நண்பர்களே,
வணக்கம். வானமும், பொதுவான ஊர் நிலவரமும் இருண்டு கிடக்கும் ஒரு ஞாயிறின் காலை வணக்கங்கள் ! 'திடு திடுப்'பென நேற்றைக்குப் பிற்பகல் கடையடைப்பு ; ஆபீஸ்களுக்கு விடுமுறை என்றதின் ஒரே வெளிச்சக் கீற்றாய் அமைந்தது வண்டி வண்டியாய் வந்து - என்னைச் சூழ்ந்து கிடக்கும் காமிக்ஸ் சாம்பிள்களைப் படிக்கக் கிடைத்த நேரமே என்று தான் சொல்லுவேன் ! "கனவெல்லாம் காமிச்சே !" என்ற தலைப்பில் எப்போதோ ஒரு பதிவிட்டதாய் ஞாபகம் ; அதே பெயரை இன்னுமொருமுறை இரவல் வாங்கிக் கொள்ள முடிந்தால் இந்தப் பதிவுக்கும் கூட அதனையே தலைப்பாக்கி இருப்பேன் ! தூக்கத்தில் விரிவதோ டெக்ஸாஸ் பாலைவனமும் ; தோட்டாவே நிரப்பாமல் ஓராயிரம் முறை முழங்கும் துப்பாக்கிகளும் ! புரண்டு படுத்தால் - 'சர்ர்-புர்ர்- ரென்று சீரும் கார்களில் ஸ்டைலாகப் பறக்கும் டிடெக்டிவ் நாயகர்கள் ; உற்றுப் பார்க்க முனைகிறேன் - ஒரு பயலின் முகமும் தென்படமாட்டேன்கிறது ! சரி...கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் படுப்போம் என்று முயற்சித்தால் - ' அன்பார்ந்த செல்லக் குழந்தைகளே' என்ற விளிப்போடு ஹாட்லைன் எழுதுவது போலொரு பயங்கரக் கனவு ! 'ஆத்தாடி !' என்று எழுந்து உட்காருகிறேன் ! 2015-ன் அட்டவணையை இறுதி செய்வதற்கு முன்பாக "காமிச்சொமேனியா" ரொம்பவே சீரியஸ் ரகமாகிவிடும் போலுள்ளது ! சரி... பூதம் புதையலைக் காப்பது போல் மண்டைக்குள்ளே வைத்து 'தேவுடு' காப்பதை விட - விஷயங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய் உங்களோடு பகிர்ந்திட்டல் நலம் எனத் தோன்றியது ! அட்டவணை கையில் கிடைக்கும் வரை ஆர்வமும், சஸ்பென்சும் தொடர்ந்திட வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என்பதால் - புது வரவுகளைப் பற்றி ஜாஸ்தி வாயைத் திறக்காமல் இருக்க முயற்சிப்பேன் ! கெலிக்கப் போவது பெவிகாலா ? ஒட்டைவாயா ? என்பதைப் போகப் போகவே பார்த்தாக வேண்டும் !
ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல - இத்தனை கதைவரிசைகள் நம்மிடம் இருக்கும் வேளையில் கூட 'யார் பெயர்களை அணிக்குள் முதலில் 'டிக்' அடிப்பது ?' என்பதில் பெரிதாய் சிரமங்கள் இருக்கவில்லை ! முன்பெல்லாம் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்ட கையோடு "ஸ்பைடர்" என்று பவ்யமாய் எழுதி விட்டுத் தான் மோட்டைப் பார்த்து அடுத்த ஆசாமியின் பெயரைப் பற்றிச் சிந்திக்கத் துவங்குவது வழக்கம் ! அட்டைப்படத்தினில் ஒரு ஓரமாகவாவது தனது அழகு வதனத்தையும், உட்பக்கங்களில் ஒரு நாலே நாலு பக்கங்களிலாவது தலைவர் தலைகாட்டினாலும் போதும் - அந்த இதழ் ஹிட் என்பது அன்றைய சம்பிரதாயம் ! இன்றைக்கு அந்த இடத்தில் "லார்கோ" என்றதொரு பெயரை எழுதி வைக்கும் நிலை என்பதில் துளியும் இரகசியம் இல்லை ! இன்றைய நம் அணிவகுப்பில் - First amongst Equals என்று பார்த்தால் அது நிச்சயமாய் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் தான் ! கையில் துப்பாக்கியே எடுக்காமல் ; குதிரைச் சவாரிகளும் செய்யாமல் ( நவம்பர் இதழில் மனுஷன் கொஞ்ச நேரம் குதிரை மீதும் பவனி செல்கிறார்!!) நம்மை மயக்க இயலும் என்பதை லார்கோவும், கதாசிரியர் வான் ஹாம்மேவும் நிரூபிக்க - 2015-ன் அட்டவணைக்கு நான் முதல் பெயராய்த் தேர்ந்தெடுத்தது லார்கோவையே ! ஒரே பிரச்சனை என்னவெனில் இத்தொடரில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதைகள் வெகு சொற்பமே என்பதால் - லார்கோவோடு பிள்ளையார் சுழி போடும் luxury இன்னும் அதிக காலத்துக்கு நீண்டிடப் போவதில்லை ! இருக்கும் வரை ரசித்துக் கொள்வோமே ! (இந்தாண்டு பிரெஞ்சில் புதிய பாகம் ஒன்று வெளிவரவுள்ளது கொசுறுச் சேதி !)
இரண்டாமிடத்துப் பெயரை எழுதுவதற்கும் 'தல' புண்ணியத்தில் எனது தலைமுடி அதிகம் பிய்ந்திடவில்லை ! என்ன தான் 'தளபதி' ரசிகர்கள் கலாய்த்தாலும் ; டெக்ஸ் கதைகளில் ஆழமில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் ; மசாலா ; காரம் என்றெல்லாம் அபிப்ராயங்கள் முன்வைக்கப்பட்டாலும் - விற்பனை எனும் முனைகளில் நமது "VRS வாங்கிய மும்மூர்த்திகளுக்கு" அப்புறமாய் கல்லா கட்டும் ஆற்றலை அதிகம் கொண்டிருப்பவர் நமது இரவுக் கழுகார் என்பதில் சந்தேகமே இல்லை ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாங்கள் திரும்பத் திரும்ப அனுப்பத் தேவையாக இருந்து வந்துள்ளது டெக்ஸ் கதைகளையே ! So காரணங்கள் எவையாக இருப்பினும், "மாஸ் ஹீரோ" பட்டம் தற்போதைக்காவது திருவாளர் டெக்சுக்கெ ! ரசனைகளில் நாம் சிறுகச் சிறுக மேலேறி இருப்பினும் கூட ; நமது வாசிப்புக் களங்கள் விஸ்தீரணமாய் மாறி இருந்தால் கூட - அடிமனதில் நாமெல்லாமெ 'பாட்ஷா" வின் ரசிகர்கள் தான் என்பதை அடிக்கோடிடும் விஷயமாய் இதைப் பார்க்கத் தோன்றுகிறது ! So let's enjoy the ranger !! அட்டவணைக்குள் ஆட்டோமேடிக்காக நுழையும் ஆசாமி # 2 இவர் ! ஏற்கனவே ஈரோட்டில் ஒ.வா.உலகநாதனாய் நான் உளறி வைத்தது போல - 2015-ல் வரக் காத்திருக்கும் நமது லயனின் 250-வது இதழை அலங்கரிக்கப் போவது 2 x மெகா டெக்ஸ் சாகசங்களே - முழு வண்ணத்தில் ! தலா 336 பக்க சாகசங்கள் எனும் போது இதுவொரு 672 பக்க அதிரடி இதழாய் இருந்திடப் போகிறது ! வெறும் கும்மாங்குத்துக்கள் மாத்திரமின்றி - கதையம்சமும் பொருந்திய சாகசங்களைத் தேர்வு செய்ய இம்முறை முனைந்துள்ளேன் ! So இதுவொரு memorable இதழாய் இருக்குமென்ற திட நம்பிக்கை என்னுள் !
அட்டவணையின் பெயர் # 3 எனது personal favorite -ம் கூட ; தொடர்ச்சியாய் 2012 முதல் அனைத்துப் புத்தக விழாக்களிலும் பட்டையைக் கிளப்பிய மனுஷன் ! அது வேறு யாருமில்லை - நமது பென்சில் உடம்பு லக்கி லூக் தான் ! கார்டூன்களில் ; டிவி.க்களில் தலை காட்டியதனாலோ - என்னவோ குட்டீஸ்களின் பெரும்பான்மைக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஓரளவிற்குப் பழகிய பெயராய் இருப்பதால் ஸ்டாலுக்குள் நுழைந்த உடனேயே லக்கியின் பக்கமாய் ஈர்க்கப்படுவதை ஏராளமான தடவைகள் பார்த்தாகிவிட்டோம் ! Yes - நாம் அந்நாட்களில் படித்துப் பழகியிருந்த "புரட்சித் தீ" ; "சூப்பர் சர்க்கஸ்" : "பொடியன் பில்லி" தரங்களில் இதர கதைகளில் நகைச்சுவை quotient மிகுந்திருக்கவில்லை தான் ; ஆனால் சலிப்புத் தட்டாமல் பயணிக்கும் இவை எப்போதுமே safe bets ! திரைப்பட பாஷையில் சொல்வதாயின் "மினிமம் கேரண்டி "க்கு என்றைக்குமே சிக்கல் தரா தேர்வு ! So - பட்டியலில் # 3 லக்கி !
இன்றைய சூழலில் ; கௌபாய் கதைகளே flavor of the season என்றிருக்கும் நிலையில் - ஆர்ப்பாட்டமில்லாமல் ; அட்டகாசச் சித்திரங்களோடு நம்மை வசியம் செய்து வரும் கமான்சே தொடரினை அடுத்ததாக அட்டவணையில் பட்டியலிட்டேன் ! ஒரு காலத்தில் கீச்சலாய்த் தெரிந்த ஓவியர் ஹெர்மனின் ஓவிய பாணியானது இன்றைக்கு நம்மில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை நினைக்கும் போது ரசனைகளின் படிகளில் நாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதை உணர முடிகின்றது ! முதன்முறையாக ஹெர்மனின் சித்திரங்களோடு கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை" இதழை நாம் 1986-ல் வெளியிட்ட போது - "உள்ளூர் ஆர்டிஸ்ட் போட்ட படங்களா இவை ? " என்று கேட்ட வாசகர்களும் இருந்தனர் ; ஆனால் அந்த ஸ்டைலில் உள்ள வசீகரத்தை வெகு சீக்கிரமே நாம் உணர்ந்து கொண்டோம் என்பது தான் நிஜம் ! So 2015 அட்டவணையில் தேர்வு # 4 சிக்கலின்றி !
லார்கோவின் கதைகளின் ஆழமோ ; நுணுக்கமோ கிடையாதெனினும் இவரும் ஒரு மாறுபட்ட நாயகரே என்பதில் சந்தேகமில்லை ! Mandrake -க்கு அடுத்ததாய் மீசை வைத்த நாயகர் என்ற பெருமை (வேறு யாரேனும் உண்டா - கார்சனைத் தவிர ??) ; கிருதாக்களில் நரை ; 50-களில் அகவை என்ற அடையாளங்கள் ! Yes - நாம் பேசுவது வேய்ன் ஷெல்டனைப் பற்றியே ! பளீர் சித்திரங்கள் ; பிரமாதமான வர்ணங்கள் - பரபரப்பான கதைக்களங்கள் என ஒருவிதமாய் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஓடும் இவரது சாகசங்கள் அத்தனையும் இதுவரை ஹிட் ! So தொடரும் ஆண்டிலும் இவரது ஆட்டம் தொடரும் !
TOP 5 தேர்வுகளில் டெக்ஸ் மாத்திரமே கலர் + black & white என இரு பாணிகளிலும் தலைகாட்டும் தைரியசாலி ! இதர தேர்வுகள் out & out கலர் நாயகர்கள் என்பதால் - பிரத்யேகக் கறுப்பு-வெள்ளையின் முதல் தேர்வைப் பற்றிப் பார்ப்போமா ? ரொம்ப காலமாய் ஓய்வில் இருந்த காரணத்தால் - புது உத்வேகத்தோடு மீண்டும் சாகசம் செய்ய வருபவர் நமது தங்கத் தலைவி ; பரணி புகழ் பாடும் (!!) மாடஸ்டி அம்மையார் அவர்களே ! 100 கதைகள் உள்ள இந்தத் தொடரில் நாம் இதுவரையில் ஒரு 30 சாகசங்களை வெளியிட்டிருப்போம் எனும் போது ஏராளமாய் புதுக் கதைகளைத் தன்னுள் கொண்ட கதைவரிசை இது ! இதனை சமீப காலங்களில் நாம் அதிகமாய் பயன்படுத்திடாது இருக்க 2 முக்கியக் காரணங்கள் உண்டு ! தினசரி strips ஆக வெளியாகும் இக்கதையினை இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் வெட்டி-ஒட்டி ; ஓரங்களை திரும்பவும் வரைந்து தயார் செய்வது அலுப்பை ஏற்படுத்தும் பணி என்பது காரணம் # 1 என்றால் மாடஸ்டிக்கு செலுத்தத் தேவையான ராயல்டி கட்டணம் தலை சுற்றச் செய்யும் ஒரு தொகை என்பது இரண்டாம் பூதம் ! இங்கிலாந்தில் உருவாக்கப்படும் இக்கதைகளுக்கு பவுண்ட் ஸ்டெர்லிங்கில் (அந்நாட்டுக் கரென்சி ) பணம் அனுப்பிட அவசியமாகிறது ! ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது மதிப்புக்கு ரூ.68 என்று இருந்து வந்த பவுண்ட் 'சொய்ய்ங்' என்று ரூ.103 க்குச் சென்று குந்திக் கொண்டது ! அவர்களது கட்டணங்கள் மாற்றமில்லாமல் இருந்த போதிலும், அதற்கு ஈடாக நாம் இங்கு செலுத்தத் தேவைப்படும் இந்தியப் பணம் எக்குத்தப்பாய் கூடிப் போனது ! இன்றும் நிலை அதுவே தான் ; ஆனால் எப்படியோ குட்டிக் கரணம் அடித்து தங்கமங்கையை அவ்வப்போதாவது கண்ணில் காட்டுவோமே என்ற அவாவின் விளைவே 2015-ல் மாடஸ்டி தலை காட்டும் பின்னணி ! But - இவரது கதைகள் வெளியாகும் இதழ்களின் விலைகள் மாத்திரம் - இதர b&w இதழ்களின் விலையிலிருந்து சற்றே கூடுதலாய் இருக்கும் ; அல்லது பக்கங்கள் குறைவாய் இருக்கும் ! (மாடஸ்டி வருகிறார் என்ற உடனேயே எங்கள் DTP ஆப்பெரேடர்கள் தையல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி விட்டனர் என்பது கொசுறுச் செய்தி !!)
தொடரும் வாரங்களில் 2015-ன் preview பற்றி இன்னமும் கொஞ்சம் பேசுவோமே ! ஒ.வா. உலகனாதனாகவும் இல்லாது - பெ.பெ.வாகவும் இல்லாது ஒரு 'சமநிலை சண்முகமாக' அவதாரம் எடுக்க முனைவேன் ! அதற்கு முன்பாக ஒரு சில teasers & updates :
1.ஏழு முழு ஆண்டுகளைச் செலவிட்டு ஒரு டெக்ஸ் கதைக்கு சித்திரம் போட்டுள்ளார் ஐரோப்பிய ஓவியர் ஒருவர் !! அவரது அசாத்திய கைவண்ணத்தை 2015-ல் நாம் ரசித்திடக் காத்துள்ளோம் !!
2."கிராபிக் நாவல்" என்ற கெட்ட வார்த்தை (!!) 2015-ல் ஒரு புது அர்த்தத்தைக் காணவுள்ளது ! ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் !! கடந்த 2 நாட்களும் என் தலைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஷண்டிங் செய்து வரும் இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !! இதனை வெளியிட சகல முயற்சிகளும் செய்து வருகிறேன் - ராயல்டி கட்டணம் எத்தனை அதிகமாய் இருந்தாலும் பரவாயில்லை என்ற வேகத்தில் !! நிச்சயமாய் 2015-ல் இது நம் கைகளில் இருந்திடும் !! (போராட்டக் குழுத் தலைவரை தற்காலிகமாகவாவது ஸ்டோர் ரூமில் போட்டுப் பூட்டி வைக்கும் பணியை யார் ஏற்றுக் கொள்வது ?)
3.அக்டோபர் இறுதியினில் காத்திருக்கும் ஒரு பதிவானது நிச்சயமாய் ஒரு கலக்கு கலக்கவிருக்கிறது ! Wait n' watch guys...!
4.அடுத்தாண்டின் ஒரு ஹாரர் கதை உங்கள் விழிகளைப் பனிக்கச் செய்யக் காத்துள்ளது ! Be prepared !
5.சென்ற வாரம் Caption எழுதும் போட்டிக்கு நடந்த அதகளமும், அட்டகாசமும் நான் மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்ததால் மட்டுப்பட்டு விட்டதாய் நண்பர்களில் சிலர் அபிப்ராயம் சொல்லி இருந்தனர் ! 'இதற்கு மேலே தளம் தாங்காது !' என்று நினைக்கத் தோன்றியதால் தான் final whistle-ஐ சீக்கிரமே ஊத வேண்டியானது ! சரி - இம்முறை 7 நாள் அவகாசத்தோடு இன்னுமொரு வாய்ப்பு ! இம்முறை பரிசு வழங்கக் காத்திருப்பது நண்பர் ஒருவர் !! Yes - சென்ற வார உற்சாகத்தை திரும்பவும் லேசாகவேனும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டினால் அதற்கு ஈடாக என்னிடமுள்ள "இரத்தப் படலம்" The Complete Collection இதழின் spare copy -ஐத் தரத் தயாரென்று சொல்லி கூரியரில் அனுப்பியுள்ளார் !!! சற்றே புரட்டப்பட்ட ; கைபட்ட இதழ் தான் எனினும், எவ்விதக் கிழிசலும் இல்லாது 'ஜம்'மென்று காட்சி தருகிறது ! பெயரை வெளிச் சொல்லிக் கொள்ள விரும்பா இந்த நண்பரின் உபயத்தில் இவ்வாரத்துப் போட்டி guys ! Get cracking !! மீண்டும் சந்திப்போம் - அதுவரை have fun !
Captions 1 & 2:
முதலிடம்
ReplyDeleteஎடிட்டர் பதிவுக்கு பதில் எழுதவேண்டும்...
Deleteஅறிவிப்புகளை கொண்டாட வேண்டும்....
அக்டோபர் பதிவுகள் பற்றி யோசிக்க வேண்டும்....
போட்டிக்கு 'டைலாக்' எழுதவேண்டும்....
இதில் எதைமுதலில் செய்ய...
அட எல்லாமே செய்ய ஒரு 'ஐடியா' !
அதைபார்க்க....இங்கே'கிளிக்'
ஏம்பா வேறேவேலையே இல்லையா ..சோறு தண்ணி எல்லாம் எப்பதான் சாப்பிடுவீங்க
Deleteஹை! :)
ReplyDelete3rd I am my 1st comment
ReplyDeleteJust missed
Deletenaresh kumar welcome friend
Deleteநல்வரவு நரேஸ் குமார்! :)
Deletenandri nanbargalea
Delete@ nareh kumar
Deleteநல்வரவுகள் நண்பரே !
Welcome friend
Deleteபடிச்சுட்டு வருவோம்...
ReplyDeleteஅசத்தலான அறிவிப்புகள்,எடிட்டருக்கு நன்றி.மாடஸ்டி கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,ஆனால் தையல் வேலையை சற்று மட்டுப்படித்தினால் நன்று.அடுத்த வருடம் இரவுக்கழுகார் உயர உயர பறப்பார் என்று அறிந்து மிகவும் மகிழ்கிறேன்.
ReplyDeleteசுட்டிலக்கி பற்றி எதுவுமே இல்லையே சார்?!
முதலில் வந்த மாயாவி சார் க்கு ஒரு கேள்வி இருக்கு... ஸ்பைடர் கதை அது. வில்லன் கதிர்வீச்சு மூலம் சிறிய தாவரங்கள் செடி கொடிகளை ராட்சத அளவில் வளரவைத்துவிடுவான்.. கதையின் பெயர் மறந்துவிட்டது.. சிறு வயதில் பிரமித்து படித்த கதை.. சொல்லுங்கள் சார்..
ReplyDeleteSankar R,
Deleteலயன் காமிக்ஸ் 12-ஆவது இதழாக வெளிவந்த பழி வாங்கும் பொம்மை என்ற கதைதான் அது. ஏப்ரல் 1985-ல் இந்த இதழ் வெளியானது.
இந்த இதழின் அட்டையை காண: பழி வாங்கும் பொம்மை அட்டை
தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து ஸ்பைடர் கதைகளின் விவரங்கள், அட்டைப்படங்களை காண: தமிழில் ஸ்பைடர்
இது மட்டுமல்ல: பான் என்ற ஒரு வில்லன் தன்னுடைய இசையால் செடிகொடிகளை அசுரவளர்ச்சிக்கு உட்படுத்தி எதிரிகளை பயமுறுத்துவான்.
Deleteஅந்த கதையின் பெயர்: மரண ராகம்
அந்த கதையின் பெயர் பழி வாங்கும் பொம்மை. என்னிடம் இந்த புத்தகம் இல்லை. வழக்கம் போல மாயாவி சிவா இந்த கதை பற்றி எழுதுவார் என்று நினைக்கிறன். முன்கூட்டியே நன்றி திரு மாயாவி சிவா.
DeleteI believe it's called 'palli vangum pommai
DeleteFrancissco Cueto என்ற ஸ்பானிஷ் ஓவிய மாமேதையின் கைவண்ணத்தில் வெளிவந்த இந்த கதை மிகச்சரியாக 9 வருடங்கள் கழித்து (ஏப்ரல் 1994) லயன் காமிக்சின் 99-ஆவது இதழாக மறுபதிப்பிக்கப்பட்டது.
Deleteமறுபதிப்பின் அட்டை
thanks for all your reply friends...
Deleteநன்றிகள் கிங் விஸ்வா ! வெள்ளம் போலவே தகவல்கள் !
Deleteநீங்கள் சொல்லும் விஷயம் கேட்க அவ்வளவு சூப்பராக
உள்ளது...(சென்றபதிவில் செய்த குறும்பிற்கு வசமாக
மாட்டவிருந்தேன்...உங்களால் தப்பித்தேன்...அப்பாடா...)
+1 :)
Deleteகிங் விஸ்வா = காமிக்ஸ் Wikipedia !!!
விஷ்வா,
DeleteSpider-ஐ போலவே Tex-க்கும் தமிழில் வெளியான அனைத்து comics பற்றிய தகவல்கள் உண்டா ? (அதாவது தமிழ் தலைப்பு, English Title, Issue No)..
-Sankar
In Top 10! Thanks to Vishwa :)
ReplyDeleteஅட்டகாஷ்!
ReplyDeleteWow information
ReplyDeleteBlue coat caption
ReplyDeleteஐஸ் பக்கெட் challenge தெரியும் .. இடு என்னடா அறிபெடுகுற challenge...
விடுங்க கேப்டன் அவன் அவன் புக் வேண்டும்னு என்னென்னமோ பண்றான்.....இந்த சின்ன விஷயத்துக்கு பொய் பொலம்பிகிட்டு .. பேசாம வாங்க..
Sik bill caption
என்னகு ரத்தபடலம் புக் வேணும் .... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
டாய் அழாதே இந்த தடவை புக் நம்மளுக்கு தான் இல்லேனா ஆசிரியரை ஒரு வழி பண்ணிடலாம்
I request our editor to publish a collectors special only edition covering 1970
ReplyDeleteSenthil Kumar : 1970 ?? But why ? There wasn't even Muthu Comics in 1970 !
DeleteSorry. Spelling mistake. I meant 1970's. end of 1970s to beginning of 1980s. like 'minnum maranam' a collectors special we need. I remember u announced in 2012 also planning for 'Nepoleon Pokkisam' like few stories. But as we know, many people as well as you wont agree since a lot new books are waiting in Q. Just I put my comment with a hope.
Delete//ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் !! கடந்த 2 நாட்களும் என் தலைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஷண்டிங் செய்து வரும் இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !! இதனை வெளியிட சகல முயற்சிகளும் செய்து வருகிறேன் - ராயல்டி கட்டணம் எத்தனை அதிகமாய் இருந்தாலும் பரவாயில்லை என்ற வேகத்தில் !! நிச்சயமாய் 2015-ல் இது நம் கைகளில் இருந்திடும் !! //
ReplyDelete)
இவ்ளோ சஸ்பென்ஸ் எல்லாம் தாங்காது சார்........... We want more details(Bharathiraja Style).....
Mohamed Harris : (கர கர குரலில்..) புலரும் வரைப் பொறுத்திருப்போம் !
Deleteபொறுத்தது போதும் பொங்கி எழுவோம் !
Deleteகாமிக்ஸ் வாழ்க! Tried in IOS. In India apple released only Tamil keyboard next to English and Hindi.
ReplyDeleteநல்வரவு மாடஸ்டி அம்மையார்!
// 2015-ல் வரக் காத்திருக்கும் நமது லயனின் 250-வது இதழை அலங்கரிக்கப் போவது 2 x மெகா டெக்ஸ் சாகசங்களே - முழு வண்ணத்தில் ! தலா 336 பக்க சாகசங்கள் எனும் போது இதுவொரு 672 பக்க அதிரடி இதழாய் இருந்திடப் போகிறது ! //
ReplyDelete250வது இதழ் பக்கங்களும் கதைகளும் குறைவாக உள்ளனவே , LMS or NBS போல் இருந்தால் நன்றாக இருக்கும் !!!!!
Thilagar, Madurai : 672 பக்கங்கள் குறைவா ? சரியாப் போச்சு !!
Deleteஆத்தாடியோவ்!! மீண்டும் LMS சைசில் குண்ண்ண்டாய், அதுவும் 'தல' ஸ்பெஷலாய், அதுவும் நல்ல கதையம்சத்தோடு... எனக்கு இப்பவே அதை பார்ககணும்போல இருக்கே...
ReplyDeleteஏழு வருடங்களாய் சித்திரம் போட்ட ஒரு டெக்ஸ் கதையா!!! அ..அதையும் நான் உடனே பார்த்தாகணுமே...
ஆகமொத்தத்தில் அடுத்தவருடம்- 'தல' வருடம்!! அட்டகாசம்!! :))))))
'காந்தக் கண்ணழகி' மாடஸ்டி மறுபடியும் வருவது மகிழ்ச்சிதான்! நல்ல கதைகள் வரவேற்கப்படுகின்றன.
தன்னிடமிருக்கும் 'இரத்தப்படலத்தை' அனுப்பி வைத்து மீண்டும் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்த அந்த தயாள குணம் கொண்ட நண்பருக்கு எனது நன்றிகளும், வாழ்த்துகளும்! (மீண்டும் ஒருமுறை எனக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளா? ) இம்முறை தம்பி சத்தியா பரிசைத் தட்டிச் செல்ல என் வாழ்த்துகள்! :)
விஜய்..காந்த கண்ண ள கியா ..வீடு எங்கே அதே இடத்தில்தானே ..
DeleteHappy sunday post..
ReplyDelete//But - இவரது கதைகள் வெளியாகும் இதழ்களின் விலைகள் மாத்திரம் - இதர b&w இதழ்களின் விலையிலிருந்து சற்றே கூடுதலாய் இருக்கும் ; அல்லது பக்கங்கள் குறைவாய் இருக்கும் //
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார்,
இவ்வளவு சிரமங்களோடு மடஸ்டி (ஸாரி) வந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் என்ன.?
மேடம் மட்டுமே துயிலெல போகிறாரா அல்லது வேறு நாயகர்களும் உண்டா சார்.?
Mecheri Mangoose : //இவ்வளவு சிரமங்களோடு மடஸ்டி (ஸாரி) வந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் என்ன.? //
DeleteRedirect to : Parani from Bangalore !
ready to face with steel claw
Deleteஹ ஹ ஹா ....சரி அ ஆசை படுறாங்க விட்டுடுவோம் மேச்சேரி மங்கூஸ்
Deleteஇரத்தப்படலம் வேண்டும். பரிசு வாங்கும் அளவுக்கு வசனம் எழுத வராது..இந்த தருமிக்காக பாடல் எழுதி தரும் சொக்கநாதர் யாராவது இருக்கிங்களா?
ReplyDeleteமாடஸ்டியின் கண்கள்... அடடாடா... என்ன பெண் .. என்னா கண்... ஆஹா.. சூப்பர்... தையல் போட முடியாது மாடஸ்டியின் கண்களுக்கு...
ReplyDeleteSankar R. : சுலபமாய் ஒரு கறுப்புக் கண்ணாடியைப் போட்டு விட முடியாதா ? :-)
Deleteநீங்கள் ரொம்ப நல்லவர் அப்படிலாம் செய்யமாட்டிங்க சார்..
Deleteஅந்த மாதிரி x ரே கண்ணாடியா சார் !
Deleteஹாஹாஹா.!
Deleteமேலே இருக்கும் அத்தனை கமெண்ட்ஸும் LOL ரகம்! :))))
Deletemodesty யின் மறு பிரவேசம் மனதை கவ்வுகிறது ஆனால் இதுவரை வந்த புதிய நண்பர்களின்
ReplyDeleteபிரவேசம் புதிய உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கிறது
BAMBAM BIGELOW : கவலை வேண்டாம் சார்...நம் வீட்டுப் பிள்ளைகள் காமிக்ஸ் பக்கமாய் கவனம் செலுத்தும் நேரம் இன்னமும் கனியாது போயினும், புது வரவுகள் இல்லாதில்லை ! நம்பிக்கையோடு காத்திருப்போம் !
DeleteCaptions 1 & 2:
ReplyDeleteபழைய காமிக்ஸ்கள வீட்ல அதிக வில கொடுத்து வாங்கி வச்சதுல அரிப்புதான் மிச்சம், அம்மா முடியலையே ...
உங்களுக்காச்சும் தேவல, எனக்கு கிராபிக்ஸ் நாவல் படிச்சு வந்த அரிப்பு, உலக யுத்த கதைங்க வர போகுதுன்னு சொன்னதுமே இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு பா
Second picture :-
அயோ மம்மி ம்ம்ம்மா...
ஏற்கனவே கிராபிக்ஸ் நாவல் படிச்சு மனசு உடைஞ்சு போனவன் கிட்ட உலக யுத்த கதைங்க வருதுன்னு சொன்னது தப்பா போச்சே....
Just for fun guys :)
உற்சாகம் பீறிடும் பதிவு ...
ReplyDeleteஇம்மாத இதழ்கள் என்றைக்கு நம் கைகளில் இருக்கும் சார்..?30-ந்தேதி ..?
சார் ஷெல்டன் கதைகள் மூன்று பாகங்களில் வந்தால் அவற்றை ஒரே புத்தகமாக வெளியிடுங்கள்.
ReplyDeleteஉதாரணம்.
NBS + HOT and COOL SPECIAL
இதழ்களில் ஒரே கதையை பிரித்து போட்டிருந்தீர்கள்.
2015ல் இது போன்ற கொத்து பரோட்டாக்களை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள் சார்.
முழுமையாக ஒரு கதையை படித்து முடிக்கும்போது ஏற்படும் போது கிடைக்கும் சொல்ல இயலா சந்தோஷம் தொடர்கதைகளில் கிடைப்பதில்லை.(எ.எ..க)
Mecheri Mangoose : தவறான அனுமானம் ! NBS -ல் வந்த 2 பாகங்களே முதல் கதை ! அதன் follow up ஆக வந்த கதை # 3 - தனியானதொரு படைப்பே ! So கொத்துப் புரோட்டாக்கள் போடும் அவசியம் அங்கே நேரவே இல்லை !
Deleteஒரே story line களை பிடித்துக் கொண்டு செல்லும் கதைகள் சகலத்தையும் ஒரே இதழாக வெளியிடுவதாயின் கேப்டன் டைகரின் தற்போதைய கதைகள் மொத்தத்தையும் ; கமான்சே தொடரின் அத்தனை இதழ்களையும் 'எக் தம்'மில் வெளியிட்டால் தான் கரை சேரும் !
ஓ.கே. சார்.
Deleteஇருந்தாலும் முதல் மூன்று பாகங்களும் ஒரே கதையாக தோன்றியது.
எஞ்சி நின்றவனின் கதை புதிய களத்தில் தொடங்கியது. எனவே என்னுடைய கேள்வி அப்படி வந்துவிட்டது.
டைகர் விசயத்தில் நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு சரி (ஹிஹிஹி)
அது ஜூனியர் கண்ட பின்னரே ஆசிரியர் சரி செய்தார் நண்பரே ....ஒரே பாகம் மூலமாய் !
Delete
ReplyDeleteகிட் ஆர்ட்டின் மறுபதிப்பு போடுங்கள் சார்.
மலையோடு மல்யுத்தம்
மிஸ்டர் மஹாராஜா
போன்ற சரவெடி சிரிப்பு தோரணங்கள் சிலவற்றை சேர்த்து வண்ணத்தில் வெளியிடுங்கள் சார்.
தையல் வகுப்புகளுக்கு செலவிடும் தொகையை இப்படி கூட பயண்படுத்தலாமே.?
Mecheri Mangoose : இது தொடர்பான முந்தைய பதிவுகளை நேரம் கிட்டும் போது உருட்டிப் பாருங்களேன் - நிறையவே பேசியுள்ளோம் இங்கே இது பற்றி !
Deleteஉலகநாதன்.பெரியசாமி .இப்போ சண்முகநாதன்...நடத்துங்கள் சார் நடத்துங்கள்
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeletemodesty blaise மீண்டும் வருவது குறித்து மகிழ்ச்சி ! விலை சற்றே அதிகம் என்றாலும் பரவாயில்லை.
மற்ற நாயகரின் தேர்வுகள் எதிர்பார்த்தவையே - உலகநாதன், பெரியசாமி இவர்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார் காமிக்ஸ் சொப்பனம் கந்தசாமி :-)
Raghavan : காமிக்ஸ் சொப்பனம் கந்தசாமி இன்னமும் நிறைய 'சரக்கு' வைத்திருக்கிறார் கைவசம் !
Delete
ReplyDelete//
1.ஏழு முழு ஆண்டுகளைச் செலவிட்டு ஒரு டெக்ஸ் கதைக்கு சித்திரம் போட்டுள்ளார் ஐரோப்பிய ஓவியர் ஒருவர் !! //
அடேங்கப்பா.!!!
'Operation இரத்தப்படலம்'
ReplyDeleteATTEMPT NO. 1
ஸ்கூபி-ரூபி:
எங்க வேணா 'க்ளிக்'குங்க பாஸு!
இவ்வளவு ஸ்பீடா ? அம்பேல்
Delete'Operation இரத்தப்படலம்'
Delete+100 likes :)
ATTEMPT NO. 1-----Super!!!
Nice....
DeleteVery Nice Vijay :-))
Delete//தோட்டாவே நிரப்பாமல் ஓராயிரம் முறை முழங்கும் துப்பாக்கிகளும் ! //
ReplyDeleteடைகர் கனவோடு நின்று விடாமல் அடுத்த வருட நினைவிலும் தொடரட்டும் சார் !
சார் சைமனுக்கு இந்த/அடுத்த மாத இதழில் வாய்ப்புண்டா ?
ReplyDelete//வெறும் கும்மாங்குத்துக்கள் மாத்திரமின்றி - கதையம்சமும் பொருந்திய சாகசங்களைத் தேர்வு செய்ய இம்முறை முனைந்துள்ளேன் ! So இதுவொரு memorable இதழாய் இருக்குமென்ற திட நம்பிக்கை என்னுள் ! //
ReplyDeleteசார் கரும்பே சர்க்கரயாய் மாறுவதோடு நில்லாது சுவை மிகு பலகாரமாய் மாறும் பொது அதுவும் எழுநூறு பக்கம் வண்ணத்தில் அடடா !
முன்னாடி போறவன் கிட்டே நைசா பேசி dress ஐ புடுங்க வேண்டியதுதானேடா முண்டம்
ReplyDeleteகூனா மூனா தனமா பேசாதீங்க chaarge நம்ம டிரஸ் ஐ புடுங்கின வனே அவன்தான்
நல்லாருக்கே.!!!
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteயூகிக்கக் கூடிய தேர்வுகள்.... மாடஸ்டியின் மறுவருகை தவிர! கிளாசிக் கதைகள் என்ற அடிப்படையில் வருடத்திற்கு ஓரிரண்டு கதைகள் இது போல வரலாம் தான்...
//ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கம்//
Road to Perdition?
// அக்டோபர் இறுதியினில் காத்திருக்கும் ஒரு பதிவானது நிச்சயமாய் ஒரு கலக்கு கலக்கவிருக்கிறது ! Wait n' watch guys...!//
ஒரே மாதத்தில் எகிறி இருக்கும் லைக் எண்ணிக்கையை (1711) வைத்துப் பார்க்கும் போது, அக்டோபர் இறுதியில் ஃபேஸ்புக் 2000 லைக்ஸ் ஸ்பெஷல் அறிவிப்பு வரும் போலிருக்கிறதே?! ;)
(போட்டியில் கலந்து கொள்ளாத) கேப்ஷன்ஸ்:
***
படம் 1 - பெட்டி 1: வடக்குப் படைகளை முடக்குவதற்காக, அடுத்த வருஷம் மாடஸ்டியையும், அதுக்கடுத்த வருஷம் மாயாவியையும் களத்துல எறக்கறோம்!
ப1 பெ2: எனக்கு இப்பவே ஒடம்பெல்லாம் புல்லரிக்குது சார்ஜ்!
***
***
ப2 பெ1: இரத்தப் படலம் ஹீரோவோட ஹேர்ஸ்டைல் சூப்பர்னு சொன்னதுக்கு, உங்க வழுக்கை மண்டை மாதிரியே எனக்கும் மொட்டை அடிச்சுட்டீங்களே, இது நியாயமா பாஸ்?
ப2 பெ2: புலம்பாதேடா பயலே... அந்தக் கதையோட ஹீரோவ விட, வில்லன் மங்கூஸ் தான் இப்ப ரொம்ப ஃபேமஸ்!
***
ஆர்ட்டின் , ஷெரிப் கலக்கல் டைமிங் அருமை நண்பரே
Deleteசெல்டனுக்கு ஐந்தாம் இடம் ஒதுக்கியது அநியாயம் சார் !
ReplyDeleteபரணிதரன் இனிமேல் அப்படி பேச மாட்டேன் என்று கூறி விட்டார் சார் ....உங்களை சொல்லி குத்தமில்லை ....நினைவிலும் கனவிலும் அவர் கடிதம் படுத்தும் பாடு ....அவர் திருந்தி நல்லமுறையில் சுற்றி அலைவதாய் ஈரோட்டு பக்கம் கேள்வி....
next மீட் பண்ணுவோம்
=='அன்பார்ந்த செல்லக் குழந்தைகளே' என்ற விளிப்போடு ஹாட்லைன் எழுதுவது போலொரு பயங்கரக் கனவு!'==
ReplyDeleteகனவா அல்லது சீக்கிரமே நடக்கப்போகும் நனவா சார்??!! ;)
//=='அன்பார்ந்த செல்லக் குழந்தைகளே' என்ற விளிப்போடு ஹாட்லைன் எழுதுவது போலொரு பயங்கரக் கனவு!'==
Deleteகனவா அல்லது சீக்கிரமே நடக்கப்போகும் நனவா சார்??!! ;)///
+1 Hope Some secret plan is there for kids
பாஸ் கதற கதற ஏன் மண்டையை மொட்டை அடிசுட்டீ ங் களே why this கொலை வெறி பாஸ்
ReplyDeletesorrydaa ஏன் செல்லம் ஒருவேளை நீதான் மரமண்டை யாய் இருப்பியோன்னு ஒரு டவுட்
//sorrydaa ஏன் செல்லம் ஒருவேளை நீதான் மரமண்டை யாய் இருப்பியோன்னு ஒரு டவுட்///
Delete:D
Timing comedy :-))
Deleteஹா... ஹா... :)
Deleteலயன் 250வது இதழ் போன்ற மைல்கல் இதழில் கண்டிப்பாக அரை டஜன் கதைகளாவது
ReplyDeleteஇடம் பெறும்படி செய்யுங்கள் சார்! 2015 தேர்வுகள் எல்லாம் டாப் ஆக உள்ளன சார்!
கார்சனின் கடந்த காலம்...வெளியீடு no:237 என்றால்...லயனின் 250-வது இதழ் வெளியிட
ReplyDeleteஇன்னும் 13 மாதங்கள் உள்ளன.அப்படிஎன்றால் ஜனவரி 2016 என கணக்கு சொல்கிறது.
எடிட்டர் 2015 ல் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.அப்படிஎன்றால்....
2013-மே மாதம் மட்டும் 2 லயன் இதழ்கள்(+1) என்றால்...
2014-ஏப்ரல்&மே மாதங்களில் மட்டும் 4 இதழ்கள்(+2) என்றால்...
2015-மார்ச்&ஏப்ரல்&மே மாதங்களில் 6 இதழ்கள் (+3) என இந்த கணக்கு சொல்கிறது.
ஆக இன்னும் பத்து மாதங்களில்,அதாவது ஈரோடு புத்தகத்திருவிழவில் தல 'டெக்ஸ்'
பட்டையை கிளப்பபோகிறார். ஈரோடு நண்பர்களே வணவேடிக்கையுடன் திருவிழா
எடுக்க இப்போதே திட்டமிட தயாராவோமா...!
(இந்த வருடம் கூடுதலாக 3 லயன் இதழ்கள் கிடைக்கபோகிறது....இன்னொரு கணக்கும் இதை
ஆணித்தனமாக உறுதிசெய்கிறது...விடைசொல்லுங்கபார்போம்..!)
இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக extra வெளியீடு வர வாய்ப்புள்ளதோ?
Delete2014-ஏப்ரல்&மே&செப் ஆகிய இந்த முன்று மாதங்களிலும் 2 லயன் என வந்துவிட்டதால்
Deleteஇந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக extra வெளியீடு கிடைக்க வாய்ப்பு குறைவுதான்.
கிடைத்தால் ரெட்டிப்பு சந்தோஷம்...சத்யா..!
நான் சொல்லவந்தது, ஈரோடு புத்தகத்திருவிழவில் தல 'டெக்ஸ்'கதையுடன்
லயனின் 250-வது இதழ் வருவது உறுதி ! காரணம் ரொம்பவும் சிம்பிள்...
சென்னைக்கு,'தளபதி' டைகர் ! ஈரோடுக்கு 'தல' டெக்ஸ் !
சென்னைக்கு NBS போல பெரிய அசத்தல்...
ஈரோடுக்கு LMS போலவே குண்டு அசத்தல்....OK !
எதிர்வரும் 10வது மாதத்தில் லயனின் 250-வது இதழ் வெளிவரும்
என்பதால் இந்த 10 மாதத்தில் 13 லயன் உறுதி !
(கூட்டி கழிச்சி பாருங்க..கணக்கு சரியா வரும்..ஹிஹி..)
//இந்த 10 மாதத்தில் 13 லயன் உறுதி !//
Delete13 உறுதி
ReplyDeleteசார்ஜ் அவரு எடிட்டர்னு சொல்லிட்டு இத மட்டும் இவனுக கைல குடுத்துட்டாரே...சும்மாவே கிழி கிழின்னு கிழிப்பாணுக ....அவரே கிழிச்சு விட்டுட்டாரே ...சும்மா விடகூடாது ...
அந்த மாடஸ்டி பொம்பளைக்கு மட்டும் ஒரு நியாயம் ....நமக்கு ஒரு நியாயமா ....ஆண் பாவம் பொல்லாதது...வாசகர்க தப்பு செஞ்சா ஆசிரியர்கிட்ட முறையிடலாம் ...ஆசிரியரே தப்பு செஞ்சா
Appo xiii mystery kidaiyatha
ReplyDelete:-(
Delete"சட்ட கிழிஞ்சிருந்தா நெஞ்ச நிமித்தி நடந்திடலாம் ...ட்ரௌசர் கிளிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் "
ReplyDelete"ஸ்கூபி வாய மூடிட்டு வரப்போறியா , இல்ல அதையும் உருவட்டா "
==ஏழு முழு ஆண்டுகளைச் செலவிட்டு ஒரு டெக்ஸ் கதைக்கு சித்திரம் போட்டுள்ளார் ஐரோப்பிய ஓவியர் ஒருவர் !! அவரது அசாத்திய கைவண்ணத்தை 2015-ல் நாம் ரசித்திடக் காத்துள்ளோம் !!==
ReplyDelete==ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் !! இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !!==
நான் மெர்சலாயிட்டேன்!! :))
ஆர்ட்டின் ," ஐயோ ! அந்த உடை எனக்கு வேணும் .....ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் "
ReplyDeleteஷெரிப் , " டேய் சத்தம் போட்டு காட்டி குடுத்துராத ! அவனுக ரகள பொருக்காம ஆசிரியர் நம்மகிட்ட இருக்குறத கழட்டி அவனுக கைல குடுத்துற போறார் "
அடுத்த. வருடம் சார் ஒரே ஒரு ஸ்பைடர் மட்டும் வண்ணத்தில்....
ReplyDeletePlease allocate at least TWO SLOTS EACH FOR SPIDER & STEEL CLAW each year...you can not completely forget those heros
ReplyDeleteVijayan sir..... if u don't assure "SPIDER and STEEL CLAW" comics collection reprint in the near future ...I will have to file a case against u in a special court....
ReplyDeleteWarm welcome Arul.
Deletethank u
Deleteவிஜயன் சார், மாடஸ்டி கதைகள் அடுத்த வருடம் முதல் வரும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது, மறுவருகையில் மிக சிறந்த கதைகளை மட்டும் வெளி ஈட வேண்டும். நண்பர் கார்த்திக் சொன்னது போல் முடிந்தால் மாடஸ்டியின் பழைய கிளாசிக் கதைகளையும் வருடம் 2 வெளி ஈட வேண்டும்.
ReplyDelete2015 காமிக்ஸ் காலண்டரில் டாப் 5 எதிர்பார்த்தது, ஆனால் டாப் 6 ஆக மாடஸ்டியை தேர்ந்து எடுத்தது இன்ப அதிர்ச்சி; நன்றிகள் பல.
// ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் // சும்மாவே ஆஸ்கார் வென்ற படங்கள் எனக்கு பிடிக்காது, இதில் அது போன்ற காமிக்ஸ் ஆ? கண்ண கட்டுது, கொட்டாவி வருது.
லார்கோ- இது போன்ற குறைந்த தொடர்கள் கொண்ட கதைகளை விரைவில் முடித்து விட்டு, புதிய நாயகர்களின் கதைகளை அறிமுகபடுத்தவும்.
==முன்பெல்லாம் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்ட கையோடு "ஸ்பைடர்" என்று பவ்யமாய் எழுதி விட்டுத் தான் ==
ReplyDelete==அட்டைப்படத்தினில் ஒரு ஓரமாகவாவது தனது அழகு வதனத்தையும், உட்பக்கங்களில் ஒரு நாலே நாலு பக்கங்களிலாவது தலைவர் தலைகாட்டினாலும் போதும் - அந்த இதழ் ஹிட்==
நீங்களும் ஸ்பைடரை ரொம்பத்தான் மிஸ் செய்கிறீர்கள் போலிருக்கிறது!! என்றேனும் ஒரு அட்டகாசமான கிளாசிக் ஸ்பைடர் டைஜஸ்ட் வருமா சார்??!!
//நீங்களும் ஸ்பைடரை ரொம்பத்தான் மிஸ் செய்கிறீர்கள் போலிருக்கிறது!! என்றேனும் ஒரு அட்டகாசமான கிளாசிக் ஸ்பைடர் டைஜஸ்ட் வருமா சார்??!!//
Deleteவருமா சார் ?
லார்கோவின் புது வரவு மகிழ்ச்சி அளிக்கிறது ...வான் ஹாமேவுக்கும் லார்கோவுக்கும் நீண்ட ஆயுள் வேண்டி பிராத்திப்போம் !
ReplyDeleteடெக்ஸ் கதை ஏழு வருட முயற்ச்சியில் ! டைகர் கண்மணிகளே மூர்ச்ச்சை ஆகி விடாதீர்கள் ...மூச்சு விட்டு கொள்ளுங்கள் !
lion ......250......SUPER NEWS
ReplyDeleteOCT NEW PADHİVU.......SUPER
LAARGO...SHELTEN....LAKKİ.....COMANCHE......SUPER
MAADASTHİ....SUPER O SUPER.....
OSKAAR........ ???
மீள்வருகை புரியும் என்றும் இனிய இளவரசிக்கு, வந்தனங்கள் !!
ReplyDeleteகூர்மண்டையரையும் (அபாயம் அல்ல – எட்டுக்கால்) வண்ணத்தில், தமிழ் பேசி பார்த்து விட்டால், எனது ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும் !!!
@ Dr. A. K. K. Raja
Delete//வண்ணத்தில், தமிழ் பேசி பார்த்து விட்டால், எனது ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும் !!!//
டாக்டர் சார்,உங்கள் செந்தமிழ்...'ஸ்பைடர்' மேல் உள்ள காதலின் ஆழத்தை,
அழகாக வெளிப்படுத்துகிறது !
பாஸ் ..திருப்ப தி போய் மொட்டை போட்டது தெரியாம இருக்க நான் வாங்கின விக்கை நீங்க ஆட்டைய
ReplyDeleteபோடுறது நியாயமில்லே
அந்த புது டீச்சர் கிராஸ் ஆகி போற வரைக்கும் இந்த சீப்பாலே சீவுற மாதிரி ஆக்ட் குடுக்கிறேன் கண்டுகாதேடா என் செல்லம்
@ BAMBAM BIGELOW
Deleteநண்பரே அட்டகாசம்,அருமையான நகைசுவை !
இதற்கு பரிசு பெற நிறைய வாய்ப்புள்ளது..நண்பரே !
(சோறு தண்ணி எல்லாம் இப்பதான்தான் சாப்பிட்டேங்க..)
நண்பர்களின் சந்தோஷமே எ ன் சந்தோசம் நண்பரே
Deleteவணக்கம் நண்பர்களே !!!
ReplyDeleteநேற்று சென்னையில் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு, மாலை room க்கு திரும்ப முடியாத “சூழல்” ஏற்பட்டதால் இப்பொழுது தான் ஆசிரியரின் பதிவைக் காண முடிந்தது....
“லயனின் 250 வது இதழில் டெக்ஸ், மீண்டும் மாடஸ்டி, ஆஸ்கார் வென்ற திரைப்படத்தின் காமிக்ஸ்,விழிகளைப் பனிக்கச் செய்யும் horror கிராபிக் நாவல்”...
மிக முக்கியமாக மீண்டும் caption பரிசுப் போட்டி....
Woooowwww…wooooww…சான்ஸே இல்ல…..
மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது :):):):):)
//(போராட்டக் குழுத் தலைவரை தற்காலிகமாகவாவது ஸ்டோர் ரூமில் போட்டுப் பூட்டி வைக்கும் பணியை யார் ஏற்றுக் கொள்வது ?)//
விடுங்க எடிட்டர் சார், இந்த தடவை அவரை “கிட்னா” பண்ணிடலாம்... by “kidna group” member… :D
DONE DONE ! :D
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete
Deleteimage1
image2
Nice... :)
Delete102
ReplyDeleteகமெண்ட் மேல கமெண்ட் போட்டா, ஆசிரியரும் அசைவாருங்கறது மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகிவிட்டது. (மாடஸ்டியை தவிர்க்க எத்தனை காரணம் சொல்லியிருப்பீர்கள் சார்...???) மாடஸ்டி மீண்டும் வருவதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். நல்ல கதைகளாக தெரிவுசெய்வீர்கள் என்று தெரியும் சார். அற்புதமான சித்திரப் பாணி கொண்ட கதைகளாகவும் தெரிவுசெய்யுங்கள். கற்கால வேட்டை, பச்சை வனப்பாவை, திகில் நகரம் டோக்கியோ போன்றவை கதைக்காக மட்டுமல்ல, சித்திரங்களுக்காகவும் சிலாகிக்கப்பட்டவையல்லவா? சித்திரங்களை முன்புபோல ரொம்ப சிறிதாக்கிவிடாமல் ஓரளவு பெரிய சித்திரங்களாகவே வெளியிடுங்கள்!
ReplyDelete///மாடஸ்டி மீண்டும் வருவதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். நல்ல கதைகளாக தெரிவுசெய்வீர்கள் என்று தெரியும் சார். அற்புதமான சித்திரப் பாணி கொண்ட கதைகளாகவும் தெரிவுசெய்யுங்கள். கற்கால வேட்டை, பச்சை வனப்பாவை, திகில் நகரம் டோக்கியோ போன்றவை கதைக்காக மட்டுமல்ல, சித்திரங்களுக்காகவும் சிலாகிக்கப்பட்டவையல்லவா? சித்திரங்களை முன்புபோல ரொம்ப சிறிதாக்கிவிடாமல் ஓரளவு பெரிய சித்திரங்களாகவே வெளியிடுங்கள்!///
Delete+1
+1
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅமர்க்களம் சத்யா,
Deleteஉங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி மேச்சரி அண்ணா :)
Deleteசாரி...அந்தப் பதிவு bold லெட்டரில் பதிவிட்டது பார்க்க கண்களுக்கு உறுத்தியதால், delete செய்து அதைக் மீண்டும் கீழே பதிவு செய்து உள்ளேன்..
Deleteசத்யா,
Delete"அண்ணா "ன்னு சொல்லாதிங்க.ரொம்ப கஷ்ஷ்ஷ்டமா இருக்கு. மாடஸ்டி வேற வரப்போகுதாம்.அந்த கோடாரிக் கொண்டை போடும் குமரிப் பொண்ணு என்னைய பெருசுன்னு தப்பா நெனச்சிட்டா என்ன பண்றது.
குல தெய்வம் கோயில்ல வெச்சி மொட்டையடிச்சி காதுகுத்தி கெடாவெட்டி விருந்து போட்டு பேரு வெச்சாங்க..எஎன்னோட பேரு,
மங்கூஸ்ஸ்ஸ்.!!!!
LOL :)
Deleteசரி நண்பரே... :)
@ மங்கூஸ்
Delete:D
Caption 1:
ReplyDeleteஸ்கூபி: நம்மளே போருக்குப் போறதுக்குப் பயந்துக்கிட்டு மாறு வேஷத்துல இந்த காட்டுல திரியறோம்...இவன் யாரு புதுசா?
ரூபி: இவர தெரியலையா பாஸ்...இவரு தான் நம்ம படைத்தளபதி...போரில் எல்லா வீரர்களையும் 'சார்ஜ்' ன்னு சொல்லியே காலி பண்ணிட்டு, மாறுவேஷத்துல ஆள் தேடி இங்கே அலையறார்...அவருக்குத் தெரிஞ்ச பாஷைல கூப்பிடுறேன் திரும்புவார் பாருங்க...
”சாஆஅர்ர்ர்ர்ஜ்ஜ்ஜ்ஜ்”....
அருமை !
Delete//மாடஸ்டி வருகிறார் என்ற உடனேயே எங்கள் DTP ஆப்பெரேடர்கள் தையல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி விட்டனர் என்பது கொசுறுச் செய்தி !!)//
ReplyDeleteLOL
// இத்தொடரில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதைகள் வெகு சொற்பமே என்பதால் - லார்கோவோடு பிள்ளையார் சுழி போடும் luxury இன்னும் அதிக காலத்துக்கு நீண்டிடப் போவதில்லை ! //
ReplyDeleteபரவாயில்லை சார்.
இன்னும் எத்தனை ரத்தப்படலங்கள், லார்கோ வின்ச்சுகள், அங்கே குவிந்து கிடக்கிறதோ தெரியவில்லை.(உங்களுக்கு தெரிந்திருக்கும்) .
நிறைய்ய்ய எதிர்பார்க்கிறோம் சார்.கொண்டு வாருங்கள்.கொண்டாட தயாராக இருக்கிறோம்.
+1
Delete
ReplyDeleteஉங்கள் தேர்வு என்றுமே சோடை போனதில்லை.
புது பள பள ஹீரோ லார்கோ........... மாறாத டெக்ஸ் வில்லர்,.......... கலக்கல் லக்கி லூக்,............. மிடுக்கும் வேய்ன் ஷெல்டன்,................. எவர்கிரீன் மாடஸ்டி.........
சயின்ஸ் பிக்ஸ்சன் கதைகள் ஒன்றிரண்டு வருவது நலம்.
வண்ண லேட்டஸ்ட் புது யுவதி ஒன்றை அறிமுக படுத்தலாம்.
ReplyDelete// !! கடந்த 2 நாட்களும் என் தலைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஷண்டிங் செய்து வரும் இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !! //
இப்படி உசுப்பேத்தி., blood pressure அ எகிற வெக்கிறிங்களே சார்,!
தே..ர..தேடலுக்கல்ல த்ரில்லர் இன்னும் உச்சிமண்டையில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
இ.இ.கொல்லாதே ஆவலைத் தூண்டி அலைகழிக்கிறது.
இப்போது இன்னொன்று .,
ஆஹா.!! ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.
டியர் ஆதி & மங்கூஸ்,
ReplyDeleteசென்ற போட்டியிலேயே நீங்கள் பரிசு வாங்கிவிட்டாலும் இந்த போட்டியில் பங்கேற்கக்கூடாது என்று அர்த்தமில்லையே? களத்தில் இறங்கி உங்கள் கற்பனை வளத்தைக் காட்டலாமே? ஒருவேளை மீண்டும் நீங்களே ஜெயித்தால்... உங்களைக் களமிறக்கி அழகு பார்த்திட முனைப்பாய் இருந்தவர் யாரென்று தேடி(!) கண்டுபிடித்துப் பரிசை அவருக்கு அளிக்கலாமே? ;)
அப்படிங்கிறீங்க.! சரி ஒவ்வொரு முடியா பிச்சு Caption போட முயற்சி செய்வோம்.
Delete//உங்களைக் களமிறக்கி அழகு பார்த்திட முனைப்பாய் இருந்தவர் யாரென்று தேடி(!) கண்டுபிடித்துப் பரிசை அவருக்கு அளிக்கலாமே? ;)//
என்ன ஒரு புத்திசாலித்தனம்.
Deleteஈரோடு விஜய் அண்ணா,மாயாவி சிவா,ஸ்டீல் க்ளா,மேச்சேரி மங்கூஸ்,satiskumar s, ஆதி தாமிரா, b’lore parani,bam bam,podiyan,tex sampath etc etc… அனைவரும் இந்தப் போட்டியில் போட்டி கலந்து கொண்டால் தான் சுவாரசியமாக இருக்கும்...
But one condition…
இந்த தடவை யார் ஜெயிச்சாலும் கிடைக்குற book ah ‘காங்கேயம் அட்ரஸ்’ க்கு அனுப்பிச்சுடுவேன்னு ‘மாடஸ்டி மேலே சத்தியம்’ பண்ணிட்டு ஆரம்பிக்கலாம்... :D :D
இத்தனை பேர kidna பண்ணா company கட்டுப்படி ஆகாது...பாஸ்...
Caption 2:
ReplyDeleteகிட்: பாஸ் சிவனேனு தூங்கிட்டு இருந்த என்னை எதுக்கு எழுப்பி கூட்டி வந்து மொட்டை அடிக்கிறீங்க...ம்ஹூம்ம்...
டெபுடி: ரின் டின் கேனுக்கெல்லாம் கூட தனியா ஒரு காமிக்ஸ் வெளிவந்துடுச்சு...நாம எத்தனை நாளைக்குத்தான் “சிக் பில் & கோ” ன்னே காலத்தை ஓட்டறது...”காலனின் கைக்கூலி” மாதிரியே “ஒரு டெபுடியின் தினக்கூலி” ன்னு ஆசிரியர் கதை ரெடி பண்றாராம்...அதுல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான்...அதுக்கு தான் இந்த கெட்டப் சேஞ்ச்...முதல்ல அழுகறதை நிறுத்து டா சகிக்கலை...
//.”காலனின் கைக்கூலி” மாதிரியே “ஒரு டெபுடியின் தினக்கூலி” ன்னு ஆசிரியர் கதை ரெடி பண்றாராம்...///
Delete:D சூப்பர் சத்யா!
கன்ஃப்பார்முடுங்க.!!!
Delete(ஆனா சத்யா மொட்டை அடித்தவர் சீஃப், அடிக்கப்பட்டவர்தான் டெபுடி.)
நன்றி...நண்பர்களே :)
DeleteSorry...இங்கே கரண்ட் இல்லை...புழுக்கத்தில் உட்கார்ந்து டைப் செய்வதால்...டெபுடியையும்...ஷெரிப்பயையும் மாத்தி விட்டேன்...
ஒருவேளை “ஒரு டெபுடியின் தினக்கூலி” யில் கதையே அப்படித்தானோ என்னவோ... :D
'Operation இரத்தப்படலம்'
ReplyDeleteATTEMPT NO. 3
ஸ்கூபி-ரூபி
VIJAY SUPER..CONTINUE PLEASE
Deleteஎனக்கில்லை எனக்கில்லை ....இதையும் இவரே ...
Delete'Operation இரத்தப்படலம்'
ReplyDeleteATTEMPT NO. 4
ஆர்டின்-ஷெரீப்
லேசா அரிக்குது சொரிஞ்சு விடுடான்னு சொன்னதுக்கு எனக்கு தெரிஞ்ச மூலிகை வைத்தியன்
Deleteஇருக்கான் குண ப் படுத் துவான் னு கூட்டிட்டு வந்து உடம்பு பூரா அரிக்க வச்சுட் டியேடா
சாரி சார்ஜ் languvage problem ..அரிப்பு போகன்னு நான் சொன்னதை அரிப்பு வரணும்னு அவன்
புரிஞ்சுகிட்டான்
செம....கலக்குறீங்க... :)
Deleteஹ ஹ ஹா...
Deleteயார்ரா அங்கே எட்டிப் பார்க்கிறது?என் செல்ல ஆர்டினுக்கு நான் மொட்டை அடிப்பேன்.என்னமும்
ReplyDeleteசெய்வேன்
பாஸ் நீங்க மறுபடியும் ஷெரிப்பா தேர்வானதுக்கு உங்க தலையை மொட்டை அடிக் கிற தாத்தான்
வேண்டி இருந்து இருக்கணும்.
என்னுடைய Captionகள் போட்டிக்கு அல்ல பொழுதுபோக்க.!!
ReplyDeleteருபி.: அந்தப் பொண்ணு மஸாஜ் பண்ணிவிடறேன்னு காட்டுகுள்ள கூட்டிப்போகும்போதே லேசா டவுட்டு வந்திச்சி ஸ்கூபி, ஒரு குரூப்பே வந்து எல்லாத்தையும் உருவிட்டானுங்க, படுபாவிங்க.!! அரிப்பு பவுடர வேற பூசிட்டானுங்க.ஆனா ஷூவையும் தொப்பியும் ஏன் விட்டுட்டானுங்கன்னுதான் புரியல.
ஸ்கூபி.: தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேத்து கெடுத்துச்சாம்னு ஒரு சொலவடை இருக்கு.என்னையும் சேத்து சிக்க வெச்சிட்டிங்களே சார்ஜ். சரிசரி முன்னால போறவங்கிட்ட வேற பாலீஸா சொல்லியிருக்கேன். கெடுத்திராதிங்க.
ஹா...ஹா...ஹா...அட்டகாசம்...சூப்பரப்பு!
Deleteஹ ஹ ஹா ...
Deleteஆர்ட்டின்.:சீஃப்,! ஸ்கூல்மிஸ் என்னோட ஹேர்ஸ்டைல் நல்லாயிருக்குன்னு சொன்னதுக்காக பிடிச்சி மொட்டையடிச்சிட்டீங்க, பரவாயில்ல.,ஆனா கண்றாவியா ஒரு விக்கு வெச்சிகிட்டு நீங்க யூத்துன்னு அலப்பறை பண்றத பாத்தா அழுகாச்சிய கன்ட்ரோலே பண்ணமுடியல சீஃப்,! பூவ்வ்வ்வ்வ்வ்.,பூவ்வ்வ்வ்வ்வ்.
ReplyDeleteடாக்புல்.: டேய் மாடர்ன் மங்கூஸ், அந்த மிஸ் வந்துகிட்டு இருக்கா.! நான் அவள டாவு கட்றேன். அவகிட்ட நீயும் நானும் கிளாஸ்மேட்டுன்னு சொல்லியிருக்கேன். மாத்தி ஏதாவது சொன்னே.,மவனே இதே கத்தியால அந்த போண்டா மூக்க அறுத்திடுவேன் ராஸ்கோல் மைண்ட் இட்.
அய்யோ...பின்றிங்க மிஸ்டர் மங்குஸ்... இன்னிக்கு ராத்திரிபுற
Deleteஉங்க காமெடி நினைச்சி,தூக்கத்துல சிரிக்கிறத கேட்டு... 'வீட்ல'
தூக்கங்கெட்டு செமத்திய வாங்கபோறேன் !
விடுங்க மாயாவி, புதுசா என்ன வாங்கிட போறோம். ரொட்டீனா நடக்கறதுதானே.!
Deleteஎங்க வீட்ல
என்ன அவ அடிக்க
அவ என்ன அடிக்க
அதுவே பழகிப் போச்சு.!
//என்ன அவ அடிக்க
Deleteஅவ என்ன அடிக்க//
நாம அடிக்க 'சான்சே' கிடைக்காதா ?
எல்லாரு வீடுலேயும் இதே தானா....
//அவகிட்ட நீயும் நானும் கிளாஸ்மேட்டுன்னு சொல்லியிருக்கேன். மாத்தி ஏதாவது சொன்னே.,மவனே இதே கத்தியால அந்த போண்டா மூக்க அறுத்திடுவேன் ராஸ்கோல் மைண்ட் இட்///
Delete:D
ஹ ஹ ஹா
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteகார்சனின் கடந்த காலத்தில் வரும் ஒரு உரையாடலில் எனக்கொரு சந்தேகம்... (It's better than never.!)
டெக்ஸ்சும் கிட்டும் ரயிலேறுவதற்கு முன்னால் ஒரு இரவை குதிரையில் கடப்பார்கள்.. அப்போது உணவு சமைக்கும் காட்சியொன்றில் "பெம்மிகானை நன்றாக கடித்து சாப்பிட வேண்டும்., இல்லையெனில் செரிக்காது" என்று டெக்ஸ் கூறுவார்.
பெம்மிகான் என்று ஒரு உணவு வகை இருக்கிறதா அல்லது "பேபி கார்ன்" தான் அச்சுப்பிழையில் பெம்மிகான் ஆகிவிட்டதா?
Modesty Blaise rebootற்கு நல்வரவேற்பு ! மேலும் பல பழைய characterகளுக்கு reboot கொடுக்கவும் ! நாளை இம்மாத வெளியிடுகள் சந்தாதாரர்களுக்கு கிடைக்குமா?- Courier officeய் முற்றுகையிடுவோர் சங்கம்
ReplyDeleteவிஜயன் சார், கடந்த "caption" போட்டியில் வென்ற மற்றும் இந்த "caption" போட்டியில் வெற்றி பெறப்போகும் "caption"களை நமது அடுத்த (தீபாவளி) புத்தகம்களில் வெளி இட்டால் நன்றாக இருக்கும், முடிந்தால் வெற்றி பெற்ற நமது நண்பர்களின் புகைபடம்களையும் இணைத்து வெளி இட வேண்டும்; வாசகர் ஸ்பாட் லைட் என்ற பகுதியில் வெளி இடலாம்.
ReplyDelete2015 அட்டவணையில் இடம் பெற்றவர் ஏதோவொரு
ReplyDeleteஒரு விஷத்தை பார்த்து விட்டார்...!
அவரை பார்க்க...இங்கே'கிளிக்'
காலைல முதல் வேலையா அந்த 'விஷத்தை' போட்டுவிடுங்க மாயாவி! அப்படியென்ன அதிர்ச்சியோ?!
Deleteவேற என்ன.,? மாடஸ்டி மறுபடியும் வரப்போகுதே.!!
Delete//அந்த 'விஷத்தை' போட்டுவிடுங்க மாயாவி! //
Delete"விஷயத்தை " ஃப்ரியா விடுங்க விஜய். மாயாவி நல்ல மனிதர்.
டைகர காணலியா ?
Deleteஅப்டேட்ஸ்கள், டீஸர்கள் அருமை. மாடஸ்டி மீள்வது அட்டகாசமான எதிர்பாரா ஒன்று. அடுத்தடுத்த பதிவுகளையும் அப்டேட்டுகளையும், புத்தகங்களையும் காண ஆவல்.. வழக்கம் போல!!
ReplyDelete(எல்லா பதிவுகளுக்கும் இப்படி ஒரு டிஃபால்ட் கமெண்ட் வரச்செய்ய ஏதும் ப்ரொக்ராம் இருக்கா? ஹிஹி!)
'Operation இரத்தப்படலம்'
ReplyDeleteATTEMPT NO. 5
ரூபி: இனிமே நான் ரம்மி விளையாடும்போது பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு 'அதை இறக்குங்க சார்ஜ், இதை இறக்குங்க சார்ஜ்'னு சொல்லிப்பார்... உன்னை கவனிச்சுக்கறேன்! ஒட்டுத் துணிகூட இல்லாம எல்லாத்தையும் ரம்மில விட்டுட்டு இப்படி சொறிஞ்சுகிட்டே சுத்த வேண்டியதாகிடுச்சேடா ஸ்கூபி! நல்ல வேளை... நம்ம தொப்பிகளையாவது விட்டுவச்சானுகளே!
ஸ்கூபி : அவனுக விவரமாத்தான் தொப்பியை விட்டுவச்சிருக்கானுக சார்ஜ்... அதாவது 'தொப்பியை தலைகீழா திருப்பிப் புடிச்சு, பொதுமக்கள்கிட்ட பிச்சை எடுத்துப் பொழைச்சுக்கோங்க'னு அர்த்தம்! எனக்கென்னவோ நம்ம ரெண்டு பேருக்கும் இதுதான் சரிப்பட்டு வரும்னு தோணுது சார்ஜ்!
மாடஸ்டிக்கு நல்வரவு !
ReplyDeleteஅப்படியே சிக் பில்லுக்கும் சார் !
எடிட்டர் சார்,
ReplyDeleteமாடஸ்டியின் வரவு உண்மையிலே ஒரு இன்ப அதிர்ச்சி (மனசே தேதிக்கோங்க கலீல் :-))
அதுவும் இப்போது வரும் தரத்தில் மாடஸ்டியை பார்க்க போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
திரைப்படமாய் வந்ததை காமிக்ஸ் வடிவில் பார்ப்பது என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு முதல் வாழ்த்தை இங்கே தெரிவிக்கிறேன்.
ReplyDeleteஇனிய நண்பர் விஜய்க்கு நானும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !
Deleteஈரோடு விஜய்..இன்று போல என்றும் வாழ்க
Deleteகுருநாதருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வயது பற்றாத காரணத்தால் ,
Deleteபிறந்தநாள் வணக்கங்கள்.!!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஈரோடு விஜய் அண்ணா :):):)
DeleteHappy birth day vijay..
DeleteHAPPY BIRTH DAY VIJAY SIR
Deleteபிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
DeleteWish u a very happy birthday n many more returns!!!
Deleteஹ ஹ ஹா ....விஜய் நேரடியாக இங்கேயே பதியலாமே .....load more உடன் இதுவும் ....
ReplyDeleteவிஜயன் சார்...! 250 வது இதழாய் 1000 கறுப்பு - வெள்ளை பக்கங்களில் டெக்ஸ் வில்லரின் சாகசம் கேட்டால் பேராசை என்பீர்களா?
ReplyDeleteஇரத்த படலத்திற்காக இப்படி ஒரு போட்டியை வச்சுட்டீங்களே சார்..! நமக்கு கற்பனையும் வராது..,காமடியும் வராது. காமிக்ஸ்ஸுன்னா வசனங்கள் மட்டுமல்லவே,அங்கே ஓவியமும் பங்காற்றுகின்றதல்லவா? அடுத்த வாட்டி ஓவியப்போட்டி வைத்தால் ......ஓகே..!ஓகே! கடுப்பாயிடாதீங்க சார்.ஏதோ... கண்ணுமுன்னாலயே இரத்தபடலத்தை கோட்ட விடுற துக்கம்..ம்ம்ம்....!
//விஜயன் சார்...! 250 வது இதழாய் 1000 கறுப்பு - வெள்ளை பக்கங்களில் டெக்ஸ் வில்லரின் சாகசம் கேட்டால் பேராசை என்பீர்களா//
Deleteச்சே ச்சே !
மூலிகையை இடுப்பிலே சுத்திகிட்டு முன்னும் பின்னும் குதிச்சா இளமை ஊஞ்சலாடும்னு
ReplyDeleteசொன்ன வைத்தியன் இவந்தானேடா இவனுக்கு அது வேண்டாமா .full சூட் லே இருக்கான்
கேட்டேனே எனக்கு நானே வைத்தியம் பார்த்துகிட்டா பீசை யார் கிட்டே வாங்குறது ங்கிறான்
அந்த காவடியை ஏற்பாடு பண்ணி இருந்தேனே எங்கே இன்னும் காணோம்
ReplyDeleteபாஸ் பாஸ் ..ஈரோடு விஜய்க்கு இன்னிக்கு பிறந்த நாளாய் இருக்கலாம்..
அதுக்காக எனக்கு மொட்டை போட்டு அலகு குத்தி காவடி தூக்க வைக்கிறது எல்லாம்
toomuch
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் !!!
ReplyDeleteCaption 3:
ReplyDeleteகிட் ஆர்டின்: ம்ஹூம்ம்ம்...புதுக்கதை, கெட்டப் சேஞ்ச் அது இதுன்னு சொல்லி எனக்கு மட்டும் மொட்டை அடிச்சிட்டு...நீங்க ‘விக்’கை மாட்டிக்கிடீங்க...இது கொஞ்சம் கூட நல்லா இல்லை...ங்ங்ங்ங்க்யாயா...
டாக் புல்: ஏண்டா கிட் கண்ணா...உன்னோட ஷெரீஃப் அவ்வளவு கொடுமைக்காரனடா...உனக்கே நல்லா தெரியும் இங்க மொட்டை அடிச்சுக்க என்ன இருக்கு? எனக்கு எப்பவும் ஒரே ‘ஹேர் ஸ்டைல்’ தான டா...அது தான்டா ‘விக்’ மாட்டிக்கிட்டேன்...உனக்கும் ஒண்ணு கொண்டு வந்திருகேன்டா செல்லம்...
அழுகறதை முதல்ல நிறுத்துடா...சத்தம் கேட்டு யாராவது வந்துடப் போறாங்க...அப்புறம் நம்ம கெட்டப் சேஞ்சுக்கே அர்த்தமில்லாம போயிடும்...
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் Dear VIJAY
ReplyDeleteநண்பர் ஈரோடு 'விஜய்' க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசொல்லும் பிரமுகரை பார்க்க...இங்கே'கிளிக்'
ஆஹா !
Delete@mayavi siva:
DeleteSuper !!!
@mayavi siva:
Deleteநான் ஒரு picture ah எடிட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது...நீங்க எப்படித்தான் இத்தனை picture ah எடிட் பண்ணி பதிவிடுறீங்களோ...சான்ஸே இல்ல...
கலக்குறீங்க நண்பரே!!!
SUPER MAYAVI SIR!
DeleteCaption 4 க்கு “இங்கே” க்ளிக் செய்யவும்..
ReplyDeleteசத்யா ...இந்த தடவ விடக்கூடாது ! கண்டிப்பா 'வின்' பண்ணறிங்க ...ஓகே !
Deleteநல்ல பண்ணறிங்க...கிட்ட நெருங்கிட்டிங்க நண்பரே...மிஸ்டர் மங்குஸ்
வர்றவரைக்கும்..நான் உங்களை 'கமான்' கமான்னு கூப்பிடறேன் !
இன்னும் நிறைய யோசிச்சி அள்ளிவிடுங்க..!
" பாஸ் முடியல "
ReplyDelete"டேய் மொட்டையா சத்தமில்லாம சொறிடா , எதிரிக யாராவது சத்தம் கேட்டு வந்து தொலைக்க போறாங்க !"
"பாஸ் என்னோட விக்க என்கிட்ட கொடுத்துருங்க "
Delete"டேய் அந்த பொண்ணுகிட்ட என் தலைய காட்டி கொடுத்துராதடா ...உன்ன மொட்டைன்னு சொல்லிக்கலாம் ...லாலி பாப்பும் , காரமெல்லும் வாங்கி தாரேண்டா செல்லம் !"
Happy birthday vijay sir
ReplyDeleteடாக் புல்: உன்னொட தலையில இருக்குர பேன் கொஞ்சம் கொஞ்சமா உன்னொட மூளைய சாப்பிட்டுகிட்டு இருக்குறதாலதான் நீ இப்படி இருக்க. அதுக்கு இதுதான் ஒரெவழி ( மனசுக்குள் -எனக்கு கமலா மிஸ் கிடைக்கவும் இதான் ஒரெ வழி)
ReplyDeleteகிட்: உன்க தலையில சாப்பிட எதுவும் இல்லததால பேன் எல்லாம் என்னோட தலையில வந்திருக்கும். நீன்க முன்னமே சொல்லி இருந்தா சலூன்லயே பண்ணி இருக்கலாம். அவ்வ்வ்வ்....
தங்க தலைவியின் வருகை.. கிராபிக் நாவல் பிட்டு ... கடைசியா வரப்போகும் பதிவுக்கே ஒரே டீஸர் பிட்டு... கலக்குறீங்க....
ReplyDeleteஎதிபார்ப்பை ஏத்திவிட்டு வேடிக்கை காட்டுறதே வழக்கமா போயுடுச்சு...
"
ReplyDeleteஸ்கூபி எனக்கு கொஞ்சம் சொரிஞ்சு விடேன்டா "
"அந்த வேப்பிலைய பிடுங்கி ஓட்டுங்க "
சார் புத்தகங்களை அனுப்பியாச்சா !
ReplyDeleteஇந்த வருட ஆய்த பூஜை ஆய்தம் தாங்கிய நண்பர்கலோடதானே !
Delete