Thursday, October 22, 2015

கதைகளின் கதையிது...!

நண்பர்களே,
     
வணக்கம். ஊரெங்கும் பண்டிகையின் உற்சாகங்கள்; வீடெங்கும் பட்டிமன்றங்களின் கலகலப்புகள்; சேனல்தோறும் புதுப்படங்கள் என்ற அமளிக்கு மத்தியில் ஏகப்பட்ட பள்ளிக்கூடப் பயணங்களுக்கும் இன்றைய தினமொரு துவக்கப் புள்ளியல்லவா? அத்தகையதொரு சூப்பர் தருணத்தில் நம் புதுப்பயணத்தின் ப்ளூபிரிண்டை திரைமறைவிலிருந்து வெளிக் கொண்டு வருவதும் சாத்தியமானால் என்னவென்று தோன்றியது? அதன் பலனே நமது பதிவு # 251 !!

சில பல வாரங்களுக்கு முன்பாகவே 2016-ன் அட்டவணைகள் பற்றிய guessing games ஆரம்பித்திருந்த நிலையில் அவரவர் ஆசைகளை வெவ்வேறு ரூபங்களில் பதிவு செய்திருந்தீர்கள்! கேட்கப்பட்ட கேள்விகளுக்கு; முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக்கி வந்த என் கல்லுளிமங்கத்தனம் உங்களில் நிறையப் பேருக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதும் தெரியாதில்லை! ஆனால் சில பல combination-களை; சில பல நாயகர்களின் scope பற்றிய பட்டிமன்றங்களை என் தலைக்குள் நடத்திக் கொண்டிருந்த போது – ஓட்டைவாய் உலகநாதனைத் தற்காலிகமாய் நாடு கடத்திடலே தேவலை என்று தோன்றியது! So- நா வறண்டு போகுமளவிற்கு முயற்சித்தும் என்னிடமிருந்து உருப்படியான பதில் வாங்க முடியாது போன நண்பர்களிடம் ஒரு sorry சொல்வது எனது முதல் கடமை!

வருஷா வருஷம் இந்தத் ‘திட்டமிடல் மேளாவைத்‘ தொடங்கிடும் போது – கிராபிக் நாவல்கள்; புதுப்பாணிகள்; புது அறிமுகங்கள் என்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் கலவையாய் தலையை நிரப்பிடுவதுண்டு! அவற்றில் பல புஸ்வாணமாவதையும்; சில சிலாகிக்கப்படுவதையும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம் ! பரீட்சார்த்த முயற்சிகளை main stream சந்தாவினுள் வலுக்கட்டாயமாக நுழைத்திடாமல் அவற்றிற்கென ஒரு தனித் தடம் ; தனிச் சந்தா என்ற option தற்சமயமே நடைமுறையில் உள்ளதால் – 2016-க்கும் அதனைத் தொடர்வது என்று தீர்மானித்தோம்! தற்போது பௌன்சர் & தோர்கல் ஆல்பங்கள் மட்டுமே இந்தத் தனிப்பாதையில் பயணம் செய்து வருகின்றன; ஏப்ரலில் அறிவிக்கப்பட்டிருக்கும் 2016ன் சந்தா Z-ல் (!!!) இன்னும் நிறையவே மாறுபட்ட கதைகளைக் களமிறக்குவது என்பது முடிவான போது – 2016-ன் ரெகுலர் சந்தாக்களின் திட்டமிடல் சுலபமாகியது!

‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை!‘ காத்திருக்கும் புத்தாண்டிலும் சரி; தொடரும் ஒவ்வொரு ஆண்டிலும் சரி- இதையே நமது theme-ஆகக் கொண்டு செயல்படுவதென்ற எண்ணம் எங்கிருந்தோ ஒரு நாள் எனக்குள் உதயமானது! ‘பளிச்‘ கதைகள்; positive களங்கள்; அனைவரையும் ஏதேவொரு விதத்தில் ஈர்க்கக்கூடிய தொடர்கள் என்பதில் கவனமாக இருந்திடுவது என்ற அளவுகோல்களோடு நமது நாயகர்கள் பட்டியலை கையில் எடுத்தேன்! “புது அறிமுகங்கள்” என்று நிறையப் பேரை அட்டவணைக்குள் புகுத்தி விட்டு அப்புறமாய் மூச்சுத் திணறும் நெரிசலை நாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டாமென்ற சிந்தனை எனக்குள் உரக்கவே ஒலித்துக் கொண்டிருந்தது! இன்னும் ஓராண்டு சுமாரில், லார்கோ; ஷெல்டன் & கமான்சே தொடர்கள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றிருக்கும் & XIII ஏற்கனவே மங்களம் பாடியுள்ள நிலையில் – 2017-ல் நிச்சயமாய் புது நாயகர்களுக்கு / தொடர்களுக்கு அவசியம் ஏற்படும் என்பதைக் கணிக்க முடிகிறது! So 2016-ல் புதுசாய் நிறையப் பேரை நம் அணிவகுப்பிற்குள் திணிக்க அவசரம் காட்ட வேண்டாமென்று (ரொம்பக் கஷ்டப்பட்டு) தீர்மானத்தேன். BATMAN & இதர அமெரிக்கப் படைப்புகளையும் சரி; பிரான்கோ-பெல்ஜியப் புது நாயகர்களையும் சரி – 2017-ல் களமிறக்கினால் மட்டுமே – அவர்களுக்கு ரேஷனில்லாமல் கணிசமான வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது தானே நிதர்சனம்! In fact – இரு புதுத் தொடர்களுக்குக் கான்டிராக்ட் போடும் சூழல் இப்போதே கனிந்துள்ள போதிலும் – அவற்றை நாசூக்காய் தள்ளிப் போட முயற்சித்து வருகிறோம்!

So பரீட்சார்த்த முயற்சிகள் பற்றியும்; புது அறிமுகங்கள் பற்றியும் ஒரு குழப்பமில்லா தீர்மானத்தோடு வேலையை ஆரம்பித்த போது – உரத்த குரல்களாய் கேட்டு வந்த “தனி டெக்ஸ் சந்தா” தான் எங்கள் கவனத்தை முதலில் ஈர்த்தது! ஆனால் அதன் சாதக / பாதககங்களை எடைபோட்டுப் பார்க்க கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வதே தேவலை என்பதில் தீர்மானமாக இருந்தேன்! அதற்கிடையே நமது முத்து காமிக்ஸின் இதழ் # 350 ஆன CCC-ன் வெற்றியைத் தொடர்ந்து எனக்குள் திடமாய் குடி புகுந்திருந்த யோசனையை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலிருந்து 2016-ன் சந்தா package-ஐத் தொடங்கலாமே என்று தோன்றியது! ‘மினி லயனுக்கு‘ மறுவரவு வாய்ப்புத் தந்து கார்ட்டூன் கதைகளை அந்தப் பக்கமாய் நகர்த்திடலாமே?‘ என்ற கோரிக்கையும் நீங்கள் ரொம்ப காலமாகவே எழுப்பி வருமொரு விஷயம் தான் என்றாலும் – வெறுமனே லக்கி லூக்கையும், சிக் பில்லையும் கொண்டு 12 மாதங்களை ஓட்டுவது சாத்தியமாகாதே என்ற ஆதங்கத்தில் நான் கண்டும், காணாமலும் இருந்து வந்தேன்! But கார்ட்டூன் ஸ்பெஷலின் பொருட்டு கர்னல் க்ளிப்டன்; லியனார்டோ; ஸ்மர்ப்ஃஸ் என்று புது வருகைகள் வலு சேர்க்க – ஏற்கனவே இடமில்லாமல் சீட்டியடித்துக் கொண்டிருந்த மதியில்லா மந்திரியாரையும்; நமது பிரிய ரின் டின் கேனையும் கூட்டணிக் குடைக்குள் கொண்டு வந்தால் 12 smiley இதழ்கள் தயார் செய்ய ஒரு நொடி போதுமென்று புரிந்தது! புலரவிருப்பது லக்கியின் 70-வது ஆண்டு என்பதால் அவருக்கு 2 slots; உட்சிட்டி கோமாளிகள் golden age கதைகள் இப்போது டிஜிட்டல் ஃபைல்களாகக் கிடைக்கின்றன என்பதால் அவர்களுக்கும் 2 slots; அப்புறம் நமது ஊதாப் பொடியர்களுக்கு 3 வாய்ப்புகள் என்ற நிர்ணயத்துக்கு அப்புறமாய் க்ளிப்டன்; மதியில்லா மந்திரி; ரி.டி.கே. ; லியனார்டோ; சுட்டி பென்னி என ஆளுக்கொரு இதழை ஒப்படைத்துப் பார்ததால் – 12 மாதங்களுக்கான பட்டியல் தயாராகி இருந்தது! ஒவ்வொரு மாதமும் ஒரு ஜாலியான கதை எனும் போது – மற்ற கதை பாணிகளின் இறுக்கத்தை மீறி இவை நமது வாசிப்புகளை இலகுவாக்குமென்று நினைத்தேன்! அது மட்டுமின்றி – ஒவ்வொரு மாதமும் ஒரு இதழாவது நம் வீட்டு இளைய தலைமுறைகளுக்கும் பிரயோஜனமாகிடும் விதமாய் அமைவதில் சின்னதாயொரு long term ஆதாயமும் நமக்கு இருக்கக் கூடுமல்லவா? கலக்கல் கலரில் – காத்திருக்கும் இந்தக் கார்ட்டூன் மேளாவுக்கு சந்தா C என்று பெயரிட்டேன் !  Dial C for a Cartoon Carnival in Color ! அதிக மண்டைக்குடைச்சலின்றி ‘மள மள‘ வென்று தீர்மானம் செய்ய உதவிய இந்த சந்தா C பள்ளிகளுக்கோ, பிறந்த நாள் பரிசுகளுக்கோ ஒரு அழகான வாய்ப்பாக அமையுமென்றும் தோன்றியது! எல்லாவற்றிற்கும் மேலாக – மாதா மாதம் வறண்டு போன அரிசோனா பாலைப்பிரதேசங்களைப் பற்றியே எழுதிக் கொண்டு திரியாமல் – ஜாலியாக ரின் டின் கேனுடன் கூத்தடிப்பதும்; ஊதாப் பொடி மனுஷர்களின் லோகத்திற்குள் நடைபயில்வதும்; கர்னல் க்ளிப்டனோடு இலண்டனின் வீதிகளை வலம் வருவதும் எனக்கொரு welcome relief ஆக இருக்குமே என்ற சின்ன சுயநலமும் இந்த சந்தா C-ன் பின்னே ஒளிந்துள்ளது!
சடுதியில் 12 இதழ்கள் தீர்மானமான பின்னே – அடுத்த பன்னிரண்டும் கூடப் பெரிய குழப்பமேதும் இல்லாது பட்டியலில் அணிவகுத்து நின்றன! அவை தான் மறுபதிப்புக் கோட்டா – 3 மாயாவி + 3 ஸ்பைடர் + 3 லாரன்ஸ் டேவிட் + 2 ஜானி நீரோ +  டெக்ஸ் வில்லர் (பழி வாங்கும் புயல்) என்ற கதைகளோடு! சமீபமாய் நமது இரவுக் கழுகாருக்கு அடுத்தபடியாக விற்பனையில் விறுவிறுப்பு காட்டுவது மாயாவி மாமாவும்; ஸ்பைடர் சித்தப்பாவுமே தான் எனும் போது – புத்தக விழா விற்பனைகளுக்கும், கடைகளில் நடந்தேறும் வியாபாரங்களுக்கும் மறுபதிப்புகள் ஒரு முக்கிய பங்கு என்பதை மறக்க இயலாது! அது மட்டுமன்றி – இந்த classic மறுபதிப்புகளை one last time அழகாக வெளியிட்டு விட்டால் – இந்தியாவில் ஊழல் காணாமல் போகும் வரைக்குமாவது இவற்றைக் கேட்டு குரல்கள் மறுபடியும் எழுந்திடாது என்ற நம்பிக்கை எனக்குள்ளது! So- ஈரோட்டில் வாசகர் சந்திப்பின் போது நான் மறுபதிப்பு செய்திட ஒத்துக் கொண்ட டெக்ஸின் “பழி வாங்கும் புயல்” மட்டும் இந்த Fleetway oldies உடன் கைகோர்த்துக் கொள்கிறது! இந்தப் 12 பெயர்கள் கொண்ட பட்டியலும் ‘மள மள‘ வென்று ரெடியாகி நிற்க – சந்தா D என்று இதற்குப் பெயரிட்டேன்! Dial D for Dynamic Reprints!

இந்த இரு சந்தா option-களும் finalize ஆன நிலையில் ஆக்ஷன் & சாகஸம் கொண்ட ரெகுலர் கதைகளின் பக்கமாகத் திரும்பும் தருணமும் விடிந்தது! ‘டெக்ஸ் சந்தா உண்டா – இல்லையா?' என்ற கேள்விகள் ஒரு பக்கம் விஷ்... விஷ்... என்று பாய்ந்து கொண்டிருந்தாலும் ஒரு சில விஷயங்களில் தெளிவாக இருந்தேன் நான்!

·  மாதந்தோறும் ஒரு 224 பக்க நீள டெக்ஸ் சாகஸத்தைத் தான் நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனில் – அது நடைமுறை சாத்தியம் என்ற எல்லைகளுக்குள் அடங்கிடாது என்பது தெளிவாகத் தெரிந்தது! 224 x 12 = சுமார் 2750 பக்கங்கள் எனும் போது அவற்றை இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்து வாங்குவது மட்டுமின்றி – தமிழில் மொழிமாற்றம் செய்வதும் ஒரு பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை!
· ‘டெக்ஸ்‘ என்ற ஹீரோவின் வசீகரம் - ‘ஓவர்டோஸ்‘ என்ற சங்கதியைத் தாண்டிச் செல்ல maybe உதவிடலாம் தான்! ஆனால் கௌ-பாய் கதை genre-ன் மீதே ஒரு லேசான அயர்ச்சி தோன்றக் கூடிய ரிஸ்க் இங்கே உண்டல்லவோ?
·        ஆனால் அதே சமயம் – சந்தாவில் ஒரு மேஜர் பங்கு நம் மஞ்சள் சட்டை மாவீரருக்கு ஒதுக்கப்படாது போயின் – மொத்த முயற்சியுமே தேறாது என்பது போன்றதொரு புதிரான mindset நம்மில் சிலரிடம் குடிகொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! விற்பனைகளில் டெக்ஸ் கதைகள் சந்மேகமின்றி முதலிடத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் – முழுக்க முழுக்க ஒரு டெக்ஸ் வரிசைக்குச் சாலை அமைப்பது எத்தனை தூரம் practical என்று எனக்கு கணிக்கத் தெரிந்திருக்கவில்லை!
·        அப்பொழுது என்னுள் எழுந்தது தான் சந்தா B-ன் யோசனை! முழுக்க முழுக்க வண்ண இதழ்கள் நம் பட்டியலில் அணிசேர்ந்து நிற்பது மட்டுமன்றி அவற்றின் பெரும்பகுதி பிரான்கோ-பெல்ஜியக் கதைகளாகவும் இருப்பது நிதர்சனம்! லேசாகத் தராசின் முள்ளை பீட்சா தேசத்தின் பக்கமாகவும் திருப்பினால் – Bonelli in Black & White சாத்தியமாகிடும் என்பது புரிந்தது! கலரின் ஆதிக்கமும் சமனமானது போலவும் இருக்கும் என்றும் பட்டது! Bonelli’s Best அடங்கிய சந்தாவினுள் ஒரு மேஜர் பங்கினை டெக்ஸுக்கு வழங்குவது; பாக்கியை ஜுலியா; ராபின்; மர்ம மனிதன் மார்டின் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற எண்ணம் வலுப்பெற்றது எனக்குள்! அந்த டெக்ஸின் “மேஜர் பங்கு” எத்தனை இதழ்கள் கொண்டதாக இருக்க வேண்டும்? என்ற சிந்தனை தான் நிறையவே மண்டையைப் பிறாண்டச் செய்தது! இறுதியில் I froze on 9 – because மறுபதிப்பில் ஒரு டெக்ஸ்; தீபாவளி மலரில் ஒரு டெக்ஸ் & ஈரோட்டுத் திருவிழாவில் ஒரு டெக்ஸ் என்பன எழுதப்படா நியதிகள் என்றாகிவிட்டுள்ள நிலையில் –ரெகுலர் 9 + ஸ்பெஷல் 3 – ஆக மொத்தம் 12 இதழ்கள் டெக்ஸுக்கு என்றாகி விடும்! ஆட்டைத் தூக்கிக் குட்டியோடு போட்டாலும், குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் கணக்கு ஒன்று தான் எனும் போது – ஏதோ ரூபங்களில் ஆண்டுக்கு 12 டெக்ஸ் கதைகள் என்ற அவாவைப் பூர்த்தி செய்ய முடிந்தால் சரி என்று தோன்றியது! டெக்ஸ் காதலர்களுக்கு இந்த ஏற்பாடு ரசிக்கும் என்ற நிலையில் – நடுநிலை நண்பர்கள் ‘ஆவ்... இது நிச்சயம் ஓவர்!‘ என்று நினைக்கக் கூடும் என்பதும் புரியாதில்லை எனக்கு! ஆனால் அங்கே தான் டெக்ஸின் மாறுபட்ட கதை நீளங்கள் உதவிடக் கூடுமென்று தோன்றியது!
94 பக்கங்கள் -
104 பக்கங்கள் -
192 பக்கங்கள் –
224 பக்கங்கள் –
260 பக்கங்கள் –
336 பக்கங்கள் –
என்று விதம் விதமான நீளங்களில் டெக்ஸ் கதைகள் இருப்பதால் – இதனில் கொஞ்சம்; அதனில் கொஞ்சம்; அதோ அங்கே இருப்பதில் கொஞ்சமோ கொஞ்சம் என்று திரட்டி வந்தால் boredom factor தலைகாட்டாது என்றே எதிர்பார்க்கிறோம்! தவிர – கதைகள் ஒட்டுமொத்தமாய் ஒரே template-ல் இல்லாது – மாறுபட்ட பல களங்கள் கொண்டவைகளாக இருக்கச் செய்ய ஏகப்பட்ட வேலைகள் செய்திருக்கிறோம்! அது மட்டுமன்றி – சித்திரத் தரங்களில் ப்ளஸ் – மைனஸ்கள் இல்லாமல் – ஒட்டுமொத்தமாய் எல்லாமே டாப் ஓவியர்களின் கைவண்ணங்களாக மட்டுமே இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டோம்! So- 94 பக்கக் கதைகள் கொஞ்சம்; mid range-ல் 200+ பக்கக் கதைகளில் கொஞ்சம்; 336 பக்கங்களில் இன்னும் சில என்று தேர்வு! வண்ணத்தில் ஸ்பெஷல் இதழ்கள்; b & w-ல் நார்மல் இதழ்கள்; நார்மல் சைஸ்; மெகா சைஸ்; என்று என்னென்ன வேற்றுமைகள் காட்ட முடியுமோ – அவை சகலத்தையும் திட்டமிட்டிருக்கிறோம்!
·        ஓராண்டில் ஒரே நாயகன் இத்தனை இதழ்களையும், பக்கங்களையும் ஆக்கிரமிக்கப் போவது இதுவே முதல் தடவை! இந்தப் பரீட்சை ஜெயம் தருமாயின் வாயெல்லாம் பல்லாக வரும் ஆண்டைக் கடக்கும் வாய்ப்புகள் நமக்குப் பிரகாசம்! அதே சமயம் இது பிராய்லரை வெந்நீர் அண்டாவிற்குள் பிடித்துத் திணித்த புண்ணியத்தை நமக்குத் தேடித் தருமாயின் – கொஞ்ச காலம் சத்தியமங்கலத்துக் காடுகள் பக்கம் யானை மேய்க்கும் வேலைக்கு ஆள் தேவையிருக்குமோ? என்று விசாரிக்க வேண்டி வரலாம்! பந்து இப்போதிருப்பது உங்கள் பக்கம் guys! பக்குவமாய் ஷாட் ஆடுங்களேன் – பளீஸ்! சத்தியமங்கலத்தில் நிறைய அட்டைப்பூச்சித் தொல்லைகள் உண்டென்று கேள்வி!!
·        ஆண்டாண்டு காலங்களாய் கோரப்பட்ட “திகில் நகரில் டெக்ஸ்” ஒருவழியாக வெளிச்சத்தைப் பார்த்திடவுள்ளது. 2016-ல் ! அதே போல – நினைவைத் தொலைத்துவிடும் கிட் – தன் தந்தை டெக்ஸோடேயே மோதும் 260 பக்க நீள் சாகஸமும் இந்தாண்டின் பட்டியலில் highlight! அப்புறம் “தலையில்லாக் கொலையாளி” மெகா சைஸில் b&w-ல் மிரட்டக் காத்துள்ளவொரு visual treat ! And 94 பக்க one shot கதைகள் எல்லாமே ஒன்றுக்கொன்று துளி கூட ஒற்றுமை இல்லாப் புது விதக் கதைப்பாணிகள் ! And 2016 தீபாவளி மலர் 3 தனித்தனி இதழ்கள் கொண்டதொரு box set-ல் அழகாக வரக் காத்துள்ளது ! 3 ஒரிஜினல் ராப்பர்கள்; போசெல்லியின் மிரட்டலான கதைக்களம்; முழு வண்ணம் என்பதோடு மட்டுமன்றி – இம்முறை நாம் பயன்படுத்தவுள்ள box நல்ல தரமாக இருக்கும்! So- மாதந்தோறும் டெக்ஸ் உங்களை சந்திக்கக் காத்திருப்பினும் – சலிப்பு நேர்ந்திடாதிருக்க நம் சிற்றறிவுக்கு எட்டிய எல்லா சாகசங்களையும் திட்டமிட்டுள்ளோம் ! But ultimately -ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உங்கள் புரிதல் ரொம்பவே இங்கு அத்தியாவசியம் ! ஒவ்வொரு டெக்ஸ் சாகசமும் ஒரு 'தலைவாங்கிக் குரங்காக ' ஒரு சைத்தான் சாம்ராஜ்யமாக இருத்தல் கடினமே ! டெக்ஸ் சூப்பர்மேன் போல் ஆற்றல் கொண்டவராய் இருந்திடலாம் தான் - ஆனால் அவரைப் படைத்திடும் கதாசிரியர்கள் நம்மைப் போலவே இரத்தமும், சதையும் ஆனவர்களே ! மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் !  

டெக்ஸின் யானைப் பங்கு தொகுதிப் பங்கீடு முடிந்தான பின்னே – மர்ம மனிதன் மார்ட்டினின் ஒரு முழுநீள சாகஸம்; ராபின் & ஜுலியா என போனெல்லியின் 12 இதழ்களைப் பட்டியலிட்டு முடித்தேன்! So- முழுக்க முழுக்க b&w இதழ்களாய்; முழுக்க முழுக்க இத்தாலியப் படைப்புகளோடு சந்தா B தயாராகியிருந்தது! Dial B for Bonelli's Best in Blach & White !! 

கட்டக் கடைசியாக ஆக்ஷன் & அட்வென்சர் பக்கம் ஒளிவட்டத்தைப் பாய்ச்சும் சந்தா A மட்டுமே காத்து நின்றது நம் முன்னே!
·        லார்கோ
·        வேய்ன் ஷெல்டன்
·        கமான்சே
·        XIII
என்ற முதல்நிலை நாயகர்களுக்கு வாய்ப்பை உறுதி செய்த போதே ஆறு இதழ்கள் பூர்த்தியாகியிருந்தன! ஆண்டு மலர்; ஈரோட்டுத் திருவிழாவுக்கொரு மலர் ; தீபாவளி மலர் என 3 ஸ்பெஷல் தருணக் கோட்டாக்களை நிரவல் செய்திட அடுத்து முனைந்தேன்! ஆண்டு மலர் – நமது 30 ஆண்டு பிரான்கோ-பெல்ஜியப் பயணத்தை highlight செய்யும் விதமாய் இருந்தால் தேவலை என்று தோன்றியது! So- இந்த முப்பது ஆண்டுகளும் நம்மோடு travel செய்துள்ள சில back bench boys-ன் பின்னோக்கியும், முன்னோக்கியுமான பயணங்களை கொண்ட கதைகளை ‘டிக்‘ அடித்தேன் ! கேப்டன் பிரின்ஸ் ஆரம்ப நாட்களில் ஒரு இன்டர்போல் ஏஜெண்டாக இருந்தவர் என்பது நாமறிந்திருக்கா விஷயம்! அந்நாட்களது கதைத் தொகுப்புகள் – இது வரை நாம் படித்திரா புத்தம் புது ரகம்! அதே போல ரிப்போர்டர் ஜானியின் கதையில் நான் தேர்வு செய்துள்ளது கூட ஒரு timeline சாகஸம்! ஜானியின் தந்தை துவக்கும் ஒரு புலன்விசாரணையை ஒரு தலைமுறைக்குப் பின்பாக ஜானி தொடர்கிறார்! And please note – இது ஜானியின் புது பாணி கிராபிக் நாவல் அல்ல! அந்தக் கதையை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துப் படித்துப் பார்த்த போது – கதை ஒரே shot–ல் முடிவது போல் அல்லாது தொடர்ந்திடக் கூடியது போல் பட்டது! இது வரை அதன் மறுபாகம் பற்றிய அறிவிப்பு ஏதும் படைப்பாளிகளிடமிருந்து வராத நிலையில் இந்தப் புது பாணியை ஆரம்பிப்பதில் எனக்குத் தயக்கம்! So- இம்முறை ஜானியின் classic கதையினில் ஒன்றே  தொடர்கிறது! சாகஸ வீரர் ரோஜரைப் பொறுத்தவரையிலும் இதே நிலவரம் தான் !; புதிதாகத் தொடங்கியுள்ள கிராபிக் நாவல் 2020-ல் நடப்பது போலானதொரு scenario – and இதுவும் ஒன்-ஷாட் கதையல்ல - நீண்டு செல்லும் தொடரே ! ஆகையால் அந்தப் புதிய பாணிகளும் / கதைகளும் கொஞ்சம் தொடர்ந்தான பின்பு – நமக்கு ரசிக்கும் விதமாய் கதைகள் இருப்பின் பயன்படுத்திக் கொள்வோமே என்று நினைத்தேன்!

ஆகஸ்டில் நடந்திடும் ஈரோட்டுப் புத்க விழாவின் போதும் ஒரு ஸ்பெஷல் இதழ் இருந்தால் தேவலையே என்ற நண்பர்களின் வேண்டுகோள் நினைவில் நின்றிட; “ஸ்பெஷல்” என்றாலே “இரவுக் கழுகார் அவசியம்' என்ற நண்பர்களின் ஆசைகளும் சிந்தனையில் நிழலாட – ஒரு மினி LMS“ஐத் திட்டமிட்டேன் – “ஈரோட்டில் இத்தாலி” என்று! Given a choice – இன்னமும் புஷ்டியாய்; இன்னமும் கூடுதலாய் கதைகளோடு இந்த இதழை உருவாக்கியிருப்போம் தான்! ஆனால் சற்றே conservative-ஆன திட்டமிடலே சென்றாண்டின் சந்தாத் தொகைகளை எட்டிப் பிடித்து விடும் நிலையில் –இதழ்களின் கூடுதல் பருமன் - பர்ஸ்களுக்குக் கூடுதல் பளுவாகிப் போய்விடுமே என்ற பயம் தலைதூக்கியது! So- அடக்கி வாசிப்போம் என்று சொல்லிக் கொண்டேன்!

6 ரெகுலர் இதழ்கள் + 3 ஸ்பெஷல்கள் என்றான பின்பு – நமது இளவரசிக்கு ஒற்றை slot ஆவது ஒதுக்கும் கடமை பாக்கி நின்றது! ‘என் கடன் – (மாடஸ்டிக்கு) பணி செய்து கிடப்பதே!‘ என்றொரு one point agenda வுடன் காலத்தை நகற்றும் ஒரு ஜீவனின் பொருட்டு இந்தத் தேர்வு என்று வைத்துக் கொண்டாலும் சரி; எனது ‘இளவரசிக் காதலின்‘ வெளிப்பாடாய் இதைப் பார்த்தாலும் சரி – சந்தா A வின் ஒரே b&w இதழாக மாடஸ்டி மாத்திரமே இருந்திடுவார்!
இறுதியான 2 சீட்களை மட்டுமாவது புதியவர் யாருக்கேனும் ஒதுக்குவோமே என்று யோசித்தேன்! நாற்பது – ஐம்பது கதைகள் கொண்டதொரு நெடுந்தொடருக்குச் சொந்தக்காரராக இல்லாது – crisp-ஆன கதைக்களத்தில் பயணம் செய்பவராக; சமகாலத்து ஆசாமியாக இருந்தால் தேவலையே என்ற தோன்றியது! அப்போது தான் என் நினைவுக்கு வந்தவர் John Tiffany! மனுஷன் ஒரு நவீனகால வெகுமதி வேட்டையன்! பணத் தேடலில் எதுவுமே சரியே என்ற கோட்பாடு கொண்டவன்! ‘ஜான் டைனமைட்‘ என்ற பெயரில் நம்மிடையே அறிமுகம் காணப் போகும் இவரது தொடரில் இது வரை 2 கதைகள் மட்டுமே உருவாகியுள்ளன என்பதால் அவை இரண்டையுமே 2016-ல் வெளியிடவுள்ளோம்! கொஞ்சம் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே சிதறலாய் இருப்பினும் – பௌன்சரில் போல அவை கதையின் கருவோடு பின்னிக் கிடப்பவையல்ல என்பதால் எடிட்டிங் சாத்தியம் என்றுபட்டது! அந்த நம்பிக்கையோடு – இந்தப் புதுவரவோடு சந்தா A-வின் 12 இதழ்ப்பட்டியலை முழுமைப்படுத்தினேன்! So- Dial A for Action & Adventure!


பட்டியலைப் பூர்த்தி செய்தான பின்னே நிதானமாக படித்துப் பார்த்துக் கொண்டே போன எனக்குள் எழுந்த சில கேள்விகள் உங்களுக்கும் எழுந்திடும் என்று பட்டது! நீங்கள் கேட்கத் தொடங்காத கேள்விகளுக்கு நானே பதில் சொல்லி விட்டால் உங்கள் நேரங்கள் மிச்சமாகும் என்பதால் இதோவொரு impromptu கேள்வி-பதில் நேரம்!

·        ப்ளூகோட் பட்டாளத்தைக் காணோமே – கார்ட்டூன் கோட்டாவில்?
     
சமீபமாகவே சொதப்பி வருவது நமது cricketing men in blues மட்டுமல்ல – நமது (ஸ்கூபி-ரூபி) ப்ளூகோட் படையும் தான்! கார்ட்டூன்களாகவும் பார்த்திட முடியவில்லை; ஆக்ஷனாகவும் ரசிக்க முடியவில்லை என்ற உங்களின் புகார்கள் விற்பனையில் எதிரொலிப்பதை கவனிக்க முடிகிறது! 2015-ன் இதுவரையிலான எல்லாப் புத்தகவிழாக்களிலும் மிகச் சுமாரான விற்பனை கண்டுள்ள கார்ட்டூன் கதைகள் ப்ளூஸ் சாகஸங்களே! So இவர்களுக்கு சின்னதாகவொரு பிரேக் தேவலை என்று நினைத்தோம்!

·        ஸ்மர்ஃப்ஸ் – 3 இதழ்களுக்குத் தகுதியானவர்கள் தானா?

Oh..yes!!! இந்த நீல மனிதர்களின் உலகமும் ஒருவிதத்தில் தோர்கலின் மாயாஜால உலகைப் போன்றது! அதனுள் நாம் ஆழமாய் செல்லச் செல்ல ஏகப்பட்ட புது அனுபவங்கள் கிட்டிடும்! சிரிப்பில் விழுந்து புரளச் செய்வது மட்டுமே ஒரு கார்ட்டூன் கதையின் இலட்சியமென்றில்லாது – ஒரு அழகான, இதமான வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவைகளும் classy கார்ட்டூன்களே என்பதை ஸ்மர்ஃப்ஸ் நிச்சயம் நிரூபிப்பார்கள்!

· மறுபதிப்பில் Fleetway தவிர- இப்போதைக்கு வேறு கதைகளே கிடையாதா?
     
நிறையப் பேசியிருக்கிறோம் இது பற்றி! So- கொஞ்சம் பொறுமையோடு தொடர்ந்தால் Fleetway படலத்தை நிறைவு செய்து விட்ட திருப்தியோடு அடுத்த batch ரீப்பிரிண்டுகளுக்குள் தலை நுழைக்கலாம்! And “இரத்தப் படலம் – முழுத் தொகுப்பும் வண்ணத்தில்?” என்ற கனவு தற்போதைக்கு கனவாகவே தொடரட்டுமே? 2020-க்கு அப்புறமும் இந்தக் கோரிக்கை வலுவோடு தொடர்ந்தால் அது பற்றி யோசிப்போமே? எல்லாக் கனவுகளும் ஏக காலத்தில் நனவாகிப் போய்விட்டால் கனவுகளுக்கே கவர்ச்சியில்லாது போய் விடாதா?

·        ஜில் ஜோர்டனின் நாடு கடத்தல் ஏனோ?
     
ஏற்கனவே ஒரு main stream கார்ட்டூன் சந்தாவே நடைமுறை காணப் போகும் வேளையில் கார்ட்டூன் பாணியிலான ஜில்லையும் போட்டால் overkill ஆகிடக் கூடாதே என்று தோன்றியது! Again just a short break!

·        “தில் இருந்தால் திகுலுண்டு” என்ற பில்டப் என்னாசோ?

தனித் தண்டவாளம் – பரீட்சார்த்த முயற்சிகளுக்கு என்றான பின்னே அவற்றை ரெகுலர் சந்தாப் பக்கமாய் தலைகாட்டச் செய்வானேன்? ஏப்ரலில் இதற்கு விடை கிடைக்கும்! தில்லும் இருக்கும், திகிலும் இருக்கும், அழகான புது பாணிக் கதைகளும் இருக்கும் !

·        ஸ்பெஷல் இதழ்கள் இன்னும் கனமாக இருக்கலாமே 2016-ல்?

நிச்சயமாய் எனக்கும் அந்த ஆசை உண்டு தான்! ஆனால் உதைக்கும் பட்ஜெட்டுகள் தான் இங்கே ஸ்பீட்-பிரேக்கர்களாகி நிற்கின்றன! ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.4000/- என்ற தொகையில் நிற்கும் சந்தாவை இன்னமும் கனமான நம்பர்கள் பக்கமாக இட்டுச் செல்லும் தைரியம் நம்மிடமில்லை! “என் பெயர் டைகர்” கற்றுத் தந்த பாடம் நமக்கு long run-ல் ஒரு உபயோகமான பாடம் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை! அதுமட்டுமன்றி 2016-ல் பெரிதாய் மைல்கல்கள் எதையும் நாம் தாண்டிச் செல்லும் வேளைகளுமில்லை என்பதால் – முகாந்திரங்களும் குறைச்சலே நமக்கு! 2017-ல் 2 மில்லியன் ஹிட்ஸ்; முத்துவின் அடுத்த landmark; இத்யாதிகள் காத்திருப்பதால் அங்கே நமது கொண்டாட்டங்களை இன்னும் கொஞ்சம் விமர்சையாக வைத்துக் கொள்வோமே?

·        மேஜிக் விண்ட் – ஒற்றைக் கதை மட்டும் தானா? மார்ட்டினுக்கும் அதே one shot மட்டுமா?
     
‘டெக்ஸ்‘ எனும் ஆலமரம் விழுதுகளோடு கம்பீராய் நிற்கத் தேவையாகும் போது அரச மரங்களும், வேம்புகளும் கொஞ்சம் பின்வாங்கத் தானே வேண்டும்? ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற நிலைப்பாட்டை எடுத்தான பின்பு – ஜெயமோ; வேறென்னவோ – அதை டெக்சோடே சந்திப்போமே? Moreover இந்த சந்தா B ஹிட்டாகும் பட்சத்தில் – தொடரும் நாட்களில் அதன் இதழ் எண்ணிக்கையை விரிவாக்கி – மற்ற போனெல்லி நாயகர்களுக்கும் கூடுதல் வாய்ப்புகள் தந்திட முடியும்  ! இங்கேயும் ‘வாய்ப்பு‘ எனும் கதவை விசாலமாகத் திறந்தே வைத்துள்ளோம்! அதனை பயன்படுத்திக் கொள்வதா?- அல்லது அப்படியே தொடரச் செய்வதா? என்ற final call உங்களது guys! எப்போது வேண்டுமானாலும் black & white இதழ்களின் எண்ணிக்கைகளை அதிகம் பண்ணிடும் சாத்தியங்கள் உண்டு! So please do understand that the slots to other heroes can indeed be upped!

·        கோடை மலர்” கிடையாதா?

பட்ஜெட்; பளு; விட்டமின் ‘ப‘; etc.. etc... என்ற அதே பல்லவியைத் தான் பதிலாக்கிட வேண்டும்!

·  சரி – பெருசாய் புதுசாய் ஏதும் அறிமுகங்கள் இல்லாத சூழலில் என்ன மாற்றங்களை செய்வதாக உத்தேசம்?
     
Making-ல்; அட்டைப்படங்களில்; உட்பக்க content-களில்; எழுத்து பாணிகளில் ‘திடுக்‘ மாற்றங்கள் இல்லாவிட்டாலும் – அத்தியாவசிய முன்னேற்றங்கள் செய்திடவுள்ளோம்! இங்கே உங்கள் சகாயங்கள் பெரியளவில் நமக்குத் தேவை! என்ன தான் நம்மில் பெரும்பகுதியினருக்குப் பழசு மீது தீரா நாட்டம் இருப்பினும் – புதுப் பாதைகள் / புதுப் பாணிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய வேளைகள் புலர்ந்து வருவதை நாம் முழுமனதாக ஏற்றுக் கொண்டாக வேண்டும்! அட்டைப்படங்களில் புது சிந்தனைகளை அமல்படுத்த; உட்பக்கங்களில் புதுசாய் filler pages-களைக் கொண்டு வந்திட, நமது எழுத்து நடைகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றிட -  உங்கள் புரிதல்கள் நமக்கு ரொம்பவே அத்தியாவசியம்! கதைகளையும் அதன் நாயகர்களையும் முன்சீட்டை ஆக்ரமித்துக் கொள்ள அனுமதித்து விட்டு – நான் சிறுகச் சிறுகப் பின்னணியில் இருந்திடுவது தான் காத்திருக்கும் காலங்களுக்கான modus operandi ஆக இருந்திடலாம்! நாயகர்களை விட அவர்கள் மீது தற்போது படிந்து கிடக்கும் எனது நிழல் பெரிதாய் இருக்கிறதாய் எனக்குத் தோன்றுவதால் – அந்தக் குறைபாட்டைத் திருத்திட எனக்கு சுதந்திரம் தரக் கோருகிறேன் guys! And – கதை நீங்கலாக பாக்கி filler pages-களை நிரப்பிட உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது! ஒவ்வொரு இதழையும் ‘பரபர‘ வென்று கதையளவிற்குத் தயார் செய்தான பின்னே – அந்தப் பக்க நிரப்பிகளின் பொருட்டு நிறையவே  நேரங்களை விரயம் செய்ய நேரிடுகிறது! Filler pages களில் பிரயோஜனமாக; அதிகமாய் நேரத்தை விழுங்காவிதமாய் என்ன செய்திடலாம்? இங்கே உங்களது பங்களிப்புகள் ஏதேனும் இருக்க சாத்தியமாகிடுமா? ஏதேனும் (காமிக்ஸ்) தொடர்கதைகள் போடுவது உருப்படியான காரியமாக இருக்குமா? Thoughts please guys?

·        ஜனவரியின் சென்னைப் புத்தக விழாவுக்கு என்ன பிளான்?
     
Again – பந்து உங்கள் தரப்பில் தான்! ”என் பெயர் டைகர்” முன்பதிவுப் பட்டியல் 140-ல் நிற்கிறது !! (பட்டியலை டைப் செய்யக் கோரி நம்மவர்களை நேற்றே நினைவுபடுத்தி இருந்தும் விடுமுறை ஜோரில் மறந்து விட்டார்கள் ! So இன்றைய பகல் பொழுதில் அடியேனே அந்த வேலையை செய்து விடுவேன்)! அடுத்த பத்துப் பதினைந்து நாட்களுக்குள் dramatic ஆக முன்பதிவுகள் சூடுபிடித்தால் ஜனவரியில் இதன் ரிலீஸ் சாத்தியமாகும்! If not, ‘எ.பெ.டை‘ ஏப்ரலுக்கே! எவ்விதமிருப்பினும் வழக்கமான வண்ண இதழ்கள் நீங்கலாக - டெக்ஸின் ஒரு வெயிட்டான (b&w) இதழ் ஜனவரிக்கு உண்டு!

· கிராபிக் நாவல்கள் – ரெகுலர் சந்தாக்களில் கிடையவே கிடையாதா?
     
இதற்கென ஒரு தனியரங்கு யாருக்கும் சிரமங்கள் தராத விதத்தில் அமைந்திருக்கும் போது – அதனை நோண்டி வைக்க மனம் வரவில்லை! So சந்தா Z அதைப் பார்த்துக் கொள்ளும்! 

 • தோர்கல்  ?

Again சந்தா Z !!

கதைகளின் விளம்பர templates, நவம்பர் இதழோடு வரக் காத்திருக்கும் வண்ண (குட்டி) புக்கில் இருந்திடும் ! So முழுமையாய் கதைகளை / டிரெய்லர்களைப் பார்த்திட நவம்பரின் ஆரம்ப நாட்கள் வரை சற்றே பொறுமை ப்ளீஸ்! விலைகள் பற்றியும் ; காத்திருக்கும் கதைகள் பற்றியும் நவம்பர் ஹாட்லைனில் விரிவாக எழுதியுள்ளேன் ! அவை அனைத்தையும் இங்கே அட்சர சுத்தமாய் ஒப்பிப்பின் - டைப் அடிக்கும் என் விரலும் புரட்சி செய்யத் தொடங்கி விடும் ; இதழைப் படிக்கும் போது உங்களுக்கும் அந்த 3 பக்கங்கள் 'மறு ஒலிபரப்பு' விரயமாகத் தெரியக் கூடும் ! So தற்போதைக்கு அவசியத் தேவைகள் பக்கமாய் மட்டுமே என் சிந்தனைகளைத் திருப்பியுள்ளேன் !


இதற்கு மேல் எழுதினால் – காலுக்குள் இடறும் என் நாக்கார் நிரந்தரமாய் தரையிலேயே குடித்தனம் பண்ணத் தொடங்கிடும் ஆபத்துள்ளதால் இந்தாண்டின் மிக நீ-ள-மா-ன பதிவை நிறைவு செய்கிறேன்! கிளம்பும் முன்பாய் ஓரிரு குட்டிக் கோரிக்கைகளும் - ஒரு மெகா நன்றியும் !! கோரிக்கைகள் முதலில் :

'ரசனைகளில் ஒற்றுமை' மிக மிக அரிதான விஷயம் எனும் போது - நம்மில் அனைவருக்கும் 100% திருப்தி தரக் கூடியதொரு அட்டவணை பிரம்மாவுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை நாம் அறிவோம்  ! இயன்றவரை உங்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளில் நின்று சிந்திக்க நிறையவே முயற்சித்துள்ளேன் !  நம் தரப்பில் உள்ள limitation-களுக்குள் பணியாற்றும் அவசியங்களுக்கும் நான் தலைவணங்காது இருக்க இயலாது எனும் போது - கத்தி மேல் நடப்பது போலாகிறது என் பணி ! இது தான் ULTIMATE என்று ஒரு பொழுதும் நான் சொல்லப் போவதில்லை - ஆனால் தற்போதைய சூழலில் ; உங்கள் ரசனைகளையும் / மார்கெட்டின் வாங்கும் திறன்களையும் கருத்தில் கொண்டு கவனத்தோடு தயார் செய்துள்ள அட்டவணை இது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் ! So 2016-ன் schedule பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாய் நிறைவு செய்ய நாங்கள் தவறியிருக்கும் பட்சத்தில் - அதன் பின்னணியில் நிச்சயமாய் ஏதேனும் காரணம் இருக்கும் என்ற புரிதலுக்கு எங்களது அட்வான்ஸ் நன்றிகள் ! 

End of the day - 'ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை !' என்பதே நம் தீரா ஆசை என்ற புரிதலுக்கும் அட்வான்ஸ் நன்றிகள் !! 
"மெகா நன்றி" எதற்கென்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் !! இந்தப் பயணமும் சரி ; இந்த சந்தோஷங்களும் சரி - உங்கள் ஒவ்வொருவரின் துணையின்றிச் சாத்தியமே கிடையாது அல்லவா ?! ஓட்டுனர் இருக்கையில் இருப்பது நானாக இருக்கலாம் தான் - ஆனால் என் பின்னே சன்னமானதொரு அன்புக்குழாமின் invisible கரங்களும், ஆசீர்வாதங்களும் இல்லாது போனால் வண்டி முதல் கியரைத் தாண்டியே இருக்காதே ! சங்கட நாட்களிலும், சந்தோஷ வேளைகளிலும் மாறா நேசத்தோடு நமக்குத் துணை நின்றுவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் மனதார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ! தொடரும் ஆண்டிலும், காலங்களிலும் உங்கள் அன்புக்கு அருகதைகள் எங்களுக்குத் தொடர்ந்திடும் பட்சத்தில் எங்களது வரங்களை எண்ணி நிச்சயமாய் குதூகலிப்போம் !! Thank you ever so much!!! 

புலியும் வந்தே விட்டது guys - கூடவே உங்களின் சந்தாக்களைப் புதுப்பிக்கும்  தருணமும் தான் ! டிசம்பரின் ஆரம்பத்துக்குள் உங்கள் சந்தாக்கள் எங்களை வந்தடையும் பட்சத்தில் 2016-ன் வேலைகளைத் தெளிவாய்த் துவங்கிட இலகுவாக இருக்கும் ! அது மட்டுமன்றி- "GIFT A SUBSCRIPTION"பக்கமாகவும் உங்கள் சிந்தனைகளை ஓட விடலாமே ? Please do chip in folks ! மீண்டும் சந்திப்போம் - விடுமுறைகளை ஜமாயுங்கள் !!    


    
 
     
(சித்திர ) டிரெய்லர்கள் தொடரும்....கொஞ்ச நேரத்தில் !! 
P.S : And  இம்முறை - சந்தாக்களுக்கு ஒரு குட்டிப் பரிசாய் ஒரு டி-ஷர்ட் தரவிருக்கிறோம் ! So  - உங்கள் சந்தாக்களோடு - உங்களுக்குக்கான டி-ஷர்ட் அளவினையும் ( S : M : L : XL : XXL ) குறிப்பிட மறந்திடாதீர்கள் நண்பர்களே !! 

401 comments:

 1. அருமை விஜயன் சார்
  படித்து வருகிறேன் :))
  .

  ReplyDelete
 2. அலோ வணக்கம் நண்பர்களே....வணக்கம் சார்..

  ReplyDelete
 3. நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று முன் கூட்டியே எ(உ)ங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த ஆசிரியர் அவர்களுக்கு ஆயுதபூஜை பொறியுடன் எங்கள் போராட்ட குழு வரவேற்கிறது ...

  படித்து விட்டு வருகிறோம் சார் ... :)

  ReplyDelete
 4. காலை வணக்கம் நண்பர்களே. வந்தே விட்டது. முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 5. விஜயன் சார், கடந்த வருடம் “பரண் உருட்டும் படலம்” என்ற பதிவு என்னை தலை கீழாக புரட்டி சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடவைத்த நாள். இன்றும் அந்த நாளை மறக்க முடியவில்லை. மீண்டும் அது போன்ற சந்தோசத்தை தரும் பதிவாக இதனை எண்ணுகிறேன்.
  படம் கொஞ்சம் லேட்டா போட்டாலும் விசில் சும்மா பறக்குது, எப்பா காது கிழியுது! இத பார்க்கதுல அடுத்த வருட அட்டவணை செம ஹிட் என புரிந்து கொள்ள முடிகிறது. அட்டவணையே இப்படினா அடுத்தவருட கதைகளை சொல்லவா வேணும். சூப்பர்.

  ReplyDelete
 6. ஹைய்யோடா எவ்வளவு பெரிய பதிவு ....புத்தகத்தை முதல் நாள் மாதிரி படிக்காம அலைபேசியை தடவிட்டே இருக்கேனே ...படிடா பரணி ....

  ReplyDelete
 7. வந்துட்டேன் சார்...

  ReplyDelete
 8. உள்ளேன் அய்யா!!!

  (எம்மாம் பெரிய பதிவு) :-)

  ReplyDelete
 9. விஜயன் சார்,
  // Dial C for a Cartoon Carnival in Color ! //
  சரியான முடிவு! குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. கிப்ட் கொடுபதற்கு சிறந்தது.

  அதே நேரம் கடந்த 2 வருடமாக மதியில்லா மந்திரியை அட்டவணையில் இடம் பெற செய்து கடைசி வரை நீங்கள் காண்பிக்காமல் விட்டதற்கு எனது ".கடும் கண்டனம்கள்" . அடுத்த வருடமாவது இவரை சொன்னபடி எங்கள் கைகளில் தவழவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வருடம் ஹிட் அடித்த காமிக்ஸ் ஹீரோகளை (காமெடி கர்னல், லியனார்டோ; ஸ்மர்ப்ஃஸ்) அடுத்தவருடமும் இடம் பெற செய்தமைக்கு நன்றி.

   Delete
  2. Parani from Bangalore : "தனித் தடத்தில் கார்டூன்கள்" என்ற சிந்தனைக்கு வலு சேர்த்தவர்களே இந்தப் புதியவர்கள் தானே ?

   Delete
 10. விஜயன் சார்,
  // Dial D for Dynamic Reprints!//
  இந்த மறுபதிப்பில் வரவுள்ள கதைகளின் பெயர்களை குறிப்பிட்டால் நண்பர்கள் சந்தோசத்துடன் விரைந்து சந்தாகட்ட வசதிப்படும்.. அதாவது மறுபதிபின் சந்தா அதிகரிக்கும்.

  ReplyDelete
 11. வணக்கம் நண்பர்களே... படித்துவிட்டு வருகிறேன் ...

  ReplyDelete
 12. WOW! Great News for TEX fans. Thanks again for the great choices of stories.

  Aldrin Ramesh from Oman

  ReplyDelete
 13. அட்டகாசம்
  அருமை
  அமர்க்களம்

  அனைத்து தரப்பினரையும் கணக்கில் கொண்டு
  தயாரித்துள்ளீர்கள்

  மிக நன்று சார்

  கலக்கல் சார்

  ( பேட்மேன் வருவார் என எதிர்பார்த்தேன் சார்
  சரி அதான் அடுத்த வருடம் புதுவரவாக
  ரவுண்டு கட்டி அடிப்பாருன்னு நீங்களே சொல்லிட்டீங்களே )

  ReplyDelete
 14. மிக்க சந்தோசம்! இன்று எனக்கு மறக்க முடியாத ஒரு நன்நாள்.

  அல்ட்ரின் ரமேஷ்

  ReplyDelete
 15. வாவ் அருமை ஆசிரியரே,நாக்கில் ஜலம் ஊறும் படங்கள் பத்து.

  ReplyDelete
 16. Tex story patriya ungal mudivu Amiga sariyanathu sir nanrigal pala .

  ReplyDelete
 17. சந்தா கட்டியாச்சு. அட்டவணை அமர்க்களம். நிறைவான சந்தோசத்துடன் தூங்க போகிறேன்...

  சீக்கிரமா சந்தா கட்டுங்க நண்பர்களே.. அப்பத்தான் ஏப்ரல்ல இன்னும் நிறைய கேட்டு வாங்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. //சந்தா கட்டியாச்சு. ///
   சூப்பர்!! வாழ்த்துகள் M.P அவர்களே!!!

   நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பே (EBFல்) அடுத்த வருடத்திற்கான சந்தாவைக் கட்டிவிட்டேன்!

   Delete
 18. டெக்ஸ் 12 கேட்டது கிடைத்து விட்டது :) வரும் மாதம் புத்தகங்கள் வரும் பேக்கில் போன வருடம் போல இந்த வரும் வருட புக்லேட் கீடைக்கும் அல்லாவா! சார் போன வருடம் போல இந்த வருடம் சந்தா பணம் பாதி அனுப்பி விட்டு மிதம் 3மாதம் கழித்து அனுப்பும் முறை வரும் வருடம் நடைமுறையில் உண்டா என சொல்லுங்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. Ranjith : Well...சென்றண்டின் இரு தவணைகளில் சந்தா என்ற சந்தா முறை அவ்வளவாக சோபிக்கவில்லை என்பதால் இந்தாண்டு அதனை நடைமுறை செய்திட தயக்கங்கள் உள்ளன. எனினு இப்போது பாதியும் - ஜனவரியில் மீதியும் செலுத்தும் வசதியை எடுத்துக் கொள்ளலாம் தான் !

   Delete
  2. புக்லெட் சார் .

   Delete
 19. நண்பர்களின் விருப்பத்தை ஏற்று மாதம் தோறும் டெக்ஸ் தந்த உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் சார் ....

  ReplyDelete
 20. விஜயன் சார், @ தோர்கல் பற்றிய அறிவிப்பு இந்த பதிவில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது!

  // Dial B for Bonelli's Best in Blach & White //
  டெக்ஸ் ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் விஷயம்! நல்ல முடிவு! எனது ஆதரவு இதற்கு உண்டு!

  அதே நேரத்தில் மாடஸ்டி (இளவரசிக்கு) ஒரே ஒரு ஸ்லாட் மட்டும் ஒதுக்கி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது :-(

  magic வின்ட் ஒரு கதை மட்டும்தான் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏப்ரல் மாதத்திற்கு பின் முடிந்தால் இவருக்கு கூடுதல் ஸ்லாட் ஒதுக்கவும்.

  டயபோலிக் - இந்த முறையும் இவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஆச்சரியமான விஷயம். ஒரு ஸ்லாட்டாவது கொடுத்து இருக்கலாம்.

  ஆனால்: இதைவிட முக்கியம் அடுத்த வருடமும் நமக்கு காமிக்ஸ் மழை தொடர்ந்திடும் என்பதால் நன்றி! சந்தோசம்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : //தோர்கல் பற்றிய அறிவிப்பு இந்த பதிவில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது!//

   கேள்வி-பதில் பகுதிக்குள் இன்னொருமுறை மூழ்கிப் பாருங்களேன் சார் - பதில் இருப்பதைக் கவனிக்க இயலும் !

   And டயபாலிக் கதைகள் வாங்கிய சாத்துக்களுக்கு அப்புறமாய் அவற்றை நாம் தேர்வுப் பட்டியலில் வைத்திருக்கவே இல்லையே ?

   Delete
  2. விஜயன் சார் @ சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த அறிவிப்பில் தோர்கல் எத்தனை கதைகள் என்று சொல்லாமல் விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

   நன்றி விஜயன் சார்.

   Delete
 21. டியர் விஜயன் சார், பதிவை முழுக்க படித்துவிட்டேன். மாதாமாதம் டெக்ஸ் என்பதை.தவிர வேறெதும் மனதில் பதியவில்லை:-)இன்னொரு முறை பதிவை படிக்கவேண்டும் போல.அந்தளவு டெக்ஸே மனதில் வியாபித்துள்ளார்.
  அடுத்த வருடம் என் பெயர் டைகரை தவிர டைகருக்கு,வேறெதும் ஸ்லாட் இல்லையென்பது,சிறிது வருத்தம் தந்தாலும், உங்களை மென்மேலும் சிரமம் தர மனம் வரவில்லை.

  முடிந்தளவு அனைத்து தரப்பையும் திருப்தி செய்துள்ளீர்கள் என்றே, சொல்ல வேண்டும் சார். ஹாட்ஸ் ஆப்.

  அடுத்த வருடம் மாடஸ்டிக்கு ஒரே கதைதான் என்று அறிவித்துவிட்டீர்கள்.அந்த கதை கழுகு மலை கோட்டை மறுபதிப்பாக,நல்ல தரமான தாளில்,தெளிவான சித்திரதரத்துடன் அமைந்தால், மிக்க மகிழ்ச்சி.
  டெக்ஸ் மேக்ஸி கலரில் என்று சொல்லி விட்டு,அதை கருப்பு வெள்ளையாக மாற்றி விட்டீர்களே சார். 4000பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டும் என்று நீங்கள் பிரம்ம பிரயத்தனம் செய்வது தெரிகிறது சார். பட்ஜெட் மட்டுமே பார்த்தால்,இவ்வுலகில் பாகுபலி சாத்தியபடாமல்,காக்காமுட்டை மட்டுமே சாத்தியபடும் சார்.பாகுபலியை ரசிக்கும் உள்ளங்களும் உள்ளதே சார்.
  எனவே டெக்ஸ் மேக்ஸியா தலையில்லா வீரன்(?) கலரில் நல்ல ஹார்ட் பவுண்டில் வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் சார்.இல்லையெனில் என் பெயர் டைகர் போல,ரெட்டை அவதாரம் எடுக்கும் அபாயமிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem. : மேலேயிருந்து பட்டியல் போட்டுக் கொண்டே வந்து இறுதியாய் டோட்டல் போடுவது ஒரு விதமெனில் ; டோட்டலை முதலில் போட்டுக் கொண்டு அப்புறமாய் மேலே செல்வது கூட இன்னொரு பாணி தானே சார் ?

   :-)

   Delete
 22. தானைத்தலைவர் டேஞ்சர் டாயபாலிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது வருத்தளிக்கின்றது :(

  ReplyDelete
 23. ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் (கைதட்டல் படங்கள் பல)

  ReplyDelete
 24. ஹைய்யா! மாதாமாதம் டெக்ஸ்!!! ஏதோ கனவு பலிச்சா மாதிரி இருக்கிறது எடிட்டர் சார்! சூப்பர் சூப்பர் சூப்பர்!!
  வித்தியாசமான கதைக்களங்களும், வெவ்வேறான பக்க எண்ணிக்கைகளும் நிச்சயம் தல'யை உச்சாணியில் வைத்திடும்!

  துளிகூட பயமே வேண்டாம்! தல'யால முடியலேன்னா வேறு யாரு?!! நீ ச்சும்மா பூந்து விளையாடு தல!

  ReplyDelete
 25. விஜயன் சார்,

  // உங்கள் புரிதல்கள் நமக்கு ரொம்பவே அத்தியாவசியம்! கதைகளையும் அதன் நாயகர்களையும் முன்சீட்டை
  ஆக்ரமித்துக் கொள்ள அனுமதித்து விட்டு – நான் சிறுகச் சிறுகப் பின்னணியில் இருந்திடுவது தான் காத்திருக்கும் காலங்களுக்கான modus operandi ஆக இருந்திடலாம்! நாயகர்களை விட அவர்கள் மீது தற்போது படிந்து கிடக்கும் எனது நிழல் பெரிதாய் இருக்கிறதாய் எனக்குத் தோன்றுவதால் – அந்தக் குறைபாட்டைத் திருத்திட எனக்கு சுதந்திரம்
  தரக் கோருகிறேன் guys!//

  நமது காமிக்ஸில் படிக்கும் போது நீங்கள் இங்கு குறிபிட்டது போல் ஒரு நாளும் எனக்கு இருந்தது இல்லை. நமது காமிக்ஸ் நாயகர்கள் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதன் காரணம் உங்கள் எழுத்துகள் ஒரு காரணம்.

  // தேனும் (காமிக்ஸ்) தொடர்கதைகள் போடுவது உருப்படியான காரியமாக இருக்குமா? //
  கண்டிப்பாக வேண்டாம்!

  ReplyDelete
 26. ஹாஹாஹா! டைட்டில்களில் 'சிக்பில்' என்று ( அர்த்தமில்லாமல்) கிரெடிட் கொடுத்துவந்த வழக்கத்தை மாற்றி இப்போ 'டாக்புக்' பெயரைப் போட்டுட்டீங்களே?!!! :)))

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : எனக்குத் தோன்றிய ஒரே சந்தேகம் - ஆர்டினின் பெயரைப் போடுவதா - தலைவர் டா.பு.வின் பெயரைப் போடுவதா என்பது மட்டுமே !!

   Delete
 27. யப்பா.... வரலாறு காணா பதிவு.... நிச்சயம் வரலாறு படைக்கும். இன்னும் 2 முறை படிக்க வேண்டும்... கிரகிக்க.

  ReplyDelete
 28. வணக்கம். நண்பர்களே

  எடி சார் கதை தேர்வு மிக அருமை நிச்சயமாக எல்லோரும் மகிழ்ந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அட்டவணை முதலில் கேட்டாவன் என்ற விதத்தில். கதை தேர்வு அருமைசார்
  ஒரு சின்ன விண்ணப்பம் அந்த வெளி வராத. ஒரே ஒரு ஸபைடர் கதை ஈரோடுல் வருமா !!!!(சார் அப்படி சிரிக்காதிங்க )
  மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைடர் ஶ்ரீதர் : ஆனாலும் உங்களுக்கு அலாதியான ஆசைகள் தான் சார் !!

   Delete
 29. விஜயன் சார், அடுத்த ஆண்டு சந்தாவை நமது தளத்தின் முலம் ஆன்லைன்லின் செலுத்தும் வசதியை கொடுத்தால் வசதியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நிச்சயம் உண்டு ! இன்று மதியமே அதற்கான லிங்க் இருந்திடும் !

   Delete

 30. Tornado, Hurricane, twister, gale, storm என்றெல்லாம் சொல்கிறார்கள்... நாங்களோ அதை Tex என்கிறோம்!

  மேற்கண்ட வரிகளைப் படித்தபோது ஏதோ சாதித்துவிட்டதைப்போல சத்தம்போட்டுச் சிரித்தேன்!! ஆனந்தம்!! ஆனந்தம்!!

  இதைவிடவும் Effectiveஆக டெக்ஸுக்கு புகழாரம் சூட்ட அந்த பொனெலி குழுவுக்கே இயலாது எடிட்டர் சார்!!

  பட்டையக் கிளப்பிட்டீங்க போங்க!!!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : தீபாவளி with டெக்ஸ் கதையின் எடிட்டிங் முடித்த கையோடு எழுதிய வாசகம் அது...! :-)

   Delete
 31. அனைவருக்கும் வணக்கம். 2016ல் காமிக்ஸ். திருவிழா கலைகட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. டெக்ஸ் மேளா, கூடுதல் இதழ்கள் அருமை. Mini lms மட்டும் mega lms ஆக மாறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ricky_tbm Ramesh : 2017-ல் மெகா தருணங்கள் புலரும் போது - போட்டுத் தாக்கி விடுவோமே நண்பரே !

   Delete
 32. SIR, "THALI ILLAA PORALI"YAI PADIKKA IPPODHEA AASAIYAI ULLATHU.

  ReplyDelete
  Replies
  1. R.GIRI NARAYANAN : விரைவில் சார் !!

   Delete
  2. அசாத்திய சித்திரங்கள் கொண்ட சாகசம் இது !!

   Delete
 33. அன்புள்ள எடிட்டர்,

  மிக்க மகிழ்ச்சி, போராட்டம் இனிதே முடிவுற்றதற்காக .... மிக்க நன்றி! டெக்ஸ் (இத்தாலியன்) தனி சந்தாவுக்காக..... அதுவும் மாதா மாதம் தல நம்ம வீட்டுக்கு visit அடிக்கப்ப் போறாரு... .

  இரட்டிப்பு மகிழ்ச்சி ... மினி லயன் தனிச்சந்தாவுக்காக.. தயவுசெய்து சுஸ்கி & விஸ்கி, அலிபாபா (Ali Beber) மறுபதிப்புகளை மறந்து விடாமல் சேர்க்கவும்

  Bonus T-Shirt - idea சூப்பர் ..... . ஆனா அதுல வரப்போற ஹீரோ / ஹீரோயின் யார்? :)

  அப்புறம் முடிந்தால் 2-3 மார்ட்டின் கதைகள் கூடுதாலாகக் கிடைக்குமா? :) அடுத்த போராட்டம் விரைவில் :)

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Periyar : "எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது !" என்றல்லவா சங்கத்தின் விளம்பரங்கள் இருந்தன ? ஸ்டேட் விட்டு ஸ்டேட் புறப்பட்டு கிளைகள் தொடங்கியாச்சா ? ஆஹா !!

   Delete
  2. 'விடா முயற்சி; விஸ்வரூப வெற்றி' என்பதை நிரூபித்த நண்பர் பெரியார் அவர்களுக்கு வாழ்த்துகள்!!

   உங்களது அடுத்த போராட்டத்திற்கு என்னுடைய ஆதரவும்!

   Delete
  3. போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் ... நமது கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துகிற அன்புள்ள எடிட்டருக்கும் மிக்க நன்றி !

   Delete
  4. // Bonus T-Shirt - idea சூப்பர் ..... . ஆனா அதுல வரப்போற ஹீரோ / ஹீரோயின் யார்? //
   நாராயணா.... :-)
   Smiley படம் போட்ட இந்த T-Shirt நல்லா இருக்குது! என்ன கொஞ்சம் கலர மட்டும் மாத்தின சந்தோஷ படுவேன்.

   Delete
 34. காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
  கடந்த வருடம் "தவணை முறையில்" சந்தா செலுத்த வாசகர்களுக்கு கொடுத்து, அதனை உபயோகித்து இன்னும் பாக்கி பணம் செல்லுத்தாத நண்பர்கள் தவறாது பணம் செலுத்தினால் நன்றாக இருக்கும், நமக்கு மேலும் பல காமிக்ஸ் தொடர்ந்து தவறாமல் கிடைக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில் இந்த வேண்டுகோள்.

  ReplyDelete
 35. * டெக்ஸ் கதைகளின் தலைப்புகள் எல்லாமே பட்டையைக் கிளப்புகின்றன!

  * 'திகில் நகரில் டெக்ஸ்' - ஆனந்த அதிர்ச்சி!

  * உறுதியளிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக மார்ட்டின், ராபின் ஆகியோருக்கு தலா ஒரே ஒரு கதை என்பது சற்று ஏமாற்றமே! ஜூலியாவுக்குப் பதிலாக மார்ட்டினுக்கு இன்னொரு ஸ்லாட் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : ராபின் & டைலன் & மேஜிக் விண்ட - ஈரோடு ஸ்பெஷல் இதழில் வண்ணத்திலும் வருகிறார்கள் ! So ராபினுக்கு 2 வாய்ப்புகள் - one in color & 1 in b&w.

   ஜூலியாவைப் பொறுத்தவரை - மிக அட்டகாசமானதொரு அனுபவம் காத்துள்ளது ! பொறுத்திருந்து பாருங்களேன் !

   Delete
  2. Erode VIJAY : ராபின் & டைலன் & மேஜிக் விண்ட - ஈரோடு ஸ்பெஷல் இதழில் வண்ணத்திலும் வருகிறார்கள் - அதாவது 'தல'யோடு இவர்களும் !

   Delete
  3. //..* உறுதியளிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக மார்ட்டின், ராபின் ஆகியோருக்கு தலா ஒரே ஒரு கதை என்பது சற்று ஏமாற்றமே! ஜூலியாவுக்குப் பதிலாக மார்ட்டினுக்கு இன்னொரு ஸ்லாட் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்! ..//

   +12345678 .. நானும் இதை வழிமொழிகிறேன் ... முடிந்தால் மார்ட்டினுக்கு இன்னும் கூடுதலாக 2-3 கதைகள் வேண்டும்

   Delete
  4. அட்டகாசம் சார்!! கண்களிலும், எண்ணங்களிலும் தல'யே நிரம்பி வழிந்து கொண்டிருப்பதன் சைடு-எஃபெக்ட் இது! :))

   Delete
 36. -------------------
  அருமை.
  அட்டகாசம்
  அசத்தல்
  அற்புதம்
  இன்னும் என்னன்ன வார்த்தைகள் இருக்கிறதோ.. இங்கு போட்டுக் கொள்ளலாம்.
  அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்றை அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள்.
  15 நிமிஷத்தில் படித்து விட்ட இவைகளை திட்டமிடுவதற்கு எவ்வளவு மணித்துளிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், நீங்கள் செலவழித்திருப்பீர்கள் என்பது கண்கூடு.
  குறையொன்றும் இல்லை எடிட்டர் சார்.
  ஒரு நாளைக்கும் ரூ 11.50 - ஒரு கப் காபி விலையில் என்ற வாக்குறுதியினைக் காப்பாற்றி விட்டீர்கள்.
  இன்னுமொரு கலக்கல் காமிக்ஸ் வருடம் காத்திருக்கிறது.
  ஒரு வேண்டுகோள், போன வருடத்திலிருந்த அச்சுத்தரம் மற்றும் குறித்த தேதிக்கு காமிக்ஸ் என்ற இரு முக்கியமான அம்சங்களும் தொடரும் 2016ல் இருக்க வேண்டும் சார்.

  எங்கள் மனதில் உற்சாகத்தை வரவழைக்கும் உங்கள் (நம்ம) டீமிற்கு நல்வாழ்த்துக்கள்
  ------------------

  ReplyDelete
 37. எடிட்டர் சார்,
  கடந்த சில வருடங்களாக இருந்த surprise factor வரும் வருட இதழ்களில் இல்லை என்பது சற்று ஏமாற்றமளிக்கிறது....john dynamite ஐ தவிர வேறு புதிய அறிமுகங்கள் இல்லை என்பதற்க்காக சொல்கிறேன்... TeX overdose ஆகிவிடுமோ என்ற உண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை....
  சந்தா Z இந்த ஏமாற்றத்தை தவிர்க்கும் என நம்புகிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : Surprises மாத்திரமே சந்தா Z -ல் எனும் போது அதனை வம்படியாய் ரெகுலர் சந்தாக்குள்ளும் நுழைத்து சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாமென்ற எண்ணம் தான் ! 'தல' ஓவர்டோஸ் ஆகிடுவாரா - இல்லையா ? என்பதை காலமும், நண்பர்களும் தான் தீர்மானிக்க முடியும் !!

   Delete
 38. டியர் விஜயன் சார் ராபினின் வேதாள வேட்டை 234பக்கங்கள் ரூபாய் 50/என்றுள்ளது.பக்கங்கள் எண்ணிக்கை சரி,விலை தவறா,அல்லது பக்கங்கள் எண்ணிக்கை தவறு,விலை சரியா என தெளிவுபடுத்தல் நலம்.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem : Oops ! திருத்தியாச்சு !!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 39. அதெப்படி பள்ளிகூட லீவுல இருக்குற மாணவன் இல்ல, ஆனாலும் இந்த பதிவை படிச்சதும் குழந்தை மாதிரி துள்ளி திரியுது மனசு?! பலகோடி நன்றிகள் சார் எங்கள் விடுமுறை நாளை விழா நாள் ஆக்கியதற்கு! :) ஏலேய் சண்முகம் எட்றா வண்டிய சந்தா கட்டுறதுக்கு! :)

  ReplyDelete
  Replies
  1. cap tiger : சித்திர உலகின் மாயாஜாலம் பண்ணும் வேலையன்றோ ? :-)

   Delete
  2. 100% உண்மை சார்! (ஆனந்த கண்ணீர் படங்கள் 1000) :)

   Delete
 40. அட்ரா சக்கை ....அட்ரா சக்கை ....அட்ரா சக்கை ...சூப்பர் சூப்பர் சூப்பர் ....சார் ....முழுபதிவும் படித்தவுடன் ஒரு ஏமாற்றமும் இல்லாமல்
  "ஆனந்தம் வந்ததடி ஆனந்தி "என்று பாட சொல்கிறது ...நன்றி ...நன்றி ...நன்றி ....முழு திருப்தி சார் ....


  ****####****####

  ஆனாலும் மனதில் தோன்றியதை சொல்லி விடுகிறேன் சார் ...


  மினிலயன் மறுவரவு ...சத்தியமாக எதிர்பாரா சந்தோச செய்தி ...நினைத்து பார்க்கவே இல்லை ....கண்டிப்பாக அதை மினிலயன் என்ற நேம் பிராண்டிலியே கொண்டு வாருங்கள் ...என்னை பொறுத்த வரை ப்ளு கோட் மிகவும் விரும்பி படித்தேன் ..அந்த பட்டாளம் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் தாம் எனினும் 12 டெக்ஸ் கதைகள் வருகிறதே அது போதும் சார் ...

  சூப்பரோ சூப்பர் ...;-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : தலீவரே...ப்ளூ கோட் பட்டாளத்துக்குத் தரப்பட்டுள்ளது ஒரு தற்காலிக ஓய்வே - so மீண்டு(ம்) வருவார்கள் !

   Delete
  2. // ஆனந்தம் வந்ததடி ஆனந்தி "என்று பாட சொல்கிறது ...//
   பரணி ஹி,ஹி.

   Delete
 41. திகில் நகரில் டெக்ஸ் @ புதிய கதையா? இதே பெயரில் ஏற்கனவே ஒரு டெக்ஸ் கதை வந்ததாக ஞாபகம் என்பதால் இதனை கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நினைவுகளைக் கொஞ்சம் பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள் நண்பரே...! நாமொரு மெகா டின் வாங்கிய நேரம் நினைவுக்கு வரும் பொழுது அப்படியே pause பட்டனை அமுக்கி விட்டு யோசிக்கத் தொடங்குங்கள் ! நிலவரம் புரிபடும் !

   Delete
  2. யோசிக்க முடியவில்லை! புத்தகம் வந்தபின் படித்து தெரிந்து கொள்கிறேன் :-)

   Delete
  3. விளம்பரம் கொடுத்து ... இந்த கதையை ரொம்ப வருஷம் கழிச்சி வெளி இட போறிங்க!

   Delete
  4. மறந்து விட்டீர்களா பரணி!!!!... காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் னு கதைகளை ஓரிரு மாதம் கொத்துகறி போட்டாரே ஆசிரியர் சார்.....அதற்காக நம்மாட்கள் அவரை கொத்துபுரோட்டா போட்டனரே.....அதான்....அதில் ஒன்று தான் இந்த திகில் நகரில் டெக்ஸ்....மற்றவை ஏற்கனவே வந்து விட்டன.....திகில் நகர் மட்டுமே இவ்வளவு கால தாமதம்...கிட்டத்தட்ட 20வருடங்கள், தோராயமாக... ஆகிட்டது.....

   Delete
 42. பிறகு மார்டின் ...ராபின் என்பது ஓகே சார் ...ஆனால் ஜூலியா அவர்களுக்கு பதிலாக வேறு எவராவது இருந்தால் இன்னும் மகிழ்ச்சி கூடி இருக்கும் என்பது உண்மை..என் பணி மாடஸ்திக்கே என்பவருக்காகவும் ...தங்களுக்காகவும ;-) என மாடஸதி இரண்டாக வந்து இருக்கலாம் என்று நண்பர்கள் (ஹீஹீ ) நினைக்கலாம் என்னை போலவே .. ..அதில் கொஞ்சம் ஏமாற்றம் தான் என்றாலும் 12 டெக்ஸ் கதைகள் வருகிறதே அது போதும் சார் ..

  சூப்பரோ சூப்பர் ..;-)

  ReplyDelete
 43. கதை தேர்வில் , கடும் சிரமத்திற்கு இடையேயும் மாடஸ்டிக்கு ஒரு இடம் ஒதுக்கியதற்கு நன்றி சார்.!
  _________/\________.!


  நான் 12 வயதில் இருந்து காமிக்ஸ் படிக்கின்றேன். இளம் வயதில் டீன் ஏஜ் ல் பதிவது ,பசுமரத்தாணிபோல் பதிந்துவிடும் என்பார்கள்.எனவே உங்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ரசனை.!எனவே உங்கள் தேர்வு (கி.நா)இல்லாததால் 99.9% ஒத்துப்போகும். ஆகவே நான் "ஹேப்பி அண்ணாச்சி."

  ReplyDelete
 44. பேட்மேன் 2016ல் கண்டிப்பாக தலை காட்டுவார் என இருந்தேன் ...அடுத்த வருடம் அவர் தள்ளிபோய் விட்டார் என்பது ஏமாற்றமே ...

  **********

  கிராபிக்ஸ் நாவல் நீங்கள் 12 இதழ்கள் இட்டு இருந்தாலும் சந்தோச பட்டு இருப்பேன் சார் ..காரணம் கிராபிக்ஸ் நாவலில் தோர்கல் ..பெளன்சர் தானே ..அவர்கள் இப்போது எங்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ..எனவே இதழை அதிகரித்தாலும் ஓகே ...;-)

  ***********

  அடுத்து lms அல்லது மேக்னம் ஸ்பெஷல் போல ஒரு கொண்டாட்டம் இந்த முறை இல்லாது போவது கொஞ்சம் வருத்தமே ....

  ***********

  ஏப்ரலில் இன்னும் திகில் லிஸ்ட் உள்ளது என்பதால் ஹேப்பி அண்ணாச்சி ...


  டெக்ஸ் ....12 இதழ்களில் வருகிறார் என்பதே கொண்டாட்டமான ஒன்று ...அவர் ...கடுகு போல சிறுத்து வந்தாலும் நல்ல காரத்தை கொடுப்பார் என்பது உறுதி ...அதே போல கறுப்பு வெள்ளை என்பதிலும் எனக்கு மட்டுமல்லாமல் டெக்ஸை மட்டுமே விரும்பி படிக்கும் மெளன நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று ...வண்ணத்தை விட கறுப்பு வெள்ளை அதித அழகு என்பது அவர்கள் கருத்து ...மொத்ததில் மினிலயன் வரவு ..12 டெக்ஸ் கதைகள் இந்த இரண்டு அறிவிப்பே மனதில் கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது . உங்கள் செலக்‌ஷன் எனக்கு நூற்றுக்கு நூறு திருப்தி செய்த ஒன்று ..

  நன்றிகள் சார் ..

  ReplyDelete
 45. டேஞ்சர் டயபாலிக் ற்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே ஆசிரியரே.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : ஏற்கனவே வாங்கிய உதையே இன்னும் மறக்கவில்லை என்பது தான் யதார்த்தம் சார் ! நிறைய எதிர்பார்ப்போடு தொடங்கி - நிறைய உதையும் வாங்கிய தொடர் அது !

   Delete
 46. சந்தா வாசகர்களுக்கு டீசர்ட் பரிசு என்று நண்பர்களுக்கு எதிர் பாரா. இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள் ....

  அதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சார் ....;-)

  ReplyDelete
 47. // ஜூலியாவைப் பொறுத்தவரை - மிக அட்டகாசமானதொரு அனுபவம் காத்துள்ளது ! பொறுத்திருந்து பாருங்களேன் ! //
  என்னமோ சொல்றிங்க பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : 200+ கதைகள் கொண்ட தொடரிது நண்பரே ! ஒற்றை அறிமுகத்தோடு தீர்ப்பெழுத அவசரம் காட்டிட வேண்டாமே !

   Delete
  2. ஓகே ஆசிரியரே நீங்க சொன்னா சரி.

   Delete
 48. While reading this post, my heart was wanting that this post should go lonnnnnng....and it went long. Very happy to see the list of Stories, Option A, B, D - is Very Good and Option C - books are good.

  However a small suggestion,
  ****Please add one special edition some where in the year, to make the total books 49 and with My name is tiger, we will touch 50 Books in 2016.

  I was eager to see the Batman in 2016, but it is okay to wait till 2017. (Will there be a place for Batman in THIGIL in April 2016? )
  I thought you will be adding Archie & other old classics this year, but will wait for one more year. Please don't push the XIII in color to 2020.....may be 2017 you can plan, if there is enough demand and pre booking.

  Finally thank you for making 2016, a Comics Festival.

  ReplyDelete
  Replies
  1. N. Arul : //Please add one special edition some where in the year, to make the total books 49 and with My name is tiger, we will touch 50 Books in 2016.//

   கவலை வேண்டாம் சார் - இந்தாண்டின் (ரெகுலர்) பட்டியல் எண்ணிக்கை 51-ல் தான் நிறைவு பெரும் ! பாருங்களேன் !

   Delete
  2. //....thank you for making 2016, a Comics Festival. ...//
   Yes. It will be a Mega, Gala Comics Festival waiting for us in 2016...

   //... இந்தாண்டின் (ரெகுலர்) பட்டியல் எண்ணிக்கை 51-ல் தான் நிறைவு பெரும் ! பாருங்களேன் ! ... //
   அப்படிப் போடு .. சூப்பர்

   Delete
 49. எடிட்டர் சார்.!

  நமது காமிக்ஸ் பிரபல ஹீரோக்களின் போஸ்டர்களை இலவச இணைப்பாக நீங்கள் தருவது உண்டு. அதை வீட்டில் வைத்துக்கொள்வோம்.
  அதனால் பிரச்சினைகள் இல்லை.தயவு செய்து இவர்களை டி.சர்ட்ல போட்றாதீங்க அப்புறம்.குழந்தைகளெல்லாம் பயந்து விடும்.வேணும்னா மாடஸ்டி படத்தை போட்டுவிடுங்க அட்டகாசமாய் இருக்கும்.!இந்த பதிவில் ஒரு அழகான மாடஸ்டி படம் இருக்கே அதமாதிரி இருந்தால் சூப்பர்.!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : M.V சார், உங்கள் MB காதல் பற்றிய சேதி உங்கள் துணைவியார் காதுகளுக்கு இதுவரைக்கும் போகாமல் எப்படிக் காப்பாற்றி வருகிறீர்கள் ?

   Delete
  2. சிம்பிள்! "மாடஸ்டி அச்சு அசலா உன்னைய மாதிரியே இருக்கா இல்லே?" :D

   Delete
  3. எப்படீங்க விஜய்... எங்கேயோ போயிட்டீங்க... "அனுபவசாலி"ன்னு உங்களை சொல்ரதிலே தப்பே இல்லீங்...

   Delete
  4. @ MV : உங்கள் வீட்டில் பூரி உருட்டுவது கூட காங்கோவினால் தானா சார் ?

   Delete
  5. // உங்கள் வீட்டில் பூரி உருட்டுவது கூட காங்கோவினால் தானா சார் //

   ஹா ஹா!

   Delete
  6. //சிம்பிள்! "மாடஸ்டி அச்சு அசலா உன்னைய மாதிரியே இருக்கா இல்லே?" :D//

   இப்படி சொன்ன அதிகமா உதை விழும். ட்ரை பண்ணாதீங்க...

   Delete
 50. // இம்முறை ஜானியின் classic கதையினில் ஒன்றே தொடர்கிறது! //
  என்ன சார் இப்ப்ப்ப்ப்படி பண்றிங்களே சார்.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : அதற்கான காரணத்தையும் படித்த பிறகும் இப்படிக் கேட்கிறீர்களே சார் ?! அந்தரத் தொங்கல்கள் போதுமே ?

   Delete
  2. ஹி,ஹி,இதற்கான பரிகாரத்தை 2017 சந்தாவில் செய்விர்கள் என்று நம்புகிறேன் ஆசிரியரே.

   Delete
 51. ///இந்தக் கார்ட்டூன் மேளாவுக்கு சந்தா C என்று பெயரிட்டேன் ! Dial C for a Cartoon Carnival in Color !///

  உய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
  உய்! !! உய்!!!!!
  உய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! !
  ஹைஹய்யா ஹைய்யா ஹைஹய்யா
  ஹைஹய்யா ஹைய்யா ஹைஹய்யா
  ஹை
  ஹை
  ஹை
  ஹைய்ய்ய்ய்ய்ய்யாயாயாயாயாயா!!! !!!

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : உங்காட்கள் இந்தாண்டு பின்னி பெடல் எடுக்கப் போவது உறுதி ! இரண்டாவது டாக்புல் & ஆர்ட்டின் (!!) கதைக்கான டிரெய்லரும் ரெடி ! பாருங்களேன் !

   Delete
 52. "ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ :-) :-) :-) :-) .. [வாயெல்லாம் பல் :-) படித்துவிட்டு வருகிறேன்]"

  ReplyDelete
  Replies
  1. Raghavan ; இந்த "E " - நமது C -ன் பொருட்டா ? B -ன் பொருட்டா ?

   :-)

   Delete
  2. கீழே விடை சொல்லி விட்டேன் :-)

   Delete
 53. ////முழுக்க முழுக்க b&w இதழ்களாய்; முழுக்க முழுக்க இத்தாலியப் படைப்புகளோடு சந்தா B தயாராகியிருந்தது! Dial B for Bonelli's Best in Blach & White !! ////

  டன்டனக்கா னக்கா னக்கா னக்கா
  னக்கா டன்டனக்கா னக்கா னக்கா


  டன்டனக்கா னக்கா னக்கா னக்கா
  னக்கா டன்டனக்கா னக்கா னக்கா

  ReplyDelete
 54. டியர் விஜயன் சார்,

  முதலில் 250 பதிவுகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள் ... என்னதான் இதை நீங்கள் ஊர் கூடி தேர் இழுத்த சங்கதியாக கூறினாலும், அதன் மையப்புள்ளி நீங்களே ...

  அருமையான கதை தேர்வுகள் சார், இதுதானே எங்களுக்கு பண்டிகை ....

  பள்ளி, நூலகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு தள்ளுபடியுடன் கூடிய சந்தா நல்ல முயற்சி ...

  என் பெயர் டைகர் – சந்தா தொகை, 2016 ஆம் ஆண்டுக்கான சந்தாவுடன் அனுப்பி விடுகிறேன் சார்.

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய பண்டிகை நல்வாழ்த்துக்கள் ...

  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //பள்ளி, நூலகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு தள்ளுபடியுடன் கூடிய சந்தா நல்ல முயற்சி ...//

   பார்ப்போமே - விற்பனைக்கு மட்டுமன்றி புது வாசகர்களை சந்திக்கவும் இது உதவுகிறதா என்று !

   Delete
 55. நம்ம காமிக்ஸ்களை paytm இணையம் மூலமாக வாங்கும் வகையில் ஏதாச்சும் ஒப்பந்தம் போட்டால் நன்றாக இருக்கும்! வாசகர்களுக்கும் சிறிது கேஷ்பேக் ஆஃபர் ஏதாச்சும் கிடைக்கும்! :-) ஒரு யோசனைதான். ஃபிளிப்கார்ட் திட்டம் ரத்தாகி விட்டதா?

  ReplyDelete
  Replies
  1. cap tiger : ஃபிளிப்கார்ட் திட்டம் ஜனவரி முதல் தீவிரமாய் நடைமுறைக்கு வந்திடும் !

   Delete
  2. உடனடி பதிலுக்கு நன்றி சார்! :)

   Delete
 56. முக்கியமான ஒன்றை மறந்தே விட்டேன் சார்...அது வருத்தமான ஒன்று ..

  கதைகளை முன்னோக்கி நிறுத்தி நீங்கள் பின்னோக்கி செல்வதை எங்கள் போராட்ட குழு ஏற்காது ...ஏதோ 120 பக்க கதைகளில் 20 பக்கங்கள் நீங்கள் வருவது போல இந்த கருத்தை சொல்லி இருப்பது ஏற்க முடியாது ..ஆனால் சொல்லி விட்டீர்கள் ...

  எனவே ...

  அனைத்து ஒவ்வொரு மாத இதழ்களிலும் இரண்டு அல்லது மூன்று பக்க ஹாட்லைன் ...சிங்கத்தின் சிறு வயதில் தொடர் . சிங்கத்தின் சிறு வலையில் முக்கியமானவை மட்டுமே

  ..இவை மட்டுமே எழுதி தாங்கள் தாராளமாக பின்னோக்கி செல்லலாம் சார் ....


  ஆமா ....இதை தவிர நீங்கள் ஏதாவது நமது இதழ்களில் சிறுகதை போல ஏதாவது எழுதினீர்களா சார் ..பாக்கவே இல்லை ....கிர்ர் .....

  எப்போதும் போல வாருங்கள் சார் ...சந்தோசமா இருக்குற நேரத்தில கடுப்பை கிளப்பிக்கிட்டு ....;-((

  ReplyDelete
 57. வென்றாள் மாடஸ்தி.டி-சர்ட்ல யாவது மாடஸ்டிய கலர்ல போடுங்க சார்.சந்தாவும்
  சட்டையும் சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்

  ReplyDelete
  Replies
  1. ravanan iniyan : ஆனாலும் உங்க திட மனதைப் பாராட்டாது இருக்க இயலாது சார் ! MV & நீங்கள் இளவரசியின் மீது காட்டும் பக்தி அசாத்தியம் !

   Delete
 58. விஜயன் சார், "திகிலூட்டும் நிமிடம்கள்" விளம்பரத்தில் கதையின் தலைப்பு மட்டும் உள்ளது, படம் ஏதும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : Yes - ஆனால் அவற்றை பூர்த்தி செய்திட இன்று ஆளும் இல்லையே ! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி, இந்த பைல்களை சேகரிக்கவே பொழுது சரியாகிப் போய் விட்டது !

   Delete
  2. :) புரிந்து கொண்டேன்! நன்றி!

   Delete
 59. ஆனாலும் மேக்சி டெக்ஸ் கருப்பு & வெள்ளையில் வருவதைவிட வண்ணத்தில் வருவது சிறப்பாக இருக்கும் ஆசிரியரே,கண்டிப்பாக நீங்கள் இதை பரிசீலித்துதான் ஆக வேண்டும்.

  ReplyDelete
 60. சந்தா IMPS மூலமாக அனுப்பிவிட்டேன்...

  ReplyDelete
 61. டியர் எடிட்டர்,

  குட் ஷோ ! அனைவரையும் திருப்தி செய்யும் ஒரு ப்ளான்.

  நண்பர் ஒருவருக்கு டெக்ஸ் சந்தா மட்டும் அளிக்க ஆசை (மற்றவை படிக்க மாட்டேங்கிறார் :-)) - விவரங்கள் தெரியப்படுத்தவும். நண்பருக்கு GIFT SUBSCRIPTION கொடுக்க ஆசை. நமது வலை தளத்திலும் GIFT SUBSCRIPTION வகை வாரியாக லிங்க் கொடுக்கலாமே - மற்றும் இங்கேயும் லிங்க் கொடுத்துவிடலாம்.

  கார்ட்டூன் மற்றும் டெக்ஸ் சந்தாக்கள் - குட் options. தமிழ் படிக்கும் சிறுவர்கள் அருகில் இல்லாதது சற்றே வருத்தமான விஷயம் - otherwise that would have been a gift too !

  ReplyDelete
 62. ரொம்பவே உங்கள் தலையை குடைந்து விட்டிருக்கும் போல இந்தாண்டின் கதைதேர்வுகள்,மிகவும் மெனக்கட்டு சிறப்பாகவே தயார் செய்துள்ளிர்கள் ஆசிரியரே பாராட்டுக்கள்,
  ஆனாலும் நாங்கள் அது வேண்டும்,இது வேண்டும்,அது இல்லை இது இல்லை என்று கேட்கிறோம்,ஏனெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைச்சாலும் சந்தொசம்தானே.

  ReplyDelete
 63. Editor Sir,
  Though a mute spectator, some posts will automatically make me to write at least a comment. This is one of such post. To be frank, I was refreshing the site continuously from yesterday midnight to check for the new post.

  My uncle will be happy to see the new version of 'Manjal Poo Marmam' as it is his favourite. He painted the first b&w edition in colour using crayons and preserving it till date.! By the way, "Thigiloottum Nimidangal" was re-published before few years. Why is that being considered again for this year? Possible to consider some other story in lieu of this?

  As regards cartoon subscription, I didn't liked 'Vidiya Vidiya Vignani' at all. On the other hand, it's very surprising to note that lot of people liked it. May be my 'rasanai' is different.! Anyways, I would rather like to see either a Chick Bill or Lucky Luke in his place.

  Though it may be an overdose, Tex stories will be essential to have a good run at book fair venues. You deserve a special thanks for considering 'Thigil Nagaril Tex' and the Kit vs Tex stories.!

  With the help of Almighty, hope everything go well as planned.

  ReplyDelete
 64. 4000 என்ற மந்திர எண்ணைச் சுற்றி எல்லா கதைகளையும் கவர் செய்த உங்களுக்கு ஒரு சல்யூட் சார்

  ReplyDelete
 65. மறுபதிப்புகளில் ஜானி நீரோவின் கதைகள்-சதிகாரர் சங்கம்,லாரன்ஸ் & டேவிட்டின்-திகிலூட்டும் நிமிடங்கள்,மஞ்சள் பூ மர்மம்போன்ற கதைகளை திரும்ப திரும்ப பார்ப்பது போல் உணர்கிறேன்.
  இது உண்மையா? அப்படியெனில் இவை சற்றே ஒரு அயர்ச்சியை உண்டு செய்யக்கூட வாய்ப்பு உண்டே.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : ஒட்டு மொத்த FLEETWAY Classics களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வெளியாகவுள்ள சூழலில் இன்றில்லையேல் நாளை அவை வெளி வரத்தானே தேவை ? So one last hurray !!

   Delete
 66. Dear Editor Sir, Send subscription for A+B+C+D. Sent mail with the transaction details. - Ram from Coimbatore

  ReplyDelete
 67. சந்தாவோடு டீ-சர்ட் நல்லதொரு யோசனை ஆசிரியரே.டெக்ஸ் கதை தேர்வுகள் அசத்தலாக உள்ளன.

  ReplyDelete
 68. கூடிய சீக்கிரமே லோட்மோர் வந்துரும்போல வாவ்.

  ReplyDelete
 69. அடுத்த வருட தோர்கால் படிக்க ஏப்ரல் வரை காக்க வேண்டியது ஒன்றே .. நற நற நற !!! :-)

  ReplyDelete
  Replies
  1. Raghavan : ஒன்பது மாதங்கள் காத்திருந்த பின் தானே இந்தாண்டில் தோர்கல் தலை காட்டியுள்ளார் ? பார்த்திருக்க 4 மாதங்கள் ஓடிடுவது நிச்சயம் !

   Delete
 70. ரெக்க கட்டி பறக்குதடி மனசுனு பாட தோனுது..
  எப்படியோ என் ஆயுள் முடியறதுகுள்ள
  டெக்ஸ் கதைகள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்ற அவா நிறைவேறியதில் மனசுக்குள் மத்தாப்பு..
  ..
  டெக்ஸ் என்ற மந்திர சொல்லுக்கு முன்னாள் வேறெந்த கதைகளின் பெயர்களும் மனதில் நிற்கவில்லை என்பதே உண்மை..
  ..
  மிக்க நன்றி எடி சார்..

  ReplyDelete
  Replies
  1. Alan muthu : //டெக்ஸ் என்ற மந்திர சொல்லுக்கு முன்னாள் வேறெந்த கதைகளின் பெயர்களும் மனதில் நிற்கவில்லை என்பதே உண்மை..//

   :-)

   Delete
 71. ///வழக்கமான வண்ண இதழ்கள் நீங்கலாக - டெக்ஸின் ஒரு வெயிட்டான (b&w) இதழ் ஜனவரிக்கு உண்டு!////----- ஆசிரியர் சார்... சென்னையில் டெக்ஸ் மேக்ஸி ....டெக்ஸின் விஷ்வரூபம் என ஏற்கனவே அறிவித்து இருந்தீர்கள் சார்.... ஆனால் இப்போது கருப்பு வெள்ளையில் ஒரு வெயிட்டான ....என அறிவிக்க காரணம் என்ன சார்?????.... பட்ஜெட் டெக்ஸ் மேக்ஸியை விழுங்கி விட்டதா சார??? .....காமிக்ஸ் பந்தலிலே டெக்ஸ் மாரி பொழியும் ......இப்போது கேட்க தயக்கம் இருப்பினும்............

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ... தல தனிச் சந்தா அறிவிப்பை பார்த்த மகிழ்ச்சியில்... இதை மறந்தாச்சு ... டெக்ஸ் Maxi கண்டிப்பாக முன்பு அறிவித்தபடி 2016-ல் வேண்டும்

   Delete
  2. போஸ்டரை ஒழுங்கா படிங்கப்பா .. giant சைசில்னு எழுதி இருக்குல்ல .. ! :-)

   Delete
  3. கலரு , கிரையான்ஸ் வைத்து நாமே அடுத்து கொள்வதாஆஆஆஆ ....ராக் ஜி...??😳

   Delete
  4. 12 டேக்சும் b&w என்று அவர் சொல்லவில்லையே - Maxi வந்தால் கலர்ல தான் வரும் - giant sizeனு போட்டிருக்கார் வேற .. வெயிட் பண்ணுவோம் !

   Delete
 72. //ஆல்பங்கள் மட்டுமே இந்தத் தனிப்பாதையில் பயணம் செய்து வருகின்றன; ஏப்ரலில் அறிவிக்கப்பட்டிருக்கும் 2016ன் சந்தா Z-ல் (!!!) இன்னும் நிறையவே மாறுபட்ட கதைகளைக் களமிறக்குவது என்பது முடிவான போது – 2016-ன் ரெகுலர் சந்தாக்களின் திட்டமிடல் சுலபமாகியது!//
  //கதைகளின் விளம்பர templates, நவம்பர் இதழோடு வரக் காத்திருக்கும் வண்ண (குட்டி) புக்கில் இருந்திடும் ! So முழுமையாய் கதைகளை / டிரெய்லர்களைப் பார்த்திட நவம்பரின் ஆரம்ப நாட்கள் வரை சற்றே பொறுமை ப்ளீஸ்! //

  :| waiting starts for 2016 April. hoping for Big Z-ubscription


  //‘ஜான் டைனமைட்‘ என்ற பெயரில் நம்மிடையே அறிமுகம் காணப் போகும் இவரது தொடரில் இது வரை 2 கதைகள் மட்டுமே உருவாகியுள்ளன என்பதால் அவை இரண்டையுமே 2016-ல் வெளியிடவுள்ளோம்!//
  நல்வரவு ஆகட்டும் !


  //தனி டெக்ஸ் சந்தா//

  :)

  //ஏதேனும் (காமிக்ஸ்) தொடர்கதைகள் போடுவது உருப்படியான காரியமாக இருக்குமா? Thoughts please guys?//

  ரெகுலர் ஆகா பிரசுரிக்க முடியும் முழுகதைகளை முயற்சிக்கலாம் வருடம் ஒரு கதை என்ரால் தொடரில் சுவாரசியம் குறைகிறது.

  சந்தா D இல் wild west ஸ்பெஷல் வருமா எடிட், அப்புறம் விடுபட்ட Comanche புத்தகம் கலரில் வருமா எடிட். கான்க்ரீட் கானகம் நியூயார்க் reprint 2016இல் வருமா எடிட் சார்.
  ReplyDelete
  Replies
  1. //என்று விதம் விதமான நீளங்களில் டெக்ஸ் கதைகள் இருப்பதால் – இதனில் கொஞ்சம்; அதனில் கொஞ்சம்; அதோ அங்கே இருப்பதில் கொஞ்சமோ கொஞ்சம் என்று திரட்டி வந்தால் boredom factor தலைகாட்டாது என்றே எதிர்பார்க்கிறோம்! தவிர – கதைகள் ஒட்டுமொத்தமாய் ஒரே template-ல் இல்லாது – மாறுபட்ட பல களங்கள் கொண்டவைகளாக இருக்கச் செய்ய ஏகப்பட்ட வேலைகள் செய்திருக்கிறோம்! அது மட்டுமன்றி – சித்திரத் தரங்களில் ப்ளஸ் – மைனஸ்கள் இல்லாமல் – ஒட்டுமொத்தமாய் எல்லாமே டாப் ஓவியர்களின் கைவண்ணங்களாக மட்டுமே இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டோம்! So- 94 பக்கக் கதைகள் கொஞ்சம்; mid range-ல் 200+ பக்கக் கதைகளில் கொஞ்சம்; 336 பக்கங்களில் இன்னும் சில என்று தேர்வு! வண்ணத்தில் ஸ்பெஷல் இதழ்கள்; b & w-ல் நார்மல் இதழ்கள்; நார்மல் சைஸ்; மெகா சைஸ்; என்று என்னென்ன வேற்றுமைகள் காட்ட முடியுமோ – அவை சகலத்தையும் திட்டமிட்டிருக்கிறோம்!//

   varietyஐ balance செய்வது அவசியம் நிச்சயம் உங்கள் வார்த்தைகள் ஒரு 2016 டெக்ஸ் திருவிழா வாக கொண்டாட இருப்பதாய் கூறுகிறது ! அவா வை தூண்டும் வார்த்தைகள்.

   Delete
  2. //ஆண்டு மலர் – நமது 30 ஆண்டு பிரான்கோ-பெல்ஜியப் பயணத்தை highlight செய்யும் விதமாய் இருந்தால் தேவலை என்று தோன்றியது! So- இந்த முப்பது ஆண்டுகளும் நம்மோடு travel செய்துள்ள சில back bench boys-ன் பின்னோக்கியும், முன்னோக்கியுமான பயணங்களை கொண்ட கதைகளை ‘டிக்‘ அடித்தேன் ! கேப்டன் பிரின்ஸ் ஆரம்ப நாட்களில் ஒரு இன்டர்போல் ஏஜெண்டாக இருந்தவர் என்பது நாமறிந்திருக்கா விஷயம்! அந்நாட்களது கதைத் தொகுப்புகள் – இது வரை நாம் படித்திரா புத்தம் புது ரகம்! //

   கேப்டன் பிரின்ஸ் digest- நமது ஆண்டு மலராக வரஇருக்கிறதா edit? இல்லை கதம்பம் ஆகவா. நான் single hero centric digest எதிர்பார்த்தேன்,அது தனே நீங்களும் சொல்லரீங்க ?!

   Delete
 73. கதைத்தேர்வுகள், எல்லோரையும் திருப்திப்படுத்தும் சந்தா தேர்வுகள் என பதிவில் உற்சாகமளிக்கும் சங்கதிகள் நிறைய! அதற்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இது:

  //Making-ல்; அட்டைப்படங்களில்;உட்பக்க content-களில்; எழுத்து பாணிகளில் ‘திடுக்‘ மாற்றங்கள் இல்லாவிட்டாலும் – அத்தியாவசிய முன்னேற்றங்கள் செய்திடவுள்ளோம்!

  அட்டைப்படங்களில் புது சிந்தனைகளை அமல்படுத்த;உட்பக்கங்களில் புதுசாய் filler pages-களைக் கொண்டு வந்திட, நமது எழுத்து நடைகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றிட -  உங்கள் புரிதல்கள் நமக்கு ரொம்பவே அத்தியாவசியம்!//

  இதுவரை நான் சந்தா கட்டியதில்லை. எல்லா இதழ்களையும் வாங்காமல் எனக்கு பிடித்ததை மட்டும் வாங்கி படித்து வருகிறேன். இந்த பதிவைப்படித்ததும் என் மனதில் தோன்றியது - இனி சந்தா கட்டி விடலாமோ!

  ReplyDelete
 74. Blueprint அருமை! தமிழ்நாடுகுள் Professional Couriersக்கு எவ்வளவு கூடுதல் தொகை செலுத்தவேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : எக்குத்தப்பாய் கட்டணங்கள் உயர்ந்துள்ளன PFC -ல் ! DTDC இது வரையிலும் எவ்விதப் புகார்களுமின்றி நன்றாகவே ஓடி வருகிறது ! அதை முயற்சித்துப் பார்க்கலாமே ?

   Delete
  2. DTDC முயற்சித்து பார்க்கிறேன். கடந்த முறை 2 தவணைகளில் சந்தா செலுத்தினேன். அதே முறையில் செலுததலமில்லையா?

   Delete
 75. டியர் விஜயன் சார், இரும்பு கையாரின், கொரில்லா சாம்ராஜ்யம்,ஒரிஜினல் கலரில் வந்ததாக, நியாபகம்.ரீபிரிண்டும் கலரில் வந்தால்,நன்றாக இருக்குமே சார்.எத்தனையோ,செஞ்சிட்டீங்க.இதை செய்ய மாட்டீங்களா.இரும்பு கையை, நெடுநாள் கழித்து,வண்ணத்தில் பார்க்கும் ஆவலுடன்,.......

  ReplyDelete
  Replies
  1. +111222333444555...நியாயமான கோரிக்கை சுந்தர் அவர்களே.....ஆசிரியர் சார்@ இந்த கொரில்லா வை மட்டும் கலரில் மட்டுமே தாருங்கள் சார்.....இல்லையென்றால் பழைய கலர் கொரில்லா வின் விலை பல மடங்கு அதிகரிக்க கூடும் சார்...10கருப்பு வெள்ளை+2 வண்ண மறுபதிப்புக்கள்....அதற்காக 2016 தீபாவளி மலரின் 3வண்ண டெக்ஸ் கதைகளுல், ஏதாவதொரு டெக்ஸ் கதையை கருப்பு வெள்ளை யில் கொடுத்தால் கூட ஓகே சார்.....

   Delete
  2. இரும்பு கையை, நெடுநாள் கழித்து,வண்ணத்தில் பார்க்கும் ஆவலுடன்,.......

   Delete
 76. மிக்க மகிழ்ச்சி சார் ஒரு கணம் சந்தோஷ மயக்கம் கொஞ்சம் தெளிஞ்சு வரேன் சார்

  ReplyDelete
 77. நண்பர்களே எனது புதிய பதிவைக்காண https://tamilcomicseries.blogspot.in/2015/10/blog-post_20.html

  ReplyDelete
 78. Madipakkam Venkateswaran & ravanan iniyan, அடுத்த வருடம் மாடஸ்டி கதை ஒண்ணுதான் என்றாலும் நமது ஆசிரியர் இங்கு இளவரசியின் படத்தை பெரியதாக போட்டு நம்மை சந்தோஷபடுத்திவிட்டார்; அவரும் நமது இளவரசியின் ரசிகர் என்பது தெரிகிறது :-)

  ReplyDelete
  Replies
  1. பரணி.@

   ஹஹஹஹ.........சரியாக சொன்ணீங்க.! மாடஸ்டி கதையின் ஒவ்வொரு வசனமும் ஆழமான கருத்துகளை கொண்டுள்ளதை அச்சு அசலாக வெளிப்படுவதை பார்த்தால் புரிகிறது.(வேறு பதிப்பகத்தின் ஜீவன் இல்லாத மொழி பெயர்ப்போடு ஒப்பிடும் போது நன்கு புரியும் .) நாம் எல்லாம் அண்ணனின் விழுதுகள் மட்டுமே.!

   எடிட்டர் ஒரு சிறந்த காமிக்ஸ் ரசிகர் என்பதினால் மட்டுமே தமிழ் காமிக்ஸின் ஆயுள் நீடித்து கொண்டு உள்ளது. அதுவும் ஒரு நல்ல பிஸினஸ் மேன் முதுகில் அது ( காமிக்ஸ் )சவாரி செய்வதால் தடையின்றி சுகமாகவும் சுளுவாகவும் செல்கிறது..! நாம் கொடுத்துவைத்தவர்கள்.!

   திரும்ப ஒருமுறை பதிவையும் டீஸர்களையும் படித்தபோது.,
   அவர் நமக்காக எவ்வளவு நுட்பமாக மெனகெட்டு ரசித்து பட்டியலை ரெடி செய்துள்ளர் என்று புரிகிறது.!இதற்கு அவர் எவ்வளவு நாள் கஷ்டப்பட்டாரோ.! கடவுளுக்கு , நன்றி.!
   ___________/\__________

   Delete
 79. ராபின் மற்றும் மார்டினுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கலாம் ...

  ப்ளூ கோட்ஸ் அல்லது ஜில் ஜோர்டான்க்கு ஒரு smurfsக்கு பதிலாக வாய்ப்பு வழங்கலாம் ....

  One suggestion:

  If possible diabolik ஐ தொடர் கதையாக Filler pages ல் வெளிஇடுங்கள் சார் ... Diabolik ரசிகர்களும் படிப்பார்கள் .. பிடிக்காதவர்களுக்கும் பெரிதாய் பிரச்சனை இருக்காது .. அல்லது முன்பு வந்த மாதிரி II World War கதைகளை
  தொடர் கதையாக filler pagesல் வெளிஇடுங்கள் சார் ..

  ReplyDelete
 80. tex கதைகள்12+11111111111111 likes

  ReplyDelete
 81. tex 12கதைகள் +11111111111111111111111

  ReplyDelete
 82. டியர் எடிட்டர் சார்

  நான் கேட்டிருந்தது போலவே
  மாதம் ஒரு டெக்ஸ் என
  வருடத்திற்கு 12 டெக்ஸ் கதைகளை கொடுக்க முடிவு செய்ததற்கு மிக்க நன்றி நன்றி நன்றிகள் பல பல


  ரீ பிரிண்ட்டில் மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யத்தை கலரிலேயே தரவேண்டும்

  ReplyDelete
 83. சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் சார்.சந்தா ABCD Z எல்லாவற்றிலும் அட்டகாசமான் விருந்துகள் அமைந்நுவிட்டன.எந்த ஒன்றையும் தவறவிட முடியாது.....
  அப்புறம் ....
  உங்கள் மொழிபெயர்ப்பு/எழுத்து நடை அப்படியே தொடருங்கள்.எந்த மாற்றமும்(மண்ணாங்கட்டி)தேவையில்லை.
  நாங்கள் லயித்துபோகும் உங்கள் பாணி மட்டுமில்லாமல் போயிருந்தால் நமது காமிக்ஸ் இவ்வளவு உயரங்களை தொட்டிருக்குமா?

  ReplyDelete
 84. இந்த கதை விபரங்களை இனையம் வரா நண்பர்களிடம் விவரித்த பொழுது இது வரை சந்தா கட்டாத நண்பர்கள் கேட்ட வினா ...

  சந்தா B க்கு மட்டும் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதே .....எனவே D க்கு போல Bக்கு தனி கட்டணம் அறிவித்தால் முதல் முறை இங்கு வர செய்து பிறகு படிபடியாக அவர்களை மாற்ற முடியும் என நம்புகிறேன் ..

  எனவே சந்தா B மட்டும் எவ்வளவு என அறிவிக்க முடியுமா சார் ...

  ***********

  இந்த மொத்த சந்தா தொகையுடன் என் பெயர் டைகர் இதழுக்கும் சந்தா அனுப்பி விடுகிறேன் சார் ...


  **************

  ReplyDelete
 85. 2 murai patiththu vitten TEX TEX mattume thirikirathu

  ReplyDelete
 86. கொரில்லா சாம்ராஜ்ஜியம் நண்பர்கள் வினவியபடியே ஒரிஜினல் போல வண்ணத்திலேயே வெளி இடுங்கள் சார் ..இல்லை என்றால் இப்போது வருவது கருப்பு வெள்ளை ....அப்போது வந்தது கலர் என டிமாண்ட் கூடி கொண்டே போகும் சார் ..்;-)

  ReplyDelete
 87. ஏதோ 'சோ வென்று மழைப் பொழிந்து விட்டது போலிருக்கிறது. ஒரு உற்சாகமூட்டும் அட்டவணையைப் படைத்திருக்கிறீர்கள். ஒரு அடைமழை சில பல விஷயத்தில் எப்படி நமக்கு நன்மையைக் கொண்டு வருமோ, அதைப் போல் இந்த டெக்ஸ் எனும் காமிக்ஸ் அடைமழையும் நன்மையைக் கொண்டு வருமென்று நம்புவோமாக..!

  எண்பதுகளின் நாயகர்கள் பிரின்ஸ், ஜானி & ரோஜர் ஒரே இதழில் இணையவிருப்பது இதுவரை நாம் முயன்றிராத ஒரு அட்டகாசமான முயற்சியின் நல்வரவு.

  ப்ளூ கோட்ஸ் இல்லாதது சற்று ஏமாற்றமே. காமெடியோ, ஆக்ஷனோ என்னை எல்லா அம்சங்களிலும் கவர்ந்தேயிருந்தது! விற்பனையில் சற்று வேகத்தைக் கூட்டிட லுக்கி உடனோ / சிக் பில் உடனோ இணைத்து வெளியிடலாமே...?

  ReplyDelete
 88. எடிட்டர் சார்.!

  2016 பட்டியலில் எனக்கு முழு திருப்தி ,சந்தோசம் .ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது வயது ஏறுகிறதே என்ற வருத்தமும், அசுர கதியில் ஒடும் காலச்சக்கரத்தை நினைத்து கொஞ்சம் பீதியும் உண்டாகும்.ஆனால் இந்த மாதிரி புதியதாக வெளிவரும் காமிக்ஸ் மட்டுமே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என்றால் மிகையாகாது.!

  ஆனால் மனதில் உள்ள சிறு குறை அது.,
  இன்று பணவீக்கத்தால் எல்லா விலைவாசிகளும் ஜெட் வேகத்தில் செல்கின்றன.! து.பருப்பும் , உ.பருப்பும் 1 கிலோ ரூ₹220 சென்று விட்டது.! டீசல் விலை கட்டுப்பாட்டை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாய் விலை ஏறுகிறது.! ஒரு புது படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்தால் சாதாரணமாக ரூ ₹1000 க்கு மேல் செலவாகிறது.! குடும்பத்துடன் சைவ ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டாலே ரூ₹1000 வருகிறது.!
  ஒரு சித்தாள் சம்பளம் தினமும் ரூ ₹ 500 .

  இந்த சூழ்நிலையில் நீங்கள் ₹ 4100 க்குள் முடிக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்.! இந்த சந்தா முடிவு செய்துவிட்டீர்கள் ஒ.கே.

  ஆனால் " இஸட்" சந்தா , எங்களைப் போன்று காமிக்ஸ் தவிர வேறு பொழுது போக்கு இல்லாத என்னைப்போன்றவர்கள் முழுமையாக அன்லிமிட்டேடு மீல்ஸ் போல் இருந்தால் நன்றாக இருக்கும்.!இந்த சந்தாவில் என் பெயர் டைகர் பிரச்சினை, பேங்க் லோன் போடவேண்டும் என்று கூறி மனதை புண் படுத்திய வாசகர் என்று எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கதையில் மட்டுமில்லாமல் விலையிலும் பக்கங்களிலும் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.! நன்றி.!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு காமிக்ஸ் மேல் இருக்கும் காதலைப் பாரட்டுகிறேன். ஆனால் எல்லோருடைய சூழ்நிலையும் உங்களுடையதைப் போன்றே அமைந்திருக்கும் என்று எண்ணுவது தவறு... உங்களுக்கு அதிக புத்தகங்கள்(பக்கங்கள்) வேண்டும் என்றால் எடிட்டரிடம் கேளுங்கள்.. அதனைத் தவிர்த்து தவறான முன்னுதாரணங்கள் கொடுத்து எனக்கு 4100 ரூபாய் பத்தல.. சந்தாவை அதிகப்படுத்தி 7000, 8000 அப்படினு போடுங்கனு சொல்ற மாதிரி இருக்கு... நான் உங்களைத் தவறாகக் கூறவில்லை... தவறாக எண்ணவேண்டாம்.
   நான் இந்த பதிவைப் பதிவதின் காரணம்.. வாங்கும் சக்தி குறைவாக உள்ளோரின் எண்ணிக்கையையும் எடிட்டர் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதே..
   விலை அதிகமான காரணத்தினாலேயே சினிமா மற்றும் ஓட்டல் செல்லும் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டோரில் ஒருவன் நான்.
   கவனிக்க: எண்ணிக்கை மட்டுமே குறைகிறது...

   Delete
  2. ம.வெ.சார் +1111111.......
   ரெகுலர் சந்தா எல்லோரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்ற வகையில் இந்த ஆண்டின் அளவிலே அறிவிக்கப் பட்டுள்ளது....
   ஆனால் ஏப்ரல் சந்தா , ஸ்பெசல் சந்தா.....அதிலே எதற்கு கட்டுப்பாடு???.... ரெகுலரில் கிடைக்காத எல்லாமும் அதில் கேட்பதில் தவறில்லையே, பிடிக்கும் டைட்டில் வாங்கி கொண்டால் தீர்ந்த்து பிரச்சினை...... 51புதிய இதழ்கள் வரும் என்ற ஆசிரியர் அறிவிப்பு படி பாரத்தால் அதலும் கூட கட்டுப்பாடாக 14இதழ்கள் மட்டுமே வரும்போல தெரிகிறதே......

   Delete
 89. Dear editor sir....
  மிக்க மகிழ்ச்சி,..... super list...
  தலீவர் Tex க்கு தனி சந்தா... Truly a very happy new year indeed.....
  A B C D என எல்லா route லும் நமது பயணம் இமாலய Hit ஆக வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் Sir....

  சந்தா December ல் இந்தியா வந்ததும் முதல் வேலையாக கட்டிடுரேன்,........

  Thank you edi sir....

  ReplyDelete
 90. Super! Super! super!
  மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை என்பதுதான் உண்மை

  ReplyDelete
 91. sir , pali vangum puyal in color ?

  ReplyDelete
 92. கார்திக் சோமலிங்கா.!,மாயாவி சிவா, செல்வம் அபிராமி , ரமேஷ்குமார் ,மிஸ்டர் மரமண்டை. சத்யா அண்ணன் ,,இவர்களையெல்லாம் காணோமே.?

  ReplyDelete
 93. ஹலோ சார் , மறு பதிப்புகளில் ஒரே ஒரு கலர் மறு பதிப்பு கூட இல்லையே :(, ரிபோர்ட்டர் ஜானி, பிரின்ஸ், சிக் பில் இவர்களின் கலர் மறுபதிப்பு என்ன ஆயிற்று ??. பழைய முத்து கருப்பு வெள்ளை மறு பதிப்புகளுக்கு 6 ஸ்லாட் கொடுத்து மற்ற 6 ஸ்லாட்டை இவர்களின் மறுபதிப்புகளுக்கு ஒதுக்கலாமே ....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மடிப்பாக்கம் Venkateswaran சார் :)

   Delete
  2. அந்த 48 என்கிற எண்ணைத் தாண்டி வந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும் சார்

   Delete
  3. ஏப்ரல் தனி சிறப்பு சந்தாவில் தலா 2ஜானி, பிரின்ஸ், சிக்பில், லக்கி வண்ண பறுபதிப்பு+ 1ப்ளு கோட்ஸ் வர தடை ஏதும் இல்லையே...

   Delete
 94. குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா. அற்புதம், ஆனந்தம்,அட்டகாசம்.
  மனத்திற்கு நிறைவைத்தரும் தேர்வுகள். ஏப்ரல் Z சந்தா மிகவும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விட்டது சார். நன்றி

  ReplyDelete
 95. இன்றைய பதிவைப் பார்த்தவுடன் திருவில்லிபுத்தூரில் இருந்தவன் டவுண் பஸ்சை பிடித்து சிவகாசி வந்து உங்கள் அலுவலகம் வந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இன்று விடுமுறை மதியத்திற்கு மேல் நீங்கள் அலுவலகம் வரலாம் சந்தித்து பேசலாம் என்ற ஆவல். மாதம் ஒரு முறை இருமுறை சிவகாசி வரும்போதெல்லாம் உங்களை சந்தித்து பேசவேண்டும் என்ற ஆசையோடு வருவேன். ஆனால் இந்த கூச்ச சுபாவம் என்னை விட்டு விலக மாட்டேன் என்று கூடவே ஒட்டிக்கொள்ளும்.
  நான் உங்கள்
  அலுவலத்தில் இருக்கும்போது நீங்கள் எதாவது காரணத்திற்காக அறையை விட்டு வெளியே வரும்போது பார்த்து ஏதாவது பேசுவீர்கள் என்று((அட்லீஸ்ட் எந்த ஊர்) அப்பிடீன்னு கேப்பிங்கன்னு பாத்தா நேரா அங்க இருங்கிறவங்ககிட்ட என்ன விசயமோ அத சொல்லீட்டு உள்ள போயிர்ரீங்க. ம்ஹீம் எனக்கு என்னைக்கு இந்த கூச்சம் போயி என்னைக்கு

  ReplyDelete
 96. தல தனி சத்தாவில் வர உள்ளது சூப்பர் சார். வெளிநாட்டிலுள்ள நான் 2016 இற்காக எவ்வளவு சந்தா செலுத்த வேண்டும் என்றும், அதற்கு என எமது தளத்தில் தனி லிங்க் தர முடியுமா ஸார்? எல்லோரையும் திருப்திபடுத்த நிறைய முயற்சித்து உள்ளீர்கள். Hats off you sir. புளூ கோட் பட்டாளம் இனை நான் நிறையவே ரசித்தேன். 2016 இல் அவர்களுக்கு இடம் இல்லை என்பதுதான் சிறிது வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : இந்தாண்டும் நீங்கள் சிவனே என்று புத்தகங்களை ரசிக்கும் வேலையை மட்டுமே செய்யத் தேவைப்படும் சார் ! உங்கள் பணம் இன்னமும் கணிசமாகவே கையிருப்பில் உள்ளது !

   Delete
 97. அட்டகாசமான அறிவிப்புகள்! கத்தி முனையில் நடந்து சாதித்ததற்கு வாழ்த்துக்கள்!

  அந்த மஞ்சள் கலர் T-ஷர்ட் பார்த்தவுடன் வேப்பிலை ஞாபகம் வருவதை தவிக்க முடியவில்லை ;-)

  ReplyDelete
  Replies
  1. தமிழ் காமிக்ஸ் : அது நெட்டில் சுட்டதொரு படம் மாத்திரமே சார் !

   Delete
 98. டியர் விஜயன் சார்,

  கிட்டத்தட்ட அதே பழைய சந்தா தொகை, கதை எண்ணிக்கைகள் மற்றும் வழக்கமான நாயகர்களை புதிய package-களில் (ABCD, Mini Lion, Tex subscription) நுழைத்திருக்கிறீர்கள், நல்ல முடிவு...!

  பேட்மேன் இல்லை, திகில் இல்லை, சந்தா Z (அதாவது சந்தா G) பற்றிய விவரங்கள் இப்போதைக்கு இல்லை என்பதால், பதிவின் அடுத்த அதி முக்கியமான கட்டத்திற்கு நகர்வோம்... ;)

  //உங்கள் சந்தாக்களோடு - உங்களுக்குக்கான டி-ஷர்ட் அளவினையும் ( S : M : L : XL : XXL ) குறிப்பிட மறந்திடாதீர்கள் நண்பர்களே !! //

  நான் சந்தா A, B, C, D மற்றும் Z ஆகிய அனைத்தையும் வாங்க இருப்பதால், மொத்தம் ஐந்து டீஷர்ட்டுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :P தவிர, அளவுகளை எண்களில் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்! உதாரணத்திற்கு, L என்றால் 40ஆ அல்லது 42ஆ என்பதை ஆறிவிக்கவும்! :)

  பி.கு.: 251-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! இதையே கொஞ்சம் பிரித்துப் பிரித்துப் போட்டிருந்தால் 300-ஐத் தொட்டிருக்கலாம்! :)

  //ஆட்டைத் தூக்கிக் குட்டியோடு போட்டாலும், குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் கணக்கு ஒன்று தான்//
  ஆட்டைத் தூக்கி குட்டி மீது போட்டால், குட்டிக்கு வலிக்குமே?! கருத்துக் கணிப்பெல்லாம் வைத்து விட்டு, தோர்களை தூக்கி சந்தா Z-ல் தொபுக் என்று போட்டு விட்டீர்களே? :P

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : ஒவ்வொரு சந்தாப் பிரிவுக்கும் ஒவ்வொரு டி-ஷர்ட் தருவதாயின் லார்கோவின் W குழுமத்திடம் நாமொரு சின்ன லோன் கேட்கத் தான் வேண்டி வரும் ! ஒரு சந்தாதாரருக்கு ஒரு டி-ஷர்ட் என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்களேன் ! And சைஸ்களைப் பொறுத்தவரை நாளைக்கு சரியான விபரங்களைத் தந்து விடுகிறேனே !

   Delete
 99. எனக்கு ABCD என நான்கு சந்தாவும் வேண்டும் ஸார். மற்றும் ஏப்பிரலில் வெளியாக உள்ள சந்தா z ம் கட்டாயம் வேண்டும்.

  ReplyDelete
 100. எடிட்டர் சார்.,
  இவ்வளவு சந்தோசத்திலும் ஒரு சின்ன மனக்குறை.
  ப்ளூகோட்ஸ் இந்த வருடம் இல்லையென்பது கொஞ்சம் சங்கடமான சங்கதியாக படுகிறது.
  ஸ்மர்ஃப்ஸுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றையாவது ப்ளுகோட்ஸ்க்கு மாற்றி வழங்க இயலுமா சார்.??
  காதலிக்க குதாரையில்லை
  தங்கம் தேடிய சிங்கம்
  இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தனவே.! !!!

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : நம் நண்பர்களிடையே 'நல்ல வரவேற்பு' என்று சொல்ல இயலாது - ஆனால் நிச்சயமாய் மோசமாகவும் அவை perform பண்ணிடவில்லை ! ஆனால் எந்தவொரு புத்தக விழாவிலும் அவை எவ்வித விற்பனைத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை !

   அது மட்டுமன்றி - ஜூ.எ. புண்ணியத்தில் நமது ஆன்லைன் விற்பனை புள்ளிவிபரங்களையும் பார்த்திட முடிந்தது ! ப்ளூ கோட்ஸ் கதைகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளன !! நிச்சயம் எனக்கும் சங்கடத்தை தந்த stats அது !

   Delete

  2. ஜோர்டான் இல்லாததும் ஏமாற்றமாக இருந்தாலும்., அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என தேற்றிக் கொள்ளலாம்.
   ஆனால் ப்ளுகோட்ஸ் இல்லையெனும் போது. . . . .

   அய்யகோ இவ்வேதனையை எங்ஙனம் எழுத்தில் கொணர்வேன்.!!!

   (கண்ணீர் விட்டு கறியழும் படங்கள் கணக்கின்றி)

   Delete
 101. Bat Man 2016 இல் வெளி வராமல் போனது எம் துரதிஸ்டமே. ஹூம் என்ன சொல்ல?

  ReplyDelete