Powered By Blogger

Saturday, January 03, 2015

ஒரு கூரியர் படையெடுப்பின் காலை !

நண்பர்களே,


வணக்கம். (தாமதமான) புத்தாண்டு வாழ்த்துக்களும்...! வருடப்பிறப்பன்று பௌன்சரின் அச்சுப் பணிகளைத் துவக்கியிருந்தோம் என்பதால் அன்றைய நாள் முழுவதுமே நான் அச்சுக் கூடத்தில் குடியிருக்க வேண்டிய சூழல் ! பௌன்சர் ஒரு புதுத் தொடர் ; புதியதொரு பதிப்பகத்தில் நாம் வாங்கும் தொடரும் கூட என்பதோடு அதற்கான கலரிங் பாணி ரொம்பவே வித்தியாசமானது என்பதால் I just didn't want to take a chance ! வழக்கம் போல் கொஞ்ச நேரம் அங்கிருந்து விட்டு பணியாளர்களின் பொறுப்பில் பாக்கிப் பணிகளை விட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை ! ஆகையால் பௌன்சரின் front side முழுவதுமாய் அச்சாகிடும் வரையும் என் ஜாகையை அங்கேயே போட்டு விட்டேன் ! (இன்றைய பகலில் பின்பக்கப் பணிகள் என்பதால் இன்றும் ditto !)

நேற்றைய தினமோ நமது டெஸ்பாட்ச் தினம் என்பதால் என் கவனம் முழுவதுமாய் அதனில் செலுத்திடத் தேவையாகிப் போய் விட்டது ! என்ன தான் நமது அலுவலகப் பெண்மணிகள் திறமையாகப் பணியாற்றினாலும் அடுத்த நிலை ஊழியர்களை பர பர வென முடுக்கி வேலை வாங்குவதில் கொஞ்சம் slow என்பது தான் நிஜம். எப்போதும் இல்லா திருநாளாய் ஒரே சமயத்தில் 5 இதழ்களை அனுப்பத் தேவையான இம்முறை அவர்களாக பிரதிகளை அனுப்பும் பணிகளைச் செய்வதாய் இருப்பின் நிச்சயமாய் தாமதம் ஆகிப் போகும் என்பதால் அடியேனின் வெண்கலத் தொண்டை நேற்று முழுவதும் பிசியாக இருந்தது ! வழக்கமான துணி கவரில் பிரதிகளை அனுப்பும் போது பாக்கிங் பணிகளும் சற்றே சுலபம் ; ஆனால் அட்டை டப்பாக்களுக்குள்  போட்டு சீல் செய்வது நிச்சயமாய் ஜவ்வு மிட்டாய் process !பணியாளர்களை சாப்பிடக் கூட அனுப்பாமல் மதியம் 3 மணி சுமாருக்கு டெஸ்பாட்ச் முழுவதையும்  ஒரு வழியாய் முடித்தாகி விட்டோம் என்பது தான் நேற்றைய update ! ஞாயிறு விடுமுறைக்குள் பார்சல்கள் சிக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான் எனக்கு ! நம் வேகத்துக்கு ஈடு தரும் விதமாய் நேற்று ST கூரியரிலும் புக்கிங்க்களை விரைவாய் செய்தது இன்னுமொரு சந்தோஷம் ! So -உங்களின் கூரியர் படையெடுப்புகளை இன்று காலை ப்ரெஷாக நடத்திடலாம் ! 5 இதழ்களை ஒரு சேரப் பார்த்திடும் ஜாலி அனுபவம் அதன் பின்னணிச் சிரமங்களை முற்றிலுமாய் மறக்கச் செய்தது ! அதனைப் பெறும் உங்களுக்கும் அதே சந்தோஷம் வியாபித்திடும் பட்சத்தில் நிம்மதிப் பெருமூச்சிடுவோம் !அடுத்த ஐந்தின் பணிகளுக்குள் மூழ்க திரும்பப் புறப்படுகிறேன் ; நீங்களும் இதழ்களுள் மூழ்கிட நேரம் ஒதுக்கிடலாமே ?! Happy reading ! இதழ்களைப் பற்றிய உங்களின் எண்ணங்களை இங்கே பதிவிடலாமே - ப்ளீஸ் ?! 

நாளை வழக்கம் போல் பதிவோடு ஆஜராவேன் ! Bye for now ! 

120 comments:

  1. ஐந்து கையிலே ..இன்று கிடைத்திடும் ஆனந்தம் ..

    ReplyDelete
  2. Happy new year to editor and his family......

    ReplyDelete
  3. கனவா நிஜமா

    Happy New Year Friends

    Received books :))
    .

    ReplyDelete
  4. //பணியாளர்களை சாப்பிடக் கூட அனுப்பாமல் மதியம் 3 மணி சுமாருக்கு டெஸ்பாட்ச் முழுவதையும் ஒரு வழியாய் முடித்தாகி விட்டோம் என்பது தான் நேற்றைய update ! ஞாயிறு விடுமுறைக்குள் பார்சல்கள் சிக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான் எனக்கு //
    பணியாளர்களின் உழைப்புக்கும்,ஆசிரியரின் உழைப்புக்கும் வந்தனம் செய்வோம்.

    ReplyDelete
  5. Replies
    1. பாஸ்கல் வந்து விட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.......

      Delete
  6. புத்தாண்டில் முதல் பத்துக்குள் நான்தானா நம்பவே முடியவில்லை

    மிக அழகாக கச்சிதமான பாக்கிங்கில் ஐந்து புத்தகங்களும் வந்துவிட்டன

    ப்ளூ கோட், லக்கி & டயபாலிக் பிரிண்ட் தரம் அற்புதம் :)
    .

    ReplyDelete
    Replies
    1. @ Prabakar T

      எடிட்டரின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே!
      புக்ஸ் கிடைச்சாச்சு போலிருக்கே...
      Happy reading!

      Delete
  7. // வருடப்பிறப்பன்று பௌன்சரின் அச்சுப் பணிகளைத் துவக்கியிருந்தோம் //

    வாவ் சூப்பர் சார்

    // பணியாளர்களை சாப்பிடக் கூட அனுப்பாமல் மதியம் 3 மணி சுமாருக்கு டெஸ்பாட்ச் முழுவதையும் ஒரு வழியாய் முடித்தாகி விட்டோம் என்பது தான் நேற்றைய update ! ஞாயிறு விடுமுறைக்குள் பார்சல்கள் சிக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் தான் எனக்கு //

    Hats off U Vijayan Sir :))
    .

    ReplyDelete
    Replies
    1. பணியாளர்களை நேரத்தோடு சாப்பிட அனுப்பியிருக்கலாம்...! :D

      Delete
  8. விஜயன் சார், இந்த முறை உங்கள் பக்கம் இருந்து அனைத்து புத்தகம்களையும் 3 மணிக்கெல்லாம் டெஸ்பாட்ச் செய்தது சந்தோஷம், ஆனால் நமது கொரியர் நண்பர்கள் அவை அனைத்தையும் ஒரே நாளில் சிவகாசியில் இருந்து எங்களுக்கு அனுப்பினால் எங்களுக்கு இன்றே கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம், பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்; எனது இந்த வருட அதிர்ஷ்டம் எப்படி என்று :-)

    ReplyDelete
  9. Happy new year all. ஒரு சில எண்ணங்களை மட்டும் பகிர்கிறேன் . டியர் எடிட்டர் நாம் 2012ல் புது அவதாரம் எடுத்தது மகிழ்ச்சி தான். புதிய பல ஹீரோக்கள் வந்துள்ளனர். very interesting because of wide Variety . நீங்கள் முந்தைய பதிவில் நிறைய வாசகர்கள் A +B+C subscription ஐ opt செய்து இருந்ததாக கூரியுள்ளிர்கள். நானும் தான். அது ஏனென்றால் உங்கள் காமிக்ஸ் எதையும் மிஸ் செய்து விடகூடாது என்பதால் தான். ஸ்பைடர், மாயாவி, ஆர்ச்சி கதைகளை எவ்வளவு முயன்றும் படிக்க முடியவில்லை. லார்கோ கதைகளை பழக்கப் படுத்திவிட்டு திரும்ப ஆர்ச்சியை படி என்றால் எப்படி? புக் பேர்களில் அதிக அளவிளான புது புத்தகங்கள் இருக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு 30-40 வெளியிடுகள் அல்ரெடி உங்களிடம் உள்ளதே. பிறகு ஏன் reprints? please அடுத்த வருடம் இதே போல் இல்லாமல் வழக்கமான subscription + graphic novels மட்டும் வெளியிடவும். பர்ஸ் அதிகமாக கடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. டியர் டாக்டர் சார் , இங்கே பழைய புத்தக கடையில் ஒரு புத்தகமே அட்டையுடன் 1000ரூபாய் , அட்டை இல்லை என்றால் ரூபாய் 800க்கும் விற்கிறார்கள் . கள்ள மார்க்கெட் டில் இன்னும் ....... இப்படி இருக்கும் போது பழைய இதழ்கள் இல்லாத என் போன்றோருக்கு இது ஒன்றே கடைசி வாய்ப்பு சார் . கொஞ்சம் எங்களையும் நினைத்து பாருங்கள் . இந்த மறுபதிப்பு நல்ல சக்சஸ் ஆகி என் போன்ற நண்பர்கள் பயன் அடைய கொஞ்சம் ஒத்துழைப்பு ப்ளீஸ் சார் .

      Delete
    2. @சேலம் Tex விஜயராகவன்,

      ம்க்கும்...

      இம்மாதிரி கமெண்ட்கள் நிறைய Divert செய்கிறது பாஸ். விலைகளை பகிறாதீர்கள் ப்ளீஸ். கள்ள மார்க்கெட் என்ற ஒன்று மீன் மார்க்கெட் போல நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை. பழைய பொருட்களின் மீது மோகம் கொண்டவர்கள் எதைக்கொடுத்தாவது வேண்டியதை வாங்குவது நமக்கு சம்பந்தமில்லா சப்ஜக்ட். ஒரு விஷயத்துக்குப் பெயர் வைத்தவுடன் அது நிறைய இருப்பதுபோல தோன்றும் மாயைதான் குழப்பங்களுக்கு காரணம்.

      பழைய புக்குகளை சும்மா கொடுக்கும் நல்ல பழக்கமும் கூடதான் உண்டு. அதைப்பற்றி ஏன் பேசமாட்டேன்கிறோம்..?! அந்த மார்க்கெட்டுக்கும் (?) ஏதாவது பெயர் வைப்போமே..

      Delete
    3. ஜி ஆர்ச்சி, ஸ்பைடர், மாயாவில்லாம் அவ்ளோ வொர்த் இல்ல சார். தூக்கம் சும்மா ஜிவ்வுன்னு வரும். அந்த காலத்துல interestinga இருந்துது. ஆனா லார்கோ, வெய்ன் ஷெல்டன் லாம் படிச்சிட்டு இத படிக்க முடியாது. காமிக்ஸ்க்காக செலவு பண்றது ரொம்ப அதிகமாயிடிச்சி.

      Delete
    4. லயனின் எந்த வெளியீட்டையும் தவற விட முடியாதுதான் டாக்டர் ஜி. நல்ல நட்பு தங்கத்தை விட பெரிதல்லவா. உங்களிடம் அனைத்து வெளியீடுகளும் உள்ளதாக தெரிகிறது . கொஞ்சம் எங்களுக்காக அந்த ஸ்கிப்பிங் ஆப்சன யோசனை செய்து பாருங்களேன் ஜி. நாங்களும் அந்த பழைய பொக்கிஷம் களை சிறிதளவாவது தரிசிப்போமே.

      Delete
    5. +999999....... pls reprint our old hits only. Except our 3 stars.(For Dr.hariharan's commnt...)

      Delete
    6. எனக்கு கூடத்தான் கிராபிக் நாவல் பிடிக்கவில்லை. So, சந்தா 'B' கட்டவில்லை. ஆனால் கிராபிக் நாவலே வெளியிட வேண்டாம் என்று கூறவில்லையே. அது யாருக்கு பிடிக்கிறதோ வாங்கிக்கொள்ளட்டும். எனது purse-யும் கடிக்கப்போவதில்லை

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சந்தா 'C' option வாங்க வேண்டியதில்லையே. உங்க purse-யையும் கடிக்காது. அதற்காக யாருக்குமே கிடைக்கக் கூடாது என்று எடிட்டரை சந்தா 'C'-யை ஏன் நிறுத்தச் சொல்லவேண்டும்?

      எனக்கு தெரிந்து யாருக்கு சந்தா 'C' தேவைப்படாது என்றால்,
      - ஏற்கனவே அனைத்து புத்தகங்களும் வைத்துள்ளவர்களுக்கு (இவர்கள் மிகச்சிலரே & சந்தா 'C' option கட்டாமல் ஒதுங்கிக் கொள்ளலாம்)

      எனக்கு தெரிந்து யாருக்கு சந்தா 'C' வருவது பிடிக்காது என்றால்,
      - ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் வைத்திருப்பவர்கள்
      - பதுக்கல் வியாபாரிகள்
      - அதிக விலைக்கு விற்பவர்கள்

      பெரும்பான்மையானவர்கள் பழைய புத்தகங்கள் பார்க்காதவர்கள், படித்தவர்கள் ஆனால் சேகரிக்க இயலாமல் போனவர்கள் மற்றும் வாங்கித் தொலைத்தவர்கள். இவர்களுக்கு மறுபதிப்பு வருவது கனவு நனவாவது போல.

      நாங்களே வெகுநாட்கள் எடிட்டருடன் போராடி, அவரை சம்மதிக்க வைத்து, இப்போதுதான் பழைய மறுபதிப்புகள் வர ஆரம்பிக்க போகின்றன. இந்த நேரத்தில் ஏன் இந்தக் கொலைவெறி? :)

      Delete
  10. 2015 ன், எடிட்டரின் முதல்பதிவில்,எனது முதல் வணக்கங்கள் நண்பர்களே...!

    ReplyDelete
  11. 2015 ன், எடிட்டரின் முதல்பதிவில்,எனது முதல் வணக்கங்கள் நண்பர்களே...!

    இந்த வருடமும் இனியதாய் அமையட்டும்.!

    ReplyDelete
  12. இரண்டு புத்தகங்கள் மட்டுமே வந்துள்ளன அதுவும் பேப்பர் கவர் பாக்கிங்

    ReplyDelete
    Replies
    1. நான் 1 மாதத்திற்கு முன்பு 2015 சந்தா அனுப்பிவிட்டேன் . நம்பர் 1122.

      Delete
    2. ஆபீஸ் போன் செய்தேன் . இன்று மற்ற புத்தகங்களை அனுப்புவதாக சொன்னார்கள்

      Delete
  13. 5புத்தகங்களும் அருமையான பேக்கிங் கில் முனை மடங்காமல் வந்து கிடைத்தது சார் . மாடஸ்டி அட்டைப்படம் டாப், ப்ளூ கோட்&டயபாலிக் 2வது வது இடம் பெறுகின்றன சார் . டைலன் பின்அட்டை சூப்பர் . லக்கிக்கி லாஸ்ட் ப்ளேஸ் சார் . கதைகள் பற்றி பிறகு சார் . நண்பர்கள் பொங்கலுக்கு மிகவும் எதிர் பார்த்த மின்னும் மரணம் ஏப்ரலில் தான்.

    ReplyDelete
  14. January starts with lot of reading! The only problem is finding time to read all those books! ;)

    ReplyDelete
  15. பேக்கிங் சூப்பரூ.!
    டயபாலிக் அட்டைப்பபடம் அமர்க்களம். அடுத்த இடம் டைலனுக்கு. (கவனிக்கவும் "அட்டை படம் ")
    மாடஸ்டிஈஈ,,,,,, வேணாம் விட்ருவோம்.!
    (அக்கா கையில துப்பாக்கியோட முறைக்கிறாக.! புகை வேற போகுது.!)

    ReplyDelete
  16. பேக்கிங் சூப்பரூ.!
    டயபாலிக் அட்டைப்பபடம் அமர்க்களம். அடுத்த இடம் டைலனுக்கு. (கவனிக்கவும் "அட்டை படம் ")
    மாடஸ்டிஈஈ,,,,,, வேணாம் விட்ருவோம்.!
    (அக்கா கையில துப்பாக்கியோட முறைக்கிறாக.! புகை வேற போகுது.!)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு காதில் புகை போகிறது....ST கொரியர் என்பதால் தாமதமோ என்னவோ...?
      முதல் முறையாக கொரியரில் புத்தகங்களை பெறபோகிறேன்...ஐந்தும் வருமா..? இரண்டு,மூன்று
      வருமா..?என குட்டி கேள்வி ஓடிக்கொண்டே உள்ளது.
      முத்துகாமிக்ஸ் உட்பட பல தமிழ் காமிக்ஸ் வரவுக்கு 'இரத்தினகம்பலம்' விரிக்கப்பட்டதும், கொரியரில்
      வந்துகொண்டிருக்கும் புத்தகத்திற்கும் உள்ள தொடர்பான, சுவையான தகவல்களுடன் ஒரு 'கிளிக்' போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்....கண்ணன் ரவி !

      Delete
  17. எடிட்டர் சொல்லியிருந்த ஜனவரிக்கு ரெண்டு அக்கா., என்ற மர்மம் இரண்டாம் பக்கத்திலேயே புரிந்துவிட்டது.!(கலரில் இருந்திருக்கலாம் ஹூம்ம்ம்.,)

    ப்ளுகோட்ஸ்., லக்கி, டைலன், டயபாலிக்!!!! படிச்சிட்டு இறுதியாக இ(கி)ளவரசியை பார்க்கலாமின்னு இருக்கேன்.!

    ReplyDelete
  18. சார் புத்தகம் வாங்காதவர்களுக்கும் அறிய காட்சி !
    ஸ்பைடர் சைத்தான் விஞ்சானி சூப்பர் . அன்று மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் இந்த இதழை ஆர்ச்சியுடன் ஆண்டு மலராய் காந்தி புரத்தில் வாங்கியது பசுமையாய் நினைவில் ! அற்புதமான கதை ...படித்து அன்று அடைந்த அதே சந்தோசம் இதன் அறிவிப்பால் தற்போதும் ! குதிரை வீரன் ஆர்ச்சியும் வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் !

    ReplyDelete
  19. அடுத்த மாத இதழ்கள் ஆவலை கிளப்புகின்றன ! வருட ஆரம்பமே அதகளம்தான் ! உய் ய் ய் ய்ய் ய்ய் ய்....

    ReplyDelete
  20. //நாளை வழக்கம் போல் பதிவோடு ஆஜராவேன் ! Bye for now ! //

    பௌன்சரின் டீஸரையும், மறுபதிப்புகளின் அட்டைகளையும் எதிர்பார்க்கிறேன்.!

    ReplyDelete
  21. புத்தகங்கள் கிடைத்து விட்டன! டயபாலிக் அட்டைபடம் சூப்பர்! எனக்கு வந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை பதிவின் முதல் படம்! அட்டகாசமான புத்தாண்டு தொடக்கம்,விஜயன் சார்!

    ReplyDelete
    Replies
    1. @ஈரோடு விஜய்!
      "பேட் கேட்"க்கு ஒரு லைக். BATMAN-ஐ தான் தமிழில் பார்க்க முடியவில்லை!

      @ ஸ்டீல் க்ளா!

      ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" நான் படித்திராத கதை,நண்பரே! எத்தனுக்கு எத்தன்+யார் அந்த மினி ஸ்பைடர் (CC) ஒரு புத்தகம் மட்டுமே படித்திருந்தும் ரொம்பவே பிடித்து போய் விட்டார் - "குற்ற சக்கரவர்த்தி". எனவே பிற கதைகள் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்கின்றேன்!

      Delete
    2. //BATMAN-ஐ தான் தமிழில் பார்க்க முடியவில்லை! ///

      விரைவில் பேட்மேன்(மீண்டும்) தமிழ் பேச இருப்பதாக எடிட்டர் அறிவித்திருக்கிறார் இல்லையா சிவா? அனேகமாக அடுத்தவருடம் இருக்கலாம்!

      Delete
  22. ST கூரியர் -ன் மகத்துவம் இப்போதுதான் புரிகிறது ......Superb Transporters ........

    Registered post -னால் வரும் சின்ன frustration -ஐ தவிர்க்க முடிகிறது !!!!!!

    இரண்டு "நித்தமும் குற்றம் "வந்துள்ளது .........வரும் வழியிலேயே "டயபாலிக் "எல்லா காரக்டருக்கும் செயற்கை முகமூடி செய்து மாட்டி விட்டாரோ என்னவோ .....;)
    (இந்த extra copy திருப்பி தரப்படும் .......)

    ReplyDelete
    Replies
    1. Haha, quite possible

      // வரும் வழியிலேயே "டயபாலிக் "எல்லா காரக்டருக்கும் செயற்கை முகமூடி செய்து மாட்டி விட்டாரோ என்னவோ .....;) //

      Delete
  23. டியர் எடிட்டர் சர்ர்,
    இவ்வளவு விரைவரகவர சர்ர்? புத்தரண்டு பதிவர சர்ர்? நரன் 45 வதர சர்ர்?
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  24. டியர் எடிட்டர் சர்ர்,
    ஐனவரி 5 இதழ்களர சர்ர்?இதழ்களின் முன் அட்டைகள் சூப்பர் சர்ர். தொழிலரளர்களை 3 மணிக்கு மதிய உணவுக்கு கூட போகவிடரமல் பேக்கிங்கர? ஞரயிறு விடுமுறை தினத்தில் மரட்டிக் கொள்ள கூடரதே என்று உங்கள் ஆதங்கம் புரிகிறது சர்ர்.
    டரக்டர் சர்ர! பீளீஸ் சர்ர். சேலம் tex விஐயர்ரகவனின் ஆதங்கம் சர்ரரனே சர்ர். உங்கள் பர்சுக்கு வேட்டு வைத்தரல், ரிபிரின்ட் சந்தர கட்டரமல் விடுவது மட்டுமே சரியரன வழியாக இருக்கும் சர்ர் please???
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  25. டியர் எடிட்டர் சர்ர்,
    புத்தரண்டு வரழ்த்து சொல்ல " லக்கியும் ஐரலியும்" கொடுத்து வைத்தவர்கள்தரன்.இன்னும் 3 வரரங்கள் பொறுத்திருக்க வேண்டுமே என்று ஏக்கமரக உள்ளது. நரளை பதிவு இருக்கிறது இல்லையர சர்ர் ? அடுத்த பதிவுக்கரக நரம் 8 நரள் கரத்திருக்க வேண்டுமர சர்ர்? உங்கள் எழுத்தை பர்ர்த்தரல்தரன் நித்திரை வருகிறது சர்ர். என்னை தப்பரக எடுத்து கொள்ளரதீர்கள் சர்ர்.
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. @ திருச்செல்வம் பிரபானந்

      இக்குறும்பதிவின் கடைசியில்//
      நாளை வழக்கம் போல் பதிவோடு ஆஜராவேன் ! Bye for now ! /// என்று எடிட்டர் எழுதியிருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா நண்பரே?

      Delete
    2. டியர் நண்பரே!
      இப்போதுதரன் நிம்மதி. நரன் அதை கவனிக்கவில்லை. நன்றி சர்ர்!
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
  26. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
    WISH YOU HAPPY NEW YEAR 2015 !!!

    ReplyDelete
  27. 2015 ஆம் வருடத்தின், எடிட்டரின் முதல் பதிவில்,எனது முதல் பதிவு!!!

    ReplyDelete
  28. //முனை மடங்காமல்//
    இதற்கெல்லாம் பயந்துட்டுத்தானே நேரிலேயே ஒவ்வொரு புக்கா பார்த்து பார்த்து காமிக்ஸ் வாங்கிட்டு இருக்கேன்...

    //சேலம் Tex விஜயராகவன்3 January 2015 at 11:42:00 GMT+5:30

    5 புத்தகங்களும் அருமையான பேக்கிங் கில் முனை மடங்காமல் வந்து கிடைத்தது சார் .//

    ஹை...சூப்பர்!!!
    ஹும்ம்ம்...நானும் பேசாம சந்தா கட்டியிருக்கலாமோ?!!

    ReplyDelete
    Replies
    1. டியர் நண்பரே!
      சந்தர செலுத்தி முனை மடங்கரமல் வெளியீடுகளை பெற்றுக்கொள்வது மிகச்சரியரன முடிபு . ஏப்ரல் மரதம் வரை நம் எடிட்டர் விட்டுள்ளர்ர். சீக்கிரம் சர்ர்.
      தங்கள் உண்மையுள்ள
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
    2. நானும் அதையே தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்....
      மிக்க நன்றி செல்வா நன்பரே :):):)

      Delete
    3. சத்யா நான் எனது கடையில் செய்து தரும் கிஃப்ட் பாக் போல நல்ல காம்பாக்ட் பேக் செய்திருந்தார்கள். அதற்கு நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம் . தாமதிக்காமல் திங்கள் முதல் வேலையாக சந்தா கட்டுங்கள் . சந்தாசமா இருங்கள் .

      Delete
    4. @Tex Vijayaraghavan:

      Thnksss brother:)

      Delete
    5. முணுமுணுப்பு - ஹூம் நம்மல விட சின்ன பசங்கலாம் அண்ணணாம் , நாம பிரதராம் . அவ்வளவு இளமையாவா இருக்கிறோம் . இன்று இரவு வீட்டுக்காரி சொல்லி சுத்தி போடச்சொல்லனும்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. @சேலம் Tex விஜயராகவன்:
      //முணுமுணுப்பு - ஹூம் நம்மல விட சின்ன பசங்கலாம் அண்ணணாம் , நாம பிரதராம்//
      ஆஹா...எல்லாரையும் 'அண்ணா', 'நண்பரே' ன்னே ஒரே மாதிரி கூப்பிடறதுக்கும் ஒரு மாதிரி இருந்துச்சு...பேர் மட்டுமே சொல்லி கூப்பிடறதுக்கும் சங்கடமா இருந்திச்சு...அதான் 'ப்ரதர்' ன்னு கூப்பிட்டேன்...
      சரி விடுங்க வேணும்னா, நண்பர் 'ரவி கண்ணன்' கூப்பிடற மாதிரி நானும் இனிமேல் உங்களை 'டெக்ஸ் மாம்ஸ்' ன்னே கூப்பிடுறேன்...:D

      //அவ்வளவு இளமையாவா இருக்கிறோம்//
      அப்போ...இனிமேல்...
      Thnksss bro:) ஓ.கே. தானே ?

      Delete
    8. //சரி விடுங்க வேணும்னா, நண்பர் 'ரவி கண்ணன்' கூப்பிடற மாதிரி நானும் இனிமேல் உங்களை 'டெக்ஸ் மாம்ஸ்' ன்னே கூப்பிடுறேன்...:D//

      எங்களுடைய பந்தம் தானாக அமைந்தது சத்யா.!!!

      Delete
    9. @ கிட் ஆர்ட்டின்

      (சத்யாவின்) இந்த பந்தமும் உறுதியானதுதான், சங்கர் சிமெண்ட் போல! ;)

      Delete
    10. விஜய் .,
      அப்போ சத்யாவ சுவர்னு சொல்றிங்களா.?
      (ஹிஹிஹி.)

      Delete
    11. //@சேலம் Tex விஜயராகவன்:
      //முணுமுணுப்பு - ஹூம் நம்மல விட சின்ன பசங்கலாம் அண்ணணாம் , நாம பிரதராம்//

      அவரு சின்ன பசங்கன்னு குறிப்பிட்டது என்னைத்தான்.!

      Delete
    12. அய்யாக்களா தெரியாமல் ஒரு ஜோக் சொல்கிறதாக நினைத்து போட்டு விட்டேன் . தயவுசெய்து உங்கள் கால்களை கொஞ்சம் காட்ரீங்களா?, சத்யா இனிமேல் என்னை - டேய் விஜின்னே கூப்பிடுங்கள். ( சும்மா இதுவும் ஜோக்தான் ப்ரதர்னே கூப்பிடவும்,).

      Delete
    13. @Erode VIJAY & கிட் ஆர்ட்டின் KANNAN:
      :):):)
      சேலம் Tex விஜயராகவன்'s mind voice:ஆஹா ...ஒண்ணு கூடிட்டாங்கய்யா...ஒண்ணு கூடிட்டாங்கய்யா...

      @சேலம் Tex விஜயராகவன்:
      //சத்யா இனிமேல் என்னை - டேய் விஜின்னே கூப்பிடுங்கள். ( சும்மா இதுவும் ஜோக்தான் ப்ரதர்னே கூப்பிடவும்,). //
      Ok Brother:)

      Delete
  29. இந்நேரம்...அடுத்த வாரம்...:):):):)

    ReplyDelete
  30. நிழலோடு நிஜ யுத்தம்

    Sorry to say this.. இந்தக் கதையை படிக்கும் ஆர்வமே வரப்போவதில்லை எனக்கு. ஒருவேளை 80'களில் இந்தத்தரத்தில் அச்சு சித்திரங்கள் இருந்திருந்தால் ஓகே வாக இருந்திருக்கும். 2014'ல் நுணுக்கமான க்ராஃபிக் நாவல் சித்திரங்களையும் அச்சையும் (ஜோ; இ.இ.கொ மற்றும் வா.எ.வீ) பார்த்த பிறகு இந்தப் புத்தகத்தை புரட்டிப்பார்ப்பதே வீண் வேலையென தோன்றுகிறது.

    Honestly, we better avoid clinging with Black & White stories and old hero / heroins with Xerox level print... Doesn't fit for 2015.

    ReplyDelete
    Replies
    1. + 1

      பத்து ரூபாய் புக்கைவிட மோசமான தரத்தில் இப்போது முப்பத்தைந்து ரூபாய் - மாடஸ்டி - the story compensated a bit but we need to seriously look at print jobs :-(

      Delete
  31. கை நிறைய காமிக்ஸ்கள்,நண்பர்களின் வருகையால் மனம் நிறைய சந்தோஷங்கள் etc. etc. :):):)
    புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களையும் advance ஆக வருக வருக என வரவேற்கிறேன்....:)

    பின் குறிப்பு:
    இன்னும் நமக்கு ஸ்டாலே confirm ஆகவில்லைன்னு மட்டும் யாரும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நமக்கு ஸ்டால் confirm தானே சார்? அங்கே ஜனவரி மாதத்தின் வெளியீடுகளான 10 புத்தகங்களும் கிடைக்கும் தானே சார்?

      Delete
  32. டியர் எடிட்டர் சர்ர்,
    பரண்டிச்சேரி ஷ்டரலில் விற்பனை நல்லதர சர்ர்?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  33. //Siva Subramanian3 January 2015 at 14:15:00 GMT+5:30
    எனக்கு வந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை பதிவின் முதல் படம்!//

    முடிந்தால் 'புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை' வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கும் கொண்டு வாருங்கள் சார்!!!

    ReplyDelete
  34. டியர் சார்

    முதலில் புத்தாண்டு வாழ்த்துகளை தெறிவித்துகொள்கிறேன் !

    2015 ம் ஆண்டின் முதல் ஐந்து வெளியீடுகள் ரொம்ப safe ஆக கிடைத்தது. backing க்கு எனது பாரட்டுகளை தங்கள் பனியாளர்களுக்கு தெறிவித்துவிடுங்கள்!

    முதல் பார்வையில்...

    நள்ளிரவு நங்கை - அழகான பிரிண்டிங் தரம், கச்சிதமான சைஸ், அளவான வண்ணக்கலவை வசிகரிக்கிறது !

    சிறைக்குள் ஒரு சடுகுடு - வழக்கமான சைஸில் எந்த குறையும் தென்படவில்லை. மேலோட்டமாக நன்றாக இருக்கிறது !

    ஒரு ஜெண்டில்மேனின் கதை - குறையென்று பார்த்தால் சற்றே கூடுதலான வண்ணக்கலவையே. மற்றபடி நம்ம ஒல்லிபிச்சான் புத்தகம் நன்றாக இருக்கிறது !

    நித்தமும் குற்றம் - நான் படிக்கப்போகும் முதல் இதழ் இதுதான் !

    நிழலோடு நிஜ யுத்தம் - Sorry Sir, அனைவராலும் மிகவும் எதிர்பாக்கப்பட்ட மாடஸ்டி இந்த ஆண்டின் முதல் சறுக்கலாக இருக்கும் என்று தோன்றுகிறது! அட்டைப் படங்களைத் தாண்டி இந்த புத்தகம் மிகப்பெரிய ஏமாற்றைத்தை தருகிறது ! பாக்கெட் சைஸ் புத்தகத்தி விரிவு படுத்தி, பெரிய சைஸில் வெளியிட்டதுபோல் இருக்கிறது ! :-( என்னதான் கதை நன்றாக இருக்குமென்றாலும், நிச்சயமாக இந்த புத்தகத்துடன் ஒன்ற முடியாது என்பது எனது முதல் பார்வை கருத்து!

    மொத்தத்தில் இந்த மாதம் முதல் ரவுண்டில், நாண்கு பலசாலிகள் மத்தியில், மாடஸ்டி பரிதாபமாக நிற்கும் இளவரசி!!

    இனி கதைகளை படித்த பின்பு. Happy Week End to all !

    ReplyDelete
  35. எடிட்டர் சார்,

    //அடியேனின் வெண்கலத் தொண்டை நேற்று முழுவதும் பிசியாக இருந்தது !///

    ஏனோ இதைப் படித்தபின்பு உங்கள் குரலில் ஒரு பாடலைக் கேட்டு இன்புறவேண்டும் போல் ஒரு அவா எழுகிறது(அதான் கவிதையெல்லாம் எழுதறீங்களே?). அடுத்த வாரம் சென்னையில் நான் இந்த ரிஸ்கை எடுக்கத் துணிந்துவிட்டேன். ( 'இருட்டில் பூசணிக்காய்கள் விகாரமாக இளிக்கின்றன' song மட்டும் வேண்டாம் சார். ரொம்பப் பயமாய் இருக்கும்!) :D

    ReplyDelete
    Replies
    1. //ஏனோ இதைப் படித்தபின்பு உங்கள் குரலில் ஒரு பாடலைக் கேட்டு இன்புறவேண்டும் போல் ஒரு அவா எழுகிறது//

      @ஈரோடு விஜய் !.....சென்னை புத்தக திருவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியதாக உங்கள் மேல் இ.பி.கோ -வின் ஏதேனும் ஓர் சட்ட பிரிவு பாய்வதற்கான வாய்ப்புகள் பலமாக தென்படுகின்றன .....;)

      Delete
    2. @ selvam abirami

      ஹா ஹா! திருவிழாவையே சீர்குலைத்துவிடும் சக்தி படைத்ததென்றா நினைக்கிறீர்கள்?! இருக்கலாம், யார் கண்டது! ;)

      Delete
    3. @Erode VIJAY:
      //இருட்டில் பூசணிக்காய்கள் விகாரமாக இளிக்கின்றன' song மட்டும் வேண்டாம் சார். ரொம்பப் பயமாய் இருக்கும்!) :D//
      நம்ம எடிட்டர் புத்தக விழாவினில் பேசிய வீடியோவையெல்லாம் 'You tube' ல பார்த்துட்டு, உங்க பதிவைப் பார்த்தவுடன், ஏனோ எனக்கு இது ஞாபகம் வந்துச்சு "நின்னுக்கோரிரிரிரிரி வர்ர்ர்ர்ணம்ம்ம்ம்ம்ம்...." :D

      Delete
    4. //ஏனோ எனக்கு இது ஞாபகம் வந்துச்சு "நின்னுக்கோரிரிரிரிரி வர்ர்ர்ர்ணம்ம்ம்ம்ம்ம்...." :D//

      ஹாஹாஹா.!
      Welcome back Sathya

      Delete
    5. //ஏனோ எனக்கு இது ஞாபகம் வந்துச்சு "நின்னுக்கோரிரிரிரிரி வர்ர்ர்ர்ணம்ம்ம்ம்ம்ம்...." :D//

      ஹாஹாஹா!

      Delete
    6. @Erode VIJAY & கிட் ஆர்ட்டின் KANNAN:
      :):):)

      Delete
  36. புத்தாண்டின் முதல் ஏமாற்றம்!!! பார்சல் வாங்கும் போதே சந்தேகம்.. ஏன் எனில் மிக சிறியதாக இருந்தது.. நான் சந்தாவின் முதல் பகுதி மட்டும் கட்டியதால் எனக்கு சென்ற ஆண்டின் பாலன்ஸ் புத்தகங்கள் மட்டுமே கிடைத்தது..ஹ்ம்ம்ம்ம்

    ReplyDelete
  37. //P.Karthikeyan: மொத்தத்தில் இந்த மாதம் முதல் ரவுண்டில், நாண்கு பலசாலிகள் மத்தியில், மாடஸ்டி பரிதாபமாக நிற்கும் இளவரசி!! // Oh.... :-(

    ReplyDelete
  38. அன்பு ஆசிரியருக்கு ஸ்பைடர் ஶ்ரீதரின் வணக்கங்கள் (நண்பர் டெக்ஸின் வாயிலாக )
    * இம்மாதம் வெளியீடுகளை இப்போது தான் பார்த்தேன் சார் . கைநிறைய காமிக்ஸ் கிடைத்த சந்தாசத்தோடு கூடவே ஒரு அதிர்ச்சியும் தந்துள்ளீர்கள் . தாங்கள் வெளியிட்ட 2015பிளானரிலும் இதுவரை வந்த மறுபதிப்பு அறிவிப்புகளிலும் ஸ்பைடரின் இராட்சத குள்ளன் ஜனவரியில் முதல் மறுபதிப்பாக வரும் என்று இருந்தது . இப்போது வந்துள்ள அனைத்து புத்தகங்களிலும் -சைத்தான் விஞ்ஞானி என்று உள்ளது . ஏன் இந்த திடீர் மாற்றம் . ஆவலுடன் இருந்த எனக்கு சற்றே ஏமாற்றம் .குள்ளன் எப்பொழுது வருவான் ?. சில நண்பர்களுக்கும் கூட சிறிய மாற்றம் ஏமாற்றத்தை தந்து உள்ளது . அனைவரும் உங்கள் பதில் நோக்கி .................- ஸ்படர் ஶ்ரீதர் .

    ReplyDelete
    Replies
    1. // இப்போது வந்துள்ள அனைத்து புத்தகங்களிலும் -சைத்தான் விஞ்ஞானி என்று உள்ளது . ஏன் இந்த திடீர் மாற்றம் . ஆவலுடன் இருந்த எனக்கு சற்றே ஏமாற்றம் .குள்ளன் எப்பொழுது வருவான் ?. //
      வருடத்தின் ஆரம்பத்தில் ஏன் இந்த (ஏ) மாற்றம் விஜயன் சார்? இதனை கண்டிப்பாக நான் எதிர் (விரும்ப) பார்க்கவில்லை. இது போன்ற குழப்பம்களை தவிர்ப்பது நலம்.

      Delete
    2. குற்றசக்ரவர்த்தி ஸ்பைடரின் 'ராட்சஸ குள்ளன்' மறுபதிப்பு வரப்போகிறது என முதல் பதிப்பு அட்டைபடங்கள், உள்படங்கள் எல்லாம் போட்டு செய்த டிசர்,டிஷர்ட்,கலண்டர் எல்லாம் வீணா... :((

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. சார்,

    நான்கு இதழ்கள் சுப்பர். மாடஸ்டி இதழ் மிகப் பெரிய சொதப்பல். (ராப்பர் தவிர்த்து) இந்தளவிற்கு மோசமான சித்திரத்தரம் நான் எதிர்பார்க்காதொன்று! இதை வெளியிட துணிந்த உங்கள் அசட்டு தைரியம், Distress…?

    எல்லாவகைகளிலும் முன்னேறி வந்துவிட்ட நாம் இதன் மூலம் மீண்டும் back to past போன்றதொரு உணர்வு! இனி மாடஸ்டி கதைகளில் இதே சித்திரத்தரம் தான் எனும் போது It’s time to avoid Modesty forever!!

    ReplyDelete
  41. அந்த கண்ணை அதன் கூர்மையான வெறி பார்வை , இதை வைத்தே அப்பா character , diabolic என்று ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டேன்
    பஞ்ச புத்தகங்கள் நன்று நன்று
    மாடஸ்டி பரவாயில்லை
    லக்கி லுக் சுமார்
    டியாபலிக் புது பானையிலே பழைய கள்
    டைலன் நன்று
    நம்ம ரூபி சார்ஜ் சிரிக்கலாம்

    ஹாப்பி நியூ இயர் சாமியோ

    ReplyDelete
  42. மாடஸ்டி பற்றி காலையிலேயே நான் சொல்ல ஆசைப்பட்டு சொல்லாமல் விட்டுவிட்ட விசயங்களை இப்போது தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
    காலையில் சொல்லியிருந்தால் மாடஸ்டி கதைகள் பிடிக்காமல் பொறாமையில் பொங்குகிறான் என்று பழிச்சொல் வந்துவிடுமோ என்ற பயத்தில் சொல்லவில்லை.
    இப்போது குளுகுளுன்னு இருக்கு.:):) (D).
    (சும்மா டமாஸுக்கு சொன்னேங்க. டாருடாரா கிழிச்சிராதீக.!)

    ReplyDelete
  43. டிலன் டாக் கதையில் ஒரு 10 பக்கத்திற்கு பிறகு உள் பக்கத்தை படிப்பதற்கு கடினமாக இருக்கிறது. வலது புறம் அதிக மார்ஜின் இருக்கிறது. அதனால் சற்று தள்ளி பைண்டு செய்தால் நன்றாக இருக்கும். இது பிரிண்டிங் சரி செய்ய வேண்டுமா அல்லது பைண்டிங்கில் சரி செய்ய வேண்டியதா தெரியவில்லை.

    ReplyDelete
  44. டியர் எடிட்டர் சர்ர்,
    " நிழலோடு நிஐ யுத்தம் " இளவரசியின் கதை இந்த வருட முதல் சொதப்பல் என்று விமர்சனம் நண்பர்களிடம் எழுகிறதே சர்ர்?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  45. புத்தகங்கள் கிடைத்தன...
    1.டயபாலிக் world class...
    2.மாடஸ்டி ...நமது லயன் சரித்திரத்தில் ஒரு கருப்பு புள்ளி ...
    சீக்கிரம் மறந்த விட நினைக்கிறேன் ..
    3.மற்ற வண்ணபுத்தகங்களின் வண்ணங்களில் நல்ல முன்னேற்றம் .இன்னும் ஒரு நூல் அழுத்தம் கொடுத்தால் perfect ஆகிவிடும் ...பிரின்டிங் ஷார்ப்னஸ் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் ...

    ReplyDelete
  46. டியர் எடிட்டர் சர்ர்,
    //இந்தப் புத்தகத்தை புரட்டிப்பார்ப்பதே வீண் வேலையென தோன்றுகிறது. // உங்கள் ஆதங்கம் புரிகிறது சர்ர். ஆனரலும் இப்படி கமெண்ட்ஸ் போட்டரல், நம் எடிட்டர் 2வது இளவரசி வேண்டரம் என நிறுத்தி விட்டரல் என நினைத்தரல் என்ன சர்ர் செய்வது?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  47. முதல் பார்வையில்...

    * பேக்கிங் கச்சிதம், அட்டகாசம்!

    * அட்டைப் படங்கள் எல்லாப் புத்தகங்களிலுமே அசத்தல்!

    * லக்கி-லூக் புத்தகத்தில் வண்ணங்கள் சற்றே தூக்கல்!

    * டைலன்டாக் புத்தகத்தில் வண்ணங்கள் சற்றே குறைச்சல்!

    * சரியான வண்ணக்கலவையிலும், செம ஷார்ப்பான அச்சுத் தரத்திலும் ப்ளூகோட்ஸ் "வாவ்!" சொல்லவைக்கிறது.

    * டயபாலிக் - வழக்கம்போலவே கச்சிதமான அச்சுத்தரம்!

    * மாடஸ்ட்டி- ஏமாற்றம்! ஏமாற்றம்! பெருத்த ஏமாற்றம்!! அட்டைப்படத்தைத் தவிர வேறெங்குமே ( நான் எதிர்பார்த்த) மாடஸ்டியைக் காணவில்லை. படு சொதப்பலான ஓவியங்கள்! ( சொதப்பலான ஓவியங்களால் இதுவரை நான் படிக்காமலேயே வைத்திருக்கும் மாடஸ்டியின் பத்து ரூபாய் புத்தங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன) . பின்னட்டையிலுள்ள மாடஸ்ட்டியின் மிக அழகான படம் மட்டுமே ஒரே ஆறுதல்!
    கதையைப் படிக்கலாமா வேண்டாமா என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்!

    மாடஸ்டியின் இனிவரும் புத்தங்களும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தாலே - பகீர்!!!

    ப்ளீஸ் எடிட்டர் சார், ஓவியத்தரம் சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் இதுபோன்ற கதைகள் வேண்டாமே, அது எவ்வளவு நல்ல கதையாக இருப்பினும்!

    ReplyDelete
    Replies
    1. //ப்ளீஸ் எடிட்டர் சார், ஓவியத்தரம் சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் இதுபோன்ற கதைகள் வேண்டாமே, அது எவ்வளவு நல்ல கதையாக இருப்பினும்//

      யெஸ், சரியாக சொன்னிர்கள் விஜய். லக்கிலுக் புத்தகம் ஏதோ கலர் டப்பாவில் முக்கி எடுத்ததுபோல் இருப்பது மிகப் பெரிய உறுத்தல். :(

      Delete
  48. நாளை புதிய பதிவில் சந்திப்போமா.!!

    ReplyDelete
  49. நல்ல படத்தை தியேட்டர் பிரிண்ட் வாங்கி பார்த்த எஃபக்ட் நி. நி .யு . படித்த போது :(

    ReplyDelete
  50. @ FRIENDS : நண்பர்களே,

    இன்றைய பொதுவான கருத்து என்பதால் ஆங்காங்கே இதனைப் பதிலாய்ப் பதிவிடாது - இங்கே ஒருசேர எழுதிடுகிறேனே...! நிழலோடு நிஜ யுத்தம் கதையின் (மாடஸ்டி) சித்திரத் தரம் பற்றிய உங்களின் ஆதங்கங்கள் நியாயமானதே..! ஆனால் நாணயத்தின் மறுபக்கம் என்னவென்பதை சற்றே பொறுமையாய் கேட்கவும் கோருகிறேன் !

    நாம் வெளியிட்டு வரும் கதைகளுள் நமக்கு படைப்பாளிகளோடு நேரடித் தொடர்பு இல்லாத ஒரே கதைவரிசை என்றால் - அது மாடஸ்டி மாத்திரமே ! மாடஸ்டி கதைகளை உலகம் முழுவதிலும் வியாபாரம் செய்திட ஒரு சங்கிலித் தொடர் உள்ளது ! அவர்களுக்கு இந்தியாவிவிலும் ஒரு ஏஜெண்ட் உள்ளார் ! அவரது பொறுப்பு மாடஸ்டி & இன்ன பிற கார்ட்டூன் ஸ்ட்ரிப்களை இங்குள்ள செய்தித் தாள்களுக்கும் ; வார / மாதப் பத்திரிகைகளுக்கு விநியோகம் செய்வதே ! ஒரு குத்து மதிப்பான முன்பணத்தை படைப்பாளிகளுக்கு அனுப்பி விட்டு - ஆறு மாதங்களுக்கோ ; ஓராண்டுக்கோ தேவையான கதைகளை / பக்கங்களை வரவழைத்து கையில் ஸ்டாக் வைத்துக் கொள்வார் ! அவ்விதம் ஸ்டாக் இருந்த மாடஸ்டி கதைகளின் எண்ணிக்கை 16 ! அவற்றுள் நாம் ஏற்கனவே வெளியிட்டு விட்ட கதைகள் 9 நீங்கலாக ராணி காமிக்ஸ் போட்டிருந்த கதைகள் 4 இருந்தன ! So அந்த 9+ 4 கதைகளை outright தவிர்த்து விட்டு பாக்கியிருந்த 3 கதைகளையும் வாங்கி விட்டோம் ! அவற்றுள் 2 ஓவியர் Neville Colvin -ன் படைப்புகளே ! இப்போது உங்களை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கும் "நி.நி.யு." கதை அவரது ஓவியக் கைவண்ணமே !

    ஆரம்ப நாட்களது மாடஸ்டி கதைகளுக்கு சித்திரம் போட்ட ஜிம் ஹோல்டவே & பீட்டர் ரோமேரோவின் கதைகளுள் நாம் பிரசுரித்திருக்காப் புதுக் கதைகள் எதுவுமே ஏஜண்டிடம் தற்போதைய ஸ்டாக்கில் இல்லை ! தவிர அவருக்கு 'இந்த சித்திரங்கள் சூப்பர் ; அது சுமார் ' என்ற ரீதியிலான பார்வைகள் இராது ! அவர்களைப் பொறுத்த வரை எல்லாமே மாடஸ்டி கதைகளே - fullstop ! நாம் கேட்பதற்காக நெவில் கொல்வினின் சித்திரக் கதைகளை ஓரம் கட்டி விட்டு, புதிதாய் கதைகளைத் தருவிக்கும் சாத்தியங்கள் ஜீரோ ! ஆகையால் அவர்களது கைவசம் உள்ளதை மாத்திரமே வாங்கிடும் நெருக்கடி !

    அது மட்டுமன்றி - மாடஸ்டியின் கதைகளுக்கு ஓவியர் Neville Colvin ஒரு முக்கிய படைப்பாளி எனும் போது அவரது கதைகளை en masse ஒதுக்கிடும் சாத்தியங்களும் கிடையாதே ! நமது லயனில் -"கார்வினின் யாத்திரைகள்" ; கொலை செய்ய விரும்பு" ; "பறக்கும் பரலோகம் " போன்ற கதைகளுக்கு சித்திர உபயம் இதே ஓவியர் தானே ! என்ன ஒரே வித்தியாசம் - அன்றைய நாட்களில் நமது ஓவியர்கள் ஒரிஜினல் படங்களை ஓரங்களில் நீட்டுவது ; panel சைசுக்குள் நுழைப்பது என்பதையெல்லாம் நாசூக்காய் செய்து விடுவார்கள் ! ஆனால் இன்றோ அத்தனையும் கணினி என்றான பின்னே அந்த ஓவியத் திறமை காணாது போய் விடுகிறது ! பிளஸ் இப்போதைய புத்தக சைஸ் பெரியது என்பதோடு காகிதமும் வெள்ளை எனும் போது - அந்த குறைபாடுகள் வெளிச்சமாய்த் தெரிகின்றன !

    நாம் செய்யக் கூடியது - நம்மிடம் கைவசம் உள்ள இன்னுமொரு நெவில் கொல்வினின் கதையை வெளியிடாமலே மூலை சேர்த்து விடக் கூடியது தான் - அதனில் முடங்கியுள்ள தொகையைப் பொருட்படுத்தாது ! ஆனால் ஒட்டு மொத்தமாய் அவரது படைப்புகளுக்கு 'நோ' சொல்லுவது இயலாக் காரியமே ! படைப்பாளிகளைப் பொறுத்த வரை Neville Colvin-ம் ஒரு முக்கிய ஓவியர் என்பது தான் bottomline !!

    ReplyDelete
    Replies
    1. @ FRIENDS : இதில் இன்னொரு கூத்து என்னவெனில் - The Warlords of Phoenix என்ற கதை ஆரம்ப காலத்து அழகான ஓவிய பாணிக் கதை ! அதனையும் அவசரத்தோடு அவசரமாய் நான் வாங்கி வைத்து விட்டு ; மொழிபெயர்க்க நமது கருணை யானந்தம் அவர்களுக்கும் அனுப்பி விட்டேன் ! அவரும் 'மளமள' வென எழுதி ஸ்க்ரிப்டை எனக்கு 10 நாட்களில் அனுப்பியிருந்தார் ! வழக்கம் போல அதன் மீதான எனது remake பணிகளைத் துவக்கிய போது தான் லேசாகப் புளியைக் கரைத்தது - இந்தக் கதையை இதற்கு முன்பே போட்டு விட்ட மாதிரித் தோன்றுகிறதே என்று ! அப்புறம் பழைய மாடஸ்டி இதழ்களை உருட்டிப் பார்த்தால் "திகில் நகரம் டோக்கியோ" என்ற பெயரில் நாம் வெளியிட்டிருந்த அதே கதை !!

      ஆங்கிலப் பெயரை நினைவில் வைத்திருக்கத் தவறியதற்கு எனக்குக் கிடைத்த தண்டனை செம காஸ்ட்லி ; கதைக்குக் கட்டிய ராயல்டி பற்றாது என்று மொழிபெயர்ப்புக்குக் கொடுத்த கட்டணமும் கூட !! phew !!

      Delete
    2. இதில் கொடுமையோ கொடுமை என்னவெனில் - 'பக்க எண்ணிக்கை - ராயல்டி' என்றதொரு கணக்குப் பார்த்தால் பௌன்சர் கதைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது மாடஸ்டி தான் !

      Delete
    3. //படைப்பாளிகளைப் பொறுத்த வரை Neville Colvin-ம் ஒரு முக்கிய ஓவியர் என்பது தான் bottomline//

      இதனை நான் ஆக்ரோஷமாக ஆமோதிக்கிறேன் சார்.

      1. கதாசிரியர் ஓ டானலுக்கு மிகவும் பிடித்த ஓவியர் இவரே. ஓ டானலே ஒரு பேட்டியில் ஹோல்டவேவுக்கு பிறது அந்த அளவுக்கு வரைபவர் இவர் என்று சொல்லி இருக்கிறார்.
      2. முதன்முதலில் மாடஸ்டி கதைத்தொடருக்கு சன் டே ஸ்ட்ரிப் வரைந்தவர் இவரே. இது நடக்கும்போது ஹோல்டவே உயிரோடுதான் இருந்தார்.
      3. ஓ டானல் சினிமாவாக எடுக்க நினைத்த கதையான ஸ்கார்லட் மெய்டனை காமிக்ஸ் ஆக வரைய தூண்டி, அதில் வெற்றியும் பெற்றார் இவர்.
      4. இவரது பாணி, ரொமேரோவின் கமர்ஷியல் ஓவியங்களை போலவோ. அல்லது ஹோல்டவேவின் அசாத்திய திறமையோடோ இல்லாமல் ஒடு தனித்துவமான பாணியில் இருக்கும்.

      மீதம் இருக்கும் அந்த கால்வின் கதையையும் யோசிக்காமல் பிரசுரியுங்கள் சார். கால்வினின் ஓவியங்களை நம்ம ”புது” வாசகர்களுக்கு அந்நியமாக தெரிய காரணம் அவர்கள் வண்ண வண்ண ஓவியங்களை ரசிக்க தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு இந்த பழைய பாணி 70’s ஓவியங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்.

      ஆகவே, மீதமிருக்கும் கதையையும் பிரசுரிக்க கோருகிறேன்.

      Delete
    4. //இதில் இன்னொரு கூத்து என்னவெனில் - The Warlords of Phoenix என்ற கதை ஆரம்ப காலத்து அழகான ஓவிய பாணிக் கதை //

      இந்த கதையை நீங்கள் எப்படி மறந்தீர்கள் என்பது புரியாத புதிர். ஏனென்றால் இந்த கதையின் முடிவில்தான் ஜிம் ஹோல்டவே இறந்துவிட, அவருக்கு பதிலாக எடிட்டர் விண்டர் ரொமேரோவை தேர்ந்தெடுத்து ஓவிய வரிசை 2099 முதல் வரைந்து இருப்பார். இந்த கதையை முதலில் படித்தபோதே ஓவிய முறையில் இருந்த மாற்றத்தை கவனித்து இருந்தோம்.

      அப்படி இருக்க, நீங்கள் மறந்தது எப்படி?

      ஒருவேளை, ”நான் ஒரு தடவ புக்க ப்ரிண்ட் பண்ணிட்டா, என் புக்க நானே பார்க்க மாட்டேன்” என்ற உங்கள் பாலிசிதான் இதற்க்கு காரணமா?

      Delete
    5. King Viswa : நிஜமும் அது தான்...! நான் பணியாற்றியிருக்கா ஆரம்ப காலத்து முத்து காமிக்ஸ் நீங்கலாய் பாக்கி எந்தக் கதைகளையும் மேலோட்டமாய்ப் புரட்டுவதைத் தாண்டி பொறுமையாய் திரும்பப் படித்ததாய் எனக்கு நினைவே இல்லை !

      Delete
  51. @Vijayan:
    உங்கள் நிலைமை புரிகிறது சார்....

    ReplyDelete
  52. இந்த நேரத்தில் உங்களின் கமென்ட்டைப் பார்த்தால், புதிய பதிவு ஒருவேளை ரெடியா சார்...

    ReplyDelete
    Replies
    1. Sathiya : வைகுண்ட ஏகாதசி எங்களுக்கு இன்றிரவு தான் போலும் ; இன்னமும் ஆபீசில் தான் இருக்கிறேன் ; கிழியும் கொட்டாவிகளுக்கு மத்தியினில் மறுபதிப்புகளின் அட்டைப்பட அச்சின் பொருட்டு !

      Delete
    2. நாளைய பதிவு ...ஹாவ்வ்வ்..நிச்சயமாய் 10 மணிக்கு மேலாகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது !

      Delete
    3. ஆஹா...
      இரண்டு நாட்களாக 'வைகுண்ட ஏகாதசி', 'நியூ இயர்' என கண் விழித்திருந்ததால் இன்றும் எனக்கு தூக்கம் வரவில்லை....
      ஆனால் வேலையின் பொருட்டு நீங்கள் கண் விழித்திருப்பது....
      சரியான நேரத்திற்கு காமிக்ஸ் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று மதியம் 3 மணி வரை சாப்பிடமால் வேலை செய்வது...
      Really appreciated sir...but also take little care of ur health too...(ஐஸ் எல்லாம் இல்ல சார் :p)
      ஓவர் work ஒடம்புக்கு ஆகாதும்பாங்க :D

      Delete
    4. 10 மணிப் பதிவை எதிர்நோக்கியவாறே தூங்க செல்கிறேன்....
      k..Gud nite Editor சார்...
      Gud nite நண்பர்களே.....

      Delete
  53. @Vijayan:
    உங்கள் நிலைமை புரிகிறது சார்....நான் இன்னமும் மாடஸ்டியின் புக்கைப் பார்க்கவில்லை(படிக்கவில்லை), அதனால் என்னால் அதைப்பற்றி கமென்ட் செய்ய முடியாது....
    ஆனால் மீதியிருக்கும் மாடஸ்டியின் கதைகள் அவ்வளவு மோசமாக இருக்காது என்றே நம்புகிறேன்....

    ReplyDelete
  54. டியர் எடிட்டர் சர்ர்,
    //கிழியும் கொட்டாவிகளுக்கு மத்தியினில் மறுபதிப்புகளின் அட்டைப்பட அச்சின் பொருட்டு !//
    இப்படி வெளிவரும் மறுபதிப்புகள் அட்டைபட அச்சில் உங்கள் உழைப்பு உள்ளது எங்கள்க்கு ரொம்பவே ஷ்பெஷல்தரன் சர்ர். ( என்னிடம் மறுபதிப்பு ஒன்று கூட இல்லை என்பது வேறுவிடயம்)
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  55. ஒரு சந்தோசப் பகிர்வோடு எடிட்டரின் புதிய பதிவு தயார் நண்பர்களே!

    ReplyDelete
  56. வேண்டாம்...விட்டுங்க...அழுதுறுவேன்...

    ReplyDelete

  57. இப்பொழுது உங்கள் பிரியமான முத்து, லயன் காமிக்ஸ்

    கண்கள் விரும்பும் வண்ண சித்திரங்களுடன்

    உள்ளம் விரும்பும் சித்திர கதைகளுடன்

    காலத்திற்கேற்ற கிராபிக் நாவல்களுடன்

    மேம்பட்ட வண்ண அச்சு தரத்தில் வெளிவருகிறது

    தமிழ் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் இரும்புக்கை மாயாவி, மற்றும் குற்ற சக்ரவர்த்தி ஸ்பைடர் மறுபதிப்புகளாக வெளி வருகிறார்கள்

    இன்றே வாங்கி படிங்கள்

    சந்தா தொடர்புக்கு 04562-272649 மேலும் விவரங்களுக்கு www.lioncomics.in என்ற இனைய தளத்தை பார்க்கவும்

    ReplyDelete