நண்பர்களே,
வணக்கம்! இராமாயணம், மகாபாரதமென்று ஆரம்பிக்கும் முன்பாக டிசம்பர் இதழ்களைப் பற்றி "பட்'டென்று சொல்லிவிடுகிறேனே folks! லார்கோவோடு தான் WWF போட வேண்டியிருக்குமென்ற எதிர்பார்ப்பு ஓரளவுக்கே மெய்யாகிப் போனது! இளம் டெக்ஸ் - 5 பாக சாகஸம் கூட நாக்குத் தொங்கும் பணிகளைக் கோரிவிட்டது! குழப்பங்கள் இல்லாத நேர்கோட்டுக் கதை தான் என்றாலும், 320பக்கங்கள் எனும் போது the sheer volume of the work குறுக்கைக் கழற்றி கையில் கொடுத்தே விட்டது! ரெகுலர் டெக்ஸை விட இளையவரின் கதைவரிசையில் எப்போதுமே சம்பாஷணைகள் ஜாஸ்தியே! And இங்கேயும் க்ரோ பழங்குடியினர்; ப்ளாக்ஃபுட் பழங்குடியினர் என்று அணி சேர்த்து காடு-மேடெல்லாம் நம்மவர் பயணிக்கிறார்! இதுவரைக்கும் "வோ'' போட்டுவிட்டு பெட்ரோல் காசும், பேட்டாவும் வாங்கிவிட்டுப் புறப்படும் சிகப்பின ஜனம் இந்தமுறை 'மைக் மோகன்' ஆன எனக்கே tough தரும் அளவிற்கு செம மாட்லாடுகிறார்கள்! எனக்கோ தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க வயிற்றில் புளியும் கரைந்து கொண்டிருந்தது! ஆனால், எத்தனை முயற்சித்தும், எடிட்டிங்கைத் திருப்திகரமாய் செய்திட இந்த 320 பக்கங்களும் கோரிட்ட உழைப்பைப் போடாது ஒப்பேற்ற வழியே இருக்கவில்லை! So சகலத்தையும் முடிக்கவே வியாழனாகிப் போய்விட்டது! மறுநாளே ப்ரிண்டிங்கும், முடிந்திருக்க, இன்று பைண்டிங் ஆபீஸ் வாசலில் நம்மாட்கள் கொட்டகை போட்டு அமர்ந்துள்ளனர்! So இன்றிரவு (சனி) அல்லது ஞாயிறு பகலில் புக்ஸ் ரெடியாகிவிடும் & திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! Terribly sorry all 🙏🙏 கடந்த இரண்டு மாதங்களாய் பழைய தொற்று வியாதி நம்மையும் அறியாமலே தோளில் ஏறிக் கொண்டதோ? என்ற பயம் கூட என்னைப் பீடித்துள்ளது! But முரட்டுப் பணிகள் ஒட்டுமொத்தமாய் ஆண்டின் இறுதிக்கென அணி சேர்ந்துவிட்டது தான் எதிர்பாரா இடரே! ஜனவரி முதலாய் 'பங்க்சுவல் பரமேஷ்' அவதார் உறுதி!
And சகல குட்டிக்கரணங்களுக்கும் காரணமே "சாம்பலின் சங்கீதம்'' இதழோடு நடத்த நேர்ந்த மெகா சடுகுடு தான் என்பதில் no secrets! எப்படியேனும் அதனை சேலம் புத்தகவிழாவினில் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுடன் ரிலீஸ் செய்தே தீரணும் என்ற வைராக்கியத்தில் தான் ரெகுலர் தட இதழ்களைக் கூட சற்றே ஆறப் போட்டிருந்தேன்! ஆனால், நவம்பர் இறுதியில் துவங்கியிருக்க வேண்டிய சேலம் விழாவானது டிசம்பர் 19-க்கென மாற்றம் கண்டது! ஆனால், அதன் பிற்பாடாய் பெருசாய் எவ்விதத் தகவல்களும் லேது! ஜனவரியில் துவங்கவுள்ள சென்னை புத்தகவிழாவின் தேதிகள் கூட அறிவிக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகளும் துவங்கியும் விட்டன! ஆனால், இந்தப் பதிவினை எழுதி வரும் நொடி வரைக்கும் சேலத்தின் திசையிலிருந்து சலனமற்ற மௌனமே! So வரும் வாரத்தினில் ஏதேனும் நல்ல சேதி கிட்டுகின்றதா என்று பார்க்க உத்தேசித்துள்ளோம்! In case நாமெல்லாம் எதிர்பார்க்கும் good news இல்லையெனில் டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! ஒரு அசாத்தியப் பணிக்கு இதுவொரு anti-climax ஆகத் தானிருக்கும் என்பது புரிகிறது; ஆனால், தயாராகி வரும் புக்கை இனியும் தேவுடு காக்கச் செய்ய மனசில்லை! தவிர 2025-ல் துவக்கிய முன்பதிவுகளுக்கு 2026 -ல் புக் என்பது நெருடுகிறது! So சேலம் விழா இருந்தால் சிறப்பு ; இல்லையேல் கூரியர் நண்பர்களே சிறப்பு விருந்தினராய் மாறி ரிலீஸ் செஞ்ச்சூ 🥹🥹!Phewwwwwwwww.....!
And இந்த நொடியில் சேலமும்; சாம்பலின் சங்கீதமும் சார்ந்த சன்னமான disappointments-ஐ ஓரம்கட்டி விட்டுப் பார்த்தால், உள்ளுக்குள் ஒரு செம குஷி & நிம்மதி & திருப்தி போட்டிங் தி குத்தாட்டம்! "2025 எனும் ஒரு அசாத்தியப் பரீட்சையை எழுதி முடிச்சாச்சு!'' என்ற திருப்தி உள்ளாற தாண்டவமாடிடுகிறது!
*தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா?
*சுமாராய் செய்திருக்கிறோமா?
*சொதப்பலாய் பண்ணிருக்கிறோமா?
என்பதைத் தீர்மானிக்க ஜுரிக்களான உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்! So எங்களைப் பொறுத்தவரை just being able to complete the trial - ஒரு ஜாலிலோ ஜிம்கானா அனுபவமாக இருந்துள்ளது!
மொத்தம் 57 இதழ்கள்..... கலரில் 33 & black & white-ல் 24!
இந்த 2025-ல் எதிர்காலத்துக்குள் டைவ் அடித்திருக்கிறோம்.....அழிவின் விளிம்பில் நிற்குமொரு apocalyptical பிரபஞ்சத்தில் "பயணம்'' பண்ணியிருக்கிறோம்! வரலாறுக்குள் வட்டமும் அடித்துவிட்டோம்....மன்னிக்காத வடுவாகிப் போன அணுகுண்டோடும், உலக யுத்தத்தோடும்! க்ரிப்டோ கரென்சி எனும் மெய்நிகர் பணவுலகினுள் சஞ்சாரம் செய்துவிட்டோம்! பங்குச் சந்தையின் பல்வேறு பரிமாணங்களோடு பொருதியும் விட்டோம்! "அலிபாபாவும், 40 திருடர்களும்'' வானவில்லின் ஒரு மழலை முனையெனில், மறுமுனையில் நிற்பனவெல்லாம் வேறு லெவல்! இந்தத் திரும்பிப் பார்க்கும் படலத்தினை விரல் நோவ எழுத இந்த நொடியில் "தம்'' லேது என்பதால் அடுத்த சில நாட்களில், சாம்பலின் சங்கீதம் பைண்டிங் முடிந்து புக் ரெடியான நாளில் ஒரு YouTube பதிவாக்கிடத் தீர்மானித்துள்ளேன்! So இந்த நொடியினில் இதோ சாம்பலின் சங்கீதம் அட்டைப்பட preview :
அப்புறம் சென்னையின் புத்தக மேளா ஜனவரி 7 to 19 தேதிகளில் என அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட அவசியமாகிடப் போகும் இதழ்கள் பக்கமாய் கவனங்களை திருப்பி வருகிறோம் ஜல்தியாய்! கைவசம் மாயாவி சார் இல்லாமல் பட்டினத்துக்குப் போனால் சரமாரியாய் சப்பல்ஸ் பிய்ய நேரிடும் என்பதால் அவரே நமது முதல் இலக்காகிடுகிறார்! வேக வேகமாய் தயாராகி வரும் இதழ்கள் பற்றி தொடரும் வாரங்களில் சொல்லுகிறேன்! இதோ இப்போதைக்கு "தவளை மனிதர்கள் " ரெடி ஆகி விட்டார் என்பது தகவல் !
And மறுபதிப்புப் படலங்களிருந்து இன்னமும் ஒரு க்ளாசிக் ஜாம்பவானின் குட்டிப் பிரிவியூமே இதோ! மாயாவிக்கான மோகம் வேறொரு லெவல் என்றால், வேதாளருக்கான கெத்தும் சளைத்ததே அல்ல தான்! So ஏற்கனவே ரெடி செய்திருந்த "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" கலரில் டிக் ஆகியுள்ளது! இதோ preview :
Bye all.. see you around.... இந்த நொடியில் ஊரில் இல்லாது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தே டைப்பி வருவதால், இதற்கு மேல் நீட்டி முழக்காது விடை பெறுகிறேன்! See you around all - ஜனவரியின் காவியத் தலைவன் தோர்கலுமே calling! Have a good Sunday 👍
P. S: உங்களுக்கான வினா :
இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்?


