்டைப்படமானது - நமது ஓவியரின் கைவண்ணம் ! பின்னட்டை வழக்கம் போல நமது டிசைனிங் கோகிலா ! 

மார்ச்சின் மறுபதிப்புமே தட தடவென ஓட்டம் கண்டுள்ளது ! In fact அது அச்சும் முடிந்து பைண்டிங்கில் உள்ளது ! நமது உடைந்த மூக்காரின் "தோட்டா தலைநகரம்" தான் அந்த (வண்ண) இதழ் ! அதன் அட்டைப்பட பைல் எனது லேப்டாப்பில் காணவில்லை என்பதால் அத்னை அடுத்த வாரம் கண்ணில் காட்டுகிறேனே !! இம்முறை பிப்ரவரியில் மார்ச் நிச்சயம் ! 

இப்போதைக்கு நான் கிளம்பும் முன்பாய் - காமிக்ஸின் ஆற்றலை அப்பட்டமாய் உணர்த்திடும் ஒரு செய்தியின் பக்கமாய் உங்கள் பார்வைகளை கொண்டு செல்ல விழைகிறேன் (தகவல் : சீனியர் எடிட்டர்) வோட்டுரிமையின் முக்கியத்துவத்தை 'பளிச்' என்று உணர்த்தும் பொருட்டு - குஜராத்தில் ஒரு காமிக்ஸ் இதழை வெளியிட்டிருக்கிறது அங்குள்ள தேர்தல் ஆணையம் !!  அது பற்றிய  தகவல்களை இங்கே பாருங்களேன் : https://scroll.in/magazine/859564/ahead-of-gujarat-elections-a-new-comic-book-reminds-indians-that-every-single-vote-matters 

அதே பக்கத்தின் அடியில் கண்டதொரு அசாத்திய படைப்பு இது !! டின்டினும், கேப்டன் ஹேடாக்கும், ஸ்நோயியும் (அந்நாளைய) பாண்டிச்சேரிக்கு சாகசம் செய்ய வந்திருப்பின் எவ்விதமிருந்திருக்கேமென்று பிரெஞ்சு ஓவியர் ஜாக் ப்யுமெல் செய்த கற்பனையின் பலனிது !! Awesome !!!
Bye all....see you around !! Have a lovely weekend !

302 comments:

  1. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே...!!!

    ReplyDelete
  2. எடிட்டர் சார்@

    ///அமெரிக்காவும், ஜப்பானும் நமக்கு சற்றே அந்நிய மார்க்கெட்கள் என்பதால் - நாம் அன்னம்-தண்ணி புழங்கும் பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டிலேயே கவனம் பதிப்போமே ?///----ஹா...ஹா... இந்த ஹாஸ்ய நடையை ரசிக்கத் தானே நடுசாமத்திலும் விழித்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. ///ஆஸ்டெரிக்ஸ் எனும் அசகாயர் கண்டிடும் விற்பனைகள் வாயை உத்திரம் வரைக்கும் விரியச் செய்யும் ரகம் !! சமீபமாய் வெளியான ஆல்பம் இதுவரைக்கும் விற்றுள்ளது 50 லட்சம் பிரதிகளாம் !!! ///

    வந்து .. .. அதாவது.. .. நான் வந்து ...கேக்குறது ...அதாவது ... வந்து ....என்னென்னா... ..ம்ம்.. .வந்து .. அதாவது ....தமிழ்ல .. ..வந்து ..அதாவது ... நம்ம லயன்ல .. ..வந்து ....அதாவது ... ஆஸ்ட்ரிக்ஸ் .. .. அதாவது ... வந்து ...

    ReplyDelete
    Replies
    1. சட்டு புட்டுன்னு வேணும்னு கேட்க வேண்டியது தானே..
      அதுதான் இனிமே புதுசுக்கு தான் ஆதரவுன்னு சொல்லியாச்சோ இல்லையோ..

      Delete
    2. அது வந்து அதாவது "ஆஸ்ட்ரிக்ஸ்"

      Delete
    3. லார்கோக்களையும்...டைகர்களையும்...XIII களையும் ; பவுன்சர்களையும் வெளியிடும் ஜாம்பவான் பதிப்பகங்களையே "அப்டிக்கா ஓரமாய் குந்துறீகளா மக்கா ?-ன்னு சொல்லும் சண்டியர் இவர் !!

      So அந்தப் பக்கமாய் போனோமா ; அந்த ஆஸ்டெரிக்ஸ் பொம்மைக்கு முன்னே நின்னோமா ; வழுக்கையை கூலிங் கிளாஸை மாட்டி மறைச்சோமா ; தொந்தியை உள்ளே இழுத்துப்புட்டு செல்பி எடுத்தோமா என்று நல்ல பிள்ளையாய் நடையைக் கட்டுவதே நலம் என்பேன் !!

      50,00,000 பிரதிகள் சாமி !! அதும் இந்த ஒற்றை ஆல்பத்தில் !! Phew !!!

      Delete
    4. Amazon ல் 50 பக்கங்கள் கொண்ட ஒற்றை ஆங்கில ஆல்பமே கிட்டத்தட்ட நானூறு ரூபாய்க்கு விற்கடுகிறது சார்.!

      தமிழில் வெளியிட்டால் சல்லீசான விலையில் தருவீர்களே என்கிற ஒரு பேராசைதான் சார்.! :-)

      Delete
    5. ஆ..டெக்ஸ் கிட்டுதானா இது? நிறய எழுதி இருக்காரு?

      Delete
    6. வைல்டு வெஸ்டில் வறண்ட பாலைவனத்தையே பாத்தவுக

      பிரான்ஸ் சாித்திரத்தையும் "ஆஸ்ட்ரிக்ஸ்" வாயிலாக தொிஞ்சுக்கலாம்னுதான் ??!!

      Delete
    7. ///ஆ..டெக்ஸ் கிட்டுதானா இது? நிறய எழுதி இருக்காரு?///

      எனக்கும் அதே ஆச்சரியம் தான்! அதுவும் செம ஜாலியா எழுதியிருக்காரு!!

      ஆத்தா மகமாயிகிட்ட நான் வேண்டிக்கிட்டது வீண் போகலை!

      Delete
    8. சங்கம் அபராதத்திலே ஓடுது..டீக்கடையில் பாக்கி ! ரைட்டு...தப்பில்லே !! ஆனா..ஆனா ஆத்தாவுக்குமே (கூழ்) பாக்கின்னா ???

      Delete
  4. நாளை திருமண பந்தத்தில் இணைந்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கயிருக்கும் சகோ வாசுகி'க்கு வாழ்வின் எல்லா வளங்களையும் பெற நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் பல

      Delete
    2. வாசுகி திருமண வாழ்த்துக்கள்
      இரு மனங்களும் இனைந்து பல சந்தோஷங்களை கண்டு களித்திட வாழ்த்துக்கள்

      Delete
    3. மகளே வாழ்க என்று வாழ்த்துகிறேன்

      Delete
    4. திருமண வாழ்த்துகள் .

      Delete
  5. ///! நமது உடைந்த மூக்காரின் "தோட்டா தலைநகரம்" தான் அந்த (வண்ண) இதழ்////--- அப்பாடி ஜென்மம் சாபல்யம் அடைய இன்னும் 10நாள்தான் இருக்கு. வண்ணத்தில் ரசிக்க அதிகம் ஆசைப்பட்ட டைகரின் இதழ் தோட்டா தலைநகரம் தான்; ஹூம் கடேசியாக மறுபதிப்பாகுது...

    ReplyDelete
    Replies
    1. மினுமினுக்குது இந்த இதழ் !!

      Delete
    2. பசி கொண்ட நேரம் நெய்யை ஊற்றி தாளிக்குறாரே...!!!

      Delete
    3. அந்த மிஸ் அழகா இருக்காங்களா

      Delete
    4. கருப்பு வெள்ளையிலே அழகோ அழகு...

      Delete
    5. ரொம்பவே அழகாய் !!

      Delete
  6. ///டின்டினும், கேப்டன் ஹேடாக்கும், ஸ்நோயியும் (அந்நாளைய) பாண்டிச்சேரிக்கு சாகசம் செய்ய வந்திருப்பின் எவ்விதமிருந்திருக்கேமென்று பிரெஞ்சு ஓவியர் ஜாக் ப்யுமெல் செய்த கற்பனையின் பலனிது !! ///

    டின்டின், ஸ்நோயியைவிட கேப்டன் ஹேடாக்குக்கும் பாண்டிச்சேரிக்கும் நிறையவே ஒத்துப்போகும் ..:-)

    ReplyDelete
    Replies
    1. ஸ்நோயியும் கூட சரக்கடித்து சிலம்பும் ஆல்பமும் உண்டு சார் !!

      Delete
    2. சும்மாவே சலம்பும் நம்ம ரின்டின்கேனுக்கு போட்டியாக இருக்கும் சார்.!! :-)

      Delete
    3. சாதாரணமாவே கோணங்கித்தனமா யோசிக்கும் நம்ம ரின்டின்கேனை (கடைசி ரெண்டு எழுத்துக்கூட எவ்வளவு பொருத்தமா அமைஞ்சிருக்கு பாத்தீங்களா?!!) ஒரு கதை முழுக்க மப்புல மிதக்க விட்டா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்... சிரிப்பை அடக்க முடியல!

      Delete
    4. ஈவி
      நமது வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும் கேரக்டர் ரின்டின்கேனை.
      எப்டின்னு சொல்லட்டுமா

      Delete
    5. அதாகப்பட்டது டெ.வி
      ஒருத்தர் ஒண்ண செய்யச்சொன்னா ஸ்மார்ட்டா அத செய்றதா நெனச்சி எதிர்மறையா செஞ்சி கவுந்து போறது ரின்டின்கேன்.
      அதுமாறி நம்பளப்பாருங்க °°°°

      கடைகள்ல கெடக்கிற அரிசி சரியில்லன்னு தெரிஞ்சே வாங்குவோம்
      உரம் போடாத அரிசி தேடி கெடச்சாலும்
      பெருசாருக்குன்னு மாட்டோம்போம்.

      குக்கர் சாதம் வேணாம்னு வடிச்சி சாப்டுங்கன்னா சின்சியரா சாப்ட்டு , சுகர் முட்டிவலின்னு இஷ்டப்பட்டு ஏத்துக்குவோம்

      வெள்ளைசீனி வேணாம் கருப்பட்டி சாப்டுங்கன்னா சொன்னவன மொறப்போம் (ரின்டின்கேன் சூப் குடிக்கும்ல)😢

      பிராய்லர் முட்டையும் பிராய்லர் பிரியாணியும் (அஜினோமோட்டோ ஆஸ்ப்ரோ) சபாஷ் ன்னு (ரின்டின்கேன் சோப்பு முழுங்குற மாதிரி)அவுக் அவுக் போடுவோம்.

      படிபடின்னு கொழந்தங்கள கொல்லுவோம்.
      சின்சியரா நாம டியூசன் படிக்க போற மாறி கொண்டுபோய் விடுவோம்.(ரின்டின்கேன் டால்டன்க பின்னாடியே போகும்ல)

      இப்டிக்கா சொல்லிண்டே போலாம்.

      Delete
  7. வாழ்த்துக்கள் வாசுகி..

    ReplyDelete
  8. அட இங்கே பாருங்கப்பா!

    நம்மாள் நெ.1

    //அந்தப் பட்டியலுள் உள்ள "நம்மவர்கள்" யாரென்பதை பார்ப்போமா :
    லக்கி லூக்
    XIII
    SMURFS (!!!)
    கேப்டன் டைகர்//

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷

      (இத்தாலி பட்டியல் வரட்டும், எங்களது மிரட்டும்)

      Delete
    2. அப்போ டெக்ஸ்,லார்கோ லாம் இல்லையா...
      மார்ட்டினும் இல்லை...

      Delete
    3. ஹி ஹி..ஹி...அது இன்னொரு சமுத்திரம் !! எந்த நாயகரின் விற்பனை stats-ஐத் தொட்டாலும் முட்டை..முட்டை ..முட்டை என்று போட்டுக் கொண்டே போக வேண்டி வரும் !!

      Delete
    4. tex kit : டெக்ஸ் & மார்ட்டின் இத்தாலிக்காரங்கள் சார் !

      Delete
    5. ஸ்மா்ப்ஸ மறந்துட்டீளே சாமிகளா?

      Delete
    6. Mithun Chakravarthi : //நம்மாள் நெ.1//

      நம்மவர் அந்த all time பட்டியலில் # 3 !! But நம்மிடையே உலவும் பிரான்க்கோ-பெல்ஜிய பட்டாளத்தை undisputed # 1 லக்கியே !!

      Delete
    7. சாா் 3 ராசியான நெம்பா் தான்

      Delete
  9. ஜில் ஜோர்டன் அட்டைப்படத்தில் அந்த 'ஓநாயும்' எழுத்துரு ரொம்பவே இம்ப்ரஸிவ்!! ஓநாயின் தலையும், வாலும் கூட இடம் பெற்றிருப்பது ரசணையான டிசைனிங்!! இந்த ஐடியா யாரோடதுன்னு வாசகர் சமூகம் தெரிஞ்சுக்கிடலாமா?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சமூகத்துக்கு ரோசனை மட்டுமே சாத்தியம் என்பதால் இயக்கம் : சமூகம் ; ஆக்கம் : சிகாமணி !

      Delete
    2. டிசைனர் சிகாமணிக்கு வாசகர் சமூகம் வாழ்த்துச் சொல்றான்! கையைப் புடிச்சு குலுக்கறான்!

      ரோசனை சொன்ன எடிட்டர் சமூகத்துக்கு நம்பள் 'பேஷ் பேஷ்' சொல்றான்!

      Delete
    3. நாமளும் சந்தடிசாக்கில ,😊"எஸ் "போட்றோம்

      Delete
  10. @ ALL : ஆனாலும் சனிக்கிழமை இரவுக்கு இத்தனை இரவுக் கழுகுகளா ?

    ReplyDelete
    Replies
    1. அல்லாரும்
      Tetley டீ போட்டுட்டு மல்லாக்க படுத்துட்டு பரக்க பரக்க முழிச்சிட்டே செல்போன வரக் வரக் னு பெறாண்டிக்கிட்டே கிடப்பாங்களோ நம்ப எடிட்டார் மாதிரி.
      எடிட்டார் தூங்கா மனுசன்ல ...அக்காங்

      Delete
    2. நாங்கல்லாம் தூங்குனாலே முழிச்சு இருக்கா மாதிரித் தெரியும் ஆட்கள் சாரே !

      Delete
    3. ஹா ஹா ஹா!! சுய எள்ளல் வகையறாவின் உச்சம், எடிட்டர் சார்! :)))))))

      Delete
  11. அப்போது இளம் தங்க தலைவன் உண்டா சார்...?????

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் தங்கத் தலைவனை மறக்கப் போவதாக இல்லை !!

      Delete
  12. ஜில் ஜோர்டன் இந்தக் கதையில ஆவியா வராப்புடியா சார்? இல்ல... இடுப்புக்கீழே எதையும் வரையாம அந்தரத்துல மிதக்கவுட்டுட்டீங்களேன்னு கேட்டேன்!

    ReplyDelete
  13. சாா்,

    //வைல்டு வெஸ்டில் வறண்ட பாலைவனத்தையே பாத்தவுக

    பிரான்ஸ் சாித்திரத்தையும் "ஆஸ்ட்ரிக்ஸ்" வாயிலாக தொிஞ்சுக்கலாம்னுதான் ??!!//

    ReplyDelete
  14. @ ALL : அப்புறம் சின்னதொரு கோரிக்கையுமே : ஒவ்வொரு மாதமும் இந்தப் பக்கத்தின் மேல் கோடியில் அந்தந்த set இதழ்களுள் உங்களது best ஐ தேர்வு செய்யக் கோரும் poll ஒன்று இருக்கும் ! அதனில் ரெகுலராய்ப் பங்கேற்க அழைக்கிறேன் (மொபைலில் பார்க்கும் போது அது கண்ணில்படுமா ??)

    ReplyDelete
    Replies
    1. மொபைலில் சாதாரணமாகத் தெரியாது சார்! ஆனால் ப்ரொளசரின் கீழ்ப்பக்கத்தில் தெரியும் 'desk top view' / 'view web version'ஐ கிளிக்கினால் கம்ப்யூட்டர் திரையில் தெரிவதுபோல எல்லாமே புலனாகிடும்!

      Delete
    2. அப்புறம்... வருசா வருசம் டிசம்பர்ல 'டாப்-5', 'சொதப்பல்ஸ்-5' கதைகள்/அட்டைப் படங்கள் பற்றியெல்லாம் கேட்பீங்களே...? இந்த வருசம் கேட்காதது ஆச்சரியமா இருக்கே சார்?!!

      Delete
    3. தகவலுக்கு நன்றி ஈ.வி.

      ஓட்டு போட்டாச்சு !!

      ஆனாக்கா விரல் மை வைக்கலியே??

      ஓட்டு செல்லுமா?/

      Delete
    4. அட...ரெண்டு நாளைக்கு கண்முழிச்சு, டிசைன் பண்ணி, பிரிண்டும் பண்ணி ;அனுப்பி வைக்கவொரு கவரையும் இணைத்து அனுப்பிய ரிப்போர்ட் கார்டையே யாரும் கண்ணில் காட்டலை !!

      Delete
    5. இந்த ஆபிஸா் என்னமோ சொல்றாரு!

      ஆனா என்னன்னு புாியலே??!!

      Delete
    6. ஒவ்வொரு ஓட்டுக்கும் மை வைக்கணும்னா நம்ம ஆட்கள்ல சிலபேரு உடம்பு முழுக்க மையோடதான் சுத்துவாங்க! :P

      Delete
    7. ///அட...ரெண்டு நாளைக்கு கண்முழிச்சு, டிசைன் பண்ணி, பிரிண்டும் பண்ணி ;அனுப்பி வைக்கவொரு கவரையும் இணைத்து அனுப்பிய ரிப்போர்ட் கார்டையே யாரும் கண்ணில் காட்டலை !!////

      படம் போட்டு எதை அனுப்பி வச்சீங்கன்னாலும் அதை வீட்டுக்குள் அறுபதடி ஆழத்தில் பதுக்கிவச்சுப் பழகிட்டோம் எடிட்டர் சார்!

      தப்பு உங்க மேலதான்! :)

      Delete
    8. மையி மையின்னு சொல்றீங்களே ஆபிஸா்!

      அது சாப்பிட நல்லாயிருக்குமா??

      எந்தக் கடையில கெடைக்கும்?

      Delete
    9. எல்லாம் போட்டு கேட்டாரு நம்மாளு

      Delete
    10. /// ஒவ்வொரு ஓட்டுக்கும் மை வைக்கணும்னா நம்ம ஆட்கள்ல சிலபேரு உடம்பு முழுக்க மையோடதான் சுத்துவாங்க! :P ///

      நீங்க என்னை சொல்லலைதானே...

      Delete
  15. திருமண பந்தத்தில் இணையும் சகோதரி வாசுகிக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. வெல்கம் பேக் - ஜில்!
    ஓவியர் மாலையப்பன், ஓவியர் சிகாமணி, டிசைனர் கோகிலா, எடிட்டர் காம்போ ஜொலிக்குது!

    ReplyDelete
  17. வாழ்த்துகள் வாசுகி..!
    பட்டாஸ் சிகாமணி சார்..!

    ReplyDelete
  18. ஆஸ்டெரிக்ஸ் எனும் அசகாயர் கண்டிடும் விற்பனைகள் வாயை உத்திரம் வரைக்கும் விரியச் செய்யும் ரகம் !! சமீபமாய் வெளியான ஆல்பம் இதுவரைக்கும் விற்றுள்ளது 50 லட்சம் பிரதிகளாம் !!! (ஆத்தா.....மகாமாயீ...இந்த நம்பரிலிருந்து ஒரு நாலைந்து முட்டைகளைக் குறைத்துக் கொண்டாவது ஒரு எண்ணிக்கையை நமக்கு சாத்தியமாக்கக் கூடாதா ??)

    கணக்கு ரொம்பவே உதைக்குதே எடிட்டர் சார்.
    50,00,000 = 50 லட்சம் (6 முட்டைகள்)
    இதில்,
    4 முட்டைகளை குறைத்தால் 500 பிரதிகள்.
    5 முட்டைகளை குறைத்தால் 50 பிரதிகள்.
    சரி ஒரு Flowவுல டைப்பிட்டீங்க போல.

    வரலாறு (எண்ணிக்கை) ரொம்பவே முக்கியம்!!!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள செ.வி,

      அவர் சொன்ன எண்ணிக்கை ஏதாச்சும் 'விசாரணை' சம்மந்தப்பட்டதோ என்னவோ?!! :P

      Delete
    2. அப்படி போடு அருவாள.......
      அப்ப எடிட்டர் சமூகத்துக்கும் 'விசாரணை'யே நினைப்பாக உள்ளதுன்னு சொல்லுறீங்க.
      Warm welcome 🙏

      Delete
    3. கண்டிப்பா பு வியா இருக்கப்படாது
      மறுபடியும் ரெஸ்ட் எடுக்க கடுப்பேத்திறாதீங்க யுவர் ஆனர.

      Delete
    4. மறுபடியும் ரெஸ்ட் எடுக்க கடுப்பேத்திறாதீங்க யுவர் ஆனர்

      #####


      வழிமொழிகிறேன்..

      Delete
  19. வணக்கம் ஆசிரியர் ஐயா..
    நீங்கள் கூறிய புள்ளி விபரங்கள் மலைப்பை உண்டாக்குகின்றது ..

    சிறு வயதில் தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த நாம் அடுத்த தலைமுறைக்கு கதை சொல்லி வளர்க்க தவறி விட்டோம்..

    தாத்தா பாட்டி அண்மை அருகாமையில் இல்லாமலிருப்பதும் ஒரு காரணம் ..

    குழந்தைகளுக்கு வாசிப்பின் ஆர்வத்தை தூண்டுவது இது மாதிரியான கதை சொல்லிகள்தான்...

    வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் நின்று நிதானித்து நம் குழந்தைகளுக்கு கதை சொல்ல அவர்கள் அருகாமையும் இல்லை..
    நமது வாழ்க்கை முறையிலும் நேரமிருப்பதில்லை..

    நம் கல்வி முறையும் மதிப்பெண் சார்ந்ததொன்றாகி விட்ட நிலையில் பள்ளியில் படித்த பாடத்தையே டியுஷன் என்று இரவு ஒன்பது மணி வரை கல்வி கற்றால் அந்த குழந்தைக்கு எப்படி வாசிப்பு மீது ஆர்வம் வரும் ??

    இது போன்ற புள்ளி விவரங்கள் படிக்கும் போது ஒரு வித ஏக்கங்கள் இயல்பே..

    இனிமேலாவது நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்ட தினமும் சிறிது நேரமாயினும் நாமும் ஒரு கதை சொல்லி ஆவதுதான் இதற்க்கான தீர்வாக அமையும்..

    ReplyDelete
    Replies
    1. ////நம் கல்வி முறையும் மதிப்பெண் சார்ந்ததொன்றாகி விட்ட நிலையில் பள்ளியில் படித்த பாடத்தையே டியுஷன் என்று இரவு ஒன்பது மணி வரை கல்வி கற்றால் அந்த குழந்தைக்கு எப்படி வாசிப்பு மீது ஆர்வம் வரும் ??

      இது போன்ற புள்ளி விவரங்கள் படிக்கும் போது ஒரு வித ஏக்கங்கள் இயல்பே..

      இனிமேலாவது நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்ட தினமும் சிறிது நேரமாயினும் நாமும் ஒரு கதை சொல்லி ஆவதுதான் இதற்க்கான தீர்வாக அமையும்..////

      +10000000

      அருமை!!

      Delete
    2. அருமையான பாயிண்ட்கள் அத்தனையும் சிவா...

      ///////நம் கல்வி முறையும் மதிப்பெண் சார்ந்ததொன்றாகி விட்ட நிலையில் பள்ளியில் படித்த பாடத்தையே டியுஷன் என்று இரவு ஒன்பது மணி வரை கல்வி கற்றால் அந்த குழந்தைக்கு எப்படி வாசிப்பு மீது ஆர்வம் வரும் ??///---- இதான் நிதர்சனம். போன வருடம் 8வது லீவுல மொத முறையாக என் பையன் நீல பொடியர்கள் படிச்சான். ஆகா, நம்ம கதைகளை படிக்க ஆள் ரெடினு சந்தோசப் பட்டேன். ஆனா,ஆனா,
      இப்ப அவன் 9வது; என்னோட 10மார்க் ஷீட்டை எடுத்து வைத்து கொண்டு அப்பா மாதிரியே மார்க் வாங்கனும்னு ட்ரில் எடுக்குறாக வீட்டில்...!!!!

      பாவமா இருக்கு இக்கால குழந்தைகளை பார்த்தா...

      Delete
    3. அருமையான அலசல் மற்றும் ஆலோசனை சிவகுமார்.

      Delete
    4. //இனிமேலாவது நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்ட தினமும் சிறிது நேரமாயினும் நாமும் ஒரு கதை சொல்லி ஆவதுதான் இதற்க்கான தீர்வாக அமையும்//

      நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் இந்தக் "கதை சொல்லும் கலை" பற்றி லேசாகக் கோடு போடவாச்சும் விழைவது வழக்கம் ! இந்த எப்ரல் & மே மாதங்களில், பள்ளி விடுமுறைகள் தான் காத்துள்ளனவே ! அந்நேரமாச்சும் இதற்கொரு துவக்கம் தந்து பார்ப்போமா ? இங்கே நமது பதிவுப் பக்கத்தில் அவரவர் வீட்டு குட்டிஸ்களுக்கு கதை சொன்ன அனுபவங்களை பகிர்ந்திடலாம் + ஒரு selfie -ம் எடுத்து அனுப்பினால் அதையும் வலையேற்றம் செய்திடலாம் !

      What say guys ?

      Delete
    5. டபுள் ஓகே சார்...:-)

      Delete
    6. நல்ல ஐடியா சார்.

      Delete
  20. திருமண பந்தத்தில் இணைய உள்ள
    வாசுகிக்கு வாழ்த்துக்கள்.
    வள்ளுவர்க்கோர் வாசுகி போல்
    வையகமே வாழ்த்த
    பதினாறும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  21. ***** போராட்டக்குழு-Reloaded-version 2.0 அறிவிப்பு *****

    சாத்வீகமாய் பலமுறை கோரிக்கை வைத்தும்கூட எடிட்டர் சமூகம் தொடர்ந்து 'சி.சி.வ'வை புறக்கணித்துவருவது பொதுமக்களுக்கு பலப்பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது! சமூகத்தின் இந்த மெத்தனப்போக்கை போராட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!

    எனவே,
    மார்ச் மாதப் பிரதிகளில் 'சி.சி.வ' இடம்பெறவில்லையெனில், ஏப்ரல் மாத மத்தியில் சிகவகாசி ஆபீஸ் முன்பு அமர்ந்து 'சூ.ஹீ.சூ.ஸ்' கதைகளை தொடர்ந்து இரண்டுமூன்று முறை படித்து உயிர் துறக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை சங்கத் தலீவரின் ஆசியோடும், போ.கு கண்மணிகளின் ஆதரவோடும் தெரிவித்துக்கொள்கிறேன்!

    இப்ப டிக்கி,
    செயலர், போ.கு R.L-V2.0

    ReplyDelete
    Replies
    1. ///ஏப்ரல் மாத மத்தியில் சிகவகாசி ஆபீஸ் முன்பு அமர்ந்து 'சூ.ஹீ.சூ.ஸ்' கதைகளை தொடர்ந்து இரண்டுமூன்று முறை படித்து உயிர் துறக்கும் போராட்டம் நடைபெறும் ///

      நான் மாடஸ்டியோட ஆஜராயிடுறேன் குருநாயரே ..!

      Delete
    2. உயிர் துறக்கும் போராட்டத்திலும் கூட ஒரு கிளுகிளுப்புத் தேவைப்படுது உங்களுக்கு! அதானே?

      Delete
    3. போ.கு R.L V2.O கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள் :

      நீங்கள் சிவகாசிக்கு எடுத்துவரப்போகும் 'சூ.ஹீ.சூ.ஸ்' புத்தகத்தை பஸ்/ரயில் பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் எடுத்துவரவேண்டியது ரொம்பவே அவசியம்! தவறவிடும்பட்சத்தில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது - எச்சரிக்கை!

      Delete
    4. ஏப்ரல் மாத மத்தியிலா,
      இல்லை....
      ஏப்ரல் '1'ன்னிலா?

      Delete
    5. ஏப்ரல் மத்தியில்தான்!

      April 17 - World Hemophilia Day.

      அதாவது, உண்மையான 'இரத்தப் படல' நாள்! ஹிஹி!

      Delete
    6. சூ.ஹி.சூ.ஸ்.க்கு இவ்வளவு ரசிகர்களா..!!!, 5ஆண்டுகள் கழித்து மறுவாசிப்பு செய்யும் நேரம் போல பேஷ்...பேஷ்... என சொல்லி சூ.ஹி.சூ.ஸ்.பார்ட்2 அறிவித்து விடப் போகிறார் செயலரே...

      Delete
    7. April 17 - பாத்து போராட்டம்பண்ணுங்க கண்ணுங்களா.
      இரத்த வாந்தி எடுத்தாலும் எடுத்திருவீங்க.....
      ஏன்னா சி.சி.வ கதையும் பு.வி கதைதான்.

      Delete
    8. ///ஏன்னா சி.சி.வ கதையும் பு.வி கதைதான்.///

      விளக்கம் ப்ளீஸ்?!! ( யாரோட மனசையும் காயப்படுத்தறமாதிரியான விளக்கம்னா - வேண்டாம்!)

      Delete
    9. என்னாது?????????????
      யாரோட மனசையும் காயப்படுத்தி இருக்கேனா யுவர் ஆனர்?????
      அய்யகோ..........
      அபாண்டம்!!!
      அக்கிரம்ம்!!!
      அநியாயம்!!!

      Delete
    10. ஹலோ ...தன்ராஜா ?....வாழைப்பூ ரெண்டு கிலோ ...இல்லே இல்லே ...மூணு கிலோ ! ம்ம்ம்ம்...அப்புறம் நல்ல கடல் நண்டா பார்த்து ஒரு நாலு கிலோ ; வேற ..வேற .. புதுசா நம்மூர்லே வருதாமேப்பா மூலிகை சிக்கன்..அதிலே லெக் பீசா ௨ கிலோ !! எல்லாத்தையும் ரெடி பண்ணிடு ! இல்லே ..இப்போ வேணாம்..ஏப்ரல் லெ தான் !

      ஆங்....அப்புறமா நம்ம கார்னேஷன் பேக்கரி சூஸ்பெரி ஒரு கிலோ வாங்கி வச்சிரு !! மறந்துப்புடாதே !!

      Delete
    11. செத்து செத்து விளையாடவா
      மறுபடியுமா.....

      Delete
    12. போராட்டம் ஒழிக...வடை வாழ்க..

      Delete
    13. உண்ணாவிரதம்
      சக்சஸ்...சக்சஸ்...சக்சஸ்...

      Delete
    14. செயலரே...ஆசிரியரும் நமது போராட்ட குழுவை பழைய போராட்ட குழுவா நினைச்சுட்டாரு போல...

      போராட்ட குழு 2.0 வில் பழைய போராட்ட முறை அறிவித்தால் இப்படி தான் கிலோ கணக்குலே ஆமை வடை வாங்கியும் கவுத்துருவாங்க...

      இனி கொஞ்சம் சீரியஸா போராடுனும் அதக்கு ஐடியா பண்ணுங்க..பழைய போராட்ட முறையில உருப்படியான போராட்டம் " இங்கி பாங்கி " தான் ...அதிலியே புதுசா ஏதாவது பாருங்க...

      Delete
    15. க்க்கும்...சுத்தம். ..!

      போராட்டம் அறிவிச்சி அரைமணிநேரங்கூட ஆகலை ..! அதுக்குள்ள வாழைப்பூ வடையக்கட்டி கடையை சாத்த வெச்சிட்டாங்களே ..! தலீவரும் செயலருமே இப்படி இருந்தா, எதிர்கட்சிக்கூ எப்படி நம்ம போராளிகள் மேல பயம் வரும்.!!

      சங்கத்துல உள்கட்சி தேர்தல் நடத்தவேண்டி வரும்போல இருக்கே.!!


      *இது எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும் ..மத்தவங்க படிக்கக்கூடாது! .*

      சார்.! அங்கே மூலிகை சிக்கன் மட்டும்தான் கிடைக்குமா? இல்லை மட்டன் காடை கௌதாரி எல்லாமும் மூலிகை வகையறாவில் கிடைக்குமான்னு மட்டும் சொல்லுங்க சார்.!


      *இது எல்லோருக்கும். .*

      போராட்டம் ஓங்குக..!

      போர் ...ஆம்மா போர்..!!

      Delete
    16. அ(ட)ப்பாவி மாம்ஸ்...!!!

      கடேசி விக்கெட்டும் போச்சா...

      கவுதாரில கவுந்துட்டேய்யா...!!!

      தலீவர்@ பொரட்டாசி மாசமா பார்த்து போராட்டம் அறிவிச்சி பாருங்களேன்.

      Delete
    17. நான்தான் மத்தவங்க படிக்கக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன்ல்ல ..!!

      (சங்கேத பாஷைல்லன்னா எழுதியிருந்தேன். .!
      எப்படி புரிஞ்சிருக்கும்.?? )

      Delete
    18. லேட்டா வந்திட்டேன்.

      Delete
  22. வேய்ன் ஷெல்டனுக்கு என்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டேன்.!
    ரெண்டாவது ஆப்சன் இருந்திருந்தா ரின்டின்கேனை ஆதரிச்சு இருக்கலாம்தான். .ம்ம்.. எந்து செய்யும்.?!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வாக்கு - ரின்டின்கேனுக்கே!! ரொம்பவே ரசித்துச் சிரித்த இதழ்!!

      Delete
    2. ஹி...ஹி.... லிஸ்ட்ல டெக்ஸ் புக்கும் இருக்கச்சே வேறு ஈரோவுக்கு வாக்களிக்கத்தான் முடியுமோ...???

      Delete
    3. ///ரெண்டாவது ஆப்சன் இருந்திருந்தா ரின்டின்கேனை ஆதரிச்சு இருக்கலாம்தான்///

      இது அநியாயம்! அக்கிரமம்!! ஏற்றுக் கொள்ளவே முடியாது!!

      ரின்டின்க்கு செய்யும் துரோகம்! காா்ட்டூனுக்கே நிகழ்ந்த சோகம்!!

      நீங்களே இப்புடிக்கா பண்ணினா அப்புரம் இந்த அப்ராணி எங்கே போகும்?? என்ன செய்யும்??

      இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது!!

      என் ஓட்டு கடேசி வரை காா்ட்டூனுக்குத் தான்! ஆமா சொல்லிட்டேன்!!

      Delete
    4. மிதுன்.!

      எப்பவுமே நம்ம முதல் ஆதரவு கார்ட்டூனுக்குத்தான் என்பது உலகறிந்த விசயமாச்சுங்களே.! அதில் மாற்றம் எதுவுமில்லை ..எப்போதுமில்லை..!!


      இந்த ஓட்டு ஹானஸ்டிக்கு இல்ல ஷெல்டனுக்குத்தான்னு நான் சொன்னா நீங்க நம்பணும்.! ;-)

      Delete
  23. நல்ல பதிவு,நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  24. என் நண்பேன்டா : எனது மகளின் பார்வையில்.

    முதல் படத்தில் அதிகாரிக்கு ஷேவ் செய்வதை வேடிக்கை பார்க்கும் ரின் டின் அதே பக்கத்தில் கடைசியில் வாயில் ஷேவ் கீரிமுடன் படுத்து கிடந்தை கண்டு சிரித்த இடம்.

    யூமா செல்லும் அந்த இரயிலின் கோச்சு வண்டியின் உட்புற ஆடம்பரத்தை மிகவும் ரசித்தார்கள் (இதில் எனது மனைவியும் அடங்கும்)

    சோப்பை சீஸ் கேக் என சாப்பிடும் ரின் டின் ஐ பார்த்து இது இன்னும் திருந்தவில்லையா என ஒரு கேள்வி.

    அதேநேரத்தில் அதற்கு வெறிபிடித்து விட்டது என பாப்லோ கொளுத்தி போட்டதை கேட்டு எல்லோரும் கோச்சை விட்டு ஓடும் போது ரின் டின் அந்தரத்தில் தலைகீழாக மிதப்பது.

    11ம் பக்கத்தில் சிக்கன் துண்டை சாப்பிட்ட செல்லும் போது அக்கம் பக்கம் நோட்டம் இடும் படம். முதல் வரிசையில் கடைசி படம்.. இதற்கு ஏன் மூன்று தலை என வியந்து கேள்வி கேட்க.. அது நோட்டம் போடுவதை அப்படி வரைந்து இருக்கிறார்கள் என சொன்னேன்.

    இரயில் இருந்து குதிக்கும் பாவ்லா கள்ளிச்செடி மீது மடேர் என மோதும் படம் அதனை தொடர்ந்து அவர் சட்டை முள் சட்டையாக மாறுவது.

    கோச்சு வண்டியின் பயணம் பற்றி விவரித்தது அவளுக்கு புதிய விஷயம்.

    இவர்களுக்கு கதையைச் சொல்லும் போது படங்களில் மறைந்து உள்ள சில நகைச்சுவையை தெரிந்து கொள்ள முடிந்தது.

    இந்த வாரத்தில் இது வரை 18 பக்கம் தான் படித்து சொல்லி உள்ளேன்.. ரொம்ப கேள்வி கேட்கிறாங்க யுவர் ஆர்னர். :-)

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கேள்விகள் ; அந்த இளம் மனதுகளில் துளிர் விடும் ஆர்வ மத்தாப்பூக்கள் - இவையன்றி வேறேது வாழ்க்கையின் சந்தோஷங்கள் ? சூப்பர் !!

      Delete
    2. சூப்பரு....

      நல்லா கதை சொல்றீங்களே...👌👌👌

      எங்களுக்கும் ஈரோட்டில் ஒரு கதை சொல்றீங்களா...????

      Delete
    3. @ PfB

      ஹா ஹா!! அருமை அருமை!! குழந்தைகளுக்கு காமிக்ஸ் படித்துக்காட்டுவது கொஞ்சம் சவாலான, ஆனால் செம ஜாலியான விசயம்!!

      எவ்வளவு என்ஜாய் பண்ணியிருப்பீங்கன்னு என்னால உணர முடியுது!

      மகிழ்ச்சி மகிழ்ச்சி!

      Delete
    4. கொடுத்து வைத்த குழந்தை ..

      என்னை போலவே..:-)

      Delete
    5. விஜயராகவன் @ உங்களுக்கு கதை சொல்வது சுலபம். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது கடினம்.. பொறுமை அதிகம் தேவை. நமக்கு அது ஒரு வரப்பிரசாதம்.

      Delete
    6. சிறந்த கதைசொல்லியாக உருமாறிவிட்டீர்கள் பரணி சார்.

      Delete
    7. 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் கோவிந்தா :-)

      Delete
  25. //மார்ச்சில் ஒரு மறுவருகையாளர் காத்திருக்கிறார் - ஜில் ஜோர்டனின் ரூபத்தில் ! மனுஷன் எனக்கொரு favorite !// எனக்கும் தான் sir ...
    அப்புறம் அந்த super heroes Batman ; Superman : Justice league ; Avengers ; Spiderman ஏதாவது ஒண்ணே தமிழ் பேச வைக்க முடியுமா சார் ...

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய நமது variety mix என்ற பாணிக்கு மத்தியில்இதற்கான சாத்தியங்கள் ரொம்பவே குறைவு சார் ! ஒரு தனித் தடம் ; அதனில் குறைந்த பட்சமாய் ௧௦ / ௧௨ இதழ்களாவது என்று தொடர்ச்சியாய் அட்
      லீஸ்ட் மூன்று / நான்கு வருடங்களுக்கு முயற்சிக்க நாம் தயாராய் இருந்தால் முயற்சிக்க இயலும் ! But நமது நடைமுறைகளுக்கு அது சுகப்படுமா என்பது சந்தேகமே !

      Delete
    2. இல்லை சார் .. இப்ப இங்க DC marvelக்கு நல்ல craze இருக்கு ..இதில் ஏதாவது ஒன்னு நம்ம list ல இருந்தா book fair ல புது customers ஐ attract பண்ண easy ஆ இருக்கும் ..its just my opinion sir .. U do wat is right ..

      Delete
  26. My rating for February books,
    1. மரணம் ஒரு முறையே
    2. வெண்பனியில் செங்குருதி
    3. மர்மக் கத்தி

    ReplyDelete
  27. January month graphic novel (நிஜங்களின் நிசப்தம்!) - I am still reading and unable to complete it.... This book is not to my liking.

    ReplyDelete
  28. Dear Editor,

    There was a sneak previews announcement for WWF early bird and not sure it was done.

    //
    - முன்பதிவுக்கு முந்திடும் முதல் 100 வாசகர்களுக்கு “EARLY BIRD” என்றதொரு அழகான கலர் பேட்ஜ் தந்திடவுள்ளோம் ! ஈரோடு புத்தக விழாவிற்கு ஆஜராகும் வேளையில் அதை பந்தாவாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டு வரலாமே ?! (ஈரோட்டுக்கு டிக்கெட்- யோசனை # 2) !! Earlybird வாசகர்களுக்கு நமது முக்கிய இதழ்கள் தொடர்பான அறிவிப்புகள் ; sneak previews - கொஞ்சம் முன்கூட்டியே தரப்படும் !
    //
    http://lion-muthucomics.blogspot.in/2017/03/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிட்டியிருக்கவில்லை sir சென்றாண்டின் overloaded இரண்டாம் பாதியினில் !

      Delete
    2. No problem Sir! Thank you for clarification.

      Delete
  29. நம்மாளூ இந்த மாசம் வர போறாரூ
    அட
    அவரு நம்ப எடிட்ருக்கும் ஃபேவரிட்டா.


    ஜில்லு இது தெரியாம போச்சே.......

    ReplyDelete
    Replies
    1. கச கசவெனக் குழப்பாத நேர்கோட்டுக் கதை களம் ; ஈர்ப்பினை உருவாக்கும் சிம்பிளான சித்திர பாணி ; டாலடிக்கும் வர்ணங்கள் ; பஞ்ச் பேசா ஹீரோ ; கூடவே ஒரு மொக்கை அசிஸ்டண்ட் ; அந்நாட்களது வாழ்க்கை முறைகள் விரவிக் கிடக்கும் கதை நகர்த்தல்கள் - இவை போதாதா சார் மனதில் இடம் பிடித்திட ?

      Delete
    2. ஜில்லு நம்ப ஜெய்சங்கர் .

      Delete
  30. Sir

    My name is Saravana Raja . I booked Ratha padalam on dec-2017 along with my 2018 subscription.
    The booking number given was 323, But there is another name(Mr. prince manual) mentioned for the number 323 in January month bluecoat book & last post.
    I called lion office last month itself and they told it will be corrected. But still the same name is there .I want to confirm my Ratha padalam booking number , If it is not 323 give me the correct number.
    I have sent email to office.lioncomics@yahoo.com also . Please do the needful.

    ReplyDelete
  31. எங்கள் வீட்டு பொடியன் ஸ்மர்ப்ஸ் ரசிகன். அவனின் அக்காவிற்கு கதை சொல்லும் போது எல்லாம் விண்ணில் ஒரு பொடியன் புத்தகத்தை எடுத்து எல்லா படங்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்தகிறார் யுவர் ஆர்னர்.

    விண்வெளியில் என்ன இருக்கும் இந்த எரிமலை ஏன் வெடிக்காது இங்கே ஏன் யாரும் இல்லை என பல பல கேள்விகள்.

    இப்போது எல்லா வகையான பொடியர்கள் பெயர் அவனுக்கு அத்துப்படி.

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகாத நேரத்தில் இந்த புத்தகத்தை எடுத்து படம் பார்ப்பது எங்கள் வீட்டுப் பொடியனின் பழக்கம்.

      Delete
    2. அந்த இளம் மனதினில் உள்ள hard disc -ல் இவையெல்லாமே சேமிக்கப்படும் !! பின்னாட்களில் தெரியும் பாருங்கள் - இந்த நாட்களின் அருமைகள் !!

      Delete
    3. உண்மை சார். வாழ்க்கையின் வரம் இவையெல்லாம்.

      Delete
    4. ///இப்போது எல்லா வகையான பொடியர்கள் பெயர் அவனுக்கு அத்துப்படி.///


      சூப்பர் பரணி!

      அப்படியே அந்த கேரக்டர்களை நம் நிஜ மாந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்க.. சுவாரஸ்யமா இருக்கும்.!!

      இப்போ நம்ம தளத்தையே எடுத்துக்கோங்களேன்.!
      எடிட்டர் சார்தான் சீனியர் ஸ்மர்ஃப்னு வெச்சுக்குவோம், அப்படியே மத்த ஸ்மர்ஃப்களை கற்பனை பண்ணிப்பாருங்களேன்.!

      Delete
    5. முக்கிய குறிப்பு :

      கார்காமெல் யாருன்னு கேட்டு கலவரத்தை உண்டு பண்ணிடாதிங்க.!-:)

      Delete
    6. ///இப்போ நம்ம தளத்தையே எடுத்துக்கோங்களேன்.!
      எடிட்டர் சார்தான் சீனியர் ஸ்மர்ஃப்னு வெச்சுக்குவோம், அப்படியே மத்த ஸ்மர்ஃப்களை கற்பனை பண்ணிப்பாருங்களேன்///---😁😁😁😁😅😅😅😅😆😆😆😆😄😄😄😄😄😄😃😃😃😃

      Delete
    7. ///இப்போ நம்ம தளத்தையே எடுத்துக்கோங்களேன்.!
      எடிட்டர் சார்தான் சீனியர் ஸ்மர்ஃப்னு வெச்சுக்குவோம், அப்படியே மத்த ஸ்மர்ஃப்களை கற்பனை பண்ணிப்பாருங்களேன்///

      கற்பனையே ககலகலப்பாக இருக்குதே.

      Delete

  32. ஜில் ஜோர்டான் எனக்கு பிடித்த நாயகர்களில் ஒருவர். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  33. நமது front desk-ல் பணியாற்றிய வாசுகிக்கு நாளைக்குத் திருமணம் (பிப்ரவரி 21). என்ற செய்தியை

    ###


    சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை எங்கள் சார்பாகவும் தெரிவித்து விடுங்கள் சார்..!

    ReplyDelete
  34. மரணம் ஒரு முறையே.
    வெய்ன் ஷெல்டன்.
    உலகின் முடிசூடா வல்லரசு அமெரிக்கா.
    எதேச்சதிகார போலீஸாக USA நடத்தி வரும் தகிடுதத்தங்களை துகிலுரித்து காட்டியள்ளார். வான்ஹாமே

    ReplyDelete
    Replies
    1. அணு ஆயுத பலத்தினால் உலகை கைக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா செய்யும் ஏவல் விளையாட்டுக்கள் ,விரலசைவுகளை புரிந்து கொள்ளலாம் கதையை ஊன்றி படித்தால்.

      Delete
    2. ஈரான் மன்னர் ஷா.
      அயத்துல்லா கோமெய்னி புரட்சி செய்து ஷாவை தூக்கி எறிந்தார்.அதற்கு ரஷ்யா உதவி.
      ஆட்சிக்கு வந்த கையோடு கோமெய்னி அமெரிக்காவிற்கு அதிர்ச்சி தர அணுஆயுத வல்லரசாக ரகசிய திட்டம் தீட்டினார்.

      Delete
    3. அதை மோப்பம் பிடித்து விட்ட அமெரிக்கா கோமெய்னியை கட்ட செய்த காய் நகர்த்தல்கள் தான் கதைக்கரு.

      Delete
    4. Atomic physics துறையில் டாக்டரேட் பட்டம் பெற்ற டாக்டர். கரீம் நாசினை சாதூர்யமாக பயன்படுத்தும் USA ஈரானியர்கள் அணு ஆயுதம் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால் மத்திய கிழக்கில் தங்கள செல்வாக்கு குறையக்கூடும் என்று பயந்தார்கள்.ஈரானியர்கள் ஆயுதங்கள் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டால் தங்கள் ஏகபோகம் மங்கிப்போகும் என்றுணர்ந்த அமெரிக்கா அதற்கு தேர்ந்தெடுத்த பகடைக்காய் தான் நாசின்.

      Delete
    5. ஈரான் முதலில் அணுஆயுத்தை பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும்.ஈரான் மக்கள் அழிந்துவிடுவார்கள் என்று நாசினை மூளைச்சலவை செய்து ஈரானின் அணுஆயுத தயாரிப்பு திட்டத்தை முடிந்த வரை தள்ளிப்போட வேண்டும் என்று நாசினை பணிக்கிறார்கள்.
      இயல்பாகவே soft nature குணமுடைய நாசினும் அதற்கு சம்மதித்து உடன்படுகிறார்.டெஹ்ரான் பல்கலை கழகத்தில் பணியிலமர்கிறார்.
      இன்னொறுபுறம் உலகிலேயே அதிபயங்கர புத்திசாலி உளவுஅமைப்பான மொஸார்ட் ஈரானின் அணுஆயுத வேட்கையை உணர்ந்து நாசினை கண்காணிக்க அனாதை யாசினை தேர்வு செய்கிறது.

      Delete
    6. அனாதை சாடியா டெஹ்ரானில் நாசினிடம் physics படிப்பதோடல்லாமல் அவர்கூட chemistry ஒர்க் ஆகுமாறு நடித்து காதலில் வீழ்த்தி நடப்புகளை இஸ்ரேலுக்கு உளவு சொல்லவேண்டும் 😢😢😢😢

      Delete
    7. சாடியா நாசினை வஞ்சகமாக காதலித்து மணக்கிறார்.இந்நிலையில் ஈரானியர்களும் லேசுப்பட்டவர்களா.விவாக் என்ற ஈரான் உளவுத்துறை கர்னல் ரஜாவி என்பவரிடம் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திட ரகசியமாக கண்காணித்திட assignment Project Derius - Atom bomb ஒப்படைக்கிறது.கர்னல் ரஜாவியோ கஜதலப்பிரதாபன்.எல்லோரையும் சந்தேகிக்கும் கொடும்பிறவி.இதறகிடையே சக உளவாளிகளால் டாக்டர் நாசினின் குட்டு அம்பலமாகிறது.

      Delete
    8. ஒவ்வொரு பக்கமா படிச்சி உடனுக்குடன் விமர்சனம் எழுதுறிங்க போலிருக்கே J சார்.!! :-)

      Delete
    9. நல்லா ஃபுலோவா இன்னொரு முறை படிப்பது மாதிரியே இருக்கு J ji...super...

      Delete
    10. நாசின் சிக்கிக்கொண்ட விபரம் CIA விற்கு தெரியவருகிறது.Atom bomb உடனடியாக செய்து முடித்திட நாசின் டார்ச்சர் செய்யப்படுவார் என்று யூகித்து அதை தடுக்க CIA எக்ஸிக்யூட்டிவ் ஹெட் சேம்பர்ஸ் மற்றும் intelligence security general லாமர் கலந்தாலோசிக்கின்றனர்.

      Delete
    11. இங்கு தான் நமது ஹீரோ ஷெல்டன் பிரசன்னமாகிறார்.
      நாசினின் இளம் மனைவி சாடியாவை கடத்திக்கொண்டு வந்து விட்டால் அவரை தங்கள் சொற்படி ஆட்டிவைக்கலாம் என்றெண்ணி அந்த கடத்தலை செய்து முடிக்க ஷெல்டனை தேர்ந்தெடுக்கின்றனர்.Income tax பிடியில் ஷெல்டனை கட்டாயமாக சிக்க வைத்து இதிலிந்து தப்பிக்கணும்னா சாடியாவ ஈரான் லருந்து கடத்திக்கிட்டு வா ஒருமில்லியன் தர்றோம் இல்லன்னா ஜெயில்னு, மிரட்டப்படுகிறார் ஷெல்டன்.
      நம்மாளூ யாரு உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே ன்னு பிலிபிலி காட்ற பார்ட்டி.
      நரைமுடி ஜேம்ஸ்பாண்ட் என கிண்டலடிக்கும் லாமரை , இத்தனை சின்ன வயதில் தத்துவங்களா என்றே பதிலுக்கு கலாய்த்து இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார்.

      Delete
    12. மூன்று மில்லியன் கூலி கேட்கும் ஷெல்டனிம் ஒரு மில்லியன் தான் என்று இளக்காரமாக கூறிவிட்டு மாடியேறும் சேம்பர்ஸ் blockmail கைது என்றும் பணம் வேலை முடித்த பிறகுதான் என்றும் கடுப்படிக்கிறார்.

      Delete
    13. ஆப்கன் எல்லையிலிருந்து ஈரானுக்குள் நுழைய பைக் வேண்டாமென்று லாமரிடம் கூறும் ஷெல்டன் ஏர்பலூன் வேண்டும் என்று படம் வரைந்து லாமரிடம் காட்டுவதோடு அதிவேக பாராசூட் மற்றும் ஸ்காட்லந்து பாஸ்போர்ட் பெற்று mission ஐ ஆரம்பிக்கிறார்.சாகசப்பயணம் என்று பேப்பர் பக்கங்களுடன் பறக்கும் ஷெல்டன் ஈரான்படையால் சுடப்பட்டு கர்னல் ரஜாவி முன் நிறுத்தப்படுகிறார்.

      Delete
    14. ஜனார்த்தனன் @ விமர்சனம் எழுத சொன்னா கதையை பக்கத்துக்கு பக்கம் அப்படியே எழுதுறீங்க:-)

      Delete
    15. எட்வர்ட் கேம்பெல் என்று பிரிட்டிஷ்காரராக நாடகமாடும் ஷெல்டனை அமெரிக்க பாராசூட்டைக் கொண்டு சந்தேகிக்கும் ரஜாவி அதிபுத்திசாலி தான். ஆனால் கதையின் அதிர்ச்சித் திருப்பம் இங்கு தான் கட்டவிழ்கிறது.ரஜாவியோடு ஒன்றாக சாடியாவும் ஷெல்டனை பைனாக்குலரில் கண்காணிப்பது நமக்கு ஷாக்.இதன் மர்மம் பின்னால் முடிச்சவிழ்க்கப்படுகிறது.சாடியா ஒரு இஸ்ரேல் உளவாளி என்பதை டாக்டர் மொஹதானியை சித்ரவதை செய்து தெளிந்த அற்புத கில்லாடி ரஜாவி நாடியாவை பள்ளியறை பாவையாக்குகிறார்.சாடியாவோ ரஜாவியிடம் படுக்கையறையில் நெருங்கி டாக்டர் நாசின் சமாச்சாரங்களை தெரிந்துகொள்ள முயல்கிறார்.இடையில் அணுவிஞ்ஞானி டாக்டர்.கரீம்நாசினை ரகசியமாக சந்திக்கிறார் ஷெல்டன்."பதட்டப்படாதீர்கள் நண்பேண்டா😊 " என்று கூறி அறிமுகமாகி எல்லா பின்னணி குட்டு நட்டுகளும் அறிந்து தெளிவாகிறார்.பதட்டத்தை தான் உணர்ந்து பல நாட்களாகி விட்டதாக டாக்டர் நாசின் உரைப்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
      Characterization.      Delete
    16. பொதுவாக ஒரு விஷயத்தை இயல்முறை கடந்து ஆழ அகலம் கூர்ந்துணரக் கூடியவர்களே விஞ்ஞான மேதைகள்.🎂
      தனது வேஷம் எப்போதும் கலையலாம் என்று நிதான மனம் கொண்ட நாசின்,"சாடியா தனக்கு துரோகமிழைத்திருந்த போதும், பிறப்பால் ஈரானியனான தான் தாய்மண்ணுக்கு துரோகமாக USA உடன் கை கோர்த்ததால் தானழிந்தாலும் காதல்மனைவி சாடியாவை காப்பாற்றுவதோடு பெஷாரா atomic research centre ஐ 👍தரை மட்டமாக்க
      மனிதகுல நன்மையை முன்னிருத்தி அதற்கான முன்னேற்பாடுகளுடன் முடிவெடுக்கிறார்.
      நடுவே மொஹதானியினடத்தில் தானே அமெரிக்க விசுவாசி என்று சந்திக்கும் ரஜாவியிடம் நம்பிக்கையில்லாவிடினும் வேறுவழியின்றி அரைமனதுடன் செல்கிறார்

      Delete
    17. ஆனால் தன்னை ஒரு மொஸார்ட் என்று சாகஸமாக வெளிப்படுத்தும் ரஜாவியை, அதகளமாக தாக்கி ஷெல்டனுடன் வெளியேறுகிறார் சாடியா நாசின்(எந்த ட்ரக் மூலம் அவர்களை கடுஞ்சிறையிலடைக்க ரஜாவி நினைத்தாரோ அதே ட்ரக் மூலமே)☺☺☺☺☺😊
      இங்கிருந்து தான் ஷெல்டனின் ஹீரோயிஸம் ஆரம்பம்.

      Delete
    18. எடிட்டர் ரமணான்னா

      நாம மட்டும் என்ன

      சும்மா யந்திரன் மாதிரி பிரிச்சி மேய்வோம்ல.

      Delete
    19. பரணி சார்
      வான் ஹாமே என்ற கதாசரியரின் கற்பனை விரிவே இந்த அலசல்.

      Delete
    20. டெ வி உலக அரசியல் சதுரங்க நகரத்தல்கள் எப்பிடி.
      1980கள்ல கொமெய்னி போட்ட சட்டங்கள்லாம் தான் அல்கய்தாவோட ஆரம்பம்.

      Delete
    21. ஒவ்வொரு பக்கமா படிச்சி உடனுக்குடன் விமர்சனம் எழுதுறிங்க போலிருக்கே J சார்.!! :-)

      ######


      :-)))))

      Delete
  35. ரசனைகளின் ஓட்டத்தில் நாம் லேசாகப் பின்தங்கி நிற்கிறோமோ என்று தோன்றுகிறது ! எதிர்காலக் கதைகளுக்கு நாம் இன்னும் நெருக்கம் காட்டிடவில்லை ; fantasy எனும் பனிக்கட்டியின் ஒரு துளியூண்டு முனையினை மட்டுமே அரவணைத்துள்ளோம் ; சமகால உலக நிகழ்வுகள் சார்ந்த படைப்புகளுக்கும், நமக்கும் தற்சமயம் தூரம் அதிகமாகவே உள்ளது ;
    பிறகு எதற்காக சார் மறுபதிப்பு என்ற பெயரில் மாதம் ஒரு மாயாவி மாதம் ஒரு ஸ்பைடர்?

    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டின் அட்டவணையை இன்னொருமுறை புரட்டித் தான் பாருங்களேன் ? விற்பனையில் alltime top எனக் கொடிநாட்டியிருக்கும் மாயாவிக்கே ஒரேயொரு ஸ்லாட் தானிருக்கும் !

      Delete
  36. நேற்றைய அனுபவம்...


    எப்பொழுதும் எனது அலுவலக பையில் தினம் ஏதாவது காமிக்ஸ் இதழ்களை எடுத்து செல்வதும்..ஒரு மணி நேர பேருந்து பயணத்தில் நமது இதழ்களை பயணத்தில் படிப்பது அல்லது புரட்டுவது ( இருக்கை கிடைப்பின் மட்டும்..) வாடிக்கையே.அம்மாத இதழ்கள் படித்து இருந்தால் மீண்டும் படிக்க தோன்றும் இதழ்களை பையில் திணித்து விடுவதும் வாடிக்கையே.நேற்று மாலை பயணத்தில் பழைய ஷெல்டனை ரசித்து கொண்டு இருந்தேன்.அப்போது பக்கத்தில் இருந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்ட இருவரில் ஒருவர் ஏப்பா இந்த புக்கெல்லாம் இன்னும் வருதா என்று வினவ மாதாமாதாம் நாலஞ்சு புக்கு வருது சார் பாருங்க என்று அவரிடம் கொடுத்தேன்.அடேங்கப்பா இப்ப இப்படி வருதா...நான் படிக்குறப்ப எல்லாம் கருப்பு வெள்ளைல சின்ன சைஸ்ல வரும் ..அதுவும் செமயா இருக்கும் என அப்படியும் வருது சார் என இம்மாத டெக்ஸ் சாகஸ இதழான " வெண்பனியில் செங்குருதியை " எடுத்து காண்பித்தேன்.வாவ் எனது பேவரிட் ஹீரோ என ஆவலுடன் வாங்கி ரசித்தார்.பின் இந்த இதழ்கள் எங்கே வாங்குறீங்க...என்ன விலை என்றெல்லாம் விசாரிக்க நான் சந்தா கட்டியுள்ளேன் சார் ..வீட்டிற்கே வந்து விடும் என்றேன் .தொகை அனைத்தும் கேட்டவர் கடைகளில் இப்பொது கிடைக்காதா என்றார் .நான் செல்லும் பேருந்து வழக்கமான ஈரோடு பேருந்து என்பதால் கிடைக்கும் சார் ..ஈரோட்டிலியே கிடைக்கிறது.அதுவும் ஈரோடு பஸ்ஸ்டேண்டிலியே என்றேன்.உள்ளே நுழையிற என்டரில ஒரு புத்தக கடை இருக்குமே அங்கேயா என வினவ அதே தான் சார் என்றேன்.ஓகே நான் டெய்லி ஈரோடு தான் போறேன் .கண்டிப்பா இனி வாங்கி விடுகிறேன் என்றார்.பேச்சுவாக்கில் அவரும் அவர் அருகில் இருந்த நண்பரும் மின்வாரியத்தில் பணிபுரிபவர்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.இது போன்ற ஆச்சர்ய பார்வைகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கொண்டு இருந்தாலும் இந்த முறை மிகவும் விரும்பிய காரணம் என்னவென்றால் அந்த நண்பர் அருகில் உள்ள நண்பரிடம் சிறுவயதில் தனது காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தையும்..அதன் சுவையையும் ..நேரம் போவதே தெரியாமல் இரவு பதினொரு மணி வரை படித்ததையும் , அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பாட புத்தகத்தில் ஒளித்து வைத்து படித்த அனுபவத்தையும் என ஒன்று விடாமல் "அவர் நண்பரிடம்" சிறுவர் போல் மாறி ரசித்து ரசித்து சொல்லி கொண்டு இருந்தார் .நானோ எப்பொழுதும் போல மனதில் ஆனந்ததுடன் வெளியே அமைதியாய் அவர்கள் பேசி வருவதையே கேட்டு கொண்டு வந்தேன்.இந்த முறை இது எனக்கு புது அனுபவமே.பின் தாரை மாநகர் நெருங்க மீண்டும் அவருக்கு நினைவுபடுத்த சார்..மறந்துறாதீங்க ஈரோட்டு பஸ்ஸ்டேண்டு கடையிலேயே எல்லா புக்கும் இருக்கும் மறந்துறாதீங்க என்றேன்.கண்டிப்பாக என்றார் .இருப்பினும் சிறுவனாக மாறிய அவர் மீண்டும் வயதினால் மாறி விட கூடாதே என்ற யோசனையில் என்னிடம் இருந்த அந்த இம்மாத டெக்ஸ் சாகஸத்தை அவரிடம் கொடுத்து சார்..நான் இதை படித்து விட்டேன் ..இந்தாங்க இதை நீங்க வச்சுகுங்க படிங்க என்றபடி கொடுக்க அவருக்கு மிக மகிழ்ச்சி .பின் விலையை பார்த்து அவர் பணத்தை எடுக்க பரவால சார் ..நான் ப்ரீயா தான் தந்தேன் என்றாலும்...இல்ல இல்ல நாளைக்கு ஞாயிறு ..திங்கள் கண்டிப்பா ஈரோட்ல வாங்கலாம்னு இருந்தேன்.நீங்களே கொடுத்ததுக்கு தேங் க்ஸ் ..நாளைக்கு ப்ரீயா இருப்பேன் படிக்கலாம் என்றபடி என் கையில் அந்த இதழின் பணத்தை திணித்து விட்டு தான் ஓய்ந்தார் .ஓகே சார் தேங்க்ஸ் என்றபடி எனது நிறுத்தத்தில் இறங்கினேன்.

    மனதில் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி..

    இனி சேலமோ..ஈரோடோ செல்ல நேர்ந்தால் எனக்கு அந்த இம்மாத டெக்ஸ் இதழை வாங்க வேண்டும்.செயலரே ஈரோட்ல நான் வாங்குறதுக்குள்ள அந்த இதழ் தீராம பாத்துகுங்க ஆமா...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தலீவரே.!

      ஆனந்தமான சந்திப்பு ..அருமையான காரியமும் பண்ணியிருக்கீங்க.!

      ஆனாப் பாருங்க ....

      தாரைமாநகர்னு சொன்னீங்களே ...அது ..அதுமட்டுந்தேன் கொஞ்சம். ...!

      Delete
    2. செம...தலீவரே...
      அருமையான விவரிப்பு...
      இதுபோன்ற அனுபவங்கள் கேட்க கேட்க திகட்டாதவை...

      பஸ்ல வந்த நபரும் டெக்ஸ் ரசிகரா...சூப்பரு...

      அன்பளிப்பாக வாங்காமல் பணத்தை தந்து வாங்கி செல்லும்போதே அந்த ரசிகரின் நல்ல மனம் புரியுது. நம்ம படையில் மற்றொரு வாசக நண்பர் இணைவது உறுதி...

      அப்புறம் தாரையே மாநகர்னா சேலம்..??? பிறகு சென்னைலாம்???

      Delete
    3. சிறுகச் சிறுக வாசகர்கள் அதிகரிப்பது சந்தோசமான விசயம்.

      Delete
    4. என்னது எல்லோரும் தாரை மாநகர்ன்னா ஜெர்க் ஆகுறாங்க..ஹலோ அது தாரை மாவட்டம் ...யாரும் பொறாமைபட கூடாதுன்னு சுருக்கி மாநகர்ன்னு சொல்லி இருக்கேன்..:-(

      Delete
    5. சூப்பர் தலைவரே,அப்புறம் சின்ன வயசுல பாடப் புத்தகத்தில் காமிக்ஸை ஒளிச்சி வெச்சி படிச்ச அனுபவம் நம்மை போலவே நிறைய பேருக்கு போல,என்ன ஒரு ஒற்றுமை செயல்பாடு.

      Delete
    6. நான் சந்தித்த சில பழைய வாசகர்கள் மாயாவி,ஸ்பைடர்,கார்ட்டூன் ரசிகர்களாகத்தான் இருந்துருக்காங்க,எனது தலைமையாசிரியர் இன்னும் இரும்புக் கை மாயாவியைத்தான் விரும்புறாங்க.
      மற்றவர்கள் முறையே ஸ்பைடர்,லாரன்ஸ் & டேவிட் ஆர்வலர்கள்,நண்பரின் மகன் பென்னி மட்டும்.

      Delete
  37. 'வெண்பனியில் செங்குருதி' கதையில் கொலை செய்யப்பட்டவராக வரும் எட்வர்ட் மாண்ட்கோமெரி என்பவர் இதற்கு முன் ஏதோ ஒரு கதையில் வந்திருக்கிறாரே... அது எந்த கதை என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. ஓவர் டூ விஜயராகவன்

      Delete
    2. ஓவர். ஓவர் டூ விஜயராகவன் சார்.

      Delete
    3. பிரம்மன் மறந்த பிரதேசம்...

      Delete
    4. பிரம்மன் மறந்த பிரதேசம்..

      ######


      அடேங்கப்பா டெக்ஸ்...:-))))

      Delete
  38. நண்பர்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
  39. டைகரின் கதைகள் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறதா சார்? அல்லது, மீண்டும் தொடருமா?

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் யங் டைகர் சீரியஸ்ல 12கதைகள் பாக்கி இருப்பதால் தக்க சமயத்தில் வரக்கூடும்... இரத்தகோட்டை, என் பெயர் டைகர்லாம் தீர்ந்த பிறகு வரக்கூடும்...
      கெளபாய் ரசிகனாக மீ டூ வெயிட்டிங்...

      Delete
    2. டைகர் தொடரில் கௌபாய் ஸ்பெஷலில் வந்த இளமையில் கொல் மட்டும் கலரில் இல்லை.2019-ஆவது ஆசிரியர் இதற்கு இடம் ஒதுக்குவாரா?

      Delete
  40. என் ஓட்டு ரின்டின்கேனுக்கே.கவலையை மறக்கச்செய்த வகையில் ரின்டின்கேன் முன்னணியில்.

    ReplyDelete
    Replies
    1. கவலையை மறக்க செய்வதில் ரின்டின்க்கு கணிசமான பங்கு உண்டு.
      மறுவாசிப்புக்கு என செலக்ட் ஆகும் ரின் டின் கேன் சாகசங்கள்.

      அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே&
      என் நண்பேன்டா...

      Delete
  41. monthly 4 books are not enough.6 will be o.k sir

    ReplyDelete