நண்பர்களே,
வணக்கம். பலப்பல கழுதைங்கோ வயசான பிற்பாடுமே நிறைய விஷயங்கள் தெரியலீங்களே ?! ப்ளீஜ் எல்ப் !
தெரில # 1 : பெருமைப்பட்டுக்கிடணுமா - மூவாயிரத்துக்குக் குறைவான விலையிலான நமது புக், வெளியான ஒண்ணரை மாதத்திலேயே கூரையைப் பிய்க்கும் விலைக்கு போணியாகிறதென்று ?
தெரில # 2 : அல்லது - "வாசிப்பாது..... புண்ணாக்காவது ?!! சூட்டோடு சூடாய் கிடைக்கிறதை வாங்கிப் போட்டு பிசுனசை டெவலப் பண்ணுவியான்னு ?!" தென்படும் அந்த அப்பட்ட வியாபார முனைப்பினைப் பார்த்து நொந்து கொள்ளணுமா ?
தெரில # 3 : ஒண்ணேகால் ஆண்டுகளாய் ஹோட்டல் வாசல்களில் நின்று யாசகம் கேட்போருக்கு இணையாய் முன்பதிவுகளுக்கெனக் கெஞ்சிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் அரூபமாயிருந்த நண்பர்கள் இன்றைக்கு மூச்சிரைக்க புக் தேடி தெற்கேயும், வடக்கேயும் ஓட்டமெடுக்கும் மாயம் தான் என்னவோ ?
தெரில # 4 : யாருமே படிக்காத கதையே அல்ல தான் ; ஓட்டங்களே வாழ்க்கையாய் ஆகிப் போயுள்ள இன்றைய பொழுதினில், இதனைப் புதுசாய் ஒருவாட்டி படிக்கும் முனைப்பும், அவகாசமும் ஆண்டவனுக்கு இருந்தாலே அதிசயம் என்பதே யதார்த்தம் ! இருந்தாலும் 'அதனைச் சும்மானாச்சும் வீட்டு அலமாரிலே அடுக்கிப்பேனே' - என்ற ஆதங்கத்தினில் இத்தனை தடுமாற்றம் கொள்ள வேணும் தானா - என்ன ?
தெரில # 5 : சின்னஞ்சிறு வட்டமே ; மண்டை காட்டிக் கொடுக்காவிட்டாலும், கொண்டை காட்டிக் கொடுத்து விடும் என்பதே யதார்த்தம் ! ஆனாலும் "யார் என்ன நினைச்சுக்கிட்டாலும் பரவால்லே ; இது என் புக் - இது என் கல்லா !!" என்ற சிலரது எண்ணப்போக்கினை எவ்விதம் பார்ப்பதோ ? For sure - 'நான் காசு பாக்காங்காட்டி, வேற யாருமே இதிலே பாக்கலாகாது !' என்பதல்ல எனது பார்வை ! ஆனால் அபத்தங்களின் உச்சங்களை விலைகளாக்கி விட்டு, யார் வயிதெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிட்டாலுமே பரவால்லே ; என் கல்லா நிரம்பினால் போதுமென நினைக்கும் அளவிற்கு இங்கே பணம் பண்ணியுள்ள முன்அனுபவம் கண்களை மறைக்கின்றதோ ?
தெரில # 6 : Going forward - இது மாதிரியான பஞ்சாயத்துக்களிலேயே என் பொழுதுகளும், முயற்சிகளும் சுவாஹா ஆகின், பழசு எனும் மாயைக்குள்ளேயே நானும் நித்தமும் சிக்கித் திரிவதாயின், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலாய் இங்கு நமக்கொரு எதிர்காலம் இருப்பதாய் யாருக்கேனும் தோன்றுகிறதா ? தாண்டிவிட்ட தத்தம் பால்யங்களை மீட்டெடுக்கும் தேடல்களிலேயே இந்த காமிக்ஸ் வாசிப்பினை நீட்டிப்பதாயிருப்பின், என்னிடத்தினில் ஒரு ஜெராக்ஸ் கடை முதலாளி குந்தியிருந்தாலே போதுமாகி விடாதா ?
தெரில # 7 : ஒரே ஒரு வருஷம்...பன்னிரெண்டே மாதங்களுக்கு...365 நாட்களுக்கு மட்டுமாவது, என்றைக்கோ ஊசிப் போய்விட்ட உப்மாக்களை தேடும் படலத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு - நிஜங்களோடு கை குலுக்கத் தான் முயற்சிப்போமே - ப்ளீஸ் ? "இந்த மறுபதிப்பு போடுவியா ? அதை போடுவியா ?" என்ற கேள்விகளை நீங்கள் கேட்க ; நான் "இல்லீங்க" என்று சொல்ல, அன்றிரவே உள்ளாற இருந்து பதுக்கல் புக்ஸ் கொலைகார விலைகளில் வெளி வர ; அதற்கான கடுப்புகளையும் என்னிடமே ஏதோவொரு ரூபத்தில் நீங்கள் வெளிப்படுத்த ....... இந்தச் சங்கடச் சக்கரச் சுழற்சியினில் தொலைவது காமிக்ஸ் வளர்ச்சி & தழைப்பது க்ரே மார்க்கெட் கல்லாக்கள் என்பதைப் புரிவது அத்தனை கடினம் தானா folks ?
தெரில # 8 : ஒரேயொரு வருஷம் மட்டும் இந்தப் பழசை தலை முழுகி விட்டு, புதுசுக்குள் பயணித்துத் தான் பாருங்களேன் ? அதற்காக மறுபதிப்புகளே இல்லை என்று கதவைச் சாத்தச் சொல்லவில்லை ; ஏதேனும் ஆன்லைன் புக் பேர் ; ஆப்பாயில் புக் பேர் என்று ஆண்டுக்கு இரு முறைகளாவது நடத்தும் கட்டாயத்தினோடு, இந்த மறுபதிப்புகளை தோணாது நுழைத்து விட்டுப் போகிறேனே ? பழசுக்கென கண் மண் தெரியாது க்ரூப் க்ரூப்பாய்த் தேடித் திரிவதை ஒரேயொரு வருஷத்துக்கு மட்டுமே PAUSE பண்ணலாமே ? கொஞ்சமாய் நிதானம் நம் எல்லோருக்குமே நல்லதாகிடும் தானே ?
தெரில # 9 : "இரத்தப் படலம்" இல்லாட்டி இந்த ஜென்ம சாபல்யம் சாத்தியமே அல்ல என்று எண்ணிடும் நண்பர்கள், இன்று முதலாய் ஒரேயொரு உதவி செய்திடுங்களேன் - ப்ளீஸ் : உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! ஆமாங்கோ - இருபதினாயிரம் ஓவாயே தான் !! கூடிய சீக்கிரத்தில் ஆளாளுக்கு கிட்னிக்களை அடமானம் வைக்கும் நிலை புலரும் முன்னமாய் ஏதேனும் செய்திடுவோம் !
And "இந்தவாட்டியும் மிஸ் பண்ணிட்டேன் !!" - என்று அதற்கடுத்த மூன்றாவாது மாசத்திலேயே காதில் தக்காளிச் சட்னி கசியச் செய்யும் குரல்கள் கேட்டால், மேற்படி வரிகளையே இன்னொருவாட்டி cut & paste போட்டு விடலாம் தான் ! Pheww !!
தெரில # 10 : மெய்யாலுமே கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளும் போது ஒரு பேப்பயல் தான் பிம்பத்தில் தென்படுகிறான் ! 'சிவனே' என்று சொகுசாய் அமர்ந்து கொண்டு, ஒரு டஜன் டெக்ஸ் வில்லர் கலர் மறுபதிப்பு ; நாலு "இ.ப" editions ; நாலு டைகர் கலர் மறுபதிப்பு என்று போட்டு விட்டு, சில்லறையைப் பார்த்த கையோடு, கட்டையைக் கிடத்தாமல், ஏர்வாடி கேசாட்டம் ஓடு ஓடு என்று ஓடுவது ஏனென்ற கேள்வி இப்போதெல்லாம் எழுகிறது !! ஆருக்காச்சும் பதில் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா - ப்ளீஸ் !
நான் இப்போதைக்கு Clifton கூட குப்பை கொட்ட கிளம்பறேன் !! Bye all ! See you around !!
And yes, 99 more days to go !!
விட்டுத் தள்ளுங்கள் சார் இவற்றை எல்லாம் 🙏
ReplyDelete+111111
Deleteஅனைத்தையும் கடந்து செல்லலாம் ஆசிரியரே
Delete2nd
ReplyDelete3rd
ReplyDeleteசார், ஜெஃப்ரி ஆச்சர் (Jeffrey Archer) போன்ற படைப்பாளிகள் புதிய புதினங்களை எழுத நேரம் செலவிடும் பொழுது அவருடைய பழைய நாவல்களை பதிப்பிட வேண்டாம் என்று சொல்வதில்லையே.
ReplyDeleteநேற்று புத்தகம் பற்றி தெரியாதவர்கள் இன்று தெரிந்து ஆவலுடன் வாங்குகிறார்கள். இன்றும் இந்த புத்தகங்களை பற்றி தெரியாதவர்கள் நாளை தெரிந்தால் நாளை வாங்குவார்கள்.
If you spend 10 percentage of your time it's more than enough sir. When a Lucky Luke goes out of stock Cinebook print it again and they print new Lucky Luke books also along with it. They are not getting stuck only with reprints. Please have that approach sir.
வெறும் 800 புத்தக active விற்பனையில் jefferey ஆர்ச்சரையும் ; சினிபுக்கையும் ஆறே ஆறு மாசம் மட்டுமே தாக்குப் பிடிக்கச் சொல்லிப் பாருங்களேன் - அவர்களின் பதிலில் உங்களுக்கான எனது பதிலும் இருக்கும் சார் !
Deleteஒப்பீடுகள் ஓமகுச்சி நரசிம்மனுக்கும் , மைக் டைசனுக்குமிடையேவா ?! Phew!
Billy the kid Cinebook version I bought first version and gifted it to a friend's nephew hence bought it again and understood within 3 years they have reprinted that book four times hence price was not going up.
ReplyDeleteA MNC company with a sales footprint commencing from U.K. all the way to New Zealand ; and us on the other hand !!
DeleteFair comparison indeed !!
Might as well compare us with Disney & Marvel & DC while you are at it sir !
Deleteஒப்பீட்டின் அளவிலாவது ஜாம்பவான்களோடு நாமும் பேசப்படுவதை எண்ணி மகிழ்ந்து கொள்ளலாம் அல்லவா ?
OK Sir. :) . கள நிலவரம் புரியாமல் பேசி விட்டேன். :).
Deleteஎங்களுக்கு கரகாட்டம் போட்டே ஆகனும் போன்ற mindset - ல் எழுதி விட்டேன். ( வருத்த படாத வாலிபர் சங்கம் டயலாக் போல) 🙏
Durango முதலிரு புத்தகங்கள் இருந்தால் ஒருவேளை 3,4,5 புத்தகங்கள் விற்பனையும் அதிகரிக்குமோ என்று எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதோ?
ReplyDeleteஏழரை கோடி ஜனம் உள்ள மாநிலத்தில் எண்ணூறு பேரே முதற்நிலை காமிக்ஸ் வாசகர்கள் என்ற யதார்த்தம் அறியாதோர் நம் வட்டத்திலேயே இல்லாதில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டுமே தானா ?
DeleteSorry sir! 1000 book விற்கும் என்றும்
Deleteசென்னை book fair - ல் இன்னொரு இரண்டாயிரம் புத்தகங்கள் போகும் என்றும் நினைத்து ரொம்ப ஆசைப்பட்டு விட்டேன்.
For various reasons I keep missing ratha padalam,but I don like to spend double or triple the amount. hopefully when time comes I will buy it sir..I sent an email last month as well.i will send one sir.
ReplyDeleteஉண்மையில் தெரியவில்லை/புரியவில்லை சார்.
ReplyDeleteமறுபதிப்புகள் குறைந்து நீங்க சமீப வருடங்களில் வெளியிட ஆரம்பித்திருந்த க்ராபிக் நாவல், ஜம்போ என குதூகலமாக போய் கொண்டு இருந்தது. வருடம் தோறும் வரும் லக்கி, டெக்ஸ் மறுபதிப்புகள் வேறு.
ஆனால் இந்த ரத்தப்படலம் வெளியீட்டுக்கு பின்பு மாறி உள்ளது. நீங்கள் ஏற்கனவே கூறிய சில நடைமுறைகளை கொண்டு வந்துவிட்டு மீண்டும் நாம் முன்னோக்கி செல்வோம் சார்.
Always there will be someone with the need including me
அனைவரின் தேவையையும் நீங்கள் தீர்க்க முடியாது.
// மறுபதிப்புகள் குறைந்து நீங்க சமீப வருடங்களில் வெளியிட ஆரம்பித்திருந்த க்ராபிக் நாவல், ஜம்போ என குதூகலமாக போய் கொண்டு இருந்தது. வருடம் தோறும் வரும் லக்கி, டெக்ஸ் மறுபதிப்புகள் வேறு. // ஆமாம் நமது comeback kku பிறகு மிகச் சிறந்த ஆண்டு 2019 தான். டப்சா இதழ்கள் மிகக் குறைந்த ஆண்டு. ஈரோடு புத்தக விழாவில் பிஸ்டலுக்கு பிரியா விடை, நித்தமும் யுத்தம். அதே போல ஒரு அட்டகாசமான பட்டியலை 2022இல் எதிர் பார்க்கிறோம் சார். முன்னே செல்வோம் சார்.
Deleteஉண்மைங்க குமார். பவுன்சர், பராகுடா, பிஸ்டுலுக்கு பிரியாவிடை என நல்லாத்தான் போய் கொண்டு இருந்தது.
Deleteசத்தியமா என்னிடம் பதில் இல்லை சார்...இந்த எடிஷனில் எனக்கு இரண்டு புக்ஸ்...😄😄😄😄
ReplyDeleteவெறும் 800 புத்தக active விற்பனையில் jefferey ஆர்ச்சரையும் ; சினிபுக்கையும் ஆறே ஆறு மாசம் மட்டுமே தாக்குப் பிடிக்கச் சொல்லிப் பாருங்களேன்//
ReplyDeleteநிச்சயமா உங்களைத்தவிர யாராலும் முடியாது சார்
எடி Sir,
ReplyDeleteநீங்க எதை கொடுத்தாலும் வாங்க நான் ரெடி.ஒரு இ.ப வோ, ஒரு Tex ஓ, ஒரு Old monk ஓ (வேதாளர்/இ.கை.மாயாவி/ரிப் கெர்பி/ காரிகன்) கொடுத்தா டபுள் O.K.
ரத்தப்படலம் காமிக்ஸ் மூன்று மடங்கு விலை குடுத்து வாங்க உயிர் காக்கும் மருந்து அல்ல; முன்பதிவுக்கு என அதிகபட்ச சந்தர்ப்பம் குடுத்தும் வாங்காமல் இருந்து விட்டு பிறகு அதிக விலை குடுத்து வாங்குவதில் அர்த்தமும் இல்லை. இதில் தவறு விற்பவர்களிடம் மட்டும்அல்ல. இதில் உண்மையான சிரமங்களால் தவற விட்டவர்கள் இருக்கலாம்.
ReplyDeleteபாத்துகிட்டே இருங்க. S70 க்கும் இதான் நடக்கும். முன்பதிவுக்கு மட்டும்னு அறிவிச்சாச்சு. இருந்தாலும் முன்பதிவு பண்ணாம வேதாளர் கதையை அதிக விலை குடுத்து வாங்குவது நடக்கத்தான் போகிறது. You cannot save people who don’t want to be saved.
மாத இதழ்களில் குறிப்பாக டெக்ஸ் கதைகளில் 100க்கு வுரும் போது பல்க் சேலுக்கு தடை விதித்தது சரியான செயல். அதுக்கு மேல பெருதாக என்ன செய்ய முடியும். ஒரு பப்ளிசரால் எவ்வளவு ஸ்டாக் வைக்க முடியும். கலர் மற்றும் கடின அட்டை புத்தகங்களை தீர்ந்தவுடன் மறுபடி ஸ்டாக்கிற்கு கொண்டு வருவதும் எளிதான காரியம் அல்ல. Readers need to wake up.
இதே வியாபாரிகள் சந்தா விலை அதிகம்; காமிக்ஸ் வாங்கனும்னா வீட்டை விக்கனுங்கற என்று செய்யும் பிரச்சாரங்களை கண்ணை மூடி நம்பிக்கொண்டு செலக்டிவாக வாங்குகிறேன்னு சொல்லி சந்தாவை விட அதிகம் செலவழிக்கிறார்கள். வரும் 40 கதையில் ஒரு பத்து கதை பிடிக்காமல் போகுமா? இவர்களைக் பதுக்கல் விற்பனையாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆண்டவனே வந்தாலும் முடியாது. இவர்களைப் பற்றி சிந்திப்பது நேர மற்றும் சக்தி விரயம் எ. எ. க.
// இதே வியாபாரிகள் சந்தா விலை அதிகம்; காமிக்ஸ் வாங்கனும்னா வீட்டை விக்கனுங்கற என்று செய்யும் பிரச்சாரங்களை கண்ணை மூடி நம்பிக்கொண்டு செலக்டிவாக வாங்குகிறேன்னு சொல்லி சந்தாவை விட அதிகம் செலவழிக்கிறார்கள். வரும் 40 கதையில் ஒரு பத்து கதை பிடிக்காமல் போகுமா? // உண்மை நண்பர்கள் தயை கூர்ந்து யோசித்து பாருங்கள். ஒரு முறை நீங்கள் சந்தா கட்டிவிட்டால் புத்தகங்களை தேடி தேடி நீங்கள் ஓட வேண்டி இருக்காது. உங்களுக்கு பிடித்த புத்தகமாக இருந்தால் இன்னொரு காபியை நீங்கள் உங்கள் முகவர் இடமும் வாங்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு முறை சந்தா கட்டி முயற்சி செய்யுங்களேன் பிளீஸ்
Deleteகசப்பான உண்மைகளை நச்சுணு சொல்லியிருக்கீங்க ஷெரீப்! ஒவ்வொரு வரியிலும் உங்க ஆதங்கத்தை உணரமுடியுது!
Delete/* You cannot save people who don’t want to be saved. */ Thiruvaasagam saamiyOv !!
Delete/* You cannot save people who don’t want to be saved. */
DeleteWell said! Agreed.
ஒரு டஜன் டெக்ஸ் வில்லர் கலர் மறுபதிப்பு ; நாலு "இ.ப" editions ; நாலு டைகர் கலர் மறுபதிப்பு //
ReplyDeleteஎன்னது இ. ப. நாலு, டைகர் நாலா? நான் வரலை இந்த வெள்ளாட்டுக்கு…🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
தெரியவில்லை...
ReplyDeleteபுரியவும் இல்லை சார்...:-)
ஆமா தல
Deleteசந்தா விலை அதிகம்; காமிக்ஸ் வாங்கனும்னா வீட்டை விக்கனுங்கற என்று செய்யும் பிரச்சாரங்களை கண்ணை மூடி நம்பிக்கொண்டு செலக்டிவாக வாங்குகிறேன்னு சொல்லி சந்தாவை விட அதிகம் செலவழிக்கிறார்கள்..
ReplyDelete#####
உண்மை...
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteநல்லா வச்சீங்க சார் பேரு... இரத்தப் படலம்னு...!
Deleteஇதுக்கு இரத்தப் பஞ்சாயத்துதான்னு 1985 லயே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு பாருங்க... தீர்க்கதரிசி சார் நீங்க...!!
ஒரே இரத்தக் களரிதான் போங்க...!!!
DeleteSaravanakumar, 85ல் இந்த மாதிரி கீழ்த்தரமான,வாசகர்கள் என்ற போர்வையில்,எந்த வாசகனும் இல்லைங்க.
Deleteஅந்த காலமே வேறு. நீங்க காமிக்ஸ் வாசகரா?,உங்களால் காமிக்ஸ் வாங்க முடியாத சூழலா? கவலை வேண்டாம்,எங்களிடமுள்ள காமிக்ஸை கொடுத்து உதவினோம்.சில நாள் கழித்து அவரே வாங்கி,சில நண்பர்களுக்கு படிக்க உதவுவார்.கொடுத்த புக் பத்திரமாக திரும்பி வரும். இந்த இ ப முதல்முதலாக திகில் காமிக்ஸில் வந்த போதும் இப்படித்தான். இப்படித்தான் நாங்க,வாங்க முடியாத காமிக்ஸ் வாசகர்களை மதித்தோம்.
ஒவ்வொரு வெளியீட்டையும் கொண்டாடினோம்.
முகம் தெரியாத ஆசிரியரை மதித்தோம்.
தவறாக ஒரு பதிவ கூட எதிர்த்து போடாத, உண்மையான வாசகர்கள் மத்தியில் லயன் செல்லக்குட்டியாக வளர்ந்தது.
ஆனா இன்று?.. எத்தனை கேலிக்கூத்துக்கள், எத்தனை வியாபார தந்திரங்கள், பகிரங்கமாக கேவலமான கருத்துக்கள் ஆஹா.
இந்த மாதிரி விற்க வேண்டும் என அவர் எப்பயோ நினைத்திருந்தால், இன்னமும் 5 புதிய பேரில் நிறுவனங்கள் துவங்கியிருப்பார். அப்படி இருந்திருக்க வேண்டும்.என்று இப்ப தோன்றுகிறது எனக்கு. உண்மையாக உள்ள சிலரைத்தவிர மற்றவர்கள், காமிக்ஸ் வாசகர் எனும் போர்வையில் வாழ்பவர்களே
இரத்தப் படலம் என்றாலே இரத்த பூமிதானே....
Delete// அரூபமாயிருந்த நண்பர்கள் இன்றைக்கு மூச்சிரைக்க புக் தேடி தெற்கேயும், வடக்கேயும் ஓட்டமெடுக்கும் மாயம் தான் என்னவோ ? //
ReplyDeleteஎன்னத்த சொல்ல...!!!
// இந்த காமிக்ஸ் வாசிப்பினை நீட்டிப்பதாயிருப்பின், என்னிடத்தினில் ஒரு ஜெராக்ஸ் கடை முதலாளி குந்தியிருந்தாலே போதுமாகி விடாதா ? //
ReplyDeleteசமயத்தில் தோன்றும் சார்,இந்த மறுபதிப்பிற்குபதில் இன்னொரு புது இதழ் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று...!!!
காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு, அன்பு ஆசிரியருக்கு 🙏...
ReplyDelete35வருசங்களாக வெற்றி நடை போடும் சிங்கம் இந்த "குப்பை" விசியத்துக்காக சோர்ந்து போகலாமா?.
நீங்க பாக்காத எதிர்ப்புக்களா? சோதனைகளா? இல்ல இந்த மாதிரி விசியங்களா? தூக்கியேறிந்துவிட்டு வரவில்லையா?.
நாங்க இருக்கோம் உங்களுடன்.
எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்தி படுத்துவதென்பது முடியாத உண்மை. இது வரலாறு.
இதை மாற்றவேண்டும் என முயற்சிப்பது வீண் சார்.
ஒரு ரேர் புக் போட்டீங்க. தேவையுள்ளவர்கள் வாங்கிட்டாங்க.
தேவைப்படுவோர் அடுத்த முறை இது நிகழாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அதிக விலை கொடுத்து வாங்குவது வாங்குபவர் பாடு.
நீங்க இதை கவனித்தால், கடைசி வரை, இந்த விசியத்தை நோக்கி பயணம் செய்வதிலும், இதுக்கு பதில் சொல்லுவதிலும், ரீபிரின்ட் அடிப்பதிலுமே நாள் போகும்.
இது தேவையற்ற டென்ஷன்.
எனக்கு தெரிந்து, நீங்களே ஒரு விற்பனைக்குழு துவக்கலாம். ஸ்டாக் தீரும் வரை அங்கேயே வாங்குவார்கள்.
முடிந்தபின் தேவைக்கு ரீபிரின்ட் அடிக்கலாம்.
"எனக்கு அது வேலை இல்ல"என்றால், அடுத்த புதிய வெளியீடுகளில் கவனம் செலுத்துங்கள். நீங்க இன்னொருமுறை
இ ப கொடுத்தாலும், மீண்டும் இந்த வியாபாரம் நடக்கும். இதுக்கு முடிவு இப்போதைக்கு கிடையாது.
அடுத்த மெகா வெளியீடான,
"SMASHING 70s" க்கும் இதுவே தொடரும்.
உங்களிடம் ஸ்டாக் இல்லையென்றால்,
வேதாளனின் புக்கின் விலை மட்டுமே இந்த புத்தகங்களின் மொத்த தொகைக்கு ஈடாக விற்பனையாகும்.
உண்மையில் கிடைக்காதவர்கள், மீண்டும் உங்களையோ, உங்களிடம் இல்லாத பட்சத்தில் வியாபாரிகளையோ தேடி போவது நிச்சயம்.
நீங்க நினைக்கும் விசியங்களை பலரும் யோசிக்க வேண்டும் சார். அந்த எண்ணம் சில பேருக்கு மட்டுமே உள்ளது.
பலருக்கும் "லயன் தங்க முட்டை" தான்.
இந் நிலைமாறும் சார்.
வணக்கம்
அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹...
// என்றைக்கோ ஊசிப் போய்விட்ட உப்மாக்களை தேடும் படலத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு - நிஜங்களோடு கை குலுக்கத் தான் முயற்சிப்போமே - ப்ளீஸ் ? //
ReplyDeleteபதில் சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான் சார்,முடிந்தவரை நல்ல கதைகள், விற்பனைக்கு உதவுபவை,பெரும்பாலான வாசகர்களின் கேட்பு,அவசியம் இதை போட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு இருக்கற இதழ்களை விடலாம்...
மேலும் பழைய இதழ்கள் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு மறுபதிப்பு இதழ்கள் ஒரு வரப்பிரசாதம் தான்...
இனிவரும் காலங்களில் போட்ட கதையையே திரும்ப திரும்ப மறுபதிப்பில் விடுவதை தவிர்க்கலாம் சார்,ஏனெனில் இதில் நேர விரயம்,திடீரென குறுக்கே வரும்போது எகிறும் பட்ஜெட்,வேறு ஒரு நல்ல இதழ் அப்ப வந்திருக்கும் அதை கேட்கும்பொழுது இப்பதானே சார் இந்த மறுபதிப்பு இதழ் பெரும் விலையில் வந்தது,இது போன்றவற்றை தவிர்க்கலாம்...
சில தேவைகள் முடிவதுமில்லை,சில பஞ்சாயத்துகள் ஓய்வதுமில்லை,செக்குமாடாய் சுற்றுவதை நிறுத்தவில்லை எனில் மனதிற்கு ஓய்வுமில்லை...
வரிக்கு வரி வழிமொழிகிறேன் அண்ணா. அருமையான கருத்து.
Delete// இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! //
ReplyDeleteஅடடா ஒரு நாலைஞ்சு புக் வாங்கி வெச்சிருக்கலாம் போல...!!!
நீங்க ரொம்ப லேட் அண்ணா
Delete// இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! //
ReplyDeleteஅட கிறுக்கு பய புள்ளைகளா...!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஅடுத்ததாக இரத்த படலம் பாக்கெட் சைஸ் மட்டும் தான் பாக்கி..
ReplyDelete####பழசு எனும் மாயைக்குள்ளேயே நானும் நித்தமும் சிக்கித் திரிவதாயின், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலாய் இங்கு நமக்கொரு எதிர்காலம் இருப்பதாய் யாருக்கேனும் தோன்றுகிறதா ?###
ReplyDeleteஒரு வருஷம் ரீபிரிண்டே போடாம ஃபுல்லா புது கதைகளாக போட்டு தாக்குங்க சார்..
// ஒரு வருஷம் ரீபிரிண்டே போடாம ஃபுல்லா புது கதைகளாக போட்டு தாக்குங்க சார்.. // எனது ஒப்புதல் உண்டு இதற்கு 100%
Deleteமன்னிக்க டெக்ஸ் மட்டும் விதிவிலக்கு கேட்டுக்கொள்கிறேன்
Deleteடெக்ஸ் மறுபதிப்பு வரவேற்பு, விற்பனை, கலக்சன், நாஸ்டால்ஜியா,தேவை.. என நிறைய காரணிகளை கொண்டுள்ளது.... அது மட்டுமே மறுபதிப்பில அவசியமாகும்...
Delete// இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! //
ReplyDelete'ஏங்க காமிக்ஸ் வாங்கணும்னா வீட்டை விக்கணும்னு போன வாட்டி சொன்னீங்களே..'
'அது போன மாசம்..'
'அப்ப இந்த மாசம்? '
'காமிக்ஸை வித்து வீடு வாங்கலாம்னு இருக்கேன்..'
???
காமிக்ஸை வித்து வீடு வாங்கலாம்னு இருக்கேன்..'///ஹா ஹா, உண்மை
Deleteசெம்ம GP Fact fact
DeleteGP :)))
Deleteகலியாணத்துக்கும் காமிக்ஸை வித்துக்கலாமா? ;)
EV அந்த அறுபதாங் கல்யாணம் என்பதை underline செய்யவும்.
Deleteகல்யாணத்தை சிம்பிளா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல முடிச்சுக்கலாம்.கோயில்ல பண்ணிக்கலாம்.ஏன்.. போலிஸ் ஸ்டேஷன்ல கூட மாலை மாத்திக்கலாம்..
Deleteஆனா வீடு அப்படியில்லையே..செலவுபிடிக்கும் விசயம்..அதனால வீடு தான் கரைக்டா இருக்கும்..
(சின்ன வீட்டுக்கும் இது ஒத்து வருமானு கேக்கப்படாது..Beware)
//'காமிக்ஸை வித்து வீடு வாங்கலாம்னு இருக்கேன்.//
Deleteநல்ல விஷயம் போலவே தெரிகிறது
39
ReplyDeleteசார் வேணும்னே டிமாண்ட் கிரியேட் பண்ணி யாரோ புண்ணியவான்...விளையாடுறார்...
ReplyDeleteஒன்னு நீங்க அகலக் கால் வைக்கனும்...இல்ல அவனுக விக்கனும்....இதுக்கு உங்க ஒன்பதாம் கேள்வி பொருத்தமான எதிரடி....உண்மையா இருபதாயிரம் கொடுத்து வாங்க தெம்புள்ளோர் மூன்றாயிரம் கொடுத்து முன்பதிவில் வாங்கிட்டு மே ....ரெடி ஜுட்
ஆனா அந்த நல்ல மனசுக்காரங்க பத்து வருசமா வெலய உயர்த்தல போலும்....இருவதுலயே நிக்குறாவ
Deleteஇ.ப 2.0 நான் வாங்கவில்லை, முதலில் சிலிப் கேஸூடன் வந்த 3-செட் புத்தகங்கள் உள்ளது. அதே கதைக்கு 3000ரூ செலவு செய்ய வேண்டாம் அதற்கு இன்னும் 10/15 புத்தகங்கள் வாங்கிக்களாம் என்று முடிவு செய்து மனசை தேற்றிக்கோன்டேன். ஆனால் அவ்வப்போது கை அறிக்கதான் செய்தது. அதிலும் இ.பா 2.0 வின் 2வது அட்டை படம் என்னை ரொம்பவே கவர்ந்தது, வாங்கி போட்டுடா கைப்புள்ளை என மனசுல இருந்த குரங்கு கத்தி கூச்சலிட்டது. "நான் நேரில் வருகிறேன் சார்" என்றவுடன் 2.0 நேரில் வாங்க தான் என்று விஜயன் சார் அலுவலகத்தில் சொல்லி எடுத்து வைக்க சொல்லியிருக்கிறார். ஆனா நான் தான் புக்கிங் செய்யலியே. "என்ன 2.0 வாங்கவில்லையா? அப்புறம் எதுக்கு.. " என்று தப்பா நினைப்பாங்களோ? ஒன்னு வாங்கிடலாமான்னு வேற தோணுச்சு. ஆனால் அதில் பாதி செலவில் நான் படிக்காத 17புக்ஸை அள்ளிக் கொண்டு வந்தேன் என்பதில் சந்தோஷமே. 1.0 வச்சிருக்கிற எனக்கே இவ்வளவு சபலம்னா, மிஸ் சேய்தவர்களின் ஆசையை புரிந்துகொள்ள முடிகிறது.
ReplyDeleteஎடிட்டர் சார், உலகத்தில் இருக்கும் பசியை கடவுளாளேயே போக்க முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம். அவர்கள் விமர்சனங்களை என்னி காலத்தை வீன் சேய்ய மாட்டார்கள்.
வறும் வருடம் நாம் கொண்டாட மட்டுமே.
Smashing 70sஐ விளம்பரப்படுத்த உதவுங்கள் நண்பர்களே. அதற்கும் இந்த நிலை வரும்.
ரொம்பவே யதார்த்தமாக மனதில் பட்டதை எழுதி இருக்கிறீர்கள் நண்பரே. Smashing 70s kkum இதே போல நடக்கத்தான் போகிறது. முன் பதிவு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே.
Delete///Smashing 70sஐ விளம்பரப்படுத்த உதவுங்கள் நண்பர்களே. அதற்கும் இந்த நிலை வரும்.///
Delete+1
கொரானாவால் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் உங்களிடம் கேட்டேன். மறுத்து விட்டீர்கள். உண்மையான காரணம் என்பதால் ஏற்றுக் கொண்டேன். இரத்தப் படலம்
ReplyDeleteகருப்பு வெள்ளையிலும் இரத்தப் படலம் தான் என்று தேற்றிக் கொண்டேன். என் காமிக்ஸ் ரசனை வாங்கியே ஆகவேண்டும் என என்னை வெறியனாக்கவில்லை. காத்திருக்கச் சொல்லி என்னை பண்படுத்தி இருக்கிறது. காத்திருக்கிறேன், இந்த முறை
எனக்கான, ஒரே ஒரு புக்கை வாங்க
சூப்பர் சார். இது தான் நிதர்சனம்.
Deleteவெரி குட்!
DeleteHats off Iniyan !
DeleteSuper! I like your attitude.
Deleteநான் காலை எழுந்து சார் இன்று பதிவுக் கிழமை என்று சொல்லத் தான் வந்தேன். பார்த்தால் இங்கே நித்தமும் பதிவு. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
ReplyDeleteஇதுக்கெல்லாம் கூச்சப்பட்டா வேலைக்கு ஆகாதுங்க KS!
Deleteஇப்போ நான் எப்படி கேட்கிறேன்னு பாருங்க!
"சார்.. இன்று பதிவுக்கிழமை!"
EV ஹிஹிஹி இதற்குத் தான் நண்பர் ஒருவர் வேண்டும்
Deleteஇது பதிவு அல்ல ஒரு பரிதவிப்பு... பதிவு இன்னைக்கு இருக்கும்... இருக்கனும்
Deleteஅண்ணன்-தம்பி செட் மாதிரி பதிவு செட்டுக்கும் ஒரு சோடியான பெயர் போடணுமே...🤩💕
Deleteகாப்பி பேஸ்ட் படலம்:
ReplyDelete//அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன்//
இந்த இன்னொருவாட்டி "இ.ப. - ம.ம.ம.ம. ப." செய்ய நேரிட்டால், கடந்த ஆண்டே கேட்டுக் கொண்டபடி மறுபதிப்பை, மரு ஒட்டாத, காப்பி பேஸ்ட் பதிப்பாக வெளியிட வேண்டுகிறேன்.
//And "இந்தவாட்டியும் மிஸ் பண்ணிட்டேன் !!" - என்று அதற்கடுத்த மூன்றாவாது மாசத்திலேயே காதில் தக்காளிச் சட்னி கசியச் செய்யும் குரல்கள் கேட்டால், மேற்படி வரிகளையே இன்னொருவாட்டி cut & paste போட்டு விடலாம் தான் ! Pheww !!//
நாங்களும் காப்பி பேஸ்ட் பண்ணுவோம்ல?! :)
https://lion-muthucomics.blogspot.com/2020/06/here-we-go.html
Karthik Somalinga 18 June 2020 at 20:35:00 GMT+5:30
டியர் விஜயன் சார்,
இரத்தப் படலத்தைத் தவற விட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட வாசகர்களை மகிழ்வடையச் செய்யும் அறிவிப்பு என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. மற்றபடி கலெக்டர்ஸ் இருக்கும் வரையில், நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு எடிஷனும் கலெக்டர்ஸ் எடிஷனாக மாறிக் கொண்டே தான் இருக்கும்! ஆகவே, முன்பதிவுச் சாளரத்தை உடனடியாக எட்டிப் பார்க்கும் எண்ணம் தற்போது இல்லை. தவறவிட்டவர்கள் முதலில் பயன்படுத்திக் கொள்ளட்டும்!
//*"இரத்தப் படலம்" பாகம் 1 to 18 ப்ளஸ் புலன்விசாரணை முழு வண்ணத்தில் - ஏற்கனவே வெளியான அதே ரெகுலர் சைசில் !//
மறுபதிப்பை, மரு ஒட்டாத பதிப்பாக, அச்சு அசலாக ஏற்கனவே வெளியான அதே பாணியில் வெளியிட முடியுமா? (மூன்று தொகுதிகள் + புலன் விசாரணை + புத்தகப் பெட்டி + வெளியீட்டு எண், உட்பக்கங்கள், ஆசிரியர் கட்டுரைகள், விளம்பரங்கள் மற்றும் இன்னபிற...)! என்ன ஒன்று, அட்டையில் அதே பழைய விலையையும் அச்சடிக்க இயலாது தான் - அதையும், மறுபதிப்பாகும் வருடத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டால், சேகரிப்பாளர்கள் சேதாரத்தைத் தவிர்க்கலாம்.
https://lion-muthucomics.blogspot.com/2020/06/blog-post_23.html
Karthik Somalinga 23 June 2020 at 20:27:00 GMT+5:30
Cover variants எல்லாம் தயவு செய்து வேண்டாமே சார்?! என்னதான் இ.ப. - ம.ம.ம.ப. வேண்டாமென முறுக்கிக் கொண்டு நின்றாலும், என்னைப் போன்ற பலர் நமது வெளியீடுகள் அனைவற்றையும் வாங்கியாகிய வேண்டிய கட்டாயத்தில் முன்பதிவைத் தாமதமாகச் செய்தாவது வாங்கத்தான் போகிறோம். இதில் நீங்கள் "கவர் கவராக" வெளியிட்டால், கலெக்டர்கள் நிலை?
https://lion-muthucomics.blogspot.com/2020/06/3-3.html
Karthik Somalinga 30 June 2020 at 08:47:00 GMT+5:30
குழப்பப் படலம்...
ஆயிரத்துச் சொச்ச வாசகர்களில், இரத்தப்படலத்தை வாங்கத் தவறிய சில நூறு பேருக்காக (மற்றும் இதர காரணங்களுக்காக), ஆறு மாதத்தில் வெளியாக வேண்டிய பதிப்பு, பல நூறு காப்பிகள் விற்றால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விலையில் ஒரு வருடம் கழித்து வெளிவரப் போகிறதா? ம்...! அந்த வாங்கத் தவறிய சில நூறுபேராவது அடித்துப் பிடித்து முன்பதிவு செய்தார்களா என்றால் அதுவும் இல்லை! பல்வேறு காரணங்களுக்காக மல்டிபிள் காப்பி வாங்குபவர்கள், விலை குறைவென்பதால் இன்னும் ஒன்றிரண்டு கூடுதலாக வாங்கிப் போடப் போகிறார்கள், அவ்வளவுதான் (ஆதரவு தருவதற்காக, இந்த கடின சூழலிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பிகள் வாங்குபவர்களையும் சேர்த்து)!
உங்கள் தொழில் சார்ந்த தகவல்களான பிரிண்ட் ரன், முன்பதிந்தோர் பட்டியல் (நம்பர்ட் எடிஷன்களாக இருந்தாலன்றி), நிர்வாகச் செலவினங்கள், புத்தக விழா புள்ளி விவரங்கள், ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கைககள் போன்றவற்றை, இத்தளத்தில் விவாதப் பொருளாக்குவதை முடிந்தால் தவிர்க்கலாமே சார்? எதிர் கருத்துகள் மட்டுமல்ல, ஆதரவுக் குரல்களும், உணர்வுத் ததும்பல்களும் கூட, நீங்கள் எடுக்கும் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதைக் காண முடிகிறது!
// உங்கள் தொழில் சார்ந்த தகவல்களான பிரிண்ட் ரன், முன்பதிந்தோர் பட்டியல் (நம்பர்ட் எடிஷன்களாக இருந்தாலன்றி), நிர்வாகச் செலவினங்கள், புத்தக விழா புள்ளி விவரங்கள், ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கைககள் போன்றவற்றை, இத்தளத்தில் விவாதப் பொருளாக்குவதை முடிந்தால் தவிர்க்கலாமே சார்? //
Delete+1
🙏
ReplyDeleteIt's time to make full stop for re prints or re editions
ReplyDeleteஎணக்கு ஒரு இப ஒரு S70ே வேண்டும்
ReplyDeleteஎனக்கு இரத்த படலம் slipcase Type ஒரு பிரதி.
Deleteமுகவரிகளுடன் மின்னஞ்சல்கள் ப்ளீஸ் ! இங்கே போடும் ஒற்றை வரி ஆர்டர்களைக் கணக்கிட ஆட்கள் லேது !
Delete1.எதிரிகள் ஓராயிரம்.
ReplyDelete2.கைதியாய் டெக்ஸ்.
3.பாலைவனத்தில் ஒரு புலனாய்வு.
4.டிராகன் நகரம்.
5.ஒரு கணவாய் யுத்தம்.
6.வெண்பனியில் ஒரு செங்குருதி.
இவையும் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்.
கைதியாய் டெக்ஸ் போதும் அது வேண்டாம்
Deleteஒரு கணவாய் யுத்தம்
DeleteScanlation is legally wrong.
ReplyDeleteWhat is wrong in re selling comics. If news like this come out, It increases the image of the publishers.
I have a huge collection of our comics started from 1994. Everything read over 100 times and saved in cupboards. I bought only for myself. My children are not at all interested in my comics.
Before my death I will surely make an auction of all these items, and give money to my children, since nobody expect me in my circle understands the value. They will surely sell this to waste paper man along with newspapers.
So my humble opinion in this matter is to ignore this and use this news for publicity of other specials. Nothing wrong in using this matter for publicity.
We have to be proud that our comic is an antique item and has more value than purchased value plus inflation and depreciation. Like wine.
I am proud of being in this elite comic family.
And if my passion and time pass leads to a decent income to my sons, then I must be proud of my passion. Not be ashamed
Disclaimer. I never sold anything till date
அம்மாடியோவ்!! ஒவ்வொரு வரியிலும் மிளிரும் யதார்த்தமும், உண்மையும்!!
Deleteசிந்திக்கத் தூண்டும் பதிவு! செம டாக்டர் சார்!
///We have to be proud that our comic is an antique item ///
Deleteஅருமையாக சொன்னீர்கள் டாக்டர்...
பாஸிடிவ் ஆக சிந்திக்கும் பதிவு... வரிக்கு வரி உடன்படுகிறேன்...
/*What is wrong in re selling comics*/
DeleteDoctor -this is totally agreeable. Editor has clarified many times over that reselling antique comics is not unwelcome.
Also, waiting for 20-30 years and auctioning it and sharing the proceeds with family or like several of our comics friends do - for social causes - is all welcome and laudable. Nothing wrong there too. And to do this with LION COMICS - the BEST brand of Tamil Comics, would just be the icing on the cake.
All this does not mean that we should tolerate a gang that has the financial temerity to stock up in advance and sell at 5-8 times the price just after one month of release. That to me is not something I would be proud to be associated with.
We are a population in 100s lets say the starting 1000s. So stock-piling recent releases and jacking up the price multiple times and selling just after 30 days would make other readers - who are as passionate as us - but cannot the beefed up price, move away from our comics. It is this space the Editor is trying to address. He has already clarified that selling after a period of "currency" is something he does not find objectionalble either !!
cannot AFFORD the beefed up price ------
Delete///So stock-piling recent releases and jacking up the price multiple times and selling just after 30 days would make other readers - who are as passionate as us - but cannot the beefed up price, move away from our comics. It is this space the Editor is trying to address.///
Deleteஎடிட்டரின் இந்தப் பதிவு எதற்காகன்னு சில நண்பர்களுக்கு குழப்பம் வரலாம்!
அதை தெளிவா எடுத்துச் சொல்லியிருக்கீங்க ராக் ஜி! செம்ம!!
// All this does not mean that we should tolerate a gang that has the financial temerity to stock up in advance and sell at 5-8 times the price just after one month of release. //
DeleteWell said!
நன்றாக சொன்னீர்கள் ராகவன் சார்.
Deletesubscribe மற்றும் முன்பதிவு என்றால் என்ன ஏது எனப் பார்க்காமல் பணம் கட்டி விடுவேன். ஏனென்றால் லயன் முத்து மேல் அவ்வளவு பிரியம் மற்றும் நம்பிக்கை. எல்லா இதழ்களும் வீட்டிற்கே வந்து விடுவதால், இங்கே அரங்கேறும் book fair, e புக் பேர், வெப் லிஸ்டிங் போன்றவற்றில் எனக்கு அக்கறையில்லை.
அதனால் beefed up prices என்னை பாதிக்காது. பள்ளிக் காலங்களில் வருடம் 60, 75 ரூபாய் சந்தா கட்டமுடியாமல் ஒன்றிரண்டு வருடம் மட்டுமே கட்டினேன். இரண்டாம் இன்னிங்சில் ஒரு இதழ் கூட தவற விடுவதில்லை. பணம் இருக்கிறது, மணம் இருக்கிறது செய்கிறேன். ஆசிரியர் பாவம். நானாக இருந்திருந்தால் கம்பெனியை மூடி விட்டு நாஸ்டால்ஜியாவில் மூழ்கியிருப்பேன்.
ஆனாலும் விலைகளை கூட்டி விற்பதை, ஒரு கலெக்டர் எனும் பார்வையில் எனக்கு பெரிதாக ஆட்சேபனையில்லை. இந்தப் பதிவை படித்த பின் தோன்றுவது, PPF, gold, stocks போல் நமது காமிக்சிலும் invest செய்தால் என்ன என்பதே. செம ரிட்டர்ன் இருக்கே. :-)
அல்ரெடி 2012-21 அனைத்து இதழ்கள் வைத்திருக்கிறேன். லிஸ்டிங்கில் இருக்கும் இதழ்களில் ஒரு எக்ஸ்ட்ரா காப்பி, மற்றும் அடுத்த வருடம் முதல் இரண்டு சந்தா என ஸ்டாக் செய்தால் தேவலை என நினைக்கிறேன். மேற்படி பதிவைப்பார்க்கும் அனைவர்க்கும் நான் சொன்ன கருத்தே இருக்கும் என தோன்றுகிறது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete/// இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை ///
ReplyDeleteதிட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது.
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது.
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.
எல்லாக் காலத்திலும் இது தான் நிதர்சனமான உண்மை.
பட்டுக்கோட்டையார் ஒரு தீர்க்கதரிசி.
/// சின்ன வீட்டுக்கும் இது ஒத்து வருமானு கேக்கப்படாது..Beware)///
ReplyDeleteஅப்புறம் வீட்டுல ரத்தப படலம் தான்.
Reply
/* ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" */
ReplyDeleteThis is some a***** playing tricks on you mind Editor sir. Even the auctioneer would know that any collection RP is not worth 20000 INR. And if there is a buyer at this price - let them just buy sir.
'பாத்தீங்களா..? இதே புக்கை அங்கே இருபதாயிரத்துக்கு விக்கறாங்க. நான் இங்கே உங்களுக்கு பத்தாயிரத்துக்கு தரேன். என்ன சொல்றீங்க?'ன்னு டீல் பேசத்தான் இப்படி 'இருபதாயிரம்' நாடகமோ?!!
Deleteவிதவிதமா யோசிக்கறாங்களே!!!
ராகவன் உண்மை! மற்றும் ஒரு காரணம் எடிட்டரை கொஞ்சம் கோபப்படுத்தி பார்க்க நினைப்பது!
Deleteகோபமாவது ..ஒண்ணாவது சார் ! இதற்கெல்லாம் சலசலக்கும் வயசா எனக்கு ? காமிக்ஸ் நேசிப்பின் மத்தியினில் அக்மார்க் வியாபாரம் துளிர்ப்பதைக் கண்ட அயர்ச்சி மட்டுமே !
Deleteஅப்ப சரி சார்.
DeleteWHEN SOMEBODY USES BAD WORDS SUPPORTING EDITOR, HE ACCEPTS. WHEN SOMEBODY USES SOFT WORDS AGAINST EDI, HE GETS CRAZY
Deleteவிஜயன் சார், வர வர ரொம்ப யோசிக்கிறீங்க :-) இவ்வளவு யோசனை தேவையில்லை உங்கள் உடம்புக்கும் நல்லது இல்லை சார்!! உங்கள் உடல் நலம் மிகவும் முக்கியம் எங்களுக்கு!
ReplyDeleteவரும் காலங்களில் முன் பதிவுக்கு என சொல்லும் புத்தகங்களின் பிரிண்ட் ரன்ஐ முன்பதிவு எண்ணிக்கையை விட கொஞ்சம் அதிகமாக பிரிண்ட் செய்து வையுங்கள் (முடிந்தால்) ; ஒருவேளை அதுவும் விற்று டிமாண்ட் இருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் மீண்டும் சூட்டோடு சூடாக ரி-பிரிண்ட் செய்ய முடிந்தால் செய்யுங்கள்! ஸ்மாஷிங் 70s கண்டிப்பாக ஹிட் ஆகும், எனவே கொஞ்சம் பக்காவாக பிரிண்ட் ரன்ஐ திட்டமிடுங்கள் சார்!
அப்புறம் மறுபதிப்பு இப்பொது உள்ளது போல் புத்தக திருவிழா மற்றும் உங்களுக்கு வசதிபடும் போது போட்டு தாக்குங்கள்; ஒருவேளை அந்த மறுபதிப்புகளுக்கும் டிமாண்ட் இருந்தால் மற்றும் ஒரு முறை முடிந்தால் சூட்டோடு சூடாக ரி-பிரிண்ட் செய்யுங்கள் (முடிந்தால்)
ஆண்டு சந்தாவில் முழுக்கு முழுக்க தெறிக்கும் புதுக்கதைகளை கொடுங்கள்! மறுப்பதிப்பை சந்தாவில் சேர்க்கவேண்டாம்! அவைகளை சென்னை & ஈரோடு போன்ற புத்தகத்திருவிழாவில் 2-4 கதைகள் எனவும் ஆன்லைன் புத்தக திருவிழாவில் 2-4 கதைகளையும் வெளியிடலாம்!
இவைகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எனக்கு தெரியாது, எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்!
தமிழில் இருக்கும் ஒவ்வொரு முகநூல் காமிக்ஸ் குழுவில் நண்பர்கள் எண்ணிக்கையை பார்த்தால் சுமார் 1500 உறுப்பினர்கள் இருப்பது போல் காட்டுகிறது! எனக்கு என்னமோ காமிக்ஸ் படிப்பவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என தோன்றுகிறது! இன்னும் நமது காமிக்ஸ் வருகிறதா எப்படி/எங்கு வாங்குவது என தெரியாமல் பல வாசக நண்பர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் சார்.
நடக்கும் விஷயங்களை பார்த்தால் நமது காமிக்ஸ் வட்டம் விரைவில் பெரியதாகும் என நம்புகிறேன்!
அருமையான திட்டம் பரணி சார். ஆசிரியர் சார் செயல்படுத்துவாரா ?
Deleteஎனக்கே ஒரே ஒரு டவுட்டு தான்...இரத்த படலமாக இருக்கட்டும்...சமீப நமது டெக்ஸ் இதழாக இருக்கட்டும் ,அல்லது சமீப ஸ்பெஷல் இதழாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்..ஒரு வாட்ஸ் அப் காமிக்ஸ் குழுவில் இருக்கும் காமிக்ஸ் நண்பர்கள் இப்படி ஆசிரியரின் தளம் இருப்பதை அறிய மாட்டார்களா...அல்லது வாங்கும் இதழில் நமது நிறுவன முகவரி ,வெளியீடு விளம்பரங்கள் என எதையும் கவனிக்க மாட்டார்களா ..நமது பதிப்பகத்திலியே வாங்கினால் அதே விலைக்கு வாங்கலாமே ..சந்தா கட்டினால் இவ்வளவு மீதி ஆகுமே சந்தா கட்டா முடியாவிட்டாலும் மாதா மாதம் ஆன்லைனில் ஆசிரியர் விற்பனைக்கு கொண்டு வருகிறார் அதில் தவறாமல் வாங்கி கொள்ளலாமே என யோசிக்க மாட்டார்களா ..
ReplyDeleteஇது எதையுமே நண்பர்கள் கவனிக்காமல் அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாறுவது ஏனோ ..
ஆசிரியர் சொன்னது படி இது தெரியவே மாட்டேங்கது்..புரியவும் மாட்டேங்கது..
ஏலத்தில் எடுக்கும் நண்பர்களே தயவு செய்து சந்தாவில் இணையுங்கள்...எந்த இதழையும் தவற போவதும் இல்லை...பின்னர் இதழ்களை அதிக விலை கொடுத்து வாங்கவும் தேவை இல்லை...அடுத்தவர் சொல்கிறார் என சந்தா கட்ட மாட்டேன்...செலக்ட்டீவாக வாங்குவேன் என்ற கூற்றை நம்பி இதழ்களை தவற விட வேண்டாமே..பின் அவஸ்தை படவும் வேண்டாமே...சரி அப்படியே வரும் புத்தகத்தில் மீறி போனால் ஒரு ஐந்து ,ஆறு தங்களுக்கு பிடிக்காமல் போகலாம் என்றே வைத்து கொள்ளுங்கள்..அந்த இதழ்களின் விலைக்கு தபால் செலவிற்கு சரியாக போய்விட்டது என்று நினைத்து கொள்ளுங்களேன்.. முழு சந்தா நண்பர்களுக்கு தபால் செலவு இலவசம் என்பது தெரியுமல்லவா...அட அப்படியும் வேண்டாம் எனில் அந்த பிடிக்காத ஒரு சில பிடிக்காத அந்த இதழகள்களை நூலகத்திற்கோ ,அன்பு நண்பர்களுக்கு,அருகில் உள்ள சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக என்று ஏதோ ஒரு விதத்தில் அதனை பயன்படுத்தி நமது காமிக்ஸ் வளர செய்யலாமே நண்பர்களே...
யோசியுங்கள்...எனக்கு கார்ட்டூன் பிடிக்காது ,எனக்கு டெக்ஸ் பிடிக்காது ,எனக்கு டைகர் பிடிக்காது ,எனக்கு கிராபிக் பிடிக்காது என சந்தாவை நிறுத்தினால் அது நமக்கு தான் நஷ்டம் என்பதை உணருங்கள் நண்பரே...அந்த பிடிக்காத இதழை ஒரு பிடித்த காரியத்திற்கு பயன்படுத்துங்களேன்...
பிறகு எந்த குழுவிலும் ,எந்த இதழிற்காகவும் நாம் அலையவும் தேவையில்லை...பணத்தை வீண் பண்ணவும் தேவையில்லையே்...ப்ளீஸ் யோசியுங்கள்..
🙏🏻🙏🏻🙏🏻
// இது எதையுமே நண்பர்கள் கவனிக்காமல் அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாறுவது ஏனோ .. //
Deleteஇதில் ஏதாவது உள்ளடி வேலைகளும் இருக்கலாம் தலைவரே...!!!
// இது எதையுமே நண்பர்கள் கவனிக்காமல் அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாறுவது ஏனோ .. //
Deleteஎதாவது வேண்டுதலாக இருக்கும் :-)
எதுக்கும் அருப்புக்கோட்டை கோடங்கியிடம் மை போட்டு கேட்டு சொல்லுறேன் தலைவரே :-)
:-))
Deleteமுதல் காரணம்...
Deleteஇவர்கள் அதிகம் வாட்ஸப் வருவது கிடையாது. புதிதாக சேரும் நபர் ஒரு ஸ்டாக் இல்லாத புத்தகத்தை தேடி, அந்த புக் விலைக்கு வரும் போது, அவரது கவனம் நமக்கு அந்த புக் கிடைக்குமா?, வேறு யாராவது எடுப்பாங்களா? என்பதுதான். இதில் கவனமிருக்கும் பட்சத்தில் 10தோடு 11 ஆக,ஸ்டாக்கில் உள்ள புக் விற்பனைக்கு வரும்.
ஆனா அவர் ஏற்கனவே ஸ்டாக்லிஸ்ட் தெரிந்தவரோ,தெரியாதவரோ, மறுபடி போய் லிஸ்ட் செக் பண்ண முடியாது. போய்ட்டு வரதுக்குள் புக் போய்டும். இதுதான் மெயின் காரணம். அவர் வான்ட் போட்டு விடும் பட்சத்தில், யாராவது, "சார் இது ஆபீஸில் ஸ்டாக் உள்ளது" என்றதும்தான் அவருக்கு ஞாபகமே வரும். அதுவரை யாரும் சொல்ல மாட்டார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் சொன்னால்,வியாபாரம் ஆகாது. தடையாகும்.இதை எந்த குழு அட்மினும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அறிந்தே சிலர் இந்த புது புக்குகளை விற்பதை தவிர்த்து விடுவர்.
2)வது ரகம்.... பலசூழல் காரணமாக வாங்காமல் விட்டு விட்டு, பிறகு இ ப தேடிய கதை. இவங்களும் கிட்டத்தட்ட இதே ரகம்தான், வாங்காத புக்கை ,அதே விலையில் கிடைக்குமா என தேடுவார்கள். விலை அதிகம் உள்ள பட்சத்தில், இனி தாமதித்தால் இதும் கிடைக்காது என அதிக விலைக்கு வாங்கி விடுவார்கள். இவர்கள் இதன் பிறகே ப்ளாக், விளம்பரங்களை கவனித்து விட்டு , அடுத்த முறை ஏமாறாமல் இருப்பாங்க. இவங்க இல்லைனாலும்,இதே நிலையில் அடுத்தவர் வந்து லைனில் வருவார்.
3)வது சந்தா... இந்த சாந்தாவில் பலருக்கு பல வேறுபாடுகள் உண்டு.
நாம் காமிக்ஸை விரும்பும் அளவுக்கு எல்லாரும் விருப்ப மாட்டார்கள்.
சிலர் லயன் மட்டும் பிடிக்கும்,
சிலருக்கு தீபாவளி போன்ற ஸ்பெஷல் மட்டும் வாங்குவார்கள்,
சிலர் முக்கியமான இதழ்கள் மட்டும் வாங்குவார்கள்.
இவர்களுக்கும் சந்தாவுக்கும் ஏழாம் பொருத்தம். சந்தா பக்கமே வர மாட்டார்கள்.
இன்னொன்று...
சந்தா கட்டும் ரகங்கள் ஒன்றாக இருப்பது சந்தா கட்டாததற்கு காரணமாக இருக்கும் பலருக்கு.
லயன் ,முத்து,ஜாம்போ,சன்ஷைன் என
4 யும் விரும்ப மாட்டார்கள்.
இதை முறையே தனித்தனியாக இருந்தால் அவர்களுக்கு தேவையானதை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதைத்தான் நான் நேற்று முன்தினம் குழுவில் கேட்டது. "லயன் மட்டும் சந்தா கட்டி விட்டு, மீதி தேவையானதை மட்டும் வாங்கலாம்" என,
அந்த முறை இல்லை எனும் போது, தேவையானவைகளை தவறாமல் வாங்க வேண்டும்.
ஒட்டுமொத்த சந்தாவை கட்டி, பிடிக்காத காமிக்ஸை வாங்கி, எத்தனை நாளைக்கு தானம் செய்ய முடியும்?
அந்தளவுக்கு பொருளாதாரம் எல்லாருக்கும் அமையுமா?.
ஏன்? தனித்தனியாக பிரித்தால்,
சந்தாவை கட்டி தேவையானதை தவறாமல் வாங்குவார்களே.!
லயன்,திகில்,மினிலயன்,ஜூ லயன் என,
தனித்தனியாக சந்தா கட்டியவரை நல்லாதானே போச்சு.?
இது என்னைப் போன்றவர்களுக்கு வருத்தமே. மாதம் ஒரு இதழோ, 2 இதழோ, விரும்பும் காமிக்ஸ் கிடைத்தால் சந்தா கட்ட என்ன தயக்கம்.?
காட்டாதவர்களுக்கு சில காரணங்கள் இருக்கலாம்.அது நமக்கு தேவையில்லை.
விரும்புபவர்கள், வேண்டாத காமிக்ஸ்க்கும் சேந்து சந்தா கட்டுவார்களா?.
காமிக்ஸ் படிக்க ஆசைப்படும் வாசகர்களுக்கு சில சலுகைகள் வேண்டும். அப்பதான் காமிக்ஸ் கடைசி நிலை வாசகர்கள் வரை செல்லும்.
வெற்றியும் தொடரும். எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழலும், எண்ணங்களும் அமையாது.
சந்தா கட்டும் வாசகர்களில் எத்தனை பேர், வரும் காமிக்ஸ் அனைத்தையும் விரும்புறீங்க?, இல்ல இந்த பதிவாளர் சொன்னது போல, இலவசமாக எத்தனை பேர் தருகிறீர்கள்?.
ஏலத்தில் எடுப்பவர்களை நீங்கள் கவனித்தது உண்டா?.
பலமுறை ஒரே புத்தகத்தை வாங்கியவர்களும், அதை அதிக விலையில் போகும்போது,
விற்பவர்களுமே ஏலத்தில் பெரும்பாலும் எடுப்பார்கள்.
அப்பப்ப 1 & 2 பேர் மட்டுமே புதியவராக இருப்பார்.
பிறகு வாங்குபவர் எந்த விலையிலும் வாங்குவார்.இதுக்கும் மேல் சொன்ன பதிலே. எந்த விலையிலும், வாங்கும் நபர் கேக்கும் புக் பழையதாகவே இருக்கும்.
ஏனெனில் அவர் அந்த மாதிரி புக்ஸ் மீது ஆர்வமுள்ளவர். வாங்குவதில் என்னதவறு என நம்மையே கேப்பார்.
பெரும் விலையுள்ள புது புக் அவ்வளவு எளிதில் பேரம் போகாது.
எல்லா குழுவிலும் அதிக பட்சமாக 2000 வரையே முடிவு. இதும் ஏதாவது ஸ்பெஷல் புக் பழசாக இருந்தால்.
ஒவ்வொரு குழுவிலும் கட்டுப்பாடுகள் தேவை. இந்த புக் இது நாள் வரை விக்க கூடாது. யார்? செய்வது?.
புலிக்கு யார் மணி கட்டுவது?.
அப்ப மாற்றம் வேண்டியது எங்கே? யார்?
என புரிந்திருக்கும்.
இவைகள் நான் கடந்த 2 மாதமாக கவனித்தவை.
என்னைவிட அனுபவமுள்ள நண்பர்கள் இருப்பீங்க. அதிகம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது என் கருத்து.
இது யாரையும் காயப்படுத்த அல்ல.
நன்றி...
People buy books at beefed up rates which are not available with the publishers. People know about internet thoroughly and they search at first
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅவ்வப்போது ஆஜராகி அசத்தலான அறிவுரைகள் அருள்வதற்கு பத்தாயிரம் நன்றிகள் சார் ! ஏதோ, எனக்குத் தெரிந்த குப்பையைக் கொட்டி கடந்த 37 வருஷங்களைக் கடந்துப்புட்டேன் ; மீதமிருக்கும் காலங்களையும், கழுத - எனக்குத் தோணக்கூடிய சுமாரான சிந்தனைகளோடே கடத்தி விட்டுப் போகிறேனே ? உங்களின் நுண்ணிய சிந்தைகளுக்கு சந்தையில் நிறைய டிமாண்ட் இருக்கக்கூடும் எனும் போது - அவற்றை இந்த செவிடன் காதில் ஊதி வீண் செய்வானேன் ? Good luck sir !
Deleteதவிர உங்களின் சமூக நலன் சார்ந்த அக்கறைகளும், பொது நல மனப்பான்மையும் இதை விடவும் பண்பட்ட பல தளங்களுக்கு நிரம்ப பயன் தந்திடுமென்பதிலும் எனக்கு ஐயமேயில்லை சார் ! So thanks for your contributions thus far here !
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநிதர்சனமான பதிவு. நகைச்சுவை கலந்த ஆதங்கம் உங்கள் பதிவில் தென்பட்டது.
ReplyDeleteஎன்றும் உங்கள் பின் நிற்போம் என்று உளமாரச் சொல்கின்றேன்.
///ஆருக்காச்சும் பதில் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா - ப்ளீஸ் !///
ReplyDeleteஆண்டவனின் படைப்பியல்புங் சார்.... என்ன சிக்கல் வரினும் தங்களின் இயல்பு தேடல்...தேடல்...தேடல்...!!!
அன்பிற்குரிய ஆசிரியருக்கு,
ReplyDeleteநான் தொடர்ந்து இத்தளத்தை தொடர்ந்து வாசிப்பவன், அவ்வப்போது எனது கருத்துகளை தெரிவிப்பேன்,
புரியாத விசயம் 1 -
தங்களின் இன்றைய பதிவு தங்களின் மனச்சோர்வினை வெளிப்படுத்துகிறது,
"பழைய இதழ்களை மறுபதிப்பு கோருவது, தவறான செயலா, இரசனை குறைவா
"என்றைக்கோ ஊசிப் போய்விட்ட உப்மாக்களை தேடும் படலத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு - நிஜங்களோடு கை குலுக்கத் தான் முயற்சிப்போமே - ப்ளீஸ் ?"
நாம் நடப்புச் செய்திகளை மட்டுமே வெளியிடும் தினசரி பத்திரிக்கை இல்லையே,
அப்படியெனில் ஒரு பதிப்பாளரிடம் ஒரு வாசகன் முன்பு வெளிவந்த இதழ்கள் கிடைக்குமா இல்லை மறுபதிப்பாவது கிடைக்குமா என்று கேட்பதில் என்ன தவறு.
பால்யத்தை தேடுகிறோம் என்று யாரும் பால் பாட்டிலுடன் மூன்று சக்கர சைக்கிளில் சுற்றுகிறோமா, பின்னர் ஏன் ஊசிப் போன உப்புமா என்று ஒரு சாராரின் ரசனைகளை இழிவுபடுத்த வேண்டும்,
ஒரு பதிப்பாளராக பழைய இதழ்கள் மறுபதிப்பு கிடையாது என்று தாங்கள் வெளிப்படையாக அறிவிக்கலாம். யார் என்ன செய்ய இயலும்,
வாசகர்கள் கருத்துக்களை கோருவதும் நீங்களே, பின்னர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதும் நீங்களே,
புரியாத விசயம் 2 - பழைய இதழ்கள் Scanlation, fan made,self print என்று பல வடிவங்களில் புழங்குவது தாங்கள் அறியாதது அல்ல,
ஆனால் இன்றும் தங்களிடம் பழைய இதழ்களை மறுபதிப்பு கோரும் Minority வாசகர்கள் அத்தகைய சட்ட விரோத வாய்ப்புகளை அங்கீகரிக்காதவர்கள், அவர்கள் தாங்கள் விரும்பிய ஒரு புத்தகத்தை கோருவது அவர்கள் இரசனைகளை கேலி செய்வதற்கான முகாந்திரம் அல்ல,
புரியாத விசயம் 3
எவ்வித சார்பும் இல்லாத, லயன் காமிக்சின் வளர்ச்சியை தங்களின் வளர்ச்சியாக எண்ணி மகிழும் என்னைப் போன்ற பலர் இத்தகைய கருத்துக்களின் காரணமாக தளத்தில் பதிவிடவே பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது.
தங்கள் விருப்பங்கள் மறுபதிப்புக்கள் கோருவோருக்கு வாய்ப்பிருந்தால் வழங்குங்கள் இல்லையென்றால் மறுத்து விடுங்கள் மாறாக இரசனைகளை இழிவுபடுத்தாதீர்கள்,
நீங்கள் ஆயிரம் தோழனின் கதைகளை வெளியிட்டு எங்களின் இரசனைகளை கடுமையாக உயர்த்த முயன்றாலும் எனது கருத்தை கேட்கும் பொழுது சுஸ்கி விஸ்கி வேண்டும் என்றுதான் கூறுவேன். எனக்கு நல்ல கருத்துக்களை கூறும் அக்கதையே உயர்ந்த இரசனையாக தோன்றுகிறது. அதனையே எனது குழந்தைகளுக்கும் பரிந்துரைப்பேன்,
எனது ஆதங்கம் இத்தகைய ரசனை சார்ந்த கேலி கிண்டல்கள் 7 கோடி பேரில் காமிக்ஸ் படிக்கும் 800 பேரை இன்னும் Minority ஆக்கிவிடக் கூடாது என்பதே
பின் குறிப்பு : ஆசிரியருடன் நேரடித் தொடர்பு இல்லாத காரணத்தால் ஒரு வாசகனாக நான் எழுதும் பதிவு இது.
எனது பதிவிற்கு நேரமிருப்பின், தேவையென்று கருதினால் ஆசிரியர் மட்டும் பதிலளிக்கட்டும், Friends please excuse, Thank you
This comment has been removed by the author.
Delete👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Deleteசந்தா கட்டாமல் புத்தகக் கடைக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் புத்தகமே வரும். எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களாக சந்தா காட்டுவதால் சரியாக புத்தகம் வந்துவிடுகிறது. எனக்கு அலைச்சலும் மிச்சம். நல்லவேளையாக எங்க ஊர் தாராபுரத்தில் எஸ்டி கூரியரில் எனக்குத் தெரிந்தவர் இருப்பதால் புத்தகம் வந்தாலும் நான் எனக்குத் தோது படும் நேரத்தில் போய் வாங்கிக் கொள்கிறேன்.
ReplyDeleteசூப்பர்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனது மகனின் டவுட் லயன் பிறந்தநாள் அன்று வீட்டில் எதாவது ஸ்பெஷல் செய்வாங்களா?
ReplyDeleteலயன் காமிக்ஸ் முதல் புத்தகம் தொடங்கியது ஜூன் முதல் எனவே அதனை லயன் காமிக்ஸ் பிறந்தநாள் என கொண்டாடுகிறோம். அந்த மாதம் ஏதாவது ஸ்பெஷல் புக் படிக்க போடுவாங்க என சொல்லியும் அவர் திருப்தி அடையவில்லை. யாராவது லயன் காமிக்ஸ் பிறந்தநாளுக்கு வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு செஞ்சி
சாப்பிடுவீங்களாப்பா? இனியாவது எங்கள் வீட்டில் நாங்கள் இதனை நடைமுறை படுத்தலாம் என உள்ளோம் :-)
ஜூலை 1 லயன் பர்த்தடே...
Deleteவெரைட்டியா செஞ்சி அழைப்பு விடுங்க...சோறு போடுறீங்கனா பெங்களூரோ, தூத்துகுடியோ எங்கனாலும் ஓடியாந்திடுறோம்....
சாரி ஜுலை தான் :-)
Deleteசோறு முக்கியம் அமைச்சரே..!!
Deleteஜூலைப் பிறந்தநாளுக்காக காத்திருக்கின்றோம்.
ஹலோ ஹலோ சிறப்புச் சோறு எங்களுக்கு மட்டும் தான் :-)
Delete122nd
ReplyDeleteS70ன் நான்கு இதழ்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ?!
ReplyDelete2023 பிறந்திருக்கும்
Deleteதெரில # 2
ReplyDeleteசார் இது மாதிரியான பதிவுகள் சங்கடப்படுத்துகிறது (என்னை மட்டுமாவது) இப மறு மறு பதிப்பு வந்த போது புக்கிங் என்ணிக்கை 500 தொட்டிடுமா என்ற சந்தேகத்திலும் ஒரு நல்ல நோக்கத்திற்கு மீண்டும் மறுபதிப்பு என கூறியதாலும் 2 புக்கிங் செய்தேன். ஒன்றை மட்டும் பிரித்துப் பார்த்து விட்டு ஒன்றை unboxing ஆக வைத்துள்ளேன்.
என்னிடமிருந்த பழைய மிகப் பழைய முத்து லயன் இதழ்கள் 400க்கும் மேல் நண்பர் ??? ஒருவர் படித்து விட்டு தருவதாக எடுத்துச் சென்றார். நன்கு திட்டமிட்டு பழைய மற்றும் Special இதழ்களை மட்டும் எடுத்துச் சென்று விட்டார். அவற்றின் இன்றைய மதிப்பு நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. வருடம் ஒரு முறை TShirt அனுப்புவார். கடந்த 2 வருடங்களாக அதுவுமில்லை. இதற்கு நான் எங்கு போய் சொல்வது.
ஒரு இப மேல் வாங்கிய அனைவரும் வியாபாரிகளல்ல.
சிலருக்கு வீட்டு நிர்ப்பந்தமாக இருக்கலாம். 3000 கு வாங்கி 6000 கு வித்துட்டேன் பார்த்தியா என்னமோ காச கரியாக்கேறேனு சொன்ன போட்ட காச எடுத்தாச்சுனு
அவங்கவங்க வீட்ல 1008 பிரச்சினை
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது
இங்கே பணமே பிரதானம்
காமிக்ஸ் :...?
// ஒன்னு மட்டும் நல்லா தெரியுது
Deleteஇங்கே பணமே பிரதானம் //
Yes.
Please start reprinting old catalogue as a trial basis. Once they purchase old ones definitely they will come for annual subscription. My case is also like that.
ReplyDeleteநிறைய பேர் ஏற்கனவே சொன்ன கருத்துக்கள் தான் எனதுமே.
ReplyDeleteநான் லயன் காமிக்ஸான கத்தி முனையில் மாடஸ்டி பிளைசி யில் இருந்து கலெக்ட் பண்ணுபவன். ஆனால் நான் சந்தா கட்டுபவன் அல்ல. அந்த காலத்தில் இருந்து ஒரு பயம். போஸ்ட் ஆஃபிஸில் புக்ஸை யாரவது ஆட்டை போட்டு விடுவார்களோ என்று. இதனால் நான் கடைகளில் சென்று தான் வாங்குவது டிரௌசர் போட்ட காலம் தொட்டு இன்று வரை பழக்கம். இதனால் நான் மிஸ் பண்ணிய பூக்குகள் ஒரு 40 % இருக்கும்.
லயன் மறு வருகைக்கு பிறகு 2017 இருந்து நான் ஒரு புத்தகங்களையும் மிஸ் பண்ணுவது இல்லை. ஏனென்றால் என்னுடைய கசின் புத்தக கடையில் லயன் முத்து ஜம்போ வந்து விடும். அவற்றில் எனக்கு எது வேணுமோ அதை நான் தனியாக எடுத்து வைத்து விட சொல்லி விடுகிறேன்.
இன்னொரு விஷயம் நான் மறு வருகைக்கு பிறகு சந்தா காட்டாமல் இருப்பது, என்னிடம் இருக்கும், எனக்கு தேவை படாத மறுபதிப்பு புத்தகங்களும் கட்டாயம் வாங்க வேண்டி வரும். மறுபதிப்பு தடம் என்று ஒன்று போட்டால் மறுபதிப்பு வேண்டும் என்பவர்கள் மட்டும் வாங்கி கொள்ள எதுவாக இருக்கும். இது ஜஸ்ட் எனது மனவோட்டம்.
எனவே ஒரு வருடம் மறுபதிப்பிலா வருடம் என்றால் அணைத்து புத்தகங்களும் நான் வாங்கி விடுவேன். எனக்கு தேவை புது புது ஜானரில் புது புது கதைகள். சயின்ஸ் பிக்ஷன், ஹாரர், ஜாம்பி எது அனைத்தும் வர வேண்டும். வலேரியன் (sci - fi ), உயிரை தேடி (zombie ), மற்றும் ஏகப்பட்ட மிஸ்டரி திரில்லர் வகை கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.
இன்னொரு நண்பர் சொன்னது போல், என் வீட்டில் நான் மட்டுமே காமிக்ஸ் படிக்கும் கடைசி ஜீவன். மகன் மகள், காமிக்ஸ் பக்கமே இனி வரமாட்டார்கள். நான் சாவதற்கு முன் ஒரு பெரிய ஏலம் விட்டு அந்த காசை பிரித்து கொடுத்துவிடுவேன்.
நான் நமது 3 பாக ரத்தப்படலத்தின் ஈரோடு திருவிழா விற்கு முதல் முறையாக வருகிறேன், அப்போது மிஸ் பண்ணிய LMS புத்தகத்தை ஒருவர் கொடுப்பதாக சொன்னார். நான் வெள்ளேந்தியாக அவரிடம் வாங்க காசை கொடுத்தபோது, டபுள் மடங்கான காசை கேட்டார். இதுக்கு நான் செட் ஆக மாட்டேன் என்று வேண்டாம் என்று கூறி விட்டேன்.
அதற்கு பிறகு தான் லயன் வாட்சாப் நண்பர்கள் அறிமுகம். உள்ளே காமிக்ஸ் அரசியல், காமிக்ஸ் சேல்ஸ் எனப்படும் விஷயங்கள் அறிமுகம் ஆகின. முதலில் அனைத்தும் அந்நியமாக புதிதாக இருந்தது. பிறகு பழகி விட்டது. இன்று வரை நான் அதிசயமாக பார்ப்பது, நமது காமிக்ஸை அதீத விலை குடுத்து வாங்கும் கூட்டம் இருக்கிறதே என்பது தான்.
மார்வெல் ஸ்பைடர்மேன் முதல் புத்தகம் 1 மில்லியன் டாலர்களுக்கு விலை போகிறது கேள்வி பட்டு அதிர்ந்திருக்கிறேன். அதே போல் நமது லயன் முத்துவிற்கும் வேல்யூ இருப்பது மிகவும் மகிழ்ச்சி ஊட்டும் விஷயம் தான்.
எனக்கு எனது ஸ்லிப் கேஸ் XIII போதும். அதை இப்பொழுது எடுத்து பார்த்தாலும் புல்லரிக்கிறது. அட்டை படம் நகாசு வேலை செம. அதன் கவர்ச்சி XIII version 2 வில் மிஸ்ஸிங் என்பது எனது எண்ணம்.
யாரும் தப்பாக நினைக்க வேண்டாம், இந்த XIII மறு மறு மறு மறு பதிப்பு விளையாட்டு வெளியில் இருந்து பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த புத்தகத்தை genuine ஆக மறுபடியும் மிஸ் பண்ணியவர்கள் நிஜமாகவே பாவம் தான்.
ஸ்மாஷிங் 70 கடைகளில் கிடைக்குமா கிடைக்காதா என்பது clearaga தெரிந்து விட்டால் சந்தா கட்டுவதா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்வேன்.
ReplyDeleteநீங்கள் வாங்கும் கடைக்காரர் / முகவர்முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே கடைகளில் கிடைக்க வாய்ப்புண்டு.
Delete/// எனக்கு எனது ஸ்லிப் கேஸ் XIII போதும். அதை இப்பொழுது எடுத்து பார்த்தாலும் புல்லரிக்கிறது. அட்டை படம் நகாசு வேலை செம. ///
ReplyDeleteMe too.
This comment has been removed by the author.
ReplyDeleteஆண்டு சந்தாவுக்கான அட்டவணையில் A, B, C, D, E என்று இருப்பது போல் மறுபதிப்புகளுக்கென F என்று ஒரு Slot ஒதுக்கி அதனை optional என்றும் அறிவித்துவிட்டால், விருப்பமுள்ளவர்கள அதற்கு சேர்த்தும், விரும்பாதவர்கள் அதை தவிர்த்தும் சந்தா செலுத்தலாம். யாருக்கும் சிரமமும் இருக்காது.
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteமாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ? Excellent idea Edi Sir. We will collect Name/Age/Gender/ Address/contact number & email address/self introduction etc.,.
ReplyDelete