Powered By Blogger

Saturday, October 07, 2023

The SUPREMO is here !

 நண்பர்களே,

வணக்கம். 'தல' தாண்டவம் starts !! அக்டோபர் மாதத்தின் அத்தனை இதழ்களோடும் நேற்று உங்களின் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! And துளியும் ஐயங்களின்றி இம்மாதத்தின் ஒளிவட்டத்தை கபளீகரம் செய்திட நம்ம SUPREMO ரெடி !! (நன்றி நண்பர் MKS ராம் !!) ஒண்ணே முக்கால் கிலோவுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைவான எடை - இது 'தல' மெகா இதழின் வெயிட் மாத்திரமே ! இதோ - இதுவரைக்கும் கண்ணில் காட்டிடாது வைத்திருந்த அட்டைப்படம் :

இதன் பின்னணியினில் அவசியமாகிய உழைப்பும், மெனெக்கெடலும் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே ஒரு முழுநீளப் பதிவு தேவைப்படும் ! இந்த நொடியினில் spotlight இருந்திட வேண்டியது 75 வது அகவையினுள் அடியெடுத்து வைக்கும் நமது இரவுக்கழுகாரின் ஆதர்ஷ டீம் மீதே என்பதால் - வேறெது பற்றியும் நீட்டி முழக்கப் போவதில்லை ! Let's wish the boys a wonderful 75-th with many many more to follow !!!

And இதோ - இந்தத் தருணத்துக்கென உருவாக்கிய குட்டி வீடியோ கிளிப்புமே !!

ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ ரெடி : https://lion-muthucomics.com/monthly-packs/1134-october-pack-2023.html

இரவின் பதிவில் மீண்டும் சிந்திப்போம் folks ! அதுவரையிலும் சுப்ரீமோவுடனான உங்களின் செல்பிக்களை போட்டுத் தாக்கினால் - மொத்தமாய் இத்தாலிக்கு அனுப்பிடலாம் ! இதோ STV ஆரம்பிச்சாச்சு !

Bye all...see you around ! Have a fun Saturday !!

291 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. மு பாபு ஆத்தூர்

    ReplyDelete
  3. ஏ அஜக்

    ஏ டுமுக்

    ஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  4. சூப்பர் சார்...கொரியர்காரவங்க இம்மதா எங்க ஏரியாக்கு கெளம்புவாப்ளயாம்...நம்ம புக் வந்தாச்சுன்னுதா நினைக்கிறாராம்...நானே வந்து வாங்கிக்கிறேன் எங்க செல்லம் இருக்கீயன்னு கேட்டா...
    ரெண்டு மணிக்கு நான் கூப்டதும் வாங்கன்னுட்டார்...சரி பாத்துக்கலாம்னு ஆவலோடு காத்து கிடக்கேன் வேலை வெட்டி இல்லாததால்...பிடிச்சதும் வாரேன் ...


    அட்டைப் படத்துல டாப் இதைத்தவிர ஏதுமிருக்குமா என்ன...

    ReplyDelete
  5. எப்படியோ கைய கால காட்டாம வாம்படம் போட்ட டெக்ஸ் இறுக்கமாய் தூள் கிளப்பும் போரில்....

    நான்தா இருக்கமான்னு இருக்கிப்பாத்து இருகிய சேலம் டெக்சா

    சிறுவயதுல வாம்படம் அணியமாட்டாரான்னு ஒவ்வோர் கதைகளிலும் தேடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்டு நீருபூத்த கண்களுக்கு குளிர்ச்சியாய் நீர் பாய்ச்சும் டெக்ஸ்ட்டை அதகளம்...இந்த வாம்படத்த பத்தி விரிவான கதையேதுமுண்டா

    ReplyDelete
  6. இத்தனநாள கடத்தியாச் சுளுவா...ஆனா இந்த ரெண்டு மணி நேரத்த கடத்துவது பெரும்பாடு போல

    ReplyDelete
  7. எத மொதல்ல...டெக்ஸ் சகோதரரா...பனிப்போரா...பிறந்த நாள் ஸ்பேசலா....இல்லை தாத்தாவ மொதல்லருந்தா

    ReplyDelete
  8. மூணாவது சனிக்கிழமை...
    புரட்டாசி கும்பிடு....
    ஃப்ரீயாத்தான் இருப்போம்.. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ... கூரியர் கதவை தட்டிற்று...😍😍😍

    Supremoவின் திக்கெட்டு திகிலுடன் இப்போது..😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ம்.. ம்...
      திக்கெட்டும் திகில்

      Delete
  9. அந்த ரோஸ் பனியன் போட்ட பெரியவர் யாருங்க...?! டெக்ஸ் வில்லரோட சித்தாப்பாரா..!?

    ReplyDelete
  10. தாயில்லாமல் லயனில்லை
    தானே டெக்ஸாய் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை சேர்க்கின்றாள்

    ஜீவநதியாய் வருவாள்
    நம் தாகம் தீர்த்து மகிழ்வாள்
    தவறினைப் பொறுப்பாள்
    தர்மத்தை வளர்ப்பாள்
    தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
    தாயில்லாமல் லயனில்லை

    தூய நிலமாய் கிடப்பாள்
    தன் தோளில் குதிரையால் சுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

    தாயில்லாமல் லயனில்லை

    மேக வீதியில் நடப்பாள்
    உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
    75ம் வாழ்வுக்கு துணையிருப்பாள்
    தாயில்லாமல் லயனில்லை

    ஆதி அந்தமும் அவள்தான்
    நம்மை தேடும் முத்தும் அவள்தான்

    அகந்தையை அழிப்பாள்
    ஆற்றல் கொடுப்பாள்
    அவள்தான் விஜய மகா சக்தி
    அந்த தாயில்லாமல் லயனில்லை
    தானே டெக்ஸாய் பிறந்ததில்லை
    என்க்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை சேர்க்கின்றாள்...

    ReplyDelete
  11. பாட்டில்லாமல் ஸ்டீலில்லை.
    பாட்டும் அவரும் பிரிவதில்லை.
    அவருக்கென்றே பல பாட்டிருக்கு.
    என்றும் அவருடன் இணைந்திருக்கு.

    ReplyDelete
  12. வந்தாச்சு
    தல தாண்டவம்தான் இந்த தீபாவளிக்கு ..

    டெக்ஸ் 75 சுப்ரிமோ ஸ்பெஷல் ..
    இம்மாதம் சத்தமில்லாம ஒரு ரெக்கார்டு பண்ணிருக்கார் தல..

    லயன் 250 (3 தனி தனி கதை) க்கு அப்புறம் ஒரே புத்தகத்தில் 4 கதைகளுடன்-ம் & இம்மாதம் மொத்தம் 5 டெக்ஸ் கதைகள் ..

    இந்த தீபாவளி கலர்புல்லாத்தான் இருக்கு .. 😍😍😍 💛❤💙💚💜

    ReplyDelete
    Replies
    1. வரட்டும் அண்ணா .. மொத்தமா வச்சு படிப்போம் ..

      Delete
  13. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  14. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  15. மிக அருமை.. நன்றி sir.. வாழ்த்துக்கள்.. மிகவும் சிரமமான பணியாக இருந்திருக்கும்..முழுதும் உருவாகி, கையில் எடுத்து புரட்டும் போது அந்த கஷ்டம் எல்லாம் விலகி.. ஒரு புன்னகை
    வந்திருக்கும் என்பதை என்னால் உணர மூடிக்கிறது...மிக்க
    மகிழ்ச்சி..❤️😄🙏👍

    ReplyDelete
  16. இதர கதை அட்டைகளின் படம் போடலியே இன்னும்.

    ReplyDelete
  17. பார்சல் பிரிச்சி செல்ஃபிய அனுப்பிட்டு....நிதானமாக புரட்டுனா தூக்கி வாரிப் போடுது என்னையுமே அட்டைப்படம் போலவே டயலனும்...
    என்னப்பா பெரிய டெக்சு...

    டெக்ஸ் சகோதரன் துப்பாக்கித் துணையுடனும் இணையோடு பின்னணி சந்தோசம் இழையோட..டைலன் முன்னால் ம்ஹும்...


    சரி இப்பதான் நான் மிக எதிர்பார்த்த விதி தேடிய ..புத்தகத்தயே பாக்குறேன்...எல்லாம் விதிதானோ...அட்டைப்படம் அசத்தி ஈவிய கோர்க்க...


    டெக்ச பாக்க...டயலன பாக்க ரெண்டுமே பட்டாசு தான்....ஆனாலும் தளத்ல காலைல பார்த்ததால் டயலன்தான் டாப்னு முடிவு கட்டிய என்ன மிரட்டும் பிரம்மாண்டம்...ஓவியர் பின்னிப் பெடலெடுத்துட்டார் முன்னும் பின்னும்...ஆனாலும் டயலன்.......

    ஆனாலும் நேர்ல பாத்த யாருமே கண்ணால் தன்னால் சொல்லிருவீங்க பெஸ்ட் டெக்சுதான்னு....சான்சே இல்ல சார்..நம்ம அட்டைகள்ல டாப் இதான்னு சந்தேகமே இல்லை...சந்தோசமே

    ReplyDelete
  18. டெக்ஸ் பாக்கும் பார்வையும்....அசால்டாக உந்தித் தள்ளியபடி பறக்கும் கழுகும்...பின்னணி இளம் மாலை நிறமும் சோகமாய் இன்றய நமது நிலையையும் ...மலைத் தொடரும் ஒரு கனமான அமைதியையும்...எதையோ எதிர்நோக்கும் ஆர்வத்தைத் தூண்ட.....

    பின்னட்டை நால்வருமே தூள் கிளப்ப...



    ஹாட் லைன் பட்டாசு சார்...இது வரவந்ததிலை பெஸ்ட்...ஸ்பைடர் 80 கள் தலைவாங்கினாலே பெஸ்டாயிருமே...கூட சில வரிகளும் கூட கொஞ்சமாய் சேர...அன்று கொலைகாரக் குரங்கு விரைவில்னுதான விளம்பரப்படுத்தினீங்க சார்...பின்னர் மாற்றி தலைவாங்கிக் குரங்குக்கு பேர்லயே பீதியைக் கிளப்புனீங்க நினைவிருக்கா...அன்று முதல் இன்று வரை அந்தத் தலைப்பும் கதையும்...அந்த புத்தகமும் மனதோடு நெருக்கம்...அதான் ரொம்ப காலமா அடிக்க முடியா டாப் தலைப்பென்பேன்...

    அடுத்த தீபாவளி மலர் இளம் டெக்சோடு இளம்....அய்யோ என்னால் சொல்லாம இருக்க முடியலியே....வேண்டாம் சஸ்பென்சாவே இருக்கட்டும் நண்பர்கள் நேரில் கண்டு சிலாகித்இது...


    வட்டத்துக்கு சவால் விடுத்த கருப்பு வெள்ளை வண்ணங்களில் பேப்பரில் தரம் பட்டைன்னா....முதலிரண்டு பக்கங்கள் வழுவழுத்தாளில் தலைவாங்கி சொதப்பியத ஈடு செய்யுது வழுவழுதாள்...நானும் மீண்டும் கேக்கலாமேன்னு இன்று வரை அன்று முதல் மனதில் இருத்திய கேள்விக்கு விடையாய்...வெள்ளோட்டப் பக்கங்களா...இளம் டெக்ஸ் கடைசி தாள் தூள்...

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. வாவ்...

    டெக்ஸ் அட்டைப்படம் செம கலக்கல் சார்...இன்று மாலை இல்லம் திரும்பினால் தான் தெரியும் இதழ் கைக்கு கிடைத்திருக்குமா என ...கிடைத்து விட்டால் சண்டே டெக்ஸ் சண்டே வாக கலக்கலாக அமைந்து விடும் ..காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  21. // இரவின் பதிவில் மீண்டும் சிந்திப்போம் folks ! // சார் சிந்திப்போமா? சந்திப்போமா? I'm ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  22. எனக்கும் புத்தகம் வந்து விட்டது ஆனால் அலுவல் நேரம் தான் நீண்டு கொண்டே இருக்கு. என்ன செய்வது?

    ReplyDelete
  23. தீபாவளிக்கு முன்னாமே அதிரப்போவுது சரவெடிதான்
    நம்பர் ஏழு 0 அடிதூளு

    ReplyDelete
  24. அட்டைபடம் சூப்பர் இரண்டு இரவுக்கழுகுகள்

    ReplyDelete
  25. எல்லாம் கிழமயம்!

    பேருக்கேத்தா மாதிரி கதையில வர்ற பெரும்பாலோனோர் முதியவங்கதான். ஆனா அவங்களோட சின்ன வயசு சேட்டைகளை எல்லாம் படிச்சா 'பார்ரா'ன்னு இருக்கு. கதையில டயலாக்ஸ் தெறிக்க விடுது. கார்ட்டூன்களைக் காட்டிலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குது. கதைய முழுசுமா படிச்சு முடிக்கும்போதுதான் எல்லாமே புரியுது. அங்கங்கே சொல்லப்படற பிளாஷ்பேக்ஸ் கதையோட்டத்தை சுவாரஸ்யமாக்கி கடைசியில எல்லா முடிச்சுக்களையும் விடுவிக்குது.

    பெர்தாகிட்ட ஏன் முட்டைகளை வாங்கக்கூடாதுன்னு நாமும் தெரிஞ்சுக்கற ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியலை. கடைசில அதனால அபிஷேகம் செய்யப்படுகிற தாத்தாக்களை பார்த்தா ஸோபி மாதிரி நமக்கும் கோவம்தான் வருது.

    அட... மில்சே பிளேபாயா இருப்பார்னு முதல் பாகத்திலேயே நான் கணிச்சது சரியாகத்தான் இருக்கு...

    கதையில் ஒவ்வொரு லூஸ் என்ட்ஸையும் அருமையாக் கோர்த்து அட்டகாசமான வாசிப்பை அனுபவத்தை கொடுத்திருக்காங்க...

    கதையில ஆராய்ச்சி பண்ணவும் நிறைய இருக்கு...

    அந்த நாஜிக்களோட 'டாஸ் ரெய்ச்' படைப்பிரிவு, டோங்கா தீவில் புதைந்த கொள்ளையர் கப்பல் பற்றி நிறைய கூகுள் சொல்லுது. உண்மை சம்பவங்களை கோர்த்து கதை சொல்லி இருப்பதால அதுசார்ந்த தேடல் இன்னும் ஆழமான புரிதலைக் கொடுக்கும்.

    மொத்தத்தில் தாத்தாக்கள் இம்முறையும் தீபாவளிக்கு முன்னாடியே பட்டாஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !! தட்டு நிறைய லட்டும், மைசூர்பாகும் இருக்கும் போது 'நச்' என்று சீடையை தேர்வு செய்திருப்பதே வித்தியாசமென்றால் தாத்தாஸை துல்லியமாய் ரசித்திருப்பது icing on the cake sir !

      Delete
    2. இந்தியாவின் எந்தவொரு பிற மொழியிலும் இந்தத் தொடரை திரும்பிப் பார்க்கக்கூட நாதியிராது எனும் போது - நாம் மூன்றாம் ஆண்டாய் பெருசுகளோடு பயணித்து வருகிறோம் சார் ! நான் வம்படியாக இதனை திணிப்பதாக நண்பர்களில் சிலர் கருதுவது மெய்யே ; but நம்ம தாத்தாஸ் - காமிக்ஸ் தாதால் என்று நிரூபித்து வருவதைப் பார்க்கும் போது ஒரு குட்டிப் பெருமிதம் உள்ளுக்குள் ! And டயலாக்ஸ் ஒற்றை இரவின் ஆக்கம் சார் ; நன்றாக வந்திருப்பின் - super happy !

      Delete
    3. // டயலாக்ஸ் ஒற்றை இரவின் ஆக்கம்//

      ஒற்றை இரவில்!! வாவ்..! மார்வெலஸ்!!!

      //தாத்தாஸை துல்லியமாய் ரசித்திருப்பது icing on the cake//

      நிறைய நண்பர்கள் படித்திருக்க மாட்டார்கள் என்பதால் ரொம்பவுமே அடக்கி வாசித்திருக்கிறேன் சார்... படித்தவுடனே தோன்றியதை எல்லாம் எழுதியிருந்தால் ஸ்பாய்லராகி விடுமென்பதால் தவிர்த்து விட்டேன்.

      உங்கள் தேடலில் கிடைத்த முத்து இந்த தாத்தாக்கள்! ஹாட்ஸ் ஆப் சார்!!

      Delete
    4. மீ டூ இன்று தாத்தாஸ் உடன் பயணந்தான்..

      Delete
  26. டெக்ஸ் இதழை கையில்
    ஏந்திய உடன் தீபாவளி 🔥 இன்றே வந்தது போல் ஒரு உணர்வு

    ReplyDelete
    Replies
    1. எக்ஸாக்ட்லி.....

      தொடர் வானவேடிக்கையை சின்ன தல காட்டுவாரு....

      Delete
  27. எங்களோட தலைவர் தோர்களுக்கு இதே போல இதழ் எப்போது வெளியிடப் போறீங்க.?😀😁😁

    ReplyDelete
  28. அனைவருக்கும் வணக்கம்...

    பார்சல் வந்து விட்டது இன்று... எனக்கு முன்பே... நன்றி சார்.

    இவ்வருடம் சாதனையான இதழ் இது. வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  29. அம்மாடியோவ்..
    அருமை ஸ்டீல் க்ளா - நண்பரிடம் இருந்து நிறைய வார்த்தைகளை சுட வேண்டி உள்ளது..சார்.
    - இதுவரை வந்த Tex-ஸ்பெஷல் களிலேயே இதுதான் டாப் இதழ் சார்.
    - இதுவரை வந்தா Tex-சிறப்பிதழ்களிலேயே இதுதான்.. மிகவும் கனமான இதழ் சார்.
    -அட்டைப்படம் -இதுவரை வந்த Tex இதழ்களிலேயே இதுதான் டாப் கிளாஸ் - சார்.
    (கண்ணில் காட்டாமல் ஏமாற்றிவிட்டதில் கோபம் வந்தாலும் - என்னது Tex க்கு பச்சை கலர் சட்டையா..?ii-மஞ்சள் சட்டைக்கு மாற்றச் சொல்லி இருக்கலாமே-?ii. என்றெல்லாம் தோன்றினாலும் -
    அந்த சிகப்பு பிண்ணணிக்கு பச்சைதான் எடுப்பாக தெரிவதும்..
    மேலும், கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால்..
    Tex - என்ற பிம்பத்தை தாண்டி தங்களது முகம் (காமிக்ஸ் "தலை" யாய்) தெரிவதும் - மிகவும் ரசித்த அட்டைப்படம்... ii சார்..சூப்பர்..அருமை..
    _Tex team_க்கு பின்பக்கம் சிறப்பு செய்து விட்டீர்கள்..
    _இதழின் உள்ளே-ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும்-
    கதாசிரியர்களின் புகைப்படம்-மிகவும் அருமை..
    அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கதையைப் படிக்க ஆரம்பிக்கலாம்..சூப்பர் சார்..
    - Tex THE SUPREMO ஸ்பெஷலுக்கு
    ஒரு ஸ்பெஷல் நன்றிகள் சார்..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உண்மையில் ஆச்சரியம் என்னன்னா நானெழுத நினைத்த இரண்டு வரிகள் உங்க பதிவில் நுழைந்து தொலைந்து கிடக்குது....

      ஆசிரியர் முகம்தான்னு நானுமே நினைத்தேன்..

      என்னடா பச்சையாருக்கே..டெக்ஸ் என்றும் பசுமைதானே நீதிக்கு என சொல்ல வாராரோன்னு நெனச்சேன் அருமை...

      Delete
  30. சார் செல்பி போட்டோ லைன் whatsapp நம்பருக்கு அனுப்புனா போதுமா

    ReplyDelete
  31. டைலன் டாக்

    எளிய & அருமையான கதை.

    அழகான ஓவியங்கள் & அசத்தலான கலரிங்.
    பக்கங்கள் குறைவு என்பதால் முதலில் படிக்க முடிந்தது.

    கதையின் முடிவில் ஒரு லேசான சோகம் மனதை வருடிச் செல்கிறது.

    டைலனின் இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்தால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. டைலன் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்க எடிட்டர் சார்

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. அப்புறம் ஒரு சின்ன நெருடல்.

    டெக்ஸ் 75 கதை & தயாரிப்புத் தரம் அருமை & அட்டகாசம்...

    ஆனால் நெருடலாக இருப்பது டெக்ஸின் அட்டைப் படமே.
    கலரிங் நல்லா இருக்கு ஆனால் டெக்ஸ் முகம் தான் ஏதோ ரொம்ப கரடு முரடாக இருக்கு.

    புக் மார்க்ல இருக்கும் ஒரு வசீகரம் இதில் இல்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா 😇.

    அதே போல பின்னட்டையில் கார்சனாரின் கழுத்துக்கு பக்கத்தில் சட்டை கொஞ்சம் மிஸ்ஸிங்.

    சண்டைன்னா சட்டைக் கிழியத் தானே செய்யும்...😇🙄

    ReplyDelete
    Replies
    1. என்னதான் டெக்ஸ் கதைகளுக்கு 75 வயசு ஆகியிருந்தாலும், டெக்ஸை என்னிக்கும் இளமையா பார்த்திடத்தான் மனசு ஏங்குது! பின்னட்டையில் உள்ள டெக்ஸ் அந்த வகையில் சேர்த்தி!

      Delete
    2. 75வயசு ஆகுதுனு அட்டையிலயே சிம்பாளிக்கா சொல்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது போல.....!!!😉

      Delete
  34. ஒண்ணே முக்கால் கிலோவுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைவான எடை - இது 'தல' மெகா இதழின் வெயிட் மாத்திரமே //


    நான் அன்னிக்கே சொன்னேன்... இன்னிக்கு ஆசிரியரும் ஒத்துக் கொண்டுவிட்டார்..
    அதிகாரிக்கு தலக்கணம் அதிகம் என்பதை தனது தேர்தெடுத்த சொற்களால்...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு காரணமில்லாமல்ல ரம்மி....உள்ள பாருங்க குளிக்காத தளபதி விளம்பரத்தை...வெயிட் கூடிராதா

      Delete
    2. தலைனாவே ஒரு கெத்து இருக்கத்தானே செய்யும்...

      Delete
  35. ஆனால் ஒரிஜனல் தீபாவளி அடுத்த மாதம் தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா...என்றுமே இளம் டெக்ஸ் களம் காணவும்...ஆனா இந்த மாத அட்டையே வெடிக்குதேன்னு உங்க மனசு ஏமாந்தாலும் ஒரிஜினலா தீபாவளியும் அடுத்த மாதம்தான்னு காலண்டர் சொல்லுதே

      Delete
    2. ஆமா..சின்ன தலையோட வானவேடிக்கை அடுத்த மாசந்நானே.....😎🎇🎆🎇🎆


      ஏதோ அரை டவுசரும் வர்றாராமே....வெடிக்குமா? நமத்திடுமா?

      Delete
  36. முதலில் படித்தது V காமிக்ஸ். சகோதரனின் சகாப்தம். சாம் வில்லர் அட்டகாசமான ஆரம்பம். யங் டெக்ஸ் படிப்பது போலவே பரபர சுறுசுறு் . பட்டாசாக பொறிகிறது இந்த கதை. அடுத்த பாகம் எப்போது வரும் என்று இப்போதே ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. குண்டுபுக் எப்படி இருக்கு?

      Delete
    2. குண்டு புக் ஆக்கமும் சரி, அட்டையும் சரி அசத்தல். இந்த மாதிரி ஒரு டெக்ஸ் book ரொம்ப வருடங்களுக்கு முன்பு பார்த்ததாக நினைவு. டெக்ஸ் 75க்கு இதைவிட சிறப்பு செய்யமுடியாது.

      One of the best books I ever had in my life. இன்னும் புத்தகம் படிக்கவில்லை படித்து விட்டு வருகிறேன். கதைகளை பற்றி விமர்சனம் செய்ய.

      Delete
    3. இந்த மாத V காமிக்ஸ் எனது மதிப்பெண் 9/10.

      Delete
    4. //!One of the best books I ever had in my life.///

      யெஸ்.... பெர்ஃபெக்ட் மேக்கிங்......100/100

      Delete
  37. பல மாதங்களுக்குப் பிறகு புத்தகம் அனுப்பிய மறுநாளே இந்த மாத புத்தகங்கள் எனக்கு கிடைத்து விட்டன ரொம்ப நன்றி சார்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  38. டெக்ஸ் 75வது ஆண்டு மலரில் முதலில் படிக்க ஆரம்பித்துள்ள கதை திக்கெட்டும் திகில்.

    ReplyDelete
  39. புத்தகம் இன்னும் வரவில்லை.பெருமூச்சுதான் வருது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அட டா இந்த மாசம் காளான் மந்திரத்தை(புரட்டாசி மாசம் பாருங்க அதான் முட்டை மந்திரத்துக்கு பதிலாக காளான் மந்திரம்) கரூர் பக்கம் வெச்சிட்டாரா ஷெரீப்பு..🤭

      Delete
  40. நாளை காலையில் தான் புத்தகங்களை கையில் ஏந்த ஏலும்!
    விடிவதற்காண்டி வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. ஏன் இரவுல ஏந்தினா சந்திரரு தடுத்துடுவாரா??

      Delete
  41. Supremo is HERE...

    உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெளிவந்த அதே நாளில் லயன் முத்து காமிக்ஸ்அக்டோபர் மாத இதழ்கள் அன்பாக்சிங்... சுட... சுட 🥰

    >https://youtu.be/EJVXCheGr7A?si=_3JT5E3-qPxyAaMq

    காலையில் மேக்கப் போட்டு செல்ஃபி எடுத்து போடுறேன்.... பின்ன விஜயராகவனுக்கு ஈடு கொடுக்கனுமே 😁

    ReplyDelete
    Replies
    1. முதல் மூன்று இடங்கள கடசியா காட்டிட்டீங்க போல...
      எந்திரப் பார்வைல படிச்சாச்சோ...
      அதுக்கு ரோஸ் பவுடர் அவசியம்...பச்சைக்கு போட்டி போட

      Delete
    2. ///காலையில் மேக்கப் போட்டு செல்ஃபி எடுத்து போடுறேன்.... பின்ன விஜயராகவனுக்கு ஈடு கொடுக்கனுமே///

      😁😁😁😁

      Delete
    3. சட்டு புட்டுனு வீட்டம்மவோட மேக்அப் சாதனங்களை லவட்டிட்டு வந்திடுங்க.. செல்ஃப்பி சிறக்கும்..🤣

      Delete
  42. Replies
    1. பொறுப்பா லேட்டா போனா காளான் தீர்ந்திடும்...

      பதிவை மதியம் கூட போட்டுக்கலாம்..

      காளான் காத்திருக்குமா???

      Delete
  43. அடேங்கப்பா நேற்று மாலை இல்லத்தில் பார்சலை பார்த்ததுமே செம கொண்டாட்டம் தான் அதன் பருமனை பார்த்து...வெளியே எடுத்து வழக்கம் போல் ஒவ்வொரு இதழாக எடுத்து பிரித்து ரசித்து..... ஆஹா..அருமை..அருமை..அருமை...அதுவும் டெக்ஸன் இதழை பார்த்ததும் நமக்கு தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டது என முடிவாயிற்று...இதழ் மிக சிறப்பாக வந்து உள்ளது சார்...சூப்பர் ..என்னத்தான் டெக்ஸ் இதழை முதலில் படிக்க தோன்றினாலும் ம்ஹீம் சிறு இதழ்களை எல்லாம் முடித்து விட்டு டெக்ஸை கடைசியாக தான் கையில் எடுக்க வேண்டும் என மனது சொல்வதால் பிற இதழ்களை வாசித்துவிட்டு தான் டெக்ஸ்...

    உண்மையில் இந்த குண்டு டெக்ஸ் இதழை பார்த்தவுடன் தீபாவளிக்கும் சேர்த்து தான் இந்த தீபாவளி மலர் என நினைத்து விட்டேன் ..ஆனால் அடுத்த வெளியீடாக மீண்டும் படா இளம் டெக்ஸ்ம் ..இளம் புலியும் வருவதை கண்டவுடன் தான் தெரிகிறது அடுத்த மாதமும் தீபாவளி காத்திருக்கிறது என ..சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் தல... ஒவ்வொரு மாதமும் பார்சல் பிரிக்கும்போது எழும் சந்தோசத்துக்கு ஈடு இணை ஏது??

      இந்த வருடம் இரட்டை தீவாளிதான்...

      Delete
  44. @Edi Sir..😍😘

    Thala 75 Birthdayக்கு Hulk மாதிரி ஒரு Bulk புக் 725+ pages ல கொடுத்து அசத்திட்டிங்க சார்..😍😃👍👌✊


    மெகா குண்டுபுக் க்கு ரொம்ம்ம்ப Thanks சார்..😍😘💐💐❤💛💙💚💜

    ReplyDelete
    Replies
    1. கோடாலி கொம்பரோட ஹன்ரட் பர்த்டேவுக்கு ஆயிரம் வாலா ஒண்ணு போட்டுறலாமுங்க பாபுஜி💞💪🎂

      Delete
  45. இந்த மாத சந்தாவின் இலவச இதழான பேய் புகுந்த பள்ளிக்கூடம் டைலனின் பாணியில் கடுகு போல் சிறுத்து இருந்தாலும் காரம் குறையாது என்ற பழைய பழமொழியை மீண்டும் உண்மை ஆக்கி உள்ளது. முதல் பக்கமே முழு நீள ஓவிய பாணியில் அதுவே அட்டைப்படம் போல் சிறப்பாக அமைந்து உள்ளது அட்டைப்படம் வராத இதழ்களில் இனி இது போலவே முழு பக்க ஓவியம் இடம் பெற்றோலே அதுவே அட்டைப்படமாக மாறிவிடும் சார்...எனவே இந்த பாணியவே பின்பற்றினால் அட்டையை காணவில்லையே என்ற குறை மறைந்து விடும்..

    ."உண்மையான பயணிகள் பயணத்தை தொடங்குவது விதியின் பிடியிலிருந்து தப்பித்து போகும் நோக்கத்தில் அல்ல" என்ற பாடல் வரிகளில் தொடங்கி அதே பாடல் வரிகளில் கதை முடியும் பொழுது ஸ்காட்டை நினைத்து வருந்த தோன்றியது..டைலன் கெளரவ தோற்றம் போல் வந்தாலும்அழகான கதை..

    ReplyDelete
  46. வி காமிக்ஸ் ன் சகோதரனின் சகாப்தம்...

    மினி இதழ் போல் அமையாது இந்த முறையும் சிறிது பருமனான இதழாக அமைந்து போனதில் மகிழ்ச்சி..அட்டைப்படமும் சரி ..உட்பக்க சித்திரங்களும் சரி அழகு...டெக்ஸ் வில்லரை போலவே சாம் வில்லரும் அதே அதிரடி பாணியில் இருப்பாரோ என நினைத்தால் அப்படியே நேர்மாறான குணத்தில் வருகை தந்தாலும் மனதை கவர்ந்து விட்டார்..கதை ஆரம்பம் முதல் முடிவு வரை சாம் வில்லர் அவர்களுடனே பயணம் சென்று வந்த உணர்வு ..இவரின் சாகஸம் இன்னும் இருக்கிறதா என தெரியவில்லை இருப்பின் கண்டிப்பாக தொடர்ந்து வர செய்யுங்கள் சார்..சாம் வில்லர் மட்டும் புது அனுபவத்திற்காக காத்திருக்க வில்லை அவருடன் நாங்களுமே காத்திருக்கிறோம்

    ReplyDelete
  47. தலயோட பிறந்த நாளை எல்லா வருடமும் இப்படி கொண்டாட வாய்ப்புண்டா?

    ReplyDelete
    Replies
    1. 🎇🎆🎇🎆🎇🎆🎇அப்படி போடு அருவாளை மாப்பு....💪💪💪💪

      பளஸ்ஸோ ப்ளஸ்கள்...💕💕💕💕

      Delete
  48. Dylan dog

    Simply awesome. Expecting all stories like this in future. Please do that sir.

    10/10

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. எல்லாம் கிழமயம்'
    செம கதை. படித்தாகிவிட்டது.
    சரளமான நடையில் வசனங்கள்.
    ஏக் தம்மில் முடித்து விட்டேன்.
    மில்ஸே, பெர்தா லவ் ட்விஸ்ட் சூப்பர்.
    பின் அட்டையில் மூன்று கழுதை பொம்மைகளின் கதையும் அருமை. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  51. டெக்ஸ் சுப்ரிமோ Spl.
    அட்டைப்படத்திற்கு ஒரிஜினலை பயன்படுத்தி இருக்கலாம்.
    டெக்ஸ் பார்ப்பதற்கு அர்னால்டு மாதிரி தெரிகிறார்.
    மேலும் முன்னட்டையிலும் சரி, பின்னட்டையில் நால்வருக்கும் சரி , கழுத்தின் அமைப்பு சரியாக பொருந்தவில்லை. கழுத்தில் தைராய்டு ப்ராப்ளம் வந்த மாதிரி புடைத்து தெரிகிறது. இன்னும் கொஞ்சம சரியாக வரைந்திருக்கலாம்.
    என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. ///டெக்ஸ் பார்ப்பதற்கு அர்னால்டு மாதிரி தெரிகிறார்.//

      ஹா..ஹா.... புத்தகத்தின் வெயிட்டை அட்டையிலும் காட்டிட்டாங்களோ....!!

      சென்னை ஓவியராக இருக்கும் பத்து சார்...😉😉
      அவரு வரைஞ்சா கேள்வியே கேட்காம 10/10 கொடுத்து வுடனும் என்பது தள பால பாடம்...

      Delete
    2. தப்பு...! முன்னட்டை இத்தாலிய ஒவியரின் கைவண்ணம் !

      And பயன்படுத்தியிருப்பதுமே ஒரிஜினல் டிராயிங்கினை !

      பின்னட்டை மட்டுமே நமது சென்னை ஓவியரின் பணி !

      Delete
    3. ஓவ் இம்முறை இத்தாலிய ஓவியரா!!!

      இத்தனை ஜோராக ஜொலிக்கும் இதழுக்கு அட்டைப்படம் திருஷ்டிபொட்டாக உள்ளது சார்...

      இதற்கு ஒரு வழிமுறையைக் காண வேணும் என கேட்டுக்கொள்கிறேன்.

      30ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட, இத்தாலிய FB gruop admin cum சீனியர் வாசகர் G G Carsanன் நீண்ட காலமாக நமது இதழ்களை பாலோ செய்து வருகிறார்...,

      "ஏன் இந்தியன் டெக்ஸகளில் அடர் வண்ணத்தில் அட்டை போடுறீங்க??, ஓவியர்களைக் கொண்டு வரைந்து அட்டை போடுறீங்க; ஒரிஜினல் போனெல்லி ஆக்கங்களையே பயன்படுத்த மாட்டறீங்க????"

      ---என கேட்டு இருந்தார் இரு ஆண்டு முனபு..
      அவருக்கு நீண்ட பதிலாக சொல்லி இருந்தேன்..

      நேற்றைய நமது The supremo special இதழுக்கும் அவரது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்...

      Delete
    4. அகப்பையில் வந்த்து சட்டியில் இருந்த்தது தானே...

      Delete
  52. மினி டைலன் முதலில் படித்தேன். Short and Sweet. சின்ன கதை ஆனால் அதில் ஒரு திருப்பம். ஒரு பள்ளியில் பேய் நடமாட்டம் இருப்பதாக தெரிய வர அதை ஆராய பள்ளி நிர்வாகம் டைலனை அணுகுகிறது. மொத்த மாணவர்களும் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கும் அவர்களின் சக மாணவி தான் காரணம் என்று சொல்ல அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை. செம்ம செம்ம எனது மதிப்பெண் 10/10.

    இது போல மினி Dylan கதைகளை தொகுப்பாக கொடுத்தால் நன்றாக இருக்கும் சார்.

    ReplyDelete
  53. டைலனின் முழு கதைகளையுமே கூட போடலாம்.
    கொஞ்சம் மர்மம் & திகில் கதைகளாக.
    வேற திகில் கதைகள் வராததால இதை முயற்சி பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. முன்னாட்களில் டைலனோடு வாங்கிய வீரத் தழும்புகள் இன்னமும் கிட்டங்கியில் கணிசமாக உள்ளன நண்பரே !

      Delete
    2. வருத்தமான செய்தி.

      ஒரு ரீ என்ட்ரி வாய்ப்பு இருக்கா சார்.

      Delete
  54. 3ஆவதாக படித்தது எல்லாம் கிழமயம்.

    இந்த கதையின் கார்ட்டூன் பாணி ஓவியங்கள் இந்த கதைகளுக்கு ஒரு தனி ஈர்ப்பு கொண்டு வருகிறது. இந்த முறையும் தாத்தாஸ் டிஸ்டிங்ஷன் வாங்கி விட்டார்கள். ரொம்ப இயல்பாக அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலித்து உள்ளது இந்த கதை. அதும் அந்த சிடு மூஞ்சி பாட்டியின் ஃபிளாஷ் பேக் ரொம்பவே Touching. இந்த வருடத்தின் டாப் கதைகளில் ஒன்று என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

    உங்கள் மொழி பெயர்ப்பு இந்த முறை அட்டகாசம் சார்.

    எனது மதிப்பெண் 100/10

    ReplyDelete
  55. Ji, தளபதி ஸ்பெஷல் நான்கு பாகத்தோடு முடியும் கதையா, தொடர்கதையா.

    ReplyDelete
    Replies
    1. முடியும்ம் ...ஆனா முடியாதே சார் ! ஒற்றைச் சங்கிலியில் பயணிக்கும் story arc !

      Delete
  56. அடுத்த மாதம் டபுள் தமாக்கா தீபாவளி.
    ஒரு பக்கம் லயன் தீபாவளி மலர்
    மறுபக்கம் முத்து தீபாவளி மலர். உடன் ஜானி மற்றும் V காமிக்ஸின் வன் மேற்கின் வரலாறு என கலக்கலான தீபாவளி சரவெடி வரிசைகட்டி வருது.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. எடிட்டர் சார்.தீபாவளி டெக்ஸ், டைகர் கதைகளுக்கு அட்டையில் ஒரிஜினல் படங்களையே வெளியிடுங்கள். இது என் வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. சார் ...எனெக்கென்ன பரபரப்பு இருக்கப் போகிறது - நல்லதாய் ஒரிஜினல் இருக்கும் போது கணிசமாக காசை செலவழித்து புதுசாக டிசைனை போட ?

      சுப்ரீமோ ஸ்பெஷலின் 4 ஒரிஜினல் ராப்பர்களில் எதனை அட்டைக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்பீர்களோ - தெரியலியே ? நான்குமே பொனெல்லி அளவுகோள்களுக்கு ரொம்பவே மிதமானவை ! அதிலும் "வந்தார் ...வென்றார் " அட்டையை நாம் பயன்படுத்தியிருந்தால் படுக்கப்போட்டு ரோடு ரோலரை ஏற்றியிருக்க மாட்டீர்களா ?

      'தல'யை படைக்கும் போனெல்லின் ஓவியர்களிலேயே ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றியே சித்திரங்களை போடுவது கண்கூடு சார் ! லெட்டரியின் பாணி வேறு ; ஜோஸ் ஆர்ட்டிசின் பாணி வேறு ; பஸ்க்வாலே பிரீஸ்ன்டாவின் பாணி வேறு ; கெலேபினீயின் பாணி வேறு என்ற அடுக்கிக் கொண்டே போகலாம் !

      அட, இந்த இதழிலேயே 3 வித சித்திர பாணிகளில் டெக்சை பார்க்கிறோம் தானே சார் ? 724 பக்கங்களில் படைப்பாளிகள் உருவாக்கியிருப்பதிலேயே மாறுபட்ட 3 டெக்ஸ்களை பார்க்கும் போது மட்டுப்பட்டுக் கொள்ளும் நமது ஆதங்கம் ஒற்றை ட்ராயிங்கில் மட்டுமே வெளிப்படுவது ஏனென்பது தான் புரிய மாட்டேன்கிறது ! தோர்கலில் நிகழ்ந்தது போல பிழை இருப்பின் அது புரிந்து கொள்ள முடியும் விமர்சனம் ! ஆனால் இங்கு அவ்விதப் பிசகுகள் இருப்பதாக என்மட்டிற்கேனும் தெரியலியே சார் ?

      அப்புறமா சமீபத்தில் வெளியாகியுள்ள மாயாவி & ஸ்பைடர் தொகுப்புகளின் ஒரிஜினல் அட்டைப்படங்களை மட்டும் ஒருக்கா தேடிப் பிடித்துப் பாருங்களேன் சார் - ஒரிஜினல்களும் எல்லா நேரங்களிலும் வேதங்களாகிடாது என்பது புரியக்கூடும் !

      Delete
    2. மன்னிக்க வேண்டும் சார். நான் கேட்பது போனெல்லியின் சிறந்த படங்களில் ஒன்றை தேர்வு செய்து அதனை அட்டை படமாக போடலாமே என்பதுதான்.
      மாதாந்திர டெக்ஸ் இதழ்களிலேயே சிறப்பான அட்டைப்படங்கள் ஒரிஜினலாக வரும்போது 75 ம் ஆண்டு மைல் கல் இதழ் எனும்போது டெக்ஸின் முன் அட்டைப்படம் இன்னும் கம்பீரமாக, எடுப்பாக இருந்திருக்கலாமே என்பது என் கருத்து.
      இன்றுவரை என் அளவில் மிகச்சிறந்த அட்டைப் படம் மின்னும் மரணம் டைகரின் அசத்தலான படம் தான்.
      அதன் பின் NBS மற்றும் டெக்ஸ் 400 இதழ். மற்றவை எல்லாம் அப்புறம் தான்.

      Delete
    3. அந்த "மின்னும் மரணம்" அட்டைப்படத்துக்கு நான் வாங்கிய சாத்து மறக்க இயலா நினைவுகளின் ஒரு அங்கம் சார் !

      நேரம் கிடைக்கும் போது அந்தப் பதிவுக்குப் போய்ப் பாருங்களேன் !

      Delete
    4. லயன் 250 யோட CD style bullet, டைனமைட் ஸ்பெசல் பச்சை தவக்களை டெக்ஸ் னு சாத்துகள் பிரபலம் இங்கே....🤣🤣🤣

      குண்டு புக்ஸ்களோட அட்டைபட கேம்ஸ் அப்படி.....!!!!

      Delete
    5. உண்மை sir.. ஒரே ஒரு முகம் மட்டுமே.. சூப்பர் தேர்வு... But நாம் அட்டையிலும் action வேண்டும் என்றே நினைக்கிறோம்... ( நானல்ல 😄) புரியுதுங்க.. ❤️

      Delete
    6. /// அதே போல பின்னட்டையில் கார்சனாரின் கழுத்துக்கு பக்கத்தில் சட்டை கொஞ்சம் மிஸ்ஸிங்.///
      yes sir. சட்டையின் காலர் கழுத்துடன் இணைக்கப்படவில்லை.

      Delete
    7. ///சட்டையின் காலர் கழுத்துடன் இணைக்கப்படவில்லை.///

      பத்து சார்.. அது கார்சன் கொஞ்சம் பெருமையோட காலரைத் தூக்கிவிட்டுக்கும்போது கொஞ்சம் கிழிஞ்சிடுச்சாம்!

      Delete
    8. நடுவுல கொஞ்சம் காலரக் காணோம்.

      Delete
  59. Supremo தாண்டவம் 75 ஆண்டாக தொடர்கிறது

    ReplyDelete
  60. தளபதியை நீண்ட நாட்களுக்கு பிறகு தீபாவளி வேளையில் சந்திக்க போவது மகிழ்ச்சியளிக்கிறது

    ReplyDelete
  61. எச்சில் விழுங்கி காத்திருக்கிறேன் எப்போது புத்தகம் கைக்கு கிடைக்கும் என்று... மதுரைக்கு பராக் பராக்!

    ReplyDelete
  62. டைலன் டாக்: பேய் புகுந்த பள்ளிக்கூடம்

    இந்த குட்டியான புத்தகத்தை கையிலேந்த அருமையாக உள்ளது. கொஞ்சம் கெட்டியான தாள்களாக இருப்பதால் கச்சிதமாக வளையாமல் நிற்கிறது. விலையில்லா இதழாக இருந்தாலும் நல்ல தரம் மற்றும் நேர்த்தி!!


    கதையை பொறுத்தவரையில்...
    சுருக்... நறுக்!!

    ReplyDelete
  63. ! நான் வம்படியாக இதனை திணிப்பதாக நண்பர்களில் சிலர் கருதுவது மெய்யே ;
    but நம்ம தாத்தாஸ்


    தாத்தாஸ் வம்படிய ஆக திணிக்கும் நீங்கள் கார்டூன் கதைகளையும் திணித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ப்ளூ கோட்ஸ்
      மேக் & ஜாக்
      ஹெர்லாக் ஷோமஸ்

      இவர்களெல்லாம் ஆக்க்ஷன் நாயகர்கள் என்று எண்ணி விட்டீர்கள் போலும் நண்பரே !

      And இவர்கலெல்லாம் விற்பனையில் ஊடு கட்டி அடிப்பதால் அட்டவணையில் இடம் பிடித்திருப்பதாகவுமே எண்ணியிருக்கிறீர்கள் போலும் !

      Sadly mistaken on both counts !

      Delete
  64. புத்தகங்களை பார்த்தாயிற்று! supremo special அட்டைப்பட பிரம்மாண்டத்தைப் பார்க்கும்போதும்; அதன் பருமனை கைகளில் உணர்ந்தபோதும், புரட்டப்புரட்ட வந்துகொண்டேயிருந்த வண்ணப் பக்கங்களைக் கண்ணுற்றபோதும் - மனதிலும் உடலிலும் ஒரு சிலிர்ப்பு ஓடியது! இந்த இதழைக் கையில் ஏந்திடும் - டெக்ஸை விரும்பிடும் - காமிக்ஸ் ரசிகர் யாராயிருந்தாலும் சரி; கண்டிப்பாக ஒரு பொக்கிஷத்தை ஏந்தியிருப்பதான பெருமிதத்தை அடைவார் என்பது உறுதி!

    முன்னட்டையில் டெக்ஸ் முகத்தை சற்று கடுகடுவென்று வைத்திருப்பது போல தோன்றுகிறது! இது எப்படி இருக்குன்னா.. "காலாகாலத்துல எனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிப் பாக்கற ஐடியா இருக்கா இல்லையா டாடி?" என்று கேட்ட கிட்வில்லரை டெக்ஸ் ஒரு லுக் விடறாப்ல இருக்கு!! :)

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கணா ...அந்த புக்குக்குள்ளாற ஒண்ணுக்கு நாலா 'கத கத'ன்னு ஒரு ஐட்டமும் கீதே...ஆருக்கேனும் அதுக்கும் சித்த நேரம் தர முடிஞ்சதுங்களா ?

      Delete
    2. திக்கெட்டும் திகிலுடன் பாதி தூரம் பயணம் போய் கொண்டு இருக்கின்றேன் சார்.

      Delete
    3. சார்.. குண்டு புத்தகங்களை முதல் ஒரு நாலஞ்சு நாளுக்கு வச்சுத் தடவிட்டு அப்புறம்தான் கதைகளைப் படிக்கணும்றது எங்கவூர் வழக்கம்!

      இன்னிக்கு நான் அன்னந்தண்ணி புழங்கப்போறது - விதி எழுதிய வெள்ளை வரிகளோட!

      'ஐ லவ் கி.நா'ஸ்!

      Delete
    4. //// ...அந்த புக்குக்குள்ளாற ஒண்ணுக்கு நாலா 'கத கத'ன்னு ஒரு ஐட்டமும் கீதே----//

      இனிப்பு பிரியனுங்கோ நானு...பாறைக்காடுங்கிற புறநகர் காட்டுபகுதியில வளர்ந்து இஸ்கூலும் அங்கிட்டே...மொத்த உலகமே அவ்வளவு தாங்கிற அளவுதான் தெரியும்.

      பக்கத்தில உள்ள சிறு கடைப்பகுதியில வருடம் பூரா பலகார சீட்டு போட்டு வருவாங்க, தீவாளிக்கு 4நாட்கள் முன்பு ப்ளாஸ்டிக் கவர்கள்ல ஒவ்வொரு கிலோவாக அடைபட்ட லட்டு, ஜிலேபி, மைசூர்பா னு கிடைக்கும்... வீட்டிலொரு பக்கமாக கூடையில அடுக்கப்பட்டுள்ள இந்த பாக்கெட்டுகளை தினம் காலை, மாலைனு கண்ணு நிரம்ப பார்த்து வருவோம் நானும் தம்பி தங்கைகளும்..தீபாவளிக்கு தான் தின்ன தருவாங்க... 3, 4நாட்களாக பார்த்து பார்த்து அந்த இனிப்புகள் கண்ணிலயே நிற்கும்..

      தீபாவளி அன்னிக்கு அதிகாலை குளிச்சிட்டு புது டவுசர் சொக்கா போட்டுகிட்டு, சாமி கும்பிட்டுட்டு அந்த ஜிலேபியை நாக்கில் வைக்கும் போது ஆஹா.... அப்படி தித்திக்கும்...

      அந்த காத்திருந்து உண்ணும் சுகத்துக்கு ஈடு ஏதுங்கோ சார்...!!!!

      காமிக்ஸ்ம் அதுபோலத்தான்...அதும் குண்டுபுக்னா இன்னும் சொல்லணுமா???? ஒரு ரெண்டுநாள் எடுத்து தடவிப்பார்த்து அந்த புக்கு கண்லயும் சிந்தையிலும் சிங் ஆக டைம் தந்து வாசிக்கணும். அப்ப அது என்னிக்கும் மறக்காது...நினைவில் நிற்கும்....

      ----இவன், நிதான வாசிப்பும் நன்றே சங்கம்!😎

      Delete
  65. சுப்ரீமோ Spl.
    Selfie யாச்சு. அனுப்பியாச்சு.

    ReplyDelete
  66. Ellam kizha mayam

    The story starts on a funny side. The dark side of every human are just hidden under a mask. Whom we thought as heroes has a dark flashback with lot of guilt tied around their neck. The heroes win if they acknowledge the existence of their darkside. Otherwise it is just pure waste.

    I was expecting a twist at the end to glorify thaththas but I hope they are waiting for it sequel

    10/10

    ReplyDelete
    Replies
    1. //I was expecting a twist at the end to glorify thaththas but I hope they are waiting for it sequel//

      Nopes...this is a series that follows no stereotypes !

      Delete
  67. எடிட்டர் சார். எனக்கு வந்த Supremo Spl புத்தகத்தில் 76 ம் பக்கத்திற்கு அடுத்து 93ம் பக்கம் தான் உள்ளது. நடுவுல 16 பக்கத்தை காணோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. ப்ளஸ் 16 னு 2015லயோ 2016லயோ ஒவ்வொரு மாசமும் வழங்கினாங்க... உப்ப ரிவர்ஸ் போல...மைனஸ் 16 ஆகிட்டது....🤣

      Delete
    2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நிஜமாவே.

      Delete
  68. டைலர் அட்டையே கதை வரிகளை துவக்க..
    முதல் பக்கம் அடுத்த வார வரிகளை வரைய...
    அருமை சார்....
    டைலர் நாயகரல்ல அந்த சிறாரே....
    நல்ல மனம் வாழும்குது முடிவிலும்...
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதே....
    சந்தாதாரர்க்கு அரிய உடனடி பம்பர்

    ReplyDelete
  69. A Real moment.
    கதையோட சுவாரஸ்யத்துல நான் பக்கங்கள் விடுபட்டதை கவனிக்கவில்லை.
    எங்கோ தப்பாயிருக்கேன்னு 120 பக்கம் தாண்டினதும் லேசாக உரைத்தது.
    அப்போதும் எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
    அதன் பின்பு எங்கே தவறு என்று ரிவர்ஸ் கியர் போட்டதில் தான் பக்கங்கள் மிஸ்ஸானது தெரிந்தது.
    அநேகமாக 76க்கும் 93க்கும் இடையில் இரண்டாவது கதை ஆரம்பம் என்று நினைக்கிறேன். (அட்டைய எடுத்து விட்டால் எல்லா டெக்ஸ் கதையும் ஒண்ணு தான்னு தளத்துல யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.)

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. சர்ப்பத்தின் சின்னம் படித்தாகி விட்டது.
    செம த்ரில்லான கதை.
    தங்கத்தை உருவாகும் ரசவாதம் பற்றிய புத்தகத்தை திருடி, தங்கத்தை உருவாக்கி புகழ்பெற நினைக்கும் ஒரு துறவியையும், அவருக்கு துணையாக இருக்கும் ஒரு திருட்டு கும்பலையும் டெக்ஸ் அண்டு கோ தேடிச் சென்று கூண்டோடு வேரறுக்கும் கதை.
    பரபர பட்டாசு ரகம் கதை.
    கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு குறையாமல் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது.
    அருமையான கதைத் தேர்வு சார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  72. Most of the time getting the books after 2 days only...
    So have to wait for Monday...

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. பார்சல் ஒன்றே வந்துவிட்டது. புதன்கிழமை தான் கைப்பற்ற முடியும். நான் படிக்கும் முதல் கதை நிச்சயம் டைலன்டாக் தான். குறிப்பாக டைலன் கிழவிகளின் கதையை முடிக்கும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மற்ற நண்பர்கள் அதையே காரணம் காட்டி டைலனை ஒதுக்கியது கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  75. என்னது என் தளபதி மீண்டும் வருகிறாரா. ஆக அருமை. தீபாவளி தளபதி தீபாவளி.
    🎆🎇🎆🎇
    😷😷😷😷😷😷😷😷
    சதாசிவம் காங்கயம்

    ReplyDelete
  76. வந்தார். வென்றார்..
    பத்து பக்கங்கள்தான் தாண்டியிருக்கிறேன்.
    வாவ்...
    சித்திர அதகளம் சார்.
    காட்சி அமைப்புகளும், அதற்கான சித்திரங்களும் பிரமிப்பூட்டுகின்றன.
    முதல் பிரேமிலேயே குதிரை செத்து வீழ்ந்து கிடக்கும் காட்சி...அப்பப்பா..
    வேற லெவல் கதையாக இருக்க போல.
    இன்றைய இரவு இதனுடன்

    ReplyDelete
  77. திக்கெட்டும் திகில் - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிளாசிக் டெக்ஸ் கதை முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை கதை விறுவிறுப்பாக பட்டாசாக சென்றது. நன்றி Vijayan Sir.

    ReplyDelete
  78. காளான் சூனியத்தால் பாதிக்கப் பட்டு கதறிக் கிட்டு இருக்கேன் . சேலத்துல என்னனா நிதான வாசிப்பும் நன்றே. அப்படினு புது பழமொழி சொல்லிக்கிட்டு நிம்மதியா சந்தோசமா புத்தகத்த பார்த்துக்கிட்டு மேக்கப் போட்டுகிட்டு செல்ஃபி எடுத்துகிட்டு மட்டும் இருக்காங்க வாழ்க வளமுடன்(.இன்னைக்கு குரியர் ஆபிஸுக்கு போய் பார்க்கணும்) . கரூர் ராஜ சேகரன் ்

    ReplyDelete
    Replies
    1. இன்று புத்தகம் வந்து விடும் சார். கவலை வேண்டாம். படித்து விட்டு விமர்சனம் பதிவிடுங்கள்.

      Delete
    2. முட்டை மந்திரம் ஒரு வாரம் வீரியத்துடன் இருக்கும்.....

      காளான் மந்திரம் 48மணி நேரந்தான் தாங்கும்...

      இன்று வந்திடும் புக்ஸ்.. ஹேப்பி ரீடிங் ஜி.

      Delete
  79. அது காளான் சூன்யமா இருக்காது ஜி. கொரியர் வூட்டுக்கு வராததால் அநேகமா அது வூ(ட்)டு சூன்யமா இருக்கும். எதுக்கும் ரிப்போர்ட்டர் ஜானிய கூப்பிட்டு கேளுங்க.

    ReplyDelete
    Replies
    1. அதுல பாருங்க பத்து சார்,
      நம்ம கூட்டம் கும்மியடிக்கும் கனவுலகம் வாட்ஸ்ஆப் குருப்புல இந்த முட்டை மந்திரம் பேமஸ்...இந்த C+ language ல வைப்பது நம்ம ஷெரீப்பு...போன வருடம் பூரா எனக்கு வெச்சாங்க...ஒரு வாரம் லேட்டூ, ரெண்டு வாரம் லேட்டுனு தாமதம் ஆகும்..

      அதும் எனக்கு பிடிச்ச ரிப் கெர்பி ஸ்பெசல்1, ஊரெல்லாம் சுத்தி ஈரோடு போயி திருப்பூர்ல திரும்பி கோவையில குந்தியிருந்துட்டு 20நாள் கழித்து வந்த்து.

      அப்புறம் என் சகோதரி அந்த மந்திரத்துக்கு எதிர் மந்திரம் போட்டு அதை உடைக்க, நம்ம ஏரியாவுலயே DTDCகொரியர் ஆபீஸ் வர அன்றே கிடைக்க ஆரம்பித்தது.

      இப்ப இன்னும் பியூட்டி என்னானா, professional courier beanch, எதிரில் உள்ள காம்ளக்ஸ்ல அண்டர்கிரவுண்டுல தான் ஆபீஸ் வைத்து உள்ளார்கள். பார்சல் பாய் டெலிவரிக்கு கிளம்பியனா மொத என்ட்ரி நமக்கு தான்🤩🤩🤩

      10 ல இருந்து 10.30க்கெலாம் டான்னு வந்திடுது போங்க...💪

      (VKR style வாசிங்க)

      Delete
  80. இந்த மாதம் டெக்ஸின் சரவெடி மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக வந்தார் வென்றார் பரபரப்பாகவும் தெளிவான கதையோட்டதுடனும் இருந்தது. அதிலும் டெக்ஸுக்கும் கிட்டுக்கும் இடையிலான தந்தை மகன் பாசத்தை உணர்வுகளை வார்த்தையுடன் ஓவியமாக பார்த்து படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. ஒரு தந்தையின் பாசத்தையும் மகனுக்கு தந்தை மேல் இருக்கும் மதிப்பும் பாசமும் வேறு எவரும் தன் தந்தையை வெல்ல முடியாது என்ற கிட்டின் கர்வமும் இந்த வருடம் வந்த டெக்ஸின் கதைகளில் மற்றும் ஒரு வைரம். நன்றிகள் பல ஆசிரியருக்கு

    ReplyDelete

  81. சமனான சாதனை...."Suremo vs ரெளத்திரம் மற"

    The supremo specialல 16பக்கங்கள் காணல என்ற நம்ம பத்து சாரின் கமெண்ட்டை அடுத்து இன்று என் புத்தகத்தில் உள்ள பக்கங்களை சரிபார்த்தேன்... 724 பக்கங்களும் எண்ணிக்கையில் சரியாக இருந்தன....

    The Supremo Special ல உள்ள,

    1.திக்கெட்டும் திகில்...!
    2.சர்பத்தின் சின்னம்...!
    3.வந்தார்...வென்றார்...!
    4.பூதம் காத்த புதையல்...!

    ----ஆகிய4கதைகளும் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுதும் உள்ளன....

    4கதைகள் என்றவுடன், அட ஏற்கனவே ஏதோ ஒரு டெக்ஸ் புக்கில 4கதைகள் பார்த்தா மாதிரியுள்ளதேனு ஃப்ளாஷ் அடிக்க, பழைய புக்ஸ்களை நினைவு படுத்தி பார்க்க ஒரு புக்கில் 4கதைகள் வந்துள்ளது தெரிய வந்தது....

    அது எதுனா உருவத்தில் சிறியதானாலும் கதையில் பட்டாசாக வெடித்த "வாமன டெக்ஸ்"-என நம்ம பொருளாலர் செனா அனா ஜியால் அழைக்கப்பட்ட டெக்ஸ் சிறுகதைகளின் தொகுப்பு, "ரெளத்திரம் மற"

    2019ன் சந்தாதாரர்களுக்கு இலவச இணைப்பாக அளிக்கப்பட்ட 4வாமன- டெக்ஸ் சிறு கதைகளின் தொகுப்பு 2020ஜனவரியில் "ரெளத்திரம் மற"-வாக ரூ120விலையில் லயன் வெளியீடு எண்369ஆக வெளியாகியுள்ளது.

    அதில் உள்ள4 டெக்ஸ் கதைகள்....

    1.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மினிடெக்ஸ்-மே2019

    2.நட்புக்கு நாட்களேது-மினி டெக்ஸ்-ஜூலை2019

    3.தகிக்கும் நியூ மெக்சிகோ-மினி டெக்ஸ்-ஆகஸ்ட்2019

    4.ரெளத்திரம் மற-மினி டெக்ஸ்-டிசம்பர்2019

    132பக்கங்களில் வெளியான இந்த மினி டெக்ஸ் தொகுப்பிலும் 4கதைகள்; இம்மாத The Supremo specialலும் 4கதைகள். " ரெளத்திரம் மற"- செய்திருந்த அதிக கதைகள் கொண்ட டெக்ஸ் இதழ் என்ற சாதனையை இம்மாத The Supremo Specialம் சமன் செய்துள்ளது....!

    புதிய சாதனையான 5கதைகள் கொண்ட டெக்ஸ் இதழ் எப்போது வெளிவருமோ!!!-என்ற கேள்வி அடுத்து தானாவே எழுகிறது!

    இம்மாத இரு டெக்ஸ் புக்ஸ் உடன் எண்ணிக்கை 162 ஆச்சுது.. . 3ஆண்டுகளில் வெளிவரக்கூடிய "தமிழ் டெக்ஸ் 200வது சிறப்பிதழ்"- சரியாக இருக்குமா நண்பர்களே???

    ReplyDelete
    Replies
    1. அடுதத மாதம் இளம் டெக்ஸ் 6 கதைகள்தானே சார்.

      Delete
    2. மெபிஸ்டோலாம் வருடம் ஒரு தடவைதான் கட்டவிழ்க்கணும்...

      Delete
    3. @பத்து சார்

      வரவிருக்கும் லயன் தீபாவளிமலர்
      யங் டெக்ஸின் 6பாகங்கள் கொண்ட ஒரே கதை...!!



      அங்கே மாதம் 64பக்கங்களில் இதுபோன்ற தொடர்களை வெளயிட்டு வர்றாங்க. இங்கே நாம ஒரே கதையாக வழங்கிடறோம்...

      சென்ற மாதம் தாங்கள் வெகுவாக ரசித்த யங் டெக்ஸ் "திக்கெட்டும் பகைவர்கள்"- 5பாகங்கள் கொண்டது....

      Delete
    4. @STV
      அண்ணா வருடம் ஒரு கதையாவது மெபிஸ்டோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏற்கனவே ஓட்டெடுப்பு நடந்த போது மெபிஸ்டோ வேறு கெழித்து இருக்கிறார். வழக்கமான தளத்தில் கொண்டுவர முடியவில்லை என்றால் மேபிஸ்டோவை முன்பதிவுக்காவது கொண்டு வரவும். 2024 இல் மெபிஸ்டோவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜயன் சார் ஏமாத்திப்புடாதிங்க. இல்லையென்றால் எங்கள் தலீவரை சிவகாசி வரை போராட்டத்திற்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.

      Delete
    5. சதாசிவம் @ வருடம் ஒரு மெபி நிச்சயமாக இனி வரும்தான். மெபிக்கு வந்த வரவேற்பு அப்படி....🤭

      டெக்ஸ் பிடிக்காதவங்களுக்கும் மெபி பிடிக்குதே... பின்ன டெக்ஸை காய்ச்சி எடுத்தா..

      Delete
  82. சர்பத்தின் சின்னம்!!

    ஹைய்யா... மோரிஸ்கோ!!!

    ReplyDelete
  83. ...விதி எழுதிய வெள்ளை வரிகள்..
    படித்து முடித்தாகிவிட்டது.
    படித்ததும் எனக்கு தோன்றிய தலைப்பு,
    ' கொடும் பனியில் நெடும்பயணம்'.
    இந்த ஆண்டின் மிகச்சிறந்த கதை.
    சித்திரங்கள் அதகளம்.
    நிஜங்களின் நிசப்தம் கதை பாணியில் வரையப்பட்ட சித்திரங்கள் அருமை.
    சதுரங்க ஆட்டத்துடன், கதையின் சம்பவங்கள் இணைந்து செல்வது சூப்பர்.
    ரஷ்யாவில் இருந்து கொடும்பனியில் தப்பி ஓடும் பிரெஞ்சு மேட்டுக்குடி, அவர்களுடன் இணைந்து பயணிக்க வரும் கர்ப்பிணிப் பெண்ணும், அவள கணவனும்.
    இறுதிக் கட்டத்தில் ஒவ்வொருவராக வெவ்வேறு சூழலில் இறந்து விட மேட்டு குடிப்பெண்ணான அரோரா மட்டும் தப்பி பிரெஞ்சு மக்கள் தங்கியிருக்கும் இடத்தை சென்றடைகிறாள்.
    அங்கும் ரஷ்ய பீரங்கிகள் குண்டுமழை பொழிய....
    கனமான வரிகளுடனும், கனமான சம்பவங்களுடனும், சித்திரங்களுடனும் கூடிய அற்புதமான தவறவிடவே கூடாத கிராபிக் நாவல்.
    பல இடங்களில் ஓநாயின் விழிகளுடன், கதை மாந்தரின் விழிகளும் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அருமை.
    கர்ப்பிணிப் பெண்ணான அனைஸ் மரணிக்கும் காட்சி மனதை உலுக்குகிறது.
    அந்தக் காட்சி நமக்கு போதிக்கும் பாடங்கள் ...
    உயிரைப் பிடித்துக்கொண்டு தப்பி ஓடும் நிலையில் ஒவ்வொருவருமே மற்றவர்க்கு பாரமாகத் தெரியும் மனித இயல்பு, சர்வைவல் எனும் வார்த்தையின் உண்மையை உணர்த்துகிறது.
    இப்படி ஒரு கடினமான கதையை துணிந்து தகுந்த நேர்த்தியான வசனங்களுடன் வெளியிட்ட ஆசிரியர்க்கு பாராட்டுகள்.
    hats off Sir.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்.. அழகான, ஆத்மார்த்தமான விமர்சனம்! கதையோடு எத்தனை லயித்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எழுதியிருக்கும் விதத்திலேயே உணரமுடிகிறது!
      நானும் நேற்றிரவுதான் இந்தக் கதையைப் படித்து முடித்தேன். உங்கள் கருத்துக்களோடு பெரும்பான்மை ஒத்துப்போகிறேன்!

      மறுக்கா ஒருவாட்டி படித்தால் தான் அந்தப் பனியில் புதைந்து கிடக்கும் மர்மங்களை முழுசா உணரமுடியும் என்று நினைப்பதால் கிடைக்கும் கேப்பில் ஒரு மறுவாசிப்பை போட்டுவிட்டு வருகிறேன்!

      Delete
    2. பனியில் புதைந்து கிடப்பது மர்மங்கள் அல்ல ஈ.வி. நமது மனங்களே. அந்த பனிவனத் துயரில் கல்மனமும் கரையும்.

      Delete
    3. செம நண்பரே பாதிதான் படித்தேன்....சரியான வரிகள் புதைந்து கிடப்பது நம் எண்ணங்களே ...நாமே அங்கே மாறி மாறி நாட்டியமாடுவோம்...சகிப்புத்தன்மையா இயலாமையா என மேட்டுக்குடியாயும்...என் வண்டி இருக்கைல நானும் நடக்கனுமான்னு கடுப்புல காய்ந்து ...அந்த குழந்தை வரவில் நாமும் மகிழ்ந்து சாதாரண குடியானவராயும்...

      மீதிய படிச்சு உருகிய பின் சிந்திப்போம்

      Delete
  84. சுப்ரீமோ ஸ்பெஷல். மறு கொரியர்க்காக வெயிட்டிங். வந்ததும்தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  85. பூதம் காத்த புதையல் - இந்தக்கதையை நேற்று மாலை அலுவலகம் விட்டு வீடு வந்த பிறகு ஆரம்பித்தேன், இன்னும் 50 பக்கங்கள் உள்ளது கதையை முழுவதும் படித்து முடிக்க, கதையை முழுமையாக படித்து முடிக்காமல் என்ன சொல்ல போகிறேன் என்றா :-) முதல் சில பக்கங்கள் படிக்க ஆரம்பித்தவுடன் எழுத்துருக்கள் வழக்கமான அளவில் இல்லாமல் கொஞ்சம் சிறியதாக இருந்தது, படிக்கும் ஆர்வத்தை மட்டுப் படுத்துவதாக இருந்தது, அடுத்த சில பக்கங்களை தாண்டும் போது சித்திரங்கள் என்னை கட்டிப்போட்டது, ஒவ்வொரு கட்டங்களில் வரும் சித்திரங்கள் அந்த நிகழ்வு நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்தது, மிகவும் தெளிவாக, நேர்த்தியாக வரைந்து உள்ளார்கள், அது கதாபாத்திரங்களாகட்டும், அலுவலகமாகட்டும், குதிரை, இயற்கையாகட்டும், செவ்விந்திய குடியிருப்பாகட்டும் அல்லது சண்டை காட்சியாகட்டும் அனைத்தும் அருமை; கடந்த சில வருடங்களில் வந்த கருப்பு வெள்ளை கதைகளில் இது போன்ற சிறந்த ஓவியங்களை பார்க்கவில்லை. எனது டூப் லைட் மண்டைக்கு இந்த ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்த பிறகுதான் புரிந்தது, எழுத்துக்களை வழக்கமான அளவில் பிரிண்ட் செய்து இருந்தால் இந்த ஓவியங்களை முழுமையாக ரசித்து இருக்க முடியாது என்று.

    கதை அட்டகாசமாக சென்று கொண்டு உள்ளது, முதல் 4-5 பக்கங்களில் வழக்கமான டெக்ஸ் & கார்சன் கலாய்ப்புடன் ஆரம்பிக்கும் கதை ஜெட் வேகத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடன் செல்கிறது!
    நன்றி விஜயன் சார்!

    ReplyDelete
  86. விஜயன் சார், அடுத்த மாதம் இளம் டெக்ஸ் கருப்பு வெள்ளை கதையடன் ஒரு வண்ணக்கதையையும் சேர்த்து கொடுத்தால் தீபாவளி கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக அமையும்! டெக்ஸின் புதிய கதை இல்லாவிட்டால் பழைய கிளாசிக் கதையை வண்ண மறுபதிப்பாக கொடுங்கள் சார்! இது ஒரு வேண்டுகோள் மட்டுமே சார்!

    ReplyDelete
  87. டெக்ஸ் இன்

    *THE SUPREMO SPECIAL*

    இந்த 700 ப்ளஸ் பக்க இதழை கையில் ஏந்தும் பொழதே அவ்வளவு சந்தோசம்.. மிக மிக அருமையான தரத்துடன் வாம்பம் பட்டையுடன் டெக்ஸ்ன் க்ளோஸ்அப் முன்னட்டை படமும் ...டெக்ஸ்ன் அனைத்து குழுவினரும் இடம் பெறும் பின்னட்டை படமுமே அட்டகாசமாக ரசிக்க வைத்தது எனில் உட்பக்கங்களை புரட்டும் பொழுது ஒவ்வொரு கதையின் சித்திரதரமும் ,அச்சுதரமும் பட்டாஸாய் வெடிக்கிறது..ஆசிரியர் சொன்னது போல இதழை ரசித்து முடித்த பின் வரிசைகிரகமாக படிப்பதா இல்லை ஆசிரியர் சொன்னபடி இங்கிபிங்கி போட்டு படிப்பதா .. எந்த கதையை தான் முதலில் படிப்பது என்ற குழப்பமே மேலோங்கியது..பின் வண்ண டெக்ஸ் கதைகளை வரிசைகிரகமாக படித்து கொள்ளலாம்...கறுப்பு வெள்ளை கதையை முதலில் முடித்து விடலாம் என நான் தேர்ந்தெடுத்த கதை 200 பக்கங்களை நெருங்கும் "பூதம் காத்த புதையல் "


    *பூதம் காத்த புதையல்*

    ஆரம்ப கால டெக்ஸ் ஓவிய பாணியில் கறுப்பு வெள்ளையில் ஒரு பழைய க்ளாசிக் கதையை படிக்கும் உணர்வு கதையில் பயணிக்கும் பொழுது உணர்ந்து கொண்டே சென்றது...செம செம விறுவிறுப்பான அட்டகாசமான பயணிப்பு டெக்ஸ் உடன்...கதை ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அந்த கனமான இதழை கீழே வைக்கக்கூட மனம் வரவில்லை..க்ளைமேக்ஸ் மிக நன்று...டெக்ஸ் படைப்பாளிகள் எப்படித்தான் இப்படி அசரடிக்கிறார்களோ தெரியவில்லை...கதையை படித்து முடிக்கும் வரை கவனத்தை வேறுபக்கம் திருப்ப முடியவில்லை...இதழில் இந்த கதைதான் முதலிடத்தை பெறுமோ என எண்ண வைக்கிறது பூதம் காத்த புதையல்... ஆனால் அடுத்த கதையை படித்தவுடன் அதே உணர்வு டெக்ஸ் கதையில் எழும் என்பதையும் உணர்ந்தே உள்ளேன்..பூதம் காத்த புதையலின் எனது மதிப்பெண் ஒன்று கூட குறையாமல் முழுமதிப்பெண்னை பெறுகிறது..

    அனைத்து டெக்ஸ் கதைகளையும் படித்து விட்டே விமர்சனம் இடலாம் என இருந்தேன்..ஆனால் பூதம் காத்த புதையலை படித்தவுடன் உடனே சந்தோசத்தை பகிர்ந்து விட்டுத்தான் அடுத்த கதையை படிக்க வேண்டும் என்ற உணர்வே அதற்குள் பதிவை இட வைத்து விட்டது..இனி மற்ற கதைகளை படித்து விட்டு...


    ஆனால் ஒன்று மிக மிக தரமான ,அட்டகாசமான படைப்பு இந்த ஸ்பெஷல் இதழ்..காமிக்ஸ் ரசிகர்கள் புதையலாய் காக்க வைக்கும் மற்றொரு இதழ் இது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை...


    புற நிகழ்வுகளை மட்டுமல்ல புறக்கவலைகளையும் மறக்க வைக்கும் இப்படிப்பட்ட இதழை அளித்த ஆசிரியருக்கும் , அவரின் அனைத்து குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  88. ராஜசேகரன் ஜி@ பார்சல் கிடைக்க பெற்றீர்களா???

    தல தரிசனம் ஆச்சா?

    ReplyDelete
  89. அசுர வேக அலுவலகம்.
    நேற்று காலைலயன் அலுவலகத்தில் இருந்து Superemo Spl புக்கை திருப்பு அனுப்பச் சொல்லி message வந்தது. உடனே அனுப்பிவிட்டேன். இன்று மதியம் வேறு புத்தகம் வந்துவிட்டது. மிக்க நன்றி சார். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete
  91. ஒரு குறிப்பிடத்தக்க, பாராட்டுக்குரிய அம்சம், எந்த புத்தகத்திலும் நானறிந்தவரையில் எழுத்துப்பிழை அறவே இல்லை.புரூஃப் ரீடருக்கு எனது பாராட்டுதல்கள். நீண்ட கதையோட்டத்தின் சுவாரஸ்யத்தில் எழுத்துப்பிழைகள் நெருடலாக இருக்கும். இந்த அனைத்து இதழ்களிலும் அது கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது. நன்றிகள் சார்

    ReplyDelete
  92. .. வந்தார். வென்றார்..
    இப்போது தான் முடித்தேன்.
    அப்பப்பா..
    என்னவொரு அற்புதமான கதை.
    உயிரோட்டமான சித்திரங்கள்
    போர்க்களத்திலிருந்து டெக்ஸூடன் நாமும் போர் செய்து திரும்பிய உணர்வு.
    வழக்கமாக டெக்ஸை ரேஞ்சராக பார்த்தே பழகி இருக்கிறோம். எதிரிகளுக்கு தோட்டா மழை, கும், ணங், சத் என குத்துக்கள் பரிசளித்தே பழகி இருக்கிறோம்.
    இந்தக் கதையில் ஒரு நேர்மையான, நியாயத்தின் பக்கம் போராடும் ஒரு தீரமிக்க போராளியை சந்திக்கிறோம்.
    அர்ஜென்டினாவின் காடுகள், மலைகள், நதிகள் என நம்மை கூட்டிச்செல்கிறார்.
    செங்கிஸ்கான் படத்தை பார்த்த உணர்வு.
    போர்க்களக் காட்சிகள் அற்புதம்.
    இன்னும் பிரமிப்பு நீங்கவில்லை.
    டெக்ஸ் 75க்கு சிறப்பான தேர்வு.
    இந்த ஒரே கதை டெக்ஸின் மகுடத்தில் ஒரு வைரக்கல்.
    வாழ்த்துக்கள் சார்.
    இன்னும் நிறைய கதை பற்றி சொல்லவேண்டும்.
    ஆனால் பிரமிப்பில் எனக்கு வார்த்தைகள் தோன்றவில்லை.
    hats off editor Sir.

    ReplyDelete