Powered By Blogger

Tuesday, November 10, 2015

பண்டிகையும்..ஒரு பழங்கதையும்..!

நண்பர்களே,

வணக்கம்! தேசமே ஆர்ப்பரிக்கும் ஒரு அழகான தீபாவளித் திருநாளில் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சந்தோஷம் பெருக்கெடுக்கட்டும்!! பட்டாசுகளோடும், புத்தாடைகளோடும், புது காமிக்ஸ் இதழ்களோடும் இந்தத் தீபாவளியை அற்புதமாக்கிட நமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்!

தீபாவளி நாளில் நம் எல்லோருக்குமே வயது 10 தான்!‘ என்பதில் போத்தீஸின் உலக நாயகருக்கு மட்டுமின்றி நம் அனைவருக்குமே உடன்பாடிருக்கும் என்பது உறுதி! என்னைப் பொறுத்தவரை அதனில் சின்னதொரு மாற்றம் தீபாவளிக்கு எப்போதுமே என் வயது 17 தான்! அதைப் பற்றிய flashback பதிவிது என்பதால் பட்டிமன்றங்களையும், சுவாரஸ்யமான புதுப்படங்களையும் பாதியில் உதறிவிட்டு இங்கு வந்திருக்கக் கூடிய நண்பர்களிடம் முன்கூட்டியே apologies! ஆ... ஊன்னா தியாகராஜ பாகவதர் காலத்துக்குப் போயிடறான்டா சாமி!‘ என்ற உங்கள் mind voice-கள் கேட்பினும் என் சிற்றறிவுக்குத் தெரிந்த மிகப் பிரகாசமான தீபாவளி புதைந்து கிடப்பது 1984-ல் தான் எனும் போது தமிழ் சினிமாப் பாணி flashback-களைத் தவிர்த்திட முடியவில்லை!

1984ல் ஜுலையில் நமது லயனின் பயணம் துவங்கியது; மாடஸ்டியின் சொதப்பல்கள்; அப்புறமாய் ஸ்பைடரின் வருகை தந்த எழுச்சி என்பதெல்லாம் well documented தானே? அதே போல லயனின் இதழ் # 5 ஆக அக்டோபர் 1984-ன் இறுதிகளில் வெளிவந்த “இரும்பு மனிதன்நமது பல தீபாவளி மலர்களுள் முதன்மையானது என்பதையும் அறிவோம்! அதன் பின்னணியைப் பற்றி “சிங்கத்தின் சிறு வயதில்“ பகுதியில் லேசாக எழுதியிருப்பது நினைவுள்ளது! ஆனால் அதன் பின்னணியில் ஒரு கிராபிக் நாவல் ரகத்திலான ஆக்ஷன் உள்ளதை நான் மட்டுமே அறிவேன்! இந்தப் பதிவு அதன் ஒரு ஜாலியான rewind தான் !  

ஆர்ச்சி நிகழ்ந்தது ஒரு காலத்தின் கட்டாயமென்று சொல்லலாம்...! அந்நாட்களது ஒவ்வொரு Fleetway வருடாந்திர சிறப்பு மலர்களிலும் நமது சிகப்புச் சட்டித் தலையனின் சிறுகதைகள் தவறாமல் இடம்பிடிப்பதுண்டு! அவற்றைப் படித்த நாட்களிலேயே, இந்த இரும்பு மனுஷனுக்கு நானொரு ரசிகன். In fact – மாடஸ்டி சொதப்பிடத் தொடங்கிய கணமே (sorry M.V.sir!!) என் தலைக்குள் தோன்றிய முதல் உருவம் ஆர்ச்சியினுடையது தான்! என்னிடமிருந்த ஒரு மூட்டை fleetway வாராந்திர இதழ்களின் குவியலுக்குள் ஒரு இரும்புக்கை வில்லனோடு ஆர்ச்சி மல்லுக்கட்டும் தொடர்கதையினைப் பார்த்து வாய் பிளந்திருந்தேன்! இரும்புக்கை கொண்ட தேவாங்கு சிக்கியிருந்தால் கூட அதையும் பிடித்து வந்து காமிக்ஸின் அட்டையிலும், விளம்பரத்திலும், போட்டிட நான் மட்டுமன்றி காமிக்ஸ் பதிப்பகங்கள் சகலமுமே காவடி எடுத்துக் காத்திருந்த நாட்களவை! So- "ஆர்ச்சி vs The Iron Fist " என்ற அந்தத் தொடர்கதையின் பெயர் வெளிவந்த மாதம் & வருடம் ஆகிய குறிப்புகளோடு டெல்லியிலிருந்த Fleetway-ன் அந்நாட்களது ஏஜெண்டிடம் ஆர்டர் செய்திருந்தேன். கடுதாசிகள் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் நடந்து வந்த புராதன நாட்களவை என்பதால் ஆகஸ்டில் நான் போட்ட ஆர்டருக்கு செப்டம்பரில் தான் “கதை வந்து விட்டது“ என்ற பதில் கிட்டியது! அதற்கு முன்பாக நமது கூர்மண்டையர் நமது அணிவகுப்புக்குள் புகுந்திருந்து வெற்றியை ஈட்டித் தந்திருக்க சூப்பர் ஹீரோ ரகக் கதைகள் மீதான எனது அபிமானம் இன்னும் கூடிப் போயிருந்தது! So- டெல்லிக்குப் பயணமான பொழுது ஆசை ஆசையாய் ஆர்ச்சியை புரட்டத் தொடங்கிய போது தான் முதல் ஷாக்! அதுநாள் வரையிலும் நாம் வெளியிட்டுக் கொண்டிருந்த மாடஸ்டி & ஸ்பைடர் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்குள் அடங்கிடும் விதமாய் இருந்திட ஆர்ச்சியின் இந்த சாகஸமோ நைல் நதியின் நீளத்திற்கு இருந்தது! ‘கதையும் ரெடி உடனே பணம் செலுத்த வேண்டும் ! ‘ என்ற போது யோசிக்க அவகாசமெல்லாம் இருக்கவில்லை! பணத்தைக் கட்டி விட்டு, கதையை வாங்கிக் கொண்டு தமிழ்நாட் எக்ஸ்பிரசில் ஊர் திரும்பிய போது தான் இவ்வளவு நீளக் கதையை இரண்டு பாகங்களாகப் பிரிக்காமல் எவ்விதம் வெளியிடுவது என்ற யோசனை ஓடத் தொடங்கியது! கதை செம உப்மா என்ற போதிலும் அந்நாட்களது நமது வயதுகளுக்கும், Fleetway-ன் சரமாரியான Annuals சிறப்பிதழ்களைப் பார்த்தே வளர்ந்திருந்த எனக்கு அந்த பாணியில் நாமும் ஒரு ஸ்பெஷல் வெளியீடாக ஆர்ச்சியைப் போட்டால் என்ன? என்று தோன்றத் தொடங்கியது. இரயில் போபால் ஸ்டேஷனை எட்டிப் பிடித்த வேளைக்குள் என் தலைக்குள் தீபாவளி மலரின் ஒரு மினி ப்ளு-பிரிண்ட் தயாராகியிருந்தது!

அந்நாட்களில் நான் தனியாகக் கடை போட்டு, ஒரேயொரு ஆர்ட்டிஸ்ட் & ஆபீஸ் பையனோடு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் இதழ்களின் தயாரிப்பு வேலைகளின் பொருட்டு என் தந்தையும், அவரது சகோதரர்களும் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த வளாகத்தினில் தான் பாதி நேரத்தைக் செலவிட்டு வருவேன். தந்தை partnership-ல் ஒரு அங்கமாக இருந்திட , அவர் மூகுக்குக் கீழேயே குந்திக் கொண்டு நான் தனியாக எதையோ கிளறிக் கொண்டிருந்தது - இதர பார்ட்னர்களை அத்தனை சந்தோஷப்படுத்தவில்லை ! அதிலும் அன்றைய நாட்களில் முத்து காமிக்ஸ் நொண்டியடித்துக் கொண்டிருந்த சமயம் - நான் தனி ஆவர்த்தனத்தில் ஏதேதோ ஜிகினா வேலைகளைச் செய்து வந்தது தந்தையின் சகோதரரிடையே புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது ரொம்பச் சீக்கிரமே என் கவனத்துக்கு வந்து விட்டது ! வெளியாட்களுக்கான அதே ட்ரீட்மெண்ட் தான் எனக்கும்! அச்சிட அதே கூலி தான் ; அங்கிருந்த உபகரணங்களையோ, பணியாட்களையோ பயன்படுத்தினால் அதற்கும் காசு கட்ட வேண்டியிருக்கும் ! இவ்வளவு ஏன் - மாட்டு வண்டியில் அவர்களது காலெண்டர் பண்டல்களோடு நமது காமிக்ஸ் இதழ்களின் பண்டல்கலையும்  சேர்த்து அனுப்பினால் கூட - அதுக்கும் கணக்காகக் காசு தந்து விடும் சூழல் !!!  உச்சக்கட்ட நிதி நெருக்கடியில் தந்தையும், சகோதரர்களும் நடத்தி வந்த அச்சகம் உழன்று வந்த காலம் என்பதால் என் தந்தையிடமே நான் கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய நாட்களாக அவை அமைந்து போயின! என்னிடம் அப்போது பாங்க்கில் சுமார் ரூ.30,000 இருப்பு இருப்பது வழக்கம்! (அந்நாட்களில் அதுவொரு huge தொகை!! ) அவர்களது அச்சக நிர்வாகத்தில் ஏதேனும் நெருக்கடி எனில் என்னிடமிருந்து கைமாற்று கேட்டு விடுவார்களோ என்ற பயத்தினிலேயே என் தந்தையைத் தவிர்த்து விட்டு அலுவலகத்தின் பணியாட்களோடே நான் பொழுதுகளைக் கழிப்பது வாடிக்கை! 

புத்தக அளவுகள் மாறும் சமயம் தயாரிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய நெளிவு சுளிவுகளை எனக்கு அந்நாட்களது முத்து காமிக்ஸின் மேனேஜரும், பைண்டிங் பிரிவின் பணியாளருமே கற்றுத் தந்தனர்! இரும்பு மனிதன்“ பெரிய சைஸில் என்று தீர்மானமான பின்பு அதன் “பிரம்மாண்டத்தைக்“ கூட்டிட கதைக்கு 2 வர்ணங்கள் தருவதென்று தீர்மானமும் செய்தேன்! கம்ப்யூட்டர் இல்லாக் காலங்கள் என்பதால் எல்லாமே பணியாட்களின் processing கைவண்ணத்தில் அரங்கேறியாக வேண்டும். எனக்கோ black & white இதழ்களின் அடுத்த லெவல் பணிமுறைகள் பற்றித் துளியும் தெரியாது! என் தந்தையிடம் கேட்க, ஒரு வித இயலாமை ; சக பார்ட்னர்களின் (சகோதரர்களின்)  கடுப்பை சமாளிக்க வேண்டிய இக்கட்டில் இருந்த என் தந்தைக்கு அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ற நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறி இரு வண்ணங்களுக்குரிய நெகடிவ்களை தயார் செய்து விட்டேன். அதன் மீது ரீ-டச்சிங் ஆர்ட்டிஸ்ட்கள் என்ற பணியாளர்கள் வேலை செய்தாக வேண்டும். அடியில் டியூப்லைட் பொருத்தப்பட்ட கண்ணாடி மேஜைகளின் மீது நெகடிவ்களைப் போட்டுக் கொண்டு ‘வறட்‘ ‘வறட்‘ என்று சுரண்ட ஒரு கருவியும்; செங்கமட்டி போன்றதொரு opaque பேஸ்டையும் வைத்துக் கொண்டு தான் அவர்கள் மணிக்கணக்கில் / நாள்கணக்கில் பணி செய்வர்! என் தந்தையின் அச்சகத்தில் காலண்டர்கள் பிரதானமாய் தயாராவது வாடிக்கை என்பதால் இந்த ரீ-டச்சிங் ஆர்ட்டிஸ்ட்கள் 4 பேர் இருப்பதுண்டு! அவர்களைத் தாஜா பண்ணி நமது காமிக்ஸ் வேலைகளைச் செய்யத் தொடங்க வைத்திருப்பேன்; அதற்குள் “வேறு அவசர வேலை“ என்று காலெண்டர்கள் எதற்குள்ளாவது அவர்களை அமுக்கி விடுவார்கள்! “இது வேலைக்கு ஆகாதுடா சாமி!“ என்று என் தலைக்குள் அபாய மணி ஒலிக்க என்ன செய்யலாமென்று யோசிக்கத் தொடங்கினேன்! இந்தியாவிலிருந்து கொண்டு வளைய, நெளியத் தெரியாது இருந்தால் குப்பை கொட்ட முடியுமா என்ன..? அன்று முதல் அத்தனை ஆர்டிஸ்ட்களுக்கு்ம் இரவில் "புரோட்டா-சிக்கன்" விருந்து என் செலவில் என்று காதில் போட்டு வைத்தேன்! ஏற்கனவே என்னைப் பொடியனான நாட்களிலிருந்தே அறிந்து வைத்திருந்த பணியாட்கள் எனக்கு உதவி செய்திட ஆர்வமாகவே இருந்த நிலையில்; "புரோட்டா-சிக்கன் வாக்குறுதி" செம சூப்பராக வேலைகள் நடந்தேறச் செய்தது! ஒவ்வொரு நாளும், பகல்களில் காலெண்டர் வேலைகளைப் பார்த்து விட்டு இரவுகளில் ‘இரும்பு மனிதனோடு‘ பொழுதைக் கழித்தனர். அவர்கள் தூங்காமல் பணி செய்யும் போது நமக்குத் தூக்கம் தான் பிடிக்குமா என்ன? இரவு 2 மணி வரை ஒரு ஓரமாய் உட்கார்ந்து “பாதாளப் போராட்டம்“ கதையின் மொழிபெயர்ப்பில் மொக்கை போட்டுக் கொண்டிருப்பேன். ஒரு மாதிரியாக ஒரு வார இரவு வேலைகளுக்குப் பின்பாக 2 வர்ணத்தில் அச்சிட பிலிம்கள் தயாராகி இருந்தன!

அச்சு இயந்திரங்களில் இரு வகைகள் உண்டு! நியூஸ் பேப்பர்கள்; வாரப் பத்திரிகைகள் போன்றவற்றை பேப்பர் ரீல்களிலிருந்தே அச்சிடுபவை web offset என்று ரகம். மற்றபடிக்கு எண்ணிக்கையில் குறைச்சலான காலெண்டர்கள், டயரிகள், லேபில்கள் etc.. etc.. போன்றவற்றை வெட்டப்பட்ட தனித்தனிக் காகிதங்களிலிருந்து அச்சிடுபவை sheetfed presses. பிந்தையது எக்கச்சக்கமாய் உண்டு; ஆனால் ரீல்களில் இருந்து அச்சிடும் web offsets ரொம்ப ரொம்பக் குறைவே சிவகாசியில்! என் தந்தையின் அச்சகத்தில் அந்நாட்களில் இரண்டுமே உண்டு! So- முன்பக்கமும், பின்பக்கமும் 2+2 ஆக மொத்தம் 4 கலர்கள் அச்சிட வேண்டுமென்பதால் பணியை web offset-ல் செய்தால் ‘ஏக் தம்மில்‘ வேலை முடிந்து விடும்! பற்றாக்குறைக்கு அச்சிட்டு விட்டு பேப்பரை அதுவே கட் பண்ணி, மடித்தும் தந்து விடும்! So- பைண்டிங்கிலும் வேலை சுலபமாகி விடும் என்பதால் இந்த இதழின் திட்டமிடல் தொடங்கிய போதே இதற்கான பேப்பரை ரீலாக வாங்கி விடுவது என்றும் ஊருக்கு சற்றே வெளியிலிருந்த web offset பாக்டரியில் அவற்றை அச்சிட்டு விடுவது என்றும் தீர்மானித்திருந்தேன். என் தந்தைக்கும் தகவல் சொல்லி விட்டதால் ஜரூராக பேப்பரை வரவழைத்து தடித் தடி ரீல்களைக் கொண்டு போய் தந்தையின் அந்த web offset பிரிவில் இறக்கி வந்தேன்!
WEB OFFSET

SHEETFED
Web offset இருந்த பாக்டரியில் பெரிதாய் வேலைகள் இருந்து நான் பார்த்ததே கிடையாது! ‘மாலை மலர்‘ க்ரூப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “தேவி“ வாராந்திர இதழின் அட்டைப்படம் மட்டுமே ரெகுலராக அங்கே அச்சாக வருவதைப் பார்த்திடுவேன். So- அங்கிருக்கும் பணியாட்கள் சாவகாசமாய்; எனக்கென்ன போச்சு? என்ற ரீதியில் தான் பணி செய்வர்! சரி-இங்கேயும் “புரோட்டா-சிக்கன் டெக்னிக்“ தான் என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டே வரும் திங்கள் முதல் உங்கள் சாப்பாட்டுப் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!“ என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்! கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த நண்பர்கள் வார இறுதியில் ஒட்டுமொத்தமாய் கொடைக்கானல் புறப்பட்டுக் கொண்டிருக்க இந்தத் “தொழிலதிபரும்“ அவர்களோடு இணைந்து கொள்ள வேண்டிப் போனது! ஜாலியாக 2 நாள் ஊர் சுற்றி விட்டு சட்டுப் புட்டென்று பிரிண்டிங் வேலைகளைப் பார்க்கலாம் என்று ஆபீஸுக்கு திங்கட்கிழமை போனேன்! அங்கே காத்திருந்த ‘ஷாக்‘ இப்போதும் நினைவில் உள்ளது!

பேப்பர் ரீல்களை எப்போதுமே லாரியிலிருந்து இறக்கி அச்சகத்தின் ஓரத்திலுள்ள புல்தரையில் தான் போட்டு வைத்திருப்பார்கள்! நமது பேப்பர் ரீல்களும் அப்படித் தான் கிடந்தன வெள்ளி இரவில் நான் புறப்பட்ட வரைக்கும்! திங்கட்கிழமை காலை புல்தரை பச்சை பசேலென்று காட்சி தந்தது மேலே ஏதுமின்றி! “மழை பெய்திருக்கும் போலும்... உள்ளே தூக்கி அடுக்கியிருப்பார்கள்!“ என்றபடிக்கு சாவகாசமாய் உள்ளே போய் நோட்டம் விட்டால் அங்கேயும் சுத்தம் - எதுவும் கண்ணில் படக் காணோம் ! பணியாட்களிடம் விசாரித்தால் பேப்பரா? ரீலா?“ என்றுப் பேந்தப் பேந்த முழிக்க அங்கிருந்த மேனேஜர் மட்டும் பேய்முழி முழத்துக் கொண்டிருந்தார்! ஆறடி மூன்றங்குல உயரம்; ஆஜானுபாகுவான உடல் ஆனால் ரொம்பவே கீச்சுக் குரல் கொண்டவர் அவர்! வயதிலும் மூத்தவர்! அவரிடம் போய் “அண்ணாச்சி... என்னோட ரீல்லாம் எங்கே?“ என்று கேட்க அவர் தாளம் போடத் தொடங்கிய போது தான் எனக்குள் சைரன் சத்தம் கேட்கத் தொங்கியது! பதினேழே வயதான சுள்ளான் தான் என்ற போதிலும் உண்ணாமல், உறங்காமல் சேர்த்த காசின் மீது எனக்கிருந்த அக்கறை அசாத்தியக் கோபத்துக்கு வழிவகுத்தது! அங்கேயே ஒரு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் மெதுமெதுவாய் வாயைத் திறந்தார்........! அந்த வாரத்து ‘தேவி‘ இதழின் ராப்பர் அச்சிடத் தேவையான பேப்பர் இன்னமும் வாங்கிடவில்லை; ஆனால் அவர்களது deadline-க்கு நேரமாகி விட்டதால் கைவசம் தயாராகக் கிடந்த நமது (காமிக்ஸ்) பேப்பர் ரீல்களை எடுத்துப் போட்டு அதனில் தேவியின் ராப்பரை அச்சிட்டு விட்டதாகச் சொன்னார் ! 

அவர் சொல்லச் சொல்ல எனக்கு இரத்தம் கொதிநிலைக்குப் பயணமாகி விட்டது! கொஞ்ச நேரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ; இது மாதிரியான சிக்கல்களெல்லாம் இதன் முன்னே பார்த்தது கிடையாது எனும் பொழுது - அழுகை அழுகையாய் வந்தது. தோல்வி பயம் தொண்டையை அடைக்க, கண்ணீரோ எந்த நொடியும் பெருக்கெடுக்கக் கூடுமென்ற நிலையில் சைக்கிளை புயல் போல் மிதித்துக் கொண்டு என் தந்தையும், அவரது சகோதரர்களும் இருந்திடும் மெயின் ஆபீஸுக்கு வெறிபிடித்தவன் போல் போய்ச் சேர்ந்தேன்! பகல் வேளை என்பதால் பிசியாக எல்லோரும் இருக்க நடுக்கூடத்தில் நின்று கொண்டு சாமியாட்டம் ஆடத் தொடங்கினேன். இன்று யோசிக்கும் போது அந்த ரௌத்திரம் ரொம்பவே ஓவரோ? என்று தோன்றினாலும் அந்நாட்களில் ஒவ்வொரு ஒற்றை ரூபாய் நோட்டையும் கண்ணில் பார்க்க நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நிதானத்தை அந்த நிமிடத்தில் நல்கவில்லை! நெருக்கடியானதொரு சூழலில் தந்தையின் சகோதரர் எடுத்திருக்கக்கூடிய அந்தத் தீர்மானத்தை என் தந்தையால் நிராகரிக்க இயலாது போனதா ? அல்லது என்னை சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் என் தந்தையே எடுத்த தீர்மானமா ? விடை தெரிந்து கொள்ளும் பக்குவத்தில் நானில்லை!தந்தையும் சரி சகோதரர்களும் சரி ஆடித் தான் போய் விட்டார்கள்! “தேவி“யிலிருந்து செக் நாளை வந்து விடும்; நாளைக்கு பேப்பர் வாங்கி replace செய்து விடலாம் !" என்று என் தந்தை சொல்ல நானோ எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை! 'சந்தைக்குப் போணும்...ஆத்தா வையும்...காசு கொடு..!" என்ற பாணியில் ஒரே பாட்டைத் தான் பாடிக் கொண்டு நின்றேன் !  அந்த ஆபீஸ் முழுவதுமே என்னை விரோதமாய்ப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. ஆனாலும் எனக்கு என் ரீல்கள் கிடைக்காமல் நான் இடத்தைக் காலி பண்ணப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் கற்பனைக்கு அப்பாலானதொரு விலையோடு (ரூ.4!!!) வரவிருக்கும் ஒரு “ஸ்பெஷல் இதழ்“ தாமதமாகி விட்டால் கதை கந்தலாகிப் போகுமே என்ற பயம் தான்!! தவிர, கழுத்து வரை பிரச்சனைகளுக்கள் சிக்கிக் கிடப்பவர்களுக்கு நாளைய பொழுது புலர்ந்து விட்டால் நம் பிரச்சனை எங்கே பெரிதாகத் தெரியப் போகிறது? என்ற கலக்கமும்! விட்டால் அழுதுவிடுவேன் என்ற அளவுக்கு உள்ளுக்குள் கதிகலங்கிப் போயிருந்தேன்; ஆனால் வெளியே அதைக் காட்டிக் கொள்ளக் கூடாதென்ற வீராப்பில் ‘அலெர்ட் ஆறுமுகம்‘ போல  முறையோ முறை என்று முறைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்! சரி- இவன் எந்த சமாதானத்துக்கும் சரிப்பட மாட்டானென்று அனைவரும் உணர்ந்திருந்தனர் அந்நேரத்துக்கு! அதன் பின்பாக என்னவோ செய்து பணத்தை எப்படியோ புரட்டி மதுரையிலிருந்து பேப்பர் ரீல்களை ஆர்டர் போட்டார்கள்! ‘இரவு வந்து விடும் !‘ என்று எனக்கு வாக்களிக்கப்பட்டிருப்பினும் யாரையும் நம்பும் மனநிலையில் நானில்லை! சத்தமில்லாமல் மதுரையிலிருந்த லாரி ஷெட் நம்பரை எடுத்து வந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் கூப்பிட்டு அவர்கள், குடலையும் உருவினேன். ஒருவழியாக ‘லோடு ஏறிடுச்சி‘ என்று அவர்களும் சொல்லி வைக்க, அன்றிரவு பேப்பர் சிவகாசி வந்து சேர்ந்தது!

மறுபடியும் இதே கூத்தாகிப் போய்விடக் கூடாதுடா சாமி !!‘ என்ற வைராக்கியத்தில் அடுத்த சில நாட்களுக்கு நமது தக்கனூண்டு ஆபீஸையே இந்த பாக்டரி இருந்த இடத்துக்கு மாற்றினேன். ஆர்ட்டிஸ்டும், நமது ஆபீஸ் பையனும் 5 நிமிடங்களுக்கொரு தடவை ரீல்களை சரிபார்த்து விட்டு... “மைக் 1... மைக் 2...All ok. boss !“ என்று குரல் கொடுக்காத குறை தான்! அவர்களது முழுநேரப் பணி - ரீல்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவதே !! 

ஒருவழியாக அச்சிட பிளேட்களையும் தயார் செய்து கொண்டு வந்து ஆர்ச்சியின் அச்சுப் பணிகள் தொடங்கிய போது எனக்குள்ளே சொல்ல முடியாததொரு புல்லரிப்பு! முதல் தடவையாகக் கலரில் (!!) அது சவ்வு மிட்டாய் ரோஸாகவோ; கிளிப் பச்சையாகவோ இருந்தால் கூட நமது காமிக்ஸைப் பார்த்த அந்தப் பரவசம் வார்த்தைகளுக்கு அப்பாலானதொரு உணர்வு! அதிலும் முன்னும், பின்னும் ஒரே சமயம் பக்கங்கள் உச்ச வேகத்தில் அச்சாவதைப் பார்த்ததும், சரி; இரும்புக்கை வில்லனோடு ஆர்ச்சி அண்ணாச்சி மோதுவதை உங்களுக்குக் கொணரவிருக்கும் உற்சாகத்தையும் (!!!) இப்போது கூட மறக்க முடியவில்லை !  ஒரு மாதிரியாக அச்சு முடிந்து பைண்டிங்கும் முடிந்து முதல் பிரதியைப் பளபளக்கும் வார்னிஷ் அட்டைப்படத்தோடு பார்த்த சமயம் அதன் பின்னிருந்த பாடுகள் சகலமும் மறந்தே போயிருந்தன! அதிலும் அட்டைப்பட டிசைனுக்கென நமது ஓவியர் காளியப்பா அவர்கள் ஒரே நாளில் போட்டுத் தந்திருந்த டிசைன் மூச்சு வாங்கச் செய்தது!

பிரதிகளைப் பார்த்த போது ஏஜெண்ட்கள் அத்தனை பேருக்குமே செம குஷி! ‘இது உறுதியா வித்திடும் சார்!‘ என்றபடிக்கே அருகாமையிலிருந்தோர் வாங்கிச் செல்ல தொடர்ந்த நாட்களில் ஒரு ஊர் பாக்கியின்றி சகல இடங்களிலும் தீபாவளி மலர் huge hit! வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சைக்கிளுக்கு அப்பாலாக நான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் (IND SUZUKI Max 100) முன்பதிவுப் பணமும், லோனின் முதல் தவணைக்கான பணமும் உற்பத்தியானது நமது சட்டித்தலையரின் புண்ணியத்தாலேயே! ஒன்பதாயிரம் ரூபாய் விலையிலான புது வண்டிக்கு (!!) முன்பதிவுக்கு ரூ.2000/- பணம் கட்டிய சந்தோஷத்தோடே முதன்முறையாக என் கையிலிருந்த பணத்தைக் கொண்டு வீட்டிலுள்ளவர்களுக்கு தீபாவளிக்கு சின்னதாய் ஏதோ வாங்கித் தர முடிந்ததும் அன்றைக்குத் தான்! நாட்களும், அகவைகளும் ஏராளமாய் கழிந்து விட்ட போதிலும், வாழ்க்கையில் ஏதேதோ பார்த்து விட்டான பின்பும்  அந்த "முதல் பண்டிகையின்" பரவசம் இது போன்ற சமயங்களில் எப்போதாவது தலைதூக்குவதுண்டு எனக்குள் ! 

இன்றைய உலகில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் போதே நம் இளைய தலைமுறையினர் செய்திடும் start up ventures விண்ணைத் தொடும் வெற்றியை ஈட்டுவதெல்லாம் பார்க்கும் போது எனது கி.மு. காலத்துக் கூத்துக்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது! ஆனால் நினைவுகளுக்குத் தான் லாஜிக் தெரியாதே?! So இது தான் எனது "தலை தீபாவளியின்" கதை !! உங்கள் ஒவ்வொருவரின் பால்யங்களிலும் இது போல் வித்தியாசமான தீபாவளி அனுபவங்கள் நிச்சயம் இருக்கும் ! அவற்றை சமயம் கிட்டும் போது பகிர்ந்திடலாமே folks ? Should be fun for sure !!

அட்டகாசமாய் இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோமே.. ! மீண்டும் சந்திப்போம்! Bye for now !!

P.S.: நவம்பர் இதழ்களின் விமர்சனங்களை இங்கேயே தொடரலாமே?!

169 comments:

  1. தீபாவாளி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் மற்றும் ஜூனியர் எடிட்டர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார். நீங்கள் கொண்டாடிய அந்த தல தீபாவளி இதழ நான் பார்த்ததெ இல்லை சார். ப்ளீஸ் காமிக்ஸ் கிளாசிக்கில் இதை வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  5. வணக்கம் சார்...வணக்கம் நண்பர்களே...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அனைவருக்கும்...... இந்த டெக்ஸ் வித் தீபாவளி - மாதிரி எல்லா தீபாவளிகளும் சிறக்க ஆண்டவரை வேண்டுகிறேன்.....

    ReplyDelete
  6. அன்பு ஆசிரியரே....

    அன்றும் தீபாவளி...
    இன்றும் தீபாவளி..

    இடையே முப்பது வருடங்கள்...!

    "தலை வாங்கி குரங்கு" இதழிற்காக தாங்கள் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் அமர்ந்து எழுதிய ஹாட்லைன் ஏதோ நேற்றுதான் படித்தது போல் பசுமையாய் நினைவிலுள்ளது.

    காலச்சுழற்சியால் வாழ்க்கை, எத்தனையோ மாற்றங்களை கண்டுவிட்டாலும்,நீங்களும், உங்கள் எழுத்துகளும்,காமிக்ஸும் மட்டும் தான் என் பால்யத்தை திரும்ப கொண்டுவரும் வரமாக இருக்கிறீர்கள்.
    வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சந்தோஷ உணர்வுகள்.எனக்கே எனக்கான உலகம் இது.
    நன்றி அன்பு ஆசிரியரே...

    எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களின் மீதும்,குடும்பத்தார்மீதும் அருள் பொழிய பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  7. இரும்பு மனிதன் இரும்புக்கையுடன் மோதும் கதை என்கிற விளம்பரம்.. 1984 தீபாவளி சிறப்பு மலருக்காக .......இன்னமும் கண்முன் நிற்கிறது.. இன்னும்நூ ற்றுக்கணக்கான ..ஆயிரக்கணக்கான தீபாவளி மலர்கள் தாங்கள்
    வெளியிட வேண்டும் ..லட்சக் கணக்கான காமிக்ஸ் காதலர்கள் அதைப் படித்து இன்புற வேண்டும் என்று மனதார
    வாழ்த்துகிறேன் ...

    ReplyDelete
  8. காமிக்ஸ் நண்பர்களுக்கும் எடி சாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சார் ..


    தங்களுக்கும் ....ஜூ.எடிட்டருக்கும் உடல் நிலை ஓகே தானே சார் ....

    ReplyDelete
  10. Dear Edi,

    The story behind the first issue Erich kickstarted our Diwali Specials in our editions is awesome. Thinks much for sharing.

    I wasn't a Lion or Muthu comics readers in those years... But still remember the awe with which I looked at these enlarged editions and striking covers in the second hand bookshop. They stood out from the rest of Comics even in 1990s. Unforgettable Memoirs.

    ReplyDelete
  11. வணக்கம் சார் வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் /\/\

    ReplyDelete
  12. எடிட்டர் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    இந்த வாழ்த்தை ஒரே ஒருகாமிக்ஸ் நாயகரால் மட்டுமே குடும்பம் சகிதமாக சொல்ல முடியும்..! அதை பார்க்க...இங்கே'கிளிக்'

    'தல' டெக்ஸ் & கோ சொல்லும் வாழ்த்துகளை பார்க்க.. இங்கே'கிளிக்'

    ReplyDelete
  13. ஹூம் ...இந்த இரும்பு மனிதன் கதையை அவ்வளவு ஆசையாக வைத்திருந்தேன் ..அதுவும் .அட்டை இல்லாமலே அதன் அளவிற்காகவே அவ்வளவு விருப்பமான இதழ் அது ....கொடுமை ..பத்து வருடங்களுக்கு முன் .வீடு புகுந்து பணத்தை கொள்ளை அடிக்காமல் ( க்கும் ..அப்படியே கொட்டி கிடந்தாலும் )காமிக்சை கவர்ந்து சென்ற நண்பருக்கு கிடைத்த பொக்கிஷம் அதுவும் ஒன்று ....அதற்கு பிறகு அந்த இதழை கண்ணால் கூட பார்க்க முடிய வில்லை சார் ...

    ReplyDelete
  14. I ​
    Just
    Want
    To
    Wish
    You
    A
    Very
    happy
    diwali
    And a
    Happy
    lovely
    diwali
    I ​
    Just
    Want
    To
    Wish
    You
    A
    Very
    happy
    diwali
    And a
    Happy
    diwali
    day
    I ​
    Just
    Want
    To
    Wish
    You
    A
    happy
    diwali
    diwali
    And a
    Happy
    diwali
    diwali
    *•take your phone•*
    *•in your hand•*
    *•🌲first see🌲•*
    *•my pic•*
    *•then wake up•*
    *•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*
    *•your day•*
    *•will be great•*
    
    
    
    
    🌞
    
    
    
    happy 
     diwali 
    
    I ​
    Just
    Want
    To
    Wish
    You
    happy
    diwali

    *•😀😀•*
    *••*
    *•🌲🌲•
    *•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*
    
    
     happydiwali 
     🐝🌼🐝 
    🌞
    
    
    


    happy diwali...

    ReplyDelete
  15. எடிட்டர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  16. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சார், நண்பர்களே,

    நாலு நாள் லீவில் மழை யுடன் ஒரு காபி மிச்சறை வைத்துக் கொண்டு காமிக்ஸ் படிக்கும் சுகத்தை வழங்கியதற்கு நன்றி. நிஜமாகவே காமிக்ஸ் ஹீரோக்களின் சாகசத்தை விட நீங்கள் காமிக்ஸ் வெளியிட சிறுவயதில் செய்த சாகசங்கள் எங்களை இம்ப்ரெஸ் செய்கின்றன.

    மஞ்சள் நிழல்
    காதில் பூச்சுற்றும் ரகம். ஆனால் ஸ்பைடரையும் ஆர்ச்சியையும் படித்த நமக்கு இது ஒன்றும் புதிதில்லையே. விறுவிறுப்புடன் போனது.

    ஷெல்டன் வரலாறும் வல்லூறும்
    வரலாற்றின் பின்னணியில் சம கால கதை. ரைடர்ஸ் ஆப் லாஸ்ட் ஆர்க் கதை போலவே இருந்தாலும் கடவுள் நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்குமான உரையாடல்கள் அருமை. பரபர கதை.

    டெக்ஸ்
    Tex with T-REX
    துயில் எழுந்த பிசாசாகி விடுமோ என்று நினைத்தேன் ஆனால் டைனாசருடன் கட்டிப் பிடித்து சண்டை எல்லாம் போடாமல் கதையை நகர்த்தி இருந்தனர். ஓகே ரகம் தான்.

    அவேஞ்சர்ஸ்
    சித்திரங்கள் அருமை. கலரில் இல்லாமல் போயிற்றே என்ற வருத்தம் வந்தது. கதையும் ஏற்கனவே படித்த கேட்ட பார்த்த கதை தான். ஆதலால் இதுவும் ஓகே ரகம் தான். டெக்ஸ் பட்டையை கிளப்பினார் என்று சொல்லும்படி ரெண்டு கதையும் இல்லாதது வருத்தம் தான்.

    ReplyDelete
  17. டெக்ஸ் சுக்கு நீங்கள் எழுதிய பஞ்ச் லைன்கள் அருமை!.

    Dr டெக்ஸ் - இவர் சிகிச்சையே வேற மாதிரி

    ReplyDelete
  18. ஆசிரியர், ஜூ.எடி, ஊழியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. அன்புள்ள எடிட்டர்,அவருடன் பணிபுரிவோர்கள்,மற்றும் நம் காமிக்ஸ் நன்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. எடிட்டர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. //நாட்களும், அகவைகளும் ஏராளமாய் கழிந்து விட்ட போதிலும், வாழ்க்கையில் ஏதேதோ பார்த்து விட்டான பின்பும் அந்த "முதல் பண்டிகையின்" பரவசம் இது போன்ற சமயங்களில் எப்போதாவது தலைதூக்குவதுண்டு எனக்குள் ! //
    உண்மைதான் சார்!

    ReplyDelete
  22. பத்திரிகைப்பணிக்கும் எனக்குமான ஆத்மார்த்த உறவை உங்கள் பதிவு ரொம்பவே கிளறிவிட்டுவிட்டது சார். பாடசாலை நாட்களிலிலேயே பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பை இயற்கை எனக்குக் கொடுத்தது. அதற்கான ஊக்கம், உங்களதும், கோகுலம் ஆசிரியராகவிருந்த 'ரேவதி' அவர்களதும், வாண்டுமாமா அவர்களதும் எழுத்துக்களாலேயே கிடைத்தது. அதற்கு உங்களனைவருக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    முதல் முதலாக 'உதயன்' என்ற பத்திரிகையில் பணியாற்ற வருமாறு அழைப்புக் கடிதம் வந்து, அதன் நிர்வாக ஆசிரியராகவிருந்த திரு.வித்தியாதரன் ஊடாக பிரதம ஆசிரியர் திரு.கான மயில்நாதனை சந்தித்தபோது அவர் சொன்னார், 'இந்த அச்சு மை, கையில் பட்டால் போகாது. அதனால், இதைத் தொடமுதல் நன்கு யோசித்துத் தொடும்' என்று. யோசிக்காமலே தொட்டேன், இன்றுவரை தொடர்கிறது!

    ReplyDelete
  23. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. தித்திக்கும் தீபஒளித் திருநாளில்
    எத்திக்கும் புகழ் மணக்கும் என்னருமை லயனே
    முத்தான முத்தே முத்தமிழின் சொத்தே
    சத்தான கதை பல தந்து
    சாகாவரம் பெற்று வாழி நீ வாழி ..

    ReplyDelete
  25. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  26. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. டியர் விஜயன் சார், இந்த தீபாவளியை, மேலும் இனிப்பாக்கி, சிறப்பாகியது உங்களின் இந்த பதிவு.

    ஆரம்பகால, பிளாக் துள்ளல் எழுத்து நடுவே கொஞ்சம் மிஸ்ஸானமாதிரி, தெரிந்தது.இப்போது மீண்டும் அதே துள்ளல் எழுத்து.


    ஆரம்ப கால சுஜாதா, சாவியில் எழுதிய ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்(வேறு சில பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது) சரியான துள்ளல் நடை. ஒவ்வொரு வரியிலும் இளமை கொப்பளிக்கும்.

    கடைசியாக விகடனில் வந்த ஸ்ரீ ரங்கத்து தேவதைகள், ரொம்பவே மெச்சூரிட்டியாக இருந்தது, அதில் பழைய துள்ளல் இல்லை.அதற்கு அவருடைய வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    ப்ளாக் ஆரம்பித்த புதிதில், தங்களை இணையுலக சுஜாதா என்று விழைத்தது, நியாபகம் உள்ளது.

    அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த பதிவு அமைந்தது மிக்க மகிழ்ச்சி.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் விஜயன் சார்.

    சேலத்தில் கொட்டும் மழையில், எங்குமே வெளியே போகவும் வாய்ப்பில்லாமலும், டீவியில் தீபாவளி மொக்கைகளை பார்க்கவும்.,பிடிக்காமல் போரடித்து இருந்த என்னை, உங்களின் தீபாவளி பதிவு ரொம்பவே குஷிபடுத்தி விட்டது.

    சுந்தர் இப்ப ரொம்பவே ஹேப்பி அண்ணாச்சி.

    அப்படியே மினிலயனை யார் தட்டிட்டு போனாங்கன்னு சொல்லுறது:-)

    ReplyDelete
  28. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. அனைவருக்கும் என் தீபதிருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  30. எடிட்டர் சார் அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்திற்கும், லயன் முத்து காமிக்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும்...

    இனிய காமிக்ஸ் நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும்...

    இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் :-):-):-)

    ReplyDelete
  31. அனைவருக்கும்...
    Theriiiiii 'Thala' Diwaliiii....

    ReplyDelete
  32. காமிக்ஸ் அறிந்த அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். !

    ReplyDelete
  33. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் மற்றும் ஜூனியர் எடிட்டர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    Happy DIWALI ......

    ReplyDelete
  34. டியர் எடிட்டர்,

    சுவாரஸ்யமான நினைவு கூறல். திருமங்கலம் பார்முலாவின் முன்னோடி நீங்கள் துவக்கி வைத்தது தான் (புரோட்டா -சிக்கன்) என்று அறிய முடிவது சிறப்பு.;-) :-p

    BTW ,, ஜானி கதையும் படித்தாயிற்று. முன்பெல்லாம் முத்து காமிக்ஸ் படித்ததில்லை என்பதால் இவை அனைத்தும் எனக்கு புதியவை. மாயாவி மாமா கொஞ்சமே ஜவ்வாக இழுத்தாலும் மற்ற மறுபதிப்புக்கள் படிப்பதற்கு லேசாக இருக்கிறது - welcome change !

    ReplyDelete
  35. ஆசிரியருக்கும், ஆசிரியர் குடும்பத்தினருக்கும் மற்றும் எனது இனிய காமிக்ஸ் நெஞ்சங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. அட்டகாசமான பதிவு! இந்த மாதப் புத்தகத்தில் சி.சி.வ இல்லாத குறையை இந்த 'தலை தீபாவளி' மலரும் நினைவுகள் பல மடங்கு நிவர்த்தி செய்கின்றன! உங்களின் உழைப்புக்கும், தீராக் காமிக்ஸ் காதலுக்கும் பயனடைந்தவர்கள் நாங்களுமே என்ற முறையில் மீண்டும் ஒருமுறை எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எடிட்டர் சார்!

    உங்களுக்கும், நம் அலுவலகப் பணியாளர்களுக்கும், சீ/ஜூ எடிட்டர்களுக்கும் மற்றும் நம் நண்பர்களும் ஈரோடு விஜயின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  37. சார் அருமை௰ான பதிவு .எனது உற்ச்சாகத்தையும் மீட்டெடுத்தது.நீங்கள் அப்போதே உலகநாயகர்தாம் போலும் .சிறுவயதிலே உங்கள் பொறுப்புனர்ச்சி ...தொழில் பக்தி என்னைபோன்றோர்க்கு நிச்சயம் வியப்புதான்....
    பலமாதமாக வீட்டினருகே கடையில் தொங்கிக் கொண்டிருந்த இந்த அட்டைபடம் 2வது படித்து கொண்டிருந்த ...அதுவரை கதைகளே படித்திராத (தந்தையாரிடம் இரவு தோறும் கதைகள் கேட்டு தூங்குவேன்) என்னை எப்படி ஈர்த்தது என்பது இன்று நினைவில் இல்லை.யாரும் அறிமுகபடுத்தவுல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.
    எனதுதாயாருடன் மளிகைக்கடைக்கு செல்லும் போது அந்த கடை ரேக்கில் ஏறி நின்ற படி நமது தொங்கி கொண்டிருந்த இதழை கை நீட்டி கேட்டு வாங்கியது இன்றும் நேற்று நடந்தது போல நினைவில் .ஒவ்வொரு காட்சிகளும் அப்படியே விரிகிறது மனத்திரையில் .....எனது படிக்கும் ஆர்வத்தை தூண்டியது ...கற்பனை வளத்தை ...யாரும் காணா உலகை காட்டியது ....எப்போதும் எனது ஆசிரியராய் தங்களை காட்டியது இந்த இதழே ...அன்றய பொருளாதார சூழலில் ஏனென்று கேட்காமல் விலையுயர்ந்த இந்த இதழை வாங்கித் தந்த என் அன்னையை நினைக்கும் போது ...

    ReplyDelete
  38. பழஙகதையாக இருந்தாலும் சூவாரஸ்யத்திற்கான விஷயங்களில் பஞ்சமில்லை!

    ReplyDelete
  39. Naveena Nakeerar, Namadhu Editor.!!!

    BTW, wishing you all a safe Diwali

    ReplyDelete
  40. //மாடஸ்டி கதைகள் சொதப்பிய கணங்களில் //

    டவுசர் போட்டுகிட்டு குச்சி மிட்டாய் வாங்கி தின்றுவிட்டு சுற்றி திரிந்த காலங்களில் மாடஸ்டி &கார்வின் நட்பு புரிய வாய்ப்பு ஏது.? கதைகளில் காணப்படும் ஆழமான கருத்துக்களை புரியும் வயதா அது.? அச்சமயம் லார்கோ,ஷெல்டன், கதைகளை அறிமுகப்படித்தினாலும் சொதப்விடத்தான் செய்யும்.எனக்கு கூட அந்த வயதில் மாடஸ்டி கதைகள் அவ்வளவாக பிடிக்காது.! குறிப்பாக ஜான் வெஸ்ட்(அதிரடி படை) கொன்றுவிட்டு ஒரு பெண்ணை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியபோது. .,பச்சை மிளாகாயை அரைத்து பூசியது போல்தான் இருந்தது.அதுவும் அந்த காலகட்டத்தில் பெண்கள் ஆண்கள் முன்னாடி அமர்வதோ,முகத்தை பார்த்து பேசுவதே அவமரியாதை என்று கருதிய காலம். அந்த காலத்தில் மாடஸ்டி அதி புத்ஹதிசாலியான பெண்ணாகவும்.ஆஜானு பாகன ஒரு ஆணை மூஞ்சியில் ஒரே உடை விடுவதை ஏனோ ரசிக்க தோன்றவில்லை.!

    தொடர்ச்சி........

    ReplyDelete
  41. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்களே!!!

    ReplyDelete
  42. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இது கதைகளை பற்றிய விமர்சனம் அல்ல.

    டெக்ஸ் - முன் பின் அட்டைகள் இரண்டுமே சற்று உள் மடங்கி பக்கங்கள் வெளியே தெரிகின்றது. தாளின் நிறம் சற்று மங்கலான வெண்மையாக இருக்கின்றது. முந்தைய b&w இதழ்கள் பளீர் வெண்மையாக இருந்த்து.

    ஜானி - சித்திரங்கள் சற்று டார்க்காக ப்ரிண்ட் ஆகி உள்ளது.

    ஷெல்டன் & மஞ்சள் நிழல் - பல பக்கங்களிலிருந்து கையில் பவுடர் போல் ஒட்டுகின்றது. ( இந்த பிரச்சினை விண்ணில் ஒரு வேங்கையில் மிக மோசமாக இருந்தது).

    எனக்கு வந்த புத்தகங்களில் மட்டுமே இந்த பிரச்சினைகள் என்றாலும் கூட இவை கண்டிப்பாக களைய வேண்டியவைகளே.

    பத்தோடு பதினொன்று என்றில்லாமல் அனைத்து புத்தகங்களையும் காலகாலத்திற்க்கு பாதுகாக்க நினைப்பதாலயே இதை சொல்கிறேன்.

    ReplyDelete
  43. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்களே!!!

    ReplyDelete
  44. Very happy Diwali to all of our friends.. to our editor sir his family.... and his staff team....

    ReplyDelete
  45. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். !

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. "தல"யின் தீபாவளிமலா் அதிரடி சூப்பா்.
    இரண்டாவது கனதயின் சித்திரம் மிக நன்று.
    வண்ணத்தில் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
    வண்ணத்தில் கினடக்குமா....?

    ReplyDelete
  48. விஜயன் சார், அருமை! பணத்தின் அருமை உங்களுக்கு அந்த வயதில் தெரிந்து இருந்ததால்தான் உங்களால் அந்த தீபாவளி மலரை கொண்டு வந்து வெற்றி பெற செய்தது! உண்மையில் பாராட்ட கூடிய ஒரு சாதனைதான்! "இரும்பு மனிதன்" கதையை இன்றுவரை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையில் "இரும்பு மனிதன்" சூப்பர், இப்பொதும் அந்த அட்டைபடம் ரசிக்க செய்கிறது என்றால் அந்த "காலத்தில்" இது எல்லோரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.

    நீங்கள் சொல்வது போல், அந்த காலத்தில் ரூபாய். முப்பது ஆயிரம் என்பது கோடிக்கு சமானம்.

    ReplyDelete
  49. காமிக்ஸ் காதலர்கள் அவவர்தம் குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆசிரியர் என அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி வாழ்துகள்.

    ReplyDelete
  50. @ திரு விஜயன்

    மொயிதீன்,MV,விஜயராகவன் இவர்களின் மலரும் நினைவுகளால் நேற்றுதான்... வாங்கின தீபாவளிமலர்களை எல்லாம் அடுக்கிவைத்து அதுமேல் வைத்து, திகில் மர்மகத்தியை எடுத்து துசு தட்டி பார்த்தேன்.

    "புது புக்ஸ் வாங்கி அதுமேல பழைய புக்கை வெச்சி...நீங்க புரட்டி புரட்டி பத்திரமாட்டம் நோட்டம்விடுறதை, யாராவது பாத்தா எம்மானமே போய்டும்.." என வீடுல நேத்துதான் செமத்தியா வாங்கினேன்..! இன்னிக்கு உங்க 'முதல் தலைதீபாவளி' கதையை படித்ததும், திரும்பவும் லைப்பையே 'ரிஸ்கா' வெச்சி அந்த மெகாசைஸ் இரும்புக்கை போட்ட புக்கை எடுத்தேன்..! யப்பா...ஆர்ச்சியையே எடுத்து மடியில வெச்சாப்புல என்னா 'வெய்ட்'..!

    அந்த பறக்கும்இரும்புக்கை அட்டைபடத்தையே போஸ்டராக பேப்பர்கடையில் பார்த்ததும்... 'இப்போது விற்பனையில்' என தொங்கியதும், இப்போதும் பசுமையாய் நினைவிருக்கு ஸார்..! அந்த இரும்புகைக்காகவே 25 காசு கொடுத்து, நாலுநாள் காத்திருந்து போஸ்டை புடிச்சேன்..! இங்க ஒரு உண்மையை சொல்லணும்..அந்த இரும்புக்கை பார்த்துட்டு, அது இரும்புக்கை மாயாவி கதை என நம்பிவாங்கினேன்...! ஆனா ஆனா..நாலாவது பக்கத்துலேயே, ஹெலிகாப்டர் சைஸ் இரும்புக்கை பறந்து வருவதும்...அது செய்யும் வில்லத்தனமும் முதலில் ஒத்துக்கவே முடியலை, அது இரும்புகையார் இமேஜ் மேல் கைவைப்பது மாதிரி ஒரு பீல்..! இது உள்நாட்டு சதி [?] என மூடிவிட்டேன். அருகில் இருந்த லைப்ரரியில் ப்ரண்ட்ஸ் வாடகைக்கு எடுத்து ரசித்து ரசித்து படிப்பதை பார்த்து, மீண்டும் எடுத்து படித்தேன், ஆர்ச்சி செய்யும் சாகசமும், ராட்ஷ பற்சக்கரம்,தரையை பிளந்துகொண்டு வரும் வானுயர வேர்கள், யானையளவு இரும்பு மனிதன், பூமியை பிளக்கும் துளையிடும் இரட்சகருவி என கதைநகரும் களம்...அந்த வயதில் பச்சென ஒட்டிக்கொண்டது ஆர்ச்சி..! ரெண்டாவது கதையா துப்பறியும் கம்பியூட்டர் ஜானியின் துவக்க கதை,கம்பியூட்டர் என்றால் என்ன? அது என்னவெல்லாம் செய்யும்? என்ற மங்கலான விடை தெரிந்து கொண்டதும், கம்பியூட்டர்ன்னா இரும்புல செஞ்சா பெரிய மூளை என முடிசெய்ததும்[இன்னிக்கு நினைச்ச சிரிப்பா வருது] நினைவுக்கு வருகிறது..!

    ம்...இன்னிக்காச்சி தீபாவளி with டெக்ஸ் படிக்கணும்னு இருந்தேன்...பழைய நியாபகம்...பழைய பொக்கிஷம்...மறுபடியும் புரட்டல் என பாதிநாள் போயே போச்சி..! எப்படியிருக்கு டெக்ஸ் கேட்டும் நண்பர்களிடம்..இனியும் ஹீ..ஹீ...என பல்லிளிப்பது ஆகாது...! நான் படிக்க போறேன், அதுக்கு முன்னாடி எல்லோரும் புக்கை அழகு பாத்துட்டே இருக்குற மாதிரி தான் தோணுது..! ஸோ 'டெக்ஸ்' மோகம் 'எகிற'... கொஞ்சம் பத்தவெச்சிட்டு போறேன்..!

    நோ போட்டிகாண்டி...ஒன்லி விளம்பரத்துகாண்டி..!

    கார்சன்: ஐயா இரவுகழுகாரே...அப்படி என்னதான்
    உன்னோட கண்னுங்க பைனாகுலர்
    வெச்சி தேடுது...?

    டெக்ஸ்: இல்ல ஒரு வாரம் முந்தி புயல்
    எச்சரிக்கை எல்லாம் பந்தாவா
    கொடுத்தேன்.. புயலை தான்
    காணம்..வர்ற டைம் ஆயிடிச்சி...

    கார்சன்: ப்ப்ப்பூ...நல்லா தேடுனே...நீதாம்பா அந்த
    புயல்..ஆல்ரெடி புயல் கிளம்பியாச்சி...

    இந்த டையலாகை 'கிளிக்' ஆக பார்க்க...இங்கே'கிளிக்'

    புயலை பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. //இரும்பு கை வில்லத்தனம் செய்வதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.! //

      " ஸேம் பீலீங்." ஆனால் புத்தக வெளியீட்டாளர்கள் ஏமாற்றுவதாக கோபம் கொண்டேன்.

      சிறுவயதில் என் பள்ளித்தோழன் .,சிப்பிக்குள் முத்து (கமல் படம்) படம் என்று நினைத்து எழதபடிக்க தெரியாத தன் அப்பாவை முத்துக்குள் சிப்பி என்ற பெயர்கொண்ட (மலையாளப்படத்தின் பெயரைஅரைகுறையாக படித்துவிட்டு )படத்திற்கு கூட்டிச்சென்று உதைவாங்கியதுதான் ஞாபகம் வந்தது.

      Delete
    2. //இன்னிகாச்சும் தீபாவளி வித் டெக்ஸ் படிக்கலாம்.//

      கையில் எடுத்து படிக்க ஆரமித்தால் கீழே வைக்க மனசு வராது.அவ்வளவு சுவராசியம் இரண்டு கதைகளுமே.!எனக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.!

      Delete
  51. 62 வது. படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  52. Happy Deepavali everyone!

    // இன்றைய உலகில் – பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் போதே நம் இளைய தலைமுறையினர் செய்திடும் start up ventures விண்ணைத் தொடும் வெற்றியை ஈட்டுவதெல்லாம் பார்க்கும் போது – எனது கி.மு. காலத்துக் கூத்துக்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது! //

    @Vijayan sir, As of 1980's, considering the limitations of that era, you are blessed to have such unique experiences as a teenager. Almost all of your comic related adventures are very special and different from todays young entrepreneurs. Nice to see today's technology made it possible to share your experiences with people readers who feel it is valuable and connected with own their past!

    Most of my Deepavali memories are connected with reading comics & kids magazines, searching for books along with my brother, drawing something inspired comics etc! Lot of memories with comics and Deepavali combination! :)

    ReplyDelete
  53. சிறப்பான பதிவு ஆசிரியரே,பல்வேறு போராட்டங்களை கடந்தே இந்த நிலையை எட்டியுள்ளிர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  54. தீபாவாளி வாழ்த்துகள்

    ReplyDelete
  55. தீபாவாளி வாழ்த்துகள்

    ReplyDelete
  56. ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. Hello sir, தீபாவளி வாழ்த்துக்கள், இந்த மாத இதழ்களில், ஷெல்டன் தவிர மற்ற எல்லா கதைகளும் வெகு சுமார் ரகம், அதுவும் டெக்ஸ், இரண்டும் சுத்தமாக படிக்க இயலவில்லை, டெக்ஸின் சரித்திரம் முடிந்து விட்டதா??இதில் மாத மாதம் டெக்ஸுக்கு தனி track வேறு,இது எதில் கொண்டு போய் விட போகின்றதோ :(. மொத்தத்தில் டெக்ஸ் over dose :(

    ReplyDelete
  58. .
    .
    .
    ம்...
    இந்த வரலாற்று சம்பவமே
    காமிக்ஸ் கதையைவிட
    த்ரில்லா இருக்குதே!
    இருக்குதே!!
    இருக்குதே!!!
    .
    .
    .
    .

    ReplyDelete
  59. டெக்ஸ் வித் தீபாவளி. இதழில்.,வசனங்கள் மற்றும் கார்சனின் நகைச்சுவை அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது.!

    ReplyDelete
  60. ஆசிரியருக்கும் , சீனியர் ஆசிரியர், ஜூனியர் ஆசிரியர் அவர்களது குடும்பத்தினருக்கும், ஆசிரியரின் Team இனருக்கும், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும், நண்பர்கள் அனைவரிற்கும் என் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. பழைய கதையா? சி.சி.வயதில் படித்தது போல் சுவையாக இருந்தது ஸார்.

    ReplyDelete
  62. இம்முறை டெக்ஸ் படித்த பின் மனதில் தோன்றியது

    கதைகள் இப்படித்தான் இருக்கும் என்றால்....
    வருடத்திற்கு 12 என்பது சரி வராது.



    வருடத்திற்கு 24 தான் சரியாகும்...... ;)

    ReplyDelete
  63. ஆசிரியர் அவர்களுக்கு ...இந்த தீபாவளி இந்த முறை அதிர்வெடி போல அதிரடி பட்டாசாக அமைந்து விட்டது டெக்ஸ் என்ற நாயகரால் ....இரண்டு கதைகளையும் படிக்க ஆரம்பித்தவுடன் முடிக்கும் வரை கீழே வைக்க தோன்ற வில்லை ...

    டெக்ஸ் எதிரி எப்பொழுதும் பலவீனமானவன் ...என்ற கருத்தை டைனசோரின் பாதையில் கதை முறியடித்து விட்டது ...முதல் வெற்றி ...


    இரண்டாவது கதையின் ஓவியங்கள் இரத்த படலத்திற்கு சவால் விடுகிறது ...இது டெக்ஸ் ஓவியங்களுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி ..



    டெக்ஸின் எந்த கதையை படித்தாலும் ஒரே மாதிரி என சொல்லுபவர்களுக்கு இந்த முறை நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த இரண்டு கதைகளுமே
    பதில் சொல்லி விட்டது ...இது மூன்றாவது வெற்றி ...

    மொத்ததில் டெக்ஸ் மீண்டும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் என்பதை இந்த தீபாவளி வித் டெக்ஸ் இதழ் நிரூபித்து விட்டது ..


    இந்த இரண்டு கதைகளுமே அதகள சாகசமாக ஒன்றுக்கொன்று போட்டி போடுவதால் இந்த இரண்டு கதைகளுமே முதல் இடத்தையும் ...இரண்டாவது ஷெல்டன் சாகஸமும் ...மூன்றாவது ரோஜரின் சாகஸமும் இடம் பிடித்து விட்டது .

    மீண்டும் சொல்கிறேன் ..சார் ..பழைய டெக்ஸ் கதைகளை படித்த விறுவிறுப்பு ...சுவராஸ்யம் ..ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லா இந்த இரண்டு கதைகளுமே ஏற்படுத்தியது ..அடுத்த டெக்ஸ் சாகஸம் எது என்ற ஆர்வம் இப்பொழுதே தலை தூக்குகிறது ...நடுவில் ஒரு மாதம் தலயை காண முடியாமல் போகும் ஏக்கமே இப்போது ...எப்போதடா புத்தாண்டு வரும் ...மாதாமாதம் டெக்ஸை பார்ப்பது என்ற ஏக்கமும் இப்பொழுதே ...

    ReplyDelete
  64. இந்த வருடம் வந்த டெக்ஸ் கதைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது,
    கவனித்தீர்களா நண்பர்களே........!!??

    ReplyDelete
    Replies
    1. ஒன்று கூட டெக்ஸின் சொந்த இடத்தில், அதாவது அரிசோனாவில் நடக்காமல்.....எல்லாமே வெளி இடங்களில் நடக்கும் சாகசங்களே...

      Delete
    2. @ கி.கி

      நீங்கள் நெனச்ச ஒத்துமை தப்பு...:)

      Delete
    3. கிட் வில்லரைக் காணலை - அதானே?

      Delete
    4. டெக்ஸ் வழக்கமாக எதிகளை துவம்சம் செய்தால்.அட்டை கிழித்து போட்டால் எல்லா கதைகளும் ஒரே மாதிரி உள்ளது என்று கலாய்கிறார்கள்.

      சரி கொஞ்ம் வலுவான வில்லனுடன் லாஜிக்கா கதை சென்றால் டெக்ஸையே காணோம் என்று கலாய்கின்றீர்கள்.டெக்ஸ் என்ன செய்வார் ?

      ஆகமொத்தம் கதைவிறுவிறுப்புடன் மெய்மறந்து ஒரே மூச்சில் படிக்க வைத்ததே அதுவே இமலய வெற்றி!.

      இன்னமும் படிக்காமலே பரவசமடைந்து வரும் நண்பர்கள் எண்ணிக்கையோ மிக அதிகம்.!

      Delete
  65. Diwali special justifies the TEX TRACK in the coming year....
    Sheldon - Vara...Vallu,,,,,, is very good.
    Roger - Not so good.
    REPRINT - JOHNY NERO.. AS USUAL - OLD CLASSIC,

    ReplyDelete
  66. எப்பொழுதுமே உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். ஒரு மிகப்பெரும் சவாலை நீங்கள் எதிர்கொண்டதை ஒரு சில பேராக்ககளில் அடக்கிக் கொடுப்பது தான் உங்கள் எழுத்தின் வெற்றி. எவ்வளவு பெரிய விஷயத்தை நாசுக்காக, அதே சமயம் அழுத்தமாக, காமெடி கலந்து கொடுத்திருக்கிறீர்கள். மிக அருமையான பதிவு. நான் எப்பொழுது காமிக்ஸ் இரண்டாம் அல்லது மூன்றாம் முறை படிக்கும் போது சில சமயம் போர் அடிக்கலாம். ஆனால் 'சிங்கத்தின் சிறு வயதில்' போர் அடித்ததே இல்லை. அவ்வளவு நல்ல தொடர் அது. அதன் வசீகரமே நம்மை 80ஸ்க்கு அழைத்து செல்வது தான். டிரங்க் கால் புக்கிங், பழைய மிஷின்கள், டப்பா டெக்னாலஜி, போஸ்ட் ஆபிசில் தவம் கிடப்பது, பாரின் டிரிப் மேல் உள்ள ஒரு ஈர்ப்பு போன்றவைகளை ரிவைண்ட் செய்து பார்ப்பது போல் இருக்கும்.

    இங்கு தைரியமாக உங்கள் பழைய பாலிடிக்ஸ்களையும், உங்கள் பிடிவாதத்தின் மூலம் எங்களுக்கு நீங்கள் கொடுத்த தீபாவளி மலரையும் நன்றாக கூறி இருக்கிறீர்கள். சமீப நான்காண்டுகளின் வெற்றியே உங்கள் மனத்தடைகளை நீக்கி இந்த அருமையான பதிவை எங்களுக்கு கொடுத்துள்ளது. இதே போல் பல கதைகள் முன்பு சொல்ல முடியாமல் போயிருக்கலாம். அதை கூறும் நேரம் இது தான். சிங்கத்தின் சிறு வயதில் பகுதியை இன்னும் ஆழமாகவும் ஆசமாகவும் மாற்றும் நேரம் இது. அனைவரும் இதை வரவேற்பதுடன், உங்களை ரோல்மாடலாக எண்ணி வாழ்வார்கள்.

    நன்றி

    ReplyDelete
  67. பிகு: இன்னும் எனது இந்த மாத இதழ்கள் வரவில்லை. :-(
    4100 சந்தா மற்றும் என்பெயர் டைகர் கலர் இதழுக்கும் பணம் கட்டியுள்ளேன். அக்னாலெட்ஜ் செய்தால் தேவலை.

    ReplyDelete
  68. டியர் எடிட்டர் விஜயன் சார்,
    சட்டி தலையன் ஆர்ச்சி குறித்த தங்களின் பதிவு மிகவும் அருமை. ஏற்கனவே தங்கள் சொன்னபடி சட்டி தலையன் ஆர்ச்சிக்கும் மறுபதிப்பில் வாய்ப்பு தருவது எப்போது சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
    Replies
    1. ஜெயகாந்தன் சார்.!

      எடிட்டர் ஆர்ச்சியை பற்றி சுவராசியமாக எழதிய போது உங்கள் நினைவுதான் வந்தது.!

      Delete
  69. பழகுவதற்கு இனமையானவர், கருத்துக்களை நடுநிலைமை, மற்றும் புதிய பாணியில் சொல்லும் நண்பர் ஆதி தாமிரா அவர்களுக்கு...சேலம் நண்பர்கள் அனைவரின் சார்பில் இனிய பிறந்ந நாள் நல்வாழ்த்துகள்.......

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிராவுக்கு என்னுடைய வாழ்த்துகளும்!

      Delete
    2. ஆதி தாமிராவுக்கு என்னுடைய வாழ்த்துகளும்

      Delete
    3. ஆதி தாமிராவுக்கு என்னுடைய வாழ்த்துகளும்!!!

      Delete
    4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

      Delete
  70. Dear Editor Sir,
    This was a wonderful post and I liked it very much. It showed us how much committed you were in your endeavours in those days itself...My heartfelt thanks to you for continuing this journey even today. Without you, one of my childhood memories would have vanished without any trace. Muthu Comics is my favourite any day.

    Regarding November issues, I am very disappointed with the quality of work on the Johnny Nero book. The drawings are smudgy throughout the book and the faces are not at all reflecting our hero. Utter disappointment. Please avoid this kind of below standard work.

    ReplyDelete
  71. இந்த மாத வெளியிடுகளை,
    1. டெக்ஸ் வித் தீபாவளி,
    2. வேயின் ஷெல்டனின் ஆண்டவனின் ஆயுதம்,
    3. ரோஜரின் மஞ்சள் நிழல்,
    4. ஜானி நீரோவின் மூளைத் திருடர்கள்,
    என்று தரவரிசைப்படுத்தலாம்.

    ReplyDelete
  72. இந்த மாத மறுபதிப்பாக வெளிவந்த மூளைத் திருடர்கள் சுவாரஸ்யமாகவே சென்றது.

    ReplyDelete
  73. ரோஜரின் மஞ்சள் நிழலைப் பொறுத்தவரை கதைக்கான கரு சற்று வித்தியாசமாக இருந்தாலும், இது ஒரு குழந்தைத்தனமான ஆக்ஸன் கதையாகவே தோன்றுகிறது.இதில் ரோஜரின் பங்களிப்புக்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை,பெரியதொரு ஆர்வத்தை இந்த கதை ஏற்படுத்தவில்லை,என்னை பொறுத்தவரை சுமார்தான்.

    ReplyDelete
  74. வேய்ன் ஷெல்டனின் இருபாக சாகசங்களும் அருமை, அனல் பறக்கும் ஒரு ஆக்ஸன் மேளா என்றால் அது மிகையாகாது.கதைக்கான களம் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது,கையில் எடுத்தால் முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை.
    அட்டைப்படம் கச்சிதம்,மொழிபெயர்ப்பும்,வசன நடைகளும் கதையோட்டத்தின் விறுவிறுப்புக்கு துணை செய்கின்றன.கதை களங்களுக்கு வண்ணச் சேர்க்கைகள் மிகவும் பொருத்தமாக உள்ளது. மேலும்,கிறிஸ்டியன் டினாயரின் ஓவியங்கள் கண்ணை பறிக்கின்றன.
    இக்கதையைப் படிக்கும்போது,2006 ல் வெளிவந்த டான் பிரவுனின்-டாவின்சி கோட் மற்றும் 2009 ல் வெளிவந்த ஏஞ்சல்ஸ் அண்ட் டீமோன்ஸ் படங்களின் நினைவு வருவதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.
    மொத்தத்தில் ஷெல்டன் அசத்துகிறார்.

    ReplyDelete
  75. ரோஜரின் மஞ்சள் நிழல் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன்.!

    ஒரேயொரு ப்ளஸ் பாய்ன்ட் இந்த கதைக்கு உண்டு. (என்னை பொருத்தவரை மட்டுமே.)
    இந்த வருட கடைசியில் எடிட்டர் வைக்கப் போகும் பரிட்சையில்., இரண்டாவது கேள்வி கீழ்கண்டவாறே இருக்கும். -

    இந்த வருடத்தின் டாப் 3 சொதப்பல்களாக நீங்கள் கருதுவது?


    இந்த கேள்விக்கு பதிலளிக்க ககதைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பய்ந்திருந்தேன்.
    மஞ்சள் நிழல் அந்த பயத்தை போக்கிவிட்டது.
    இன்னொன்று ஜனவரியிலேயே வந்துவிட்டது. :-)
    டிசம்பரில் ஏதாவது தேறுமா என பார்க்க வேண்டும்.!!

    (எளவரசிதேன் இருக்காக இல்ல) :-)

    ReplyDelete
    Replies
    1. //எளவரசிதேன் இருக்காக இல்ல//

      அடுத்த மாதம் அதிரடி.!

      அடுத்த மாதம் இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக

      " பெண்கள் வாரம் (மாதம்)"

      1)தங்க தலைவி மாடஸ்டி

      2)வானமே எங்கள் விதி ஹன்னா

      3)கமான்சே.!

      பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு செய்த சமத்துவ எடிட்டர் வாழ்க.! வாழ்க.!

      Delete
  76. நண்பர் M V அவர்களே.,
    கொஞ்சம் வேலை ஜாஸ்தியா இருக்குங்க எசமானரே.,
    சிப்பாயின் சுவடுகளில் விமர்சனம் ஆண்டு இறுதிக்குள் எழுதுகிறேன்.
    சற்று பொருத்தருளுங்கள் ஸ்வாமி.! :-)

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் கண்ணன் .!@

      நான் சிறு வயது முதல் எந்த புத்தகத்தை படித்தாலும் புரிந்து படிப்பது தான் வழக்கம்.மர்ம கத்தி 30 வருடங்களளுக்கு முன் படித்தது. இருந்தாலும் மொய்தீன் சார் ஆர்வமுடன் கூறியதும். என் கதை சித்திரங்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளது.அதற்கு காரணம் முழுதும் புரிந்து ரசித்து படிப்பது தான்.!

      ஒ.சி.சு.,இ.இ.கொ.தேவ .ர.தேட.இவைகளை பார்க்கும் போது.கோபம் எரிச்சல் வெறி உண்டாகிறது.அதை அடியேனுக்கு தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..........

      தாழ்மையான வேண்டுகோள் இந்த மாதிரி கதைகளின் கதைகளை வெளியே சொன்னால் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று எடிட்டர் முதல் அனைத்து வாசகர்களும் கருதுவதால் எனக்கு ஈமெயில் அனுப்பினாலும் சந்தோசமே..!

      Delete
  77. தீபாவளி வித் டெக்ஸ் வாவ் அட்டகாசம், முதலில் டைனோசரின் பாதையில்,ஓவியங்கள் கீச்சல் பாணியில் இருப்பதால் சற்றே சுமாராக தெரிந்தாலும் கதை எந்த விதத்திலும் சோடை போகவில்லை.348 பக்க சாகசமாக இருந்தாலும் கதையின் விறுவிறுப்புக்கு எந்த தடையும் இல்லை, வழக்கமான நேர்கோட்டில் வரும் டெக்ஸ்சின் கதை போல் அல்லாமல் பல்வேறு கோணங்களில் பயணம் செய்யும் கதை போகிற போக்கில் ஒரே நேர்கோட்டில் அபாரமாக இணைக்கப்பட்டுள்ளது.
    ரெட் பார்னமின்,சாலமன் போன்ற இரு கதைப் பாத்திரங்களும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது,புரிந்துகொள்ள சற்றே கடினமான சில கதாபாத்திரங்கள் கதையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் உண்டு.
    இக்கதை டெக்ஸ் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து,இது போன்ற கதைகள் டெக்ஸ்சின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

    ReplyDelete
  78. இரண்டாவது சாகசமான எமனும் வாசலிலும் அசத்தல் ரகம் தான்,கதை சொல்லும் படங்கள் என்று படித்துள்ளேன்,அந்த நிகழ்வை எமனின் வாசலில் சாகசத்தில் நன்றாகவே உணர முடிகிறது,சித்திரங்கள் நன்றாக இருக்கின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக வெறும் வார்த்தைகள்தான்,அவை அதுக்கும் மேல ரகத்தில் அசத்துகிறது,கண்களுக்கு அருமையான விருந்து,கதையை பின்னுக்கு தள்ளி படங்கள் பிரதானமாக தெரிகிறது.

    ஜான் ஷூட்டரின் சுவராஸ்யமான பின்னணி தகவல்கள் கதைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.பெரியவர் ஷூட்டர் மே-லிங்கை சுட்டு கொன்ற பிறகு அவெஞ்சர்ஸ்கள் மீண்டும் டெக்ஸ் அண்ட் கோவுடன் மோத துணிவது,கிளைமேக்சை ஆக்ஸன் இல்லாமல் முடித்தால் விறுவிறுப்பை குறைத்துவிடுமோ என்ற எண்ணத்தில் கதாசிரியர் யோசித்திருப்பாரோ என்றுத் தோன்றுகிறது.லூகாஸ் பான்னர்தான் விக்டர் என்பது நல்ல டுவிஸ்ட்.

    தல ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பான ஆக்ஸன் மசாலா.மொத்தத்தில் இரண்டு கதைகளும் பிளாக் பஸ்டர்சாகசம்.

    ReplyDelete
    Replies
    1. ரவி.!@

      விமர்சனங்களே தூள் கிளப்புதே.! எழத்து நடை சூப்பர்.!

      Delete
    2. நன்றி நண்பரே,இருந்தாலும் சேந்தம்பட்டி அணியில் எழுத்து புலிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் அளவுக்கு என்னால் எழுத இயலாது.

      Delete
  79. ஆதி தாமிரா ஸாருக்கு பிந்திய பிறந்த நாள்வாழ்த்துக்கள் .

    ReplyDelete


  80. தீபாவளி மலரை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறேன்.
    சாப்பிட்டுவிட்டால் தீர்ந்துவிடுமே என்று சிறுவயதில் ஸ்வீட்ஸை நீண்ட நேரம் சாப்பிடாமலேயே வைத்திருந்தது போல. , தீபாவளி மலரையும் இன்னும் படிக்காமலேயே வைத்திருக்கிறேன்.!

    இதுவரை 2016 புக்லெட்டை மட்டும் எத்தனை முறை புரட்டியிருப்பேன் என்று கணக்கேயில்லை.

    டெக்ஸ் வில்லர் ஓவர்டோஸ் என்று குரல் கொடுக்கும் நண்பர்களே!
    அந்த புக்லெட்டை பாருங்கள்.
    வில்லரின் விஸ்வரூபம் புலப்படும்.

    வெற்றி நிச்சயம். !!!!!!

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் அதே கதை தான்.ஹி,ஹி

      Delete
    2. //தீபாவளி மலரை படிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.!//


      ஹிஹி.......நானும் அப்படியேதான் வைத்திருந்தேன்.ஆனால் எனக்கு செல்ப் கண்ரோல் கம்மி.......

      படிக்காமல் வைத்திருந்த போது புத்தகத்தை பார்த்தாலே வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோல் சந்தோசம் ஏற்படும்.!

      Delete
    3. காமிக்ஸை பொறுத்தவரை நாமெல்லாம் இன்னும் சிறார்களாகவே இருக்கோமோ?ஹா,ஹா,ஹா.

      Delete
    4. காமிக்ஸை பொறுத்தவரை நாமெல்லாம் இன்னும் சிறார்களாகவே இருக்கோமோ?ஹா,ஹா,ஹா.

      Delete
  81. நண்பர் ஆதி தாமிராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  82. எடிட்டரின் இந்த மலரும் நினைவுகளைப் படித்தவுடன் என் நினைவுகளும் கொஞ்சம் பின்னோக்கி சென்று விட்டன. என்னை மிகவும் கவர்ந்த முதல் இதழைப் பற்றி சொன்னாலென்ன என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த முயற்சி. 1986-ல் மே மாதம் வெளிவந்த லயன் கோடை மலரும், அதனுடன் வந்த திகிலின் ‘பனி மலை பூத’ மும் தான் நான் வாங்கிய முதல் இதழ்கள். அடுத்த மாதம் வெளிவந்ததுதான் நம் ரசனைகளை வேறொரு லெவெலுக்கு எடுத்து சென்ற திருவாளர் XIII- ன் ‘இரத்தப் படலம்’. அப்போது அதொரு தொடரென்றோ, இந்தளவிற்கு சாதனைப் படைக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதற்கப்புறம் நடந்தவைகளெல்லாம் இன்று வரலாறு...! அதற்கடுத்த மாதம் வெளிவந்த சாகச வீரர் ரோஜரின் ‘மர்மக்கத்தி’ திகிலின் 7-வது வெளியீடாக ஜூலை 1986-ல் வெளிவந்தது. (இதன் ஒரிஜினல் 1967-ம் ஆண்டு ‘The Sword of Paladdin’ என்று பிரெஞ்சில் முழு வண்ணத்தில் வெளிவந்தது.) என்னை இன்றும், என்றும் இம்ப்ரெஸ் செய்ந்து வரும் இந்த இந்த இதழைப் பற்றி சொல்வதே இந்த பதிவின் நோக்கம். 29 ஆண்டுகள் முன்பு வந்த இந்த இதழைப் பற்றி சொல்வதா, வேண்டாமா என்ற சிந்தனை என் மண்டையில் போராட்டமே நடத்தி வந்தது என்றாலும், எடிட்டரின் இந்த மலரும் நினைவுகளுடன் என்னுடைய இந்த இதழைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளவதும் தவறில்லை என்பதால், so இப்ப இல்லையென்றால் எப்பவுமே இல்லை. So here goes:
    ரோஜரின் கதைகளுக்கு இதுவரை நான்கு ஓவியர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். வில்லியம் வான்ஸ், கோரியா, ஃபோர்டான் மற்றும் அட்டனாசியோ. வெர்நஸ் அட்டகாசமான இந்த கதையைப் படைத்திட, அதற்கு பக்கபலமாக அழகான சித்திரங்களை தந்து அசத்தியுள்ளார் ஓவியர் ஃபோர்டான். ஓகே, நமது திகிலின் அட்டைப்படமே அட்டகாசம். நம் ரோஜர் வாளுடன் நிற்க, பின்னணியில் முழு நிலவும், அதற்கு பக்கத்தில் ஒரு கால எந்திரம் நம்மை அழகாக வசீகரிக்கிறது. அட்டையைப் புரட்டினால் உள்ளே முதல் பக்கம். ‘மர்மக்கத்தி’ வாருங்கள் ஒரு காலயந்திரத்தைக் கொண்டு பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல தயாராகுவோம்.!
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ‘மர்மக்கத்தி’ :
    சாகச வீரர் ரோஜரும், அவருடைய சகா பில்லும் பழம் பெரும் கோட்டையை மாளிகையாக உருமாற்றி அதில் வசித்து வந்தனர். குளியலறையில் இருக்கும் ரோஜர் அழைப்பு மணி இந்த நள்ளிரவில் ஒலிப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார். வந்த வேறுயாருமல்ல, professor ஹண்டர், அவர் ரோஜரிடம் நான் காலத்தைக் கடந்து மனிதனை பழங்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ கொண்டு செல்லும் கால எந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பது தங்களுக்கு தெரியும். நான் ஊனமாகி விட்டதால் அதை நீங்கள் இருவரும் இயக்க முயற்சிக்க வேண்டுமென்கிறார். பில் மறுக்க, ரோஜர் சாவாலாக ஏற்றுக் கொள்கிறார். இரண்டு நாளில் கால எந்திரம் தயாராகயிருக்கிறது. அதனுள்ளே இப்போது ஹண்டர் விளக்குகிறார். ஒரு விசை அழுத்துவதன் மூலம் ஆயிரமாண்டுகள் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்லலாம் என்றும். அப்புறம் இந்த இயந்திரத்தை விட்டு நீங்கள் செல்லும் முன் ஒரு விசையை எடுத்து விட்டால் அதனால் இயங்க முடியாது, எல்லாம் சீராகவுள்ளது நாளை நீங்கள் புறப்படலாம் என்கிறார். ஆனால், நள்ளிரவில் ஒரு உருவம் உள்ளே நுழைந்து? அதனை இயக்க முற்படுகிறது. ஆனால் அது இயங்காததால் அதில் ஏதோவொரு சிக்கலிருப்பதால் அதன் உள்ளேயே ஓர் அடித்தளத்தில் மறைந்து கொள்கிறது. மறுநாள், ஹண்டரிடம் விடைபெற்றுக் கொண்டு நம் நண்பர்கள் கால எந்திரத்தில் 14-ம் நூற்றாண்டிற்கு கிளம்புகிறார்கள். கால் எந்திரம் அதே இடத்திலிருக்கிறது, ஆனால் இப்போது இருப்பதோ 14-ம் நூற்றாண்டு. ஹண்டரும், கார் ட்ரைவரும் நின்ற இடத்தில் இப்போது சில மத போதகர்கள் நிற்கிறார்கள். காலயந்திரத்தை ஒரு குகையில் மறைவாக இறக்கி விட்டு வெளியே வருகிறார்கள். தூரத்தில் ஒரு கிராமம் தெரிய அங்கு செல்கிறார்கள். இதற்கிடையே உள்ளே உள்ள மர்ம நபர் அதை நோட்டம் விட்டு ஒரு விசை இல்லாததை கண்டுப்பிடிக்கிறான். அவர்கள் வந்தவுடன் தாக்கி விட்டு அதனை கைப்பற்ற வேண்டுமென்று சொல்லி மீண்டும் உள்ளேயே பதுங்குகிறான்.

    தொடரும்,,,,

    ReplyDelete
    Replies
    1. ரோஜரும், பில்லும் கிராமத்திற்கு செல்லும் வழியில் சில ஓநாய்களால் தாக்குதலுக்கு உள்ளகின்றனர். அப்போது அம்பிலிருந்து பாய்ந்து வரும் வில்கள் ஓநாய்கள் விரட்டியடிக்கின்றன. அப்போது அங்கு ஒரு ராணி சிறு கூட்டத்துடன் நிற்கிறாள். காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து தங்களை பாதயாத்ரீகள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பில் புத்திசாலித்தனமாக தாங்கள் ஆங்கிலேயர்களல்ல, ஸ்காட்லாண்டை சார்ந்தவர்கள் என்கிறார். அதற்கு ராணி, தன் பெயர் யோலண்ட் என்றும் தன் கோட்டைக்கு வந்து விருந்து உபசாரத்தில் கலந்துக் கொண்டு மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறாள். அதனை ஏற்று இருவரும் அவர்களுடன் கோட்டைக்கு செல்கின்றனர். ரோஜர், ராணியின் முகத்திலுள்ள சோகத்தையும், ஜீவனற்ற கண்களையும் கவனிக்க தவறவில்லை. போகும் வழியிலும் மக்கள் முகத்தில் அதே பீதி. அன்று இரவு விருந்தில் நம் நண்பர்கள் சாகசங்களை செய்து மக்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லோரும் சோகமாகவேயிருக்கிறார்கள். கடைசியில் ரோஜர் ஒரு பாட்டுப் பாட எல்லோரும் தம் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்.

      ராணியிடம் தங்கள் கவலைக்கு என்ன காரணம் என்று ரோஜர் கேட்க, ராணி சொல்ல துவங்குகிறாள். அதாவது, முன்பு ஒரு காலத்தில் சார்ல்மேகன் (கிங் சார்லஸ்) பிரான்சை ஆண்டு வந்தார். ஒரு முறை ஸ்பெயின்-ல் போரிட்டு தாயகம் திரும்பி கொண்டிருக்கையில் சக்கவர்த்தியின் மகன் ரோலான் கடைசியாக வந்து கொண்டிருந்தான், அந்தப் படையில் இருந்த ஒரு கானி எனும் கொடியவன் பொறாமையினால் எதிரிப்படையில் பொய் சேர்ந்தான்.

      எதிரிப்படையினர் ரோலானை கொல்லத் தீர்மானித்து, சதித்திட்டம் தீட்டி பிரெஞ்சு படையை மடக்கினார்கள். போரில் அனைவரும் மடிய, ரோலான் மட்டும் தனித்து போராடினான். தன்னை மரணம் தழுவும் முன் தன் கத்தியை பாறையில் அடித்து உடைக்க முற்பட, கத்தி உடையாமல் பாறை இரண்டாக பிளக்கிறது. பிரெஞ்சு மக்களின் அபிமான ரோலானின் மரணத்திற்கு காரணமான துரோகி கானியை தன் முன்னோர்களில் ஒருவர் மணந்ததால், அன்று முதல் தங்கள் பரம்பரைக்கே இழுக்கு வந்து விட்டது என்கிறாள்.

      Delete
    2. நம் நண்பர்கள் ராணியின் சந்தோசத்திற்காக சில நாட்கள் தங்க முடிவு செய்கிறார்கள். அங்கோ கால எந்திரத்தில் பொறுமையையிழந்து அந்த மர்ம நபர் அதிலுள்ள பியூஸ் கட்டையை பிடிங்கிக் கொண்டு வெளியே வந்து ஒரு பாரில் நுழைகிறான். அங்கு மூன்று சகோதர கயவர்கள் ராணிக்கு எதிராக உள்நாட்டுப் போரை உண்டு பண்ணி நிலங்களை கைப்பற்ற துடிப்பதை ஒட்டு கேட்கிறான். அந்த மர்ம நபர் மூன்று சகோதர்களிடம் இங்கு வந்திருக்கும் ரோஜரும், பில்லும் பயங்கரவாதிகள் என்று கதையளக்கிறான். அதற்கு அவர்கள் இந்த விஷயத்தை மக்களிடம் பரப்பி கிளர்ச்சியை உண்டு பண்ணி கோட்டையை பிடிக்கலாம் என்கின்றனர். ஆகையால் மர்ம நபரை அவர்களுன் இணைத்துக் கொள்கின்றனர். மூன்று சகோதரர்களும் மக்களும் இணைந்து ராணி மீது போர் தொடுக்க, ஒரு கட்டத்திற்பின் ரோஜர், பில் மற்றும் ராணி தப்பிக் முற்படுகின்றனர். அப்போது ரோஜர், உங்கள் மீதுள்ள பழியை அழித்து விட்டால மக்கள் திருந்தி விடுவார்கள் என்றும், அதற்கான ஆதாரங்களை நாங்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி கோட்டையிலிருந்து ரகசிய வழியாக வெளியேறுகிறார்கள்.

      பில் என் செய்ய போகிறாய் என்று கேட்க, சார்ல்மேகன் சக்ரவர்த்தி காலத்திற்கு சென்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்ய வேண்டும் சென்று சொல்லி, கால எந்திரத்திற்கு சென்று இயக்குகிறார்கள். அனால் அதில் பியூஸ் இல்லாததால் இயங்க மறுக்க மாற்று பியூஸ் மாற்றி நம் நண்பர்கள் கி. மு. 778 ஆண்டு பின்னோக்கி செல்கிறார்கள். அங்கு சார்ல்மேகன் சக்ரவர்த்தி படைபிரிவுடன் திரும்பிக் கொண்டிருக்கிறார். கடைசியாக வந்து கொண்டிருந்த ரோலானை எதிர்ப்படைகள் கானியின் சூழ்ச்சியால் தாக்குகிறார்கள். போரில் அனைவரும் மடிய, ரோலான் மட்டும் தனித்து போராடி, தன்னை மரணம் தழுவும் முன் தன் கத்தியை பாறையில் அடித்து உடைக்க முற்பட, கத்தி உடையாமல் பாறை இரண்டாக பிளக்கிறது. அங்கு வரும் சார்ல்மேகன் சக்ரவர்த்தி தன் மகன் ரோலானின் மரணத்தைக் கண்டு பழிக்குப் பழி என்று சபதம் செய்கிறார். ரோஜரும், பில்லும் அங்கு வந்து ரோலான் வாளைக் கைப்பற்றுகிறார்கள். ரோலான் வாள் இப்போது நம் ரோஜரின் கையில். அவர்களாலேயே நம்ப முடியவில்லை. பின்பு கால எந்திரத்தைக் கொண்டு எதிரிகள் படை சார்ல்மேகன் படைக்கு அருகில் இருக்கிறது என் அறிகிறார்கள். இரவில் ஓய்வில் இருக்கும் சாரல்மேகன் சக்ரவர்த்தியை சந்தித்து எதிரிகள் படை அருகில் இருந்து தாக்கவிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அந்த செய்தி மூலம் கூடாரத்தை காலி செய்து பின்பு அங்கு வரும் எதிரிப்படையைத் தாக்கி வெற்றிக் கொள்கிறார். அதற்கு உபகாரமாக என்ன வேண்டும் என்று கேட்ட, அதற்கு ரோஜர், இந்த கானியின் துரோக செயலால் யோலன்ட் குடும்பத்திற்கே கெட்ட பெயர் உண்டாகிவிட்டது என்கிறார். அதை மறுக்கும் சார்ல்மேகன் சக்ரவர்த்தி, இவனுக்கும் யோலான்ட் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை, இவன் போரிகார்ட் இனத்தை சார்ந்தவன் என்பதோடு, அதனை ரோஜரின் விருப்பத்தின் பேரில் தன் கைப்பட எழுதி, முத்திரையிட்டு கொடுக்கிறார்.

      Delete
    3. பின்பு 14-ம் நூற்றாண்டு வரும் நண்பர்கள் அதை சீமாட்டியிடம் காட்ட, அதற்கு அவள் அரசர் சார்லஸ் V யிடம் நீதி வழங்குமாறு கேட்கிறாள். அந்த சான்றிதழ் சோதிக்கப்பட்டு உண்மையானதுதான் என்றான பின் அந்த சீமாட்டியின் களங்கம் துடைக்கப்படுகிறது. மன்னர் படையின் துணையோடு சீமாதின் எதிரிப்படைகள் விரட்டியடிக்கப்படுகின்றன. அந்த மூன்று சகோதரக் கயவர்கள் இங்கு வந்து பிரச்சனை செய்கிறார்கள். அதாவது, இது போலி சான்றிதல் என்றும், அது போலியான வாள் என்றும். உண்மையை உணர்த்த ரோஜர் அந்த வாளைக் கொண்டு பாறையைப் பிளக்க, எல்லோரும் வாயை பிளக்கிறார்கள். மூன்று சகோதரக் கயவர்கள் அடக்காமல் ரோஜரை தனியாக சண்டைக்கு இழுத்து தோற்று ஓடுகிறார்கள். மன்னரால் சீமாட்டி களங்கமற்றவள் என்று அறிவிக்கப் படுகிறது. அன்றிரவு விருந்திற்கு அப்புறம் நம் நாண்பர்கள் சீமாட்டியிடம் விடை பெற்று கிளம்புகிறார்கள். சீமாட்டி மன வேதனையோடு வழி அனுப்புகிறாள். மூன்று சகோதரக் கயவர்களை நம்பி மோசம் மோன அந்த மர்ம நபர் வேறொரு மூன்று ஆட்கள் மூலம் ராஜரையும், பில்லையும் பின்பக்கமாக தாக்கிவிட்டு, அந்த விசையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். மயக்கம் தெளிந்த பின் நம் நண்பர்கள் விசையை காணாது திகைக்கிறார்கள். இந்த 14-ம் நூற்றாண்டில் யாருக்கு தேவைப் பட்டிருக்கும் என்று சிந்தனையோது வேறு வழியில்லாமல் உறங்கிப் போகிறார்கள்.
      இப்போது கதையின் முதல் பக்கம், 20-ம் நூற்றாண்டு குளியலறையில் இருக்கும் ரோஜர் அழைப்பு மணி இந்த நள்ளிரவில் ஒலிப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார். யாராகயிருக்கும் என்று சிந்தனையோடு அறையை விட்டு வெளியே வர அவர் காலில் ஒன்று தட்டுப் படுகிறது, அது ரோலானின் வாள். என்பதுடன் கதை கி. நா. கணக்கா முடிகிறது.

      இந்த இதழை இப்போது கைவசம் வைத்துள்ளவர்கள் தாராளமாக எடுத்து மறுவாசிப்பிற்கு முனையலாம். இதழ் இல்லாதவர்கள் மன்னிக்க வேண்டும் , உங்கள் சார்பாகவும், என்சார்பாகவும் மறுபதிப்பை எடிட்டரிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. 29 ஆண்டுகளாக ஓர் இதழைப் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இப்போது தாள்கள் எல்லாம் பழுப்பேறி, மஞ்சள் நிறமாக மாறிவிட்டன. இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கும் என்றும் புரியவில்லை. அதற்காவது மறுபதிப்பு அழகாக வண்ணத்தில் வரவேண்டும்.

      Delete
    4. மொய்தீன் சார்.! சிறுவயதில் படித்தது. ஆனால் பசுமையாக நினைவில் உள்ளது.மனதில் தூசிதட்டி எழப்பியது போல் ஒரு உணர்வு. நன்றி.!

      அந்ந நாள்களிலே கி.நா. போன்று ஒரு ஒரு குழப்பமான ஒரு முடிவு அது.

      1) எதிரி கடந்த காலத்தில் இருந்து கால ஏந்திரத்தைதிருடிக்கொண்டு ஓடி விடுகிறான்.ஆனால் எப்படி திரும்ப நிகழ்காலத்திற்கு வருகிறார்கள்.?

      2)கனவு என்று கருதும் என்னும் பட்சத்தில் அந்த உண்மையான வாள் எப்படி அவர் கையில் கிடைத்தது.?

      இந்த கேள்வி சிறு வயதிலேயே புத்தகம் காணமல் போனாலும் இன்று வரை விடை கிடைக்கவில்லை.!

      Delete
    5. மொய்தீன் @ இந்த கதையை படித்து இல்லை. உங்கள் விமர்சனம் முலம் அந்த குறை நீங்கிவிட்டது!

      Delete
    6. @MV
      கிராபிக் நாவல் கதைகள் அப்படித்தான் இருக்கும், கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. ஜஸ்ட் கிட்டிங். ஹா ஹா.
      இதில் இரண்டு விஷயங்கள், 1. எதிரி காலயந்திரத்தை திருட்டு போன பின் ரோஜரும், பில்லும் அங்கேயே தங்கி விடுவதுப் போல் சொல்லப்பட்டுள்ளது. சீமாட்டியை விட்டு பிரிய மனமில்லாமலும், 14-ம நூற்றாண்டில் அவர்கள் ரொம்ப ஒன்றிவிட்டபடியாலும்..!
      2. ரோஜர் (கனவாகவே இருந்தாலும்) தன் தந்தையை எதிகளிடமிருந்து காப்பற்றியதற்காகவும், அந்த சீமாட்டியின் களங்கத்தை அந்த வாள் கொண்டு போக்கியதற்காகவும், ரோலான் தன் வாளை அன்பு பரிசாக ரோஜருக்கு வழங்கியது என வைத்துக் கொள்ளுங்களேன்.

      Delete
    7. //கிராபிக் நாவல் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.//

      ஹஹஹஹஹ............ நெத்தியடி இப்படி சொல்லிவிட்டால் மேற்கொண்டு தொல்லையில்லை பாருங்கள்.இப்பவே இவ்வளவு தொலைதொடர்பு வசதி இருந்தாலும் விளக்கம் கிடைக்க மாட்டேன் கிறது.!அந்த காலத்தில் சுவற்றை பிராண்டியதுதான் ஞாபகம் இருக்கிறது.!



      பருத்தி வீரன் படம் சூப்பராக இருந்தாலும் கிளைமேக்ஸ் பிடிக்காததால் ஒரு தடவை மட்டுமே பார்த்தேன்.

      மர்மகத்தி சூப்பராக இருந்தாலும் அதன் முடிவு குழப்பமாக இருந்ததால் பாதுகாக்க தோன்றவில்லை.! திகில் காமிக்ஸ் என்னிடம் நிறைய இருந்தபோது திகில் கதைகள் எனக்கு பிடிக்காது என்பதால் பாதுகாக்கவில்லை.

      Delete
  83. ///ஒ.சி.சு.,இ.இ.கொ.தேவ .ர.தேட.இவைகளை பார்க்கும் போது.கோபம் எரிச்சல் வெறி உண்டாகிறது.அதை அடியேனுக்கு தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..........////

    நண்பர் M V அவர்களே.,
    மாயாவி சிவா அவர்களின் ப்ளாக்கில் தே.ர. தேடலுக்கல்ல , இ.இ.கொல்லாதே இரண்டைப் பற்றிய விரிவான விமர்சனம் கிடைக்கும். கூடவே "கறுப்பாய் வருவான் காலன் " என்ற Spin off கதையும் கிடைக்கும்.
    கதை - ஈரோடு விஜய்
    ஆக்கம் - மாயாவி சிவா.
    சி.சுவடுகளில் குறித்த உங்களது சந்தேகங்களை எனக்கு மெயிலோ., வாட்ஸ்அப்போ செய்து கேளுங்களேன்.
    எனக்கும் வேலை சுளுவா இருக்கும்.!இல்லை பதிவாகவே போட்டுவிடலாம் என்றால் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

      சாரி சார் .! உங்களை அதிகமாக தொந்தரவு செய்கிறேன்.உங்களுக்கு எப்பொழது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது சொன்னால் போதும்.! என்னை பற்றிய நினைவை மனதில் ஒரமாக வைத்துக்கொண்டுடால் அது போதும்.!

      சார் நம் வாசகர்களில் மூன்று பிரிவினர் இருப்பதாக கருதுகிறேன் அவை.

      1)ஓவியங்கள் தீவிரமாக ரசிப்பவர்கள் .75% ஓவியங்களையும் 25% கதைகளையும் ரசிப்பவர்கள்


      2) இவர்கள் கதையையும் ஓவியங்களையும் சரிசமமாக ரசிப்பவர்கள்.ஓவியங்கள் 50% ,கதைகள் 50%

      3)இவர்கள் 75 % கதைகளையும் 25% ஓவியங்களையும் ரசிப்பவர்கள். நான் இதில் சேர்த்தி.!

      நீங்கள் குறிப்பிட்ட விமர்சனங்கள் ரசனை ஒவியங்களை சார்ந்தே உள்ளது.

      நான் கேட்பது தெளிவான கதை விமர்சனம் நீங்கள் புது காமிக்ஸ் வந்தவுடன் ஜாலியாக முழு கதையையும் உங்கள் நடையில் விமர்சனம் செய்வீர் கலை அதைப்போல........
      உதரணமாக நம் நண்பர் மொய்தீன் மர்மகத்தி விமர்சனம் எழதியுள்ளாரே அதைப்போன்று............

      " கதையைமட்டும் "
      €€€€€€€€€€€€€€€€€

      Delete
    2. அடடே! தொந்தரவெல்லாம் இல்லை எம் வி சார்.
      சொல்லப்போனால் நீங்க கேட்டது எனக்கு சந்தோசமாகவே இருந்தது.
      தெளிவான விமர்சனம் தர வேணும் என்பதால் மீண்டும் ஒருமுறை கதையை படித்துவிட்டு எழுதலாம் என்று இருக்கிறேன்.
      சில பர்சனல் காரணங்களால் கதையை படிப்பது தள்ளிப்போகிறது அவ்வளவே.! கூடிய விரைவில் இங்கேயே தருகிறேன்.
      அதுவரை மாயாவி சிவா அவர்களின் ப்ளாக்கில் உள்ள பழைய பதிவுகளை ஒரு பார்வை பாருங்களேன்.!!!

      Delete
  84. வணக்கம். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று தான் இந்த மாத காமிக்ஸை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் தான் படிக்க வேண்டும். அதற்கு முன், எனக்குக் கிடைத்த டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் சில பக்கங்கள் கசங்கிய நிலையில் பைண்டிங் செய்யப்பட்டுள்ளது. சில பலூன்களில் எழுத்துகள் மை அழிந்த நிலையில் வெள்ளெழுத்துகளாக காட்சியளிக்கின்றன.

    பொதுவாகவே எனக்குக் கிடைக்கும் குறைபாடான புத்தகத்தைத் திரும்பவும் சிவகாசிக்கு அனுப்பி, புதிய புத்தகத்தை வாங்கும் அளவிற்கு எனக்குப் பொறுமை இருந்தது கிடையாது. அதிலும் இங்குப் பதிவிட்டப் பின் அதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடும் :))

    எனவே சந்தாதாரர்களுக்கு பார்சல் அனுப்பும் முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்து அனுப்பினால் நன்றாக இருக்கும். எனக்கு 10 நாட்கள் தாமதமாக கிடைத்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் இதுபோன்ற குறைபாடுகள் இல்லாமல் இருந்தாலே போதுமானது. தற்போது வரும் அட்டைகள் அடுத்த நாளே சுருண்டு விடுகிறது. என்னைப் பொறுத்த வரை பணமா, விலையா, தரமா என்றால் - நான் தேர்ந்தெடுக்க நினைப்பது, சிறந்த தரமானதாக மட்டுமே இருக்கும். நன்றி !!

    ReplyDelete
  85. எடிட்டர் சார்,

    தீபாவளி வித் டெக்ஸ் நேற்று இரவுதான் படிக்க நேரம் கிடைத்தது. ‘டைனோசரின் பாதையில்’ ஆர்வமாக படித்து வந்தபோது ஒரு பெரிய ஏமாற்றம். 171 வது பக்கத்திலிருந்து 186 பக்கம் வரை கானவில்லை. அதற்கு பதிலாக 139 வது பக்கத்திலிருந்து ரிபீட் ஆகியிருந்தது. ஆக மொத்தம் 16 பக்கங்கள் காணவில்லை. :( அதற்கு பிறகு ஆர்வமில்லாமல் எப்படியோ படித்து முடித்துவிட்டேன் !

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகேயன் சார்..!@

      காமிக்ஸ் கலாட்டா உங்களுடைய பிளாக் க சூப்பர்.உங்களின் 2013 தீபாவளி பதிவு எங்கள் வாழ்கையை அப்படியே பிரதிபலித்தது சார்.நான் அடிக்கடி படிக்கும் பதிவு.!

      Delete
  86. கதைகள் நன்றாக இருப்பினும்,பக்கங்கள் வெள்ளையாக உள்ளது,கசங்கி உள்ளது,பிரிண்ட் ஆன பக்கங்களே மீண்டும் பிரிண்ட் ஆகி வருவது பக்கங்களின் ஓரத்தில் கருப்பு வண்ணங்கள் திட்டு திட்டாய் உள்ளது இப்படி பல குறைகளை களைந்தால் ஒழிய முழு திருப்தி கிட்டாது,பாதுக்காக்கப்பட வேண்டிய இதழ்கள் இப்படி இருந்தால் எப்படி?
    ஆசிரியர் இதை கவனத்தில் கொண்டு இனி இக்குறைகள் நிகழா வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  87. Dear Editor,

    I recently read all the four volumes of "Long John Silver" by Xavier Dorison.

    A gripping story it is.

    Please have a look and see if this can be released in our Tamil Comics

    Regards,
    Jp

    ReplyDelete
  88. எமனின் வாசலில் முதல்முறை படிக்கும்போது டைனோசரின் பாதையை விட சுமராகவே தெரிந்தது.நண்பர் ரவி கண்ணன் அவர்களின் கருத்தை ஏற்று எமனின் வாசலில் கதையில் இரண்டாவது முறையாக மீள் வாசிப்பில் ஆழ்ந்தேன்.
    பிரமாதமாக இருந்தது,இனி தல சாகஸங்கள் ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால் தனித்தனியாகவே படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

    ReplyDelete
  89. எமனின் வாசலில் முதல்முறை படிக்கும்போது டைனோசரின் பாதையை விட சுமராகவே தெரிந்தது.நண்பர் ரவி கண்ணன் அவர்களின் கருத்தை ஏற்று எமனின் வாசலில் கதையில் இரண்டாவது முறையாக மீள் வாசிப்பில் ஆழ்ந்தேன்.
    பிரமாதமாக இருந்தது,இனி தல சாகஸங்கள் ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால் தனித்தனியாகவே படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. //எமனின் வாசலில் இரண்டாம் முறையாக படித்தேன்.//

      ஒருமுறை கதையை படித்துவிட்டேன்.இனி ஓவியங்களை ரசித்து ஒருமுறை படிக்க வேண்டும்.அட்டகாசமான ஓவியம்.! புகைப்படம் போல் அவ்வளவு தெளிவு.!

      எடிட்டர் அவர்களே !,முடிந்த அளவு கதையும் ஒவியங்களும் சூப்பராக உள்ளவை மட்டுமே தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.!தோர்கல் கதையைப்போல் வரிசைப்படி தேரந்ந்து எடுக்க கட்டாயம் கிடையாதல்லவா.?

      Delete
  90. புரோட்டா சிக்கன் டெக்னிக், ஆத்தாவையும் காசுகுடு பகுதி என மெந்நகைச்சுவையிழையோடும் ஓர் அழகான பத்தி எழுத்து இது. காமிக்ஸின்றிப்போனால் தாங்கள் ஒரு எழுத்தாளராகவும் மலர்ந்திருக்கக்கூடும் என சில பொழுதுகளில் எண்ணுவதுண்டு. அதற்கான உதாரணம் இந்தக்கட்டுரை. ஆமா.. இது சி.சி.வ கட்டுரைத்தொகுதியில் இடம்பெற வேண்டிய பகுதியாயிற்றே.. சிசிவ புத்தகமாக வரும்போது சரியான இடம் பார்த்து இதையும் சேர்த்திடுங்கள். புரோட்டாக்குழு நண்பர்களே.. சே.. போராட்டக்குழு நண்பர்களே, இதில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். :-)))

    பை தி வே, தீபாவளி கொண்டாட்டங்கள், அலைச்சல் என இங்கு வர தாமதமாயிற்று. இங்கு என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். தனித்தனியே நன்றி சொல்லலாம், ஹோப் யு அண்டர்ஸ்டேண்ட்! ஒரு தனி நபருக்காகவெல்லாம் லோடு மோரை உருவாக்கவேண்டாமே என்று மொத்தமாக சொல்லிக்கொள்கிறேன். அனைவருக்கும் என் அன்பு!

    ReplyDelete
  91. ஏற்கனவே நம் போராட்டக்குழுவை நண்டு வறுவல், வறுத்த கறி போன்ற பலமான எதிர் ஆயுதங்களைக்கொண்டு ஆசிரியர் சுலபமாக சமாளித்துவருகிறார். இந்த அழகில், புரோட்டா சிக்கன் எனும் பழைய பவர்ஃபுல் டெக்னிக் வேறு ஞாபகம் வந்து தொலைத்திருக்கிறது. இனி போராட்டங்கள் பிசிபிசுத்துப்போகாமலிருப்பது எங்ஙனம் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. :-))))))))

    ReplyDelete
  92. புரோட்டா சிக்கன்.! இதை படித்தவுடனே வாயில் எச்சில் ஊறிவிட்டது.(மதுரை மற்றும் தெற்கே உள்ள புரோட்டா சுவை இங்கு கிடையாது.விசாரித்தபோது தண்ணீர் காரணமாக சுவை அதிகம் என்ற தகவல்.)

    ReplyDelete
  93. எமனின் வாசலில் சாகஸத்தில் டெக்ஸை நேர் கோணத்தில் பார்ப்பதைவிட சைடு ஆங்கிளில் தெரியும் டெக்ஸ் இன்னும் துள்ளலாக,துடிப்பாக,லுக்காக தெரிவது போல் தெரிவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை?!

    ReplyDelete
  94. 1.முதலிடம்......
    வரலாறும் ஒரு வல்லூறும்...................
    Raiders of the lost ark 90% + da vinci code 5% + the seventh secret( irving wallace 1985) 5% என்று இருந்தபோதிலும்( ரவி அறிவரசு சொன்னது போல் angels and demons –க்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை) கதையின் நவீனத்துவ சொல்யுக்தியும் விறுவிறுப்பும் அதை அவ்வளவாக பாதிக்கவில்லை......
    2.இரண்டாமிடம்
    டைனோசாரின் பாதையில்....அட....டெக்ஸ் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்கிறார்....ஒரே புள்ளியில் சங்கமிக்கும் இரண்டு ட்ராக்குகள் ...அட்டகாசம்……
    3. மூன்றாமிடம்
    எமனின் பாதையில்.....சுமாரான பிரியாணி( கதை)....சூப்பரான லெக் பீஸ்(சித்திரங்கள்)
    4.நான்காமிடம்.....
    மஞ்சள் விழல்
    Appendix……..மூளை திருடர்கள் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவு......

    ReplyDelete
  95. அன்புள்ள எடிட்டர்,

    தங்களது முதல் தீபாவளி மலர் மலரும் நினைவுகள் அருமை ... இவ்வளவு "வரலாற்று சிறப்பு மிக்க" இந்த தீபாவளி மலரை, நாம் ஏன் அடுத்த பொங்கலுக்கு (அல்லது தீபாவளிக்கு) மறுபதிப்பு செய்யக்கூடாது? :)

    As usual, டெக்ஸ்-ன் "தல" - தீபாவளி இரண்டு கதைகளும் சரவெடி..... அதுவும் "எமனின் வாசலில்" - Top class art work

    ஷெல்டன் கதை, சோடை போகவில்லை, விறுவிறுப்பாகச் சென்றது

    எனக்கு ரோஜரின் "மஞ்சள் நிழல்" மிகவும் பிடித்திருந்தது ... வண்ணச்சேர்க்கையைத் தவிர்த்து .. கருப்பு வெள்ளையில் வந்திருக்கவேண்டிய கதை இது

    மூளைத்திருடர்கள் - கதை ok .. சித்திரங்கள் மிகவும் தெளிவற்றிருந்தன ... probably due to the poor quality of the scan or the old prints used

    அன்புடன்,
    பெரியார்

    ReplyDelete
    Replies
    1. அதே சைசில்......இரு வண்ணத்தில் அதே அற்புதமான அட்டை படத்தில் ....கொரில்லா சாம்ராஜ்யம் , கொலைப்படை.....போன்ற இதழ்கள் பழங்கதைகளும் சிறப்பு மலர்களாய் மலர உதவட்டுமே ஸார் ப்ளீஸ்

      Delete
  96. Kumbakonam book shopkalil November issues eppo kidaikum sir.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீதர்

      கட்டாயம் ஒரு வாரங்களுக்கு முன்பே புத்தகங்கள் கும்பகோணம் வந்திருக்கும்...நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் என தெரியவில்லை. இரண்டு முகவர்கள் பெயர்,செல் நெம்பர் கொடுத்துள்ளேன்..விசாரியுங்கள்..!

      Sri Markandeya Book Gallery, cell: 9629815580

      Jai Sri books, cell: 9952882002

      Delete


  97. ******* டைனோசரின் பாதையில் ******

    கதையின் டைட்டிலைப் பார்த்தபோது எங்கே மறுபடியும் நம்ம டெக்ஸ் டைனோசர்களோடெல்லாம் மோதி மறுபடியும் மானத்தை வாங்கிடுவாரோன்னு சின்னதாய் ஒரு கலக்கம் இருந்தது. நல்லவேளையாக அப்படி ஏதுமில்லாமல் அந்த காலகட்டத்திற்கு ஏற்ற அருமையான, விறுவிறுப்பான கதையமைப்புகளால் 'தல தல தான்'னு மறுபடியும் நிரூபிச்சிருக்கிறார்.
    ஆரம்பத்தில் கி.நா பாணியில் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாம் சென்றாலும் பிற்பாடு எல்லாமே ஒரு நேர்கோட்டில் இணைந்து விறுவிறுப்பாகப் பயணிப்பது வித்தியாசம், அழகு!

    வெறுமனே 'ணங், கும், சத், டுமீல்' ரகமாக மட்டுமே இல்லாமல் கதை நடுவே மனித உறவுகளையும், உணர்வுகளையும் அவ்வப்போது சரியான அளவில் தெளித்துவிட்டிருப்பதும், கதையோடு இணைந்த (கார்சனின்) நகைச்சுவை வசனங்களும் அட்டகாசமாய் அமைந்து ஆத்மார்த்தமானதொரு படிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன!

    குறைகள்:
    * சித்திரங்கள் - 'ஆவரேஜ்' ரகம்
    *ஓரிரு இடங்களில் பலூன் மாறிய வசனங்கள்
    * ஒரு செவ்விந்தியக் கூட்டத்துக்குள் நுழைந்து அதன் தலைவனைச் சந்திக்க உயிரை இழக்கவேண்டியிருக்குமோ என அச்சப்படும் (செல்லுபடியாகாத) 'இரவுக் கழுகின்' கீர்த்தி!


    மொத்தத்தில் - அட்டகாசம்!!

    ReplyDelete
    Replies
    1. //ஆரம்பத்தில் கி.நா. பாணியில் தனித்தனியே சென்றாலும்.//

      "நல்ல கிளப்புறாங்கய்யா பீதியை ! "

      //ஒரு செவ்விந்திய கூட்டத்தில் நுழைந்து.......//

      ஹஹஹஹஹஹ.................ஸ்பைடர் மேன் லிப்ட்டில் கீழே இறங்கிவருவது போல் இருந்தது.!

      இனிமேல் யாரும் கேப்டன் டைகர் கதையைப்போல் ,டெக்ஸ் கதை ரியலிட்டி இல்லை என்று கூறமுடியாது அல்லவா.?

      Delete
  98. நாம் ஏன் அடுத்த பொங்கலுக்கு (அல்லது தீபாவளிக்கு) மறுபதிப்பு செய்யக்கூடாது? :)
    சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பொங்கலுக்கு -> வரும் பொங்கலுக்கு அப்படின்னு சொல்லுங்க!

      Delete
    2. ஆர்ச்சி கதையை ரசிக்கும் ஒரே ரசிகர் நம் புன்செய் புளியம்பட்டிகாரர்தான். (என்னிடம் புத்தகம் முழமையாக இல்லை எனவே மறுபதிப்பு வந்தால் சந்தோசமே.!)

      நம் எடிட்டரிடம் மறுபதிப்பு கோட்டாவில் கதையை வாங்குவது காளை மாட்டில் பால் கறந்துவிடலாம்.அல்லது கல்லிலேயே நார் உரித்துவிடலாம்.ஆனால் மறுபதிப்பு கிடைப்பது அவ்வளவு கஷ்டம்.அப்படி இருக்கும் போது.,காதில் தோவாளை பூ மார்க்கெட்டையே வைக்கும் அளவிற்கு பூ சுற்றல் கதை நமக்கு தேவையா.? எல்லோரும் ரசிக்கும் ஒரு நல்ல கதையை கேட்போமே.?

      Delete
  99. An article about our artist Malaiyappan has been published by The Hindu today!

    The Hindu

    ReplyDelete
  100. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

    ஹிஹிஹி...........நாளைய பதிவு எதைப்பற்றி இருக்கும்.?ரொம்ப பிசியா.???

    ReplyDelete
  101. Dear Editor,

    I have requested for additional subscription (A, B,C,D + additional copies of B & D) cost details through couple of mails. In spite of my repeated follow-ups with your office (spoke to Stella & Vasuki over the phone), but they couldn't provide the details as they need to confirm with you. Could you please confirm respond to my mail regarding the additional subscription for B & D along with full subscription?

    Thanks,
    Periyar

    ReplyDelete
  102. அன்புள்ள எடிட்டர்,

    2016 ஆண்டு சந்தாவுடன் T-Shirt-க்குப் பதிலாக, 12 sheet calendar தர இயலுமா? - ஒவ்வொரு மாதத்திற்கும் நமது ஹீரோ / ஹீரோயின் ஒவ்வொருவருடைய படத்துடன், நல்ல தரமான/கனமான அட்டைகளில். முடிந்தால் spiral binding உடன். எங்களுக்கு கிட்டத்தட்ட 12 போஸ்டர்கள் கிடைத்த மாதிரி இருக்கும். அத்துடன் ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்துக் கண்டு மகிழ்வோம்.

    முன்கூட்டிய நன்றிகள்,

    அன்புடன்,
    பெரியார்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பெரியார் கருத்தை நானும் வழிமொழிகிறேன்

      Delete
    2. நண்பர் பெரியார் கருத்தை நானும் வழிமொழிகிறேன்

      Delete
    3. நண்பர் பெரியார் கருத்தை நானும் வழிமொழிகிறேன்

      Delete
    4. சூப்பர் ஐடியாவா இருக்கே.! எங்க தலைவி மாதத்தை மட்டும் மாற்றவே மாட்டேன்.!(அசிங்கமான ஹீரோக்களுக்கு வாய்ப்பு உண்டா.?( காமிக்ஸ் பற்றி தெரியாதவர்கள் வீட்டிற்கு வரும்போது ,,.வீட்டுக்கு வெளியே திருஷ்டிக்கு மாட்டுறத ஏம்பா உள்ள மாட்டிவைச்சுருக்கே.? என்று கேட்டுவிட்டால் வம்பாகிவிடும்.!

      Delete
  103. 12,30 ஆயிட்டு இன்னும் கானோம்

    ReplyDelete
  104. இரவு 1மணி வரை பார்த்து.....
    இப்பொழுது அதிகாலை ....
    ......
    ......

    ReplyDelete

  105. எடிட்டரின் புதிய பதிவு ரெடி, நண்பர்களே!

    ReplyDelete
  106. காத்திருக்கிறேன்

    ReplyDelete