Powered By Blogger

Thursday, October 01, 2015

ஹலோ அக்டோபர் !

நண்பர்களே,

வணக்கம். வருண பகவான் திடீர் கருணை முகம் காட்டிட, மின்தேவனோ கோபித்துக் கொண்டு வனவாசம் சென்றிட, அக்டோபர் இதழ்களை சொன்னது போல் அனுப்புவது next to impossible என்றாகிப் போயிருந்தது ! ஆனால் நமது பைண்டிங் பிரிவினரின் அசகாய  முயற்சிகள் என் வாக்குத்
தவறாதிருக்க உதவியது ! நேற்றைய மதியமே உங்கள் கூரியர்கள் சகலமும் கொட்டும் மழைக்கு நடுவே சிவகாசியிலிருந்து புறப்பட்டு விட்டன ! So மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் 4 இதழ்களை ஒப்படைத்த திருப்தியோடு தீபாவளி மலரின்  பணிகளுக்குள் மூழ்குகிறோம் ! 380+ பின்னூட்டங்களைக் கொண்ட சென்ற பதிவில் அக்டோபர் விமர்சனங்களும் இடம் பிடிக்க வேண்டாமே என்ற ஆர்வத்தில் இந்தப் புதுப் பதிவுக்கு கதவைத் திறந்துள்ளேன். கூரியர் படையெடுப்பொடு உங்கள் நாளைத் தொடங்கிடவும் , இதழ்களைப் படித்திட, உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட உங்கள் நேரங்களைக் கோருகிறோம் !   Happy reading !

173 comments:

  1. Me First.!!!

    Dear Editor sir, my long week end will be with Oct. Releases. Tx sir!!

    ReplyDelete
  2. சூப்பர்!

    எங்கள் விடுமுறை நாட்களை விழா நாட்களாக்கிய உங்களின் மொத்த டீமின் உழைப்புக்கும் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. // எங்கள் விடுமுறை நாட்களை விழா நாட்களாக்கிய உங்களின் மொத்த டீமின் உழைப்புக்கும் நன்றி!! //
      +1

      Delete
  3. ஹாய் ஹாய்...waiting சார் ...

    ReplyDelete
  4. இன்று நம் கைகளில் தவழ்ந்திடயிருக்கும் நான்கு புத்தகங்களனாவன : ( சமூக சேவை னா எனக்கு ரெம்பப் பிடிக்கும்! ;) )

    ★*★*★*★*★*★*★*★*★

    1. தோர்கலின் – ‘சாகாவரத்தின் சாவி‘
    2. சுட்டி லக்கியின் – ‘புயலுக்கொரு பள்ளிக்கூடம்‘
    3. ரிப்போர்டர் ஜானியின் – ‘காலனின் காலம்‘
    4. (மறுபதிப்பு) ‘சிறைப் பறவைகள்‘

    ★*★*★*★*★*★*★*★*★*★*★

    ReplyDelete
    Replies
    1. சமூக சேவா ரத்னா விருதுகள் 5 முறை பெற்ற எங்கள் அன்பு செயலாளர் சேவை தொடர வாழ்த்துக்கள்

      Delete
    2. போனிக்ஸ் காலையிலேயே 3 காபியா,ஹி,ஹி.

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.....

    ReplyDelete
  6. ஆஹா.மூன்று நாள் லீவில் , நான்கு புத்தகங்கள் கிடைப்பது இரட்டிப்பு சந்நோசம்.! ஹேப்பி அண்ணாச்சி..!

    1ஆம் தேதியே எங்கள் கைகளில் இதழ்கள் கிடைப்பது ,வரலாற்றில் பொன் எழத்துக்களால் பொறிக்கபடவேண்டிய செய்தி.!மின்சாரமே இல்லை என்றாலும் மழையிலும் கடுமையாக உழைத்த உங்கள் டீம்மிற்கு நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. +1
      அருமையா சொன்னிங்க நண்பரே.

      Delete
  7. Replies
    1. நாங்களும் வந்துட்டோம்ல.

      Delete
  8. காலை வணக்கம் எடிட்டர் & நண்பர்களே.

    ReplyDelete
  9. உங்கள் அணியின் அர்ப்பணிப்பான உழைப்பிற்கு வந்தனங்கள் ஆசிரியரே.

    ReplyDelete
  10. வணக்கம் சார்....
    வணக்கம் நண்பர்களே....
    அடாத மழையிலும் விடாத பணியாற்றிய உங்கள் அணிக்கு வந்தனம் சார்...
    அப்பாடி , சைக்கிள்ல போனேன்.... தவழ்ந்து போனேன் என யாரும் இன்னும் புக் வாங்கல போல.....லைட்டா சந்தோசம......

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் ஹா ஹா ஹா.

      Delete
    2. ///சைக்கிள்ல போனேன்.... தவழ்ந்து போனேன் என யாரும் இன்னும் புக் வாங்கல போல..///

      பேக் வீல் பஞ்சராயிடுச்சாமாம்.!!!
      (டமாஸ். . . டமாஸ் ... மாயாவி) :-)

      Delete
  11. Madipakkam Venkateswaran ://மிஸ்டர் மரமண்டை.!நீங்கள் என்னதான் எதிர்பார்த்தாலும் எடிட்டர் என்னதான் முயற்சி செய்தாலும்//

    Mv சார், இப்போதெல்லாம் எனக்கு எதிர்பார்ப்பு என்று பெரிதாக எதுவுமே இல்லை. மறுபதிப்புகள் தொடர்ச்சியாக வருகிறது ; லார்கோ, வேயின், காமன்சே, தோர்கல், etc., போன்ற தொடர்கள் சீக்கிரமே முடியப் போகிறது ; மின்னும் மரணம் முழு வண்ணத்தில் வந்து விட்டது - இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் ?! மாறாக, அடுத்த வருடம் முதல் ''விண்ணில் ஒரு வேங்கை'' போன்று, எனக்கு சற்றும் சுவாரசியம் ஏற்படுத்தாத கதைகளை தவிர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் (:

    //இந்த தளத்திற்கு வராத மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் போன் தொடர்பில் உள்ளனர்.!// and //..... உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள்.! .. ... செலவிடுங்களேன்.! பின் நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன்.!//

    அப்படியெல்லாம் வேண்டாமே சார், எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்... உங்களிடம் ஃபோன் தொடர்பில் உள்ள மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் - எதனால் இந்த தளத்தில் பதிவிடுவதில்லை என்று கேட்டு மட்டும் சொல்லுங்களேன்.. ப்ளீஸ் :-)

    ReplyDelete
  12. ஐயம் வெயிட்டிங்...:-)

    ReplyDelete
  13. @எடிட்டர்:
    //380+ பின்னூட்டங்களைக் கொண்ட சென்ற பதிவில் அக்டோபர் விமர்சனங்களும் இடம் பிடிக்க வேண்டாமே என்ற ஆர்வத்தில் இந்தப் புதுப் பதிவுக்கு கதவைத் திறந்துள்ளேன்//
    ஹெ ஹெ... எப்படியும் ஒரு 95% பேருக்கு புத்தகங்கள் கிடைத்து, அதில் ஒன்றையாவது படித்து முடித்து, அதைப் பற்றி இங்கு கருத்திட முடிவதற்குள், கமெண்டுகளு வழக்கம் போல 200, 300 தாண்டி விடும்! டோன்ட் வொர்ரி ;)

    ReplyDelete
    Replies
    1. Same feeling. Thanks message itself has grossed 50 comments already. Our guys are never known for keeping comments in context, and it isn't going to change this time either :)

      Delete
    2. திருந்தி வாழ்வதென்பது என்னை மாதிரியே எல்லோருக்கும் சுளுவா வந்திடும்னு எதிர்பார்த்தா எப்படி நண்பர்ஸ்? ;) :P

      Delete
    3. +1

      உரையாடல்களின் நடுவில் 'மானே தேனே பொன்மானே' என்புதுபோல, க்ராஃபிக் நாவல் என்கிற கான்செப்டுக்கு சைடில் உதைகொடுத்துவிட்டு உரையாடலைத் தொடர்வதுதான் இன்றைய ஃபேஷன்.

      (My quota of comment for this post ends with this comment)

      Delete
    4. //உரையாடல்களின் நடுவில் 'மானே தேனே பொன்மானே' என்புதுபோல, க்ராஃபிக் நாவல் என்கிற கான்செப்டுக்கு சைடில் உதைகொடுத்துவிட்டு உரையாடலைத் தொடர்வதுதான் இன்றைய ஃபேஷன்.//

      :D they are not understanding that such comments subliminally impacting their mind too!

      Delete
    5. .. ஆமா .. அதுக்கு நடூல நாலு பேரு ஒரே ஐடீல வந்து உபதேசம் பண்ணா இன்னும் ஒரு பதிவோ இல்ல கமெண்ட் எல்லாம் கிளீனோ பண்ணனும் வேற :-p

      Delete

    6. ஆனா இதுக்காக புதுசா ஒரு டெக்னிக்கை நம்ம நண்பர்ஸ் ஏற்கனவே கண்டுபிடிச்சு வச்சிருக்கும்போது பெரிசா விசாரப்படவேண்டியதில்லைனு தோனுது! கமெண்ட்ஸ் எண்ணிக்கை Load moreஐ டச்சு பண்ணும்போது காமிக்லவர் மாதிரி யார்கிட்டயாவது 'பிழைப்புகளின் வகைகள் யாவை?' அப்படீன்னு ஒரு கேள்வியக் கேட்டு வச்சாப் போதும்... சித்தநேரத்துல இந்தத் தளம் இன்பெர்னோ சலூன் மாதிரி ஆகிடும்... அப்புறம் 'Operation dry clean' பண்ண இந்தத் தளத்தின் பெளன்ஸர் சரியான நேரத்தில் (இரண்டுநாள் குதிரைப் பயணத் தொலைவில்) வந்து தன் கையில் வச்சிருக்கும் அழி-லப்பரால் (Eraser) சர சர சர...

      அப்புறமென்ன...? எதுவுமே நடக்காதமாதிரி நாமும் 'ஹை! நான் 1st'னு மொதல்லேர்ந்து கமெண்ட் போட ஆரம்பிக்கலாம்! ;)

      அடிக்கடி இதுமாதிரி Operation பண்ணிக்கிட்டே இருந்தா நம்ம எடிட்டரை "டாக்டர் எடிட்டர் அவர்களே!" அப்படீனு கூப்பிடுற வசதியும்கூட இதில் இருக்கே? :P ( ஆனா அதுக்காக, கி.நா'வை படிச்சு தலைவலி கண்டவங்களையெல்லாம் வரிசைல நிக்க வச்சு மருந்து மாத்திரை எழுதிக்குடுக்கிற வேலையெல்லாம் வச்சுப்படாது எடிட்டர் சார்) :P

      Delete
    7. அட .. அட்டகாஷ் .. போலி ஐடி இல்லாமலே ஆரம்பிக்குதே ;-)

      Delete
    8. அப்புறம் விஜய் .. 55 கமெண்ட் தான் ஆகிருக்கு .. வெய்ட் பண்ணுங்க .. போய் ஒரு ஐடி வேணும்னா தயாரிச்சிட்டு வாங்க ;-)

      Delete
    9. குமார்'ன்றது defaultடா வந்துடும் ராகவரே... அதுக்கு prefix என்ன வேணும்னு நீங்களே சொல்லிட்டா வேலை சுளுவாகிடும் பாருங்க... ( ரொம்ப யோசிச்சாக்கூட இப்பல்லாம் தலவலி வந்துடுது. அப்புறம் மருந்துச் சீட்டை எடுத்துக்கிட்டு யாராவது டாக்டர் வந்துட்டாலும் கஷ்டம் பாருங்க?) :P

      Delete
    10. ஆங் .. ஆர்ச்சி குமார் ?? :-) ;-)

      Delete
    11. நைஸ் நேம்! ;)

      ஆங்! ஆர்ச்சி'ன உடனேதான் ஞாபகம் வருது... அந்த கேப்ஷன் போட்டி முடிவ எடிட்டர் இன்னும் அறிவிக்கலையே...?

      Delete
    12. நான் செயிக்கிரதுல......உங்களுக்கு எல்லாம் எவ்ளோ ஆர்வம்.....நண்பர்ஸ் உங்களை நினைக்க நினைக்க ஆனந்த கண்ணீர்......

      Delete
    13. கார்த்திக் சோமலிங்கா சார்.!உங்கள் கடிதம்(கமெண்ட்) வெளிவந்து உள்ளது. வாழ்த்துக்கள்.!

      Delete
    14. ///சிறிது நேரத்தில் இன்பெர்னோ சலூன்.!////

      ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ..............!

      ///மருந்து சீட்டை எடுத்துக்கிட்டு// எங்கள் க்யூ சிவகாசியில் இருந்து மதுரைவரை நிற்கும்.! உங்களை போன்றவர்கள் கூட்டத்தை ஒழங்கு படுத்தலாம்.

      பம்மல் கே சம்மந்தம் படத்தில்,கமலிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டால்,
      "பம்மல் உவ்வ்வே சம்பந்தம் என்பார் அது மாதிரி ,தலைவலிக்கு காரணம்"-----------------"-தான்.ஏனெனில் "-------------" ஆதரவாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.!
      ஒரு மனவருத்தமான செய்தியை கலகலப்புடன் ஜாலியாக சொல்லும் திறமை அபாரம்.!இது உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.!குட் நைட்.!

      Delete
    15. Thanks, 1st, 2nd, book reached, going towards courier office.
      இந்த மாதிரி பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒரு உற்ச்சாகம் தோத்திக்குது. அதனால அதுவும் இருந்துட்டு போகட்டுமே.
      கதை விமர்சனம் போடறவங்க போடுங்கப்பா, பின்னூட்டம் 200 அல்லது 300 கிராஸ் பன்னா என்ன ? Load More ஒரு 4 முறை கிலிக்கினால் போச்சி.

      Delete
    16. கார்த்திக் சார்.!

      ///விமர்சனம் போடுறவங்க ///

      நான் புத்தகங்கள் வாங்கியவுடன் அதை புரட்டி , புரட்டி அதன் அழகை ரசித்து சந்தோசப்பட்டு . பின், விளம்பரங்களை பார்த்து உற்சாகப்பட்டு,இந்த வருடம் வரவேண்டிய மாடஸ்டி கதைக்கான விளம்பரத்தையும் அது வருவதற்கான அறிகுறிகளையும் காணோம் என்று வருத்தப்பட்டு,பின் சி.சி.வ.படித்து ஆர்ச்சியின் கால எந்திரத்தில் எடிட்டருடன் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு , பின் ஹாட்லைன் ,காமிக்ஸ்டைம் என்று எல்லாவற்றையும் படித்து விட்டு, அதில் எடிட்டர் சொல்லிய விஷயங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டு இருந்து விட்டு ,பின் வீட்டில் தொந்தரவு இல்லாத நேரமா பார்த்து மீண்டும் ஹாட் லைன் படித்துவிட்டு கதையைப்பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை மனதில் ஓரமாக வைத்துக்கொண்டு பின்பு கதையை படித்துவிட்டு படித்த கதையை மனதில் அசைபோட்டு பின்பு இங்கு விமர்சனம் போடவேண்டும்.!

      நான் தற்போது புரட்டி புரட்டி ரசித்துக்கொண்டு உள்ளேன்.!

      Delete
    17. //இந்த மாதிரி பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒரு உற்ச்சாகம் தோத்திக்குது. அதனால அதுவும் இருந்துட்டு போகட்டுமே.
      கதை விமர்சனம் போடறவங்க போடுங்கப்பா, பின்னூட்டம் 200 அல்லது 300 கிராஸ் பன்னா என்ன ? Load More ஒரு 4 முறை கிலிக்கினால் போச்சி.//


      Fact Factu :-))

      Delete
    18. @MV
      அனேகமா பலபேர் இப்படிதான் படிப்போம் நினைக்கிறேன், என்னையும் சேர்த்து. கூரியெர் வந்ததும் அந்த பார்செல அரை மணி நேரம் வேடிக்கை பார்த்துட்டு அப்புறம் பொறுமையா கட் பன்னி புக்க வெளிய எடுத்து அதுக்கப்புறம் நீங்க சொன்ன மாதிரி படிக்கிறது .

      LOL
      //இந்த வருடம் வரவேண்டிய மாடஸ்டி கதைக்கான விளம்பரத்தையும் அது வருவதற்கான அறிகுறிகளையும் காணோம் என்று வருத்தப்பட்டு//

      Delete
    19. கார்த்திக் சோமலிங்கா ,ரமேஷ், சதீஷ் குமார்ஸ்.!

      மிலிட்டரி ரூல்ஸ் போல் எல்லோரும் அட்டேன்சன்ஸ் என்று முகத்தையும் உடம்பையும் விரைப்பாக வைத்துக்கொண்டு பதிவிடவேண்டுமா.? உங்களுக்கு புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற காண்டா.? கூல் கூல்.! கேலியும் கிண்டலும் வாழ்க்கையில் ரொம்ப அவசியம்(மனதை புண்படுத்தாத),

      வாழ்க்கை என்னும் சக்கரம் தடையின்றி சுழன்று செல்ல கேலியும் கிண்டல் என்னும் கிரீஸ் அவசியம் .என்று டால்ஸ்டாய் கூறியுள்ளார்.!மேலும் நாளை காலை மீண்டும் புதிய பதிவு வரப்போகிறது.! கா.சோ.சார் ஒன்று அல்லது இரண்டு கமெண்ட்க்கு மேல் போடமாட்டேன் என்ற விரதத்தை எனக்கும் கடைபிடிக்க ஆசைதான்.! ஆனால் அந்த அளவுக்கு எனக்கு " வில் பவர் " கிடையாது.! வாழ்க்கை என்னும் படகில் பிக்கல் பிடுங்கள் இல்லாதவரை இங்கு வரப்போகிறேன் ..1990 வரை காமிக்ஸ் தவிர வேறு எதுவும் யோசிக்காத தீவிர காமிக்ஸ் ரசிகரான நான் வாழ்க்கை சுனாமியில் அடித்துச்செல்லப்பட்டு பின்பு2013 வரை காமிக்ஸையே மறந்துவிட்டேன். எல்லாம் அவன் செயல் என்றே ஜாலியாக பதிவிடுகிறேன்.!

      Delete
  14. ஐயம் வெயிட்டிங்

    ReplyDelete
  15. Replies
    1. ஏன் மாயாவி?
      உங்களுக்கு "Shaving birds " வந்து சேரவில்லையா.??

      Delete
    2. வேறு யாரோட போட்டோவை போட்டால்.....புத்தகங்கள் உடன் ஓர் செலிபி போட்டாத்தான் ஒப்புக்கொள்வோம்.....

      Delete
    3. Mayavi sir Status update:

      கூரியர் படையெடுப்பொடு உங்கள் நாளைத் தொடங்கிடவும் - DONE Target Achieved

      இதழ்களைப் படித்திட, உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட உங்கள் நேரங்களைக் கோருகிறோம் - Pending

      Delete
  16. ஜ யம் வெயிட்டிங்

    ReplyDelete
  17. வாங்கியாச்சு! வாங்கியாச்சு.!

    இங்கே க்ளிக்.

    (நேர்ல வந்தா க்ளிக்கை பார்க்கலாம்.)

    தலைவரும் செயலாளரும் கடுதாசி போட்டிருக்காங்க (காலனின் காலத்துல)

    ReplyDelete
  18. Inrey kadaigalilum kidaikuma editor avargaley.

    ReplyDelete
  19. அன்புள்ள எடிட்டர்,

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்! ..

    ReplyDelete
    Replies
    1. @பெரியார்

      இன்னும் ஒரு மாதமேயுள்ளது, அதற்குள் கஜினி முஹம்மது சாதனையை முறியடிக்கணும், ஆமா!

      Delete
  20. TEX SANTHA KANDIPPAKA VARUM ENAKKU EDI SIR MEETHU NAMPIKKAI EPPOTHUM UNDU SO IAM WAITING

    ReplyDelete
  21. TEX SANTHAVIL TEX VANTHA 600+ KATHAIKALILB FIRST 300 KATHAIKALIL(AARAMPA KALA TEX STORY KATHIKALUM VANTHAL NALLATHU) ORU 3 BOOK KAVATHU VELIYITTAL NANTRU SIR PLS

    ReplyDelete
  22. விஜயன் சார், தோர்கல் அட்டை படம் பார்க்கும் போது சில வருடம்களுக்கு இதே போன்ற படத்துடன் விளம்பர பலகை பார்த்தேன். அப்போது அந்த படத்தில் உள்ளது யார் என தெரியாது. நமது இந்த மாத அட்டைப்படத்தை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  23. வழமை போல கொரியரில் 10.15க்கெல்லாம் புத்தகங்கள் வந்து கிடைத்தன சார்......
    நான்கையும் புரட்டி பார்த்ததில், அட்டைப்படத்தில் இம்முறை டாப் இடியாப்ப ஜானி தான் சார் ....நீல ஊதா வண்ணத்தில் ராசிசக்கரத்தில் ரொம்பவே ரசிக்க வைத்தது சார்..... 2ம் இடம்தான் தோர்கல் அட்டைப்படத்திற்கு.....கதைகளில் உள் பக்கங்களில் கூட காலனின் கால ஊதாவே ஆதிக்கம் செலுத்துகிறது சார்....கார்டூன்தான் கொளக்கு அடுத்த பேவரைட் எனவே இங்கி பிங்கி பாங்கி இல்லாமலேயே சுட்டி படிக்க ஆரம்பித்து விட்டேன் சார்....கதைபற்றி இப்போது ஏதும் சொல்லமாட்டேன் , புத்தகம் வராத நண்பர்கள் பொருட்டு....
    இந்த மாதம் சத்தியாமாய் என்னை கவர்ந்த ஒன்று-"தீபாவளி with டெக்ஸ்" என்ற தீபாவளி மலரின் அசத்தல் விளம்பரமே சார்.... நண்பர்ஸ் முதல் கதையில் புதிய பாணி ஓவியங்கள் போல...க்ர்ர்...2வது டெக்ஸ் கதையில் பழைய பவள சிலை மர்ம - ஓவிய பாணியில் டெக்ஸ் முகமும், எங்க மாமா "கிட்" கா்சனின் முகமும் அசத்துகிறது......இப்போதே நீர்வீழ்ச்சி வாயில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது......

    ReplyDelete
    Replies
    1. @STV
      டெக்ஸ் சந்தா, ஒரு வேளை இல்லாதுப் போனால், வருகின்ற தல தீபாவளி மலருக்கு அப்புறம் அதனுடைய தாக்கம் அதிகரிக்க வாப்புக்கள் ஏராளம்! ஏனெனில், வரவிருக்கும் இரண்டு கதைகளின் சித்திரங்களும் அசாத்திய ரகங்கள்.

      கதை ஒன்று -> 'பனி மலையில் ஒரு புதையலைத் தேடி' - இது ஒரிஜினலில் டெக்ஸ் maxi வரிசையில் 2வது வெளியீடாக 01/11/1997-ல் வெளிவந்தது. (இந்த கதை அடுத்த மாதம் முதல் தேதியன்று நமக்கு கிடைக்கும் போது சரியாக 18 வருடங்கள் நிறைவு செய்யும்.) 'அந்தோனியோ செகுரா'-வின் கதைக்கு ஓவியர் 'ஜோஸ் ஒர்டிஸ்' சித்திரங்கள் பட்டையைக் கிளப்புவது நிச்சயம்.

      கதை இரண்டு -> 'எமனின் வாசலில்' - இது ஒரிஜினலில் டெக்ஸ் ஸ்பெஷல் வரிசையில் 14வது வெளியீடாக 01/06/2000-ல் வெளிவந்தது. கிளாடியோ நிஸ்ஸி-ன் கதைக்கு ஓவியர் 'காலின் வில்சன்' சித்திரங்கள் இன்னுமொரு அசாத்திய சித்திர விருந்து.

      so, வரவிருக்கும் 'தீபாவளி வித் டெக்ஸ்' , இந்த தீபாவளிக்கு ஒரு 10000 வாலா சரவெடியாக வெடிக்கும் என்பது நிச்சயம்.

      Delete
    2. // அட்டைப்படத்தில் இம்முறை டாப் இடியாப்ப ஜானி தான் சார் ....நீல ஊதா வண்ணத்தில் ராசிசக்கரத்தில் ரொம்பவே ரசிக்க வைத்தது சார்....//

      ஆஹா எனக்கு புத்தகம் வர 3 அல்லது 4 வாரம் ஆகுமே

      Delete
    3. டெக்ஸ் விஜயராகவன்.!

      //டெக்ஸ் தீபாவளி குண்டு ஸ்பெஷல்.!//

      " கண்ணா பெரிய லட்டு திண்ண ஆசையா.? "

      Delete
    4. MVசார்/// கண்ணா பெரிய லட்டு திண்ண ஆசையா...///---தட்டோடு கொடுத்தாலும் ஓகே தான்... அடுத்த மாதம் லாம் கொரியர் வரும் அன்று ....அந்த சைக்கிள் கேரியரில் தொத்தி கொண்டு போய் விடுவேன்...

      Delete
    5. மொகய்தீன் பாய்@ தகவலுக்கு நன்றி...
      அப்புறம் உங்கள் ஊர் பக்கம் என்னா பேமஸ்.....

      Delete
  24. டியர் எடிட்டர்,

    சிங்கத்தின் சிறு வயதில் தொடரில் நீங்கள் கூறி இருப்பது போல சிறு வயது நாட்களில் பிரான்கோ-பெல்ஜிய இதழ்கள் கொஞ்சம் புரியாமல்தான் இருந்தது. நான் சொல்வது 1987 தீபாவளியில் லயன் சூப்பர் ஸ்பெஷல் (இதன் காரணமாகவே மறக்க முடியாத தீபாவளி) XIII வந்து - அது படித்த பொழுது சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதே 2011ல் படித்த போது - it was just fantastic.

    அந்நாட்களில் batman, ஸ்பைடர், ஆரச்சி, டெக்ஸ் போன்ற adventure / fantasy தான் பிடித்திருந்தது.

    மினி-லயன் / ஜூனியர் லயன் - அந்த Scrooge / Donald கதைகள் மற்றும் திகிலில் Batman நின்றது குறித்த வருத்தம் இன்னும் மனதில் ஒரு ஓரமாய் ...!! ப்ச் ..!! :-(

    ReplyDelete
  25. இன்று எவ்வளவோ கார்டூன்கள் தமிழில் படித்து விட்டோம் (லயன் மற்றும் முத்துவில்) என்றாலும் அன்று .. the sheer thrill and charm the first Lucky Luke and Scrooge gave in ஜூனியர் லயன் and மினி லயன் .. மறக்க இயலாத நினைவுகள் ! :-)

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசுல அனுபவித்த அந்த thrill, வித விதமான கதை களம் ( lucky Luke, Suskie wiskie, Tex, mr jet, wing man, Donald Duck, கறுப்பு கிழவியின் கதைகள்) அசத்தல்.
      இப்போ லார்கோ, தோர்கல் , டெக்ஸ், டைகர், ரிப்போட்டர் ஜானி, பவுன்சர், லக்கி இவிங்க கதை கிட்டத்தட்ட அந்த பழைய த்ரில்ல தருது.

      Delete
  26. தோர்கல் முதல் கதை படித்து விட்டேன். தமிழில் எளிமையாக அனைவரும் எளிதாய்ப் படிக்கும் வண்ணம் இருந்தது. விறுவிறுவென்று கதை முடிந்து விட்டது. தொடர் சுவாரஸ்யம் கூடும் வேளை ..!

    Quite coincidentally .. தோர்கல், புலி, சந்திரஹாசம் என்று மீடியாவில் ஒரே மாயஜாலமாய் இருக்கிறது ...!

    ReplyDelete
  27. ஆகா,! இப்போதுதான் கைப்பற்றினேன்.காலை பத்து மணிக்கு கூரியர் ஆபிஸில் இருந்து போன் .!அவர்களுக்கு ஆச்சர்யம்.!கடன் காரன் மாதிரி வந்து நிப்பானே.! அப்படி இல்லையெனில் போன்போட்டு தொல்லை கொடுப்பானே, இன்று ஆளைகாணோமே,! என்று ஆச்சர்யம்.!மூன்று நாள் தொடர்விடுமுறை என்பதால் வேலைப்பளு மேலும் ஒரு மணிநேரமா கரண்ட் இல்லை.! படித்துவிட்டு வருகிறேன்.!

    ReplyDelete
  28. விஜயன் சார், சுட்டி லக்கி கதை படித்துவிட்டேன். சிறுவர்களுக்கு உகந்த கதை, அவர்களுக்கு கண்டிப்பாக இந்த கதை பிடிக்கும். சிரிப்பு வரவைக்கும் பக்கம்கள் குறைவு. எல்லா கதையும் வயிறு குலுங்க வைக்கும் காமெடி கதைகள் என்ற எண்ணம் இல்லாமல் படித்தால் இதனை கண்டிப்பாக ரசிக்கலாம். அச்சு மற்றும் வண்ணத்தில் ரசிக்க செய்யும் சித்திரம்கள் இந்த கதையின் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதைக்கு மாற்றி யோசித்த தலைப்பு: சுட்டிகளின் வேட்டை (அ) தேட்டை.

      Delete
    2. குறை: குழந்தைகள் படிக்க உகந்த இந்த கதையில் ஒரு இடத்தில் தென்பட்ட வசனம் கொஞ்சம் மனதை நெருடியது.

      Delete
    3. பரணி@ ///குழந்தைகள் படிக்க ஏற்றது.!////

      உண்மை.!நான்கு புத்தகங்களையும் பார்த்த என் மகன் சுட்டி லக்கிலூகை மட்டும் எடுத்து கொண்டு படிக்கிறான்.!நான் இன்னும் தொடவேஇல்லை.!

      Delete
    4. // குறை: குழந்தைகள் படிக்க உகந்த இந்த கதையில் ஒரு இடத்தில் தென்பட்ட வசனம் கொஞ்சம் மனதை நெருடியது. //

      எனக்கும் தான்...

      Delete
    5. ஒரு இடமல்ல; இரு இடங்களில்!

      Delete
  29. சிறை பறவைகள்: முதல் முறையாக படிக்கிறேன். தெளிவான கதை. முதல் பக்கத்தில் இருந்து விறுவிறுப்பு. கிளைமாக்ஸின் கடைசி இரண்டு பக்கம்கள் சப்பென்று இருந்தது. பின் அட்டையில் உள்ளது போல் நமது நமது துப்பறியும் ஜோடிகளை காண்பிக்காமல் கதையில் அவர்களை அருமையாக வரைந்து இருந்தது சிறப்பு.

    குறை: எப்போதும் போல் இவர்களில் கதைகளில் ஆங்காங்கே தென்பட்ட எழுத்து பிழைகள்.

    ReplyDelete
  30. விஜயன் சார், அடுத்த மாதம் தீபாவளி விருந்தாக டெக்ஸ் மற்றும் ஷெல்டன் கதைகள் வரும் என நீங்கள் சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்த மாத புத்தகத்தில் அடுத்த மாதம் வானமே எங்கள் வீதி, மஞ்சள் நிழல், மற்றும் டெக்ஸ் கதைகள் வருவதாக விளம்பரம் உள்ளது.

    இவைகளில் அடுத்த மாதம் வரவுள்ள புத்தகம்கள் எவை என மீண்டும் ஒரு முறை உறுதி செய்தால் நன்றாக இருக்கும். அதே போல் புத்தகம் மற்றும் இணையதளத்தில் அடுத்த மாதம் வரும் கதைகளில் விளம்பரம் எங்களை குழப்பாமல் பார்த்து கொள்ளவும்.

    ReplyDelete
  31. விஜயன் சார், நமது இந்த ஆண்டு மறுபதிப்பில் தங்க விரல் மர்மம் கதை வருவதாக சொல்லி இருந்தீர்கள். அது இந்த வருடம் எந்த மாதத்தில் வருகிறது.

    ReplyDelete
  32. காலனின் காலம்: அட்டை படம் அருமை. வித்தியாசமான வண்ணம், இந்த வண்ணத்தில் நமது அட்டைபடம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறன். சித்திரம்கள் வண்ணத்தில் கண்ணைபறிக்கின்றன.

    வழக்கமான ஜானியின் இடியாப்ப சிக்கல் நிறைந்த கதை. விறுவிறுப்பாக ரசிக்கும் படி இருந்தது.

    முன் பக்கத்தில் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம்கள் பற்றி ஒரு வரியில் குறிப்பிட்டு இருந்தது நல்ல விஷயம், இதனை நமது காமிக்ஸில் வரும் அனைத்து கதைகளுக்கும் தொடர்ந்திட செய்யலாமே?

    எனக்கு இந்த புத்தகத்தில் மிகவும் பிடித்தது: அழகான ஓவியமும் அதன் வண்ண சேர்க்கைகளும்.

    ReplyDelete
  33. சூப்பர் ஸார். உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள் . எப்போது எங்கள் அபிமான Batman வருவார் ஸார்?

    ReplyDelete
  34. பவுன்சரின் 'கறுப்பு விதவை' போன வாரம் படித்து முடித்தேன்.
    இங்கு வந்த விமர்சணங்களை தவிர்த்ததால் :) கதையின் கிளைமாக்ஸ் ஒரு பெரிய திருப்பமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  35. 'வாராதோ விடியலே' ஆசிரியர் ஹாட்லயனில் குரிப்பிட்டது போல் ஒரு soulful reading experience. படங்கலே கதை கூரியது.
    Question: எப்படி கால்களை உருப்பு மாற்று ஆருவை சிகிச்சை செய்ய முடியும் ?

    ReplyDelete
    Replies
    1. //Question: எப்படி கால்களை உருப்பு மாற்று ஆருவை சிகிச்சை செய்ய முடியும் ?//

      சிரமம் தான்! குறிப்பா, இடதுகாலும் வலதுகாலும் இடம்மாறிடாம எடுத்து வைக்கணும்... இல்லேன்னா, ஷூ போடும்போது பிரச்சினையாகிடும்! :P

      Delete
    2. @Erode Vijay

      // சிரமம் தான்! குறிப்பா, இடதுகாலும் வலதுகாலும் இடம்மாறிடாம எடுத்து வைக்கணும்... இல்லேன்னா, ஷூ போடும்போது பிரச்சினையாகிடும்! :P //

      ஹா ஹா என்னா கவலை உங்களுக்கு :)

      Delete
  36. புயலுக்கொரு பள்ளிக்கூடம்:

    சுட்டி லக்கியை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன?

    அழகான ஒரு இதழ். அழகான ஓவியங்கள், அட்டகாசமான வண்ண சேர்க்கை, நல்ல வசனங்கள் (இரு இடங்கள் தவிர்த்து), தாத்தாவின் சேட்டை, பேரனின் மேதாவித்தனம், சில இடங்களில் அசத்திய நகைச்சுவை, இடையே ஒரு சுவாரஸ்ய 'நிஜ சங்கதி' குறிப்பு... என மிகவும் ரசித்தேன். பக்கம் 6 லிருந்து 49 வரை ஒரு குழந்தையை மாறியிருந்தேன் என்பதை சந்தோசமாய் சொல்லிகொள்கிறேன்.. சார்..

    @ All : லக்கி லுக் கதைகள் உண்மைக்கு எவ்வளவு நெருக்கம்.. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

    ReplyDelete
  37. விஜயன் சார்,
    தோர்கல்:- அம்புலிமாமா கதைகளில் வரும் மந்திர/மாய உலக கதை. அந்த கதைகளை படிக்கும் போது வசனம்களை வைத்து கற்பனை செய்து ரசித்த அனுபவம். இன்று அது போன்ற கதை, சிறப்பான சித்திரம்களுடன். வாவ்.
    கதையின் ஆசிரியரின் கற்பனைக்கு சித்திரம் மற்றும் அதற்கு வண்ணகலவை கொடுத்து வேறு உலகத்திற்கு கூட்டி சென்று விட்டார்கள், வான்காமே மற்றும் ரோசின்கி. ஒவ்ஒரு பக்க ஓவியும் ஒரு கதை சொல்கிறது, பிரமிக்க வைக்கிறது... இதனை ரசித்த கண்கள் பாராட்டுவதற்கு கைகளை தட்டிகொண்டே இருக்க சொல்லுகிறது. அதில் குறிப்பாக பக்கம் 12, 19, 20, 28, 40, 48, 54, 65, 69 (சிறுத்தையுடன் போடும் சண்டை) 74, 81.

    மொழி பெயர்ப்பு, அனைவரும் புரிந்து கொள்ள கூடிய எளிதான வகையில் இருந்தது. குறிப்பாக நான் ரசித்தது, "என் உடலில் மூச்சிருக்கும் வரை போராடுவேன்" - இவரின் பாசிடிவ் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது. மொழி பெயர்ப்பு கதையின் வேகத்தை மட்டுபடுத்தாமல் கதையுடன் நம்மை பயணிக்க வைத்தது சிறப்பு.

    விஜயன் சார், ஒரு சிறந்த திறமைசாலியை வீட்டில் வைத்து கொண்டு அவருக்கு தாமதமாக இந்த வாய்ப்பை வழங்கியதற்கு "கடும் கண்டனம்கள்". இந்த கதையை மொழி பெயர்த்த 70 வயது இளைனருக்கு தொடர்ந்து இதுபோன்ற கதைகளில் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் உங்கள் தந்தையாரிடம் சொல்லிவிடுங்கள்.

    ஆரிசியா என்னவானால் என்ற கேள்வி மனதில் ஓடி கொண்டுள்ளது. எனவே அடுத்த பாகம்களை விரைவில் (டிசம்பர்) வெளி இட வேண்டுகிறேன்.

    பேராசை: முடிந்தால் அடுத்த வருடம் தோர்கல் கதை முழுவதையும் ஒரு "complete collection" ஆக வெளி இட்டால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்ப்பு இலாகா தலைமை மாற்றவும் :) நான் சொன்ன நாள் ("தினம் தினமாய் ஒரு பதிவு") பகுதி 584 வெகு தொலைவில் இல்லை !!

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உண்மைதான் .......அவர்களின் வார இதழை தூக்கி எறிவது நிஜமே...ஆயிரம் விலை போட்டு காமிக்ஸ் என்று வாங்குபவர்கள் அதை தூக்கி எறிய மாட்டார்கள் ...:-)

      Delete
    3. மற்ற குழுமங்களின் வெளியீடுகள் பற்றி இங்கே விவாதமோ, விலை பற்றிய விமர்சனங்களோ இங்கு வேணாமே, நண்பர்பளே...நீங்கள் இருவரும் உங்களின் இந்த கமெண்ட்ஸ் களை அழித்து விட வேண்டுகிறேன்... ப்ளீஸ்....

      Delete
    4. @தலீவர் //பெரும் பத்திரிக்கை குழுமத்தில் இருந்து ஒரு காமிக்ஸ் கிராபிக் நாவல் விளம்பரம் //

      என்ன நிறுவனம்..என்ன புத்தகம்... தகவல் ப்ளீஸ்.

      Delete
    5. // மற்ற குழுமங்களின் வெளியீடுகள் பற்றி இங்கே விவாதமோ, விலை பற்றிய விமர்சனங்களோ இங்கு வேணாமே, நண்பர்பளே. //
      +1

      Delete
    6. Done ... we cannot compare two different products - an original creation and translated work with respect to pricing .. true .. deleted my comment ..

      Delete
    7. எனக்கு தகவல் மட்டும் போதும். விவாதிக்க அல்ல. நான் வேறு எந்த பத்திரிக்கைகளும் படிபதில்லை. செய்தி தளங்களுக்கும் போவதில்லை. தமிழ் காமிக்ஸ் தளங்கள் தவிர. நல்ல கதையாக இருக்கும் என்று தோன்றினால் வாங்கி படிப்பதற்கு எனக்கு தகவல் மிகவும் உதவியாக இருக்கும்..

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Sorry ...type error ....


      WWW .CHANDRAHAASAM .COM செல்லவும்

      Delete
    10. MP sir !..விகடன் பிரசுரம் ....

      Delete
    11. // ஆனால் உள்ளே ஜானி அழகான வண்ணத்தில் அட்டகாசமான அச்சுதரத்தில் செமையாக உள்ளார் //

      Super

      Delete
    12. நன்றிகள் பல செனா. ஆனா.

      Delete
    13. வருவதற்கு முன்கூட்டியே எம்பி சாருக்கு தகவல் கொடுத்துமைக்கு நன்றிநன்றி செல்வம் சார்...


      நண்பரின் வேண்டுகோளை ஏற்று நானும் நீக்குகிறேன் ...:-)

      Delete
    14. மனப்பூர்வமான நன்றிகள் ராகவன் ஜி& தலீவரே........
      //// we cannot compare two different products - an original creation and translated work with respect to pricing .. true ........///--- எக்ஸ்சாக்ட்லி ராகவன் ஜி.......உண்மை நிலையை எடுத்துரைக்கும் வார்த்தைகள்......

      Delete
  39. சார், book வந்துடிச்சி. Surprised, 2ம் தேதியே வந்தது, ஆச்சரியம், சந்தோஷம். டைகர் வெளியீடு, டபுள் சந்தோஷம். ரெண்டு புக்குமே வாங்க போறேன் சார். தோர்கல் படங்கள் அருமை. எதை முதலில் படிப்பது என தெரிய வில்லை.

    ReplyDelete
  40. முதல் கதை சுட்டி லக்கி லூக்கை படித்தேன்.!என் பையனுக்கு ரொம்ப பிடித்து விட்டது போலும்.! அவன் புத்தகத்தை கீழே வைக்கும் வரை நீண்ட நேரம் காக்கவேண்டியதாயிற்று.!

    நான்கு புத்தகத்திற்கும் ஒரே ஹாட்லைன் வருத்தத்தை கொடுக்கின்றது.! என்ன காரணம் இருந்தாலும் எல்ல புத்தகத்திற்கும் ஹாட்லைன் எழதவும்.ஏனென்றால் இந்த புத்தகங்கள் எங்கள் எங்கள் ஆயுள் முழுமையும் எங்களுடன் இருக்கபோகிறது.!

    சி.சி.வ. தொடரில் திகில்,@ மினிலயனும் நிறுத்திய சோகம் உங்களை எவ்வளவு தூரம் பாதித்து உள்ளது.இதன் முலம் இந்த தொழிலை உயிர் மூச்சாக பாவிப்பது புரிகிறது சார்.!

    சுட்டி லக்கி நன்றாக இருந்தது. காமெடியுடன் த்ரிலிங்க் காக கதை சென்றது.! சித்திரங்கள் கலரில் அட்டகாசம்.!சூப்பர் தரம் மொத்தத்தில் சூப்பர்.! அடிக்கடி சுட்டி லக்கிலூக் வந்தால் நானும் என் மகனும் சந்தோசப்படுவோம்.!

    ReplyDelete
  41. aaeram roopaaikku 150 pakkangal mattumay ini yaaravathu nam comics vilai matrum tharam patri athusariyillai ithu sariyillai ena noynoy endru kutram solvathai inimaylaavathu vittu tholaiyungal

    ReplyDelete
  42. ******** புயலுக்கொரு பள்ளிக்கூடம் ********

    அதிக எதிர்பார்ப்பின்றி படித்ததாலோ என்னவோ கொஞ்சம் அதிகமாகவே ரசிக்க முடிந்தது! உருண்டுபுரண்டு சிரிக்க வைத்திடும் வாய்ப்புகள் மிகக் குறைவு எனினும் அவ்வப்போது புன்னகைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை! நண்பர் பரணி( ஃப்ரம் பெங்களூரு) சொன்னதைப் போல, அந்த இரு இடங்களில் அந்த இரு சொற்கள் மட்டும் படிக்கும்போது கொஞ்சம் இதுவாய் இருந்தது. குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுக்க ஏதுவானதாக கருதப்படும் இதுபோன்ற புத்தகங்களில் இதுமாதிரி வார்த்தைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் இதுவாகத்தான் இருக்கிறது! இதுபோன்ற இதுக்களை இனிமேல் கொஞ்சம் பார்த்து இது செய்வது நல்லது எடிட்டர் சார்! அன்றாடப் புழக்கத்தில் இதுபோன்ற வார்த்தைகள் மிகச் சாதாரணமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும், அச்சில் பார்க்கும்போது கொஞ்சம் இதுவாக இருப்பதைத் தவிர்க்கமுடியவில்லை; அதிலும் குழந்தைகளுக்கான ஒரு இதுவில்!

    ஹாட்லைன்'ல் சென்ற மாதத்து இதழ்களின் வெற்றி/தோல்வி குறித்த, பெரும்பான்மை வாசகர்களின் கருத்துகளை 'உள்ளது உள்ளபடி' வெளிச்சமிடும் எடிட்டரின் விவரிப்புகள் இடம்பெறாமல் போனது ஒரு ஏமாற்றமே! (மறந்துட்டீங்களா எடிட்டர் சார்?)

    'சி.சி.வ' - அட்டகாசம்! எழுத்துக்களின் வழியே அன்றைய நாட்களின் வலியை நாமும் உணரும்படி செய்தது! இன்றைக்கு 'கடமையே' என்று எழுதவேண்டியிருக்கும் ஹாட்லைனைக் காட்டிலும், அன்றைய நாட்களின் குதூகலங்களும் வலிகளும் ஆத்மார்த்தமான எழுத்துக்களாய் 'சி.சி.வ' தொடரில் வெளிப்படுவது உண்மையிலும் உண்மை! ( மறுத்துப்பேச யாரேனும் தயாரா?) ;)

    ReplyDelete
    Replies
    1. //மறுத்து பேச யாரேனும் தயாரா.?//

      உண்மை சார்.!இதை படிக்கும்போது நெஞ்சு கனத்துவிட்டது.!

      ஹாட்லைன் நான்கு இதழ்களுக்கும் சேர்த்து ஒரே இதழில் காக்டெயில்லாக எழதுவது கண்டிக்க தக்கது சார்.!

      ஒரு படத்தில் பி.எஸ். வீரப்பாவின் சதி திட்டங்கள் எல்லாம் முறியடிக்கும் போது அவர் வெறுப்புடன் ஒரு வசனம் கூறுவார் அது.,
      "நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் " என்பார்.! அதைப்போல நம்மை திட்டுபவர்களை கண்டு கொள்ளவேண்டாம்.!

      Delete
    2. Erode Vijay: ஹி ஹி !! நம்ம வார்த்தை இப்போ பேமஸ் :-D

      Delete
  43. சிறைப்பறவைகள் ,எடிட்டர் கூறியது போல் தெளிந்த நீரோடை போல் எளிமையாகவும் கதை நன்றாகவும் உள்ளது.. என் அண்ணன் மகன் ( 13 வயது) இந்த மாதிரி எளிமையான கதைகள் விரும்பி படிக்கிறான்.!
    கடினமான கதைகளங்கள் கொடுத்தால் சந்தேகம் கேட்டே டார்ச்சர் கொடுக்கின்றான் என்று அண்ணி புகார் தெரிவிப்பதால் இந்த மாதிரி எளிமையான கதைகள் மட்டுமே தற்போது கொடுக்கின்றேன்.!


    உலகத்தில் எல்லோரும் மறந்துவிட்ட நிலமையில் நாமே கடைசி மறுபதிப்பு ,இனிமேல் நாமும் கூட எதிர்பார்க்க முடியாது என்று ஹாட்லைனில் படிக்கும் போது நெஞ்சில் பாரம் ஏற்பட்டது.!

    ReplyDelete
  44. காலனின் காலம் இப்போதுதான் படித்து முடித்தேன்.!

    ஓவியங்கள் எல்லாம் வாவ்.! என்று கூறும்படி அட்டாகாசமாய் இருந்தது..ஓவியங்களும் கலரும் கனகச்சிதமாக பொருந்தி கலக்கலாக இருந்தது.! நீண்ட நாட்களுக்கு பின் அதிக வசனங்கள் மனதில் சந்தோசத்தை கொடுத்தது. !கி.நா.வெறும் ஓவியங்கள் பார்த்து, மண்டை காய்ந்து போன எங்களுக்கு இந்த ஸ்டைல் ஒரு ஆறுதல்.!கதை ஆரம்பம் முதல் ஒரே சஸ்பென்ஸ்.!

    ஈரோடு விஜய், செல்வம் அபிராமி,நம்ம தலைவர் ,ரமேஸ்குமார் ,ராகவன் ,கார்த்திக் சோமலிங்கா ஆகியோரின் விமர்சனம் இடம் பெற்று உள்ளது.!அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.!

    முன் பக்கத்தில் கதாபாத்திரங்கள் அறிமுகம் இது போன்ற அறிமுகம் அவசியமாகும்.!இது சிறியவயது ஜேம்ஸ் பாண்ட் மற்றும் லார்கோ கதையை ஞாபகப்படுத்தியது.!இது போல் மாடஸ்டி கதைகளுக்கும் அவரது இளமைகால சோக கதையான ஆறுபக்க கதைகளையும் வெளியிட்டால் தற்கால புது வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.!

    வருகிறது விளம்பரங்கள் அருமை.ஆனால் இந்த வருட கோட்டாவான மாடஸ்டி கதை வருகின்ற அறிகுறிகளே காணோம்.!அக்டோபர் மூன்று தேதி ஆகியும் வடகிழக்கு பருவமழை தொடங்க அறிகுறிகள் காணோமே.! என்று ஏங்கும் தமிழக மக்கள் போல் மாடஸ்டி கதைக்காக காத்துள்ளேன்.!

    ReplyDelete
    Replies
    1. // மாடஸ்டி கதை //
      கண்டிப்பாக டிசம்பர் மாதம் வரவேண்டும்! இளவரசி கதையை எந்த காரணமும் சொல்லி தள்ளி போடகூடாது. ஆமா சொல்லிபுட்டேன்!

      Delete
    2. மாடஸ்டி கண்டிப்பாக வரவேண்டும்... ஓவியங்கள் நன்றாக இருந்தால் மட்டும்!

      Delete
    3. MV சார் // மழைக்கு ஏங்கும் தமிழக மக்கள் போல் மாடஸ்டி கதைக்காக காத்துள்ளேன்.!///.---- ஆண்டு துவக்கம் இளவரசியுடன் தானே நடந்தது..... ஆண்டு இறுதி மாதத்தில் மற்றொரு இதழும் வரக்கூடும்.....

      Delete
    4. மாடஸ்டி வரணும், கண்டிப்பாக டிசம்பர் மாதம் வரும்.

      Delete
  45. அன்புள்ள எடிட்டர்,

    இம்மாத புத்தகங்கள் வந்தடைந்தன.... சிறைப்பறவைகள் & ஜானி-யின் காலனின் காலம் அட்டைப்படங்கள் சூப்பர்..

    சிறைப்பறவைகள் - இப்போதுதான் படித்தேன். கதை நன்றாக இருந்தது...

    காலனின் காலம் - இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன்.... typical ரிப்போர்ட்டர் ஜானி கதை starting... வழக்கம் போல, சில பக்கங்கள் 1.5D, blurred ஆக அச்சாகி இருந்தது.

    சுட்டி - இனிமேல் தான் படிக்க வேண்டும்

    ReplyDelete
  46. அடுத்த இரண்டு மாதம்களுக்கு நமது ஆசிரியர் மற்றும் அவரின் குழுவிற்கு நிறைய வேலை இருக்கிறது. குறிப்பாக டிசம்பர் மாதம், இந்த வருடத்தில் மிச்சம் உள்ள அனைத்து இதழ்களையும் தயார் செய்து கொடுக்கும் மிக பெரிய வேலை உள்ளது. சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.

    இந்த வருடம் இன்னும் வர வேண்டியள்ள இதழ்கள் (எனக்கு தெரிந்த வரை)
    1. தோர்கல்
    2. ரோஜர்
    3. மாடஸ்டி
    4. காமன்சே
    5. மறுபதிப்புகள் (1-2)
    6. ஷெல்டன்
    7. வானமே எங்கள் வீதி
    8. டெக்ஸ் (தீபாவளி மலர்)
    9. ஒரு கிராபிக் நாவெல்?

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்பின் கடைசி இதழ் மட்டுமே பாக்கி.நண்பரே...பரணி..
      ஆனால் கார்ட்டூன் ஸ்பெசலுக்கான இட ஒதுக்கீட்டில் ட்ராப் ஆவது எவை என இன்னும் அறிவிக்கப்படலயே.....
      கருப்பு வெள்ளை கி.நா...அவுட் நெ1....
      மற்றது இதில் எது என ஆசிரியர் சார் தானே சொல்லனும்..

      Delete
    2. கல்தா பட்டியலில் மாடஸ்டி இல்லை என்று ஒரு பதிவில் எடிட்டர் உறுதிபடுத்தியுள்ளார்.!

      Delete
  47. **** சாகாவரத்தின் சாவி! ******

    அம்மாடியோவ்! ஒரு அற்புத அனுபவம்!! புதிதாய் ஒரு விசித்திர உலகத்தில் நானும் ஆரிசியாவுடன்(!) சுற்றிவந்ததான பிரம்மை எனக்கு!!! படித்துமுடித்துச் சில நிமிடங்களைக் கடந்து இதை டைப்'பிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரையிலும் அந்த உலகத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை!!!!

    ஓவியங்கள் பல இடங்களில் ஸ்தம்பிக்கச் செய்கின்றன! இப்படியொரு அழகான படைப்பைக் கொடுத்த அதன் படைப்பாளிகளையும், அதைத் தமிழுக்கு (தைரியமாய்) கொண்டுவந்த நம் எடிட்டரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வசனங்கள் கூடக்குறைய இல்லாமல் மிக இயல்பாய் கதையோடு ஒன்றிப்போக வைத்திருப்பது சீனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்புக்கு அட்டகாச வெற்றி!! அடியேனின் வாழ்த்துகளை அருட்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் சார்!

    இதன் முந்தைய பாகங்களைவிட நேர்த்தியாகவும், பரபரப்பாகவும் லயிப்புடனும் நம்மை நகர்த்திச் செல்கிறது என்ற வகையில் தோர்கல் தொடர் அட்டகாசமாய் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது! தேறுமோ தேறாதோ என்று தொங்கலில் இருந்த தொடர் ஆரவாரமாய் கிளம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! ( நண்பர்கள் மற்றும் எடிட்டரின் கணிப்பு சரியே!)

    நண்பர் பரணி ( from Bangalore) கூறியிருப்பதைப்போல நானும் அடுத்த பாகங்களை ( ஆரிசியாவுக்கு என்ன ஆச்சோ... கடவுளே!!) ஆவலோடு எதிர்நோக்குகிறேன்......

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் மின்னும் மரணத்திற்கு பிறகு வண்ணத்தில் என்னை மிகவும் ரசிக்க செய்த கதை.

      Delete
    2. தமிழில் இந்த தோர்கல் தொகுப்பு நன்றாய் அமைந்திருக்கிறது. வசன நடை நன்றாய் இருக்கிறது. இது இளைஞர்களுக்கும் பிடிக்கக் கூடும் - இதன் பொருட்டு 2 இன் 1 ஆல்பம் ஆகவே வருதல் நலம்.

      பெங்களூர் பரணி அண்ட் ஈரோடு விஜய்: இதுக்கே அசந்தால் எப்படி. இன்னும் பல திகில் களங்கள் காத்திருக்கின்றன.

      @ எடிட்டர்,

      1. இத்தொடரினை மட்டும் வழவழா தாளில் இல்லாமல் திக் பேப்பர்ல் போட முடியுமா? சித்திரங்கள் சற்றே மிளிர் குறைந்து விடுகின்றன 'வழ வழா' தாளில்! திக் பேப்பர் அண்ட் hardbound would be amazing !!

      2. இத்தொடரினை கண்காட்சிகளில் பிரதானப் படுத்த வேண்டும் - சூப்பர் ஹிட் அடிக்கும் வாய்ப்புக்கள் பிரகாசம் !

      Delete
    3. ராகவன் @,

      தோர்கல் கதைகள் மொத்தம் எத்தனை.?அதில் எவ்வளவு நன்றாக இருக்கும்.?

      Delete
    4. அடடே .. இந்த கேள்வி எனக்கானது அல்ல ;-) என்ற போதிலும் உங்களுக்கான பதில் இங்கே :

      https://en.wikipedia.org/wiki/Thorgal

      எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது அவரவர் ரசனை சார்ந்தது. இவைகள் ஒரே template ரகமல்ல என்பதால்.

      Delete
    5. தோர்கல் கண்டிப்பாக ரூ 120ல் வரவேண்டும். மாய லோகத்திற்கு நுழைய, ஒரு 10 பக்கம் தேவை.

      தயவு செய்து ரூ.60 ஒல்லி புத்தகம் வேண்டாம்.

      Delete
  48. சீனியர் எடிட்டருக்கு ENT தொடர்பான surgery அனேகமாக இந்நேரம் முடிந்திருக்குமென்று கணிக்கிறேன்! (கணிப்பு தவறாகவும் இருக்கக்கூடும்). சீனியர் எடிட்டர் பூரண சுகம் பெறப் பிரார்திக்கிறேன்...

    ReplyDelete
  49. டெக்ஸின் தீபாவளி இதழ் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது!
    இரண்டு முழுநீளக் கதைகளோடு, அடுத்த வருடத்திற்கான முன்னோட்டப் பக்கங்களையும், மிக மிக மிக முக்கியமாக டெக்ஸின் தனி ட்ராக் பற்றிய அட்டகாச அறிவிப்பையும் தாங்கிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    நாமெல்லாம் வளர்ந்துட்டோம்... பக்குவமடைஞ்சிட்டோம்... அப்படி இப்படினு சொல்லிக்கிட்டுக் கிடக்காம ஒரு சுறுசுறுப்பான குத்தாட்டத்துக்குத் ரெடியாவோம் நண்பர்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. // குத்தாட்டம்//

      காலம் போன காலத்துல எங்களை மாதிரி ஆட்களுக்கு குத்தாட்டம் போட்டால் எங்காவது ஒரு இடத்தில் சுளுக்கி கொள்ளும். எனவே ஓரமா நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமானால் ரெடி

      Delete
    2. அவ்வளவுஉஉஉஉஉஉஉஉஉஉ......வயசா ஆச்சுது....😊

      Delete
    3. 42 வயசு ஆகிடிச்சு .!என்கூட படித்த சில கேர்ள்ஸ்களுக்கு பேரன்&பேத்தி எடுத்துவிட்டனர்.!ஹும் என்னமோ போடா மாதவா.!

      Delete
  50. தோர்கல் படித்து விட்டேன்.

    அருமையான கதை.

    மிக எளிமையான இதமான மொழிபெயர்ப்பு.

    ஹி..ஹி... சீனியர் எடிட்டரிடம் தோர்கல் முழுவதுமாக ஒப்படைத்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Ha Ha .. join the club :-) எழுபது வயது Tyro ஒருவர் முப்பதாண்டு அனுபவஸ்தர் ஒருவரை முந்தி இருக்கிறார் :-) ஹி ஹி ! முத்து காமிக்ஸ் கதைகளை அப்பாவிடம் ஒப்படைக்கவும் :-)

      Delete
  51. அனைத்து ராசிகாரர்களுக்கும் திரிகால ஞானி ஜோதிட கலா சிரோத்மனியின் பொதுபலன் அருள்வாக்கு !!!!!!!!!!
    அனைவருக்கும் காலத்தின் காலன் என்ற சுவையான காமிக்ஸ் படிக்கும் நல்வாய்ப்பு கிட்டும்....!!!!!!!
    திருச்செல்வம் பிரபானந்த், மகேந்திரன் பரமசிவம், கார்த்திகேயன்,சுஜிபாலா போன்று கடல் கடந்து வாழும் சிலருக்கு மட்டும் குரு பார்வை மூன்று வாரம் கழித்து கிடைக்க பெறுவதால் சற்றே தாமதமாகும்....

    செப்டம்பரில் 29 ம் தேதி பிறந்து கன்னி ராசியின் தாக்கம் இருப்பினும்துலாம் ராசியில் இருக்கும் .ஈரோடுக்கும் சேலத்திற்கும் தினமும் பயணிக்கும் ஒரு ராசிகாரர்க்கு தனி பலன்....
    சூழ்நிலை சாதகமாக இல்லை...மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை....யதார்த்தமான பிரச்சினைகளை அலட்சியபடுத்த கூடாது.....
    (உங்களிடமுள்ள அனைத்து காமிக்ஸ்களையும் நீங்கள் அகமது பாட்சா பாயை சந்தித்த இடத்தில் வைத்துவிட்டு தனக்குத்தானே 16 முறை சுற்றிவிட்டு{ ஆனா எண்ண கூடாது} சென்று விடவும்....
    இல்லையேல் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை ஒரே நாளில் 20
    முறை படிக்க நேரிடும்.....இது மிதுன ராசியின் எச்சரிக்கை !!!!!!!!!!!)

    ReplyDelete
    Replies
    1. ஓ! இப்படியும் ஒரு சைடு பிஸினஸா? ;)

      செனா அனா'வுக்கு ஈனா வினா மேல் ஏன் இப்படியொரு கொனா வெனா'யோ?

      அடுத்த வருஷம் 'திகில் காமிக்ஸ்' வருமா இல்லையான்னு ஜோசியர் கணிச்சுச் சொன்னாத் தேவலை!

      ஒரு பட்சி ஆருடக்காரரு...
      ஒரு கோடங்கி...
      இப்ப ஒரு ஜோசியர்!

      வெத்திலையில் மை போட்டுப் பார்க்கிறவங்க யாராவது இருக்கீங்களா? :P

      Delete
    2. //மட்டும் குரு பார்வை மூன்று வாரம் கழித்து கிடைக்க பெறுவதால் சற்றே தாமதமாகும்....//

      இந்த ஜோசியரை அவ்வளவா நம்ப முடியாது போல இருக்கிறதே... எனக்கு செப்டம்பர் - டிசம்பர் இதழ்கள் டிசம்பர் 12 தான் கைல கிடைக்கும்.

      Delete
    3. //இந்த ஜோசியரை அவ்வளவா நம்ப முடியாது போல இருக்கிறதே... ///

      ஹம்ம்... இந்த பிஸினஸும் அவுட்டா?! ;)

      செனா அனா, பேசாம நீங்க 1001, 1002னு பழசயே தொடரலாம்... அதுவும்கூட கிட்டத்தட்ட ஊடுசூனியம் மாதிரிதானே...? :P

      Delete
    4. @ MP ......குரு பார்வை கிடைக்க மூணு வாரம் ஆகும்னு சொன்னேன்.....புக் கிடைக்க " சற்றே" தாமதம் ஆகும்னு ஜோதிட சாம்ராட் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்களே.......

      இப்போதைக்கு " குருவுக்கு'' கிட்ட பார்வை வேறு..........

      சொல்லபோனா உங்க பேர் ராசிக்கு சந்திர அஷ்டமம் உச்சத்தில் இருப்பதாலும் ( சிவகாசி டிஸ்பாட்ச் செக்சன் புலி படம் பார்த்து கிலி அடைந்திருப்பதாலும் என பொருள் கொள்க) சனி நீச்சம் கொண்டு இருப்பதாலும்( உங்க கூரியர் பாய்க்கு வயிற்று போக்கு காரணமாக என பொருள் கொள்க) உங்க புக்ஸ் தாமதமாக வரலாம்.....
      @ ஈனா வினா ..... எப்படியோ MP யை சமாளிச்சாச்சு !!!!!! ஊடு சூன்யம் பண்ணினா வூடு கட்டி அடிப்பாங்க...!!!!! ஆமா!! ஒரு கிளி எவ்ளோ??????

      Delete
  52. ஹ ஹ ஹ ! 3 வாரம் கழித்தாவது பொக்கிசம் கிடைக்கிறதே என்று மனதை ஆறுதல் படுத்த வேண்டியதுதான். 16 முறை சுற்றி விட்டு ஒப்படைக்க வேண்டுமா? அதுவும் எல்லா காமிக்ஸையுமா? அதில் எனக்கு நூறில் ஒரு பங்காவது அனுப்ப முடியுமா?

    ReplyDelete
  53. அதுவும் ஒரே நாளில் 20 தடவை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வாசிக்க வேண்டுமா செனா-அனா? அவ்வளவு மோசமாகவா இருக்கிறது ?

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் சார்.!

      ஓரளவு நன்றாகத்தான் இருக்கும். காதில் பூ சுற்றல் கொஞ்சம் அதிகம் அவ்வளவே.!என்னுடன் பணிபுரியும் நண்பரின் 14 வயது பையனுக்கும் கொடுத்தேன்.அவனும் விரும்பி படித்தாக தகவல்.!என் அண்ணன் மகனிடம் (13 வயது) கொடுத்தபோதும் மெய் மறந்து ரசித்து படித்தான்.அவன் இரும்புகை மாயாவி ரசிகன்.!

      இன்னமும் எக்ஸ்ட்ரா மூன்று புத்தகங்கள் வைத்துள்ளேன்.பொடியன்கள் இன்னமும் சிக்கவில்லை.!

      Delete
    2. ///பொடியன்கள் இன்னமும் சிக்கவில்லை///-- நல்லவேளை 350கிலோ மீட்டர்கள் தள்ளி உள்ளேன் ....இந்த பொடியன்...

      Delete
    3. நீங்கள் பொடியன்.?ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...........

      Delete
  54. டியர் எடிட்டர்,

    அப்புறம் ராணி காமிக்ஸ்ல் வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு L'enfant des étoiles (தோர்கல் - மூன்று சிறு வயது கதைகள் ) பிரசுரிக்காமல் விட்டு விடாதீர்கள். தொடரின் புரிதலுக்கு அவை அவசியம் - ஆரிசயா கதைகள் கூட.

    Infact அடுத்த ஆண்டு மறுபதிப்பில் விடுபட்டுப் போன கமாஞ்சே கதையினை வண்ண மறுபதிப்பாய் இணைந்ததால் நலமே !

    ReplyDelete
    Replies
    1. ராகவன் சார்.! தோர்கல் கதைக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் , தனி சந்தா கேட்டுவிடுவார்கள் போல் உள்ளதே.! நடக்கட்டும்,நடக்கட்டும்.! முதலில் ஒரு 15 பக்கங்கள் போர் அடித்தது.! அதன் பின் நல்ல பிக்கப்.! ஒவர் கப்ஸா இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் உள்ளது.!

      Delete
  55. மிஸ்டர் மரமண்டை .!இம்மாத இதழ்களை நான்கையும் படித்துவிட்டீர்களா.? உங்கள் ஸ்டைல் விமர்சனத்திற்காக வெயிட்டிங்................!

    ReplyDelete
    Replies
    1. பலருடைய விமர்சனங்களும் பாக்கியுள்ளனவே.....நிறைய பேர் விடுமுறை டூர் போல....

      Delete
    2. எல்லோரும் படிப்பதில் மும்மறமாக இருப்பார்கள் போலும்.!

      Delete
  56. எப்போதுமே கதையை விறுவிறுவென்று படித்துவிட்டு பிறகு சாவகாசமாக சித்திரங்களை ரசிப்பது என் வழக்கம் ஆனால் இம்முறை தோ ர்கலி ன் கதையோட்டமும் சரி,சித்தி ரங்களின் அற்புத மாயாஜாலமும் சரி
    பக்கத்துக்கு பக்கம் மெய்மறக்க செய் து விட்டன ..இதுவரை மைனசில் இருந்த தோ ர்கல் பற்றிய மதிப்பீடு ஜிவ்வென்று உயர்ந்து விட்டது,, BACK TO THE FUTURE ஆங்கிலப் படத்தின் கதையை ஞாபகப் படுத்தியது ..அருமை..அருமை
    காலனின் காலம் ...ராசிபலனைப் பற்றிய பைத்தியம் பாரிசையும் பற்றிக்கொண்டதா..நம்ப முடியவில்லை
    ஆனால் கதை வழக்கம் போல் சூப்பர் ..இதை வண்ணத்தில் மட்டுமே படிக்க வேண்டும்..படிக்ககிடைத்த நாம்
    உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்களே ..
    குட்டி லக்கி ?டால்டன் க்ரூப்பும் லக்கியும் ஒன்றாகப் படித்தவர்கள் ..கற்பனையே பிரமாதம் ..அந்த குட்டிப்பெண் JANE ஆக பரிமளிப்பாள் என்று எதிர்பார்த்தேன் ..டீச்சர் ..வரும் இடங்கள் எல்லாமே ஹி ஹி ..
    மொத்தத்தில் அக்டோபர் வந்தது ..ஆனந்தம் தந்தது ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. /* , BACK TO THE FUTURE ஆங்கிலப் படத்தின் கதையை ஞாபகப் படுத்தியது .. */

      உங்களுக்கு வயது 40லிருந்து 50க்குள் ??!! :-) ஹி ! ஹி !!

      Delete
  57. சுட்டி லக்கி மிகவும் சுட்டி! ஜானி வழக்கம் போல மனதை கவர்கிறார் !

    ReplyDelete
  58. வானமே எங்கள் வீதி வருவது குறித்து நிறைய சந்தோஷம் .!உறுதியான மனம் கொண்ட ஹன்னாவை காண ஆவலுடன் உள்ளேன்.!

    ReplyDelete
  59. 2016 முன்னோட்டத்தை இம்மாத இதழ்களுடன் அனுப்பி இருக்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சார்.!

      //2016 முன்னோட்டத்தை இந்த இதழடன் அனுப்பி //

      என்ன சார் இவ்வளவு சுலபமாக சொல்லிட்டீங்களே. ?
      அனைத்து தரப்பு வாசகர்களும் ஒரு கையில் பொக்கையும் மறுகையில் உருட்டு கட்டையுடன் காத்து உள்ளனர்.!எடிட்டர் 2016 கதைகளை அறிவிக்கும் தினம் இங்கு பௌன்சரின் சலூன் போல் ஆகிவிடும்.! பௌன்சரின் கதைபோல சுவராசியத்திற்கும் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது.! நான் ஆவலுடன் உள்ளேன்.!(நான் காந்தியைபோல் ஒரு அகிம்சைவாதி.! )

      Delete
  60. சிறைப்பறவைகள் இது வரை படித்ததில்லை மறுபதிப்பிற்கு நன்றிகள் பல !

    ReplyDelete
  61. புதிய பதிவுக்காண்டி........ ( இப்படி ஏகப்பட்ட புள்ளிகளை வச்சுவிட்டோமின்னா 'காத்திருப்பதாக' அர்த்தம்! )

    ReplyDelete

  62. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete