நண்பர்களே,
டிரெயின் கொஞ்சம் லேட் ; தூக்கம் தெளிந்து நான் எழுந்திருக்க இன்னும் கொஞ்சம் லேட் ! என்ன எழுதவென்று மலங்க மலங்க முழித்த நொடியில் தோன்றியது இது !! And உஷார் - தம்மாத்துண்டு கூட இதழ்கள் சார்ந்த தகவல்கள் இல்லாத மொக்கை இது !
வணக்கம். அதே வாடகை சைக்கிள்....அதே இலக்கு....ஆனால் பயணமோ இரண்டு வாரங்களுக்கு முன்னே ! மேட்டர் இன்னான்றீங்களா ? அது ஒன்றுமில்லை guys - கொரோனா எனும் கொடுமை கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்படுவதான தோற்றம் உலகெங்கும் வேரூன்றி வர, வாழ்க்கை சிறுகச் சிறுக நார்மலுக்குத் திரும்பி வருகின்றதல்லவா ? அதன் ஒரு நீட்சியாக, பதிப்பகத் துறையின் ஜீவநாடியான புத்தக விழாக்களும் அசலூர் + உள்ளூர் என சகல இலக்குகளிலும் back as normal ! சில பல மாதங்களுக்கு முன்பிருந்தே இது சார்ந்த தகவல்கள் நமது படைப்பாளிகளிடமிருந்து வந்து கொண்டே இருக்க, லைட்டாக ஒரு ஆர்வம் எழுந்தது - வாடகைச் சைக்கிளை மறுக்கா எடுத்துக் கொண்டு Frankfurt புத்தக விழா பக்கமாய் ஓட்டிப் போனால் என்னவென்று ? கடாசியாய் 2017-ல் ஜூனியர் எடிட்டருடன் அக்கட போனது தான் ; தொடர்ந்த நாட்களில் ஜூனியரின் திருமணம் ; எனது ஆரோக்கிய(மின்மை) ; கொரோனா லாக்டௌன், என ஏகப்பட்ட நிகழ்வுகள் கட்டிப் போட்டு வைத்திருக்க, ZOOM கால்களிலும், கூகுள் MEET-களிலும் படைப்பாளிகளுக்கு நமஸ்காரம் போட்டே பொழுதுகளை ஒட்டியிருந்தோம் ! உலகெங்குமே 2 வருடங்களாய் physical fairs-க்கு தடை போடப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு Frankfurt விழா மெய்யாலுமே உண்டு என்ற தகவல் பலருக்கும் உற்சாக மீட்டரை எகிற வைத்திருந்தது !
அந்த "பலருக்கும்" பட்டியலில் ஞானும் இருக்க, தேதிகளைப் பார்த்தேன் - அக்டோபர் 19 to 23 என்று சொல்லியது ; ஜூனியரும் , நம்மளும், இந்தவாட்டியும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுப்புடலாம் என்று தீர்மானித்தேன் ! என்னிடம் ஒரு வருஷத்து ஐரோப்பிய விசா இருந்ததால் ஜூனியருக்கு மாத்திரம் விசா எடுத்தாக வேண்டிய சூழ்நிலை ! ரைட்டு...சென்னையில் விசா விண்ணப்பத்தைப் போடச் சொல்லலாமென்று நினைத்தபடிக்கே நமது டிராவல் ஏஜெண்டுக்கு போன் அடித்து விபரத்தைச் சொன்னேன் ! மறு முனையில் கனத்த மௌனம் ! அப்புறம் மனுஷன் விளக்க ஆரம்பித்த போது தான் புரிந்தது - கொரோனா கோலோச்சிய 2 ஆண்டுகளின் காலகட்டத்தினில் இங்குள்ள தூதரகங்களிலிருந்து ரொம்பவே அத்தியாவசியமானோரை மாத்திரம் தக்க வைத்துக் கொண்டு பாக்கிப் பேரையெல்லாம் தத்தம் நாடுகளுக்கே வாபஸ் அனுப்பி விட்டிருக்கின்றனர் என்பது ! அவர்களுள் பெரும்பகுதியினர் இன்னமும் இந்தியா திரும்பியிருக்கவில்லை ! And 2 ஆண்டுகளின் லாக்டௌன் சார்ந்த கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ள நிலையில் நம்மவர்கள் 'ஆப்ரிக்கா போணும்...அமெரிக்கா போணும்...ஐரோப்பா போணும்...' என ஒரே பொங்காய்ப் பொங்க, ஒவ்வொரு தூதரகத்தில் விசா விண்ணப்பங்கள் மலையெனக் குவிந்து விட்டுள்ளன ! அமெரிக்காவுக்குப் புதுசாய்ப் போக வேணுமா ? ரெம்ப சாரிங்க....2024 மார்ச்சில் தான் தூதரகம் உங்களுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவே தேதி ஒதுக்கிடும் ! இங்கிலாந்து போணுமா - விண்ணப்பத்தைப் போட்டுப்புட்டு நீங்கபாட்டுக்கு ஒரு நாலைஞ்சு மாசங்கள் சாவகாசமாய் காத்திருக்கலாம் ! So ஜெர்மனி தூதரகமும் இதே போல போர்டை மாட்டி விட்டார்கள் - அடுத்த appointment 4 மாதங்களுக்கு அப்பாலிக்காவே சாத்தியமென்று ! ஆக ஜூனியருக்கு விசாவைப் போட்டு Frankfurt போக அவகாசமில்லை என்றான பின்னே, வாடகைச் சைக்கிளில் சிங்கிள்ஸ் அழுத்தத் தீர்மானித்தேன் !
சரி, விசா கீது ; இனி டிக்கெட் மாத்திரம் தேவை என்று மறுக்கா டிராவல் ஏஜெண்டுக்கு போன் போட்டால், மனுஷன் சொத்துப் பத்திரங்களைத் தூக்கி அனுப்பப் சொல்லாத குறையாக ஒரு தொகையைச் சொன்னார் ! 1985-ல் மொதவாட்டி Frankfurt கிளம்பிய போது, 22 நாள் பயணத்துக்கு ஆன டிக்கெட் தொகையே ரூ.8,300 தான் ! இன்றைக்கு அதை ஒரு பத்துப்பன்னிரெண்டு மடங்கு பெருக்கி ஒரு தொகையைச் சொல்ல, கலாமிட்டி ஜேன் பாணியில் வாயிலிருந்து என்னென்னவோ கொப்பளித்தது ! "இது தானுங்கண்ணா நடப்பு...முடிஞ்சா போய்க்கோங்க ! இல்லாங்காட்டி ஒரு தோணியில இப்போவே கெளம்புனாக்கா அம்பது, அறுபது நாட்களிலே ஐரோப்பா பக்கமாய் போயிடலாம் !" என்ற ரீதியில் டிராவல் ஏஜெண்ட் விளக்க - "ச்சீ.சசீ..ZOOM லே தான் சூப்பரா வண்டி ஓடுதுலே.... இதையே தொடர்ந்துட்டா ஒரு ஒன்னரை லட்சம் மிச்சம் !" என்றபடிக்கே கவிழ்ந்தடித்துப் படுத்து விட்டேன் ! ஆனால் ஜூனியர் எடிட்டர் லேசானதொரு தார்குச்சியைக் கொண்டு குத்த, வேண்டாவெறுப்பாய் டிக்கெட்டைப் போட்டேன் ! அடுத்ததாய் தங்க ரூம் ! Frankfurt நகரில் பொரிகடலை வியாபாரிகளிலிருந்து, ராக்கெட் செய்வோர் சங்கம் வரை அடிக்கடி தொழில் விழாக்கள் நடத்திக் கொண்டே இருப்பது வாடிக்கை என்பதால், முக்கியமான trade fairs நேரங்களிலெல்லாம் நகரில் ரூம்களின் ரேட்களை ஜிவ்வென்று ஏத்தி விடுவார்கள் ! பயந்தபடிக்கே நெட்டில் தேடினால் நாளொன்றுக்கு எட்டாயிரம், பத்தாயிரம் என்று தாளித்துக் கொண்டிருந்தனர் ! மூவாயிரம், நாலாயிரத்துக்கு வேணுமானால் ஒரு ஹாஸ்டலில், 16 பேர் தங்கும் டார்மிட்டரியில் ஒரு பெட் கிடைக்கும் என்று போட்டிருந்தது ! மறுக்கா கலாமிட்டி ஜேன் அவதார் ; மறுக்கா வாயை கொப்பளிக்கும் அவசியம் ! "டார்மிட்டரியில் தங்கும் வயசையெல்லாம் தாண்டிப்புட்டாச்சுடா நானு..." என்றபடிக்கே 20 & 21 என இரு தினங்களுக்கு மட்டும் 'கபகபவென' எரியும் வயிற்றோடு ஒரு ரூமை புக் பண்ணி வைத்தேன் ! இனிமேல் Frankfurt புத்தக விழாவிற்குள் நுழைய Entry டிக்கெட் மட்டும் தேவை என்றபடிக்கே பார்த்தால் - அங்கேயுமொரு வெடிகுண்டு காத்திருந்தது - Day டிக்கெட் : யூரோ.79 என்று !!
பேஸ்தடித்துப் போய் அவர்களது தளத்தை உருட்டிய போது லேசாயொரு வெளிச்சக்கீற்று கண்ணில்பட்டது ! பத்திரிகையாளர்களுக்கும், வலைப்பூவில் பதிப்புலகம் சார்ந்து எழுதும் ப்ளாகர்களுக்கும், நுழைவுக் கட்டணங்கள் இராதென்று போட்டிருந்தது ! "ஆஹா...ஆஹா...இந்தக் கல்லைத் தூக்கிக் கடாசிப் பார்ப்போம் ; வந்தா மலை....போனா....மண்டையில் இல்லாத அந்த வஸ்து !!" என்று தீர்மானித்து, நமது வலைப்பூ பற்றிய தகவல்களை அனுப்பி விட்டு தேவுடு காக்கத் துவங்கினேன் ! ஊஹூம்.....கிணற்றில் போட்ட கல்லாய் பதில் ஏதுமில்லை & பத்து நாட்களும் ஓடியிருந்தன ! "மண்டபத்திலே பாட்டெழுதி வாங்கிப்புட்டு வர்றவனையெல்லாம் புலவன்னு ஒத்துக்க மாட்டாங்களோ ?" என்ற சீரிய சந்தேகம் அரித்தெடுத்தது ! "ஒரு நாளுக்கு 79 யூரோன்னா - 2 நாட்களுக்கு நம்ம பணத்திலே கிட்டத்தட்ட ரூ.13000 ஓடிடுமே !! சொக்கா....சொக்கா...!!" என்று முட்டிக்கினு திரிஞ்ச ஒரு காலையில் Frankfurt புத்தக விழா அமைப்பாளர்களிடமிருந்து ஈ-மெயில் : "உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டது - இதோ 2 நாட்களுக்குமான 2 தனித்தனி நுழைவு டிக்கெட்கள் " என்று !! 11 வருடங்களாய் உங்கள் புண்ணியத்தில் ஓடி வரும் இந்த வலைப்பூவுக்கு முற்றிலும் எதிர்பாரா ரூபத்திலொரு சகாயம் கிட்டிய நொடியில் வாயெல்லாம் பல்லாகிப் போனது ! அவசரம் அவசரமாய் அதையொரு பிரிண்டவுட் எடுத்துக் கொண்டு, பொன் கிடைத்தாலும் கிடைக்கா ஒரு புதனின் காலையில், சட்டி, பெட்டிகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டேன் !
ஒன்னரை பேண்ட்டும், ஒண்ணேமுக்கால் அழுக்கு சாக்ஸையும் தாண்டி, பெட்டியினை ஆகிருதியாய் ஆக்கிரமித்துக் கிடந்தவைகளோ கடந்த 2 ஆண்டுகளின் நமது புக் samples ! ரொம்ப மாதங்களுக்கு ஏர்-மெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஆண்டுகளின் மத்தியில் வெளியான நமது இதழ்களின் மாதிரிகளை படைப்பாளிகளுக்கு அனுப்பிட வழியிருந்திருக்கவில்லை ! So லொங்கு லொங்கென்று அவற்றையுமே சுமந்து கொண்டு மதுரையிலிருந்து ஏர்-இந்தியா ப்ளைட்டைப் பிடித்து சென்னை போய்ச் சேர்ந்தேன் ! அங்கிருந்து இரவு தான் அடுத்த flight அபு தாபி மார்க்கமாய் எனும் போது நிறையவே நேரமிருந்தது, விமான நிலையத்தில் மொக்கை போட ! எனக்குப் பின்னே இருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டாலில் வண்டி, வண்டியாய் பதார்த்தங்களை ஒரு வேனிலிருந்து இறக்கி கண்ணாடிக்குள் அடுக்கிக் கொண்டிருக்க, கடைவாயில் அபிஷேகத்துடன், மண்டைக்குள்ஒரு பட்டிமன்றம் ஓட ஆரம்பித்திருந்தது : "என்னிக்காச்சும் ஒருவாட்டி, மைசூர்பாகையும், மில்க் பேடாவையும், 'போடா'ன்னு சொல்லாம ஒரு ஷூகர் பேஷண்ட் பேஷா விழுங்கி வைச்சா அந்த சர்க்கரை இரத்தத்திலிருந்து காணாமல் போக எத்தினி நாழியாகும் ?" என்று ! "கழுத்தை அந்தப்பக்கம் திருப்பாதேடா கழுதை !" என்று மண்டை படித்துப் படித்துச் சொன்னாலும், மனசு சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது ! மிகச் சரியாக அந்த நேரம் பார்த்தா ஒரு புண்ணியவான் தட்டில் இருந்த அத்தனை ரகங்களிலும் தலா அரை கிலோவை பேக் பண்ணச் சொல்லணும் ? சில ஆயிரங்களில் விழுந்த பில்லை பளபளப்பானதொரு க்ரெடிட் கார்டில் தேய்த்து சமன் செய்துவிட்டு அவர் ஹாயாக நடையைப் போட, எனக்கோ லஜ்ஜை பிடுங்கித் தின்றது ! ஐஞ்சாறு கிலோ சுவீட்டை சுடச்சுடப் போணி பண்ணியிருந்த பாப்பாவிடம் போய் "ஒன்னரை மைசூர்பாகும், அம்பது கிராம் பேடாவும்"னு ஆர்டர் பண்ணினா நம்ம கவுரதை என்னாறது ? கடைவாயைத் துடைத்துக் கொண்டேன் !
அந்த நொடியில் தொண்டை என்னவோ செய்தது போலிருந்தது ! 'இல்லியே..ஒரு மைசூர்பாகு இல்லேன்னு ஆனதுக்குலாம் தொண்டை கமரும் வயசெல்லாம் எனக்கு இல்லியே !!' என்றபடிக்கே 5 நிமிடங்களைக் கடத்தினால், தொண்டையில் மெய்யாலுமே கிச் கிச் குடிவந்திருப்பது புரிந்தது ! எச்சில் விழுங்கும் போதே சளி பிடிப்பதன் ஆரம்ப கட்டம் போலான உணர்வு எழுந்தது & இது போலான விஷயங்களில் எனது அனுமானங்கள் ஒருபோதும் தப்பாக இருந்ததில்லை ! For sure தொண்டை நோவு & சளி on the way என்பது புரிந்த நொடியிலேயே உள்ளுக்குள் புளியைக் கரைக்க ஆரம்பித்தது ! "ஐயையோ...மதுரை ஏர்போர்ட்டிலிருந்தே N 95 மாஸ்க் போட்டுட்டே தானே இருந்தேன் ? ; கழட்டவே இல்லியே !! ; மூணாவது டோஸ் ஊசியும் போட்டு 6 மாசம் ஆச்சே !! ; இருந்தும் எவனோ புண்ணியவான் எதையோ விநியோகம் பண்ணிப்புட்டானா ?" என்ற டர் நொடிக்கு நொடி எகிற ஆரம்பித்தது ! லேசா ஜுரம் அடிப்பது போலவும் தோண ஆரம்பிக்க.....ஜெர்மனி போய் இறங்கும் போது "கூடவே கொரோனாவையும் கூட்டிக்கினு வந்திருக்கேடா டொமரு ; 14 நாள் இருடா தனிமையிலே !!" என்று தடி தடியான வெள்ளை ஆசாமிகள் என்னிடம் சொல்வது போலெல்லாம் மனசில் ஓட ஆரம்பித்தது ! பையைத் திறந்தேன் ; கைவசமிருந்த மிளகையும், கிராம்பையும் அள்ளி வாயில் போட்டு மொசுக் மொசுக்கென்று மெல்ல ஆரம்பித்தேன் ! கொரோனா காலத்துப் பாடம் ; வீட்டை விட்டு வெளியே கிளம்புறச்சே ஜட்டி போட மறந்தாலும், ஒரு சின்ன சட்டியில் மிளகையும், கிராம்பையும் போட்டுக்கொண்டு போக மறப்பதே இல்லை ! ஒரு Azithral 500 ; ஒரு Calpol 500 ; ஒரு Cetrizine மாத்திரை என்று வாய்க்குள் போட்டுவிட்டு, சுடச் சுட ஒரு காப்பியையும் தொண்டைக்கு அறிமுகம் செய்து வைத்தேன் ! முன்னெல்லாம் இடியே விழுந்தாலும் துடைத்துக் கொண்டு, ஊரெல்லாம் சுற்றி வந்த எருமை கிடாவுக்கு இப்போ தம்மாத்துண்டு தொண்டைக் கமறலுக்கு இத்தினி பயமா ? ஷேம்...ஷேம்..பப்பி ஷேம்...!! என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டது ! இந்த 2 ஆண்டுகளின் "வீட்டுக்குள் குப்பை கொட்டிய நாட்கள்" மனுஷனின் தைரியங்களில் என்னமாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பது அந்த நொடியினில் புரிந்தது ! "வாடகைச் சைக்கிளை இங்கேயே ஒரு ஓரமா நிறுத்திப்புட்டு ஊரைப் பாத்து திரும்பிடலாமா ?" என்ற எண்ணம் கூட லைட்டாக எட்டிப் பார்த்தது ! ஆனால் டிக்கெட் தொகை முழுசாய் ஸ்வாஹா ஆகிப் போகுமென்பதால் அந்த நினைப்பை ஓரம்கட்டி விட்டு அமர்ந்தேன் ! மிளகின் மகிமையோ ; அசித்ராலின் ஆற்றலோ ; கால்பாலின் காவலோ ; சுடு காப்பியின் சூட்சமமோ தெரியாது - but அடுத்த அரை அவரில் தொண்டை தேவலாம் என்றாகியிருந்தது & சளியின் அந்த அறிகுறிகளும் காணாது போயிருந்தன ! "காத்தீரய்யா புனித மனிடோ" என்றபடிக்கே check-in செய்து அபு தாபிக்கு பயணமானேன் !
Air Arabia என்றதொரு குறைந்த கட்டண ஏர்லைனில் அந்த முதல் leg பயணம் ; அவ்வளவாய் கூட்டமில்லை ! பின் இருக்கைகளில் ஒரு நாலைந்து வரிசைகள் காலியாக இருக்க, அதில் கட்டையைக் கிடத்துவோமா ? வேணாமா ? யாரும் ஏதும் நினைப்பாங்களா ? என்ற யோசனையில் சில பலர் தயங்கிக் கொண்டிருப்பது புரிந்தது ! Maybe ஒரு 10 வருஷங்களுக்கு முன்பான முழியங்கண்ணனுமே அதே ரீதியில் தயங்கியிருக்கக் கூடும் தான் ; ஆனால் இப்போதெல்லாம் "எவன் என்ன நினைச்சா எனெக்கென்ன ?" என்று தெலுங்குப் பட டைட்டில்கள் பாணியில் தான் சிந்தனைகள் ஓடிடுகின்றன என்பதால், முதல் ஆளாய்ப் போய் நீட்டி விட்டேன் ! நிம்மதியாய்த் தூங்கி நடுச்சாமத்தைத் தாண்டியதொரு வேளையில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அபு தாபி ஏர்போர்ட்டில் இறங்கிய போது எனக்கிருந்தது ஒரேயொரு குறிக்கோளே ; and அது அபு தாபி to பிராங்க்பர்ட் பயணத்துக்கென எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாடு சீட்டை aisle (ஓரத்து) சீட்டாய் மாற்றிட வேண்டும் என்பதே !
நினைத்த நேரத்துக்கு எழுந்து நின்று கையைக் காலை நீட்டிடவும் சரி, டாய்லெட் போக வேண்டுமெனில் பக்கத்து சீட்டில் குறட்டை விடும் கடோத்கஜரை உசுப்பி, அவரின் கொலை காண்டை சம்பாதிக்காது போய் வரவும் சரி, aisle சீட் தான் எப்போதுமே எனக்கு தோதுப்படும் ! ஆனால் எதிஹாட் ஏர்வேஸில் தொட்டதுக்கெல்லாம் டப்பு ; "aisle சீட் வேணுமெனில் கூடுதலாய் ரூ.10,800 கட்டுடா அம்பி" - என அன்போடு அவர்களின் சிஸ்டெம் செப்பியது ! ஆறரை மணி நேரப் பயணத்தை லைட்டாய் சவுகரியமாக்கிக் கொள்ள இத்தினி காசைக் கடாச மனசாவது வருமா ? "So அபு தாபி போறோம்....அங்கேயுள்ள Transfer Desk போறோம்....அக்கடயிருக்கக்கூடிய அண்ணாச்சியிடமோ, அத்தாச்சியிடமோ ஒரு ஸலாம் போட்டு... ஓசியில் ஓரத்து சீட்டுக்கு மாற்றம் காண்கிறோம் !" என்பதே Operation அபு தாபி ! போனேன்...லைனில் நின்னேன்...நம்ம ஊர் புள்ளையாண்டானாட்டம் காட்சி தந்த ஒரு நபரே எனது கவுண்டரில் இருக்க, நம்பிக்கை துளிர் விட்டது - 'ஆங்...ஆயிடும் ! வேலை ஆயிடும் !' என்று ! எனது முறையும் வந்தது ; குரலில் இயன்றமட்டுக்கு SPB-ஐ வரவழைக்க முயற்சித்தபடிக்கே, தேன் ஒழுகக் கோரிக்கையினை முன்வைத்தேன் ! கவுண்ட்டரில் இருந்தவருக்கு SPB-யாய் ஒலித்தேனா ? கவுண்டராய் ஒலித்தேனா ? தெரியாது - "சாரி சார்...பிளைட் full ! கேப்டன் மடியில் கூட இடமிருக்காது " என்ற ரீதியில் உதட்டைப் பிதுக்கி விட்டார் !
எனக்கு மூச்சா முட்டுவது போல் அந்த நொடியில் தோன்ற ஆரம்பித்தது - அதிகாலையில் பிராங்க்பர்ட் போய் இறங்கும் வரைக்கும் விடாப்பிடியாய் தொற்றிக் கொண்டே வந்தது ! 'அடுத்த 7 மணி நேரத்துக்கு தண்ணியைக் கண்ணிலே கூடப் பார்த்திடாதே ; அங்கே போய் இறங்கின பிற்பாடு தான் நாக்கிலே சொட்டுத் தண்ணி !' என்று மண்டை கட்டுப்பாடு விதிக்க, 'ஆகட்டும்ங்கண்ணா' என்று மண்டையை ஆட்டி வைத்தேன் ! பளபளப்பான புத்தம் புது விமானத்துக்குள் ஏறிய போதோ எனக்கு கடுப்புக் கடுப்பாய் தான் வந்தது ! "இத்தினி காசு தான் ராஜ்ஜியத்தில் கொட்டி கிடக்கில்லே......அப்புறமும் ஓரத்து சீட்டுக்கும் இம்புட்டை ஆட்டையைப் போடாட்டி என்ன ?" என்று மண்டைக்குள் கறுவியபடியே, ஓரத்து சீட்காரர்களைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டே போனேன் ! And நான் யூகித்தபடியே நடுசீட்டில் நான் இடுங்கிக் கிடக்க, எனது வலதுபுறம் இருந்தவர் ஒரு ஜெர்மன் பீம்பாய் ! மனுஷன் அமர்ந்து சீட்பெல்ட்டை மாட்டினால் அவரை மறுக்கா எழுப்பி விட நிரம்பவே பிரயாசை தேவைப்படும் என்பது புரிந்தது ! ரைட்டு...அடுத்த ஆறரை மணி நேரங்கள் அண்ணாச்சி அருகினில் தான் என்று ஓடின் தேவன் தீர்மானித்திருப்பின், அதை யார் மாற்றுவது ?! சாப்பிட்ட பின்னே கூட இம்மியூண்டு தண்ணியைத் தாண்டி எதையும் குடிப்பதில்லை என்று நான் வைராக்கியமாக இருக்க, அதைத் தகர்த்தே தீர்வேனேன்று ஜன்னலோரம் இருந்ததொரு பம்பை மண்டை இந்தியத் தம்பி சிக்கிய பானங்களையெல்லாம் வாங்கி உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருந்தான் ! 'ஆப்பிள் ஜுஸா ? ஊத்து ! தக்காளியா ? ரைட்டு...! கோக்கா ? குடிச்சிப்புடறேன் !' என்று தம்பி தாக்கிக் கொண்டிருக்க, எனக்கோ சொல்ல இயலா கடுப்பு ! ஆனால் தம்பி உள்ளே அனுப்பிய பானங்கள் சகலமும், அடுத்த 2 மணி நேரங்களில் அவனை பாம்பு டான்ஸ் ஆடச் செய்ய ஆரம்பிப்பதை உணர்ந்த நொடியில் எனக்குள் பீறிட்டது உற்சாகம் ! பீம்பாய் கெட்ட தூக்கத்தைப் போட்டுக் கொண்டிருந்தாலும், அவரது தொப்பை மீது கால்பதித்தாவது பம்பைத்தம்பி டாய்லெட் போயே தீர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்த போது - "புதிய வானம்...புதிய பூமி..!" என்று தலைவரின் உற்சாகத்தோடு பாடணும் போலிருந்தது எனக்கு ! ஜன்னல் தம்பியின் பெயரைச் சொல்லி பீம்பாயை எழுப்பி விடும் ஒவ்வொரு வேளையிலும், எனக்கும் விடுதலையாச்சே !! அடுத்த ஆறரை மணி நேரங்களும் சிட்டாயப் பறந்து விட, பிராங்க்பர்ட்டில் நானும், பம்பைத் தம்பியும் எதுவுமே நடவாதது போல் இறங்க ரெடியான போது பீம்பாயோ தூக்கம் தொலைத்த கண்கள் சிகப்பாகிக் காட்சி தந்தார் ! உம்ம விதி இப்படி !! என்று மனசுக்குள் நினைத்தபடிக்கே விமானத்திலிருந்து வெளிப்பட்ட போது மணி காலை 7 !
வழக்கமாய் அந்நேரத்தில் பாஸ்போர்ட் & விசா பரிசோதனை சாவடிகளில் செமத்தியான கூட்டமிருப்பதுண்டு ! ஆனால் இம்முறையோ காற்றாடியாது...! திபு..திபு வென்று புகுந்து, பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பாவை வாங்கி கொண்டு நகன்றேன் ! எனது பெட்டிகளும் அதற்குள்ளாக வந்திருக்க, அவற்றை எடுத்துக் கொண்டு அடுத்த தேடலை ஆரம்பித்தேன் ! பிராங்க்பர்ட்டில் ஒரு உலக மகா இம்சை உண்டெனில் - அது அங்குள்ள ஹோட்டல்களின் check-in நேரமானது ! மதியம் 3 முதற்கொண்டு தான் ரூம்களின் சாவிகளைத் தருவார்கள் நம்மிடம் ! இது போல காலங்கார்த்தாலே வந்து இறங்குவோரெல்லாம் முந்தைய தினத்துக்கே ரூமைப் போட்டு வைத்திருந்தால் தான் உண்டு ! தங்கப் போகும் ராவுக்கு வாடகை தரவே அரை பாட்டில் ஜெலுசில் குடிக்கும் நம்மளை, தங்காத (முந்தைய) இரவுக்கு பணம் கட்டச் சொல்வதெல்லாம் ஆகுற காரியமா ? ரோட்டோரமாய் ஏதாச்சும் குழாய், கேணி...கீணி இருந்தால் அதிலேயே குளிச்சுப்புட்டு கிளம்பிடுவோமே - நம்மளையெல்லாம் இன்னொரு நூறு யூரோ தண்டம் அழ சொன்னா காதிலேயாச்சும் போட்டுக்குவோமா - என்ன ? இங்கிருந்து கிளம்பும் முன்பாகவே ஆராய்ச்சி செய்து வைத்திருந்தேன் - ஏர்போர்ட்டில் குளிக்கும் வசதிகள் ஏதேனும் உண்டா என்று ! "உண்டே...உண்டே...வெறும் 6 யூரோ கட்டணத்துக்கு ஷவர் பண்ண வசதி உண்டே !" என்று போட்டிருந்தது ! அது போதாதா நமக்கு ? தட்டுத் தடுமாறி, அதனைத் தேடிப் பிடித்து, குளித்து முடித்து, 'ஜில்'லென்று நகருக்குள் போகும் ரயிலில் ஏறிய பொழுது - மணி எட்டேகால் தான் !
எனது முதல் appointment புத்தக விழாவினில் காலை 10 மணிக்கே என்ற போது கணிசமாய் நேரமிருப்பது புரிந்தது ! ஊரின் மத்தியிலிருந்த ரயில் நிலையத்தினில் போய் இறங்கி, பொடி நடையாய் எதிரே இருந்த தெருவுக்குள் எனது லாட்ஜைத் தேடி நடந்த சமயம், ஏதேதோ flashbacks மனசுக்குள் ! ஆனால் அதையெல்லாம் விடவும் ரொம்பவே தாக்கியது - ஊரினில் தென்பட்டவொரு பொதுவான பரபரப்பின்மை தான் ! எந்நேரமும் மின்னலாய் இயங்கி வரும் அந்த ரயில்நிலையம் பாலா படத்தில் போல நிதானமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தது ! வெளியே கட்டுமானங்கள்..இடிபாடுகள்..என்று ஏதேதோ !! எனது ரூமிற்குப் போய் பெட்டியை மட்டும் ஒப்படைத்து விட்டு, டிராமைப் பிடித்து Bookfair கிரவுண்டுக்குச் சென்றேன் ! டிராமிலிருந்து வெளிப்பட்ட போது அந்த ஸ்டாப் ஸ்பைடரைக் கண்ட க்ளாஸிக் காதலன் போல ரொம்பவே வாஞ்சையோடு என்னை எதிர்கொள்வது போலிருந்தது !
அதே இடம்....சாலையின் எதிர்பக்கமிருந்த அதே முகப்பு...அதே கம்பீரம்....!! 37 ஆண்டுகளுக்கு முன்பாக இதே இடத்தில் கலங்கிய அடிவயிற்றோடு, காற்றில் பரந்த கேசத்தோடு, ஆயிரம் ரூபாய் கோட்டையும்,ஐநூறு ரூபாய் brief கேஸையும் இறுகப் பற்றிக் கொண்டு, எனெக்கென காத்திருப்பது என்னவென்று துளியும் அறியாது நின்றது தான் மனதில் நிழலாடியது ! கலவையான ஏதேதோ சிந்தைகள் பெருக்கெடுத்த அந்த நொடியினில் எனது வாழ்க்கையே fast forward-ல் ஓடுவதான பிரமைக்கு மத்தியினில் பச்சை சிக்னல் விழுந்திருப்பதைக் கவனித்தபடிக்கே சாலையைக் கடந்தேன் ! என்னைப் போல் எத்தனையோ பேருக்கு வாழ்க்கைகளின் துவக்கப் புள்ளிகளாக்கித் தந்த பெருமை இந்தப் புத்தக விழாவுக்கு இருக்குமென்பது சர்வ நிச்சயமே ! ஆனால் அதை துளியும் காட்டிக் கொள்ளாது, அமைதியாய் தனது கதவுகளைத் திறந்து வைத்து வேக வேகமாய் நடைபோடும் பதிப்பகத் துறையினரை வரவேற்றுக் கொண்டிருந்தது !! மனசுக்குள் குலசாமியை நினைத்தபடிக்கே உள்ளே நுழைந்தேன் - கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஓசி டிக்கெட் காற்றில் சலசலத்தபடிக்கே !!
தொடரும் guys !!
P.S : அடுத்த பதிவில் no நீட்டி முழக்கல்ஸ் ! பதிப்பகங்களுடனான மீட்டிங்குகளில் புதுசாய் காத்துள்ள சுவாரஸ்ய தொடர்கள் பற்றித் தெரிந்து கொண்ட தகவல்ஸ் மட்டுமே !
சந்தா 2023 ரயிலில் இடம் போட்டாச்சா guys ? இல்லையெனில் இன்றைக்கே ஏற்பாடுகள் செய்திடலாமே - ப்ளீஸ் ?
|
நண்பர் சிவகுமார் (சிவா) திருப்பூரின் ஜூனியர்ஸ் ! |
|
திருப்பூர் நண்பர் ராஜ்குமார் & அவரது இல்லத்து இளம் காமிக்ஸ் தலைமுறை ! |
|
மதுரை நண்பர் செந்தில்குமாரின் இல்லத்து இளம் காமிக்ஸ் தலைமுறை ! |
|
நண்பர் கிரி திருவேங்கடம் |
|
டாக்டர் ராஜேஷ்குமார், காஞ்சிபுரம். |
|
நண்பர் Verner Readinger , கிருஷ்ணகிரி - குடும்பத்துடன் ! |
|
நம்ம J சார் from கும்பகோணம் ! |
|
நண்பர் ஆத்தூர் மாதேஸ்வரன் |
|
நண்பர் கணேஷ் குமார் & Junior, போடிநாயக்கனூர் |
|
நண்பர் செந்தில் சத்யா சென்னை |
|
நண்பர் ஸாகோர்ர்ர்ர்ர் ஸ்ரீபாபு ! |
|
சென்னை நண்பர் J அருண் பிரசாத்தின் சேகரிப்பு ! |
|
சின்னமனூர் நண்பர் P சரவணகுமார் |
|
நண்பர் கெங்கவள்ளி M .பாபு |
|
சேலம் டெக்ஸ் விஜயராகவன் |
|
கரூர் டாக்டர்.ராஜா சார் & இளவல்கள் நிறைகதிர் & நன்முகில் !!
|
|
பல்லடம் சரவண குமார் சாரின் ஜூனியர்ஸ் ! |
|
GUESS WHO ??? |
|
Arupukottai Dr.Saravanan's Junior |
|
பேபி பெபினா, த/பெ. ஷலும் பெர்னாண்டஸ் |
1st
ReplyDelete1 an in
ReplyDeleteI am...
DeleteMe first
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஆஜர்
ReplyDelete6th?
ReplyDelete🙏🙏
ReplyDeleteபுது பதிவுக்காக நேற்றிலிருந்து Waiting
ReplyDeleteபுதிய பதிவு..
ReplyDeleteமதிய வணக்கம் நண்பர்களே
ReplyDeleteNo 2
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteபதிவுக்காக தான் காத்திருந்தோம். மகிழ்ச்சி ❤️
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன்.
ReplyDeleteI am next.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete3rd
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteAfter a long time great pleasure in travelling with you to frankfurt sir.
ReplyDeleteHi..
ReplyDelete@Edi Sir..😍
ReplyDeleteஅருமையான பதிவு..👍
நோ நீட்டி முழக்கல்ஸ்.👏.
உங்களுடனே பிராங்க்பர்ட் வரை ஜன்னோலர சீட்டில் உடன் பயணித்தது போன்ற உணர்வு..😍😃
Super பதிவு.. பயண கட்டுரைகள் எப்போதுமே fun ஆன ஒரு read தான்.. அதிலும் உங்கள் மொழி நடை இன்னும் சிறப்பு. சென்னை ஏர்போர்ட்டில் தொண்டை கமறல் என்றவுடன் பக் பக் என்று ஆகிவிட்டது.. ஒரு ஏமாற்ற பயண திட்டத்தின் பதிவோ என்று... ஒரு cliff hanger முடிவு.. அடுத்த பதிவு வரும் சனி்கிழமை தான் என்று சொல்லி விடாதீர்கள் sir.. 🙏
ReplyDeleteநான் சொல்லலீங்கோ ; நீங்க தான் சொல்லியிருக்கீங்கோ !
Delete😁
DeleteIndha maadha books:
DeleteSisco - தூள். 10/10. Breathtaking pace and action. கீழே வைக்கவே முடியவில்லை. முத்து 50's pick of the three இவரே. இனி 7 சாகசங்களே இருக்கும் நிலையில் 2024இல் ஒரு double slot இவருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
மேக் and Jack - Okish.. பாவை மிரண்டால்.. அளவுக்கு கதை இல்லை, இருந்தாலும் they deserve a place, at least in the cartoon special. My vote for SSS is still for this duo. 6/10
Eager for the return of Deadwood டிக்.
ஆஹா.. ரொம்ப நாளைக்கப்புறம் மனம் விட்டு சிரிக்க செய்த பயண பதிவு.. 😍😍😍😍
ReplyDelete:-)
Deleteசுவாரஸ்யமான பயணக் கட்டுரை சார்...
ReplyDelete"பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன்" மாதிரி "பிராங்க்பர்ட்டில் எங்கள் தமிழ்காமிக்ஸ் கதை மன்னன்"..😍😘
ReplyDeleteஅருமையான/ அசத்தலான கதைகளுக்கு அச்சாரம் கொடுத்துட்டு வந்திருப்பீங்க..👍
அப்ப அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எங்களுக்கு கொண்டாட்டம்தான்.. ❤💛💙💚💜
அவரெல்லாம் பயணக்கட்டுரைகள் எழுதப் பிறந்தவர் சார் ; நாமெல்லாம் பஞ்சத்துக்குக் கட்டுரை எழுதுவோர் சார் ! "இதயம் பேசுகிறது" மணியன் சாரையும் பயணக்கட்டுரை ஜாம்பவான்ஸ் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் !
Deleteசார்.
Deleteபார்த்து... புதுப்புது ஜேப்படி ஆயாக்கள், கொரில்லாக்கள் இப்படி எவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பத்திரமாக திரும்பி வாருங்கள். செல்லும் காரியம் வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துகள்.
2 வாரங்களுக்கு முந்தைய பயணம் சார் ; தீபாவளிக்கு முந்தைய காலையே ஊருக்குத் திரும்பி விட்டேன் !
Deleteஅட்டவணை etc., என்ற பிசிக்குப் பின்பாய் இப்போது தான் நேரம் வாய்த்தது எழுத !
இருந்தாலும் பத்திரமா வாங்க சார்
Deleteவாவ்!! நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு பயணப்பதிவு! அந்த பம்பைத் தம்பி & ஜெர்மன் பீம்பாய் ரவுசுகள் செம சிரிப்பு!! குறிப்பாய் தூக்கம் கெட்ட கண்களுடன் இறங்குச் சென்ற பீம்பாயின் நிலைமை ஹா ஹா!! வடிவேலுவை வைத்து இதை ஒரு காமெடி சீனாகவே எடுக்கலாம்!! :)))
ReplyDeleteஅடுத்த பதிவையும் ஆறஅமர நிதானமாகவே எழுதுங்களேன் எடிட்டர் சார்?!!
உளவுத்துறை DIG ஆக ஒரு மொழுமொழு மண்டைக்கார முரட்டு ஆசாமி வருவாரே சார் - வடிவேலை மொத்தியெடுக்க - கிட்டத்தட்ட அவரைப் போலிருந்தார் அந்த ஜேர்மன் பீம்பாய் !
Deleteஅன்புள்ள விஜயன் sir.. ஒவ்வொரு முறையும் தங்களின் பயணக் கட்டுரைகள் வாசிக்கும் போது மிகவும் குஷியாகி விடும். நீங்கள் விவரிக்கும் போது நேரில் காண்பது போல நல்ல உணர்வு இருக்கும். ஆகையால் தங்களின் பயணக் கட்டுரைக்கு நான் தீவிர விசிறி. போலவே பயணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஆனால்.. யாரோ எங்கோ நம் கட்டுரையை வெறுப்பார், பகடி செய்வர் என்ற அவசியமற்ற முன் முடிவில் எழுத தயங்குவது அவசியம் மற்றது. Youtube ல் சென்று பாருங்கள் இது போன்ற பயண வீடியோஸ் தான் அதிகம், அதற்கு வரவேற்பும் அதிகம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் sir ரசித்து வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.
பகடியாவது...ஒண்ணாவது ! அதற்கெல்லாம் தயங்கும் வயசா சார் - எனக்கு ? வலைப்பூவினில் எனது இலக்கு செம சிம்பிள் : காமிக்ஸ் & காமிக்ஸ் & காமிக்ஸ் ! அவை சார்ந்த இன்ன பிற சங்கதிகள் என்றென்றும் பின்சீட்டிலேயே !
Deleteதவிர, இது போலான பதிவுகளில் / கட்டுரைகளில் - "நான் பாய்ஞ்சேன்...நான் குதிச்சேன் !"என்ற ரீதியில் என்னை முன்னிலைப்படுத்தியே எழுத அவசியப்படும் ! அதனில் எனக்கு எப்போதுமே நெருடல் உண்டு சார் ! So காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களை ஜாலியாய் முன்னே நிறுத்திவிட்டு, இது போலான பதிவுகளை அத்தி பூத்தாற்போல என்றைக்கேனும் கண்ணில் காட்டிட விழைகிறேன் !
அப்புறம் நீங்கள் சொல்லும் அந்த Youtube Travel Vlogs முற்றிலும் வேறொரு இலக்கினைக் கொண்டவை ! அவற்றின் நோக்கங்களே பயண அனுபவங்களை பகிர்வது தான் எனும் போது, அவற்றோடு நம்மை ஒப்பிடல் சுகப்படாது !
அட்டவணை அட்டகாசமாக உள்ளது. மேக் @ ஜாக் மட்டும் படித்துள்ளேன்.
ReplyDeleteஏனோ இம்முறை சிரிப்பு பற்றவில்லை எனக்கு ஏமாற்றமே
2 பதிவுகளுக்கு முன்பாய் நானே பதிவிட்டிருந்தேனே - இங்கே பக்கத்துக்குப் பக்கமெல்லாம் சிரிப்பை எதிர்பார்க்காதீர்கள் என்று !! கார்ட்டூன்கள் நம் மத்தியில் பெரிதாய் pickup ஆகாது போவது இந்த ஒற்றை காரணத்தினால் தானே சார் ? பொதுவாய் கதையின் இலகுத்தன்மை ; கதை மாந்தர்களின் பகடி ; சித்திரங்களில் இழையோடும் ஹ்யூமர் - என்பனவெல்லாமே இங்கு நம்மை மகிழ்விக்கும் சிற்சிறு ingredients ! ஆனால் பெரும்பாலும் ஹாஷ்யம் என்றால் கிரேசி மோகன் பாணியில் வெடிச்சிரிப்பை உண்டு பண்ண வேண்டுமென்ற அவாக்கள் இந்தக் குட்டியான சமாச்சாரங்களை override செய்து விடுகின்றன !
Deleteஹா..ஹா..ஹா..
ReplyDeleteஇந்த மாத மேக் & ஜாக் கின் சிரிப்பும்
இந்த மாத சிஸ்கோவின் விறுவிறுப்பும் ( சிஸ்கோ பாதிதான் படித்திருக்கிறேன்) கூட இந்த பதிவளவுக்கு இல்லை! செம!!!
ஹி..ஹி...எப்போவாச்சும் ஒரு unwind பதிவு சார் !
Delete36th
ReplyDelete// மண்டைக்குள்ஒரு பட்டிமன்றம் ஓட ஆரம்பித்திருந்தது : "என்னிக்காச்சும் ஒருவாட்டி, மைசூர்பாகையும், மில்க் பேடாவையும், 'போடா'ன்னு சொல்லாம ஒரு ஷூகர் பேஷண்ட் பேஷா விழுங்கி வைச்சா அந்த சர்க்கரை இரத்தத்திலிருந்து காணாமல் போக எத்தினி நாழியாகும் ?" //
ReplyDeleteஎப்படி சார் இப்படி ஒரு சிந்தனை:-)
எத்தினி சாலமன் பாப்பையா பட்டிமன்றங்கள் பார்த்திருப்போம் சார் ?
DeleteGood luck sir.
ReplyDelete// "ஒன்னரை மைசூர்பாகும், அம்பது கிராம் பேடாவும்"னு ஆர்டர் பண்ணினா நம்ம கவுரதை என்னாறது ? கடைவாயைத் துடைத்துக் கொண்டேன் ! //
ReplyDeleteSame blood. இன்றும் இதனை மட்டும் என்னால் மாற்ற முடியவில்லை சார்.
// Operation அபு தாபி //
ReplyDeleteஏன் சாமி. ஒரு ஓரமாக உட்காரும் சீட்டுக்கு இந்த ப்ளானிங் எல்லாம் தேவையா :-)
Rs.10,800 கட்டியிருந்தால் சூப்பராகக் கொடுத்திருப்பார்கள் !
Deleteநீங்கள் அப்படி ஓரத்து சீட்டுக்கு பணம் கட்டியிருந்தால் ஜன்னல் மற்றும் நடு சீட்டு ஆசாமி உங்களை தூங்க விடாமல் கண் சிவக்க வைத்து இருப்பார்கள் சார்:-)
Deleteபயணப்பதிவு அருமை ஆசிரியரே
ReplyDeleteதங்களுடைய முதல் Frankfurt அனுபவ கட்டுரை லயனில் படித்தது இன்னும் நினைவு உள்ளது
நல்லவேளை பீம்பாயை எந்திரிக்க வைக்க புனித மானிடோ உதவி செய்து விட்டார்
Frankfurt புத்தக விழா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்தில் உள்ளேன்
// "இத்தினி காசு தான் ராஜ்ஜியத்தில் கொட்டி கிடக்கில்லே......அப்புறமும் ஓரத்து சீட்டுக்கும் இம்புட்டை ஆட்டையைப் போடாட்டி என்ன ?" //
ReplyDeleteநம்ப ஊர் பெண்மணிகளின் சிந்தனை. இதனை படிக்கும் போது எனது அம்மாவும் ஆச்சியும் (அம்மாவின் அம்மா) பேசும் மாடுலேசன் நினைவுக்கு வந்து சென்றது.
// "புதிய வானம்...புதிய பூமி..!" என்று தலைவரின் உற்சாகத்தோடு பாடணும் போலிருந்தது எனக்கு ! ஜன்னல் தம்பியின் பெயரைச் சொல்லி பீம்பாயை எழுப்பி விடும் ஒவ்வொரு வேளையிலும், எனக்கும் விடுதலையாச்சே !! //
ReplyDeleteஆகா ஆகா.
உங்கள் எழுத்துக்கள் செம சார்.
காரிகன் :: டாப் 👍👍
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஉங்களுடைய பயணப் புலம்புரைகளைப் வாசிப்பது ஒரு தனி சுவாரசியம் :)
//இல்லியே..ஒரு மைசூர்பாகு இல்லேன்னு ஆனதுக்குலாம் தொண்டை கமரும் வயசெல்லாம் எனக்கு இல்லியே//
அதில் ஒன்றும் தவறில்லையே... எனக்கெல்லாம், துக்கத்தில் தொண்டை அடைத்து அழுகையே வந்து விடும் :)
ஊஹூம், சளி பிடித்தால் இந்த Cetrizine, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கொழகொழ மசமச மைசூர்பா எல்லாம் வேலைக்காகாது! தொண்டை கரகரப்புக்கு, மதுரை ஸ்டைல் சொரசொர மைசூர் பாக்கை உள்ளே தள்ளிப் பாருங்கள், இலவச இணைப்பாக ம_ச்சிக்கலும் சரியாகி விடும். இருமலுக்கு சூடான நெல்லை அல்வாவை, தொண்டையின் நடுப்பகுதியிலிருந்து நழுவாமல் நான்கு நிமிடங்கள் வைத்திருக்கவும். அதையும் மீறி நீங்கள் இருமினால், அல்வா அபிஷேகத்திற்கு கம்பெனி பொறுப்பேற்காது!
அதே நேரம், Frankfurt புத்தக விழா அமைப்பாளர்களின் அலுவலகத்தில், ஒரு கனத்த உருவம், லயன் பிளாகைத் திறந்து, "Translate to German"-ஐக் கிளிக்கியது. அடுத்த சில நிமிடங்களில், அமைதியைக் கிழித்துக் கொண்டு வெளியேறிய அந்த ஜெர்மானியப் புலம்பல், அனைவரின் முதுகுத்தண்டுகளையும் அச்சத்தில் ஜில்லிட வைத்தது. அதை மொழி பெயர்த்துப் பார்த்ததில்:
அய்யகோ, €158-க்கு டிக்கெட் போட்டுக் கொடுத்தால், புத்தக விழா பற்றி எழுதாமல், பயபுள்ளை தான் தின்னாமப் போன ஒன்னரை மைசூர் பாக்கைப் பற்றி, இரண்டரைப் பக்கம் புலம்பித் தள்ளியிருக்கிறது...
தின்னாது போனது மைசூர் பாகு மாத்திரமா ? கேசர் பேடாவுமில்லே ? எவ்ளோ பெரிய இழப்பு சாமி ?
Deleteடியர் எடிட்டர் சார் உங்கள் பயணப்பதிவு என்றுமே சூப்பராகவே இருக்கும் இது அதுக்கு மேல இன்னும் நல்லாவே இருக்கு சூப்பர் சார் தொடருங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2021, 2022 தீபாவளி மலர்கள், இதுவரை வந்த டெக்ஸ் கிளாசிக் கதைகள், பந்தம் தேடிய பயணம் போன்ற கதைகளை கடந்த பத்து நாட்களில் எனது மனைவி படித்து விட்டார். தோர்கல் கதையை விட டெக்ஸ் கதைகள் நன்றாக உள்ளதாம்.
ReplyDeleteஇந்த மாத புத்தக பார்சலில் டெக்ஸ் இல்லை என்றவுடன் மிகவும் கவலை கொண்டார்.
டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் உள்ள கதைகள் அவருக்கு மிகவும் பிடித்து உள்ளது.
அடுத்த வருடம் வரவுள்ள மீண்டும் வந்த மாயன் கதைக்கு டெக்ஸ் அட்டைப்படம் தான் அவரின் சாய்ஸ்.
"கரையெல்லாம் குருதி " கதைக்கு ஃப்ரான்கோ பெல்ஜிய பக்க அமைப்பு என்றால் என்ன கேட்டார் சார்.
இப்பதான் இரும்புக்கை நார்மன் கதைல லண்டன் போட்டோவை போட்ட மாதிரி இருந்தது. அதுக்குள்ளே 37 வருசம் ஓடிப்போச்சா
ReplyDelete'தலைவாங்கிக் குரங்கு' இதழ் என்று நினைக்கிறேன் சார் !
Deleteமீண்டும்...
ReplyDeleteசிங்கத்தின் இப்பொழுதைய வயதில்...
சூப்பர்...
நன்றி சார்..
சார் செம சூப்பர் நகைச்சுவை அட்டகாசம் பதிவு....நீங்க ஃபாரின் போனாலே உற்சாகம் தெறிக்கும் தானே....சீக்கிரமா மீதியை போடுங்க
ReplyDeleteThat exciting travelogue moments and experience again...
ReplyDeleteThanks again...
// 37 ஆண்டுகளுக்கு முன்பாக இதே இடத்தில் கலங்கிய அடிவயிற்றோடு, காற்றில் பரந்த கேசத்தோடு, ஆயிரம் ரூபாய் கோட்டையும்,ஐநூறு ரூபாய் brief கேஸையும் இறுகப் பற்றிக் கொண்டு, எனெக்கென காத்திருப்பது என்னவென்று துளியும் அறியாது நின்றது தான் மனதில் நிழலாடியது ! கலவையான ஏதேதோ சிந்தைகள் பெருக்கெடுத்த அந்த நொடியினில் எனது வாழ்க்கையே fast forward-ல் ஓடுவதான பிரமைக்கு மத்தியினில் பச்சை சிக்னல் விழுந்திருப்பதைக் கவனித்தபடிக்கே சாலையைக் கடந்தேன் ! // ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது சார் இந்த வரிகளை படிக்கும் போது.
ReplyDeleteஒரு காலப் பயணம் சென்று உங்களோடு 1985இல் இறங்கியது போல.
Deleteநீங்கள் பயணப் பதிவு எழுதும் போது எப்போதுமே அருமையாக தான் இருக்கும். இதை எல்லாம் ஒரு புத்தகமாக அச்சடித்து தர சொல்லி ரொம்ப நாளாகவே கேட்டுக் கொண்டு இருக்கிறோம் சார். Please Consider
ReplyDeleteதங்க சுரங்கத்தில் நுழைந்த நீங்கள் அதில் எத்தனை கிலோ வெட்டி எடுத்து வந்தீர்கள் என்பதை சீக்கிரம் சொல்லுங்க
ReplyDelete67வது
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...!
ReplyDeleteஅருமையான பயணப்பதிவு. உங்கள் எழுத்துகளின் லாவகம் எங்களையும் உடனழைத்துச் சென்றது பிராங்பர்ட்டுக்கு... அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!
Deleteமேக் & ஜாக்
ReplyDeleteCelebrityயாக இருப்பதால் வரும் பிரச்சினைகளை இப்படி நகைச்சுவையாக கதையாக படிப்பது இதுவே முதல் முறை. கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட்.. 9.5/10.. பல இடங்களில் கலரிங் அதிகமாக இருந்த மாதிரி ஒரு feeling எனக்கு மட்டும் தானா?
சூப்பர்
Deleteபோன பதிவின் பின்னூட்டங்களை நீங்கள் பார்க்கலை என்பது புரிகிறது ! இது 1982-ல் - டிஜிட்டல் யுகத்துக்கு முன்பாய் உருவாக்கப்பட்ட கதை என்பதால் கலரிங் 40 ஆண்டுகளுக்கு முன்பான புராதன பாணியில் இருப்பதை விளக்கியிருந்தேன் நண்பரே !
Deleteநன்றி சார்
DeleteCorrigon பரம எதிரியான Dr 7 கதை கண்டிப்பாக ஒன்றாவது காரிகன் கிளாசிக் இல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அடுத்த வருடம் வரும் காரிகன் கதைகளில் டாக்டர் செவன் வருமாறு ஒரு கதையாவது போட்டு விடுங்கள்.
ReplyDeleteநாம் பயணித்து வருவது 1967 to 1972 வரையிலான கதைகளுடன் சார் ! அந்தக் காலகட்டத்தில் டாக்டர் 7 அவ்வளவாய் முன்னிலைப்படுத்தப் படவில்லை போலும் !
Deleteகாரிகன் முதல் கதை செம சார்...காரிகனும் பிடிக்கும்
DeleteDear Editor,
DeleteCorrigan and Mandrake stories are not exciting, the artwork of Corrigan was too messy with no clarity .I have finished Mandrake and halfway through Corrigan.Ribkirby was good and Vedalar was okay .I have read Phantom many years back and the stories were better, more contemporary . Didn't find our story collection exciting.Iam eagerly waiting for Wing commander George and Charlie.Can u consider any golden oldie other than Corrigan for 2023?Of course everyones feedback to be taken into consideration.
Regards
Arvind
ஆமா.....காரிகன் மசமசன்னுருக்கு சார்
DeleteSpider special kekkalama?
Deleteகேக்கவே வேண்டாம் நண்பரே...24 ல அதாதான் இருக்கும்
Deleteவேறு Golden Oldies யாரும் பாக்கி இல்லியே ? 200 பக்கங்களுக்கு ஸ்பைடரெல்லாம் போட்டால், ஊருக்குள் நிறைய கவிஞர்கள் உருவாகி நிற்பார்கள் நண்பரே !
Deleteசார் யார் அந்த மினி ஸ்பைடர்
Deleteநீதிக் காவலன் ஸ்பைடர்
பாட்டில் பூதம்
விண்வெளி பிசாசு
சினிஸ்டர் செவன்
ஸ்பைடர் படை
வண்ணத்ல
DeleteOk Editor Sir
Deleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteI liked the humor in Mac and Jack though. Not sure what is missing. Sariyaaththaan vaasichOmaa?!! Loving Corrigan now - might become the best of Classic 70s sir !!
ReplyDeleteOur folks expect a laugh riot like "SUPER CIRCUS" most times sir ; that's half the reason why milder entertainers fail to strike a chord !
Deleteசிரிச்சு மாளலை.
ReplyDeleteமாண்டால் சிரிப்பில்லீங்களே ! :)
Deleteசிரிச்சதால் மாளலை
Deleteவிளம்பரம் சூப்பர்
ReplyDeleteAgree on the lack of print quality for Corrigan though I like the stories. Rip Kirby was excellent in print quality. Phantom was so so. Mandrake was ok.
ReplyDeleteI somehow like the soft white paper better than thick paper with a tinge of yellow.
May be in the 60s round some of these issues might be addressed better.
Regarding overall quality of stories - we must understand that these are 50-60 years old and would not be so engrossing overall. The value is in the nostalgia - most stories can be read once - during a leisure break, for sure.
These are all reproduced from King Features files sir ; with no artwork corrections or extensions at our end. So clarity basically depends on the original artwork styles. Phantom & Rip Kirby artwork are a class apart & maybe that's why they ended up looking better.
DeleteAnd this paper has no bearing on the print quality as such. Maybe being a touch rougher might feel different !
ரீகா ரியலா சில இடங்களில் விழுந்து விழுந்து சிரிச்சாலும் கதை சுமாரே...வண்ணங்கள் சூப்பர்....
ReplyDelete@Edi Sir..😍
ReplyDeleteஎனக்கு இப்பதான் Bun & (காரி)Gun .. இரண்டும் கிடைச்சுது..😍🥰🤓💪🥁🎻
பன்னு சூப்ப்ப்பர்..🍔
அடுத்து கன்..கன்..காரிகன் தான்..❤📖💘
ஆத்தாடி... படிக்கறப்பவே பயமா இருக்குங்க sir... தன்னந்தனியே... நம்மால முடியாது சாமி...
ReplyDeleteMe.. நந்தீஸ்வரன் friends... இப்பதான் உள்ள வர புரிஞ்சது...
ReplyDeleteவாங்க சார் !
DeleteWarm welcome Easwar sir!
Deleteவாசகர்களையும் அழைத்து செல்லலாமே.
ReplyDeleteநன்றி எடிட்டர் sir..
ReplyDeleteகவனிச்சீங்களா....
ReplyDeleteஎங்கே எப்போது எல்லாமே ஹார்டு பௌண்டு இதழ்களே
@ ALL : மேலே பதிவினில் நண்பர்களின் போட்டோக்கள் added !!
ReplyDeleteஅருமை நண்பர்களே....நானும் ஊருக்கு சென்ற குடும்பத்தாருக்காக வெய்ட்டிங்.....
ReplyDeleteசிங்கத்தின் சிறு வயதில் தொடரை படித்த ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteமிக அருமை. கொஞ்சம் கூட சலிப்பே ஏற்படுத்தாமல் எவ்வளவு அருமையாக நகைச்சுவை ததும்ப எழுதி உள்ளீர்கள் சார்.
சிங்கத்தின் சிறுவயதில் முழு தொகுப்பாக தனியே வெளியிட வேண்டுகிறோம்.
நீங்க நம்ம ஆளு சார்.
Deleteசார் உங்கள் பயண கட்டுரையை அடுத்த முறையும் சுருக்காது நீட்டி முழக்கியே வெளியிடுங்கள். வரிக்கு வரி ரசித்து, அனுபவித்து படிக்கிறோம். எங்களுக்கு கிடைக்காத இந்த அனுபவம் உங்கள் மூலம் கிடைக்க பெருகிறோம். ஆகையால் பல கமாக்களுக்கு பிறகு புள்ளி வைத்துக்கொள்ளலாம்.
ReplyDeleteஅட்டவணை பற்றி எனது தாமத பகிர்வு,
1. முதல் பொக்கே, பௌன்ஸரை மீண்டும் கொண்டு வந்ததுக்கு. அட்டவணையில் என்னை பொருத்தவரைக்கும் இது தரமான சம்பவம் சார்.
2. கேப்டன் டைகர் - தளபதியை நேசிக்கும் தல ரசிகர்கள் சார்பில் அடுத்த பொக்கே.
3. தரைக்கு வந்த வானம், XIII spin off & தாத்தாஸ் - அட்ரா சக்கை மொமெண்ட்.
4. The Supremo special - கதை தேர்வு, Sixer Special, மீண்டு வந்த மாயன் & வண்ண பெரிய சைஸ் புத்தகம் - சூப்பரப்பு, விசில் போடும் ரகம்.
5. Summer Special - சத்தமில்லாமல் வெடிக்க போகும் கண்ணி வெடி சார் இது.
6. மைக் ஹேமர், நெவாடா & IRS - ஆச்சர்யம் கலந்த உற்சாகம்.
7. ஸேகோர், சிரிப்பே சிறப்பு & இரும்புக்கை நார்மன் - வாவ்
மேற்கூறிய அனைத்தும் என்னை துள்ளிக் குதிக்க வைத்தவை.
லக்கிலூக், தோர்கல், ட்ரெண்ட், ஜானி, சோடா, சிஸ்கோ & ப்ளூ கோட்ஸ் எதிர்பார்த்த மாதிரியே வந்து விட்டதால் மகிழ்ச்சி.
மொத்தத்தில் எனது மார்க் 90/100. அனைவரையும் திருப்தி படுத்தி இருக்கும் இந்த அட்டவணைக்கு பின் உள்ள உங்கள் உழைப்பிற்கு நாங்கள் என்றென்றும் கடைமைப்பட்டுள்ளோம்.
இப்பொழுது அட்டவணையில் உள்ள சிறு நெருடல்களுக்கும் விளக்கமளிக்க முடிந்தால் உறுத்தாமல் இருக்கும்.
1. வன்மேற்கின் வரலாறு - வருவது மிக்க மகிழ்ச்சி, ஆனால் compact size என்று போடப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் சைஸே அதுதானா, அல்லது விலை குறைப்பிற்காக சிறிதாக்கி விட்டீர்களா. அப்படி இருந்தால் தயவு செய்து மாற்றி ஒரிஜினல் சைஸிலேயே விடுங்கள் சார். காம்பேக்ட் சைஸில் சுருக்க வேண்டவே வேண்டாம்.
2. இருப்புக்கை நார்மன், ஸ்பைடர் & மாயாவி. ஏற்கனவே க்ளாஸிக் நாயகர்களுக்கு இந்த சைஸ் fit ஆகவில்லை என்பது எனது கருத்து மட்டுமல்ல, நண்பர்கள் பலரின் ஆதங்கமும் இதுவே. மறுபடியும் அதே டெம்ப்ளேட்டில் விட்டு இவர்களின் சித்திரங்களையும் ரசிக்க முடியாமல் போய் விடுமே என்கிற ஆதங்கமே மேலோங்குகிறது. Smashing 70's வெற்றி தான், ஆனால் வெளியில் இருந்த பிரம்மாண்டம் உள்ளே சித்திரத்தில் இல்லை என்பதே நிஜம். இது குறித்து ஒரு poll வைத்து பார்த்தால் தங்களுக்கே புரிந்து விடிம் சார்.
3. டெட்வுட் டிக் - கண்டிப்பாக ஒரு ஸ்லாட்டுக்கு தகுதி ஆனவர். கண்டனங்கள் சார்.
4. நமீபியா அல்லது ரூட் 666, ஏதாவது ஒன்றை ஸ்பெசல் இதழாகவாவது நுழைத்து இருக்க வேண்டும்.
நன்றி.
நமீபியாவைப் படித்திருக்கிறீர்களா சார் ?
Deleteதமிழ் தாண்டி வேற்று மொழிகளில் படித்தது இல்லை சார். கென்யா நன்றாக இருந்தது. அதே போல் ஏதாவது ஒன்றை ( மூன்று அல்லது அதற்கு மேல் உள்ள) இந்த வருடமும் எதிர்பார்த்தேன் சார்
Delete//இருப்புக்கை நார்மன், ஸ்பைடர் & மாயாவி. ஏற்கனவே க்ளாஸிக் நாயகர்களுக்கு இந்த சைஸ் fit ஆகவில்லை//
Deleteநண்பரே,
இவை யாவுமே தினசரி ஸ்ட்ரிப் போன்று அல்லாமல் 2, 3 முழுப்பக்க பக்க தொடர்களாக வந்தவை என்பதால் மாக்ஸி சைசில் அப்பட்டமாக பொருந்தி கொள்வார்கள்.
என் ஆசையெல்லாம் பிக் பாய்ஸ் ஸ்பெசல் உட்பக்கங்கள் எல்லாம் டெக்சின் தலையில்லா போராளி போன்று உட்பக்கங்களில் நேர்த்தியாக அச்சாகிட வேண்டுமென்பதே.
கொலைப் படை...சதிவலை...இரும்பு மனிதன்....இவையெல்லாம் இதே சைசுல பட்டய கிளப்பியவை நண்பரே
Delete// உட்பக்கங்கள் எல்லாம் டெக்சின் தலையில்லா போராளி போன்று உட்பக்கங்களில் நேர்த்தியாக அச்சாகிட வேண்டுமென்பதே. //
Deleteகவலை வேண்டாம்.
உட்பக்க சித்திரங்கள் தலையில்லாத போராளி சைசில் வராமல் ரெகுலர் சைசில் வரும் என நினைக்கிறேன். தலையில்லாத போராளியின் உட்பக்க சித்திரங்கள் அந்த பெரிய சைஸூக்கு ஏற்ற மாதிரி வரையப்பட்டவை என நினைக்கிறேன்.
பிக் பாய் ஸ்பெஷல் ஸ்மாஷிங் 70 மாதிரியான தயாரிப்பு தரம்+உட்பக்க சித்திரங்களுடன் வரும் என நினைக்கிறேன்.
This comment has been removed by the author.
Deleteகார்டூன் ஸ்பெஷல் பற்றிய எனது எண்ணமும் இதுவே. ஆனால் ஆசிரியர் ஏதாவது காரணம் வைத்து இருப்பார்.
Deleteஇருந்தாலும் எனது ஆசையை இங்கே வெளிபடுத்த விரும்புகிறேன்.
விஜயன் சார், கார்டூன் ஸ்பெஷலில் ரெகுலராக வராத கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். சிக்பில்+கைப்புள்ள ரெகுலராக வருகிறார்கள். சிக்பல் கதையை மட்டும் புத்தகத் திருவிழா ஸ்பெஷலாக சென்னையில் வெளியிட முடியுமா. சிக் பில் வருடம் இரண்டு கதைகள் கண்டிப்பாக வேண்டும் (ரெகுலர் தடத்தில் இரண்டு கதைகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் அவரை கார்டூன் ஸ்பெஷலில் நுழைத்து உள்ளேன் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது சார்)
மதியில்லாத மந்திரி, விஞ்ஞானி தாத்தா, ரின் டின் கேன், ஸ்மர்ப்ஸ் என கார்டூன் ஸ்பெஷல் வந்தால் நன்றாக இருக்கும் சார். இது எனது குழந்தைகளின் சாய்ஸ். எங்களது சாய்ஸூம் இதுவே.
ஸ்மாஷிங் 70 AND தலையில்லா போராளி ஒரே சைஸ் தான் நண்பரே, ஹார்ட் கவர் மட்டுமே ஸ்மாஷிங் 70 ல் கூடுதல் அளவாக காட்டுகிறது.
Deleteமேலும் சிரிப்பே சிறப்பு இதழில் ஒரு ஸ்லாட்டுக்கு நான்கு பேரை போட்டியில் விடுவதற்கு பதில், ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் சிக்பில் & கைப்புள்ள ஜாக்கை கழற்றி விட்டு ரின்டின்கேன், மந்திரி, க்ளிப்டன், மேக் & ஜாக் மற்றும் லியானார்டோ, ஆகியோரிலிருந்து 5 ல் நான்கு பேரை தேர்வு செய்ய விட்டிருந்தால் சான்ஸ் கிடைக்காத மற்ற நாயகர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். பரீசிலிப்பீர்களா.
ReplyDeleteநவம்பர் வெளியீடான மேக் & ஜாக் in ரீலா..? ரியலா..? வாசித்து விட்டேன். வழக்கம் போலவே இம்முறையும் காமெடி எழுத்து நடை செமத்தியாக ஒர்க் ஆகியுள்ளது. வாசிப்பில் நிறைய இடங்களில் மனம் விட்டு சிரித்தேன். எங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி மகிழ்விக்கும் மேக் & ஜாக் தோழர்களுக்கு அடுத்த ஆண்டு வாய்ப்பு கொடுக்காது விடுமுறை கொடுத்து விட்டீர்களே என்பது பெரிய வருத்தம்ங்க விஜயன் sir. 🙁
ReplyDeleteCould still be part of comedy pack. Let us see in the polls.
Deleteபயணக்கட்டுரை அருமை சார்.. ii
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteபயணக் கட்டுரை மிகவும் அருமை!! நிறைய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்தது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்களுக்கு பதிவு தவறாமல் வந்துச்சே, எந்த கேப்பில போயிட்டு வந்திங்க? :-)
// அக்டோபர் 19 to 23 என்று சொல்லியது ; //
Deleteநமக்கெல்லாம் சைக்கிள் கேப் போதாதா சார் - ஆட்டோ ஓட்டிப் போக ?
Deleteசெலவே இல்லாமல் உங்களுடன் எங்களையும் பயணிக்க வைத்து விட்டீர்கள் சார். உங்கள் நகைச்சுவை எழுத்துக்களுடன் இன்னும் நிறைய கார்ட்டூன் கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇங்கே இன்னும் இம்மாத புத்தகங்கள் வராததால் போட்டோ இப்போதைக்கு போட முடியாது சார்.
நண்பர்கள் புகைப்படங்கள் அருமை.
தோர்கல் ஃபுல்லா படிச்சிட்டேன் வேற நல்ல comics suggestion பண்ணுங்க ( கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கணும்) 😅
ReplyDeleteAnd color fulla 😍
DeleteLargo Winch - first 4 albums - terrific action and colorful. Warning: Not like Thorgal
DeleteBrother varesapade yathula erunthu vanga
Deleteட்யுரங்கோ இந்த கௌபாய் கதையை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்து பாருங்கள்! மிகவும் அருமையான சுவாரசியமான தொடர் இது!
Deleteஅண்டர்டேக்கர் கதைகளை படியுங்கள்! அட்டகாசமான தொடர் இது!
Deleteஒன் ஷாட் கதையான நில் கவனி வேட்டையாடு படியுங்கள், செம கதை! அதே போல்பராகுடா !
Deleteஇரத்தபபடலம்
Deleteஷெல்டன்
Deleteடியூராங்கோ...
Deleteபெளன்சர்....
வெய்ன் ஷெல்டன்....
லார்கோ வின்ச்...
கமான்சே...
இரத்தப்படலம்.சுற்று1& சுற்று2..
னு...நிறைய உள்ளது....
Read Bouncer stories.. Raw.. Engaging.. Enthralling
Deleteதீபாவளி ஸ்பெஷல் 2022 - டெக்ஸின் இரண்டு கதைகளும் வித்தியாசமாக ரசிக்கும் படி இருந்தது.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteSmashing 70-photos email பண்ணிட்டேன் Sir..👍❤💛💙💚💜
Editor sir if possible in future singathil siruvayathil should be published as volumes, it is always very intetesting non fiction read from you sir. Please consider it.
ReplyDeleteஇவையெல்லாமே சும்மா ஜாலிக்காண்டியான light stuff சார் ! அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டுமே ! நமது இதழ்களே நிரந்தரமானவை எனும் போது focus அவற்றின் மீதே தொடரட்டும் !
DeleteS70s உடன் காமிக்ஸ் நண்பர்களின் செல்பிக்கள், குடும்ப செல்பிக்கள் அழகு. இதே போல் இங்கு உலவும் ஏனைய நண்பர்களையும் பார்த்து மகிழ ஆசை.
ReplyDeleteஇந்த சங்கத்தின் புதுவரவு நான்..
ReplyDeleteWelcome sir...
Deleteவணக்கம் நண்பரே
DeleteWelcome சார்.
Deletet..எடிட்டர் சார் & parani.& kumar...
Delete@erode venki..😃
ReplyDeleteவருக..வருக..என Zagor சார்பாக வரவேற்கிறேன்..✨🌟⭐🙏
@ ALL : New Photos added !!
ReplyDeleteஆஹா....நானும்.
Deleteஅடேங்கப்பா நானும்
DeleteCan anyone tell - what are all the previous posts about travel experiences by editor?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களின் புகைப்படங்கள் அருமை. யோக நிலையில் உள்ள கும்பகோண சாமியார் ஜனா ஜி சூப்பர்:-)
Deleteகாமிக்ஸ் நண்பர்களை குடும்பத்துடன் பார்ப்பது மகிழ்வைத் தருகிறது.
எனது S70 Collection உடன் எனது Photo வும் Blog ல் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி Sir
ReplyDeleteExcelled Writing Sir...
ReplyDeleteநண்பர்களின் ஃபோட்டோக்களும், அவர்களது முகத்தில் தெரியும் ஒருவித பெருமை கலந்த உற்சாகமும் - ச்சும்மா தெறி ரகம்!!
ReplyDeleteசார்.. நீட்டி முழக்கல்கள் சகிதம் சீக்கிரமே இப்பதிவின் தொடர்ச்சியை வெளியிடுவீர்களென்று காத்திருக்கிறோம்!
ReplyDeleteச்சும்மா கலக்குறீங்க எடிட்டர்.
ReplyDeleteஉங்கள் பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. தயவுசெய்து கத்தரி போடாமல் முழுமையாக எழுதவும். உங்கள் பயண புகைப்படங்கள் மற்றும் புக் ஃபேர் புகைப்படங்களையும் ஷேர் செய்யுங்கள். நான் மிகவும் விரும்பி படித்த பதிவு இது.😍😍😍😍😍😍
அருமை நண்பர்களே....நேரில் பாரா நண்பர்களே இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி
ReplyDelete@Edi Sir..😍😘😃
ReplyDeleteThanks a lot for adding me in the post along with my lovely collection of *Smashing 70*..🙏💐💐
💋👄...
தன்யனானேன்..
💛💙💚❤💜
வணக்கங்கள் சார்!
ReplyDeleteஅட்டவணை மற்றும் புத்தகங்கள் புறப்பட்ட நேரத்தில் நான் வெளியூரில் இருக்க... திரும்பி வந்த நேரத்தில் புத்தகங்களை வாங்கி வைத்த கடைக்காரர் விஷேச நிமித்தமாய் கடைசாத்தி போக... ஒருவழியாய் இன்று புத்தகப் பார்சலுடன் முன்னோட்ட அட்டவணையையும் கைப்பற்றியாகி விட்டது.
தளத்தில் அட்டவணைப் பதிவை வாசித்து இருந்த போதும் பொறுமையாக அதை கிரகித்துக் கொள்ளும் சூழல் அமையவில்லை. எனவே இப்போது ஆற அமர அட்டவணையையும் பதிவையும் படித்து உள்வாங்கியாயிற்று.
#டெக்ஸ் 75 ஆம் ஆண்டினை சிறப்பிக்க வேண்டிய அதே தருணத்தில் மற்ற நாயகர்கள் புறந்தள்ளப் பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்துள்ளீர்கள் என்பது புரிகிறது.
#மெபிஸ்டோவின் வருகை, இளம் டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல், பெரிய பிரான்கோ பெல்ஜிய பாணியிலான வண்ண டெக்ஸ் மற்றும் தி சுப்ரிமோ ஸ்பெஷல்! ஆக ஒரு ஆர்ப்பாட்டமான கொண்டாட்டம் காத்திருக்கிறது 2023ல்!!
#தி சுப்ரிமோ ஸ்பெஷல் இதழுக்கு கதைகளை தேர்வு செய்ய கையாண்ட வழிமுறை அட்டகாசம். 75 ஆண்டுகளாய் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உயிரோட்டமாக பரிணமிக்கச் செய்த கதாசியர்களின் பங்களிப்போடு இருக்குமாறு வடிவமைத்தமைக்கு ஸ்பெஷலான கைகுலுக்கல்கள் சார்... பிரம்மிப்பூட்டும் சிந்தனை!!!
#அடுத்ததாக பவுன்சர் மற்றும் தளபதி டைகரின் மீள்வருகை... சிம்ப்ளி சூப்பர்ப்! ஏக எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடந்த நண்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!!
#அசத்தும் புதுவரவுகளான மைக் ஹேமர், I.R.$, நெவாடா இவர்களுடன் வன்மேற்கின் அத்தியாயம்! வித்தியாசமான மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான அறிமுகங்கள்! நாம் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறுகிறோம் என்பதை பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.
#கி.நாக்களின் கூடுதல் எண்ணிக்கை... வாரே வாவ்! கி.நா.காதலர்களுக்கு ஜாக்பாட்!
#அப்புறம் அந்த எங்கே...? எப்போது...? அறிவிப்புகள் துள்ளிக் குதிக்க வைக்கிறது.
#மூன்றாக சுருங்கிப்போன கார்ட்டூன்களின் எண்ணிக்கைக்கு கார்ட்டூன் ஸ்பெஷலும் சுஸ்கி விஸ்கியும் ஆறுதல் அளிக்கிறது.
#டைலன் டாக் விலையில்லா இணைப்பில் தலைகாட்டிவிட மார்ட்டின் மற்றும் ராபின் ஆண்டில் எதாவது ஒரு தருணத்தில் எட்டிப் பார்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுவும் ராபினின் தரமான தற்போதைய நடுநிசி வேட்டையைத் தொடர்ந்து அவர்மேல் ஒளிவட்டம் பிரகாசமாக விழுந்திருக்கிறது.
#விலையில்லா இதழ்களிலும் ஒரு வெர்சடைல்டி இருப்பது சூப்பரான விஷயம். வெயிட்டிங் பார் தி பிரீக்வல் ஆப் நெப்போலியன் பொக்கிஷம்!
#தி பிக் பாய்ஸ் ஸ்பெஷல்: மேக்ஸி சைஸ், ஹார்ட் கவர் அருமை! அந்த கொலைப்படை இருவண்ணத்துக்கு பதில் முழுவண்ணமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
#ஸாகோரின் அடுத்த ஆல்பத்துக்கு வெயிட்டிங்! டெக்ஸ் கிளாசிக்-4 லிலும் மெபிஸ்டோ(!) இந்த ஆண்டு டெக்ஸ் vs மெபிஸ்டோ போலும்...
#ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ, ரூபின், தோர்கல், ட்ரெண்ட், ஜானி மற்றும் சோடா தலா ஒற்றை ஸ்லாட்கள்! மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல் தலைப்பு அருமை! தோர்கல் குறித்த தித்திப்பான செய்திக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்!!!
#ஒரு விண்ணப்பம்: ஜம்போவின் அடுத்த சீசன் பற்றிய தகவல் ஏதும் இல்லையே...?
#ஆக மொத்தத்தில் மிக திருப்தியான அட்டவணை! சந்தாப் பயணத்தில் சகலரும் பயணிக்க ஏற்ற இதழ்கள்! கிளாசிக் நாயகர்கள் S60 தனித்தடத்தில் வருவதால் அதுவும் ஜாலி!
#கடைசியாக இப்பதிவை படித்து முடிக்க தேவைப்பட்ட நேரம் குறித்து கேட்டிருந்தீர்கள்... முதன்முறை பயணத்தின்போது நுனிப்புல் வாசிப்பை கணக்கில் கொள்ளவில்லை. தற்போது பொறுமையாக வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள்! ப்பா...!!!
// ஒரு விண்ணப்பம்: ஜம்போவின் அடுத்த சீசன் பற்றிய தகவல் ஏதும் இல்லையே...? // அடுத்த வருடம் ஜம்போவே இல்லையே
DeleteLucky luke la yathu nailla comedy aa erukuim
ReplyDeleteLucky special 1 and boom boom padalam
Deleteஅய்யா இந்த பதிவின் தொடர்ச்சியை இன்றோ நாளையோ வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
ReplyDeleteநானும் அதே கோரிக்கையை வைக்கிறேன். (ஆனா போட மாட்டார்..அடுத்த .sat.பதிவு )
ReplyDeleteலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட சார் நீங்க ! உங்க டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு !
Deleteடெக்ஸோடு நிழல்களின் ராஜ்யத்தில் பயணம் செம ஸ்பீடாய் ஒடி வருகின்றது !
Deleteஇந்த டெக்ஸ் சாகஸத்தின் முழுமையும் எவ்விதமென்று இன்னமும் no idea ; 35 பக்கங்களைத் தான் முடித்திருக்கிறேன் ! ஆனால் - இந்தத் துவக்கத்தின் tempo மட்டும் இறுதிவரையில் தொடரும் பட்சத்தில் - ஒரு blockbuster 'தல' ஆல்பம் காத்துள்ளது என்று நம்பலாம் !
Deleteசும்மா செம தெறி so far !!
Waiting for Thala sir. December... Come fast
Deleteஅய்யா சாகசத்தோடு சாகசமாக அந்த பதிவையும் போட்டு விட்டீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியமாக போகும்.
Delete***** மேக் & ஜாக் *** ரீலா? ரியலா? *****
ReplyDeleteஉருவ ஒற்றுமையில் அச்சுஅசலாக ஜாக் போலவே இருக்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாஃபியா கும்பல் மிரட்டல் விடுத்து முடக்குகிறது. படப்பிடிப்பு முடங்கிக்போன நிலையில், ஜாக்கை எதேட்சையாக ஒரு பாரில் சந்திக்கும் அப்படத்தின் டைரக்டர் மீதப்படத்தை ஜாக்கை வைத்து எடுக்க நினைக்கிறார். ஷூட்டிங் தொடங்கப்பட்டதை அறிந்துகொள்ளும் மாஃபியா கும்பல் ஹீரோவைப் போட்டுத்தள்ளும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்க, நமது மேக் & ஜாக் இரட்டையர்கள் அவர்களது முயற்சியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே ரகளையான மீதக் கதை!
நல்ல கதையம்சம் உள்ள படைப்பு! முதல் பேனலிலிருந்தே ஜாலியாக நகரத் தொடங்கும் கதை, இறுதிப்பேனல் வரை நிறையவே கெக்கபிக்கேக்கள் & கிச்சுகிச்சு மூட்டிடும் வசனங்கள் சகிதம் ஜாலியாக முடிகிறது!
ஒருசில பக்கங்களில் அடர் வண்ணங்கள் கொஞ்சம் கண்களைப் பதம் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் - ஒரு ரகளையான வாசிப்பு அனுபவத்தைத் தந்திடும் தரமான படைப்புகளுள் ஒன்று!
10/10
சூப்பர் விஜய்.
Deleteநீங்கள் எழுதிய விமர்சனம் 100 க்கு 100 உண்மை.
Deleteநன்றி நண்பர்களே! ரசிக்க, சிரிக்க, பிரம்மிக்க ஆயிரம் சமாச்சாரங்கள் இருந்தும் இந்தக் காட்டூன்கள் நம் நண்பர்களின் பெரும்பான்மைக்கு எட்டிக்காயாய் கசப்பது ஏனென்றுதான் புரியவில்லை!!
Deleteஇன்று மாலைகூட இதுகுறித்து ஒரு வயதானவரிடம் சொல்லி ஆதங்கப்பட்டேன்!
This comment has been removed by the author.
Deleteபச்சக்னு பாய்ண்ட்டைப் புடிச்சிடீங்க பத்து சார் ! பெருசும், பெருசுமாய் ஆதங்கப்படுவது இயல்பு தானே ?!
Delete/// இன்று மாலைகூட இதுகுறித்து ஒரு வயதானவரிடம் சொல்லி ஆதங்கப்பட்டேன்!///
Deleteநீங்க சொல்றது கரெக்டு தான் ஈ.வி.
பசங்ககிட்ட எல்லாம் இது பத்தி சொன்னா அவங்களுக்கு இதெல்லாம் புரியாது.
நம்ம செட் ஆளுங்கதான் , நம்மளோட feelingக நல்லா புரிஞ்சுக்குவாங்க ஈ.வி.
எடிட்டர் சார். செம ஃபாஸ்டா இருக்கீங்க. டெலிட் பண்ணி கரெக்ட் பண்றதுக்குள்ள கமெண்ட் போட்டுட்டீங்க.
Deleteபத்து சார்.. பத்து வயதானவங்களுக்கு மத்தியில வச்சு என்னை அசிங்கப்படுத்திட்டீங்க இல்லே.. உங்ககூட பத்து நாள் நான் கா! முன்னே நான் வாங்கிக்கொடுத்த பத்து பாக்கெட் ரவுண்டு பன்னுகளை இப்பவே திருப்பிக் கொடுங்க!
Deleteநாம ரெண்டு பேர். மீதி எட்டு ?
DeleteWho is the black Sheep? அது யார், யார், யார்...?
Deleteசெ.அவின் மனச்சாட்சி: பேத்தி எடுத்தாச்சு; மாடஸ்டி டிஷர்ட் போட்டு போஸ் குடுக்கறியே? லஜ்ஜையே இல்லியா?
ReplyDeleteசெஅ: தமிழ் காமிக்ஸ் உலகில் நுழைஞ்சாச்சுன்னா வயசாவது ஒண்ணாவது?
செஅ மனச்சாட்சி: லயன் ஆபிஸ்ல வேலை செய்யறவங்கல்லாம் பாவம் இல்லியா? உன் போட்டோவப் பாத்து வாந்தி பேதி வந்தா என்னாவறது?
அவங்களுக்கு குடும்பம்னு இருக்குல்ல?
செஅ: அவங்க fate அப்டி. பாஸிட்டிவ்வா நினைச்சு பாரு! என்னைப் பார் யோகம் வரும்னு எழுதி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஆபிஸ் முன்னாடி தொங்க விட ஒரு போட்டோ கிடைச்சுதுல்ல.
செ அ மனச்சாட்சி: அதுவும் சரிதான்!
பக்கத்து வீட்டு மாமி மாமாவைத் திட்டுறப்ப " ஏழு செல்வம் வயசாச்சு ; இன்னும் லாலிபாப் சாப்பிடுறீங்க! " அப்டின்னுதானே திட்டுனாங்க.
( அதாகப்பட்டது நானும் போட்டோ அனுப்பிட்டேன்)
சூப்பர்
Delete@செனா அனா 🤣🤣🤣🤣🤣
Delete'சுய எள்ளல்' சமாச்சாரத்தை சுழட்டி சுழட்டி அடிக்கறீங்க ஜி! :))))
சிரிப்பு சார்
Delete// பாஸிட்டிவ்வா நினைச்சு பாரு! என்னைப் பார் யோகம் வரும்னு எழுதி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஆபிஸ் முன்னாடி தொங்க விட ஒரு போட்டோ கிடைச்சுதுல்ல. //
DeleteLOL
//என்னைப் பார் யோகம் வரும்னு எழுதி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஆபிஸ் முன்னாடி தொங்க விட ஒரு போட்டோ கிடைச்சுதுல்ல.//
Deleteஅக்காங்....அஸ்கு...பிஸ்க்கு !! நாங்கள்லாம் பின்னே எதுக்கு இருக்கோமாம் ?
அப்படியாவது யோகம் வந்து குடோன் எல்லாம் காலியாச்சுன்னா சரிதான் ஜி
Deleteரீலா..? ரியலா ..?- படித்துவிட்டேன்.
ReplyDeleteஒரு கார்ட்டூன்-காமெடி என்பதையும் தாண்டி நிறைய உள்ளதே..
கண்டிப்பாக - எனக்கு மேக் & ஜாக்-தொடர்ந்து வேண்டுமே..
சிக் பில்-நிறைய சேர்த்தாச்சு..
ப்ளூ கோட்-ம் நிறைய சேர்த்தாச்சு..
அது போல்-மே க்&ஜாக்-க்கும் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறோமே..ii
எனது ஆதரவு மேக் & ஜாக் கிற்கே..
//ஒரு கார்ட்டூன்-காமெடி என்பதையும் தாண்டி நிறைய உள்ளதே//
Deleteநண்பர்களுக்கு சில தருணங்களில் அதுவே இடராகிப் போய்விடுகிறதே சார் !!
நச்சுணு சொன்னீங்க @?Elango DCW ஜி!
DeleteReally enjoyed the travel diary
ReplyDeleteJust a breezy rant sir !
Deleteமேக்& ஜாக்
ReplyDeleteFUN: ' ""முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். தண்ணிய தண்ணியாலதான் சமாளிக்கணும்".
மேக்கின் வசனம் முதலில் புரியவில்லை. பின்பு விழுந்து விழுந்து சிரித்தேன்.
FACT: குளிரில், மழையில் , பனியில் ஆல்கஹால் அருந்தினால் கதகதப்பாக உணர்வோம் என்பது உண்மை.காரணம் தோலில் உள்ள ரத்தக்குழாய்கள் ஆல்கஹாலால் விரிவடைவதால்.
NOT AT ALL FUNNY: குளிரில் ஆல்கஹால் அருந்திவிட்டு பாதுகாப்பு உடைகள் இன்றி வெளியில் சுற்றினால் ஹைப்போதெர்மியா எனும் உடல் வெப்பக் குறைபாடு ஏற்பட்டு விபரீதங்கள் விளையலாம்.
*******""". ********
கதை தனிப்பட்ட முறையில் மிகவும் கவர்ந்தது..அடுத்த வருடம் SSS -ல் மேக் & ஜாக் வர விருப்பம்
9.25/10
****""*"""
LGBTQ+
ரேண்டால்ஃப் பாத்திரம் மிகவும் வித்தியாசமானது கார்ட்டூன் என்ற வகையில் .
ஆண்களை ஸ்வீட்டி, டார்லிங் என அழைக்கும் மனிதர்.
LGBTQ + - ல் ரேண்டால்ஃப் G or T?
லார்கோவில் L பாத்திர பெண் வந்ததுண்டு.ஆனால் கார்ட்டூனில் இதுதான் முதன்முறை என நினைக்கிறேன்.(பூடகமாக)
Not Overt , in Subtlety. But its there.
****""""""""*************
என்ன எழவோ! நல்லவேளையா இதெல்லாம் கதையில அளவோடவும், இலைமறை-காய்மறையாவும் இருந்ததால முகம் சுளிக்கும்படியா எதுவுமில்லை! இதுக்காகவே படைப்பாளிகளை ஸ்பெஷலா பாராட்டலாம் தான்! ஒருவேளை ஒரிஜினலில் 'அப்படிக்கிப்படி' டயலாக்ஸ் இருந்து, அதை நம்ம எடிட்டர் இதமா-பதமா மாத்தி எழுதியிருக்காரோ என்னமோ?!!
Deleteஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "நடனமாடும் கொரில்லாக்கள்" கதை கூட சற்றே வித்தியாசமான உணர்வுகள் கொண்டோர் சார்ந்த கதை தானே சார் ....!
Deleteஅல் காபோன் கூட பெண்ணோடு குத்தாட்டம் போடுவதாய் நினைத்துக் கொண்டு பெண்ணாய் உடையணிந்திருக்கும் ஆணோடு ஆட்டம் போடுவார் ...!!
That again was a story with focus on the "Q " in LGBTQ !
யெஸ் சார்! ' நடனமாடும் கொரில்லாக்கள் ' பற்றி மறந்தே போனேன்.ட்ரான்ஸ்வெஸ்டிஸம் LGBTQ கம்யூனிட்டியின் ஒரு அங்கம் என்பது நீங்கள் நினைவூட்டியபின் பளிச் எனத் தெளிவுபடுகிறது.!!
Delete199
ReplyDelete200 ரீலா ரியலா சூப்பர்
ReplyDelete