Powered By Blogger

Saturday, December 06, 2025

டிசம்பர் பூக்கள்!

நண்பர்களே,

வணக்கம்! இராமாயணம், மகாபாரதமென்று ஆரம்பிக்கும் முன்பாக டிசம்பர் இதழ்களைப் பற்றி "பட்'டென்று சொல்லிவிடுகிறேனே folks! லார்கோவோடு தான் WWF போட வேண்டியிருக்குமென்ற எதிர்பார்ப்பு ஓரளவுக்கே மெய்யாகிப் போனது! இளம் டெக்ஸ் - 5 பாக சாகஸம் கூட நாக்குத் தொங்கும் பணிகளைக் கோரிவிட்டது! குழப்பங்கள் இல்லாத நேர்கோட்டுக் கதை தான் என்றாலும், 320பக்கங்கள் எனும் போது the sheer volume of the work குறுக்கைக் கழற்றி கையில் கொடுத்தே விட்டது! ரெகுலர் டெக்ஸை விட இளையவரின் கதைவரிசையில் எப்போதுமே சம்பாஷணைகள் ஜாஸ்தியே! And இங்கேயும் க்ரோ பழங்குடியினர்; ப்ளாக்ஃபுட் பழங்குடியினர் என்று அணி சேர்த்து காடு-மேடெல்லாம் நம்மவர் பயணிக்கிறார்! இதுவரைக்கும் "வோ'' போட்டுவிட்டு பெட்ரோல் காசும், பேட்டாவும் வாங்கிவிட்டுப் புறப்படும் சிகப்பின ஜனம் இந்தமுறை 'மைக் மோகன்' ஆன எனக்கே tough தரும் அளவிற்கு செம மாட்லாடுகிறார்கள்! எனக்கோ தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க வயிற்றில் புளியும் கரைந்து கொண்டிருந்தது! ஆனால், எத்தனை முயற்சித்தும், எடிட்டிங்கைத் திருப்திகரமாய் செய்திட இந்த 320 பக்கங்களும் கோரிட்ட உழைப்பைப் போடாது ஒப்பேற்ற வழியே இருக்கவில்லை! So சகலத்தையும் முடிக்கவே வியாழனாகிப் போய்விட்டது! மறுநாளே ப்ரிண்டிங்கும், முடிந்திருக்க, இன்று பைண்டிங் ஆபீஸ் வாச­லில் நம்மாட்கள் கொட்டகை போட்டு அமர்ந்துள்ளனர்! So இன்றிரவு (சனி) அல்லது ஞாயிறு பகலி­ல் புக்ஸ் ரெடியாகிவிடும் & திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! Terribly sorry all 🙏🙏 கடந்த இரண்டு மாதங்களாய் பழைய தொற்று வியாதி நம்மையும் அறியாமலே தோளில் ஏறிக் கொண்டதோ? என்ற பயம் கூட என்னைப் பீடித்துள்ளது! But முரட்டுப் பணிகள் ஒட்டுமொத்தமாய் ஆண்டின் இறுதிக்கென அணி சேர்ந்துவிட்டது தான் எதிர்பாரா இடரே! ஜனவரி முதலாய் 'பங்க்சுவல் பரமேஷ்' அவதார் உறுதி!

And சகல குட்டிக்கரணங்களுக்கும் காரணமே "சாம்பலின் சங்கீதம்'' இதழோடு நடத்த நேர்ந்த மெகா சடுகுடு தான் என்பதில் no secrets! எப்படியேனும் அதனை சேலம் புத்தகவிழாவினில் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுடன் ரிலீஸ் செய்தே தீரணும் என்ற வைராக்கியத்தில் தான் ரெகுலர் தட இதழ்களைக் கூட சற்றே ஆறப் போட்டிருந்தேன்! ஆனால், நவம்பர் இறுதியில் துவங்கியிருக்க வேண்டிய சேலம் விழாவானது டிசம்பர் 19-க்கென மாற்றம் கண்டது! ஆனால், அதன் பிற்பாடாய் பெருசாய் எவ்விதத் தகவல்களும் லேது! ஜனவரியில் துவங்கவுள்ள சென்னை புத்தகவிழாவின் தேதிகள் கூட அறிவிக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகளும் துவங்கியும் விட்டன! ஆனால், இந்தப் பதிவினை எழுதி வரும் நொடி வரைக்கும் சேலத்தின் திசையி­லிருந்து சலனமற்ற மௌனமே! So வரும் வாரத்தினில் ஏதேனும் நல்ல சேதி கிட்டுகின்றதா என்று பார்க்க உத்தேசித்துள்ளோம்! In case நாமெல்லாம் எதிர்பார்க்கும் good news இல்லையெனில் டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! ஒரு அசாத்தியப் பணிக்கு இதுவொரு anti-climax ஆகத் தானிருக்கும் என்பது புரிகிறது; ஆனால், தயாராகி வரும் புக்கை இனியும் தேவுடு காக்கச் செய்ய மனசில்லை! தவிர 2025-ல் துவக்கிய முன்பதிவுகளுக்கு 2026 -ல் புக் என்பது நெருடுகிறது! So சேலம் விழா இருந்தால் சிறப்பு ; இல்லையேல் கூரியர் நண்பர்களே சிறப்பு விருந்தினராய் மாறி ரிலீஸ் செஞ்ச்சூ 🥹🥹!Phewwwwwwwww.....!

And இந்த நொடியில் சேலமும்; சாம்ப­லின் சங்கீதமும் சார்ந்த சன்னமான disappointments-ஐ ஓரம்கட்டி விட்டுப் பார்த்தால், உள்ளுக்குள் ஒரு செம குஷி & நிம்மதி & திருப்தி போட்டிங் தி குத்தாட்டம்! "2025 எனும் ஒரு அசாத்தியப் பரீட்சையை எழுதி முடிச்சாச்சு!'' என்ற திருப்தி உள்ளாற தாண்டவமாடிடுகிறது! 

*தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா? 

*சுமாராய் செய்திருக்கிறோமா?

*சொதப்பலாய் பண்ணிருக்கிறோமா? 

என்பதைத் தீர்மானிக்க ஜுரிக்களான உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்! So எங்களைப் பொறுத்தவரை just being able to complete the trial - ஒரு ஜா­லிலோ ஜிம்கானா அனுபவமாக இருந்துள்ளது! 

மொத்தம் 57 இதழ்கள்..... கலரில் 33 & black & white-ல் 24! 

இந்த 2025-ல் எதிர்காலத்துக்குள் டைவ் அடித்திருக்கிறோம்.....அழிவின் விளிம்பில் நிற்குமொரு apocalyptical பிரபஞ்சத்தில் "பயணம்'' பண்ணியிருக்கிறோம்! வரலாறுக்குள் வட்டமும் அடித்துவிட்டோம்....மன்னிக்காத வடுவாகிப் போன அணுகுண்டோடும், உலக யுத்தத்தோடும்! க்ரிப்டோ கரென்சி எனும் மெய்நிகர் பணவுலகினுள் சஞ்சாரம் செய்துவிட்டோம்! பங்குச் சந்தையின் பல்வேறு பரிமாணங்களோடு பொருதியும் விட்டோம்! "அ­லிபாபாவும், 40 திருடர்களும்'' வானவில்­லின் ஒரு மழலை முனையெனில், மறுமுனையில் நிற்பனவெல்லாம் வேறு லெவல்! இந்தத் திரும்பிப் பார்க்கும் படலத்தினை விரல் நோவ எழுத இந்த நொடியில் "தம்'' லேது என்பதால் அடுத்த சில நாட்களில், சாம்பலின் சங்கீதம் பைண்டிங் முடிந்து புக் ரெடியான நாளில் ஒரு YouTube பதிவாக்கிடத் தீர்மானித்துள்ளேன்! So இந்த நொடியினில் இதோ சாம்பலி­ன் சங்கீதம் அட்டைப்பட preview : 

அப்புறம் சென்னையின் புத்தக மேளா ஜனவரி 7 to 19 தேதிகளில் என  அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட அவசியமாகிடப் போகும் இதழ்கள் பக்கமாய் கவனங்களை திருப்பி வருகிறோம் ஜல்தியாய்! கைவசம் மாயாவி சார் இல்லாமல் பட்டினத்துக்குப் போனால் சரமாரியாய் சப்பல்ஸ் பிய்ய நேரிடும் என்பதால் அவரே நமது முதல் இலக்காகிடுகிறார்! வேக வேகமாய் தயாராகி வரும் இதழ்கள் பற்றி தொடரும் வாரங்களில் சொல்லுகிறேன்! இதோ இப்போதைக்கு "தவளை மனிதர்கள் " ரெடி ஆகி விட்டார் என்பது தகவல் !

And மறுபதிப்புப் படலங்களி­ருந்து இன்னமும் ஒரு க்ளாசிக் ஜாம்பவானின் குட்டிப் பிரிவியூமே இதோ! மாயாவிக்கான மோகம் வேறொரு லெவல் என்றால், வேதாளருக்கான கெத்தும் சளைத்ததே அல்ல தான்! So ஏற்கனவே ரெடி செய்திருந்த "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" கலரில் டிக் ஆகியுள்ளது! இதோ preview :

Bye all.. see you around.... இந்த நொடியில் ஊரில் இல்லாது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தே டைப்பி வருவதால், இதற்கு மேல் நீட்டி முழக்காது விடை பெறுகிறேன்! See you around all - ஜனவரியின் காவியத் தலைவன் தோர்கலுமே calling! Have a good Sunday 👍

P. S: உங்களுக்கான வினா :

இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்? 

51 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு முதலிடம் 😇💪✨

    ReplyDelete
  3. எடிட்டர் ஐயா தவளை மனிதர்கள் அட்டைப் படம் எப்போது காட்டுவீர்கள்

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. அனைவருக்கும் இரவு வணக்கம்.

    🙏🙏🙏

    ReplyDelete
  6. அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
  7. இந்த வருடம் கடினமான வேலைப் பளுவால் நிறைய இதழ்கள் வாசிக்க இயலவில்லை.

    அதனால் எதுவும் சொல்ல இயலவில்லை.

    மன்னிக்கவும் சார்.

    ReplyDelete
  8. இந்த வருடம் முழு திருப்தி .

    ReplyDelete
  9. சார் எவ்ளோ மெனக்கெடல்கள்....சூப்பர் சார் படித்த வரை அனைத்துமே....சொத்தை அனுபவிக்காம காத்து ரசித்து வரும் கருமியப்போல காத்திருக்கு பொக்கிசம்....ஓட்டத்தால் போரென்பதே கிடையாதெனும் போது...போரடிக்கும் போது காத்திருக்கு சொர்கம்.....இருந்தாலும் அனுபவித்து படித்து வருகிறேன்....அன்று முதல் இன்று வரை எனது சந்தோஷத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியாய் உருகி உருகி வெளிச்சம் தரும் தங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்....நாளை நமதே....லார்கோவும் வருதே

    ReplyDelete
  10. சேலத்தில் வெளியீடு இல்லாவிட்டால் சென்னையில் வெளியிடலாமே.. உங்கள் உழைப்புக்கு மற்றும் இத்தகைய வெளியீட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து!👍💐

      Delete
    2. இப்போ தான் கீழே பதில் போட்டிருந்தேன் சார்....!

      கணிசமான நண்பர்கள் பொறுமை இழந்து வருகின்றனர்! நம்மாட்கள் சாத்து வாங்குவதே பலனாகிப் போகிறது!

      Delete
  11. அட்டைப்படம் அருமை.....வேளாளர் அட்டை வேற லெவல் சார்.....தோழர்கள் ஆஹா....ஆஹா எத்தனை கோடி இன்பம் ஜனவரிக்குள்....தவளை மனிதன் வண்ணமா....இருவண்ணமா

    ReplyDelete
  12. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் மறு மதிப்பு அதுவும் கலரில் சூப்பர் நியூஸ் சாரே

    ReplyDelete
  13. சரி நண்பர் கார்த்திகை பாண்டியனோடு ஓர் செல்ஃபோன் வீடியோ உரையாடல் போட்ருவோம்

    ReplyDelete
  14. //சேலத்தில் வெளியீடு இல்லாவிட்டால் சென்னையில் வெளியிடலாமே.. உங்கள் உழைப்புக்கு மற்றும் இத்தகைய வெளியீட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.//

    ஆமோதிக்கிறேன்.. சென்னையில் வெளியிடுவது பற்றி யோசியுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. அது இன்னுமொரு மாதம் அடை காக்கும் பணியாகிப் போகும் சார்! And இப்போவே நம்மாட்கள் பதில் சொல்ல முடியாது நெளிந்த பிழைப்பாய் உள்ளது! "இன்னுமா ரெடியாகல?" என்று நித்தமும் வரும் போன்கள் எண்ணிலடங்கா 🤕🤕

      Delete
    2. ரிலீஸ், வாசக மீட்ஸ் - என எதிலும் பங்கேற்கா நண்பர்களுக்கு பொறுமையின்றிப் போவதை புரிந்து கொள்ள முடிகிறது தான்!

      Delete
  15. சார்.. பதிவு எங்கேங்க சார்?🤔 வெறும் கமெண்ட் மட்டும் போட்டிருக்கீங்க.. அதுவும் நம்ம ஸ்டீல் போடும் கமெண்டை விட சின்னதாய்?0🧐

    ReplyDelete
    Replies
    1. "பிளாட்பாரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டான் பாத்தியளா?"ன்னு யாராச்சும் கேக்குறதுக்கு முன்னே ரயிலில் ஏறிட்டா தேவலாம்னு தோணுச்சு 🥹! So ஈ பதிவே மதின்னு தீர்மானிச்சூ!

      Delete
  16. // டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! //
    அணுகுண்டு வெடிக்கும் கிளைமேக்ஸிற்கு வந்தாச்சி...

    ReplyDelete
  17. Hi Editor sir ,
    Happy to know about Vedhalar book release . Wrapper is looking nice
    Happy to hear that you are going to post a video on samablin sangeetham .
    This year one of the great year .
    Sambalin sangeetham and payanam are the two biggest releases in this year

    ReplyDelete
    Replies
    1. வீடியோ "சாம்பலின் சங்கீதம்" பற்றி மட்டுமல்ல நண்பரே - the year 2025 பற்றி மொத்தமாய் ஒரு rewind!

      Delete
    2. That is much more nice sir.
      Once again thanks for bringing sambalin sangeetham.


      Delete
  18. // திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! //
    உழைப்பு அதிகமாய் தேவைப்பட்டிருப்பதால் தாமதம் பிரச்சினை அல்ல சார்,இதழ்கள் நிறைவாய் வரட்டும்,மகிழ்ச்சி,ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. புக்ஸ் வரட்டும் சார் - புரியும் ஏன் முழி பிதுங்கிப் போச்சு என்பது 🥹🥹

      Delete
    2. ///புரியும் ஏன் முழி பிதுங்கிப் போச்சு என்பது///

      இந்த டவுட்டு உங்களை முதல் தபா பார்த்ததுலேர்ந்தே இருக்குதுங்க சார்!🤔👀

      Delete
  19. சாம்பலின் சங்கீதம் அட்டைப்பட பாதிப்பு - பின்வருமாறு:

    உயரே ஒரு நெருப்புப் பிழம்பு
    உருவாவதை உச்சி நோக்கிடும்
    ஊராருக்குத் தெரியாது - அவர்கள்
    உயிர் தங்கிடும் காலம் - ஒரு
    கண்சிமிட்டல் வரையே என்பது!

    ReplyDelete
    Replies
    1. நம்புனால் நம்புங்கோ : ஒரிஜினல் டிசைனில் தமிழில் எழுத்துக்கள் + நம்ம லோகோ பொருத்துவதற்கே 11 வாட்டி திருத்தங்கள் சொன்னார்கள் படைப்பாளிகள் 🥹🥹.

      உட்பக்க திருத்தங்கள் பற்றி தனியா ஒரு புக்கே போடலாம்!

      Delete
  20. மாயாவியாருடன் வேதாளரும் வருவது கட்டற்ற மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. Urban மாயாவியும், Rural மாயாவியும் ஒன்னா வராங்கன்னு சொல்லுங்க!😁

      Delete
  21. "ம"ட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. // *தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா? //

    YES!!!

    ReplyDelete
  23. Sir
    இந்தாண்டின்
    பயணம்
    டபுள் OK Sir,
    ஆனால்
    (இரத்தப்படலம் இரண்டாம்
    சுற்று தொடர் மட்டும்
    மிஸ்ஸிங் சார்)

    ReplyDelete