Saturday, May 30, 2020

நகரும் நாட்கள்...!

நண்பர்களே,

வணக்கம். உலகை உலுக்கிப் போடக்கூடியதொரு உண்மையை கடந்த சில வாரங்களில் ; அதுவும் குறிப்பாய், இந்த ஒற்றை வாரத்தில் கண்டு பிடித்து வருகிறேன் என்று தான் சொல்லணும் !! அதாகப்பட்டது - சுறுசுறுப்பானதொரு மாடு கூட படு சோம்பேறி மாடனாவது செம சுளுவானதொரு பிராஸஸாக்கும் !!  மாங்கு மாங்கென்று வேலை செய்த நாட்களை ; ராவோ, பகலோ ; உள்ளூரோ ; அசலூரோ - எங்கிருந்தாலுமே எதையெதையோ இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றிய தருணங்களை மறப்பதென்பதெல்லாம் சுலபமோ - சுலபமாக்கும் ! சொல்லிக் கொள்ள சாக்கு என்று ஏதேனும் சிக்கினால் போதும் - மல்லாக்கப் படுத்துக் கொண்டே ; வெட்டிப் பொழுதில் ஆயுளில் பாதியைக் கரைக்க மனசு டபுள் ஓ.கே. சொல்லி விடுகிறது ! கடந்த 2 மாதங்களின் கடைமூடிய வேளைகளில், மேற்படி மஹாகண்டுபிடிப்பு  ஜனித்ததெனில் ; இந்தக் கடைசி ஒற்றை வாரத்து அனுபவமானது அதனை இன்னொரு உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது ! ஆமாங்கோ....ஐநூறு, அறுநூறு பதிவுகளை எங்கெங்கேயோ அமர்ந்து டைப்பிய விரல்களே தான் ; வாரம் தவறாது ; நேரம் தவறாது, சொந்தக்கதை, சோகக்கதை ; சோன்பப்டி சாப்பிட்ட கதை என்று எதையெதையோ சொல்லிப் பழகிய பள பளா கபாலமே தான் !! ஆனால் 'லேப்டாப் ரிப்பேர்' என்ற காரணத்தினால், ஒரே ஒரு வாரத்துப் பதிவை மட்டும் ஒரு வீடியோ காணொலியாய் அமைத்துப் பழகிய பிற்பாடு back to the laptop எனும் போது விரல்களும், கபாலமும், ஒருசேர சண்டித்தனம் செய்கின்றன !!  'சும்மா ஜாலியா கால் மேலே கால் போட்டபடிக்கு, மனசில் தோணும் சமாச்சாரங்களை அரை அவரில் ஒப்பித்தால் முடிந்திடும் வேலையை - குறைந்தது நாலைந்து மணி நேரங்களுக்கு நாங்கள் மெனெக்கெட்டு செய்யத்தான் வேணுமா  ?' என்று அவை முன்வைக்கும் கேள்விகளில் "அக்மார்க் சோம்பேறி மாடன் " என்ற முத்திரை பிரதானமாய் மிளிர்கிறது ! "சரி...சரி...மாதத்தில் ஒரேயொரு வாரம் உங்களுக்கு இனி லீவு ; அந்தப் பதிவினை மட்டும்  வீடியோப் பதிவாக்கிடலாம் !' என்று அவற்றைச் சமாதானம் செய்து விட்டு, டைப்படிக்கும் மாமூலுக்குள் புகுந்தால்,  மாறிப் போயுள்ள யதார்த்தங்களை நினைத்து மலைக்காது இருக்க இயலவில்லை ! அட்டவணை எத்தனை கனமாய் அமைந்து போனாலும், "bring them on !!" என்று 'தம்' கட்டிப் பணி செய்ததெல்லாம் ஏதோவொரு கி.மு. - கி.பி. காலத்துப் புராதனம் போல தோன்றிட -  இந்த லாக்டவுன் நாட்களின் பிரதான சேதாரமாய் என்னளவிற்குத் தெரிவது - இத்தனை நாட்களாய் அரும்பாடுபட்டு வளர்த்திருந்த சுறுசுறுப்பே !சத்தியமாய்ப் பின்னணியினில் நீங்களும், உங்களின்செம energetic ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாது போயின் - இந்த newfound சோம்பேறி சுப்பாண்டி அவதாரைப் பின்னுக்குத் தள்ளிட ரொம்பவே திணறிப் போயிருப்பேன் ! இதோவொரு சின்ன உதாரணம் - காத்திருக்கும் அடுத்த செட் இதழ்களைக் கொண்டு !! பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பிலும் இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்களேன் :
 1. SODA - திசை மாறிய தேவதை
 2. 'அதிகாரி' - கைதியாய் டெக்ஸ்
 3. ப்ளூ கோட் பட்டாளம் - போர்முனையில் ஒரு பாலகன்
 4. ஜேம்ஸ் பாண்ட் Black & white - விண்ணில் ஒரு வேதாளம் 
In the normal routine - மேற்படி அட்டவணையின் பணிகளெல்லாம்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தித்திப்புகளை தொந்திக்குள் தள்ளும் லாவகத்தில் ஜிலோவென்று அரங்கேறியிருக்கும் ! 2 x 48 பக்க வண்ண புக்குகள் & அவற்றுள் ஒன்று கார்ட்டூன் எனும் போது - 4 நெய் மைசூர்பாகுகளை விழுங்கும் வேகத்தில் பணிகளை முடித்திருப்போம் ! அந்த 110 பக்க அதிகாரியின் black & white சாகசத்தை - ரெண்டு அதிரசத்தைப் பிய்ச்சு வாய்க்குள் போடும் நேரத்திற்குள் அரங்கேற்றியிருப்போம் ! ஜேம்ஸின் 36 பக்க black & white classic சாகசமோ  - ஒரு பாதாம்கீர் உள்ளுக்குள் என்ட்ரி ஆகிடும் நேர்த்தியில் நிறைவு கண்டிருக்கும் ! ஆனால் இந்தக் கொடுங்கோல கொரோனா வழங்கியுள்ள enforced விடுமுறைகளின் பலனாய் - வண்டி அந்நாட்களது லாம்பிரெட்டா ஸ்கூட்டரைப் போல தத்தித் தத்தி ஓடி வருவதால் - இதோ ஜூன் முதல் தேதிக்குத் தான் 2 வண்ண இதழ்களுமே அச்சுக்குத் தயாராகிடும் நிலையில் உள்ளன !! And தொடரும் நாட்களில் மீதமிருக்கும் 2 black & white இதழ்களும் முழுமை கண்டுவிட்டால் - ஜூன் 10 வாக்கில் அடுத்த செட் இதழ்களை அனுப்பிடத் தயாராகியிருப்போம் ! இம்முறை தமிழகத்தைப் பொறுத்த மட்டிலுமாவது DTDC என்ற திசைக்கு ஒரு பெரும் கும்பிடைப் போட்டுவிட்டு ST மூலமே அனுப்பிடத் திட்டம் !!  திட்டங்கள் நனவாகிட, நமக்கோசரம் நீங்களும் பெரும்தேவன் மனிடோவிடம் ஒரு பிரார்த்தனையைப் போட்டு வையுங்களேன் - ப்ளீஸ் !

SODA !! காத்திருக்கும் புது நாயகரின் அறிமுகம் இது தான் : "My name is SODA, but my real name is Solomon.....David Solomon." மம்மிக்கு மட்டும் என்னைப் பற்றிய நிஜம் தெரிந்திருக்குமேயானால் "என் புள்ளையாண்டான் ஒரு காவல்துறை அதிகாரி !" என்று கெத்தாகச் சொல்லவே பிரியப்பட்டிருப்பார் ! அவரது சுபாவம் அப்படி ; புள்ளை மீதான அபிமானமும் அப்படி ! ஆனால் நியூயார்க்கில் ஏது "கெத்தான அதிகாரிகள்" எல்லாம் ? இங்கே அத்தினி பேரும் "போலீஸ்காரர்கள்" மட்டும் தானே ? அட....எனது NYPD (NewYork Police Department) புராணமெல்லாம்  எதுக்கு இப்போ ? மம்மிக்கு நிஜம் தெரியாது ; நான் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வருகிறேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார் ! தெரியாத நிஜம் மம்மியை ஒருபோதும் நோகச் செய்யப் போவதில்லை என்பதால் அவரது நம்பிக்கையோடு வாழட்டும் என்று விட்டுவிட்டேன் ! போலீஸ் உத்தியோகத்தில் இருந்த டாடி செத்த பிற்பாடு போன வருஷம் தான் ஊரிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார் - என்னோடு காலத்தைத் தள்ளிட ! So மம்மியின் திருப்திக்கு pastor ஆகவும், நிஜத்தில் ஒரு NYPD போலீஸ்காரனாகவும் குப்பை கொட்டி வருகிறேன் நான் !!"

1986-ல் துவங்கிய இந்த SODA தொடரானது உலகின் தலைநகராய் விளங்கும் நியூயார்க்கின் இருண்ட பக்கங்களை செம ஜாலியாய்ச் சொல்ல முனையும் ஒரு படைப்பு ! க்ரீன் மேனர் பாணியில், இங்குமே இறுக்கமான கதைக்களத்திற்கு லைட்டான ஓவியங்கள் ; சுலபமான treatment என்று ஒரு வித்தியாசமான டெம்பிளேட் செட் பண்ணியுள்ளார் "TOME" என்ற புனைப்பெயருடன் உலவிய Philippe Vandevelde ; வெகு சமீபமாய் (அக்டொபர் 2019) மரித்துப் போனதொரு திறமைசாலி ! மொத்தம் 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை அதன் ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காகவே நான் தேர்வு செய்தேன் ! Dark humor ; நியூயார்க்கின் பரபரப்பு ; NYPD-ன் ஓய்வில்லா அதிரடிகள் ; மிரட்டும் ஆக்ஷன் என்பதன் மத்தியில் - ஒரு முதிய மம்மியின் மனதைக் குளிர்விக்க நினைக்கும் பொறுப்பான புள்ளையாகவிருக்கவும் முயற்சி செய்திடும் SODA நாம் பரிச்சயப்பட்டுள்ள typical ஹீரோவெல்லாம் கிடையாது ! மணிரத்னம் சார் பட நாயகர்களின் பாணியில் கொஞ்சமாய்ப் பேசுவார் ; நக்கலாய்ப் பேசுவார் ; கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் சாத்து சாத்தென்று சாத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார் ! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோவல்ல இவர் ! So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !! இதோ - அதன் அட்டைப்பட முதல் பார்வை :

லக்கி லூக்கையும், அண்டர்டேக்கரையும் சேர்த்த கலவை போலான இந்த ஒடிசலான நாயகரை 2 வாரங்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஆர்வமாய்க் காத்திருப்போம் -நீங்கள் இந்த மனுஷனை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வகுப்பிற்கு அனுப்பப் போகிறீர்களா ?  இல்லாங்காட்டி 'ரிஜிட்' என்று முத்திரை குத்தப் போகிறீர்களா என்று !! Fingers crossed !!
Philippe Vandevelde (aka) TOME
அதிகாரியின் அட்டைப்படத்தைத் தான் ஏற்கனவே கண்ணில் காட்டி விட்டேன் என்பதால் - எஞ்சியிருக்கும் 2 இதழ்களின் previews தான் தொடரும் ஞாயிறுப் பதிவுக்கான மேட்டர் ! So அவற்றின் preview இப்போதைக்கு நஹி !

Moving on, கொஞ்சம் ஜாலியான சேதிகள் !!  வெளியே சுனா.பானா.போல கெத்தாய்க் காட்டிக் கொண்டு திரிந்திருந்தாலுமே - இந்த கொரோனாவின் தாக்கம் நமது காமிக்ஸ் வாசிப்பின் மீதும்  ; விற்பனைகளின் மீதும் எவ்விதம் reflect ஆகிடுமோ ? என்ற 'டர்' உள்ளுக்குள் நிரம்பவே புரட்டி எடுத்துக் கொண்டேயிருந்தது !! பற்றாக்குறைக்கு வெளியாகியுள்ள 5 சமீப இதழ்களிலும் நம்ம 'தல' நீங்கலாய்ப் பெரிதாய் star power கொண்ட நாயக இதழ்கள் எவையும் கிடையாது என்ற நிலையில் - விற்பனை எந்தமட்டிற்கு இருக்குமோ ? என்ற நெருடல் கணிசமாகவே இருந்தது ! ஆனால் ஆண்டவனும், நீங்களும், உங்கள் காமிக்ஸ் காதல்களைப் பறைசாற்றிட  வாகான தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆர்வலர்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! Of course - இது கூரையிலேறிக் கூச்சலிடுவதற்கு ரொம்பவே சீக்கிரமான தருணமே  ; இன்னமும் விற்பனையாள நண்பர்களிடம் நிலவரங்கள் குறித்து நிறைய பேச வேண்டியுள்ளது தான் ! And தொடர்ந்திடவுள்ள நாட்களில் நம் தமிழகத்தில் இந்த வைரஸ் அரக்கனின் தாண்டவம் என்ன மாதிரியெல்லாம் வேதனையான வடுக்களை விட்டுச் செல்லவுள்ளதோ - கணிக்கவே இயலவில்லை தான் !   ஆனால் ஒற்றை விஷயம் மட்டும் ஊர்ஜிதம் கண்டுள்ளது - 'எது எப்படியிருப்பினும் வாசிப்புக்கு ஆயுள் ரொம்பவே கெட்டி & நம் காமிக்ஸ் நேசத்துக்குமே !! என்பதை அடிக்கோடிட்டு பதிவு செய்துள்ளீர்கள் !! Thanks a million folks ! ஊடகத் துறையின் அசாத்திய ஜாம்பவான்கள் கூட ஆட்டம் கண்டு நிற்கும் இந்தச் சிரம நாட்களில் நம் போன்ற துக்கடாக்களெல்லாம் - 'டுக்கடே ; டுக்கடே' ஆகிப் போவது நொடிப் பொழுது நிகழ்வாகவே இருந்திருக்கக்கூடும் - அரணாய் உங்களின் அன்பும், காமிக்ஸ் தேடலும் இல்லாது போயிருக்கும் பட்சத்தில் !  இண்டுக்குள்ளும், இடுக்குக்குள்ளும் புகுந்து வெளியேறிடும்  திறன் கொண்ட flexible பூனைகளாய் இருப்பதன் சவுகரியங்களை எண்ணி இந்த நொடியில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !!  இன்றைக்கு வெகுஜன ஊடகங்களின் ஆக்சிஜன் சப்ளையை "விளம்பரமின்மை" என்ற சிக்கல் கோரமாய் நெரித்து வருகிறது ! ஆனால் நமக்கோ அவை என்றைக்குமே அரையணாவைக் கூட ஈட்டியிருக்கா சமாச்சாரம் தானே ? அப்புறம் லட்சம் ; பல்லாயிரம் என்ற பெரும் எண்ணிக்கையினை எட்டிப் பிடிக்க முனையும் ஊடகங்களுக்கு  ஆட்பலமும் பன்மடங்கில் அவசியம் ; தொடர் விற்பனை ; நில்லா வசூல் என்பனவும் அவசியமோ அவசியம் ! ஆனால் இக்கடவோ மாவாட்டுவதும் நாமே ; டீ மாஸ்டரும் நாமே ; பரோட்டா மாஸ்டரும் நாமே ; சப்லையரும் நாமே ; இலை எடுப்பவரும் நாமே - எனும் போது, ஒரேயொரு பெரிய ஈரத்துணி போதும் தாற்காலிகமான சிரம நாட்களைச் சிக்கனத்தோடு தாண்டிப் போக ! And yes - அந்த சிக்கனத்தின் இன்னொரு பரிமாணமாய் நமது பணியாட்களை சுழற்சி முறையிலேயே மாதத்தின் பிற்பகுதிகளில் வரச் சொல்லிடுகிறோம் ! நிலவரத்தை உணர்ந்தவர்களாக அவர்களும் முழுமனசோடு ஒத்துழைத்து வருவதால், தட்டுத் தடுமாறியேனும் வண்டி ஓடி வருகிறது ! ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் மாமூலான எண்ணிக்கையினைத் தொட்டிடும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்வோம் ! And yes - புது இதழ்களுக்கான கூரியர் கட்டணங்கள் இம்முறை நம் ஆன்லைன் தளத்தில் தலை தெறிக்கும் விதமாய் உள்ளன ' என்ற புகார் நண்பர் பிரஷாந்த் கார்த்திக்கின் புண்ணியத்தில் கவனத்துக்கு வந்திருந்தது ! இம்மாத இதழ்களின் எடை தவறாய் input செய்யப்பட்டிருந்தால் 1 கிலோவுக்கு மேற்பட்ட slab கட்டணங்களை கணக்கிட்டு தளம் சொல்லியுள்ளது என்பதைக் கண்டறிந்து சரி செய்து விட்டோம் ! Thanks for bringing it to our notice Prashanth !!

தொடரும் நாட்களில் 500 ரூபாய்களுக்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.50 விலையிலான any book of their choice அன்பளிப்பாகவும் ; ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.100 விலையிலான ஏதேனுமொரு புக் அன்பளிப்பாகவும் (and so on for higher order values) தந்திட எண்ணியுள்ளோம் ! ஆர்டர் செய்திடும் போதே  - அதனில் உள்ள Remarks பகுதியினில் உங்களுக்கு அன்பளிப்பாய் அனுப்பிட வேண்டிய புக்கிங் பெயரைக் குறிப்பிட்டால் மதி ! Or ஒரு மின்னஞ்சல் ! ஜூன் 1 முதலாய் இது நடைமுறை கண்டிடுகிறது ! 

அப்புறம் இன்னொரு யோசனையும் கூட எழுந்தது -  "ம.ப.வி.பா".நாட்களின் உபயத்தில் !! "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? அதைப் போலான ரெடிமேட் கேஸ்களை அமெரிக்க ; ஐரோப்பிய பதிப்பகங்கள் காமிக்ஸ் ஆர்வலர்களின் பொருட்டு தயாரித்து விற்பனை செய்து வருவதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது ! உதாரணத்திற்கு - ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ? Action Collection ; James Bond collection ; Graphic Novel Collection - என்ற ரீதியில் நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் !  Of course - டப்பி ஒன்றுக்கு இன்றைய விலைவாசிகளில் சுமார் 75 ரூபாய் ஆகிடலாம்  ; and அதன் பிற்பாடு அவற்றைப் பத்திரமாய் பேக் செய்து கூரியரில் அனுப்பிடும்  செலவுகளும் உண்டு தான் ! So இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி எழக்கூடும்  என்பதில் ஐயமில்லை ! ஆனால் வெகு சமீபத்தில் கண்ணில்பட்ட சமாச்சாரத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளாவிடின் மண்டைக்குடைச்சல் அடங்காதே ?! இதோ இப்போது இறக்கி வைத்து விட்டேன் ; இப்போதோ ; கொஞ்சம் பின்னேவோ, இது சார்ந்த முடிவினை எவ்விதம் எடுத்தாலும் எனக்கு ஓகே தான் !

Around the world, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் ஐரோப்பிய ; அமெரிக்க காமிக்ஸ் பதிப்பகங்கள் அதிரடி காட்டி வருவதை வாரமிருமுறை வந்து தாக்கிடும் மின்னஞ்சல்கள் பறைசாற்றுகின்றன ! And சில நாட்களுக்கு முன்பாய் Fleetway புராதனங்களுக்குப் புனர்ஜென்மம் தந்து அசாத்தியம் செய்து வரும் பிரிட்டிஷ் ஜாம்பவான்களிடமிருந்து வெகு சமீபத்தைய படைப்புகளான புது ஸ்பைடர் (சிறு) கதை வண்ணத்திலும் ; இரும்புக்கை மாயாவி (சிறு)கதை black & white -லும் மிரட்டலாய் வந்திருந்தது ! நிறைய வண்ணமும், கொஞ்சம் கருப்பு-வெள்ளையாய் இந்த SMASH Annual தக தகக்கிறது ! கொஞ்சமாய் சூழல் சரியான பின்னே இது குறித்து யோசிப்போமா ?

அது போதாதென்று - 2021 பிப்ரவரியில் "இரும்புக்கை மாயாவி ஸ்பெஷல்" 128 பக்கங்களிலும், நம்ம தானைத் தலீவர் ஸ்பைடரின் ஸ்பெஷல் ஒன்றும் - classic கதைகளுடன் அரங்கேறிடவுள்ளதாய் விளம்பரமும் !! பாருங்களேன் - நம் பால்யங்களின் கனவு நாயகர்களின் மறுவருகையின் வீரியத்தை !!


இரு  ஸ்பெஷல் இதழ்களுக்கும் 'ஜெ' போட்ட கையோடு அவற்றை வெளியிடும் நமது ஆர்வங்களையும் சொல்லிடலாமா guys ? மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே !  What say folks ?

அப்புறம் இன்னொரு "வரவுள்ளது" சேதியுமே - இம்முறை ஞாபகமறதிக்காரரின் மூன்றாம் சுற்றின் இரண்டாம் ஆல்பம் குறித்து ! XIII -ன் புது ஆல்பமான  "2132 மீட்டர்" ஆகஸ்டில் நாம் வெளியிடவுள்ளோம் ; இந்நிலையில் அதன் தொடர்ச்சி நடப்பாண்டின் இறுதிக்குள் பிரெஞ்சில் தயாராகிடும் போலுள்ளது ! Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?

"வரவுள்ளது" சேதிகளுக்குப் பின்னே - "வந்துள்ளது" சேதி ஒன்றுமே !! இத்தாலியில் டயபாலிக்கிற்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த தகவலே ! படைப்பாளிகளின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தில் நமது "அலைகடலில் அதகளம்" இதழ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை பாருங்களேன் !! கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! (இத்தாலியிலுள்ள 'தல' ரசிகர்வாள் கவனிச்சிட்டு இருக்கீங்களா ??) துரதிர்ஷ்டவசமாக தற்சமயத்துக்கு 'No Airmail Bookings for now !' என்று நம் அரசாங்கம் அறிவித்துள்ளதால் ஏதும் செய்ய இயலா நிலை !

இங்கே எனது கேள்வி ஒன்றேயொன்று தான் !! இந்த முகமூடிக்காரரின் அசாத்திய கீர்த்திக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடுமோ ? சரக்கின்றி ஒரு தொடர் 58 ஆண்டுகளாய் ; பல நூறு ஆல்பங்களோடு சக்கை போடு போட இயலாதே ? இவரது இரகசியம் எந்த பூஸ்ட்டோ ?

Bye all ; இப்போதைக்கு கிளம்புகிறேன் - ஜேம்ஸ் பாண்டின் பணிகளில் புகுந்திட !!

And நடையைக் கட்டும் முன்பாய் ஒரு வேண்டுகோள் !! இதோவுள்ள இந்த image-ஐ உங்களது வாட்சப் DP ஆக ; Facebook DP ஆக ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருக்க முடியுமா - ப்ளீஸ் ? குழந்தைப்புள்ளைத்தனமான யோசனையாகத் தோன்றிடலாம் தான் - ஆனால் இந்தக் கடின நாட்களில் காமிக்ஸ் வாசிப்பின் ரம்யத்தை ஒன்றிரண்டு பேருக்கேனும் தெரிவிக்க இது உதவிடின் சந்தோஷம் தானே ?  Think about it folks !! And Please keep reading !!
Have a wonderful week-end all !! And Stay Safe please !!

221 comments:

 1. Replies
  1. வாழ்த்துக்கள் நண்பரே

   Delete
 2. வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

  ReplyDelete
 3. வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

  ReplyDelete
 4. ஆகா புதிய பதிவு நிறைய படங்களுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு. முழுவதும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 5. பதிவைப் படிக்கும் முன்னர் வழக்கம்போல......
  இளவரசி வாழ்க!
  இளவரசி வாழ்க!

  ReplyDelete
 6. // 2021 பிப்ரவரியில் "இரும்புக்கை மாயாவி ஸ்பெஷல்" 128 பக்கங்களிலும், நம்ம தானைத் தலீவர் ஸ்பைடரின் ஸ்பெஷல் ஒன்றும் - classic கதைகளுடன் அரங்கேறிடவுள்ளதாய் விளம்பரமும் !! //

  ஆகா ஆகா இது புதுசு. அப்படியே இங்கும் அதே இதழை சூடாக சிறப்பு இதழாக எங்களுக்கும் கொடுத்து விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்.காதில் தேன் பாய்ந்தாற் போல் உள்ளது.
   அங்கு வரும்போதே இங்கும் வந்தால் செம சிறப்பாக இருக்கும்.

   Delete
 7. வந்தாச்சு.....வந்தாச்சு.

  ReplyDelete
 8. // படைப்பாளிகளின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தில் நமது "அலைகடலில் அதகளம்" இதழ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை பாருங்களேன் !! கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! //

  அட்டகாசமான விஷயம். செம.

  ReplyDelete
 9. இரவு வணக்கம் அனைவருக்கும்.

  ReplyDelete
 10. 2021 எப்ப வரும் ஸ்பைடரையும் மாயாவியை தரிசிக்கனுமே ஆண்டவா

  ReplyDelete
 11. // நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் ! Of course - டப்பி ஒன்றுக்கு இன்றைய விலைவாசிகளில் சுமார் 75 ரூபாய் ஆகிடலாம் ; and அதன் பிற்பாடு அவற்றைப் பத்திரமாய் பேக் செய்து கூரியரில் அனுப்பிடும் செலவுகளும் உண்டு தான் //

  நமக்கு இப்போது வேண்டாம் சார். சில வருடங்களுக்கு பிறகு முயற்சிக்கலாம்.

  ReplyDelete
 12. ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ?

  நல்ல ஐடியா வாகான தருனத்தில் முயற்சி செய்துபார்க்கலாம்

  ReplyDelete
 13. SODA நாயகனின் முன்னோட்டம் அருமை. படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது, அதுவும் கீரின் மேனர் பாணியில் என்றதும் ஆர்வம் இரட்டிப்பாகி விட்டது.

  இந்த கதையின் உள் பக்கங்களையும் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ப்ளீஸ்.

  ReplyDelete
 14. நமது இந்த மாத இதழ்களின் விற்பனை பரவாயில்லை என்ற செய்தி சந்தோஷமாக உள்ளது.

  ஆன்லைனில் வாங்கும் வாசகர்களுக்கு இலவசமாக புத்தகம் என்பது நல்ல விஷயம். இது நமது விற்பனையை அதிகரிக்க உதவும். நல்ல ஐடியா.

  ReplyDelete
 15. // இதோவுள்ள இந்த image-ஐ உங்களது வாட்சப் DP ஆக ; Facebook DP ஆக ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருக்க முடியுமா - ப்ளீஸ் //

  கண்டிப்பாக. செய்தாகிவிட்டது.

  ReplyDelete
 16. Soda: White background-ல் அட்டைப்படம் அருமையாக உள்ளது. இது போல் White background-ல் வேறு அட்டைப்படம் "புரட்சித்தலைவன் பிரின்ஸ்" - ல் பார்த்ததாக ஞாபகம்.

  Slip Case யோசிக்க வேண்டிய விஷயம்.

  Steel Claw & Spider புதுக்கதைகளை சூடாகவே பரிமாறிவிடுங்கள் சார். also XIII....

  ReplyDelete
  Replies
  1. also XIII....//
   S நிச்சயமா நம்ம ஆசிரியர் செய்வார்...நண்பரே...

   Delete
  2. வெள்ளை பேக்கிரவுண்டில் இன்னமும் சில இதழ்கள் வந்திருக்கும் சார் ; யோசித்துப் பாருங்களேன் !

   Delete
  3. ஓநாய் கணவாய்
   மின்னல் ஜெர்ரி

   Delete
 17. சாலமன் டேவிட் நிச்சயம் ட்யூராங்கோவின்இடத்தைநிரப்புவார் வேறொருவிதத்தில் என்றே தோன்றுகிறது முன்னோட்டம் தைப் பார்க்கும்போது. நவீனகிராபிக் நாவலோ.அண்ட் 2132 மீட்டர்எதிர்பார்ப்பில் , அப்புறம்அந்த,,
  , அந்த,, மே ப்ளவர். . 2132ன் வரவேற்ப்பைப் பார்த்துவிட்டுஅப்புறம் முடிவெடுக்கலாம்சார் ப்ளீஸ் கரூர்ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. Soda & Durango !!

   என்ன மாதிரியானதொரு ஒப்பீடு சார் இது ? ஊஹூம் , சத்தியமாய்ப் புரியலை !

   Delete
 18. // So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ? //

  இந்த வருடம் வரும் 13ன் கதையின் வரவேற்பு மற்றும் விற்பனையை பார்த்து விட்டு பின்னர் நீங்கள் தைரியமாக முடிவு எடுக்கலாம் சார்.

  ReplyDelete
  Replies
  1. உலகப்புகழ் பெற்ற நம் கதாநாயகன்
   ஜேஸனின் புதிய சாகசங்களை பார்த்து
   ரசித்து படித்து மகிழும் ரசிகர்கள்
   இங்கே குறைவுதான் என்றாலும்
   விற்பனையில் நிச்சயம் சாதிப்பார்
   மக்லேன். இரத்தபடலம் புத்தகத்துடன்
   கொடுக்கப்பட்ட புலன் விசாரணை
   புத்தகத்தை பலரும் படிக்க வாய்ப்பில்லாமல் வருந்தும்போது
   சிலரோ அதை இன்னும் படிக்கவில்லை
   என்றே சொல்கிறார்கள்.இதுவரை
   உலகில் வெளிவந்த கதைகளில்
   அதன் கதாபாத்திரங்களைபற்றிய
   தனிப்புத்தகம் வேறு எந்த கதைக்கும்
   வெளியானது இல்லை.மேலும் ஒரு
   தகவல் புலன்விசாரணையின்
   இரண்டாம் பாகமும் பிரெஞ்சில் வெளி
   வந்து விற்பனை சிறப்பாக உள்ளது.
   அதை தொடர்ந்து ஜேசனின்
   முன்னோர்களது HISTORY யும்
   வெளிவந்துள்ளது.இன்றும் காமிக்ஸ்
   மார்க்கெட்டில் இரத்தபடலம் மிகவும்
   அதிகமான தேடலுக்குரிய புத்தகமாக
   இருக்கிறது.

   Delete
  2. இந்த வருடம் வரும் 13ன் கதையின் வரவேற்பு மற்றும் விற்பனையை பார்த்து விட்டு பின்னர் நீங்கள் தைரியமாக முடிவு எடுக்கலாம் சார்.//
   ஏன் நண்பரே ஆரம்பத்திலேயே ...எங்க தலயோட தரிசனம் கிடைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது... விற்பனையை பார்த்துவிட்டு தொடரலாம் என்பது ஆரம்பத்திலேயே ஃ வைப்பது போல் உள்ளது.

   Delete
  3. //இதுவரை
   உலகில் வெளிவந்த கதைகளில்
   அதன் கதாபாத்திரங்களைபற்றிய
   தனிப்புத்தகம் வேறு எந்த கதைக்கும்
   வெளியானது இல்லை//

   முற்றிலும் தவறான தகவல் சார் ! அமெரிக்க காமிக்ஸ் உலகில் உப கதாப்பாத்திரங்களுக்கு முழுசாய் தனித்தடங்கள் வழங்குவதென்பதெல்லாம் குச்சி மிட்டாய் வாங்குவதற்கு இணையான சுலப நடைமுறைகள் ! பிரசித்தி பெற்ற ARCHIE தொடரின் JUGHEAD ; VERONICA ; BETTY என அத்தனை பேருமே பின்னாட்களில் பிரத்யேகமான தனி தடங்களில் வெளிவந்துள்ளவர்கள் தானே ? அப்புறம் இந்த லிங்கில் சென்று தான் பாருங்களேன் - spin-offs எத்தனை சப்பை மேட்டர் என்று புரிந்து கொள்ள :

   http://www.mtv.com/news/2623677/10-spin-off-comic-books-just-as-good-as-or-better-than-the-original/

   Delete
  4. //புலன்விசாரணையின்
   இரண்டாம் பாகமும் பிரெஞ்சில் வெளிவந்து விற்பனை சிறப்பாக உள்ளது.//

   ஹி ..ஹி !!

   Delete
  5. \\\முற்றிலும் தவறான தகவல் சார் ! \\\
   கேவி கணேஷ் சொல்ல வந்தது. காதாபாத்திரஙகளின் வரலாறு மற்றும் குணத்தியசம் வைத்து எந்த புத்தகமும் வந்தது இல்லை.

   Delete
 19. ஸ்பைடரின் இரண்டு அட்டைப்படங்ளும் செமயாக இருக்கிறது. அதுவும் ஸ்பைடரின் கெத்தான அந்த போஸ் செம மாஸ்.

  ReplyDelete
  Replies
  1. அங்கே டெக்சாஸில் ஒருத்தருக்குக் கேட்கிற மாதிரி உரக்கச்
   சொல்லுங்கள் சார் :-) :-)

   Delete
 20. வணக்கம் ஆசிரியரே! & நண்பர்களே.!

  ReplyDelete
 21. பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பதிலும்
  இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் திட்டமிட்டுள்ள அடுத்த மாத இதழ்கள் நான்கும் அருமையான சாய்ஸ். மிகச் சரியான திட்டமிடல்.

  ReplyDelete
  Replies
  1. கால நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பதில் நம்ம ஆசியர் என்றும் தோற்றதில்லை நண்பரே...

   Delete
  2. உண்மை.அதுவும் நமது மறு வருகைக்கு பிறகு, பல முடிவுகளை மிகச் சரியாக எடுக்கிறார்.

   Delete
 22. விஜயன் சார், I Love Lion & Muthu Comics என்று நமது காமிக்ஸ் லோகோவுடன் ஒரு image ready செய்து கொடுங்கள் அதனை whatsup statusல் போட்டு விடுகிறேன்.

  ReplyDelete
 23. கலெக்சன் டப்பாவுக்கே ஜே! டபுள் ஓகே!!
  உண்மையைச் சொல்வதானால் புத்தகங்களை பராமரிப்பது பெரும் சிரமமாக உள்ளது!! சிலீப் கேஸ் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. நிஜம் சார் ; பராமரிக்க சுலபம் !

   Delete
  2. எனக்கு ஒரு 10 ஸ்லிப் கேஸ் பார்சல்

   Delete
 24. Slip case அருமையான idea... இது மாதிரி சங்கதிக்கு room போட்டு யோசிப்பாங்களோ.. ஜமாய்ச்சுடலாம் சார்

  ReplyDelete
 25. 1000 ரூபாய்க்கு வாங்கினால் 100 ரூபா... 1500 வாங்கினால் 150 ரூபா... அட்டடட்டட்டா... I love this...

  ReplyDelete
 26. பால்யத்தின் நினைவுகளில் கரைய மனங்கவர்ந்த காமிக் நாயகர்களின் மறுவாசிப்பும்,புதிதாக வாசிப்பதும் சிறந்த எளிய வழிகளில் ஒன்று.. சற்று நேரத்திற்காவது கொரானா மற்றும் இன்ன பிற இம்சை குருமாக்களிலிருந்து தப்பிக்கலாம்.
  சென்னை பு. கா வில் அன்டர்டேக்கரின் அட்டகாசம், லார்கோவின் லீலைகள் என நான் என்ன அள்ளி விட்டாலும் அனைத்தைம் ஒரு புன்னகையால் புறந்தள்ளி இரும்புக்கையாரை மட்டுமே வாங்கிச் சென்ற பல அங்கிள்ஸை பார்த்துள்ளேன்.
  ஆதலால் இரும்புக்கையாருக்கும்,ஊசிக்காது வலைமன்னனுக்கும் ஆர்வத்துடன் வெய்ட்டிங்கு!!
  13 ம் நம்பர் காரருக்குமே!!
  சிறுவயதிலிருந்தே டயபாலிக் எனக்கு ஆதர்சம்.
  அட்வென்சரஸ் திருடன் என்பதால் கூட இருக்கலாம்.

  எடிட்டர் சார், நமது லயன்/முத்து லோகோவை ஒரு collage ஆக I luv comics என்ற caption உடன் இங்கு பகிருங்கள். DP ஆக வைத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நலமா?
   உத்தமபாளையம் சரவணன்.

   Delete
  2. //நமது லயன்/முத்து லோகோவை ஒரு collage ஆக I luv comics என்ற caption உடன் இங்கு பகிருங்கள். DP ஆக வைத்துக் கொள்கிறேன்.//

   நண்பர்கள் யாருக்கேனும் நேரம் இருப்பின் அழகாய் டிசைன் செய்து அனுப்பிட இயலுமா ?

   Delete
 27. ஹையா வந்துட்டேன்

  ReplyDelete
 28. //XIII -ன் புது ஆல்பமான "2132 மீட்டர்" ஆகஸ்டில் நாம் வெளியிடவுள்ளோம்//
  மகிழ்ச்சியான செய்தி சார்.. ஆகஸ்ட்க்கும் நம்ம ஹூரோவுக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகும் சார்...

  ReplyDelete
 29. இரத்தப்படத்திற்க்கு ஸ்லிப் கேஸ் உண்டு என்றால் டபுள் ஓகே...சார்..

  ReplyDelete
  Replies
  1. இரத்தப் படல புதுச் சுற்று ஸ்லிப் ஆகாமல் பயணிக்கட்டும் பழனி ; அப்பாலிக்கா அதுக்கு ஸ்லிப் கேஸ் ; ஸ்லீப்பிங் கேஸ் பற்றியெல்லாம் யோசிக்கலாம் !

   Delete
 30. // So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ? //

  தாராளமா செலுத்தலாம் சார்....

  ReplyDelete
 31. சீறிப்பாயும் ஒற்றை தோட்டா யாரை நோக்கியோ....?? விவரம் அறிய வாங்கிப்படியுங்கள் XIII 2132 மீட்டர் ஆகஸ்ட்டில் உங்கள் அபிமான உலகில் வெளிவரும் ஒரே தமிழ்காமிக்ஸ் நிறுவனத்தின் லயன்காமிக்ஸ்ஸில் வாங்கி படிக்கத்தவராதீர்கள்.....!!

  ReplyDelete
 32. //இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ?//

  எடிசார் நான் இன்னும் இரத்தப்படலம் புக் பாக்கவே இல்லை.. ஸிலிப் கேசுடன் புத்தகமும் கொடுத்தால் நல்லது. மனசு வையுங்க பிலீஸ்..ஃ🤞

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு ஸ்லிப் கேஸ் ; ஒரு decade கழிந்த பிற்பாடு மறுபதிப்பும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் சார் !

   Delete
 33. 1. ஸ்லிப் கேஸ் கண்டிப்பாக வேண்டும். அடுத்த வருடம் போல நிலவரங்கள் சரியான பிறகு. அடுத்த ஒரு ஆறு மாதங்களைத் தாண்டிவிட்டால் பெரும்பாலான நண்பர்களுக்கு வசதியாக இருக்கும்்
  2. மாயாவி மற்றும் ஸ்பைடர்: பெரிய கொட்டாவி தான் வருது. வருட பழயவற்றிற்கான கோட்டாவில் வரட்டும்.
  3. 2132 க்காக வெயிட்டிங். போட்டுத் தாக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. //மாயாவி மற்றும் ஸ்பைடர்: பெரிய கொட்டாவி தான் வருது.//

   ஹி ஹி ஹி !!

   Delete
  2. புது ஸ்பைடர் அண்ட் மாயாவி எப்படி என்று பார்ப்போமே ஷெரீஃப்

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. //மாயாவி மற்றும் ஸ்பைடர்: பெரிய கொட்டாவி தான் வருது.//

   அப்படி என்றால் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாயாசத்தை ரெடி பண்ணி விடலாம். இந்த பாயாசத்தில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் உப்புமா செய்ய பயன்படுத்தப்படும் சில பொருட்களை இதில் சேர்க்க உள்ளேன். :-)

   Delete
  5. @பரணி மற்றும் குமார். பாயசத்தை காயச்சறதுக்கு முன்னாடி நான் வேண்டாம்னு சொல்லலைங்கறதை கவனிங்கோ. அதுவும் உப்புமா ingredients போட்டா? 😫😫😫

   Delete
  6. // நான் வேண்டாம்னு சொல்லலைங்கறதை கவனிங்கோ. //

   விஜயன் சார், நோட் திஸ் பாயிண்ட்!

   மகேந்திரன் @ :-)

   Delete
 34. புது DP வைச்சாச்சு !

  ReplyDelete
 35. ###இரு ஸ்பெஷல் இதழ்களுக்கும் 'ஜெ' போட்ட கையோடு அவற்றை வெளியிடும் நமது ஆர்வங்களையும் சொல்லிடலாமா guys ?###

  கரும்பு தின்ன கசக்காது சார்..
  2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை என்றால் கோடை மலர் 2021

   Delete
  2. // கரும்பு தின்ன கசக்காது சார்..
   2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடுங்கள் சார் //


   +123

   Delete
 36. ###Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?###


  Double ok sir.

  ReplyDelete
  Replies
  1. XIII நம்ம தலைக்கு தளத்தில் ஆதரவு பெருகுவதைப்பார்த்தால் சந்தோசத்தில் மனம் துள்ளுகிறது சிவா.. நன்றி...

   Delete
 37. ####கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! ####

  ஆயிரத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் முன்பதிவு..
  வருத்தமான விஷயம்..

  இதுவே பத்துக்கு ஒன்று என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //இதுவே பத்துக்கு ஒன்று என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.//

   ஆனாலும் நமக்கு ரெம்போ தான் ஆசைகள் சிவா !!

   Delete
 38. இந்த மாத இதழ்கள் பல போராட்டங்களை சந்தித்து கடைசியாக என்னை அடைந்துள்ளன.

  முதலில் படித்தது டயபாலிக் தான்... பெரிய சைஸில் பார்க்க படிக்க நன்றாக இருந்தது. கதையும் சாதாரணமல்ல... கொள்ளையடிப்பதிலும், தப்பிச் செல்வதிலும் அசத்தலான திட்டமிடல்... அதையும் மோப்பம் பிடிக்கும் ஜின்ஹோ...

  அவர் இன்னமும் டேஞ்சர் டயபாலிக் தான்
  டயபாலிக் இன் டேஞ்சர் இல்லை

  மறு வாய்ப்பு கொடுக்க மறுக்கக் கூடாத ஹீரோ இவர்  மற்றபடி, ஸ்பைடர், மாயாவி கதைகளையும், எங்கள் நினைவுகளை தட்டி எழுப்பும் Xiiiக்கும் என்றும் வரவேற்பு உண்டு

  ReplyDelete
  Replies
  1. //அவர் இன்னமும் டேஞ்சர் டயபாலிக் தான்
   டயபாலிக் இன் டேஞ்சர் இல்லை//

   Super !

   Delete
 39. //எங்கள் நினைவுகளை தட்டி எழுப்பும் Xiiiக்கும் என்றும் வரவேற்பு உண்டு//
  💐💐 நல்லா சொன்னிங்க நண்பரே...பிடிங்க 2132 நன்றிகள்...

  ReplyDelete
 40. ஞாயிறு ஸ்பெஷல், சேமியா. நம்ம dp எப்போதும் காமிக்ஸ் நாயகர்கள் தான். இரண்டு வருசமா கேப்டன் அமெரிக்கா உட்கார்ந்து கொண்டு இருக்கார். இதோ மாத்திட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நமக்கும் அதே கதை தான். என்ன டிபி க்கு பதிலாக ஸ்டேடஸ்ல வைப்போம்...

   Delete
  2. அட....ஞாயிறுக்கு சேமியா உxxவா ?

   Delete
  3. ஆம் அய்யா. இது கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கை. அப்புறம் ஸ்லிப் கேஸ் எல்லாம் கொஞ்சம் தடி புத்தகங்களுக்கு தானே? அல்லது எல்லா size க்கும் சரிப்பட்டு வருமா? நான் ஹாரி பாட்டர் ஸ்லிப் கேஸ் தொகுப்பு மட்டுமே பார்த்திருக்கிறேன்.

   Delete
  4. ஒரு பொதுவான சைசிலான any & all புக்குகளை உள்ளே நுழைத்துக் கொள்ளும் மாதிரியான டிசைன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

   Delete
  5. அப்போ double ok தான் சார்

   Delete
  6. எனக்கும் ஓகே.

   Delete
  7. /// நமக்கும் அதே கதை தான். என்ன டிபி க்கு பதிலாக ஸ்டேடஸ்ல வைப்போம்///
   🥊 Rocking

   Delete
 41. ஹைய்யா புதிய பதிவு.......

  ReplyDelete
 42. மாயாவி, ஸ்பைடர் ஸ்பெஷல் வெளிவந்த உடனே போட்டுத் தாக்கினால் நல்லாயிருக்கும் சார்! இரண்டுமே புதுக்கதைகள் என்பதால் பலருக்கு சந்தோஷத்தையே வழங்கும்! அதே போல இரத்தப்படலம் 2132 & கால்வின் வாக்ஸ் க்கு வெயிட்டிங்! நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் கிங் கோப்ராவுக்கும் வெயிட்டிங் (முடிந்தால் காணாமல் போன கடலையும் சேர்த்து போட்டு தந்தால் இதுவரை படிக்காத (புக் கிடைக்காத) வாசகர்களுக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கும்) அதே போல இந்த Sleep case நல்ல விஷயம்தான் சார் இது பலருக்கு நல்ல பயனைத் தரும் இதை சென்னை போன்ற புக்பேரில் கொண்டு வந்தால் வாங்குவோருக்கு நல்ல வசதியாக இருக்கும் (கூரியர் செலவு, பாக்ஸ் பாழாகாமல் எல்லோரையும் சென்றடையும்) அடுத்த மாதக் கதைகள் நான்குமே சிறிய கதைகள் ஏற்கனவே ஏப்ரல் மாதத்து புத்தகங்கள் பெண்டிங் இருப்பதால் ஒரு புத்தகம் சேர்த்து வெளியிட்டால் எண்ணிக்கை குறையும், 80 அல்லது 120 க்குள் ஏதாச்சும் கதையிருந்தால் சேர்த்து வெளியிடலாமே சார்?

  ReplyDelete
  Replies
  1. நடப்பு இதழ்கள் பிசிறின்றி விற்றிருக்கும் பட்சத்தில் தொடரும் செட்டிலும் 5 இதழ்களென்ற ஏற்பாடைச் செய்திடலாம் தான் சார் ; ஆனால் சென்னை நிலவரம் ரொம்பவே உறுத்துகிறது ! அங்கே கடைகள் திறக்கும் சாத்தியமே கண்ணில் படக்காணோமே ?!

   Delete
  2. விற்பனை டல் என்றால் நான்கே போடுங்க சார்!வரும் மாதங்களில் பார்த்து கொள்ளலாம் அதற்குள் நிலவரம் கொஞ்சம் சரியாயிடும்னு நம்புகிறேன்

   Delete
  3. //சென்னை நிலவரம் ரொம்பவே உறுத்துகிறது ! அங்கே கடைகள் திறக்கும் சாத்தியமே கண்ணில் படக்காணோமே ?!

   சென்னையில் வீட்டுக்கதவையே திறக்கமுடியாத சூழ்நிலை சார்

   Delete
  4. தெரியும் சத்யா ! பார்த்து ; பத்திரமாய் இருந்து கொள்ளுங்கள் சென்னை நண்பர்களே !

   Delete
 43. ஸ்லிப் கேஸ் இரத்தப்படல கருப்பு வெள்ளை தொகுப்புக்கு நிச்சயம் தேவைப்படும் சார்....அப்புறம் அந்த புலன்விசாரணை 2 + XIII history ஒண்ணா வரப்போகுதே அதுக்கும் தேவைப்படும் சார்... எதுக்கும் போட்டுவைப்போம்....

  ReplyDelete
  Replies
  1. புள்ளைங்க ஹிஸ்டரி புக்கை எடுத்துப் படித்து வையுங்க பழனி ; பாடம் சொல்லிக் கொடுக்கவாச்சும் உதவும் !

   Delete
  2. \\\ஸ்லிப் கேஸ் இரத்தப்படல கருப்பு வெள்ளை தொகுப்புக்கு நிச்சயம் தேவைப்படும் சார்....\\\

   நிச்சயம் வேண்டும் சார். பழனிவேல் அவர்களின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

   பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம் அது.

   Delete
 44. Facebook,WhatsApp,google dp மாற்றிவிட்டேன்.

  ReplyDelete
 45. கூரியர் தொகை பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி சார்.. 500 மற்றும் 1000க்கு மேற்படும் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவச காமக்கஸ் அளிப்பது மிக நல்ல முடிவு. இதனால் ஆன்லைன் ஆர்டர்கள் கண்டிப்பாக அதிகரிக்கும்.

  இந்தமுறை வந்த புத்தகங்களில் பிரிவோம் சந்திப்போம் தான் முதலில் படித்தேன். வெறும் ஆக்ஷன் அதிரடி என்றில்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது. ஓவியங்கள் அபாரம்.

  டேஞ்சர் டயபாலீக் முன்ன வந்த கதைகளை விடவும் இது அருமையாக இருந்தது. ஒரு படம் பார்த்து முடித்த ஃபீல் . க்ளைமேக்ஸ் ட்விஸ்டுகள் awesome. Black and White என்றாலும் டயபாலீக் கதைகளுக்கு இதே புத்தக சைஸ் தொடருமா?

  மற்ற கதைகள் இனிமேல் படிக்க வேண்டும். சோடா இந்த வருடத்தில் அறிவித்த கதைகளிலேயே நான் கொஞ்சம் ஆர்வமாய் எதிர்பார்க்கும் இதழ்களில் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. // சோடா இந்த வருடத்தில் அறிவித்த கதைகளிலேயே நான் கொஞ்சம் ஆர்வமாய் எதிர்பார்க்கும் இதழ்களில் ஒன்று. //

   நானும். +1

   Delete
  2. மீ டூ +10000

   கூரியர் குளறுபடி பற்றி ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றது அருமை பிரசாந்த்

   Delete
 46. தானை தலைவர் ஸ்பைடருக்காக வெயிட்டிங்..
  முதுமை காலங்களில் பெரிய பெரிய கொட்டாவிகள் வருவது சகஜம் தான் போலே..

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஏன்னா முதுமைக்கால பிரச்னையெல்லாம் உங்களுக்குத்தானேத் தெரியும்.

   Delete
  2. பாயாச பார்டிக்கே அண்டாவை சப்ளை பண்ணீட்டீங்க.... செம ஷெரீப்... ஐ லைக் & லவ் இட்!

   Delete
 47. மறதிக்கார நண்பர்க்கு வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன்

  ReplyDelete
 48. ///ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய்///

  நல்ல யோசனை சார். ஒரு டப்பியில் எத்தனை காமிக்ஸ் தோரயமாக வைக்க முடியும். கண்டிப்பாக நான் வாங்குவேன்.

  லார்கோவிற்க்கு டப்பி போட மறந்துடாதிங்க...

  ReplyDelete
  Replies
  1. லார்கோ மற்றும் ஷெல்டன் இருவருக்கும்

   Delete
  2. லக்கிலூக்க விட்டுட்டிங்களே தலைவரே....நெறைய ஹார்டுபவுண்ட் புக் அதுல தான் இருக்கு அப்புறம் தோர்கல் டியுராங்கோ....

   Delete
  3. லக்கி லுக்கை ஆசிரியர் விடமாட்டார் என்று நம்புகிறேன்.

   நம்பிள்கி எப்படியும் 10 பாக்ஸ் மேல தேவைபடும்.

   Delete
 49. ##Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?###

  என்னை பொருத்தவரை XIII தொடர் முழுவதும் முடிந்த பிறகு வெளியிட்டு கொள்லாளாம்.

  தொடராக படிப்பதபடிப்பதில் அவ்வளவு நாட்டம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. //XIII தொடர் முழுவதும் முடிந்த பிறகு வெளியிட்டு கொள்லாளாம்.//

   அநேகமாய் அதற்குள் நான் ரிட்டயர் ஆகியிருப்பேன் சார் !

   Delete
  2. _\\அநேகமாய் அதற்குள் நான் ரிட்டயர் ஆகியிருப்பேன் \\\

   அப்படி என்றால் அடுத்த வருடமே வெளியிடவும்.

   Delete
 50. ஸ்பைடர் ஆகா....ஆகா ஆகா....வரட்டும்

  ReplyDelete
 51. Lion comics.in ...Online listing...
  ஒவ்வொரு புத்தகத்தின் கீழ்.... review option கொடுத்தால்....நாங்கள் பின்னிடுவோம்.....

  வாங்குபவர்க்கு....அதிக ஆர்வம் ஏற்படும்....

  யோசியுங்கள்....
  யோசிச்சாச்சா...

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே உங்க கருத்து....

   Delete
  2. lion-muthucomics.com தளத்திற்குப் போய் ஆர்டர் செய்தால் Remarks என்றொரு பகுதி திறக்கும் மந்திரியாரே !

   Delete
  3. ஓகே காமிக் ஆசான்

   Delete
  4. சொற்பிழை & பொருட்பிழை மந்திரியாரே !

   Delete
  5. ஹி ஹி google auto correction... புண்ணியம்...

   Delete
 52. மாயாவியும், ஸ்பைடரும் மீண்டு(ம்) வருவது நல்ல செய்தி சார். சூட்டோடு சூடாக நீங்களும் போட்டுத் தாக்குங்கள். முன்பு ரோஜரோ? யாரென்று சரியாக நினைவில்லை. மறுபடி புது அவதார் எடுக்கப்போவதாக தெரிவித்ததாக ஞாபகம். அவரையும் கண்ணில் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்புறம் அடுத்தமாதம் ஒல்லிப்பிச்சான் மாதமென்பதால் '5 பக்க' மாயாவியையும், ஸ்பைடரையும் அடுத்தமாதமே கண்ணில் காட்டினால் இன்னும் இன்னும் சிறப்பாக இருக்கும்!

  ReplyDelete
 53. முக கவசம் போட்டு...போட்டு....  நானும் danger diabolik தான்...😊

  ReplyDelete
 54. // ஜூன் 10 வாக்கில் அடுத்த செட் இதழ்களை அனுப்பிடத் தயாராகியிருப்போம் ! //
  10 ஆம் தேதிக்கு இன்னும் பத்துநாள் இருக்கே.......

  ReplyDelete
  Replies
  1. பத்தே நாட்கள் தானா ? ஜேம்ஸ் பாண்டட்ட் !!!!!

   Delete
  2. அட 12 ஆம் தேதிதான் அனுப்புங்களேன் சார்,ஏன்னா எனக்கும் அப்பதான் நேரம் கிடைக்கும்,ஹி,ஹி.......

   Delete
 55. // மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே ! What say folks ?
  போதிய இடைவெளி கிடைத்து விட்டதால் நம்ம ஆட்கள் ஆர்வமாவே இருப்பாங்க சார்,போட்டுத் தாக்குங்க...

  ReplyDelete
 56. // இந்த ஒடிசலான நாயகரை 2 வாரங்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஆர்வமாய்க் காத்திருப்போம். //
  வித்தியாசமான ஒரு களத்துக்காக காத்திருக்கிறோம் சார்.....

  ReplyDelete
 57. // "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? //
  நல்ல யோசனைதான்,வரவேற்புக்கு உரியது,அதே நேரத்தில் இந்த யோசனை சற்று முன்னரே தோன்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....
  அடுத்து வரும் புத்தக விழாவிற்குள் இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் சார்,இதை கூரியரில் பெறுவதை நினைத்தால் கொஞ்சம் கண்ணை கட்டதான் செய்கிறது....

  ReplyDelete
 58. முதல் கதையிலேயே ட்யூராங்கோ உண்டாக்கிய அதிர்வலைகள் என்ற விதத்தில் கூறினேன் சார். சோடா. இனிவருங்கால காமிக்ஸ் உலகமே இந்த ஜேனரில் ஒரு முழு ரவுண்ட் வரும் என்றே தோன்றுகிறது. சோடா பெரும் எதிர்பார் ப்பில். கரூர்ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. //So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !!//

   From the பதிவு சார் !

   Delete
 59. இந்த மாதம் சோடா குடிக்க வெயிட்டிங்.......

  ReplyDelete
  Replies
  1. குண்டு உள்ள சோடாவா?
   குண்டு இல்லாத சோடாவா?

   Delete
  2. நல்லவேளை

   ஆம்பளை சோடாவா,
   பொம்பளை சோடாவான்னு...

   Delete
 60. ///அதிகாரி' - கைதியாய் டெக்ஸ்///---- waiting for this one!

  ReplyDelete
 61. ##Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?###

  டாப் கியர் போட்டு........

  ReplyDelete
  Replies
  1. தூக்கியர்ல்லாம் தலைவரே...

   Delete
 62. பிரிவோம் சந்திப்போம்!

  சுருக்கம் சொல்வதென்றால் வன்மேற்கின் வாழ்க்கை முறையில் மக்கள் எவ்விதம் சூழ்நிலைக் கைதிகளாய் மாறி போயிருந்தனர் என்பதற்கு ஒரு சான்று!

  கதை அமைப்புக்கும், ஓவியங்களின் நேர்த்திக்குமே 💯 மார்க் கொடுக்கலாம்!

  இதுபோன்ற கதை வரிசைகள் ஜம்போ தடத்தினை மேலும் சிறப்பாக்குகின்றன!

  10/10

  ஜெய் ஜம்போ!!!

  ReplyDelete
  Replies
  1. //சுருக்கம்//. சுருங்கச்

   Delete
  2. //இதுபோன்ற கதை வரிசைகள் ஜம்போ தடத்தினை மேலும் சிறப்பாக்குகின்றன!//

   "ஜம்போ" என்ற தனித்தடத்தை அறிவித்த போது 'why ஜம்போ ?' என்ற கேள்விகள் இருந்தன !

   This is exactly why Jumbo came into existence !!

   Delete
  3. ஜெய் ஜெய் ஜம்போ

   Delete
  4. ஸ்லிப் கேஸ்கள் புத்தகங்களை முனை மடங்காமல் அழுக்கு படாமல் சுலபமாக கையாள் வதற்கு மிகவும் பயன்படும்.
   கொரில்லா சாம்ராஜ்யம் எப்போது எதிர் பார்க்கலாம் சார்?

   Delete
 63. // // மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே ! What say folks ? //


  இவர்களின் மறுபதிப்புகள் தற்சமயம் இல்லை எனும் போது இவர்களை தாராளமாக களம் இறக்கலாம் சார். அதிவிரைவில் இவர்களை கைகளில் தவழவிட்டால் சிறப்பு.

  ReplyDelete
 64. //பத்தே நாட்கள் தானா ? ஜேம்ஸ் பாண்டட்ட் !!!!!//

  ஜேம்ஸ்பாண்ட் படங்கள் நெருக்கமாக இருப்பது போல் உள்ளது சார். டயபாலிக் போல ப்ரேம்களை கொஞ்சம் பெரிசுபண்ணி எழுத்துக்களை பெரிசு பண்ண வாய்ப்புள்ளதா சார்....???

  ReplyDelete
  Replies
  1. பக்கங்களையும் ஜாஸ்தி பண்ணி ; விலையையும் ஜாஸ்தி பண்ணினால் பண்ணலாம் பழனி !

   Delete
  2. Good suggestion பழனி.

   ஆனால் விலையை ஜாஸ்தி பண்ணி என்றால், கொஞ்சம் மாதங்கள் போகட்டும் சார்.

   Delete
  3. //பக்கங்களையும் ஜாஸ்தி பண்ணி ; விலையையும் ஜாஸ்தி பண்ணினால் பண்ணலாம்//

   தாரளமாக பன்னுங்க ஆசிரியரே

   Delete
  4. 40 ஐ தாண்டிய கண்கள்....எழுத்து உருக்கள் பெரிது என்றால் நலம்...

   Delete
 65. // "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? //

  இதனை பெற விரும்பும் நண்பர்கள், அவர்களின் அந்த அந்த மாத சந்தா பிரதிகள் உடன் அனுப்ப சொல்லலாம்.
  அல்லது ஆன்லைனில் புத்தகங்கள் ஆர்டர் செய்யும் போது இதனையும் சேர்த்து ஆர்டர் செய்யலாம். இப்படி செய்தால் slip caseஐ மட்டும் தனியாக ஆர்டர் செய்வதனால் ஏற்படும் கொரியர் செலவை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 66. ஸ்லிப் கேஸ் ஈரோடு புக் பேர் விற்பனைக்கு ரெடி பண்ணிருங்கசார். மிகவும் பயன்படும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வருஷம் சாத்தியங்கள் குறைவே சார் !

   Delete
 67. சார், மன்னிக்கவும். புத்தக விலையெல்லாம் இப்பொழுது அதிகமாக தெரிகிறது. 80ரூ,120ரூ ?!! பக்கங்கள் குறைவாகவும் விலை அதிகமாகவும் படுகிறது. இனி காமிக்ஸ் மாதமாதம் வாங்க இயலுமா என்பது சந்தேகம். என்னைப் போன்ற selective/optional readers இனி குறைவதற்கு சாத்தியமுள்ளது

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு வருடங்களாய்த் தொடரும் விலைகள் தானே இவை நண்பரே ? And for sure தொடரும் ஆண்டினில் இந்த விலைகளில் தாக்குப்புடிக்கவே இயலாது என்பதும் நிலவரம் !

   Delete
 68. ஸ்லீப் கேஸ் ஐடியா அருமை சார்...

  கண்டிப்பாக கொண்டு வரலாம் ..புத்தகங்களை நாயகர் வரிசைப்படி பத்திரப்படுத்தி பாதுகாக்க நல்ல யோசனை..கார்ட்டூன் மட்டுமல்லாது லார்கோ ,ஷெல்டன் மற்றும் பிற கதாநாயகர்களுக்கும் அது போல் கொண்டு வருவது மிக சிறப்பாக இருக்கும்..

  நான் ரெடி...:-)

  ReplyDelete
 69. ஸ்பைடர் ,மாயாவி *சிறுகதைகள்* என்பதாலும் ,புது யுகத்தில் என்பதாலும் ஒரு முறை முயற்சித்து பார்ப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது சார்..:-)

  ReplyDelete
 70. சோடா ..

  கார்ட்டூன் பாணியில் சீரியஸான கதை

  கண்டு படித்த பின்னேரே இவரின் வெற்றீ புரிய வரும்...:-)


  ReplyDelete
 71. * ஸ்லிப்கேஸ் நல்ல ஐடியா தான்! ஆனால் ஷெரீப் சொல்லியிருப்பது போல நிலைமை கொஞ்சம் சீரடைந்த பிறகு வருவது அனைவரும் வாங்கிப் பயன்பெற வசதியாய் இருந்திடும்!

  * இஸ்பைடர் மற்றும் மாயாவி மாமாக்கள் வரட்டும்! அறிவரசு சொன்னதைப் போல தகுந்த இடைவெளிக்குப் பிறகு வருவதால் வரவேற்பதில் பிரச்சினை இருக்காது!

  * 'சோடா' - ஆவலைக் கிளப்புகிறது! வெயிட்டிங்..

  * அடுத்த வெளியீடுகள் (எதிர்பார்த்த மாதிரியே) ஜூன்-10வாக்கில் வரப்போவதில் மகிழ்ச்சி!! ப்ளூகோட்ஸ் வருவது குஷியளிக்கிறது!

  * இரத்தப்படலம் அடுத்த பாகங்கள் - வரட்டும் வரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. /// நிலைமை கொஞ்சம் சீரடைந்த பிறகு ///

   அப்படின்னா,

   "வாய்ப்பில்ல ராஜா....!
   வாய்ப்பில்ல...!" தான்

   Delete
 72. ஸ்லிப் கேஸ் ஐடியா செம சார்.ஒரு 20 புத்தகங்கள் வைக்கும்படியாக சுமார் ஒரு 3000 ரூபாய் விலையில் ஒரு ஸ்லிப் கேஸை வைத்தால் உடனே நான் நான் வாங்கத்தயார்... என்ன.. அது கூட இலவசமாக இரத்தப்படலம்+புலன்விசாரணையோடு குண்டு புத்தகமாக கொடுத்தால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. 'இரத்தப் படலம் வேணும்'னு டைரக்டாவே கேட்டிருக்கலாம்! :D

   Delete
  2. இந்த வருஷமும் ,இன்றைய நிலவரங்களும் போகிற போக்கில் ரூ. 3000-க்கு ஓராண்டுச் சந்தாவினை நிர்ணயித்தாலே பெரும் சமாச்சாரம் என்று தோன்றுகிறது ! இந்த அழகில் அரைத்த மாவையே இன்னோருவாட்டி அரைக்க ஏது 'தம் ?

   Delete
 73. Irumbukkai mayavi & spider .......Comics world can never forget. The voice saying 'no' to them is very weak and insignificant. I can't help laughing

  ReplyDelete
 74. இரும்புக்கையரையும் வரவேற்போம்
  ஸ்பைடரையும் வரவேற்போம்

  ReplyDelete
 75. SO DA_கார்டூன் பாணி இல்லாமல்- ஓவியம் இருந்தால் CI D - ராபின் தொடர் போல் இருக்கலாம்.- கண்டிப்பாக இவரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  புது தொடர் x 111-க்கு ஆர்ட் ஓர்க் - சூப்பர்.
  அப்றம் - இம்மாதம் (ஏப்ரல்) வெளி வந்த இதழ்களில் Tex - ஓவியரின் ஒவ்வொரு Frame-க்கும் மெனக்கெடல்கள் மிகவும் அருமை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனதில் பதியும்படி வரைந்துள்ளார்.
  வழக்கமான Tex_கதை - அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை..
  ப்ளீஸ் i சார்_இது போன்ற ஓவியரின் கைவண்ணத்தில் வந்த Tex கதைகளாக தேர்ந்தெடுத்து வெளியிடுங்களேன்.
  Tex - 70 -இதழின் அட்டைப்பட Tex - யை இதழ் முழுவதும் கம்பீரத்துடன் காண முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. //SO DA_கார்டூன் பாணி இல்லாமல்- ஓவியம் இருந்தால் CI D - ராபின் தொடர் போல் இருக்கலாம்//

   பதிவினில் சொன்னதையே ஒருவாட்டி ரிப்பீட் செய்கிறேன் சார் : எவ்வித ஒப்பீடுகளையும் மனதில் இருத்திடாது காஷுவலாக இந்தப் புதியவரை அணுகிடல் நலம் !

   Delete
 76. டேஞ்சர் டயபாலிக் அருமை. _ அவர் குற்றவாளிதான் - ஹீரோ கிடையாது.சட்டந்திலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் சுவராஸ்யம்.
  எனவே, டயபாலிக் - கை ரசித்தால் பல குற்றங்களின் தன்மைகள் தெரிய வரும்.

  ReplyDelete
 77. ஜேம்ஸ் பாண்ட் சார்... இன்னும் 9 நாட்கள்தான் இருக்கிறது இந்த மாத நான்கு புத்தகங்களை அனுப்ப... அதற்கு இடையில் மீதம் உள்ள மூன்று புத்தகங்களின் டீசரை எங்களுக்கு நீங்கள் காண்பிக்க வேண்டும் அதுவும் இந்த சனிக்கிழமை பதிவில் :-)
  ஏதோ நம்மால் முடிந்த ஒரு நினைவூட்டல் :-)

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் சோடா கதையின் உட்பக்கங்களை இன்று கண்ணில் காண்பிப்பதாக சொன்னீங்க. அதையும் கொஞ்சம் கண்ணில் காட்டுங்கள்.

   Delete
  2. சோடா உள் பக்கம் சார்

   Delete
 78. மே மாதத்தின் இதழ் பிரிவோம் சந்திப்போம் படித்தேன்

  நல்ல மற்றும் ஆழமான கதைக்கரு. வன் மேற்கு என்றாலே ரத்தமும் துரோகமும் பணத்தாசையும் நிரம்பியிருக்கும் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல நல்ல முடிவுடன் சொல்லியிருக்கிறது பிரிவோம் சந்திப்போம்.

  கதையின் துவக்கத்தில் இருந்து, இறுதி வரையிலும் வன்முறையின் தாண்டவங்கள், மரணத்தின் அழுத்தமான முத்திரையைப் பதித்துச் என்று இருந்தது. ஆனாலும், மனதிற்கும் சவால் விடும் வகையில் அன்பின் சாயலும் அங்கங்கே பட்டு ரத்தத் துளிகளுடன் சேர்ந்து தெறித்து இருந்ததையும் மறுக்க முடியாது.

  பெற்ற தாய் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத தந்தையில்லாத பாலகன், நண்பனின் மகன் அனாதை ஆனதும் பாசத்தோடு எடுத்து வளர்க்கும் கௌபாய், விபத்தாக நடந்த மரணத்திற்கு காரணமானவனை காப்பாற்றும் நோக்கில் சென்று, வளர்ச்சி என்ற பெயரில் வன்மத்தை வளர்த்து கொண்டு மனித உருவில் இருக்கும் மிருகங்களின் சுயநலத்தால் மாண்டு போகும் அந்தப் பெண்ணும் சரி, அவளை காப்பாற்ற தன்னுயிரை இழக்கும் கிர்பியும் சரி, இந்த உலகில் அன்பு என்றென்றும் தழைத்திருக்கும் என்பதை இறுதிப் பக்கத்தில் உணர்த்துவதும் சரி... மனதை நிரம்பவே நெருடுகிறார்கள்.

  இந்த ஆண்டு இதுவரையிலும் வந்த ஒட்டுமொத்த கதைகளிலும் என்னை நிரம்பவே ரசிக்க வைத்த கதை இது.

  வெளியிட்ட ஆசிரியருக்கு மிகவும் நன்றி 🙏 🙏 🙏

  ReplyDelete
  Replies
  1. செம விமர்சனம்!!

   Delete
  2. நன்றியெல்லாம் சொல்ல அவசியங்கள் ஏது சார் ? ஒவ்வொரு இதழும் உங்கள் அபிமானங்களை ஈட்டும் ரகமாய் அமைத்திட வேண்டியது என் கடமையாச்சே ?!

   Delete
 79. கெட்டியான slip case - I want 30 numbers

  But it should be in uniform size (same shape and size)

  (your comic books are always in different sizes by centimeters)

  ReplyDelete
 80. கெட்டி ஸ்லிப்கேஸ் மூடிய வகையில் தருவதற்கு வாய்ப்பிருக்கா சார்......

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே சாத்தியமே சார் ; ஆனால் விலைகள் தான் எகிறிக் கொண்டே போகும் !

   Delete
 81. கனவே கலையாதே - ட்ரெண்ட்

  வெள்ளை வன்மேற்கின் அற்புத முகங்களில் ஒன்றாக ட்ரெண்ட் கதைகள். இந்த கதைகளின் சிறப்பம்சமாக நான் கருதுவதோ ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு, கதையோடு சேர்ந்தே அனைத்து பாத்திரங்களும் பயணிப்பதே...

  இந்த கதையும் விதிவிலக்கு இல்லாமல் அப்படியே செல்கிறது. இறுதி பஞ்ச் ஆக இருந்தவை:

  1. வைல்ட் பில்லின் மறுஅவதாரம்
  2. ட்ரெண்ட் பேசும் இறுதி வார்த்தைகள்

  இரண்டுமே... முடிந்து விட்டதாக நினைத்த உறவு வேறு வடிவில் தொடர, தொடரும் என நினைத்த உறவு முடிகிறது

  ReplyDelete
  Replies
  1. அருமை. அருமையான விமர்சனம்.

   Delete
 82. 13 நவீன சிந்து பாத் போல தொடர்ந்து கொண்டே இருப்பதால் நாம் சுடச்சுட இப்போது வெளியிட்டு விடலாம் ஸார். பிறகு இசைவான ஒரு சந்தர்ப்பத்தில் 13 கலெக்டர்ஸ்ஸ்பெஷல் பார்ட் 2ஒன்று உற்சாகமாகபோட்டுத் தாக்குவோம்சார். ஆகா நினைத்தாலே இனிக்கிறது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 83. டிஸ்கவர்பூஸார், பிரிவோம். சந்திப்போம் அருமையானவிமர்சனம். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 84. //அதைப் போலான ரெடிமேட் கேஸ்களை அமெரிக்க ; ஐரோப்பிய பதிப்பகங்கள் காமிக்ஸ் ஆர்வலர்களின் பொருட்டு தயாரித்து விற்பனை செய்து வருவதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது ! உதாரணத்திற்கு - ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ? Action Collection ; James Bond collection ; Graphic Novel Collection - என்ற ரீதியில் நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் ! //

  சார், இதை நான் ஒரு சில வருடங்களாக எதிர்பார்க்கிறேன். எனது கோரிக்கை ஒன்றே. பெட்டி hardbound புத்தகங்களையும் சேர்த்து வைக்கும் அளவுக்கு உயரமாய் இருக்க வேண்டும். சில தோர்கல் , லக்கி லூக் புத்தகங்கள் இரண்டு விதமாகவும் வந்திருப்பதால் இந்த கோரிக்கை.

  பெட்டியை நாங்களே சில பக்கங்களில் ஒட்டி முழுமையாய் உருவாக்கி கொள்ளும்படி (சுட்டி விகடன் - சுட்டி கிரியேஷன்ஸ் போல ) இருந்தால், அனுப்பும் செலவும் உடையாமல் வர வேண்டும் எனும் கவலையும் இருக்காது.

  விரைவில் இது செயல்பாட்டுக்கு வர வேண்டும் ஆசிரியரே.

  - சங்கர்

  ReplyDelete
 85. @ ALL : SODA பிரிவியூ பக்கம் மேலுள்ளது !

  ReplyDelete