Powered By Blogger

Sunday, July 19, 2015

ப.பட்டி இருக்க பயமேன் ?

நண்பர்களே,

வணக்கம். "500+ பின்னூட்டங்களா ? OMG !!" என்றபடிக்கே சென்ற வாரப் பதிவின் பிற்பகுதிக்குள் புகுந்தால் கொஞ்ச நேரத்தில் ராட்டினத்தில் ஏறியது போலொரு கிறுகிறுப்பு !! Load more தொல்லை ஒரு பக்கம் பிடுங்கித் தின்னும் போது நண்பர்களுக்கு இத்தனை பொறுமை எவ்விதம் சாத்தியமாகிறது என்ற கேள்வி தான் எனக்குள் பிரதானமாய் ஓங்கி நின்றது! 'தலை எது ..? வால் எது ?' என்ற பரிசீலனைகளைச் செய்து சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று நான் இறங்கினால் எஞ்சியிருக்கும் மிச்சம் சொச்சமும் அரோகராவாகிடும் ; august பணிகளின் உச்சத்துக்குள் அமர்ந்திருக்கும் இத்தருணத்தில் அங்கே கோட்டை விடும் வாய்ப்புகளும் பிரகாசம் ஆகிப் போகும் என்பதால் let's just move on folks ! என்ற விண்ணப்பத்தை முன்வைத்து விட்டு புதிய பதிவுக்குள் புகுந்திடுகிறேனே !  

வழக்கம் போல கதைகளின் முன்னோட்டம், பின்னோட்டம்; ‘வருகிறது வந்தே விட்டது பாணியில் எழுதி-எழுதி என் பேனாவுக்கே அலுத்து விட்டதால் இந்த ஞாயிறு லேசாக ‘ஜெர்க்‘ அடிக்கிறது ! So ஒரு மாற்றத்திற்காகவாவது வேறு பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமே என்று நினைத்தேன் ! So CCC-ன் கதை preview-களை பிரதானமாய் எதிர்பார்த்திருந்த நண்பர்கள் ஷமிப்பார்களாக இதுவொரு unplugged ரகப் பதிவு மாத்திரமே!

3 ஆண்டும் சில மாதங்களும் பயணித்த நேரத்திற்குள் 100 இதழ்கள் நம் கண்முன்னே ஆஜராகியிருக்கின்றன என்ற தகவலை சென்ற வாரம் நண்பர்களின் புண்ணியத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது ! இவற்றுள் மறுபதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே தான் எனும் போது புது வரவுகள் / புதுக் கதைகளின் பங்களிப்பே பிரதானம் என்பதும் புரிகிறது ! புள்ளி விபரங்களில் டைகர்களான நண்பர்கள் இன்னும் சற்றே மெனக்கெட்டால் இந்த 100 இதழ்களின் மொத்தப் பக்க எண்ணிக்கையும் என்னவாகயிருக்குமென்று அறிந்து கொள்ள இயலும் ! தோராயமாய் ஒரு கணக்குப் போட்டாலே சுமார் 6000+ பக்கங்கள் தேறிடும் என்று எனக்குப்பட்டது! கும்பகர்ணனின் உடன்பிறப்பாய் நடமாடி வந்த லயனின் முதல் அவதாரத்திற்கொரு அசாத்திய நம்பராக இது நிச்சயமிருக்கும் தான் ! இன்றைய புதுயுகத்திற்கு முடிந்தளவு ஈடு தர நினைத்திடும் லயனின் version 2-க்கும் இதுவொரு sizable நம்பர் தானா ? என்பதைச் சொல்லிட வேண்டியவர்கள் நீங்களே ! ஆனால் இங்கே நான் இந்த நம்பர்களோடு சடுகுடு ஆடுவது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் பொருட்டல்ல... மாறாக எனக்குள் மெலிதாக முளைவிடும் ஒரு முன்ஜாக்கிரதையின் பொருட்டே! வாழ்க்கையின் சகல சங்கதிகளுக்கும் ஒரு ஆயுட்காலத்தை நிர்ணயி்த்துள்ளார் மேலேயுள்ளவர் ! அப்படிப் பார்க்கையில் ரசனைகளுக்கும் நிச்சயமாய் ஒரு shelf life இருந்திடுவது தானே இயற்கை ? ஆறாயிரமோ - ஏழாயிரமோ இந்தப் பக்கங்கள் சகலமும் இரண்டே பேர்களின் பேனாக்கள் தந்த உழைப்பு என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது மூன்று கேள்விகள் எனக்குள் :

கேள்வி # 1: நமது மொழிபெயர்ப்பு இலாக்காவின் துவாரபாலகர்களாய் நானும், திரு. கருணையானந்தம் அவர்களுமே தொடரும் இந்த நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகவேணும் ஒரு மாற்றம் கொணர்வது அவசியமாகாதா ? எனக்கே சில நேரங்களில்  இதே ‘பன்ச்சை‘ போன வருஷத்து டெக்ஸ் கதைக்கும் எழுதி விட்டோமோ ? என்ற சந்தேகம் எழுகின்ற சமயம் இது ! லக்கி லூக்குக்கு ஏற்கனவே இதே நையாண்டி வசனத்தை வேறொரு கதையில் பிரயோகித்து விட்டோமோ? என்ற குழப்பம் எழாதில்லை ! So அதே பாணிகளைப் படித்துப் படித்து உங்களுக்கு ஒருவித சலிப்புத் தட்டும் முன்பாகவே (அது வந்து ஒரு மாமாங்கம் ஆச்சு ! என்ற சில குரல்கள் loud & clear too !கொஞ்சம் கொஞ்சமாகவாவது புது வரவுகளை இந்த இலாக்காவினுள் நுழைக்கும் முயற்சிக்கு ஒரு பிள்ளையார் சுழி போடும் தருணம் தான் எதுவாக இருக்குமோ ? 

கேள்வி # 2: இதே சங்கதி  மறுபக்கத்திற்கும் பொருந்தும் தானே? எத்தனை காலம் தான் எங்கள் இருவருக்கும் இந்தப் பணிகளை துடிப்போடு செயல்படுத்திடும் ஆற்றல் தொடரும் ?  வெவ்வேறு  விதங்களில் இது  தான் ஆண்டாண்டு காலமாக எங்கள் பிழைப்புகளே என்றாலும் இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பது தானே யதார்த்தம் ? பணிசெய்வது ஒரு சிறு வட்டத்துக்கே என்றால் கூட இதனிலுள்ள எதிர்பார்ப்புகள் முன்பு எப்போதும் இருந்திடாத ரகம் இன்றைக்கு ! இன்டர்நெட்டின் ஒரிஜினல் கோப்புகளோடு ஒப்பீடு ; ஆங்காங்கே நண்பர்களின் ஸ்கான்லேஷனுடனான வரிக்கு வரி comparisons; இதை இப்படிச் செய்திருக்கலாமே; அதை அப்படிச் செய்திருக்கலாமே !' என்ற ஜாலியான அறிவுரைகள் நிறைந்ததொரு களத்தினில் நித்தமும் குதிரை ஒட்டுவதென்பது  கம்பி மேல் நடப்பது போலவே! Improvise செய்கிறோமென்று இரண்டு வரி சேர்த்து எழுதினால் 'டண்டணக்கா' ; 'எடிட் செய்கிறேன் பேர்வழி !' என்று இரண்டு வரியை கபளீகரம் செய்தால் 'டணக்கு நக்கா' ! அந்த நாட்களில் நம்மில் முக்கால்வாசி வாசகர்கள் அரைடிராயர் பாலகர்களே என்ற போது - "மாயாவி சண்டை செய்தார் !" ; "ஜானி கராட்டே வெட்டு வெட்டினார்" போன்ற டயலாக்குகள் கூட செல்லுபடியாகிவிட்டன ! ஆனால் இன்று நம் வட்டத்தின் அகவைகளும், ஆற்றல்களும் வேறொரு தளத்தில் உள்ளன எனும் போது ஒவ்வொரு பந்திலும் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டியதொரு கண்ணுக்குப் புலப்படா அவசியம் நிலவுகின்றதல்லவா ? இதனை ஒரு சவாலாய் ஏற்று நாங்கள் பணியாற்றினாலும் - boredom factor உங்களுள் எட்டிப் பார்த்திடுமோ என்ற மெல்லிய கவலை எங்களுக்குள் எட்டிப் பார்ப்பது இயல்பு தானே ? அந்த சலனங்களை சத்தமின்றி உள்ளே தள்ளிப் பூட்டி வைக்கும் திறன் தொடர்ந்திடுமா எங்களுக்கும் என்பதே கேள்வி # 2 ! 

கேள்வி # 3: “மாற்றங்கள் மட்டுமே மாற்றமில்லாதவை !“ blah blah blah என்று நான் பிளேடு போடும் அவசியமேது ? அது தான் நாம் அனைவரும் காலம் காலமாய் கேட்டுப் பழகிப் போன cliché ஆயிற்றே ? பழமையைத் தழுவுவதைத் தாரக மந்திரமாய் கொண்டுள்ள நம் நண்பர்களை  மொழிபெயர்ப்பு இலாக்காவினுள் இள ரத்தம் / புது ரத்தத்தைப் புகுத்துவது தொடர்பான இந்த மாற்றத்துக்கு மகிழ்ச்சியோடு உடன்படச் செய்யவது எப்படியோ? என்பதே எனது கேள்வி # 3. 

1974-ல் வந்த மாயாவி & லாரன்ஸ் கதைகளின் பாகவதர் பாணியிலான வசனங்களை லேசாக மாற்றுவதற்கே மின்னஞ்சல்களில் சோடாவைத் தெளித்துத், தெளியத் தெளிய கும்மாங்குத்து குத்துகிறார்கள் ! நம் குட்டி வாசக வட்டத்தின் ஒரு கணிசமான சதவிகிதம் ‘மாற்றங்களே no-no' ரகம் தான் எனும் போது அவர்களது முகச்சுளிப்புகளை சம்பாதிப்பதற்கு மனம் ஒப்புவதில்லை!என் தலைக்குள் ஓடும் கேள்வி இது தான்: : என்றோ ஒரு தருணத்தில் செய்ய அவசியமாகிடப் போகும் இந்த வேலைக்கு 2016ல் ஒரு துவக்கம் தந்து தான் பார்க்கலாமா?

இதை ஏன் கேட்பானேன்? சத்தமில்லாமல் செய்து விட்டுப் போகலாமே?“ என்ற mind voice ஓடும் தியேட்டர்கள் உங்கள் தலைகளுக்குள் இருப்பின் அதற்கான பதிலாக இதை எடுத்துக் கொள்ளுங்களேன் :

இட்லிக்குத் தொட்டுக் கொள்ள எனக்குத் தேங்காய் சட்னி பிடிக்குமா;  ?வெங்காய சட்னி பிடிக்குமா? என்பது நீங்கலாக இப்போதைக்கு எனது வரலாறு ; பூகோளம் ; writing style என சகலமும் உங்களுக்கு அத்துப்படி எனும் போது சத்தமின்றி புதுசாய் ஒருவரின் எழுத்துநடையை உட்புகுத்துவது நடவாக் காரியம் ! ஒற்றை நொடியில் சோற்றுக்குள் பதுங்கியிருப்பது பூசணியா ? தர்ப்பூசணியா? என்பது அம்பேலாகி விடும் ! So சத்தமின்றிப் புதுமுக அறிமுகம்  என்ற option ruled out!

“சிவனே என்று ஒழுங்காய் ஓடிக் கொண்டிருக்கிற வண்டியை நோண்டுவானேன் ? தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும் யானை தான் நினைவுக்கு வருகிறது!“ என்று பற்களின் நறநறப்புப் பின்னணி இசையோடு mind-voice ரிலீசாகியிருக்கும் தியேட்டர்களின் சொந்தக்காரர்களுக்கு எனது பதில் இது :

உணர்ச்சிவசப்படாது சற்றே பொறுமையாய் சிந்தித்தால் இந்த மாற்றம் சிறுகச் சிறுகவேணும் என்றோ ஒரு நாள் அவசியப்படப் போவது உறுதி என்பது உங்களுக்குப் புரியாது போகாது ! ‘டெக்ஸ் கதைகளில் மறுபதிப்புகள் வேண்டும்‘ என்ற கோரிக்கை எழும் சமயமெல்லாம் நான் சொல்லும் அதே பதிலையே இங்கேயும் இணைத்தால் தப்பில்லை என்று படுகிறது ! ஒவ்வொரு “டிராகன் நகர“ மறுபதிப்பின் நேரத்திற்கும் அந்த 655+ புதுக் கதைகளின் தொகுப்புக்குள் எத்தனை எத்தனை “டைனோசர் நகரங்களும்“ "கார்சனின் நடந்த காலங்களும் " காத்துள்ளனவோ என்பது போலவே எழுத்தாற்றலோடு இன்னும் எத்தனை எத்தனை திறமைசாலிகள் காத்துள்ளனரோ ? மாற்றமே வேண்டாமென்று நம் ரசனைகளின் சாளரங்களை குறுக்கிக் கொள்வதை விடப் புதுக் காற்றும், புது ஒளியும் உட்புக வாய்ப்பிருப்பின் வரவேற்கும் mindset கொள்ள முயற்சிப்பது தவறில்லை தானே ? நிறையவே அவகாசம் இருப்பதால் பொறுமையாய் நமது சிந்தனைக் குல்லாக்களை அணிந்து தான் பார்ப்போமே ?

"ஞாயிற்றுக்கிழமை வந்தோமா கழகக் கண்மணிகளே; டைகரின் தம்பிகளே... சிங்கத்தின் உடன்பிறப்புகளே என்று நாலு பத்தி எழுதிட்டு; ரெண்டு படத்தை / டிரைலரைப் போட்டுட்டு; 'கேப்ஷன் எழுதுங்க கேப்ஸ்யூல் சாப்பிடுங்க' என்று ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு விட்டுப் போகும் போதே டிரவுசரில் ஒரு பக்கம் காணாமல் போயிருக்கும்! இதில் இப்படிக் கேள்விகளை எழுப்பி விட்டு, முதுகிலே நீயாவே parachute தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டு போஸ் வேற குடுக்கறே... என்னமோ போடா மாதவா !“ என்ற mind voice ஓடும் என் மண்டைக்கும்; அதன்மீது  மிச்சமிருக்கும் கேசங்களின் நலன் பற்றிய அக்கறை கொண்ட நண்பர்களின் mind voice களுக்கும்  பதில் இதோ:

சரவணபவனிலோ; அஞ்சப்பரிலோ அன்றைய மெனுக்களையோ; புதிய மெனுக்கள் பற்றிய ஆலோசனைகளையோ வாடிக்கையாளர்களிடம் கேட்கும் நேரமோ / அவசியமோ இருந்திடாது தான் ! ஆனால் தெருக்கோடியிலுள்ள வீட்டு மெஸ்கள் அதே போன்ற விதமாய் இயங்குவது அசாத்தியம் தானே? “காரம் இன்னும் கூட்டணுமா ? குறைக்கணுமா ?“ ; “புதுசாய் ஏதேனும் ஸ்வீட் செய்யணுமா?“ என்று கேட்பது போலத் தானே நாமும் ? இருக்கின்ற சிறுவட்டத்தை தக்க வைப்பது மட்டுமன்றி அவர்களை சந்தோஷமாய் தக்க வைப்பதுமல்லவா முக்கியம்? So இந்த முயற்சியில்  சில பல டிரவுசர்கள் கிழிய நேரிட்டால் இருக்கவே இருக்கு  "ஹி...ஹி...ஹி...!" ; இருக்கவே இருக்கு கோடு போட்ட பட்டாப்பெட்டி!

டின் வாங்கும் படலத்தின் முதல் அத்தியாயத்தை மங்களகரமாகத் தொடங்கி விட்ட திருப்தியில் டி.வா.ப.2-க்குள் இனி குதிக்கும் பணியைத் தொடங்கிடவா?

2016-ன் அட்டவணைக்குள் ; எஞ்சியுள்ள இந்தாண்டின் பணிகளுக்குள் என்ற எனது மந்தித் தாவல்களுக்கு மத்தியில் இன்னுமொரு சலனம் எழத் தான் செய்தது! இதற்கும் ஒரு சின்ன வட்டம் சொன்னோம்லே?!“ என்று கும்மாங்குத்து குத்தப் போவது உறுதியெனில் இன்னொரு பெரும்பான்மை புகை சமிக்ஞைகளைக் காதுகள் வழியாய் கிளப்பிடத் தயாராகப் போவதும் உறுதி ! அது தான் நமது கதைத் தொடர்களின் எண்ணிக்கை தொடர்பான மண்டகப்படி!

‘மேஜிக் விண்டின்‘ “கறுப்புக் காகிதங்கள்“ கதையின் பணிகள் என் மேஜையில் கிடக்கின்றன! இன்னொரு பக்கமோ தோர்கலின் ஆல்பங்கள் எடிட்டிங் எதிர்நோக்கி ஓய்வெடுக்கின்றன ! அதற்குக் கீழேயோ கமான்சேவின் ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘!! In fact சா.ஒ.சி. தயாராகி மாதங்கள் 5 ஆகி விட்டன ! The லயன் 250 குறிப்பிட்ட தருணத்தில் வெளிவந்திட வேண்டுமென்பதன் பொருட்டு சடுகுடு ஆடியதன் பலனாய் கமான்சே குறட்டைசே அவதாரம் எடுக்க நேரிட்டது!

இவற்றையெல்லாம் பார்த்த போது எனக்குள் ஒரு குட்டியான நெருடல் variety வேண்டுமென்ற மோகத்தில் நிறைய தொடர்களைக் கையாண்டு வருவதும் கூட ஒரு வித மைனஸ் தானோ என்பதாக ! 1985-ல் பிராங்க்பர்டில் துவங்கிய அந்தக் "கொள்முதல் மேளாவில்" தான் இந்த "ஏகப்பட்ட கதைத் தொடர் காதலின்" ஆரம்பப் புள்ளி உள்ளது. ஒரே சமயத்தில் அத்தனைப் பதிப்பகங்களைக் கண்ட குஷியில் தலைகால் புரியாது கதைகளாக வாங்கிக் குவித்தது ; அவற்றையெல்லாம் ‘ஏக்-தம்மில்‘ உங்களுக்கு அறிமுகம் செய்திட எழுந்த வேட்கை என்பதெல்லாம் இப்போதைக்கு well documented என்ற போதிலும் சில தருணங்களில் is less the better option? என்று கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. பாருங்களேன் தற்சமயமாய் நாம் active ஆகக் கையாண்டு வரும் தொடர்களின் பட்டியலையும் அவற்றுள் எஞ்சியுள்ள கதைகளின் நம்பர்களையும்: (இது 2015-ன் வெளியீடுகளுக்கு அப்புறமாய் மீதமிருக்கக் கூடிய எண்ணிக்கை ! And it isn't very precise ; என் தலைக்குள் நினைவில் நின்ற நம்பர்களின் அணிவகுப்பே ! )

நாயகர் / நாயகி           பாக்கியுள்ள          தொடரின் status
                           கதைகள்
 டெக்ஸ் வில்லர்   -    (சுமார்) 590                   Ongoing
லார்கோ வின்ச்    -              2                          Ongoing
வேய்ன் ஷெல்டன் -         4                     முடிந்தது 
 கேப்டன் டைகர்   -            16                         ?
மேஜிக் விண்ட்    -            129                        முடிந்தது
கமான்சே          -                   9                      முடிந்தது
தோர்கல்          -                   31                  Ongoing
 லக்கி லூக்        -         (சுமார்) 50                   Ongoing
 சிக் பில்                -       (சுமார்) 50                 முடிந்தது
இரத்தப் படலம்    -           1                          முடிந்தது
மர்ம மனிதன் மார்டின் - (சுமார்) 240                 Ongoing
ப்ளூகோட்              -             54                Ongoing
மாடஸ்டி          -          (சுமார்) 75                 முடிந்தது
C.I.D. ராபின்        -    (சுமார்)  180                முடிந்தது
 ரிப்போர்டா ஜானி -   (சுமார்) 60         முடிந்தது & மறுபடியும் துவங்குகிறது

ஜில் ஜோர்டன்    -                                        முடிந்தது
விடிய விடிய விஞ்ஞானி       -   46                   Ongoing
பௌன்சர்         -                      2                    முடிந்தது

மேற்படிப் பட்டியல் நீங்கலாக இன்னமும் ரின்டின் கேன்; ஜுலியா; ஸ்மர்ப்ஸ்; கர்னல் க்ளிப்டன் என்று ஒரு உப பட்டியலுக்குள் இடம்பிடிக்குமளவிற்கு நாயகர்கள் இருப்பதால் என் தலைக்குள் ரீங்காரமிடும் கேள்வி இதுவே:

§ 2016ன் அட்டவணையினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு இன்னமும் புதுஅறிமுகங்களை இணைத்திடுவது அவசியம் தானா?
§  ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா?
§  ஆரம்பம் முதலே கல்யாணப் பந்தி போல ஏகப்பட்ட பதார்த்தங்களோடே நமது இலைகள் இருப்பது பழகியான நிலையில் variety ஆக ருசி மட்டும் பார்ப்பதை விட குறைச்ச ரகங்களை ஒரு கட்டு கட்டுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாயிருக்கும்?
§   For instance – ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? அருகாமையிலுள்ள துடைப்பங்கள் அவசரமாய் தேடப்படும் அவசியம் எழுந்திடுமா ? அல்லது- why not? என்ற கேள்வியை முன் வைப்பீர்களா?

இன்னிக்கு இவனுக்கு என்னாச்சு? நம் ஃபார்முலாக்களின் ஆணிவேர்களை அசைத்துப் பார்க்கும் இந்த கொலைவெறி ஏனோ?“ என்று தலைக்குள் வெப்பம் கொண்டிடும் நண்பர்களுக்கு : please guys... இவையெல்லாமே வெறும் உரத்த சிந்தனைகளே ! உங்களின் பரவலான சம்மதங்களின்றி எந்தவொரு policy decision-ம் ‘எடுத்தோம்  கவிழ்த்தோம்‘ என்று  அமலுக்கு வந்திடாது! So- கேள்விகளுக்கான பதில்களை நையாண்டிகளின் பூச்சோடோ; ரௌத்திரத்தின் மெருகோடோ அமைத்திட மெனக்கெட வேண்டாமே - ப்ளீஸ்! Energy spent on that would surely be of better use when applied to these questions !

சைஸில் மாற்றம் -
விலைகளில் மாற்றமோ மாற்றம் -
கலரில் மாற்றம் -
ரசனைகளில் மாற்றத்தின் ஆரம்பநிலை -
எண்ணிக்கைகளில் மாற்றம் -

என்று இத்தனை ‘டிக்‘ அடிக்க நாம் பச்சைக்கொடி காட்டி விட்ட நிலையில் இந்தக் கேள்விகளுள் உள்ள விஷயங்களையும் லேசாகப் பரிசீலனை செய்து தான் பார்த்திடலாமே ப்ளீஸ்?!

மறுபடியும் வலியுறுத்துகிறேன் இன்றைய பதிவின் சகல சங்கதிகளும்  வெறும் feelers மாத்திரமே ! So இவை தான் வரும் நாட்களின் பார்முலாக்களோ ?  என்ற குஷி / குழப்பம் will be premature ! பொறுமையாய், ஒவ்வொரு வினவலுக்கும் பதில் தர நீங்கள் முன்வரும்பட்சத்தில் ரொம்பவே சந்தோஷப்படுவேன்! And சத்தியமாய் இது எங்கள் பணிகளை நீங்கள் உரக்கச் சிலாகிக்கும் ஒரு hidden agenda வுடன் எழுதப்பட்ட பதிவுமல்ல ! ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் TRP  ரேடிங்க்சை ஏற்றிக் கொள்ளும் பாணிகள் நமக்கு நிச்சயம் அந்நியமே ! 

More importantly – மௌனப் பார்வையாளர்களாய் மாத்திரமே தொடர்ந்து வரும் நண்பர்களும் பதில் சொல்ல மெனக்கெட்டால் ஆந்தைவிழியார் இன்னமும் ஹேப்பி அண்ணாச்சி ! Simply because இவை அனைத்துமே நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ! 

And please guys – தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புள்ளவைகளாக இருப்பின் / இல்லாவிடின் +1 என்றோ -1 என்றோ உங்கள் அபிப்பிராயங்களை  மட்டும் பதிவு செய்து விட்டு நகர்ந்திடக் கோருகிறேன்! இதுவொரு குட்டியான கருத்துக் கணிப்பு போன்ற சமாச்சாரம் மாத்திரமே So “இந்தக் கட்சிக்கு எப்படி ஓட்டுப் போடப் போச்சு?“ என்ற ரீதியில் தர்க்கங்கள் வேண்டாமே?!So- தைரியமாக உங்கள் பார்வைகளைப் பதிவிடுங்களேன் guys – யார் என்ன நினைப்பார்களென்ற தயக்கங்களின்றி ? 

சரி- கேள்விகள், கத்திரிக்காய் என்று உங்களை ஞாயிறு காலையில் படுத்தியது போதுமென்பதால் ஜாலியான சங்கதிக்குள் தலைநுழைப்போமா? இதோ நமது உட்சிடியின் கோமாளிகளின் இந்தாண்டின் முதல் சாகஸத்தின் முன்னோட்டம்! ஒரிஜினலின் வர்ண மாற்றத்தோடு வந்திடும் அட்டைப்படம் நமது சமீபத்தைய trend-ஐப் பின்பற்றுகிறது ! 
இன்னமும் பணிகள் முடிவாகா ராப்பர் இது ! 
உட்பக்கங்களின் ஒரு சின்ன டீஸரும் இதோ! வழக்கம் போல ஷெரீப்பும், ஆர்டினும் கலக்குவதாலோ என்னவோ,படைப்பாளிகளே ராப்பரில் அவர்களிருவரையும் பிரதானமாக focus செய்துள்ளனர்! சமீப சிக் பில் கதைகளின் template இம்முறையும் பின்பற்றப்படுகிறது- ஒரு அழகான இளம் பெண்ணைக் சுற்றிக் கதை சுழன்று வருவதில்! கொடுமை என்னவெனில் சமீப காலமாய் பௌன்சர் கதைகளிலும், டைகர் கதைகளிலும், சில பல லார்கோ கதைகளிலும் வரும் அந்த ‘பச்சக்‘ பாணியை இத்தனை காலமும் சைவமாய் இருந்து வந்துள்ள சிக் பில்லும் கடைபிடிக்கிறார் !

அப்புறம் caption எழுதும் போட்டிக்கான முடிவை அறிவிக்காவிட்டால் வரலாற்றுப் பிழையாகிப் போய்விடுமென்பதால் இதோ அதற்கான முடிவு! ஏகப்பட்ட பின்னூட்டங்களுக்கு மத்தியில் நீந்தி ஒரு மாதிரியாக நான் தேர்வு செய்த caption இதோ! நமது வாழ்த்துக்களுடன் நண்பருக்கு அந்த Fleetway இதழைப் பரிசாக அனுப்புகிறோம்! 

selvan abirami :
"லாரன்ஸ் : டேவிட் ! ஏன் மேலே பாத்து சுட்டே ?? வார்னிங் ஷாட்டா ?

டேவிட் :நோ ! லஞ்ச் ஷாட். . இரண்டு பேர்ட்டயும் காசில்லை .....இப்ப சுட்ட காடையைத்தான் ரோஸ்ட் பண்ணி மத்தியானம் சாப்பிடனும் ...."

அப்புறம் ஒரு சந்தோஷ சேதி - ஈரோடு புத்தக விழாவின் தொடர்பாக ! நமக்கு இம்முறை ஸ்டால் ஒதுக்கப்பட்டுள்ளது - கிட்டத்தட்ட சென்றாண்டின் அதே இடத்தினில் ! போன வருஷம் நமது ஸ்டால் எண் 153 எனில், இம்முறை 152 ! So காத்திருப்போம் உங்கள் வருகைகளுக்கு - ஆவலாய் ! Please do come - with family ! 

சரி... இதற்கும் மேலாக இந்த பதிவை நீட்டிட வண்டியில் ‘தம்‘ இல்லை என்பதால் நடையைக் கட்டுகிறேன்! மீண்டும் சந்திப்போம்! அது வரை enjoy the Sunday!

ERODE STALL LAYOUT :

448 comments:

  1. இனிய வணக்கம் நண்பர்களே .ஆசிரியர் அவர்களே .500 பின்னூட்டம் தாண்டி (உபயம் .நண்பர் திரு .மரமண்டை ) சென்ற நமது பதிவு திருவிழாவை கொண்டாட ஒரு சிறப்பிதழ் வெளியிடலாமா ??.ஏதோ நம்மால் முடிந்தது !!!!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பிதழ் பெயர் !??

      Delete
  2. மூன்றாவது பின்னூட்டம் $$

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம். ஈரோடு புத்தக விழாவில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? .எனது பதில் வரவேற்க தக்க முடிவு . குழப்பம் இன்றி என் போன்ற சிறுவர்கள் படிக்க முடித்து பாதுகாக்க முடியும்

    ReplyDelete
  5. // புதுப் பட்டாப்பெட்டியை எடுத்து iron பண்ணக் கொடுத்து விட்டு இங்கே அடியேன் ஆஜராகியிருப்பது போல – உங்கள் வீடுகளிலும் அவசர உபயோகத்திற்கு சில பல லங்கோடுகள் இல்லாமலா போய் விடும் ? So- தைரியமாக உங்கள் பார்வைகளைப் பதிவிடுங்களேன் guys – யார் என்ன நினைப்பார்களென்ற தயக்கங்களின்றி ? கிழிந்தால் டிரவுஸர்... கிடைத்தால் பிரயோஜனமான பாதை ! So- முயற்சித்துத் தான் பாருங்களேன்!//

    ஏற்கனவே ஒருமுறை மதுரையைச் சேர்ந்த நண்பர் கார்த்திகைப் பாண்டியன் இதைப்பற்றி இங்கே ஒரு கமெண்ட் போட்டு, அதன் பின்னர் இங்கே வருவதையே நிறுத்திக்கொண்டார்.

    நிஜம்மாகவே இந்த வரிகளை எழுதியது நீங்கள் தானா எடிட்டர்? Really?

    நீங்கள் தான் எனில்,

    ஒரு நல்ல காமிக்ஸ் எடிட்டர் காணாமல் போய், ஒரு கைதேர்ந்த ப்ளாக்கர் உருவாகி இருப்பது தெரிகிறது. வாழ்த்துகள்.

    ஆனாலும் ஒன்று. உங்களை பலரும் விரும்ப காரணம் நீங்கள் ஒரு நல்ல எடிட்டர், கண்ணியமான வார்த்தைகளை எங்களுக்கு பழகச் சொல்லிக்கொடுத்த சிறுவயது தோழன் என்பதாலேயே அன்றி வேறெந்த காரணமும் இல்லை.

    அப்படி இருக்க, இப்படிப்பட்ட playing to the gallery வார்த்தைகள் இங்கே தேவையா?

    p.s.: நாம் அனைவருமே மெச்சூர்ட் ஆன கணவான்களே. இதை இங்கே சொல்லாமல் நான் செல்லலாம். ஆனால், எனக்குள்ளே வைத்துக்கொண்டு புழுங்குவதை விட உங்களுக்கு (என்னுடைய பெயரிலேயே) இதை சொல்லிவிட்டு move on செய்வதேர் உசிதம் என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அருண் சொல்வதில் நியாயமிருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது எடிட்டர் சார்! உங்கள் எழுத்துக்களைப் படித்து தமிழ் கற்றுக்கொண்டேன் என்பதால் உங்களை என் மானசீக 'தமிழ் வாத்தி' என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தானோ என்னவோஇதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உங்களிடமிருந்து வருவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

      Delete
    2. எடிட்டர் சார்,
      முன்பொரு பதிவில் சூப்பர் மேன் உள்ளாடை போடும் பாணியை பற்றி நீங்கள் எழுதியிருந்தபோதுகூட எனக்கு இவ்வாறே தோன்றியது! ஆனால் அதுவொரு ஒற்றை வரிதான் என்பதால் தாண்டிச் செல்வதும் எளிதாய் இருந்தது.

      Delete
    3. ஈரோடு விஜய்.!யூ டூ .! பம்மல் கே சம்மந்தம் படத்தில் எனக்கு பிடித்த ஜோக்& டயாலாக்"த்தோடா பழமொழி சொன்னா அனுபவக்கனும் உட்கார்ந்து ஆராயக்கூடாது.!"

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  6. டியர் எடிட்டர்,

    சாலமன் பாப்பையா அவர்கள் ரேஞ்ச் தீர்ப்பெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு விஷயம் தான் - இத்தளத்தில் நெடு நாட்களாய் - வருடங்களாய் - நிலவி வரும் ஒரு வரைமுறை. அது:

    உஷ்ணம் அதிகப்படும் போதெல்லாம், "எப்படி வேண்டுமானாலும்" ஒரு வரைமுறை அன்றி கமெண்ட் பதிப்பவர்களை பல சமயங்களில் ஆதரிக்கும் நீங்களும் சில இதர நண்பர்களும், ஒரு ஒழுங்கு முறை வரவேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து சில கருத்துக்களைப் பதிப்பவர்களை மற்றும் தாண்டிச் செல்ல சொல்வது ஏனோ ?

    நண்பர் மீரான் சென்ற பதிவில் கூறி இருந்தது போல [கண்காட்சிக்கு குடும்பத்துடன் வருபவர்களை, புத்தகம் அடுக்கி, கணக்கு போட்டு விற்பவர்களைத் தாண்டி (இவ்வார்த்தைகள் எனது சொருகல் - நண்பர் மீரானது அல்ல)]தமிழ் காமிக்ஸ் இன்னும் படிப்பவர்கள் நெஞ்சத்தில் தான் நேசமுடன் நிலைத்திருக்கிறது.

    சிறிய வாசகர் வட்டம் என்றாலும் இந்த ப்ளாக் தாண்டிய தனிப்பட்ட தேடலினால்தான் இன்னும் தமிழ் காமிக்ஸ் உயிர்ப்புடன் உள்ளது. இங்கு கமெண்ட் பதியும் (என்னையும் சேர்த்த) 31.5 நபர்களால் அல்ல :-) :-) :-)

    ப்ளாக், கமெண்ட்ஸ், கண்காட்சி எல்லாம் வாசகனுக்குப் பின்னால் தானே !

    ReplyDelete
    Replies
    1. //நண்பர் மீரான் சென்ற பதிவில் கூறி இருந்தது//

      இதைதான்

      காமிக்ஸ் சுவாசம் இயங்குவது அதை வாசிக்க ஏங்கும் இதயங்களால்தான். தன்னை முன்னிருத்த காமிக்ஸை பயன்படுத்துபவர்களால் அல்ல .


      // சிறிய வாசகர் வட்டம் என்றாலும் இந்த ப்ளாக் தாண்டிய தனிப்பட்ட தேடலினால்தான் இன்னும் தமிழ் காமிக்ஸ் உயிர்ப்புடன் உள்ளது. இங்கு கமெண்ட் பதியும் (என்னையும் சேர்த்த) 31.5 நபர்களால் அல்ல :-) :-) :-)//

      +1

      //ப்ளாக், கமெண்ட்ஸ், கண்காட்சி எல்லாம் வாசகனுக்குப் பின்னால் தானே !//

      +1

      ஜிகினாக்கள் எப்போதும் மனதை கவரும் ஆனால் அவை நிலையானதில்லை.

      Delete
  7. செல்வம் அபிர்ரமி அவர்களுக்கு என் வரழ்த்துக்கள். புது ரத்தம் மொழி பெயர்ப்பில் பரய்வது கரலத்தின் கட்டரயம் என்பதை நரன் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆசிரியர், நண்பர் கருணையரனந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்கு போரடிக்கின்றது என்று அர்த்தமில்லை. அவர்களின் மொழிபெயர்ப்பிற்கு நரன் அடிமை.

    ReplyDelete
    Replies
    1. //புது ரத்தம் மொழி பெயர்ப்பில் பரய்வது கரலத்தின் கட்டரயம் என்பதை நரன் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆசிரியர், நண்பர் கருணையரனந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்கு போரடிக்கின்றது என்று அர்த்தமில்லை.//
      +1

      Delete
  8. கேப்ஷன் போட்டியில் வெற்றிவாகை சூடி Fleetway புத்தகத்தை ( ய்யே!) பரிசாகப் பெறவிருக்கும் நண்பர் செல்வம் அபிராமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ( எத்தினி பிரைசு வாங்குறீங்கோ... ஈரோட்டு திருவிழாக்கு வந்து எங்களுகொரு ட்ரீட்டு வச்சாத்தான் என்னவாம்?) ;)

    ReplyDelete
  9. டியர் எடிட்டர் ஸர்ர்,
    சைஸில் மாற்றம் , கலரில் மரற்றம், விலைகளில் மரற்றம் என்பதெல்லாம் தேவையில்லை என்பது எனது கருத்து. ரசனைகளில் மரற்றம் என்பதெல்லாம் சும்மா. நரன் எல்லரவற்றையும்தரன் ரசிக்கிறேன். இதழ்களின் எண்ணிக்கையை இன்னும் கூட்டலரமே ஒழிய குறைக்க கூடாது என்பது எனது தரழ்மையரன கருத்து. எண்ணிக்கையை கூட்ட எடிட்டர்தரன் மனம் வைக்க வேண்டும்.
    வுட் சிட்டியின் கோமரளி கும்பல் மறுபடி " மரறிப்போன மரப்பிள்ளை" மூலம் வர இருப்பது நல்ல செய்தி. அட்டை படத்தில் சிக்பில் இருப்பது நன்றே. குள்ளன் மட்டும் missing.

    ReplyDelete
    Replies
    1. //இதழ்களின் எண்ணிக்கையை இன்னும் கூட்டலரமே ஒழிய குறைக்க கூடாது என்பது எனது தரழ்மையரன கருத்து. எண்ணிக்கையை கூட்ட எடிட்டர்தரன் மனம் வைக்க வேண்டும். //
      +1

      Delete
  10. 'மாறிப்போன மாப்பிள்ளை' அட்டைப்படத்தில் ஷெரீப் மற்றும் கிட்ஆர்ட்டினின் முகபாவங்களே சிரிப்பை வரவழைக்கின்றன. 'மாப்பிள்ளை' என்ற தலைப்புக்கேற்றபடி மணப்பெண்ணையும் அட்டைப் படத்தில் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  11. நமக்கெல்லரம் ஆரம்பம்முதலே கல்யரண பந்தி போல ஏகப்பட்ட பதர்ர்த்தத்துடன் இலையில் சரப்பரட்டு பழகி விட்டது ஸர்ர். ஹி ஹி.
    இன்னும் புது அறிமுகங்களை இணைப்பது உங்களிஷ்டம். 1slot 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளுவது எனக்கு பிரச்சனை இல்லை ஸர்ர். ஆண்டுக்கு 4 லக்கி, 4 சிக் பில், 4 மேஜிக் விண்ட், 4 ரிப்போட்டர் ஜரனி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தரல் போரடிக்கும் ஸர்ர். உங்களுக்கு தெரியும்தரனே ஸர்ர்.

    ReplyDelete
    Replies
    1. //நமக்கெல்லரம் ஆரம்பம்முதலே கல்யரண பந்தி போல ஏகப்பட்ட பதர்ர்த்தத்துடன் இலையில் சரப்பரட்டு பழகி விட்டது ஸர்ர். ஹி ஹி.
      இன்னும் புது அறிமுகங்களை இணைப்பது உங்களிஷ்டம். 1slot 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளுவது எனக்கு பிரச்சனை இல்லை//
      +1
      //ஆண்டுக்கு 4 லக்கி, 4 சிக் பில், 4 மேஜிக் விண்ட், 4 ரிப்போட்டர் ஜரனி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தரல் போரடிக்கும் //
      +1

      Delete
  12. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே & விஜயன் சார்

    ReplyDelete
  13. உச்சி மண்டையில் கிர்ர்ர்ர்ர்ருங்குது...,.

    ReplyDelete
  14. நீங்களே வேறு எழுத்து நடையை முயற்சிக்கலாமே சார்..., உங்களுக்குள் ஏகப்பட்ட பாணிகள் ஒளிந்து கொண்ணிருப்பது உங்களுக்கே தெரியவில்லை.....

    ReplyDelete
  15. டியர் எடிட்,

    வருந்ததக்க ஒரு விஷயம் இப்பதிவில் மனதை நெருடினாலும், நமது காமிக்ஸ் வெளியீடுகளின் எதிர்கால பாதைகளை நோக்கி தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் எனது தரப்பு அபிப்பிராயத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

    மொழிபெயர்ப்பில் புதியவர்கள்

    :நமது வாசகர்களிடையே கருணையானந்தம் மற்றும் தங்களின் மொழிபெயர்ப்புகள் பழகி போய் இருக்கலாம், ஆனால் அதில் ஒரு புதுமையை கொண்டு வருவதில் எனக்கு முழு உடண்பாடே. டெக்ஸ், ப்ளுபெர்ரி போன்றவர்களிடம் உங்கள் மொழிபெயர்ப்பு ஒன்றி தெரிவதால், அவற்றில் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வருவதை விட்டு விட்டு, புதிய கதை தொடர்கள், அல்லது சமீபத்திய அறிமுகங்களின் மீது புதிய மொழிபெயர்ப்பாளர்களை களமிற்க்கலாம்.

    அப்படி, களமிருக்க முடிவு செய்யும்பட்சத்தில், எனது முன்மொழிதலாக, இணையத்தில் தமிழ் ஸ்கான்லேஷனில் முனனோடியாக பிரதிபலிக்கும், கனவுகளின் காதலர், லக்கி லிமட், மற்றும் தங்கவேல் போன்றவர்களுக்கு ஒரு வாயப்பு அளிக்கும்படி வேண்டி கொள்கிறேன். காமிக்ஸ் மீதான உண்மையான காதலை உட்கொண்டு வெளிவரும் அவர்கள் படைப்புகளுக்கு இம்முறையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சமீபத்திய நமது வரவுகளான, பென்னி, ஸ்மர்ப்ஸ், பவுன்சர், ப்ளுகோட், வரிசைகளுக்கு அவர்களின் மொழிபெயர்ப்பே சிறந்த உதாரணம்.

    மற்றபடி Old is Gold என்ற முறையில், பிரதான மொழிபெயர்ப்பாளர்களாக உங்கள் பணியும் தொடர வேண்டும், நீங்கள் ஆர்வபடும் வரை.

    இவ்வழியில், வெறும் விமர்சனங்களாக தொடர்ந்து வரும் மொழிபெயர்ப்பிற்கு, ஆர்வபட்ட வாசகர்களாக ஒரு புதுமையை கொண்டு வர முடியும், அவர்களை ஆக்கபூர்வமாக ஈடுபடுத்தவும் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. கதை வரிசை தேர்வுகள்

      வேற்று மொழி கதை வரிசைகளில் சில சோபிப்பதும், சில தோற்பதும் என்ற பல்டிகள் தொடர்ந்தாலும், நமது லயன் முத்து காமிக்ஸ் இதழ்களில் நான் அதிகம் நேசிப்பது அந்த Variety ஐ தான். என்ன தான் லக்கி, சிக் பில், டெக்ஸ், ;ப்ளுபெர்ரி என்ற கதைகளில் நமது ரசனைகள் Biased ஆக இருந்தாலும், வருடம் மொத்தமும் இவர்களை வைத்தே ஆவர்த்தனம் நடத்துவதில் எனக்கு உடண்பாடு இல்லை. Mixed Masala தான் நமது டேஸ்ட் என்பது பட்டவர்த்தனமாக தெரியும் போது, ஒவ்வொரு ஹீரோவும் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களில் தோன்றும்படியாக, ஒரு Lineup ஐ தொடர்ந்து வரவேண்டும்.

      அதற்காக புதிதிதாக கதை தொடர்களை அறிமுகம் செய்கிறேன் என்று உங்கள் முதலீடுகளை மொத்தமாக ஸ்வாகா செய்து விடாமல், ஒரு பேலன்ஸை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... ஏற்கனவே நீங்கள் கூறியபடி ஒரு கதை தொரின் கணிசமான புத்தகங்களை முன்பே கொடுத்து புக் செய்யும் வேலைகளை இவ்வழியில் தேவைபடும் போது என்று கிரயம் செய்ய முடியும்.

      Delete
    2. அந்த நெருடல் பற்றி :


      எப்போதும் பழக்கமான பாதையில் அச்சு உடையும் வரை ஹாயாக பயணம் செய்து கொண்டிருக்கலாம், ஆனால் அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர சிந்திப்பதே ஒரு வரவேற்கத்தக்க விஷயம்... கூடவே "ஆர்வமுள்ள" வாசகர்களிடம் அவர்கள் பார்வையில் அச்சிந்தனைகளை அலச கூறியிருப்பது பேஷ். ஆனால்.....

      பதில்களில் ஒரு நிதானத்தை கடைபிடியுங்கள், தனிபட்ட விருப்பு வெருப்புகளை ஒரம் கட்டுங்கள், என்று கூறி கொண்டே, இன்னொரு பக்கம் உங்கள் டவுசர்கள் கிழிக்கபட்டாலும் கருத்துகளை பதியுங்கள் என்று ஏற்கனவே முகமூடிகளின் பின் இருந்து ஆவர்த்தனம் நடத்துபவர்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை அளிக்கிறீர்கள் என்ற முரண் புரிபடவில்லை...

      இந்த தளத்தை விட்டு, நமது காமிக்ஸ் பாலான உண்மையான அன்பை கொண்ட பல வாசர்கள் ஒதுங்கி இருப்பதன் அடிப்படையே, இந்த நபர்கள் தானே.... வெறும் 500 கமெண்ட் ஹிட்டிற்காக இவர்களுக்கு தூபம் போட்டு ஏன் வளர்க்க வேண்டும்....

      அந்த 500 கமெண்டுகளில் எத்தனை உண்மையான வாசர்களின் தனிபட்ட விமர்சனங்கள் தொலைந்து போயிருக்கும் என்று தாங்கள் எண்ணியதுண்டா.... Me the First. Happy Birthday. என்ற பரஸ்பர கமெண்டுகளால் மூலம் மற்றவர்களை இங்கு எட்டி கூட பார்க்க முடியாத அளவு பக்கங்களை ஆக்கிரமிக்கும் நபர்களுக்கு எப்போது தான் நீங்கள் கடிவாளம் போட போகிறீர்கள்...

      இல்லை இது நமது ப்ளாகின் நடைமுறை.... அது தொடரட்டும்... மாட்ரேஷன் நமக்கு ஆகாது... என்ற பழைய பஞ்சபாட்டை நீங்கள் கடைபிடிக்கும் வரை, உண்மையான வாசர்களின் நேரடி விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு படாமலேயே போகும் வாய்ப்கள் என்றும் தொடரும்...

      இந்த கருத்துகளை 500 கமெண்டுகளுக்கு முன்பு உங்கள் பார்வையில் பட வைக்க வேண்டும் என்பதற்காக இரவின் மத்தியில் இட தோன்றியது, எப்போதும் சாத்தியமாகமால் போகலாம்... அப்போது மவுன பார்வையாளனாக தொடர்வதே வழக்கமாகி போகும்.. இது போல இன்னும் எத்தனை பேரோ... அவர்கள் குரல்களும் கேட்கபட வேண்டும்... அதுவே எனது அவா.

      Delete
    3. // அந்த 500 கமெண்டுகளில் எத்தனை உண்மையான வாசர்களின் தனிபட்ட விமர்சனங்கள் தொலைந்து போயிருக்கும் என்று தாங்கள் எண்ணியதுண்டா.... Me the First. Happy Birthday. என்ற பரஸ்பர கமெண்டுகளால் மூலம் மற்றவர்களை இங்கு எட்டி கூட பார்க்க முடியாத அளவு பக்கங்களை ஆக்கிரமிக்கும் நபர்களுக்கு எப்போது தான் நீங்கள் கடிவாளம் போட போகிறீர்கள் //

      // புதிதாய் வருபவர்கள், வர ஆசைபடுபவர்கள் என்றும் மவுனப்பார்வையாளனாகவே தொடர்வது வழக்கமாகிட போகப்போகி வாய்ப்புகள் அதிகம் இதுபோல் எத்தனை பேரோ... அவர்கள் குரல்களும் கேட்கபடல் வேண்டும் //

      இக்கருத்தை ஆமோதிக்கிறேன்
      விஜயன் சார்
      நீங்கள் இதற்கு உடனடியாக ஓர் தீர்வு உங்களால் தரமுடியும் என்று எதிர்பார்க்கிறேன்

      புதிதாய் ப்ளாகில் பதிவிட நினைப்பவர்களை நீங்கள்தான் ஊக்குவிப்பு செய்திட வைக்க வேண்டும்
      அதில் உங்களின் பங்களிப்பு அதிகமாய் இருந்திடல் வேண்டும்

      எதிர்பார்புடன்

      Delete
    4. ரபீக் ராஜா.!வணக்கம்.!உங்களுக்கு தெரியாதது அல்ல.!எதுவுமே பிளான் செய்து நடப்பதல்ல.!அப்படி நடத்தவும் முடியாது.!மழை வெள்ளம் எப்படி போகும் என்பதை கணிக்க முடியாது அதைப்போலத்தான்.!!எல்லோரும் தங்கள் கருத்துக்களை பரிமாறவேண்டும் என்பதே ஆவல்.!நீங்கள் ஒருகருத்து சொன்னால் அது சுவராசியமாக இருந்தால் அதைப்பற்றியே கமெண்ட போகும்.நிறைய காமிக்ஸ் நண்பர்கள் வந்தால் இன்னும் ஜாலியாக இருக்கும்.!என்னைப்பொருத்தவரை காமிக்ஸ் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் சந்தோஷத்திற்கு ஈடுஇணை கிடையாது..டைம் கிடைக்கும்போது ஜாலியாக கமெண்ட் போடுகிறேன். எல்லா நண்பர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வருகை புரிந்தால் இன்னும் நிறைய சந்தோசம்தானே.!இதோ எனக்கு ஒரு வேலை வந்துள்ளது.அதை முடித்து விட்டு நான் திரும்பி எப்பொழது வந்து பதிவிடுவேன் என்று எனக்கே தெரியாது.!வேலை வந்துவிட்டால் தூக்கி போட்டவிட்டு சென்றுவிடுவேன்.இதற்கு என்ன ரூல்ஸ்&ரெகுலேசன் தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தக்கூடாது அதுமட்டுமே முக்கியம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.!

      Delete
    5. @ Madipakkam Venkateswaran // யதார்த்த உண்மை ....+1

      Delete
    6. நண்பர் M.V கருத்தில் நான் முழுவதும் உடன் படுகிறேன் .நான் இங்கு ஒரு மெளன பார்வையாளர் .அவ்வப்போது ஏதாவது ஒரு பின்னூட்டம் இடுகிறேன் . அதற்காக இங்கு கலக்கும் முகமறியா நண்பர்கள் கருத்தை படித்து பிடித்தால் சிரித்து இல்லை எனில் கடந்து அடுத்த கமெண்ட்ஸ் போகிறேன் .இந்த தளத்தில் எதற்காக இந்த அளவில் சூடான விவாதம் என்பது எனக்கு புரியவில்லை

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. //பீக் ராஜா.!வணக்கம்.!உங்களுக்கு தெரியாதது அல்ல.!எதுவுமே பிளான் செய்து நடப்பதல்ல.!அப்படி நடத்தவும் முடியாது.!மழை வெள்ளம் எப்படி போகும் என்பதை கணிக்க முடியாது அதைப்போலத்தான்.!!எல்லோரும் தங்கள் கருத்துக்களை பரிமாறவேண்டும் என்பதே ஆவல்.!நீங்கள் ஒருகருத்து சொன்னால் அது சுவராசியமாக இருந்தால் அதைப்பற்றியே கமெண்ட போகும்.நிறைய காமிக்ஸ் நண்பர்கள் வந்தால் இன்னும் ஜாலியாக இருக்கும்.!என்னைப்பொருத்தவரை காமிக்ஸ் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் சந்தோஷத்திற்கு ஈடுஇணை கிடையாது..டைம் கிடைக்கும்போது ஜாலியாக கமெண்ட் போடுகிறேன். எல்லா நண்பர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வருகை புரிந்தால் இன்னும் நிறைய சந்தோசம்தானே.!//
      //இதற்கு என்ன ரூல்ஸ்&ரெகுலேசன் தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தக்கூடாது அதுமட்டுமே முக்கியம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.!//
      +1

      Delete
    9. //இங்கு கலக்கும் முகமறியா நண்பர்கள் கருத்தை படித்து பிடித்தால் சிரித்து இல்லை எனில் கடந்து அடுத்த கமெண்ட்ஸ் போகிறேன் //
      +1

      Delete
    10. ***** இல்லை இது நமது ப்ளாகின் நடைமுறை.... அது தொடரட்டும்... மாட்ரேஷன் நமக்கு ஆகாது... என்ற பழைய பஞ்சபாட்டை நீங்கள் கடைபிடிக்கும் வரை, உண்மையான வாசர்களின் நேரடி விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு படாமலேயே போகும் வாய்ப்கள் என்றும் தொடரும்.. *****

      +1

      The need of the hour is comment moderation ...

      ஒரு ஆறு மாதங்கள் செயல்படுத்திப் பாருங்களேன் ! "இத்தளம் எப்போதும் 'அறிவுசார் அட்ராசிட்டி கழகத்தின்" தளமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை - enough is just enough on unbounded, unsolicited overdose in the name of fun என்பதுதான் பாயிண்ட் !

      Delete
    11. //பதில்களில் ஒரு நிதானத்தை கடைபிடியுங்கள், தனிபட்ட விருப்பு வெருப்புகளை ஒரம் கட்டுங்கள்//
      ஆசிரியரின் இந்த கருத்து, வரைமுறையில்லாமல் கருத்து பததிவிடுபவர்களுக்கு என்றும்...

      //உங்கள் டவுசர்கள் கிழிக்கபட்டாலும் கருத்துகளை பதியுங்கள் //
      ஆசிரியரின் இந்த கருத்து, வரைமுறை அற்ற கருத்தை வாசிகின்றவர்களுக்கும்...என்பதாகவே எனக்கு தோன்றியது.
      ஒரே கருத்து, படிப்பவர்களின் மனநிலையை பொறுத்து, வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ள படுகிறது. இங்கு நிலவும் வெப்ப சூழலுக்கும் அதுவே காரணம்.

      //முகமூடிகளின் பின் இருந்து ஆவர்த்தனம் நடத்துபவர்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை அளிக்கிறீர்கள் என்ற முரண் புரிபடவில்லை...//
      //வெறும் 500 கமெண்ட் ஹிட்டிற்காக இவர்களுக்கு தூபம் போட்டு ஏன் வளர்க்க வேண்டும்....//
      //கமெண்டுகளால் மூலம் மற்றவர்களை இங்கு எட்டி கூட பார்க்க முடியாத அளவு பக்கங்களை ஆக்கிரமிக்கும் நபர்களுக்கு எப்போது தான் நீங்கள் கடிவாளம் போட போகிறீர்கள்...//
      இதற்கெல்லாம் கட்டுப்பாடு என்பது சாத்தியமில்லாதது...ஏனெனில் உண்மையான கட்டுப்பாடு கருத்தை பதிவு செய்பவர்களின் கரங்களில் தான் உள்ளது. இதற்காக ஆசிரியரை நொந்து கொள்வது அவசியமில்லாதது...

      ஆசிரியரின் தற்போதைய நிலைமை, பள்ளிக்கூடம் வாத்தியார் கணக்காலே இருக்கு, மாணவர்களை அடித்தாலும் குற்றம், ஆடிக்கவில்லை என்றாலும் குற்றம்...

      Delete
    12. //இதற்கு என்ன ரூல்ஸ்&ரெகுலேசன் தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தக்கூடாது அதுமட்டுமே முக்கியம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.! //

      Well said Mr MV ! The matter is so simple and as Editor said it many times. பிடிச்சா + 1 போடுங்க, பிடிக்கலையா தாண்டி போயிகிட்டே இருங்க! Cool .

      Delete
    13. //பதில்களில் ஒரு நிதானத்தை கடைபிடியுங்கள், தனிபட்ட விருப்பு வெருப்புகளை ஒரம் கட்டுங்கள், என்று கூறி கொண்டே, இன்னொரு பக்கம் உங்கள் டவுசர்கள் கிழிக்கபட்டாலும் கருத்துகளை பதியுங்கள் என்று ஏற்கனவே முகமூடிகளின் பின் இருந்து ஆவர்த்தனம் நடத்துபவர்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை அளிக்கிறீர்கள் என்ற முரண் புரிபடவில்லை.//

      +1

      Delete
    14. /பதில்களில் ஒரு நிதானத்தை கடைபிடியுங்கள், தனிபட்ட விருப்பு வெருப்புகளை ஒரம் கட்டுங்கள், என்று கூறி கொண்டே, இன்னொரு பக்கம் உங்கள் டவுசர்கள் கிழிக்கபட்டாலும் கருத்துகளை பதியுங்கள் என்று ஏற்கனவே முகமூடிகளின் பின் இருந்து ஆவர்த்தனம் நடத்துபவர்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை அளிக்கிறீர்கள் என்ற முரண் புரிபடவில்லை.//
      +1

      Delete
    15. Raghavan : //The need of the hour is comment moderation ...//

      ஞாயிறு ஒரு நாளைத் தாண்டிய பின்னே, வார நாட்களில் 2 நாட்களுக்கொருமுறை இரவில் நான் இங்கே ஆஜரானாலே பெரிய விஷயம் ! அதிலும் அச்சு வேலைகள் ; தயாரிப்புப் பணிகள் நடந்தேறும் போது நான் வீடு திரும்புவதே நள்ளிரவுக்குப் பின்னே எனும் போது அதற்கும் வலு இருப்பதில்லை ! வெளியூர் / வெளிநாட்டுப் பயணம் எனும் சமயம் கேட்கவே வேண்டாம் ! யதார்த்தம் இது தான் எனும் போது comments moderation + reply to comments என்ற பொறுப்புகளையும் நான் கையில் எடுத்துக் கொண்டால் அதற்கு நியாயம் செய்திடும் ஆற்றல் என்னிடம் இராதே ?!

      தவிர, உள்ளது உள்ளபடிக்கு இங்கே பதிவாகும் போதே favorites ; ஜால்ரா ; சொம்பு ; அண்டா என்ற allegations பறந்திடும் போது, சென்சார் செய்து selective ஆக மாத்திரமே பின்னூட்டங்களை நான் அனுமதிக்கும் பட்சம் கதை கந்தலாகிடாதா ?

      Delete
    16. //தவிர, உள்ளது உள்ளபடிக்கு இங்கே பதிவாகும் போதே favorites ; ஜால்ரா ; சொம்பு ; அண்டா என்ற allegations பறந்திடும் போது, சென்சார் செய்து selective ஆக மாத்திரமே பின்னூட்டங்களை நான் அனுமதிக்கும் பட்சம் கதை கந்தலாகிடாதா ? //

      சில பதிவுகளுக்கு முன் அருண் Arun SowmyaNarayan எழுதிய பின்னூட்டதிற்கு இரவில் ஆதரவு தெரிவித்தவர்கள் காலையில் உங்கள் பதிவை பார்த்ததும் அப்படியே ப்ளேட்டை மாற்றியதை எப்படி எடுத்து கொள்வது சார் ?

      Delete
  16. largo winch போன்ற புதிய பரிமாண கதாநாயகர்கள் மேலும் தேவை ! magic wind போன்றவர்களுக்கு கல்தா கொடுத்து விடலாம் ! விலை மற்றும் வடிவமைப்பில் இப்போதைய நிலையே தொடர வேண்டுகிறேன் ! எண்ணிகையில் வேண்டுமானால் சிறிது குறைத்து கொள்ளலாம் ! மற்றபடி அனைத்து முடிவுகளும் எடிடரான தங்கள் கையில் !

    ReplyDelete
    Replies
    1. //magic wind போன்றவர்களுக்கு கல்தா கொடுத்து விடலாம் !//
      //எண்ணிகையில் வேண்டுமானால் சிறிது குறைத்து கொள்ளலாம் !//
      -1

      Delete
    2. அஇதுவும் சரியான யோசனைதான் :)

      Delete
    3. // //magic wind போன்றவர்களுக்கு கல்தா கொடுத்து விடலாம் !////
      -100

      Delete
    4. senthilwest2000@ Karumandabam Senthil : மேஜிக் விண்ட் தொடரில் தொடரவிருக்கும் கதைகளைப் படிக்கும் வரை சற்றே பொறுமை நண்பரே ! அதுவும் அதன் ஆல்பம் # 4 - ஒரு அட்டகாச த்ரில்லர் !

      Delete
  17. Xiii mudikavum xiii mystery thodaravum TeX lion 250 pola new year pongal deepavali July andumalar and 300 lion SPL.+ reprint
    Largo mudikavum martin 1or 2

    ReplyDelete
  18. அப்போ உண்மையிலேயே ட்ரவுசர் கிழிஞ்சுதான் போச்சா ? பட்டா பட்டியவிட ஜீன்ஸ் பேண்ட் நல்லா உழைக்குமே ..!

    நான் ஏதோ நோபால் ன்ல நினைச்சேன்.! ;)



    ஆரம்பத்திற்கும் , முடிவிற்கும் இடையில் இருக்கும் தொடர்பே மாற்றங்கள் மட்டும்தான்.

    பழையன கழிதலும் , புதியன புகுதழும் காலத்தின் கட்டாயம்தானே !

    //“சிவனே என்று ஒழுங்காய் ஓடிக் கொண்டிருக்கிற வண்டியை நோண்டுவானேன் ? தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும் யானை தான் நினைவுக்கு வருகிறது!“//

    இந்த வசனத்தை படிக்கும் போது நீங்கள் சொல்லும் தொணியை மனதில் நினைத்து பார்த்தேன் என்னுடைய 10 வகுப்பு வாத்தியார் நினைவுக்கு வந்தார்.



    ReplyDelete
    Replies
    1. Meeraan : //பழையன கழிதலும் , புதியன புகுதழும் காலத்தின் கட்டாயம்தானே !//

      Exactly ! கழிக்கும் கட்டாயம் எழும் முன்பே புதுசை உட்புகுத்துவோமே என்ற அவா தான் !

      Delete
  19. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..பரிசைத் தட்டிச்சென்ற
    செல்வம் அபிராமிக்கு மனப் பூர்வமான வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

    ReplyDelete
  20. காலை வணக்கம் ஆசிரியருக்கும் ...நண்பர்களுக்கும் ...

    செல்வம் அபிராமி சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் ....


    ReplyDelete
  21. ஆசிரியர் மற்றும் கா.கா.் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவுக்கு என்னுடைய கருத்தை கூற ஆசைப்படுகிறேன். மொழிபெயர்ப்பில் மாற்றம்---கண்டிப்பாக முயற்சி செய்யலாம். முதழில் கி.நா. மற்றும் சில புது வரவுகளுக்கு மட்டுமே முயற்சிக்கலாம். அதிலும் ஆசிரியர் என்ற முறையில் உங்களின் சில திருத்தங்களோடு. சைசில் மாற்றம்--நிச்சயம் வரவேற்க கூடியது(இளைய தலைமுறையை நம் பக்கம் இழுக்க பல புதுமைகளை செய்தால்தான் முடியும். ) விலையில் மாற்றம்----இதுவும் கண்டிப்பாக செய்தே தீர வேண்டிய மாற்றம் . கலரில் மாற்றம் *சாதாரண பேப்பரில்(தரமான) கலர் மற்றும் கருப்பு வெள்ளையில் அதிக இதழ்கள் வரவேண்டும் சார். எண்ணிக்கையை பொறுத்தவரை இதழ்களின் விலை ஒரு குறிப்பிட்ட அளவு குறையும்போது அது ஒரு பிரச்சினையாக இராது. (வருடத்திற்கு சுமார் 80 கதைகள் வரை எதிர் பார்க்கிறோம்) நன்றி. இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்து சார்

    ReplyDelete
    Replies
    1. //வருடத்திற்கு சுமார் 80 கதைகள் வரை எதிர் பார்க்கிறோம்//
      அதுக்க்க்க்க்க்கும் மேல...இருந்தாலும் நமக்கு OK தான்

      Delete
    2. rajasekarvedeha //(வருடத்திற்கு சுமார் 80 கதைகள் வரை எதிர் பார்க்கிறோம்)//

      ஆவ்வ்வ்வ் !

      Delete
  22. டெக்ஸ் வில்லர்க்கென்று புதிதாய் மாதம் ஒரு புத்தகம் வீதம் வருடத்திற்கு 12 புத்தகங்கள் வீதம் ( இதில் அனைத்து ஸ்பெஷல்கள் ம் சேர்த்து) தனியாக Plan A தொடங்கலாம் நாங்களும் மீதமுள்ள 590 சொச்சு கதைகளை எப்போது படித்து கரை சேர்வது?

    லக்கி, சிக்பில், ம.இ.மந்திரி. ப்ளுகோட் இவர்களை. CCC இணைத்து இவர்களின் கதைகளை வருடத்திற்கு 2 / 2 கதைகளாக வெளியிட்டால் வாசர்களின் சிறார்களை அவர்களது மனைவிகளையும் கவர்ந்திட பெரிது உதவும்

    பெறும்பாலான புத்தகங்கள் கருப்பு/வெள்ளையாய் இருந்தால் நலம்

    புதிய தொடர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    டிடெக்டிவ் சீரியஸ்ஆக ராபின், மார்ட்டின், ரி.ஜானி, மாடஸ்டி இவர்களை உள்கொண்டு வருதல் நலம்

    ReplyDelete
    Replies
    1. ///டெக்ஸ் வில்லர்க்கென்று புதிதாய் மாதம் ஒரு புத்தகம் வீதம் வருடத்திற்கு 12 புத்தகங்கள் வீதம் ( இதில் அனைத்து ஸ்பெஷல்கள் ம் சேர்த்து) தனியாக Plan A தொடங்கலாம் நாங்களும் மீதமுள்ள 590 சொச்சு கதைகளை எப்போது படித்து கரை சேர்வது?////--- எப்போதும் நாம் கரை சேரவே முடியாது நண்பா... அங்கே இத்தாலியில் ஆண்டுக்கு 12கதைகள் கூடிக்கொண்டே தான் செல்கின்றன ....இங்கே இந்த வருடம் 5டெக்ஸ் கதை என்ற ஒதுக்கீடுக்கே போன வருடம் பல கண்டன குரல்கள் ஒலித்தன ....இந்த லட்சணத்தில் தனி புத்தகம் ,12 இதழ்கள் என்ற கோரிக்கை கனவாகவே முடியப்போகுது...நம்மை பொறுத்து ...ஆண்டு முழுதும் அனைத்து கதைகளும் டெக்ஸ் கதைகளாக வந்தாலே இன்னும் 10வருடம் ஆகும் ......

      Delete
    2. கி.நா. தனி சந்தாவாக வரும்போது ஏன் Tex willer தனி சந்தாவாக வரக்கூடாது?வந்து பார்க்கட்டும். அதன் பிறகு தான் தலயின் உண்மையான மதிப்பு தெரியும். கண்டிப்பாக Texதனி சந்தா வேண்டும்

      Delete
    3. டெக்ஸ் தனி இதழ் கேட்டு இன்று உண்ணும் விரதப் போராட்த்தை தலைமையேற்று நடத்துமாறு சேலம் இரவுக்கழுகாரை கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    4. டெக்ஸ் சம்பத்.!//டிடெக்டிவ் வரிசையில் மாடஸ்டி//+1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

      Delete
    5. ////டெக்ஸ் வில்லர்க்கென்று புதிதாய் மாதம் ஒரு புத்தகம் வீதம் வருடத்திற்கு 12 புத்தகங்கள் வீதம் ( இதில் அனைத்து ஸ்பெஷல்கள் ம் சேர்த்து) தனியாக Plan A தொடங்கலாம் நாங்களும் மீதமுள்ள 590 சொச்சு கதைகளை எப்போது படித்து கரை சேர்வது?//// தனி சந்தா - வருடத்திற்கு 36 புத்தகங்கள் - லிமிடெட் அல்லது பிரிமியம் எடிசன் - மினிமம் 600 சந்தாதாரர்கள் - 17 வருடத்தில் மீதமுள்ள கதைகளை எங்கள் காலத்திற்குள் முடித்து விடலாம், புது கதைகளை ரெகுலர் சந்தாவில் வெளியிடலாம்..

      Delete
    6. டெக்ஸ் கதைகள் மிக சிறந்த /சிறந்த கதைகளை தேர்வு செய்து மாதம் ௐரிதழ்

      Delete
    7. கரூர் சரவணன் ஜி
      வருடத்திற்கு 12 புத்தகங்களை கேட்பதற்கே நாக்கு தள்ளுது

      நீங்க வேற 35னு கொளுத்திபோடாதிங்க

      அப்புறம் இதையும் விஜயன் சார் தள்ளுபடி (12அ 8ஆ) பண்ணிடபோறார் :)

      Delete
    8. இந்த பதிவில் எடிட்டர் நல்லா மாட்டிக்கிட்டார்

      மற்ற அனைத்து ஹீரோக்களை விட டெக்ஸ் புக்ஸ் எண்ணிக்கை வரிசையில் உச்சாணிக்கொம்பில் நிற்கிறார்

      ஆகவே டெக்ஸ் கென தனி சந்தா கேட்டு அதை நிறைவேத்திக்கப் பார்க்கணும்

      இதவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது நண்பர்களே

      Delete
    9. TeX than I santha + regular+reprint porata kuluvin poor murasu Havana seiyungal editor sir

      Delete
    10. Dear Editor,
      Time for a Tex monthly books.Can you share your thoughts?

      Delete
    11. Tex Sampath & Aldrin Ramesh & friends :

      "அட..டெக்சா ?!!!" என்று முகம் மலர்வது இன்றைய நிலை !
      "ஓஹோ..டெக்சா ?!!" என்று ஆகிடும் மாதம்தோறும் டெக்ஸ் எனில் ...!

      Delete
    12. கண்டிப்பாக சலிப்பு தட்டாது சார்

      டெக்ஸை எதிபார்த்து பார்த்து ஒரு ரசிக கூட்டமே காத்திட்டிருக்கு

      Delete
  23. ஈரோட்டில் ஸ்டால் கிடைத்ததில் மகிழ்ச்சி சார் ...தங்களின் வருகை தேதி ....?

    அறிமுகங்களின் கதைகளை குறைத்து நான்கு சிக்பில் ..extra....#

    எனக்கு மகிழ்ச்சியே ...நான்கு லக்கி ...நான்கு சிக்பில் ...ஆறு டெக்ஸ் ...நாலு ஜானி ...இரண்டு லார்கோ ...இரண்டு ஷெல்டன் ...ஆஹா ...ஆஹா ...

    பழைய இதழ்களில் அடுத்த வெளீயீடு நாயகர்களின் விளம்பர வெளியீடே மனதை துள்ள செய்யும் ...அப்படி இருந்தால் ஓகே தான் ..புது அறிமுகங்களை மிதமாக அறிமுகம் செய்யலாம் என்பது என் கருத்து மட்டுமே ...

    மொழி பெயர்ப்பு #

    அந்த மிதமான அறிமுக நாயகர்களில் புது நண்பர்களின் ஆக்கத்தை படைக்கலாம் ..எப்படியும் உங்கள் பட்டி ..டிங்கரிங் பார்த்து தான் வரும் என்பதால் உங்கள் திருத்ததுடன் வரும் ஆக்கம் ஓகே ...அதே சமயம் டெக்ஸ் ..லார்கோ போன்ற உங்கள் எழுத்து நடையில் ஊறி போன நாயகர்களுக்கு தாங்களே தொடரலாம் என்பது என் கருத்து மட்டுமே ....


    கண்காட்சிக்கு குடும்பத்தோடு வராதவர்கள்..புத்தகத்தை அடுக்கி வைக்க தேவையில்லாதோர் ..விற்பனை கணக்கை பார்க்காதோர்...கண்காட்சிக்கே வராதோர்..இங்கே மெளன பார்வையாளர்களாக வீற்றிருக்கும் நண்பர்கள் அனைவரும் காமிக்ஸ் காதலர்களே என்று 100சதவிகிதம் ஒத்த கொள்ளும் அதே சமயம் இந்த செயல்களில் ஈடுபடும் நண்பர்களும் அதே காமிக்ஸ் தாகத்தை கொண்டவர்கள் தான் என்பது என் கருத்து மட்டுமே ...

    மெளன பார்வையாளர்கள் பலரும் ..இடையில் நின்று போன சில நண்பர்களும் தொடர்ந்து இங்கே பதிவிட்டால் அனைவருமே மகிழ்வர் என்பது என் கருத்து மட்டுமல்ல...காமிக்ஸ் நண்பர்கள் அனைவர் கருத்துமே.....

    ReplyDelete
    Replies
    1. இதை அப்படியே நான் வழி மொழிகிறேன்......

      Delete
    2. //கண்காட்சிக்கு குடும்பத்தோடு வராதவர்கள்..புத்தகத்தை அடுக்கி வைக்க தேவையில்லாதோர் ..விற்பனை கணக்கை பார்க்காதோர்...கண்காட்சிக்கே வராதோர்..இங்கே மெளன பார்வையாளர்களாக வீற்றிருக்கும் நண்பர்கள் அனைவரும் காமிக்ஸ் காதலர்களே என்று 100சதவிகிதம் ஒத்த கொள்ளும் அதே சமயம் இந்த செயல்களில் ஈடுபடும் நண்பர்களும் அதே காமிக்ஸ் தாகத்தை கொண்டவர்கள் தான் என்பது என் கருத்து மட்டுமே ...

      மெளன பார்வையாளர்கள் பலரும் ..இடையில் நின்று போன சில நண்பர்களும் தொடர்ந்து இங்கே பதிவிட்டால் அனைவருமே மகிழ்வர் என்பது என் கருத்து மட்டுமல்ல...காமிக்ஸ் நண்பர்கள் அனைவர் கருத்துமே.....//
      +1

      Delete
  24. நண்பர் ராஜசேகர் கூறியதைப்போல விலையில் மாற்றங்கள் வேண்டும்
    அதிலும்
    CCC க்கு குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்

    இப்பொழுதெல்லாம் சிறுவர்களிடம் 10 & 20 ரூபாய் என்பது சர்வ சாதாரணமாக புழங்குகிறது
    இவ்விலையில் கிடைத்தால் காமிக்ஸ் என்ற வட்டத்துக்குள் இவர்களாகவே வந்து விடுவார்கள்
    இரண்டு வருடங்கள் கழித்து விலையேற்றம் செய்தாலும் தப்பில்லை விஜயன் சார்

    CCCக்கு மட்டும் வருட சந்தாவை இவரகளால் தனிப்பட்டமுறையில் கட்டச்செய்து ஊக்குவிக்கலாம்

    ReplyDelete
  25. ஈரோடு புத்தக திருவிழா ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை

    ReplyDelete
  26. காலை வணக்கம் சார் ....
    கேப்சன் போட்டியில் வென்ற செல்வம் அபிராமி சார் வாழ்த்துக்கள் ....
    ஈரோடு புத்தக விழாவில் இந்த ஆண்டும் ஸ்டால் கிடைத்துள்ளது.--- இந்த வாரத்தில் முதல் நல்ல செய்தி சார் .... வழக்கம் போல வரவேற்பும் நல்விற்பனையும் அமைய முன்கூட்டியே நல்வாழ்த்துகள் சார் .......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .!டெக்ஸ் விஜயராகவன்.போன் சரியாகிவிட்டதா.!

      Delete
    2. வணக்கம் MV சார் ....சரியாகுது ...திடீரென கோளாராகுது....சரியாக இருக்கும் போது இங்கே +1 போடுகிறேன் ....கோளாராக இருக்கும் போது நோ ......(இந்த தனிப்பட்ட உரையாடல் காரணமாக உபயோகமான தகவல்கள் கிடைக்காத்தற்கு வருந்துகிறேன் நண்பர்களே)

      Delete
    3. .(இந்த தனிப்பட்ட உரையாடல் காரணமாக உபயோகமான தகவல்கள் கிடைக்காத்தற்கு வருந்துகிறேன் நண்பர்களே) //

      @சேலம் Tex விஜயராகவன் :

      LOL

      Delete
  27. எடிட்டர்&நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.!!!மாற்றம் ரொம்ப முக்கியம் சார்.!நாங்கள் பழமையான பழக்கத்தில் ஊறி கிடப்பதால்.,கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் கொடுத்து மாற்றினால் நன்றாக இருக்கும்..கொடிய விஷம் கூட கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் உடம்பு ஏற்றுக் கொள்ளும் என்று இயற்கையே வழிகாட்டும்போது நமக்கு ஏன் தயக்கம்?..லயன்#250கூட கொஞ்சம் புதிய நடை நன்றாகத்தான் இருந்தது. (கி.நா.கூட அப்படியே ராவா கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் கொடுத்து பழக்கி இருந்தால் நாங்களும் பழகி இருப்போம்.).

    ReplyDelete
  28. செல்வம் அபிராமி சாருக்கு,எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
  29. ஞாயிறு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  30. 2016 விருப்பப் பட்டியல்..
    கடந்த வருடம் நமது லயன், மின்னும் மரணம் மற்றும் முத்து காமிக்ஸ்களின் பட்ஜெட் Rs.5000/. இதுவே 2016லும் பட்ஜெட்டாக இருக்கும்/ என்று நினைக்கிறேன். அதன் அடிப்படையில் என்னுடைய அடுத்த வருட ஆசைகள்...

    லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்:

    1. டெக்ஸ் – 1500 பக்கங்கள். 700 பக்கங்கள் வண்ணத்தில். ஒரே புத்தகமாக – புத்தக விழா அல்லது தீபாவளி சிறப்பிதழாக வருவதே சிறப்பு. மீதம் கருப்பு வெள்ளை கதைகளாக.
    2. டைகர் – எனக்கு என் பெயர் டைகர் இப்பொழுது வருவதில் உடன்பாடில்லை. பாதியில் தொங்கிக் கொண்டிருக்கும் டைகர் இளமைக் கால கதைகளை முதலில் முடிக்க வேண்டும். அதனால் என்னுடைய விருப்பம் 5 young bluberry கதைகளை வெளியிட வேண்டும்.
    3. லார்கோ - 15, 16, 17, மற்றும் 18 கதைகளை இரண்டு புத்தகங்களாக.
    4. ஷெல்டன் – 9, 10, 11, மற்றும் 12 கதைகளை இரண்டு புத்தகங்களாக.
    5. மாடஸ்டி கதைகள் மூன்று. கருப்பு வண்ணத்தில். இருக்கும் நூறுகதைகளில் சித்திர தரம் பெரும்பாலும் சுமாராகவே இருக்கும் கதைகளே அதிகம். இருந்தாலும் பரபரப்புக்கும் சுறு சுறுப்புக்கும் உத்தரவாதம் தரும் கனவுக்கன்னி(?!) மாடஸ்டிக்கு என்னுடைய வோட்டு.
    6. கொமான்சே – இரண்டிரண்டு இதழ்களாக நான்கு கதைகள்.
    7. மாதம் ஒன்று என 12 கார்ட்டூன் கதைகள். சிக் பில், ஸ்மர்ப், லக்கி, என்று காமெடி கதைகளின் அணிவகுப்பு.
    8. ரிப்போர்டர் ஜானி – 2 கதைகள்.
    9. மர்ம மனிதன் மார்ட்டின் - 2 கதைகள்.
    10. வானம் எங்கள் வீதி.

    கிராபிக்ஸ் நாவல்- தனி சந்தா:

    1. ரத்தப் படலம் – இறுதிப் பகுதி மற்றும் மூன்று ஸ்பின் ஆப் கதைகள். ஆங்கிலக் கதைகள் என்னிடம் இருப்பதால் மீதமுள்ள கதைகளையே சுயநலமாய் பட்டியலிடத் தோன்றுவதால் ஸ்பின் ஆப் கதைகளில் குறிப்பாக எதையும் கேட்க விரும்பவில்லை. ஒரு சில ரசிகர்கள் முடியல/பிடிக்கல/புரியல என்பதால் XII-ஐ தனி சந்தா வரிசைக்கு தள்ளி விட்டுள்ளேன்.
    2. தோர்கல்- அடுத்த நான்கு கதைகள்.
    3. பௌன்செர் - அடுத்த இரண்டு கதைகள். அதிரடியான கதை. அதிர்ச்சியான முடிவு.

    கி. நா.வுக்கு ஆதரவு சற்றே குறைவாக இல்லாததால், குறைந்த அளவு சந்தா வரும் என்று நினைக்கிறேன். இம்மாதிரி கதைகளுக்கு ஆசிரியர் கஸ்டம் பிரிண்ட் வழியில் சற்று விலை(premium) கூடுதலாக வைக்க எனது ஆதரவு உண்டு.

    மறுபதிப்புகள்:

    1. வழக்கம் போல 12 மறுபதிப்புகள் + முடிந்தால் ரத்தக்கோட்டை வண்ணத்தில். மிகப் பெரிய மறுபதிப்புகளை கேட்க சங்கடமாக உள்ளது. நிறுவனத்தின் தளவாட சிக்கல்களை புரியாமல் கேட்டு ஆசிரியரை சிரமப்பட வைக்க விருப்பம் இல்லை. எனவே ர. கொ. வண்ணத்தில் வரவில்லைன்னா ஓகே.
    முடிந்தால் Archie-ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.

    திகில் காமிக்ஸ்:

    ஓட்டைவாய் உலக நாதன் வாய் திறந்தால் தான் ஏதாவது யூகிக்க முடியும்.

    புதிய கௌபாய் தொடர்: ஜாங்கோ (Django-Zorrow) கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பகுதி திரைப்படமாக வந்து பிறகு காமிக்ஸாக வந்தது. திரைபடம் மிகவும் சிறப்பாக இருந்ததால் இரண்டாவது கதைத்தொடர் படிக்க ஆரம்பித்துள்ளேன். படித்த வரை நன்றாக உள்ளது. நம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று நினைக்கிறேன், ஒருவேளை ஆசிரியர் குறிப்பிட்ட தொடர் இதுவாக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. +111111111111
      இம்முறையு கி.நா .சந்தாவில் பௌன்சர் போன்று அனல் பறக்கும் கதைகளை ஏதாவது தேர்வுசெய்து வைத்துஇருப்பார் எனவே கவலைப்பட தேவையிருக்காது.!

      Delete
    2. விலையை குறைக்கிறேன் என்று தரத்தில் கை வைத்து விடாதீர்கள் சார்... வண்ணத்தில் ஒரிஜினலாக வந்த கதைகள் வண்ணத்தில் வருவதே சிறப்பாக இருக்கும்

      Delete
    3. விலையை குறைக்கிறேன் என்று தரத்தில் கை வைத்து விடாதீர்கள் சார்... வண்ணத்தில் ஒரிஜினலாக வந்த கதைகள் வண்ணத்தில் வருவதே சிறப்பாக இருக்கும்.
      கருப்பு வெள்ளை - முடிந்தளவு குறைவாக தாருங்கள் சார் ....வண்ணத்தில் பழகிட்டு கருப்பு வெள்ளை ....லைட்டா கடுப்ப கிளப்புது

      Delete
    4. இது தவிர டெக்ஸ்ஸின் தனி பிரிமியம் சந்தா - கருப்பு வெள்ளையில் - தேவைப்படுபவர்களுக்கு மட்டும்...

      Delete
    5. Mahendran Paramasivam : Rs.5000 பட்ஜெட் இந்தாண்டு நிகழ்ந்தது "மி.மி." புண்ணியத்திலும் ; லயன் + முத்துவின் landmarks ஒரு சேர அமைந்ததன் காரணமாகவே எனும் போது - 2016-ல் அதே தொகைக்கான திட்டமிடல்கள் இருந்திடாது !

      மற்றபடிக்கு உங்களின் இதர wish list - சுவாரஸ்யமானதே :-)

      Delete
  31. புது கதைகளுக்கு புதிய மொழி பெயர்ப்பை யூஸ் பண்ணி பார்க்கலாம்.சிறப்பாக மொழி பெயர்க்கும் நிறைய வாசகர்களும் இங்குண்டு.அவர்களின் திறமைக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.ஏற்கனவே ஒரு போட்டி வைத்த முன் அனுபவமும் நமக்கிருக்கிரது.இந்த தளத்தில் கருத்து சொல்லும் நண்பர்களைவிட பத்து மடங்குஅதிகமான தொழில் நுட்பம் வசப்படாத நண்பர்கள் வெளியே உள்ளனர்.தளத்தில் பதிவிட வரும் புதியவர்களும்"சில விளங்காத."காரணத்தால் சீக்கிரம் வெளியேறி மவுனகுருவாகின்றனர்.சிலர் ஆக்கி விடுகின்றனர்.காலேஜ்ஜை போல ராகிங் பண்றாங்களோ என்னவோ.?உண்மையான கருத்து சொல்லும் வாசகர்கள் தளத்திற்கு வெளியேயும் இருக்கிறார்கள்.ஈரோட்டில் ஸ்டால் கிடைத்ததற்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. karthik karthik : //இந்த தளத்தில் கருத்து சொல்லும் நண்பர்களைவிட பத்து மடங்குஅதிகமான தொழில் நுட்பம் வசப்படாத நண்பர்கள் வெளியே உள்ளனர்//

      Of course ; அவ்வப்போது இந்த ப்ளாக் சேதிகளை "சிங்கத்தின் சிறுவலையில்" பகுதி வழியாக நாம் repeat செய்வதே இணையத்துக்கு அப்பாலுள்ள வாசகர்களையும் நம் திட்டங்களில் இணைத்தே வைத்திருக்கும் பொருட்டு தானே ?

      Delete
  32. ஈரோட்டில் ஸ்டால் கிடைத்தது மிகவும் சந்தோஷமான செய்தி !

    எடிட்டருக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள் !!_/\_

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி சாருக்கு,எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.!

      Delete
    2. அபிராமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

      Delete
  33. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..

    ReplyDelete
  34. விஜயன் சார்,
    // For instance – ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? அல்லது- why not? என்ற கேள்வியை முன் வைப்பீர்களா? //
    எனது முழு ஆதரவு இதற்கு உண்டு! தயவு செய்து இதனை நடைமுறைபடுத்துங்கள்!

    உட்சிடியின் கோமாளிகளின் இந்தாண்டின் முதல் சாகஸத்தின் அட்டைபடம் அருமை! இவர்களை சந்திக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    ஈரோடு புத்தக திருவிழாவில் நமக்கு ஸ்டால் கிடைத்தது மிகவும் சந்தோசம். புத்தக திருவிழாவில் எந்த நாட்களில் உங்களை சந்திக்க முடியும் என கூறினால் நன்றாக இருக்கும்.

    புதிய மொழி பெயர்பாலர்களை உபயோகபடுத்தலாம், முடிந்தால் இந்த தளத்திற்கு வரும் வாசக மற்றும் முகநூல் நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
    selvan abirami :வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. //// For instance – ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? அல்லது- why not? என்ற கேள்வியை முன் வைப்பீர்களா? //
      எனது முழு ஆதரவு இதற்கு உண்டு! தயவு செய்து இதனை நடைமுறைபடுத்துங்கள்!//
      -1

      Delete
  35. எடிட்டர் .நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் . டெக்ஸ் வில்லர்க்கென்று புதிதாய் மாதம் 2 புத்தகம் வருடத்திற்கு 24 விதம் தனி சந்த plan A தொடங்காலம்.

    ReplyDelete
  36. எடிட்டர் .நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் . டெக்ஸ் வில்லர்க்கென்று புதிதாய் மாதம் 2 புத்தகம் வருடத்திற்கு 24 விதம் தனி சந்த plan A தொடங்காலம்.

    ReplyDelete
    Replies
    1. Bhaskaran C : மதிய வணக்கங்கள் சார் ! மாதம் ஒரு டெக்ஸ் என்ற கோரிக்கைக்கு பதில் போட்டு விட்டு மேலே ஸ்க்ரோல் செய்தால் - மாதம் 2 TEX என்ற அபிலாஷை !! வேண்டாமே இந்த கௌபாய் ஓவர்டோஸ் !!

      Delete
  37. Sir .. New translators can be used for new series or heroes or for graphic novels ... Leave ongoing series as it is ..

    New hero or series can be introduced every 2 years .. Illaina variety illama poidum ...

    TEX monthly issue can be published Sir .. Consider it as a separate option in subscription ..

    ReplyDelete
    Replies
    1. Mks Ramm : //TEX monthly issue can be published Sir .. Consider it as a separate option in subscription ..//

      இந்தப் பதிவின் சாராம்சமே "அளவுக்கு மீறிடும் சமயம்..." என்ற முன்ஜாக்கிரதை எனும் போது - இந்தக் கோரிக்கை அதன் மறு முனையல்லவா ?! இப்போதே ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5 / 6 கதைகள் நம் இரவுக்கழுகின் ஆக்கிரமிப்பில் தானே உள்ளது !

      Delete
    2. How about taking a vote on Tex monthly series?

      Delete
  38. காலை வணக்கம் ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும்..

    ReplyDelete
    Replies
    1. Tiruppur Kumar : மதிய வணக்கங்கள் நண்பரே !

      Delete
  39. இனிய காலை வணக்கம். நீ...ண்டதொரு பதிவு. சில கருத்துப் பகிர்வுக்கான வினாக்களை முன்வைத்து வந்திருக்கும் இந்தப்பதிவு பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தப்போவது உறுதி.
    மொழிபெயர்ப்பில் புதியவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு என்றும் எனது ஆதரவைத் தெரிவித்துவந்திருக்கிறேன். இது இப்போதும் தொடரும். சில நண்பர்கள் குறிப்பிட்டிருப்பதுபோன்று புதியதொரு தொடர் ஆரம்பிக்கும்போது புதியவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கிடலாம். புதியதொரு தொடர் அறிமுகமாகும்போது அதற்கு சிறப்பானதொரு ஆரம்பத்தை கொடுக்க மொழிபெயர்ப்பில் நீங்கள் அதீத கவனம் செலுத்துவீர்கள் என்பது தெரியும். ஆயினும், தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் தொடர்களில் புதிய எழுத்துக்கள் வரும்போது வித்தியாசம் அப்பட்டமாகத் தெரிந்து அதிருப்தி அலையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?

    ReplyDelete
  40. புதிய தொடர்கள் கட்டாயம் வேண்டும். இப்போதுள்ளவை சலிக்காதுதான் என்றாலும் புதிய தொடர்களின் அறிமுகம் அவசியம்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //புதிய தொடர்கள் கட்டாயம் வேண்டும். இப்போதுள்ளவை சலிக்காதுதான் என்றாலும் புதிய தொடர்களின் அறிமுகம் அவசியம்!//

      200 - 300 என்ற கதை எண்ணிக்கை கொண்ட தொடர்களாக அல்லாது 15 அல்லது 20 கதைகள் இருப்பின் நம் வேலை ரொம்பவே சுலபம் ! இதோ அடுத்த ஆண்டில் லார்கோவை ; ஷெல்டனை complete செய்திடும் தருணத்தை எட்டி விடுவோம் ; கமான்சே அதன் மறு ஆண்டில் நிறைவாகிடும் !

      Delete
    2. தேடும்போது எமக்கு இன்னுமொரு லார்கோவோ, கமான்சேயோ, ஷெல்ட்டனோ கிடைக்காமலா போய்விடுவார்கள், இல்லையா சார்?

      Delete
  41. சார் புதிய மொழி பெயர்ப்பு பிடித்திருந்தால் தொடரலாம். முயற்ச்சிப்போம்.லார்கோ மட்டும் இதே நடை தொடரட்டும்.

    ReplyDelete
  42. காடை சுட்டு பரிசு பெற்ற செல்வம் அபிராமிக்கு காலை வணக்கத்தோடு வாழ்த்துகளும்.!

    ReplyDelete
    Replies
    1. அதற்கு நீங்கள் ஏன் தலைகீழாக வணக்கம் போடுகிறீர்கள் ....

      Delete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 1. //– இதே ‘பன்ச்சை‘ போன வருஷத்து டெக்ஸ் கதைக்கும் எழுதி விட்டோமோ ? என்ற சந்தேகம் எழுகின்ற சமயம் இது !//
      நிதர்சனமான உண்மை. ஆனால் இது 90களிலிருந்தே நடந்து வரும் ஒன்று. உதாரணமாக, டெக்ஸ் யாரையாவது அடித்து வீழ்த்தி விட்டு, அவர்களை மறுபடியும் எழுப்பும்போது “இனிய கனவுகளை கலைத்து விட்டேனா? சாரி? என்று சொல்வதை குறைந்தது ஐந்தாறு கதைகளில் அப்போதே படித்திருக்கிறேன்.
      //லக்கி லூக்குக்கு ஏற்கனவே இதே நையாண்டி வசனத்தை வேறொரு கதையில் பிரயோகித்து விட்டோமோ? என்ற குழப்பம் எழாதில்லை !//
      இதுவுமே உண்மைதான்.
      அதே சமயம், சில அடிப்படையான மொழிபெயர்ப்பு விஷயங்களில் கோட்டை விடுவது நல்ல வேர்க்கடலையில் வரும் மொக்கை போல பல்லிளிக்கிறது. (பிரச்சினை என்ன என்றல், இவை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருவதே).

      ஆனால், Unless otherwise உங்களிடம் qualified ஆட்கள் இருந்தாலொழிய, வேறு ஒருவரிடம் மொழிபெயர்ப்பை கொடுப்பதில் எனக்கு நாட்டமில்லை. அவ்வாறு செய்து நீங்கள் வெளியிட்ட கோன் பனேகா ட்ரான்ஸ்லேட்டர் அனைத்துமே வெகு சுமார் தான்.
      Change, just for the sake of it என்பது தவறான ஒன்று தானே?
      2. //இதனை ஒரு சவாலாய் ஏற்று நாங்கள் பணியாற்றினாலும் - boredom factor உங்களுள் எட்டிப் பார்த்திடுமோ என்ற மெல்லிய கவலை எங்களுக்குள் எட்டிப் பார்ப்பது இயல்பு தானே ? //
      இந்த கேள்வியின் பின்னர் இருப்பது உண்மையெனில், it is time to move on. விருப்பம் இல்லாதஒன்றை (அயற்ச்சி, சலிப்பை கொடுப்பவை விருப்பம் இல்லாத செயல்களே) செய்வதை விட அமைதியாக இருப்பது நல்லதல்லவா?

      Delete
    2. //ஆனால், Unless otherwise உங்களிடம் qualified ஆட்கள் இருந்தாலொழிய, வேறு ஒருவரிடம் மொழிபெயர்ப்பை கொடுப்பதில் எனக்கு நாட்டமில்லை. அவ்வாறு செய்து நீங்கள் வெளியிட்ட கோன் பனேகா ட்ரான்ஸ்லேட்டர் அனைத்துமே வெகு சுமார் தான்.
      Change, just for the sake of it என்பது தவறான ஒன்று தானே?///---101% சத்தியமான வார்த்தைகள் சார் .....5க்கும் 10க்கும் புத்தகங்கள் விற்றால் எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம் சார் .....ஆனால் 5000ரூபாய் என்னைப்போல் பலர் சிரமங்களுக்கு இடையே தான் கட்டுகிறோம்....நாங்கள் குவாலிட்டி யை எதிர் பார்ப்பது நியாயமான ஒன்று தானே சார் .....நண்பர் மற்றும் மூத்த வாசகர் அருண் குறிப்பிட்ட வாரு குவாலிபைடு ஆட்கள் கிடைத்தால் இந்த முயற்சி செய்யுங்கள் சார் ....

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : //5000ரூபாய் என்னைப்போல் பலர் சிரமங்களுக்கு இடையே தான் கட்டுகிறோம்....நாங்கள் குவாலிட்டியை எதிர் பார்ப்பது நியாயமான ஒன்று தானே //

      நியாயமான எதிர்பார்ப்பே !

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் : //5000ரூபாய் என்னைப்போல் பலர் சிரமங்களுக்கு இடையே தான் கட்டுகிறோம்....நாங்கள் குவாலிட்டியை எதிர் பார்ப்பது நியாயமான ஒன்று தானே //

      +1

      Delete
  44. short and sweet or sour ?

    மொழிபெயர்ப்பு

    +1 உங்கள் மொழிபெயர்ப்பு !
    +1 புது கார்ட்டூன் தொடர்கள், கிராபிக் நாவல்கள் !
    ​ -1 சினிமா வசனங்கள் !

    -1 புது கதைத் தொடர்கள் !

    +1 மறுபதிப்பில் மாற்றமில்லா மொழிபெயர்ப்பு !
    +1 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி !

    $$ சரவணபவனையோ ; அஞ்சப்பரையோ தவிர்த்து, தெருக்கோடியிலுள்ள வீட்டு மெஸ்கள், இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே, தொடர்ந்து வருடக்கணக்கில் சாப்பிட்டாலும் நம் வயிறாருக்கும், உடலாருக்கும் - எந்தத் தீங்கும் நேராமல் இருப்பதே முதன்மையான காரணம். காரம் இன்னும் கூட்டணுமா ? குறைக்கணுமா ?“ ; “புதுசாய் ஏதேனும் ஸ்வீட் செய்யணுமா?“ என்று ஒவ்வொரு வாடிகையாளரிடமும் ஆலோசனை கேட்டால்,

    *காரம் குறைவாக வேண்டும் என்று - அல்சர் பேஷன்ட் கூறுவார் !
    *ஸ்வீட் வேண்டாம் என்று - ஷுகர் பேஷன்ட் கூறுவார் !
    *காரம் அதிகமாக வேண்டும் என்று - ஜாலிப் பேர்வழி கூறுவார் !
    *உப்பு குறைவாக வேண்டும் என்று - பி.பி பேஷன்ட் கூறுவார் !
    *விலை குறைவாக வேண்டும் என்று - சிலர் கூறுவார் !
    *இவ்வளவு வெரைட்டி எதற்கு தண்டமாக என்று இட்லிப் பிரியர் கூறுவார் !
    *இதைவிட அதிகம் வேண்டும் என்று - இன்னொமொரு வாடிக்கையாளர் கூறுவார் !

    வரவு எட்டணா... செலவு பத்தணா... கடைசியில் துந்தணா... துந்தணா.. என்று வேறு ஒரு மெஸ் அல்லது இன்டர்நெட் சாப்பாடு என்று மாறலாம். இன்று வரை, எங்களின் சுவையும், தரமும் மாறாமலிருப்பதே - எங்களின் நீடித்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது என்று - 84 வருடமாக வெற்றிகரமாக சக்கைபோடு போடும் ''இருட்டுக் கடை'' அல்வா நிர்வாகிகள் கூறுவதைப்போல் சில விஷயங்களில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதாலேயே அது நீடித்து நிலைத்து வெற்றியை ஈட்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. //இதே ‘பன்ச்சை‘ போன வருஷத்து டெக்ஸ் கதைக்கும் எழுதி விட்டோமோ ? என்ற சந்தேகம் எழுகின்ற சமயம் இது ! லக்கி லூக்குக்கு ஏற்கனவே இதே நையாண்டி வசனத்தை வேறொரு கதையில் பிரயோகித்து விட்டோமோ? என்ற குழப்பம் எழாதில்லை//

      அதனால் என்ன சார், டெக்ஸ் என்றால் இப்படி தான் வசனம் பேசுவார், இப்படி தான் பன்ச் டயலாக் பேசுவார் - அதில் ஒன்றும் தவறில்லையே !? லக்கி லூக் - கடைசியில் கதை முடியும் போது, தனிமையே என் துணைவன் என்று தான் ஒவ்வொரு கதையிலும் பாடிச் செல்வார் - அதனால் என்ன சார் !?

      ''நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி'' என்று அதையே 'பாட்ஷா' பட ரஜினி, அப்படத்தில் நூறு தடவை சொல்லவில்லையா என்ன ?! சினிமா வசனங்களை சேர்க்காமலும், கதைக் களத்திற்கு / கால கட்டத்திற்கு முரணான வசனங்களை சேர்க்காமலும் இருந்தாலே போதுமானது என்பது என் கருத்து !

      பிறகு தொடரும் ...

      Delete
    2. ////இதே ‘பன்ச்சை‘ போன வருஷத்து டெக்ஸ் கதைக்கும் எழுதி விட்டோமோ ? என்ற சந்தேகம் எழுகின்ற சமயம் இது ! லக்கி லூக்குக்கு ஏற்கனவே இதே நையாண்டி வசனத்தை வேறொரு கதையில் பிரயோகித்து விட்டோமோ? என்ற குழப்பம் எழாதில்லை//

      அதனால் என்ன சார், டெக்ஸ் என்றால் இப்படி தான் வசனம் பேசுவார், இப்படி தான் பன்ச் டயலாக் பேசுவார் - அதில் ஒன்றும் தவறில்லையே !? லக்கி லூக் - கடைசியில் கதை முடியும் போது, தனிமையே என் துணைவன் என்று தான் ஒவ்வொரு கதையிலும் பாடிச் செல்வார் - அதனால் என்ன சார் !?

      ''நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி'' என்று அதையே 'பாட்ஷா' பட ரஜினி, அப்படத்தில் நூறு தடவை சொல்லவில்லையா என்ன ?! சினிமா வசனங்களை சேர்க்காமலும், கதைக் களத்திற்கு / கால கட்டத்திற்கு முரணான வசனங்களை சேர்க்காமலும் இருந்தாலே போதுமானது என்பது என் கருத்து !//
      +1

      Delete
    3. //-1 புது கதைத் தொடர்கள் !
      +1 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி !//
      -1

      Delete
    4. //$$ சரவணபவனையோ ; அஞ்சப்பரையோ தவிர்த்து, தெருக்கோடியிலுள்ள வீட்டு மெஸ்கள், இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே, தொடர்ந்து வருடக்கணக்கில் சாப்பிட்டாலும் நம் வயிறாருக்கும், உடலாருக்கும் - எந்தத் தீங்கும் நேராமல் இருப்பதே முதன்மையான காரணம். காரம் இன்னும் கூட்டணுமா ? குறைக்கணுமா ?“ ; “புதுசாய் ஏதேனும் ஸ்வீட் செய்யணுமா?“ என்று ஒவ்வொரு வாடிகையாளரிடமும் ஆலோசனை கேட்டால்,

      *காரம் குறைவாக வேண்டும் என்று - அல்சர் பேஷன்ட் கூறுவார் !
      *ஸ்வீட் வேண்டாம் என்று - ஷுகர் பேஷன்ட் கூறுவார் !
      *காரம் அதிகமாக வேண்டும் என்று - ஜாலிப் பேர்வழி கூறுவார் !
      *உப்பு குறைவாக வேண்டும் என்று - பி.பி பேஷன்ட் கூறுவார் !
      *விலை குறைவாக வேண்டும் என்று - சிலர் கூறுவார் !
      *இவ்வளவு வெரைட்டி எதற்கு தண்டமாக என்று இட்லிப் பிரியர் கூறுவார் !
      *இதைவிட அதிகம் வேண்டும் என்று - இன்னொமொரு வாடிக்கையாளர் கூறுவார் !//
      +1

      Delete
    5. ////இதே ‘பன்ச்சை‘ போன வருஷத்து டெக்ஸ் கதைக்கும் எழுதி விட்டோமோ ? என்ற சந்தேகம் எழுகின்ற சமயம் இது ! லக்கி லூக்குக்கு ஏற்கனவே இதே நையாண்டி வசனத்தை வேறொரு கதையில் பிரயோகித்து விட்டோமோ? என்ற குழப்பம் எழாதில்லை//

      அதனால் என்ன சார், டெக்ஸ் என்றால் இப்படி தான் வசனம் பேசுவார், இப்படி தான் பன்ச் டயலாக் பேசுவார் - அதில் ஒன்றும் தவறில்லையே !? லக்கி லூக் - கடைசியில் கதை முடியும் போது, தனிமையே என் துணைவன் என்று தான் ஒவ்வொரு கதையிலும் பாடிச் செல்வார் - அதனால் என்ன சார் !?//

      +1111111

      Delete
    6. மிஸ்டர் மரமண்டை : "ஒருவாட்டி- நூறுவாட்டி" என்று தலைவர் பஞ்ச் வசனங்களைப் படம் முழுக்கப் பேசினாலும் அனல் பறக்க விசில் பறக்கும் தான் ; ஆனால் அதையே நாமும் செய்தால் சாத்தல்லவா விழும் ?!

      Delete
    7. Radja : //லக்கி லூக் - கடைசியில் கதை முடியும் போது, தனிமையே என் துணைவன் என்று தான் ஒவ்வொரு கதையிலும் பாடிச் செல்வார் - அதனால் என்ன சார் !?//

      அது template வசனம் சார் - so தொடர்வதில் பிரச்சனை இல்லை ! ஆனால் வசனங்களே template ஆகிடக் கூடாதே என்பது தான் எனது ஆதங்கமே !

      Delete
    8. மிஸ்டர் மரமண்டை.!நான் அல்சர் பேஷண்ட் ,!எனக்கு காரம் சுத்தமாக ஆகாது.!அதனால் கருத்து மோதல்கள்&விவாதங்களில் காரம் அதிகமாக இருந்தால் சூப்பராக இருக்கும்.!அதுவும் டெக்ஸ் வில்லரின் ஒக்லஹாமா கதையில், டெக்ஸ் திறமையான இருவருடன் ஒற்றை ஆளாக டூயல் சண்டை செயவதுபோல் கருத்து மோதல்கள் நடத்தால் இன்னும் சூப்பராகத்தான் இருக்கும்.!ஹீம்ம்! என்னமோ போடா மாதவா!,

      Delete
  45. டியர் எடிட்டர் புதிய மொழி பெயர்பள்ர்கள் கண்டிப்பாக தேவை புதிய கதை களுக்கு அறிமுக படுத்தலாம் .புதிய கதைகள் வேண்டும் ஒன் shotஇருந்தால் நல்லது( கிரீன் மனோர் போன்ற கதை ).Varity இருந்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. //டியர் எடிட்டர் புதிய மொழி பெயர்பள்ர்கள் கண்டிப்பாக தேவை புதிய கதை களுக்கு அறிமுக படுத்தலாம் .புதிய கதைகள் வேண்டும் ஒன் shotஇருந்தால் நல்லது( கிரீன் மனோர் போன்ற கதை ).Varity இருந்தால் நல்லது.//
      +1

      Delete
    2. kadbhdul : ஏகப்பட்டவை உண்டு தான் ; but அவற்றுள் கிரீன் மேனரை தேடிக் கொண்டே இருப்பது இயலாதே நண்பரே ! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவமாக இருக்கும் !

      Delete
  46. இந்த ஆண்டு 5,000 ரூபாய்க்கு, மேலே காமிக்ஸ் பட்ஜெட் எகிறி விட்டது. நிச்சயமாக இது வரவேற்க்கதக்க சூழல் அல்ல. இதற்கு தேவையும் இல்லை.
    ஆகவே இந்த அளவில் (48+ புத்தகங்கள்) அடுத்த ஆண்டு வேண்டவே வேண்டாம்.
    இப்போதைக்கு நமக்கு தேவை ஓரளவுக்கு ஸ்டெடியான ஒரு சந்தாதாரர் எண்ணிக்கையே. கம்பேக் ஸ்பெஷலில் இருந்து ஸ்டெடியாக புத்தகங்கள் வெளிவந்தும், ஏன் இன்னமும் ஒரு ஆயிரம் பேரை நம்மால் தொடர்ந்து தக்கவைக்க முடிவதில்லை? attrition level ஏன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது?
    ஆக, ஒரு நிலையான வருட பட்ஜெட், தெளிவான கதைகள் (இந்த விமானம் சார்ந்த கதைகள் இரண்டுமே மொக்கை). கேப்டன் டைகர் கதைகள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை (பெருங்காய வாசனைக்காக டப்பாவை வாங்குவது போலிருக்கிறது) கொண்ட 2016 is welcome.

    1/ //2016ன் அட்டவணையினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு இன்னமும் புதுஅறிமுகங்களை இணைத்திடுவது அவசியம் தானா?//
    இப்போதைக்கு தேவையில்லை. முதலில் கொஞ்சம் நிலையாக நிற்போமே?
    2. //ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா?//
    இல்லை. நிச்சயமாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //இந்த ஆண்டு 5,000 ரூபாய்க்கு, மேலே காமிக்ஸ் பட்ஜெட் எகிறி விட்டது. நிச்சயமாக இது வரவேற்க்கதக்க சூழல் அல்ல. இதற்கு தேவையும் இல்லை.//
      -1111111111

      Delete
    2. 50புத்தகங்கள் 5000பட்ஜெட் ஓகே சார் ....அதற்கு தகுந்தவாறு ஸ்பெசல் இதழ்களை அமைத்து கொள்ளலாம் சார் ...

      Delete
    3. Arun Sowmyanarayan : //இந்த ஆண்டு 5,000 ரூபாய்க்கு, மேலே காமிக்ஸ் பட்ஜெட் எகிறி விட்டது. நிச்சயமாக இது வரவேற்க்கதக்க சூழல் அல்ல. இதற்கு தேவையும் இல்லை//

      நிச்சயமாக ! "மின்னும் மரணம்" special edition ; முத்துவின் 350 ; லயனின் 250 என்ற தருணங்களும் ஒன்று சேர்ந்து கொண்டது ; மறுபதிப்புகள் துவங்கியது என நிறையவே வெவ்வேறு கிளைகள் இந்தாண்டு தற்செயலாய் ஒன்று சேர்ந்து போய் விட்டதால் தான் இந்த மெகா பட்ஜெட் ! அதனை மீண்டுமொருமுறை replicate செய்திட சத்தியமாய் உங்கள் + எங்கள் நிதிநிலைமை இடம் தராது !

      Delete
  47. டியர் எடிட்டர்,

    Coming to the subject:

    1) 45+ புத்தகங்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் - இன்னும் நான் படிக்காத இந்த வருடத்திய காமிக்ஸ்கள் 7 (மி.ம 8 பாகங்கள் தவிர). 45+ புத்தகங்கள் - மாதம் 4 வருவது ஒரு வித அலுப்பை ஏற்படுத்துகிறது.

    ஒரு அளவுகோல் வேண்டும் பட்சத்தில் (இஃது இவ்வருடம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை :-)) :

    2 * 12 கலர் = 24 issues
    2 * LMS 1 type குண்டு = 2 issues
    Limited reprints - 6 issues

    2) இவைகளுள் variety கண்டிப்பாய் வேண்டும் தான் - நாலு பேரைத் தேர்ந்தெடுத்து 4 கதைகள் வீதம் போடுவது அலுத்துவிடும்.

    Thorgal, Magic Wind, Tex, Largo, Robin, Lucky Luke, Julia, Diabolic, Martin Mysterie, Bluecoats - மற்றும் வருடத்திற்கு 1-2 புதிய அறிமுகங்கள் வைத்துக்கொண்டால் 24 இதழ்கள் கடப்பது பெரிய விஷயம் அல்ல. சீராக, நேர்த்தியாக ஒரு track உருவாக்கிக் கொண்டு செல்ல முடியும்.

    3) சந்தாத் தொகையும் மேற்கூறியவாறு செய்தால் 3000த்துக்குள் அடங்கக் கூடியதே.

    இப்போது நடப்பது என்னவெனில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வருவதால் :

    - வேண்டும் புத்தகங்களை வாங்கிக் கொள்கின்றனர்
    - வாங்காத புத்தகங்களை நண்பர்களிடமிருந்து படித்து விடுகின்றனர் - சமீபத்தில் ஒரு காமிக்ஸ் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது
    - ஒருவர் வாங்கினால் digitize செய்து நவீன போன்களிலும் கம்ப்யூட்டர்களிலும் பரவி விடுகிறது - இது இன்றைய யுகத்தின் யதார்த்தம் (அந்த காலத்தில் திரைப்படங்கள் வந்த மறுநாள் வீடியோ காசெட்கள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து ஒரிஜினல் பிரிண்ட்கள் வருவதைப் போன்றது - தவிர்க்க இயலாது) நீங்கள் என்னதான் regional ஜவாப்தாரியாக agreement போட்டாலும் digital piracy is here to stay - given our times and needs.

    4) மொழிபெயர்ப்பு பற்றி மூன்றாண்டுகளாய் நான் தனி ஆவர்த்தனம் செய்து விட்டதால் என் கருத்தை நீங்கள் அறிவீர்கள் - yes we need guided induction of fresh blood. மின்னும் மரணம் தொகுப்பில் தற்போது வழக்கத்தில் இல்லாத சில வார்த்தைகள் சிரமப்படுத்துகின்றன என்பது நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : 45+ புத்தகங்கள் என்பது நிச்சயம் ஒரு மிகப் பெரிய எண்ணிக்கை - எங்கள் தயாரிப்புத் தரப்பிலும் ! வாரம் ஒரு இதழ் என்ற பணிச் சுமையை எனது இதர வேலைகளுக்கு மத்தியில் கையாள்வதென்பது நாக்குத் தள்ளத் தான் செய்கிறது ! But இந்த 45-ல் பன்னிரண்டு மறுபதிப்புகள் காலத்தின் (விற்பனையின்) கட்டாயமாகவும் ஆகிப் போய் விட்ட சூழலில் எஞ்சி நிற்கும் 33-ல் தான் கூட்டல்- கழித்தல் சாத்தியம் !

      அதே சமயம் எங்களது நிர்வாக overheads எத்தனை சுருக்கமாக வைத்திருக்க முயன்றாலும், ஆண்டுக்கு ஆண்டு அவை உயரே உயரே செல்வதைத் தவிர்க்க இயலா சூழலில் - தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை !

      It's a case of the classic catch 16 - நிறைய தயாரிக்க நிறைய பணமும், உழைப்பும் அவசியமாகிறது ; குறைவாய் தயாரிக்கத் தீர்மானித்தால் fixed expenses ஆளைத் தின்று விடும் நிலை !

      Delete
  48. /பதில்களில் ஒரு நிதானத்தை கடைபிடியுங்கள், தனிபட்ட விருப்பு வெருப்புகளை ஒரம் கட்டுங்கள்//
    ஆசிரியரின் இந்த கருத்து, வரைமுறையில்லாமல் கருத்து பததிவிடுபவர்களுக்கு என்றும்...

    //உங்கள் டவுசர்கள் கிழிக்கபட்டாலும் கருத்துகளை பதியுங்கள் //
    ஆசிரியரின் இந்த கருத்து, வரைமுறை அற்ற கருத்தை வாசிகின்றவர்களுக்கும்...என்பதாகவே எனக்கு தோன்றியது.
    ஒரே கருத்து, படிப்பவர்களின் மனநிலையை பொறுத்து, வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ள படுகிறது. இங்கு நிலவும் வெப்ப சூழலுக்கும் அதுவே காரணம்.

    //முகமூடிகளின் பின் இருந்து ஆவர்த்தனம் நடத்துபவர்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை அளிக்கிறீர்கள் என்ற முரண் புரிபடவில்லை...//
    //வெறும் 500 கமெண்ட் ஹிட்டிற்காக இவர்களுக்கு தூபம் போட்டு ஏன் வளர்க்க வேண்டும்....//
    //கமெண்டுகளால் மூலம் மற்றவர்களை இங்கு எட்டி கூட பார்க்க முடியாத அளவு பக்கங்களை ஆக்கிரமிக்கும் நபர்களுக்கு எப்போது தான் நீங்கள் கடிவாளம் போட போகிறீர்கள்...//
    இதற்கெல்லாம் கட்டுப்பாடு என்பது சாத்தியமில்லாதது...ஏனெனில் உண்மையான கட்டுப்பாடு கருத்தை பதிவு செய்பவர்களின் கரங்களில் தான் உள்ளது. இதற்காக ஆசிரியரை நொந்து கொள்வது அவசியமில்லாதது...

    ஆசிரியரின் தற்போதைய நிலைமை, பள்ளிக்கூடம் வாத்தியார் கணக்காலே இருக்கு, மாணவர்களை அடித்தாலும் குற்றம், ஆடிக்கவில்லை என்றாலும் குற்றம்...

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : ஒரு சின்ன வட்டத்தினுள் சுற்றி வரும் காமிக்ஸ் ரசனைகளின் மத்தியில் ஏராளமான பார்வைக் கோணங்கள் நிலவுவதே இந்தத் துறையின் ஒரு ஸ்பெஷல் அம்சம் ! ஒவ்வொருவருக்கும் அவரது தனிப்பட்ட அணுகுமுறை ; அது தொடர்பான கருத்து என்றிருப்பது இயல்பு தானே ! முடிந்தளவுக்கு அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் பணியின் மிகப் பெரிய சுவாரஸ்யம் !

      Delete
  49. @Vijayan Sir,

    Couldn't spend time to read entire post easily as it is too lengthy for what it actually conveys / wants. These days the same happens to the Hot Line / Editorial pages too. As a long term reader, I feel it is time to reduce the size of Hot Lines to single page - and make it understandable by everyone including new readers and those who are not so familiar with comics blogs and culture. Saying this because Hot Line page served in the past a bridge between new readers and comics / story of that month. But now it feels like someone speaking to 3rd person through editorial.

    By the way these days I skip the hotlines after reading 1-2 paragraphs and jump into story - at the same time with a feel of missing some points from editorial. The problem is not with my reading habits but just the editorial page these days missing the obvious. Just my 2 cents.

    ReplyDelete
    Replies
    1. *** Couldn't spend time to read entire post easily as it is too lengthy for what it actually conveys / wants. These days the same happens to the Hot Line / Editorial pages too. ***

      *** The problem is not with my reading habits but just the editorial page these days missing the obvious. ***

      +1

      Delete
    2. Ramesh Kumar : அளவுக்கு மீறும் எதுவுமே ரசனைகளை வருடவதில்லை என்பது தான் எனது இந்தப் பதிவின் முதுகெலும்பே ! ஹாட்லைனில் உங்களுக்குத் தோன்றிடும் வேறுபாடும் இதன் ஒரு கிளைப்பிரச்சனை தான் !

      1.முன்பெல்லாம் மாதம் ஒருமுறை எழுதும் போது ஒரு மொத்தமாக சொல்ல வந்ததை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இருந்தன !

      2.வெளியீடுகளின் எண்ணிக்கைகளும் குறைவாக இருந்ததனால் சொல்ல வேண்டிய விஷயங்களை ஒரு பக்கத்துக்குள் அடக்கிட சாத்தியமானது !

      3.வாசகர்களை சந்திக்க அன்றைக்கு அந்த ஹாட்லைன் பக்கத்தைத் தாண்டி வேறு பாதைகள் இருந்திருக்கவில்லை. ஒரு channel ; ஒரே சேதித் தொகுப்பு என்பது அன்றைக்கு முடிந்தது !

      இன்றைய நிலைமை அவ்விதமல்ல தானே ? வாரம்தோறும் இங்கே பதிவுகளைப் படித்து நமது updates தெரிந்துள்ளதொரு வாசக வட்டம் + இணையம் பக்கமாய் வரவே செய்திடாத ஒரு வாசக வட்டம் என இரு clearly marked பிரிவுகள் உள்ளன எனும் போது அவை இரண்டையும் நான் address செய்திட முனையும் போது இது போன்ற சிக்கல்கள் தலை காட்டுவது இயல்பல்லவா ?

      Delete
    3. Ramesh Kumar - log time no writing? good to see you, share your thoughts often !

      Delete
  50. Vijayan sir,

    As long as books are flowing every month I am happy.

    One Point i want to underline is, series like thorgal, magic wind, comanche should be finished ASAP like Bouncer, 2-3 stories in single issue and 3 issue per year. one shot stories like tex, lucky luke, chick bill etc can be published leisurely. Please take this point into consideration.

    Thanks & Regards.
    S.Mahesh

    ReplyDelete
    Replies
    1. Mahesh : (முதல் சுற்றில்) ஏழே கதைகள் கொண்ட பௌன்சரை ஒரே ஆண்டில் முடிப்பது சாத்தியமாகலாம் ; ஆனால் 132 கதைகள் கொண்ட மேஜிக் விண்டை அவ்விதம் கையாளல் இயலாதே ? தோர்களிலும் 34 கதைகள் உள்ளன & அதுவொரு தொடர்ந்திடும் தொடரே !

      Delete
  51. திரு விஜயன் & நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்..!

    //நமது மொழிபெயர்ப்பு இலாக்காவின் துவாரபாலகர்களாய் நானும், திரு. கருணையானந்தம் அவர்களுமே தொடரும் இந்த நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகவேணும் ஒரு மாற்றம் கொணர்வது அவசியமாகாதா ?//

    * ஆம்..! ஆனால் சோதனை ஓட்டமாக....புதியநாயகர்களை புதியவர்களிடம் மொழிபெயர்ப்பு செய்யதரலாம்.

    //எத்தனை காலம் தான் எங்கள் இருவருக்கும் இந்தப் பணிகளை துடிப்போடு செயல்படுத்திடும் ஆற்றல் தொடரும் ? வெவ்வேறு விதங்களில் இது தான் ஆண்டாண்டு காலமாக எங்கள் பிழைப்புகளே என்றாலும் – இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பது தானே யதார்த்தம் ? //

    * 'பிழைப்புக்காக' என்னும்போது இது இத்தனை ஆண்டாண்டு காலம் தொடர்ந்திருக்காது என்பது..நீங்கள் சொல்லும் யதார்த்தத்தையும் விட பெரியது. (நாம் தான் தொடர்ந்து பெட்ரோல் போடுறோமே..!பொழுதுபுலர்ந்தால் புதிதாய் பிறந்தமனதுக்கு சொந்தக்காரர் தானே ஸார் நீங்கள்..!)

    //பழமையைத் தழுவுவதைத் தாரக மந்திரமாய் கொண்டுள்ள நம் நண்பர்களை – மொழிபெயர்ப்பு இலாக்காவினுள் இள ரத்தம் / புது ரத்தத்தைப் புகுத்துவது தொடர்பான இந்த மாற்றத்துக்கு மகிழ்ச்சியோடு உடன்படச் செய்யவது எப்படியோ?//

    * இந்த இள ரத்தத்தின் பெயர்கள் தெரிந்தபின்...அவர்களின் ரசனையை அளக்கும் அரசியல் யோசித்தாலே தலைசுற்றுகிறது..!

    //ஒவ்வொரு “டிராகன் நகர“ மறுபதிப்பின் நேரத்திற்கும் – அந்த 655+ புதுக் கதைகளின் தொகுப்புக்குள் எத்தனை எத்தனை “டைனோசர் நகரங்களும்“ "கார்சனின் நடந்த காலங்களும் " காத்துள்ளனவோ என்பது போலவே – எழுத்தாற்றலோடு இன்னும் எத்தனை எத்தனை திறமைசாலிகள் காத்துள்ளனரோ ?//

    * உண்மை..! பல வித்தியாசமான களம்,கதை,கோணம்,ஓவியம் என டெக்ஸ் வில்லரின் சாகசங்கள் பட்டையை கிளப்பும் ரகத்தில் கொட்டிக்கிடக்கின்றன..! டெக்ஸ் கதைகள் மட்டுமே வருடம் 12 இதழ்கள் போட்டாலே இன்னும் ஐம்பது வருடங்களுக்கு தொடரலாம் என்னும்போது...நாம் சந்திக்கவேண்டிய திறமைசாலிகளின் படைப்பின் அணிவகுப்பை பற்றி சொல்லவேண்டுமா என்ன..!

    எந்த மாற்றம் செய்யலாம் என்ற கேள்விக்கு எனது பதில் பெரிய ஆச்சரியகுறி..! மாற்றத்திற்குள் தான் இருக்கிறோம்.. மீண்டும் எதை மாற்றவேண்டும்..! (முத்து 350 அட்டைபடத்தில் உள்ள செரிப்&கிட் ஆர்ட்டின் முகபாவ படங்கள் நான்கு)

    * 2016-ன் பட்டியலில் எவைவந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் பற்றிய சகநண்பர்களின் கருத்துகள் முன், அவர்கள் கூறுவதை தாண்டி எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை..! ஏனெனில் வந்தவைகளை வரவேற்று கொண்டாடும் நிகழ்காலம் தாண்டி..எவைகள் வந்தால் நன்றாக இருக்கும் என்ற கனவுக்கு மனம் ஏங்கமறுக்கிறது..!

    * 100 இதழ் எத்தனை பக்கங்கள் என்ற கேள்விக்கு பதிலை சரிபார்த்து சொல்முயற்சிக்கிறேனே..!

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva & friends : இங்கே நான் சொல்ல வந்தது வேறு - ஆனால் அடியேனின் கம்பியூட்டர் ஞானக் குறைபாடு தெரிவித்த சேதி வேறு.

      மாற்றங்கள் என எழுதி - அதன் நேராய் ஒரு பெட்டியைப் போட்டு அதனுள் ஒரு 'டிக் ' போட வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் டப்பாவைப் போட்ட பின்னே, அதனுள் டிக் போட எனக்குத் தெரியவில்லை ! So அவை எல்லாமே காலியாக நிற்பதன் மூலம் உங்களிடம் அது தொடர்பாய் நான் கேள்வி கேட்பது போலொரு தோற்றம் தருகிறது ! சாரி guys

      சைஸ்களில் ; விலைகளில் ; வண்ணங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யும் அபிப்பிராயமே இல்லை நமக்கு !

      Delete
    2. வாங்க..படிக்க...சேகரிக்க...வரிசையாக அடுக்கிவைக்க...அதை அழகு பார்க்க என கனகச்சிதமாய் உள்ளவிஷயங்களை அப்படியே தொடரும் எண்ணத்தை தெளிவுபடுத்திய..."சைஸ்களில் ; விலைகளில் ; வண்ணங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யும் அபிப்பிராயமே இல்லை நமக்கு !" என்ற பதிலுக்கு 350 (like படங்கள்) லைக்குகள்..!

      Delete
  52. // ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? //
    மிக்க மகிழ்ச்சி அய்யா நான் இதை முழு மனதோடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  53. //2016ன் அட்டவணையினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு இன்னமும் புதுஅறிமுகங்களை இணைத்திடுவது அவசியம் தானா?//
    இப்போதைக்கு அதற்கான அவசியம் இல்லை என்பது எனது கருத்தாகும்,ஏற்கனவே ரேசன் கடையில் நிற்கும் வரிசை கணக்காக நிறையப்பேர்கள் காத்துள்ளனர்,அவர்களுக்கு ஸ்லாட் ஒதுக்குவதே முழிபிதுங்கும் விஷயம்.
    படிப்படியாக புது முகங்களை இணைத்துக் கொள்ளலாமே.

    ReplyDelete
  54. போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் செல்வம் அபிராமிக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
    ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கு ஸ்டால் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம் ஆசிரியரே.

    ReplyDelete
  55. Vijayan sir,

    It cant be completed in a year, atleast 2-3 stories in a issue and 3 issues per year makes reading pleasant and can follow the plot without any problem.

    ReplyDelete
  56. // ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா? //
    களத்தில் ஆட்கள் நிறையபேர் வரிசை கட்டி நிற்கும்போது நீங்களும் வேறு என்னதான் செய்ய முடியும், இதற்கு இரண்டு வழிகள் உண்டு,
    1.முடிந்தவரை கதைகளுக்கான இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம்,
    2. தொடர்ச்சியாக அந்த கதைகளை வெளியிட்டு விடலாம்.
    விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும் பொழுது இதுபோன்ற சிக்கல்கள் எழுவது இயல்பே.

    ReplyDelete
  57. // ஆரம்பம் முதலே கல்யாணப் பந்தி போல ஏகப்பட்ட பதார்த்தங்களோடே நமது இலைகள் இருப்பது பழகியான நிலையில் – variety ஆக ருசி மட்டும் பார்ப்பதை விட – குறைச்ச ரகங்களை ஒரு கட்டு கட்டுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாயிருக்கும்?//
    ஒரு மாற்றத்திற்காக ஒரே ஒரு ஆண்டு தேர்தெடுத்த ரக கதைகளை கொண்டு அப்படி ஓர் முயற்சியை தாரளமாக மேற்கொள்ளலாமே.

    ReplyDelete
  58. // கேள்வி # 1: நமது மொழிபெயர்ப்பு இலாக்காவின் துவாரபாலகர்களாய் நானும், திரு. கருணையானந்தம் அவர்களுமே தொடரும் இந்த நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகவேணும் ஒரு மாற்றம் கொணர்வது அவசியமாகாதா ? //
    ஏன் இந்த கேள்வி?
    இப்போதைக்கு அதற்கான அவசியம் எந்த வகையிலும் எழவில்லை ஆசிரியரே,மாற்றம் எப்பொழுது தேவையோ அதை காலம் தானாகவே தீர்மானிக்கும்.

    ReplyDelete
  59. // கேள்வி # 2: இதே சங்கதி – மறுபக்கத்திற்கும் பொருந்தும் தானே? எத்தனை காலம் தான் எங்கள் இருவருக்கும் இந்தப் பணிகளை துடிப்போடு செயல்படுத்திடும் ஆற்றல் தொடரும் ? வெவ்வேறு விதங்களில் இது தான் ஆண்டாண்டு காலமாக எங்கள் பிழைப்புகளே என்றாலும் – இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பது தானே யதார்த்தம் ? //
    மேற்கூரிய கேள்வி எண் ஒன்றிற்கான பதிலே இதற்கும், கூடவே,பழசு ஆனா பயனுள்ளது என்ற வசனத்தையும் சேர்த்து கொள்ளவும்.(உபயம்) -டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.

    ReplyDelete
  60. // கேள்வி # 3: “மாற்றங்கள் மட்டுமே மாற்றமில்லாதவை !“ blah blah blah என்று நான் பிளேடு போடும் அவசியமேது ? – அது தான் நாம் அனைவரும் காலம் காலமாய் கேட்டுப் பழகிப் போன cliché ஆயிற்றே ? //
    காலம் காலமாய் கேட்டுருந்தாலும், பழமையை போற்றி பாராட்டுவோம், புதுமையை சரியான நேரத்தில் ஊக்குவிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //காலம் காலமாய் கேட்டுருந்தாலும், பழமையை போற்றி பாராட்டுவோம், புதுமையை சரியான நேரத்தில் ஊக்குவிப்போம்.//

      :-)

      Delete
  61. //கொஞ்சம் கொஞ்சமாகவாவது புது வரவுகளை இந்த இலாக்காவினுள் நுழைக்கும் முயற்சிக்கு ஒரு பிள்ளையார் சுழி போடும் தருணம் தான் எதுவாக இருக்குமோ ? //

    மொழிபெயர்ப்பில் புது முயற்சிகள் தேவை.

    //மாற்றமே வேண்டாமென்று நம் ரசனைகளின் சாளரங்களை குறுக்கிக் கொள்வதை விடப் புதுக் காற்றும், புது ஒளியும் உட்புக வாய்ப்பிருப்பின் வரவேற்கும் mindset கொள்ள முயற்சிப்பது தவறில்லை தானே ?//

    தவறில்லை எடிட்

    //2016ன் அட்டவணையினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு இன்னமும் புதுஅறிமுகங்களை இணைத்திடுவது அவசியம் தானா?//

    புதுஅறிமுகங்கள் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பான one shot(தொகுப்பு) கதைகள் தேவை எடிட்.

    // ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா?//

    பென்சர்ஐ நீங்கள் கையாண்டது போல ஒருவருடத்தில் ஒரு முழு தொடர் என்ற முயற்சி மீண்டும் தேவை, ஒரு முழு தொடரையும் படிக்கும் திருப்தி கிடைகிறது. நமது ஆதர்ச நாயகர்களுக்கு 1 slot 2 slot ருசியை திகட்டாது வைக்கும்.


    // variety ஆக ருசி மட்டும் பார்ப்பதை விட – குறைச்ச ரகங்களை ஒரு கட்டு கட்டுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாயிருக்கும்?//
    variety ஐ விட(அனைத்தும் ஒரு தொடராக இருந்தாலும்) தரமான கதைகள்மட்டுமே சோபிக்கும்.

    //For instance – ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்?//

    I am Fine with this idea , வரும் அனைத்தும் தரமானதாக இருந்தால் அது வருடம் 16 கதை, அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை எனும்போது எனக்கு சம்மதமே எடிட் சார்.

    ReplyDelete
  62. சார், மாறிப்போன மாப்பிள்ளை அட்டைப்படம் சரியாக 'செட்' ஆகாதமாதிரி ஓர் எண்ணம் எனக்குள். பின்னணி வர்ணம் காரணமா இருக்குமோ தெரியவில்லை. இல்லை, எனக்குமட்டும்தான் அப்படித் தெரிகிறதா? (டைட்டிலிலும் மாப்பிள்ளை மாறியதற்குரிய துள்ளல் டிசைன் மிஸ்ஸிங் சார் - மிஸ்டர். பொன்னன் விடுமுறைக்கு வெளியூர் போய்விட்டாரோ?)

    ReplyDelete
  63. விஜயன் சார்,
    magic wind - தற்போது வரும் கௌபாய் கதைகளில் வித்தியாசமானது, எனவே இது தொடர்ந்து வரவேண்டும்! முடிந்தால் இதன் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம்.

    கருப்பு வெள்ளை மறுபதிப்பு குறைந்தது வருடம் 12 வேண்டும், முடிந்தால் இதன் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம்.

    விரைவில் முடியும் சில தொடர்களை (ஷெல்டன், லார்கோ) அடுத்த வருடத்திற்குள் முடித்து விட்டு புதிய தொடர்களை தொடர்வது நலம்.

    XII - நன்றாக இல்லை, இதற்கு என்று ஒரு ஸ்லாட் ஒதுக்குவதற்கு பதில், புதிய தொடரை வெளி இடலாம்.

    விடுதலையே உன் விலை என்ன போன்ற கதைகளை வரும் வருடம்களில் தவிர்ப்பது நன்று.

    ReplyDelete
    Replies
    1. //magic wind - தற்போது வரும் கௌபாய் கதைகளில் வித்தியாசமானது, எனவே இது தொடர்ந்து வரவேண்டும்! முடிந்தால் இதன் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம்.//
      +++1000

      மேஜிக் வின்ட் கதைகள், ப்ளூகோட் பட்டாள கதைகளைவிடவும் சட்டென்று வாசித்து முடிந்துவிடுகின்றன. எனவே, இரண்டு கதைகளை ஒன்றாக்கி, ஒரே இதழில் வெயிடாமே சார்? அதற்கு ஏதும் வாய்ப்பிருக்கிறதா?

      Delete
    2. //விடுதலையே உன் விலை என்ன போன்ற கதைகளை வரும் வருடம்களில் தவிர்ப்பது நன்று.//

      விடுதலையே உன் விலை என்ன-இன் மொழி பெயர்ப்பு யாருடையது Edit sir?

      Delete
  64. Dear Edi,
    பின்னூட்டங்கள் 500 வருவதைவிட, உங்கள் பதிவுகளும் பதில்களும் வாசிப்போர் மனதில் சரியாகப் பதிந்திட்டால், அதுவே இந்த ப்ளாக்கின் 'ஹிட்' சார். எண்ணிக்கையை கணக்கில் எடுக்காதீர்கள் ப்ளீஸ்!

    ReplyDelete
  65. // For instance – ஆண்டுக்கு 4 லக்கி லூக்; 4 சிக் பில்; 4 மேஜிக் விண்ட்; 4 ரிப்போர்டர் ஜானி என்ற ரீதியில் நம் அட்டவணைகள் இருந்தால் உங்களின் reactions எவ்விதமிருக்கும்? //

    நாலு மேஜிக் விண்ட் தாங்காது.
    மற்றவை சூப்பர். கூடவே நாலு புளுகோட்ஸ் ரெண்டு ரின்டின் கேன் சேத்திட்டா சூப்பரோ சூப்பர். .!

    ReplyDelete
  66. Fleetway புத்தகத்தை சுட்டு வீழ்த்திய செல்வம் அபிராமி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  67. //selvan abirami :
    "லாரன்ஸ் : டேவிட் ! ஏன் மேலே பாத்து சுட்டே ?? வார்னிங் ஷாட்டா ?

    டேவிட் :நோ ! லஞ்ச் ஷாட். . இரண்டு பேர்ட்டயும் காசில்லை .....இப்ப சுட்ட காடையைத்தான் ரோஸ்ட் பண்ணி மத்தியானம் சாப்பிடனும் ...."//

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  68. வாழ்த்துக்கள் selvan abirami !

    :)

    ReplyDelete
  69. 'மொழிபெயர்ப்பில்' மாற்றம் அவசியம் வேண்டும். அதை யார் செய்கிறார் செய்யப்போகிறார் என்பது அவசியம் இல்லை என்று படுகிறது. நீங்களே கூட உங்கள் மொழிநடையில் சிறிது மாற்றத்தை கொண்டு வரலாமே சார்..

    என்னைப்பொறுத்த வரை டெக்ஸுக்கு உங்கள் மொழிநடை கச்சிதம். டயலான் டாக்கும் அப்படியே..

    லார்கோ போன்ற தற்கால கதைகளில் நடைமுறையில் இல்லாத சில வார்த்தை பிரயோகங்கள் பொருந்தவில்லை. அவ்வளவே..

    ReplyDelete
  70. 2016ன் அட்டவணையினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு இன்னமும் புதுஅறிமுகங்களை இணைத்திடுவது அவசியம் தானா?

    இப்போதைக்கு அவசியம் இல்லை. கைவசம் வெளியிட இருக்கும் கதைகளிலேயே நிறைய variety இருக்கிறது.

    §  ஆண்டில் 1 slot – 2 slot என்ற ரீதியில் பல தொடர்கள் கையாளப்படுவது உங்களுக்கு ஓ.கே. தானா?

    ஒன்றும் பிரச்சினை இல்லை. பெரும்பாலான தொடர்கள் பிரெஞ்சிலும் இத்தாலியிலும் வருடத்திற்கு 1, 2 என்றுதானே வந்து கொண்டுள்ளன.

    ReplyDelete
  71. எடிட்டர் சார்,

    போனவருசம் ஒரு பதிவில்., ரின்டின் பற்றிய தகவல் அளித்த போது.,
    2015 ல் ரின்டின் கதைகள் ஒன்று நிச்சயம் ரெண்டு லட்சியம் என்று வாக்களித்து இருந்தீர்கள்.
    ஆனால் இந்த வருடம் வாய்ப்பில்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த வருடமாவது வாய்ப்பு கிடைக்குமா சார்?

    ReplyDelete
  72. // ஆரம்பம் முதலே கல்யாணப் பந்தி போல ஏகப்பட்ட பதார்த்தங்களோடே நமது இலைகள் இருப்பது பழகியான நிலையில் – variety ஆக ருசி மட்டும் பார்ப்பதை விட – குறைச்ச ரகங்களை ஒரு கட்டு கட்டுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாயிருக்கும்?///

    ருசி கண்டு பழகிவிட்ட பதார்த்தங்களையும் விடமுடியவில்லை.

    வெரைட்டியாக நிறைய புதிய பதார்த்தங்களின் மீதானை மோகத்தையும் தவிர்க்க முடியவில்லை.

    மொத்தத்தில் நமக்கு முக்கியம் பந்தி மட்டுமே!! !

    ReplyDelete