நண்பர்களே,
ஞாயிறு வணக்கம். சமீப மாதங்களில் வார இறுதிகளின் பெரும்பான்மை எழுதும் பணிகளுக்கோ ; பயணங்களுக்கோ ; அல்லது விட்டத்தின் விஸ்தீரணத்தைக் கணக்கிடும் ஆராய்ச்சிகளுக்கோ செலவாகி வந்ததால் 'ஒரு சண்டே போஸ்ட்' என்பது குதிரைக் கொம்பாகி விட்டது ! ஆனால் "சூப்பர் 6 " & லயனின் 30-வது ஆண்டுமலரின் பணிகளைத் துவக்கிய நாள் தொட்டு, வாரத்தில் நாட்கள் ஏழு மாத்திரமே இருப்பது போதவில்லை என்ற பாடு தான் !! 4 மாத அவகாசம் இருக்கும் போதே 'லப் டப்' சத்தம் கொஞ்சம் அதிகமாகி விட்டது போலொரு பிரமை !! ஏப்ரல் இதழ்களின் இறுதிப் பணிகளைப் பார்வையிடுவது ; அறிவிப்புகளை சரியாய்த் திட்டமிடுவது ; "சிங்கத்தின் சிறு வயதில் " + 2 x ஹாட்லைன் கச்சேரி - என கடந்து சென்ற வாரம் முழுவதும் ஒரு வேலையிலிருந்து அடுத்த வேலைக்குள் குதித்த பாடு தான் !தொடரக் காத்திருக்கும் வாரம் கூட இதே போல் hectic ஆகத் தானிருக்கும் என்பதால் - இந்த ஞாயிறின் விட்டத்து ஆராய்ச்சியை சற்றே தள்ளி வைத்தல் நம் வலைப்பூவிற்கு நலம் பயக்குமெனத் தோன்றியது ! So, here I am :
இதோ ஏப்ரலின் "சற்றே குண்டு" புக்கின் அட்டைப்படம் + ட்ரைலர் ! "குண்டு புக்கின்" காதலர்களுக்கு தொடர் மாதங்களில் இது போல் இதழ்கள் வெளியாவதில் குஷி இருக்கலாம் - but நமது விற்பனையாளர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதான feedback - தொடரும் நாட்களில் தான் நமக்குக் கிட்டும். கடைகளில் விற்பனைக்கு ரூ.60 விலையிலான சிங்கள் இதழ்கள் சற்றே சௌகரியமாய் இருப்பதாக இந்தாண்டின் துவக்கம் முதலாய் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வருகிறேன் ; அதே பாணியில் ரூ.120-க்கும் சிக்கலின்றி வரவேற்பு கிட்டிடும் பட்சத்தில் தலை தப்பித்து விடும் !! விற்பனைக் கதையை ஓரம் கட்டி விட்டு - இம்மதத்துக் காமிக்ஸின் கதைக்குத் தாவும் போது - சமீப அதிரடி வரவுகளில் பிரதானமான ஷெல்டன் நம்மை எதிர்நோக்கிக் காத்திருப்பது புலப்படும் ! காதோர நரை நாயகரின் தொடரில் one of the best என முத்திரை பதித்த சாகசங்கள் இவை என்பதால் இம்மாதம் ஏன் நெற்றியில் கவலை ரேகைகளுக்கு இடமில்லை ! கதையின் ஆக்க்ஷன் சூறாவளி ; சித்திர உச்சங்கள் ; துளியும் தொய்வில்லா plot என தட தடப் பயணம் ஒன்று நமக்குக் காத்துள்ளது என்பதை தைரியமாகச் சொல்ல முடிகிறது ! இம்மாத அட்டைப்படம் நம் ஓவியரின் கைவண்ணமே ; நீங்கள் கம்பியூட்டர் திரையினில் பார்ப்பதை விடவும் அழுத்தமான வர்ணங்களில் அச்சாகியுள்ளது என்பதால் - புக்கில் பார்க்கும் போது இங்கு தெரிவதை விட இன்னமும் எடுப்பாக இருக்கும். பின் அட்டை அவர்களது தயாரிப்பே - background வர்ண மாற்றங்கள் மட்டும் நமது பங்களிப்பு ! உட்பக்க சித்திரங்களைப் பற்றிச் சொல்வதானால் - mindblowing என்ற சொல்லே பொருந்தும் ! முரட்டு truck வண்டிகளை ரசித்து வளர்ந்த ஓவியர் இம்முறை இயந்திரப் படகுகள் ; முரட்டுக் கப்பல்கள் ; ஹெலிகாப்டர் என்று அதகளம் செய்துள்ளார் ! இம்மாதம் ஷெல்டன் ஒரு ஹீரோவெனில் - ஓவியரும் இணையானதொரு ஹீரோ என்றே சொல்லல்லாம் !! கதையீன் நீளமே 102 பக்கங்கள் என்பதால் இந்த இதழில் filler pages ; லொட்டு லொசுக்கு ஏதும் கிடையாது ! ஹாட்லைன் + கதை என்ற சிம்பிள் package இம்முறை !! (அந்தக் குறையை (?!!) நிவர்த்தி செய்திட ஏப்ரலின் இன்னொரு வெளியீடான லக்கி லூக்கின் - "எதிர்வீட்டில் எதிரிகள்" இதழில் வண்டி வண்டியை அறிவிப்பு விளம்பரங்கள் இத்யாதி..இத்யாதி !)
கடந்த பதிவில் புது வரவு MAGIC WIND பற்றியும், அவருக்கொரு பெயர் சூட்டக் கோரியும் நான் எழுதியிருந்தது நிச்சயமாய் மறந்திருக்காது ! (வண்டி வண்டியாய்ப் பெயர்கள் ; suggestions என வலைப்பூவை ஒரு சில நாட்கள் மூழ்கடித்த அனுபவம் அத்தனை சீக்கிரம் மறக்காது !!) நிறையப் பெயர்களைப் பார்த்த பின்னர் நான் மனதில் கொண்டிருந்த "மாயச் சூறாவளி " என்பதை விட - ஒரிஜினல் பெயரான "மேஜிக் விண்ட " தனை அப்படியே பயன்படுத்திடுவது தேவலை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். "மேஜிக் விண்ட்" என்ற பெயரோடும், கதையினுள் "மேஜிகோ" என்ற பிறர் இவனை அழைப்பது போலவும் அமைப்பது சுலபமாய் இருக்குமென்று நினைத்துள்ளேன் ! So - இந்தப் பெயர்களை இங்கே suggest செய்திருந்த நண்பர்கள் சற்றே கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ! உங்களுக்கு மேஜிக் விண்ட் முதல் இதழின் பிரதி நமது compliments உடன் அனுப்பிடப்படும் guys! இது தவிர ஏராளமாய் தலையைக் கசக்கி பெயர் மழை பொழிந்த நண்பர்கள் அனைவரின் ஆர்வத்திற்கும் ஒரு மெகா thanks !!
அப்புறம் விற்பனை தொடர்பான இன்னொரு சேதி ; update ! கடந்த ஒரு மாதமாய் நாம் ஆன்லைன் விற்பனையினை நிறுத்தி வைத்திருந்தது நீங்கள் அறிந்தது தானே ! E-Bay-ல் சிக்கல்கள் சில நேர்ந்தபடியால் இப்போது அதற்கொரு மாற்றைத் தயார் செய்தாகி விட்டோம். www.lioncomics.worldmart.in என்ற தளம் தான் நமது புதிய ஆன்லைன் விற்பனைக் கூடமாகச் செயல்படும் !
முழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் முயற்சியில் அரங்கேறியுள்ள இந்த விற்பனைத் தளம் E-Bay அளவுக்கு efficient ஆக இருக்குமா ? என்பது போகப் போகத் தான் தெரியும் ; ஆனால் அந்தந்த மாதங்களில் - தேவையான இதழ்களை மாத்திரமே ; கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக வாங்கிட நினைக்கும் நண்பர்களுக்கு இது ஒரு சுலப option ஆக இருக்குமென்று நினைக்கிறேன்.இதனில் இன்னமும் செய்யக்கூடிய திருத்தங்கள் ; முன்னேற்றங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயங்கள் எப்போதும் போல் வரவேற்கப்படும் guys - so நீங்கள் ஆன்லைன் வாங்கப் போகும் நண்பர்களாய் இல்லது போனால் கூட அப்பக்கமாய் ஒரு குட்டி விசிட் அடிக்கலாமே ? இன்னும் ஓரிரு வாரங்களில் நமது இணைய தளத்தினிலே ஆன்லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என்பது கொசுறுச் சேதி ! அது முழுக்க துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னாவின் கைவண்ணமாக இருக்கும் ! இது தவிர AMAZON .IN தளத்திலும் நாம் தலைநுழைக்க துணை ஆசிரியர் முயற்சித்து வருகிறார் ! சீக்கிரமே அதுவும் சாத்தியமாகிடும் பட்சத்தில் இணைய உலக நண்பர்களை எட்டிப் பிடிக்க சற்றே வசதியாய் இருக்குமென்று நினைக்கிறேன் ! Fingers crossed !
பெயர் சூட்டல் படலத்தில் உங்களின் உத்வேகத்தைப் பார்த்த போது - KBT - சீசன் 2014-ஐத் துவங்கலாம் போல் தோன்றுகிறது !! இம்முறை வழக்கமான அதே பாணியைப் பின்பற்றாமல் சின்னதாய் ஒரு twist கொடுத்தால் என்னவென்று நினைத்தேன் ! So this is how it will go : ஆர்வம் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வழக்கம் போலவே ஒரு சிறுகதை அனுப்பிடுவோம் மொழிபெயர்க்க....! அதனில் சிறப்பான பணியாற்றும் TOP 3 நண்பர்களுக்கு வழக்கம் போல் வாட்ச் பரிசு ; நாடோடி ரெமி பரிசு என்றெல்லாம் இல்லாது - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் ! அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் ! நமது அடுத்த மாத இதழில் இப்போட்டி அறிவிக்கப்பட்டு - இணையத்திற்கு அப்பால் நிற்கும் நண்பர்களையும் இழுத்திட முனைவோம் ! நமது லயனின் ஒரு முக்கிய மைல்கல் இதழில் நண்பர்களின் பங்களிப்பும் active ஆக இருந்த சந்தோசம் கிட்டுமல்லவா ? What say folks ? See you around soon...Bye for now !
1 st
ReplyDelete2 nd :)
ReplyDeleteவிஜயன் சார், தோர்கல் கதையின் அடுத்த பாகம் ஏப்ரல் மாதம் வெளிவருவதாக கூறி இருந்த ஞாபகம், வெளிவரும் தேதியில் ஏதும் மாற்றம் உண்டா?
ReplyDeleteVijayan28 January 2014 22:34:00 GMT+5:30
Parani from Bangalore : கட்டுக்கடங்கா கூட்டம் என்பதால் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் புத்தக விழா அரங்கினுள் நுழையவே சிரமம் ஆகிப் போனதாம் !
தோர்கலின் இரண்டாம் பாகம் ஏப்ரலில் என்பதால் அது வரை தாக்குப் பிடிக்கப் பாருங்களேன் :-)
Parani from Bangalore : மாதம் இரண்டு இதழ்களோ / மூன்று இதழ்களோ - ரூ.180 பட்ஜெட்டைத் தாண்ட வேண்டாமே என்பது முகவர்களின் கோரிக்கை ! So தோர்கல் இதழின் எழுத்து / DTP பணிகள் முடிந்தாகி விட்ட போதிலும், மே மாதமே அது வெளி வரும்.
Deleteதுணைவியாரிடம் இம்மாதம் லக்கி லூக்கைக் கொடுத்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளச் சொல்லிப் பாருங்களேன்..?!
This comment has been removed by the author.
Deleteரொம்ப கஷ்டம் சார்.... தோர்கல் கவர்ந்த அளவு மற்றவை கவரவில்லை என்பதுதான் உண்மை! என்ன நீங்க சொன்ன மாதிரி சொன்ன தேதி புத்தகம் வெளி இட மாட்டிங்க அப்படின்னு நினைபாங்க... உங்களுக்கு ஒரு பின்னடைவு... சார் சொன்னபடி எப்படியாவது தோர்கல் வெளி இட முடியுமா பாருங்க:-)
DeletePresent sir
ReplyDeleteAHMEDBASHA TK : Attendance போடுவதைத் தாண்டிப் பதிவுகளும் எதிர்பார்க்கிறோம் சார் உங்களிடம் !
Delete+1
Delete+1 :)
Deleteஆமாம் +100000000000000000000000000000000
Deleteஅன்பு ஆசிரியரே...
Deleteமீண்டும் அருமையான தரத்தில் நமது இதழ்கள்.
மிகவும் திருப்தி. என்னைவிட அழகாகவும் அருமையாகவும் நமது வலை நண்பர்களே கருத்துக்களும் பதிவுகளும் என்று போட்டு தாக்கி வருவதை நான் தவற விட்டதேயில்லை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
இப்படி போட்டு தாக்கிட்டீங்களே ! வந்து பதிவ போடுங்க !
Deleteவிஜயன் சார், இந்த மாதம் டைகர் புத்தகத்தின் பக்கம்கள் அதிகம், குண்டு புத்தகம் படிப்பது போன்று இருந்தது; இது போல் இரண்டு கதைகளை வெளி இடும் போது, பக்கம்களை குறைக்க வேண்டாம்.
ReplyDeleteParani from Bangalore : ரூ.120 இதழ்களில் 104 பக்கங்கள் என்பது தற்சமய standard template..!
Deleteவிளம்பரப்படுத்தப்பட்ட ; அட்டவணையில் அறிவிக்கப்பட்ட பக்க எண்ணிக்கைகள் என்றைக்கும் குறையாது !
சந்தோசம் சார்! சந்தோசம் சார்! கதம்பம் போல் அனைவரையும் கவரும் வகையில் filler பேஜ் வருவது சந்தோசம்!
DeleteIn Top 10!!!
ReplyDeleteமுதல் இரண்டு இடத்திலும் ஒரே ஆளா????
ReplyDeleteகோட்ட அழிச்சுட்டு முதல்ல இருந்து ஆடுவோம பாஸ் :)
Deleteநீங்க அடிச்சு ஆடுங்க!!!!.
Deleteவிஜயன் சார், மேஜிக் விண்ட மற்றும் மேஜிகோ என்ற பெயரை பயன்படுத்த முடிவு செய்தது மிகவும் சரியானது! அந்த பெயரை கூறியவர்களை கடந்த போஸ்ட் மூலம் நீங்களே தேர்வு செய்யலாம், அந்த (மேஜிக் விண்) பெயரை கூறியவர்களில் நானும் ஒருவன்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே !
DeleteParani from Bangalore : நண்பர் பரணிக்கும் ஒரு "ஒ" !!
Deletei am in top 10
ReplyDelete12th
ReplyDelete//அதனில் சிறப்பான பணியாற்றும் TOP 3 நண்பர்களுக்கு வழக்கம் போல் வாட்ச் பரிசு ; நாடோடி ரெமி பரிசு என்றெல்லாம் இல்லாது - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் ! //
ReplyDeleteமெய்யாலுமே இது ஒரு அருமையான வாய்ப்பு ... வெற்றி பெற போகும் நண்பருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
அது யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஈரோடு புத்தக திருவிழாவில் எங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும். இந்த கண்டிசனுக்கு ஒத்து கொள்ளும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவார்கள்.
சொக்கா ... எனக்கு ட்ரீட் மட்டும் நிச்சயம் .... அந்த ஆயிரம் பொன் எனக்கில்லை ... எனக்கில்லை ... எனக்கில்லை ...
:)
கில்லாடி ப்ளூ நீங்க! இவரு மொழிபெயர்பில் பங்கெடுத்துக்க மாட்டாராம்; ஆனா ஜெயிக்கறவங்க யாரா இருந்தாலும் இவருக்கு பிரியாணி வாங்கித் தரணுமாம், இவரும் மீசையில் லெக்-பீஸ் மாட்டிக்கற அளவுக்கு சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணிடுவாராம்! எனக்கு மொழிபெயர்க்கற ஆசையே போய்டுச்சு! கிர்ர்ர்ர்...
DeleteErode VIJAY : விடாதீங்க...அஞ்சப்பருக்குக் கூட்டிட்டுப் போய் புளியோதரை வாங்கிக் குடுங்க !
Delete// விடாதீங்க... அஞ்சப்பருக்குக் கூட்டிட்டுப் போய் புளியோதரை வாங்கிக் குடுங்க //
DeleteCode name 'அஞ்சப்பர்' --> 'ஐந்தாறு பேர்களுடன்'
'புளியோதரை' --> 'கரைக்கபட்ட புளி'
'ஐந்தாறு பேர்களைக் கொண்டு ஆளை மடக்கி, புனலை வாயில் வைத்து புளியைக் கரைத்து ஊற்று'
Message received! ;)
just miss... computer restarted..otherwise consecutive first 10 ...missed...:(
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete// - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் ! அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் ! //
என்னை பொறுத்தவரை பரிசு கொடுப்பது நன்று
இம்முறை நானும் போட்டியில் குதிக்க முடிவு செய்து விட்டேன்... எப்படி பதிவு செய்யணும்னு சொல்லுங்க??
ReplyDeleteஉங்ககிட்டே இருக்கிற காமிக்ஸ் கலெக்ஷனை எல்லாம் ஈரோடு விஜய்கிட்ட கொடுத்துட்டு உடனடியா உங்க பேரை நீங்க பதிவு செஞ்சுக்கலாம். :D
DeleteErode VIJAY :
Deleteவிஜய்சாமி - குத்தகைதாரர் !
சைக்கிளுக்கு...பஸ்சுக்கு...ஏன் ப்ளைட்டுக்குமே இவ்விடம் டோக்கன் போடப்படும் !
முன் அட்டை பழைய காலத்தை நினைவு படுத்துகிறது... பின் அட்டையிலிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை.... அட்டகாசம்....
ReplyDeleteRummi XIII : //முன் அட்டை பழைய காலத்தை நினைவு படுத்துகிறது.//
Deleteநம் ஓவியர் மாலையப்பனின் டிசைனில் அந்நாட்களது Classical look தெரிந்ததால் தான் முன்னட்டையினை அதற்கென ஒதுக்கினேன் :-)
நானும் முயற்சி செய்கிறேன், ஹி ஹி
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : கையெழுத்து கிறுக்கலாய் இல்லாத வரைக்கும் ஒ.கே. !!
Deleteஅப்ப நான் போட்டியிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்
Deleteநண்பர்களே, போட்டிக்கு கயற இருக்கம்மா கட்டிட்டு குதிங்க :-)
Deleteகிறுக்கும் அழகு என்று தெரிந்து கொண்டேன் உன்னாலே ...
Deletekaathirukiren april maathathirkku...
ReplyDeletedear விஜயன் சார் , KBT - சீசன் 2014 க்கு , பரிசு கொடுப்பதே சரியான முடிவாக இருக்க முடியும் ! வேண்டாம் இந்த விபரீத முடிவு ! ஒருவேளை இந்த போட்டியில் நம்ப ஸ்டீல் வெற்றி பெற்றால் , lion ஆண்டு மலருக்கு பக்கத்தில் தமிழ் to தமிழ் அகராதியை வைத்து கொண்டு படிக்க பொறுமை இல்லை :)
ReplyDeleteசார் , பயபடாதீர்கள் , அந்த அளவுக்கு என்னால் இயலாது !
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Why not ? முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் !
Deleteசார் தருமா ஈரோட்டு திருவிழாவிற்கு பள பளவென வந்து , உடல் முழுதும் கண் , காத்து , மூக்கு தவிர பேண்டேஜ் சுற்றி செல்ல என்னால் ஆகாது !
Deleteதருமா / அல்ல தகுமா
Delete// தருமா / அல்ல தகுமா //
Deleteஆனாலும் இந்த ரேஞ்சில் தொடர்ந்தால் கண்டிப்பாக "தருமா" தான்! :D
நண்பர்களே, ஸ்டீல் சொன்னா ரசிக்கனும் ஆராய கூடாது... ஆமா அவரு என்ன சொன்னாரு :-)
Delete// ஆமா அவரு என்ன சொன்னாரு :-) //
Delete"கண் , காத்து , மூக்கு"
அது எப்பவும் சொல்லுறதுதான் ... புதுசா ஏதாவது சொன்னாரா ....
Deleteஇறைவா என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று ! எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் !
Deleteகாத்து இல்லை , நண்பரே காது ...
Deleteநண்பர்களுக்கு விளக்கம் தேவை இல்லை ! எதிரிகள் அதை நம்ப போவதில்லை !
:)
Deleteவாயடைக்க தேவை இல்லை நீங்கள் நண்பர்தான் !
Delete// ஆனாலும் இந்த ரேஞ்சில் தொடர்ந்தால் கண்டிப்பாக "தருமா" தான்! //
Delete// கண், காத்து, மூக்கு //
ஹா ஹா ஹா! ROFL! :D
"மேஜிகோ" என்ற எளிய பெயரை Suggest செய்த நண்பரின் பெயர் நீளமானது:
ReplyDeleteசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்
:D
வாழ்த்துகள் சத்யா...
Deleteடிடேக்டிவ் ரமேஷ் !
Ramesh Kumar : கால்வின் சத்யா எங்கிருப்பினும் அவருக்கொரு "ஓ " உரித்தாகுக !
Deleteசத்யா, வாழ்த்துகள்!
DeleteThanks friends
Delete@ EDI - Nandri ana oru request if you can write a line or two and autograph and send the issue i will be doubly happy.
@ Ramesh - 1.) :-) thanks & Nattammaaiii sombuuuuuuu kidaichiruchuuuuuuuuuuu
ஆசிரியருக்கு: நம் இதழ்களின் இணையத்திலூடான விற்பனையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், By the way சின்ன ஒரு சந்தேகம், இந்த இணைய விற்பனை ஊடாக இந்தியாவிற்கு வெளியே உள்ள என்னைப் போன்றவர்களும் புத்தகங்களைப் பெற்றிட முடியுமா...???
ReplyDeleteSuganthan P : சந்தேகமே....ஆனால் இப்புதிய தளத்தில் யூரோ மற்றும் அமெரிக்க டாலர் currency என்றொரு option காட்டுகிறது ! அதனில் முயற்சித்துப் பார்த்தால் தெரியும் !
Deleteமேஜிக் விண்ட் என்ற பெயரே முடிவுசெய்யப்பட்டதில் ஒரு நிம்மதி. அப்புறம் விற்பனையாளர் கருத்து, குருத்துனு எதையாவது சொல்லி குண்டு புக்குக்கு ஆப்பு வைச்சிடப்போறீங்க.. அப்பால கதறிக்கதறி அழுவதைத் தவிர வேறு வழியில்லாது போயிடும் எனக்கு!! :-)))
ReplyDeleteKBT-2014: என்னது வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலையா? கைப்புள்ள, கீபோர்டை தூசுதட்டுடா!! :-)))))))
சுத்தமான மண்ணு தமிழ்நாட்டில் எங்கே கிடைக்கிறது ஆதி அவர்களே? ;)
Delete// சுத்தமான மண்ணு தமிழ்நாட்டில் எங்கே கிடைக்கிறது ஆதி அவர்களே? ;) //
Deleteபூனைகள் இருக்கும்வரை உலகில் சுத்தமான மண் என்ற பேச்சுகே இடமில்லை, ஹி ஹி!
ஹி ஹி! அது மண்வளத்தை பெருக்க பூனைகள் போடும் சத்துமிக்க உரமாக்கும்! ;)
Deleteபிரசன்ட் சார் ப்ளசன்ட் சார்!!
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDelete* ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கென்றே துவங்கப்பட்டிருக்கும் புதிய இணையதளம், நமது பயணத்தின் அடுத்த மைல்கல்லாக அடையாளப்படுத்தி மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைத்த ஜூ.எடிட்டருக்கும், இ.எடிட்டருக்கும் வாழ்த்துகள் பல! இத்தளத்தின் நிறை-குறைகளை நமது வாசக-வல்லுனர்கள் தங்களது ஆராய்ச்சிகளின் முடிவில் இங்கு அறிவிப்பார்களென நம்புகிறேன்.
* இந்தமாத ஷெல்டன் அட்டைப்படம் படம் முதல் பார்வையிலேயே மனதை அள்ளுகிறது. பார்த்தவுடன் ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்திவிட்டாலே எந்த அட்டைப்படமும் தன் பிறவிப் பயனை அடைகிறது என்ற வகையில் இந்த அட்டைபடத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். பின் அட்டை இணையத்தில் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் பின்னணி வண்ணச் சேர்க்கையால் அழகாய் மிளிர்கிறது. மாலையப்பர் இம்முறையும் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் எனினும், முன்-பின் அட்டைகள் இடம் மாறியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் எழாமலில்லை தான்!
* 30வது ஆண்டு மலரில் ஒரு முழுநீளக் கதைக்கு நமது நண்பர்களில் ஒருவருக்கு மொழிபெயர்க்க வாய்ப்பளிக்க நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம்! நமது நண்பர்களில் பலர் இம்மாதிரியான பணியை செவ்வனே செய்யக்கூடியவர்களே என்றாலும் பெங்களூரு பரணி மற்றும் டாக்டர் சுந்தர் ஆகியோரது ஆதங்கத்தில் சிறிது நியாயம் இருப்பதாகவே படுகிறது. இதில் உங்களது இறுதி முடிவு எப்படியிருப்பினும் எனக்கு சந்தோசமே!
* மேஜிக் விண்டுக்கு 'மேஜிக் விண்ட்' என்றே(!) பெயர் தெரிவு செய்திருப்பதும், நடுநடுவே 'மேஜிக்கோ'வை உபயோகிக்க நினைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது ( நோ நோ அழக்கூடாது ஸ்டீல்க்ளா... புதுசா ஒரு டிடெக்டிவ் வரார் இல்லையா... எங்கே,அவருக்கு ஒரு அழகான பேர் வையுங்க பார்க்கலாம்?) :)
Erode VIJAY : மிதமான மின்சாரம் பாய்ந்து ஈரோட்டில் பூனையொன்றின் மயிர்கால்கள் குத்திட்டு நிற்கின்றனவாம்.....CNN -ல் flash news !!
Delete//எனினும், முன்-பின் அட்டைகள் இடம் மாறியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் எழாமலில்லை தான்! //
Delete+++1
விஜய்,
Delete// ( நோ நோ அழக்கூடாது ஸ்டீல்க்ளா... புதுசா ஒரு டிடெக்டிவ் வரார் இல்லையா... எங்கே,அவருக்கு ஒரு அழகான பேர் வையுங்க பார்க்கலாம்?) :) //
நம்ப ஸ்டீல் இந்த வருடம் ஆசிரியர் அறிவிக்க போற எல்லா போட்டிக்கான விடைகளை/பெயர்களையும்
ஒரே பதிவில் சொல்லிட்டறாரு... இனி தலைவலி நம்ப வாத்தியாருக்குதான் :-செலக்ட் பண்ணணும்ல :-)
பரணி என்ன இப்பிடி சொல்லீட்டீங்க ! இன்னும் நான் ஃபீல் பண்ணி கூவலையே ! இப்பிடியெல்லாம் சொல்லி கட்டி போட முடியாது !
Delete// மிதமான மின்சாரம் பாய்ந்து ஈரோட்டில் பூனையொன்றின் மயிர்கால்கள் குத்திட்டு நிற்கின்றனவாம் //
Deleteஅந்த (துருப்பிடிச்ச) 'தகரக் கரத்தில்' இருந்து இப்போல்லாம் மயிர்கால்களை நட்டுக்க வைக்கும் அளவுக்குத்தான் மின்சாரம் உற்பத்தியாகுதாம் எடிட்டர் சார். அதுவும் சாதாரண static electricity தானாம்!
@ நண்பர்கள்
எனக்கொரு டவுட்! 'மயிர்கால்கள்' என்பதும் 'கால் மயிர்கள்' என்பதும் ஒன்றா நண்பர்களே?
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு மதிய வணக்கம். அட்டை படம் அசத்தல். கதையும் கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்பாடி ஒரு வழியே பேரை செலக்ட் செஞ்சிங்களே, நண்பர்கள் கொன்னு எடுத்துபுட்டாங்க முடியலாம். kbtக்கு பரிசு எத வேனா குடுங்க சார். ஆனால் கனவு இதழான 30வது ஆண்டு மலர்ல மொழி பெயர்ப்பு வாய்ப்புலாம் தர வேண்டாம் சார் . இதை போன்ற முக்கிய இதழில் நாங்கள் உங்கள் மொழி பெயர்ப்பை மட்டுமே மட்டுமே மட்டுமே படிக்க விரும்புகிறோம். நண்பர்கள் கோபித்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் .
ReplyDeleteஉண்மை. KBT மறுபடியும் ஒரு சிக்கலை நோக்கி போகிறதோ என்ற கேள்வி மண்டையை குடைகிறது. வென்றவருக்கு முழு நீள கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு.கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் படிக்க நன்றாக இருக்குமா?
Deleteமுழு நீள கதை எனும்போது ஏற்கனவே வந்த தொடர் கதைகளில் இந்த சோதனை செய்ய முடியாது, செய்ய வேண்டாம். ஏற்கனவே செய்த மொழிபெயர்பில் இருந்து நிச்சயமாக வேறு பட்டு தெரியும். சிறு கதைகளோடு நிப்பாட்டி கொள்ளலாம் என்பது என் கருத்து.
Magic wind என்ற பெயரே இருக்கட்டும் என்று suggest செய்தவர்களில் அடியேனும் ஒருவன்! எந்த காரணம் கொண்டும் குண்டு புக் quotaல் கைவைக்க வேண்டாம்!
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : விற்பனையின் குரல்வளையில் யாரும் கால் வைக்காத வரைக்கும், நான் கை வைக்க அவசியம் நேராது !!
DeleteOnline comics martல் பணம் செலுத்தும் முறையில் credit, debit cards மட்டுமல்லாது internet banking முறையில் money transfer faciltyயும் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : Netbanking வசதியும் உண்டு !
Delete@ FRIENDS :
ReplyDeleteசேலம் Tex விஜயராகவன் : //கனவு இதழான 30வது ஆண்டு மலர்ல மொழி பெயர்ப்பு வாய்ப்புலாம் தர வேண்டாம் சார் . இதை போன்ற முக்கிய இதழில் நாங்கள் உங்கள் மொழி பெயர்ப்பை மட்டுமே மட்டுமே மட்டுமே படிக்க விரும்புகிறோம். //
Parani from Bangalore : //என்னை பொறுத்தவரை பரிசு கொடுப்பது நன்று//
Dr.Sundar, Salem : // KBT - சீசன் 2014 க்கு , பரிசு கொடுப்பதே சரியான முடிவாக இருக்க முடியும் ! வேண்டாம் இந்த விபரீத முடிவு ! //
Erode VIJAY : //பெங்களூரு பரணி மற்றும் டாக்டர் சுந்தர் ஆகியோரது ஆதங்கத்தில் சிறிது நியாயம் இருப்பதாகவே படுகிறது. //
வாசக நண்பர்களுள் இப்படியும் ஒரு சிந்தனையோட்டம் இருக்கக் கூடிய சாத்தியம் என் மண்டைக்கு strike ஆகவில்லை ! ஹ்ம்ம்ம்ம் ...சிந்திப்போம் ...இன்னும் இதர நண்பர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதை அறிந்தொரு முடிவெடுப்போம் ! !
சார் நானும் இவர்களுடன் உடன் படுகிறேன் ! சிறிய கதைகள் பரவா இல்லை ! முழு நீள கதைகள் எனும் போது ...
Deleteஎப்படியும் Finalize ஆவது 3 சலித்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் ஆக்கங்களுன் ஒன்றாக இருப்பதால் Standards குறைய வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. நாம் அவசியமில்லாமல் ரொம்பவும் பயப்படுகிறோமோ எனத்தோன்றுகிறது.ஒரேவொரு கதை சற்று Different Flavour மொழிபெயர்ப்பில் வரும் / ஒருவேளை அது Positive'ஆன விளைவைக்கூட தரக்கூடும். :)
DeletePS: நான் KBT - சீசன் 2014 ன் பங்கேற்பபாளரல்ல என்பதால் கொஞ்சம் நடுக்கமிருந்தாலும் பயமின்றி இதை முன்மொழிகிறேன்! :P
ஒரு வாசக மொழிபெயர்ப்பு ஸ்பெஷெல் போட்டா போச்சு
Deleteஉண்மை. KBT மறுபடியும் ஒரு சிக்கலை நோக்கி போகிறதோ என்ற கேள்வி மண்டையை குடைகிறது. வென்றவருக்கு முழு நீள கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு.கேட்க்க நன்றாக இருக்கிறது, ஆனால் படிக்க நன்றாக இருக்குமா?
Deleteமுழு நீள கதை எனும்போது ஏற்கனவே வந்த தொடர் கதைகளில் இந்த சோதனை செய்ய முடியாது, செய்ய வேண்டாம். ஏற்கனவே செய்த மொழிபெயர்பில் இருந்து நிச்சயமாக வேறு பட்டு தெரியும். சிறு கதைகளோடு நிப்பாட்டி கொள்ளலாம் என்பது என் கருத்து.
எம் பணி காமிக்ஸ் படிப்பதே!!! இந்த ட்ரான்ஸ்லேட் இதெலாம் நம்ப நண்பர்கள் பார்த்துப்பாங்க..
ReplyDelete+1
Deleteசார் பின்னட்டை அருமை , வண்ணங்கள் தூவலுக்கு நமது ஓவியருக்கு வாழ்த்துகள் !
ReplyDeleteஷெல்டனை காண துடிப்பாய் தயாராய் இருக்கிறேன் >..
நமது விளம்பரங்கள் லக்கி லுக்கின் இதழில் பட்டய கிளப்புமென நினைக்கிறேன் !
ஷெல்டனின் மகனை காண நானும் ஆவலாய் காத்திருக்கிறேன் !
சார் www.lioncomics.worldmart.in தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
Deleteவிக்ரம் மற்றும் துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை அறிவித்து விடுங்கள் !
விற்பனை சிறப்பாய் அமைய உறுதுணை ஏதுவாக எதுவோ , அதாவது புத்தகம் ஒல்லியாய் வந்தால் மூன்று அல்லது நான்காய் வரவேண்டும் ! நண்பர் ஆதி மன்னிப்பாராக ! சூப்பர் சிக்ஸ் நமக்கு ஆகவே அழ வேண்டாம் நண்பரே !
விஜயன் சார், நம்ப தரகககரந்தார் (அதான் ஸ்டீல்) அதிக பெயரை செய்ததுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்.
ReplyDeleteParani from Bangalore : Special category-ல் ஒரு பெரிய "ஒ" போட்டு விடுவோம் !!
DeleteSuper!
Deleteஓ!
Delete@ ALL : காதோர நரையார் ஷெல்டனைப் பார்க்கும் போது - தொப்பி போடாத மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும் தானா ?
ReplyDeleteஎனக்கும் தான் சார்
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஇந்த வருட காமிக்ஸ் அட்டவணை என்னிடம் உள்ளது காணாமல் போனதால், காமிக்ஸ் அட்டவணை வேண்டும் என நமது காமிக்ஸ் அலுவலகத்துக்கு 2 வாரம் முன்னால் போன் செய்து சொன்னேன், இந்த வாரம் அதனை போஸ்டல் மூலம் அனுப்பி கிடைக்கபெற்றேன், நமது அலுவலக சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.
இந்த வருடம் காமிக்ஸ் அட்டவணையில் தேர்வு செய்த கதைகளை தவிர அதிகமான கதைகள் வர உள்ளதால் இன்னும் ஒரு புதிய அட்டவணை வெளி இட முடியுமா?
ஒரு முழு நீளக்கதையினை வாசகர் மொழி பெயர்ப்பில் வெளியிடுவது வரவேற்கத்தக்க விஷயம் தான்.
ReplyDeleteபெரும்பான்மை வாசகர்களின் கருத்து 30வது ஆண்டு மலரில் வேண்டாம் எனில் வேறு ஏதாவது இதழில் இடம் பெற செய்யலாம்.
புதிய ஆன்லைன் பர்ச்சேஸ் வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள் சார்! "எதிர் வீட்டில் எதிரி" இதழை மிகவும் வெறித்தனமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்! ஏனென்றால் "ஆண்டுமலர் அறிவிப்புகள்" அதில்தானே உள்ளது!
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeletehttp://www.lioncomics.worldmart.in/ மூலம் புத்தகம் ஆர்டர் செய்துவிட்டேன்! அருமை ... விக்ரம் அருமையாக வடிவமைத்து உள்ளார்.வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள்!
சில suggestions...
1. ஒரு ஆர்டர் முடிந்தவுடன் நமது தளத்திற்கு automatic-a திரும்ப செல்ல வேண்டும்.
2. புத்தகம்களை அனுப்ப கூரியர் மற்றும் போஸ்டல் மூலம் அனுப்ப தனித்தனியான option கொடுப்பது நலம்.
3. பின் கோடு (pin code) மிக முக்கியம், எனவே முகவரியுடன் பின் கோடு விபரம் வாங்க ஒரு text field தேவை.
ஆர்டர் செய்த புத்தகம் புரட்சி-தீ! நம்பால முடிஞ்ச பிள்ளையார் சுழி!!
Delete@ Parani
Deleteவாவ்! ஆன்லைனில் முதல் ஆர்டர் உங்களுடையதுதான் எனில், வாழ்த்துகள் நண்பரே! வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது!
விஜயன் சார், என்னது ஷெல்டன்க்கு மகன் உண்டா ...ஷெல்டன் கதையின் முன்னோட்டம் கதை பற்றிய ஆர்வத்தை கிளப்பிவிடுது!
ReplyDeleteஎன்ன ஆச்சு?
ReplyDeleteபேர் வைக்க சொன்னாங்க,
நிறைய பேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,
அப்புறம் ப்பா....
என்ன ஆச்சு?
பேர் வைக்க சொன்னாங்க,
நிறைய பேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,
அப்புறம் ப்பா....
என்ன ஆச்சு?
பேர் வைக்க சொன்னாங்க,
நிறைய பேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,
அப்புறம் ப்பா....
இப்படி கோவை மாநகரில் ஒருவர் புலம்புவதாக ஒரு செய்தி
நிஜமாகவே சென்ற பதிவின் கமெண்டுகள்...
Deleteப்பா.... :D
இன்னும் வரும்...ப்பா
Deleteஇன்னுமா?!! அப்பப்பா!
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteவர வர இந்தப் அட்டைப் படங்களை பார்த்து சூப்பர், excellent என்று சொல்லலி சொல்லி போர் அடித்துவிட்டது. வேறு எதாவது வார்த்தைகளைத்தான் தேட வேண்டும் இவைகள பாராட்ட. Really suberb.
30வது ஆண்டு மலரில் தங்களின் கைவண்ணமே வரவேண்டும் என்பது என் விருப்பம். என்னதான் நீங்கள் வெற்றி பெற்றவரின் படைப்பை பட்டி டிங்கரின் பார்த்து உங்கள் ஸ்டைலில் வெளியிட்டாலும் (கமல்ஹாசனின் படங்களை யார் டைரக்ட் செய்தாலும் கமலே டைரக்ட் செய்தது போல் இருப்பது போல :-) ) மாற்றத்தை ஏற்க விரும்பவில்லை.
Raja from France @
Delete// வேறு எதாவது வார்த்தைகளைத்தான் தேட வேண்டும் //
அப்ப சும்மா அதிருதுன்னு சொல்லுங்க :-)
@ Radja from france
Delete// வேறு ஏதாவது வார்த்தைகளைத்தான் தேடவேண்டும் //
மேலே பரணி சொல்லியிருப்பதுபோல் நீங்களே ஏதாவது முயற்சி செஞ்சுபாருங்க. இல்லன்னா இருக்கவே இருக்கார் நம்ம ஸ்டீல்கிளார்! புதுசா ஏதாவது பேரோ/வார்த்தைகளோ தேவைப்படுகிறதா? சுவிட்ச் போட்டீங்கன்னா போதும்; ச்சும்மா மாவரைக்கிற மெசின் மாதிரி அரைச்சுத்தள்ளிடும்! ;)
ஸ்டீல் கிளாவா ? இந்தப் பேரை கேட்டாலே இப்பதான் சும்மா அதிருது (எதாவது புதுப் பெயர் / வார்த்தை வந்து விழுமோ என்ற பயத்தில் :-))
Deleteயாமிருக்க பயமேன் !
Delete@ ஸ்டீல்
Delete// யாமிருக்க பயமேன் //
ம்க்கும்! பயமே நீங்கதான்னு கதறிட்டிருக்கோம்...
// யாமிருக்க பயமேன்!//
Deleteபயமிருக்க பயமேன்! :D
யாமில்லை ஃபயர்மேன் !
DeleteFEARMAN
DeleteHi everybody...i am new to this webpage but not for Prakash publishers comics....I love love love very very much the comics of this publishers....hope i am reading this comics from 1992....but lost the way around 2006 and joined again last month...
ReplyDeleteI feel very happy to have these comics again in my hand...i am so excited and happy to share this with all.....
வாருங்கள் நண்பரே ! சந்தோசங்களை , சந்தோசம் தரும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம் !
Deleteநமது காமிக்ஸின் பொற்காலம் (அற்புத நாயகர்கள் ) முடிந்த பின்னர் ஆரம்பித்திருக்கிறீர்கள் ! இப்போதைய வைர, பிளாட்டின காலங்களுக்குள் நுழைந்துள்ளீர்கள் ! தவறாமல் முந்தய வெளியீடுகளை பிடியுங்கள் ! லார்கோ , nbs உங்களுக்கு இழப்பே ! இருந்தாலும் புத்தக திருவிழாக்களில் நண்பர்களிடம் முயற்ச்சியுங்கள் ! உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் !
Deleteஅப்புறம் இரத்த படலம் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ! வண்ணத்தில் உங்கள் சார்பாகவும் ஒரு கோரிக்கை கல்லை வீசி செல்லுங்கள் !
Deleteஅதாவது மறுபதிப்பு கோரிக்கை !
DeleteWelcome back to the Rabbit hole sir! :)
Deleteநன்றி நண்பரே, NBS மட்டும் அன்றி முந்தையே வெளியீடு அனைத்தையுமே நான் மிஸ் பண்ணுகிறேன். மூன்று நாட்கள் முன்னதாக தான் 2013 வெளியிடுகளை தபாலில் பெற்றேன். அது இப்போதைக்கு மகிழ்ச்சி, ஆனால் அனைத்தையும் படித்து முடித்ததும் மனம் பிற முந்தையே வெளியிடுகளை எதிர்பார்க்கும். XIII பாகம் 1-19 முழு புத்தகம் கிடைக்கவில்லை ஆனால் ஆங்கிலத்தில் படித்துவிட்டேன், இருந்தாலும் தமிழில் படிக்கும் ஆசை தீரவில்லை.
DeleteXIII கதைகளை கண்டிப்பாக வண்ணத்தில் படித்ிடவே விரும்புகின்றேன்.
DeleteDasu bala @ Welcome to the club!
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @
சங்கத்துக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சிடான்கடா :-)
@ Dasu bala
Deleteகாமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்மை சேர்க்கும் பல கோரிக்கைகளை உள்டக்கித் தொடர்ந்து போராடிவரும்; வாழைப்பூ வடை/நண்டு வறுவலுக்கு கடைவாய் ஓரம் ஈரம் காட்டிடாத வீரம் மிக்க போராட்டக்குழுவின் சார்பாகவும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
பரணி , விஜய் நல்ல கதைகளை(நூல்களை ) தேடி படிக்க வேண்டும் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க நண்பர்கள் சேர்ந்தால்தானே குரல் விண்ணை எட்டும் !
Deleteநன்றி நண்பரே, NBS மட்டும் அன்றி முந்தையே வெளியீடு அனைத்தையுமே நான் மிஸ் பண்ணுகிறேன். மூன்று நாட்கள் முன்னதாக தான் 2013 வெளியிடுகளை தபாலில் பெற்றேன். அது இப்போதைக்கு மகிழ்ச்சி, ஆனால் அனைத்தையும் படித்து முடித்ததும் மனம் பிற முந்தையே வெளியிடுகளை எதிர்பார்க்கும். XIII பாகம் 1-19 முழு புத்தகம் கிடைக்கவில்லை ஆனால் ஆங்கிலத்தில் படித்துவிட்டேன், இருந்தாலும் தமிழில் படிக்கும் ஆசை தீரவில்லை.
ReplyDeleteXIII, இரும்பு கை மாயாவி, ஸ்பைடர், ரோபோ ஆர்ச்சி, டெக்ஸ், லக்கீ லூக், captain prince இன் தீவிர ரசிகன். சமீபத்திய ஈர்ப்பு டயாபாலிக்....
ReplyDeleteஇவர்களுடன் லாரென்ஸ் -டேவிட், ஜானி நீரோ , வேதாளன், இரட்டை வேட்டையர், நார்மன் , ஜெஸ லாங், செக்ஸ்டன் ப்ளேக் , இரும்புக்கை வில்சன் ,ஸ்பைடர் குள்ளன் .
Deleteஉங்களை டயபாளிக் கவர்ந்தது போல cid ராபினும் நிச்சயம் கவர்வார் !
Deleteஎன்னாது....மறுபடியும் மொழி பெயர்ப்பு போட்டியா...?
ReplyDeleteஹரே பகவான்...ஹம்கோ அங்க்ரேஸி நஹி மாலூம்:-)
தமிழ்ல மட்டும் நீ என்ன புலவனா-ன்னு கேட்காதீங்க.ஹிஹி!!!
டியர் எடிட்டர் ,
ReplyDeleteஏப்ரல் மாத வெய்ன் ஷெல்டன் இன் "எஞ்சி நின்றவனின் கதை " அட்டை படம் இரண்டும் சூப்பர் . அதிலும் நேரில் மெருகு கூடி வரும் என்பது தெளிவு. ஓவியர் மாலையப்பன் அவர்கட்கு நன்றிகள் . லார்கோ விஞ்ச் இற்கு பின் வெய்ன் ஷெல்டன் உம் அவரது அதிரடியும் எனக்கு மிகவும் பிடிக்கும் . அதிலும் குண்டு புக் ஆக வெளியிட முடிபு எடுத்ததுக்கு கோடி நன்றிகள் . தொடந்து இப்படி முயற்சிகள் செய்யுங்கள் சார் ! நண்பர் ஆதி அவர்கள் மட்டுமில்லாது நானும் குண்டு புக் கிளப் மெம்பர்தான். 60 ரூபாய் விலையில் வருபவை சிறந்த கதை தேர்வுகள் ஆக இருந்தாலும் சட்டென்று முடிந்து விடுவதால் ஏமாற்றமாக உள்ளத்தினை மறுப்பதற்கில்லை .
ஆமாம் குண்டு புத்தகத்தை பார்த்தாலே மனம் துள்ளிகுதித்திடுமே.
Deleteரொம்ப நேரமா யோசிச்சி பார்த்ததில் இந்த அட்டைபடம் ஆபரேஷன் சுறாவளி யை நியாபகபடுத்துகிற மாதிரி ஒரு பீலிங்!!!
ReplyDeleteசார் இந்த ஆண்டு மலர் இரண்டு கதைகளை தேர்வு செய்து விட்டீர்கள் ...
ReplyDelete1.நகைச்சுவை
2. அதிரடி
3.கௌபாய் / சோகம் மாந்த்ரீகனின் கதை போன்ற நெஞ்சை தொடும் ஒரு கதை
4. டிடேக்டிவ் / சிறுவர்களை கவர கெக் தீவின் மன்னன் என சிறுவர்கள் அந்த அநாதை விடுதியில் இருந்து தப்பி சென்று தீவில் வாழ்வார்களே அது போல சிறுவர்கள் சாகசங்கள் )
5. அமானுஷ்யம்
6. கொலை
7. வீர சாகசம் (அட்வென்ச்சர் )
8. போர் கதை
9. விண்வெளி கதை
10. வரலாற்று கதை !
இவைகளில் போட்டால் ஒரு கலவை கிடைக்கும் என்பது எனது எண்ணம் !
// அதற்காக அவர்களது அத்தனை படைப்புகளும் அட்டகாசம் என்றும் சொல்லிட மாட்டேன் ; அபத்தமாய்த் தோன்றியதொரு பூதம் - ராட்சச மிருகங்கள் - பாணியில் ஒரு கதைத் தொடரைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தேன் ! 'இது எங்களது bestsellers பட்டியலில் உள்ள தொடராக்கும்; இது வரை மொத்தம் 30 லட்சம் ஆல்பங்கள் இந்தத் தொடரில் விற்பனை ஆகியுள்ளது' என்று அவர்கள் சொல்லிய போது - 'ஹி..ஹி' ..தான் பதிலாக்கிட இயன்றது எனக்கு ! இது போன்ற கண்மூடித்தனமான காமிக்ஸ் நேசம் எதற்கு பயனாகிறதோ இல்லையோ ; அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது! ஒரு தொடரின் கருவே - "WHAT IF ..?" என்பதே !
Deleteநிலவில் முதலில் கால் பதித்தது அமெரிக்கர்களாக இல்லாது ரஷ்யர்களாய் இருந்திருந்தால் - வரலாற்றின் போக்கு எப்படி மாறி இருக்கும் ?
அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி கொலை செய்யப்படாது போய் இருந்தால்..?
// இது தங்களின் ஜனவரி மாத அசுரர்களின் தேசத்தில் இருந்து !
மேலும்
விமானத்தின் கதை
அந்த கிரேக்க சிறுமி கதை ஒன்றும் கூறினீர்களே ஓவியம் வண்ணம் அசத்துகிறது என்று இவைகளையும் சேர்க்கலாமே !
இவர்களுடன் ஒரே ஒரு சூப்பர் ஹீரோ ...
Deleteஸ்பைடர், ஸ்பைடர் மேன் , பேட் மேன் , ஹீ மேன் , வேதாளன் , சோரோ , முக மூடி வீரன் பில்லி போல
உங்களுடைய யோசனை அற்புதமானதுதான். ஆனால் எடிட்டர் என்ன முடிவு செய்து இருக்கிறாறோ என்று தெரியவில்லையே.
Deleteஆசிரியர் ஏறத்தாள இது போல ஏற்கனவே முடிவெடுத்திருக்கலாம் ! வரலாற்று கதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை ~! மேலும் அவர் ஏற்கனவே கூறிய கதைகளை சேர்த்திருப்பாரா இல்லையா என நினைவூட்டவே இந்த முயற்சி நண்பரே !
Deleteஅன்புள்ளம் கொண்ட ஆசிரியர் அவர்களுக்கு ....
ReplyDeleteஒரு " அப்பாவி " காமிக்ஸ் ரசிகனின் கடிதம் இது .நீண்ட இடைவெளிக்கு பிறகு விட்டதை விட்டு இங்கே பதிவில் வந்து ஆஜர் ஆகியதற்கு மிக்க நன்றி .அட்டை படம் மிக அருமை .முன் ..,பின் அட்டை படம் மாறி வந்தால் இன்னும் கலக்கலாக இருக்கும் என்பது என் தனி பட்ட எண்ணம் .இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அட்டைப்படங்கள் ஒன்றுகொன்று போட்டி போட்டு கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை .ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது .வருட கடைசியில் சிறந்த அட்டைபடம் எது என்ற வினா தங்களிடம் இருந்து வரும் பொழுது இந்த வருடம் எங்கள் பதில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் தான் கண்டு பிடிக்க படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை .ஏப்ரல் இதழை மறவாமல் 4..,5 ம் நாளுக்குள் அனுப்பினால் மிகுந்த சந்தோசம் அடைவோம்.
அடுத்து மீண்டும் " மொழி ஆக்க போட்டி " வைத்து நண்பர்களின் திறமையை வளர்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் .ஆனால் முழு நீள கதைக்கு நண்பர்களின் " மொழி ஆக்க போட்டி " வைப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை .முன்னர் இந்த 3 ,4 பக்க மொழி ஆக்க போட்டி வைத்த போதே பல கண்டன குரல்கள் இங்கே எழுந்தன .லயன் காமிக்ஸ் பெருமைய இந்த " மொழி ஆக்கம் " தான் .அதில் விளையாட வேண்டாம் என குரல்கள் ஒலித்தன .அந்த சமயத்தில் நண்பர் ஈரோடு விஜய் அவர்கள் "உங்கள் நண்பர்களின் திறமைக்காக 3.., 4 ...பக்கம் சுமாரக இருந்தாலும் பொருத்து கொள்ள கூடாதா என வினவி இருந்தார் ...அவரின் வினாவில் உண்மை இருப்பதால் அந்த பிரச்சனை அதற்கு பிறகு எழ வில்லை .இப்பொழுது மீண்டும் ஒரு " முழு நீள கதைக்கு " என்று சொல்லி தயவு செய்து " பிள்ளையார் சுழி " போட வேண்டாம் .
நண்பர் ரமேஷ் குமார் அவர்கள் சொன்னது போல லயனை விட சிறந்த மொழி ஆக்கம் அமையலாம் நண்பர்களின் மொழி ஆக்கம் என்பதும் உண்மை தான் .ஆனால் நண்பர்களின் மொழி ஆக்க கதையை படிக்க ஆரம்பிக்க போகும் நண்பர்கள் இது " உள்ளூர் மொழி ஆக்கம் " எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் படிக்க ஆரம்பிப்பார்கள் .அந்த மன நிலையில் சிறந்த மொழி ஆக்கம் கூட சுமாராக தான் தோன்றும் .அதே சமயம் சுமாராக இருப்பின் எங்களால் எடுத்து சொல்ல முடியுமா ? உங்கள் மொழி ஆக்கத்தில் குறை இருப்பின் எடுத்து சொல்லலாம் .( தங்க கல்லறை மறுபதிப்பில் நடந்த கண்டன குரல்கள் நினைவில் இருக்கலாம் ) நீங்களும் புரிந்து கொள்வீர்கள் .அதே சமயம் வாசகர் படைப்பில் குறை இருந்து இங்கே சொன்னால் அது அவர் மனதை புன்படுத்தாதா ? ( சொல்ல பலருக்கு மனம் வராது என்பது தான் உண்மை ) .நீங்கள் வாசகர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் ..,ஆதரவுக்கும்....எங்கள் நன்றி எப்பொழுதும் உண்டு .அதே போல நண்பர்களின் திறமைக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் தலை வணங்குகிறோம். ஆனால் அது ஒரு 3..4 ...பக்க சிறு கதைக்கு அளித்து ஊக்க படுத்துங்கள் . இது " பரீட்சை காலம் " தாம் . தாங்களும் "பரீட்சை" வைக்கலாம் .ஆனால் தயவு செய்து " விஷ பரீட்சை " வேண்டாம் என்பதே எங்கள் வேண்டுகோள் .
இந்த அப்பாவியின் கடிதம் முழு நீள கதை மொழி ஆக்க போட்டிக்கு கலந்து கொள்ள நினைத்திருக்கும் நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்து நீ அப்பாவியா ...அடப்பாவியா என்ற என்ணத்தை அளிக்கலாம் .அவர்களிடம் மனதார நான் " மன்னிப்பையும் " நான் கோரி கொள்கிறேன் .லயன் குழுமத்தின் மிக சிறந்த வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த " மொழி ஆக்கத்தில் " விளையாட வேண்டாம் என்பதே எங்கள் முதல் நோக்கம் நண்பர்களே ...நன்றி ...
எண்டென்றும் அன்புடன் ....
பரணிதரன் ...,
தாரமங்கலம் .
நானும் நண்பர் பரணியின் கருத்துக்களை வழிமொழிகிறேன். முழு நீஈஈஈஈஈள கதை மொழிபெயர்ப்பு வாய்ப்பு என்ற அடுத்த கட்ட முயற்சியை கோடை மலரிலோ அல்லது தீபாவளி மலரிலோ செயல் படுத்தலாம் என்பது என் கருத்து சார் .
Delete// மொழி ஆக்க போட்டிக்கு கலந்து கொள்ள நினைத்திருக்கும் நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்து நீ அப்பாவியா ...அடப்பாவியா என்ற என்ணத்தை அளிக்கலாம் .அவர்களிடம் மனதார நான் " மன்னிப்பையும் " நான் கோரி கொள்கிறேன் .//
Deleteஹா ஹா! லயன் 30ஆவது ஆண்டுமலர் ஒரு Rare Milestone என்பதால் அதில் ரிஸ்க் எடுக்கவேண்டாம் எனத் தெரிவிப்பது நியாயமான point'தான்! அடப்பாவி ரகமல்ல! :D
நீங்கள் என்றுமே அப்பாவிதான் பரணிதரன்
Delete//நீங்கள் என்றுமே அப்பாவிதான் பரணிதரன்//
Deleteஆசிரியர் ஒன்றாம் தேதிக்கு வீட்டுக்கே அனுப்பி விடுவார் !
ஷெல்டனை ...ஷெல்டனை ...
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஆங்கில (Magic) மற்றும் ஒரிஜினல் இத்தாலிய (Magico) பெயர்களை கலவையாக உபயோகிப்பது நல்ல யோசனை! எஞ்சி நின்றவனின் கதை - புது வருடத்தில் இது வரை வந்த இதழ்களை விட நான் அதிகம் எதிர்பார்க்கும் இதழ்! அட்டையில் நம் ஓவியர், ஷெல்டனை சிறப்பாக வரைந்திருக்கிறார்! புதிய இணைய விற்பனை தளத்தில் Combined Shipping வசதி உண்டா? ஃபில்லர் மொழிபெயர்ப்பில் சிறப்பாக செயல்படும் மூவருக்கு, லயன் 30வது ஆண்டு மலரில் முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு என்பது ஆர்வத்தை தூண்டிடும் விஷயம்! :)
This comment has been removed by the author.
Deleteலயன் 30ஆம் ஆண்டு மலரில் மொழி பெயர்ப்பு வாய்ப்பை பெறவிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் சோமலிங்கா அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ;-)
Deleteகொஞ்சம் கொஞ்சமா இப்போர்ந்தே உண்டியல்ல காசு போடுங்க கார்த்திக். ஈரோடு புத்தகத் திருவிழால மட்டன் பிரியாணி ட்ரீட் தரதுன்னா ச்சும்மாவா? அதுவும் லெக்பீஸோட! ஹிஹி! (
Delete******மட்டன் பிரியாணி ட்ரீட் தரதுன்னா ச்சும்மாவா? அதுவும் லெக்பீஸோட! ஹிஹி! ************ தேர்தல் போது இதெல்லாம் கூடாது
DeleteBeef பிரியாணி வித் லெக் பீஸ் :-)
DeleteSnake பிரியாணி வித் லெக் பீஸ் :-)
DeleteSnake பிரியாணி வித் லெக் பீஸ் :-).........................உங்க ஊரு பாம்புக்கு கால் இருக்க என்ன ?
Deleteகோயம்புதூரில் பம்புக்குத்தான் கால் இருக்காது மந்திரியாரே ! யாராவது காலை பயன் படுத்தி கொள்ளும் !
Delete@சாத்தான் ஜி:
Delete//அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
ஓ. கா. உடம்புக்கு ஆ! :)
KBT மு.க.மொ.பெ. எனது ஆர்வத்தை மட்டுமே தூண்டியது! உங்களில் பலருக்கு அது பசியையும் சேர்த்துத் தூண்டி இருப்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை!!! சரி விடுங்கள்.... போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விஜயன் சாரே கம்பெனி செலவில், தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி வாங்கித் தருவார்... டோன்ட் வொர்ரி!! ;)
'ஃபில்லர்' கதையை சிறப்பாக மொழிபெயர்க்கும் மூவருக்கு, 'ஃபுல்(லர்)' கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு பரிசு!
சரி... ஓகே... ஆனால், அந்த முழுக்கதை மொழிபெயர்ப்பில் வெற்றி பெறுபவருக்கு என்ன பரிசு??!!! :D
@ஈ.விஜய்:
ரைமிங்காக, 'வில்லர்' கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு பரிசு - என்று கமெண்டி, அந்த கடிதக் 'கில்லர்' பார்ட்டியை மேலும் டென்ஷன் படுத்த வேண்டாமே ப்ளீஸ்! ;)
@மந்திரியார்:
//தேர்தல் போது இதெல்லாம் கூடாது //
பிரியாணி தானே கூடாது... தேர்தல் ஸ்டைலிலேயே நான் கேட்கிறேன்... முழுக்கதைக்கான பரிசு என்னவென்று, எடியிடம் கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா?! நீங்கள் கேட்பீர்களா?! :P
நாடோடி ரெமி தான் .........வேறென்ன
Deleteகாலை வணக்கம்
ReplyDelete//லயன் 30வது ஆண்டு மலரில் முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு என்பது ஆர்வத்தை தூண்டிடும் விஷயம்! :)//
ReplyDeleteSame here..
1. இந்த வருடம் இதுவரை வந்ததில் இந்த அட்டை சுமார் தான். ஷெல்டன் முகம் எதோ ரொமாண்டிக் லுக் குடுக்கற மாத்ரி தான் இருக்கு. (இந்த வருடத்தின்) வழக்கம் போல் ஒரிஜினலே பயன் படுத்தி இருக்கலாம்..
ReplyDelete2, KBT - சீசன் 2014 - துண்டு போட்டாயிற்று. Am waiting!!
@ சூப்பர் விஜய்
Delete// ஷெல்டன் முகம் எதோ ரொமாண்டிக் லுக் குடுக்கற மாதிரிதான் இருக்கு //
இதைத்தான் பின் அட்டையில் 'ஆக்சன் ஹீரோக்களில் இவர் ஒரு தனி ரகம்' அப்படீன்னு எடிட்டர் சொல்லியிருக்காரோ?! :D
அப்படீன்னா ரொமான்ஸ் பண்றப்போ மூஞ்சியை டெரரா வச்சிக்குவாரோ?! பாவம் அவரோட கேர்ள் ஃப்ரண்ட்! ;)
எடிட்டர் சார்...
ReplyDeleteநம்ம சிவசுப்ரமணியன் இருக்காரில்ல சிவசுப்ரமணியன்... அவர் உங்ககிட்ட என்ன கேட்கச் சொல்றார்னா... ம்... வந்து... "அந்த 500 புத்தகங்கள் பத்திரமா இருக்கா"னு அழுத்தமா கேட்கச் சொன்னார்.
(அவரு கேட்கச் சொன்னாரு, நான் கேட்டேன்... அவ்ளோதான்! மற்றபடி 'காமிக்ஸ் லைப்ரரி' பற்றியெல்லாம் நான் பேசமாட்டேன்பா!)
காமிக்ஸ் நூலகம் குறித்து பூனையார் (பார்க்க: ப்ரொபைல் போட்டோ) மைண்ட் வாய்ஸ்-இல் மட்டும் பேசாமல் அழுத்தமான பதிவொன்றும் இடலாமே,என்று தான் சொன்னேன்,விஜயன் சார்.
Deleteகாமிக்ஸ் நூலகம் - எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளும் எனது ஆவலும் தான் காரணம்!
ஒ அப்ப 500 புக் குடுத்து அவர் அவர்தானா
ReplyDeleteமகா சிவராத்திரி அப்போது ஆபிசுக்கு போன் பண்ணி கேட்டபோது இன்னும் லைப்ரரி ஆரம்பிக்க வில்லை என்று சொன்னார்கள்.
@ Raj muthu kumar
Delete// 500 புக் குடுத்தது அவர்தானா //
புதுசு புதுசா கிளப்பி விடுறீங்களே... 'அது' இவர் இல்லைங்க. :)
// ஒ அப்ப 500 புக் குடுத்து அவர் அவர்தானா //
Deleteநான் இல்லேங்கோ! நான் ரத்தபடலம் 1-18,சாத்தான் வேட்டை போன்ற புத்தகங்களை கூட வாங்க தவறிய NBS வாசகன் தான்,நண்பரே!
@ சிவசுப்ரமணியன்
Deleteஉங்களின் வருத்தமும், தேவையும் புரிகிறது. அந்த 500ல் இரத்தப்படலமும். சாத்தான் வேட்டையும் உங்களுக்கு. மற்றவை எனக்கு. சந்தோசம் தானே? :D
ரத்த படலம் கூட வண்ணத்தில் திரும்ப வந்தால் படித்திடலாம் (பேராசை?!), ஆனால் டெக்ஸ்-இன் சாத்தான் வேட்டை படித்திட காமிக்ஸ் நூலகம் வந்தால் தானே முடியும்?
Delete@ஈரோடு விஜய்
500-ஐ கைபற்றிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோ? நன்றிகள் பல,நண்பரே!
இரத்த படலம் விரைவில் !
Deleteஓ சாரி நண்பரே. இடப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்தான் லைப்ரரி தொடங்க தாமதமாக இருக்கலாம்.
ReplyDelete// இடப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்தான் லைப்ரரி தொடங்க தாமதமாக இருக்கலாம்//
Deleteஇடப்பிரச்சனை என்பதை விட பாதுகாப்பு பிரச்னை என்பது சரியான காரணமாகத் தோன்றுகிறது!
குறிப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு விஜய் மற்றும் ரமேஷ் குமார் இருவர் கையில் குடுத்து விடலாமே? தீர்ந்தது,இல்லையா?
// பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு விஜய் மற்றும் //
Deleteஹைய்யா... நான் ரெடி! :)
கீழ்காணும் பொருட்கள் பாதி விலைக்கு:
* மயக்கவாயு குப்பி
* சாவிக் கொத்துகள்
* முகமூடி, கையுறை
* ஹெட் லைட்
* 'வாரி வழங்கும் வள்ளல் எடிட்டர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி!' என்று எழுதப்பட்ட ஒரு போர்டு.
லயனை வளர்த்து திகில் கையில கொடுத்த மாதிரி ஆயிடுச்சே
Delete1.கண்ணாடி பெட்டிக்குள்ள வச்சு பூட்டுங்க ....தினமும் ஒரு பக்கம் மட்டும் பார்வைக்கு வைங்க.....
Delete2.எல்லாத்தையும் செராக்ஸ் பண்ணி ஒரு அறை முழுவதும் ஒட்டி வைங்கோ...........நாங்க நின்னுகிட்டே படிச்சுகிறோம்
3. பூனைகள் ஜாக்கிரதை.... போர்டு வச்சுடுங்க
ராஜ், சிவா, விஜய், மந்திரி பற்றி நான் மிகவும் உயர்வாக எண்ணி இருந்தேன். ஆனால் இந்த பதிவை படித்தவுடன் அந்த எண்ணத்தில் மண் விழுந்து உள்ளது.
Deleteநீங்கள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சமுக அந்தஸ்துடன் வாழ்பவர்கள் ஆனால் நீங்கள் புத்தக திருட்டை பற்றி பேசுவது என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. உங்களிடம் இந்த வார்த்தைகளை நான் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. இந்த பதிவை படிக்கும் நபர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள். உங்கள் கவுரவத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள, திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வளவுத்தான் நான் சொல்வது.
ஊருக்கு (நமது காமிக்சுக்கு) ஒரு திருடன் போதும். அது நானாகவே இருந்துவிட்டு போகிறேன்.
அதனால் வரும் பழிச்சொல்லை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஒரு வேண்டுகோள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளி போட வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிவகாசியில் தொடங்கவுள்ள காமிக்ஸ் லைப்ரேரிக்கு தொடக்க நாள் இரவு மட்டும் இரவு காவலாளியாக என்னை நியமனம் செய்த நமது எடிட்டருக்கு கோடானு கோடி நன்றி........ நன்றி............. நன்றி............
ஒய்யார கொண்டயாம் தாழம் பூவும் .....
Deleteஉள்ள இருக்குமாம் ஈரும் பேணும்............
நிழல் படை ஜாக்கிரதை !
Deleteமாயாவிகள் ஜாக்கிரதை
DeleteThis comment has been removed by the author.
Deleteமுகுந்தனின் பெருந்தன்மைக்கு சக இரவு காவலாளி என்ற முறையில் தலைவணங்குகிறேன்
Delete@ செந்தில் மாதேஷ்
Deleteஅப்படியே ரெண்டு காவலாளிகளும் ஒருவருக்கொருவர் குனிஞ்சு குனிஞ்சு தலைவணங்கிகிட்டே.... இருந்தீங்கன்னா, ஜன்னல் வழியா உள்ளே குதிச்சு 'மொத்தத்தையும்' சத்தமில்லாம லவட்டிகிட்டு புயலா புறப்பட்டுடுவேன்...
//இதோ ஏப்ரலின் "சற்றே குண்டு" புக்கின் அட்டைப்படம் + ட்ரைலர் ! "குண்டு புக்கின்" காதலர்களுக்கு தொடர் மாதங்களில் இது போல் இதழ்கள் வெளியாவதில் குஷி இருக்கலாம் - but நமது விற்பனையாளர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதான feedback - தொடரும் நாட்களில் தான் நமக்குக் கிட்டும். கடைகளில் விற்பனைக்கு ரூ.60 விலையிலான சிங்கள் இதழ்கள் சற்றே சௌகரியமாய் இருப்பதாக இந்தாண்டின் துவக்கம் முதலாய் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வருகிறேன் ; அதே பாணியில் ரூ.120-க்கும் சிக்கலின்றி வரவேற்பு கிட்டிடும் பட்சத்தில் தலை தப்பித்து விடும் //
ReplyDeleteநாம் இப்போது விற்பனயாலர்களுக்கு பணம் கொடுத்த பிறகுதான் கொடுக்கிறோம் (மாற்றி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)
ரூ 180 ரெண்டு புத்தகங்களுக்கு எனும்போது 50 காப்பிகள் வாங்க ரூ 9000 ஐ அவர் எடுத்து வைக்க வேண்டும். அதே சமயம் ரூ 120 (ரெண்டு புத்தகம்) எனும்போது கம்மியாகத்தான் அவர் செலவளிக்க வேண்டி ருக்கும். அதற்காக அவர்கள் ரூ 120 கே ரெண்டு புக்கா போடுங்கள் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ரூ 60 எனும்போது நிறைய பேர் வாங்க வாய்ப்பு கிடைக்கும். எனவே ரெண்டையும் கலந்தே போடுவது நல்லது. ஒரு 60 ரூ புக் மற்றும் ரூ 120 புத்தகம் அல்லது மூன்று 60 ரூ புத்தகம் என்று போடலாம் (ஹி ஹி )
வணக்கம் to all!
ReplyDelete// இம்மாத அட்டைப்படம் நம் ஓவியரின் கைவண்ணமே ; //
அட அட ! நமது ஓவியர் திரு.மாலையப்பன் அவர்களின் கைவண்ணம் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது. சூப்பர் சார்!அவர் ஓவியங்களுக்கு தற்போது ஏதோ ஒரு வகையில் கணினி தொழில் நுட்ப்பத்தின் உதவியை பயன்படுத்துகிறார் எனபது என் கணிப்பு. ஓவியங்களின் பின்னணியை வழக்கம் போல ஏதாவது ஒரு ஏனோ தானோ பாணியில் வண்ணங்களை கொண்டு நிரப்புவதை விடுத்து, அப்படியே FG ஓவியத்துக்கு பொருத்தமான வகையில் ஒரு BG ஓவியத்தையும் தயார் செய்து இரண்டையும் இணைத்தால் நாமும் INDUSTRIAL STANDARD டுக்கு மிக நெருக்கத்தில் வந்து விடுவோம். :-)!
//இம்மாதம் ......... ஒரு ஹீரோவெனில் - ஓவியரும் இணையானதொரு ஹீரோ என்றே சொல்லல்லாம் !! //
ஆஹா...படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக உள்ளது.இந்த கருத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகத்தின் வெளியீட்டின் முன்பும் ஆசிரியர் வெளியிடவேண்டும் எனபது எனது ஆசை. நான் ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் மேடை போட்டு மைக் பிடித்து ஆசிரியரை முன்னே நிற்கவைத்து "நீங்கள் செய்வீர்களா.......!? நீங்கள் செய்வீர்களா.....!?நீங்கள் செய்வீர்களா...!?" என்று கேட்டிருப்பேன்.: -)
//முழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் முயற்சியில் அரங்கேறியுள்ள இந்த விற்பனைத் தளம் //
//முழுக்க துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னாவின் கைவண்ணமாக இருக்கும் ! //
திரு.விக்ரம்,திரு.பிரகாஸ்,திரு.துரை பிரசன்னா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்! இரண்டு வெவ்வேறு முயற்சிகளை என்பதை விடுத்து, இணைந்து செயல்பட்டால் வெளிப்படும் ஆக்கம் இன்னமும் சிறப்பாக இருக்கும் அல்லவா??
//KBT - சீசன் 2014-ஐத் துவங்கலாம் போல் தோன்றுகிறது !! //
//இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் ! //
ஆசிரியர் நம் மேல் வைத்துள்ள அளவு கடந்த அன்பும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவுமே இந்த அறிவிப்புகளை பார்கிறேன். சில நண்பர்கள் இங்கே "இது ஒரு வேண்டாத முயற்சி" என்பதை போல் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது சொதப்பினால் என்னாவது என்பதே அவர்களின் பயம். இந்த மொழிபெயர்ப்பை யார் செய்தாலும் அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் அதை அனுமதிக்காப்பபோகிறார். தரம் இல்லாத மொழிபெயர்ப்புகள் வந்தால் நிச்சயம் அவை வெளியிடப்படப்போவதில்லை. இதை நாம் அனைவரும் அறிந்ததே. பிறகு எதற்கு இந்த பயம்?? நம் மேல் ஆசிரியர் நம்பிக்கை வைத்துள்ளதை போல,ஆசிரியரின் மேல் நாமும் நம்பிக்கை வைப்போம் நண்பர்களே! இங்கே இன்னொன்று ,நமது சக நண்பர்களின் படைப்புகளை படிப்பது ஒரு மகிழ்ச்சி என்றால் மொழிபெயர்ப்பில் வேற்றொரு புதியவிதமான SPICE கலவை நமக்கு கிடைப்பது மற்றொன்று. lets give it a try folks!
எனது சமீபத்திய பணிசுமை/பயணங்கள் காரணமாக அட்லாண்டாவில் ஆக்ரோசத்தை கூட இன்னமும் படித்துமுடிக்க முடியவில்லை.sorry!
KBT - சீசன் 2014னின் பார்வையாளனாக இருந்து encourage செய்து ஆக்கங்களை ரசிப்பதில் எனது பெரும் பங்கு இருக்கும் என உறுதிபட கூறிக்கொள்கிறேன். ; -)
// நீங்கள் செய்வீர்களா...!? நீங்கள் செய்வீர்களா....!? //
Deleteஹா ஹா ஹா! LOL.
ஒரிஜினல் பெயரான "மேஜிக் விண்ட " தனை அப்படியே பயன்படுத்திடுவது தேவலை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்
ReplyDelete+1
பின்னட்டையில் வந்துள்ள "ஆக் ஷன் காமிக்ஸ் ஹீரோக்களுள் இவர் ஒரு தனி ரகம்"!! வாசகம் கற்பனை வறட்சியை காட்டுகிறது. ஷேல்டனுடைய ஹீரோ இமேஜேய் தூக்கி நிறுத்துவதற்கு பதில் "அவனா நீ ??" என்பதை போல ஏதோ ஒரு நகைசுவை உணர்வை இந்த வாசகம் தூண்டி விடுகிறது. :-)
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteபின் அட்டைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகத்தரம் நம் உள்ளங்கையிலும் கூட ஒயிலாய் ஊஞ்சலாடும் என்று, இந்த பின் அட்டை நம்மிடம் சத்திய பிரமாணம் செய்கிறது. என்னுடைய favorite ஹீரோக்களில், லார்கோ வின்ச்/ற்கு பிறகு இரண்டாவதாக இடம் பெரும் ''வேயன் ஷெல்டன்'' நம் காமிக்ஸ் ரசனைக்கு ஒரு பூஸ்ட் ; அவரின் வருகை பாலைவனச் சோலையாய் - ஏப்ரல் வெம்மையை தவிர்க்கும் என்ற நினைப்பில் நொடிகள் தோறும் இங்கு யுகமாய் நகர்கின்றன :(
மீண்டும் இப்பொது தான் ஜெரோம் கதை எடுத்து படிதேன் ....
ReplyDeleteநல்லா இருந்துச்சு..........
அதில் உள்ள ஆசான் முன்னுரையை இப்பொழுது படிக்கவில்லை.........
1. மொழிபெயர்த்த பின் ஒன்றரை வருஷம் மேஜை மீது தூங்கிய புத்தகம்....
2.ஆர்ப்பாட்டம்,அதிரடிஇல்லாதவர் ,சோடாபுட்டி,சோப்ளாங்கி என்ற வர்ணனை
3.ஜெரோம் ஆக்சன் குறைவு
ஒரு வேலை இப்படி அறிமுக படுத்தி இருந்தால் .......
௦.ஒன்றரை என் கண்ணில் ஏன் படாமல் போனதோ தெரியவில்லை
1.ரிப் கிர்பி போன்றவர்
2.துல்லியமாக வழக்கை அணுகுவார்
3.அவரது காதலியும் இனைந்து துப்பறியும் முதல் கதை.....
நீங்க இப்படியெல்லாம் பேசினதே இல்லையே மாஸ்டர்
Deleteநீங்க எப்பவுமே இப்படித்தான் மாஸ்டர்
Deleteஇது தான் என் முதல் விமர்சனம் ஹிஹி
Deleteஅட்டகாசம் !
Deleteஅப்பிடீங்கிறீங்க ...........
Deleteமந்திரியின் மாறுபட்ட கண்ணோட்டத்திலேயே எல்லாரும் பார்த்திருந்தா அந்த சோடாபுட்டி டிடெக்டிவை நாம் இழந்திருக்க மாட்டோம்... ஹம்... :(
Deleteசெல்டனை வரவேற்பதா? அல்லது 30/ம் ஆண்டு மலர் அறிவிப்பு விளம்பரங்களை வரவேற்பதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் இரண்டுமே மனதை கொள்ளை கொள்ள செய்பவை.
ReplyDeleteகேபிடி சீசன் 2014 போட்டி வரவேற்கத்தக்கது. ஆனால் அறிவித்திருக்கும் பரிசுதான் விசப்பரீட்சை என்று தோன்றுகிறது. வாசகர்களுக்கு பரிசாக தங்களுடைய பழைய புத்தகங்களை தர விருப்பமில்லையெனில்,
நான் பொக்கிசமாக போற்றி பாதுகாத்து வரும் 2 புத்தகங்களை பரிசாக தர பெருந்தன்மையுடன் முன்வருகிறேன்.
///////////////மனதில் மிருகம் வேண்டும்///////////////ஒரு சிப்பாயின் சுவடுகள்///////////////////
இந்த பரிசு அறிவிப்பை கண்டு உள்ளம் மகிழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டி களத்தில் குதிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
// செல்டனை //
Deleteவயதில் பெரியவரான அந்த ஹீரோவை சற்று மரியாதையுன் ஷெல்டர் என்றே அழைக்கலாமே... :P
அந்த மரியாதை டைகருக்கு மட்டுமே உரித்தானது நண்பரே
Deleteபெரிய வயதில் டைகர், இளவயதில் டைகன்! :D
Deleteரமேஷ் குமார் ர்ர்ரர்ர்ர்ர்
Deleteமுகுந்தன் குமார்ர்ரர்ர்ர்
ர்ர்ர்ரர்ர்ர்ர்
டெக்ஸ் வில்லர்
இறைவன்
ஷெல்டன்
ok
ReplyDelete200 ....
ReplyDelete