Powered By Blogger

Thursday, March 26, 2020

நில்..கவனி...திரும்பிப் பார் !

நண்பர்களே,

வணக்கம். ஒரேயொரு ஞாயிறு அக்கடாவென்று ஓய்ந்து கிடக்க வாய்ப்புக் கிடைத்தால் - அடடா...சொர்க்கமாய் இருக்காதா ? என்று நினைத்துப் பெருமூச்சு விட்ட நாட்கள் ஏராளம் ; ஆனால் இதோ - அடுத்த மூன்று வாரங்களுக்கு பிட்டம் முழுக்க பெவிகாலைத் தடவிக்கொண்டு வேலைக்குப் போகும் அவசியங்களின்றி வீட்டுக்குள்ளே சோம்பல் முறிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது - ஆனால் surprise..surprise....இந்த ஓய்வினில் சும்மா கிடக்க  மனசு சண்டித்தனம் செய்கிறது !! நித்தமும் வேலைக்குப் போய், அங்குள்ள பிடுங்கல்கள் ஒரு நூறுக்கும் பதில் சொல்லிவிட்டு,கிடைத்த ஐநூறையோ, ஆயிரத்தையோ பைக்குள் திணித்த கையோடு உராங்குட்டான் போல மூஞ்சை வைத்துக் கொண்டே ஸ்கூட்டரில் வீடு திரும்பி, மேஜையில் காத்திருக்கக்கூடிய உப்மாவையோ ; கிச்சடியையோ மூச்சைப் பிடித்துக் கொண்டே அவசரம் அவசரமாய் விழுங்கிவிட்டு, சங்கு மார்க்கோ ; நண்டு பிராண்டோ - ஏதேனும் ஒன்றுக்குள் காற்றோட்டமாய்ப் புகுந்து கொண்டே, வாட்சப் எனும் மாய லோகத்தினுள் நுழைந்து, பெயரைத் தாண்டி பாக்கி எதுவும் அவ்வளவாய் நினைவில்லாத நண்பர்களிடம் கூட -  "என்ன பிழைப்புடா சாமீ இது ?" என்று புலம்பும் அந்த வாடிக்கைகளின் அருமை மல்லாக்கப்படுத்து விட்டத்தை முறைக்கும் இன்றைக்குத் தான் புரிகிறது !! ஆனால் மாண்புமிகு பிரதமரின் அதி முக்கிய அறிவிப்பு நம் நலனும், நாட்டின் நலனும் கருதியுமே எனும் போது அதைக் கிஞ்சித்தும் மீறாது, வீட்டில் தவம் செய்வது நமது தலையாய கடமையாகிப் போகிறது ! Let's Stay Home...and Stay Safe folks ! எனக்கோ மளிகைக்கடையில் பெவிஸ்டிக் கிடைத்தால், ஒரு டஜனை சேர்த்துப் போட்டு வாங்கி வரத் தீர்மானித்துள்ளேன் !!

எது எப்படியோ - எனது பணிகளின் பெரும்பான்மை எங்கிருந்துமே செய்திடக்கூடியது எனும் போது - நாட்கள் பிஸியாகவே நகர்ந்து வருகின்றன ! கை கடுக்கும் வரையிலும் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவின்" மூன்றாம் பாகத்தில் பணி......அப்புறமாய் தோர்கல் (கோடை மலர்) இதழ்களில் கொஞ்ச நேரம் ஜாகை ; பின்னே நமது படைப்பாளிகளின் குடல்களையும் இயன்றமட்டுக்கு உருவி, லேட்டஸ்ட் கதைகள்  சார்ந்த  அளவளாவலை  நடத்திடுவது  ; அதன் பலனாய்க் கிட்டி வரும் புதுப் புதுக் கதைகளைப் படம் பார்ப்பது - என ஓட்டமெடுத்து வருகின்றன ! பற்றாக்குறைக்கு ஏப்ரலில் வரவிருந்த "5 நிமிட வாசிப்பு" புக்கின் ஓவியையோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் அமைய, நமக்கென பிரேத்தியேகமாய் நாலு வரிகளில் ஒரு "ஹலோ" message அனுப்பியுள்ளார் ! அதுவும் அந்த புக்கில் இடம் பிடித்திடும் - whenever that happens !

அப்புறம் நாம் இங்கிருந்து இத்தாலிய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் படைப்பாளிகளிடம் நலம் விசாரித்த காலங்கள் மலையேறி, அவர்கள் இப்போது நாம் ஓ.கே.வா ? என்று விசாரித்து வருவதற்கும் பொறுப்பாய்ப் பதில் போட்டு வருகிறேன் !! "அநேகமாய் மே 4 வரையிலுமே எங்க பிழைப்பு இப்டி தான் போலும் " என்று சொல்லும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்து அதிகாரி, வீட்டிலிருந்தே பணி செய்வதால் - நமக்கு வித விதமான கதைகளின் மாதிரிகளை அனுப்பி உதவி வருகிறார் ! So பலவிதங்களில் மிஷின்களாய் மாறிப் போயிருந்த நாமெல்லாம் இழந்த பலவற்றை மறுபடியும் மீட்டெடுக்கும் வேளையோ - என்னவோ இது ?!ரைட்டு...நான்லாம் ஓவராய் சித்தாந்தம் பேசித் திரிந்தால் சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும் என்பதால் வேறு பக்கமாய் வண்டியை விடலாமா ?

இன்றைக்கு கண்ணுக்குத் தெரியா ஒரு வைரஸைக் கண்டு ஆளாளுக்குத் தெறித்து ஓடிவரும் சூழலில், 34 ஆண்டுகளுக்கு முன்னேயே நான் இதே போலொரு ஓட்டம் எடுத்த தருணம் தான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது ! அதே சமயம் இந்த அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்து விட்டேனா - இல்லியா ? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் லைட்டாக உள்ளது - becos நிறையவாட்டி இதை பற்றி எழுத நினைத்திருக்கிறேன் - ஆனால் கடைசி நிமிடத்தில் 'சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும்' என்ற பயத்தில் பின்வாங்கவும் செய்திருக்கிறேன். Maybe....just maybe இதுவொரு மறு ஒலிபரப்பாகவும் இருந்திடக்கூடும் தான் ; அவ்விதமிருப்பின் காமிக்ஸ் மறுபதிப்புகளைப் போல இதுவொரு "பதிவு மறுஒலிபரப்பு" என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?

வாழ்க்கையின் இரு ஆண்டுகள் எனக்கு  திளைக்கத் திளைக்க சந்தோஷங்களும், வெற்றிகளும் வாரி வழங்கின என்றால் அது 1985 & 1986 தான் ! அதன் பின்பாய் சொந்த வாழ்வில், பணம் ஈட்டலில் ; நமது காமிக்ஸ் முயற்சிகளில் என்று நிறைய highlight தருணங்களை தாங்கிய வருஷங்கள் வந்து போயிருக்கின்றன ;  ஆனால் '85 & '86 முற்றிலுமாய் வேறொரு லெவல் ! ஒற்றை வருஷத்துக்கு முன்பு வரை அடையாளம் ஏதுமின்றி, கையில் பத்தணாவுமின்றி, எதிர்காலம் குறித்து துளியும் நம்பிக்கையின்றித் திரிந்தவனுக்கு, எங்கிருந்தோ சகலத்தையும் ஏக் தம்மில் பெரும் தேவன் வழங்கி திக்குமுக்காடச் செய்திருந்தார் ! அதன் ஒரு ரம்யமான உச்சத்தை ரசித்துக் கொண்டிருந்த 1986 -ன் செப்டெம்பர் மாதம் அது !

லயன் காமிக்ஸ் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, திகில் காமிக்ஸ் துவக்கத்துத் தடுமாற்றத்துக்குப் பின்பாய் சற்றே நிதானம் கண்டிருந்த நாட்களவை ! புது சைஸ் ; ரூ.2 .25 விலை (!!) ; ஜூனில் XIII ; ஜூலையில் சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி" ; ரிப்போர்ட்டர் ஜானியின் "இரத்தக் காட்டேரி மர்மம்" ஆகஸ்டிலும் ; "சைத்தான் வீடு" செப்டெம்பரிலும் என்று வெளியாகி விற்பனையை ஓரளவுக்குத் தாங்கிப் பிடித்திருந்தன ! தொடரும் மாதங்களில் கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை"  ; ப்ருனோ பிரேசிலின் மர்மச் சவப்பெட்டிகள்  என்று பிரான்க்கோ-பெல்ஜிய அட்டகாசங்கள் சார்ந்த தட புடத் திட்டமிடல் கையிலிருந்ததால், உலகமே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவைப் போல இனிப்போ இனிப்பாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் !  லயனில் ஸ்பைடர் ; ஆர்ச்சி ; இரட்டை வேட்டையர் ; இளவரசி ; இரும்புக்கை நார்மன் என்று பிரிட்டிஷ் track ஓடிக்கொண்டிருந்தது ! So நிஜத்தைச் சொல்வதானால் மாதம் 2 இதழ்களென்ற அந்நாட்களது நமது அட்டவணைக்கு, அடுத்த 10 வருஷங்களுக்காவது கதைப்பஞ்சம் நேர்ந்திட வாய்ப்பே கிடையாது தான் ! ஆக வீட்டிலிருந்து ஆபீஸ் ; ஆபீசிலிருந்து வீடு என்ற routine-ல் வண்டி நிம்மதியாய் ஓடிக்கொண்டிருந்தது ! ஒரே மாற்றம் - ஹெர்குலிஸ் சைக்கிளுக்குப் பதிலாய் Ind -Suzuki என்றதொரு 100 cc பைக்கில் சவாரி (ஒன்பதாயிரத்துக்குக் கொஞ்சம் கம்மிங்கோ - புத்தம் புது வண்டி !!)

எனது தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை என்பதால், 1983 -ன் இறுதியில் பாட்டி காலமான பிற்பாடு எங்களோடே வசிக்கத் துவங்கியிருந்தார் ! எனக்கு நிதியுதவி ; மதியுதவி என சகலமும் அவரே ; and வீட்டிலிருக்க போரடிக்கும் என்பதால் ரெகுலராய் என்னோடு ஆபீசுக்கு வந்து விடுவது வழக்கம் ! அங்கே பகல் பொழுதில் நான் செம பிசியாக இருக்கும் வேளைகளில் தாத்தா எனக்கெதிரே ஒரு சேரைப் போட்டு அமர்ந்தபடிக்கு நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவரது அச்சு இயந்திரத்தையும் என்னிடம் ஒப்படைத்திருக்க, அப்போதைய சிவகாசியின் நடைமுறைக்கேற்ப 2 ஷிப்ட்டில் விடிய விடிய வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும் ! So ஞாயிறு மதியம் வரைக்குமே ஆபீஸ் 'ஜே-ஜே ' தான் ! மாலைகளில் ஆபீஸின் வாசலில் அக்கடாவென இரு சேர்களை போடச் செய்து - "போதும்டா வேலை பார்த்தது ; வா - வந்து உட்கார்!!" என்று ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார் ! வண்டி இந்த routine-ல் ஓடிக்கொண்டேயிருந்தது ஆகஸ்டில் கடைசி வரையிலும். செப்டெம்பர் பிறந்த போதே விண்ணஞ்சலில் கடுதாசிகள் வரத்துவங்கின - ஐரோப்பாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ! (இன்டர்நெட் ; செல்போன் ; பேக்ஸ் ; என்று எதுவுமே இல்லாத அந்த வேளைகளில் கடுதாசிகளில் தான் தகவல் பரிமாற்றங்களே !!)

"போன வருஷம் (1985) பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருந்தாயே....இந்த வருஷமும் வருவாய் தானே ? உறுதி செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் தருகிறோம் !" என்று அந்தக் கடுதாசிகள் அனைத்துமே சொல்லின ! அந்நாட்களில் எனது பணியின் நிமித்தம் மிஞ்சிப்போனால் ஆண்டுக்கு ஒருவாட்டி டில்லிக்கோ ; மும்பைக்கோ போவதைத் தாண்டி பெருசாய் வெளியூர்களுக்குப் போகும் அவசியங்கள் இருந்ததில்லை ! So ஊரைச் சுற்றியே ; வீடு-ஆபீஸ் கூட்டணியைச் சுற்றியே - நாட்கள் ஓடிய வேளைகள் அவை ! திடு திடுப்பென இந்தக் கடுதாசிகள் வந்த சேர்ந்த போது மறுக்கா புத்தக விழாவின் பெயரைச் சொல்லி ஐரோப்பாவுக்கு ட்ரிப் அடிக்கும் ஆசை மெது மெதுவாய்த் துளிர் விட்டது மண்டைக்குள் ! அப்போதெல்லாம் விசா எடுப்பது ; ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று செலவுக்கு டாலரோ ; பிராங்கோ ; மார்க்கோ வாங்குவது என்பதெல்லாம் பிராணனை வாங்கும் வேலைகள் ! So ஒரு மாதம் முன்கூட்டியே திட்டமிடல்களை ஆரம்பிக்கா பட்சத்தில் எதுவும் தேறாது ! வீட்டினில்  அலமாரிக்குள் தூங்கி கொண்டிருந்த 2 கோட்-சூட்களும் சரி, பிடாரி சைசிலானதொரு சூட்கேஸும் சரி, என்னைப் பார்த்துக் கண்ணடித்து போலவே தோன்ற, அவற்றை மறுபடியும் உபயோகத்திற்கு கொணர ஆசை ஆசையாய் இருந்தது ! என் தந்தைக்கு உலகம் சுற்றுவதென்பது ஜாங்கிரி சாப்பிடுவது போலான விஷயம் ; விட்டால் இன்றைக்குமே எங்கேயேனும் கிளம்பத் தயாராகி விடுவார் ! So அவரிடம் "இன்னொருவாட்டி பிராங்பர்ட் போக நினைக்கிறேன் " என்று சொல்வதில் சிக்கல் இராதென்பது எனக்குத் தெரியும் ! ஆனால் அந்தக்காலத்து ஆளான என் தாத்தாவுக்கு விமானப் பயணங்கள் ; அயல்நாடுகள் என்றாலே சுத்தமாய் ஆகாது ! "இவையெல்லாமே ஆபத்தான சமாச்சாரங்கள் ; தூர விலகி நிற்பதே சாலச் சிறந்தது !" என்பதே அவரது அபிப்பிராயம் ! ஆகையால் நிச்சயமாய் அவருக்கு இதனில் உடன்பாடிராது என்பதை யூகிக்க முடிந்தது ! முதலீடு முழுக்கவே அவரது பணம் தானென்றாலும், எதுவானாலும் "என்னைக் கேட்டுக் கொண்டு தான் செலவழிக்கணும்" என்ற ரீதியில் அவர் ஒரு நாளும் முட்டுக்கட்டை போட்டதே கிடையாது ! "சிக்கனமாய் ; சரியாய்ச் செலவிட்டுக் கொள்" என்பதைத் தாண்டி எனக்கு வேறெந்த கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை ! இருந்தாலும், அவரை எப்படியேனும் சம்மதிக்க வைத்து விட்டுப் பயணம் போவதே எனக்கு சரியென்றுபட்டது !

என்ன சொல்லி சம்மதிக்கச் செய்யலாமென்று யோசித்துப் பார்த்த போது, இரும்புக்கை தான்  என்னைக் கைதூக்கி விட்டது !! ஆனால் இதுவோ நம்ம லூயி கிராண்டேல் அல்ல ! மாறாக - இரும்புக்கை உளவாளி என்ற பெயரில் நாம் வெளியிட்ட DC Thompson பதிப்பகத்தின் ஏஜெண்ட் வில்சனின் இரும்புக்கையே ! சமாச்சாரம் என்னவென்றால், இரும்புக்கை மாயாவி அந்நாட்களில் முத்து காமிச்சிலேயே தான் இருந்தார் & அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸ் என் பொறுப்பாகி இருக்கவில்லை ! So போட்டிக் கம்பெனியின் flagship hero என்ற கடுப்போடே தான் மாயாவியை நான் பார்த்திடுவதுண்டு ! ஸ்பைடர் ; ஆர்ச்சி ; ரிப்போர்ட்டர் ஜானி என்று என்ன தான் நான் கர்ணம் போட்டாலும் - "இரும்புக்கை" என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகவர்கள் முத்து காமிக்ஸுக்குப் படையெடுப்பதுண்டு ! And அங்கே ஆர்டர் செய்து விட்டுத் திரும்பும் போது அடுத்த வாசலான நமது ஆபீசுக்கு வந்து "முத்து காமிக்ஸுக்கு ஆர்டர் குடுக்க வந்தேங்க சார் ; நல்லா இருக்கீங்களா ?" என்று குசலம் விசாரித்துப் போக, எனக்கோ யாரையாவது நடு மூக்கில் அதிகாரியின் ஸ்டைலில் குத்தணும் போலிருக்கும் ! தாத்தாவுக்கும், காமிக்ஸ் வாசிப்புக்கும் தூரம் ஜாஸ்தி என்ற போதிலும், விற்பனை சமாச்சாரங்களில் இரும்புக்கை சாதித்து வருவதை நன்கு அறிவார் தான் ! ஏற்கனவே DC Thomson காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து அந்த இரும்புக்கை ஏஜெண்டை வாங்கிட நான் போட்ட மொக்கைகளும் அவருக்கு நன்றாகவே தெரியும் ! So இரண்டாவது தபா ஜெர்மனிக்குப் பயணம் போயிட அந்த "இரும்புக்கை" மேட்டரையே மூலதனமாக்கிடத் தீர்மானித்தேன் !

"இந்த வருஷம் பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு போய் சந்தித்துப்  பேசினாக்கா அந்த உரிமைகளை வாங்கிடலாம் போலத் தெரியுது தாத்தா !!" என்று ஒரு சாயந்திர அரட்டையில் போது  மெதுவாய் பிட்டைப் போட்டேன் ! "இங்கிருந்தபடிக்கே முடியலியோடா ?" என்று கேட்க, "முடியலியே !!" என்று பஞ்சப்பாட்டொன்றைப் பாடினேன் ! அப்புறமென்ன ..? "சரி..போனவாட்டி போல 22 நாள்லாம் வேணாம் ; போயிட்டு சீக்கிரமா திரும்பிடணும் !" என்றபடி கேட்டைத் திறந்து விட, 'அத்துச்சாம் கழுதை ; எடுத்துச்சாம் ஓட்டம்' என்ற ரீதியில் மட மடவென்று விசா & இன்ன பிற பணிகளைத் துவக்கினேன் ! அந்நேரத்துக்கு முந்தைய ஆண்டின் பயண அனுபவம் இருந்ததால்,  எல்லாமே சுலபமாய் நடந்தேறின ! முதல் வருடம் ஜெர்மனி ; பெல்ஜியம் & லண்டன் என்று சுற்றியிருக்க, இந்தவாட்டி ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் போய்ட்டு வரும் ஆசை தலை தூக்கியது !

அந்நாட்களில் பாரிஸ் என்பது செம exotic இலக்கு அனைவருக்குமே !! ஐபெல் டவர் ; மோனா லிசா ; இன்ன பிற உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களும் புக்குகளில் ; சினிமாக்களில் அட்டகாசமாய்க் காட்சி தருவதுண்டு ! பற்றாக்குறைக்கு Berlitz Guide to Paris என்றதொரு சின்ன புக்கை எங்கேயோ வாங்கியிருக்க, அது பாரிஸின் ஒவ்வொரு மார்க்கெட் ; ஒவ்வொரு வீதி என்று விளக்காத குறை தான் ! So "இம்மாம் தொலைவு போறச்சே அங்கேயும் எட்டிப் பார்த்திடுவோமே !" என்ற ஆசைக்கு அங்கே நமது முக்கிய படைப்பாளிகள் இருவர் இருப்பதும் உரமூட்டியது ! So அவர்களை நேரில் சந்திக்கும் திட்டத்தையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பிரெஞ்சு விசாவும் போடச் செய்தென் ! அதற்குள் நண்பன் எவனோ, "ஸ்விட்சர்லாந்து போகாமே திரும்பினாக்கா புளிய மரத்துக்கும், முருங்கை மரத்துக்கும் தான் பின்னாளில் படையெடுக்க நேரிடும் !!" என்று திரிக்கொளுத்திப் போட, 3 நாள் ஜெர்மனி ; மூணு நாள் பிரான்ஸ் ; ஒன்றரை நாள் சுவிட்சர்லாந்த் என்று திட்டமிட்டுக்கொண்டேன் !

இன்றைக்கு யோசித்தால் அந்நாட்களில், அந்த வயதில், வருமான வரி கட்டுவதென்றால் வீசம்படி எவ்வளவு ? என்ற தொழில் பின்னணியுடனான எனக்கு, ஐரோப்பியத் தூதரகங்கள் விசாக்களை எப்படித் தான் வழங்கினார்களோ ? என்று மலைப்பாக உள்ளது ! இன்றைக்கு ஒரு வண்டி பேப்பர்கள் ; ஒரு வண்டி Income Tax காகிதங்கள் என்று ஒப்படைத்து விட்டும் "வரும்...ஆனா வராது" என்று காத்திருப்பதே நடைமுறை ! ஆனால் அந்நாட்களில் என் முகரையைப் பார்த்து "இவனும் ஒரு எடிட்டர் தான் !" என்று சில மகானுபாவர்களுக்குத் தென்பட்டிருக்கிறது போலும் ; பெரிய மனது பண்ணி விசா வழங்கியிருந்தனர் !

So அக்டோபர் 9 1986-க்கு புத்தக விழா துவங்கிட, அந்நேரத்துக்கு ஆஜராகியிருந்தேன் ! சென்றாண்டு தங்கிய அதே ஊருக்கு வெளியிலான ஹோட்டல், இம்முறையோ ரொம்பச் சுலபமாய் எட்டிட முடிந்தது போலப்பட்டது ! பிராங்கபர்ட்டுக்கு இரும்புக்கை  உளவாளியைக் காரணம் காட்டிய கையோடு பயணம் செய்திருந்தேன் என்பதால், அவர்கள் கையில், காலில் விழுந்தாவது உரிமைகளை வாங்கிடும் முனைப்பிலிருந்தேன் ! So D.C.Thompson அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது ! அதுமட்டுமன்றி BATMAN உரிமைகளுக்கென DC Comics நியூயார்க்கின் சந்திப்புக்கும் நேரம் வாங்கி வைத்திருந்தேன் ! மூன்றே தினங்களில் முக்கிய வேலைகள் அனைத்தையுமே பிசிறின்றி முடித்திட படைப்பாளிகள் அனைவரின் சகாயங்களும் ஏகமாய் உதவியிருந்தன ! "சின்ன பையன் ; எடுத்தேறி இத்தினி தொலைவு வந்திருக்கான் ; பிழைச்சுக்கட்டும் !" என்ற ஒற்றை சிந்தனையைத் தாண்டி, அவர்கள் யாரிடமும் வியாபார அணுகுமுறை கிஞ்சித்தும் இருந்ததில்லை என்பதில் சந்தேகமே கிடையாது ! அந்த தயாளமும், பெருந்தன்மையும் மாத்திரமில்லாது போயிருப்பின், சுட்டிக்குரங்கு கபிஷ் ; ராமு & சோமு என்ற ரேஞ்சைத் தாண்டிய புக்ஸ் எதுவுமே எனக்குச்  சாத்தியப்பட்டிராது !

எல்லாமே அட்டகாசமாய் நடந்தேறிய சந்தோஷத்தை ஊருக்கு போன் செய்து பகிர்ந்த கையோடு, பிராங்கபர்ட்டுக்கு டாட்டா சொல்லிவிட்டு பயணத்தின் அடுத்த கட்டத்துக்குத் தயாராக துவங்கினேன் ! அந்நேரத்துக்கு பிராங்பர்ட் நம்ம உசிலம்பட்டி ரேஞ்சுக்கு நட்போடு காட்சி தந்து கொண்டிருக்க, சிரமங்கள் ஏதுமின்றி, பாரிஸ் போகும் காலை விமானத்தைப் பிடிப்பதற்கோசரம் சீக்கிரமே ஏர்போர்ட்டுக்குக் கிளம்பிவிட்டேன் ! அதிகாலை முதலே உள்ளுக்குள் ஒரு விதப் பட படப்பும், மெல்லிய பயமும் துளிர் விட்டிருப்பதை உணர முடிந்தது ! ஜெர்மனியும் ஒரு மேற்கத்திய ஐரோப்பிய தேசமே ; பிரான்சும் அதுவே என்ற போதிலும் இரண்டுக்கும் மத்தியில் ஏகப்பட்ட கலாச்சார வித்தியாசங்கள் ; மொழி பேசுவதில் சிக்கல்கள் ; ஊருக்குள் பயமின்றிச் சுற்றி வருவதில் சில வேறுபாடுகள் இருப்பதாகவே ஒவ்வொரு பயண கைடும் சொல்லியது ! "பிரான்சில் பல தேசத்து ; பல இனத்து மக்கள் வசிப்பதால் இக்கட சூதானமா இருந்துக்கோ தம்பி" என்று எனது டிராவல் ஏஜெண்டுமே சொல்லியிருந்தது காதில் ஒலித்துக கொண்டிருந்தது ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலங்களில் முன்னே பின்னே போயிரா ஊர்களில் ஒரு ஹோட்டல் ரூம்  புக் செய்வது என்பது ரொம்பவே கம்பு சுற்றும் வேலை தான் ! பாரிஸ் ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்குள் போவது எப்படி ? என்று அந்தக் கையேட்டில் பார்த்தால் "டாக்சி தான் தேவலாம் ; சுலபம் ; அதற்கான கட்டணம் இத்தனை " என்று இருந்தது ! ஆயிரம் ரூபாய் சுமாருக்கு போடப்பட்டிருந்த  அந்தக் கட்டணத்தைப் பார்த்து மிரண்டு போனேன் ! "எங்க ஊரிலேர்ந்து இவ்ளோ தூரம் வந்து போறதுக்கே ஒன்பதாயிரம் தான் ; உங்க ஊர் டேக்சிக்கு மட்டுமே இவ்ளோவா ?" என்ற கடுப்பில், பஸ்ஸைக் கிஸ்ஸைப் பிடித்து ஊருக்குள் போய் விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டேன் ! அந்நாட்களில் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து நகரின் மையத்துக்கு பயணமாகிட ரயில் இருந்ததாயும் எனக்குத் தோன்றவில்லை ; so பஸ்ஸே மார்க்கம் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன் ! ஊருக்குள் போன பிற்பாடு  எந்தப் பகுதியினில் தங்குவது என்று பெரிதாய் ஐடியா ஏதுமில்லை ! பொதுவாய் ரயில் நிலையத்தின் அருகே பட்ஜெட் ஹோட்டல்கள் நிரம்ப இருக்குமென்பது எனது அனுபவப்பாடம் ! ஆனால் அந்த தயாளப் பிரபுக்களின் ஊரிலோ சல்லிசாய்க் கொத்தனார்களும், தண்டவாளங்களும் கிடைத்ததாலோ, என்னவோ - மொத்தம் ஆறோ, ஏழோ ரயில்வே ஸ்டேஷன்களை கட்டி விட்டிருந்தனர் ! So  அதிலும் செம குழப்பம் ! ஆனால் வெளியே எதையுமே காட்டிக்கொள்ளாமல் கோட் சூட் போட்ட  லார்ட் லபக்தாஸ் ரேஞ்சுக்கு, பிராங்பர்ட் விமான நிலையத்தினில் எனது பெட்டிகளை செக்கின் செய்து விட்டு, பாரிஸ் செல்லும் விமான கேட்டுக்கு நடையைக் கட்டிய போது காலை எட்டரை தான்  !

முக்கால் மணி நேரமோ - என்னவோ தான் பாரிசுக்கான பயண நேரம் எனும் போது "இன்னும் கொஞ்ச நேரத்திலேயே பாரிசில் மொக்கை போடும் படலம் ஆரம்பிச்சிடுமோ ?" என்ற பயம் உள்ளுக்குள் குடைந்து கொண்டிருந்தது ! விமானத்துக்கான கேட்டைச் சென்றடைந்த போது நல்ல கூட்டம்...! கண்ணாடித் தடுப்புக்கு மறு பக்கம் முரட்டு முரட்டு Lufthansa விமானங்கள் நின்று கொண்டிருக்க - அதையொட்டிய வரிசையில் ஒரேயொரு சீட் மட்டுமே காலியாய் இருந்தது ! விதியானது அடியேனின்  பிட்டத்தில் தரவிருந்த முரட்டுக் குத்தலுக்கு அது தான் முதற்படி என்பதை அந்நேரம் அறிந்திருக்க வழியேது ? ஸ்டைலாய்ப் போய் அங்கே அமர்ந்தேன்....!

தூக்கத்தில் செருகும் கண்ணிமைகளும் , டைப்படித்தே நோவும் விரல்களும் ஓய்வினைக் கோருவதால் பின்னே தொடர்ந்த நிகழ்வுகள் பற்றி...........அடுத்த பதிவினில் எழுதுகிறேனே guys !! Bye for now !! See you around !!

203 comments:

  1. Replies
    1. 🤨
      எப்போ பாத்தாலும் நீங்களே வந்தா எப்படி 🤷🏻‍♂️
      .

      Delete
    2. பதிவு போடுகிற விஜய் வராமல் வேறு யார் வரமுடியும் :-)

      Delete
    3. கமெண்ட் போட்டுவிட்டு பதிவோ?

      Delete
    4. @சித்
      ///எப்போ பாத்தாலும் நீங்களே வந்தா எப்படி//

      கிர்ர்ர்ர்..

      @Parani from Bangalore
      //
      பதிவு போடுகிற விஜய் வராமல் வேறு யார் வரமுடியும் ///

      உர்ர்ர்ர்ர்..


      @Padmanaban.R
      //
      கமெண்ட் போட்டுவிட்டு பதிவோ?///

      புர்ர்ர்ர்... (உறுமல்தான் உறுமல்தான்!)

      Delete
    5. //🤨
      எப்போ பாத்தாலும் நீங்களே வந்தா எப்படி 🤷🏻‍♂️//--அதானே???

      Delete
    6. ஹிஹிஹி EV மக்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டனர்

      Delete
    7. ////ஹிஹிஹி EV மக்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டனர்///

      KS.. இதுக்குப் பின்னாடி ஒரு சைக்கலாஜிகல் மேட்டர் இருக்குங்க!
      அதாவது, வீட்ல - வீட்டுக்காரம்மாகிட்ட ணங்கு ணங்கு அடி! வெளியே ஓடினா - போலீஸ்காரங்கிட்டே சொத் சொத்'னு அடி!
      இந்தக் கடுப்புகளுக்கெல்லாம் ஒரு வடிகால் வேணாமா நம்ம நண்பர்களுக்கு?! அதான் சுத்திமுத்தி பார்க்கறாங்க.. நாயோ, பூனையோ கையில சிக்கினா கண்டம் பண்ணிடறாங்க! இதான் நடக்குது!

      Delete
    8. நீங்கள் சொல்வது உண்மை தான் ஒதுக்கறேன். திரும்ப மீட் பண்றேன்.

      Delete
  2. ஆஹா.. கதை சூடுபிடிக்கும் வேளையில் இப்படி தொங்கலில் விட்டுட்டுப் போய்ட்டீங்களே எடிட்டர் சார்...
    'நாளைக்குத் தொடருகிறேன்'ன்னு சொல்லியிருந்தாக்கூட பரவாயில்ல.. 'அடுத்த பதிவுல'ன்னு சொல்லிட்டீங்களே..!!

    சரி, 'கம்பேனி ரூல்ஸ்'னு ஒன்னு இருக்கிறவரைக்கும் கவலையில்லை!

    யாராயிருந்தாலும் கம்பேனி ரூல்ஸுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆகணும்?!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா EV இப்போதான் கதை சூடு பிடிக்கிறது. இந்த நேரத்தில் இன்டர்வல் விட்டுடீங்களே சார்.

      Delete
  3. இதைதான் சார் எதிர்பார்த்தேன்..
    மூணு நாளைக்கு ஒரு பதிவு..

    ReplyDelete
  4. முதன்முறை பாரிஸ்..!
    அதுவும் அந்த கால கட்டத்தில் (1986)...

    ஆவலோடு வெயிட்டிங் சார்.

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு.........

    ReplyDelete
  6. சிங்கத்தின் சிறுவயதில்- ஆஹா! சூடு பிடிக்கும்போது தொடரும் போட்டு விட்டீர்களே சார்.

    ReplyDelete
  7. ஆனால் ஒன்று சார் எவ்வளவு மோசமான நிலை ஆக இருந்தாலும் உங்கள் பதிவை படிக்கும் போது மனது அப்படியே லேசாக ஆகி விடுகிறது. மிக ரசித்த பதிவுகளில் ஒன்று. ஸ்ட்ரெஸ் பஸ்டர் உங்கள் எழுத்துக்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. ///எவ்வளவு மோசமான நிலை ஆக இருந்தாலும் ///

      வீட்ல இருக்கீங்க - அதுவும் வீட்டம்மா பக்கத்துல இருக்கீங்க! இதைப்போய் 'மோசமான சூழ்நிலை'னு சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லீங்க குமாரு! :D

      Delete
    2. அதானே

      இவ்வளோ தெகிரியமா பப்ளிக்குட்டியா ஒத்துகுறாரு 🤷🏻‍♂️

      தப்பாச்சே🤔
      .

      Delete
    3. அவரு தனியாக உள்ளார் விஜய்! உங்களை மாதிரி தைரியமானவங்க இங்கு கிடையாது விஜய் :-)

      Delete
    4. சரியாக சொன்னீர்கள் பரணி.

      Delete
  8. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  9. அன்னைக்கே அண்ணன் சொன்னாரு. நான்தான் கேட்கலை.

    ReplyDelete
    Replies
    1. என சொன்னார் உங்கள் அண்ணன் ? :-)

      Delete
    2. அதைத்தான் கேட்கலை என்று சொன்னேனே அண்ணா.
      அன்னைக்கே கேட்டுருந்தா இன்னைக்கு உங்ககிட்ட சொல்லியிருப்பேன்.

      Delete
    3. ஓ அதுவா! நீங்க இப்ப என்கிட்ட சொன்னதை வேறு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க, அடிச்சி அழுது அடம்பிடித்து கேட்டாலும் சொல்லிடாதீங்க :-)

      Delete
    4. 2நாள் தானே ஆவுது. இன்னும் ஒரு வாரம் போனாக்கா நிறைய டைம் பாஸ் ஆகும் போல...!!!ஹி...ஹி..!!

      Delete
    5. இன்று தான் இரண்டாவது நாள். இன்னும் போக போக நீங்கள் சொன்னது போல செம டைம் பாஸ் ஆகும்

      Delete
  10. ஹைய்யா புதிய பதிவு.........

    ReplyDelete
  11. வந்திட்டேன் சார் 🙏🏼
    .

    ReplyDelete
  12. நான் இஸ்கோலு படிக்கிறப்போ சினிமா பாட்டு பொஸ்தகம் 10 பைசா (எம்ஜியார் பட பாட்டு புஸ்தகம்னா 5 பைசா அதிகம்) குடுத்து வாங்கினா மொத பக்கத்துல படத்தோட கதைய பாதி போட்டுப்புட்டு மீதியை ' வெள்ளித்திரையில் காண்க' அப்டின்னு இருக்கும். (சனிககெழம புக்கு வாங்குனவனோட நெலம). அது மாதிரி பொசுக்குன்னு புள்ளி வெச்சுட்டீங்களே சாமீ..

    ReplyDelete
  13. ஆஹா.. கதை சூடுபிடிக்கும் வேளையில் இப்படி தொங்கலில் விட்டுட்டுப் போய்ட்டீங்களே எடிட்டர் சார்...

    Typing credit: EV

    ReplyDelete
  14. சூப்பரான ஆரம்பம் சார் 🙏🏼

    இந்த பயணக்கட்டூரையை நீங்க இதுக்கு முன்னாடி சொன்னதா நினைவில்லை சார்

    முக்கியமான நேரத்துல தொடரும் போட்டுட்டீங்களே 🤷🏻‍♂️


    ஆவலுடன் வெயிட்டிங்கு சாரே 🙏🏼
    .

    ReplyDelete
  15. விஜயன் சார், பயண கட்டுரை அருமையாக ஆரம்பித்து உள்ளது, நீங்களும் full formமில் இருப்பது அருமையான அனுபவத்தை தருகிறது! தொடருங்கள்.... ஆவலுடன் அடுத்து என்ன என படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!

    வீடு அலுவலம் என்ற வட்டம் மிகவும் சந்தோசமானது, அதுவும் வீடும் ஆபீஸும் அருகில் என்றால் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும்! பெங்களூருக்கு வேலை என்று வந்தபின் எனது குடும்பத்தினருடன் உள்ள தூரம் அதிகரித்தது, நண்பர்கள், மற்றும் குடும்ப நண்பர்கள் தூரமும் அதிகரித்தது; ஊருக்குள் நடக்கும் விசேஷங்களில் கலந்து கொள்வது குறைந்தது! இப்போது அனைவரிடமும் போன் இருந்தாலும் அவர்களிடம் முன்பு போல் உரையாட கூட முடியவில்லை!

    அப்படியே ஏப்ரல் மாதம் வர வேண்டிய பிற கதைகளின் டீசரையும் அவ்வப்போது கண்களில் காண்பித்தால் இன்னும் சூப்பராக இருக்கும்!

    ReplyDelete
  16. குறுகிய பதிவா இருக்கும்னு நினைச்சேன்...பெரிய பதிவாகவே இருக்கிறது..

    படித்து விட்டு வருகிறேன் சார்..:-)

    ReplyDelete
  17. திடுதிப்புன்னு இப்பிடி இடைவேளை விட்டா எப்பிடி சார்...??

    ReplyDelete
    Replies
    1. அதான் பாருங்க ரம்மி...

      அதிகாரியிடம் முறையிடலாமா...!?

      Delete
    2. // திடுதிப்புன்னு இப்பிடி இடைவேளை விட்டா எப்பிடி சார்...?? //
      இடைவெளி விடுவதே எதிர்பார்ப்பை உண்டாக்கத்தானே,அடுத்த பகுதி இன்னும் சுவராஸ்யமாக இருக்கும்.........

      Delete
  18. சிங்கத்தின் சிறு வயதில் அருமை சார்....இந்த அனுபவங்களை தாங்கள் இதுவரை பகிரவில்லை சார்...

    புத்தகத்தில் சி.சி.வயதில் வந்தபொழுது முக்கியமான கட்டத்தில் தொடரும் போடுவது போலவே இங்கேயும் தொடரும் போட்டு அடுத்த பதிவிற்கு ஆவலாய் காக்க வைத்து விட்டிர்கள்..:-)

    ReplyDelete
  19. ஒரேயொரு ஞாயிறு அக்கடாவென்று ஓய்ந்து கிடக்க வாய்ப்புக் கிடைத்தால் - அடடா...சொர்க்கமாய் இருக்காதா ? என்று நினைத்துப் பெருமூச்சு விட்ட நாட்கள் ஏராளம்

    #####


    உண்மை சார்...ஏங்கிய நாட்கள் இப்பொழுது எனக்கும் நடைமுறை ஆவதில் மகிழ்ச்சியே..:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே ஆசிரியர் சொன்னது ஒரு நாள் என்றால் நன்றாக இருக்கும் அதுவே தொடர்கதை ஆனால்.......

      Delete
  20. பற்றாக்குறைக்கு ஏப்ரலில் வரவிருந்த "5 நிமிட வாசிப்பு" புக்கின் ஓவியையோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் அமைய,

    ####

    சார்... அப்ப அது ஏப்ரல் பூல் இல்ரையா சார்...உண்மையான செய்தி தானா...? :-)

    ReplyDelete
    Replies
    1. உண்மையான செய்தி தான் நீங்கள் தான் ஏப்ரல் ஃபுல் என்று நினைத்தீர்கள். ;-)

      Delete
  21. வாரம்இர ண்டு, மூன்று பதிவுகள் எங்களுக்கும் 1985,1986 வசந்தகாலநினைவுகள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  22. வழக்கம் போல நையாண்டி பாணி பதிவு. செம சார்....!! விரைவில் பார்ட் 2 வரட்டும். கதை இன்ட்ரஸ்ட் எடுக்க ஆரம்பித்த சமயம்- வணக்கம் போட்டீங்க!

    ReplyDelete
  23. ரொம்ப மோசம் சார் பரபரவென போய்க்கொண்டிருக்கும் பொழுது டக்குனு தொடரும் போட்டுடீங்களே.
    இதுல வேற அந்த கடைசி லைனை உங்க கதையின் ஒரு நிகழ்வுதான் என படிக்க அப்புறம் தான் புரிந்தது அது தொடரும்னு. :(

    ReplyDelete
  24. ///போட்டிக் கம்பெனியின் flagship hero என்ற கடுப்போடே தான் மாயாவியை நான் பார்த்திடுவதுண்டு ///

    ///! ஸ்பைடர் ; ஆர்ச்சி ; ரிப்போர்ட்டர் ஜானி என்று என்ன தான் நான் கர்ணம் போட்டாலும் - "இரும்புக்கை" என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகவர்கள் முத்து காமிக்ஸுக்குப் படையெடுப்பதுண்டு ! And அங்கே ஆர்டர் செய்து விட்டுத் திரும்பும் போது அடுத்த வாசலான நமது ஆபீசுக்கு வந்து "முத்து காமிக்ஸுக்கு ஆர்டர் குடுக்க வந்தேங்க சார் ; நல்லா இருக்கீங்களா ?" என்று குசலம் விசாரித்துப் போக, எனக்கோ யாரையாவது நடு மூக்கில் அதிகாரியின் ஸ்டைலில் குத்தணும் போலிருக்கும்///

    -- ஓ இதான் விவகாரமா??? தந்தையாரின் கம்பைனி என்றாலும் "இரும்புக்கை"- மீது தங்களது கடுப்ஸ் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது சார்.

    அங்கிட்டு ஆர்டர்; இக்கட விசாரிப்பு மட்டுமே என்றால் கடுப்பாகத்தான் செய்யும்!!!

    ReplyDelete
    Replies
    1. // அங்கிட்டு ஆர்டர்; இக்கட விசாரிப்பு // உண்மை தானே

      Delete
  25. உங்களின் பதிவு எப்போதும்போல உற்ச்சாக டானிக் தான்..

    தற்சமயம் ஸ்பைடர், ரிப்போர்ட்டர் ஜானி, XIII புத்தகங்களுடன் நாட்கள் நல்லவிதமாக நாட்டிற்காக நகர்த்தப்படுகின்றன.

    பதிவுகள் தொடர்ந்து வரட்டும் சாரே..

    ReplyDelete
  26. நேற்றைய மீள் வாசிப்பில் தி டைனமைட் ஸ்பெஷல் வாசித்தேன்,அப்பப்பா என்ன ஒரு அபாரமான சாகஸம் விறுவிறுப்பு குறையாத ஒரு வாசிப்பு.......
    லயன் 250 யில் வந்த முதல் கதையில் ஓவியங்கள் நேர்த்தியாக இருக்கும்,அதை நினைவூட்டும் ஓவிய நேர்த்தி கண்களுக்கு விருந்து......
    சிறையில் இருந்தே வில்லர் வகுக்கும் திட்டங்களும்,அதை செயல் வடிவமாக்கும் கார்சன்,கிட்,டைகரின் செயலாற்றலும்,கிட் வில்லர் மோசமான புதிய செவ்விந்திய ஏஜெண்டை சாதுர்யமாக எதிர்கொள்ளும் உத்தியும் அருமை.....
    கிட் வில்லரின் உத்திகள் பழி வாங்கும் புயலில் டெக்ஸ் பின்பற்றும் உத்திகளை நினைவூட்டியது........
    மீண்டும் இதற்கு இணையான சாகஸங்கள் கிடைத்தால் அதைவிட பாக்கியம் நமக்கு வேறேன்ன வேண்டும்.........

    ReplyDelete
    Replies
    1. டைனமைட் ஸ்பெசல்ங்கிறது அந்த அதிகாரி சொம்பு சொம்பா பாயசம் குடிப்பாரே .. அந்த கதையா???

      Delete
    2. அண்டா அண்டாவா...

      Delete
    3. // டைனமைட் ஸ்பெசல்ங்கிறது அந்த அதிகாரி சொம்பு சொம்பா பாயசம் குடிப்பாரே .. அந்த கதையா??? //
      சில பேர் அண்டா,அண்டாவா பாயசம் குடிக்கும்போது,அதிகாரி சொம்பு,சொம்பா குடிக்கறதில் என்ன வியப்பு ரம்மி...
      பார்ப்போம் அடுத்த ஜனவரியில் வரும் டவுசர் மேன் எத்தனை அண்டா குடிப்பார்னு........

      Delete
    4. அதுவும் கன்னிப் பால்....

      Delete
  27. // "இங்கிருந்தபடிக்கே முடியலியோடா ?" என்று கேட்க, "முடியலியே !!" என்று பஞ்சப்பாட்டொன்றைப் பாடினேன் ! அப்புறமென்ன ..? "சரி..போனவாட்டி போல 22 நாள்லாம் வேணாம் ; போயிட்டு சீக்கிரமா திரும்பிடணும் !" //

    அந்த கால பெரியவர்களின் கரிசனம்.

    // என்றபடி கேட்டைத் திறந்து விட, 'அத்துச்சாம் கழுதை ; எடுத்துச்சாம் ஓட்டம்' //
    :-)

    ReplyDelete
    Replies
    1. // அத்துச்சாம் கழுதை ; எடுத்துச்சாம் ஓட்டம்' // இதை படித்து விட்டு காலையிலேயே விழுந்து விழுந்து சிரித்தேன்.

      Delete
  28. //பஸ்ஸைக் கிஸ்ஸைப் பிடித்து ஊருக்குள் //

    பஸ் கிடைத்ததா அல்லது கிஸ் கிடைத்ததா அல்லது இரண்டுமே கிடைத்ததா சார்?? :-)
    கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் மாதிரி நிறுத்திப்புட்டீங்களே சாரே!! அடுத்த பதிவு அர்ஜென்ட்டா வேணுமாக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. ///பஸ் கிடைத்ததா அல்லது கிஸ் கிடைத்ததா அல்லது இரண்டுமே கிடைத்ததா சார்?? ///

      அப்படிக் கேளுங்க! ரெண்டுமே கிடைச்சிருக்கலாம்தான்.. யார் கண்டது!! நாம் பின்னதைப் பற்றிதான் நிறைய எதிர்பார்போம்.. ஆனால் அவர் முன்னதைப்பற்றி மட்டுமே நிறைய எழுதிவிட்டு பின்னதை 'எடிட்' செய்துவிடுவார்! எடிட்டரோல்லியோ?!!

      Delete
    2. விஜய் குறும்பு :))))))))))

      Delete
  29. // எனக்கு நிதியுதவி ; மதியுதவி என சகலமும் அவரே ; and வீட்டிலிருக்க போரடிக்கும் என்பதால் ரெகுலராய் என்னோடு ஆபீசுக்கு வந்து விடுவது வழக்கம் ! அங்கே பகல் பொழுதில் நான் செம பிசியாக இருக்கும் வேளைகளில் தாத்தா எனக்கெதிரே ஒரு சேரைப் போட்டு அமர்ந்தபடிக்கு நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் ! //

    அது ஒரு அழகிய நிலாக்காலம் சார் உங்களுக்கு!

    ReplyDelete
  30. // என் தந்தைக்கு உலகம் சுற்றுவதென்பது ஜாங்கிரி சாப்பிடுவது போலான விஷயம் ; விட்டால் இன்றைக்குமே எங்கேயேனும் கிளம்பத் தயாராகி விடுவார் ! //

    அட இதுவரை தெரியாத விசயம் சீனியர் எடிட்டர் பற்றிய இது!

    ReplyDelete
  31. // முதலீடு முழுக்கவே அவரது பணம் தானென்றாலும், எதுவானாலும் "என்னைக் கேட்டுக் கொண்டு தான் செலவழிக்கணும்" என்ற ரீதியில் அவர் ஒரு நாளும் முட்டுக்கட்டை போட்டதே கிடையாது ! "சிக்கனமாய் ; சரியாய்ச் செலவிட்டுக் கொள்" என்பதைத் தாண்டி எனக்கு வேறெந்த கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை ! //

    தாத்தா என்றால் இவர்தான்! அந்தக்கால பெரியவர்கள் நம்மை வழி நடத்திய விதம் மிகவும் அருமை!

    I am missing elder people for guiding us and giving moral support :-(

    ReplyDelete
    Replies
    1. ///I am missing elder people for guiding us and giving moral support ///

      உங்க வருத்தம் புரியுது PfB! வீட்டில் பெரியவர்களின் சப்போர்ட் இருப்பதே மிகப்பெரிய பலம் தான்!

      கவலை வேண்டாம்.. இந்தத் தளத்தில் நிறைய பெரியவர்கள் உண்டு.. அவர்கள் நமக்குத் துணையாக இருப்பார்கள்! :D

      Delete
    2. இதோ சில பெரியவர்களின் லிஸ்ட் - உங்கள் பார்வைக்கு :

      சிபி தாத்தா
      அறிவரசு தாத்தா
      ஸ்டாலின் தாத்தா, ஈரோடு
      சரவணன் தாத்தா, கரூர்
      ஷெரீப் தாத்தா, அமெரிக்கா
      தலீவர் தாத்தா, பதுங்குகுழி
      அ..அப்புறம்..
      எ*ட்டர் தாத்தா, சி*காசி

      மற்றும் பலர்! லிஸ்ட்டும் ரொம்பப் 'பெரிசு' என்பதால் இங்கே சில உதாரணங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்!ஹிஹி!! :D

      Delete
    3. என்ன இருந்தாலும் நீங்க மேச்சேரி தாத்தாவை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது ஈ.வி, எல்லாத்துக்கும் சீனியரான நம்ம மேச்சேரி தாத்தாவை முதல் பெயராக சேர்த்தாதால் வீட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டு மேச்சேரி தாத்தா பூவ்....பூவ்.......ன்னு அழுதுகிட்டு இருக்காராம்......

      Delete
    4. செயலர் தாத்தா ,

      பாத்து சூதானமா இருந்துக்கோங்க...:-)

      Delete
    5. திரு. கொள்ளுத்தாத்தா செயலர் அவர்களுக்கு.

      நீங்கள் மற்றும் மேச்சரி கொள்ளுத்தாத்தா வழி நடத்த இருக்கும வரை எங்களை போன்ற சிறு தாத்தாக்களுக்கு கவலையே இல்லை.

      Delete
    6. @ அறிவரசு & ஷெரீப் தாத்தாவ்ஸ்

      ஏங்க.. நானும், மேச்சேரிகாரரும் என்ன முதியோர் இல்லமா வச்சு நடந்திக்கிட்டிருக்கோம்? அவரை ஏங்க வம்புக்கு இழுக்கறீங்க? அவரே பாவம் சிவனேன்னு உட்கார்ந்து பல்செட்டைக் கழட்டி பாலீஸ் போட்டுக்கிட்டிருக்கார்... ச்சும்மா உசுப்பி விட்டுக்கிட்டு!!
      சாது தாத்தா மிரண்டால் காடு தாத்தா கொள்ளாது-ன்றதை புரிஞ்சு நடந்துக்கோங்க!

      Delete
    7. ஒரே தாத்தாஸ் கிளப்பா இருக்கு...! நாம நம்ம செட்டு பேரன்கள் கிளப்புக்கு போவோம்.

      Delete
    8. சாது தாத்தா மிரண்டால் காடு தாத்தா கொள்ளாது-ன்றதை புரிஞ்சு நடந்துக்கோங்க!//

      என்ன பாட ஆரம்பிச்சிருவீங்க. அவ்வளவு தானே. ரெண்டு பேரும் பல்செட்டை நல்லா மாட்டிட்டு பாடுங்க. கேக்கறவங்களுக்கு முழுங்கிட்டு பாடற மாதிரி இருக்கு.

      Delete
  32. உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே இந்த தன்னடக்கம்தான் ஈ.வி.

    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட லிஸ்டில் பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்..ஹிஹி! ;)

      Delete
  33. பற்றாக்குறைக்கு ஏப்ரலில் வரவிருந்த "5 நிமிட வாசிப்பு" புக்கின் ஓவியையோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் அமைய,

    ####

    சார்... அப்ப அது ஏப்ரல் பூல் இல்ரையா சார்...உண்மையான செய்தி தானா...? :-)

    ReplyDelete
  34. சார் இகை வில்சன் என்றதுமே அன்றய இகை மாயாவிய விட கூடுதல் சந்தோசமாய் உணர்ந்ததாய் நினைவு...கதைகளும் சூப்பரே....இரண்டு இரும்புக் கரத்தாரல்லவா...நார்மன் கூட அட்டகாசமே...ஜெஸ்லாங. ,ஸ்கார்பியன், ரேம்போ,பேட்மேன் கராத்தே டாக்டர் என அதிரடி நாயகர்கள் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டத மறக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்டீல். பல அதிரடி நாயகர்கள் தான்.

      Delete
    2. ஸ்கார்பியன் நேமே கவர்ந்திழுக்க , விளம்பரம் பெடலெடுக்க ...ஆசிரியர் தேமேன்னு கை கழுவ ...நெடுகாலங்கள் அந்தக் கனவிலே வாழ்ந்தது பசுமை ...கராத்தே டாக்டரும் ஒரு கதயோட வரல...ரேம்போ கோடை மலர்ல பொசுங்க...ஆசிரியர தொடர்பு கொள்ளத் தெரியாததால தப்பிச்சார்....இரும்புக் கை மாயாவிக்கு வில்சன போல....ஸ்பைடருக்கு இணையா என குதித்துத் தாவிக் கொண்டு ஒருவர் வந்தார் நினைவிருக்கா

      Delete
  35. இன்றைய ஸ்பெஷல்..

    நடமாடும் நரகம்..

    இப்பொழுது எல்லாம் பழைய கதைகளை படித்தால் கூட புது கதைகளை புதிதாக படிப்பது போலவே தோற்றம் தருவது எதனாலோ என தெரியவில்லை..

    தன் நண்பரை காப்பாற்ற டெக்ஸ் ,கார்ஸன் விரைந்து வரும் ஆரம்ப சூழலே அந்த நண்பரின் மரணத்தில் ஆரம்பிக்க அதற்கு காரணமான லிட்டில் உல்பை தேடி அவர்கள் விரைய ,நகரில் இருந்து கிளம்பும் கோச்சில் முன்னாள் கேப்டன் ,வெகுமதி வேட்டையன் ,வயதான டைலர் ,கொலை செய்து அப்பொழுது தான் தப்பி ஓட முயற்சிக்கும் கொலைகார கணவான் என கோச்சில் பயணிக்க ,சில ஆபத்துகளில் இருந்து தப்பித்த டெக்ஸ் ,அன்ட் கார்ஸனும் அதே கோச்சில் பயணிக்க ,அவர்கள் தேடும் லிட்டில் உல்ப் அந்த கோச்சையே தாக்குதல் தொடுக்க பின்தொடர அப்ப்ப்பா நாமும் கோச்சு வண்டியிலேயே திடுக் ,திடுக் என பயணிக்க வேண்டி இருந்தது.. சித்திரங்களும் பழைய டெக்ஸை நினைவுபடுத்த ஒண்ணரை மணி நேரம் போனதே தெரியவில்லை..கடைசி சில பக்கங்கள் டுமீல் ,டுமீல் எனவே காணப்பட்டாலும் விறுவிறுப்பாகவே காணப்பட்டது..இப்பொழுது படிக்கும் பொழுது தான் ஒன்று நினைவிற்கு வருகிறது..இதுவரை வந்த கதைகளில் இந்த கதையில் தான் வில்லன் டெக்ஸ் இடம் சாகவும் இல்லை ,சிக்கவும் இல்லை..

    நடமாடும் நரகம் ...இனிமையாகவே கழிந்த்து ..:-)

    ReplyDelete
    Replies
    1. //இப்பொழுது எல்லாம் பழைய கதைகளை படித்தால் கூட புது கதைகளை புதிதாக படிப்பது போலவே தோற்றம் தருவது எதனாலோ என தெரியவில்லை//எப்பவும் அப்டிதான

      Delete
  36. எடிட்டர் சார் அப்படியே மின்னல் வேகத்தில் மொழி பெயர்ப்பு பணியும் சென்று கொண்டு இருக்கிறது போல? 3 ஆம் பாகம் வந்து விட்டீர்கள். இப்படியே போனால் ஏப்ரல் முடிவதற்குள் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா தயார் ஆகிவிடும் போல?

    ReplyDelete
  37. எனக்கொரு டவுட்டு. 2019ல் அறிவித்த 'பிரளயம்' கிராபிக் நாவல் வெளிவந்ததா?

    ReplyDelete
    Replies
    1. வரவில்லை சார். அதற்கு பதில் தான் barracuda இரண்டாம் பாகம் வந்தது. அந்த நாவல் இந்த வருடம் வரப்போகிறது

      Delete
  38. தோர்கல் கோடை மலர் 5 பாகங்கள் ஒரே புத்தகமாக hard boundஆ அல்லது பாக்ஸ் செட்டா சார். இந்த வருடத்தில் நான் மிகவும் எதிர் பார்க்கும் இதழ்களில் இது முதன்மையானது.

    ReplyDelete
  39. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ஆர்வத்துடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  40. எடிட்டர் சார் full form ல இருக்கார்.

    ReplyDelete
  41. சார் அந்த பழய விளம்பரத் தோரணங்களோட புதிய பதிவு களை கட்டட்டும் ...விரைந்து வருக ....ஆதரவு தருக

    ReplyDelete
  42. சில வாரங்களுக்கு முன்னர்,

    ---காமிக்ஸ் வாசகர்களுடனான முதல் சந்திப்பு...

    ---எடிட்டர் சாரை முதலில் சந்தித்த தருணம்...

    ---முதல் புத்தகத் திருவிழா அனுபவம்...என்று நண்பர்கள் பகிர்ந்து கலக்கிக் கொண்டிருந்தனர்..!


    *அப்போது டெக்ஸ் லிஸ்ட் ரெடி பண்ண டெக்ஸ் கதைகளோடு கட்டி புரண்டதால் முடியவில்லை..! இப்ப கொஞ்சம் டைம் இருக்கு சொல்ல...!!!

    *இந்த காமிக்ஸ் உலகம் வலையால் கட்டுண்ட பிறகு நடந்த நிகழ்வுகளில், மறக்க இயலா நினைவுகள் பல உள்ளன. நண்பர்களுடன் உற்சாகமாக செலவிட்ட நிமிடங்கள் நினைவில் நீங்கா காலப்பொக்கிசங்கள்.

    *என்னுடைய மறக்க இயலாத நினைவுகள் பல இருந்தாலும், அவற்றுள் முதல் அனுபவம்????? ஆங், ஞாபகம் வந்துட்டது.

    *1990களின் பிற்பகுதியில் இருந்து பழைய புத்தக கடையில் அறிமுகமான சிலபல நண்பர்களுடனான தொடர்பு 2000வரை தொடர்ந்தது! லயன் காமிக்ஸ் புக்மார்கெட் பகுதி பல பேனா நட்புகளை பெற்றுத் தந்து இருந்தது. அந்த நட்புகளும் நாளடைவில் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது. புத்தக வரத்து குறைந்த பின்னர் நட்புகளும் ஒருவித சலிப்பு&சோர்வு நிலைக்கு போச்சுது.

    *2012 கம்பேக்கிற்கு பிறகு நேரில் காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பது தொடக்கம் பெறாத காலம் அது. லயன் வலைத்தளத்தில் உலாவந்த சிலரை எல்லோருக்கும் போல வெறும் பெயர்களாக மட்டுமே எனக்கும் தெரியும்.

    *கம்பேக் ஸ்பெசல், சர்ப்ரைஸ் ஸ்பெசல், டபுள் த்ரில் ஸ்பெசல்... என ரெகுலர் புத்தகங்களே சிறப்பு மலர்களாக வெளியாகி சக்கபோடு போட்டு வந்தன. ஒரு மாசத்துக்கே ஒரு புத்தகம் தான் எனும் போது விமர்சனங்கள் வரிசை கட்டின. மாசம் பூரா நிறை,குறை என வெச்சி செஞ்சு வந்தாங்க.

    *அப்பத்தான் 2012 சம்மர் இறுதியில் ஒரு நாள்.....

    (தொடரும்) ---ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்,வீட்டில் தான்!

    ReplyDelete
    Replies
    1. // ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்,வீட்டில் தான்! //

      ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்,வீட்டில் தான்!

      Delete
    2. ஆமா
      டீ குடிச்சா கொரானோ எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாமே...

      உண்மையா....

      Delete

    3. *"பெங்களூரு காமிக்கான் செப்டம்பர் 8-9, 2012--அனைவரும் வாரீர்; ஆதரவு தாரீர். உங்களை வரவேற்பது:உங்கள் எடிட்டர் விஜயன்" ---- என்ற அறிவிப்பு தான் அது!

      *டெக்ஸ் கதைக்கு அடுத்து ஹாட்லைன் தான் ரொம்ப பிடிச்ச பகுதி. "எடிட்டர் S.விஜயன்" என ரொம்ப நாளாகவே பார்த்து பார்த்து பரிச்சயம் ஆன பெயர்; இவரது வசனங்கள் வாயிலாக ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருந்தார். தொலைவு காரணமாக சிவகாசி போய் நேரில் சந்திக்க எண்ணியது கிடையாது என்றுமே. "அட பெங்களூரு பக்கம் தானே போய் பார்ப்போம்" என்ற எண்ணத்தை ஸ்பார்க் பண்ணிச்சு இந்த அறிவிப்பு!

      *பெங்களூரா நாங்களும் வருவோம்னு வீட்டில் தொற்றி கொண்டார்கள். "விஜயன் சாரை பார்க்க போறம்மா, காமிக்ஸ் விழா"- என சொல்லி கழட்டி விடபார்த்தும் பாச்சா பலிக்கல.

      (எப்பாடு பட்டாவது கழட்டி விடாம போனதற்கு என்னை நானே நொந்து கொண்டேன். காரணம் நம்ம இரத்தப்படலம் பழனிவேல் அங்கே எடுத்து கொண்ட போட்டோக்கள். ஒவ்வொன்றும் சும்மா "கின்"! பிற்பாடு போட்டோ பார்த்துட்டு போச்சே போச்சேனு புலம்பத்தான் முடிஞ்சது.)

      *காமிக்ஸ் வாங்கப் போறம்னு தெரிஞ்சதும் என் தங்கை பையன் அவுங்க தெரு நண்பனோட அப்பாவுக்கு சில காமிக்ஸ் வாங்க வேணும் என இணைந்து கொண்டான். (பிறகு அவரோட அறிமுகம் கிடைத்து, பழைய ரசிகர் என தெரிந்து கொண்டேன். 2013 முதல் இன்றளவும் லயன்-முத்து சந்தாவில் லஷ்மன பெருமாள் எனும் அவர் தொடர்கிறார். என்றாவது ஈரோடு விழாவிற்கு அழைத்து வர்றேன்)

      *பெங்களூரு போக ட்ரெயின் தேர்ந்தெடுத்தேன். எங்கயோ ஹீலாலிகேவுல இறங்கி, சேர் ஆட்டோ பிடித்து மெயின் ரோடுவந்து, டவுன்பஸ்ஏறி பெங்களூரு ஊருக்குள் வந்து, செயின் ஜான்ஸ்ல இறங்கி, மறுபடியும் ஆட்டோ பிடிச்சா விழா நடக்கும் ஸ்டேடியம் போய் விடலாம்னு தகவல்களை திரட்டியாச்சுது.

      *சேலம் டூ பெங்களூரு ட்ரெயின் அதிகாலை 5மணிக்கு போல. போய் சேர 10மணி ஆகிடும். பிறகு அந்த லோக்கல் ட்ராவலிங் இன்னும் நேரம் எடுக்கும், பொடியனை வெச்சிகிட்டு டிபனுக்கு எங்கே தேடுவதுனு ரோசனை. நானுமே பசி தாங்க மாட்டேன்... ஹி.. ஹி...!! பைனலி ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்வது தான், கட்டுச்சோறு!

      *சோறெல்லாம் எம்பையன் காலைல சாப்பிட மாட்டான்னு தங்கை சொல்ல, ஒரு வழியாக பூரி+ உருளைகிழங்கு குருமானு முடிவாச்! சரி, மொத மொத எடிட்டர் சாரை பார்க்க போறோம்; வெறுங்கையாகவா போறதுனு என் சிற்றறிவுக்கு ஏற்ப ஒரு சின்ன கிஃப்ட் வாங்கினேன். என்ன அதுவென பின்னர் சொல்றேன்!

      *2012,செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 3மணிக்கு எழுந்து டிபன் கட்டிகிட்டு போய் சேலம் ஜங்சன்ல யஷ்வந்த்பூர் ட்ரெயின் ஏறி ஆச்சி. ட்ரெயின் விசிலை விட சத்தமாக என் மனசுக்குள் விசில் அடித்தது. டெக்ஸை நமக்கு தந்தவரை பார்க்க போறோம்னா சும்மாவா!!!

      *ஓசூரில் அரை மணி நேரம் கட்டய
      போட்டு விட்டது ட்ரெயின்! எத்தனை ஆரவாரம் அங்கே! கூடை வியாபாரிகளிடம் இட்லி சாப்பிடும் மக்கள் ஒரு பக்கம், வேகவைத்த குச்சி கிழங்கோடு ஒரு கூட்டம், அவித்த கடலை விற்கும் பாட்டிம்மாவிடம் ஒரு 10பேர்...என கலவையான காலை! நாங்களும் பூரியை சாப்பிட்டுவிட்டு, சில ஸ்நாக்ஸ் வாங்கிட்டோம்.

      *மேலே சொன்னவாறு எல்லா வகை பிரயாணத்தையும் முடித்து அந்த ஸ்டேடியம் சென்று சேர்ந்தோம். இங்கே அதுமாதிரி எந்த விழாவும் நடக்கலயே என குண்டை தூக்கிப் போட்டான் செக்யூரிடி! திகைத்து போய் பேஸ்து அடிச்சிடுச்சி எனக்கு...!!!
      (தொடருது...)

      Delete
    4. *செக்யூரிட்டியின் பதில் தூக்கிவாரிப்போட்டதை அடுத்த ஓரிரு நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு, ஸ்டேடியம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்ல விசாரித்தேன். விசயம் விளங்கிட்டது. பெங்களூருல கோரமங்களா என்ற பெயரில் 2 ஸ்டேடியங்கள் இருக்கும் போல. ஒன்று பெரிய அவுட்டோர்; மற்றது சிறிதான இன்டோர். காமிக்கான் நடப்பது இன்டோர்ல; நாம இருப்பது அவுட்டோர்ல என ஒருவழியாகப் புரிய போன உசுரு திரும்பிச்சு!

      *மொத ஆட்டோ ட்ரைவர் எங்கே காமிக்கான் நடக்குதுனு தெரியாமல் எங்களை பெரிய ஸ்டேடியம் அழைத்து சென்று விட்டார். மறுபடியும் வேறொரு ஆட்டோ. இம்முறை சரியான இடம். தூரத்திலயே "வெல்கம் டூ காமிக்கான்2012" போர்டுகள் வரவேற்றது. மீண்டும் என் மனசில ஒலித்த விசில் ஓசூர் வரை கேட்டு இருக்கும்.

      *டிக்கெட் வாங்கிட்டு லைன்ல நிக்கவும், கையில் டேக் அடித்து விட்ட மினி கோட் யுவதியை பார்த்ததும் இது வேற லெவல் விழா என புரிந்து போனது. 11மணிக்கு தான் உள்ளே அனுமதி தந்தாங்க! 20நிமிட காத்திருப்பு 20நொடியில் பறந்தது.

      *பேட்மிட்டன் உள்ளறங்கில் தடுப்பை வைத்து விழா ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.

      *எடிட்டர் சாரை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டே ஒவ்வொரு ஸ்டால் ஆக போனோம். முத்து காமிக்ஸ் என இருந்த நமது ஸ்டால் கண்ணில் பட்டது. பில்லிங் டேபிளில் இருந்த பெரியவரிடம் (அவர் தான் திரு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என பின்னர் தெரிந்து கொண்டேன்) எடிட்டர் சார் எங்கே என கேட்டேன். பக்கத்தில் இருந்த குழுவை கை காட்டினார்.

      *வாங்க சார், வாங்க என எடிட்டர் சார் முன்னே வந்து கையை நீட்டினார். 22வருடங்களாக அவரது எழுத்துக்கள் வாயிலாக உள்வாங்கி இருந்த பிம்பத்தை நிஜமாக பார்த்தபோது நா உலற , உள்ளம் பதற சற்றே தடுமாறிப்போனேன். உள்ளத்தின் உதறலை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு கை கூப்பினேன். சட்டுனு கைகளை பிடித்து குழுக்கினார். அவரை பார்க்க என்றே வந்துள்ளதாக சொன்னபோது லேசாக ஆச்சர்யம் காட்டிதாக பட்டது. சேலம் டூ பெங்களூரு பக்கம், வருவது எளிது என அவரே சொன்னார்.

      *"டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன் சார் நான்" என தட்டு தடுமாறி சொல்லியே விட்டேன். "கம்பேக் ஆகி இன்னும் டெக்ஸ் வர்ல; இப்ப வருவது சந்தோசம் சார்"-- என அம்மாத இதழ் வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல இருந்த டெக்ஸ் வருகிறது விளம்பரம் பற்றி சொன்னேன். "நிறைய டெக்ஸ் இனமே வருது சார் "--என பதில் தெரிவித்தார்.

      Delete
    5. *அருகில் சில ரசிகர்கள் இருந்திருப்பார்கள் போல. சாரோடு போட்டோ எடுத்துக்கொண்டேன். என் பையன் பொடியனை, எடிட்டர் சார் அவரோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போஸ் தந்தது பெரு மகிழ்ச்சியை தந்தது.

      *எடிட்டர் சாருக்கு என வாங்கி இருந்த கிஃப்ட்டை என் மனைவி ஞாபகப்படுத்தினாள். சில மாதங்களில் வர இருக்கும் முத்து நெவர் ஸ்பெசல் வெற்றிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள் தெரிவித்தேன்.

      ####என்னுடைய வருகை& சிறு சந்திப்பை பற்றி தளத்தில் எடிட்டர் சாரின் விவரிப்பு...., ..

      .////மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?////.....

      ####நான் அதிகம் முறை படிச்சது மேற்கண்ட வரிகளை தான். பின்னர் வந்த சூ.ஹீ.சூ.ஸ்பெசல்ல பிரிண்டிங்ல அந்த பதிவுல இருந்த இந்த வரிகள்& போட்டோக்களை அடுத்த ஓரிரு மாதங்கள் எங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரிடமும் காண்பித்தேன்!

      *சொற்ப நேரமே என்றாலும் நிறைவான சந்திப்பு. வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல சாரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு புறப்பட்டேன். மற்ற ஸ்டால்களை லேசாக நோட்டம் விட்டோம். ஒவ்வொரு ஹீரோவை போல வேடமணிந்த இளம் யுவதிகள் பட்டாம் பூச்சிகளை போல சுற்றித் திரிந்தனர். டோரோ, இன்னொரு பொம்மை உடன் என் மகன் போட்டோ எடுத்து கொண்டான். ஆனா....சரி வேணாம், சொல்லி என்ன ஆகப்போவுது.

      *மீண்டும் டவுன் பஸ் ஏறி கெம்பேகெளடா பஸ்நிலையம் வந்ததோ, அங்கிருந்த எண்ணிலடங்கா பேருந்துகளோ, நகரின் பிரமாண்டங்களோ, வெளியே இருந்த ஓரு ஓட்டலுல்ல சாப்பிட்ட பிரியாணியோ, யஷ்வந்த்பூரின் விஸ்தாரங்களோ எதுவும் மனிதில் நிற்கல. எடிட்டர் சாருடனான சொற்ப நேர சந்திப்பை மட்டுமே மனம் அசை போட்டது மறுபடி மறுபடி......!

      Delete
    6. *சுவீட் பாக்ஸில் இருந்த இனிப்பை அங்கே குழுமி இருந்த நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தந்து மகிழ்ந்தார் எடிட்டர் சார். சாரின் எளிமையாக பழகும் விதம் கண்டு எல்லா நண்பர்களும் மலைத்து போனோம்.

      ---சேலம் டெக்ஸ். (பொறுமையாக படித்த நண்பர்களுக்கு நன்றிகள்!)

      Delete
    7. ஆனால் பாருங்க நீங்க (விஜய், விஜயராகவன், தலைவர்) எல்லாரும் எங்க வீட்டுக்கு வராமல் தப்பி விட்டீங்க! :-)

      Delete
    8. செயலர், காரைக்கால் பிரசன்னா, மைசூர் சூப்பர் விஜய், ஷல்லூம், ஸ்ரீராம் லஷ்மன்...இன்னும் சில நண்பர்கள் வந்து இருந்தாங்க போல. எல்லோருக்கும் அழைப்பு எனில் அடுத்த காமிக்கான் நடந்தா வந்துடுறோம். இம்முறை உறுதியாக சிங்கிள் தான்.

      Delete
  43. டியர் எடி, சிங்கத்தின் சிறுவயதில் படித்த ஃபீலிங்... தொடருங்கள்.

    ReplyDelete
  44. சிவகாசி பதிவு தான் தொடரும் போடுதுன்னா சேலம் கமெண்டும் தொடரும் போடுதே.

    ReplyDelete
    Replies
    1. டிவி, போனு 2லும் தான் நேரம் ஓடுது. போனில் டைப் அடிக்க கை வலிக்குது. சட்டுனு போட்டுறலாம் பத்து சார்.

      Delete
    2. அட இதற்கு எதற்கு சாரி... தளம் கொஞ்சமாச்சும் உயிர்ப்பாக இருக்க உங்களை மாதிரி நகைச்சுவை உணர்வு உள்ளவர்களே காரணம் சார். சிரிக்க வைங்க காத்து இருக்கோம். மேலே கம்ப்ளீட் பண்ணிட்டேன்! பார்த்துட்டு சொல்லுங்க!

      Delete
  45. இரத்தக் கோட்டை

    எப்போதெல்லாம் மறுவாசிப்புனு எடுத்தாலும் இது படிக்காம வேறய தொடவே முடியறதில்ல!

    எந்தனை முறை படித்தாலும் சலிக்காத கதையிது!

    ReplyDelete
    Replies
    1. தங்கத் தலைவன் என்றால் சும்மா வா

      Delete
    2. கேப்டன் டைகர் மாஜிக்!

      Delete
  46. கோடை மலராக தோர்கல் வருவது ஆவலை ஏற்படுத்துகிறது.

    காமிக்ஸ் பற்றி நிறைய எழுத தோன்றுகிறது. ஆனால் தட்டச்சு செய்வது ஒருவித சோர்வை தருகிறது.

    தளத்தில் பலரும் பெரிய பதிவாக பின்னூட்டம் இடுவது அவர்களுடைய காமிக்ஸ் ஆர்வத்தை உணர்த்துகிறது.
    இந்த பதிவில் சேலம் டெக்ஸ் விஜயராகவன் தம்முடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
    " மின்னும் மரணம் ", " பிஸ்டலுக்கு பிரியாவிடை" மீள்வாசிப்பில் நிறைவடைந்துள்ளது.

    நிஜங்களின் நிசப்தம்,பி.பி.விடை நாவல்களில் சில பகுதிகளை விரிவாக பதிவிடும் எண்ணம் உள்ளது.
    அதை இங்கு " டைப்புவதில்" உள்ள
    சோர்வு பல நேரங்களில் பின்வாங்க செய்கிறது.

    அடுத்ததாக இரத்தப் படலம் முதல் தொகுதியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.தொய்வில்லாமல் மிகச் சிறந்த திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ள ""வான்ஹாம் ""நாவல்.லார்கோ தொடரில் "ஆதலால் அதகளம் செய்வீர்" நாவலும் ஆகச் சிறந்த திரைக்கதைக்கு உதாரணமான படைப்பு.
    வான்ஹம் ஓர் படைப்புலகின் இணையில்லா பல்கலைக்கழகம்.

    சில நாவல்கள்,மீள்வாசிப்புக்காக சில காமிக்ஸ்,ஒரு சில திரைப்படங்கள் என நேரம் நகர்ந்து விடும்.



    ReplyDelete
    Replies
    1. செம்ம ஸ்ரீ. // அதை இங்கு " டைப்புவதில்" உள்ள
      சோர்வு பல நேரங்களில் பின்வாங்க செய்கிறது. // நானும் பல முறை இதனால் பின்வாங்கி இருக்கிறேன்.

      Delete
    2. .///
      காமிக்ஸ் பற்றி நிறைய எழுத தோன்றுகிறது// ட்ரை பண்ணுங்க. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுங்க. சோர்வு போகும்.

      Delete
  47. தலைகீழா நின்னாலும் உங்கள மாதிரி முடியாது.ஏன்னா, ஸ்டீலாச்சே.

    ReplyDelete
  48. தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
    தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
    தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
    ஏ.....
    தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
    ஏ.....
    எதுக்கு புது புக்கு என்ன சுத்தி படியாபுக்கு
    எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

    கொரனாவுல போகயில ஆவாரம் பாளய ஓடையில
    கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
    இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

    எதுக்கு புதுபுக்கு என்ன சுத்தி படியா
    எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

    கொரனாவுல போகையில ஆவாரபாளை ஓடையில
    கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
    இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

    அண்ணாச்சி புக்கு கடயினில
    ஆயிரபுக்கு தொங்கையில இரும்பு மனிதன கண்டு லயன புடிச்சேன்

    ஸ்பைடர் தத கெடைக்கையில வலயிலதா தான் தொங்கயில
    கத புக்க வாங்கி லயன புடிச்சன்

    ஹை ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில
    சுத்தி வந்து டெக்சு
    கதய படிச்சன்

    திருச்செந்தூரு போகையில மதுரயில எறங்கயில
    சதிவலய கண்டு லயன படிச்சன்

    ஹே தொட்டுத் தொட்டுத் தாள் புரட்ட தூக்கம் வரக் கத படிக்க
    நித்தம் ஒரு காமிக்ஸ்
    வேணும் எனக்கு

    மாதத்துக்கு முப்பதே நாளு வந்ததுவோ ரெண்டே புக்கு
    நெறய புக்கு கொரையுதய்யா கணக்கு

    எதுக்கு புதுபுக்கு என்ன சுத்தி பழயபுக்கு
    எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

    கொரனால போகையில ஆவாரம்பாளய ஓடையில
    கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
    பாடபுக்கு கத ருசியா படபுக்கு கத ருசியா
    பஞ்சாயத்த கூட்டு நண்பா கேப்போம்

    ஸ்பைடர் பய கத அழகா சட்டித் தலயன் கத அழகா
    விவகாரம் பேசி முடி வெடுப்போம்

    டெக்சு வில்லர் கத ருசியா டவுசர் பய கத ருசியா
    பதிவப் போட்டு பேசி பேசி முடிப்போம்

    லார்கோக்கான கத இனிப்பா வேய்னுக்கான கத இனிப்பா
    சிவகாசி அணாச்சி முடி வெடுப்போம்

    கையில புது ஸ்பைடர் இல்ல இனி வாழ்க்கையே தொல்லபுள்ள

    வாழ்க்கையில குண்டு ஸ்பைடர் கேட்டு ஜெய்ப்போம்

    டெக்சுடவுசர் சண்ட இல்ல வேணா மின்னும் வம்பு இல்லே
    இப்படியே எல்லா நாளும் இருப்போம்

    எதுக்குபுதுபுக்கு என்ன சுத்தி படியாபுக்கு
    எக்கச்சக்க மாகி
    போச்சே கணக்கு

    கொரனால போகையில ஆவாரம்பாளய ஓடையில
    கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
    இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

    எதுக்கு புதுபுக்கு என்ன சுத்தி பழயபுக்கு
    எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

    பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
    கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
    இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் நாட்கள் கூட கூட இது போல நிறைய கவிதைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். இன்று பதிவு கிழமை அல்லவா? கதையின் தொடர்ச்சி?

      Delete
    2. நான் ஒரு வாரம் லீவு :-)

      Delete
    3. good decision. ஆனா ஏற்கெனவே நீங்க லீவுல தானே இருக்கீங்க.கொரொனா உபயத்துல.

      Delete
    4. Work from home. Only Saturday and Sunday leave from office work பத்மநாபன்.

      Delete
    5. ஏலே என்ன பாப்பம். :-)

      Delete
    6. ஸ்டீல் ஒரு தடவை எழுதியதை அவரே கூட படிக்க மாட்டார் :-) ஏன்னா அவருக்கே படிக்க முடியாதாம் :-)

      Delete
    7. @ ஸ்டீல்..!

      நேக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

      அதென்ன பாட்டு படிக்கிறப்ப ( பாடுறப்ப )மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரவே மாட்டேங்குது.

      :-)

      Delete
    8. அது பாட்டுங்களா? ஏதோ இம்போசிஷன் வீட்ல எழுத சொல்லியிருக்காங்கன்னு நெனச்சேன்.

      Delete
  49. என்ன ஒரு திறமை..அடடா..

    ReplyDelete
  50. நாலுநாள்தான ஆகியிருக்கு.அதுக்குள்ளேயேவா?

    ReplyDelete
  51. எனக்கு ஒரு டவுட்டு. Never Before Special புக் இன்று வெளியில் எடுத்தேன்.அதில் 2013 ஜனவரி புக் ஃபேர் ஸ்பெஷல். முத்துகாமிக்ஸ் 40 வது ஆண்டு மலர் என்று போட்டிருந்தது. அப்படியானால் இந்த வருடம் ஜனவரியில் வந்த டியுராங்கோவின் ஆறாது சினம்.முத்துவின் 47வது ஆண்டு மலர்தானே. ஆனால் 48வது ஆண்டு மலர் என்றிருந்தது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் பற்றி போன வருடம் (மே மாதம்னு நினைக்கிறேன்) விரிவான சந்தேகம் கேட்டு எடிட்டர் சார் விளக்கம் தந்து இருந்தார். அந்த பதிவில் இருந்து எனக்கு நினைவில் இருப்பது, முத்து காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது-சனவரி1972. 2012ல் 40ம் ஆண்டு; 40ஆம் ஆண்டு மலர் அறிவிப்பு செய்யபட்டது 2012 நடுவே. ரூ400 என்பதால் புக்கிக்+ தயாரிப்பு என சனவரி 2013ல் ரிலீஸ் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு மலர் வர்ல. பிறகு ஆண்டுமலர் 2017ல் மறுபடியும் ரிலீஸ் ஆனபோது 45ஆம் ஆண்டு மலர் என சரியாக போடப்பட்டது. (பார்க்க டியூராங்கோ-முதல் புக் சத்தமின்றி யுத்தம் செய் பக்கம் 195)!

      2018-46வது ஆண்டுமலர்-கடவுளரின் தேசம்

      2019-47ஆவது ஆண்டுமலர்-சிகரங்களின் சாம்ராட்!.

      2020-48வது ஆண்டுமலர்-ஆறாது சினம்.

      2022ல் வரும் 50வது ஆண்டில் பெரிய செலிபரேசன்கு நண்பர்கள் ப்ளானிங் பண்ணுவாங்க! கொண்டாடுவோம்.

      Delete
  52. நல்ல ஐடியா. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பார்க்க பக்கம்195 னு குறிப்பிட்ட காரணம் முத்து காமிக்ஸ் பற்றி நண்பர்களோடு நானும் எழுதிய கட்டுரை இடம் பெற்று இருக்கும்! எல்லாம் ஒரு விளம்பரம் தான்!ஹி...ஹி..!

      Delete
  53. பதிவுக் கிழமை..
    தூங்கும் வேளை..
    ப்ளாக்ல நோட்டம் விட்டேன்..
    பொம்மை புக் எடிட்டர்..
    பதிவை எண்ணி..
    ஆர்வத்தில் காத்திருந்தேன்.. ஓ..ஓ.ஓ..
    ஆர்வத்தில் காத்திருந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி!! அதுவுந்தே!! ;)

      Delete
    2. இத பாருடா... இந்த பக்கம் பதிவ போடுற மாதிரி போட்டுவிட்டு அந்த பக்கம் போய் me first என போடுறவங்ளே இப்படி பேசினா :-) என்ன கொடுமை சார் இது :+)

      Delete
    3. @PfB

      ஓஹோ!! இருங்க.. ஸ்டீல்ட்ட சொல்லி ஒரு முழுநீள கமெண்ட் போடவச்சு அதை நீங்க மொழிபெயர்க்க ஏற்பாடு பண்றேன்.. அப்பத்தான் சரிப்படுவீங்க! கிர்ர்ர்...

      Delete
    4. ஸ்டீல் காத்து ஈரோட்டுல அடிக்குது.

      Delete
    5. // லீவு வுட்டாச்சேஈவி //

      நண்பேன்டா :-)

      Delete
  54. எதையுமே சுருக்கமாய்ச் சொல்வதென்பது நமக்குத் தெரியாத விஷயமாச்சே ; டைப்படித்தால் நீண்டு கொண்டே போகுது !! நிச்சயமாய் லேட்டாகும் போலத் தெரிவதால், நாளைக் காலை 9 க்கு சாவகாசமாய் எட்டிப் பாருங்களேன் guys ? அத்தினி பேருமே வெட்டி ஆபீஸர்ஸ் தானே - கொஞ்ச காலத்துக்காவது ?

    See you tomorrow !

    ReplyDelete
    Replies
    1. ஓகே சார்! 9 மணிக்குள் சட்டுபுட்டுனு வீட்டு வேலை, சமையல் - எல்லாத்தையும் முடிச்சுட்டு ரெடியாகிடறோம்!!

      Delete
    2. great insult. நாங்கள்ளாம் வீட்லே வேலை செய்யுறோமாக்கும். (work at home). சந்தேகம்னா எங்க வீட்டுக்காரவுங்கள கேட்டுப் பாருங்க.

      Delete
    3. உப்புமாவ கண்டுபுடிச்சவன தூக்கி போடுங்க.

      Delete
    4. // great insult. நாங்கள்ளாம் வீட்லே வேலை செய்யுறோமாக்கும். (work at home). சந்தேகம்னா எங்க வீட்டுக்காரவுங்கள கேட்டுப் பாருங்க. //

      அதானே. Great insults :-)

      Delete
    5. அதுக்கு தான் நான் வீட்டுக்கு ரவையே வாங்கி கொடுப்பது இல்லை:-) எப்புடி :-)

      Delete
  55. பத்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றீர்களா நண்பர்களே?

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. /// பத்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றீர்களா நண்பர்களே? ///
    உப்புமாவுக்கு முன்பு வரை.

    ReplyDelete
  58. ஞாயிறு காலை வணக்கம் கா கா...

    ReplyDelete
  59. உப்புமா தொண்டையில சிக்கிடுச்சோ.

    ReplyDelete
  60. ஒரு வேளை....அங்கேயும்.... உப்..
    சேச்சே..இருக்காது.
    நல்லதே நடக்கும்..
    நம்புவோம். அது தானே வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. இப்பிடிப்போட்டாலாவது பதிவு சீக்கிரம் வராதான்னுதேன்.

      Delete
  61. நான்கு நாட்களைக் கடந்து ஐந்தாவது நாள் ..

    ReplyDelete