நண்பர்களே,
வணக்கம். அத்தி பூத்தாற்போல என்றைக்கேனும் ஒரு அதிசய மாதத்தினில் எங்களது பணிகள் சீக்கிரமே முடிந்து, அச்சும் சுருக்கென முடிந்து, பைண்டிங்கிலிருந்து புக்ஸ் வரக்காத்திருக்கும் போது 'தரின்னான்னா...' என்றபடிக்கே காலாட்டிக் கொண்டிருக்கும் சுகம் இருக்கிறதே - அடடடடா ....சொர்க்கமய்யா !!! அந்த அத்தி இந்த ஆகஸ்ட் இறுதியினில் நமக்கெனப் பூத்திருக்க, செவ்வாயன்று டெஸ்பாட்ச் செய்திடும் பொருட்டு நம்மாட்கள் பரபரப்பாய் இயங்கி வரும் வேளைதனில், ஈ பாலக்காட்டு மாதவன் டியூன் போடுவதில் பிஸியாயிட்டு !
தாத்தாக்கள் & டேங்கோ இரண்டாம் வாரத்துவாக்கிலேயே ரெடியாகியிருக்க, டெக்ஸ் மாத்திரமே பெண்டிங் இருந்தார் ! And இம்முறையுமே டெக்சின் அட்டவணையினில் ஒரு சிறு மாற்றம் !! "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" ஆண்டின் இறுதி (டெக்ஸ்) ஸ்லாட்டுக்கு இடம்பெயர்ந்திட, "சொர்க்கத்தில் சாத்தான்கள்" முந்திக் கொள்கிறது - இளம் டெக்சின் பெயரைச் சொல்லி ! So 128 பக்க சாகசமென்பதால் அதுவும் ஜல்தியாய் நிறைவுற்று - பைண்டிங்கில் தற்போதைக்குக் குந்தியுள்ளது ! இதோ - சின்னத் தல இதழின் preview :
அட்டைப்படம் முன் & பின் - ஒரிஜினல்களே - நமது மாமூலான நோண்டல்களுடன் ! And இம்மாதமுமே செம clean artwork சகிதம் இந்த ஆல்பம் மிளிர்கிறது ! உலகைப் புரட்டிப் போடப்போகும் கதைக்களமெல்லாம் இல்லை தான் - ஆனால் செம breezy read என்பதில் ஐயங்களே கிடையாது !
இந்தப் புள்ளியினில் எனக்கொரு கேள்வியுள்ளது உங்களிடம் கேட்க :
இளம் டெக்ஸ் தொடரானது இத்தாலியில் தனித்தடத்தில் அடித்து தூள் கிளப்பிக் கொண்டு பயணித்து வருகின்றது ! திரு மௌரோ போசெல்லி அவர்கள் உருவாக்கியுள்ள இந்த crisp தடத்தின் ஒவ்வொரு ஆல்பமும் 64 பக்கங்கள் மாத்திரமே & மாதம்தோறும் ஒரு புக் ரிலீஸ் ஆகிடுகிறது ! So 2 பாகக் கதைகள் ; 4 /6 பாகக் கதைகள் என்றெல்லாம் சரளமாய் கையிலெடுக்கும் கதாசிரியர்(கள்) நான்கோ ; ஆறோ மாதங்களில் அவற்றை அமர்க்களமாய் நிறைவும் செய்திடுகிறார்கள் ! தற்போது இத்தாலியில் வெளியாகியுள்ள இளம் டெக்ஸ் ஆல்பத்தின் நம்பர் 47 !
அடுத்த மாதத்து தீபாவளி மலரில் நாம் (கலரில்) தொடவுள்ள பாகங்கள் 10 - 13 ! இம்மாதத்து "சொர்க்கத்தில் சாத்தான்களோடு நாம் தொட்டிருப்பது நம்பர்ஸ் 14 & 15 ! So ஆண்டுக்கு நாலோ, ஐந்தோ 'சின்னத் தல' இதழ்களை நமது அட்டவணைகளுக்குள் புகுத்தினாலுமே - இத்தாலிய ஜெட் வேகத்துக்கு ஈடு தந்திட வாய்ப்பே இராது ! And கொஞ்ச காலம் கழித்துப் பார்த்தால் கண்ணுக்கே எட்டாத தொலைவினில் இந்தத் தொடர் முன்னேறியிருக்கும் - கதைகளின் எண்ணிக்கையினில் ! So my question is this :
'மணந்தால் only மஹாதேவி ; கட்டிக்கினா only க்ரித்தி ஷெட்டி !!' என்ற நமது பாங்குகளில் இரகசியங்களே கிடையாதல்லவா ? "கதைகளைப் பிரிச்சுப் போட்டாலே அடி தான் ; மொத்து தான் !" என்ற பழக்கத்தினை கல் தோன்றி, மண் தோன்றா 'காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்' நாட்களிலிருந்தே நீங்கள் கையில் எடுத்து வந்துள்ளீர்கள் ! In fact கீழடியில் நடப்பது போல் ஒரு அகழ்வாராய்ச்சியினை பின்னாட்களில் நமது காமிக்ஸிலும் செய்திட ஆராச்சும் முனைந்தால், நமது தொன்மையான மூ.ச.க்கள் அங்கு கணிசமாய்ப் புதைந்திருப்பதையும், கேசத்தை கணிசமாய்க் கொண்டிருந்த ஒரு ஆந்தையனை, தெளிய வைத்துத் தெளிய வைத்து அந்நாட்களிலேயே லேப்பி எடுத்ததற்கான வரலாற்றுச் சின்னங்களும் கிடைப்பது உறுதி ! (ஆத்தாடியோவ்.....இன்னா அடி !!) அதன் பின்பாய் "காலன் தீர்த்த கணக்கு" ; "துயில் எழுந்த பிசாசு" (!!!) போன்ற டெக்ஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட்டுள்ளோம் தான் ; ஜேசன் ப்ரைஸ் 3 பாக சாகசமுமே அந்த பாணியில் வெளியாகியுள்ளது தான் ! ஆனால் ஒவ்வொரு தபாவுமே - "இதை ஒரே குண்டு புக்காய்ப் போட்ருக்கலாமே ?" என்ற விசனக்குரல்கள் ஒலிக்காதில்லை !
கதைகளை அத்தியாயங்கள்வாரியாய்ப் பிரிப்பதென்பது உலகின் அனைத்து மார்க்கெட்களிலும் சர்வ சாதாரணமானதொரு நடைமுறை என்பதை நீங்களும் அறியாதவர்களல்ல தான் ; but still "கதையைப் பிரிச்சே - மொத டெட் பாடி நீ தானலே !" என்ற எச்சரிக்கைக்கு குரல்களை ஒலிக்கவிடத் தவறவுவதே இல்லை !
- பிரான்க்கோ-பெல்ஜிய உலகினில் XIII தொடரானதை 1984-ல் துவக்கி - 2007 வரைக்கும் இழுத்திருந்தனர் - அந்த முதல் சுற்றின் 19 ஆல்பங்களை பூர்த்தி செய்திடவே ! Which meant - இந்த உச்ச சஸ்பென்ஸ் த்ரில்லரின் முடிச்சுகளைக் கண்டறிய 23 ஆண்டுகள் காத்திருக்க பிரெஞ்சு மக்களுக்கு அவசியப்பட்டிருந்தது !
- தோர்கல் தொடர் துவங்கி 41 ஆண்டுகள் ஆகியுள்ளன & அவர்கள் தொட்டுள்ளதோ நம்பர் 39 தான் !
- 1965-ல் ஜனனம் கண்ட (கதாசிரியர் சார்லியேவின்) தட்டைமூக்கார் டைகரின் அந்த க்ளாஸிக் முதல் சுற்றின் 23 ஆல்பங்கள் பூர்த்தி காண தேவைப்பட்ட அவகாசமோ கால் நூற்றாண்டு !
ஆனால் இங்கோ - "ஒரு பேமானி கதைகளைக் கொத்துக்கறி போட்டுப்புடுச்சி ! துண்டும் துக்கடாவுமாய்ப் போட்டுப்புட்டதால், இந்தத் தொடரின் ரெஜ்பெக்டே போச்சு !!" என்ற புகார் கால காலமாய் ஒலித்து வருவதில் இரகசியங்கள் லேது !! நமது கும்பகர்ண உறக்க நாட்களில், கதைகளின் துண்டாடல் உங்களுக்கு ரௌத்திரங்களை உற்பத்தி செய்திருப்பதன் பின்னணி perfectly understandable ! "இந்தக் கோமாளிப்பய அடுத்த புக்க அடுத்த திருவிழா நேரத்துக்குத் தானே வெளியிடும் ?" என்ற அந்நாட்களின் கடுப்ஸ் லாஜிக்கலானதொன்று தான் ! ஆனால் இன்றைக்கோ நிலவரம் முற்றிலும் வேறல்லவா ? நீங்கள் முதல் மாச டப்பியினைப் பிரிக்க நல்லதொரு நாளையும், பொழுதையும் தேடிக் கொண்டிருக்கும் போதே, கூரியர் தம்பி மறுமாதத்து புக்ஸ்களோடு கதவைத் தட்டிக் கொண்டிருப்பான் என்பதை நமது இரண்டாம் இன்னிங்ஸ் track record சொல்லிடும் ! So கதைகள் பாதியில் தொங்கலில் கிடந்து போகக்கூடுமே என்ற பயங்கள் இன்றைக்கு அவசியமே கிடையாது தான் ! ஆனாலும் தொகுப்புகளாய் ; குண்டு புக்குகளாய் ; இணைந்த ஆல்பங்களாய் மாத்திரமே வாசிப்பதென்ற அந்த அவாவினில் மாற்றங்களைக் காணோமே - why ?
ஒரே புக்காய் வெளியிட்டாலன்றி வரவேற்பிராது என்ற பயத்தினூடே பயணிக்க நேர்வதால் நிறையத் தொடர்கள் பக்கம் தலை வைத்தே படுக்க நமக்கு முடிவதில்லை ! 'மாதம் ஒரு பாகம்....மூன்று மாதங்களில் முடிந்திடும் ஒரு கதை ! மாதா மாதம் இதனை ரசிப்பதும், "அடுத்து என்ன ?" என்ற எதிர்பார்ப்போடு மறுமாசத்துக்குக் காத்திருப்பதும் ஓ.கே. தான் !" என்ற தகிரியத்தை நீங்கள் நமக்குத் தந்திடும் பட்சங்களில், இன்னமும் கணிசமான அமெரிக்க சமகாலப் படைப்புகளை களமிறக்கிட சாத்தியமாகிடும் ! அங்கே அவர்களது template - "ஒவ்வொரு இதழும் 28 பக்கங்கள் ; ஒரு கதை பூர்த்தியாவது சுமார் 6 இதழ்களில்" என்பதே ! ஆனால் அவற்றை ஒன்றிணைத்து நூற்றுச்சொச்சம் பக்கங்களில் ஒரே புக்காய் வெளியிட்டாலொழிய ரசிக்காது என்பது இக்கட நடைமுறை ! So படிக்கிறீர்களோ ; படம் பார்க்கிறீர்களோ - சகல முயற்சிகளுக்குமே தொகுப்புகள் மாத்திரமே தீர்வெனின் - சந்தாவின் பட்ஜெட் எகிறும் என்ற பயத்திலேயே நான் நழுவிடுவதே பலனாகிறது !
"4 மாசம் தொடராகிடும் பட்சத்தில், நடுவாக்கிலானதொரு புக் - நம்ம பாசமான சேகரிப்பாளர்களின் உபயத்தில் out of stock ஆகிப் போனா அப்புறம் கூடுதல் விலை கொடுத்து க்ரே மார்க்கெட்டில் தானே வாங்க வேண்டிப் போகும் மடஞ்சாம்பிராணி உடன்பிறப்பே ?" என்ற ஆதங்கங்கள் இங்கே ஒலிக்கலாம் தான் ! ஆனால் இன்றைக்கெல்லாம் அந்த நடைமுறைகள், லெமூரியா கண்டத்தினில் வேண்டுமானால் இருக்கக்கூடும் என்பதற்கு நமது ரயில்வண்டி நீளத்து ரேக்குகளும், பிதுங்கி வழியும் கிட்டங்கியுமே சாட்சி !
அதே போல - "புத்தக விழாக்களில் வாங்கும் casual readers - தெரியாமல் பாகம் 3 ஐ மட்டும் வாங்கிக்கினு போய் சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் அபாயம் உண்டென்பதை நீ உணரவில்லையா கூமுட்டை உடன்பிறப்பே ?" என்ற உங்களின் செல்லமான வினாவும் எனக்குக் கேட்கிறது தான் ! புத்தக விழாக்களுக்குச் செல்லும் சமயங்களில் இத்தகைய அத்தியாயம் பிரியும் இதழ்களை ஒன்றிணைத்து கண்ணாடிக் கவர்களில் போட்டு pack ஆக விற்க முனைந்தால் அந்தச் சிக்கலையும் சரி செய்து விடலாமன்றோ ?
So சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ?
Before I wind up - புத்தக விழா news !! கரூரில் வரும் திங்கள் வரைக்கும் நிலைகொண்டுள்ளது நமது காமிக்ஸ் கேரவன் ! ஈரோட்டின் வேகங்கள் இங்கு சாத்தியமல்ல என்றாலும் - decent sales இது வரையிலும் ! Icing on the cake : ஏகமாய் பள்ளி & கல்லூரி மாணாக்கர்களை புத்தக விழாவிற்கு இட்டு வருகின்றனர் & அவர்களும் செம ஜரூராய் நமது ஸ்டாலில் ஆஜராகிடுகின்றனர் ! வருகை தருவோரில் பத்திலொருவர் காமிக்ஸ் மீது அபிமானம் கொள்ள இதுவொரு வாய்ப்பாய் அமைந்தாலும் நமக்கு உவகையே ! And கேக்கின் மீதான cherry பழம் - இன்றைக்கு கொட்டித் தீர்த்த மழை காரணமாய் அரங்கே சகதிக் காடாய்க் காட்சி தரும் நிலையில், செப்பனிடும் பணிகளை மேற்பார்வை செய்திட வந்திருந்த மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நமது ஸ்டாலுக்கு செம வாஞ்சையோடு வருகை புரிந்தது ! பால்யம் முதலே அவர் நமது காமிக்ஸ் வாசிகரென்ற தகவலை அண்ணாச்சியுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமன்றி - "வேதாளன் கதைகளைக் காணோமே ?" என்றும் வினவியுள்ளார் !! இந்த பொம்ம புக் நேசம் துரும்புகளிலும் இருக்கும், தூண்களிலும் இருக்குமென்பதை உணரச் செய்த yet another day !! தகவலை என்னோடு பகிர்ந்த நம்ம அண்ணாச்சியின் குரலில் கொப்பளித்த உற்சாகத்தை ஒரு பாட்டிலில் அடைத்து வைக்க முடியுமெனில் அட்டகாசமாய் இருந்திடும் ! நமது இதழ்களின் முகமாய் எண்ணற்றோருக்கு இருந்து வரும் அண்ணாச்சியின் அத்தியாயங்களில் இன்றைய சந்திப்பு லேட்டஸ்ட் !! குட்டியாய் ஒரு இடைவெளிக்குப் பின்பாய் நமது bookfair கேரவன் இன்னும் நிறைய இலக்குகளில் பயணிக்கவுள்ளது எனும் போது அண்ணாச்சியின் உற்சாகங்களும் தொடரட்டும் என்பேன் !
அப்புறம் நமது YEAR END Specials முன்பதிவுகள் செம விறு விறுப்பாய்ப் பயணித்து வருகின்றன ! இதுவரையிலும் செய்திருக்கா பட்சத்தில் இன்றைக்கே நம்மிடமோ, உங்கள் ஊர் முகவரிடமோ புக்கிங் செய்திடலாமே - ப்ளீஸ் ? (கார்த்திக் : டப்பிக்குள் இவற்றையும் சேர்த்துக்க reminder !!)
நன்றி : நண்பர் கிரி !! |
அப்புறம் இன்னொரு தகவலுமே guys :
உலகப் பிரசித்தி பெற்ற ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடரினைத் தமிழில் போட என்றைக்கேனும் முடிகிறதோ - இல்லையோ, அவர்களின் ஆங்கில இதழ்களின் full set நம்மிடம் இப்போது விற்பனைக்கு உள்ளது ! மொத்தம் 34 புக்ஸ் கொண்ட இந்தத் தொடர் நமது ஆன்லைன் ஸ்டோர்களில் லிஸ்டிங் ஆகியுள்ளது ! ரொம்பவே competitive விலைகளில் உள்ள இந்த இதழ்களை முயற்சித்துப் பார்க்கலாமே ?
Bye all...see you around ! Have a cool weekend !
Hi
ReplyDeleteHi
ReplyDeletePresent sir
ReplyDelete3rd
ReplyDelete10 க்குள்ளே நானும் வந்துட்டேன்
ReplyDeleteMe 4th
ReplyDeleteவணக்கம் 🙏 ஐயா
ReplyDeleteஇவ்ளோ சீக்கிரமாவா? பரவாயில்லையே!!!
ReplyDeleteமாலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇங்கேயும் மழை :-)
ReplyDeleteவாய மூடுல வராது
DeleteLove you brothers 🤣🤣🤣
Deleteவணக்கம் காமிக்ஸ் காதலர்களே....
ReplyDeleteமாலை வணக்கம் நட்புகளே.....
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteநம்ப கரூர் கலெக்டர் அய்யாவுக்கு ஒரு வேதாளர் புக் பார்சல் ...😍
ஜேசன் ப்ரைஸ் போன்ற குறைந்த சுற்றுகளில் முடியும் தொடர்களை வேண்டுமானால் தொடர்ச்சியான மாதங்களில் வெளியிடலாம். தலயெல்லாம் ஒரு கதையை மொத்தமாகப் படித்தே பழகிவிட்டது சார். கதையின் மூன்று ஆக்ட்களை ஒரேயடியாகப் படிப்பதே தனி high சார். நெட்பிளிக்ஸில் மொத்த சீரிஸையும் பிஞ்ச் வாட்ச் செய்யும் தலைமுறை இது. நான்கு அல்லது ஆறு மாதங்களாக ஒரே கதை வந்தால் தலயாகவே இருந்தாலும் காத்திருந்து படிப்பது சுகப்படுமா ? தெரியவில்லை சார்.
ReplyDeleteஆமாங்க Edi Sir..
Delete40 பக்கமோ, 400 பக்கமோ முழுசா படிக்கிறமாதிரி மைண்ட் செட்டாகி போச்சுங்க..
அதனால..
அதுவும் டைகரோட பல கதைகளை தொன்னூறுகள்ல குதறியதை நினைத்தால் இன்னைக்கும் முடிவறியா நாட்களின் ரத்தம் கக்கி சாகக் கிடந்த நாட்கள் கண்களிலாடுமே
Delete// இன்னைக்கும் முடிவறியா நாட்களின் ரத்தம் கக்கி சாகக் கிடந்த நாட்கள் கண்களிலாடுமே // ஹிஹிஹி
DeleteEdi Sir..
ReplyDeleteசொர்க்கத்தில் சாத்தானோ..
நிழல்களின் ராஜ்ஜியமோ..
எங்களுக்கு Tex வேண்டும்..😍
எங்களுக்கு Tex வேண்டும்..😍😍
" இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ? "
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் ரசிகர்களாகிய எங்களுக்கு பிஞ்சு மனசு சார் Suspense தாங்கமாட்டோம்
டெக்ஸ் தலையில வில்லன் துப்பாக்கிய வைக்கிற நேரத்தில நீங்க தொடரும் போட்டீங்கன்னா அவ்ளோதான்
அடுத்த Book வர்ரதுக்குள்ள Original version படிச்சு மொத்த கதையும் சொல்லிருவாங்க
இதெல்லாம் போக உலகமெல்லாம் Slim beauty யை விரும்பினாலும் தமிழனுக்கு எப்பவும் குண்டு மேல மோகம் உண்டு ( குஷ்பு இட்லி மாதிரி)
So we always like KUNDU Specials
#### So சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ? ####
ReplyDelete12 இதழ்களையும் சேர்த்து ஒரே குண்டு புக்காக (64*12=768 பக்கங்கள்) போடலாம் சார் :-)😎
That பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாமோ moment#
DeleteKundu young Tex please sir.
Deleteஅடேடே நானுமே
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசார் தொடர் கதைகள் அடுத்த அடுத்த மாதங்களில் வருவது எனக்கு ஓகே, ஆனால் அதற்கு இளம் டெக்ஸ் வேண்டாம். வேறு தொடர் முயற்சி செய்யலாம்.
ReplyDeleteஇப்பொழுது இருக்கும் இளம் டெக்ஸ் கவுண்ட் போதுமானது வருடத்திற்கு.
Meme இரண்டுமே சூப்பர் ரகம்.
// வேறு தொடர் முயற்சி செய்யலாம். // ஆமாம் எனது கருத்தும் இதுவே
Delete23rd
ReplyDeleteமுழுவதுமாக ஒரு கதையைப் படிப்பது என்பது என்னை போன்றவர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியைத் தருகிறது.
ReplyDeleteபார்க்கிறதுக்கு...குண்டு புக்கு
ReplyDeleteபடிக்கிறதுக்கு ஒல்லி புக்கு..
ஆக மொத்தம் ரெண்டு புக்கு..
:)
It is better to have all in one issue rather than series in month
ReplyDeleteசார் முன்னோருமுறை எனது suggestionக்கு தங்கள் பதில் கீழே.
ReplyDelete>>>>லார்கோ ராஜ்10 July 2022 at 07:52:00 GMT+5:30
சார், August க்கு வேறொரு மாதத்திற்குரிய Tex single ஆல்பத்தை மாற்றி வெளியிடலாமே ?
இந்த மாதம் மற்ற heavy hitters இருப்பதால் readers wont miss out anything , அதே சமயம் அந்த மாத வாசிறப்பிற்கு வலு சேர்க்குமே?<<<<
>>>>Lion Comics10 July 2022 at 08:23:00 GMT+5:30
சிங்கிள் ஆல்பங்களில் எஞ்சியிருப்பது ஒரேயொரு இளம் டெக்ஸ் சாகசம் மட்டுமே நண்பரே & அதுவும் கதைவரிசைக்கேற்ப தீபாவளி மலரில் காத்துள்ள இளம் மெபிஸ்டோ சாகசத்துக்குப் பின்னானது ! So அதனை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு வர வாய்ப்பிராது !
Maybe ஆகஸ்டில் 'தல' முழுசாய் ஓய்வெடுக்கும் விதமாய்த் திட்டமிடலாம் - பார்க்கலாமே ! <<<<
இப்பொழுது single ஆல்பம் முந்தி வருவதால் வாசிப்பில் கஷ்டம்/கதையில் Jump இருக்குமா?
"நிழல்களின் ராஜ்ஜியத்தில்" ஒரிஜினலில் கொஞ்சம் missing என்பதை பணிக்கு எடுத்த பின்னே தான் நம்மாட்கள் கவனித்துள்ளனர் நண்பரே ! அக்கட இத்தாலியில் இது சம்மர் விடுமுறை வேளை என்பதால் மிகக் குறைச்சலான ஆட்களுடன் இயங்கி வருகிறார்கள் ! So குறையும் அந்த file களைக் கோரிட இது சுகப்படும் தருணம் அல்ல என்பதால் எஞ்சியுள்ள ஒரே டெக்ஸ் (இளம் டெக்ஸ்) கதையைக் களமிறக்க வேண்டிப் போச்சு !
Delete
Delete//இப்பொழுது single ஆல்பம் முந்தி வருவதால் வாசிப்பில் கஷ்டம்/கதையில் Jump இருக்குமா?//
Nopes sir...இவற்றினிடையே தொடர்பே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன் ! கதாசிரியர்களே வெவ்வேறாய் உள்ளனர் !
நோ Problem சார். Just realized தீபாவளி ஸ்பெஷல் is not far away.
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDelete//கார்த்திக் : டப்பிக்குள் இவற்றையும் சேர்த்துக்க reminder !!//
கடந்த வாரமே கட்டியாச்சு!!! டப்பி எண் 42 :)
//இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் - மாதமொரு 64 பக்க இதழ்//
நிச்சயமாக செய்யலாம் சார். மாதா மாதம் 64, 64 பக்கங்களாக பிரிண்ட் போட்டு தனித்தனியே வைத்துக் கொள்ளுங்கள், நான்காவது மாதம் மொத்த பக்கங்களையும் பைண்டு செய்து எங்களுக்கு ஒரே புக்காக அனுப்பி விடுங்கள்! :)
😂🤣
Deleteஇது நல்லா இருக்கே..
Deleteஹா ஹா!! நமக்கேற்ற அட்டகாசமான ஐடியா கார்த்திக்!! :)))))
Deleteசமீப காலமாக இருள் பின்ணணியில் டெக்ஸ் அட்டைப்படங்கள் டார்க்காக அமைய..சொர்க்கத்தின் சாத்தான்கள் பளீர் அட்டைப்படம் மனதில் டக்கென இடம்பிடிக்கிறது.
ReplyDeleteMoreover, I still feel Comanche would have succeeded if it followed Durango's pattern (3 Albums in one shot). So only kundu book vennum sir. No single albums.
ReplyDeleteட்யுராங்கோ சிங்கிளாய் வந்திருப்பினும் சாதித்திருப்பார் ; கமான்சே தொகுப்பாய் களம்கண்டிருப்பினும் ஜெரெமியாவுக்குத் துணையாகத் தானிருந்திருப்பார் ! நிஜம் இதுவே நண்பரே !
Deleteசிக்கல் - கதை சொன்ன பாணியினில் ! So எவ்விதம் வாசித்திருப்பினும் அந்தக் குறைபாடு காணாது போயிராது !
Fair Enough
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete// செவ்வாயன்று டெஸ்பாட்ச் செய்திடும் பொருட்டு நம்மாட்கள் பரபரப்பாய் இயங்கி வரும் வேளைதனில், //
ReplyDeleteநல்ல தகவல் தான்,அதே நேரத்தில் புதன் விநாயகர் சதுர்த்தி ஆயிற்றே, கூரியர் அலுவலகங்கள் இயங்குமா சார் ?!
கொழுக்கட்டையோடு புக்ஸ் கொண்டு வருவார்கள் சார் !
Deleteகொழுக்கட்டையோடு வந்தால் நலம்,அடுத்தநாள் பல்போடு வந்தால்தான் கடுப்ஸ் ஆகும்...
Deleteவாவ்..இந்த மாதம் இளம் டெக்ஸ்ஸா சூப்பர் சார்..ஆவலுடன் காத்திருக்கிறேன்..
ReplyDelete// நிழல்களின் ராஜ்ஜியத்தில்" ஆண்டின் இறுதி (டெக்ஸ்) ஸ்லாட்டுக்கு இடம்பெயர்ந்திட, "சொர்க்கத்தில் சாத்தான்கள்" முந்திக் கொள்கிறது //
ReplyDeleteஅடடே,அருமை,அருமை...
வாவ்..இளம் டெக்ஸ் இந்த மாதம் வருகிறதா..
ReplyDeleteசூப்பர் சார் ..ஆவலுடன் வெயிட்டிங்..
இளம் டெக்ஸ் டைட்டில் பட்டையக் கிளப்புது,விற்பனையில் வழக்கம்போல் அதிரிபுதிரியாகத்தான் இருக்கும்...
ReplyDelete// அப்புறம் நமது YEAR END Specials முன்பதிவுகள் செம விறு விறுப்பாய்ப் பயணித்து வருகின்றன ! //
ReplyDeleteசிறப்பான தகவல்...
// செம breezy read என்பதில் ஐயங்களே கிடையாது ! //
ReplyDeleteநேர்கோட்டில் தடதடக்கும் இத்தாலி எக்ஸ்பிரஸ்...
// இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ? //
ReplyDeleteகுண்டு புக்கிற்கே எனது ஆதரவு சார்,எனினும் அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன,சாதக,பாதகங்கள் என்ன என்பது குறித்து தங்களுக்கே வெளிச்சம்...
ஆகையால் 2023 இல் மாதம் ஒரு இளம் டெக்ஸ் என்பது வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே...
அல்லது மாற்று வாய்ப்புகள் இருப்பின் அதுகுறித்து பரிசீலியுங்கள் சார்,3 மாதத்திற்கு ஒருமுறை 4 அல்லது 5 இளம்டெக்ஸ் குண்டு புத்தகங்களாக...!!!(குண்டுபுக் என்றாலே அது வேற லெவல்தான்...
நேர்கோட்டு கதைகளாக இருப்பதால் தொடர்ச்சியில் பெரிய விடுதல் ஏதும் இருக்க வாய்ப்பில்லைதான்,எப்படி இருப்பினும் வரவேண்டும் என்பது முக்கியம்,மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் சார்...
அதே நேரத்தில் இந்த வருடத்தில் 13 கதைகளை தொடும் நாம்,அடுத்த வருடம் 12 கதைகள் போட்டாலெ மொத்தம் 25 கதைகளைத்தான் நிறைவு செய்திருப்போம்,இத்தாலி எக்ஸ்பிரஸ் கிட்டத்தட்ட 60 கதைகள் என தடதடத்திருக்கும்...
மூச்சிரைக்க நாம் பின்னே ஓடவேண்டும் சார்,எனது ஆசை என்னவெனில் இயன்றால் இளம் டெக்ஸ் தனித் தடத்தை தொடர்ச்சியாக நாம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்தால் என்ன சார் ?!
விற்பனையும் சிறக்கும்,மாதம் 40/- என்றாலும் ஆண்டிற்கு 500 /- க்குள் பட்ஜெட்டில் 12 இதழ்கள் கவர் செய்திடலாமே...!!!
கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைக்கிறேன் சார்...!!!
@ ALL :
ReplyDeleteஅப்புறம் இன்னொரு தகவலுமே guys :
உலகப் பிரசித்தி பெற்ற ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடரினைத் தமிழில் போட என்றைக்கேனும் முடிகிறதோ - இல்லையோ, அவர்களின் ஆங்கில இதழ்களின் full set நம்மிடம் இப்போது விற்பனைக்கு உள்ளது !
மொத்தம் 34 புக்ஸ் கொண்ட இந்தத் தொடர் நமது ஆன்லைன் ஸ்டோர்களில் லிஸ்டிங் ஆகியுள்ளது ! ரொம்பவே competitive விலைகளில் உள்ள இந்த இதழ்களை முயற்சித்துப் பார்க்கலாமே ?
ஆம்னிபஸ்களாக வாங்கி வைத்திருக்கிறேன் சார்..!
Deleteஆஸ்டெரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் ஒரு அற்புதமான தொடர் நண்பர்களே.!
50 BCயின் ரோமனிய சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்து விட்டோமானால் அவ்வளவு எளிதில் வெளியேற முடியாது.. அப்படி கட்டிப்போட்டுவிடும்..!!
வாங்கிப் பயணடைவீர்...😍😍😍😍..!
ReplyDelete///சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ? ///
என்ன சார் கேட்டீங்க...பிரிச்சு பிரிச்சு போடலாமாவா ...அதுவும் இளம் டெக்ஸை...இந்த கேள்வியை எப்படி சார் உங்களால கேக்க முடிஞ்சது..போராட்ட குழுவை காணவில்லை என்பதாலா ..இது மட்டும் தாங்கள் செயல்படுத்த முயற்சிகள் செய்தால் எங்கள் போராட்டத்திற்கு நீங்களே மண்ணெண்ணய் ஊற்றி வளர்ப்பதற்கு சமமாகி விடும் சார்..
சாக்ரதை சாக்ரதை சாக்ரதை
---தலைவர், போராட்டகுழு!
(தலைவர் நெட் இல்லாத இடத்தில் இருப்பதால் அவர் கமெண்ட் ஆசிரியர் சாருக்கு....)
5-6 பாகங்கள் வரையிலான கதைகளை, தொடர் மாதங்களில் வெளியிடுவதில் தவறில்லை.
ReplyDeleteடெக்ஸ் கதைகளை பொறுத்த வரையில், முடிவுகள் பெரும்பாலும் வெளிச்சம். எனவே, ஒரே மூச்சில் போட்டு முடிப்பது உத்தமம்...
அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஇளம் டெக்ஸ் தனிதடத்தில் நாமும் தொடரலாம்.
// தற்போது இத்தாலியில் வெளியாகியுள்ள இளம் டெக்ஸ் ஆல்பத்தின் நம்பர் 47 ! //
ReplyDeleteஅவங்க பாட்டுக்கு போய்கினே இருக்காங்களே...
ஹும்,பெருமூச்சுதான் விடனும் போல...!!!
//மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ?//
ReplyDeletePlease Go Ahead, Sir...It is easier for my (our) reading.
Fact1: தனித்தனி இதழாய் வரும்போது ஒரிஜினல் அட்டைப்படங்களும் எங்களுக்கு போனசாக கிடைக்குமே.
DeleteFact 2: It is easy to read and handle.
DeleteCuriousity. உயிரைத்தேடி இன்று 180பக்க தொகுப்பாய் வருகையில் மெத்த மகிழ்ச்சியே... ஆனால் வெள்ளிக்கிழமை தோறும் வாரமலரில் ஒரு வருடம் முழுவதும் வெளிவந்த அந்த தொடர் கதை பள்ளிசெல்லுமுன் வீட்டில் ஏதேதோ சொல்லி அடம்பிடித்து தினமலர் வாங்கி பரபரப்பாய் படித்துவிட்ட வைரல் hype இன்று நினைக்கையிலும் பரவசம் தான். 30 வருடமாக இரத்தப்படலம் செய்திட்ட தாக்கம் சொல்லத்தேவையே இல்லை.
Deleteஅப்படியே ஆறுமாதம் சேர்த்து ஒரே முறை வெளியிட்டாலும், அதனையும் தனித்தனி புக்காகவே ஒரு கவரில் அடைத்து தாருங்கள். (4 கார்ட்டூன் ஸ்பெசல் வெளியிட்டது போல)
Delete//Lusettesofia: முகவர்களுக்கு (Even Readers too) பணச்சுமை இல்லாமை.//
DeleteVery very valid point.
குண்டு புக்காக டெக்ஸ் மட்டுமே வாங்கி படிக்கும் வாசகர்கள், டெக்ஸ் மற்ற புக் போன்ற விலையில் வெளியானால் மற்ற காமிக்ஸிம் வாங்கிட வழி கிடைக்கும். விற்பனையில் தேக்கமடையும் மற்ற காமிக்ஸ்கள் 2012,2013 வருடத்தினை போலவே மீண்டும் மற்ற ஹீரோ காமிக்ஸ் விற்பனையில் சூடுபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
Deleteஊஹூம்...ஆளில்லாத கடையிலே நீங்களும், நானும், இன்னும் கொஞ்சூண்டு நண்பர்களும் மட்டும் டீ ஆத்திக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது !
DeleteSo sad, Sir
Deleteஇளம் டெக்ஸ் கதைகளை தனித்தனியாக வெளியிட என ஆதரவு உண்டு.
Deleteபரணி சகோ, நீங்கள் சொன்னது போல் இது ஆசிரியர் முன்னெடுத்து முடிவு செய்யவேண்டிய ஒன்று.அ
Deleteஇளம் டெக்ஸ் கதைகளை தனித்தனியாக வெளியிட எனது ஆதரவு உண்டு
Delete64 பக்கமெல்லாம் எங்களுக்கு பத்தாது சார்!! மாதம் மாதம் (டெக்ஸ்) குண்டு புக்காகத்தான் வேண்டும்.
ReplyDeleteஇளம் டெக்ஸ் தனி தடத்தில் 5 +6 பாகங்களாக போடுங்கள்!! வழக்கமாக வரும் டெக்ஸ் கதைகள் அதுவும் வரட்டும் ஆகமொத்தம் டெக்ஸ்+இளம் டெக்ஸ் கண்டிப்பாக வரவேண்டும் அதுவும் குண்டாக 🥰
ReplyDelete+1
Deleteஆசிரியருக்கு இனிய மாலை வணக்கம்..
ReplyDeleteTex கதைகள் பிரித்து படிப்பது கொஞ்சம் கடினமானது...
வந்தேன்.
ReplyDeleteஎடிட்டர் சார் என்னைப்பொறுத்தவரை டெக்ஸ் இதழ்கள் தனித்தனியாக வருவது சுகப் படாது என்றே தோன்றுகிறது. வேண்டுமென்றால் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 250 பக்கங்கள் கொண்ட குண்டு போக்காக வெளியிடலாமே. B/W தானே வரப்போகிறது. வருடத்துக்கு மூன்று தொகுப்பாக வெளியிட்டால் இதன் விலை எவ்வளவாக இருக்கும் என்பதையும் கூறுங்கள் சார். அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூன்று கதைகளை தொகுப்பாக வெளியிடுவது தோதாக இருக்குமா என்பதையும் பரிசீலியுங்கள். இதற்கென்று தனி சந்தா கூட அறிவித்து விடலாம். இதில் எது உங்களுக்கு சுகப் படுகிறது என்பதையும் கூறுங்கள். அதேபோல் இதில் சாதக பாதகங்கள் என்ன என்பதையும் கூறுங்கள்.
ReplyDeleteசதாசிவம், வெள்ளியம்பாளையம்
+1
Deleteஇளம் டெக்ஸ் மாதம் தோறும் வருவதற்கு பரிபூரண ஆதரவை நல்குகிறேன் சார்..
ReplyDeleteஇது மட்டுமல்லாது நீங்கள் குறிப்பிட்ட அமெரிக்க சமகால கதைகளையும் வெளியிடலாம்.
எவ்வளவுதான் ஆராதிக்கப்படும் நாயகன் - தொடர் என்றாலும் நெடிய கதைகள் ஒரு ஆயாசத்தை கொணரத்தான் செய்கின்றன.
குண்டுபுக் மாடலர மன மகிழ்வை கொண்டு வந்தாலும் லேசான அலுப்பினை ஏற்படுத்துவதை FFS சமயத்தில் உணர முடிந்தது.
தனித் தனி அட்டைகள், விரைவான வாசிப்பு , ஒரு மாத இடைவெளி மட்டுமே , முகவர்களுக்கு பணச்சுமை இல்லாமை, சந்தா வரம்புக்குள் கொண்டு வரும் சாத்தியம் என பல சாதக அம்சங்கள் உள்ள இந்த ஃபார்மட்டுக்கு வாசகர்கள் பழகுவது எல்லா தரப்பினருக்கும் பலனைத் தர வல்லதாகத் தோன்றுகிறது.
// இது மட்டுமல்லாது நீங்கள் குறிப்பிட்ட அமெரிக்க சமகால கதைகளையும் வெளியிடலாம். // Double ok
Deleteமெஜாரிட்டிகளே கவிழும் நாட்களிவை சார் ; நம் அணியோ செம மைனாரிட்டியில் ! ஊஹூம் .... !
Deleteடெக்ஸ் அட்டை. செம்ம
ReplyDeleteஹஹஹஹ....செம ரகளையான பதிவு சார்....நா பதிவ ரசிச்சாலும் இப்படியெல்லாம் உங்கள் தவறா நினைக்க மாட்டேன்.....எனது எல்லா கால ஆசிரியரும் தாங்களே....சார் இம்மாத அட்டை பட்டய கிளப்புது.....என்னா கலரு...என்னா ஸ்டில்லு...இது வரை வந்ததிலேயே...வரப்போவதிலேயே டாப்புங்ற சாதாரண வரிய இதுக்கும் போடக் கூடாதுன்னு நெனச்சு தேடுனாலும் முடியல....சத்தியமா இது மிஞ்ச எவ்வட்டைகளாலும் இயலாது....சமந்தா அட்டைன்னாலும் கூட....சூப்பர் சார்.....இளம் டெக்ஸ்னாலே நம்ம உற்சாக மீட்டர்ல சார்ஜ் ஏறிக்கும்....இம்முறை இன்ப அதிர்ச்சியா கூடுதல் சார்ஜ்....இனி சார்ஜ் தீரவே தீராதோ...
ReplyDeleteஇளம் டெக்ஸ் கதையை பாகங்களாக வெளியிட எனது ஆதரவு எப்போதும் உண்டு. இது ஆர்வத்தையும் எகிற வைக்கும். படிக்க எளிதாக இருக்கும்.
ReplyDeleteஇளம் டெக்ஸ் தனித் தனி இதழாக ஒரே மாதத்தில் 5 அல்லது 6 இதழ்களாக கொடுத்து விடுங்கள் சார் ஒவ்வொரு அட்டைப்படம் ஸ்பெஷலாக கிடைக்கும் அவர்கள் தொடர்ந்து உள்ள 47 பாகம் முடிந்ததும் அந்தந்த மாதத்தில் ஒன்றொன்று வெளியிடலாம் சார்.
ReplyDeleteமாதம் 5 அல்லது 6 இதழ்களாகவா நண்பரே ? சர்தான் !!
Delete////தொகுப்புகளாய் ; குண்டு புக்குகளாய் ; இணைந்த ஆல்பங்களாய் மாத்திரமே வாசிப்பதென்ற அந்த அவாவினில் மாற்றங்களைக் காணோமே - why ? ////
ReplyDeleteஎடிட்டர் சார்..
* தனித்தனி பாகங்களாய் வந்தால் அதை வெளியீடு வாரியாக அடுக்கி வைப்பது ரொம்பவே சிரமம். பேஸிகல்லி ஐ யாம் எ சோம்பேரி!
* நடுவிலே ஒரு புக் காணாமல் போனாலும் "மொத்தத் தொடரையும் இனிமே படிக்க முடியாமப்போச்சே!" என்பதான ஒரு ஃபீலிங் எட்டிப்பார்க்கும்! பிகாஸ், ஐ யாம் எ டென்ஷன் பார்ட்டி டூ!
* 5வது பாகத்தைப் படிக்கும்போது 4 மாதங்களுக்கு முன் படித்த1வது பாகச் சம்பவங்கள் மறந்துவிட வாய்ப்புகள் அதிகம்! பிகாஸ், ஐ ஹேவ் எ பூவர் மெமரி டூ!
* ஒவ்வொரு மாசமும் "அச்சச்சோ! பரபரப்பான தருணத்தில படக்குனு 'தொடரும்' போட்டுட்டாங்களே!!"ன்னு கிடந்து தவிக்க முடியாது. பிகாஸ்.. ஐ யாம் எ ரெஸ்ட்லெஸ் பெர்ஸன் டூ!
இவ்வளவு பிரச்சினைகளை நான் எதிர்கொள்ளவேண்டியிருப்பதால் 'பிச்சு பிச்சு கதைகள்' முடிந்தவரை வேண்டாம் என்ற வாதத்தை முன்வைக்கிறேன்!
செயலரின் கூற்றுக்கு கன்னாபின்னாவென்று ஆதரவு அளிக்கிறேன்...
Deleteஎது - செயலருக்கு ஞாபக மறதி சாஸ்தி ; மன்சன் ஒரு டென்க்ஷன் பார்ட்டிங்கிறதையா ?
Deleteபாத்தீங்களா தலீவரே.. கிடைக்கிற கேப்லயெல்லாம் நம் சங்கத்துக்கு வெடி வைப்பதிலேயே குறியா இருக்கார் - எதிரணித்தலைவர்!!
Deleteஅது வேணா உண்மதான் செயலரே...அதுக்கு காரணம் நாம என்ன போராட்டம் பண்ணினோம் என நாமளே மறந்து போனதால் தான் செயலரே..:-(
Deleteசார் எதுக்கு தான் துக்கடா போடனும்னு துடிக்கிறியலோ....
ReplyDeleteபேசாம ஒரு வருட இளம் டெக்ச அப்படியே ஹார்டு பௌண்டுல ஜனவரி சென்னை திருவிழாவுக்கு குண்டா கட்டி விட்டா வேணாம்னா சொல்லப் போறோம்......வருடம் முழுதும் வராட்டியும் அடுத்த வருடம் உங்க தலைல ஆப்பிளா விழுந்து 75ன் ஈர்ப்பு விசை இத்திசையிலும் வலுக்கட்டுமே....டெக்ஸ் 75க்காக..டெக்சுக்கும் ஒத்த லாபம்...எங்களுக்கும் பெத்த லாபம்
அமேரிக்கா படைப்புகள வேணா துக்கடா போடுங்க....பிடிக்கான்னு பாப்பம்
Deleteநண்பர் கிரியின் விளம்பரம் அட்டகாசம்...அந்த விளம்பரத்த ஒரு தாள்ல முன்பதிவர்களுக்கு தந்தா அட்டகாசமா இருக்குமே
ReplyDeleteவழுவழு தாள்ல
Deleteஆஸ்ட்ரிக்ச பாத்து வாங்கிட்டீங்க போல ....அதான் இந்த உற்சாகப் பதிவோன்னு பாத்தா....
ReplyDelete***சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ?****
ReplyDeleteபாயாச குண்டாவ நானும் ரெடி பண்ண போறேன்..
ரிப்பு, மாண்ட்ரேக், காரிகன் எல்லாம் நிறைய கதைகளுடன் தொகுப்பாக வந்து கொண்டிருக்க, டெக்ஸின் ஒரு கதையை நான்கு மாதத்திற்கு, அதிலும் 75 ஆம் ஆண்டில் பிரிக்க எப்படி சார் நினைக்கலாம். மரியாதை கலந்த கண்டனங்கள். மாதம் ஒரு டெக்ஸ் வேண்டும் அது தொகுப்பாக தான், தொடராக அல்ல.
ReplyDeleteபதிவின் சாரத்தை நீங்கள் புரிந்தாய் எனக்குத் தோணலை சார் ; இந்தப் "பிரித்து வெளியிடுவோமா ?" என்ற கேள்வி apply ஆவதே இளம் டெக்ஸுக்கு மாத்திரமே ! So ரெகுலர் டெக்ஸ் இதழ்கள் அதுபாட்டுக்கு வழக்கம் போல வெளிவந்து கொண்டேயிருக்கும். So அந்த மாமூலான இதழ்களின் இடத்தினில் இந்த 64 பக்க குட்டி ஆல்பங்களை வெளியிடவிருப்பதாய் பொருள்படுத்திக் கொள்ளத் தேவையில்லையே ?!
Deleteஇளம் டெக்ஸ்'ஐ பிரிக்க வேண்டாம் சார். இப்போது போலவே இருக்கட்டும். வேறு புது தொடரை இப்படி மாதம் ஒன்று என முயற்ச்சி செய்யலாம். டெக்ஸின் விற்பனை கியாரண்டி புதுசுக்கு இருக்குமா என்பது ஒரு பெரிய ?
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDelete///சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ?///
ReplyDeleteவேண்டாம் சார்... வேண்டவே வேண்டாம்..!
குண்டு குண்டாய் இருப்பதுதான் டெக்ஸ் கதைகளுக்கே கெத்து.!
Sir for Young Tex what we can do is wait for a particular story arc to end and club all the parts into a book. Suppose 48 books are already out you may club 4 * 1 and publish them - Hee Hee Hee :-)
ReplyDelete// இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? //
ReplyDeleteடபுள் ஓகே.
நித்தியமற்ற இவ்வாழ்வின் நிதர்சனம் அறிந்ததாலோ என்னவோ தொடரைவிட முழு கதையாக படிக்கவே எனது விருப்பம் சார். அந்நாட்களில் எப்படித்தான் பொன்னியின் செல்வனை வருடக்கணக்கில் படித்தார்களோ என்று நினைத்து நினைத்து வியந்ததுண்டு.. மற்றபடி உங்கள் முயற்சிகளுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.
ReplyDeleteதனி இளம் டெக்ஸ் தொடர்
ReplyDeleteசெய்யலாம் என்பது எனது விருப்பம்
அமெரிக்க தொடரினை முயற்சி செய்யலாம்
ReplyDelete101வது
ReplyDeleteநம்ம இளம் டெக்ஸ் கிட்ட அதிரடி, தெனாவெட்டு, துள்ளல் எல்லாமே அதிகம்
ReplyDeleteநம்மளையும் அவருடைய இளமை சாகஸத்துக்கு இழுத்துட்டு பொய் விடுவார்
அடுத்த மாதம் அவர் வருவதில் மகிழ்ச்சி
மாதம் ஒரு இளம் டெக்ஸ் ஓ. கே சார். அடுத்தமாதம் டெக்ஸ் உண்டு என்பதே சந்தோசம். அதிலும் தொடராக என்பது மகிழ்ச்சியானவிசயம் டெக்ஸ் 75வருடம் முழுதும் கொண்டாட்டம். மாதம். வருடம், முழுதும் அலசல். இதுபோக ரெகுலர் டெக்ஸ் தனியாக. இதுவல்லவாடெக்ஸ் 75 கொண்டாட்டம். ஒரு உற்சாகதம்ஸ் அப். ஓக்கேசார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதீபாவளிக்கு புதுப்புத்தகங்களோடு கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அக்டோபர் 24.தீபாவளி. நவம்பர் புத்தகங்கள் ஒருவாரம் முன்பாகவே கிடைக்குமாங்கசார்அல்லது தீபாவளி ஸ்பெசல் டெக்ஸ் மட்டுமாவது தீபாவளிக்கு 2 நாட்கள் முன்பாகக் கிடைக்குமாங்கசார். இல்ல அக்டோபர் புத்தகங்கள 2வாரம் தள்ளி வச்சு தீபாவளியப்ப படிக்கிறமாதிரரி தற்றேன்னு ஏதாச்சும் வெடிகுண்டு வச்சிருக்கறீங்களாங்கசார். சொல்லுங்கசார் சொல்லுங்க. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதீபாவளி 24 ம் தேதி எனும் போது 20 தேதிவாக்கிலேயே ஆளாளுக்கு சொந்த ஊர்கள் நோக்கிய பயணங்களைத் துவக்கி விடுவார்கள் சார் ! So 18 தேதிக்கே டெஸ்பாட்ச் செய்ய வேண்டி வரும் ! வெறும் 17 நாள் இடைவெளியில் நவம்பர் இதழ்களை அவ்விதம் அனுப்பிடும் பட்சத்தில் முகவர்கள் நாக்குத் தொங்கிப் போவார்கள் சார் !
DeleteSo இம்முறை தீ.மலர். அக்டோபரிலேயே !
அட்வான்ஸ் தீபாவளியா அருமை...
Deleteவாரே வா. அக்டோபரில் இந்த முறை டெக்ஸ் தீபாவளி மலர், ஜாகோர், அப்படியே சிஸ்கோ வையும் இறக்கி விட்டீங்க என்றால் திருவிழா தான்.
Deleteஇளம் டெக்ஸ் - 1. டெக்ஸ் எல்லோருக்கும் பிடித்த "வெற்றி நாயகர்".
ReplyDelete2. இவரின் அனைத்து கதைகளும் தெறி ஹிட்.
3. விற்பனையில் சாதித்தவை.
4. ஆசிரியர் இப்போது எல்லாம் சொன்னதை செய்கிறார். மாதம் தவறாமல் காமிக்ஸ் நமக்கு தருகிறார்.
5. நமது கம்பேக் பிறகு அவருடன் இருந்த சோ.மா துரத்தி விட்டார்
இதற்கு முன்னர் நான் தனித்தனியாக சில கதைகளை வெளியிட வேண்டாம் என சொல்வதற்கு மேற்கூறிய 2-5 pointகளே காரணம். தற்போது இவைகள் எல்லாம் ஆசிரியர் சரிசெய்து விட்டார். எனவே இளம் டெக்ஸ் தனித்தனி கதைகளாக அடுத்த ஆண்டு வரட்டும்.
ஆசிரியர் இளம் டெக்ஸ் கதையை தனித்தனியாக தொடர்ந்து வெளியிட அனைத்து கோணங்களில் இருந்து யோசித்து அருமையான திட்டத்துடன் வந்து உள்ளார். எனவே ஆசிரியரின் இந்த முயற்சிக்கு நமது ஒத்துழைப்பை கொடுப்போமே.
1. தனித்தனியாக இளம் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதால் மேலும் பல புதிய வாசகர்கள் காமிக்ஸ் வட்டத்திற்குள் வருவார்கள். 2. நண்பர்கள் சொன்னது போல் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு அட்டைப்படம் என மொத்தம் 12 அட்டைப்படம்.3.ஈரோட்டில் இருந்து சேலம் செல்பவர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் செல்பவர்கள் தங்கள் பயணத்தின் போது கைகளில் ஏந்தி தூங்காமல் படித்து செல்லலாம். இதன் மூலம் நல்ல விளம்பரம் கிடைக்கும். ஈரோடு இளவரசருக்கு இதன் மூலம் மேலும் பல பஸ் தோழிகள் கிடைக்கும் :-) 4. ரம்மிக்கு மாதம் மாதம் பாயசம் போடும் வேலையை கொடுக்கலாம் :-)
எனவே இளம் டெக்ஸ் கதைகள் மட்டும் அடுத்த வருடம் முதல் மாதம் மாதம் வரட்டும்.
+9
Deleteபுது வாசகர்கள் இளம் டெக்ஸ் தொடராக வாங்கும் சமயம் என்னப்பா கதைல க்ளைமேக்ஸே இல்லை என அச்சப்படும் நிலைப்படும் ஏற்படலாம் என்றும் ஒரு கதைக்கு நாலு மாசம் நாலு புக்கு வாங்கனுமா என நினைக்கும் சூழலும் வரலாம் என்பதால் இதனை உடனடியாக மறுதலிக்கிறேன்..
Delete// புது வாசகர்கள் இளம் டெக்ஸ் தொடராக வாங்கும் சமயம் என்னப்பா கதைல க்ளைமேக்ஸே இல்லை என அச்சப்படும் நிலைப்படும் ஏற்படலாம் என்றும் ஒரு கதைக்கு நாலு மாசம் நாலு புக்கு வாங்கனுமா என நினைக்கும் //
Deleteதற்போது உள்ள நீங்களும் நானும் இல்லை மற்றவர்களும் இப்படி இருந்தோமா பரணி:-)
குண்டு புத்தகம் எனும் போது பட்ஜெட் அதிகம் என புதிய வாசகர்கள் வாங்காமல் போக வாய்ப்புகள் அதிகம் பரணி:-)
Totally agree with you bro.
Deleteடெக்ஸ் கதைகளின் விற்பனைக்கு குண்டு புக்ஸ்கள்,ஹார்ட் பைண்டிங்குகள் எப்போதும் தடையாக இருந்ததில்லை PFB,அவை விற்பனைக்கு தூண்டுகோலாகவே இருந்துள்ளன...
Deleteஇளம் டெக்ஸ் தனித்தனியாக வருவது விற்பனைக்கு "செம மாஸ்" தூண்டு கோலாக இருக்கும் என்பதே என எண்ணம் அறிவரசு.
Deleteநல்லது நடந்தால் மகிழ்ச்சி...
Delete2023 இல் இளம் டெக்ஸ் கதைகளை மாதமொரு ஸ்லாட்டில் விட்டு அதன் சாதகங்கள் அதிகமாய் இருப்பின் அடுத்த ஆண்டுகளிலும் அதையே தொடரலாம்,பாதகங்கள் அதிகமாய் இருப்பின் தொடரும் ஆண்டுகளில் குண்டு புக்ஸாக தொடரலாம்,இந்த முயற்சியை எடுத்துப் பார்க்க இயலுமா சார் ?!
DeleteNopes sir...நண்பர்களின் "பல்ஸ் அறியும் படலம்" சொல்லும் செய்தி ஸ்பஷ்டமாய் உள்ளதெனும் போது நான்பாட்டுக்கு வேறொரு ஆவர்த்தனம் செய்ய முயன்றால் சொதப்பலிலேயே முடியும் !
Delete30 நாட்களில் (பழைய) குஷ்பூ இட்லி சுடுவது எப்படி ? என்ற புக்குக்கு ஆர்டர் போட்டிருக்கிறேன் !
////(பழைய) குஷ்பூ இட்லி சுடுவது எப்படி ///
Deleteசார்.. ஒரு நிமிசம் லேட்டாத்தான் புரிஞ்சது! மனக்கண்ணில் பிக்சர் புலப்பட்டதுமே குபீர்னு சிரிச்சுட்டேன்!! :)))))))
ஹா,ஹா...
Deleteஅப்பாடா நன்றி சார் ..நன்றி...
Deleteஅப்புறம் விஜயன் சார் இளம் டெக்ஸ் கதையை தனித்தனியாக வெளியிட சரியான திட்டமிட்டு உள்ளீர்கள். . புதிய கதை தொடர் அல்லது புதிய நாயகன் என்றால் எங்களின் கருத்துக்களை கேட்கலாம். ஆனால் இளம் டெக்ஸ் அனைவரும் நன்றாக தெரிந்த பிடித்தமான நாயகர் எனவே இதற்கு எங்களின் opinion கேட்கத் தேவையில்லை. அடுத்த வருடம் முதல் இளம் டெக்ஸ் கதைகளை தனித்தனியாக வெளியிடுங்கள்.
ReplyDeleteஒரு விறுவிறுப்பான தொடரை காத்திருந்து ஒவ்வொரு மாதமும் படிக்கும் சுகமே தனி.
Delete/ஒரு விறுவிறுப்பான தொடரை காத்திருந்து ஒவ்வொரு மாதமும் படிக்கும் சுகமே தனி./
Delete+9
முதுகு நிறைய எண்ணெய்யை தடவிக்கினு மு.ச.விலோ ; மூ .ச.விலோ காத்திருக்கும் பயமுமே தனி சார் !
Deleteமேலேயுள்ள பின்னூட்டங்களை பார்க்கலியா ?
அட போங்க சார் நாம பார்க்காத மூ.ச வா. :-) எல்லா ஊர் மூ.ச நமக்கு அத்துப்படி இப்போது எல்லாம்:-)
Deleteவெளியிலேர்ந்து பாக்றதும், உள்ளாற இருந்து பாக்றதும் இரு முற்றிலும் வேறான மேட்டர்கள் சார் !
Deleteஉங்கள் வலி புரிகிறது சார்:-(
Delete///வெளியிலேர்ந்து பாக்றதும், உள்ளாற இருந்து பாக்றதும் இரு முற்றிலும் வேறான மேட்டர்கள் சார் !//
Delete----உங்க வலி உணர இயல்கிறதுங் சார்... வழக்கம் போல மக்கள் தீரப்பையே செயல்படுத்துவதை வரவேற்கிறேன் சார்
Hi..
ReplyDeleteமுழு டெக்ஸ் கதைகளே படித்து முடித்த பின் அடுத்த மாதத்திற்குள் நினைவில் நிற்பது கடினம். இதில் இளம் டெக்ஸ் கதைகள் நான்கு மாதம் தொடர்ந்தால் நினைவு கூர்வதும் சிரமம்/மீண்டும் முதலில் இருந்து படிப்பதற்கும் ஒரு வித அயர்ச்சி ஏற்படும் என்னை போன்றோர்க்கு. டெக்ஸ்/இளம் டெக்ஸ் கதைகள் படிக்கும் போது இலகுவாக இருந்தாலும், காத்திருந்து படிப்பதற்கு ஏற்புடையது அல்ல. நான்கு கதைகளையும் சேர்த்து குண்டு புக்காகவோ, தனித்தனியாகவோ மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடலாம்.
ReplyDeleteஇல்லை குறைந்த விலையில் டெக்ஸ் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது மினி டெக்ஸ், மாதம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை சேர்த்து வண்ணத்திலேயே கொடுக்கலாம் சிக்கென்ற சைஸில்/விலையில்.
பிரிக்க வேண்டாம், பிரிக்கவே வேண்டாம் சார்.
எஸ் ...நோ பிரிப்பு
Delete// மினி டெக்ஸ், மாதம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை சேர்த்து வண்ணத்திலேயே கொடுக்கலாம் சிக்கென்ற சைஸில்/விலையில். //
Delete"ஒன்று" அல்லது இரண்டு என்றால் தனியாக வெளியிட சொல்லிகிறீர்களா?
வண்ணத்தில் எனும் போது விலை அதிகமாக வாய்ப்புகள் அதிகம் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
அவர் குறிப்பிடுவது "நிலவொளியில் நரபலி"சைசில் 32 பக்க கலர் டெக்ஸ் குட்டிக் கதைகளை !
Deleteஓகே சார். புரிந்து கொண்டேன்.
Deleteஅந்தக்காலத்திலேயே நம்மாட்களெல்லாம் பிறக்காமல் போய்ட்டாங்களேன்னு இப்போ கவலையா இருக்கு சார் ; திருப்பதிலாம் இன்னமுமே நம்மகிட்டேயே இருந்திருக்கும் !
Delete///திருப்பதிலாம் இன்னமுமே நம்மகிட்டேயே இருந்திருக்கும் !///
Deleteஹா ஹா ஹா!! வயசாக வயசாக உங்க ஹியூமர் சென்ஸ் எகிறிட்டே போகுதுங்க எடிட்டர் சார்! :)))))
(சந்தடிசாக்குல உங்களை வயசானவர்னு சொல்லியிருக்கறதையும் நீங்க கவனிக்கணும் ஹிஹி!)
மதராஸ் மாகாணத்தின் வரலாறு தெரிஞ்சிருக்கிறவங்க எங்க பாட்டையா வயசா தான் இருக்கணும் என்பதையுமே கவனிச்சேனுங்கோ !
Delete// அந்தக்காலத்திலேயே நம்மாட்களெல்லாம் பிறக்காமல் போய்ட்டாங்களேன்னு இப்போ கவலையா இருக்கு சார் ; திருப்பதிலாம் இன்னமுமே நம்மகிட்டேயே இருந்திருக்கும் ! // பாகிஸ்தானும் சார்.
Delete////பாகிஸ்தானும் சார்.///
Deleteநம்மாட்கள் எல்லாம் சில கோடி வருடங்களுக்கு முன் பிறந்திருந்தாங்கன்னா கண்டங்களே பிரிஞ்சிருக்காது. பிரியவும் விட்டிருக்க மாட்டாங்க! ஜஸ்ட் மிஸ்!!
// முழு டெக்ஸ் கதைகளே படித்து முடித்த பின் அடுத்த மாதத்திற்குள் நினைவில் நிற்பது கடினம். // Fact fact
Delete////மதராஸ் மாகாணத்தின் வரலாறு தெரிஞ்சிருக்கிறவங்க எங்க பாட்டையா வயசா தான் இருக்கணும் என்பதையுமே கவனிச்சேனுங்கோ///
Deleteஹா...ஹா..ஹா...
புதிய வாசகர்களை டெக்ஸ் பக்கம் இழுக்க தனி இளம் டெக்ஸ் உதவியாக இருப்பார்
ReplyDeleteஇளம் டெக்ஸ் அதிரடி மன்னன் என்பதால் ஹிட்டாக வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம்
அடுத்தது என்ன என்று தெரிந்த கொள்ளும் ஆவலில் அவர்களும் வாங்க முனையலாம்
ஆங்.. பிச்சு பிச்சு போடுற டென்ஷன்ல சொல்ல மறந்துட்டேன்!
ReplyDelete'சொர்க்கத்தில் சாத்தான்கள்' அட்டைப்படம் (முன், பின் - இரண்டுமே) பட்டையைக் கிளப்புகிறது!
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்படும் மரக்கட்டைகளின் மீது பேலன்ஸ் பண்ணி நிற்பதே பெரும்பாடு! இதிலே சுட்டுகிட்டே வேற நிக்கிறாரு. அதுவும் ரெண்டு கையாலயும்!!
இதெல்லாம் இளம் தல'க்கு மட்டுமே சாத்தியம்!!
நேர்த்தியான, ரொம்பவே ஸ்டைலிஷான இந்த அட்டைப்படத்துக்காகவே வித்துத் தீர்ந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன்!
🤟🤟🤟🤟🤟
Deleteகுண்டு புக்தான் என்னுடைய விருப்பமும்.
ReplyDeleteகுண்டு புக் கேட்பவர்களுக்கு வருடத்துக்கு மூன்று புக் கொடுத்து விடுங்கள்.
மாதாமாதம் வேண்டுமென்பவர்களுக்கு அதையே பன்னிரண்டாக பிரித்து கொடுத்து விடுங்கள்.
தொகுப்புக்கே எனது ஓட்டு.
ReplyDeleteமாத மாதம் விரும்புவர்கள் விரும்புபவர்கள் அப்படியே வாங்கட்டும். நாங்கள் தொகுப்பாகவே வாங்கி கொள்கிறோம்.
ReplyDeleteகடல் போல் டெக்ஸ் வெளியிட வேண்டியவை குவிந்து கிடக்க, பூந்தியா லட்டு லட்டா குடுக்குறது எது சுகப்படும் சார்.
ReplyDeleteநல்லா இருக்கிற ஒரே சுறுசுறுப்பே டெக்ஸ் தா. அத கிறுகிறுப்பா மாத்தீறாதீங்க சார்.
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteநான் பல வருடங்களாக, கேட்கும் கோரிக்கை ஒன்றுதான். வெளிநாட்டு வெளியீடுகளாக இணையாக, அதே சைஸ், அதே பக்கங்கள், மற்றும் பாகம் பாகமாக, மாதம் தோறும் வெளிவரும்படி ஒரு தொடராவது வெளியிடுங்கள் என்று. எந்த வித சிறப்பு மாதங்களிலும், அது இரட்டிப்பு சேர்ந்த இதழாகவோ, இல்லை திடீரென்று ஸ்பெஷல் இதழ் ஒன்றில் அங்கமாகவோ வெளியிடாமல் பேண வேண்டும். இது வெறும் ஒரு சேகரிப்பு, மற்றும் அடுக்கி பார்க்கும் அழகுக்கும் மட்டுமல்ல. அதையும் தாண்டி மனரீதியாக ஒரு தொடரின் மீதான பிடிப்பினை அதிகம் செய்யும் முறை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் எழுத்து கூட்டி படித்த காலத்திற்கும் முன்பே பல்வேறு நாட்டு காமிக்ஸ்களை படித்தவர் நீங்கள். ஆனால், மேற்சொன்ன எனது வேண்டுகேளை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அடுத்த பத்திகளை எழுதுகிறேன்.
ஐரோப்போ காமிக்ஸ் உலகம் தனி. அவர்கள் கதைகளை தாண்டி ஓவியங்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள். சுமாரான கதையில் கூட அட்டகாசமான ஓவியங்களை பார்ப்பது அங்கு மிகவும் சகஜம். எனவே, அங்கு ஒரு ஆல்பத்திற்கான சித்திரங்களை தீட்ட 1 வருட காலம் அவகாசம் எடுக்கும் நேர்த்தியான ஓவியர்களே அதிகம். அப்படி இருக்கையில், அங்கு ஒரு தொடர் 10/15/20 வருடங்கள் இழுப்பது சாதாரண போக்கே. அதை நாம் குண்டு புக் என்ற தொகுப்பில் வெளியிடுவதில் எனக்கு எந்த தவறாகவும் தெரியவில்லை.
ஆனால், இத்தாலியில் பொனெல்லி போன்ற நிறுவனங்கள், டெக்ஸ் வில்லர், டயபாலிக், ஜகோர், என்ற கதாபாத்த்திரங்களை ஒரு பிரம்மாண்ட மேடைகளுக்கு எடுத்து செல்ல முடிந்தது, படிபடியாக அவைகளை மாதா மாதம் சீறான இடைவெளியில் வெளியிட்டு, தொடராக அதை வாசகர்களை அணுக வைத்தது, சிறிது சிறிதாக அதை மக்கள் மனதில் ஐக்கியமாக்கி, வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகம் செய்தது என்பது நமக்கு சரித்திர பாடம். குண்டு புக், மெகா புக்கெல்லாம் அவைகளை ஒரு தரத்திற்கு உயர்த்திய பின்னே அவர்கள் முயன்றுள்ளார்கள், அதுவும் முன்வெளியிட்ட தொகுப்புகளாக, வாசித்த வாசகர்களுக்கே திரும்ப விற்கும் முறையாகவே, இல்லை அமெரிக்கா போன்ற தூரத்து தேசத்து கலெக்டர் ரசிகர்களை கவரவோ தான் செயல்படுத்த பட்டிருக்கிறது.
நாம் இப்போது இருக்கும் தமிழ் காமிக்ஸ் தளம் கிட்டதட்ட அதுவே. குண்டு புக் தான் வேண்டும் என்று குரல் எழுப்பும் ஒரு குழு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் அதற்கு மனதளவில் நம் வாசகர்களில் பெருமபான்மையோர் பழகிவிட்டார்கள். அதில் விந்தை என்னவென்றால், படிக்கவில்லை என்றாலும் வாங்கி அழகு பார்க்கும் கூட்டமே அதிகம்.
ஆனால், வாசிப்பு களங்கள் என்று எடுத்து கொண்டால், அந்த குழுவை தாண்டியும் இருக்கும் நபர்களை நாம் அரவணக்க இப்படி ஒரு மாதா மாதாம் சீரான இடைவெளியில் பாகங்களாக வெளிவர, ஒரு தொடர் கண்டிப்பாக வேண்டும். இளம் டெக்ஸ் அறிமுகமான போது நான் எதிர்பார்த்தது இந்த தனி தடத்தையே. டெக்ஸ் வில்லருக்கு போட்ட அந்த குண்டு புக் கலாச்சாரம் இதிலும் அண்டாமல், இதை ஒரு மாத வரிசையாக பார்க்க தான் ஆவலுடன் இருந்தேன். அப்படியே நீங்களும் யோசித்தபடியால் தான் தனி சந்தா ஒன்றை அறிமுகபடுத்த எண்ணியிருந்தீர்கள் என்பது நிதர்சனம். லாக்டவுன் மற்றும் மூடு விழாக்களில் காணாமல் போன அந்த யோசனையை தயங்காமல் மீண்டும் களமேற்றுங்கள்.
64 பக்கங்கள், ஒரு ப்ரீஸி ரீட், அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்ற ஒரு ஆர்வம், அடுத்த மாதத்தை நோக்கி எதிர்பார்க்கும் அந்த பரபரப்பு, இவை தான் நமது இன்றை நிலையை மாற்ற போகும் காரணிகள்.
[contd...]
Deleteஇன்னொன்று இப்படி தனி தனி இதழ்களாக மாதா மாதம் வெளிவரும் புத்தகங்களை, கருப்பு சந்தைகாரர்கள் பதுக்க நினைக்கலாம். முதல் பாகத்தை அதிகம் வாங்கி வைத்து, அதை படிக்க தேடும் நபர்களிடம் விற்க அவர்களுக்கு தோன்றாமல் இருந்தால் தான் நான் ஆச்சர்யபடுவேன். இதற்கும், உங்களிடம் ஏற்கனவே தீர்வு உள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை ஸ்டாக்கில் தொட்டவுடன், சேர்ந்திருக்கும் பாகங்களை ஒருங்கே தான் வாங்க முடியும் என்று ஒரு கட்டுபாடை விதித்து, காமிக்ஸ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் பார்க்க நினைப்பவர்களை புறம் தள்ளுங்கள்.
குண்டு புக் ரசிகர்கள் டெக்ஸ் மூலம் அவர்கள் ஆசைகளை அவ்வப்போது தீர்த்து கொள்ளட்டும். ஆனால், தொகுப்புகளை முழுவதும் படிக்க முடியாமல் (என்னை போல) கிடப்பில் போடும் வாசகர்களை, புதிதாக படிக்க நினைக்கும் நபர்களை, நோக்கி நம் பயணம் இந்த பாதையில் மட்டுமே பல வருடங்களுக்கு செல்ல முடியும். ஆவண செய்யுங்கள் எடி.
பி.கு.: எங்களுக்கு தொகுப்பு, மற்றவர்களுக்கு தனி தனி ஆல்பங்கள், என்று வரும் சில கருத்துகளை பார்த்துவிட்டு, இரு பாலாரையும் திருப்தி படுத்தலாம் என்றும் முடிவெடுத்துவிட வேண்டாம். இரு வெளியீடு பாணிகளை ஒரே தொடருக்கு ஏற்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு, பெரிய சான்று கேப்டன் டைகரின் கறுப்பு வெள்ளை மற்றும் வண்ண இதழ்கள் ஒருங்கே வந்து ஸ்டாக்கில் குடி கொண்டதே. விஷ பரீட்சை அது.
உண்மையான வார்த்தை
Delete+1 . இந்த மாதம் ஒரு இதழ் + தொடருக்கு வாசகர்களை பழகச் செய்வது எல்லாவிதத்திலும் நன்மை செய்யும் என்றே தோன்றுகிறது. இளம் டெக்ஸூக்கு இல்லாவிடினும் வேறு ஒரு தொடருக்காவது.
DeleteStrongly agree with you Rafiq bro.
Delete//குண்டு புக், மெகா புக்கெல்லாம் அவைகளை ஒரு தரத்திற்கு உயர்த்திய பின்னே அவர்கள் முயன்றுள்ளார்கள், அதுவும் முன்வெளியிட்ட தொகுப்புகளாக, வாசித்த வாசகர்களுக்கே திரும்ப விற்கும் முறையாகவே, இல்லை அமெரிக்கா போன்ற தூரத்து தேசத்து கலெக்டர் ரசிகர்களை கவரவோ தான் செயல்படுத்த பட்டிருக்கிறது//
Deleteஇதைத்தான் நானும் வலியுறுத்தி வருகிறேன்... இத்தாலியை விட நம் மக்கள் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர்.
//இன்னொன்று இப்படி தனி தனி இதழ்களாக மாதா மாதம் வெளிவரும் புத்தகங்களை, கருப்பு சந்தைகாரர்கள் பதுக்க நினைக்கலாம். முதல் பாகத்தை அதிகம் வாங்கி வைத்து, அதை படிக்க தேடும் நபர்களிடம் விற்க அவர்களுக்கு தோன்றாமல் இருந்தால் தான் நான் ஆச்சர்யபடுவேன். இதற்கும், உங்களிடம் ஏற்கனவே தீர்வு உள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை ஸ்டாக்கில் தொட்டவுடன், சேர்ந்திருக்கும் பாகங்களை ஒருங்கே தான் வாங்க முடியும் என்று ஒரு கட்டுபாடை விதித்து, காமிக்ஸ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் பார்க்க நினைப்பவர்களை புறம் தள்ளுங்கள்.//
Deleteஇதுவல்லவோ காமிக்ஸ் வளர்ச்சிக்கு அற்புதமான தொலைதூர பார்வை...?!
குண்டு புக் ஆசைக்காக மற்ற நல்ல விஷயங்களை புறக்கணிப்பது நமக்கு நல்லதல்ல...
இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும்
ReplyDeleteசிங்கம் சிங்களாக வந்தாலும்
கூட்டமாக வந்தாலும் சிங்கம் சிங்கம் தானே🧐🧐🧐🤪
ஐரோப்பிய மொழிகளில் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான காமிக்ஸ் வருகிறது. ஆகவே அங்கு அவை சாத்தியம். அத்தியாயங்களாக அங்கு அது சாத்தியம் இங்கோ நீங்கள் மட்டுமே.
ReplyDeleteIf just 'Tex' reader, may be printing the sequential issues turn good but when there are many out there, remembering and re-reading will be not preferable. Also when we have several yet to be published full stories, why we need to choose this option also?
ReplyDeleteஇது வரை வெளியிடப்படாத டெக்ஸ் எண்ணிக்கை மிகுதியாய் இருக்கிறது. அதை முதலில் வெளியிட்டு விடுங்கள்.
ReplyDeleteசொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ?///
ReplyDeleteநீங்க மாசத்துக்கு ஒரே ஒரு பக்கம் மட்டும் போடுங்க.. அதையவே நான் அடுத்த மாசம் தான் படிப்பேன்..
///நீங்க மாசத்துக்கு ஒரே ஒரு பக்கம் மட்டும் போடுங்க.. அதையவே நான் அடுத்த மாசம் தான் படிப்பேன்..///
Deleteஅதையுமே தப்புத் தப்பாத்தானே படிப்பே..!
/////Nopes sir...நண்பர்களின் "பல்ஸ் அறியும் படலம்" சொல்லும் செய்தி ஸ்பஷ்டமாய் உள்ளதெனும் போது நான்பாட்டுக்கு வேறொரு ஆவர்த்தனம் செய்ய முயன்றால் சொதப்பலிலேயே முடியும் !////
ReplyDelete----ஆஹா...பாலை ச்சே பிரியாணியை வார்த்தீர்கள் ஆசிரியர் ஐயா....!!!
நமக்கு புஷ்டியா உள்ளது தாங்க காலத்துக்கும்...
ஐரோப்பிய டெக்ஸ்ஸைக் கொண்டாடுவோம்...ஐரோப்பிய வழியில் அல்ல...!!
நம்ம பிரத்யேக வழியில்...💃💃💃💃💃
4+4+5+2+1+3+.....னு எங்கெங்கே சங்கிலி முடியுதோ அப்படியே பாலோ பண்ணுவோம் சார்....
ஆல்ரெடி போட்ட டைகர் கொத்துகளும், தோர்கல் கொத்துகளும் போதும்......
தோர்கல் தொடரின் ஜீவனே ஒவ்வொரு கதை ஆர்க்குகள் தான்... அதை இம்முறை சோதிச்சி 6பாக ஆர்க்கை 4+1+1னு பிரிச்சி கொஞ்சம் சுவாரயஸ்யத்தை குறைச்சாச்சி..!!
டெக்ஸோ, தோர்கலோ எந்தொரு நாயகனோ அந்த ஒரு நாயகனுக்கும் என பிரத்யேக ரசிகர்கள் கூட்டல் இருக்கும்.... பிரித்து போட்டா அந்த ரசிகர்கள் மனம் எப்படி இருக்கும் னு நல்லா உணர முடிகிறது. எனவே எந்த தொடரையும் பிரிக்க சொல்லி ரெகமண்ட் செய்ய மாட்டேன் சார்!!!
""" வன்மேற்கின் வரலாறு"""--- என்ற கதையே நாயகனாக உள்ள தொடரை வேணும்னா இந்த மாதா மாதம் வெளியிடும் பரிட்சார்த்த முயற்சிக்கு சோதனை ஓட்டமாக முயலலாம்... இது தரும் சாதகங்கள் கண்டு ஒருவேளை நாங்கள் மனம் மாறலாம்... அன்று பி்ரதான நாயகர்களை முயலலாம் சார்!!!
குண்டுபுக் வருவது உறுதியாவது போல் தெரிவதால் குட்டி கலாட்டா.
ReplyDeleteவந்தா குண்டாத்தான் வருவேன்!!!!
*****************"""""**********'''''''''*******""
மாசம் ஒரு பக்கம் இளம் டெக்ஸ் வந்தாலும் படிப்பேன் சார்
இப்படிக்கு காமிக்ஸ் மற்றும் கன்னித்தீவு ரசிகன்.
**""""*********"""""""**********""""""
ரம்மி: இளம் அதிகாரியை குண்டு புக்காவே போடுங்க.உள்ளார படங்களோ , வசனங்களோ இருக்கணும்னு கட்டாயம் ஏதுமில்ல.
*************"""""""""""**********"'''''"
இ.சி.ஈ.இ: இப்படி செஞ்சா என்ன? அவங்கங்க எடைக்கு தகுந்தா போல குடுக்கலாம்..எனக்கு ஒரு 30 பாகம் கிடைக்கும்..என் சிஷ்யனுக்கு ஒரு24 பாகம் கிடைக்கும். பாவம் தலீவருக்கு ரெண்டு மூணு அத்தியாயம்தான் கிடைக்கும்.ஆனாக்க இதுல ஒரு லாஜிக் இருக்குல்ல
***"""***********************"""""""""********
தலீவர்: இதுமட்டுமில்ல. டெக்ஸ் பொறந்ததிலிருந்து 12 மாசம் வரைக்கும் செஞ்ச சாகசங்கள் வரும்போதும் குண்டு புக்காத்தான் வரணும்.
†**********""""***"*"""""***********######
தொலைதூர முகவர்: ஈரோட்டில் இத்தாலியே இன்னுமிருக்கு.இளம் டெக்ஸ் குண்டுபுக்கா வந்தா அத வாங்கறதுக்கு குண்டோ ஒல்லியோ வாசகர்களை அனுப்பி வைக்க முடியுமா?
**********""""*******""*"""********"""""""******
செஅ: இளம் டெக்ஸ் குண்டு புக் வந்தா வசனங்களுக்கு ஒரு ஆடியோ கேஸட் கொடுத்தனுப்ப முடியுமா?
எடிட்டர் சார்: குண்டு இளம் டெக்ஸூக்கு மாடஸ்டி போஸ்டர் இலவச இணைப்பா தரலாம்னு இருக்கேன்.உங்களுக்கு கேஸட் வேணுமா? போஸ்டர் வேணுமா?
செஅ: any one can guess what the answer would be.:-)
*****************"""""""""""""""""********""*""""
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Delete👏👏👏👏👏👏👏👏👏
Awesome
//குண்டு இளம் டெக்ஸூக்கு மாடஸ்டி போஸ்டர் இலவச இணைப்பா தரலாம்///--- மாடஸ்தி போஸ்டர் இப்படி கூட கேட்கலாமோ!!!!!!!
Deleteசெனா அனா... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Delete///any one can guess what the answer would be///
ரொம்ப சுளுவான கேள்வி! மாடஸ்டி போஸ்டரையும், ஆடியோ கேஸட்டையும் லைட்ட்டா மிக்ஸ் பண்ணி 'மாடஸ்டி கேஸட்' வேணும்னு கேட்பீங்க! 😝
ஹாஹாஹா...:-))))
Deleteநம்ம குமார் சேலம் சிஸ்கோ கிட் கேட்டிருக்காராம்.! எங்கேன்னு தேடி அங்கே போய் தெரிவிக்க சோம்பேறித்தனமா இருக்கு.. அதனால இங்கேயே என் ஆதரவை தெரிவிச்சிக்கிறேன்.!
ReplyDelete✊✊✊✊✊✊✊✊✊✊
அய்யா அது சிஸ்கோ கிட் இல்லை முத்து 50 இல் வந்த சிஸ்கோ. நம்ம செ. அ சாருடைய ஃபேவரைட் ஹீரோ.
Delete🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂
Deleteசிஸ்கோ கிட்டுக்கு என்னுடைய ஆதரவுகளும்... நான் பால்வாடி பொடியனாக இருந்தபோது வந்திருக்கும் போல... இப்போ நண்பர்கள் சொல்ல சொல்ல வாசிக்க ஆவல்....
Delete///அய்யா அது சிஸ்கோ கிட் இல்லை முத்து 50 இல் வந்த சிஸ்கோ. நம்ம செ. அ சாருடைய ஃபேவரைட் ஹீரோ.///
Deleteஅதெல்லாம் தெரியாது.!
சிஸ்கோ கிட்டுக்கு ஆதரவு தெரிவிச்சாச்சி.. பேசிக்கிட்ட மாதிரி கரெக்டா மாலை வெட்டிருங்க.. ஆம்மா.!
நானும் ஆதரவு தருகிறேன் சிஸ்கோ பாஞ்சோ கூட்டணிக்கு...
Deleteதிருப்பதிலாம் இன்னமுமே நம்மகிட்டேயே இருந்திருக்கும் !/// Namma Aranilayathurai kittayaa? aiyoo!
ReplyDeleteமாதம் ஒவ்வொன்றாய் 64 பக்கங்களில் வெளியிடுவது சுவாரசியத்தை குறைக்கும் ,விறுவிறுப்பை மட்டுப்படுத்தும் என்பதோடு மற்ற தனி இதழ்கள் தோல்வி கண்டது போல இதுவும் அந்த பட்டியலில் சேர்ந்து விடக் கூடாது என்று ஆதங்கம் தான் எனக்கு
ReplyDeleteநம் வட்டத்தை தாண்டி காமிக்ஸ் அதிகமாக செல்லாததற்கு காரணம் காமிக்ஸின் மீது நாட்டமில்லாதது மட்டுமே. குண்டு புத்தகமாக வெளியிடுவதைவிட தனித்தனியே வெளியிடுவதால் விலை குறைவாக இருக்கும். அதனால் அதிகம்பேரை சென்றடையும் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
ReplyDeleteஇதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு?
"விலை குறைவாக இருந்தால் அதிகம்பேரை சென்றடையும்....!' அப்படியென்றால் ₹20 க்கு வெளியான முத்து மினி காமிக்ஸ் விற்பனையில் சக்கை போடு போட்டிருக்க வேண்டுமே! ஏனென்றால் புதிய வாசகர்களுக்கு டெக்ஸூம்,( வாயு வேக) வாசுவும் ஒன்றுதானே?
தியேட்டர்களிலும், மால்களிலும், துணிக்கடைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழிப்பவர்களுக்கு காமிக்ஸின் விலையெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவர்களை ஈர்க்குமளவிற்கு அதில் ஒன்றுமேயில்லை என்பதுதான் காரணம். இதுவே டெக்ஸ் முகத்துக்கு பதிலாக விஜய் முகமும், அஜீத் முகமும் இருந்து விஜய் விரட்டும், அஜீத் மிரட்டும் என்று டைட்டிலில் இருக்குமானால் 100 பக்க கறுப்பு வெள்ளை புத்தகத்துக்கு ₹500 என்று விலை வைத்தாலும் விற்பனை பட்டையை கிளப்பும்.
காரணம் அவர்களுக்கு பிடித்த சரக்கு அதில் உள்ளது என்பதால் மட்டுமே! தொடர்கதை காலமெல்லாம் மலையேறிவிட்டது. காலை என்ன சாப்பிட்டோமென்பதையே மறந்து போகுமளவுக்கு வேறு விஷயங்கள் நம்மை சூழ்ந்துவிட்ட இந்த காலத்தில்போய் ஒரு கதையின் தொடர்ச்சிக்காக அடுத்த முப்பது நாட்கள் காத்திருப்பது வாய்ப்பில்லே ராஜா போலத்தான். நீங்கள் குண்டு புத்தகமாக போட்டாலும், பிரித்து போட்டாலும் இதில் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டுமே வாங்குவார்கள். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். அந்த ஒன்றிரண்டு நபர்களை வைத்து காமிக்ஸின் விற்பனையை முடிவு செய்வதுஎன்பது வேடிக்கைதான்!
"அப்போது அவர்களின் பின்தலையில் இரண்டு மரக்கட்டைகள் இறங்க ஜான்சுந்தரும்,அனிதாவும் மயங்கிச் சரிந்தார்கள். அவர்கள் இருந்த குடிசை தீப்பிடித்து எரிய ஆரமபித்தது." அடுத்த அத்தியாயத்தின் முடிவில் : அந்த இருட்டான அறையிவ் யாரேனும் இருக்கிறார்களா என நரேந்திரன் கண்களை தூழாவினான்.அப்போது "டுமீல்"என துப்பாக்கி ஒன்று வெடிக்க "ஆ"அலறல் கேட்டது. அது நரேந்திரனின் அலறல். (முதல் பாகம் முற்றும்) இப்படி தூண்டில் கயிறு கதைல தொடரும்னு போட்டப்ப 90களில் நாங்க ஒருமாசம் பட்ட அவஸ்தை இருக்கே.. அந்த மாதிரி இப்பவும் போட்டீங்கன்னா நாங்களாவது பரவாயில்லை. இந்த காலத்து 2K கிட்ஸுங்க 'ஞ்ஞஞங்ங்... ஞ்ஞ்ஞஞங்ங.."ன்னு அலைவாங்க..
ReplyDeleteநான்லாம் இந்த தூண்டில் கயிரை பழைய புத்தக கடையில் 2வது பாகத்தை வாங்கிட்டு அமராவதி யாரு, அவ ஏன் நரேனை அறையிறா??? அவள் உண்மையில் அமானுயஸ்யமா என விழிச்சி நின்று.... அப்புறம் பாகம் 1& க்ளைமாக்ஸ் பாகம் "மீண்டும் நரேன் "-ஐ தேடிப்பிடிச்சி வாசிக்க கிட்டதட்ட ஓராண்டு ஆகிட்டது....
Deleteநான் பாட்டுக்கு தூண்டில் கயிறு3 வது பாகத்தை தேடிட்டே இருந்தேன்...
ஆனாக்கா அதை பெயர் மாற்றி இருக்காங்கனு தெரிஞ்சிக்கவே பல மாசங்கள் ஆகிட்டது.....!!!
சோ அப்பல இருந்தே தொடர்னா நமக்கு காத தூரந்தான்.....!!!
தனித்தனியா போடலாம். ஆனா எல்லா பாகமும் ஒரே மாதத்துல பாக்ஸ் செட்டா வந்துடனும்.
ReplyDeleteஏ மாப்பு இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே......!!!🤣
DeleteThis comment has been removed by the author.
DeleteEdi Sir..
ReplyDeleteசெப்டம்பர் 3 முதல் துவங்க இருந்த Madurai Bookfair (MBF) தவிர்க்க இயலாத காரணங்களால் ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு.😨😭👎
மியாவ் மியாவ் சிங்கக்குட்டி ;-
ReplyDeleteமறுக்கா வாசிப்புலயும் தரமான நகைச்சுவை தோரணமா இருந்துச்சி.! அதுமட்டுமவ்ல.... சிக்பில், குள்ளன், டாக்புல், கிட் ஆர்டின் இவர்களுக்கிடையேயான அன்னியோன்னியத்தை இத்தனை அழகாக வேறெந்த கதையிலும் சொனன்தாய்த் தெரியவில்லை.!
ஒருத்தருக்கு ஒருத்தர் எத்தனை அன்பாய் அனுசுரணையாய் .. இருக்கிறார்கள்..! கடவுள் நேரில் தோன்றி உனக்கென்ன வரம் வேண்டும் கேள் மகனே என்று அருள்பாலித்தால்.. வுட்சிடியில் தினமும் பெர்ட்டின் சலூனில் இந்த நண்பர்களை பார்த்துக்கொண்டே இருக்கும் அற்புதமான வாழ்க்கை "அந்திமண்டலமாக" வேண்டுமென்று கேட்பேன்.!
சிக்பில் கதைகள் இத்தனை நன்றாக இருந்தும் வருடம் ஒரே ஒரு ஸ்லாட்டோடு பரிதாபமாக தொங்கிக்கொண்டிருப்பது.. ரணமாக வலிக்கிறது..!
வணக்கம் சார்.
ReplyDeleteகதையின் முடிவு தெரியாமல் அடுத்த மாதம் வரை காத்திருப்பது சற்றுச் சிரமமான காரியம்தான். அதிலும் இளம் டெக்ஸ் போன்ற ஹை-டெம்போவில் நகரும் கதையில் இடைவெளி விடுவது நிச்சயம் தொய்வை ஏற்படுத்தும். மற்ற கதைகளுக்கு எப்படியோ அது tex க்கு பொருந்தாது என்பது என் எண்ணம்.
என்னைப் பொருத்தவரையில் இந்த குண்டுபுக்காகவே கேட்கும் நண்பர்களின் (நானும் குண்டுபுக் சபலக்காரன் என்பது வேறு விஷயம்) ஆட்சேபனைக் குரல்களின் வேகத்தை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது.
எதிர் வரும் இணைத்தட தோர்கலை ஒரே குண்டாக போடவேண்டும் என்றால் மெயின் தடம் மற்றும் கிரிஸ் ஆப் வல்நார் தடம் இரண்டையும் ஒரே புத்தகமாகத்தான் போட வேண்டி இருக்கும். அப்படிப் பார்த்தால் 16 ஆல்பங்கள் கொண்ட ஒரே குண்டாகத் தான் போட்டாக வேண்டும். இதில் ஓநாய்க்குட்டி தடமுமே அவ்வப்போது எட்டிப்பார்க்கும்...
ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடக்கும் சம்பவங்களைத் தனித்தனி தடமாக கொண்டு சென்றிருப்பார்கள். இந்தத் தடத்தில் எழும் கேள்விகளுக்கான பதிலை இணைத்தடம் சொல்லும். இப்படி இருக்க அத்தனையும் ஒரே குண்டாக எப்படி சாத்தியப் படுத்த இயலும் எனத் தெரியவில்லை.
பேசாமல் இணைத்தடங்கள் மூன்றையும் முன்பதிவு வரிசையில் வெளியிட்டால்தான் முடியும் போலிருக்கிறது.
ஓடின் தேவன்தான் வழி செய்ய வேண்டும்!
கேட்க நல்லா இருக்கு,ஆசையாகவும் இருக்கு...
Deleteஆனா முன்பதிவு ஆகனுமே,பெரிய பட்ஜெட் வேற...
தோர்கல் வான்ஹாமே தொடர் முடிந்த பின் சிக்கல் தான் சார். கதைகளுக்குள் இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒரே மாதத்திலேயே மெயின் கதையும், இணைத்தட கதைகளும் என 2 தோர்கல் புக்காக வெளி வரும் நிலை கூட ஏற்படும் போல் தோன்றுகிறது.
Deleteஒரே சாகசம் சில பாகங்களாக தொடர்ந்து வெளியிடும் போது எங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினை பெயர்க் குழப்பம் தான். லயன் கம்பேக்கின் பின் வந்த 10 ரூபா டெக்ஸ் தொடர்களில் நான் இப்போதும் சில வேளைகளில் தடுமாறுவதுண்டு சார். புத்தக திருவிழாக்களில் வாங்கும் புதிய வாசகர்களுக்கு இதுவொரு பிரச்சினையாக அமையலாம்.
ReplyDeleteகார்சனின் கடந்த காலம், தங்கக்கல்லறை தொடர்களுக்கு பாகம் 1,2 என்று பெயர் வைத்தது போல் ஒரே பெயராக வைத்தால் அல்லது ஒவ்வொரு புதிய பெயருடனும் கதைதொடரின் பெயரையும் சேர்த்து முன்னட்டையில் குறிப்பிட்டீர்கள் என்றால் இந்த குழப்பம் குறையும்.
டெக்ஸை பொறுத்த வரை என் தனிப்பட்ட விருப்பம் ஒவ்வொரு கதைத் தொடரையும் ஒரே புத்தகமாக படிக்க வேண்டும். நீண்ட காலமாக லயன் முத்துவில் அவ்வாறே படித்து பழகிவிட்டதால்.... 🤷♂️
ReplyDelete200
ReplyDeleteநாம் அனைவரும் குண்டு புத்தக விரும்பிகளே... நிறைய ஓட்டுகள் அதற்கே என்று தெரிகிறது