Sunday, May 14, 2017

ஒரு அரையாண்டுத் தேர்வு !

நண்பர்களே,

ஞாயிறு வணக்கங்கள் ! வேறொரு time zone -ல் நானிப்போது இருக்க ; வரும் வழியில் மாங்கு மாங்கென்று எழுதிய பக்கங்களை  ஊருக்குப்  போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பி, டைப்படித்துத் திருப்பி அனுப்ப கோரியிருக்க, நம்மவர்கள் கோட்டையும், குறட்டையும் விட்டுக் கொண்டிருக்க ; பாதித் தூக்கத்தில் எழுந்து அவர்கள் குடலை நான் உருவிய பிழைப்பாகியிருக்க   - அடுத்த 30 நிமிடங்களுக்குள் பதிவோடு ஆஜராகியிருப்பேன் guys !! Sorry !!

------------------------------------------------------------------------------------------------------------

வழக்கமாய் பதிவுகளை டைப்பும் போது வீடோ; அலுவலக அறையோ நிசப்தமாகவே இருக்கும் - என் மைண்ட் வாய்ஸே எனக்குக் கேட்கக் கூடிய விதத்தில்! ஆனால் அவ்வப்போது எங்கேயாவது யாத்திரைகள் போகும் வேளைகளில் தான் எத்தனை பெரிய மாற்றம்! சுற்றுமுற்றும் பரபரப்பு... சட்டியும், பெட்டியுமாய் ஷண்டிங் அடிக்கும் மனிதர்களின் அவசரங்கள்; நம்மூர்களுக்கே உரிதான சத்த மேளாக்கள் என்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் வியாபித்துக் கிடக்கும் அந்தத் திருவிழாக் கோலத்துக்கு மத்தியில் எழுத முற்படும் போது தான் எத்தனை தினுசு தினுசான அனுபவங்கள்? ‘இந்தாள் என்ன பண்றார்?‘ என்ற குறுகுறுப்பில் கிட்டே வந்து எட்டிப் பார்க்கும் குட்டீஸ்; ‘ஓவரா பிலிம் காட்றானே?‘ என்ற விதப் பார்வைகளோடு பரிசீலனை பண்ணும் not so குட்டீஸ்; ‘மோட்டைப் பார்க்கிறான்... என்னமோ கிறுக்கி வைக்கிறானே முட்டைக்கண்ணன்?‘ என்ற புதிர் முகமெல்லாம் தெறிக்க முறைக்கும் ஆசாமிகள் என்றதொரு களேபர சூழலில் எழுதுவதும் ஒரு செம அனுபவமே! மண்டைக்குள் ஏதேனும் ஒரு சிந்தனை லேசாக ஓடத் தொடங்கும் நொடியில் மூன்று தெரு தள்ளிக் கேட்கக் கூடிய குரலில் “ஹலோாா!!” என்று செல்போன்களுக்குள் நம்மாட்கள் பிளிறுவதற்கும் சரியாக இருக்கும்! ஆனால் அத்தனையையும் மீறி நம் கனவு லோகத்தினுள் ஆழ்ந்திட முயற்சிப்பது – நமது மாடஸ்டி வெங்கடேஸ்வரன் சார் உதாரணம் காட்டுவது போல ‘சிந்தனை ஒருமுகப்படுத்துதலுக்கான‘ இளவரசியின் பயிற்சிக்கு ஒப்பானதாக இருக்கும்!

And டில்லியின் விமான நிலையத்தில் தேவுடா காத்துக் கிடக்கும் வேளைதனில் பேனாவைக் கையில் ஏந்திடும் போது அந்த சிந்தனைகளைக் கட்டி வைக்கும் கலையை அவசரம் அவசரமாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன்! அகன்ற கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே ராட்சஸ விமானங்கள், தத்தம் வயிறுகளுக்குள் கங்காரூக் குட்டிகளைப் போல இருநூறு-முன்னூறு பயணிகளைச் சுமந்து கொண்டு ‘சொய்ங்ங்க்க‘ என்று மின்னல் வேகத்தில் மேலெழும்புவதைப் பார்க்கும் போது- நமது நாட்களுமே அதே துரிதத்தோடு பறந்து செல்வதை உணர முடிந்தது! நடப்பாண்டின் அட்டவணையைப் போட்ட நினைவுகளே இன்னும் பசுமை குன்றாது மனதிற்குள் பளபளக்க- ஆண்டின் பாதிப் பொழுதைக் கடக்கும் தருணத்தில் இருப்பதை தலை சொல்கிறது! And இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்- காத்திருக்கும் பதினெட்டின் திட்டமிடல்கள் இறுதி செய்யப்பட வேண்டிய பொழுது புலர்ந்திருக்கும் எனும் போது- இது வரையிலான பயணத்துக்கொரு பின்திரும்புதலைத் தந்து பார்க்கத் தோன்றியது! 2017ன் முக்கால் பங்கு கடந்திருக்கும் ஒரு அக்டோபரில் அடுத்தாண்டின் schedule ஐ உங்களிடம் ஒப்படைக்கும் வேளையில் உங்களது பரிந்துரைகளைப் பெரிதாய் அமல் செய்ய நேரமிருக்காது என்பதால், உங்கள் உரத்த சிந்தனைகளுக்கு இந்த ஞாயிறைக் களமாக்க நினைத்தேன்! So here goes!

* ‘கதை ரகவாரியான சந்தாக்கள்‘ என்ற நிர்ணயம் நமக்குச் சமீப வரவே! லக்கி லூக்கையும், லார்கோவையும்; வில்லரையும், சிக் பில்லையும் ஒரே கட்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை வருஷமாய்ச் செய்து கொண்டிருந்தோம்! ஆனால் 2016 முதலாக முடிந்தமட்டிற்குக் கதை ரகங்களை வரிசைப்படுத்தத் துவங்கினோம்! தற்போதைக்கு ஆங்கில எழுத்துக்களின் முதல் ஐந்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்- தொடரும் ஆண்டும் கிட்டத்தட்ட இதே template-ல் தான் நடைமுறை இருந்திடுமென்று தோன்றுகிறது! எனது முதல் கேள்வியானது- சந்தா A –விலிருந்து! ட்யுராங்கோ; லார்கோ; தோர்கல்; ஜேசன் ப்ரைஸ்; கமான்சே; ஷெல்டன்; ஜானி; Lady S என்று அணிவகுக்கும் இந்தச் சந்தாவினில் இன்னும் யாருக்கு இடமிருந்தால் தேவலாம்? என்று கேட்கப் போவதில்லை! மாறாக- இதனில் யாரேனும் இல்லாதிருப்பின் மகிழ்வீர்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது! ஒட்டுமொத்தச் சந்தா எனும் போது- ‘விதியே!‘ என்று யாரையேனும் சகிக்க வேண்டி வருகிறதெனில் அவரைச் சுட்டிக் காட்டி எனக்கொரு சின்ன ஈ-மெயில் தட்டி விட்டால் அது பற்றி நிச்சயம் யோசிப்பேன்! Any வீட்டோடு மாப்பிள்ளைகள் உள்ளனரா- நமது சந்தா A-வில்?
* ‘சந்தா B‘ என்பதை விட, ‘சந்தா Tex‘ என்ற பெயரே இதற்குப் பொருத்தமாக இருக்கும் எனும் போது என் கேள்விகள் எல்லாமே இரவுக்கழுகாரைச் சார்ந்தே இருந்திடவுள்ளன!

1. ‘மாதமொரு டெக்ஸ்‘ வேண்டுமா? வேணாமா? என்று கேட்டு வைத்தால் ‘ஜோக்கர் ஸ்மர்ஃப் கூட என்னைப் பார்த்து இடிச் சிரிப்பு சிரிப்பான் என்பதால் அதனை நான் செய்யப் போவதில்லை! மாறாக என் கேள்வியே வேறு! டெக்ஸ் கதைகளுக்கு மத்தியினில் இயன்றளவு ஒரு variety தென்பட்டால் தேவலாம்! என்று எனக்குத் தோன்றியதன் பலனாய்- மஞ்சள் சட்டை மாவீரரின் பலவிதக் கதைகளைத் துளாவித் துளாவி வரவழைத்து வந்துள்ளேன்! ‘டாக்டர் டெக்ஸ்‘; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமில்லை‘; ‘ஒரு வெறியனின் தடத்தில்‘ என்பனவெல்லாமே அந்தத் தேடல்களின் பலன்களே! ஆனால் இவற்றுள் சில புஸ்வானங்களும் இல்லாது போகாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம் என்று எனக்குத் தோன்றுகிறது! So- மாற்றம்; முன்னேற்றம் என்ற கோஷம் நம்மவருக்கு அவசியம் தானா? என்ற கேள்விக்கு உங்கள் பதில்கள் என்னவாக இருந்திடும்? “பட்டாசு என்றால் அதகளமாய் வெடிக்கத் தான் வேண்டும்?‘ அதில் வித்தியாசமெல்லாம் நாங்க கேட்டோமா?“ என்பது உங்கள் அபிப்பிராயங்களெனில் ‘பளிச்‘ என்று பதிவு செய்யுங்களேன் folks? மாறாக- “ஒரே மாதிரியான கதை பாணிகள் அலுத்துப் போகுமே; இந்த வித்தியாசங்களெனும் எக்ஸ்ட்ரா நம்பர் நிச்சயம் தேவையே!” என்று நீங்கள் நினைத்தால்- அதையும் சொல்லிப் போட்டீர்களெனில் டெக்ஸின் 70-ம் ஆண்டின் கதைத் தேர்வுகளை ஒரு தெளிவோடு அணுகிட முடியும் எனக்கு!

2. டெக்ஸ் கதைகள் விதவிதமான சித்திர பாணிகளோடு வலம் வருவதை நாமறிவோம்! சில சமயங்களில் கதை நன்றாக இருக்கிறதென்ற நம்பிக்கையில் சற்றே சுமாரான சித்திர பாணி கொண்ட கதைகளைத் தேர்வு செய்து விட்டு- இறுதித் தருணத்தில் ‘இது டெக்ஸுக்கு ஒன்று விட்ட சித்தப்பா புள்ளை போலத் தெரியுதுடோய்‘ என்று உதறவும் செய்திருக்கின்றன! May be நல்ல கதைகளை நாமங்கே miss செய்திருக்கவும் கூடும் தான்! சொல்லுங்களேன்- எனது இந்தத் தேர்வு பாலிசியினை கொஞ்சமாய் தளர்த்திக் கொள்ளலாமாவென்று? குருமா மீடியமா இருந்தாலும் லெக்பீஸ் ஓ.கே.வெனில் உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது தற்போதைய எனது பாணிக்கே ‘ஜே‘ போடுவீர்களா?

3. டெக்ஸின் புராதனங்களுக்குள் பல முத்துக்களும் உள்ளன; சில கல்யாணி கவரிங் சமாச்சாரங்களும் உள்ளன என்பதை நாம் பார்த்துள்ளோம்! “அராஜகம் அன்லிமிடெட்” அதற்கொரு prime உதாரணம் என்பேன் ! டெக்ஸின் 1-200 கதைகளுக்குள் தேடிடும் ஆர்வத்தில் ‘டிக்‘ ஆன கதையிது! தற்போதைய எடிட்டர் போசெல்லியின் வருகைக்குப் பின்னே இது போன்ற oldies சற்றே நெருடலாய்த் தெரிவது எனக்கு மட்டும் தானா? அல்லது உங்களுக்கும் அந்த வேறுபாடுகள் தட்டுப்படுகின்றனவா? ஒட்டுமொத்தமாய் ‘புதுயுக டெக்ஸ்‘ பக்கமாய் சாய்ந்து / பாய்ந்து விடலாமா? Of course – புதுசெல்லாமே கிடையாதென்பதை நாமறிவோம் தான்; ஆனால் புது யுகப் பயணத்தின் திகிலை அனுபவிக்க முனைவோமா?

4. டெக்ஸின் சிங்கிள் ஆல்பங்கள் நம் யானைப் பசிகளுக்கு நிச்சயம் பக்கோடாக்களாய் மாத்திரம் இருந்திடக் கூடும் தான்! ஆனால் பட்ஜெட்டையும் சரி , பணிச் சுமைகளை balance செய்திடவும் சரி, இந்த 110 பக்க டெக்ஸ்  கதைகள் தவிர்க்க இயலா விஷயங்களாய் கண்ணில் படுகிறன்றன. இவற்றைப் படிக்கும் போது பெரிதாய் நெருடல்கள் இல்லையெனில் சந்தோஷமே! What say all?

5. ஏற்கனவே கேட்ட கேள்வியே ; ஆனால் இம்முறை சற்றே சீரியஸாகவே! மாந்த்ரீகம் சார்ந்த கதைகள்; மெஃபிஸ்டோ; எமா என்ற விட்டலாச்சார்யா ரக வில்லன்களை நாம் பரணிலேயே குடிவைத்துள்ளோம் ரொம்ப காலமாகவே! ஆனால் இத்தாலிய வாசகர்களோ- நம்மவர் தடித்தடியான வில்லன்களை சாத்துவதை ரசிக்கும் அதே வேகத்தோடே இந்தச் செவியில் புய்ப்ப ஹீரோக்களையும் ரசித்து வருகின்றனர்! நமக்கும் இது சாத்தியப்படுமா? அல்லது ‘சிவனே‘ யென்று தற்போதைய பாதைகளில் சவாரிகளைத் தொடர்வோமா?

- கார்ட்டூன் ‘C‘ சந்தா ! எனது ஆதர்ஷ சந்தா இதுவே என்பதில் ஐயம் லேது தான்! ஆனால் இது இன்னமும் நிறைய நண்பர்களுக்கு பொம்மைக் கதைகளே என்பதும் நிஜமே! கார்ட்டூன் அணிவகுப்பில் கல்தா தருவதாயின் அது யாருக்கெல்லாம் என் அபிப்பிராயப்படுவீர்களோ? All is well என்றால் சுகமே ! ஆனால் சில நெருடல்களைக் களைய அவசியம் இருப்பதாகத் தோன்றின் ஒரு பிரத்யேக மின்னஞ்சல் ப்ளீஸ்!!

- மறுபதிப்புச் சந்தா D: கேள்விகளே எனக்கில்லாத சந்தா இது! எடிட்டராகப் பேய் முழியும்; பதிப்பாளனாக சந்தோஷத் தாண்டவமும் ஆடச் செய்திடும் இந்தப் பழமைகளின் மறுவருகையை 2018லும் தொடரவே உள்ளோம்! But இவற்றை சற்றே மெருகூட்டிட என்ன செய்யலாம் என்பது பற்றி ஏதேனும் யோசனைகள் folks? Serious question guys !!!

- சந்தா E: எட்டு வைக்கக் கூடப் படித்திரா பிள்ளை என்பதால் கருத்துச் சொல்ல இது ரொம்பவே சீக்கிரம் தானே? So இது தொடர்பான எனது கேள்விகளை ஆண்டின் இறுதிக்கு வைத்துக் கொள்வோமே? தற்போதைய தொடக்கம் promising ஆக இருப்பதால் செல்லக் கூடிய தொலைவு ஏகமென்ற நம்பிக்கையோடு தொடர்கிறோம்!

- What else? ஏதேனும் ஒரு புதிய நாயகரை அறிமுகம் செய்வதாகயிருப்பின் உங்களது suggestion ப்ளீஸ்? ஒரேயொரு நாயகத் தேர்வு மட்டுமே allowed என்பதோடு; அது நமது ஆதிகாலத்து ஆசாமிகளாய் இருத்தலும் வேண்டாமே என்ற வேண்டுகோளும் ! பழைய ஆசாமிகளுக்கு சந்தா D-ல் உரிய சமயங்களில் வேளை பிறக்குமென்பதால் - அவர்களை உங்கள் தேர்வாக்கிட வேண்டாமே- ப்ளீஸ்?

ஜுன் மாதத்து இதழ்கள் பரபரப்பாய் ஒரு பக்கம் தயாராகி வருகின்றன! ரிப்போர்டர் ஜானியின் மாமூலான தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணி இம்முறையும் நம்மை ‘மெர்செல்‘ ஆக்கக் காத்துள்ளது ஒரு பக்கமெனில் போட்டிக்கு நிற்கக் கூடிய அத்தனை பேரையும்- ‘ஓரமாய்ப் போய் விளையாடுங்கப்பா!‘ என்று மூட்டை கட்டி அனுப்பத் தயாராகி வரும் டெக்ஸ் வில்லர் சாகஸம் மறுபக்கம்! ‘கவரிமான்களின் கதை‘ சித்திர பாணிகளலும் சரி, கதையிலும் சரி, பிரித்து போய்க் காத்துள்ளது! இந்த இதழை உங்களிடம் ஒப்படைக்க இப்போதே கை பரபரக்கிறது!! பற்றாக்குறைக்கு சந்தா E சார்பாய்க் காத்திருக்கும் அண்டர்டேக்கரின் அதகளமும்!! ஜுன் ஒரு த்ரில்லிங் வாசிப்பை வழங்கக் காத்துள்ளது என்ற மட்டிற்கு நடையைக் கட்டுகிறேன்! Bye all! See you around soon !

நம்மிடையே உள்ள அத்தனை தாயுள்ளங்களுக்கும் நமது அன்னையர் தின வாழ்த்துக்களும், வணக்கங்களும் உரித்தாகுக  !!

285 comments:

 1. பதிவு வரும்னு பாத்தா ப மட்டும் வந்திருக்கு!!!!

  ReplyDelete
 2. முழு பதிவு வரும்வரை போராட்டக்குழுவினர் தொடர்ந்து படுக்கையிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடுமை சார் இது.

   Delete
  2. ஹஹஹா!!!! விஜய் செம :-)

   Delete
  3. 'இந்தக் குறும்பதிவுக்கு ஒரு காலை மட்டும் படுக்கைக்கு வெளியே நீட்டிக்கலாமா?'னு கேட்டு மெஸேஜ் அனுப்புறது கொஞ்சம்கூட நல்லா இல்லை தலீவர் அவர்களே!

   Delete
  4. படுக்கை விரிச்சு படுக்கும் அளவிற்கு பதுங்குகுழி பெரிசா இருக்கோ
   .

   Delete
  5. பின்னே? 'முதுமக்கள் தாழி' அளவுக்குத்தான் இருக்கும்னு நினைச்சீங்களா?

   Delete
  6. வீட்டில் ஆள் இல்லை என்ற சந்தோசத்தை இங்கு போராட்டம் என்ற பெயரில் விஜய் செய்யும் காமெடி தாங்க முடியல்ல சாமி. Vijay rocks

   Delete
 3. வரும்போது குச்சி மிட்டாயும் குருவிரொட்டியும்,கூடவே புது புது கதைளும் வாங்கிட்டு வாங்க.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருதபாவும் கு.மி & கு.ரொ வாங்கிட்டுதான் ஃபிளைட் ஏறுவாராம்... ஆனா இறங்கும்போது எதுவுமே மிஞ்சியிருக்காதாம்!

   Delete
  2. எனக்காச்சும் கிடைக்குமா அண்ணே .

   Delete
  3. வாய்ப்பே இல்லை சிபி அவர்களே! ஏர்-ஹோஸ்டஸ் அழகா இருந்துட்டா வாயிலிருக்கும் கு.மி படுசீக்கிரமா கரைஞ்சுடுதாம்!

   Delete
 4. காலை வணக்கம் சார் & நண்பர்களே _/\_
  .

  ReplyDelete
 5. லயன்காமிக்ஸ் வாட்ஸ்அப் குரூப் உள்ளதா? நண்பரகளே நம்பர் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. இல்லையென்றுதான் நினைக்கிறேன் நண்பரே
   .

   Delete
  2. பிளாக்கில் குறைவான நண்பர்களே உள்ளனர் என்பது என் கருத்து.

   நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட இன்னும் அதிக வழிகளை எடிட்டர் சார் ஏற்படுத்த வேண்டும்.

   Delete
 6. தமிழில் டைப்படிக்க போன வாரம் உதவிய நண்பர்களுக்கு நன்றி.😄😄😄

  ReplyDelete
 7. அன்னையர் தின சிறப்பு பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் சார்
  .

  ReplyDelete
 8. சார் அவ்வளவுதானா
  .

  ReplyDelete
  Replies
  1. படிச்சிட்டு பதில் எழுத எனக்கு
   அரையாண்டு பிடிக்கும் போல இருக்கிறதே
   (குப்புற படுத்து யோசிக்கும் படம் ஒன்று )
   .

   Delete
 9. பதிவு அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது நண்பர்களே!

  ReplyDelete
 10. காலை வணக்கம். அப்போ பதிவு மாலையிலா? :-P

  ReplyDelete
 11. டெக்ஸின் பலதரப்பட்ட கதை பாணிகளில் மாயாஜால அமானுஷ்ய கதைகளும் ஒன்றிரண்டு தேவை சார்....! மந்திர மண்டலமும்,இருளின் மைந்தர்களும்,சைத்தான் சாம்ராஜ்யமும் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு அகலாது...!

  ReplyDelete
 12. Tex என்றால் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். Mefisto and yama கண்டிப்பாக வேண்டும் சார். நண்பர்களின் கோரிக்கை யும் அதுவாகவே இருக்கும்.

  ReplyDelete
 13. Morning Vijay sir,

  Sub:A It continue with present heroes as we have different heroes with different genre in other subscriptions.

  Sub: B (Tex) Sir please try different themes of tex like mapisto and yuma, you can always publish good stories with ordinary art work in B/w so that nothing is missed, please publish atleast one mega album of tex in a year.

  Sub:C (cartoon) some stories are dragging a bit, overall its good.

  Sub:D (Reprint) A single hero collection would be welcome, my first choice is archie the robot.

  Sub:E I would prefer some war stories rather than psychic themes.

  If possible Donald Duck stories can be published

  ReplyDelete
  Replies
  1. // Sub:D (Reprint) A single hero collection would be welcome, my first choice is archie the robot. //

   +1

   Delete
 14. இதே பாணியில் தொடர்வது நல்லது

  ReplyDelete
 15. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....!

  மறுபதிப்புகள் வேண்டாம் என்பதற்கு ஒரு சந்தா பிரிவு இருக்கிறது.கி.நா.வேண்டாம் என்பவர்களுக்கும் ஒரு சந்தா இருக்கிறது.அது போல கார்ட்டூன் வேண்டாம் என்பவர்களுக்கான சந்தாவை அடுத்த வருடம் வழங்க இயலுமா...?

  A+B+D+E (or) A+B+E

  ReplyDelete
  Replies
  1. சரவணா நீங்களா இப்படி. ஈரோட்டில் பேச்சு வார்த்தை நடத்திக்கலாம்

   Delete
  2. எனக்கும் கார்ட்டூனில் ஒரு சில கதைகள் பிடிக்கவில்லைதான்.அந்த பிடிக்காத கதைகள் குட்டீஸ்களுக்கு ரொம்ப ,ரொம்ப பிடிக்கிறது.!

   Delete
 16. சந்தா D அடுத்த வருட புத்தகங்களை இணைத்து (இன்னும் ஓரு 7-8 பாக்கி இருக்குமா) ஒரு ஹார்டபவுண்ட் final celebratory இதழாக ஜனவரியில். அல்லது இதன் வேறு பரிமாணமாக பழையவர் நான்கு பேர் இணைந்த காம்போ இதழ்கள் இரண்டோ அல்லது மூன்றோ ... as a final act !

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகிறேன் ...:-)

   Delete
  2. ஆமா சீக்கிரம் இந்த மும்மூற்த்திகளை முடிங்க, அப்பதான் மற்ற மறுப்பதுப்புகளுக்கு வழி கிடைக்கிம் ;)

   Delete
  3. V Karthikeyan, that's the idea behind the request ;-)

   Delete
 17. மறுபதிப்பு வெளியீட்டில் கொஞ்சம் ஸ்பெஷலாக முயற்ச்சிக்கலாமே சார் மாயாவி டைஜஸ்ட்,காரிகன் டைஜஸ்ட்,விங்-கமாண்டர் ஜார்ஜ்,சார்லி,இரட்டை வேட்டையர்,மாண்ட்ரேக்,ரிப் கிர்பி இவர்களின் 4-5 சூப்பர் ஹிட்டான கதைகளை மட்டும் மேற்கண்ட தலைப்புகளில் வெளியிடலாமே சார்.ஏனெனில் புத்தகத்திருவிழாக்களில் இவர்களையும் தேடும் வாசகர்கள் உண்டு.(நானும்தான்)

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகிறேன்....:-)

   Delete
  2. சந்தா D தான் நினைச்சு பார்க்கவே பயந்து வருது.steelclow, spider,larance னு சொன்னாலே தலை சுத்தல்தான்;புற முதுகு தெரியுதுனா பாருங்களே!.நண்பர் மகேஷ் குமார் சொன்னது போல் மாண்டிரெக், மாயாவி,விங்கமாண்டர் ஜார்ஜ் ,காரிகன்'ரிப்'சார்லி'இரட்டை வேட்டையர்னு குறைந்த பட்சம் நான்கு சூப்பர் ஹிட் .கதைகளாக முன்பதிவுகளுக்கான limit print runs முறையில் வெளியிடலாம்.a + b +c + e சந்தாக்கள் o.k. ரகங்கள்.இதிலையும் ஒரு சில கதைகள் சுமார் மூஞ்சி குமாரா செதப்புது.ஸ்டீல் களாவ்,ஸ்பைடர்,டேவிட் கதைதான் வேண்டும் என்பவர்களுக்கு அதிலேயும் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு கதைகளாக முன்பதிவுகளுக்கான limit printல இதே தடத்தில் வெளியிடலாம்.இரத்த படலத்தை c.b.f ல் ஒப்படைத்து விட்டு முடிவு செய்வோம்.தன்னிறைவான மாதம் முழுவதும் போதுமான வெளியீடுகளாக காமிக்ஸ் இல்லை என்பதே குறை.

   Delete
  3. // மாண்டிரெக், மாயாவி,விங்கமாண்டர் ஜார்ஜ் ,காரிகன்'ரிப்'சார்லி'இரட்டை வேட்டையர்னு குறைந்த பட்சம் நான்கு சூப்பர் ஹிட் .கதைகளாக //

   +1111

   Delete
 18. சந்தா A –விலிருந்து! ட்யுராங்கோ; லார்கோ; தோர்கல்; ஜேசன் ப்ரைஸ்; கமான்சே; ஷெல்டன்; ஜானி; Lady S என்று அணிவகுக்கும் இந்தச் சந்தாவினில் இன்னும் யாருக்கு இடமிருந்தால் தேவலாம்? என்று கேட்கப் போவதில்லை! மாறாக- இதனில் யாரேனும் இல்லாதிருப்பின் மகிழ்வீர்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது! ///
  அனைத்தும் நன்றாகவே உள்ளது கமான்சே மற்றுமே போரடிக்கிறது.ஒரு வேளை நிறைய நண்பர்கள் விரும்பி படித்துக்கொண்டிருந்தால் இதை பொருட்படுத்த வேண்டாம்.ட்யுராங்கோ போன்ற மின்னல் வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிப்போம்.

  ReplyDelete
 19. விஜயன் சார், சில முடிவுகளை எடுத்தபின் யோசிக்க கூடாது. அது கார்டூன் கதைகளுக்கு பொருந்தும் (மறுபதிப்புகளுக்கும் பொருந்தும்). கார்டூன் கதைகளுக்குகான காரணம் மற்றும் அவசியம் பற்றி பலமுறை பல சமயங்களில் பேசவிட்டோம். தயவு செய்து இதில் பட்டி டுஙகரிங் பார்க்கிறேன் என்று வரும் காலங்களில் கார்​டூன் கதைகளை குறைத்து விடாதீர்கள். இது அடுத்த தலைமுறையை காமிக்ஸ் படிக்க செய்ய நடக்கும் வேள்வி.புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

  ReplyDelete
 20. சந்தா A இதில் யாருக்கும் கல்தா கொடுக்க தேவையில்லை. தற்போதைய நாயகர்கள் யாரையும் இழக்க எனது இதயத்திற்கு விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக புதிதாக யாரை சேர்க்கலாம் என பேசலாமே.

  ReplyDelete
 21. A: All stories are Ok sir .. no need to change ..

  B: TEX le variety thevai sir ... Single shot mattum konjam thavirkalam ... MAFISTO , YAMA TRY panalam sir (marana mandalam s one of my favorite ) .. old stories yum kalande vidunga sir ..

  C: Leonardo thatha mattum vendam sir .. lucky , chick bill innoru slot increase panalam .. if possible donald , mickey try pannalam sir ...

  D: current format s ok ....

  any new detective or adventure series can be tried sir ...

  ReplyDelete
 22. டெக்ஸின் மெஃபிஸ்டோ; எமா வகை கதைகளுள் ஏதோ ஒரு குண்டு புக் உள்ளது பற்றீ ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள் அந்த குண்டு புக்கை களம் இறக்குங்களேன் சார் , டெக்ஸின் விட்டாலாச்சாரியார் ரக கதை என்றாலும் பரவாயில்லை ஒரு மாற்றம் உள்ள கதையாக இருந்தால் தைரியமாக முயற்சி செய்யுங்கள் எங்களுக்கு டெக்ஸ் வந்தால் போதும் என்றிருக்கின்றது

  ReplyDelete
 23. சந்தா A வில் மறக்கப்படும் நாயகராக எனக்கு ஏதும் தோன்ற வில்லை சார்....ஆல் இஸ் வெல்....:-)


  **********

  டெக்ஸ் சாகஸங்கள் வித்தியாசமாக இருப்பதையும் தவறாமல் வெளியிடலாம் ..டெக்ஸின் பலமுக பாணிகளையும் அதனால் அறிந்து மகிழலாம் சார் .தவறே இல்லை....கொஞ்சம் மனக் குறையாக இருந்தாலும் குறைந்த பக்க கதைகளையும் (டாக்டர் டெக்ஸ் போல ..)போல வெளியிடலாம்.சந்தா தொகை அதிகமாகிறது என்று நினைக்கும் நண்பர்களுக்கு அந்த இதழ்கள் சிறப்பான வழி அல்லவா ..( தங்களுக்கும்..நண்பர்களுக்கும்...) ..டெக்ஸின் மாயமந்திர கதைகளும் ஓகே தான் சார்...டெக்ஸ் பற்றிய வினாக்களில் மிகவும் யோசிக்க வைத்த கேள்வி இதுதான் ..சுமாரான சித்திர தரம் கொண்ட இதழ்கள்..அந்த இதழ்கள் வெளிவரும் பொழுது இது உண்மையாகவே டெக்ஸ் கதை தானா ...டெக்ஸ்க்கு சித்தப்பா மாதிரி இருக்காரு என்றவாறு வரும் விமர்சனங்களே அதிகம் வருமோ என நினைக்க தோன்றுகிறது...எனவே இப்போது போலவே ( சிறு சித்திர வேறுபாடுகள் பற்றி நோ ப்ராபளம் )தொடருவது நலம் சார்....டெக்ஸின் அனைத்து வினாக்களுக்குமே இது பொருந்தும் ..:-)

  ********


  கார்ட்டூன் பிடிக்காத நாயகர்களும் இப்போது பிடிப்பது போல சாகஸம் செய்து வருவதால் எனக்கு நோ ப்ராபளம் சார்...:-)


  ***********

  ReplyDelete
 24. "ஒரு முடியா இரவு"அருமையான த்ரில்லர்.
  இதை போல கதைகள் தொடர வேண்டும்.
  ஒரு சந்தேகம் சார்.
  இது மாமூலான சித்திர பாணி கொண்ட கதை
  கதை தானே...!!!
  கிராஃபிக் நாவல் என்கிற அடைமொழி ஏன்.?
  முந்தைய ஈஸ்ட்மென் கலர் டாரச்சர் கதைகளில் இருந்த சித்தர பாணி வேறு.
  சித்திர பாணி எதுவாகினும் ,ஒரு முடியா இரவு போன்ற கதைகள் கருப்பு/வெள்ளையில் தொடர்ந்து வரவேண்டும் ஆசிரியரே...!!!
  "முழு"வண்ணத்தில் என்கிற கதையே வேண்டாமே ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகிறேன்....

   Delete
  2. T K AHMED BASHA : வண்ணத்துக்கும், கதை பாணிகளுக்கும் தொடர்பில்லை சார் ; இந்தக் கதை வரிசையினை பட்ஜெட் கருதியோ ; வேறு காரணங்களின் பொருட்டோ படைப்பாளிகள் black & white -ல் உருவாக்கத் தீர்மானித்திருக்கிறார்கள் ! அவ்வளவே !

   So கலரில் வரும் கி.நா.க்கள் மொக்கை என்றோ ; b & w கள் ஹிட்கள் என்றோ பொது விதியெல்லாம் கிடையாது !

   ரசனைகளில் நாம் மேம்பட்டு வருகிறோம் என்பதே நிஜம் !

   Delete

  3. ///ரசனைகளில் நாம் மேம்பட்டு வருகிறோம் என்பதே நிஜம் !//

   தரத்திலும் மேம்பட்டு வருகிறோம் என்பதும் நிஜம் ஆசிரியரே...!!

   நம்ம தலைவரே like போட்டுவிட்டார் என்பதே ஒரு முடியா இரவின் வெற்றிக்கு சாட்சி...!!

   Delete
  4. நானும் வழிமொழிகிறேன்..ஒரு முடியா இரவை வண்ணத்தில் கண்டிருந்தால் இவ்வளவு திரில்லிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..இரவில் நடக்கக்கூடிய கதைகளுக்கு Black&White படங்கள்தான் சரி..எனக்கென்னவோ இந்தக்கதைக்கு கருப்புவெள்ளைதான் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டே படைப்பாளிகள் இதைக் கருப்புவெள்ளையில் படைத்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது..அதனால் தான் Psycho என்ற படத்தை கலரைப் பயன்படுத்தாமல் கருப்புவெள்ளையில் எடுத்தார் ஆல்பர்ட் ஹிட்ச்காக் என கேள்வி.

   Delete
  5. வழிமொழிகிறேன்....

   Delete
 25. மறுபதிப்பு பற்றி ஏற்கனவே அடிக்கடி தங்களிடம் கேட்பது தான் சார்...நீங்களும் அதற்கு அடிக்கடி பதில் சொன்னது தான்...இருந்தாலும் நீங்கள் வினவுவதால் மீண்டும் அதே கேள்வி....


  மறுபதிப்பு கதைகள் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழில் வராத கதைகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுத்தால் நலமாக இருக்கும் சார்...:-)

  ReplyDelete
 26. லயனுக்கு அறிமுகம் இல்லாத புது நாயகர்களை பற்றி நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல சார்...:-)

  ReplyDelete
 27. அன்புள்ள ஆசிரியருக்கு¸

  சமீப காலமாக இத்தளத்தில் ஒரே புகழ்சியுரைகளாக மட்டுமே இருக்கிறது. ஏதிர்மறையான கருத்துக்கள் காணப்படவில்லை. ஒரு படத்தில் வடிவேலு வானத்தை பார்த்துக் கொண்டு அதோ கடவுள் தெரிகிறார் என்று கூறுவார். மற்றவர்கள் எங்கே காணுமே என்பார்கள். அதற்கு வடிவேலு எவன் மனைவி பத்தினியோ அவனுக்கு மட்டும் கடவுள் தெரிவார் என்பார். உடனே அனைவரும் ஆமாம் அதோ கடவுள் தெரிகிறார் என்பார்கள்.

  எனக்கு தெரிந்து காமிக்ஸ் என்பது நிறைய படங்கள் குறைந்த வசனங்கள் மட்டுமே. காமிக்ஸ் படிப்பது நமது மன அழுத்தத்தினை குறைக்க மட்டுமே. ஆனால் தற்போது வெளிவரும் காமிக்ஸ்-கள் அப்படியிருப்பதில்லை. இரத்தவெறி பிடித்து அலைகிறது. மனஅழுதமும் அதிகரிக்கிறது. தற்போது வெறிவந்த கிராபிக் நாவலும் ஏன்டா படித்தோம் என்று இருக்கிறது. ஜெரமையா சரியில்லை. அதை சொன்னால் நான் பைத்தியகாரன் ஆகிவிடுகிறேன். உருப்படாத படங்களும ;சொதப்பலாக உள்ள ஜானிநீரோ கதைகளை மறுபதிப்பு செய்யும் பொழுது ஏனையோரால் மிகவும் விரும்பிய வேதாளர் மற்றும் காரிக்கன் போன்ற கதாபாத்திரங்களின் நல்ல கதைகளை மறுபதிப்பு செய்தால் என்ன? ஆசிரியருக்கு பிடிக்கவில்லை அதனால் அவைகள் மறுபதிப்பு செய்யப்படவில்லை என்று எங்களை போன்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.

  தொடரும்…….

  ReplyDelete
  Replies
  1. Jegang Atq & Sridhar : சார்...இங்கே யாரும், யாருக்கும் துதி பாடும் அவசியங்கள் கிடையாதென்பதற்கு உங்களின் அவ்வப்போதைய காரசாரப் பின்னூட்டங்கள் அத்தாட்சி தானே ? ஜெரெமியா பிடிக்கவில்லை என்று சொன்ன முதல் குரல் உங்களதும் அல்ல தான் என்பதை நினைவூட்டலாமா நான் ?

   வேதாளரை தமிழுக்கு கொணர வேண்டுமெனில் தற்சமயம் ரூ.ஏழு லட்சம் முன்பணம் தேவை ! And ஆண்டுக்கு குறைந்த பட்சம் 6 slot அதற்கென ஒதுக்கிடவும் அவசியப்படும் - அடுத்த 3 ஆண்டுகளுக்காவது ! ! இரண்டுக்கும் நம்மிடம் மார்க்கமிருப்பதாய்த் தெரியவில்லை என்பதால் மௌனமாய் அடுத்த வேலைக்குள் புகுந்து விட்டேன் ! இந்த முடிச்சை அவிழ்க்க ஏதேனும் உபாயமிருப்பின் நிச்சயமாய் கேட்டுக் கொள்ளத் தயாராக இருப்பேன் !

   எல்லா நேரங்களிலும் எனது சிக்கல்களை நானிங்கு பகிர்ந்து கொள்வது சாத்தியமாகாது சார் ; சில தீர்மானங்கள் / திட்டமிடல்கள் பின்னே நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கக்கூடுமென்ற புரிதல் நிரம்பவே உதவிடும் எனக்கு !

   Delete
  2. வேதாளர் பிரச்சனை என்றால் காரிக்கன் ரிப் கெர்பி போன்றவர்களின் கதைகளை வெளியிடலாமே?

   Delete
  3. ரிப் கெர்பி அப்படி என்னதான் இருக்கு தெரியலையே. எனக்கு தலையை சுத்தி துக்கி போடனும் தோன்றத கதை உங்களுக்கு பிடிக்கிறது என்பதற்கு காக மட்டுமே அதை வெளியிட முடியுமா? எத்தனை முறை ஆசிரியர் விளக்கு வார். புதுசா மட்டும் வரனும் வரனும் சொல்லிகிட்டு ரெகுலர் ஸ்லாட் எல்லாம் மொக்க ரிப் கெர்பிக்கு ஒதுக்க சொன்னால் எப்படி?

   Delete
  4. என்னுடைய கருத்தினை ஆசிரியருக்கு தெரியபடுத்தினேன். இங்கு ஏனையோர் வெளியிடும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர்களிடம் எனது கருத்தினை நான் திணிப்பதில்லை

   Delete
 28. டெக்ஸ் வில்லரின் மாறுபட்ட கதைகளை வரவேற்கிறோம் சார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரே மந்திர தந்திர சாமியார்களுடன் மோதியுள்ளாரே.(படம்-விக்ரமாதித்தன்)

  ReplyDelete
 29. sir good morning. please publish good horror stories &give chance to Rip Girpy. New detective &fantasy heroes should be included in A series 🙌🎅📚🍦💎✋

  ReplyDelete
 30. சந்தாAல். வேண்டுமானால் ஜானியை வேண்டுமானால் கல்தா கொடுக்கலாம் நண்பர்கள் மன்னிக்கவும்.. இது என் கருத்து மட்டுமே. மற்றபடி எல்லா கதை நாயகர்களும் ஓ.கே. தான்.
  சந்தா Bபொறுத்தவரை எடிட்டர் தேர்வு செய்யும் விதம் நன்றாகத்தான் உள்ளது. டெக்சுக்கு பரம வைரியான மெபிஸ்டோவுடனான மோதும் ஒரு சாகசம் உடனடி தேவை என்பது என் கருத்து. அமானுஷ்ய சக்திகளுடன் மோதும் கதைகள் வரவேற்பை பெற தவறுவதில்லை. உம்: மரண மண்டலம், ஸைத்தான் ஸாம்ராஜ்யம் போன்றவை. இவைகள் all time hits தானே.
  Latest வகை டெக்ஸ் திகில் கதைகளையும் பரிசீலிக்கலாம் என்பது என் கருத்து.
  சந்தாc: சிக்பில் கதை களுக்கு கல்தா தரலாம். மீண்டும் நண்பர்கள் மன்னிக்கவும். இது என் தனிபட்ட கருத்து மட்டுமே.
  சந்தா D: johnny hazard ,கதைகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளை பரிசீலிக்கலாம்..உம். விண்ணில் ஒரு குள்ள நரி. என்னுடைய all time favorite .திரைப்படமாக எடுக்கப்பட்ஆல் hit ஆக கூடிய cold war era ஐ சேர்ந்த கதை இது.
  மற்றபடி புதிய நாயகர் யாரை சேர்க்கலாம் என்றால்... என் கருத்து இதுதான் .... அவ்வப்போது தரமான one shot கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிடலாம் பேர் தெரியாத
  Hero என்றாலும் கூட...

  ReplyDelete
  Replies
  1. //சந்தாAல். வேண்டுமானால் ஜானியை வேண்டுமானால் கல்தா கொடுக்கலாம் நண்பர்கள் மன்னிக்கவும்//
   //சந்தாc: சிக்பில் கதை களுக்கு கல்தா தரலாம். மீண்டும் நண்பர்கள் மன்னிக்கவும்.//
   அடக் கடவுளே.

   Delete
  2. Hello leom,
   ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு.
   ரிப்போர்ட்டர் ஜானியும், சிக்பிலும் உங்களுக்கு என்ன துரோகம் செய்தார்கள்.
   அவரகள் மேல் இரக்கத்தை காட்டுங்கள்.
   நான் கூட நீலப்பொடியர்களை படிப்பதில்லை ஆனால் அதை அருகிலுள்ள லைப்ரேரிக்கு கொடுத்து வருகிறேன். அவைகள் அங்கு வரும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வாசிப்பை கற்றுத்தருகிறது.

   Delete
 31. Happy Mother's day friends 🌹🌹🌼🌼🌻🌻🌷🌷🌺🌺🎂🎂💐💎

  ReplyDelete
 32. From Editor's old post: //டெக்ஸில் ‘அந்த‘ 550+ பக்கக் கதை கிடையாதா? கண்டனப் போஸ்டர்கள் அச்சிடவுள்ளோம் !!!

  ‘துரோகத்துக்கு முகமில்லை‘ ; (காத்திருக்கும்) ‘சர்வமும் நானே‘!; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமேது?‘ போன்ற கதைகளைப் படித்தான பின்பு - ‘டெக்ஸ்‘ என்ற இயல்பான நீதிக்காவலர் மீது நமக்கு அதிகமாகிடும் மரியாதையை ஒரு fantasy கதைக்களத்தினுள் இறக்கி விடுவதன் மூலம் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமேயென்று நினைத்தேன் ! ‘அந்த‘ 550+ கதையானது மாயாஜால மெபிஸ்டோவோடு மோதும் சாகஸம் ! தற்பேதைய Tex எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் தலைமையில் நமது இரவுக் கழுகாரின் கதைகள் இயல்பான; தரமான புதுக்களங்களைத் தேடிப் பயணித்து வரும் போது நாம் இந்த விட்டலாச்சார்யா பாணி Tex=க்கு ‘ஜே‘ போட்டால் பொருத்தமாக இருக்குமா ? பக்க நீளத்தை மட்டுமே பார்க்காது - கதையின் போக்கையும் கவனமாய் பரிசீலனை செய்யும் கடமை எனக்குண்டல்லவா?//

  ReplyDelete
  Replies
  1. 'மாற்றங்களே மாறாதது...!'

   Delete
  2. அந்த கண்டன போஸ்டர நானே அடிகிக்கிறேன்.அதை எடிட்டர் திரும்புற பக்கமெல்லா ஒட்டணும்.ப்லேன்ல, ட்ரெயினிலே,அவரோட கார்லே,அவர் வீடு எதிர்லே.

   Delete
 33. சமீப உலக அரசியலையொட்டிய நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகி உள்ள காமிக்ஸ் கதைகள் ஏதேனும் வெளியாகி உள்ளனவா சார்...?

  ReplyDelete
 34. அனபுள்ள ஆசிரியருக்கு

  கல்தா கொடுக்கலாம் : ஜேசன்ப்ரைஸ்¸கமான்சே¸ ரிப்போர்டர் ஜாளி. லேடி எஸ் பற்றி தெரிய வில்லை.. ஏற்கனவே நான் தெரிவித்திருந்து CODE MINNAL-ஐ ஏன் கிடையாது என்று தெரிந்து கொள்ளலாமா?

  அதிரடி இல்லாத மனதை நெகிழச் செய்யும் டெக்ஸ் கதைகளை வரவேற்கிறேன்.

  கார்ட்டூன்கள் கண்டிப்பாக தொடர வேண்டும். அதில் வைக்கிஸ் கதைகளையும் சேர்க்கலாம்

  மறுபதிப்புகளில் வாசகர்களின் வேண்டுகோள்கள் ஏற்கனவே நிறைய உள்ளது. மனதிருந்தால் மாஸ்டர் முயற்சிக்கலாம்

  ஜெரமையா ஒரு முடியா இரவு போன்ற கதைகளை சந்தாவில் சேர்க்காமல் தனியிதழ்களாக வெளியிடலாம்.

  எனது எண்ணங்கள் தொடரும்....

  ReplyDelete
  Replies
  1. பறவைகள் பலவிதம் என்பதை போல ரசனைகள் பலவிதம்.

   Delete
  2. பறவைகள் மட்டும் பலவிதமல்ல. மனிதர்களும் பலவிதம் அவர்களின் ரசனைகளும் பலநூறு விதம். நடிகர் கமல் நடித்த பலபடங்களில் அன்பேசிவம் போன்ற சிலபடங்கள் சிலபேருக்கு மட்டுமே பிடித்தது.

   Delete
 35. ஆக்ஷன் பைலட் ஜான்ஹேவக் கதைகளில் 4-5ஐ ஒரே டைஜஸ்ட் ஆக வெளியிடுங்களேன் சார்.

  ReplyDelete
 36. போன வாரம் தான் முடியா இரவு போன வாரம் தான் படித்தேன்.
  முடியா இரவு ஏன் அவ்வளவு சிக்கிரம் முடிந்தது என்று வருத்தமாக இருந்தது.
  கதை அவ்வளவு சுவாரஸ்யம்.
  திட்டம் போடும் போது எவ்வளவு எளிதாக இருந்தது என்று வருத்தம் படும் போது பாவமாக இருந்தது.

  ReplyDelete
 37. im fine with மெஃபிஸ்டோ ... "Manthira mandalam" is one of my favorite :)

  ReplyDelete
 38. i want Tex in colour. what you say guys?

  ReplyDelete
 39. டெக்ஸ் நிறைய தடவை கலர்ல வந்திருக்காரே.ஆனா B/W-ல வரும்போதுதான் அட்டகாசமா இருக்கிறதா எனக்கு தோணுது.

  ReplyDelete
 40. //Any வீட்டோடு மாப்பிள்ளைகள் உள்ளனரா- நமது சந்தா A-வில்?//
  எவரும் தற்போது இல்லை சார்.

  ReplyDelete
 41. //மாறாக- “ஒரே மாதிரியான கதை பாணிகள் அலுத்துப் போகுமே; இந்த வித்தியாசங்களெனும் எக்ஸ்ட்ரா நம்பர் நிச்சயம் தேவையே!”//
  நிஜத்திலும் சரி,நிழலிலும் சரி,எப்போதும்,எல்லா நேரங்களிலும்,எல்லோரையும் திருப்தி செய்வது யாருக்கும் சாத்தியம் அல்ல சார்,எனவே தலைக்கு வித்தியாசமான கதை பாணி அவசியமே,ஒன்றிரண்டு சற்றே சோடை போனாலும் மோசமில்லை எனும் ரகமே,ஆக தற்போதைய அணுகுமுறையே சிறப்பு.

  ReplyDelete
 42. //குருமா மீடியமா இருந்தாலும் லெக்பீஸ் ஓ.கே.வெனில் உங்களுக்கு ஓ.கே. தானா ? //
  என்னைப் பொறுத்தவரை கதைதான் முக்கியம் என்பேன்,சித்திரங்கள் எல்லா நேரங்களிலும் சிறப்பாய் அமைய சாத்தியம் இல்லை,அதற்கு அதிகம் மெனக்கெட வேண்டும்.
  சித்திரங்கள் திருப்தியாய் அமைந்து,கதைக்களம் மொக்கையாய் அமைந்தால் அது அதிருப்தியையே தரும்.

  ReplyDelete
 43. //புது யுகப் பயணத்தின் திகிலை அனுபவிக்க முனைவோமா?//
  புதுசு-3 பங்கு,பழசு-1 பங்கு என்ற பாணியில் கதைகளை அணுகலாம்.(வாய்ப்பு இருந்தால்)

  ReplyDelete
 44. //டெக்ஸின் சிங்கிள் ஆல்பங்கள் நம் யானைப் பசிகளுக்கு நிச்சயம் பக்கோடாக்களாய் மாத்திரம் இருந்திடக் கூடும் தான்! //
  இது ஒரு பிரச்சனையே இல்லை,எல்லா நேரங்களிலும் பெரிய சாகசங்கள் சாத்தியம் இல்லை என்பது தெரிந்தது தானே,விலை ஒரு பிரச்னை,மேலும் சிங்கள் ஷாட் ஆல்பங்களை எப்போதுதான் ரசிப்பது.

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. //இத்தாலிய வாசகர்களோ- நம்மவர் தடித்தடியான வில்லன்களை சாத்துவதை ரசிக்கும் அதே வேகத்தோடே இந்தச் செவியில் புய்ப்ப ஹீரோக்களையும் ரசித்து வருகின்றனர்! நமக்கும் இது சாத்தியப்படுமா?//
  டெக்ஸின் அமானுஷ்ய களங்கள் அப்படி ஒன்றும் சோடைபோக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது,1 முதல் 200 வரிசையில் சுமாரான கதைகளையே படிக்க தயாராக இருக்கும் நாம் இந்த களங்களை முயற்சி செய்து பார்க்கலாம் என்றே தோன்றுகிறது,
  யார் கண்டது இந்த கதை வரிசைகள் பெரிய ஹிட் அடித்தாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை,.

  ReplyDelete
 47. //கார்ட்டூன் அணிவகுப்பில் கல்தா தருவதாயின் அது யாருக்கெல்லாம் என் அபிப்பிராயப்படுவீர்களோ?//
  அதற்கு அவசியமேயில்லை.எல்லாம் நலமே.

  ReplyDelete
 48. //மறுவருகையை 2018லும் தொடரவே உள்ளோம்! But இவற்றை சற்றே மெருகூட்டிட என்ன செய்யலாம் என்பது பற்றி ஏதேனும் யோசனைகள் folks? Serious question guys !!!//
  தலைவர் சொன்ன மாதிரி இதுவரை மறுபதிப்பு ஆகாத கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பாக்கெட் சைசில் வெளியிடலாம்.
   (Example
   கழுகுமலைக்கோட்டை)
   பட்டையை கிளப்பும்.

   Delete
 49. //சந்தா E: எட்டு வைக்கக் கூடப் படித்திரா பிள்ளை என்பதால் கருத்துச் சொல்ல இது ரொம்பவே சீக்கிரம் தானே? //
  இந்த செடியை பொறுத்தவரை இப்போதைக்கு தண்ணீர் மட்டும் ஊற்றி வளர்க்கலாம்.

  ReplyDelete
 50. //ஏதேனும் ஒரு புதிய நாயகரை அறிமுகம் செய்வதாகயிருப்பின் உங்களது suggestion ப்ளீஸ்? //
  ரிப்போர்ட்டர் ஜானி,மர்ம மனிதன் மார்ட்டின் மாதிரி அவர்களுக்கு இணையான ஒரு ஹீரோ இருந்தால் தாரளமாக களத்தில் இருக்கலாம் சார்.

  ReplyDelete
 51. //ஜுன் மாதத்து இதழ்கள் பரபரப்பாய் ஒரு பக்கம் தயாராகி வருகின்றன! ரிப்போர்டர் ஜானியின் மாமூலான தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணி இம்முறையும் நம்மை ‘மெர்செல்‘ ஆக்கக் காத்துள்ளது.//
  மிக்க ஆவலுடன் சார்,ரிப்போர்டர் ஜானி நல்ல வாசிப்புக்கு உத்திரவாதம் அளிப்பவர்.

  ReplyDelete
 52. எத்தன கேள்வி ??? ஸ்ஸப்பா.. இப்படி கேள்வி கேக்குறாங்குனுதான் என்ஜீனியிரிங் மேல்படிப்புக்கே போகலை. ஆனால் கேட்டது நம்ம எடிட்டர் + திஸ் ஜப்ஜக்டு நம்ம உசிராச்சே!!
  அதனால சொல்லி வைப்போம்.
  டெக்ஸ் கதைகளில் வெரைட்டி கண்டிப்பாக வேண்டும்.
  எனக்கு கார்ட்டூன் ரொம்ப பிடிக்கும். அடிஷனலாக சேர்த்தால் கூட பரவாயில்லை.
  மறுபதிப்புகளில் இரட்டை வேட்டையர் போன்ற நாயகர்களையும் சேர்க்கலாம்.
  புதிதாக ஸை - ஃபை ஜானர்களை முயற்ச்சிக்கலாம்.

  ReplyDelete
 53. டெக்ஸ்ன் மாயாஜால கதைகளை தாராளாமாய் வெளியிடலாம்.

  ReplyDelete
 54. ஒட்டுமொத்தமாய் ‘புதுயுக டெக்ஸ்‘ பக்கமாய் சாய்ந்து / பாய்ந்து விடலாமா? Of course – புதுசெல்லாமே கிடையாதென்பதை நாமறிவோம் தான்; ஆனால் புது யுகப் பயணத்தின் திகிலை அனுபவிக்க முனைவோமா?
  எடிட்டர்
  டெக்ஸ் புது கதைகள் இருக்கு என்கிறாரா அல்லது இல்லையா

  ReplyDelete
 55. முடியா இரவு மிகவும் அற்புதமான கதை. இது மாதிரி கதைகளை நிறைய முயற்சியுங்கள் சார். நமுடியா இரவு இன்னும் என் மனதில் முடியா நினைவாக உள்ளது. Jegang Atq ஏன் உங்களுக்கு இந்த கதை பிடிக்கவில்லை...புது களம் புது சிந்தனை தான் வளர்ச்சி இந்த தடத்திற்கு வாங்க...புதிய வாசலை புதிய அனுபவத்திற்கு வழி விடுங்க...உங்களுக்கு பிடொக்கவில்லை என்றால் எல்லாருக்கும் பிடிக்காது என்று அர்த்தமில்லை.

  ReplyDelete
 56. முடியா இரவு;மல்டி மார்கெட் கம்பெனியில் பல மில்லியன் டாலர்களை கையாடல் செய்கிறான் மார்வின்.கைதாகும் நிலையில் மனபிறழ்வுபட்டதாக நடித்து மன நல காப்பகத்தில் சேர்கிறான்.பணம் பதுக்கப்பட்ட இரகசியத்தை அறிந்து கொள்ள அவனுடைய கூட்டாளிகள் காப்பகத்தில் நுழைகின்றனர்.இந்த வழக்கை புலனாய்வு செய்ய காவல் துறை சார்பாக ஓர் அதிகாரி செவிலியர் பணியாளராக நுழைகிறார்.அவரின் அன்பான பணிவிடையின் மூலம் மார்வினின் மனதில் ஈர்ப்பு ஏற்படுகிறது.டேனியல்'அலெக்'வில் ஆகியோரின் திட்டமிடல்கள் திசைமாறி இக்கட்டான சிக்கலில் முடிகிறது.இரண்டாம் தளத்தில் உள்ள ஆபத்தான மன நோயாளிகளால் தாக்கப்பட்டு மார்வின் குற்றுயிராக தவிக்கும் போது தான் ஒரு தலையாய் நேசிக்கும் நர்ஸ்ஸிடம்(அவர் ஓர் காவல் துறை அதிகாரி என்பதை அறியாமலே)உண்மைகளை கூறுகிறான்.மருத்துவமனைக்கு வெளியில்இருக்கும் காவலர்களின் தாக்குதலில் அலெக்கும்'வில்லும் வீழ்த்தப்படுகின்றனர்.தலைமையாக செயல்பட்ட டேனியல் தப்பிச் செல்லும் வழியிருந்தும் குற்றவுணர்வின் காரணமாக வழிய மரணத்தை தேடிக் கொள்கிறான்.உள் நுழையும் காவல் துறையினரால் மீட்க்கப்பட்ட மார்வின் சிகிச்சைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்படுகிறான்.ஓர் இரவில் நடைபெறும் பரபரப்பான திருப்பங்களளுடன் கூடிய சம்பவங்களே "முடியா இரவு".கதையை இத்தகைய போக்கில் அமைத்திருக்கலாம் என்பது எனது கற்பனை.முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குவதாய் உள்ளது.கூடிய விரைவில் அரங்கேரவிருக்கும் மூன்றாவது உலக மகா யுத்தம் பற்றிய கதைக் கரு என்னிடம் உள்ளது.ஆசிரியர் அவர்களும்"நண்பர்களும் அங்கீகரித்தால் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

  ReplyDelete
 57. டெக்ஸ் கையாலே பல மந்திரம் பண்ணுவார் இதுல இவருக்கு மந்திர கதை நேரா கண்ணகட்டுது சாமி. நடக்கட்டும் நடக்கட்டும்.

  ReplyDelete
 58. Top10 cowboy heroes என கூகுளில் தேடினால் டெக்ஸ்,கேப்டன் டைகர் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் நிற்கும் ஜோனா ஹெக்ஸ் என்ற ஹீரோவை அறிமுகப்படுத்தலாமே சார்.முகத்தில் தழும்பும் சற்று மாந்திரீகமும் தெரிந்தவர் போல் இரூக்கிறார்.இவரது கதைகளை படித்த நண்பர்கள் விவரிக்கலாமே.

  ReplyDelete
 59. விஜயன் சார், சந்தா A நாயகர்கள்ல யாருக்கு கல்தா கொடுக்கலாம் என கேட்பதை பார்த்தால் அடுத்த வருடம் யாரோ ஒரு புதியவரை அறிமுகம் செய்வதற்கான முன்னோட்டம் மாதிரி தெரியுது. ஏது எப்படி என்றாலும் அடுத்த வருடம் தற்போதைய சந்தா A நாயகர்கள் மாற்றம் ஏதும் இன்றி தொடரவேண்டும்.

  ReplyDelete
 60. டெக்ஸ் மாயாஜால கதை வரிசைகள் "கண்டிப்பாக " வேண்டும்.
  டெக்ஸ் ஒல்லியான ஒன்ஷாட் கதைவரிசை வெளியிடுகையில் இரண்டோ அல்லது மூன்று கதைகளாக சேர்த்து வெளியிடலாம்.
  கல்தா கொடுக்க வேண்டியவர்களை நாங்கள் தீர்மானிப்பதைவிட உங்கள் கிட்டங்கியில் நிரந்தரமாய் அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளவர்கள் யாரென்பது உங்களுக்குத்தான் தெரியும். அவர்களை நீங்கள் தீர்மானிப்பதே சரியான ஒன்றாய் இருக்கும்.
  புது வரவுகள் கூட உங்கள் சாய்ஸ்தான். இருப்பனவற்றில் நல்லதாக தோன்றுவதை நீங்களே முடிவுசெய்யலாம்.
  மறுபதிப்புகள்....
  இப்போதுள்ள அளவு விலை இவற்றில் மாற்றம் வேண்டாம்.
  கொரில்லா சாம்ராஜ்யம் மட்டும் வண்ணத்தில்" இப்போதுள்ள சைஸில்" வரவேண்டும். வழுவழுதாள்கூட வேண்டாம்.(விலை எக்கச்சக்கமாய் எகிறாமல் இருக்க வேண்டுமென்பதால்) வண்ணம், சைஸ் இவை மட்டும் முக்கியம்.
  பலரும் படித்திராத தொடராக வெளியான மாயாவியின் பச்சைக் கண் மர்மம் மற்றும் ஸ்பைடரின் விண்வெளிப்பிசாசு இரண்டும் வேண்டும்!
  ரிப்கெர்பி,காரிகன், விங் கமாண்டர் ஜார்ஜ், சார்லி, கிஸ்கோ கிட் இவர்களின் கதைகளை முத்து மினி காமிக்ஸ் போல் மலிவுப் பதிப்பாக வெளியிடலாம். ஒரு செட்.ஆறு கதைகள். இப்படி வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வெளியிடலாம். சந்தாவில் சேர்க்காமல் முன்பதிவுக்கு மட்டுமென்று வெளியிடலாம். இவைகளை தேடி இன்னமும் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்!!( அடியேனும்கூட!!) முயற்சி வெற்றி பெறாவிட்டால் ஒரு செட்டுடன் மூடு விழா நடத்தி விடலாம்.

  ReplyDelete
 61. டெக்ஸ் பற்றி மட்டுமே நிறய கேள்விகள். இப்பதான் எல்லா டெக்ஸையும் வரிசையா படிச்சுட்டு இருக்கிறதால எளிதா பதில் சொல்ல முடியும். குண்டு புக்கோ ஒல்லி புக்கோ ஆக்‌ஷனோ மந்திர ஜாலமோ பழய ஸ்டைலோ புதிய ஸ்டைலோ இலகுவான வாசிப்புக்கு டெக்ஸ் மற்றும் கார்ட்டூன்கள் உகந்தவையாக இருக்கிறது. தற்செயலாய் ஒரு ஹீரோ, சர்வமும் நானே, அராஜகம் அன்லிமிடெட் முடித்து விட்டு இப்போது துரோகத்திறகு முகமில்லை படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு போரடிக்கவே இல்லை. ஒவ்வொன்றும் வேறு வேறு மாதிரி இருக்கின்றது. 110 பக்க கதைகள் சற்றே சின்ன எபிசோடு போல் தோன்றினாலும் எனக்கு போரடிக்க வில்லை. டெக்ஸ் எங்களால் ஆங்கிலத்திலும்படிக்க வழியில்லை. அதனால் முடிந்த அளவு அனைத்து கதைகளையும் கொணர முயற்சி செய்யுங்கள். 70ஆம்்ஆண்டை முடந்த அளவு குண்டு குண்டாக கொண்டாட வகை செய்யுங்களேன் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. யாரையும் நீக்கும் கோரிக்கையை நான் வைக்கப் போவதில்லை. மேஜிக் வினட் டயபாலிக் போன்ற கதைகள் பிடிக்காது என்றாலும் அவற்றை ரசிக்கும் நணபர்கள் இருக்கிறார்கள். கூட்டுறவில் எல்லார்ததுக்கும் பிடிச்சதும் நமக்கு பிடிக்காததும் இருப்பது சகஜமே. கூட்டுறவு நீடிக்க இது தொடர்வது மிக முக்கியம். எனவே என்னிடம் இருந்து யாரையும் நீக்கும் கோரிக்கை வராது. அதிகப்படுத்த வேண்டுமானால் சிக்பில் கதைகள். டிஜிட்டல. வடிவில வந்து விட்டதாக சொன்னதாக ஞாபகம் முடிந்தால் சிக்பில் குணு ஸ்பெஷல் தனி சந்தாவில்.

   Delete
 62. எடிட்டர் சார்
  இன்னொரு கோரிக்கை.
  ஏற்கனவே வண்ணத்தில் வெளியான மாயாவியின் யார் இந்த மாயாவி மற்றும் கொள்ளைக்கார பிசாசு இவற்றையும் வண்ணத்தில் வெளியிட வேண்டுகிறேன்.
  தனித்தனியாகவோ அல்லது கொரில்லா சாம்ராஜ்யத்துடன் இணைந்த குண்டு புத்தகமாக ஹார்ட் பவுண்ட் அட்டையுடன் வெளியிட்டாலும் சரிதான்.
  நாற்பத்தைந்து ஆண்டுகளையும் கடந்து வெற்றி நடைபோடும் அவருக்கு முத்து காமிக்ஸின் சிறப்பு வெளியீடாக கொண்டு வரலாம்.

  ReplyDelete
  Replies
  1. Shinesmile Foundation Sir
   நான் நலமே.
   தாங்கள் நலம்தானே?

   Delete
 63. /// இந்தப் பழமைகளின் மறுவருகையை 2018லும் தொடரவே உள்ளோம்! But இவற்றை சற்றே மெருகூட்டிட என்ன செய்யலாம் என்பது பற்றி ஏதேனும் யோசனைகள் folks? Serious question guys !!!///

  ரெண்டு மூணு கதைகளை சேர்த்து டைஜஸ்ட் மாதிரி வெளியிட்டு பயபுள்ளைகளோட சோலிய சுருக்கா முடிச்சி அனுப்பிடலாம்..ஹிஹி..!!

  ReplyDelete
 64. ///கவரிமான்களின் கதை‘ சித்திர பாணிகளலும் சரி, கதையிலும் சரி, பிரித்து போய்க் காத்துள்ளது! இந்த இதழை உங்களிடம் ஒப்படைக்க இப்போதே கை பரபரக்கிறது!! பற்றாக்குறைக்கு சந்தா E சார்பாய்க் காத்திருக்கும் அண்டர்டேக்கரின் அதகளமும்!! ஜுன் ஒரு த்ரில்லிங் வாசிப்பை வழங்கக் காத்துள்ளது ///

  கவரிமான்களின் கதை - பெயரே வித்தியாசமா இருக்கே சார்!
  கதையில யாருக்கும் பொடுகு, முடிஉதிரும் தொல்லை இருக்குமோ?

  அண்டர்டேக்கர் அண்ணச்சியோட டீசர்களே ஹார்ட்பிட்டை எகிறச்செய்தன. போதாக்குறைக்கு நீங்க வேற அப்பப்போ இப்படி ஆர்வத்தை தூண்டிவிட்டுட்டே இருக்கீங்களே சார்.!

  ஏ மே மாதமே, சீக்கிரம் முடிந்துபோய் ஜூன் மாதத்தை வரவிடுவாயாக.!!

  ReplyDelete
 65. ///ஏதேனும் ஒரு புதிய நாயகரை அறிமுகம் செய்வதாகயிருப்பின் உங்களது suggestion ப்ளீஸ்?///

  அ..அ..அந்த.. ஆ.ஆஸ்ட்ரிக்ஸ்..!

  ReplyDelete
 66. ///கார்ட்டூன் அணிவகுப்பில் கல்தா தருவதாயின் அது யாருக்கெல்லாம் என் அபிப்பிராயப்படுவீர்களோ?///

  லியனார்டோ தாத்தாவ்ஸ்க்கு PF, கிராஜுவாட்டி எல்லாத்தையும் கையில கொடுத்து, பென்சனை மாசாமாசம் பேங்குல போட்டுவிடுறது நலம்னு தோணுது சார்.!

  ReplyDelete
  Replies
  1. அட ஆமால்ல.....தாத்தா ஏற்கனவே வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டதா நான் நினைச்சுட்டு இருக்கேன்...இன்னும் இங்கே தான் இருக்காரா....சின்ன பசங்களே நிறையபேரு ஓய்வு எடுத்துட்டு இருக்காங்க...பாவம் ..வயசான தாத்தாவை சிரம்படுத்த வேண்டாமே சார்..ரவிகண்ணரின் கருத்தை வழிமொழிகிறேன்..:-)

   Delete
 67. சந்தா A: தங்களுக்கு தெரியாத சட்டம் ஓன்றும் இல்லை. தங்களுக்கு எந்த சட்டம் சிறந்த சட்டமாக தெரிகிறோதோ அதை வைத்து திர்ப்பு எழுதுமாறு கேட்டு கொல்கிறேன் யுவர் ஆனார்.

  சந்தா B: மாதம் ஓன்று என்பதை வருடம் ஓன்று என்று மாற்றுங்கள்.

  சந்தா c: புதிதாக எதுவும் சேர்த்தாலும் ok தான்.

  சந்தா D: no comments.

  ReplyDelete
 68. ///இந்த 110 பக்க டெக்ஸ் கதைகள் தவிர்க்க இயலா விஷயங்களாய் கண்ணில் படுகிறன்றன. இவற்றைப் படிக்கும் போது பெரிதாய் நெருடல்கள் இல்லையெனில் சந்தோஷமே! ///

  நிச்சயம் நெருடல்கள் ஏதும் கிடையாது சார்.! மாறாக பெரிய கதைகளை பெரிதாக காட்ட, இந்த சிறிய கதைகளே உதவுகின்றன எ.எ.கருத்து.!
  ஆட்டம்பாம், லஷ்மிவெடிகளுக்கு மத்தியில் இந்த ஊசிப்பட்டாசுகளும் கொண்டாட்டத்தின் அடையாளங்களே..!

  ReplyDelete
 69. ///மெஃபிஸ்டோ; எமா என்ற விட்டலாச்சார்யா ரக வில்லன்களை நாம் பரணிலேயே குடிவைத்துள்ளோம் ரொம்ப காலமாகவே! ஆனால் இத்தாலிய வாசகர்களோ- நம்மவர் தடித்தடியான வில்லன்களை சாத்துவதை ரசிக்கும் அதே வேகத்தோடே இந்தச் செவியில் புய்ப்ப ஹீரோக்களையும் ரசித்து வருகின்றனர்! நமக்கும் இது சாத்தியப்படுமா? அல்லது ‘சிவனே‘ யென்று தற்போதைய பாதைகளில் சவாரிகளைத் தொடர்வோமா?///

  வெரைட்டீ கண்டீப்பாக தேவை சார்.!
  இருளின் மைந்தர்கள், மந்திரமண்டலம் போன்றவை இன்னும் மனதில் குடிகொண்டு இருக்கின்றன.!
  சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற ஸ்பைடர் கதைகளின் ரீமேக்கில் டெக்ஸ் வராமல் கவனித்துக்கொண்டால் போதும் ஹிஹி..!

  ReplyDelete
  Replies
  1. வெரைட்டீ கண்டீப்பாக தேவை சார்.!
   இருளின் மைந்தர்கள், மந்திரமண்டலம் போன்றவை இன்னும் மனதில் குடிகொண்டு இருக்கின்றன.!/////   +123456789

   Delete
 70. ///ஒட்டுமொத்தமாய் ‘புதுயுக டெக்ஸ்‘ பக்கமாய் சாய்ந்து / பாய்ந்து விடலாமா? Of course – புதுசெல்லாமே கிடையாதென்பதை நாமறிவோம் தான்; ஆனால் புது யுகப் பயணத்தின் திகிலை அனுபவிக்க முனைவோமா?///

  ஆஹா.! பேஷாய்..!

  (அராஜகம் அன்லிமிட்டேட் - சமீப காலங்களில் நாம் ரசித்துவரும் டெக்ஸ் கதைகளின் ஸ்டான்டர்டுக்கு சற்று குறைச்சல்தான்)

  ReplyDelete
 71. ///இந்தத் தேர்வு பாலிசியினை கொஞ்சமாய் தளர்த்திக் கொள்ளலாமாவென்று? குருமா மீடியமா இருந்தாலும் லெக்பீஸ் ஓ.கே.வெனில் உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது தற்போதைய எனது பாணிக்கே ‘ஜே‘ போடுவீர்களா?///

  தங்களுடைய தற்போதைய பாணிக்கே ஜே போடுகிறேன்.!
  சுமாரான சித்திரங்களுடன் வெளியான நில் கவனி சுடு சக்கைபோடு போட்டதையும் மறுக்கமுடியாதே சார்.!

  ReplyDelete
 72. ///ஒட்டுமொத்தச் சந்தா எனும் போது- ‘விதியே!‘ என்று யாரையேனும் சகிக்க வேண்டி வருகிறதெனில் அவரைச் சுட்டிக் காட்டி எனக்கொரு சின்ன ஈ-மெயில் தட்டி விட்டால் அது பற்றி நிச்சயம் யோசிப்பேன்! Any வீட்டோடு மாப்பிள்ளைகள் உள்ளனரா- நமது சந்தா A-வில்?///

  அப்படி எதுவும் தோன்றவில்லை.!
  லார்கோ, ஷெல்டன் தொடர்கள் முடிவுக்கு வரும் வேளையில் வரவிருக்கும் புதியவர்களை லேசாக 2018 ல் அறிமுகப்படுத்தி வைக்கலாமே சார்.??

  ReplyDelete
 73. சூப்பரான சித்திரங்களுடன் கூடிய அட்டகாச சஸ்பென்ஸ் திரில்லர்களுக்கு கூடுதல் ஸ்லாட் ஒதுக்கலாம் சார்.!

  (அதாகப்பட்டது, ரிப்போர்ட்டர் ஜானி வேணுமின்னு சுத்திவளைச்சி சொல்லியிருக்கேன், அம்புட்டுதேன்.!)

  ReplyDelete
 74. Try to include Bouncer 8 and 9 in Subscription A

  ReplyDelete
 75. ஷான் வான் ஹேமேவின் கரங்களையும், பிலிப் ப்ராங்கோவின் கரங்களையும் ஒருசேர மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்கிறேன் - சதுரங்கத்திலொரு சிப்பாய் வாசிப்பின் நடுவே..!

  ReplyDelete
 76. இந்த மாய ஜால tex கதைகளை சந்தா Bல் சேர்க்காமல் ஒரு customized imprint அல்லது சந்தா E வரிசையில் சேர்த்து விடுங்களேன். இந்த மாதிரி பீலாக் கதைகள் அதிகம் ஆவதால் அடுத்த வருடம் சந்தா என்று செலுத்தாமல் முன்பணம் என்று வரவு வைத்து எனக்கும் என் நண்பருக்கும் வேண்டிய புத்தகங்களை தருவித்துக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளேன்.

  அதாவது நீங்கள் எ+பி +சி +டி எவ்வளவு என்று அறிவித்த உடன் அந்தத் தொகையை செலுத்தி விடுவேன். பிறகு எனக்கு வேண்டும் இதழ்களை monthly செட்டாகவோ டபுள் காபியாகவோ, ரெண்டும் சேர்ந்த மாதிரியோ பெற்றுக்கொள்வது. உங்கள் சந்தாவும் குறையாது நாங்கள் இருவரும் வேண்டியதை படிக்கவும் இயலும் !

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சார் .,


   அடுத்த வருட சந்தவின் ப்ளுபிரிண்ட் நிலையில்,நாங்களும் எங்கள் இளவரசிக்கு கதைக்கு துண்டைபோட்டு இடம் பிடிக்கிறோம்.!

   இலட்சியம் ஐந்து.! நிச்சயம் இரண்டு என்பது ( உங்கள் )நமது கொள்கையாக இருக்கட்டும்.!

   மறுபதிப்பாக இருந்தாலும் ஓ.கே.தான்!.ஏனென்றால் மாடஸ்டியின் ஒவ்வொரு கதையும் அட்டகாஷமானதுதான்.!

   நன்றி.!

   Delete
 77. இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும்

  பதுங்குகுழி சிங்கம்

  கடுதாசியால் மத்திய அரசை வாழவைக்கும் ஒரே அஞ்சாநெஞ்சர்

  எங்கள் தாரை தலிவர்

  அவர்களை வாழ்த்த வயதில்லை குப்புற விழுந்து வணங்குகிறேன் 🙏🏼

  இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

  இங்ஙனம்
  அண்ணாரின் அடி விழுதுகள் 🙇🏻

  💐💐💐💐💐
  🎂🎂🎂🎂🎂
  🍧🍧🍧🍧🍧

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தன்னிஜாரில்லா தலீவரே..!!

   Delete
  2. மதங்கொண்ட களிறுபோல மனத்திண்மை மெய்பொருந்தினும்
   இதந்தரும் இதயத்தால் பதுங்குகுழி ஒதுங்குமிவர்; மக்கள்சேர்
   திடல் கண்டால் மைக்தேடும் தமிழகதலைவரல்ல;மாக்கடல் நீட்சியுடை
   மடல்கொண்டு மனம்கொண்டார்;சுகமுடை உடல்கொண்டு நீடுவாழ்வார் ..   '' தலீவருக்கு மனம் பொங்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் ''

   Delete
  3. தலீவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
   எனக்கு வாழ்த்த வயதும் இருக்கிறது.
   மனமும் இருக்கிறது.
   எனவே---
   தலீவர் என்றென்றும் நலமாய் வாழ வாழ்த்துகிறேன்.

   Delete
  4. தங்கத் தலீவருக்கு...
   சிந்தனைச் செயலரின் ( ஹிஹி ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு...)
   இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

   @ சிபி
   ///வாழ்த்த வயதில்லை குப்புற விழுந்து வணங்குகிறேன்///

   :)))))

   @செனா அனா

   செம செய்யுள்!

   @ எடிட்டர்

   அடுத்தவருச சந்தாவுக்கு இலவச இணைப்பாக ஒரு 'கோனார் தமிழ் உரை' கொடுத்தீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்!

   Delete
  5. செனா சார் .!

   வாழ்த்து அருமை! அருமை!

   Delete
  6. ///மதங்கொண்ட களிறுபோல மனத்திண்மை மெய்பொருந்தினும்
   இதந்தரும் இதயத்தால் பதுங்குகுழி ஒதுங்குமிவர்; மக்கள்சேர்
   திடல் கண்டால் மைக்தேடும் தமிழகதலைவரல்ல;மாக்கடல் நீட்சியுடை
   மடல்கொண்டு மனம்கொண்டார்;சுகமுடை உடல்கொண்டு நீடுவாழ்வார் ..///

   செனா அனா,

   நல்லா இருக்கு..! இருந்தாலும் தமிழிலேயே வாழ்த்தியிருக்கலாம்..! :-)

   Delete
 78. ஐயா, நான் இதுக்கு புதுவரவுங்க.
  இந்த ஜோதியில நானும்கலந்துக்கலாம்னு ரொம்ப நாளா முயற்சி பண்ணி, இப்பதா கூகிள் அண்ணாச்சி வழி வுட்ருக்கராருங்க.
  இதுல எப்புடி நம்ம கருத்தை பதியரதுன்னு தெரியாம, இன்னிக்கு ஒரு வழியா கண்டுபுடிச்சுட்டேனுங்க.

  ReplyDelete
 79. மொதல்ல இது சித்திரக் கதைங்க ஐயா.
  படத்துக்குத்தான் மொதல் இடமுங்க.
  கதை படிக்கறதுக்கு ஆயிரம் வழி இருக்குத்துங்க.

  ReplyDelete
 80. சந்தா A :
  Its seem OK. தோர்கல் மட்டும் (4 ஆல்பங்கள் சேர்ந்த கதைகளாக) ஸ்பெஷல் கோட்டாவில் சேர்த்துவிட்டால் சூப்பர். லார்கோ & ஷெல்டன் 2018-ல் எக்ஸிட் ஆவதால், 2019-ல் புது நாயகர்களை கொண்டு வரலாம்.

  சந்தா B :

  1. மாதாமாதம் டெக்ஸ் எனும் போது, ஓரே போன்ற ஸ்டீரியோ-டைப் கதைகளை விட, நாம் இப்போது கையில் எடுத்திருக்கும் டெக்ஸ்-ன் variety-யான பாணியே சிறந்தது. Obviously, டெக்ஸ்-ன் சந்தா தடம் ஒரு வெற்றி என்பதற்கு, இதொரு முக்கியமான காரணம். திகில் நகரில் டெக்ஸ், ஆவிகளின் சரணாலயம் போன்றவைகள் கதைகள் நல்லவொரு refreshing changes தான்.

  2. சித்திரங்களில் என்னைப் பொறுத்தவரையில் No Compromise.

  3. புதுயுக டெக்ஸ் பக்கமாகவே வண்டி ஓடட்டுமே!. [போகும் வழியில் வேண்டுமானால் ஓரிரு oldies-சை ஏற்றிக்கொள்வோமே...?

  4. 110 பக்க டெக்ஸ் கதைகள் No Problem at all. எங்களின் பட்ஜெட்டையும், உங்களின் பணிச் சுமைகளை லேசாக்க இதுப்போன்ற கதைகள் தேவையே...!

  5. 'டுப்பாக்கியில்' அளவில்லாமல் தோட்டாக்கள் சீறிப்பாய்வதும், போட்ட சட்டை கசங்காமல் எதிரிகளை துவைத்தெடுப்பதை ரசிக்கும் நாம், கொஞ்சம் மெஃபிஸ்டோ; யாமா போன்ற கதைகள் பக்கம் போனால் தவறில்லை தானே, கிண்டி வைத்திருக்கும் அந்த அல்வாவையும் விட்டு வைப்பானேன்.?

  சந்தா C :
  லியோனார்டோ, ஸ்மார்ப் (ஒரு இதழ் போதுமே), சிக் பில் (ஒரே template-ல் கதைக்களம்)

  சந்தா D :
  மும்மூர்த்திகளின் ஒவ்வொருத்தரின் சிங்கள் ஆல்பங்களுக்கு பதில், டபுள் ஆல்பங்களாக இணைத்து வெளியிடலாம். (4 நாயகர்கள், 8 கதைகள் என்றான பின்னே, எஞ்சியிருக்கும் 2 ஸ்லாட்களை இன்றாக இணைத்து ரூ.150 / 200 - ல் காரிகன், கெர்பி, சார்லி, வெஸ்ட் சிலேடு போன்றவர்களின் 5 / 6 கதைகளை இணைத்து வெளியிடலாம். இவர்களின் கதைகள் ஒரு 40 / 50 பக்கங்கள் தாண்டாதென்பது ஒரு ஆறுதல்)

  அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இந்த ஸ்பெஷல் வெளியீடுகள், ரெகுலர் சந்தாவில் இல்லாமல் அதற்கென ஒரு தனி சந்தா.! (சில பதிவுக்கு முன்னாள் ஒரு நண்பர் சொன்னார், பெயர் நினைவில்லை, Do u ?

  so, அடுத்தாண்டு ஸ்பெஷல் இதழ்கள் என்று பார்த்தால்:

  சந்தா S :
  முத்து 46-வது ஆண்டு மலர் (ஜனவரி '18)
  லயன் 34-வது ஆண்டு மலர் (ஜூலை '18)
  EBF '18 (ஆகஸ்ட்) டெக்ஸ் ஸ்பெஷல் / சஸ்பென்ஸ் ஸ்பெஷல் (இரத்த படலம் தவிர்த்து)
  தீபாவளி மலர் '18
  3 மில்லியன் ஹிட் ஸ்பெஷல்!!!

  ஸ்பெஷல் இதழ்களுக்கென்று ஒரு தடம் அமையுமாயின், ஒரு புது முயற்சியின் ஆரம்பமாகயிருக்கும்.

  ReplyDelete
 81. யாரோ ஒரு புண்ணியவான் சிக்பில்லை வேண்டாம்ங்கிறாா்ங்க.
  இன்னோருத்தரு ஸ்மா்ப்ப வேண்டாங்கிறாா்ங்க.
  கொஞ்சம் வுட்ட லக்கிலூக்கையும் வேண்டாம்னு சொல்லீட்டு, டுமீல் டுமீலை மட்டும் போதும்ன்னு சொல்லுவாங்க போல தெரியுதுங்க.
  காமிக்ஸ்னாவே கார்ட்டூன் தானங்கண்ணா.
  நம்ம சீாியஸான முகத்தை கொஞ்சம் கலட்டி வைச்சுட்டு நமக்குல்ல என்ன இருக்குன்னு பாருங்கங்ணா.
  நம்ம இயல்பே கொழந்தைத்தனம் தானுங்க.
  நாமெல்லாம் காமிக்ஸை ரசிக்கரமுல்ல. இது கொழந்தைத்தனம் தானே.
  சீரியஸான ஒருத்தராலே எதையாவது ரசிக்க முடியுமா? ரசனைங்கிறதே குழந்தைத்தனம் தான், நம்மை லகுவாக்கிக்கிறது தானே. இதுல மேதாவித்தனம் எதுக்குங்க?
  உண்மையிலே மேதாவித்தனம், சீரியஸ்நஸ்ங்கிரது ஒரு மனநோய்.
  ரசனைங்கிரது நம்ம குழந்தைத்தனத்தை நோக்கிய, நமது உள் அடையாளத்தை நோக்கிய பயணம் இல்லைங்கலா.
  அதை நாம வளர வழி செய்வோமே.

  ஏதோ எனக்கு தொிஞ்சத சொல்லிடங்க.

  காா்ட்டுனை மட்டும் தனித்தடத்தில் வருடத்திற்கு 50 புக் விட்டாலும் நான் வாங்குவேனுங்க.

  நம்ம ரேங்க்கிங் பட்டியல்
  1. லக்கிலூக்
  2. சிக்பில்
  3. ஸ்மா்ப்
  4. டெக்ஸ் வில்லா்
  5. டைகா்
  6. கேப்டன் பிரின்ஸ்

  ReplyDelete
  Replies
  1. Mithun Chakravarthi @

   சிம்பிளா சொல்லிட்டிங்க சார்.! சூப்பப்ரப்பு..!!

   Delete
  2. ///காா்ட்டுனை மட்டும் தனித்தடத்தில் வருடத்திற்கு 50 புக் விட்டாலும் நான் வாங்குவேனுங்க.///


   உங்களை மாதிரி ஒருத்தரைத்தான் சார் தேடிட்டே இருக்கேன். .!
   தளத்திற்கு நல்வரவு சார்.!
   உங்களை பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுத்தீர்களெனில் மகிழ்வேன். .!

   Delete
  3. நம்ம சொந்த ஊா் கோபி-ங்க.
   நம்ம வேலை DTP Designer-ங்க.
   படிச்சது B.Sc (Psychology)-ங்க.

   Delete
  4. நல்லது-ங்க.
   மகிழ்ச்சி-ங்க.
   கலக்கு-ங்க.

   Delete
 82. சந்தா C யில் லியானா்டோவும், மீசைக்காரா் கா்னல் கிளிப்டனும் கொஞ்சம் மொக்கை பீஸ்தான் Drop that Two.

  சந்தா B யில் சித்திரத் தரத்திலே டெக்ஸ் தான் டாப் 1, முழுவதும் வண்ணத்தில் வெளியிடலாமே. கதைப் பாணியிலே எல்லாமே OK தான்.

  சந்தா D யில் மாயாவி, ஸ்பைடா், லாரன்ஸ் மூன்றுமே சமகாலத்துக்கு ஒவ்வாதவை. தமாஸ் ரகம்.

  சந்தா A முற்றிலும் உங்கள் விருப்பம்.

  ReplyDelete
 83. மதங்கொண்ட களிறுபோல மனத்திண்மை மெய்பொருந்தினும் 

  இதந்தரும் இதயத்தால் பதுங்குகுழி ஒதுங்குமிவர்; மக்கள்சேர் 
  திடல் கண்டால் மைக்தேடும் தமிழகதலைவரல்ல;மாக்கடல் நீட்சியுடை

  மடல்கொண்டு மனம்கொண்டார்;சுகமுடை உடல்கொண்டு நீடுவாழ்வார் ...


  செனா அனாவின் செய்யுளுக்கான விளக்கவுரை :-

  மதம் புடிச்ச ஆனையாட்டம் தில்லான மைண்டும், சிக்ஸ்பேக் பாடியும் இருந்தாலுங்கூட...

  மெல்லீசனா மல்லிப்பூ மாதிரி இதயம் இருக்கறதத்தொட்டு அப்பப்போ பதுங்குகுழியில பம்மிடுவாப்புல ...

  சனங்க கும்பலா நிக்கிறத பாத்தவுடனே மைக்கப்புடிச்சி "ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஏதென்ஸிலே, கிரேக்கத்திலே, ஜெர்மனியிலே "ன்னு கூச்சல் போடுற நம்மூரு டுபாக்கூர் தலிவர் இல்லிங்கோ இவுரு...

  அம்மாம்பெரிய கடலு மாதிரி நீளஅகலத்துக்கு கடுதாசி எழுதுவாரே, அந்த கடுதாசி அளவுக்கு நல்ல மனசும் இருக்குறவருங்க...

  அப்படியாப்பட்ட நம்ம தலீவரு, நோவுநொடி இல்லாம நூறுவயசு வாழணும்னு வாழ்த்துறேங்க.............!

  ReplyDelete