நண்பர்களே,
வணக்கம். வாரத்தின் நீளம் போதவில்லை இப்போதெல்லாம்...! "பூம்-பூம் படலம்" + "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & "விரியனின் விரோதி" வண்ண அச்சுப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பூர்த்தியாக - இந்த வாரத்தில் LMS-ன் (இத்தாலிய) வண்ணப் பக்கங்களின் அச்சு வேலைகளைத் துவங்கியுள்ளோம் ! தடிமனான இந்த இதழின் பணிகளில் இவை துவக்க நாட்களே என்ற போதிலும் - touch wood , இது வரையிலான results அற்புதமாய் வந்துள்ளன ! "வர்ணங்கள் ஜாஸ்தி" ; "அடர்த்தியாய் உள்ளன " என்று சமீப நாட்களில் அச்சுத் தரம் பற்றி எழுந்த விமர்சனங்கள் இம்முறை எழ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..! இதன் பின்னணிக் காரணங்கள் 2 ! காரணம் # 1 - இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும், டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் ! Reason # 2 : நமது "மஞ்சள் சட்டை மாவீரர் "!! Yes - மஞ்சள் சட்டையாரின் "சட்டம் அறிந்திரா சமவெளி" கதைக்கு படைப்பாளிகள் பூசியுள்ள வர்ணக் கலவை அபாரமாய் உள்ளது ! ஒரிஜினலாய் கருப்பு & வெள்ளையில் தயார் செய்யப்படும் கதைகள் பின்னர் கலருக்குக் கொண்டு செல்லப்படும் போது கலரிங்கில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரிய வாய்ப்புண்டு ; ஆனால் டெக்சின் இந்த சாகசத்திற்கு அவ்விதக் குறைகள் தோன்றாதிருக்க அட்டகாசமாய் உழைத்துள்ளனர் ! அதன் பலன்களை அச்சின் போது பிரவாகமாய் உணர முடிகின்றது !! ஒவ்வொரு பக்கத்திலும் அப்பாவும், பிள்ளையும் மஞ்சள் சட்டைகளோடு உலா வர - கண்ணைப் பறிக்கிறது ; மஞ்சள் மையும் வண்டி வண்டியாய் செலவாகிறது !! (புண்ணியத்துக்கு கார்சனின் நிஜாரும், சொக்காயும் mild ஆன கலர்களில் உள்ளன !! ) இதோ இன்னொரு பக்கம் சாம்பிளுக்கு !
டெக்சின் கதையின் வர்ணங்களுக்கு சவால் விடும் விதமாய் டைலன் டாகின் கதையிலும் ஒரு வானவில் கூட்டணி !! இதன் பக்கங்கள் தொடரும் நாட்களில் அச்சாகக் காத்துள்ளன என்ற போதிலும் முடிக்கப்பட்ட பக்கங்களை monitor -ல் பார்க்கும் போது 'ஜிவ்' வென்று உற்சாகம் எழுவதை உணர முடிந்தது ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் ஆழமாய் - அழகாய் - ஸ்டைலான ஓவியங்கள் + வர்ணங்களோடு இருந்தாலும், இத்தாலியின் படைப்புகளில் உள்ளதொரு எளிமை ; கதைகளில் உள்ளதொரு சுலப flow + இப்போது வர்ணங்களில் தெரியும் ஒரு வீரியம் என்னை லயிக்கச் செய்தன என்றே சொல்ல வேண்டும் !! டைலனும் அச்சில் இதே போல் ஸ்கோர் செய்து விட்டால் இன்னும் கொஞ்சம் இலகுவாகும் என் மண்டை !! அதன் பின்னே காத்திருக்கும் CID ராபின் கதையில் இது போன்ற ஆளை அடிக்கும் வர்ணங்கள் இல்லாது - கதையின் பாணியைப் போலவே soft pastel shades தான் தூக்கலாய் உள்ளன ! கதையின் மூடுக்கு ஏற்ப வர்ணக் கலவைகள் அமைக்கும் அந்தக் கலையை இம்முறை நாம் LMS மார்க்கமாய் முழு வீச்சில் பார்க்கப் போகிறோம் !! டெக்சின் சரவெடி கதைக்கு அதிரடி bright வர்ணங்கள் ; டைலனின் விறு விறு த்ரில்லருக்கு அதே போல் விறுவிறுப்பான கலரிங் ; அமைதியான ராபின் கதைக்கு சலசலக்கும் நீரோடையைப் போன்ற ஆர்ப்பாட்டமில்லா வர்ணங்கள் !!
இத்தாலிய சிலாகிப்பு இன்னமும் முடிந்தபாடில்லை !! டிடெக்டிவ் ஜூலியாவின் "விண்வெளி விபரீதம்" கதையின் தமிழாக்கத்தை முடிக்கும் தருணத்தில் தற்சமயம் உள்ளேன் ! இந்தக் கதையின் தயாரிப்புப் பின்னணியில் எங்களுக்குள் கொஞ்சம் குழப்பம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில ஸ்க்ரிப்டை முதலில் நமது கருணை ஆனந்தம் அவர்களுக்குத் தான் அனுப்பி இருந்தேன் - மொழிபெயர்ப்பின் பொருட்டு !ஆனால் கதையைப் படிக்க முயற்சித்த போது அவருக்குக் கதையோட்டம் அவ்வளவாய் ரசிக்கவில்லை ! இத்தாலிய மொழிபெயர்ப்பும் சற்றே complicated ஆக உள்ளதால் - அவகாசம் குறைவாய் உள்ள இத்தருணத்தில் இதோடு மல்லுக் கட்ட வேண்டாமே - இதற்குப் பதிலாய் வேறு கதை எதையாவது தேர்வு செய்யலாமே ? என்று சொல்லி கதையினை திருப்பி அனுப்பி விட்டார் ! நானோ லக்கி லூக் : அடுத்த லார்கோ என்று எதெதிலோ மூழ்கிக் கிடந்ததால் - இது என்னடா புதுக் குழப்பம் ? என்று ஓரிரு நாட்கள் தயங்கியிருந்தேன் ! சரி - ஜூலியாவுக்குப் பதிலாய் வேறொரு கதையை நுழைப்பது என்றெல்லாம் ஒரு மாதிரியாகத் தீர்மானம் செய்து - அந்தக் கதையையும் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது இத்தாலியத் தயாரிப்பல்ல என்பதால் - நமது "இத்தாலிய ஐஸ்க்ரீமில்" கொஞ்சமாய் கலப்படம் செய்தாற் போல் ஆகிடுமே என்பதோடு - ஒரு புதுத் தொடரை (ஜூலியா) ஓடத் தொடங்கும் முன்பே முடக்கிப் போட்டது போலாகிடுமே என்றும் நெருடியது ! So - ஆனதைப் பார்ப்போமே என்று ஜூலியாவைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு நீண்டு செல்லும் கதை வரிசையில் நாம் வெளியிடப் போவது கதை # 102 என்பதால் அதன் பிரதான கதாப்ப்பாதிரங்கள் யார்-யார் என்பதைப் படித்தறிய கொஞ்சம் நேரம் செலவிட வேண்டியிருந்தது ! கதையின் ஓட்டம் துவங்க சிறிது நேரமாகிறது என்பதாலும் ; நமது வழக்கமான அதிரடி பாணியில் கதை பயணிக்காததாலும் தான் கருணைஆனந்தம் அவர்களுக்கு இது அத்தனை பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன் ! பொறுமையாய் திரும்பப் படித்த போது - மனித உணர்வுகளின் வெவ்வேறு முகங்களை தனது கதைகளின் மூலம் கதாசிரியர் வெளிப்படுத்த விரும்புவதை உணர முடிந்தது ! ஜூலியா ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் கிடையாது ' மாடஸ்டி ப்ளைசி கிடையாது ; XIII -ன் ஜோன்ஸ் கிடையாது - ஆனால் மனித உணர்வுகளைப் புரிய முயற்சிக்கும் ஒரு விவேகமான பெண் ! இந்தக் கதையின் கிளைமாக்ஸ் பக்கங்களில் இத்தாலிய மொழிபெயர்ப்பு எனக்கும் குழப்பமாய் இருந்திடவே - நமது படைப்பாளிகளையே தொடர்பு கொண்டேன் - சிற்சிறு சந்தேகக் கேள்விகளுடன் ! அதன் பதில்கள் கிட்டிய பின்னே jigsaw puzzle -ன் விடை கிடைத்த தெளிவு கிட்டிய போது மொழிபெயர்ப்பை துரிதமாய்ச் செய்ய முடிந்தது ! கதையும் ரொம்பவே யதார்த்தமாய் நகர்வதாலும் ; நிறையப் பக்கங்களில் வசனங்களே கிடையாதென்பதாலும் (!!) எழுதும் போது சோர்வே தெரியவில்லை - 4 நாட்களில் 120+ பக்கக் கதையை wrap up செய்ய முடிந்ததுள்ளது ! LMS -ல் இக்கதையைப் படிக்கும் போது ஒரு அதிரடி த்ரில்லரை எதிர்பார்க்காதீர்கள் - ப்ளீஸ் ! மாறாக - சூப்பர் ஹீரோக்களோ ; ஒரே உதையில் இருபது பேரை பறக்கச் செய்யும் (உடான்ஸ்) ஹீரோக்களோ இல்லாததொரு சூழ்நிலையில் ஒரு சிக்கல் எழுந்திடும் போது சராசரியான மக்கள் அதனை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதைச் சொல்லும் கதையாக இது இருக்கும் ! Personally I loved Julia....பார்க்கலாமே - உங்களுக்கும் ஜூலியாவைப் பிடிக்கிறதா என்று! அடுத்த ஞாயிறன்று ஜூலியாவின் teaser இங்கு உங்கள் பார்வைக்கு வந்திடும் !
சரி - இத்தாலியப் புராணம் போதுமென்று நினைக்கும் போது மார்டினின் கதை முடிந்து printouts என் கைக்கு வந்து சேர்ந்துள்ளன ! (ஞாயிற்றுக் கிழமைகளும் அதே புன்சிரிப்போடு செயலாற்றும் மைதீன் இருக்கும் வரை என் வண்டி ஓடி விடும் !! )இதோ பாருங்களேன் மார்டினின் first look ! அடுத்த வாரம் மார்டின் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதுகிறேன் !
பணிகள் முடிந்து வரும் இன்னொரு கதையும் என் மேஜைக்கு வந்திருந்தது ! அது பெல்ஜிய சாக்லெட்டின் ஒரு பகுதியான ரின் டின் கேன் ! ஒரு கூமுட்டை பிராணியும் கூட ஒரு முழு நீளக் கதையைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதென்பதை உணர்த்த வரும் "அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே"வின் ஒரு பக்க ட்ரைலர் இதோ ! படங்களில் கிரே கோட் அணிந்த ஆசாமி தான் அமெரிக்க ஜனாதிபதி !!
ஆகஸ்டின் LMS -க்கு முன்பாக நெய்வேலி + நெல்லை புத்தக விழாக்கள் காத்துள்ளன ! இரண்டுக்கும் நாம் விண்ணப்பித்திருந்த போதிலும் நெய்வேலியில் "இடம் லேது!" என்று ஓலை வந்து விட்டது நமக்கு ! So BOOK FAIR SPECIAL இதழ்களை நெய்வேலியில் ரிலீஸ் செய்வதென்பது சாத்தியமில்லை என்பதால் வழக்கம் போல் ஜூலை இதழ்களோடு சேர்த்தே அனுப்பப்படும் ! நெல்லை புத்தகவிழா புது டில்லியிலுள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் மேற்பார்வையில் ஜூலை 18-27 தேதிகளில் நடைபெறுகிறது ; இங்கு நமக்கு நிச்சயமாய் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது ! அது மட்டுமல்ல - ஆகஸ்டில் நடக்கவிருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவினிலும் நாம் பங்கேற்க உள்ளோம் !!! சென்னைக்கு இணையாக அற்புதமாய் நடத்தப்படும் இந்த விழாவினில் நாமும் கலந்திட மீண்டும் வாய்ப்புத் தந்துள்ள (அமைப்பாளர்கள்) மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்திடுவது மிக மிக அவசியம் ! திரு குணசேகரன் அவர்கள் அந்நாளைய இரும்புக்கை மாயாவி ரசிகர் என்பது கொசுறுச் செய்தி !! சென்னையில் நமக்கு ஸ்டால் கிடைக்க நண்பர் விஷ்வா உதவுவது போல் ஈரோட்டில் நமக்குக் கை கொடுத்து வருவது நண்பர் ஸ்டாலின் ! ஆங்காங்கே நமக்கு உதவ இது போன்ற நல்லுள்ளங்கள் உள்ளவரை நமக்கெது கவலை ? மறவாது உங்களது ஆகஸ்ட் 2-ம் தேதிகளை நமக்காக ப்ரீயாக வைத்துக் கொள்ளுங்களேன் folks ? அன்றைய தினம் ஈரோட்டில் உங்களை சந்திக்க எப்போதும் போல் மிகுந்த ஆவலாய்க் காத்திருப்போம் - LMS சகிதம் !!
கொசுறுச் சேதிகளில் இன்னும் சில : தமிழகத்தின் பெருநகரங்களை ஒவ்வொரு வாரமும் நமது பணியாளர்கள் explore செய்து வருகின்றனர் - விற்பனைக்குக் கடைகளை ஏற்பாடு செய்திடும் பொருட்டு ! இப்போதைக்கு (புதிதாய்) நம் இதழ்கள் கிடைக்கும் ஊர்களின் பட்டியல் பின்வருமாறு : சாத்தூர் ; கோவில்பட்டி ; தூத்துக்குடி ; நாகர்கோவில் ; வள்ளியூர் ; தென்காசி ; தஞ்சாவூர் ; மாயூரம் ; கும்பகோணம் ; சிதம்பரம் ; நாகப்பட்டினம் ; திருச்சி ; திருமயம் ; பட்டுக்கோட்டை ; காரைக்குடி ! வாங்கும் எண்ணிக்கைகள் பெரிதாக இல்லையென்ற போதிலும், சிறு துளிகளே - பெரு வெள்ளமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம். ஆங்காங்கே உள்ள நம் நண்பர்கள் தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்து நமது பணியாளர்களின் வேலைகளை சுலபமாக்கி வருங்கின்றனர் ! Thanks ever so much guys !! அடுத்த வாரத்தில் பொள்ளாச்சி ; கோவை ; திருப்பூர் ; சேலம் பகுதிகளில் நம்மவர்களின் பணிகள் / பயணங்கள் தொடரும் ! See you around folks ! Bye for now !
P.S : கடந்த பதிவின் உங்களின் பின்னூட்டங்களை இன்று இரவு முழுவதுமாய்ப் படித்து விட்டு அவற்றிற்கான பதில்களை ; எனது அபிப்ராயங்களை இங்கே பதிவிடுகிறேன் ! Thanks for the patience !!
P.S : கடந்த பதிவின் உங்களின் பின்னூட்டங்களை இன்று இரவு முழுவதுமாய்ப் படித்து விட்டு அவற்றிற்கான பதில்களை ; எனது அபிப்ராயங்களை இங்கே பதிவிடுகிறேன் ! Thanks for the patience !!
sokka nan 1st
ReplyDeletesokkkaaaa....! kanava nejamaaa....?
ReplyDeleteI am 2nd or 3rd
ReplyDeletechennaiyil iruntha stalkalai vittu vitteerkale (landmark, discovery book palace) editare. ingu eppothu thodanga pogireergal, munbu ellam chennaiyil pala kadaikalil namadhu comics kidaikkum, ippothoo...! (i already missed 2012th many comics, for this reason, lion comback special also missed...!)
ReplyDeleteஞாயிறு மதிய பொழுது என்றாலே பதிவை எதிர்பார்க்கவைப்பதோடு மட்டுமல்லாமல் பதிவையும் தந்துவிடும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் அடுத்தடுத்த இதழ்கள் பற்றிய முன்னோட்டங்கள் சரவெடியாகவே வருகின்றன. ரின் டின் கேன் ஐ சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அதேநேரம், சுட்டி லக்கி என்று ஒருவர் அறிமுகமாகி அப்படியே நிற்பதையும் நினைவூட்டுகிறோம். அவருக்கும் இவ்வருடத்தில் எங்காவது ஓரிடத்தில் வாய்ப்பு கிடைக்குமா சார்?
ReplyDeletePodiyan : சுட்டி லக்கி - சென்னையில் - ஜனவரி 2015-ல் மறு பிரவேசம் செய்வார் !
Deleteஜனவரியிலா..? பரவாயில்லை... ஆனால், மீள் பிரவேசம் செய்தவரை அப்படியே 'கப' பென்று பிடித்துவைத்து வந்திருக்கும் அத்தனை (சில கதைகள்தான்!) கதைகளையும் சிறிய இடைவெளிகளில் கொண்டுவந்துவிடுங்கள்.
Deleteஊர்களின் பட்டியல் பின்வருமாறு : சாத்தூர் ; கோவில்பட்டி ; தூத்துக்குடி ; நாகர்கோவில் ; வள்ளியூர் ; தென்காசி ; தஞ்சாவூர் ; மாயூரம் ; கும்பகோணம் ; சிதம்பரம் ; நாகப்பட்டினம் ; திருச்சி ; திருமயம் ; பட்டுக்கோட்டை ; காரைக்குடி+ KATTUPUTHUR cal me 9789214198 doordelivery done
ReplyDeletevanakam sr,
ReplyDeleteSri Lankavirkum LMS same monthil vandhal nalam...
waiting 4 LMS cover photo
kavinth jeev : LMS அட்டைப்படத்தைக் காண ஆகஸ்ட் வரைக் காத்திருக்க வேண்டுமே..!
DeleteNBS இல் டைகர் கதைகள் தொடர் கதைகளாக இருந்தது ஆனால் LMS இல் அனைத்து கதைகளும் அவ்வாறு அமையாமல் பார்த்து கொண்டதற்கு நன்றி
ReplyDeletein top 10 again :`)
ReplyDeletein top 10
ReplyDeleteபுக் பேர் ஸ்பெஷலும் ஜூலையிலே!!!!!!!!, அப்படின்னா எத்தனை புக்ஸ் கிடைக்கும்.... ஒரு கை விரல்கள் பத்தலையே!!!!
ReplyDeleteகடன் வாங்கணுமோ, இன்னொரு கைய?....
உழைப்புக்கேற்ற ஊதியமும் ; தரத்திற்கேற்ற விலையும் தானே ஒரு பொருளின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் ?!
ReplyDeleteகடந்த சில பதிவுகளின் மூலம் எங்களுக்கு காணக்கிடைக்கும் தங்களின் அதீத உழைப்பும் ; LMS முன்னோட்டங்களையும் பார்க்கும் போது, LMS ன் விலை வெறும் 500/- மட்டுமே என்பது மிகவும் குறைவாகத் தெரிகிறதே விஜயன் சார் ?!
டியர் விஜயன் சார்,
ReplyDeleteஜூலை மாத காமிக்ஸ் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும் ? எத்தனை காமிக்ஸ் சார் ?!
மிஸ்டர் மரமண்டை : July 31st...! 1+1+1+1
Delete4 books ? super sir!
DeleteJuly 31st ????!!!!!! or July 1st ??? for July books ?! :-)
Deleteநன்றி சார்! ஒவ்வொரு மாதமும் எங்கள் கைக்கு கிடைக்கும் காமிக்ஸ் இதழ்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது - ''அள்ளிக்கோ அள்ளிக்கோ அண்ணாச்சி கடையில் அள்ளிக்கோ'' என்ற சரவணா ஸ்டோர் விளம்பரம் தான் ஞாபகத்தில் வருகிறது :)
Deleteநமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்களின் பெயர்களோடு முகவரியும் கிடைத்தால் நலம்
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : விரைவில்...
Deletefor follow up
Deleteநானும் வந்துட்டேன் பதினைந்தாய் !
ReplyDeleteஇம்முறை தலை துப்பாக்கியை தூக்கப்போவது இல்லையா சார் ?. வெறும் கைகளாலேயே எதிரிகளை துவம்சம் செய்ய இருக்கிறார் போல தெரிகிறது. டமால் டுமீல் பிடிக்காதவர்கள விசில் அடித்து உற்சாகப் படுத்தவும். டைகர் ரசிகர்கள்லாம் எங்கே ஓடுகின்றீர்கள அதான் தலை பழக கூப்பிடுகிரார் வாங்க அய்யா , வந்து பழகுங்கள்.
ReplyDelete+1
Deleteசேலம் Tex விஜயராகவன் : உங்கள் காட்டில் அடைமழை எனும் போது புலிகளையும் வாலைப் பிடித்து இழுக்கத் தோன்றுவது சகஜமோ ? :-)
Deleteவேங்கைக்கும் வேளை வராது போகாது !
Texசுக்கு இப்போதுதானே வந்திருக்கு சார் !
Delete//உங்கள் காட்டில் அடைமழை எனும் போது புலிகளையும் வாலைப் பிடித்து இழுக்கத் தோன்றுவது சகஜமோ ?//
Deleteபோனால் போகட்டும் விஜயன் சார்.. ஒருமுறை புலி வாலைப் பிடித்து விட்டால் அப்புறம் விடவே முடியாது என்பதை சீக்கிரமே தெரிந்துக் கொள்வார்கள். அப்புறம் டெக்ஸே வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது. பாவம் மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறார்கள் ;)
************************************************************************************************************************************************************************
ReplyDelete1.இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் !
2.விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும்,
3.டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் !
4.மஞ்சள் மையும் வண்டி வண்டியாய் செலவாகிறது !!
5.இந்தக் கதையின் கிளைமாக்ஸ் பக்கங்களில் இத்தாலிய மொழிபெயர்ப்பு எனக்கும் குழப்பமாய் இருந்திடவே -
5.நமது படைப்பாளிகளையே தொடர்பு கொண்டேன் - சிற்சிறு சந்தேகக் கேள்விகளுடன் !
6.இத்தாலி, பெல்ஜியம் - என இரண்டு collections ; இரண்டு புத்தகங்கள் !
7.மொத்த பக்கங்கள் 900+ ; விலை வெறும் 500 மட்டுமே !
************************************************************************************************************************************************************************
டியர் விஜயன் சார், உங்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் யாருக்கும் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். மிகச் சிறிய வட்டத்திற்குள் இருக்கும் வாசகர்களான எங்களுக்கு இவ்வளவு சிரத்தையுடனும், அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பை வேறு யாராலும் வழங்க இயலாது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ; இன்றைய விருட்சம் நாளைய ஆலமரம் சார் !
உங்கள் காமிக்ஸ் மீதான காதலுக்கு ஒரு ராயல் சல்யூட் விஜயன் சார் !
+11111111111111111111111111
DeleteHats off sir....
\\\உங்கள் காமிக்ஸ் மீதான காதலுக்கு ஒரு ராயல் சல்யூட் விஜயன் சார் !\\\
DeleteThanks a lot sir...
கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் ! கனவுகள் காண என்னை விடாது ஊக்குவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் பங்குள்ளது என்பதால் let's pat ourselves !
Deleteஅப்போ ஜூலியா அம்மையார் இன்னொரு ரிப்கெர்பி போலவா ?
ReplyDeletedon't underestimate the EVES !!
DeleteMr selvas !
FEMALE OF THE SPECIES IS
THE DEADLIEST !!!
selvas : ரிப் கிர்பிக்கு ஒரு ரசிகர் படையும் உள்ளது ; "வாரி விடும் " குழாமும் உள்ளதென்பதால் நீங்கள் எந்தப் பக்கமிருக்கிறீர்கள் என்று அறியாது நான் பதில் சொல்வது பொருத்தமாக இராது ! ஆனால் ஜூலியா நிச்சயம் சாதிப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது !
DeleteSir
ReplyDeleteMy subscription Id is 1090 I have wrongly transferred Rs.1320 two times for Super 6 Subscription to your account on 08/06/2014 from CITI bank .In Lion Comics office they told they not even received one transaction . I have raised query to CITI bank and confirmed both the transaction was successful on 09/06/2014 and I they told I need check from beneficiary end. Again I contact Lion comics office many times but they are not able to confirm this. I have sent mail to lion comics id (lioncomics@yahoo.com)also with truncation ids also. But no response still. Is there any other mail id is there , I can send the truncation details again
Can you please help in this issue.
Saravana : நீங்கள் ஆர்டர் செய்திருந்தது எதன் மூலமாக - worldmart தளமா ? அல்லது நேரடியாய் நமது வலைத்தளத்திலா ? எந்தப் பெயரில் மின்னஞ்சல் அனுப்பி இருந்தீர்கள் ? மீண்டுமொருமுறை அந்த மின்னஞ்சலை அதே முகவரிக்கு அனுப்புங்கள் - நாளைய தினம் சரி பார்த்து ஆவன செய்கிறோம்.
DeleteSir
DeleteI have transfered to praksh publishers account from my account as usual I do. I sent mail again to the same id. My name is Saravana Raja. I sent email in that name .
The issue has been resolved. Thanks for your help.
Deleteசார் !
ReplyDeleteபுக்ஸ் எல்லாம் எப்ப அனுப்ப போறீங்க ?
சிறிது நேரம் செலவழித்து அந்தந்த ஊர்களில்
கிடைக்கும் முகவரி ,போன் நம்பர் தெரிந்து
கொள்ளும்படி செய்யுங்கள் !!
1.Please click here to buy our Comics online !!
ReplyDelete2.சூப்பர் 6 சந்தாப் படிவம் !
3.FACEBOOK BULLETIN BOARD
4.OFFICIAL WEBSITE
சார், ஏற்கனவே நமது வலைப்பூவில் தற்போது இருக்கும் லிங்க் போல, ஐந்தாவதாக இன்னுமொன்றை ஏற்படுத்தி, அதில் நமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்கள், கடையின் பெயர்கள், ஏஜென்ட் contact numbers என ஒரு பக்கத்தை உருவக்கினால் புதிய பழைய வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து ! உதாரணமாக...
5.நமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்களும் கடையின் பெயர்களும் !
+1
Delete+1
Deleteவரப்போகும் லயன் 30 வது ஆண்டு மலர் - லயன் மேக்னம் ஸ்பெஷல் (LMS) - காமிக்ஸ் பொக்கிஷத்தை, பெரும்பான்மையான வாசகர்கள் ஒவ்வொருவரும்5 புத்தகங்கள் ஆர்டர் செய்யப்போவது உறுதி என்று பட்சி சொல்கிறது சார் !
ReplyDeleteமிஸ்டர் மரமண்டை : அந்தப் பட்சி எங்கிருந்தாலும் அதற்கு ஒரு கிலோ பாதாம் & பிஸ்தா பருப்பு ரெடியாக உள்ளது என்று தகவல் சொல்லி வையுங்களேன் !
Deleteநிச்சயமாக சொல்லி வைக்கிறேன் சார். ரூபாய் 500 விலையில் இரண்டு புத்தகங்கள் ; 900+ பக்கங்கள் ; லயன் 30 ஆவது ஆண்டு மலர் ; அட்டகாசமான கதைகள் என்றால் சும்மாவா சார்.. உண்மையாகவே மீண்டும் ஒரு முறை மறுபதிப்பு செய்யவே இயலாத பொக்கிஷம் அல்லவா இந்த LMS ?! எனவே அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாங்கி பாதுகாக்க நினைப்பதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை :)
Deleteஏற்கனவே NBS விரைவில் விற்றுத் தீர்ந்து போனது வாசகர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அது போல் LMSம் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்து விட்டால், கடையில் தாமதமாக வாங்க நினைக்கும் பல வாசகர்களுக்கும், விஷயம் தெரிந்து தாமதமாக காமிக்ஸ் ஜோதியில் ஐக்கியமாகும் புதிய வாசகர்களுக்கும் LMS என்பது கனவாகவே போய் விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். இன்றும் கூட புதிய வாசகர்கள் பலர் இரத்தப் படலம், NBS - விலைக்கு வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர் !
முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம்
ReplyDeleteதெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்கள் !
தூக்கி பிடிக்க கார்ஸன் வேறு !!
புக்கை முகத்தை விட்டு 3 அடி தள்ளி வைத்து
படிக்க வேண்டும் போல !!!!!
// புக்கை முகத்தை விட்டு 3 அடி தள்ளி வைத்து படிக்க வேண்டும் போல !!!!! //
DeleteLOL :-)
selvam abirami : 'கதையில் எத்தனை பேரின் தாடைகளை டெக்ஸ் பதம் பார்க்கிறார் என்று கண்டுபிடியுங்களேன் ' என்றொரு போட்டியே அறிவிக்கலாம் ! அப்படியொரு ரௌத்திர அவதாரம் !
Deleteவிஜயன் சார், அச்சில் நீங்கள் செலுத்திவரும் கவனம் மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி, இந்த மாத இதழ்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.
ReplyDeleteநமது காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க நீங்கள் எடுத்து வரும் முயற்சி வெற்றி பெற்று நமது காமிக்ஸ் மேலும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள். மாதம் மாதம் நமது காமிக்ஸ் வெளிவரும் போது அந்த மாத கதைகளுக்கான ஒரு பக்க போஸ்டர் () ஒன்று தயார் செய்து இது போன்ற கடைகளுக்கு புத்தகம்களுடன் அனுபினால் பலருக்கு நமது புத்தகம் வரும் விபரம் தெரிய வாய்ப்பாக அமையும்.
மார்டின் கதையின் மாதிரி பக்கம் அருமை, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருப்பு வெள்ளை கதை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.
ஜூலியா கதையை மொழி பெயர்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி சின்ன துப்பறியும் கதை படித்து போல் உள்ளது. ஜூலியா கதையை நீங்கள் மொழி பெயர்த்த பின் திரு.கருணைஆனந்தம் அதனை படித்து பார்த்தார்களா? என சொன்னார்கள்?
ரின் டின் கேன் - இந்த கதையில் ஒரு இடத்தில் "வாங்கோழி" என குறிப்பிட்டு உள்ளது, நீங்கள் குறிப்பிடுவது "வான்கோழி" என் நினைக்கிறன். வான்கோழி என்பது சரியானது என்பது எனது அபிப்பிராயம்; ஒரு முறை சரி பார்த்து கொள்ளவும்.
கொசுறு செய்தி: ஆகஸ்ட்-2 ஈரோடு புத்தக திருவிழாவில் நண்பர்கள் அனைவரையும் காண ஆர்வமுடன் உள்ளேன்.
Deleteவாருங்கள் நண்பரே ... ஈரோடு மாநகர் தங்களை வரவேற்கிறது ...
Deleteநன்றி நண்பரே, முடிந்தால் உங்கள் அலைபேசி எண்ணை எனது மின்-அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
DeleteParani from Bangalore : ரின் டின் கேன் என் மேஜையில் நேற்று மதியம் தான் தஞ்சம் புகுந்தது என்பதால் முதல் வாசிப்பே அதனில் இன்னும் ஆனபாடில்லை ! So - "வான்கோழி" / "வாங்கோழி" சங்கதிகளை நாளை தான் தொடங்க வேண்டும்.
Deleteதவிர, இது முழுக்க முழுக்க பேச்சு நடையிலான மொழியாக்கம் என்பதால் உச்சரிப்பை முன்னிலைப்படுத்தியே வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் !
பரணி சார் , டிரைவர் குமார் வீட்டில் சில வருடங்கள் முன்பு மட்டன் பிரியாணி , சிக்கன் குழம்பு சாப்பிட்டு விட்டு புத்தகங்கள் பார்த்து விட்டு , படிக்க சில அள்ளி சென்றோம். நான் தங்களை சேலம் புதிய பேருந்து நிலையத்தில் டிராப் செய்தேன் . அந்த பரணி தானே தாங்கள் ?
Deleteசேலம் Tex விஜயராகவன் @ அந்த பரணி நான் இல்லை நண்பரே; இதற்கு முன்னால் ஈரோடு புத்தக திருவிழாவில் நான் கலந்து கொண்டது இல்லை. ஆனா நீங்க சொல்லற அந்த நான்-வெஜ் வகைகளை சாப்பிட நான் தயார் :-)
Deleteகண்டிப்பாக சாப்பிடலாம் நண்பரே. உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்பு நண்பர்கள் பலர் உண்டு நண்பரே ! அப்போது அந்த பரணி யார் ? அவர் இதை படிக்க நேர்ந்தால் பதில் தெரிவிக்கவும்.
Deleteஉங்களின் "அன்பான சாப்பாடு" எனக்கு ஒரு பயத்தருது..
Delete// உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்பு நண்பர்கள் பலர் உண்டு // இதில ஏதும் உள்குத்து இல்லையே :-)
சேச்சே ஒரு பயமும் வேண்டாம் நண்பரே ! நீங்கள் வந்தால் மட்டுமே போதும் . ஆமாம் வந்தாலே போதும்.
DeleteFollow email..-
ReplyDeleteTirunelveliyil Comics vanka...
ReplyDelete9790906490
டியர் எடிட்டர்,
ReplyDeleteமார்க்கெட்டிங் பிரதிநிதிகளால் விற்பனை களங்கள் விரிவைடைவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
/* இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும், 3.டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் ! */
இந்த முடிவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். Thanks for considering inputs from us.
விறுவிறுப்பான அப்டேட்ஸ். நன்றி. நாட்கள் நகர மறுக்கின்றன. ஜூலை இதழ்கள் இம்மாத 30ல் வருவதாய் சொல்லியிருந்தீர்கள். புத்தகங்கள் தயாராகிவிட்டால் முன்னமே அனுப்பிவையுங்கள் சார்!
ReplyDeleteசமீபத்தில்தான் நண்பர் ஒருவரின் புண்ணியத்தில் ’டால்டன் நகரம்’ படித்தேன். லக்கி கதைகளின் டா5ல் ஒன்றாக இது இருக்கும் என நினைக்கிறேன். ஆவரெல் தமது சிறையறைக் கதவில் பூட்டு சரியில்லை என்று ஆதங்கப்படும் இடத்தின் ரசனையை எப்படி விளக்குவது? சற்று நேரமே வந்தாலும் ரின்டின் செய்தது அதகளம்! அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தேயை மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
முதலில் தயங்கிய அல்லது தாமதித்தத் தங்களை எறும்பூரக் கல்லும் தேயும் என்பது போல இத்தளத்தின் நண்பர்களின் இடைவிடாத கோரிக்கைகள், சந்தாதாரர் தவிர்த்த வாசகர்களைச் சென்றடையும் முயற்சியை மெல்ல மெல்ல மேற்கொள்ளச்செய்தது எனில் அது மிகையாகாது! மிக ஆரோக்யமான விஷயம் இது! பொறுமையையும், விடாமுயற்சியையும் மேற்கொள்ளுங்கள், நிச்சயம் 80களின் பிரிண்ட் ரன்னை விரைவில் தொடுவோம். நல்வாழ்த்துகள்!
DeleteRaghavan & ஆதி தாமிரா :
Deleteமூத்த பணியாளரான திரு பொன்னுசாமி நம்மிடம் பணியாற்றி வந்த நாட்களில் மார்கெட்டில் ரெகுலராக சுற்றி வந்து கொண்டிருந்தார் ; ஆனால் அன்று நமது விலைகள் ; வெளியிடும் வேகம் அனைத்துமே வித்தியாசமாய் இருந்ததால் - நாளாசரியாக ஒரு விதத் தொய்வு ஏற்பட்டுப் போனது ! அந்தத் தொய்வு விழுந்த நாளே நிலுவைப் பாக்கிகளும் வெறும் காகிதங்களாய் மாறிப் போயின ! இது புலி வாலைப் பிடித்த கதை ; வாலை விட்ட மறு கணம் நம்மை ஸ்வாஹா செய்து விடுமென்பதாலேயே நமது இரண்டாம் வருகைக்குப் பின்னே திரும்பவும் களம் இறங்கி கடனுக்கு விற்பனை செய்து - வசூல் செய்யும் தலை நோவு வேண்டாமே என்று நினைக்கத் தோன்றியது.
ஆனால் சந்தா எனும் வட்டம் எத்தனை முயன்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாது என்பதை உணரும் போது வேறு மார்க்கம் இல்லை - கடைகளின் கதவைத் திரும்பவும் தட்டுவதைத் தவிர !
இப்போது நாம் செய்யத் துவங்கி இருப்பது சுலபமான பணிகளையே ; வசூல் செய்வதில் தான் சிரமும், திறமையும் உள்ளது ! Fingers crossed ! நம்பிக்கையோடு செயல்படுகிறோம் !
டியர் எடிட்டர்,
Deleteஇந்த மார்க்கெட்டிங் யோசனை பல நண்பர்களால் முன்மொழியப்பட்டதன் முக்கிய காரணம் - தங்களது முப்பதாண்டு அனுபவத்தில் ஊருக்கு ஒரு நல்ல நியாயமான விற்பனையாளர் உங்களுக்கு பரிச்சியம் ஆகி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால்தான். அதில் ஒரு ஐம்பது சதவிகித ஊர்களில் ஓரிரு agentகள் இருந்தாலும் உங்கள் நம்பிக்கை நன்றாய் மெய்ப்படும் சாத்தியம் அதிகமே - not figures crossed - it's Thumbs Up !!
டியர் ராகவன்,
Deleteஉங்கள் கமெண்ட்டை என்னுடைய கணினியில் படிக்கும்போது, n மிஸ் ஆகிறது.
அதனால் Fingers என்பது எனக்கு Figures என்று தெரிகிறது.
ஆங்,,,,, அப்புறம் எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வச்சுடுறேன். :)
டியர் விஸ்வா,
Deleteஹா ஹா :-) நான் எழுத நினைத்தது பிங்கர் - எழுதியது பிகர் - ராத்திரி ஒரு மணிக்கு கமெண்ட் போட்டா இப்டிதான் ஏதாவது ஆகும் ;-)
டியர் ராகவன்,
Deleteஅப்போ பிரச்சினை என்னுடைய கணினியில் இல்லை அல்லவா?
நல்லவேளை நான் ஒரு ஸ்மைலி போட்டு வைச்சேன். அதுக்காக நீங்க ரெண்டு ஸ்மைலி போட்டே ஆகணுமா என்ன?
இந்தாங்க :) :) :)
டியர் விஸ்வா,
Deleteநாம இப்டி ஸ்மைலி போடுறதால இன்னொரு மில்லியன் ஸ்மைலி ஸ்பெஷல் வரும் என்றால் .. இந்தாங்க ...
:-) :-) :-) :-)
What say Editor ;-) ?
Did LMS reservations cross the magic number 1000
ReplyDeleteMahendran Paramasivam : அதில் பாதியையே இன்னமும் நாம் எட்டவில்லை !
Deleteவிஜயன் சார் !
DeleteSHELL SHOCKED TO HEAR THIS :'(
உங்கள் கஷ்டங்களை நாங்கள்
எப்போதும் முழுமையாக உணர போவதில்லை .
எங்கள் சந்தோஷங்களை மட்டுமே
பார்க்கிறோம் .
புக்ஃபேர் இதழ் வரும் எங்கள் சந்தோஷம்
நெய்வேலியில் உங்களது ஏமாற்றத்தை
திரையிட்டு விடுகிறது .
1500க்கு குறைவின்றி முன் பதிவு
இருக்கும் என நினைத்தேன் சார் !
Interesting post...eagerly waiting for the books.....counting d days......
ReplyDeleteஹய்யா !சிரிப்பு அடக்கவே முடியல !
ReplyDeleteபுக் ஃபேர் ஸ்பெஷலும் சேர்ந்து வருது !
:-),:-)
:-)
போச்சுடா ..........
Deleteஇப்ப தனியா சிரிக்கிற அளவுக்கு வந்துடுச்சா ...................
காதல் பண்றாராம் ........
காமிக்ஸை .........
LMS Trailers பட்டய கிளப்பது! திருச்சியில் எங்கே நமது புக்ஸ் கிடைக்கும் என முகவரியும், தொலைபேசி எண் தேவை!
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : விரைவில் இங்கொரு லிங்க் ஏற்படுத்தித் தருகிறேன் - ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளின் முகவரிகளோடு !
DeleteTest
ReplyDeleteநெய்வேலி புத்தக கண்காட்சியில் நமக்கு ஸ்டால் கிடைத்தால் ஒரு ட்ரிப் அடிக்கலாம் என்றிருந்தோம். மிஸ் ஆகிவிட்டது...
ReplyDeleteநமது இதழ்களின் தரத்தை உயர்த்த நீங்கள் எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சிக்கும் நன்றிகள் சார்... LMS சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ஈரோட்டில் சந்திப்போம்!
காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : நெய்வேலி நமக்கும் ஏமாற்றமே !! ஒன்றரை மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்தும் பிரயோஜனம் இல்லாது போய் விட்டது ! ஈரோட்டில் சிந்திப்போம் !
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஜூலை(ஜூன்) மாத புத்தகங்கள் படிக்க கிடைக்காத குறையை (இடைவெளி ரொம்ப ஜாஸ்திதான்) உங்களது பதிவுகள் தீர்த்து வைக்கின்றன.
டெக்ஸ் சாம்பிள் பக்கங்கள் கதைக்கான எதிர்பார்ப்பை ரொம்பவுமே அதிகரிக்க செய்கிறது. நண்பர் சேலம் டெக்ஸ் விஜய் சொன்னது போல, டெக்ஸ் கை தான் பேசுகிறது போலும் இந்த முறை.
// டெக்சின் சரவெடி கதைக்கு அதிரடி bright வர்ணங்கள் ; டைலனின் விறு விறு த்ரில்லருக்கு அதே போல் விறுவிறுப்பான கலரிங் ; அமைதியான ராபின் கதைக்கு சலசலக்கும் நீரோடையைப் போன்ற ஆர்ப்பாட்டமில்லா வர்ணங்கள் !! //
அருமையான (கலர்) அறிமுகப் படலம் ....
ஜூலியா - அதிரடி ரசிகர்களை எப்படித்தான் சமாளித்து பாஸ் மார்க் வாங்க போகிறாரோ ? பார்ப்போம் :)
ரிண் டின் - ஏற்கனவே நீங்கள் கூறியது போல, அருமையான நகைச்சுவை கதையாக அமையும், ஆனாலும் எங்க வீட்டு வால் சுட்டி லுக்கியை எதிர்பார்க்கிறார் ... எப்பொழுது சார், அடுத்தட சுட்டி லக்கி ...
திருப்பூர் - எந்த கடையில் நமது புத்தகங்கள் கிடஈக பெரும் என்பதை தெரியப்படுத்தவும், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் கடையில் புத்தகம் கிடைக்குமா என கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இது ஒரு இனிய செய்தியாக அமையும்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் ஈரோட்டில் ஆஜர் :)
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் //ஜூலியா - அதிரடி ரசிகர்களை எப்படித்தான் சமாளித்து பாஸ் மார்க் வாங்க போகிறாரோ ? பார்ப்போம் :) //
Deleteநிச்சயமாய் distinction-ல் பாஸ் செய்வார் !
//எப்பொழுது சார், அடுத்தட சுட்டி லக்கி ...?//
January'15 - சென்னையில் !
@விஜயன் சார் !
ReplyDelete//...ஜூலியாவின் கதையில் .....நிறைய
பக்கங்களில் வசனங்கள் இல்லாமல்
(படங்கள் மட்டுமே )இருப்பதாலும் (!!)//
சார் ! இதில் என்ன ஆச்சரியம் ?
என்னுடைய பழைய பரிட்சை பேப்பர்களில்
படம் கூட இருக்காது !;)
Really nice post. Dear friends tomorrow I will write about vijayan sir on the title of "Singaththudan oru munmaalai pozhuthu"
ReplyDeleteDr.Sundar,Salem :
Deleteதங்களின் ''சிங்கத்துடன் ஒரு முன் மாலைப் பொழுது'' பதிவுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே !
Sir ... Will LMS be available in erode book fair or do i have to reserve it .....
ReplyDeleteMks Ramm : முன்பதிவு நலம் !
Delete//Mks Ramm : முன்பதிவு நலம் !//
Deleteஇங்கு பார்வையிடும் மௌனப் பார்வையாளர்கள் கவனிக்கவும். நீங்கள் சந்தா கட்டியிருக்காத நிலையில் குறைந்தப் பட்சம் முன்பதிவு செய்துக் கொள்வது - காமிக்ஸ் பொக்கிஷமான LMS ஐ நமக்கு உறுதி செய்துக் கொள்வதாக அமையும். தவற விட்டால் மீண்டும் மறுபதிப்பில் வராது என்பதால் வாசகர்கள் மிகவும் உஷாராக, தங்களுக்கான பிரதியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.
எடிட்டர் சார்,
ReplyDelete//Vijayan22 June 2014 21:30:00 GMT+5:30
selvam abirami : 'கதையில் எத்தனை பேரின் தாடைகளை டெக்ஸ் பதம் பார்க்கிறார் என்று கண்டுபிடியுங்களேன் ' என்றொரு போட்டியே அறிவிக்கலாம் ! அப்படியொரு ரௌத்திர அவதாரம் !//
அப்படி ஒரு போட்டி வைய்யுங்களேன். சூப்பராக இருக்கும்.
தொண்ணூருகளின் இறுதியில் (அப்போதைய) இளம் நாயகன் பிரஷாந்த் “நடித்த” ஹலோ என்றொரு படம் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் (சலாம் குலாமு என்ற சரித்திரபுகழ் பெற்ற பாடல் இந்த படத்தில் தான் வந்தது).
அந்த படத்தின் சலாம் குலாமு பாடலை ஷூட்டிங் செய்யும்போது என் நண்பனும் தவறுதலாக அந்த காட்சியில் நடித்துவிட்டான் (ஹுக்கும், ஒரே ஒரு காட்சியில் திரையில் ஒரு ஓரமாக இருப்பது நடிப்பா? என்பதெல்லாம் கூடாது).
ஆகையால் அந்த படத்திற்க்கு எங்கள் கல்லூரி நண்பர்களை எல்லாம் அழைத்தோம். நிறைய பேர் தவிர்க்க, நாங்கள் ஒரு போட்டி அறிவித்தோம். இந்த படத்தில் எத்தனை முறை ஹலோ என்ற வார்த்தை வருகிறது என்பதை எண்ணி சொல்லவேண்டும் என்பதே அந்த போட்டி.
அதனால் ஜாலியாக அந்த படத்தை பார்த்து (எண்ணி) பதில் அளித்தார்கள்.
முதல் பாதியில் 39 முறையும், இரண்டாவது பாதியில் 18 முறையும் ஹலோ என்ற வார்த்தை அந்த படத்தில் உச்சரிக்கப்பட்டது.
ஆக, நீங்கள் இப்படி ஒரு போட்டி அறிவித்தால், எப்படியும் ஒரு முறை படிக்கும் வாசகர்கள் இரண்டாம் முறையும் (உடனே) படிப்பார்கள்.
மொக்கையான யோசனை சொன்னதற்க்கு திட்டாமல் இருப்பதற்க்கு முன்கூட்டிய நன்றி.
King Viswa : "மொக்கைப் போட்டிகள்" பட்டியலில் இன்னமும் சில சங்கதிகளையும் சேர்க்கலாம் :
Delete1.டெக்சின் குத்து வாங்கி எதிரே உள்ள சுவற்றைப் பதம் பார்ப்பது எத்தனை பேர் ?
2.வறுத்த கறி வேண்டும் என்று கார்சன் அலம்பல் செய்வது எத்தனை முறைகள் ?
3.TEX கதையில் மொத்தம் எத்தனை டுமீல்-டுமீல் ?
4.லக்கி லூக் கதையில் கலாமிட்டி ஜேன் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது எத்தனை முறைகள் ?
5.ஜாலி ஜம்பரை கூட வரும் குதிரை வித விதமாய் செல்லப் பெயர்களோடு கூப்பிட்டுக் கடுப்படிப்பது எத்தனை தடவைகள் ?
6.ரின் டின் கேன் கதை முழுவதிலும் முழுங்கும் ஐட்டங்கள் எத்தனை ?
எடிட்டர் சார்,
Deleteஅனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள நான் ரெடி.
King Viswa : முதுகில் டின் வாங்க நான் ரெடி இல்லை !!
Deleteடியர் எடிட்டர்,
ReplyDeleteஅருமையான ஒரு பதிவு . "சட்டம் அறிந்திரா சமவெளி ", டின் டின் , மார்டின் மூன்றினதும் டீசெர் அருமையாக வந்துள்ளது. குறிப்பாக டெக்ஸ் இன் "பழகி பார்க்கும் " சித்திரங்களின் பின்னணியினை வரையாமல் வர்ணகளின் மூலம் காட்சிபடுத்தியிருக்கும் விதம் கவர்கின்றது. "அதிஸ்டம் தரும் அண்ணாத்தே" இனில் அமெரிக்க ஜனாதிபதி , செவ்விந்தியர் கைதியாகவா ? நம்பவே முடியவில்லை . அதுவும் மரங்களின் மேல் பரண் அமைத்து செவ்விந்திய குடியிருப்பா ! சார் , ஜூலை மாத இதழ்கள் எப்போது எமக்கு கிடைக்கும் ? மார்டின் கதைகளில் இது வரை வெளிவந்ததை விட இந்த சாகசம் வித்தியாசமாக உள்ளது. ( இல்லையேல் சித்திரங்கள் அவ்வாறு நினைக்க தோன்றுகின்றது ).தங்களின் தெரிவுகள் என்றுமே சோடை போனதில்லை & என்றுமே எனக்கு பிடித்தமானவை எனும்போது டிடக்டிவ் ஜூலியா இன் சாகசமும் எமது வாசகர் வட்டத்தினை கூட்டும் என்பதில் ஐயமில்லை . ஆனால் அவரது கதை வரிசையில் 102 ஆவதினை வெளியிடுவதனால் முன் கதை புரியாமல் போகாதா சார்? "வெள்ளி முடியாரின் கடந்த காலம் " மறுபதிப்பு விரைவினில் என்ன்று அறிவிப்பு செய்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் . இருப்பினும் எந்த மாதம் வெளிவரும் என்று கூறவில்லையே சார் .
Thiruchelvam Prapananth : //டிடக்டிவ் ஜூலியா கதை வரிசையில் 102 ஆவதினை வெளியிடுவதனால் முன் கதை புரியாமல் போகாதா சார்? //
ReplyDeleteஇவை அனைத்துமே அந்தந்த இதழோடு நிறைவு காணும் கதைகள். பிரதான பாத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது தொடர்வார்களே தவிர - கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை !
டியர் எடிட்டர்ஜீ!!!
ReplyDeleteல.மே.ஸ்.பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறித்து மகிழ்ச்சி.டெக்ஸ் வில்லர் கதைக்கு படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ள வண்ணக்கலவைகள் உண்மையில் அருமையாக அமைந்திருக்கிறது.ஆனால் ,ரின் டின் கேன் கதையின் வண்ணங்கள் அவ்வளவு எடுப்பாக இல்லை.சற்றே அதை கவனிக்கவும்.ஜூலியா கதைக்கு நீங்கள் கொடுத்துள்ள பில்ட்-அப் எங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது.அந்த "அக்காவை" பார்க்க ஆவலாக உள்ளோம்.(என்று ஈரோடு விஜய் கூறுகிறார்;-)
இந்த வண்ணமயமான வாரத்தில் அடியேனின் ஒரு சிறிய வேண்டுகோள்.நமது காமிக்ஸ்களின் ரிவ்யூ மற்றும் முன்-பின் அட்டைகளின் இமேஜ் ஆகியன முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் இணையத்தில் இல்லாத வாசகர்கள் அனுபவிக்கும் "அடுத்த கதையும்,அட்டைப்படமும் எப்படியிருக்கும்?" என்ற த்ரில் எங்களுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.அட்டைப்படங்களை இங்கே வெளியிடுவதை தவிர்த்தால் கூரியரை மெல்ல பிரித்து நமது இதழ்களின் அட்டைகளை நேரில் பார்த்து அனுபவிக்கும் த்ரில்லை நாங்களும் பெறமுடியுமே ஸார்...!
ரெகுலர் இதழ்களை விடுங்கள்.அட்லீஸ்ட் மேக்னம் ஸ்பெசல் அட்டைப்படங்களையாவது முன்கூட்டியே வெளியிடுவதை தவிர்த்து ரகசியமாக வைத்துக்கொள்ளுங்களேன்.இதன்மூலம் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பது அடியேனின் கருத்து...!!
இதுகுறித்து நண்பர்களின் அபிப்ராயத்தை அறிய விரும்புகிறேன்...!!!
saint satan : மேலே..மேலே scroll செய்யுங்களேன் சாத்தான்ஜி ..இலங்கை நண்பர் kavinth jeev-க்கு இது பற்றிய பதிலை பதிவிட்டிருக்கிறேன் பாருங்களேன்..!
Deleteவாவ்...சரியான முடிவு ஸார்...!
DeleteThis comment has been removed by the author.
Deleteஜூலியா விஜய்க்கு அக்கான்னா ......உங்களுக்கு ஜூலியா என்ன உறவுன்னு சொல்லுங்களேன்?
Delete...........தங்கச்சி
Deleteடியர் மதியில்லா மந்திரி!
Delete...........தங்கச்சி...? ஏன் கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க...? விஜய் எனக்கு மச்சான் மாதிரி...ஹிஹி!!!
அப்ப அஜித் என்ன உறவு...........சூர்யா என்ன உறவு...............விக்ரம் என்ன உறவு..............
DeleteDear sir,muthalil thanks apuram vanakkam kumbakonathiru comics varavaipatharku nanri,ini couurierku seium selavaiyum mo commisionaium lion comics athanaium vankikolven.oru siru uthavi july matha comics kumbakonathil kidaikuma entha kadaiyil mugavari tharavum,busstand manikoondu,diamond theatre oneway,townhigh school ingellam nan siru vaathu muthal lion comics thedi thedi book seithum vangi irukeeran. Intha puthiya pathivu ennai ronbavum urchagam kolla seikirathu sir.
ReplyDeleteகாமிரேட்ஸ்,
ReplyDeleteஇன்றைய தி ஹிந்து தமிழ் நாளிதழின் எட்டாவது பக்கத்தில் வெளிவந்து இருக்கும் கட்டுரையை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் தலையங்கத்துக்கு கீழே ”இரும்புக்கை மாயாவியோடு ஒரு சாகசப் பயணம்” என்று பெட்டி செய்தியாக லின்க் கொடுத்து நடுப்பக்கத்தில் வாசகர் நினைவுகள்: இரும்புக்கை மாயாவியோடு ஒரு சாகசப் பயணம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
வாசக அன்பர் இரா. நாதன் அவர்களின் சிறுவயது நினைவுகள் அற்புதமாக எழுதப்பட்டு படிக்க சுவையாக இருக்கிறது.
இதை தவிர நாளைக்கு
1. குங்குமம் வார இதழிலும்
2. டெக்கன் க்ரோனிக்கள் - சென்னை க்ரோனிக்கள் தினசரியிலும்
காமிக்ஸ் கட்டுரைகளும், பேட்டிகளும் வெளிவர இருக்கின்றன.
விஜயன் சார், நமது காமிக்ஸ் தூத்துகுடியில் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள நேரு புத்தக கடை மற்றும் பஜாரில் உள்ள சங்கர் ஏஜென்சியில், விருதுநகரில் பழைய பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடைகளின் கல்லூரி படிக்கும் நாட்களில் வாங்கினேன். தற்போதும் அவைகளில் நமது புத்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteபெங்களூரில் K.R மார்க்கெட் மற்றும் சிவாஜி நகர் அருகே நமது காமிக்ஸ் Agent இடம் 1998 காலகட்டம்களில் வாங்கினேன். இப்போது யாராவது உள்ளார்களா? கைஅலைபேசி இல்லாத அந்த காலங்களில் நமது புத்தக Agent கடுதாசி முலம் தொடர்பு கொண்டு, குறிபிட்ட நாள், நேரம் மற்றும் இடத்தில் சந்தித்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
சார் , டெக்ஸின் ஒரு பக்கம் பட்டய கிளப்புது ! மஞ்சள் நிறத்தில் ஜொலித்து , எதிரியை கிழிக்கும் டெக்சை காணும் போதே தெரியும் நிஜமான புலி யாரென்று ! டைகரை மிஞ்ச வண்ணத்தில் வரும் இவரை கண்ட பின்னர் ஒரு எண்ணம் மேலோங்குகிறது . பேசாமல் இந்த கதம்ப இதழில் மூன்று டெக்ஸ் கதைகள் இடம் பிடித்திருந்தால் ஆஹா என எண்ணம் ஒங்க தவறவில்லை ! கொள்ளை கொள்கிறார் மனதையும் , கண்களையும் டெக்ஸ் .
ReplyDeleteஅடியா அது இடி ! இரண்டு மஞ்சள் சட்டை வீரர்களும் கலக்கும் ஒரு பக்கமும் வெளியிடுங்களேன் அடுத்த பதிவினில் !
ஜூலியாவின் கதை தயாரிப்பில் எங்கள் மேல் அக்கறை கொண்டுள்ள தாங்களும் , கருணை ஆனந்தம் அவர்களும் அவதாரமாய் தெரிகிறீர்கள் ! நன்றிகள் சார் , உங்களது ஆரோக்கியமான எண்ணங்கள் கொண்ட தேடல்களுக்கு ! கோடை மலரென்றாலும் வசந்த காலம் நமது காமிக்சில் மட்டுமே !
ஆனாலும் கொடுமை அடுத்த ஒரு வாரங்களுக்கு (பன்மை ) அலுவலகத்தில் தயாரான நமது காமிக்ஸ்கள் துயில் பயில்வது !
ஜூலையே சீக்கிரம் வந்து போ போ................... ! ஆகஸ்டே விரைந்து வா வா....................... !
Deleteஎடிட்டர் சார் !
Deleteஸ்டீல் க்ளாவின் போக்கு எனக்கு
என்னவோ சரியாக படவில்லை !!!
LMS ரெடியானவுடன் அவற்றை
வைக்கும் கோடவுனை சுற்றி
கறுப்பு பூனை படை
வெள்ளை யானை படை எல்லாம்
நிறுத்தி விடுங்கள் !
சொல்லி விட்டேன் ்.ஆகஸ்ட் வரை
தாங்க மாட்டார் போல் தோன்றுகிறது !!
முன்பு கோடை மலரை , கோடை விடுமுறைகளை எதிர்பார்த்து காத்திருப்பேன் ! இப்போது மாதம் தோறும் வரும் புத்தகங்கள் கூட அவ்வாறே ! ஆனால் இந்த டெக்ஸ் , குண்டு புத்தகம், இரண்டு அளவுகளில் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்கிறதே ! ஆகஸ்ட் வெகு தொலைவில் அல்லவா உள்ளது ! காத்திருக்க முடியாது காலம் கனியும் வரை ! தடியால் அடித்து கனிய வைப்போமா ?
Deleteவள வழப்பான கண்ணாடி அட்டை, 520 பக்கங்கள் , பாக்கெட் சைசில் என்ற விளம்பரங்களை கண்டு துள்ளி குத்திருப்பீர்கள் முன்பொரு தரம் , அதை போலவே இப்போதும் குதிக்கிறது மனது !
ஒரு
Deleteகிளா........
கிளாஸ் ஏந்தி
நிற்கிறதே ....
ஆச்சர்ய குறி .
கிளாஸ் பன்மைதானே !
Deleteஇதுல கிளாஸ் கோஷ்டி வேற இருக்கா .........?
Deleteகோஷ்டி அல்ல முந்திரியாரே சாரி , மந்திரியாரே முஷ்டி !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடெக்ஸிடம் அடிவாங்குபவரின் முகத்தில் தெரியும் அதிர்ச்சி, இயலாமை , வேதனை ஆகியவற்றை சித்திரத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் ஓவியருக்கு பாராட்டுக்கள் !
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteLMS பற்றிய தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. அனைத்தும் அற்புதம். ரின் டின் கேன் ஐ படித்து வாய்விட்டு சிரித்தேன். ட்ரைலரே இப்படி இருந்தால், கதை எப்படி இருக்கும்? மார்டின் கதையின் சித்திரங்கள் அற்புதமாக உள்ளன.
ஆகஸ்ட் 2 ஐ மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
மர்ம மனிதன் மார்டின்-ஐ காண ஆவலுடன் இருக்கின்றேன்.
ReplyDeleteடெக்ஸ் வில்லர் - "அடி" பின்னுகிறார்,வண்ணத்தில் மின்னுகிறார்.
டியர் விஜயன் சார்,
ReplyDeleteஆகஸ்ட் புத்தகத் திருவிழா முடிந்தவுடனேயே, மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கு தயாராகி விடுங்கள் சார் :) ஆகஸ்ட் மாதம் முடிவதற்கு உள்ளாகவே - இங்கே பத்து இலட்சம் பார்வைகள் அரங்கேறி விடும் போலிருக்கிறது. Total Pageviews - 947117+ and counting :)
for follow up
ReplyDeleteLion "Matte" Special ஆக வரும் தகவல், தயாரிப்பு சார்ந்த பின்னணி விவரங்கள், நேரடி விற்பனை மற்றும் புத்தக விழா அறிவிப்புக்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜயன் சார்!
ReplyDeleteijayan22 June 2014 22:07:00 GMT+5:30
ReplyDeleteமிஸ்டர் மரமண்டை : July 31st...! 1+1+1+1 aug 2 bookfair
june 31 na sir ..?
palanivel arumugam :
Deleteஜூலை மாத காமிக்ஸ் ஜூன் 30 ஆம் தேதியே நமக்கு அனுப்பி வைக்கப்படும். அவை ;
1.காவல் கழுகு
2.பூம்-பூம் படலம்
3.விரியனின் விரோதி
4.ஆத்மாக்கள் அடங்குவதில்லை
ஜூன் 30 என்று அனைவரும் அறியவும் :)
வணக்கம் சார்,
ReplyDelete// "பூம்-பூம் படலம்" + "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & "விரியனின் விரோதி" வண்ண அச்சுப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பூர்த்தியாக//
சூப்பர் சார்! இந்த மாதம் எனக்கு நான்கு + 1 புத்தகங்கள் வரப்போவதை எண்ணி இப்போதே உள்ளம் குதூகளிக்கிறது. சிரிப்புக்கு ஓன்று,த்ரில்லருக்கு ஓன்று, க்ரைமுக்கு ஓன்று, ஆக்சனுக்கு ஓன்று ஆஹா! அற்புதம்! :-)))! இவை தவிர வேறொன்றும் வேண்டேன் பராபரமே! என மனம் சொல்ல எத்தனித்தாலும் LMS இருக்குப்பா அதுக்கு என்ன சொல்ல போறே? என கேள்வி என்னுள் எழாமல் இல்லை! :-))!
//இது வரையிலான results அற்புதமாய் வந்துள்ளன ! "வர்ணங்கள் ஜாஸ்தி" ; "அடர்த்தியாய் உள்ளன " என்று சமீப நாட்களில் அச்சுத் தரம் பற்றி எழுந்த விமர்சனங்கள் இம்முறை எழ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..! இதன் பின்னணிக் காரணங்கள் 2 !
காரணம் # 1 - இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! //
பரணி,கிரிதரன் & FRIENDS, உங்களது விடாது பிரண்டல் வேலையை செய்து விட்டது.:-)))! நமது காமிக்ஸ் தர முன்னேற்றத்துக்கு நீங்கள் செய்துள்ள சேவை அற்புதமான ஓன்று. நன்றிகள் உங்களுக்கு முதலில், இதை செயல்படுத்திய ஆசிரியருக்கு THANKS A LOT SIR ! இதே தரத்திலான தாள்கள் தொடருமா?
// மஞ்சள் சட்டையாரின் "சட்டம் அறிந்திரா சமவெளி" கதைக்கு படைப்பாளிகள் பூசியுள்ள வர்ணக் கலவை அபாரமாய் உள்ளது ! //
YES ! ME TOO ENJOYED ! :-))! பளிச் வண்ணங்களில் மஞ்சள் அழகோ அழகு!
//முடிக்கப்பட்ட பக்கங்களை monitor -ல் பார்க்கும் போது 'ஜிவ்' வென்று உற்சாகம் எழுவதை உணர முடிந்தது ! //
முடியல! குழந்தைய கிள்ளி விட்டாச்சு !
ஜிவ்வுன்னு உற்சாகம் உங்களுக்குன்னு இப்படி போட்டா அத படிக்கற எங்க நிலைமைய கொஞ்சம் நினைச்சு பாக்க வேணாமா? யாராவது சிவகாசி பக்கம் இருக்கற வாசகர் (சௌந்தர்??) நம்ம பதிப்பகத்துக்கு ஒரு விசிட் அடிச்சு "THE MAKING OF LMS" பதிவு புகைப்படங்களுடன் போட்ட நாங்க ஆனந்தப்படுவோமே!
//கதையின் மூடுக்கு ஏற்ப வர்ணக் கலவைகள் அமைக்கும் அந்தக் கலையை இம்முறை நாம் LMS மார்க்கமாய் முழு வீச்சில் பார்க்கப் போகிறோம் !! //
அருமை சார்! மறக்காமல் இந்த பாயிண்டை இன்னமும் ELABORATE பண்ணி HOT LINE னில் குறிப்பிடவும்.
//LMS -ல் இக்கதையைப் படிக்கும் போது ஒரு அதிரடி த்ரில்லரை எதிர்பார்க்காதீர்கள் - ப்ளீஸ் ! மாறாக - சூப்பர் ஹீரோக்களோ ; ஒரே உதையில் இருபது பேரை பறக்கச் செய்யும் (உடான்ஸ்) ஹீரோக்களோ இல்லாததொரு சூழ்நிலையில் ஒரு சிக்கல் எழுந்திடும் போது சராசரியான மக்கள் அதனை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதைச் சொல்லும் கதையாக இது இருக்கும் ! //
ஹ்ம்ம்....சரியப்படலயே!
:-))!
//தமிழகத்தின் பெருநகரங்களை ஒவ்வொரு வாரமும் நமது பணியாளர்கள் explore செய்து வருகின்றனர் - விற்பனைக்குக் கடைகளை ஏற்பாடு செய்திடும் பொருட்டு ! //
அருமை சார்! முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்!
--------
ReplyDeleteLMS புத்தகத்தை மட்டும் தனியாக முன்பதிவு செய்ய முடியுமா ?. ப்ரொபஷனல் குரியர் - எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்?
---------
அன்பு எடிட்டர்
ReplyDeleteஎங்க தல டெக்ஸ் வண்ணத்தில் மிக அழகு.மர்ம மனிதன் மார்டின் கதைகள் மீண்டும் வருவது ஆவலை
தூண்டுகிறது(இது-இது நிஜமே) .ஈரோடில் LMS இதழ்கள் வாங்க முன்பதிவு அவசியமா? ஏனெனில் நான்
LMS சந்தா ஒன்றுதான் கட்டியுள்ளேன். மேட்பினிஷ் காகிதங்கள் எனில் வழக்கமான பளபளப்பு இருக்காதா?
ஜூலியா பற்றிய உங்களது மெனக்கெடல் எங்களது மீதான உங்களது அக்கறையை காட்டுகிறது .நன்றி.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஈரோடில் உங்களை சந்திக்கவும்,நண்பர்களை சந்திக்கவும் மிகவும் எதிர்பார்புகளுடன்
உள்ளேன்.
-----
ReplyDeleteவேறு விதமான பேப்பர் உபயோகிப்பதாக கூறியுள்ளீர்கள். அச்சுத்தரம் மேம்பட தாங்கள் என்ன செய்தாலும் வரவேற்கிறோம். புதிய தாளில் ப்ரிண்டிங் இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் ப்ரிண்ட் செய்வது எளிதா ?
++++
ரின் டின் கேன் - டீசர் பிரம்மாதம். உங்கள் எழுத்துக்களில் இந்தக் கதை மேலும் மிளிரும் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
++++++
மார்டின் டீசரில் அந்த பாம்பு மிரள வைக்கிறது. 25 இன்ச் மானிட்டரில் பார்த்து சற்றே பயந்து போனேன் :-)
++++++
ஜீன் - 30க்காக வெயிட்டிங்
-------
Trailor super, egarly waiting for books.
ReplyDeleteசார் , இன்னுமோர் புத்தகம் ஈரோட்டில் பார்சல் !
ReplyDeleteடியர் எடிட்,
ReplyDeleteமுதல் முறையாக Matte Finish முறையில் ஒரு தமிழ் காமிக்ஸ் புத்தகம் வரவிருப்பதில் மகிழ்ச்சி. வளவள காகிதங்கள் காமிக்ஸ் பக்கங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தாலும், பளீர் வண்ண காமிக்ஸ் கதைகளுக்கு, சேகரிப்பிற்கும் படிப்பிற்கும் இதுவே உகந்த தரம் என்று தெரிகிறது... விலையை பொறுத்து அவ்வப்போது ஸ்பெஷல் புத்தகங்களுக்கு இவற்றை உபயோகியுங்கள்... கூடவே பளபள பக்கங்கள் என்றும் தொடரட்டும்... வண்ண கதைகளுக்கு மட்டும்.
கலர்களின் என்ன தான் ஒரு ரம்மியம் இருந்தாலும், அந்த மார்டின் கருபபு வெள்ளை பக்கத்தில் இருக்கும் ஈர்ப்பு... கருப்பு வெள்ளை காமிக்ஸ் கதைகளுக்கு ஒரு தனி மார்கெட் எப்போதும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஜுலை இதழ்களுக்கு 31 ந்தேதி வரை காத்திருப்பது சற்றே அதிகம் இல்லையா ? ஏற்கனவே ஜுன் மாத இதழ்கள் முன்பே வெளிவந்துவிட்டபடியால், கிட்டதட்ட 2 மாதத்திற்கு புத்தகங்கள் இல்லாமல் இருப்பது போல ஒரு எண்ணம் தோன்றிவிட கூடும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் LMS வெளிவருவதால், ஜுலை மத்தியில் புத்தங்களை பார்சல் பண்ணிணால் ஷேமம். கொஞ்சம் பார்த்து போட்டுவிடுங்க :P
Dear Rafiq.
Delete// July 31st...! 1+1+1+1 //
Seems typo error, that should be June 30th or July 1st ... other wise we will get 4 books on 31st July and LMS on 02nd Aug :)
Tirupur Blueberry (A) NAgarajan
Rafiq Raja : ஜூன் 30 என்று டைப் அடிப்பதற்குப் பதிலாய் ஜூலை என்று பதிவிட்டு விட்டேன் !! "கா.கை.கூ." + "பூ.பூ.ப." + "ஆ.அட." + "கா.க " நான்குமே ஜூலை முதல் தேதிக்கு உங்களிடம் இருக்கும் !
Deleteவிஜயன் சார், சிறு சந்தேகம்:- ஜூன் 30 அன்று வரும் புத்தகம் "கா.கை.கூ." அல்லது விரியனின் விரோதியா?
Deleteவி வி
DeleteThx Steel!
Deleteமிஸ்டர் மரமண்டை !
ReplyDeleteLMS நோக்கி விரையும் உங்கள் எண்ண
புரவியை சற்றே வழி மறிப்பதற்கு
மன்னிக்கவும் !!
8 NBS இதழ்கள் வைத்து இருப்பது பற்றி
ஜூன் 20 17.13 பதிவில் கேட்டு இருந்தீர்கள் !
பழைய பதிவில் எழுதபட்டு இருந்தது
எனக்கு நினைவில் இருந்தது .
ஆனால் எழுதியவர் உண்மையாகவே
அப்போது நினைவில் இல்லை !
நீங்கள் கேட்டதால் மட்டுமே பழைய
பதிவுகளை ஆராய்ந்து பார்த்தேன் !
ஆசிரியர் பதிவு தலைப்பு
முன்னோட்டங்களின் முன்னோடி
நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற
தலைப்பின் கீழ் ஏப்ரல் 2 20.58 நேர பதிவிட்டு
இருந்த அந்த இனிய நண்பர் பேரை பார்த்து
ஆச்சரிய கடலில் மூழ்கினேன் !
வஞ்சிர மீன் வரும் என நான் வேண்டுகோள்
வலை வைத்து இருந்தால் அதில்
வல்லிய (காமிக்ஸ் ) திமிங்கிலம் வந்து
இருப்பின் என் செய்வேன் ?
"அன்புடன் ......
.
selvam abirami :
Deleteஹா ஹா நன்றாக எழுதுகிறீர்கள். அதே நேரம் வஞ்சிர மீன் வருவலையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அதன் ஈடு இணையற்ற சுவைக்கு எந்த மீன் வகையும் ஈடாகாது என்பதே உண்மை. உள்ளங்கை அகலத்தில் மிக மெலிதான கனத்தில் ஸ்லைஸ் செய்யப்பட வஞ்சிர மீனை, அதன் மேலே தடவிய மசாலாவின் நிறம் லேசான கருநிறமாக மாறும் வரும் வரை, தோசை தவாவில் போட்டு வறுத்து எடுத்து சூடாக சுவைத்தால்.. அடடா.. அடடா.. அதன் சுவைக்கு ஈடேயில்லை நண்பர்களே.. உங்களின் வயது 30+ ஆக இருந்தால், குறைந்தப் பட்சம் 5 மீன் ஸ்லைஸ்களை நீங்கள் நிச்சயம் எதிர்பார்ப்பீர்கள் என்பது உறுதி. குழம்பை விட வறுத்து சாப்பிடும் போது தான் நாம் கொடுக்கும் விலை நமக்கு ஜீரணமாகும் :)
ஆனால் சந்தானம் ஏதோ ஒரு படத்தில் கூறியபடி, இப்போதெல்லாம் வஞ்சிர மீன் வாங்க வேண்டுமென்றால் பேங்க் லோன் போட்டுத் தான் வாங்க முடிகிறது. எது எதற்கோ லோன் போடுகிறோம், இதற்கும் தான் போட்டு வாங்கிச் சாப்பிடுவோமே.. என்ன நாஞ் சொல்றது...?
தொடர்கிறது..
//8 NBS இதழ்கள் வைத்து இருப்பது பற்றி ஜூன் 20 17.13 பதிவில் கேட்டு இருந்தீர்கள்//
Deleteஎனக்கும் அன்று சரியாக நினைவில்லை என்பதால் மட்டுமே அப்படி கேட்டிருந்தேன். அதன் பிறகு சந்தேகத்தின் பெயரில் நானும் பழைய பதிவுகளை குத்து மதிப்பாக ஆராய்ந்து, என்னை நானே கண்டு பிடித்து விட்டேன் :)
நான் 8 copies NBS வாங்கியதன் முதற் காரணமே, ராமருக்கு உதவிய சிறு அணில் போல் NBS முன்பதிவுக்கு ஒரு சிறு ஊக்கமாக இருக்கும் என்ற எண்ணம் தான். ஆனால் வாங்கியப்பின் அவைகளை பதுக்கி வைக்கும் எண்ணமே ஆனந்த தாண்டவம் ஆடுகிறது :)
எட்டில் மூன்றை நண்பர்களுக்கு பரிசாக சென்ற வருடமே கொடுத்து விட்டேன். அப்படியே நான் யாருக்காவது தற்போது கொடுக்க நினைத்தாலும் அது இயலாத காரியம் அல்லவா? நான் கும்மிருட்டான் பட்டியில் இருந்து வந்தவன் தான் என்றாலும், என் பெயருக்கேற்ப வாழ நினைத்து, அமேசான் காடுகளில் மட்டுமே காணப்படும் எர்வாமேட்டின் போன்ற உயர்ந்த (tall) மரங்களிடையே தற்போது சுகவாசம் செய்து கொண்டிருக்கிறேன். நான் கூற விழைவது தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் :)
NBS = NOBODY sale :)
மன்னிக்கவும். சென்ற வருடமே என்பதை சென்ற மாதம் என்று படிக்கவும். தவறுதலாக எழுதி விட்டேன். போலவே NBS = NOBODY sale என்பதும் வார்த்தை விளையாட்டாக எழுதியிருக்கிறேன். உள்நோக்கம் ஏதுமில்லை என்பதையும் இங்கே விளக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த முறை வாசகர்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட LMS புத்தகங்கள் வாங்குவார்கள். அப்ப நீங்க ?!
Deleteமிஸ்டர் மரமண்டை !
DeleteA bit Disappointed Nevertheless
NOT OFFENDED !
Thanks Anyway !
LMS ஏற்கனவே 2 சந்தா !
ஈரோடு திருவிழாவில் குறைந்தது 5 என
ப்ளான் .
எடிட்டர் சார், வலியவந்து தான் எத்தனை காப்பி வாங்குகிறேன், மற்றவர்கள் எத்தனை பிரதி வாங்கக்கூடும் என்பதெல்லாம் ஒரு ஜாலி வாழ்த்துக்கு உதவினாலும், எடிடரான தாங்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் கடந்து செல்றால் நல்ல உதாரணமாக அமையும். மாறாக தாங்கள் வெள்ளந்தியாக அம்மாதிரி வாழ்த்துகளை ஏற்பது, உங்களை அறியாதோருக்கு வியாபார தந்திரமாக தோன்றி அவபெயர் வரலாம். மேலும் லாட்டாக வாங்கி அதிக விலைக்கு விற்போரின் சரணாலயமாக இத்தளம் நமக்கே தெரியாமல் மாறிவிடலாகாது.
Deleteகடை விற்பனை முயற்சிகள் குறித்த தங்களின் இப்பதிவு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் இவ்வேளையில் ஒரு காமிக்ஸை எத்னை வாசகர் படிக்கிறார்கள் என்ற விவாதமே பெருமையும் நன்மையும் தரும். ஒருவ ரது பீரோவில் எத்தனை புக்குகள் பூட்டப்பட்டன என்பதுபோன்ற விசயங்கள் நேர்மரையாக இராது.
நட்புடன்
M Bala
a71ed3b0-f05d-11e3-b4d3-000bcdcb8a73 :
Deleteடியர் நட்புடன் M.பாலா,
இதுக்கெல்லாமா குத்தம் சொல்லுவாய்ங்க ;) என்னவோ போங்க சார்.. உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல :)
//லாட்டாக வாங்கி அதிக விலைக்கு விற்போரின் சரணாலயமாக இத்தளம் நமக்கே தெரியாமல் மாறிவிடலாகாது//
அதனால் தான் முன்பே இங்கு கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் முன்பதிவு செய்து விட்டால் எவராலும் இன்னொருவருக்கு அதிக விலையில் விற்க முடியாது அல்லவா? இன்னும் 500 சூப்பர் 6 சந்தா கூட தாண்டா விட்டால் வேறு என்ன தான் செய்ய முடியும்? தான் பிரிண்ட் செய்யும் புத்தகங்களை ஆசிரியர், விற்பனையாகாமல் தன் கொடவுனில் பூட்டி வைக்காதவரை எதுவுமே தப்பில்லை நண்பரே.. அடுத்த திட்டமிடலுக்கும் முதலீடு என்பது வேண்டும் அல்லவா?
M Bala : நண்பரே, கோப்பையில் ததும்பும் நீரை நான் பார்த்தால் - காலியான மீதப் பகுதியினைப் பார்க்க நிச்சயமாய் யாரேனும் இருப்பர் என்பது நான் அறியாததல்ல !
Delete'அவர் என்ன நினைப்பார் ? இவர் எப்படி எடுத்துக் கொள்வார் ? ' என்ற ஒவ்வொரு முறையும் ஒரு அலசலோடு நான் புறப்படும் பட்சத்தில் - நான் என்ன நினைக்கிறேன் ? என்பதையே மறந்து விடும் நிலையாகிப் போகும் ! தவிர, எல்லா ஆர்வங்களின் பின்னணியிலும் ஒரு வியாபார நோக்கமிருக்கத் தான் வேண்டுமா - என்ன ?
எடிடர் சார், தங்களின் நேர்மரை நிலைப்பாடு புரியாமலில்லை. பல வாசகர்கள் ஒன்றுக்குமேல் வாங்கக்கூடியவர்களாக இருந்தாலும் அதனை அவசியமில்லாது இத்தளத்தில் திரும்ப திரும்ப தெரிவிப்பதில்லை. ஒருவரை தவிர.
Deleteமரமண்டையாரை வியாபாரியென நான் சித்தரிக்கவில்லை. ஆசை வார்த்தைகள் அச்சமுறுத்துகின்றன. தனி பிளாகில் மன குமைச்சலோடு தங்களுக்கு எதிரான கருத்துகளை வைத்தவர் மரமண்டை. சமீபம் வரை பலரை திசை திருப்ப முயன்றவர், பலர் இவருக்கு பயப்படுகிறார்கள். இருந்தும் தாங்கள் இவையெல்லாம் தெரியாது என்பதுபோல செயல்படுவதை பார்த்தால் தங்கள்மேல் குழப்பமே ஏற்படுகிறது.
என்மூலமாக சர்ச்சை வேண்டாம், மனதில் இருந்ததை நான் சொல்லிவிட்டேன், மற்றுவர்கள் தயங்கி நிற்கிரார்கள், அவ்வளவே.
பாலா நீங்கள் கூறியது 100க்கு 100 உண்மை. நல்ல பிள்ளைபோல் நடித்து இத்தளத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கும் செயலை மரமண்டை தெள்ளத் தெளிவாக செய்து பசுந்தோல் போர்த்திய புலியாக இத்தளத்தில் உலாவி வருகிறார். இங்கே பலர் தயங்கி நிற்பதற்கு காரணம் மரமண்டையிடம் விவாதம் செய்வதும், நாம் சாக்கடையில் குதிப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணத்தில்தான். மில்லினீயம் ஸ்பெசலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், வாசகர் வருகை சம்பந்தமாக ஒரு தவறான வழிமுறையை கூறி, மில்லினியம் ஸ்பெசல் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்தான் இந்த மரமண்டை. இங்கே கமெண்ட் இடும் அனைவரையும் போலி ஐடி, அவன்தானே நீ என்று கூறும் இவர், தன் முகத்தை மறைத்து கொண்டு வருவதை மறந்துவிடுகிறார்.
Deleteதனது பிளாக்கில் ஆசிரியருக்கு எதிரான கருத்துகளை வைப்பது, இந்த தளத்தில் நவீன வள்ளுவன் என்ற பெயரில் ஆசிரியருக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, பின்னர் மரமண்டை என்ற பெயரில் வந்து அதை கண்டிப்பது போன்று நடிப்பது என இரட்டை வேடம் போட்டு கொண்டு அலைகிறார். இவர் ஆசிரியருக்கு ஆதரவாக எழுதும் கமெண்டில் நாடகத்தனம் அப்பட்டமாக தெரிகிறது.
இந்த தளத்தில் இரண்டு நண்பர்களுக்குள் நடந்த கருத்து மோதலில் தனது பிளாக்கில் ஒருவருக்கு ஆதரவாக எழுதிவிட்டு, இங்கே மற்றொருவருக்கு ஆதரவாக எழுதியது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
LMS ன் மிரட்டலான ட்ரைலர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மீது மிகப்பெரிய ஆர்வத்தை உண்டுபன்னுகிறது! அதிலும் மார்டின் கதை டீஸர் மிரட்டல். அதற்காக தாங்கள் தங்கள் டீமுடன் சேர்ந்து உழைக்கும் கடிண உழைப்பு ஒவ்வொரு பதிவிலும் கண்கூடாக தெறிகிறது. NBS இதழின் குறைகள் LMS ல் துலியும் வராமல் இருக்க கதைத் தேர்விலிருந்து காகிதத் தரம் வரை தங்களின் மெனக்கெடல்களுக்கு ஒரு சல்யூட். LMS பிரமாண்ட வெற்றி பெறுவது நிச்சயம்!
ReplyDelete//மார்டின் கதை டீஸர் மிரட்டல்.///
Deleteஆமா ஆமா ஆமா
P.Karthikeyan & மதியில்லா மந்திரி : பாம்புன்னா சூப்பர் ஸ்டாரே டர்ராகும் போது மார்ட்டினும், நாமும் என்ன விதிவிலக்கா ?
Deleteவிஜயன் சார், "சலோர்" என்று உபயோகிப்பது சரியா இல்லை "சலேர்" என்பது சரியா என ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.
ReplyDeleteநண்பர்களே ..............
ReplyDeleteநெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.........
கடந்த இரண்டு வருடங்களில் வந்த எந்த காமிக்ஸை அதிக முறை படித்தீர்கள் ........?
வண்ணமா இல்லை கருப்பு வெள்ளயா........?
எனது தேர்வு
Delete1..டேஞ்சர் டயபாலிக்
2.டெக்ஸ்
3.பிரின்ஸ்
லார்கோ, ஷெல்டன், இரத்தபடலம் ...
Deleteஎமனின் திசை மேற்கு ...ஒரு சிப்பாயின் சுவடுகளில் ....அரக்கன் ஆர்டினி ....டயபாளிக்
Delete2. காலன் காலால் மிதிக்கும் போது உங்கள் கடைசி விருப்பம்......?
ReplyDeleteஎனது ஆசை
Deleteரத்தபடலம் முழுவதும் ஒருமுறை....!
மறுமுறை வண்ணத்தில் !
Deleteஎனது ஆசை
Deleteரத்தபடலம் முழுவதும் மறுமுறை வண்ணத்தில் !!
@ FRIENDS : எப்படிலாம் யோசிக்கிறாங்க !! Phew !
Deleteகாலன் கால் கடுக்க நின்னுட்டு நேரா சிவகாசி போய்டுவாரு ...................
Delete''தம்பி விஜயா........... சீக்கிரம் ரத்தபடலம் வண்ணத்தில் போடு ......கால் நோவுது......முடியல .........."
நண்பர்களே இந்த ஜென்மத்தில் நமக்கு சாவு இல்லை .................
மரணமிலா பெருவாழ்வு வாழ.............. படிப்பீர் ''ரத்த படலம் வண்ணத்தில்''
நண்பர்களே வெகு நாட்களுக்கு முன்பு , அதாவது எத்தனை நாட்கள் , எத்தனை யுகங்கள் காத்திருந்தேன் என்று தெரியாது. சாவதற்குள் இரத்தபடலம் முழுவதும் படித்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் . அதனால் முழு பாகமும் கிடைத்தது ! அது வரை நான் சாகவில்லை . இப்போது புதிதாய் இரத்த படலம் வருவதால் அது முடியும் வரை உயிர் வாழ்வதில் பிரச்சினை ஏதும் இருக்கபோவதில்லை ! ஆனால் பழைய தொகுப்பு வண்ணத்தில் வந்தால் உயிர் வாழும் பொது நிறைவாய் உணர்வேன் . யாராவது விழ்யாட்டுக்கு சொல்வார்கள் அடுத்த நிமிடம் உனக்கு உறுதி இல்லை என்று....! ஆஅனால் இரத்த படலம் முடியும் வரை உறுதியாய் எனக்கு மரணம் இல்லை என தெரிகிறது ! எனக்கு கேன்சர் என்பதால் வண்ணத்தில் வெளி விட்டால் வாழும் வரை ரசித்து சந்தோஷ படுவேன் !
Deleteஎன் ராசியை சொன்னேன் என்பதை அடக்க' த்துடன் தெரிவித்து கொள்கிறேன் !
என்னாது தொண்டையில் TRANSERA .........?
Deleteகாமிக் ஆசான் சீக்கிரம் கவனிங்க .........
ஒரு சந்ததாரரும் அவரது கடைசி ஆசையும் ..........
யோவ் ஸ்டீல் கிளா,
Deleteபக்குனு ஆயிப்போச்சு ஒரு செகண்ட்! எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு ஓய்!! ஆனாலும் உம்ம காமிக்ஸ் ஆர்வம் அளவு கடந்தது! :-)))
ஆதி , தொடரும் இரத்த படலத்திற்கு அளவே இல்லையே !
Delete3.ஈரோடு புத்தக விழாவிற்கு ஸ்லோகன்
ReplyDeleteலயன் திகில் என்றால் உதடுகள் ஒட்டாது..........
முத்து என்றால் உதடுகள் ஓட்டும் ............
ஹி ஹி கருப்பு வெள்ளை ரீப்ரின்ட் ப்ளீஸ்
கலர் என்றால் ஒட்டாது
Deleteகருப்பு வெள்ளை என்றால் உதடுகள் ஓட்டும்......
ஹி ஹி கருப்பு வெள்ளை ரீப்ரின்ட் ப்ளீஸ்
சிகப்பு...நீலம்....மஞ்சள் ....பிரவுன்....எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது மந்திரியாரே .....கலர் என்றாலே நானே ஒட்டி விடுவேன் .....ஹோலி கலர்களை சொன்னேன் !
Deleteலயன் காமிக்ஸ்....திகில் காமிக்ஸ் ..... என்று சொல்லுங்கள்.....
Deleteandavaa...july puthagam intha maatham 30 il vanthu vidum.LMS puthgam august muthal vaaram vanthu vidum.
ReplyDeleteaaval thaanga mudiya villai aandavaa...thayavu koornthu intha varudam "JULY" maathathi neeki vidungal.
aandavanukay punniyam vanthu serum..
திரு பரணீதரன் !
Deleteமனிதர்களே இதை செய்துள்ளனர் !
லீப் வருட முறை கையாளாத
காரணத்தால் வந்த குளறுபடிகளை
போக்க ஜூலியஸ் சீசர் ஒரு
மாதம் தன்னை நீக்கியுள்ளார் !
கிறிஸ்துமஸ் பின் வரும் ஈஸ்டர்
ரொம்ப நாள் தள்ளி போகாமல்
இருக்க முன்னொரு சமயம் போப்பாண்டவர் ஒருவர் 37 நாட்கள்
நீக்கியுள்ளார் !
அதாவது காலண்டரே ஜம்ப் செய்தது !
அப்படி பட்ட வல்லமை உள்ளவர்கள்
இப்போது இருந்தால் ............
என் பக்கத்து வீடுக்காரர் பேர் ''ஜம்ப் லிங்கம்''...........அவரை வர சொல்லவா
Deleteசிங்கத்துடன் ஒரு முன் மாலை பொழுது !!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeletefriends ,சென்ற மாதம் சில personal work காரணமாக என் நண்பரோடு மதுரைக்கு சென்றிருந்தேன் !அப்படியே சிவகாசிக்கும் செல்லலாம் என்று மனதில் சின்ன ஆசை !எப்படியும் விஜயன் இருக்க மாட்டார் , லயன் ஆபீஸ் க் காவது ஒரு விசிட் அடித்தது போல் இருக்கட்டும் என்ற எண்ணத்தில் சிவகாசி சென்றோம் !
விஜயன் சாருடனான என் பரீட்சியம் letter மூலமாக (பரணி ஜாக்கிரதை ),2000 லேயே துவங்கிவிட்டது என் நண்பர் வசமிருந்த சில ஆயிரகணக்கான 1rs முத்து வை (ஒவொரு புத்தகமும் min 10 copy வைத்திருந்தார் ),சென்னையிலிருந்து வந்த சில காமிக்ஸ் நண்பர்கள் ,சாமர்த்தியமாக ,சில பல பிரெஞ்சு ப்ளுபெர்ரி ஒரிஜினலை கொடுத்து விட்டு ,ஆட்டையை போட்டு விட்டார்கள் !புத்தகத்தை தன் "விருப்பத்தின் பேரிலியே "கொடுத்த நண்பர் அடுத்த நாளே காய்ச்சலில் விழுந்து விட்டார் !!அந்த வாரத்தில் என்னை சந்தித்து அழுது விட்டார் !அந்த சந்தர்பத்தில் விஜயனுக்கு ,இப்படி காமிக்ஸ் விஷயத்தில் ஏமாற்றுகிறார்களே என்று "என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் (மனுஷிய புத்திரனுக்கு முன்னோடி :) இது நிற்க !!!
சிவகாசி லயன் ஆபீசை அடைந்தபோது மதியம் 2.30,எப்படியும் விஜயன் சார் இருக்கமாட்டார் என்று நினைத்தவாறே ,உள்ளே நுழைந்தால் ,இது நாள் வரை சிலரின் ப்ளாக் ,மற்றும் பத்திரிகையில் பார்த்த கம்பீரமான உருவம் (பழைய சினிமா நடிகர் -ப்ரேம் ,குரோதம் என்ற படத்தில் கூட நடித்து இருப்பாரே அவரை நினைவுபடுத்தும் உருவம் ),பயங்கர சிகப்பு ,இது நாள் வரை நானும் சிகப்பு என்ற என் கர்வம் அழிந்தது :)
டாக்டர் சுந்தர், சேலம்:
Deleteசார்,
என்னுடைய படு பயங்கரமான கண்டனங்கள்.
//பத்திரிகையில் பார்த்த கம்பீரமான உருவம் (பழைய சினிமா நடிகர் -ப்ரேம் ,குரோதம் என்ற படத்தில் கூட நடித்து இருப்பாரே அவரை நினைவுபடுத்தும் உருவம்//
80-களின் கமல் ஹாசன் போல இருப்பவரை க்ரோதம் புகழ் ப்ரேம் என்று எப்படி சொல்லலாம்?
(இத்தனைக்கும் நடிகர் ப்ரேம் அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் சந்திக்கும் நபர் நான், எனக்கே கோபம் வருகிறது).
உடனடியாக உங்களின் செயலை கண்டித்து நான் வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்டத்தை துவக்குகிறேன். :)
//என் நண்பர் வசமிருந்த சில ஆயிரகணக்கான 1rs முத்து வை (ஒவொரு புத்தகமும் min 10 copy வைத்திருந்தார்) சென்னையிலிருந்து வந்த சில காமிக்ஸ் நண்பர்கள் ,சாமர்த்தியமாக ,சில பல பிரெஞ்சு ப்ளுபெர்ரி ஒரிஜினலை கொடுத்து விட்டு, ஆட்டையை போட்டு விட்டார்கள்//
Deleteஎனக்கு மயக்கமே வருகிறது. திருவிளையாடல் தருமி போன்றே வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம் அந்த சென்னை நண்பர்கள் யாராக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது ;)
அந்த நண்பரை ஈரோட்டில் காண முடியுமா !
Deleteபிரேம் +1
Deleteஸ்டீல்,
Delete//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்23 June 2014 21:13:00 GMT+5:30
அந்த நண்பரை ஈரோட்டில் காண முடியுமா !//
அவர் அரசாங்க ஊழியர் என்பதால், விடுமுறை கிடைப்பது குதிரை கொம்புதான். விசாரித்து சொல்கிறேனே?
அதே சமயம்,
ப்ரேம்’க்கு +1 போட்ட உங்களை என்ன செய்வது? அதை உடனடியாக “கமல் ஹாசன்” +1 என்று மாற்றுங்கள்.
விஸ்வா ஆசிரியரின் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது அதுவே . ஆசிரியரை நேரில் அடிக்கடி சந்தித்த நீங்கள் சொவதும் சரியாக இருக்க கூடும் . ஆகவே ஆசிரியர் புகை படத்திற்கு பிரேம் போட வேண்டும் அல்லவா ! அதற்க்கு +1/2 ! நேரில் பார்க்கும் போது கமலஹாசன் போல தெரிவதால் அதற்க்கு ஒரு +1/2 !
DeleteKing Viswa : நேற்றிரவு முதலாய் ஒரு லோட் உருட்டுக்கட்டைகளோடு கமல் நற்பணிமன்றத்தினர் உங்களை வலை போட்டுத் தேடுவதாய் வதந்தி ! எதற்கும் கன்னத்தில் மருவோடு கொஞ்ச நாளைக்காவது நடமாடுவது நலம் !
Deleteமதியம் லஞ்ச் க்கு கிளம்பியிருந்தவரை ,நாங்கள் வலுகட்டாயமாக ஒரு மணி நேரமாவது மொக்கையை போட்டு இருப்போம் !!!
ReplyDelete-ஏன் லார்கோ வில் இதனை censor ?
-டெக்ஸ் ன் முகம் ஏன் வர வர அவர் சித்தப்பா முகம் போல் உள்ளது ?
போன்று பலரும் அடித்து துவைத்த கேள்விகள் !!!!
சளைக்காமல் அவரும் பலரிடம் சொல்லிய பதில்களையே சிறிதும் சலுப்படையாமல் புன்னகையுடன் சொன்னார் !!!
என் உள்ளம் நெகிழ்ந்தது !!உங்களிடம் இருந்து சாதாரண வாசகர்களான எங்களுக்கு இவ்வளவு response எதிர்பார்க்கவில்லை
மேலும் உங்கள் அலுவகத்தில் உள்ள ஒவொருவரும் காட்டிய அன்பு (மைதின் ,சிரித்தே சமாளிக்கும் ஸ்டெல்லா ,ராதாக்ருஷ்ணன் (ph ல் லயன் ஆபீஸ் க்கு இவருடன் பேசும்போது ,நான் நெடுநாட்கள் விஜயன் சாருடன் பேசுவதாகவே நினைத்து இருந்தேன் :),மாற்று திறனாளியான அந்த சிறுவன் (அந்த முகத்தில் இருந்த அந்த உறைந்து போன அந்த சிரிப்பை என்னால் சில நாட்களுக்காவது மறக்க இயலவில்லை ) உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல விஜயன் சார்
விஜயன் தி பாஸ் !!!!!!!!!!!!!!!!!!!
நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ரொம்பவே இரத்தினச் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். நம் வாசகர்களை பற்றியும், ஆசிரியர் விஜயனை பற்றியும் எத்தனை விரிவாக விஷயங்கள் படிக்க வருகிறதோ, அத்தனை சுவாரசியமாக எங்களுக்கு இருக்கிறது. இந்த முறை நீங்கள் ஈரோடு புத்தக விழாவிற்கு வருகிறீர்களா? சென்ற முறை போன்று நீங்களும், உங்கள் தொழில்முறை நண்பரும் அரைமணி நேரத்திற்குள்ளாக கிளம்பி சென்றது போலல்லாமல், இம்முறை ஆசிரியருடன் புகைப்படம் எடுத்து, அதை நண்பர் ஸ்டாலின் அவர்கள் வலைப்பூவில் பதிவேற்றச் சொல்லவும்.
Deleteநண்பர் புத்தகப் ப்ரியன் அவர்களை நான் மிகவும் கேட்டதாக சொல்லவும். நன்றி !
Dr.Sundar,Salem. : மகிழ்வான பதிவுக்கு நன்றிகள் ! அடுத்த தெருவில் இருக்கும் நண்பரைச் சந்திக்கவே சோம்பல் முறிக்கும் இந்நாட்களில், நம்மை சந்திக்கும் பொருட்டு அத்தனை தூரம் பயணிக்கும் வாசகர்களுக்கு சிறிதேனும் நேரம் ஒதுக்குவதை விட வேறு என்ன வேலை இருந்திடப் போகிறது எனக்கு ? நாம் எல்லோருமே காமிக்ஸ் கிறுக்குப் பிடித்ததொரு குடும்பத்தின் அங்கத்தினர் என்பது தான் எப்போதுமே எனது அபிப்ராயம் ! So - "சாதாரண" வாசகர்கள் ; "அசாதாரண நண்பர்கள்" என்ற பாகுபாட்டிற்கெல்லாம் இடம் கிடையாது !
Deleteஅப்புறம் "நான் சிவப்பு மனிதன்" என்ற சர்டிபிகேட் அடியேனின் முன்மண்டையின் glare ஏற்படுத்திய மாயை ! சும்மா டாலடிக்கும்லே !!
///thayavu koornthu intha varudam "JULY" maathathi neeki vidungal///
ReplyDelete+111 LOL
புதுவையில், நெல்லிதோப்பு சிக்னல் பட்டேல் மரவாடீ அருகே இருக்கும் கடையில் நமது காமிக்ஸ் கிடைக்கும்.
ReplyDeleteகாமிரேட்ஸ்,
ReplyDeleteமுன்கூட்டியே திட்டமிட்டு பழகியவன் என்பதால்,,,,,,,,,,,,
ஈரோடு புத்தக திருவிழாவுக்கு இரெயில் டிக்கெட்டுகளை பதிவு செய்துவிட்டேன்.
சனிக்கிழமை காலை (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) ஈரோட்டில் வந்திறங்கி, ஞாயிற்று கிழமை இரவு திரும்ப சென்னை செல்வதாக உத்தேசம்.
(இப்படி திட்டமிடுவதற்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை, கடந்த 2 வருடங்களாக இதைப்போலவே டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்சலும் செய்யாமல், வரமுடியாமல் போனது தனி கதை).
ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக வந்தே தீருவது என்ற தீர்மானம் சற்று முன்பாக எடுக்கப்பட்டதால்,,,, டிக்கெட்டுகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன.
பின்குறிப்பு 1: தமிழகத்தின் முதன்மையான நாளிதழ்களில் ஒன்று இந்த மேக்னம் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீட்டையும், அது சார்ந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒரு தனி நிகழ்வாக வாசகர்களுக்கு படங்களாகவும், பதிவுகளாகவும் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆகவே என்னுடன் ஒரு போட்டோகிஃராபரும், நிருபரும் வருகின்றனர். ஆகவே இந்த காமிக்ஸ் வெளியீட்டை ஒரு மாபெரும் வெற்றி விழாவாக நிகழ்த்துவது காமிக்ரேட்ஸ் ------ உங்கள் கையிலே மட்டும் தான் உள்ளது.
பின்குறிப்பு 2: சக காமிரேட்டுகளுக்கும், இதுவரை என்னை பார்த்தே இராத “நண்பர்களான” புனித சாத்தான், ஆடிட்டர் ராஜா (சார்), ஈரோடு விஜய், தாரமங்களம் பரணிதரன் சார், சேலம் டாக்டர் சுந்தர், சேலம் டெக்ஸ் விஜயராகவன், போன்ற “பெருந்தலைகள்’ அவர்களை சந்திக்கும்போது என்ன பரிசோடு வரவேண்டுமென்பதை இப்போதே சொல்லிவிட்டால் நல்லது.
இந்த லிஸ்ட்டில் பெயர் விட்டுபோனவர்கள் மன்னிக்க.
ஹோ ! உங்களை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் ! ஈரோட்டில் சந்திப்போம் சார் !
Delete//ஹோ ! உங்களை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் ! ஈரோட்டில் சந்திப்போம் சார் !//
Delete+1
King Viswa :
Delete//தமிழகத்தின் முதன்மையான நாளிதழ்களில் ஒன்று இந்த மேக்னம் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீட்டையும், அது சார்ந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒரு தனி நிகழ்வாக வாசகர்களுக்கு படங்களாகவும், பதிவுகளாகவும் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்//
ஆஹா.. நினைக்கும் போதே இனிக்கிறது. காமிக்ஸ் களப்பணியில் தாங்கள் ஆற்றிவரும் உழைப்புக்கும், தங்களின் காமிக்ஸ் ஆர்வத்தை, காமிக்ஸ் வளர்ச்சியாக மாற்றி வரும் தங்களின் திறமைக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே ! ஈரோடு புத்தக விழா பற்றிய மிகவும் விரிவான, புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளை, தங்கள் வலைப்பூவில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
@ விஷ்வா
Deleteஉங்கள் ஒருபக்க வாண்டுமாமா கட்டுரை நன்று. வாண்டுமாமா சரிவர அங்கீகரிக்கப்படவில்லை
என்ற உங்கள் ஆதங்கம் மிக நியாயமானது.எப்படிப்பட்ட ஆளுமை அவர்! ... எல்லாவற்றையும்விட
உங்கள் பளா!பளா! புகைப்படம் மிகவும் அருமை
ஸ்டீல்,
Deleteஉங்களை சந்தித்தபோது ஒரு பரிசுடனே சந்தித்ததாக நினைவு. ஒரு முறை நினைவுகளை சரிபார்க்கவும் :)
@விஸ்வா,
Deleteபெரிய தலைகள்னா எப்படி பெரிய அளவில் மண்டை இருப்பவர்களா? அப்படின்னா நீர்தான் இருப்பதிலேயே பெரிய தலை! ஹிஹி!!
என்னால் அலுவல் காரணமாக முன்னரே முடிவு செய்து டிக்கெட் எடுக்கமுடியாது. ஆனால், இம்முறை ஈரோடு வர திட்டமிட்டுள்ளேன். வெளியூர் பயணம் ஏதும் அச்சமயத்தில் இல்லையெனில் நிச்சயம் ஈரோடு வருவேன். ஈரோடு நண்பர்கள் தயாராக இருக்கவும். லெமனேடு தந்து ஏமாற்றிவிடமுடியாது. பியரும், வறுத்த கறியும் தயாராக இருக்கட்டும்! :-)))))
நான்கு பேருக்கு தந்துள்ளீர்கள் விஸ்வா !
Deleteசந்தோஷமாய் உள்ளது:-)
ReplyDelete................
Deleteகிங் விஸ்வா சார் அவர்களை சந்திக்க ஈரோட்டில் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...காமிக்ஸ் வெளிச்சத்திற்கு உங்கள் உழைப்பு மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று .நன்றி சார் .
ReplyDeleteபின் குறிப்பு 1 : ஈரோட்டில் நீங்கள் என்னை பார்த்தவுடன் பரணி சார் என்பதை நிறுத்தி விட்டு தம்பி பரணி என்று அழைக்க வில்லை என்றால் எனது பெ யரை மாற்றிகொள்கிறேன் சார் .
பின்குறிப்பு 2 ; ஆசிரியரை கமல் ..,பிரேம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் .சிறு வயதில் அவர் கமல் ..இப்பொழுது பிரேம்....நடையில் சூப்பர் ஸ்டார் ...திரும்பி பார்த்தால் விஜய்....முறைத்து பார்த்தால் அஜித் ...என அனைத்தும் கலந்த கலவை அவர் .
*****************************************
செல்வம் அபிராமி அவர்களே மாதத்தை நீக்க இப்பொழுது ஒருவர் உண்டு ..அவர் நமது ஆசிரியர் தாம் ...... :-)
*************************************************
ஆகா .....அப்ப நம்ம " மரமண்டை " அவர்கள் போன வருடம் ஈரோடு வந்து உள்ளார் .இந்த முறையும் வருவார் .இந்த முறை "மரமண்டையை "கண்டு பிடிக்காமல் மதியம் 2 மணி வரை நான் உண்ண போவதில்லை....
****************************************************
டாக்டர் சுந்தர் அவர்கள் ...மீண்டும் பழைய படி அடிக்கடி இங்கே காண்பதில் மகிழ்ச்சி .இதை இப்பொழுதும் போல எப்பொழுதும் தொடர நண்பர்களின் சார்பாக எனது வேண்டுதல்கள் ....
******************************************************
விஜயன் சார் ..நமது 30 வது ஆண்டு மலரின் "டீசர் " ஒவ்வொரு வாரமும் பட்டையை கிளப்பவது மட்டுமல்ல இந்த "ஜூலை " மாதத்தை வெறுக்கவும் வைக்கிறது .
நண்பர் புனித சாத்தான் சொன்னது போல அட்டைப்படத்தை புத்தகம் வெளிவரும் வரை இங்கே மறைத்தே வைக்கவும்..
********************************************************
ராஜரிசி (கிங் -ராஜா , விஷ்வ-விஷ்வாமித்ர-ரிசி) தாங்கள் ஈரோடு வர இருப்பது நல்ல செய்தி. சென்னையில் ஒரு முறை தங்களை பார்த்து இருந்தாலும் சரியாக பேச வில்லை. இம்முறை பட்டைய கிளப்பிடவோம். அப்புறம் நீங்கள் குறிப்பிட்டு மாதிரி நான்லாம் பெருந்தலை அல்ல சார். ஒரு சிறும் புள்ளி. ஒரு 70புத்தகங்கள் என்னிடம் இருக்கும் சார். பலர் 700க்கு மேலே வைத்து இருப்பார்கள் , நீங்கள் குறிப்பிட்ட லிஸ்ட்ல கூட சிலர் இருக்கலாம் சார். நீங்களே எது கொடுத்தாலும் வாங்கி கொள்வேன் சார். ஆவலுடன் சே.டெ .வி .
ReplyDeleteஐயா,
Deleteகண்டிப்பாக சிந்திப்போம், சந்திப்போம். ஒக்கே?
சேலம் விஜயராகவன்,
ReplyDeleteபச்சப்புள்ள மாதிரி யாரும் காமிக்ஸ் தர்றேனு சொன்னா நம்பிடாதீங்க.. என்னையும் சென்னையில ஒருத்தர் இப்படித்தான் ரொம்பநாளா ஏமாத்திகிட்டு இருக்கார். லாஜிக் என்னன்னா, நீங்களோ, நானோ நம்ப கலெக்ஷனிலிருந்து ஒரு புக்கை யாருக்கும் எடுத்து அவ்வளவு ஈஸியா தந்துடுவோமா என்ன? புரிஞ்சுதா? ஹிஹி!!