Sunday, November 16, 2014

The Four Men Army...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா...! 
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மந்திரி..! 

ஒரே ஒரு ராஜாவுக்கும் ஒரே ஒரு பிள்ளை..!
அந்தப் பிள்ளையோடு துணைக்கிருப்பதோ செவ்வேங்கை !  

நண்பர்களே, வணக்கம். பாட்டோடு (!!!)  துவங்கும் பதிவென்ற போதே எழும் கேள்விக்குறிகள் , முதல் வரியைப் பார்த்த மறுகணமே இது யாரைப் பற்றிய பதிவென்பதை உணர்ந்து ஸ்மைலிக்களாய் மாறி இருப்பது நிச்சயம் ! ஐம்பதைத் தொடும் ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டைக்காரர் ; தோற்றத்தில் அறுபதையும், மனதில் இருபதையும் பிரதிபலிக்கும் ஒரு ஆட்டுத்தாடிக்காரர் ; என்றும் பதினாறாய் வலம் வரும் ஒரு இளம் வேங்கை ; வேங்கையின் பெயரையே தன பெயராகவும் கொண்டதொரு சிகப்பு ஆசாமி ! இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் அதிரடி மன்னர்களாய் உலவிடுவது இந்த நால்வர் அணியே என்றால் அது நிச்சயமாய் வெறும் சிலாகிப்பல்ல !  'டல்லடித்துப் போய் கிடக்கும் சமயங்களில் டெக்சின் கதையைப் படித்தால் பேட்டரி ரீ-சார்ஜ் ஆன உணர்வு எழுந்திடத் தவறியதே இல்லை !" என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டும் ; அந்த டஜனின் அங்கத்தினர் சகலரும் 35+ வயதினர் ! ஒவ்வொரு புத்தக விழாவினிலும் நம் விற்பனையில் முதலிடப் போட்டி இருப்பது சுட்டி லக்கிக்கும் - இந்த இரவுக் கழுகின் அதகளக் குழுவுக்குமிடையே தான் !

2014-ன் இது வரையிலான நமது bestseller எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் - "கார்சனின் கடந்த காலம்" என்று !! வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க - இந்த டெக்ஸ் வண்ண bonanza இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து repeat ஆர்டர்கள் தந்து வருகின்றனர் ; multiple பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் ! இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் ! சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே ; "நிலவொளியில் ஒரு நரபலி" காலி ; "சிகப்பாய் ஒரு சொப்பனம்" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது ; மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது ! 2012-ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா ; பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் THE KING SPECIAL !! நண்பர்களில் ஒரு பகுதியினர் இது 'டெக்ஸ்' சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும், கடிதங்களும் சொல்லி வந்தன ! நவம்பரின் லார்கோ இதழில் - "கிங்" யாரென்ற இரகசியம் (!!!) உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் !! இதோ - டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான "வல்லவர்கள் வீழ்வதில்லை" கதையின் சில டீசர் பக்கங்கள் ! 

ஒவ்வொரு புதிய கதையின் அறிமுகப்படலத்தின் போதும் இதைச் சொல்லுவது வாடிக்கை தான் என்றாலும் - தேய்ந்த அதே பாட்டைத் திரும்பவும் ஒருவாட்டி பாடிக் கொள்ள உங்களின் அனுமதி தேவை ! "இது ரொம்பவே வித்தியாசமானதொரு டெக்ஸ் சாகசம் !" வழக்கம் போல நான்காவது பக்கத்தில் ஒரு சில்லுமூக்கு ; இருபதாவது பக்கத்தில் ரெண்டு மண்டைகள் என்று உடைபடும் மாமூலான பாணியினை இம்முறை எதிர்பார்க்காதீர்கள் ! கதை நிகழ்வது முழுக்கவே மெக்சிகோ மண்ணில் ; அங்கு அரங்கேறிய உள்நாட்டுப் போர் ; விடுதலைப் போராட்டம் ; வரலாற்று நிகழ்வுகள் என கதையோடு சகலமும் வெகு இயல்பாய்க் கோர்க்கப்பட்டிருப்பதை "வ.வீ"-ல் பார்த்திடப் போகிறீர்கள் ! ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ; ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது ! பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் & குழு இம்முறை அழகாய்க் காட்சி தர - இதுவொரு visual feast-ம் கூட ! 

சித்திரங்கள் என்ற topic -ல் உள்ள போதே குறிப்பிட்டாக  வேண்டிய விஷயமிது ! இது வரைக்கும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 40-ஐத் தொடும் !! 66 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரு தொடர் என்ற போதிலும் அதனில் இத்தனை பெரிய ஓவியப் பட்டாளம் பணியாற்றத் தேவைப்பட்டதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ! ஆரம்ப நாட்களில் கதாசிரியர் பொனெல்லியும் ; ஓவியர் காலெப்பினியும் மட்டுமே இத்தொடரில் பணியாற்றி வந்தனர் ! பின்னாட்களில் டெக்சின் பிரசித்தம் கூடக் கூட ; அவரின் புதுக் கதைகளின் தேவைகளும் கூடக் கூட - ஓவியர்கள் + கதாசிரியர்கள் அணியின் பலம் சட சடவென்று அதிகமாகத் துவங்கியது ! கொஞ்ச காலம் முன்பாய் நான் பொனெல்லி அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொழுது கூட இது பற்றிய பேச்சு எழுந்தது ; இத்தனை பேர் படம் வரையும் போது டெக்சின் முகம் தினுசு தினுசாய் மாறிடுகிறதே ? என்று கேட்டேன் ! 'என்ன செய்வது ? இன்றைக்கும் புது டெக்ஸ் கதைகளுக்கென ஒரு ஓயா தேடல் இங்கு தொடர்ந்திடுகிறது ; அதற்குத் தீனி போட ஒரு mass production line இல்லாது போனால் வேலைக்கு ஆகாது !' என்று பதில் சொன்னார்கள் ! 'சரி, ஒரே சமயத்தில் இத்தனை டீம்கள் புதுப் படைப்புகளில் பணியாற்றும் போது ஒரே விதமான plot -ஐ வெவ்வேறு குழுக்கள் கையாளும் ஆபத்தும் இருக்குமல்லவா ? ' என்றும் கேட்டேன் ! '650 கதைகளை நெருங்கும் ஒரு தொடரில் இன்னும் புதிதாய்...இது வரை முயற்சித்திராத பாணியாய்த் தேடித் பிடிக்க வேண்டுமென்ற வேட்கை எங்களின் டீம்களிடையே ஒரு நெருப்பாய் தகிப்பது உண்டு ! So இத்தனை காலம் ஆன பின்னும் கூட, புதுசு புதுசாய் டெக்சுக்குக் களங்கள் உருவாக்குவது சாத்தியமாகிறது !' என்று சொன்னார்கள் ! அப்போது பூம் பூம் மாடு போல் மண்டையை ஆட்டி வைத்தாலும் கூட, அன்று மாலை ரூமில் இருந்த போது இது பற்றி அசை போட்டேன் தலைக்குள் ! இது வரை நாம் வெளியுட்டுள்ள டெக்ஸ் கதைகளின் பட்டியலை எப்போதோ நண்பர் ஈரோடு ஸ்டாலின் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர, அதனைத் தேடித் பிடித்தேன் ! அத்தனை கதைகளின் கருக்களும் எனக்கு நினைவுக்கு வந்தன என்று பீலா விட மாட்டேன் ; ஆனால் கதைகளின் ரேன்ஜ் பிரமிக்கச் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர முடிந்தது !  

மன வியாதியின் விளைவாய் இரவுகளில் தலை சீவும் (சீப்பைக் கொண்டு அல்ல!!) குரங்கில் துவங்கி ; மறந்து போனதொரு சுரங்கத்தினில் வசிக்கும் வேற்று கிரகப் பிறவியில் தொடர்ந்து ; பூமியின் ஒரு ஆளரவமற்ற   கோடியில் ஜீவித்து வரும் டைனோசார்கள் கொண்ட சைத்தான் சாம்ராஜ்யங்களை சித்தரித்து ; பேங்க் கொள்ளையர்கள் ; ஆயுதக் கடத்தல்காரகள் ; செவ்விந்தியப் புரட்சியாளர்கள் ; புதையல் வேட்டையர்கள் ; அராஜக சாம்ராஜ்யங்கள் என நாம் பார்த்துள்ள அதிரடிகள் தான் எத்தனை !! ஒரு கௌபாய் உலகம் பறந்து விரிந்த மண்டலம் தான் எனினும், அதனில் சாத்தியமாகக் கூடிய கதைக் களங்கள் - ஒரு கேப்டன் பிரின்சின் அளவிற்கோ ; ஒரு மர்ம மனிதன் மார்டினின் அளவிற்கோ ; உலகம் சுற்றும் ஒரு லார்கோவின் வீச்சுக்கோ இருக்க வாய்ப்பில்லை தான் ! ஆனால் அதனையும் லாவகமாய்க் கையாண்டு இத்தனை வருஷங்களாய் ; இத்தனை கதைகளில் ஒரு தேசத்தை மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தீரா ரசிகர்களை உருவாக்கி, கட்டுண்டு வைத்திருப்பது ஒரு அசாத்திய சாதனை தானே ?! அந்த சாதனையாளரை நம் மத்தியில் கொஞ்சமாகவேனும் சிலாகிப்போமே என்ற சிந்தனையில் உதித்தது தான் THE KING SPECIAL !! 

கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் !! கிட்டத்தட்ட 8300 பக்கங்களை இந்நேரம் நாம் கடந்திருக்க மாட்டோமா - இரவுக் கழுகாரோடு ?!! ஒற்றை நாயகராய் நமது இதழ்களில் இத்தனை பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஆசாமி இவரைத் தாண்டி வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது - WOW ! என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது !! இந்தப் பட்டியலில் உள்ள சகலக் கதைகளையும் படித்துள்ளோர் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் எனும் போது - இன்று வரையிலான முழுப் பட்டியலையும் கருத்தில் கொண்டு - best ever டெக்ஸ் கதை எதுவென்று தெர்ந்தெடுப்போமா ? 


Moving on from Tex, சில சந்தோஷ செய்திகளின் பகிர்வுகள் ! 2014-ல் இது வரையிலான நமது பொனெல்லி வெளியீடுகள் அனைத்திலும் அவர்களுக்கு அமோக சந்தோஷம் ! வண்ணமயமான அட்டைப்படங்களில் துவங்கி நமது இதழ்களின் சைஸ் ; பைண்டிங் ; இணையத்தில் நாம் செய்யும் சிலாகிப்புகள் என சகலமும் அவர்களுக்கு வித்தியாசமாய்த் தோன்றுகின்றன ! தவிரவும் அவ்வப்போது நம்மிடம் புத்தகங்களை வாங்கும் இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களும் நம் இதழ்களுக்கு thumbs up தந்து வர - தமிழ் அவர்களின் பிரியமான மொழியாக மாறி வருகிறது ! 2015-ல் துவங்கி நாம் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் 20 பிரதிகள் வீதம் பொனெல்லி கோரியுள்ளது -உலகெங்கும் உள்ள அவர்களது கதைகளை வெளியிடும் பதிப்பகங்களுக்கு இதனை ஒரு மாதிரியாய்க் காட்டிட ! 20 பிரதிகளை DHL  கூரியரில் தருவிக்கவே சில ஆயிரங்கள் செலவாகும் என்றாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை !! உலகில் அவர்கள் கதைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலையும் ; பதிப்பகங்களின் பெயர்களையும் வாசிக்கும் போதே எனக்கு அவர்கள் ஒவ்வொருவரது ஆற்றல்களும் புலனாகிறது ! அந்தப் பட்டியலில் துக்கடா நாம் தான் என்பதில் ஐயமே கிடையாது ; ஆனால் அவர்களுள் நாமொரு standout ஆக தெரியக் காரணமே - வாசகர்களாய் நாம் காட்டும் உற்சாகமும், அந்த எல்லைகளில்லா காமிக்ஸ் காதலும் தான் என்று நினைக்கிறேன் ! நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக் கூடியதொரு தருணம் இது folks !

தூக்கிய காலரை அவ்விதமே தொடரச் செய்ய இன்னுமொரு காரணமும் கூட ! இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் ! அவர்களுக்கு நமது "OPERATION சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் ; லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் !! இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ! ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் - இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம்  என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது !! We just need to keep at it !

சந்தோஷ சேதி # 3 : அவ்வப்போது நமக்கு அட்டைப்படங்களைப் போட்டுத் தர ஒரு ஐரோப்பிய ஓவியரோடு பேசி வருகிறோம் ! கட்டணங்கள் நம்மூர் நிலவரங்களை விட அதிகமே எனினும், முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்துள்ளோம் ! தற்சமயம் ஒரு trial முயற்சி தொடங்கியுள்ளது ; அவரது ஸ்டைல் நமக்கு ஒத்துப் போகும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டமே ! Fingers crossed!

And சேதி # 4 : புதிய பதிப்பகங்களோடு நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் 2 கனிந்துள்ளன !! புதிய கதைகள் ; புதிய பாணிகள் இவை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ! இவற்றை எப்படி - எங்கு - எப்போது புகுத்துவது என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ! ஏற்கனவே 46 இதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2015-ஐ வாத்து பிரியாணியாக்க மனதில்லை என்பதால் நாளைக்கே புது அறிவிப்புகளை நான் களம் காணச் செய்யப் போவதில்லை அசட்டுத்தனமாய் ! காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ! ஏனோ தெரியவில்லை - 'வச்சாக் குடுமி..அடிச்சா மொட்டை !!'  என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது !! :-)

அப்புறம், அவ்வப்போது நமக்கு நம் படைப்பாளிகளின் மார்கெட்களிலிருந்து கிட்டும் புள்ளி விபரங்கள் ரமணா ஸ்டைலில் ! 
  • சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை : 5519 !! கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் !! 
  • இவற்றுள் 1500+ கதைகள் 'மங்கா' காமிக்ஸ் படைப்புகளே !! 
  • லார்கோவின் விற்பனை அரை மில்லியனுக்கு (500,000) கொஞ்சமே கொஞ்சம் கம்மி !! 
  • தோர்கல் - 250,000+ பிரதிகள் விற்பனை காண்கிறது ! 
  • டின்டின் கதைகள் விடாப்பிடியாய் இன்னமும் ஐரோப்பாவின் டாப் காமிக்ஸ் தொடரென்ற இடத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது ! 
  • ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று ! 
  • கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் ! 
  • காமிக்ஸ் பற்றிய சேதிகளையும், படைப்பாளிகளின் பேட்டிகளையும் தாங்கி வரும் பிரத்யேக பத்திரிகைகள் 60-க்கும் அதிகம் உள்ளன பிரெஞ்சில் !! (அவற்றின் ஆயுட்காலங்கள் மாறுபடுவது வேறு விஷயம் !!)
  • சீனாவும், ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் !! ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் ! 
  • நமது இரவுக்கழுகாருக்கென  கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு Android App உள்ளது தெரியுமோ? https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_bacigalupo_andrea88.TexApp&hl=en
  • சென்ற வாரம் வெளியான டெக்ஸ் சாகசம் # 649 !! அறுநூற்றி ஐம்பது என்ற இலக்கைத் தொட சொற்ப இடைவெளியே காத்துள்ளது !! இதோ அதன் ராப்பர் : 

மீண்டும் சந்திப்போம் ; அது வரை - have a lovely sunday & a great week ahead ! Bye for now!

300 comments:

  1. Before going to the bed thought will check for a last time and the new post is ready. What a coincidence.
    இனிமே எங்க தூங்கரதது :)

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : நான் கூடுதலாய் இன்று தூங்கி விட்டதால் உங்கள் தூக்கம் போச்சா ? ஆஹா !!

      Delete
  2. // மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது //

    Personally i loved this story, it gave chills.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : எனக்கும் இந்தக் கதை பிடிக்கவே செய்தது - despite கொஞ்சம் காதிலே பூ !

      Delete
  3. இன்னகி நானும் 10குள்ள வந்துடேன் ஹையோ......

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் ! //

    not surprised its a epic hit indeed.

    ReplyDelete
  6. Lot of good news about our comics, happy to hear them.

    It will be great if editor can bring out a special this year similar to LMS-1 i.e. all Italian stories special.

    ReplyDelete
  7. Replies
    1. Sir,
      Nice to here different comics news from you, would like to read TeX 650 in Tamil as soon as possible after it get published.

      Delete
    2. Mahesh : நல்ல கதையாக இருந்தால் - why not ?!

      Delete
  8. //சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை : 5519 !! கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் !! //
    //காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் !//

    why this kolaveri Edit sir?

    lets hit the 50 sir, specially with the amount of media light we are getting its better to have more verity for new audience, lets include the new ones for 2015 Edit sir.

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : வேகம் தேவை தான் - "வி" எனும் இனிஷியலையும் அதனோடு சேர்த்துக் கொண்டோமேயானால் !

      Delete
  9. வாழ்த்துக்கள் எடிட்டர் சார்... glad to know that we are making a impressive impression.. this is all because of your tireless efforts

    ReplyDelete
    Replies
    1. Mohammed Harris : நன்றிகள் நண்பரே ; ஆனால் ஒரு கையை எத்தனை விசையாய் வீசினாலும் - இன்னொன்றும் இணையும் போது தானே சத்தம் கேட்கும் ? அந்த இன்னொன்று யாரென்று நான் சொல்லவும் வேண்டுமா- என்ன ?

      Delete
  10. //ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று ! //

    good to hear our tiger rides the tide(sort of) even in this tough times.

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : வேங்கை - வேங்கை தானே ?!

      Delete
    2. :) waiting for our January Tiger reprints Edit sir!

      Delete
  11. Sir சேலம் புத்தக திருவிழாவில் உங்களை எதிர்பார்ப்போம். ஏமாற்றிவிட்டீரகள். டெக்ஸ் விசய் குடும்பம் , மாயாவி சிவா, யுவா கண்ணன்,

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ; ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் !

      காத்திருக்கும் இந்தப் பட்டியல் என் தலையணைக்கு அடியே இல்லாத குறை தான் ; தூங்கக் கூட முடிவதில்லை நண்பரே !

      அடுத்தாண்டும் சேலத்தில் புத்தக விழா இருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களை சந்திக்க வருவேன் நண்பரே !

      Delete
    2. // டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ; ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் ! //

      aaaha Super.

      I haven't received Oct + Nov yet, so i will have even more pages to read :)

      Delete
    3. அடுத்த ஆண்டும் புத்தக விழா சேலத்தில் நிச்சயமாக உள்ளது . உங்கள் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் ஸ்டால் உங்கள் காமிக்ஸ்க்கானது என்று சற்று முன் மாயாவி சிவாவிடம் ரெயின்போ ஈவண்ட்ஸ் திரு பர்வீன் அவர்கள் உறுதி அளித்துள்ளார் . அதைக்கேட்டு நண்பர்கள் மாயாவி சிவா, Tex விஜயராகவன் , சேலம் சுசி , யுவா கண்ணன் மற்றும் நான் அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்தோம். அடுத்த ஆண்டு உங்கள் டைரியில் இப்போதே குறித்து கொள்ளுங்கள் சார் .

      Delete
    4. @ இளமாறன்

      அட்டகாசம்!!! மகிழ்ச்சியான செய்தியும்கூட!!! இதை சாத்தியமாக்கிக் காட்டிய நம் நண்பர்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்!! :)

      சேலத்துக்கு வரும்போது சிலபல சிறப்பு வெளியீடுகளோடு வாங்க எடிட்டர் சார்!

      Delete
    5. எல்லாப் புகழும் நண்பர்களுக்கே..!

      Delete
    6. எல்லா புகழும் காமிக்ஸ் காதலர்களுக்கே. புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்.S.V.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. //ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் - இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது !! We just need to keep at it !//

    :)

    long way ahead!

    ReplyDelete
  13. Just like that started counting and after counting realized that i had read almost 30 tex stories i cant believe it.
    After this post excited about tex and going to re-read some of the old titles tomorrow.

    Tex வாழ்க.

    At one point when tiger was in his peak (during Mega Dream Special days), i was a big tiger fan and i used to tease my wife (she is a tex fan) a lot but now literally there is no competition to tex. MagicWind and Comanche were their own style of cowboy stories.
    Hopefully Bouncer will give a good fight to Tex.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : Bouncer வேற மாதிரி !

      Delete
    2. oooooh அப்போ tex அடிசிக்க இப்போதக்கி யாரும் இல்ல.

      Delete
  14. சார் டெக்ஸ்சின் பழைய இதழ்கள் டிராகன் நகரம்.பவழ சிலை மர்மம், கழுகு வேட்டை கலரில் மறுபதிப்பு கலரில் வரவேண்டும் நிறைவேற்றுவிர்களா

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : வேளைகள் வரும் போது பார்ப்போமே..!

      Delete
    2. +1,சார் இதுவே அந்த வேளை ! ஏதேனும் ஒன்று அடுத்த வருடம் வந்தால் !

      Delete
    3. டிராகன் நகரம்
      பவளச்சிலை மர்மம்
      கழுகுவேட்டை

      இத்துடன் மறுபதிப்பு வரிசையில்,

      பழி வாங்கும் பாவை,
      சைத்தான் சாம்ராஜ்யம்
      வைக்கிங் தீவு மர்மம்

      ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும்

      Delete
    4. 'பழிவாங்கும் புயல்'ஐயும் மறுபதிப்பு லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார் (வண்ணத்தில் என்றால் கூடுதல் மகிழ்ச்சி!). 'கார்சனின் கடந்த காலத்தை' விடவும் நல்லதொரு கதையம்சம் கொண்டது அதுவென்பது நீங்கள் அறியாததல்லவே!

      Delete
  15. பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது! காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார், தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம்!
    ஆங்! அப்புறம்... தல 650ஐ தொடப்போகிறார்னு வேற சொல்லிப்புட்டீங்க... நாம 60+ லயே தடவிக்கிட்டிருக்கோம்... டெக்ஸுக்காண்டி ஒரு 'சந்தா-D'ஐ அறிவிக்கப்போறீங்களா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நேற்றைக்கு நில்கிரிசில் பார்த்தேன்...வாழைப்பூ சீசன் துவங்கி விட்டது போல் தெரிகிறதே !

      Delete
    2. //பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது! காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார், தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம்! //
      +1 :):):)

      Delete
    3. ஆக, போராட்டம் ஆரம்பித்தால் சந்தா D (Tex) குறித்து யோசிக்கலாமென ஆசிரியர் சொல்வது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ...........??

      Delete
    4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : உங்க ஊர் பக்கமாய் வாழைப்பூ விலை கூட ரொம்பவே சல்லிசாமே ?!

      Delete
    5. சந்தா D கட்டாயம் தேவை சார்.

      Delete
    6. சந்தா D: மாதமொருமுறை டெக்ஸ்-ன் கதை/புத்தகம் ஒன்று கருப்பு வெள்ளையில் (தீபாவளி, கோடை மலர் ஸ்பெஷல்-கள், மற்றும் வண்ண பதிப்புகள் சேர்க்காமல் :)

      எடிட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இவ்வருட இறுதிக்குள் ... :)

      Delete
  16. //காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார், தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம்! //
    LOL

    ReplyDelete
  17. இனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே!!!
    நாம் லயன் 250 வது இதழ் நெருங்கும் வேளையில், அவர்கள் 'தல' டெக்ஸ் கதையில் மட்டுமே 650 ஐ நெருங்குகிறார்களா!!! அடேயப்பா!!!

    ReplyDelete
  18. //சீனாவும், ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் !! ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் ! //

    Chinese comics invasion !

    ReplyDelete
    Replies
    1. Japanase Manga have big fanbase in India
      Chinese manga is not much famous here

      Delete
  19. //ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ; ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது ! பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் & குழு இம்முறை அழகாய்க் காட்சி தர - இதுவொரு visual feast-ம் கூட ! //

    ஆஹா...இப்பவே டிசம்பர் வராதா....என்று மிகவும் ஆவலைத் தூண்டுகிறது...

    //இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் ! அவர்களுக்கு நமது "OPERATION சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் ; லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் !! இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ! ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் - இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது !! We just need to keep at it !//

    சூப்பர் !!!! சூப்பர் !!!! சூப்பர் !!!!

    ReplyDelete
  20. வருடா வருடம் இது போன்று 500 பக்க டெக்ஸ் கதைகளை நான்கு என வெளியிடுங்கள் சார்

    கிங் ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  21. உற்சாகம் கொள்ள வைக்கும் பதிவு. நமது சிறிய ஸைஸ் இதழ்களின் வடிவமைப்பு எப்பவுமே டாப் தான். இத்தாலி நண்பர்களும் ரஷ்ய புதுப் பதிப்பகமும் ஆச்சிரியப்பட்டதில் ஆச்சரியமே இல்லை. மிகுந்த மகிழச்சி.
    எனக்குப் பிடித்த டெக்ஸின் டாப் 3 கதைகள்:
    1) பழிவாங்கும் புயல்
    2) கழுகு வேட்டை
    3) கர்சனின் க கா

    ReplyDelete
  22. //
    2014-ன் இது வரையிலான நமது bestseller எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் - "கார்சனின் கடந்த காலம்" என்று !! வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க - இந்த டெக்ஸ் வண்ண bonanza இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து repeat ஆர்டர்கள் தந்து வருகின்றனர் ; multiple பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் ! இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் !//

    கார்சனின் கடந்த காலம் suites the the label best of TEX, one of my favorite book from tex gang! no surprise indeed its best selling of 2014!

    ReplyDelete
  23. கார்சனின் கடந்த காலம் சேலத்தில் ஸ்டாக் இல்லை சார். அடுத்த ஆண்டு சேலத்தில் புதிய புத்தக வெளியீடு வேண்டும் சார்.

    ReplyDelete
  24. டெக்ஸ் வில்லர் பற்றிய தமிழ் முகநூல் பக்கத்தின் லிங்க் இதோ,டெக்ஸ் பற்றிய பல தகவல்கள் இப்பக்கத்தில் உள்ளன..!
    டெக்ஸ் வில்லர்

    ReplyDelete
  25. சேலத்தில் நமது ஸ்டாலில் இப்போது நல்ல கூட்டம். கா.க.கா கடைசி புத்தகத்தை ஒருவர் கேட்டு பெற்று சென்றார். மிகவும் சந்தோஷமாக.

    ReplyDelete
  26. சார் கா.க.கா, சைத்தான் வீடு போன்ற புத்தகங்களை worldmart ல் தனியாக வாங்க listing செய்யுங்கள் சார். monthly packages ஆகவே உள்ளதால் தனியாக இப்புத்தகங்களை order போட வசதி செய்யுங்கள் சார். ப்ளீஸ்.. திருச்சியில் கடைகளில் இப்புத்தகங்கள் இன்னும் வரவில்லை. எனவே தனியாக order போட வசதி செய்யுங்கள் சார். நன்றி.. (கா.க.கா க்கு பின் வந்த இ.இ.கொ தனியாக worldmart ல் கிடைக்கிறது)

    ReplyDelete
  27. டியர் எடிட்,

    இத்தாலி நாயகர் டெக்ஸிற்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது... தமிழில் எத்தனையோ கவ்பாய் கதைகள் வெளிவந்திருந்தாலும் (கவனிக்க, ப்ளுபெர்ரி கவ்பாய் கதைகளில் சேர்த்தம் இல்லை என்பது என் எண்ணம்), டெக்ஸ் அளவிற்கான அவற்றின் தாக்கம் குறைவே.

    நமது இதழ்கள் தேசத்தை தாண்டியும் கவனிக்கபடுகிறது என்பதில் சந்தோஷம்.

    எப்போதோ ஒருமுறை டெக்ஸ் கேட்டலாக் பார்த்தபோது, டெக்ஸின் புதல்வருக்கும் ஒரு தனிகதை தொடர் பற்றி படித்தாக ஞாபகம்... அப்படி அது இருக்கையில், அவரையும் தனி ஆவர்த்தனமாக களம் இறக்க யோசைனை உள்ளதா ?? டெக்ஸ் அளவிற்கு சோட்டா டெக்ஸும் பிரசித்தி பெருவார் என்று நம்பலாம்.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : சோட்டா டெக்சுக்கென தனிப்பட்டதொரு கதை வரிசை இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ; டெக்சின் கதைகளுள் கிட்டின் முக்கிய role கொண்ட கதைகள் இருக்கலாம் !

      But நாளைக்கே கேட்டு விட்டால் போச்சு ; அவ்விதம் கதைகள் இருப்பின், சுட்டி லக்கியைப் போல ஜூனியர் டெக்சையும் உள்ளிழுத்துப் போட்டு விடலாம் !

      Delete
  28. என்று டெக்ஸ் ஐ லயனில் தமிழில் படிக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் இன்றுவரை சூப்பர் கௌபாய் என்றால் டெக்ஸ்தான் - டெக்ஸ் மட்டும்தான் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

    நீண்ட தூரப் பயணங்களின்போது நிச்சயம் சில டெக்ஸ் கதைகள் என் பயணப்பொதிக்குள் அடங்கிவிடும். எத்தனை தரம் படித்தாலும் அலுக்காத கதைகள்! அது மாத்திரமல்லாது எனது பயணக் களைப்பினை தெரியாமல் அடித்துவிடும் மந்திரமும் டெக்ஸ் கதைகளுக்கு உண்டு! நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு.

    உலகம் முழுவதும் அண்ணனுக்கு இருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்காத ஒன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : பிரேசில் நாடும் நம்மைப் போலொரு டெக்ஸ் ரசிக பூமி ! அங்கும் நம்மைப் போல ஏராளமாய் diehard fans அண்ணனுக்கு உண்டு !

      Delete
    2. //நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு. //
      +1

      Delete
  29. டியர் விஜயன் சார்,

    டெக்ஸ் பத்தி பாட்டாவே படிச்சுட்டீங்களா?! :P

    //சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை : 5519//

    இங்கு, தற்போதைய ரசனை எல்லைக்கு எத்தனை கதைகள் தேறும் என்று கணக்கிட்டதில்:
    5519 (-) 1500 மங்கா = 4000 (-) சோகநாவல் (-) கடமை (-) கண்ணியம் (-) கட்டுப்பாடு (-) கத்தரிக்கோல் = 400

    :) :)

    On a serious note, ஒரே ஒரு பதிப்பகம், ஓரிரு ஆயிர வாசகர்களின் ஆதரவுடன், இங்கே நாற்பது ஐம்பது புத்தகங்களை ஆண்டுதோறும் வெளியிடுகிறது என்றால் நிச்சயம் அது லேசான காரியம் இல்லை! மேலும் சில பதிப்பாளர்கள், வெரைட்டியாக காமிக்ஸ் & கி.நா. வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

    On a different note, இன்று காமிக்ஸ் டைம் II-ஐ மேலோட்டமாக வாசிக்கையில் ஒரு விஷயம் தட்டுப்பட்டது... ஆக, அந்த அவார்டு வாங்கிய கி.நா. பற்றிய என் கணிப்பு சரியே! Road to Perdition - 300 பக்கங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், அமெரிக்க பதிப்பகமான Vertigo-வின் வெளியீடு என்பது உறுதியாகிறது. அமெரிக்கக் கதைகளை (மீண்டும்) வெளியிட இருப்பதற்கு வாழ்த்துக்கள்! வெர்டிகோவின் வெளியீடுகள் சற்று offbeat ஆகத் தான் இருக்கும் - க்ரைம் நுவார் (crime noir) வகைக் கதையான இது பெரும்பாலான வாசகர்களைக் கவரும் என்றே நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : //மேலும் சில பதிப்பாளர்கள், வெரைட்டியாக காமிக்ஸ் & கி.நா. வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.//

      ஒரு துவக்கமாய் ஜனவரி முதல் டிங்கிள் தமிழ் வரவுள்ளது ! இது முற்றிலுமாய் சிறார்களை டார்கெட் செய்யும் இதழாக இருப்பினும், ஆலையே இல்லா காமிக்ஸ் ஊரில் துணைக்கொரு ஆள் கிட்டியது போல் இருக்குமே !

      And rest assured, there will be new entrants to follow ..ஒவ்வொரு ஊரின் புத்தக விழாக்களிலும் நமக்குக் கூடும் கூட்டங்கள் சக பதிப்பகங்களின் கவனத்திற்குத் தப்பியிராது - நிச்சயமாய் !

      Delete
    2. சிங்கத்தோடு (லார்கோ, ஷெல்டன்,டெக்ஸ்,தோர்கள்,மேஜிக் விண்ட் ,ஸ்பைடர்,ஆர்ச்சி,மாயாவி,ஜானி நீரோ )போட்டி போடா ஏலாதே !
      ஆனால் காமிக்ஸ் ஆர்வலர்கள உருவாக்கும் வாய்ப்புகளை பிடித்து கொள்ளலாம் நிச்சயமாய் ! இதே போல தரமான தேடல்கள் தொடரட்டும் ....!

      Delete
    3. "And rest assured, there will be new entrants to follow .."

      வந்தால் சந்தோஷமே ஏன் என்றால்

      Super starae "பொதுவாக என் மனசு தங்கம் போட்டின்னு வந்து விட்டா சிங்கம் "

      ஆனா நம்ம தான் என்னிக்குமே சிங்கம் தானே

      Delete
  30. Dear Editor Sir,

    649 tex kathaikal iruka nam 60 kathiakal thane podu ullom. Nalla kathaikalai reprint seiyngal sir.

    ReplyDelete
  31. கருப்பு ஞாயிறு. தினம் ....

    ReplyDelete
  32. Dear sir,
    Nan Hospital iruppathu thirinthu kunamadaiya imathu nanbarkalidam ungal pathiivill pirarthikka sonnathukku Thanks sir . Enkku ennum Novembar Matha ithalkal vanthu Kidaikkavillai sir."iravee irulee kollathe" , Largo in " Silanthiyodu oru Sathurangam", Jony in "Saithan Veedu" Kidaikkvailai. Avana seiveergala sir? Sorry!

    ReplyDelete
  33. Dear Sir,
    To publish my yahoo , Hotmail
    Did't work. 2 months hospital. 2 operation in my head. Doctors said stork in my left head. Agust 18 I paid 11852/= for "Minnum Maranam " Mun pathivu. Puthu Pathivu poddu irukieengal . Nan "Minum Maranam" Mun Pathivil irukineena ena neengalthan uruthipadudtha veendum .Below 350 No number and No Name . And Spider and Irumbu kai , Jony Nero - iththan ethir parthen. " Madasty Plysi" kojam reprintkku karunai kaddunkalen Please . Reprinit SANTHA evalavu? Thaneye anuppa veenduma sir? Antha "Kaluku malai koddai" , "kathi munaiyil Madasyplysi"veliyiddal vitrpanai allum enpthu enathu thalmaiyana karuthu.,Any way , " Iththa Iththan ethirparthoom". Start music. "Mrakkaneeyar Naalvar" Pathivil enkkaga kunamadaiya veedi neegal podda pathivu kangalai panikka seithatthu. Thanks sir.


    Your loving crazy reader
    Thiruchelvam Prapananth

    NB: 7 bundale ill ovonru varun en Brother Ruban idam koduthu vidungal. En mun pathu konjam kavaniyungal sir. Thank you so much sir. En Address: 4, alleé des Charmilles, 77420, Champs Sur Marne, France

    Sent from my iPhone

    ReplyDelete
    Replies
    1. Hi dear friend. My kind advice, Don't publish your personal infos here. It may give you some troubles. Please send an detailed email to Editor. Tc. Get well soon.

      Delete
    2. Thiruchelvam Prapananth : Sir, I guess you cannot access your e-mails, because I have mailed you a week back.

      All your subscription copies have been duly shipped & the old books too. Please take care of your health ! Everything else can & will wait ! Thank you !!

      Delete
    3. Dear Editor sir,
      Thanks sir,

      Yours faithfully
      Thiruchelvam Prapananth

      Delete
  34. தங்க தலைவனின் ரசிகர்களுக்கு இது ஒரு கருப்பு ஞாயிறு ... அதுவும். மின்னும் மரணம் தாமதம் ஒரு உலக அவமதிப்பு ...

    ReplyDelete
    Replies
    1. Let's wait for more bookings for Captain Tiger's Minnum Maranam

      Delete
  35. Dear sir,
    "En Peyar Largo" um "Kaval Kaluku"um enkku anuppi vaiyungal . Eppadiyo viduppdu pooi viddathau.
    P.S: yahoo valai seiyathal enntha etpadu.

    Yours
    Thiruchelvam Prapananth

    ReplyDelete
  36. எடிட்டர் சார்,

    டெக்ஸ் கதை படிப்பது போன்றே இருக்கிறது டெக்ஸ் பற்றிய பதிவும், சூப்பர்.

    கிங் ஸ்பெஷல் சித்திரங்கள் வெகு அழகாக உள்ளன. அதனாலேயே நீங்கள் டீசெர் வெளியிட்டபோது என்னால் இதை டெக்ஸ் கதை என்று கண்டுபிடிக்க முடியவில்லை :-) .

    டெக்ஸ் ன் 650 அட்டைப் படம் லோ ஆங்கிலில் பிரமிப்பாய் இருக்கிறது. மழை பெய்யும் இரவில், செவ்விந்தயர்களின் மாந்திரீக பூமியில் என்று படமே கதை சொல்கிறது. சீக்கிரம் இந்தக் கதையை வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  37. டெக்ஸ் விஜயராகவன், மாயாவி சிவா, மற்றும் சேலம் நண்பர்களே,
    நமக்கு சேலம் புத்தக திருவிழாவில் அடுத்த வருடமும் இடம் பிடித்து கொடுத்த "சேலம்" நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி! இது பலனை எதிர்பாரா காமிக்ஸ் மேல் உள்ள காதலால் நடத்தி காட்டிய விஷயம்!

    விஜயன் சார்,
    நமது டெக்ஸ் கதைகளில் இப்பொது எல்லாம் புகை சமிஞ்சையை பார்க்க முடிய வில்லை, டெக்ஸ் மாறி வருகிராரோ? சார் புகை சமிஞ்சை உள்ள கதையா பார்த்து போடுங்க சார்

    அடுத்த மாதம் வரும் கதைகளின் எண்ணிக்கை என்ன அவைகளின் பெயர் என்ன? லார்கோ புத்தகத்தில் காமிக்ஸ் டைம்ல் மூன்று கதைகளை குறிப்பிட்டு இருந்தீங்க, ஆனா இவை போக இன்னும் இரண்டு புத்தகம்கள் வரவுள்ளன என நினைக்கிறன். அவற்றின் பெயரை குறிப்பிட்டால் சந்தோசமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நமது "பரண் உருட்டும் படலம்" பதிவில் இருந்து நமது தளத்தில் (மௌன பார்வையாளர்கள்) புதிய நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிவர்து மிகவும் சந்தோசமாக உள்ளது! நண்பர்களே உங்கள் மனதில் உள்ளதை "உங்கள் காமிக்ஸ்காக" தொடர்ந்து பதிவிடுங்கள்.

      Delete
    2. பரணி வீட்டில் புகை யா மல் பார்த்து கொள்ளுங்கள் .....!

      Delete
  38. //salemkelamaran : ...புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்.S.V.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.//

    தோழரே... நான் வெறும் அணிற்பிள்ளை மட்டுமே... நமது ஸ்டாலில் நல்ல கூட்டம் என்ற உங்கள் பதிவு மனதிற்கு மகிழ்வைத் தருகிறது... என்னால் இன்று(ம்) வரஇயலவில்லை...

    ReplyDelete
  39. I'm a fan of both Tiger n TeX
    TeX going to near 650,
    Love the guys

    ReplyDelete
  40. With 649 TeX stories n Italy , have we touched 100 stories here?
    Its nice that TeX has more slot in 2015
    I haven't read Tex's "Dragon Nagaram"n few more golden oldies of his
    Hope for reprints of TeX when the time makes it possible in the future

    TeX Sunday:)

    ReplyDelete
  41. சார் வீட்டில் இப்போது நெட் கிடையாததால் தொடர்பு கொள்ள இயலவில்லை நண்பர்களுடன் . ஆஹா போன வாரம் இரு பதிவா....?
    டெக்ஸ் அற்புத மான மொழிபெயர்ப்பில் வரும் போல தெரிகிறது . லார்கோவின் மொழி பெயர்ப்பு அற்புதத்தை விளைவித்திருக்கும் பொது அதே போல டெக்ஸ் கார்சன் இணை தூள் கிளப்பும் என்பதில் ஐயமேது !
    அடுத்த மாத இதழ்கள் அனைஹ்தும் முதல் வாரமே கிடைக்குமா ?
    டெக்ஸ் வெற்றி நமக்கு மேலும் சிறந்த இதழ்களை தரட்டும்.நான் படிக்காத ஒரே சைத்தான் சாம்ராஜ்யத்தையும் பெற்று தரட்டும். உலக கவனத்தை ஈர்த்த நமது இதழின் வடிவமைப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் பொது அந்த கொலை படை அதே சைசில் வந்தால் என்ற ஒரு கேள்வியும் அனைவர் மனதிலும் தோன்றி மறைவது உங்களுக்கு தெரியாமல் போகாதே !கவன ஈர்ப்பில் அது.....அடடா ! சக்கை போடு போடுமே !
    டெக்ஸ் அட்டை படம் அருமை !
    புள்ளி விவரங்கள் அரமை என்றாலும் கிரீன் மேன்னர் அச்சுறுத்துகிறது.
    வான் ஹாம்மேயின் மரணம் மறந்த மனிதர்களை நீங்களு ம் மறந்து விட்டீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....?

      Delete
    2. சார் சங்கட பதிவை இப்போதுதான் படித்தேன் .அந்த குழுவினர் அடுத்த கட்ட உள்ளனர் போலும் ...!அந்த நபர்கள் அவர்கள் மீண்டும் அது போல ஈடு பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்கலாமே !

      Delete
    3. //சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....?//
      +1
      is new arrivals லார்கோ kind of action style Edit sir or some new genre ....?

      Delete
    4. we missed you steele claw :(

      Get the internet connection soon and kalakunga as usual.

      Delete
  42. எனக்கு மெயிலில் வந்திருந்த மாயாவி சிவாவின் கமெண்ட் இங்கே நண்பர்களின் பார்வைக்கு:

    ################
    @ நண்பர்களே

    கடந்த பத்து நாட்களாக "லஞ்ச " டைமிற்கும் தூங்குவதற்க்கும் மட்டுமே வீட்டிற்க்கு சென்றுவிட்டு மீதி நேரமனைத்தும் நமது ஸ்டாலிலேயே தவமிருந்த எங்கள் நண்பர் சேலம் யுவா கண்ணன் அவர்களை
    மங்கூஸ் நன்றிகளுடன் கலாய்ப்பதை காண. இங்கே க்ளிக்குங்கோ....
    இங்கே'கிளிக்'-1
    இங்கே'கிளிக்'-2

    ReplyDelete
  43. டெக்ஸ் ரசிகர் என்ற முறையில் நானும் காலரை தூக்கி விட்டு கொள்ளும் இதே சமயத்தில் எங்கள் ஆருயிரே என்று அழைக்கப்படும் எங்கள் செயலாளர் சேலத்து ஈரோடு விஜய் அவர்கள் வினவிய படி ......

    டெக்ஸ் சந்தா ....டி.. ...

    என ஒன்றை இந்த சமயத்தில் அறிவித்து தான் பாருங்கள் சார் ....இந்த வாழை பூ வகைகளும்....நண்டு வருவல்களும் என்ன தான் ஆகின்றன என பார்த்து விடலாம் . போட்டிக்கு

    நாங்கள் ரெடி.....நீங்கள் ரெடியா ?


    ReplyDelete
    Replies
    1. நான் ரெடி for டெக்ஸ் சந்தா ....டி

      Delete
    2. @ Parani and Ramesh...

      சந்தடி சாக்குல சந்தா...டி.

      ஆனா அளவுக்கு மிஞ்சினால் பாயாசமும் பாய்சன் ஆகிடுமே.

      Delete
  44. 'தல சன்டே' ஸ்பெஷல் ஹாட் நியூஸ்...

    சேலம் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான இன்றைய விற்பனையின் முடிவில், ஒரு டெக்ஸ் இதழ்கூட பாக்கியில்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது!

    அதாங்க டெக்ஸு!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் உங்களது பேச்சும் போன் காலும் என்னை சிறிது நேரம் ஸ்டாலுக்கு வரவைத்தது விஜய் அவர்களே அதற்காக எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்

      Delete
  45. வணக்கம் சார் . நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் இந்த ஞாயிறும் சந்தோஷ ஞாயிறாக அமைந்தது சார் .முதல் சேலம் புத்தக விழாவே ஒட்டுமொத்த வரவேற்பை பெற்றதும் அதன் பயனாக அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் இங்கே புத்தக விழா உண்டு என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள் சார் . தொடரும் வருடங்களில் நாமும் நமது அதகளத்தை இங்கே அரங்கேற்றலாம் சார் . இன்றும் நண்பர்கள் உற்சாக சந்திப்பு ,பரபரப்பான விற்பனை என அனைத்திலும் கடந்த ஞாயிறை மிஞ்சி விட்டாம் சார். இன்று குடும்பத்துடன் வந்து நண்பர்கள் ஏராளம் சார் . கேசரி, மிக்சர் மற்றும் மிராண்டா உடன் நண்பர்கள் சந்திப்பை செலிபரேட் செய்து மகிழ்ந்தோம் சார் . கடந்த ஞாயிறு வந்து குதூகலித்த வழக்கமான நண்பர்கள் உடன் இன்று சேலம் ஶ்ரீராம் , வசந்த குமார் , தாரமங்கலம் பரணீதரன் , லக்‌ஷ்மண பெருமாள் மற்றும் பல நண்பர்கள் காமிக்ஸ் கலகலப்பு உற்சாகத்தில் பங்கு கொண்டனர் சார் . சேலம் கர்ணனும் சற்று நேரம் வந்து சென்றார் . சேலம் வந்த தலை சிவகாசி திரும்ப வில்லை சார், தலையின் கடைசியாக இருந்த புத்தகமான பூத வேட்டையை நண்பர் மாயவி தட்டி சென்றார் சார் . அனைத்து நாட்களிலும் நமது ஸ்டாலே கதி என இருந்து பணியாற்றிய நண்பர்கள் யுவா கண்ணன் , சேலம் கார்த்திக் ,மாயாவி சிவா மற்றும் நேரம் கிடைத்த போதெல்லாம் வந்திருந்து ஒத்துழைப்பு நல்கிய ஈரோடு விஜய் ,ஸ்பைடர் ஶ்ரீதர் , சேலம் சுசி என அனைவருக்கும் ஒரே வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது சார் . மொத்தத்தில் நண்பர்கள் அனைவரும்ஒரே குடும்பமாக ,இந்த நம்ம வீட்டு விசேடம் சிறப்பாக நடந்தேற ஒரே அணியாக உற்சாகத்துடன் ஒத்துழைப்பு நல்கினார்கள் சார். இறுதியாக நண்பர்கள் அனைவரும் நண்பர் மாயவி சிவா தலைமையில் ,நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் @....இனிமையான நிகழ்வுகள் .....!!!...

      Delete
    2. நேற்றைய மதிய பொழுதை புத்தக திருவிழாவில் நிறைவாக கழித்தேன் எத்தனை ஆர்வம், எத்தனை தேடல் புதிய நண்பர்களின் அறிமுகம் , கெவிஸ் ரெஸ்டாரண்டில் சாப்பிட மட்டன் பிரியாணி , கமெடி, கிண்டல் , கேசரி , மிச்சர், குளிபானம் மற்றும் பக்கத்து கடைகாரகளின் வயிற்றெரிச்சல் என உற்சாகமா சென்றது

      அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் ஒத்துழைப்பு தொடர வேண்டும்

      Delete
    3. //நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார்.//
      நிறைவுவிழாவின் மையப்பகுதியை பார்க்க....இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!

      Delete
    4. Best wishes to all the friends who stayed in book fair and made it huge success..

      Delete
  46. Dear sir,

    This month Largo story, nice plot.
    It is happy to know about the reprints, I have paid for A+B+C.
    Please consider few of the older comics for reprints such as
    1.Theevai meetiya Theeran
    2.Aviyin Geetham
    3.Sirai meetiya sithrakathai
    4,Vankaval padai
    definitely it will be celebrated by guys inbetween our superheroes stories.
    Thanks

    ReplyDelete
  47. ஃப்ரான்சில் இருக்கும் காமிரேட் Thiruchelvam Prapananth அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மே 18, 2013 முதல் இந்த வலைப்பூவில் தன்னுடைய வருகையினால் அலங்கரித்துக்கொண்டு இருக்கும் இவர் விரைவில் முழுமையாக நலமடைந்து மறுபடியும் தன்னுடைய கருத்துகளால் மகிழ்விக்கப்போவது உறுதி.

    வாழ்த்துகள் சார். Get well Soon.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பர் திருச்செல்வம் பிரபானந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! விரைவில் நலமடையவும் பிரார்த்திக்கிறேன்.

      Delete
    3. good bless you திருச்செல்வம் பிரபானந்த் sir! get well soon as Edit said rest of the world can wait while you recover, get well soon sir!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  48. சார் .....அடுத்த மாதம். வரும் 5 புத்தகமும் இந்த மாத கடைசி யில் வருமா ?அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வருகிறதா ?

    இது கொஞ்சம் அவசர குடுக்கை வினாவாக இருப்பினும் ஆரம்ப கால வரலாற்றில் இந்த மாத இதழ்கள் அடுத்த மாதம் வருமா அல்லது அதற்கு அடுத்த மாதம் வருமா என்ற வினாக்கள் இப்போது மறைந்து அடுத்த மாத இதழ்கள் இந்த மாதமே வருகிறதா என்று வினவுவது மனதில் ஒரு கூதுகலத்தை உருவாக்குகிறது சார் .

    "என்ன இனிமை இது சரவணன் சாரி விஜயன் சார் " ?

    ReplyDelete
  49. Dearபரணி, இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா, மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை:-)

    ReplyDelete
  50. //கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு 2013-ல் அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் !! அதனைத் தொடர்ந்து நாம் வெளியிட்டுள்ள டெக்ஸ் கதைகளை சரி பார்த்து அந்த விபரங்களையும் இங்கு இணைக்க அடியேனிடம் தற்போது வசதியில்லை - வெளியூரில் அமர்ந்திருப்பதால் ! நண்பர்களில் யாரேனும் இதனை update செய்து எனக்கு jpeg format -ல் மின்னஞ்சலாய் அனுப்பினால் இன்றே கூட அதனை இங்கு upload செய்து விடலாம் !!//

    நண்பர்கள் யாருக்கேனும் டெக்ஸ் கதைகளின் இத்தாலிய பெயர்கள் தெரிந்திருப்பின் அவற்றையும் பதிவேற்றுங்களேன்.

    - சங்கர்

    ReplyDelete
  51. தலை அடுத்த மாதம் வர இருப்பது அனைவரிடமும் ஒரு எதிர் பாரப்பை கிளப்பி உள்ளது தெரிகிறது. 10நாட்களுக்கு பிறகு "லஞ்ச " டைமில் தூங்க போகிறேன்.

    ReplyDelete
  52. கிங் விஸ்வா, ஈரோடு விஜஸ் இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  53. டியர் எடிட்டர்,

    இரத்தபடலம் xiii உடன்தான் , திருப்பி படிப்பதுடன் என் பொழுதுகள் கொஸ்பிட்டலில் கழிகின்றன. ஐம்போ ஸ்பொஸல் ஆச்சே!.

    ReplyDelete
  54. மேற்கில் இருந்து ம.இராஐவேல்- நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  55. ******* நிஜ நாயகர்கள் *******

    சேலம் புத்தகத் திருவிழா நேற்று இனிதே நிறைவுற்றது... 80 ஸ்டால்களை உள்ளடக்கிய முதல் புத்தகத் திருவிழா முயற்சியென்றாலும், நிறைவான அரங்க ஏற்பாடுகளோடு இதை சாத்தியமாக்கிக் காட்டிய இதன் அமைப்பாளர்களைப் பாராட்டியே தீரவேண்டும். பரவலான விளம்பர ஏற்பாடுகள் இல்லையென்றபோதிலும், வருணபகவான் அவ்வப்போது ஹலோ சொல்லிப்போனபோதிலும்; சேலம் மக்களின் ஆதரவால் நிறைவானதொரு வெற்றித் திருவிழா ஆகியிருக்கிறது.

    நண்பர் S.V.வெங்கடேஷ் கொடுத்த உபயோகமான தகவலின்பேரில் எடிட்டரின் முயற்சியும் பலனளிக்கவே, துளியூண்டு அதிர்ஷ்டத்தின் துணையோடு அதிக சிரமங்களின்றி(?) நமக்கான ஸ்டால் 'ஒதுக்கப்பட்டிருந்தது'. கொள்ளைப்புற வழியின் அருகே தட்டுமுட்டுச் சாமான்களை வைத்துக்கொள்ளவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு இடத்தையொட்டியே நமக்கான ஸ்டால் கிடைத்ததிலும் அதிர்ஷ்டத்தின் பங்கு இல்லாமலில்லை. சென்னை, ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் நம் பக்கத்து ஸ்டால் புண்ணியவான்களின் உபயத்தால் நமக்குக் கிடைத்திருந்த 'நற்பெயரின்' காரணமாகவோ என்னவோ, 'சன்ஷைன்' என்ற அடையாளமே நமது ஸ்டாலுக்கும் இடப்பட்டிருந்தது.

    தெரிந்தோ தெரியாமலோ எடிட்டர் செய்திருந்த இன்னொரு நல்ல விசயம் - அச்சகப் பணியாளர் குமாரை விற்பனைக்காக அனுப்பிவைத்திருந்தது! தனது வேலைகளில் ரொம்பவே சின்சியரான, நட்பான, அன்பான இவரை 'ஜூனியர் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி' என்று தாராளமாக அழைக்கலாம்! ஈரோட்டைப் போல் அல்லாமல் சின்னப் பையன் செல்வமும் இம்முறை சற்று பொறுப்புடன் பணியாற்றியதும் ஆறுதல் அளித்தது!

    தொடக்க நாளிலிருந்து, கடைசியாய் மூட்டை கட்டும்வரை தன் வீட்டு விசேஷம் போல பாவித்து காமிக்ஸ் களப்பணியாற்றிய சேலத்து நண்பர்கள் இக்கட்டுரையின் பிரதான இலக்குக்கு உள்ளாகிறார்கள்! நண்பர்களது ஈடுபாடு நிஜமாகவே வியக்கவைத்துவிட்டது. நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுதவேண்டுமானால் ஒரு கோனார் உரை அளவுக்கு எழுதவேண்டியிருக்கும். ஆனால், நண்பர்களில் குறிப்பிட்ட சிலரையாவது நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்...

    'யுவா' கண்ணன் : எடிட்டரின் வலைப்பூவை தினமும் பார்வையிட்டுவரும் இந்த சைலண்ட் பார்வையாளர், சேலம் புத்தகத் திருவிழாவில் விஸ்வரூபமெடுத்திருக்கிறார்! தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு, காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார். நமது நண்பர்களுடன்கூட அதிகம் பேசாமல், விற்பனையிலும், புத்தகம் வாங்க வருபவர்களுக்குத் தேவையான தகவலையும் அளிப்பதையுமே தன் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றினார்.
    தலைவணங்குகிறேன் கண்ணன்!! உங்களது எண்ணமும், செயலும் புகழ் மாலைகளுக்குள் அடக்க முடியாவை!

    'மாயாவி' சிவா : சில மாதங்களுக்கு முன்புதான் நமக்கெல்லாம் அறிமுகமானவர் என்றாலும் தன் வித்தியாசமான செயல்பாடுகளால் நம்மையெல்லாம் சுனாமியில் சிக்கிய சுண்டெலியாக்கிய புண்ணியவான்! ;) மேற்கூறிய நபரோடு இவரும் நம் ஸ்டாலில் அதிக நேரம் செலவழித்து, தன் சொந்தச் செலவில்
    * ஸ்டாலுக்குத் தேவையான பல வண்ணமயமான போஸ்டர்கள் *புத்தகம் வாங்கியவர்களுக்கெல்லாம் ஒரு 'மின்னும் மரணம்' விளம்பரக் கார்டு
    * 'தேசன் புத்தக நிலையத்தின்' விற்பனையை உயர்த்திடும் நோக்கில் 'இங்கே லயன்-முத்து காமிக்ஸ் கிடைக்கும்' என்ற ரீதியிலான நூற்றுக் கணக்கான விசிட்டிங் கார்டுகள்
    * கேட்பவருக்கெல்லாம் தன் பிரியமான ஹீரோக்களின் போஸ்டர்கள்
    * நண்பர்களுக்கு நினைவுப் பரிசுகள்
    * புத்தகத்திருவிழா அமைப்பாளர்களிடம் நல்லுறவு மேம்படுத்துதல்
    * ஸ்டாலுக்கு வருகைதரும் சேலம் நகர புத்தகக் கடை உரிமையாளர்களிடம் பக்குவமாகப் பேசி சில ஆயிரங்களுக்கு ஆர்டர்கள் ஏற்பாடு செய்தது
    * இன்னும் பலப்பல.....

    கார்த்திக் : 'சேலத்தின் காமிக்ஸ் குடும்பம்' என்றே இவரது குடும்பத்தினரை பெருமையோடு அழைத்திடலாம். தன் அப்பா, அம்மா, சகோதரி சகிதம் கடந்த இரண்டு வருடங்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆஜராகியவர். சேலத்தில் புத்தகத் திருவிழா என்றால் கேட்கவா வேண்டும்?!
    தனது மருந்துக் கம்பெனி ஏஜென்சி மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை சற்றே ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கூறிய நபர்களோடு காமிக்ஸ் களப்பணியில் குதித்தவர். நமது பில் புத்தகத்தின் பல பக்கங்கள் இவரது கையெழுத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவையே! ரொம்பவே சின்சியர் பர்சனாலிட்டியான இவர் "உடல் மண்ணுக்கு , உயிர் காமிக்ஸுக்கு" என்கிறார், படு சீரியஸாக! வெல்டன் கார்த்திக்!

    (நாளை இன்னும் கொஞ்சம்...)

    ReplyDelete
    Replies
    1. Good job guys...

      Thanks @Erode Vijay and @Salem Tex for all the wonderful updates.

      Delete
    2. Great work everyone!

      தகவல்களுக்கு நன்றி விஜய்!

      Delete
    3. :)

      +1

      thanks to நண்பர் S.V.வெங்கடேஷ் special thanks to all the volunteered friends !

      Delete
    4. Good job friends and erode vijay....

      Delete
    5. //தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு, காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார்.//
      நண்பர்க்கு கனிவான வேண்டுகோள் ....எவ்வளவு சொன்னாலும் காமிக்ஸ் ஒரு பொழுது போக்கு ...அதற்காக வாழ்வாதாரம் தரும் கடமைகளை புறக்கணிப்பு செய்வது சரியானது அல்ல ...ஸ்டாலுக்கென பணியாளர் இருக்கும்போது டெக்ஸ் விஜய் ,ஈரோடு விஜய் போல் பணி ஓய்வு நேரம் ,விடுமுறை நாட்களில் காமிக்ஸ் -க்கென்று நேரம் செலவழிப்பதே சரியான வழி ....முன்பு ஒரு நண்பர் எடிட்டரிடம் காமிக்ஸ் ,குடும்ப உறவு குறித்து கேள்வி எழுப்பியதின் தவறான முன் உதாரணமாக நாம் அமைந்து விட கூடாது ....

      Delete
    6. @selvam abirami, தனிப்பட்ட நபரின் பங்களிப்பு, செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் (எடிட்டர், மற்ற நண்பர்கள் etc) தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும்.

      Delete
    7. *** நிஜ நாயகர்கள் **** தொடர்கிறது....

      'டெக்ஸ்' விஜயராகவன் : 'இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே இத்தனை நாளும் காத்துக் கிடந்தாய் பாலகுமாரா' என்ற ரீதியிலிருந்தது, இவரது ஒவ்வொரு நடவடிக்கையும்! சேலம் புத்தகத் திருவிழாவில் லயன்-முத்து ஸ்டால் இடம்பெறவிருக்கிறது என்ற செய்தியை கேட்டவுடன் பிரகாசமாக எரிய ஆரம்பித்த இவருடைய கண்கள், புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில்தான் இயல்புநிலைக்குத் திரும்பியது! அத்தனை ஆர்வம்!!
      தினசரி தனது 'லஞ்ச' டைமையும், முழுதாக இரண்டு ஞாயிறுகளையும் ஸ்டாலில் நண்பர்களோடு உற்சாகத்துடனும் செலவிட்ட இவர், ஓரிரு இரவுகள் விடிகாலை வரை விழித்திருந்து ஈரோடு ஸ்டாலினையும் தூங்கவிடாமல் 'வாட்ஸ்அப்' வழியாகவே தனது கடித பாணியிலான பதிவுகளைப் போட்டு இணையதள நண்பர்களிடமும் SBF பற்றிய பாப்புலாரிட்டியை ஏற்படுத்தியிருக்கிறார். அடுத்தவருடம் வருகைதரயிருப்பதாக எடிட்டர் அளித்திருக்கும் உறுதிமொழியால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் இவர், அந்த நாளுக்கான திட்டமிடல்களைப்பற்றி இப்போதிருந்தே கனவுகாணத் தொடங்கியிருக்கிறார்!

      எடிட்டரின் இந்தப் பதிவின் " The four men army...!" தலைப்பு மேற்கூறிய நண்பர்களுக்கும் கச்சிதமாய் பொருந்திவருமென்றால் அது நிச்சயம் மிகையில்லை!

      படைக்கு தலைமை தாங்கிய இவர்களோடு...

      * ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் நிறைய கேசரி செய்து எடுத்துவந்து இறுதிநாளன்று நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துமகிழ்ந்ததோடு, தாராளமாக செலவு செய்து நண்பர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்திய 'ஸ்பைடர்' Sridhar

      * ஒரு குழந்தையின் உற்சாகத்தை முகத்தில் காட்டி, எப்போதும் சிரித்த முகமாய் உலவிக்கொண்டிருந்த நண்பர் சேலம் சுசி,

      * தனது பிஸியான மருத்துவப் பணியின் இடையிலும், ஞாயிறு பொழுதுகளை நண்பர்களோடு கழித்து உற்சாகப்படுத்திய Dr. Sundhar ,

      * தனது குடும்ப விசேஷம் தொடர்பான பிரயாணங்களுக்கு அவ்வப்போது கல்தா கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயக்குமார் உடன் மேச்சேரியிலிருந்து வந்திருந்து காமிக்ஸ் கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகித்த 'மாடர்ன் மங்கூஸ்' ரவிக்கண்ணன்

      * அவ்வப்போது வந்து காமிக்ஸ் பணியாற்றிச் சென்ற BSNL தியாகராஜன், 'போராட்டக்குழு தலைவர்' பரணிதரன், ஆட்டையாம்பட்டி ராஜ் குமார், குமார் அண்ணாமலை, பனமரத்துப்பட்டி வீமன், நம் அன்பு வேண்டுகோளை ஏற்று 'மெட்ராஸ்-ஐ' பாதிக்கப்பட்ட கண்களுடனேயே தட்டுத்தடுமாறி வந்து நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் சென்ற L. கர்ணன், 'தேசன் புக் ஸ்டால்' உரிமையாளர் ராஜசேகர் , டிரைவர் குமார் மற்றும் நான் சந்திக்காத இன்னும் பலர்!

      நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆர்வமும் புத்தகத் திருவிழா மூலம் முதன்முதலாக சேலத்தில் காலடியெடுத்துவைத்த நமது காமிக்ஸ் வருகையை ஒரு அழகான வெற்றியாக்கியிருக்கிறது!


      இந்த காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

      Delete
    8. ரமேஷ் குமார் @ // தனிப்பட்ட நபரின் பங்களிப்பு, செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. //

      உண்மை! இதனை நான் ஆமோதிக்கிறேன்!

      Delete
    9. //selvam abirami//

      appreciable intention friend, as Ramesh said it’s a personal choice it’s better to advice/discuss personally.

      Delete
    10. //தனிப்பட்ட நபரின் பங்களிப்பு, செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் (எடிட்டர், மற்ற நண்பர்கள் etc) தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும்.//

      RK @.....முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன் RK ........

      @sathishkumar ....thanks pal ...for guiding me properly ....!!!

      Delete
    11. //selvam abirami//
      to take criticism openly in its sprite of its context one needs some level of maturity friend, I am humbled by your words.

      Delete
  56. Best wishes to all the friends who stayed in book fair and made it huge success

    ReplyDelete
  57. அட்டகாசம் சார்! நமது டெக்ஸ் வில்லர் என்று எந்த மொழியைச் சேர்ந்த காமிக்ஸ் ரசிகரும் அள்ளி அணைத்துக்கொள்ளும் வகையிலான அற்புதமான கதை நம்ம கிங் டெக்ஸ் அண்ட் கோவினருடையது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியுமா என்ன?

    ReplyDelete
  58. ஹீ ஹீ ஹீ
    நான் கறுப்புக் கிழவியின் கதைகளைத் தொகுத்து இருக்கிறேனாக்கும்!
    இதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் தெரிவிக்க எனது வலைப்பூவிலும் கோரிக்கை விடுத்திருக்கிறேன் சார்!
    ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?
    ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும்!

    இது வரை நமது திகில், முத்து ஆகியவற்றில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய
    கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் ....
    திகில் வெளியீடு _13 மரண விளையாட்டு (ஜான் ரேம்போ சாகசம்)
    1)“மரணப் பகை” முதன் முதலில் திகில் வாசகர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட கதை.

    கறுப்புக் கிழவியின் முதல் முதல் தமிழ் மண்ணை முத்தமிட்ட கதை இதுதான் ரசிகப் பெருமக்களே!

    இதே இதழில் வெளியான இரண்டாவது கதைதான்
    2)“பிசாசுக் கல்யாணம்”


    திகில் வெளியீடு 14.சிவப்புப் பாதை
    3) ஆகாயத்தில் கொலை


    வெளியீடு _15 சாவதற்கு நேரமில்லை (சைமன் சாகசம்)
    4)_”பேய் மீது ஆணை”
    திகில் கோடை மலர்-17
    5)_“சாபம்”” ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்றதாக அமைக்கப்பட்ட கதை!
    அதே இதழின் இரண்டாவது கதை
    6) “கல்லறை கீதம்””


    வெளியீடு _20 முகமற்ற கண்கள்
    7) பார்த்த ஞாபகம் இல்லையோ???


    வெளியீடு _23 கறுப்புக் கிழவி ஸ்பெஷல்
    8)_எத்தனுக்கு எத்தன்
    9)_எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது???
    10)_பிசாசுப் பிரம்பு
    11)_பழி வாங்கும் பருந்து
    12)_பேயை நம்பாதே
    13)_விசித்திர சேவகன்
    14)_மரண டாலர்
    15)_சூப்பர் சித்தப்பா
    வெளியீடு 26 பேட்மேன் கிறுக்கனா??
    16)_மரண இசை
    17)_சிரிக்கும் பேய்
    வெளியீடு _33 இறந்தவனைக் கொல்லாதே!!! & சைத்தான் பங்களா
    18)_இறந்தவனைக் கொல்லாதே
    19)_கிணற்றில் ஒரு கிழவன்
    20) பாலக் காவலன்
    21) இரவு நண்பன்
    22) பிசாசுப் பிம்பம்
    வெளியீடு 42 இரத்த அம்பு
    23) போலிகள் ஜாக்கிரதை
    வெளியீடு 44 ஆழ்கடல் மயானம்
    24) தங்கக் கண்கள்
    25) பெண் பேய் பொல்லாதது
    வெளியீடு 45 ஆபத்திற்கொரு சவால்
    26) அண்ணனின் ஆவி
    27) ஆளுக்கொரு ஆயுதம்
    28) கிழட்டு மரங்கள் சாவதில்லை
    29) ஆபத்திற்கொரு சவால்
    வெளியீடு 49 கொலைகார கோமாளி
    30) கொலைகார கோமாளி
    31) நிழல் எது நிஜம் எது?
    வெளியீடு 51 எரிமலைத் தீவில் ப்ரின்ஸ்
    32)செத்தவளுக்கு ஒரு சத்தியம்
    வெளியீடு 58 சைத்தான் ஜெனெரல்
    33) ஆவிக் கொரு அழைப்பு
    வெளியீடு 59 சாவோடு சூதாட்டம்
    34) பாவம் ஹென்றி
    35) தேடி வந்த டாக்டர்
    36) கருப்பு அறை
    37) நானும் இருக்கிறேன்
    38) தேடி வந்த தூக்குக் கயிறு
    முத்து காமிசில் வந்த
    திகில் ஸ்பெஷல் 255
    39) 1.கண்ணை நம்பாதே
    40) 2.பிறவி நடிகன் (re print Story)
    41) 3.ஆவிக்கு அல்வா
    42) 5. செத்தும் கெடுத்தான் சித்தப்பா
    43) 6.இனிது இனிது இளமை இனிது
    44) 7.ஆளுக்கொரு ஆவி
    ஹாரர் ஸ்பெஷல் 258
    45) 1.பேய் காத்த புதையல்
    46) 2.மரணத்துக்கு மரியாதை
    47) 3.நிழல் நிஜமானால்...
    48) 4.முடிந்த அத்தியாயம்
    49) 5.பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம்
    50) 6.வினையானதொரு விளையாட்டு
    http://johny-johnsimon.blogspot.in/2014/10/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. இதில் திருத்தி அமைக்க வேண்டிய குறிப்புகள் இருப்பின் தயவு செய்து எனது jsc.johny@gmail.com ல் குறிப்பிட்டீர்களானாலும் எதிர்கால காமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பைத் தேர்வு செய்திடும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும்! என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

      Delete
    2. // ஆவிக்கு அல்வா //
      // ஆளுக்கொரு ஆவி //

      ha ha!

      Delete
    3. //
      ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?
      ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும்!//

      +1

      Delete
    4. நன்றிகள் ரமேஷ் ஜி! சதீஷ் ஜி செல்வா ஜி! ஆயா ரசிகர்கள் அனைவரும் இங்கே ஒரு + போட்டுட்டு போனீங்கன்னா ஆசிரியர் யோசிக்கத் துவங்கி விடுவார்! ஒருங்கிணைந்து கேட்போம் வாருங்கள்! ஹீ ஹீ ஹீ ஆயா ஆசீர்கள்!

      Delete
    5. அதில் உள்ள அத்தனை கதைகளையும் இன்னும் பிரசுரித்து முடியவில்லை. மொக்கை கதைகள் என்பதால் அவை அரங்கேறவில்லை. இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம், சதை, நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார்!

      Delete
    6. -------
      கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும். இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன. ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும்
      --------

      Delete
    7. //ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?
      ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும்! //

      +1 May be in Super Six 2015?

      Delete
    8. +1
      பொக்கை வாய் சிரிப்புடன் 'மரண அட்வைஸ்' கொடுக்கும் அந்தக் கருப்பு ஆயாவின் கதைகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்!

      Delete
    9. Super Ji! ஆயாவின் கதைகள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்! அல்லது நமது மறுபதிப்பு நாயகர்கள் கதைகளில் பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான்!

      Delete
    10. //பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான்!//

      Delete
    11. //இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம், சதை, நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார்!//

      true its chilling horror in its own way, it created the thrill and phycological silent with in a reader(it shows bigger reflex of the smaller mistakes, I see it as moral(!?) story some times !!! ) with out portraying scary blood shed! it suited aptly for Tamil audience when it was released!

      Edit consider it sir!

      Delete
  59. டியர் சேர்,

    C.John Simson ௯றுவது போல் "கறுப்பு கிழவி" கதைகளை டைஐஸ்ட் ஆக வெளியிடுங்கள் சார். Please

    உங்கள்
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. சார்... விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகளும்.. பிராத்த்தனைகளும்!!
      ஓய்வில் எல்லா புத்தகங்களையும் மீண்டும் ஒரு முறை படிக்கும் வாய்ப்பாக எடுத்து கொண்டு மறுபதிப்பு கோரிக்கைகளுடன் களம் இறங்குங்கள்!!

      Delete
    2. -------
      கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும். இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன. ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும்
      --------

      Delete
    3. //கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும்//
      +1

      Delete
  60. Dearபரணி, இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா, மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை:-) #

    சுந்தர் சார் ....அடுத்த மாதம் மொத்தம் 5 புத்தங்கள் ...அதில் 4 கிராபிக் நாவல் என்றாலும் ஒரே ஒரு "தலை " அந்த நான்கையையும் ஈடு கொடுத்து விடுவார் என்பது தாங்கள் அறிந்தது தானே ..:-)

    ReplyDelete
  61. சேலம் புத்தக திருவிழாவின் உற்சாகம் இங்கும் தெறிக்கிறது... மிஸ் பண்ணிவிட்டேன்!! அடுத்த முறை விடப்போவதில்லை!!!
    நண்பர்களின் காமிக்ஸ் காதலுக்கு ஒரு ஜே!!!

    ReplyDelete
  62. ஹை ....சந்தா அனுப்பியதன் விவரம் ,சந்தா எண் ஆகியன SMS மூலம் எனக்கு அனுப்ப பட்டுள்ளது ....எல்லோருக்கும் அனுப்ப படுகிறது என்றே தோன்றுகிறது .....

    நண்பர்கள் நியாயமான வேண்டுகோள்கள் முடிந்தவரை வேகமாக நிறைவேற்ற படுகின்றன ..

    சந்தாதாரர் -க்கு கூரியர் தொகையில் கிட்டத்தட்ட 95% மேல் கழிவு ...(பேக்கிங் தொகை மட்டுமே )....இப்போது sms ....எடிட்டர் தான் செய்யும் எந்த விஷயங்களையும் சப்தமின்றி செய்து விடுகிறார் .....மீடியா உலகில் இருந்து கொண்டு கொஞ்சூண்டுதாவது சுயவிளம்பரம் இருக்க வேண்டாமோ ...?.....:-)

    ReplyDelete
    Replies
    1. +1

      true, most benefiting/attracting subscription option! 2015 going to be happy years for subscribers i guess.

      Delete
  63. Dear Sir,
    I am very happy that you are reprinting 2012 issues,Kindly let us know how to purchase reprints of 2012 issues,Is it possible to buy along with 2015 subscription

    ReplyDelete
    Replies
    1. ribkumar : Sorry no, you can buy them in January separately.

      Delete
  64. டியர் சர்ர்,

    புத்தகம் 3 ம் பர்ர்சலில் வந்து கிடைத்து விட்டது. நன்றிகள் கோடி.
    இவ்வண்ணம்

    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் பிரபரனந் : நீங்கள் தேறி வருகிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் வழியாகப் புரிந்து கொள்ள முடிகின்றது சார் !! மிகுந்த சந்தோஷம் !!

      Delete
  65. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

    சென்ற அக்டோபர் மாதம் - iStartSurf browser hijackerம், அதன் கூடவே வந்த சில kidnapper வைரஸ்களும் என்னுடைய கம்ப்யூட்டர்/ஐ சர்வ நாசம் செய்து விட்டன. கம்ப்யூட்டர் இன்றி நிறைய நேரம் மிச்சமானதால் - சரி இதுவும் கூட நன்றாக இருக்கிறதே என்று சரி செய்யாமல் இன்றுவரை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இருந்தாலும், தட்டுத் தடுமாறியாவது அவ்வப்போது பதிவிடலாமே என்ற எண்ணத்தினால் இந்தப் பதிவு :-)

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் Mr .M ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் .......:-)

      Delete
    2. //நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் Mr .M ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் .......:-)//
      +1

      Delete
  66. ஒரு நிழல் நிஜமாகிறது ! கதை விமர்சனம் [1 of 2]

    நண்பர்களே வணக்கம். தன்னுடைய படம் வெளிவரும் போதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அடித்து, அளவற்ற துட்டு பார்க்கும் தமிழக சூப்பர் ஸ்டாரை நாம் பார்த்து விட்டோம் ; நாலு இட்லி, ஒரு வடையில் திருடிய ஒரு திரைக்கதையில் 120 கோடி கல்லா கட்டிய, சமுதாயத்தின் மேல் அளவிட இயலாத அக்கறையுள்ள producer cum director யும் பார்த்து விட்டோம் ; சமுதாய அவலங்களைக் கண்டு சீறி எழுந்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே தம் சீரிய எண்ணங்களை சிதறடிக்கும், Facebookன் அட்டக் கத்தி அலெக்ஸாண்டர்களையும் நாம் பார்த்து விட்டோம் ; ஒரு தலைமுறையையே சீரழித்து, வரும் வருமானத்தில் இலவசங்களை கொடுத்து, வறுமையையே வாட வைத்ததாக கொக்கக்ரிக்கும் ஆட்சிகளையும் பார்த்து விட்டோம் !

    பாலியல் வன்கொடுமையை, ஒரு வாரம் வரை திரும்பத் திரும்ப ஒளிபரப்பியும் ; தீக்குளிக்கும் நபரின் கடைசி மூச்சு வரை நிற்கும் வரை, துடிக்கத் துடிக்கக் காட்சிப்படுத்தியும் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றிய மக்கள் கருத்தாக, 7.20 கோடியில் வெறும் நான்கு முகத்தை மட்டுமே காட்டியும் ; கலாச்சார சீரழிவையும் ; மாமா.. மாமா.. எப்ப.. ட்ட்..ரீட்டு.. என்று அந்த வேலையையும் கூட திறம்பட செய்தும் ; தாம் வாழும் சமூகத்தின் பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் காட்சிப் பொருளாக்கி, தத்தம் TRP ratingஐ உயர்த்தி காசாக்கும் டிவி சேனல்களையும் முழுமையாக பார்த்து விட்டோம்; ஆனால்,

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிழல் நிஜமாகிறது ! கதை விமர்சனம் [1.5 of 2]

      ஆனால், சமுதாய கடமை என்றால் என்னவென்று மட்டும் இன்று வரை நமக்குத் தெரியவே இல்லை. அதனால் தான் அடுத்தவர் தெருவில் போடும் குப்பையை நாம் பெருக்கிச் சுத்தம் செய்து, சமூக சேவையில் நாமும் ஐக்கியம் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்கிறோம் ! என்னைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது, சமூதாய விழிப்புணர்ச்சியில் தான் முழுமைப் பெறுகிறது. நம் வீதியில் இருக்கும் குப்பையை நாம் சுத்தம் செய்வதை விட, நம் தெருவில் குடியிருக்கும் மக்கள், குப்பையை தெருவில் வீசாமல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எவரால் முடிகிறதோ, அவரே சமூக சேவகன் ; தம் நாட்டின் நலன் மீது அக்கறையும் கொண்டவர் ; அவரே உயர்ந்தவர் ; அவருக்கே பேறும், புகழும் ஒன்றாய்ச் சேரும் !

      அதனால் தான், ஒவ்வொரு லார்கோ வின்ச் கதையைப் படிக்கும் போதும் அதன் கதாசிரியரான வான் ஹாமே ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராக எனக்குத் தெரிகிறார். இந்த மாத வெளியீடான ஒரு நிழல் நிஜமாகிறது ! கதையும் அதற்கு விதிவிலக்கல்ல ! தங்க முக்கோணம் என்றால் என்னவென்பதையும் ; அதில் பயிராகும் கஞ்சாவில் இருந்து கடத்தல் வரையும் ; மார்பின்/லிருந்து உருமாறும் ஹெராயின் செய்முறையும் ; அதற்குண்டான துல்லியமான விலையும் ; உலகமெங்கும் இருக்கும் நெட்ஓர்க்கும் ; அதனால் ஏற்படும் சீரழிவும் சேதாரமும் - என அனைத்தையும் ஒரு காமிக்ஸில் கொண்டு வந்து கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஒருவரால் சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியுமென்றால் அது வான் ஹாமேவாகத் தான் இருக்க முடியும் !

      தொடரும்...

      Delete
    2. // [1.5 of 2] //

      ஹா ஹா ஹா!

      Delete
    3. ஒரு நிழல் நிஜமாகிறது ! கதை விமர்சனம் [2 of 2]

      Golden Gate சீரியலின் நடிப்பில் சொதப்பும் சைமன், இம்முறை கதை முழுவதிலும் சொதப்பி உள்ளார். முதல் 18 பக்கங்கள் அறுவை மட்டுமல்ல அப்பட்டமான செயற்கை. ஒரு அல்லக்கை ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும் இருக்கிறது. லார்கோ வின்ச்/ன் ஹீரோயிசம் கூட ஆங்காங்கே செயற்கையாகத் தெரிந்தாலும், இந்தக் கதையின் உண்மையான ஹீரோவான கதைக்கரு - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது !

      மேலோட்டமாக பார்த்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதைப் போல் தோன்றும் கழுத்து வரை புதைக்கப்பட்ட லார்கோவும், தேள் ; ஓணான் ; செந்நிற கடி எறும்புக் கூட்டமும் - கதையோடு நீங்கள் ஒன்றிபோய் படித்திருக்கும் பட்சத்தில் ... ...

      லார்கோ வின்ச் கதைத் தொடரில் இந்தக் கதை சற்றே சுமார் ரகம் தான் என்றாலும் - மற்றக் கதை வரிசைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு மெஹா ஹிட் கதை என்பதில் ஐயமில்லை ! ஏனெனில் இந்தக் கதையை படிப்பதற்கு என ஸ்பெஷலான மனநிலையோ ; இரவின் தனிமையோ ; இருளின் நிர்சலனமோ ; ஒத்தி வைக்கப்படும் காலநிலையோ ; காத்திருக்கும் மனோநிலையோ தேவையில்லை. ஏனெனில் புத்தகம் கிடைத்தவுடன் ; கவரை கிழித்தவுடன் படித்து முடிக்கப்படும் காமிக்ஸ் எதுவோ அதுவே ரசனையிலும் ; பொழுதுபோக்கிற்கும் சிறந்தது !

      முழுமையாக படிக்க இங்கே இங்கே 'க்ளிக்'கவும் நண்பர்களே !

      Delete
    4. மிஸ்டர் மரமண்டை : சமூக சேவகர் Van Hamme ?! வித்தியாசமானதொரு பார்வை தான் ...!

      Delete


  67. சேலம் புத்தகத் திருவிழாவில் மங்கூஸும், மாயாவியும் : இங்கே 'க்ளிக்'குங்க பாஸு! l

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் புரியுது, ஏன் selvam abirami உட்பட பலரும் காமிக்ஸ்க்காக நேரம் செலவிடுவது சம்பந்தமாக ஒரு கருத்தை அடிக்கடி முன்வைத்தார்கள் என்று.

      விளையாட்டுக்கு இம்மாதிரி ஜோக்குகளை பகிர்ந்தாலும், காலேஜ் ஸ்டூடண்டுகள் போல வீட்டுக்கு தெரியாமல் செய்யும் காரியமாக புக்ஃபேர் விசிட்டுகள் புரிந்துகொள்ளப்படுவதை தவிர்ப்போமே.

      Delete
  68. ம(னதிற்கு மகிழ்வு தரும் )தியில்லா மந்திரியார்க்கு பாக்தாத் நகரசபையின் எச்சரிக்கை ..!!!!
    உங்களது CL,ML ,EL,EOL என எல்லா லீவுகளும் முடிந்து விட்டபடியால் தொடர்ந்து இந்த blog க்கு வராமல் மட்டம் போடும் பட்சம் உங்களது "C"சந்தாவினை நிறுத்தி வைக்கும்படி எடிட்டர்க்கு தீர்மானம் இயற்றி நகல் அனுப்ப படும் .....

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி - அக்கவுண்ட் ஒரு நபருடையதல்ல - 3 பேருடையது என அவரே தெரிவித்திருந்தார். ஆனாலும் மதியில்லா மந்திரி இல்லாததால் Pure Innocent ஜோக்குகள் கொஞ்சம் இங்கே மிஸ்ஸிங்...

      Delete
    2. இது பாக்தாத்தின் விடுமுறைக் காலமாக இருக்குமோ ?

      Delete
  69. time is the true narcotic of any kind of pain ;either the pain vanishes or we are accustomed to it .....
    Robert Ludlum ...the Parsifal Mosaic .....நாவலில் .........

    @வெட்டு கிளி வீரையன் .....எல்லாம் மறந்து விரைவில் தளம் நுழைய வேண்டுகோள் விடுக்கிறேன் .......இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ...please come back ....!!!!

    ReplyDelete
    Replies
    1. //இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ...//

      +1

      Delete
    2. sorry friends tho come back special
      வேகமா இன்னும் வேகமா ஓடு ஸ் பைடறு பின்னாடி கிங் கோப்ரா துரத்திட்டு வர்றான்
      பூ ..அவனை ஒரு கை பார்க்க வேண்டியதுதானே லாரன்சு..
      அம்பது நூறு கடனா கேட்க வர்றான்..வச்சிருக்கியா யே யே எங்கேப்பா இந்த ஓட்டம் ஓடறே ..

      Delete
    3. ஹா ..ஹா .....இந்த "அதகளத்தை "தானே எல்லோரும் விரும்புகிறோம் ....:-)

      Delete
    4. @ VETTUKILI VEERAIYAN : 30 ஆண்டுகளுக்கு முன்பாய் தலைகாட்டிய 'கிங்' கோப்ரவையெல்லாம் ஞாபகம் வைத்துள்ளீர்களா ?! சூப்பர் தான் !!

      Delete
  70. வணக்கம் சார் . தலையின் வித்தியாசமான சாகசம் அடுத்த மாதம் என்று டீசர் மட்டுமே போட்டுள்ளீர்கள். எங்கே சார் அட்டைப்படம் ? லஞ்ச டைமில் அரைத்தூக்கத்தில் மீண்டும் பதிவை பார்த்து வந்தேன் , தலைக்கு எப்போதும் அட்டை படமே பாதி கதை சொல்லி விடுமே சார் . சீக்கரம் தரிசனம் காண்பியுங்கள் சார் . எப்போதும் தலை மெக்சிகோ போனால் சாகசம் நிச்சயமாக ஏமாற்றம் தராது . எனவே எதிர் பார்ப்பும் இருமடங்கு எகிறிப் போய்விட்டது சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : 'தல' அட்டைப்படத்தை வரும் ஞாயிறின் பதிவோடு ஆஜர் செய்திடுவோம் ! அது வரை பொறுமை ப்ளீஸ் !

      Delete