நண்பர்களே,
வணக்கம். ஒத்துக் கொண்டே தீர வேண்டும் - நிஜம், நிஜம் தான் ; ரீல், ரீல் தானென்று !! என்னதானொரு வான் ஹாம்மேவும், வில்லியம் வான்சும் 'தம்' கட்டி, "இரத்தப் படலம்" என்றொரு க்ளாஸிக்கை உருவாக்கி, செண்டிமெண்ட் ; ஆக்ஷன் ; பரபரப்பு என்ற சுவைகளை நமக்குக் காட்டட்டுமே.....?! அவற்றை ஒற்றை நொடியில் தூக்கிச் சாப்பிட இன்றைய தமிழகத்தில் நிஜத்தின் நிகழ்வுகள் காத்துள்ளனவே ! என்னதானொரு கோசினியும்,மோரிஸும் இணைந்து "லக்கி லூக்" என்றதொரு ஜாம்பவானைப் படைத்து அவர் மூலமாக நமக்கு கிச்சு கிச்சு மூட்டிப் பார்க்கட்டுமே ...! "யார்கிட்டே...?" என்ற பழிப்புக் காட்டிக் கொண்டே நம்மைக் கெக்கே-பிக்கேவென சிரிப்பில் உருளச் செய்யும் ஆற்றல் சமீபத்தைய அன்றாடங்களிடமா பஞ்சம் ? செம பில்டப்....மர்மம்...திகில்....என்று ஜேசன் ப்ரைஸோ, அவரது தாத்தாவோ களமிறங்கித் தான் பார்க்கட்டுமே - தினமும் இரவிலும், பகலிலும் நான் டி-வியில் பார்க்கும் விவாத மேடைகள் சகலத்தையும், தூக்கிச் சாப்பிட்டு "யேவ்வ்வ்வ்" என்று ஏப்பம் விடுகிறதா - இல்லையா ? So கடந்த வாரம் முழுக்க நான் எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொண்டிருந்தாலும், பணிநேரம் தவிர்த்த சமயங்களில், நம்மைச் சுற்றி நடந்துவரும் மெகா சீரியல் நிகழ்வுகளைப் பார்ப்பதிலேயே பொழுதைச் சுலபமாய் விரயம் செய்துவிட்டேன் ! தவிர, நமது இதர தொழில்களின் பொருட்டும், நிறையவே மெனக்கெடல்கள் அவசியமாகிட - இந்தப் பக்கமாய்த் தலை காட்டவே சுத்தமாய் முடிந்திடவில்லை ! Sorry all !!
மார்ச் மாதத்துப் பணிகள் இந்தக் கூத்துக்களுக்கு மத்தியில் "தட தடத்து வருகின்றன !! " இதனை நான் அழுத்திச் சொல்லிடக் கூடுதலாயொரு காரணமுள்ளது - simply becos இம்மதத்து இரவுக்கு ககாரின் சாகசத்தில், தண்டவாளங்களை அதிர செய்யும் இரும்புக்
குதிரையாருக்குமொரு முக்கிய பங்குள்ளது ! ஜனவரியில் ஒரு டிடெக்டிவ் ரோல் : பிப்ரவரியில் சுத்தமான அராத்துப் பார்ட்டி வேஷம் என்று டெக்ஸ் வில்லரின் வித்தியாச முகங்களை பார்த்திருந்தோம். ஆனால் அந்நியனையும், ரெமோவையுமே நாள் முழுக்கப் பார்த்திடாது - அவ்வப்போது ஒரிஜினலான அம்பியின் முகத்தையும் ரசிப்பதிலும் சுவாரஸ்யம் உண்டல்லவா ? So நமது ரேஞ்சர்கள் அரிதாரங்களின்றி, அக்மார்க் ரேஞ்சர்களாகவே பட்டையைக் கிளப்பக் காத்துள்ளனர் இம்மாதம் ! கதையின் முதல் பக்கத்திலிருந்தே டெக்ஸோடு - வெள்ளி முடியாரும் ஒட்டிக் கொண்டிருக்க, "சுப மங்களம்" போடும் வரையிலும் மனுஷன் லொங்கு லொங்கென்று குதிரையை ஒட்டித் திரிகிறார் ; நாமோ - அவரையே ஒட்டித் திரிகிறோம் ! பொதுவாய் பக்க நீளம் காரணமாய் - டெக்சின் கதைகள்தான் ஒவ்வொரு மாதமும் கடைசியாய்த் தயாராகிடுவது வழக்கம். "அட...black & white இதழ் தானே ? கடைசி நிமிஷத்திலும் தயார் செய்துக்கலாம் !!" என்ற குசும்பும் இதற்கொரு காரணம் ! ஆனால் இம்முறை பணியாற்ற அமர்ந்த போதே ஒரு ஜாலியான வேறுபாடு கண்ணில் பட்டது ! சற்றே கீச்சலான பானிச் சித்திரங்கள் இந்த சாகசத்துக்கெனப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கார்சனின் அழகு வதனம் எக்ஸ்ட்ரா அழகாய்த் தெரிவது போலத் தோன்றியது எனக்கு ! அந்த expressive முகத்தில் நெளியும் குசும்பு ; கடுப்பு ; நையாண்டி என சகலமுமே சற்றே தூக்கலாய்த் தெரிந்ததைக் கதை முழுவதிலும் கவனிக்கலாம் ! பற்றாக்குறைக்கு நன்றாகவே ஏறிப் போனதொரு முன்நெற்றியும், குறு குறு ஆட்டு தாடியும், ஓவியர் ஆர்ட்டிசின் புண்ணியத்தில் ஜொலிப்பதை ரசிக்கலாம் !
கதை ஆரம்பமே வித்தியாசமாய் இருந்தது ! வழக்கமாய் குதிரைகளில் பிட்டங்களைத் தேய்த்துத் திரியும் நம்மவர்கள் ஒரு இரவு ரயிலில் சலம்பிக் கொண்டே பயணிக்கின்ற sequence -ல் துவக்கம் இருந்திட - 'அட்ரா சக்கை' என்று பிரகாசமானேன் ! கதைக்குள் புகுந்த பொழுது கதாசிரியர் நிஸ்ஸியின் ஜெட்வேகக் களமும், ஸ்க்ரிப்டும் அதிரச் செய்ய, ஓவியரின் அந்த breezy பாணியும் உற்சாகம் ஊற்றெடுக்கச் செய்ய - 224 பக்கங்களையும் வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடந்திட இயன்றது ! துளி கூடத் தொய்வின்றி, பர பரவென்று பட்டாசாய்ப் பொறிகிறது - "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்"!! So வந்துட்டார்னு சொல்லலாம் ; அதிரடியாய்த் திரும்பவும் வந்துட்டார்னு சொல்லலாம் !! இதோ இந்த crackerjack இதழுக்கான அட்டைப்பட first look ! (இன்னமும் பின்னட்டையில் லேசாய் tasks பாக்கியுள்ளது !)
வழக்கம் போலவே, இதுவுமொரு கூட்டணித் தயாரிப்பே ! நமது ஓவியர் மாலையப்பன் 'தல'யை வரைந்திருக்க, வர்ண மாற்றம் ; பின்னணிச் சித்திர இணைப்பு இத்யாதிகள் பொன்னனின் கைவண்ணம் ! போன மாதம் கட்ட துரையிடம், கட்டம் சரியில்லாது சிக்கிப் போன கைபுள்ளையைப் போல சொக்காயின்றி நம்மவர் நின்றதை ஈடு செய்திட இம்முறையோரு தோரணையான ராப்பரை அமைத்தே தீர வேண்டுமென்று வைராக்கியமாக இருந்தேன் ! நம்மவர்கள் என் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டதாகவே தோன்றியது ! What say folks ?
And இதோ - உட்பக்கங்களின் ஒரு முன்னோட்டமும் கூட ! ஏற்கனவே நமக்குத் பரிச்சயமான ஓவிய பாணி தானென்றாலும், இந்தக் கதைக்கு இதுவொரு வித்தியாசமான flavor தருவதாக எனக்குப் பட்டது ! So மார்ச்சின் ஓட்டப் பந்தயத்தில் 2 வது; 3 வது ; 4 வது ஸ்தானங்களுக்கே போட்டி என்பேன் !
'தல; புராணம் போதுமென்பதால் - பார்வைகள் இனி லயிக்கவிருப்பது இன்னுமொரு கௌபாய் மீதே ! முன்னவர் மிரட்டல் திலகமெனில் ; பின்னவர் (சிரிப்பில்) உருட்டல் திலகம் ! Oh yes - நமது பென்சில் பருமன் காமெடி நாயகரான லக்கி லூக் தான் மார்ச்சின் கார்ட்டூன் பிரதிநிதி ! எல்லா நாயகர்களும் ; கதைத் தொடர்களும் எனக்கு ஆதர்ஷத்தில் சமமான அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஒரு சிலர் மீதொரு மிருதுவான மூலை - (அட soft corner தான் !!) எனக்குண்டுதான் ! அந்தப் பட்டியலில் ஒரு உச்ச இடத்தைப் பிடித்து நிற்பவர் லக்கி ! கார்ட்டூன்கள் எப்போதுமே உற்சாகம் தரும் பணிக்களங்கள் என்றாலும், லுக்கிக்குப் பேனா பிடிப்பது ஒரு ஜாலியோ ஜாலி job !! மூன்றே ராப்பொழுதுகளில் இதன் மொழிபெயர்ப்பை முடித்திட சாத்தியமானது !! And இதோ 'தரைக்கடியில் தங்கம்" இதழின் அட்டைப்பட முதல் பார்வை ! ஒரிஜினல் டிசைனே ; மெலிதான நகாசு வேலைகளுடன் !
வழக்கம் போலவே கலரில் கலக்கும் உட்பக்கங்களிலிருந்தும் ஒரு டீசர் ! கதாசிரியர் கோசினியோடு கரம் கோர்த்து மோரிஸ் உருவாக்கிய பல classic கதைகளுள் "த.அ.த" வும் ஒன்று ! அமெரிக்காவைப் புயலாய் உலுக்கிய எண்ணெய் வள தேடலைப் பின்னணியாகக் கொண்டு அதனுள் லக்கி & ஜாலியை உலவ விட்டுள்ளனர் ! So பார்வைக்கு இதுவொரு கார்ட்டூன் கதையாகத் தெரிந்தாலும், கொஞ்சம் வரலாறு ; நிறைய பகடி ; மெலிதான படிப்பினை என நிறைய சமாச்சாரங்கள் இங்கே பின்னணியில் உள்ளதை உணர முடியும் ! So மார்ச்சின் இந்த 2 கௌபாய்க் கதைகளையும் உங்களிடம் ஒப்படைக்கப் பரபரக்கிறது மனசு !!
Before I sign off - இதைப் பாருங்களேன் !! பார்த்த கணம் முதலாய் இழுத்துப் பிடித்த மூச்சை இன்னமும் விட மனதின்றித் திரிகிறேன் !! Breathtaking !!!! யாரது கைவண்ணமாக இருக்குமென்று any guesses ? Bye now all ! See you around !
- P.S : அந்த "ஜேசன் ப்ரைஸ் அனுபவத்தை" இன்று மதியம் ஆராய நேரமிருக்குமா guys ? 1 மணி சுமாருக்கு நான் ஆஜராகியிருப்பேன் !!
- உசுப்பி விட்டு கடுப்பேத்துவானேன் ? என்று தோன்றிட - போன பதிவினிலேயே அது பற்றி வாயைத் திறக்கும் சபலத்துக்கு அணை போட்டு வைத்தேன் ; ஆனாலும் அந்தக் கடைவாய் ஓரத்தில் பெருக்கெடுக்கும் ஜொள்ளை துடைத்துக் கொண்டே லேசானதொரு பிட்டைப் போட்டு வைக்கும் ஆசையினை அடக்க இயலவில்லை ! இன்னமுமொரு அட்டகாசப் பதிப்பகத்தோடு கைகோர்க்கும் முயற்சிகள் கனஜோராய் நடந்து வருகின்றன !! ஓரிரு மாதங்களில் வாண வேடிக்கைகள் காத்துள்ளன !! இப்போதைக்கு இந்த பிட் போதும் தானே ? !
1
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்
Deleteமீனும் உண்டு பூனையாரே...
Deleteno 3 போச்சே போச்சே no 1
ReplyDeleteGood morning :)
ReplyDelete.
5th
ReplyDeleteTex ஓவிய பாணி வித்தியாசமாக அழுத்தமாக உள்ளது!
ReplyDeleteஆகா.! டெக்ஸ் கதையின் டீஸர் ஆவலை தூண்டுகிறது.ஒல்லி பிச்சானும்தான்.!இப்படியே பத்து நாட்கள் காத்திருக்க வேண்டுமா.???ஹும்.!!!
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே....
ReplyDeleteகாலை வ.ணக்கம். அ.ட்டைப்படங்கள்பிரமாதம்.
ReplyDeleteGood Morning
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் நிஜமான அசத்தல்!! நமது ஓவியர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்!
ReplyDeleteலக்கியின் அட்டைப்படமும் சூப்பர்!
அம்மாடியோவ்!!!! அஜய் சாமியின் அட்டைப்படம் - ஸ்தம்பிக்கச் செய்யுது!!! என்னாவொரு திறமை!!!!!!! அசத்தல் அசத்தல் அசத்தல்!!!!!!!!!
காலை வணக்கம்.
ReplyDeleteடெக்ஸ் விஜய ராகவன்.!
ReplyDeleteஇந்த ஒவியத்தை வேறு ஏதாவது கதையில் ரசித்துள்ளோமா.???
நலமா MV sir?
Deleteஇரண்டும் டைகர் பாணியில் உள்ளன. டைகரின் கதைகள் அனைத்தையும் மீண்டும் புரட்டினால் எங்காவது தென்படக்கூடும் சார்.
Sathan vettai..??
Deleteசார்(ஸ்).!
Deleteஜோஸ் ஓர்டிஸ் டயனோசரின் பாதையில்.. (தீபாவளி மலர்) கதையின் ஓவியர்.!
@ FRIENDS : லயன் / திகிலில் வந்துள்ள அந்த 13 -வது மாடி கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிப் பாருங்களேன் நண்பர்களே ?! இதே ஜோஸ் ஆர்டிஸ் தான் அதற்கும் ஓவியர் !!
Deleteதல தல தான் நிருபிக்க இன்னும் 10 நாட்கள் எல்லாம் தேவையில்லை.அட்டையும் டீசருமே பறை சாட்டுகிறதே தல தான் no 1என்று.
ReplyDeleteகடை வாயை கொஞ்சம் துடைத்து விட்டு அந்த புது ஹீரோவை சொல்லலாமே.
+1
DeleteSaran Selvi : //கடை வாயை கொஞ்சம் துடைத்து விட்டு அந்த புது ஹீரோவை சொல்லலாமே.//
Deleteஉரிய தருணத்தில் !!
வந்துட்டேன்
ReplyDeleteHi good mong everybody!
ReplyDeleteவணக்கம் சார்...
ReplyDeleteஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இரண்டு அட்டைகளும் அப்டியே அள்ளுது சார்.
இரண்டிலுமே தங்கம் இடம்பெறும் காரணம் என்னவோ சார்???
சேலம் Tex விஜயராகவன் : Yes !! தற்செயலானதொரு ஒற்றுமை !!
Delete19th
ReplyDelete21st
ReplyDeleteமார்ச் மாதம் இரண்டு கௌபாய்களும் பட்டையை கிளப்புவார்கள் என நம்பலாம்.
ReplyDeleteஆமா இந்த ரெண்டு கௌபாய்களையும் ஏற்கனவே படித்ததுபோல் இருப்பது எனக்குமட்டூம்தானா :-)
இல்லை சார் எனக்கும்தான். சொன்னால் பாய்ஸ் பதம் பார்க்கும் அபாயமிருப்பதால் அப்பீட்...
Delete///
Deleteஆமா இந்த ரெண்டு கௌபாய்களையும் ஏற்கனவே படித்ததுபோல் இருப்பது எனக்குமட்டூம்தானா :-)///
தாவிப் பாய் என் தங்கமேன்னு தவ்வச்சொல்லோ எண்ணெய் வயல் படலம் வயுக்கிவுட்ற போவுது சுந்தர்.!!வாட்ச்மேனா இருங்கோ. .!(அதாங்க விழிப்போட இருங்க)
உங்க மனதைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை சுந்தர்..!:-)
Dr சுந்தர் சேலம் :
Deleteதோர்கல் - ராணி காமிக்ஸ் வெளியீடு
லக்கி லூக் - ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெளியீடு
Tex Willer - ஸ்கேன்லஷன் செய்யப்பட்டது
அடுத்த மாத நான்கு காமிக்ஸ்களும் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்கள் ஏற்கனவே படித்திருந்தாலும், முதல் மூன்று நமது தயாரிப்பில் வருவது இதுவே முதல் முறை :-)
மார்ச் மாதம் இரண்டு கௌபாய்களும் பட்டையை கிளப்புவார்கள் என நம்பலாம்.
ReplyDeleteஆமா இந்த ரெண்டு கௌபாய்களையும் ஏற்கனவே படித்ததுபோல் இருப்பது எனக்குமட்டூம்தானா :-)
இத மேல ஒருக்கா படிச்சத போல..ஃபீலிங்கு எனக்கு மட்டும்தானோ..
Deleteவணக்கம் சார். தங்கக் கொள்ளை. அதைத் துரத்திடும் டெக்ஸ் அண்ட் கார்சன். இறுதியில் நல்லதே நிலைக்கும் என்கிற அழுத்தமான முடிவு என்று அத்தனை அம்சங்களும் கவர்ந்தீர்க்கக் கூடியதொரு கதை-இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல். என் வருத்தமெல்லாம் வண்ணத்தில் இன்னும் அட்டகாசமான மாஸ் வரவேற்பினை இந்தக் கதை பெற்றிருக்கும் என்பதுதான். கடைசியாக தெறிக்க வைக்கும் டெக்ஸ் அட்டையோடு பதிவை முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்படியே வார வார புது புது பிட்டா போடுங்க..
ReplyDelete"இன்னமுமொரு அட்டகாசப் பதிப்பகத்தோடு கைகோர்க்கும் முயற்சிகள் கனஜோராய் நடந்து வருகின்றன !! ஓரிரு மாதங்களில் வாண வேடிக்கைகள் காத்துள்ளன !! இப்போதைக்கு இந்த பிட் போதும் தானே ? ! _இதுதான் சார் கவரும் அம்சம். கலக்குங்கள்.
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார்...!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....!
ஹாய்.
ReplyDeleteஉள்ளேன் அய்யா. .!!
ReplyDelete///பார்த்த கணம் முதலாய் இழுத்துப் பிடித்த மூச்சை இன்னமும் விட மனதின்றித் திரிகிறேன் !! Breathtaking !!!! யாரது கைவண்ணமாக இருக்குமென்று any guesses ?///
அஜய் சாமி அவர்களின் அட்டகாசமான கைகளின் வண்ணம் என்று தோன்றுகிறது சார்.!
பிரமிப்பு..!!
Yes, its ajay's work!
Deleteடெக்ஸ் அட்டைபடம் இன் ப்ரோக்ரேச்ஸ் - நண்பர் அஜய் கைவண்ணம்! இந்த வண்ணப்படம் நமது சமீபத்திய டுரங்கோ அட்டைபட ஸ்டைல்ல போல் உள்ளது!
ReplyDelete///இன்னமுமொரு அட்டகாசப் பதிப்பகத்தோடு கைகோர்க்கும் முயற்சிகள் கனஜோராய் நடந்து வருகின்றன !! ஓரிரு மாதங்களில் வாண வேடிக்கைகள் காத்துள்ளன !! இப்போதைக்கு இந்த பிட் போதும் தானே ? ! ///
ReplyDeleteசொக்கா. .!!
ஆயிரம் பொன்னும் எனக்கேவா??!!
KiD ஆர்டின் KannaN :
Deleteரகம், ரகமாய் ; விதம் விதமாய் ; தினுசு தினுசாய் கதைகளை பார்க்கும் போது - மண்டபத்தில் புலம்பித திரியும் தருமியைப் போலத் தான் நானும் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறேன் !!
Super sir,தல தளத்தில் கலக்குகிறார்.super இப்படி ஒரு பதிவு தான் எதிர்பார்த்து இருந்தேன்.thanks sir.
ReplyDeleteAjay samy's work amazing.
ReplyDeletePodiyan : Truly stunning !
Deleteநம்ம அஜய் ன் தானே சார்.அட ஆமா அவரேதான்.
ReplyDeleteஅப்புறம் அந்த இரயில் இரும்புக்கை எத்தன் அட்டைல வருமே (IRON HORSE) டைகரோடது
அந்த இரயில் டிரைவரோட மூஞ்சிய நல்லாபாருங்க ஒரு பீதி கிளம்பியிருக்கும். அந்த லைட்ல டிசைன் .மறக்கமுடியாத அட்டை அது.
ReplyDeleteஅந்த இன்பிராகரஸ் சீலை கொஞ்சம் எடுங்களேன் முதல் டெக்ஸோடபடத்தை வால்பேப்பரா வைக்கனும் சார்
ReplyDeletepalanivel arumugam : சீக்கிரமே நண்பர் டிசைனை முடித்து அனுப்பட்டும் ; கண்குளிர ரசித்துக் கொள்வோம் !!
Deleteகாத்திருக்கிறேன் சார்
DeleteGM 2 All
ReplyDelete///இம்முறையோரு தோரணையான ராப்பரை அமைத்தே தீர வேண்டுமென்று வைராக்கியமாக இருந்தேன் ! நம்மவர்கள் என் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டதாகவே தோன்றியது ! What say folks ?///
ReplyDelete100% சார்.
இந்த ஆண்டின் சிறந்த அட்டைப்படங்களுள் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று பஜ்ஜி போண்டா போன்றவை தெரிவிக்கின்றன..!!
+++
DeleteKiD ஆர்டின் KannaN : எல்லாப் புகழும் நம்மவர்களுக்கே !!
Deleteலயன் முத்து காமிக்ஸ்
ReplyDeleteபல கதைகள் பிரமாதம்
அந்த விஜயனின் பிரசாதம்
இதுவே எனக்கு போதும்
மாயாபஜார் கல்யாணசமையல்
ராகத்தில்படிக்கவும்
அனைவருக்கும் காலை வணக்கம்
புதிய காமிக்ஸ் வருது என்ற
சேதியிலே இன்ப தேன் வந்து
பாயுது காதினிலே
இதுபோல் இன்ப அதிர்ச்சி எத்தனை
கொடுத்தாலும் போதாது
வந்துட்டேன் நான் திரும்பி வந்துட்டேன்
ReplyDeleteஅதே பழைய உற்சாகத்துடன்
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
தடியடியில் மண்டை உடைந்து மிகுந்த மன உளைச்சளையும் தாங்க முடியாத வலியையும் அனுபவித்துக் கொண்டிருந்த போது நமது செயலாளர் தளத்தில் எனது நிலையை பதிவிட்டிருந்த நிமிடத்தில் நீங்கள் அனைவரும் நான் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்ததும் ஆறுதல் கூறியதும் எனது மன உளைச்சலை பறந்தோட செய்தது
ஆசிரியர் பெருமிதமாக இருக்கிறது என சொன்னவுடன் மின்சாரம் பாய்ந்து அருபமான மாயாவியின் உடலைப் போல எனது வலி மாயமாக மறைந்தது எனது உறவினர்களே தேவையில்லாமல் போய் அடி பட்டு வந்திருக்கிறாயே என்று திட்டிக் கொண்டிருக்கும் போது முகம் தெரியா நமது நண்பர்களின் பண உதவி அனைவரது வாயையும் அடைத்தது சாதாரண கிளீனிக் ல் மருத்துவம் பார்த்த நான் நண்பர்களின் பண உதவியால் உயர்தர சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிந்தது மேலும் நமது நண்பர்கள் ஈரோடு விஜய், கிட் ஆர்ட்டின் கண்ணன், ஸ்டீல் கிளா பொண்ராஜ். போனில் பேசி என்னை உற்சாகப் படுத்தினார்கள் அதுவும் செயலாளர் அடிக்கடி போன் செய்து நான் கூப்பிட்டால் உடனே வந்து விடுவார் பக்கத்து தெருவில் குடியிருப்பது போல் ஒரு தோற்றத்தை கொடுத்தார் உங்கள் அனைவரது ஆறுதலும் வேண்டுதலுமே என்னை சீக்கிரம் இங்கு வர செய்தது
இவை அனைத்திற்கும் நன்றி என்ற வார்த்தை பத்தாது உங்கள் அன்புக்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன் ஆசிரியர் & நண்பர்களே நன்றி நன்றி நன்றி
வாருங்கள் வாருங்கள் நண்பரே....உங கள் பழைய உற்சாகத்தை உங்கள் எழுத்து காட்டுகிறது ...
Deleteஇனி என்றும் நலமுடன் ..உற்சாகத்துடன் திகழ என்றென்றும் வேண்டுகிறேன் ...
Welcome back Senthil.!
Deleteமெரினாவில் அடுத்தப் போராட்டம் ஆரம்பிக்கபேபோறதா பேசிக்குறாங்க..! :-)
நீங்கள் அனைவரும் இருக்கும் போது எனக்கென்ன கவலை போராட்டத்தில் கலந்து கொள்ள நான் தயார்
Deleteநண்பர் செந்தில் அவர்களுக்காகவே ஆசிரியர் வைத்த தலைப்போ....:-)
Deleteகண்ணன் சார்...நம்ப சத்யா ரியல் தலைவர்...மூணு அடி வாங்கிட்டார் ...இனி வாங்க மாட்டார்...திருப்பி தான் கொடுப்பார் ....அதானே நம்ப தலைவர் திலகத்தின் பார்முலா..:-)
Deleteதலைவரே ஆசிரியரின் தலைப்பு எனக்கு பொருந்தியிருந்தால் சந்தோஷமே
Deleteஇனி பதிலுக்கு அடி இல்லை தலைவரே இடி தான்
வாருங்கள் சகோ, உடல் நலம்தேறி நீங்கள் மறுபடி பின்னூட்டமிட வருவதை உணர்ந்துதானோ என்னவோ ஆசிரியர் இப்படியொரு தலைப்பை இன்று பதிவிட்டுள்ளார்!
Deleteநலம் பெற்று மறுபடியும் தளத்தில் வந்ததற்கு மகிழ்ச்சி.. செந்தில் சத்யா.
Deleteவாருங்கள் செந்தில் சத்யா!! மிக்க மகிழ்ச்சி!!
Deleteநீங்கள் மீண்டுவந்திருப்பதில் பெரும்பங்காற்றிய அந்த பெயர்சொல்ல விரும்பாத நல்ல உள்ளங்களுக்கும், இதற்கெல்லாம் தூண்டுகோலாக அமைந்து ஒரு நல்ல விசயத்தைச் செய்யப் பிள்ளையார்சுழி போட்டுக்கொடுத்த 'அன்புள்ள அனாமதேயா'வுக்கும் மீண்டும் நம் காமிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்! _/\_
தலீவர் சொன்னத வழிமொழிகிறேன்....மகிழ்ச்சிகள் சத்யா
Deleteசெந்தில் சத்யா : Welcome back சத்யா !! குருவி உட்காரப் பனம்பழமும் விழுந்த கதையாக - நீங்களும் இந்தப் பதிவினில் (மீண்டு) வந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு !
Deleteவெறும் உதட்டளவு நட்புக்களாய் இல்லாது - ஆத்மார்த்தப் பிணைப்புகளையும் இங்கே பார்த்திட முடியும் போது நிஜமாய்ப் பெருமிதம் கொள்கிறது மனது !!
என்றென்றும் தொடரட்டும் - தழைக்கட்டும் இந்த பந்தங்கள் !!
நல்வரவு செந்தில் சத்யா ஜி:-)
Deleteவாவ்.....
ReplyDeleteடெக்ஸின் அட்டை படத்தை பார்த்தவுடன் மனதில் தோன்றிய வார்த்தை இது...
போன இதழுக்கும் சேர்த்தி வட்டியும் முதலுமாக அசத்தும் டெக்ஸின் அட்டைப்படம் சூப்பரோ சூப்பர் சார்....
லக்கியின் அட்டை படமும் பெஸ்ட்டாக அமைந்துள்ளது....
இதழ்களை காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...
TEX simply superb ....
ReplyDeleteஜேசன்: கடந்த ரெண்டு பாகம்களிலும் பல கேள்விகள் ஆச்சரியத்தை எழுப்பியவர், கடைசி பாகத்தில் அவைகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று ஒரு அனுமாசிய விஷத்தை கொண்டு வந்து முடித்துவிட்டது சப்பென்று ஆகிவிட்டது; இந்த பூ சுற்றும் சமாச்சாரம் நமது வலை மன்னனுக்கு கொஞ்சவும் சளைத்தது இல்லை என சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteஅதே நேரம் ஒரு பூ சுற்றும் கதை கருவை வைத்து ஒரு சுவாரசியமான கதையை கொடுத்த கதாசரியர் மற்றும் ஓவியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
டெக்ஸ்: நமது தமிழ் படம்களில் வரும் வழக்கமான கதை, போலீஸ் திருடர்கள் கும்பலில் திருடர் போல ஐக்கியமாகி அவர்களின் இடத்தை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒட்டு மொத்த கும்பலையும் மடக்குவது தான் கதை. இந்த கதையில் டெக்ஸ்தான் அந்த மாறுவேடம் போட்டு திருடர்கள் கும்பலில் நுழையும் போலீஸ் (ரேன்சர்).
ReplyDeleteரொம்பவே மெதுவாக நகரும் கதைகளம், முடிவு இதுதான் என்று நன்றாக தெரியும் இது சுவாரசியத்தை ரொம்பவே குறைத்து விட்டது.
அதுவும் திருடர் நகரில் யாருக்குமே டெக்ஸ் பற்றி யாருக்குமே தெரியாதது என்பது மிக பெரிய காமெடி. அதுவும் ஒன்றை கண்ணனாக வரும் டெக்ஸ் நமது தமிழ் படம்களில் ஒரு பெரிய மருவை ஓட்டிவிட்டு மாறுவேடம் புனையும் காமெடிக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை என்பேன்.
இறுதியில் மிக பெரிய குறை கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு அட்டைபடம்.
டெக்ஸ் இந்த மாத கதையில் பூக்கள் அதிகம், அவைகளை பெரிது படுத்தாமல் இருந்தால் ஒரு எளிதான வாசிப்பு அனுபவம் கிடைப்பது உறுதி.
இந்த மாதம் டெக்ஸ் கதைக்கு கடைசி இடம்தான்.
///அதுவும் திருடர் நகரில் யாருக்குமே டெக்ஸ் பற்றி யாருக்குமே தெரியாதது என்பது மிக பெரிய காமெடி.///
Deleteரேஞ்சர் போஸ்ட்டுக்கு எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி வேலைல சேர்ந்த புதுசுல அவர் பண்ண சாகஸமா இருக்கலாமில்லையா? அவர் அப்போ அந்த அளவுக்கு வேல்ட்டு ஃபேமஸ் இல்லைன்றதை நீங்க புரிஞ்சுக்கிடணும்! ;)
Parani from Bangalore : //மிக பெரிய குறை கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு அட்டைபடம். //
Deleteஒரிஜினல் அட்டைப்படம் சார் !
ஒருக்கால் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகு ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் போய் நின்று கொண்டு காயங்களின் வீரியத்தை பார்வையிட்டாரோ - என்னவோ ?!
செயலர் அன்ட் ஆசிரியர்..
Delete:-)))))
//மிக பெரிய குறை கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு அட்டைபடம். //
Deleteஒரிஜினல் அட்டைப்படம் சார் !
ஒருக்கால் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகு ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் போய் நின்று கொண்டு காயங்களின் வீரியத்தை பார்வையிட்டாரோ - என்னவோ ?!
அல்லது ரேஞ்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கு ஏற்பட்ட ரகளையில் சட்டை கிழிந்ததாக மாகாண கவர்னர் அலுவலகம் முன் தர்ணா செய்தபோது வரையப்பட்ட படமாக கூட இருக்கலாம் !!!!!( டெக்ஸ் சட்டையை கிழிக்கும் அளவு யாருக்கு தில் இருந்து இருக்கும்???)
///அல்லது ரேஞ்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கு ஏற்பட்ட ரகளையில் சட்டை கிழிந்ததாக மாகாண கவர்னர் அலுவலகம் முன் தர்ணா செய்தபோது வரையப்பட்ட படமாக கூட இருக்கலாம் !!!!///
Delete:)))))
பொருளாளரே...:)))
Deleteகதை நல்ல கதைதான். ஆனால் கொஞ்சம் அந்த "ஜிலாஸ்"தான் டெக்ஸ் என்ற உண்மையை வாசகர்களுக்கும் சஸ்பென்ஸ்சாக வைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.
Delete:-)
Deleteடெக்ஸ் மாறுவேடம் போட்டபின் லாங் ஷாட்டில் காண்பிக்கும் போது பல இடம்களில் அவரது தாடி மிஸ்ஸிங். ஓவியர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒரு இடத்தில் டைகர் கார்சனுடன் பேசும் டியாலாக்கில் கார்சனை "நீ" என சொல்லுவது நெருடலாக உள்ளது; மற்ற எல்லா இடம்களில் "நீங்கள்" அல்லது "வெள்ளி முடியாரை" என சரியாக உள்ளது.
நமது டெக்ஸ் ரசிகர்களுக்காக ஒரு வித்தியாசமான கதையை தரவேண்டும் என்று இந்த கதையை கண்டுபிடித்த நமது ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
// ஒரிஜினல் அட்டைப்படம் சார் ! //
Deleteஅதுசரி! அவர்கள் தப்பு செய்தால் நாமும் அதே தவறை செய்யலாமா :-)
Tap to create a note
ReplyDeleteஎல்லா ஹீரோ கதைக்கும் விமர்சனம் எழுதுற நான் டெக்ஸ் கதைக்கு விமர்சனம்
எழுதுறதே இல்லை. இப்படியே போனால் தெய்வ குத்தமாக வாய்ப்பு இருப்பது போல் தோன்றியதால் அரஜகம் அன்லிமிடட் விமர்சனம்.
வழக்கம் போல 10 பேருக்கு மேல் டெக்ஸ் சுட்டு சாய்கிறார். கார்ஸன் உதவியோட. 10 பேர் என்ன 200 பேரா இருந்தாலும் டெக்ஸ் ஒத்த பிஸ்டல் போதமே அத்தனை பேரையும் திர்த்து கட்ட. ஆனா என்ன பன்றது கதைக்கு டைகர் தேவை படுவதால் அவரும் வந்து சேர்ந்து விடுகிறார்.
அவர்களுடைய இருப்பிடம் யாருக்கும் தெரியாத ரகஸிம் என்பதால் ஒத்த கண்ணன் வேஷம் போட்டு செல்வதாக கிளம்புகிறார் (மறுவேடம் என்று ஆசிரியர் கூறி விடுகிறார். இல்லைனா அவர் மாறுவேடம் போட்டு இருக்கிறார் என்று தெரியாமலே போயிருக்கும்)
இடயில் வோர்டோக என்ற தங்க குனம் படைத்த ஓரு திருடர் அவர்களை(மரியாதை) காப்பாற்றி நானும் ரவுடிதான் சாரி திருடன் தான் என்று டன் கணக்கில் அளந்து விடுகிறார். உடனே அந்த தங்க மனம் படைத்த திருடரும் அவர்களின் ரகசிய இடத்துக்கு கூட்டி கொண்டு போகிறார்.(ரகசிய இடத்தை நான் ரவுடி சொல்லிடாலே உடனே கூட்டிட்டு
போறாறே என்ற தற்குறி(stupid) தனமான எண்ணம் வர கூடாது. ஏன்னா அது அப்படி தான்)
அவர்களுடைய ரகஸிய இடத்துக்கு பேய். டெக்ஸ் அடித்தால் வாங்கி கொள்ள வேண்டும் என்ற இயற்கை விதியின் படி அவர்களுடைய ஓரு ஆளை அடுத்த துவைக்கிறார்.
அப்புறம் மிக்ஸார் சாப்பிடுகிற அதி பயங்கர வில்லனை சந்திகிறார். எல்லா தைதயும் நான் பார்த்துற பார்த்துகிற சொல்ற அவரோட புத்திசாலிதனம் அப்படியே புல்லரிக்குது. கடைசியாக ஓன்னுமே செய்யாமல் செத்து போறது செம டிவிஸ்ட்.
கதையின் மைனஸ்
டெக்ஸ் திருடர்களின் கண்டு பிடிப்பது லாஜிக்கோட இருக்கு. டெக்ஸ் கதையில் லாஜிக் வரலாமா? யுவர் ஆனர்.
நாலு வயசு குழந்தை கூட டெக்ஸ் யாருன்னு தெரியும் இந்த பிரபஞ்சத்தில். ஓரு கண்ணை மறைத்து கடுமையான மாறு வேஷத்தில் இருந்தாலும் உலகப் புகழ் பெற்ற டெக்ஸை கண்டு பிடித்திருக்க வேண்டும். திட்டம் இட்டு கதையின் ஆசிரியர் டெக்ஸின் புகழை குறைத்து இருக்கிறார்.
அருமையான விமர்சனம்..
DeleteGaneshkumar Kumar : ஆனாலும் கதையின் முழுமையையும் நீங்கள் வாசித்திருப்பதையும் கவனிக்க முடிந்தது சார் !!
Deleteஅதுவும் மிக ரசித்து சார்...:-)
Deleteஎன்ன ரொம்ப புகழதிங்க. எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு.....
Delete63
ReplyDeleteவாவ்...!!!'தல'is back with his அதிரடிஸ்...!!!
ReplyDeleteபுது பதிப்பகமா...சூப்பர் சார்:-):-):-)
சார் 1. முதலிடம் லார்கோவின் தொகுப்புகள் அனைத்தமே......அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தன்னிஷ்டத்திற்கு வாழும் லார்கோ.....மிகப் பெரிய கோடீஸ்வரர் கத்தியை கையால் பிடித்தாலே அழகு ...கையாலும் விதமோ கூடுதல் அழகு .தான் செல்லும் திசையெங்கும் தானே சிக்கலில் சிக்கி , தானே மீள்வதில் அசத்தல .பக்கத்திற்கு பக்கம் நுணுக்கமாக செல்லும் கதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூணடுவதுடன் .....மீண்டும் படிக்கும் போது அது காட்டும் புதிய பரிணாமங்கள்....அசததலான இவருக்கிணையான திறமையும் துணிச்சலும் கொண்ட நண்பன் ...ஜானியின ஸ்டெல்லா போல அக்கறை மிகு பென்னி....அட்டகாசமான வாழ்வியலை வாழ வைத்து தனது திசையில் வாழச் செய்த ..சண்டைக் கோழியாய் வாழச் செய்த பெரியவர் நெரியோ வின்ச்....ஒரே இழப்பு ப்ரெடியை இழந்தது ...ஏற்றுக் கொள்ளவே முடியல....கான்கிரீட் கானக நாயகி இறந்தத போல....அது மட்டுமில்லாமல் ஓவியத்தை விஞ்சிய வித்தியாசமான வண்ணக்கலவை...கடலாகட்டும் ,வெயிலில் நாட்டியமாடும் மரத்தின் நிழலாகட்டும் , கடல் , தீவுகள் வண்ணமாகட்டும் , கஞ்சாத் தோட்டமாகட்டும் ,வாழைத் தோட்டம் ....அங்கு உரையாடல்கள்... அங்க லார்கோ கற்றுக் கொள்ளும் தலைமைபண்புகளாகட்டும் , லார்கோ சுற்றுவதால தத்ரூபமாய் நம்மைச் சுற்றும் உலகமாகட்டும் ,சுவாரஷ்யமான லார்கோவின் சிறுவயது காலமாகட்டும் கதையும் ,ஓவியமும் ,வண்ணங்களும் நடையும் மூன்று ஆசிரியர்களாலும் பிசகாமல் செதுக்கப் பட்டதால் முதலிடம் என் மனதில் எளிதாய் ......அதிரடி லார்கோ ..ஹீரோயிசத்தால் பாத்திர படைப்பால் இதனை விஞ்ச கதைகளுண்டா...சார் கருப்பு சூரியன் தினம் என கூறிக் கொண்டு தடதடக்கும் கேள்விகளுடன் அமோஸ் வரும் போது கென்னடிய நினைவு படுத்தியதுடன் முப்பது வருடங்களாய் சுணக்கமின்றி தொடரும் கதயல்ல காவியத்த பிரிய மனமின்றி பிற வல்லுணர்களாலும் அதே போல மாற்றமின்றி தொடரும் கதய மறந்தா எல்லாம் போச்சு .....தான் யாரென்றே தெரியாத மனிதன் , பதிமூன்ற நெஞ்சின் மேலும்தான் நல்லவனா , கெட்டவனா என நெஞ்சினுள்ளும் தாங்கி திகைப்பினூடும் பயணிக்கும் ஜேசன் தன்னை மறந்ததால் ....என்னை மறந்து படிக்க வைத்த கதை .எத்தனையோ கதைகள் படித்திருக்கலாம்........ அத்தனையையும் இது ஒன்றிலையே அடக்கியபடி ஒன்றுமே தெரியாது எனக் கூறிக் கொண்டு அமெரிக்க சரித்திரத்தை தன்னுள் திணித்த படி பயணிக்கும் போது தென் அமெரிக்க நாடுகளில் நிலவும் புரட்சியும் , க்யூபா பிடல் ,சே வை நினைவு படுத்தியும் ,அதிகார போட்டியும் , வலது சாரிகளின் பார்வையிலு்ம் , மத பிரிவினரையும் ,கொரில்லா யுத்தங்களயும் ,cia ,fbi தராதரங்களயும் ,மாபியாக்களின் அரசியல் செல்வாக்கயும் இன்னும் பல...யும்களயும் சுமந்த படி பயணிப்பது அழகு .இறுக்கமான முகத்துடன் கதை நெடுகில் பயணிக்கும போதும் , நான் உலகில் சர்வ வல்லமை படைத்த நபர் என கத்தும் அதிபர அப்பிட்டு கெத்தா ஏறெடுத்தும் பாக்காம அதே கெத்தோட போவாரே ..அடடா....ஆனா இவருக்கு தன்னயே தெரியாது ..! எல்லாம் இயல்பு நிலைக்கு வந்தும்..ஒருவனை பொறுத்த வரை தான் யாரென்று காண்பதில்தான் அவன் வாழ்க்கையே எனும் வரிகள் மனதை பிசைந்ததும்.....அவர் மனைவிய பாப்பாரா..இந்த ஸ்டீவ் அண்ணாச்சி யாருப்பான்னு அதே ஈடுபாட்டோட சுவை குன்றாம இருவது வருடங்கள கடத்துன வான் ஹாம்மே....அவருக்கிய இணையா சித்திர விருந்து படைத்த வான்'ஸ் ...அந்த அற்புதத்த திகட்டாம தந்து வான் ' புகழீட்டிய லயன் என பல அற்புதங்கள் இணைந்ததால் இரணடாமிடம் ...அந்த இரண்டாமிடத்திற்கு தள்ளிய பெருமை நம் ஆசிரியரயே சாரும்....வண்ணத்தில் தந்திருந்தால் ஒருவேளை லார்கோவ மிஞ்சி என் மனதில் முதலிடம் பிடித்திருக்கலாமோ....வரும் காலத்தில் தலையில்லா போராளி சைசுல தந்து வண்ணத்தில தரும் போது ஒரு வேளை இடம் மாறக் கூடலாம் !கதய வான்ஸ் நிறுத்திய போதும் ...அந்த பாத்திரத்த அதே அழகோட மெருகூட்டி புதிர்கள முடிக்க வநத ஆசிரியரும் அதன் படைப்பால் கவரப்பட்டு ,வாசகர்களால் நேசிக்கப்பட்டு இன்னும் சில முடிச்சுகளால்....அதாவது நூலில் சிக்கெடுக்கும் போது மேலும் சில முடிச்சுகள் பட்டத்து நூலில் சிறு வயதில் அனுபவித்திருப்போம் .....அத போல முடிச்சவுக்க வந்த புதிய கர்த்தாக்கள் மேலும் கூடுதல் முடிச்சுகளால் சுவாரஸ்யத்த கூ்டுவார்களான்னு காலம்தான் சொல்லனும்..காலனும்தான் நம்ம விட்டு வைக்கணும் .
ReplyDeleteமூன்றாவது கதையும் சிரமமில்லை....சாகசத்துக் கு வயது தடையில்லை....தணியாத ஆர்வமும் ...ஊக்கமுமே மருந்தாய் அமயுமென சீறும் ...வான் ஹேம்மேயின் அறுவது வயது வாலிபர் ஷெல்டன்தொடர்தான் ....முதல் கதையிலே நண்பர்களை திரட்டுவதும் ..தொடர்ந்த கதைகளில் நண்பர்கள் பிரிவால் எனக்கும் ஏதோ இழப்பு போல உணரச் செய்தார் வான்ஹாம்மே என்றால் மிகையல்லவே ...அசுரப் பாய்ச்சலிலும் , உலகை சுற்றி வருவதிலும் லார்கோவுக்க சற்றும் சளைத்ததல்ல இவரது கதைகள் .....வெற்றிய அடைய எவ்வளவு பாடுபட்டாரோ ...அவ்வளவு கஷ்டபட்டு இறந்த நண்பர்களுக்கு உரியவரிடம் பணத்தை தரும் கதைகிலும் மிஞ்சி நிற்கிறார் .அதிரடிக்கே அதிரடி தரும் வண்ணம் தான் கொல்லப்பட்டு விட்டதாய் காட்டியபடி....வில்லன் தன்னைத்தானே அழிக்கும் போது.....சாகலடான்னு நின்னு கொல்வாரே....சாவிலும் தண்டனை தந்த அந்தக் கதய ரொம்பப் பிடிக்கும் .வெள்ளக்காரங்கன்னாலும் நெறி மாறுவதில்லன்னு ஆணில அடிச்சமாதிரி சொன்ன கதை...நான்காவது கதை காதல் வயப்பட்டு....சகோதரனா என உணர்ந்து ஒதுங்குவாறே அந்தக்கதை ....கதை முதன் முதலாய் நான் தரிசித்த ஆயில் பெயிண்டிங்..வார்த்தை சரியான்னு தெரில .... ஆனா வித்தியாசமான பழமையை நினைவு படுத்தும் துருப்பிடித்த இரும்பின் நிறமாயும் ...காய்ந்து போன குருதியின் குணமான நிறமாயும்....பல நாட்கள் கழித்து புரட்டிய பழுப்பு நிற தாளின் நிறமாய் அமைவதுடன் ...பழங்கால நகரை புரட்டிக் காண்பித்த இதயத்தை பிசையும் ஓவியங்கள் போதுமே அதன் பெருமய பறைசாற்ற ... ஒற்றைக் கையன் தனது முயற்சியால் ....வித்தைக்குத் தேவயான கரத்தை இழந்தும்.....அதில் தேறி எதிரிகளை துவைப்பது அட்டகாசம் .ஷெரிப்பால் சிறு வயது முதல் துரத்தப்படும் அவன் ......மரணம் வரை வேட்டையாடும் ஷெரீப்....இஇரக்கமின்றி சாகும் தருவாயிலும் அவனை நினைத்து வாழும் பெண்ணை அதாவது தாங்கள் சகோதரர்கள் அல்ல என எண்ணி அவனை நினைத்தே காதலால் வாழும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் கேத்தியை ...அவன் உன் சகோதரன்தான் என கொல்லாமல் கொல்லும் வஞ்சகன் ஷெரீப்பை எண்ணி ஏதும் செய்ய முடியவில்லயே என ஏங்கி குமுறி அழுவது வானமும்தானே....கடைசி கட்டமும் கவிதை அல்லவா..!தான் சொன்ன பொய் தன்னை சகோதரனாய் காட்டி விட்டதே என தடுமாறும் நாயகன்...அண்ணன் தடம் மாறுகிறானே என விலகும் நாயகி...நாயகன் இறந்த பின் சகோதரனல்ல என ஷெரீப்பால் தவறாய் உணர்ந்து வாழ்வை தியாகம் செய்ய....கடைசியில் தனது ஒன்று விட்ட சகோதரன்தான் என அதே ஷெரீப்பால் ஏமாற்றப் பட்டத அறிந்து வெடிக்கும் கட்டமும் வான் ஹாம்மே எவ்வளவு அற்புதமான கதாசிரியர்.....இனி இது போல கதைகள படைக்க மாட்டார் என்பது நமது காமிக்ஸ் உலகின் ஈட்ட முடியா இழப்பு என உணர நான்கு இடங்களும் இவரது எனும் போது திகைக்கிறேன் ....
Deleteநண்பனுக்காக எதயும் செய்வேன் எனும் வார்த்தைகள கார்சனின் வாயிலிருந்து வாங்கிய படி சாகும் அப்பாவிகளின் தலைவன் ரே கிளம்மன்ச மையமாய் கொண்டு பின்னிச் சுழலும் கார்சனின் கடந்தகாலம்தான் எனது வரிசையில் ஐந்தாமிடம் . பார்க்கும் அப்பாவிகள் கூட அப்பாவிகளா' என டெக்ஸ் தன் மகனிடம் விவரிக்கும் அட்டகாசமான இக்கதய இப்ப லார்கோவ புரட்டுவத போல எத்தன தடவ புரட்டிருப்பேன்னு எனக்கே தெரியாது . ஒவ்வொரு பாத்திரமும் அட்டகாசமாய் , தெளிவாய் ..அதாவது வருவது சிறிது நேரம் எனினும் மனதில் பதியும் வண்ணம் படைக்கபட்டிருப்பது இதன் சிறப்பு ...அதிரடி , காதல் ,ஒரு தலைக் காதல் ,அன்பு ,பிள்ளைப் பாசம் ,துரோகம் ,தந்தையின் அருமை ,நட்பு ,மிரட்டும் வில்லன் ,வில்லத் தலைவனினுள்ளும் ஊற்றெடுக்கும் பாச உணர்வு.....என என்ன இல்லை இதில் என அனைத்தயும் அனாசயமாய் அடக்கிய படி சுருக்கபட்டு வந்த அற்புத படைப்பு .கார்சனுக்கு மட்டும் ஏண்டா கல்யாணம் ஆகலன்னு உணரச் செய்து ..பரிதாபப் பட்ட கதை கூட . ஆசிரியர் காலப் பயணம் செய்தால் அந்தத் தவற திருத்தி பக்கங்கள அதிகரித்திருக்கலாம் என ஆசிரியர உருகி எழுத வைத்த இதழ் ...அதே போல் தலையில்லா போராளி சைசில் வந்தால் அட்டகாசமா இருக்குமே என இன்னொரு காலப் பயணம் செய்ய ஆசிரியருக்கு நேரலாம் அட்லீஸ்ட் தோணலாம் . ...சார் இப்டியே காலப்பயணம் செய்து கொண்டிருந்தால் செலவு செஞ்சே மீள முடியாதே.....அதனால அந்த செலவ குறைக்க இபவ தபோசைசுல வெளியிட்டா வசனங்கள கத்தரி போடும் நோய் கூட பீடிக்காதிருக்குமே .பாத்து செய்யுங்க..மாற்றமே மாறாததுதானே...ஆறாவது இதழ் நம்மள கொஞ்சம் பயித்தியங்கன்னு நெனச்சவங்கள மெச்சூரானவங்கன்னு காட்ட வைத்த இதழ் . கௌபாய் , செவ்விந்தியர் ,குதிரைன்னு குதிரை கூடயே ஓடிட்டிருந்தவங்கள நின்னு நிதானமா துல்லியமா அதனை ரசித்தபடியே அன்றய கௌபாய் ,செவ்விந்திய வாழ்வியல் நுணுக்கங்கள கற்றுத் தந்த படி கரம் கோர்த்து அழைத்துச் சென்ற டைகர் தந்த மின்னும் மரணமே ஆறாவதிடம் மனதில் .அதும் மிகப் பிரம்மாண்டமா அப்பத்தய காலத்துல ரசிச்சு எப்படா வரும் அடுத்த பாகங்கள்னு ஆவல தூண்டிய கதை...தப்பிப் பிழைப்பதயே இறுதி லட்சியமா வச்சு பழிகளை பாகத்துக்கு பாகம் அதிகமாய் சுமந்த படி செல்லும் டைகரின் வாழ்க்கயே இதிலிருந்து தப்பி வர்றதிலேயே கழிஞ்சி போயிடுமோன்னு பாத்தா ...கதாசிரியர் தனது வாழ்க்கயே இதில் கழித்துள்ளார் நாம் நேரத்தை களிப்பாய் கழிக்க !டைகரின் மதியூகம் பிரம்மிக்க வைக்கும்.....கௌபாய் திரைப்பட இரசிகர்கள் இத படிச்சா நிசசயம் நம்ம காமிக்சுக்கு அடிமை . அதிலும் வண்ணத்துல மொத்தமா பாத்தப்ப கிடச்ச சந்தோசம் அட்டகாசம் அட்ட மட்டும் மோசம் ! நிச்சயமாய் அடடைக்காக அடைகாத்த ஆசிரியர் பிரம்மாண்டமா உருவாக்க உழைத்திருந்தாலும் பலவண்ணங்களுக்கு என்னை அடிமை ஆக்கியிருந்த ஆசிரியர் வண்ணக்கண்ணன் வண்ணக்கஞ்சனாய் மாறியதன் விளைவு அட்டை ... ...மின்னும் மரண அட்டய மின்ன வைத்ததென்னவோ உண்மதான் . மற்றபடி நிறை மிகுந்த புத்தகமெனினும் கதையும் நிறைவு ...இப ஒரே புத்தகமா வேணும்ன்ற எண்ணத்த மாற்றுக் கருத்தின்றி எனக்குள் விதைத்த இதழ் .மனதில் வலியை ஏற்படுத்தும் வலிமை இழந்த கிழட்டு மோசைஸ், அப்படியே எதிரான ..எதிர்த்துருவமான விக்டோரியா , ஷைனி ,நம்ம ஷி நா பா என மனதில் கனக்க வைக்கும் கணமான பாத்திரங்கள்......புதயல தேடும் கமாண்டர் முதல் கவர்னர் வரை ,டைகர் இழந்த புதயல் சில்க் ,இங்க இல்லயேன்னு ஏங்க வைக்கும் .....கிராண்டை கொல்ல விடாமல் கன்னி வைக்கும் ஏஞ்சல் ஃபேஸ் , டைகர காக்கும் ஜிம்மி சகாக்கள் , இறக்கும் போதும் டைகர காக்கும் குபி பால்மர் மனதில் எப்பவும் வாழும் அமர பாத்திரங்கள் ...அந்தப்பயல் ...சாரி புயல் தேடிய புதயலும்தான் ! புத்தகமும் கதயும் பிரம்மாண்டம்தானே !
Deleteஎன்னடா இது அதிரடிக்கதைகள் மட்டுமே எனக்கு பிடிக்குமா என வியக்காதவாறு எண்ணிணால் தற்செயலாய் ஏழாமிடத்தில் ( எழுதத் துவங்கிய போதே மூன்றாமிடத்த தீர்மானித்தேன்...எழுத எழுத அந்தக் கதைகள் முன்வாங்க இதனை மறந்ததாச்சரியம் ..ஏழில் நிலை கொண்டதும் ஆச்சரிய மே ) அமர்ந்த அந்தக் கத ஏழு நாட்களுக்கொரு முறை ஏழரைய கொண்டு வந்து படுபாவிகள் நிறைந்த , யாருக்கோ நடக்கும் அநியாயத்தில் நாம் காட்சியின் சாட்சியாய் வாழ்ந்தால் போதும்.... என வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பாழும் உலகை ஆட்டி வைக்கும்மேதையான சகோதரன் , பாதை மாறி மேதை ஆகி ஐசக்கின் மரணத்துக்கு பழி வாங்கும் கதை.... இப்படி நடந்திருக்குமா என எண்ண வைத்த பத்து சாபங்கள விஞ்ஞானத்தோட வீம்பாய் விளையாடிய படி கடவுள் சாபமா என நடுங்கிச் சாகும் தன்னலபிசாசுகள சாடுமிவரின் கதையல்ல கற்பனைய மறுப்பின்றி ரசிக்கிறேன் . முடிவு தீயவன் அதாவது நியாயமே ஆனாலும் அப்பாவிகள அழிப்பவன் அழிந்தே ஆக வேண்டும் என்ற ஆண்டவனோ அல்லது எழுதி வைத்த மாண்டவனோ எழுதிய படி அழிக்கப்படுகிறான் ....இதில் ஏனோ எனக்கும் உடன்பாடில்லை....தவறு செய்தவர்கள தட்டி கேக்காத ....அதன் காரணமா பாத்துகிட்டிருக்கும் ....அதாவது படிக்கப்போகும் பிற்கால சந்ததிக்கும் , தவறு செய்தவர்கள் வாழ்வது அவர்களது திறமை என தவறான பாடத்தை போதிக்கும் போக்கு இக்கதயிலும் தொடர்கிறது . ஆனா ஒரே சந்தோசம் தவறு செய்யா குழந்தைகளயும் தண்டிக்க முனைய சாவு எட்டி பார்க்கிறது ..ஆனா ஒரே வருத்தம் வளந்த பின் அந்தக் குழந்தயும் நாம உண்டு..நம்ம வாழ்க்க உண்டுண்ணு வேடிக்க பாக்கலாம்...அல்லது தனக்கு நேரும் தவறுகள பொறுத்து வாழலாம்.....அல்லது தண்டனைதான் கிடையாதே என தானும் தவறு செய்யலாம் கள்ளத்தனமாய்...இதனை அழித்த ..அளித்த மார்ட்டின் கதைகள் சூப்பர்....அந்த சுதந்திர தேவி சிலையை முழுமையாக காட்டியதும்..அங்கு நிகழும் மனதைத் தொடும் நெகிழ்ச்சியான விஷயமும் இப்பவும் வாழுது மனதில் ....!ஹி ஹி ஹி...இன்று கூட கண் முன் நடக்கும் அடக்குமுறை கண்டு நமக்கென்ன என வாழும் வளந்த குழந்தை நானும் என்பத நேற்று வரை இருந்த உறுத்தல் இன்று இல்லை ..வழக்கம் போல காமிக்ஸ படிக்க வந்துட்டேன் ....
Deleteஒரு ரெண்டுநாள் டயம் கொடுங்க ஸ்டீல், அதுக்குள்ள எப்படியும் உங்க கமெண்ட்ட படிச்சுடுவேன்!
Delete(நடுநடுவே ரெண்டு படங்களை இன்செர்ட் பண்ணிட்டீங்கன்னா இதுக்குப் பேர்தான் 'பதிவு') :D
ஸ்டீல் சார்... ரெண்டு லைனுக்கு ஒரு கேப் கொடுத்தீங்கன்னா படிக்க கொஞ்சம் சுலுவாயிருக்கும்...
Deleteஏன்னா கண் வலிக்குது... அதுவுமில்லாம வயசாவுது பாருங்க... இன்னும் டவுசர் பசங்க வயசுலயா இருக்கோம்? கொஞ்சம் கன்சிடர் பண்ங்க பாஸ்....
நம்ம ஸ்டில் ஜீ பதிலுக்கு பதில் என்பது மாதிரி பதிவுக்கு பதிவு போடறாரு செயலரே...:-)
Deleteடைப் பன்னும் போது கை வலிக்கலையா ஸ்டிவ். செய்யுள் எழுதிடிங்க எப்போ விளக்க உரை எழுத போறாங்க.
Delete😉
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :
Deleteப்பா....! அரைத் தூக்கத்தில் ஐந்தாறு பத்திகளை டைப் அடிக்கவே நாக்கு தொங்கோ தொங்கென்று தொங்கிப் போய் விடுகிறது ; நீங்களானால் தண்ணி கூடக் குடிக்காமல் அடிச்சு துவம்சம் பண்ணுகிறீர்களே !! தெய்வம் அய்யா !!
இல்லை......நீங்க தெய்வம்..நான் பக்தன்..உங்க அருள் என்ன எழுதத் தூண்டிய சிறந்த கதைகள்
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ நீங்க ரொம்ப கொஞ்சமா எழுதி இருப்பதால் இதனை படிக்க(முடிய)வில்லை, அதனால் போன் செய்து இது பற்றி பேசிக்கிறேன் :-)
Deleteதல கனத அட்னடம்படம் சூப்பர் சார்....
ReplyDeleteஜேஸன்பிரைஸ்...
ReplyDeleteசிலபல கருத்துக்கள் வைத்திருக்கிறேன்.... ஆனால் முதலில் நான் சொல்வதாகயில்லை.
வேறு யாராவது முதலில் வாங்கிக் கட்டிக் கொள்ளட்டுமே!
@ SVV
Deleteஹாஹஹா...வாத்தியார் கிட்ட அவ்வளவு பயமா..!!!!! உண்மையில் அது நல்லகதைதான்,ஆனால் நாம் பார்க்கபோவதா நினைச்ச,நினைக்கவைக்கபட்ட படம் ஒரு அமானுஷ்யம் கலந்த திக் திக் படம், ஆனாக்க கொஞ்சம் விட்டாலாச்சாரியார் படமா போய்டிச்சி அம்புட்டுதான்.
உண்மையில் நாம் அதை ரசிக்கற தயாராக எடிட்டர் ஒரே ஒரு அறிவிப்பை சொல்லியிருக்கணும் அதுஎன்னணு யாருக்காவதும் ஐடியா இருக்கா..????
அந்த சொல்லை அவர் சொல்லியிருந்தா இந்த அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்காது..;-))))
////உண்மையில் நாம் அதை ரசிக்கற தயாராக எடிட்டர் ஒரே ஒரு அறிவிப்பை சொல்லியிருக்கணும் அதுஎன்னணு யாருக்காவதும் ஐடியா இருக்கா..????////
Delete'இது ஒரு கி.நா' - அதானே மாயாவிகாரு?
@ இத்தாலிகாரு
Deleteஇல்லை :))))
S.V.VENKATESHH : அட...உங்கள் கருத்துக்களை ஜாலியாகப் பதிவிடுங்கள் சார் ; ரசனைசார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுகளுக்கு ஏது அவசியம் ?
Deleteமாத்தியோசி-31
ReplyDeleteஹா...ஹா...ஹா... செம....
Deleteமாயாவி சார்... வேதாளர் பத்தி ஒரு பதிவு உங்க பிளாக்ல போடறதா வாக்கு குடுத்ததா எனக்கு ஞாபகம் லேசா இருக்கு... உங்களுக்கு?
Delete@ SVV
Deleteஇந்த டைம்மிஷின் சாவி ஒரு பாலிடிக்ஸ்காரங்க கையில மாட்டிகிச்சி, சாவியில்லமலேயே அதை ஸ்டாட் பண்ற வழியை சீக்கிரமா பாக்குறேனே..!
ஜேசன் மூன்று பாகத்தையும் ஒட்டுமொத்தமாக படித்து இருந்தாலும் மொத்தமாக விவாதிப்பதற்கு நானெல்லாம் வொர்த் இல்லை ஆசிரியர் சார்...
ReplyDeleteஎனக்கு கதை பிடித்து இருந்தது..... சூப்பரா இருந்தது.... அவ்வளவு தான் சார் என் விவாதம் ....:-)
@ தலீவா
Deleteஇந்த டையலாக் நேத்து சபாநாயகர் கடைசியா பேசினதோட ஒத்துபோகுதே..![வடிவேலுவின் மீம்ஸ் படம் சேத்துக்கங்க.]
Paranitharan K : ஆனா உங்க டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு தலீவரே !
Deleteஜேசன் கதைகள் முதல் பாகம்
ReplyDeleteஇரண்டாம் பாகம் ஓ கே ரகம்
மூன்றாவது பாகம் காதில் புய்பம்
சார் அடேங்கப்பா....இது வரை வந்த எனும் வார்த்தை மீண்டு விட்டது இந்த டெக்ஸ் அட்டயப் பாத்து ... இது வர வந்த டெக்ஸ் அட்டயிலேயே இதான் பெஸ்ட்...ஏன் , அனைத்து அட்டைகளிலும் கூட !மாலையப்பரின் மாலை என்றும் மலையென்றும் சொல்லலாம்..மனுசன் படைத்திருக்கிறார்... பின்னட்டையும் டிசைனிங் ஈர்ப்பு..
ReplyDeleteநீங்க கீசல் ஓவியம்னதும் கேவலமா இருக்குமோ மாடஸ்டி போலன்னு நெனச்சா பாத்ததுமே அழகில் மயங்கா குறைதான் ...அதகளம் சாரே !லக்கியின் அட்டய பாத்ததுமே அசந்துட்டேன் ....அந்த பண்ணை மாடுகள வச்சு ஒரு கதை வருமே வித்யாசமாய் ..அதக்கூட top10 ல ஒன்னா இணைக்கணும்னு இருந்தேன்...அதே போல இக்கதயும் உண்டென்பது கூடுதல் சந்தோசம் .பின்னட்டை ஒரே கட்டம் வசனங்களுடன் மனதை ஈர்க்கிறது .அட்டகாசமான அந்த அட்டை நமது மாடஸ்டிக்கு வரைந்த நண்பரா அல்லது பொன்னனா ..அதகளம் சார்....சிறப்பிதழை அழகு படுத்தட்டும்..டும்...டும்..
இவ்வளவு நீளமா டயலாக் எழுதினா எப்படி ?
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //அட்டகாசமான அந்த அட்டை நமது மாடஸ்டிக்கு வரைந்த நண்பரா அல்லது பொன்னனா ? //
Deleteஇது ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையில் நமது DTP பிரிவின் கோகிலா போட்ட டிசைன் !
சார் அட்டகாசம் . மனதில் தோன்றியது ..எழுதாம விட்டுட்டேன்.....
Deleteநண்பரே ..உடுங்க ..புள்ளி வச்சிரலாம் .
Deleteசார்....கோகிலா மேடம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து விடுங்கள் ...அட்டகாசம் ..அதுவும் அந்த முதல் டெக்ஸின் ஓவியம் பிண்ணி...வண்ணம் வெகுஅருமை....
DeleteParanitharan K : தலீவரே ...
Deleteடெக்ஸ் ராப்பர் - பொன்னன் !
லக்கி ராப்பர் : கோகிலா !
Tex ன் black & white கதைகளுக்குத்தான் என்னுடைய ஆதரவு
ReplyDeleteஒருவழியாக மார்ச்சில் தோர்கல் வருவது மிகுந்த உற்ச்சாகமே.முதல் கதையை நண்பர்கள் பலர் சுமார் என்றதும் பின் ஆஹா சூப்பர் என்றதும் நியாபகம் வருகிறது.ஆனால் முதலிலேயே என்னை தோர்கல் வசிகரித்துவிட்டார்.
ReplyDeleteமறுவாசிப்பில்
1.டைகர்
2.தோர்கல்
3,வேய்ன் ஷெல்டன்
எப்போதும் மும்மூர்த்திகள்.
Jaya Kumar : //முதலிலேயே என்னை தோர்கல் வசிகரித்துவிட்டார்.//
Deleteஅடுத்தாண்டில் ட்யுராங்கோவை கையாண்டது போலவே தோர்கலுக்கும் VIP ட்ரீட்மெண்ட் தந்திடவுள்ளோம் ; so ஒருசேர கதைகளை படிக்க வாய்ப்புக் கிட்டும் சமயம் - அவரது popularity இன்னமும் கூடும் என எதிர்பார்க்கலாம் !
வாவ்
Deleteஅருமை...ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
DeleteVIP treatment காக நா ரொம்ப சந்தோஷ படுறேன்.
Deleteவிஜயன் சார் @ நீங்கள் சொல்வது போல் செய்யுங்கள் அடுத்த வருடம், அதன் பின் எனது சந்தோசத்தை வெளிபடுத்துகிறேன்!
Delete94வது
ReplyDeleteஜேஸன் பிரைஸ்....
ReplyDelete(யாரும் எதுவும் சொல்வதாக இல்லை போலிருக்குது... சரி நாமளே ஆரம்பிச்சிடுவோம்...)
3 பாக கதையில் எனக்கு ஓரளவுக்காவது பிடித்தது கடைசி பகுதி மட்டுமே... மற்றபடிக்கு முதலிரண்டு பாகங்களும் அந்த காலத்தில் கருப்பு வெள்ளையில் மெயின் பிலிமுக்கு முன்னால் வரும் இண்டியன் நியூஸ் ரீல் பார்க்கும் அனுபவத்தையே தந்தது... அதாவது தவிர்க்க முடியாது... அதனால் பார்த்துத்தான் தொலைப்போமே என்ற விதத்தில்...
@ svv sir!!
Deleteஒரு படத்தில் எனக்கு ஆக்ஷன் பகுதி பிடிக்கும் ,சென்டிமென்ட் பகுதி பிடிக்கும் ,பாடல்கள் மட்டும் பிடிக்கும் என்பது போலவே காமெடி ட்ராக் மட்டுமே பிடிக்கும் என சொல்ல உங்களுக்கு முழு உரிமை உள்ளது :)
But most consider the third part is the ‘’ weak link ‘’ in an otherwise strong chain……!!!!
No offence please..!!!!!
செனா அனாஜி...
Deleteநான் எவ்ளோ சீரிஸா கமெண்ட் போட்ருக்கேன், நீங்க காமெடிங்கறீங்க?....
ஆனாலும் நீங்க சொல்றது உண்மைதான்... ஏன்னா கார்ட்டுன் படிக்கற சுவராஸ்யம்
கி-லயோ, நா-லயோ கிடையாது...
Jasan...kathaiyin pokku satru karadu muradai erundalum mudivu INDIANA JONES pol ulladu.
ReplyDeleteநண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்..!
ReplyDeleteபொழுதுபோக்காக மட்டும் ஜஸ்ட் லைக்தட் என காமிக்ஸ்களை படிக்கும்பழக்கம் இருந்தால் ஒரு சின்ன புன்முறுவலுடன் அடுத்த புத்தகத்தை படிக்கபோய்டலாம்.படைப்பாளி அழைத்தசெல்ல விரும்பும் உலகில் பயணித்து அனுபவிக்கும் பழக்கம் கொஞ்சமே கொஞ்சமாக இருப்பதால் இந்த கருத்தை முன்வைக்கவேண்டியுள்ளது.
ஒரு திரை விலகும் நேரம்! விவாத துவக்கம்
முதல்பாகம்: அசத்தலான துவக்கம்,தெளிவான கதை ஓட்டம்
இரண்டாம் பாகம்: மர்மம்...மர்மம்...புதிர் மேல் புதிர்...என்னதான் முடிவு ? என நிறையவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மூன்றாம் பாகம்: கதையை முடித்தவிதம்....
ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் முடிவை... வான்ஹெல்சிங் படத்தில் இருந்து எடுத்த மாதிரி இருக்கு.
அதாவது டெக்ஸ் வில்லரின் கதையின் முடிவை தோர்கல்லில் இருந்து எடுத்தா எப்படி இருக்கும் ? அப்படி ! இப்படிஒரு வித்தியாசமான கலவையில் கதைபயணிக்கும் களம் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானதே. அந்த நாயகரை போலவே இவரும் ஒரு வித்தியாசமான டிடக்டீவ் என ஒரு முன்னறிவிப்பை திரு விஜயன் தந்திருந்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராக இருந்திருப்போம்.ஆனால் அவரும் நம்மைபோலவே சஸ்பென்ஸ் தெரிந்துகொள்ளகூடாது என மொத்தகதையையும் முதலிலேயே படிக்கலை என முன்பே குறிப்பிட்டிருந்தார்.
படித்திருந்தால் முன்பே அந்த அறிவிப்பை அறிவித்திருப்பார்.நாம் ஜேசன் ப்ரைஸ் ஒரு அக்மார்க் டிடக்டீவ் என எதிர்பார்பில் காத்திருந்தால்..... முடிவும், அங்கு சொல்லபட்ட காரணமும் அந்த தருணத்தில் மனம் ஏற்க்கவில்லை.!மற்றபடி மனநிலையை மாற்றிக்கொண்டு படித்தால் பட்டாசு.!
மனநிலையை மாற்றும் அந்த அறிவிப்பு என்ன ? அந்த நாயகர் யார்? என்னவென பார்க்க...இங்கே'கிளிக்'
அல்ல மாயாவிஜி!!!!!!
Deleteமார்ட்டின் அமானுஷ்ய நிகழ்வுகளில் நம்பிக்கை வைத்து செயல்படுபவர்..
ஜேசன் பிரைஸ் அவற்றில் நம்பிக்கை இல்லாதவர்....அமானுஷ்ய நிகழ்வுகள் அவர் மேல் திணிக்கப்படுகின்றன....
டைலன் டாக்கையும் மார்டினையும் இணைகோடுகளாக கருத வாய்ப்புண்டு.
இரண்டும் நெடிய கதை தொகுப்புகள் உள்ளவை.
ஜேசன் ஒரு செங்குத்து கோடு ----மார்ட்டின் ,டைலன் டாக்கை ஒப்பு நோக்கும்போது....
அதுவும் இப்போதைக்கு ஒரு மினி சீரிஸ் மட்டுமே..
தொடர்ந்து இதே பாணியில் ஜேசன் பிரைஸ் கதைகள் வருமாயின் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள நேரிடலாம்
'இங்கே க்ளிக்' டிசைன் - அருமை, மாயாவி அவர்களே! மற்றபடிக்கு, செனாஅனாவின் கருத்துதான் என்னுடையதும்!
Delete@ செல்வம் அபிராமி
Deleteஉண்மை.! ஜேசன் ப்ரைஸ் ஒரு சாராசரி துப்பறியுவாளர், அவர் தேடும் விஷயம் நடைமுறைசாத்தியம் பற்றியது.ஆனால் விடையோ சக்திக்கு அப்பாற்பட்டவை. உண்மையில் மார்டின் போலவோ,டைலன்டாக் போலவோ நிகழ்ந்த அமானுஷ்ய நிகழ்வுக்கு என்ன காரணம் என விளக்கம் சொல்லும் வகையில் அவரின் கதாபாத்திரம் அமைக்கபடவுமில்லை. அதில் அவர் திறமையானவர் என ஒரு சதவிகிதம் கூட எங்குமே மேற்கோள்காட்டப்படவே இல்லை.
நான் கூறவரும் ஒற்றுமை...
கதையில் நிகழும் சம்பவங்கள் மனிதசக்திக்கு அப்பாற்ப்பட்ட... நடந்ததாக கருதப்படும் பலவரலாற்று [கற்பனை] கதைகள் இருந்தவைகள்... தற்போது நிகழ்வதாக பின்னப்பட்ட களம் என்பதே.! அதற்கு விடை தேடும் வேட்டை.!!
களம் இன்னாது என்ற சின்ன அறிமுகம் துவக்கத்திலேயே தெரிந்துவிட்டால்...படிப்பதும் புரிந்துகொள்வதும் தானாகவே நிகழும்.!
[கற்பனை]கதைகள் = கதைகளில்
Deleteமாயாஜி... எங்களது தானைத்தலைவர் பாசமிகு அண்ணன் மார்ட்டின் அவர்களை ஜேசனோடு ஒப்பீடு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்....
Delete@ ALL : கீழிருந்து மேலே பதில் தரும் வழக்கம் விட மாட்டேன் என தொடர்வதால் - ரிப்பீட் பதில் :
Deleteஇங்கொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ! இந்தக் கதை உருவாக்கப்பட்டது எவ்வித audience க்கு என்பது நமக்குத் தெரியாது !
சிக்கிய genre சகலங்களையும் ரசிக்கும் நாம் ஒரு வித்தியாசமான அணி ; so நமக்கு தோன்றிடக் கூடிய சில பல லாஜிக் நெருடல்களானவை - ஒரு dedicated fantasy தொடர் ரசிகர் கூட்டத்துக்கு தெரிந்திட வாய்ப்புகள் குறைவு தானே ?!
தவிர இன்ன மாதிரியான கதைகளைத் தான் படிக்கப் போகிறோமென்ற வரையறைகளை முன்கூட்டியே நாம் போட்டுக் கொள்வதன் சாதக / பாதகங்களுக்கு நம் தலீவரே ஒரு உதாரணம் தானே ? இது "இன்ன மாதிரி..இன்ன மாதிரி" கதை என்ற விவரிப்பை நான் முன்கூட்டியே தந்திடும் பட்சத்தில், உள்ளே புகும் போதே லைட்டாக Milk of Magnesia மருந்தைக் குடித்த effect சில விளிம்பு நிலை நண்பர்களுக்கு ஏற்பட்டிடக்க கூடும் தானே ?
எல்லாவற்றிற்கும் மேலாய் - ஒரு கதையை ஒரு அனுபவமாய் இப்போது போல் நாம் உணர்ந்திருக்கும் வாய்ப்புகளும் - ஒரு preview இருந்திருக்கும் பட்சத்தில்மட்டுப்பட்டுப் போயிருக்காதா ?
இந்தக் கதையை நான் 3 ஆல்பம்களாய் ஒரு மெல்லிய இடைவெளியினில் வெளியிட்டதன் காரணமே - 'take it as it comes' என்ற பாணியை நாம் நுகர்ந்திடும் பொருட்டே !
:-))))
Delete@ திரு விஜயன்
Deleteகடைசியாக ஒரு உண்மையை இங்கு பதிவிடவேண்டும் ஸார்...என்னை பொறுத்தவரையில் இரண்டாம்பாகத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளும், சிக்கல்களும், மர்மங்களும் எப்படி இறுதியில் அவிழ்க்கப்படும் என்ற 'சஸ்பென்ஸ்' 'காத்திருப்பு' செமையா இருந்தது.! அந்த அனுபவத்திற்காகவே ஒரு பெரிய 'ஓ' போடலாம் ஸார்..!அம்புட்டுதான்.!!
உடு ஜூட்ட்ட்டட்ட்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விவாதம் தொடர்கையில், யாம் இப்போது 'தற்செயலாய் ஒரு ஹீரோ' படித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் கதை சூப்பர் action என்றும் தெரிவித்துக்கொண்டு சரி பாதியில் விட்ட கதையினை தொடரச் செல்கிறோம் .. :-) :-) :-)
ReplyDeleteஅட்டைப்படங்கள் அருமையாக அமைந்துள்ளன.
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கின்றேன்.
வாழ்த்துக்கள் ஆசிரியரே.
ஆசிரியரே பாட்டுக்கு பரிசெதும்
ReplyDeleteகிடையாதா.
ஆசிரியரே பாட்டுக்கு பரிசு????????????
ReplyDeleteganesh kv : சார்...ரிசார்ட்டில் ரூம் போட்டுத் தந்து பரிசும் தர ஆசை தான் ; ஆனால் நம் நிதி நிலைமை அடம் பிடிக்கிறதே !!
Deleteதங்கள் அன்பு ஒன்றே போதும்.
ReplyDeleteஈ வி சத்தமே காணோம்
ReplyDeleteவணக்கம் கணேஷ் சார்! கொஞ்சம்போல குடும்பத்தையும் கவனிக்கவேண்டியதாகிடுச்சு! ( ச்சோ... இந்தக் குடும்பத்தையெல்லாம் யாருங்க கண்டுபிடிச்சது?)
Deleteஅட்டை படங்கள் அருமை. பதிவு விரைவினில் முடிந்து விட்டது போல தோன்றியது.
ReplyDeleteஎடிட்டர் இன்னிக்கு குறும்படம் மட்டும் எடுத்திருக்கார்! ஸ்டீல் - மெகா சீரியல்!
DeleteErode VIJAY : இரவில் நானுமொரு இரும்புக் குதிரையில் சவாரி செய்து, அதிகாலை 5 -30 க்கு தமிழகத்தின் மத்தியில் இறங்கி, ரூமில் இருந்த மொக்கை wi -fi -ல் இந்தப் பதிவை தயார் செய்வதற்குள்ளேயே குடல் வாய்க்கு வந்து விட்டது !! JIO ..அய்யய்யோ !
Deleteபுதிய பதிப்பகத்துடன் கைகுலுக்க உள்ளது ஆவலை தூண்டுகிறது. வாழ்த்துகள் சார். வாணவேடிக்கைக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteThiruchelvam Prapananth : :-)
Delete@ திரு விஜயன்
ReplyDeleteமார்ச்சில் வரவிருக்கும் டெக்ஸ்வில்லர் கதை ஏற்கனவே வண்ணத்தில் கறுப்பு சந்தையில் தமிழாக்கம் செய்யபட்டு சக்கைபோடு போட்ட கதை. எனக்கு தெரிந்து அத்தனை நண்பர்களும் அந்த ஸ்கேன்லேசன் வைத்திருக்கிறார்கள். இங்கு நான் சொல்வது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்... என்னிடமும் இருந்தாலும்கூட அதில் ஒரு பக்கம் கூட சத்தியமாக படித்தது கிடையாது.இதை சொல்ல காரணம் என்னை நல்லவனாக காட்டிக்கொள்வதற்கு கிடையாது. புத்தகத்தில் மட்டுமே படிக்கும் வட்டத்தை தாண்டி ஏனோ சிஸ்டத்தில் படிக்கமனம் போகவே மாட்டேன் என்கிறது.
கறுப்புசந்தையில் ஹிட் அடித்த ஒரு கதைக்கு, உங்கள் மொழிபெயர்ப்பில் புத்தகமாக வெளிவரும்போது அதற்கு வரவேற்ப்புக்கும்,கொண்டாட்டத்திற்கும் அளவே இருக்காது. அப்படியொரு படைப்பின் அட்டைபடம் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தை எதிர்பார்கிறேன்.
சன்சைன் லைப்ரியில் வந்த டைகர் ஸ்பெஷல்-1 அட்டையில் உள்ள பெல்ஜியம் ரயில், இயற்கையான அரிசோனா வனத்தின் ரியல் போட்டோ, மலையப்பன் வரைந்த அட்டகாசமான டெக்ஸ்வில்லர் ஓவியம் என கலந்துகட்டியிருப்பது ஏனோ சரியான கலவையாக தெரியவில்லை ஸார்.! இந்த கருத்தை சொல்லாமல் ஒதுங்க எவ்வளவோ முயன்றும் மனசு கேக்கலை... மன்னிக்கவும்..!!
வாய்ப்பிருந்தால் மாற்றத்தை விதையுங்களேன்.!
mayavi.siva : சார்...அது பெல்ஜியத்தில் வரையப்பட்டிருப்பினும் வன்மேற்கின் ரயில் தானே ? In fact - முதலில் இதற்கென இணைக்கப்பட்ட ரயில் பொருத்தமாக இல்லையென மாற்றிட்டோம். பாருங்களேன் - அந்த "முதல் ரயிலை" !!
Deleteஅப்புறம் கறுப்புச் சந்தையில் வலம் வந்த கதையெனும் விஷயம் இப்போது தான் எனக்குத் தெரியும் ! இந்தக் கூத்து வேறு அரங்கேறியுள்ளதா ? ஷப்பா ! முடிலே !!
@ திரு விஜயன்
Deleteநீங்கள் மாற்றத்தை விதைக்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கிறது.! நன்றியும்,பாராட்டும் ஸார்.! அந்த தாவிபாயும் தங்கம் சந்தையில் விற்கப்பட்ட விலை கேட்டால் பல ஷப்பா சொல்லவேண்டியிருக்கும் ஸார்.! அதன் விலை வரவிருக்கும் ரத்தபடல்ம் கலர் பதிப்புக்கு நிகர்.!!
mayavi.siva : கிறு கிறுக்கிறது சார் !
Deleteஅதனால் தான் பின்னூட்ட துவக்கத்தில் டாக்டர் சுந்தரும், மேச்சேரியாரும் ஏதோ பேசிக் பேசிக் கொண்டது எனக்குப் புரியலையாக்கும் ? இப்போவே கண்ணைக் கட்டுதே !!
Delete// அந்த "முதல் ரயிலை" !! //
Deleteஇப்போது அட்டைபடம் நன்றாக உள்ளது விஜயன் சார்!
@ திரு விஜயன்
Deleteஇதுசம்மந்தமா நிறையவே கூத்து நடந்தது. பொதுவாவே நம்ம லயன்காமிக்ஸில் வந்த டெக்ஸ் கதைகளைதான் கலர்ல காப்பிபோட்டாங்க.! ஒரு சேஞ்சுக்கு புதுசா செய்யலாம்ன்னு அலசி ஆராய்ஞ்சி...செலக்ட் பண்ணி ராப்பகலா பாடுபட்டு பிரிண்டுக்கு பைலை தயார் செஞ்சது ஒரு டீம். அதை பிரிண்ட் போட்டது இன்னொரு டீம். இடையில புக்கை புக்பண்ணினது ஒரு டீம். விலை தாறுமாறாய் எகிற கடுப்பான சந்தை....அந்த பைலை உஷார் பண்ணி தூக்கிட்டுவந்து...
அதை இங்கிலிஷ் படம் டவுண்லோடு பண்ற சைட்டான 'torrnets' லயே அப்லோடு பண்ணி, அது யார் பண்ணினதுன்னு தெரியாம இருக்க பிரான்ஸ்காரங்க id ஒன்னை fb யில ஆரம்பிச்சி அதுல லிங்க் கொடுத்து...எல்லாரும் தாவிபாஞ்சு...ஒரே ரகளைதான்..!
இதெல்லாம் ரெண்டுவருஷம் முன்னாடி கதை கதையா கேட்ட விஷயம் ஸார்..!இது உங்க காதுக்கு வராதது ஆச்சரியமா இருக்கு..!
முக்கிய குறிப்பு : இந்த ஒரே ஒரு முயற்சியோட அந்த சந்தை சப்புனு ஊத்திக்கிச்சிங்கிறது முக்கியமான பாயின்ட்.
*** டவுட்டு ****
ReplyDeleteஎழுத்தாளர் அவதாரம் எடுப்பதற்காக கடலில் விழுந்து இறந்துவிடுவதாக நாடகமாடுகிறார் மார்கன் ஃபடாய் ( பாகம்3 -பக்கம் 9). அவரது சவப்பெட்டிக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது (பக்கம்-10). "வெற்று சவப்பெட்டிதான் அன்றைக்கு மண்ணுக்குள் இறக்கப்பட்டது" என்று பக்கம்38ல் அவரே சொல்கிறார்!
என் சந்தேகமெல்லாம்...
இல்லாத உடலுக்கு சவப்பெட்டி எதற்கு? கடலில் மூழ்கி காணாமல் போன ஒருவனின் வெற்று சவப்பெட்டியைப் புதைத்து ஈமக்கிரியை செய்யும் பழக்கம் மேலைய நாடுகளில் நிஜமாகவே இருக்கிறதா? அல்லது இது கதையில் இருக்கும் ஒரு ஓட்டையா?
யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்?
வாவ்!!! செம டவுட் இத்தாலிகாரு...இதுக்கு செ.அபிராமி பதில் சொல்வார்.!
Deleteஇத்தாலிக்காரு ; கிருஸ்துவ நம்பிக்கைகளில் மட்டுமன்றி இன்னும் வேறு சில சமய நம்பிக்கைகளிலும் ஒரு முறையான சவ அடக்கத்தின் முக்கியத்துவம் ரொம்பவே அதிகம்.
Deleteமரித்துப் போனவரை பூமி போர்த்துக் கொள்ள வேண்டுமென்பது மட்டுமன்றி, அவரது பிரிவால் வாடுவோர் தம் துயரங்களை வெளிப்படுத்திடும் ஒரு மையமாய் அவரது கல்லறை இருந்திடுவது ஒரு அத்தியாவசியம் என்றே பார்த்திடுகின்றனர். ஆகையால் யுத்தத்திலோ ; இயற்கைப் பேரழிவுகளிலோ மாண்டவர்களின் சடலங்கள் கிட்டாவிடினும் ஒரு s அடக்கச் சடங்கும், கல்லறையும் எழுப்பப்படுவது உண்டு தான் !
புரிந்து கொண்டேன்! விளக்கத்திற்கு நன்றி எடிட்டர் சார்!
Deleteநெக்ஸ்டு டவுட்டு ஃபால்லோவ்ஸ்...
ஹல்லோ...ஹல்லேல்லலோ ....இங்கே சிக்னல் சரியில்லையே !!
Deleteமுதல் பாகத்தில் ஜேஸனை ஒருவன் அடிக்க முற்பட்டு அடி வாங்கு வானே அது சும்மாவாச்சு தானா?.
Deleteஅவர் தந்தையின் கூற்று படி(ஜேஸன் பாடாய்) வில்லனால் அவர் அந்த தீவில் இறக்க வேண்டும். வேறு ஓரு காலகட்டத்ததில் அவர் அதே தீவில் இறப்பார் என்றால் அவரை அந்த தீவை விட்டு வெளியே செல்லுமாறு அவருடைய தந்தை கெஞ்கமாட்டார். அவரின் தந்தை கடைசியாக அவர் வில்லனை கொல்ல வேண்டும் என்று எழுதிய பிறகு ஜேஸனின் எதிர்கால வாழ்க்கை பாடய் எழுதிய புத்தகத்தில் இருப்பதாக கூறி எரிப்பது லாஜிக்காக இடிக்கிறது.
மேலும் நீக்ரோ அழகியின் பையன் ஆபத்தின் போது அவனை காப்பாற்ற ஓரு ஜந்து வெளிபடுகிறது. அதே போல் அந்த நீக்ரோ பெண் மயக்கம் அடையும் போது என்ன ஆகும் என சொல்லவில்லை.
மேலும் வில்லன் இறந்த பிறகு அந்த ஜந்து தொடர்ந்து அந்த பையன் உடம்பில் இருக்கமா? இல்லை போய்விடும் என்று நமளே எடுத்து கொல்லலாமா?
முதல் இரண்டு பாகத்தின் அதித வெற்றி காரணமாக மூன்றாம் பாகம் ஓரளவு நன்றாக இருந்தும் ரசிக்க சற்று சிரமமாக இருந்தது.
இருந்தாலும் ஜேஸன் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஓன்று.
Ganeshkumar Kumar : //மேலும் வில்லன் இறந்த பிறகு அந்த ஜந்து தொடர்ந்து அந்த பையன் உடம்பில் இருக்கமா? இல்லை போய்விடும் என்று நமளே எடுத்து கொல்லலாமா?//
Deleteசார்...அவசியங்கள் எழும் போது மட்டுமே வெளிப்படும் பாதுகாவலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ?
ஒரு Resident Bodyguard !!
சமீபத்தில் நான் பார்த்த arrival என்ற அறிவியல் படம் போல இருந்தது ஜேசன் ப்ரைஸ் கதை.
ReplyDeleteசிறுவனின் வாயிலிருந்து வரும் விநோத மிருகம் மற்றுமே தேவையில்லாத இடைசெருகல். அது இல்லாமல் பார்த்தால் loop time travel வகை கதை இது.
ReplyDeletecap tiger : சார்...இங்கொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ! இந்தக் கதை உருவாக்கப்பட்டது எவ்வித audience க்கு என்பது நமக்குத் தெரியாது !
Deleteசிக்கிய genre சகலங்களையும் ரசிக்கும் நாம் ஒரு வித்தியாசமான அணி ; so நமக்கு தோன்றிடக் கூடிய சில பல லாஜிக் நெருடல்களானவை - ஒரு fantasy தொடர் ரசிகர் கூட்டத்துக்கு தெரிந்திட வாய்ப்புகள் குறைவு தானே ?!
@ cap tiger
Deleteசில இடைசொருகல் இல்லைஎன்றால் விறுவிறுப்பு குறைந்துவிடும். ஆனால் அந்தஇடைசொருகல் கதையின் போக்கையே மாற்றபோகும் விசயமெனும் போது...
அதற்காக விளக்கத்தை கதாசிரியர் முன்வைக்கவேண்டியது அவசியம்.! நோய்வாய்ப்பட்டவனுக்கு 'ஷாய்' கடவுள் மரணத்தை தள்ளிவைக்கும் இளமையை மட்டுமே கதைபடி கொடுத்துள்ளார். அதற்கு ஈடாக 'ஆன்மா' க்களை பெற்றுகொள்கிறார்.
[ இங்க கடவுள் 'லஞ்சம்' வாங்கினாரா? அப்ப அவரே உழல்வாதியா? ன்னு கேக்காதிங்க.! :))) ]
மற்றபடிக்கு வில்லனுக்கு எந்த பயங்கரசக்தியும் வழங்கவில்லை எனும்போது சிறுவனுக்கு எப்படி சிறப்பு 'சைன்ஸ்பிக்ஷன்' பேயை வழங்கினார் என்பது கேள்விக்குறியே.! ஒரு தம்மாதுண்டு சிறுவனுக்கே இவ்வளவு சக்தியை வழங்கும்போது கதையை எழுதும் ஜேசன் ப்ரைஸின் அப்பாவிற்கு ஏன் கொடுக்கலை..? அவ்வளவு ஏன் யாரோ ஒரு சிறுவனுக்கே தரும்போது நமக்கு தெரிந்த [ஆரம்பத்தில்] சிறுவனாக இருந்த ஜேசன் ப்ரைசுக்கே தந்திருக்கலாமே என கேள்வி திசைதிரும்பும்..! கிர்ர்ர்ரர்ர்ர்ரர்....
அந்த எழுதுவதெல்லாம் பலிக்கும் மந்திரக் கோலே பெரிய சக்திதானே . சிவனே பக்தனுக்கு வரத்த வழங்கிட்டு தலையில் கை வைத்து ஓடலியா . அதப் போல சக்திய படாய்க்கு வழஙக அத சிறுவனுக்கு வழங்குகிறார் ஃபடாய் .தனது சக்திய திசைதிருப்பி நல்லத நோக்கி திரும்பாவண்ணம் அந்த தீய சக்தி பார்த்துக் கொள்கிறது . கடைசியில் கடவுள் அருளால் தீயது அழிய நல்லதாய் அந்த சிறுவனுக்கு வழங்கியசக்தி வெடிக்கிறது . அத பத்தி கண்ணில் காட்டாமல் இரண்டாம் பாகத்தில் சிறுவன தாக்க வரும் கும்பல வீழ்த்தும் போதே காட்டி விடுகிறார் .மீண்டும் படித்தால் அதன் தாக்கம் பிடி படும் . இரண்டாம் பாகத்திலேயே அமனுஷ்யத்த நோக்கி ஒரு அடி விழுவதும் , முதல் பாக விரல் இழப்பும் சொல்லி விடுதே . அமானுஷ்யம்னாலே பூ சுற்றல்தான் அல்லவா ?
Deleteவணக்கம் மாயாவி சார்
Deleteஜேசனுக்கு தந்தா கதை மிடிஞ்சுருமே பட்டுன்னு நண்பரே....
Deleteஅந்த பையனுக்கு அந்த மாதிரி சக்தி இல்லை என்றால் எப்படிப் ஜேஸன் சக்தி வாய்த வில்லனை கொல்ல முடியும்.
Deleteமேலும் முதலில் அந்த கல்லறையில் அனைவரும் இறந்து கிடப்பதை பார்த்த சற்று மிரட்டடலாக இருந்தது உண்மை.
mayavi.siva : ////சிறுவனுக்கு எப்படி சிறப்பு 'சைன்ஸ்பிக்ஷன்' பேயை வழங்கினார் என்பது கேள்விக்குறியே.! ஒரு தம்மாதுண்டு சிறுவனுக்கே இவ்வளவு சக்தியை வழங்கும்போது கதையை எழுதும் ஜேசன் ப்ரைஸின் அப்பாவிற்கு ஏன் கொடுக்கலை..? ////
Deleteசார்...அவரவரது ஆன்மாக்கு ஈடாய் - அவரவரது கனவுகளை நிஜமாக்குவதே விதிக் கடவுளின் டீலிங் !
தோற்றுப் போன எழுத்தாளரான ஜேசனின் தந்தைக்கு உலகமே கொண்டாடும் படைப்புகளை உருவாக்குவதே கனவும்..இலட்சியமும் ! So அவருடனான டீலில் விதிக் கடவுள் அருள்வது அசாத்திய படைப்புகளை எழுதும் திறனும், ஆற்றலும் !
சிறுவன் ஜெபிரியைப் பொறுத்தவரை அவனது தாய் கோருவதோ - கருப்பு இனத்தவர் சந்திக்கும் அந்நாட்களின் சீண்டல்களிருந்து தன மகனுக்கொரு பாதுகாப்பே ! அதன் பொருட்டு அவனுக்குள் அந்த "உறாஅஅஅ " மிருகம் உறங்கச் செய்கிறார் ஷாய் !!
ஆளுக்கென்ன தேவையோ - அதனையே இங்கு வழங்குகிறாரே தவிர, ஒட்டு மொத்தமாய் அனைவருக்கும் ஒரே வரத்தை அல்ல தானே ? !!
Jason பிரைஸ் கதையை கதையாக பார்க்காமல் ஒரு கனவாக பார்தால் ஒ கே
ReplyDeleteSridhar : well said !!
Deleteமூணு மாசமாக நம்மை பரபரப்பா வெச்சிருந்தது ரெண்டே விசயம் .
ReplyDeleteஒண்ணு தமிழக அரசியல்.
இன்னொண்ணு ஜேசன் ப்ரைஸ்.
இப்ப ரெண்டுமே 'சப்'பென்றாகி விட்டது
Govindaraj Perumal : "இன்னொண்ணு" வேணுமானால் முடிவுக்கு வந்திருக்கலாம் சார் - ஆனால் அந்த "ஒண்ணு" ???
Delete**** இன்னொரு டவுட்டு ****
ReplyDeleteஎகிப்தின் விதிக்கடவுளான ஷாய்'யே தன் இ்ன்ட்ரோ சீனில் கல்லறையில்தான் கிடக்கிறார் (பாகம்-3,பக்கம்-46) அப்படியானால் விதிக்கடவுளின் விதியையே கல்லறைக்குள் நிர்ணயித்த அந்த மகாசக்தி யார்? 'தனக்கு இணையான ஒரு எதிரி வேண்டுமென்பதற்காக' அந்த விதிக்கடவுள் ஷாய்தான் ஆண்டவனையே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது (பக்கம்-51). எனில், ஆண்டவனை மிஞ்சிய அந்த இன்னொரு சக்தி யார்? யார்? யார்?
(இதுக்கு நான் ஏத்துக்கறமாதிரி பதில் சொல்லறவங்களுக்கு சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் ஒன்று பரிசாக அளிக்கப்படும்) ;)
கடவுழுக்கு பொழுது போகணும் அல்லவா ....அதான் இப்டி விளையாடுவது அவன் திருவிளையாடல்களில் ஒன்று .
Delete///விதிக்கடவுளின் விதியையே கல்லறைக்குள் நிர்ணயித்த அந்த மகாசக்தி யார்? 'தனக்கு இணையான ஒரு எதிரி வேண்டுமென்பதற்காக' அந்த விதிக்கடவுள் ஷாய்தான் ஆண்டவனையே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது (பக்கம்-51). எனில், ஆண்டவனை மிஞ்சிய அந்த இன்னொரு சக்தி யார்? யார்? யார்?///
Delete///ஆண்டவனை மிஞ்சிய அந்த இன்னொரு சக்தி யார்? யார்? யார்?///
வேறு யார்? கதாசிரியர்தான்..!!
///(இதுக்கு நான் ஏத்துக்கறமாதிரி பதில் சொல்லறவங்களுக்கு சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் ஒன்று பரிசாக அளிக்கப்படும்) ;)///
இதை நினைச்சாத்தான் திக்குன்னு இருக்கு..!! :-)
ஹ ஹ ஹ...அந்த சக்திய கதாசிரியருக்கு தந்ததே அந்தக் கடவுளின் வெளாட்டுதான்.
Delete...நா சொல்லல...kr விஜயா சொன்னது
\\ வேறு யார் கதாசிரியர் தான்\\
Deleteகிட் ஆர்டினக்கு மூளை தான் உடம்பையே செஞ்சு இருக்கு. பின்றிங்களே பாஸ்.
Erode VIJAY : //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்............நா சொல்லல...KR விஜயா சொன்னது//
Deleteஇதுக்கு மேலேயுமா டவுட்டு ? ஆத்தா மகமாயி !!
**** இது கொஞ்சம் ச்சும்மாக்காண்டி டவுட்டு *****
ReplyDeleteபாகம்-2, பக்கம்-8. ஜெர்மானியரிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள, இறந்த குதிரையின் வயிற்றுக்குள் தஞ்சமடைகிறார் ஜேசன் ப்ரைஸ். அந்த ஜீவமரணப் போராட்டத்தில் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் வினையூக்கியாக 'இரு தவளைகளின் கதை' சொல்லப்படுகிறது!
அதாவது, இரண்டு தவளைகள் ஒரு பால்ப் பாத்திரத்துக்குள் தவறி் விழுந்துவிடுகிறதாம்... அதுல ஒரு தவளை நீந்திக் களைச்சுப்போய் மூழ்கி முக்தியடைஞ்சுடுதாம்... அந்த இன்னொரு தவளை தொடர்ந்து நீந்திக்கிட்டிருக்கும்போது திடீர்னு பால் - வெண்ணெயாக மாறிவிடுகிறதாம்... வெண்ணையில கால வச்சு ஏறி தவளை தப்பிச்சு வெளியேறிடுதாம்!
கதை நல்லா உத்வேகம் தரும்படியாத்தான் இருக்கு! ஆனா என்னோட சந்தேகம் என்னன்னா...
* தவளை வெறுமனே நீரில் மிதக்க கால்களை அசைத்து நீந்தவேண்டுமென்பதில்லையே... சும்மா தேமேன்னு அதால மிதக்க முடியுமே...?!! அப்புறம் ஏன் மூழ்கிச் சாகணும்?!! தவிர, தண்ணீரைவிட பாலின் அடர்த்தி அதிகம் எனும்போது - மிதப்பது இன்னும் சுலபமாச்சே... அப்புறமும் ஏன் சாகணும்? so, இறந்த தவளையின் சாவில் மர்மம் இருப்பது புலனாகிறது!
* தவளைகளின் பாலினம் குறிப்பிடப்படவில்லை! ஒன்று ஆண், ஒன்று பெண் - என்று வைத்துக்கொண்டோமானால், சந்தேகமான முறையில் சாகடிக்கப்பட்ட அந்தத் தவளை ஒரு அப்பாவிஆணாகத்தான் இருக்குமென்ற என் கணிப்பு சரிதானா?
* தவளை உதைத்ததற்கே தயிராக மாறிவிடும் அப்படியாப்பட்ட ஆவின் பால் எந்த ஊரில் கிடைக்கிறது? ;)
( முறைக்காதீங்க மக்களே... அதான் ச்சும்மாக்காண்டினு சொல்லிட்டோமுல்ல?)
வேறு வழியே இல்லை ; ரிசார்ட்டில் ரூம் போட்டு ஜிம் பாய்ஸை அனுப்ப வேண்டியது தான் !! நமக்கு கட்டுப்படியாகிற ரேஞ்சுக்கு எங்கேயாச்சும் ரிசார்ட் தேறுமா என்று பாருங்களேன் மக்களே ?
Deleteரிசார்ட் சே எனக்கு பிடிக்காத வார்த்தை (smurf) :-)
Deleteஜேசன்னை பற்றி கலந்து உரையாட (கலாய்பதற்கு) விஷயம் கொஞ்சம் குறைவு, அப்படி (கலந்து உரையாட) கலாய்பதற்கு உள்ள விஷயம் அந்த அனுமாசிய சக்தி!
ReplyDeleteஆனால் இந்த மாத டெக்ஸ் கதை பற்றி கலாய்பதற்கு சாரி கலந்து உரையாட நிறைய உள்ளது, யாரவது தயாரா :-) சேலம் ஸ்டீல் பாக்டரி பக்கத்தில் இருந்து ஸ்டீல் பூரிக்கட்டை பறந்து வர மாதிரி தெரிகிறது, எனவே நான் விடைபெறுகிறேன்!
Parani from Bangalore : சேலத்திலிருந்து மட்டும் தானா ?
Deleteவிஜயன் சார், இப்போதைக்கு அந்த பக்கம் இருந்து மட்டும் தெரிகிறது, தூரத்தில் கோயம்புத்தூர் பக்கம் இருந்து ஏதோ வருகிற மாதிரி தெரிகிறது :-)
Delete***** ஒரு ஏடாகூட டவுட்டு ******
ReplyDeleteபாகம்-2 மறைக்கப்பட்ட நிஜங்கள்: பக்கம்-30
*ஏன் சில பேனல்களைக் காணவில்லை? வாசகர்களிடம் மறைக்குமளவுக்கு அந்தப் பக்கங்களில் அப்படி என்ன இருந்தது?
* நீக்கப்பட்ட பேனல்களுக்கு நஷ்ட ஈடாக அடுத்தமாத புத்தகங்களில் ஏதேனும் டிஸ்கவுண்டு கிடைக்குமா?
Erode VIJAY : டவுட்டே ஏடாகூடம் எனும் போது விஷயமும் ஏடாகூடமாய் இருக்காதா - என்ன ?
Deleteசில நிஜங்கள் மறைக்கப்படுவதே நலம் !!
குண்டக்க மண்டக்க கேள்விகளாய்க் கேட்டு வந்தால் அப்புறம் "அண்ணன் ஆர்ச்சியை" வைத்தொரு ஸ்பெஷல் போட்டு விடுவோம் - ஜாக்கிரதை !!
Deleteஅப்புறமாய் பின்-முன் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை சாமி - ஆமா சொல்லிப்புட்டேன் !
ஈரோடு விஜய் @
Delete// *ஏன் சில பேனல்களைக் காணவில்லை? வாசகர்களிடம் மறைக்குமளவுக்கு அந்தப் பக்கங்களில் அப்படி என்ன இருந்தது? //
*****&&&&&*** அதுதான் இருந்தது!
ஜேசன் ப்னரஸ் கனதனயவிட அதன் ஓவியம் சொல்ல வார்த்தைக்கு இடமில்லை...
ReplyDeleteஇங்கு விவாதம் நடக்கும்போது ஜேசன் புத்தகத்தின் ஓவியத்னத ரசித்து வருகிறேன்......
சமீபமாக நான் மிக ரசித்த புத்தகங்கள் மீண்டும் ஒரு செட் லயன் ஆபிசில் வாங்கினேன்....
1. மின்னும் மரணம்
2. இரவே அருகே கொல்லாதே
3. தேவரகசியம் தேடலுக்கு அல்ல
4. இரத்தப்படலம்
5.லயன் நியூ ஸ்பெசல்
மீண்டும் இந்த புத்தகத்தை வாங்கினேன்.....
இதன் ஓவியங்கனள ரசித்து வருகிறேன்.....