Powered By Blogger

Saturday, September 27, 2025

ஒரு விஸ்வரூபம் 💥!

நண்பர்களே,

வணக்கம்! எங்க வீட்டு ஸ்டார் - உங்க வீட்டு ஸ்டார் கூடக் கிடையாது; சூப்பரோ, சூப்பரான பல ஸ்டார்கள் இந்த வருஷத்திலே ஏகப்பட்ட படங்களில் "ஆக்ட்'' கொடுத்திருக்கிறார்கள்! ஆனால், அவர்களுக்கெல்லாம் எட்டாததொரு மெகா வெற்றி - பெருசாய் ஸ்டார்பவரே இல்லாத "டூரிஸ்ட் பேமிலி­'' என்ற படத்திற்குக் கிடைத்துள்ளமாம் - சமீபமாய் எங்கேயோ படித்தேன்! "அடடே.." என்றபடிக்கே உள்ளுக்குள் படித்தால் - ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட படம் 275+ கோடிகளை வசூலித்துள்ளது பற்றி சிலாகித்திருந்தார்கள்! நல்லதொரு கதை மட்டும் முதுகெலும்பாக அமைந்துவிட்டால் போதும் - விச்சு & கிச்சு கூட விண்ணைத் தொட்டுவிடலாம் போலும் என்று நினைத்துக் கொண்டேன்! And கடந்த பத்து தினங்களாய் அந்த நினைப்பானது எத்தனை சரியென்பதை அட்சர சுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது - ஏஜெண்ட் ராபினின் உபயத்தில்!

ராபின் 2.0!! இரண்டு ஆண்டுகளாய் நம்ம V காமிக்ஸில் வருகை தந்து கொண்டிருக்கும் ஒரு டீசன்டான நாயகர்! ராபினை நமக்குக் கிட்டத்தட்ட 30+ ஆண்டுகளாகத் தெரியும் என்றாலும், கிருதாக்களில் "ஒயிட்'' படர்ந்துள்ள சற்றே முதிர்ந்த இந்த ராபின் 2.0 கொஞ்சம் மாறுபட்டவர்! கதாபாத்திரத்தில் ஆசிரியர் குழு செய்துள்ள சிற்சிறு மாற்றங்களை... அவரது குணங்களில் அவர்கள் காட்ட விழைந்திடும் வித்தியாசங்களை subtle ஆகக் கவனிக்க முடிந்தது தான்! ஆனால், முதன்முறையாக முந்நூறுக்குக் கொஞ்சம் குறைச்சலான பக்கங்களில் ராபின் 2.0 சாகஸம் செய்திடவொரு களம் ஏற்படுத்தித் தந்தான பின்னே, அவர்களும் சரி, அவர்கள் வாயிலாக ராபினும் சரி- முற்றிலுமாயொரு விஸ்வரூபம் எடுத்திருப்பதே இந்த வாரயிறுதியின் பதிவு!

எல்லாம் ஆரம்பித்தது போன வருஷம் இதே சமயத்தில்! ஒன்-ஷாட்களே ராபின் தொடரின் signature எனும் போது நம்ம V காமிக்ஸில் 5 சிங்கிள் ஆல்பங்கள் வெளியாகியிருந்தன! And ஆறாவதான ஆல்பமும் அறிவிக்கப்பட்டிருந்தது -"எழுந்து வந்த எதிரி!'' என்ற தலைப்புடன்! அட்டைப்படமெல்லாம் ப்ரிண்ட் ஆகியிருந்தது & தமிழாக்கம் நமது டீமில் ரொம்பத் தற்காலிகமாய் இடம் பிடித்திருந்ததோர் எழுத்தாளரின் பொறுப்பில் செய்யப்பட்டிருந்தது! எப்போதும் போலவே DTP முடித்து பக்கங்கள் ஜுனியரின் மேஜையில் கிடந்தன & வழக்கம் போலவே இதனில் எடிட்டிங் செய்திடும் ரிஸ்க்கை அவர் எடுத்துக் கொள்ளவில்லை! "புது ரைட்டர்; So நீங்களே பார்த்திடுங்களேன்'' என்று என் பக்கமாய் அனுப்பியிருந்தார்! 94 பக்க சிங்கள் ஆல்பம் தானே...பெருசாய் படுத்தி எடுக்காது என்றபடிக்கே நானும் மண்டையை ஆட்டி வைத்திருந்தேன்! But கதைக்குள் நுழைந்த பத்தாவது நிமிஷமே புரிந்துவிட்டது - புது எழுத்தாளர் ரொம்பவே திணறியுள்ளார் என்பது! கதையின் பேச்சு நடையில் ஆரம்பித்து வார்த்தைத் தேர்வுகளி­லிருந்து வாக்கியக் கோர்வை வரை சகலமுமே மழை காலத்து நம்மூர் சாலைகள் போல குண்டும் குழியுமாய் இருந்தன! பெருமூச்சிட்டபடியே மாற்றி எழுத ஆரம்பித்தேன்! அப்போதே ஒரு வாரம் எடுத்துக் கொண்டதாய் ஞாபகம்! 

கதையின் பிற்பகுதியை நெருங்க நெருங்கவே லைட்டாய் வேறொரு வகை பீதி தொற்றிக் கொள்வது புரிந்தது! "இந்தக் கதை இப்போது தான் 80 பக்கங்களைத் தாண்டிய தருவாயில் சூடு பிடிப்பது போலுள்ளதே..? அடுத்த பத்துப் பக்கங்களுக்குள் இதற்கு "சுபம்'' போட வேண்டுமெனில் ரிப்போர்டர் ஜானியின் கதாசிரியர் வந்தால் தானே முடியும்?!''என்று குழம்ப ஆரம்பித்தேன்! "வேற வழியே இல்லே- நேரடியா கடைசிப் பக்கத்துக்குப் போய் பார்த்திடலாம்!' என்றபடிக்கே பரபரப்பாய் பாய்ந்தால், ஒரு வில்லன் ஆராமாய் குந்தியபடியே "ஆட்டம் ஆரம்பிக்கப் போகுதுன்னு'' வசனம் பேசறான்! ஆக இது ஒன்-ஷாட் அல்ல; ஒரு நெடும் சாகஸத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே என்பது அந்த நொடியில் தான் எனக்கும் Vகாமிக்ஸ் எடிட்டருக்கும் புரிய ஆரம்பித்தது! கதைத் தொடரில் இது ஆல்பம் # 6. And நாம் அதற்கடுத்த இரண்டு நம்பர்களையுமே ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் - 2025-ல் வெளியிடுவதற்கென! And எங்களது அந்நேரத்தைய புரிதலி­ன்படி ஆல்பம் # 6 ஒரு one shot & ஆல்பம் 7+8 டபுள் ஆல்பம்ஸ். அதைத் தான் "இரத்தமின்றி யுத்தம்'' என 2025-ல் Vகாமிக்ஸ் தீபாவளி மலராகவும் விளம்பரப்படுத்தியிருந்தோம்! கோப்புகளைத் தூக்கி வைத்து நிதானமாகப் பரிசீலி­த்த போது தான் நிலவரம் புரிந்தது :

ஆல்பம் # 6: நிகழ்காலத்தில் அரங்கேறும் ஒரு episode

ஆல்பம் # 7 & 8 : பத்தாண்டுகளுக்கு முன்னமாய் அந்த episode-க்கான முன்வினைகள்!! And எல்லாமே இணைந்து தான் ஒரு முழு story arc..!

ஆக, கதாசிரியர் Davide Rigamonti ஒரு பத்தாண்டுப் பெரிய கேன்வாஸில் இந்த மெகா சித்திரத்தைத் தீட்டியிருப்பது மெது மெதுவாய்ப் புலர்ந்தது!

ஆனால், 2024 நவம்பரில் அன்றைய ஸ்லாட்டை நிரவல் பண்ண வேண்டிய அவசியமும், அவசரமும் மட்டுமே மேலோங்கியது! டைலன் டாக்கின் "சட்டைப்பையில் சாவு'' கோப்புகள் கைவசமிருக்க, அடிச்சுப் புடிச்சி அதனை ரெடி செய்து உட்புகுத்தி, அன்றைய பாட்டை சரிசெய்து விட்டோம்! And நமக்குத் தான் அடுத்த வேலை உதிக்கும் நொடியில் முந்தைய பொழுதுகளின் கூத்துக்கள் மறந்தே போய் விடுமல்லவா? So ராபினின் அத்தியாயம்-1 ( எழுந்து வந்த எதிரி) 80 பக்கங்களை மாற்றி எழுதிய நிலையில் அப்படியே பீரோவுக்குள் போட்டுப் பூட்டியாச்சு! 2025 தீபாவளி சமயத்தில் மூன்று அத்தியாயங்களையும் ஒரு சேரப் பார்த்துக் கொள்ளலாம்; அந்நேரம் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானமானது!

கண்ணை இமைப்பதற்குள் 2025-ம் புலர்ந்து; ஒன்பது மாதங்களும் ஓட்டமாய் ஓடிவிட்டன! டின்டின் ; "சாம்ப­லின் சங்கீதம்'' என ஏதேதோ பணிகளுக்குள் நான் கைகளையும், கால்களையும் நுழைத்துக் கிடந்ததால் - ராபினின் இரு அத்தியாயங்களையும் நண்பர் கிட் ஆர்டினாரிடம் ஒப்படைத்திருந்தோம்! கிட்டத்தட்ட ஓராண்டின் ஓட்டத்தில் இந்த ராபின் சாகஸத்தின் களமும் சரி, கனமும் சரி சுத்தமாய் எனக்கு மறந்தே போயிருந்தது! So நடப்பாண்டிற்கான டெக்ஸ் தீபாவளி மலர் 336 பக்க நீளத்திலானது என்ற "டர்'' மட்டுமே மனதில் நிலைத்திருந்தது! But செம ஆச்சர்யமாய் அந்த ஸ்க்ரிப்டில் பெருசாய் பட்டி- டிங்கரிங் பார்த்திடும் அவசியங்கள் இல்லாது போனதால் மின்னல் வேகத்தில் அது முடிந்து விட்டது! So ஒரு முழு ப்ளேட் சுக்கா ரோஸ்டை போட்டுத் தாக்கிய கார்சனின் குஷியோடே ராபினின் பணிகளை ஆரம்பித்தேன்! 

போன வருஷம் மாற்றி எழுதியிருந்த முதல் 80 பக்கங்களை முழுசாய், புதுசாய்ப் படிக்க ஆரம்பித்த போது தான் - "ஆஹா.. இது அதுல்லே? போன தபாவே முழி பிதுங்கச் செய்திருந்தது தானே?!' என்ற ஞாபகம் விரவ ஆரம்பித்தது! ஒரு மாதிரியாய் முதல் அத்தியாயத்தின் மீத 14 பக்கங்களை முடித்துவிட்டு, நண்பர் ரவிக்கண்ணனின் ஸ்க்ரிப்டுக்குள் புகுந்தேன்!

Truth to tell - இது நிரம்பவே கனமான களம்! அதுவும் எக்கச்சக்க கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் பின்னிப் பிணைந்தோடும் பின்புலம், பற்றாக்குறைக்கு Crypto Currency என்ற மெய்நிகர் நாணய வர்த்தகம் பற்றிய கதையும் கூட! நியாயப்படிப் பார்த்தால் இதனை இத்துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நண்பர்கள் யாரேனும் தான் கையாண்டிருக்க வேண்டும் ! ஆனால், மேச்சேரியாரும், சிவகாசியானும் இதற்குள் ரங்க ராட்டினம் ஆட நேர்ந்தது தான் விதியின் விளையாட்டு! நண்பரும் இயன்றமட்டிற்கு  முயற்சித்திருந்தார் தான்! ஆனால், ஒரு நுணுக்கமான களத்திற்கு இன்னமும் மெருகு, இன்னமும் better flow ரொம்பவே அத்தியாவசியம் என்பது ஐயமின்றிப் புரிந்தது! To cut a very long story short - டெக்ஸின் தீபாவளி மலரில் கழன்றிடாது தப்பித்த குறுக்கானது இங்கே not so lucky! 

300 பக்கங்களுக்கு முன்னே; பத்தாண்டுகளுக்கு பின்னே - என குறுக்கும், நெடுக்குமாய் ஓட்டமெடுக்கும் இந்த சாகஸத்தைக் கோர்வையாய் நான் புரிந்து கொள்ளவே நாக்கு தொங்கிப் போச்சு ! And எனக்கே புரிந்திடாத பட்சத்தில் - அதை உங்களுக்குப் புரிய வைப்பது சாத்தியமாவது ஆகுமா? So தோண்டினேன்- துருவினேன் :  Bitcoin என்றால் என்ன? Data flow என்றால் என்ன? Block chain என்றால் என்ன? என்றெல்லாம் புரிந்து கொள்ள !! 'கந்தர் சஷ்டி கவசத்தை படிக்க வேண்டிய வயசிலே இதுலாம் தேவையா கோபி??' என்றொரு குரல் உள்ளுக்குள் கேட்காத குறை தான்!! ஒவ்வொரு முடிச்சாய் என் மண்டைக்குள் அவிழ்க்க முடிந்த பிற்பாடே, மாற்றியெழுதும் போது பேனாவுக்கு ஒரு கோர்வை சாத்தியமானது! And என்ன முக்கு முக்கினாலும்-நாளொன்றுக்கு இருபது பக்கங்களைத் தாண்ட முடியலை எனும் போது 192 பக்கங்களுமாய் கிட்டத்தட்ட பத்து தினங்களுக்கு என்னை "ஆட்றா ராமா.. தாண்ட்றா ராமா' என்று ஆட்டுவித்தன! சகலத்தையும் முடித்த பிற்பாடு, over the 280 pages எனக்கிருந்த சந்தேகங்களை; கேள்விகளை நிவர்த்தித்துக் கொண்டு இந்தப் பதிவை எழுத உட்காருவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னே தான் மொத்தத்தையும் அச்சுக்கு அனுப்ப ஒப்புதல் தந்தேன்!

இங்கே நியாயப்படி இந்த நொடியில் எனக்குள் ஒரு பெரும் relief அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! "ஷப்பா!'' என்ற பெருமூச்சு பிரதானமாகியிருக்க வேண்டும்! மாறாக மனசெல்லாம் ஒரு இனம்புரியா சந்தோஷம்! குறுக்கில் வெந்நீர் பையை ஒட்டிக்காத குறையாய் 10 தினங்களாய் சுற்றித் திரிய நேரிட்டிருந்தாலும், மனம் நிரம்ப மகிழ்ச்சி! ஒரு மெய்யான உயர்தர விருந்தை பண்டிகை வேளையில் சமைத்திருக்கும் மகிழ்வும், பெருமிதமும் என்று இதைச் சொல்லலாம்! தவிர, ஒரு நார்மலான நாயகரின் விஸ்வரூபத்தை கண்குளிர அருகிலி­ருந்து ரசித்த சந்தோஷம் என்றும் சொல்லலாம்!

நாற்பதுகளில் Irritable Male Syndrome (IMS) என்றதொரு மனநிலை ஆண்களிடம் சகஜமாம்! ஒருவித தனிமை நாடும் உத்வேகம், உலகத்தின் மீதே கோபம்; பதட்டம் ; எரிச்சல் என்பனவெல்லாம் ஆணுக்குள் குடி கொள்ளுமாம்! எக்கச்சக்கமான stress; உட­லில் நேர்ந்திடும் மாற்றங்கள்; குடும்ப சூழல்கள்; நில்லாது ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதன் ஆற்றமாட்டாமை - என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடுமாம்! இங்கே ராபினிடம் நாம் காண்பது இவற்றின் சகல பரிமாணங்களையுமே!! 

தனிமையின் கனம்.. சதா நேரமும் கம்பி மேல் நடப்பதற்கு இணையான பணியின் stress ....அதிலுள்ள ஆபத்துக்கள்.. நண்பர்களின் இழப்பு தந்திடும் வலி­.. மாற்றங்களை ஏற்க மறுக்கும் பிடிவாதம்.. அதிகாரத்தை எதிர்த்துத் திமிர விழையும் சண்டித்தனம்.. உசிரே போனாலும், மசிராச்சு..! என்றதொரு ஒற்றை வேங்கையின் மனப்பான்மை- என கதாசிரியர் ராபினுக்கு இங்கே தந்துள்ள layers-களை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை! நாற்பதுகளைக் கடக்கும்/கடந்த நம் ஒவ்வொருவருக்குமே ஏதேனும் ஒரு புள்ளியில் இந்த ராபினோடு ஒன்றிட முடியும்!

And அந்த கதைக்களம்!! 💥💥💥 "எட்றா வண்டிய.. சுட்றா புறம்போக்கை'' என்று சைரனை அலறவிட்டபடியே நியூயார்க்கின் வீதிகளில் அனல் பறக்கவிடும் cops-களை இங்கே நாம் பார்க்க முடியாது! மாறாக கம்ப்யூட்டர்களின் பின்னே அமர்ந்து கொண்டு, ஒரு கீ-போர்டின் அசைவில் ரணகளங்களை உருவாக்கும் டிஜிட்டல் மாயாவிகளோடு சடுகுடு ஆடுகின்றனர்! க்ரிப்டோ கரன்சி என்ற கண்ணுக்குத் தெரியாத காசைக் கட்டி ஆள நினைப்போரோடு மல்லுக்கு நிற்கின்றனர், பணியில் மரணமும் ஒரு சன்மானமே என்றபடியே தளராது முன்னேறிச் செல்கின்றனர்! போலீஸாரை காமெடி பீஸ்களாகவே திரைகளில் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு, கடைசிப் பக்கங்களில் ராபினின் ரௌத்திரமும், நண்பர்களின் சவப்பெட்டிகளைச் சுமக்கத் தோள் தரும் கண்ணியமும் நெகிழ்வைத் தராவிட்டால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வேன்! ஒற்றை வசனம் கூட இல்லாத அந்தப் பக்கத்தை சில நிமிடங்களுக்குப் பார்த்துக் கொண்டே இருந்தேன் - ஏதோ கண்முன்னே விரியும் காட்சியைக் காண்பது போல! நாமெல்லாம் நிம்மதியாய் வாழ தூக்கம் தொலைக்கும் போலீஸாருக்கு ஒரு சல்யூட் & ஒரு சமகாலக் கதையை அட்டகாசமாய் உருவாக்கியுள்ள கதாசிரியருக்குமே தான்!

"இன்னுமா இதெல்லாம் படிக்கிறே?''என்று யாராச்சும் நமது காமிக்ஸ் வாசிப்பினைப் பகடி செய்திடும் அடுத்தவாட்டி "நச்'' என்று நடுமூக்கில் ஒரு குத்தை இறக்கிய கையோடு இந்த ட்ரிபிள் ஆல்பத்தினை அவர்களிடம் படிக்கக் கொடுத்துப் பாருங்கள் folks! நிச்சயமாய் மெர்சலாகிப் போவார்கள்!


""சாம்ப­லின் சங்கீதம்'' என்ற ultra tough பணிக்குள் ஏற்கனவே டப்பா டான்ஸாடிக் கொண்டிருந்த சூழ­லில், இந்த ரன்டக்கா.. ரன்டக்கா டான்ஸ் படலமும் சேர்ந்து கொண்டிருக்க, நியாயப்படி நான் "ஐயா.. மிடிலே..!'' என்று ஒரு ஓரத்தில் புலம்பிக் கொண்டே கட்டையைச் சாத்திக் கிடக்க வேணும்! மாறாக இந்த நொடியில் "bring them on'' என்று துள்ளிக் குதித்தபடியே சாம்ப­லின் சங்கீதம் - பாகம் 2-க்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் ! Phewww!

And மொத்தமாய் ராபினின் மூன்று அத்தியாயங்களும்.. இரண்டு புக்ஸ்களாய் ஒரு அழகான ஸ்லிப் கேஸில் வரவுள்ளது folks! இந்தப் பதிவினை நான் எழுதி முடிக்கும் நேரத்திற்குள் முதல் அத்தியாயம் பிரிண்ட் ஆகியிருக்கும்! மீத இரண்டும் திங்களன்று அச்சாகிடும்! So ஆயுத பூஜை முடிந்ததும் புக்ஸ் பைண்டிங்கி­லிருந்து வந்து விடும் என எதிர்பார்க்கலாம்! தீபாவளி மலர் ஏற்கனவே ரெடி! கொஞ்சமே கொஞ்சமாய் தாமதித்து புக்ஸ்களை அதன் மறு வாரத்தில் அனுப்பினால் தீபாவளிக்குப் பொருத்தமாகயிருக்கும் என்பது எனது எண்ணம்! What say folks?

ரைட்டு.. ஒரு சமகால டிஜிட்டல் யுத்தத்தி­லிருந்து 80 வருடங்களுக்கு முன்பான ஒரு அசுர உலக யுத்தத்தினுள் ஐக்கியமாகப் புறப்படுகிறேன்! And கிளம்பும் முன்பாக ஒன்று மட்டும் சொல்லிக்கொண்டு நடையைக் கட்டுகிறேன் guys ! Maybe கொஞ்ச காலத்திற்குப் பின்பாய், இந்த நடப்பு ஆண்டானது சாவகாசமாய் ஒரு அலசலுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், இதுவொரு மைல்கல் ஆண்டாகத் தென்படக் கூடும் என்றொரு பீலிங் உள்ளுக்குள் ! இந்த நொடியில் அதன் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அதை உணர்வது கடினமே ; but இது நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ஆண்டென காதோரமாய் பட்சி சொல்கிறது! நகரும் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு பணி தரும் அனுபவமும் பட்சியின் சேதி மெய் தானோ? என்று எண்ணச் செய்கின்றன!

Bye all.. see you around! Have a great Sunday!

125 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே.. 🙏🙏

    ReplyDelete
  5. // கொஞ்சமே கொஞ்சமாய் தாமதித்து புக்ஸ்களை அதன் மறு வாரத்தில் அனுப்பினால் தீபாவளிக்குப் பொருத்தமாகயிருக்கும் என்பது எனது எண்ணம்! //
    அப்ப அக்டோபர் 6 க்கு மேல் புக்ஸ் வரும் போல...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கி சாய்ஸ் தான் சார்...

      Delete
    2. இரண்டாம் வாரம் அனுப்பி வையுங்கள் சார்.

      Delete
    3. ஆயுத பூஜை முடிஞ்சிதான் பைண்டிங் பணிகளே முடிந்து வரும் எனும்போது கொஞ்சம் பொறுமையாகவே வரட்டும் சார்...
      ஆர்வமுடன் காத்திருக்கிறோம்...

      Delete
    4. ஆமாம். அடுத்த வாரம் புத்தகம் கிடைக்க வாய்ப்பு இல்லையே.

      Delete
    5. Jetspeedla படிக்கிறவங்க வருத்தப்பட வேண்டிய விசயம் தான்

      Delete
  6. ராபின் VS டெக்ஸ் = தீபாவளி

    ReplyDelete
  7. ராபின் ப் ரிவியூ பார்க்கும் போது இன்னொரு லார்கோ என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  8. அட்டகாசமான ராபின் முன்னோட்டம் சார்....
    🔥🔥🔥🔥🔥🔥
    ஆயுத பூஜை முடிந்து புத்தகங்களை அனுப்பினால் தீபாவளிக்கு சரியாக வாசகர்கள் அனைவருக்கும் சென்று விடும்.

    ReplyDelete
  9. ///நாற்பதுகளில் Irritable Male Syndrome (IMS) என்றதொரு மனநிலை ஆண்களிடம் சகஜமாம்! ஒருவித தனிமை நாடும் உத்வேகம், உலகத்தின் மீதே கோபம்; பதட்டம் ; எரிச்சல் என்பனவெல்லாம் ஆணுக்குள் குடி கொள்ளுமாம்! எக்கச்சக்கமான stress; உட­லில் நேர்ந்திடும் மாற்றங்கள்; குடும்ப சூழல்கள்; நில்லாது ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதன் ஆற்றமாட்டாமை - என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடுமாம்! இங்கே ராபினிடம் நாம் காண்பது இவற்றின் சகல பரிமாணங்களையுமே!! ///

    சார் அப்படியே என்னைப் பத்தி படிக்கிற மாதிரியே இருக்குங்க சார்!! இந்த கதையை படிக்கும் போது அப்படியே நானே சாகசம் பண்ற மாதிரியான ஒரு பிரம்மை வரப்போறது உறுதின்னு தோனுது!

    ஆர்வமுடன் வெயிட்டிங்... 😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. இதுக்குக் கூட ஒரு poll வைக்கலாமோ - எத்தினி பேருக்கு IMS தாக்கம் உள்ளதென்று கேட்டு?

      Delete
    2. IMS னால ஏர்வாடி வரைக்கும் ஒரு விசிட் போகாம இருக்கோம்னா நம்ம காமிக்ஸும், உங்க பதிவுகளும், கம்யூனிடியும், கம்யூனிட்டியில் வர்ற AI வீடியோ & good night மெசேஜ் உள்ளிட்டவைகள் தான் சார்! 😌

      Delete
    3. EV இதுவும் உண்மை.

      Delete
  10. "இரத்தமின்றி யுத்தம் " செம்மையான தலைப்பு சார்.
    இந்த வருடத்தின் சிறந்த தலைப்பு 👌👏👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நானே ஒரு பொன்னாடை போர்த்துக்கிட்டேன் சார் - தலைப்புக்கோசரம்!

      அந்த 2 அத்தியாயங்களினுள் புகுந்திடாமலே வைத்த குத்துமதிப்பான title அது.... இன்று செமயா பொருந்துவதை எண்ணி மகிழ்கிறேன்!

      Delete
    2. ஆம் ஸ்ரீ சகோ.. வாழ்த்துக்கள் sir...

      Delete
  11. ஏஜெண்ட் ராபினை எதிர் பார்க்க வைத்து விட்டீர்கள் சார்!
    வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. புக் வந்த பின்னே புரியும் சார் - இந்த முன்னோட்டம் சரி தானென்று!

      Delete
  12. Please send book 1st week itself sir

    ReplyDelete
  13. ///நாற்பதுகளில் Irritable Male Syndrome (IMS) என்றதொரு மனநிலை ஆண்களிடம் சகஜமாம்! ஒருவித தனிமை நாடும் உத்வேகம், உலகத்தின் மீதே கோபம்; பதட்டம் ; எரிச்சல் என்பனவெல்லாம் ஆணுக்குள் குடி கொள்ளுமாம்! எக்கச்சக்கமான stress; உட­லில் நேர்ந்திடும் மாற்றங்கள்; குடும்ப சூழல்கள்; நில்லாது ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதன் ஆற்றமாட்டாமை - என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடுமாம்! இங்கே ராபினிடம் நாம் காண்பது இவற்றின் சகல பரிமாணங்களையுமே!! ///

    "பாரத விலாஸ்" படத்தில் கே.ஆர்.விஜயா கேரக்டர் வாயிலாக இது பாடலாக பாடப்பட்டுள்ளது

    சாரி திடீர்னு ஞாபகம் வந்துருச்சு, இளவரசரே

    ReplyDelete
    Replies
    1. அடடே! சூப்பர் சகோ! புது தகவல் எனக்கு!!👍💐

      Delete
  14. ///கொஞ்சமே கொஞ்சமாய் தாமதித்து புக்ஸ்களை அதன் மறு வாரத்தில் அனுப்பினால் தீபாவளிக்குப் பொருத்தமாகயிருக்கும் என்பது எனது எண்ணம்! What say folks?///

    கொஞ்சமே கொஞ்சமாய் முன்னால் அனுப்பினாலும் ஓகே தான் சார்! தீபாவளி மலர் எங்கள் கைகக்கு கிடைக்கும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி என்ற பதமே இங்கு பொருத்தமாய் இருக்கும் என்பது என் எண்ணம்! What sayங்க Editor sir?😍😍

    ReplyDelete
    Replies
    1. கொ. ப செ. பத்தாம் தேதிக்கு மேலே பாத்துப்போம்னு சொல்லிட்டாக... 🥹

      Delete
    2. பாத்தீங்களா எடிட்டர் சார்? வயசு பசங்க think alike னு வெள்ளைக்காரங்க சொன்னது சரியா போச்சு!😁

      Delete
    3. அதாவது, வயசு பசங்க நானும், KS ம்!☺️

      Delete
    4. "பாரத விலாஸ்" கூட relate பண்ணுற வயசிலான பசங்க 🤕🤕

      Delete
    5. பாரத விலாஸ் எல்லாம் எல்லாம் ரொம்ப பழைய படம் சார்.

      Delete
    6. எங்க ஏஜ் குருப்புக்கு ஏற்றது போல ஒரு example சொல்லுங்க

      Delete
    7. ஏக் துஜே கே லியே?

      Delete
    8. // ஏக் துஜே கே லியே? //

      குசும்பு கொஞ்சம் அதிகம் தான்

      Delete
  15. ராபினின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது இந்த பதிவு

    ReplyDelete
  16. ////கொஞ்சமே கொஞ்சமாய் தாமதித்து புக்ஸ்களை அதன் மறு வாரத்தில் அனுப்பினால் தீபாவளிக்குப் பொருத்தமாகயிருக்கும் என்பது எனது எண்ணம்! What say folks?///

    பத்தாம் தேதிக்கு மேல் அனுப்பினால் ஓகே தாங்க, சார்

    ReplyDelete
  17. வணக்கம் அனைவருக்கும்...

    ReplyDelete
  18. // இதுவொரு மைல்கல் ஆண்டாகத் தென்படக் கூடும் பீலிங் உள்ளுக்குள் ! //
    கண்டிப்பாக வாய்ப்பிருக்குங் சார்,V காமிக்ஸில் வ.செ.வே கொடுத்த இன்ப அதிர்ச்சி ,பயணம் எனும் இதழின் புரட்சி,சாம்பலின் சங்கீதம் தரப்போகும் நவிற்சி,ராபினின் எழுச்சி என 2025 கொடுக்கும் வியப்புகள் ஏராளம்...

    ReplyDelete
  19. // 192 பக்கங்களுமாய் கிட்டத்தட்ட பத்து தினங்களுக்கு என்னை "ஆட்றா ராமா.. தாண்ட்றா ராமா' என்று ஆட்டுவித்தன //
    அப்ப ஏகப்பட்ட வசனங்கள் கூர்தீட்டப்பட்டிருக்கும்னு தோணுது,இந்த தீபாவளிக்கு முதல் வாசிப்பு ராபின்தான்...😍🤩

    ReplyDelete
    Replies
    1. ஏகப்பட்ட நஹி சார்... அனைத்தும்!

      Delete
    2. அப்போ டபிள் தீபாவளி வெயிட்டிங் எங்களுக்கு

      Delete
  20. //நாமெல்லாம் நிம்மதியாய் வாழ தூக்கம் தொலைக்கும் போலீஸாருக்கு ஒரு சல்யூட்//

    கொஞ்ச நேரம் முன்பு தான், கரூரில் நடந்த துக்க நிகழ்வுக்கு எத்தனை காவலர்களின் தலை உருளப் போகிறதோ என நான் நினத்துக் கொண்டிருத்தேன்..

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் என்ன சார் செய்ய முடியும் - கட்டுக்கடங்காத அப்படியொரு கூட்டத்தின் முன்னே?

      Delete
  21. இந்த வருடத்தில் டெக்ஸ் கதைகள் மிக சிறப்பான தேர்வுகள்
    கபிஷ் செனனை புத்தக விழாவில் சாதித்தது
    கதை சொல்லும் காமிக்ஸ் மீண்டும் வந்து வெற்றி கண்டது
    கேல்குலஸ் படலம் செமயாக இருந்தது, வெற்றியும் கண்டது
    பயணம் மேக்கிங் & ஆர்ட்வொர்க்
    இரண்டு தனி ஜாகோர் கதைகள் டாப்
    புத்தக விழாக்களின் சாதனைகள்
    பெருநகர விழாக்களிக்கும் ஸ்பெஷல்ஸ் அறிவித்தது
    சேலத்தில் ஜொலித்திட தயாராகிடும் சாம்பலின் சங்கீதம்

    இது மைல்கல் ஆண்டே சார்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இது ஒரு அட்டகாசமான காமிக்ஸ் வருஷம்.

      Delete
  22. // ! 'கந்தர் சஷ்டி கவசத்தை படிக்க வேண்டிய வயசிலே இதுலாம் தேவையா கோபி??' என்றொரு குரல் உள்ளுக்குள் கேட்காத குறை தான்!! //

    ROFL

    ReplyDelete
    Replies
    1. நெசம் தானே சார்?

      Delete
    2. கண்டிப்பாக இல்லை சார். எல்லா வயதிலும் படிக்கலாம் சார்.

      Delete
    3. காமிக்ஸ் படிக்க வேண்டிய பத்து வயதில் எங்க அம்மா கந்தர் சஷ்டி கவசத்தை மனப்பாடம் பண்ண வைச்சாங்க
      அதற்கு என்ன சொல்வதுங்க, சார்

      நம்ம காமிக்ஸ் 7 டூ 77

      Delete
    4. அதே ரம்யா. நானும் அந்தவயதில் கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடமாக படித்தேன்; பக்கத்து வீட்டு நண்பன் படிப்பதை பார்த்து எனது பெற்றோர்கள் படிக்க வைத்து விட்டார்கள்.

      Delete
  23. தீபாவளி அக்டோபர் 20.
    ஆயுத பூஜை முடிந்து மறு வாரத்தில் 10 ம்தேதி பார்சல் கைக்கு கிடைக்கிற மாதிரி அனுப்பினா சரியா இருக்கும் சார்.
    உள்ளூர் & வெளியூர்.

    ReplyDelete
  24. ராபின் செமையா வேலை குடுத்துள்ளார் என்பது புரிகிறதுங்க, சார்

    யாராவது பொம்மை புஸ்தகம் என சொல்லிட்டால் இந்த போலீஸ்கார் கதையை படிக்க குடுத்து கேள்வி கேட்றலாம் 😁😁😁

    ReplyDelete
  25. ராபின் முதல் முறையாக 280 அட்டகாசம் செய்ய வருகிறார் அதற்கு மரியாதை கொடுக்க ஹார்ட் பவுண்ட் அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும்; கேட்காமல் இருக்க முடியவில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க பரணி யார்ட்ட கேக்கறீங்க???

      Delete
    2. அதான் slip case என்று சொல்லியாச்சு. Case Closed

      Delete
    3. Dank u குமார் சார் 👍

      Delete
    4. நல்லாருக்கு இந்த conversations!!😂😂😂

      Delete
  26. கந்த சஷ்டி கவசம் படிக்கற வயசு.... 😄😄😄😄.... Lovely...
    But... நம்ம காமிக்ஸ் "காயகல்பம் "
    மாதிரிங்க sir... 😄😄❤️👍🙏...

    ReplyDelete
  27. Bitcoin, crypto currency என்ற வர்த்தக உலக மாயாஜால cyper crime உலகில் ராபினுக்கு IMS வந்திருப்பதிலும், அதை மொழி பெயர்க்க தாங்கள் பட்ட பாடும் புரிந்தது.
    குறிப்பாய் மேற்க்கண்ட உலகத்திற்கு 'இரத்தமின்றி யுத்தம் ' பொருத்தமான, அருமையான தலைப்பு.
    எங்கள் பொன்னாடையையும் வாங்கிக் கொள்ளுங்கள். 👏👏

    ஒரு வாரம் கழித்தே தீபாவளி விருந்தாக அனுப்பலாம்.

    இவ்வருடம் மைல்கல் ஆண்டுதான்!
    பயணம், வசெவே, சாம்பலின் சங்கீதம் இவைதான் மைல்கற்களே! 👏🙏💐

    ReplyDelete
  28. ஆஹா... காயகல்பம் என்றால் என்ன அப்படினு கூகுளை கேட்டேன் sir... மிக பொருத்தம்... 😄😄😄❤️👍🙏..

    ReplyDelete
  29. // குறுக்கில் வெந்நீர் பையை ஒட்டிக்காத குறையாய் 10 தினங்களாய் சுற்றித் திரிய நேரிட்டிருந்தாலும், மனம் நிரம்ப மகிழ்ச்சி! ஒரு மெய்யான உயர்தர விருந்தை பண்டிகை வேளையில் சமைத்திருக்கும் மகிழ்வும், பெருமிதமும் என்று இதைச் சொல்லலாம்! //

    நீங்கள் ஒரு நல்ல எடிட்டர் மட்டும் அல்ல மிக சிறந்த கதைகளை மட்டும் கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் சிறந்த காமிக்ஸ் ரசிகர் என்பதை மீண்டும் ஒருமுறை உணரவைத்த எழுத்துகள் இவை சார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை இந்த ராபின் தீபாவளி மலர் நிச்சயம் ஹிட் தான். ஏன் என்றால் முதலில் நீங்கள் எங்களை போல காமிக்ஸ் ரசிகர். அதனால் எப்போதும் உங்களால் எங்கள் Pulse உணர முடியும்.

      Delete
    2. Fingers crossed சார் 🤞🤞

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. சார் அப்படியே அந்த 9 பாக Mr.No அடுத்த வருட VComics தீபாவளி மலருக்கு ரெடி பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. Sorry... கூகிள் பாவம் sir என்ற எடிட்டர் in பதிவுக்கு நான் போட்ட சிரிப்பு இங்கே பதிவாகி விட்டது... உண்மை... பரணி சகோ.."பொறுக்கியெடுத்த மாணிக்கங்கள் " என்கிறார்களே..அப்படிதான் தேர்வு பண்ணுகிறார் கதைகளை.. ❤️👍🙏...

      Delete
  32. // நாற்பதுகளில் Irritable Male Syndrome (IMS) என்றதொரு மனநிலை ஆண்களிடம் சகஜமாம்! ஒருவித தனிமை நாடும் உத்வேகம், உலகத்தின் மீதே கோபம்; பதட்டம் ; எரிச்சல் என்பனவெல்லாம் ஆணுக்குள் குடி கொள்ளுமாம்! //

    நான்கு வருடங்களுக்கு முன்பு இதனை அனுபவித்து பல நாட்கள் தூக்கத்தை தொலைத்து அதில் இருந்து வெளிவர பார்க்காத மருத்துவர்கள் இல்லை போகாத கோயில் இல்லை. கடந்த ஒரு வருடமாக ஆபீஸ் வேலை முழுமையாக நாள் முழுவதும் ஆக்கிரமித்த பிறகு இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  33. நானும் கூட சகோ... 😔😔❤️👍🙏
    இப்போ.. மிகவும் சுதந்திராமக்கவும், மகிழ்வாகவும். நிம்மதி யாகவும்
    உணர்கிறேன்... இப்படியே முடிவும் இருந்தால் போதும்.. ❤️🙏🙏🙏..

    ReplyDelete
  34. Replies
    1. Good Question.

      ஆமா சொல்லுங்க சார் சொல்லுங்க

      Delete
    2. ஆயுத பூஜை விடுமுறையிலா?

      அல்லது தீபாவளி விடுமுறையின் போதா?

      இல்ல நீங்க ஏதாவது ஸ்பெசல் பிளான் வைத்து இருக்கீங்களா?

      Delete
    3. // ஆயுத பூஜை விடுமுறை //
      இதுவே எனது சாய்ஸ். ஆனால் ஆசிரியருக்கு காமிக்ஸ் வேலை பளு அதிகம் கடந்த சில மாதங்களாக அதிகம் என்று நினைக்கிறேன்; எனவே ஆசிரியர் விருப்பபடி வெளியிடட்டும்.

      Delete
    4. ஒரு விடுமுறையிலே சுண்டல ரவுண்டு கட்டிட்டு மல்லாக்க கிடப்பாங்க....!இன்னொண்ணிலே ஒரு வண்டிப் பட்சணங்களை அமுக்கிட்டு திக்குமுக்காடிட்டு இருப்பாங்க..!

      ஏவ்வ்வ்!!

      Delete
    5. பரணி சும்மாவே நம்ம எடிட்டர் சாரிடம் பதில் வாங்க முடியாது. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு man.

      Delete
    6. // ஆமா சொல்லுங்க சார் சொல்லுங்க //

      ஆசிரியர் மைண்ட் வாய்ஸ்: கொஞ்ச நேரத்திற்கு முன்னால்தான் நல்லவர் மாதிரி நமக்கு சப்போர்ட் செய்தத பார்த்து சந்தோசபட்டால் நம்பளை இப்படி மாட்டி விடுகிறாரே 😉

      Delete
    7. // ஒரு விடுமுறையிலே சுண்டல ரவுண்டு கட்டிட்டு மல்லாக்க கிடப்பாங்க....!இன்னொண்ணிலே ஒரு வண்டிப் பட்சணங்களை அமுக்கிட்டு திக்குமுக்காடிட்டு இருப்பாங்க..!

      ஏவ்வ்வ்!! // அப்போ நீங்களே ஒரு நல்ல நாள் பாருங்க சார்.

      Delete
    8. // பரணி சும்மாவே நம்ம எடிட்டர் சாரிடம் பதில் வாங்க முடியாது. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு man.//

      அவரு பெவிகால் ராமசாமி அவதாரம் எடுத்து 3 வருஷம் ஆச்சு குமாரு (போன் வயறு பிஞ்சி போச்சு மொடுலசன்ல படிக்கவும்).

      Delete
    9. // // ஒரு விடுமுறையிலே சுண்டல ரவுண்டு கட்டிட்டு மல்லாக்க கிடப்பாங்க....!இன்னொண்ணிலே ஒரு வண்டிப் பட்சணங்களை அமுக்கிட்டு திக்குமுக்காடிட்டு இருப்பாங்க..! //

      பட்சணம் சாப்பிடும் குழந்தைகள் கிடையாது சார் நாங்கள் காமிக்ஸ் படித்து மனதை இளமையாக வைத்து இருக்கும் குழந்தைகள் சார் நாங்கள். எனவே இந்த மாதிரி சுனா பானா டயலாக் போடாமல் வழக்கம் போல ஆயுத பூஜை அன்று நமது காமிக்ஸ் அட்டவணையை வெளிஇடுங்கள் சார். செண்டிமேன்டான இந்த பழக்கத்தை மாற்ற வேண்டாம் சார்.

      Delete
    10. இது எப்போ சாரே? நெடும் விடுமுறைகளில் பதிவையே தவிர்க்க நினைப்பவன் நான்!!

      Delete
  35. Hi Editor sir , first very happy to see the new post sir. Robin stories are always nice . Very nice to hear about this 3 part story and eagerly waiting for it .

    ReplyDelete
  36. // இந்த நடப்பு ஆண்டானது சாவகாசமாய் ஒரு அலசலுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், இதுவொரு மைல்கல் ஆண்டாகத் தென்படக் கூடும் என்றொரு பீலிங் உள்ளுக்குள் ! //

    உண்மைதான் சார். கடந்த பதிவில் இது பற்றிய எனது பின்னூட்டம் சார்.

    // இந்த வருடம் இதுவரை வந்த கதைகள் அனைத்தும் அருமை, எந்த கதையும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. அட்டகாசமான கதை தேர்வு. வாழ்த்துகள் சார். //

    என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு காமிக்ஸ் மறக்க முடியாத சிறந்த இதழ்களை கொடுத்த பொற்கால ஆண்டு சார்.

    ReplyDelete
  37. புத்தக பணிகள் முடிந்தால் வழக்கம் போல் அனுப்பி விடுங்கள் சார்...

    எங்களுக்கு புத்தகம் கிடைக்கும் நாட்களே தீபாவளி...

    ReplyDelete
  38. இந்த முறை எடுத்தவுடன் முதலில் ராபின் கதையை தான் படிக்க வேண்டும் என பதிவை படித்தவுடன் முடீவெடுத்து விட்டேன் சார்...

    ReplyDelete
  39. Replies
    1. நீங்க படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடீங்க

      Delete