Powered By Blogger

Sunday, September 13, 2020

ஒரு சாவகாச ஞாயிறின் சிதறல்கள் !

 நண்பர்களே,

வணக்கம். By now நம் மத்தியில் செம பிரசித்தி ஆகிவிட்டிருக்கும் அந்த ரவுண்டு பன்னைத் தயாரிக்கும் பேக்கரியின் பணிக்கூடம் என் வீட்டுக்கு அருகே தான் ! காலையில் பூச்சாண்டியைப் போல மாஸ்க்கை மாட்டிக் கொண்டு அந்த ரோட்டில் வாக்கிங் போகும் போது, மாஸ்க்கையும் தாண்டி காற்றோடு இணைந்து வரும் சுகந்தங்களே ஆயிரம் கதைகள் சொல்லிடுவதுண்டு : "இப்போ பட்டர் பிஸ்கெட் பேக் ஆகுது ; இப்போ ஸ்வீட் பிரெட் !!" என்கிற ரீதியினில் மூக்கும், மண்டையும் ஒன்றுகூடிப் பட்டியல் போடும்  ! இன்று காலையும் அந்த மோப்பம் பிடிக்கும் படலம் அரங்கேறிட, காலங்கார்த்தாலே எங்கோ ஒரு விசேஷ ஆர்டருக்கென நிறைய ஐட்டங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ! ஒரே அச்சில் வார்த்தது போல் நூற்றுக்கணக்கில் ஜேம் பூசப்பட்ட கேக்குகள் ; ட்ரே முழுக்க ரவுண்டு பன்கள் ; தம்மாத்துண்டு முசல் குட்டிகளைப் போல மக்ரூன்கள் என்று வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க, நாக்கிலோ இங்கே ஜலஜாலங்கள் !! கடையின் ஓனர் ஒரு குரங்குக்குல்லாயை மாட்டிக் கொண்டு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, எனக்கு ஒருவித வியப்பு அந்த நொடியில் !! "ஆத்தாடி...வருஷத்தில் 365 நாட்களும், ஒரே தரத்தோடு, ஒரே சுவையோடு, ஒரே சீராய் இத்தனை சமாச்சாரங்களை உற்பத்தி செய்வது என்பது எத்தனை சவாலான காரியம் !! கொஞ்சமாய்ச் சர்க்கரை கூடிப்புட்டால் கதை கந்தல் ; 'புஸ்ஸென்று' உப்பிட்ட வேண்டிய பன் அன்று சண்டித்தனம் செய்ய நேரிட்டால் ஜோலி முடிந்தது !! Awesome !!" என்ற நினைப்போடே நகர்ந்த போதே எனக்கு 3 நாட்களுக்கு முன்பான நமது டெஸ்பாட்ச் தினம் தான் நினைவுக்கு வந்தது ! 

குரங்குக்குல்லா மாத்திரம் நஹி ; மற்றபடிக்கு ஓரமாய் ஒரு ஆந்தைவிழியன் வேடிக்கை பார்த்து நிற்க, "இதில் ஸ்டிக்கரை ஒட்டு ; அதைக் கவரில் போடு ; thank you card ஒட்டியாச்சா ? இது DTDC க்குப் போக வேண்டியது " என்ற பரபரப்போடு சுழன்று கொண்டிருந்த நமது அலுவலகம் என் முன்னே நிழலாடியது ! அந்த அடுமனை ; நம்ம ஆபீஸ் - சிலபல சமாச்சாரங்களில் ஒற்றுமை கொண்டிருப்பதாய்த் தோன்றியது ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு புக்கும் இயன்ற மட்டில் perfect ஆக அமைந்திட வேண்டியது எழுதப்படா விதியாயிற்றே !! ஒரு அட்டைப்படம், ஒரேயொரு மாற்று குறைவேனும் சிக்கல் தான் ; பைண்டிங்கில் துளியூண்டு பிசிறாய் இருந்தாலும் விமர்சனங்கள் பறக்கும் ; மேக்கிங்கிலும் சரி / பேக்கிங்கிலும் சரி -  முதல் பார்வைகளில் கவர்ந்திட்டாலன்றி அம்மாதம் மந்தகதியிலேயே பயணிக்கும் ! ஆனாலும், மாதத்துக்கு  ஒருவாட்டி அந்த டெஸ்பாட்ச் தினத்தன்று மூன்றோ / நாங்கோ புக்ஸை ஒருசேர கவர்களில் போட்டு, டப்பிக்களில் அடைக்கும் காட்சிகளை பார்க்கும் வேளையில் அந்த பேக்கரிக்கடைக்காரருக்கு நித்தமும் கிட்டிடக்கூடியதொரு மெல்லிய திருப்தி எனக்குள்ளும் விரவிடத் தவறுவதில்லை ! வாசிப்பினில் ரசிக்கப்போகிறதா ? சொதப்பப் போகிறதா ? என்பதெல்லாம் அந்நொடியில் தெரிந்திராது ; and பெரியதொரு சமாச்சாரமாய்த்  தோன்றிடவும் செய்யாது ! அட்டைப்படத்தில் என் கண்களுக்கு ரம்யமாய்த் தெரியும் லாரன்ஸ் - உங்கள் பார்வைகளில் லிப்ஸ்டிக் போட்டபடிக்கு அபிநயம் பிடிப்பதாய்த் தோன்றுவாரோ  ? என்ற சந்தேகங்கள் அந்த நொடிகளில் எழுந்திடாது ! கதைத்தேர்வுகளோ ; மொழிபெயர்ப்புப் பாணிகளோ துடைப்பக்கட்டைகளைத் தேடச் செய்திடுமா ? என்ற பயங்கள் அந்தக் காலைகளில் கிளர்ந்து நின்றிடாது ! மாறாக, மசியின் மணம் கலந்து, சொட சொடவென புது டிரெஸ்ஸைப் போட்டுப் போகும் புக்குகள் ஒவ்வொன்றுமே Booker பரிசுகளுக்கும், Pulitzer விருதுகளுக்கும் புறப்படும் பார்ட்டிங்களாகவே அந்த வேளைதனில் அகன்ற எனது விழிகளுக்குத் தென்படுவதுண்டு ! மறுநாளைக்கு யதார்த்தம் புலர்ந்திருக்கும் ; அலசல்கள் துவங்கியிருக்கும் and முன்தினத்து சோப்புக்குமிழிக் கற்பனைகளும் காலாவதியாகியிருக்கும் ! ஆனால் ஒவ்வொரு மாதமுமே எனது அந்த momentary madness-களுக்கு விடைகொடுப்பதே கிடையாது ! 

அதற்கொரு சன்னமான பின்னணிக் காரணமும் இல்லாதில்லை தான் ! ஒவ்வொரு இதழின் தயாரிப்பிலும் பிசகிடக்கூடிய சமாச்சாரங்கள் ஒரு நூறு உண்டு ! Forget the quality of the stories ; the translation & stuff - மேக்கிங்கினில் எத்தனை அனுபவசாலிகளும் சறுக்கிட வாய்ப்புகள் ஏராளம் - இதோ இம்மாதத்துப் "பிசாசுப் பண்ணை" இதழினில் MAGNA ARS விளம்பரத்தின் முதல் பக்கமும், இரண்டாம் பக்கமும் இடம் மாறிக் கிடப்பது போல !! 300 பக்கங்கள் கொண்டதொரு டெக்ஸ் வில்லர் கதையில் வாரமாய்ப் பணியாற்றும் பெண்களுக்கு நூறாம் பக்கத்திற்கும் ; நூற்றியோறாம் பக்கத்திற்கும் அந்நேரத்து அயர்ச்சியினில்  பெருசாய் வித்தியாசங்கள் தோன்றிடாது ! மந்தை மந்தையாய்  ஜனம் குருதைகளில் பயணிக்கும் சித்திரங்கள் இங்கேயும் இருந்திடும்   ; அங்கேயும் இருந்திடும் !! ஆனால் ஒரேயொரு பக்க நம்பரை மாற்றி வைத்துவிட்டாலுமே அம்மாதம் நடுமூக்கில் குத்துக்கள் வாங்க நேரிடும் மொத்த டீமுமே ! ஒற்றைப்பக்கத்தில் 20 டயலாக்குகள் கொண்ட கிங் கோப்ரா கதையினில் ஒரேயொரு வசன பலூனானது தப்பான திக்கில் திரும்பிக்கிடந்தால், அது கூட ஆட்டோ ஷங்கரின் குற்றங்களுக்கு இணையாகப் பார்த்திடப்படும் ; பரிகசிக்கப்படும் ! ஆயிரம் புத்தகங்களின் பைண்டிங்கினில் ஒன்றேயொன்றின் மூலை கசங்கியிருந்தால் கூட - "குற்றம்...!! நடந்தது என்ன ?" என்ற புலனாய்வுகள் துவங்கிடும் என்பது நமது ஜாலியான நடைமுறைகள் ஆச்சே !! ஒரு சின்னஞ்சிறு வட்டத்தின் உள்ளே வண்டியோட்டும் போது சின்னஞ்சிறு பிசகுகள் கூட பூதக்கண்ணாடிகளில் பார்த்திடப்படும் என்பதால் - ஒவ்வொரு மாதத்திலும், 'மேக்கிங் எனும் மொட்டைக் கிணறுகளில் சறுக்கி விழுந்திடாது தாண்டிட்டோமே தெய்வமே !! ' என்ற தற்காலிக நிம்மதி தான் அந்த டெஸ்பாட்ச் தின ரசிப்பின் பிரதானப் பின்னணி !  தவிர, ராமராஜனுக்குப் போட்டி தரவல்ல வர்ணங்களில் டாலடிக்கும் அட்டைப்படங்களையும், 'சர்ரென்று' புரட்டும் போது உள்ளுக்குள் தகதகக்கும் லக்கி லூக்கின் வர்ணங்களும் - ஒருகாலத்தில் சாணித் தாள்களில் சவாரி செய்த நமக்கு "ஏஏஏஏஏஏயப்பா !!" என்ற மலைப்புக்குரிய சமாச்சாரமாய்த் தோன்றத் தவறிடாது ! So இம்மாதமும் பராக்குப் பார்த்தபடிக்கே புத்தகங்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன் - கூடுதலாயொரு காரணத்தின் பொருட்டு !! 

இரும்பு மனிதன் ஆர்ச்சி...ரோபாட் ஆர்ச்சி...(ஆங்...உச்சரிப்பில் பிழை ; அது "ரோபோ" ஆர்ச்சி !! என்பவரா நீங்கள் ? இல்லீங்கோ - பிரிட்டிஷ் உச்சரிப்பினில் அது "ROW BAT "(https://www.youtube.com/watch?v=aAeUFwLjldo)..சட்டித்தலையன் ஆர்ச்சி - நீங்கள் எவ்விதம் கூப்பிடுபவராக இருந்தாலும் சரி, இம்மாதத்தின் firstlook ஒளிவட்டத்தை முழுசுமாய்க் கபளீகரம் செய்திருக்கும் இந்த கோமுட்டித்தலையனை நேசிக்காதோர் யாரும் இருக்க முடியாதென்பேன் ! இம்மாதத்து combo-வில் மாக்சி சைசில், முழு வண்ணத்தில் பயல் டாலடிப்பதையே நான் மறுக்கா மறுக்கா ரசித்துக் கொண்டிருந்தேன் ! துண்டும், துக்காணியுமாய் வெளியான சிறுகதைகளை ஒருசேர, முழுவண்ணத்தில், மாக்சி சைசில் தொகுத்து வழங்கிடும் "பிசாசுப் பண்ணை" ! 'தல' பின்னிப்பெடலெடுக்கும் ஒரு செம சாகசம் ; ஹெர்மனின் ஓவிய அதகளங்களில் மிளிரும் ஜம்போ ....இவையெல்லாம் இருந்தும் என் பார்வை உங்களை போலவே இந்தச் சிகப்பு மண்டையனோடே பயணித்து வந்தது ! அதன் முக்கியக் காரணமே - இந்த வர்ணங்கள் முழுக்கவே நமது தயாரிப்பு என்பதே !! வண்ணங்கள் நமக்குத் புதிதல்ல தான் ; ஒரிஜினல் கலரிங்களில் ஏதேதோ மிரட்டலான உச்சங்களைப் பார்த்திருக்கிறோம் தான் ! ஆனால் 'கழுகுமலைக் கோட்டை" ; "கொரில்லா சாம்ராஜ்யம்" ; "கொள்ளைக்கார பிசாசு" ; "யார் அந்த மாயாவி ?" பாணிகளில் நாமாய் உருவாக்கும்  வண்ணங்களுக்கு எப்போதுமே வாஞ்சை அதிகம் - என்னுள்ளாவது !! No different with Archie this time too !! 

நமக்கு அவ்வப்போது உதவிடும் குருமூர்த்தி தான் இம்முறையும் கலரிங் பொறுப்பைக் கையிலெடுத்துள்ளவர் ! ஆர்ச்சியை ஒரிஜினலாய் அவர்களது ஆண்டுமலர்களில் மட்டும்  சிறுகதைகளில்  Fleetway முழு வண்ணத்தில் பயன்படுத்துவதை ரொம்பகாலமாய் ரசித்து வந்தவன் நான் ! அதே போலவே நாமும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழில் செய்தாலென்ன ? என்றே எண்ணியிருந்தேன் துவக்கத்தில் ! ஆனால் இப்போதெல்லாம் இந்த இக்ளியூண்டுக் கதைகள் நமக்கு ரசிப்பதே இல்லையெனும் போது, கனவினை இன்னும் கொஞ்சம் பெருசாக்கிடத் துணிந்தேன் ! And அதுவே தற்போதைய "பனி அசுரர் படலம்" ! ஆரம்பித்திலேயே இந்த இதழை loyalty points க்கு ஈடாய்த் தந்திடும் திட்டம் என்னிடம் இருக்கவில்லை தான் ! ஈரோட்டிலோ ; சென்னையிலோ - இதையொரு சர்ப்ரைஸ் இதழாய் களமிறக்கத் தான் நினைத்திருந்தேன் ! ஆண்டின் ஓட்டத்தோடு பயணித்து, அப்போதைய மூடுக்கேற்ப ஏதேனுமொரு இதழை loyalty points க்குப் பதிலாய்த் தந்திடலாமென்று தான் எண்ணங்கள் அந்நேரம் குடிகொண்டிருந்தன ! In fact ஒரு வித்தியாசமான வன்மேற்குக்  கதையொன்றையும் shortlist செய்து, அதனை  வாங்கியும் விட்டிருந்தேன்! அது கொஞ்சமாய் dark shades கொண்ட ஆல்பம் ! ஆனால் இந்தக் கொரோனா கொடுமைகளின் புண்ணியத்தில் எல்லாத் திட்டமிடல்களும் went for a toss & நிறைய சமாச்சாரங்களை மாறுபட்ட விதத்தில் பார்க்கச் செய்தது ! ஏற்கனவே அட்டவணையில் உள்ள dark shade கதைகள் போதும் ; இன்றைய சூழல்களில் புதுசாயும் நோவுகள் வேண்டாமே என்று மனசு சொல்லிட, 'அதுவும் சர்தான் !' என்று பட்டது ! தவிர, ஒரு பத்தோடு பதினொன்று cowboy ஆல்பமானது பெருசாய் நினைவில் நிற்கக்கூடிய சாத்தியங்களைவிடவும், நமது சட்டித்தலையன் போலானதொரு ஆசாமி, அதுவும் முழுவண்ணத்தில் ஆஜரானால், அதன் தாக்கம் நிச்சயமாய் நினைவில் நின்றிடும் என்று தோன்றியது ! அப்புறமே தீர்மானித்தேன் - "ப.அ.ப' நமது loyalty points கனவுகளுக்கொரு தொடக்கம் தந்திடும் இதழாய் அமையட்டும் என்று ! And truth to tell - இதனை நார்மல் சைஸிலேயே தான் குருமூர்த்தியும் வேலை செய்து தந்திருந்தார் ! ஆனால், பிசாசுப் பண்ணை இதழின் வேலைகளை சில மாதங்களுக்கு முன்னே கையிலெடுத்த போதே, சிகப்புமண்டையனையும் மாக்சி சைசில் ரவுசு செய்திட வைக்கும் ஆசை துளிர்விட்டது ! And you know the rest !!  

கதையைப் பொறுத்தவரையிலும், வழக்கமான ஆர்ச்சி உட்டாலக்கடிகளிலும் இது இன்னொரு லெவல் தான் ! ஆனால் நண்பர் ரபீக் ராஜா போன பதிவில் பின்னூட்டமிட்டிருந்தது போல - 'சூப்பர்ஹீரோக்களுக்கு பூச்சுற்றலுமே அழகு தான் !' என்று எடுத்துக் கொண்டேன் ! And இதற்குப் பேனா பிடித்துள்ள   நமது கருணையானந்தம் அவர்களுக்கு இங்கொரு special mention அவசியமே !! ஆர்ச்சி ஆங்காங்கே அவிழ்த்துவிடும் டயலாக்குகளைத் தாண்டி, பாக்கி சகலமும் அவரது உழைப்பே ! சத்தியமாய் என்னால் இக்கதையினில் பணியாற்றுவது என்பது இயலாக்காரியமே ! ஆனால் சளைக்காது ஆர்ச்சிக்கும் சரி, தொடரவுள்ள ஸ்பைடருக்கும் சரி, மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் எனும் போது hats off !!

ஆர்ச்சி ; மெகா சைஸ் ; வர்ணம் - என்றெல்லாம் தீர்மானமான பின்னே நமது அமெரிக்க ஓவியையைக் கொண்டு முதலில் ஒரு டிசைன் போட்டு வாங்கினேன் ! அதுவோ முன்னொருகாலத்தில் ஆர்ச்சி டச் மொழியில் வெளியான சமயம், ஹாலந்தினர் உருவாக்கிய அட்டைப்பட டிசைனின் டிஜிட்டல் உட்டாலக்கடி ! So அதையே ராப்பராக்கி, படைப்பாளிகளுக்கும் அனுப்பியிருந்தேன் - "ஷோக்கா கீதாங்க சார் ?" என்ற கேள்வியோடு ! அவர்களோ - புதுசாய் முடிவெட்டிப் பழகும் அப்ரஸிட்டி கிட்டே தலையைத் தந்தது போலக்காட்சியளித்த விக்டரையும், தாம்சனையும் பார்த்து மிரண்டே போய் விட்டார்கள் ! "இது தான் அட்டைப்படமா ?" என்று அவர்கள் சங்கடமாய்க் கேட்ட நொடியிலேயே, எனக்கு வயிற்றைக்கலக்கி விட்டது ! 'போச்சுடா..! க்ளாஸிக் டிசைன் என்று நம்ம கலைக்கண்களுக்குத் தென்பட்ட சமாச்சாரம் செம டப்ஸா தானா ? என்னடா இது - உன் ரசனைக்கு வந்த சோதனை மாதவா ? "என்று புரிந்த நொடியே, அடித்துப் பிடித்து இன்னொரு டிசைனை ரெடி செய்தோம் ! அதை பார்த்த பிற்பாடே படைப்பாளிகளின் முகங்களில் மலர்ச்சி ! பிரிட்டிஷ் கிளாசிக் நாயக / நாயகியரை புது உத்வேகத்தோடு மார்கெட்டினில் மறுஅறிமுகம் செய்துவரும் படைப்பாளிகளுக்கு இந்த ஸ்டெப்கட் மண்டைகள் எத்தனை நெருடலை ஏற்படுத்தியிருக்குமென்பதை இப்போது யோசித்துப் பார்க்கும் போது - பக்கோ என்றுள்ளது ! Anyways all's well that ends well !!இதோ - அந்த "wouldbe wrapper"- உங்கள் பார்வைகளுக்கு ! 

The REJECTED Cover !! Glad we changed it !!! Phew !

ஆர்ச்சியைக் கலரில் பார்த்தாச்சு ; மாயாவியை எப்போதோ பார்த்தாச்சு ; ஜேம்ஸ் பாண்டை தெறிக்கும் கலரில் பார்த்தாச்சு ; இளவரசியையும் பார்த்தாச்சு !! So கருப்பு-வெள்ளையில் ரகளை செய்யும் classic british stars-களுள் இன்னமும் நாம் வண்ணத்தில் பார்த்திரா சூப்பர்ஸ்டார் தானைத் தலைவர் மட்டுமே !! Maybe ஆர்ச்சி காட்டியுள்ள வழி, வெற்றியின் வழியாய் அமையின், ஒரு தூரத்து தினத்தில் கூர்மண்டையரும் மினுமினுப்பாரோ - என்னவோ !! Bye all ....enjoy the Sunday & the books !! மீண்டும் சந்திப்போம் !! 

338 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. அமெரிக்க பெரியவரையும்,
    பல்லடத்து பச்சைக் குழந்தையையும்
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன் மக்களே!
    HBD ❤

    ReplyDelete
  3. விரைவில் எங்கள் "தல" ஸ்பைடரை வண்ணத்தில் எதிபார்க்கிறோம்.

    ReplyDelete
  4. வந்தாச்சு.....


    இனி படித்து விட்டு....

    ReplyDelete
  5. சூப்பர் பதிவு சார். அருமை

    ReplyDelete
  6. எனக்கு ஆர்ச்சி MAXI வருவதை விட வேறு ஏதாவது புது காமிக்ஸ் மேக்ஸி வருவதை தான் நான் விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் லக்கி லுக் MAXI ல் வருவது ரொம்ப பிடித்திருக்கிறது.

      Delete
    2. எனக்கு முதலில் இந்த மாத புத்தகங்கள் கைக்கு வருவதையே நான் விரும்புகிறேன்.

      Delete
  7. எடிட்டர் சார்..

    வெளிவராத அந்த ஆர்ச்சியின் அட்டைப்படம் அட்டகாசம்!! மழைத்துளிகளினூடே கம்பீரமாய் மினுமினுத்து நிற்கும் ஆர்ச்சி - மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கிறான்! தாம்ஸன்-விக்டர் மட்டுமே (அடையாளம் தெரியாத சிறூ குறை).

    பின்னட்டையாகவாவது இதையும் போட்டிருக்கலாம் சார்!

    ReplyDelete
  8. ///அந்த ரவுண்டு பன்னைத் தயாரிக்கும் பேக்கரியின் பணிக்கூடம் என் வீட்டுக்கு அருகே தான் !////

    சார் அந்தப் பணிக்கூடத்துக்கு பக்கத்திலேயே வாடகைக்கு ஒரு வீடு கிடைக்குமான்னு பார்க்க முடியுமாங் சார்?

    ReplyDelete
  9. ஆர்ச்சியின் அட்டைப்படம் வெளிவராமல் நின்று போன எம் ஜி ஆர் படங்களின் விளம்பரத்தைப் போல நன்றாகவே உள்ளது. அதை பேசாமல் டஸ்ட் கவர் ஆகக்கூட வெளியிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெரீப் & ரம்மி,வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்..
    💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவின் ஒரேயொரு ஷெரீப்பையும், திருப்பூரின் பாயச ஃபேக்டரி ஓனரையும் - என்றும் குன்றா வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!!
      💐💐💐💐💐💐💐💐💐

      Delete
    2. இந்த பிறந்த நாள் இன்னும் உறுதியாக வில்லை செயலரே...:-)

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      மகி ஜி & ரம்மி
      🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

      Delete
    4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      கி & மி !

      Delete
    5. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மகி & ரம்மி .

      Delete
  11. ///ஒரே அச்சில் வார்த்தது போல் நூற்றுக்கணக்கில் ஜேம் பூசப்பட்ட கேக்குகள் ; ட்ரே முழுக்க ரவுண்டு பன்கள் ; தம்மாத்துண்டு முசல் குட்டிகளைப் போல மக்ரூன்கள் என்று வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க,///

    நாளைக்கு வாக்கிங் போகுப்போது அந்த பேக்கரி ஓனரின் காதிலே போட்டு வையுங்க சார் - 'பேக்கரி வண்டியை துப்பாக்கி முனையில் கடத்திய மர்மக் கும்பல் - சிவகாசியில் பரபரப்பு' - அப்படீன்னு சீக்கிரமே தினத்தந்தியில் வரும்னு!

    ReplyDelete
    Replies
    1. அந்த கடத்தலை செய்யப்போவது ஈரோடு விஜய் என்று மட்டும் சொல்லி விடாதீங்க சார் :-)

      Delete
  12. //ஒரு தூரத்து தினத்தில் கூர்மண்டையரும் மினுமினுப்பாரோ - என்னவோ //

    சர்ப்பத்தின் சவாலை அடுத்த மாதத்திற்கு தள்ளி மினுமினுக்க வைக்கலாமே சார்!!
    பாம்பு படம் எடுக்குறதுன்னு ஆகிப்போச்சு.. அதை கலர்ப்படமாவே எடுக்கட்டுமே
    ( எதுக்கும் சும்மா போட்டு வைப்போம்..ஹிஹி..) :-))

    ReplyDelete
  13. இதுவரை வந்த மேக்ஸி சைஸ் இதழ்களில் இந்த மாதம் வருகை புரிந்த லக்கியின் பிசாசு பண்ணை இதழும் ,ஆர்ச்சியின் பனி அசுரர் படலமும் முதலிடத்தை பிடித்து விட்டது எனலாம்...மேக்ஸி இதழ் அப்படி எனில் வழக்கமான இதழில் டெக்ஸ் ன் அட்டைப்படம் அசத்தலோ அசத்தல்..இணைய புகைப்படத்திலியே அசத்திய புகைப்படம் நேரில் சொல்லவும் வேண்டுமா...மொத்தத்தில் இந்த மாதம் அட்டைப்படங்களுக்காவே சுத்திப் போடலாம் நமது காமிக்ஸ் இதழ்களுக்கு..

    முதல் இதழாக எடுத்து ரசித்தது ஆர்ச்சியின் சாகஸமே. ஆர்ச்சி பூ சுற்றும் கதையே ...போன முறை வந்த ஆர்ச்சி கதையுமே சுமார் ரகமே ( இந்த வயதில் நமக்கு ) என்றாலுமே இப்படி படா படா அளவில் ,அதுவும் வண்ணத்தில் ஆர்ச்சியை முதன்முதலாக இந்த இதழில் பார்க்கும் பொழுது உண்மையிலேயே பிரமித்து விட்டேன்..கதை பூ அல்ல மாலையே போட்டாலும் இதழின் தரத்திற்காகவே கண்டிப்பாக முழுமதிப்பெண் அளிக்கலாம்...ஆனால் இப்படிப்பட்ட சஸ்பென்ஸ் இதழைத்தான் சந்தா நண்பர்களுக்கு "இலவசமாக " அளிப்பீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை சார்...உண்மையில் அந்த அறிவிப்பு வந்த பொழுது மினி வண்ண டெக்ஸ் கதையை அளித்து வருகிறீர்களே அதே போன்ற ஓர் இதழாகத்தான் ஆர்ச்சி இதழை எதிர்பார்த்து இருந்தேன்..ஆனால் இப்படிப்பட்ட ஓர் பெரிய்ய்ய்ய இதழை ,அதுவும் இந்த இடர்பாடான சூழல்களில் இந்த இதழ்களை வாசகர்களுக்கு தாங்கள் அளித்த இந்த பரிசு 🎁 உண்மையிலேயே 🏆 பொக்கிஷமான ஒன்று சார்...உங்களின் இந்த பரிசிற்கு நண்பர்கள் சார்பாக ஓர் ராயல் சல்யூட் சார்...

    அடுத்து எடுத்து ரசித்தது "பிசாசு பண்ணை " இதழே ..சிறு கதைகளாக இருப்பினும் பிசாசு பண்ணையும் ,பயங்கர பாலமும் இணைந்து வந்ததில் எனக்கு மகிழ்ச்சி...காரணம் இரு இதழ்களும் மினிலயனில் மெயின் கதையாக வந்த கதைகள் அல்லவா...மேலும் அட்டகாசமான வண்ணத்தில் ,அசத்சலான சைஸில் வெகுவாக கவர்ந்து விட்டது...

    டெக்ஸ் இதழை முதலில் படிக்க மனதும் ,கரங்களும் பரபரத்தாலும் எப்பவும் சிறப்பான ,விருப்பமான இதழை எப்பொழுதும் கடைசியாக படிக்கும் வழக்கம் இருப்பதால் இன்று மற்ற மூன்று இதழ்களை ரசித்து விட்டு ...லக்கியின் "பிசாசு பண்ணை " ரசித்தும் முடித்தாயிற்று...வாசித்தும் முடித்தாயிற்று.

    அருமை...அருமை...அருமை..என்பதே எனது விமர்சனம் சிறுசிறு கதைகளாக இருந்தாலுமே...

    இனி மற்ற இதழ்களை ரசித்தும் ,வாசித்தும்.....

    ReplyDelete
    Replies
    1. ///இப்படிப்பட்ட ஓர் பெரிய்ய்ய்ய இதழை ,அதுவும் இந்த இடர்பாடான சூழல்களில் இந்த இதழ்களை வாசகர்களுக்கு தாங்கள் அளித்த இந்த பரிசு 🎁 உண்மையிலேயே 🏆 பொக்கிஷமான ஒன்று சார்...உங்களின் இந்த பரிசிற்கு நண்பர்கள் சார்பாக ஓர் ராயல் சல்யூட் சார்...///

      +1 ங்க தலீவரே!

      Delete
    2. உண்மையில் அந்த அறிவிப்பு வந்த பொழுது மினி வண்ண டெக்ஸ் கதையை அளித்து வருகிறீர்களே அதே போன்ற ஓர் இதழாகத்தான் ஆர்ச்சி இதழை எதிர்பார்த்து இருந்தேன்/// Exactly I too thought so.

      Delete
  14. எல்லா புத்தகங்களும் படித்து முடித்து விட்டேன். அருமையான மாதம்.

    தனித்திரு தணிந்திரு ..... ஒரு ருத்ர தாண்டவம்
    எனது மதிப்பெண் 8/10


    பனி அசுரர் படலம் இந்த மாதத்தின் சர்ப்ரைஸ் இதழ் அட்டகாசம் நமது சட்டி தலையனை இப்படி பார்ப்பது மிகப்பொருத்தமாக உள்ளது. இந்த இதழுக்கு தங்கள் உழைப்பு அசர வைக்கிறது. இந்த முறை ஆர்ச்சி இலக்கை அடித்து விட்டது
    எனது மதிப்பெண் 9/10

    கடைசியாக படித்தது அதிகாரி நிறைய உழைப்பை கொட்டி உருவாக்கிய கதை அட்டகாசம் எதிரிகள் ஓராயிரம் க்கு அடுத்த இதழும் ஹிட் தான். நிறைய டுவிஸ்ட் அண்ட் டர்ன் கொண்ட கதை நிறைய இடங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    எனது மதிப்பெண் 9.5/10

    மொத்தத்தில் மிகவும் நிறைவான மாதம் சார்.
    I'm very happy

    ReplyDelete
    Replies
    1. புயல் வேக விமர்சனம் - செம!!

      Delete
    2. அடேங்கப்பா அதற்குள் இம்மாத இதழ்கள் முடிந்து விட்டதா...:-)

      Delete
    3. நன்றி நண்பர்களே

      Delete
  15. இந்த கருப்பு வெள்ளை டெக்ஸ் இதழில் ஹாட்லைன் அதுவும் இரண்டு ஹாட்லைனாக ...டெக்ஸ் இதழில் ஹாட்லைன் வந்தாலே ஓர் சிறப்பு தான்...அடுத்த மேக்‌ஸி விளம்பரத்தில் தலைவாங்கி குரங்கு என்பது சிறிது ஆவலை குறைத்து விட்டது சார் ஏற்கனவே மறுபதிப்பு கண்ட இதழ் என்பதால் போன பதிவில் நண்பர்கள் குறிப்பிட்டவாறு இதுவரை மறுபதிப்பு காணாத டெக்ஸ் வில்லர் வருகை தருமாயின் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாக அமையும் சார்.. முடியுமாயின் ஆவணச் செய்யவும் சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் அந்தக் குரங்கு விரட்டும் விபரீத இரவை பௌர்ணமி பொழிய வண்ணத்ல வேடிக்கை காட்டும் படங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதே....தரமான வண்ணத்திற்காக உருவான மேக்சிக்கு சரியான தேர்வே..மேக்சிக்கான கலக்கலான கண்கவர் வர்ணம் ஓவியம் கொண்ட கதை

      Delete
    2. /// தரமான வண்ணத்திற்காக உருவான மேக்சிக்கு சரியான தேர்வே..மேக்சிக்கான கலக்கலான கண்கவர் வர்ணம் ஓவியம் கொண்ட கதை ///

      அதற்காக சமீபத்தில் வெளியான இதை வெளியிடுவது தேவையில்லாதது.. இன்னும் வெளிவராத கதைகள் எவ்வளவோ இருக்கின்றன.. அதை முயற்சிக்கலாம்..

      Delete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெரீப் & ரம்மி 🍿🍿🎂

    ReplyDelete
  17. சார் அவ்வட்டை வண்ணமயமா கலக்குனாலும்...ஏனோ தற்போது வெளியிட்ட மஞ்சலட்ட குளோசப் ஆர்ச்சி பட்டாசு...மனதுக்கு நெருக்கமான ஓர் ஃபீல்...அந்த தாம்சன் விக்டரில்லாம குளோசா காட்டியிருந்தா கலக்குமோ என்னவோ...தங்கள் படைப்பின் உச்சம் என்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டுவதிலிருந்து உணரமுடிகிறது....

    ReplyDelete
    Replies
    1. அந்த ஸ்பைடர் இருவண்ணத்ல வந்தா நல்லாருக்கும்...ஒரிஜினல் போல...வண்ணத்துக்கு யார் அந்த மினி ஸ்பைடர் மற்றும் விண்வெளிப் பிசாசு அசத்தலாருக்கும்

      Delete
  18. இந்த மாத புத்தகங்களை பிரித்து பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு வகையில் என்னை ஈர்க்கிறது. ஆர்ச்சியை மேலோட்டமாக புரட்டினேன், இந்த கால ஜேம்ஸ் / லார்கோ / ஷெல்டன் கதை சித்திரங்களுக்கு போட்டி போடும் வகையில் அரை பக்கத்தில் ஒரு சித்திரம் மற்றும் ஒரு முழு பக்கத்திற்கு ஒரு சித்திரம் என மிரட்டுகிறது. வாரே வா ஆர்ச்சி.

    பிசாசு பண்ணை படித்தது இல்லை.. வண்ணத்தில் இப்பவே என்னைப் படி என கூப்பிட்டுகிறது. ஹம் ஹம் நேரம் கிடைக்கும் போது தான் இந்த மாத புத்தகங்களை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  19. கொரில்லா சாம்ராஜ்யம்" ; "கொள்ளைக்கார பிசாசு" ; "யார் அந்த மாயாவி ?"....இவையும் கலர் காணும் காலத்துக்காக கனா காணும் கண்கள்

    ReplyDelete
  20. ஆன்லைன் புத்தக திருவிழா பற்றிய திட்டமிடல் நன்றாக உள்ளது.

    அதில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரிரு சர்பிரைஸ் வெளியீடுகள் விற்பனைக்கு வரும் என்பது. அது என்ன இதழாக இருக்கும். வாண்டு இதழ் அல்லது மெபீஸ்டோ அல்லது கென்யா.. சர்பிரைஸ் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
  21. பிசாசுப் பண்ணை:
    முதல் பக்கத்திலேயே அலப்பறை ஆரம்பிச்சிடுது,
    "நாற்றம் குடலைப் புரட்டுது ! மூட்டையைக் கட்டுடி ! நாம் எங்கேயாவது ஓடிப் போயிடலாம் !"
    "உங்க அழுக்கு சாக்ஸ் கூட இத்தனை கப்படிச்சதில்லை !"

    புனுகுப் பூனை கேள்விப்பட்டிருக்கிறேன் அதென்ன துருவப் பூனை?!

    பொய் ஹேஸ்யங்களை போலி ஜோஸியத்தை எள்ளி நகையாடும் களமான ஒரு ஜோஸ்யரின் கதை காமெடியும்+கருத்துமாய் சிறப்பு.....

    நான்கு கதைகளின் தொகுப்பும் வேறு வேறு பாணியில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு...
    வண்ணத்தில் சொல்லவும் வேண்டுமா வழக்கம்போல் அசத்தல்....
    கலகலப்பான வாசிப்பிற்கும்,ஜாலியான பொழுதுபோக்கிற்கும் உத்தரவாதம்...
    நகைச்சுவை சற்றே ஒரு மிடறு குறைவாய் இருப்பதாய் தோன்றுகிறது...

    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  22. பந்தம் தேடிய பயணம் ..

    ஒரு கேரவன் நிறைய்ய யுவதிகள் ..புது வாழ்க்கையை தேடி பயணம் ஆகிறார்கள் துணையாய் டெக்ஸ் என்ற பின்னட்டை முன்னோட்டமே செம...செம...


    யோசித்து பார்க்கிறேன்...

    ஒரு கேரவன் நிறைய்ய யுவதிகள்..புது வாழ்க்கையை தேடி பயணமாகிறார்கள் துணையாய் செயலர் என இருந்தால்...

    அந்த யுவதிகளின் கதி...?! அனைவருக்கும் ஒரே ஒரு மணாளன் ஆகும் பாதிப்பும் யுவதிகளுக்கு நிறைய்ய இருப்பதால் அதை உடனடியாக நிராகரித்தேன்..

    அடுத்து யோசித்தேன்..

    ஒரு வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி பயணமாகிறார்கள் துணையாய் செனாஅனாஜீ...


    மிக மிக பாதுகாப்பான பயணம் ...ஆனால் அவர்களிடம் பொழுது போக எங்கள் பொருளாளர் அவர்களிடம் உரையாட நேர்ந்து கம்ப ராமயாணத்தையும் ,சீவக சிந்தாமணியையும் விரிவாக எடுத்துரைத்துரைப்பது மட்டுமில்லாமல் கோச்சுவண்டியின் நீண்ட பயணத்தின் காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்புகளையும் அறிவியல்பூர்வமாக விரிவாக எடுத்துரைத்து அவர்களின் பயணத்தை பின் திரும்பும் பயணமாக மாற்றிவிடும் அபாயமும் இருப்பதால் அவரையும் நிராகரிக்கும் சூழல்...

    எனவே அடுத்து யோசித்தேன்..

    ஒரு வேகன்நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி பயணமாகிறார்கள் ..துணையாய் நண்பர் பெங்களூர் பரணி...

    சிலமணி நேரங்களுக்கு பயணம் அமைதியாகவே சென்றது ..ஆனால் சில தாமத நிமிடங்களில் தனது புகைப்பட கருவியை கொண்டு அனைவரையும் கூட்டாக ,தனியாக ,ஒட்டு மொத்தமாக என புகைப்படத்தை எடுத்து தள்ளியிருந்தால் கூட பயணம் தாமதமாக கூட சென்று இருக்கும்..ஆனால் வேகனின் சக்கரத்தின் வலது பக்கத்தில் இடது புறமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு ... வேகனின் இடது பக்க சக்கரத்தின் அருகே தலையை குனிந்து கண்களை மேல்நோக்கி முழங்கால் போட்டு புகைப்படம் எடுப்பதுடன்...குதிரையின் பின்னங்கால் அருகே அமர்ந்து .. குதிரையின் மேல் ஒற்றைக்காலில் நின்று என யுவதிகளை விட அவரின் போஸ்கள் யுவதிகளை பொறாமைபடுத்த அந்த பயணமும் கேன்சலாகி விடும் அபாயம் ஆகி விடுகிறது..

    மீண்டும் யோசித்தேன்..

    ஒரு வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி துணையாய் ரம்மி...


    வேகன் மெதுவாக நடைபயில ஆரம்பிக்க துணையாய் பயணமான ரம்மி வேறெங்கும் கண்நோக்காமல் வழித்துணைக்கு கொண்டு வந்த ஒவ்வொரு டெக்ஸ் கதையாய் படித்து கொண்டே வருகிறார்..ஆனால் என்ன ஒன்று...?! படித்து முடித்தவுடன் டைகர் வாழ்க ..டைகர் வாழ்க என்று மட்டும் சத்தம் வர யுவதிகளே.. என்னடி இது இந்த பாதுகாப்பு அதிகாரி டெக்ஸ் கதையை படிச்சுட்டு டைகர் வாழ்க வாழ்க ன்னு சத்தம் போடறாரு ...இவரை நம்பி நாம் பயணம் சென்றால் அவ்ளோத்தான் என அவர்களே வேகனை திருப்பி செல்ல அந்த பயண அபாயமும் மறுதலீக்கப்படுகிறது..

    சரி இவர்கள் எல்லாம் வேண்டாம்..

    வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி பயணமாகிறார்கள்..துணையாய் நானே😍

    யோசித்து பார்க்கிறேன்..

    "அனைத்து யுவதிகளும் ஒரே ஒருமித்த குரலில் ..

    எங்களுக்கு வழித்துனையாய் " இவ்வளவு தூரம் நீங்கள் எங்களுடன் பயணம் செய்ய துணையாக நீங்கள் வர வேண்டாம்..உங்களுக்கு துணையாய் நாங்கள் அனைவருமே உங்களுடன் ,உங்கள் இடத்திலியே இருந்து விடுகிறோம் வேகனை திருப்புங்கள்"

    என்று கூறும் இனிய அபாயம் இருப்பதாலும் அதனையும் நிராகரித்து விட்டு


    டெக்ஸ் வில்லரையே துணையாக அனுப்பி "பந்தம் தேடிய பயணத்தை " சிறப்பாக ரசித்து முடிக்க புறப்படுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. கலக்கீட்டீங்க தல..

      Delete
    2. தலீவரே.. சிரிச்சு முடியலை..!!!
      🤣🤣🤣
      🤣🤣🤣
      🤣🤣🤣
      🤣🤣🤣

      Delete
    3. // ஒரு வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி துணையாய் 'நம்ம எடிட்டர்'//

      இதைப் பற்றி எதுவும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே...?

      Delete
    4. /// வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி பயணமாகிறார்கள்..துணையாய் நானே///

      சொந்தக்காசில் யாராவதுசூன்யம் வைத்துக் கொள்வார்களா என்ன?

      Delete
    5. இயல்பாகேவே யுவதிகள் இருக்கும் கூட்டத்தில் நாம் ஒத்தையா சிக்கிடோமென்றால் அவர்கள் டாமினேட் பண்ணி நம்மள கலாய்த்து தள்ளிவிடுவார்கள். இதே vice- versa செய்தால் ஒரு யுவதி பரிச்சமில்லாத ஆடவர்களை ஒரு வித மிரட்சியுடேனே பார்க்கக் கூடும். அதனால் 'தல' யை தவிர்த்து இந்த கதையை வேறு யாராலும் Safe பா Handle பண்ண முடியாது.

      Delete
    6. ///// ஒரு வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி துணையாய் 'நம்ம எடிட்டர்'////

      "உங்களுக்கெல்லாம் இப்ப ஒரு கவிதை சொல்லப் போறேன் கண்ணுகளா.."ன்னு ஒவ்வொருத்தர் முகத்தையும் நெருங்கி டைட்-க்ளோஸ்அப்'பில் விழிகளை உருட்டியிருப்பாரு.. தொடர்ந்த வினாடிகளில் அத்தனை யுவதிகளும் கோச்சு வண்டியிலேர்ந்து குதிச்சு மலைச்சரிவில் உருண்டிருப்பாங்க!
      'அப்பாடா.. வண்டி காலி!'னு கால்களைத் தூக்கி எதிர்புற சீட்டில் வைத்தபடியே லேப்டாப்பில் "நண்பர்களே வணக்கம்! தறிக்கெட்டு ஓடும் கோச்சுவண்டியினுள் ஒற்றை ஆளாய் பயணக்க நேரிட்ட ஒரு தருணத்தில் இப்பதிவை.."னு டைப் பண்ண ஆரம்பிச்சிருப்பாரு!!

      இதெல்லாம் உண்மையா நடந்திருக்கவும் நிறையவே வாய்ப்புகள் இல்லாமலில்லைதான்! ஹீ..ஹீ !!

      Delete
    7. //// ஒரு வேகன் நிறைய்ய யுவதிகள் புது வாழ்க்கையை தேடி துணையாய் 'நம்ம எடிட்டர்'//

      ஏனுங்க சார் - நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு ? நம்மளைக் கோர்த்து விட்டு அந்தப் புள்ளைங்களை மிரட்டணுமா - என்ன ?

      "தூக்கத்திலே கூட இந்த அங்கிள் / தாத்தா ஒன்றரைக்கண்ணால் என்னை நோட்டம் விட்டுக்கிட்டே இருந்தார்னு " அந்த எம்மாகிட்டே புள்ளீங்க புலம்பினா நடுமண்டையை அந்தம்மா பதம் பார்த்து வைக்கப் போகுது !

      Delete
    8. தலைவரே வித்தியாசமான பார்வையில்,சிந்தனையில் இரகளையா அசத்திட்டிங்க போங்க.....

      Delete
    9. புள்ளைங்களை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டதற்கு, நடுமண்டை என்ன இந்த உடம்பையேப் பதம் பார்த்தாலும் தப்பில்லைன்னு ஒரு மைண்ட் வாய்ஸ் எங்கேயோ கேக்கிறாப்பல கீதே...?

      Delete
    10. கோச்சு வண்டியில் இல்லை. நிஜத்தில் நடந்தது. ஆனால் பாரிஸில் ட்ரெயினில் என ஒரு ஃப்ளாஷ்பேக் விரைவில் வரலாம் என்று எனக்குத் தோணுது.

      Delete
    11. ஹாஹாஹா, வேற லெவல். கலக்கிட்டீங்க

      Delete
    12. சிரிக்க சிரிக்க எழுதியிருக்கீங்க பாஸு... கலக்கல் கற்பனை

      Delete
  23. பனி அசுரர் படலம்:
    ஆர்ச்சியை சிறிய இடைவெளிக்குப் பின்னர் காண்பது மகிழ்ச்சி,அதுவும் வண்ணத்தில் காண்பது கூடுதல் மகிழ்ச்சி...
    காடுகள் சார்ந்த களத்தை வண்ணத்தில் அசத்தலாய் அளித்துள்ளனர்,கதையெங்கும் முழம்,முழமாய் காதில் பூ இரகம் என்றாலும் இது ஜாலியான அனுபவம்தான்.
    லாஜிக் கண்ணாடியை கழட்டிட்டா ஜாலியாய் ஆர்ச்சியுடன் பயணிக்கலாம்...
    யார் கண்டது குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த இதழாய் அமையவும் வாய்ப்புண்டு, அவர்களுக்கு இந்த வாசிப்பு ஓர் அலாதியான அனுபவத்தையும் நல்கலாம்...

    ReplyDelete
  24. தனித்திரு,தணிந்திரு...!
    தேவையென்றால் அற்ப சுகத்திற்காக நிறபேதத்தை மறந்து சுயநலத்திற்காக கீழ்த்தரமான எண்ணங்களோடு அப்பாவிகளை பயன்படுத்திக் கொள்வதும்,தேவைகள் முடிந்தவுடன் ஓடிப்போன நிறபேதம் வந்து ஒட்டிக் கொள்வதும்,அடடா மனிதரில் இப்படியும் அற்ப பிறவிகள்...!!!
    உரிமைகளை கோரும்போது தலையெடுக்கும் நிறவெறியானது அற்ப சுகத்திற்காக காணாமல் போவது உண்மையில் நகைமுரண்தான்.....
    நிறங்களை வைத்து குணங்களை மதிப்பிடுவது மனித இனத்தின் அவலமும்,சங்கடமும் ஆகும்...

    வழக்கமான பழிவாங்கல் கதை,பின்னணியில் உள்ள காரணம் சோகத்தையும்,கதைக்கான அழுத்தத்தையும் தருகிறது...
    கதைக்களம் பெரும்பாலும் இருள் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பது,கறுப்பின மக்களின் அவல வாழ்வை குறிப்பிடும் தற்செயல் குறியீடோ ???!!!
    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
    Replies
    1. ///உரிமைகளை கோரும்போது தலையெடுக்கும் நிறவெறியானது அற்ப சுகத்திற்காக காணாமல் போவது உண்மையில் நகைமுரண்தான்.....////

      அட்டகாசமா எழுதியிருக்கீங்க அறிவரசு அவர்களே!!

      Delete
    2. இது நிதர்சனமான உண்மையும் கூட.

      Delete
    3. விமர்சனம் நல்லாருக்கு👌

      Delete
  25. //தூரத்து தினத்தில் கூர்மண்டையரும் மினுமினுப்பாரோ - என்னவோ//

    இஸ்பைடரு கலர் புக்கு 2 புக்கிங் கன்பார்ம் சார். எந்த மாசம், எவ்வளவு விலைன்னு சொல்லிட்டா வசதியா இருக்கும்...

    ReplyDelete
  26. டியர் எடி,

    ஆர்ச்சி முதன் முதலில் அறிமுகமானது, இரு வண்ணத்தில் தற்போதைய மேக்ஸி சைஸ் பாரமேட்டில் லயன் 4வது இதழாக 1984ல். அந்த இதழ் கூட திடீரென்று திட்டமிடபட்டு, நமது இதழ்களின் முதல் ஸ்பெஷல் ஆக தான் வெளிவந்தது என்று உங்கள் ஹாட்லைனில் படித்திருக்கிறேன். அப்போது இந்த இதழ் வாங்கும் அனுபவம் கிட்டவில்லை.

    36 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ஆர்ச்சி அதே சைஸில், இம்முறை முழு வண்ணத்தில், ஒரு திடீர் இதழாக வெளிவந்திருப்பது, ஆச்சர்யமான ஒற்றுமை. முன்பு தவற விட்ட அனுபவத்தை, இப்போது நிவர்த்தி செய்ய முடிந்தது.

    ஏற்கனவே ஸ்டீல்க்ளா ஆதிகாலத்திலேயே வண்ணத்தில் வந்துவிட்டார், மாடஸ்தி'யும் சமீபத்தில் வண்ண முகம் காட்டிவிட்டார். அடுத்து இருப்பது, ஸ்பைடர் கலர் இதழ் மட்டுமே.... அதற்கும் நேரம் பிறக்கும் என்று நம்புவோமாக.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை, அந்த இருட்டு அட்டையை பயன்படுத்தவில்லை. ஆர்ச்சியின் நண்பர்கள் ஒரிஜினல் ஓவியரால் அந்தளவு மொக்கையாக வரையபட்டிருக்கிறார்கள். அவர்கள் முடி சிங்காரமும், முக லட்சணமும், Rebellion'ஐ அலற வைத்திருக்கும் என்று நம்பலாம் :)

      பளீரென்ற மஞ்சள் அட்டை இந்த landmark இதழுக்கு சரியான தேர்வு.

      Delete
    2. //அடுத்து இருப்பது, ஸ்பைடர் கலர் இதழ் மட்டுமே.... //

      அண்ணன் ஆர்ச்சி வெற்றியாக்கிக் காட்டட்டும் சார் ; அண்ணாத்தேக்கும் ரூட் போட நாள் பார்ப்போம் !

      Delete
  27. தனித்திரு தணிந்திரு
    simply the best, கருப்பினத்தவர் மேல் நடக்கும் வன்கொடுமை,
    தன் பேத்தியின் கொடூர மரணத்துக்கு காரணமானவர்களை 8 வருடத்திற்கு பிறகு, பழிவாங்கும் தாத்தா.
    அருமை


    ReplyDelete
  28. இங்கே உள்ள ஆர்ச்சி வண்ண அட்டைப்படம் நன்றாக உள்ளது. முக்கியமாக ஆர்ச்சி மற்றும் பின்னால் உள்ள கோட்டை. விக்டர் மற்றும் தாம்சனை மட்டும் எடுத்து விட்டு கூட இந்த படத்தையே கூட உபயோக படுத்தி இருக்கலாம்.

    மஞ்சள் நிறத்தில் ஆர்ச்சி புகையும் உயர கிளம்பும் படம் பார்க்கும் எங்களை கட்டி இழுத்து உயரே வானத்திற்கு கொண்டு செல்வது உண்மை.

    ReplyDelete
  29. ஸ்பைடர் கலரில் களம் கண்டால் விற்பனையில் மட்டுமல்ல எதிர்பார்ப்பிலும் உச்சத்தை அடைவார்

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் மகிஜி. & ரம்மி ஜி. இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  31. ஸ்டீல் ஜி பரவால் 'லதா'.யாருங்க அது லதாதளத்துக்கு வரும்போதெல்லாம் கூட்டிக்கிட்டு வந்தற்றீங்க. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. மக்கள் திலகத்தோட ஹீரோயின் தான்.

      Delete
    2. இது ஏழு முதல் எழுவது வயது வரைக்காணோர்க்கு நண்பரே...எந்த வயதினர் பார்ப்பாரோ அவருக்கே ம்ம் புலப்படும்...பத்துக்கு புரட்சித் தலைவர் லதா ...உங்களுக்கு சாதா லதா

      Delete
  32. பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே!

      Delete
    2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மஹி!

      Delete
    3. பிறந்ததின வாழ்த்துக்கள் சார் !

      Delete
  33. ///கால்களைத் தூக்கி எதிர்புற சீட்டில் வைத்தபடியே லேப்டாப்பில் "நண்பர்களே வணக்கம்! தறிக்கெட்டு ஓடும் கோச்சுவண்டியினுள் ஒற்றை ஆளாய் பயணக்க நேரிட்ட ஒரு தருணத்தில் இப்பதிவை.."னு டைப் பண்ண ஆரம்பிச்சிருப்பாரு!!///

    சூப்பர் ஈவி!

    அட்டகாசம்!

    என்னமோ தெரியல இந்த டயலாக் படித்ததும் லக்கிலூக்கும், எடிட்டரும் மாறி மாறி தெரியாராங்க!

    ஒரு லக்கி லூக் கதையில் இம்மாதிரி ஒரு எடிட்டரோடு பயணப் பட்டால் எப்படி இருக்கும்!!

    எடிலூக் படலம்னு பெயரையும் வைச்சரலாம்!

    ReplyDelete
    Replies
    1. அதாச்சும் நான் ஜாலி ஜம்ப்பர் கிட்டே நாலு உதையும் ரின்டின்கேன் கிட்டே நாலு கடியும் வாங்கணும் ! எத்தினி நாள் திட்டம் சார் இது ?

      Delete
  34. ///Arivarasu @ Ravi13 September 2020 at 11:50:00 GMT+5:30
    பிசாசுப் பண்ணை:
    முதல் பக்கத்திலேயே அலப்பறை ஆரம்பிச்சிடுது,
    "நாற்றம் குடலைப் புரட்டுது ! மூட்டையைக் கட்டுடி ! நாம் எங்கேயாவது ஓடிப் போயிடலாம் !"
    "உங்க அழுக்கு சாக்ஸ் கூட இத்தனை கப்படிச்சதில்லை !"

    புனுகுப் பூனை கேள்விப்பட்டிருக்கிறேன் அதென்ன துருவப் பூனை?!///

    துருவ பூனை ??? பழைய மொழிபெயர்ப்பு என்பதால் ஏற்பட்ட குளறுபடி ..
    Polecat என்பதை அப்படியே வாலிப எடிட்டர் துருவ பூனை என மொழி பெயர்த்து இருக்கிறார் ...அப்ப அவ்வளவா வசதி இல்லை ஆராய ....
    Pole –ங்கறது poule அப்டிங்கற பிரஞ்சு வார்த்தையின் திரிபு ..பிரஞ்சில poule-ன்னா poultry..அதாவது முக்கியமா chicken---
    chicken---அதிகமா விரும்புற பிராணி....
    ful cat அப்டிங்கற ஓல்ட் ஆங்கில வேர்ஷனின் திரிபா கூட இருக்கலாம்
    ful அப்டின்னா foul –ன்னு அர்த்தம் வருது
    Polecat எதிரிகள் கிட்ட இருந்து தப்பிக்க வாலுக்கு அடியில் இருந்து துர்நாற்றம் வீச கூடிய திரவத்தை பீச்சும் ...இதை யாராலயும் சகிக்க முடியாது ..அந்த நேரத்துல ஓடி போய்டும்..
    எடிட்டர் இதன் உண்மையான –polecat -என்பதன் மொழிபெயர்ப்பான கீரியினத்தை சேர்ந்த ஒருவகை மர நாய் அப்படின்னு எழுதியிருந்தா நாம தலையை பிச்க்க்க வேண்டியதுதான்

    ஆனா அந்த பேனலே ஒரு ஜோக்குதான் ..
    அந்த படத்துல கீழே ஓடறது stoat weasel அப்டிங்கற மர நாய் ..
    கப்பு தாங்க முடியிலன்னு அதே பேனல்ல மேல சொல்றது
    American polecat –அப்டின்னு சொல்லப்படுற skunk..[தமிழ்ல முடைவளிமா ]..இதுவும் துர்நாற்றம் வீச கூடிய பொருளை பீச்சி அடிக்க கூடியதுதான் ..
    அதாவது European polecats ஏற்படுத்தும் துர்நாற்றத்தை American polecats தாங்க முடியிலயாம் ..



    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ///Polecat எதிரிகள் கிட்ட இருந்து தப்பிக்க வாலுக்கு அடியில் இருந்து துர்நாற்றம் வீச கூடிய திரவத்தை பீச்சும் .///

      மிஸ்டர் செனா அனா...
      உலகிலுள்ள எல்லா மிருகங்களுமே வாலுக்கு அடியிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடிய திரவத்தைத்தான் பீச்சியடிக்கின்றன!
      அப்படியிருக்க, பூனைகளை மட்டும் அவமரியாதை செய்யும் விதத்தில் நீங்கள் எழுதியிருப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்!!

      Delete
    3. ஹா...ஹா..ஹா...

      பட் யூ மிஸ்ட் தி பாய்ண்ட்..

      போல்கேட் ஈஸ் நாட் எ கேட் ..

      இட்ஸ் எ மிக்ஸர் ஆஃப் டாக்ஸ் அண்ட் ரோடன்ட்ஸ்...

      Delete
    4. துருவப்பூனை என்று ஏதாச்சும் மெய்யாலுமே உண்டா ? என்பதை அந்நாட்களில் இதற்குப் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்களிடம் தான் கேட்கணும் சார் !

      Delete
    5. அப்படீன்னா அதை ஏன் 'பூனை'னு சொல்லணும்றேன்?!!

      அதெல்லாம் முடியாது! பூனை இனத்தையே நீங்கள் களங்கப்படுத்தியிருப்பதை மறுக்க முயற்சிக்காதீர்கள்!!

      பரிகாரமாக, பூனைகளின் அருமை பெருமைகளைப் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இங்கே ஒரு கட்டுரை எழுதினால் மட்டுமே நீங்கள் சிலபல பிறாண்டல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும்!

      ன்னான்றீங்க?

      Delete
    6. //துருவப்பூனை என்று ஏதாச்சும் மெய்யாலுமே உண்டா ? என்பதை அந்நாட்களில் இதற்குப் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்களிடம் தான் கேட்கணும் சார் !//

      ஓ!!!

      Delete
    7. Literal translation ஆகியிருப்பதை இந்த நொடியில் தான் உணர்கிறேன் சார் !

      Delete
    8. //அப்படீன்னா அதை ஏன் 'பூனை'னு சொல்லணும்றேன்?!!//

      பேரு வச்சவங்கள சொல்லணும்..:-)

      Guinea pig - ன்னு பேரு வச்சாங்க

      ஆனா

      அது அதுக்கு guinea சொந்த ஊரில்ல..

      Pig -ன்னாங்க அது பன்றியுமில்ல

      குட்டியூண்டு எலி மாதிரி..( ஆனா எலி இனமில்ல...எலி மாதிரி)


      ஆனா பேரு guinea pig ...செம பெட் அனிமல்....பாவம் லேப்ல டெஸ்ட் பண்றதெல்லாம் பெரும்பாலும் இத வச்சுத்தான்...

      Delete
    9. //Literal translation ஆகியிருப்பதை இந்த நொடியில் தான் உணர்கிறேன் சார் !./

      அறிவரசு ரவி நண்பரின் கேள்விக்கான தேடல்தான் சார் அது!

      இணையம் இல்லாத அக்காலத்தில் கருணையானந்தம் சாருக்கும் இதே கஷ்டம்தான் சார் இருந்திருக்கும் ...

      Delete
    10. //பரிகாரமாக, பூனைகளின் அருமை பெருமைகளைப் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இங்கே ஒரு கட்டுரை எழுதினால் மட்டுமே நீங்கள் சிலபல பிறாண்டல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும்!//

      அழகான பெண்பூனையொன்றின் படத்தை அனுப்பினா போதாது?;-)

      Delete
    11. ///பாவம் லேப்ல டெஸ்ட் பண்றதெல்லாம் பெரும்பாலும் இத வச்சுத்தான்...///

      த்சொ பாவம்!! ஊரு, பேரு - ரெண்டுமே சரியா அமையலீன்னா இப்படித்தான் கிடந்து சாகணும் போலிருக்கு!! 🙀🙀🙀

      ///அழகான பெண்பூனையொன்றின் படத்தை அனுப்பினா போதாது?///

      அந்த ரெண்டு பக்க கட்டுரையில இந்தப் படத்தை வேணுமின்னா ஒரு அரைப் பக்கத்துக்குக் போட்டுக்கிடலாம்!!😼😼😼

      Delete
    12. விளக்கத்திற்கு நன்றிகள் செனா அனா ஜி...

      Delete
    13. // அதெல்லாம் முடியாது! பூனை இனத்தையே நீங்கள் களங்கப்படுத்தியிருப்பதை மறுக்க முயற்சிக்காதீர்கள்!! //
      அதுசரி நாலுகால் பூனையை வம்புக்கு இழுத்தால்,இரண்டு கால் பூனை ஏன் அழுகாச்சி பண்ணுதாம்...

      Delete
  35. சார் உங்களுக்கு அது ஆயிரத்தில் ஒன்று
    ஆனால் வாங்கும் எங்களுக்கு அது ஒன்று தானே. பணத்தை விட பெரிதும் விரும்பும் காமிக்ஸ் இப்படி வந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கும் தானே சார். தவறு நடப்பது இயல்புதான் ஆனால் அதற்காக வாங்குபவர்கள் வருத்தம் தெரிவிக்க கூடாதா. மடங்குவதை விட சில சமயம் படங்களே கசகச என்று கூட இருந்துள்ளது.

    ஆயிரம் புத்தகங்களின் பைண்டிங்கினில் ஒன்றேயொன்றின் மூலை கசங்கியிருந்தால் கூட - "குற்றம்...!! நடந்தது என்ன ?" என்ற புலனாய்வுகள் துவங்கிடும் என்பது நமது ஜாலியான நடைமுறைகள் ஆச்சே

    ReplyDelete
    Replies
    1. வருத்தம் தெரிவிக்கலாம் நண்பரே ; அவசியமென்றால் நாலு சாத்து கூடச் சாத்தலாம் தான் ! ஆனால் நடைமுறையிலிருப்பது என்னவென்பது நீங்களோ - நானோ அறியாததா ?

      Delete
    2. சோத்துல கல் கிடந்தா தூக்கி போட்டுட்டு சாப்டலாம்....அந்தசிறுகல்ல தூக்கி செங்கலப்பாருன்னு காட்டுவது இயல்பல்லவே....ஜாலிதா

      Delete
    3. // ஆனால் நடைமுறையிலிருப்பது என்னவென்பது நீங்களோ - நானோ அறியாததா ? //

      உங்களின் வேதனை புரிகிறது சார்.

      Delete
    4. //சார் உங்களுக்கு அது ஆயிரத்தில் ஒன்று
      ஆனால் வாங்கும் எங்களுக்கு அது ஒன்று தானே. பணத்தை விட பெரிதும் விரும்பும் காமிக்ஸ் இப்படி வந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கும் தானே சார்.//

      +1

      Delete
  36. ட்ரம்புக்கு எதிரணியில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஷெரீஃபுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  37. பிசாசு பண்ணை !!!

    எல்லாமே புதிதாக படித்த கதைகள்!!

    செம காம்பிலேஷன்..!!!!

    ஒவ்வொரு கதையும் ஒன்பது மதிப்பெண்களுக்கு மேல்தான் பெறுகின்றன..


    அல்லிஸ்டர் மரம்!!!! :-))))

    இப்ப நினச்சாலும் சிரிப்பு வருது!!!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை நூறுக்கு நூறு உண்மை.

      Delete
    2. ///அல்லிஸ்டர் மரம்!!!///

      மீ.. டூ...

      Delete
  38. /// அதெல்லாம் முடியாது! பூனை இனத்தையே நீங்கள் களங்கப்படுத்தியிருப்பதை மறுக்க முயற்சிக்காதீர்கள்!!///

    உங்கள் கோபம் நியாயமே ஈ.வி.
    களங்கம் என்றால் இனத்தவர் மானம்
    காத்திட எழுவான் அவர் பிள்ளை. என்று
    கண்ணதாசன் சும்மாவா சொன்னார்.
    புகழுக்குரிய மானமென்றால்
    உலகிற்கே ஒரே இனம்
    என்று இலக்கணம் கற்றுத்
    தந்தவர் நாங்கள்.என்று கட்டபொம்மனாக
    சிவாஜி கர்ஜித்ததும் உமக்காகவே.
    வாழ்க உமது பூனைத் தொண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பத்து சார்!! இதன்மூலம் நீங்கள் பூனைகளின் கடவுளான 'பாஸ்டெட்'(Bastet)டின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள்!!

      Delete
  39. நீங்க எதுவும் என்னைத் திட்டலியே.

    ReplyDelete
  40. ///..செம பெட் அனிமல்....பாவம் லேப்ல டெஸ்ட் பண்றதெல்லாம் பெரும்பாலும் இத வச்சுத்தான்.///

    எங்க வீட்டம்மா டெஸ்ட் பண்றதெல்லாம் என்னை வச்சுத்தான்.(வச்சு செய்யறதுங்கிறது இது தானோ?)

    ReplyDelete
  41. /// ஊரு, பேரு - ரெண்டுமே சரியா அமையலீன்னா இப்படித்தான் கிடந்து சாகணும் போலிருக்கு!!///

    உங்க அதிர்ஷ்டம். உங்களுக்கு ரெண்டுமே சரியா அமைஞ்சிருச்சி.

    ReplyDelete
    Replies
    1. அடடே!! ஆமால்ல?!!
      நன்றிகள் பத்து சார்!!🤩🤩🤩

      Delete
  42. பந்தம் தேடிய பயணம்:
    ஓரேகானை நோக்கிச் செல்லும் அசாதாரண வழித்தடத்தில் ஓர் தொடர் கொலையாளியை தேடிச் செல்லும் டெக்ஸ் & கார்ஸன் குழு,
    தங்களின் எதிர்கால மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஓரேகான் நோக்கிச் திடச்சித்தத்துடன் செல்லும் மகளிர் குழு....
    பாதுகாப்புக் கருதி மகளிர் குழுவுடன் நம்மவர் பயணிக்க...

    எதிர்ப்படும் இன்னல்களை எவ்வாறு அக்குழு களைகிறது???

    தொடர் கொலையாளியை டெக்ஸ் கண்டுபிடித்தாரா???

    மகளிர் குழுவின் நோக்கம் நிறைவேறியதா???

    அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியதா???
    விடை காண வாசியுங்கள்....
    ப.தே.ப.....
    அப்பப்பா செல்லும் வழியில்தான் எத்தனை,எத்தனை சோதனைகள்...
    பயணிகள் பாதுகாப்பாய் இலக்கை சென்றடைய வேண்டும் என்ற பதட்டம் நமக்கும் தொற்றிக் கொள்வது கதையின் வெற்றி...

    கதையின் பின்பகுதியில் எதிர்பார்த்தது போலவே பல அதிரடி திருப்பங்கள்,சிலவற்றை கணிக்க இயலவில்லை...

    சில சமயங்களில் இக்கதையில் வரும் கெவின் ஃப்ளட்சரை போலத்தான் பலரது வாழ்வும் அமைந்து விடுகிறது.
    அவர்களின் தீர்மானம் ஒன்றாக இருக்கும்,ஆனால் சில குறிக்கீடுகள்,இடையூறுகளால் வாழ்வின் போக்கே மாறிவிடும்,எனில் தீர்மானிப்பது நாமா ??? வாழ்வா ???


    என்னைக் கவர்ந்த வசனங்கள் சில,
    1."நல்லவர்கள் யாராக இருந்தாலும் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் முன்னர் சகலத்தையும் யோசிக்கத்தான் செய்வர் !"
    2."தோட்டாவைப் பரிசளிப்பதற்குப் பதிலாகக் கருணையுடன் பேசிக் கொண்டிருப்பதால் அவ்விதம் நினைக்கத் தோன்றுகிறதோ ?"
    3."சாதுக்கள் சதா நேரமும் சாத்வீகமாகவே இருப்பதில்லை ஜெர்ரி !"


    அட்டைப்படம் செம கெத்து...
    இந்த சாகஸம் வண்ணத்தில் வெளியாகியிருந்தால் இன்னும் மிரட்டலாய் இருந்திருக்குமோ...

    டெக்ஸ் & கார்ஸன் குழு மகளிர் குழுவுடன் பயணிப்பது மட்டுமே பிரதான நோக்கமாய் கொண்டு கதைக்களம் அமைந்திருப்பின் சற்றே சாதரணமாய் அமைந்திருக்கலாம்,கூடுதலாய் தொடர் கொலைகாரனை தேடும் காரணம் அமைந்தது கதைக்கு கூடுதல் வலுவாய் அமைந்து விட்டது போலும்...

    பொதுவில் ஒரு கதைக்கு வலுவான எதிரி அமைந்தால்தான் கதைக்களம் சிறப்பாய் அமையும் என்ற கருத்து உண்டு,அக்கருத்துகளை அடித்து நொறுக்கி விறுவிறுப்பான வாசிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது இக்களம்...


    வரலாறும் டெக்ஸும் பின்னிப் பிணைந்து நமக்கு அலாதியான அனுபவங்களை நல்குவதால் நம்மவரை வரலாற்று நாயகர் என்று அழைப்பதில் தவறில்லை என்பேன்....
    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. அடி தூள் விமர்சனம்!!

      Delete
    2. எல்லா பெருமையும் நண்பர்களுக்கே...

      Delete
    3. ரவி அண்ணா அருமையான விமர்சனம். எப்போதும் போல இப்போதும் அனைத்து கதைகளுக்கும் விமர்சனம் எழுதி முடித்து விட்டீர்களே.

      Delete
    4. மணியான கதைக்கு மகுடமான விமர்சனம் ரவி!

      டயலாக் உதாரணங்கள் சிறப்பு!

      தொடர்ந்து ஜமாயுங்கள்!

      Delete
  43. சூப்பர் விமர்சனம் ஜி. கலக்குறீங்க. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  44. Archie was great. My son wanted me to read it for him. We enjoyed.

    ReplyDelete
  45. Archie was great. My son wanted me to read it for him. We enjoyed.

    ReplyDelete
    Replies
    1. யெஸ். அழகான நிகழ்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      Delete
    2. நானும் முதலில் படிக்கையில் ஏழுவயதுதான்...இரும்பு மனிதன்...அதன் பிரம்மிப்பே கதைகளை படிக்கத் தூண்டியது...நிச்சயம் தேடும் ஆர்வத்தை கிளறி தீனி போடும்... வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
  46. /// நாலுகால் பூனையை வம்புக்கு இழுத்தால்,இரண்டு கால் பூனை ஏன் அழுகாச்சி பண்ணுதாம்...///

    இது என்னங்க கேள்வி? வலது கண் கலங்கினா இடது கண்ணும் கலங்காதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. பாயிண்டுதான்...ஹி,ஹி...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. // இது என்னங்க கேள்வி? வலது கண் கலங்கினா இடது கண்ணும் கலங்காதா என்ன? //

      அதானே :-)

      Delete
  47. நாளை ஒரு இ.ப புக்கிங் சா.கு சென்னை ..
    இது இன்னும் கூடிட்டே போகனும்

    இ.ப மறுபதிப்பு வரனும் கடைசி கடைசியாய் ...

    ஒரு ஆர்வம்தான் ... 💐💐💐

    ReplyDelete
  48. Online book fair idea fulla effective ah implement Panna mudiyuma sir? That feel good factor is understandable but All done in video call means some may miss it while selecting sir. In addition to that why can't the entire books be listed also sir? This will be a supplement in case...

    ReplyDelete
    Replies
    1. ஆபீசில் சும்மா கிடக்கும் ரேக்குகளில் புக்ஸை அடுக்கப் போகிறோம் ; சுமாரான வேலைப் பளுவே எனும்போது சும்மா இருக்கும் நேரங்களைச் செலவிட எண்ணுகிறோம் & கிட்டங்கியில் சும்மா கிடக்கும் புக்ஸ்களை கிளப்பிட முனைகிறோம் எனும் போது இம்முயற்சியினில் நாம் இழக்க இம்மியூண்டு கூடக் கிடையாதே சார் ! பத்தாயிரம் சேல்ஸ் என்றாலும் why not ?

      And எல்லா புக்ஸுமே ஆன்லைனில் லிஸ்டிங்கில் உள்ளன தானே சார் ?
      இது ஆன்லைனில் browse செய்து தீர்மானிக்க இயலா வாசகர்களின் பொருட்டு என்று சொல்லலாம் சார் !

      Delete
  49. Also other payment processes other than Google pay may also be listed sir. A time frame can be given within which the amount has to be paid for the chosen books so that you may attend on others selection sir.

    ReplyDelete
  50. *நிஜமான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் ஷெரிப் அவர்களை வாழ்த்த வயது உண்டு என்பதால் அவரின் "மனம் "போல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்*


    *இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷெரீப்*



    💐💐💐💐

    ReplyDelete
  51. மகேந்திரன் அவர்களுக்கும், ரம்மி அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. தலைவர்கள் எவ்வழி, தொண்டர்கள் அவ்வழி.

    ReplyDelete
  53. எனது இரண்டு வயது மகளுக்கு Maxi ஆர்ச்சியின் அட்டை படம் மிகவும் பிடித்திருக்கிறது...
    " அசுதன் அசுதன்(அசுரன்) சோய்ய்யீ..." என்று மழழைக்கே உரிய ஆச்சரியத்தோடு கதை சொல்கிறாள்
    அவள் பார்க்கும் தீபாவளி பற்றிய கார்ட்டூன் பாட்டில் வரும் நரகாசுரனை ஆர்ச்சியை கம்பேர் செய்தது ஏன் என்று அவளுக்கே வெளிச்சம்!!!

    ReplyDelete
  54. சார், இரும்பு மனிதன், கொலைப்படை இரண்டையும் maxi சைஸ்ல் போட்டால், எங்களை போன்று நீண்டநாள் தேடி கிடைக்காமல் இருக்கும் வாசகர்களுக்கு வண்ணத்தில் படிக்கும் மற்றும் சேகரிக்கும் இரட்டை சந்தோசமாக இருக்கும், வாய்ப்பு உண்டா சார்?

    ReplyDelete
  55. தனித்திரு,தணிந்திரு...!
    தேவையென்றால் அற்ப சுகத்திற்காக நிறபேதத்தை மறந்து சுயநலத்திற்காக கீழ்த்தரமான எண்ணங்களோடு அப்பாவிகளை பயன்படுத்திக் கொள்வதும்,தேவைகள் முடிந்தவுடன் ஓடிப்போன நிறபேதம் வந்து ஒட்டிக் கொள்வதும்,அடடா மனிதரில் இப்படியும் அற்ப பிறவிகள்...!!!
    உரிமைகளை கோரும்போது தலையெடுக்கும் நிறவெறியானது அற்ப சுகத்திற்காக காணாமல் போவது உண்மையில் நகைமுரண்தான்.....
    நிறங்களை வைத்து குணங்களை மதிப்பிடுவது மனித இனத்தின் அவலமும்,சங்கடமும் ஆகும்...

    வழக்கமான பழிவாங்கல் கதை,பின்னணியில் உள்ள காரணம் சோகத்தையும்,கதைக்கான அழுத்தத்தையும் தருகிறது...
    கதைக்களம் பெரும்பாலும் இருள் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பது,கறுப்பின மக்களின் அவல வாழ்வை குறிப்பிடும் தற்செயல் குறியீடோ ???!!!


    விமர்சன உதவி...


    ( நன்றி திரு அறிவரசு ரவி அவர்கள்..)

    ReplyDelete
  56. மறுபதிப்பை பொறுத்த வரையில், மேக்ஸியோ, வேறு ஏதோ சைஸோ இன்னமும் ஒருமுறை கூட மறுபதிப்பாக வராத கதைகளை போடுவதால் எல்லோருக்கும் பலனாக இருக்கும் ஐயா.

    1990-க்கு முன்பாக வந்த கதைகளில் பழிக்குப் பழி, இரத்த முத்திரை, அதிரடி கணவாய், எமனோடு ஒரு யுத்தம் ஆகிய கதைகள் இன்னமும் மறுபதிப்பு காணவில்லை. இந்த கதைகளில் ஏதாவது ஒன்றை அதே சைஸிலோ, மேக்ஸியிலோ அல்லது நீங்கள் விரும்பும் எந்த சைஸிலுமோ வண்ணத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    கழுகு வேட்டை, மரணமுள், இரத்த வெறியர்கள், நள்ளிரவு வேட்டை, மந்திர மண்டலம் கதைகளை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முயற்சி செய்தால், வரிசைப்படி வகையாக நிறைவேற்றலாமே...

    இந்த விஷயத்தில், தலை வாங்கிக் குரங்கு ஏற்கனவே மறுபதிப்பு செய்து விட்டதால், கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்....

    ReplyDelete
  57. Today I was going through the "Tamil comics Ulagam" blog. Junior Lion's Alibaba and Mustafa are my favorite ... can we get those stories as reprint sir? Just a humble application :-)

    ReplyDelete
  58. பந்தம் தேடிய பயணம்....

    என்னவொரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் இம்மாத இதழ்கள்..

    தணித்திரு தணிந்திரு பெண்களை போகப்பொளுளாக்கி கொடுமைப்படுத்தி பழிவாங்கும் ஒருவனின் சோக கதை எனில் பந்தம் தேடிய பயணம் பெண்களுக்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாது துணையாய் பயன்படும் நாயகர்களின் கதை...

    ஒரு விருந்தோம்பலை செமயாக முடித்து விட்டு தூக்க கலக்கம் இருந்த மனநிலையோடு இதழை வாசிக்க ஆரம்பத்தேன்..ஒரு நான்கு பக்கம் முடித்திருப்பேன்..தூக்க கலக்கத்தில் படிக்கும் கதையா இது என பரபரவென கைகால் ,முகம் அலும்பி தூக்க கலக்கத்தை விரட்டியடித்து புத்துணர்ச்சியோடு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்.இதோ

    முடிக்கும் வரையில் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை..முடித்தவுடன் இதோ இங்கே வந்து விட்டாயிற்று...அருமை ..அருமை ..அட்டகாசம்...ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்தை முதலாக பார்க்கும் ஆர்வம் போல ஒவ்வொரு டெக்ஸ் இதழை படிக்க ஆரம்பிக்கும் பொழதும் அதே உணர்வுதான் டெக்ஸ் புத்தகங்களை புதிதாக கைகளில் ஏந்தும் பொழுதும் ...அந்த சூப்பர்ஸ்டார் ஆவது ஏதாவது ஒரு முறை தவறலாம்..ஆனால் இந்த காமிக்ஸ் சூப்பர் ஸ்டாரின் இதழை படிக்கும் பொழுது மட்டுமல்ல படித்து முடித்தவுடனும் ஏற்படுத்தும் ஓர் இனிய அனுபவத்தை தர தவறியதே இல்லை.... இந்த பந்தம் தேடிய பயணமும் அவ்வாறே.இறுதியில் டெக்ஸ் தேடி அலையும் அந்த வில்லனின் மீது கோப படுவதா ,வருத்தப்படுவதா என்று கூட தெரியவில்லை...அந்த பெண்களை நினைத்தும் கூட ...ஆனால் அந்த அழகான டெக்ஸ்ன் வசன முடிவுரை தான் மனதில் ஒரு மகிழ்ச்சியை விதைத்து சென்றது..இந்த இதழை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணம் ஒன்று தான்..அடுத்த வருட சந்தாவும் குறைவு...இதழ்களும் குறைவு என்பதை நன்கு உணர முடிகிறது.ஆனாலும் அந்த குறைவான மாதத்திலும் மாதம் ஒரு டெக்ஸ் கொண்டு வர சாத்தியப்படுத்த முடியுமா என்பது மட்டுமே சார்..ப்ளீஸ்...

    அட்டைப்படங்கள் மட்டுமா இந்த இதழின் சித்திரங்களுமே அந்த பெண்களுக்கு துணையாய் டெக்ஸ் உடன் அந்த வேகனில் நாமே உடனிருந்து பயணத்த அனுபவத்தை அப்படியே வாரி வழங்கியது என்பதும் உண்மை..

    மேலும் இந்த முறை டெக்ஸ் கார்ஸனின் உரையாடல்களில் பல இடங்களில் நான் வாய்விட்டு சிரிக்க வைத்த இடங்களும் ஏராளம்...அவை ஒவ்வொன்றையும் குறிப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தாலும் பணி ,நேரமின்மை போன்ற சூழல்கள் அதனை நடைமுறை படுத்த முடியவில்லை என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்..

    பந்தம் தேடிய பயணம் முடிவுற்றது..ஆனால் டெக்ஸின் பயணம் என்றுமே நிறைவுறாது என்பதை மீண்டும் நிரூபித்த மீண்டும் ஒரு இதழ்...

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சும்மா பின்னிடீங்க அருமையான விமர்சனம். கதையை படித்து விட்டு ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து விமர்சனம். உங்க மனதில் உள்ளதை நீங்கள் அப்படியே எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சூப்பர்

      Delete
    2. நன்றி நண்பர்களே..:-)

      Delete
    3. மனதிலிருப்பதை ஆத்மார்த்தான எழுத்துக்களாக்கிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் தலீவரே! அருமையான விமர்சனம்!

      Delete
    4. கலக்கலான விமர்சனம் தலைவரே!

      ///பந்தம் தேடிய பயணம் முடிவுற்றது..///---பயணத்தின் பாடம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

      "//டெக்ஸின் பயணம் என்றுமே நிறைவுறாது என்பதை மீண்டும் நிரூபித்த மீண்டும் ஒரு இதழ்...///---யெஸ்ஸூ தல...!!!

      டெக்ஸின் மற்றொரு பரிணாமத்தை காட்டிய இதழ்.

      Delete
  59. அட்டகாசம் பரணி சார். நிறைவான விமர்சனம்.
    நான் இன்றுதான் கொரியர் ஆபிஸ்க்கு நேரில் சென்று பார்சலை வாங்கினேன். பிரிக்கும் படலம் நாளைதான். Today 2 pm to 10pm Iam in duty.No way.

    ReplyDelete
  60. பனி அசுரர் படலம்: வழக்கமாக கோட்டையை தவறான காலகட்டத்தில் இறக்கி சாகசம் புரியும் ஆர்ச்சி, இந்த முறை நிகழ்காலத்தில் புரஃபஸர் ஒருவர் அழைப்பை ஏற்று தெற்கு ஆசியாவில் நண்பர்களுடன் படகில் சென்று இறங்க ஆரம்பித்தவுடன் ரோவர் காரில் வரும் நபர்களுடன் ஒரு அடிதடி, அதன் பின்னர் புரஃபஸரை சந்தித்து வெள்ளை வைரம் பின்னனால் உள்ள ரகசியத்தை கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்! தாம்சன் மற்றும் விக்டர் அதில் உள்ள ஆபத்தை உணராமல் ஆர்ச்சி இருக்கும் தைரியத்தில் சரி என சொல்லி ஒரு புதிய துளையிடும் வாகனத்தில் புறப்படுகிறார்கள்! அங்கே எடுக்கும் வேகம், விறுவிறுப்பு வித்தியாசமான பனி அசுரர்கள், டைனசோர், வெள்ளை வைரம் என மிரட்டி நம்மை கதையுடன் கட்டி போட்டுகிறது. ஆர்ச்சிக்கு எழுதிய பஞ்ச் டயலாக் செம, simply சூப்பர். மற்றும் ஒரு விஷயம் இந்த கதையில் விக்டரின் புலம்பல் குறைவு. தாம்சன் மற்றும் விக்டரின் வசனங்கள் கதைக்கு தேவையான படி அளவாக இருந்தது சிறப்பு. அதே போல் ஆர்ச்சிக்கு அளவான வசனங்கள், அதிகமாக ஆக்ஷன் என அமர்க்களமாக இருந்தது. கருணையானதம் அவர்கள், இந்த கதையை மிகவும் ரசித்து மொழி பெயர்த்து உள்ளார்கள்; அற்புதம் சார், இந்த கதையை மிகவும் ரசிக்க வைத்தற்கு உங்களின் மொழிபெயர்ப்பு ஒரு காரணம்! வாழ்த்துக்கள்!

    இந்த மாக்ஸி இதழுக்கு ஏற்ற மாதிரி பெரிய மிரட்டும் படங்கள், சில படங்கள் ஒரு முழு பக்கத்திற்கு அல்லது அரை பக்கத்திற்கு என தற்போது வரும் மற்ற கதைகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என ஆர்ச்சி & கோ சொல்லுவது போல் இருந்தது.

    இந்த கதைக்கு வண்ணம் தீட்டிய குருமூர்த்தியும் அவர்களும் பாராட்டுக்கு உரியவர், மிகவும் ரசித்து செய்துள்ளார், வண்ணம் இந்த கதைக்கு ஷங்கர் படம் போல் ஒரு பிரம்மாண்டத்தை கொடுத்து உள்ளது. கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வண்ணத்தை கொடுத்து அதனை கதை நெடுகிலும் அழகாக கொடுத்துள்ளார்!

    நீண்ட நாட்களுக்கு பிறகு அட்டகாசமான ஆர்ச்சி எல்லா விதத்திலும் அனைவரையும் கவரும் விதத்தில்.

    நன்றி விஜயன் சார், ஒரு மறக்க முடியாத இதழை கொடுத்து எங்களின் இளமை காலங்களுக்கு அழைத்து சென்றதற்கு.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் பரணி, அனைவரையும் கவரும் ஆர்ச்சி என்பதில் சந்தேகமேயில்லை.

      Delete
    2. பார்டா ..நம்ம சட்டித்தலையனுக்கு வந்த வாழ்வை !!

      Delete
  61. பிசாசு பண்ணை கதை அருமை. 1993-ஆம் வருடம் பாசில் இயக்கத்தில் மம்முட்டி கனகா நடிப்பில் வெளியான கிளிப்பேச்சு கேட்க வா என்ற திரைப்படம் இதே கதை அமைப்பைக் கொண்டது தான்

    ReplyDelete
    Replies
    1. அப்ப கிளிப்பேச்சு கேட்க வா கதைய சுட்டுதான் பிசாசுப் பண்ணையை உருவாக்கி இருக்காங்க போல...
      வழக்கமா ஹாலிவுட்டில் தான் நம்ம கதைய சுட்டு வடை போடுவாங்க,இப்ப மேற்கத்திய காமிக்ஸிலுமா....!!!
      அய்யகோ தமிழ்திரைக்கு வந்த சோதனை இது......

      Delete
    2. சாரே.. பிசாசுப் பண்ணை உருவானது 1974-ல் ; வெளியானது 1975-ல் ! நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள் அந்தத் திரைப்படம் வெளியானது 1993-ல் என்று !

      இப்போ கணக்குப் போட்டுச் சொல்லுங்களேன் - கோழி முதலில் வந்துச்சா ? முட்டையா என்று !

      Delete
  62. நண்பர்கள் ஸ்டீல் மற்றும் டெக்ஸ் விஜயராகவன் இருவருடன் சேர்ந்து நானும் எனது ஆதரவை தலைவாங்கி குரங்கு maxi க்கு தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ KS.

      பழிக்குப்பழி--யும் அதிரடி ஆக்சன் கதையே!

      டெக்ஸ் vs ரூபி ஸ்காட்-ஒற்றைக்கு ஒற்றை மோதல் காட்சிகள் மேக்ஸியில் கலக்கும்.

      எதுவந்தாலும் சிறப்பு....!!!!

      Delete
    2. பழிக்குப் பழி- கதையில் "கெனோ"--எனும் மிகவும் நேர்மையான மனிதரை சந்திக்கலாம்.

      டைகர்& டெக்ஸின் நடுநிலையை பல இடங்களில் பார்த்து வியந்து உள்ளோம். நடுநிலை தன்மையில் "கெனோ"---கேரக்டர் நம்மை அசரடித்துவிடும்....!


      Delete
  63. தனித்திரு.. தணிந்திரு.
    இனபேதத்தை அடிப்படையாகக் கொண்ட பழி வாங்கும் கதை. குறைவான வசனங்கள். நான் ரசித்தது,"பிறப்பும், இறப்பும் பரமபிதாவின் திட்டங்கள். இந்த சாலின் மெய்யான காரணத்தை அவர் மட்டுமே அறிவார்."
    கதையைப் படித்ததும், நிறவெறிக்கு எதிராக போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் (சீனியர்)கும், நெல்சன் மண்டேலாவும் நினைவில் வந்தனர்.
    அடர் இருண்ட வண்ணக்கலவை கதையின் கனத்தை மேலும் கூட்டுகிறது.

    ReplyDelete
  64. பந்தம் தேடிய பயணம் Starts.
    தோட்டா டைம் படித்தவுடன் ஏனோ என் மனதில் முதலில் தோன்றிய டைட்டில்
    ' Wild West matrimony.com'

    ReplyDelete
  65. பந்தம் தேடிய பயணம்--- டெக்ஸ் தமிழ் கதைவரிசையில் ஒரு மைல்கல்.

    டெக்ஸ் எனும் மெகா ஸ்டாரை சூழலுக்கு கட்டுப்படும் சாதாரண மேற்கத்திய மனிதராக உலவ விட்டுருப்பது கதையின் முதுகெலும்பு!

    வித்தியாசமான ஓவியங்கள் கூடுதல் கவரும் அம்சம்!

    வித்தியாசமான டெக்ஸ் கதைவேணும் எனும் குரல்களை திருப்திபடுத்தும் படைப்பு!

    ஒரே மூச்சில் படிக்கவேண்டிய இதழ்.

    ஒரு கட்டத்தில் எம்மாவோடு நாமும் அந்த தார்பாய் இல்லாத வண்டியில் ஒரு மாலையில் குந்திகிடப்பதான உணர்வு!

    கலிபோர்னியாவை நோக்கி பயணிக்கும் பெண்கள் குழு நம் மனதில் அழுத்தும் பாரம் சிலகாலங்களுக்கு நீடிக்கும்...!!!!

    ஆண்டுக்கு ஒரு படைப்பு இதுபோல டெக்ஸ் வரிசையில் தேர்வாகட்டும் எடிட்டர் சார்.

    (டெக்ஸ் & இரத்தபடல இதழ்களுக்கு அடுத்த மாதத்தில் விரிவான விமர்சனம் பண்ணுகிறேன். தற்போதைக்கு பணிச்சூழல் வெரி டைட் ஆக இருப்பதால் ரெகுலர் ஆக பங்கு பெற இயலவில்லை ஃப்ரெண்ட்ஸ்)

    ReplyDelete
    Replies
    1. // சூழலுக்கு கட்டுப்படும் சாதாரண மேற்கத்திய மனிதராக உலவ விட்டுருப்பது கதையின் முதுகெலும்பு! //
      பாயிண்ட்...

      //டெக்ஸ் தமிழ் கதைவரிசையில் ஒரு மைல்கல்.//
      உண்மைதான்...

      Delete