நண்பர்களே,
வணக்கம். நிமிஷமாய் நாட்கள் கரையும் ஒரு தருணத்தின் வழியே நாமெல்லாம் பயணித்து வருகிறோம் தானே?! இரண்டரை மாதங்களுக்கு முன்பாய் தமிழகம் சந்தித்ததொரு இழப்பை நின்று நிதானமாய் அசைபோடக் கூட நேரமின்றி ஏதேதோ அசாத்திய நிகழ்வுகள் அசுர கதியில் தடதடக்கின்றன ! இந்த நிலையில் 2016-ன் நமது இதழ்கள் பற்றிய review-ஐ கையில் எடுக்க எனக்கே சற்றே மலைப்பாக இருந்தது. ஏதோவொரு மாமாங்கத்தில் அவையெல்லாம் வெளியானது போல்த் தோன்றுவது மட்டுமல்லாது - இடைப்பட்ட வேளைகளில் ஏதேனும் பதிவிலோ ; ஹாட்லைனிலோ the year in review என்று ஏதாச்சும் எழுதியிருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை. ஓலைப்பாயில் மூச்சா போகும் அல்சேஷனைப் போல சிக்கிய சந்திலெல்லாம் ‘சள சள‘ வென்று எதையாவது பதிவிட்டுத் திரிவதால் ‘மறு ஒலிபரப்பாகிடக்‘ கூடாதே என்ற முன்ஜாக்கிரதை மேலோங்குகிறது. அதுமட்டுமன்றி - சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால் உங்களது பார்வைக் கோணங்களை அறிந்திட அதிகமாய் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது ! ஆனால் சிறுகச் சிறுக ஜனவரியிலும், பிப்ரவரியிலும் அந்த red & black படிவங்கள் நம்மைத் தேடி வரத் தொடங்க, மெதுமெதுவாய் அவற்றின் மீது பார்வையை ஓடச் செய்தேன் ! தலீவரின் படிவமும் சமீபமாய் நம்மை வந்து சேர - ‘அது என்னாச்சு?‘ என்ற கணையோடு அவரொரு கடுதாசித் தாக்குதலைத் துவங்கும் முன்பாக மேட்டருக்குச் சென்றுவிடல் நலம் என்று தோன்றியது ! So here goes :
ஆண்டினில் 54 இதழ்கள் எனும்போது - இதுவரையிலான நமது சர்வீஸில் ஆகக் கூடுதலான அறுவடை ஆண்டு இதுவே என்பதில் சந்தேகமில்லை ! And - மறுபதிப்புகள் நீங்கலான புது இதழ்ப் பட்டியலுள் 2016-ல் சொதப்பல்கள் எண்ணிக்கையும் மிகச் சொற்பமே என்பதால் இதுவொரு "அறுவை ஆண்டாக" இல்லாது போனதில் நிம்மதியும் கூட !Genre-வாரியாக சந்தாக்கள் பிரிக்கப்பட்ட நாள் முதலாய் - கதைத் தேடல்களில் எங்களுக்குள் சற்றே கூடுதலான தெளிவு பிறந்திருப்பது இதற்கொரு முக்கிய காரணி என்பேன் ! So இந்த review படலத்தையும் இதே genre ரீதியில் / சந்தாவாரியாகக் கொள்வதே தேவலாமென்று பட்டது !
சந்தா A:
ஆக்ஷன் அதிரடிகள் என்ற இந்தக் களத்தில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி - உச்சமெது? என்ற தேர்வுக்கு அதிகநேரம் அவசியமாகிடவில்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது ! என்னதான் ஷெல்டன்... கமான்சே... மாடஸ்டி... டைலன் டாக்... ராபின் என்ற நாயகர்கள் சந்தா A-வில் வலம் வந்தாலும், லார்கோவும் சரி, இரவுக் கழுகாரும் சரி - ஒரு பிரத்யேக அணியில் இருப்பது புரிகிறது ! So 2016-ன் டாப் கதைகளுக்குள்ளான போட்டி சர்வமும் நானே ! vs “கடன் தீர்க்கும் நேரமிது” இதழ்களுக்கு மத்தியினில் தான் என்பது உங்கள் மார்க் ஷீட்களில் பிரதிபலிக்கிறது ! என்னைப் பொறுத்தவரை புது அறிமுகம் ஜேசன் ப்ரைசுமே இந்த ஆட்டகளத்தில் சேரத் தகுதி கொண்டவரே ! For the sheer novelty & intensity - ஜேசனின் "எழுதப்பட்ட விதி" + "மறைக்கப்பட்ட நிஜங்கள்”" 2016-ன் உச்சத் தருணங்களுக்குள் இடம்பிடிக்கத் தகுதியுள்ளவை என்றே நினைத்தேன் ! ஆனால் தொடர் (கதை) எனும் போது அதனை முழுமையாய் எடை போடாது - பாகம் பாகமாய் தர நிர்ணயம் செய்ய முயற்சிப்பது அத்தனை சுகப்படாது என்று பட்டதால் ஜேசனை போட்டியிலிருந்து ஓரம்கட்டி விட்டேன் ! உங்களது மதிப்பெண்களையும் சரி, இதழ் வெளியான வேளையில் கிட்டிய அதகள வரவேற்பையும் சரி, மனதில் கொண்டால் 2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் "சர்வமும் நானே"” தான் ! தடதடக்கும் சரவெடி ஆக்ஷன்; ரேஞ்சர்களின் ஒட்டுமொத்த dynamic presence ; பாலைவனத்தில் ; நடுக்கடலில் ; கப்பலில் என்று பரந்து விரியும் கதைக்களம் ; மயக்கும் artwork + வர்ணங்கள் என சிலாகிக்க இதனில் சரக்கு ஏகமாய் உள்ளதால் உங்கள் தேர்வின் பின்னணிகளை யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை ! அது மட்டுமின்றி - இது வரையிலான ‘தல‘ கதைகளிலேயே நீளத்தில் முதன்மையானது இது தான் எனும் போது- வாசிப்பின் அந்தத் தூக்கலான லயிப்பையும் இதற்கொரு காரணமாகப் பார்க்கிறேன் !
அதே நேரம் - தனிப்பட்ட முறையில் எனக்கு "பெஸ்ட்" என்றுபட்டது லார்கோவின் ஆக்ஷன் த்ரில்லரே ! “கடன் தீர்க்கும் நேரமிது” வழக்கமான லார்கோ template-ல் சவாரி செய்யுமொரு இதழ் தான் - ஒத்துக் கொள்கிறேன் ! ஆனால் கையில் ஆயுதமேந்தா ஒரு கோடீஸ்வரக் கோமகனைப் போராளியாக்குவது ஒரு சுலபக் காரியமல்ல என்றால் - அவரைக் கொண்டு பிசுனஸ்... பங்குச் சந்தை... எண்ணெய் வளம்... இத்யாதி இத்யாதி என்ற ரீதியில் வறட்சியாய்ப் பயணிக்காது இத்தனை துடிப்பானதொரு ரூட் போடுவது சிரமமோ - மெகாச் சிரமம் ! அதுவும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படப் பாணியில், ஒவ்வொரு தேசத்துக்கொரு adventure என்ற அந்த யுக்தி இந்தத் தொடரின் ஒரு highlight என்பேன் ! நம்மையும் உடனழைத்துக் கொண்டு பூமியுருண்டையின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராய முற்படுவது சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை ! And இம்முறை ஹாங்காங்கில் நடைபெறும் அந்த ஆக்ஷன் தோரணம் துளியும் தொய்வின்றிப் படபடத்த சாகஸம் என்பதால் எனது ஓட்டு – ‘W’ குழுமத் தலைவருக்கே! So - சந்தா A-வில் top:
உங்கள் சாய்ஸ் : “சர்வமும் நானே”
எனது சாய்ஸ் : “கடன் தீர்க்கும் நேரமிது”
"உச்சம் எது?" என்றான பின்னே ‘தாங்கலைடா சாமி‘ award யாருக்கு என்பதையும் தீர்மானிக்க வேண்டுமல்லவா ? இங்குமே நமது தேர்வுகள் ரொம்பவே சுலபம் என்பேன் - லயனின் 32-வது ஆண்டு மலர் புண்ணியத்தில் !
கேப்டன் பிரின்ஸ் சிறுகதைத் தொகுப்புகள் + பெட்டி பார்னோஸ்க்கி” என்ற கூட்டணி க்ரீன்வேஸ் சாலையின் ஏமாற்றத்துக்கு நிகரானதொரு disappointment-ஐத் தந்திடும் என்பதை நான் நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை ! இன்று நிதானமாய் யோசிக்க அவகாசம் கிடைக்கும் வேளையில் இதனில் நடந்த தவறுகள் ஸ்பஷ்டமாகத் தெரிகின்றன !
* கேப்டன் ப்ரின்ஸ் சிறுகதைகள் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு டீம்களின் கைவண்ணத்தில், Spirou என்ற வாரயிதழில் 1960-கள் முதலாய் வெளிவந்தவை. கேப்டன் பிரின்ஸ் தொடர் limited ஆன இதழ்களோடு நிறைவு பெறுவதே படைப்பாளிகளின் திட்டமிடல் என்பதால் இந்தத் துண்டு + துக்கடாக் கதைகளை ஒருங்கிணைத்து சேகரிப்புக்கென இந்த ஆல்பத்தை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் ! வெற்றி கண்டதொரு தொடரில் இது ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறதே...? இதையும் போட்டு வைப்போமே ?” என்ற சபலத்திற்கு நாமோ அடிமையாகிட இந்த இதழைக் களமிறக்கினேன் ! சிற்சிறு கதைகள் எனும் போது அரை வரிக்குக் கூடத் தேறாத கதைக்களங்களே வியாபித்து நின்றிட - மொத்த ரிசல்ட் - ‘ஙே‘வாகிப் போனதில் (இப்போது)வியப்பில்லை ! ‘பெட்டி பார்னோவ்ஸ்க்கி‘யைப் பொறுத்தவரைக்கும்- இந்த spin-off ல் அவரது மறுபக்கத்தைச் சித்தரித்திருப்பார்களென்று ஹேஷ்யமாகக் கூட எனக்கு அந்நேரம் தெரிந்திருக்கவில்லை ! XIII Mysteries தொடரில் இதுவும் பிரெஞ்சில் ஹிட்டடித்த இதழ்களுள் ஒன்று என்ற தகவலை மட்டுமே என் கதைத் தேர்வுக்கு மூலதனமாக்கிக் கொண்டதால் இந்தச் சொதப்பலை நான் கணித்திருக்க முடியாது போனது !
So இங்கே நான் கற்றறிந்துள்ள பாடங்கள் இரண்டு :
* கதைகளில் merit இல்லா பட்சத்தில், பெருங்காய டப்பா வாசனைக்கோசரம் இனியும் கொடி பிடிப்பது சரிப்படாது என்பதே பாடம் # 1 ! எத்தனை பெரிய அப்பாடக்கரா இருப்பினும் ; நேற்று வரை எத்தனை வீரியமான சாகஸங்களை விருந்தாக்கியிருப்பினும் - இன்றைக்கு சரக்கில்லையெனில் இதயத்தில் மட்டுமே இருக்கை!
* "ஜப்பான்லே ஜாக்கி சான் கூப்டாகோ; அமெரிக்காலே மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ!”" என்று காதில் விழும் சமாச்சாரங்களை “ஓஹோ ?“ என்று மட்டும் இனிமேல் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டியது ! ஆனால் இங்கே நம்மிடையே கரகாட்டத்தை ஆரம்பிக்கும் முன்பாக- முடிந்தளவுக்கு மொழிபெயர்ப்பு; கதைப் பரிசீலனை இத்யாதிகளை வழக்கம் போலச் செய்து விடுவது சாலச் சிறந்தது என்று பாடம் படித்துள்ளேன்!
So மொக்கை பீஸ் of சந்தா A :
எனக்கும், உங்களுக்கும் : 32-வது ஆண்டு மலர்!
Close second: இரத்தப் படலம் “The End?”
சந்தா B:
2016-ஐ துள்ளிக் குதிக்கும் உற்சாகத்தோடு drive செய்து வந்ததே “மாதமொரு இரவுக் கழுகார்”ஃபார்முலா தான் என்பதில் ஐயமேது ? So பெரும்பான்மை Tex இதழ்களைத் தன்னுள் கொண்ட சந்தா B-ன் டாப் இதழ்த் தேர்வு ரொம்பவே சுலபமாகத் தானிருக்குமென்று நான் அவதானித்திருந்தேன் ! இங்கு பதிவான உங்களின் குரல்களுமே பெரும்பாலும் அதையே பிரதிபலித்தன ! So - போட்டியில் வெற்றி பெறுபவர் அரிசோனா மாநில... டெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன் ! Surprise... Surprise... நான் மாத்திரமன்றி; படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்த நண்பர்களுள் கணிசமானோரும் ஆட்டத்தைக் கலைக்க வந்தது போலான "ஜெய மார்ட்டின் பேரவைக்கு" ஆதரவு தெரவித்திருப்பது தெரிந்தது!
"இனியெல்லாம் மரணமே”!" மார்ட்டினின் ஒரு அசாத்தியக் களமென்பதை இதழ் வெளியான அந்த மாதமே நாம் அனைவரும் உணர்ந்திருந்தோம் ! அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் ! So சந்தா B-ன் சந்தேகமிலா ஹிட் - இந்த விஞ்ஞானம் + வரலாறு + கற்பனை கலந்த க்ளாசிக் கூட்டணி என்பதை அறிவிப்பதில் பெருமையாகவுள்ளது ! இது போன்ற கதைகளையும் நாம் just like that ரசிக்க.. ருசிக்கத் தயாராகி விட்டோமெனும் போது -நமது ரசனைக் கொடிகள் பந்தாவாய்ப் படபடப்பது போலொரு உணர்வு எனக்குள் ! இந்த இதழின் மொழிபெயர்ப்பின் போதும், எடிட்டிங்கின் போதும், நான் போட்ட மொக்கைகளுக்கு இந்தத் தீர்ப்பானது ஒரு பாட்டில் ஜண்டு பாமாகத் தெரிகிறது !
இரவுக் கழுகாரின் பலதரப்பட்ட கதைகளுள் “"விதி போட்ட விடுகதை”" ; “"தலையில்லாப் போராளி”" ; “துரோகத்திற்கு முகமில்லை” போன்ற கதைகள் நிறைவாக ஸ்கோர் செய்துள்ள போதிலும், அந்த TEX ரேசில் முந்தி நிற்பது “"தற்செயலாய் ஒரு ஹீரோ"” தான்! சுலபமான அந்தக் கதைக்களமும், மனிதனின் இயல்பான கோழைத்தனமும் ; அவசியம் எழும் போது அவன் வீறுகொண்டு எழுவதும் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் இந்த இதழை ஒரு வித்தியாசமான அனுபவமாக்கியுள்ளது என்பது புரிகிறது ! So சந்தா B-ன் டாப் :
எனக்கும், உங்களுக்கும் : "இனி எல்லாம் மரணமே”"
சந்தா B-ன் ஊ. போ. உ. : “"வேதாள வேட்டை”!"
சந்தா C:
வண்டி வண்டியாய் எதையெதையோ எழுதினாலும், கையாண்டாலும்- இந்தக் கார்ட்டூன் சந்தாக்களின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் திருப்தி அலாதி ரகம் ! So அதனுள் ஒரு தேடலை செய்ய முனைவதும் சுகமோ சுகம் ! கார்ட்டூன் மைதானத்தில் ஜாஸ்தி தெரிந்தவை நீலத் தலைகளே - நமது Smurf-களின் புண்ணியத்தில் ! துவக்கத்தில் இந்தக் குட்டி பசங்கள் உலகமோ ; இவர்களது பாஷைகளோ அத்தனை லயிப்பைத் தந்திடாது போக - நம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை ! In fact “இன்னமும் கூட என்னால் smurfs கதைகளுக்குள் ஐக்கியமாக முடியவில்லை சார்!” என்று அவ்வப்போது காதைக் கடிக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை ! ஆனால் “"ஒரே ஒரு ஊரிலே"” மற்றும் “"வானம் தந்த வரம்"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம் ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு ! So ஆண்டின் தலைமக்கள் பட்டியலுக்குள் இந்தக் குட்டி உருப்படிகள் தாவித் திரிந்தது மறுக்கவியலா நிஜம் ! ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கார்ட்டூன் ராஜ்யத்தின் நிகரில்லா ‘தல‘ நானே என்றபடிக்குக் குரல் கொடுப்பதோ ஜாலி ஜம்பரின் முதலாளி ! “"ஒரு பட்டாப் போட்டி"” சுவாரஸ்யமான கதையே என்றாலும் - ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த லக்கி லூக்கின் “"திருடனும் திருந்துவான்"” a class apart என்பது உறுதி ! எழுதும் போதே இதுவொரு உறுதியான ‘ஹிட்‘ என்பதை உணர முடிந்தது ; இதழின் ஆக்கம், அட்டைப்படம் என சகலமும் ஒத்துழைக்க - 2016-ன் பெஸ்ட் கார்ட்டூன் என்ற பதக்கத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டது இந்த இதழானது !
‘உச்சம்‘ இது தானென்று அடையாளம் கண்டான பிறகு, சம்பிரதாயப்படி wash செய்து...wash செய்து..pour பண்ண ஒரு இதழையும் தேடிப் பிடித்தாக வேண்டும் தானே ? இழுத்துப் பிடித்து, நாலு குட்டு வைத்திட அந்த சோன்பப்டித் தாடி வாகாக உதவிட - நமது 24/7 விஞ்ஞானி லியனார்டோ தான் சோப்பு டப்பாவை ஈட்டிடும் நாயகர் சந்தா C-ல்!
So, the best of Cartoons :
* லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான் ! ஏகோபித்த தேர்வு !
*"the டொங்க்ஸ் of 2016 - கார்ட்டூன்" : “ஜீனியஸ் உறங்குவதில்லை”!
பெர்சனலாக எனக்கு லியனார்டோ தாத்தாவை ரொம்பவே பிடிக்கும் ; அந்த gags-களை நிதானமாய் ரசித்தால், ஓவியரின் கற்பனை பிரவாகமெடுப்பதை உணர முடியும் ! ஆனால் ஏனோ நமக்கு முழுநீள சாகஸங்கள் அல்லாத கதைகள் மீது ஒரு இனம்புரியா துவேஷம் தொடர்வதன் எதிரொலியாக லியனார்டோ உதை வாங்குகிறார் ! So 2018-க்கும் இவர் நம்மிடையே இடம் பிடிக்கப் போகும் வாய்ப்புகள் சொற்பமே என்று தோன்றுகிறது ! Sad !!
சந்தா D:(Reprints)
பெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது ? bottom எது ? என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால் - மரியாதையாக அந்த வி்ஷப்பரீட்சையினைச் செய்யாது ஒதுங்கிக் கொள்கிறேன் ! So போட்டியே இன்றி இங்கே தேர்வு காண்பது டெக்ஸ் வில்லரின் “பழி வாங்கும் புயல்” வண்ண மறுபதிப்பே !
என் பெயர் டைகர் :
ரொம்பவே விநோதமானதொரு அனுபவம் இதனில் எனக்கு! சென்றாண்டின் இதே சமயம் சுமாருக்கு ‘சிவனே‘ என்று இந்த இதழுக்குக் ‘கல்தா‘ கொடுத்து விடலாமா? என்ற யோசனை எனக்குள் பலமாகவே ஓடிக் கொண்டிருந்தது ! ஒரு “மின்னும் மரணம்” ; ஒரு “தங்கக் கல்லறை” யுகத்துக்கொரு முறையே நிகழும் அதிசயங்கள் என்பதை மண்டை புரிந்திருந்தாலும், நெஞ்சமானது அங்கேயே சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடி வருவதைத் தவிர்க்க வழி தெரிந்திருக்கவில்லை! வன்மேற்கின் வரலாறு ; அதனில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் ; வாழ்ந்த மாந்தர்கள்... இவர்களுக்கு மத்தியில் நமது சப்பை மூக்கார் என்பதே களம் என்ற நிதர்சனத்தை ரொம்ப நேரத்திற்கு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ! என்னை விடவும் பெரிய ஓட்டைவாயன்களாய், கதையில் உலவும் அத்தனை ஆசாமிகளும் ஓயாமல் ஏதாச்சும் பேசிக் கொண்டேயிருக்க- வந்தோமா...சலூனின் நட்டநடுவில் நிற்க வைத்து நாலு பேரை நடுமூக்கில் 'பொளேர்' என்று போட்டோமா - என கெத்து காட்டும் டெக்ஸ் வில்லர் பாணிக்காக மனசு ஏங்கத் தொடங்கியது ! “டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா!”!! என்று என் மனம் கூவாத குறை தான் ! ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு 2 நாட்கள் சுத்தமாய் 'பிரேக்' எடுத்துக் கொண்டு,தட்டுத் தடுமாறி திரும்பவும் கதைக்குள் நுழைந்தேன். இம்முறை கூகுள் உதவியோடு வ்யாட் ஏர்ப்; டாக் ஹாலிடே; OK கார்ரல் மோதல் ; கோசைஸ் என்ற பெயர்களையெல்லாம் அலசோ அலசென்று அலச - சிறுகச் சிறுக கதாசிரியர் இங்கு சித்தரிக்க முயன்றிருக்கும் மெகா ஓவியத்தின் பரிமாணம் புலப்படத் தொடங்கியது ! நிஜத்தினுள் ரீலை இணைத்திருப்பதால்,கைபுள்ளெ ரேஞ்சுக்கு டைகர் சலம்பாது, அடக்கி வாசிக்க வேண்டியதன் அவசியமும் புரிந்தது ! அந்தத் தெளிவோடு மீண்டும் பணியாற்றத் தொடங்கிய பின்னரே “"என் பெயர் டைகர்"“ ஜனித்தது! எனக்கு நேர்ந்த அதே கேச சேதாரங்கள் உங்களையும் தாக்கிடலாகாது என்ற முன்ஜாக்கிரதையில் கூகுளில் நான் கண்ட விபரங்கள் சகலத்தையும் முன்னுரைகளாக்கி, அதன் பின்பாய்க் கதைக்குள் நீங்கள் புகுந்திட வழி செய்தேன் ! இயன்ற அத்தனையையும் செய்து விட்டேன்... புனித மனிடோ... இனி உங்களுக்காச்சு ; வாசகர்களுக்காச்சு!” என்ற மனநிலை தான் அதற்குப் பின்பும் ! ஆனால் உங்கள் ரசனைகளின் பன்முகத்தன்மை - என்னையையும், நமது உடைந்த மூக்காரையும் ஒரு மெகா தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றி விட்டது தான் நாம் பார்த்த நிஜம் ! கனமான களம் ; இதுவொரு பாலைவனப் பயணம் போல வறட்சியானது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டு - அதற்கேற்ற mindset சகிதம் உள்ளே நுழைந்து, நிதானமாய் பயணம் செய்து, கதையின் முழுமையையும் ரசித்துப் படித்ததே 2016-ன் உச்சபட்ச அனுபவம் என்பேன் ! தலையில்லாப் போராளி” மெகா இதழ் வெளிவந்த நாட்கள் ; “ஈரோட்டில் இத்தாலி” வெளியான தருணம் - என பல ஸ்பெஷல் வேளைகள் இருந்த போதிலும்- “என் பெயர் டைகர்” சாதித்த வேளையே ஆண்டின் மறக்க இயலாத் தருணம் - என்னளவிற்காவது ! Thanks a ton guys !!
கதைகளுக்கு அப்பால் - கடந்தாண்டின் ஒட்டுமொத்த அனுபவங்களை ஒற்றைச் சொல்லில் அடக்குவதெனில் ‘Awesome’ என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ! ஈரோட்டில் அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் ! இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ? ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ ? என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை ! ஆனால் 2016 தான் துவக்கப் புள்ளி என்பது என்றைக்கும் மாறப் போவதில்லை என்பதால் 2016 ஒரு lifetime memory ஆகவே எனக்குள் தொடரும் !
மீண்டும் சந்திப்போம் ! Have a wonderful weekend all!
P.S :சில நாட்களுக்கு முன்பாய் நண்பரொருவரிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சல் இது !! லேசாக பீற்றல் பரமசிவமாய் நான் தெரியக் கூடுமென்றாலும், யதார்த்தத்தை அழகாய் விவரித்துள்ள நண்பரின் மடலை உங்களோடு பகிர்வதில் தவறில்லை என்று பட்டது !! !
ஆசிரியர் அவர்களுக்கு,
கடந்த காலங்கள் எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அறியா வயதில் குடும்பம், பணி சுமை, உறவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என ஏதும் இல்லா பருவத்தில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே மனதில் குடி கொண்டு இருக்கும். அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க அப்பொழுது ஒன்றே ஒன்று மேலும் கூடுதலாக காணப்பட்டது. அது “காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இப்பொழுது எல்லாமே மாறி விட்டது. பிறரை சார்ந்து நாம், நம்மை சார்ந்து குடும்பங்கள். இதன் காரணமாக பணி சுமை, பணச் சுமை, இது மட்டுமா? இன்று நமக்காக உழைப்பதை விட நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உழைப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இவற்றின் காரணமாகவும், நம்மை சுற்றி இருக்கும் சிலரின் பொறாமைகள், துரோகங்கள், அதன் காரணமாக வருத்தங்கள் காரணமாகவும் மகிழ்ச்சி என்ற எல்லை கோட்டை கூட கண் காணாத தூரத்தில் தான் குடி இருக்க முடிந்தது.
இப்படிபட்ட சூழலில் தான் மாதா மாதம் இவை எல்லாவற்றையும் மறந்து அந்த டவுசர் போட்டு திரிந்த பால்ய வயதில் எந்த கவலையும் இல்லாத, எந்த வருத்தமும் இல்லாத பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த காலகட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்று கொண்டிருப்பது இப்பொழுது “உங்கள் காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இதனால் நமது இதழ்கள் மாதா மாதம் வரும் பொழுதெல்லாம் ஓர் இனம் புரியா கொண்டாட்டம். சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள். புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.
உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteசற்று நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவணக்கம் திரு.ATR சார்! நலம்தானே?
Deleteஉங்களைப் போன்ற நல்ல இதயங்கள் இருக்கும்வரை நான் நலமாகத்தான் இருப்பேன்.
Deleteநீண்ட நாட்கள் கழித்து தங்கள் பதிவை கண்டு மகிழ்ச்சி ஏடிஆர் சார்...:-)
Deleteஎனக்கும் மகிழ்ச்சிதான் தலீவரே.
Deleteஎனது உடம்பின் வலதுபுறம் சரிவர இயங்குவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு
அதற்கு மருத்துவ சிகிச்சை என சில மாதங்கள் ஓடிவிட்டன.
வலது கையினால் பதிவிட இயலாததால் ஒரு மாத காலம் பயிற்சியின்மூலம் இடது கையினால் டைப் பண்ண முயற்சித்து தற்போது இடது கையினாலேயே பதிவிடுகிறேன்.
நீங்கள் நலமா தலீவரே.
In top 5
ReplyDeleteGOOD EVENING TO EVERYONE
Deleteநண்பரின் கூற்று 100 சதவீதம் உண்மையே!
ReplyDeleteபலரின் மன ஓட்டங்களை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்
+1111
Deleteகரம் கூப்பும் படங்கள் பல !
Deleteவணக்கம்.
ReplyDeleteஎம்மாம் பெரிய மாத்திரை.
போன தபா சன்னமான மாத்திரைகளாகிப் போய் விட்டன அல்லவா ?
Deleteஹைய்யா ...தூங்குறதுக்குள்ள பதிவு வந்துறுச்சு ....சூப்பரோ சூப்பர் ...நீண்ட நாட்கள் கழித்து நீண்ட பதிவு போல ..பதிவை படித்து விட்டு வருகிறேன் சார் :-)
ReplyDeleteHappy
ReplyDelete//இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!//
ReplyDeleteடெபனட்லி..டெபனட்லி..
234% அக்மார்க் உண்மை...
Deleteதற்செயலாய் ஒரு ஹீரோ டெக்ஸ்
Deleteகடவுள் செயாலால் ஒரு ஹீரோ விஜயன் சார்
அது சரி,ஹீரோன்னு இருந்தா வில்லன் ஒருத்தர் இருந்தாதான் சுவராஸ்யம்,யார் சார் வில்லன்?!
Deleteஎங்களுக்கும் டைம் பாஸாகனும் இல்ல,ஹி,ஹி.
கதாநாயகன் மட்டுல்ல தமிழ் காமிக்ஸூக்கு அவர்தான் கேமரா மேன், டச்சப் மேன், தயாரிப்பாளர் எல்லாம் அவர்தான்.( ஹரோயின் மட்டும் மாடஸ்டி , ஜுலியா, lady-s மற்றும் பலர்)
Deleteஎதிர் பாராத பதிவு சூப்பர் சார் :))
ReplyDelete.
:-)
Deleteஉள்ளேன் அய்யா..!!
ReplyDeleteஹைய்யா இயர் ரிவியூ பதிவு சூப்பர் சார்...
ReplyDeleteரொம்மப்பப்பப நாள் கழித்து சனி முன் மாலை பதிவு...
ஞாயிறு செமத்தியான விருந்து வெயிட்டிங் போல....வெளுத்து கட்டுங்க சார்...
சேலம் Tex விஜயராகவன் : நம்ம ஞாயிறு விருந்து பென்னி கூடவும் ; ஜெரெமியா கூடவும் தான் சார் !
Deleteமார்ச் இதழ்கள் எப்ப கிளம்புதுன்னு சொல்லலையே சார்?
ReplyDeleteஅதானே...
DeleteArivarasu @ Ravi : மார்ச் பிறக்கும் போது உங்களிடமிருக்கும் சார் !
Deleteமகிழ்ச்சி சார்.
Delete////2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் "சர்வமும் நானே////....
ReplyDeleteடன்ட டைன்... டன்ட டைன்...
ஊய்...ஊய்...ஊய்....
டம்..டமால்...டமார்....
படர..படர...படீர்...
எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா...!!!!
குஷியோ குஷி.
Deleteகுதிங்க.! நல்லா குதிங்கோ.
Deleteயார் குதிச்சா அழகு MV sir?
Deleteசர்வமும் டெக்ஸே
Delete// Surprise... Surprise... நான் மாத்திரமன்றி; படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்த நண்பர்களுள் கணிசமானோரும் ஆட்டத்தைக் கலைக்க வந்தது போலான "ஜெய மார்ட்டின் பேரவைக்கு" ஆதரவு தெரவித்திருப்பது தெரிந்தது!
ReplyDelete"இனியெல்லாம் மரணமே”!" மார்ட்டினின் ஒரு அசாத்தியக் களமென்பதை இதழ் வெளியான அந்த மாதமே நாம் அனைவரும் உணர்ந்திருந்தோம் ! அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் //
இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))
.
// இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார்.//
Deleteஇதை நானும் வழிமொழிகிறேன்.
+11111
//இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))//
Delete+1
//இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))//
Delete+1
மார்ட்டினுக்கு அதிக ஸ்லாட்டுகள் வழங்கப்படவில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்!
இனி எல்லாம் மரணம் மாதிரியே எல்லாம் இருக்கும்னு எந்தளவு எதிர்பார்ப்பை வளர்ப்பது???
Delete//மார்ட்டினுக்கு அதிக ஸ்லாட்டுகள் வழங்கப்படவில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்!//
Deleteதலீவர் சொப்பன லோகம் போய் இரண்டு ஜாமம் ஆச்சு !! அவர் எழுந்து குரல் கொடுத்து, அப்புறமாய் நீங்கள் போராட்டம் நடத்துவதற்குள் மார்ட்டின் VRS வாங்கிடுவார் !!
Prabhakar T : இந்தாண்டில் 2 x 100 பக்க சாகசங்களில் மார்ட்டின் களம் காண்கிறார் !! அதிலும் சாதித்துக் காட்டட்டுமே சார் - 2018 -ல் ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து விடுவோம் !
Deleteஏதோ ஒரு கதை தெரியாத்தனமாக சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.அதற்காக அதிக ஒதுக்கீடு செஞ்சு கடுப்பேற்றி விடாதீங்க மாண்புமிகு எடிட்டர் சார்.! இதில் டெக்ஸ் விஜயராகவன் கருத்தை வழிமொழிகிறேன்.!
Deleteஇந்தாண்டில் 2 x 100 பக்க சாகசங்களில் மார்ட்டின் களம் காண்கிறார் !! அதிலும் சாதித்துக் காட்டட்டுமே சார் - 2018 -ல் ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து விடுவோம் !// 2018 ஐ சந்தோஷமாய் நோக்குகிறோம்,மார்ட்டின் வாசிப்பு எப்போதும் அலாதி மிக்கது.
Deleteஅருமை சார்.... _/\_
ReplyDelete/////உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்./////
ReplyDelete+1111111111111111111111
////உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!////
உண்மை உண்மை உண்மை! ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்!)
ஹா,ஹா,ஹா.
Delete/// ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்!)///
Deleteஏன் குறைச்சி பேசுறிங்க குருநாயரே!!
பாலிவுட் பக்கமா போனா இந்த ஷாரூக்கான் ஆமிர் கான் சல்மான் கான், பாப்கார்ன் போன்ற ஹீரோக்களின் மார்க்கெட்டை காலி செய்திடலாமல்லவா??!! :-)
என் Hollywood try பண்ண கூடாதா. என்னு கெக்கிரென்.
Deleteநமது ஆசிரியரை சிறு cricleலில் அட்டைபதை வன்மையாக கண்டிகிரென். Parani from Bangalore who travelling back to Bangalore😂
Delete///என் Hollywood try பண்ண கூடாதா. என்னு கெக்கிரென்.///
Deleteஅங்கே ஸ்டன்ட் காட்சிகள்தான் நிறைய் வைப்பாங்க.! பாலிவுட்னா ரொமான்ஸ் பட்டைய கெளப்புமே.! அதுவுமில்லாம ஹாலிவுட்ல ஹீரோயின்ஸும் அவ்வளவு சொகமில்லே. அதே பாலிவுட்னா ஜொள்ளவே தேவையில்லை.
ம்ம்ம்ம்ம்ம். . . .ஒருகாலத்துல மாதுரி திக்ஸித் சிரிக்கிற மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தாலே ஒரு மணி நேரத்துக்கு குறையாம அங்கேயே சிலையாயிடுவேன். அதெல்லாம் ஒரு ஜொள்ள மறந்த கதை போங்க.)
அப்புறம் என்னோட கனவுகன்னி லிஸ்ட்டுல முதலிடம் பிடிச்சவங்க கூட ஒரூ சிவகாசி தயாரிப்புதான். கெஸ் பண்ணிக்கோங்க.!! :-)
படைப்பது எல்லாம் கடல் கடந்தவையல்லவா...!!!
Deleteநாயகராவதும் அங்கே தான் இருக்க வேணும்...
//ஒருகாலத்துல மாதுரி திக்ஸித் சிரிக்கிற மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தாலே ஒரு மணி நேரத்துக்கு குறையாம அங்கேயே சிலையாயிடுவேன். அதெல்லாம் ஒரு ஜொள்ள மறந்த கதை போங்க.//
Deleteஇந்த ஆராய்ச்சியில் பல உண்மைகள் வெளி வரும் போலுள்ளதே ?!!
@ ALL : இன்னிக்கு காமெடி பீஸ் நான்தான் என்று ஆச்சு ; கிட்டக்க வாங்களேன் ஒரு இரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன் !
Delete1995 to 1997 வரைக்கும் நமது மிஷினரி இறக்குமதி வியாபாரத்தின் பொருட்டு தென் கொரியாவுக்கு அடிக்கடி ஷண்டிங் அடிப்பது வாடிக்கை ! அங்கே பெரும்பாலும் எல்லோருமே வெள்ளையோ-வெள்ளையாய் ; குட்டிக் குட்டிக் கண்களோடு ; மித உயரத்தில் இருப்பது இயல்பு ! ஆண்களில் 90 % மழு மழு சவரம் செய்யப்பட முகத்தோடு - மீசைகளின்றித் தான் இருப்பர் ! நானோ விருமாண்டி ஸ்டைலில் மீசையோடும், முட்டைக் கண்ணோடும், நம்மூர் கலரில் அங்கே ஆஜராகிடும் போது சுலபத்தில் வித்தியாசப்பட்டுத் தெரிவேன் ! சாலைகளில் நடந்து போகும் போதெல்லாம் அந்த ஊர் பொடுசுகள் பூச்சாண்டி ரேஞ்சுக்கு என்னைப் பார்த்து மிரள்வதெல்லாம் ஜகஜம் ! "ஒழுங்கா சேமியா உப்மா சாப்பிடறியா ?இல்லாட்டி மந்திரியாரிடம் பிடிச்சுத் தரவா ?" என்கிற மாதிரி, என்னைக் காட்டி குட்டிகளை அடக்கிய தாய்மார்களும் நிச்சயம் இருந்திருப்பர் !
இந்த அழகில் 1996 -ல் ஒரு வாரயிறுதியில் சியோல் நகரில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த போது ஒரு பூங்காவில் ஏதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது ! "ஹை...இவங்க ஊர்லேயும் மரத்தைச் சுத்திச் சுத்தி பாட்டு படிக்கிறார்களா ? " என்று பார்க்கும் ஆவலில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! கொஞ்ச நேரம் போயிருக்கும் ; ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என் முன்னே வந்து நின்று கிக்ரி-முக்ரி என்று ஏதோ பேசினார் ! "ஒரு கண்றாவியும் புரியவில்லை !" என்று நான் ஆங்கிலத்தில் சொல்ல, அவர் திரும்பவும் கொரிய பாஷையில் என்னமோ சொன்னார் ! திரு திருவென்று நான் முழிப்பதை பார்த்து, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளைய கூட்டத்திலிருந்து பெண்ணொருத்தி இங்கிலீஷில் மொழிபெயர்க்க முன்வந்தார் முகம் முழுக்க சிரிப்போடு !!
"சரி...கிக்ரி-புக்கரி பெண்ணுக்கு என்னவாம் ?" என்று நான் கேட்க - அங்கே ஷூட்டிங் ஓடிக் கொண்டிருப்பது ஏதோவொரு கொரிய டி-வீ சீரியலுக்கு என்றும் ; அடுத்து எடுக்கவிருக்கும் ஏதோ ஒரு ஷாட்டுக்கு கூட்டமாய் நிற்க ஆள் திரட்டுகிறார்கள் என்றும் ; முன்னணியில் நான் நின்றால் வித்தியாசமாய் இருக்கும் என்றும் அந்த ஷூட்டிங் சார்ந்த பெண்மணி சொன்னதாக மொழிபெயர்த்தார் !
"ஆத்தா...கொரிய அங்காள பரமேஸ்வரிகளா....உங்க சங்காத்தமே வேண்டாம் தாயீ !!" என்றபடிக்கு விட்டேன் ஜுட் !!
கொரிய திரையுலகு தப்பிச்சதுடா சாமி என்று நினைத்துக் கொள்கிறேன் இன்றைக்கு !! !!
கொரிய சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா...
Deleteசின்ன குழந்தையும் சொல்லும்! ;)
கவலைய விடுங்க எடிட்டர் சார்! நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, மூனு ஹீரோயின் சகிதம் சீக்கிரமே உங்களுக்கு ஹீரோ வேஷம் கட்ட வாய்ப்பு வரட்டும்னு வேண்டிக்கறோம்! கண்ணை மூடிக்கிட்டு படத்தைப் பார்க்க நாங்க ரெடி! ( ரொமான்ஸ் சீனுக்கு மட்டும் அலாரம் வச்சு எழுந்துடுவோம்) ;)
Erode VIJAY : அட..இதுக்கோசரம் கொரியா போவானேன் ?
Deleteநாளைக்கே "டிடெக்டிவ் ஸ்பெஷல்" + வேதாளன் மறுபதிப்பு வருகிறது என்றால் குத்தாட்டமும், செம சாங்கும் இங்கேயே ரெடியாகிடும் !
"க்ரே மார்க்கெட்" என்றொரு பதிவை இறக்கி விட்டால் அரை டஜன் ஃபைட்டு சீனை பார்த்த மாதிரியாகி விடும் !
இளவரசி...ஜுலியா....(சீக்கிரமே) LADY S - என்று 3 ஹீரோயின்களும் கூட ரெடி !
இது போதாதா - என்ன ?
////இளவரசி...ஜுலியா....(சீக்கிரமே) LADY S - என்று 3 ஹீரோயின்களும் கூட ரெடி ! ///
Deleteஆனா கதைப்படி, நாலாவது ஹீரோயினான கருப்புக்கிழவிதான் க்ளைமாக்ஸில் உங்களை கரம் பிடிக்குதாம் எடிட்டர் சார்! :P
மந்திர ராணி, அதிரடிப்படை சாகச தலைவி -இவர்களை மறந்தது ஏனோ சார்???
Deleteஎனக்கும் மறைக்கப்பட்ட ஜொள்கள் ஏராளம் ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் மாதுரி தீட்சித்தை பார்த்து விட்டு விட்ட ஜொள் 5 லிட்டரை தாண்டும்
DeleteE.v @ climax sema comedy
Deleteகொரிய அனுபவங்கள் சூப்பர் சார்...ஒரு கொரிய" மக்கள் திலகத்தை "அந்த கொரிய நாட்டு மக்கள் இழந்து விட்டதை அறியும் பொழுது வருத்தமே...:-)
Delete/// ஏதோவொரு கொரிய டி-வீ சீரியலுக்கு என்றும் ; அடுத்து எடுக்கவிருக்கும் ஏதோ ஒரு ஷாட்டுக்கு கூட்டமாய் நிற்க ஆள் திரட்டுகிறார்கள் என்றும் ; முன்னணியில் நான் நின்றால் வித்தியாசமாய் இருக்கும் என்றும் அந்த ஷூட்டிங் சார்ந்த பெண்மணி சொன்னதாக மொழிபெயர்த்தார் ! ///
Deleteநடிச்சா ஹீரோவாத்தான் மேடம். நான் வெய்ட் பண்றேன் மேடம்னு சொல்லிட்டு வந்திருப்பிங்கன்னு நினைக்கிறேன் சார்.!!
கொரிய தேசம் ஒரு சூப்பர்ஸ்டாரை சரியா யூஸ் பண்ணத்தெரியாம ஏமாந்துட்டாங்கன்னு தோண்றது!! :-)
கொரிய தேசம் ஒரு சூப்பர்ஸ்டாரை சரியா யூஸ் பண்ணத்தெரியாம ஏமாந்துட்டாங்கன்னு தோண்றது!!//
Deleteஅதே,அதே.
//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!! //
ReplyDeleteஉண்மை உண்மை
உண்மையோ உண்மை
நன்றி நண்பரே :))
.
ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteகடந்த காலங்கள் எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அறியா வயதில் குடும்பம், பணி சுமை, உறவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என ஏதும் இல்லா பருவத்தில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே மனதில் குடி கொண்டு இருக்கும். அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க அப்பொழுது ஒன்றே ஒன்று மேலும் கூடுதலாக காணப்பட்டது. அது “காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இப்பொழுது எல்லாமே மாறி விட்டது. பிறரை சார்ந்து நாம், நம்மை சார்ந்து குடும்பங்கள். இதன் காரணமாக பணி சுமை, பணச் சுமை, இது மட்டுமா? இன்று நமக்காக உழைப்பதை விட நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உழைப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இவற்றின் காரணமாகவும், நம்மை சுற்றி இருக்கும் சிலரின் பொறாமைகள், துரோகங்கள், அதன் காரணமாக வருத்தங்கள் காரணமாகவும் மகிழ்ச்சி என்ற எல்லை கோட்டை கூட கண் காணாத தூரத்தில் தான் குடி இருக்க முடிந்தது.
இப்படிபட்ட சூழலில் தான் மாதா மாதம் இவை எல்லாவற்றையும் மறந்து அந்த டவுசர் போட்டு திரிந்த பால்ய வயதில் எந்த கவலையும் இல்லாத, எந்த வருத்தமும் இல்லாத பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த காலகட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்று கொண்டிருப்பது இப்பொழுது “உங்கள் காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இதனால் நமது இதழ்கள் மாதா மாதம் வரும் பொழுதெல்லாம் ஓர் இனம் புரியா கொண்டாட்டம். சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள். புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.
உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!
ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்... யாராக இருந்தாலும் எழுதியதற்க்கு நன்றி
Rummi XIII : //யாராக இருந்தாலும் எழுதியதற்க்கு நன்றி//
Deleteஅவருக்கும், உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள் !
கணக்கில்லா நன்றிகள் நாங்கள் தான் உங்களுக்கு சொல்ல வேண்டும் ஆசிரியரே
Delete// உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்.//
ReplyDelete100 சதவிகிதம் உண்மை.
Arivarasu @ Ravi : கனத்த வரிகள் சார் ! நம் சின்னஞ்சிறு உலகினுள் ஒரு சின்ன விதத்திலாவது சில புன்னகைகளை அரும்பச் செய்ய எங்களுக்கு சாத்தியப்படுவது நிச்சயமாய் இறைவனின் வரம் !
Deleteஉங்களை ஆசிரியர் ஆக
Deleteஅடைந்தது எங்கள் வரம்சார்.....
காமிக்ஸ் (கடவுள்) கொடுத்த வரம்
Deleteசரி சரி மெயின் Picture-ர சீக்கிரம் போடுங்க
Deleteகடிதம் எழுதிய அந்த நண்பர் யாரென்று தெரியவில்லை! ஆனால், என்னவொரு நிதானமான, தெளிவான எழுத்து நடை!
ReplyDeleteஉள்ளத்திலிருப்பதை வார்த்தைகளில் வடித்தெடுப்பது அழகானதொரு கலை! அது இந்த நண்பருக்கு நன்றாகவே வருகிறது!
( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்?)
ஈ.வி சார் வணக்கம்
Deleteவணக்கம் சார்! அ..அது நீங்கதானா?!!!
Deleteஈ.வி சார் வணக்கம்
Deleteமறுபடியும் வணக்கம் சார்! அ..அது மறுபடியும் நீங்கதானா?!!!
Deleteசத்தியமா இல்ல சார்
Deleteஉயர்ந்த உள்ளம்...
Delete///
Delete( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்?)///
பதிவை திரும்பவும் கவனமா படிச்சிப்பாருங்க ஈ வி.! க்ளூ இருக்கு.!! :-)
Erode VIJAY : //( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்?)//
Deleteபழமொழி சொன்னா அனுபவிக்கணும் ; ஆராயப்படாது !!
அது யாருன்னு எனக்கு தெழியும்...
Deleteஅது யாருன்னு எனக்கும் தெரியும்.
Deleteமாடஸ்டி மேடம் ரெடியா சார்?
ReplyDeleteஅதே.! அதே.!
Delete"
என் மேஜையில் மாடஸ்டி !!
Deleteரெடி ! ரெடி !
சூப்பரப்பு
Deleteவாம்மா மின்னலு
Deleteதங்கத்தாரகையே வருக வருக!
Deleteகாமிக்ஸ் தேவதையே வருக வருக!
///சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள்.///
ReplyDelete///உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்.///
///உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!///
சூப்பர் சூப்பர் ..!! எங்க எல்லோர் மனதையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த வாக்கியங்கள்.!
"இந்த நாடா என்கூடவே இருந்து பழக்கப்பட்ட நாடா மாதிரி இருக்கே " ன்னு தலைவர் கவுண்டர் ஒரு படத்தில் செந்திலை கண்டுபிடிப்பார்.
அதைப்போலவே இந்த கடுதாசியைப் படிக்கும்போதே இதை எழுதிய நண்பர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் மாதிரி தெரியுதேன்னு தோணித்து.!
"பதுங்கியே " இருந்து பழகிய புலி ஒன்று பாய்ந்தது போல் தோணியது என் ஒருவனுக்கு மட்டும்தானா?? :-)
// புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.//
ReplyDeleteமன நிம்மதிக்காக நிறைய பேர் எவ்வளோவோ செலவு செய்கிறார்கள்,எங்கெங்கோ போகிறார்கள்,ஏதேதோ செய்கிறார்கள்.ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே?
இதை கவனத்தில் கொண்டால் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் கொஞ்சம் செலவு,நிறைய நிம்மதி.
இது எப்படி இருக்கு.
அறிவரசு ரவி +1
Deleteசூப்பர்!
///நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் கொஞ்சம் செலவு,நிறைய நிம்மதி.
Deleteஇது எப்படி இருக்கு.///
சூப்பரப்பு..!!
ஜென்குருன்னா சும்மாவா...
Delete@ FRIENDS : +101
Deleteஇந்தப் படக்கதை உலகினுள் எத்தனை அமைதியும், மகிழ்வும் சாத்தியமாகிறது என்பதை இவ்வுலகிற்கு வெளியிலுள்ள நிறைய பேர் அறிய மாட்டார்கள் !! அதுதான் கொடுமையே !!
வீட்டுத் தள்ளுங்க சார் ...
Deleteகழுதைக்கு தெரியுமா பிரிட்டிஷ் ச்சே கற்பூர வாசனை......
நம்ம உலகம் ஸ்மர்ப் உலகம்
Deleteஉண்மை ரவி ...சரியாக சொன்னீர்கள்
Delete///சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால்.///
ReplyDeleteசிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்.!!
ஆனாக்கா, அதையே ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிட்டு ஒரிஜினலை அலமாரியில் பதுக்கிவிட்ட என்னைப் போன்றோரும் சிலர் இருந்திருக்ககூடுமே!!
////சிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்.!!////
Deleteஹா ஹா ஹா!
மாசாமாசம் வந்து சேரும் கொரியர் பெட்டிகளைக்கூட தூக்கி எறியறதில்லைனா பாத்துக்கோங்களேன்! ;)
///மாசாமாசம் வந்து சேரும் கொரியர் பெட்டிகளைக்கூட தூக்கி எறியறதில்லைனா பாத்துக்கோங்களேன்! ;)///
Deleteநீங்க வெளையாட்டா சொல்றிங்களான்னு தெரியலை குருநாயரே,, ஆனா என் வரையில் அது உண்மைதான். அந்தந்த மாதத்து புத்தகங்களை அந்த கொரியர் பெட்டியில் வைத்தேதான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்..!! :-)
ஆனாக்கா, அதையே ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிட்டு ஒரிஜினலை அலமாரியில் பதுக்கிவிட்ட என்னைப் போன்றோரும் சிலர் இருந்திருக்ககூடுமே!!//
Deleteஹி,ஹி,நீங்களுமா.!!!
யாமும் செராக்ஸ் பார்ட்டிதான்....
Deleteமுதல் காப்பில அவசரத்தில 10மார்க்குக்கு போட்டுட்டேன்.
பிறகு மறுபார்வையில் 25க்கு என இருக்க, 2 வது காப்பி எடுக்க வேண்டியதா போச்...
///முதல் காப்பில அவசரத்தில 10மார்க்குக்கு போட்டுட்டேன்.
Deleteபிறகு மறுபார்வையில் 25க்கு என இருக்க, 2 வது காப்பி எடுக்க வேண்டியதா போச்.///
ம்ஹூம். .செல்லாது செல்லாது!
வேறவழியில்லாம ஜெராக்ஸ் எடுத்ததுக்கும், அந்த ரிப்போர்ட்டை விரும்பி வைத்துக்கொள்ள வேண்டி ஜெராக்ஸ் எடுத்ததுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
எனவே யூ ஆர் டிச்சுகுவாலிபைடு யுவர் ஹானரூ. .!! :-)
நாங்க டெம்போலாம் வைச்சுக் கடத்தினத்துக்காகவாச்சும் இன்னும் கொஞ்சப் படிவங்களை அனுப்பியிருக்கலாம் !!
Deleteஒவ்வொரு பிரிவிலும் டாப்பாக ஒரே ஒரு கதையை தேர்ந்தெடுப்பது மட்டும் முடியவே முடியலை சார். மாறாக டொங்ஸை தேர்ந்தெடுக்க ஒரு செகண்டே தேவைப்பட்டது.
ReplyDeleteசந்தா C யில் ஆர்டினின் ஆயுதமும் டாப் க்ளாஸ் காமெடிதான். ஆனால் ஒன்னே ஒன்று எனும்போது முடிய்லையே..!!
போலவே சந்தா B யில் நின்று போன நிமிடங்களும் டாப்பான கதைதான்..! தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றிபெறுவார் என்பதுதானே நியதி.
DeleteKiD ஆர்டின் KannaN : "நின்று போன நிமிடங்கள்" எனக்குமே ரொம்பப் பிடித்திருந்தது !
Deleteஜுலியாவை நம்மவர்களுக்குப் பார்த்தவுடன் பிடிக்கிறதோ - இல்லையோ ; பார்க்கப் பார்க்கத் தான் பிடிக்கும் என்பது புரிகிறது ! நிச்சயமாய் தொலை தூரம் ஓடவிருக்கும் பந்தயக் குதிரை இவர் என்பதில் எனக்கு ஐயமில்லை !
///தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றிபெறுவார்///--- அமெரிக்க தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி....
Deleteபாப்புலர் வோட்ல வெற்றினா அதான் உண்மையான வெற்றி(இந்தியாவில்)...
Deleteஅமெரிக்காவில் அதும் தோல்வி....
அதிக ஓட்டு வாங்குனா தோல்வியாம். அதிக காலேஜ்ல காலூன்றினால் வெற்றியாம்...
50வருசமா ஒருந்தர்ஒரு இடத்தில் வெற்றி...
ஒரே மாசத்தில் அவர் இங்கோ தோல்வி...
2ம் உணர்த்துவது என்ன....்????
Surprise post...அப்போ நாளைக்கு பதிவு இல்லையா..So sad
ReplyDeleteWhy not. Vijayan sir, we are expecting your regular tomorrow early morning. அடிக்க வராதிந்க்க
Deleteஒரு நாளைக்கு ஜாலியாகத் தூங்குங்க சாமிகளா !
Deleteஎனக்கு பென்னி தான் நாளைய துணைவன் !!
சந்தா Bல் தன்னந்தனியாக நின்று வெற்றிக்கனியைப் பறித்த தங்கத்தலைவன்(தலைமுடி தங்கமாட்டம் இருக்கில்ல) மர்ம மனிதன் மார்டின் அவர்களை பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்த ,வயதில்லை வணங்குகிறேன்
ReplyDeleteஇதை நான் வழி மொழிகிறேன்.
Delete//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!//
ReplyDelete+1
/// So சந்தா B-ன் டாப் :
ReplyDeleteஎனக்கும், உங்களுக்கும் : "இனி எல்லாம் மரணமே”"///...
மறு சீராய்வு மனுவை அனைத்துலக "டைனமைட் டெக்ஸ்" ரசிகர்கள் சார்பில் தாக்கல் செய்கிறேன் யுவர் ஆனர்.
மீண்டும் நன்றாக ஆய்வு செய்து விரைவில் நல்ல தீர்ப்பு தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
டெக்ஸின் டாப்பை மர்மம் மறைக்கும்;
மீண்டும் அரிசோனாவே ஆடும்.
better luck next time your honour
Deleteமறு மதிப்பாய்வு இருக்கும்போது....
Deleteசேலம் Tex விஜயராகவன் : பதிவாகும் வாக்குகள் தானே சார் பேசிட முடியும் ? ரிசார்ட்டில் ரூம் போட்டுக் கொடுத்தோ ; வேறு ஏதோ வழிகளில் தாஜா செயதோ அரிசோனா அணியை பலமாக வாக்களிக்கச் செய்திருக்க வேண்டாமா ?
Delete58வது.சூப்பர்
ReplyDeleteமொக்கை பீஸ்
ReplyDeleteClose second இரத்தப்படலம் The end?
அவரா(எடிட்டர்) சொன்னார்? இருக்காது.
அப்படி எதுவும் நடக்காது.
நடக்கவும் கூடாது.
நம்ப முடியவில்லை.இல்லை.இல்லை.
அவரா சொன்னார்? இருக்காது.
Govindaraj Perumal : அந்த சிகப்புக் - கறுப்புப் படிவங்கள் சொல்லும் செய்தியை இங்கு ஒலிபரப்பும் ஸ்பீக்கர் மட்டுமே அடியேன் ! (ஸ்பீக்கர் என்பதற்காக சாத்திப்புடாதீங்க !!)
Delete///(ஸ்பீக்கர் என்பதற்காக சாத்திப்புடாதீங்க !!)///
Deleteஎடிட்டர் சார்..!! :):):):)
Editor sir!!:-)))
DeleteKiD ஆர்டின் KannaN & selvam abirami : ஒரு முன்ஜாக்கிரதை தானே ?!!
Deleteஅதுக்குள்ள பதிவா சூப்பர்
ReplyDelete//பெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது ? bottom எது ? என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால் -//
ReplyDeleteரசித்துச் சிரித்த இடம்!
Podiyan : நிஜத்தை விட வீரியமானது வேறேதும் கிடையாதல்லவா ? So நம்மூர் நடப்புகள் நடு நடுவே தலைகாட்டுவதைத் தவிர்க்க இயலவில்லை !
Delete3 முறை படித்துது விட்டேன் . மார்டினின் இனி எல்லாம் மரணமே 2016 ன் டாப் இதழ் என்பேன். ஓவியங்கள் அற்புதம். Andrea Artusi என்பவர் பொனெலி குழுமத்தில் கதை இலாகாவில் உள்ள எழுத்தாளர். அவரிடம் facebookல் நம் குமரிகண்டத்தை பற்றி மார்டின் சாகசம் ஏதேனும் இருக்கிறதா என கேட்டபோது பெரும்பாலான மார்டின் கதைகளில் அட்லான்டிஸ் மற்றும் லெமூரிய கண்டத்தை பற்றிய செய்திகள் வரும். அதிலும் இனி வரும் புது வண்ண மார்டின் கதைகளில் அந்த நகரங்கள் மக்கள் பற்றிய கதைகள் வரும் என பதிலளித்தார். என் கேள்விக்கு மதிப்பளித்து பொறுமையாக பதில் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. சார் , மார்டினின் மிக மிக வித்தியாசமான கதைகளாக தேர்தெடுத்து வெளியிடுங்கள். :)
ReplyDeleteசீக்கிரமே 'மானாமதுரையில் மார்ட்டின்'ன்ற பேர்ல புக்கு வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை போலிருக்கே!!!
Deletecap tiger : போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் ! நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் !
Delete///நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் !///
Deleteவாவ். .!
அப்படியே டயானாவின் ரேடாரிலும் என்று நம்புவோமாக.!
இந்த ஜாவா ரேடாரை நினைச்சாத்தான் பயந்து வருது!! :-)
////போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் !////
Deleteஅப்படீன்னா 'மா.ம.ம.ம.மா' ( மானாமதுரையில் மர்ம மனிதன் மார்ட்டின்) கன்ஃபார்டு'ன்றீங்க?
சங்ககால மதுரையில் ம ம மார்ட்டின்
Deleteரிவியூ பதிவு நிறையவே உற்சாகமாய் அமைந்துவிட்டது. எதிர்பாரா விஷயங்கள்தான் உற்சாகம், இதைத் தாங்கள் நாளை வெளியிட்டிருந்தால் ஒரு படி கம்மியாகத்தான் இருந்திருக்குமோ.?
ReplyDeleteஏபிசி டாப்ஸ், சொதப்பல்களை வாசித்துக்கொண்டே வருகையில் ஆமாதான், சரிதான் என்று தலையாட்டிக்கொண்டே இருந்தேன்.. லியனார்டோ வரும் வரை.! சந்தா ஏபியில் எதையாச்சும் சொல்லுங்கள், ஊம் கொட்டிக்கொள்கிறேன். ஆனால், சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு! அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செமையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.
அந்தக் கடுப்போடு தொடர்ந்தால்.. ‘என் பெயர் டைகர்’!! முடிவிலும் ஒரு முத்திரை! வளவள சொளசொளவென முடிவில்லா டெக்ஸனையோ நாயகர்கள் நம்மிடையே இருந்தாலும் வரலாறாய் வாழ்ந்துவிட்டிருக்கும் ப்ளூபெரியைப் பற்றிய நினைவுகள் மனதை சாந்தப்படுத்திவிட்டன. கூடுதலாய் வாசக நண்பரின் செண்டிமெண்டும் மனதைத் தொட்டுவிட மனம் அமைதியாகிவிட்டது.
நானுமே நினைவோடைகளில் சற்றே மிதந்தேன். சிறுவர் மலர் ’உயிரைத்தேடி’ காலங்களில் நமது மாயாவி, ஆர்ச்சி போன்றோரின் ஓரிரு இதழ்கள் மட்டுமே காணக்கிடைத்த சிறுவன் நான். அதெல்லாம் இப்படி ஒரு நிறுவனம் இருக்கிறது என்பதே தெரியாத நாட்கள். மாதாமாதம் இதழ்கள் வருகின்றன எனும் சேதி தெரிந்தால் கூட அப்பாவிடம் அழுது பிடித்து வாங்கியிருப்பேன். அது கூட புரியாத வயது. என்னிலும் வயதில் சற்றே மூத்த என் சித்தப்பாவின் சேகரிப்பிலிருந்து கண்டவைதான் நமது ஓரிரு இதழ்கள். அவருக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றன என்பதைக்கூட யோசிக்க இயலாத வயது அது. கொஞ்சமே என்றாலும் அப்படி லயித்துக்கிடந்தவன்.. இன்று அதே நாட்களை மீண்டும் தருவதற்கு.. உங்களை பாலிவுட் பாப்கான் என மட்டுமல்ல.. ஆலிவுட் விஜய்காப்ரியோ என்று கூட ஒத்துக்கொள்ள தயாராகவே உள்ளேன்.. :-)))))
////உங்களை பாலிவுட் பாப்கான் என மட்டுமல்ல.. ஆலிவுட் விஜய்காப்ரியோ என்று கூட ஒத்துக்கொள்ள தயாராகவே உள்ளேன்.. ///
Deleteகுறைஞ்சபட்சம் ஒரு டீவி சீரியல்லயாவது அவரை நடிக்க வைக்காம விடமாட்டீங்க போலிருக்கே ஆதி?!! ;)
ஆதி தாமிரா : //எதிர்பாரா விஷயங்கள்தான் உற்சாகம், //
Deleteஇந்தப் பதிவை இன்றைக்கே, அதுவும் ஆவிகள் அராத்துச் செய்யும் வேளைக்கு ரொம்ப முன்பாகவே தயார் செய்ததே - "ஞாயிறுதோறும் பதிவு" என்ற அந்த மாமூலிலிருந்து கொஞ்சமாய் மாறுபடுவோமே என்ற ஆர்வத்தில் தான் !! நம்முள் நிறைய இரவுக் கழுகுகள் உண்டென்பதால் - சனியிரவு கச்சேரிக்கு இது உதவுமே என்றும் நினைத்தேன் ! அதற்குள்ளாகவே 75+ பின்னூட்டங்கள் எனும் போது - சர்ப்ரைஸ் நல்லதே என்று தான் தோன்றுகிறது !
//சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு! அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செமையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.//
ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறோம் தானே - the proof of the pudding is in the eating" என்று ?! "அழகாய் உள்ளது ; சுவையாய் உள்ளது ; ரசிக்கலாம் ; சிலாகிக்கலாம்" என்றெல்லாம் நாம் வாஞ்சை காட்டிடலாம் தான் ; ஆனால், நாளின் இறுதியில் அது வெகுஜன கட்டைவிரல் உயர்த்தலை ஈட்டினால் தானே வெற்றி கண்டதாகிட முடியும் ?
Of course - எனக்கும் லியனார்டோவை தோற்ற்றவர் பட்டியலில் சேர்ப்பதில் வருத்தமே ; ஆனால் என்னிடம் உள்ள பூர்த்தி செய்யப்பட்டுள்ள black & red படிவங்கள் சகலமும் தாத்தாவின் மண்டையில் கொட்டு வைக்கும் போது ஞான் என்ன பண்ணும் ?
சில தருணங்களில் , உரத்த விமர்சனங்களின் முன்னே மௌன ரசனைகள் தலைவணங்கத் தேவைப்படுகிறதே ?!! அனைவருமே இந்த review-ல் கலந்து கொள்ளுங்களேன் என நான் TIMESNOW-ன் அர்னாப் கோஸ்வாமியை விடவும் பிடிவாதமாய்க் கூவிடுவது இது போன்ற காரணங்களின் பொருட்டே !!
ஆசிரியர் சூப்பரான கதைகளை சொல்லி அடிக்கும் அர்னால்டு
Delete///தருணங்களில் , உரத்த விமர்சனங்களின் முன்னே மௌன ரசனைகள் தலைவணங்கத் தேவைப்படுகிறதே ?!!///.... அற்புதமான தீர்ப்பின் சாரம் சார்.
Deleteஎனக்கு சந்தா C தான் ரொம்ப பிடிக்கும். போன தடவை வந்த லியானர்டோ ரொம்ப பிடித்து இருந்தது
Deleteஆனால் இந்த முறை சலிப்பு தட்டியது. எனக்கு சிறு சிறு கதைகளும் பிடிக்கும் ஆனால் ஏனோ இந்த முறை பிடிக்க வில்லை.
ஆசிரியரரின்(வாசகர் வாயிலாக) சொன்ன திர்ப்பு சரி என்றே தோன்றுகிறது.
இன்னும் ஓரு வாய்ப்பு கொடுத்து சரியில்லை எனறால் பிற்பாடு துக்கி கொல்லலாம்.
///சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு! அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செமையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.///
ReplyDeleteஎனக்கும் அப்படித்தான்.! கார்ட்டூன் கதைகளில் சொதப்பல் சொல்ல மனசே வராது. ஆனாலும் இந்த வருடத்தின் லியனார்டோ தாத்தாவ்ஸ் கொஞ்சம் சொதப்பல் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.!!
KiD ஆர்டின் KannaN : இது போன்ற சிற்சிறு கதைத் தொகுப்புகளின் மைனஸே ஒரு மிதமான கதையைக் கூடத் தயார் செய்திட களம் தராத அந்தத் தன்மை ! மதியிலா மந்திரியாருக்காவது 6 அல்லது 8 பக்கக் கதைகள் சாத்யமாவதால் - கதாசிரியர் தேறி விடுகிறார் ! ஆனால் லியனார்டோவிலோ ஒரு பக்கம் ; இரண்டு பக்கம் என்று இருப்பதால் எதையும் ஆழமாய் அமைக்க சான்ஸ் லேது தானே ?!
Delete///“டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா////
ReplyDeleteஇந்த ஆற்றலை ரசிப்பதற்காக தான் நாளுக்கு குறைந்த பட்சம் பத்து முறையேனும் தளத்திற்கு ஆஜராகிவிடுவேன் சார்.
Absolute YOURS
T.K. AHMEDBASHA : சென்றாண்டில் இதே நேரம் நான் அனுபவித்த உணர்வுகளின் சாயமிலாப் பிரதிபலிப்பு சார் - இந்த வரிகள் ! அதனால் தான் அதனை ரசித்தீர்களோ - என்னவோ !!
Deleteஇந்த செந்தில் சத்யா வின் வணக்கத்தை வாங்கிக் கொள்ளுங்கள்
ReplyDeleteஆசிரியர் & நண்பர்களே
ஆங்! கொஞ்சூண்டு மட்டும் எடுத்துக்கறேன், சத்யா அவர்களே! ;)
Deleteபணிக்குத் திரும்புமளவுக்கு தேறிவிட்டீர்களா?
வெகு விரைவில் செயலாளரே
Deleteபதில் வணக்கத்தை வாங்கிக்கோங்க செந்தில். .!
Deleteபூரண குணமடைந்ததில் மகிழ்ச்சி நண்பரே. .!!
நண்பர்களுடன் பதிவிடுவது எனக்கு மகிழ்ச்சி
Deleteமகிழ்ச்சி செந்தில் சத்யா அவர்களே...:-)
Deleteபூரண குணமடைந்ததில் மகிழ்ச்சி நண்பரே. .!!
Deleteஅருமையான கதையான சட்டத்திற்கு ஒரு சவக்குழி டாப் தேர்வில் இடம் பெறவில்லையே
ReplyDeleteசெந்தில் சத்யா : கருப்பு & சிகப்புப் படிவங்களின் நகல்களில் "ச.ஓ.ச.கு".இல்லையே நண்பரே ?
Deleteசென்ற ஜனவரியை கலக்கிய இதழ் சட்டத்திற்கு ஒரு சவக்குழி
Delete/// ஆனால் “"ஒரே ஒரு ஊரிலே"” மற்றும் “"வானம் தந்த வரம்"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம் ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு ///
ReplyDelete+1111111111
நாமெல்லாம் புதுப்பதிவை படிச்சு ரசிச்சு, கமெண்ட் போட்டு கலாய்த்து, கமுந்தடித்துப் படுத்துத்தூங்கும் நேரமும் வந்துடுச்சு! ஆனா இந்தவிசயம் தெரியாம, வழக்கம்போல சனிக்கிழமை நடுராத்திரிக்கு கம்ப்யூட்டர்/மொபைல்'ஐ முன்னாடி வச்சுக்கிட்டு 'ஐ பஸ்ட்'னு கமெண்ட் போடறதுக்குக்குன்னே சிலபேரு பொடக்கு பொடக்குனு முழிச்சிக்கிடுட்டிருப்பாங்களே... அவங்களை நினைச்சாத்தான் சிப்பு சிப்பா வருது!
ReplyDeleteErode VIJAY : என்னா ஒரு வில்லத்தனம் ?!!
Deleteஇது போங்கு ஆட்டம். ஞயிற்று கிழமை தானே பதிவு போட வேண்டும். இது என்ன புதுசா சனிக்கிழமை சாய்திரம்?. ஆசிரியர் ஞயிற்று கிழமை தான் பதிவு போடுவார் என்ற நம்பிக்கைய சிதச்சுட்டாரு. என் சின்ன மனசை சின்னாபின்னமாக்கிட்ரு. அதை ஓட்டு மொத்தமாக சரி பன்னவே முடியாது.
Deleteஆசிரியர்: இளவரசி பாக்கெட் சைஸ் அதுவும் கலர்ல...
அந்த ஜிரோ சைஸ்ஸூக்கு. சாரி பாக்கெட் சைஸூக்கு எவ்வளவு பணம் கட்டனும். ஐய்ய்யோ சந்தோஷத்துல பணம் கட்னது கூட மறந்து போச்சே...சே
//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள் //
ReplyDeleteஆழமான, அற்புதமான உண்மை
கரூர் சரவணன் : நன்றிகள் சார் !!
DeleteReviewல் வெறும் பார்வையாளனாக நான் இருந்தததற்கு காரணம் சிறந்த படைப்பாக தேர்ந்து எடுப்பதில் உள்ள சிரமம். எடிட்டர் உங்களின் தேர்வு சரியாகவே உள்ளது.
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : சரியோ-தவறோ ; அடுத்த முறை உங்களின் எண்ணங்களும் பிரதிபலிக்கச் செய்யுங்கள் சார் !
Deleteஎன் பெயர் டைகர் mega hit என்பதில் சந்தேகமில்லை.
ReplyDelete“காமிக்ஸ்” எனும் காலயந்திரம் Visit my new post in tamilcomicseries.blogspot.com
ReplyDelete124th
ReplyDeleteபுதிய பதிவு எப்போ சார்???...
ReplyDeleteஞாயிறு ரெகுலர் பதிவு வரும் வரை விழுத்தே இருப்பேன்....
/// ஈரோட்டில் அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் ! இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ? ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ ? என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை///.....
ReplyDeleteஇம்முறை உடல் நலம் தேறிய செயலர் உண்டு சார்...
அந்த சமயத்தில் வேலை ஏதும் இல்லாத குருநாதர் ஸ்டாலினும் உண்டு சார்...
என்(ங்கள்) வழிகாட்டி மாயாசார் மீண்டும் அட் யுவர் சர்வீஸ் சார்...
சாதனைகள் முறியடிக்கவே படைக்கப் படுகின்றன சார்....
இம்முறை இன்னும் சிறப்பான நண்பர்கள் சந்திப்பாக அமையும் சார்...
நாங்கள் சிலர் வெள்ளியே வேட்டைக் களம் புகுவோம் சார்...
சூப்பரா சொன்னீங்க டெக்ஸ்! பிச்சு உதறிடுவோம்!
Deleteசும்மா பின்னுறோம்
Deleteஆமா....கண்டிப்பா பின்றோம் ..
Deleteவெள்ளிக்கிழமையே டேராவப் போடுறோம். பட்டைய கெளப்புறோம். ஆம்மா..!!
Deleteதிரு விஜயன் அவர்களே...இரண்டு கைகளாலும் கையெழுத்து போட சிவாஜி மாதிரி பழகிகோங்க. அப்புறம் போன் GPS ஆன் பண்ணிவெச்சிகங்க.
Deleteகூட்டத்தில நீங்க எங்க இருக்கீங்க? வாசல் எந்தபக்கம்?மேடை எந்த பக்கம்ன்னு தெரிஞ்சிக்க GPS தேவைப்படும்.!
முக்கியமா கலர் ஃபுல்லா...குண்டா ஒரு புக் + செமத்தியான அறிவிப்புக்கு இப்பவே ப்ளான் ரெடி பண்ணுங்க.!
என்ன சேலம் டெக்ஸ்...நான் சொல்றது சரிதானே..!! :))))))))
சரிதான் ஜி.
Deleteவெள்ளிக்கிழமையே டேராவப் போடுறோம். பட்டைய கெளப்புறோம். ஆம்மா..!!//
Deleteயெஸ் பட்டய கிளப்புறோம்.
எக்ஸாட்லி மாயாசார்...
Deleteஎன் மனதில் இருந்ததை வார்த்தையால் கோர்த்து விட்டீர்கள்.
இம்முறை 200கையெழுத்து விழனும்...
// போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் ! நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் ! // வாவ். சூப்பர் சார். :)
ReplyDelete//ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteகடந்த காலங்கள் ... தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!//
பெரும்பாலான வாசகர்களின் உள்ளக்கிடங்கை படம் பிடித்து போட்டிருக்கிறார் நண்பர். இதே உணர்வுகள் இருந்தாலும் இவ்வளவு தெளிவாக என்னால் எழுத முடியாது. ஒவ்வொரு வரிக்கும் +100
சரியா சொன்னிங்க நண்பரே.
Deleteஎன் அபிமான மார்டின் முதல் இடத்தை பிடித்திருப்பதில் பெரு மகிழ்ச்சி.
ReplyDeleteஅதே சமயம் ராபின் கதை கடைசி இடத்தை பிடித்திருப்பது வருத்தத்தை தருகிறது. (எனக்கும் வேதாள வேட்டை சமார் தான்). இவரின் பனியில் ஒரு பிணம், நரகத்தின் நடுவில் போன்ற பரபரப்பான கதைகள் மீண்டும பார்க்க விருப்பம். ராபினின் கதைகளில் ஆக்ஷன் குறைவாகவும் டிடெக்டிவ் விஷயங்கள் அதிகமாக இருக்கும் கதைகளே சிறப்பு. அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்திட வேண்டுகிறேன்.
+11111
Deleteநேற்று ...பதிவை படித்து ஆனந்த உறக்கம் ...காரணம் இந்த சிறுவனின் ரசனையும் மற்ற அனைத்து பெரியவர்களின் ரசனையும் இம்முறை 95% சரியாக இருந்தது...
ReplyDeleteநான் வளர்கிறேனே மம்மி...:-))
ஆனந்த உறக்கமோ?!
Deleteடெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன்
ReplyDelete########
நம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை !
########
பெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது ? bottom எது ? என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால்
##########
“டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா!”!! என்று என் மனம் கூவாத குறை தான் ! ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு....
##########
இப்படி இந்த பதிவில் பல இடங்களில் லக்கி..சிக்பில்லை விட வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள் சார்...:-)))
Good morning editor sir and friends.
ReplyDeleteசிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்
ReplyDelete######
ரவி கண்ணன் ...ஹாஹா....:-)))
ஆனா நான் தான் ரூல்ஸை சரியா கடை பிடிக்கனும்ன்னு ஒரிஜினல் மார்க் ஷீட்டையே அனுப்பிட்டேன் ...:-((
திரும்ப நான் வளர வீல்லையே மம்மீஈஈஈ....:-)
உண்மை உண்மை உண்மை! ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்!)
ReplyDelete#####₹
செயலரே....:-))))
இந்த வாரம் நகைச்சுவை வாரம் ....:-)
Good morning to all Thanks a lot to the bro who wrote our heart collectively
ReplyDeleteThis letter gives a Recharge,Energy to go a long way for our HERO who is bringing happiness to our door step every month
Kindly suggest me a good Tamil keyboard friends
செல்லினம், எழுத்தாணி, கூகுள் தமிழ் பலகை இவற்றில் ஏதாவது ஒன்று முயற்சி செய்யுங்கள் நண்பரே....
Deleteநன்றி நண்பரே
Deletewell, He echoed for all of us ( refer. to thanks note by one of us at the end of sir's latest blog
ReplyDeleteமாத்தியோசி-38
ReplyDeleteஅனைத்து வாசகர்களின் சார்பாக
ReplyDeleteஅமைந்த கடிதம் கூறியது200%உண்மை
எபெடை சிறப்பு
செல்லாது செல்லாது நாட்டாம
தீர்ப்ப மாத்து??????
எங்கள்முத்துஉங்கள்சொத்து
அண்ணன் லயன்ஸ்டார் நடிக்கும்
காமிக்ஸேவாழ்க்கை 50வது பொன்விழா
காண வாழ்த்தும் அகில உலக
லயன்ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர்
ganesh.kv .நானும் எப்பத்தான் தலீவர்
ஆகுறது.என்னசெயலாளர் ஈ வி நான்
சொன்னது சரிதானே.
சந்தா B ல் எனது டாப் இதழ் ## சர்வமும் நானே ## தான்.... தல தல தான்.....
ReplyDeleteநாட்டாமை திர்ப்ப மாத்துன்னு சொல்லாம விட்டுடிங்க..
Deleteபதிவுக்கு ஏகோபித்த வரவேற்பு போலும்.நாளைக்கே புது பதிவை எதிர்பார்க்கலாமோ?!
ReplyDeleteஉண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!//
ReplyDeleteநூறு சதவீதம் உண்மை.
ஓரு வருடம் முன்பு யாராவது மர்ம மனிதன் மார்டின் டெக்ஸை முந்துவாரு சொன்ன. கோபம் வர்ர மாதிரி காமெடி பன்னதா சொல்லி கடுப்படுச்சிருப்பாங்க.
ReplyDeleteஅவ்வளவு ஏன் நம்ம டைப் பன்ற நம்ம கீ_போர்டு கூட நம்பி இருக்காது.
ஓரு ஸலாட் கூட தேருவாரான்னு இருந்த மார்டினுக்கு முதலிடம். காலமும் கதையும் நம்பள எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது.
வண்ணத்தில் முதல் முறையாக மாடஸ்டி!
ReplyDeleteஇந்த முயற்சி முடிவல்ல.ஆரம்பம்தான் என ஆசிரியர் முடிவெடுக்க "கழுகு மலைக்கோட்டை" விற்பனையில் சாதனையை நிகழ்த்திக்காட்டும் என நம்புகிறேன்.
இனி-
நமது லயனில் வந்த மாடஸ்டியின் கதையை அப்படியே தந்துள்ளேன். பலருக்கு பழையதாக தோன்றினாலும் ஒரு சிலருக்கு மாடஸ்டியின் முன் கதை தெரியாதிருக்குமானால் அவர்களுக்கு இந்த பதிவு உதவக்கூடும். இனி மாடஸ்டியின் கடந்த காலம்.....
இரண்டாம் உலக யுத்தம் முடிவுறும் தறுவாயில் கிரீஸிலுள்ள ஒரு அகதிகள் முகாமிலிருந்து மெல்ல வெளியேறினாள் ஒரு சிறுமி.
முடிவின்றி நீண்ட துயரங்களினூடே அவளை அரவணைத்து வந்த கரம் துவண்டு விழுந்து விட்டது...அவள் அனாதையாகிப் போனாள்.....
எத்தனையோ பயங்கரங்களை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் அவளுக்கு எல்லாமே மறந்து விட்டது. தன் பெயர்கூட அவளுக்கு நினைவில்லை. அங்கிருந்து தப்பியோடிவிட வேண்டும். இதுதான் அப்போதைக்கு அவளுடைய இலட்சியம்.
கால் போன திசையில் நடந்தாள். இரவுப் பொழுதை கானகத்தினூடே கழிக்க நேரிட்ட போதும் அவள் கலக்கமடையவில்லை.
குளிர்காலம் வந்த போது அவள் ஒரு கிராமத்தில் தங்கினாள்.பசியைப் போக்கிட கடுமையாக உழைத்தாள். முடியாதபோது பிச்சையெடுத்தாள்.
அச்சமும் துயரமும் அவளைவிட்டு விலகிக்கொண்டு விட்டன. உயிரை தக்க வைத்துக் கொள்ளும் கலையில் தேர்ந்துவிட்டாள்.
மீண்டும் நெடுந்தூர பயணத்தை மேற்கொண்ட அந்த சிறுமி மற்ற சில அகதிகளோடு எல்லையை கடந்து பெர்ஸியா நாட்டுக்குள் புகுந்தாள்.
அவளைப்போல நாடிழந்து வெறும் கையோடு மனம் தளர்ந்து அங்கே வந்து சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்கள் பல இருந்தன....
ஆனால் அவள் எந்த முகாமிலும் நீடித்து தங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. நகர கடைவீதிகளில் திருடினாள். நாடோடி கும்பல்களோடு தங்கினாள்.
அப்படி ஒரு அகதிகள் முகாமில் தங்க நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் அந்த கிழவரை சந்தித்தாள்.அவரிடமிருந்த அற்ப உணவுப் பொருளை ஒரு திருடன் அபகரிக்க முயன்றான்.
அது தனக்கே ஏற்பட்ட பிரச்னையாக எண்ணி சிலிர்த்தெழுந்த சிறுமி திருடன் மீது ஆக்ரோஷமாய் பாய்ந்தாள்.
அவளிடமிருந்த ஒரே பாதுகாப்பு ஆயுதமான சிறுகத்தி முரடனின் முழங்கையில் கீறியதை அடுத்து அவன் தப்பியோடிவிட்டான்.
(தொடரும்)
தனித்து உயிர் வாழ முடியாத அளவு பலவீனப்பட்டு போயிருந்தார் அந்த கிழவர்.அவரை தன்னால் பராமரிக்க முடியும் என்று நம்பினாள் அந்த பன்னிரண்டு வயது சிறுமி.
ReplyDeleteவிசித்திரமானதொரு நட்பு அவர்களிடையே மலர்ந்தது. ஏதோ புரபஸர் என்று சொல்லிக்கொண்ட அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது.
இருவரும் முகாமை விட்டு வெளியேறினர்.அவளுக்கு கோடை காலம் முழுதும் பாடம் சொல்லிக் கொடுத்தார். "மாடஸ்டி" என்று அவளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர்களிருவரும் நாடோடிகள் போல இடம்விட்டு இடம் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் மிக அலட்சியமாக சமாளித்தாள் மாடஸ்டி.
புத்தகங்களை திருடிக்கொண்டு வந்து கொடுத்தாள் அவர் கற்றுக் கொடுப்பார் என்று. கற்றுக்கொடுப்பதை அவள் புரிந்து கொள்ளும் வேகம் அவரை வியக்க வைத்தது.
ஒரு கதையில் வந்த "ப்ளைசி"என்ற பெயர் அவளுக்கு மிகவும் பிடித்து போனதால் அதை மாடஸ்டி என்ற பெயரோடு சேர்த்துக் கொண்டாள்.
மற்றவர்களைப்போல் தானும் வசதியாக வாழவேண்டும் என்ற இலட்சிய வெறி அவளை நகரத்தின்பால் இழுத்தது.
நகரை அடையும் தறுவாயில் கிழவர் செத்துப்போனார். அவரை அடக்கம் செய்து முடித்த மாடஸ்டி வாழ்க்கையிலேயே முதன்முறையாக கதறி அழுதாள்.
பின்னர் ஹென்ரி என்பவன் நடத்திவந்த சூதாட்ட அரங்கில் பணிப்பெண்ணாக இருந்தாள்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவள் கற்றுக் கொண்டது ஏராளம்.
இரண்டு கும்பல்களிடையே நடந்த மோதலின்போது ஹென்ரி கொல்லப்பட்டபோது அவன் இடத்தை மாடஸ்டி இட்டு நிரப்பினாள்.
திட்டங்களை வகுத்தாள்.அவற்றை செயல்படுத்தினாள். கும்பல் வலுப்பெற்றது. நாடுகள்தோறும் கிளைகள் தோன்றின.
இருபதே வயதில் அவள் பெயர் உலகின் மூலைமுடுக்கு எங்கிலும் எதிரொலித்தது. ஆனால் குற்றங்களை நிரூபிக்கவே முடியவில்லை.
மாடஸ்டியிடம் கெட்ட பழக்கங்கள் ஏற்படவேயில்லை. மனிதனை ஈனப்படுத்தும் தீய பழக்கங்களை அறவே வெறுத்தாள்.
" வில்லி கார்வினை" முதல் முறையாக சைகோனில் நடந்த ஒரு குத்துச்சண்டை மைதானத்தில் அவள் சந்தித்தாள். சட்டத்திற்கு புறம்பான அந்த போட்டியில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டார் கார்வின்.
அவரை சிறையிலிருந்து மீட்டாள் மாடஸ்டி. எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்!
(தொடரும்)
திகைத்துப்போன கார்வினுக்குப அவள் ஒரு இளவரசியாகவே தோன்றினாள்.(நமக்கு மட்டும் என்னவாம்???).
ReplyDeleteமாடஸ்டியின் சகவாசத்தால் முரட்டு கார்வின் முற்றிலும் மாறிப்போனார். " நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கடின சித்தத்தில் துளிர்விட்டன." விரைவிலேயே மாடஸ்டியின் வலது கரமாகிவிட்டார் அவர்.
சேர்ந்து திட்டமிட்டனர்.சேர்ந்து சண்டை போட்டனர்.தப்பியோடினர். ஒருவர் காயம்பட்ட போது மற்றவர் கவனித்துக் கொண்டனர். ஆறு ஆண்டு காலத்தில் நிறைய செல்வம் குவித்து விட்டனர்.
தன் கும்பலை பல துண்டுகளாக்கி குழுத்தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள் மாடஸ்டி.
இலண்டனில் ஒரு வீட்டை வாங்கி குடியேறினாள்.ஆயுளுக்கும் போதுமான பணம் சேர்த்துக்கொண்ட கார்வின் தேம்ஸ் நதியோரமாக இருந்த ஒரு விடுதியை வாங்கினார்.
மாறுபட்ட அந்த புதுவாழ்க்கை அவர்களுக்கு அலுப்பூட்டியது. இந்த பலவீனத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார் -ஸர் ஜெரால்டு டர்ராண்ட்.பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரி.
கார்வின்-மாடஸ்டி வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் துவங்கியது. நீதிக்காக முதன் முறையாக போராடத் துவங்கினர்.
ஆனாலும் அவர்கள் உளவுத்துறை ஊழியர்கள் அல்ல. உழைப்புக்கு ஊதியம் பெற மறுத்தனர். உத்தரவுகள் தங்களை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கவில்லை.
ஆபத்து அவர்களை தேடிக்கொண்டு வரத் துவங்கியபோது புது உற்சாகத்துடன் வரவேற்றனர்.
நாமும் அதே உற்சாகத்துடன் வரவிருக்கும் "கழுகு மலைக் கோட்டை" சாகஸத்தை வரவேற்போமா நண்பர்களே?
இந்த வண்ண இதழுக்கு கிடைக்கும் வரவேற்பு ஆண்டுதோறும் ஒரு வண்ண மாடஸ்டி தரிசனத்திற்கான கதவினை திறந்திடும் திறவுகோலாக அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.