நண்பர்களே,
வணக்கம். நவம்பர் 13 ! சாமத்தை நெருங்கவிருந்ததொரு வேளை ! வீடே அமைதியாக இருளில் குளித்துக் கிடக்க - ஒரு மூலையில் இருக்கும் என் மேஜையில் மட்டும் வெளிச்சம் ! அதை விடவும் செம பிரகாசம் இரு ஆந்தை விழிகளில் !! சினிமாக்களில் போல 'ஜிங்'கென்று மேஜை மீது குதித்து ஏறி...லைட்டாக ஒரு டான்சைப் போடும் ஆசை எழுகிறது ; ஆனாக்கா 'இந்த வயசில் பிரபு தேவா வேலையைப் பார்த்துப்புட்டு அப்பாலிக்கா காரைக்கால் அம்மையாராய் வலம் வர நேரிட்டால் பரால்லியா ?' என்று மண்டை கேட்க - ஓசையின்றி நாற்காலியில் இன்னும் அழுத்தமாய் ஒட்டிக் கொண்டேன் ! அந்த மெல்லிருளிலும் முகத்தில் ஒரு நீண்ட புன்னகை குந்தியிருப்பது மட்டும் புரிய, அந்தத் தருணத்தைக் கொண்டாட ஏதாச்சும் சாப்பிட உள்ளதாவென்று பிரிட்ஜை உருட்டினால் அடுத்த நாள் சமையலுக்கான கேரட்டும், தக்காளியும் தான் கண்ணில் படுகின்றன ! அந்த நொடியில் கேரட் கூட மந்திரியாருக்கு கலீபா பதவியாய்க் காட்சியளிக்க - வாய்க்குள் திணித்தபடிக்கே மறுபடியும் மேஜையில் போய் அமர்ந்தேன் ! இத்தனை ரகளை எதுக்கோ ? என்று கேட்கிறீர்களா ? வேறொன்றுமில்லை guys - முழுசாய் 12 மாதங்களுக்கானதொரு திட்டமிடலை ஆண்டவன் கருணையில் பூர்த்தி செய்த சந்தோஷத்தின் வெளிப்பாடே அது ! டிசம்பரின் 3 ரெகுலர் இதழ்கள் ப்ளஸ் ஜம்போவின் ஒன்றை நிறைவு செய்வதோடு 2019-ன் ஒட்டுமொத்த பணிகளுக்கும் "சுப மங்களம்" போட்டிட முடியுமல்லவா ? நவம்பர் 13-ன் பின்னிரவில் ஜேம்ஸ் பாண்டின் மொழியாக்கத்தை நிறைவு செய்த நொடியே அந்த 'சுப மங்கள' நொடி !! என்பதால் தான் கேரட்டோடு கொண்டாட்டம் !!
என்னதான் இதுவொரு தொடர் ஓட்டம் என்றாலும் ; என்னதான் அடுத்த நாளே ஜனவரியின் வேலைகளுக்குள் வழுக்கைத் தலையை நுழைக்க வேண்டி வருமென்பது புரிந்தாலும், - "ஹை...இந்த வருஷத்துக் கோட்டா ஓவர்டோய் !!" என்ற புரிதல் புலர்ந்த நொடியின் ஏகாந்தம் அத்தனை ரம்யமாக இருந்தது ! கடந்த ஏழோ-எட்டோ ஆண்டுகளாய்ச் செய்து வரும் பணியே என்றாலும் இந்தாண்டு சற்றே வித்தியாசம் - என்னளவிலாவது ! ஆண்டின் கணிசமான பகுதியினை ஆரோக்கியத்தில் குறைபாடுகள் + பொதுவான 50+ வயதினர்களின் சிக்கல்கள் என்ற பயணத் தோழர்களோடு நகற்றிட வேண்டிப் போனதால், அதன் மத்தியில் நம் பயணத்தையும் தொய்வின்றிச் செய்ய முடிந்தது நிச்சயமாய்ப் பெரும் தேவன் மனிடோவின் உபயமே என்றுபட்டது ! அது மாத்திரமின்றி சமீப வருடங்களிலேயே 'hits - சொதப்பல்ஸ்' ratio ரொம்பவே சாதகமாய் அமைந்ததொரு ஆண்டு இந்த 2019 என்ற புரிதலுமே எனது கேரட் பார்டிக்கொரு காரணம் என்பேன் ! டிசம்பரின் இதழ்களையும் உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடு "The Year in Review" என்று அலசிடுவதே பொருத்தமாயிருக்கும் என்றாலும், இந்த நொடியில் ஓடும் சிந்தனைகளை லைட்டாய் ஒரு டப்பிக்குள் அடைக்க முற்படுவதே இந்தப் பதிவு ! But first things first ! காத்திருக்கும் டிசம்பரின் இதழ்களுக்கான previews கொஞ்சமாய் :
பொதுவாகவே அட்டவணையினைத் தயார் செய்யும் போது அத்தனை கதைகளுமே சூப்பர்-டூப்பர் ஹிட்களாகவே எனக்குத் தென்படுவது வழக்கம் ! மேலோட்டமான வாசிப்பு ; இன்டர்நெட் அலசல்கள் ; பக்கங்களைப் புரட்டிப் பராக்குப் பார்த்தல் என்று ஏதேதோ ரூபங்களில் எனது தேர்வுகளின் பின்னணிகள் அமைந்திடுவதுண்டு ! ஆனாலும் ஒரு சில கதைகள் அந்த ஒட்டு மொத்த அணிவகுப்பிலுமே என் கவனத்தை ஈர்ப்பது மட்டுமில்லாமல் - 'ஹையோடா....இதில் பணியாற்றும் வாய்ப்பு சீக்கிரமே அமைந்தால் தேவலாமே !' என்றும் தோன்றச் செய்வதுண்டு ! இந்த எடிட்டர் குல்லாயை மாட்டிக் கொள்வதில் சில பல வசதிகள் உண்டு !! பனிக்காலத்தில் காதுகள் குளிராது ; ஒருகாலத்தில் கேசம் குடியிருந்த இன்றைய பொட்டல்காட்டை மறைத்துக் கொள்ளலாம் ; அப்படியே எந்தக் கதைகளை மொழிபெயர்ப்புக்கென கையில் தக்க வைத்துக் கொள்ளலாம் ?- எவற்றைத் தள்ளி விட்டிடலாம் ? என்ற தீர்மானங்களையும் தன்னிச்சையாய்ச் செய்து கொள்ள முடியும் ! அட்டவணை உருவாகும் போதே ஒரு parallel பட்டியல் போட்டிருப்பேன் - எவற்றையெல்லாம் நன் எழுதுவதென்று !! அந்த வரிசையில் கிராபிக் நாவல்கள் & கார்ட்டூன்ஸ் & டெக்ஸ் சமீப ஆண்டுகளில் பிரதான இடம் பிடிப்பது வாடிக்கை !
2017-ல் லயன் கிராபிக் நாவல் வெளியானது முதலாய் அவற்றில் இதுவரையிலுமான ஒவ்வொரு ஆல்பமும் வித விதமாய் சவால்களை முன்வைக்கத் தவறியதில்லை ! அவற்றை நான் கையாண்ட விதம் நன்றாய் அமைந்திருந்ததோ ; சுமாராய் அமைந்திருந்ததோ - அங்கே எனக்குக் கிட்டிய அனுபவப்பாடங்கள் ஏராளம் ! அதிலும் சற்றே இருண்ட ரக கிராபிக் நாவல்கள் என்றாலே உள்ளுக்குள் குஷியாகிப் போகும் - ஆங்காங்கே ஸ்கோர் செய்ய லட்டு போல வாய்ப்புகளை ஒரிஜினல் ஸ்கிரிப்ட் தவறாது வழங்கிடுமே என்ற எதிர்பார்ப்பில் ! அந்த எதிர்பார்ப்பு போனெல்லியின் black & white கி.நா.க்களில் இன்னமும் ஜாஸ்தியாவதுண்டு - அவற்றின் செம diverse கதைக்களங்களின் காரணத்தினால் ! So 2019-ன் அட்டவணையில் 3 போனெல்லி கி.நா.க்களை அறிவித்த போதே அவை சார்ந்த எதிர்பார்ப்பு எனக்குள் ! "முடிவிலா மூடுபனி" செம ஹிட் ; "நித்திரை மறந்த நியூயார்க்" ஹிட்டுமல்ல ; சொதப்பலுமல்ல என்ற நிலையில் இறுதி இதழான "கதை சொல்லும் கானகம்" எவ்விதமிருக்குமோ என்ற குடைச்சல் தலைக்குள் இருந்தது ! So டிசம்பர் பணிகளுக்குள் புகுந்திடும் வேளை வந்த போதே எனது முதல் தேர்வு "க.சொ.கா." வாகத் தானிருந்தது ! கடந்த 4 ஆண்டுகளாய் ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளின் பலனாய் native italian speakers தான் நமது இத்தாலிய மொழிபெயர்ப்பைச் செய்து வருகின்றனர் ! So ஒரிஜினல் ஸ்கிரிப்ட் எவ்வித நுணுக்கங்களோடு உள்ளதோ - அதைத் துளிப் பிசகுமின்றி இங்கிலீஷில் போட்டுத் தாக்கி அனுப்பி விடுவார்கள் ! அதிலும் ஒரு கல்லூரியில் பணியாற்றும் இளம் பெண்ணின் மொழிபெயர்ப்புகள் சும்மா எகிறி அடிக்கும் ! கி,நா.க்கள் ; ஜூலியா ; போன்ற tough கதைகளை கையாள்வது அவரே ! So அவரிடமிருந்த வந்த ஸ்கிரிப்ட் என்றால் - ஒரு பக்கம் ஒரிஜினல் சித்திரங்கள் ; இன்னொரு பக்கம் அவரது ஆங்கில கத்தை ; மூன்றாவது பக்கம் கூகுள் ஆண்டவரைத் தேடிடும் கம்பியூட்டர் என்றில்லாது தமிழாக்கத்தைச் செய்திடவே வாய்ப்புகள் லேது! அத்தனையையும் வைத்துக் கொண்டே நிறைய இடங்களில் விழி பிதுங்கிடுவதுண்டு - சரியான context-ல் அர்த்தம் செய்து கொள்வதற்கு ! இம்முறையும் no different !
ஒரு மாதிரியாய் தீபாவளி விடுமுறைகள் பூர்த்தியான பிற்பாடே இந்தக் கதையை எடுத்துக் கொண்டு மெது மெதுவாய் வேலைகளை ஆரம்பித்தேன் ! வழக்கம் போலவே கதை ஆரம்பித்த எட்டாவதோ ; ஒன்பதாவதோ பக்கத்திலேயே ஒரு திடும் அதிரடி தலை காட்ட - 'அட !' என்றபடிக்கே இன்னும் ஈடுபாட்டோடு எழுத ஆரம்பித்தேன் ! ஒரு க்ரைம் த்ரில்லர் போலவே கதையின் ஓட்டமும் இருந்ததால் தொய்வின்றிப் பணியாற்ற முடிந்தது ! 'இது நம்ம தலீவர் கூட ஊதிடும் ரகத்திலான க்ரைம் கதை மாதிரியிருக்கே - இதில் என்ன கி.நா element இருக்குமோ ? என்றபடிக்கே எழுதிக் கொண்டு போனால் ஒரு மெல்லிய பரபரப்பு பக்கத்துக்குப் பக்கம் தொற்றிக் கொண்டே செல்வதை உணர முடிந்தது ! As always ஒரு சிறு நகரம் ; அங்கொரு குற்றம் ; அது சார்ந்த தேடல் என்ற template தான் இங்கேயும் என்றாலுமே ஒரு இனம் புரியா ஈர்ப்பு இல்லாதில்லை ! ! நடு நடுவே பிளாஷ்பேக்கில் ஏதேதோ சொல்லப்பட - அங்கெல்லாம் திரு திருவென நான் முழிக்கும் படலம் துவக்கம் கண்டது ! எப்போதுமே, ஆங்கிலமல்லாத வேற்று மொழிக் கதைகளில் பணியாற்றும் போது நான் முழுக்கதையையும் ஆரம்பத்திலேயே படிப்பதெல்லாம் கிடையாது ! 'படிக்கப் படிக்க எழுதிக்கலாம் ; எழுத எழுதப் படிச்சுக்கலாம் !' என்பதே சோம்பேறித்தனத்தின் பிரதிபலிப்பாய் இருந்திடுவதுண்டு ! ஆனால் முதன்முறையாக 60 பக்கங்களை எட்டிப் பிடித்த தருணத்தில் - கதையின் முழுமையையும் புரிந்து கொள்ளும் வேகம் என்னை ஆட்டிப்படைக்க - பேனாவைத் தூக்கி ஓரமாய் வைத்து விட்டு கதையை வேக வேகமாய்ப் படிக்க ஆரம்பித்தேன் ! பின்னே போகப் போகத் தான் அந்த பிளாஷ்பேக் sequences களில் கதாசிரியர் சொல்ல முனைவது என்னவென்று புரியத் துவங்கியது ! தடுமாற்றமான அந்த இடங்களில் எல்லாம் நான் குத்து மதிப்பாய் எதையோ எழுதியிருந்ததை நினைத்து சிரிப்பாய் வர - அவசரமாய் அந்த இடங்களைத் திருத்தினேன் ! தொடர்ந்த ஒன்றரை நாட்களில் மொழிபெயர்ப்பின் மீதத்தையும் முடித்திருந்த போது, ஒரு வீரியமான க்ரைம் சப்ஜெக்டை மாமூலான பாணியில் அல்லாது செம வித்தியாசமாய் கதாசிரியை சொல்லியிருப்பது புரிந்தது ! க்ளைமாக்சில் தெறிக்கும் குருதிப் புனலின் மத்தியில் வில்லனை இனம்காண்பது அத்தனை சிரமாக இருக்கவில்லை என்றாலும் - அந்தக் கடைசிப் 10 பக்கங்களில் தட தடக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸின் சீற்றத்தையும், வேகத்தையும் பார்த்திட முடிந்தது ! 112 பக்கங்களை முடித்து விட்டு "முற்றும்" என்று போட்டுவிட்டுக் கையைத் தட்டும் நொடியினில் உள்ளுக்குள் லேசாய்க் கனத்திருந்தது இதயம் ! இதழின் முதற்பக்கத்திலும், இறுதிப் பக்கத்திலும், இது சார்ந்து நான் தந்துள்ள சில 'ரமணா' புள்ளிவிபரங்கள் கதையைப் படித்து முடிக்கும் அந்த நொடியில் ரொம்பவே relevant ஆகத் தோன்றிடும் என்பேன் !
இது பற்றி பணி முடித்த 2 வாரங்களுக்கு முன்பே அந்த ஞாயிறுக்கு எழுதிடத் தோன்றியது தான் ! ஆனால் எமோஷனல் ஏகாம்பரமாகி சூட்டோடு சூடாய்ப் பெரும் பில்டப் கோபுரங்களை கட்டி விட்டு, அப்பாலிக்கா உங்களிடம் நயமான LED பல்புகள் வாங்க லைட்டாய்க் கூசுவதால் இரு வாரங்கள் உள்ளுக்குள் விஷயத்தை ஆறப்போட்டேன் ! 15 நாட்களுக்குப் பின்னேயும் இந்தக் கதை பற்றி எனக்கு அதே வேகத்துடனான ஈர்ப்பு தொடர்ந்திட்டால் அப்புறம் எழுதலாமென்று நினைத்தேன் ! இதோ - இன்றைக்கு இந்த இதழின் அச்சு + பைண்டிங்கும் முடிந்து, கையில் புக்காக நிற்கிறது & எனக்குள் அதே வேகமும் தொடர்கிறது ! So நாம் பார்க்காத முட்டுச் சந்தா ? நாம் வாங்காத சீரியல் செட் பல்புகளா ? என்ற நம்பிக்கையோடு இது பற்றி எழுதுகிறேன் ! Of course - விடுமுறை தினத்து டாஸ்மாக் ஆர்வலரைப் போல எனது ரசனை மீட்டர்கள் கொஞ்சம் இப்டிக்கா-அப்டிக்கா டான்ஸ் ஆடிடலாம் தான் ; ஆனால் கதை சொல்லும் விதத்தினில் ஒரு சராசரியான கதையையும் வித்தியாசமாய் மிளிரச் செய்வது சாத்தியமே என்று இங்கே நான் புரிந்துள்ளது நிஜம் ! இன்னும் 2 வாரங்களில் இதை படிக்கும் போது என்னுள் துளிர் விட்ட ஈர்ப்புகள் உங்களுக்கும் தோன்றுதா ? அல்லது என் முதுகில் மத்தளம் வாசிக்கும் வேகத்தைக் கொணர்கிறதா ? என்பதைக் கண்டுபிடித்திட ஆர்வத்தோடு வெய்ட் செய்துலு ! கலர் அல்லாத அந்த black & white சித்திர பாணி தான் இதுபோன்ற darkish த்ரில்லர்களுக்கு உகந்தது என்பதுமே நிரூபணமாகியுள்ளதாய் நினைத்தேன் ! இதோ பாருங்களேன் அட்டைப்பட முதற்பார்வை & உட்பக்க previews !
Moving on, டிசம்பரின் எனது அடுத்த பணிகள் இருந்தது ஜம்போவின் ஜேம்ஸ் பாண்ட் ஆல்பத்தினில் ! ஜேம்ஸ் பாண்ட் 2.0 என்று சொல்லும் விதமாய், ஹாலிவுட் திரைப்பட ஆக்ஷனுக்குத் துளியும் சளைக்கா பாணியில் இந்தக் கதைவரிசை அமைந்திருப்பதை போன ஆண்டே பார்த்திருந்தோம் ! இதோ தொடரின் கதை # 3 - "சுறா வேட்டை" ! "கதை சொல்லும் கானகம்" பணிகளை முடித்த கையோடு இந்த ஆல்பத்தினுள் புகுந்தால் - அந்த கூகுள் தேடலுக்கான கம்பியூட்டர் இங்கும் ரொம்பவே அவசியமாகியது ! சின்னச் சின்னத் தகவல்களைக் கூட ஒரிஜினல் கதாசிரியரான இயன் பிளெமிங்கின் கற்பனைகளோடு அட்சர சுத்தமாய் sync ஆக்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதி தற்போதைய கதாசிரியர்களுக்கு இருப்பதால் - இந்த மொழிபெயர்ப்பினை ரொம்பவே சிரத்தையோடு கையாள வேண்டிப் போனது ! கிராபிக் நாவல்களை எழுதுவது தான் கஷ்டம் ; ஜேம்ஸ் பாண்ட் போன்ற நேர்கோட்டுக் கதைகளைக் கையாள்வது not so tough என்று வெளிப்பார்வைக்குத் தோன்றிடலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவல்ல ! ஜேம்ஸ் பாண்டின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் அத்தனை ஷார்ப் எனும் போது அதற்கு நியாயம் செய்திட ஏகப்பட்ட குட்டிக்கரணங்கள் அவசியமாகிடுகின்றன ! இயன்றதைச் செய்து அந்த நவம்பர் 13-ன் ராப்பொழுதில் பணிகளை நிறைவு செய்த போது - ரொம்பவே நிறைவாக இருந்தது ! இதோ JB-ன் அட்டைப்பட & உட்பக்க முதற்பார்வைகள் :
முதலிரண்டு ஆல்பங்களில் ஆக்ஷன் sequences களில் மௌனமே மொழியாக இருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் இப்போதோ அவர்களிடமே மனமாற்றம் ! 'பிளாம்..பிளாம்.....கிராஷ்....பூம்ம்ம்" என்று ஆங்காங்கே அவர்களே தெறிக்க விட்டுள்ளனர் ! So நாமும் அவர்களது வாலைப் பின்பற்றி கதைக்கு sound effects தந்துள்ளோம் ! திகிடு முகுடான ஆக்ஷன் ; வெனிசுவேலா ; துபாய் ; யெமென் ; ஸ்காட்லாந்து என்று பயணிக்கும் கதை ; மாமூலான 007 அதிரடிகள் என்று டாப் கியரிலேயே சுற்றி வரும் இந்த ஆல்பம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வாவாய் சுவைக்கும் என்பது உறுதி !!
Before I sign out - இந்தக் கடைசிப் 12 மாதங்களின் பணிகளிடையே நினைவில் நின்ற சில விஷயங்களை பற்றி லேசாய் ஒரு கோடிட்டு விட்டுக் கிளம்புகிறேனே !! கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முன்பாய் தோர்கலின் "சிகரங்களின் சாம்ராட்" வெளியாகி நம்மையெல்லாம் மெர்சலாக்கிய வேளை எனது 2019 -ன் ஆதர்ஷ நினைவுகளுள் உச்சமானது ! அது சார்ந்த அலசல்கள் ; ஆளாளுக்கு முன்வைத்த அபிப்பிராயங்கள் என இங்கு நம் தளமும் அப்பொழுதில் அதிர்ந்ததை மறக்கத் தான் முடியுமா ?
Next in line - அந்த விகாரக் கடல்கொள்ளையர்கள் சாகஸமான பராகுடா என்பேன் ! பௌன்சர் எனும் மைல்கல்லைத் தாண்டிய பொழுதே நாம் நிறைய maturity-ஐ அரவணைக்கத் தயாராகிவிட்டது புரிந்தது ! இருந்தாலும் இந்த பராகுடா தொடரானது நாம் இது நாள் வரையிலும் முயற்சித்துள்ள பாணிகளிலிருந்து ரொம்பவே விலகி நின்றதொரு ஆக்கம் ! 2 தனித்தனி ஆல்பங்களாய் வெளிவந்துமே நம்மிடையே அதிர்வலைகளை உருவாக்கிய இந்த தொடர் சந்தேகமின்றி இந்தாண்டின் highlight !
பிரித்து மேய்ந்த இன்னொரு ஆல்பம் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை !" நல்ல கதையிருந்தால் போதும் - அதிரடியான நாயகர்களெல்லாம் அவசியமில்லை ; அழகான கதை நகற்றல் இருந்தால் போதும் - கார்ட்டூன் பாணிச் சித்திரங்களே அதகளம் செய்து விடும் " என்று ஆணியடித்ததுபோல நீங்கள் நிலைநாட்டிட முனைந்த அந்த அழகான ஆகஸ்ட் மாதம் ரொம்ப காலத்துக்கு நினைவில் நிற்கும் ! "உள்ளூர் உளுந்தவடையில் துவாரம் ஏனுள்ளது ? என்ற ரீதியில் யோசிக்க வேண்டிய நேரத்தில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் ஷரத்துக்களை ஆராய முற்பட்ட ஆல்பத்தையும் கொண்டாட எங்களுக்கு சாத்தியப்படும் !" என்று நீங்கள் செய்த statement cannot be anymore emphatic !! மறக்கவியலா தருணம் !
அதே போல ஓசையின்றி ஜுனியர் எடிட்டரின் முனைப்பில் உருவான MAXI லயனின் 2 இதழ்களுமே ஈட்டியுள்ள வெற்றிகள் செம 'ஜிலோ' நொடிகள் ! மறுபதிப்புகளே என்றாலும் அந்த சைஸ் ; அந்த பாணி ; அந்தத் தரம் ஏற்படுத்திய தாக்கம் இந்தாண்டின் சந்தோஷப் புள்ளிகளில் இன்னொன்று !
இன்னமுமே நிறைய moments உள்ளன - நினைவில் நிற்கும் விதமாய் ! ஆனால் டிசம்பரின் இதழ்களையும் உங்களிடம் ஒப்படைத்த பிற்பாடு இன்னும் கொஞ்சம் விரிவாய்ப் பேசலாமே என்ற நினைப்பில் இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! பொதுவாய் இந்த 2019 பற்றிய உங்களது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்ப் பகிர்ந்திட்டால், இந்த மழைக்கால ஞாயிறை சற்றே சுவாரஸ்யமாக்கிட முடியலாம் ! Wanna give it a try folks ?
மீண்டும் சந்திப்போம் ! Happy sunday all ...bye for now !
First
ReplyDeleteNobody came.so 2nd also Iam.
ReplyDeleteSecond
ReplyDeleteநைட் ஷிப்ட் உபயத்தில் 'முதல்வர்', முதல்வர் ஆனார்.
ReplyDeleteவாவ்...10 க்குள்..அனைவருக்கும் அதிகாலை வணக்கம் 🙏🙏🙏💐💐💐
ReplyDeleteவெயிட்டிங் ஃபார் ஜேம்ஸ்பாண்ட். கதை சொல்லும் கானகத்தின் கதை பற்றி நீங்கள் சொல்லிய விதம் Super.
ReplyDeleteஅக்டோபரில் நவம்பர்.
ReplyDeleteநவம்பரில் டிசம்பர்(சந்தேகமின்றி) ..
அப்போ டிசம்பரில்???????
டிசம்பரில் ஜனவரி...தான்.
Deleteno doubt
டிசம்பரில் கிறிஸ்துமஸ் தான்
Deleteஅட்டைகள் இரண்டிலுமே நபர்களின் முகம் இல்லையே ...தற்செயலாக அமைந்ததோ....
ReplyDeleteஇரண்டுமே ஒரிஜினல்கள் ! தற்செயலான ஒற்றுமை !
Deleteகதை சொல்லும் கானகம் அட்டையும் சரி உட்பக்க previews சரி எவரையும் கடைகளில் வாங்க வைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. .(நண்பர்களே கதைகளை படித்து விட்டு கொஞ்சம் பாஸிட்டிவ் அதிகமாக சொல்ல முயற்சிங்களேன்.நன்றி) ..
ReplyDeleteஆசிரியரிடம் ஒரு வேண்டுக்கோள் 2020 அட்டவணை பற்றி. ...தல கதையில் 2 கதை all time classic என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்...அதை எப்படியாவது கலரிலே கொண்டு வர வேண்டும். ..முடியுமா..ப்ளீஸ்
ReplyDelete+ 007
Deleteஒரிஜினலாய் இத்தாலியில் அவர்கள் ரசித்த அதே கருப்பு-வெள்ளையில் நாமும் ரசிப்போம் நண்பரே ! அப்புறமாய் என்றேனும் மறுபதிப்பில் வண்ணத்தில் ரசிக்கலாம் - அவர்களை போலவே !
Deleteவண்ணத்தில் ரசிக்கலாம் என்று சொன்னதே...காதில் தேன் வந்து பாய்ந்தது ...நன்றி🙏🙏
Deleteகாமிக்ஸ் காதலர்களுக்கு இரவு வணக்கங்கள்...
ReplyDeleteநாம் அடித்த சிக்ஸர்கள் ஒன்றா இரண்டா,பல ஆசானே ஆசான்.
ReplyDeleteசிகரங்களின் சாம்ராட், பராகுடா ,பி பி வி ,
Maxi lion, தீபாவளி மலர் ,ட்யூராங்கோ ,பாலைவனத்தில் ஒரு கப்பல், சாலையெல்லாம் ஜூவாலைகளே இன்னும் நிறைய உண்டு ஆசானே...!!.
பந்தைப் போட்டது நானாக இருக்கலாம் நண்பரே ; ஆனால் அதை சிக்சருக்கு அனுப்பிய புண்ணியமெல்லாம் உங்களது அல்லவா ?
Deleteபராகுடா படித்துவிட்டு இரண்டு மூன்று மாதங்கள் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததை மறக்க முடியுமா?
ReplyDeleteஆயிரம் பின்னூட்டங்களிட்டு சாதனைப் படைத்தோமே, அதை எல்லாம் மறக்கத் தான் மறக்க முடியுமா?
ReplyDeleteமுடியுமா முடியுமா முடியுமா............
Deleteமுடியாது முடியாது
Deleteஉங்களின் அந்த ஆயிரம் பின்னூட்ட இரவின் பின்னே என்னிடமும் ஒரு மறக்கவியலா அனுபவம் உள்ளது ! ஒரு தூரத்து நாளில் அது பற்றி..!
Deleteகாத்திருக்கிறோம் சார்..:-)
Deleteவழக்கம்போல் பின்னூட்டம் 300 ஐ தாண்டினால் தூரத்து நாள் பதிவு கிட்டத்தில் வந்துவிடாதா என்ன?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHai Friends!
ReplyDeleteசிகரங்களின் சாம்ராட் / பாரகுடா / பிஸ்டலின் பிரியாவிடை.
ReplyDeleteஅருமையான கதைகள்தான்!
மூன்றுமே இந்தாண்டின் TOP இடத்துக்குப் போட்டி போடும் ஆற்றல் கொண்டவையே சார் !
Delete22
ReplyDeleteஒரு வழியாக நானும் வந்து விட்டேன்.
ReplyDeleteஅருமையான அழகான பதிவு சார். இந்த வருடத்தின் பணிகள் நல்லபடியாக முடிந்ததை எண்ணி நீங்கள் விடும் பெரு மூச்சு இங்கே கேட்கிறது.
ReplyDeleteHi vijayan sir🙋♀️🙏
ReplyDeleteSuperb post
Have a lovely Sunday 😊
Many thanks !
Deleteஇந்த டிசம்பர் இதழ் களுக்கு வெயிட்டிங். அடுத்த மாத இதழ்கள் இப்போதே நாவில் நீர் ஊற செய்கிறது. இன்னும் டெக்ஸ் and Ringo previews தரவில்லையே. அடுத்த வாரம் வரும் என்று நினைக்கிறேன்..
ReplyDeleteGood morning editor sir and my dear friends.Happy Sunday🤗😁😄
ReplyDeleteEdi sir sixth slot for jumbo🤔🤔🧐🧐🧐🧐🤫🤫🤫🤫🤐🤐🤐🤐🤐🤐
ReplyDeleteஸ்லாட் பூர்த்தியாயிட்டு சார் !
DeleteCartoon தானே சார்
Deleteகார்ட்டூன் தான் :-)
Deleteஇந்த வருடம் நமது லயன் வரலாற்றில் சிறந்த வருடங்களில் ஒன்று. மிக சில தோல்விகள். நிறைய ஹிட் கள். டாப் புத்தகங்கள் இவையே
ReplyDelete1. பாரகுடா
2. சிகரங்களின் சாம்ராட்
3. சிங்கத்தின் சிறு வயதில்
4. உத்தம புத்திரன்
5. பி பி வி
6.. டுரங்கோ
7. டிரெண்ட்
8. வஞ்சம் மறப்பதில்லை
9. இன்னும் பல
"இன்னும் பல" என்று புக் போட்டோமா - என்ன சார் ?
Delete:-)
எடிட்டர் சார் குசும்பு
Deleteஅந்த இன்னும் பல
Deleteநித்தம் ஒரு யுத்தம்
தீபாவளி மலர்
2 maxi lion
பரலோகத்திற்கு ஒரு படகு
இது போல சொல்லிக்கொண்டே போகலாம்
Hi..
ReplyDeleteHello
DeleteFor me it's working just fine sir.
ReplyDelete2019 வெற்றிகரமான வருடமே.
ReplyDeleteடிசம்பரையும் அலசிய பின்னே இதே கருத்து நிலவட்டும் சார் ; உங்களுக்கோர் ரவுண்ட் பன் எக்ஸ்டரா !!
DeleteThis comment has been removed by the author.
Deleteபார்சலில் வரும் பன்னை "ரவுண்ட்" பன் என சொல்லாமல் "பன் எக்ஸ்ட்ரா என சொல்லுங்கள்"-)
Deleteரவுண்டா இருந்தது அப்பிடின்னு நெனச்சிக்கலாம்
DeleteI'm first!
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் சார்🙏🏼
ReplyDeleteமற்றும் நண்பர்களே 🙏🏼
.
வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே..🙏🙏🙏
ReplyDeleteஇனிய வணக்கங்கள் நண்பரே...:-)
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவீட்டுக்கு உள்ளேயா வெளியேயா ஐயா?
Deleteஇந்த காலத்திலுமா?
Deleteக.சொ.கா அட்டைப்படத்தில் உள்ள பச்சை வண்ணம் அந்த படத்திற்கு மேலும் வலுசேர்த்து உள்ளது. அதேபோல் கதையின் டீசர் பக்கங்களின் ஓவியம் அருமையான பென்சில் ஸ்கெட்ச். ஆவலுடன் ஓவியங்களை ரசித்து கதையை படிக்க உள்ளேன்.
ReplyDeleteஎனது குழந்தைகள் ட்ராயிங் கிளாஸ் போகிறார்கள், ஆரம்ப லெவலில் உள்ளார்கள், இது போன்று பென்சில் ஸ்கெட்ச் பார்த்தார்கள் என்றால் அந்த ஸ்டைலில் அவர்களுக்கு பிடித்த படங்களை வரைகிறார்கள்.
Delete//இது போன்று பென்சில் ஸ்கெட்ச் பார்த்தார்கள் என்றால் அந்த ஸ்டைலில் அவர்களுக்கு பிடித்த படங்களை வரைகிறார்கள்//
DeleteSuper !!
Wow Today's Dinakaran Vasantham page 4 our Deepavali malar was appreciated
ReplyDeleteசூப்பர் ஜி
Deleteவாவ்..வாழ்த்துகள் ..:-)
Deleteநண்பர் திருப்பூர் ப்ளூபெர்ரி இப்போது தான் அந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார் ! அழகாய் எழுதியுள்ளனர் !! நம் நன்றிகள் தினகரன் ஆசிரியர் குழுவிற்கு !
Deleteஅருமை... வாழ்த்துகள் நன்றிகள்
Deleteமகிழ்ச்சி☺
Deleteகொலை கொலையா முந்தரிக்கா
ReplyDeleteதீடிரென ஏற்பட்டு ஒர் இரவில் முடிந்த நட்பு ஒரு பெண்ணுக்கு எப்படிபட்ட பாதிப்பை கொடுக்கிறது, இந்த பின்னணியில் ஒரு அழகான க்ரைம் அதனை டிடெக்டிவ் ராபின் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்கள்.
தொடர்ந்து கொலைகாரர்கள் அடுத்து அடுத்து கொலை செய்கிறார்கள், ஒரு ரகசிய குறிப்பை கண்டுபிடிப்பதற்காக; ஆனால் அதில் என்ன உள்ளது என்று இறுதி சில பக்கங்களில் கோர்வையாக சொன்னது அருமை.
அறியாமல் நட்பு கொள்வதால் ஏற்படும் நட்பின் விளைவை சொல்ல இதனை விட சிறந்த கதை இல்லை எனலாம்.
ராபின் - தொடரட்டும் இது போன்ற கதை களங்களில்.
+1
Deleteஅனைவருக்கம் காமிக்ஸ் காலை வணக்கங்கள் ☺☺☺
ReplyDeleteஇனிய வணக்கங்கள் தோழமையே...:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவிஜயன் சார், கேரட் கொண்டாட்டம் அருமை. அதுவும் மிட் நைட்டில் ஒரு ஆரோக்கியமான உணவை கொண்டு கொண்டாடியது நன்று.
Deleteஆசிரியருக்கு ஊட்டி கேரட் ஒரு பை பார்சல்.:-)
கி.நா'க்களில் பணியாற்றிட நீங்கள் காட்டும் உற்சாகம் எங்களுக்கும் குதூகலமளிக்கிறது எடிட்டர் சார்!
ReplyDelete'கதை சொல்லும் கானகம்' அட்டைப்படம் - ச்சும்மா மிரட்டல் ரகம்! லைட்டா பார்க்கும்போதே திகிலூட்டுகிறது!
007 அட்டைப்படமும் அட்டகாசம்!! சமீபத்திய அட்டைப்படங்கள் எல்லாமே 'வேற லெவல்'லில் அமைந்து அமர்க்களப்படுத்துகிறது!!
அப்புறம் இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து நமது கேரட்மீசைக்காரரைப் பற்றிய பதிவென்று நினைத்தேன்! சமீபத்திய 'விடுமுறையில் கொல்' கதையில் இந்த மீசைக்காரரின் முகபாவங்களை அத்தனை சீக்கிரம் மறந்துவிடமுடியாது என்பதே காரணம்! மனுசன் ஒவ்வொருமுறையும் அந்த பத்திரிக்கைப் பாட்டீம்மாவிடம் பல்பு வாங்கிக்கொண்டு அசடுவழிய நிற்கும் அழகே தனீ தான்!!
ஐ லவ் கேரட் மீசைக்காரர்!!
// இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து நமது கேரட்மீசைக்காரரைப் பற்றிய பதிவென்று நினைத்தேன் //
Deleteநானும் அப்படித்தான் நினைத்தேன் விஜய்.
நானும்
Deleteராத்திரி ஒன்றே முக்காலுக்குப் பதிவின் தலைப்பின் பொருட்டு தலையை ரொம்பவெல்லாம் உருட்ட சாத்தியப்படவில்லை சார் ! சோ தோன்றிய முதல் பெயரே தலைப்பாகிப் போனது !
Delete:-)
Deleteகிராபிக் நாவலின் அட்டைப்படமும் சரி ..007 ன் அட்டைப்படமும் சரி ..செம கலக்கலாக அமைந்துள்ளது சார்..பாராட்டுகள்...
ReplyDelete54tg
ReplyDeleteமுதலிரண்டு ஆல்பங்களில் ஆக்ஷன் sequences களில் மௌனமே மொழியாக இருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் இப்போதோ அவர்களிடமே மனமாற்றம் ! 'பிளாம்..பிளாம்.....கிராஷ்....பூம்ம்ம்" என்று ஆங்காங்கே அவர்களே தெறிக்க விட்டுள்ளனர் ! So நாமும் அவர்களது வாலைப் பின்பற்றி கதைக்கு sound effects தந்துள்ளோம்
ReplyDelete#####
எந்த இடத்தில் " மெளனம் " பேச வேண்டுமோ அங்கே தான் "மெளனம் " பேச வேண்டும் என்பதை அவர்களும் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி..:-)
ஆனாலும் உங்க தீர்க்கதரிசனம் அல்லாருக்கும் அத்தினி சீக்கிரம் வருமா தலீவரே ?
Deleteபராகுடா ,பிபிவி போன்றவை மட்டுமா சார்..ஒவ்வொரு மாதமும் ஏதாவது இரண்டு இதழ்களோ ,மூன்று இதழ்களோ ஏன் பல மாதங்கள் அனைத்தும் இதழ்களும் கூட எங்களை பல விதங்களில் புறச்சூழலை புறம் தள்ள வைத்து விட்டு எவ்வளவு மகிழ்ச்சியை விதைத்து கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொண்டே தான் வருகிறோம் ..அது இந்த வருடம் மட்டுமல்ல எவ்வருடமும் தாம் என்பதையும் உணர்ந்தே உள்ளோம்
ReplyDelete.்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
இது போங்கு ஆட்டம்... காலையில் பதிவு என்றதும் இந்தியன் நேரம்னு நினைச்சா..ஆஸி,ஜப்பான் நேரத்துல பதிவு வந்து இருக்கு...
ReplyDelete:-)
Deleteஅதானே :-)
Deleteஒன்று நீங்கள் ஆஸ்திரேலியா அல்லது ஜப்பான் பக்கம் இருக்கனும் இல்லை என்றால் நம்ப ஆசிரியர் அந்த ஊர் பக்கத்தில் இருக்கனும்.
காரணம்: க.சொ.கா பற்றி எழுத கடந்த சில வாரங்களாக பொறுமையாக இருந்த கைகள் அவரை நேற்று இரவு தூங்க விடவில்லை போல் தெரிகிறது.
Delete"காலையிலே பதிவிருக்கும்" என்றால் பின்னிரவே நான் அதனை தயார் செய்தாக வேண்டுமென்று அர்த்தமல்லவா நண்பரே ? குறைந்த பட்சம் இரண்டரை மணி நேரங்கள் எடுப்பதுண்டு இது போன்ற சராசரிப் பதிவுகளைத் தயார் செய்யவே ! So காலையில் ஆறு மணிக்கு அது உங்கள் முன் தயாராய் நிற்க வேண்டுமெனில் நான் ராத்திரி மூன்றரைக்கு எழுந்தல்லவா பணி தொடங்கிட வேண்டும் ? நடக்கிற காரியமா அது ?
DeleteOf course இரண்டரைக்குப் படுத்து, நாலரைக்கு எழுந்து பதிவு போட்டதும் உண்டு ; மூன்றாண்டுகளுக்கு முந்தைய சென்னைப் புத்தக விழாவின் முதல் நாளில் ! But இப்போதெல்லாம் வண்டியில் அத்தனை தம் லேது !
உங்கள் அசதியையும் ,வசதியையும் பொறுத்தே பதிவுகள் வரட்டும் சார்..:-)
Delete//
Deleteஉங்கள் அசதியையும் ,வசதியையும் பொறுத்தே பதிவுகள் வரட்டும் சார்..:-) //
+1
Delete//ஒன்று நீங்கள் ஆஸ்திரேலியா அல்லது ஜப்பான் பக்கம் இருக்கனும் இல்லை என்றால் நம்ப ஆசிரியர் அந்த ஊர் பக்கத்தில் இருக்கனும்.//
இல்லேன்னா என்னை மாதிரி நைட் ஷிப்ட் பார்க்கணும்..
இதோ - இன்றைக்கு இந்த இதழின் அச்சு + பைண்டிங்கும் முடிந்து, கையில் புக்காக நிற்கிறது & எனக்குள் அதே வேகமும் தொடர்கிறது
ReplyDelete#########
அதே வேகத்தில் புத்தகத்தை அனுப்பிவிட்டால் நாங்களும் வேகமாக ஓட்டத்தில் இணைந்து கொள்வோம் சார்..:-)
தலீவரே...கி.நா.வைப் படித்த கையோடு நீங்க எந்தத் திசையில் ஓட்டம் பிடிப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது ! So வரும் போது புக் வெளிவரட்டுமே !
Delete:+)))
Delete007 ன் முன்னட்டை வித்யாசமான ஆங்கிளில் கவர்கிறது.கீழே சிந்திய இரத்தம் இங்கிலாந்து, அயர்லாந்து வரைபடமாக அமைத்தது சிறப்பான கலையுணர்வு.
ReplyDelete+1
Deleteஅது இங்கிலாந்து ,அயர்லாந்து வரைபடமா என்பது எல்லாம் தெரியாது ..ஆனா சூப்பர..:-)
DeleteEYES DO NOT SEE WHAT THE MIND DOESN'T KNOW என பிரபல வழக்குமொழி உண்டு..அதற்கு சிறந்த உதாரணமாக GP - ன் பார்வையை சொல்லலாம்..செம GP!!
Deleteநல்ல ரசனையான பார்வை உங்களுக்கு கோவிந்.
Deleteஇதில் சின்னதாயொரு கூத்துமே !! ஒரிஜினல் ராப்பரே இங்கு நாம் பயன்படுத்தியுள்ளது ! எழுத்துக்களை இணைத்து லேசாய் மெருகூட்ட முனைந்த பணிகளின் மத்தியில் - 'இவ்ளோ இடம் தான் காலியா கீதே...இன்னும் கொஞ்சம் இரத்தத்தைத் தெறிக்க விடலாமே !' என்ற மகா சிந்தனை தோன்றியது எனக்கு ! So இரத்தக் கறைகள் இன்னும் தாராளமாய்க் கூடுதலாய் இருக்கும் விதமாய் அமைக்கச் சொன்னேன். அப்போது தான் திடீரென உறைத்தது - ஒரிஜினலில் அந்த இரத்தக் கறையிலும் அவர்கள் ஒரு சேதியினைச் சொல்ல முனைவதை !! "ஆத்தாடியோவ் !" என்றபடிக்கே 'கூடுதல் இரத்தப் பொரியல் கேன்சல் !!' என்று சொல்லி வைத்தேன் ! இல்லாவிடின் இங்கிலாந்து மேப் நம்ம உசிலம்பட்டித் தாலுகா மேப் ஆக மாறியிருக்கக்கூடும் !!
Deleteஹாஹாஹா...:-)))
Deleteஆசிரியர் சார் ஹிஹிஹி
Delete///
Deleteஇல்லாவிடின் இங்கிலாந்து மேப் நம்ம உசிலம்பட்டித் தாலுகா மேப் ஆக மாறியிருக்கக்கூடும் !!///
:))))))))
@GP
செம!! வித்தியாசமான பார்வை!!
GP படங்கள் சொல்லும் கதையை உங்களை விட அழகாக அறிபவர் யாரும் இல்லை. அட்டகாசம்
Deleteஅனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்.
Deleteஉலக மேப்பை எப்ப பார்த்தாலும், பார்வையானது இங்கிலாந்தையே வெறித்துப் பார்க்கும்.
காரணம் ஒரு அழகான யுவதி, நளினமான பாவனையில் நிற்பது போல் அவுட் லைன் எத்தனை துல்லியமாக தெரியுது பாருங்கள்.அந்த அவுட் லைனில் மார்கோவை ஃபிக்ஸ் செய்தால் அட்டகாசமாக பொருந்துகிறது.
அதனால்தான்.ஹி...ஹி...
//
Deleteஇல்லாவிடின் இங்கிலாந்து மேப் நம்ம உசிலம்பட்டித் தாலுகா மேப் ஆக மாறியிருக்கக்கூடும் !!///
ஹா..ஹா...ஹா..
Gp யப்பா... எப்டி இப்டிலாம்
DeleteG.p.👌👌👌👌
Deleteஎனக்கு மார்கோவை பொருத்திப்பார்க்கும் வாய்ப்பு எல்லாம் லேது. ஏன்னா எங்க வீட்டுல ரெக்ஸோனா தான்.
DeletePadmanaban @ :-)
DeletePadmanaban சார் ஹிஹிஹி.
Deleteசர்க்கஸ் சாகசம்: வங்கியை தொடர்ந்து கொள்ளையடிக்கும் கும்பல், காவல் அதிகாரிகளிடம் மாட்டாமல் வெற்றிகரமாக கொள்ளையடிக்கும் மர்மம் என்ன? இதில் சர்க்கஸூக்கு என்ன சம்பந்தம்? என்ற இரண்டு கோடுகளை ஒரு புள்ளியில் கதாசிரியர் அழகாக இணைத்து உள்ளார்.
ReplyDeleteடெக்ஸ் தனக்கு துப்பறியவரும் என நிரூபித்துள்ளார். அவர் ரசிகர்களுக்கு என்றார் போல் கடைசி அத்தியாயம் அடிதடி டாமால் டூமில் என கலக்கியிருக்கிறார்.
கார்சனின் நண்பரின் முன்னால் நண்பர் சர்க்கஸில் வேலைக்கு சேர்ந்த காரணம் காமெடியனாக சொல்லி இருந்தாலும் அவரின் வேலையில்லாமல் இருக்கும் வலியை புரிந்து கொள்ள முடிகிறது.
கொள்ளை கும்பலுடன் உள்ள குள்ள மனிதரின் முடிவு பரிதாபம்.
வித்தியாசமான துப்பறியும் கதைகளை விரும்பும் டிடெக்டிவ் ரசிகர்கள் மற்றும் டெக்ஸ் ரசிகர்களை ஒரே கதையில் திருப்திபடுத்த முடியுமா என்றால் முடியும் என நிரூபித்துள்ளார் கதாசிரியர்.
ஏற்கனவே டெக்சின் துப்பறிவாளர் அவதாரை 'திகில்நகரில் டெக்ஸ்" ; "ஆவியின் ஆடுகளம்" போன்ற சாகசங்களில் பார்த்துள்ளோமே சார் !
Deleteஆனால் இந்த சாகஸத்திற்கு நீங்கள் அளித்த மதிப்பெண் தான் எங்களை கடுப்பேற்றி விட்டது..:-(
Deleteஆனால் இந்த கதை ரசிக்கும் படி இருந்து. கடைசி அத்தியாயம் டெக்ஸ் ரசிகர்களுக்கு கிடா விருந்து மற்றும் ஒரு ப்ளஸ் இங்கு:-)
Delete+1
Deleteஅட்டகாசமான oviyamum கதையின் ஓட்டத்தை mudukki விட்டுள்ளது
Deleteஇந்த ஆண்டு வெற்றி ஆண்டு என கொண்டாடலாம
ReplyDelete.சொதப்பல்ஸ் இல்லவே இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் மறக்க முடியாத பல கதைகளை கொண்ட ஆண்டு என்பதால் இந்த ஆண்டு வெற்றி ஆண்டே என காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்!
அந்த ஜடாமுடி நாயகரையும் ; 'நீரில்லை-நிலமில்லை' ஆல்பத்தையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் தான் சார் !
Deleteவிடுங்கள் சார். குழந்தைகளுக்கு கண்ணத்தில் வைக்கும் திருஷ்டி பொட்டு போல் இந்த இரண்டு கதைகளை எடுத்துக் கொள்வோம்.
Deleteஅப்போ சாத்தானின் சீடர்கள்?
Deleteஎன்னை பொறுத்தவரை இந்த வருடம் டெக்ஸ்ன் எந்த கதையுமே சோடை போகவில்லை...
Deleteவஞ்சம் மறப்பதில்லை தான் நெஞ்சம் மறக்க சொல்கிறது..:-)
நீங்கள் ஸ்பெஷல் தலைவரே
Deleteநீங்க சொல்லும் அனைத்தும் எனக்கு அருமையை.... இன்னும் படிக்காத சில கதைகள் உண்டு... அதும் படித்த பின்னர் சூப்பர்னு சொல்வேன்
Deleteஸ்டீல் @ நீ படிக்காமலேயே சூப்பர்ன்னு சொன்னாலும் யாரும் இங்கு ஆச்சரியப் படபோவதில்லை மக்கா :-)
Deleteசூப்பர்ல... நம்ம கதை தேர்வுகள் அப்டிலா...
Delete///அந்த ஜடாமுடி நாயகரையும் ; 'நீரில்லை-நிலமில்லை' ஆல்பத்தையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் தான் சார் !///
Deleteஇரண்டும் படிக்கவில்லை படிக்கமுடியவில்லை
இந்த மாத தீபாவளி மலர் என்ற டைட்டில் உடன் டிடெக்டிவ் ஸ்பெஷல் என்பதையும் இணைத்து இருக்கலாம்.
ReplyDeleteஒரு அட்டகாசமான டிடெக்டிவ் விருந்து இந்த வருட தீபாவளி மலர்.
மார்ட்டின் கதைக்கு "டிடெக்டிவ் பாணி" என்ற வர்ணனை பொருந்தாதே சார் ?
Deleteஐந்தில் நான்கு இந்த வகை என்னும் போது டிடெக்டிவ் ஸ்பெஷல் என வைத்துக் கொள்ளலாம் சார்.
Deleteஏல எதிர்த்து பேசாதல...
Deleteஏலே மக்கா கல்யாணம் ஆன கொஞ்சம் நாளில் நிறைய கத்துக்கிட்ட போல் தெரிகின்றது :-) நீ பிழைச்சக்குவ :-)
Delete
Deleteஎல்லாம் உண்ட கத்துக்கிட்டதுதாம்ல
Arctic blast அதகளப்படுத்துது போலிருக்கே சார் ?
ReplyDelete2019 ஐ பொறுத்தவரை பெரும்பான்மையான இதழ்கள் மனதிற்கு நிறைவாகவும்,இரசனையான களங்களாகவும் அமைந்திருந்தன.....
ReplyDeleteபொதுவில் எல்லா இதழ்களும் சிறப்பான வாசிப்பையும்,வித்தியாசமான ஒரு அனுபவத்தையும் தருவதற்காகவே தேர்வு செய்யப்படுகின்றன என்ற போதிலும்,சில இதழ்கள் சுமாரான வரவேற்பை பெறுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.....
இரசனைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம் எனும்போது அவை சில நேரங்களில் சாதகமாகவும்,சில நேரங்களில் பாதகமாகவும் அமைந்து விடுகின்றது.....
எப்படி பார்த்தாலும் தங்களது சேவை சிறப்பானதே சார்......
// எப்படி பார்த்தாலும் தங்களது சேவை சிறப்பானதே சார். // இதில் கடுகளவு கூட சந்தேகம் கிடையாது.
Deleteநீரில்லை நிலமில்லை என்னை பொறுத்தவரை அட்டகாசம்... பிடிக்கலை என்பது ஆச்சரியம்
Deleteஇரசனைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம் எனும்போது அவை சில நேரங்களில் சாதகமாகவும்,சில நேரங்களில் பாதகமாகவும் அமைந்து விடுகின்றது.....
Deleteஎப்படி பார்த்தாலும் தங்களது சேவை சிறப்பானதே சார்.....
#######
+1
சார் கதை சொல்லும் கானகம் தலைப்பே தூள். கானகம் எனும் வார்த்தையே மனம் முழுதும் அழகிய மரக்கூட்டத்தை கண் முன்னே niruththuம். கானகம் எனும் வார்த்தை தமிழிலே என்னை ஈர்த்து மனதை மயக்கி உற்சாகத்தை தெறிக்க விடுமே. இந்த அட்டை இருளை எதிர் பார்த்து, வெளிச்சம் பாய்ச்சும் அட்டை தாங்கி அருமையாக வந்துள்ளது. அட்டகாசமான அட்டைக்கு நன்றிகள் . உள்ள பக்கங்கள் மிரள வைக்குது. நவம்பர் 13 எனும் போதே சக்தி அதிகம்தான்.... ரிங்கோவ கண்ல kaattalai....இந்த மாதமும் தூள் கிளப்பாத போவது உங்க குத்தாட்ட பதிவிலே தெரிதே ... arumai...சுறா வேட்டையும் அட்டகாசம். ஆனாலும் அட்டை நம்ம ஸ்டைலில் இல்லை என்பது வருத்தம்.
ReplyDeleteசார் சொல்ல மறந்த கதை.... கானகத்தின் பக்க ஓவியங்கள் சும்மா பிச்சி உதறுது
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteகதை சொல்லும் கானகம் ஓவியங்களும் அட்டைபடமும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது சார். இந்த வருடம் வெளிவந்ததிலேயே டாப் என்று பார்த்தால், 1.சிங்கத்தின் சிறுவயதில், பிஸ்டலுக்கு பிரியாவிடை, பரகுடா, நித்தம் ஒரு யுத்தம், சிகரங்களின் சாம்ராட்
ReplyDeleteடாப் டூ மோசம் என்று பார்த்தால் முதலில் லக்கிலுக்கை சுட்டது யாரைத்தான் சொல்லலாம் இதைத்தான் நான்கு நாட்களாக வைச்சி படிச்சேன். மிடியல இரண்டாவதாக நீரில்லை நிலமில்லை சொல்லலாம்
Hai friends
ReplyDeleteஆமாங்க சார். ஆனால்டெக்ஸாஸில் ஓரளவுக்கு பரவாயில்லை. ஓரிரு நாளிலேயே வழக்கமான குளிருக்கு திரும்பி விட்டது.
ReplyDelete148வது
ReplyDeleteதீபாவளி மலர் - ஜூலியா கதை தவிர (அது முடித்தாகிவிட்டது) மற்றவை படிக்க ஆரம்பிக்கலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-)
ReplyDeleteசார் dylon மற்றும் ராபின் படித்து விடுங்கள். இரண்டுமே அட்டகாசம்
Deleteஆனாலும் இவ்ளோ நேரம் யோசிக்க கூடாது ராகவன் சார்..:-)
DeleteEdi sir please break the suspense for jumbo slot 6🤭🤭🤭🤭🤭
ReplyDelete🤭🤭🤭🤭🤭🤭
Deleteசஸ்பென்ஸ் slot 6 kku இல்லை. Slot 5 kku தான்
Deleteசார் டைகர் கதைய 2021 வச்சிகிடுங்க 2020 ஈரோட்டில் அந்த நான்கு ஐந்து மூன்று பாக கவ்பாய் கதைகளை வெளியீடுங்கள்
ReplyDeleteஇந்த ஐடியா நல்லா இருக்கு ஆனா நண்பர்கள் எல்லாம் டென்ஷன் ஆய்டுவாங்களே?
Deleteசெம யோசனை ..:-(
Deleteஅ...ஆனா டைகரு ரசிகருக தான் டென்ஷன் ஆயிருவாங்களே நண்பரே..:-)
டெக்ஸ் கௌபாய் தான்.
Deleteஅப்படியே நீங்கள் சொன்ன கௌபாய் கதைகள் 2020 வேண்டும் என்றால் சில டெக்ஸ் கதைகளை 2021 வைத்து விட்டு அதற்கு பதிலாக புதிய கௌபாய் கதைகளை ஈரோட்டில் தரளாமே :-)
🏃🏃🏃🏃🏃🏃 பிடிடா பரணி ஓட்டத்தை :-)
This comment has been removed by the author.
Deleteபாலன் @ சோதனையான யோசனை :-(
Deleteபாலன் சார்..சொன்னேன் பாத்தீங்களா..
Deleteஆனா எனக்கு உங்கள் யோசனை டபுள் ஓகே..:-)
சார் பிஸ்டலுக்குப் பிரியாவிடை மாதிரி கவ்பாய் கதைகளை ஈரோட்டில் வெளியீடுகள் சார்
ReplyDeleteSuper GP for oo7 👏👏👏
ReplyDeleteSir, இம்மாதம் வர இருக்கும் உளவாளியை நினைக்கையில் இன்னொரு இங்கிலாந்து உளவாளியும் நினைவுக்கு வருகிறார்.
ReplyDeleteசுமார் 30 வருடங்களுக்கு முன் , லயன் காமிக்ஸ் மாக்ஸி சைஸில் வருகிறது என்றால் ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற சூப்பர் ஹீரோக்களை தான் எதிர்பார்ப்போம். ஆனால் ஆண்டு மலர் ஒன்றில் சாதாரண உளவாளி ஒருவர் வருகை புரிந்து விளையாட்டாய் அடித்து ஆடி தூள் கிளப்பினார். அவருக்கு பின்னப்பட்ட “சதி வலை”யும் அதன் வில்லன்களும் இன்றளவும் மனதை விட்டு அகலவில்லை.
ஜான் மாஸ்டர், அவரது முன்னாள் கூட்டாளி (பெயர் மறந்து விட்டது) மற்றும் இந்நாள் கூட்டாளி ஹென்றி போன்றோர் சாகசம் புரியும் அந்த காமிக்ஸ் கலரில் வந்தால் சூப்பராக இருக்கும். சிறுவர், சிறுமியருக்கு பரிசளிக்க ஏற்ற புத்தகம் அது.
ராணி காமிக்ஸ் ‘ஜேம்ஸ் பாண்ட்' வரும்வேளையில், லயன் காமிக்ஸ் ஜான் மாஸ்டரும் வரும் வாய்ப்பு ஏதேனும் உண்டா சார்? Just a curiosity,not a compulsion, Sir.
John master kku +1
Deleteஜான் மாஸ்டருக்கு +123
Deleteஜான் மாஸ்டர் கதை அனைவருக்கும் ஓகேவாக தான் இருக்கும் என்பது உண்மையே..ஆனால் வெளிவந்த கதையே அவ்வளவுதான் என ஆசிரியர் ஒரு முறை கூறியதாக நினைவு நண்பரே..:-(
Deleteதலைவரே! மன்னிக்க வேண்டும், நான் கேட்டது “சதி வலை”யை தான். அதனை, கலரில், Maxi Size’ல் வெளியிட ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்றே நான் வினவினேன். அதன் கூடவே "மாஸ்கோவில் மாஸ்டர்'ஐயும் இணைத்து வெளியிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். மாஸ்டரின் சாகச கதைகள் இவை இரண்டு மட்டுமே என்பது ஒரு வருத்தமான விஷயம் தான்.
Deleteஓ...சாரி நண்பரே..தவறாக புரிந்து கொண்டேன்..
Deleteமறுபதிப்பு சதிவலை எனில் எனது ஓட்டும் 100% :-)
This comment has been removed by the author.
ReplyDeleteசார், இம்மாதத்திய கிராபிக் நாவலின் வருகையை முன்னிட்டு , முன்னர் வந்த "முடிவில்லா மூடுபனி " மூடியே வைத்திருக்கும் இரண்டு கேள்விகளுக்கான (வாசக நண்பர் ஒருவர் கேட்டது) எனது யூகம்:
ReplyDelete1. இன்ஸ்பெக்டருக்கு தெரிந்த அந்த மலர் விற்கும் பெண், தன்னை மணம் புரியும்படி கேட்ட பணக்காரருக்கு சொன்ன பதில் என்ன? அந்த பணக்காரர் டைரியின் பக்கம் ஏன் கிழிக்கப்பட்டிருந்தது?
விடை: “முடியாது” என்பதே பதில். அந்த பதிலை அந்த பணக்காரர் தனது டைரியில் பதிவு செய்திருந்திருப்பார். அந்த பெண் கொலை செய்யப் பட்டதை அறிந்த பின், தனது கோரிக்கை மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, தானே அந்த பெண்ணை கொலைசெய்திருக்க கூடும் என பழி விழும் என்று பயந்து அந்த டைரி பதிவை அழித்திருந்திருப்பார்.
2. கொலையாளியை பற்றிய தகவல், காவல் நிலையத்தில் இல்லாமல், இன்ஸ்பெக்டரின் வீட்டில் எப்படி இருந்தது?
விடை: அந்த தகவல் முதலில் இன்ஸ்பெக்டரின் டேபிளிற்கு தான் வருகிறது . அன்று தான் தன் மேல் அதிகாரியிடம் " டோஸ் " வாங்கி, வேலையை விட்டே நீக்கப்படுகிறார். அந்த தலைகுனிவோடு தன்னுடைய உடமைகளை வாரும் போது அந்த கடிதத்தையும் (அறியாமலே)சேர்த்து கொண்டு போய் அப்படியே அவரது வீட்டின் மூலையில் போட்டு விடுகிறார்.
(பெரும்பான்மையோருக்கு இதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை. மன்னிக்கவும்.தமிழில் டைப் அடிக்க சமீபத்தில் தான் பழகியதால் இவ்வளவு கால தாமதம்.)
லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட் பதில் தான் நண்பரே..:-)
Deleteகிரி சார் நல்லா பொறுப்பாக பதில் சொல்கிறீர்கள். உங்களிடம் கேட்க இன்னும் நிறைய கேள்விகளை தயார் செய்து விட்டு வருகிறேன். நல்ல பதில்கள்.
DeleteThis comment has been removed by the author.
DeleteGood Giri
Deleteமிக்க நன்றி நண்பர்களே. மிகுந்த மனநிறைவோடு விடை பெற்று வீட்டிற்கு கிளம்புகிறேன்.
Deleteபரணி.உரிமையோடு பேரை சொல்லி கூப்பிட்டது மிக்க மகிழ்ச்சி.நன்றி.
Delete//1. இன்ஸ்பெக்டருக்கு தெரிந்த அந்த மலர் விற்கும் பெண், தன்னை மணம் புரியும்படி கேட்ட பணக்காரருக்கு சொன்ன பதில் என்ன? அந்த பணக்காரர் டைரியின் பக்கம் ஏன் கிழிக்கப்பட்டிருந்தது?
Deleteவிடை: “முடியாது” என்பதே பதில். அந்த பதிலை அந்த பணக்காரர் தனது டைரியில் பதிவு செய்திருந்திருப்பார். அந்த பெண் கொலை செய்யப் பட்டதை அறிந்த பின், தனது கோரிக்கை மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, தானே அந்த பெண்ணை கொலைசெய்திருக்க கூடும் என பழி விழும் என்று பயந்து அந்த டைரி பதிவை அழித்திருந்திருப்பார்.///
பணக்காரர் குற்றம் செய்தவராய் இருந்திருப்பின் டைரியையே அழித்திருப்பார் ..
கிழிந்த பக்கம் உள்ள டைரி அவருக்கு எதிராக எண்ணங்களை தோற்றுவிக்க வல்லது ..இதோ உங்களுக்கும் அப்படித்தானே தோன்றுகிறது .
அந்த இளம்பெண் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க கூடும்..
ஒரு முதியவரை பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுபெண் மணம் செய்ய சம்மதித்து விட்டாள் என அவள் இறந்தபின் உள்ளநிலையில் அவளை யாரும் குறை சொல்லிவிடலாகாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு ....அதனால் அப்பக்கத்தை அவர் கிழித்திருக்கலாம் ..
/// 2. கொலையாளியை பற்றிய தகவல், காவல் நிலையத்தில் இல்லாமல், இன்ஸ்பெக்டரின் வீட்டில் எப்படி இருந்தது?
விடை: அந்த தகவல் முதலில் இன்ஸ்பெக்டரின் டேபிளிற்கு தான் வருகிறது . அன்று தான் தன் மேல் அதிகாரியிடம் " டோஸ் " வாங்கி, வேலையை விட்டே நீக்கப்படுகிறார். அந்த தலைகுனிவோடு தன்னுடைய உடமைகளை வாரும் போது அந்த கடிதத்தையும் (அறியாமலே)சேர்த்து கொண்டு போய் அப்படியே அவரது வீட்டின் மூலையில் போட்டு விடுகிறார்.////
வேறு ஒரு பகுதியில் இருந்து ஒரு ஊரின் காவல்துறை தலைமையகத்துக்கு அலுவல்ரீதியான கடிதம் அனுப்பப்படுமாயின் அது சம்பந்தப்பட்ட ஊரின் தலைமை அதிகாரிக்கே அவரது பேரை குறிப்பிடாமல் பதவி நிலையினை குறிப்பிட்டே வரும் ...
நமது ஆளோ ஒரு கீழ் நிலை அலுவலர் ...எப்படியாயினும் அவருக்கு வர வாய்ப்பில்லை ...கதையின் ஒரு நெருடலாகவே இதனை கருதமுடியும்
"ஒரு முதியவரை பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுபெண் மணம் செய்ய சம்மதித்து விட்டாள் என அவள் இறந்தபின் உள்ளநிலையில் அவளை யாரும் குறை சொல்லிவிடலாகாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு ....அதனால் அப்பக்கத்தை அவர் கிழித்திருக்கலாம்"
Delete1. அந்த பெண்ணின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவர் நல்லவராக இருந்தால் அவர் அந்த சிறு பெண்ணிடம் தான் அவளை தத்து எடுப்பதாகத்தான் கோரிக்கை விடுத்திருப்பாரே தவிர தன்னை திருமணம் செய்யும் படி கேட்டுஇருக்க மாட்டார் சார்.
ஒருவேளை அந்த பெண் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தால், அவர் தனது வருங்கால மனைவியை அநாதரவாக, தக்க பாதுகாப்பு இன்றி அகால வேளையில் அனுப்பி வைத்திருக்க மாட்டார். தனது மாளிகையிலயே தங்க வைத்திருப்பார். காலையில் தான் அனுப்பி இருப்பார்.அந்த பெண்ணும் உயிர் பிழைத்திருப்பாள்.
எனவே அந்த பெண் சொல்லியிருக்க கூடிய பதில் “முடியாது" என்பதே ஆகும்.
பின் ஏன் அவர் அந்த டைரியின் பக்கத்தை கிழித்துவிட்டார்?
அந்த ஏழை பெண்ணின் மறுப்பு அவரது "ஈகோ" வை த் தாக்கியிருக்கும். அந்த கடுப்பில் “போற வழில ............" என்று கறுவியவாரே துரத்தி இருப்பார்.
மறுநாள் அந்த பெண்ண “செத்துவிட்டாள்... கொலை செய்யப்பட்டு " என்று அறிந்ததும் குற்றஉணர்வுக்கு ஆட்பட்டு இனம் தெரியா படபடப்பில் , தனக்கு ஏதும் பங்கம் வந்து விடக்கூடாது என்று தான் அந்த பக்கங்களை கிழித்திருக்க கூடும்.
2. “வேறு ஒரு பகுதியில் இருந்து ஒரு ஊரின் காவல்துறை தலைமையகத்துக்கு அலுவல்ரீதியான கடிதம் அனுப்பப்படுமாயின் அது சம்பந்தப்பட்ட ஊரின் தலைமை அதிகாரிக்கே அவரது பேரை குறிப்பிடாமல் பதவி நிலையினை குறிப்பிட்டே வரும் ...
நமது ஆளோ ஒரு கீழ் நிலை அலுவலர் ...எப்படியாயினும் அவருக்கு வர வாய்ப்பில்லை”
இவ்வளவு கட்டுக்கோப்பான Procedure உள்ளதால் கண்டிப்பாக அவரது வீட்டுக்கு கடிதம் பட்டு வாடா செய்ய பட்டிருக்கமுடியாது.
பின் எப்படி அவரது வீட்டிற்கு வந்தது?
இதற்கு குழப்பமே வேண்டாம். “அந்த கடிதம் அவரது Table’ல் தான் வைக்கப்பட்டிருந்தது “ என்று வாக்கியத்தை மாற்றி கொண்டால் போதும்.
தபால் காரர் நேரிடையாக மேலாதிகாரியிடம் கொடுக்க இயலாது, இந்த கீழ்நிலை அதிகாரியிடம் சேர்ப்பித்திருப்பார். அவ்வளவுதான்.
Thank you very much for your response Sir.
அட... செமையாக யோசிக்கிறீங்க கிரி.
Deleteநம்ப செல்வம் அபிராமி என்ன பதிலோடு வருகிறார் என்பதை படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
Thank you! பரணி . அவர் மேற்கண்ட யூகங்களில் Satisfy ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் நம்மை விட மூத்தவர்களிடம் அறிவை காட்டி ஜெயிப்பதை விட அன்பை காட்டி தோற்பது தான் நல்லது. நான் கமெண்ட் இடுவது ஆபீஸ்'இல் இருந்து தான். நேற்றே எனது Boss ப்ராஜெக்ட் ரிப்போர்ட் போட வேண்டும் , urgent என்று சொல்ல, நான் பதில் தயார் பண்ணுவதிலேயே கவனமாக இருந்தேன். Load more வருவதற்குள் பதிலை தயார் செய்து தமிழில் அடித்து Upload செய்வதற்கு முக்கால் மணி நேரம் ஆகி விட்டது. பொதுவாக யாரும் இல்லாதபோது தான் எதையேனும் கமெண்ட் type பண்ணி இடுவேன். இன்றும் நேற்றைய Situation தான். So………..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹலோ , இன்னும் இடம் இருக்கா.? i.அப்பா டி.உள்ள வந்துட்டேன்.
ReplyDelete2019-ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..ii
ReplyDeleteஇதே போல் 2020-ம் சிறப்பான பல விசயங்களுடன் அமைந்து நம் அனைவரையும் மகழ்விக்க வேண்டும் என்ற ஆசைகளுடன் -
காத்திருக்கிறேன்.. நன்றி சார் ii
இன்று உலக ஆண்கள் தினம்
ReplyDeleteஆசிரியருக்கும், என் காமிக்ஸ்
தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ☺☺☺
நன்றி தோழி
Deleteவிஜயன் சார், டெக்ஸ் மற்றும் கௌபாய் கதைகளை எல்லாம் வரும் 2021 முதல் "கௌபாய்" சந்தா என்று புதிய சாந்தாவின் கீழ் கொடுக்க முடியுமா? இதில் மட்டும் சுமார் 24 கதைகளை கொடுத்தால் நன்றாக இருக்கும். நமது வாசகர்கள் பலருக்கு கௌபாய் மிகவும் பிடித்த களமாக இருப்பதால் இந்த யோசனை.
ReplyDeleteஹிஹிஹி சூப்பர் ஐடியா இல்லையா இதில் அந்த 3 பாக 4 பாக கௌபாய் இதழ்களையும் வெளியிட்டு விடலாம்
Delete+111☺️
Deleteபழிவாங்கும் புயல் (மாடஸ்டி)
ReplyDeleteகனடாவிலுள்ள ஒரு ஹாஸ்பிடல் ஒருவித மர்மமான 'சொர்க்கபுரி' பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது.அதற்கு நம் கேப்ரியல் மறைமுகமாக உடந்தையாக உள்ளார். அந்த ஹாஸ்பிடல் மீது சந்தேகம் கொள்ளும் சர் ஜெரால்ட் ஏதேச்சையாக மாடஸ்டியின் காதில் போட்டு வைக்கிறார். சந்தேகத்தை உடனே பரிசோதிப்பதுதானே மாடஸ்டியின் இயல்பு. விளைவு, வாலண்டியராக கார்வினோடு களமிறங்குகிறார்.
பழம்பெரும் வில்லன் பெரும் பலத்தோடு, பின்புலத்தில் பெரும் தடையாக இருக்க,அதை உடைத்து மாடஸ்டியும் கார்வினும் எப்படி மங்களம் பாடுகிறார்கள் என்பதே மீதி கதை.
வழக்கமான மாடஸ்டி கதைகளில் ஆக்சன் சீக்வென்ஸ் 'அட ' போடும்படி இருக்கும்.கதாசிரியர் இந்தக் கதையில் அதற்கு 'தடா ' போட்டுவிட்டார் போலும்.எதிர் வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதுதானே மாடஸ்டியின் ஸ்டைல்.இதில் அந்த ஸ்டைல் மிஸ் 'ஸாகிவிட்டது. க்ளைமாக்ஸில், ஆக்ரோசமாக ஆக்ரமித்திருப்பது கார்வினே.இவரது ருத்ர தாண்டவமே ஏனைய பக்கங்களை, அநாயசமாகத் தாங்குகிறது.
// இவரது ருத்ர தாண்டவமே ஏனைய பக்கங்களை, அநாயசமாகத் தாங்குகிறது. // This is what I felt அந்த கிளைமாக்ஸ் மட்டுமே போதும்
Deleteபோதும்தான்..!
Deleteஆனா...,
வில்லன் கேப்ரியேல் எனும்போது, மாடஸ்டிக்கு வேலை அதிகம் இருக்கும்னு எதிர்பார்த்தேன்..!
இம்மாதம் வெளியான 7 கதைகளில் முதலில் என்னை மிகவும் கவர்ந்தது 'கொலை கொலையா முந்திரிக்கா' தான்.
ReplyDeleteமிகவும் விறுவிறுப்பான ஒரு க்ரைம் த்ரில்லர். கொலைகாரர்கள் யார் என்று நமக்கு தெரிந்தும், எதற்காக இந்த கொலை வெறி என்று சஸ்பென்சாகவும், கொலைகாரர்களை பிடிக்க நியூ யார்க் போலீஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் த்ரில்லிங்காக இருந்தது. தீயில் கருகிப் போன சடலத்தில் கை ரேகைகள் கிடைக்காது போனாலும், சடலத்தின் பல் அமைப்பை வைத்து இறந்தவனை சரியாக கண்டுபிடிக்கும் நேர்த்தி அருமை. தான் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பது தெரியாத நிலையிலேயே, லிண்டா என்ற அந்த பெண் அந்த ஆபத்தில் சிக்காமல் தப்பித்து போகும் ஒவ்வொரு கட்டமும் அட்டகாசம். கடைசியில் அவளும் கொல்லப்படுவாளோ என்ற பதைபதைப்பும் கதை படிக்கும் போது உண்டாகிறது. கதை ஆரம்பம் முதல் முடிவு வரை தீயாய் நகர்கிறது.
அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்தது, அந்த மாஃபியா டான்களின் கதை "துரோகமே துணை" அட்டகாசமான ஆக்ஷன் கதை. சித்திரங்கள் ஒவ்வொரு பக்கமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. 100 பக்கங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு கதையை, படைப்பாளிகள் சுருக்கமாக அமைத்திருந்தாலும், அதை லாவகமாக மொழிபெயர்த்த விதம், கதையை நன்றாக ரசிக்க வைத்தது. மேலும், ஹீரோவின் காதலி, எதிரியின் ஆளோடு சரசமாடும் சம்பவம் முகம் சுளிக்க வைக்கிறது. அந்த காட்சி கதைக்கு தேவையே இல்லாத ஒன்று. ஏற்கனவே லேடி எஸ்ஸின் கதை நிறைய பேருக்கு அதிருப்தியை உண்டாக்கியது இதனால்தான். அப்படி வரும் காட்சிகளை ஆசிரியர் கத்தரித்து விட்டால் நன்றாக இருக்கும்.
மூன்றாவதாக எனக்கு பிடித்த கதை: "சிகப்பு ரோஜாக்கள்." டைலன் டாக் கதை என்றதும் காதில் பூ சுற்றும் ரகமாக இருக்கும் என்றுதான் படிக்க தொடங்கினேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் லாஜிக்கை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அட்டகாசமாக அமைந்திருந்தது கதை. இதுவரை வெளிவந்த டைலன் டாக்கின் கதைகளை படித்தப் போது, டைலன் டாகை சூப்பர் ஸ்டாராக பார்க்கும் இத்தாலியர்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தேன். அதை இப்போது தான் ஓரளவு புரிந்துக் கொள்கிறேன். டைலன் டாக்கிற்கு இத்தாலியில் நிறைய ரசிகர்கள் உருவாக காரணமே அவரது ஆரம்ப காலத்து கருப்பு வெள்ளையில் வெளிவந்த கதைகள் தான் என நினைக்கிறேன். இனி ஆசிரியர் டைலன் டாக் கதையை வெளியிட்டால் அவரது ஆரம்ப காலத்து கருப்பு வெள்ளை கதைகளையே தேர்ந்தெடுத்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கர்னல் க்ளிப்டனின் கதையும், ஜூலியாவின் கதையும் நன்றாக இருந்தது.
செப்டம்பரிலும், அக்டோபரிலும் பட்டையை கிளப்பிய டெக்ஸ் வில்லரின் கதை இம்மாதம் சுமார் ரகம் தான்.
2020 சென்னை புத்தகக் திருவிழா தொடங்கும் நாள் எது என்று தெரியுமா நண்பர்களே? இன்னும் சில மாதங்கள் உள்ளன என்றாலும் ரயிலில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இந்த கேள்வி. பொதுவாக ஜனவரி முதல் வாரம் ஆரம்பித்து மூன்றாம் வாரம் வரை நடக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteவழக்கமாக ஜனவரி முதல் வாரம் வெள்ளியன்று தொடங்கும்.
Delete2019 - ஜனவரி 4 வெள்ளி
2020 - ஜனவரி 3 வெள்ளி (எதிர்பார்க்கப்படும் தேதி)
200
ReplyDeleteதிடீரென ஒரு ஞானோதயம் உண்டானது.
ReplyDeleteடெக்ஸ் வில்லர் கதைகளில் விதவிதமான ஓவியர்களின் கைவண்ணத்தில் டெக்ஸும் விதவிதமாக காட்சியளிக்கிறார் அல்லவா? ஒவ்வொரு டெக்ஸும் முதல் பார்வைக்கு எப்படி தோன்றுகிறார்கள் என்று பார்ப்பதே அது.
இதோ என்னுடைய பார்வையில்..,
பெரியவர் காலப்பினி -சரியான டெக்ஸ்
க்ளாடியோ வில்லா :ஸ்டைலான டெக்ஸ்.
சிவிடெல்லி :கம்பீர டெக்ஸ்
லெட்டாரி :பாந்தமான டெக்ஸ்
ஜோஸ் ஒர்டிஸ் :பரபரப்பான டெக்ஸ்
செய்ஜாஸ் இளமையான டெக்ஸ்
மார்செலோ :கச்சிதமான டெக்ஸ்
மஸ்டான்டியானோ :கடுவன் டெக்ஸ்
டோரிசெல்லி :அமைதியான டெக்ஸ்
நிகோலோ :பாவமான டெக்ஸ்
லியோமாஸ் :சிடுசிடு டெக்ஸ்
காபிடானியோ :சைனா டெக்ஸ்
என்னுடைய நினைவில் நின்ற லிஸ்ட் மட்டுமே இது.சொல்லாமல் விட்டது நிறைய இருக்குமென நினைக்கிறேன்
சார் டைகர் கதைய மூன்று பாகம் சார்லியர் கதை மத்த நான்கும் வேற எழுத்தாளர் கதை மத்த நான்கும் சுமார் கதைதான் அதனால மத்த 12 பாகமும் சுமார் கதைகள் தான் அதனால ஈரோட்டில் அந்த நான்கு ஐந்து மூன்று பாக கவ்பாய் கதைகளை வெளியீடுகள்
ReplyDeleteதவறான தகவல்கள் நண்பரே ! ....இதுவரையிலும் "இளம் டைகர்" வரிசையில் 9 ஆல்பங்களை நாம் வெளியிட்டுள்ளோம். அவற்றுள் முதல் 6 ஆல்பங்கள் கதாசிரியர் (அமரர்) சார்லியேவின் கைவண்ணமே ! 1989 -ல் அவர் மரித்துப் போன போது ஆல்பம் # 6 -ன் பணிகள் முழுமையடையாது இருக்க - பிரான்சே கோர்டேகியானி இணைந்து கொண்டார் ! தொடர்ந்த ஆல்பங்கள் அனைத்துமே அவரது படைப்புகளே ! நாம் வெளியிட உத்தேசித்துள்ளது ஆல்பம் # 10 முதல் 21 வரை !
Deleteஅப்புறம் மேலோட்டமாய் "கதை சரியில்லை" என்ற தீர்ப்புகள் வேண்டாமே - ப்ளீஸ் ? ஒரிஜினல் டைகர் கதைகளின் உச்சங்களைத் தொடுவது யாருக்கும் சாத்தியமாகாது என்பது உலகறிந்த உண்மை ! அதே சமயம் ஆனை இளைப்பாறும் போது கூட அது குதிரையை விட உசத்தி தான் என்பதுமே உலகறிந்த நிஜம் !
DeleteNegative தீர்ப்பெழுத இப்போதே துடிப்பானேன் சார் ?