Powered By Blogger

Saturday, June 11, 2022

ஒரு ஜம்போ சவாரி !

 நண்பர்களே,

வணக்கம். நவீன வெட்டியான் ஸ்கோர் செய்வாரென்று எனக்கு நம்பிக்கை இருந்தது தான் ; ஆனால் கென்யா மெகா ஆல்பத்துக்கு நிகராய் ஸ்டெர்னின் "மேற்கே...இது மெய்யடா..!"வும் பேசப்படும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை ! சமீப வரவான ஸ்டெர்னின் கதைகளின் மூன்றையுமே பொறுமையாய் கொஞ்சம் புரட்டும் போது ஒரேயொரு விஷயம் மட்டுமே பிரதானப்பட்டிருப்பது தெரிகிறது ; and அந்த ஒற்றை விஷயமானது - வாழ்க்கையைச் சொல்லும் முயற்சிக்கு கதை என்பது முக்கியமல்ல என்ற கதாசிரியரின் calculated gamble தான் ! Maybe "வழியனுப்ப வந்தவன்" அறிமுக ஆல்பத்தினில்  கதைக்கென கொஞ்சமாய் அடித்தளங்கள் இருந்திருக்கலாம் ; ஒரு புது தொடருக்கு வாசகர்களைப் பரிச்சயப்படுத்திட அது எப்படியும் அவசியம் தான் ! ஆனால் ஒரு சிறு நகரம், அதன் கரடு முரடான ஜனம் ; அவர்களோடு ஸ்டெர்ன், லென்னி...என்ற template அமைத்தான பிற்பாடு தொடர்ந்துள்ள ஆல்பம் # 2 & 3-ல் கதைக்கென கிஞ்சித்தும் மெனெக்கெடவில்லை என்பது கண்கூடு ! சொல்லப் போனால் நமது ஆபீஸ் முன்னான மறியல் போராட்டத்துக்கென தலீவருக்கு நம்மாட்கள் ரெடி பண்ணியிருந்த வேப்பிலை லங்கோட்டின் அளவு கூட இராது இரு ஆல்பங்களிலுமான storyline ! "காட்டான் கூட்டம்" ஆல்பத்தினில் ஸ்டெர்ன் தனது வாசிப்பு தாகத்தின் பொருட்டு கேன்சஸ் நகர் செல்லும் ஓரிரவே மொத்தக்கதையின் பின்னணி என்றால், இந்த "மே..இ.மெ" சொல்ல விழைவதோ ஒரு பிரச்சனையினை ஒரு சமூகம் கரம்கோர்த்துக் கையாளும் விதத்தினை மட்டுமே ! இவை எல்லாமே மிகையில்லா life like நிகழ்வுகளின் சித்தரிப்புகளே தவிர்த்து ஒரு முழுமையான ஹீரோ ; அவர் வசிக்கும் மண்ணில் முளைவிடும் ஒரு சிக்கல் ; அதனை ஹீரோ தீர்க்கும் படலம் - என்ற மாமூலான templates மருந்துக்கும் கிடையாது !  அதனால் தான் இந்த லேட்டஸ்ட் ஆல்பத்தினில் கூட நம்மாள் ஸ்டெர்ன் action block-களில் கூட டம்மி பீஸாய் வலம் வந்தால் தப்பில்லை என்று கதாசிரியர் அனுமதித்துள்ளார் ! அனல் பறக்கும் துப்பாக்கிச் சண்டையின் நடுவே கூட வாளியைக் கொண்டு ஒரு சாத்து ; சம்மட்டியைக் கொண்டொரு போடு என்பதோடு நாயகரின் பங்கு நிறைவுற்றாலும் இந்த பாணியிலான கதை நகர்த்தலுக்கு பங்கமில்லை என்ற படைப்பாளிகளின் நம்பிக்கை தான் இந்தத் தொடரின் அச்சாணியே ! 

So துப்பாக்கிகளைத் தூக்காமலும், சில்லு மூக்குகளுக்குச்  சேதாரங்கள் நிகழ்த்தாமலும், விவேக யுக்திகளைக் கையில் எடுக்காமலும், ஒரு Wild West நாயகர் தனது இருப்பினை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கும் ஸ்டெர்ன் - நீங்கள் தந்திருக்கும் அந்தத் தேடல் லைசென்சின் பலனே ! கிராபிக் நாவல் தடத்திலும், ஜம்போவின் free flowing தடத்திலும் நமக்குப் பரிச்சயப்பட்டு நிற்கும் நாயக / நாயக பாணிகளைத் தாண்டியும் கதைகளைத் தேடிப் பிடித்துக் கூட்டியார எனக்கு நீங்கள் தந்துள்ள அந்த சுதந்திரம் இருந்திராவிடின் நிச்சயமாய் வாய்ப்பே இருந்திராது ! கிராபிக் நாவலின் தடமோ கொஞ்சம் dark ; கொஞ்சம் அழுகாச்சி என்றிருக்க, கொரோனா தந்த முகாரி ராகங்களுக்கு மத்தியில் அந்த dark பாணிகள் மையிருட்டாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் !

ஜம்போ காமிக்ஸ் !! அழுகாச்சி லேது ; கதைக்கே முக்கியத்துவம் - என்ற பாணியிலான ஜம்போ - 2018 முதலாய் இந்த one shot தேடல்களுக்கு உரம் தந்த தனித்தடம் ! (அது ஏன் - "ஜம்போ காமிக்ஸ்" என்று பெயர் ?? என்ற கேள்வி அவ்வப்போது காதில் விழுமொரு வினவல் தான் ! VRS வாங்கிப்புட்டு டாட்டா சொல்லும் நாளொன்று புலரும் போது மறக்காமல் கேளுங்கோ ; நிச்சயமாய் பதில் சொல்லுவேன் !) ஜம்போ இதுவரைக்கும் 4 சீசன்களைப் பார்த்துள்ளதை STV உபயத்தில் பட்டியலாய்ப் பார்த்தாச்சு ! ஆனால்  SMASHING '70s வருகையினைத் தொடர்ந்து அடுத்த வருஷத்திலும் ஜம்போவுக்கு இடமிராது என்பதே (தற்போதைய) நிலவரம் ! So "இந்த one shot ஜம்போ கதைத்தேடல்கள் தொடரணுமா ? அல்லது இப்போதைக்கு ஓய்வெடுக்கட்டுமா ?" என்ற கேள்வியே இந்த வாரயிறுதியின் அலசலின் topic !!

ஸ்டாக்கில் உள்ள 20 ஜம்போ ஆல்பங்களை ஆபீசில் இன்றைக்கு காலையில் பார்த்த போது கலவையான சிந்தைகள் உள்ளுக்குள் !!  என்ன தான் பாசமான காக்காம்மாவாக இருந்தாலுமே, தங்கம் விற்கும் விலைக்கு,  தனது இளசுகளை பொன்குஞ்சுகளாய்க் கருதுவதெல்லாம்  இன்றைக்கு ரெம்போவே costly ஆன ஒப்பீடாகிடக்கூடும் ! So - 4 வருஷங்களின் இந்த "ஜம்போ" முயற்சியினை ஒட்டுமொத்தமாய்ப் பார்த்த உடனே "எனக்கு அவை அத்தனையுமே ஜூப்பர் டூப்பர் ஹிட்களாய்த் தென்பட்டன !" என்றெல்லாம் அள்ளிவிட மாட்டேன் !  மாறாக, அவற்றின் குறைகள் ; பிழைகள் ; இன்னும் better ஆக  செய்திருக்கலாமோ ? என்ற நினைப்புகளே மேலோங்கின !

Anyways - இதோ அந்த ரெண்டு டஜனின் பட்டியல் :

ஜம்போ - சீசன் 1 :

1.காற்றுக்கு ஏது வேலி?- இளம் டெக்ஸ்

2.ஒரு குரங்கு வேட்டை-ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன்

3.பனியில் ஓரு பிரளயம்-James Bond 007

4.Theஆக்சன் ஸ்பெசல்- Fleetway கதைத் தொகுப்பு 

5.பயணங்கள் முடிவதில்லை-ஜெரெமியா

6.நிழலும் நிஜமும்- James Bond 007

ஜம்போ சீசன் 2 :

8.தனியொருவன்...Lone ரேஞ்சர்

9.சிங்கத்தின் சிறுவயதில்...இளம் டெக்ஸ்

10.லக்கி லூக்கை சுட்டது யார் ?

11.சுறாவேட்டை...James Bond 007

12.அந்தியின் ஒரு அத்தியாசம...மார்ஷல் சைக்ஸ்

13.நில்..கவனி...வேட்டையாடு...Zaroff

ஜம்போ சீசன் 3 :

14.பிரிவோம் சந்திப்போம்...கி.நா.

15.நில்..கவனி..கொல்...James Bond 007

16.தனித்திரு தணிந்திரு...கி.நா.

17.மா.து.ஜே.சலாம்...கி.நா.

07.காலவேட்டையர்...கி.நா.

18.தகிக்கும் பூமி..Lone ரேஞ்சர் 

ஜம்போ சீசன் 4 :

20.ஒரு தலைவனின் கதை-..ஜெரோனீமோ

21.சித்திரமும் கொலைப்பழக்கம்..கி.நா.

22.ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்- அண்டர்டேக்கர்

23.போர் முனையில் தேவைதைகள்-கி.நா.

24.உளவும் கற்று மற- மாட்டா ஹாரி

25.மேற்கே இது மெய்யடா-ஸ்டெர்ன்

பட்டியலையும் சரி, புக்குகளையும் சரி, நிறைய நேரத்துக்கு  உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ! As always - ஒவ்வொரு ஆல்பத்தின்  பின்னணியிலும், ஆங்காங்கே போட நேர்ந்த மொக்கைகள் சார்ந்த நினைவுகள் 'சர்ர்ர்ர்..' என்று மின்னலாய் றெக்கை கட்டின ! நினைவுகளை சற்றே உறக்கம் கிடத்தி விட்டு, இந்த 24 இதழ்களை மூன்று பிரிவுகளாய்ப் பிரித்துப் பார்க்க முனைந்தேன்  - "சூப்பர் hits " ; "சுமார் ஹிட்ஸ்" & பீப்பீ ஹிட்ஸ் !" என்ற ரீதியில் !! Of course - இந்த முயற்சியினில் நீங்களும், நானும் பல இடங்களில் முரண்படக்கூடும் தான் ; but இது இந்த வாரயிறுதியின் எனது உரத்த சிந்தனைகள் மட்டுமே என்று எடுத்துக் கொண்டீர்களெனில் வேலை சுலபமாகிடும் !

முதலில் கண்ணில்படுவது  - கிட்டத்தட்ட ஒவ்வொரு சீசனிலும் இடம்பிடித்திருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007 தான் ஜம்போவில் கோலோச்சியுள்ளார் என்ற விஷயம் ! புதுயுக ஜேம்ஸ் பாண்ட் - புதிய பாணியிலும், முழுவண்ணத்திலும் தெறிக்க விட்டிருக்கும் ஆல்பங்கள் 4 வெளியாகியுள்ளன & அவற்றுள் ஒன்று ஏற்கனவே விற்றும் தீர்ந்து விட்டது !  விற்பனைகளில் ஒரு இதழ் சாதித்துள்ளதா ? சோதித்துள்ளதா ? என்பதே ஒரு ஹிட்டின் முதல் அளவுகோல் எனும் போது 007-ன் கலர் இதழ்கள் அனைத்துமே "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பெரிய மெனெக்கெடல்கள் ஏதுமின்றி புகுந்து விடுகின்றன ! நம்மிடம்  கைவசமுள்ள 3 இதழ்களை யாரேனும் இப்போவுமே வாங்கி வருகின்றனரா, என்பது தெரியலை ; ஆனால் வெளியான சமயத்தினில் செம சுறுசுறுப்பு காட்டிய இதழ்கள் இவை என்பது நினைவுள்ளது ! So சாகாவரம் பெற்ற இந்த சீக்ரெட் ஏஜெண்டுக்கு  "ஜம்போவின் தூண்களில் # 1 !!" என்ற முத்திரையை நல்குவதில் குழப்பங்கள் லேது !

4 ஹிட்களோடு முன்னணியில் நிற்பவர் மூத்தவர் ஜேம்ஸ் எனில், கீழ்க்கண்ட stats சகிதம் நிற்கும் 'சின்னவரை' சித்தே பாருங்களேன் :

இளம் டெக்ஸ் வில்லர் !

வெளியானவை - 2 இதழ்கள் !

வெளியான இரண்டே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்தவை - 2 இதழ்கள் !

அதிலும், ஜம்போவுக்குத் துவக்கம் தந்த "காற்றுக்கென்ன வேலி?" பற்றிச்  சிலாகிப்பதெனில், உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியும் ரேஞ்சுக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு என்னால் 'தம்' கட்டியபடியே காலட்சேபம் செய்து கொண்டே செல்ல முடியும் ! சொல்லி மாளா விற்பனையும், வரவேற்பும் பெற்ற இதழ் எதுவென்பதை ஒரு போதும் மறக்க இயலாது ! So "ஜம்போவின் தூண் # 2 " என்ற அடையாளத்தை அலட்டல் அல்லாது அள்ளி ஜோப்பியில் போட்டுக் கொள்பவர் "சின்னத் தல" - இளம் டெக்ஸ் தான் !

"சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பொட்டு வியர்வையும் சிந்திடாது, 'ஜிலோ'வென்று அடுத்ததாய் நுழையும் இருவருமே வெட்டியான் தொழில் செய்பவர்களே ; வன்மேற்கின் பிரதிநிதிகளே ; பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகின் பிள்ளைகளே & last சீசனில் ஜம்போவுக்குள் கால்பதித்த ஆசாமிகளுமே ! Enter - 'தி அண்டர்டேக்கர்" & "ஸ்டெர்ன்" !! 

"ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" - நடப்பாண்டில் தத்தித் தடுமாறிக் கொண்டிருந்த ஜம்போவுக்கு நிமிர்ந்து நிற்கவொரு திடம் தந்ததெனில், எழுந்து நின்ற ஜம்போ சீசன் 4-க்கு கேக் மீதான ஐசிங் ஆகிப் போன பெருமை ஸ்டெர்ன் தோன்றிய "மேற்கே...இது மெய்யடா!" வுக்கு நிச்சயம் உண்டு ! In fact - மும்பை இந்தியன்களின் லேட்டஸ்ட் IPL  வேட்டையைப்  போல முழுசுமாய் ஊற்றிக் கொள்ளாது, ஜம்போவின் சீசன் 4-க்குத் தலை தப்பிக்க ஒரு முகாந்திரம் தந்தவையே இந்த 2 இதழ்கள் தான் ! So இந்த காமிக்ஸ் வெட்டியான்களுக்கு, collective ஆக   "ஜம்போவின் தூண் # 3" என்ற அடையாளத்தையும், "சூப்பர் ஹிட்ஸ்" பட்டியலுக்குள் 2 இடங்களையும் வழங்கிடுவதில் நெருடல் இருக்கவில்லை ! 

அடுத்ததாய் "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் நுழையும் இதழ் - எக்கச்சக்க  சர்ச்சைகளை ஈட்டியதொரு ஆல்பமே ! பிரவாகமெடுத்த விமர்சனங்களின் பெரும்பான்மை பாசிடிவோ, நெகடிவோ - அதனை இம்மிகூடச் சட்டையே செய்திடாமல் விற்பனை எனும் அளவுகோலில் நூற்றுக்கு முன்னூற்றி நாற்பத்தியெட்டு மதிப்பெண்கள் பெற்றது - ஜெரெமியா தொடரின் "பயணங்கள் முடிவதில்லை" தான் ! பிரமாதமான தயாரிப்புத் தரம் ; புரட்டப் புரட்ட ஓவியத் தாண்டவங்களாய் விரியும் வண்ணப் பக்கங்கள் ; ஹார்ட்கவர் - என்று வெற்றிக்குத் தேவையான ஐட்டங்கள் நிறையவே இருந்தாலும்,  பத்தியச் சாப்பாடு ரேஞ்சில் காரமோ, வேகமோ இன்றி கதைக்களங்கள் 'தேமே' என்றிருந்ததை அலசல்களில் வெளுத்தெடுத்து இருந்தீர்கள் ! ஆனால் வெளுக்கும் வேகத்தில், வீட்டில் திருமதிகளின் பட்டுப் புடவைகளை துவைக்க Surf Excel வாங்குவதற்குப் பதிலாகவுமே  "ஜெரெமியா"வை வாங்கி வைத்தீர்களோ என்னவோ - புக்ஸ் ஆறோ, ஏழோ மாதங்களிலேயே காலியாகி விட்டிருந்தன ! (அப்புறமாய், ஆங்காங்கே புழக்கடைகளில் எத்தினி பேரின் சொக்காய்கள், திருமதியினரிடம் சிக்கிக் கிழிபட்டனவோ - தெரியலை !!) So சர்ச்சைக்குரிய இதழாய் இருந்தாலுமே, ஜம்போவின் ஒரே ஹார்ட்கவர் இதழ் என்ற கூடுதல் அடையாளத்துடன், ஜம்போவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டுக்குள் நுழைகின்ற தொடர் "ஜெரெமியா" !

தொடர்ந்து அந்த elite பட்டியலினுள் புகும் இதழ்கள் அனைத்துமே one shots தான் ! வெவ்வேறு ஜானர்களில் இருந்தாலும், அவை அனைற்றிற்குமே பொதுவான ஒரே சமாச்சாரம் - "கதைகளின் வலு" என்பது மாத்திரமே !

**ஒரு ஓய்ந்து போன நீதிக்காவலரின் உள்ளுக்குள்ளான போராட்டத்தை காட்டியது "அந்தியின் ஒரு அத்தியாயம்" !

**அமேசானின் பரந்து விரிந்த கானகப் பின்னணியில் மிரட்டும் சித்திரங்களுடன் ஒரு ஆடுபுலியாட்டத்தைப் பார்த்தோம் - "நில்..கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் !

**வன்மேற்கின் மனித முகத்தை தெறிக்கும் சித்திரங்களோடு சொல்ல முற்பட்டது "பிரிவோம்..சந்திப்போம் !"

**ஒரு தாயின் பாசப் போராட்டத்தை ஒரு சமகால யுத்த முன்னணியிலிருந்து கார்ட்டூன் பாணிச் சித்திரங்களோடு சொன்னது "மா..துஜே ஸலாம் !" 

இவை நான்குமே மாஸ் ஹிட்டடித்த இதழ்கள் & ஒவ்வொன்றுமே ஒரு விதத்தில் மனித மனதின் பரிமாணங்களை அளவிட முயன்றது கண்கூடு ! So "ஜம்போவின் தூண் # 4" என்ற ஸ்டிக்கரை இந்த ரகக்கதைகளின் மீது ஒட்டுமொத்தமாய் ஒட்டிடலாம் என்பேன் !

So சூப்பர் ஹிட்ஸ் லிஸ்டினில் இடம் பிடிப்பவை 4 + 2 + 2 + 1 + 4 = 13 இதழ்கள் !! 

Of course இந்த நம்பரில் உங்களில் நிறைய பேருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் தான் ; ஆனால் எனது அளவீடுகள் ரசனைகள் சார்ந்தவை மட்டுமே அல்ல எனும் போது this number of mine will stand up to scrutiny !!

*விற்பனை

*விமர்சனங்கள்

*வெளியான காலகட்டத்துக்குப் பின்புமான விற்பனை 

என்பனவே எனது அளவீடுகள் ! இவை ஒவ்வொன்றிலும், மேற்படிப் 13-ம்  தேறியுள்ளன !

"சுமார் ஹிட்ஸ்" பட்டியலில் இடம்பிடிக்கும் ஆல்பங்களின் சகலமுமே one shots - ஒற்றை நாயகர் LONE ரேஞ்சரைத் தவிர்த்து ! "தனியொருவன்" என்று கலரில் சீசன் 2-ல் ஆஜரான இந்த முகமூடிக்காரர் மீது நான் நிரம்பவே நம்பிக்கை கொண்டிருந்தேன் என்பது தான் நிஜம் ! இவர் நிச்சயமாய் நம் மத்தியில் ஒரு முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கை நிரம்பவே இருந்தது எனக்கு ! ஆனால் நெடும் சாகசங்களாய் இவரது கதைகள் இல்லாதது காரணமோ ; அல்லது - "ஞான் சுடும் ..பட்சே உன்னைக் காயப்படுத்தில்லா !" என்ற ஹீரோவின் அநியாய நல்லபிள்ளைத்தனம் காரணமோ தெரியலை - Lone ரேஞ்சர் எதிர்பார்த்த ஜெயத்தைத் தொடவில்லை !  2 ஆல்பங்கள் தொகுப்புகளாய் வெளிவந்தும் - was only an average success !

சுமாராய்ப் போன மீத ஆல்பங்களின் லிஸ்ட் இதோ :

தனித்திரு...தணிந்திரு..!

ஒரு குரங்குச் சேட்டை..!

போர்முனையில் தேவதைகள் !

இதனில் last mentioned - "போர்முனையில் தேவதைகள்" உங்கள் விமர்சனங்களில் சாத்து வாங்கியிருப்பினும் - விற்பனைகளில் did very decently ! So "பீப்பீ லிஸ்ட்" பிரஜையாகிடாது - மத்திம லிஸ்டுக்குள் மண்டையினை நுழைத்துக் கொண்டுள்ளது ! Which means - 5 books in the "சுமார் லிஸ்ட்" !

இறுதியான அந்த "பீப்பீ லிஸ்ட்"  முழுக்கவே one shots சமாச்சாரங்கள் தான் ! 

* லக்கி லூக்கைச் சுட்டது யார் ?

(கார்ட்டூன் நாயகரை கி,நா.பாணியில் பார்த்ததில் நம்மவர்கள் ஆகிப் போனார்கள் காண்டு ; இந்த இதழும் தலையில் போட்டுக்கொண்டது  துண்டு !!)

*கால வேட்டையர் 

( புய்ப்பங்களால் அநியாயத்துக்கு ஆளையே அமுக்கும் கதைக்களம் !!)

*சித்திரமும் கொலைப்பழக்கம்

(எனக்கு ஓ.கே,வென்று தோன்றிய கதை தான் ; ஆனால் ஓடவிட்டே சாத்து வாங்கித் தந்தது தான் பலனாகியது !)

*The ACTION ஸ்பெஷல் !

(சில புராதனங்கள் மியூசியங்களில் இருத்தலே தேவலாம் - என்ற யானைப்பாலை நீங்கள் எனக்குப் புகட்டிய இதழிது !)

*ஒரு தலைவனின் கதை!

(சில தலீவர்கள் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதே சாலச் சிறந்தது ! என்பதை புரிய வைத்த ஆல்பம் !)

"உளவும் கற்று மற !" 

(என்னா அடி !!! ஆத்தாடியோவ் !!)

So 6 இதழ்கள் இந்த பீப்பீ ஊதிய லிஸ்ட்தனில் !

ஆக, 55% செம ஹிட்ஸ் ; 20% சுமார் ஹிட்ஸ் & 25% சொதப்பல்ஸ் என்பதே ரிப்போர்ட் கார்ட் சொல்லும் தகவல் ! நிச்சயமாய் 55 சதவிகிதம் என்பது நல்லதொரு நம்பர் தான் ; மறுப்பதற்கே இல்லை ! But மெனுவில் ஒரு நூறு ஐட்டங்கள் இருந்தாலும், அந்த நூறையுமே ஒரே சுவைக்குத் தினம் தினமும் தயாரிக்கத் தெரிந்திருக்கும் A2B போலான தேர்ச்சி தான் நமது லட்சியம் எனும் போது 55% மகிழ்வூட்டவில்லை - at least எனக்கு ! அது மாத்திரமன்றி, இந்த வெற்றியின் பின்னுள்ள 4 இதழ்கள் - ஜேம்ஸ் பாண்ட் 007 எனும் கமர்ஷியல் நாயகர் + "இளம் டெக்ஸ்" எனும் சுனாமியின் உபயம் என்பதையும் மறக்கலாகாது ! டூரிங் டாக்கீஸ் டெண்டு கொட்டாயில் இவர்களது சாகசங்களை ஒட்டியிருந்தாலுமே வெற்றி நிச்சயம் அல்லவா ? So ஒட்டுமொத்த வெற்றிக்கு இவர்களைத் தவிர்த்தான இதர கதைகளின் பங்களிப்பையும் பாரபட்சமின்றிப் பார்த்திடல் அவசியம் என்ற தோன்றுகிறது எனக்கு !

Maybe தொடரும் காலங்களின் திட்டமிடல்களில் ஜம்போவுக்கும் இடித்துப் பிடித்தாவது இடம் கிட்டிடும் பட்சத்தில், கதைத்தேர்வினில் இரட்டிப்புக் கவனம் அவசியம் என்பதும் அப்பட்டமாய்ப் புரிகிறது ! பிராங்கோ-பெல்ஜிய மனிடோ கருணை காட்டுவாராக !!

So இந்த ஜம்போ அலசலின் இறுதியினில் எனது கேள்விகள் இவையே :

1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ? (டப்ஸா பதில் சொன்னால் ஜடாமுடி ஜானதன் தொகுப்புகள் உங்கள் கனவில் ஒவ்வொரு அமாவாசைக்கும் வரும் - கபர்தார் !!)
2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?
3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?
5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?
6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?

Before I sign out, ஒரு மகிழ்வான தகவல் : நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கென நாம் இணைந்து திரட்டிய நிதி - அவரது 2 புதல்விகளின் கல்விக்கு ; மேற்படிப்புக்கு ; திருமணத்துக்கு - என்ற உதவும் விதங்களில் தேர்வு செய்யப்பட ஷேம நிதிகளில் முதலீடு செய்தாச்சு ! துவக்கம் முதலே ஒத்தாசை செய்த டாக்டர் A.K.K.ராஜா அவர்களுக்கும், முதலீட்டுக்கு வழிகாட்டிய திருப்பூர் ப்ளூபெரிக்கும், இயன்ற நிதிகளைத் தந்த அன்புள்ளங்களுக்கும், பழனியின் குடும்பத்துக்காகப் பிரார்த்தித்த நெஞ்சங்களுக்கும், நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! இதோ, ரொம்பச் சமீபமாய்க் கூட, அந்தப் பிள்ளைகளின் கல்விக்கென ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் ஒரு தொகையினை வழங்கிட நண்பர் ஒருவர் முன்வந்திருக்கிறார் ! பழனி...நீங்கள் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தினை நிரப்பிட ஒரு வாசகக்குடும்பமே தன்னால் இயன்றதைச் செய்து வருகிறது !! ஒரு தூரத்து நாளில் உங்கள் பசங்கள் அழகாய்க் கற்றுத்தேர்ந்து, வாழ்க்கையில் ஒரு அழகான இடத்தினை எட்டிப் பிடித்திடுவதை கண்டு ரசிக்க ஒரு நூறு தாய்மாமன்கள் இங்கே காத்திருப்பதை நீங்கள் மேலிருந்து தரிசிக்காமல் போக மாட்டீர்கள் ! Rest in Peace Bro !`

Bye all...see you around ! Have a fun Sunday !!

P.S : கதை சொல்லும் காமிக்ஸ் - பீன்ஸ் கொடியில் ஜாக்  - 15-ம் தேதியன்று புறப்படும் !

288 comments:

  1. First.1 இன்னும் வித்தியாசமான கதைகளை ஜம்போவில் பார்க்க ஆசை.... டார்சன் ரக கதைகளுக்கும் ஜம்போவில் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் சார்

    ReplyDelete
  2. /உளவும் கற்று மற !"

    (என்னா அடி !!! ஆத்தாடியோவ் !!)/

    Ha ha ha

    ReplyDelete
  3. நீங்க அடுத்த ஜம்போ சீசன் போடுங்க போடாமே போங்க... ஆனா எனக்கு JB 2.0 போட்டே ஆகனும்.. ஆங்..

    ReplyDelete
  4. 1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ? (டப்ஸா பதில் சொன்னால் ஜடாமுடி ஜானதன் தொகுப்புகள் உங்கள் கனவில் ஒவ்வொரு அமாவாசைக்கும் வரும் - கபர்தார் !!) - வாங்கியது - 24. படித்தது - 12. படிக்காத புத்தகங்கள் அத்தனையுமே சில பக்க புரட்டல்களுக்குப் பின்னே முடிக்க முடியாமல் வைத்தவைகள். முக்கியமான காரணம் அந்த மாதத்தில் கூட வந்த ஷோ ஸ்டீரலர்கள். பின்னால் படித்துக் கொள்ளலாம் என தொடாமலே விட்ட சில புத்தகங்களும் உண்டு.
    2.இந்த ஒட்டு மொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ? - 100. நேரடியாக சில புத்தகங்கள் பிடிக்காமல் போயிருப்பினும், நமது காமிக்ஸ் வாசிப்பின் ரசனையை மாற்றியதில் ஜம்போவிற்கு பெரும் பங்குண்டு. ஜம்போ இல்லாமல் ஒரு ARS Magna வோ, ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவோ, கனவானின் கதையோ, ஏன் கென்யாவுமே நமது ரெகுலராகவோ, புத்தக விழா ஸ்பெஷலாகவோ ஹிட் அடித்திருக்குமா என்பது கேள்வியே !
    3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ? - நிச்சயமாக. கேள்வியே கேட்காமல் இந்த ஒற்றை தடத்திற்கு, புதிய முயற்சிகளுக்கு எப்பொழுதுமே தம்ஸ் அப். சொல்லப்போனால் புது வருட பட்டியல்களில் எனக்கு எப்பொழுதுமே ஜம்போவில் என்ன வருகிறது என்பதிலேயே ஆர்வம் அதிகம்.
    4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ? - இல்லை சார். இதைவிட நில் கவனி, பிரிவோம் சந்திப்போம் ரக கதைகள், ஜெரமியாவிற்கு கூட வாய்ப்புகள் தரலாம்.
    5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ? தலையை வேண்டுமென்றே விடுகிறேன். நில் கவனி வேட்டையாடு.
    6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ? முதல் சீஸன்.

    ReplyDelete
    Replies
    1. // நமது காமிக்ஸ் வாசிப்பின் ரசனையை மாற்றியதில் ஜம்போவிற்கு பெரும் பங்குண்டு. ஜம்போ இல்லாமல் ஒரு ARS Magna வோ, ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவோ, கனவானின் கதையோ, ஏன் கென்யாவுமே நமது ரெகுலராகவோ, புத்தக விழா ஸ்பெஷலாகவோ ஹிட் அடித்திருக்குமா என்பது கேள்வியே ! // அப்பட்டமான உண்மை.

      // நிச்சயமாக. கேள்வியே கேட்காமல் இந்த ஒற்றை தடத்திற்கு, புதிய முயற்சிகளுக்கு எப்பொழுதுமே தம்ஸ் அப். சொல்லப்போனால் புது வருட பட்டியல்களில் எனக்கு எப்பொழுதுமே ஜம்போவில் என்ன வருகிறது என்பதிலேயே ஆர்வம் அதிகம். // யார் சார் நீங்க? இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க?

      Delete
    2. Blog ஆரம்பிச்ச காலத்துல இருந்து இங்க தாங்க சார் சுத்திட்டு இருக்கேன். நான் ஒரு லயன் ஸ்லீப்பர் செல். சமீப காலம் ஃபேஸ்புக்லயும், மற்ற வலைதளங்கள்லயும் வர நெகட்டிவ் விமர்சனங்களையும், காட்டுக் கூச்சல்களையும், திட்டமிட்டே பரப்பப்படுகிற விஷமங்களையும் பாத்து, அமைதியா போஸ்ட் மட்டும் படிச்சிட்டு போறது அதவிட ஆபத்துன்னு ஆக்டிவேட் ஆகிட்டேன் சார் :)

      Delete
    3. // நான் ஒரு லயன் ஸ்லீப்பர் செல். சமீப காலம் ஃபேஸ்புக்லயும், மற்ற வலைதளங்கள்லயும் வர நெகட்டிவ் விமர்சனங்களையும், காட்டுக் கூச்சல்களையும், திட்டமிட்டே பரப்பப்படுகிற விஷமங்களையும் பாத்து, அமைதியா போஸ்ட் மட்டும் படிச்சிட்டு போறது அதவிட ஆபத்துன்னு ஆக்டிவேட் ஆகிட்டேன் சார் :) //

      Super! Do write regularly.

      Delete
    4. மகிழ்ச்சி @ ரெஜோ நண்பரே! அருமையாக, நச்சென்று எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்!

      Delete
    5. Welcome ரெஜோ...💐

      தொடர்சியாக எழுதுங்க..
      அவ்வப்போது இங்கே ஒரு புதிய பாணி தெம்பட்டால் ஒரு சுறுசுறுப்பு கூடும்...
      😍

      Delete
  5. 1. வாங்கியதும் வாசித்ததும் -24

    2. 70/100

    3. ஜம்போ தேவை

    4. லோன் ரேஞ்சர் வேண்டாம்

    5. ஒரு வெள்ளை செவ்விந்தியன்

    6. முதல் ஸீஸன்

    ReplyDelete
  6. அனைத்து காமிக்ஸ் களையும் தமிழில் படிக்க ஆசை இருந்தாலும் நம் (உங்கள்/எங்கள்) கையை கடிக்காத கதைகளை வெளியிடுங்கள் சார். பல மொழிகளில் வந்துள்ள நிறைய பார்த்து பெருமூச்சு விட்ட காலம் போய், தங்கள் வெளியீடுகள் தரத்திலும் விலையிலும் எங்கள் காலரை மற்ற மொழி வாசகர்கள் முன் தூக்கி விட்டுக் கொள்ள உங்கள் வெளியீடுகள் தான் காரணம் என நான் வேறு சொல்ல வேண்டுமா என்ன? என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உலகின் எந்த மொழியிலும் நீங்கள் வெளியிடும் புத்தகங்களின் விலையில் வெளிவருவதாக தெரியவில்லை. தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாங்கள் வரம் வாங்கி வந்தவர்கள். உங்கள் முயற்சிகளுக்கு கண்டிப்பாக எங்கள் ஆதரவு உண்டு.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. 1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?
    Lone Ranger மற்றும் ஜெரோமையா தவிர அனைத்து கதைகளும் படித்துவிட்டேன்.


    2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?
    70 கதைகளுக்கு. 100 மதிப்பெண்கள் இவ்வளவு வகைகளை எங்களுக்கு கொடுத்ததற்காக உங்களுக்கு.


    3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
    தற்போது வந்து கொண்டிருக்கும் கதைகளில் எனக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்தது ஜம்போ தான். சமீபத்தில் நின்று போன கருப்பு வெள்ளை கி நா பிறகு. கண்டிப்பாக ஜம்போ தேவை

    4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?
    ஏனோ வசனங்கள் எனக்கு பிடிக்க வில்லை. முதல் கதை பாதியோடு நின்றதோடு சரி. தயவு செய்து வேண்டாம்.

    5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?
    அனைத்து ஜேம்ஸ்பாண்ட் கதைகளும். மற்றும் நில் கவனி வேட்டையாடு அதன் சித்திரங்களுக்காகவே.

    6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?
    சீசன் 2.

    ReplyDelete
  8. ஸ்டெர்ன் மூலம் ஜம்போ மீண்டு எழுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது சார்...ஸ்டெர்ன் இதழை பொறுத்தவரை படிக்கும் பொழுது ஒரு கதையாக அது தெரிவதில்லை ..நிஜத்தில் நாமும் கூட இருந்து பயணிக்கும் அனுபவமாக மகிழச்சி அடைய வைக்கிறது சார்..அதுவே அதன் வெற்றி...

    ReplyDelete
    Replies
    1. // ஸ்டெர்ன் இதழை பொறுத்தவரை படிக்கும் பொழுது ஒரு கதையாக அது தெரிவதில்லை ..நிஜத்தில் நாமும் கூட இருந்து பயணிக்கும் அனுபவமாக மகிழச்சி அடைய வைக்கிறது // உண்மை உண்மை

      Delete
  9. இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?


    ####


    வாங்கியது அனைத்தும் படித்ததும் அனைத்தும்...

    ReplyDelete
  10. 2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?


    ####


    எழுபது...

    ReplyDelete
  11. .க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?


    ####

    கண்டிப்பாக தேவை சார்..சில இதழ்கள் சோடை போனாலும் பல புது ( மை)படைப்புகளை அத த ஜம்போ தானே வழங்கியுள்ளது...!

    ReplyDelete
  12. இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா


    ***

    வேண்டாம் சார் ..புது கெளபாய் என்றவுடன் துள்ளி எழுந்த மனம் இவரை படித்து முடித்தவுடன் ஓ...இவர் கெளபாயா என்று பொசுங்கி போயிற்று சார்...:-)

    ReplyDelete
  13. இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?


    இளம் டெக்ஸ் இரண்டும் சார்..

    ReplyDelete
  14. இறுதி வினாவிற்கு சரியாக பதில் அளிக்க தெரியவில்லை சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. பிட் அடிச்சாவது சொல்லுங்க தலைவரே...!!!

      Delete
    2. இங்கி பிங்கி பாங்கி போட்டுவிடுங்க தல...

      Delete
  15. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  16. வாசக நண்பரின் குடும்பத்திற்காக நல்முயற்சியில் இணைந்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..

    கண்டிப்பாக நண்பரின் ஆன்மா சாந்தியடைந்து இருக்கும்...

    ReplyDelete
  17. ///1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?////

    வாங்கியது - எல்லாமே.
    வாசித்தது - 21
    (ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வாசிக்க இயலாமல் போன கதைகள்: ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்,போர் முனையில் தேவைதைகள்,உளவும் கற்று மற!)

    /////2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?/////

    80/100

    /////3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?/////

    தேவைதான் சார்! சற்றே வித்தியாசமான கதைக்களங்களுக்காக ஏங்குகிறது மனம்!


    ////4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?////

    சார்.. ஒன்னு - நான் இருக்கணும்.. இல்லேன்னா அந்த லோன் பார்ட்டி இருக்கணும்! கிர்ர்ர்ர்...

    ////5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?////

    மேற்கே இது மெய்யடா!


    ////6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?//////

    சீஸன்-2

    ReplyDelete
    Replies
    1. ஈவி@ உங்களுக்கே "லோன்" பிடிக்கலனா இனி அவன் கதை ஓவர் தான்....!!

      சீசன்2வும் மேற்கே இது மெய்யடாவும் ஜம்போவை சும்மா தூக்கி நிறுத்திட்டன....!!

      Delete
    2. // ஈவி@ உங்களுக்கே "லோன்" பிடிக்கலனா இனி அவன் கதை ஓவர் தான்....!! //
      இதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு ஈ.வி யோசிச்சிகிட்டு இருக்காரு...!!!

      Delete
  18. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  19. புது புது கதைகளை எதிர்பார்க்கிறேன். 24 புத்தகங்களும் என்னிடம் உள்ளன. இரசித்து படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. வணக்கம் என்னருமை நண்பர்களே...!!!

    ReplyDelete
  21. கென்யா!

    எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் படித்ததால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனி சுவாரஸ்யமான பயணமாக இருந்தது.

    இருண்ட கண்டம், ஆப்பிரிக்காவின் அதிகம் மக்கள் தொகை இல்லா & அதிக தொழில் நுட்பம் இல்லா கென்யாவில் தொடங்குகிறது கதை.

    காலத்தால் அழிந்து போன அரிய விலங்கினங்களை காப்பாற்றி அவற்றை பாதுகாத்தும் வருகின்றனர் வேற்று கிரக வாசிகள். அவர்களின் கட்டு பாட்டை மீறி அவ்வப்போது வெளி வரும் உயிரினங்களை அழித்தும் சிலவற்றை அங்கிருந்து மீட்டும் போகின்றனர்.

    என்ன ஒரு அற்புதமான கற்பனை வளம். லாஜிக் மற்றும் கதை பற்றிய ஆராய்ச்சி போன்றவகைகளை ஒதுக்கி வைத்து விட்டு படித்தால் ஒரு அற்புதமான அனுபவம் நமக்கு உண்டு.

    கென்ய தேசத்தின் அழகான காடுகளும், அங்கு இருக்கும் மிகப்பெரிய ஏரியும், அங்கு வாழும் பழங்குடி மக்களும் நம் கண் முன் வந்துவிட்டு போகின்றனர்.

    சித்திரங்களும் வண்ண கலவைகளும் போட்டு நம் கண்ணுக்கு ஒரு நல்ல சித்திர விருந்து படைக்கின்றான.

    *ஆனால் ஒரு விஷயம் மட்டும் உதைக்குது தொழில்நுட்பத்திலும் அறிவிலும் மனிதர்களை விட சிறந்து விளங்கும் வேற்று கிரக வாசிகள் தோற்றத்தை மட்டும் ரசிக்கிற வகையில் மனிதனுக்கு உருவாக்க முடியாமல் போனது தான் விசித்திரம் (அவதார் படத்தில் மட்டும் தான் அவர்கள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு அற்புதமான உலகத்தை காட்டுவர்) .

    மற்ற தேசங்களை காட்டிலும் ஆப்பிரிக்கா நாடுகள் பொருளாதாரத்திலும் அறிவியல் வளச்ர்சியிலும் பின் தங்கி இருப்பதால் அரிய மிருகங்களை காப்பதில் அந்த நாடுகளின் தலையீடு இருக்காது என்பது ஒரு காரணமாக இருக்கலாம் (ஏன் கென்யா தேசத்தை அவர்கள் தேர்ந்து எடுத்தார்கள் என்ற கேள்விக்கு விடை இதுவாக இருக்கலாம் என்பது என் யூகம்)

    இறுதி பாகத்தில் அந்த ஏலியனே மாற்று உருவில் வந்து விளக்கம் தருவது எதிர் பார்க்காத ட்விஸ்ட் செம்ம.

    அங்கங்கே தெறிக்கும் & நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள் "நீ என்னுடன் இருந்தால் மலைகளை கூட புரட்டி போடுவேன்" அதற்கு "அந்த மலைகள் எல்லாம் அங்கேயே இருக்கட்டும்" என்று "நறுக்"கென்று சொல்வது செம்ம.

    கதையின் நாயகிக்கு ரசிகர் மன்றம் இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது பெரிய ஆச்சர்யம் தான்...

    இந்த கதை வரிசையில் வரும் மற்ற கதை தொடர்களையும் அவசியம் ஆசிரியர் வெளியிட வேண்டும் நல்ல கதை தொடர்களை மிஸ் பண்ணிட கூடாது...
    கென்யா - அட்டகாசம் & அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்!

      ///கதையின் நாயகிக்கு ரசிகர் மன்றம் இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது பெரிய ஆச்சர்யம் தான்...///

      கதையின் கடைசி பேனல் தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்!

      Delete
    2. நன்றிகள் 🙏🥙

      Delete
    3. // கதையின் கடைசி பேனல் தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்! // இதற்காகவே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும். அகில உலக கேத்தி ஆஸ்டின் ரசிகர் மன்றம்.

      Delete
    4. ///இதற்காகவே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும். அகில உலக கேத்தி ஆஸ்டின் ரசிகர் மன்றம்.///

      அப்புறம் என்னாச்சுன்னா.. அந்த ரசிகர் மன்ற கண்மணிகள்லாம் ஒருத்தர் பின் ஒருத்தரா ஒரு வினோத மிருகத்தால் தாக்கப்படுகிறார்களாம்!!

      Delete
    5. அழகின்னாலே ஆபத்தும் உண்டு ஆச்சே.

      அதை எல்லாம் கடந்து தான் கோட்டையில கொடிய நடனும்.

      Delete
    6. அருமை நண்பரே...//அவர்களின் கட்டு பாட்டை மீறி அவ்வப்போது வெளி வரும் உயிரினங்களை அழித்தும் சிலவற்றை அங்கிருந்து மீட்டும் போகின்றனர்.//
      நண்பரே மீட்டுப் போகவில்லை என்றே நினைக்கிறேன்...நீரோடு உரிவதால் அப்படி தெரியலாம்....அவர்கள் ஊருக்கு கொண்டு செல்ல வாய்ப்பே இல்லை....வேற்று கிரகத்தில் வைக்கலாம்னா ...வாய்ப்பிருந்தா கடலுக்குள் பதுக்கி அவசியமுமில்லை....

      Delete
    7. அந்தப் பரந்து விரிந்து பெரிய ஏரின்னு துவக்கமே சொல்வதால் விபரீத கற்பனைக்குதிரை நாலுகால் பாய்ச்சலில் உருவெடுக்க கென்யா உகந்த இடமாகி இருக்கலாம்

      Delete
    8. //மற்ற தேசங்களை காட்டிலும் ஆப்பிரிக்கா நாடுகள் பொருளாதாரத்திலும் அறிவியல் வளச்ர்சியிலும் பின் தங்கி இருப்பதால் அரிய மிருகங்களை காப்பதில் அந்த நாடுகளின் தலையீடு இருக்காது என்பது ஒரு காரணமாக இருக்கலாம் (ஏன் கென்யா தேசத்தை அவர்கள் தேர்ந்து எடுத்தார்கள் என்ற கேள்விக்கு விடை இதுவாக இருக்கலாம் என்பது என் யூகம்/

      /அந்தப் பரந்து விரிந்து பெரிய ஏரின்னு துவக்கமே சொல்வதால் விபரீத கற்பனைக்குதிரை நாலுகால் பாய்ச்சலில் உருவெடுக்க கென்யா உகந்த இடமாகி இருக்கலாம்//

      வேலையா இருக்கேன். சாயந்திரம் வர்றேன்.
      பயப்பட வேண்டாம். சுருக்கமா எழுதப் பாக்கறேன்

      Delete
    9. வருக வருக ஐயா!

      உங்களின் விளக்கங்களும், பார்வை கோணமும் புதிய விஷயங்களை அள்ளி தரும் எங்களுக்கு.

      Delete
    10. ///வேலையா இருக்கேன். சாயந்திரம் வர்றேன்.///

      செனா அனாவை இன்னும் காணோமே?!! மறுபடியும் பாண்டிச்சேரிக்கே போய்ட்டாரா?!!
      க்கும்! அப்படியே போய்ட்டாலும்...!!

      Delete
  22. *சித்திரங்களும் வண்ண கலவைகளும் போட்டி போட்டு நம் கண்ணுக்கு ஒரு நல்ல சித்திர விருந்து படைக்கின்றான.

    ReplyDelete
  23. 1. அனைத்தும்.
    2.மார்க் - 75
    3.ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
    தேவைதான்
    4.LONE ரேஞ்சர் - தவிர்த்துவிடலாம்
    5. 007 2.0
    6. முதல் சீசன்

    ReplyDelete
  24. .இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?

    வாங்கியது 24, வாசித்து 24

    .இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?

    கிராஃபிக் நாவல்களின் காதலன் என்பதால் கண்டிப்பாக 100/100.

    க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?

    கண்டிப்பாக தேவை சார்.


    4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?

    நிச்சயமாக தரலாம் சார். எனது அபிமான ஹீரோக்களில் ஒருவர்.

    5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?

    பாண்ட் 2.0வின் முதல் ஆல்பம். பனியில் ஒரு பிரளயம்.
    நில் கவனி வேட்டையாடு came very close for second place.

    6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள்

    சீசன் 2 தான். கொஞ்சமும் சந்தேகமின்றி. 6 க்கு 6ம் சிக்ஸர் தான் அந்த சீசனில்

    ReplyDelete
    Replies
    1. ////எனது அபிமான ஹீரோக்களில் ஒருவர்.///

      நீங்க தெலுங்குல பாலகிருஷ்ணா படங்களை விரும்பிப் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன் KS! :)

      Delete
    2. இல்லீங்க சிரஞ்சீவி:))))))

      Delete
    3. என்ன? லோன் ரேஞ்சர் வேணுமா.... ஓ...

      ஈவி@ நம்ம KS, பேங்ல டெபுடி மேனேஜர். அதான் "லோன்" பிடிச்சிருக்கு....!!!😉

      Delete
  25. கால வேட்டையர்
    ஜெரோனிமா பாதி....
    வெள்ளைச் செவ்விந்தியன் கதை
    படிக்காதவை இம்முனே

    ReplyDelete
    Replies
  26. நண்பர் பழனியின் குடும்பத்திற்கு தொடர்ந்து உதவி கிடைத்து வருவது மகிழ்ச்சி. இது போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்றும் பூமி சுழன்று கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///இது போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்றும் பூமி சுழன்று கொண்டு இருக்கிறது.///

      ஆங்! இப்ப செனாஅனா வந்து பூமி சுழல்வதின் கோட்பாடு என்ன.. ஒரு சடன் ப்ரேக் போட்டு பூமியை நிறுத்தினா என்ன ஆகும்.. திடீர்னு டர்போ மோடுல/பீஸ்ட் மோடுல பூமி சுத்துனா என்ன ஆகும்.. இது பத்தியெல்லாம் சீவகசிந்தாமணியில் என்ன சொல்லியிருக்காங்க - அப்படீன்றதையெல்லாம் பாண்டிச்சேரி பக்கமா போய்ட்டுவந்து தெளிவா சொல்லுவாரு பாருங்க! :D

      Delete
  27. //பிரவாகமெடுத்த விமர்சனங்களின் பெரும்பான்மை பாசிடிவோ, நெகடிவோ - அதனை இம்மிகூடச் சட்டையே செய்திடாமல் விற்பனை எனும் அளவுகோலில் நூற்றுக்கு முன்னூற்றி நாற்பத்தியெட்டு மதிப்பெண்கள் பெற்றது - ஜெரெமியா தொடரின் "பயணங்கள் முடிவதில்லை" தான் ! //


    ஹூர்ரே...

    ஜெரெமயா இரண்டாவது இதழ் மிகவும் நன்றாக இருந்ததுங்க சார்... இண்டியானாவும் அந்த இளமை கிளினிக்கும் நல்லவிதமாக பேசப்பட்டதாகவே ஞாபகம்...

    ஜெரெமயா மீள்வருகைக்கு தகுதியான தொடர். அதிலும் தற்போது வந்துள்ள ஆம்னிபஸ் #3 அட்டகாசமாக உள்ளதுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் நீங்கள் மனது வைத்தால் அந்த 3வது பாகமும் வந்து விடும் சார். ஹிட் என்று நீங்களே சொல்லிட்டீங்க

      Delete
    2. ///இண்டியானாவும் அந்த இளமை கிளினிக்கும் நல்லவிதமாக பேசப்பட்டதாகவே ஞாபகம்...///

      யெஸ்! ஜெ.ராமைய்யா தொடரில் ஓரளவுக்கு கதையம்சம் இருந்த பாகமும் இதுவே!

      Delete
    3. நீங்க ராமைய்யாவா ஆக்கினாலும் சைலண்டா ஹிட் ஆயிட்டார் பாத்தீங்களா?

      Delete
    4. ஜெரெமியா ஒரு புள்ளியில ஆரம்பிச்சு ஒரு புள்ளியில முடியற கதை வகையறா இல்லைங்க.

      ஜெரெமியாவும் கர்டியும் ஒரே மனிதனோட வெவ்வேறு குணங்கள்னு ஹெர்மன் சொல்லி இருப்பார். அந்த மயான பூமியில தங்கள் ஜீவனத்துக்கான பயணத்தில் சந்திக்கும் நிகழ்வுகளையே கதையாக்கி இருப்பார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

      உதாரணமாக அந்த இரும்பு கோபுர முட்டைக்கண்ணன் தான் வளர்க்கும் கழுகளுக்கே உணவாவது; மரபணு மாற்றம் கண்ட இண்டியானாவும் அந்த மெஜுசியனும்; அந்த டாக்டரும் அவரோட இளமை கிளினிக்கும்; ஒரு புது மதத்தை(?) தோற்றுவிக்க எண்ணும் ஒரு வேசக்காரன்; முதலாளியின் இறந்த சடலத்தை கொண்டு கோலொச்சும் வாரிசுகள் இந்த மாதிரி...

      Delete
    5. எனக்கு முதல் கதை மிகவும் பிடித்து இருந்தது காரணம் கதை நகரும் விதம் மற்றும் மனித மனங்களில் உணர்ச்சிகளை கொண்டு அழகாக நகர்ந்தது.

      Delete
  28. மேலே ஜம்போவின் நான்கு சீசன்களிலும் வந்த 24 புத்தகங்களையும் ஒன்றாகப் பார்க்கும்போது எப்படிபட்டதொரு ஒரு வெரைட்டியான வாசிப்பு அனுபவத்தை ஜம்போ சீரிஸ் வழங்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது சார்.

    ஜம்போ கட்டாயம் தொடர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ///எப்படிபட்டதொரு ஒரு வெரைட்டியான வாசிப்பு அனுபவத்தை ஜம்போ சீரிஸ் வழங்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது சார்.////

      உண்மை!

      Delete
    2. ஜம்போ தொடரனும் சார். வித்தியாசமான கதைகள் நிச்சயமாக வேண்டும்.

      Delete
  29. பீன்ஸ் ஜாக்குக்காக இன்னொருவரும் வருகிறார்....அற்புதங்கள் நிகழ்வே வாழ்க்கை....

    ReplyDelete
  30. //2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ? //

    கதைகளோ... தனிப்புத்தகங்களோ... அவற்றின் வெற்றியோ... தோல்வியோ... அவை தரும் கொண்டாட்டமோ... குட்டுகளோ... அவற்றின் வாசிப்பு அனுபவத்திற்கு எந்த புத்தகமும் சோடை போகவில்லை.

    இது வாசிக்க தகுதியற்ற புத்தகம் என்று ஜம்போவில் எதுவுமே வரவில்லை. என்னைப் பொறுத்தவரை 100% வித்தியாசமான வாசிப்பு அனுபவங்களை அளித்த ஜம்போவுக்கு மதிப்பெண்களும் 100.

    தேடலே வாழ்க்கையின் உயிர்த்துளி!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க மாணவர்கள் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள் நண்பரே!

      Delete
    2. நன்றிங்க நண்பரே...

      Delete
    3. எல்லாப் படைப்புகளுமே அதனதன் படைப்பாளிகளின் அழகான குழந்தைகளுக்குச் சமானம் என்ற விதத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துச் செல்வேன் சார் ; எதையும் "குப்பை" என்று மட்டம் தட்டுவது சரியாய் இராது தான் ! என்ன - நமது ரசனைகளுக்கேற்ற தேர்வுகளாய் அமைத்துக் கொள்ளும் கடமையினை நாம் செவ்வெனே செய்து கொள்ள வேண்டும் !

      Delete
    4. //!கதைகளோ... தனிப்புத்தகங்களோ... அவற்றின் வெற்றியோ... தோல்வியோ... அவை தரும் கொண்டாட்டமோ... குட்டுகளோ... அவற்றின் வாசிப்பு அனுபவத்திற்கு எந்த புத்தகமும் சோடை போகவில்லை.////

      ----ஒரு படைப்பை அணுகவேண்டிய முறையை சொல்லி உள்ளீர்கள் SK.

      நம்மிள் பலரும் அடுத்தவங்க கருத்தை பார்த்தே இதழ்களுள் போக ட்ரை பண்றாங்க.. அது சரியல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.. அவரவர் ரசனையின் அளவுகோலில் அந்த படைப்பு பிடிக்கலான அதற்கு நிச்சயமாக காரணங்கள் இருக்கும்...

      Delete
  31. // கதை சொல்லும் காமிக்ஸ் - பீன்ஸ் கொடியில் ஜாக் - 15-ம் தேதியன்று புறப்படும் !// வாரே வா im waiting

    ReplyDelete
  32. டியர் எடி,

    விற்பனை விகிதங்கள் எதிர்பார்த்த தொனியே, ஆனால் ஜெரோமியா ஒரு ஆச்சர்ய அதிர்ச்சி... தனி இதழ்களாக இதை ஆங்கிலத்தில் படித்த போது அத்தனை சாராம்சம் இல்லை என்ற எண்ணமே. ஆனால் முழுத் தொகுப்பாக இது இன்னும் நன்றாக வந்திருப்பதாக தெரிகிறது. படித்து பார்க்க வேண்டும்.

    1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?

    வாங்கியது இது அத்தனையும். படித்தது முதல் இரண்டு சீசன்கள், மற்றது இன்னும் சேகரிப்பில் தூங்கி கொண்டுள்ளன. தேடிப் படிக்க எத்தனித்து கொண்டிருக்கிறேன்


    2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?

    6/10 கதை தேர்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.


    3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?

    பழையன கொண்டாடபடுவதுடன், புதியவைகளை தேடி ஓடிகொண்டே இருக்கும் காலம் இது... இல்லையேல் நாம் வழக்கொழிந்து போய்விடுவோம்.



    4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?

    இனி அந்த தொடர் எடுபடும் என்ற நம்பிக்கை இல்லை


    5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?

    படித்ததில், நில் கவனி வேட்டையாடு...Best. இரண்டாம் பாகம் இருந்தால் ஆவலுடன் வெயிட்டிங்.
    ஒரு தலைவனின் கதை... தான் Worst.


    6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?

    இரண்டாவது, தற்போதைக்கு.

    ReplyDelete
    Replies
    1. சீசன் 3 இதழ்களைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள் சார்... !

      Delete
    2. கண்டிப்பாக எடி... இந்த மாதம் இதுதான் டார்கெட் :-)

      Delete
    3. ஆம் சார்... சீசன் 3யுமே செம ஹிட்ஸ் தான்....

      Delete
  33. // "ஜெரெமியா"வை வாங்கி வைத்தீர்களோ என்னவோ - புக்ஸ் ஆறோ, ஏழோ மாதங்களிலேயே காலியாகி விட்டிருந்தன ! //

    இது இது செய்தி. மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் எனக்கு ஜெரெமியா மிகவும் பிடித்தமான கதை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும், எனது நண்பர் கிரி நாராயணன் அவர்களுக்கும்.

      Delete
  34. // Before I sign out, ஒரு மகிழ்வான தகவல் : நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கென நாம் இணைந்து திரட்டிய நிதி - அவரது 2 புதல்விகளின் கல்விக்கு ; மேற்படிப்புக்கு ; திருமணத்துக்கு - என்ற உதவும் விதங்களில் தேர்வு செய்யப்பட ஷேம நிதிகளில் முதலீடு செய்தாச்சு ! //
    Super Sir...

    ReplyDelete
  35. 1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?
    24 இதழ்களுமே வாங்கியாச்சி,24 இதழ்களையுமே படிச்சாச்சி..
    சில இதழ்களை மீள் வாசிப்பும் செய்தாச்சி...

    2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?
    60/100...

    3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
    தேடல் தேவைதான்,அதே நேரத்தில் சீஸன் 5 ற்கு இன்னும் கொஞ்சம் இடைவெளி நல்லதே,அதனால் பொறுமையாக தேடி 2024 இல் இறங்கி அடிக்கலாம்...

    4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?
    செமி கார்ட்டூன் மாதிரி LONE ரேஞ்சர் கேரக்டர் மதில் மேல் பூனையாக இருப்பதால் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்,அதனால் சக்ஸஸ் ரேட்டிங் குறைவாக உள்ளது,எனக்கு பிடித்தே இருந்தாலும்,அவசியம் போட்டே ஆகனும்னு இல்லை...வந்தாலும் பிரச்சனை இல்லை...

    5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?
    நில்,கவனி,வேட்டையாடு இதழ் தான்,பல இதழ்களைப் பிடித்திருந்தாலும் இது கொடுத்த அனுபவம் அலாதியானது...

    6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?
    இரண்டாவது சீசன்...

    ReplyDelete
    Replies
    1. சீசன் 2.. ஓவரால் வின்னர்னு நிறைய பேரை அது கவர்ந்ததில் இருந்து தெரிகிறது..

      ஆசிரியர் சார்@ சீசன் 2வை அடுத்த ஜம்போ சீசனின் போது கம்பேர் பண்ணிகிட ஒரு பார்வை பார்த்துக்கிடலாம் சார்

      Delete
  36. விக்ரம் படத்தின் வெற்றி கிடைக்கிற நேரத்தை தனதாக்கி கொள்ள, நமது தளத்தை அவ்வப்போது எட்டிப்பார்ப்பதோடு சென்று விடுவேன். என்ன செய்வது ஒரு உண்மையான கலைஞனுக்கும், திறமைக்கும் எப்பொழுதுமே அங்கீகாரம் just like that என்று கிடைத்து விடுவதில்லையே. ஆனால் இன்று அனைத்தையும் சேர்த்து வைத்து ஆண்டவருக்கு உலக மக்கள் கொடுத்து கொண்டிருக்கும் வெற்றியை கண்டு வாயடைத்து போய் கொண்டிருக்கிறேன். உண்மை சில சமயம் தூங்கும், ஆனால் செத்து விடாது, அது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் போது மற்றவை காணாமல் போகும். இதுவே நிதர்சனம்.

    என்ன இது சம்மந்தம் இல்லாமல் புலம்பிக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம். இங்கு ஏறக்குறைய கிராபிக் நாவலுக்கும், ஜம்போவுக்கும் 2023 ல் மூடு விழா எடுக்கும் நிலையில், STV அவர்கள் ஒற்றை ஆளாக தனது வழக்கமான புள்ளி விவரங்களுடன் முன் நின்று ஜம்போ சீசன் 2023 ல் வருவதற்கு ஒரு நம்பிக்கை கீற்றை விதைத்திருக்கிறார்.

    நண்பர்களும் இதுவரை positive response யே அளித்து கொண்டிருக்க, இந்த தடம் வெளி வந்து பல அரிய கதைகளை காண ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்.

    1. வாங்கியது - 24, படித்தது - 24

    2. 80/100

    3. ஜம்போ வேண்டும் சார்

    4. Lone Ranger - 50/50

    5. நில் கவனி வேட்டையாடு

    6. சீஸ்ன் 3 - இங்கே மசாலா குறைவு, pure jumbo.

    ReplyDelete
    Replies
    1. /////ஜம்போவுக்கும் 2023 ல் மூடு விழா எடுக்கும் நிலையில், STV அவர்கள் ஒற்றை ஆளாக தனது வழக்கமான புள்ளி விவரங்களுடன் முன் நின்று ஜம்போ சீசன் 2023 ல் வருவதற்கு ஒரு நம்பிக்கை கீற்றை விதைத்திருக்கிறார்.///

      ---திரு@ நம் எல்லோரது கருத்துக்களையும் 4ஆண்டுகளாப் பார்த்தாலே நம் காமிக்ஸ் பயணத்தில் ஜம்போவின் முக்கியத்துவம் &அவசியம் தெளிவாக விளங்குது.... கடுமையான நேர நெருக்கடி என்பதால் ஒவ்வொரு சீசனாக விவரிக்க வாய்ப்பு இல்லை...!!

      ஜம்போ 5 அதி விரைவாக வந்தே ஆகணும் என்பதில் அனைவரும் ஒருமித்து உள்ளோம் என நட்புகளின் கருத்துகள் சொல்லுது...

      2023ல் நம்பிக்கை கொள்வோம்...

      Delete
  37. // So சர்ச்சைக்குரிய இதழாய் இருந்தாலுமே, ஜம்போவின் ஒரே ஹார்ட்கவர் இதழ் என்ற கூடுதல் அடையாளத்துடன், ஜம்போவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டுக்குள் நுழைகின்ற தொடர் "ஜெரெமியா" ! //
    ஙே,ஙே,ஙே...!!!

    ReplyDelete
  38. // தொடர்ந்து அந்த elite பட்டியலினுள் புகும் இதழ்கள் அனைத்துமே one shots தான் ! வெவ்வேறு ஜானர்களில் இருந்தாலும், அவை அனைற்றிற்குமே பொதுவான ஒரே சமாச்சாரம் - "கதைகளின் வலு" என்பது மாத்திரமே ! //
    ஜம்போ கலவையான வாசிப்பு அனுபவத்தை நல்கியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை,சீஸன் -5 ற்காக வெயிட்டிங் சார்...
    கனமா,கச்சிதமா இறங்கி 6 க்கு 6 ன்னு சிக்ஸர் அடிப்போம்...

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ கதைகளில் படிக்காமல் உள்ளது ஒரு தலைவனின் கதை மற்றும் உளவும் கற்று மற. முதல் கதை பாதியில் நிறுத்தி விட்டேன் இரண்டாவது கதையை படிக்கவே இல்லை.

      இது தவிர ஜம்போவில் வந்த அனைத்து கதைகளையும் படித்து விட்டேன்.

      லோன் ரேஞ்சர் - இரண்டாவது கதையை மிகவும் எதிர்பார்த்தேன் ஆனால் மனுஷன் நான் எப்போதும் இப்படித்தான் என சொல்லி விட்டார். எனவே இவரை தொடராமல் இருப்பதே நல்லது. இவர் ஹீரோ வேஷத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார்.

      ஜம்போவில் வந்த கதைகளில் மனதில் நின்றவை மா து ஜே சலாம், பயணங்கள் முடிவதில்லை, நில் கவனி வேட்டையாடு.

      ஜம்போ நான்காவது சீசன் மிகவும் சுமார். மற்ற மூன்று சீசனும் நன்றாக இருந்தது. மார்க் 7/10.

      ஜம்போ மற்றும் எந்த ஒரு பேனரில் வரவுள்ள கதைகளும் டாக்குமெண்டரி படம் போல இல்லாத கதைகளை தேர்ந்தெடுப்பது நலம். சித்திரமும் கொலைப் பழக்கம் போன்ற கதையை படித்து விட்டேன்.ஆனால் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.

      அப்புறம் நீருண்டு நிலமில்லை (கிராஃபிக் நாவல்??) மிகப்பெரிய மொக்கை மிடியல.

      Delete
    2. "நீருண்டு நிலமில்லை" ஜம்போ வெளியீடே அல்ல சார் !

      Delete
    3. ஆமாம் சார்.தெரியும் சார் ஆனால் அது ரெகுலர் தடமா அல்லது கிராப்பிக் நாவல் தடமா என தெரியாததால் "()" எழுதி இருந்தேன்.

      Delete
    4. அது சந்தா A வில் வந்த புத்தகம். எப்பூடி.... ரைட் ல இண்டிகேட்டர், லெஃப்ட் ல கையை போடுவோம் ....

      Delete
    5. நீருண்டு நிலமில்லை - அது எந்த பேனரின் கீழ் வந்தது என்பதை கூட மறக்கடிக்க செய்த இதழ் :-) குமார் எப்பூடி 😀😀😀

      Delete
  40. லக்கி லூக்கை சுட்டது யார் மிகவும் ரசித்தேன். எனக்கு இந்த கதை பிடித்தே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அமாம். "பிரிவோம் சந்திப்போம்" இதழ் மாத்திரம் வெளியிடப்படாவிடில் எனது பார்வையில் "லக்கி லூக்கை சுட்டது யார்?" தான் ஜம்போவின் டாப் இதழ்

      Delete
  41. கால வேட்டையர் என்னைப் பொறுத்தவரை நன்றாகவே இருந்தது. கதை விறுவிறுப்பாக சென்றது. அதிக பக்கங்கள் குறைவான விலை மற்றும் ஒரு ப்ளஸ்.

    ReplyDelete
  42. James bond 2.0 lone Ranger இருவருக்கும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்,
    ஜம்போ காமிக்ஸ ஒரு புதிய தலங்கள் புதிய தடத்தில் கொண்டு செல்லவும்.
    For example, 6 category sci fiction, horror ,thriller ghost stories, adventures, new cowboy.

    ReplyDelete
  43. வணக்கம்...


    1) வாங்கினியா - ஆமாங்க 24ங்க
    வாசிச்சியா - அம்புட்டையும் : அதை விட காமிக்ஸ் ரசிகன்ங்கிறதுல என்ன வேலைங்க...தற்பெருமெங்க...

    2) இன்னா மார்க்கு - 99 ங்க 100க்கு...

    அதாகப்பட்டது. சும்மா கெடந்த சங்க ஊதிவிட்டுட்டீங்க. இப்டியெல்லாமே கதைங்க இருக்குதுப்பான்னு வெரைட்டியா காட்டுனதுக்கு சல்லூட்டு.
    மொத்தமா 100/100 ன்னா ச்சும்மா போற போக்குல அடிச்சி விட்ட மேரி ஆயிடும். சிற்பங்கள செதுக்குற சிற்பிக்கு தன் படைப்ப வருங்கால மக்கள் பார்க்கணும் - ரசிக்கணும் - என்ன சொல்ல வந்தேன்னு உணரணும்னு நெனப்பு இருக்குமில்ல. ஆனாக்க இப்ப பாக்குறவெங்களுக்கு இத இன்னுமு நல்லா செஞ்சிருக்கலாம்லன்னு சொல்லவரும்ல...அந்த ஒரு பர்செண்ட் தான் கொறைங்கிறதுக்காக கொரச்சது...

    3)இப்ப இன்னான்ற ஜம்போ குடுக்கணுமா - டய்ரட்டா சொல்லு மச்சி...

    அக்காங் - ஆமான்னு தாஞ் சொல்றே...

    4(((( அந்த மொமூடி போட்ட வெள்ள குருத பார்ட்டீ பத்தி - சொல்றதுக் நெறய்ய இருக்கில்ல... சும்மா ச்சும்மா வந்து குத்தி ஒடச்சி ஒடச்சதுக்கு பணங்குடுத்து சுட்றவெங்கெ...ரிப்பீட்டு க்கு நடுவால இந்தாளு நல்லாத்தாங் குப்பை கொட்றாரூ...இதாச்சும் மக்குற குப்ப...இன்னொரு பார்ட்டிங்க இன்னுமு எத்தினி வருஷத்துக்கு சுட்டுக்கினே இருப்பாய்ங்கெளோ தெர்ல சாமீ...

    5) பட்ச்சதுல புட்ச்சது:
    ஞான தெனாவட்டு வெட்டியான்...

    6)சீசனு : குத்தால சீசன்ல தண்ணி விழுந்தாலே போதுங் குளிக்க...அந்த சாரலும் தூறலும் - அந்த மேகக் கூட்டமும் - அந்த ஜிலீர் ஜில்லிப்பும் - சூடா ஒரு வடய சாப்டுக்கிட்டு ஊதி ஊதி டீய குடிக்கிற சுவாரஸ்யமும் - ஈரத்துண்டு மேலுக்கு போட்டுகிட்டு - ஈரமாருக்கிற டௌசரோட நடக்குற வித்தியாசமும் - மூணு நாளூ டேரா போட்டா கூட ஃபிரண்ட்ஸ்ங்க கூட அடிக்கிற!!! கூத்தும் - இல்லைன்னாலும் குடும்பத்தோட போயிருந்தாலும் அவங்க ரிலாக்ஸாக ஆறத பாக்குற சொகமும் - இதெல்லாத்தையுமு விட சூடா இட்லியத் தேடி அலையிறதும் எத்தனை வருஷம் னா என்னங்க - எப்பயும் இனிக்கவே இனிக்கும்.

    வருஷா வருஷம் திரும்ப திரும்ப போனாலும்....

    போகாம இருந்துட்றோமாக்கும்...

    சிலத தலைகீழா நின்னாலும் மாத்தீட முடியாது சாமீ...

    ReplyDelete
    Replies
    1. 5) பட்ச்சதுல புட்ச்சது:
      ஞான தெனாவட்டு வெட்டியான்...
      Superb

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 1. வாங்கியது 24 வாசித்தது 12

      2. 80/100

      3.அனைத்து தரப்பு வாசகர்களின் பட்ஜெட்டுக்குள் இருந்தால் எதுவும் வெளியிடலாம். பெயரளவில் (Banner) எப்போதும் எனது ஆசைகள் முத்து, லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்கள்.

      4. மன்னிக்க...நான் இனிமேல் தான் இவரது கதைகள் படித்திட வேண்டும். டெக்ஸ் வில்லர் சைஸை போல் சிறிதுப்படுத்தினால் LONE ரேஞ்சுர் ஓகே ஆவர் என்பது எனது யூகம்.

      5."பிரிவோம் சந்திப்போம்"

      (மற்ற சிறந்தவை 2. லக்கி லூக்கை சுட்டது யார் ? பிரிவோம் சந்திப்போம் இதழ் மாத்திரம் வெளியிடப்படாவிடில் எனது பார்வையில் "லக்கி லூக்கை சுட்டது யார்?" தான் ஜம்போவின் டாப் இதழ், 3. மேற்கே இது மெய்யடா!, 4. மா.து.ஜே.சலாம்...கி.நா.) 5. The ஆக்சன் ஸ்பெசல்- Fleetway கதைத் தொகுப்பு _Favorite stories) 6. நில்..கவனி...வேட்டையாடு...Zaroff

      6. சீசன் 3. (சீசன் 2ம் கூடவே சொல்லலாம்)

      Delete
    2. உதய் ப்ரோ@ "பிரிவோம் சந்திப்போம்"....கதையில நெ1. அந்த ஓவியங்களும் ஒரு லெவல்.. அனைவரும் டாப்3ல செலக்ட் பண்ண இதுவும் கூடுதல் காரணம்னு நினைக்கிறேன்...!!! அந்த மரங்களுக்கு கீழே நிழல்கள் அத்தனை தத்ரூபம்...

      Delete
  45. கென்யாவின் வெற்றிக் கதை இந்த வார பதிவில் இருக்கும் னு நினைச்சேன்... ஆனா ஜம்போ பற்றிய பதிவு... தற்காலிக நிறுத்தத்தில் ஜம்போ உள்ளபோது பொருத்தமான பதிவு தான்....

    சீசன்4ன் கடைசிஇதழ் மேற்கே இது மெய்யடா வின் பரபரப்பான வெற்றியே சொல்லிட்டது ஜம்போவில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என..... சீசன்5ல பார்ப்போம்...

    ReplyDelete
  46. ///ஜம்போ இதுவரைக்கும் 4 சீசன்களைப் பார்த்துள்ளதை STV உபயத்தில் பட்டியலாய்ப் பார்த்தாச்சு ! ஆனால் SMASHING '70s வருகையினைத் தொடர்ந்து அடுத்த வருஷத்திலும் ஜம்போவுக்கு இடமிராது என்பதே (தற்போதைய) நிலவரம் ! So "இந்த one shot ஜம்போ கதைத்தேடல்கள் தொடரணுமா ? அல்லது இப்போதைக்கு ஓய்வெடுக்கட்டுமா ?" என்ற கேள்வியே இந்த வாரயிறுதியின் அலசலின் topic !!////

    ஆஹா.... ஜம்போவின் நிறைகுறை பார்க்க நாம கொடுத்த பட்டியலே இந்தவார பதிவுக்கு கன்டென்ட் என்பது ரொம்ப மகிழ்ச்சிங் சார்...!!!

    ReplyDelete
  47. ////சாகாவரம் பெற்ற இந்த சீக்ரெட் ஏஜெண்டுக்கு "ஜம்போவின் தூண்களில் # 1 !!" என்ற முத்திரையை நல்குவதில் குழப்பங்கள் லேது !

    4 ஹிட்களோடு முன்னணியில் நிற்பவர் மூத்தவர் ஜேம்ஸ்///

    அட 007 தட்டிட்டு போயிட்டாரா கோல்டு மெடலை......!!!

    ReplyDelete
  48. ///இளம் டெக்ஸ் வில்லர் !

    வெளியானவை - 2 இதழ்கள் !

    வெளியான இரண்டே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்தவை - 2 இதழ்கள் !///

    //ஜம்போவின் தூண் # 2 " என்ற அடையாளத்தை அலட்டல் அல்லாது அள்ளி ஜோப்பியில் போட்டுக் கொள்பவர் "சின்னத் தல" - இளம் டெக்ஸ் தான் !///

    ஊய்....ஊய்..ஊய்... தல டெக்ஸ் உரம்பரையாக போன இடத்திலும் ரன்னர்அப்பு...💞💞💞💞

    "சில்வர் டெக்ஸ்"...சூப்பரு....!!!

    ReplyDelete
  49. //// "ஜம்போவின் தூண் # 3" என்ற அடையாளத்தையும், "சூப்பர் ஹிட்ஸ்" பட்டியலுக்குள் 2 இடங்களையும் வழங்கிடுவதில் நெருடல் இருக்கவில்லை ! ///

    வாவ்..வெட்டியான்களுக்கு வெண்கலமா.....!!!!

    ஸ்டெர்ன்& ஜோனாஸ் க்ரோ டிஸர்வ்ஸ் இட் சார்.... எக்ஸலன்ட் டிஸிஸன்...

    ReplyDelete
  50. ////சர்ச்சைக்குரிய இதழாய் இருந்தாலுமே, ஜம்போவின் ஒரே ஹார்ட்கவர் இதழ் என்ற கூடுதல் அடையாளத்துடன், ஜம்போவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டுக்குள் நுழைகின்ற தொடர் "ஜெரெமியா" !/////

    வாங்கிய அடிகள் வீண்போகல தம்பி ஜெராமையாவுக்கு.... சர்ப்ரைஸ் ரிசல்ட்...

    @சரவணகுமார் பல்லடம்

    @குமார் சேலம்

    @PfB/T & ஆல் ஜெரெமையா ரசிகர்களுக்கு வாழ்த்துகள்...

    இதழ்3க்கான வேளை வந்திட்டது போலயே.. அப்புறம் என்ன வாழைப்பூ வடைகளுடன் ஜமுக்காளத்தை விரிச்சிவிடுங்கப்பா....

    ReplyDelete
  51. ////ஒரு ஓய்ந்து போன நீதிக்காவலரின் உள்ளுக்குள்ளான போராட்டத்தை காட்டியது "அந்தியின் ஒரு அத்தியாயம்" !

    **அமேசானின் பரந்து விரிந்த கானகப் பின்னணியில் மிரட்டும் சித்திரங்களுடன் ஒரு ஆடுபுலியாட்டத்தைப் பார்த்தோம் - "நில்..கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் !

    **வன்மேற்கின் மனித முகத்தை தெறிக்கும் சித்திரங்களோடு சொல்ல முற்பட்டது "பிரிவோம்..சந்திப்போம் !"

    **ஒரு தாயின் பாசப் போராட்டத்தை ஒரு சமகால யுத்த முன்னணியிலிருந்து கார்ட்டூன் பாணிச் சித்திரங்களோடு சொன்னது "மா..துஜே ஸலாம் !" ///

    சிங்கிள் ஷாட்கள்ல என் டாப்3யோடு மேட்ச் ஆகுது....ஒன்றைத்தவிர...

    மை ஆர்டர்..

    🥇பிரிவோம் சந்திப்போம்
    🥈நில் கவனி வேட்டையாடு
    🥉அந்தியின் ஒரு அத்தியாயம்

    ReplyDelete
  52. ///Loan ranger
    தனித்திரு...தணிந்திரு..!

    ஒரு குரங்குச் சேட்டை..!

    போர்முனையில் தேவதைகள் !///

    லோன் ரேஞ்சர் கெளபாய் காதலனாக எனக்கு ஓகே...

    ஆனா போர் முனையில் தேவதைகள்,
    பாஸ் மார்க் வாங்கி இருந்தாலும்
    தவிர்த்து இருக்க வேண்டியகதை...
    இதில் நண்பர் சரவணகுமார் உடன் 100% ஒத்துப்போகிறேன்...

    ReplyDelete
  53. ஜம்போ சீசனில் வாங்கியது 24.
    ஜேம்ஸ்பாண்ட் தவிர மற்ற அனைத்து கதைகளும் படித்துவிட்டேன்.
    என்னுடைய மார்க் 90/100. ஜேம்ஸ்பாண்ட் காக 10 மார்க் குறைக்கப்பட்டுள்ளது.
    நான்கு சீசனிலும் சிறந்த கதையாக நான் நினைப்பது நில் கவனி வேட்டையாடு.
    ஜம்போ இன்னும் தொடரனும்.
    எனக்கு பிடித்தது சீசன் 2
    லோன் ரேஞ்சர் வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  54. ஜம்போ அலசலின் கேள்விகளுக்கான பதில்கள் :-

    1.வாங்கியது 24(இதில் சீசன்3 போட்டியில் வென்று பரிசாக அடைந்த இதழ்கள்)/ வாசித்ததும் 24.

    2.வெற்றி சதவீதம் 75%

    3.நிச்சயமாக தேவை.....ஷாரோஃப்& அந்தியின் ஓரு அத்தியாயம் லாம் கிடைப்பது எப்படி?

    4.லோன் ரேஞ்சர்..நிறைய கெளபாய்கள் இருக்கையில் ஜானதன் கார்ட்லேண்டு உடன் இவரும் வேட்டைக்கு போகட்டும்.

    5.பிரிவோம் சந்திப்போம்--னு சொல்ல ஆசை ஆனா யங் தல இல்லைனா, மை டாப்:- "காற்றுக்கு ஏது வேலி"

    6.சந்தேகம் இல்லாமல் சீசன்2.

    ReplyDelete
    Replies
    1. // சந்தேகம் இல்லாமல் சீசன்2. //

      +1

      Delete
  55. 24 & 24

    90%

    மறந்தும் இருந்து விடாதீர், இருந்தும் மறந்து விடாதீர்,

    லோன் ரேஞ்சர் : தேவை ஒரு நீண்ட உறக்கம்

    வேட்டையாடு விளையாடு (டெக்ஸ் தவிர்த்து)

    ReplyDelete
  56. ஜம்போ அலசலின் கேள்விகளுக்கான பதில்கள் :-

    1.வாங்கியது 24(இதில் சீசன்3 போட்டியில் வென்று பரிசாக அடைந்த இதழ்கள்)/ வாசித்தது அனேகமா 22. மாத்தா அம்மிணியும், புது படிப்பாளி வெட்டியானும் இன்னும் படிக்கலை.

    2.வெற்றி சதவீதம் பத்தி எப்படி சொல்றதுன்னு தெர்ல. எனக்கு குறைஞ்சது 60% கதைகளாவது பிடிச்சிருக்கும்.

    3.நிச்சயமாக தேவை.....

    4.லோன் ரேஞ்சர்..வீட்டுக்கு அனுப்பிடலாம்.

    5. நிறைய இருக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லனும்னா தனித்திரு… தணிந்திரு…

    6. சீசன்2.

    ---மகேந்திரன் பரமசிவம்.

    ReplyDelete
  57. அனைத்தும் படிச்சாச்சு!

    75/100

    தனித்தடம் யோசிக்க வேண்டிய விசயம்! ஒன்றிரண்டு சிங்கில்ஸ் நல்ல கதையாய் இருந்தால் மெயின் சமந்தாவில் சேர்த்திருந்தார்!

    லோன் ரேஞ்சர் - திருப்தி இல்லை!

    நில் கவனி வேட்டையாடு!
    மை ஃபேவரிட் 5ல் இடம் பிடிக்கக் கூடிய இதழ்!

    பாண்ட், வில்லர் வழக்கமான இதழ்கள் என்பதால் சில ஒன்ஷாட்ஸ் தவிர மற்றவை எல்லாம் மனதில் நிற்கவில்லை!

    ReplyDelete
  58. 1. வாங்கியது: 24; வாசித்தது: 23.5

    ஆக்சன் ஸ்பெசல் பாதியிலேயே நின்று விட்டது. பொதுவாகவே என்னிடம் ஏதோ ஒரு காரணத்தால் (நேரமின்மை, ஆர்வமின்மை) முழுவதுமாக வாசிக்காத புத்தகங்கள் கூட இருக்கலாம். ஆனால் எதையும் பாதியில் விடுவதில்லை. இது ஒன்று மட்டுமே விதிவிலக்கு. மீண்டும் எடுக்க ஆர்வமே வரவில்லை. அது புத்தக அலமாரியில் எந்த இடத்தில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஒருநாள் தேடி எடுத்து வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  59. 2,3 க்கு பதில் சொல்லியாகி விட்டது.

    ReplyDelete
  60. My Feedback for Jumbo Series
    1. Purchased - 24 / Read - 24
    2. 70/100
    3. Continue
    4. Lone Ranger, Martha, sherlock, the action special likes
    5.Young Tex (1st Book)
    6. Jumbo Session-2

    ReplyDelete
  61. 4. லோன் ரேஞ்சர்.

    ஆரம்பித்த புத்தகத்தையோ தொடரையோ பாதியில் நிறுத்துவதை தனிப்பட்ட முறையில் எப்போதுமே விரும்புவதில்லை. அது ஜெரெமியாவோ, லோன் ரேஞ்சரோ, கமான்சேவோ யாராக இருந்தாலும் என் நிலைப்பாடு இதுவே.

    அதேசமயத்தில் நண்பர் STVR சொன்னதை போல வெகுஜன ரசனையோடு பொருந்தி போகும் தொடர்களே தாக்குப்பிடிக்கும் என்ற உண்மையும் புரிகிறது. எனவே விற்பனை மற்றும் விமர்சனங்களின் அடிப்படையிலான உங்கள் முடிவையே வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் SK, என்னதான் குறிப்பிட்ட சதவீதத்தை கவர்ந்தாலும் பெரும்பான்மைக்கு ரசிக்கலனா அது நீண்டகாலம் சோபிக்காது... நிறைய தொடர்கள் அதுபோல, கமான்சே எனக்கு பிடிச்சே இருந்தது.. ஆனா வெகுஜனத்திடம் தோற்றுப்போச்சுது.. என்ன குறை இதிலே என கேள்வி எழும்; ஆனா ஏதோ ஒரு அம்சத்தில் பின்தங்குது என்பதை அனைவரும் ஸ்பாட் அவுட் பண்ணிட்டாங்க...!!!

      சில தொடர்களின் ட்ராப் அவுட் தவிர்க்க இயலாதது...

      இதை விட நல்லதாக கிடைக்கும்னு நம்புவோம்...

      Delete
  62. 5. தி பெஸ்ட் என்று பட்டென ஒற்றை ஆல்பத்தைச் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு மனதை ஆக்கிரமித்து இருப்பவர் ஸ்டெர்ன் தான்.

    அண்டர்டேக்கரும் பிரம்மிப்பூட்டும் அசாத்தியக் கதையே!

    ஆனால் தொடரல்லாத ஒற்றைக் கதைகளையே நான் ஜம்போவில் எதிர்பார்க்கிறேன்.

    அந்தவகையில் இரு வெட்டியான்களும் அடிபட்டுப் போய்விட ஆல்டைம் பெஸ்ட் இடத்தைத் தட்டிச் செல்வது பிரிவோம்..! சந்திப்போம்..! இதழே.

    இளம் டெக்ஸ்/ ஜேம்ஸ்பாண்ட் 2.0 / ஜெரெமியா போன்றவைகளையும் தொடர்கள் என்ற காரணத்துக்காக தவிர்த்துவிட்டுப் பார்த்தால் டாப் 3:

    #1. பிரிவோம் சந்திப்போம்!
    #2. நில்! கவனி! வேட்டையாடு!
    #3. மா... துஜே ஸலாம்!

    ReplyDelete
  63. 6. சீசன்:1

    5/6 (ஆக்சன் ஸ்பெஷல் தவிர்த்த மீதி அனைத்துமே அருமையான இதழ்கள்)

    அதிலும் நம்ம ஹெர்லாக் ஸோம்ஸ்... வண்ணத்தில் அட்டகாசம் அந்த சீசனில்! ஜம்போவில் வெளிவந்த ஒற்றைக் கார்ட்டூன்!!

    ReplyDelete
    Replies
    1. // நம்ம ஹெர்லாக் ஸோம்ஸ்... வண்ணத்தில் அட்டகாசம் அந்த சீசனில்! ஜம்போவில் வெளிவந்த ஒற்றைக் கார்ட்டூன்!! //

      I.loved this one.

      Delete
  64. // தனித்திரு...தணிந்திரு //

    மனதில் மிகுந்த தாக்கத்தை எற்படுத்திய கதையிது. One of my favourite.

    ReplyDelete
  65. பழனிவேல் குடும்பத்திற்கு நண்பர்கள் செய்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகிறது. நண்பர்கள் கடவுள் வடிவில் இருக்கிறார்கள் பழனி.

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொன்னீங்க PfB! உதவி செய்த, இன்னும் உதவிக் கொண்டிருக்கும் நண்பர்கள் போற்றுதலுக்குரியவர்கள்!

      Delete
  66. *** என்னைக் கவர்ந்த ஜம்போ வெளியீடுகள் ****

    பனியில் ஒரு பிரளயம் - 007ன் புதிய அவதார் மிரட்டலாக இருந்தது. நவீனயுகக் கதைகளும், முழுப்பக்க சித்திரங்களும், ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டலாய் அமைந்து ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தியது!
    ஆனால் எந்தச் சித்திரங்கள் மிரட்டலாய் தெரிந்ததோ அதுவே அதற்குப்பிறகு வெளியான பாகங்களில் 'ஏதோவொரு குறையாக' தோன்றியது. குறிப்பாக 'fill color' பாணியிலான வண்ணச் சேர்க்கை 'ஓவியர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்' என்று எண்ண வைத்தது!

    மற்றொரு (தாங்கமுடியாத) குறை - 007 சொக்கிக்கிடந்த அழகிகள் எல்லோருமே சுமார் ரகம் என்பதுதான்!!

    என்னளவில் 007ன் புதிய அவதாருக்கு 70/100 கொடுப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. // (தாங்கமுடியாத) குறை - 007 சொக்கிக்கிடந்த அழகிகள் எல்லோருமே சுமார் ரகம் என்பதுதான்! // இத இதைத்தான் எதிர்பார்த்தேன். :-)

      Delete
    2. ////
      மற்றொரு (தாங்கமுடியாத) குறை - 007 சொக்கிக்கிடந்த அழகிகள் எல்லோருமே சுமார் ரகம் என்பதுதான்!!
      ///--+

      007வின் வர்சன்2.0 எனக்குமே பிடிக்காம போனதற்கு இதான் காரணம்..

      கறுப்பு வெள்ளையிலயே அழகழகானதாக படைத்து உலாவ்விட்டுட்டு கண்ணைக் கவரும் கலரில் மொக்கை பீஸூகளாக ஜொடிபோட்டா..கர்ர்ர்ர்...

      நல்ல சிட்டாக இல்லைனா ஜம்போ5ல எல்லாமே சிங்கிள் ஷாட்டாகவே வரட்டும்...ஆமா..

      Delete
  67. 1. Season 1, 2 and 3 subscription.
    Bought books 1 and 2 in season 4. Planning to buy stern, undertaker and maybe pormunaiyil devadhaigal.
    2. Total marks 75/100
    3. Yes. Thedal thevai.
    4. Big No for Lone Ranger
    5. pirivom sandhipom
    6. Season 3.

    ReplyDelete
  68. 1. 24 bought and 24 read
    2. 85%
    3. Yes
    4. Yes, please
    5. Difficult to select. I loved many. Zaroff and bond 2.0
    6. 2

    ReplyDelete
  69. Great post sir. Happy that graphic novels are a success. 55% +25% sumaar means, graphic novels are a big success according to lion standards and are here to stay. I am ready for another full season, but also ok with less issues if others feel cost burden is there. But dont stop. After 2 yrs ppl may forget jumbo and will hesitate to subscribe. Good horse or not, GN is a running horse. Dont give rest and make it lazy

    ReplyDelete
  70. வாவ் கென்யா அட்டகாசமான அட்வெஞ்சர் கதை. ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவிற்கு இருந்தது.

    அடுத்தது என்ன நடக்குமோ என்ற த்ரில்லோடு கடைசிவரை இருந்தது.

    இறுதியில் இருந்த ட்விஸ்ட் நம்பும் வகையில் இருந்தது ஒரு பிளஸ். ஆனால் அதுவே மைனஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது, என்னடா இதற்கு தான இந்த ஆர்பாட்டம் என்று.

    நான் இக்கதை தொடர் பற்றி நினைத்து வந்தது ஒரு zombie போலவோ வைரஸ் போலவோ ஏதோ ஒன்று அனைத்து மிருகங்களையும் மாற்றுகிறது என்று. ஒரு போஸ்ட் apocalyptic பிரதேசம் போல. ஆனால் அனைத்தும் அந்த காலகட்டங்களில் வாழ்ந்த அதே உயிரினங்கள் பாதுக்காக்க பட்டவை என்பது புதியதாக இருந்தது.

    ஏலியன்களை வில்லன்கள் ஆக்காமல் வந்த இரண்டாவது கதை, முதல் கதை ஒரு தோழனின் கதை 😀

    அடுத்து நமீபியா கண்டிப்பாக கொண்டு வாருங்கள் சார். என்ன ஒரு ஆபத்து என்றால் ஒரு களம் முதல் முறை படிக்கும் போது நன்றாக இருக்கும், அது வெற்றி பெற்றதற்காக அதை தொடர்ந்தால் நன்றாக இருக்காது. அது போல இல்லாமல் அது வேறு புதிய களத்தில் இருந்தால் கண்டிப்பாக இரட்டிப்பு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ///
      ஏலியன்களை வில்லன்கள் ஆக்காமல் வந்த இரண்டாவது கதை, முதல் கதை ஒரு தோழனின் கதை 😀
      ///

      ---அட டே கென்யாவில் இந்த புதைமையுமா... சூப்பர்...!!

      Delete
    2. // ஏலியன்களை வில்லன்கள் ஆக்காமல் வந்த இரண்டாவது கதை, முதல் கதை ஒரு தோழனின் கதை 😀 //
      இப்பதான் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி படித்தேன்,ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது உண்மையா ?! தகவல்களை சேகரிக்கும் நாசா...!
      ஒருவேளை அவங்களும் கென்யாவை படிச்சிருப்பாங்களோ...!!!

      Delete
  71. ஜம்போ அலசலின் கேள்விகளுக்கான பதில்கள் :-

    1.வாங்கியது 18(இந்த சீஸன் ஜம்போ சந்தா கட்டாயத்தால் 6 இதழ்கள் மைனஸ்)/ வாசித்தது 18. (இரண்டு வெட்டியான் களையும் ஈரோட்டில் பிடித்து விட வேண்டும்)

    2.வெற்றி சதவீதம் 70/100

    3.நிச்சயமாக தேவை கொஞ்சம் இடைவெளி தேவை.....

    4.லோன் ரேஞ்சர்..டாட்டா காட்டி அனுப்பிடலாம்.

    5. நிறைய இருக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லனும்னா காற்றுக்கென்ன வேலி…

    6. சீசன்2.

    ReplyDelete
  72. Jumbo shud continue edi. Lone Ranger was boring. Give another chance for Jeremiah, story line has the potential

    ReplyDelete
  73. // கதை சொல்லும் காமிக்ஸ் - பீன்ஸ் கொடியில் ஜாக் - 15-ம் தேதியன்று புறப்படும் ! //

    இன்னும் இரண்டு நாட்கள். காத்துக் கொண்டு இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. இராம்ல....பீன்ஸ பறிச்சதும் எறங்கி நேரே வோன் வீடுதாம்ல...மசாலாவை ரெடியா ஓன் கையால் அரச்சி வை..பீன்ஸ் கொழம்புல ஜாக் நீச்சலடிக்க

      Delete
  74. *** மேற்கே இது மெய்யடா ***

    ஹீரோ... கதை தான் ஹீரோ..
    வேலை என்று பெரிதாக ஏதும் இல்லாத 'வெட்டி'யான்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சில நாட்களில் மோரிஸன் நகரில் நடக்கும் உணர்வு பூர்வ ரகளைகளே கதை.
    தனது சுயசரிதை வெளியீட்டிற்கு மோரிஸன் நகருக்கு வரும் கொலராடோ காப்.
    தனது மகளை கர்ப்பமாக்கி, சுயநினைவற்று,நடைப்பிணமாக்கியதற்காக அவரைக் கொல்வதற்கு தனது ஆட்களுடன் வரும் கார்ல் நூனன். இவர்களது ரகளைகளின் நடுவே ஏதோ ஒருவிதத்தில் பங்கு பெறும் நகர மாந்தர்கள். இறுதியில் உயிரை விடும் நூனன். அபிகெய்ல்லை ஏற்றுக்கொள்ளும் காப். வேறு ஊருக்கு பயணமாகும் ஸ்டெர்ன். ஒவ்வொரு துப்பாக்கியிலிருந்தும் வெளிவரும் குண்டுகளுக்கு ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
    அபிகெய்ல், லென்னி , லூனன் , பர்ட் என விதவிதமான கதை மாந்தர்கள்.
    மனதிற்கு நிறைவான, சிறந்த , வாசிப்பிற்கு உகந்த கதை.
    பாராட்டுக்கள் சார்.
    யதார்த்தமான வன் மேற்கை கதைக்களம் ஆக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
    ஸ்டெர்ன் அடுத்த ஸ்லாட்டிற்கு தன் இடத்தை உறுதி செய்கிறார்.

    இந்தக் கதையை படித்து முடித்ததும் மனதில் தோன்றிய ஒரு இயக்குநர்....?...
    ...ஒரு தமிழ்ப்படம்..?...
    இந்தக் கதையை இவர் எப்போது படித்தார்..? ..??
    தந்தை, மகள் உறவை மட்டும் , தாய்,மகன் என மாற்றி
    தமிழ்த்திரை உலகின் மாஸ் ஹீரோவை வைத்து கமர்ஷியல் வெற்றிப் படமாக்கியிருக்கிறாரே
    என வியப்பு ஏற்பட்டது..
    அந்த இயக்குநர்....
    திரு.K.S.ரவிக்குமார் அவர்கள்.
    அந்த ஹீரோ...
    திரு. அஜித் அவர்கள்....
    ... அந்தப்படம்...

    ... வரலாறு..

    காப்பை கொல்ல லூனன் துரத்துவது போல், படம் முழுக்க மகன் அஜித், தந்தை அஜித்தை துரத்துவார்.

    ReplyDelete
    Replies
    1. பின்றீங்க பத்து சார்! என்னவொரு நுட்பமான ஒப்பீடு!!

      Delete
    2. செம பத்து சார்.... நேற்றுதான் இதை வாசிக்க இயன்றது.... உடனடியாக இன்னொரு வாசிப்பும் செய்திட்டேன்...

      செம ப்ளாட்.... படத்தை பற்றி தெரியாத காரணமாப உங்க ஒப்புமை விளங்கல..

      கதையை பற்றி அருமையாக விவரித்து உள்ளீர்கள்...

      Delete
    3. அஜித்தின் 'வரலாறு' படம் youtube ல் இருக்கிறது. பாருங்கள்STVR சார். அஜித் 3 வேடத்தில் கலக்கியிருப்பார். அருமையான படம். பார்த்தீர்களானால் இந்த Commparison புரியும்.
      தன் தாய் சித்தப்பிரமைக்கு ஆளானதற்கு தந்தை அஜித் அவரை கர்ப்பமாக்கிவிட்டு, சென்றுவிட்டது தான் காரணம் என நினைத்து, இரண்டாவது மகனாக (TWIST) வரும் அஜித் அவரைக கொல்ல விதவிதமாக ப்ளான் பண்ணி துரத்துவார். interesting movie.

      Delete
    4. தேங்யூ பத்து சார்.... ட்ரை பண்ணுறேன் அந்த படத்தை....!!

      திரு திருடா பாடல் புகழ் "உதட்டழகி" கனிஷ்கா இருக்குமா அந்த படத்தில்....?? ஒரு பாடல் தொலைக்காட்சியில் பார்த்து உள்ளேன்..🤩

      Delete
    5. Yes. அவர் கனிஷ்கா அல்ல. கனிகா. அப்பா அஜித்தின் ஜோடியாக, சித்தப் பிரமைக்கு ஆளான அம்மாவாக வருவது அவரே.

      Delete
  75. Replies
    1. பை த வே, உங்க ப்ரொஃபைல் நேம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! :)

      Delete
    2. உங்க மெயில், போன் நம்பர்லாம் போட்டு விடுங்க சாரே.. உங்க சேவை நிறைய தேவை...💞

      Delete
    3. யோவ்....எங்க ஆளுங்களை பத்தி தெரியாம இங்கே வந்து மண்டைய நீட்டிக்கிட்டு நிக்குறீரே....பூரிக்கட்டைகள் பறக்குறதுக்கு முன்னே கிளம்பும் !

      அப்புறமா தனியா மெசேஜ் பண்ணும் !

      Delete
    4. எடிட்டர் சார்.. மறுபடியும் ஒருக்கா எங்க வாழ்வில் ஒளியேற்ற வந்தவரை நீங்க இப்படி மிரட்டறதெல்லாம் கொஞ்சம்கூட சரியில்லை!

      ///அப்புறமா தனியா மெசேஜ் பண்ணும் ///

      நம்ம ஊர்லயெல்லாம் அறுபதாம் கண்ணாலத்துக்கு அதே பொண்ணுதான் இருப்பாங்க. நீங்க சகட்டுமேனிக்கு கனவுகளை வளர்த்துக்கிட்டிருக்கீங்களோன்னு தோனுது!

      Delete
  76. ஏதாச்சும் idea இருக்குதுங்களா ஈவி?

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்..
      ஹிஹி லைட்ட்ட்ட்ட்டா!! :D

      Delete
    2. பத்து சார் @ ஈரோடு விஜய் அப்ளிகேசன் போடும் போது டெக்ஸ் விஜய் ம் போட என்ன தயக்கம்னேன்...

      சிவகாசியில இருந்து ஒரு குரல்:- ஈவி, டெவி லாம் பின்னாடி போங்கப்பா... எவி- இருக்கம்ல....!!!

      Delete
    3. ///சிவகாசியில இருந்து ஒரு குரல்:- ஈவி, டெவி லாம் பின்னாடி போங்கப்பா... எவி- இருக்கம்ல....!!!///

      அப்படித்தான் ஆகிப்போச்சு போங்க!

      Delete
  77. மேற்கே இது மெய்யடா:-

    ஜம்போவின் டாப் இதழாக வரும் அளவுக்கு இது சாதித்துள்ளதில் ஆச்சர்யம் ஏதும் இல்லைதான்...

    "வழியனுப்ப வந்தவன்" ல கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுள் ஆகிய ஸ்டெர்ன், "காட்டான் கூட்டத்தில்" 4வது கியரைத்தொட்டு இதில் டாப் கியருக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளான்....

    கார்சனின் கடந்த காலத்தில் டெக்ஸ் கெஸ்ட்ரோல் தான் ஆனா டெக்ஸின் டாப் 3ல அது என்னிக்கும் உண்டு.

    தங்க கல்லறையில் ஹீரோ டைகரை ஓரம்கட்டி, லக்னர் வில்லன்கள்ல ஒரு பெஞ்ச் மார்க் செட் பண்ணிய கதைதான் டைகரின் ஆல்டைம் டாப்!

    அதே ட்ரெண்ட்டை பாலோ பண்ணி, இங்கே கெஸ்ட்ரோலில் ஸ்டெர்ன் வந்தாலும் ஸ்டெர்ன் சீரியஸ்ல இதுதான் ஆல்டைம் டாப்பாக இருக்கும்...!

    கதையைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசிட்டாங்க நட்புகள்...சோ, சில கேரக்டர்ஸ் கதையில் எப்படி தங்களின் ஆளுமையை காட்டி என் மனதைக்கவர்ந்தனர் என்று மட்டுமே சொல்லி நிறுத்திக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதழில் முதல் பக்க ஓவியம்....

      அட்டையை திருப்பியதும் கண்ணில் படுவது நிலவொளியில் ஸ்டெர்ன் & லென்னி இருவரும் மோரிசன் சிறு நகர சிமென்ட்ரி முன்பு குளிர்காயும் காட்சி....

      ப்பா... ஜூலியன் மேஃப்ரீயின் அபாரமான போர்ட்ராய்டு.

      அப்படியே லாங் ஷாட்ல கிரேட் வியூ....மேக திரள்களுக்குள் தப்பி வெளியேறும் பூர்ண நிலவு...

      துயில பயில்வோருடன் ஜோடி போட்டுள்ள மலைத்தொடரின் மெளனம்..
      நிலவுக்கு இணையாக பிரகாசிக்கும் அடுப்பின் நீளும் வெளிச்ச கீற்றுகள் கல்லறைகளில் ஒளிர்வது...
      அந்த இரவிலும் புத்தகத்தை வாசிக்கும் எலிஜா, சாட்சாத் பிரதிபலிப்பது நம்மையே! நாமும் அவ்வப்போது இப்படி இரவில் கச்சேரி பண்ணுவது வாடிக்கை தானே!

      கொடுத்த காசு இந்த ஒரு ஓவியத்துக்கே போச்சுது...💞

      Delete
    2. ஸ்கூல் மிஸ் கேரீன்:-

      கதை முழுக்க அதிரடி, பரபரப்பாக நகர்ந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து போகும் ஸ்கூல் மிஸ் கேரீன் நம்மை வசீகரிக்கத் தயங்குவதில்லை...

      க்றிஸ்மஸ்க்கு தயார்படுத்துவதில் துவங்கி ஸ்டெர்ன்& லென்னியையும் அழைப்பது; க்ரிஸ்மஸ் பார்ட்டி சூட் அவுட்ல பொங்கி எழுவது;
      எம்மாவோடு இணைந்து காப்பை ஒளித்து வைப்பது; க்ளமாக்ஸில் லென்னியை போட்டுத்தள்ளிய வெறியன் பார்ட்டின் நெஞ்சை ரைஃபிளால் பிளப்பது என கதை நெடுக உலாவுகிறாள்..
      அவளது அதிரடியான வசனம்,

      "என் மனசாட்சிக்கு உறுத்தல்களை விழுங்கி வைக்கிற திறமை உண்டு"

      கேரீன் ரொம்ப நாள் நினைவில் இருப்பாள்....

      Delete
    3. சூப்பரா சொன்னீங்க STV! அந்த டீச்சரின் குணாதிசயங்கள் அம்சமானவை!! வெட்டியான்'ற பாரபட்சம் பார்க்காது ஸ்டெர்னையும் பார்ட்டிக்கு அழைக்கும்போதே அவள் தன் பெருந்தன்மையைக் காட்டிவிடுகிறாள்! 'பார்ட்டி முடியறவரைக்கும் முகத்துல ஒரு புன்னகை ஒட்டவச்சுக்கோ போதும்!' என்று ஸ்டெர்னுக்கு டிப்ஸ் கொடுப்பதெல்லாம் கவிதை!!

      இயல்பான, மனதை வருடும் கதாபாத்திரங்கள்!

      Delete
    4. சூப்பரா சொன்னீங்க VR!

      Delete
    5. ////அந்த டீச்சரின் குணாதிசயங்கள் அம்சமானவை!! வெட்டியான்'ற பாரபட்சம் பார்க்காது ஸ்டெர்னையும் பார்ட்டிக்கு அழைக்கும்போதே அவள் தன் பெருந்தன்மையைக் காட்டிவிடுகிறாள்!///--- ஆமா ஈவி, அத்துடன் பார்டிக்கு வந்த லென்னியை குளிரும்னு உள்ளே வரச்சொல்வா....ச்சே இத்தனை சாஃப்ட் நேச்சரானு அப்படியே ஈர்த்துப்புடுவா....

      அடுத்து அந்த சூட் அவுட் இரவில் அந்த டயலாக்கை மெய்ப்பிக்கும் நடப்புகள்,

      *எம்மா கூட சேர்ந்துகிட்டு மனசாட்சியைக் கொன்னுட்டு காப்புக்கு உதவி பண்ணி இருப்பா*-- இது அதிர்ச்சி1...* அடுத்த பேணல்ல வெடியை எடுத்து வீசுவா, *"நர்ஸ்! இப்போ இல்லை...யுத்தத்தின் போது..!!* அமெரிக்க உள்நாட்டு யுத்தம் கோர யுத்தங்கள்ல ஒன்று, பூ மாதிரி வளைய வரும் கேரீன் யுத்த நர்ஸ்னா என்ன மாதிரியான அனுபங்களை கடந்து வந்திருப்பானு விக்கித்து போகச் செய்வாள்.... நூனனோடு நம்மையும் கூட....!!!

      ரொம்பவே ரசிக்க வைத்த கதை சொல்லும் பாணி....

      Delete
  78. ஸ்டெர்ன்!!!

    கதையின் தொடக்கமே ஒரு குடிகாரனின் மரணத்தில் தொடங்குகிறது, அது ஒரு அதீத குடியினால் ஏற்பட்ட மரணம் என்று அனைவரும் முடிவெடுக்க ஆனால் பிண கூராய்வு செய்யும் வெட்டியான் ஹீரோ அதில் கிடைக்கும் ஒரு துப்பை வைத்து அது ஒரு கொலை தான் என்று நிரூபிக்கும் ஆதாரம் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது கதை.

    இதற்கிடையே அடுத்து வரும் இன்னொரு கதாபாத்திரமும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து விட அதில் சந்தேகத்திற்கிடமான இன்னொரு நபர் கைது செய்ய படுகிறார் ஆனால் இறந்து போன இருவரின் மரணத்திற்கும் கைது செய்ய பட்டவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போகிறது.

    அப்போ அவர்களை கொன்றது யார்?

    என்ன காரணத்திற்காக அவர்கள் கொல்ல பட்டனர் என்பதை எதிர் பாராத திருப்பங்களுடன் கொண்டு சென்று கதையை நிறைவு செய்கின்றனர் .

    ஆரம்பத்தில் கதையின் மாந்தர்களை மேலோட்டமாக பார்க்கும் போது போக்கிரிகளாகவும் குடிகாரர்களாகவும் தோன்றினாலும் கதையின் அடுத்தடுத்த நகர்வு அவர்களின் பின்புலத்தை விளக்கும் போது ஆச்சர்யமாக தான் உள்ளது.

    அந்த மொடாக்குடியன் அழகாக மொசார்டின் இசையை இசைத்து அனைவரையும், படிக்கும் நம்மையும் திகைப்பில் ஆழ்த்துவது அற்புதம்.

    ஹீரோவுக்காக ஒரு கதையை அமைத்து அவரை சுற்றியே கதை முழுதும் நகரும்படி இல்லாமல் ஒரு சிறு நகரத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக வைத்து கதை பின்னப்பட்டு நகர்வது அருமையோ அருமை அதிரடி அடிதடி இல்லாமல் அங்கங்கே மனதை தொடும் சில சோக இடங்கள் வந்து நெருடுகிறது.

    நேற்று தான் படிக்க முடிந்தது அதனால் தான் கதையை பற்றிய என்னுடைய பார்வை கோணத்தை இப்போது பகிர முடிந்தது.

    ஆசிரியர் சொன்னது போல் ஸ்டெர்ன்னின் முதல் பாகம் அட்டகாசம் தான் ஆனால் பலரும் இரண்டாம் பாகத்தையே கொண்டாடி சிலாகித்து எழுதி இருந்தனர்.

    இரண்டாம் பாகமும் முடித்து விட்டேன் அப்புறம் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செமயான ரைட்டிங் சிவலிங்கம்.... ஸ்டெர்ன் 1ஓவியங்களுக்காகவே சிலாகிக்கப்பட்ட கதை...

      நிறைய ஓவியங்கள் அசரடிக்கும்....

      அந்த குடிகாரன் வாயை பிளந்துகடக்கும் காட்சியின் ஆங்கிள் பாருங்க...; அதுபோல நிறைய காட்சிகள்...

      Delete
    2. ///ஹீரோவுக்காக ஒரு கதையை அமைத்து அவரை சுற்றியே கதை முழுதும் நகரும்படி இல்லாமல் ஒரு சிறு நகரத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக வைத்து கதை பின்னப்பட்டு நகர்வது அருமையோ அருமை அதிரடி அடிதடி இல்லாமல் அங்கங்கே மனதை தொடும் சில சோக இடங்கள் வந்து நெருடுகிறது.///

      சூப்பரா சொல்லியிருக்கீங்க சிவலிங்கம் நண்பரே!

      Delete
    3. // அந்த மொடாக்குடியன் அழகாக மொசார்டின் இசையை இசைத்து அனைவரையும், படிக்கும் நம்மையும் திகைப்பில் ஆழ்த்துவது அற்புதம். //
      உண்மைதான்...உருவத்தையும்,உடுத்தும் உடையையும்,பழக்க வழக்கங்களையும் வைத்தே ஒருவரை எடை போடுவது பொது புத்தியில் ஊறிப் போய் விட்டது,ஆனால் அவர்களோடு பழக நேரிடும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறாக இருக்கும்...
      இந்த அனுபவம் எனக்கும் கிடைத்துள்ளது...
      புத்தியில் இருந்து எடை போடுவது எல்லா நேரங்களிலும் சமநிலையில் இருப்பதில்லை...

      Delete
    4. மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் சிவலிங்கம். பாராட்டுக்கள்

      Delete
  79. அப்புறம் அந்த கார்ட்டூன் பாணி ஓவியங்களும் அருமை இப்படி பட்ட கதை சொல்லும் விதத்திற்கு இந்த ஓவியங்கள் ஒன்றும் பெரியதாக குறையாக தெரியவில்லை. அருமை !

    ReplyDelete
  80. நில்,கவனி,வேட்டையாடு 2 ஆம் பாகம் ஏதாவது வெளிவர வாய்ப்பிருந்தா யோசிக்காம சீஸன் -5 க்கு உள்ளே இழுத்து விட்ருங்க சார்...

    ReplyDelete
  81. ஸ்டெரன் - முதல் பாகத்தில் உள்ள சஸ்பென்ஸ், துப்பறிதல் மற்றும் அதன் முடிவு என்னை கட்டிப் போட்டது.

    இரண்டாம் பாகம் ஒரு லைனில் எழுதிவிடலாம் கதையை ஆனால் அதனை பரிமாறிய விதம் செம. மகிழ்ச்சியான கதை முடிவு என்னையும் மகிழச் செய்தது.

    மூன்றாம் பாகம் பிடித்து உள்ளது. எதிர்பாராத திசையில் இருந்து ஊருக்குள் குழப்பம் அடிதடி சூழ்நிலை மக்களை சண்டையிட செய்வது செம சிந்தனை. கடைசி சில பக்கங்களில் நடக்கும் தோட்டாச் சண்டையை கொஞ்சம் தெளிவாக காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

    ReplyDelete