Powered By Blogger

Monday, January 26, 2015

சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

நண்பர்களே,

வணக்கம். குடியரசு தின வாழ்த்துக்கள் ! விடுமுறை நாளான இன்று பௌன்சரின் அடுத்த ஆல்பத்தின் மொழிபெயர்ப்புக்கு நடுவே கொஞ்சமாய் இங்கே கரை ஒதுங்கியுள்ளேன் - சில பல உரத்த சிந்தனைகளோடு !  மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்த சில வேளைகளில் புலர்ந்த இந்தக் கேள்விகளுக்கு - நீங்கள் ஏதாவது ஒரு தினுசில் பதில் சொல்ல முயற்சித்திடலாமே ?   

மல்லாக்கக் கேள்வி # 1 : 

நேற்றைய பதிவிற்கான உங்களின் பின்னூட்டங்களில் கரை புரண்டோடும் உற்சாகத்தின் பாதிக் காரணம் மறுபதிப்புகள் பற்றிய அறிவிப்புகள் என்பதை மறுக்க இயலாது ! அட..என்ன தான் புதுக்கதைகள் ; புது பாணிகள் என்று நான் தொண்டை நரம்பு புடைக்க சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்று என்று ஆற்றி வந்தாலும் - பழசுக்குள்ள மவுசை துளியும் அடித்துக் கொள்ள முடிய மாட்டேன்கிறதே...! இது பற்றி வண்டி வண்டியாய்ப் பேசியும், எழுதியும்  விட்டோம் தான் ; ஆனாலும் இந்த தேவ இரகசியத்தின் சில சூட்சமங்கள் எனக்குப் பிடிபடவில்லை ! என் கேள்வி இது தான் :  ஒரு லார்கோ போன்ற டாப் தொடரில் "வேட்டை நகரம் வெனிஸ்" போன்ற சிறு சறுக்கல் நிகழ்ந்தால் கூட -  'அய்யே..இது ரொம்ப சுமார் ரகம் !' என்று முகம் சுளிக்கும் நாம் - "சாக்கடைப் புழுவே !" என்று ஆர்டினியின் பிட்டத்தில் உதை விடும் ஸ்பைடர் அண்ணாத்தையையும் ; உசிலம்பட்டிக்கும், ஓட்டஞ்சத்திரத்துக்கும் ஷண்டிங் அடிப்பது போல கோட்டையில் ஏறி காலப் பயணம் செய்யும் அண்ணார் ஆர்ச்சி அவர்களையும் நாம் வாஞ்சையோடு அரவணைப்பதன் மர்மம் தான் என்னவோ ? அந்த mindset மாற்றம் நிகழ்வது எவ்விதமோ ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!  

மல்லாக்கக் கேள்வி # 2 : 

"பால்யங்களின் நினைவூட்டல்" ; "வாடகை சைக்கிளில் ஏறி பின்னோக்கிய பயணம்" ; "பழசை அசை போடுவதன் சுகமே அலாதி"...போன்ற பதில்கள் கிட்டுமென எதிர்பாராது இல்லை தான் ; ஆனாலும் நம் இளம் வயதுகளின் carry overs நிறையவே இருக்கக் கூடும் தானே ?  ;  அவற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியத்தை காமிக்ஸ் மீது மட்டும் அழுத்தமாய்த் தொடரச் செய்வது எதனால் ?  சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

மல்லாக்கக் கேள்வி # 3 : 

நேற்றைய பால்யங்கள்...நேற்றைய காமிக்ஸ் வாசிப்புப் பழக்கங்கள்....!
இன்றைய வாலிப / வயோதிகங்கள்.ஆனால் தொடரும் அதே காமிக்ஸ் நேசம் ! சூப்பர் !! 

ஆனால் - 

இன்றோ நிலைமையே வேறு....! காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோரின் சராசரி வயதுகள் 25+ என்று வைத்துக் கொள்ளலாமா ? So இந்தக் கால கட்டங்களில் காமிக்ஸ் படிக்கத் துவங்கும் இந்தப் புதுத் தலைமுறைக்கு இன்னுமொரு 20 /25 ஆண்டுகள் கழிந்த பின்னே நாம் கொண்டாடும் இது போன்ற காமிக்ஸ் nostalgia இருக்குமென்று நினைக்கிறீர்களா ? அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற காமிக்ஸ் சேகரிப்பு ஆர்வம்   ; உத்வேகம் எல்லாம் இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறதா     ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

மல்லாக்கக் கேள்வி # 4 : 

உங்கள்  இல்லத்தில் உங்களைத்  தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம்  கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ? குறிப்பாக இளம் தலைமுறையினில் ? அல்லது நீங்களொரு டைனோசார் நகலா  - அழிந்து போகும் பிராணிகளின் வரிசையில் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!


மல்லாக்கக் கேள்வி # 5:

கலர் கலராய் உள்ளன...ஓகே . ! லார்கோ...ஷெல்டன்...பௌன்சர்.. கமான்சே என்று பெயரெல்லாம் இங்கிலீஷ் பட டைட்டில் போல மெர்சலாக உள்ளது..டபுள் ஒ.கே..! ஆர்ட் பேப்பரில் ; கனமான அட்டையோடு  வருவதால் இது லேசுக்குள் பாழாய்ப் போக வாய்ப்பில்லை - ட்ரிபிள் ஒ.கே. ! ஆனால் முன்பைப் போலில்லாது இன்றைக்கு காமிக்ஸ் மழையாகக் கொட்டுகிற போது - படித்த ஒரு கதையை மறு முறை புரட்டத் தோன்றுகிறதா ?   அட...மறு முறை என்ன மறு முறை..? முதல் முறையே எல்லா இதழ்களையும் படிக்கவாச்சும் நேரம் ஒதுக்க முடிகிறதா ? வெளிப்படையான பதில்கள் ப்ளீஸ் !  

மல்லாக்கக் கேள்வி # 6:

முத்தக் காட்சிகள் வந்தால் சூர்யகாந்திப் பூக்களை உரசவிடும் அந்தக் காலத்து தமிழ் சினிமா பாணியில் -கோஷாப் பெண்ணாய் இது காலம் வரை இருந்து வந்துள்ள நமது இதழ்களில் - இதழ் to  இதழ் சமாச்சாரங்கள் ஜஸ்ட் லைக் தட் அரங்கேறுகின்றன ! இப்போதெல்லாம் 'நச்' என்ற sound effect -ஐ எழுதுவது போலவே   "இச்"  என்றும் எழுத வேண்டியாகிறது ! இது கால  மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறதா guys ? 

மல்லாக்கக் கேள்வி # 7:

சின்னதோ - பெரிதோ ; காமிக்ஸ் பற்றிய எண்ணப் பரிமாற்றங்களுக்கு இன்று ஆங்காங்கே குழுக்களாய் நண்பர்கள் இணைந்து வருவது கண்கூடு ! Watsup -ல் ; facebook -ல் ; இன்னும் பிற வலைப்பூக்களில் ; அப்புறம் ஒரே ஊரில் இருக்கும் நண்பர்களின் சந்திப்புகள் மார்க்கமாய் இந்த நட்புகள் தழைத்து வருவது நிதர்சனம் ! அந்த அளவளாவல்களின் போது - பழசைப் பற்றிய பேச்சே ஜாஸ்தியாக இருப்பது வாடிக்கையா ? அல்லது சமீபத்தைய இதழ்களுக்கும் முக்கியத்துவம் கிட்டிடுமா ? Just curious...!!!

மல்லாக்கக் கேள்வி # 8:

2012-க்குப் பின் வெளியாகியுள்ள இதழ்களுள் TOP 3 என்று சொல்வதாயின் எவற்றைத் தேர்வு செய்வீர்கள்  ?  And the BOTTOM 3 ?

மல்லாக்கக் கேள்வி # 9:

"இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா ??" என்ற புருவ உயர்த்தல்களை சந்திக்கும் தருணங்கள்  இன்னமும் உங்களுக்கு நிகழ்கின்றனவா ? வெளியிடங்களில் (தமிழ்) காமிக்ஸ் படிக்கும் "தைரியம்' கொண்டவரா நீங்கள் ? 

மல்லாக்கக் கேள்வி # 10:

Last but not the least : உங்கள் காமிக்ஸ் காதலால் வீட்டினுள் நீங்கள் சந்திக்கும் சங்கடங்கள் ஏதேனும் ? பண விரயம்; பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதில்லை என்ற ரீதியில் அர்ச்சனைகள் அரங்கேறுவது அடிக்கடி நிகழ்வுகளா ? அல்லது - உங்கள் ரசனைக்கு மதிப்பளித்து உங்களை சுதந்திரமாய்  (தண்ணீர் தெளித்து) விட்டு விடுகிறார்களா  ? 

உலகை உலுக்கப் போகும் இந்த வினாக்களுக்கு (.ஹி..ஹி...)  மனதில் தோன்றும் நிஜ அபிபிராயங்களைச் சொன்னால் விமர்சனங்களுக்கு ஆளாகலாம் என்ற தயக்கங்களின்றி - 'பளிச்' என பதில் சொல்லிடலாமே folks ?! Look forward to your answers !! Bye for now !!

349 comments:

  1. யாரும் எதிர் பாராத பதிவு

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : நேற்றைய உங்களின் உற்சாகங்களின் பிரதிபலிப்பு !!

      Delete
  2. ஆ!! அதற்குள் இன்னொரு பதிவா!! ஆச்சர்யம்!!!!!!!! (300வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சார்!)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஜனவரியில் இதுவரையில் 7 பதிவுகளாகி விட்டன ! இதுவே நமக்கொரு ரெகார்ட் என்று நினைக்கிறேன் !

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அடடே..!!

      Delete
  3. அடடே..... அடுத்தடுத்து இரண்டு பதிவுகளா... சூப்பர்....!!!

    ReplyDelete
  4. To Editor: மல்லாக்க கேள்வி # 1 : மறுபதிப்புக்களை ஆரவாரித்து வரவேற்பதற்கான காரணம், அவற்றை வாங்கி சேமிப்பில் வைத்துக்கொள்ளவேயன்றி, வாசித்து வாசித்து இன்புறவல்ல என்பது என் கருத்து. முன்னர் படித்திருக்கா வாசகர்கள் அவற்றை ஆர்வத்தோடு ஒரு தடவை படித்துவிட்டு, 'அப்பாடா.. இந்தக் கதையை படிக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றோடு தொலைந்தது..' என்று மனதை ஆற்றுப்படுத்தவே அவை அவற்றின் தரங்களைத் தாண்டியும் வரவேற்புப் பெறுகின்றன என நினைக்கிறேன். கலெக்ஷனுக்காகவே மறுபதிப்புக்கள் அதீத வரவேற்புக்கு ஆளாகின்றன.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //அப்பாடா.. இந்தக் கதையை படிக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றோடு தொலைந்தது..' என்று மனதை ஆற்றுப்படுத்தவே//

      நெத்தியடி !

      Delete
    2. எதிர்த்த வீட்டுக்காரன் எரோபிலன்ல வச்சு இருந்தாலும் ......நம்ம கிட்ட எமன் வாகனமாவது இருக்கனும்ல ......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  5. செமத்தியான கேள்விகள் என்பதில் சந்தேகமே இல்லை!! இந்தத் தருணத்தில் இது அவசியமான கேள்விகளும் கூட!! பதில் எழுத நிறையவே அவகாசம் தேவைப்படும்!! ( வாசகர்களின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்லிமாளாத ஒரு எடிட்டரின் tit for tat என்று என்று எடுத்துக்கொள்ளலாமா? ஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஊமைக் குசும்பு என்று கேள்விப்பட்டுள்ளேன்... இது பூனைக் குசும்போ ? !

      Delete
  6. மல்லாக்க கேள்வி 2: பொழுதுபோக்குகளும், கவனச் சிதைப்பான்களும் பெரிதாக அற்றதொரு காலப்பகுதியில் வாசிக்கப்பட்ட புத்தகங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும், பார்த்து ரசித்த சித்திரங்களுக்குள்ளும் 'என்கோட்' செய்யப்பட்டுள்ள அந்தந்தக் காலப்பகுதிகளுக்குரிய நினைவுகள் ஏராளம்! அவற்றை மீள் வாசிப்புக்குக் கொண்டுவரும்போது அந்த நினைவுகள் பெரிதொரு டேட்டா இழப்பின்றி 'டீ- கோட்' செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு, 'அதிரடிப்படை' கதையை மீள வாசிக்கும்போது அந்த நேரத்தில் நான் அருந்திக்கொண்டிருந்த 'ஹார்லிக்ஸ்' பானத்தின் சுவை இருபது வருடங்களுக்குப் பின்னும் நாவில் உணருவதான உணர்வை என்னவென்பது?

    ReplyDelete
    Replies
    1. ரசணையான, ரசிக்கும்படியான பதில்! அழகான வார்த்தைப் பிரயோகங்கள்!!

      Delete
    2. Podiyan : //அதிரடிப்படை' கதையை மீள வாசிக்கும்போது அந்த நேரத்தில் நான் அருந்திக்கொண்டிருந்த 'ஹார்லிக்ஸ்' பானத்தின் சுவை இருபது வருடங்களுக்குப் பின்னும் நாவில் உணருவதான உணர்வை என்னவென்பது?//

      சில ஹார்லிக்ஸ்கள் ரொம்பவே பிரத்யேகமானவை என்பது புரிகிறது !

      Delete
    3. பழைய லவ்வரை பார்க்கும் போது வருமே ஒரு சந்தோஷ பீறிடல் .......


      அது போலவே ஒரு கணம் கண் முன்னே......வந்து போகுமே ......''வாடா நயாகராவில் மாயாவி உன்ன தாமலே இதனை வருஷமா தேடிகிட்டு இருந்தேன்னு ..........''

      *************பழைய லவ்வரை என்பது போன ஜென்மத்தில் லவ்வரா இருந்தவள்*********** என்று அர்த்தம்

      Delete
  7. எதிர் பாரா இனிய அதிர்ச்சி ...

    ReplyDelete
  8. கேள்வியே கிர்ர்ர்ருன்னு இருக்கு, இன்னும் பதில் வேறு சொல்லனுமா.......

    ReplyDelete
    Replies
    1. Srithar Chockappa : அவசியமாய் !!

      Delete
  9. வினா எண் 1;மறுபதிப்புக்களை ஆரவாரித்து வரவேற்பதற்கான காரணம், அவற்றை வாங்கி சேமிப்பில் வைத்துக்கொள்ளவேயன்றி, வாசித்து வாசித்து இன்புறவல்ல என்பது என் கருத்து. முன்னர் படித்திருக்கா வாசகர்கள் அவற்றை ஆர்வத்தோடு ஒரு தடவை படித்துவிட்டு, 'அப்பாடா.. இந்தக் கதையை படிக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றோடு தொலைந்தது..' என்று மனதை ஆற்றுப்படுத்தவே அவை அவற்றின் தரங்களைத் தாண்டியும் வரவேற்புப் பெறுகின்றன என நினைக்கிறேன். கலெக்ஷனுக்காகவே மறுபதிப்புக்கள் அதீத வரவேற்புக்கு ஆளாகின்றன.

    நன்றி ..பொடியன். :)

    ReplyDelete
    Replies
    1. சாரி சர் .............நான் இன்னமும் மீண்டும் படிப்பது லார்கோவோ ....ஷேல்டனோ அல்ல .........
      இரட்டை வேட்டையர் .....
      காணமல் போன கடல் ...........
      பழி வாங்கும் பொம்மை ...போன்றவை ...........

      அந்த லார்கோ பய ஒரு வாட்டியாவது தொடர்ந்து அக்சன் பண்ணுறானா ...........கிடையாது.....
      ஷெல்டன் சுமார் ...........
      டயபாலிக் ஒரு கொலைகாரன் .......

      ஆனால் என் தல ஸ்பைடர் .....கொள்ளைக்காரன் கொலைகாரன் அல்ல..........மண்டியிடாத பாத்திரம் ...........
      முரட்டு தனத்தில் ஒரு பொறுப்பு இருக்கும் .......
      கோபத்திலும் ஒரு சிரிப்பு இருக்கும் .............

      Delete
    2. பிளைட் 731............தொடர்ந்து அக்சன் .........
      பக்கத்திற்கு நாலே படங்கள் .........விறு விறு ....துரு துரு ......

      Delete
    3. லார்கோ ...........ஷேர் மார்க்கெட் பத்தி கொஞ்சம் கிளாஸ் எடுக்காம இருந்த ஷேமம் ...............முடியல.....
      உங்கள்ள யாரு தாண்டா டயபாளிக்கு.................வரலாறு படத்துல கிளைமாக்ஸ் மாதிரி .......எந்த பக்கம் போனாலும் டயபாளிக்கா (ஒரு அம்புகுறி போட்டா தேவலை )......

      Delete
    4. எல்லா கதயும் வாங்குவேன் கண்டிப்பா படிப்பேன் ............ஆனா சின்ன சைஸ் புக்கு தான் முதல் இடம்.

      Delete
  10. 1.இன்றைய ஆப்பிளும் ஆரஞ்சும் எக்கச்சக்கமாய் கையில் கிடைத்தாலும் சிறுவயதில் நாமே மரம் ஏறிப் பறித்த
    கொடுக்காப்புளியின் இனிப்பு ..அது பச்சையாக இல்லாமல் கொஞ்சம் சிவப்பு கலர் தட்டியிருந்தால் எவ்வளவு
    உயரமாயினும் துரட்டி வைத்தாவது பறிப்போமே .அதை மறக்க முடியுமா...
    2.காமிக்ஸ் மீது மட்டும் என்றில்லை..இன்றைக்கும் நாம் படித்த அதே elementary ஸ்கூல் வாசலில் சில பல கண்ணாடிப் பெட்டிகளும் கலர் கலர் பானங்களும் வைத்து விற்பவர்களை காணும்போது ஒரு சிறு நேசம்..
    3.லோகோபின்னருசி ...அவரவர் நாக்கின் சுவை அவரவருக்கு..
    4,வாழையடி வாழை..
    5.திரும்பத் திரும்ப படிக்க ...நம் காலங்களில் இத்தனை டிவி சேனல்கள் பொழுது போக்கு அம்சங்கள் ஏது ..அத்தனையும் மீறி எடிடரின் காமிக்ஸ் காதலர்கள் வலை உலகில் உலாவரவே ஒருநாளில் குறைந்தது பத்து முறை நேரம் செலவு ....ஒருமுறை படிப்பதே பெரிய காரியம்..
    6.பௌன்சரின் கிளைமாக்ஸ் ..நம் காமிக்ஸ்க்கு இது தேவையா ..கேள்வி எழுப்பியது உண்மை ..
    7.கிட்டும் அவ்வப்போது
    8.வெயிட் ப்ளீஸ்
    9.ஒருமுறை மூ ன்று மாதங்கள் முன்னால் பகல் ஒரு மணியில் இருந்து 5 மணிவரை எக்மோர்ரெயில்வே station ல் ரத்தப்படலத்தை பகிரங்கமாக படித்துகொண்டு இருந்தேன்
    10.தண்ணீர் பட்டு பட்டு தலையே மொட்டை..அல்லது சொட்டை யோ

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : //இன்றைய ஆப்பிளும் ஆரஞ்சும் எக்கச்சக்கமாய் கையில் கிடைத்தாலும் சிறுவயதில் நாமே மரம் ஏறிப் பறித்த
      கொடுக்காப்புளியின் இனிப்பு ..அது பச்சையாக இல்லாமல் கொஞ்சம் சிவப்பு கலர் தட்டியிருந்தால் எவ்வளவு
      உயரமாயினும் துரட்டி வைத்தாவது பறிப்போமே .அதை மறக்க முடியுமா...//

      //காமிக்ஸ் மீது மட்டும் என்றில்லை..இன்றைக்கும் நாம் படித்த அதே elementary ஸ்கூல் வாசலில் சில பல கண்ணாடிப் பெட்டிகளும் கலர் கலர் பானங்களும் வைத்து விற்பவர்களை காணும்போது ஒரு சிறு நேசம்..//

      என்னவொரு ரசனையான வரிகள் !!

      Delete
  11. கேள்வி எண் 2;பொழுதுபோக்குகளும், கவனச் சிதைப்பான்களும் பெரிதாக அற்றதொரு காலப்பகுதியில் வாசிக்கப்பட்ட புத்தகங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும், பார்த்து ரசித்த சித்திரங்களுக்குள்ளும் 'என்கோட்' செய்யப்பட்டுள்ள அந்தந்தக் காலப்பகுதிகளுக்குரிய நினைவுகள் ஏராளம்! அவற்றை மீள் வாசிப்புக்குக் கொண்டுவரும்போது அந்த நினைவுகள் பெரிதொரு டேட்டா இழப்பின்றி 'டீ- கோட்' செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு, 'அதிரடிப்படை' கதையை மீள வாசிக்கும்போது அந்த நேரத்தில் நான் அருந்திக்கொண்டிருந்த 'ஹார்லிக்ஸ்' பானத்தின் சுவை இருபது வருடங்களுக்குப் பின்னும் நாவில் உணருவதான உணர்வை என்னவென்பது

    நன்றி ; பொடியன :)

    ReplyDelete
  12. மல்லாக்க கேள்வி # 3: இன்றைய தலைமுறைக்கு கவனச் சிதைப்பான்களும், பொழுதுபோக்குக்கான சாதனங்களும் மிக அதிகம். இருக்கும் பொழுதுபோக்குகளை சமாளித்து அனுபவிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. எனவே, ஒரு சிறு சதவீதத்தினர் காமிக்ஸ் சேகரிப்பு போன்ற 'புராதன' விடயங்களில் ஆர்வம் காட்டக்கூடும். ஆயினும், முந்தைய தலைமுறையின் 'வெறித்தனமான' காமிக்ஸ் நேசத்தோடு ஒப்பிடுகையில் இது மிகமிகச் சொற்பமானதொரு எண்ணிக்கையிலேயே இருக்கலாம்.

    ReplyDelete
  13. இன்றைக்கு எட்டாவது,பத்தாவது படிக்கும் மாணவனால் படிப்புசுமை,பெற்றோர் கண்டிப்பை மீறி காமிக்ஸில் கவனம் செலுத்தமுடியாது.அப்படி செலுத்துபவனால் மாதம் முன்னூறு ரூபாய் கொடுத்து புத்தகங்களை வாங்க முடியுமா.?ஜனவரி வெளியீடுகள்அறுநூறை தொட்டு விட்டடன.மி.ம ஆயிரம் தேவைப்படும்.வாசிப்பவர்களின் சராசரி வயது முப்பது டூ நாற்பது.புதிய தலைமுறை வாசகர்கள் விலையினால் தள்ளிபோகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. karthik karthik : விலை காரணமாய் புது வாசகர்கள் விலகிச் செல்ல வாய்ப்பிருக்கக் கூடியது இன்றைய தேதியில் சற்றே நிஜமாக இருக்கலாம்..! ஆனால் -

      நம்மை மாற்றுப் பாதைக்கு அனுப்பியதன் காரணமே இளம் தலைமுறையின் உதாசீனம் / ஆர்வமின்மை தானே ?

      கொஞ்சமாய் மாற்றி யோசிக்க அவசியம் இங்குள்ளது நண்பரே !

      இன்றைய பிரதான சிறார் பத்திரிகைகளின் விற்பனை எண்ணிக்கை - 4 இலக்கங்களில் தான் உள்ளன என்பதை அறிவீர்களா ? அவர்களுள் யாரது விலைகளும் உச்சங்கள் அல்லவே ?!

      Delete
  14. கேள்வி எண் 3 ;

    சந்தேகம் தான் சார் ...அவர்களை காமிக்ஸ் வாசிப்புக்கு பழக்க படுத்திவிட்டாலே பெரிய விசயம் சார் ....இதில் அவர்கள் காமிக்ஸ் சேகரிப்பு என்பதெல்லாம் 10% நடைமுறைக்கு வந்தாலே பெரிய விசயமே ...:(

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்களேன்...பாக்கி அவர்களது ஆர்வத்தின் போக்கினில் ...!

      Delete
  15. கேள்வி எண் 4 ;

    நான் மட்டுமே இப்போது காமிக்ஸ் ரசிகனாய் இருக்கிறேன் .ஆனால் இன்னமும் வாசிப்பு பழக்கம் வராத என் ukg படிக்கும் மகனை கண்டிப்பாக என் லிஸ்டில் வர பாடுபடுவேன் .என் மகளையும் .....:)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : ஜூனியரை இப்போவே போராட்டக் குழுவின் கொ.பா,சா. ஆக்கி விடுங்கள் தலைவரே !

      Delete
  16. surprise wishes from the editor. thanks. 66th republic day wishes to all.adha sollungapa ellorum.

    ReplyDelete
  17. டியர் எடிட்டர்சர்ர்,
    நரன் 21 ஆவது சர்ர். யர்ரும் எதிர் பர்ர்க்கரத பதிவு இது.

    ReplyDelete
  18. கேள்வி எண்5;

    ரசனை ...விருப்பம் என்பதை தாண்டி இப்போது பொறுப்புகள் என்பது அதிகமாக இருப்பதால் தூங்கும் நேரத்தை தள்ளி வைத்தாவது புத்தகம் வந்தவுடன் படித்து விடுவேன் சார் .நாளுக்கு ஒரு புத்தகம் என்ற வீதத்தில் ....அதே சமயம் ஓய்வு நேரம் ..பயணம் என்ற சமயத்தில் பழைய புத்தகமே எடுக்க தோன்றுகிறது .அதற்கு இன்னொரு காரணமும் உண்டு .பெரிய சைஸ் புத்தகத்தை மீண்டும் புரட்டுவதை விட கைக்கு அடக்கமான புத்தகம் புரட்டுவது எளிதாக இருப்பதும் ஒரு காரணம் ..

    ReplyDelete
    Replies
    1. கைக்கு அடக்கமான சைசுக்கு இப்படியும் ஒரு ஆதரவு உள்ளதா ? சிந்திக்க வேண்டிய விஷயமே !

      Delete
    2. பரணிதரன்
      +12345

      பிரயாணங்களில் சிறு புத்தகங்கள்தான் மிகச்சரியான ஒன்று


      Delete
    3. // பெரிய சைஸ் புத்தகத்தை மீண்டும் புரட்டுவதை விட கைக்கு அடக்கமான புத்தகம் புரட்டுவது எளிதாக இருப்பதும் ஒரு //
      +1
      100% True

      Delete
    4. ரிபீட்டு ...........பக்கத்திற்கு நாலே படங்கள் .........விறு விறு ....துரு துரு ......பக்கத்தை திருப்பும் போது ஏற்படும் பதபதைப்பு ..............அடுத்தது என்ன ........? அதெல்லாம் சொன்னா புரியாது பீல் பீல் பண்ணனும்

      Delete
  19. மதிய வணக்கம் நண்பர்களே,பதிவை படிச்சுட்டு வறேன்.

    ReplyDelete
  20. கேள்வி எண் 6;

    இதெல்லாம் டேக் இட் ஈசி பாலிசி சார் என்னை பொறுத்த வரை...

    எனக்கு நோய் ப்ராப்ளம் ...:)

    ReplyDelete
    Replies
    1. போராட்டக்குழு தலைவருக்கு இவ்வளவு வேகம் கூடாது.

      Delete
    2. அட ....நாசமா ...போக....

      எனக்கு நோ ப்ராபளம்.....அப்படின்னு படிங்கப்பா ....இதுக்கு தான் செல்லுல டைப்ப கூடாது ....

      Delete
  21. To Editor:

    மல்லாக்க கேள்வி # 1 : மறுபதிப்புக்களை ஆரவாரித்து வரவேற்பதற்கான காரணம், அவற்றை வாங்கி சேமிப்பில் வைத்துக்கொள்ளவேயன்றி, வாசித்து வாசித்து இன்புறவல்ல என்பது என் கருத்து. முன்னர் படித்திருக்கா வாசகர்கள் அவற்றை ஆர்வத்தோடு ஒரு தடவை படித்துவிட்டு, 'அப்பாடா.. இந்தக் கதையை படிக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றோடு தொலைந்தது..' என்று மனதை ஆற்றுப்படுத்தவே அவை அவற்றின் தரங்களைத் தாண்டியும் வரவேற்புப் பெறுகின்றன என நினைக்கிறேன். கலெக்ஷனுக்காகவே மறுபதிப்புக்கள் அதீத வரவேற்புக்கு ஆளாகின்றன.
    --------------------

    மல்லாக்க கேள்வி 2: பொழுதுபோக்குகளும், கவனச் சிதைப்பான்களும் பெரிதாக அற்றதொரு காலப்பகுதியில் வாசிக்கப்பட்ட புத்தகங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும், பார்த்து ரசித்த சித்திரங்களுக்குள்ளும் 'என்கோட்' செய்யப்பட்டுள்ள அந்தந்தக் காலப்பகுதிகளுக்குரிய நினைவுகள் ஏராளம்! அவற்றை மீள் வாசிப்புக்குக் கொண்டுவரும்போது அந்த நினைவுகள் பெரிதொரு டேட்டா இழப்பின்றி 'டீ- கோட்' செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு, 'அதிரடிப்படை' கதையை மீள வாசிக்கும்போது அந்த நேரத்தில் நான் அருந்திக்கொண்டிருந்த 'ஹார்லிக்ஸ்' பானத்தின் சுவை இருபது வருடங்களுக்குப் பின்னும் நாவில் உணருவதான உணர்வை என்னவென்பது?

    ------------------------------

    மல்லாக்க கேள்வி # 3: இன்றைய தலைமுறைக்கு கவனச் சிதைப்பான்களும், பொழுதுபோக்குக்கான சாதனங்களும் மிக அதிகம். இருக்கும் பொழுதுபோக்குகளை சமாளித்து அனுபவிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. எனவே, ஒரு சிறு சதவீதத்தினர் காமிக்ஸ் சேகரிப்பு போன்ற 'புராதன' விடயங்களில் ஆர்வம் காட்டக்கூடும். ஆயினும், முந்தைய தலைமுறையின் 'வெறித்தனமான' காமிக்ஸ் நேசத்தோடு ஒப்பிடுகையில் இது மிகமிகச் சொற்பமானதொரு எண்ணிக்கையிலேயே இருக்கலாம்.

    -----------------------

    மல்லாக்க கேள்வி 4: டைனோசர் இனத்தை அழியவிடுவதாக இல்லையென்று பிடிவாதமாக இருக்கிறேன். எனது பெற்றோரிலிருந்து தொற்றிய நோயை பரம்பரை நோயாக்க இரண்டரை வயது மகனிடம் கையில் காமிக்ஸ் புத்தகங்களை (ஒரு வயதிலிருந்தே வேறு புத்தகங்களை கொடுத்து கிழிக்க அனுமதித்து... இப்போது கிழிக்கும் நிலை கடந்து அவன் படம் பார்க்கும், கார், ஏ, பி, சி.. சொல்லும் நிலைக்கு வந்துவிட்டான்) தாராளமாய்க் கொடுத்து பார்க்க பழக்கப்படுத்திவிட்டேன். அட்லீஸ்ட் அடுத்த தலைமுறைக்காவது இந்த நோய் தொடரும்...
    --------------------------

    மல்லாக்க கேள்வி 5: இப்போது எமது படிக்கும் வேகமும் கொஞ்சம் அதிகரித்திருப்பதால் பேருந்து பயணங்களின்போதே ஒரு அரை மணி நேரத்துக்குள் பெரும்பாலான காமிக்ஸ்கள் வாசித்து முடிக்கப்பட்டுவிடுகின்றன. அலுவலகம் போகும்போது ஒரு புத்தகம் வரும்போது ஒரு புத்தகம். ஆனால், வல்லவர்கள் வீழ்வதில்லை போன்ற கதைகளை நிறுத்தி நிதானித்து ஆசுவாசப்படுத்தி வாசித்தது தனி சுகம். இரண்டாவது வாசிப்பு பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். பின்னைய கதைகளை வாசிக்கும்போது ஞாபகப்படுத்தல்கள் தேவைப்பட்டால் முன்னைய இதழ்களை புரட்டுவதுண்டு. கைக்கு கிடைத்த சமீபத்திய இதழ்கள் அனைத்தும் வாசித்து முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், 'மக்னம் ஸ்பெஷலில்' மட்டும் பல கதைகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. தூர இடப் பிரயாணத்துக்காக வைத்திருந்த புத்தகம். பயணம் இன்னமும் சாத்தியமாகாததால் அப்படியே இருக்கிறது :-(

    ReplyDelete
    Replies
    1. nanba how to set tamil font please tell

      Delete
    2. யுனிகோட் எழுதியை பயன்படுத்துங்கள் நண்பரே. அது தொடர்பான இணைப்புகள் உள்ள நண்பர்கள் இங்nகே பதிவிட்டு நண்பருக்கு உதவிடுங்கள்.

      Delete
    3. இந்த இணைப்பை பயன்படுத்தி தட்டச்சு செய்து இங்கே காப்பி பேஸ்ட் செய்யலாம். (தமிங்கிலீசில் தட்டச்சு செய்து) http://www.typetamil.in/

      Delete
  22. computerla tamil font type panna mudiyala so bare it please...

    *age is not a problem to read comics but cost is the main criteria. some of my friends told me that "lion comics engayo poyiduchu book 100 rupees nammala vanga mudiyadu". that is real.

    *i told to my family dont ask and say anything about my family. but they felt that why are you wasting money. {avangaluku enka theriya pogudhu comics arumai... netraiya padhivai kaati 30 book 50000 endru sonnen. all mouth locked}

    *2012 book fairla books vankitu busla varumpodhu padichukitu irundhen appa pakkathula irundhavanka ellarum lion comicsaa apadinu aacharyapattu anaivarum vanki parthanar. so tamilnadu fulla namaku vasakarkal undu but edukunu thaniya money spent panna yosikuranka. ippa inka irukaravanka anaivarum "mad about lion comics" adhan 30 bookuku 50000 kuda kuduka readya irukanaka.

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : ஐந்திலும், பத்திலும் விலைகள் நின்ற நாட்களில் வாசகர்கள் எங்கோ போய் விட்டதால் தானே மாற்றம்பற்றிய சிந்தனையே எழுந்தது ?

      Delete
    2. When compared to other english comics and indian comics, our lion comics price is very cheap. I bought Ben10 & Dora tamil version comics for my kids, it was printed with low quality paper and images are in scanned quality but it cost is Rs. 35 for just 20 pages.

      Delete
    3. yahoo tamil type மாற்றும் LUXILOGO இரண்டயும் பயன்படுத்துகள்
      முதலில் சிரமமாக இருக்கும். ஆனால் தானாக எளிதாகிவிடும்.

      Delete
  23. Ans Part 2:


    மல்லாக்க கேள்வி # 6: என்னைப் பொறுத்தவரை அந்த நாளில் வந்த காமிக்ஸ்களில் ஒளித்து மறைத்து தேட வைத்ததைவிட இன்று வெளிப்படையாக வருபவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். கலாசாரம் என்ற நோக்கில் 'அது தவறு.. இது தவறு' என்று சுட்டிக்காட்டப்பட்டாலும், யு ஏ, ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட படங்கள்கூட டிவிடிக்களிலோ, தொலைக்காட்சிகளின் ஊடாகவோ வீடுகளுக்குள் சகஜமாக வந்துவிடும் காலம் இது என்பதால் இந்த மாற்றங்களை தடுக்கமுடியாது. இவற்றுக்குப் பயப்படாமல் இயல்பாக எடுத்துக்கொண்டு கடந்துபோவதே நல்லதென்பேன். இதில் பலருக்கு நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்கும். தமிழகத்தின் 'பிரபல சஞ்சிகைகள்' போல சதை வியாபாரம் காமிக்ஸ்களில் நடைபெறவில்லையென்றே நினைக்கிறேன். கதைகளின் போக்கிலேயே அப்படிப்பட்ட விடயங்கள் வந்துபோவதால் பெரிதாக கவனத்தை ஈப்பதுமில்லை. 'எல்லாம் கடந்து போகுமடா...' என்று பாடிவிட்டு அடுத்த பக்கத்தை புரட்டவேண்டியதுதான்!
    -----------------------

    மல்லாக்க கேள்வி # 7: பழைய இதழ்கள் பற்றிறே பேச்சு ஆரம்பிக்கும். ஆனால், அப்படியே புதிய இதழ்களுக்கு தாவி, அடுத்தகட்டமாய் என்னென்ன தமிழுக்கு வரலாம் என்று பேச்சு நகர்ந்திடுவது வழக்கம். இது நல்லதொரு அறிகுறி.

    -------------------
    மல்லாக்க கேள்வி # 8: சாரி பாஸ். இந்த ரேட்டிங்க்ஸ் நமக்கு சரிவராத ஒன்று. வேறுவேறு ஜானர்களில் வேறு வேறு சுவைகளில் வரும் கதைகளை தரவரிசைப் பட்டியலில் கொண்டுவருவது நமக்கு ரொம்பவே கஷ்டமான காரியம். அண்மைய இதழ்களில் 'வல்லவர்கள் வீழ்வதில்லை' ரொம்பப் பிடித்திருந்தது. 'இரவே இருளே கொல்லாதே' ஈர்த்தது. 'உயரே ஒரு ஒற்றைக் கழுகு' அம்புலி மாமா கதைபோல இருந்தது.
    ------------------------

    மல்லாக்க கேள்வி # 9: காமிக்ஸ் பற்றி ஏதாவது பேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டால் உடனே ஆச்சரிய விசாரிப்புகள் வருவது வழமை. அவர்களுக்கு புதிய வெளியீடுகளின் தன்மை பற்றி விளக்கியதும். அவர்களுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டுவிடுவதும் நடக்கிறது. பொது இடங்களில் காமிக்ஸ் வாசிப்பதை பல நேரங்களில் வேண்டுமென்றே செய்துவருகிறேன். பக்கத்திலிருந்து எட்டிப்பார்க்கும் பலர் இன்னமும் இவை வருகின்றனவா? என்று ஆச்சரியப்பட்டு விபரங்கள் வாங்கிச் சென்றிருக்கின்றனர். ஆனால், பொது இடங்களில் படிப்பதற்கு பழைய (ஏ 5) அளவுகளான காமிக்ஸ்களே வாகாக இருக்கும் என்பதுதான் கவனிக்கவேண்டியது. 'உயரே ஒரு ஒற்றைக் கழுகு' சைஸ் கனகச்சிதம்!
    ---------------

    மல்லாக்க கேள்வி # 10: தண்ணீர் தெளிக்கவில்லை. இது தெளியாத பைத்தியம் என்று அப்படியே விட்டுவிடடார்கள். நண்பர்களோடு ஊரைச் சுற்றி நடு ராத்திரியில் வீடு வருவதிலும் பார்க்க புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கண்முன்னே கிடப்பது நல்லது என்று நினைத்திருப்பார்கள் போலும்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //தண்ணீர் தெளிக்கவில்லை. இது தெளியாத பைத்தியம் என்று அப்படியே விட்டுவிடடார்கள்//

      :-) same blood !

      Delete
    2. நண்பர்களோடு ஊரைச் சுற்றி நடு ராத்திரியில் வீடு வருவதிலும் பார்க்க புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கண்முன்னே கிடப்பது நல்லது என்று நினைத்திருப்பார்கள் போலும்!

      True Words!!!

      Delete
  24. எடி சார் ,அருமையான கேள்விகள்,இதற்கு அவகாசம் தேவை,மாலைக்குள் உரிய பதில்களை பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  25. கேள்வி எண் 7
    சமீப இதழ்களை பற்றிய குறைகள்
    பழைய இதழ்களின் நிறைகள் பற்றி தான் அதிகம் ஓடுவது ...:)

    ReplyDelete
  26. டியர் எடிட்டர் சர்ர்,
    1) நம் பரல்யங்களை மீட்டெடுக்கும் ஒரே ஒரு முயற்சி . நீங்கள் கையை பிடித்து எம்மை அழைத்து சென்று லர்ர்கோவையும் ஷெல்டனையும் எமக்கு மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தும்போது எப்படி பிடிக்காமல் போகும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  27. பழைய கதைகள் பால்யத்தில் ஏற்படுத்திய impact பெரியது. அந்த இன்பமான impact தான் இன்னும் காமிக்ஸ் காதலை மேன்மேலும் இழுத்து செல்கிறது.
    கிளாச்சிக் Heroes can be never forgotton

    அதற்காக நேரம் முழுவதையும் கிளாச்சிக் ஹீரோஸ் மட்டும் செலவிட வேண்டும் என்று சொல்லவில்லை, மறுபதிப்புகள் குறைந்த அளவிலே இருத்தல் நல்லது
    புதிய தேடலில் தாங்கள் கொண்டு வரும் கதைகளும் நாயகர்ளும் மிகந்து சுவாரசியமிக்கன

    ஆனால் நமது கிளாச்சிக் ஹீரோஸ் எங்களின் ஒரு காமிக்ஸ் காதலில் மிக பெரிய அங்கம்
    without past, there is no present

    லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகளை ஆர்வத்தோடு திரும்பி படிக்கிறேன், அதுவும் லார்கோ கதைகள் விறுவிறுப்பாக உள்ளன

    என் வீட்டில் நான் மற்றும் எனது பெற்றோர் comics விரும்பி படிக்கின்றோம்

    "இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா ??" என்ற புருவ உயர்த்தல்களை சந்திக்கும் தருணங்கள் இன்னமும் நட்பு வட்டாரத்தில் நிகழ்கின்றன

    வெளியிடங்களில் (தமிழ்) காமிக்ஸ் படிக்கும் "தைரியம்' உண்டு

    பண விரயம் எதுவும் ஆவதில்லை

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : //ஆனால் நமது கிளாச்சிக் ஹீரோஸ் எங்களின் ஒரு காமிக்ஸ் காதலில் மிக பெரிய அங்கம்
      without past, there is no present//

      இளம் தலைமுறையின் ஒரு சுவாரஸ்யமானப் பார்வைக் கோணம் ! Intriguing....!!

      Delete
    2. //லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகளை ஆர்வத்தோடு திரும்பி படிக்கிறேன், அதுவும் லார்கோ கதைகள் விறுவிறுப்பாக உள்ளன //
      +1

      Delete
  28. கேள்வி 8;

    டாப் 3& பாட்டம் 3 ரொம்ப கடினமான ஒன்று சார் ..
    பிடித்தது அதிகம்....பிடிக்காமல் போன கதைகள் ஒற்றை படையில் ...

    கேள்வி எண் 9;

    தயங்காமல் வெளி இடத்தில் காமிக்ஸ் படிப்பேன் சார் .அதன் மூலம் சிலர் இன்னமும் காமிக்ஸ் வருவதை அறிந்தனர் .எனவே எப்போதும் தொடருவேன் ...

    ReplyDelete
    Replies
    1. கேள்வி எண் 10;

      அது வந்து ...வந்து ..சார் ...

      சார் ....என் பொண்டாட்டி பக்கத்துல இருக்கா ....அப்புறமா வரேன் ...:)

      Delete
  29. டியர் எடிட்டர் சர்ர்,
    "வேட்டை நகரம் வெனிஸ்" போன்ற புத்தகங்கள் உலகளரவிய ரீதியில் எல்லோராலும் வரசிக்க படுபவை- அதில் சிறு தப்பு நடந்தாலும் நண்பர்கள் மனம் தரங்குவதில்லை. ஆனரல் கூர்மண்டையரோ? ஆர்ச்சியோ சிறு பிழை செய்தரலும், அது அந்த கரல படைபரளிகளின் பிழையரக இருக்கலரம் என்று ( fleetway) அந்த கரலம் தொட்டு பழகிப் போயிருக்கும் சர்ர்.

    ReplyDelete
  30. MK1:

    சிறு மணித்துளிகளாவது நிகழ்கால சுமைகளை இறக்கி வைத்து, நம் பால்ய விவகாரங்களுக்குள் செல்ல நாம் எல்லாருக்கும் ஆசைதான். இதில் அண்ணன், தம்பி, அக்கா, நண்பன் என்று உறவுகள் எல்லாரும் ஊர் மாறி, நிலை மாறி எங்கோ வசிக்க வேண்டிய நிலை. இதில் மாறாட்ட ஒரே விஷயம் அன்றைக்கும், இன்றைக்கும் ஆர்ச்சிதான், மாயாவிதான் ! இதனால் தான் ...!

    MK2:

    காமிக்ஸ் இன்னும் வெளிவந்து கொண்டிருப்பதால் - நீங்கள் இன்னும் வெளியிட்டுக் கொண்டிருப்பதால் - ஏனையவை நின்று விட்டன அல்லது கடந்து விட்டன !

    MK3:

    இன்றும் காமிக்ஸ் படிக்கும் அபூர்வமான சிலருள் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு இருக்கலாம் - மற்றபடி நோ சான்ஸ். அனால் முதல் copy மாயாவி இன்னும் 25 வருடம் கழித்து 1 லட்சத்துக்கு விற்பனையாகும் ! சிலர் ப்ரொவிடெண்ட் பண்ட் சேமிப்பில் வாங்குவார்கள் :-)

    MK4:

    உண்டூ ! என் மாமன் மகன் - 25 வயது - ஒரு காமிக்ஸ் ரசிகன் - உலகளாவிய காமிக்ஸ் தேடித் தேடி படிப்பவன். என் அடுத்த தலைமுறையும் இப்போதைக்கு ACK ரசிகர்கள் - இவர்களை பின்னர் franco-belgianக்கு இட்டாந்துருவேன் :-)

    MK 5:

    என்னால் முடிகிறது :-)

    MK 6:

    "இச்" எனக்கு ஓகே - பல வார இதழ்களில் பழகியாகி விட்டது. வாழ்க்கையிலும் தான் :-) "பச்சக்","ப்வ்ச்க்" என்று புதிதாயும் ட்ரை பண்ணலாமே :-)

    MK 7:

    சந்திப்புகளில் சமீப இதழ்கள் பற்றிய அலசல்களே அதிகம். மற்றும் நாம் வெளியிடாத நல்ல பிற காமிக்ஸ் பற்றியும் அவைகளை யார் scanlate செய்வது என்பது பற்றியும் :-D ;-) :-P

    MK 8:

    கொஞ்சம் கஷ்டம் தான், எனினும் :

    டாப் 3:

    1. LMS - 1
    2. லார்கோ விஞ்ச் - 2 (appeared in NBS)
    3. நமது முதல் ப்ளுகொட்ஸ் வெளியீடு

    FLOP 3:

    1. ஒரு சிப்பாயின் சுவடுகளில் (script மாற்றப்பட்டதால்)
    2. புதிய சிக்-பில் அனைத்தும் (இப்போது தனியாய் படித்துப் பாருங்களேன்)
    3. ஆல் நியூ ஸ்பெஷல் (அதிலும் அந்த கிராபிக் நாவல் Noooooooooo ... யம்மாடி !!)

    MK 9:

    சமீபத்தில் நடந்த என் நிறுவனத்தின் AEM (all employee meeting-ல்) நானும் என்னுடன் executive ஆக பணிபுரியும் நண்பியும் பேசிக்கொண்டிருக்கையில் "asterix", "franco-belgian" என்ற வார்த்தைகள் தெறிப்பதை பார்த்து என் உயரதிகாரி திரும்பிப் பார்க்கையில் "நானும் ராகவனும் காமிக்ஸ் பைத்தியங்க" என்று அவர் இன்ட்ரோ கொடுக்க "அட அற்பப் பயலே" என்ற பார்வையில் என் மேலதிகாரி என்னைப் பார்த்து சிரித்தது இன்னும் மறக்கவில்லை. இதன் result அடுத்த மாதம் தெரியும் :-)

    MK 10:

    அதெல்லாம் தண்ணி தெளித்து விட்டு ரெண்டு வருஷம் ஆச்சுங்கோய் :-) :-)

    ReplyDelete
    Replies
    1. // "பச்சக்","ப்வ்ச்க்" என்று புதிதாயும் ட்ரை பண்ணலாமே //

      ஹா ஹா!

      Delete
    2. Raghavan : //அண்ணன், தம்பி, அக்கா, நண்பன் என்று உறவுகள் எல்லாரும் ஊர் மாறி, நிலை மாறி எங்கோ வசிக்க வேண்டிய நிலை. இதில் மாறாட்ட ஒரே விஷயம் அன்றைக்கும், இன்றைக்கும் ஆர்ச்சிதான், மாயாவிதான் //

      அழகான நிஜம் !

      // "பச்சக்","ப்வ்ச்க்" என்று புதிதாயும் ட்ரை பண்ணலாமே :-)//

      அடுத்த மாதமே ட்ரை பண்ணிடலாம் ....மார்ஷல் டைகர் உபயத்தில்..!

      Delete
  31. மல்லாக்க படுத்துகிட்டு எதனை கேள்விதான் கேட்பது....

    நானும் மல்லாக்க படுத்துகிட்டே பதில் அனுப்புறேன்...
    என்னதான் ஆயிரம் பேர் வந்தாலும் காமிக்ஸ்னாலே மாயாவி ஆர்ச்சி ஸ்பைடர் தான் எனவே எப்போதும் ஓல்ட் ஈஸ் கோல்ட் தான்.
    காமிக்ஸ்கள் எப்போதும் சலிக்காது எத்தனை முறை படித்தாளும்தான். ஆனால் கருப்பு வெள்ளையில் வந்த பழைய இதழ்களை பலமுறை படிக்க தோன்றும். கலர் புத்தகங்களை அவ்வாறு பலமுறை படிக்க தோன்றவில்லை என்பதே உண்மை...
    **டாப் 3: 1. வல்லவர்கள் வீழ்வதில்லை
    2. கார்சனின் கடந்த காலம்/கான்கரிட் kaanagam
    3. சட்டம் அறிந்திரா சமவெளி / இரவே இருளை கொல்லாதே
    டெக்ஸ் வாழ்க வாழ்க வாழ்க...

    ******கோடான கோடி பெரிய பெரிய நன்றி நண்பர் பொடியனுக்கு ******

    ReplyDelete
  32. 2) அரை ரவுசரில் திரிந்த கரலங்களில் இன்டர்நெட்,முகநூல், ருவிட்டர் என்று அறிமுகமரகவில்லை. எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு வரசிப்பு மட்டும்தரன் என்பதொன்று, இப்போது எமக்கென்று குடும்பம், பிள்ளை என்றும் , நரம் இப்போது உழைக்கின்றோம் -அப்பர, அம்மர பர்சை எதிர்பர்ர்க்க இனியும் தேவையில்லை என்பதுவும் ஒரு கர்ரணமரயிருக்கலரம் சர்ர்.

    ReplyDelete
  33. மொக்கை கதை என்று எதுவும் கூற மாட்டேன் எடிட்டர் கஷ்டப்பட்டு கதைகளை தேர்ந்து எடுக்கிறார் அவர் மனம் கஷ்டப்படும் அல்லவா...
    இருந்தாலும் ஒன்று மட்டும் கூறுகிறேன் குறை சொல்வது எளிது நடைமுறை படுத்துவதுவது சிரமம்.

    மாயாவி ஸ்பைடர் ஆர்ச்சி கதைகள் புதியது எதுவும் உள்ளதா எடிட்டர் சார்...

    ReplyDelete
  34. டியர் எடிட்டர் சர்ர்,
    3) அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியில்தரன் இப்போது ஈடுபட்டுள்ளேன். எனதிரு பெண்பிள்ளைகளுக்கும் இப்போது இருந்து பழக்குகிறேன். அடுத்த தலைமுறை 20% மட்டுமே வரசிப்பதும், சேகரிப்பதும் தொடரும் என்று நினைக்கிறேன்.

    4) அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சிதரன் இப்போது நடக்கிறது சர்ர். நரம் என்றும் டைனோசர் இனமரக இருக்க மரட்டோம்.
    5) எமது வெளியீடுகளை நரன் டிரெயினிற்கு உள்ளே வைத்தும் வரசிப்பேன். எனக்கு அதில் பெருமையே. தங்களுக்கு தெரியரது எதுவுமில்லை. பிரஞ்சுகர்ரர் ஒவ்வொருவர் பையிலும் ஏதரவதொரு புத்தகம் கட்டரயம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : //எனதிரு பெண்பிள்ளைகளுக்கும் இப்போது இருந்து பழக்குகிறேன். //

      Lovely !!

      Delete
  35. // ஆனாலும் நம் இளம் வயதுகளின் carry overs நிறையவே இருக்கக் கூடும் தானே ? ; அவற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியத்தை காமிக்ஸ் மீது மட்டும் அழுத்தமாய்த் தொடரச் செய்வது எதனால் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...! //

    The simple answer is our comics is easily reachable than other stuff that triggers nostalgia dopamine! :D

    என்னைப் பொருத்தவரையில் எனது சிறுவது நினைவு / நாஸ்டால்ஜியா அட்வென்ச்சரின் கடைசி உறுப்படிதான் காமிக்ஸ் என நினைக்கிறேன்.. வேறு விஷயங்கள் நிறையவே உள்ளன! 2013க்கு பின்புதான் காமிக்ஸ் பற்றிய திசையில் கவனம் வந்தது... அதற்கு 3-4 வருடங்களுக்கு முன்பாக அதிர்ஷ்டவசமாக ஏகப்பட்ட ஃபரீ டைம் கிடைத்தபோதெல்லாம் சிறுவயது சம்பந்தப்பட்ட வேறு லேயர்கள் / விஷயங்கள் எல்லாவற்றையில் நிறைய Go through செய்து இருக்கிறேன். 20 வருடமாக பயணம் செய்ய மறந்த ஆனால் Just 1கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் மரம் முதல் 20-30 வருடங்களுக்கு முன்பு வசித்த 200-500 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் வீடு, பள்ளி, மணல் மேடு, சினிமா தியேட்டர், மாவு மில்கள், புத்தகங்கள், சினிமா, பாடல், நண்பர்கள், கடை என சகலத்தையும் Re visit அடித்து என்னதான் ஆகிறதென்று பார்த்தும் இருக்கிறேன். உண்மை என்னவென்றால், சிறவயது விஷயங்கள் எளிதாக திரும்பக் கிடைத்து மீள் பார்வை பார்த்துவிட்டபின் பெரும்பாலான வெய்ட்டான விஷயங்கள் "இவ்வளவுதானா? எல்லாம் நம்ம நெனப்புதான்" ரேஞ்சுக்கு புஸ்.. ஆகவே உள்ளன - நிகழ்காலம்போல! கிடைக்காது, எட்டாது என்ற உணர்வு நிதர்சனமாக மனதில் இருக்கும் வரைதான் நாஸ்டால்ஜியா போதை!

    'சிறு வயது நன்றாக இருந்ததே இப்போ ஏன் வாழ்க்கை டல்லாக உள்ளது..' என்ற ஆயிரக்கணக்கான தலைமுறைகளாகத் தொடரும் கேள்விக்கு பதில் இல்லாமலில்லை... நமது பழைய நினைவுகள் எவ்வளவுக் கெவ்வளவு Empty ஆக உள்ளதோ அந்தளவுக்குதான் நிகழ்காலத்தை ஊன்றி ரசிக்கமுடிகிறது.. சிறு வயதில் அந்த Freshness அனைவருக்கும் இயல்பாகவே சாத்தியப்படுவதால் அப்போது கிடைத்த எந்த அனுபவமும் (காமிக்ஸ் உட்பட) நமக்கு Deep'ஆகவே பாதித்திருக்கும்.

    (Sorry for my loooong post but inevitable he he!)

    ReplyDelete
    Replies
    1. @ramesh kumar
      Makes sense, particularly
      // சிறு வயதில் அந்த Freshness அனைவருக்கும் இயல்பாகவே சாத்தியப்படுவதால் அப்போது கிடைத்த எந்த அனுபவமும் (காமிக்ஸ் உட்பட) நமக்கு Deep'ஆகவே பாதித்திருக்கும். //


      Delete
    2. @ramesh kumar
      But again how come the freshness was maintained during childhood times for a longer period? Than now.
      One of the reasons could be multiple options available now on any thing

      Delete
  36. கேள்வி 1 - ரஜினி படத்திற்கும் மிஸ்கின் படத்திற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டையும் பார்ப்போம் .

    கேள்வி 2 - அன்றைய பொழுது போக்கே அது தான் எனும் போது. true memories .

    கேள்வி 3 - டிஜிட்டல் உலகில் கண்டிப்பாக 50% குறையும்.

    கேள்வி 4 - no from my family . what to do .

    கேள்வி 5 - முதல் முறை கண்டிப்பாக முழு மூச்சக படித்து விடுவேன். ஆனால் திரும்ப படிப்பது கிடையாது. 90 களில் மாதிரி 50 தடவை திரும்ப படிக்கும் ஆர்வம் இப்போது இல்லை.

    கேள்வி 6 - கால மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறது .

    கேள்வி 7 - ஒன்லி old

    கேள்வி 8 - டாப் 3
    ரத்த படலம் எல்லாம்
    லார்கோ 2 ஆம் பாகம்
    தங்க கல்லறை

    flop 3 - nothing .

    கேள்வி 9 - புருவ உயர்தல்கள் உண்டு . தைரியமும் உண்டு.

    கேள்வி 10 - சுதந்திரமாய் (தண்ணீர் தெளித்து) விட்டு விடுகிறார்கல் .

    Pasupathy.R - Tirupur.

    My first post.

    ReplyDelete
    Replies
    1. Pasupathy R : முதல் பின்னூட்டமே பிரமாதம் !

      Delete
  37. டியர் எடிட்டர் சர்ர்,
    புதிய வெளியீடுகள் வரும்வரை ஏதரவதொரு பழைய லயனின் வெளியீடே கைகொடுக்கும். திரும்பத் திரும்ப வரசிப்பேன். எனக்கு அதிலொன்றும் வெட்கமில்லை.
    6) முத்தக்கரட்சி வந்தாலும் நமது லயனில் அதை நரசூக்கரக இன்று வரை கையரண்டு வருகிறீர்கள். தொடருங்கள் சர்ர்.
    7) கரமிக்ஸ் நண்பர்களை இங்கு கரண்மதே அரிது. இருப்பினும் முதலில் பழங்கதை பேசியபின்பே , தற்போது வெளிவரும் வெளியீடுகள் பற்றி பேசத்தொடங்குவோம் என்று நினைக்கிறேன்.
    8) top3- பின்பு
    9) " இன்னமும் கரமிக்ஸ் படிக்கிறரயர?" என ஓர்ரயிரம் கேள்விகள்தரன். அவர்களுக்கு என் கரமிக்ஸ் கலெக்‌ஷனை பெருமையுடன் எடுத்து கரட்டுவேன்.
    10) ஊட்டுகர்ரம்மர முதலில் சிரித்தரலும், பின்பு என்னை தண்ணி தெளித்து விட்டுவிட்டார்.( இவர் எப்போதும் இப்படித்தான் )

    ReplyDelete
  38. ஜனவரி 16 பொங்கலுக்கு மறுநாள் ..கடுமையான கூட்டம் திருப்பதியில் ..வெகுநேரம் வரிசையில் நின்று
    சுவாமி தரிசனம் செய்து,அதைவிட வெகு நேரம் வரிசையில் நின்று லட்டு வாங்கி ,அதைப் பையில் போட்டு
    18ம் தேதி சென்னை புத்தக திருவிழா விற்கு வந்து 150ம் நம்பர் ஸ்டால் ஐ கண்டுபிடித்து எடிடரை பார்த்து குடுக்க வந்தால் அவரில்லை..அங்கிருந்த தாடிக்காரரிடம் துண்டு சீட்டெழுதி கொடு த்துவிட்டு வந்தது..என் இனிய
    BAMBAMBIGELOW .. ஒரே ஒரு கேள்வி..திருப்பதி, பிரசாதம் எடிட்டருக்கு கிடைத்ததா இல்லையா ...

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : அட...அந்த நல்லுள்ளம் நீங்கள் தானா சார் ?! "நெரிசலில் சரியாகக் கவனிக்க இயலவில்லை - லட்டு கொடுத்து விட்டுப் போனார்" என்று மட்டும் நம் பணியாளர் சொல்லி இருந்தார் !! பத்திரமாய் கூரியரில் என்னை வந்து சேந்தது - விலைமதிப்பில்லா அந்தப் பிரசாதம் ! மனமார்ந்த நன்றிகள் !!

      Delete
  39. // முத்தக் காட்சிகள் வந்தால் சூர்யகாந்திப் பூக்களை உரசவிடும் அந்தக் காலத்து தமிழ் சினிமா பாணியில் -கோஷாப் பெண்ணாய் இது காலம் வரை இருந்து வந்துள்ள நமது இதழ்களில் - இதழ் to இதழ் சமாச்சாரங்கள் ஜஸ்ட் லைக் தட் அரங்கேறுகின்றன ! இப்போதெல்லாம் 'நச்' என்ற sound effect -ஐ எழுதுவது போலவே "இச்" என்றும் எழுத வேண்டியாகிறது ! இது கால மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறதா guys ? //

    காதல், Kiss, ரொமேன்ஸ்கள் பிரச்சனையில்லை, தற்காலத்தில் அவை சரியான கண்ணோட்டத்துடன் நெருடலில்லாத பார்வையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.. ஆனால் லார்கோ போன்ற ப்ளே பாய் லெவல் எட்டிப்பார்க்கும் கதைகளை பரணில் அனுப்பிய பின்கூட யாராவது இதை புரட்டினால் என்ன நினைப்பார்கள் என்ற கவலையைத் தவிர்க்கமுடியவில்லை. (So planning to dispose after first reading - inevitably)

    புத்தக கண்காட்சிகளில் எப்படி மேனஜ் செய்யப்படுகிறதெனத் தெரியவில்லை, ஆனால் சிறார்களுக்காக புக் தேடிவரும் பெரியவர்கள் எடுத்த எடுப்பிலேயே லார்கோவின் ஏடாகூடமான பக்கத்தைப் புரட்ட நேர்ந்தால் லக்கி லுக்குக்கு ஒரு சேல்ஸ் மைனசாக வாய்ப்பள்ளது! வயது ரீதியிலான சந்தா மற்றும் Display அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : //வயது ரீதியிலான சந்தா மற்றும் Display அவசியம்.//

      எல்லா சந்தர்ப்பங்களிலும் இது சாத்தியமல்லவே !

      ஒவ்வொரு பெருநகரிலும் காமிக்ஸ் விற்பனை செய்யும் நம் முகவர்களை இதற்குக் கட்டுப்படச் சொல்வதோ, செய்வதோ நிச்சயமாய் இயலாக் காரியங்கள் !

      சித்திரங்களை இயன்றளவு சென்சார் செய்ய முற்படுவது இதன் பொருட்டே - ஆனால் அதன் பொருட்டும் விமர்சனங்கள் எழும் சமயங்களில் எங்கள் கைகள் கட்டப்பட்டே போகின்றன !

      Delete
    2. கடைகளில் விற்பனை செய்பவர்களுக்கு இது சாத்தியமில்லைதான் சார், நான் குறிப்பிடுவது கண்காட்சிகள் மற்றும் சந்தா ரீதியிலானது. கண்காட்சிகள் புது வாசகர்களுக்கு நமது வெளியீடுகள் அறிமுகமாகும் களம் என்பது முக்கிய காரணம். இரண்டாவது, தனி சந்தா இருந்தால் லார்கோ வகைக் கதைகளை சென்சார்கூட செய்யவேண்டியிருக்காது.

      Delete
  40. எடிட்டருக்கும் , ஐ௳னியர் எடிட்டருக்கும் , லயன் பணியரளருக்கும், அவர்தம்குடும்பத்தினருக்கும், அன்பு வரசகர்கட்கும், என் இனிய நண்பர்கட்கும் இனிய குடியரசு தின வரழ்த்துகள்!

    ReplyDelete
  41. Top 3
    1 Kolai seivir kanavangale
    2 Irave irule kollathey
    3 Largo 2nd story

    ReplyDelete
  42. Top 3
    என்னைப் பொறுத்த வரை
    1)LMS
    2) லர்ர்கோ விஞ்சின் கதைகள்
    3) கர்ர்சனின் கடந்த கரலம்

    ReplyDelete
  43. 1. இன்றளவும் நாம் காமிக்ஸ் படிக்கின்றோம் என்பதின் மூலமாக, நாம் இன்னும் நமக்குள் இருக்கும் பால்யத்தை நமது இந்த வயதிலும் நம்முடனே அழைத்து வந்து கொண்டு இருக்கிறோம் என்று விளங்கி கொள்ள முடியும். முக்கியமாக காமிக்ஸ் படிக்கும் பொழுது மனதில் எழும் இனம் புரியா குதுகலம், நம்மை இன்னும் சிறுவர்களாகவே நினைக்க தூண்டுகிறது. So நாம் நமது உண்மையான பால்யத்தில் படித்த கதைகளை மனம் விரும்புவதில் வியப்பேதும் இல்லையே சார்.
    --------------------------------------------------------------
    2. So சிம்பிள் சார், இது ஒரு இனிமையான பொழுது போக்கு. எந்த வித கஷ்டமோ, தவறான வழிக்கு கொண்டு போகும் விஷயங்கள் இல்லாத பொழுது போக்கு. முக்கியமாக காமிக்ஸ் படிக்கும் பொழுது மனதில் எழும் இனம் புரியா குதுகலம், நம்மை இன்னும் சிறுவர்களாகவே நினைக்க தூண்டுகிறது. ஒவ்வொருவரும் பால்யத்துக்கு திரும்பி விட முடியாத என்று தானே ஏங்கி கொண்டு இருக்கிறோம். அதன் வெளிபாடே இது
    ------------------------------------------------------
    3. அது நம் கையில் தான் உள்ளது. அடுத்த தலைமுறைக்கு நாம் தான் அதை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் சிறுவர்களிடம் சுத்தமாக நடைமுறையில் இல்லை. அது பெற்றோர்களின் தவறு. இன்றைய டிஜிட்டல் உலகத்தில், பெற்றோர்களாகிய நாம் தான் அவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். அட்லீஸ்ட் நமது வீட்டில் உள்ள சிறார்களிடம் அந்த பழக்கத்தை கொண்டு வந்தாலே அவர்களின் மூலமாக கொஞ்சமாவது இந்த பழக்கம் வளரும்.
    ---------------------------------------------------------
    4. டைனோசார் தான், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என் ஐந்து வயது மகனுக்கு ஆர்வத்தை தூண்டி வருகிறேன். புத்தகம் பார்சல் வந்தால், அவனுக்கு என்று தான் சொல்லி வைப்பேன். நிலவொளியில் ஓர் நரபலி புத்தகத்தின் அட்டை படம் அவனை கவர்ந்ததால், இன்று வரை அது அவனது புத்தகம் என்று எடுத்து தனியாக வைத்து கொண்டான். என்னை படித்து கதை சொல்ல சொல்லி ஆர்வத்துடன் கேட்டான். கார்ட்டூன் காமிக்ஸ் நிறைய வந்தால் அவனை காமிக்ஸ் வட்டத்திற்குள் கொண்டு வர இன்னும் சுலபமாக இருக்கும்.
    --------------------------------------------------------------
    5. கண்டிப்பாக மறுமுறை படிகின்றேன் நிறைய முறை. இணையத்தில் உலவும் நேரத்தில் சில சமயம் நமது மனம் தேவை இல்லாத விஷயத்தில் ஈடுபடும் ஆனால் அதை தவிர்க்க நமது காமிக்ஸ் எனக்கு எல்லா விதத்திலயும் உறுதுணையாய் உள்ளது. இப்பொழுது கூட சிப்பாயின் சுவடுகளில் முடித்து விட்டு All new Special எடுத்து உள்ளேன் படிப்தற்கு. Next லார்கோ Series.
    --------------------------------------------------------------
    6. கண்டிப்பாக இதை கால மாற்றத்தின் பிரதிபலிப்பாக தான் பார்க்க தோன்றுகிறது.
    -------------------------------------------------------------------------
    7. கண்டிப்பாக பழைய கதைகளை பற்றி தான் பேச்சு அதிகமாக இருக்கும்
    ----------------------------------------------------------------------
    8. நான் தீவிர காமிக்ஸ் காதலன் So எனக்கு கதைகள் பிடித்திருக்கு பிடிக்க வில்லை என்று இது வரை யோசிச்சது கிடையாது, வகை படுத்தவும் தெரியாது ஆனால் நமது Blogல் உலவ ஆரம்பித்தது முதல், நண்பர்களின் விமர்சனங்களை படித்து, கொஞ்சமேனும் நானும் கதைகளை அலசி விமர்சனம் செய்ய கற்று கொண்டு வருகிறேன். Top 3 என்று வரிசை படுத்த தெரியவில்லை ஆனால் உடனே நியாபகத்திற்கு வருவது “இரவே இருளே கொல்லாதே”, “விரியனின் விரோதி”, “இறந்த காலம் இறப்பதில்லை” and Bottom என்று சொன்னால் அது “காலத்தின் கால்சுவடுகள்” மட்டும் தான்
    -----------------------------------------------------------------------
    9. அப்படி யாரும் கேட்டதில்லை ஏன் என்றால் காமிக்ஸ் என்றால் என்னவென்றே தெரியதர்வகள் தான் என்னை சுற்றி இருப்பவர்கள். கண்டிப்பாக தைரியமாக படித்திருக்கிறேன், படிப்பேன்.
    ----------------------------------------------------------------
    10. சிறு வயது முதல் இப்போ வரை எனது காமிக்ஸ் ரசனைக்கு என் வீட்டில் யாரும் தடை விதித்ததில்லை. அனால் "திரும்பவும் இந்த புத்தகம் எல்லாம் படிக்கச் ஆரம்பிதுவிட்டாயா" என்று சொல்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. // என்னை படித்து கதை சொல்ல சொல்லி ஆர்வத்துடன் கேட்டான். கார்ட்டூன் காமிக்ஸ் நிறைய வந்தால் அவனை காமிக்ஸ் வட்டத்திற்குள் கொண்டு வர இன்னும் சுலபமாக இருக்கும்.//

      Same blood..

      Delete
    2. Dasu Bala & Jaya Sekhar : Same...same blood !!

      Delete
    3. Dasu Bala : //இப்பொழுது கூட சிப்பாயின் சுவடுகளில் முடித்து விட்டு All new Special எடுத்து உள்ளேன் படிப்தற்கு. Next லார்கோ Series.//

      கையைக் கொடுங்கள் சார் !

      Delete

  44. மல்லாக்கக் கேள்வி # 1 :
    என்றும் இளமை நினைவுகள் இனியவை
    இன்றைய தலை முறைக்கு லார்கோ நினைவுகளாய் இனிக்க காலம் இருக்கு

    ReplyDelete
  45. என் மகனுக்கு வானமே எங்கள் வீதி ஒரு இனிய நினைவாக வரும்
    மாயாவியும் கூட!!

    2 சிறு வயதில் செய்தவை அனைத்தும் தற்போது செய்ய முடியாது ஆனால் காமிக்ஸ் படிக்கலாம்
    அப்போது வாங்க தந்தையை நாட வேண்டும் சம்பாத்யம்இல்லை இப்போது நாம் காமிக்ஸ் வாங்கலாம்

    ReplyDelete
  46. Electronic gadgets அதிகம் உள்ள அமெரிக்கா பிரான்ஸ் மற்ற நாடுகளில் காமிக்ஸ்களும் கோலோச்சுகின்றனவே

    3.சிறு வயதில் குழந்தைகளின் ரோல் மாடல் தந்தை தான் எனவே இந்த பழக்கம் தொடரும்

    ReplyDelete

  47. 4 புத்தகங்களின் வசதியே மீண்டும் மீண்டும் வாசிப்பதே
    5 இன்று பள்ளிகலிலேயே மாணவ மாணவியருக்கு செக்ஸ் கல்வி தரப்படவேண்டும் என்ற நிலையில் நமது காமிக்ஸில் வரும் சில நாசுக்கான காட்சிகளால் தவறில்லை இன்றைய சிறார்கள் முத்தக்காட்சிகளை ஊடகங்கள் வழியாக பார்பதற்கும் வாய்புகள் அதிகம்
    so our younger generation has to cross it

    ReplyDelete
  48. 6 பழையதும்+புதியதும்
    7 Green mannor
    Deva ragasium thedalukalla
    Irave irule kollathe

    According to me there are some different books but not bad books

    ReplyDelete
  49. 9. நண்பர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்
    10 வெளியிடத்தில் படிக்க தைரியம் உண்டு
    11. தண்ணீர் தெளிப்பு தான்
    நல்ல வேளை பத்து கேள்விகள்தான் தண்ணீருக்கு பதிலாக தண்ணீர் பாத்திரத்தை தெளிப்பதற்குள் முடித்துவிட்டன்

    WhatWhatfor u are asking these questions
    Why are u putting our lives in danger

    ReplyDelete
    Replies
    1. sai vignesh : //நல்ல வேளை பத்து கேள்விகள்தான் தண்ணீருக்கு பதிலாக தண்ணீர் பாத்திரத்தை தெளிப்பதற்குள் முடித்துவிட்டன்//

      தலை தப்பியதோ ?!! :-)

      Delete
  50. படித்துவிட்டு போக வேண்டியது தானே ஏன் இந்த பதிவு அப்படி இப்படி என்று!!!!!!!!
    ThereThere are many readers not expressing their views because of shortage of time

    ReplyDelete
  51. Oh god I am closing , last call for my dinner

    ReplyDelete
  52. I'm a student so pocket moneyல தான் books வாங்குறேன்...பல books selectiveவாகத்தான் வாங்க முடிகிறது...பலரின் காமிக்ஸ் விமர்சனங்களையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது but உண்மை என்னவெனில் "ஒரு சிப்பாயின் சுவடுகள்,கீரின் மெனர்,இடியாப்ப சிக்கல்"காரரின் புத்தகங்களே எனக்கு தனிப்பட்ட ரீதியில் பிடித்துள்ளது..சிறந்த பொழுது போக்கு புத்தகங்களாகவும் தோன்றுகிறது...மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றன.அதே நேரத்தில் இவை வசூலிலும் விமர்சன ரீதியிலும் பெரிதும் அடிவாங்கியவை.அதே நேரம் பெரும் வெற்றி பெற்ற 'நில் கவனி சுடு"20 பக்கங்களிற்குள்ளேயே'பிறகு படிக்கலாம்'என்ற மன நிலையை கொண்டு வந்து விடுகிறது.@the same time ஏற்கனவே படித்த,கதை நன்றாக தெரிந்த "மாயாவி,கூர்மண்டையர்,ஆர்ச்சி"ஆகியோரின் நூல்கள் எவ்வளவு படித்தாலும் மீண்டும் படிக்க வைக்கின்றன...
    Marvel comics பற்றி ஒருமுறை கூறி இருந்தீர்கள்...Starwars போன்றவற்றை விட Marvel பல மடங்கு சிறந்தாக இருக்கும் ஏனையவர்களுக்கு...ஏனெனில் Starwars கீரின் மெனர் என்றால் Marvel comics டெக்ஸ்,ஸ்பைடர் போன்றது...(அதனால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்றேன்).இது எனது தனிப்பட்ட கருதுகோள்..!

    ReplyDelete
  53. விஜயன் சார்,
    1. நமது come back special இதழை மீண்டும் ஒருமுறை படித்தேன், குறிப்பாக லக்கி-லூக் அருமையான கதை, அதில் மிகவும் ரசித்தது அதன் தெளிவான வண்ணம் மற்றும் சித்திரம்; தற்போது வரும் ப்ளூ கோட் பட்டாளத்திற்கு இணையான ஆச்சு. ஆனால் இதன் பிறகு வந்த லக்கி-லூக் கதைகளில் இது போன்ற தெளிவான படம்கள் மற்றும் வண்ணம்களை பார்க்க முடியவில்லை! இது ஏன்? இது நமது புதிய மற்றும் பழைய அச்சு எந்திரம்களின் கை வண்ணமா? இல்லை 2012 வெளிவந்த லக்கி-லூக் கதை போன்று சிறந்த ஓவிய தெளிவு மற்றும் வண்ணகலவை கொண்ட கதைகள் தற்போது இல்லையா?

    மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், கடந்த (2012) காலம்களில் ஒரு கட்டத்தில் வரும் இரு வேறு வசனம்களுக்கு இருவித அளவு பான்ட் உபயோக படுத்தி இருந்தது கண்களை உறுத்தியது ஆனால் தற்சமயம் அந்த குறைபாடு இல்லாமல் சிறப்பாக இருக்கிறது.

    2. Come back special-லில் லக்கி-லூக்கின் தரைக்கு கீழே தங்கம், மற்றும் பனியில் ஒரு கண்ணாமூச்சி வருகிறது என விளம்பரம் கண்டேன்! இவை எப்போது வரும். மேலும் லாரன்ஸ்&டேவிட்-இன் பனியில் ஒரு அசுரன் விளம்பரம் கண்டேன்! அதுவும் எப்போது?

    அந்த புத்தகத்தின் ஹாட்-லைன்-இல் "செய்வதை மாத்திரம் சொல்வோம்" என குறிப்பிட்டு இருந்தீர்கள், இதுவரை அப்படித்தான் எல்லாம் நடைபெறுவது சந்தோஷம் அளிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த புத்தகத்தின் தெளிவான வண்ணம் மற்றும் சித்திரத்தை தற்போது வரும் லக்கி-லூக்கின் கதைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும்!

      Delete
    2. Parani from Bangalore.
      +1
      +1
      (இரண்டு கமெண்ட்டுகளுக்கு.)

      Delete
  54. விஜயன் சார், கடந்த சில நாட்களாக மனதில் ஓடும் சிந்தனை இது....
    1. நாம் அதிகமான எண்ணிகையில் சிறப்பு இதழ்களை வெளி ஈடுவதாக தோன்றுகிறது.
    2. நமது காமிக்ஸ் எல்லோரும் வாங்கும் விலையில் இருப்பது நலம்! நமது வாசகர் வட்டம் விரிவடைந்து நமது விற்பனை அதிகரித்தால் நமது புத்தகம்களில் விலை குறைந்து விடும் என நம்புகிறேன், இதற்கு வாய்ப்பு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. 3. மின்னும் மரணத்தின் விலை குறைய வாய்ப்பு உண்டா?

      Delete
    2. தற்சமயம் நமது காமிக்ஸ் விலையை பார்க்கும் போது வரும் காலத்தில் காமிக்ஸ் என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்ற நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் உள்ளது.

      Delete
    3. //நாம் அதிகமான எண்ணிகையில் சிறப்பு இதழ்களை வெளி ஈடுவதாக தோன்றுகிறது. //

      இதற்கு மட்டும் -1
      மற்ற கருத்துகளுக்கு நடு நிலை.

      சிறப்பு இதழ்கள் தரும் மகிழ்ச்சி அலாதியானது.!

      // நமது வாசகர் வட்டம் விரிவடைந்து நமது விற்பனை அதிகரித்தால் நமது புத்தகம்களில் விலை குறைந்து விடும் என நம்புகிறேன், //

      உங்கள் நம்பிக்கை நிஜமானால் அனைவருக்கும் சந்தோஷம்.

      Delete
    4. @Parani from Bangalore,

      Essential questions!

      // நாம் அதிகமான எண்ணிகையில் சிறப்பு இதழ்களை வெளி ஈடுவதாக தோன்றுகிறது. //

      +1 ஆண்டுக்கு 2 அல்லது 3 ஸ்பெஷல்கள் என்ற அளவோடு வைத்துக்கொண்டு ரெகுலர் இதழ் கதைகளின் தயாரிப்பு தரத்துக்கு உழைப்பை செலவிடலாம். அச்சுத்தரம் ரெகுலர் இதழ்களில் நன்றாக இருந்தால் வாசகர் வட்டம் விரிவடைய வாய்ப்புள்ளது (Because Comics can attract new readers only by first impression and attraction). ஸ்பெஷல்களில் மட்டும் தரம் உயர்த்தப்படுவதால் Long term'க்கு உதவ வாய்ப்பில்லை.

      // நமது விற்பனை அதிகரித்தால் நமது புத்தகம்களில் விலை குறைந்து விடும் என நம்புகிறேன், இதற்கு வாய்ப்பு உண்டா? //
      வாசகர் வட்டம் விரிவடைகிறதோ இல்லையோ, கதைகளின் எண்ணிக்கை மற்றும் வெரைட்டியின் காரணமாக ஏற்கெனவே இருக்கும் சிறிய வட்டம் மேலும் குறுகும் நேரம் இது. எல்லா கதைகளையும் வாங்கும் சக்தியிருந்தாலும் ஆண்டுக்கு இவ்வளவு கதைகளை படித்துதான் ஆகவேண்டுமா என்ற கேள்விக்கு atleast நான் வந்துவிட்டேன். பலர் இந்த ஆண்டில் இவ்வாறு யோசிக்காவிட்டாலும், அடுத்த ஆண்டுவாக்கில் வாசிப்பு அயர்ச்சிக்கு ஆளாகப்போவது உறுதி. தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழிமுறை தவிர்க்க இயலாதது!

      எனவே ஆண்டுக்கு ஒவ்வொரு ஜானரிலும் 12 கதைகள் என்ற ரீதியில் வெளிவந்தால் சந்தா செலுத்துவோர் மற்றும் நேரடியாக வாங்குவோருக்கு வேண்டியதை வாங்கும் மினிமம் கேரண்ட்டி சாத்தியமாகும்.

      அத்தோடு மட்டுமல்லாமல் வாசகர் வட்டம் விரிவடைவது கார்ட்டூன் போன்ற Light Weight கதைகள் மூலம்தான் சாத்தியம். ஆண்டுக்கு 12 புத்தகங்கள் என்ற ரீதியில் 5 தனித்தனி சந்தாக்கள் இருப்பின் அதில் 2 சந்தாக்கள் மட்டுமாவது அதிக சர்க்குலேஷனை தொட வாய்ப்புள்ளது. அது நிகழும்பட்சத்தில் அந்த குறிப்பிட்ட ஜானர் இதழ்களின் விலைகளைக் குறைப்பது சாத்தியமாகலாம். We should allow virtuous circle to start somewhere :)

      Delete
    5. //சிறப்பு இதழ்கள் தரும் மகிழ்ச்சி அலாதியானது.! //
      +1

      Delete
    6. //நாம் அதிகமான எண்ணிகையில் சிறப்பு இதழ்களை வெளி ஈடுவதாக தோன்றுகிறது. //

      இதற்கு மட்டும் -1
      மற்ற கருத்துகளுக்கு நடு நிலை.

      சிறப்பு இதழ்கள் தரும் மகிழ்ச்சி அலாதியானது.!

      +1

      Nothing can beat special issues. Just the sight of collection of stories in a big single book gives immense pleasure.

      Delete
    7. சிறப்பு இதழ்கள் தரும் மகிழ்ச்சி அலாதியானது என்பது உண்மை! ஆனால் அவை குறிப்பிட்ட அளவு இருந்தால் நலம்! வருடத்திற்கு 2 என்பது சரியான எண்ணம், மேலும் இது அனைவரும் வாங்கும் விலையில் வருவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்!

      Delete
  55. Mk 10:-
    சில சமயங்களில் மதிப்பும், பல சமயங்களில்.,மிதிப்பும் கிடைக்கின்றன.
    தண்ணீர் தெளித்து விட்டுவிடுவதில்லை. தண்ணீரை முகத்தில் ஊற்றி தெளியவைத்து தெளியவைத்து கும்மிய கதைகளை நான் வெளியில் சொல்ல விரும்புவதில்லை.!
    Mk9.;-
    என் தந்தை ஒருமுறை புருவம் உயர்த்தினார். கா.க.காலமும், மின்னும் மரணமும் படிக்க வைத்து புருவத்தை கீழிறக்கினேன்.(அவருடைய ரசனை சரித்திர நாவல்களில் மட்டுமே நிலை கொண்டுள்ளது.)
    புருவ உயர்த்துதல்களை சமாளிக்கும் வழிமுறை தெரிந்து வைத்துள்ளேன். பூரிக்கட்டை உயர்த்துவதை தடுக்கத்தான் வழி தேடிக்கொண்டு இருக்கிறேன்.
    வெளி இடங்களில் காமிக்ஸ் படிப்பது கிடையாது.(தைரியம் இல்லை என்பதை தைரியமாக ஒத்துக் கொள்கிறேன்.)

    ReplyDelete
  56. Mk 8:-
    Top 3,,முன்று மட்டுமே சொல்வது சற்று கடினம்தான்.!
    எமனின் திசை மேற்கு
    ஆகாயத்தில் அட்டகாசம்
    அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே
    மற்றும் நிறைய.
    Bottom 3:-
    இதுவும் கடினமே.!
    ப்ரிண்டிங்., கலரிங் குறைபாடுகள் உள்ள சில கதைகள் மட்டுமே.!
    (காமிக்ஸ் என்றாலே படக்கதைதானே, படங்கள் தெளிவற்று இருக்கும் பட்சத்திலோ கலரிங் சொதப்பலாக இருக்கும் பட்சத்திலோ எத்தனை விறுவிறுப்பு நிறைந்த கதையாயினும் அது ரசிக்க முடியாத நிலைக்கு சென்று விடுகிறது.)

    ReplyDelete
  57. @editor::-) அடுத்த வருடம் டெக்ஸ் டைஜஸ்ட் மறுபதிப்பாக வேண்டும்.

    ReplyDelete
  58. Mk :-7:-
    நல்ல கேள்வி.!
    இன்று கூட எங்கள் வாட்ஸ் அப் குழு நண்பர்களின் சந்திப்பு நடைபெற்றது.
    முழுக்க முழுக்க காமிக்ஸ் மட்டுமே என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் எங்கள் குழுவில்,
    பழசு புதுசு இரண்டின் நிறை குறைகளும் அலசப்படும்.
    விலை தரம் எல்லாமே விவாதிக்கப்படும்.
    இன்னும் வந்திடாத, வரவேண்டிய கதைகளும் பேசப்படும்.
    மொத்தத்தில் எங்கள் குழுவில் நடைபெறும் விவாதங்கள் போட்டிகள் விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்கள் போன்றவை எங்களின் காமிக்ஸ் காதலை என்றென்றும் வாழவைக்கும் என்பது உறுதி.!
    நன்றி நண்பர்களே.!

    ReplyDelete
  59. டெக்ஸ் டைஜஸ்டில் top hit or wanted கதைகள் 5 to 6 ஒன்றாக வெளியிடவும்.
    1. சைத்தான் சாம்ராஜ்யம் -128 pages
    2. பவள சிலை மர்மம் -110 pages
    3. பழிக்குப்பழி -124pages
    4. இரத்த முத்திரை -120pages
    5.அதிரடிக் கணவாய் - 128pages
    6. எமனுடன் ஒரு யுத்தம் - 94pages
    Total no of pages. - 704 pages

    ReplyDelete
  60. ///உங்கள் இல்லத்தில் உங்களைத் தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ? ///

    என் மனைவி எப்போதாவது டெக்ஸ் கதைகள் படிப்பதுண்டு. அவர் சமீபத்தில் படித்து மிரண்டது - ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷலின் இரு கதைகளையும்! பொதுவாகவே என் மனைவிக்கு பேய் பிசாசு பில்லிசூன்ய கதைகளே அதிகம் பிடிக்கிறது (அது சரி, இனம் இனத்தோடுதானே சேரும்...!) ;)

    என் 5 வயது மகளுக்கு சுட்டிலக்கியின் பல பக்கங்கள் (நான் பலமுறை கதை சொல்லியதன் மூலம்) அத்துப்படி! லக்கி-லூக், ஜாலி ஜம்பர், தர்பூசணி தபீதா ஆகியோர் மிகவும் பரிச்சயமானவர்கள்! அவளுக்கு தமிழ்மொழியை காமிக்ஸ் மூலமாகவே கற்றுத்தர விரும்புகிறேன். இதில் என் மனைவிக்கும் பரிபூரண சம்மதம்!

    ஒரு குழந்தையின் தாய், என் மனைவிக்கு ஃபோன் செய்து பேசிய உரையாடலின் சுருக்கம் கீழே:

    " உங்க பொண்ணுக்கு தமிழ் லேங்வேஜ் நல்லா எழுத வருதே... ஏதாச்சும் ஸ்பெஷல் கோச்சிங் கொடுக்கறீங்களா?"

    "கோச்சிங் எல்லாம் எதுவுமில்லங்க. இவங்க டாடிக்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கமிருக்கு... இவளுக்கும் காமிக்ஸைப் படிச்சுக்காட்டி கதை சொல்லுவார். இவளுக்கு தமிழ் மேல இன்ட்ரஸ்ட் வர இதுதான் காரணம்னு நினைக்கிறேன். வேணுமின்னா நீங்களும் காமிக்ஸ் மூலமா ட்ரை பண்ணிப் பாருங்களேன்..."


    இந்த உரையாடல் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்!

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே ... வாழ்த்த வயதில்லை (!) ... தொடரட்டும் உங்கள் சேவை ....

      Delete
    2. @ ப்ளூ

      இப்படியே 'வாழ்த்த வயதில்லை., வாழ்த்த வயதில்லை'னு இன்னும் எத்தனை நாளுக்குதான் சொல்லிக்கிட்டிருப்பீங்களாம்? சட்டுபுட்டு வயதுக்கு வரும் வழியைப் பாருங்க. கிர்ர்ர்ர்..,

      Delete
  61. இது போல் collectors edition ஆக hardbound அட்டையில் வண்ணத்தில் முன் பதிவு முறையில் வெளியிடவும். இதற்கு நிச்சயம் நல்ல வரவேற்பும் LMS விட விற்பனையில் அதகளம் செய்வது உறுதி.

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் நான் பலநாட்களாக திட்டம் செய்து கொண்டிருந்ததை நீங்கள் வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்
      நன்றி.எடிட்டர் பார்வைக்கு.....

      Delete
  62. ///இன்றைக்கு காமிக்ஸ் மழையாகக் கொட்டுகிற போது - படித்த ஒரு கதையை மறு முறை புரட்டத் தோன்றுகிறதா ? ///

    எப்போதாவது தோன்றினாலும் அதற்குத் தோதான நேரம் அமைவதில்லை. வேலை நேரத்தில்கூட கையில் மொபைலை வைத்துக்கொண்டு இந்த வலைத்தளத்தில் சில/பல பின்னூட்டங்களை எளிதாகப் போட்டுவிட முடிகிறது... ஆனால் புத்தகத்தை எடுத்துப்படிக்க அதற்கான ஒரு தனிமையான சூழல் தேவைப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களிலோ அல்லது பயணங்களின்போதோ மட்டுமே அது சாத்தியமாகிறது.

    ReplyDelete
  63. டியர் எடிட்டர் சர்ர்,
    இன்று பதிவு தபரலில் புத்தகங்கள் வந்து கிடைத்துள்ளன. இம்மரத இதழ்களுடன், மறுபதிப்புகளும் கூடவே தரங்கள் கூறியது போல Double Thil Special+"என் பெயர் லர்ர்கோ" உடன் மறுபடியும் " கர்ர்சனின் கடந்த கரலம்" இதழையும் அனுப்பி உள்ளனர். என் வீட்டுக்கர்ரம்மர இற்கு கூட நல்ல ஞரபகம் உள்ளது. நரன் குறை சொல்பவனல்ல.
    "கரவல் கழுகு" நரன் ஓடர் செய்து விட்டு பதிலும் மெயிலில் வந்து நரன் பொறுமையரய் கரத்திருந்த வேளையில் இப்படி.சென்ற மரதமும் இப்பபடி 3 புத்தகம் மறுபடி அனுப்பினர்ர்கள். நரன் திருப்பி அனுப்பினேனர சர்ர் இல்லையே! மருத்துவமனையிலுள்ள , கை, கரல் வழங்கரத எனக்கே இந்த நிலமை என்றரல்? இதற்கும் சேர்த்து கணக்கில் வைப்பர்ர்கள். முடியுமுன் எனக்கு "கரவல் கழுகு" அனுப்பி வைப்பீர்களர சர்ர்? இது 2 வது என்றபடியால் உங்களிடம் முறையிடுகிறேன் சர்ர். இது தொடர்ரமல் தடுத்து நிறுத்துங்கள் . இல்லரவிடில், இப்படி ஒவ்வொரு சந்தரதர்ரரும் போய் விடுவர்ர் சர்ர்!

    ReplyDelete
  64. ///இப்போதெல்லாம் 'நச்' என்ற sound effect -ஐ எழுதுவது போலவே "இச்" என்றும் எழுத வேண்டியாகிறது ! இது கால மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறதா guys ? ///

    தனிப்பட்ட ஒருவனாக என்னால் இதை மிகச் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் எதிர்காலத்தில் இந்த முத்தச் சமாச்சாரங்கள் அடங்கிய புத்தகங்களை என் சந்ததிக்குப் படிக்கக் கொடுப்பேனா என்ற கேள்விக்கு இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை என்பதே உண்மை!
    என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை!

    ReplyDelete
    Replies
    1. // என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை! //
      சரியாக சொன்னீங்க விஜய்! எனது ஆசையும் இதுதான்!

      Delete
    2. // என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை! //

      ஏற்றுக் கொள்ள வேண்டிய ஆசை

      +1

      Delete
    3. என்ன @erode vijay இப்படி சொல்லிடீங்க.
      We can't sacrifice everything for our kids ;)

      In my opinion, there is no need for nudity but all type of comics genre should come out irrespective of whether kids will like it or not.

      Delete
    4. @ V Karthikeyan, Pasupathy R

      ஒரு நீண்டநாள் காமிக்ஸ் காதலராக நம்மால் நம் குழந்தைகளுக்கு இச், ப்ச்க், ம்ப்ப் இல்லாத லயன-முத்து காமிக்ஸ்களை எளிதாக தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட முடியும் தான்!

      ஆனால் நான் சொல்ல வந்தது, காமிக்ஸ் வாசனையே துளியும் அற்ற ஒரு பெற்றோர் தன் மகனுக்கு/மகளுக்கு தானாக முன்வந்தோ அல்லது அக்குழந்தையின் விருப்பத்தின்பேரிலோ ஒரு புத்தகக்கடை/புத்தகத் திருவிழாவில் ஒருசில காமிக்ஸ் புத்தகங்களை தேர்வுசெய்ய நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டுகிறார்... அது ஒரு லார்கோ பு(மு)த்தகம்.... இச், இம்ப், ப்ச்க்... "ஆத்தாடி..." அவசர அவசரமாக புத்தகத்தைத் திரும்ப வைத்துவிட்டு மற்றொரு புத்தகத்தை எடுக்கிறார்... அதுவொரு ஷெல்ட்டனின் பு(மு)த்தகம்... "அம்மாடி..." ஒரு சரியான காமிக்ஸ் கைடு அருகில் இல்லாவிட்டால் அவரது முடிவு என்னவாக இருந்திடுமென்று கணிப்பது அப்படியொன்றும் கஷ்டமான காரியமில்லையே?

      இப்போது என் மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்களேன்...

      // என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை! //

      இதுவே ஞான் சொல்ல வந்தது! :)

      Delete
  65. // என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை! //

    நான் ஆட்சேபிக்கிறேன்.

    குழந்தைகளுக்கு பரிந்துரை செய்வது என்பது அவர்களின் வயதை maturity ஐ பொருத்தது .

    எனக்கு 1995 இல் எனது உறவினர் வீட்டில் 10 வயதில் காமிக்ஸ் பார்த்தபோது மாயாவியின் தவளை மனிதர்களும் லக்கி இன் பூம் பூம் படலமும் தான் ஈர்த்தது. ரத்தபடலம் 5 புரியவே இல்லை .
    வயது ஆக ஆக எல்லா கதைகளும் பிடித்தது. புரிந்தது.

    குழந்தை பருவத்தில் முதலில் இரும்பு கை மாயாவி, phantom மாதிரி பாண்டஸி தான் பிடிக்கும். அப்புறம் லக்கி , சிக் பில் காமெடி பிடிக்கும் . அப்புறம் டெக்ஸ் வில்லர் வகையறா action பிடிக்கும் .

    graduation முடித்து உலக அறிவு வளரும் பொது தான் லார்கோ, மார்டின், கிராபிக் novel கதைகள் புரியும்.

    அந்தந்த வயதிற்கு உண்டான கதைகளை பரிந்துரை செய்யுங்கள். குழந்தைகள் பெரியவர்கலாகும்போது தானாக censorship ஐ ஏற்றுகொண்டு விடுவார்கள் .

    ReplyDelete
    Replies
    1. //குழந்தைகளுக்கு பரிந்துரை செய்வது என்பது அவர்களின் வயதை maturity ஐ பொருத்தது . //
      +1

      Delete
    2. அதுக்கு தான் மினி லயனில் சிறுவர்களை ஈர்க்கும் கதைகளை கொண்டு வாருங்கள் ..........ப்ளீஸ் ......(அப்பிட்யே நானும் படிப்பேன்)..........அதிக வசமில்லாத BALLOON கள் சிறுவர்களை ஈர்க்கும்............
      நம்மை விட்டால் .............வேறு யார் தான் தமிழ் போற்றுவார்

      Delete
  66. காமிக்ஸ் விற்பனையை அதிகமாக்க வேண்டுமெனில் வளரும் தலைமுறையை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்தல் அவசியம்.

    காமிக்ஸ் வாங்குவதில் வளர்ந்த தலைமுறை வாசகர்களுக்கு எவ்வித கஷ்டமும் உண்டாவதில்லை

    மேலும் அளவுக்கு அதிகமான காமிக்ஸ்களை வெளியிடுவதன் மூலம் சலிப்பு ஏற்பட ஏற்பட வாய்ப்புள்ளது

    மாதம் இரண்டு காமிக்ஸ்கள் மற்றும் ஆண்டின் இடைவெளியில் இரண்டு மூன்று சிறப்பு இதழ்கள் என்று வெளியிட்டால் நலமாக இருக்கும் .

    இளைய தலைமுறையை கருத்தில் கொண்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

    ஏழை காமிக்ஸ் வாசகர்களுக்கு காமிக்ஸை எட்டா கனியாக்கி விடாதீர்கள்.

    இங்கே உள்ள பல வாசகர்களும் இவ்வகையான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருப்பவர்கள்

    ReplyDelete
  67. சொல்லுறதை சொல்லிப்புட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்

    யாம் பெற்ற காமிக்ஸ் இன்பம், பெறுக இளைய தமிழகம்

    ReplyDelete
  68. Hai சன்டே ன்னா ரெண்டு... super padhivu.. நான் தவறவிட்ட பல கதைகளை (நீங்கள் எல்லோரும் மிகவும் சிலகிக்கும்) படிக்க பத்திரப்டுத்த மிகவும் உதவிகரமானவை மறுபதிப்புகள்.....
    Ponit 2 : எங்கள் வீட்டில் " comics ஐ இன்னுமா படிக்கிற? " என்ற கேள்வி உண்டு... answer as usual " its a part of my life "

    ReplyDelete
  69. ''சிங்கத்தின் சிறு வயதில்''........
    நீங்க மட்டும் கால எந்திரத்தில் ரிவேர்ஸ் பயணம் போகலாம் ..............
    நாங்கள் மட்டும் போக கூடாதா என்ன கொடுமை இது விஜயன் சார்..........
    மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்கோன்னா ................



    (மறுபடியும் பரிட்ஜெய் தொறந்து ......புளியோதரை வச்சு ...................மறுபடியும் ப்ரிட்ஜை .மூடி .............மறுபடியும் சூடு பண்ணி ------------------- மைன்ட் வாய்ஸ் OF விஜயன் )

    ReplyDelete
  70. @Tex Wiler resigan
    "//It's part of my life" awser as Usual""//
    சரியரக சொன்னீர்கள் சர்ர்.

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. மல்லாக்கக் கேள்வி # 10:
    ஆமாம்! முதலில் ஆங்கில சினிமா பைத்தியம்,அப்புறம் டிவி பைத்தியம் (இதுவம் ஆங்கிலமே), இப்போ கடைசியா காமிக்ஸ் பைத்தியம் (நல்ல வேலை இது தமிழ் தான்) என்று எனது லிஸ்ட் பெருசு என்பதால் எனக்கு காமிக்ஸால் அர்ச்சனைகள் ஏதும் கிடையாது!(அப்படியும் சில நேரம் அம்மாவிடம் மாட்டுவதுண்டு ) வீட்டின் பல மாதசெலவுகளும் என் பொறுப்பே என்பதால் இப்போது வரை காமிக்ஸ் செலவு எவ்ளோ என்பதை மறைத்தே வைத்துளேன், தெரிய வரும் பொது விளைவு தெரியும்?

    மல்லாக்கக் கேள்வி # 9:

    மாதாமாதம் புத்தகங்கள் அலுவலக முகவரிக்கே வந்துவிடுவதால் மாதமொருமுறை இக்கேள்விகளை எதிர்கொண்டே தானிருகின்றேன், ஒரு வினோத புன்னகையுடன் தைரியமாக!

    மல்லாக்கக் கேள்வி # 7:

    நான் வருவது நமது தளம், மட்டும் தான். அதிகம் பேசிடுவதில்லை. எனவே இந்த கேள்வியை தாண்டி செல்வதே சரி!

    மல்லாக்கக் கேள்வி # 6:

    இது காலமாற்றமே, ஏற்று கொள்வதே சிறந்த முடிவு.


    மல்லாக்கக் கேள்வி # 4

    டைனோசர் நகல் தான்! என் சகோதரி குழந்தைகளை காமிக்ஸ் உடன் நெருங்கி பார்த்தேன்! "புத்தகம்" என்றாலே பதறி ஓடுகிறார்கள்! பாட புத்தகத்தால் வந்த பயமா? இல்லை டிவியின் சாபமோ ? தெரியவில்லை.


    மல்லாக்கக் கேள்வி # 3 :

    மேல உள்ள பதில் தான்! ஆனால் எனது அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்கு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பது என்பது என் கையில் தான் உள்ளது. என் கடமையும் கூட என்பது என் கருத்து.

    ReplyDelete
  73. Dear vijayan sir., நம் வாசக நண்பர்கள் சில வருடங்களாகவே விலை குறைவாக அதிக புத்தகங்களை கொண்டுவந்தால் Rs.30,40/ல் குழந்தைகளை அதிகம் ஈர்க்கும். அவர்களும் தங்கள் பாக்கெட்மணியில் புத்தகங்களை வாங்குவர் என்று சொல்லி வந்துள்ளனர். ஆர்ட்பேப்பர் அல்லாமல் இப்போது டேஞ்சர் டயபாலிக் வரும் பேப்பர் தரத்தில் கலரில் கார்ட்டூன் கதைகளை பிரிண்ட் செய்து புத்தகவிழாக்களுக்கு வரும் சிறார்களை ஈர்ப்பது இயலாத காரியமா சார். இதை எல்லாம் சந்தாவில் கொண்டுவர அவசியமில்லாமல் புத்தகதிருவிழாக்களை குறிவைத்து செயல்படுத்தலாமே சார். குறைந்த விலை என்பதால் நிறைய பேர் வாங்கவே செய்வார்கள். யோசித்து செய்யலாமே சார்.காமிக்சுக்கு அதிக பணம் செலவழிக்க முடியாத நிலையிலிருக்கும் வாசகர்களையும் சந்தோஷபடுத்துமே சார்.

    ReplyDelete
    Replies
    1. // டேஞ்சர் டயபாலிக் வரும் பேப்பர் தரத்தில் கலரில் கார்ட்டூன் கதைகளை பிரிண்ட் செய்து புத்தகவிழாக்களுக்கு வரும் சிறார்களை ஈர்ப்பது இயலாத காரியமா சார். இதை எல்லாம் சந்தாவில் கொண்டுவர அவசியமில்லாமல் புத்தகதிருவிழாக்களை குறிவைத்து செயல்படுத்தலாமே சார். //

      +1

      ஏகப்பட்ட ராயல்டி கொடுத்து நைந்துபோன ஒரிஜினல் ஆர்ட்வொர்க்குடன் மாடஸ்டி கதையை வெளியிடும் முயற்சிகளுக்கு பதிலாக இந்தமாதிரி முயற்சிகளில் நல்ல உபயோகம் இருக்கும்...

      Delete
    2. குறைவான விலை ...அதிக புத்தகங்கள்..அருமை..சார் வரவேற்கிறேன்

      Delete
  74. Electronic gadgets அதிகம் உள்ள அமெரிக்கா பிரான்ஸ் மற்ற நாடுகளில் காமிக்ஸ்களும் கோலோச்சுகின்றனவே

    3.சிறு வயதில் குழந்தைகளின் ரோல் மாடல் தந்தை தான் எனவே இந்த பழக்கம் தொடரும்

    ReplyDelete
  75. என் மகனுக்கு வானமே எங்கள் வீதி ஒரு இனிய நினைவாக வரும்
    மாயாவியும் கூட!!

    2 சிறு வயதில் செய்தவை அனைத்தும் தற்போது செய்ய முடியாது ஆனால் காமிக்ஸ் படிக்கலாம்
    அப்போது வாங்க தந்தையை நாட வேண்டும் சம்பாத்யம்இல்லை இப்போது நாம் காமிக்ஸ் வாங்கலாம்

    ReplyDelete

  76. மல்லாக்கக் கேள்வி # 1 :
    என்றும் இளமை நினைவுகள் இனியவை
    இன்றைய தலை முறைக்கு லார்கோ நினைவுகளாய் இனிக்க காலம் இருக்கு

    ReplyDelete
  77. வாங்கித்தந்திருக்கிறேன்.
    ------

    மலிவு விலைப் பதிப்பாக (கார்ட்டூன் கதைகள் + நிலவொளி சைஸ் + டயபாலிக் பேப்பர்) சாத்தியாமா சார்.

    ------

    ReplyDelete
  78. மல்லாக்கக் கேள்வி # 1 :
    -----------------------------------------
    நமது பால்ய நினைவுகளை மீட்டு தருவதுதான்.


    மல்லாக்கக் கேள்வி # 2
    -----------------------------------------
    பதில் தெரியவில்லை என்பதே உண்மை. சில விசயங்கள் நம்முடன் கலந்து வாழ்வின் ஒரு அங்கம் ஆகி விடும் இது போல. சிறு வயதில் இந்த ஹீரோக்கள் நம்மில் ஏற்படுத்திய ஏற்படுத்திய தாகமோ ?


    மல்லாக்கக் கேள்வி # 3 :
    -----------------------------------------
    கண்டியப்பாக இருக்காது என்பதே எனது எண்ணம். அப்படியே இருந்தாலும் இதை போன்றதொரு சூழ்நிலை வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே ...


    மல்லாக்கக் கேள்வி # 4 :
    -----------------------------------------
    எனது மகனுக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறேன். லக்கி லுக் ப்ளூ கோட் பட்டாளம் சுட்டி லக்கி அவரது விருப்பம்.


    மல்லாக்கக் கேள்வி # 5:
    -----------------------------------------
    முதல் முறை படிக்கவே நேரம் கிடைக்கவில்லை என்பதே இந்த வருட ஜனவரி மாதத்து புத்தகங்களின் நிலைமை. ஒரு புறம் நிறைய புத்தகங்கள் வருவது சந்தோஷத்தை கொடுத்தாலும் அவற்றை படிக்க நேரம் கிடைப்பத்து குதிரை கொம்புதான். (காமிக்ஸ் படிக்க கொஞ்சம் அமைதி மற்றும் நமக்கேற்ற சூழ்நிலை தேவை) எனினும் இதை தாண்டி நேரம் கிடைக்கும் பொழுது லார்கோ எனது option மீண்டும் படிக்க (படிக்காத பழைய கதைகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும் பொழுதும்)


    மல்லாக்கக் கேள்வி # 6:
    -----------------------------------------
    காலம் மாறி போச்சு சார் ...


    மல்லாக்கக் கேள்வி # 7:
    -----------------------------------------
    பழைய கதை கொஞ்சூண்டு ... புதிய கதை கொஞ்சம் ... காமிக்ஸ் நடப்புகள் கொஞ்சூண்டு அதிகமாக


    மல்லாக்கக் கேள்வி # 8:
    -----------------------------------------
    Top - NBS, LMS, Largo

    Bottom - ????


    மல்லாக்கக் கேள்வி # 9:
    -----------------------------------------
    உண்டு, முக்கியமாக ரயில் பயணத்தில் நான் மட்டும் பயணிக்கும் பொழுது காமிக்ஸ் படிப்பது உண்டு, இதன் மூலம் சிலருக்கு நம் காமிக்ஸ் மீண்டு(ம்) வருவதை அறிந்து கொள்ள முடிந்தது வெளியிடங்களில் படித்தேன், படிக்கிறேன் இனியும் படிப்பேன்.


    மல்லாக்கக் கேள்வி # 10
    -----------------------------------------
    முதலில் கொஞ்சம் இருந்தது ... நாளாக நாளாக நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்டனர்.

    ReplyDelete
  79. எடி சார்,பதில்கள் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க,
    ம.கே-1.மனித மனம் என்றுமே எதிர்காலத்தை பற்றிய கனவுகளையும்,இறந்த காலத்தை பற்றிய பதிவுகளையும் மட்டுமே ஆர்வம் கொள்ளும்.இதன் அடிப்படை நிகழ்காலத்தை பற்றிய மனதின் பயம் தான்,உளவியல் ரீதியாகவே சிறு பிரயாங்களின் முதல் அறிமுகங்கள் மனதில் என்றும் ஆழமாக பதியும்,ஸ்பைடரையும்,ஆர்ச்சியையும் காதலிக்க இதைவிட சிறந்த காரணம் இருக்க முடியுமா?
    ம.கே-2.கனவுகள் என்பது நம்மிடையே விட்டு போன சம்பவங்களின் தொடர்ச்சிதான்,அதுபோல்தான் பால்யங்களின் நிறைவேறாத எண்ணம் இப்பொழுது நிறைவேற வைப்பு கிட்டினால் சொல்லவா வேண்டும்.
    ம.கே-3.கண்ண்டிப்பாக இருக்கும் என்னதான் கிண்டில் போன்ற நவீன வளர்சிகள் வந்தாலும் புத்தகத்தை கையில் படிப்பதே அலாதி சுகம்தானே,அதுபோல் காமிக்ஸ்க்கு என்று ஒரு வட்டம் கண்டிப்பாக உருவாகும்.
    ம.கே-4.நான் மட்டும்தான் யாரும் இல்லை,எனக்கு திருமணம் ஆனால் கண்டிப்பாக மனைவியையும்,குழந்தையையும் காமிக்ஸ் படிக்க பழக்குவேன் என்று நம்புகிறேன்.
    ம.கே-5.நிறைய வேலைப்பளுவும்,வாட்ஸ்அப்,மின் அஞ்சல்,முகநூல்,பிளாக்,டுவிட்டர் போன்றவை கொஞ்சம்,கொஞ்சம் நேரத்தை விழுங்கிவிடுவதால் ஒருமுறை மட்டுமே படிக்கமுடிகிறது,ஆனாலும் பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கண்டிப்பாக படிப்பேன்.
    ம.கே-6.குழந்தைகள் இப்பொழுது அட்வான்ஸ் ஆகவே யோசிக்கிறார்கள்,ஆதலால் அவர்கள்இதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள்,காலமாற்றம் தவிர்க்க முடியாதது.
    ம.கே-7.கண்டிப்பாக முதலில் பழைய இதழ்களைப் பற்றியே பேசுவோம்,பின்னர் அடுத்த கட்ட விவாதத்தில் புது இதழ்கள் இடம் பிடிக்கும்.
    ம.கே-8.அ.வல்லவர்கள் வீழ்வதில்லை, ஆ.என் பெயர் லார்கோ, இ. எமனின் திசை மேற்கு.
    ம.கே-9.வெளி இடங்களில் படிக்க இப்பொழுது வாய்ப்பு கிட்டுவது இல்லை,எனினும் படிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை,ஏதேனும் விளக்கம் கேட்க விரும்பினால் நான் விவாதிக்க தயாராக இருப்பேன்.
    ம.கே-10.என் அம்மா இதில் நான் அதிக கவனம் செலுத்துவதை பார்த்து சிரிப்பார்கள்,ஆனால் என் ரசனைக்கு மதிப்பளித்து சுதந்திரமாய் விட்டு விட்டார்கள்.

    ReplyDelete
  80. @ FRIENDS : விலை கூடுதல் ; குறைந்த விலை பதிப்பு சாத்தியமா ? என்ற ரீதியிலான கேள்விகளை முன்வைத்திருக்கும் நண்பர்களுக்கும் ; அதே கேள்வியினைக் கேட்க மனதுக்குள் எண்ணி இருக்கக் கூடிய நண்பர்களுக்கும் இதனை ஒரு பொதுவான பதிலாய் கொண்டிடக் கோருகிறேன் :

    விலை பற்றிய விவாதங்களுக்குள் நுழையும் வேளைதனில் சின்னதாய் ஒரு விஷயத்தை நாம் மறந்திடுகிறோமே ..! குறைந்த விலை - கூடுதல் விலை என்ற விஷயங்களை நாம் தீர்மானிக்கும் முன்பாக அதற்கு படைப்பாளிகளின் ஒப்புதல் அவசியமல்லவா ?

    Dual Pricing (ஒரே இதழுக்கு இரு விலைகள்) என்பது நமது தற்சமய சர்குலேஷன்களில் படைப்பாளிகளின் சம்மதத்தை ஈட்டிட துளியும் வாய்ப்பே இல்லாததொரு விஷயம் ! So அது ஒரு பேச்சுக்குக் கூட சாத்தியமில்லா முயற்சி !

    சரி, ஒட்டு மொத்தமாகவே நமது விலைகளைக் குறைத்துக் கொள்வோமே என்ற தண்டவாளத்தில் நாம் தாவிடும் பட்சத்தில் :

    1.ஏற்கனவே நமது தற்போதைய ரூ.60 விலைகளையும், ரூ.120 விலைகளையும் யூரோக்களில் மாற்றும் போது முக்கால் யூரோவும், ஒன்றரை யூரோவும் தான் முன்னிற்கின்றன ! அவர்கள் 15 யூரோவிற்கு சில லட்சம் பிரதிகளை விற்கும் ஒரு ஆல்பத்தை நாம் முக்கால் யூரோவிற்கு - சில ஆயிரங்களில் விற்பனை செய்து வருகிறோம் ! இதற்கு அவர்களின் சம்மதத்தை வாங்கிட அவசியமாகிடும் பிரயத்தனங்கள் எத்தகையதாக இருக்குமென்று நீங்கள் யூகிக்க முடியாதா-என்ன ?!

    2.இந்த நிலையில் நாம் இன்னமும் விலைகளைக் குறைப்பதாக இருப்பின் - விற்பனை எண்ணிக்கையில் ஒரு மெகா முன்னேற்றம் காட்ட முடிந்தால் தவிர எந்தவொரு படைப்பாளியும் சம்மதம் சொல்ல வாய்ப்பே கிடையாது ! விலையைக் குறைத்த மாத்திரத்திலேயே தற்போதைய சிலாயிர விற்பனை எண்ணிக்கையானது பல்லாயிரமாய் பெருகிடும் என்று எதிர்பார்த்தல் பகற்கனவாகாதா ?

    3.இந்தப் பதிலை நான் டைப் செய்து கொண்டிருக்கும் தருணத்திலேயே ஆங்காங்கே உள்ள புது நகரங்களின் முகவர்களுக்கு நமது விற்பனை பிரிவுப் பணியாளர் போன் செய்து -'காமிக்ஸ் வெளியிடுகிறோம் ; அது விற்பனை சம்பந்தமாய் உங்களை நேரில் வந்து பார்க்கலாமா ?' என்று கேட்பதும் ; 'காமிக்ஸா ? அதெல்லாம் இங்கே விக்காதுங்க !' என்று சொல்லி போனை 'கட்' செய்வதும் நடந்து வருகிறது ! 60 நாள் கடன் தந்து முயற்சிப்போம் என நாங்கள் முனைப்புக் காட்டினாலும் - 'இது வேலைக்கே ஆகாது !' என்ற rejections தான் பெரும்பான்மை ஊர்களில் ! விலை என்ன ? ; எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை ? என்ற கேள்விகளுக்குள்ளேயே போகக் கூடப் பிரியமின்றி - இதெல்லாம் விற்காத விஷயங்கள் என்ற முத்திரைகளே காமிக்ஸ் இதழ்களுக்கு ! இது தான் யதார்த்தம் எனும் போது நாம் விலை குறைவாய் வெளியிட்டு விட்ட மறு கணம் விற்பனையில் பிரவாகம் கண்டிடுவோமென்ற எதிர்பார்ப்பின் வெற்றி விகிதம் எத்தனையாக இருந்திடுமென்று கணிக்க பெரும் சிரமம் இராது தானே ?!

    Contd..

    ReplyDelete
  81. Contd :

    4.விலை குறைவு என்பதற்கொரு வாய்ப்பிருப்பின் அதனில் முதல் சந்தோஷம் எனக்கே என்பதையும் இங்கே நான் பதிவிடும் அவசியமுள்ளது ! ஒவ்வொரு மாதமும் நாம் அச்சிடும் பிரதிகளில் சந்தா + ஆன்லைன் விற்பனை + ஏஜெண்ட் விற்பனை என மொத்தமாய் ஒரு 40% விற்பனை செய்தாலே அது மகா /மெகா சாதனைக்குரியதொரு விஷயம் ! So ஒவ்வொரு முறையும் நாம் குறைந்த பட்சம் 60% இதழ்களை ஸ்டாக்கில் கொண்டிருப்பது அவசியமாகிறது ! சில இதழ்கள் முக்கால் ஆண்டுக்குள் காலியாவதும், பல இதழ்கள் அதன் இரு மடங்கு அவகாசத்துக்கு ஸ்டாக்கில் இருப்பதும் நடைமுறை ! அதிலும் அவ்வப்போது ஏதேனுமொரு காரணத்தின் பொருட்டு "கழுவி ஊற்றப்படும் இதழ்கள்" நம் குடோனுடன் சீரியசான காதலை வளர்த்துக் கொண்டு அசையாது இருப்பதும் யதார்த்தம் !

    So 2015-ல் நாம் வெளியிடவிருக்கும் இதழ்களின் எண்ணிக்கை 46 ; அவற்றின் சராசரி விலை ரூ.60 என்று வைத்துப் பார்த்தால் - இந்தாண்டின் இறுதியினில் மட்டுமே நாம் புதிதாக சேர்த்துக் கொள்ளப் போகும் inventory -ன் எண்ணிக்கையும், மதிப்பும் எத்தகையதாக இருக்குப் போகிறது என்று கணக்கிட அதிக சிரமம் அவசியமாகாதல்லவா? இதே இடத்தில் நான் இதே 46 இதழ்களை குறைவான விலையில் - செ - சராசரியாய் ரூ.25 விலையில் வெளியிட ஒரு வழி பிறக்கிறதென்று கொண்டால் - எனது ஸ்டாக் முடக்கத்தின் மதிப்பீடும் ; அதனில் பூட்டப்படும் முதலீடும் அந்தளவிற்குக் குறைந்திடும் தானே ?!! 'அண்டா..காக்கசம்..அபூ காக்கசம் !' என நாம் ஆண்டுக்கு ஒரு முறைவங்கியில் கோரிப் பெறும் கடன் தொகையின் அளவை நான் மட்டுப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பின் - துள்ளிக் குதித்து அதனை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருக்க மாட்டேனா ?

    5.சரி...ராயல்டிகளைக் குறைத்திடாமலே - நமது செலவினங்களைக் குறைத்து விலையில் மாற்றம் கொண்டு வர வழியுள்ளதா என்ற முயற்சிகளையும் ஓசையின்றி செய்தும் பார்த்தோம் தான் - இம்மாத பௌன்சர் இதழினில் ! வழக்கமான ஆர்ட் பேப்பர் போடாமல் - அதே கனத்திலான சாதா தாள் போட்டு ஒரே ஒரு பார்ம் (16 பக்கங்கள்) அச்சிட்டுப் பார்த்தோம் ; அதனை ஆர்ட் பேப்பரின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கண்ணைக் கொண்டு பார்க்க முடியவில்லை ! ஆர்ட் பேப்பருக்கு வராத வரைக்கும் பெரிதாய் வேற்றுமைகள் தெரியாது - ஆனால் ஒருமுறை ஆர்ட் பேப்பரில் பார்த்தான பின்பு - anything else looks second grade !

    விலைகளை உயரத்தில் நிலைகொள்ளச் செய்து பெரிய லாபம் ஈட்டுவது என்றும் நம் நோக்கமாய் இராது ! இந்தத் துறையினில் பெரியதொரு விற்பனைக்கு வழியில்லா நாள் வரை - இது நாம் சகித்தாகிய வேண்டிய அவசியமே !

    கோழி முதலில் வந்ததா ? - முட்டை முதலிலா ? என்ற ரீதியிலான puzzle இது !

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்,

      நல்ல விளக்கம்! நண்பர்கள் அனைவருக்கும் திருப்தியளித்திருக்கும் என்றே நம்புகிறேன்.
      பத்து கேள்விகளைக் கேட்டுவிட்டு மல்லாக்கப் படுத்தபடியே பதில்களை ரசிக்கலாம் என்று பிளான் பண்ணிய உங்களை வெகுண்டெழச் செய்து நீளமான விளக்கமளிக்கச் செய்த நண்பர்களின் திறமையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை! ;)

      தரம், விலை, இதழ்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளை நீங்கள் கையாளும் விதத்தில் உங்கள் மீது நிறையவே நம்பிக்கையிருக்கிறது சார்! உங்களுக்கு நியாயமானதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

      தற்போது நாம் பயணிக்கும் பாதை மிகச் சரியானதே என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன் நான்!

      இந்தத் தரம் - அவசியமானது!
      இந்த விலை - நியாயமானது!
      இந்தப் பயணம் - குதூகலமானது!

      போலாம்... ரைட்!

      Delete
    2. //அவ்வப்போது ஏதேனுமொரு காரணத்தின் பொருட்டு "கழுவி ஊற்றப்படும் இதழ்கள்" நம் குடோனுடன் சீரியசான காதலை வளர்த்துக் கொண்டு அசையாது இருப்பதும் யதார்த்தம் ! ///

      :) சங்கடமான விசயங்களைக்கூட காமெடியாகக் காட்டிடும் வரிகள் - ரொம்பவே ரசிக்க வைத்தது!

      Delete
    3. டியர் எடிட்டர்சர்ர்,
      5/-, இற்கும், 10/- இற்கும், வெளியிட்டவர் நீங்கள் .நரனே அம்மர அப்பர தரும் பரக்கெற் மணியில் பல வெளியீடுகளை வரங்கிய அனுபவம் எனக்கு தனிப்பட உண்டு சர்ர்.
      //அண்டா..காக்கசம்..அபூ காக்கசம் !' என நாம் ஆண்டுக்கு ஒரு முறைவங்கியில் கோரிப் பெறும் கடன் தொகையின் அளவை நான் மட்டுப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பின் - துள்ளிக் குதித்து அதனை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருக்க மாட்டேனா ? //
      சர்ர் நீங்களுமர?எப்படி உங்களரல் இயல்பாக இருக்க முடிகிறதோ?
      உண்மைதான் சர்ர்-யூரோவின் இன்றைய மதிப்பு 68 இந்திய ரூபர . இப்படி அடிக்கடி பல்டிகள் அடிக்கின்றன.

      Delete
    4. உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி; புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் துறையினில் பெரியதொரு விற்பனையை அதிவிரைவில் எட்டி குறைந்த விலையில் நமது காமிக்ஸ் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

      Delete
  82. some answers :

    yes Its too much of cowboy story, but its not giving too much feeling( for me at least). Old reprints may give a boost but it better to handle with care, kindly do continue your regulation on (B/W)reprints. we all love old hero's, but do consider adding more new genre thats the (only) way i see to get/ to hold new, more new readers.

    yes there are regular comics readers in my house. magic wind is most read book in my home.

    i do read comics during train/long bus journey.

    don't compromise on quality, lets stick with art paper Edit sir, lets have class.

    my fav:
    For Action Adventure: Karsannin kadanthda kalam,
    For Intriguing Thrill: Irandha kalam Irapathillai(LMS),
    For Art: Deva ragasiyam thedaluku illai.

    ReplyDelete
  83. Dear vijayan sir,சிறு அளவில் பாக்கெட்மணி வாங்கும் சிறார்களை மனதில் கொண்டே அந்தகேள்வியினை கேட்டேன். தவறென்றால் மன்னாக்கவும். மேலும் சில நாட்களுக்கு முன்பு தேசன் புத்தக நிலையத்தில் பணம் அதிகமில்லாததால் புத்தகத்தை எடுப்பதும், பாக்கெட்டை செக் செய்து சில புத்தகத்தை திருப்பி வைப்பதுமான பார்ப்பதற்கே பாவமான தோற்றத்தில் ஒருவரை பார்க்கநேர்ந்ததும் ,குறைந்த விலையில் காமிக்ஸ் சாத்தியமானால் அவர் சில புத்தகமாவாது சேர்த்து எடுக்க வாய்ப்புள்ளது.அதை மனதில் வைத்துதான்சார் கேள்வி கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : நிச்சயமாய் எவ்விதத் தவறுமில்லை உங்கள் கேள்வியில்..! முன்னர் இதே போன்றதொரு சம்பவத்தைப் பற்றி நானே எழுதியிருந்தது கூட நினைவுள்ளது - நம் ஆபீசில் ரூ.100-ஐ கையில் வைத்துக் கொண்டு எந்த இதழைத் தேர்வு செய்யவென்று முழித்துக் கொண்டிருந்த சிறுவனைப் பற்றி !

      குறைவான விலையில் ஏதாவது செய்யும் முனைப்பு என்னுள் கனன்று கொண்டே தான் உள்ளது ; தற்சமயத்து வண்டியை கொஞ்சமாய் நிலைப்படுத்திக் கொண்ட பின்னே அதன் பக்கமாய் தீவிர கவனம் செலுத்துவேன் ! That's a promise...

      Delete
  84. நீநீநீநீண்ட அருமையான விளக்கம்.! டவுட்டூ கிளியர் ஆயிடுச்சி.! சூப்பர் சார்.!
    மேலும் நிறைய லாபம் கிடைக்கும் பட்சத்தில் மற்ற பதிப்பகங்கள் இத்துறையை விட்டுவைப்பார்களா என்ன.,??
    எடிட்டர் சார்., விலை பற்றிய கவலையை விட்டு தரத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
    நல்ல தரம் நியாய விலை இதுவே நம் தாரக மந்திரம்.!!

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் KANNAN : //நல்ல தரம் நியாய விலை இதுவே நம் தாரக மந்திரம்.!!//

      டிங்..டிங்டி.டிங்..!! எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது !

      Delete
  85. சார், மன்னிக்கவும் என டைப்பியது மன்னாக்கவும் என மாறியதற்கு திரும்ப வருந்துகிறேன்.

    ReplyDelete
  86. O.K. editor sir, i understand and agree with you.but consider about new cartoon series. thank you sir

    ReplyDelete
  87. //சூர்யகாந்திப் பூக்களை உரசவிடும் அந்தக் காலத்து தமிழ் சினிமா பாணியில்.//

    அந்த காட்சிகள் இடம்பெற்ற அன்றைய பாடல்களே , இன்றும் கண்ணுக்கும் காதுக்கும்.,ஏன் மனதுக்கும் கூட இனிமையை அளிக்கின்றன.!
    அரைகுறை ஆடைகளில் ஆண்பெண் பேதமின்றி பேயாட்டம் போட்டும்., கவர்ச்சி என்ற பெயரில் களியாட்டம் போட்டும் வருகின்ற இன்றைய சினிமாக்கள் இரண்டு மாதங்களில் காணாமல் போய்விடும்.!
    அதற்காக சென்சார் அதிகம் தேவை என்று சொல்லவில்லை., அழகை ரசிப்பதற்க்கும் ஆபாசத்தை ரசிப்பதற்க்கும் வேறுபாடான அந்த சின்ன கோடு தெளிவாக போடப்பட்டால் போதுமானது.!

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்து!

      Delete
    2. கோடு போட்டு மறைத்தாலும் மாடஸ்டி கதைகளில் அவசியத்துக்கு மீறிய கவர்ச்சி+ கொஞ்சம் ஆபாசம் உள்ளது என்றே கூறுவேன் (பழைய வாசகர்கள் ஒப்புக்கொள்ளப்போவதில்லை!) . லார்கோ சென்சார் செய்யப்பட்டாலும் அது நமது அளவுகோல்களுக்கு என்றுமே போதுமானதாக இருக்கப்போவதில்லை.. பௌன்சர் சென்சாரே செய்யப்படாவிட்டாலும் ஆபாசம் கிடையாது - பௌன்சரை எல்லோருக்கும் பொருந்தாத அப்நார்மல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

      நவ் கமிங் டு த பாயிண்ட்: இந்த டாபிக்குகள் படைப்பாளர்களின் கண்ணோட்டத்திலும், கதைகள் எந்த வாசகர்களைக் கருத்தில் கொண்டு, எந்த காலக்கட்டத்தில், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டன என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்படாதவரையில் தேங்காயை சாப்பிட இயலாமல் (அ) சாப்பிட மனமில்லாமல் உருட்டும் செல்லப்பிராணிகள்தான் நாம்!

      Delete
    3. //அழகை ரசிப்பதற்க்கும் ஆபாசத்தை ரசிப்பதற்க்கும் வேறுபாடான அந்த சின்ன கோடு தெளிவாக போடப்பட்டால் போதுமானது.!//
      +1

      Delete
  88. ///வெளியிடங்களில் (தமிழ்) காமிக்ஸ் படிக்கும் "தைரியம்' கொண்டவரா நீங்கள் ? ///

    நிச்சயமாக!
    முன்பு சாணித்தாள்களில் நம் இதழ்கள் வந்திட்டபோது முடிந்தவரை பொது இடங்களில் காமிக்ஸ் படிப்பதைத் தவிர்த்திருக்கிறேன் . இப்போது உலக தரத்தில் நாம் நிலைகொண்ட பிறகு, பஸ்ஸிலோ ரயிலிலோ நம் புத்தகங்களை எடுத்துப் பிரிக்கும்போதே ஒருவகையான பெருமிதத்தை உணர்கிறேன். சகபயணியின் பார்வை நம் புத்தகத்தின்மீது திரும்புவதை என் கடைக்கண் பார்வையில் உணர்ந்தால் , படிப்பதில் கவனம் குறைந்து அந்தப் பயணி நம் புத்தகத்தைப் பற்றி எவ்வகையில் மதிப்பிடக்கூடும் என்ற நினைவுகளில் லயிக்கிறேன்.

    மறைத்து மறைத்துப் படிக்க நேர்ந்த அன்றைய ஏமாற்றம்... இன்று பெருமிதமாய் வெளிப்படுகிறது!

    ReplyDelete
    Replies
    1. //பஸ்ஸிலோ ரயிலிலோ நம் புத்தகங்களை எடுத்துப் பிரிக்கும்போதே ஒருவகையான பெருமிதத்தை உணர்கிறேன்//
      அதே அதே...
      +1 :)

      Delete
  89. //இன்றைக்கு காமிக்ஸ் மழையாகக் கொட்டுகிற போது - படித்த ஒரு கதையை மறு முறை புரட்டத் தோன்றுகிறதா ? அட...மறு முறை என்ன மறு முறை..? முதல் முறையே எல்லா இதழ்களையும் படிக்கவாச்சும் நேரம் ஒதுக்க முடிகிறதா ? //
    நான் காமிக்ஸ் படிக்க ஒதுக்கியிருக்கும் நேரம், அண்ணனின் விழுதுகள் வழங்கிய
    "நேரம் நள்ளிரவு 12 மணி "
    பௌன்சர்., லக்கி டூ டைம்ஸ் ஆயிடுச்சி.! ப்ளூகோட்ஸ் செகண்ட் டைமுக்கு அருகே வெய்ட்டிங்கு.காசு குடுத்து வாங்கிய புத்தகங்களை படிக்காமல் விடவே மாட்டேன்.
    டயபாலிக் சற்று சிரமப்பட்டு பரிட்சையில் தெரியாத கேள்விக்கு பதில் எழுதும் மனநிலையில் படித்தேன்.
    மாடஸ்டி யை எந்திரன் "சிட்டி " ஸ்டைலில் படித்தேன்.
    மறுபதிப்புகளையும் மரியாதை நிமித்தம் படித்துவிட்டேன்.

    இதுவரை படிக்காமல் வைத்த இதழ் என்று எதுவுமே இல்லை.

    திரும்ப திரும்ப படிப்பது கார்ட்டூன்ஸ்.!!

    ReplyDelete
  90. //உங்கள் இல்லத்தில் உங்களைத் தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ? குறிப்பாக இளம் தலைமுறையினில் ? அல்லது நீங்களொரு டைனோசார் நகலா//

    என்னைத் தவிர எனது சகோதரர்களான கண்ணன் ரவி, மாடர்ன் மங்கூஸ் , கிட் ஆர்டின் போன்றோர் விரும்பி படிப்பார்கள்.
    ஆர்வத்துடன் படிக்கும் என் பிள்ளைகளை அவ்வபோது சோட்டா பீம் குழுவினரும் பென் டென் பார்ட்டியும் தங்கள் வசப்படுத்தி விடுவதால் நான் வற்புறுத்துவதில்லை.
    அவர்களே விரும்பி படிக்க கேட்பது மதியில்லா மந்திரியும் லக்கி லூக்கும் மாத்திரமே.! ஆர்டினும் படித்து விட்டு சிரித்திருக்கிறார்கள்.ஆனாலும் கார்ட்டூன் சேனல்களின் ஆதிக்கத்தால் பிள்ளைகளின் புத்தக வாசிப்பு மிக மிக குறைவான அளவிலேயே இருக்கிறது.

    ReplyDelete
  91. வணக்கம் நண்பர்களே!!!
    வணக்கம் எடிட்டர் சார்!!!
    தங்களின் 'மல்லாக்க' கேள்விகளுக்கு எனது பதில்கள்,

    மல்லாக்க பதில் 1:
    நிச்சயமாக!!! பால்ய நினைவுகளை மீட்டெடுக்க மிகவும் உறுதுணையாய் இருப்பது பழைய கதைகளின் re-print தானே ஐயா...

    ஏனோ லார்கோ,வேய்ன் ஷெல்டன் etc. கதைகளைப் படித்த பிறகு, இரும்புக்கையாரின் 'நயகாராவில் மாயாவி' கதையினை முதல்

    முறையாக சமீபத்தில் படித்த பொழுது இந்தக்கதை என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை...
    ஆனாலும், இரும்புக்கை மாயாவியின் மீதுள்ள அந்த craze மட்டும் இம்மி அளவு கூட குறையவில்லை...தமிழ் காமிக்ஸ் உலகின் முதல்

    சூப்பர் ஸ்டார் ஆயிற்றே!!!

    மல்லாக்க பதில் 2:
    //அவற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியத்தை காமிக்ஸ் மீது மட்டும் அழுத்தமாய்த் தொடரச் செய்வது எதனால் ?

    சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!//

    என்னவென்று சொல்லுவது...சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கத்துக்க ஆசைபட்டால் குறைந்தபட்சம் வாடகை சைக்கிள் எடுத்தாவது

    ஓட்டக் கத்துக்கலாம்...ஆனால் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்றால் அப்படியா?

    ஆனால் காமிக்ஸுக்காக எத்தனை பழைய புக் கடை கடையா ஏறி இறங்கியிருப்போம்...இந்த மாசத்து காமிக்ஸ் இன்னைக்கு வராதா?

    நாளைக்கு வராதா? என எத்தனை நாள் புத்தகக் கடை வாசல் முன்னாடியே தவம் கிடந்திருப்போம்...

    அப்புறம் எப்படி சார் மற்வற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியம் காமிக்ஸ் மீது மட்டும் வராமலிருக்கும்...?

    மல்லாக்க பதில் 3:
    இபொழுது இருக்கும் இளைய தலைமுறைக்கு காமிக்ஸ் மீது அந்த அளவுக்கு ஈடுபாடு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை!!!

    மல்லாக்க பதில் 4:
    //உங்கள் இல்லத்தில் உங்களைத் தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ?//
    ம்ஹூம்ம்...என்னைத் தவிர வேற யாரும் படிப்பதில்லை...

    // குறிப்பாக இளம் தலைமுறையினில் ? //
    எங்கள் வீட்டில் தற்போதைக்கு அடியேன் மட்டுமே இளம் தலைமுறை list ல் உள்ளேன்...

    ReplyDelete
  92. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மல்லாக்க பதில் 5:

      //கனமான அட்டையோடு வருவதால் இது லேசுக்குள் பாழாய்ப் போக வாய்ப்பில்லை - ட்ரிபிள் ஒ.கே. !//
      ட்ரிபிள் ஒ.கே. சார்!!!

      //ஆனால் முன்பைப் போலில்லாது இன்றைக்கு காமிக்ஸ் மழையாகக் கொட்டுகிற போது - படித்த ஒரு கதையை மறு முறை புரட்டத் தோன்றுகிறதா ? அட...மறு முறை என்ன மறு முறை..? முதல் முறையே எல்லா இதழ்களையும் படிக்கவாச்சும் நேரம் ஒதுக்க முடிகிறதா ? வெளிப்படையான பதில்கள் ப்ளீஸ் //
      முன்பெல்லாம்...நமது புது காமிக்ஸ் வெளியீடுகள் இன்னைக்கு வராதா? நாளைக்கு வராதா? என ஏங்குவோம்...ஸ்கூல் வேற அடிக்கடி அரையாண்டு, முழு ஆண்டு லீவு விட்டு விடுவார்கள் என்பதால், அப்பொழுதெல்லாம் சேர்த்து வைத்திருக்கும் பழைய காமிக்ஸ்கள் தான் கதி என்று படித்த கதைகளையே திரும்பி திரும்பிப் படித்து வந்தோம்...

      ஆனால் இப்பொழுதெல்லாம் காமிக்ஸ் படிக்க அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை...அதுலயும் ஒரு மாதத்திற்கு கிட்டத்திட்ட 10 வெளியீடுகள் என்றால் சுத்தம்...
      ஜனவரி மாத வெளியீடுகளில் 'நயகாராவில் மாயாவி' ஒன்றை மட்டுமே இதுவரை அடியேன் படித்துள்ளேன்...
      (ஐயா அவ்வளவு பிசி என்று யாரும் என்னை தப்பாக எண்ணி விட வேண்டாம் :D... மனம் அமைதியாக இருக்கும் சூழலில் மட்டும் தான் காமிக்ஸைப் படிக்க வேன்டும் எனபதற்காக...)

      மல்லாக்க பதில் 6:

      //இது கால மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறதா guys ? //
      பழைய படத்தில் முத்தக் காட்சியில் பூவோடு பூ சேர்வது போல் காட்டினார்கள்...பிறகு முத்தக் காட்சியில் ஹீரோவின் த்லையை வைத்து மறாய்த்துக் காட்டினார்கள்...
      இப்பொழுதெல்லாம் அப்படியா?
      விடுங்க சார்...இதெல்லாம் கால மாற்றத்தின் பிரதிபலிப்பே அன்றி வேறெதுவுமல்ல என்பது என் தாழ்மையான கருத்து...
      அதற்காக நமது காமிக்ஸில் நம் வரம்பு மீறாமல் இருப்போம் தானே...பிறகென்ன விட்டுத்தள்ளுங்கள்...

      மல்லாக்க பதில் 7:

      //பழசைப் பற்றிய பேச்சே ஜாஸ்தியாக இருப்பது வாடிக்கையா ? அல்லது சமீபத்தைய இதழ்களுக்கும் முக்கியத்துவம் கிட்டிடுமா ? Just

      curious...!!!//
      பழசு, புதுசு இரண்டைப் பற்றியும் விவாதிகிறார்கள் என்றே நினைக்கிறேன்...

      மல்லாக்க பதில் 8:

      டாப் 3:
      1. என் பெயர் லார்கோ
      2. நில் கவனி சுடு
      3. தேவ ரகசியம் தேடலுக்கல்ல

      மல்லாக்க பதில் 9:

      //"இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா ??" என்ற புருவ உயர்த்தல்களை சந்திக்கும் தருணங்கள் இன்னமும் உங்களுக்கு நிகழ்கின்றனவா ?//
      நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி...எங்க வீட்டில எனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு போடறாங்களோ இல்லையோ...நான் காமிக்ஸ் படிக்கறதைப் பார்க்கும்பொழுது எல்லாம் இந்த கேள்வி தவறாமல் இடம் பிடிக்கும்...
      அதுவும், "ஏண்டா கல்யாணம் ஆகப் போற வயசுல உட்கார்ந்து இப்படி பொம்மைக் கதைப் படிச்சிட்டுயிருக்கியேன்னு என் பாட்டி என்னைக் கேட்பாங்க பாருங்க..." ஹும்ம்ம் முடியலைங்க...

      மல்லாக்க பதில் 10:

      //உங்கள் காமிக்ஸ் காதலால் வீட்டினுள் நீங்கள் சந்திக்கும் சங்கடங்கள் ஏதேனும் ?//
      நண்பர்களெல்லாம் facebook, whatsapp eh கதின்னு இருக்கும்போது நான் மட்டும் நமது காமிக்ஸ் blogspot படிச்சிட்டுருக்கறதப் பாத்தா செமையா கலாய்ப்பாங்க...

      //அல்லது - உங்கள் ரசனைக்கு மதிப்பளித்து உங்களை சுதந்திரமாய் (தண்ணீர் தெளித்து) விட்டு விடுகிறார்களா ? //
      காமிக்ஸ் மட்டுமில்லாம நியூஸ் பேப்பர்,விகடன்,குமுதம் etc.etc. போன்றவற்றையும் படிப்பதால், வீட்டில அப்ப அப்ப அர்ச்சனையும் கிடைக்கும்...அப்புறம் 'இவன் என்ன சொன்னாலும் திருந்த மாட்டான்' னு தண்ணி தெளிச்சும் விட்ருவாங்க...So no problem :):):)

      Delete
  93. டியர் எடிட்டர் சர்ர்,
    மறுபடி உங்களுக்கு தொந்தரவு சர்ர். 2015 ன் அட்டவணை எனக்கு வரவில்லை சர்ர். சந்தரக்களுக்கு என்று தயர்ரித்து இருப்பீர்கள்தரனே சர்ர். அதில் ஒன்றையும், "கரவல் கழுகு" இனையும் சேர்த்து அனுப்ப முடியுமர சர்ர். பிளீஸ்?

    ReplyDelete
  94. இவன் பெரிய இம்சை என்று நண்பர்களிடமும் உங்களிடமும் பெயர் எடுத்துவிடுவேன் என பயமரக உள்ளது சர்ர்.

    ReplyDelete
    Replies
    1. Don't worry.
      Even i haven't got the 2015 trailer and every month i have to call lion office to make them send the books.
      Hoping things will change from feb as calling in midnight from here is really painful

      Delete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. //ஒரு லார்கோ போன்ற டாப் தொடரில் "வேட்டை நகரம் வெனிஸ்" போன்ற சிறு சறுக்கல் நிகழ்ந்தால் கூட - 'அய்யே..இது ரொம்ப சுமார் ரகம் !' என்று முகம் சுளிக்கும் நாம் - "சாக்கடைப் புழுவே !" என்று ஆர்டினியின் பிட்டத்தில் உதை விடும் ஸ்பைடர் அண்ணாத்தையையும் ; உசிலம்பட்டிக்கும், ஓட்டஞ்சத்திரத்துக்கும் ஷண்டிங் அடிப்பது போல கோட்டையில் ஏறி காலப் பயணம் செய்யும் அண்ணார் ஆர்ச்சி அவர்களையும் நாம் வாஞ்சையோடு அரவணைப்பதன் மர்மம் தான் என்னவோ ? அந்த mindset மாற்றம் நிகழ்வது எவ்விதமோ ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...! //

    லார்கோ போன்றவர்கள் கதை நாயகர்களாகவும் ,ஸ்பைடரும் , ஆர்ச்சியும் பால்ய நண்பர்களாகவும் தோன்றுவதால் ஸ்பைடர் ,ஆர்ச்சியின் அனைத்து செயல்களும் நமக்கு பழக்கப்பட்டதாகவே உள்ளது , எனவே அதை வாஞ்சையோடு ஏற்றுக் கொள்கிறோம்.





    //நம் இளம் வயதுகளின் carry overs நிறையவே இருக்கக் கூடும் தானே ? ; அவற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியத்தை காமிக்ஸ் மீது மட்டும் அழுத்தமாய்த் தொடரச் செய்வது எதனால் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!//


    என்னைப் பொருத்தவரையில் சிறுவயதில் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது காமிக்ஸ் மட்டுமே. சிறு வயதில் விளையாட்டுக்களுக்கு அணி பிரிக்க இரகசிய பெயர் சூட்டி தேர்வு செய்யும்போது கூட டெக்ஸ் வில்லரும் ,ஸ்பைடருமே பெயராக சூட்டப்பட்டனர். பண்டிகைகளுக்கு புத்தாடை எடுக்கச்செல்லும் போது கூட இவனுக்கு காமிக்ஸ் வாங்கி கொடுத்தால் போதும் அதுதான் இவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று உறவினர்களால் கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தேன். என் காமிக்ஸ் சேகரிப்புகள் உறவுகள் முழுக்க மிகப் பிரசித்தம் , அவை எனக்கு நெருங்கிய நண்பனாகவே விளங்கின, அவற்றை தொலைத்து விட்டென். மீண்டும் அதை அடையும் போது தொலைந்த நண்பனை மீட்டெடுத்த சந்தோஷம்.



    //இன்றோ நிலைமையே வேறு....! காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோரின் சராசரி வயதுகள் 25+ என்று வைத்துக் கொள்ளலாமா ? So இந்தக் கால கட்டங்களில் காமிக்ஸ் படிக்கத் துவங்கும் இந்தப் புதுத் தலைமுறைக்கு இன்னுமொரு 20 /25 ஆண்டுகள் கழிந்த பின்னே நாம் கொண்டாடும் இது போன்ற காமிக்ஸ் nostalgia இருக்குமென்று நினைக்கிறீர்களா ? அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற காமிக்ஸ் சேகரிப்பு ஆர்வம் ; உத்வேகம் எல்லாம் இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறதா ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!//

    இருக்காது என்றே நினைக்கின்றேன்.




    //உங்கள் இல்லத்தில் உங்களைத் தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ? குறிப்பாக இளம் தலைமுறையினில் ? அல்லது நீங்களொரு டைனோசார் நகலா - அழிந்து போகும் பிராணிகளின் வரிசையில் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!//

    இதுவரை இல்லை. இனிமேல் என் மகன் வாசிப்பானா என்று தெரியவில்லை , ஆனால் என் சேகரிப்புகளை பாதுகாப்பதில் என்னை விடவும் அவன் ரொம்ப தீவிரம். அவன் காலத்திலும் என் சேகரிப்புகள் பாதுகாக்கப்படுமென்று நம்புகிறேன்.


    6) முதல் முறை நிச்சயம் படித்துவிடுவேன். கையில் புத்தகம் கிடைத்தவுடன் அதை வாசிப்பதில் தாமதமும் ஏற்படாது. இரத்தப்படலம் முழு தொகுப்பைக்கூட சாயங்காலம் தொடங்கி விடியும் பொழுதுக்குள் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மற்ற காம்போ இதழ்களில் டெக்ஸ் ,லார்கோ முதலாவதாகவும் மற்ற கதைகள் சற்று இளைப்பாறிய பின் படிக்கப்பட்டது.

    மறு முறை வாசிப்பு என்பது டெக்ஸ் வில்லரே அதிகமாக வாசிக்கப்படுகிறார்.


    8) லார்கோ அனைத்தும் டாப்.



    9) 2012 க்கு முன்பு அதிகமாக கேட்கப்பட்டுள்ளேன். 2005 ல் ஒருநாள் பழனி பேருந்து நிலையத்தில் இரவு 2 மணி சுமாருக்கு ஸ்பைடரின் பழிவாங்கும் பொம்மை கதையை அங்குள்ள ஒரு கடையில் வாங்கிய உடன் மெய் மறந்தவனாக அந்த கடையின் முன் நின்று வாசித்துக்கொண்டிருப்பதை கண்ட ஒரு காவல் துறை அதிகாரி இன்னுமா இந்த மாதிரி பொம்மை புத்தகங்களை படிக்கின்றாய் என்று கேட்டது நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது. இப்போதும் பொது இடங்களில் வாசிக்கத்தான் செய்கிறேன். ஆனால் யாரும் எதுவும் கேட்டதில்லை.


    10) புத்தகத்தின் விலையை பார்க்கும் போது மறைமுகமாக வீட்டில் சங்கடங்கள் நிகழ்வதுண்டு. ஆனால் வாசிப்பதை யாரும் குறையாக எடுத்துக்கொள்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. //லார்கோ போன்றவர்கள் கதை நாயகர்களாகவும் ,ஸ்பைடரும் , ஆர்ச்சியும் பால்ய நண்பர்களாகவும் தோன்றுவதால் ஸ்பைடர் ,ஆர்ச்சியின் அனைத்து செயல்களும் நமக்கு பழக்கப்பட்டதாகவே உள்ளது , எனவே அதை வாஞ்சையோடு ஏற்றுக் கொள்கிறோம்.//

      // சிறு வயதில் விளையாட்டுக்களுக்கு அணி பிரிக்க இரகசிய பெயர் சூட்டி தேர்வு செய்யும்போது கூட டெக்ஸ் வில்லரும் ,ஸ்பைடருமே பெயராக சூட்டப்பட்டனர். //

      ரம்யமான வரிகள் !

      Delete
  97. 1. பசு மரத்தாணி போல பதிந்து விட்டது என்று சொல்லலாம்.

    2. எவ்வளவ்வோ ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள் காலம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது . அனால் இவை அனைத்தையும்
    தவிடுபொடியாக்கி மனதை ரிலாக்ஸ் ஆகா வைக்க காமிக்ஸால் மட்டுமே முடியும். மனம் வேதனைப்படும்போது காமிக்ஸ் படித்துபாருங்கள் தெரியும்.

    3. அடுத்த தலைமுறைக்கும் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க, சேகரிக்க நீங்களும் நாங்களும்தான் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த தலைமுறையில் இது தொடருமா? தெரியவில்லை? காலமும் நம் முயற்சியும் தான் பதிலளிக்க வேண்டும்.

    4. எனது குழந்தைகள் படிக்கிறார்கள். படிக்க வைக்கிறேன்.

    5.மறுமுறை புரட்டத்தொன்றவில்லை. பழைய காமிக்ஸ் தோன்றுகிறது

    6. // என்னைப் பொருத்தவரை, எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி பரிந்துரை செய்யும் விதத்திலேயே என்றென்றும் நமது லயன்-முத்து காமிக்ஸ்கள் திகழவேண்டும் என்பதே என் தனிப்பட்ட ஆசை! // நான் என் குழந்தைகளுக்கு அதுபோன்ற புத்தகங்களை கொடுப்பதில்லை. (வெளி நாட்டவர் நம் கலாச்சாரத்தை விரும்புகிறார்கள் ஆனால் நாம்தான் நம் கலாச்சாரத்தை விரும்புவதில்லை) தேர்ந்தெடுத்து கொடுப்பதை நிறுத்தி எல்லா காமிக்ஸ்களையும் படிக்க கொடுக்கவேண்டும். உஸ்ஸ்ஸ்.....அப்பாடா போராட முடியல சாமி..

    7. புதிய வாசகர்கள் புதியதை பேசுகிறார்கள். பழைய வாசகர்கள் கண்டிப்பாக பழையதை மட்டுமே பேசுகிறார்கள். ரீ பிரிண்ட் படித்த பிறகு புதிய வாசகர்கள் பழைய கதைகளை பற்றி அதிகம் பேசுகிறார்கள்.

    8. வ.வீ .

    9. ஆம் நிறையப்பேர் கேட்கிறார்கள். எங்கே உட்கார்ந்து படிக்க சொன்னாலும் படிப்பேன். எனக்கு வேண்டியது தமிழ் காமிக்ஸ்.காமிக்ஸ்.காமிக்ஸ்.

    10. எல்லோரும் சேர்ந்து படிக்கும்போது என்னை யார்திட்டுவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Karnan L : //உஸ்ஸ்ஸ்.....அப்பாடா போராட முடியல சாமி.. //

      அதுக்குள்ளேவா பெருமூச்சு ?!! :-)

      Delete