Friday, November 30, 2018

டிசம்பரும் வந்தாச்சு !

நண்பர்களே,

வணக்கம். இன்றைக்குக் காலையிலையே உங்கள் கூரியர்களின் சகலமும் புறப்பட்டு விட்டன - டிசம்பர் இதழ்களைச் சுமந்த வண்ணம் !! So பன்னிரெண்டாம் மாதம் புலரவிருப்பது - நமது இதழ்களோடு என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! சந்தா B-ன் சார்பாய் ஒரு black & white டெக்ஸ் ; ஒரு விலையிலா கலர் டெக்ஸ் ; சந்தா C கார்டூனின் சார்பில் மதியிலா மந்திரியார் ; மறுபதிப்புச் சந்தா D சார்பில் லக்கி க்ளாசிக்ஸ்-2 & ஜம்போவின் ACTION SPECIAL என்ற கூட்டணி, மேற்படி கூரியர் டப்பியினுள் இடம்பிடித்துள்ளது ! So இந்த வாரயிறுதியை நமது இதழ்களோடு செலவிட நேரம் எடுத்துக் கொள்ள உங்களுக்கு முடியுமாயின் - சூப்பர்  !! Happy Reading !!

ஆன்லைனிலும் லிஸ்டிங் ரெடி : http://lioncomics.in/monthly-p…/564-december-pack-2018-.html

அப்புறம் திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்றுவரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் : 81 !! அந்தப் பக்கமாயிருப்போர் ஒரு விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ? 

160 comments:

  1. அடடே கூரியர் புறப்பட்டு விட்டதா?

    ReplyDelete
  2. Replies
    1. எல்லா புக்ஸும் படிச்சாச்

      Delete
  3. நானும் வந்துட்டேன்..

    ReplyDelete
  4. திண்டுக்கல்லுக்கு உங்கள் விஜயம் உண்டா சார்....?

    ReplyDelete
  5. Thank you very much dear sir and friends

    ReplyDelete
  6. // அப்புறம் திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்றுவரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் : 81 !! அந்தப் பக்கமாயிருப்போர் ஒரு விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ? //

    சூப்பர் சார் 👍🏼

    ReplyDelete
  7. இரவு வணக்கம் 🙏

    ReplyDelete
  8. நாளைய இதழ்களுக்கு நன்றி ...:-)

    ReplyDelete
  9. திண்டுக்கல் நகரில் நாம் கால் பதிப்பது இது முதல் முறைதானே எடிட்டர் சார்?? வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. Sir please consider paytm option for paying subscription amount

    ReplyDelete
  11. கொரியரைக் கைப்பற்ற காலையில் பறவை அவதாரம் எடுக்கப் போகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. பட்சிராஜன் அவதாரமா??? 😂😂😂

      2.0 😂😂😂

      Delete
  12. ///அப்புறம் திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்றுவரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் : 81 !! ///

    நல்ல செய்தி சார்.
    விற்பனை சிறக்க வாழ்த்துகிறேன்...!

    ReplyDelete
  13. tweeter account ஒன்றை தயவுசெய்து ஆரம்பிக்கவும்.நிறைய வாசகர்களை முத்து மற்றும் லயன் காமிக்ஸ் reach ஆகும்.

    ReplyDelete
  14. விக்ரம் தம்பதியர்க்கு இனிய மணநாள் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  15. நான்கட்டைகளும் தூள் கிளப்பும் போலுல்லதே.....பெரிய பார்சல் நாளைடோய்

    ReplyDelete
  16. நாளைய பொழுது புலர்வது லயனுடன்.....ஆக்சனே வருக.....பெருசை தருக

    ReplyDelete
  17. O Lucky luke!!

    A man shoots faster than his own shadow 🔫🔫🔫

    ReplyDelete
  18. ஆஹா.. வெயிட்டிங்..

    ReplyDelete
  19. வெயிட்டிங் சார்....!

    ReplyDelete
  20. ஜூனியர் எடிட்டர் தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பர்களே !! (on behalf of J.E)

      Delete
  21. WISH HAPPY MARRIED LIFE TO JUNIOR EDITOR

    ReplyDelete
  22. Books recvd.l will be sending d cheque for 2019 subscription in 2 days.lthink lam eligible for d book,sir.

    ReplyDelete
  23. Today my wedding day and i held at office auditing. After 7.00 pm only i will collect the books. So sad.

    ReplyDelete
    Replies
    1. Many more happy returns of the day!!!:)

      I wonder you ought to be more concerned about spending time in the office rather than with your spouse and kids..

      Priorities!!! Please don't collect the books and the books can wait..but this important day won't wait..

      Happy wedding anniversary .!!

      Delete
    2. Thank you sir and try to complete the work before 5 pm.

      Delete
    3. இனிய திருமணநாள் வாழ்த்துகள் விஜய்

      Delete
    4. ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்.

      Delete
    5. @ Trichy Vijay : (தாமதமான) வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
    6. மிக்க நன்றி சார்

      Delete
  24. Mathieu stories are awesome really enjoying script..
    Action special looks smart..MACHI is very good artwork like as irummukkai batman ....Tex colour Sara Vedi..but climax ..is Tex missed out the villain?!...be Tex is good...I read it all. Thank u sir

    ReplyDelete
    Replies
    1. MACH 1 -ஐ சேர்த்து எழுதியிருக்க அதை "மச்சி" என்று வாசித்தேன் நண்பரே !!

      Delete
  25. காதல் தோல்வின்னா ரவுண்டு பன்னா

    ReplyDelete
    Replies
    1. கலீபா அல்குண்டு பாய் அழும் படி பாடும் சோகப் பாட்டிலும் சிவகாசி வட்ட பன்னு ...

      Delete
    2. பத்து ரூபாயை நீட்டினாக்கா, காரணம் கேட்காமலே ரவுண்ட் பன்னை நீட்டுவாங்க சார் !

      Delete
  26. கா(த)லனின் கானகம்

    அக்மார்க் தமிழ்படம்.

    காதலிப்பது போல் நடித்து பணக்காரப் பெண்ணின் தகப்பனின் பணத்தை கறக்க திட்டமிடுகிறான் ஸ்மார்ட் ஜிம்மி பார்க்கர். அக்மார்க் நம்பர் 1.

    பிணைத்தொகை கேட்பதற்கு மிரட்டல் லெட்டர் அக்மார்க் நம்பர் 2.

    அந்தப் பணக்காரர் வீட்டிற்கு அகஸ்மத்தாய் (அவரது வேலையாட்களுடன் ஏற்பட்ட உரசலுக்குப்பின் நட்பாகி )வந்து சேர்வது. அக்மார்க் நம்பர் 3.

    பணக்காரர் மார்ட்டின் அப்பிராணி மகள் அழகாக வில்லனை படம் வரைந்து வைத்திருப்பது. அக்மார்க் நம்பர் 4.

    தன்னைத்தானே கடத்தி நாடகமாடும் ஜிம்மி பார்க்கர் உளறிக்கொட்டி டெக்ஸோடு துப்பாக்கி கொண்டு மோதுவது . அக்மார்க் நம்பர் 5.

    எப்போதும் போல எல்லோரையும் காக்கா குருவி போல டெக்ஸ் சுட்டுத் தள்ளுவது. அக்மார்க் நம்பர் 6.

    அடுத்து என்ன நடக்கும் என்று ரொம்ப சுலபமாக யூகிக்க முடிவது .அக்மார்க் நம்பர் 7.

    கதையின் முடிவு .அச்சு அசல் அக்மார்க் நம்பர் 8

    ReplyDelete
    Replies
    1. இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது அக்மார்க் நம்பர் 9...ஆ.....

      Delete
    2. பட்டாசாய் படபடக்கச் செய்யும் டெக்ஸ் கதைகளில் நடுவே இது திருஷ்டி பரிகாரம்.

      Delete
    3. அதனால் தான் ஆசிரியர் இந்த கதையை வெளியீட தயங்கியது.

      Delete
    4. டெக்ஸின் "மெக்சிக்கோ படலம்" உட்டாலங்கடி உல்டா செய்யப்பட்டுள்ளது.


      Delete
    5. பூத வேட்டைக்கு படம் போட்டவர் இந்த கதைக்கும் படம் வரைஞ்சிருப்பாரோ.

      Delete
    6. 700 + ஆல்பங்களுக்கு மத்தியில் இது போன்ற சில ஆக்கங்களும் இருந்திடத் தான் செய்யும் போலும் !

      Delete
    7. ஹப்பா .. இதுதான் வேணும் ... ஜம்போ ஸ்பெஷல் முதல் கதைக்கு ஈடு செய்துவிட்டீர்கள் .. ஜாலியா படிக்கலாம் ..

      Delete
  27. சார் காலை ஏழரைக்கு போனா என்னைப் பார்த்ததும் நம்ம பண்டலைத்தான் பிரிக்கப் போறேன்னு கொட்டுனார்.....எல்லா பார்சல ஆவலோட தள்ளிட்டே வந்தா கடைசி பார்சல் என்னைப் பார்த்து சிரிக்குது நானும் உனதல்ல என்று ! வருத்தமுடன் திரும்ப எத்தனித்தால் இருங்க இதையும் பார்ப்போம்னு இரண்டு பண்டலை வெட்டுகிறார் நண்பர் சரசரவென.......முதல் பண்டல்ல இல்லை நம்ம புத்தகங்களுக்கான அறிகுறி.....அவநம்பிக்கையுன் அடுத்தத பார்த்தால் முருகன் கைவிடவில்லை , என்னைப் பார்த்து நண்பர் மலர்ந்த முகத்துடன் சிரித்த படி நீட்ட புத்தகமும்என்னைப் பார்த்து சிரிக்க மனம் சிரிக்க உற்சாகத் துள்ளளுடன் திரும்புகிறேன் ......
    காலனின் கானகம் முன்னட்டையும் , பின்னட்டையும் எப்போதையும் விட அதிக பளபளப்பா தெரியுது , ஏதாச்சும் புதுமைய புகுத்தி உள்ளீர்களா சார் ! பின்னட்டை உலகில் இதுதான் பெஸ்ட் என நினைக்கிறேன் ....முன்னட்டை பஞ்சு மிட்டாய் சேலை கட்டிய வானின் கீழ் அருமை ....போனஸ் விளம்பரமும் பளபளப்பாய் கனகச்சிதமாய் அட்டகாசம் ...அட்டை எனக்கு ஒன்பது பாய்ண்டை நீட்ட , மனம் காமிக்ஸ் ஸ்பைரலை வாங்கவா அல்லது டீ சர்ட்டாவென குழப்ப , குட்டி டெக்ஸ் அசத்த ....காலனின் கானகம் உள் சித்திரமும் சரி , துவக்கமும் ஈர்க்க மனமெல்லாம் சந்தோசத்துடன் அதைத்தான் புரட்டினேன்.....சான்சே இல்லை சித்திரத் தரமும் , அதன் தாளின் தரமும் அசத்த டெக்சுக்கும் இதே தாள் ...இல்லை இல்லை....கறுப்பு வெள்ளைக்கு இதே தாள் அட்டகாசமாய் இருக்குமே எனும் ஏக்கம் மனதைத் தாக்க , சித்திரத் தரம் அப்படியே சதி வலையை புரட்டிய நினைவுக்குள் அழைத்துச் செல்ல தவறி இருக்காது என தங்களுக்காத் தெரியாது !
    மந்திரியார் பினனட்டை வடிவமைப்பு அட்டகாசம் , முன்னட்டையை சொல்லவே வேண்டாம்..... அட்டகாசம் .
    சார் உள்ள திருப்புகிறேன் நம்ம வடிவைப்பு ,அட்டைகளில் தூள் கிளப்பிய லக்கிய....உள் பக்கம் அந்த சிவப்பு நிற பக்கம் எப்பவுமே அசத்தல் , இதனையே தொடரலாமே என நினைத்தால் நீல வண்ணமும் அசத்துமே எனும் எண்ணம் சிதற....
    ஐனவரியோ அதிரடி மாதம் போலும் ....அலை கடல் அசுரர்கள் .....ஆஹா சீக்கிரமே கடல் கொள்ளையர்கள நம்ம காமிக்ஸ்ல....அடுத்து தோர்கள் , டெக்ஸ் என விசில் சத்தம் ஓயாமல் தொடருது .....அனைத்துக்கும் நனறிகள் சார்.....
    நிச்சயமா தூள் கிளப்பும் நம்ம பிரிட்டிஷ் காமிக்ஸ் என பட்சி ராஜா முழங்க விடை பெறுகிறேன்.....அருமை சார் அனைத்துமே !

    ReplyDelete
  28. கானகம் எனும் வார்த்தையே கவர்ச்சிதான்.....காலனின் கானகம்கிற தலைப்பு அசத்தாம போகுமா என்ன/னை

    ReplyDelete
  29. சார் ஞாயிறு பதிவுக்காக.......

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு நாலாய் புக்குகள் புதுசாய் உள்ள போது- அவற்றைப் பற்றி நீங்கள் எழுத, நான் வாசிக்கும் வேளை அல்லவா இது கவிஞரே ?

      Delete
    2. அதுக்கு புத்தகம் கைக்கு வந்திருக்கனும் ஆசிரியரே...

      Delete
    3. கோட்டை விடுவது ST யா ? DTDC யா ? அல்லது இருவருமேவா ?? புரியலையே....

      Delete
  30. இந்த வருட பெஸ்ட் அட்டை ஆக்சன் ஸ்பெசல்தான்

    ReplyDelete
    Replies
    1. ஹை ! இது லேட்டஸ்ட்டா ?

      Delete
  31. கடந்த இரண்டு மூன்று பதிவுகளில் , எனது கருத்தை பதிவிட முடியாமல் கோகுலாண்டவர் சதி பண்ணி விட்டார். இப்போதுதான் கடவுளருளால் சரியாகியது.

    ReplyDelete
    Replies
    1. சார்..கூகுளாண்டவருக்கும், கோகுலாண்டவருக்கும் வித்தியாசம் உண்டு !!

      Delete
  32. நேற்றே புத்தகங்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்தால் வரவில்லை. இன்று ஞாயிறு என்பதால் டெலிவரி கிடையாது. அடுத்த முறையாவது புத்தகங்களை அனுப்பும் போது புதன் வியாழன்கிழமைக்குள் அனுப்புகிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள் சார்!

    ReplyDelete
  33. முதல் புரட்டலில் அனைத்து இதழ்களும் நிறைவு சார்,
    மந்திரியார்,டெக்ஸ்,லக்கி லூக் அட்டைப்படங்கள் கலக்கலாக அமைந்துள்ளது.
    லாயல்டி பாயிண்ட் விவரங்கள் தாண்டிய அட்டை வித்தியாசமான முயற்சி.

    ReplyDelete
  34. ஆசிரியரும் இங்கேயே ரவுண்ட் அடிச்சுட்டு இருக்காரு ...

    அப்ப இன்னிக்கு பதிவு இல்லையா..:-(

    ReplyDelete
  35. அடேங்கப்பா ...இந்த வருட இறுதி மாத பொக்கிஷ பெட்டிக்கு சுத்தி போடுங்க சார் முதல்ல..அனைத்து இதழ்களின் அட்டைப்படமும் அவ்வளவு அட்டகாசம்.சும்மா பட்டையை கிளப்புகிறது.அதுவும் ரோஸ் கலர் பிண்ணனியில் டெக்ஸின் கம்பீர உருவமும் ,பின்பக்க படுக்கை வச அட்டைப்படமும் வைத்த கண் வாங்காமல் பார்க்க சொல்கிறது.மேலும் அடுத்த வருட முழு அட்டவனையையும் இதழில் வெளிவந்துள்ளது சிறப்பு.சந்தா இல்லாத நண்பர்களுக்கு அந்த விளம்பரங்களே சர்ப்ரைஸ் ஆக கூதுகலிக்க வைக்கும்.

    டெக்ஸ் இதழ் அப்படி எனில் "லக்கி கிளாசிக்" அட்டைப்படங்களும் ,தரமும் "வாவ்" ரகம் .

    மதியில்லா மந்திரியின் அட்டைப்படமோ இதுவரை வந்த மந்திரி கதைகளின் அட்டைப்படத்தை "என்ன " என்று கேட்க வைக்கிறது.


    இவைகள் இப்படி என்றால் ஜம்போ காமிக்ஸ் இதழின் அட்டைப்படமோ அப்படியே பழைய நமது இதழ்களை அப்படியே கையில் கொண்டு வந்து கிடைத்தது போல ஒரு அட்டகாசம் .( அட்டைப்படத்தின் ஒற்றை கண் ஜாக்கின் முகம் தெளிவுற முழுமையாக இருந்திருந்தால் இன்னும் பட்டையை கிளப்பி இருக்கும் ) ஆக்‌ஷன் ஸ்பெஷலின் இதழை பிரித்தால் அந்த சித்திரங்களும் ,தாள்களின் தரமும் அப்படியே பழைய பொக்கிஷங்கள் இப்பொழுது புதிதாய் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி உள்ளது .அதுவும் பழைமையான இதழ் பெரிய அளவில் புரட்டி பார்க்கவே அவ்வளவு ஆனந்தம்.இப்பொழுது வரை இதழ்களை ரசிப்பதிலியே சென்று விட்டதால் இனியே அந்த உலகிற்குள்....

    ReplyDelete
  36. இன்னிக்கு பதிவு உண்டா இல்லையா சார்??

    ReplyDelete
  37. இன்றைக்கு பதிவு இல்லையென நினைக்கிறேன்.

    ReplyDelete
  38. மந்திரி

    மந்திரிச்சி விட்ட மாதிரி விண்வெளிக்கு போறாரு பாருங்க .....

    "இஸ்ரோ" ல்லாம் ச்சும்மா புஸ்ரோ...
    நமுத்துப்போன பட்டாசு லேட்டா வெடிக்கும்போது அது மாதிரி..,

    லேட்டா வெடிச்சாலும் லேட்டஸ்டாக விண்"வெளிக்கி" போறாரு கலீபாவ கவுக்கும் நாமோடி.....

    ஹைலைட் மந்திரி வீட்டு ப்ளான் ட்ராயிங் ....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்மந்திரி டிராயிங் மாஸ்டர் PG diploma ....... சூப்பரு....


      என்னத்தயோ படம் வரைஞ்சு...
      எல்லாத்தையும் கிழிக்கிறாரு....

      Delete
    2. பஸ்ஸுல படிக்கிறப்போ சிரிச்சு குலுங்கினா...
      பக்கத்து சீட் பயணி ஙே....ஙேங்ஙேங்ஙேஏ

      Delete
  39. டியர் எடிட்டர்

    ஜனவரிக்கு ஜம்போ உண்டா? பொங்கல் விடுமுறைக்கு உதவுமே!

    ReplyDelete
    Replies
    1. ஜெரம்யா வருகிறார்.

      Delete
    2. ஜனவரியில் பட்ஜெட் ஏற்கனவே கொஞ்சம் தூக்கல் சார் !

      தோர்கல் டிரிபிள் ஆல்பம் - ரூ.250

      பராகுடா - அலைக்கடலின் அசுரர்கள் - ரூ.250

      TEX - சாத்தானின் சீடர்கள் - ரூ.135

      So ஜம்போவும் இணைந்திடும் பட்சம், கடைகளில் வாங்கிடுவோர் இன்க்கி -பின்க்கி-பான்க்கி போட்டு எதையேனும் skip செய்திடக்கூடும் !!

      ஜெரெமியா பிப்ரவரிக்கு !

      Delete
  40. Jumbo தரம் சூப்பர். ஆனால் கதைகள் கவரவில்லை.
    ஒரு பக்கம் இரண்டு பக்கம் கதைகள் முடிந்து விடுகிறது.
    மொத்தத்தில் உப்பு சப்பில்லாமல் உள்ளது.
    பிரிட்டிஷ் வேண்டாம் சார்.

    ReplyDelete
  41. மூன்றில் முன்னேற்றம் கண்ட ஜம்போ நாளில் சற்று சருக்குவது போல தெரிகிறது சார்.

    ReplyDelete
  42. புத்தகம் கையில் கிடைக்க நான்கு நாள் ஆகின்றது பெங்களூரில் ..அதற்குள் ஆர்வ மிகுதியால் நண்பர்கள் கதையைப்படித்துவிட்டு விமர்சனம் செய்கிறேன் என்று கதைமுழுவதையும் சொல்லிவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வீரையன் @ எப்படி இருக்கிறீர்கள்?

      Delete
  43. பாஸ் புக் சந்தா பாயிண்ட் பரிசுகள் அழகு.இதனை பற்றிய ஆலமரத்து பஞ்சாயத்துகள் மெயில் முகவரியில் மட்டுமே என்றாலும் ஒரே ஒரு கருத்து சார்....

    எனக்கு 15 பாயிண்ட் இருக்கு.அதற்கான பரிசு "சிங்கத்தின் சிறு வயதில் " கட்டுரை தொகுப்பாக இருந்தால் உடனடியாக அந்த பரிசை அனுப்புமாறு பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  44. மினி டெக்ஸ் போன முறை விட்ட பாயிண்டை இந்த முறை இணைத்து எடுத்து விட்டது அட்டகாசம்...


    *******


    கனவெல்லாம் கலீபா ஓகே ...


    ********

    ReplyDelete
  45. 1986 circa .. அப்போது ஒரு அலுவல் சம்பந்தமாக என் சித்தப்பா லண்டன் சென்று திரும்பியபோது ஒரு கற்றை tabloid சைசிலான இங்கிலாந்து காமிக்ஸ்கள் கொண்டுவந்தார் - என் கோரிக்கையின் பொருட்டு. இங்கு வந்திருந்த விச்சு-கிச்சு, ஜோக்கர் எல்லாம் வண்ணத்தில் - மற்றும் சில adventure கதைகள் கருப்பு - வெள்ளையில் ஏ4 சைசில். நம்மூரிலும் இந்த சைசில் வந்தால் எப்படி என்று வியந்ததுண்டு - பின்னர் மினி லயனில் சம்மர் ஸ்பெஷல் அப்படி வந்தது.

    இந்த ஜம்போ இதழ் பார்த்ததும் அந்த nostalgia ... அந்த 13ம் நம்பர் தளத்தை தவிர மற்றவற்றை வாசித்து விடுவேன். இதை இப்படியே வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனது personal favorite 13 வது.தளம் தான் சார் ! உங்களுக்கு அது ரசிக்காது போனது வியப்பே !

      Delete
    2. Not like that - I do not read horror stories - too much negative input. My comment was not on the story which might have been good. I just avoid it.

      Delete
    3. 13 th floor ஹாரர் கதையே கிடையாது சார் ! முயற்சித்துப் பாருங்களேன் - பிடிக்காது போகாது !

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Good some one is there to appreciate British stories. It would be better if hi tech readers magnanimously tolerated and did not say no to such stories please.

      Delete
  46. நோ ஸ்பாயிலர்ஸ்....!!!
    மினி டெக்ஸ் !!! அசர வைக்கும் கடைசி பேனல்!!!
    இவ்வகை கதாசிரியர்கள் மெய்யாகவே கொண்டாடப்படவேண்டியவர்கள் ...
    சந்தா செலுத்தவேண்டியதன் அவசியத்தை இவ்வகை கதைகள் பறைசாற்றுகின்றன ..............
    மூன்று மாதம் கழித்து படிக்க முடியும்தான் ..ஆனாலும் வந்தசூட்டில் படிக்கும் அந்த அனுபவம் கைவிட்டு போகும் ....


    diminutive in stature but colossal in effect...

    ReplyDelete
    Replies
    1. கடைசி பிரேம் வரைக்கும் ...அதுவும் அந்த ஒற்றை sound effect வரைக்கும் கதையின் மையத்தை மறைத்திடச் சாத்தியமாவது நிஜமாய் ரொம்பவே ஸ்பெஷல் பாணி தான் சார் !

      Delete
  47. நோ ஸ்பாயிலர்ஸ்....!!!
    காமிக்ஸ் வானிலை அறிவிப்பு !!!!
    லக்கி லூக்...மேடையில் ஒரு மன்மதன் & அதிரடி பொடியன்
    கந்தக பூமியான சிவகாசியில் உருவாகியுள்ள இந்த கார்ட்டூன் புயல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் பெங்களூரூவிலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தேசங்களில் ஓரிரு இடங்களிலும் கனத்த மற்றும் அதி கனத்த சிரிப்பு மழையை ஏற்படுத்த வல்லது ..
    முதல்முறையாக இப்புயலை எதிர்கொள்பவர்கள் சிரிப்பினால் ஏற்படும் வயிறு வலிக்கு முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் ...

    ReplyDelete
  48. I read all books of this month.
    My raking is as follows:-
    1. Jumbo
    2 Lucky classics.
    3 Mathiyila Manthiri
    4 Kaalanin Kaanagam.
    5 Yaarintha marana thoothan?
    What the motive behind the Father to kill the Seneter page 28?

    ReplyDelete
  49. Hi all 😊
    Why no new post from editor this sunday

    ReplyDelete
  50. ஹாய்..
    டிசம்பர் மாதத்துக்கான சந்தா இதழ்கள் இன்று காலைதான் சரியாக சொல்வதானால் (15 நிமிடங்களுக்கு முன்பு) கிடைத்தது.
    முதல் பார்வைக்கு அட்டை படங்கள் அட்டகாச படங்களாய் மயக்கின.டெக்சின் பின் அட்டை "வாவ்"..
    ஆக்சன் ஸ்பெசல் உள்பக்கங்களில் அசர வைக்கிறது.கருப்பு வெள்ளையின் அழகும் புத்தக வாசனையுமாய் புரட்டல்களில் நகரும் பக்கங்களின் நேர்க்கோட்டு ஓவியங்கள் அழகு...
    ஸ்டேட் பேங்க் ஆப் காமிக்ஸ் என்று எதிர்பாராத பரிசும் எடியிடமிருந்து..
    வழக்கமாய் கேப்சன் போட்டிகளுக்கு மட்டுமே வருபவன் இதழ்களின் அழகால் இதயம் திறந்திருக்கிறேன்...
    நன்றி சார்..
    (பி.கு:சந்தேகம் ஒன்று:-
    ஏற்கனவே ஜம்போவுக்கு பணம் செலுத்தி புத்தகங்கள் வருகின்றன.மீண்டும் இப்போதே கட்ட வேண்டுமா?காலம் இருக்கிறதா?
    இரண்டு:-
    இவ்வளவு ஸ்பெசலாய் இதழ்கள்+ஆச்சர்ய பரிசென விவாதிக்க நிறைய இருந்தும் வெறிச்சோடிய தளம் எதனால்?

    ReplyDelete
    Replies
    1. முதல் பார்வைக்கு அட்டை படங்கள் அட்டகாச படங்களாய் மயக்கின.டெக்சின் பின் அட்டை "வாவ்"..
      ஆக்சன் ஸ்பெசல் உள்பக்கங்களில் அசர வைக்கிறது.கருப்பு வெள்ளையின் அழகும் புத்தக வாசனையுமாய் புரட்டல்களில் நகரும் பக்கங்களின் நேர்க்கோட்டு ஓவியங்கள் அழகு...
      ஸ்டேட் பேங்க் ஆப் காமிக்ஸ் என்று எதிர்பாராத பரிசும் எடியிடமிருந்து..
      வழக்கமாய் கேப்சன் போட்டிகளுக்கு மட்டுமே வருபவன் இதழ்களின் அழகால் இதயம் திறந்திருக்கிறேன்...
      நன்றி சார்..


      ######


      வரிக்கு வரி உண்மை...தொடர்ந்து வாருங்கள்..

      *********

      இவ்வளவு ஸ்பெசலாய் இதழ்கள்+ஆச்சர்ய பரிசென விவாதிக்க நிறைய இருந்தும் வெறிச்சோடிய தளம் எதனால்?


      #####


      இதழ்களில் மூழ்கியது ஒரு காரணம் எனில் ஆசிரியரின் புது பதிவு வழக்கம் போல் வருகை தரும் அதில் எண்ணங்களை பதியலாம் என்று இன்னமும் காத்து கொண்டிருக்கும் காரணமும் ஒன்று.

      Delete
    2. கொஞ்சமே கொஞ்சமாய் எல்லோருக்கும் போர் அடித்துப் போயிருப்பதால் தான் இங்கே காற்று வாங்குகிறது ! தவிர, சில வருத்தங்கள்...சில கோபங்கள்..காரணமாயும் வருகைப் பதிவேடு உதை வாங்கியுள்ளது ! அதனால் தான் நானும் இந்த ஞாயிறுக்கு புதுசாய்ப் பதிவென்று காப்பி ஏதும் ஆற்றவில்லை !

      இதில் ஒளிவென்ன - மறைவென்ன தலீவரே ?

      Delete
    3. @ M.Vidya : ஜம்போ சீசன் 2 க்கு பணம் இப்போதோ - அப்புறமோ அனுப்புவது உங்கள் சாய்ஸ் தான் சார் ! You have time....

      Delete
  51. Wow bank passbook vaangitten..Enna naangalam...

    ReplyDelete
  52. Sir, one doubt. Is n't possible to avoid morphed pictures ? I m mentioning the pictures in ' The Action Special ' . Esp. the story Enthiran (originally published as Computer manithan in colour). Comparing to those pictures , these news ones have been morphed (because of computer?). I doubt all the stories must ve lost their shape sir. Apart from this The action special is a gift.

    ReplyDelete
    Replies
    1. Those are improved pictures sir..not morphed ! The current publishers have done their best to improve the art files..

      Delete
    2. Thank u sir. I said 'morphed', in the sense the pictures seem as if they slanted forward . By the way.....Fleetway stories are the best for ' gundu book ' ....like Deepawali malar, Kodai malar...etc., aren't they?

      Delete
  53. Replies
    1. இந்த கதையில் உள்ள மற்ற கதைகளை நாளை படிக்க வேண்டும்.

      மந்திரியார் எனக்கு பிடிக்க முக்கியமான காரணம் 8-10 பக்கங்களில் முடிந்து விடும், அதே நேரம் சிரிப்புக்கு உத்திரவாதம். இது போன்ற சிறிய கதைகள் குழந்தைகள் படிக்க அல்லது நாம் படித்து அவர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும்.

      Delete
    2. கனவெல்லாம் கலீபா:- முதல் பக்கத்தில் நமது மந்திரியார் விண்வெளியில் பறக்கிறார் ஏன் என்ற கேள்வியுடன் பக்கங்களை புரட்டினால் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கும் படங்கள் மற்றும் டயலாக் உடன் விடை கிடைக்கிறது. ஆம் வழக்கம் போல் மந்திரியின் கலீபா கனவு நிறைவேறாமல் பல்ப் வாங்குகிறார்.

      மந்திரியார் கலீபாவுக்கு வணக்கம் செலுத்தும் படம் நம்ப ஊர் அமைச்சர்கள் இறந்து போன தங்கள் தலைவிக்கு வணக்கம் செலுத்தும் முறையை நினைவுபடுத்தியது.

      கடைசி பக்கத்தில் நமது அரசியல் நிகழ்வுகளை வசனங்கள் மூலம் இணைத்தது பொருந்தவில்லை.

      எனது குழந்தைகள் இதனை என்னுடன் சேர்ந்து ரசித்து சிரித்தார்கள்.

      Delete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. டியர் எடி,

    சிங்கத்தின் சிறுவயதில் ஒரு புத்தகமாக வெளிவருவது, அதுவும் சந்தா இலவச பிரதியாக வருவது சிறப்பு...

    ஆனால் இது முழுமைடையாமல் சமீப காலத்தில் தொங்கலில் விடப்பட்டது இல்லையா??? தொகுப்பின் மூலம் அதை முடிக்க போகிறீரா??

    அப்படியே, கொஞ்சம் டிஷர்ட், காலண்டர் மற்றும் காஃபி மக் இவற்றிற்கான, சாம்பிள் காட்டினீர்கள் என்றால் முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்... :)

    ReplyDelete
    Replies
    1. தொகுப்பின் மூலம் முழுமையாக அந்த இதழ் வருமாயின் மிக சிறப்பு .அல்லது பாகம் ஒன்றாக முதல் தொகுப்பு வருமாயின் அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்தாவது மீண்டு (ம்) சி.சி.வயதில் தொடருமாயின் நன்று.


      ஆனால் எனக்கு மிக பலத்த சந்தேகம் .

      பரிசு இதழ் கட்டுரை தொகுப்பா அல்லது ஜம்போ முதல் இதழான சிங்கத்தின் சிறு வயதில் இதழா என்பது தான்..

      கட்டுரை தொகுப்பாக இருப்பின் (மட்டும் ) உடனே அனுப்பி வையுங்கள் சார்..என மீண்டும் நினைவுபடுத்துகிறேன்

      Delete
    2. //டிஷர்ட், காலண்டர் மற்றும் காஃபி மக் இவற்றிற்கான, சாம்பிள் காட்டினீர்கள் என்றால் முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்... :)//

      டி-ஷர்ட் சற்றே நேரம் எடுக்கும் சார் ; பாக்கி சமாச்சாரங்களை இம்மாதத்தினில் கண்ணில் காட்டி விடலாம் !

      Delete
  56. டெக்ஸ் இந்த முறை தோற்றத்தில் சிறிது வித்தியாசம் காட்டினாலும் அதை பற்றி பலமுறை ஆசிரியர் காரணத்தை விளக்கி விட்டதால் அது குறையாக தெரியவில்லை..ஒரு நேர்க்கோட்டு கதையாக பரபரவென சென்று எடுத்ததும் தெரியவில்லை ,முடிந்ததும் தெரியவில்லை.எனக்கு மிகவும் பிடித்தே இருந்தது. பிறகு ஏன் தயங்கினீர்களோ தெரியவில்லை சார்.என்ன சமீபகால அதிரடி திருப்பங்கள் ஏதும் இந்த சாகஸத்தில் இல்லை என வேண்டுமானால் சொல்லலாம்.அல்லது அந்த திருப்பங்களும் முன்னரே நாம் அறிந்து கொள்வதான கதைபோக்கு என வேண்டுமானால் சொல்லலாம்.என்னை கேட்டால் இந்த இதழுக்கான அட்டைப்படங்களே வாங்கிய காசுக்கு நியாயம் செய்து விட்டது போல ..அத்தனை நேரம் ரசித்து ,ரசித்து பார்த்தேன்.

    எனது மதிப்பென்

    7.5 \ 10

    ReplyDelete
  57. சார்! Loyalty Points பாஸ்புக்கிலுள்ள பாய்ன்டுகளை அப்படியே 2019-க்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? மெயிலில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டுமா? அல்லது தெரிவிக்காமல் இருந்தாலே அந்த பாய்ன்டுகள் தானாகவே 2019-ல் சேர்ந்துவிடுமா?

    ReplyDelete
    Replies
    1. மௌனமே ஒரு மொழி தானே ஜகத் !

      Delete
  58. ஆக்ஷன் ஸ்பெஷல் சைஸ், பேப்பர், தரமாக உள்ளது சார். என்ன 13 வது தளம் கதை செமையாக உள்ளது. மற்ற இரண்டு கதைகளும் சிறுசிறு கதைகள் என்பதால் கொஞ்சம் சுமாராகத்தான் உள்ளது. அடுத்தமுறை பிரிட்டிஷ் கதைகளை மூன்று முழுநீளக் கதைகளாக களம் இறக்கிப் பாருங்கள். மூன்றுமே வெவ்வேறு கதைக்களமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சயின்ஸ்பிக்ஷன், ஹாரார், டிடெக்டிவ், சாகசம், வார் கதைகள் ஏதாவது மூன்று சிறந்த கதைகளாக தேர்வு செய்து போட்டு பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Fleetway கதைகள் புனர்ஜென்மம் எடுத்து வருகின்றன என்றாலும், அவற்றுள் எவற்றையெல்லாம் Rebellion தேர்வு செய்கின்றனவோ - அவற்றுள்ளிருந்தே இப்போதைக்கு நமது தேர்வுகளை அமைத்திட இயலும் ! So அவர்களது சிறகுகள் விரியும் தருணமே நமக்கான options களும் கூடிடும் சார் !

      Delete
  59. ஜம்போ காமிக்ஸ் - ஆக்‌ஷன் ஸ்பெஷல்..


    இதழை பார்த்ததும் ,உள்ளே சித்திரங்களை பார்த்ததும் ,அந்த பழைய பாணி தாள்களில் இதழை ரசித்ததும் உண்மையோ உண்மை என்பது போல இதழை கண்டவுடன் மிக பழைமையான நமது ஒரு அரிய இதழ் புத்தம் புதிதாய் கிடைத்தது பல ஓர் ஆனந்த எண்ணம் .இதழையோ ,தரத்தையோ கண்டிப்பாக குறை சொல்ல முடியாது .

    ஆ...ஆனால் ..


    இன்றைய காலகட்டத்தில் இந்த கதைகளை படிக்கும் பொழுது அன்று போலவே இன்றும் நம்மை மதிமயக்கும் என்றே நினைந்திருந்தது பொய்த்து விட்டது.ஒற்றைக்கண் ஜாக் சிறு சிறு கதைகளாக வந்ததாலியே ஒரு வித ஏமாற்றமோ என்ற எண்ணத்தில் இயந்திர மனிதனில் நுழைந்தாலும் அதே எண்ணப்பாடு .இவர்களுக்கு பதிலாக காரிகன் ,ரிப் போன்ற நாயகளின் வெளிவராத புது சாகஸங்களை இதே தரத்தில் வந்திருப்பின் ரசித்து இருப்பேனா என்னவோ.ஆனால் இம்முறை ஜம்போ சாரி சார்..


    இந்த மாத ஆக்‌ஷன் ஸ்பெஷலை படிக்கும் பொழுது ..

    "நான் வளர்ந்து விட்டேனே மம்மி " இந்த வெறும் பால் எல்லாம் வேண்டாம் என கத்த சொல்ல தோன்றுவது


    நல்லதா ..கெட்டதா ...


    தெரியவில்லை சார்.:-(

    ReplyDelete
    Replies
    1. //இந்த மாத ஆக்‌ஷன் ஸ்பெஷலை படிக்கும் பொழுது ..

      "நான் வளர்ந்து விட்டேனே மம்மி " இந்த வெறும் பால் எல்லாம் வேண்டாம் என கத்த சொல்ல தோன்றுவது


      நல்லதா ..கெட்டதா ...


      தெரியவில்லை சார்.:-(//

      எடிட்டர்,நீங்கள் இருவருக்குமே இப்படி வெளிப்படையாக எழுதுவது நல்லதுதான் தலீவரே!!

      //இன்றைய காலகட்டத்தில் இந்த கதைகளை படிக்கும் பொழுது அன்று போலவே இன்றும் நம்மை மதிமயக்கும் என்றே நினைந்திருந்தது பொய்த்து விட்டது.//

      இந்த வரிகளிலேயே " point already taken". :)

      Delete
    2. தலீவரே....இங்கே ஆச்சர்யப்பட வைக்கும் சேதி ஒன்றே ஒன்று தான் !! அது - நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என்பது மாத்திரமே !!

      Delete
    3. தலைவரே...

      உங்களுக்கு ஒரு கதை பிடிக்கலைங்கறதை யார் மனதும் புண்படாத மாதிரி நயமா எடுத்து சொன்ன உங்க ஸ்டைலுக்கு நான் அடிமை

      Delete
  60. Editor Sir: ஜனவரி புத்தகங்கள் டிசம்பர் கடைசி வாரத்தில் advance ஆக, நீண்ட விடுமுறை நாட்கள் காரணமாக, வெளிவர வாய்ப்புள்ளதா? :-) Thanks.

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; கடைகளின் விற்பனைகளுமே நமக்கு அத்தியாவசியமானவை எனும் போது - அவர்கட்கு அதற்குரிய அவகாசம் தரும் பொறுப்பும் நமக்குண்டு ! So புத்தாண்டின் இதழ்கள் புத்தாண்டிற்கே !!

      Delete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. மதியில்லா மந்திரி..!

    மந்திரியோட ஒவ்வொரு கதையுமே சீரியஸாகவே குபீர் சிரிப்பை வரவழைக்கிறது..!
    கடைசியில் பல்பு வாங்கப் போகிறார் என்றுதெரிந்துமே மேற்ப்படி மந்திரியாரைப் போலவே அந்த பதபதப்பையும் அவஸ்தையையும் நமக்குள்ளேயும் கடத்துவதே மந்திரியாரின் ஸ்பெஷாலிட்டி..!

    கலீபா குழந்தை உள்ளம் கொண்டர் என்பதாலேயே மந்திரியின் உள்ளக்கிடக்கை, தவிப்பை, இலட்சியத்தை உணரமுடியவில்லை போலும்..!

    கலீபாவின் இடத்தில் நானிருந்தால், சிரமேற்கொண்டு சிரமப்படும் மந்திரியாரிடம்

    'இந்தாப்பா..! என்னோட ராஜ்ஜியத்தை நீயே வச்சிக்க.!ஒரு வருஷம் ,ரெண்டு வருஷம் இல்ல 987654321 நீயே கலீபா 'னு சாசனம் எழுதிக் கொடுத்திடுவேன்.

    மந்திரியார் கஷ்டப்படுவதை என்னால பாக்க முடியல....😢😢😭😭😭

    இதைப் பத்தி ஆசிரியர் மோரிஸ் அவர்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு லெட்டர் எழுதப் போறேன்....!

    ReplyDelete
  63. கலீபாவின் இடத்தில் நானிருந்தால், சிரமேற்கொண்டு சிரமப்படும் மந்திரியாரிடம்

    //'இந்தாப்பா..! என்னோட ராஜ்ஜியத்தை நீயே வச்சிக்க.!ஒரு வருஷம் ,ரெண்டு வருஷம் இல்ல 987654321 நீயே கலீபா 'னு சாசனம் எழுதிக் கொடுத்திடுவேன்.//

    அவ்ளோதான் கதை முடிஞ்ச் போச்!!

    மதியில்லா மந்திரி இனிமேட்டு வேண்டாம்னு குறியீடு ஏதாவது வச்சிருக்கீங்களா ?? :-)

    //இதைப் பத்தி ஆசிரியர் மோரிஸ் அவர்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு லெட்டர் எழுதப் போறேன்...//

    மதியில்லா மந்திரி ஆசிரியர் மோரிஸ் அல்ல..

    RENE GOSCINNY...முதல் பக்கத்துலேயே போட்டிருக்கே...

    ReplyDelete
  64. ///மதியில்லா மந்திரி ஆசிரியர் மோரிஸ் அல்ல..

    RENE GOSCINNY...முதல் பக்கத்துலேயே போட்டிருக்கே.///

    அட.. ஆமாம்.
    நான்தான் சரியா கவனிக்கவில்லை.
    Sorry sir.!


    ///மதியில்லா மந்திரி இனிமேட்டு வேண்டாம்னு குறியீடு ஏதாவது வச்சிருக்கீங்களா ?? :-)///

    இதுக்கு இப்படி ஒரு எதிர்மறை சிந்தனை வரும்னு நினைக்கவில்லை சார்.
    மந்திரி என்னோட ஃபேவரைட் ..!


    ///அவ்ளோதான் கதை முடிஞ்ச் போச்!!///

    கதையே இனிதான் ஆரம்பிக்குது.அதாவது கலீபாவான மந்திரி ,அதில் உள்ள டார்ச்சரைத் தாங்காமல் மீண்டும் மந்திரி எனும் நாமகரணத்திற்காக போடும் குட்டிகரணமாக இருந்தால் எப்படி இருக்கும்?(கற்பனை)

    அதாவது மந்திரி 2.0 இல்லைன்னா
    மந்திரி 3.0

    ReplyDelete
    Replies
    1. //இதுக்கு இப்படி ஒரு எதிர்மறை சிந்தனை வரும்னு நினைக்கவில்லை சார்.
      மந்திரி என்னோட ஃபேவரைட் ..!//

      ச்சும்மா...!!! டீஸிங்..!!!

      //கதையே இனிதான் ஆரம்பிக்குது.அதாவது கலீபாவான மந்திரி ,அதில் உள்ள டார்ச்சரைத் தாங்காமல் மீண்டும் மந்திரி எனும் நாமகரணத்திற்காக போடும் குட்டிகரணமாக இருந்தால் எப்படி இருக்கும்?(கற்பனை)//


      ஹா..ஹா..ஹா..

      ம.மந்திரி : கலீபாவா இருக்கறது ஒரே கலீஜ்பா...!!

      Delete
  65. லக்கி க்ளாசிக்...

    இரு கதைகளுமே படித்த கதைகள் மட்டுமல்ல கையில் வைத்திருக்கும் இதழ்களும் கூட .ஆனாலும் இம்மாத அட்டகாச தரத்தில் பெரிய அளவில் கண்ணை கவரும் அட்டைப்படத்தில் இதழ் கைகளில் தவழும் போது படிக்காமல் இருக்க முடியுமா..மேடையில் ஒரு மன்மதன் கதை ஒரு நாள் அதிரடி பொடியன் அடுத்த நாள் என்ற எண்ணத்தில் தான் இதழை படிக்க ஆரம்பித்தது.ஆனால் இரு கதைகளையும் ஒரு சேர படித்து முடித்தவுடன் தான் இதழை கீழே வைக்க தோன்றியது.


    லக்கி க்ளாசிக் ஒரிஜினல் க்ளாசிக்.....

    ReplyDelete
  66. நான் ஆவலுடன் எதிர்பார்த்த மர்ம மண்டலம் ஏமாற்றவில்லை..எந்திரன் ஏகப்பட்ட கதைகளுடன் மறுபிரவேசம் செய்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார் .ஒற்றைக்கண் ஜாக் படித்த நினைவில்லை.கதைகளும் சோடைபோகவில்லை.மனித எரிமலை கதைக்கு வரைந்த படங்கள் போலவே இருந்தது தனி உவகை ஊட்டியது .ஒரு இருபத்துஐந்து வருடங்களுக்கு முன் மீண்டும் அந்த கால கட்டத்திற்கு அழைத்து சென்ற பாதிப்பு....பதிப்பு ரப்பர் மண்டையன் ரிக்கி பலமுக மன்னன் ஜோ..ர் இந்த முறை ஜம்போ என்னுடைய மார்க் முந்நூறு ..நூற்றுக்கு ..இரும்புக்கை நார்மனை எதிர்பார்க்கிறேன் ..ஜான் சில்வரும்தான் ..வருவார்களா?

    ReplyDelete
  67. லக் கி கிளாசிக்ஸ் சூப்பர் ..இரண்டு கதைகளுமே படித்த நினைவில் இல்லாதது கதைக்கு தனி சுவை ஊட்டியது
    வண்ணங்கள் கண்ணைப் பறித்தன.

    ReplyDelete
  68. காலனின் கானகம் அருமையாக இருந்தது .கதை நச் என்று,அனாவசிய இழுவை இல்லாமல் இருந்தது.அதைவிடவும் குட்டி டெக்ஸ் யார் அந்த மரண தூதன் தீம் சூப்பர் .ஐந்து பேர்.ஒரு கொலைகாரன் .கொலை நடக்கும் முன் தடுக்க வேண்டும்...கட்ட கடைசியில் டுமீல் சப்தம் கேட்க யார் யாரை சுட்டது ?நம் கற்பனைக்கே விட்டுவிட்ட கதாசிரியரின் திறமை நல்ல முத்தாய்ப்பு. மொத்தத்தில் டிசம்பர் இதழ்கள் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் ரகங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. //கட்ட கடைசியில் டுமீல் சப்தம் கேட்க யார் யாரை சுட்டது ?நம் கற்பனைக்கே விட்டுவிட்ட கதாசிரியரின் திறமை நல்ல முத்தாய்ப்பு. //

      ஒரு கொசுறுச் சேதி சார் :

      அந்தக் கடைசி பேனலில் "டுமீல்" சத்தமானது நமது கைவண்ணமே ! ஒரிஜினலில் அது கிடையாது ! அந்த ஒற்றைக் குறியீடே நமக்கு கதை புரிய உதவிடும் என்று நினைத்தேன் ; so டுமீல் !

      Delete
    2. அந்தக் கடைசி பேனலில் "டுமீல்" சத்தமானது நமது கைவண்ணமே ! ஒரிஜினலில் அது கிடையாது ! அந்த ஒற்றைக் குறியீடே நமக்கு கதை புரிய உதவிடும் என்று நினைத்தேன் ; so டுமீல் !

      #####


      அருமை சார்..அந்த டூமீல் சத்தம் இல்லையெனில் கதையின் முடிவை கண்டிப்பாக ( என்னால் ) உணர்ந்திருக்க முடியாது.:-)

      Delete
    3. //அருமை சார்..அந்த டூமீல் சத்தம் இல்லையெனில் கதையின் முடிவை கண்டிப்பாக ( என்னால் ) உணர்ந்திருக்க முடியாது.:-)//

      # me too..

      Delete
  69. Hi all :

    நமது YouTube சேனலில் டிசம்பர் இதழ்களின் preview :

    https://youtu.be/DXWvbsvb_28

    ReplyDelete
  70. Priyatels!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!

    ReplyDelete