Saturday, July 04, 2015

படப் பொட்டி வந்திடுச்சு.....!!

நண்பர்களே,

வணக்கம். வெளியீட்டு நம்பர்களோடு மௌனமாய் நாம் நடத்தி வந்ததொரு சடுகுடு ஆட்டத்துக்கு ஒரு வழியாய் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் புலர்ந்து விட்டடது !  இன்றைய காலைப் பொழுதினில் கூரியர் நண்பர்கள் உங்கள் கதவுகளைத் தட்டி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா சைசிலானதொரு பார்சலை ஒப்படைப்பார்கள் -THE LION 250 இதழோடு !! நிஜத்தைச் சொல்வதானால் ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய இதழிது ! ஆனால் தளபதியின் "மின்னும் மரணம்" மெகா இதழை முடித்த கையோடு இந்த 680 பக்க இதழின் பணிகளையும் நடத்தி முடிப்பது next to impossible என்பதால் இந்த வெளியீட்டின் தேதியைப் பின்னே தள்ளிட அவசியமானது ! ஒன்றரை மாதங்களாய் முத்து காமிக்ஸ் மட்டுமே என்று ஒப்பேற்றியதன் பலனாய் அங்கேயும் இதழ் # 350 எனும் மைல்கல்லைத் தொட்டிடும் தருணம் தயாராகி விட்டதால் - இதற்கும் மேலாய் இதழைக் களமிறக்காது இம்மி கூட நகர முடியாது என்ற சூழல் ! So here comes TEX ! ஏற்கனவே கதைகளின் preview  / டிரைலர் என்று வாரங்கள் மூன்றை பில்டப்பிலேயே ஒப்பேற்றி விட்டதால் இனியும் பீடிகைகளில் பொழுதைக் கழிக்காது - இதோ இந்த மைல்கல் இதழின் அட்டைப்பட முதல் பார்வைக்குள் புகுந்திடுவோமே ! 

ஏற்கனவே நான் சொல்லியிருந்தபடி - இது நமது ஓவியர் + டிசைனரின் கூட்டணியில் தயாரான ராப்பர் ! வழக்கமான பாணியில் கதையின் பெயரை முன்னட்டையில் பெரிதாகப் போடுவதற்கு இந்த டிசைனின் அமைப்பு இடம் தரவில்லை என்பதாலும், மாமூலான லுக்கிலிருந்து சற்றே வேறுபாடு காட்டுவோமே என்ற நம் டிசைனரின் அவாவினாலும் "THE LION 250" என்ற பெயர்பலகை மத்தியில் இடம்பிடிக்கிறது ! அது மட்டுமன்றி டெக்சின் இந்த போஸ் நடுநாயகமாய் இடத்தை ஆக்கிரமிப்பதால் எழுத்துக்களை எப்போதும் போல place செய்வது ரொம்பவே cumbersome ஆக இருந்தது ! So - ஒரு வீடியோ கேசட்டின் அட்டை பாணியில் இந்த ராப்பர் வித்தியாசமாய் அமையட்டுமே என்று தீர்மானித்தோம் ! டெக்சின் அட்டைகளுக்கு ஏதோவொரு ஒரிஜினல் மாதிரியினைக் கொண்டு தோசை சுடுவதே எப்போதுமே நம் வழக்கம் என்பதால் அதனை இம்முறையும் கடைபிடித்துள்ளோம். சமீப சமயங்களில் டெக்சின் முகத்தை தோரணையாய் அமைத்திடுவதில் நம் ஓவியருக்கு வெற்றி கிட்டிய ஓவியம் இதுவென்று எங்களுக்குத் தோன்றியது ! பின்னணி வர்ண சேர்க்கைகளை விதம் விதமாய் முயற்சித்துப் பார்த்து - இறுதியில் பச்சையில் freeze ஆனோம் ! இதோ அதற்கு முன்பான ஒரு சில முயற்சிகள் : 

பணிகளின் துவக்கங்களின் போது - மி.மி. பாணியில் ஒரு ராப்பரையும் நமது டிசைனர் கண்ணில் காட்டி - இதைப் போல அமைப்போமா ? என்ற கேள்வியை முன்வைக்க - 'ஊஹூம்' என்று நான் மறுப்புச் சொல்லி விட்டேன் ! டெக்சுக்கு எப்போதும் போலவே கலர்புல் பாணியில் ராப்பர்களை உருவாக்குவது தான் 655 இதழ்களாகியும் போனெல்லியே கடைப்பிடிக்கும் பாணி எனும் போது அதனில் நாம் உல்டா வேலைகள் செய்திட வேண்டாம் என்று நினைத்தேன் ! தவிர, மனுஷன் அதன் பின்னணிக்குத் தேர்வு செய்திருந்தது மார்ஷல் டைகரின் கதையிலிருந்து ஒரு சித்திரம் ! "வில்லங்கத்தை வீடு தேடி வரவைக்கும் வேலைகள் வேண்டாம் சாமி !" என்று நான் reject முத்திரை குத்திய டிசைன் இதுவே ! 
பச்சைப் பின்னணியோடு டிசைன் தயாராகி அச்சும் முடிந்த பின்னே  (இப்போது நமக்குப் பழகி விட்ட) நகாசு வேலைகள் என்று மூன்று வெவ்வேறு process களைச் செய்து முடித்தான பின்னே 'தல' மிடுக்காய்க் கட்சி தருவதாய் எங்களுக்குப் பட்டது ! Of course எந்தக் காக்கைக்கு ....சாரி..சாரி...எந்தக் கழுகுக்குத் தன் இரவுக் கழுகு பொன் கழுகாய்த் தெரியாது போய் விடப் போகிறது ?! So இந்த அட்டைப்படத்தின் நிஜமான ஜட்ஜ்கள் நீங்களாகத் தானிருக்க முடியும் ! இத்தாலியில், போனெல்லியில் அமர்ந்திருக்கும் டெக்சின் முழுக் குழுவிற்கும் இது "பிரமாதம் !' என்று பட்டிருக்கிறது ; but உங்கள் தீர்ப்பு தானே நமக்குப் பிரதானம் ? Fingers crossed for your reactions on this !! 

இதழுக்குள் நுழைந்திடும் போது வழக்கமான எனது "வெப்பக்கோடு" 3 பக்கங்களின் ஆக்கிரமிப்போடு உங்களை வரவேற்றிடும் ! தொடர்வது 'தல'யின் 340 பக்க சாகசம் ஒரிஜினல் ராப்பரோடு ! And அதன் பின்னே 110 பக்கக் கதை + 220 பக்கக் கதை - ஒவ்வொரு ஒரிஜினல் ராப்பரோடு ! மூன்று கதைகளுக்குமே கதைகள் + ஓவியங்களின் பாணிகள் முற்றிலும் மாறுபட்டவை என்பதால்  இதழின் முழுமைக்கும் ஒரு fresh feel தொடர்ந்திடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! வழக்கமான hardcover பைண்டிங்கில் முழு வண்ணத்தில் வந்திருக்கும் இந்த இதழுக்கு உங்களின் முதல் அபிப்பிராயங்கள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தினில் தான் இந்த வாரயிறுதி பயணிக்கக் காத்துள்ளது எங்களுக்கு ! சென்ற ஞாயிறுக்கு ஊர்சுற்றலைத் துவக்கியவன் எங்கெங்கோ பயணமாகிய பின்னே, ஏழுமலையானை தரிசிக்கச் சென்ற கையோடு இன்று அதிகாலை தான் வீடு திரும்பி finished book-ஐ பார்த்திடுகிறேன் ! எனக்குக் கிடைத்த 'ஜிவ்' feel உங்களுக்கும் கிடைத்தால் - கடந்த 60 நாட்களின் முயற்சிகள் வீண் போயிராது!F-C again ....big time !! 

இதழின் பின்னே அடுத்த மாத இதழ்களின் விளம்பரத்தினில் CCC -ன் புக் # 4-ன் விளம்பரமும் உள்ளது ! ஏற்கனவே நம் அட்டவணையினில் உள்ள சிக் பில்லின் "மாறிப் போன மாப்பிள்ளை" தான் அது ! "ஒரு கார்ட்டூன் landmark இதழினில் லக்கி லூக்கோ ; சிக் பில்லோ இடம்பிடிக்கவில்லையா ??" என்ற சில நண்பர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்லாது விட்டதன் காரணம் இதுவே ! புதியதொரு கார்ட்டூன் கதைக்கான உரிமைகள் கிடைத்து, அதன் பணிகள் ஒரு பக்கம் நடந்தேறி வந்தாலும் - அதனை உள்ளே நுழைப்பதன் மூலம் 2015-ன் அட்டவணையில் நிறையவே மாற்றங்கள் செய்திடல் அவசியமாகிப் போய் விடும் என்பதால்  புது கார்ட்டூன் வரவைப் புத்தாண்டுக்கு வைத்துக் கொள்வோமென்று தீர்மானித்தோம் ! ஏற்கனவே நம் schedule -ல் உள்ள "விடிய விடிய விஞ்ஞானி" + "மாறிப் போன மாப்பிள்ளை" கதைகளை CCC-ன் குடைக்குள் கொண்டு வருவதன் மூலம் SMURFS + CLIFTON கதைகள் மட்டுமே இடைச் செருகல்களாய் இருந்திடும் ! இவற்றிற்குப் பதிலாய் 2016-க்கு postpone  ஆகிடும் கதை எதுவென்று சீக்கிரமே அறிவிப்பேன் - டின் வாங்க முதுகில் உரமேற்றிக் கொண்ட கையோடு ! 

அதே போல இன்னொரு தவிர்க்க இயலா மாற்றம் பற்றிய சேதி ! 2015-க்கு நாம் அறிவித்திருந்த  "ஒற்றை நொடி-ஒன்பது தோட்டா " இரண்டே ஆல்பங்களில் முடிவு பெறுவதாய் ஆரம்பத் திட்டமிடல்கள் இருந்தன படைப்பாளிகளின் தரப்பினில் ! So 2015 டிசெம்பரில் அதன் முதல் பாகத்தையும், ஜனவரி 2016-ல் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டால் சிக்கலின்றி கதைக்கு சுபம் போட்டது போலிருக்கும் என்று நான் எண்ணியிருந்தேன்.  ஆனால் முதல் ஆல்பம் பெற்ற சூப்பர் வரவேற்பின் காரணமாய் அதனை 4 கதைகள் கொண்ட cycle-ஆக படைப்பாளிகள் உருமாற்றம் செய்திட இப்போது தீர்மானித்துள்ளனர் ! So குறைந்த பட்சம் இன்னமும் 1.5 ஆண்டுகள் ஓடக் காத்திருக்கும் அந்தத் தொடரின் முதல் இதழை மட்டும் இந்தாண்டில் வெளியிட்டு சொதப்ப வேண்டாமே என்ற எண்ணத்தில் அதனை skip செய்யவிருக்கிறோம் இந்தாண்டினில் ! அதனிடத்தில் 2014-ன் ஹிட் இதழ்களுள் ஒன்றான "வானமே எங்கள் வீதியின்" ஆல்பம் # 3 வரக் காத்துள்ளது ! இந்தத் தொடரின் வெற்றியும் கூட "இதனை நீட்டிப்போமே" என்ற சிந்தனையைத் தந்துள்ளது - படைப்பாளிகளுக்கு ! So முதல் சுற்றின் முடிவு தான் இந்த ஆல்பம் # 3 என்ற கையோடு  நிறைவு செய்துள்ளனர் - நீட்டிப்புக்கு வாசலைத் திறந்து வைத்த வண்ணம் ! 

புறப்படும் முன்பாய் சின்னதாய் சில practical updates : சென்ற வாரம் நம் front office-ல் பணியாற்றிய ஸ்டெல்லா மேரி விடைபெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன்......தொடர்ந்த மூன்றே நாட்களில் அவருடன் பணியாற்றிய Ms.துர்காவிற்கும் திருமணம் நிச்சயம் ஆகி விட்டதால் - திடுமென அவரும் கிளம்பி விட்டார் ! So நம் பணியினில் ஒரே வார அனுபவம் கொண்ட வாசுகி + ஒரே நாள் அனுபவம் கொண்ட யோகிதாவும் தான் இனி உங்கள் அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடுவார்கள் ! இரண்டு பக்கமும் புது batswomen என்பதால் உங்களின் கூக்ளிகளை சமாளிக்க அவர்களுக்கு சற்றே அவகாசம் பிடிக்கலாம் ; so உங்களின் புரிதலுக்கு முன்கூட்டிய நன்றிகள் ! Of course அவர்கள் பணியினைப் படிக்கும் வரை உங்கள் ஆர்டர்களுக்கு சொதப்பல்கள் பதில்களாகிடக் கூடாதென்று ஜூ.எ.வின் கண்காணிப்பை கோரியுள்ளேன் ! 

அப்புறம் பெங்களூரு வாசக நண்பர்களின் கவனங்களுக்கு : வரும் நாட்களில் Proff கூரியரில் இதழ்கள் அனுப்பிடல் கிட்டத்தட்ட இயலாக் காரியமாகிடும் போல் தோன்றுகிறது ! கூட்டப்பட்ட அவர்களது கட்டணங்களின்படி  இந்த இதழுக்கு அவர்கள் கோரியது ரூ.260 !! இதழின் 60% கிரயத்தைக் கூரியருக்குத் தருவது சாத்தியமாகாது என்பதால் உங்கள் பிரதிகள் DTDC கூரியர் மூலமே அனுபியுள்ளோம் ! ("மின்னும் மரணம்" இதழ்களின் despatch கூட DTDC மூலமே சிக்கல்களின்றி இருந்ததென்று ஞாபகம் !) So உங்கள் பிரதிகளை இம்முறை Proff கூரியரில் தேடிட வேண்டாமே - ப்ளீஸ் ! 

And சகல சந்தாப் பிரதிகளும் நேற்றைய மாலைக்குள் அந்தந்த மார்க்கங்களில் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பதால் விடுபட்டுப் போன பிரதிகள் என்று எங்கள் வசம்  ஏதும் கிடையாது ! கூரியர் ரசீதுகள் இன்று மதியத்துக்கு மேல் தான் கிடைக்கும் என்பதால் அதிகாலையிலேயே அது விபரம் கோரி போன் செய்திடுவது உதவிடாது ! So சற்றே பொறுமை ப்ளீஸ் !

அப்புறம் ஜூ.எடியின் முயற்சிகளில்  இனி நம் இதழ்கள் FLIPKART-லும் கிடைக்கும். அவர்களது கூரியர் கட்டணங்கள் சற்றே ஜாஸ்தியாய் எனக்குத் தோன்றினாலும் - வெகுஜனப் பார்வை கிட்டும் பொருட்டாவது அங்கே விற்பனைகளைத் துவக்கிட வேண்டுமென்று ஜூ.எ. ஆசைப்பட - we would be there too !
இப்போதைக்கு விடைபெறுகிறேன் guys - இந்த வாரயிறுதி நமக்கொரு சந்தோஷப் பொழுதாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையோடு ! See you around ! Bye for now ! 

379 comments:

 1. Replies
  1. வணக்கம் சார் ...படித்து விட்டு வருகிறேன் ...

   Delete
  2. நீங்க யாரு?
   இரவுக்கழுகாச்சே

   (விடிய விடிய ரீபிரஸ் பட்டனை அமித்தீட்டே இருந்திருப்பிங்க)

   Delete
 2. காலை வணக்கங்கள் நண்பர்களே,

  அதிகாலை சைக்கிளிங் போகும் வழியில் "கொரியர் ஆபிஸ் பக்கமாக ஒரு விசிட் போட்டால் என்ன ?" எதோச்சையாக தோன்ற...என்ன ஆச்சரியம்...கொரியகாரர் டேபிளில் எனக்கான பார்சல் பெட்டி நெஞ்சில் குறிவைத்து சுட்டது..!
  பார்சலை வாங்கி..அங்கேயே பிரித்து...அதை புரட்டி புரட்டி பார்த்து....நான் சிரித்த சிரிப்பு..."யோவ் ஆரன் அடிக்கிறது காதுல கேக்குதா இல்லை.." என ஒருகை உலுக்கி கேட்டதும், சுய நினைவுக்கு வந்தேன்...ஹீ..ஹீ..(தலையில் ஒளிவட்டம் சுற்றும் பொடியன் படம் ஒன்று)

  தேசிய வண்ணங்களை நியாபகபடுத்தும் அட்டை...ம்...இதற்கு மேல் சொல்வது சபை நாகரிகமா..? எனவே மூச்ச்ச்(வாயில் பிளாஸ்டர் ஒட்டிய படம் ஒன்று)

  சேலம் இரவுக்கழுகுக்கு ஸ்பெஷல் வாழ்த்த்துக்கள்..!
  நண்பர்கள் மீரான்,கிட் ஆர்ட்டின் கண்ணன்,இத்தாலி விஜய்,அபிஷேக்,தலீவா உங்களுக்கும் எனது முதல் வாழ்த்துக்கள்..! (மலர் கொத்துக்கள் படங்கள்இஸ்டத்துக்கு)

  ReplyDelete
  Replies
  1. mayavi.siva : காலை எழுந்தவுடன் சைக்கிளிங்கா ? அட...!!

   Delete
  2. காலை வணக்கங்கள் விஜயன் அவர்களே..!

   வளர்ற பையன் ஸார்..! இன்னும் எவ்வளோவோ பாக்கவேண்டியுள்ளது...நல்ல திடமா இருக்கனமில்லையா ?அதுதான் ..!

   ஒரு வாரம் முன்பு தான் உங்களை சந்திச்சி...LMS வாங்கின மாதிரி இருந்திச்சி...அதுக்குள்ளே LMS சோட அண்ணன் வந்து நிக்கிறார்..! சைக்கிள விட வேகமா வாழ்க்கை ஓடுது...ம்...'அந்த தி லயன் 250' மட்டும் ஜிகு ஜிகுனு சும்மா மின்னுது..!

   Delete
  3. //அந்த தி லயன் 250' மட்டும் ஜிகு ஜிகுனு சும்மா மின்னுது..!//

   Matte lamination...UV...embossing என்று அதன் பின்னணியில் நிறைய ஐட்டங்கள் உள்ளன சார் ! மினுமினுப்பு அதனாலேயே !

   Delete
  4. சைக்கிளிங் போனால் இப்படி ஒரு நண்மையா ???மாயாவி சார் அசத்திட்டீங்க....சூப்பர் சூப்பர் ...ஏ .ஏ.எப்பா எனக்கு ஒரு சைக்கிள் பார்சேல் ......

   Delete
  5. சேலம் இரவுக்கழுகு...நேத்து நீங்க சிவகாசிக்கே குடிபோறதா செய்தி வந்திச்சே...எங்கிட்ட மயில் வாகனம் இல்லை...அதனால சைக்கிள்லயே முனு ரவுண்ட்ஸ் போட்டு பழத்த வாங்கிட்டேன்( கண்னடிக்கும் பொடியன் படங்கள் இரண்டு)

   உங்க தவிப்பு... எனக்கு இங்க அனலா சுடுது..! உண்மையில் எனக்கு பத்து நிமிஷம் ஜிரவே வந்துடுச்சி..! எடிட்டர் சொன்னப்பல அட்டையில எக்கச்சக்க வேலை செஞ்ச்சிருக்கரு..! இன்னும் புக்கையே திறக்கலை...அட்டையையே நேண்டிட்டு இருக்கேன்...! டெக்ஸ்,250,பெயர்,லோகோ,ன்னு தனித்தனியா மின்னுது...அத எப்படி சொல்ல..ம்...இங்கே'கிளிக்'
   (சிகப்பு குறிகள் உள்ளவைகள் ஸ்பெஷல் லேமினேட்)

   Delete
  6. :)


   \\Matte lamination...UV...embossing\\
   // எடிட்டர் சொன்னப்பல அட்டையில எக்கச்சக்க வேலை செஞ்ச்சிருக்கரு..! இன்னும் புக்கையே திறக்கலை...அட்டையையே நேண்டிட்டு இருக்கேன்...!//
   ஆவலை தூண்டும் கிளிக் சார்,நான் சிலநாட்களுக்கு காத்திருப்பு கவிதை வசிகவேண்டியது தான் .. :)

   Delete
  7. ///சேலம் இரவுக்கழுகு...நேத்து நீங்க சிவகாசிக்கே குடிபோறதா செய்தி வந்திச்சே...///--சேலம் ஸ்டீல் சோரூம் ,சிவகாசியில் ப்ரான்ஜ் ஓப்பன் பண்ணினால் அங்கே இன்சார்ஜ் ஆக நிச்சயமாக பொறுப்பில் வந்து விடுவேன் ....ஏன்னா இங்கே தான் நமது காமிக்ஸ் படிக்கவும் , ப்ளாக் படிக்க-கருத்து போட , வாட்ஸ் அப் ,, _பேஸ் புக் பார்க்க, நண்பர்கள் வந்தால் எதிரே உள்ள குப்தா ஸ்வீட்ஸ் ல கொறிக்க -நேரமும் அனுமதியும் கிடைக்கிறது ...

   Delete
 3. கிரேட் சல்யூட் எடி சார்,தல தரிசனத்திற்காக I am waiting.

  ReplyDelete
 4. அட்டையில் தல் அசத்துறார் ccc ல் சிக்பில் சூப்பர் flipkart ல் நமது காமிக்ஸ் வருவது மகிழ்ச்சி. ராப்பரை பார்த்தவுடன் கூரியர் ஆபிஸில் வெயிட்டிங்( தலை எப்ப வருவாரோ)

  ReplyDelete
 5. தல குறித்து எழுதி தல ஸ்பெஷலில் இடம் பெறும் நண்பர்கள் மீரான், ரவி கண்ணன், ஈரோடு விஜய், அபிஷேக் ஆகியோர்க்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.!!!!!!!!!!!! :-௦

  ReplyDelete
  Replies
  1. selvam abirami : அட...இன்னுமொரு கூரியர் படையெடுப்பா ?!

   Delete
 6. கொக்கு பற பற,கோழி பற பற,என் மனமும் பற பற.

  ReplyDelete
 7. அட்டை படம் போன்ல பார்க்கும் போதே அள்ளுதே .....ஆண்டவா....என்ன பண்ணுவேன்.....எப்படி பார்ப்பேன் ....நான்.... 10மணிக்கு தானே கொரியர் வரும் ..சொக்கா..

  ReplyDelete
 8. ஹைய்ய ஹைய்ய ஹய்யா

  ReplyDelete
 9. ஹூர்ர்ரே!!! முன்னட்டை அசத்தல்!!!! 'தல' துள்ளலாய், இளமையாய், கலர்ஃபுல்லாய் அசத்துகிறார்! புகையைக் கக்கியபடி முன்னோக்கி வரும் அந்த புல்லட் - புதுமை! ஓவியருக்கும், டிசைனருக்கும், இவர்களை பெண்டு நிமித்தியவருக்கும் வாழ்த்துகள்!!! ( நேரில் பார்த்து ஆச்சர்யப்படக் காத்திருக்கிறேன். வெளியூர் பயணத்திலிருப்பதால் புத்தகத்தைக் கைப்பற்ற மூன்று நாட்களாகிவிடும். ஹம்ம்ம்... :( )

  பின்னட்டை சற்று சுமார் ரகமாகத் தோன்றுகிறது. குறிப்பாக டெக்ஸின் தலைமுடி குறைந்த, இறுக்கமான முகம் 'மேக்கப் கலைத்த வேதாள மாயாத்மா லுக் விடுவது' போலுள்ளது! சரி, முன்னட்டையே போதுமான அளவுக்கு ஸ்தம்பிக்க வைப்பதாக இருப்பதால் பின்னட்டை கொஞ்சம் சுமாராகத் தோன்றினால் தவறில்லை!

  புத்தகம் கிடைக்கும்வரை நண்பர்களின் சிலாகிப்புகளே உற்சாகமளித்திடும்....

  ReplyDelete
  Replies
  1. இத்தாலி விஜய் அவர்களே,

   என்னை பொறுத்தவரையில் முன்அட்டையை விட, பின் அட்டை செம தூள்..! கையில் வாங்கி பாருங்கள் புரியும்..!

   Delete
  2. படு மோசமான பின் அட்டை

   Delete
 10. In top 25...
  It will take a month for me to get the book anyways. So will wait for reviews from others.

  ReplyDelete
 11. வழி மேல் விழி வைத்து .....

  ReplyDelete
 12. Dear Edi, Eagerly looking forward for the courier to reach. In recent times, I don't remember seeing Tex in such young and jubilant avatar on our comics covers. Thanks to you and your team for the color combinations and selections. Rest after Reading :-)

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja: முதல் முயற்சியிலேயே முகவசீகரம் அழகாய் அமைந்து விட்டால் தான் 'தல' தப்பிக்கிறது ! First attempt -ல் சொதப்பிடும் பட்சத்தில் மாறி மாறி திருத்தங்கள் செய்திட முயற்சிப்பதெல்லாம் முகத்திற்கு மட்டும் சரி வருவதில்லை ! இம்முறை first time lucky !

   Delete
 13. சொக்கா... கூரியர்ல phone ஐ எடுக்க மாட்டிகிறாங்களேப்பா....

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

   Delete
  2. நண்பர் சரவணனுக்கு இதுவே ஆசிரியரின் சிறந்த அன்பு பிறந்த நாள் பரிசு என நினைக்கிறேன்.

   Delete
  3. குஷியா எனது வாழ்த்துகள் பார்க்க..இங்கே'கிளிக்'

   Delete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணன் சார் .. :-)

   Delete
  5. காமிக்ஸ் தல யோடு பிறந்த நாள் கொண்டாடும் கரூர் சரவணன் சார் எனது இனிய இனிப்பான வாழ்த்துக்கள்.

   Delete
  6. நண்பர் கரூர் சரவணன் அவர்களுக்கு ஈனா வினா'ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

   Delete
 14. டியர் சார்,

  ஒரு பதிவில் இத்தனை விஷயங்களா ? அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளவே 3 மூன்று முறை திரும்ப திரும்பப் படித்து விட்டேன். சந்தோஷ செய்திகளால் இதயத் துடிப்பு அதிகமாகி சுவாசம் எகிறுகிறது - இதை முகஸ்துதியாக யாரும் கருத வேண்டாம், ஏனெனில், என்னைப் போல் பலருக்கும் இன்று இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கலாம் :-)

  டெக்ஸ் வில்லர் பதிவுக்கே இத்தனை சந்தோஷ ஆர்ப்பரிப்பு இதயத்திற்குள்ளே என்றால் - நிச்சயமாக, டெக்ஸ் வில்லரிடம் ஏதோ ஒரு மாபெரும் வசீகர சக்தி இருப்பதை மறுப்பதில் அர்த்தம் இல்லை என்றே தோன்றுகிறது :)

  டெக்ஸ் வில்லர் தவிர்த்து, சிக்பில் ; வானமே எங்கள் வீதி என்று எல்லாமே இதயத்திற்கு இன்பம் தரும் இனிய பகிர்வுகள் தான் என்றாலும் குறிப்பாக flipkart-ல் விற்பனை இந்தப் பதிவிற்கு மகுடம் சூட்டுகிறது :)

  ReplyDelete
 15. Lion 250-அட்டை படம் மிக அருமை ! ,i am waiting to enjoy it.

  "வானமே எங்கள் வீதியின்" ஆல்பம் # 3 2015இல் வரக் காத்துள்ளது !, -அருமை :)

  "ஒற்றை நொடி-ஒன்பது தோட்டா "-4 PART album style book 2016 இல் வெளிவந்தால் மிக மகிழ்ச்சி

  FLIPKART - :) விற்பனை பலமடங்கு கூட போவது கண்கூடு

  ReplyDelete
 16. Replies
  1. வண்டிக்குள் தேடதிங்க...வெச்ச இடத்துல தேடுங்க..(தலை சொரியும் படங்கள் மூன்று)

   Delete
 17. எடிட் sir, ஒரு கேள்வி நமது புத்தகங்களில் ISBN இல்லையே ஏன்?, goodreads இல் பதிவேற்ற அது தேவை என்பதால் கேட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : விண்ணப்பித்து 1.5 மாதங்களாகியுள்ளன.....சாவகாசமாகவே அவை கிடைப்பதாய் பதிப்பக நண்பர்கள் சொல்கின்றனர் ! காத்துள்ளோம்...!

   Delete
  2. தகவளுக்கு நன்றி எடிட் சார்!, நிசயமாக lionmuthucomics இணயத்தில் புத்தக தகவலுடன் (கிடைத்தவுடன்)அந்த நம்பரையும் இடுங்கள் சார், பல லட்சம் பார்வையாளர்கள் உள்ள தளத்தில் நமது புத்தகத்தையும் பதிவேற்ற அவா !

   Delete
 18. ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.. இன்றைய பொழுதின் மிக இனிய செய்தி..

  ReplyDelete
 19. Good Morning Friends I Got The Lion 250

  ReplyDelete
 20. குறிபார்த்து சுடத் தெரியாத, கருப்பு ஸ்கார்ஃப் கட்ட மறந்த டெக்ஸ்; நட்டநடுவில் கண்ணை உறுத்தும் வண்ணத்தில் & வடிவமைப்பில் லயன் 250 பேனர்; எக்கசக்கமாய் பச்சை... ஹ்ம்ம்! டெக்ஸின் முகமும், பின்னட்டையும் ஓகே.

  Flipkart - better late than never!

  Road to perdition வருவதாக இருந்ததே, வருமா?

  ReplyDelete
  Replies
  1. /* வருமா? */ ??? Road or Perdition? :-) ;-)

   Delete
 21. ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.. இன்றைய பொழுதின் மிக இனிய செய்தி..'தல' துள்ளலாய், கலர்ஃபுல்லாய் அசத்துகிறார்! சேலம் இரவுக்கழுகுக்கு ஸ்பெஷல் வாழ்த்த்துக்கள்..!
  நண்பர்கள் மீரான்,கிட் ஆர்ட்டின் கண்ணன்,இத்தாலி விஜய்,அபிஷேக்,தலீவா உங்களுக்கும் எனது முதல் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 22. யாஹூ புத்தகம் வாங்கியாச்சே :)

  ReplyDelete
 23. அட்டை டெக்ஸ் அழகு. வண்ணம் அழகு. ஏதோ ஒரு குறை. தலைப்பா....¿¿¿¿¿¿¿¿

  ReplyDelete
  Replies
  1. ஸ்டீல்...தலைப்பு பின்னாடி சூப்பரா போட்டி ருக்காரே..!

   Delete
  2. நண்பரே முன்னட்டையில் ஏதோ காலியான உணர்வு. கதை புத்தக அட்டை என மனது ஏற்கவில்லை.ஆனால் ஆசிரியர் நமக்களித்த பொக்கிசங்களில் அரியது என்பதனை புரட்டும் பக்கங்கள் காட்டத் தவறவில்லை.

   Delete
  3. இந்த இங்கே'கிளிக்'ல் விடுபட்டது தான் உங்கள் மனம் ஏற்க்கவில்லையோ..!(கூளிங்கிளாஸ் போட்ட புன்னகை படங்கள் இரண்டு)

   Delete
 24. சார் வானமே எங்கள் வீதி மே மாதம் ெவ ளி வருமென்று நீங்கள் கூறியதை நினைத்து ....கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன். இன்ப அதிர்ச்சி...

  ReplyDelete
 25. புத்தக வடிவமைப்பு வண்ணங்களில் பளபளக்கும் பக்கங்கள் தூள் . ஹாட் லைன் பட்டாசு. தல போல வருமா....

  ReplyDelete
 26. வந்த்தே புக் வந்த்தேஏஏஏஏஏஏஏஏஏ

  ReplyDelete
 27. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மிகவும் எதிர் பார்த்தேன் சார்

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் தோழர்களே
  ஹ்ஹூம்
  உங்களுக்காவது உடனே கிடைத்து விடுகிறது
  நாங்கள்ளாம் சம்பளத்தை கண்ணில் கண்ட பிறகே
  டெக்ஸ் எங்கள் கண்ணில் படுகிறார்
  கதைகளின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்

  ReplyDelete
 29. டியர் எடிட்டர்,

  அட்டைகளில் தர்மேந்திரா நன்றாக பளிச்சென்று இருக்கிறார் :-) :-)

  Jokes apart, waiting for the bundle of joy !!

  ReplyDelete
 30. 'ஒக்லஹோமா' 1991-ல் வந்த படைப்பென்பதால் இளமையாய் அதில் வரும் டெக்சை அப்படியே ராப்பரில் கொண்டு வந்திருப்பது ஒரு ஒரிஜினல் ஃ பீல் தருகிறது!. ராப்பரின் வண்ணக்கலவைகள் எல்லா முயற்சிகளிலும் அழகாவே அமைந்திருப்பதால், எது அமைந்திருந்தாலும் ஓகே ரகமே!

  இது லயன் 250 + ஆண்டு மலரென்பதால் நம்ம லயனின் birth டே லோகோ ராப்பரில் இடம் பெற செய்திருக்கலாமே...?

  ReplyDelete
  Replies
  1. MH Mohideen : Sorry...சுத்தமாய் மண்டையில் நிற்கவே இல்லாது போன விஷயம் சார் ! " 250" என்ற எண்ணின் மீதே கவனம் முழுசும் இருந்ததன் விளைவு !!

   Delete
 31. இப்பொழுது பதிவை படித்து கொண்டு இருக்கும் பொழுது போனில் தகவல் ...கொரியர் நண்பர் இடம் இருந்து ....உங்கள் அலுவலகத்திலையே வைத்திருங்கள் ..நானே மாலை வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன் ..அங்கே இங்கே என்று அலைந்து புத்தக கவரை அழுக்காகி விட்டால் கூட மனம் தாங்காதுப்பா ...."தல " புக்குனா சும்மாவா ... :-)

  *************************

  அட்டைப்படம் ஓகே சார் ..நன்றாக உள்ளது ...புத்தகத்தில் இன்னும் பட்டையை கிளப்பும் என்று தோன்றுகிறது ....பின் அட்டை படத்தில் தங்கள் முதல் படத்தில் உள்ள டெக்ஸ் நின்று கொண்டு இருக்கும் அட்டை இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ..

  **************************

  புத்தகத்தை புரட்டி ரசிக்கவே இரண்டு ..மூன்று நாட்கள் ஆகி விடும் ..எனவே கதை பற்றிய எண்ணத்தை அறிய இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் சார் ...சிறய கதை ...கொஞ்சம் பெரிய கதை ..அடுத்து நீள ....கதை என்றே படிக்க காத்திருக்கிறேன் ....

  ***************************

  காட்டூன் ஸ்பெஷல் இதழில் சிக் பில் வருவதில் மகிழ்ச்சி சார் ...அது என்னவோ தெரியவில்லை ..இப்பொழுது லக்கியை விட "கிட் ஆர்ட்டின் " சாகசம் தான் அதிகம் மனம் கவர்கிறது ...காரணம் புரிய வில்லை :-)

  ****************************

  லயன் 250 வது இதழில் இடம் பெற்ற அனைத்து வாசக நண்பர்களுக்கும் போராட்ட குழுவின் சார்பாக வாழ்த்துக்களும் ..பாராட்டுக்களும் ..... :-)

  *************************

  ReplyDelete
 32. Dear Editor,

  /* இவற்றிற்குப் பதிலாய் 2016-க்கு postpone ஆகிடும் கதை எதுவென்று சீக்கிரமே அறிவிப்பேன் - டின் வாங்க முதுகில் உரமேற்றிக் கொண்ட கையோடு ! */

  Waiting .. அதுவரை நீங்கள் கூறியபடியே 'நறுக்' என்று நையப்புடைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டே ஒரு short commercial break ;-) :-)

  ReplyDelete
 33. தலே வந்திட்டாப்பிலே.!!!!

  ReplyDelete
 34. *காலை 10மணிக்கு சரியாக கொரியரில் ,அடிபடாமல் கனத்த பாக்ஸ் பேக்கிங்ல "தி லயன் 250" -நவஜோக்களின் ஒரு பெட்டி தங்கம் வந்து கிடைத்தது சார்..........
  *பிரித்த உடன் " தலை "-தடால் என துப்பாக்கியால் மிரட்டுகிறார்....தி லயன் 250- லாலடிக்கும் வண்ணத்தில் மிளிர்கிறது .லயன் லோகோ கலரில் இல்லாதது சிறு குறை...
  *பின் அட்டை கொஞ்சம் வயதான டெக்ஸ் சாந்தமான தோற்றத்தில் வசீகரிக்கிறார்..மூன்று கதைகள் பெயர்கள் -பக்கங்கள் உடன் வரவேற்கிறது....முதல் புரட்டலில் அனைத்து கதைகளும் அட்டகாசமான வண்ணத்தில் பட்டாசாக வெடிக்கின்றன .....
  *நான் எழுதிய தலை கதைகள் பட்டியல் வெளிவந்து மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்து விட்டது ...தலையின் நிறை,குறை பகுதியில் நானும் , நண்பர்கள் மீரான்பாய் ,கிட் மாமா,ஈரோடு விஜய் ,அபிசேக் மற்றும் போ.கு.தலீவர் எழுதிய பகுதிகள் இடம் பெற்று உள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் நண்பர்களே.......
  ----போதும் புத்தகம் இன்னும் கிடைக்காத நண்பர்கள் உதைக்க வருவதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் சார்...

  ReplyDelete
 35. அட்டைபடங்கள் அருமையாக தெளிவாக உள்ளது எடி சார்

  முன்னட்டை அருமை இளம் வயது டெக்ஸ் காலத்திற்கேற்ப மாற்றம்கண்டு
  இனி காமிக்ஸ் வெகு ஜனங்களால் ரசிக்கப்படுவார்

  தி லயன் 250 முதுகில் தந்திருப்பது நன்று எடி சார்
  பைண்டிங் வித்யாசம் தருமென்று நீங்கள் சொல்லியிருக்கின்றீரகள் புத்தகத்தினை நேரில் கண்டு சொல்கிறேன் எடி சார்


  பின் அட்டை யில் உள்ள முடியிழந்து பாதி மொட்டை தலையுடன் சோகமா விறைப்பாக காட்சி கொடுப்பவர் நம்ம டெக்ஸ்தானுகளா??
  மனதை உறுக்குகின்றார் போல் ஒர் தோற்றம்
  !!!

  டெக்ஸ் முதுகை காட்டிக்கொண்டிருக்கும் ராப்பரை பின்னட்டைக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து


  கிட்ஆர்டின் சார்க்கு ஏற்ற தலைப்பு " மாறிப்போன மாப்பிள்ளை " :-)

  ReplyDelete
 36. விஜயன் சார், அருமையான பதிவு! நமது லைன் 250 அட்டைபடம் அருமை! சமிபத்திய
  நமது சிறப்பு இதழ்களில் மிகவும் கவர்ந்தது மின்னும் மரணம், ஓவியம், வண்ணம், அச்சு தரம் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது! இந்த கதையின் பக்கத்து பக்கம் அதன் ஓவியம் மற்றும் வண்ண சேர்கை என்னை பிரமிக்க வைத்தது! உண்மையில் நமது பயணத்தில் இது ஒரு மணி மகுடம்!

  தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல்.

  ReplyDelete
 37. Flipkartல் நமது இதழ்களைப் பார்த்திடுவது ஒரு சந்தோச அனுபவமாக இருந்திடும்! இதன்மூலம் ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் (என்னைப் போன்ற) இளசுகளின் கவனத்தை ஒரு குறிப்பிட்ட சிறிய சதவீதத்திலாவது கவரமுடியும்! ;)
  ஜூ.எடிட்டரின் இந்தப் புதிய முயற்சிக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. //என்னை போன்ற இளசுகள்//இளைஞர் அணி என்றுசொல்லுங்கள்.!!!

   Delete
 38. Dear Editor,

  Tex in hand was indeed a bundle of joy .. perhaps it is the nature of some three letter words to provide fulfillment every single time :-)

  Next wish from Lion Comics Stable : Leather Bound Volume :-)

  போராட்டக் குழு தலைவர் அவர்களே - அடுத்த லயன் மெகா வெளியீடு லெதர் பவுண்ட் ஆக இருக்க வேண்டுமென ஈரோட்டு விழாவில் ஒரு கோரிக்கையை முன்னிலைப் படுத்த வேண்டுகிறேன் !

  ReplyDelete
  Replies
  1. காமிக் லவர் அவர்களே...
   ஹார்டு பவுண்டு, லெதர் பவுண்டுக்கு அடுத்தபடியா 'உறுதியான எஃகு இழைகளாலான' பவுண்டு அட்டை வேணுமின்னு கேட்பீங்க போலிருக்கே?

   Delete
  2. Raghavan : Thank you !

   ஆஹா....போராட்டத் தலைவர் இப்போது தான் 3 பக்க / 4 பக்கக் கடுதாசிகளோடு சாந்தமாய் காட்சி தருகிறார் - அவரை உசுப்பும் இன்னொரு களம் தயாரா ?

   Delete
 39. ஓய் மாயாவி சிவா...
  டெக்ஸ் இதழின் உள் பக்கங்களை படமெடுத்து உடனே இங்கு லின்க் கொடுங்களைய்யா....
  DTDC கூரியர்காரங்க தாலி அறுக்கறாங்க..

  ReplyDelete
 40. எடிட்டர் ஸார்! நெய்வேலி புத்தக கண்காட்சியில் எந்த ஸ்டாலில் நமது புத்தகங்கள் கிடைக்கின்றன?

  ReplyDelete
 41. எடிட்டர் சார்.,மனம் நிறைய சந்தோசத்துடன் புத்தகத்தை பக்கங்களை புரட்டி கலரில் அதிசயத்து போய் ஹாட் லைன் படித்தவுடன் ஆனந்தத்தில் என் கண்களில் பொளபொளன்னு கண்ணீர் வந்துவிட்டது.நன்றி சார்.!!!(ஆனந்த கண்ணீருடன்.!)

  ReplyDelete
  Replies
  1. @ M.V

   பொள பொள'னு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிற அளவுக்கு எடிட்டர் அப்படி என்னதான் எழுதியிருக்கார்? ஒருவேளை... 'மடிப்பாக்கம் வெங்கிக்கு மாடஸ்டியின் மொபைல் நம்பர் வழங்கப்படும்'னு எழுதியிக்கோ? ;)

   Delete
  2. ஈரோடு விஜய்.!என்ன பண்றது?சந்தோஷம்.!இதுவரை இப்படி கலரில் மொத்தமா இவ்வளவு பெரிய டெக்ஸ் கதைகள் வந்தது கிடையாது.!இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக....,..!,காமிக்ஸ் வருமா வராதா என்று ஏக்கத்தில் இருந்த அன்று.......... இன்று இவ்வளவு பெரிய டெக்ஸ் கதையை பார்த்தால் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்.உங்கள் தலபுரணம் சரியான நக்கலாக இருந்தது.!
   //மாடஸ்டி செல்போன் நம்பர்//ஐயோ.!அப்படிமட்டும் இருந்தால் நானும் மாடஸ்டி நெட் ஒர்க் கில் லீகல் அட்வைசர் ஆகிவிடுவேன்.!!!என்ழ பண்றது கற்பனையாக போச்சே.!!!

   Delete
 42. In dru ellorukkum thala deepavalithan.thanks sir.TeX aram a life history comic saga epothu kidaikkum sir.

  ReplyDelete
 43. மிக மிக ஆவலாக காத்திருந்து ஏமாந்த நாள் இன்று :(

  இன்று கூரியர் கிடைக்கவில்லை. இனி திங்கள் அன்று தான் டெக்ஸ் வில்லரைப் பார்க்கவே முடியும். நேற்று மாலையில் தான் என்னுடைய காமிக்ஸ், கூரியர் அலுவலகத்திற்கே சென்றிருக்க வேண்டும் ; அதனால் தான் எனக்கு இன்று கிடைக்கவில்லை. திங்கள் அன்று காலையில் அனைத்து பார்சலையும் கொடுக்கும் நிலை இருந்து இருந்தால் இந்த நிலை என்னைப் போன்ற வாசகர்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்பது திண்ணம் :(

  ஒவ்வொரு மாதமும், கால அட்டவணை தங்களால் தான் நிர்ணயிக்கப்படுகிறது எனும் போது, ஓரிருநாள் தாமதமாக நிச்சயம் செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக 5 ஆம் தேதியை நிர்ணயித்து இருக்கலாம். சில வாசகர்களுக்கு மட்டும் கூரியர் தாமதமாகாமல் இருக்க, தயவு செய்து காலை 12 மணிக்குள்ளாக அனைத்து பார்சலையும் கூரியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதே சிறந்த தீர்வாக அமையும் என்பது என் கருத்து :(

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் மரமண்டை.!வணக்கம்.இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கும் இதே நிலைமைதான்.இரண்டுஅல்லது மூன்று நாட்களக கழித்துதான் டெலிவரி செய்தார்கள்.நான் இதுகுறித்து கிளை பொறுப்பாளரிடம் சண்டையிட்டேன்.என் முன்பே கூரியர் பாயை திட்டினாலும் முதலாளிக்கு பயந்த காலம் போய் , தொழிலாளிக்கு பயந்து உள்ளார் என்று புரிந்து கொண்டேன்.பிறகு என்ன கூரியார் பாய் எனக்கு நண்பர்ஆகிவிட்டார்.பார்சல் வந்ததும் முதல் போன்&டெலிவரி எனக்குத்தான்.நானும் ,கூரியர்பாய்,தொல்லை விட்டது என்று முதலாளியும் இப்போது அனைவரும் ஹேப்பி அண்ணாச்சி..!!!

   Delete
  2. Madipakkam Venkateswaran : வணக்கம் மிஸ்டர் Mv ! ஆனால், என்னுடைய பிரச்சனை கூரியர் பாய் அல்ல.. டெக்ஸ் வில்லரை அடிக்கடி நய்யாண்டி செய்த விளையாட்டு இன்று வினையாகி நிற்கிறது ;( மனதிற்குள் புழங்கிய டெக்ஸ் வில்லர் ரசிகர்களின் சாபத்தால், இன்று எனக்கு லயன் 250 இதழ் கிடைக்காமல் மனம் சோகத்தில் புழங்குகிறது ;)) ஏதோ, புண்பட்ட மனதை, ஒரு பழைய பின்னூட்டத்தை மீள்பதிவு செய்து ஆற்றிக் கொள்கிறேனே :-))

   தினமலர் அன்றே சொன்னது :))

   மிஸ்டர் மரமண்டை17 January 2014 at 15:49:00 GMT+5:30 டியர் விஜயன் சார்,

   லயன் 30 - வது ஆண்டுமலர் மெகா சைஸ் குண்டு புத்தகத்திற்கு எனது தேர்வு டெக்ஸ் வில்லர் மட்டுமே..!

   டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் என்ற முத்திரையுடன் - பெரிய சைசில், முழு வண்ணத்தில் இரண்டு கதைகளுடன் வெளியிடுங்கள் ; அதில் முதல் கதையாக டெக்ஸ் வில்லரின் புதிய சூப்பர் ஹிட் கதை ஒன்றையும், இரண்டாவது கதையாக கார்சனின் கடந்த காலத்தை முழுவண்ணத்திலும் வெளியிட இங்கு கோரிக்கை வைக்கிறேன் ;

   ஏனெனில்

   2014 - மெகா ஸ்பெஷல் - டெக்ஸ் வில்லர் - 30 வது ஆண்டு மலர்
   2015 - மெகா ஸ்பெஷல் - கேப்டன் டைகர் - மின்னும் மரணம்
   2016 - மெகா ஸ்பெஷல் - XIII - முழு வண்ணத்தில்

   மிகப்பெரிய வெற்றி நாயகர்களான இவர்களுக்கு இப்படி மரியாதை செய்வது தான் சிறந்தது மட்டுமல்ல வியாபாரத்திற்கும் உகந்தததாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அதுமட்டுமல்ல காலமெல்லாம் நம் நினைவை விட்டும் நீங்காது.

   பஞ்ச் டயலாக் : இனிமே எல்லாம் இப்படித்தான் :)

   Delete
  3. ஹஹஹஹஹஹஹஹஹ.......................உண்மையிலேயே நீங்கள் தீர்க்கதரிசி.இன்னொரு விஷயம் வலைதளத்திற்கு வராத மௌன பார்வையாளர்கள் நான்கு நண்பர்கள் என்னுடன் போனில் அரட்டை அடிப்பது வழக்கம் அவர் உங்களை ஆவலுடன் விசாரித்தனர்.!உங்கள் கருத்துகளை ஆமோதித்தனர்.!

   Delete
 44. //இவற்றிற்குப் பதிலாய் 2016-க்கு postpone ஆகிடும் கதை எதுவென்று சீக்கிரமே அறிவிப்பேன் //
  -1
  Paid subscription for stories listed in subscription booklet. Removing/Postponing the stories due to CCC is not acceptable. This is very big disappointment.

  ReplyDelete
 45. "தல"புராணம் தேர்வு அட்டகாசம்.!வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.! அதுசரி ஈரோடு நண்பர்கள் சிரிக்கும் போட்டா நாலு...............!என்றுகி.நா.( சங்கேத )பாஷையில் பேசினால் எங்களுக்கு எப்படி புரியும்.?

  ReplyDelete
 46. அட்டகாசம் அதகளம்
  வர்ரேன் வர்ரேன்னு சொன்ன டெக்ஸ்
  வந்தேவிட்டார்

  இப்போதுதான் புக் பார்சலை வாங்கி புக்கின் அட்டைபடங்களை ரசித்து ருசித்தேன்
  மனங்கொள்ளா மகிழ்ச்சி விஜயன் சார்

  எவ்வளவோ டெக்ஸ் கதைகளை தேடி தேடி அலைந்ததைவிட
  லயன் 250 வாங்க கொரியர் பாய் பின்னால் அலைந்த அலைச்சல் மிகவும் அதிகம்
  இந்த வருடத்தில் இருந்து கொரியர் பாய் தீபாவளி போனஸ் கொடுத்து வைக்கணும்!

  அட்டைப்படம் சூப்பர்
  250வது புக் என்று பார்த்தவுடன் கண்டு பிடிக்க முடியவில்லை
  பின்புறம் டெக்ஸ் வயதானவர் போல தெரிகிறார்
  (வயசாகிடுச்சுன்னு ஒத்துக்க வேண்டியது தான்)

  மூன்று கதைகளில் எதை முதலில் படிப்பது என்ற போராட்டம் என்னுள்ளே

  டெக்ஸ் கதைவரிசையை எங்கள் தல டெக்ஸ் விஜயராகவன் அண்ணாவின் பாணியில் போட்டிருப்பது அருமை

  தல புத்தகத்தில்
  இடம் பெற்ற கண்ணண் க்கும் . பூனையார் க்கும் . போராட்டக் குழு தலைவர் க்கும். மீரான் க்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. //டெக்ஸ் வயதானவர் போல்//கௌபாய் ஸ்பெஷலில் வந்த டெக்ஸ் ஓவியம்.!

   Delete
 47. நண்பர்களே,

  ஒரு பென்சில் அல்லது பேனாவை எடுத்துக்கொண்டு 'தி லயன் 250' யில் கடைசியில் உள்ள டெக்ஸ் வில்லர் பட்டியலில் குட்டிகுட்டியாய் ஏழு திருத்தங்கள் சொல்கிறேன்...சரியான தகவல்களை விரும்பும் நண்பர்கள் மட்டும் திருத்திக்கொள்ளுங்களே..! திருத்தங்கள் பார்க்க...இங்கே'கிளிக்'

  ReplyDelete
  Replies
  1. 8வது திருத்தம் -58.காமிக்ஸ் கிளாசிக்கல் ,தலை வாங்கி குரங்கு விலை ரூபாய் 25மட்டுமே ...100அல்ல

   Delete
  2. கரெக்ட்..!(கட்டைவிரல் உயர்த்திகாட்டும் தம்சப் படம் ஒன்று)
   10 வது திருத்தம் ஒன்று உள்ளது...அதை கண்டுபிடிங்க..!

   Delete
  3. 9வது ..லயன் Top 10 ஸ்பெசல்..ரெகுலர் Tex சைஸ் அல்ல ...அதைவிட சிறிதான ஆனால் பாக்கெட் சைஸ்ஐ விட பெரிது...(க்ரைம் நாவல் சைஸ் )
   10வது ...மெகா ட்ரீம் ஸ்பெசல்- பெரிய சைஸ் அல்ல..அதைவிட பெரியதான...மெகா சைஸ் ...

   Delete
  4. அல்லது வேறு ஏதாவது கூட இருக்கலாம் .....ஏனெனில் இது மாதிரி ஸ்டாடிஸ்டிக்ஸ் பட்டியல் கடந்த இரண்டு வருடமாக ஒன்றில் கூட அனைவரும் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவு எட்டப்படவில்லை.. என்பதே உண்மை ...(கை தம்ப்ஸ் அப் படங்கள் ஐந்து )

   Delete
  5. @ சேலம் tex

   10 வது சரிதான்..! 9 வது தவறு பட்டியலில் இருந்து தவிர்க்கலாம் என எண்ணுகிறேன்..! 9 வதாக நான் குறிப்பிடுவது வெளிவந்த மாதம் சம்மந்தப்பட்டது. 'மரணத்தில் முன்னோடி' வெளிவந்த மாதம் ஏப்ரல் அல்ல..! ஆனால் எந்த மாதம் என்பதை வேறு நண்பர்கள் தான் உறுதிசெய்ய வேண்டும்..! கிங்விஸ்வா,கலீல்,RT முருகன் யாராவது சொன்னால் தான் உண்டு..!

   @ குமார் N

   திருப்பூர் நண்பரே..இந்த தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..! உங்கள் காமிக்ஸ் ஆர்வத்தை இங்கு தொடர்ந்து பகிருங்கள்..!

   Delete
  6. 10 கண்டுபிடிச்சீங்க
   11 வதா ஒண்ணு இருக்கே அத விட்டிட்டீங்களே மாயாவி சிவா ஜி

   Delete
  7. 11வது ...12வது ன்னு சரியாக ஒரு தடவை சரிசெய்து விட்டால் பிறகு அதை பாலோ செய்யலாம் நண்பர்களே...இன்னும் மற்ற நண்பர்களின் பார்வையில் ஏதும் சிக்கினால் இங்கே போடவும் ...மெளன பார்வையாளர்கள் எனில் எனக்கு மெசேஜ் ப்ளீஸ் 9629298300.....
   பிறகு லக்கி லூக், ஸ்பைடர், ஆர்ச்சி , மாடஸ்தி , சிக்பில் ..என ஒவ்வொரு டாப் ஹீரோ வாக பட்டியல் தயாரிப்பு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ....டைகர் , பட்டியல் சீ நா பா வைத்து உள்ளார் ...

   Delete
  8. @ FRIENDS : ஆஹா...!! சரி பார்க்க நேரமின்றிப் பிரசுரித்ததில் பிழைகள் நிறையவேவா ? அடடா..!

   Delete
  9. @ திரு விஜயன்

   அப்படி பெரிய தவறு என சொல்லமுடியாது...ஸார்..! ஆனால் தகவல் தருவது என வந்துவிட்டால் சும்மா..'நச்' ன்னு இருக்கனும்கிறது என்னோட வேண்டுகோள் அவ்வளவே, தவறாக எண்ணவேண்டாம் ஸார்..! பொதுவாக இப்படிப்பட்ட தகவல்கள் கூட்டு முயற்சியின் கீழ் செய்ய பரிந்துரைக்கிறேன்..!

   Delete
  10. mayavi.siva : statistics களில் நான் ரொம்பவே வீக் என்பதால் தான் டெக்ஸ் பட்டியலைக் கோரி கடந்ததொரு பதிவில் எழுதியிருந்தேன். But அதற்கு கிட்டயிருந்த ஒரே response சேலம் டெக்சின் பட்டியல் மாத்திரமே ! நேரமின்மை என்பதோடு என்வசம் இத்தனை விலாவாரியாய் விபரங்கள் இல்லை என்பதாலும் அப்படியே போடும்படியாகிப் போனது ! வரும் நாட்களில் இது போன்ற பிழைகளைத் தவிர்க்க முனைப்பாய் இருப்போம் !

   Delete
  11. டைப்பியதில் சில தவறுகள் , நான் தவிர்த்து இருக்கு கூடிய தவறுகள் இரண்டு ....வைகிங் தீவு என்னிடம் உள்ள புத்தகத்தில் பழைய புத்தக கடைக்காரன் அந்த விலையை சுரண்டி விட்டான்..ஆனால் வேறு நண்பர்கள் வலைத்தளம் களில் அந்த அட்டை படத்தை பார்த்து அந்த விலையை திருத்தம் செய்ய தவறி விட்டேன் ...மெகா ட்ரீம் ஸ்பெசல்...மெகா சைஸ் என்பதை பட்டிலை மீண்டும் வாசிக்காமல் (கடுமையான வேலை காரணமாக ) விட்டதால் தவறியது .....
   மாயாவி சார், ஆண்டு மலர் எல்லாம் ஜூலை யில் வந்தவை அல்ல ....காலதாமதம் காரணமாக அந்த ஆண்டு மலர் ஜூலையில் வெளிவரவில்லை....இப்படி பல விசயங்களும் கூட்டு முயற்சியில் தவிர்த்து இருக்க முடியும் .....யாராவது ஒருவர் இம்மாதிரி முயன்றால் தானே கூட்டு முயற்சி க்கு வழி பிறக்கும் ... மேலும் இதழ்கள் வெளி வந்த மாதங்கள் எப்போதும் குழப்பம் ஆகவே உள்ளன காரணம் திருப்பூரில் மற்றும் ஈரோட்டில் ஒரு மாதமும் சேலத்தில் வேறொரு வெளிவந்த சமயங்கள் பல உள்ளன.சேலத்தில் எப்போதும் சில மாதங்கள் லேட்டாகவே கிடைக்கும் . ....ஒரு முறை ஒரு டெக்ஸ் புக் சேலத்தில் கிடைக்கவில்லை....ஆறு மாதங்கள் கழித்து ஈரோடு போய் ,அழுக்கான கசங்கிய நிலையில் அந்த புக்கை வாங்கி வந்தேன்..அதுபோன்ற சமயங்களில் வெளிவந்த மாதம் நிச்சயமாக குழப்பம் தான் ..

   Delete
 48. Mugamilla Marana Thoodhan: Good interesting detective action thriller...................

  ReplyDelete
 49. Wow தல கலக்கிறர்ர். அட்டை படம் சூப்பர்.

  ReplyDelete
 50. ஓக்லஹோமா ----படிக்க ஆரம்பித்து விட்டேன் ...இதுவரை வராத புதிய கதைக்களம் ...அற்புதமான தீம்....ஆரம்பம் முதல் படு ஸ்பீடு......அதில் வரும் ரோஸ் என்ற பாத்திரம் இதுவரை படித்த 150பக்கங்களில் எனக்கு பிடித்துள்ளது .....கதை பற்றி பிறகு -அனைவருக்கும் புத்தகங்கள் வந்த பிற்பாடு ....

  ReplyDelete
 51. இனிய பிறந்த நரள் வரழ்த்துக்கள் சரவனண் சர்ர்.

  ReplyDelete
 52. நேற்று காலை எனது அலுவலகத்திற்கு செல்லும்முன் கொரியர் அலுவலகம் சென்றேன். அங்கு அப்போதுதான் despatch hubல் இருந்து வந்து இன்னும் பகுதிவாரியாக பிரிக்கபடாத நிலையில் நமது முத்திரை உள்ள பெட்டி மட்டும் தனியாக கண்ணில் பட்டது அப்புறம் நடந்ததை சொல்லவும் வேண்டுமோ!!

  ReplyDelete
 53. பிரம்மன் மறந்த பிரதேசம்: Usual Tex action package with a triangle love concept..Interesting..Net & Sheeva ending disappointing..
  ஆனால் எடிட்டர் அவர்களின் கீழ்கண்ட இறுதி வசனங்கள், முக்கோண காதல் உறவின் முடிவை ஏற்று கொள்ள செய்து விடுகிறது
  Tex: "ஆனால் பாழாய்ப் போன இந்தக் காதல் என்று வரும் போது, மனிதனின் சிந்தனை தரி கெட்டு தான் போய் விடுகிறது..
  "காதல் மனைவியை மீட்கும் வேகம் நேட்க்கு! காலமெல்லாம் காதலித்தவள் கிடைக்கவில்லையே என்ற ரௌத்திரம் ஜீஸஸ்க்கு"

  Super dailouges sir...

  ReplyDelete
  Replies
  1. Dasu Bala : டெக்ஸ் கதைகளில் இண்டு இடுக்கில் புகுந்து வசனங்களில் ஏதாவது ஸ்கோர் செய்தால் தவிர, canvas முழுவதிலுமே டெக்ஸ் தவிரே வேறு யாருக்கும் இடமிராது ! So கூடுதலாய் கவனம் தந்திடத் தவறி விட்டால் - நாம் பணி செய்ததற்குத் துளி கூட அடையாளம் இல்லாது போய் விடும் !

   Delete
 54. அட்டைபடத்தில் உள்ள நம் தல ஒரு சாயலில் Clint eastwoodயும் மற்றொரு சாயலில் Terence hillயும் கொண்டிருப்பது போல தெரிவது எனக்கு மட்டும்தானோ ??

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : தர்மேந்திரா ; கிளின்ட் ஈஸ்ட்வுட் ; டெரென்ஸ் ஹில்...அட....தலைக்கு டூப் போட இத்தனை பேர் ரெடியா ? :-)

   Delete
 55. வேலை பளு காரணமாக இன்னும் படிக்க தொடங்கவில்லை ! ஒரு glance புரட்டி பார்த்ததோடு சரி !ஹும்!

  ReplyDelete
 56. வானமே எங்கள் வீதி -3 இந்த வருடமே தமிழில் வருவது மிக்க மகிழ்ச்சி ! Flipcartல் நம் காமிக்ஸ் கிடைப்பது ஆஹா !

  ReplyDelete
 57. டியர் எடிட்டர் ஸர்ர்,
  கிட் ஆர்டின் குழு வருவது, " வரனமே எங்கள் வீதி" ஆல்பம்3 வருவதுதுள்ளி குதிக்க வைத்தரலும் " ஒற்றை நொடி ஒன்பது தோட்டர" அடுத்த வருடம் வருவது கொஞ்சம் வருத்தம்தரன். Flip kart.com இலும் நம் இதழ்கள் கிடைக்க வழி செய்ததுக்கு என் வரழ்த்துகள் ஸர்ர்.

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சார்.!வானமே எங்கள் விதி வருவது குறித்து ரெம்ப சந்தோசம்.!திமிர் இருந்தாலும் வசிகரம் செய்யும் ஹன்னாவை காண ஆவலோடு உள்ளேன்.சார் இந்தமாதிரி சுவராசியமான கதைகளை தொங்கலில் விட்டால் பந்தியில் இருந்து பாதியில் எழப்பிவிட்டமாதிரி கஷ்டமாக உள்ளது.! வருடகணக்கில் காத்துக்கிடப்பது எங்களுக்கு ஒத்துவராத சங்கதி.!!

   Delete
 58. எதிர்பார்த்தது , எதிர்பார்த்தப்படியே நடப்பது சில சமயம் ஏமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. லெfப்ட்ல இண்டிகேட்டர் போட்டு , ரைட்ல கையப்போட்டு, நேரே போகும் பாணி சல சலப்பை ஏற்படுத்தினாலும் , ரோலர் ஹோஸ்டரில் செல்லும் த்ரில் அதில் இருந்ததை மறுக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. Meeraan : அந்த த்ரில் factor மிஸ்ஸிங் அல்லவா ? :-)

   Delete
 59. ஒக்லஹோமா நேற்று இரவு 12 மணிவரை உட்கார்ந்து படித்து விட்டேன்.சூப்பர்.! புது கதைகளம்.சும்மா புரட்டிக்கொண்டுதான் இருந்தேன்.இரண்டு பக்கங்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று நினைத்து புரட்டினேன்.கதையின் விருவிருப்பு என்னை மெய்மறக்கச்செய்து உள்ளே இழத்துவிட்டது.ஆசிரியரின் மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது.கலர் மற்றும் சித்திரங்கள் அருமை.!தலைப்பை மாற்றிஇருந்தால் கதையின் உயிரோட்டம் குறைந்துவிடும்.!தலைப்புஆசிரியர் ஏன் பிடிவாதமாக இருந்தார் என்று புரிந்தது.!எனக்கே கொஞ்சம் இடம் கிடைத்த மாதிரி நினைப்பு.!கார்சனின் கலகலப்பு,பக்கத்து வீட்டு இளம் பெண் போல் அழகு தேவதை இவைகள் அனைத்தும் கதையை மெருகேற்றின.!அவ்வப்போது வந்து கடுப்பேற்றும் கி.நா.வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வாயில்போட்டவுடன் கரைந்து போகும் குளுக்கோஸ் போல்எளிமையாக சந்தோஷமாக உள்ளது.!கி.நா.கடுக்கா மிட்டாய்,சீடை,போன்று படித்துவிட்டு தல கதையை படிக்கும்போதுதான் இதன் எளிமை&அருமை புரிகிறது.மீதி படித்த பின்பு..................!

  ReplyDelete
  Replies
  1. *நானும் உங்கள் நிலையில் தான் உள்ளேன் MV சார் ...முதல் நாள் , வெள்ளி இரவு அரை மணிக்கு ஒரு தடவை பதிவு வந்துள்ளதா ???என ரீஃப்ரெஸ் பண்ணி கொண்டே இருந்ததால் சரியாக தூங்கல....சனிக்கிழமை ஒரு வழியாக ,அதிர்ஷ்டவசமாக முதல் கமெண்ட போட்டுவிட்டு , சர ஒரு ஒரே மணி நேரம் தூங்கலாம்னா....மாயாவி சார்" சைக்கிள்ல கிரேட் ரேஸ் போனேன் , நிலத்திற்கு பதில் புத்தகம் கிடைத்தது "- என போட்டு அதற்கும் ஆப்பு வைத்து மகிழ்ந்தார் ...
   சரின்னு கிளம்பி 9.55க்கே என் கடை முன் போய் நின்று கொண்டேன் , கொரியர் பாயை எதிர் பார்த்து ....சரயாக 10.00க்கு பார்சல் வந்து , பர பரன்னு பிரித்து அட்டை படத்தை , உள் பக்கத்தில் எப்படி வந்திருக்கும் என பார்த்து ரசித்த வண்ணம் இருந்தேன் .. .போன் ரிங்கியது..யார்னு பார்த்தால் சேலம் இளமாறன் ......புதிய பேருந்து நிலயம் எதிரே உள்ள தன் ஆபீசுக்கு என் கடை வழியே தான் தினமும் செல்வார் .. .." என்னா டெக்ஸ் தினமும் 10.15கால் ஆனா கூட வர மாட்டீர்கள், இன்று முன்பே வந்து டென்சனா ரோட்டையே பார்த்து கொண்டு இருந்தீர்கள் , கொரியர்க்காக தானே ...புக் வந்துட்டதா ?"- எனக்கேட்டு , என் வண்டவாளத்தை - ஓக்லஹோமா தண்டவாளத்தில் ஏற்றினார் ..நான் கொஞ்ச நேரமாகவே போனு ,ரோடு , போனு,ரோடு ....ன்னு மாறி மாறி டென்சனாக பார்த்து கொண்டு இருந்ததை , பைக்கை நிறுத்தி கொஞ்ச நேரம் ரசித்து சென்றுள்ளார் ....ஹூம் .
   *சனிக்கிழமை எப்போதும் போல கூட்டம் புத்தகத்தை அவ்வப்போது தொடத்தான் முடிந்தது ...லஞ்ச் டைம்ல எப்படி தூங்கி போனேன் என எனக்கே தெரியலை.....இரவு வீட்டுக்கு வந்து ..தூக்க கலக்கத்தில் சரின்னு கொஞ்ச நேரம் படிக்கலாமே என ஆரம்பித்து 200பக்கம் தாண்டிட்டேன்...ஓக்லஹோமா ....இங்கே அப்படியே உங்கள் கமண்ட காப்பி+பேஸ்ட்........

   Delete
  2. Madipakkam Venkateswaran & சேலம் Tex விஜயராகவன் : தமிழ் சினிமாவில் ஊறிப் போன நமக்கு அந்த ரேக்ளா ரேஸ் சீன்கள் உற்சாக விசில்களைக் கொணர்வதில் வியப்பில்லை தான் !! அதே போல Ohlahoma கிளைமாக்ஸ் பக்கங்களில் வரும் அந்த ஒற்றைக்கு ஒற்றை மோதலில் 'தல'யின் தாண்டவம் செமையாக இருப்பதாய்த் தோன்றியது எனக்கு !

   Delete
  3. மமதிய வணக்கம் சார் ...இப்போது தான் மீண்டும் ஓக்லஹோமா ..தொடர்கிறேன் ..தலையின் தாண்டவமா ...ஆகா...மீண்டும் ஒரு கழுகு வேட்டை கிளைமாக்ஸா..சார் ...அப்படீன்னா பட்டையை கிளப்புமே.. (ஐந்து விசில் அடிக்கும் சிறுவன் படங்கள் -நன்றி மாயாவி சார் )

   Delete
  4. டெக்ஸ் விஜய்.!ஒருவகையில் உங்ளைப்போன்ற தீவிரமான வாசகர்களுக்கு என்னை போன்ற வாசகர்கள் நன்றி கூறவேண்டும் .எங்களுக்கும் இதைபோன்ற மெகா டெக்ஸ் இதழ்கள் மீது தீராக்காதல் இருந்தாலும்.,அதை வெளியில் காட்ட தயக்கம் இருந்தது.அதை நீங்கள் எடிட்டரை தொடர்ந்து நச்சரித்ததும் ஒரு காரணம் எனவே உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.!!!

   Delete
  5. ஓவ் உங்கள் நன்றியை குண்டு புக் வேண்டுவோர் சங்க நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம் ...MV சார் ....

   Delete
  6. @ Friends : இன்னொரு குண்டு புக் காதலரைக் காணலியே கொஞ்ச நாளாய்..!

   Delete
  7. @ Friends : எடி கேட்கும் அந்த காதலர் யார்..? ஆதி,சிபி,ப்ளு பெர்ரி...ம்...(நகம் கடிக்கும் யங் மேன் படம் ஒன்று)

   Delete
  8. @ மாயாவி

   எடிட்டர் கேட்கும் அந்த கு.பு.காதலர் - விஸ்கிசுஸ்கி எ.எ.கணிப்பு!

   Delete
 60. ////Caption எழுதும் போட்டிக்கான முடிவை அடுத்த ஞாயிறு பதிவில் பார்ப்போமே? ////

  - இது போன பதிவில் எடிட்டர் சொல்லியிருந்தது!

  இன்று ஒரு பதிவை மனதில் வைத்துத்தானே அப்படிச் சொல்லியிருப்பார்?

  விடமாட்டோம்ல? (வெடிச் சிரிப்புச் சிரிக்கும் வீரப்பாவின் படங்கள் ஐந்து - நன்றி: மாயாவி)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹஹஹ.............ஈரோடு விஜய்..!உங்களுக்கு கம்ப்யூட்டர் மூளை.! ஆசிரியரின் பதிவை அரசு கெஜட்டில் வந்த உத்தராவாக பாவித்து நடைமுறைபடுத்திறீங்க.!சூப்பர்.!!!

   Delete
 61. சார். ..அருமை ..அருமை ...நேற்று மாலை கொரியர் ஆபிஸ் சென்று புத்தகத்தை வாங்கி சந்தோசத்தை ..பரபரப்பை அடக்கி கொண்டு இரவு பத்து மணிக்கு தான் கவரையே பிரித்தேன் ...சூப்பர் ....ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்து கொன்டு ...பிறகு ஹாட் லைன் ...சி சி.வயதில் ...வாசகர் கடிதம் ...தல புராணம் ...விளம்பரங்கள் என லயித்து ..படித்து ...டெக்ஸின் முதல் சித்திர கதையை முதலில் சித்திரங்கள் எப்படி என்று புரட்டி பார்க்கலாம் என்று புரட்டினால் புரட்ட ..புரட்ட ..புரட்ட கதை வந்து கொண்டே இருக்கிறதே தவிர அடுத்த கதையை காணோம்...இவ்வளவு பெரிய டெக்ஸ் கதையாஆஆஆ என வாயை பிளந்தேன் ..அந்த ஒரு கதையை போட்டு இருந்தாலே சிறப்பிதழ் போல தான் இருக்கும் போலிருக்கிறது ...மூன்று சித்திர கதைகளின் ஓவியம் ...அச்சு தரம் அனைத்தும் அட்டகாசம் ...சார் ...இனி படித்து விட்டு வருகிறேன் சார் ....

  ReplyDelete
  Replies
  1. தலைவரே.! மிகப்பெரிய கதைதான் . ஆனால் பக்கங்கள் போனதே தெரியவில்லை.அவ்வளவு விறுவிறுப்பு.!!!

   Delete
  2. இத்தனை பக்கங்கள் இருந்தது கூட நினைவில்லை....காலரை தாக்கி விட்டு கொள்ளுங்கள்...அல்லது காலர் தூக்கிய படம் ஒன்று மாயாவி சார்பில் பார்சல் ..

   Delete
  3. Paranitharan K : தலீவர் ஹேப்பி என்றால் தொண்டனும் ஹேப்பி !

   Delete
 62. டெக்ஸ் துப்பாக்கியில் குண்டு தீரவே தீராதா என்று ரொம்பவே வருத்த பட்ட நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி... பிரம்மன் மறந்த பிரதேசம் கதையில் டெக்ஸ் துப்பாக்கியில் குண்டு தீர்ந்து விடுகிறது... ஆனால் அதை கதாசிரியர் எவ்வாறு அமைத்துள்ளார் என்பதில் தான் Twist/சுவாரசியம் உள்ளது....
  கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.....
  இனிமே யாரும் கேட்க முடியாது, "டெக்ஸ் துப்பாக்கியில் குண்டு தீரவே தீராதா" என்று.....

  ReplyDelete
  Replies
  1. Dasu Bala : ஜெட் வேகத்தில் படித்து முடித்து விட்டது போல் தெரிகிறதே ?!!

   Delete
  2. Sir.. Yet to start "ஒக்லஹோமா"...

   Delete
  3. //பிரம்மன் மறந்த பிரதேசம் கதையில் டெக்ஸ் துப்பாக்கியில் குண்டு தீர்ந்து விடுகிறது... ஆனால் அதை கதாசிரியர் எவ்வாறு அமைத்துள்ளார் என்பதில் தான் Twist/சுவாரசியம் உள்ளது....///

   ஒருவேளை... எதிரிகளையெல்லாம் துப்பாக்கியால் அடித்தே கொன்று விடுகிறாரோ?!

   Delete
 63. சார் எதை சொல்ல எதை விட ....குழப்பமில்லா கதைக்குள் இந் த ஒரே ஒரு குழப்பம் மட்டுமே.
  மின்னலென விரையும் களம் கொண்ட புத்தகத்தை இவ்வளவு பக்கங்கள் இருந்தும் கீழே வைக்கவே மனமில்லை.
  அன்று டிராகன் நகரம் படித்தது போல...எவ்வளவு காலம் கழித்து மீண்ட சந்தோசம்....நீங்கள் என்னதான் வாக்குறுதி தந்திருந்தாலும் மூன்று கதைகள் ...டெக்ஸ் மட்டூமே ....அலர்ஜிதான் என எ ண்ணிய என்னை தட்டி போட்டது மட்டுமின்றி கட்டி போட்டது.
  அட்டகாசமான வில்லன் இல்லை.அதற்கீடாய் அற்புதமான கதா பாத்திரங்கள்...அனைவரும் தூள் கிளப்ப அனல் பறக்கும் வசனங்கள்....உன் சொற்பொழிவு முடிந்தால் நான் தயார் என இயல்பான நகை கலந்த நறுக் வசனங்கள் அற்புதமான நிகறற்ற கடைசி 30
  பக்கங்கள் .....அந்த மனக்கண் முன்னே ஓடும் முடிவுரை ....ஒற்றை வரியில் சொன்னால் அற்புதம் சார்
  டைகர் கழக கண்மணிகளே படிச்சு சந்தோச பட்டா மட்டும் போதாது ....டெக்ஸ் பின்னாடி வாங்கப்பா....

  ReplyDelete
  Replies
  1. சண்டை பயிற்ச்சி யார் சார் ...இயல்பான கட்டங்கள் ...ஓவியுக்கு ஒரு ஓ....

   Delete
  2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //அன்று டிராகன் நகரம் படித்தது போல...எவ்வளவு காலம் கழித்து மீண்ட சந்தோசம்..//

   டெக்சின் கதைக் கடலுக்குள் குதிக்கக் குதிக்க முத்துக்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் !

   Delete
  3. முத்துக்களாகவே தான் தருவீர்களா சார் ??? இந்த வைரம் ,மாணிக்கம் லாம் எப்போது சார் ....ஹி..ஹி..ஹி.

   Delete
  4. சண்டை பயிற்ச்சி யார் சார் ...இயல்பான கட்டங்கள் ...ஓவியுக்கு ஒரு ஓ....

   Delete
  5. இது போல கதைகள் இருந்தால் டெக்சுக்கு தனி இதழே போடலாம்....டெக்ஸ் காமிக்ஸ் ...okவா

   Delete
  6. இது போல என்றால் தனி தண்டவாளத்தில் டெக்ஸ் காமிக்ஸ் தயாரா

   Delete
 64. அன்புள்ள ஆசிரியர் ஐயா,

  "The Lion 250"-ஐப் கையிலெடுத்துப் பார்க்கையில், மீண்டும் LMS Book 1-ஐ கையில் ஏந்தியது போன்ற ஒரு உணர்வு! அதே தரம், அதே எடை ;) கடுப்பைக் கிளப்பும் அட்டை டிசைனையும், பாப்பா புத்தகங்களை நினைவுறுத்தும் முதல் பக்கத்தையும் (this book belongs to... seriously?) மட்டும் கடந்து விட்டால், உதட்டின் மேல் ஒரு நிரந்தரப் புன்னகை ஒட்டிக் கொள்கிறது! வாவ்... அட்டகாசம்! வாழ்த்துகள்! :)

  பின்னட்டைக் குறிப்பின் படி, 110 பக்கங்களுடன், இருப்பதிலேயே மிகச் சிறிய கதையான முகமில்லா மரண தூதனை படிக்க முடிவெடுத்து, அதை உள்ளே தேடு தேடென்று தேடினேன். எந்தப் பக்கத்தை திருப்பினாலும் மஞ்சளின் ஆதிக்கம், ஒரே பக்கத்தில் அதிக நேரம் நின்று கொண்டிருந்தால், டெக்ஸ் என் தாடையிலும் ஓங்கிக் குத்தி விடுவாரோ என்று லேசாய் ஒரு நடுக்கம். பின்னட்டையையில், மு.ம.தூ.-வின் பெயர் மூன்றாவதாக போடப் பட்டிருந்ததால், புத்தகத்தின் - கடைசி கதையின் - கடைசி பக்கத்திற்கு சென்று, அதில் இருந்து 110-ஐக் கழித்துக் கொண்டு, 570-ம் பக்கத்திற்கு சென்றால், தாடையில் "ணங்"-கென்று ஒரு குத்து விழுந்தது. பதறி அடித்துக் கொண்டு, 570-க்கு முன்னே சில பக்கங்கள் மற்றும் பின்னே சில பக்கங்களில் மு.ம.தூ-வைத் தேடி, "கும், சத், மடேர், டுமீல்களிடம்" இருந்து தப்பி, மீண்டும் பின்னட்டைக்கு மரண பயத்துடன் ஓடினேன். "கதை ஆர்டரை மாற்றிப் போட்டிருப்பார்களோ?" என்று மந்தமாக ஒரு லாந்தர் விளக்கு எரிந்தது. முதல் கதை ஏழாம் பக்கத்தில் தொடங்குகிறது - பெயரை பின்னட்டையுடன் சரி பார்த்தேன் - மிகச் சரியாக பொருந்தியது - ஒக்லஹோமா! நல்லது, ஏழுடன் 338-ஐக் கூட்டி, 346-ம் பக்கத்திற்குச் சென்றேன். அப்பாடா... படப்பொட்டி ஒருவழியாக கிடைத்தே விட்டது!

  ஆனால், கொஞ்ச நேரம் கதையில் லயிக்கவே முடியவில்லை. இந்த புக்கு இன்னார் இன்னாருக்கு பாத்தியப் பட்டது என்று முதல் பக்கத்தை வீணடித்ததற்குப் பதிலாக; இந்த இந்த பக்கத்தில், இந்த இந்த கதை ஸ்டார்ட் ஆகிறது என்று போட்டிருக்கலாமே என்று கோவம் கோவமாக வந்தது. "சரி நாம கோவப்பட்டு என்ன ஆவப் போகுது?"-ன்னு மனசை தேற்றிக் கொண்டு கதையைப் படித்தேன் - வழக்கமான டெக்ஸ் கதை. ஆனால், டெக்ஸிடம் நாம் எதிர்பார்ப்பதும் அதைத் தானே? :) தமிழில் வெஸ்டர்ன் படிப்பது தனிச் சுகம்! அதுவும் டெக்ஸ் கதைகளில் மட்டும் உங்கள் மொழிபெயர்ப்பில் ஒரு இனம் புரியா ஈர்ப்பு காணப் படுகிறது - மீண்டும் வாழ்த்துகள். (ஆனால், அந்த ஈர்ப்பு பௌன்சரில் சுத்தமாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து).

  லயன் 250-ஐ, ஸ்பெஷலாக போட வேண்டும் என்பதற்காக, மூன்று கதைகள் போட்டு, வாசகர்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியதற்குப் பதிலாக, "ஒக்லஹோமா"-வை மட்டும், இதே ஹார்ட் பௌண்டில்; ஆனால், A4 சைஸில் வெளியிட்டிருந்தால் இது ஒரு சூப்பர் ஸ்பெஷலாக அமைந்திருக்குமே என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லை!

  இருப்பினும், சிறப்பாக ஒரு இதழை தயாரித்து அளித்ததிற்கு மிக்க நன்றி! :)

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கதைகள் மொழி பெயர்ப்பு என்றாலே ஆசிரியர் சற்றே தனிகவனம் செலுத்துகிறார் என்பது 101% அக்மார்க் உண்மை நண்பரே கார்த்திக். இதோ ஆசிரியரின் மொழி பெயர்ப்பு பற்றி என்னுடைய மற்றும் நண்பர்களின் விமர்சனங்கள் .....
   //// *"உண்மையை எடுத்துரைத்தவனுக்கு
   இதுதான் கதி என்கிற அளவுக்கு தரம் இறங்கிப்
   போய்விட்ட இந்த சமுதாயத்திற்காக நான் பேப்பரையும்,
   மசியையும் வீணடிக்கத் தயாரில்லை",
   *"அவர், சாந்தமானவர்தான்- ஆனால் ரோசத்தில்
   யாருக்கும் சளைத்தவரில்லை",
   *"!பணி புரியப் போவது எனக்கல்ல -
   சத்தியத்திற்கு"
   ,
   *"கொல்லப்பட்ட நவஜோ இளைஞர்கள் பிக் எல்க்கின்
   பிரிவை சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்குரிய
   தண்டனையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கே
   உரியது",
   --- -போன்ற அமரத்துவம் வாய்ந்த டயலாக்குகள் மற்றும்
   அற்புதமான மொழி பெயர்ப்பும் பழி வாங்கும் புயலை வெகு
   சுலபமாக முதல் இடத்தில் அமர்த்தின.///
   ////டெக்ஸ் கதைகளுக்காகவே எடிட்டர்
   மெனக்கிட்டு எழுதுகிறாரோ ///
   ///டெக்ஸ் கதைகள் நிச்சயமாக
   ஆசிரியரின் செல்லக் குழந்தைகள்///----

   Delete
  2. //பின்னட்டைக் குறிப்பின் படி, 110 பக்கங்களுடன், இருப்பதிலேயே மிகச் சிறிய கதையான முகமில்லா மரண தூதனை படிக்க முடிவெடுத்து, அதை உள்ளே தேடு தேடென்று தேடினேன். எந்தப் பக்கத்தை திருப்பினாலும் மஞ்சளின் ஆதிக்கம், //
   +1 Same feeling friend

   Delete
  3. @சேலம் Tex விஜயராகவன்

   //மீசை கூட சரியாக அரும்பாத இளைஞர்கள் - விளையாட்டும், உல்லாசமுமாக வாழவேண்டிய வயது....
   பெற்றோர்களின் எதிர்கால நம்பிக்கைச் சின்னங்கள் - இந்த வம்சத்தின் வாரிசுகள் - சலனமற்று பிணமாக கிடக்கிறார்கள் ...//

   //சாவிற்கு பழிவாங்க வேண்டிய கடமை உருவாகியிருக்கிறது//

   //தாங்கள் திரும்பி வருவதை எதிர் பார்த்து பொறுமையோடு காத்துக்கிடப்பான் இந்த கிரேட் ஸ்டாக்//

   - பழி வாங்கும் புயல். இன்றும் என்னுடைய fav. லிஸ்ட்-ல் இடம் பிடித்து, கிட்டத்தட்ட 20-25 முறை படித்தும் அலுப்பேற்படுத்தாத காவியமே.

   இத்தகைய மொழிபெயர்ப்பு இப்போதைய கதைகளில் சற்றே குறைவதாய் எனக்கு (மட்டுமா !?) தோன்றுகிறது...!?!

   Delete
 65. வருடம் 1889
  மாதம்: ஏப்ரல்
  நாள்: 22-ம் தேதி நண்பகல் 11:50

  ஜானதிபதி ஹாரிசன் அரசில் அரசாங்கத்தின் அனுமதியில் கீழ்...'ஓக்லஹோமா' என்னும் புதிய நகரை நிர்மாணிக்க, புது நகரின் எல்லையில் இருந்து, நூறு மையில் தொலைவில் ஒருமுகமிற்கு வரச்சொன்னது அமெரிக்க அரசாங்கம்..! முதலில் இடம் பிடிப்பவருக்கே நிலம் சொந்தம்...என்ற இந்த புதுவகை ரேஸில் பங்குகொள்ள சுமார் வந்துகுவிந்தவர்கள் 50,000 பேர்கள்..! ரஜினி படம் பார்க்க இலவசமாக தியேட்டர் கதவுகள் திறந்துவிட்டது போலவே...பீரங்கி வெடித்து நண்பகல் 11:50 க்கு ரேஸை அரசாங்கமே துவக்கிவைக்கிறது..! அதில் நம்ம 'தல' டெக்ஸ்...என வித்தியாசமான அட்டகாசமான கதைகளம்...(பெரும்முச்சு விடும் பெரிய படம் ஒன்று) வரலாற்று குறிப்புடன் ஒரு பதிவுக்கு தயாராகிவிட்டேன்...ஆனால் எல்லோருக்கும் புத்தகம் கிடைத்த பின்னரே பதிவு..ஹீ..ஹீ..! (கள்ளசிரிப்பு சிரிக்கும் வால்பையன் படங்கள் நான்கு)

  ReplyDelete
  Replies
  1. @ ALL : புது மண்ணில் பிளாட் பிடிக்கும் இதே plot -ஐ கொண்டொரு லக்கி லூக் கதையும் உள்ளது...! 2016-ல் அதைப் பார்ப்போமா ?

   Delete
  2. வாவ் அருமையான அறிவிப்பு..! (அதிரடி பொடியன் துள்ளி குதித்து இஸ்டத்துக்கு குதிரையை விரட்டும் படங்கள் விதவிதமாய்)

   Delete
  3. ///@ ALL : புது மண்ணில் பிளாட் பிடிக்கும் இதே plot -ஐ கொண்டொரு லக்கி லூக் கதையும் உள்ளது...! 2016-ல் அதைப் பார்ப்போமா ?////---வாவ் சூப்பர் நியூஸ் சார். . ...இந்த திரைக்கதை யில் டைகரு நடிக்கலயா? சார் ....முன்பே இதுபோல் ஒரே திரைக்கதையில் நம்முடைய மூன்று டாப் நாயகர்களும் அவரவர் ஸ்டைலில் கலக்கி இருப்பார்கள்....
   திரைக்கதை - இரும்பு பாதை போடுவது...
   டெக்ஸ்- இரும்புக்குதிரையின் பாதையில் ..
   டைகர்-இரும்புக்கை எத்தன் (4பாகங்கள்)...
   லக்கி லூக்- பூம்பூம் படலம் ...

   Delete
  4. மாயாவி சார் அந்த 3அட்டை படங்களையும் இங்கே க்ளிக்"கறது ...

   Delete
  5. ஒரு வாரம் கழித்து இதைப்பற்றிய பதிவொன்றைப் போட்டுத் தாக்குங்கள் மாயாவி அவர்களே! காத்திருக்கிறோம்....

   Delete
  6. @ FRIENDS : தகவல் தொடர்பை உறுதிப்படுத்துவதும் , பயணப் பாதைகளை அமைப்பதும் ; புதிய பிராந்தியங்களை நிர்மாணிப்பதுமே வன்மேற்கில் தலையாய பணிகளாய் இருந்து வந்ததால் - நம் கதைகளின் ஒரு கணிசமான பகுதி அதன் மீது focus செய்திருப்பதில் வியப்பில்லை ! Land rush பற்றிய இந்த தீம் நமக்குப் புதுசு என்பதாலேயே "ஒக்லஹோமா" கதையினை இந்த இதழின் பிரதானக் கதையாக்கிட முனைந்தேன் !

   Glad it worked..!

   Delete
  7. இந்த வரலாற்றில் என்ன சூப்பர் சுவை என்றால்...

   ஜனாதிபதி பதவி ஏற்ற Benjamin Harrison மார்ச் 4-ம் தேதி 1889. நம்மூர்ல அரசியல்வாதிகள் பதவிக்கு வரும் முன் அது இலவசம், இது இலவசம் என அறிவிப்பை அள்ளி தெளிப்பார்கள். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஆன கையோடு ஹாரிசன்...வந்த அன்றே...இலவசமாக வழங்க உத்தரவிட்ட நிலத்தின் அளவு கேட்டால் தலைசுற்றுகிறது.அதை விட ஒரு விவசாய குடும்பத்திற்கு அவர் ஒதுக்கிய (டெக்ஸ் வரைபடத்தில் காட்டும் 1027) அளவு கேட்டால் சுத்தம்..!

   Delete
 66. அன்பு ஆசிரியருக்கு...
  DTDC கூரியர்மாதிரி ஒரு நொண்டி குதிரையை நம்பி இரண்டு நாட்களாய் BP ஏறிக்கொண்டிருக்கிறது.அதுவும் ஞாயிறு மத்தியில் வருகிற மாதிரி நீங்கள் வேறு புண்ணியம் தேடிக்கொண்டீர்கள்.
  அடுத்த முறை வேறேதேனும் வழி பண்ணினால் தான் நமக்கு சரிபட்டு வரும்.

  *"வரும் ஆனா வராது"*

  என்ற ஆட்டத்துக்கெல்லாம் நான் வரலை சாமி..

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASHA TK : இதழ் தயாராகும் நாளை நிர்ணயம் செய்வது நானல்ல - பணிகள் நிறைவடையும் தருணம் ! அது வெள்ளிக்கிழமையாய் அமைந்தால் அதனை நான் மாற்றியமைப்பது எவ்விதமோ ?

   தவிரவும் இங்குள்ள எந்தக் கூரியர் கம்பெனிகளில் 3 பணியாட்களுக்கு மேல் வேலையாட்கள் கிடையாது ! வாரத்தின் எந்த நாளில் பிரதிகளை அவர்களிடம் ஒப்படைத்தாலும் இதர புக்கிங்களுக்கு மத்தியில் தான் நமது இதழ்களை கையில் எடுப்பார்கள் ! ST கூரியரில் அனுப்பியும் இங்கேயுள்ள மதுரைக்கே இன்னமும் பட்டுவாடா ஆகாத நிலை தான் நிதர்சனம் !

   சில விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் உள்ளவை ; பல - அவ்விதமல்ல !

   Delete
 67. புத்தகத்தைக் கைப்பற்ற நாளை மாலையாகிவிடும்... ஹூம்!

  லலலல...
  நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...
  இன்று எந்தன் 'தல'வன் இல்லை சென்று வா நிலா...
  ( நிலாவைப் பார்த்து பூனை ஒன்று கொட்டாவி விடும் படங்கள் நான்கு! நன்றி: மாயாவி)

  ReplyDelete
  Replies
  1. ஹி. ஹி.. நாங்கள் முதல் கதை படித்து முடித்து விட்டோமே ..

   Delete
  2. ஹி. ஹி.. நாங்கள் முதல் கதை படித்து முடித்து விட்டோமே ..

   Delete
  3. ஹி. ஹி.. நாங்கள் முதல் கதை படித்து முடித்து விட்டோமே ..

   Delete
 68. புக் ஏன் இன்னும் வரலைன்னு கேட்டு load more கமெண்ட்ஸ் போடுறாங்க...இல்லாத போட்டி,பரிசுன்னா முட்டியடிச்சு கமெண்ட்ஸ் வருது...'தல' ஏன் இன்னும் வரலைன்னு load மறியல் போராட்டம் நடக்குது...பொக்கிஷமா ஒரு குண்டு புக் வந்து ரெண்டு நாள் ஆச்சி....200 தாண்ட முக்குதே...என்னதான் நினைக்கிறாங்கன்னு புரியலையே..! மொக்கை (எனக்கு அப்படியில்லை) கதைக்கு வர்ற கூட்டம்..'சக்க' கதைக்கு காணமே.. :-(என்னமோ போட மாதவா..)நன்றி:MV

  ReplyDelete
  Replies
  1. Mayavi Siva sir...all r busy in reading Thala book

   Delete
  2. மாயாவி சார்.!எல்லோரும் படிப்பதில் மூழ்கிவிட்டனர் என்று நினைக்கின்றேன்.ஒரு முறை படித்தால் இந்தபுத்தகத்திற்கு போதாது .இன்னொரு முறை ரசித்து படிக்கவேண்டும்.!

   Delete
  3. mayavi.siva : சில சமயங்களில் இலக்கை விட, அதனை நோக்கிய பயணத்திலும், அதற்கான எதிர்பார்ப்பிலும் தான் சுவாரஸ்யம் ஜாஸ்தியோ என்ற எண்ணம் எனக்குத் தலைதூக்குவதுண்டு ! Another of those days !!

   Delete
  4. இதை நானும்(தாரக மந்திரம்) யோசித்தேன்...! ஆனால் எதோ ஒன்று குறைகிறது..! பார்ப்போம்..!

   Delete
 69. இனிமேல் டெக்ஸ் கதைகள் இதுமாதிரியே பைண்டிங்கில் வந்தால் எப்படி இருக்கும்.!(சிறுவயதில் டிராகன்நகரம்,இரத்த முத்திரை போன்று ஸ்பெஷல் என்றாலே ஒருவடிவம்)

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : பட்ஜெட்டில் பெரிய பொத்தல் விழுந்து போகும் சார்..!!

   Delete
 70. dear editor,

  so far i have felt that minnum maranam was the best packaged book ever in tamil comics. But, you have thrashed my belief and within months of creating minnum maranam, produced this book, which i feel is the best ever in tamil, nay in India.

  Here are some glitches:

  1. kindly avoid the format of "this book belongs to.....". It looks downright childish. When iam able to show this book to my fellow mumbaikars proudly, the first page is a definite shocker.

  2. Same is the case with producing the hot line and singathin siru vayathil in a Box with old fashioned design. i.e. the box structure used to the old marriage invitations in Pink + yellow colour used to have the same pattern of designs.

  when megala comics was launched in Tamil in 1995, i had big expectations. the adverts were also classy.

  But, cometh the day, when i oped the editorial page, Vallaban's daughter started the editorial with something like anbu chellangale, that was a major put off. She thought that only kids are reading comics. that primarily was one of the reasons why it couldn't sustain in the market.

  Barring the numerous errors in the index, i have counted close to 15 errors, and the first page images, this is the best ever book published by you.

  as we caan see, progressively you are setting the bench marks higher and higher. So, if you can avoid these, then it will be truly a world class product.

  question: before publishing the index, can't you cross check with some one? it was one of the classic example where a fan boy wants to show off, lacking the basics.

  ReplyDelete
  Replies
  1. Also, the idea of producing the original cover images as the title pages for each story was a master piece. kindly continue the same here after.

   Delete
  2. Arun SowmyaNarayan : Thank you...! Index எழுதியவரை விட, அதனை சரி பார்க்காது வெளியிட்ட என்னையே தான் பொறுப்பு சாரும் ! வரும் காலங்களில் இது போன்றவற்றில் கூடுதல் கவனம் காட்டுவேன் - நிச்சயமாக !

   Delete
  3. Arun SowmyaNarayan : புதிய உயரங்களை நம் பாதைகளில் நாமே அமைத்துக் கொள்வது தான் இந்தப் பயணத்தில் அயர்ச்சி தோன்றாதிருக்கச் செய்யும் மருந்து என்பது எங்களது நம்பிக்கை !

   இது போன்றதொரு குண்டு இதழின் இடத்தில் நார்மலான இதழ்களாய் ஒரு 6/7 தயாரித்திட நினைத்திருப்பின், எங்கள் வேலைகளும் சரி ; விற்பனை சாத்தியங்களும் சரி - சுலபமாய் இருந்திருக்கும் தான் ! ஆனால் ஒரு impact உருவாவது இது போன்ற big bang இதழ்களில் தான் எனும் போது - இதுவும் ஒருவிதத் த்ரில்லாக அமைந்து விடுகின்றது !

   Delete
  4. உண்மைதான் சார். ஆனால்,

   லயன் கோடை மலர் 1986

   லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்

   டிராகன் நகரம்

   டாப் டென் ஸ்பெஷல்

   மில்லேனியம் ஸ்பெஷல்

   மெகா ட்ரீம் ஸ்பெஷல்

   ஜம்போ ஸ்பெஷல்

   கம்பேக் ஸ்பெஷல்

   நெவர் பிஃபோர் ஸ்பெஷல்

   மேக்னம் ஸ்பெஷல்

   மின்னும் மரணம்

   இப்போது, 250 ஸ்பெஷல்.


   அடுத்து என்ன? என்ற அயர்ச்சி கலந்த மலைப்பு உருவாவதை நிச்சயமாக தடுக்க முடியவில்லை. ஆனால், இவற்றின் உயரங்கள் கூட கூட உங்களுக்கான பொறுப்பும், எங்களுக்கான எதிர்பார்ப்பும் பன்மடங்கு கூடும்.

   எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஆற்றலை உங்களுக்கு அளிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

   Delete
  5. அருண்&கார்த்திக் சோமலிங்கா சார்.!இந்த புத்தகத்தின் சொந்தக்காரன் என்று முதல் பக்கத்தில் என் பெயரை எழதுவது தஞ்சாவூர் கல்வெட்டுகளில் பதித்தது போல் சந்தோசப்பட்டேன்.!நண்பர்களும் இது குறித்து கருத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.!!!

   Delete
  6. அருண் சார்.,நானும் கடவுளை வேண்டுகிறேன்.!+1

   Delete
 71. ன்னாது? 'This book belongs to .....'வா? அப்படியா கீது?!!!

  எடிட்டர் சார்,

  எங்க ஊர்ல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹோட்டல் இருந்திச்சி. பேரு 'ஹோட்டல் கணேசா ' . அங்க இருந்த எல்லா எவர் சில்வர் டம்ளர்லயும் "இது கணேசாவில் திருடப்பட்டது" அப்படீன்னு carving பண்ணியிருக்கும்! ஆரம்பத்துல "அட! இவங்க கடையில இவங்களே ஏன் திருடணும்?"னு யோசிச்சு மண்டையை பிறாண்டியிருக்கேன். அப்புறம்தான் அவங்களோட புத்திச்சாலித்தனம் தெரிவந்து ஆச்சரியப்பட்டுப் போனேன்! ;)

  அதே மாதிரி..... இனி வரப்போற எல்லா ஸ்பெஷல் இதழ்கள்ளேயும் " இந்த புக்கு ______________ இடமிருந்து திருடப்பட்டது" அப்படீன்னு பிரிண்ட் பண்ணிட்டீங்கன்னா நாங்க அதுல எங்க பேரை எழுதி வீட்டுத் திண்ணையில் வச்சுட்டுகூட வேலைக்குக் கிளம்பிட முடியும் பாருங்க? :D ( முகத்தில் பெருமிதம் பொங்கிடும் பூனைகளின் படங்கள் நான்கு. நன்றி: மாயாவி)

  ReplyDelete
  Replies
  1. //ஆரம்பத்துல "அட! இவங்க கடையில இவங்களே ஏன் திருடணும்?"னு யோசிச்சு மண்டையை பிறாண்டியிருக்கேன். //

   ஹா ....ஹா ....ஹா .....

   Delete
  2. Erode VIJAY : மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு எதிரே இருந்த (இப்போதும் உள்ள ??) ஹோட்டல் மனோரமாவிலும் இதே குழப்பத்தோடு நான் மண்டையைப் பிறாண்டிய காலமொன்று உண்டு ! "இது ஹோட்டல் மனோரமாவில் திருடியது !" என்ற சொம்பின் பெயர்வெட்டைப் பார்த்து விட்டு - கடையின் பெயர்பலகையை திரும்பவும் நான் பார்த்துக் கொண்டது நினைவில் உள்ளது ! உஷார் பார்டிக்கள் ஊருக்கு ஊர் உண்டு போலும் !

   Delete
  3. ' இந்த புத்தகம் திருவாளர் __________ இடமிருந்து (திருட்டுவாளர்) ____________ என்பவரால் திருடப்பட்டது' அப்படீன்னு பிரிண்ட் பபண்ணிட்டீங்கன்னா ஆட்டையைப் போட்ட ஆசாமி யாரென்று என்னிக்காச்சும் ஒரு நாள் நாங்களே தெரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது! ;)

   Delete
  4. அந்த கணேசாவின் மனைவிதான் மனோரமாவா இருக்கும்னு நினைக்கிறேன்! :D

   Delete
 72. @சேலம் Tex விஜயராகவன்:
  //"உண்மையை எடுத்துரைத்தவனுக்கு இதுதான் கதி என்கிற அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்ட இந்த சமுதாயத்திற்காக நான் பேப்பரையும், மசியையும் வீணடிக்கத் தயாரில்லை"//
  வாஸ்தவம் தான் நண்பரே... இருந்தாலும் எழுதாமல் இருக்க மனம் வருவதில்லை! :P

  @Dasu bala:
  நன்றி நண்பரே!

  @ம.பா.வெ:
  //இந்த புத்தகத்தின் சொந்தக்காரன் என்று முதல் பக்கத்தில் என் பெயரை எழதுவது தஞ்சாவூர் கல்வெட்டுகளில் பதித்தது போல் சந்தோசப்பட்டேன்.!//
  அது உங்கள் விருப்பம்! ஆனால், "this book belongs to" என்ற வரி இல்லாமலேயே கூட, உங்கள் பெயரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம், தவறில்லை நண்பரே! :)

  @டம்ளர் திருடன்:
  கணேசா ஹோட்டல் ஓனர் உங்களை தர்ம அடி அடிக்கும் கோல்டன் பிரேம் மாட்டிய ப்ளோ-அப் படம் ஒன்று, "this tumbler belongs to கணேசா ஹோட்டல் முதலாளி, நான் தான் ஆள் தெரியாம எடுத்துட்டேன்" என்று எழுதி கையொப்பமிட்ட வரிகளுடன்! :)

  @?:
  "காதல் கொண்டேன்" சாயலில் இருக்கும், பிரம்மன் மறந்த பிரதேசத்தைப் படித்து முடித்தேன். அருமை! கதைக்கு சம்பந்தமில்லாத தலைப்பை நியாயப் படுத்த, இறுதியில் இடைச்செருகலாய் ஒரு வசனம்! பழைய திரைப்படங்களின் இறுதிக் காட்சியில், டைரக்டர்கள் கர கர குரலில் போதனை செய்வது போல, "படைத்தவரின் வினோதங்களுள் இதுவும் ஒன்றோ, இதை யார் தான் அறிவாரோ, இதற்கு யார் தான் விடை தருவாரோ, நனைந்த கண்களை யார் தான் துடைப்பாரோ, ஒவ்வொரு முறையும் ஏன் தான் இப்படிப் பட்ட வசனங்களுடன் முடிக்கிறாரோ" என்ற ரீதியிலான கேள்விகளுடன் கதையை முடிக்கும் பாங்கு - இப்படி சின்னச் சின்ன எரிச்சல்களைத் தாண்டி, கதை படு அட்டகாசமாக இருந்தது!

  முன்பே சொன்னது போல, பல இடங்களில் வசனங்கள் லயிக்க & சிரிக்க வைத்தன! இப்போதெல்லாம், கார்ட்டூன் கதைகளை விட, டெக்ஸ் கதைகளில் தான் அதிகம் சிரிப்பு வருகிறது! அதற்காக அவர் சிரிப்பு ரேஞ்சர் என்று அர்த்தம் அல்ல! குறிப்பாக, கார்சனின் புலம்பல்கள் & ஜீன் கிழவியை சமாளிக்கும் இடம்! :)

  அடுத்தது, ஒக்லஹோமா வா அல்லது தூக்கப் போலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இந்தக் கேள்விக்கு விடை அளிப்பவர் தான் யாரோ? இயற்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்றோ?

  - முற்றும் -

  ReplyDelete
  Replies
  1. //அடுத்தது, ஒக்லஹோமா வா அல்லது தூக்கப் போலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இந்தக் கேள்விக்கு விடை அளிப்பவர் தான் யாரோ? இயற்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்றோ?

   - முற்றும் - ///

   LOL :D

   //@டம்ளர் திருடன்//

   மிஸ்டர்... நான் டம்ளர் திருடனா? சரி, இருக்கட்டும்! மதுரை மனோரமாவுல மண்டையைப் பிறாண்டிக்கிட்டதா இங்கே ஒருத்தர் எழுதியிருக்காரே, கவனிக்கலையா நீங்க? அவரை என்னன்னு சொல்லுவீங்களாம்? :D

   Delete
  2. @கோல்டன் ஃப்ரேம் விஜய்:
   உங்க குசொம்பு என்கிட்ட செல்லாது! நான் சொல்ல மாட்டேன்! ;)

   மறந்து போன அட்:

   @Raghavan:
   //Road or Perdition? :-) ;-)//
   அந்த புக்கு தமிழில் வருமா வராதா என்ற எனது கேள்விக்கு விடை கிடைத்த பின்னர் தான், உங்கள் கேள்விக்கும் ஒரு வடை கிடைக்கும் என்பது தான் நரகத்தின் நியதியோ?! :P

   Delete
  3. @ கார்த்திக் //அடுத்தது, ஒக்லஹோமா வா அல்லது தூக்கப் போலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இந்தக் கேள்விக்கு விடை அளிப்பவர் தான் யாரோ? இயற்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்றோ?//

   Really laughed out loud (வாய்விட்டுச் சிரிக்கும் படங்கள் பத்து - நன்றி மாயாவி)

   Delete
 73. ஐரோப்பிய கதைகளங்களிலும், கதை சொல்லும் பாணியிலும் ஒரு விதமான அயர்ச்சி உருவாகிறது.

  உண்மையைச் சொல்வதெனின் வானமே எங்கள் வீதி கதை மிகவும் சுமாரான ஒன்று என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. மிகவும் சுமாரான ஒரு ஒன் லைனரை வைத்துக் கொண்டு, நான் லீனியர் பானியில் கதை சொல்கிறேன் என்று அடித்து ஆடுகிறார்கள். சமீபத்தில் வந்த அனைத்து (பெரும்பாலான??) ஃப்ராங்கோ - பெல்ஜிய கதைகளில் இதே தான் பிரச்சினை. (இத்தாலிய கதைகளைப் பற்றி பிறகு பேசுவோம்).

  வானமே எங்கள் வீதியை நேரிடை பாணியில் ஒரு முறை மனதில் ஆர்டர் செய்து படித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

  ஆகவே, இந்த ஐரோப்பிய கதைகளின் ஆதிக்கத்திற்கு ஒரு இடைவெளி (ப்ரேக்) கொடுக்கவாவது அமெரிக்க கதைகளை முயற்சி செய்யலாமே?

  சில மாதங்களுக்கு முன்பாக நீங்கள் அமெரிக்கா சென்று, அங்கே பேட்மேன் கதைகளுக்கு உரிமை பேசியதாக யாரோ சொன்னார்கள் (நீங்கள் தானோ??????!!!!!!).

  அந்த விஷயம் என்ன ஆயிற்று? எப்போது அறிவிப்பு வெளியாகும்?

  ReplyDelete
 74. ஆங் ! சொல்ல மறந்துட்டேன் எடிட்டர் சார்... ////' இந்த புத்தகம் திருவாளர் __________ இடமிருந்து (திருட்டுவாளர்) ____________ என்பவரால் திருடப்பட்டது //// ஒருவேளை மேற்கண்டவாறு பிரின்ட் செய்யும் ஐடியா இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்! ஏனென்றால், ஏதாவது ஒரு புத்தகத் திருவிழா சமயத்தில் உங்களது கையெழுத்துக்காக யாராவது புத்தகத்தை நீட்டினால் தவறுதலாக நீங்கள் அந்த dashல் கையெழுத்துப் போட்டுவிடும் வாய்ப்பும் நிறையவே இருக்கிறது! :P

  ReplyDelete
 75. முகமில்லா மரணத்தூதன் மற்ற இரண்டு கதைகளை விட சித்திரத் தரத்திலும்,வண்ணக்கலவையிலும், தரமான பிரிண்டிங் லும் ஒரு படி மேலே வசீகரிக்கிறது! கதையின் முதல் 17 பக்கங்கள் த்ரில்லின்கான ஒன்று.

  (கீழே உள்ளவை கதையை படித்தவர்களுக்கு மட்டும்)
  முகமில்லா மரணத்தூதன் கதையில் வில்லனாக வருவான் என எதிர்பார்த்தால்,அவன் கடைசி வரை நல்லவனாக சித்தரிக்கப்பட்டிருப்பது எதிர்பாராத வியப்பு! கடைசியில் முகமில்லா மரணத்தூதன், மோடோக்ஸ் பழங்குடியினர் மின்னும் உலோகத்தைப் பற்றி அறியாதவர்கள், ஆகையால் என் உயிரைக் காப்பாற்றிய அவர்களுக்கு பாதுகாப்பாக நான் சேவை செய்வது என் மனதிற்கு திருப்தியளிக்கும் என்பதற்கு பதிலாக, அந்த மின்னும் உலோகத்தைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை மேம்பட செய்திருக்கலாம்?

  இந்த முகமில்லா மரணத்தூதுவனால் யாருக்கும் ஆபத்தில்லை எனும் போது 'முகமில்லா ஒரு நல்லவன்' / "முகமில்லா ஒரு மறுபிறவி..".தலைப்பும் பொருந்தும்தானே...?

  ReplyDelete
 76. சார் முகமில்லா மரணதூதன் படிக்கும் முன்னரே அசத்துகிறது . ஓவியங்களாலும்.....அசத்தும் வண்ணங்களாலும் என்னும் மாபெரும் சந்தோசத்தை பகர்கிறேன்...கோடி கை கூப்பும் படங்கள் ...இரும்பு கையும் முத்திரை மோதிரம் கொண்ட மாயாவி சிவா வேதாளர் கையும்

  ReplyDelete