Powered By Blogger

Monday, March 30, 2020

நாயகர் பேச நினைப்பதெல்லாம்.....!

நண்பர்களே,

வணக்கம். அத்தியாவசியப் பணிகளில் பிஸியானதொரு precious, சிறு அணி களத்திலிருக்க, அதனில் அல்லாத பெரும்பான்மை, வீட்டில் குந்தியபடியே WFH தவிர்த்த மற்ற நேரங்களில் tiktok & வாட்சப் ஆய்வுகளில் பூமியைத் தாங்கிப் பிடிப்பதில் ஒரே பிஸி என்பது புரிகிறது ! இடைப்பட்ட அவகாசங்களில், கறி காய் நறுக்கும் கலைகள் ; துடைப்பத்தின் மறு முனையோடு பரிச்சயமிருக்க, இப்போதோ சரியான முனையைப் பிடிக்கக் கற்றிடல் ; 'வசந்தகால நதிகளிலே' என்று உள்ளுக்குள் தலீவர் பட டியூனை இசைத்துக் கொண்டே வீட்டின் கூடங்களை mop செய்திட முனைதல் என்று ஆங்காங்கே புதுப் புதுக் கற்றல்களும் அரங்கேறுவது புரிகிறது !! Never too old to learn என்று சும்மாவா சொன்னார்கள் ?! வாழ்க்கைப் பாடங்களின் இன்னொரு பக்கம் !! 

எது எப்படியோ - வியாழன் + ஞாயிறின் பதிவுகளுக்கு மாங்கு மாங்கென்று எழுதியவன் சற்றே ஓய்வெடுக்க, இனி நீங்கள் கொஞ்சம் எழுதிடலாமே ?

இதோ உ.ப.வுக்கென ஒரு caption போட்டி !! அதிகாரி மீதான துவேஷத்தையோ ; பட்டாளத்தில் பிகில் ஊதும் அண்ணாச்சி மீதான கடுப்சையோ வெளிக்காட்டிட இதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளாது, இந்த iconic நாயகர்களை தரமான நகைச்சுவை வரிகளோடு கலகலக்க விட முயற்சித்திடலாமே guys ? வெற்றி பெரும் ஒவ்வொரு கேப்ஷனுக்கும், ஒரு ஜம்போ சீசன் 3 சந்தா பரிசு - நம் அன்புடன் !! 


Bye all !! Stay home....Stay Safe !! See you around !!

பி.கு : இவை எல்லாமே படைப்பாளிகள் ஏதேதோ தருணங்களில் உருவாக்கிய பகடிகளே !! 

233 comments:

  1. Replies
    1. அதே தான் சித்தரே

      Delete
    2. ஹிஹி!
      என்ன பார்வை உங்க பார்வை..
      இடை மெலிந்தான் இந்தப் பூனை!

      Delete
    3. வழக்கம் போல

      பொய்யிதானே

      ஈனா வினாண்ணே 🤷🏻‍♂️😜
      .

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. வந்தாச்சு சார் 🙏🏼
    .

    ReplyDelete
  4. போட்டியெல்லாம் நமக்கு சரிபடாது

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி...இங்கேயும் இதே கதை தான்.

      Delete
  5. ஆஹா caption எழுதும் போட்டியா ? இங்கே நமக்கு ஏதும் வேலை இல்லை. நண்பர்கள் எழுதுவதை ரசிப்பதோடு சரி. வாருங்கள் நண்பர்களே

    ReplyDelete
  6. பராகுடா வைரத்தேடல் போயிட்டிருக்கு!

    ReplyDelete
  7. ///துடைப்பத்தின் மறு முனையோடு பரிச்சயமிருக்க, இப்போதோ சரியான முனையைப் பிடிக்கக் கற்றிடல் ///

    ஹா ஹா ஹா!! கிடைக்கிற கேப்ல எல்லாம் சிக்ஸர் அடிக்கறீங்க எடிட்டர் சார்!! :)))

    ReplyDelete
  8. A...எனக்குத் தெரிது இது கனவுன்னு...

    B... எனக்கும் தெரிது இது கனவுன்னு
    C...அடப் போங்கடா எனக்கும் தெரியும்...இது கனவுன்னு

    ReplyDelete
  9. கார்சன் :
    ஏப்பா டெக்சு இந்த கொரோனா கொரோனான்னுறாங்களே அத இன்னிக்கி நாம ரெண்டுபேரும் சேர்ந்து தூக்கிடலாமா/போட்டிடலாமா

    டெக்ஸ் :
    அத நீ தூக்குறது/போடுறது இருக்கட்டும் அது உன்ன தூக்கிடப்போகுது
    ஏன்னா கொரோனா பெருசுங்களா பாத்துதான் தூக்குதாமாம்
    பேசாம நீ வீட்டுலயே கம்முன்னு இருந்தா அதுபாட்டுக்கு போயிடுமாம்

    ReplyDelete
  10. டைகர் :
    ஏப்பா டெக்சு
    ரேண்டுபேரும் சேர்ந்து கொரோனா ஒழிப்புல இறங்கலாமா

    டெக்ஸ் :
    இது ஹீரோயிசத்த காட்ட வேண்டிய நேரமல்லண்ணே
    அரசாங்கம் சொல்லுவதுபோல வீட்டுக்குள்ளயே
    இருந்தா போதும்
    Stay Home
    Stay Safe 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா! டெக்ஸ்-டைகரை வச்சு கொரோனா ஒழிப்புப் பிரச்சாரமா?!! :)))

      Delete
    2. ஏதோ நம்மாள மிடிஞ்சது 🤷🏻‍♂️
      .

      Delete
  11. *** முதல் படத்துக்கான கேப்ஷன் ***

    டெக்ஸ் : அடேய் டைலா..! நீ என்னதான் சமூக விலகலைக் கடைபிடித்தாலும் நான் உன்னை பிடிக்காம விடப்போறதில்லை!

    டைலன் : எ..என்னை நம்புங்க வில்லர் சார்.. நீங்க சாப்பிட்ட கோழி வருவலில் கொரோனாவைக் கலந்தது சத்தியமா நானில்லை!!

    கார்ஸனின் மைன்டு வாய்ஸ் : அடக்கன்றாவியே!! அப்படீன்னா.. டெஸ்டுக்கு அனுப்பவச்சிருந்த ப்ளட் சாம்பிளை நான்தான் வரமிளகாய் சட்னினு நெனச்சு சிக்கன்ல மிக்ஸ் பண்ணித் தொலைச்சுட்டேனா?!!!

    ReplyDelete
    Replies
    1. 😝😝😝
      நீங்களும் நம்ம ரூட்டுக்குதானே வந்திருக்கீங்க
      நல்ல விசயம் தானுங்களே 🤷🏻‍♂️

      .

      Delete
  12. /// வெற்றி பெரும் ஒவ்வொரு கேப்ஷனுக்கும், ஒரு ஜம்போ சீசன் 3 சந்தா பரிசு - நம் அன்புடன் !! //

    Very good prize!! All the very best friends!!

    ReplyDelete
  13. டைகர் : நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா.?

    டெக்ஸ் :உனக்கென்னப்பா வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் தலையைக் காட்டுவே.என் கதை அப்படியா ?நான் மாச மாசம் வந்தேதான் ஆகணும்.அதான் திக் திக்னு இருக்கு.

    ReplyDelete
  14. Caption :
    கார்சன் : இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் ப்பா ..!

    டெக்ஸ் : ஏன் என்ன சொல்றே...

    கார்ஸன் : ஊரு முழுக்க கொரோனா இருக்கும் போது, ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் இப்படி பக்கத்திலே உட்காந்திருக்கீயே ...அட தேவுடா.

    MH MOHIDEEN

    ReplyDelete
  15. டைலன் : ஐயோ! என்னை பிடிக்காதே விட்டுடு ...

    டெக்ஸ் : நில்லுடா அப்பதான் பிடிக்கவே முடியும்

    கார்சன் : பிடிச்சா தாண்டா விட முடியும்?

    ReplyDelete
  16. *** இரண்டாவது படத்துக்கான கேப்ஷன் ***

    டைகர் : சொல்லுங்க மிஸ்டர் வில்லர்.. என்னைக் கைது செய்ய வந்ததன் நோக்கமென்ன?

    டெக்ஸ் : நீசனே! பதினஞ்சு வருடங்களுக்கு முன்னே சிகுவாகுவா சில்க்குடன் சில்ஃபான்ஸ் பண்றதுக்காக ஒருதடவை குளிச்சே! அதுக்கப்புறம் இப்பவரைக்கும் நீ மழையில் கூட நனையலை! இப்ப உலகத்தையே உலுக்கிட்டிருக்கும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் உன் அழுக்கு மண்டையைத் தவிர வேறு என்னவாக இருந்திடமுடியும்? கைகளை உயர்த்தாமல் என்னுடன் எழுந்துவா - கப்படிக்கும்!

    ReplyDelete
  17. Caption 3
    A:ஊரடங்கு 144 போட்டாலும் போட்டாங்க ஒரு பயலயும் கனானோமெ நாம யார் கூட சண்ட போடறது.
    அதிகாரி:நாம அடக்கம் பன்னவங்கலோட எண்ணிக்கைக்கு 1440 தடையுத்தரவு போடலாம்.அட விடுப்பா நாம நம்மள தனிமைப்படுத்திப்போம் சமூக விலகல மதிப்போம்.

    ReplyDelete
  18. A ஐயையோ ஆளை விடு சாமீய்ய்...
    B ஒரு கப்பு இரத்தமாவது கொடுத்துட்டு போ டைலான்..
    C இதுக பூனை எலி ஆட்டத்தை ஆடுனா நான் என்னாறதாம்?!


    டெக்ஸ் Vs டைகர்
    கொரோனாவின் கோர தாண்டவத்துக்கு முடிவு கட்டியாகணும் டைகரு..

    முதல்ல அதுக்கு வூட்டை வுட்டு போகணும் டெக்ஸூ... கம்முனு இரு.. இத்தாலியே மெர்சல்ல கெடக்கு..


    இம்சை அரசா காபி ரெடி..

    இப்போ தேவை கபசுரக்குடிநீர்தான் ஓய்ய்..

    ReplyDelete
  19. கேப்வன: 1
    B:டேய், ஓடாதே. கொரோனாவுக்கு மருந்து சொல்லிட்டு போ.
    A: அடேய். தீஞ்சு போன மூஞ்சிக்காரா பின்னாடி ஒரு மாக்கான் வர்ரான் பாரு.அவன கேளு.
    C: அட நாதாரி, இது போற போக்குல என்னய மாட்டி விடுது பாரேன்.

    கேப்ஷன்: 2
    டைகர் : டெக்ஸூ. என்ன பலமா யோசனை.
    டெக்ஸ் : இல்லே ஏப்ரல் 14 வரைக்கும் சமூக விலகலை கடைப்பிடிக்கணுமாம். யாரையாவது சுடலாம்னா, ஒரு பயலையும் காணோம். பேசாம நாம ரெண்டுபேரும் சுட்டு சுட்டு விளையாடலாமா?
    இல்லேன்னா நான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்கவா?
    டைகர் : நீ ஆணியே புடுங்க வேணாம். ஆளை விடு.
    கேப்ஷன்: 3
    கார்சன்: டெக்ஸ், ப்ளாஸ்க்குல கொரானாவுக்கு கஷாயம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.
    டெக்ஸ் : நீ போடற காப்பியே அது மாதிரிதான் இருக்கும். இதுல தனியா கஷாயம் வேறயா.

    ReplyDelete
    Replies
    1. ///நீ போடற காப்பியே அது மாதிரிதான் இருக்கும். இதுல தனியா கஷாயம் வேறயா.///

      ஹா ஹா! செம்ம! :)))))

      Delete
    2. Caption 3 semma பத்து சார்

      Delete
    3. பத்து சார்@ சரி டைமிங்! எனக்கும் இதே சந்தேகம் தான். எப்படி பார்த்மலும் கார்சனே காப்பி போடறரு. இன்னிக்கி தெரிந்து கொண்டேன் ரகசியத்தை...செம...செம!

      Delete
  20. கேப்ஷன் : 3
    கார்ஸன் : அடேய் டெக்ஸு, இப்பவாவது சொல்லு. கொரானாவைரஸ்ங்கிறது யாரு.
    டெக்ஸ் : அட தாடிக்காரா. நம்ம தோஸ்த்து கவர்னர் மாண்டாலெஸ் இருக்காரே, அவரோட ஒண்ணு விட்ட சித்தப்புவோட பையன்தான் இந்த கொரானாவைரெஸ். ரொம்ப மோசமான பய.

    ReplyDelete
  21. கேப்டன் : 2
    டைகர் : டெக்ஸ். என்ன யோசிக்கிற.

    டெக்ஸ் : கொரோனாவ பரவாம கட்டுப்படுத்த மாஸ்க் நிறையே வேணுமாம். நம்ம டயபாலிக்கோட கான்டாக்ட் நெம்பர கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன். அவருதான் நிமிசத்துல விதவிதமா மாஸ்க்கு ரெடி பண்ணிடுவாரே.
    டைகர் : சூப்பரப்பு.

    ReplyDelete
    Replies
    1. இது செம்ம டிரெண்டிங்

      Delete
  22. I am staying comics. கரூர் ராjasekaran

    ReplyDelete
  23. *** முதல் படத்துக்கான கேப்ஷன் ****

    Dylon: ஐயோ ! சத்தியமா நான் ஊரடங்குனாலதான் ஒதுங்குனான் ! உங்கள வேவு எல்லாம் பாக்கலிங் !

    டெக்ஸ் : Dy! Dieee! Dylon! Dyy! Dieee! Dylon! Dyyyy! Dieee! Dylon!

    கார்சன் : அடப்பாவி ! கொரோனா கிட்ட தப்பிச்சு இவன்கிட்ட சிக்கிட்டேயேப்பா!
    கொரோனா அடிச்சு பொழைச்சவன் கூட இருக்கான் ! ஆனா..... இந்த தல கடிச்சு தப்பிச்சவங்க யாருமே இல்ல !
    (இது எப்படி இருக்கு ! அவரு மட்டும்தான் நம்மள ஓட்டுவாரா ! ஹி ஹி ஹி!)

    ReplyDelete
  24. *** இரண்டாவது படத்துக்கான கேப்ஷன் ***: புலி & தல

    அடேடே! புலியும் தலையும்மா! சரிரிரிய் ..சரிரிரிய் ..கொஞ்சம் kindஅவே டீல் பண்ணுவோம்!
    (முன்குறிப்பு : ஐயா....பெரியோர்களே! தாய்மார்களே! இங்க இருக்கற டயலாக் எல்லாம் அதிகாரி இங்லிஷ்ல சொல்லி..நான் தமிழ்ல மொழி பெயர்த்ததுங்க!
    ஏதாவது குத்தம் கொர இருந்தா நீங்க அதிகாரியோட துப்பாக்கிட்டிட்டயே பேசிக்குங்க! சொல்லிட்டானாஆமா !)

    கேப்ஷன் : 1

    புலி : நிறுத்தணும் ! எல்லாத்தையும் நிறுத்தணும் ! இந்த அதிகாரிங்க ஆயுதம் எடுக்கறத நிறுத்தணும் !

    தல : ஏனப்பா! வூட்ல இருக்க சொன்னா... குதிரையை எடுத்துட்டு வெளிய சுத்துணையா?
    இப்ப புலிய வரி புலி ஆகிட்டாங்களாலாக்கும் ;-)




    கேப்ஷன் : 2

    புலி : (ரொம்ப சீரியஸ் ஆக): இந்த மாதிரி நேரத்துல நீங்க ஏன் ஏங்குட சேர்ந்து ஒர்க் பண்ண கூடாது ?

    தல :
    (actuala ...இத தல... சத்தியராஜ் ஸ்டைல பேசிருந்தார்னா இன்னும் தூக்கலா இருக்கும்)

    என்னப்பா காமெடி பண்ணிட்டு இருக்க ! நீயே வருஷம் ஒருக்கா......
    வரலாமா வேணாமான்னு யோசனை பண்ணி பண்ணி வர்ற ! அட... அதுவும் பாதி நேரம் கெஸ்ட் ரோல்தானாமா? இதுல இவுரு என்னைய வேற கூப்புடுறாரு !
    சரிரிய்.... ஏஏஏன் கூட உன்னை சேதிக்கலாம் பார்த்தா....ஏற்கனவே நமக்கிட்ட ஒரு புலி இருக்குது!
    சரி!!!
    நீ வேண்ணா ஒன்னு பண்ணு!!!
    ஒவ்வொரு தடவையும் ஒரு "அதிகாரி" கோட்டைல இருந்துகிட்டு....
    ஆரம்பத்துல ஒரு 'குட் லக்' உம்....
    கடைசில ஒரு 'குட் பை' யும் சொல்லுவாரே!!
    நீ ஏன் அந்த ரோல பண்ண கூடாது !!!
    இப்ப நீயும் மாசம் மாசம் வந்த மாதிரியும் ஆச்சு! உனக்கு புடிச்ச கெஸ்ட் ரோல் பண்ண மாதிரியும் ஆச்சு!
    ஒரே புல்லெட்ல ரெண்டு மாங்கா! என்ன சொல்ற ? ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. சிரிச்சு முடியலைங்க சரவணன்!! அப்படியே அருவிமாதிரி கொட்டுது!! :))))))

      Delete
    2. ///குதிரையை எடுத்துட்டு வெளிய சுத்துணையா?
      இப்ப புலிய வரி புலி ஆகிட்டாங்களாலாக்கும் ;-)///---கொன்னூட்டீங்க பாஸ்!!---செம..செம...!!!

      Delete
    3. ///குட்பை&குட்லக்///---என்னா நக்கல்... செம ரோலு செம ரோலு!!!! இத்தோட சொச்சமும் போச்!

      Delete
    4. நன்றி! நன்றி! நன்றி சேலம் டெக்ஸ் பாஸ்!

      Delete
    5. நன்றி செயலரே ! அது என்னாமோ தெர்ல ! நம்ம புலியையும் தலயையும் பார்த்தா ஒரே பரபரன்னு ஆய்ருது! மத்த டைம்ல இப்போ type பண்ணலாம் அப்புறம் type பண்ணலான்னு யோசிச்சு அடுத்த பதிவே வந்துருது!

      இப்படித்தான் பாருங்க, போன பதிவுல நம்ம ஸ்டீல் பாஸ் போட்ட பாட்டு கடைசி பாராவை பார்த்தா ,

      "வீணை எரிகிறது............................................................."

      பாஸு! ஒரு டவுட்டு ! இது அந்த மல குரங்கு சார் எதுத்த ரூமை பார்த்து படறதுதானானு கேக்கணும் நெனச்சன்... ஆனா அதுக்குள்ள பாருங்க... அடுத்த பதிவே வந்துருச்சு :-)

      Delete
  25. *** மூன்றாவது படத்துக்கான கேப்ஷன் ***: கார்சன் & டெக்ஸ்

    கேப்ஷன் : 1

    டெக்ஸ் : ஆமா ! ரொம்ப நாளா நடிக்கணும்னு சொன்னையே! ஒரு AD ஒன்னு பண்ணறாங்களாம் ! போறையா ?

    கார்சன் : சூப்பர் பா ! ஹீரோயின் உண்டுதானே ?

    டெக்ஸ்: இல்ல ! கோழி சாப்ட்டா கொரோனா வராதுன்னு AD ஆம் ! ஹீரோயின் கெடைக்குதோ இல்லையோ ! ஆனா நெறைய வறுத்த கறி கெடைக்கும் !

    கார்சன் : ஹேய் ! இது அதவிட சூப்பர் பா !



    கேப்ஷன் : 2

    கார்சன் : ஏன் டெக்ஸு ! இவ்வளவு பக்கத்துல உங்காந்துருக்கமே... நமக்கு கொரோனா வருமா என்ன ?

    டெக்ஸ் : (மனதிற்குள்) உன் ரூட் மேப் படி கடைசியா நீ இத்தாலி, கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் டி சி .....
    (சத்தமாக) ஐஐயோ! நீ கொஞ்சம் எட்டவே உக்காரபா!



    கேப்ஷன் : 3

    கார்சன் : ஏனப்பா ! இந்த விஸ்கி அடிக்கடி சாப்ட்டா கொரோனா வராதாமே !

    டெக்ஸ் : யோவ் பெருசு ! விஸ்கி வேண்ணா வாங்கி குடி ! அதுக்காக இந்த வாட்ஸாப்ப் forward மெசேஜ் மாதிரி பொய்யா பேசி என்ன மாதிரி சிறுசுங்கள கெடுக்காத !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! 3வது கேப்ஷன் - செம!! :)))

      Delete
    2. எல்லாமே அடி தூள்...!!! சிரிச்சி சிரிச்சி மாளல!

      Delete
  26. *** இரண்டாவது படத்துக்கான கேப்ஷன் ***: டைகர் & டெக்ஸ் :

    (இன்னுமும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நெருங்காத ஒரு தூரத்து சலூனில் அந்த இணை பிரியா நண்பர்கள் டைகரும் டெக்ஸ்சும்
    சோகமாக பேசி கொண்டு இருந்தனர் ..............)

    டைகர் : சில்க்கை நெனச்சு ஒரே கவலையா இருக்கு ! கொரோனா கிட்ட தப்பிச்சாளோ என்னமோ !

    டெக்ஸ் : நீ கடைசியா சில்க்கை எப்போ பார்த்தா !

    டைகர் : ஒரு ரெண்டு மூணு வாரம் முன்ன !

    டெக்ஸ் (ரொம்ப சீரியஸ் ஆக ): அப்ப சில்க் பொழச்சுக்குவா !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! செம்ம செம்ம!! :)))))

      Delete
    2. ////
      டைகர் : ஒரு ரெண்டு மூணு வாரம் முன்ன !

      டெக்ஸ் (ரொம்ப சீரியஸ் ஆக ): அப்ப சில்க் பொழச்சுக்குவா !///---வெச்சி செஞ்சிங்!!ஹா...ஹா...!! ஸ்டாண்டன் இனி நிம்மதி ஆக இருப்பார்.

      Delete
    3. ரொம்ப நன்றி GP சார் !

      Delete
  27. டைகர் அன்ட் டெக்ஸ்...


    டெக்ஸ்...நாம ரெண்டு போரும் சேந்தா செம மாஸ் தானே...


    இப்ப "மாஸ் " முக்கியமில்லை டைகர்..நமது வீரர்களை காப்பாற்ற "மாஸ்க் " தான் முக்கியம்..

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கார்ஸ்ன்..

      டெக்ஸ்..பல மாசமா யாருமே இல்லாத இந்த பாலைவனத்துலே யாரை தேடி இங்கே அலைஞ்சுட்டு இருக்கோம்..


      பெருசு ..எப்பவுமே நாம வில்லன்களை தேடி அலைவோம்..ஆனா இப்ப இந்த கொரானா வில்லன் நம்மளை தேடி வந்துரகூடாதுன்னு தான் இங்கே இந்த யாருமே இல்லாத பாலைவனத்துல திரியுறோம்..சில சமயம் துப்பாக்கியை விட தனிமையும் நம்மை காப்பாத்தும்..பொறுமையா இரு இன்னும் கொஞ்ச நாள் தான்..

      Delete
  29. கார்ஸன்..

    டெக்ஸ் இப்ப நாம உடனே இந்தியா கிளம்புனும்..

    டெக்ஸ்..

    எதுக்கு பெருசு..


    கார்ஸன்..

    இந்தியாவிலும் கொரானா வை பரப்பிட்டாங்களாம்..அவங்களை போய் நாம காப்பாத்த வேணாமா..

    டெக்ஸ்..

    அவங்களை காப்பாத்த தான் நாம எங்கேயும் போகாம இங்கே உக்காந்து இருக்கோம் பெருசு..அமைதியா உக்காந்து நீ டீயை ஆத்து..

    ReplyDelete
  30. டைகர் அன்ட் டெக்ஸ்..

    டெக்ஸ் இந்த சலூன்ல நம்மளை சுத்தி எதிரிகள் ரவுண்ட் கட்டிட்டாங்க..தெரியுமா இல்லையா..?

    ம்ம்...


    அவுங்க கையுல எல்லோரும் ஆயுதம் வச்சுருக்காங்க தெரியுமா இல்லையா..?

    ம்ம்....


    என்ன ம் கொட்டிட்டே இருக்கே..இப்ப எப்படி தப்பிக்க போறோம் டெக்ஸ்...?!

    கவலையே படாதே டைகர்..அவுங்க எல்லாத்துக்கும் சரக்கை ஊத்தி கொடுக்குறது உன்கூடவே வருச கணக்கா சுத்திட்டு இருந்த ஜிம்மி தான்...கண்டிப்பா அவன் வைரஸே போதும் நம்ம எதிரிகளை முடிக்க..









    ReplyDelete
  31. டைலன் அன்ட் டெக்ஸ்...

    அய்யோ என்னை விடு எதுக்கு என்னை கொல்ல வர்ற டெக்ஸ்..

    செத்தாலும் வில்லன்களை ஒழிக்காம விட மாட்டான் டெக்ஸ்...

    ஐயோ...நான் வில்லன் இல்லை..நானும் உன்னை மாதிரி ஹீரோ தான்...


    நீ ஹீரோன்னு எப்படி நம்புறது..


    நீ வேணா சிவகாசில போய் லயன் காமிக்ஸ் விடற ஆசிரியர் கிட்ட கேட்டு பார்..என்னை வச்சு புக்கு எல்லாம் போட்டு இருக்காரு..


    ஹா...அவுரு தான் ..நள்ளிரவு நங்கை ன்னு ஒரு கதை போட்டேன்..அந்த புக்குக்கு என் குடோன்ல இருந்து விடியலே வரமாட்டேங்கது அவன் தான் என் முதல் வில்லன் ன்னு அனுப்பி வச்சதே...

    ReplyDelete
  32. பந்தயத்துக்கு நாங்களும் வருவோம். (வந்தாப்ல இருந்து நாங்க...நாங்கன்னா இப்டி எத்தன பேருடா கிளம்பி வந்திருக்கீங்க.. யோவ்..இருய்யா.. அப்புறம் கான்செப்ட்ட மறந்துறப் போறன்..) கேப்ஷன் 1 : டைலான்: "என்னாங்கடா இது... சைனாமேன் வருவான்னு பார்த்தா கறுப்புக்கிழவி ப்ராடக்ட் வருது.."
    பேய்:"க்கிர்ர்ர்..என் வவ்வால் சைட்டிஷ் மேலயா கை வெக்கிறே.."
    கேப்ஷன் 2: டெக்ஸ்: "இந்த கொரோனா மாதிரி தொற்றுநோயா தான் அவ என்னை விட்டுப்போனா.."
    டைகர்: "நீங்க பரவால்ல. நான் மாசக்கணக்கு ல குளிக்கலன்னு சொல்லி என்னையே விட்டுட்டு போனா ஒருத்தி."
    டெக்ஸ் : "ஓ..அப்ப நீதான் அந்த சில்க்கோட காதலனா.."
    டைகர்: "ச்சே..கடைசில புஷ்பா புருஷன் ரேஞ்சுக்கு ஆயிடுச்சே என் பேரு.."
    கேப்ஷன் 3:" கார்சன்: "எதுக்கு நம்மள 90 கிட்ஸ் க்ரூப்ல சேர்த்திருக்காங்க."
    டெக்ஸ் :"ஆமா..நீ கல்யாணம் பண்ணாத பிரம்மச்சாரி. நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி"

    ReplyDelete
  33. Caption 1)

    B:டைலா டைலா டைலாஆஆஆ.....க்ர்ர்ர்.

    A: ஆஆஆஆ...கார்சம்பெருசு...என்னய்யா ஆச்சு உந்தோஸ்த்த்துக்கு....

    C: சொன்னா கேட்டாத்தான....மாசா மாசம்
    சிவகாசி போவாதடான்னா கேட்டாத்தான ஆச்சு...இப்ப பாரு...மே மாசம் வரைக்கும் போடமுடியாதுன்னுட்டாங்கெளாம்...அதாங் கொரானாபிடிச்ச கெழவனாட்டம் அலையுறான்....

    ReplyDelete
  34. கேப்ஷன் : 2
    டைகர் : என்ன தல! என்ன யோசனை?
    டெக்ஸ் : இல்லே. பதிவு போட்டா சாதாரணமாவே 100, 200 ன்னு கமெண்ட்டு எகிறி அடிக்கும். சாயங்காலம் ஆகப்போகுது.இன்னும் 80 கூட தாண்டலே. ஒருவேளை 3வது கேப்ஷன்ல கார்சன் போட்ட காபிய குடிச்சதுல பயபுள்ள எல்லாம் தெறிச்சு ஒடிட்டானுவளோ?

    ReplyDelete
  35. சார் நீங்க எழுதியிருக்கறது எந்தப் படத்துக்கான கேப்ஷன்னு தெரியலை..! தவிர, தமிழ்ல எழுதினா எல்லோரும் படிச்சு சிரிக்க வசதியா இருக்கும்!

    ReplyDelete
  36. கேப்சன் போட்டி:-
    (முதல் படம்)
    (டைலன்)

    கேப்சன்1:-
    B."ஹாய் ஐ ம் கமிங் ப்ரம் சைனா கிளாட் டூ மீட் யூ.."
    A."அய்யோ அம்மா..."
    C.(அய்யய்யோ எஸ்கேப்...)

    கேப்சன்2:-
    A.தொடர்ந்துவா தொட்டு விடாதே...
    B.தொடர்ந்துவா தொட்டு விடாதே...
    C.தொடர்ந்துவா தொட்டு விடாதே...

    கேப்சன்3:-
    C.(ஓடுங்க ஓடுங்க)
    A.டேய் பேய் தொரத்துனா நாங்கதானேடா ஓடணும்...பேயா இருந்துகிட்டு நீங்க எதுக்குடா ஓடறிங்க..
    B.பின்னாடி கொரோனா துரத்திக்கிட்டு வருதாம் அதுதான்...

    கேப்சன்4:-
    C.டேய் நில்லுங்கடா
    B.தம்பி வேகமா ஓடுப்பா போலிஸ்காரன் துரத்தறான்..
    A.அண்ணே நான் பால் பாக்கெட் வாங்கதான் வந்தேன்....என்னை விட்ருங்க...

    கேப்சன்5:-
    C.ஓடுங்க ஓடுங்க
    B.யாகூ...யாகூ...
    C.ரன்னிங் ரேசுனு தானே சொல்லி கூப்பிடானுங்க.நம்பி வந்தது தப்போ.. இதுக்கு பேருதான் பேய் ஓட்டம் ஓடறதா...

    கேப்சன்6:-
    C.விடாத பிடி அவன..
    B.ஏய் நில்லுடா..
    A.இத்தாலில இருந்து வரேனு சொன்னதுக்கு போய் இப்படி துரத்தறானுங்களே...சாமி காப்பாத்து....

    கேப்சன்7:-
    C.<~•¡¤€《◇•^-!\°¤▪︎*
    B.<~•¡¤€《◇•^-!\°¤▪︎*
    A.(ஓ..இதான் ஜோம்பி பாஷையா...
    நாமளும் அப்படியே மெயின்டெயின் பண்ணி எஸ்கேப் ஆயிட வேண்டியதுதான்...)
    <~•¡¤€《◇•^-!\°¤▪︎*

    கேப்சன்8:-
    C.அவனேதான் பிடி.
    B.நில்லுடா டோய்..
    C.அண்ணா நீங்க நினைக்கற மாதிரி "எஸ் பேங்க்" ஓனர் நான் இல்லைங்கணா...

    கேப்சன்9:-
    A.காத்து அடிச்ச வேகத்துல உங்க முகம் பறந்து போயிடுச்சு..
    எலும்பு மட்டும் தான் மிஞ்சி இருக்கு...
    B.டேய் என்ன FOGG விளம்பர ஸ்டைல்ல ஓட்டறியா வரேன் இரு மவனே..
    C.செத்தாண்டா சேகரு..

    ReplyDelete
  37. படம்2:-
    (டைகர்&டெக்ஸ்)

    கேப்சன்1:-
    B.இப்படிலாம் வருமுனு தெரிஞ்சு,அப்பவே முகமூடி போட்ட ஸ்பைடர்மேன்,டயாபாலிக் தான் சூப்பர் ஹீரோக்கள்பா என்ன சொல்ற.?
    A.ஆமாம்பா நாமலாம் தப்பு பண்ணிட்டோம்..

    கேப்சன்2:-
    A.முகத்தில் என்ன சோகம் டெக்ஸ்..
    B.எங்க நாட்டுல டெக்ஸ் பீவர் டயாபாலிக் பீவர்லாம் போய் இப்ப கொரோனா பீவர் மட்டுமே ஓடுதுப்பா அதான்...

    கேப்சன்3:-
    B.ஸ்மோக்கிங் ஈஸ் இன்ஜீரியஸ் டூ ஹெல்த் டைகர்
    A.டிரிங்கிங் ஈஸ் இன்ஜீரியஸ் டூ ஹெல்த் டெக்ஸ்
    (இவங்க துப்பாக்கிங்க தான் நிஜத்துல எங்களுக்கெல்லாம் இன்ஜீரியசே...)

    கேப்சன்4:-
    B.என்ன டைகர் தூங்காம உட்கார்ந்துகிட்டே இருக்க?
    A.தனித்திரு விழித்திருனு சொன்னாங்கப்பா அதான்...

    கேப்சன்5:-
    A.144 தடை போட்டதால இப்படி உன்கூட என்னையும் சேர்த்து அடைச்சு வச்சுட்டாங்களே
    B.இதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணிருக்கனுங்கறது...

    கேப்சன்6:-
    B.பர்ஸ்ட் இடத்த விட்டு நகரவங்க அவுட்டுனு போட்டி வச்சது தப்பா போச்சோ?
    A.ஆமாம்பா உட்கார இடமெல்லாம் செமையா வலிக்குது..

    கேப்சன்7:-
    A.என்ன டெக்ஸ் இரவுக் கழுகுக்கு பார்வையை பிடுங்கி உட்கார வச்சுட்டாங்களா?
    B.பதுங்கி கிடக்கற புலிய விட இது ஒண்ணும் மோசமில்ல டைகர்...

    கேப்சன்8:-
    A.நான் 27 டெக்ஸ்..நீ எத்தனை?

    B.ஐ..என்கிட்ட 29 ஈ இருக்கு....நாந்தான் ஜெயிச்சேனாக்கும்

    கேப்சன்9:-
    A.இந்த மிஸ்.சைனா நம்மள இந்த பாடு படுத்துதே டெக்ஸ்...
    B.முன்னதான் மிஸ் சைனாப்பா...
    இப்ப மிஸ் வேல்டாக்கும்..

    ReplyDelete
  38. படம் 3:-
    (டெக்ஸ் & கார்சன்)

    கேப்சன்1:-
    A."கரோனா"னு பேர கேட்டாலே எல்லோரும் பயந்து ஓடறானுங்க.ஏன் தம்பி அது நல்ல பிகரு இல்லயா...?
    B.ஆஹான்...

    கேப்சன்2:-
    A.என்ன டெக்ஸ் யோசிக்கற..
    B.இங்க ஒரு கூட்டம் தலயா தளபதியானு அடிச்சுகுது...
    ஆனா இப்ப உலகமே முகமூடி பத்தி மட்டும் தான் பேசுது...
    வேதாளர் வேதாளர்தான்...

    கேப்சன்3:-
    B.என்ன ரோட்டுல நாட்டுல ஒருத்தர கூடக் காணோம்.வழி கேட்க கூட ஆளில்ல..."
    A."எல்லாரும் சோசியல் டிஸ்டன்ஸ்ல இருக்காங்கபா..."

    கேப்சன்4:-
    B.கடைசி காலத்த அமைதியா ஓட்டலாமுணு ஒரு ஷேர் போட்டு ஒரு தீவ வாங்கிட்டேன்.
    இன்னோருத்தரும் நானும் மட்டும் தான் அதுக்கு ஓனராம் டெக்ஸ்..
    ஜாலி...ஜாலி..
    A.தீவு பேரு என்ன?
    B.ஏதோ கைலாசாவாம்...


    கேப்சன்5:-
    B."காக்கும் கரங்கள்"னு சொல்றதோட அர்த்தம் இப்பதாம்பா புரியுது..."
    A.உண்மைதான் டெக்ஸ்..

    கேப்சன்6:-
    B.டெக்ஸ் என்ன பொட்டலம் மடிச்சிகிட்டு இருக்க
    A.இது மன்மதப் பொடினு நினைச்சியா.
    நீ வேறப்பா இது நிலவேம்பு பொடி...

    கேப்சன்7:-
    B.இந்த கொரோனாவால எவ்வளவு பேர் செத்துடாங்க பாரு கார்சன்..
    A.ம்க்கூம்....நீ வெளிய இருந்திருந்தா இத விட அதிகம் தீர்த்திருப்பியே..

    கேப்சன்8:-
    A.அப்பாடா எப்படியோ கொரானாவுக்கு தப்பிச்சு இந்த இடம் வந்துட்டோம்...
    இது எந்த ஊரு டெக்ஸ்?
    B.ஏதோ இத்தாலியாம்...

    கேப்சன்9:-
    A.என்னப்பா டெக்ஸ் பேப்பர்லாம்..
    எதாவது ஆட்டோபயாகிராபி எழுத போறியா என்ன?
    S.ஆமாம்பா...
    பேரு கூட வச்சுட்டேன்..
    "கள்ளிக்காட்டு சதிகாசம்"

    கேப்சன்10:-
    A.ஆனாலும் இந்த எடிக்கு ரொம்ப தான் குசும்பு..
    B.ஏன் நண்பா?
    A.நான் பேசற டயலாக்குக்கு மட்டும் "A" போட்டு ரவுண்ட் பண்ணிருக்கார் பாரேன்..

    ReplyDelete
    Replies
    1. 6,7,8--டாப்ஸ்!!! மன்மதபொடி சரியான கான்செப்ட்! 7ம் நச்!

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. கேப்சன் போட்டி:-
    (முதல் படம்)
    (டைலன்)

    B & C. டேய் டைலன் ஓடாத நில்லு நில்லு!!!
    A. (ஓடியவாறே) அடேய் கரோனா மண்டையனுங்களா, இருட்டுனத்துக்கு அப்புறம் டாஸ்மாக்'ல ப்ளாக்ல சரக்கு கிடைக்குதான்னு பாக்க வந்தது தப்பு தான்டா!!! இனிமேல் இந்த சைடே தலையை காட்ட மாட்டேன்... என்னை உட்டுடுங்கடா...

    ReplyDelete
  42. Caption 1:
    டெக்ஸ்(B) : ஏய் டைலன், பயப்படாதே நில்!

    டைலன்(A) : யோவ் நீ வேற! நேரம், காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு. உன்ன மாதிரி அரைவேக்காடுக கூடதான் என் பொழப்பே ஓடுது. நான் அலறி அடிச்சு ஓடுற காரணமே உன் பின்னாடி வர்ற பெருசு தான்.

    கார்ஸன்(C) : அடடே! பயல் உஷாராயிட்டான் போலிருக்கே. வருத்த கறியுடன் கம்பி நீட்டிடுவான் போல.

    Caption 2:

    டைகர்(A) : என்ன டெக்ஸ் ஆழ்ந்த சிந்தனை.

    டெக்ஸ்(B) : வருகிற 2021 சென்னை புத்தக விழாவோடு உனது கதைகள் சகலத்துக்கும் மங்களம் போடப்போகிறார்கள். அதன் பின் உன்னை எப்போது காண்போம் என்கிற கிலேசம் மனதை வருத்துகிறது நண்பா.

    Caption 3:

    கார்ஸன்(A) : நறுமணமக்கும் காபியை சூடு ஆறுவதற்குள் தொண்டைக்குள் இறக்கித் தொலையாமல் பேப்பரில் எதை வைத்து மடித்துக் கொண்டிருக்கிறாய் சைத்தானே.

    டெக்ஸ்(B) : நிஜ உலகில் ஏதோ கொரனா வைரஸாம். கதிகலங்கி கிடக்கிறார்கள். அதை முறியடிக்கும் சக்தி இந்த கபசுர மூலிகைப் பொடிக்கு உண்டாம். அதனால் தான் பத்திரபடுத்தி கொண்டிருக்கிறேன். தின்பதைத் தாண்டி உன் மூளைக்கு எதுவுமே எட்டாதே.




    ReplyDelete
  43. 1) B (டெக்ஸ்): டேய், நில்லு. உன்னோட கதை கிளைமாக்ஸ் ஒன்னு புரியலை..
    C (கார்ஸன்): அட ஏன்பா? ஒரு கதை கிளைமாக்ஸ் மட்டும் புரியலையா? இல்லை, ஒரு கதையுமே புரியலையா??
    A (டைலன்): சாரி சகோஸ், யாருக்குமே புரியாதனாலதான் என் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு..

    2) B (டெக்ஸ்): ஏன்டா உன் கதையில் வர்ற வில்லனுங்க எல்லாரையும் நீயே புடிக்கிறதில்லை?
    A (டைகர்): சாரி புரோ.. என் கதையில் வர்ற பொண்ணுங்க மேலதான் என் கண்ணே தவிர வில்லனுங்க கன்னு மேல இல்லை.. இது வாலிப வயசு..

    3) B (டெக்ஸ்): ஏ பெரிசு.. நம்ம ஏப்ரல் புக் இன்னும் பிரிண்ட் பண்ணவே இல்லையாம், வா எடிட்டர நம்ம ஸ்டைல்ல கவனிச்சுட்டு வருவோம்..
    A (கார்ஸன்): கொஞ்சம் இருப்பா.. SWIGGY ல சுக்கா சாப்ஸ் ஆர்டர் பண்ணிருக்கேன்.. சாப்பிட்டு போயிரலாம்..

    ReplyDelete
  44. மூன்றாவது படத்துக்கான கேப்ஷன்:

    கார்சன் : அட! நிஜமாத்தான் சொல்றியா டெக்ஸு?

    டெக்ஸ் : யெஸ்!! மாடஸ்டியின் பாய்ஃபிரண்டுகளில் இரண்டுபேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாம்! அதிலே ஒருத்தர் தொழிலதிபராம்.. இன்னொருத்தர் டாக்டராம்! இரண்டுபேரின் வசீகர எழுத்துநடை தான் மாடஸ்டி மயங்கிக்கிறங்க காரணமே தவிர, அவங்க பர்சனாலிட்டியெல்லாம் காரணமில்லையாம்!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் பாஸ் நீங்களும் கண்ணரும் மாடஸ்டி அவீங்க கிட்ட கொஞ்சி விளாடும்போது "My Help"னு யோசிக்கறது...ஆனா பாருங்க பெரியவங்க பொல்லாப்பு நமக்கெதுக்குனு சைலெண்டா விட்டறது!

      இப்போ கூட நீங்க பாட்டுக்கு ஒரு தொழிலதிபர்னு போட்டுடீங்க ! இப்போ பெரியவங்க எல்லாம், அது நாந்தான் நாந்தான்னு அவுங்களுக்குள்ள அடிச்சிட்டு வாக்கிங் ஸ்டிக் எல்லாம் ஒடச்சுக்க போறாங்க!
      நாளைக்கு இப்படி ஒரு நியூஸ் வந்தாலும் ஆச்சரிய படறதுக்கில்லை !

      "தமிழ்நாட்டில் வாக்கிங் ஸ்டிக் கேட்டு வயோதிக வாலிபர்கள் ( ஐயோ! பெருசுகள்னு சொன்னா கோவிச்சுவாங் :)) போராட்டம் !

      தடியடி நடத்திய போலீசாரின் குச்சிகளை பிடிங்கி கொண்டு ஓட்டம்!"

      Delete
    2. ////டெக்ஸ் : யெஸ்!! மாடஸ்டியின் பாய்ஃபிரண்டுகளில் இரண்டுபேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாம்! அதிலே ஒருத்தர் தொழிலதிபராம்.. இன்னொருத்தர் டாக்டராம்! இரண்டுபேரின் வசீகர எழுத்துநடை தான் மாடஸ்டி மயங்கிக்கிறங்க காரணமே தவிர, அவங்க பர்சனாலிட்டியெல்லாம் காரணமில்லையாம்///


      :-))))))))

      Delete
    3. /////அவுங்களுக்குள்ள அடிச்சிட்டு வாக்கிங் ஸ்டிக் எல்லாம் ஒடச்சுக்க போறாங்க!///

      ///தடியடி நடத்திய போலீசாரின் குச்சிகளை பிடிங்கி கொண்டு ஓட்டம்!"///

      ஹா ஹா ஹா!! காலங்காத்தால (கோரோனா பீதியையும் மறந்து) கெக்கபிக்கேன்னு சிரிக்க வச்சுட்டீங்க;சரவணன்! :)))))

      Delete
    4. சரவணன் சார்...கேப்ஷனில் மட்டுமல்ல கமெண்ட்லும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறீர்கள்...:-)

      Delete
    5. தேங்க்ஸ் தல ;-)

      Delete
  45. ஈரோடு மாவட்ட updates பயமுறுத்தும் வகையில் உள்ளது. Take care Vijay, stalin sir and other erode district friends 🙏

    ReplyDelete
    Replies
    1. @Puthagapriyan0

      நன்றி நண்பரே!:நிச்சயம் பாதுகாப்பாக இருக்க முயற்சிப்போம்! _/\_

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. பார்க்கும் செய்திகள் அச்சமூட்டுகிறது நண்பர்களே! நாமக்கல், ஈரோடு, நெல்லை, புதுச்சேரி நண்பர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்கவும். டேக்கேர் ஃப்ரெண்ட்ஸ்! ஆகஸ்டில் மஞ்சள் மாநகரில் எல்லாரும் சந்திப்போம்!

    ReplyDelete
  48. கேப்ஷன் ஒன்று

    டைலன் : அந்த ஹோட்டல் சுக்கா வறுவலில் கொரோனா இருந்தது எனக்கு சத்தியமா தெரியாது டெக்ஸ்.

    டெக்ஸ் : பொய் சொல்லாத. நான் செத்தாலும் உன்னை விடமாட்டேன்னு சொன்னேனில்ல...

    கார்சன் : அப்ப நான் இவன் கூட மறுபடியும் பேயா, நாயாத் தான் அலையணுமா? இப்படி லயன் காமிக்ஸ்ல இருந்து திகில் காமிக்ஸ் போற மாதிரி ஆயிடுச்சே என் நிலைமை.




    ReplyDelete
  49. கேப்ஷன் இரண்டு..

    டைலன் : நான் ஒன்ன மாதிரி நம்பர் ஒண்ணா வர என்ன செய்யணும் டெக்ஸ்?

    டெக்ஸ் : எவனையாவது சுட்டுக்கிட்டே இருக்கணும். ஒரு சேஞ்ச் வேணும்னா கையால சண்டை போடலாம். செத்து செத்து பொழைக்கணும். குளிக்க கூடாது. குதிரை கூடவே சுத்தணும். வேணும்னா ஒரு கெழவனை துணைக்கு சேர்த்துக்கலாம்.

    டைலன் : இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நான் பேசாம நம்பர் கடைசியாவே இருந்துக்கிறேன்..

    ReplyDelete
  50. நேற்று நம்முடைய முதல் மறுவரவான லயன் கம்பேக் ஸ்பெஷல் படித்து முடித்து ,இன்று லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் இப்பொழுது தான் படித்து முடித்தேன்..

    அதில் காணப்பட்ட மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் ,வாசகர் கடித்த்திலும் காணப்பட்ட புகைப்படமும் ,எழுத்துக்களும் இப்பொழுது இங்கே வருகை தரும் ஏடிஆர் சார் அவர்கள் தானா என சந்தேகம்..

    ஏடிஆர் சார் இந்த பதிவை தாங்கள் கண்டால் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்...:-)

    ReplyDelete
  51. கடந்த இரு மாதங்கள் டெக்ஸ் கதைகளோடு ஓடிப்போனது. கடந்த 10நாட்களாக மறுவாசிப்பு எனும் தடத்தில் சென்று பழைய நினைவுகளோடு ஒரு பயணம் செய்து வருகிறேன். டெக்ஸ் & கெளபாய் கதைகளுக்கு அடுத்து எனது பேவரைட்டான இரத்தப்படலம் தற்போதைய நிறுத்தம். 2018ல் வெளியான இரத்தப்படலம் வண்ண தொகுப்பு முடியாத் தேடலின் கதை இப்போது வாசிப்பில்...!

    இரத்தப்படலம் தொகுப்பு ஒற்றை ஒற்றை பாகங்களாக உதிரிகளில் வந்தபோது எத்தனை எத்தனை ஆசையோடு தேடி தேடி ஒவ்வொரு பாகத்தையும் பலமுறை படித்தோம். பின்னர் வந்த கருப்பு வெள்ளை இரத்தப்படலம் 1டூ18-ஜம்போ தொகுப்பு ஒருசிலமுறை தான் வாசிக்க முடிந்தது.

    2018ல் வந்த வண்ணத் தொகுப்பு 2500ரூபா செலவு பண்ண நம்மால இயன்ற போதும் ஒரு தடவை தான் படிக்க முடிந்தது.

    ஒரு ரூபா, 2ரூபாய் ஆக கஷ்டப்பட்டு சேர்த்து வாங்கியதால், அந்த வயசில அந்த ஒற்றை பாகங்கள் நமக்கு பொக்கிஷமாக தோன்றியது.

    ஒவ்வொரு முறை இந்த உதிரி புத்தகங்களை பார்க்கும் போதும் அந்த காலத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. எத்தனை தேடியலைந்தோம் என வியக்க வைக்கிறது. அப்படி அலைந்து தேடித் திரிந்த நாட்கள் ஊடே ஒரு சிறு பயணமே இந்த நினைவுகள்......,

    ReplyDelete
  52. இரத்தப்படலம் தேடி ஓடிய நாட்கள்....!!!!

    *1990களில் காமிக்ஸ் படிக்க வந்த காலத்தில் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு அடுத்து நான் மிகவும் ரசித்தது இரத்தப்படலம் தான். அதுவரை 4பாகங்கள் வந்திருந்தன போல. அவற்றை சேர்க்கவும், படிக்கவும் இரத்தப்படலம் ரசிகர்கள் இடையே கடும் போட்டியும், அதீத ஆர்வமும் நிலவி இருக்க கூடும். இயல்பான ரசிகர்கள் மிகுந்திருந்த காலம் அல்லவா அது.

    *இரத்தப்படலம் பாகம்4 தான் நான் முதலில் படித்தது. 1993ல் பாகம் 4 வந்தபோது கடையில் நேரடியாக வாங்கினேன்! துவக்கத்தில் பழைய புத்தக்கடை அல்லது நண்பர்களிடம் இருந்த இரவல் வாங்கித்தான் புத்தகங்கள் படித்து உள்ளேன். இரத்தப்படலம்-கதையின் ஓட்டம் முந்தைய பாகங்களை படிக்க வேணும் என்ற ஆசை வேட்கையை தூண்டியது.

    *சரி தேடுவோம்னு அழைந்து திரிந்தபோது பாகம்3 எளிதாக கிடைத்து விட்டது. ஆனால் பாகம் 2ம், பாகம் 1ம் என்ன தலைகீழாக நின்றும் கிடைக்கல. (பாகம்2- லயன் சூப்பர் ஸ்பெசலில் வந்துள்ளது என்ற தகவல் எனக்கு தெரியாத நாட்கள் அவை). இதற்கு இடையில் பாகம்5 "நெருக்கடி வேளை ஒத்திகை" மார்ச் 1995ல் வெளிவந்து சக்கை போடுபோட்டது. அப்போது நான் கல்லூரி முதல் ஆண்டு.

    *மேலும் ஓராண்டு ஓடிப்போனது. 1996ல் வெளியான மரணமுள் இதழில் சேலம், அன்னதானபட்டில வசிக்கும் மூத்த வாசகர் திருA.சிவா அவர்களின் அறிமுகம் "மாதம் ஒரு வாசகர்"-பகுதில வெளிவந்தது. ஒரு மாசம் தயங்கி தயங்கி அவரோட வீட்டுக்கு சைக்கிளை மெதுவாக விட்டேன்.

    ReplyDelete
    Replies

    1. *அரசு பணிக்கு தேர்வு எழுத ரெடி ஆகிட்டு இருந்தார். நிறைய புத்தகங்கள் இறைந்து கிடைந்தன. பழகியதும் புரிந்து போனது மனிதர் அசாதாரணமான காமிக்ஸ் அறிவு கொண்டவர் என! இரத்தப்படல தீவிர வாசகர் எனவும் தெரிந்து கொண்டேன். பாகம் 1,2,3,4,5 என எல்லாம் பக்கம் பக்கமாக சொன்னார். அவரின் ஆர்வம் சற்றே தூக்கலாகி பாகம் 2, 3,4 ஐ பாகம் 5ன் பெரிய சைஸ்க்கு ஜெராக்ஸ் எடுத்தும், பாகம்1ஐ அப்படியே ஒரிஜினல் புக்கை வைத்தும்(அவரிடமும் பாகம்1க்கு அட்டை நஹி) பைண்டிங் செய்து வைத்து இருந்தார். அப்படியே அள்ளி கொடுத்தார், படிக்க! துள்ளும் மனதுடன் வீட்டுக்கு சைக்கிளை கிளப்பினேன.

      *பாகம்1&2வை பலமுறை படித்து தலைல ஏற்றிக் கொண்டேன். தொடர்ந்த மாதங்களில் அவரிடம் பேசும்போது பாகம் 2 லயன் சூப்பர் ஸ்பெசல் என்ற குண்டு புக்கில் வந்திருந்த தகவல் தெரிந்து கொண்டேன். இரத்தப்படலம் பற்றி பேசும் போது அவரது கண்கள் எக்ஸ்ட்ராவாக ஜொலிக்கும். கர்னல் ஆமோஸ்க்கு ஒற்றை கை தான் என்பது அவரிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன். அப்போது அத்தனை நுணுக்கமாக பார்க்கும் ரசிகன் அல்ல நான். மேலும லயன் பொற்கால தகவல்கள் எல்லாம் அடியேன் தெரிந்து கொண்டது அவரிடம் இருந்தே! எத்தனை கேட்டாலும் மனிதர் சளைக்காமல் பலமணி நேரம் சொல்லிட்டே இருப்பார். இரத்தப்படலம் 1&2உடன் லயன் குண்டு புக்குகளும் என் தேடலில் சேர்ந்திருந்தன!

      *இரத்தப்படலம் பாகங்கள் 1&2 படித்து விட்டாச்சு; இனி நமக்கே நமக்குனு வாங்கனும் என்றாலும் கூட தேடலில் ஆர்வம் குறையவில்லை. லயன் சூப்பர் ஸ்பெசல் ஒரு 100 முதல் 200 புத்தகங்கள் மட்டுமே இருக்கலாம் போல; லக் ஒத்துழைத்து, இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் கிடைக்கும் என்ற நிலை! பாகம்1, ம்ஹூம், சான்ஸே இல்லை. பழைய புக் கடை, நண்பர்கள் வாயிலாக என என்ன செய்தும் கிடைக்கல.

      ###அந்த சமயத்தில் தான் 1997ல் அந்த ஆபத்பாந்தவன், போதிதர்மன் அபயம் அடியேனுக்கு கிட்டியது.

      Delete
    2. (ஒரு இடைச்செருகல் இங்கே)

      -----///*1994ல் லயன் சென்சுரி ஸ்பெசல் வெளியானது. அந்த புக் சேலத்தில் ரூபாய் 20னு (இப்ப ஒரு 1000ரூபாய் மதிப்பு இருக்கலாம்) ரிலீஸ் ஆகல. +2 லீவு அப்ப. அந்த புக்கை வாங்கியே ஆகணும்னு தேடும்போது, யாரோ ஒரு சீனியர் நாமக்கல்ல கிடைக்கும் என்றார். லைப்ரரி போயிட்டு வர்றேன்மான்னுட்டு ஒரு ஞாயிறு கிளம்பி நாமக்கல் பஸ் ஏறிப்போய், பஸ் ஸ்டாண்ட் கடையில் தொங்கிட்டு இருந்த லயன் செஞ்சுரி ஸ்பெசல் ஒன்று வாங்கிட்டு, அடுத்த பஸ்லயே கிளம்பி வந்துட்டேன். மதியத்திற்குள் வூட்டுக்கு வர்லனா எங்கம்மா கழுத்திலியே மிதிக்குமே.

      *வரும்போதே அந்த புக்கை பிரித்து மேய்ந்தேன். லயன் 1டூ 100வெளியீடுகளின் பெயர்களை சரியாக பட்டியல் போடும் போட்டி வைத்து இருந்தாங்க. சுவாரசியமான போட்டி தானே?. அதன் முடிவு அடுத்த லயன் இதழில் வந்திருந்தது . அந்த போட்டியில் செயித்தது யார் யார்னு பார்த்தா மெல்லிய அதிர்ச்சி, அதில் சேலத்தில் இருந்து ஒரு சீனியர் நண்பரும் இருக்காரு. நம்ம கலீல் ஜி, அய்யம்பாளையம் வெங்கடேசன் சாரும் அந்த வின்னங் லிஸ்ட்ல உண்டு; காமிக்ஸ் கலக்டர்கள் என சொல்லும் போதே கலீல் ஜியோட முக்கியத்துவம் இப்ப புரிகிறதா நண்பர்களே...!!!!

      *புதிதாக வரும் காமிக்ஸ் கலக்டர்கள், கலீல் ஜியின் வழிகாட்டல் இல்லாமல் புக் சேர்ப்பதை கனவில் கூட நினைக்க முடியாது. அந்த லயன் சென்சுவரி ஸ்பெசல் போட்டியில் வென்று இருந்த 9பேரின் அட்ரஸ்கள், ரிசல்ட் வெளியான அடுத்த புக்கில் இருந்தது. (பார்க்க:ஒரு திகில் பயணம்-ப்ரின்ஸ் புக்- லயன் 101 ) அதில் இருந்த கலீல் ஜி அட்ரசை தொடர்பு கொண்டு சில புத்தகங்கள் எக்சேஞ் முறையில் வாங்கியும் உள்ளேன். சில புத்தகங்கள் படித்து விட்டும் தந்துள்ளேன். எல்லாம் போஸ்டல் துறை வாயிலாகத் தான்.////-----


      *எல்லோரிடமும் போல கலீல் ஜி-டமும் நான் இந்த இரத்தப்படலம் பாகம் 1 கேட்டிருந்தேன். இது நடந்து கொஞ்சம் காலம் கழித்து தான் நெருக்கடி வேளை ஒத்திகை வந்திருந்தது. நான் அவரிடம் இரத்தப்படலம் பாகம்1 கேட்டு இருந்தது கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டது.

      *கடேசியாக என்னுடைய அதிர்ஷ்டம் அவரிடம் எனக்காக இரத்தப்படலம் பாகம் 1-ஒரு புக் கிடைத்துள்ளது.

      *அந்த சமயத்தில் மாற்று புக் எதுவும் தர வேணாம் நீங்கள் என நம்ம கலீல் ஜி அந்த புக்கை எனக்கு அன்பளிப்பாகவே அனுப்பி இருந்தார். அன்று என்னுடைய மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளும் இல்லை. எனக்கு கிடைப்பதில் ரொம்பவும் அலையவிட்ட "இரத்தப்படலம் பாகம் 1" ஒரு வழியாக கிட்டியேஏஏஏஏஏ கிட்டியது. இரத்தப்படலம் பாகம்1 பார்க்கும் போதெல்லாம் 1990களின் தேடல் காலம் நினைவிலாடும்.

      *இன்று "இரத்தப்படலம் 1முதல் 10" உதிரி பாகங்கள் வைத்துள்ள ஒரு சில காமிக்ஸ் நண்பர்களில் அடியேனும் ஒருவன் என்றால் அதற்கு காரணம் கலீல் ஜி தான். 23ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவு வாயிலாக அவருக்கு என் நெகிழ்ச்சியான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      *பகிர்தல் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று! நாமும் நம்மிடம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் புத்தகங்களை அவற்றின் தேடல் இருப்பவருக்கு பகிர்ந்து கொள்ளுவோம். ஏனெனில் நம்மை விட, காமிக்ஸ் புக்கைவிட, காமிக்ஸ் நேசம் மிகப்பெரியது.

      Delete
    3. Great memories.nostalgia.
      Thanks for sharing Salem Vijay sir.

      Delete
  53. Caption போட்டி
    முதல் கட்டம்
    A. ஐயோ, ஆவி, பேய், என்னை விட்டுட்டு.
    B. யோவ், டயிலா நான் இன்னும் சாகலை. 21 நாள் கொரோனா வைரஸ்க்கு பயத்து இந்த கார்சன் கிழத்தோட வீட்டில் இருந்ததுல முகம் இப்படி ஆகிடுச்சு. என்னைய உங்கூட அழைச்சிட்டு போ.
    C. டேய் டேக்ஸ், நீ தப்பிச்சுட்ட ஆனால், ஒரு பிளேட் வறுத்த கறி சாப்பிடாம நான் சாகமாட்டேன்.

    இரண்டாவது கட்டம்
    A. என்ன பா ஏப்ரல் மாதம் வந்திருக்க வேண்டிய புக்ஸ் ஒன்னையும் காணோம். என்ன பண்ணலாம்? நாமே களத்தில் இறங்கிடலாமா?
    B. வேண்டாம். சுலபமான வழி ஒன்று இருக்கு. எடியை பதவி விலக வலியுறுத்தி நம் செவ்விந்திய நண்பர்களை போராட்டம் அறிவிச்சிட சொல்லிட்டேன். நீ பேஸ்புக் மூலம் ஆதரவு கொடு.

    மூன்றாவது கட்டம்
    A. காப்பி பொடி எப்படி கிடைத்தது?
    B. பக்கத்து டவுன் ஷெரீப் கிட்ட சுலபமா பேரம் பேசி வாங்கிட்டேன். உன்னை மட்டும் ஊருக்குள்ள கை கழுவாமல் விடக்கூடாது என்று பத்திரம் எழுதி குடுக்கச் சொன்னாங்க.

    ReplyDelete
  54. ***** எதிர்காலம் எனதே! ****

    * கதை எதிர்பார்த்தைவிட நன்றாகவே இருந்தது!
    * கதைக்களமும் - காலப்பயணம் தொடர்பாக - வித்தியாசமானதே!

    * சோப்ளாங்கி வில்லன்கள் - சின்னக்குறை!
    * சித்திரங்கள் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் பாகவதர் காலத்துப் படம் பார்த்த எஃபெக்ட்!

    எனது ரேட்டிங் : 9/10

    ReplyDelete
  55. கேப்ஷன் 1
    டைலன்:நம்ம எடிட்டரிடம் சொல்லி உன்னுடைய மாயாஜால கதையைப் போடச் சொல்றேன்...என்னை விட்டுடு.....
    டெக்ஸ்:இப்படி பேயா வந்து சொன்னதா கேப்பீங்களா.....
    கார்சன்:எப்படியும் நமக்கு கெஸ்ட் ரோல் கிடைக்கும்...இதுக்கே நாயா பேயா ஓட வேண்டி இருக்கே....
    கேப்ஷன் 2
    டைகர்:அப்பாடி....ஒரு வழிாஎன்னுடைய தொகுப்பு 2021 ல் வரப் போகிறது. ....உனக்கென்ன கவலை அதான் மாதம் மாதம் வந்து கலக்குறீயே.....
    டெக்ஸ்:2021 லாவது என்னோட மாயஜால கதையை போடுவாரா நம்ம எடிட்டர் என்ற கவலை தான்....
    கேப்ஷன் 3
    கார்சன்:என்னப்பா டெக்ஸ் ரொம்ப சோகமாக இருக்கீறாய்.....
    டெக்ஸ்:2022 ல் வரப் போகும் முத்து 50 வது ஆண்டு சிறப்பிதழில் எடிட்டர் நம்மை லயனின் ஹூரோ என்று ஒதிக்கி வைத்து விடுவாரோ என்று தயக்கமாக இருக்கு...

    ReplyDelete
  56. கேப்சன் போட்டி:-
    (இரண்டாம் படம்)

    A டைகர்: என்ன டெக்ஸ் எதுக்கு இவ்ளோ பலத்த யோசனை???
    B டெக்ஸ்: இல்ல, நம்ம எடிட்டர்'க்கு பாரிஸ் ஹோட்டல்ல மரண பயத்தை காட்டுன அந்த ப்ரவுன் கொரில்லாவை புடிச்சு எப்படில்லாம் டிசைன் டிசைனா தாடையை பதம் பார்க்கலாம்ன்னு யோசனை...

    ReplyDelete
  57. கேப்ஷன் இரண்டு;
    டைகர்:ஏம்பா டெக்சு சாப்பிட ரவா உப்புமா வேணுமா ,கோதுமை உப்புமா வேணுமா?
    டெக்ஸ்; ஹூம்...போற உயிர் கொரானாவாலே போகட்டும்!!

    ReplyDelete
  58. கேப்சன் போட்டி:-
    (மூன்றாம் படம்)

    A கார்ஸன்: என்ன டெக்ஸ்! எதுக்கு இப்படி வெச்ச கண்ணு வாங்காத என் அழகையே ரசிக்குறே ???
    B டெக்ஸ்: இல்ல, நம்ம எடிட்டர்'க்கு பாரிஸ் ஹோட்டல்ல மரண பயத்தை காட்டுன அந்த ப்ரவுன் கொரில்லாவை புடிச்சு உனக்கு ஜோடி சேர்த்து வெச்சு அந்த கொரில்லாவை பழிக்கு பழி வாங்கிடலாமான்னு யோசனை.. உன் அழகும் இளமையும் வேஸ்ட் ஆகுதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் நண்பா, அப்படி முறைக்காதே😁😁😁

    ReplyDelete
  59. கேப்சன் போட்டி:-
    (முதல் படம்)
    (டைலன்)

    B & C. டேய் டைலன் ஓடாத நில்லு நில்லு!!!
    A. (ஓடியவாறே) அடேய் கரோனா மண்டையனுங்களா, நம்ம ‌கவர்மெண்ட் ரூல்ஸ் படி social distancing ஒரு மீட்டர் மெயின்டெய்ன் பண்ணிகிட்டே தொரத்துங்கடா... எஸ்கேப்...

    ReplyDelete
  60. கேப்ஷன் மூன்றாவது....
    கார்ஸன்;ஏம்பா டெக்சு என்ன ஒரே சிந்தனையிலே மூழ்கிட்ட?
    டெக்ஸ்; இல்ல....ஏழை, பணக்காரன் ,சாதி ,மதம் ,இனம் எதுவும் இல்லைனு இந்தக் கொரோனாவுக்குத் தெரிஞ்சது இந்த மனிதப் பதர்களுக்குத் தெரியலையே?

    ReplyDelete
  61. பார்ட் 2:-
    படம்1:-
    (டைலன்)
    கேப்சன்10:-
    A.கொலைவெறியோட துரத்தறத பார்த்தா யார தேடறிங்கனு தெரியுது.ஆனா நீங்க தேடற டெக்சோ டைகரோ நான் இல்லங்கண்ணா...நீங்க கேப்சன் மாதிரி வந்துட்டிங்க.அவங்க அடுத்த கேப்சன்ல இருக்காங்க..போங்க
    B.(யியியியியியியி)

    கேப்சன்11:-
    B.பாஸ் நீங்க அவுட்டு.இப்ப நான் ஓடுவனாம்.நீங்க தொடுவிங்களாம்
    A.டேய் எங்க இருந்துடா வரிங்க எல்லாம்
    C.(அட கண்றாவியே)


    படம்2:-
    (டைகர் டெக்ஸ்)
    கேப்சன்10:-
    A.இவர் முழிக்கற முழியே சரியில்லையே..டெல்லி மாநாடு போய்ட்டு வந்த ஆளா இருப்பாரோ
    B.இவர் முழிக்கற முழியே சரியில்லையே..டெல்லி மாநாடு போய்ட்டு வந்த ஆளா இருப்பாரோ

    கேப்சன்11:-
    B.சார் ஒரு கதை சொல்லட்டுமா..?
    A.ம்க்கூம்..இதுவரைக்கும் கதைனு ஒண்ண உங்ககிட்ட நாங்க பார்த்ததே இல்ல.இப்ப மட்டும் சொல்லிட்டாலும்...

    படம்3:-
    (டெக்ஸ் கார்சன்)
    கேப்சன்11:-
    A.டெக்ஸ் இந்தா கபசுரக்குடிநீர்...
    B.போற உசுரு கொரோனாலயே போகட்டும் விடு பெருசு

    கேப்சன்12:-
    A.நாம இருக்கறது எமனின் எல்லையிலா டெக்ஸ்?
    B.எமனே எல்லைய தாண்டி வந்து பஞ்சராக்குனதுக்கப்புறம் இந்த பஞ்ச்செல்லாம் தேவைதானா

    ReplyDelete
  62. கார்சனு : டெக்ஸ்.. காப்பி வாசனையோட சேர்த்து ஏதோ கருகின வாசனையும் வருதேப்பா?!!

    டெக்ஸ் : ஓ.. அது உன் நாசியையும் எட்டிடுச்சா? ஆனாலும் நான் உட்கார்ந்த கல்லு இவ்வளவு சூடா இருக்கும்னு எதிர்பார்க்கலைப்பா!!

    ReplyDelete
  63. நாளை மாலை வரைக்குமான கேப்ஷன் வருகைகளுள் பெஸ்ட் எவையென்று தீர்மானிப்போமா ? அதைச் செய்திடப் போவது யாரென்பதை நாளை சொல்கிறேனே !

    ReplyDelete
    Replies
    1. நிறைய நடிகைங்க இப்போ வீட்ல சும்மாதான் உட்கார்ந்துட்டு இருக்காங்க எடிட்டர் சார்.. அவங்கள்ல யாரையாவது ஜட்ஜா போட்டீங்கன்னா போட்டி கலைகட்டுமில்லீங்களா?

      ஆனா நல்ல நகைச்சுவை உணர்வுள்ள நடிகையாப் பாத்துப் போடுங்க! முக்கால்வாசி நடிகைங்க கேமராவுக்கு முன்னாடி சிரிக்கறதோட சரி!

      Delete
    2. செயலரே...நீங்க எந்த நடிகையை செலக்ட் பண்ணுவீங்கன்னு தெரியும் சாரி...

      லேட்டஸ்ட்டா யாரையாவது செலக்‌ஷன் பண்ண செலக்‌ஷன் பண்ணுங்க ஆமா...:-)

      Delete
  64. கேப்சன் போட்டி:-
    (மூன்றாம் படம்)

    A கார்ஸன்: என்ன டெக்ஸ்! எதுக்கு இப்படி என்னையே உத்துப் பாக்குறே ???
    B டெக்ஸ்: இல்ல, நண்பா இந்த கொரோனாக்கு உன்னை மாதிரி இளந்தாரி பெரிசுகளை தான் ரொம்ப பிடிக்குமாம். அது தான் நீ இருக்குற வரைக்குமாவது பாத்துட்டே இருக்கலாமேன்னு... 😜😛😝

    ReplyDelete
  65. கேப்சன் போட்டி:-
    (இரண்டாம் படம்)

    A டைகர்: என்ன டெக்ஸ் எதுக்கு இப்போ இவ்ளோ பலத்த யோசனை???
    B டெக்ஸ்: இல்ல, ஒரு மீட்டர் தள்ளி நாம உட்கார்ந்து இருந்தும் இந்த "மப்புல" கூட உன் "கப்பு" இந்த காட்டு காட்டுதே, உன்னை "குடிக்க" கூப்பிட்டதுக்கு பதிலா "குளிக்க" கூப்பிட்டு இருக்கலாமேன்னு யோசனை... பரவாயில்ல நீ குளிப்பா ச்சே குடிப்பா😫

    ReplyDelete
  66. டெக்ஸ் :கார்சன் காப்பி வச்சதுக்கு அப்புறம், பீன்ஸ் குழம்பு வச்சிடு, நைட்டுக்கு சுக்கா வருவல் செஞ்சிடுவியாம்.தூங்குறதுக்கு முன்னாடி மறுக்கா ஒருதடவை காப்பி.ஒரு நாளைக்கு இந்த மெனு போதும்.இதையே ரெண்டு வாரத்துக்கு மெய்ன்டெய்ன் பண்ணிக்கோப்பா..!

    கார்சன் : படுபாவி! கடைசிவரைக்கும் என்னை சமையல்காரானவே யூஸ் பண்றானே.!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... செம செம GP...!இயல்பான கதையோட்ட்டம் போல இயல்பான நையாண்டி!

      Delete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. படம் - 1

    டைலன் : ஐயா ஆள விடுங்க, என்னை தொல்லை பண்ணாதீங்க..

    டெக்ஸ் : தம்பீஈஈ...கொஞ்சம் நில்லுங்கள்...கர்ர்ர்ர.....எங்க பிரச்சனையை நீங்க மட்டும்தான் தீர்க்க முடியும்னு, தம்பி மார்ட்டின் தான் அனுப்பிவைத்தார்...கர்ர்ர்ர்...நம்புங்க

    கர்சன் : வருத்த கறி வாங்கி தற்றேன்னு இப்படி சுடுகாடா சுத்தவுடுறானே படுபாவி.

    படம் - 2
    ஆப்சன் - 1
    டைகர் : என்னப்பா விட்டத புடிக்க இன்னோரு ரவுண்டு விளையாடுறியா?

    டெக்ஸ் : சும்மா சரக்கடிக்கலாம் வந்த என்னை இப்படி போண்டியாக்கிடியே டைகர்.

    ஆப்சன் - 2
    டைகர் : என்ன தல ஒரே யோசனைல இருக்கீங்க?

    டெக்ஸ் : இல்ல....நான் இத்தாலி ரிட்டன்னு செல்லியும், என்ன சுத்தி இப்படி நிக்கிறவங்கள என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன் டைகர்.

    ஆப்சன் - 3
    டைகர் : என்ன தல உக்களுக்கு சில்க் நம்பர் வேனுமா!!? ஏன்னால நம்ப முடியல..

    டெக்ஸ் : இல்ல..... டைகர்.. என்கூட இருக்கும் பெருசு பேச்சுலராவே மண்டைய போட்ற கூடாது எனும் நல்லெண்ணத்தில தான் கேட்டேன்.

    படம் - 3
    ஆப்சன் - 1
    கர்சன் : என்னப்பா நம்ம ஓனர் ஊருல பயங்கரமான நோய் பரவுதாம்

    டெக்ஸ் : கம்முனு இரு கிழவா.... நமக்கு விஷயம் தெரியும்னு ஓனருக்கு தெரிஞ்சா, அடுத்த கதையில நோய பரப்புன கூட்டத்த கண்டுபுடீன்னு தந்தி வந்துரும்.

    ஆப்சன் - 2
    கர்சன் : அது என்னப்பா, கொரனாவுக்கு அப்படி என்ன கோவம்... பெருசுங்களா பாத்து போட்டுத்தள்ளுது.

    டெக்ஸ் : ஓ. இப்படி சொல்லி நீ கிழவங்க லிஸ்டில் இல்லைனு நினைக்கிறியா!!?. பதிநாளு நாள் பொரு பெருசு...


    நன்றி

    ReplyDelete
  69. கொரானா பாதிப்பின் காரணமாக கிடைத்த ஓய்வு எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய ஓய்வு தான் .அன்றைய சிறுவயது காலகட்டத்தில் வரும் இதழ்களை பள்ளி விடுமுறை நாளில் மீண்டும் மீண்டும் படித்து வருவோம்..ஆனால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக மாதந்தோறும் வரும் இதழ்களை படித்து விட்டாலும் மறுவாசிப்பு என்பது எல்லாம் சுத்தமாக மறந்து போயிற்று .ஆனால் இந்த ஓய்வு புது புத்தகம் இல்லாத சூழல் அனைத்துமே எனக்கு காமிக்ஸ் நாளாக மாறியதில் உண்மையில் மகிழ்கிறேன்..

    வழக்கம் போல் டெக்ஸ்வில்லர் கதைகளையே மறுபதிப்பாக முதலில் இரு இதழ்களை எடுத்து படித்தாலும் மனதில் ஓர் எண்ணம்..ஆசிரியர் எவ்வளவு வித ,விதமான ஜானரில் இப்பொழுது கதைகளை வெளியிட்டு வருகிறார்..மறுவாசிப்பில் அந்த கதைகளை எல்லாம் மீண்டும் படிக்கலாமே என்று ஓர் எண்ணம்..( அதற்காக ஒரிஜினல் கிராபிக் நாவல்களை அதாவது நிநி ..இ.இ.கொல்லாதே போன்ற இதழ்களை எடுப்பேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் .நானும் பாவம் அல்லவா)

    எனவே இரண்டாம் நாளில் முதலாக தேர்ந்தெடுத்தது தோர்கலே..காரணம் ஆரம்பத்தில் தோல்வி கதைகளாய் தோன்றி ,பின் சுமாராக ஓகேவாக தோன்றி பின் வெற்றி படைப்பாக மாறிய தோர்கல் தொகுப்பை ஆரம்பத்தில் இருந்து முழுவதுமாக இப்பொழுது இறுதி வரை வந்த கதைகளை மொத்தமாக படிக்கலாமே என்ற எண்ணத்தில் அதனை தேர்ந்தெடுத்தேன்..

    உண்மையிலேயே இருநாட்கள் மாயலோகத்தில் காலை மாலை என சுற்றி திரிந்த அனுபவம்..முழுவதும் படித்த பின்னர் தோன்றிய எண்ணம்..நடுவில் வந்த தோர்கலின் பிறப்பை அறியும் கதை முதலாக வந்து இருந்து முதலாக வந்த கதை நடுவினுள் வந்து இருந்தால் தோர்கல் ஆரம்பத்தில் இருந்தே வெற்றியை சுவைத்து இருப்பாரோ என்ற எண்ணம் எழாமல் இல்லை..அது போல் முதலாக வந்த இதழில் இரண்டாவதாக காணப்பட்ட கதை ஒன்று மட்டுமே ஒரு தனிப்பட்ட சாகஸமாக தோன்றியது..மற்ற அனைத்தும் தனியாக படித்தாலும் ,மொத்தமாக படித்தாலும் புரியும் அளவிற்கு அழகாக ,அருமையாக அமைந்து விட்டது..என்னை கேட்டால் குழந்தைகளுக்கு ,சிறுவர்களுக்கு என இந்த கொரானா ஓய்வு மட்டுமல்ல பள்ளி விடுமுறை ஓய்வும் அவர்களுக்கு வருகை தர இருப்பதால் இந்த தொகுப்பை அவர்களுக்கு அறிமுக படுத்தினால் சிறப்பாக இருக்குமோ என தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. ///என்னை கேட்டால் குழந்தைகளுக்கு ,சிறுவர்களுக்கு என இந்த கொரானா ஓய்வு மட்டுமல்ல பள்ளி விடுமுறை ஓய்வும் அவர்களுக்கு வருகை தர இருப்பதால் இந்த தொகுப்பை அவர்களுக்கு அறிமுக படுத்தினால் சிறப்பாக இருக்குமோ என தோன்றுகிறது..///

      சூப்பர் தலீவரே!

      Delete
  70. கொரானா நாட்கள் தொடர்கிறது...:-)

    ReplyDelete
  71. தோர்கல் அனுபவம் முடிந்தாயிற்று ..அடுத்த நாள் எதனை தேர்ந்தெடுக்கலாம் என இதழ்களை எடுத்து தேடும் பொழுது பெளன்சர் கையில் மாட்டினார்..வந்த பொழுது பரபரப்பை மட்டுமல்ல விவாதத்தை யும் கிளப்பிய ஒற்றைக் கை ஹீரோ அல்லவா...என நினைத்தபடி அவரின் இதுவரை மூன்று தொகுப்பு இதழ்களையும் கையில் எடுத்துக்கொண்டேன்...

    என்ன சொல்வது தோர்கலை போல் இதுவும் ஒரே மூச்சில் வாசிக்கும் பொழுது இந்த பெளன்சர் இன்னமும் அதகளப்படுத்துகிறார்..இதில் இன்னொரு விடயம்..சிறுவயதில் நாம் மறுபதிப்பு ,மறுபதிப்பு என வந்த இதழ்களை வேறு பொழுது போக்குகள் இல்லாம் காமிக்ஸை மட்டுமே படித்து கொண்டு இருந்த காரணமாக அந்த நாளைய பழைய இதழ்களை ( உதாரணமாக டிராகன் நகரம் ,பழிவாங்கும் பாவை போன்ற டெக்ஸ் இதழ்கள் ,ஸ்பைடர் ,மாயாவி போன்றோர் ) இப்பொழுது படிக்கும் பொழுது கதை மட்டுமல்ல அடுத்த வரிகள் கூட நினைவிற்கு வந்து விடும்..ஆனால் இது போன்ற இதழ்களை படிக்கும் பொழுது முன்னர் படித்த நினைவு கூட இல்லை..ஏதோ இம்மாத புது இதழ்களை எடுத்து படிப்பது போல அதே விறுவிறுப்பு ,பரபரப்பு .சில காட்சிகள் வயது முதிர்ந்தோருக்கான ஒன்றாக இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் அவை எல்லாம் " வல்கராக " தோன்றவில்லை என்பது உண்மை..ஒரு நிஜ கெளபாய் உலகில் சுற்றி திரிந்த அனுபவம் .ஒற்றைக்கை பெளன்சர் மட்டுமல்ல அந்த நொண்டி நாய் கூட நம்முடனே சுற்றி திரியும் ஒரு ஒரு நாய் போல ஓர் தோற்றம்..

    பெளன்சரை படித்து முடித்தவுடன் தோன்றிய எண்ணம் இந்த நிஜ கெளபாய் உலகை காட்டிய ஆசிரியர் இதற்கு பிறகு வந்த பெளன்சர் கதைகளை வன்முறை அதிகம் ,வயது முதிர்ந்தோருக்கானது என அறிவித்து அதனை வெளியிடாமல் நிறுத்தி வைப்பது சரிதானோ என நினைக்க தோன்றுகிறது..அட்டையில் ஒட்ட இருக்கவே இருக்கிறது ஸ்டிக்கர் எனும் பொழுது அறிவிப்புடன் பெளன்சரை தொடர்ந்தால் பரவாயில்லையே என்ற எண்ணம் எழாமல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை..:-)

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறது கொரானோ நாட்கள்...

      Delete
  72. தோர்கல் நாட்கள் முடிந்து பெளன்சர் நாட்கள் முடிந்து அடுத்து எவரை தேர்ந்தெடுக்கலாம் என யோசித்த பொழுது நாயக பிம்பங்களை இடைவெளி விட்டு நமது காமிக்ஸ் பிம்ப நினைவுகளை வெளியே எடுக்கலாமே என்று நினைத்த பொழுது தான் ஓர் எண்ணம் உதித்தது.. நமது மறுவருகையின் முதல் இதழ் இதழை தேடி படித்து நமது நினைவுகளையும் பின்னோக்கி செல்வோமே என்ற எண்ணத்தில் நமது முதல் கம்பேக் ஸ்பெஷலை எடுத்தேன்..

    அப்பொழுது அந்த இதழில் வந்த லக்கியின் ஒற்றர்கள் ஓராயிரம் கதை அன்று படித்த பொழுது சுமாராக தோன்றப்பட்டாலும் ( அன்று லயன் மறுபிறப்பு என்பதால் அது குறையாகவும் தெரியவில்லை என்பதும் உண்மை ) இப்பொழுது ரசிக்கும் படியே அமைந்து இருந்தது... அதுவும் இந்த கால கட்டத்தில் ஆதார் அட்டை ,இந்த ஐடி ,இந்த ஐடி என பலவற்றை அரசு கேட்கும் நிலையில் இந்த கதை இன்னும் அதிகமாகவே ரசிக்க வைக்கிறது..பிரின்ஸ் சாகஸம் வழக்கம் போல களைகட்டியது..அந்த இதழின் நினைவுகளோ என்னவோ அதனை தொடர்ந்து வந்த இதழ்களையே தொடரலாம் என்ற நினைப்பில் நியூலுக் ஸ்பெஷல் ,டபுள் த்ரில் ஸ்பெஷல் என முன்னிரு நாட்கள் பரபரவென பறந்தோடியது..அவ்விதழ்களில் காணப்பட்ட லக்கியின் கதைகளாட்டும் ,ஜானியின் கதைகளாட்டும் ,பிரின்ஸ்ன் கதைகளாட்டும் ,அனைத்துமே ரசிக்கும் படி அமைந்தது.. என்ன சிறிதாக காணப்பட்டாலும் இரும்புக்கை மாயாவி போன்ற கதைகளை படிக்க தோன்றாமல் போனது யார் செய்த பாவமோ...என தெரியவில்லை...

    இன்று இப்பொழுது கைகளில் தவழ்வது நெவர் பிவோர் ஸ்பெஷல்...

    இந்நேரம் இரு கதைகளையாவது படித்து இருப்பேன்..ஆனாலும் இதுவரை படித்த கதைகள்..இந்த கொரானா பாதிப்பும் ஒருவகையில் மீண்டும் தினம் காமிக்ஸ் தினமாக மாற்றி மனதில் அச்சத்தை போக்கி ,ஒரு மகிழ்ச்சியை விதைத்து கொண்டு இருப்பதை தெரிவித்து விடுவோமே என்ற எண்ணத்தில் இப்பதிவினை பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இன்று பதிவு முந்தி விட்டது..

    இனி நெவர் பிவோர்...... :-)


    ( பின்குறிப்பு : இந்த ஓய்வு காமிக்ஸ் நண்பர்கள் பலருக்கு காமிக்ஸ் தினமாக மாற்றிக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது..இன்று காலை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு .அன்பரசன் சார் அவர்கள் கூட லார்கோவை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை முழு தொகுப்பாக படிக்க இருக்குறேன் பரணி கொஞ்சம் அதன் கதை வரிசைகளை வரிசையாக தெரிவிக்க முடியுமா என அலைபேசியில் விசாரிக்க அதனை தெரிவித்தேன்..

    கொரனா கண்டிப்பாக நல்லதல்ல ..ஆனால் அதனால் கிடைத்த ஓய்வு நல்லதே..


    இந்த அச்சமான நாட்களை அழகான நாள்களாக என்னை போன்றோருக்கு மாற்றி அமைத்து கொண்டிருக்கும் நமது காமிக்ஸ்ற்க்கும் ,ஆசிரியருக்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்..

    நன்றி சார்...


    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

    ReplyDelete
    Replies
    1. கொரானா முடியட்டும்..

      அழகான நாட்க்கள் தொடரட்டும்...!

      Delete
    2. ///கொரானா முடியட்டும்..

      அழகான நாட்க்கள் தொடரட்டும்...!///

      பின்றீங்க தலீவரே!! உங்க கொரோனா நாட்கள் அருமை!! தொடருங்க தலீவரே!!

      Delete
    3. தலைவரே சும்மா அடி தூள். பின்னி எடுத்து விட்டீர்கள்.

      Delete
  73. PART 3:-
    படம்1:-
    (டைலன்)

    கேப்சன்12:-
    A.சார் உங்க பேர் என்ன சார்?
    B.டிரஸ்ஸ பார்த்தா தெரியல..."கௌபேய்..."
    C.(முடியல..)

    கேப்சன்13:-
    A.நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் கற்பனை தானோ
    வெறும் காட்சிப் பிழை தானோ..
    B.போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு...
    C.(ஓட ஓட ஓட தூரம் குறையல)

    கேப்சன்14:-
    A.புரோ கேப்சன் என்ன எழுதறது தெரியல.இந்த சீன்ல நிஜமா என்ன பேசுனோம்னு ஞாபகம் இருந்தா சொல்லு.ஜம்போ ஆளுக்கு பாதி பிரிச்சுக்குவோம்
    B.அம்போனு போய்ட்டவங்கிட்ட ஜம்போ டீலா..உன்னல்லாம்....
    C.(ஹா ஹா...)


    படம்2:-
    (டைகர் டெக்ஸ்)

    கேப்சன்12:-
    A.என்ன டெக்ஸ் கோவமாஇருக்க மாதிரி தெரியுது?
    B.பின்ன என்னப்பா..புளுபெர்ரினு நாவல் பழத்தோட பேர வச்சுகிட்டு இருந்த உனக்கு போயி டைகருனு கெத்தா பேரு வச்சுட்டு எனக்கு டெக்சுனு அப்படியே சிம்பிளா வுட்டுபுட்டாரே..
    ஒரு லயனு சீட்டானு வச்சிருந்தா எவ்ளோ கெத்தா இருந்திருக்கும்

    கேப்சன்13:-
    A.ம்ம்ம்ஆஆஆ
    B.ம்ம்ஆஆஆஆஆ
    ஒரு மந்தையிலிருந்த இரண்டு மாடுகள் சந்தித்த போது அவைகளால் பேச முடியவில்லையே....
    (கௌக்கு மட்டுமில்ல கௌபாய்க்கும் இது பொருந்தும்)

    கேப்சன்14:-
    A.இந்த கார்சனையும் ஜிம்மியையும் எங்கப்பா அனுப்பின..ரொம்ப நேரமா காணோம்
    B.ஓவரா தொண தொணத்துகிட்டு இருந்தாங்க.அதான் நாலுதெரு தள்ளி போய் பால் பாக்கெட் வாங்கி வர சொன்னேன்.
    இந்நேரம் மாமாங்க கிட்ட மாட்டி பேக் சைடு பழுத்துகிட்டு இருக்கும்

    படம்3:-
    (டெக்ஸ் கார்சன்)
    கேப்சன்13:-
    A.ஏன் டெக்ஸ் சோகமா இருக்க...
    B.இந்த கொரோனாவுக்கு பயந்து நம்ம ரெண்டு குதிரைங்களும் இந்த அத்துவான காட்டுல நம்மள தவிக்க விட்டுட்டு ஓடி போயிடுச்சுங்களே அததான் தாங்க முடியலப்பா

    கேப்சன்14:-
    A.கொரோனாவுல இருந்து தப்பிக்க மக்களுக்கு அழகா ஒரே ஒரு வாக்கியத்துல ஏதாவது சொல்லு நண்பா
    B.கரம் சிரம் புறம் நீட்டாதே

    கேப்சன்15:-
    A.ஊரடங்குனால நாம தேடி வந்து அடிக்க மாட்டோங்கற நம்பிக்கைல மொத்தம் 49 கேப்சன்ஸ் போட்டிருக்கான் சகோ.
    இவன என்ன பண்ணலாம்
    B.நாலு பேருக்கு நல்லதுனா எதும் தப்பில்ல விடு கார்சன்..நம்மள நம்பிட்டான்ல...போகட்டும்.
    நம்பிக்கை அதுதானே எல்லாம்...

    ReplyDelete
    Replies
    1. 15வது சிம்ப்ளி சூப்பர் சகோ! "நம்பிக்கை அதானே எல்லாம்..."--Fantastic

      Delete
    2. ///டிரஸ்ஸ பார்த்தா தெரியல..."கௌபேய்..."///

      ///ஊரடங்குனால நாம தேடி வந்து அடிக்க மாட்டோங்கற நம்பிக்கைல மொத்தம் 49 கேப்சன்ஸ் போட்டிருக்கான் சகோ.///

      ஹா ஹா ஹா!! செம! :)))))

      Delete

    3. ///ஊரடங்குனால நாம தேடி வந்து அடிக்க மாட்டோங்கற நம்பிக்கைல மொத்தம் 49 கேப்சன்ஸ் போட்டிருக்கான் சகோ.///

      ஹா..ஹா...ஹா..

      Delete
  74. 49 கேப்சன்களையும்பொறுமையாக சகித்த சகோக்களுக்கு நன்றி...

    ReplyDelete
  75. கேப்சன் 14... அருமை நண்பரே.. சிரித்து மகிழ்ந்தேன்

    ReplyDelete
  76. நம்மளோட கொரோனா நாட்கள் கொஞ்சம் காக்டெய்ல் பாணியில் ஒடுது.லா.ச.ராவின் சிறுகதை தொகுப்பு 4ம் பாகத்தில் சில கதைகள், அப்புறம் கல்கியின் பார்த்திபன் கனவு .பின் சுஜாதாவின் நடுப்பகல் மரணம், ஆ..' மறுபடியும் NBS, then பொன்னியின் செல்வன் 5ம் பாகம் ஏக்தம்மில், அப்புறம் Best of bonelli, Now மின்னும் மரணம் 6வது பாகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பீரோ நிறைய காமிக்ஸ் + நாவல்கள். தனிமை இனிமையே. Trail run for retirement.

    ReplyDelete
    Replies
    1. அருமை சார் அருமை இது தான் வாழ்க்கை. Enjoy பத்து சார்

      Delete
    2. ப்பா!! கலக்கறீங்க பத்து சார்!! விட்டா 'கொரோனா வாழ்க'னு கோஷமே போடுவீங்க போலிருக்கே!!

      Delete
    3. தப்பு ஈ.வி. கொரானாவுக்காக விட்ட leave வாழ்கன்னு வேணா சொல்லலாம்.

      Delete
  77. தங்க தலைவன்: என்ன அதிகாரி.. சலூன்ல வந்துட்டு சோகமா இருக்கே..??
    அதிகாரி: உனக்கென்ப்பா ரெண்டு ரவுண்ட் அடிச்சா ஜாலி ஆயிடுறே.. ஆனா எனக்கு ரெண்டு பேரையாவது அடிச்சா தான் கொஞ்சம் கிக் ஏறும்.. இப்ப இருக்கிற நெலமையில யாரா இருந்தாலும் நான் தான் ரெண்டு அடி தள்ளி நிக்க வேண்டியதாயிருக்கு...

    ReplyDelete
  78. பராகுடா முடிஞ்சுது!

    என் பெயர் டைகர் ஸ்டார்ட் பண்ணியாச்சு!

    ReplyDelete
  79. கார்சனின் நண்பர்: இப்ப எதுக்கு நீ உடனே பாருக்கு போகனுங்கிறே ?
    கார்சன்: ஆமாப்பா ஆமா.. பொறந்த எடமும் பிரச்சினையா இருக்கு.. புகுந்த எடமும் பிரச்சினையா இருக்கே.. இனி பாரை தெறப்பாங்களோ என்னவோ.. அதனால் தான் இந்த கட்டை வேகணும்னா உடனே பாருக்கு போகனும்..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி.. சொந்தப் பிரச்சினைகளை கேப்ஷன்ற பேர்ல உள்ளே கொண்டுவர்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே! :))))

      Delete
    2. இது இப்போ சர்வதேச பிரச்சினையாக்கும்..

      Delete
  80. டைலான்: ஆபத்து.. ஆபத்து.. அநியாயமா சாகப் போறேனே..காப்பாத்துங்க..
    கார்சனின் நண்பரின் உடல்: என்னது.. அநியாயமா.. ஆபத்தா.. இருப்பா நான் வந்துட்டேன் காப்பத்த..
    கார்சனின் ஆவி: அட .. இவம்வேறப்பா.. அநியாயம் ஆபத்துன்னு சத்தம் கேட்டா போதும் உடனே கெளம்பிருவான்.. அட அவன் பயந்து ஓடுறதே உன்னைப் பார்த்து தாம்பா..

    ReplyDelete
  81. படம்1:-
    டைலன் : தல...ஏன் என்னை துரத்துகிறீர்கள்? உங்களுக்கு நான் என்ன உதவி பண்ண வேண்டும்?
    டெக்ஸ் : ரொம்ப வருஷமா இந்த கிழட்டு கார்சனோட அரட்டையடிச்சு போரடிச்சு கிடக்கேன்!அந்த மெபிஸ்டோவோட ஆவிய எழுப்பி அனுப்பி வைப்பா...போட்டு தள்ளணும்!
    கார்சன் : அடப்பாவி! ரொமான்ஸ் பண்ண பெண்டாட்டி லிலித் ஆவிய கேட்காம... மெபிஸ்டோவ வரவச்சு போட்டுதள்ளணுமாம்!செத்தும் வெறித்தனம் அடங்கலையே?

    ReplyDelete
    Replies
    1. ///அடப்பாவி! ரொமான்ஸ் பண்ண பெண்டாட்டி லிலித் ஆவிய கேட்காம... மெபிஸ்டோவ வரவச்சு போட்டுதள்ளணுமாம்!செத்தும் வெறித்தனம் அடங்கலையே?///

      ஹா ஹா!! செம!! :))))

      Delete
  82. தங்க தலைவன்: என்ன அதிகாரி.. நீங்க மட்டும் வந்திருக்கீங்க?? கார்சன் எங்கே??
    அதிகாரி: அட அதை ஏம்பா கேட்கிறே.. இருபத்தி ஒரு நாள் தனிமைபடுத்திக்கிறேன்னு கிச்சனுக்குள்ளே போயி பூட்டிக்கிட்டான்.. இன்னிக்கு எட்டு நாள் ஆச்சு.. கறி வறுக்கிற வாசமும், கறி மெல்லுற சத்தமும் மட்டும் தான் வருது.. இவரு இருக்கிற கறி எல்லாம் தீர்ந்தா தான் வருவாரு போல..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. ரம்மி.. அல்டிமேட் ஒன்! :))))))))))

      Delete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. கார்சன்: நண்பா.. இந்த சூடான காபியை குடிச்சா தொண்டையில இருக்கிற கிருமி எல்லாம் செத்திரும்..
    கார்சனின் நணபர்: ம்க்கும்.. உன்னோட காபியா..?? போற உசிறு கொரோனோவிலியே போகட்டும்..

    ReplyDelete
  85. ஒரே கேப்சனாக படித்துக் கொள்ளவும்

    படம் 3:
    கார்சன் : ஒரு தடவை கூட டைகர் கிட்டே போக்கர்லே ஜெயிக்க முடியலையா?? நம்பவே முடியலையே..
    கார்சனின் நண்பர்: அவன் ஏதோ பிராடு வேலை பண்றான்.. கண்டு பிடிக்காமே விடப்போறதில்லை.. எவ்வளவு நாள் ஏமாத்துறான்னு பார்க்கிறேன்..
    படம் 2:
    அதிகாரி: நான் செத்தாலும் இனி என்னை ஏமாத்தி ஜெயிக்க முடியாது..
    தங்க தலைவன் :மறுபடியும் நான் ஜெயிச்சிட்டேன்.. ஹாஹ்ஹா..
    படம்1:
    டைலான்: அய்யோ காப்பாத்துங்க .. நான் தான் டை...
    அதிகாரி: தெரியும்டா ஏமாத்துக்கார பயலே.. செத்தாலும் உன் பிராடுதனத்தை கண்டு பிடிக்காமே விட மாட்டேன்..
    கார்சனின் ஆவி: ம்க்கும்.. டை..ன்னு பேரை சொன்ன உடனே குழியிலிருந்து கெளம்பட்டானே.. ஐயோ அது டைகர் இல்லே.. டைலான்னு யாராவது சொல்லுங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி.. 3 படங்களுக்கான கேப்ஷனையும் ஒரே நிகழ்வா கொண்டு வந்தது பெரிய விசயம்!! செம்ம!!

      Delete
  86. கார்சனின் நண்பர்: எவ்வளவு நாளைக்கு தான் உன்னோட காபியை குடிக்கனும்னு என் தலையிலே எழுதியிருக்கோ தெரியலை..
    கார்சன்: ரொம்ப அலட்டிக்காதே.. இது கபசுர குடிநீர்.. ஒடம்புக்கு நல்லதாம்பா..

    ReplyDelete
  87. ஆட்டிசம்:
    'ஆட்டிசம்' என்பது என்ன? அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு - Development disability! மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் துவங்கும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாது பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் 'ஆட்டிசம்' மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப்படுகிறது. தூய தமிழில் இது தற்புனைவு ஆழ்வு என குறிப்பிடப்படுகிறது.
    ஆட்டிசத்தின் தன்மைகள்

    சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை:

    இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.

    தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை:

    'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும்திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை:

    சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் 'ஆட்டிச’க் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (PRETEND PLAY) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. 'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

    ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

    இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களைப் பீடிக்கும் 'ஆட்டிசம்' பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி என்ற எந்த பாகுபாடும் அதற்குக் கிடையாது. இன்று சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'Downs Syndrome’ என்ற மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டை விடவும் அது பரவலாகக் காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட 'ஆட்டிசம்' பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
    ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்

    ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பா¢சோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் 'ஆட்டிச'த்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டிசம் பற்றிய அட்டகாசமான விளக்கம் டாக்டர் ஐயா நன்றி நன்றி.

      Delete
    2. ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதோ சில உதாரணங்கள்:
      • நடத்தை ரீதியான அறிகுறிகள்
      • கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
      • கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
      • ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
      • தாமதமாகப் பேசத் தொடங்குதல்
      • விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
      • முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ / உணரவோ அறியாதிருத்தல்
      • சமவயதுள்ள நபர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் அல்லது அந்த உறவை நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்

      தீர்வு

      எதனால் 'ஆட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.

      இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்ததல்லவா?

      # April 2, World Autism Awareness Day

      முகநூல் பதிவில் யாரோ எழுதியது..

      பிழையிலா மழலை நினைவு கூர்ந்து இங்கு பதிவிடப்பட்டது

      Delete
    3. என் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு ஆட்டிஸ சிறுவன் ( 8 வயது இருக்கலாம்) மிகத் திறமையாக கீபோர்டு வாசிப்பான்! கீ போர்டில் அவன் கைகள் புகுந்து விளையாடுவதைப் பார்க்கும்போது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும்!! அதே போல திருகுறளின் நம்பர் சொன்னால் அந்தக்குறளை அழகுத்தமிழில் எழுதிக்காட்டுவான்!!

      ஆட்டிஸக்குழந்தைகளுக்கு இயற்கையாகவே இதுபோன்ற ஆற்றல் இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறதா? அல்லது முழுக்க முழுக்க அவனுக்கான (சிறப்பு) பள்ளியில் கொடுக்கப்படும் பயிற்சிகள் தான் காரணமா?

      விளக்குங்களேன் செனாஅனா?

      Delete
    4. ஆட்டிசம் பற்றி அருமையான விளக்கம் பொருளர் ஜி! எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. நன்று!

      Delete
    5. //ஆட்டிஸக்குழந்தைகளுக்கு இயற்கையாகவே இதுபோன்ற ஆற்றல் இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறதா?//

      ஆம்!! மிக மிக மிக குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே இவ்வாற்றல் வழங்கப்படுகிறது...

      //முழுக்க முழுக்க அவனுக்கான (சிறப்பு) பள்ளியில் கொடுக்கப்படும் பயிற்சிகள் தான் காரணமா?//

      நார்மலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஆட்டிஸம் உள்ள ஆற்றல் மிக்க குழந்தைகள் தடுமாறுவார்கள்..

      அவர்களுக்கான பள்ளிகள் அவர்களுடைய திறமையை "enhance" செய்யும் விதமான செயல்பாடுகளை கொண்டிருக்கும்..

      அவர்களுடைய ஆசிரியர்கள் அவர்களை புரிந்தவர்களாய் இருப்பார்கள்..

      சுவையான உதாரணங்கள் ,நிகழ்வுகள் கொடுக்கலாம் எனினும் வேலைப்பளு இடைமறிக்கிறது..[ நிம்மதியாக இருக்க இங்கே வந்தால் "இங்கேயுமா" என பலரின் ஆதங்க பெருமூச்சினை கேட்க விழையவில்லை என்பதும் ஒரு சிறு காரணம்:-)]

      பி.கு: நடிகைகள் யாரையேனும் ஜட்ஜாக போட்டால் நகைச்சுவை உணர்வுள்ள நடிகையாக போடச் சொல்லியிருந்தீர்கள்!

      கொரோனா உங்களை மாற்றி விட்டது ஈவி!!

      எடிட்டர் பாட்டுக்கு சச்சு ,கோவை சரளாவை போட்டுவிட்டால்,???

      நகைச்சுவை உணர்வு இல்லாங்காட்டியும் பரவாயில்லை...மாஸ்க் போடாத கீர்த்தி சுரேஷ் மாதிரி நடிகையினை ஜட்ஜாக போடச் சொல்லவும்..;)

      Delete
    6. ///கொரோனா உங்களை மாற்றி விட்டது ஈவி!!///

      அச்சச்சோ!! கொரோனா செய்திகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டு விட்டேனோ?!!

      ///எடிட்டர் பாட்டுக்கு சச்சு ,கோவை சரளாவை போட்டுவிட்டால்,???///

      ஹா ஹா ஹா!! வாய்பிருக்கு.. வாய்ப்பிருக்கு! :))))))

      Delete
  88. எடிட்டர் சார்... 'ஒற்றை நொடி ஒன்பது தோட்டா'வுல உலகத்தையே மறந்துட்டீங்களா? இன்னிக்கு ஜட்ஜை அறிமுகப் படுத்தறேன்னு நேத்திக்கு சொன்னீங்களே = அது என்னாச்சு?

    வரச்சொல்லுங்க உங்க ஜட்ஜை.. ஒரு கை பாத்துப்புடறோம்!!

    ReplyDelete
  89. @ALL : ஜட்ஜ் தானே கேட்டீங்க.. ? ஒன்றுக்கு ரெண்டாய் போட்டால் போச்சு !

    முன்னவர் தென்மாநிலத்துக்காரர் ; அண்டை மாநிலத்தில் இப்போது குடியிருப்பவர் ! பின்னவரும் தெற்கத்திக்கார மக்கா தான் ; கோவையில் குப்பை கொட்டுவதோடு கவிதைகளையும் கொட்டி வருபவர் ! ஆக இந்த இருவருமாக இணைந்து இது வரைக்குமான என்ட்ரிக்களை பரிசீலித்து பரிசு பெறுவோரை அறிவிக்கட்டுமே ?

    The stage is now yours PFB & Steel !

    ReplyDelete
    Replies
    1. ///The stage is now yours PFB & Steel ///

      ஓ... டேன்ஸ் எல்லாம் ஆடச் சொல்லுவாங்க போலிருக்குப்போய்!!

      Delete
    2. இம்முறை ஜட்ஜ்களுக்கு மிகக் சிரமமான பணி காத்திருக்கிறது நண்பர் அனைவருமே பூந்து விளையாடியிருக்கின்றனர்

      Delete
    3. Now the balls are in their court. but.. நீங்க எஸ்கேப் ஆயிட்டீங்களே யுவர் ஹானர்.

      Delete
    4. பரணி மற்றும் ஸ்டீல் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும். பரிசை அறிவிக்கவும்.

      Delete
    5. வணக்கம் அனைவருக்கும்! நண்பர்கள் எழுதிய கேப்ஷன்களை படித்து சிரிக்க மட்டுமே தெரியும் என்பதால் கடந்த நான்கு நாட்களுக்கு இங்கு தலைகாட்டவில்லை, மற்றும் ஒரு காரணம் ஆபிஸ் வேலை அதிகம். இன்று ஸ்டீல் ஆசிரியர் நமக்கு பெரிய வேலை கொடுத்து உள்ளார் என சொல்லவும் அடித்து பிடித்து இங்கு வந்தால் ஆமாம் மிகப்பெரிய வேலை கொடுத்து உள்ளார்! கேப்ஷன் என்றால் நமது நண்பர்கள் பட்டையை கிளப்புவார்கள், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது! இன்று இரவு நண்பர்கள் எழுதிய கேப்ஷன்களை முழுமையாக படித்து விட்டு நாளை காலை முடிவை ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன் நண்பர்களே !

      விஜயன் சார், இது போன்று ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் கொடுப்பீர்கள் என நினைக்கவில்லை, வந்தோமா ரெண்டு கமெண்ட் போட்டோமா என இருந்த எங்களை, இப்படி டேன்ஸ் எல்லாம் ஆட சொல்லிடீங்களே :-). தெரிஞ்ச அளவு ஆடுவோம் சந்தோசமாக! நன்றி! நன்றி!! நன்றி!!! உங்கள் அன்புக்கு நன்றி !!!!

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  90. தற்போதைய செய்திகளின்படி, கான்கிரீட் கானகம் நியூயார்க், கொரோனா கானகம் நியூயார்க் ஆக மாறியுள்ளது.

    ReplyDelete
  91. முதலிடத்தை நோக்கி தமிழகம்...கொரோனா.

    ReplyDelete
  92. யாருமே இல்லையா ?
    காமிக்ஸ் காதலர்களைக் காணாமே?

    ReplyDelete
  93. நண்பரகளைக் காணோமே ?
    வீட்ல என்னை மாதிரியே எல்லாரும் பிஸியா உப்புமா கிண்டிக்கிட்டிருப்பாங்களோ?

    ReplyDelete
  94. *** கொலை கொலையா முந்திரிக்கா ****

    கடந்த வருட பிஸி தருணங்களினூடே படிக்காமல் விட்ட சில கதைகளுள் இதுவும் ஒன்று! தீபாவளி மலர் கதம்பத்தில் ஒன்று!

    ஊய்!! நீண்டநாட்களுக்குப் பிறகு ராபின் ஒரு அக்மார்க்ட் டிடெக்டிவ் ஸ்டோரியைப் படித்த திருப்தி!! தொடர் கொலைகள் - கொலையாளிகள் யார் என்பது நமக்குத் தெளிவாகவே காட்டப்பட்டிருந்தாலும் கூட, கொலைகளுக்கான மோட்டிவ் என்னவென்பதை கடைசிவரை சஸ்பென்ஸாகக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு!

    என்னுடைய ரேட்டிங் : 9.8/10

    ReplyDelete
  95. -------நில்.. கவனி.. வேட்டையாடு.!---

    கர்னல் ஜாரோப்..,

    உயிரோடு விளையாடி வேளாவேளைக்கு வேட்டையாடி புளங்கிதம் அடைபவர்.தன் கைப்பிடியில் சிக்கும் அப்பாவிகளைத் தப்பவிட்டு, அப்புறமாக வேட்டையாடி அப்புறப்படுத்தும் பிரத்யேக ஆர்வம் கொண்டவர்.
    வழக்கம் போலொரு வேட்டையில் வழக்கத்துக்கு மாறாக தான் வைத்த பொறியிலே தானே சிக்கி பொறிகலங்கினார். அதுவே அவரைப் பதம் பார்க்க, தப்பிப் பிழைத்தார். அது போதாதென்று அவரது பிரபல்யம் கடல்தாண்டி பிரபலமாக,கழுத்துக்கு கத்தி வந்து சேரும் முன் காதும், காதும் வைத்த மாதிரி தன் ஜாகையை கண்காணாத இடத்திற்கு மாற்றுகிறார்.

    வேட்டையிலிருந்து விலகி விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு புது இடத்தில் புது வாழ்க்கை வாழ முற்படும் போது..,

    'நீ பற்ற வைத்த நெருப்பொன்று,
    பற்றியெரிய உன்னைக் கேட்கும்.'

    என பழைய பகை பழி தீர்க்க ஒரு பாவை உருவில் வந்தது.அவள்,வெளிப்பார்வைக்கு சமூக சேவகி போலத் தென்பட்டாலும், உள்ளுக்குள் அவள் சாத்தானின் சேவகி என்பது பின்வரும் பக்கங்களிலே புரிந்தது.

    அவள்,
    ஜாரோப்பின் வேட்டை மீதான மோகத்தை தூண்டிலாகப் பயன்படுத்தினாள்.வெறும் தூண்டிலை வைத்து என்ன செய்ய?
    அந்த தூண்டிலில் புழுவாக சிக்கிய இரை அவரது வெறியைத் தூண்டியது.

    தான் கட்டமைத்த ராஜ்ஜியத்தில், இன்னொருவர் தன்னை கட்டம் கட்டுவதா?
    எமனாக வாழ்பவன், இரையாக ஜனிப்பானா? என கண் சிவந்து, பொங்கும் கர்னல், கெடா வெட்டி, பொங்கல் வைத்து, திருவிழா கொண்டாடி, செந்நீராட்டி முடித்து வைக்கிறார்..!

    ReplyDelete
    Replies
    1. செம்ம GP வரவர உங்கள் விமர்சனத்தில் நெருப்பு தெரிக்கிறதே

      Delete