Powered By Blogger

Sunday, August 02, 2015

ஒரு பொடிப் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். ரிமோட் கண்ட்ரோலில் வீட்டுக் கதவுகள் திறக்கின்றன; டி.வி.க்கள் ஸ்விட்ச்-ஆன் ஆகின்றன; ஏன் விமானங்களே கூடப் பறக்கின்றன! ஆனால் சிறியதொரு ஆபீஸையும், சுருக்கமான நமது டீமையும் ரிமோட்டில் நிர்வகிக்க வழி தெரிந்த பாடைக் காணோமே! என்ற அங்கலாய்ப்போடு சென்ற வாரத்தின் நான்கு நாட்களைக் கழித்தேன்! வழக்கம் போலவே ‘திடு திடுப்‘பென பயணமொன்று அவசியமகிட - இங்கே போட்டது, போட்டபடிக் கிடக்க நான் புறப்பட்டாக வேண்டியதொரு அவசரம்! ‘ஆனால் மைதீன் இருக்க பயமேன்?‘ என்ற கதையாக சிக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் போனில் மைதீனின் குடலை உருவியே- நமது CCC-ன் மூன்று இதழ்களைக் கரைசேர்த்து விட முடிந்தது ! க்ளிப்டன்; லியனார்டோ தாத்தா & வுட்சிடியின் சட்டப் பரிபாலன அதிகாரிகள் உங்களை சந்திக்கத் தயாராகி நிற்க ஏற்கனவே நமது 2 சிரஞ்சீவிகளும் தயார் மறுபதிப்புகளோடு ! So- நான் தொலைவில் இருந்தால் கூட பெரியதொரு தடுமாற்றமின்றி ஆகஸ்டின் பெரும்பான்மை இதழ்கள் தயாராகி விட்டன! 
ஆனால் போன வாரப் பதிவினில் நான் கோடிட்டிருந்த ஸ்மர்ஃப் படைப்பாளிகளின் ‘கண்ணில் castoroil’ ரகத் தரசோதனைகளில் தான் நாட்கள் விரயம் சென்ற வண்ணமிருந்தன ! அங்குலம், அங்குலமாய் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சித்திர frame-ஐயும் நுணுக்கமோ- நுணுக்கமாய் ஆராய்ந்திட ஒரு மெகா-டீமே அமெரிக்கா-ஐரோப்பா என இருவேறு தளங்களிலிருந்து செயல்பட்டு வருவதை மலைப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம்! நம் தரப்பில் அட்டைப்படத்தை மட்டுமின்றி; ஸ்மர்ஃப்களின் பெயரைக் கூட அழகாய் வடிவமைத்திட புதியதொரு branding design நிறுவனத்தைப் பிடித்து அட்டகாசமாய் பணி செய்து வாங்கியிருந்தோம்!
Just a Trial Version !!! Not the final cover !!! 



சூப்பரப்பு!.....படைப்பாளிகள் பார்த்த மாத்திரத்திலேயே அசந்து போகப் போகிறார்கள்! என்ற நம்பிக்கையோடு அதனை  பெல்ஜியத்துக்கு அனுப்பினோம்! ணங்! என்ற சத்தம் மாத்திரமே கேட்கவில்லையே தவிர அதனோடு இணைந்து வரவேண்டிய பாக்கி சங்கதிகள் சகலமும் ஆஜராகின! பறக்கும் பொறி... காதில் ஒரு ‘கொய்ங்ங்‘ ஓசை... சில்லுமூக்கில் லேசான தக்காளிச் சட்னி ஒழுகல் என்று நிறையவே சேதாரத்தை உண்டு பண்ணியிருந்தது படைப்பாளிகளின் பதில்! ‘ராப்பரின் ஒரிஜினல் டிசைனை துளி கூட நோண்டக் கூடாது... பின்புலத்தில் நீங்கள் வரைந்துள்ள புதர்... மரக்கிளை... தொங்கும் hazelnut என சகலத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்புங்கள் ப்ளீஸ்!‘ என்று சொல்லியிருந்தனர். இது பற்றாதென்றால் உட்பக்கங்களில் ஒவ்வொரு இண்டு, இடுக்கிலும் செய்திட அவசியமாகிடும் மாற்றங்கள்; திருத்தங்கள் என நீளமாக ஒரு பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது! இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை அவர்களது trademark லோகோ மற்றும் பெயர் இடம்பெற்றாக வேண்டும் என்ற வலியுறுத்தல் வேறு ! "ஆஹா...ஈரோட்டுக்கு லேட்டாகிறதே !" என்ற ஆதங்கத்தில் இந்த இதழை அவசரம் அவசரமாய் நாம் அச்சிட்டிருந்திருக்கும் பட்சத்தில் ரொம்பவே சிக்கலாகிப் போயிருக்கும் போல் தெரிகிறதே! என்று மண்டைக்குள் சிந்தனை உதயமானது அப்போது தான் ! எல்லாவற்றிற்கும் கீழே- முக்கியம் என்று குறிப்போடு  'எக்காரணம் கொண்டும் ஒரிஜினல் டிராயிங்கின் ஒரு செ.மீ. கூட ‘கட்‘ ஆகக் கூடாது! So எழுத்துக்களை ஒரிஜினல் பலூன்களுக்குள்ளாகவே அடக்குவதில் கவனம் செலுத்துங்கள்!‘ என்றும் குறிப்பிட்டிருந்தனர்! இதே நிபந்தனைகளை ஒரு லார்கோவுக்கோ, ஒரு டைகருக்கோ; ஒரு XIII-க்கோ படைப்பாளிகள் இட்டிருக்கும் பட்சத்தில் அவற்றில் அவசியப்படக்கூடிய ஸ்கிரிப்டை ஒரிஜினில் பலூன்களுக்குள் அடைக்க பிரம்மனே திணறியிருப்பார்! இந்த நீலப்பொடியர்கள் கதைகளில் ‘வளவள‘ வசனங்களுக்கு அவசியங்களே கிடையாதென்பதால் லேசாக எழுத்துக்களின் அளவுகளை சுருக்குவதன் மூலமே படைப்பாளிகளின் அவாக்களுக்கு செவி சாய்ப்பது சாத்தியமாகிப் போனது! So இங்கும், அங்குமாய் ஏதேனும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் எழுத்துக்கள் உங்கள் கண்களுக்கு சோதனை நடத்திப் பார்க்கும் பட்சத்தில் apologies in advance guys! இதனில் நமக்கு வேறு options துளியும் இல்லை! So திரும்பவும் ஒரு தடவை துவக்கம் முதல் பணிகளைச் செய்வது போலான அயர்ச்சி இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நம்மவர்களை மறுபடியும் நீலப்பொடியர்களோடு “பழகிப் பார்த்திடச்“ சொல்லிப் பணித்தேன்! இது வரை லேசு பாசான சந்தேகமாகத் தானிருந்தது; ஆனால் இப்போது confirmed- இவர் பாஸல்ல லூசு தான்!என்ற முணுமுணுப்பு அவர்களது, உதடுகளில் இருந்திருப்பது நிச்சயம் ஏனெனில் ஒரே கதையில் மூன்றாவது தடவையாகப் பணி செய்யும் நெருக்கடி இம்முறை! முதல் தடவை ஸ்மர்ஃப் பாஷையோடு டைப்செட் செய்தார்கள்; அப்புறமாய் அதைப் பொடி பாஷையாக்க அனுமதி கிட்டிய போது மீண்டும் மாற்றங்கள்! மூன்றாவது மாற்றம் பலூன்களின் சைஸ்களின் பொருட்டு என்பதால் அவர்களது சலனங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ரகமே! ஆனால் நமது இத்தனை ஆண்டுகால; இத்தனை இதழ் தயாரிப்பு அனுபவங்களுள் இதுபோன்றதொரு சவாலான production process இதுவரை நாம் சந்தி்த்திரா விஷயம் என்ற போது தஞ்சாவூர் பொம்மைகளாய் தலையாட்டுவது அவசியமாகி விட்டுள்ளது! 

தட்டுத் தடுமாறி ஒருவழியாய் சகல திருத்தங்களையும் செய்து சமர்ப்பித்து விட்டு படைபாளிகளின் ஒப்புதல்களை வாங்குவதிலேயே இன்றுவரைக்கும் நேரம் பறந்து விட்டதால் இனி திங்கட்கிழமை தான் இந்தக் குட்டி மனுஷர்கள் அச்சுப் பிரிவுக்குள் புகுந்திடுவர். And  அந்த அட்டைப்பட ஒப்புதல் மாத்திரம் இன்னமும் அந்தரத்தில் ஊசலாடுகிறது - திங்கட்கிழமை அவர்கள் பணிக்குத் திரும்பி இதற்கு ஒ.கே. சொல்லிடும் வரையிலும் ! So அதுவும் முடிந்து, அச்சு; பைண்டிங்; box set-ல் அடைக்கும் வேலைகள்; அந்த box set-ஐ உங்கள் சந்தா டப்பாக்களுக்குள் நுழைத்து pack செய்திடும் வேலைகள் என சகலமும் நடந்தேறிட 4 நாட்களாவது ஆகிடும்! So- வரும் வெள்ளியன்று CCC + மறுபதிப்பு x 2 + ஆகஸ்டின் இதழ் # 7 ஆன மேஜிக் விண்டின் “கறுப்புக் காகிதங்கள்“ உங்களைத் தேடிப் புறப்படும்!

பௌன்சரின் “கறுப்புக் விதவையின்“ இடத்தில் “கறுப்புக் காகிதங்கள்“ இடம்பிடிப்பது கூட இந்த நீலப்பொடியர்களின் பெண்ட் கழற்றும் பணிகளின் பொருட்டே அவசியமாகிப் போனதொரு மாற்றம் ! பௌன்சர் தொடரிலேயே மிகவும் freakish ஆன இந்தக் கதையைக் கையாள நிறையவே அவகாசமும், நிதானமும் தேவை! ஆனால் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டும், மாற்றங்கள் செய்து கொண்டும் உள்ள தற்போதைய சூழலில் பௌன்சரையும் பந்தியில் அமர்த்தி சொதப்பிடக் கூடாதே என்ற தயக்கத்தில் ஜூரிடவுணின் ஒற்றைக்கரத்தாரை அடுத்த மாதத்திற்கு transfer செய்து விட்டேன். அவரிடத்தில் ஏற்கனவே தயாராகியிருந்த ‘மேஜிக் விண்ட்‘ இடம்பிடிக்கிறார் ஒரு 96 பக்க முழு வண்ண சாகஸத்தோடு! இது மே.வி.யின் ஆல்பம் # 2 போல விட்டலாச்சார்யா பாணிக் கதையல்ல; நார்மலானதொரு ஆக்ஷன் த்ரில்லரே! இதோ- அதன் ராப்பர் – ஒரிஜினல் சித்திரத்தோடே – துளியும் மாற்றங்களின்றி! 
தொடரும் கதைகளைப் படித்திருக்கும் தைரியத்தில் இந்தத் தொடர் மெதுமெதுவாய் வேகம் பிடிக்கும் ஜாதி என்பதை சொல்லிக் கொள்கிறேன்! 

ஈரோட்டில் வெள்ளி மாலை முதல் புத்தக விழா துவங்கியுள்ளது! நாம் ஸ்டால் நம்பர் 152ல் உள்ளதும் ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம் தானே? சென்றாண்டு LMS வெளியீடு ; ‘மின்னும் மரணம்‘ முன்பதிவு என்ற இரட்டை அதிரடிகள் நம் திட்டமிடல்களில் இருந்த காரணத்தால் – காற்றிலொரு மின்சாரம் கலந்திருப்பதை உணர முடிந்தது! அதனை இம்முறையும் எதிர்பார்த்திருக்கக்கூடிய நண்பர்கள் சற்றே ஏமாற்றம் கொண்டிருக்கலாம் தான்; ஆனால் இந்த ஸ்மர்ஃப் சடுகுடு நாம் துளியும் எதிர்பாரா நிகழ்வு! இது மட்டும் நம் நேரங்களை இத்தனை தூரம் ‘ஸ்வாஹா‘ செய்யாதிருப்பின் ஆகஸ்ட் ஒன்றிற்கு CCC-ன் ரிலீஸோடு நாம் ஈரோட்டில் ஆஜராகியிருந்திருப்போம்! தவிர – சென்ற முறை LMS வெளியீடு மாதங்கள் பலவற்றிற்கு முன்பே ஈரோட்டை நோக்கிய திட்டமிடலில் உருவானது எனும் போது அதனை இம்முறையும் duplicate செய்திட நாம் முயற்சித்திருந்தால் ரொம்பவே செயற்கையாக இருந்திருக்கும். லயன் 250வது இதழை நெய்வேலி புத்தக விழாவில் ரிலீஸ் செய்திடலாமென்ற அவாவில் ஜுலை வரை தள்ளிக் கொண்டே வந்திருந்தோம் ! ஆனால் ஜுன் நடுவே நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதென்று நெய்வேலியில் நிர்வாகிகள் தகவல் சொன்ன போது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை. So - ஈரோட்டில் “அதிர்வெடி ரிலீஸ்“ என்று இம்முறை இல்லாதிருப்பினும் – CCC சுவாரஸ்யத்தில் துளியும் குறை வைத்திடாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! நான்கு மாறுபட்ட Cartoons – நிச்சயம் ரசிக்கவொரு அழகான தருணமாய் இருந்திடும் ! 
Looking beyond ஆகஸ்ட் - பிரயாணங்களின் மத்தியில் கிடைத்த அவகாசங்களில் 2016-க்கான அட்டவணையினை முழுமையாகப் பரிசீலிக்க முடிந்தது ஒரு highlight. உங்களின் ‘டெக்ஸ்‘ suggestions ; ஜுனியரின் சிலபல சிந்தனைகள் ; நமது ஏஜெண்ட்களின் விற்பனை feedback என கிட்டிய inputs-களை ஒருங்கிணைத்து – இந்த முறை ஒரு ஜனரஞ்சக அட்டவணையைத் தயாரித்துள்ளேன் ! வழக்கம் போலவே இந்த முன்னோட்டங்கள் அடங்கிய booklet அக்டோபரின் இறுதியில் உஙகள் கைகளை வந்தடையும் ! Maybe – just maybe நமது அட்டவணையினை வெளியிடுவதை ஒட்டிய தருணத்தில் ஏதேனும் புத்தக விழா அமைந்திடும் பட்சத்தில் அந்நகரில் ஹோட்டல் ஹால் ஒன்றினை ஏற்பாடு செய்து நமது சந்திப்பு + 2016-ன் அட்டவணை பற்றிய கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்! இன்னமும் இரண்டரை மாதங்கள் உள்ளன என்ற போதிலும் – என் தலைக்குள் ஓடிய சிந்தனையின் பதிவு மாத்திரமே இது! ஒவ்வொரு ஆண்டும் இதனை ஒரு வழக்கமாகக் கூட கொள்வதும் ஒரு possibility தான்! இத்தருணத்தில் சென்னையில் நமது நண்பர் துவக்கியுள்ள Three Elephants புத்தக கடையானது நமது சந்திப்புகளுக்கு ஒரு சுலபக்களமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை சொல்லிடலாம் ! அவர்களது வியாபாரத்துக்கு இடைஞ்சல் இல்லா வகையில் தேதியையும், நேரத்தையும் முன்கூட்டியே  நாம் சொல்லி விட்டால் – நாம் அங்கே சந்திக்க இயன்ற ஏற்பாடுகளை செய்து தர நண்பர் தயாராக உள்ளார்! So - சென்னையின் மையத்தில், நாம் சந்தித்துக் கொள்ள ஒரு அழகான இடம் உள்ளதென்பதை நம் நினைவுகளுக்குள் இருத்திக் கொள்ளவோமாக!

வழக்கம் போல இம்முறையும் மற்ற பணிகளின் பெயரைச் சொல்லி விமானத்தில் ஏறி அமர்ந்தாலும் – கிடைக்கும் சிற்சிறு அவகாசங்களுக்கிடையே படைப்பாளிகளை சந்திக்கும் மின்னல் ஓட்டங்களை தொடர்ந்திடவே செய்தேன்! இம்முறையோ என் தலைக்குள் 2016ன் அட்டவணையின் blueprint தயாராகியிருந்த நிலையில் – புதிதாய் கதைகளைத் / தொடர்களை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்ற வேகத்தில் குழப்பங்களை விலை கொடுத்து வாங்கக் கூடாதென்ற வைராக்கியம் நிறையவே இருந்தது! ஆனால் அதெல்லாம் அவர்களது வளாகத்தினுள் நுழையும் வரைக்கும தானே?! அவர்கள் பங்கிற்கு இந்தாண்டின் மூன்றாம் quarter-க்கான வெளியீடுகளை சரமாரியாக என் முன்னே அடுக்கி வைத்து- எனது மனவுறுதியை சோதித்தே தீருவேன் என்று அடம்பிடித்தனர்! அதிலும் குறிப்பாக லார்கோ பாணியில் ஒரு இளம் கோடீஸ்வரரின் கதையானது – அட்டகாசமான சித்திரத் தரத்தோடு என்னைக் கடுமையாய் சபலப்படுத்தியது ! 
Le Redempteurs” என்ற பெயரில் துவங்கியுள்ள இந்தத் தொடரின் முதல் ஆல்பம் மாத்திரமே தற்போதைக்கு வெளிவந்துள்ளது! மூன்று ஆல்பங்கள் கொண்டதொரு சைக்கிளாக இது இருந்திடும் என்று சொன்னவுடன் என் கடவாய் ஜலப்பிரவாகத்தை லேசாகக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு – முதல் சுற்று முடிந்தான பிறகு ஒட்டுமொத்தமாய் இவற்றை வெளியிட திட்டமிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லி வைத்தேன். அவர்களது திட்டமிடல்களும் ஆல்பத்தின் வரவேற்பை சம்பந்தப்படுத்தியே இருப்பதால் – ‘வானமே எங்கள் வீதி‘ கதையாக – நட்டநடுவில் ‘தொடரும்‘ பலகையை மாட்டி விட வேண்டாமே என்று பார்தேன்!


XIIIன் இரத்தப்படலத்தின் பாகம் 24- இரண்டாம் சுற்றின் இறுதி ஆல்பமாக இருந்திடும் என்றும் – நவம்பர் 30--ல் வெளிவரும் என்றும் சொன்னார்கள் ! லேசாக தைரியத்தைத் திரட்டிக் கொண்டு "இது மெய்யாலுமே இறுதிப் பாகம் தானா ?" என்று கேட்டு வைத்தேன் ! புன்னகை மாத்திரமே எனக்குப் பதிலாகக் கிட்டியது ! நண்பர் "XIII -ன் விற்பனை எப்படிப் போகிறது ? " என்றும் கேட்ட பொழுது காங்கிரஸ் சின்னத்தைக் காட்டினார்கள் - "5 இலட்சம்' என்பதை உணர்த்திட! 15,000 ஆல்பங்கள் விற்றாலே sequel ; பாகம் 2/3 என்ற நடை போடுவது பதிப்புலகில் சகஜமெனும் நிலையில் அரை மில்லியன் விற்பனை காணும் ஒரு மனுஷனை அத்தனை சீக்கிரமாய் VRS கொடுத்து அனுப்பி விடுவார்களா - என்ன ? என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் ! அதற்கும் மேலாக அதே topic-ல் சஞ்சாரம் செய்வது நம் சிரத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடும் என்பதால் சட்டென்று வேறு பக்கமாய்க் குதிரையைத் திருப்பினேன் ! பெட்டி பெட்டியாய்க் குவிந்து கிடந்த வேற்று மொழிப் பதிப்புகளையும் புரட்டிக் கொண்டே அவர்களிடம் அதைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தேன் ! இத்தாலிய மொழியில் வெளிவந்து கொண்டிருந்த ரிப்போர்டர் ஜானி கதைகள் செம classy ஆக இருப்பதைப் பார்க்க நேரிட்டது ! அதனில் ஒரு பிரதியையும் கேட்டு வாங்கி வந்தேன் - ஏதாவது நமக்கு உதவிடும் விஷயங்கள் கிட்டுமா என்று பார்த்திட !

And எப்போதும் போலவே நமக்கு மொழிபெயர்ப்புகளில் உதவிடும் பொருட்டு - ஆங்கிலப் பதிப்புகளை ஏன் பைக்குள் திணிக்க அவர்களும் ஆன உதவிகள் செய்தனர் ! அது போதாதென்று - புதிதாய் ஒரு 4 பாக ஆக்ஷன் திரில்லர் one -shot  கதை ஆங்கிலப் பதிப்பாகிட பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இப்போதைக்கு ஆங்கில ஸ்கிரிப்ட் மட்டுமே தயாராகி உள்ளதாகவும் சொல்லி - அதனிலிருந்து ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்துத் தந்தனர் ! இதழே தயார் ஆகும் முன்பாய் அதன் ஸ்க்ரிப்டை நம்மிடம் தந்திடத் தயங்கா அவர்களது பெருந்தன்மைக்கு ஒரு வண்டி நன்றிகளைச் சொல்லி விட்டு நான் புறப்பட்டேன் - புஜம் வலிக்க புத்தக சுமையோடு ! அவற்றை ஊர் திரும்பும் வழியிலேயே படித்ததில் தலைக்குள் ஒரு பரிச்சயமான ரீங்காரம் எழத் தொடங்கி விட்டுள்ளது ! அந்த ரீங்காரத்தோடே கால் கட்டை விரல்களை ரசிக்கும் ஒரு ஆர்வமும், உத்வேகமும் எழுவதையும் உணர முடிகின்றது ! "ஆண்டவா...என்னைக் காப்பாற்றும் ; என்னிடமிருந்து நம் வாசகர்களையும் காப்பாற்றும் !" என்ற சிந்தனை தான் தலைக்குள் வழிநெடுகிலும் ! 

Before I sign off,  - இந்த நாட்டையே கனவு கண்டிட ஊக்குவித்த நிகரில்லாத் தலைவரின் மறைவைப் பற்றி......! ஒரு மகாமனிதரின் மறைவை எண்ணி ஒட்டு மொத்தமாய் ஒரு தேசமே பிரவாகமாய்க் கண்ணீர் வடித்த போதும், அவரது அசாத்திய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிப் படிக்க இயன்ற போதும்  தான் 'இப்படியும் ஒரு புனிதர் நம்மிடையே வசித்து வந்திருக்கிறாரே..!' என்பது பதிவானது !  ஜனத்தொகையில் ஒன்று குறைவு  ; -1 என்பது தான் நிஜக் கணக்காக இருப்பினும், அந்த ஒன்றின் ஈடு ஒரு கோடிக்கும் அதிகம் என்பதும் புரிந்தது ! இறுதி வரை தான் நேசித்ததைச் செய்யும் பாக்கியம் ஆண்டவனின் செல்லப் பிள்ளைகளுக்கு மாத்திரமே சாத்தியம் போலும் ! நமக்கெல்லாம் மேன்மைதகு கலாம் அவர்களின் பிரிவு ஒரு தீரா இழப்பாய் இருப்பினும், தனது பிரியமான புதல்வர்களுள் ஒருவர்  தன மடியிலேயே துயில் பயில தஞ்சம் புகுந்ததில்  ஆண்டவருக்கு நிச்சயம் சந்தோஷமே மிஞ்சியிருக்கும் ! RIP Sir  ! You will forever guide this nation ! 

254 comments:

  1. TeX santha Patrick arivipu ethum kanome left eppadi theruvara nanbarkale solungal

    ReplyDelete
  2. மாயாவியின் ராப்பர் ஹாலிவுட் பட போஸ்டர் பாணியில் அட்டகாசப்படுத்துகிறது! எப்போதில்லா இந்த முறை அந்த இரும்புக்கரத்தின் விரல் நுனியில் sharpness மற்றும் பளபளப்பு கூடுதலாக மின்னுகிறதே...? மாயாவி + கதையைப் பற்றி ஒரு வரிப் போட்டிருக்கலாமே..?

    நீலப்பொடியர்கள் தம்மாத்தூண்டு இருந்தாலும், தமிழ் மொழியில் இதழாக வெளிவர இந்தளவு 'நாம்' ராட்சச தனமாக மெனக்கெட வேண்டுமா...? படைப்பாளிகளின் கண்டிஷனைப் பார்த்து பாராட்டுவதா..? அல்லது நம்மவர்களை இந்த பாடு படுத்துறாளே என நொந்துக் கொள்வதா..? கதையை வாங்குவதுதான் காஸ்ட்லி என்று பார்த்தால், அதனை finished product-டா வெளியே தள்ளுவது அதைவிட காஸ்ட்லி சமாச்சாரமாக இருக்கிறதே?

    பௌன்சர் மே மாதமே எதிர்பார்த்தேன். இப்ப ஆகஸ்ட்லேயும் இல்லையா..? அட தேவுடா..!

    ReplyDelete
    Replies
    1. // மாயாவியின் ராப்பர் ஹாலிவுட் பட போஸ்டர் பாணியில் அட்டகாசப்படுத்துகிறது! //
      +1 அட்டைபடம் அருமையாக உள்ளது

      Delete
    2. MH Mohideen : //மாயாவி + கதையைப் பற்றி ஒரு வரிப் போட்டிருக்கலாமே..?//

      அட...அது தான் பின்னட்டையில் பெரிதாய் போட்டாச்சே சார் - "ஒரு தலைமுறையின் ஆதர்ஷ நாயகர் " என்று !!! இதைவிடவா நான் சிலாகித்து எழுதிடப் போகிறேன் ?

      ஒரிஜினல் சித்திரம் என்பதால் மின்னுகிறது !!

      Delete
  3. ஈரோட்டுக்கு கிளம்பிட்டேன்...! "இது மெய்யாலுமே இறுதிப் பாகம் தானா ?" என்று கேட்டு வைத்தேன் ! புன்னகை மாத்திரமே எனக்குப் பதிலாகக் கிட்டியது ! மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : பைக்கில் கிளம்பியிருக்காத வரைக்கும் சந்தோஷமே !!

      Delete
    2. பைக்கில் தான் வந்தார் சார் ....உங்களுக்கு தெரிய வந்தால் கடிந்து கொள்வீர்கள் என சொல்லி கொண்டே சென்றார் ...ஹி..ஹி...நாராயண ...நாராயண ...

      Delete
  4. கடவுளே அந்த நீல குட்ட பையன் இவ்ளோவேல பண்ட்ரானா சார்...?

    ReplyDelete
  5. பத்துக்குள் முதல் முறையாக

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே.... படித்துவிட்டு வருகிறேன்....

    ReplyDelete
  7. படிச்சி போட்டு வாரனுங்!!!

    ReplyDelete
  8. விஜயன் சார்,
    இந்த மாதம் 7 புத்தகம்கள்! சந்தோசம்! சந்தோசம்! கறுப்புக் காகிதங்கள் இந்த மாதமே வருவது ரொம்ப சந்தோசம்!

    பொடியர்களால் நமது 'CCC' தள்ளிபோவது வருத்தமே, பொடியர்களின் முதல் இந்த முதல் கதை முலம் அவர்களின் expectation and process பற்றி அறிந்து கொள்ள உதவும். இந்த அனுபவம் அடுத்து வரவுள்ள பொடியர்களின் இதழ்களை சிறப்பாக தயாரிக்க உதவும். பொடியர்கள் எப்படியாவது அடுத்த வாரம் (ஆகஸ்ட் 7-8 குள்) ஈரோடு புத்தக திருவிழாவில் தரிசனம் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore ://பொடியர்கள் எப்படியாவது அடுத்த வாரம் (ஆகஸ்ட் 7-8 குள்) ஈரோடு புத்தக திருவிழாவில் தரிசனம் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.//

      நிச்சயமாக !!

      Delete
  9. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.. நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்.. மு.பாபு, கெங்கவல்லி,
    சேலம் மாவட்டம்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உங்களது கடைவாயின் பிரவாகத்தை பற்றிச் சொல்லி எங்கள் நாக்கில் வெள்ள பெருக்கெடுக்க வைக்கிறீர்களே..கண்ணுல முட்டாயை காட்டிட்டு தராம போனா.. நாங்க பாவம்ல்லியா?

      Delete
  11. நண்பர்களுக்கு காலை வணக்கம்.!மறுபதிப்பு இரண்டும் கையிருப்பில் உள்ளது.பெரிய எழத்தில் படித்து மகிழ்ச்சி அடையலாம்.!சி.சி.சி.காமெடி இனிப்பாக படிக்கலாம்.
    கி.நா.பார்க்க அழகாய் இருக்கும்.புரட்டினால் சந்தோஷமாக இருக்கும்.ஆனால் படித்தால் மண்டை சூடாகி தலைவலி வந்துவிடும்.மேஜிக் விண்ட் கதையோ உல்டாவாக இருக்கிறது.புத்தகத்தை பார்த்தாலே ஏதோ எரிச்சலாக இருக்கிறது.ஆனால் படித்தால் சீட்நுனியில் உட்கார்ந்து படிப்பது போல் அவ்வளவு விறுவிறுப்பு.அதில் அப்படி என்ன மாயம் செய்கிறாரோ கதையாசிரியர் புரியவில்லை.!

    ReplyDelete
  12. மேஐிக்விண்டை ஆவலுடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  13. சூப்பர் விஜயன் சார்

    அப்படீன்னா ஏகப்பட்ட புதிய கதைகள் காத்திருக்கின்றன என சொல்லுங்கள்
    புதிய கோடீஸ்வரர் பாக்க சூப்பரா இருக்காரு
    இருந்தாலும் நம்ம லார்கோவோட போட்டி போட முடியுமான்னு பாக்கலாம்

    பேருதான் பொடியர்கள் ஆனா வேலையெல்லாம்
    பெரிசா வாங்குறாங்களே

    பொடியர்களுக்காக வெயிட்டிங் சார் :)
    .

    ReplyDelete
  14. எதிர்பார்ப்போடு இருக்கறோம்

    ReplyDelete
  15. நீலப்பொடியர்கள் அவ்வளவு பெரிய்ய்ய அப்பாடக்கரா?.மர்மமனிதன் மார்ட்டின் கதையாசிரியர் பெருந்தன்மை யாருக்கும் வராது.!உலகில் ஒரு மூலையில் தமிழ்நாடு உள்ளது.அதில் காமிக்ஸ் ரசிகர்களோ கொஞ்சம் இதற்கு இவ்வளவு நொய்நொய் ன்னு சந்தோசமான காமெடி கதைக்கு இவ்ளவு சீரியஸாக படைப்பாளிகள் இருப்பது வருத்தமாக உள்ளது.!
    எடிட்டர் சார்.!2016ல் இளவரசியை நல்ல ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒவியங்கள் மற்றும் கதை அசத்தவேண்டும்.முடிந்தால் இரட்டை வேட்டையர் கதையில் வந்த மாடஸ்டியின் உருக்கமான ஆறு பக்க இளமை பருவ வரலாறு வெளியிட்டால் இளம் வாசகர்கள் மத்தியிலும் மாடஸ்டி புகழ் பரவும்.மாடஸ்டி கதைகள் மண்ணில் கிடைக்கும் வைரமாக உள்ளது.அதை கொஞ்சம் பட்டை தீட்டி பிரபலப்படுத்தினால் மாடஸ்டி புகழ் எட்டுதிக்கும் பரவும் அல்லவா.?

    ReplyDelete
    Replies
    1. இளவரசியா
      யார் அது!! :)

      Delete
    2. இளவரசியா யார் அது!! :)/// எங்கள் தானை தலைவியை யார் என்று கேட்பதை வன்மையாக கண்டிக்கிறேன்... உடனடியாக ஆசிரியர் அவர்கள் மாடஸ்டியின் பெருமைகளை விளக்க மாடஸ்டியின் கதைகளை வரிசையாக வெளியிடுமாறு உருண்டு பொரண்டு கேட்டுக்கொள்கிறேன்..

      Delete
    3. அப்படியா?இரவு கழகு யார் என்று கேட்டு விடாதீர்கள்.!

      Delete
    4. சம்பத் @ மாடஸ்தி தான் தமிழ் காமிக்ஸ்ன் அவந்திகா.....இனிமேல் உங்களுக்கு மறக்காது தானே .....

      Delete

  16. * 'ஒரு பொடிப் பதிவு' என்ற தலைப்பைப் பார்த்து 'ஏதோ அவசரத்தில் போடும் தக்கணூன்டு பதிவு போல' என்று நினைத்தேன். நல்லவேளையாக தடிப் பதிவுதான்!

    * 'உறைபனி மர்மம்' அட்டைப்படம் அசத்தல்!

    * half centuryயை நெருங்கிக்கிட்டிருக்கும் 'முத்து' கூட தனது லோகோவை கலர்ஃபுல்லா மாத்தி பல மாசங்களாகிடுச்சு... 'எவர் யூத்'து லயனுக்கு இன்னும் அதே கருப்பு-வெள்ளை லோகோன்னா எப்படிங்க எடிட்டர் சார்?

    * 'விதவை'யை ஆவலோடு எதிர்பார்த்தோம்... 'காகிதங்கள்' வந்திருப்பதில் கொஞ்சம் ஏமாற்றமே! ஆனாலும் இந்த மாசம் ஏழு புத்தகங்கள் என்ற நினைப்பு ஊற்சாகமூட்டுகிறது!

    * 'Smurfs' ஏற்கனவே ஓரளவுக்காவது குட்டீஸ் மத்தியில் பிரபலமாகியிருப்பதால், பாக்ஸுக்குள் அடைக்கப்படாமல் அதுமட்டும் தனி இதழாக வந்திருந்தால் புத்தகத் திருவிழாவுக்கு வருகைதரும் குட்டீஸின் கவனத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஈர்க்க முடியுமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை! 'Box set ஆக வாங்கினால்தான் உண்டு' என்ற கட்டாயம் ஏதுமின்றி, Smurfs மட்டுமாவது தனி இதழாகக் கிடைத்திடும் சாத்தியக்கூறு இருக்கிறதா எடிட்டர் சார்? ( ஈரோட்டுக்கு இது சற்றே காலம் கடந்த முயற்சியாகினும்கூட, இனிவரும் மற்ற புத்தகத் திருவிழாக்களுக்காவது உதவுமில்லையா?)

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய்.! வணக்கம்.!பொடிப்பதிவு என்றவுடன் நானும் அப்படித்தான் நினைத்தேன்.மனதின் மூலையில் தோன்றும் சந்தேகம்&கேள்விகளை பட் என்று கேட்டு போட்டு உடைப்பது உங்கள் பாணி தொடரட்டும்.!

      Delete
    2. // Smurfs' ஏற்கனவே ஓரளவுக்காவது குட்டீஸ் மத்தியில் பிரபலமாகியிருப்பதால், பாக்ஸுக்குள் அடைக்கப்படாமல் அதுமட்டும் தனி இதழாக வந்திருந்தால் புத்தகத் திருவிழாவுக்கு வருகைதரும் குட்டீஸின் கவனத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஈர்க்க முடியுமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை! 'Box set ஆக வாங்கினால்தான் உண்டு' என்ற கட்டாயம் ஏதுமின்றி, Smurfs மட்டுமாவது தனி இதழாகக் கிடைத்திடும் சாத்தியக்கூறு இருக்கிறதா எடிட்டர் சார்? ( ஈரோட்டுக்கு இது சற்றே காலம் கடந்த முயற்சியாகினும்கூட, இனிவரும் மற்ற புத்தகத் திருவிழாக்களுக்காவது உதவுமில்லையா?) //

      நிச்சயமாக குட்டீஸை ஈர்த்திட நல்ல களம்
      நன்றாக பொடிஸ் பொடியன்ஸிடன் ரீச் ஆகும்

      Delete
    3. Erode VIJAY : SMURFS மட்டுமல்ல - பாக்கி 3 கார்டூன் இதழ்களுமே தனித்தனியாய் விற்பனைக்கும் உண்டு ! ஏஜெண்ட்கள் எல்லோருமே இந்த 'விலை கூடுதல்- ஒரே box கான்செப்டை' விரும்புவது சந்தேகமே என்பதால் - 350-ல் தொடங்கி ஒவ்வொரு CCC இதழுக்கும் ஒரு தனி நம்பர் ; விலை அச்சிட்டுள்ளோம் !

      So அவை நான்குமே தனித்தனி விற்பனைகளுக்கும் உண்டு !

      Delete
    4. ///350-ல் தொடங்கி ஒவ்வொரு CCC இதழுக்கும் ஒரு தனி நம்பர் ; விலை அச்சிட்டுள்ளோம் !

      So அவை நான்குமே தனித்தனி விற்பனைகளுக்கும் உண்டு !///-- வாவ் சூப்பர் நியூஸ் சார் ...பொடியர்கள் நன்றாகவே பொடிந்து விடுவார்கள் சார் ....

      Delete
  17. Comic sunday - SMURFS !

    டியர் விஜயன் சார்,

    தங்களின் பயணக் களைப்பும் அயர்ச்சியும் ; காமிக்ஸ் பணிகளின் அவதியும் அலைச்சலும் என்னையும் தொற்றிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. தமிழ் ஸமர்ஃப்ஸ் லோகோவை, இவ்வளவு சிரமப்பட்டு ; பணம் செலவழித்து branding design நிறுவனத்திடம் வாங்கியதற்குப் பதிலாக, அப்படியே ஒரிஜினல் ஆங்கில லோகோவை உபயோகப்படுத்தி இருக்கலாம் / உபயோகப் படுத்தலாமே சார் ?!

    தமிழ்நாட்டில், தற்போது ஆங்கிலம் படிக்கத் தெரியாத சிறுவர்களே இல்லை என்பதால் SMURFS ஈசியாக ரீச் ஆகிவிடும் அல்லவா? தலைப்பை மட்டும் தமிழிலும், இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை அவர்களது trademark லோகோவை ஒரிஜினலாகவும் (SMURFS) பயன்படுத்தினால் நன்றாகத் தானே இருக்கும்?

    ஒரிஜினல் அட்டைப் படங்களை அப்படியே சிறிதும் மாற்றமின்றி பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நெடுநாள் கோரிக்கை ; அது தற்போது ஸமர்ஃப்/ல் நடைமுறைப் படுத்தப்படுவது என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியே :-)

    தற்போது யாரும் புத்தக அட்டையின் கவர்ச்சியைப் பார்த்து காமிக்ஸ் வாங்குவதில்லை என்றே நினைக்கிறேன். கி நாவா? காமிக்ஸா? மறுபதிப்பா? டெக்ஸ் வில்லரா? என்பதில் தான் முதல் தலைமுறையின் கவனம் இருக்கிறது. கடைகளில் கூட கவர்ச்சியால் யாரும் காமிக்ஸை வாங்கப் போவதில்லை அல்லவா ? ஒருவேளை, தற்போதைய ஸமர்ஃப்ஸ், மேஜிக் விண்ட் அட்டைப் படங்களைப் போல் துளியும் மாற்றமின்றி, ஒவ்வொரு புத்தகமும் வடிவமைக்கப்பட்டால் - உங்களுக்கு,

    1.பெரும்பான்மையான நேரம்/காலம் மிச்சமாகும் !
    2.அட்டைப்பட விமர்சனங்கள் அறவே தொலைந்து விடும் !
    3.நிறையவே இல்லாவிட்டாலும் அதிகமான பணம் மிச்சமாகும் !
    4. எங்களைப் போன்ற வாசகர்களுக்கு ஒரு branded உணர்வு கிடைக்கும் !

    இவ்வளவு சிரமங்களுக்கிடையில் வரப்போகும் SMURFS மிகப்பெரிய வெற்றியை ஈட்டா விட்டாலும், மிதமான வெற்றியை ஈட்டினாலே நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து விடும். நம் பழைய வாசகர்களிடையே அதிக வரவேற்பு இல்லாமல் போனாலும், புதிய காமிக்ஸ் வாசகர்களை / சிறுவர்களை நிச்சயம் SMURFS கவர்ந்திழுக்கும். ஏற்கனவே சுட்டி டிவியில் ஸமர்ஃப்ஸ் ஒளிப்பரப்பாவது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய விளம்பரமே !

    ReplyDelete
    Replies
    1. +1,நீங்கள் சொல்வது போல் என்னைவிட என் பத்து வயது பையன்தான் ஆர்வமாக உள்ளான்.!!

      Delete
    2. // 2#!2~11111ஒரிஜினல் அட்டைப் படங்களை அப்படியே சிறிதும் மாற்றமின்றி பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நெடுநாள் கோரிக்கை ; அது தற்போது ஸமர்ஃப்/ல் நடைமுறைப் படுத்தப்படுவது என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியே :-) // +1

      Delete
    3. // ஒரிஜினல் அட்டைப் படங்களை அப்படியே சிறிதும் மாற்றமின்றி பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நெடுநாள் கோரிக்கை ; அது தற்போது ஸமர்ஃப்/ல் நடைமுறைப் படுத்தப்படுவது என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியே// +1

      Delete
    4. மிஸ்டர் மரமண்டை & others : எந்தவொரு மாற்றமும், மாற்றம் காட்டிட வேண்டுமென்ற நோக்கில் நடைபெறுபவை அல்ல ! ஒரிஜினல்கள் ரொம்பவே நோஞ்சானாய் இருக்கும் தருணங்களில் தான் அவற்றை மேம்படுத்திட நாம் முனைகிறோம் ! ஒரிஜினல்கள் சிறப்பாய் இருந்திடும் வேளைகளில் அவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ள ஒரு பொழுதும் நாம் யோசிப்பதில்லையே !

      தவிர இந்த மாற்றங்களை செய்திடும் ஒரே பதிப்பகமும் நாமல்ல ! ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாணி உண்டு ; ஆங்காங்கே அதற்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்கிறார்கள் !

      Delete
  18. இந்த முறை வலை மன்னன் ...மாயாவி இருவர் அட்டைப்படமும் அருமை ....மனதை கவர்கிறது சார் .

    ********************

    எங்கள் லக்கி ....சிக் பில் லை விட இந்த பொடியர்கள் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா....கதையை படித்து விட்டு இவ்வளவு வேலைகளுக்கு இவர்கள் தகுதி ஆனவர்களா என்பதை கண்டு பிடிக்க வேண்டும் ....

    *********************

    இந்த புதிய கோடிஸ்வரர் லார்கோ போல தான் இருக்கிறார் .....வெளி வந்தால் பாகம் பிரிக்காமல் லார்கோ போல ஒரு கதை முடிவு தொகுப்பாக போடுங்கள் சார் ...

    **********************

    அந்த ரீங்காரத்தோடே கால் கட்டை விரல்களை ரசிக்கும் ஒரு ஆர்வமும், உத்வேகமும் எழுவதையும் உணர முடிகின்றது ! "ஆண்டவா...என்னைக் காப்பாற்றும் ; என்னிடமிருந்து நம் வாசகர்களையும் காப்பாற்றும் !" என்ற சிந்தனை தான் தலைக்குள் வழிநெடுகிலும் ! ########

    யாஅகூஊஊஊ .....சூப்பர்......சார் .....:-)

    ***********************

    ReplyDelete
    Replies
    1. //இந்த புதிய கோடிஸ்வரர் லார்கோ போல தான் இருக்கிறார் .....வெளி வந்தால் பாகம் பிரிக்காமல் லார்கோ போல ஒரு கதை முடிவு தொகுப்பாக போடுங்கள் சார் ...//

      +1

      Delete
  19. ஏதேனும் புத்தக விழா அமைந்திடும் பட்சத்தில் அந்நகரில் ஹோட்டல் ஹால் ஒன்றினை ஏற்பாடு செய்து நமது சந்திப்பு + 2016-ன் அட்டவணை பற்றிய கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்! இன்னமும் இரண்டரை மாதங்கள் உள்ளன என்ற போதிலும் – என் தலைக்குள் ஓடிய சிந்தனையின் பதிவு மாத்திரமே இது

    ##########

    சார் ...முடிந்தால் ஈரோட்டில் தாங்கள் பங்கு பெரும் இந்த இரண்டு நாட்கள் அது போல நண்பர்கள் கலந்துரையாடல் வைத்தால் நன்றாக இருக்குமே..நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு அது போதுமே.. :)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : பார்ப்போமே சார் ! :-)

      Delete
  20. Comic sunday ! 2

    நான் பெரிதும் விரும்பும் மேஜிக் விண்ட்/ன் ''கறுப்புக் காகிதங்கள்'' கதை இந்த மாதமே வருவது மிகப்பெரிய சந்தோஷமே ! இரும்புக்கை மாயாவியின் 'உறை பனி மர்மம்' - நான் இதுவரை படிக்காத கதை என்பதால் மிகுந்த ஆவலுடன் கூரியர் வாலாவை எதிர்பார்த்து காத்துக் கிடப்பேன் :-)

    ஸ்பைடர்/ன் 'எத்தனுக்கு எத்தன்' ஏற்கனவே படித்திருந்தாலும் தற்போது வரும் அளவினாலும் (size), தரத்தினாலும், natural shade paper/ன் காரணத்தினாலும் - புத்தகத்தை வாங்கி அப்படியே கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருப்பதால் மிகுந்த ஆவலுடன் கூரியர் வாலாவை எதிர்பார்த்து காத்துக் கிடப்பேன் :-)

    தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிவரும் box set என்பதாலும், திகட்டத் திகட்டப் படித்தாலும், திகட்டாத கார்ட்டூன் கதைகள் எண்ணிக்கையில் நான்கு என்பதாலும் மிகுந்த ஆவலுடன் கூரியர் வாலாவை எதிர்பார்த்து காத்துக் கிடப்பேன் :-)

    சென்ற மாதத்தைப் போல் இந்த மாதம் காமிக்ஸ் வறட்சி இருக்காது என்ற எண்ணமே சந்தோஷமாக இருக்கிறது :-)

    ReplyDelete
    Replies
    1. //சென்ற மாதத்தைப் போல் இந்த மாதம் காமிக்ஸ் வறட்சி இருக்காது என்ற எண்ணமே சந்தோஷமாக இருக்கிறது //

      :)

      +1

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை : 680 பக்க வண்ண இதழ் வெளியாகும் மாதம் வறட்சியின் அடையாளமெனில், அடைமழைக்கான அளவுகோல் எதுவென்று தெரியலியே !

      Delete
  21. நண்பர்களுக்கு காலை வணக்கங்கள்
    அனைவருக்கும் ஆடித் திருநாள் வாழ்த்துக்கள்


    பொடியன்ஸ் ரொம்ப படுத்துறாங்கப்பா


    இ.கை.மாயாவி இதுவரை வந்த ரீ பிரிண்ட்களிலயே மிகவும் கலக்கலான அட்டைப்படம்

    இந்தமாதம் ஏழு புத்தகங்கள் அருமை

    // ஆண்டவா என்னைக் காப்பாற்றும் :
    என்னிடமிருந்து நம் வாசகர்களை காப்பாற்றும் !! //

    ஹா ஹா ஹா

    அடுத்த வருட அட்டவணை அட அட ரகமாக இருக்கணும் விஜயன் சார் நாங்கள்ளாம் பாவமோல்லியோ

    இந்த வருட புக்பேர் புக்குகளாலே நிரம்பி களைகட்டப்போவது உறுதி


    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : //அடுத்த வருட அட்டவணை அட அட ரகமாக இருக்கணும் //

      அதுவே தான் எனது ஆசையும் ! ...எல்லோரது ஆசையும் கூட அல்லவா ?

      Delete
  22. வணக்கம் சார் ...வணக்கம் நண்பர்களே....பொடிப்பயல்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடாஆஆஆஆ.....க்ரக்ர்ர் ......பெளன்சர் கிளைமாக்ஸ் இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போகுதா????..ஹூம் ....கூட்டி கழகழித்து பார்த்தால் கடைசியாக ஆகஸ்ட்டில் எது தேறும் என்ற எண்ணமே மேலோங்குகிறது......ஓகே...சார் ..ஈரோடு கிளம்பிக்கொண்டு உள்ளேன் ...ஏதேனும் சுவாரஸ்யமான விசயம் நடந்தால் இங்கே தெரிவிக்கிறோம்......

    ReplyDelete
    Replies
    1. //.ஓகே...சார் ..ஈரோடு கிளம்பிக்கொண்டு உள்ளேன் ...ஏதேனும் சுவாரஸ்யமான விசயம் நடந்தால் இங்கே தெரிவிக்கிறோம்//

      +1

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.!அப்படியே ஒரு .எஸ்.எம்.எஸ்.அனுப்பினால் நன்றாக இருக்கும்.(ஈரோடு புத்தக கண்காட்சி முடியும் வரை உங்கள்&மாயாவி பிளாக் தினமும் பார்க்கின்றேன் ஏதாவது பதிவு போட்டு உள்ளீர்களா என்று.!நன்றி.!

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : துப்பாக்கி பிடித்தால் மாத்திரமே கதைகள் தேறுமென்று கிடையாதே சார் ! கார்டூன்களில் ரசித்திட விஷயங்களுக்கா பஞ்சம் ?

      Delete
  23. Comic sunday ! 3

    2016-க்கான அதிரடி ஆட்டத்தை அறிந்து கொள்ள இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டுமா விஜயன் சார்? சென்ற வருடத்தைப் போலவே ஒவ்வொரு ஞாயிறு பதிவின் இறுதியிலும் - தங்களின் ஒரு தேர்வையும், தேர்வுக்கான காரணத்தையும் பதிவிட்டு வந்தால், எங்களின் எதிர்பார்ப்பினால் ஏற்படும் எங்கள் காமிக்ஸ் தாகம் கொஞ்சமேனும் தீருமே ?!

    புதிய தொடர்களைப் பற்றிய சிந்தனை, விடாப்பிடியாக தங்களை ஆக்கிரமிக்கும் இந்த வேளையில் - லார்கோ வின்ச், வேயின் ஷெல்டன், XIII, என் பெயர் டைகர், பௌன்சர் என்று அனைத்தையும் 2016-க்கான அட்டவணையில் / அடுத்த வருடமே இந்தத் தொடர்களை முடித்து வைப்பீர்களா விஜயன் சார் ?

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : XIII ; பௌன்சர் தொடர்கள் மங்களம் பாடும் தருவாயில் இருப்பதால் அவற்றில் நிறையக் கதைகள் கிடையாது. ஆனால் ஷெல்டன் ; largo ; டைகர் எல்லாமே ongoing series ! அவற்றில் இப்போதைக்கு முற்றுப்புள்ளிக்கு சாத்தியங்கள் கிடையாதே ?

      Delete
  24. ஸார் எனது வாயின் கடையோரங்களிலும் உமிழ் நீர் சுரப்பிளின் ௐட்டு மொத்த செயல்பாடுகளின் வெளிப்பாடுகளின் வெளிப்பாடுகளின் விளைவுக்கு காரணம் லார்கோ போல ௐரு கதை 13க்கு ௐரு முடிவு கிடயாது என்பது தவிர வேற என்னவாயிருக்கும் . இப்போதே பார்க்க வேண்டும் என்றூ நானிருந்தால் அடுத்த வருடம் கூட இல்லையா ....அதற்கான சிந்தயை எல்லாம் வல்லவராய் மாறியுள்ள கலாமும் , காலமும் தங்கள் சிந்தைக்கு அருளப் போவது நிச்சயம் என பட்சி சொல்லியதால் இதனை சந்தோசமாய் கடக்கிறேன் அந்த ௐவியங்களின் ஈர்ப்பான ௐரு பக்கம் காட்டும் வண்ணக்கலவைகளுல் மனதை தொலைத்த படி .....


    இது வரை மாயாவிக்கு இது போல அட்டை படம் வந்ததில்லை என சத்தியம் செய்தபடி மீண்ட மனது நன்றி கூறியபடி வந்தால் எப்படி இருக்குமோ என எண்ணிய படி நான் காதிதருக்கும் உளதா பொடியர்களின் அந்த உளதா முத்து காமிக்ஸ் கலக்கலாய் காட்சி தர ....அட இதுகூட சந்தோசம் தர ஏலுமா என வியந்த படி பாய்ந்தால் ....
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என குவும் மனதை கட்டு படுத்த ஏலவில்லை கறுப்பு நிற காகிதங்களின் இந்த மாத வெளிப்பாடின் அறிவிப்பாலும் ...காட்டியுள்ள மனத ஈர்த்த வண்ணம் சூழ் அட்டை படத்தாலும்


    இந்த மாத அட்டை படங்கள் அனைத்தும் தூள் என மனது சொல்லும் நிலையில் கதைகளுக்காக காத்திருக்கிறேன் எனது வழக்கபடி மாமாங்கம் கரைய...

    நமது இறைவனாகி விட்ட அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்த இதழ் பின்னட்டயில் ௐரு இடம் ௐதுக்கினால் சிறுவர்களும் மகிழ்வார்கள் என வேண்டி கொள்கிறேன் . காமராஜர் பின்னட்டை ௐன்றில் காட்சியளித்ததை எண்ணிய படி .....

    ReplyDelete
    Replies
    1. //நமது இறைவனாகி விட்ட அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்த இதழ் பின்னட்டயில் ௐரு இடம் ௐதுக்கினால் சிறுவர்களும் மகிழ்வார்கள் என வேண்டி கொள்கிறேன் . காமராஜர் பின்னட்டை ௐன்றில் காட்சியளித்ததை எண்ணிய படி .....//

      +1

      Delete
    2. இந்த பாக்ஸ் செட்டுன்னா என்ன....அந்த பாக்ஸ கண்ணுல காட்டலாமே...

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ராப்பர்கள் எல்லாமே அச்சாகி 2 வாரங்கள் ஆகி விட்டன - ஸ்மர்ப் நீங்கலாக ! And அதன் பின்னட்டையில் திருமிகு.கலாம் அவர்களின் போட்டோவை அச்சிட நிச்சயம் படைப்பாளிகள் சம்மதிக்கப் போவதில்லை !

      Delete
    4. அடுத்த வாரம்தான் நேரிலேயே பார்க்கப் போகிறீர்களே ஸ்டீல்

      #அடடா_கோவப்படாதீங்க
      இருங்க இருங்க
      அட அதுக்குள்ள ப்ளக்கில விரலை சொருகீட்டாறே !!

      Delete
    5. மனமிருந்தால் அடுத்த மாதம்.....இடமிருந்தால் ஹாட்லைனில் ௐரு புகைப்படம்...

      Delete
    6. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு தாழ்மையான வேண்டுகோள்... திரு அப்துல் கலாம் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மாமனிதர். எளிமையின் சிகரம். நேர்மையின் அடையாளம். எல்லாம் சரி. அவருக்கான அஞ்சலி என்பது அவரது படத்தைப் புத்தக அட்டையிலோ அல்லது ஹாட்லைனிலோ அல்லது ப்ளாக்கிலோ வெளிவிடுவது அல்ல..! அது வெறுமே "என் புருஷனும் கச்சேரிக்குப் போறார்" என்பது போன்ற ஒரு வேஷம் மட்டுமே..! உண்மையில் அவருக்கான அஞ்சலி என்பது அவர்து எளிமை, நேர்மை, தாய்மொழிவழிக் கல்வி பயிலல், தாய்நாட்டுக்காக மட்டுமே உழைத்தல் போன்ற நல்ல (!) பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளுதலே..!

      Delete
  25. //இத்தனை ஆண்டுகால; இத்தனை இதழ் தயாரிப்பு அனுபவங்களுள் இதுபோன்றதொரு சவாலான production process இதுவரை நாம் சந்தி்த்திரா விஷயம் என்ற போது – தஞ்சாவூர் பொம்மைகளாய் தலையாட்டுவது அவசியமாகி விட்டுள்ளது! //

    மற்றம் நல்லது தான் ! எனக்கும் ஓவர் பலூன் ஒரு பிரச்சனையாக தெரிந்தது (அழகிய சித்திரங்களை மறைப்பதனால் )

    //கறுப்புக் காகிதங்கள்//
    :) எங்கள் வீட்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா இவரால் மட்டுமே சாத்தியம்(எனக்கு ஏன் என்று புரியவில்லை புத்தகம் கிழியும் வரை அனைவரும் படிக்கின்றனர் ), இந்த புத்தகமும் மற்ற மேஜிக் விண்ட் புத்தகம் போன்ற அளவுதானே எடிட் சார் ?

    Le Redempteurs:
    நல்வரவு !

    //XIIIன் இரத்தப்படலத்தின் பாகம் //: இரத்தப்படலத்தின் complete saga 2016? Boys plz sir song behind the scene !

    //புதிதாய் ஒரு 4 பாக ஆக்ஷன் திரில்லர் one -shot கதை ஆங்கிலப் பதிப்பாகிட பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும்,//
    :)) :)) :)) :)) :))

    நிச்சயம் 2016இக்கு ஆவன செயுங்கள் எடிட் ! உங்கள் 2016 one shot slotஐ காண அறிவிப்புக்கு ஆவலுடன் இருக்கின்றேன் Edit sir!

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : //எனக்கு ஏன் என்று புரியவில்லை புத்தகம் கிழியும் வரை அனைவரும் படிக்கின்றனர் //

      பெயரிலேயே மேஜிக் வைத்துள்ளோர் இது போல் எதிர்பாரா இடங்களில் சாதிப்பதில் வியப்பேது ?

      And yes, வழக்கமான சைஸ் தான் !

      Delete
  26. ///அங்குலம், அங்குலமாய் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சித்திர frame-ஐயும் நுணுக்கமோ- நுணுக்கமாய் ஆராய்ந்திட ஒரு மெகா-டீமே அமெரிக்கா-ஐரோப்பா என இருவேறு தளங்களிலிருந்து செயல்பட்டு வருவதை மலைப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம்! ///

    அந்த டீமிலிருந்து யாராவது ஒருத்தரை நம்ம லயன் ஆபீஸுக்கு தள்ளிட்டு வந்துட்டீங்கன்னா, சந்தா புத்தகங்களை கூரியரில் அனுப்பறதுக்கு முன்னாடி ஒருவாட்டி எல்லா பக்கங்களையும் thoroughவா செக் பண்ணிடலாம் பாருங்க! ;)

    @ M.V
    வணக்கம் சார்! கிடைக்கிற கேப்பில் எல்லாம் மாடஸ்டியை ரொப்பிடுறீங்களே... உங்களுக்காகவாவது அடுத்த வருசம் ஒரே ஒரு மாடஸ்டி கதையாவது இருக்கும்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய்.!ஏன் இந்த கொலை வெறி இந்த காலைப்பொழதில்.!மாடஸ்டி கதைகள், " ஐந்து லட்சியம் இரண்டு நிச்சயம்..!""(மனதில் மட்டும் இடம் என்று ஏமாத்தி விடாதீர்கள் சார்..!)

      Delete
    2. ஈரோடு விஜய்.!ஒரு ரகசியம் காதைக்கொடுங்கள்."மாடஸ்டி ரசிகர்களில் நான் ஒரு அடிமட்ட போஸ்டர் ஒட்டும் தொண்டன். நிறைகுடம் தளும்பாது என்பது போல் எட்டுதிக்கிலும் மாடஸ்டி ரசிகர்கள் குவிந்துள்ளனர்.!அதனால் எனக்கு ஆதரவுக்கு குறித்து பயமில்லை.!"""

      Delete
    3. Madipakkam Venkateswaran : என்றைக்காவது ஒரு தூரத்து நாளில் ஒரே ஒரு பிரதி மட்டுமே ஆனாலும் கூட சுலப, சொற்ப விலையில் அச்சிட்டுத் தரக்கூடியதொரு கருவி கண்டுபிடிக்கப்படும் வேளையில் - அதனை எப்பாடுபட்டேனும் வாங்கி விடுவோம் சார் ! உலக காமிக்ஸ் வரலாற்றில் முதல் "customized single copy imprint" என்ற பெயரை உங்கள் இளவரசியின் கதைத் தொகுப்போடு எப்படியேனும் தட்டிச் சென்று விடுவோம் !!

      Delete
    4. எங்கள் தலைவியை கிண்டல் செய்வது மனது பிசைகிறது... உடனடி தீர்வாக மாடஸ்டியின் சிறப்பு தீபாவளி வெளியீடு வேண்டும்...அதுவும் கலரில் வேண்டும்...

      Delete
    5. ///எங்கள் தலைவியை கிண்டல் செய்வது மனது பிசைகிறது... உடனடி தீர்வாக மாடஸ்டியின் சிறப்பு தீபாவளி வெளியீடு வேண்டும்...அதுவும் கலரில் வேண்டும்...///--- இதை மீண்டும் படித்து பாருங்கள் சரவணன் சார் ...ஏன் இந்த கொலை வெறி....

      Delete
    6. டெக்ஸ் விஜயராகவன்.!படிக்க படிக்க .,"சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழியுறமாதிரி இனிக்குது.!"

      Delete
  27. இது செல்வம் அபிராமி அவர்களுக்காக.....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. இது துவக்கமல்ல அல்ல..முடிவு...இங்கே'கிளிக்'
      (சங்கடங்களுக்கு மன்னியுங்கள் திரு விஜயன் அவர்களே...)

      Delete
    2. முடிவின் ஆரம்பமே தொடக்கம் தான் மாயா ஜி :)

      Delete
    3. mayavi.siva: படமெல்லாம் பார்க்கும் நிலைமையிலா என் பிழைப்பு உள்ளது மாயாவி சார் ? இது பகுபலி படம் என்ற மட்டுக்குத் தெரிகிறது ; அதைத் தாண்டி துளியும் புரியவில்லை ! So no புரிஞ்சிங்க்ஸ்..நோ சங்கடம்ஸ் !

      Delete
  28. நண்பர்களுக்கும் ஆசிரியறுக்கும் காலை வணக்கங்கள்

    ReplyDelete
  29. Best tribute to Kalam sir Logicomix ஐ தமிழில் customize print ஆகா முன் ஆர்டர் ஆகா, dream for next generation thoughtகாக கொண்டு வருவது !

    https://en.wikipedia.org/wiki/Logicomix

    ReplyDelete
  30. சென்றவருடம் இதே நாளில் LMS ரிலீஸ் ஆன அந்தக் கொண்டாட்டமான நிகழ்வுகள் மனதில் அலை அலையாய் வந்துபோகின்றன. ஹார்டு-பெளன்டு அட்டையாக இரவுக் கழுகை முதன்முதலாய்க் கண்டபோது நண்பர்களின் முகத்தில் தெரிந்த அந்த உற்சாகம் - வார்த்தைகளால் வடிக்க இயலாதது!

    அதே தினத்தில் ஒரு மரத்தடியில் நண்பர்கள் மற்றும் எடிட்டர், ஜூ.எடிட்டர் புடைசூழ தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய நண்பர் சிபி ( aka) பிரபாகரன் அவர்களை இந்த வருடமும் அவ்வாறே கொண்டாட அழைக்கிறேன்!


    பிறந்த நாள் வாழ்த்துகள் சிபி அவர்களே!
    ( நினைவூட்டலுக்கு நன்றி டெக்ஸ் விஜயராகவன்)

    ReplyDelete
    Replies
    1. இது அருமை நண்பர் பிரபாகர்.T அவர்களுக்காக...இங்கே'கிளிக்'

      Delete
    2. நம் சார்பிலும் நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக !!

      ஒரு வாரம் தாமதமாகின் என்ன - திரும்பவும் ஒரு மரத்தடி கிடைக்காதா - இன்னுமொரு கேக் கிடைக்காதா ?

      Delete
    3. //உலக காமிக்ஸ் வரலாற்றில் முதல் "customized single copy imprint" என்ற பெயரை உங்கள் இளவரசியின் கதைத் தொகுப்போடு எப்படியேனும் தட்டிச் சென்று விடுவோம் !! ///

      ஹாஹாஹா ! LOL

      Delete
    4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணா

      ( நீங்கள் கேக் வெட்டும்போது நண்பர்கள் மகிழ்வுடன் வாழ்த்து சொல்லும் படம் ஒன்று )

      Delete
  31. இரத்த படலத்திற்க்கு புதிதாய் வாய்த்த ஆற்றல் மிகு ௐவியர்களின் கவனம் பரபரப்பான லார்கோ பக்கமும் பாய்ந்தால் அவரும் சிரஞ்சீவி ஆகி விடுவாரே எனும் ஏக்கத்துடன்....

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : லார்கோவின் பின்னணி டீம் - பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்சத்தில் நிற்கும் அணி ! அந்த ஜாம்பவான்களுக்கொரு மாற்றென்பது கனவுகளில் தான் சாத்தியமாகிட முடியும் !

      Delete
  32. //அதிலும் குறிப்பாக லார்கோ பாணியில் ஒரு இளம் கோடீஸ்வரரின் கதையானது – அட்டகாசமான சித்திரத் தரத்தோடு என்னைக் கடுமையாய் சபலப்படுத்தியது !//

    சபலம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்.

    கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா.......

    இந்தவாரம் மிக இனிமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. TamizhPriyan : பிரச்சனை என்னவெனில் - கடை முழுக்க கலர் கலராய் லட்டுக்கள் குவிந்து கிடக்கின்றன ! எதை ரசிப்பது ? எதை ருசிப்பது ? என்ற போராட்டம் தான் மிகப் பெரியது !

      Delete
    2. நன்றி ஆசிரியர் அவர்களே.

      மீதமுள்ள லார்கோ கதைகள் குறைவே என்பதால் இந்த புது கோடிசுவரர் வரவு ஓரு புது நம்பிக்கையை விதைத்துள்ளது.

      காத்திருக்க நாங்கள் தயார்.

      Delete
  33. கலாம் ஐயாவின் மறைவு பற்றி தாங்கள் கண்டிப்பாக குறிபிடுவீர்கள் என எதிர்பார்த்தேன். அதுபோலவே எழுதி ஆறுதல் தந்துள்ளீர்கள். என் கேள்வி வித்தியாசமாக இருக்கலாம், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு காமிக்ஸாக ஆங்கிலத்தில்/ இந்தியில் யாரேனும் வெளியிட்டு இருக்கிறார்களா?. அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அதை தமிழில் கொண்டு வரலாமே? நம் இளையதலைமுறைக்கு காமிக்ஸ் வாயிலாக அந்த மாமேதைக்கு மரியாதை செலுத்தும் ஒரு நல்வாய்ப்பாக நம் காமிக்ஸ் வாசகர்களுக்கும் அது இருக்கும். இது எனது ஆசை மட்டுமே, ஆலோசனை அல்ல. ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. cap tiger : அமர் சித்ர கதாவில் நிச்சயம் வெளியிட்டிருப்பார்கள் - and எல்லா மொழிகளிலும் அது வெளியாகும் என்றே நினைக்கிறேன் !

      Delete
  34. புது கோடிஸ்வரன் சித்திரங்கள் அழகாகவும் நல்ல தரத்துடன் காணப்படுகிறது..எது எப்படியோ புலியை பார்த்து பூனை சூடு போட்ட மாதிரி இல்லாமல் இருந்தால் சரிதான்.!

    ReplyDelete
  35. டியர் விஜயன் சார்,

    //திங்கட்கிழமை தான் இந்தக் குட்டி மனுஷர்கள் அச்சுப் பிரிவுக்குள் புகுந்திடுவர். And அந்த அட்டைப்பட ஒப்புதல் ...//

    அச்சுக்கு செல்லும் முன்னர் ஒரு விஷயத்தை சற்று தெளிவு படுத்திக் கொள்ளுங்களேன்?!

    //இதுவொரு ஊதா உலகம்//
    ஸ்மர்ஃப்ஸ் அனைவரும் நீல நிறத்தினர் - மேற்கண்ட தலைப்பு சற்றும் பொருந்தவில்லை. ஒருவேளை அது "The Purple Smurfs" என்ற ஆங்கிலத் தலைப்பின் தமிழ் வடிவம் என்றால் அதுவும் பொருந்தாது! ஏனென்றால், அட்டையில் இருப்பது கருப்பு ஸ்மர்ஃப்!

    Spoiler Alert:
    இந்தக் கதை முதன்முறையாக பிரெஞ்சில் வெளியான போது "Les Schtroumpfs noirs" (The Black Smurfs) என்ற பெயரில் தான் இருந்தது. ஒரு சில காரணங்களால், கதைப்படி பொடியர்கள் அனைவரும் நீல நிறத்திலிருந்து கருப்பாக மாறுவார்கள் - அப்படி மாறும் போது அவர்களின் குண நலன்களும் மாறிவிடும். ஆனால், இது நிறவெறியைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், கருப்புப் பொடியர்கள், ஆங்கிலத்தில் ஊதாப் பொடியர்களாக மாறி விட்டனர்!

    நாம் வெளியிடுவது கருப்பா, ஊதாவா?! ஊதா என்றால், "ஊதாப் பொடியர்கள்" என்ற தலைப்பே பொருத்தமாகப் படுகிறது!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : அந்த நிறவெறி இத்யாதி சமாச்சாரங்கள் தொடர்பாக செய்யப்பட்ட purple நிறமாற்றங்கள் எல்லாமே அமெரிக்க முன்ஜாக்கிரதைகளின் பொருட்டே ! நாம் ஒரிஜினலில் உள்ளது போலவே கறுப்பு குட்டிப்பயல்களைத் தான் காட்டவுள்ளோம் !

      Delete
    2. //நாம் ஒரிஜினலில் உள்ளது போலவே கறுப்பு குட்டிப்பயல்களைத் தான் காட்டவுள்ளோம் !//
      ஓகே!

      //இதுவொரு ஊதா உலகம்//
      அப்படியானால், உலகம் ஊதாவானது எதற்காக?!

      //‘ராப்பரின் ஒரிஜினல் டிசைனை துளி கூட நோண்டக் கூடாது... பின்புலத்தில் நீங்கள் வரைந்துள்ள புதர்... மரக்கிளை... தொங்கும் hazelnut என சகலத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்புங்கள் –ப்ளீஸ்!‘ என்று சொல்லியிருந்தனர்//

      அவர்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்திருந்தால், இதே கேள்வியை அவர்களும் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சரி விடுங்கள், ஏதோ ஒரு கலர்...! ;-)

      Btw, ஸ்மர்ஃப்ஸ் - தமிழ் தலைப்பின் வடிவமைப்பு அருமை, இதே முறையை இதர நாயகர்களுக்கும் பின்பற்றலாமே (இனிமேல்..)?

      அது சரி, ரீப்ரிண்ட் வரிசையில், வரிசையாக மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர் என்று சுற்றிய மரத்தையே சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி?! வேறு பழைய நாயகர்களே இல்லையா என்ன?! உதாரணத்திற்கு, மாடஸ்டி ப்ளைசியின் கழுகு மலைக் கோட்டை-யை ரீப்ரிண்டலாமே?

      Delete
    3. // உதாரணத்திற்கு, மாடஸ்டி ப்ளைசியின் கழுகு மலைக் கோட்டை-யை ரீப்ரிண்டலாமே? //

      மடிப்பாக்கம்
      வெங்கடேஸ்வரன் சார் கவனத்திற்கு

      இந்தவாரம் இளவரசி வாரமாக்கிடலாமா சார்

      Delete
    4. ஈரோடு விஜய்.!பார்த்தீர்களா.!கார்த்திக் சோமலிங்கா வும் இளவரசி ரசிகர்.!உய்ய்ய்யயயயயயயயயயய........(விசில் அடிக்கின்றேன்)

      Delete
    5. அப்படியே கத்தி முனையில் மாடஸ்டி கதையையும் சேர்த்து கொள்ளுங்க விஜயன் சார்!

      Delete
    6. @ Karthik Somalinga : 20 பக்கக் கதையான BLACK SMURFS -ன் பொருட்டல்ல இந்த இதழின் தலைப்பு ! இந்த SMURF உலகுக்கானதொரு general அறிமுகம் தந்திடும் வகையில் ; மற்ற கதைகளுக்கும் ஏற்புடைய விதமான டைட்டில்!

      @FRIENDS :கழுகுமலைக் கோட்டை கூட ஏற்கனவே ஒன்றோ இரண்டோ முறைகள் மறுபதிப்பான கதை தானே ?! வேண்டுமெனில் அதை reprint செய்வதில் நமக்குச் சிரமம் கிடையாது ! And 'கத்தி முனையில் மாடஸ்டி' செண்டிமெண்டாக எனக்குப் பிரியமான இதழ் தான் என்றாலும் - படு மொக்கையான கதையல்லவா ? அதற்கு மாடஸ்டி in இஸ்தான்புல் கூடத் தேவலையே !

      Delete
    7. ஹிஹிஹிஹி...................நன்றி சார்.!

      Delete
    8. @விஜயன் சார்:
      "திரும்பத் திரும்ப பேசுற நீ" என்று கடுப்பாக வேண்டாம்! ;) But, I think we are going in circles here!

      Smurfs-இன் இயல்பான நிறம் Blue, அதாவது நீல நிறம்! அவர்கள், 20 பக்கக் கதையான Black Smurfs-ல் மட்டும் கறுப்பாகவும் (Black), அதன் ஆங்கில வடிவில் ஊதாவாகவும் (Purple) மாறுகின்றனர்!

      //இந்த SMURF உலகுக்கானதொரு general அறிமுகம் தந்திடும் வகையில் ; மற்ற கதைகளுக்கும் ஏற்புடைய விதமான டைட்டில்!//
      ஆகவே, "இதுவொரு ஊதா உலகம்" என்பது மற்ற கதைகளுக்கும் ஏற்ற பொதுவான தலைப்பாக நிச்சயம் இராது! (அதுவும் நாம் ஒரிஜினலைப் பின்பற்றுவதால், அந்த 20 பக்கக் கதையில் கூட ஊதா கிடையாது!). "இதுவொரு நீல உலகம்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்!

      ஒருவேளை நீங்கள், "Blue-வை நீலம்னும் சொல்லலாம், ஊதான்னும் சொல்லலாம்...!" என்று சொல்ல வருகிறீர்களோ? ;)

      Delete
    9. Karthik Somalinga : Ringa -ringa-roses ஆடிய உணர்வு தோன்றுகிறதா ? Blue மற்றும் Purple -க்கு தமிழில் பொதுவானதொரு பதம் "ஊதா" . பார்க்க :
      http://www.tamildict.com/english.php?action=search&sID=fbafaed33942b5b8c7b966b0662eb34e%2F&word=blue
      http://dictionary.tamilcube.com/

      "நீல உலகம் " என்றாலே ஒரு மார்க்கமான பொருள்படுகிறதென்பதாலே தான் "ஊதா உலகம்" என்ற பெயர் தேர்வானது !

      Delete
    10. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஊதா=நீலம்தான். தெற்கத்தில்//

      தெற்கில் மட்டுமல்ல சார் ; எல்லா இடங்களிலுமே தான் !

      Delete
    11. @எடிட்டர் & ஸ்டீல்:
      இதாவது பரவாயில்லை... எனக்கு இந்த ஜோக் தான் (உண்மையும் கூட!) நினைவுக்கு வருகிறது: http://goo.gl/BHY58q

      Delete
    12. //..@FRIENDS :கழுகுமலைக் கோட்டை கூட ஏற்கனவே ஒன்றோ இரண்டோ முறைகள் மறுபதிப்பான கதை தானே ?! வேண்டுமெனில் அதை reprint செய்வதில் நமக்குச் சிரமம் கிடையாது ! And 'கத்தி முனையில் மாடஸ்டி' செண்டிமெண்டாக எனக்குப் பிரியமான இதழ் தான் என்றாலும் - படு மொக்கையான கதையல்லவா ? அதற்கு மாடஸ்டி in இஸ்தான்புல் கூடத் தேவலையே ! ..//

      அன்புள்ள எடிட்டர்,

      எதற்கு இந்த குழப்பம்? " கழுகு மலைக்கோட்டை + கத்தி முனையில் மாடஸ்டி + மாடஸ்டி in இஸ்தான்புல் " , மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக "மாடஸ்டி ஸ்பெஷல் - reprint" என்று வெளியிடலாமே? :) முடிந்தால் இன்னும் ஓரிரு மாடஸ்டி கதைகளையும் சேர்த்து... இன்னும் முடிந்தால் box set ஆக ;) :)

      கண்டிப்பாக எனக்கு கழுகு மலைக்கோட்டை மறுபதிப்பு வந்தேயாக வேண்டும்... :)

      பின் குறிப்பு: அத்துடன் பெரும்பான்மையான வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான, தல-யின், டிராகன் நகரம், பவளச்சிலை மர்மம், கழுகு வேட்டை மறுபதிப்பு + ... (உங்களால் எவ்வளவு [தல-யின் மற்ற] கதைகளை மறுபதிப்பு செய்ய முடியுமோ சேர்த்து கொள்ளவும் :) ) ஸ்பெஷல் வெளியீட்டு அறிவிப்பையும் விரைவில் வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்

      முன்கூட்டிய நன்றிகளுடன்,
      பெரியார்

      Delete
    13. //கத்தி முனையில் மாடஸ்டி மொக்கை கதை//எடிட்டர் சார் அதுவும் நல்ல சுவராசியமான கதைதான்.! கார்வினை போல் பபூன் வேடமிட்டு வில்லன் கத்தி வீசும் லாவகத்தை வைத்தே அது கார்வின் அல்ல என்று மாடஸ்டி கண்டுபிடித்து விடுவார்.இதைவிட நி.நி.யு.கதையில் தூரத்தில் நடந்து வருவதை வைத்தே அது மாடஸ்டி அல்ல என்று கார்வின் கண்டுபிடித்துவிடுவார்.நட்பில் உயர்ந்தவர் மாடஸ்டியா?கார்வினா?என்று பட்டிமன்றம் வைத்தால் பட்டிமன்ற நடுவர் தீர்ப்பு சொல்ல முடியாமல் தடுமாறுவது நிச்சயம்.!(ஈரோடு விஜய்.!ஒருஅணியின் தலைவர் நமது தலைவரும் மற்றொரு அணியின் தலைவர் நானும் இருந்தால் எப்படி இருக்கும்.சூப்பராய் இருக்குமல்லவா.?

      Delete
    14. இது தான் ஊதா (ஊதாப் பூ) - https://en.wikipedia.org/wiki/Violet_(color)#/media/File:Purpleflower_Violet.JPG

      Delete
    15. ///நி.நி.யு.கதையில் தூரத்தில் நடந்து வருவதை வைத்தே அது மாடஸ்டி அல்ல என்று கார்வின் கண்டுபிடித்துவிடுவார்.நட்பில் உயர்ந்தவர் மாடஸ்டியா?கார்வினா?///

      இதென்ன பிரமாதம்? நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு டெக்ஸ் கதையில், வில்லன்கள் நம்ம கார்சனை கிட்னா பண்ணிட்டுப் போய் ஒரு மலை உச்சியில சிறை வச்சு கை,கால், கண்ணு, வாய் எல்லாத்தையும் கட்டிப் போட்டிருப்பானுக. குதிரையில் இரண்டு நாள் பயணத் தொலைவில் டெக்ஸ் வந்துக்கிட்டிருப்பதை ரெண்டு தபா மூக்கை மட்டும் சுழிச்சே கண்டுபிடிச்சுடுவாரு கார்ஸன்! நட்புன்னா இப்படியில்ல இருக்கணும்?

      Delete
    16. On a funny note...
      நானும் மூன்று நாட்களாக, "ஸ்மர்ஃப்களின் சரும நிறம், ஊதா(ப் பூ) வண்ணத்திலோ, கத்தரி(க்காய்) கலரிலோ இருக்காது; மாறாக, அது சொட்டு நீலத்தை விட சற்றே லைட்டான டின்டிலும், நீல வானத்தை விட கொஞ்சம் டார்க் ஷேடிலும், அதாகப் பட்டது, கிட்டத்தட்ட, ஏறத்தாழ , ஐ மீன்... நான் என்ன சொல்ல வரேன்னா... ஸ்மர்ஃப்களின் சருமம், ஒரு விதமான லைட் ப்ளூ இள நீல நிற வண்ணக் கலரில் இருக்கும்" ன்னு தனியா புலம்பிகிட்டு தான் இருக்கேன்! எடிட்டரோ, ஒவ்வொரு முறையும், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு, கடைசில, "ஓஹோ, ஊதாக் கலரா?!"-ன்னு கேஷூவலா கேக்குறார் (அந்த, 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' மொமென்ட்!) :P

      நீலம் இஸ் நாட் ஈக்வல் டு ஊதா-ன்னு சொன்னா, தமிழ் அகராதியைக் காட்டி ஆதாரபூர்வமா அச்சுறுத்துறார்! :-D இதுவரை ஹீரோக்களின் பெயர்களை மட்டும் தான் மாத்தி இருக்கோம்; இப்ப தான், முத்து காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக (B&W பதிப்புகளைத் தவிர்த்து), ஹீரோக்களின் ஸ்கின் கலரை.....யே ஒட்டு மொத்தமா மாத்தப் போறோம்! ;)

      On a serious note...
      இவை போன்ற இங்கிலீஷ் கலர்கள் இந்தியாவுக்குள் நுழையும் முன்னர் - அவை போன்ற வண்ணங்களும், அவற்றைக் குறிக்கும் சொற்களும் இங்கே புழக்கத்தில் இல்லாமல் இருந்ததோ என்னவோ?!

      ஊதா ஸ்மர்ஃப் ஊதாவாகவும், நீல ஸ்மர்ஃப் நீலமாகவும் இருக்கும் ஆதாரபூர்வ காட்சியை இங்கே காணலாம்!

      அசரீரி from the editor's desk:
      Guys, ஒரு சாதா ஊதா மேட்டரை ஊதி ஊதி அசாதா ஆக்க வேண்டாமே, ப்ளீஸ்?!

      :-)

      Delete
    17. // "நீல உலகம் " என்றாலே ஒரு மார்க்கமான பொருள்படுகிறதென்பதாலே தான் "ஊதா உலகம்" என்ற பெயர் தேர்வானது ! //

      சிவப்பு உலகம்
      மஞ்சள் உலகம்
      நீல உலகம்

      இவை அனைத்துமே வெவ்வேறு இடங்களில், காலக்கட்டங்களில் ஒரு மார்க்கமான அர்த்தங்களையே தந்திருக்கின்றன . அதற்காக மிகவும் முக்கியமான நிறங்களைச்சார்ந்த (சிவப்பு, மஞ்சள், நீலம்) வார்த்தைகளை ஓரங்கட்டுவது முடியுமா / அவசியமா? அதுவும் படைப்பாளிகள் ஸ்ட்ரிக்டான ப்ராண்டிங் நெறிமுறைகளை எதிர்பார்க்கிறார்கள் என அறிந்தும் :(

      ஆங்கிலத்தில் வயலட் என அழைக்கப்படும் வார்த்தைக்கு ஈடாக, தமிழில் வழக்கில் உள்ள ஒரே வார்த்தை ஊதா மட்டுமே. அதையும் நீலத்துக்கு இன்னொரு பொருளாக மாற்றிவிட்டால் வயலட்டைக் குறிப்பிட தமிழில் வார்த்தையே கிடையாது. ஒருவேளை ஸ்மர்ஃப் தொடரில் எங்காவது வயலட் நிறம் சார்ந்த வார்த்தை அவசியப்படும்பட்சத்தில் அதை எப்படிக் குறிப்பிட இயலும்? பள்ளியில் பயிலும் வாட்டர் கலர் உபயோகப்படுத்தும் சிறுவர்களைக்கேட்டால் எது நீலம், எது ஊதா என எளிதாக வகைப்படுத்திவிடுவார்கள். பெரியவர்களான நமக்குதான் சகலத்திலும் குழப்பம்.

      // ‘சூப்பரப்பு!.....படைப்பாளிகள் பார்த்த மாத்திரத்திலேயே அசந்து போகப் போகிறார்கள்! என்ற நம்பிக்கையோடு அதனை பெல்ஜியத்துக்கு அனுப்பினோம்! ணங்! என்ற சத்தம் மாத்திரமே கேட்கவில்லையே தவிர அதனோடு இணைந்து வரவேண்டிய பாக்கி சங்கதிகள் சகலமும் ஆஜராகின! பறக்கும் பொறி... காதில் ஒரு ‘கொய்ங்ங்‘ ஓசை... சில்லுமூக்கில் லேசான தக்காளிச் சட்னி ஒழுகல் என்று நிறையவே சேதாரத்தை உண்டு பண்ணியிருந்தது படைப்பாளிகளின் பதில்! ‘ராப்பரின் ஒரிஜினல் டிசைனை துளி கூட நோண்டக் கூடாது... பின்புலத்தில் நீங்கள் வரைந்துள்ள புதர்... மரக்கிளை... தொங்கும் hazelnut என சகலத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்புங்கள் –ப்ளீஸ்!‘ என்று சொல்லியிருந்தனர்.//

      அட்டைப்படங்களில் நாம் சேர்க்கும் கூடுதல் கேப்ஷன்ஸ் எளிமையாக கருப்பு அல்லது வெள்ளை எழுத்தில் இருந்தாலே நன்றாகத்தான் இருக்கும். ஒரிஜினலை Distract பண்ணாமலும் அமையும். வேலைப்பளு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையிலும், நிறைய உழைப்பை செலவிட்டு டிசைன் செய்வதற்கு பதில் அட்டைகளை ஒரிஜினலின் ஃபார்மேட்டைத் தழுவியே செய்துவிடலாம். Still wondering why not..

      Delete
    18. @ கார்த்திக்

      ///எடிட்டரோ, ஒவ்வொரு முறையும், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு, கடைசில, "ஓஹோ, ஊதாக் கலரா?!"-ன்னு கேஷூவலா கேக்குறார் ////

      Lol.

      எடிட்டரின் மைன்டு வாய்ஸ் : SMURFSனால படைப்பாளிகள் கிட்டேர்ந்துதான் கலர்கலரா பிரச்சினை வருதுன்னு பார்த்தா, இப்ப வாசிப்பாளிகள் கிட்டேயிருந்தும் கலர் கலரா பிரச்சினை ஸ்மர்ஃபுதே... ! ஒரு ஊதாவுக்கு இத்தனை பிராதா? பேசாம படைப்பாளிகள்டேர்ந்து பர்மிஷன் கிடைக்கலேன்னு சொல்லி கருப்புவெள்ளையிலேயே போட்டுட்டா பிரச்சினை சுளுவா முடிஞ்சிடும்னு தோனுதே...

      Delete
    19. @ரமேஷ் குமார்:
      //அதுவும் படைப்பாளிகள் ஸ்ட்ரிக்டான ப்ராண்டிங் நெறிமுறைகளை எதிர்பார்க்கிறார்கள் என அறிந்தும் :(//

      +1 நீலமே கலவாத பொதுத் தலைப்பாக கூட வைத்திருக்கலாம்! (உ.ம்.: ஸ்மர்ஃப் பொடியர்கள்). ப்ளூபெர்ரி-டைகர், ப்ளூகோட்ஸின் ஸ்கூபி/ரூபி வரிசையில், ஸ்மர்ஃப்ஸ் - "ஸ்கூட்டி" ஆகாமல் தப்பித்தது என்ற வரையில் மகிழ்ச்சி! ஆனால், 'ஸ்மர்ஃப்ஸ் மொழி' தமிழுக்காக மாற்றப் பட்டிருப்பது அவசியமான ஒன்று என்பதால் அதை வரவேற்கிறேன்!

      பி.கு.: Purple & blue பிரச்சினை போதாதுன்னு, புதுசா violet-ஐ வேறயா?! செவ்வூதா (Purple), நீலவூதா (Violet) என்று புதிதாக கலைச்சொற்களை உருவாக்க வேண்டியிருக்கும் போல! :)

      @ஈரோடு விஜய்:
      //கருப்புவெள்ளையிலேயே போட்டுட்டா பிரச்சினை சுளுவா முடிஞ்சிடும்னு தோனுதே...///
      "கருப்பு வெள்ளை ஸ்மர்ஃப்ஸ்க்கு, ஊதா உலகம் என்ற தலைப்பு பொருந்தவில்லை; "சாதா உலகம்" ன்னு மாத்துங்க!"-ன்னு சொல்லி பிரச்சினை பண்ணுவோம்ல! ;)

      மை.வா.: ஹ்ம்ம்... ஊதா உபயத்தில், "பத்துக் கணக்காக கமெண்டு போடுவோர்" பட்டியலுக்குள் நானும் நுழைஞ்சுருவேன் போலயே? :P

      Delete
  36. ஊதான்னாலே பிரச்சனைதான் போல?! ஊதா கலரு ரிப்பன் பாட்டுலயே அவங்க காட்டுறது நீல ரிப்பன்! :)

    ReplyDelete
  37. "ஊதாப் பொடியர்கள்"

    எனது எண்ணமும் இதுவே

    முதல் புத்தகம் இப்பெயரில்வெளிவருவது அனைவரின் மனதில் பதிந்தும் , ரசிக்கும் படியான ஒன்றாகவும் இருக்குமே விஜயன் சார்

    ReplyDelete
  38. 7 புத்தகங்கள்....எடிட்டரும் அவர் பரம்பரையும் அஅனைத்து செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. Mohamed Harris : சிரம் தாழ்த்தி நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன் !!

      Delete
  39. //"ஆண்டவா...என்னைக் காப்பாற்றும் ; என்னிடமிருந்து நம் வாசகர்களையும் காப்பாற்றும் !"//
    ஹா,.,ஹா..
    மாயாவி அட்டை டிசைன் பிரமாதம். இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். கவனித்தீர்களோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : இனிமேல் தான் பார்க்க வேண்டும் சார் ! நார்மல் routine -க்குத் திரும்பிட இன்னும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் !

      Delete
    2. மாயாவியின் அட்டைப்படத்தை நம் நண்பர் மாயாவி சிவா முகப்புத்தகத்தில் போட்டோ எடுத்து பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்தவுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவ்வளவுதான்.

      Delete
  40. Dear Vijayan Sir,

    All your comments making me eagerly wait for 2016 stories selection, Hoping (Praying) for a separate subscription of Tex Willer Stories. Please allot space for special like LMS and Minnum Maranam in 2016.

    ReplyDelete
  41. EBF ல டெக்ஸ் வில்லருக்கு ஏதோ செய்வதாக கூறினீர்களே ...... சார்

    ReplyDelete
    Replies
    1. பட்டாசு நகரில் பெரிய பாத்திரத்தில் அல்வா கிண்டும் வாசம் வருவதாக காற்று வாக்கில் செய்தி பரவியது ....

      Delete
  42. புத்தக அரங்கில் ஒரு மினி ரவுண்ட் அடித்து விட்டு நம் ஸ்டாலையும் பார்த்து விட்டோம்.......மீண்டும் நம் ஸ்டாலையும் நண்பர்களையும் பார்த்த உடன் ...பொங்குதே ...சந்தோசம் பொங்குதே ...என பாட ஆசை பட படக்குதே......

    ReplyDelete
  43. டியர் எடிட்டர்,

    போடியர்களுக்கான உங்களது டீமின் மெனக்கெடுதல்கள் நமது பிற தயாரிப்புக்களையும் மெருகேற்ற உதவிடும் எனும் பொருட்டு வரவேற்க்கத்தக்கதே.

    (அதுவும் ... Especially அந்த பலூனுக்குள் வசனம் நுழைக்கும் விஷயம் :-) :-))

    இன்று காலையில் தான் டெக்ஸ் Lion 250 தவிர இந்த ஆண்டின் இதர இதழ்களைப் படித்து முடித்து பெருமூச்சு விட்டேன் .. அதற்க்குளாக இன்னும் ஏழா .. பருவ மழை மெய்பித்ததோ இல்லையோ இவ்வருடம் மாதா மாதம் காமிக்ஸ் மழை கொட்டுகிறது !

    லார்கோ போன்றவரின் தொடர் குறித்த முடிவு மிகச்சரி - கை இருப்புத் தொடர் முடிய முடிய இதனைத் தொடங்கலாம் ..

    அப்புறம் .. உங்களின் அந்த "நாடு நாடாய்ப் போய்த் திரும்புகையில் அள்ளி வரும் காமிக்ஸ் மூட்டை" வரம் மட்டும் கிடைத்தால் .. ஹ்ம்ம் .. that "சொக்கா சொக்கா ... ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொன்னாச்சே" moment :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : அதிலும் லார்கோவின் அந்த லேட்டஸ்ட் பாகத்தைப் படிக்க முடிந்த போது - பரிசே வாங்கி விட்ட தருமியாகத் தான் உணர்ந்தேன் ! வழக்கமான largo templates தான் என்றாலும் - ஆக்ஷன் & அதிரடி - செம ரகளை !!

      Delete
    2. ஓ.!சூப்பர் சார்.!2016ல் எதிர் பார்க்கலாமா சார்.?

      Delete
  44. நண்பர் சிபி அவர்கட்கு, என் பிறந்த நரள் வரழ்த்துக்கள். CCC இற்கும் புதிய கோடீஸ்வரன் வருவதற்கும் I am waiting sir.

    ReplyDelete
  45. ஈரோடு புத்தக திருவிழா கட்டரயம் வெற்றி பெறும் ஸர்ர். பர்ருங்களேன்.

    ReplyDelete
  46. ஊதா பொடியர்கள் ரொம்பத்தரன் படுத்துகிறர்ர்கள் . ஆயினும் படைப்பரளிகள் இப்படி பல திருத்தங்கள் சொல்லும்போது உங்களுக்கு வேறு வழி இல்லையே ஷர்ர்.

    ReplyDelete
  47. == 'எக்காரணம் கொண்டும் ஒரிஜினல் டிராயிங்கின் ஒரு செ.மீ. கூட ‘கட்‘ ஆகக் கூடாது! So எழுத்துக்களை ஒரிஜினல் பலூன்களுக்குள்ளாகவே அடக்குவதில் கவனம் செலுத்துங்கள்!‘ ==

    நமது அனைத்து இதழ்களுக்குமே இதை செயல்படுத்தி பாரக்கலாமே. வசனத்தை சுருக்குவது, எழுத்தின் அளவினை இன்னும் கொஞ்சம் சிறிதாக்குவது என இது சாத்தியமே.

    இப்போது உள்ள font size சாதாரணமாக நம்மால் படிக்க முடிகிற font size ஐ விட பெரியது. பொதுவாக 40 வயதுக்கு மேல் சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு சிரமம் ஏற்படும்தான். ஆனால் எழுத்தின் அளவை பெரிதாக்குவது அதற்கு தீர்வாகிடாதே!

    ReplyDelete
    Replies
    1. எல்லா கதைகளுக்கும், அதுவும் தமிழில், வசனங்களை பலூனுக்குள் அடக்குவது கொஞ்சம் கடினம்தான். எழுத்தின் அளவை இன்னும் கொஞ்சம் சிறிதாக்கி, மொழிபெயர்த்த வசனங்களை சுருக்க முடிந்தால் சுருக்கி முடிந்தவரை அவற்றை பலூனுக்குள் அடக்க முடிந்தால் நமது காமிக்ஸ் வாசிப்பு அனுபவம் இன்னும் சுகமாக இருக்கும்.

      Delete
    2. புதுவை செந்தில் : ஒரேயொரு லார்கோ சாகசத்தையோ ; XIII -ன் ஆல்பத்தையோ ; டைகரின் கதையினையோ மொழிபெயர்த்து அதே ஒரிஜினல் பலூன்களுக்குள் அடைத்துத் தான் பாருங்களேன் - எழுத்துக்களின் font என்னவாக இறுதியில் அமைகிறதென்று !ஆக்ஷன் அதிகமிருக்கும் பகுதிகளில் சிரமமிராது ; ஆனால் லார்கோவின் போர்டு மீட்டிங்குகள் அரங்கேறும் தருணங்களை ; plot -ன் பின்னணிகள் கட்டவிழும் சமயங்களை என்றெல்லாம் பயணிக்கும் போது கைவசம் ஒரு magnifying glass அவசியமாகிடும் !

      SMURFS கதைகளின் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்புகளில் உள்ள குட்டி எழுத்துக்களை 4 பக்கங்களுக்கு மேலாக எனக்குப் படிக்கவே முடியவில்லை ! கதை எத்தனை சுவாரஸ்யமாக இருப்பினும், அதனைப் படிக்க ஒரு பிரயத்தனம் அவசியமெனில் something isn't right somewhere !

      Moreover இன்றைக்குப் படிக்க சாத்தியமாகும் எழுத்துக்கள் இன்னமும் சில பல ஆண்டுகளுக்குப் பின்னே என் போன்ற பார்டிகளுக்குப் படிக்கவும் முடிந்திடுமா - என்ன ? Legible fonts are a long term thing !

      Delete
  48. விஜயன் சார், இங்கு உள்ள அட்டைதான் பொடியர்களின் ஒரிஜினல் அட்டை படமா? முடிந்தால் ஒரிஜினல் அட்டை படத்தை இங்கு வெளி இட முடியுமா?

    கடந்த வருடம் ஈரோடு புத்தக திருவிழாவில் இதே நாளில் நண்பர்களை சந்தித்தது பசுமையாக இன்றும் நினைவில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்த விஷயம்: எனக்கு பிடித்த magic-வின்ட் கதையின் அட்டை படம் சூப்பர்!

      Delete
    2. Parani from Bangalore : ஒரிஜினலின் ராப்பர் இதுவே தான் ! ஓரமாய் ஒரு புதரையும், தலைக்கு மேலே மரக்கிளையையும் மட்டுமே சேர்த்துள்ளோம் ! And ஒரிஜினலில் ஒரே மஞ்சளான வர்ணப் பின்னணி !

      Delete
  49. நிறைய புதிய மற்றும் பழைய நண்பர்கள் நமது தளத்தில் மீண்டும் பதிவிடுவது சந்தோசமாக உள்ளது!

    ReplyDelete
  50. லார்கோ விஞ்ச்கு போட்டியாக மற்றொரு கோடிஸ்வரர் வருவது மகிழ்ச்சியான சேதி ! நேற்று இரவு கமெண்ட் போடுவதற்குள் இன்டர்நெட் பேலன்ஸ் முடிந்து விட்டது ஆகவே நம் திருசபையில் கலக்க தாமதமாகிவிட்டது . இன்று காலையில் இருந்து சுட்டி டிவியில் Smurfs தான் ஓடிகொண்டிருந்தது. CCC 7தேதிக்குள் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி !

    ReplyDelete
  51. புத்தக விழா ஸ்டாலில் இருந்து கிளம்பி விட்டேன் நண்பர்களே ....வழக்கம் போலவே நமது காமிக்ஸ்க்கு நல்ல வரவேற்பு .....மக்கள் பெரியதாக உள்ள வற்றை (மின்னும் மரணம் , தி லயன் 250) தான் முதலில் எடுக்கிறார்கள் . பிறகு தான் 120,60..எல்லாம் ....தெளிவாக தெரிவது குண்டு புத்தகங்களின் இறுதி அத்தியாயம் இன்னும் எழுத பல காலம் .....உள்ளது என்பதே ........

    ReplyDelete
    Replies
    1. //குண்டு புத்தகம் மீது மக்கள் ஆர்வம்.///விஜய ராகவன் பெரியவங்க (நீங்கள்) சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.!

      Delete
    2. அய்யய்யோ MV சார் நான் சொல்ல வில்லை...ஸ்டாலில் நடந்த விற்பனை சொல்கிறது .....இறுதியில் எத்தனை குண்டு புக்குகள் விற்றன என்ற எண்ணிக்கை தெரிய வரும் போது ஆசிரியருக்கு தான் முதலில் தெரியவரும்....மேலும் பெருமாளை பார்த்து வந்து சிறியோன் தான் நான் ....ஹி...ஹி...

      Delete

  52. @ M.V & all

    EBF பற்றிய குட்டிக் குட்டி செய்திகளுக்கு ஈரோடு ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவைக்
    க்ளிக்கவும்

    ReplyDelete
  53. EBF டெய்லி அப்டேட் யாராவது பண்ணுங்களேன் :)

    ReplyDelete
  54. விஜயன் சார்,
    // @FRIENDS :கழுகுமலைக் கோட்டை கூட ஏற்கனவே ஒன்றோ இரண்டோ முறைகள் மறுபதிப்பான கதை தானே ?! வேண்டுமெனில் அதை reprint செய்வதில் நமக்குச் சிரமம் கிடையாது ! And 'கத்தி முனையில் மாடஸ்டி' செண்டிமெண்டாக எனக்குப் பிரியமான இதழ் தான் என்றாலும் - படு மொக்கையான கதையல்லவா ? அதற்கு மாடஸ்டி in இஸ்தான்புல் கூடத் தேவலையே ! //

    இதில் இருந்து நீங்க மாடஸ்டி மறுபதிப்புக்கு தயார் ஆகிவிட்டிங்க அப்படின்னு தெரியுது! அதனால மேலே சொன்ன மூன்று புத்தகம்களும் மறுபதிப்பா வந்தா சந்தோசம்தான்!

    இல்ல மாடஸ்டி Digest அப்படின்னு சொல்லி வெளி இட்டாலும் சந்தோசம் தான்!

    ReplyDelete
    Replies
    1. @பரணி சார் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளி போட வேண்டும்.!அடடா உடம்பெல்லம் புள்ளரித்துவிட்டது.!

      Delete
    2. கத்தி முனையில் மாடஸ்டி கதையில்.,காரின் புகையை வைத்து கார்வினை கொல்ல வில்லன்கள் முயற்சி செய்வார்கள்.!கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தி.நகரில் நின்று கொண்டிருந்த காரில் முன்புறம் ஒடிக்கொண்டிருந்த காரின் எஞ்சின் புகை,பின்னால் இருந்த காரின் ஏசியில் கலந்து அந்த காரில் இருந்தவர்கள் மயக்க நிலையிலேயே இறந்து போனார்கள்.அந்த செய்தியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.அதைப்போலவே பைக் பின்புறம் அமர்ந்துள்ள பில்லியன் ரைடரும் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என்றதும் மக்கள் விநோதமாக பார்த்தனர்.! இக்கதையில் அந்த காலத்திலே வந்தது . வாகனத்தின் புகையில் கார்பன் மோனாக்ஸைடு மணமற்றது அதை உணராமாலே மயக்க நிலைமையில் இறந்த விடுவார்கள்.இவை இரண்டையுமே லயன் மாடஸ்டி வாசகர்கள் 1984ல் அறிவார்கள்.!

      Delete
  55. டியர் சார் ,
    எப்படியாவது மாடஸ்டி பிளைசி வந்தால் சரிதான் .இது பொடி பதிவு இல்லை . எமக்கு விருப்பமான பதிவு .

    ReplyDelete
  56. நீலமா? ஊதாவா?

    ///ஊதா = நீலம் ///என்கிறார் ஸ்டீல்க்ளா!
    அதை ஆமோதிக்கிறார் எடிட்டர்!

    கொஞ்சம் அலசிப் பார்த்ததில்...

    * google translateல் Blue ---> நீலம் ; Purple ---> ஊதா, சிவப்புக் கலந்த நீல நிறம் என்றிருக்கிறது

    * Basic color-wheelல் purple என்ற நிறமே இல்லை. Please click here for COLOR WHEEL

    * Primary colors எனப்படும் Red, Green, Blue ஆகியவற்றில்...
    சரிவிகிதத்தில் Red மற்றும் Blue வண்ணங்களை ஒன்றாகக் கலந்தால் Purple கிடைக்கிறதாம். ///Pour equal amounts of red and blue paint onto a palette and use a brush to mix them together to create a rich purple hue. ///
    இப்படிக் கலவையில் கிடைக்கும் Purple வண்ணத்தில் கொஞ்சம் Blueஐ அதிகமாக்கினால் அது Violet நிறமாகவும் , கொஞ்சம் Redஐ அதிகமாக்கினால் அது Pink நிறத்தையும் பெறுகிறதாம்!

    தெற்கில் ஊதா = நீலம் என்றால்... வடக்கிலோ, வடமேற்கிலோ, தென்கிழக்கிலோ ஊதா = சிவப்பு என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! :P

    ரொம்பத்தான் குழப்பிக்கிறோமோ? எதுக்குப் பிரச்சினைனு நெனச்சா
    பேசாம 'இதுவொரு கிளிப்பச்சை உலகம்'னு மாத்திடுங்களேன்! :D

    ( நல்லவேளையா BlueBerryயை நாம தமிழில் 'ஊதாக் கலரு பெர்ரி'னு மாத்தலை! :D. )

    ReplyDelete
    Replies
    1. தலைமை இல்லாவிட்டாலும் நிறுவனம் சீராக இயங்க வேண்டும்.அதில் தேர்ச்சிபெற வாழ்த்துகள்.ஊதா பொடியர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதித்தால் அது சொதப்பலாகத்தான் இருக்கும்.பார்ப்போம்.!

      Delete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு புத்தகத்திருவிழாவின் துவக்கநாள் பற்றிய 'இத்தாலி விஜய்'யின் பார்வை தொகுப்பை, தமிழ்-காமிக்ஸ் கடந்து வந்த பாதை [ஸ்டாலின்] ப்ளாக்கில் பகிர்ந்துள்ளார்..! ஒரு ஜாலி விசிட் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  58. @FRIENDS :கழுகுமலைக் கோட்டை கூட ஏற்கனவே ஒன்றோ இரண்டோ முறைகள் மறுபதிப்பான கதை தானே ?! வேண்டுமெனில் அதை reprint செய்வதில் நமக்குச் சிரமம் கிடையாது

    #########

    சார் ...மாடஸ்தி கதைகளில் ஆக மிக சிறந்த கதை "கழுகு மலை கோட்டை " எனவே கண்டிப்பாக மறுபதிப்பு காண செய்தால் நண்பர்கள் மகிழ்ச்சி அடைவர் ...எனவே அடுத்த வருட கோட்டாவில் இதற்க்கு ஒரு சீட் போட்டு வையுங்கள் சார் ...:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சூப்பர்.!அதே அதே.!
      ஈரோடு விஜய்&எடிட்டர்.""இந்த படை போதுமா ?இன்னும் கொஞ்சம் வேண்டுமா.?

      Delete
    2. @ M.V

      //ஈரோடு விஜய்&எடிட்டர்.""இந்த படை போதுமா ?இன்னும் கொஞ்சம் வேண்டுமா.? //

      நான் ஏதோ மாடஸ்டி கதைகளுக்கெல்லாம் எதிரின்ற மாதிரி நீங்க பில்ட்அப் கொடுக்கறதுல ஐயாம் வெரி அப்செட். அந்த மயக்கும் விழிகளுக்கு (எடிட்டரைப் போலவே) நானும் அடிமையே! ;) மாடஸ்டிக்காக நீங்க கோயில் கட்டுங்க; நான் குடிசையாவது கட்டுறேன்.
      எத்தனை மாடஸ்டி கதைகள் வேணுமின்னாலும் வரட்டும். கதைகள் எப்படியும் பாஸ் மார்க் வாங்கிடும்; அதிலே சந்தேகமில்லை! ஆனால், ஏகப்பட்ட ராயல்டியைக் கொடுத்துட்டு, ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி வச்சா மாதிரி சித்திரங்கள் இருந்தால் சரிப்படாது. இந்த டிஜிடல் யுகத்து தகுந்தா மாதிரி பளிச்சுனு இருக்கவாணாமா சார்?

      Delete
  59. வணக்கம்.. இந்த மாதத்தின் 7 இதழ்களில் ஊதா பொடியர்களைத் தவிர மீதமுள்ள இதழ்கள் ஈரோட்டில் கிடைக்கிறதா? இல்லையெனில் எப்பொழுது கிடைக்கும்..

    ReplyDelete
    Replies
    1. டியர் கீதன் !!!

      மறுபதிப்புகளான எத்தனுக்கு எத்தன் மற்றும் உறைபனி மர்மம் இரண்டும் ஈரோட்டில் நமது ஸ்டாலில் கிடைக்கும்.மற்ற இதழ்கள் வரும் சனிக்கிழமை அன்று முதல் விற்பனைக்கு வரும்.

      Delete
  60. DEAR EDITOR & FRIENDS THIS IS THE 1 ST TIME I AM WRITING IN THIS BLOG . I AM A REGULAR READER OF MUTHU & LION FROM THE DAY ONE.NOW A DAYS THE QUALITY OF OUR COMICS MUCH MUCH IMPROVED AND DOING WELL . THANKS TO
    MR . VIJAYAN & HIS TEAM. EVERY THREE MONTHS I AM EXPECTING A SPECIAL BOOK .

    ReplyDelete
  61. ஒரு பட்டிக்காட்டான் புதுசா ஒரு மிட்டாய் கடையில போனா என்னானும்..?

    ரொம்பவே டீசண்டான அந்த பட்டிக்காட்டான் மிட்டாய்களை எப்படி ரசிப்பார்..?

    அவரோ அந்த முதல் அனுபவம் கேட்ட எப்படியிருக்கும்..?

    அவர் ஒரு காமிக்ஸ் கலா ரசிகரா இருந்தா அவர் சொல்றவிதம் எப்படியிருக்கும்..?

    அந்த கலா ரசிகர் நம்ம கிட் ஆர்ட்டின் கண்ணன்-னா இருந்தா..?

    அந்த மிட்டாய் கடை ஈரோடு புத்தகதிருவிழா-வா இருந்தா..?

    என்னால... ஹாஹா...சிரிப்பை அடக்க முடியலை...ஹாஹா...கிளிக்...ஹாஹா...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  62. எத்தனை ஆழத்தில் உண்மைகள் புதைக்கப் பட்டிருந்தாலும் ; அதை மிக சாமர்த்தியமாக வெளிச்சத்திற்கு கொண்டுவரும் 'ரிப்போர்ட்டர் ஜானியின்'' ஒரு புதிய கதையை படிக்க வேண்டுமென்ற ஆவலை அடக்க இயலவில்லை.

    ReplyDelete

  63. EBF bits day-3

    " ஒரு ஒத்திகை ஞாயிறு "

    * முதலிரண்டு நாட்கள் மாலையில் பெய்த மழையால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராத நிலையில், மூன்றாம் நாள் (ஞாயிறு) வருணபகவான் சற்றே இறக்கம் காட்ட, எல்லா ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் லேசான தூறல் இருந்தாலும், வெயில் இல்லாத இதமான வெப்பநிலை சூழ்நிலையை வசந்தமாக்கிக் கொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துவந்திருக்க, சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அழைத்து வந்திருந்ததையும்(!) காணமுடிந்தது!

    * நண்பர்கள் புனித சாத்தான், டெக்ஸ் விஜயராகவன், யுவா கண்ணன், பழனிவேல் ஆறுமுகம், கோவையிலிருந்து செல்வராஜ், மொய்தீன், திருப்பூரிலிருத்து சிபி, சிம்பா, அசோக் குமார், பெருந்துறை செல்வகுமார், 'அன்புத் தம்பி' சத்யா கோபியிலிருந்து அருள் பிரகாசம், கரூரிலிருந்து டாக்டர் சுவாமிநாதன், திருநெல்வேலியிலிருந்து கார்த்திகை பாண்டியன் மற்றும் பெயரை நினைவுகூற இயலாத இன்னும் ஏராளமான பழைய/புதிய நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரது முகத்திலும் கரைபுரண்டோடும் காமிக்ஸ்!

    * நண்பர் கார்த்திகை பாண்டியனுடனான உரையாடல் உற்சாகமானதாகவும், உபயோகமானதாகவும் இருந்தது. 'பெளன்சர்' தொடரின் கதாசிரியர் Alexandro Jodorowskyயின் திரைப்படங்களைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொஞ்சம் பயமுறுத்தினார். நண்பரின் சிறுகதைத் தொகுப்பு 'மர நிற பட்டாம்பூச்சிகள்' என்ற பெயரில் இன்று (3/8/2015)ஈரோட்டில் வெளியீட்டுவிழா காண்கிறது. வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே!

    * நமது ஸ்டாலில் விற்பனை சீராக நடந்துகொண்டிருக்க, பலதரப்பட்ட மக்களும் ஆர்வமாய் நமது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து வாங்கிச் சென்றனர். பல பெற்றோர்கள் பதின்பருவத்தை எட்டிப்பிடிக்கக் காத்திருந்த தங்களது பிள்ளைகளுக்கு தங்களது சொந்த விருப்பத்தின்பேரிலோ அல்லது தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தின்பேரிலோ ஒன்றிரண்டு புத்தகங்களை பில் போட்டனர். அவர்களின் தேர்வு பெரும்பாலும் லக்கிலூக் அல்லது ஊதாகோட்ஸ் ( ப்ளூ = ஊதா என்று எடிட்டர் சொல்லியிருக்காரில்ல?) ;)

    * இன்றைய man of the day யாரென்று கேட்டால் யோசிக்காமல் "சிபி" என்று சொல்லிவிடலாம்! தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடும் பொருட்டு மதியம் ஆஜரானவர் இரவுவரை உற்சாகமாத்தின் உறைவிடமாய் இருந்ததோடு, சுவையான மதிய விருந்தளித்து நண்பர்களின் வயிற்றிலிருக்கும் கிரைண்டர்களுக்கு ஏக வேலை கொடுத்தார். வழக்கம்போல அதே மரத்தடியில் ஸ்டாலின் வாங்கிவந்த ஒரு அழகிய கேக் பிறந்தநாள் பேபியால் கூறுபோடப்பட்டு, அவரது கைகளாலேயே நண்பர்களின் வாய்க்குள்ளும் திணிக்கப்பட்டது ( கிரைண்டர் லோடு தாளாமல் திணறியது).

    * நாங்கள் ஸ்டாலில் இல்லாத நேரத்தில் 55+ வயதுடைய பெண்மணி ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் நமது புத்தங்களைத் தேர்வுசெய்து ₹3000+ க்கு வாங்கிச் சென்றதாக 'பிரின்டர்' குமார் தெரிவித்தார்! ( மறுபடியும் அந்தப் பாட்டிம்மாவைப் பார்க்க முடிந்தால் ஒரு வீடியோ பேட்டியைத் தயார் செய்துவிடலாம். போராட்டக் குழுவின் மகளிரணித் தலைவி பதவியைக் கொடுத்து கெளரவிக்கவும் ஆசை!). தலீவியே, நீங்க எங்க இருக்கீங்க?

    * 40+ வயதுள்ளவர்களின் புத்தகத் தேர்வுகளில் டெக்ஸ் புத்தகங்களோடு மாயாவி, ஸ்பைடர், லாரன்ஸ்-டேவிட் மறுபதிப்புகள் கட்டாயமாக இடம்பிடித்திருந்தது.

    * பில் போட்டவர்களில் 10ல் ஒருவராவது 'The lion-250'யை தேர்வு செய்திருந்தனர். 30ல் ஒருவர் 'மின்னும் மரணம்'! ( தோராயமான கணிப்பு மட்டுமே)

    * டெக்ஸ் டைட்டில் அதிகமில்லாதது பலருக்கும் ஏமாற்றமே! இதனால், விற்பனையில் ஒரு கணிசமான இழப்பை சந்திக்கநேரிடும் என்பதும் உண்மை!

    * ஒவ்வொரு வருடமும் நாம் சந்திக்கும் மிக முக்கியமான விசாரிப்புகளில் ஒன்று " இரத்தப்படலம் தொகுப்புக் கிடைக்குமா?". இப்படிக் கேட்பவர்களிடமெல்லாம் நாம் சொல்லும் பதில் : "கொஞ்சநாள் பொறுங்க சார்... கலர்லயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கு" (ந..நான் சொல்றது சரிதானே எடிட்டர் சார்?)

    * நம்மிடம் பேச்சுக்கொடுத்தவர்கள் அனைவரிடமும் எடிட்டரின் வருகையைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The CCC, எடிட்டர், ஏராளமான நண்பர்களுடன் ஏகத்துக்கும் களைகட்டப்போகும் அடுத்த ஞாயிறுக்கு இதுவொரு 'ஒத்திகை ஞாயிறு' ( அப்பாடா! டைட்டிலைக் கொண்டுவந்துட்டேன்) என்றால் அது மிகையாகிடாது!

    பி.கு : அங்கே க்ளிக்கிய படங்களைப் பார்க்க இங்கே க்ளிக்குங்க பாஸு

    ReplyDelete
    Replies
    1. THANKS FOR YOUR COMMENTS. FEELING THAT I AM VISITED THE STALL.

      Delete
    2. ஈரோடு விஜய்.!இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.! யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரி உள்ளது.!அது சரி.!மாயாவி சிவா ஆளையே காணோம்.!

      Delete
    3. @மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்

      ஈரோடு விஜய்.!இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.! யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரி உள்ளது.!அது சரி.!கிட் ஆர்ட்டின் கண்ணன் ஆளையே காணோம்.!

      Delete
    4. செல்வம் அபிராமிக்காக ஒரு சின்ன விரதம்...முடிந்தது...விரதம் முடிந்த விஷயம் கிட் ஆர்ட்டின் கண்ணனுக்கு தெரியாதோ..! (இல்லை மிட்டாய் நிறைய சாப்பிட்டு படுத்துட்டரோ..ஹீ..ஹீ..!)

      Delete
  64. * ஒவ்வொரு வருடமும் நாம் சந்திக்கும் மிக முக்கியமான விசாரிப்புகளில் ஒன்று " இரத்தப்படலம் தொகுப்புக் கிடைக்குமா?". இப்படிக் கேட்பவர்களிடமெல்லாம் நாம் சொல்லும் பதில் : "கொஞ்சநாள் பொறுங்க சார்... கலர்லயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கு" (ந..நான் சொல்றது சரிதானே எடிட்டர் சார்?)
    +1111111111111111111111111111

    ReplyDelete
    Replies
    1. -1.
      அடுத்த இரண்டு வருடம் கழித்து இதனை வரவேற்பேன்! தற்சமயம் BIG NO!

      Delete
  65. magicwind இந்த மாதம் வருகிறாரா ..சரி வந்துவிட்டுப் போகட்டும்..நாம எல்லாம் எது போட்டாலும் மேய்கின்ற
    சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்..டைலன் டாக் கும் சரி தோர்கலும் சரி கடுகளவு ஆர்வமோ எதிர்பார்ப்போ
    ஏற்படுத்தாத ஆட்கள்தான்....டெம்பில் சிடி என்கிற ஓட்டலில் சாப்பிட நேர்ந்த போது கேட்காமலேயே இலையில்
    சிறிதளவு கேசரியும் சமர்ப்பித்தார்கள்..சரி ஒ சி யாகத்தான் வைக்கின்றார்கள் என்று நம்பி சுகரையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டு முடித்தபிறகு வேண்டாத கேசரிக்கும் சேர்த்து பில் தீட்டி விட்டார்கள்...இது ஒரு பழைய ஞாபகம் ..7 ஆகஸ்டே வா.... கிளாசிக் காமெடிக்காக வெயிட்டிங் ...

    ReplyDelete
  66. பாட்டியா???????

    மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் அவர் இளைஞ்சி அல்லவா?
    மகளிர் அணி என்று சொல்லாதீர்கள்///இளைஞர் அணி தலைவி என சொல்லுங்கள்!!!!!!!!
    (இப்படி விவரம் இல்லாம இருந்தா நிறைய புக் எப்படி விக்கும்?:)

    EBF விவரங்கள் சூப்பர்!!!!!!!! நன்றிகள் பல விஜய்....(அங்கு வந்து இருந்தஇனிய நண்பர் விஷ்வாவை விட்டு விட்டீர்களே!)

    ReplyDelete
    Replies
    1. @ செனா அனா

      //நண்பர் விஷ்வாவை விட்டு விட்டீர்களே! ///

      தவறு! அவர்தான் ஈரோடு வரை வந்துவிட்டு ( ஏதோ ஓர் அவசர காரியத்தினால்) எங்களைப் பார்க்காமல் கிளம்பிவிட்டார்!
      தவிர, காட்டாற்று வெள்ளத்தை ஒரு கட்டுக்குள் அடக்குவது அவ்வளவு சுலபமல்லவே? ;)

      Delete
    2. காட்டாற்று வெள்ளத்தை கைக்குள் அடக்கலாம்தான் !!

      ஆனால் அதற்கு நீங்கள் "விஜய் "என்றல்லாது "விஜி "என்று இருந்து இருக்க வேண்டும் .....;-)
      (முதுகில் டின் வாங்க போறேன் ..:)]

      Delete
    3. காட்டாற்று வெள்ளத்தை கைக்குள் அடக்கலாம்தான் !!

      ஆனால் அதற்கு நீங்கள் "விஜய் "என்றல்லாது "விஜி "என்று இருந்து இருக்க வேண்டும் .....;-)
      (முதுகில் டின் வாங்க போறேன் ..:)]

      Delete
    4. காட்டாற்று வெள்ளத்தை கைக்குள் அடக்கலாம்தான் !!

      ஆனால் அதற்கு நீங்கள் "விஜய் "என்றல்லாது "விஜி "என்று இருந்து இருக்க வேண்டும் .....;-)
      (முதுகில் டின் வாங்க போறேன் ..:)]

      Delete
  67. //இரண்டாம் சுற்றின் இறுதி ஆல்பமாக இருந்திடும் என்றும் – நவம்பர் 30--ல் வெளிவரும் என்றும் சொன்னார்கள் ! லேசாக தைரியத்தைத் திரட்டிக் கொண்டு "இது மெய்யாலுமே இறுதிப் பாகம் தானா ?" என்று கேட்டு வைத்தேன் ! புன்னகை மாத்திரமே எனக்குப் பதிலாகக் கிட்டியது ! //

    ஏப்ரல் 2015- ல் ஒரு பிரெஞ்ச் வீடியோ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் வான் ஹாமே XIII பற்றிய இறுதி கதை 2020-ல் தனது 80 வது பிறந்த நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்பு வெளியிடப்படும் என்றும் அதுவே தனது இறுதி படைப்பாக இருக்க போகிறது என்றும் சொல்லி இருக்கிறார்..(XIII ஐ , மறக்க மாட்டார் போல)
    பின் தகவல்:
    வான் ஹாமே பிலிப் பிரான்க் பற்றி தலை கனம் பிடித்தவர் என்கிற மாதிரி சொல்லி இருப்பினும் பிலிப் வான் ஹாமே தன் தந்தை மாதிரி என்றுதான் சொல்லி இருக்கிறார்
    ஏற்கனவே இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் பிலிப் இனி தொடர்ந்து லார்கோ தொடரை வெளியிடுவார்.
    ஸ்கிரிப்ட் எழுத காமிக்ஸ் தொடர்பற்ற நபரைத்தான் பிலிப் நியமனம் செய்ய போவதாக தகவல்......
    (வான் ஹாமே லார்கோ மூன்றாவது சீரிஸில் இப்போது மிகவும் பிஸி. கோ புரடியூசர் வேறு. ஸ்கிரிப்ட் எழுதும் பொறுப்பை தன்னிடம் கொடுக்க கேட்டு கொண்டு இருக்கிறார்)

    ReplyDelete
    Replies
    1. Welcome back Selvam sir. மிக்க மகிழ்ச்சி...

      Delete
    2. செல்வம் அபிராமி சார்.வணக்கம்.! கனத்த என் மனசு பஞ்சு போல் இலேசாகி விட்டது.நன்றி சார்.!மிக்க மகிழ்ச்சி.!

      Delete
    3. வணக்கங்களும் ,நன்றிகளும் MP SIR ,MV SIR !!

      Delete
    4. @செல்வம் அபிராமி

      வந்துவிட்டீர்களா...ஜெய் மகிழ்மதி..!

      Delete
    5. வாருங்கள் செனா அனா! :)

      தொலைந்துபோன ஏதோ ஒன்று திரும்பக் கிடைத்ததுபோல் இருக்கிறது!

      ஹாப்பி! :)

      Delete
    6. வாங்க வாங்க செல்வம் அபி சார் ....இரண்டு நாள் தாமதாமா வந்தாலும் நல்ல செய்திகளை சொல்கிறீர்கள் ..நன்றி ....என்னய மாதிரி தமிழ் வழி கல்வி பயின்ற நபர்களுக்கு உங்களை மாதிரி நண்பர்கள் தானே இது போன்ற தகவல்கள் தமிழில் தர இயலும் சார் ......தொடரருங்கள் ..தொடர்கிறோம்....இம்முறை ஈரோடு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏதும் உள்ளதா சார் ??

      Delete
    7. @சேலம் டெக்ஸ் விஜயராகவன் !/

      /இம்முறை ஈரோடு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏதும் உள்ளதா //

      இதே கேள்வியை நகைச்சுவை பேரரசு இனிய நண்பர் விஜய் கேட்டபோதும் தர்மசங்கடம் காரணமாக பதில் அளிக்க முடியாமல் போயிற்று ...

      மிகவும் ஆசைதான் ....ஏதாவது பணி குறுக்கீடு ஒவ்வொரு முறையும் வந்து சேருகிறது ....இந்த முறையும் அப்படியே .

      CBF -ல் உறுதியாக ......

      (உங்களது திருப்பதி யாத்திரை திருப்தியாக இருந்து இருக்குமென போட்டோக்கள் சொல்கின்றன ....:)]

      Delete
  68. நீல பொடியர்கள் தயார் ஆகிவிட்டதா.?ரூட் க்ளியரா?சனிக்கிழமை வந்தவிடுமா.?

    ReplyDelete
    Replies
    1. அட்டைபடம் சொல்லும் செய்தி..!

      * பாக்ஸ் செட்டில் முதல் கதை என சொல்லும் 'பளிச்' சிகப்பில் இடது மேல் புறம் NO.1 என சொல்லும் முக்கோணம் கார்ட்டூனுக்கே உரிய பாணி நெம்பர் one.

      * smurfs என இங்கிலிஷ்ல செமையா ஒரு டிரேடுமார்க் இருக்கு...அதுக்கு இணையா சிகப்பு+நீலம் ஸ்மார்ப்ஸ் லோகோ ஸ்டைல் கார்ட்டூனுக்கே உரிய பாணி நெம்பர் two.

      * நாற்பத்திமூன்று வருஷமா மாறாத முத்து காமிக்ஸ் லோகோ...கார்ட்டூனுக்கே உரிய பாணி நெம்பர் three.

      * 'தமிழில் முதல் முறையாக' அறிமுக வரிக்கு...மெனக்கெட்டு...சிகப்பு+நீலம்+வெள்ளை என smurfs பிராண்ட் ஸ்டைல், கார்ட்டூனுக்கே உரிய பாணி நெம்பர் four.

      * CLASSIC CARTOON COLLECTION என்ற பெயருக்கென smurfs கலரில் கலந்து கட்டிய...லோகோ ஸ்டைல் கார்ட்டூனுக்கே உரிய பாணி five.

      * இவ்வளவும் "Just a Trial Version !!! Not the final cover !!! " முடிவா என்னென்ன இன்னும் சேந்துவருமோ..!

      * ஒரு அட்டைக்கே இவ்வளவு பண்ணினா...மொத்தபுக்கும் என்னென்ன பண்ணி ரகளை ஒளிஞ்சிருக்குமோ...smurfக்கே வெளிச்சம்..!

      என் பங்குக்கு ஒரு குட்டி திருத்தம்: ஒர்ஜினல் அட்டையில் பல்லை கடிக்கற smurf ஊதா கலர்...நீங்க கறுப்ப போட்டிருக்கிங்க...பாத்துகங்க..ஸார்..!

      இப்ப எங்களுக்கு வேண்டியது....

      ALL FIRENDS: 'பாக்ஸ் செட்' பண்டல் எடுத்துட்டு ஈரோடு புக் fairக்கு ரயில் ஏறி கிளம்பிட்டேன்..! எல்லா சங்க நண்பர்களும் smurfs-ஐ சந்திக்க நாளைக்கு வாங்க..! உங்களை சந்திக்க நான் வர்றேன்...!

      ...இந்த அறிவிப்பு எப்போ..!?!?! சொல்வீர்களா..! சொல்வீர்களா..!

      Delete
  69. // இன்னமும் இரண்டரை மாதங்கள் உள்ளன என்ற போதிலும் – என் தலைக்குள் ஓடிய சிந்தனையின் பதிவு மாத்திரமே இது! ஒவ்வொரு ஆண்டும் இதனை ஒரு வழக்கமாகக் கூட கொள்வதும் ஒரு possibility தான்! இத்தருணத்தில் சென்னையில் நமது நண்பர் துவக்கியுள்ள Three Elephants புத்தக கடையானது நமது சந்திப்புகளுக்கு ஒரு சுலபக்களமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை சொல்லிடலாம் //

    நல்ல யோசனை, அனைவருக்கும் சந்தோசம் தரும் விஷயம்!

    ReplyDelete