Thursday, August 30, 2012

ஒரு புதிய வருகை !!
நண்பர்களே,

வணக்கம் ! செப்டம்பர் 8  & 9 தேதிகளில் பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON 2012 -ல் நமது அடுத்த இதழான 'Wild West ஸ்பெஷல்' விற்பனைக்குக் கிட்டிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பணிகளை நிரம்பவே துரிதப்படுத்தி வருகிறேன் ! அது மட்டுமல்லாது நமது Never Before ஸ்பெஷல் பணிகள் இமாலய உயரத்திற்கு என்   முன்னே நிற்பதால், அதிலும் எக்கச்சக்கமாய் கவனம் செலுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ! So இங்கே அவ்வப்போது எட்டிப்பார்ப்பதைத் தவிர அதிகமாய் நேரம் செலவிட இயலவில்லை !Apologies folks ! நாளை இரவு உங்களின் சமீபத்திய பதிவுகளுக்கு இயன்றளவு பதில் இடுவேன் உறுதியாய் ! 

இதோ நமது WW ஸ்பெஷலின் அட்டைப்பட டிசைன் ! 


இரு அட்டைகளுக்குமே ஒரிஜினலாக பிரெஞ்சு ஓவியர்கள் தயாரித்த அதே படங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னணி வர்ணச் சேர்க்கைகளை மட்டும் நாமாக அமைத்துள்ளோம் ! ஒரிஜினலின் வண்ணங்கள் ரொம்பவே plain ஆக இருந்ததால் அவற்றை அப்படியே பயன்படுத்திட மனம் ஒப்பவில்லை ! கண்ணை அதிகம் உறுத்தாத மெல்லிய வண்ணங்களை இம்முறை நமது டிசைனர் பிரயோகித்துள்ளது சிறப்பாக உள்ளதென்று எனக்குத் தோன்றியது ! நிச்சயம் இதில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடுமென்று நான் அறிவேன் ; வழக்கம் போல் உங்கள் எண்ணங்களை பதிவிடலாமே !

"எமனின் திசை மேற்கு" கதையின் உள்பக்கங்கள் வண்ணத்தில் அற்புதமாய்  மிளிர்கின்றதென்றே சொல்ல வேண்டும் ! மிகவும் வித்தியாசமான வண்ணச் சேர்க்கை ; மாறுபட்ட கதைக் களமென்று விரைவில் உங்களை சந்திக்கவிருக்கும் இக்கதைக்கு உங்களது மதிப்பீட்டினை அறிந்திடும் ஆவல் இப்போதே எனக்குள் !

டைகரின் சாகசம் சிறிதும் சோடை போகா 'பரபர ' பட்டாசு ! புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் (காலின்   வில்சன்) வண்ணத்தில்  கலக்கும் இந்த சாகசம் டைகர் மன்றத்தினருக்கு சரியான விருந்து படைத்திடும் ! இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன ! You will love them for sure !பெங்களுருவில் கோரமங்களாவில் (http://www.comicconindia.com/Express/index.php?page=venue) நடந்திடவிருக்கும் இந்த COMIC CON 2012 நமக்கு ஒரு புதிய களமே.!என்ன எதிர்பார்த்திடுவதென்ற ஐடியா  பெரிதாக ஏதுமில்லை என்பதே நிஜம் ! இந்திய காமிக்ஸ் உலகப் பதிப்பகப் பெருந்தலைகளோடு தோள் உரசிடும் ஒரு அனுபவமாக ; சம காலக் காமிக்ஸ் முன்னேற்றங்களை ரசித்திடும் ஒரு வாய்ப்பாக எங்களுக்கு இது அமைந்திடுமென்று நம்புகிறேன் ! இரு தினங்களும் அங்கே ஒரு காமிக்ஸ் ரசிகனாய் ரவுண்ட் அடித்திடும் எண்ணத்தில் உள்ளேன் ! உங்களை அங்கு சந்திக்க இயன்றால் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியே ! Please do drop in folks !! 

பெங்களுருவில் மட்டுமல்லாது மதுரையில் இன்று முதல் துவங்கியுள்ள புத்தகத் திருவிழாவிலும் நமது இதழ்கள் ஸ்டால் எண்  125  & 126 -ல் கிடைத்திடும் ! முதல் நாளே decent விற்பனை என்ற சேதி சந்தோஷமளித்தது ! புன்னகைக்க இன்னுமொரு காரணமாய் அமைந்தது இன்று காலையில் நமது அலுவலகத்தில் என்னை சந்தித்திட்ட வாசகர்களின் உற்சாக வெளிப்பாடுகள் ! இருவருமே 37 ..38 வயதிலிருந்த நண்பர்கள் ; தனித்தனியே வந்திருந்த போதிலும் இருவரும் வெளிப்படுத்திய உணர்வுகள் ரொம்பவே ஒற்றுமையானவை. ! அவர்களது காமிக்ஸ் ஆர்வம் understandable தான் ; எனினும் இருவருமே தத்தம் வீடுகளில் குட்டிப் புதல்வர்கள் நமது நியூ லுக் ஸ்பெஷல் இதழினை ரொம்ப ரசித்ததைப் பற்றிச் சொன்ன போது நிஜமான சந்தோஷம் ! ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!

P.S: வார இறுதிகளில் என்னோடு பேசிட எண்ணும் நண்பர்கள் இனி தொடர்பு கொள்ள வேண்டிய நிரந்தர எண் இதுவே : 98428  64584 !  முந்தைய எண் இனி செயல்படாது ! 

160 comments:

  1. Replies
    1. டியர் எடிட்டர்,

      நீங்கள் கிராபிக் நாவலாக தேர்ந்தெடுத்திருக்கும் மற்றுமொரு “WESTERN" கதை அட்டகாசம்.

      இந்த "WILD WEST SPECIAL"-ல் இந்த கதை சரியான தேர்வு. மீண்டும் ஒரு ஐரோப்பிய தயாரிப்பில் மீண்டும் ஒரு அமெரிக்க “WESTERN”.

      நீங்களும் இடுப்பில் இரட்டைத் துப்பாக்கியோடு அதிரடியாக கிளம்பி விட்டீர்கள் என்பதை இந்த வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் மூலம் அறிவித்து விட்டீர்கள். சூப்பர். காமிக் கானுக்கு சரியான தேர்வே. இந்த கிராபிக் நாவல் ஒன்று மட்டும் தானா அல்லது இவர் நமது டெக்ஸ், டைகர், லார்கோ, ப்ரூனோ கிளப்பில் நிரந்தர உறுப்பினராக இருந்து தொடர்ந்து எங்களை மகிழ்விக்கப் போகிறாரா?

      என் பல்ஸ் எகிறி விட்டது, இந்த புத்தகம் கையில் கிடைக்கும் நாளை எதிர்பார்க்கும் தவத்தை ஆரம்பித்து விட்டேன்.

      மீண்டும் ஒரு சூப்பர் கதையை எங்களுக்காக கைவசப் படுத்திய எடிட்டருக்கு நன்றி.

      அடி பின்னுகிறீர்கள். சூப்பர் WESTERN ரசிகனய்யா நீர். உமது ரசனை நாளுக்கு நாள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
    2. நீங்களும் அடி பின்னி விட்டீர்கள் நண்பரே,உங்கள் தவம் களையும் அந்த நாளை நானும் எதிர் நோக்கி.................

      அன்பு ஆசிரியர் அவர்களுக்கு எங்களுக்கும் புத்தகம் அன்றே கிடைக்குமா அல்லது 15 க்கு பிறகா என அறிவித்தால் ............நன்றி ......

      Delete
  2. Replies
    1. சாக்ரடிஸ் "I am 1 " ன்னு ரெண்டாவதா சொல்லி இருக்கீங்க. ஸ்டீல் க்ளா தமிழில் அடித்தே முதலிடத்தை பெற்று விட்டாரே. :D

      Delete
  3. Exciting announcement indeed, and the covers looks very nice.

    I am still waiting for the double thrill special. Probably I will wake up before sunrise tomorrow and call the Lion office to find out if Radhakrishnan has mailed my copy yet.

    ReplyDelete
    Replies
    1. BN USA : All overseas subscription copies were shipped 2 weeks back ! Thanks.

      Delete
  4. எழுத்துக்கள் கொண்ட கட்டங்களை தூக்கி காட்ட மிதமான வண்ண பின்னணி நீங்கள் கூறிய படி அற்புதம்.அநேகமாக நமது முந்தய அட்டை படங்களை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த அட்டை பட தேர்வு.அடாடா பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலுள்ளது நமது இந்த அட்டை படம்.டைகர் எப்போதும் அசத்தல் மன்னர்தானே.இதில் இன்னும் அசத்துகிறார்.கண்டிப்பாக காண்போரை ஈர்க்கும்.

    அந்த மாறு பட்ட கதை களத்திற்காக காத்திருக்கிறோம்.................எனக்கும் அதென்ன கிராபிக்ஸ் நாவெல் என்று ,தரிசிக்கும் ஆவலில் காத்திருக்கிறேன்.இந்த அட்டை படத்தை பார்த்தாலே தெரிகிறது நமது காமிக் கானின் வெற்றி உறுதி செய்யப்பட்டதென......

    ஓளி மயமான எதிர் காலம் என் கண்களில் தெரிகிறது

    உலகம் கேட்கும் காமிக்ஸ் ஓசை என் காதில் விழுகிறது.................

    ReplyDelete
    Replies
    1. To be frank I am not impressed with the cover for Tiger Story, may be it looks good on printed cover.

      Delete
  5. Also please make an official announcement on the Mayavi/Lawrence/Johnny special along with the cover art.

    Once you finish the remaining unpublished fleetway Mayavi/Lawrence/Johnny stories, please consider reprinting the stories that came out in the unreadable pocket size comics classics in the larger size.

    There are a few fans here who vehemently hate these old stories. For their convenience, would you consider reprinting these under a different brand, like "Muthu Classics" or "Golden Classics" so that our friends here who do not like to buy these Mayavi/lawrence stories can skip subscription for this separately branded comics classics series?

    ReplyDelete
    Replies
    1. BN USA : The announcements on reprints will find their way to this page towards the end of the year ; right now the ongoing projects have everybody in our team working round the clock.

      And the suggestions for 2 different reprint brands are just not practical. There are physical and financial limitations to what we can do and the last thing I would want at this stage is to channelize all our resources and energy into reprints - at the expense of the new releases !

      There will be six reprints each year and the choices of stories that will make up these 6 issues would be open to reader's suggestions. Thanks again.

      Delete
  6. எனக்கும் அதென்ன கிராபிக்ஸ் நாவெல் என்று ,தரிசிக்கும் ஆவலில் காத்திருக்கிறேன்.இந்த அட்டை படத்தை பார்த்தாலே தெரிகிறது நமது காமிக் கானின் வெற்றி.

    நான் இதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  7. WOW!
    Eager to meet captain Tiger for the first time in COLOUR!
    No doupt, it's going to be very exiting!...
    let's celebrate, dear friends!

    ReplyDelete
  8. பிரமாதமாக இருக்கின்றன அட்டைப்படங்கள். குதிரையின் வால்தான் கொஞ்சம் 'கட்' ஆகிவிட்டது. திருஷ்டிப்பொட்டும் வேண்டுமல்லவா?

    ReplyDelete
  9. அட்டை படம் மிகவும் நன்றாக உள்ளது சார்.
    வண்ணகலவை ஒரு பாலைவன தோற்றத்தை உருவாகுகிறது அருமை.
    அட்டை படத்தை பார்க்கும் போதே நமது டைகர் பாலைவனத்தில் சோறு தண்ணி இல்லாமல் போவது ஏன் கண் முன்னே விரிகிறது,
    பின் அட்டை படமும் நன்றாக உள்ளது.
    வழக்கம் போல இது இரண்டு கதைகள் அல்லது black & white கதையும் உள்ளது அல்லவா?
    காமிக்ஸ் கானில் நமது காமிக்ஸ் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  10. Rustic feel உடன் Raw-வாக தோற்றமளிக்கும் முன்/பின் அட்டைகள் தூள்! :) கௌபாய் கதைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
  11. அட்டை படம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது!


    முத்து காமிக்ஸ் அன்மையாக ஒரு ப்ரெபஷனல் லுக் பெற்றுள்ளது!

    வண்ணங்கள் வழக்கமான பச்சை மஞ்சள் என்று கண்ணை எரிக்காமல்
    ஒரு ஈஸ்ட் மேன் டின்ட் கொடுத்திருப்பது அருமை. ஒரே ஒரு இதழில் (என் பெயர்
    லார்கோ) பின் அடடையில் இடம் பிடித்த ஐ எஸ் பி என் பார்கோட் என்னவாயிற்று?

    ஒரு புதிய வருகை !! -- 30/08/2012
    //என்ன எதிர்பார்த்திடுவதென்ற ஐடியா பெரிதாக ஏதுமில்லை என்பதே நிஜம் ! //

    திரு விஜயன் நம்ப முடியத அளவுக்கு யதார்த்த வாதியாகவே உள்ளார். இந்த குணமே
    அவரை வாசகர்கள் மத்தியில் மிகவும் விரும்மப்படுபவராக ஆக்கியுள்ளது.

    ஒரு புதிய வருகை !! -- 30/08/2012
    //"எமனின் திசை மேற்கு" கதையின் உள்பக்கங்கள் வண்ணத்தில் அற்புதமாய் மிளிர்கின்றதென்றே சொல்ல வேண்டும் ! //


    வாவ்! ஏதிர்பார்ப்பை எகிற செய்யும் வரிகள். ஒரு சீரியசான கௌபாய் கதை வண்ணத்தில் வருவது இதுவே முதல்முறை. கௌபாய் கதை என்பதே பழம் நழவி பாலில் விழவதற்கு சமம். இப்போது அதுவே வண்ணத்திலெனும் போது அது நழவி வாயில் விழந்தது போல் ஆகாதா? இப்படி ஒரு வாய்பை ஏற்படுத்தி கொடுக்கும் திரு விஜயன் அவர்களுக்கு நன்றிகள் ஓராயிரம்.


    ஒரு புதிய வருகை !! -- 30/08/2012
    //ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!//

    ம்ம்ம்....திரு விஜயன் அவர்களின் எண்ணவோட்டத்தை பார்க்கும் போது முத்து மற்றும்
    லயன் காமிக்ஸ் களில் கதை தேர்வுகளிலில் இருந்து புத்தக வடிவமைப்புகள் வரை பல
    புரட்சிகரமான மாற்றங்களை விரைவில் எதிபார்க்கலாம் என்று தெரிகிறது!

    ReplyDelete
  12. அட்டைப்படங்கள்

    கௌபாய் கதைகளுக்கு பொருத்தமாகவே உள்ளன.. எனக்கு பிடித்திருக்கிறது.

    //இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன//

    இப்படியே ஒவ்வொரு தடவையும் கொளுத்திபோட்டுட்டு போங்க...நாங்க எப்போடா புக் கைல கிடைக்கும்ன்னு டென்ஷன் ஆ திரியறோம்..:-)

    ReplyDelete
  13. Dear Vijayan SIR, I will be visiting the comic con express on Saturday after 12 o'clock! Let me catch you there! I started counting the days for this... :-)

    ReplyDelete
  14. டியர் எடி ,,,,,,,, அட்டை படம் சூப்பர் ,,,,,,, நம்ப cap tiger கதை single பார்ட் கதையா?,,,,,,,,,,, இல்லை ,,,,பழைய கதை யின் தொடர்ச்சியா?,,,பரலோக பாதை,,,,மாதிரி கதையின் தொடர்ச்சியா ?,,,,,, இல்லை புதிய கதையின் முதல் பாகமா ?,,,உஸ் அப்பாடா,,,,,கூல் பண்ண ஒரு கதை
    ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார் ,,,,,,,,, அவர் இடம் யார் ஆசி கேட்டாலும் ,,,,புன்னகை யுடன் ஒரு விரலை காட்டுவார்,,,, துக்கம் சொன்னாலும் ,,,,புன்னகை யுடன் ஒரு விரல் காட்டுவார் ,,,, for example ,,,ஐயா,,, எனக்கு திருமணம் என்றாலும் புன்னகை யுடன் ஒரு விரல் ,,,,,,,ஐயா என் மனைவி செத்துட்டா என்றாலும் புன்னகை யுடன் ஒரு விரல் ,,,,, ஜென் துறவி இடம் வேலை பார்த்த வேலைகாரன் அவரை கிண்டல் செய்யும் நோக்கில் ,,,,அவன் இடம் யார் என்ன சொன்னாலும் நம்ப ஜென் துறவி மாதிரி ,,,, ஒரு விரலை காட்டுவானாம்,,,,,,,, அதை கண்டிக்க நினைத்த ஜென் துறவி ,,,,,,,, வேலை காரனின் விரலை வெட்டிவிட்டார்,,,,,வேலை காரன் ,,,ரத்தம்,,,, வடிய ,,,,,வடிய ,,,,,கதறியவரே,,,ஐயா இப்படி பண்ணிடீன்களே ,,,,,,என்று கேட்டானாம் ,,அதற்கு நம்ப ஜென் துறவி புன்னகை யுடன் ஒரு விரல் காட்டினார்,,,,,,,,,, கூல் friends ,,,,

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்... யப்பா முடியல.. ஏன் நீங்க நல்லா லூசாதானே இருந்தீங்க. ஏன் இந்த கொலைவெறி.:-) கூல் friend

      //நம்ப cap tiger கதை single பார்ட் கதையா?,,,,,,,,,,, இல்லை ,,,,பழைய கதை யின் தொடர்ச்சியா?,,,பரலோக பாதை,,,,மாதிரி கதையின் தொடர்ச்சியா ?,,,,,, இல்லை புதிய கதையின் முதல் பாகமா ?//

      நண்பரே எடிட்டரிடம் நீங்கள் கேட்ட கேள்வி என் மனதிலும் ஓடிகொண்டிருக்கிறது.

      Delete
    2. நண்பர்களே, இக்கதை முன்பு வந்த கதைகளின் தொடர்ச்சி என ஆசிரியர் கூறியதாக நினைவு.

      Delete
    3. This is the New series first part English translation Name "The Missouri Demons" second and third parts on Muthu Never before Special 1)Terror Over Kansas,2)The Train from Hell

      Delete
    4. இல்லை நண்பா இது தொடர்ச்சி கிடையாது. தனி கதை.

      Delete
    5. ஹா ஹா ஹா ஹாஹா.... அய்யோ அய்யோ...... :))

      Delete
    6. //தனி கதை.// puthiya thodarin aarambam (Thani Saaga)

      Delete
    7. கடைசியாக ப்ளூபெர்ரி டைகரின் கதைகளை படித்தது 2007-இல்! ஹ்ம்ம்... இது தொடரா இல்லையா என்பதிலேயே இவ்வளவு குழப்பமா?! தொடராக இருந்தால் இதன் முந்தைய பாகங்கள் என்னிடம் உள்ளனவா இல்லையா என்பதே கேள்விக் குறிதான்! :(

      Delete
    8. ஆங் அது.... பரட்டை ஒழிக... ஸ்டீல் க்ளோ வாழ்க.... :)

      Delete
    9. Quantrill Saga வின் முதல் கதை இது :)

      Delete
    10. //இதன் முந்தைய பாகங்கள் என்னிடம் உள்ளனவா இல்லையா என்பதே கேள்விக் குறிதான்! :(// Antha kavalai vendaam. Ithuthaan aarambam :)

      Delete
  15. கௌபாய் கதைகளுக்கு பொருத்தமான அட்டைப்படங்கள்...எனக்கு பிடித்திருக்கிறது.

    //இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன//

    எடிட்டர் சார், ஒவ்வொரு புத்தகமமும் எங்களை குஷிபடுத்தகூடியவைகள்தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே ,உண்மை ............
      எத்தனை முறை கடைகளுக்கு சென்று புத்தகம் வரவில்லை என்று திரும்பியிருப்போம் .................

      Delete
  16. Front cover's design & the colour's used are really awesome..
    way to go guys..

    ReplyDelete
  17. பதிவிற்கும், தகவலுக்கும் நன்றி சார்... தற்போது வீட்டில் குழந்தைகள் உங்கள் தளத்தின் Fans...

    ReplyDelete
    Replies
    1. // ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!
      //

      Delete
  18. டியர் எடிட்டர் சார்,
    வணக்கம் . wild west ஸ்பெஷல் இதழின் அட்டை படம் மிகவும் அருமை. புத்தகத்தை விரைவில் காண ஆவலாக உள்ளேன். சென்னை, ஈரோடு, மதுரை புத்தக கண்காட்சிகளில் நமது காமிக்ஸ் இதழுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 1970 , 80 களில் இருந்த காமிக்ஸ் பொற்காலம் மெல்ல மெல்ல திரும்புகிறது என்றே தோன்றுகிறது. வாசகர்களின் ஆதரவுடன் புதிய புதிய முயற்சிகளை தங்கள் மேற்கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  19. Rustic colors giving a good feel of Cow Boy life. Looks like a International comics. Really good.

    ReplyDelete
  20. Cap tiger story fourth part of the story ilamaiyil kol. Previous three parts came in the cowboy express in the name " ilamaiyil kol"

    ReplyDelete
  21. Dear Sir,

    ஏனோ எனக்கு இந்த அட்டைப்படத்தின் வண்ணங்கள் அவ்வளவாக பிடிக்கவில்லை.

    பின்னணியில் உள்ள வண்ணங்கள் பிரதான படங்களை சரியாக வெளிப்படுத்தவில்லையோ என்று
    தோன்றுகிறது.

    நீல வண்ண டைகரின் அட்டைப்படத்திற்கும், எமனின் திசை மேற்கிற்கும் ஒரே பின்னணி வண்ணங்கள் பொருந்தவில்லை என்பது என் எண்ணம். ஒரு வேலை கையில் புத்தகமாக வந்தபின் பார்த்தால் நன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    மதுரை & பெங்களுரு கண்காட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்.

    வாசகர் கருத்துக்களுக்கு இணங்க ஒரிஜினல் அட்டைப் படங்களை பயன்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  22. 100 ரூபாய் மிகவும் சிறியதாக உள்ளதாக தோன்றுகிறது. அந்த டிசைனுக்கு நடுவே வழக்கமான சைசில் விலை விவரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதிருக்கும் ரூ 100 டிசைனில் இருந்து ஒதுங்கியுள்ளது போல் உள்ளது.

    ReplyDelete
  23. முன்னட்டையில் டைகர் என்பது மிகவும் சந்தோசம். நல்லவேளை அந்த புதியவனை முன்னட்டையில் போட்டு டைகரை பின் தள்ளவில்லை. நெவெர் before ஸ்பெஷலில் முதல் கதையாக லார்கோவை போட்டது போல். (நெவெர் before ஸ்பெஷலில் முதல் கதைக்கான இடத்திற்கு டைகருக்குதான் முழு தகுதி உள்ளது. முடிந்தால் லார்கோவை இரண்டாமிடத்திற்கு மாற்றி விடுங்கள் :) )

    ReplyDelete
    Replies
    1. இனி திருஷ்டிப்பரிகார போட்டோவிற்கு இந்த முன்னட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.... ஹாஹாஹா

      Delete
    2. ha ha! tiger-in kolaveri rasigan pOla!

      Delete
    3. உண்மையை சொன்னா அதுக்கு இப்ப பொறாமைன்னு பேரா.... :)

      Delete
    4. இந்த அட்டையில் பரட்டையை தவிர மீதியனைத்தும் சூப்பரோ சூப்பர்.... சூப்பர் ஸ்டார் ஸ்பைடரிற்கு ஜே ஜே.

      Delete
    5. டியர் சங்கர் ,,,,,,, எங்க வீட்டில்,,,,,,,,, திருஷ்டி க்கு,,,,,,,,,படம் வேண்டும் என்று கேட்டார்கள் ,,,,,,,,,,
      அவசரப்பட வேண்டாம் ,,,,,,,,, சூப்பர் spl அட்டை படம் வரும் ,,,,, தருகிறேன்,,,,,,,, என்று சொல்லி இருக்கிறேன் ,,,,,,,
      சூப்பர் spl delay ஆனால் ,,,,,,,,உங்கள் போட்டோ அனுப்ப முடியுமா ?,,,,,,,,,,சும்மா ,,,,,,,,, ஜோக் தலைவரே ,,,,,,,,,
      கலர் ல் வரும் action cowboy க்கு எல்லோரும் ,,,,,,,,, salute செய்வோம் ,,,,,,,,,,,,,,,,,
      நீங்களே spider சூப்பர் ஸ்டார் என்றால் எப்படிங்க ,,,,,,
      spider தியாகராஜ பாகவதர் என்றால் ,,,,,,,,,,
      tiger ரஜினிகாந்த் ,,,,,,,,,,,,,,,,
      சந்தேகம் என்றால் ,,,,,, ஜட்ஜ் ஆக நம்ப எடி யை கூபிடுவோம்,,,,,,,,,,,,,,,
      உலகில் ஒரே சூப்பர் ஸ்டார் நம்ப tiger தான் என்று உரக்க குரல் கொடுப்போம் ,,,,,,,,,
      expired ஆன,,,,,,,ஸ்டார் spider ,,,, என்று அறிந்து கொள்வோம் ,,,,,,,,,,
      டேக் கேர் friend ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
    6. டியர் லூஸ் பையன்... பிரம்மா திருமால் பிறைசூடி ஆகியோர் அளவு பவராக சூஹிசூஸ் அட்டைப்படம் அதிரடியாக இருக்கும்.... என் போட்டோவை அனுப்புகிறேன், பின் சிட்டுக்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது யாராம்.... பரட்டை ரஜினிகாந்தான் ஆனா அது பதினாறு வயதினிலே.... ஆனா மிசூரி பரட்டை நாட் குட் பேட் அண்ட் அக்லி.... நலமா இருங்க நண்பரே...

      Delete
    7. என்னகொடுமை ஸ்டீல் claw ,,,,,,,,,,, நீங்க எதோ என்னை மோசமா தாக்கி எழுதி இருக்கீங்க ,,,,,,என்று தெரியுது ,,,,,,,,,ஆனா,,,,,,,என்ன எழுதி இருக்கீங்க என்றுதான் தெரியல ,,,,,,,,,ஒரு மூத்த காமிக்ஸ் fan ஆன,,,,,,,,,உங்களிடம் ,,,,,,இருந்து இவளவு மோசமான வார்த்தைகளை ( எதோ எனக்கு புரிந்த வரை ),,,நான் எதிர் பார்கவில்லை ,,,,,,,,,,ஆனா,,,ஏன்,,இப்படி எழுதி இருக்கீங்க ,,,என்று எனக்கு ,,தெரிகிறது ,,,வேறு ப்ளாக் ல் நடந்த சர்ச்சையை மனதில் வைத்து ,,,,,,,,இங்கு,,,,,,,மறைமுகமாக ,,,,,,, தாக்குவது,,,, பக்குவபட்ட உங்களுக்கு அழகு இல்லை ,,,,,,,,,,

      டியர் friends ,,,,இந்த ப்ளாக் எனக்கு பல உண்மையான நண்பர்களை பெற்றுத்தந்து உள்ளது ,,,,,,, நானே என்னை அறிமுகபடுத்தி ,,, சில ப்ளாக் நண்பர்களை தொடர்பு கொண்டு cell ல் பேசியதுண்டு ,,,, அவர்கள் ஆச்சர்யத்துடன் ,,,சார் ,,,நீங்களா என்று கேட்டதுண்டு ,,,,,,,,
      அதில் ஒருநண்பர் எனக்கு சில பழைய முத்து காமிக்ஸ் ,பரிசாக ,,அனுப்பினர் ,,,ரொம்ப பொறாமை படாதீங்க ,,,, எல்லாம் அட்டை இல்லாமல் ,,1 ,கழுகுமலை கோட்டை (எனக்கு மிகவும் பிடித்த கதை,,என்னிடம் reprint தான் இருந்தது ,,, நண்பர் அனுப்பிய 1 .50 ரூபா புத்தகம் மிக அருமை ,,,, மாடஸ்டி ன் pictures மிகவும் அருமை ,,அண்ட் பேப்பர் thick & quality ,,,ஏன் பழைய முத்து விற்கு இப்படி பேய் மாதிரி அலயரங்க,,, என்று இப்பதான் தெரியுது ,,),2 ,மூன்று தூண் மர்மம் ,,, 3 ,,ரத்த வெறியர்கள் (சிஸ்கோ கிட்),,,,,,,, நட்புக்கு மரியாதையை செய்த நண்பர் க்கு,,,எப்படி nandri சொல்வது என்று தெரியவில்லை ,,, நான் சில பார்வதி சித்திர கதைகள் அனுப்பினேன் ,,,,,,,, முடிக்கும் போது டேக் கேர் ,, என்று type அடிப்பேன்
      இந்த அவசர accident உலகத்தில் ,,வெளியே செல்பவங்க ,,வீடு வந்து சேர்வதே பெரும்பாடு ,,, இதை கூட கிண்டல் செய்யறீங்களே ஸ்டீல் claw ,,,, anyway டேக் கேர்,,, கிண்டல்காக என் charecter யை மாற்றி கொள்ள இயலாது ,,,,,,,,

      Delete
    8. ஸ்டீல் க்ளா,,,,,,,,,,,,,

      என்னுடைய .........பையனை......... மன்னிப்பீராக,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      anyway டேக் கேர் நண்பர்களே, டேக்கு கேறு,,,,,,,,,,,,

      Delete
    9. நண்பரே,நானும் தங்களை எங்கும் தாக்கியதாக இல்லையே,நான் மூன்று முறை குதித்த கிறுக்கன் அர்டினியை ஸ்பைடர் திட்டுவது போல அரக்கன் ஆர்டினிக்காக எனது கற்பனை கலந்தேன்,உங்கள் பதிவுகளால் கவர பட்டு உங்களது நாம் என்ன சொன்னாலும் அனைத்தையும் அழித்து விடும் தன்மை கொண்ட அந்த டேக் கேர் என்ற அற்புதமான வார்த்தைகளை அதில் சேர்த்தேன் அவளவுதான்.ஒரு ஊரிலே ஒரு குருடன் இருந்தானாம் ,அவனுக்கு ஒரு நண்பன் இருந்தானாம் .........கேட்கிறீர்களா ...............ஒருநாள் அந்த நண்பன் குருடனை பார்த்து பால் வந்ததா என்று கேட்டானாம் .அதற்க்கு குருடன் பால் எப்படி இருக்கும் என்றானாம் ,உடனே நமது அந்த புத்திசாலி நண்பன் பால் வெள்ளை நிறமாய் இருக்கும் என்றானாம் ,உடனே குருடன் வெள்ளை எப்படி இருக்கும் என்றானாம்,அதற்க்கு இவனோ கொக்கு நிறத்தில் என்றானாம் ,கொக்கு எப்படி இருக்கும் என்றானாம் குருடன்,நமது நண்பன் கையை கொக்கு குனிவது போல வைத்து கொண்டு இப்படி இருக்கும் என்றானாம் ,தடவி பார்த்த குருடனோ ஒ பால் இப்படி இருக்குமா என்றானாம் ........................இங்கு நாமிருக்கும் நிமிடங்களை சந்தோசமாக கழிப்போமே ,நீங்கள் கூறியது போல துரோகம் ,கோபம் என ....அச்சுறுத்தும் பலவுள்ள இவுலகில் நமக்கு சிறிதேனும் சந்தோசம் தர ஒதுங்கி இருக்கும் இந்த பூங்காவை அழகாக வைப்பதென்பது நமது ஒவொருவரின் பூச்செரியும் வார்த்தைகளால் தானேயன்றி ............நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்கும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான் .ஒவொருவரின் எண்ணங்களும் கண்ணாடி போல நமது எண்ணங்களை காட்டும் ..............

      இனிய உளவாக இன்னாது கூறல்

      கனி இருப்ப காய் கவர்ந்தற்று .................திருவள்ளுவருக்கு நன்றி

      நீங்கள் கூறிய அந்த விவேகனந்தரின் வரிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.....................

      //என் charecter யை மாற்றி கொள்ள இயலாது ,,,,,,,,// எதற்கு மாற்ற வேண்டும் தொடருங்கள் உங்கள் எழுத்து நடை உங்களுக்கு சந்தோசம் தருவதால் ,பிறருக்கும் சந்தோசம்தான் தரும் ,அந்த பிறரில் நானும்தான் .....................................

      Delete
    10. மேலும் மன்னிப்பு கேட்பது தவறு என்னும் எனது பிடிவாத கொள்கைதனை கூட நான் தளர்த்தினேன்,நாம் மன்னிப்பு கேட்டால் அங்கு தவறு உள்ளது என்பது எனது எண்ணம்.யதார்த்தத்தை கூறியதால் தங்கள் மனம் புண் பட்டதை பார்த்தே நான் மனிப்பும் கேட்டேன்...........................வாருங்கள் கொண்டாட இங்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன .....உங்களுக்கு கிடைத்த புத்தகங்கள் எனக்கு பொறமை அளித்தாலும் ,சரியான நபருக்கே கிடைத்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே ,தங்களுக்கு அளித்த நண்பருக்கு எனது நன்றிகளும்...................

      Delete
    11. இன்னும் நீங்கள் நண்பராக என்னை ஏற்று கொள்ளவில்லை என்பதே எனது வருத்தம்,நான் உங்களை எப்படி அழைக்கிறேன் பாருங்களேன்....................

      Delete
    12. யப்பா ,,,,,,,கீழ்பாக்கத்தில் இருந்து எப்ப வந்தீங்க?,,,,,,,,,,,,, எல்லோரும் என்னை

      லூசுவோட பையன்,,,,,லூசுவோட பையன் ன்னு,சொல்லி கடசீல,,,லூசு பையன்,,ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாங்க ,,,
      ஹாஸ்பதிரியில சேது மாமா சுகமா ?,,,,,,,,
      மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ,,,,,,,,,,
      வயசான காலத்தில கம்ப்யூட்டர் ரொம்ப நேரம் பார்க்காதீங்க ,,,,
      ஏற்கனவே கெட்டு போன கண்ணு இன்னும் அவிந்து போய்டும் ,,,,,,,
      டாஸ்மார்க் ல ரொம்ப நேரம் இருக்காம,,,,, நேர நேரத்துக்கு வீடு வந்து சேருங்க ,,,,,,,,,,,
      டேக் கேர் யப்பா ,,,,,,,,,,,,
      லூசு க்கு,,,,,,, லூசு பையன் எழுதியது ,,,,,,,,,,,,,,,

      Delete
    13. ஹாய் நண்பரே ,,, ,,டியர் பொன்ராஜ் ,,,,,,,,,,,,,,
      உங்கள் வார்த்தைகள் எனக்கு புரியாமல் போனதுதான் ,,,,,,, என்னுடைய வருத்தமான பதிவுக்கு ,காரணம்,,,,,,,,,,,,,,
      ஒரு நல்ல நண்பரை நான் இழப்பதற்கு இருந்தேன் ,,,,,,,, தேங்க்ஸ் god ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,
      டேக் கேர் friend ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
    14. இங்கு காமிக்ஸ் மேல் கொண்ட காதலால் வரும் எந்த நண்பர்களையும் இழந்து விடாதீர்கள்..................உங்களது நீண்ட மறு பதிப்பு கோரிக்கைகளை முன் வைக்க மறந்து விடாதீர்கள்.................

      Delete
  24. Waiting eagerly for Lt.Blueberry alias Captain Tiger!

    ReplyDelete
  25. Replies
    1. ஒரு வழியாக 100 ஐத் தாண்டி விட்டதா? நல்லது, நல்லது.

      Delete
    2. 200-ஐ நெருங்கி உள்ளது !

      Delete
  26. காமிக்ஸ் புத்தகங்கள் வருவதே இல்லையே ,, கறுப்போ வெள்ளையோ எப்படியாவது லயன்/முத்து வராதா... என்று எதிர்பார்த்து இருந்தது போய் இப்போது மாதாமாதம் வண்ணத்தில் இரண்டிரண்டு மன்னிக்கவும் மும்மூன்று கதைகளாக வருவது, மிகவும் எதிர்பார்த்தே இராத ஒரு அசாதாரண நிகழ்வாகும்! அட்டையில், உள்ளடக்கத்தில் நாங்கள் எதிர்பார்பதற்கும் மேலாக உங்கள் உழைப்பைத் தருவீர்கள் என்பதை நான் அறிவேன்! சிலர் அவ்வப்போது கூறும் குறைகள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை! உங்கள் இந்த உற்சாகம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! இது இடையறாது தொடர்ந்தால் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் விருந்துதான்! haats of you Mr.Vijayan!

    ReplyDelete
  27. //ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள்//

    இந்த வரிகளை துரித படுத்தும் வகையில் மினி லயன் மீண்டும் தொடங்கலாமே

    டைகரின் இரும்புக்கை எத்தன் ,பரலோக பாதை தொடரை இறுதி பகுதியை வெளியிடலாமே (முன் பகுதியையும் சேர்த்து )

    ReplyDelete
    Replies
    1. i agree ,,,,,,,,,, இரும்புக்கை எத்தன் &பரலோக பாதை யுடன் இறுதி பாகமும் இணைந்து 2013 ல் பொங்கல் மலராக மலர்ந்தால் ,,,,,,,,,, சிவகாசிக்கே வந்து ctas (கேப் tiger அடிபொடிகள் சங்கம் ) சார்பாக நம்ப எடி &டீம் க்கு சிக்கன் பிரியாணி கிண்டி தரப்படும் ,,,,,,,,,,, பொங்கல் மலர் விரைவில் வெளியிட ஆவன செய்யுமாறு CTAS சார்பாக கேட்டு கொள்கிறோம் ,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,

      Delete
    2. இந்த அடிபொடி அழுக்குமூட்டைங்க எல்லாம் அடிச்சு துவம்சம் பண்ண எங்க மஞ்சள் ஹீரோ டெக்ஸ் ரெடி ஆகிட்டு இருக்கிறதா நம்ம எடி சொல்லியிருக்காரு. இன்னும் நாளே மாசம்தான். அப்புறம் இருக்கு அதிரடி. ஒரு சின்ன ட்ரைலர் - காவல் கழுகு - டிசம்பர் மாசமே இருக்கு கண்ணுங்களா.

      Delete
    3. Auditor Raja : நிதானமாய் ; அதே சமயம் நிறைவாய் பயணிப்போமே !'மீண்டும் மினி-லயன்' ; 'மறுபதிப்புகள் எக்கச்சக்கம்' என்றெல்லாம் புதிதாய் அறிவிப்புகள் செய்திடுவது கடினமல்ல ; ஆனால் இன்று நாம் எதிர்பார்க்கும் தரத்தினைத் தொடர்ந்திட இயந்திரகதியிலான உழைப்பு பயன் தராது ! ஒவ்வொரு இதழுக்கும் இப்போதெல்லாம் அவசியப்படும் நேரமும், முயற்சிகளும் ரொம்பவே பிரத்யேகமானவை ! 'அங்கே இங்கே' வெனக் கவனம் சிதிறிட அனுமதிக்கும் பட்சத்தில், அது தரத்தில் பிரதிபலிக்கும்.Let's stay focused please !

      Delete
    4. தங்களது இந்த பதில் தாங்கள் ,தங்கள் பணியினூடே இதை பொழுது போக்காக செய்து வருகிறீர்கள் என்ற எனது எண்ணத்தை தகர்த்து விட்டது.தங்களது கவனம் இதிலேயும் முழு மூச்சாக உள்ளது எனும் போது ................................மீண்டும் அந்த பொற்காலம்( 1980 ),பிறந்து விட்டதை விதைத்து விட்டீர்கள் தங்களது தற்போதைய வெளியீடுகள் மூலம்,இது தொடரும் என்ற நம்பிக்கைகளை வளர்தியுள்ளது தங்களது இந்த பதில் .தரத்திற்காக ,தரமான கதைகளுக்காக காத்திருக்கிறோம் ..........அற்புதம் விளையட்டும் ...............ஆரம்ப காலத்தில் அற்புதமான கதைகளை ஆர்வத்துடன் தேடி திரிந்த ஆசிரியர் என் கண் முன்னே தெரிகிறார் .................நன்றிகள் ..............பல ...பல ...................

      Delete
  28. நான் காமிக்ஸ் என்று வந்து விட்டால் எப்போதுமே கண்ணில் அடிக்கும் வண்ணக் கலவையின் ரசிகன். எனக்கு இந்த அட்டைப் படம் கொஞ்சம் சோகையாகத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  29. எனக்கு புக் கிடைச்சா சரி.
    உங்கள் அனைவரின் அளவுக்கும் எனக்கு விமர்சனம் பண்ண தெரியாது ..மதியில்லா மந்திரி தானே நான்.
    ஆனா என்ன வச்சு நானே நல்லா காமெடி பண்ணுவேன் .

    ReplyDelete
  30. Good news. With respect to covers i have mixed feelings, yes i do like the original art but kind of missing our typical style.

    Editor,
    Could you please lets us know the Black and White titles (if they are present in the book) also? For the sake of BW fans like me.

    -- V. Karthikeyan

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : Not too long a wait ! I have a feeling you will not be disappointed for sure !

      Delete
    2. yaahooooooo, ippothaan nimathi :-) Thank you.

      Delete
  31. நல்ல பிசாசும்,கணக்கரசரும் இப்போதெல்லாம் ரொம்ப தோஸ்த் ஆகிவிட்டார்கள்.ஈரோட்டிலுள்ள ரஷ்ய சர்வாதிகாரியின் அலுவலகத்தில் அடிக்கடி சந்தித்து பேசுகிறார்கள்.இதை கேள்விப்பட்டதிலிருந்து இளைய தளபதி ஏக கடுப்பாகிவிட்டாராம்.சந்திப்பு அவர் ஊரிலில்லாத நாளில் நடக்கிறதாம்.கோவை இரும்புக்கைய்யாரோடு சேர்ந்து தனி அணியமைக்க முடிவுசெய்துவிட்டாராம்.திருப்பூர் புலி தலைவரும்,நீலசாயக்காரரும் அந்த அணியில் சேர இருக்கிறார்களாம்.நல்ல பிசாசை கண்டித்து தீர்மானமும் ரெடியாகிவிட்டதாம்.எல்லாம்,சிவகாசி சிங்கமுத்து செய்யும் லீலை என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.(கிசு கிசு எப்பூடி?ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. //சிவகாசி சிங்கமுத்து//
      :) :) ;)

      Delete
    2. யப்பா, குமுதம் கிசுகிசு படிச்ச மாதிரி ஒரே குழப்பமாவும் இருக்கு, புரிஞ்சமாதிரியும் இருக்கு! :))

      Delete
    3. கிசு கிசு அருமை! அட்டகாசம்! ஆனாலும் ஏற்கமுடியாது.

      (இப்படிப்பட்ட கிசுகிசு சமாச்சாரங்களை நல்ல பிசாசு உடனடியாக நிறுத்தாவிட்டால், நல்ல பிசாசுவின் கோட்டைக்குள் புகுந்து அனைத்து சிவகாசி சிங்கமுத்துக்களும் இளையதளபதி குழுவினரால் ஆட்டையை போடப்படும் என்று அதிகாரப்பூர்வ தீர்மானம் நிறைவேறியிருக்கிறதாமே!)

      Delete
    4. எனது பெயரை மட்டும் நேரடியாக போட்டு கிக்கை குறைத்து விட்டீர்களே .............நானே மறைய முடியாமல் தவிக்கிறேன் ..............

      Delete
    5. பூக்கள் ஏந்தி வந்தால் இது புண்ணிய தேசமடா ....
      வாட்கள் ஏந்தி வந்தால் தலை வாங்கிடும் தேசமடா .....

      Delete
    6. ஐயையோ! ஆடிட்டர் ராஜாவுக்கு என்னமோ ஆயிடுச்சு. யாராவது 108-ஐ கூப்பிடுங்க ப்ளீஸ்...
      (போன வாரம் புனித சாத்தானைப் பார்த்ததுலே இருந்து இப்படி ஆகிட்டார். பாவம்!)

      Delete
  32. EXCELLENT COVER ART.. இதுவரை வந்த இதழ்களில் இந்த அட்டைப் படம் போல அழகானது எதுவுமில்லை என்று கூறக்கூடிய அளவுக்கு, உலகத் தரத்துடன் இருக்கிறது...

    தங்கக் கல்லறைக்கும் இதே போல சூப்பரான லோக்கல்+க்ளோபல் டச் உள்ள அட்டைப் படத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டைகரின் அட்டை படம் கலக்கி விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு,
      அப்படியே நமது லயனை எனது எண்ணத்தில் உயர்த்தி பிடித்த ,எனது பால்ய கால வாழ்க்கைகளை கனவில் களிக்க வைத்த, நமது லயனுக்கு சூப்பர் அறிமுகத்தை நமது வாசகர்களிடம் பெற்று தந்த நமது சூப்பர் ஹீரோக்களை தாங்கி வரும் (அன்று நமது லயனை தாங்கி வந்தது ,இன்றைய நிலையை பாருங்கள் நாம் தாங்க வேண்டியுள்ளது,வயதாகி விட்டதோ! (மாற்றமே மாறாதது என்பதை இங்கு ஏற்க என் மனம்................ )),மேலும் முத்துவிற்கு அற்புத அறிமுகம் தந்த ,எனது ஆதர்சன நாயகன் மாயாவியையும் கொண்ட நமது சூப்பர் ஹீரோ ஸ்பெசலுக்கும் அட்டை படம் ,என்ன செய்வீர்களா தெரியாது ,எதனை பேரை வேலை வாங்குவீர்களோ அதுவும் தெரியாது ,ஆனால் இது வரை எந்த அட்டை படமும் இப்படி வந்ததில்லை எனும் வண்ணம் தீபாவளியன்று வந்து வெடிக்க வேண்டும் ,எனும் எனது அவாவை பூர்த்தி செய்யும் சக்தியை எல்லாம் வல்ல ................தங்களுக்கு அளிக்க வேண்டும் ................சீக்கிரம் வாருங்கள் ........நமது காமிக் கானுக்கு புத்தகம் தயாரா? பிரசன்னாவின் கேள்வியே எனதும்...............................

      நெவெர்பி ஃ போர் ஸ்பெசலுக்கு தாங்கள் செலுத்தும் முயற்சி போல இதற்க்கு இரு மடங்கு இருக்க வேண்டும் என்று வேண்டும் நெடு நாள் வாசகன் ...................

      Delete
  33. டியர் எடிட்டர்,

    இந்த காமிக் கான் 2012-ல் நாம் பெருமைப்படும் விதத்தில், உலக தரத்தில் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தின் அட்டை இருக்கின்றது. பின்னட்டையில் இருக்கும் படத்தின் சுருண்ட பேப்பரில் படம் இருப்பது போல் இருக்கும் டிசைனும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றது. அந்த குதிரையின் வால்?, முடிந்த விஷயத்தை இப்போது பேசி ஏதும் பயண் இல்லை என்று நினைக்கின்றேன். ஒரு வேளை புத்தக அட்டை மடிக்கப் பட்ட நிலையில் இருந்தால், குட்டையான வால் கண்ணை உறுத்தாது என்று நினைகின்றேன். மரங்களை எண்ணுவதை விட்டு, வனத்தை ரசிப்போம்.

    மொத்தத்தில் அட்டை படம் சூப்பர். ஒரிஜினல் அட்டையையே உபயோகப் படுத்துவதை விட புதிய அட்டையை டிசைன் செய்வது நமது கமிட்மெண்ட்டைக் காட்டும். எனது மனதில் இருக்கும் ஒரே குறை, நமது காமிக்ஸ்கள் தமிழ் தெரியாத மற்றவர்களையும் சென்றடையும் விதத்தில் ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் அமர் சித்ரகதைப் புத்தகங்களைப் போல வெளிவரும் விதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இனி மற்ற மொழிகளுக்கும் அல்லது மொத்த இந்தியாவுக்கும் என்று உரிமம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பது எனது நெடுநாளைய ஆசை.

    எடிட்டர் திரு விஜயன், உங்களது காமிக் கான் 2012 பங்கேற்பு, வெளிநாட்டு காமிக்ஸ் வெளியீட்டாளர்களின் கண்களில் நீங்கள் ஒரு பிரகா(ஷ்)சமான, வெற்றிகரமான இந்திய காமிக்ஸ் வெளியிடுபவராக தெரியவேண்டும் என்றும், உங்களது எல்லைகளை நீங்களே மீறும் வகையில் இன்னும் அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தரும் களமாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். ALL THE BEST AND WISH YOU ALL SUCCESS AND GOD BE WITH YOU IN ALL YOUR FUTURE DEEDS.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ,அன்று உங்களை நீங்கள் தமிழகமா என்று முகம் சுளித்த ,அந்த வெளிநாட்டு பதிப்பாளர் இப்போது பார்த்தால் நமது தற்போதைய இந்த வெளியீடுகளை எடுத்து பார்த்தால் ................ஆஹா ......தரமே மந்திரம்................என பாடுவாரே ...

      Delete
    2. எனது மனதில் இருக்கும் ஒரே குறை, நமது காமிக்ஸ்கள் தமிழ் தெரியாத மற்றவர்களையும் சென்றடையும் விதத்தில் ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் அமர் சித்ரகதைப் புத்தகங்களைப் போல வெளிவரும் விதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இனி மற்ற மொழிகளுக்கும் அல்லது மொத்த இந்தியாவுக்கும் என்று உரிமம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பது எனது நெடுநாளைய ஆசை.


      //

      தகுதியுள்ளன தப்பி பிழைக்கும் .......நிரூபிக்க பட்டு விட்டது

      அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு அடி போடும் நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களின் கருத்துக்கு ... //.நடந்திடவிருக்கும் இந்த COMIC CON 2012 நமக்கு ஒரு புதிய களமே.!என்ன எதிர்பார்த்திடுவதென்ற ஐடியா பெரிதாக ஏதுமில்லை என்பதே நிஜம் !//எதிர் பார்ப்புகள் பெரிதாய் இருக்கட்டும் என பணிவோடு ஆசிரியர் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

      காமிக் கான் இதனை நிறை வேற்றுமா ,நிறைவேற்றும் ,நிறைவேற்ற வேண்டும் ....................காத்திருப்போம் ...........தமிழை மறந்து விடாதீர்கள் ..............

      Delete
    3. Balaji Sundar : கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் !

      தமிழ் தவிர இதர மொழிகளில் வெளியிடுவதென்பது சிறப்பானதொரு சிந்தனையே ; ஆனால் அதில் வெற்றி காண்பது நிரம்ப கஷ்டமானதொரு காரியம். வேற்று மொழியினில் உள்ள ஒரிஜினல்களை மறுபதிப்பு செய்திடும் போது ஜீவநாடியே அந்த மொழிமாற்றம்தான் ! ஒரு மொழியினை உணர்ந்து ; ரசித்து எழுதும் போதே அந்த மொழிமாற்றம் உறுத்தாமல் , சுகமாய் அமைந்திடும். அந்த மொழி பேசிடும் வாசகர்களின் ரசனைகள், பிரியங்கள் ஓரளவிற்காவது நமக்குத் தெரிந்திருத்தல் அவசியமாகும். இவற்றில் எதுவுமே நமக்கு சாத்தியமல்லவே !

      தவிர, பரிச்சயமில்லாதொரு மொழியில் பணியாற்ற நேர்ந்து, திறமையான உள்ளூர் எழுத்தாளர்களின் உதவியினைக் கோரிப் பெற்றிட இயலும் பட்சத்திலும் கூட, ஒரு மேற்பார்வையாளர் என்பதைத் தாண்டி எனது பங்களிப்பு பெரிதாக இருந்திட சாத்தியமில்லை. எனது அனுபவத்தில், ரசித்திட இயலாத எந்த முயற்சியும் நீடித்திடுவது கஷ்டமே !

      குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதே ஆகினும், நமக்குப் பிடித்த,பிரியமான தமிழிலேயே செயல்படுவது தந்திடும் நிறைவு, நிச்சயம் இதை விடப் பெரிய, புதிய களங்களில் கிட்டிடாது - at least எனக்கு !

      Delete
    4. Dear Editor, உங்களுடைய பதில்களைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் நன்றி.

      THERE ARE MANY THINGS IN LIFE THAT WILL CATCH YOUR EYE, BUT ONLY A FEW WILL CATCH YOUR HEART, PURSUE THOSE!

      மேற்குறிப்பிட்ட வாசகம் எனக்குப் பிடித்த ஒன்று. என் வாழ்க்கையில் பெரும்பாலான சமயங்களில் இந்த வாசகத்தின் படிதான் நடந்து கொண்டு இருக்கிறது / இருக்கிறேன். மனதுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் நிறைவான முடிவுகளைத் தருவது இல்லையென்பதை நான் என் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

      இந்திய அளவில் என்று சொன்னது, ஏதோ ஒரு சமயம் நீங்கள் இளம் வயதில், டெல்லியில் இருக்கும் ஒரு ஏஜெண்டிடம் சென்ற போது (லக்கி லூக்குக்காக பணம் செலுத்த என்று நினைக்கிறேன்), அந்த ஏஜெண்ட் உங்களை சரியாக வரவேற்று பேசவில்லை என்று எழுதியதாக ஞாபகம். உங்களுக்கு ஐரோப்பிய வெளியீட்டளர்களோடு இருக்கும் இத்தனை வருட தொடர்பினால் அட்லீஸ்ட் உரிமங்களுக்கான ஏஜெண்ட்டாகவாவது நீங்கள் இருக்க சாத்தியப்படுமா என்ற எண்ணத்தில் எழுந்ததே எனது மேற்கண்ட பதிவு. சிந்தித்துப் பார்க்கையில் அது அதிக செலவும், அதிக அலுவலக வேலையையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்று முழுவதும் உணர்கிறேன்.

      பகவத் கீதையில் சொன்னது போல் எந்த சமயத்தில் எது நடக்க வேண்டுமோ, அது, தக்க சமயத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடந்துவிடும். இதையும் நான் எனது அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

      ஐரோப்பாவில் இருக்கும் தனித்தனி நாடுகளைப் பார்த்தால் அதன் அளவு நமது நாட்டின் தனி தனி மாநிலங்களுக்கு ஈடாகத்தான் இருக்கும் அல்லது சிறிது குறைவாகவே கூட இருக்கலாம். அப்படி பார்க்கையில் நமது தமிழ்நாடு ஒரு தனி நாட்டுக்கு ஈடாகத்தான் மக்கள் தொகையை கொண்டு இருக்கின்றது.

      உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி.

      Delete
  34. இந்த வருடத்தின் 50 வது பதிவு அட்டகாசம் .... இந்தியா முழுவதும் நடக்கும் புத்தக திருவிழாக்களில் மட்டுமல்லாமல் உலகலாவிய புத்தககண்காட்சிகளிலும் பங்குபெற்று வெற்றிவாகை சூடும் நாள் வெகுதூரம் இல்லை...

    ReplyDelete
  35. நேற்று இட்ட கமெண்ட் கானவில்லை. டியர் எடிட்டர், ஸ்பாம் ஃபோல்டரில் பார்த்து மீட்டெடுக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர், எனது கமெண்ட்டை தேடித்தந்ததற்கு மிகவும் நன்றி.

      Delete
    2. உங்க புண்ணியத்துல கானாமபோன என்னோட கமெண்ட் உம் வெளிப்பட்டுவிட்டது. நன்றி நண்பரே

      Delete
  36. என்னது கிணத்த காணமா....?
    ''காணாமல் போன கமெண்ட் ''

    ReplyDelete
  37. அருமையான தினம் என்பது புதிய காமிக்ஸ் கையில் கிடைக்கும் தினமே..நம் லயன்&முத்து காமிக்ஸின் புதிய பொலிவு என்னோடு என் மகனையும் ஈர்த்தது..இப்போது என் மகன் லக்கிலூக்கின் ரசிகனாகி விட்டான். இதை இரண்டு நாள் முன்பு ஆசிரியரைச் சந்தித்த போது சொன்னேன்.என்னைப் போலவே நிறைய பேரிடமும் இதே பிரதிபலிப்பு இருந்ததாக கூறினார். ஆசிரியரை சந்தித்து என் கருத்துக்களைப் பகிர்ந்ததில் என் நெடுநாள் கனவு நிறைவேறியது.தேங்க்ஸ் சார்..வருடம் ஒருமுறை மிகப்பிரமாண்ட ஸ்பெஷல் புக் ( ஆயிரம் ரூபாய்னாலும் ஒகே) போட்டால் மிகமிகமிக மகிழ்வேன்..

    ReplyDelete
  38. ராஜா பாபு சார்.ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக சொல்லிவிட்டீர்கள்.அப்படி ஒரு மகா மெகா ஷ்பெசலை அனைவரும் வரவேற்ப்பார்கள்.(இளையராஜா பாடினாரே.அது தானே திருவாசகம்?ஹிஹி).

    ReplyDelete
  39. Blue ("WILD WEST SPECIAL"-) or Red( மரண நகரம் மிசோரி) கட்டத்தில் எதாவது ஒரு கட்டம் மட்டும் இருந்தால் தூக்கலாக இருக்கும். பெங்களுரு கண்காட்சில் உங்களது ஸ்டால் மிளிர வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  40. டியர் எடிட்டர்,

    நீங்கள் கிராபிக் நாவலாக தேர்ந்தெடுத்திருக்கும் மற்றுமொரு “WESTERN" கதை அட்டகாசம்.

    இந்த "WILD WEST SPECIAL"-ல் இந்த கதை சரியான தேர்வு. மீண்டும் ஒரு ஐரோப்பிய தயாரிப்பில் மீண்டும் ஒரு அமெரிக்க “WESTERN”. இந்த கதையே 72 வண்ண பக்கங்களை எடுத்துக் கொள்ளும் போது, கூடவே வண்ணத்தில் டைகரின் சாகசம் என்று பார்க்கும் போது, காமிக் கானுக்காக இந்த இதழை லயன் கம்பேக் ஸ்பெஷலைப் தயாரிக்கின்றீர்களோ என்று எண்ணுகின்றேன். அப்படி இருந்தால் எங்கள் காட்டில் மழைதான் போங்கள்.

    நீங்களும் இடுப்பில் இரட்டைத் துப்பாக்கியோடு அதிரடியாக கிளம்பி விட்டீர்கள் என்பதை இந்த வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் மூலம் அறிவித்து விட்டீர்கள். சூப்பர். காமிக் கானுக்கு சரியான தேர்வே. இந்த நாயகனின் சாகசம்ஒன்று மட்டும் தான் என்று நினைக்கிறேன் அப்படி இல்லாமல் இவர் நமது டெக்ஸ், டைகர், லார்கோ, ப்ரூனோ கிளப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து எங்களை மகிழ்விக்கப் போகிறாரா?

    என் பல்ஸ் எகிறி விட்டது, இந்த புத்தகம் கையில் கிடைக்கும் நாளை எதிர்பார்க்கும் தவத்தை ஆரம்பித்து விட்டேன்.

    மீண்டும் ஒரு சூப்பர் கதையை எங்களுக்காக கைவசப் படுத்திய எடிட்டருக்கு நன்றி.

    அடி பின்னுகிறீர்கள். சூப்பர் WESTERN ரசிகனய்யா நீர். உமது ரசனை நாளுக்கு நாள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.

    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்.

    ReplyDelete
    Replies
    1. Balaji Sundar : குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை தான், நமது கிராபிக் நாவல் (எமனின் திசை மேற்கு) COMIC CON திருவிழாவை ஒட்டி வெளியாகும் தற்செயலான சங்கதி ! நிச்சயம் இந்தக் கதை நம்மை சலனப்படுத்திடுமென்பதில் எனக்கு சந்தேகமில்லை ! Fingers crossed !

      Delete
    2. டியர் எடிட்டர், உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

      Delete
  41. நண்பர்களே! இன்று (2/9/2012) பிறந்த நாள் காணும் சாத்தானுக்கு நல்வாழ்த்துக்கள்........(ஆமா சாத்தானுக்கு பிறப்பு உண்டா?.... ஹி ஹி ஹி )

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பருக்கு இந்த அன்பு நண்பனின் எளிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........................

      Delete
    2. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை ,ஸ்டாலின் கலகத்தால் நண்பர் சோமசுந்தரத்துடன் பழைய நினைவுகளை கிளறி மகிழும் வாய்ப்பு கிடைத்தது ,அதற்க்கு நண்பர் ஸ்டாலினுக்கு நன்றிகள் ..........................ஏன் இப்படி ..............

      Delete
  42. dear vijayan sir ,back side அட்டை ல் இருக்கும் அந்த ஒற்றை கை cowboy ன் சோக முகம் ,மனதை என்னவோ செய்கிறது ,பழைய புக் ஒன்றில்கணவாய்cowboy கதைகள் series ல் ஒரு கதை மட்டுமே வந்து ,வாசகர்கள் இடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது ,அதே போல் எமனின் திசை மேற்குவும் சோக cowboy கதையா ?, மரண நகரம் மிசௌரி போஸ்ட் ல் tigerகம்பிரமாக நிற்பது மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் , அது புதிய தொடரின் ஆரம்பம் என்பதால் ,இந்த தொடர் எப்போது முடியும் என்று மனதில் சிறிது ஆயாசம் தோன்றுகிறது . .சார் ,tiger ன் அந்தரத்தில் நிற்கும் பழைய தொடர்களை முடித்து விட்டு புதிய tiger தொடர் ஆரம்பிக்கலாமே?
    இரும்புக்கை எத்தன் ,பரலோக பாதை,series வந்து பல வருடம் ஆனதால் ,எத்தனைபேர் அந்த புக் யை கைவசம் வைத்து இருப்பார்கள் கேள்வி குறியே ?,அப்படியே வைத்து இருந்தாலும் புக் கண்டிஷன் கேள்விக்குறியே ?,
    so ,இரும்புக்கை எத்தன் ,பரலோக பாதை உடன் இறுதி பகுதியையும் இணைத்து உயர்ந்த தரத்தில் black &white ல் வெளியிட்டால் கூட என்னை போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு மிகபெரிய சந்தோசமாக இருக்கும் .ஆவன செய்வீர்களா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem : டைகரின் "மரண நகரம் மிசெளரி " படிக்கும் போது உங்களின் கேள்விகளுக்கான விடை கிட்டிடும் ! சற்றே பொறுமை ப்ளீஸ் !

      Delete
    2. thanks for ur reply sir ,
      மரண நகரம் மிசெளரியை எதிர்பார்த்து ஆவலாக காத்து இருக்கிறேன் .

      Delete
  43. "முத்து Wild West ஸ்பெஷல் ஒரு Early Bird விமர்சனத்தில்" உங்கள் பல கேள்விகளுக்கு பதிலுள்ளது நண்பரே.

    ReplyDelete
  44. வணக்கம் விஜயன் சார்!

    நானொரு காமிக்ஸ் வாசகன். நாடுவிட்டு வந்ததால், கடந்த 4 வருடங்களாக எதையும் வாசிக்க முடியவில்லை. காமிக்ஸ் தொடர்பாக தேடும் போது உங்கள் பக்கம் வரக் கிடைத்தது.
    தங்களிடம் இருப்பில் உள்ள அனைத்து காமிக்ஸ்களினதும் பிரதிகளும் எனக்கு வேண்டும். விலைப்பட்டியலினை அனுப்பி வைப்பீர்களா?

    நான் இருப்பது ஐக்கிய அரபு ராச்சியத்தில் ( துபாய்) தங்களுக்கு உகந்த பணப்பரிவர்த்தனை முறையினையும் எனக்கு அறியத்தாருங்கள்.

    அவ்வாறியலாத பட்சத்தில், உங்களால் காமிக்ஸ்களை கேரளாவிற்கு அனுப்பி வைக்க முடியுமா?

    தயவு செய்து அனைத்து விபரங்களையும் தாருங்கள்.


    மிக்க நன்றி,

    சர்ஹூன் முஹம்மது.
    அபுதாபி
    அமீரகம்.
    02/09/2012

    ReplyDelete
    Replies
    1. கறுவல் : கைவசம் உள்ள அனைத்து இதழ்களையும் துபாய் அனுப்பிட தபால் கட்டணங்கள் அதிகமாய் இருக்கும். கேரளாவிற்கு அனுப்பிடுவது உங்களுக்கு பிரச்னையல்ல எனும் பட்சத்தில் சுலபமே. மொத்தம் நீங்கள் அனுப்பிட வேண்டியது Rs .1400 . பணம் அனுப்பிட விபரம் இங்கே உள்ளது :http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.tmlh

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 4W tech ல் பணிபுரிந்த பரணீ யா தாங்கள்? :)

      Delete
  46. I booked my tickets for ComicCon, thanks to your announcement!

    ReplyDelete
  47. மை டியர் மானிடர்களே.adiyenin பிறந்த நாள் .29.4.1973.எனவே இன்று என் பிறந்த நாள் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் .இந்த வதந்தியை உண்மை என்று நம்பி எனக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா,ரஷ்ய அதிபர் புதின்,இஸ்ரேல் பிரதமர் நேதேன்யாகு,பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோருக்கு சாத்தான் நன்றி தெரிவிக்கிறான்.(சாத்தான் ஒரு சர்வதேச வி.ஐ.பி.என்பது பலறுக்கு இப்போது தெரிந்திருக்குமே.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே

      இந்த வதந்தியை நம்பி நான் நேராக வாழ்த்து கூற (?) திரு புனித சாத்தான் அவர்களின் இல்லத்திற்கே சென்று விட்டேன். பின்பு தான் தெரிய வந்தது அது நமது நண்பர் ஸ்டாலின் அவர்களால் கிளப்பபட்ட ஒரு வதந்தி என்று.

      சாத்தான் அவர்களது வீடு நமது மாயஜால மன்னன் மண்ட்ரக் இல்லம் போல உள்ளது. ஆமாங்க அவர் காமிக்ஸ் புக்ஸ் வைத்துள்ள இடத்தை சாதாரண மானிடர்கள் அடைவது சுலபம் அல்ல. சிக்கலான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி புத்தகங்களை வைத்துள்ளார்.

      நான் செய்த புண்ணியம் அவரது பொக்கிஷங்களை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது, நன்றி திரு புனித சாத்தான் அவர்களே. அது மட்டும் அல்ல அவரது குடும்பத்தினரையும் சந்திக்க கூடிய வாய்ப்பும், சில மணித்துளிகள் அவர்களுன் உரையாடவும் வாய்ப்புகள் கிடைத்தது மிக சந்தோஷமான தருணம்.

      திரு ஸ்டாலின் நேற்று மாலை முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. திரு ஈரோடு விஜய் அவர்கள் நான் செய்த போன் காலை அட்டென்ட் செய்யவில்லை (கோயம்புத்தூர் ஸ்டீல் கிளவ் உடன் ஏதேனும் மீட்டிங்க்ஸ் இருந்திருக்கலாம் )

      நண்பர் திரு ஆடிட்டர் ராஜா அவர்களது மொபைல் நம்பர் என்னிடம் இல்லாததாலும், நேரம் சற்று குறைவாக இருந்தாலும் அவரை அடுத்த முறை ஈரோடு செல்லும் பொழுது சந்திக்க ஆவல் :)

      நேற்றைய நாளை மறக்க இயலாத நாளாக மாற்றிய திரு புனித சாத்தான் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல...

      திருப்பூர் ப்ளுபெர்ரி

      Delete
    2. நண்பர் ப்ளூபெர்ரிக்கு::
      அடடா! புத்தகத் திருவிழாவிலும், நேற்றைய உங்களது ஈரோடு வரவிலும் தங்களைச் சந்திக்க முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே! நேற்று நான் சேலத்தில் இருந்தேன். தங்களது அழைப்பையும் நான் தாமதமாகவே கவனித்தேன்.  அறிமுகமில்லாத எண் என்பதால்
      திரும்ப அழைக்கவில்லை.  :-(
      புனித சாத்தானுடனான உங்களது சந்திப்பு என் காதில் புகையை கிளப்பியிருக்கிறது.  எனினும், ஊர்விட்டு ஊர் வந்து நட்பை (மற்றும் காமிக்ஸை) வளர்க்கும் உங்கள் ஈடுபாடு பாராட்டுக்குறியது!
      விரைவில் சந்திப்போம் நண்பரே!
      ( நாம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி புனித சாத்தானின் புதையல் ரகசியத்தை....)


      Delete
    3. என்ன தான் நடக்கிறது இங்கே ஒரே களோபரமாக அல்லவா இருக்கிறது
      மொத்தத்தில் நல்லது நடந்திருக்கிறது புனித சாத்தான் அவர்கள் அவதரித்த நாளை தெரிந்துகொண்டோம்
      மற்றும் நண்பர் ப்ளுபெர்ரி மூலம் புனித சாத்தான் காத்துவரும் பொக்கிசத்தை அடைய வாய்ப்பு கிடைத்துள்ளது !!!!!!!!!!
      விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் www.punithasaatthaan.com ;-)
      .

      Delete
  48. புனித சாத்தான் : அப்பாட .... இப்பவது உண்மை வெளிவந்ததே!
    (இன்று திருமண நாள் காணும் காமிக்ஸ் நண்பர் சேலம் குமார் அவர்களின் திருமண நாளை மாற்றி எழுதியதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது ..... ஹி ஹி ஹி....)

    ReplyDelete
  49. ஆசிரியர் அவர்களுக்கு,
    அட்டைப்படம் மிக நன்றாக உள்ளது. இந்த எமனின் திசை மேற்கு இதழின் ஒரிஜினல் (சினிபுக்) அட்டையை பார்க்கும் போதும், கதையை படிக்கும் போதும் ஒரு சோகமான (Morose) உணர்வு தோன்றும் எனக்கு. இதை தமிழில் படிக்கும் போது அதே உணர்வு தோன்றுமா என்று பார்ப்போம்!

    இன்னும் ஒரே வாரம்தான் உள்ளது காமிக்- கானுக்கு, அனைத்து நிகழ்வுகளும் பதினோரு மணிக்கு மேல் தான் துவங்குகின்றது. ஆகவே நண்பர்களும் அனைவரும் ஒரு பத்து-பத்து முப்பதுக்குள் வந்தால் சந்தித்து அளவளாவ வசதியாக இருக்கும்! யார் யார் வருவீர்கள் என்று இங்கே முடிந்தால் பின்னோட்டம் இடவும் :-)


    மற்றும் ஒரு விஷயம்: காமிக்-கான் வலைத்தளத்தில் அனைத்து புதிய புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும் நாள் மற்றும்
    நேரத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளன. நமது வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் பற்றி எந்த தகவலும் இல்லை :-( எடிட்டர் சார் கவனிக்க!

    ReplyDelete
    Replies
    1. Prasanna.S : பார்க்க Comic Con facebook பக்கம் !

      Delete
    2. Basic Question: Could you please let me know what is the special in Comic-Con in Bangalore? do we have stall from different publishers to sell their comics? what about our comics stall? I hope entry is allowed for everyone, correct me if I am wrong.

      If the function starts at 11 o'clock then I will come there after lunch, i.e. 2 o'clock.

      Delete
    3. This is about our comics in facebook for the comic-con
      ======================================================
      The Wild West Special By Tamil Comics (Lion, Muthu, Classics) Launching Exclusively At Comic Con Express Bangalore!
      Launching Exclusively At Comic Con Express Bangalore!

      Wild West Special

      Publisher: Tamil Comics (Lion, Muthu, Classics)

      Synopsis: A stunning graphic novel created by famed writer Van Hamme featuring the Wild West is slated to be the latest release of Muthu Comics ! Entitled “Wild West Special” this color edition would be priced at Rs.100 and would be available at the publisher’s stall

      Delete
    4. எடிட்டர் சார்: பார்த்துவிட்டேன்! நன்றி. அதை அவர்கள் வலைதளத்திலும் போட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் :-)

      பரணி: காமிக் கான் என்பது மற்ற அனைத்து புத்தக கண்காட்சிகளை போலத்தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால் இங்கு காமிக்ஸ் புத்தகங்களின் வெளியீடு/விற்பனை மட்டுமே பிரதானமாக இருக்கும். இதில் விருப்பமுள்ள அனைத்து (காமிக்ஸ்) பதிப்பகங்களும் கலந்துகொள்ளலாம். பார்வையாளர்கள்/வாசகர்கள் பங்குபெற சில வித்தியாசமான போட்டிகளும் கூட உண்டு.(http://www.comicconindia.com/Express/index.php?page=contest-detail&id=4)

      And yes, entry is free. Everybody can come!

      Delete
  50. //இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன ! You will love them for sure ! //

    குண்டன் பில்லி மற்றும் பரட்டை ராஜா தானே சார் !!!!!!!!!!!!
    .

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : ஊஹும் ! இந்த இதழ் ஒரு வகையில் முழுக்க முழுக்க சீரியஸ் ஆனதொரு இதழே ! இவ்வாரம் சனிக்கிழமை முதல் சந்தா பிரதிகள் அனுப்பிடப்படுமென்பதால், காத்திருப்பின் நீளம் அதிகமாக இராது !

      Delete
  51. அட்டைப்படங்கள் அருமையாக உள்ளது சார் :))
    .
    // பெங்களுருவில் கோரமங்களாவில் (http://www.comicconindia.com/Express/index.php?page=venue) நடந்திடவிருக்கும் இந்த COMIC CON 2012 நமக்கு ஒரு புதிய களமே.! //

    புதிய வாசகர்களை கவர்ந்து பலமாகத் தன் முத்திரையை நமது லயன் முத்து காமிக்ஸ் பதிக்க வேண்டுமென்பதே எங்களது அவா
    எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பாராக :))
    .

    ReplyDelete
  52. அது எப்படிங்க நான் போடுற கமெண்ட் மட்டும் அடிக்கடி காணாம போயிடுது? ஆசிரியர் அவர்களே....கொஞ்சம் கவனிங்க சார்......இல்ல என்ன மாதிரி பெருசுங்க ககமெண்ட்டெல்லாம் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. siva.saravanakumar : Spam Box-ல் எந்த ஒரு பதிவும் இல்லை ! ஆகையால் நீங்கள் பதிவிட்ட சமயம் இன்டர்நெட் இணைப்பு ஒத்துழைக்காது போய் இருக்க வேண்டும் ! மீண்டும் ஒரு முறை முயற்சிக்க வேண்டுகிறேன் ! மற்றபடிக்கு இங்கே கத்திரி போடும் அவசியம் நேரிடவில்லை - இது வரையிலாவது !

      Delete
    2. என் குறையை கேட்டு , விளக்கம் அளித்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி......

      Delete
  53. Does anybody know what all the comics sold in Madurai book fair. Thanks in advance

    ReplyDelete
    Replies
    1. Comicslover : All issues listed in our current books !

      Delete
  54. நல்ல பிசாசின் பிறந்தநாள் வதந்தியால் கடந்த இரண்டு நாட்களாக அவரது செல்போனில் ஒரே வாழ்த்து மழையாம்.ஹாலிவூட் பிரபலங்களிலிருந்து,லோக்கல் அரசியல் தலைவர்கள் வரை ,பிசாசாரை வாழ்த்தோ வாழ்த்து என்று வாழ்த்தி தள்ளிவிட்டார்களாம்.ஆனால் ,இந்த வதந்திக்கு பின்னால் ரஷ்ய சர்வாதிகாரியும்,பிசாசும் கூட்டுசதி செய்திருப்பதாக ஒரு புது வதந்தியும் இப்போது பரவிவருகிறதாம்.இருவரும் பேசிவைத்து நாடகம் ஆடுவதாக,இளைய தளபதியார் போவோர் வருவோரிடமெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறாராம்.(கிசு கிசு நம்பர் டூ.ஹிஹி).

    ReplyDelete
  55. To: Mr.Vijayan,
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆசிரியர்.

    ஸார் உங்களுக்கு இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். படித்தீர்களோ தெரியவில்லை. புத்தகங்கள், தபால், பணம் செலுத்தும் முறை தொடர்பாக. உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பர்க்கிறேன். நிரந்தரமான, விரைவான வழிமுறை ஒன்றை உறுதிசெய்துகொள்வதே எமது எதிர்பார்ப்பு. நன்றி.
    -Theeban
    Colombo.

    ReplyDelete
  56. சேலத்தில் நமது காமிக்ஸ் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிவித்தால் மகிழ்சி அடைவேன்.நன்றி

    ReplyDelete
  57. how can purchase your books kandy in sri lanka? is online purchase is possible? can u ship it? how can i make payment?

    ReplyDelete
    Replies
    1. Hi Manoj mano!
      There are some information, but not updated one. http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

      You can follow this FB page and group for latest comics updates in Sri Lanka. It may easy to you.
      Page: http://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069

      Group: http://www.facebook.com/groups/412480238797291/

      Delete
    2. Hi mr. Bond is iceberg comics still available in srilanka

      Delete
    3. king sulthan: No friend. Stopped; only 3 issues.

      Delete
  58. சார் ஒரு சிறு வேண்டுகோள்.
    நான் பின்னுடம் இடும் போதெல்லாம் நீங்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கேள்வி கேட்டு இருப்பேன்.
    ஆனால் இதுவரை நீங்கள் எனக்கு மட்டும் பதிலளித்ததே இல்லை.
    ஒரு முறையாவது பதிலளிங்களேன் சார் ப்ளீஸ்.
    //வழக்கம் போல இது இரண்டு கதைகள் அல்லது black & white கதையும் உள்ளது அல்லவா?//
    ஆனால் இதே கேள்விக்கு மற்றொரு இடத்தில பதிலளிதுலீர்கள்.

    ReplyDelete
  59. இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கிட்டு இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொல்லி....... ஆர்ச்சி பக்கத்து வீட்டு மாமா பையனோட.... ஸ்பைடர் தம்பியோட க்ராண்ட்டேலின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் கூட படிச்ச லார்கோவின் மைத்துனன் டைகர் வீட்டு மொட்டை மாடியில் குடியிருக்கும் மாடஸ்டிகளும்,ஜோன்சுகளும் மற்ற அணைத்து காமிக்ஸ் ஹீரோக்களும் வாழ்த்து சொல்லுறாங்க சாமியோவ்..கடைசியாய் ..........மந்திரியும்

    ReplyDelete
  60. இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கிட்டு இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொல்லி....... ஆர்ச்சி பக்கத்து வீட்டு மாமா பையனோட.... ஸ்பைடர் தம்பியோட க்ராண்ட்டேலின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் கூட படிச்ச லார்கோவின் மைத்துனன் டைகர் வீட்டு மொட்டை மாடியில் குடியிருக்கும் மாடஸ்டிகளும்,ஜோன்சுகளும் மற்ற அணைத்து காமிக்ஸ் ஹீரோக்களும் வாழ்த்து சொல்லுறாங்க சாமியோவ்..கடைசியாய் ..........மந்திரியும்

    ReplyDelete
  61. சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்களுக்கு ,,,,,,,,,,,,,,, எனது ஆழ்ந்த ,,,,,,, கண்ணீர் ,,,,,,,,, அஞ்சலி ,,,,,,,,,,,,
    காயமடைந்தவர்கள் ,,,,,,,, சீக்கிரம் குணமடைய ,,,,,,,, பிரார்த்தனை ,,,,,,,, செய்கிறேன் ,,,,,,,,,
    வரும் காலத்தில் ஆவது ,,,இந்த மாதிரி வெடி விபத்தை ,,,,,தவிர்க்க ,,, வேண்டுகிறேன் ,,,,,,,,
    அடுத்தவர்கள் ,,,சந்தோசத்துக்காக ,,,, தங்கள் உயிர் உடன் விளையாடும் ,,,, தொழில் ,,,செய்யும் பட்டாசு ,,,,,,,, தொழிலாளர்களுக்காக ,,,,
    அவர்கள் வாழ்வு முன்னேற ,,,,,,,,,, ஆண்டவனை ,,,,, பிரார்த்தனை செய்கிறேன் ,,,,,,,,,,,
    நண்பர்களும் பிரார்த்தனை செய்யுமாறு ,,,,,,,,,, பணிவுடன் கேட்டு ,,, கொள்கிறேன்
    வருத்ததுடன் ,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. எனது ஆழ்ந்த இரங்கல்களையும்,கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்து கொள்கிறேன். ..............விபத்தில் பாதிக்கப்பட்ட,மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வு முன்னேற நானும் ஆண்டவனை பிராத்திக்கிறேன் ......................

      Delete
    2. praying is not enough. shall we gather some money and dispense thru vijayan sir.

      Delete
  62. சிவகாசி துயரங்களுக்கு ,மிகவும் வேதனைபடுகிறேன். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், இத்தனை உயிர் இழப்புகளா ?
    கருவேலம் பூக்கள் (as iam correct ?) படத்தில் (writer பூமணி direction ), பட்டாசு தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக பதிவு செய்து இருப்பார்

    ReplyDelete
  63. தொழிற்சாலை விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் சிவகாசியில் உயர்தர தீத்தடுப்பு பயிற்சி நிலையங்களோ ,தீக்காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளோ இல்லை என வரும் செய்திகள் விபத்தைவிட கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ,வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காமல் உரிய சட்டநடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் புனித சாத்தான் ஆழ்ந்த இரங்கலை வேதனையுடன் தெரிவிக்கிறான்.

    ReplyDelete
  64. செய்தியை படித்து, பார்த்து அதிர்ந்துபோனேன்.
    விபத்தில் இறந்த விலை மதிப்பில்லா மனித உயிர்கள்....
    அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராதிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

    ReplyDelete
  65. இறந்தவர்களில் பெரும்பாலும் வேடிக்கை பார்க்க சென்றவர்களே என்று கேள்விப்படும்போது, பரிதாபமாகவும் இருக்கிறது அதேசமயம் கோபமும் வருகிறது

    ReplyDelete
  66. நண்பர்களே,

    சிவகாசியின் ஒரு ரத்த தினம் இன்று ...!

    நடந்திட்ட விபத்தால் பறிக்கப்பட்ட உயிர்கள் ; சிதைந்து போன குடும்பங்கள் ; வேதனையில் தவிக்கும் காயமுற்றவர்கள் என்று ஒரு சோகத் தாண்டவம் அரங்கேறியுள்ளது ! ஒரு நாளோ ; இரண்டு நாட்களோ பரபரப்பான செய்தியாக டி.வி.யிலும் ; செய்தித் தாள்களிலும் இடம்பிடித்திடும் இந்த சம்பவம், T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் துவங்கினாலோ ; அல்லது வேறு ஏதேனும் அரசியல் நிகழ்வு நடந்திட்டாலோ ; பின்பக்கங்களுக்குச் சென்று விடும். அவரவர் அன்றாட வாழ்க்கைக்கும் திரும்பிடுவோம்...

    ஆனால் ஒரே நாளில் தங்கள் உலகமே தலைகீழாகிப் போய்விட்ட அந்தக் குடும்பங்களுக்கு இனி ஒரு விடியல் எப்போதோ ? மரணத்தை அருகாமையில் முகர்ந்து பார்த்து ; அந்த வேதனை ஓலங்களைக் கேட்டு ; அழுகையின் சீற்றத்தை உணர்ந்த எஞ்சி நிற்கும் உயிர் பிழைத்தவர்கள், கண்மூடித் தூங்கத் தான் சாத்தியமாகுமா..? பிழைக்கும் வழி வேறு தெரியாதென மீண்டும் இதே வேலைக்குச் சென்றிடும் போது, இதே போன்றதொரு கோரம் நிகழ்ந்திடாதென எந்த தைரியத்தில் தங்களைத் தாமே தேற்றிக் கொள்வார்கள்?

    'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது' என்பது கீதையின் படிப்பினை ! ஆனால் இது போன்ற மரண உற்சவங்கள் அரங்கேறிடும் போது, கடவுளின் சிந்தைகளை துளியும் புரிந்திட இயல்வதில்லை ! பட்டுப் போன அந்தக் குடும்பங்கள் இனி கடவுளின் செல்லக் குழந்தைகளே என்று நம்புவோம்...!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிகவும் வேதனைபடுகிறேன்.

      Delete
    3. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை‌ விபத்துகளும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.எல்லா வருடமும் இது போன்று நடப்பது வழக்கமாகி விட்டது. இதற்க்கு உரிய விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். அதற்கு மேல் தொழிற்சாலை உரிமையாளர்கள் போதிய தீயணைப்பு உபகரணங்களை வைப்பதும் இல்லை. இதற்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருப்பதாக சொல்கிறார்களே தவிர செய்வதில்லை. விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் இன்னும் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற பெரிய விபத்துகளை தடுக்க முடியும். கந்தக பூமியில் வெந்து மடிந்த அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம். காயம் அடைந்த அனைவரும் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வோம்.
      எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

      Delete
    4. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்.

      Delete
    5. ஆசிரியர் அவர்களே.....

      தவறுகளை நாம் செய்துவிட்டு இறைவன் மீது வருத்தப்பட்டு என்ன பயன்? வெடி விபத்தில் இறந்தவர்களில் அந்த தொழிற்சாலையில் வேலை செய்தவர்களை விட , சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றசென்றவர்களும் , வேடிக்கை பார்க்க வந்தவர்களுமே அதிக எண்ணிக்கையில் பலியானதாக அல்லவா செய்திகள் தெரிவிக்கின்றன? அருகே செல்ல வேண்டாம் என்று தடுத்த காவல்துறையினரை பொது மக்களே தாக்கியிருக்கிறார்களே?

      வேறு எந்த ஊர்க்காரர்களையும் விட வெடி மருந்தின் பயங்கரம் சிவகாசிக்காரர்களுக்கு அதிகம் தெரியுமல்லவா?அவர்களே இப்படி நடந்து கொண்டால் எப்படி?

      மற்றபடி , விபத்து நடந்த பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகள், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனங்கள் இல்லாத கொடுமை, தீ விபத்து அதிகம் நடக்கும் ஊரில் உள்ள மருத்துவமணையில் போதிய வசதியின்மை போன்றவை கண்டிக்கத்தக்கவை...எதிர்காலத்திலேனும் இது போன்ற விஷயங்கள் சரி செய்யப்பட இறைவனை வேண்டுவோம்.........


      விபத்தில் பலியான அந்த அப்பாவி உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்......

      Delete
  67. அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலிகள். அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும். இனியாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அக்கறை காட்டட்டும் உரியவர்கள்.

      Delete
  68. inimalum edu pole kodumai nadavamal iruka vandugiren.

    ReplyDelete