Powered By Blogger

Wednesday, February 14, 2018

பதிவு 446 !

நண்பர்களே,

வணக்கம். பின்னூட்ட எண்ணிக்கை  300-ஐத் தொட்டால் உபபதிவு என்ற கம்பெனி ரூல்ஸ் கனகச்சிதமாய் சிவராத்திரியோடு ஒத்துப் போக, இதோ பதிவு நம்பர் 446 !! 

எதைப் பற்றி எழுதலாமென்ற ரோசனை ஓடும் போதே இரத்தப் படலம் முன்பதிவுப் பட்டியலைப் பகிர்ந்து கொள்வதாய் நான் தந்திருந்த வாக்கு நினைவுக்கு வர -  இதோ 2 நாட்களுக்கு முன்பு வரையிலான முன்பதிவுப் பட்டியல் !! அதற்கு முன்பாய் சமீபத்தில் கண்ணில் பட்ட இந்த போட்டோவை உங்களுக்குக் காட்டும் ஆசையை அடக்க முடியவில்லை ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதிகாசத்தின் 3 அசாத்தியத் தூண்கள் ஒன்றிணைந்து இப்படியொரு க்ளிக் எடுத்திருக்கிறார்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் ! புது வாசகர்களின் வசதிக்காக ஒரு அறிமுகம் என்பதால் - பழைய வாசகர்கள் மன்னிச்சூ !! இடது கோடியில் இருப்பவர் XIII தொடரின் ஓவியர் வில்லியம் வான்ஸ் ; நடுவில் உள்ளது XIII ; லார்கோ ; ஷெல்டன் ; தோர்கல் என நமக்கு ரொம்பவே பரிச்சயமான பல தொடர்களின் கதாசிரியர் ஷான் வான் ஹேம் & வலது ஓரமிருப்பது கேப்டன் டைகர் தொடரின் பிதாமகரான ஜிரௌ   !! "அயர்லாந்துப் படலம்" என்ற அந்த பிளாஷ்பேக் அத்தியாயத்தில் ஓவியராய் பணியாற்றிய வகையில் அமரர்  ஜிரௌவும் இந்த இரத்தப் படல ரயில்வண்டியில் இணைந்து கொண்டவராகிறார் தானே ?!  (அத்தியாயம் 18 )

அப்புறம் இன்னுமொரு சேதி - "இ.ப." தொடர்பாய் ! இந்தத் தொடருக்கு ஓவியங்கள் ஒரு ஜீவ நாடியெனில் - வர்ணங்களும் ஒரு மெகா பலம் தானன்றோ ? சித்திர ஜாலங்களின் பெருமை வில்லியம் வான்ஸைச் சேருமெனில், கலரிங்கின் கைவண்ணம் திருமதி வான்ஸ் !! பெட்ரா வான் கட்செம் என்பது இவரது பெயர் ! இரத்தப் படலம்  1 - 17 வரையிலும், அப்புறம் சில சாகச வீரர் ரோஜர் ஆல்பங்கள் என்று கணவருடன் பணியாற்றியிருக்கிறார் ! என்னவொரு கூட்டணி !! 

XIII பற்றி இன்னமுமேயொரு சமாச்சாரம் ! இந்தத் தொடரின் ஆரம்பம் 1983 /84 என்றிருந்தாலும் 1990 வாக்கில் தான் உச்சமாய் பிரபலம் கண்டுள்ளது ! அதுவரையிலும் காமிக்ஸ் ஆல்பங்களுக்கு காமிக்ஸ் ஆர்வலர்களின் வட்டத்தினுள் மட்டுமே விளம்பரம் செய்வது பதிப்பகங்களின் ஸ்டைலாக இருந்து வந்துள்ளது ! ஆனால் இரத்தப் படலத்துக்கு ஒரு பெரிய மீடியா விளம்பர பட்ஜெட்டை ஏற்பாடு செய்ததோடு, திரையரங்குகளிலும் விளம்பரம் செய்துள்ளனர் ! காமிக்ஸ் + வெகுஜன மார்க்கெட்டிங் என்ற கூட்டணியை வெற்றிகரமாய் பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகிற்கு கொணர்ந்த பெருமை நமது ஞாபக மறதிக்கார மனுஷனுக்கு கணிசமாய்ச் சேரும் போலும் ! ஆரம்ப ஆல்பங்களை - தினமொரு பக்கம் என்ற ரீதியில் Courrier de l'Ouest என்ற தினசரியில் தொடராயும் வெளியிட்டிருக்கிறார்கள் ! So ஒரு மார்க்கெட்டிங் கதவைத் திறந்து விட்ட புண்ணியம் இவருக்கே !! (நமக்கும் அதே போலக்  கதவைப் பப்பரக்கா என்று திறந்து விடாட்டியும் லேசாய் ; சன்னமாய்த் திறந்து விட்டால் கூட ஒரு சிலை வைத்து விடலாம் சிவகாசியில் எங்கேனும் !!)

And இதோ - ஒரு வழியாய் துவக்கத்தில் சொன்ன பட்டியல் ! 


இரு தவணைகளில் பணம் அனுப்பிடத் தேர்வு செய்த நண்பர்கள் - இரண்டாம் தவணையை அனுப்பிடும் தருணமிது என்பதை நினைவூட்டிய கையோடு கிளம்புகிறேன் ! Bye all....see you around ! 

199 comments:

  1. Replies
    1. அடடே !!

      கவித.. கவித..

      Delete
    2. ///அடடே !! ///

      இத நாங்க சொல்லணும்!!

      'அடடே!! செனா அனா!!'

      Delete
    3. ///இத நாங்க சொல்லணும்!!

      'அடடே!! செனா அனா!!'///


      அதானே ..!

      Delete
  2. Replies
    1. ஆசிரியர் சார் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்!
      ஈரோடு புத்தக விழாவிற்கு பின் இத்தளத்தில் மௌன பார்வையாளனாகவே நேற்று வரை இருந்துள்ளேன்.காரணம்...
      இரத்தப்படலத்திற்கு பணம் செலுத்திய பிறகே பின்னூட்டம் இடவேண்டும் என எண்ணினேன்.
      நேற்று மதியம் முழுத்தொகையும் (TMB வங்கி,திருச்செங்கோடு கிளை) செலுத்தி விட்டேன்.400-க்குள் வர இயலவில்லை.ஜனவரிக்குள் செலுத்த முயன்றும் முடியவில்லை.எனவே மகிழ்ச்சியிலும் சற்று வருத்தமே!?
      ஆசிரியர் சார்...
      எனது முன்பதிவு எண் ப்ளீஸ்?
      என் மெயில் ஐ.டி. boopathi1974@gmail.com

      Delete
  3. ஆசிரியர் சார் நலமா?.தாங்கள் தளத்திற்கு மீண்டும் வ௫கை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. 446 ஆகா என்ன ஒ௫ சாதனை. மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  5. உப பதிவுக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  6. மிக்க நன்றி சார் _/|\_
    .

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய சிவராத்திரி _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. 500 வது பதிவுக்குன்னு்ஏதாவது குண்டு ஸ்பெசல் போட வேண்டி வருமோ...

      Delete
    2. 500 பக்கங்களில் முழு வண்ணத்தில் முற்றிலும் புது ஹீரோக்களுடன் கார்ட்டூன் கௌபாய் அட்வென்சர் கிராபிக்நாவல்னு கலந்துகட்டி ...

      இப்படியெல்லாம் கேட்கணும்னு ஆசையாத்தான் இருக்கு ..!

      Delete
    3. ///இப்படியெல்லாம் கேட்கணும்னு ஆசையாத்தான் இருக்கு///

      போதும் சார். இது போதுமே. இனி நடக்க வேண்டியதை தானா நடந்திடும்.

      Delete
    4. தானைத்தலைவரோட குண்டு புக்க காட்டிலும் வேறேதும் உளதோ...

      Delete
  8. ஜாம்பவான்கள் ஒன்றிணைத்திருக்கும் அறிய புகைப்படம் . மிக்க நன்றிகள் சார். இன்று பொக்கிஷ புதையல் பதிவு தபாலில் வந்து கிடைத்தது . சும்மா அள்ளுது . கூடவே டெக்சின் மினி வெளியீடு , அதுவும் கலரில் இலவச இணைப்பாக. செம சார் .

    ReplyDelete
  9. அருமையான காதலர்தின பரிசு எங்கள் மறதிக்கார நண்பனின் ரசிகர்களுக்கு.கூடவே திருமதி வான்ஸ் பெட்ரா தகவல் இதுவரை அறியாதது நன்றி சார்

    ReplyDelete
  10. இரத்த படலம் காதலர்களுக்கு இரத்த படலம் பற்றி அருமையான தகவல்கள் கொண்ட பரிசு.

    ReplyDelete
  11. இரத்தப்படலம் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள் மிகச் சிறப்பு.

    ReplyDelete
  12. EBFஅல்ல ஒரு Surprise Book release என்றும் கம்பெனி ரூல் கனகச்சிதமாக பொருந்துவதால், அதற்கு Xiii புலன் விசாரணை புத்தகம் என்று இரகசியமாக திட்டம் போட்டு, இதற்காகவே மூலிகை வைத்தியம் எடுத்துக்கொன்டு, extra இளமை மற்றும் வலிமையுடன் வந்திருக்கும் மரியாதைக்குறிய மாண்புமிகு எடிட்டர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

    இவன்,
    லயன் மற்றும் முத்து காமிக்ஸ் படிப்போர் சங்கம், ஆஸ்திரேலியா கிளை 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க அருவாள.
      இவண்
      சென்னை கிளை.

      Delete
    2. நடக்கும் என்பார் நடக்காது;
      நடக்காதென்பார் நடந்து விடும்,
      கிடைக்கும் என்பார் கிடைக்காது;
      கிடைக்காதென்பார் கிடைத்து விடும்....
      (பாட்டு, பாட்டு வெறும் பாட்டுத்தேன்...)

      Delete
    3. ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா. நடுவுல மானே, தேனே, பொன்மானே, ல்லாம் போட்டுக்குங்க.😃😃😃

      Delete
    4. EBF பட்டாசா பட்டைய கிளப்பப்போவது உறுதி 💥💥💥

      Delete
    5. டெக்ஸ் பாடலில் உள்ள அர்த்தத்தை
      கவனிக்கவும்.
      நன்றி டெக்ஸ்.

      Delete
  13. சார் அருமை...நச் பதிவு...சீக்கிரம் சிலை வைகக்கத் தயாராகுங்கள் .

    ReplyDelete
  14. Xiiiன் காதலர்களுக்கு , காதலிய தேடும் நன்னாளில் , தன்னைத் தேடும் ஒருவன் ....காதலர் தின காதல் பரிசு...ககாதல் பரிசுலயும் , வெற்றி லிழாலயும் கமல்தான ஹீரோ...என்னா ஒற்றுமமை....வெற்றிவேல்

    ReplyDelete
  15. வாரத்தின் 4வது நாள்;
    வாரத்தின் 2வது பதிவு;
    பதிவு எண்ணம் 446;
    தேதி 14;
    மாதம் பிப்ரவரி(2வது மாதம்);
    வருடம் 2018;
    பதிவு நேரம் 16வது நிமிடம்;
    இரத்த படலம் புக்கிங் எண்ணம் 422;

    இப்டி எல்லாமே இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைந்துள்ளதே...!!!
    (எல்லாரும் கையில் எடுத்த கல்லை கீழே போடுங்க...., ஆம் அப்டித்தான்...)

    இன்னும் இருக்கே,

    ஈரோட்டில் வெளியாகும் ஸ்பெசல்கள் கூட 2 (இரத்த படலம், டெக்ஸ் 70)

    இரு ஸ்பெசல்களிலும் சேர்த்து புத்தக மொத்த எண்ணிக்கை 4

    ஈரோட்டில் நடக்கப்போகும் 4 வது மீட்..

    ......
    ......
    ......

    எஸ்கேப்....

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 8வது மாசம்.

      இத விட்டுட்டீங்களே.??

      Delete
    2. ஆமா..ஆமா..ஆமாம்..

      வழக்கம் போல முதல் வாரத்தில் புக் ஃபேர் இருந்தால் முதல் சனிக்கிழமை ரீலீ்ஸ் இருக்கும்;
      கஸ் த டேட் ஆஃப் தட் பர்ஸ்ட் சாட்டர்டே???... அதே தான் 4ம் தேதி.. ஹி...ஹி...

      (கோவிந்த் குனிஞ்சிக்கங்க,சொல்ல சொல்ல கேக்காம யாரோ நம்ம நண்பர்கள் யாரோ கல் எறியறாங்க பாருங்க....)

      Delete
    3. ஒருவேளை 4ந்தேதி மிஸ் ஆனா அடுத்து 11ந் தேதி. இருந்தாலுமே 1+1 :2 தானே. அதனால கவலையை விடுங்க

      (நல்ல வேளை குனிஞ்சிட்டேன். ஜஸ்ட் மிஸ்)

      Delete
  16. பிராங்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் மூன்று ஜாம்பவான்களை ஒரே ஃபோட்டோவில் பார்ப்பது மூச்சிரைக்க வைக்கிறது! தங்களின் மிதமிஞ்சிய கற்பனை வளத்தாலும், ஆற்றலாலும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான இவர்களிடமிருந்து, வாழ்த்துச் செய்தி + கையொப்பங்களைத் தாங்கிய ஃபோட்டோ பிரதி இலவச இணைப்பாகக் கிடைக்குமானால், பிரம்மிப்போடும் பெருமையோடும் நம் வீட்டு அலமாரியை அலங்கரிக்கச் செய்யலாம்!

    எடிட்டர் சமூகம் என்ன சொல்லப்போகிறது என்பதே இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி!!

    ( கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன் நண்பர்கள... மேற்கூறிய ஒரு ஃபோட்டோ பிரதி ஆகஸ்டில் வரயிருக்கும் இ.ப தொகுப்பில் ஒரு முன்பக்கத்தை அலங்கரிக்குமானால்...)

    ReplyDelete
    Replies
    1. கிட்டே கூடப் போக முடியா உயரத்தில் கதாசிரியரும், முழுமையான ஓய்வில் ஓவியரும் இருப்பதால் நாம் இது மாதிரியான போட்டோக்களைப் பார்த்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் !

      Delete
    2. ஆச்சரியமான சிந்தனை விஜய். கிடைத்தால் அட்டகாசமாகவே இருக்கும் என்பது உறுதி..

      Delete
    3. என்னோட 'பில்லியன் டாலர்' கேள்விக்கு ரொம்ப சிம்ப்பிளா, சீப்பா பதில் சொல்லிட்டீங்களே எடிட்டர் சார்! :D

      Delete
    4. விஜயன் சார்
      போட்டோ மேலே இருக்கு.
      கையெழுத்த காப்பி பேஸ்ட்😜😜😜😜

      Delete
  17. குறும்பதிவாக இருந்தாலும், நிறைவாகவே இருந்தது. மூன்று ஜாம்பவான்களின் போட்டோ காணக்கிடைக்காத பொக்கிஷமாக மின்னியது.

    இரத்தப்படல லிஸ்ட் இன்னும் ஆவலை ஏற்படுத்துகிறது. அந்த லிஸ்டில் என்பெயரும் அடுத்தமுறை இணைந்திடும்.

    ReplyDelete
  18. இரத்தப் படல முன்பதிவு லிஸ்டின் இறுதிப் பகுதியில் காணக்கிடைக்கும் அந்த சென்னை நண்பர்களில் ஒரு கணிசமான பகுதியாவது CBFல் கலக்கிய நம் KVGயின் முயற்சியால் உருவானதே என்பது பெருமைக்குரிய விசயம் நண்பர்களே!

    எத்தனை பாராட்டினாலும் தகும்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் வாழ்த்துக்கள் கணேஷ் சார்....

      மட மட னு 600புக்கிங் நடந்துட்டா கணேஷ் சார் தலைமையில் நாமெலாம் கெத்து நடை போடலாம்...

      Delete
    2. காதோரம் வெள்ளிமுடி இருந்தாலும்

      சேதாரமின்றி புக்கிங்கை கரைசேர்த்த

      ஆதாரமாக லிஸ்ட் மேலிருக்க

      ஆரவாரமான வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

      Delete
    3. நன்றி ஈ வி மற்றும் டெக்ஸ்.
      G P இருக்குடி உனக்கு ஈரோடில.நரச்ச
      முடின்னா சொல்றீங்க.

      Delete
    4. நண்பகளின் உதவியுடன் ஏப்ரலுக்குள்
      600 எட்டிவிடும் என்பது என் எதிர்பார்ப்பு.

      Delete
  19. 79-ஜான் சைமன் சென்னை என்பதனை மணலூர்ப்பேட்டை முகவரி மாற்றம் செய்து கொள்ள வேண்டுகிறேன்.முகவரியை அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளேன் சார். அப்புறம் "தம்பி டீ இன்னும் வரலை.." கணக்காக நாங்க கேட்டுக் கொண்டேயிருக்கும் புலன் விசாரணை பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லலியே சாமீய்ய்ய். டொக். (பசங்களா ஸ்டார்ட் மீஜிக்..)

    ReplyDelete
    Replies
    1. A time for everything & everything in it's time...

      அப்புறம் முகவரி மாற்றம் குறித்து ஆபீசுக்கு மெயில் அனுப்பிடுங்களேன் !

      Delete
  20. 500 is NOW WITHIN REACH, finally... Great going. Congrats Edi & Friends, for bringing to reality the Biggest Special Collection, ever.

    ReplyDelete
  21. அதற்கான வேலை துவங்கப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.
    (ஹிஹி நம்மளும் கொஞ்சம் கொளுத்தி போடுவோம்)

    ReplyDelete
  22. இரத்தபடலம் கூட்டணில் கிரெள.வும் ஒரு அஙகமா...waw

    ReplyDelete
  23. இரத்தப் படலம் & டெக்ஸ் ஆகஸ்டில் ஒரு மெகா கொண்டாட்டம்.

    ReplyDelete
  24. ***** மரணம் ஒருமுறையே! ******

    கதைக் களம் என்னவோ நமக்கு ஏற்கனவே பலமுறை சினிமாக்களிலும், நாவல்களிலும் அறிமுகமான ஒன்றுதான் என்றாலும், ஷெல்டனுக்காவே ஒரு முறை பிரத்யேகமாய், களேபரமாய், ரணகளமாய், எதிர்பாராத் திருப்பங்களோடு எழுதப்பட்டிருப்பதுவே இக்கதையின் சிறப்பு!

    எதிரிகளின் கூடாரத்தில் ஷெல்டனுக்குத் தான் எண்ணிவந்த வேலைகள் எல்லாமே சுமூகமாய் நடந்தேற, நம் மனதுக்குள் 'ரொம்ப சுளுவான சாகஸமா இருக்கும்போலிருக்கே...' என்ற எண்ணம் தோன்றும்போதே 'எல்லாமே ரொம்ப சுமூகமாய் நடந்தேறுவது நல்லதொரு அறிகுறியாகப் படவில்லையே' என்று ஷெல்டனையே நினைக்க வைத்திருப்பது ஒன்றே போதும் - கதாசிரியரின் சாதுர்யத்தைப் பறை சாற்ற!

    கிளைமாக்ஸில், அந்த அணு ஆய்வுக்கூடம் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் தாக்கத்தை இரண்டொரு ஃபிரேம்களில் காட்டியிருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்!

    என்னுடைய ரேட்டிங் : 9/10

    ReplyDelete
  25. மருத்துவ விடுப்பில் போன ஆசிரியரே
    வந்துவிட்டார்.நண்பர்களை காணோமே?
    ஒருவேளை அனைவரும் மருந்தடித்துவிட்டு
    மருத்துவ விடுப்பில் உள்ளனரோ?
    13 பற்றிய பதிவுக்கு இந்நேரம் 250
    பின்னூட்டம் போயிருக்கணுமே.
    ஏம்பா நான் சரியாத்தான் பேசறனா??

    ReplyDelete
    Replies
    1. 13க்கு 13கமெண்டாவது இருக்கானு எண்ணிப்பார்த்தாகனும் போல...!

      Delete
    2. அட கேள்வியை தப்பா கேட்டா இதுதான் கத.
      இப்ப பாருங்க ஒருத்தர் கூட வாயை திறக்காதமாதிரி நான் சிம்பிளா நம்ம தல Xiii புலன்விசாரணை புத்தகம் பத்தி ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். ஒருத்தரு கூட பதில் சொல்ல மாட்டாங்க...

      "யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்?"

      Delete

    3. F&F லேயே(5வது கி.நா. சந்தா) EBFல் வருவதற்கு வாய்ப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது செந்தில்.

      அந்த வாய்ப்பு கி.நா. சந்தா அறிவிப்பு, புக்கிங், வெளியிட தோதான சமயம் என பல்வேறு காரணிகள் சார்ந்த ஒன்று...

      தீவாளிக்கு வந்தாலும் சந்தோசமே...

      2019சென்னையில் ரிலீஸானாலும் சந்தோசமே...(இதற்கு மேலே தள்ளி உள்ள வாய்ப்புகளை பார்க்க ஆரம்பித்தால்,ஒரு சிலர் நம்மை தள்ளி வைத்து விடுவாங்க)

      Delete
    4. இந்த வருட சந்தா + ரத்தப்படலம் காமிக்ஸுக்கான செலவை 7000ரூபாய்ககு மேல் அதிகரித்திருப்பதாகவும் , சந்தா எண்ணிக்கையும் 15% குறைவாக இருப்பதாகவும் போன பதிவில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அதையெல்லாம் பார்த்தால் என்னுடய எதிர்பார்ப்புகளை சற்றே குறைத்துக் கொள்வேன்.
      ஏப்ரலுக்குள் சந்தா இலக்கத்தை அடைந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    5. ///அதையெல்லாம் பார்த்தால் என்னுடய எதிர்பார்ப்புகளை சற்றே குறைத்துக் கொள்வேன்.///--- உண்மை மஹி ஜி.
      அனைத்தும் கதை செலக்சன்களும் அருமையாக இருந்தும் சந்தா எண்ணிக்கை போதுமான அளவை எட்டவில்லை எனும்போது எதிர்பார்ப்புகளை கட்டுக்குள் வைத்து கொள்வது நலம் பயக்கும். மார்ச் முடிய சந்தா புக்கிங் ஆக வாய்ப்பு இருப்பதால் அந்த 15% வந்துவிடும்.

      எல்லாம் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      Delete
    6. // யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்?"//
      எனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை.

      Delete
    7. அதுவும் ஒரு சிலர் சித்திரங்கள் குறைவாக கொண்டு நாவல் போல் அந்த இதழ் செல்லும் (?)என்று சொன்னவுடன் சுத்தமா எனக்கு ஆர்வம் இல்லை...

      அப்படி எதுவும் இல்லை வழக்கம் போல் இதழ்தான் என்றாலும் ஒரு வேறு வித சூழலுக்கு அந்த இதழ் கொண்டு வந்த காரணத்தால் அந்த இதழின் மீது சுத்தமாக ஆர்வம் போய்விட்டது நண்பரே...-(

      Delete
    8. ///எனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை.///என்னுடைய வாக்கும் இதற்கே...

      XIII சம்பந்தமான எல்லா கதையும் கலக்சன்ல இருக்கனும் என்பதைத் தாண்டி அதில் மிஸ் செய்யும் அளவுக்கு அதிமுக்கியமான கட்டங்கள் ஒன்றும் இல்லைதான்.

      ஒரு வேளை 14டூ18பாகங்களை நாம் படிக்காம இருந்து இருந்தால் அது சுவாரசியமான பாகமாக இருந்து இருக்கும். 67% கதையில் அதுவரை பாத்திரங்களின் பங்கு பற்றிய சுருக்கமான அலசல் தான் அது....!!!! இதற்கு மேல் அந்த பாத்திரங்கள் என்ன செய்யக்கூடும் என அந்த சமயத்தில் ஊகிக்க உதவியிருக்க கூடும். இப்பதான் நமக்கு 18பாகமும் தெரிந்து விட்டதால், அந்த ஊகிப்புக்கும் வேலையில்லை. மூல கதையில் எடிட்டிங் ஆன சில பேனல்கள் உள்ளன. அவையும் எடிட்டிங் ஆவதில் இருந்து தப்ப முடியாது தான் இம்முறையும் கூட....

      அதி தீவிர இரத்த படல ரசிகர்களைத் தாண்டி பொதுவான ரசிகர்கள் இடையே இது எடுபடாமல் போவதற்கான வாய்ப்பு தான் மிகப் பிரதானமான சவால் இதில்...

      Delete
    9. (பழைய) போராட்டக்குழுவின் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் புல்லரிக்க வைக்கின்றது 🙏🙏🙏

      Delete
    10. காமிக்ஸ் ஆர்வம் எப்போதும் உண்டு சார்,ஆனால் சரியான கனெக்டிங் பாயிண்ட் இல்லை என்ற இதழுக்காக வீண் பிடிவாதம் செய்வதை பொதுவாக விரும்புவதில்லை, தேவையான இதழ் கண்டிப்பாக தேவையான நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
      இதழை வெளியிடுபவர்க்கு தெரியாதா,அது தேவையா? தேவையில்லையா? விற்குமா? விற்காதா?
      என்று.அதீத ஆர்வம் என்னைப் பொறுத்தவரை எப்போதும் சங்கடத்தையே உண்டு செய்யும்.

      Delete
    11. அன்ப நண்பரே, 12B என்ற தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. யாராவது ஒரு 5 நிமிடங்கள் தாமதமாக திரையரங்கு சென்றால் படத்தில் ஒரு காட்சியும் புரியாது.
      இது தான் Xiii புலன் விசாரணை புத்தகத்தின் கதையும்.
      பூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.
      நன்றி 🙏

      Delete
    12. // 12B என்ற தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. யாராவது ஒரு 5 நிமிடங்கள் தாமதமாக திரையரங்கு சென்றால் படத்தில் ஒரு காட்சியும் புரியாது.
      இது தான் Xiii புலன் விசாரணை புத்தகத்தின் கதையும்.
      பூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.//

      அருமை அருமை, அருமையான உதாரணம் !! இன்னும் என்ன தயக்கம் ?!

      ( வெறும் நாறு தான். +1000 likes )

      Delete
    13. Arivarasu @ Ravi16 February 2018 at 20:25:00 GMT+5:30
      // யாருக்கெல்லாம் Xiii புலன்விசாரணை புத்தகம் EBFல வேண்டாம்?"//
      எனக்கு வேண்டாம்,வரலைன்னா கவலைப்பட போறதில்லை,வந்தாலும் கவலைப்பட போறதில்லை////


      ரவி னா ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை ...யாரோ என்னமோ கேட்டுட்டு போறாங்க னா. நீங்க ஏன் தேவையில்லாம பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.....

      Delete
    14. // பூவோடு சேர்ந்தால் தான் நாறுக்கு மனம். இல்லையென்றால் அது வெறும் நாறு தான்.
      நன்றி 🙏//
      இதுக்கு மேல் என்னோட கமெண்டிலியே பதில் இருக்கே.அது சரி,ஏதாவது ஒரு பரபரப்பு வேணும் இல்லையா.ஹா,ஹா,ஹா.

      Delete
    15. // ரவி னா ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.//
      அட விடுங்க சும்மா ஒரு கருத்து தான்.தேவைன்னு ஒருபக்கம் பேசினா,தேவையில்லைன்னு ஒரு பக்கம் சொன்னாதானே சுவராஸ்யம்.

      Delete
  26. Sir

    My name is Saravana Raja . I booked Ratha padalam on dec-2017 along with my 2018 subscription.
    The booking number given was 323, But there is another name(Mr. prince manual) mentioned for the number 323 in last month bluecoat book & here.
    I called lion office last month itself and they told it will be corrected. But still the same name is there .I want to confirm my Ratha padalam booking number , If it is not 323 give me the correct number.
    I have sent email to office.lioncomics@yahoo.com also . Please do the needful.

    ReplyDelete
  27. எடிட்டர் தளத்தை விட்டு தற்காலிகமாக விலகியபோது அவரை மீண்டும் தளத்துக்கு அழைக்க தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கியத்தின் மேல் என் கண் சென்றது ..
    நாரை,வண்டு ,புறா ,அன்னம் ,கலாபம் .முகில் ,கிளி என பலவகையாக ஆராய்ந்து இறுதியில் புரவி விடு தூது என ஒரு எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா எழுத முனையும் நேரத்தில் எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    மர்ம கத்தி ...................................
    இக்கதையை பள்ளி பருவத்தில் படிக்க நேர்நதிருக்குமாயின் பறக்கும் தட்டு பரவசத்தையும் கதையில் வரும் ஓநாய்கள் இரவு நேர தீக்கனவுகளையும் கொணர்ந்திருக்க கூடும் .
    ஆரம்ப கால கல்லூரி காலத்தில் படிக்க நேர்நதிருக்குமாயின் யோலண்டின் வதனத்தில் உள்ள துயர் துடைக்க கிளம்பும் ரோஜரின் இடத்தில் பொருத்தி பார்த்து மனம் கிளர்ச்சி அடைந்து இருக்க கூடும் .

    இவ்வயதில் கருத்தை கவர்வது ‘’’ பாறையை உடைக்க வல்ல அக்கத்தியே ..
    வூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ...
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// .


    ReplyDelete
    Replies
    1. A ROSE IS A ROSE IS A ROSE IS A ROSE…..
      ரோஜா கருப்பு ,வெள்ளை என இருந்தால் என்ன ..மஞ்சள் ,சிவப்பு என வண்ணத்தில் இருப்பின் என்ன .. அளவில் சிறியதாக இருப்பின் என்ன ..பெரிதாக இருப்பின் என்ன ..அது அளிக்கும் மணத்தில்.,மகிழ்ச்சியில் குறைவு எதுவும் இருப்பதில்லை ..

      வீரட்டும் விதி ........

      உருவுசிறிதாயினும் உள்ளத்தே உவகையூட்டும் நல்
      அரவுசிறிதெனினும் நடுங்குமிவ் வுலகு .
      டெக்ஸ் கதை குறித்த மேற்படி வெண்பா (??????)வில் உள்ள அணி குறித்து சரியாக விளக்குபவர்க்கு ஓட்டை இல்லாத மெதுவடையும் சுமாராக விளக்குபவர்க்கு ஓட்டையுடன் கூடிய மெதுவடையும் ஒருவேளை பரிசாக அளிக்கப்படலாம் ....
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    2. செங்குருதியும் ஜிலேபியும் ....
      வெண்பனியில் செங்குருதியில் உலா வரும் பூகோள அமைப்பு பற்றியதே இக்கருத்து ..(ஹிஸ்டரி எஸ்டிடி ஆகும்போது ஜியாகரபி ஜிலேபி ஆகப்படாதா என்ன ??)
      ஆன் சீரியஸ் நோட் ..
      1. வறண்ட புல்வெளி பகுதி ..
      டெக்ஸ் பொலார்ட் அன் கோ –வை துரத்த ஆரம்பிப்பது நமக்கு மிகவும் அறிமுகமான ஓக்லஹோமா பகுதியில் உள்ள டஸ்டின் சிறுநகரில் இருந்துதான் ...


      2. மலைப்பகுதி ...
      அங்கிருந்து கொலராடோ மாகாணத்தில் நுழைகின்றனர் பொலார்ட் கும்பல் ...மலை பகுதிகள் ,குகைகள் .இவற்றுக்கு பேர் பெற்றது கொலராடோ..
      கனடாவில் துவங்கி நியூ மெக்ஸிகோ வரை நீளும் ராக்கி மலைத்தொடரின் முக்கிய பகுதிகள் இங்கு உள்ளன ..கதையில் வரும் – BLACK MESA –இங்குதான் உள்ளது ..

      3. கடலோர பகுதி ...
      தேடுதல் வேட்டை பசிபிக் பெருங்கடலோர மாகாணமான கலிபோர்னியாவை அடைகிறது .

      4. தீபகற்ப மாகாணம் ..
      கதை அலாஸ்காவை நோக்கி நகர்கிறது...
      வடக்கே ஆர்க்டிக் சமுத்திரம்
      மேற்கே பெரிங் கடல்
      தெற்கே பசிபிக் பெருங்கடல்
      கிழக்கே நிலப்பகுதி கனடா .
      அமெரிக்காவின் பிற மாகாணங்களை தனது எல்லையாக கொண்டிராத இரண்டாவது மாகாணம் அலாஸ்கா .முதலாவது ஹவாய் .

      5. பனிப்பகுதி
      பொலார்ட் மற்றும் போன்ஸ் நிலப்பகுதி வழியாகவே கனடாவின் வட மேற்கு எல்லையான பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது யுகான் பகுதியை அடைந்து இருக்கலாம் .
      ஆனால் கதாசிரியர் அவர்கள் முடிந்தவரை அமெரிக்க எல்லைக்குள் இருக்க விரும்புவதாக காட்டி நெருக்கடி காரணமாக அலாஸ்காவில் இருந்து கனடாவின் நார்த்வெஸ்ட் பகுதியை சார்ந்த ஹார்ஸ் கிரீக் –க்குள் நுழைவதாக காட்டி இருக்கிறார் .. கதை ஹார்ஸ் கிரீக் –ல்தான் துவங்குகிறது ...
      நார்த்வெஸ்ட் பகுதி ஆர்க்டிக் வட்டத்தை மிகவும் ஒட்டி இருப்பதால் பனி, குளிர் மிகவும் அதிகம்
      உதாரணமாக இன்றைய தேதியில்
      கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் (.கலிபோர்னியாவின் வடக்கு எல்லை) – வெப்பநிலை
      அதிகபட்சம் +8 டிகிரி செல்சியஸ்
      குறைவானது +6 டிகிரி செல்சியஸ்.

      ஆனால் ஹார்ஸ் கிரீக் பகுதியில்
      அதிகபட்சம் -12 டிகிரி செல்சியஸ்
      குறைவானது -24 டிகிரி செல்சியஸ்
      ஆஹா ..நம்மூரில் தை மாத இறுதியில் உள்ள + 20 பனி குளிருக்கே மூன்று போர்வைகளின் அடியில் இப்பதிவை எழுதவேண்டியிருக்கிறது ..
      வெயிலின் உக்கிரம் உள்ள அரிசோனா ,டெக்சாஸ் பகுதிக்கு பழக்கப்பட்ட வில்லருக்கு போக்கிரிகளை துரத்தும் ‘’பணிச்சுமையோடு ‘’ இந்த ‘’ பனிச்சுமையும்’’ சேர்ந்து கொள்கிறது .
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////










      Delete
    3. மரணம் ஒருமுறையே ...
      ஹானஸ்டி ,ஆஸ்ட்ரிட் போன்றவர்களுக்கு அடுத்து கவனத்தை வெகுவாக இழுத்தது (ஹி ..ஹி .) ப்ராஜக்ட் டேரியஸ் .

      ஏன் டேரியஸ் என்ற பெயர் ???
      DARIUS …கிமு 522 முதல் கிமு 486 வரை ஆண்ட பெர்ஷியாவின் மாபெரும் பேரரசன் ..எல்லாவிதத்திலும் வல்லமை மிக்க மன்னன் ...ஏரோது ,நெபுகத் நெசார் போல பைபிளில் இடம் பெற்ற மன்னர்களில் ஒருவன் ..ஸ்திரத்தன்மை பெற்ற மாபெரும் அஹிமோனியன் சாம்ராஜ்யத்தை உருவாகியவன் ... இரு நூற்றாண்டுகளுக்கு பின்பு மஹா அலெக்சாண்டர் தோன்றியபின்பு இவன் உருவாகிய பேரரசின் புகழை குன்ற செய்தார் .

      ஈரானும் அணுகுண்டும் ..
      கதையில் வருவதுபோல் ரஷ்யா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானுக்கு வழங்கியதாக தெரியவில்லை ...பணம் பட்டுவாடா செய்யவில்லை என கூறி ரஷ்யா தாதுவை வழங்க மறுத்து விட்டது ..
      ஐரோப்பிய யூனியன் நாடுகள் ,அமெரிக்க நிர்பந்தங்களினாலேயே ரஷ்யா இவ்விதம் நடந்து கொண்டதாக ஈரான் எண்ணியது ..ரஷ்யா ஈரானின் நண்பனாக இருந்ததுமில்லை ..இனி இருக்க போவதுமில்லை என ஈரான் எண்ணியது ..
      சிவில் அணு ரீயாக்டர்களையும் ,மிலிட்டரி ரீயாக்டர்களையும் நமக்கு நாமே பாணியில் ஈரான் இரு தண்டவாளங்கள் போல் இன்னமும் ஈரான் முயற்ச்சித்துதான் வருகிறது ..

      நமது ஆராய்ச்சி ..
      விஞ்ஞானிகள் அணு ஆராய்ச்சிகள் செய்யட்டும் ..எனது லெவலுக்கு ஆராய்ச்சி செய்ததில் கதையின் ஆரம்பத்தில் தங்க மஞ்சள் தலைமுடியுடன் – GOLDEN YELLOW BLONDE – வரும் ஹானஸ்டி கதையின் முடிவில் கருப்பு முடியுடன் –PLUM BRUNETTE WITH A SHOCK OF ELECTRIC BLUE- வருகிறார் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது ..
      கதையை திருப்பி போடும் இந்த அபூர்வ கண்டுபிடிப்போடு பதிவின் இம்சையிலிருந்து வாசிப்போர் தப்பி உய்யலாம் .





      Delete
    4. ////எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.////

      சீக்கிரமே திரும்பி வந்து வாசகர்களைக் காத்த எடிட்டர் சமூகத்திற்கு நம் நன்றிகள்! :D

      ///வூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ...///

      ஹா ஹா ஹா!! :))))))


      ///A ROSE IS A ROSE IS A ROSE IS A ROSE…..
      ரோஜா கருப்பு ,வெள்ளை என இருந்தால் என்ன ..மஞ்சள் ,சிவப்பு என வண்ணத்தில் இருப்பின் என்ன .. அளவில் சிறியதாக இருப்பின் என்ன ..பெரிதாக இருப்பின் என்ன ..அது அளிக்கும் மணத்தில்.,மகிழ்ச்சியில் குறைவு எதுவும் இருப்பதில்லை ..///

      நேற்றைய (காதலர் தினப்) பொழுதின் தாக்கம் போல தெரிகிறதே?!! :P

      ///நம்மூரில் தை மாத இறுதியில் உள்ள + 20 பனி குளிருக்கே மூன்று போர்வைகளின் அடியில் இப்பதிவை எழுதவேண்டியிருக்கிறது ..///

      :))))))

      ////கதையின் ஆரம்பத்தில் தங்க மஞ்சள் தலைமுடியுடன் – GOLDEN YELLOW BLONDE – வரும் ஹானஸ்டி கதையின் முடிவில் கருப்பு முடியுடன் –PLUM BRUNETTE WITH A SHOCK OF ELECTRIC BLUE- வருகிறார் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது ..////

      கதையின் ஆரம்பத்தில் வருவது ஹானஸ்டி இல்லைன்னுதானே நினைச்சுக்கிட்டிருந்தேன்?!! பெயர் போட்ட மாதிரியும் தெரியவில்லையே...!?

      Delete
    5. ///
      உருவுசிறிதாயினும் உள்ளத்தே உவகையூட்டும் நல்
      அரவுசிறிதெனினும் நடுங்குமிவ் வுலகு .
      டெக்ஸ் கதை குறித்த மேற்படி வெண்பா (??????)வில் உள்ள அணி குறித்து சரியாக விளக்குபவர்க்கு ஓட்டை இல்லாத மெதுவடையும் சுமாராக விளக்குபவர்க்கு ஓட்டையுடன் கூடிய மெதுவடையும் ஒருவேளை பரிசாக அளிக்கப்படலாம் ....///


      வெண்பா - குறள் வெண்பா (ரெண்டே அடி இருப்பதால் ஹிஹி!!)

      அணி - தற்குறிப்பேற்ற அணி (உங்க கருத்தை, குறிப்பை இதன் மூலம் சொல்வதால்)
      அல்லது
      எடுத்துக்காட்டு உவமையணி (டெக்ஸ் கதை சிறிதெனினும் வீரியமானது என்பதை அரவு சிறிதெனினும் நடுங்கும் இவ்வுலகுன்ற எடுத்துக்காட்டுடன் சொல்வதால்)


      பின்குறிப்பு :
      ஒரு வடைக்கு ஆசைப்பட்டு சொல்லிட்டேனுங்க .. தமிழறிஞர்கள் தயைகூர்ந்து இச்சிறியேனை பொருத்தருள்க ..!!

      Delete
    6. // வூட்டுக்காரம்மா சுட்டு தரும் இட்லிகளை ,மைசூர் பாக்குகளை உண்ணுவதற்கு இது போன்ற கத்தி இருந்தால் தேவலை என்ற எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது ... //

      ஹா ஹா சி.அ.முடியல

      Delete
    7. ///நாரை,வண்டு ,புறா ,அன்னம் ,கலாபம் .முகில் ,கிளி என பலவகையாக ஆராய்ந்து இறுதியில் புரவி விடு தூது என ஒரு எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா எழுத முனையும் நேரத்தில் எடிட்டர் மீண்டும் தளத்துக்கு வந்துவிட அந்த விருத்தப்பாவினை படிக்கவிருந்த பேரபாயத்தில் இருந்து தளத்தின் வாசக சமூகம் தப்பி பிழைத்தது.///

      இவ்வரிகளே பேரிலக்கியம் படித்ததொரு உணர்வை உண்டாக்கிவிட்டது செனா.!! ;-)

      Delete
    8. ///கதையின் ஆரம்பத்தில் வருவது ஹானஸ்டி இல்லைன்னுதானே நினைச்சுக்கிட்டிருந்தேன்?!! ///

      மேற்கத்திய ஏகப்பத்தினி விரதன் வேய்ன் ஷெல்டனை சந்தேகப்பட என்ன தைரியம் உங்களுக்கு.??!

      Delete
    9. செனா அனா ஜி
      👌👌👌👌👌👌👌👌

      Delete
    10. செனா ஆனா.. நீங்க மருத்துவ தொழிலை விட்டு விட்டு எழுத ஆரம்பிச்சீங்கனா இன்னும் ஏகப்பட்ட ஜீவன்கள் இன்புற்றிருக்கும்... இன்னறைய நாளின் ஒரே சந்தோசம் உங்க பதிவை படிச்சதது தான்.. Thanks

      Delete
    11. மரபு சார் வெண்பா இலக்கணம்.
      சீர் மரபு.
      ஈரசை சீர்களில் மாச்சீர்,விளச்சீர் பெற்று வரும்
      மூவசைச் சீர்களில் காய்ச்சீர் வரும்,கனிச்சீர் வராது.
      தளை இலக்கணம்.
      நிலை மொழியீற்றில் மாச்சீர் பெற்றால் வருமொழி முதலில் நிரையசையே வரும்
      நிலைமொழியீற்றில் விளச்சீர் பெற்றால் வருமொழி முதலில் நேரசை பெற வேண்டும்.
      மரபு விதிகளுக்குட்படுத்தி மேற்சொன்ன வெண்பாவை(????) பகுப்பது அவரவர் புரிதலுக்கு.
      ஓர் பயனுள்ள தேடலுக்கு உந்துதலாய் அமைந்த செனா அனாவுக்கு நன்றிகள் பல.

      Delete
  28. ₹ 50,500/ நண்பர்களே நமது சக்திவேல் (எ) ராஜ சேகர் அவர்களுக்கு நமது காமிக்ஸ் குடும்பபத்திடமிருந்து அக்கவுண்டிலும்,நேரிலும் "கொடை" யாக கிடைத்துதுள்ளது.சிகிச்சை(மூலிகை)திரும்பி விட்டார்.EBFல் அனைவரையும் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளார்.அவரின் துணைவியார் கண்கள் பனிக்க தனது நன்றி யறிதலை தெரிவித்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான செய்தி.

      Delete
    2. நல்ல செய்தி, அருமை டாக்டர் சார்...

      Delete
    3. இனிப்பான தகவல் சூப்பர் சுவாமி நாதன் சார்

      Delete
    4. மகிழ்வான செய்தி...விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மகிழ்ச்சி மட்டும் குடிஇருக்க எனது மனப்பூர்வமான வேண்டுதல்கள்...

      Delete
    5. ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதற்கு இதுவே உதாரணம் நல்ல இதயங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
    6. ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதற்கு இதுவே உதாரணம் நல்ல இதயங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
    7. மேலே உள்ள எனது பதிவு ஏற்கனவே போடப்பட்டு பதிவேற்றம் ஆகயிருந்தும்¸ தற்பொழுது காணவில்லை. காரணமும் விளங்கவில்லை.

      Delete
  29. ****** இந்தவாரக் கிசுகிசு ******

    அந்தக் கருணையுள்ளம் கொண்ட அன்புள்ள அனாமதேயா மீண்டும் தன் 'வேலையை' காட்டியிருக்கிறாராம். பாதிச் சந்தா கட்டியிருந்த தாரைத் தலீவருக்கு மீதச் சந்தாவையும், இந்த வருடம் சந்தா செலுத்தமுடியாத சூழலில் இருந்த - ராசியில்லாத அந்த நம்பரை நெஞ்சில் பச்சைகுத்தியிருக்கும் ஒரு ரம்மியமானவருக்கு முழுச் சந்தாவையும் அன்புப் பரிசாக்கியுள்ளாராம்!

    அனாமதேயாவின் அன்பு அழிச்சாட்டியங்களுக்கும் உண்டோ அடைக்குந்தாழ்!!

    ReplyDelete
    Replies
    1. வாவ்..
      வாழ்த்துக்கள் தலீவரே...💐

      வாழ்த்துக்கள் ரம்மி XIII...🌷

      அனாமதேயருக்கு பாராட்டுக்கள்...

      Delete
    2. அனாமதேயரே
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      தலைவர் & ரம்மி
      வாழ்த்துக்கள்

      Delete
    3. எனக்குமா... I am blessed... நன்றிகள் ... தமிழும் அப்பப்போ வார்த்தை இல்லாமல் தவிக்குது... ஏன்னா என்ன சொல்றதுன்னே தெரியலை..

      Delete
    4. ரம்மியின் நிலைப்பாடே எனதும்...அந்த அன்புள்ள அநாமதேயருக்கு எனது கனிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.கிசுகிசுத்த செயலருக்கும்...வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

      ( எதற்கும் கொஞ்சநாள் மருத்துவ விடுப்பு எடுக்கலாமான்னு யோசனை..பொருளாளலும் வந்துட்டாரு ...பிரச்சனையில்லைதான்..:-))

      Delete
    5. தலைவருக்கும் அன்பு நண்பர் ரம்மிக்கும் வாழ்த்துக்கள் .

      Delete
  30. சக்தி வேலலுக்கும் கனிசமாக வாரி வழங்கிகயதாக கொங்கு மண்டல பட்ஷி யோ!பூனை யோ சொன்னது நன்றி கள் உரித்தாகட்டும்.இதை யும் சேர்த்து கொள்ள வும் செயலரே.

    ReplyDelete
  31. 1,2,3....446 வரைக்கும் முக்கா முக்கா மூணுதாரம் பாத்தாச்சி....ஆனா நம்ம பேரே இல்லியே...நாந்தேன் சந்தா கூடவே, இ.ப வேணும்னு போன மாசத்துக்கு அதுக்கு முந்தின மாசத்துக்கு முந்தின மாசம் சொல்லிருந்தேனே சார்....ஒரு வேள லிஸ்டுல நம்ம பேர ஆபிசுல சேர்க்க மறந்துட்டாங்களோ, இல்ல அச்சுல கோக்க மறந்துட்டாங்களோ ... பதிமூணு ராசி அப்பிடி (ஆனா மொத்தமே பன்னெண்டு ராசி தானே...!)

    ஏற்கனவே பிளாக் அண்ட் ஒயிட்ல வந்தத பிளாக்ல வித்த ரேட்டுல நீங்க கலர்ல போடுறீங்க...அப்புறம் அதையும் பிளாக்குல வாங்க வேண்டி வந்துருமோ...அதெல்லாம் கம்பெனிக்கு கட்டு படியாகாது சாமீயோவ் ...!!!??? கொஞ்சம் பாத்து செய்யுங்க... ஆயுள் சந்தாதாரர் ஆன நமக்கே இப்படியா....!

    ReplyDelete

  32. எமனின் எல்லையில் Vs பாலைவனத்தில் புலனாய்வு...!!!


    *ஏற்கெனவே வெளி வந்த "எமனின் எல்லையில்'-க்கும்; அடுத்த மாதம் வரப்போகும் "பாலைவனத்தில் புலனாய்வு"-க்கும் இருக்கும் ஒற்றுமைகள் இரண்டும் டெக்ஸ் கதைகள். அடுத்து 2ம் படுக்கை வசத்தில் வெளிவந்த அட்டைப்படங்கள். அதைத்தாண்டி ஒற்றுமைகள் இருக்கப்போவது இல்லை. ஹாங், இருக்கு, இரண்டிற்கும் வித்தியாசமான பாணி ஓவியங்கள்...

    *மிக முக்கிய அம்சமான, "கதை"யில் எப்படி எனப்பார்த்தால் இரண்டும் வேறு வேறு திசையில் இருக்குமோ??? அல்லது ..... ?. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு ச்சே அரதப்பழசான உதாரணம். புதுசா சொல்லுவோம். ம், சைஸ்ல மைக்ரோ மினியானாலும் (டூப்பர் டாப்பர் ஹிட் அடிச்சி)டாப் செல்லராக வந்த " விசித்திர சவால்" போல கதையும் ஜொலிக்குமோ...!!!

    *முன்னது மாஸ் ஹிட் அடித்த 3பாக சாகசத்தின் க்ளைமாக்ஸ் பாகம். பின்னது 112பக்க ஒரே பாக சாகசம். இருப்பினும் டஃப் பைட் கொடுக்கும்னு நம்புவோம்.

    *"என்னய்யா எப்பப் பார்த்தாலும் ஒரே கும் கும்முனு குத்துவாரு, இல்லீனா சுட்டுத்தள்ளிட்டே இருப்பாரு, நீ என்னமோ மாஸ் ஹிட்டுனு கூவுற...???"--- அப்டீனு கேட்டீங்கனா சரியான கேள்விதான் அது....

    *"எமனின் எல்லையில்" அட்டைப்படம் மட்டுமல்ல கதையும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோ தான்... வழக்கமா, பெரும்பாலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் தீம்தான் தான் கையாளப்பட்டு இருக்கும். இதில் வித்தியாசமான பல லிங்குகளை இணைக்கும் தீம்.

    -இளைஞர்களுக்கு போதை மருந்துகளை விற்றதால் தன்னை ஒதுக்கி வைத்த டெக்ஸை, பழிவாங்கத் துடிக்கும் நவஹோ மாந்த்ரீக கிழவன் யானடோ...

    -புரட்சிகர சிந்தனை கொண்ட,யானடோவின் தூண்டுதலால் டெக்ஸை போட்டுத் தள்ளிட்டு தலைவனாகத் துடிக்கும் இளைய நவஹோ "ஸ்விப்ட் பேர்"(கரடி)

    -நவஹோக்களுக்கு துப்பாக்கி விற்று புரட்சியை தூண்டி விடும் ஓவரெண்ட்...

    -புகழும் பெயரும் சாதிக்க என போக்கு காட்டிட்டு, போரைத் துவக்கி நவஹோக்களின் தங்கத்தை ஆட்டைய போட நினைக்கும் டெபியன்ஸ் கோட்டை மேஜர் வெல்மேன்...

    *இத்தனை சுயநல நரிகளுக்கு மத்தியிலும் தன் நவஹோக்களை காக்க போராடும் டெக்ஸ், டெக்ஸுக்கு இணையாக ஆவர்த்தனம் செய்து மிளிரும் கார்சன் என செமயான சாகசம் இது. தன்னைக் கொல்ல முயலும், மேஜரின் முயற்சியில் மாட்டி மீள்வது, அப்பாவி நவஹோக்கள் சிலர்-தங்கள் இனத்தை சேர்ந்த ஸ்விஃப்ட் பேரின் வீரர்களால் கொல்லப்படுவதை தடுக்க முடியாமல் போவது என நிறைய இடங்களில் அசாதாரண ஹீரோவாக இல்லாமல் சாதாரண பழங்குடியின தலைவனாகவே டெக்ஸ் பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கும்.

    *மழை வெள்ளத்தில் சிக்கித் தப்பி, புரட்சி நவஹோக்களால் கணவனை இழந்த அலிசனை மீட்டு நவஹோ கிராமம் திரும்பும் டெக்ஸ் அணியும், காணாமல் போன டெக்ஸைத் தேடி( துப்பாக்கி பரிமாற்ற குழுவின் நபரை கைது செய்து அழைத்து கொண்டு) விரையும் கார்சன்&கிட் அணியும் எதிரெதிர் திசையில் மலைத்தொடரின் இரு பக்கங்களிலும் செல்லும் காட்சி செமயான ஒன்று.

    *க்ளைமாக்ஸில் ஒற்றைக்கு ஒற்றை மோதல் நடக்கும் இடம் செலி கன்யாணின் குத்துப்பாறை காட்சிகள் தத்ரூபமான ஓவிய உன்னதம்.

    *அலிசனுடன் மெல்லிய ரொமாண்டிக்ல டெக்ஸ் சிக்கிடுவாரோ என்ற லேசான எதிர்பார்ப்பு வரும்படி கதை நகரும், நமக்கும் ஒரு எதிர்பார்ப்பு நிலவ அது எத்தகைய ட்விஸ்ட் ஆவுதுனு கதையில் பார்த்து தெரிந்து கொள்வது சுவாரசியமான கிளைமாக்ஸ்...!!! கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் அக்மார்க் சாகசம் இந்த 3பாக தொடர். 330பக்கங்கள் பயணிப்பதே தெரியாது.

    *இதே போல "பாலைவனத்தில் புலனாய்வு" ம் வித்தியாசமான படைப்பாக இருக்குமா என பார்க்க இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கனுமே...காத்திருப்பும் சுகமே....

    சில காட்சிகளை ரசிக்கலாம் இந்த லிங்கில்:-

    https://m.facebook.com/vijayaragavan.salem.3/posts/pcb.2007535426171222/?photo_id=388237028313947&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.2007535426171222%26photo%3D388237028313947%26profileid%3D100013829590575%26source%3D48%26refid%3D18%26_ft_%3Dqid.6522803516324881352%253Amf_story_key.2007535426171222%253Atop_level_post_id.2007535426171222%253Atl_objid.2007535426171222%253Asrc.22%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdf=1

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அருமையான விமர்சன அலசல் விஜயராகவன்

      Delete
  33. //வலது ஓரம் இருப்பது கேப்டன் டைகரின் பிதா மகன் ஜிரௌ. ..//

    ஏலே! எல்லாரும் ஒடியாங்கலே.!வசமா சிக்கிட்டாமுல்ல!டைகர டம்மி பீஸாக்குனது இவந்தமில்ல.!ஒரே அமுக்க அமுக்குலே.!!

    ReplyDelete
  34. சென்னையில் சந்தா கட்டாதவனின் அனுபவம் இன்று.!


    சென்னையில் பீக்அவர்ஸில் ஓரு பத்து கிலோமீட்டர் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.இருந்தாலும் டிராபிக்கில் நீந்திபோய் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெல்கோ புத்தககடைக்கு சென்றேன்.காமிக்ஸ் என்றதும் அதன் உரிமையாளர் இந்த மாத இதழ்கள் அனைத்தும் விற்றுவிட்டது.என்றார் ஆர்டர் செய்துள்ளேன் இரண்டு நாட்கள் கழித்து வரச்சொன்னார். டெக்ஸ் வில்லராவது இருந்தால் கொடுங்கள் என்றேன்.ஏற இறங்க பார்த்தவர் வந்தவுடனே விற்று தீர்ந்தது டெக்ஸ்புத்தகம்தான் என்றார்.!

    அவர்பேச்சில் என்னைப்போல் சந்தா கட்டாத நிறைய பேர் இம்முறை அதிகமாக முற்றுகையிட்டது தெரியவந்தது.!!

    அவ்வளவு தூரம் மெனக்கெட்டு பயணம் செய்து புத்தகம் கிடைக்கவில்லை என்ற சோர்வு இருந்தாலும்.நம் காமிக்ஸ் கிடைக்க டிமாண்ட் ஏற்பட்டது குறித்து மனம் நிறைவாக இருந்தது.!


    எடிட்டர் சார்!

    சென்றமுறை செல்லாத நோட்டை செலுத்தி சந்தா ஈசியாக கட்டிவிட்டோம்.!இம்முறை பணபுழக்கம் குறைவாக இருப்பதால் என்னை போன்று சுயதொழில் செய்வோருக்கு இரண்டு தவணையாக கட்ட ஒரு ஆப்ஷன் கொடுக்கலாமே.??


    உங்களது சைக்ளோ ஸ்டைல் பணியாளர்களால் உங்களுக்கு சிரமம் ஏற்படின் பகுதி தொகை கட்டுவோருக்கு டம்மி சந்தா சீரியல் எண் கொடுக்கலாமே.???

    எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்.?????

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டியாரே...

      நீங்க ரொம்பவே மாறிட்டதா மனசுக்குள்ள பட்சி சொல்லுது!

      இரண்டு, மூன்று சந்தாக்கள் கட்டி பக்கத்து வீட்டுக்கெல்லாம் படிக்கக் கொடுத்தவர் நீங்க! பணப்புழக்கம் குறைவால இப்போ... ஹூம்!

      இதுவும் கடந்துபோகும்!

      இது ஒருபுறமிருக்க,
      CBF-2017க்கு உங்களால் எட்டிப்பார்க்க முடியவில்லை! கேட்டதற்கு குடும்பச் சூழ்நிலை காரணமென்றீர்கள்!
      CBF-2018லாவது உங்கள் தலை தென்படுமென்று நினைத்தேன். ம்ஹூம்! பக்கத்திலிருக்கும் மடிப்பாக்கத்திலிருந்து ஒரு மாலைப் பொழுதிலாவது புத்தகத் திருவிழாவுக்கு எட்டிப் பார்த்திருக்கலாமே? ஒருவேளை இந்த வருடமும் வரமுடியாத சூழல் இருந்திருக்கலாம் தான்! ஆனால் ஒரு ஃபோன் கால் செய்யக்கூடவா நேரமில்லை?!

      என்னமோ போங்க மாதவன் சார்!!

      Delete
  35. ஆர்மியாரே....இரு தவணை முறை எப்பொழுதும் போல இந்த முறையும் உண்டே....நானும் ஆரம்பத்தில் பாதி தவனையை தான் கட்டியிருந்தேன்..:-)

    ReplyDelete
  36. மறுபடியும் முதல்ல இருந்தா...


    பழைய போராட்ட குழுவா இருந்தாலுமே பரவால ...நாம ஆசிரியரை நிம்மதியா வேலை பாக்க விடுவோம்..


    அதனால யார் என்ன சொன்னாலும்..என்ன கேட்டாலும் கம்முன்னு போடா
    பரணி....!

    ReplyDelete
    Replies
    1. தலைவரே பேசணும்னு முடிவு பண்ணிட்டா,நீங்க எது செஞ்சாலும்,எது சொன்னாலும் பேசிகிட்டேதான் இருப்பாங்க.இதுக்கல்லாம் கவலைப்பட்டா முடியுமா?!

      Delete
    2. எது எப்படி இருந்தாலும் ஆசிரியரின் வேகத்துக்கு தடை போட முடியாது என்பதே நிதர்சனம்.

      Delete
    3. என்ன பன்றது ரவி ..நாம திட்டி பேசுனா கூட அடுத்தவங்க மனசு சங்கடபட கூடாதுன்னு நினைக்கிறோம்.ஆனா எல்லோரும் அப்படியா என்ன...;-)


      சில சமயம் மெளனமே வலிமையான மொழியாகவும்,ஆயுதமாகவும் பயன்படுகிறது அல்லவா..:-)

      Delete
  37. புலன் விசாரணை படிச்சாத்தான் இரத்த படலம் புரியுமா...????

    ஙே....ஙே..ஙே....

    இதென்னபா புதுப் புதுப் புரளியா இருக்கு....

    18பாகமும் ஒரே இதழ்ழ ஜம்போவா வந்தபோது எல்லாரும் தானே வாங்கி படித்தோம். எல்லோருக்கும் தெளிவாகவே புரஞ்சது. அதில் கிடைத்த திருப்தி தானே இன்று வண்ணத்தில் வாங்க எல்லோரும் பதிவு செய்துள்ளோம். புரியலனா இம்புட்டு விலைக்கு புக்கிங் தான் பண்ணுவோமா???

    "புலன் விசாரணை" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...!!!

    இரண்டு வருடம் முன்னாடியே அதை படித்து விட்டேன், கதையை இணைக்கும் புள்ளியும் இல்லை;கோலமும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. +1

      புலன் விசாரணை வருவது எப்டியோ உறுதியாயிடுச்சு. ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது.

      Delete
    2. ///ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது////--அதே அதே G.P.

      Delete
    3. புலன் விசாரணை" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...!!!

      :+))))


      உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன..

      Delete
    4. "உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன.."

      Dear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.

      Delete
    5. "புலன் விசாரணை" நார் அளவுக்கெலாம் ஒர்த் இல்லை சாமிகளா...!!!
      Dear சேலம் Tex விஜயராகவன், தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.
      Also NO NEGATIVE விமர்சனம் about any comics books please.

      Delete
    6. ஏன் செந்தில் ஏன்???

      XIII என்னா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா????

      சந்தைக்கு வந்துட்டா மாட்டுக்கு எத்தினி பல்லுனு பார்த்து தானே விலை பேச முடியும்...!!!

      நல்லா இல்லாத கதையை நல்லா இல்லைனு தானே சொல்ல முடியும்.

      நல்லா இல்லாத கதையை நல்லா இல்லைனு சொல்லாமல் வேறெப்படி சொல்றதாம்.



      Delete
    7. //"உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன.."

      Dear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.//

      +1 உண்மை !

      இதுபோன்ற விமர்சனங்கள் இரத்தப்படலம் முன்பதிவை தொய்வடையச் செய்து விடாதா?? இது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை ??

      ஆசிரியர் நஷ்டமடைந்து விட மாட்டாரா?? எங்கள் இலக்கு 600 + முன்பதிவு. தயவு செய்து அதைப் பாழாக்கிட வேண்டாமே ??

      Delete
    8. டெக்ஸ் கதை நல்லா இல்லைனு காய்ச்சி காய்ச்சி ஊற்றியவர்களிடம் இது போல் நான் கேட்டு கொள்ள வில்லையே...

      காசு கொடுத்து வாங்குபவரின் உரிமை விமர்சனம் செய்வது;

      நமக்கு பிடித்த ஹீரோ என்ற உடன் அவரை விமர்சனம் பண்ணாதீங்கனு கட்டளை போட முடியுமா என்ன????

      Delete
    9. A ROSE IS A ROSE IS A ROSE.
      A COMICS IS A COMICS IS A COMICS.
      தயவு செய்து இதில் டெக்ஸ், Xiii, டைகர் என்ற பாகுபாடு வேண்டாமே நண்பரே 🙏

      Delete
    10. ///டெக்ஸ், Xiii, டைகர் என்ற பாகுபாடு வேண்டாமே நண்பரே///--- இதைத்தான் நானும் சொல்கிறேன் நண்பரே...

      கதைனு வந்துட்ட பிறகு விமர்சனம் செய்வது தான் முறை. அது நெகடிவா, பாசிடிவானு எடுத்து கொள்வது நம்ம பார்வையில் தான் உள்ளது.

      வாசகரின் பார்வையில் என்ன உணருகிறாரோ அதை அவர் சொல்லத்தானே வேணும். இதில் டெக்ஸ் உசத்தி, XIIIஉசத்தி;
      இவுங்களை உயர்த்தி மட்டுமே விமர்சனம் பண்ணுங்க என சொல்வது நடைமுறை சாத்தியமானது தானா???
      அப்படி சொல்வது நகைப்புக்கு இடமளித்து விடாதா?

      என்னைப் பொறுத்து புலன் விசாரணையில் கலக்சனுக்கு என்ற அம்சத்தை தாண்டி வேறெதும் இல்லை. இரத்த படலம் என்ற மெகா விருந்தை "புலன் விசாரணை"
      என்ற பதார்த்தம் இல்லாமலே ருசிக்கலாம்.

      Delete
    11. இங்கே யாருமே பதிமூன்று இரத்தபடலத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் பண்ணவே இல்லையே மீண்டும் திசை மாற்றுவது ஏனோ..படலத்திற்கு பிறகு வந்த இதழ்கள் இரத்த படலத்துக்கு ஈடு செய்யவில்லை என்பது இரத்தபடலத்தின் பெருமையை தான் பறைசாற்றுகிறது நண்பரே..

      ஆசிரியரே இதற்காக பிரேக் விட்டும் மீண்டும் மீண்டும் இழுப்பது ஏனோ..தெரியவில்லை.:-(

      Delete
    12. இரத்தப்படலம் வரவேண்டும் என்று ஆசிரியர் முடிவெடுத்த பிறகு அந்த இதழ் வெளிவந்தால்தான் அடுத்த இலக்கிற்கு செல்ல முடியும் என்பது அவர் உட்பட அனைவருக்கும் தெளிவு,ஆக நல்ல இலக்கு எட்டி வருவது சரி,ஆனா பு.வி வந்தாதான் நல்ல இலக்கை எட்டும் என ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதேன்,அடக் கொடுமையே ஒன்னுமே புரியலையே.
      என்ன கொடுமை சார் இது.

      Delete
  38. இந்த மாத இதழ்கள் அனைத்தும் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளன. அதிரடிக்கு டெக்ஸ் வில்லரும், வேய்னே .ஷெல்டனும் இருக்க, ஃபன்டஸியை ரோஜரும், கவலைகளை மறக்க ரின்டின்கேன் குழுவினரும் மிக நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்!

    அடுத்த மாதம் வரக்கூடிய ஜில்ஜோர்டான் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்...

    ReplyDelete
  39. ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது

    #####

    உண்மை கோவிந்த்ராஜ் சார்..:-(

    ReplyDelete
    Replies
    1. +1

      புலன் விசாரணை வருவது எப்டியோ உறுதியாயிடுச்சு. ஆனா அதை இரத்தப்படலத்தோடு கூடவே வரணும்ங்கிறதுதான் சங்கடத்தை உண்டாக்குகிறது.

      Dear Govindaraj Perumal நண்பரே,
      சாப்பிடும் உணவில் உப்பு இல்லாவிட்டால் நாம் அனைவரும் அந்த சாப்பாட்டிலேயே தான் உப்பு சேர்த்து சாப்பிடுகிறோம். 2 அல்லது 3 மாதம் கழித்து என்றாவதா நாம் உப்பை தனியாக சாப்பிடுகிறோம்?

      Delete
    2. உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.

      Delete
    3. ///உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.///+1000

      Delete
    4. உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.

      :-))))

      Delete
    5. // உப்பை வைத்து தப்பான உதாரணம் காட்டி விட்டீர்களே.//
      +11111111111

      Delete
    6. அன்பு நண்பர்களே......
      சரியான உதாரணம் please 🙏🙏🙏

      Delete
  40. இந்த புலன்விசாரணை படலத்தை பார்க்கும் போது தேசிங்கு ராஜா என்ற படத்தில் வரும் சிங்கம் புலி,பரோட்டா சூரி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
    #அடியாள்:அண்ணே!இரண்டு பந்தி முடிஞ்சும் எந்திரிக்க மாட்டேங்கிறாண்ணே!
    சிங்கம் புலி:பாயசம் எங்கடா?
    அடியாள்:அண்ணே!அவன் பாயசம் கேட்கிறாண்ணே!
    சூரி:அடேய்!பக்கத்து இலையிலிருந்தாவது எடுத்து கொடுங்கடா!
    அடியாள்:அண்ணே!இங்க பாயசமே வைக்கலையாம் அண்ணே!#
    விருந்து மட்டும்தான்!பாயசம் கிடையாது என்பது எடிட்டரின் முடிவு!இது போல் ஒரு விருந்து இனி வராது.பாயசம் இருந்தால் நன்றாயிருக்கும் என்பது வாசகர்கள் எதிர்பார்ப்பு.
    😉


    ReplyDelete
    Replies
    1. Fantastic Boopathi.
      ஆனால் (பழைய) போராட்டக்குழு இதற்கு எதிர்ப்பு (நன்றாக வாசிக்கவும் 'எதிர்பார்ப்பு' அல்ல 'எதிர்ப்பு') தெரிவிக்கிறார்களே!!!

      Delete
    2. ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியமாட்டேங்குது.
      Xiii புலன் விசாரணை தமிழில் வந்தால் ஒருவேளை மூன்றாம் உலகப்போர் வந்திடுமோன்னு (பழைய) போராட்டக்குழு எதிர்க்குதோ?

      Delete
    3. இருக்கலாம் நண்பரே இனிமே வந்து நல்லாருந்தாகூட நல்லாயில்லைனுதான் பேச்சு வரும்.
      புலன்விசாரணைக்கு வரும் இவ்வளவு நேர்மையான கருத்தை அனைத்து கதைகளுக்கும் கருத்தை சொல்லுங்களேன் நண்பர்களே .
      எடிட்டரே இதப்பத்தி நான் பாத்துகொள்கிறேன் என கூறியபிறகும் இதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத நண்பர்களை நினைக்கும் போது சற்று மனவருத்தமாக உள்ளது போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க நண்பர்களே புலன்விசாரணை வந்தபிளகு பேசிக்கலாம்

      Delete
    4. பழைய (உங்கள் பார்வையில் ) போராட்ட குழு அந்த இதழை எதிர்க்கவில்லை செந்தில் அய்யா....ஆசிரியர் அதற்கான முடிவை சொல்லிய பிறகும் ..அதனால் சிலர் சங்கடம் அடைய நேர்ந்தும் ..அதற்கும் ஆசிரியர் விளக்கம் அளித்தும் மீண்டும் மீண்டும் அதை பற்றியே இழுப்பது ஏனோ என்றுதான் பழைய (உங்கள் பார்வையில் ) போராட்டகுழு எதிர்க்கிறது அய்யாஆஆ..

      Delete
    5. / எதிர்ப்பு (நன்றாக வாசிக்கவும் 'எதிர்பார்ப்பு' அல்ல 'எதிர்ப்பு') தெரிவிக்கிறார்களே//
      அதென்ன பழைய போராட்டக் குழு?
      எதிர்ப்பு என்பது 100 சதவீத தவறான புரிதல்.

      Delete
  41. மரணம் ஒரு முறையே...

    இன்று இரண்டாவது முறையாக ரசித்து படித்தேன்.முதல்முறை போலவே அதே பரபர விறுவிறு உணர்வு.இப்பொழுது எல்லாம் டெக்ஸை போல ஷெல்டனும் மீண்டும் மீண்டும் தேட வைக்கிறார் ..:-)

    ReplyDelete
  42. //"உண்மையை சொன்னா ரத்தபடலத்திற்கு பிறகு வந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்கள் அனைத்துமே தெளிவை விட குழப்பத்தை தான் விளைவித்தன.."

    Dear Paranitharan, தயவு செய்து Xiiiற்கு இது போன்று NEGATIVE விமர்சனம் வேண்டாமே.//

    +1 உண்மை !

    இதுபோன்ற விமர்சனங்கள் இரத்தப்படலம் முன்பதிவை தொய்வடையச் செய்து விடாதா?? இது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை ??

    ஆசிரியர் நஷ்டமடைந்து விட மாட்டாரா?? எங்கள் இலக்கு 600 + முன்பதிவு. தயவு செய்து அதைப் பாழாக்கிட வேண்டாமே ??

    ReplyDelete
    Replies
    1. நம்ம என்ன கத்துகத்துனாலும் புரியாது எடிட்டர் சொன்ன சொல்ல மதிச்சு நாங்க அதபத்தி கேக்கவில்லை சும்மா பொழுது போகலேனா புலன்விசாரணையை கையிலேடுப்பது என்னைப்பொருத்தவரை எடிட்டரின் சொல்லை ஒரு பொறுட்டாக மதிக்கவில்லை என்பதே எனது கருத்து அந்த புக்க போடலாமா வேண்டாமா என்பதை அவரிடமே விட்டுவிட்டோம் நல்ல முடிவை அவர் எடுப்பார் நண்பர்களே

      Delete
    2. அழகாக சொன்னீர்கள் சார்...:-)

      Delete
    3. இப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே முடிந்தால் அதற்க்கு உதவுங்கள் நண்பர்களே...!

      Delete
    4. #நல்ல முடிவை அவர் எடுப்பார் நண்பர்களே#

      #இப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே#

      #அழகாக சொன்னீர்கள் சார்...:-)#

      Double ok sir!👌

      Delete
    5. இப்போ நம்முடைய நோக்கம் முன்பதிவு 600 என்பதே முடிந்தால் அதற்க்கு உதவுங்கள் நண்பர்களே...!


      #####₹


      புலன் விசாரனை பண்ணி அதை தடுத்து விடாதீர்கள் நண்பர்களே..:-(

      Delete
  43. தலீவரே...

    கொஞ்ச நாள் கோஷம் போடாம லீவு விட்டதுக்கே நம்மை 'பழைய' போராட்டக்குழு'ன்னு சொல்லிட்டாங்களே...?!! நல்லவேளையா 'காலஞ்சென்ற' போராட்டக்குழு'ன்னு சொல்லலை! :D
    பேசாம 'போராட்டக்குழு மருத்துவ விடுப்பில் போயிருந்தது'ன்னு சொல்லி சமாளிச்சுடுவோமா தலீவரே? :P

    ReplyDelete
    Replies
    1. அப்படி தான் ஆயிபோச்சு செயலரே...


      போராட்ட குழு கோஷம் போட்டா சால்ரா ..சால்ரா ...ங்கிறாங்க எதுக்கு வம்புன்னு அமைதியா இருந்தா பழைய குழுவாம்..

      இதிலியே தெரியலையா...இவங்களுக்கு வேணுங்கிறது வேற ...:-)

      Delete
    2. (பழைய) போராட்ட குழு--- ஹா...ஹா..சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்குது தலீவரே...

      Delete
    3. // போராட்ட குழு கோஷம் போட்டா சால்ரா ..சால்ரா ...ங்கிறாங்க எதுக்கு வம்புன்னு அமைதியா இருந்தா பழைய குழுவாம்.//
      போராட்டக் குழுவின் சத்தம் யாருடைய காது ஜவ்வை பதம் பார்த்து விட்டதா என்ன?!

      Delete
    4. தலைவர் & செயலாளர்,
      அட இப்போதைக்கு கொஞ்சம் நிறுத்திக்குவோம்பா. காலையில புதுபதிவு வரும் போது மறுபடி 'ஸ்டார்ட் மீஜிக்'ன்னு ஆரம்பிக்கலாம்.
      அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 😀😜🤓.

      Delete
    5. ///அப்படி தான் ஆயிபோச்சு செயலரே...///

      அதை 'ஆகிப்போச்சு'னு சொல்லணும் தலீவரே... ஆகி.. ஆகி.... :D

      Delete
    6. //அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 😀😜🤓.//
      +11111

      Delete
  44. ச்சே...இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்..

    மூடையே கெடுத்துட்டாங்க நாளைக்கு புது பதிவிலியே சொல்லிக்கிறேன்..:-(

    ReplyDelete
    Replies
    1. டூத் பேஸ்டிலேயே உப்பு இருக்கும்போது,
      சுவையான செய்தியிலயும் கண்டிப்பாக உப்பு இருக்கும் 😋

      Delete
    2. ////இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்..///

      பதுங்கு குழிக்குள்ள யாராவது பணியாரத்தை வீசிட்டுப் போய்ட்டாங்களா தலீவரே?

      Delete
    3. நல்ல செய்தியெல்லாம் உடனே சொல்லிரனும் தலைவரே தள்ளிபோடகூடாது

      Delete
    4. /////இன்று மாலை நடந்த ஒரு சுவையான நல்ல செய்தியை பகிரலாம் என வந்தேன்../////

      ஆங், புரிஞ்சுடுச்சு! போனவாரம் சிவகாசிக்கு நீங்க எழுதியனுப்பிய கடுதாசி நம்ம அலுவலக சகோக்கள் கையில கிடைச்சிருக்கும்... 'மன்னிக்கவும் சார்! நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே? :D

      Delete
    5. செயலரும் எனக்கு எதிரா "ஸ்லீப்பர் " வச்சு இருக்காரா ன்னு தெரியலையே...:-(

      Delete
    6. டூத் பேஸ்டிலேயே உப்பு இருக்கும்போது,
      சுவையான செய்தியிலயும் கண்டிப்பாக உப்பு இருக்கும்

      ####₹

      :-))))


      ம்...செந்தில் சார் இது கரீட்டான உதாரணம்...:-))

      Delete
    7. உணவு சிறக்க அறுசுவையும் வேண்டும்.
      இனிப்பு காரம் புளிப்பு மட்டும் பத்தாது.
      கசப்பு உப்பு துவர்ப்பும் தேவை.
      பல க்ராபிக் கதைகளை ஜீரணம் செய்த
      நாம் இதையும் ஜீரணிக்க மாட்டோமா.??

      Delete
    8. //
      ஆங், புரிஞ்சுடுச்சு! போனவாரம் சிவகாசிக்கு நீங்க எழுதியனுப்பிய கடுதாசி நம்ம அலுவலக சகோக்கள் கையில கிடைச்சிருக்கும்... 'மன்னிக்கவும் சார்! நாங்கள் நாவல்களை பிரசுரம் செய்வதில்லை'ன்ற குறிப்போட அதை உங்களுக்கே திருப்பியனுப்பியிருப்பாங்க. அதானுங்களே? :D //

      ஹா ஹா சிரிப்பை அடக்க முடியவில்லை. Good one.

      Delete
    9. // பதுங்கு குழிக்குள்ள யாராவது பணியாரத்தை வீசிட்டுப் போய்ட்டாங்களா தலீவரே? //
      எப்படி விஜய்... சூப்பர். ஹா ஹா.

      Delete
  45. தலைவரே......
    அடிச்சு கேப்பாங்க,
    அப்பவும் சொல்லிடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...
      கையில் கம்போட ஆளை அனுப்பிவைத்துக் கூடக் கேட்பாஹ...
      அப்பயும் சொல்லீடாதீஹ! :P

      Delete
    2. செந்தில் சார் இப்படி ஜாலியா பேசறப்ப இங்கே வர்றதுக்கும்..பேசறதுக்கும் எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா...

      அதை மட்டும் தான் ஆசிரியர் போல நாங்களும் எதிர்பார்க்கிறோம்..அவ்ளோதான்..


      நீங்க சொன்னதால அந்த நல்ல செய்தியை நாளைக்கே சொல் றேன்..:-))

      Delete
    3. Welcome தலைவர், செயலாளர், ரசீது புக் அடிப்பவர் மற்றும் அனைவர்.....
      நான் முதல்ல இருந்து ஜாலியாத்தான் டைப்பிகிட்டு இருக்கேன் 🤣😂😜😛😆😁

      Delete
    4. //Welcome தலைவர், செயலாளர், ரசீது புக் அடிப்பவர் மற்றும் அனைவர்.....
      நான் முதல்ல இருந்து ஜாலியாத்தான் டைப்பிகிட்டு இருக்கேன் ������������//

      hilarious....

      Delete
  46. நல்ல செய்தியெல்லாம் உடனே சொல்லிரனும் தலைவரே தள்ளிபோடகூடாது


    #####


    பழனிவேல் சார்....சொல்லலாம் தான் ஆனா நைட் ஒண்பது மணிக்கு ஒன்பது கோடி கொடுத்தாலும் முழிச்சிருக்க மாட்டேன்னு எங்க தாத்தாவோட தாத்தாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தால நாளைக்கே சொல்லிறேனே..:-)


    இன்னும் 9 மணி ஆகலைனாலும் அதை டைப் பண்றதுகுள்ள 9 மணி ஆயிரும்..:-))

    ReplyDelete
  47. ஒருவேளை தலீவர் சின்னதம்பி
    கவுண்டமணியோ.???

    ReplyDelete
  48. நல்ல செய்தியை தலீவருடன் சேர்ந்து
    பெருந்தலைவரும் அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  49. நல்ல செய்தியை தலீவருடன் சேர்ந்து
    பெருந்தலைவரும் அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  50. 600 என்ற மந்திர எண்ணை அடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம் நண்பர்களே. மற்ற முடிவை ஆசிரியரிடம் விட்டு விடுவோம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. இதே தான் என் நிலையும். ஸ்டீல்போ, பழனி, சத்யா போன்ற நணபரகள் தொடர்ந்து எறும்பு போல் ஊறி ஊறி கல்லைத் தேய்த்து வாங்கி இருக்கிறார்கள். வேண்டாம் என்ற சொன்னாலும் மற்றவர்களுக்காக தன் நிலையை மாற்றிக்கொண்டு முன் பதிவு செய்த நணபரகளும் நிறய.

      சாத்வீகமாகமே பெறக்கூடிய ஒன்றிற்காக சண்டைப் போட வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய வேண்டுகோள் பு வி விவாதத்தை தவிருங்கள். இதனால் ஏற்படும் எரிச்சலால் இந்த புத்தகமே வேண்டாம் என்று பலருக்கு தோன்ற ஆரம்பித்து விடும்.

      அதற்கும் மேல் ஏதாவது செய்யனும்னா மின்னஞ்சல் பிராசாரம் செய்யுங்க. பு வி வந்தா எத்தனை முன் பதிவு செய்வீரகள் என ஆசிரியருக்கு மின்னஞ்சலில் உங்கள் தற்போதய சந்தா எண்ணுடன் அனுப்புங்கள்.

      இது அவரை ஊக்கப்படுத்தலாம். வேண்டிய ஒன்றைப் பெற எத்தனையோ பாசிட்டிவ வழிகள் உள்ளன. அவற்றைக் கையாளவும். பொது வழியில் ஒவ்வொறு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உருவாகி குட்டையைத்தான் குழப்பும்.

      Delete
    2. // அதற்கும் மேல் ஏதாவது செய்யனும்னா மின்னஞ்சல் பிராசாரம் செய்யுங்க. பு வி வந்தா எத்தனை முன் பதிவு செய்வீரகள் என ஆசிரியருக்கு மின்னஞ்சலில் உங்கள் தற்போதய சந்தா எண்ணுடன் அனுப்புங்கள். //

      Well said.

      வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

      Delete
    3. சரியான விசயத்தை சாத்வீகமாக சரியானவிதத்திலேயே சொல்லியிருக்கிறீர்கள் ஷெரீப்.!!

      ஆனா... இந்த உபதேசத்துக்கு உபயோகம் ஏதாவது இருக்குமான்னு கேட்டீங்கன்னா ..!!

      Sorry. .., no chance ன்ற பதில்தான் கிடைக்கும்.!! :(

      Delete
    4. "இப்பவே கொடுத்து ஆகணும்" என்ற பிடிவாதம் எல்லா கருத்தையும் எதிர் கருத்தாகத்தான் பார்க்க சொல்லும்.

      Delete
  51. I would like to write a lot, but two things stops me to do so...
    1. am not a regular/yearly subscriber
    2. I don't remember much about the old prints (like names & stories) even though I have read a lot of lion-comics. So fear to write anything

    ReplyDelete
    Replies
    1. Warm welcome. Do share atleast your review of our books once in a while.

      Delete
  52. Am also a fan of editor's hilarious writing.

    I too lost little interest in comics, since too much comics are coming per month, sinc last year.. so budget problem and lots of non-interesting stories...

    every month TEX is very much boring and I stopped buying Tex sinc last year.

    January month graphic novel got good reviews and so I brought that. But when I read it, I didn't seem anything interest in that.. it was too much boring and not worth for the money. since it has lots of dialogues, it is very best fit for Novel and not comics...

    If you minimize the number of comics per year, the business will grow, otherwise it may result in too much stock. This is my personal opinion only...

    (FYKI... I have bought all digest/ high-priced books.. but only 'MINNUM MARANAM' is worth. Rest all (like Erottil Italy, Tex Diwali malar, Magnum speical etc.,) are not worth for money. Sorry to say this...

    ReplyDelete
    Replies
    1. //Am also a fan of editor's hilarious writing.

      I too lost little interest in comics, since too much comics are coming per month, sinc last year.. so budget problem and lots of non-interesting stories...

      January month graphic novel got good reviews and so I brought that. But when I read it, I didn't seem anything interest in that.. it was too much boring and not worth for the money. since it has lots of dialogues, it is very best fit for Novel and not comics...
      //

      ++1

      Delete
  53. புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!(செயலர் சார்பில்)

    ReplyDelete
  54. Replies
    1. கன்னங்களும் மேவட்டும்!

      Delete
    2. my goodness ! EV ! HOW DID YOU COME TO KNOW ABOUT THIS POST? IT'S TEST POST.
      TRYING TO LEARN TEXT LINK IN HTML..IT'S A SUCCESSFUL ONE ..FURTHER LEARNING IMAGE LINK ...:)

      Delete
    3. ஹிஹி!இந்த ப்ளாக்குல ஒரு இண்டுஇடுக்கு விடாம எல்லாப் பதிவுலயும் mail subscription போட்டு வச்சுருக்கோமில்ல! யாராவது ஒரு புள்ளி வச்சாக்கூட கூகுள்காரவுக உடனே என்னோட மெயில்இன்பாக்ஸுக்கு தகவல் அனுப்பி அலர்ட் பண்ணிடறாங்க!
      //
      FURTHER LEARNING IMAGE LINK ...:)///

      எல்லாம் ஒரே மாதிரிதான்! URLஐ மட்டும் அதே href HTML tagக்கு உள்ள காப்பி-பேஸ்ட் பண்ணிட்டீங்கன்னா போதும்! ஆல் த பெஸ்ட்! :)

      Delete