Powered By Blogger

Saturday, April 23, 2022

மே...மே..மே...!

 நண்பர்களே,

வணக்கம். லேசான சாரல் ; மப்பும், மந்தாரமுமான வானம் ; ஒருபக்கம் IPL ; இன்னொரு பக்கம் Netflix ; கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு கத்தை காமிக்ஸ் ; இன்னொரு பக்கமோ 'தல' டெக்சின் இறுதிக்கட்டப் பணிகள் ! Saturdays cant get any better ....at least for me என்பேன் !! நீங்களுமே கவுண்டர் பாணியில் "ஒரே பிஷி"யாக இருப்பீர்கள் எனும் போது பதிவினை நறுக்கென்று அமைத்திட விழைவேன் !

First things first ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் - 2 எட்டுத்திக்கிலும் தனது solo பயணத்தினை நேற்றைக்கே துவக்கியிருக்க, பெரும்பான்மை நண்பர்களை அது இன்று எட்டியிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! And திருப்பூர் புத்தக விழாவிலுமே 'தல' முன்வரிசையில் காத்திருப்பதால், அங்கு விசிட் அடிப்போர், மசி மணம் மாறாத பிரதிகளை நமது ஸ்டாலிலும் வாங்கிக்கொள்ளலாம் ! நமது நண்பர்களுள் உள்ள சில முனைவர்கள், இந்த இதழுக்கான பிழைத்திருத்தங்களைச் செய்திருப்பதால் - மாமூலான spelling சொதப்பல்கள் இராதென்ற நம்பிக்கையில் fingers இறுக crossed ! இந்த இதழின் விற்பனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதமானது நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கெனச் செல்லவிருப்பதால் - இதுவரையிலும் இதற்கு ஆர்டர் செய்திரா நண்பர்கள் can go for it now !

Moving on, சந்தேகமேயின்றி மே மாதத்தின் highlight ஒரு க்ளாஸிக் நாயகரின் மறுவருகை என்பதனால் அவரை தேஜஸாக்கிட ஆனமட்டுக்கு முயற்சித்து வருகிறோம் ! And அந்த மெகா சைஸ் ராப்பரில் நகாசு வேலைகள் சகலமும் முடிந்து, ரிப்பும், டெஸ்மாண்டும் ஹாயாக காட்சி தருகின்றனர் ! இன்றுவரைக்கும் ஒரு journeyman நாயகராய் ஆங்காங்கே, அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வந்ததொரு நாயகர் இன்று ஒரு solo ; மெகா தொகுப்பினில் ஒரு மெகா ஸ்டாருக்கான அந்தஸ்த்தினை ஏற்றுக்கொள்ளத் தயாராகி வருகிறார் ! மொத்தம் 8 கதைகள் ; ஒவ்வொன்றுமே 20 முதல் 25 பக்கங்களுக்குள் ;  and உளுந்தூர்பேட்டை போக துபாய் வழியாய்ப் பயணம் பண்ண வேண்டிய மாதிரியான கட்டாயங்களை முன்வைக்காத சுலபக் களங்கள் எல்லாமே !! So போன மாசம் துவைத்த பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டே IPL மேட்ச்களையும், ஆபீஸின் ஆன்லைன் மீட்டிங்குகளையும் attend செய்த கையோடு, ரிப் ஸ்பெஷலுக்குள்  நீங்கள் புகுந்து, ஒவ்வொரு கதையாய் ஜாலியாய் வாசித்து விட்டு வெளியேறலாம் ; புரிதல்களிலும் எவ்வித lag இருந்திடாது ! 

And நேற்றைக்கு வெளியாகியுள்ள டெக்ஸ் க்ளாசிக்ஸ் 2 - 'தல' கோட்டாவினை நிரவல் செய்திருப்பினும், மே மாதத்திலுமே "விடாது வஞ்சம் !!" Yes - நம்மவருக்கொரு டபுள் ஆல்ப ஸ்லாட் வெயிட்டிங் again ! இந்த ஆல்பத்தினுள் புகுந்திடும் முன்பாய் வீட்டிலுள்ள புத்தக பீரோவினை உருட்டி, டெக்சின் - "நில்..கவனி..சுடு!"  மற்றும் தளபதியின் "என் பெயர் டைகர்" ஆல்பங்களை தேடியெடுத்து லைட்டாக ஒரு வாசிப்பு விட்டால் நலமென்பேன் ! Becos - வன்மேற்கின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அந்த O.K. Corral நேருக்கு நேர் மோதலே "விடாது வஞ்சம்" ஆல்பத்தின் துவக்கப் புள்ளி ! அங்கே அரங்கேறிய அதகள மோதலின் பின்தொடர்ச்சியினில் நம்ம 'தல' + தாத்தா கார்சனைப் புகுத்தி, சில பல நிஜ மாந்தர்களை உள்நுழைத்து, கதாசிரியர் மௌரோ போசெல்லி வலம் வந்திருக்கிறார் ! அவருக்குத் தோள் கொடுத்திருப்பதோ - ஒல்லிபெல்லி ஜூலியா ஆல்பங்களுக்கு ரெகுலராய் சித்திரங்கள் போட்டு வரும் ஓவியை - லாரா சுக்கேரி ! பாருங்களேன் அட்டைப்படத்தினையும், ஓவியையையும் :




ஒரிஜினல் அட்டைப்படத்தில் கொஞ்சமாய் வர்ணங்களை ஏற்றி, பின்னணியில் கொஞ்சம் வெற்றிடங்களை ரொப்பி, பாஷை தெரியாத பஸ் ஸ்டாண்டில் பிச்சிப் போட்ட ஜிலேபி மாதிரியான எழுத்துக்களிலான  போர்டுகளை வாசிக்க முனைபவரைப் போல விழித்துக் கொண்டிருந்த  டெக்ஸை லைட்டாக மாற்றியது - என்பனவெல்லாம் நமது டிசைனர் கோகிலாவின் கைவண்ணம் ! கதையைப் பொறுத்தவரை வன்மேற்கின் நிஜ மனுஷாளுமே ஒரு இணைத்தடத்தில் பயணித்து வருவதால், இயன்றமட்டுக்கு மிகைப்படுத்தாது பயணிக்க மௌரோ போசெல்லி முயற்சித்துள்ளார் ! For a change - 'பேச்ச குறைங்கடா டேய் !!' என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு இங்கே கதைச் சம்பவங்கள், நெடும் வரிகளுக்கு அவசியங்களை ஏற்படுத்துகின்றன ! And நெல்லையைச் சார்ந்ததொரு புது சகோதரி இதற்குப் பேனா பிடிக்க முனைந்திருந்தார் ; பாவம், முதற்பணிக்கு இது ரொம்பவே தப்பிதமான தேர்வு என்பது ஒட்டு மொத்தத்தையும் கடாசிவிட்டு, திரும்பவும் புதுசாய் எழுத உட்கார்ந்த  போது தான் எனக்கே புரிந்தது ! சுலபமான, ரெகுலரான டெக்ஸ் ஆக்ஷன் மேளா தானே ; கையாண்டுவிடுவார் என்று எண்ணியிருந்தேன் ; ஆனால்  "விடாது வஞ்சம்" அவரைப் போட்டுத் தாக்கியிருப்பது , பக்கத்துக்குப் பக்கம் புலனாகியது ! Guess I am partly to blame too !! எது எப்படியோ, கடந்த சில நாட்களில் விரல்கள் எனக்கு ஒடியாத குறை தான் !

ஆனால் நேர்மாறாய் செம ஜாலியாய்ப் பணியாற்றும் ஒரு வாய்ப்பினைத் தந்த மகானுபாவன் ஸ்ரீமான் டிரெண்ட் அவர்களும் இந்த மாதத்தில் இடம் பிடித்திருப்பதால் காய்ந்து போன மண்டை சற்றே ஜில்லென்றானது ! As always அலட்டலில்லா அந்த பாணியுடன், அசத்தலான ஓவியங்கள் + கலரிங் என்ற கூட்டணியில் "தேவையில்லா தேவதை" இம்மாதத்தின் ஒரே கலர் இதழ் என்ற குல்லாவை மாட்டிக் கொள்கிறது ! இதோ - preview : 


மொட்டைப் பையனாய்,கனடாவின் பிரேம்ஜியைப் போல ரொம்ப காலமாய் சுற்றித் திரிந்த டிரெண்டுக்கு ஒரு வழியாய் இந்த சாகசத்தில்  கண்ணாலத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார் கதாசிரியர் ! ஆனால் மனுஷன் சந்தோஷப்பட வேண்டிய பொழுதுகளில், தொல்லைகளை உட்புகுத்தி, கவுதம் கம்பீராட்டம் மூஞ்சைத் தூக்கிக் கொண்டே நெடுக ரவுண்டு அடிக்கும் வரத்தையுமே ஹீரோவுக்கு நல்கியுள்ளார் ! தொடரின் இறுதிக்கு முன்பான சாகசமிது என்பதால், 2023-க்கு இவர் தேர்வாகிட கூடுதலாய் ஒரு காரணம் கிட்டியது போலாகிறது ! இந்த ஆல்பத்தை ரசித்த பிற்பாடு மறவாது சொல்லுங்களேன் folks - டிரெண்டை சந்தோஷமாய் குடியும், குடித்தனமுமாய் குப்பை கொட்ட அடுத்தாண்டினில் ஒரு farewell ஏற்பாடு செய்து விடலாமா ? கடைசி ஆல்பத்துக்கு ஓ.கே. சொல்லிடலாமா ?

அதிர்ந்து பேசத்தெரியா ஒரு நாயகரிலிருந்து அதே போலான இன்னொரு நாயகருக்கு இனி தாவிடலாமா ? முன்னவர் டிரெண்ட் சிகப்புச் சட்டையில் தகதகப்பவரெனில், நான் குறிப்பிடும் பின்னவரோ கருப்பில் சுற்றித் திரிபவர் ! And yes - அது நம்ம நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தான் ! 

"வழியனுப்ப வந்தவன்" & "காட்டான் கூட்டம்" என 2 செம offbeat கதைகளுடன் நம் மத்தியில் entry தந்துள்ள இந்த ஏறிய நெற்றிக்காரரை சீக்கிரமே (மீண்டும்) சந்திக்கவொரு வாய்ப்பு எழுந்துள்ளது என்பது தான் நான் செல்லவிருக்கும் முன்பாய்ச் சொல்லவிருக்கும் சேதி ! ஜம்போ காமிக்ஸ் சீசன் # 4-ன் இறுதி இதழாய் அறிவிக்கப்பட்டிருந்த "வைகறைக் கொலைகள்" black & white-ல் ரூ.65 விலையினில் வந்திட வேண்டியது ! கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாய், பிரான்சில் நடந்த 3 கொலைகளின் புலனாய்வும், குற்ற விசாரணையும் தான் இந்த ஆல்பத்தின் கரு ! நிறைய பேசுகிறார்கள் ; நிறைய நிறைய தம் அடிக்கிறார்கள் ; அப்புறமாய் மேற்கொண்டும் கதைக்கிறார்கள் - கதை நெடுகிலும் ! ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் இதனை எழுதி ; DTP பணிகளும் நிறைவுற்று இருந்தாலும், கதையின் மையத்துக்குள் புகுந்திட சாத்தியப்பட்டிருக்கவில்லை என்பது அப்போதே புரிந்தது ! So 'அப்பாலிக்கா பாத்துக்கலாம்' என்றபடிக்கே தள்ளிப்போட்டிருந்தேன் ! ஆனால் போன மாதத்தினில் அம்மிணி மாட்டா ஹாரி ஆடிய தாண்டவத்தில் நிறைய சப்த நாடிகள் எங்கள் & உங்கள் தரப்பில் பியூசாகிப் போயிருக்க, இந்த ஆல்பத்தைப் பார்க்கப் பார்க்க - அந்த ஆடு...அந்த அருவா...!! இந்த மனுஷன்...இந்த குடை !" ரெண்டுக்கும் என்னமோ ஒத்துப் போற மாறியே எனக்கொரு பீதி கலந்த பீலிங்கு ! So இன்னொரு விஷப்பரீட்சை வேண்டாமே என்றபடிக்கு அந்த ஸ்லாட்டில் முழு வண்ணத்திலான ஸ்டெர்ன் ஆல்பம் # 3-ஐ புகுத்தத் தீர்மானித்திருக்கிறேன் ! Which means "மேற்கே...இது மெய்யடா !" என்று இலக்கிய ரசனையுடனான வெட்டியான் ஜூன் மாதம் வந்திடுவார் - ஜம்போவின் சீசனை நிறைவு செய்திட ! 


இதுவரைக்குமான 4 சீசன்களில் இந்த நடப்பு சீஸனின் கதைகளில் அத்தனை வலுவில்லை (அண்டர்டேக்கர் நீங்கலாய்) என்பதில் எனக்கு நிறையவே நெருடலுண்டு ! என்மட்டில்  "ஜெரோனிமோ - ஒரு தலைவனின் கதை" & போன மாதத்து மாட்டா ஹாரி ரொம்பவே சுமார் ரகங்கள் ! ஆனால் உங்களில் பலருக்கு "சித்திரமும் கொலைப்பழக்கம்" & "போர்முனையில் தேவதைகள்" ஆல்பங்களுமே அத்தனை ரசிக்கவில்லை என்பது புரிகிறது ! நிஜமாக அவை decent works என்றே எனக்குத் தோன்றியது ! Sadly you thought otherwise !! 

இது மாதிரியான நாயகரில்லா one shots தேர்வுகளின் முயற்சிதனில் கொஞ்சம் சொதப்பினாலும் கத்தியின் கூர்மையான முனையானது பிட்டத்தைப் பதம் பார்க்கும் என்பது தெரிந்த சமாச்சாரமே ; ஆனால் 'சுருக்'கென்று அது உள்ளே இறங்கும் போது சிரிச்சா மெரியே முகத்தை வைத்திருக்கச் சிரமப்படுகிறது ! Sorry guys ! 2023-ல் கூட க்ளாஸிக் நாயகர்களின் (வேதாளன்  ; ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) தனித்தடம் SUPER '60s என்று இடம்பிடித்திடும் என்பதால் 2024-க்கு முன்பாய் ஜம்போவின் சீசன் 5 சாத்தியமாகாது ! அதற்குள்ளாக உருப்படியான கதைத்தேர்வுகளைச் செய்து கொள்வேன் - thats a promise !

மீண்டும் சந்திப்போம் ; have a fun weekend all ! Bye for now !!

218 comments:

  1. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  2. பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு..

    ReplyDelete
  3. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. Smash 70's and Super 60's என்று தொடர்வது உண்மையிலேயே எனது எதிர்பார்ப்பின் அதிகபட்சம் என்று உணர்ந்து கொண்டும் கூட இன்னும் வேண்டுமென கேட்டு வைக்கிறேன் விங் கமாண்டர் ஜார்ஜையும், சார்லி சாயரையும்.
    Please ஆவன செய்யுங்களேன் ஆசிரியர் அண்ணா.

    ReplyDelete
  5. ட்ரெண்ட் வண்ணங்கள் அருமை.. கடைசி கதைக்கு அடுத்த வருடம் கண்டிப்பாக வாய்ப்பளிக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா இதெல்லாம் கேக்கவே கூடாது

      Delete
  6. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. வாவ்...! வெயிட்டிங் பார் ஸ்டெர்ன்!!

      Delete
  7. ஸ்மாஷிங் 60 வருவது மகிழ்ச்சி. இந்த முறை கதம்பமாக வந்தால் சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  9. Dear Sir,

    /* விற்பனையிலிருந்து ஒரு சதவிகிதமானது */ - slight editing required. I know you would have meant either விற்பனையிலிருந்து ஒரு KURIPPITTA சதவிகிதமானது OR விற்பனையிலிருந்து ஒரு KURIPPIDATHTHAKKA சதவிகிதமானது !

    ReplyDelete
  10. அன்பான ஒரு வேண்டுகோள் ஆசிரியர் அண்ணா!

    புத்தக திருவிழாக்களில் தயவுசெய்து சில குறிப்பிட்ட இதழ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யுங்கள். நான் உட்பட நம்மில் பலரும் அங்கு தனித்து வருவதில்லை. ஒவ்வொரு முறை அங்கு வரும்போதும் ஒரு புதிய வாசகரை அழைத்தே வருகிறோம். அவர்களுக்கான தேடலில் உள்ள ஒரு சில இதழ்கள் அங்கு கிடைக்கப் பெறவில்லை எனும்போது ஏமாற்றத்தோடே திரும்பிச் செல்கிறோம்.

    இந்தமுறை Missing இதழ்கள் பழிக்குப்பழி Reprint அதன்கூடவே வந்த Lucky Luke book மற்றும் ஜம்போவின் சில இதழ்கள் என்று நிறைய எதிர்பார்த்து வந்த இதழ்கள் எதுவும் திருப்பூர் புத்தக விழாவில் கிடைக்கப் பெறவில்லை.

    நிறைய ஏமாற்றம்.

    ReplyDelete
    Replies
    1. அதேபோல திருப்பூருக்கு ஸ்மர்ப் புத்தக வரிசையில் ஒரு கதை மட்டுமே வந்தது...

      குட்டிஸ்களுக்காக வெளியிட போகும் இதழ்களை இது போன்ற புத்தக திருவிழாவில் கிடைக்கும்படி செய்தால் குட்டி வாசகர்களையும் கவரலாம்..

      பரீசிலனை செய்யுங்கள் ஆசானே..

      Delete
    2. Smurfs 8 இதழ்களுமே திருப்பூருக்கு பயணமாகின ; விற்றிருக்கலாம் !

      Delete
  11. // அதே போலான இன்னொரு நாயகருக்கு இனி தாவிடலாமா ? முன்னவர் டிரெண்ட் சிகப்புச் சட்டையில் தகதகப்பவரெனில், நான் குறிப்பிடும் பின்னவரோ கருப்பில் சுற்றித் திரிபவர் ! And yes - அது நம்ம நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தான் ! //

    ஓ எஸ்.

    ReplyDelete
  12. விங்கமாண்டர் ஜார்ஜ் & சார்லிசாயர். +11111111111111111111111111111111. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. // "ஜெரோனிமோ - ஒரு தலைவனின் கதை" & போன மாதத்து மாட்டா ஹாரி ரொம்பவே சுமார் ரகங்கள் ! //

    ரொம்ப சரி சார். மாட்டாவை இன்னும் படிக்க வில்லை.

    ஜெரோனிமோ - பாதிக்கு மேல் படிக்கவில்லை.சொல்லப் போனால் படிக்க முடியவில்லை. சாரி.

    ReplyDelete
  14. // வைகறைக் கொலைகள்" black & white-ல் ரூ.65 விலையினில் வந்திட வேண்டியது ! கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாய், பிரான்சில் நடந்த 3 கொலைகளின் புலனாய்வும், குற்ற விசாரணையும் தான் இந்த ஆல்பத்தின் கரு ! நிறைய பேசுகிறார்கள் ; நிறைய நிறைய தம் அடிக்கிறார்கள் ; அப்புறமாய் மேற்கொண்டும் கதைக்கிறார்கள் - கதை நெடுகிலும் ! //

    நல்ல முடிவு சார் இந்த கதைக்கு பதில் நவீன வெட்டியான் கதையை தேர்ந்தெடுத்து. நன்றி.

    ReplyDelete
  15. // சித்திரமும் கொலைப்பழக்கம்" & "போர்முனையில் தேவதைகள் //

    ரொம்ப சுமார். ஆனால் படித்து விட்டேன் இவைகளை.

    ReplyDelete
  16. சார்லிசாயர் @ புஷ் சாயர்தான் கரெக்டான பேருன்னு நினைக்கிறேன். சரிங்களா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  17. மத்த கதையெல்லாம் கூட ஒரு வகையில சேர்த்திக்கலாம் ஆனா,
    மாட்டா ஹரி பொறுமைய ரொம்ப சோதிச்சிட்டா ஆசானே...

    ReplyDelete
    Replies
    1. அம்மணி மாட்டாவின் சார்பில் சாரி சிவா !

      Delete
  18. வஞ்சம்" அவரைப் போட்டுத் தாக்கியிருப்பது , பக்கத்துக்குப் பக்கம் புலனாகியது ! Guess I am partly to blame too !! எது எப்படியோ, கடந்த சில நாட்களில் விரல்கள் எனக்கு ஒடியாத குறை தான் !

    அதிகாரியின் அக்கிரமங்கங்கள் ஒரு தொடர் கதை என்பதின் அடுத்த அத்தியாயம் நம் பிரியமான ஆசிரியரின் விரல்களை உடைக்க முயற்ச்சித்தது..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி @ செம செம டைமிங்:-)

      Delete
    2. விரல்கள் ஒவ்வொன்றுக்கும் கணையாழிகளை வாங்கிப், போட்டு விட்டு அதிகாரி சரிபண்ணி விட்டாரப்பூ !

      Delete
  19. முத்து கோடை மலர் - தொட்டால் தெறிக்கும்...

    சொந்த சூழல்கள் நெருக்கிய காரணத்தால் இந்த மாத புத்தகங்கள் அப்படியே தேங்கி இருக்கிறதே என ஒரு சாயங்கால வேளையில் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக படுக்கையில் சாய்ந்தவாறே ஆரம்பித்தேன் ரூபினை! எப்போது எழுந்து உட்கார்ந்தேன் என்றே தெரியவில்லை. கதையோட்டம் உண்மையில் தெறிக்கத்தான் செய்கிறது. அம்மனி அதகளம் புரிந்திருக்கிறார்... ஆக்சன் சீக்வென்ஸ்கள் எல்லாம் பொறி பறக்கிறது. கதை எதிர்பார்த்தது மாதிரியே முடியப் போகிறது என்று பார்த்தால் அங்கேயும் ஒரு ட்விஸ்ட். விட்டால் ரிப்போர்ட்டர் ஜானிக்கு போட்டியாகி விடுவார் போல... முடிவு நேர்த்தி!

    லேடி-எஸ், ஜூலியோ போன்றவர்களிடம் என்ன பலவீனம் இருந்ததோ அதை கச்சிதமாக இட்டு நிரப்புகிறார் இந்த தடாலடி நாயகி. செம தெனாவட்டுடன் பேசும் வசனங்கள் பாத்திரத்திற்கேற்ற சரியான வெளிப்பாடு.

    இன்ஸ்பெக்டர் ரூபின் - நல்ல தேர்வு.

    இந்த வருடம் ஆல்பா, சிஸ்கோ, டேங்கோவை அடுத்து ரூபினும் தூள் கிளப்ப முத்து ஐம்பதாமாண்டு அறிமுகங்கள் அனைவரும் அட்டகாசம்.

    9/10.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க வாத்தியாரே...

      Delete
    2. // லேடி-எஸ், ஜூலியோ போன்றவர்களிடம் என்ன பலவீனம் இருந்ததோ அதை கச்சிதமாக இட்டு நிரப்புகிறார் இந்த தடாலடி நாயகி. //

      +1

      Delete
  20. எடிட்டர் sir,Tex உடன் அட்டை படத்தில் இருப்பது டாக் ஹாலிடே என்று நினைக்கிறேன்.

    Jumbo வாசிப்பில் எனக்கு பிடித்தது Undertaker, சித்திரமும் கொலை பழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இத்தாலிய ஒரிஜினலில் தான் DOC என்று தலைப்பிலேயே சுட்டிக்காட்டியுள்ளனரே நண்பரே - அவர் டாக்டர் ஹாலிடே தானென்பதை !

      Delete
  21. Tex classic 4ல் கார்சனின் கடந்தகாலம் இடம் பெறக் கூடிய வாய்ப்புகள் ஏதும் உண்டா எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. க்யூவில் இன்னும் நிறையவே ஆல்பங்கள் வெயிட்டிங்கே சார் !

      Delete
    2. இரத்த முத்திரையை மறந்திடாதீங்க, ஐயா

      Delete
    3. இம்மாத டெக்ஸ் புக் இரண்டு நாள் தாமதமாக st கொரியர் ஆள் டெலிவரி செய்தார்.

      முதலில் ஓவியர் மாலையப்பன் அட்டைப்படம் ஸ்லாகிக்க வைக்கிறது... மிருதுவான லமினேஷன் அட்டையில் wax கோட் பட்டைய கிளப்பியுள்ளது. ஜூனியர் எடிட்டருக்கு பாராட்டுக்கள். பின்னட்டையும் அற்புதமான ஓவியத்துடன் மிளிர்கிறது... குறிப்பாக இரத்த வெறியர்கள் எழுத்தோவியம், நான் அதகள ஆரம்ப காலத்து ஆக்கமாக்கும் என்று பறைசாற்றுகிறது...

      கதை, சித்திரங்கள் எல்லாமே A கிளாஸ் தான் எனினும், இந்த இதழின் அட்டைப்படம், புக் சீக்கிரமே காலியாகிவிடும் என்று உணர்த்துகிறது. இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படமாக மாறிவிடும் போல.

      மொத்தத்தில் தரமான படைப்பு.... அதில் பதிப்பகத்தின் லாபத்தின் கணிசமான பங்கு பழனி குடும்ப நிதிக்கு செல்வது... ஒரு மாபெரும் முன்னெடுப்பு.

      இது போன்ற நண்பர் இழப்பு இனி ஏதும் நிகழவே கூடாது எனவே நாம் நினைத்தாலும், ஒரு சிறு வட்டத்தின் ஆசிரியர் செய்கிறதை வேறு யாரும் செய்து இருக்க முடியுமா என்று கேள்வி வருவதே லயன் காமிக்ஸிற்கு பெருமை சேர்க்கும்.

      வாங்குபவர்கள் தன்னையறியாமல் நன்கொடை கொடுக்கின்றனர். இது மகிழ்ச்சி தரும் சுமுக பணி.

      *Hats off to Vijayan Sir*.

      குறை...
      இருக்கிறது. Spine டிசைன் அபத்தம். மேலும் பைண்டிங் பணியில் quality check செய்த பின்னே புத்தகங்கள் அனுப்பலாம் என்று தான் நினைக்க தோன்றுகிறது... எனக்கு வந்த மொக்கை பைண்டிங் பிரதி முழு தரத்தையும் பார்க்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறது...

      கதை ஏற்கனவே முதல் பதிப்பில் படித்து விட்டதால் என்னுடைய ரேட்டிங்: 4.3 / 5

      Delete
  22. டெக்ஸ் க்ளாசிக்-2 கலக்கல் ஆக உள்ளது. “இரத்த வெறியர்கள்” படித்ததில்லை. - ஆவலுடன் waiting

    விடாது வஞ்சம் - அட்டை படம் - ஓகே
    ஓவியை காட்டும் சித்திரங்கள் அழகு. அதிலும் கார்சன் ஒரு அழகியை நோக்கி துப்பாக்கியை நீட்டுதா?

    தேவையில்லாத தேவதை - அட்டை படம் - நன்று. ஆனால் பின் அட்டையிலுள்ள செஞ்சட்டையின் கலர் குறைவாயுள்ளது போன்று தோன்றுகின்றுகின்றத. மற்றப்படி டிரெண்ட் இற்கு மறுவருடம் ஸ்லாட் உறுதி. வெட்டியான் ஸ்டெர்ன் இற்கு டபுள் ஓகே சார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே ஒரிஜினல் சார் ; நமது மாற்றங்கள் எதுவும் கிடையாது டிரெண்ட்டில் !

      Delete
  23. டெக்ஸ் அட்டை சூப்பர் தான் சார்....முதன் முறையாக நமது அட்டைய விட வெண்ணிற வெளி அவர்கள் அட்டை டாப்பா தெரியுது..கதை மாந்தர்களுக்கு நமது அழுத்தமான நிறம் அழகு.....பிண்ணனி கடிகாரம் நல்லால்ல....பொருந்தலை....ட்ரெண்டின் அட்டை தெறிக்க விடுது ....இதான் இவ்வருடத்தின் டாப்பா இருக்குமோ...வள வள வசனங்களே எனக்கு பிடிக்கும் என்பதால் தலய ஆவலாய் எதிர் பார்க்கிறேன்....வெட்டியானுக்காக அனைவரையும் போல காத்திருக்கிறேன் ஆவலாய்

    ReplyDelete
  24. 'ஒரு தலைவனின் கதை' மற்றும் 'உளவும் கற்று மற' இன்னும் படிக்கவில்லை
    'சித்திரமும் கொலை பழக்கம்' சுத்தமா பிடிக்கவில்லை
    'போர் முனையில் தேவதைகள்' average

    Stern is most welcome

    ReplyDelete
  25. விடாது வஞ்சம் பின்னட்டையில் உள்ள இரண்டாவது பேனலின் ஏங்கிள்... அப்பப்பா.... செம!

    இது போல பராகுடாவில் பார்த்தது... ஓவியை செம திறமைசாலி போல...
    அட்டகாசம்!

    ReplyDelete
  26. I thought same feel about current Jambo session....except Undertaker...

    ..my humble addtion...Add 007 2.0 next session sir min 2 slot and one for Undertaker,one for sagasa veerar joger 2.0,1 slot for graphic cow boy story,1 slot for graphic novel..

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் நண்பரே ; இன்னும் ஒன்னரை ஆண்டுகள் உள்ளனவே மத்தியில் !

      Delete
  27. Edi Sir..
    Happy Sunday.14.3.2022 -அன்று பணம் அனுப்பினேன்.Tex classic -2 இன்னும் வரலிங்க.

    ReplyDelete
    Replies
    1. கொரியர் தாமதம் காரணமாக இருக்கலாம். நிறைய பேருக்கு புத்தகங்கள் வரவில்லை எனக்கும் தான். இரண்டு நாட்கள் பொறுமையாக இருப்போமே:-)

      Delete
    2. O.k..ji..
      ஆனா.. ஆசைய அடக்க முடியலியே..

      Delete
  28. விடாது வஞ்சம்....அந்த டூம்ஸ்டோன்...ஓகே கோரல் நிகழ்வுக்குப் பின்னர்....நில் கவனி சுடுக்கு தொடர்ச்சியாக..பின்னர் நடந்தவற்றை வள வள ன்னு அறிய ஆவல் உங்க பதிவ பாத்ததுமே

    ReplyDelete
  29. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  30. பனிக்கடல் படலம் மறுபதிப்பா அல்லது புதியதா?

    ReplyDelete
    Replies
    1. கௌபாய் ஸ்பெஷல் இதழில் black & white-ல் வெளியானது சார் !

      Delete
    2. Ok sir ...கதை கொஞ்சம் Different ஆ இருந்தது ..அதான்.

      Delete
    3. கறுப்பு வெள்ளையிலியே சித்திரம் கலக்கும் நண்பரே..:-)

      Delete
  31. விடாது வஞ்சம்

    அட்டைப்படம் மிக அருமையாக வந்துள்ளது.. இந்த இதழ் ஹார்ட் பைண்டிங்காக இருந்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நூத்தைம்பது ஓவா அதிகாரிக்கு, அம்பது ஓவாக்கு அட்டையா ? என்று ஒருத்தர் கிளம்பப்போறாரு சார் !

      Delete
    2. கண்டிப்பா கிளம்புவாரு சார்...:-)

      Delete
  32. // பெரும்பான்மை நண்பர்களை அது இன்று எட்டியிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! //
    இன்னும் வரலிங் சார்...

    ReplyDelete
  33. // மே மாதத்திலுமே "விடாது வஞ்சம் !!" Yes - நம்மவருக்கொரு டபுள் ஆல்ப ஸ்லாட் வெயிட்டிங் again ! //
    விடாது வஞ்சம் அட்டைப் படம் அசத்தல்...

    ReplyDelete
  34. // இந்த இதழின் விற்பனையிலிருந்து ஒரு சதவிகிதமானது நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கெனச் செல்லவிருப்பதால் - இதுவரையிலும் இதற்கு ஆர்டர் செய்திரா நண்பர்கள் can go for it now ! //
    டெக்ஸ் க்ளாசிக்ஸ்-2 இன் விற்பனை KGF-Chapter-2 வைப் போல அசுரத்தனமான வெற்றியை ஈட்ட வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸுக்கும் ராப்பரில் ஒரு தாடி போட்டு விட்டிருக்கணுமோ ?

      Delete
  35. // தொடரின் இறுதிக்கு முன்பான சாகசமிது என்பதால், 2023-க்கு இவர் தேர்வாகிட கூடுதலாய் ஒரு காரணம் கிட்டியது போலாகிறது ! //
    ட்ரெண்ட் எப்போதும் போல் அசத்துவார் என்று நம்புகிறேன்...
    இறுதி பாகம் 2023 ஸ்லாட்டில் இடம் பிடிக்க எனது ஆதரவை இப்போதே தெரிவிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே எனது ஆதரவையும்

      Delete
    2. எனது ஆதரவையும்...

      Delete
  36. // So இன்னொரு விஷப்பரீட்சை வேண்டாமே என்றபடிக்கு அந்த ஸ்லாட்டில் முழு வண்ணத்திலான ஸ்டெர்ன் ஆல்பம் # 3-ஐ புகுத்தத் தீர்மானித்திருக்கிறேன் ! //
    அடடே அப்ப வைகறைக் கொலைகள் இனி வரவே வராதாங் சார்...

    ReplyDelete
  37. // Which means "மேற்கே...இது மெய்யடா !" என்று இலக்கிய ரசனையுடனான வெட்டியான் ஜூன் மாதம் வந்திடுவார் - ஜம்போவின் சீசனை நிறைவு செய்திட ! //
    ஸ்டெர்னை வருக,வருக என வரவேற்கிறோம்,தலைப்பு வித்தியாசமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. Stern ஃபேன் கிளப்பில் நானும் ஒரு மெம்பர்.

      Delete
    2. ஸ்டெர்ன் இரசிக்காமல் போனால்தான் ஆச்சரியம் தம்பி...

      Delete
    3. //தலைப்பு வித்தியாசமா இருக்கு//


      ஒரு வித்தியாச நாயகரின், ஒரு வித்தியாச ஆல்பத்துக்கு, ஒரு நார்மலான பெயர் சுகப்படாதில்லையா சார் ?! அதான் !

      Delete
  38. // 2024-க்கு முன்பாய் ஜம்போவின் சீசன் 5 சாத்தியமாகாது ! அதற்குள்ளாக உருப்படியான கதைத்தேர்வுகளைச் செய்து கொள்வேன் //
    சிறிய கால இடைவெளி அசத்தலான கதைகளை பொறுமையாக பார்த்து தேர்ந்தெடுக்க உதவும் என்று நம்புகிறேன் சார்...
    ஒரு நில் கவனி வேட்டையாடு போல,
    ஒரு பிரிவோம் சந்திப்போம் போல,
    ஒரு அந்தியின் அத்தியாயம் போல...

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாண்ட் 2.0 போல, ஒரு தனி ஒருவன் போல ...

      Delete
    2. கமர்ஷியல் ஆக்‌ஷன் கதை ஓகேவாகி விடுகிறது ..இது போன்ற பரீட்சார்ந்த முயற்சிகள் தான் கொஞ்சம் சொதப்பி விடுகிறது சார்..

      Delete
    3. தனி ஒருவனை தனியாய், ஓரமாய், நின்னபடிக்கே நாம தான் படிச்சாகணும் போல சார் !

      Delete
    4. பரீட்சார்த்தமெல்லாம் இவற்றுள் ஏதுமில்லை தலீவரே !

      ஒவ்வொரு one shot ஆல்பமுமே ஒரு கேள்விக்குறியுடனான ஆக்கமே ! சில சிப்பிகளுக்குள் முத்து இருக்கும் ; சிலவற்றுள் பிம்பிலிக்கா பிலாக்கி !

      Delete
    5. :-)

      உண்மைத்தான் சார்...!

      Delete
  39. கோடைமலர் ஜானி - வழக்கமான அதே டெம்ப்ளேட் புதிய வில்லன்கள் வித்தியாசமான கொள்ளை கடைசி சில பக்கங்களில் குற்றவாளி யார் என்ற முடிச்சை அவிழ்ப்பது என உள்ள கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை அடுத்து என்ன குற்றவாளி டெவில் என்பது யார் என்ற கேள்வியுடன் பரபரவென்று ஓடியது. வழக்கமாக ஜானி கதையில் ஓவியம் மற்றும் லண்ணச் சேர்க்கை நன்றாக இருக்கும் இதிலும் அது டாப்.

    ஜானி ஜானிதான் இந்த முறையும் அமைதியாக சிக்ஸ் அடுத்து விட்டார்.

    ReplyDelete
  40. ஜேம்ஸ் பாண்ட் 2.0 புதிய கதைகள் உள்ளனவா சார்? இருந்தால் அடுத்த வருடம் வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. உள்ளன சார் ; அட்டவணையில் இடமும், பட்ஜெட்டும் ஒத்துழைத்தால் செய்து விடலாம் !

      Delete
    2. ஜேம்ஸ்பாண்ட் 2.0 புதிய கதைக்கு 2023 அட்டவணையில் ஒரு ஸ்லாட்டாவது ஒதுக்குங்கள் சார்.

      Delete
  41. விடாது வஞ்சம் அட்டைப்படம் செம கலக்கலாக அமைந்து உள்ளது சார்...இங்கேயே இப்படி எனில் புத்தகத்தில் நேரில் பட்டையை கிளப்பும் என்பது உறுதி...


    டெக்ஸ் க்ளாசிக் 2 நாளை தான் கிடைக்கும் என நினைக்கிறேன் காத்திருக்கிறேன்


    அடுத்த க்ளாசிக் ஓநாய் வேட்டை என்பதை அறிந்தேன் மிக மிக மிக மகிழ்ச்சி சார்...இப்படி தொடராக வந்த இதழை ஒரே இதழில் வண்ணத்தில் காணும் பொழுது ஏற்படும் குஷி கொஞ்சம் அதிகமே ..இது போல் இரத்த ஒப்பந்தம் போன்ற மூன்று பாக டெக்ஸ் சாகஸங்களையும் இது போல் தொடர்ந்து வெளிநிடுங்கள் சார்..

    ReplyDelete
  42. So இன்னொரு விஷப்பரீட்சை வேண்டாமே என்றபடிக்கு அந்த ஸ்லாட்டில் முழு வண்ணத்திலான ஸ்டெர்ன் ஆல்பம் # 3-ஐ புகுத்தத் தீர்மானித்திருக்கிறேன்

    ####

    மிக்க மகிழ்ச்சி சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. பார்டா...தலீவர்லாம் அந்த கி.நா.பாணிக்கு ரசிகர் !!

      Delete
  43. Smashing 60 அறிவிப்பே காதில் தேன் பாய்ந்தது போல் உள்ளது,

    ஏனென்றால் Smashing 70 வேதாளர் Special அட்டைப்பட அழகையே தினம் ஒரு முறை ரசிக்கலாம்,

    மதுரை Book fair ல் சகாய விலையில் பல தரப்பட்ட Used English books விற்பனைக்கு கிடைக்கும், அதன் தயாரிப்பு தரத்திற்காகவே பார்த்துக் கொண்டே இருக்கலாம், இதைப் போன்று தமிழில் நமக்கு பிடித்த Comics வருமா என்று என்று நினைத்தது உண்டு, இக்குறையை தீர்த்து வைத்தது வேதாளர்தான், அந்த அட்டை தயாரிப்பு தரத்திற்கே நாங்கள் கொடுத்த விலை போதாது என்பதுதான் உண்மை.

    இதைப் போன்று மனதிற்கு இதம் தரும் Golden oldies கதைகளை இதே தரத்தில் தொடர்ந்து கிடைக்க விரும்புகிறேன்.

    இதே போன்று நமது லயன், மினி, திகிலில் வந்த கதைகளை Replica வாக, பல கதைகள் சேர்த்து ஒரு Package ஆக விரும்பியவர்களுக்கு மட்டும் முன்பதிவு என்ற முறையில் வெளியிட வேண்டுகோள் வைக்கிறேன் Sir,

    இதனுடைய நடைமுறைச்சிக்கல்கள், சாதக பாதகங்கள், விற்பனை யதார்ங்கள் குறித்து எனக்கு தெரியாது, என்னுடைய கருத்து மட்டுமே, வாய்ப்பிருப்பின் செய்து தாருங்கள் Sir

    ReplyDelete
    Replies
    1. அந்த Replica edition முயற்சிக்கு மொத்தமே 28 பேர் தான் கை தூக்கினர் சார் ; ஜெராக்ஸ் எடுத்துத் தரக் கூட அந்த நம்பரால் பலன் இராது !

      Delete
    2. அப்புறம் படத்தின் துவக்க சீனிலேயே சூப்பர் ஸ்டாரை களமிறக்கி விட்டதால், தியேட்டரில் முதல் அவரில் விசில் காதைப் பிளப்பதில் வியப்பில்லை தான் ! ஆனால் சிறுகச் சிறுக குணச்சித்திர நடிகர்கள் ; ரெண்டாம்நிலை ஹீரோக்கள் என்றெல்லாம் ஆஜரான பிற்பாடும் தியேட்டரில் உற்சாகம் கரை புரண்டோடிடும் பட்சத்தில் மகிழ்ச்சி சார் ! Fingers crossed !

      Delete
    3. // அந்த Replica edition முயற்சிக்கு மொத்தமே 28 பேர் தான் கை தூக்கினர் சார் ; ஜெராக்ஸ் எடுத்துத் தரக் கூட அந்த நம்பரால் பலன் இராது // சார் இது எப்போது நடந்தது?

      Delete
  44. பனிக்கடல் படலம் - புதுமையான Tex கதை...
    வழக்கமா ஊருக்குள்ள வந்த ஒடனே Sheriff Voda வம்பு வளக்குற டெக்சு இதுல காவல் அதிகாரி கெட்டவன்னு தெரிஞ்சும் அமைதியா இருக்கார்...
    பெரிய பெரிய போக்கிரிகளை பந்தாடுனவர் ...இதுல சுட்டுகிட்டே போய் முட்டு சந்துல மாட்டிக்கிறார்...
    டெக்சு அடிச்சும் ஓருத்தன் அசராம நிக்குறான்...
    இதவிட Comedya இவர் Lengthஆ ஒரு பிளான் போட அத வில்லன் ஒரு Sticky note ஐ வைச்சு Simply ஆ முடிச்சு விட்டுற்றான்.
    டெக்சு குதுரைல Travel பண்ணாம ...Train யும் வாடகை வண்டிலேயும் போறார் ....Interesting.
    கதையோட மிகப்பெரிய பலமே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அமைந்த படங்களும் அதுக்கு கொடுக்கப்பட்ட Perfect coloring தான் ...ஓடும் போது பனியில் புதைகிற பூட்ஸ்...Boston ன் அழகான தெருக்கள் ...உயரமான கட்டிடங்கள்..ஒவ்வொரு Frame லேயும் அவ்வவு Details...ஓவியர் மற்றும் Coloring Artist ன் அசுர உழைப்பு தெரிகிறது. இது போல பனிப்பிரதேசம் சார்ந்த கதைகளை முடிந்த வரை Color ல வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  45. டெக்சின் - "நில்..கவனி..சுடு!" மற்றும் தளபதியின் "என் பெயர் டைகர்" ஆல்பங்களை தேடியெடுத்து லைட்டாக ஒரு வாசிப்பு விட்டால் நலமென்பேன்

    #####

    அப்ப நாளைக்கே நில்...கவனி..சுடு மறுவாசிப்புக்கு எடுத்துர்றேன் சார்..ஆனா என் பெயர் டைகருக்கு தான் நேரமிருக்காது சார்...:-)

    ReplyDelete
  46. டெக்ஸ் அட்டைப்படம் ஒரிஜினலை விட அட்டகாசமாக அமைந்துள்ளது. மேக்கிங், கலரிங் எல்லாம் அசத்துகிறது. பின்னணியில் அந்த கேம்லிங் கேம் போர்ட், வெளிர் பச்சை நிறம் என சொல்ல ஏகப்பட்ட ப்ளஸ்கள்.
    சமீபத்திய சிறந்த டெக்ஸ் அட்டைப்படங்களில் ஒன்று.

    டாக் ஹாலிடே : இந்த கதையின் மைய புள்ளி. ஏற்கனவே OK. Corral-ல் பார்த்த ஆசாமி தான். இவரைப் பற்றிய குறிப்பு நம் எடிட்டரால் அறிமுகப்படலமாக சொல்லப்பட்ட "என் பெயர் டைகர்" இதழில் உள்ளது தான்.
    அதை இப்பொழுது எடுக்க சோம்பல் முறிக்கத் தயங்குபவர்க்கு மட்டும் ஒரு சின்ன Recap:

    டாக் ஹாலிடே, பல் மருத்துவர், டாக்டர் என்பதால் நண்பர்களால் செல்லமாக டாக் என்று அழைக்கப்பட்டார். சூதாட்டப் பிரியர், சூதாட்டத்தில் வல்லவர். துப்பாக்கி சுடுவதில் கில்லாடி. வயாட் ஏர்ப்பின் நெருங்கிய கூட்டாளி. Ok Corral மோதலின் போது தற்காலிக ஷெரீப்பாக இருத்தவர். டாக்டர் என்றாலும் என்றெனும் ஒரு நாள் காலனுக்கு இரையாகத்தானே வேண்டும். தன்னுடைய வெறும் 36 வயதில் காசநோய்க்கு பலியானயொரு ஜீவன்.

    Laura Zuccheri : இந்தக் கதையின் பெண் ஒவியர் (யை). இதுவரையில் நாம் எத்தனையோ கதாசிரியர்களையும், ஒவியர்களையும் பார்த்துள்ளோம்தான். ஆனால் டெக்ஸின் இந்த முழு நீள கதைக்கு சித்திரம் தீட்டிய முதல் பெண் ஒவியர் இவர். ஏற்கனவே டெக்ஸின் இதழக்கு பணி செய்ந்தவரே! முழுக் கதைக்கல்ல! டெக்ஸ் கலர் வெளியீடு எண்.4 இதழின் ராப்பர் இவரது கைவண்ணமே. அடுத்து இவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளி வர விருக்கும் Tex Color No.21 ல் இடம் பெறவிருக்கும் டெக்ஸின் 160 பக்க Pasquale Ruju கதைக்கு Laura Zuccheri சித்திரங்களைப் முழு வண்ணத்தில் போட்டு முடித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் போல அட்டகாசமான தகவல்களுக்கு நன்றி சார்.

      Delete
    2. Thanks for the recap and the write up - interesting ahead of waiting to read the book!

      Delete
  47. // பரண் பார்ட்டீஸ் //

    பரண் பார்ட்டீஸ் ஸ்பெஷல் ப்ளீஸ் சார்.

    ReplyDelete
  48. //Sorry guys ! 2023-ல் கூட க்ளாஸிக் நாயகர்களின் (வேதாளன் ; ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) தனித்தடம் SUPER '60s என்று இடம்பிடித்திடும் என்பதால் 2024-க்கு முன்பாய் ஜம்போவின் சீசன் 5 சாத்தியமாகாது//

    மிகவும் வருத்தமான நியூஸ் சார். இதை ஈடுகட்ட எனது சமீபகால கோரிக்கையான "The Bomb" கதையை 2023 ல் ஏதாவது ஒரு தருணத்தில் நுழைக்க முயற்சியுங்கள் என்பது எனது கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய கதைகள் இருக்கே திரு.

      பிரளயம், காலனின் கால் தடத்தில், உலகத்தின் கடைசி நாள், இன்னும் பல

      Delete
    2. சார்...டி-வி சீரியலையும், விளம்பரப் படங்களையும் எடுத்து வரும் அணியிடம், "நடுவாக்கிலே கிடைக்கிறே அவகாசத்தில் ஒரு டைட்டானிக் படத்தையோ ; ஜுராசிக் பார்க்கையோ ; Schindler's list படத்தையோ எடுத்துப்புடுங்க ! என்ன ரைட்டா ?" என்று கேட்டு வைத்தால் எப்படி முழிப்பார்களோ - அதே முழி இக்கட !

      THE BOMB கதையல்ல ; 472 பக்க வரலாறு ! அதனை மொழிபெயர்ப்பதென்பது ஒரு தவம் போலச் செய்திடப்பட வேண்டியதொன்று ! சுத்தமாய் 2 மாதங்களுக்கு வேறு பணிகளையே தொடாமல் இதனுள் மூழ்கிக் கிடந்தாலொழிய டிரவுசர் கிழிபடுவது confirmed ! அப்புறம் ரெகுலர் 48 பக்க கமர்ஷியல் இதழ்களையே அந்தந்த மாதங்களுக்குள் படித்து முடிக்கத் திண்டாடி வரும் நண்பர்களிடம் ஒரு 472 பக்க வரலாற்று ஆவணத்தை ஒப்படைப்பதில் உள்ள சிரமங்களையும் யோசித்திட வேண்டுமே !

      Delete
    3. அதற்கென ஒரு தருணம் வாய்க்கும் சார்...

      Delete

  49. சிவகாசி பக்கம் அணில்கள் நடமாட்டம் அதிகமில்லை போலும்.ப்ரிண்ட் & பைண்டிங் கடகடவென முடிந்து குளியலறையில் இருந்து தலையில் ஈரத்துடன் வரும் பெண்ணைப் போல டெக்ஸ் கிளாஸிக் -2 திருப்பூர் போய்விட்டார். இந்தப் பக்கம் வரக் காணோம்.

    கல்லூரி க்ரஷ்ஷாக இருந்த பெண்ணை அதே யௌவன யுவதியாக மறுபடியும் பார்ப்பது போலான கிளுகிளுப்பு உணர்வினை டெக்ஸ் மறுபதிப்புகளும் பல சமயம் கொணர்வதுண்டுதான்.

    விடாது OK corral
    லக்கி லூக்கில் காணோமே இதனை என எண்ணிக் கொண்டிருக்கையில் மறுபடியும் டெக்ஸிலா? அரண்மனை 3 எடுத்த சுந்தர்.சி ஞாபகம் வருகிறது.


    ஜம்போ 4 -ம் ஸீஸன்

    மாட்டா ஹரி தவிர மற்றவை மறுதலிப்பு உணர்வை ஏற்படுத்தவில்லை..
    போர்முனையில் தேவதைகள் கொஞ்சம் சென்ஸிட்டிவான கரு என்பதைத் தாண்டி மற்றபடி அருமைதான்.

    விடாது வஞ்சம்

    கறுப்பு மற்றும் பொன்னிறத்தில் மிகவும் அட்டகாசம்.நான் ஓவியையைச் சொன்னேன். சித்திரங்கள் கிடக்கட்டும்.

    ஸ்டெர்ன்

    ஜூன் மாதம் வெட்டியான் வருவதற்கும் வருவது போலிருக்கும் கொரோனா 4-ம் அலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருக்க இறைவன் அருள்வானாக!

    ட்ரெண்ட்

    முரட்டு சிங்கிளாய் வலம் வந்து கடுப்பேற்றிய ட்ரெண்ட்" கண்ணால வலையில்" சிக்கி லௌகீக ஜோதியில் ஐக்கியமாவது பரம திருப்தி.

    ReplyDelete
    Replies
    1. சிகப்புச் சட்டை டிரெண்டுக்கு இந்த ஆல்பத்தில் கண்ணாலம் ; அடுத்ததில் புத்திர பாக்கியம் ; அப்பாலிக்கா THE END !!

      Delete
  50. "பனிக்கடல் படலம்" - இன்றுதான் கைப்பற்றினேன்.(ஊரில் இருந்து வந்ததால் - இன்னும் பிரித்துப் பார்க்கவில்லை- பெரிய சைஸில் படித்தது. வண்ணம் அதை ஈடுசெய்யுமா?.)
    என் அபிமான ஜுலியா-ஓவியரின் கைவண்ணத்தில் Tex - இதழ் படிக்க படங்களை ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். நிச்சயம் ஒவ்வொரு Frame-யையும் பல கோணங்களில் வரைந்திருப்பார்.. பார்ப்போம்..
    "வைகறை கொலைகள்."-B&W -யில் கதையாக படிக்க மிகவும் ஆவலாய்த்தான் இருந்தேன்.
    ஸ்டெர்ன் - முதல் கதை-கொஞ்சம் அருவருப்புரகம் என்றாலும் இரண்டாவது கதை சூப்பராக இருந்தது..
    எனவே, ஸ்டெர்ன் வருவதில் மகிழ்ச்சியே..
    ஜம்போ - வை ஒத்தி. வைத்ததில் மகிழ்ச்சியே. எனக்கு ஜேம்ஸ்பாண்ட். 2.0-மட்டுமே பிடித்திருந்தது. எனது ரசனை அவ்வளவே..
    அடுத்த வருடமும் Smashing 60-ஆக தொடர்வதில் மகிழ்ச்சியே.
    ஒரே ஒரு மாடஸ்டி -க்ளாஸிக்-கும் ? iiதந்துவிட்டால் Smashing_ஸீசன் முழுமையடைந்தது போல் இருக்கும்.சார்..
    இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆகாய சூரியனை
      ஒற்றை ஜடையில் கட்டியவள்
      நின்றாடும் விண்மீனை நெற்றி
      சுட்டியில் ஒட்டியவள் இவள்
      தானே எரிமலை அள்ளி
      மருதாணி போல் பூசியவள்.

      //ஒரே ஒரு மாடஸ்டி -க்ளாஸிக்-கும் ? iiதந்துவிட்டால் Smashing_ஸீசன் முழுமையடைந்தது போல் இருக்கும்.சார்..//

      Love emojis...

      Delete
    2. // ஒரே ஒரு மாடஸ்டி -க்ளாஸிக்-கும் ? iiதந்துவிட்டால் Smashing_ஸீசன் முழுமையடைந்தது போல் இருக்கும்.சார்..//

      என்னாது :-)

      Delete
    3. முந்தைய பின்னூட்டத்தில் நண்பர் THE BOMB கதையை வெளியிடக் கோரியிருந்தார் ; நீங்கள் இப்போது போட்டிருப்பதோ அந்த வெடிகுண்டை விட வீரியமானதை !! ஆத்தாடியோவ்....மாடஸ்டி க்ளாசிக்ஸ் !!!

      தொழிலதிபர்களும், டாக்டர்களுமே ஊரைக் காலி பண்ணிப்புடுவாங்களே !!

      Delete
    4. நீங்கள் சொல்வதன் அர்த்தம்- "தொழிலதிபர்களும்- டாக்டர்களும் முழு திருப்தியாகி புது ஜேனர் கதைகளை படிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதா.?ii..சார்..

      Delete
    5. அவர்களின் அளவில்லா மகிழ்ச்சியையும் / ரகளைகளையும் தான் அப்படி சொல்றாருனு நினைக்கிறேன்

      Delete
  51. சார் இந்த மே மாத புத்தகங்களை இந்த வார் இறுதிக்குள் அனுப்பி விடுவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இங்கு இன்னும் டெக்ஸ் கிளாசிக்கே வரவில்லை யூவர் ஆனர் 😀

      Delete
    2. இன்று வந்து விடும் பரணி.

      Delete
  52. பாராட்டுக்கள் விஜயன் சார். டெக்ஸ் கிளாஸிக் 2, புத்தகத்தை இப்போதுதான் நண்பர் கலை ஈரோடு வந்து நேரிலேயே அன்புப் பரிசாகத் தந்துவிட்டு போனார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.அவரை பஸ் ஏற்றிவிட்டு இப்போதுதான் வீட்டுக்கு வந்து புத்தகத்தை கையிலெடுத்தேன்.பத்து நிமிடங்களுக்கு மேலாக திருப்பி திருப்பிப் பார்த்தாலும் கீழே வைக்க முடியவில்லை.மிரட்டலான மேக்கிங்.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் தல! முன்அட்டையின் பின்னனியில் இருக்கும் அந்த கொசுவத்தி போன்ற டிசைனிங்கும் சரி, டெக்ஸ் நிற்கும் படகு மரத்தளத்தின் சொர சொரப்பான அமைப்பும்,லயன் லைப்ரரி சின்னத்தின் (கொஞ்சம் பெரிசா போடலாமே) பின்னாலே 3/4 இஞ்ச் அளவில் நீளவாக்கில் வரும் சிகப்பு பகுதியும், அதற்கு மேலே கொஞ்சூண்டு தான் கேப்....அதற்கு ஒரு டிசைன். இதையெல்லாம் மீறிக்கிட்டு TEX ங்கற லெட்டர்ஸ் பச்சை பிண்ணணியில் ஜொலிக்கிது.சரின்னு மனசைத் தேத்திக்கிட்டு பின்அட்டைக்கு போனா இரத்த வெறியர்கள் தலைப்புக்குப் பின்னால் ஒரு டிசைனு. தலயோட கழுத்துக்குக் கீழே பின்னனியிலே ஒர டிசைனு....ரைட்டுன்னு கீழே பார்த்தா பார்கோடுக்கு பின்னாலே ஒரு டிசைனு, இதெல்லாம் பத்தாதுன்னு புத்தகத்தின் முதுகுப்பக்கம் பார்த்தா சிகப்புப் பின்னனியிலே ஒரு டிசைனு...என்ன நெனெச்சிட்டுருக்கீங்கன்னு தெரியல. அட்டையவே இம்மா நேரம் வெறிச்சி,வெறிச்சி பாத்துகிட்டு இருந்தா கதைய படிக்கிறதா வேண்டாமா
    எடி சார் ?! B&W ல படிச்சாலே சாமியாடுவாங்க சில பேர்! நீங்க கலருங்குற சலங்கைய வேற கட்டிவிட்ருக்கீங்க! பாயாசப் பார்ட்டி என்ன பண்ணாருன்னு தெரியலே...ரெண்டு நாளா சாப்ட்டாரா, தூங்குனாரான்னு தகவல் இல்லே. இந்த வருசம் வந்த அட்டைகள்ளேயே பெஸ்ட் இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. Super marimuthu sir,super. அட்டைப்பட மேக்கிங் உண்மையில் அற்புதம். ஆசிரியரை பாராட்ட வார்த்தைகள இல்லை.

      Delete
    2. அட, அட்டைக்கே இத்தனை பெரிய பின்னூட்டமா ? நீங்கள் விவரிக்கும் அந்த நகாசு வேலைகளின் சகலமும் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணம் சார் !

      :-)

      Delete
    3. உண்மைதான் சார்..
      அட்டைப்படத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்-கதையைப் படிப்பதைக்கூட ஒத்திவைத்துவிடுகிறது.. .

      Delete
    4. //அட, அட்டைக்கே இத்தனை பெரிய பின்னூட்டமா ? //

      ரம்மி: அதுக்கு மேலே எழுத என்ன இருக்குன்னு சொல்ல வர்றாருன்னு நினைக்கிறேன். முடங்க பாய் இல்லன்னாலும் சடங்க நிறுத்திடவா முடியும்.

      Delete
    5. // ரம்மி: அதுக்கு மேலே எழுத என்ன இருக்குன்னு சொல்ல வர்றாருன்னு நினைக்கிறேன். முடங்க பாய் இல்லன்னாலும் சடங்க நிறுத்திடவா முடியும். //

      ROFL :-)

      Delete
  53. Edi Sir.. Classic 2 Tex இன்று ஜிகு.. ஜிகு ன்னு வந்துட்டார். ஃபுல் மேக்கப். பார்க்கறப்ப கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்குறாரு.

    வழியெல்லாம் மழை. அதனால பள்ளதாக்கு பாறைகளுக்கு கீழே நின்னு நின்னு வந்ததுனால லேட் ஆயிடுச்சுன்னு சொன்னாருங்க.

    பத்திரமா பள பளன்னு வந்துட்டாருங்க. அதுவே போதுங்க.

    ReplyDelete
  54. டெக்ஸ் க்ளாசிக்ஸ்-2 இன்று கிடைத்தது சார்,அட்டைப் படம் அருமையோ அருமை..
    இரத்த வெறியர்கள் படித்த நினைவு இல்லை,வாசித்தால் தான் தெரியும்...
    இந்த வாரப்பொழுதை இனிமையாக்க இந்த இதழ் போதும்...

    ReplyDelete
  55. டெக்ஸ் க்ளாசிக் 2.. கலரில் அருமையாக வந்துள்ளது.. இன்று இரண்டாவது முறை படிக்க வேண்டும்..

    ReplyDelete
  56. ****காட்டான் கூட்டம்**** விமர்சனம் by Mahendran Paramasivam

    ஒரு வித்யாசமான விஷூவல் ட்ரீட். சித்திரங்களெல்லாம் அற்புதமா இருக்கு. ஒவ்வொரு சித்திரத்தின் வர்ணசேர்க்கையும் கண்களுக்கு இதமாகவும் சுகமா இருக்கிறது.

    சராசரி வன்மேற்கு கதைகளில் காணமுடியாத களம். புத்தகங்கள் வாங்க தன் ஊரை விட்டு பக்கத்திலுள்ள பெருநகருக்கு வரும் ஹூரோ வழிப்பறியில் தன் கையிலுள்ள பணத்தை இழக்கிறான். அந்தப் பணத்தை திரும்ப அடைந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டு ஊர்போய் சேர்வதே கதை. இந்த ரெண்டு வரியை மட்டும் கதை என படித்தால் சப்பையாகத் தெரியும். ஆனால் கதை சொல்லியிருக்கும் விதமும் ஓவியங்களும் இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
    ஹீரோவை தோஸ்தானா ஆசாமி என முடிவு செய்து துரத்தும் அந்தக் கிழவி கதையில் கடைசி வரை ரணகளம் செய்கிறாள்.

    குறைந்தபட்ச வசனங்கள் அதிகபட்ச தாக்கம் என அமைந்திருப்பது தனி சிறப்பு. வசனங்கள் சிறப்பாக அமைக்கப்படிருக்கின்றன. பல இடங்களில் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. 💐💐💐💐

    *காட்டான் கூட்டம். Must Read. *
    *************************************************************************
    நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லு உள்ளார், Sternனின் மணைவி அவரின் புத்தக ரசனையௌ புரிந்து கொள்ள மாட்டார், "இதில அப்படி என்னதான் இருக்கோ?" என்பது போல பேசுவார்.... நாம் இந்த கதையோடு connect ஆக இது போதாதா?!.

    ReplyDelete
    Replies
    1. //நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லு உள்ளார், Sternனின் மணைவி அவரின் புத்தக ரசனையௌ புரிந்து கொள்ள மாட்டார், "இதில அப்படி என்னதான் இருக்கோ?" என்பது போல பேசுவார்.... நாம் இந்த கதையோடு connect ஆக இது போதாதா?!.//

      என்ன ஒரு அசட்டுத் தைரியம்?

      Delete
    2. கதை படிக்க காதல் அப்படி

      Delete
  57. டெக்ஸ் கிளாசிக்கல் 2 புத்தகம் நேற்றுதான் கிடைத்தது. பனிக் கடல் படலம் பாதிவரை வந்துள்ளேன். ஏற்கனவே படித்த கதை தான் இருந்தாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. இந்தக்கதையில் டெக்ஸையும் கார்சனையும் குதிரையில் ஏற்றாமல் சில பல சலூன்களில் யாருடைய மூக்கையும் பெயர்க்காமளும் உலாவ விட்டும் கிளாசிக் கரையாக அமைத்திருப்பதுகதாசிரியரின் தைரியத்தை காட்டுகிறது. ஆனால் கதையில் வழக்கம்போல ஒரு வண்டி தோட்டாக்கள் சீறிப் பாய்கின்றன. சடையாண்டியயை டெக்ஸ் குழு மடக்குவதும் அவருக்கு தெரியாமல் டெக்ஸ்டுக்கு குழி பறிப்பதும் செம. அதேபோல் இக்கதையில் கிளைமாக்ஸும் மற்ற டெக்ஸ் கதையைவிட வித்தியாசமாக உள்ளது.

    ReplyDelete
  58. அடுத்த டெக்ஸ் கிளாசிகல் 3ல் பாலைவன பரலோகம் கதை வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நான் படித்த முதல் லயன் காமிக்ஸின் முதல் கதை தலையின் பாலைவன பரலோகம் தான். அப்போது எனக்கு தலையை பிடித்து விட்டது. அப்போது டெக்ஸ் வில்லர் கதைகள் வந்தால் டெக்ஸ்வில்லர் என்ற பெயரை எடுத்துவிட்டு என் பெயரை அதன் மேல் எழுதியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. மறுபதிப்பு க்கு நான் பரிந்துரைத்த பட்டியலில் இருக்கும் இடம்பெற்று வருவதால் இன்னொரு பட்டியலையும் இங்கே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  59. டெக்ஸ் classics2 making அருமை! டெக்ஸ் classics 3ல் பாலைவன நரகம் மற்றும் ஓநாய் வேட்டை அறிவிப்பாகியுள்ளது.அதற்கு பதிலாக ஒநாய் வேட்டையும் அதன் இரண்டாம் பாகமான இரத்த தாகமும் வெளியானால் பொருத்தமாக இருக்கும். எடிட்டர் சார் கோரிக்கையை பரிசிலியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஓநாய் வேட்டை,இரத்த தாகம் இரண்டயுமே சேர்த்து தாங்க சொல்லி இருக்கார்.. இரண்டு டைட்டில் வைக்க முடியாது இல்லை..அதனால ஓநாய் வேட்டை னு மட்டும் சொல்லி இருக்கார் ..

      Delete
  60. நான் மறுபதிப்பாக வர விரும்பும் தலையின் கதைகள் பட்டியல்.
    1: நள்ளிரவு வேட்டை
    2 : மரண நடை
    3 : இரத்த ஒப்பந்தம்,
    கானலாய் ஒரு
    காதல், காலம் தீர்த்த
    கணக்கு.
    இந்தக் கதைகளில் நள்ளிரவு வேட்டை கதையில் கிளைமேக்ஸ் வரை வில்லன் யாரென்று தெரியாமல் சஸ்பென்ஸ் ஆகவே செல்லும்.

    ReplyDelete
    Replies
    1. 3.இரத்த ஒப்பந்தம்; தனியாத தணல்; காலன் தீர்த்த கணக்கு-

      Delete
  61. இரத்த வெறியர்கள் இதுவரை படித்திராத கதை. சித்திரம் சுமார் கதை விறுவிறுப்பு!

    ReplyDelete
  62. கை கொடுங்கள் ஆசானே.
    டெக்ஸ் கிளாஸிக்ஸ் 2 வெகு பிரமாதமான உருவாக்கம். அற்புதமான அட்டைப்படங்கள். RRR & KGF இரண்டு படங்களையும் ஒரே இதழாய்த் தந்து பரவசப்படுத்திவிட்டீர்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு டெக்ஸ் கிளாஸிக் வந்தால் நன்றாக இருக்கும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. குசேலராகப் பிறந்ததால் என்னால் தங்கள் விரல்எளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க முடியவில்லையே என்று வருந்துகின்றேன். இது புகழ்ச்சி அல்ல . நன்றி ஆசிரியர் அவர்களே.

    ReplyDelete
  63. போகிற போக்கை பார்த்தால் இன்னும் இரண்டு வருடத்தில் தலயின் துயிலெழுந்து பிசாசுகள், பறக்கும் பலூனில் டெக்ஸ் போன்ற செமி கிளாசிகல் கதையும் மறுபதிப்பாக கேட்க வேண்டிய சூழல் வருமோ.

    ReplyDelete
  64. செய்வன தில்லாய் செய் ஒரு OTT சீரீஸ் ஆக வருவதாக இன்று ஒரு கட்டுரையில் படித்தேன்.

    உண்மையாகவா?

    ReplyDelete
  65. 2023லும் Smashing 70 தொடர்வது மிக்க மகிழ்ச்சி.
    2024லும் S70 தொடர்வது உறுதி.தொடர்ந்தால் மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  66. டெக்ஸ் க்ளாசிக் அட்டகாசமான அட்டைப்படம் ,அசத்தலான வண்ண சித்தரங்கள் ,வெற்றிகரமான இரண்டு அசத்தல் மறுபதிப்பு கதைகள் என படு அட்டகாசமாக அமைந்துள்ளது இந்த இதழ் .ஏற்கனவே படித்த கதையாக இருப்பினும் நீண்ட வருடங்களுக்கு முன் வந்த கதைகள்..வண்ணத்தில் என புத்தகம் கைக்கு கிடைத்தவுடனே முதல் முறையாக பார்ப்பது போல் மீண்டும் படிக்க வைத்து விட்டது இந்த இதழ்..அடுத்த க்ளாசிக் விளம்பர அறிவிப்பு இன்னும் செம அட்டகாசம் மொத்ததில் டெகஸ்ன் இந்த அதிரடி இதழ் தவறவிடக்கூடாத இதழ்.

    ReplyDelete
  67. டெக்ஸ் க்ளாசிக் காமிக்ஸ் கனவுலக குழுவால் கிடைக்க பெற பட்டது
    அவர்களுக்கு என் நன்றிகள் 🙏 🙏 🙏

    அருமையான அட்டைப்படம்
    டெக்ஸ் அட்டைப்படத்தில் செம்மயாக காட்சியளிக்கிறார்
    முன்னட்டையில் என்ன மர்மமாக இருக்கும் என்று யோசிக்க தோன்றுகிறது
    பின்னட்டையில் அதிரடியான ஸ்டைலில் நிற்கிறார் 😎😎😎😎😎

    கதை அம்மா படித்த பிறகு தான் படிக்க முடியும்
    விமர்சனங்கள் பின்னர் 😊😊😊

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முன்னட்டை செம மிரட்டல் செம ஸ்டைலிஸ்ட் சித்திரம் வண்ணம் back ground அட்டை படத்திற்கு தேர்ந்தெடுத்த காட்சி எல்லாம் கை தட்டலை அள்ளுகிறது!

      // பின்னட்டையில் அதிரடியான ஸ்டைலில் நிற்கிறார் //
      நெற்றியில் கொடுத்த கலர் shade என் கண்களுக்கு நெற்றியில் விபூதி பட்டையுடன் நடுவில் குங்குமப்பொட்டுடன் பக்திப்பழமாக டெக்ஸ் காட்சி தருகிறார் :-) எந்த ஆங்கிளில் வைத்து பார்த்தாலும் எனக்கு இப்படிதான் தெரிகிறார் :-) நெற்றியில் கொடுத்த கலர் shade-ஐ கொஞ்சம் சரி செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
    4. எனக்கு ஸ்டைலாக தான் தெரிகிறார்

      no பக்திப்பழம்

      Delete
    5. @Parani from Thoothukudi 😋😋😋😋😋

      Delete
    6. டெக்ஸ் கிளாசிக் இன்னும் வரவில்லைனு சொல்லி இருந்தீங்க வந்துருச்சா

      Delete
    7. திங்கட்கிழமை கிடைத்தது ரம்யா. நேற்று இரத்த வெறியர்கள் படித்து முடித்தேன். இன்று பனிக்கடல் படலம் போய்க் கொண்டிருக்கிறது:-)

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. 😂😂😂😂😂
      நான் முகத்தை உற்று கவனிக்க வில்லை என்று நினைக்கிறன்......இன்று போய் பார்த்தல் தெரிந்து விடும்

      Delete
    10. // எனக்கு ஸ்டைலாக தான் தெரிகிறார் //

      நிற்பது ஸ்டைலாதான் நிற்கிறார் ரம்யா ஆனால் முகம் தான் பக்திப்பழம் :-)

      Delete
    11. செம்ம ஸ்பீட் சகோ
      உங்களது விமரசனைகள் வரவேற்க படுகிறது
      நான் ஸ்கிப் செய்து விடுவேன்...நோ ஸ்பாய்லர்ஸ் 😋😋😋

      Delete
    12. அதற்காக தான் நான் மேலோட்டமாக விமர்சனம் எழுதுகிறேன் :-)

      Delete
    13. கடந்த வாரம் புத்தகம் வந்த உடன் படித்து முடித்த நண்பர்கள் பலர். நமது புத்தகங்கள் ஒவ்வொரு மாதமும் வந்தவுடன் படித்து முடிக்கும் நண்பர்கள் முன்னால் நான் எல்லாம் சும்மா/தூசி :-)

      Delete
    14. மொத்தமும் படித்தாயிற்று இனிமேல் அடுத்த மாத புத்தகம் வந்தால் தான். சார் புக் எப்போ வரும்???

      Delete
    15. வாங்க குமார்! அடுத்து உங்க அண்ணன் வருவார் பாருங்க :-)

      Delete
    16. வந்து ஆகணுமே

      Delete
    17. // அதற்காக தான் நான் மேலோட்டமாக விமர்சனம் எழுதுகிறேன் :-) //
      இனி உள்ளோட்டமா எழுதுங்க...

      Delete
    18. // திங்கட்கிழமை கிடைத்தது ரம்யா. நேற்று இரத்த வெறியர்கள் படித்து முடித்தேன். //

      இந்த விமர்சனம் போதுமா:-)

      Delete
  68. // அடுத்து உங்க அண்ணன் வருவார் பாருங்க :-) //
    பின்னாடியே தலைவரும் வருவார் பாருங்க...

    ReplyDelete
  69. ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பியைக் காண.

    வாருங்கள் ரிப்கிர்பி !!!

    ReplyDelete
  70. ஏப்ரலில் மேவா ?!

    மேவிலே மேவா ?!

    சொல்லுங்கள் ஆசிரியர் சார் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க எஜமான் கேளுங்க

      Delete
  71. ரிப்கிர்பியுடன் சர்ப்ரைஸ் புக் ஏதும் உண்டா சார் ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்று எடிட்டர் சார் கூறி விட்டார் நண்பரே. இரண்டு பதிவுகளுக்கு முன்பு.

      Delete
  72. புக்ஸ் இன்று கிளம்ப வாய்ப்பு இருக்கா?

    ReplyDelete
  73. Replies
    1. வந்தா வார இறுதிக்குள் படித்து முடிப்பது சத்தியம்....

      Delete
    2. அடடே நம்ம கட்சிக்கு ஆள் சேர்ந்து கொண்டே இருக்கே..

      Delete
  74. ரிப் கிர்பி இதழ் பற்றி ஏதேனும் சிறப்புத் தகவல்கள் உண்டா சார் ?

    ReplyDelete
  75. Edi Sir.. ரிப் கிளம்பிட்டாருங்களா?.. ஆவலுடன் waiting ங்க.
    நல்லசேதியா சீக்கிரமா சொல்லுங்க..

    ReplyDelete