Saturday, October 13, 2012

சிங்கிளாய் ஒரு சிங்கம் !


நண்பர்களே,

வணக்கம். "புலி வருது ..புலி வருது.." என்பது பழைய பாணியல்லவா..? So இன்று ஒரு மாறுதலுக்கு "லயன் வருது...லயன் வருது.." என்று சொல்லித் தான் பார்ப்போமே ? இந்தாண்டின் most expected (!!!) இதழான "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"  இன்று உங்களைத் தேடி கூரியரில் ; பதிவுத் தபாலில் புறப்பட்டிருப்பதால் - நம் புதுமொழி பொருத்தமான மொழியாகிடும் வேளை இது ! எங்களது அச்சுப் பணிகள் சென்ற வாரத்தின் இறுதியினிலே முடிவுற்ற போதிலும்,சிவகாசியில் நிலவி வரும் 17 மணி நேர மின்வெட்டின் புண்ணியத்தில் பைண்டிங் வேலைகள் முழுவதுமாய்த் தேங்கிப் போய் விட்டது ! நான் வேறு சும்மா இருக்காமல், இதழ்களை வெள்ளிக்கிழமை அனுப்பிடலாமென இங்கே காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள, எங்களது பைண்டிங் கான்ட்ராக்டர் தலையில் மொத்தமாய் நமது டீம் ஏறி அமராத குறை தான் !! பாவப்பட்ட மனுஷன் நிறையவே பிரயத்தனப்பட்டு இன்று சந்தாக்களின் 80 % தேவைக்கான இதழ்களைத் தயார் செய்து தந்து விட்டார் !பைண்டிங் மிஷினில் பெவிகால் போன்ற பசையை கட்டியாகப் போட்டு, அதில் உள்ள ஹீட்டரை ஆன் பண்ணி ஒரு 45 நிமிடங்களாவது வெப்பம் ஏறினால் தான் பசை சரியான பதத்தை அடையும். ஆனால் இங்கேயோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ! முக்கால் மணி நேரம் பசை சூடாகி, இதழ்களை மிஷின் ஓட்ட ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் திடுமென நின்று போவதோடு மட்டுமல்லாது அந்தப் பசை முழுவதும் வேஸ்ட்டாகி விடும் ! அந்த நஷ்டத்தை மட்டுமல்லாது, நம் ஆட்களின் நச்சரிப்பையும் சகித்துக் கொண்டு முடிந்தளவிற்கு உதவியுள்ள அவருக்கு நம் நன்றிகள் ! நாளை காலை மிச்சம் மீதமுள்ள சந்தாப் பிரதிகளும் அனுப்பிடப்படும்..! So நமது சூப்பர் நண்பர்களை நீங்கள் சந்திக்கும் சமயம் வெகு அருகாமையில் ! 

253 comments:

 1. நாளின் துவக்கத்தில் ஒரு நற்செய்தி !

  ReplyDelete
 2. பால்யகால நண்பரைப் பிரியும் சோகம் எனக்குள்ளும். "We will miss you for sure !" ; சத்தியமான வார்த்தைகள் சார். ஆனாலும் என்ன, காமிக்ஸ் க்ளாஸிக்கில்தான் இவரைச் சந்திப்போமே!

  மின்வெட்டு தரும் சிரமங்களை நாங்கள் இங்கே காலாகாலமாய் அனுபவித்திருக்கிறோம். ஒரு காலத்தில் மின்சார வசதி இருந்து, அதன் பின்னர் பல தசாப்தங்களாக மின்சாரம் எட்டிக்கூடப் பார்க்காத கிராமங்கள், நகரங்கள் எங்கள் நாட்டில் உண்டு! உங்கள் தேசத்துச் செய்திகளைப் படிக்கும்போது, ஆகக் குறைந்தது 5, 6 மாதங்களுக்காவது இந்த மின்வெட்டு நீடிக்கும் என்று தெரிகிறது. நீங்களும், உங்கள் குழுவினரும் எதிர்கொண்டிருப்பது சாதாரண சவால் இல்லை என்பதும் புரிகிறது. தடைகள் கடந்துவர வாழ்த்துகிறோம்.

  இ-பேயில் பார்ப்பதைவிடவும் இங்கே நீங்கள் தந்திருக்கும் அட்டை தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. ஸ்பைடரின் மூக்கு, முதலில் மிளகாய் மாதிரி இருந்தது; இப்போது பரவாயில்லை :)

  ReplyDelete
 3. nanbar SS ku book kidaithatha innum valai yettrapadavillaye

  ReplyDelete
 4. thanks in advance and waiting for the book

  ReplyDelete
 5. >> இதழ் உங்கள் கைகளுக்குக் கிட்டியவுடன் / படிக்கத் துவங்கியவுடன் / 'எக் தம்'மில் படித்து முடித்தவுடன் என்று எந்த நிலையிலாவது உங்களின் எண்ணங்களை இங்கே பதிவிடக் கோருகிறேன் ! மிகுந்த hype சூழ வந்துள்ள இந்த இதழும் ;நம் பால்ய சூப்பர் ஸ்டார்களும் மெய்யாக உங்களின் பொழுதுகளை உற்சாகமானதாக ஆக்கினார்களாவென்று அறிய மிகுந்த ஆர்வமாய் இருப்பேன் !

  No chance for comments from me. I am still waiting for wild west special to be shipped. Hope you don't run out of stock before it gets shipped.

  I will probably get this latest issue next year :(

  ReplyDelete
 6. Dear Editor,

  உங்கள் மொத்த டீமுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்! இந்த உற்சாகம் என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.

  அட்டைப்படம் அட்டகாசம்! என்னதான் ஒரிஜினல் அட்டைப்படங்களை பயன்படுத்தினாலும், நம் பாணியிலான இந்தக் கலர்ஃபுல் அட்டையும் கலக்கல்தான்!

  மாயாவின்  பிரிவு மனதை கனமாக்குகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' எதற்கும் விதிவிலக்கல்ல போலிருக்கிறது!

  ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்போடு, வரும் ஆண்டுக்கான புதிய இதழ்களைப் பற்றிய அறிவிப்புகளையும் தாங்கிவருவதால் 'தங்கக் கல்லறை' இன்னும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது! இன்னும் இருவாரங்களிலேயே கிடைக்கவிருப்பது கூடுதல் சந்தோஷம்!

  எங்களது வேண்டுகோளை ஏற்று 'சி.சிறு வயது' ஐ இங்கே அட்வான்சாகப் பதிவிட்டமைக்கு நன்றி!

  2013ன் சந்தா விவரங்களைக் காணவும் ஆர்வமாயுள்ளோம்! அதில் CCக்கான சந்தாவும் அடக்கமா சார்?

  இத்த பவர்கட் யுகத்தில் பல தொழில்கள் முடங்கியபோதும், நம்முடைய இந்தப் பயணம் புது உத்வேகம் பெற்றிருப்பது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

  என் பிரதிக்காக ஆவலுடன்....

  ReplyDelete
 7. Great News, waiting eagerly to meet our stars after a long time :-)

  ReplyDelete

 8. முதலில் அட்டை படத்திற்கு திருஷ்டி சுற்றி போட்டு விடுவோம்..........

  நேற்றே தயாராகி விட்டேன்,எனது நினைவுகளை எல்லாம் தீபாவளிக்கு முந்திய நாளில் பட்டாசுகளை அடுக்கி வைத்து ,எப்போதடா விடியும் என்று வெடிக்க காத்திருப்போமே என நமது நினைவுகளை ஆக்கிரமித்திருக்குமே பட்டாசுக்கட்டுகள் ,அது போலவே ;இப்போதும் கூட ;நமது இந்த அட்டை படம் அசத்துகிறது,வண்ணமயமான அந்த பட்டாசு கட்டின் படங்களை பார்த்து வியந்த ,மகிழ்ந்த நினைவுகள் எனக்குள் வந்து செல்கிறது.............மேலும் நான் இந்த மாதம்தான் தீபாவளி என நினைத்திருந்தேன்,சென்ற மாத தங்களின் பதிவை பார்த்த பின்னரே காலெண்டரை பார்த்து அடுத்த மாதம்தான் தீபாவளி என தெளிந்தேன்! கடந்த நான்கு மாதங்களாக இந்த மாதம்தான் தீபாவளி என மனதில் பதிந்ததாலோ அல்லது இந்த அற்புதமான வெளியீட்டலோ எனக்கு தீபாவளி இந்த மாதமே !*************"டமால்"..."டுமீல்"...க்ரீச்"..."க்ராஷ்" .."டர்ர்ர்ர் "...விரர்ர்ர்ர் " ****************பாருங்களேன் தீபாவளிதானே !சங்கு சக்கரங்களும் ,சீறி செல்லும் ராகெட்டுகளும் தங்களுக்கும் கேட்டிருந்தால் சந்தோசமே !சில முன்னணி நடிகர்களின் போஸ்டர்கள் தெருக்களில் பார்த்திருப்போமே,தலைவா தங்கள் படம் வந்தால்தானே தீபாவளி என ! அது போலவே எனது எண்ணங்களும்...............புத்தகம் இன்று கிடைக்கும் என அதீத நம்பிக்கைகளில்.......மாயாவியின் இந்த அட்டை படம் நண்பர்களின் ப்ளாக் ,தங்களின் பழைய பதிவுகளில் பரிட்சயம் எனினும்,இதில் மீண்டும் பார்க்கும் போது திகட்டவில்லை என்பதும் ஆச்சர்யமே!முதல் இதழ் அட்டை படம் என்பதாலா என தெரியவில்லை! அதி அற்புதம்!மேலும் இந்த கடந்த கால அட்டை படத்திற்காக ஏங்கும் நண்பர்களும் அதிகம் என நினைக்கிறேன்!தாங்கள் மாயாவியை அட்டை படத்தில் காட்டாதது மிகுந்த எதிர் பார்ப்பை என்னுள் கிளப்பியது !புதிதாக வடிவமைத்திருந்தால் கூட எனக்குள் இந்த,இப்போதைய சந்தோசமான உணர்வுகள் போட்டு தாக்கி இருக்குமா என தெரியவில்லை!

  நீண்ட நெடும் நன்றி! நன்றி!! நன்றி!!!

  **********************நிச்சயம் இந்த இதழில் வண்ணத்தை நீங்கள் miss செய்ய மாட்டீர்கள் என்பது எனது யூகம் !******************************************

  கண்டிப்பாக எண்ணமெல்லாம் வண்ணமாயிருக்கும் போது வண்ணம் புத்தகத்தில் இருந்தாலென்ன! இல்லாவிட்டால்தான் என்ன!

  மேலும் இந்த இதழில் தாங்கள் முனைப்பாக நமது நண்பர்களுக்கு புத்தகங்கள் ஒரே நாளில் கிடைக்க அரும்பாடு பட்டிருப்பது மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது,முயற்சி திருவினை ஆக்கும்!

  **************************அந்த நஷ்டத்தை மட்டுமல்லாது, நம் ஆட்களின் நச்சரிப்பையும் சகித்துக் கொண்டு முடிந்தளவிற்கு உதவியுள்ள அவருக்கு நம் நன்றிகள் !*************************************

  இந்த இடத்தில் நாம் அவர்களை மறந்து விட்டால், கண்டிப்பாக நன்றி மறந்தவர்கள் ஆகி விடுவோம்!நன்றியுடன் பாராட்டுகளும் நம்மை சந்தோஷ படுத்த உதவிய அவர்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் !

  கண்டிப்பாக லயன் வருது !லயன் வருது என கூறவே விரும்புகிறேன் .............மாற்றமே என்றும் மாறாதது !ஏமாற்றம் என்றாவது மாறும் போல!இப்போதெல்லாம் தங்களால் ஏமாற்றமே இல்லையே !ஆஹா !

  கதைகளை படித்த பின்னர் புதிய தலை முறை பட்டாசுகளின் ஒலிகளை அவர்களும் கேட்கிறார்களா அல்லது தங்கள் மேல் கோபத்தில் பட்டசுக்களாய் வெடிக்கிரார்களா என அறிய தங்களை போலவே நானும் ஆவலுடன் ! ஆக எப்படி இருப்பினும் தங்களுக்கும் தீபாவளிதான் ,ஆகவே எனது தீபாவளி வாழ்த்துக்கள் ஆசிரியரே !

  இது இவரின் farewell என்று மெய்யாலுமே தோன்றவில்லை எனக்கு !!!

  ReplyDelete
 9. கேப்டன் பிரின்ஸின் பிரிவுக்கு மாற்றாக லார்கோ என்றால்,
  இரும்புக்கையாரின் பிரிவுக்கு மாற்றாக யாரைக் களமிறக்குவதாக உத்தேசம் சார்?

  ReplyDelete
  Replies
  1. vijay Erode: பொறுத்தார் பூமி ஆள்வரோ இல்லியோ, நிச்சயம் புதிதாய் காமிக்ஸ் நாயகர்களை சந்திப்பர் :-)

   Delete
 10. மாயாவிக்கு மட்டும் தான் farewell. அப்படியென்றால் அண்ணன் ஸ்பைடர் மீண்டும் எங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறதே..
  தயவு செய்து உயர்ந்த ரசனை அது இது என்று கூறிக்கொண்டு இந்த பளிச் ரக அட்டைகளை நிறுத்திவிட வேண்டாம். முன்பெல்லாம் படிக்கவில்லை என்றாலும் நமது அட்டைகளை அப்படியே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருப்பேன். ஆனால் தற்போது வரும் இதழ்களில் ஒரிஜினல் அட்டையை அப்படியே பயன்படுத்துகிறோம் என்று கூறி மிகவும் 'டல்' ஆன அட்டைகளையே பார்க்க நேரிடுகிறது. இது அந்த அளவு கண்களை கவருவதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். மற்ற நண்பர்களின் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை !நானும் முதலில் ஒரிஜினல் நன்றாயிருக்குமோ என நினைத்ததுண்டு,ஆனால் ஆளை அடிக்கும் வண்ணமே என்னை அசர அடிக்கிறது ஆகவே நமது ஸ்டைலே வேணும் எனக்கும்!

   Delete
 11. "182 பக்க மாயாவி சாகஸம்" - அவ்வளவு பெரிய மாயாவி கதையா? eagrly waiting...

  ReplyDelete
 12. இதை போல தங்களின் மந்திர எழுத்துகளை தான், நாங்கள் எதிர்பார்கிறோம் .இந்த weekend யை இனிமையாக்கிய தங்கள் குழுவினர்க்கும் , தங்களுக்கும் நன்றிகள் பல .

  ReplyDelete
 13. அட்டைப்படங்கள் பற்றிய நண்பர் SIV மற்றும் ஸ்டீல் க்ளாவின் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  பளிச் ரக அட்டைகள் நமக்கே நமக்கான பாணி என்பதோடு, புத்தகக் கடைகளில் தொங்கவிடப்படும்போது இந்த பளிச் ரக வண்ண அட்டைகளே தூரத்திலிருந்து பார்ப்பவர்களையும் அதிகம் கவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை!

  ஒரிஜினல் அட்டைகள் சில சமங்களில் சற்றே டல்லாக அமைந்துவிடுவதும் உண்மை (உதாரணம் 'என் பெயர் லார்கோ'). ஆனால், WWS க்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

  எனவே, தேவைப்படும்போது (ஒரிஜினல் அட்டைப்படங்கள் டல்லடிக்கும்போது) நம் பிரதான பளிச் ரக அட்டைகளை பயன்படுத்துவதும் நன்மையே பயக்கும்!

  ReplyDelete
 14. அட்டை படத்தை பார்த்து கொண்டிருக்கிறேன், கடந்த ஒரு மணி நேரமாக வண்ணங்களை அற்புதமாக உபயோகித்த நமது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.......மேலும் இந்த இதழின் அட்டை படம் எல்லாவற்றையும் விட பெஸ்ட் எனும் எனது கருத்துக்களும் தங்களுக்கு பரிட்சியமே,இதை கேட்டு கேட்டு தங்களுக்கு போரடித்து/புளித்து போயிருக்கலாம்,வேறு வழிஇல்லை , கேட்டு கொள்ளுங்கள் ,தற்போது வெளி வந்த இந்த வருட இதழ்களின் அட்டை படங்களிலேயே இததான் பெஸ்ட்.தொடர்ந்து அட்டை படங்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வருகின்றன ,சிறிய மீன்களை விழுங்கி வரும் ,தொடர்ந்த பெரிய மீன்கள் ஓவியங்களை பார்த்திருப்பீர்களே அதனை போலவே......வரும் காலங்கள் , இதை விட சிறப்பாக எனும் பொறுப்பு தங்களது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது ...............எனக்கு மிக பெரிய நம்பிக்கை அதிகரித்துள்ளது,தங்கள் மேல் இந்த தங்களது இந்த பதிவிற்கு பின்னர் ..............

  ReplyDelete
  Replies
  1. ---------
   ஸ்டீல் க்ளா . அடுத்த இதழ் டைகரின் தங்கக்கல்லறை... கண்டிப்பாக அந்த அட்டைப்படம் இந்த இதழின் அட்டைப் படத்தை குவாலிட்டியில் முந்துவது உறுதியாகிவிட்டது... அடுத்து நெவர் பிஃபோர் ஸ்பெஷல் அட்டைப்படம் பார்க்க வேண்டும்..
   ---------

   Delete
  2. நண்பரே தங்க கல்லறையை(ஒரே வண்ணம்) விட இந்த அட்டை அற்புதம்!பார்ப்போம் இது போல ஏதாவது retouch செய்திருக்கிறாரா என ! ஆனால் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் அட்டைப்படம் அசத்தும் நம்மை என நினைக்கிறேன் !வரையும் ஓவியர்களிடம் கௌ பாய் ஸ்பெஷல் அட்டை படத்தை கொடுத்து இதை விட சிறப்பாக வரையுமாறு கூற வேண்டும்!வண்ணங்கள் ,ஓவியங்கள் விளையாடியிருக்கும் அந்த புத்தகத்தில்......மேலும் குடும்பமே இதில் முனைப்பாக இருப்பார்கள் என நினைக்கிறேன் தாத்தா,அப்பா பேரன் ,தோழர்களாய் நாம் என மூன்று தலை முறையும் சங்கமிக்கும் 40 ஆண்டு கால குடும்ப மலர் என்றால் சும்மாவா?இந்த படை போதுமா என களமிறங்கும் கதைகலன்றோ அவை !

   Delete
 15. Adieu dear friend இதன் அர்த்தத்தை விளக்க நண்பர் விஸ்வாவை அழைக்கிறேன்......

  ReplyDelete
 16. டியர் எடிட்டர் சார் ,
  சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழை படிக்க ஆவலாக காத்து கொண்டு இருக்கிறேன்.
  எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 17. dear editor,

  'சிங்கத்தின் சிறு வயதில்' படித்தேன். படித்த எனக்கே மண்டைக்குள் ஜிவ்வென்ற உற்சாகப் பீரிடல் எனும்போது, அக்காலகட்டத்தில் அதை அனுபவித்த உங்களுக்கு எப்படியிருந்திருக்கும்!!
  அற்பமாகத் தோன்றிடும் 5 ரூபாய் அக்கால கட்டங்களில் எவ்வளவு பெரிய பயமுறுத்தல்!!
  12000 print run என்பது அக்கால கட்டத்தில் எவ்வளவு சாதாரணமாய் இருந்திருக்கிறது!!!

  திரும்ப வரும்! அந்த வரலாறு மீண்டும் திரும்பும்! அதற்கு எங்களால் இயன்றவரை தோளோடு தோள் சேர்க்கத் தயாராயிருக்கிறோம்.

  ReplyDelete
 18. அட்டை படம் நிச்சயம் என்னை போன்ற பழைய வாசகர்களை கவரும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை. இது லயன் ஸ்டைல். பீகாக் ப்ளூ அட்டையில் வருவது இது தான் முதல் முறை என்று நினைகிறேன்.கலர் காம்பிநேசன் அற்புதம். இன்றைய தலைமுறை வாசகர்களின் எண்ணத்தை ஆறிய ஆவலாக உள்ளது.

  இரும்பு கையாரின் பிரிவு ஏதோ நீண்ட நாள் பழகிய நல்ல நண்பரை பிரிவது போன்ற ஒரு மன அழுத்தத்தை கொடுக்கிறது.BYE BYE FRIEND. :.(....THANKS FOR ENTERTAINING SUCH FOR SUCH A LONG LONG PERIOD.
  WE LOVE YOU SO MUCH!!!

  பல இன்னல்களுக்கு நடுவே இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. சரியான காலத்தில் வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . பின்நாளில் லயன் அடையபோகும் மிகபெரிய வெற்றி சிகரங்களுக்கு இந்த முயற்சிகள் ஒரு STEPPING STONES. WHEN THE GOING GETS TOUGH...THE THOUGH GETS GOING! KEEP ROCKING MR.VIJAYAN!

  புத்தகம் கைக்கு கிடைத்த உடன் ரிவ்யு செய்திடுவோம். மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 19. அற்புதமான பதிவு. நான் ஆறாம் வகுப்பிற்கு செல்லவிருந்த பொது வந்த கோடை மலர் நினைவுகள் இன்னும் பசுமையாய் மனதினில்.

  லயனின் அந்த வளமான circulation நாட்கள் திரும்பிட ஆண்டவனை வேண்டுகிறேன்.

  எடிட்டர் அவர்களே: கடுமையான முயற்சி செய்து உங்கள் டீம் இந்த மாத இதழினை காலத்தோடு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

  எனக்கும் நமது பாணி 'ராமராஜன்' ரகமான பளிச் அட்டைகளே பரவசம் ! Superb art !!

  ReplyDelete
 20. நண்பர்களே வந்துவிட்டது லயன் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல்

  மிக அருமையாக உள்ளது

  மற்ற மேலதிக விவரங்களுக்கு அண்ணன் சௌந்தர் போடும் பதிவை பார்க்கவும் நன்றி :))
  .

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவிகளா! வந்து விட்டதா?இதோ போகிறேன் கொரியர் ஆஃபீசுக்கு .......... சாயங்காலம் வரை காத்திருக்க என்னால் ஆகாது !

   Delete
 21. ன்னுடைய தொலைபேசியில் அழைப்பு லேன்ட் லைன் எண் தெரிந்தது
  நான் : ஹலோ ...
  கொரியர் : பெயர் சொல்லி நீங்களா ?
  நான் : ஆமாம் நீங்கள்
  கொரியர் : சார் உங்களுக்கு பிரகாஷ் பப்ளிஷேர்ஸ் ல் இருந்து கொரியர் வந்துள்ளது
  நான் : ............... ( ஒரு கணம் திகைத்து விட்டேன் )
  கொரியர் : சார் உங்களுடைய முகவரி எங்குள்ளது என்று சொல்லுங்கள்
  நான் : அய்யா அழைத்தமைக்கு மிக்க நன்றி தங்களுடைய அலுவலகத்திலேயே வைத்துவிடுங்கள் நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்
  வாங்கி வந்து பார்த்தால் நமது விஜயன் சார் அவர்களின் புதிய பதிவு
  ஹ்ம்ம்ம் கலக்கல் சார்
  தொடருங்கள் உங்கள் சிங்க நடையை
  காத்திருக்கிறோம் நாங்கள் :))
  .

  ReplyDelete
 22. Congrats to keep up the words! The "LION TEAM" is rocking like thunders!! Good job guys!! Eagerly waiting for my copy............. :-)

  ReplyDelete
 23. ஹூர்ரே! கொரியர் வந்ததாக வீட்டிலிருந்து தகவல் வந்தது! நான் வீடுசேர மாலையாகிவிடுமே!
  நண்பர்களே, மாலைநேரம் எப்போது வருமென்று யாருக்காவது தெரியுமா?

  ReplyDelete
 24. அடப்பாவிகளா.......அதற்குள் கைக்கு வந்துவிட்டதா?

  ReplyDelete
 25. சத்தியமாய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளுக்குக் கூட நான் இவ்வாறு காத்திருந்ததில்லை.

  இரண்டு நாட்கள் முன்பு அனுப்பப் பட்ட காமிக்ஸ் கிளாசிக்ஸ் 'தலைவாங்கிக் குரங்கு' கூட இன்னும் வந்து சேரவில்லை. பரபரப்புடன் இரு புத்தகங்களையும் எதிர்நோக்கும் ...


  ... உங்கள் அன்பன் .. காமிக் லவர்.

  ReplyDelete
 26. இன்று நமது வாசக நண்பர் பெங்களூர் சுப்பிரமணியம் அவர்களை சந்தித்தேன்.கூச்ச சுபாமவுள்ள,lion ,முத்து வாசகர்களால் அதிகம் அறியப்படாத இந்த அன்பு நண்பர் நமது ஆசிரியரின் அதி தீவிர follower என்றால் மிகையாகது .முத்து காமிக்ஸின் 20 வது இதழ் முதல் சேகரித்து வைத்திருக்கும் இவர் ,(அதுவும் அட்டைப்படத்துடன் )ஒவ்வொரு இதழையும் இரண்டாக வாங்கி வைத்துள்ளார்.நிறைய இதழ்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ள இவரிடம் அனைத்து இதழ்களும் பொக்கிஷமாக பாதுகாப்பாக உள்ளன. ,(அதுவும் அட்டைப்படத்துடன் )நமது blog கை என்றும் இவர் பார்த்ததில்லை.வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்த இவர் தலை குனிந்து பார்வை தாழ்த்தி கூச்சத்துடன் பேசியது மிகச்சில வார்த்தைகள்தான்.சிறு வயது முதல் அவர் எந்த கெட்ட பழக்கமுமின்றி வளர நமது காமிக்ஸ்கள் உதவியதாக அவர் சொன்னதை நமது ஆசிரியர் அவர்களை சமர்ப்பிக்கின்றேன்.இவரைப்போல் உள்ள எத்தனையோ முகமறியா அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Ahmed, I met him in the Bangalore comics-con; I remember his face really well. He is the one collected everyone number and invited to his home! He was sharing the same details to us and our editor said, don't keep the book as not-open and read them! Good person! He is in other part of Bangalore when I live in Whitefiled. Let me see if I have any chance to meet him before next year comics con :-)

   Delete
  2. பரணி அவர்களே.......சென்னை புத்தகத்திருவிழவிற்கு கண்டிப்பாக சுப்ரமணியம் அவர்களுடன் தான் வருவேன் .....இன்ஷா அல்லாஹ் ......உங்களிடமும் நிறைய்ய பேச வேண்டி உள்ளது .....

   Delete
 27. இதழ் கைக்கு கிடைத்துவிட்டது. கண்ணை கவரும் அட்டை படம் அருமை.புத்தக கடையில் 100 புத்தங்களுக்கு மத்தியில் நமது புத்தகம் பளிச் என்று கண்ணை கவரும். OBJECTIVE IS ACHIEVED! CONGRATS!
  சமீபத்தில் புதிய பாணியில் ஒரு ப்ரொபசனல் லுக் உடன் அட்டை பார்த்து பழகிய நமக்கு இது ஒரு ரேப்ரசிங் ஓல்ட் ட்ரீட். THANKS TO MR. VIJAYAN.

  ஹாட்லைன் வழக்கம் போல ரிவிட்டிங்.அருமை.வாவ் சொல்ல வைத்தது சந்தா விபரம். வரும் 2013 இல் மாதம் மாதம் தீபாவளி போல் உள்ளது.

  வருகிறது பகுதியில் தங்க கல்லறை ரத்த தடம் விளம்பரத்துடன் மேலும் இரண்டு புதிய தூள் கிளப்பும் டெக்ஸ் மற்றும் மதி இல்ல மந்த்ரி அறிவிப்புகள். டெக்ஸ் கதையின் டைட்டில் சற்று சொதப்பலா?? காமிக்ஸ் கிளசிக்ஸ் பற்றிய இரண்டு புதிய விரைவில் வருகிறது விளம்பரங்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்பைடர் விளம்பரத்தில் ஓவியம் மிகவும் பிக்சலேட் ஆகியுள்ளது. மிக அதிகமாக ஸ்ட்ரெச் செய்ததல் வந்த வினை போலும்
  முன்று கதைகளில் இரும்பு கையார் புத்தகத்தின் பாதிக்கும் மேல் பக்கங்களை ஆக்கிரமித்து உள்ளார். ஓவியங்கள் தரமாக உள்ளன. ஓவொரு இடது பக்கத்தில் மேல் பகுதியில் பிரிண்ட் செய்யபட்டு உள்ள இரும்புக்கை ஒரிஜினல் பதிப்பில் COMIC STRIP பாணியில் பார்ட் பார்ட் ஆகா வந்ததை நினைவு படுத்துகிறது. NOTHING WE CAN DO ABOUT IT! JUST ENJOY!

  ஸ்பைடர் கதை ஓவியங்கள் அட்டகாசம். ஆனால் சில பக்கங்களில் ஓவியங்கள் பிக்சலேட் ஆகி கண்களை மிகவும் உறுத்துகின்றன.I WAS A BIT LET DOWN HERE. எதனால் என்று தெரியவில்லை. ஆனால் கதையில் அதிரடி சரவெடிக்கு பஞ்சம்மில்லை. இதுவும் COMIC STRIP பாணியில் பார்ட் பார்ட் ஆக பப்ளிஷ் ஆன கதை என்பதால் இடது பக்க மேல் பரப்பில் ஒரு ஸ்பைடர் படம் ஒன்று அனைத்து பக்கங்களிலும்.

  ஆர்ச்சி வழக்கமான ஓல்டேன் கோல்டி அட்வென்சர் கதை. இது போன்ற கதையை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.

  பக்கங்களை பலமுறை ஆசை ஆசையாய் பார்த்து கொண்டிருகிறேன்.

  நாளை ஒரு நீண்ட தொலைவு ரயில் பிரயாணம் மேற்கொள்ளவிருப்பதால் வழக்கமான ஆடியோ புத்தகத்தை தூர போட்டுவிட்டு பயணத்தின் தோழனாக இந்த புத்தகம் இருக்க போகிறது.

  கதை பற்றிய ரெவ்யூ படித்து முடித்த பின் ...

  BYE FOR NOW!

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : நீங்கள் குறிப்பிடும் ஸ்பைடரின் அந்த 3 "மொச மொச " பக்கங்கள் ஒரிஜினலில் வண்ணத்தில் வந்தவை என்பதால், black & white -ல் பார்த்திடும் போது வித்தியாசமாகத் தெரிகின்றன !

   Delete
  2. ஒரிஜினலில் வர்ணத்திலா? ஸார்...ஸார்... சூஹீசூஸ் வர்ணத்தில் வேணும் ஸார்.... ஸா......ர்ர்ர்ர்ர்ர்ர்... # lol :)

   Delete
 28. சார் சிங்கம் சிங்கிளாய் வரவில்லை

  நமது மும்மூர்த்திகளையும் தாங்கி வந்திருக்கிறது ;-)
  .

  ReplyDelete
 29. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் கிடைத்தது.

  அடுத்த ஆண்டுக்கான அறிவிப்புகள் அமர்க்களம்.

  தமிழ் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ விஜயன் சார் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. parimel : அடுத்த ஆண்டுக்கான முழு அறிவிப்புகளும் வரும் வேளை நிச்சயம் இன்னும் அதிர்வெடியாக இருந்திடப் போகின்றது ! பார்க்கத் தான் போகிறீர்களே...!

   Delete
 30. ஒரு திருத்தம்

  தமிழ் காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் விஜயன் சார் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. parimel : ஒரு திருத்தம் !

   இங்கே ஸ்டார் நானல்லவே....நமது நாயகர்களும் ; அவர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பளிக்கும் நீங்களுமே !

   Delete
 31. எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை,அதிர்ச்சியில் நான்! இனிமேல் வருமா ?தெரியவில்லை?

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா..... எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கார் .:-)

   Delete
  2. போங்க நண்பரே!நானே கொந்தளிப்பில் இருக்கிறேன்.......

   Delete
  3. நண்பரே,

   லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வரும். பொறுமை காப்போம்.

   Delete
  4. ஏற்று கொள்கிறேன் நண்பர்களே,சாரி கார்த்திகேயன் காத்திருப்போமே,பல மாதங்கள் காத்திருக்கவில்லையா?

   Delete
 32. டியர் விஜயன் சார், சூப்பர் ஹீரோ புத்தகம் கிடைக்க பெற்றேன் . இந்த மும்மூர்திகள் கதையுடன், வேறு எதோ surprise ஹீரோ கதை இருக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தேன் , but ,இல்லை . இரும்பு கை மாயாவியின் கதையே புத்தகத்தின் 60 சதத்தை ஆக்ரமித்து உள்ளது . ஒரு plesent surprice இயந்திர படை முழு கதையும்,வந்துள்ளது (ஏற்கனவே வந்த பாக்கெட் சைஸ் இயந்திர படை , இதில் மறுபதிப்பு ஆகிஉள்ளது)
  காமிக்ஸ் classic ன் முதல் இதழ் ,சென்னை bookfair ல் வெளியிடும் எண்ணம் உள்ளதா?,விஜயன் சார் , மேலும் சென்னை புக் fair ல் தனியாக ஸ்டால் போடுவதற்கு எதாவது முயற்சி எடுத்து வருகிறீர்களா , இல்லை போன முறை மாதிரி இன்னொரு பதிப்பகத்துடன் இணைந்து நடத்துவீர்களா சார் ?

  ReplyDelete
 33. மாயாவி ஒரு ஆங்கில படம் பார்த்த திருப்தியை உண்டு பண்ணியுள்ளார் . கொஞ்சம் நீளம் அதிகமா சார் ?

  மற்றவை நாளை

  ReplyDelete
 34. ஒரு கதை படித்த வரையில் இந்த புத்தகம் நிச்சயம் ஹிட்தான் அதில் மாற்றம் இல்லை .

  ReplyDelete
 35. நமது பழைய நண்பர்களின் கதைகள் நமக்கு பரிச்சயமானவர்களை பார்ப்பது போல் மட்டும் இல்லாமல் , பரிச்ச்சயமானவைகளை பார்பது போல உள்ளதே ?. இது பலமா பலவீனமா ?. இவை ஏற்கனவே வெளிவந்துள்ளனவா?

  ReplyDelete
 36. R.T.MURUGAN SAID,
  DEAR EDITOR SIR
  i have received the super hero special today morning.i have taken leave today as today is my deepavali.wow i really enjoyed the terrific three.i have travelled back to the 80"s.though these stories were more on the fantasy side i could able to enjoy thoroughly.my thaliver spider really really rocked.thankssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss thaliver spider vaalgaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa of course velgaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.

  ReplyDelete
 37. sokka! enaku innum book kidaikalaye!

  ReplyDelete
 38. enaku book kidaikadha oorla yarukum book kidaika koodathu! aamam solliputen.

  ReplyDelete
 39. Hello, வடை இன்னும் வரல , அதுக்குள்ள இப்படி ஆளாளுக்கு வெறுபேத்தக்கூடாது

  ReplyDelete
 40. Sir I have received the book but it's not the super hero special instead I got wild west special once again :'(. Really I was disappointed lot. Feel so sad. Anyway let me call your office on Monday morning to request to send me the super hero special.
  Regards
  Giridharan from Chennai

  ReplyDelete
  Replies
  1. Patience Giridharan ! Packing and couriering is manual labour and in case where few people handle mailing of a lot of books such errors creep in. Let us show a bit more patience though as a ardent fan of Lion myself, I can understand your disappointment!

   Patience always pays !

   Delete
 41. நண்பர்களே,எந்திர படை நான் படிக்கவில்லை ,ஆகவே மறு பதிப்பு கோர நினைத்திருந்தேன்,டாக்டரின் பதிவால் அது தேவை இல்லை என உணர்ந்தேன்,ஆசிரியருக்கு மேலும் நன்றிகள்,இது வரை படித்த/கருத்து கூறிய நண்பர்கள் அனைவரும் மாயாவியை ரசிப்பது,நமது சூப்பர் ஹீரோக்களின் புகழுக்கு அழிவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது .சிறு வயது நினைவுகளை கிளருவதால்தான் ரசிக்கிறோமோ என எண்ணினேன்,இல்லை அதிரடிகள் ,விறுவிறுப்பு குறையாத கதைகள் ,எப்போது காதில் பூ சுற்றினாலும் நம்மை கவரும்..........இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அதிகம் பேர் ரசிப்போம் என நினைக்கிறேன் ..................திங்கள் கிழமைதனை எதிர் பார்க்க துவங்கி விட்டேன்.......தீபாவளி போனால் பொங்கல்தானே !

  ReplyDelete
  Replies
  1. That's the spirit mate ..! Let's keep waiting .. I have reset my expectations to Wednesday :)

   Delete
  2. நானும்தான்,தங்க கல்லறை கூட வந்தாலும் காத்திருக்க தயார்!

   Delete
 42. சென்னையிலிருந்து இன்று காலை வந்தேன் கொரியரை மிக அதிகம் எதிர்பார்த்து...பெரிய ஏமாற்றம்...பக்கத்து ஊரான எனக்கே இன்னும் கொரியர் வரலை...ஒருவேளை தூர ஊர்களுக்கு முதலில் கொரியர் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...இதெல்லாம் ரொம்ப ஓர(தூர)வஞ்சனை சார்...அல்லது proffessional கொரியரில் போடுங்களேன்...கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமென நினைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. stc கொரியரை தேடி நான் திரிந்தது பெரும் சோக கதை,அட்ரெஸ் சரியாக இல்லை,போன் வேலை செய்யவில்லை,கண்டு பிடித்தால் எங்கள் பகுதிக்கு தனி எகேன்ஷி எடுத்துள்ளார்களாம்.......professional கொரியர் பெஸ்ட்.

   Delete
  2. உங்களுக்கும் புக் இன்னும் வரவில்லையா?ஐ...ஜாலி...நம்மெல்லாம் திங்கட்கிழமை சேர்ந்து படிப்போம்...சரியா?நோ ஃபீலிங்ஸ்...சூ.ஹீ.சூ.ஸ்பெசல் கிடைத்தவர்கள் எல்லாம் கொஞ்சம் மனசுக்குள்ளேயே படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...எங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு...

   Delete
 43. நமது காமிக்ஸ்கள் படிக்கும்போது தோன்றும் அதே உற்சாகம் ஆசிரியரின் பதிவுகளைப் படிக்கும்போதும் இருக்கும்...இப்போதெல்லாம் நமது வாசக நண்பர்களின் பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது...

  ReplyDelete
 44. எடிட்டர் சார்,

  இந்தக் களேபரங்களுக்கு நடுவில் அந்த 10 கேள்விகளுக்கான பதிலை மறந்துவிடாதீர்கள்!

  முடிந்தால், 10/10 வாங்கிய அந்த பாக்யவான் யாரென்றும் (கர்...புர்...) கூறலாமே?!

  ReplyDelete
  Replies
  1. Yes Sir U have promised to give the answers in this weekend.
   Answers pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

   Delete
 45. மை டியர் மானிடர்களே.அடியேனுக்கு இன்னும் புத்தகம் வரவில்லை.துக்கத்தை மறக்க ,யோசித்ததில் ஒரு பளிச் ஐடியா கிடைத்தது.நம்மூர் வி.ஐ.பி.களுக்கு பொருத்தமான நமது காமிக்ஸ்களின் தலைப்புகள் தான் அது.
  1.மன்மோகன் சிங் -மறை இல்லா மன்னர்.
  2.சோனியா காந்தி-மர்ம மைனா.
  3.ராபர்ட் வதேரா-மிஸ்டர் மர்மம்.
  4.கலைஞர் -வாரிசு வேட்டை.
  5.பிரணாப் முகர்ஜி -வெள்ளையாய் ஒரு வேதாளம்.
  6.பி.ஏ.சங்மா-மஞ்சளாய் ஒரு அசுரன்.
  7.அ.ராசா.-அமானுஷ்ய அலைவரிசை.
  8. அன்னா ஹசாரே&அரவிந்த் கேஜ்ரிவால் -சிரிப்பாய் இரு சிப்பாய்கள்.
  9.மம்தா பானர்ஜி -பழிவாங்கும் பாவை.
  10.ஜெயலலிதா -தலைவாங்கும் தாரகை.
  11.பிரகாஷ் காரத் -சிவப்பு தலை சாகசம்.
  12.நித்யானந்தா -வீடியோவில் ஒரு வெடிகுண்டு.
  13.மு க.அழகிரி-விசித்திர வில்லன்.
  14.சுப்ரமணியம் சுவாமி-காணாமல் போன ஜோக்கர்.
  15.எடிட்டர் எஸ்.விஜயன்.--தனியே ஒரு கழுகு.

  ReplyDelete
  Replies
  1. சாத்தான் அவர்களே! மறுபடியும் வித்தியாசமான முறையில் கலக்கிட்டீங்க!
   உங்க அரசியல் ஞானமும் (நீங்க சொல்லியிருக்கும் அரசியல் தலைவர்களில் பலரை யாரென்றே சத்தியமா எனக்குத் தெரியாது!!), காமிக்ஸ் காதலும், கற்பனைவளமும் ஆச்சரியப்பட வைக்கின்றன!!

   (சின்ன வயசில, தலையில எங்கயாவது அடிபட்டுச்சா, சாத்தான்ஜி?!!)

   Delete
  2. wow.... you are a man of innovations...
   can u pls add one more name:
   16. Saint Soma Sundaram - "Ethanukku Ethan"

   Delete
  3. புனித சாத்தானின் கற்பனை வளத்துக்கு பாராட்டுகள் . எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது ? anyway வளர்க தொடர்க!
   எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

   Delete
  4. அனைவரையும் ஆட்டி வைப்பவர் தாங்கள்தானே....................ஒரு அரசியல்வாதியை பகைக்கவே அஞ்சும் நேரத்தில்,அனைத்து அரசியல்வாதிகளை பகைத்து கொண்டதுடன் நமது ஆசிரியரை அதில் தள்ளி விட்டீர்களே! என்ன செய்ய புத்தகம் தங்கள் கைக்கு கிடைத்திருந்தால் தங்கள் சிந்தனை கதைகள் குறித்து பேச தூண்டி இருக்கும்..................ஆனால் ஒரே வார்த்தை பின்னுகிறீர்கள் !

   Delete
 46. இன்று பிற்பகலில் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. ஹாட்லைன் தவிர வேறு எதையும் இதுவரை படிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே கதைகளைப் படிக்கப் போகிறேன்.
  நம் நண்பர்கள் பலபேருக்கு இன்னும் புத்தகம் கிடைக்கப்பெறாத நிலையில் நான் மட்டும் எப்படி படிப்பதாம்?! (கொஞ்சம் உண்மை! நிறைய பொய்!)

  மேற்கூறிய பொய்யுண்மை ஒருபுறமிருக்க, உண்மையுண்மை என்னவென்றால்...
  கதைகளைப் படிக்க ஆரம்பித்தால் சீக்கிரம் முடிந்துவிடுமே! என்ன அவசரம்; ஒரிரு நாட்கள் புத்தகத்தை கைகளில் வைத்து திருப்பித் திருப்பி அழகு பார்த்த பின் மெதுவாய் படிக்க ஆரம்பிக்கலாமே என்றுதான்!

  மக்களே! புகை (காதில் வந்தாலும்) உயிருக்குப் பகை! ஹி!ஹி!

  ReplyDelete
  Replies
  1. Wild West Special வெளிவந்த போது முதல் நாளே கிடைக்கப் பெற்றேன். இந்த முறை, அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. விஜய்... உங்களுக்குப் பெரிய்ய்ய்ய மனது :-), எங்களுக்காக கதைககளைப் படிக்காமல் வெயிட் பண்ணுவதற்கு :)

   Delete
 47. Hmm Even I didnot got the Book.The prob is even if the book comes by tommorow. I will get the book only by the weekend.Bcoz the book comes to my uncles house,where i can go only during weekends.

  Enjoy the Fun Guys.

  ReplyDelete
 48. டியர் விஜயன் சார்
  எங்கள் ரிபோர்ட்டர் ஜானியின் ரூ.10 இதழ் எப்பொழுது வெளிவரும். சூ.ஹீ.சூ ஸ்பெஷல் hype-ல் இதை பற்றிய அறிவிப்பே வரவில்லை

  ReplyDelete
  Replies
  1. கதைகள் உங்களை கவர்ந்தனவா என உங்கள் கருத்தை கூறலாமே?

   Delete
  2. புத்தகம் கிடைத்தாலும் இன்னும் படிக்க நேரம் கிட்டவில்லை நண்பரே. ஆனாலும் புத்தகத்தை casual-ஆக புரட்டியதில் சித்திர தரம் மற்றும் presentation அருமையாக உள்ளது

   Delete
  3. நண்பர் கிருஷ்ண குமாரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

   Delete
 49. நன்றாக பசித்தபின் சாப்பிட்டால் ருசியில்லா உணவும் ருசிக்கும், ருசியுள்ள சாப்பாடென்றால் தேவாமிர்தமாகும், so அதற்காக காத்திருக்கிறேன். (ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்... மம்மீஈஈஈஈஈ..... இன்னும் புக் வரல)


  அன்புடன்
  A.S.FERNANDAS

  ReplyDelete
 50. புத்தகம் வந்த பின்னர் படிக்கலாம் என சிங்கத்தின் சிறுவயதில் இந்த பதிவில் படிக்கவில்லை,சரி இதாவது படிப்போமே என அமர்ந்தேன்.............இது கிளறிய நினைவுகள்............கோடை மலர் அறிவிப்பு கேட்டு ஏக பட்ட உற்ச்சாகம்.என் தம்பியிடம் கூறி வானுக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருந்தேன்......ஆர்ச்சி,ஸ்பைடர் ,(இரு வண்ணத்தில் நான் இரும்பு மனிதன் முதலில் படித்த நினைவுடன்)ஆனால் இதுவோ முழு வண்ணத்தில் ஈகிள் மேன்,அடடா.........புத்தகம் ஏமாற்றவில்லை,அற்புதமான கதைகள் ...........பள்ளி விடுமுறைகளில் நெல்லை எனது தாயாருடன் செல்வது வணக்கம்,ஊருக்கு சென்று நண்பர்களுடன் விளையாடலாம்,மீன் பிடிக்க ,குளிக்க ஆறு,குளம்,ஏரி,வாய்க்கால் என அனைத்தும் நிறைந்த ஊர் ஆத்தூர்,என்பதை விட மதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்கி புத்தகம் வாங்கலாம்,ஏனென்றால் அங்குதான் முதலில் வரும்.............இதற்க்கு முன்னர் மதுரையில் சதி வலை வாங்கிய நினைவுகள் வேறு வந்து சென்றது..... எனது தாயார் இறங்க வேண்டாம் என தடுப்பார் ,அனால் நான் பஸ் கிளம்பி விட கூடாதே எனும் பீதியுடன்,எதிர் பார்ப்புடன் சென்று வாங்கி வருவேன்......அச்சம் ,பரபரப்பு,எதிர்பார்ப்பு,அங்கே தொங்கி கொண்டிருக்கும்/அடுக்கி வைக்க பட்டிருக்கும் புத்தகங்களின் பிரம்மிப்பு அடடா ............ஆனால் இந்த புத்தகம் வந்த கோடை காலம் ,எனக்கு எங்கள் ஊரிலே கிடைத்து விட்டது !ஆனால் தாய விளையாட்டு கிடைக்கவில்லை !இரண்டு நாட்கள் நடையாய் நடந்தேன்,நாளை ,நாளை என கூறினார் கடைக்காரர்...............பின்னர் ஊருக்கு சென்று விட்டேன், பள்ளி விடு முறை முடிந்த பின்னர் ஊரிளிருந்து திரும்பி வந்தேன் ...இப்போது வரை கிடைக்கவில்லை ..........ஆவாரம் பாளையம் முருகன் கோவில் அருகே இருந்த அந்த கடைக்காரர் எனக்கு கடன் பட்டுள்ளார்....உங்களிடம் அவர்கள் அட்ரெஸ் இருந்தால் நினைவு படுத்துங்களேன்...................எனக்கு ஒரு தாய விளையாட்டளிக்குமாறு............. அப்போது உங்களை தொடர்பு கொள்ள வழியில்லை,ஆகவே புகார் செய்ய இயலவில்லை.....முடிந்தால் அதனை அப்படியே அந்த கதையுடன் மறு பதிப்பில் வெளியிட்டால் ஆஹா.....................................

  ReplyDelete
 51. Replies
  1. ஒழுக ஒழுக எழுதிகிறேன் நண்பரே! இப்போது தெரிகிறது புத்தகம் கிடைக்காதவர்களின் வலி,வேறு வழியே இல்லை ஆசிரியர் அடுத்த முறை 100 % அனைவருக்கும் ஒன்றாக அனுப்புவதுடன்(உள் நாடுகளிலாவது) ,திங்களன்று அனுப்ப வேண்டும்(இரண்டு நாட்கள் தவிப்புடன் காத்திருக்க வேண்டியிருக்காதே) ,.............

   Delete
 52. வழ வழப்பான கண்ணாடி அட்டை என விளம்பரம் ,அதிக பக்கங்கள் என விளம்பரம் அந்த விரைவில் வருகிறது எனும் அறிவிப்பு பக்கங்களை முடிந்தால் ஏதேனும் ஒரு பதிவில் வெளி விடுங்களேன்..........விரைவில் வருகிறது எனும் அந்த பக்கங்கள் அற்புதமாக இருக்கும் என நினைக்கிறேன்......அனைத்து வெளியீடுகளிலும் பின் புறம் உள்ள விரைவில் வெளி வரும் அறிவிப்புகளை ஸ்கேன் செய்து வெளியிட்டால் ஆஹா........... நம் கால பயணம் உற்ச்சாகமாக இருக்க இவை மேலும் உதவ கூடும்!

  ReplyDelete
 53. from murugan,
  தீபாவளி தல {ஸ்பைடர் } தல தீபாவளி.

  ReplyDelete
  Replies
  1. நான் மாட்டிகொண்டதால் எனக்கு மாட்டு பொங்கல்தான் ..............

   Delete
 54. அட்லீஸ்ட் திங்கட்கிழமையாவது வரும் என எதிர்பார்க்கும் நண்பர்களே ......உங்களைக்கண்டு நான் பொறாமைப் படுகிறேன் என்றால் என் நிலைமையை எண்ணி..... சந்தோஷப்படுங்கள் .........என் கதை........ வரும்ம் .....ஆனா வராது ......

  ReplyDelete
 55. Vijayan sir,

  The last (I think) "KODAI MALAR" was Karsanin Kadantha Kalam, Its been a decade since we saw a Kodai malar, it would be appropriate time for releasing a Kodai Malar this summer, there is more time for deciding a very good (big) story, Please consider this suggestion.

  Guys encourage our editor for a Kodai 'Special' Malar.

  ReplyDelete
  Replies
  1. Mahesh.. there is a kodai special malar advt in the super hero super special. just saw it in soundarss blog

   Delete
  2. Good news thanks Bro, not yet received SHSS book.

   Delete
  3. our editor declared a combined 2 part story of captain Tiger as 'kodai malar'. I think, We cannot ask more than this as it is practically very difficult for our editor and his team to accomplish such a huge task as 'kodai malar' with in a short span after the release of 'Never before special' in January. we need to accept what our editor offers as kodai malar.

   But, there is a strong possibility if we ask it as a 'Diwali special' in 2013. Lets all make a demand to our editor, dear friends!

   I believe 2013 Diwali will have number of reasons to be cherished! :)

   Delete
  4. Good, Good Suggestion, my vote is for Diwali Special 2013. Please guys all be greedy and vote for Diwali special. நமக்கு எவ்வளவு Special கொடுத்தாலும் பத்தாது.

   Delete
  5. உண்மைதான்! நமக்கெல்லாம் தினம் ஒரு புத்தகம் கிடைத்தால்கூட, வேளைக்கு ஒன்று கேட்டிடும் அகோரப் பசி ஆசாமிகள் நாம்! :)

   Delete
 56. Super Hero Special...

  SUPER...SUPER...SUPER....

  100 ku 100..

  Karupum oru alagu endru kandukonden unnaalay..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்போ நமது ஹீரோக்களுக்கு வாய்ப்புண்டு !

   Delete
 57. இரண்டு நாட்களில் கைக்கும் கிடைக்கும் புத்தகம் , இந்த முறை மூன்று நாட்களாகியும் கிடைக்கவில்லை... ரொம்ப கொடுமை சார் இது..

  ReplyDelete
 58. நேற்று முதல், " அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்பேன்" நிலைமை தான்.

  ReplyDelete
  Replies
  1. நான் கீழே இறங்கி வரவே மாட்டேன்,ஆனால் சிறிது சத்தம் கேட்டாலும் ஓடி வந்து பார்த்தேன்,முன்னாள் உள்ள நண்பர்கள்,எனது தந்தையார் என அனைவரும் என்ன என்ன என்று கேட்டு கொண்டிருந்தார்கள்?என்ன சொல்ல ,ஏன் சோக கதைய கேளு.................என பாடாத குறைதான் ,மீண்டும் பழைய நிலைக்கே என்னை தள்ளி விட்டார் ....................பிறரிடம் அர்ச்சனைதான்....

   Delete
 59. தமிழ்நாட்டின் இருண்ட நாட்களான இந்த தொடர் மின்வெட்டின் காரணமாக, கம்ப்யூட்டர்களை இயக்கத் தேவையான மின்சாரப் பற்றாக்குறையால் நமக்கு வரும் பின்னூட்டங்களின் அளவும் கணிசமாகக் குறைந்திருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. என் கூற்று உண்மைதானா நண்பர்களே?!

  ReplyDelete
 60. லயன்-முத்து & காமிக்ஸ் க்ளாசிக்ஸ் 2013 சந்தா தொகையான ரூபாய் 1,740 (1200 + 540)-யை இன்று காலை 8 மணிக்கு RTGS open ஆனதும் அனுப்பிவிட்டேன்.

  2013 காமிக்ஸ் அமர்களத்திற்கு சந்தா தொகையே அடிப்படை மக்களாய்!!!

  ReplyDelete
  Replies
  1. 'Early bird' Parimelக்கு வாழ்த்துக்கள்!
   சந்தா செலுத்தியவர்கள், நண்பர் பரிமலைப் போல ஒரு பின்னூட்டமிட்டால் மற்றவர்களுக்கு அது ஒரு நினைவூட்டலாகவும், உத்வேகமாகவும் அமையும்.

   Delete
  2. I have sent Subscription amount for Comics Classics now.

   Delete
 61. இதுவரை புத்தகம் கிடைக்காதவர்களுக்கு கொரியர் பாயின் இனிய குரல் கதவின் மறுபுறம் கேட்டிட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வந்து விட்டதாம்.................வழியிலே சென்று மடக்க போகிறேன்....................நன்றிகள்.....

   Delete
 62. இன்று காலையில் தான் சென்னையில் இருந்து தாக்பாத் திரும்பினேன் ....என்னபா இது நம்ப சோப்ளாங்கி அர்டினி ஸ்பைடரை இப்பிடி போட்டு வாட்டுறான்.செந்தில் கவுண்டமணிய அடிச்ச கதையால இருக்கு....பேஷ் பேஷ் ....(ஹை வோல்டேஜ் கம்பி மீது உட்கார்ந்து காமிக்ஸ் படிப்போர் சங்கம் ....கரெண்டு என்ன வரவா போகுது...)

  ReplyDelete
 63. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
  நான் ஒரே ஒரு புன்னகையில்(ஸ்பைடரை ) கண்டேனே
  பாசமுள்ள பார்வையிலே கடவுள்( ஸ்பைடர் )வாழ்கிறான் - அவன்
  கருணையுள்ள நெஞ்சினிலே(லயன்) கோயில் கொள்கிறான்

  வாங்கி விட்டேன்,வாவ் ,நேற்று மனமெல்லாம் கனத்திருக்க இன்று கை கனக்கிறது ,அட்டைபடம் நேரில் இன்னும் சூப்பர்,வேலை இருப்பதால் ,மீதி அனைத்தும் படித்தவுடன்......முன் அட்டை ,பின் அட்டையை விட சூப்பெராக இருக்கிறது ,நேரில் பார்க்கையிலே....

  ReplyDelete
  Replies
  1. yes பார்ட்னர், சூப்பர் ஹீரோக்கள் என்னிடமும் வந்து சேர்ந்துவிட்டனர். ஆபீஸ் இல் இருப்பதால் படிக்கமுடியாது. இன்று இரவு தூக்கம் போச்சு.

   Delete
  2. Nanbare endru naanum kedaika petren! Archie's Rachasa Thel marmamam Padika arambithulen!

   Delete
 64. வண்டி பெங்களூர் டிராப்பிக்கில் சிக்கி சுழன்றாலும்,மனம் என்னவோ வழியில் தென்படும் கூரியர் ஆபீஸ்களின் மேல் தான் .....நடுவில் கிடைத்த கேப்பில் இந்த புலம்பல் .............

  ReplyDelete
 65. காமிக்ஸை காதலித்துப்பார் கொரியர் கொண்டு வருபவன் தெய்வமாவான்...கையில் கிடைத்தது சொர்க்கம்...அவசர அவசரமாகப் படிக்காமல் sip by sip ஆக படிப்பதற்காக சாயந்திர ஓய்வு நேரத்தை ஆவலோடு எதிர்நோக்கியவாறு உள்ளேன்...

  ReplyDelete
 66. விஜயன் சார் கோடை மலர் புத்தகத்தில் கேப்டன் டைகர் சாகசத்தை மொத்த கதையும் ஒரே பாகமாக வெளியிட்டால் அமர்களமாக இருக்கும். பழைய புத்தகத்தை புரட்டும் நேரம் மிச்சமாகும். அது தவிர கதையை ஒரு சேர படிக்கும் போது கிட்டும் அலாதி தனி. தையவு செய்து இந்த வேண்டுகோளை பரிசிளிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் தமிழ்ல டைப் அடிக்ரோமில்ல

   Delete
  2. ஆஹா! உங்களின் இந்த வேண்டுகோளை நானும் வரவேற்கிறேன். மொத்தமாகக் கிடைத்தால் முழுமையாய் ஒரு விருந்து சாப்பிட்டதைப் போலிருக்குமே!

   Delete
 67. லயன் ஆபீசிலிருந்து போன் செய்தார்கள் - காமிக்ஸ் இன்றுதான் கூரியர் செய்யப்படும் என்றார்கள். எனினும் நல்லதே. Better late than never :)

  பின்னூட்டங்களைப் பார்த்து நானும் அடுத்த வருட சந்தா - புதிய மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் மறுபதிப்பிற்க்கும் சேர்த்தே அனுப்பிட்டேன். Let the year of fantasy begin ...!

  ReplyDelete
 68. Guys one good news have got the super hero special;) bad news is have to wait for 2 weeks to read the book since I am in Bangalore :'(

  ReplyDelete
 69. vanthuruchiya vanthurichi SHSS book just got it

  ReplyDelete
 70. இன்று நான்காவது நாள்... இக்கணம் வரை புத்தகம் கிடைக்கவில்லை... எடிட்டர் சார் என்ன ஆச்சு இந்த முறை???

  ReplyDelete
 71. நீண்டநாள் கழித்து படிப்பதாலோ என்னவோ ஸ்பைடர் கதை அமர்க்களம்...ஸ்பைடரையே நடுங்கி மண்டியிடச் செய்த ஆர்டினியைக் கண்டு ஒரு நிமிடம் நான் உறைந்தேவிட்டேன்...climaxதான் ட்விஸ்ட்... இ.கை.மாயாவி இனிதான் படிக்கப் போறேன்...

  ReplyDelete
 72. காலையில் office-ல் இருக்கும் போது Ebay-யில் இருந்து புத்தகம் குரியர் மூலம் அனுப்ப பட்டது என்று செய்தி வந்தது. மாலையில் வீடு திரும்பிய பொது புத்தகம் ஏற்கனவே வந்திருந்தது.

  நாளை தான் கிடைக்கும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. இப்போதே படிக்க ஆரம்பித்து விட்டேன். Black and white என்றாலும் இவ்வளவு clarity-யை இதுவரை கண்டதில்லை.

  ReplyDelete
 73. மும்மூர்த்திகளை ஒரே இதழில் ,நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்தபோது அடியேனுக்கு கண்களில் கண்ணீர் சுரந்தது.இந்த இதழே இவர்களின் கடைசி கதைகள் என்று நினைத்தபோது கண்களில் ரத்தமே சுரந்தது.மகிழ்ச்சியையும்,சோகத்தையும் ஒரு சேர அனுபவிக்க நேர்ந்தது இந்த மாத சூப்பர் ஹீரோ ஸ்பெசல் கைக்கு கிடைத்தபோது.(ஒன்றுமில்லை.புக்கு வந்துருச்சி என்பதை கொஞ்சம் சுற்றிவளைத்து சொன்னேன்.ஹிஹி).

  ReplyDelete
 74. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  - பின் பக்க அட்டையை விட, முன் பக்க அட்டைப்படம் சூப்பர். பார்க்க பழைய நியாபகங்கள் வந்தது.
  - ஸ்பைடர், ஆர்ச்சி மற்றும் மாயாவி கதைகளை நல்ல தாளில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
  - ஸ்பைடர் கதையில், ஸ்பைடரின் உடையின் சிறிய Texture கூட பிரிண்டில் பார்க்கும் அளவுக்கு மிக மிக துல்லியமான பிரிண்டிங் Excellent
  - கதைகளை (தமிழில்) இன்னும் படிக்கவில்லை
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  ReplyDelete
 75. இரும்பு கை மாயாவி இனி வரமாட்டார் என்கிற செய்தி துயரமானது. ஏன்? என்ன காரணம்? ஆன் லைனில் உங்கள் காமிக்ஸிற்கு சந்தா செலுத்த இயலுமா?

  ReplyDelete
  Replies
  1. நண்பர் Sai Ramஇன்றுதான் இந்த ப்ளாக் பக்கம் வந்திருக்கிறார்போல் தெரிகிறது.

   ஆற அமர... இந்த ப்ளாக்கில் உள்ள ஆசிரியரின் அத்தனை (56) பதிவுகளையும் அவற்றுக்கான பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வாருங்கள். இங்கே நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் இன்னமும் நீங்கள் கேட்கப்போகும் பல கேள்விகளுக்கும் விடைகள் கிடைத்திருக்கும்.

   Delete
  2. http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.html

   மேல் கொடுக்கப்பட்ட லிங்க் தங்களுக்கு உதவும்.

   பொடியன் அவர்களே தங்களால் முடிந்தால் உதவுங்கள்.

   Delete
  3. உண்மை ,ஆர்வமாய் இங்கு வரும் நண்பர்களை உற்ச்சாக படுத்தும் விதமாய் இருக்கட்டுமே நமது பதில்கள்.சற்றே தன்மையாய் கூறினால் நன்றாய் இருந்திருக்குமே!

   Delete
  4. மன்னிக்கவும் நண்பர்களே! நண்பர் Sai Ram ஐ கடினமான வார்த்தைகளால் ஏதும் சொல்ல நினைக்கவில்லை. முழுவதும் படித்தால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்றே சொன்னேன். அத்தோடு இப்போது நண்பர் Mahesh கொடுத்திருக்கும் இணைப்பில் இப்போது பல மாற்றங்கள் (சந்தா தொகையில் வந்துவிட்டதால், அதற்கும் அவர் பதிவை வாசித்தால் விடை கிடைக்கும் என்று நினைத்தேன். மற்றப்படி அவரை டிஸ்கரேஜ் செய்யும் விதமாக சொல்லவில்லை. முழுவதும் படித்தால் அவருக்கு தானாகவே கிடைத்துவிடும் தற்போதைய எமது காமிக்ஸ்களின் வேக வளர்ச்சி, விலை மாற்றங்கள், காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் க்கான தனியான சந்தா போன்ற என்று நினைத்தேன். தவறாக உங்களுக்குப் புரிந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

   Delete
 76. நண்பர் பொடியன் ஸ்ரீலங்காகாரர்.இங்கே தமிழ்நாட்டு நிலவரம் அவருக்கு தெரியாது போலும்.தமிழ் நாட்டில் தற்போது நிலவும் மின்வெட்டில் ஒரு பதிவை படிப்பதற்கே தாளம் போடவேண்டியிருக்கிறது.இந்த லச்சணத்தில் 56 பதிவுகளை படிக்க சொல்கிறார்.அவர் சொன்ன அத்தனை பதிவுகளையும் சாய் ராம் படித்து முடிப்பதற்குள் அநேகமாக ரத்த படலமே வண்ணத்தில் தயாராகி வந்துவிடும்.(நீ படித்திருக்கிறாயா?என்று கேட்காதீர்கள்.அடியேனுக்கு எழுத,படிக்க தெரியாது.ஹிஹி).

  ReplyDelete
  Replies
  1. நல்லா சொன்னீங்க தலைவா.

   Delete
 77. நேற்று நண்பர் முருகனைச் சந்தித்தேன். நெடு நாளைய லயன் வாசகர். Almost எல்லாப் பதிப்புக்களும் படித்துப் பரவசம் அடைந்திருக்கிறார். இரத்தப் படலம் புத்தம் புதிய காப்பி கொடுத்தார்.

  எடிட்டர்: இவரைப் போன்ற லயன் ரசிகர்கள் இருக்கும் வரை பல தரமான படைப்புக்களைக் கொணர்வது தங்களின் தார்மிகப் பொறுப்பெனவே சொல்லுவேன். Such a passionate fan of comics, especially Lion Comics ...!

  ReplyDelete
 78. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்.......

  சூப்பர் (ஹிட்) மசாலா மிக்ஸ்

  ****************************
  ஆசிரியருக்கு.....

  சில சந்தேகங்கள் சில கேள்விகளாய்

  1 . மரணத்தின் நிசப்தம் &
  காவல் கழுகு - இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவருமா?

  2 . come back ஸ்பெஷல் இல் விளம்பரப்படுத்தப்பட்ட
  1 . தரைக்கு கீழே தங்கம் 2 . வில்லனுக்கொரு வேலி 3 . பணியில் ஒரு அசுரன்
  ஆகிய மூன்று கதைகளுக்கும் 2013 லிஸ்ட் இல் இடம் உண்டா இல்லையா ?

  ஆவலுடன் தங்கள் பதிலை எதிர்பார்த்து ....

  ReplyDelete
  Replies
  1. ------------------

   ஒரு சந்தேகம் - முத்து நெவர் பிஃபோர் ஸ்பெஷல் அறிவித்த போது, Professional Courier-ல் அனுப்பும் ஒரு option இருந்தது. நான் பணம் அனுப்பியதும் அதற்குத் தான். ஆனால் இப்பொழுது வந்த அறிவிப்பில் Professional Courier இல்லை. காரணம் யாருக்காவது தெரியுமா ?.

   --------------------

   Delete
  2. 1 . மரணத்தின் நிசப்தம் DEC 2012 ல் என ஆசிரியர் கூறியுள்ளார் நண்பரே....

   Delete
 79. ஆசிரியருக்கு வணக்கம்,

  நேற்று முதலில் ஸ்பைடர் கதையினை படித்தேன். கதிர்கள் கதையில் என்ன செய்ததோ தெரியவில்லை, ஆனால், என் புத்தியை முளுங்கடித்து விட்டது. காதினில் பூ சுற்றும் ரகத்தை தாண்டி, பூவினில் காதை சுற்றும் ரகமாக இருக்கிறது. சற்றேனும் கூட கதையினை ஜீரணம் செய்திட இயலவில்லை.

  ஸ்பைடர் தந்த பயத்தால், ஆர்ச்சி கதையினை இது வரைக்கும் படித்திட தோன்றவில்லை. ஸ்பைடர் கதைகளுக்கு வழியனுப்பு விழா நடத்தியது சரியென்றே படுகிறது.

  ReplyDelete
 80. எனக்கு இரும்புக்கை மாயாவின் கதைகளை ஏனோ இப்போது படித்தால் கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது . அதுவும் லார்கோ , XIII எல்லாம் படித பிறகு இன்னும் மாயாவி , ஸ்பைடர் , ஆரச்சி என்பது எல்லாம் நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த வழியனுப்பு விழா என்னை பொருத்தவரை மகிழ்ச்சியே

  ReplyDelete
 81. இன்று 5 வது நாள்...இன்னும் சோகக்கதை தான்.பெங்களூர் சுப்ரமணியம் அவர்களும் பேசினார்கள்... அவருக்கும் இன்னும் வரவில்லையாம் ....கண்டனக்கூட்டம் போடலாமா என்று யோசித்து வருகிறோம்....

  ReplyDelete
  Replies
  1. I have called the lion office today, looks like they have sent to us on Saturday but it has not reached. So I have asked Radhakrishnan Annachi to provide the tracking number for courier, but still they have not provided the number. So getting delayed............. :-( Last time it took 5 days to reach us. The best way is please provide us the tracking number immediately, so that we can call the courier guys/collect the book from their office directly.

   Delete
 82. பொறுமை காத்தார் .......விரக்தி அடைவார் .....

  ReplyDelete
 83. Folks,

  Super hero super special பற்றிய பல கருத்துக்கள் கண்டிட்டேன். ஒரு விஷயத்தை நாம் நினைவினில் வைத்தல் வேண்டும்.

  லார்கோ வின்ச், XIII போன்ற கதைகள் - reality based fiction. Spider, Archie, மாயாவி போன்ற கதைகள் - popularity based fantasy. இரண்டினையும் வேறு நோக்கினில் தரம் பிரித்தல் வேண்டும். நான் அறிந்த வரையினில் இரு genre-விற்கும் பொது ரசிகர்களும் உண்டு, தனி ரசிகர்களும் உண்டு - தமிழினில். எனவே நாம் பொறுத்துப் போக வேண்டும். நாம் வளர்த்து விட்டக் காரணத்தினால் வர்த்தகத்தை மாற்றுத்வதை விட அனைவரையும் அனுசரிப்பது சிறப்பானதுவே ?!

  இம்முறையினில் இன்றைய சிறுவர்களும் பயனடைவார்களே. பொது நோக்கு வேண்டும்.

  ReplyDelete
 84. ஸ்பைடர் ஆர்ச்சி எல்லாம் ஒரு ஜாலி மூடில் படிக்க பழகிக்கொண்டு விட்டோம் நாங்கள் ...நீங்களும் எங்களுடன் அணி சேரவும் ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. மந்திரியாரே , எப்படி இருந்தாலும் ஸ்பைடர் ,ஆர்ச்சி எல்லாம் படிக்காமல் விடுவதில்லை.என் தனி ஒருவனுக்காக அல்லது சிலருக்காக நான் ஸ்பைடர்யோ ஆர்ச்சியோ வேண்டாம் என்று இதுவரை நான் மறுப்பு சொல்லவில்லை. அதுவும் E-bay ல் Booking speed பார்க்கும் போது மெய் சிலிர்கிறது. நமது முந்தய வெளியிடுகளுக்கு இந்த வேகம் நான் பார்க்கவில்லை . எனவே கவலை படவேண்டாம் , ஆசிரியர் அடுத்த வருடம் நிச்சயம் இரும்புகையோடு வருவார் என்று நம்பிக்கை வைக்கலாம்.(E-bay ல் முதல் ஆர்டர் அடியேனுடையது).

   Delete
  2. நன்றி பல ...டென்ஷனின் மிக உச்சத்தில் நான் இருக்கும் போது............. ஸ்பைடர் வைத்திருக்கும் சுறாவளி காப்சுள் ,மனோவசிய துப்பாக்கி ,ரிவோல்விங் துப்பாக்கி ,காந்த எதிர்ப்பு பிஸ்டல்,oxygen மாஸ்க்கு,மந்த புத்தி துப்பாக்கி ,அறிவு ஜீவி துப்பாக்கி,லேசர் துப்பாக்கி,(ஒரு மனுஷன் இத்தனையுமா தூக்கிட்டு போவான்...........) ஸ்பைடர் அழகு முஞ்சி,ஆர்டினியின் வசவுகள் பார்த்தாலே மீண்டும் குஷி வந்துவிடும் எனக்கு..

   Delete
  3. இன்ன தான் நாம வளர்ந்துட்டாலும், பழைய கதைகள அப்போ அப்போ படிக்கிற திருப்தியே அலாதி, அதிலும் இரும்புக்கை மாயாவி, இரும்பு மனிதன் ஆர்ச்சி, குற்ற சக்கரவர்த்தி போன்றவர்களின் கதைகள் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த காலத்தில் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியவர்கள்.

   Delete
  4. ஸ்பைடர் கதையுடன் ஒப்பிடும் பொழுது ஆர்ச்சி கதைக்கு கோடி குடுக்கலாம். படக்கதை எனப்படுவது, சித்திரங்களுக்கு ஏற்ப நிகழ்வுகளை மனது உருவகப்படுத்துவதில் உள்ளது. அதில் மனது ஒன்றி விட்டால் கதை வெற்றி, ஆனால் இந்த ஸ்பைடர் கதையினில், வலை துப்பாக்கியை கூட அதிகம் பயன்படுத்தவில்லை.

   கண்ணுக்கே புலப்படாத கதிர் அலைகள் , அதிலும் புவியீர்ப்பு, எதிர்ப்பு எல்லாத்துக்கும் மேல, அதை வச்சு ஒரு ஆள தூக்கின கூட சரி, அது என்ன ஒரு ஊரையே தூக்கிட்டு போறது. முடியலப்பா சாமி... இது மாதிரி இன்னொருமுறை வேண்டாம்...

   ஆர்ச்சி கதையினில் ஒரே ஒரு நெருடல், அதன் வசனம், மூன்று முறை " உன்னோட உடம்பு தாங்கும், நாங்க தாங்க முடியுமா " என வந்தது. மொழி பெயர்ப்பில் இன்னும் சிறிது கவனம் வேண்டும், ஒரு சில எளிய வார்த்தைகள், கதையின் ஓட்டத்தை மாற்றுகிறது.

   மாயாவி கதை இன்னும் படிக்கவில்லை.

   Delete
 85. கிடைகள கிடைகள புக் எனக்கு கிடைகள

  ReplyDelete
 86. மாயாவி , ஸ்பைடர், ஆர்ச்சி கதைகள் எல்லாம் காதுல பூ ரகம்தான் ஆனால் விண்கல்லையே திசை மாற வைப்பது , வேற்று கிரக வாசிகளை ஒரே சொடக்கில் அழிப்பது எல்லாம் அதிகம் தான். சரி எனக்கு பாக்யராஜ் நடனம் , சிலம்பரசனின் ஆக்சன் ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் ரொம்ப காமடியாஇருக்கும் ரசிச்சு சிரிக்கலாம் . அதை போல் இதையும் ரசித்தேன் .

  ReplyDelete
 87. எடிட்டர் சார், என்னோட சின்ன வயசுல எங்க ஊர்ல ( குமரி -கேரளா எல்லை, குழித்துறை ) பக்கம் ராணி காமிக்ஸ் மட்டும் தான் கிடைக்கும். +2 படிக்கும் போதுதான் நண்பனின் உதவியால் முதல் முத்து காமிக்ஸ்- மரண முள் படிக்க கிடைத்தது. ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன். :-(. சரி ஒரு வேண்டுகோள் வருடத்திற்கு 6 புத்தகம் வீதம் வெளியிடலாமே..

  ReplyDelete
  Replies
  1. வருடத்திற்கு 7 புத்தகங்கள் (ஒன்று வண்ணத்தில்) மறுபதிப்பாகிடும் என்று ஆசிரியர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார் நண்பரே! வரும் ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கிடைக்கவிருக்கிறது. கொண்டாட்டம்தான்!

   Delete
 88. மிகவும் பொறாமையாக இருக்கிறது ! நிறைய வாசகர்கள் தற்போதும் ரசிக்கும் (சிறு வயதில் நானும் ரசித்த) சூப்பர் ஹீரோ ரக கதைகளை என்னால் இப்போது மட்டும் ரசிக்க முடியவில்லையே !!!

  வயது தான் காரணமா? பிறகு ஏன் லக்கி லுக் , சிக் பில் போன்ற மினி லயன் கதைகள் அப்போதும்/இப்போதும்/எப்போதும் ரசிக்க முடிகிறது? என்ன ரசனை சார் இது!

  ReplyDelete
  Replies
  1. What a sensual & self-analyzing question it is!! Hope you have the answer within you!

   Delete
  2. லக்கி லுக், சிக் பில் போன்ற கதைகளில் சிறிதளவேனும் இருக்கும் logic ஸ்பைடர், மாயாவி போன்ற கதைகளில் இருப்பதில்லை.

   logic பார்க்காமல் படித்தால் எல்லாம் நன்றாக தான் இருக்கும் நண்பரே.

   Delete
  3. நாம் அறியா வயதில் இப்படியும் நடக்குமா என்று ரசித்த கதைகளும், கதாபாத்திரங்களும் அவர்களது சக்திகளும். இப்பொழுது இது சாத்தியபடாது என்ற மனோ நிலைக்கு வந்துவிட்ட காரணத்தினால் இருக்கலாம்?

   Delete
  4. உங்கள் நிலையில் தான் நானும்.. மினிலயன் கதைகளை இன்றும் ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.. காரணம் தெரியவில்லை

   Delete
  5. You can enjoy reading comedy stories always and age is not limit. In case of other, the taste will keep changing based our age. That could be the reason.... :-)

   Delete
  6. ஆர்ச்சி கதை ரசிக்க முடிகிறதே!மேலும் மாண்ட்ரேக்,பேய்க்கதைகள் ,விண்வெளி கதைகள் ரசிக்க முடிகிறதே....லாஜிக் இல்லா விடிலும்,காதில் பூவை சுற்றினாலும் .......சில நாயகர்களுக்கு என சில சக்திகள் இருக்கும்,அதனை தாண்டாத வரை பிரச்சினை இல்லை(,மாண்ட்ரேக் மாயாஜாலம்,லக்கியின் நிழலை விட வேகமாய் சுடும் திறன்,மாயாவியின் மின் சக்தி)ஸ்பைடரின் வலை துப்பாக்கி ,ஹெலிகார் இங்கே ஒரே கதையில் திடுமென ஸ்பைடர் பல அரிய சக்திகளை பெற்றது தாங்க இயலவில்லை,நம்ப மனதிற்கு துணிவில்லை ...............வயது கண்டிப்பாக காரணம் இல்லை !

   Delete
 89. My age is 37 and I enjoy superheros - are you older? :)

  ReplyDelete
  Replies
  1. I am also 37.. still i love to read Luckyluke, Iznogoud, Chikbill..cap.tiger.. but superheros (except spider) i am not able to enjoy much..

   Delete
 90. இங்கு புதியதாய் வந்துள்ள நண்பர்கள் மற்றும் பழைய நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூற வந்தது,ஆசிரியரின் கோரிக்கைகாக இருப்பினும் நமது பழைய ஹீரோக்களின் எழுச்சியே,ஆகவே அவர்களுக்கு நன்றி கூறுவோம்.நமது சூப்பர் ஹீரோக்களின் வருகை மாபெரும் வெற்றியே,ஆனால் கதைகள் எப்படி எனும் கருத்துக்கள் ஆசிரியர் முடிவெடுக்க உதவட்டும்.இது போல நண்பர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை கூறி ஆசிரியரை உற்சாக படுத்தி மறு பதிப்புகளின் எண்ணிக்கைதனை உயர்த்துவோம்.....நமது உற்ச்சாகம் ஆசிரியரின் பணி சிறக்க உதவும் விதமாய் அமையட்டும்.

  ReplyDelete
 91. நேற்றே நீதிக்காவலன் மற்றும் ஆர்ச்சி கதைகளை படித்து விட்டேன்.விமர்சிக்க சற்று தயக்கம்......நண்பர்கள் படித்த பின்னர் கூறலாமா என்று,மேலும் அவர்கள் படிக்கும்போது நமது விமர்சங்களும் disturb செய்யக்கூடாதே என்றும் ........கதைகளை கூறாமல்தானே விமர்சிக்கிறோம் என முடிவு செய்த பின்னர்,ஆசிரியரும் நமது விமர்சனங்களை உடனே கூறுமாறு கேட்டு கொண்டுள்ளார் எனவே ............முதலில், மூன்று கதைகளும் இந்த உயர்தர தாளில் மிளிர்கின்றன!வண்ணம் எதற்கு ,நாங்கள் போதாதா என்று உயர்தர தாளில் கருப்பும் வெள்ளையும் கேட்க தவறவில்லை ! !மேலும் ஓவியங்கள் அற்புதம் ! அரை பக்க ஓவியங்கள் அனைத்தும் தனி சிறப்பு !

  இந்த நமது மெகா சைசே மாபெரும் பலம் .....இந்த நமது மெகா சைசே மாபெரும் பலம் .......இந்த நமது மெகா சைசே மாபெரும் பலம் ...........இந்த நமது மெகா சைசே மாபெரும் பலம் ...............இந்த நமது மெகா சைசே மாபெரும் பலம் ...............கண்டிப்பாக விலையும் பார்க்க வேண்டும்......கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை !விலை இதற்க்கு ஒரு பொருட்டே கிடையாது!விலை இதற்க்கு ஒரு பொருட்டே கிடையாது!விலை இதற்க்கு ஒரு பொருட்டே கிடையாது!விலை இதற்க்கு ஒரு பொருட்டே கிடையாது! பிற நண்பர்களின் நிலை என்னவோ?


  ஆர்ச்சி கதை நம்மை கடந்த காலத்திற்கே அழைத்து செல்லும்!டாப் டக்கர் ! தலைவர் ஸ்பைடர் ஆரம்பம் அமர்க்களம் .கொள்ளை அழகு ஸ்பைடர்,அற்புதமான தரமான ஓவியரின் கைவரிசை ....முதல் பாதி விறு விருப்பாய் செல்கிறது.......பின்னர் எதற்கெடுத்தாலும் விந்தை ஆயுதங்கள் என ரொம்பவே காதில் பூ சுற்றுவது சலிப்பை தருகிறது......பல விஷயங்கள் சிறிதளவு கூட ஏற்று கொள்ள முடியவில்லை .....படித்த பின்னர் தெரியலாம்.......சூப்பெர்மேனின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.........ஸ்பைடர் ஆயுதங்களை அளவாய் பயன் படுத்தும் போது அவருக்கே உரித்த சிறப்புகள் , நம்மை ஈர்க்கும் ,கட்டி போடும் அவரது செயல்கள் அற்புதமாய் இருக்கும்!ஆனால் தலைவரின் தனித்துவம் இங்கு குறைவு !,நம்ப முடியாத ஆயுதங்கள் பல இதில் உண்டு,சில ஜீரணிக்க முடியவில்லை !அவற்றை நம்பியது பலவீனம் .....பல நண்பர்களை இது கவர்ந்துள்ளது இவரின் மாபெரும் வெற்றியே .......மேலும் பல நண்பர்களை நமது வலை தளத்திற்கு ஈர்த்ததும் நமது தலைவரின் ஆற்றல் என்பதால் நானும் இவரை நமது நண்பர்கள் போலவே வரவேற்க தயார்.......நமது வருங்கால பயணத்திற்கு இவரது கதைகள் சலிப்பை தராது என இருந்தால் !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே! நீங்கள் சொல்லாமல் விட்ட இன்னொரு விஷயம்- வசனங்கள்! (நண்பர் சிம்பா மேலே கூறியிருப்பதைப்போல)லயனின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமானது- அதன் மொழிபெயர்ப்புத் தரம்.
   நன்கு ரசணையுடன் மொழிபெயர்த்து பலூனிற்குள் அடைக்கப்படும் வசனங்கள் சுமாரான கதையைக்கூட தூக்கி நிறுத்திடும் சக்தி படைத்தது. அந்த வகையில் ஸ்பைடர் கதை  சற்றே ஏமாற்றமளிப்பதும் உண்மை.

   உதாரணமாக, பக்கம் 206 ல் ஹெலிகாருக்குள்ளிருந்து முஷ்டியை உயர்த்தியபடி ஸ்பைடர் ஆவேசமாகப் பேசுவது இப்படி இருந்திருக்கலாம்...
   "அடேய் ஆர்டினி! சாக்கடைப் புழுவே! நீ உலகின் எந்த மூலையில் ஓடி ஒளிந்தாலும் சரி, உன்னைத் தேடிவந்து உன் தெருநாய் முகரையைப் பெயர்க்காமல் ஓயமாட்டேன்!"

   Delete
  2. உண்மை ,நண்பர் சிம்பா கூறியது போல திரும்ப திரும்ப ஒரே வார்த்தைகளுக்கு பதில் கொஞ்சம் மாற்றி இருக்கலாம்.....இப்போது இரவு கழுகள் அதிகரித்துள்ளனர் போலும்.......

   Delete
 92. பல நண்பர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது சிறிது வருத்தமாகத்தான் உள்ளது,அடுத்த இதழில் அனைவருக்கும் ஒரே நாளில் அனுப்பினால் நன்றாய் இருக்கும்!
  இன்னும் நமது வலை தளம் பல நண்பர்கள் உதவியுடன் மெருகேறும் !

  ReplyDelete
 93. எனக்கு முதல் அறிமுகமே இரும்புக்கை மாயாவிதான் .பின்பு ஆர்ச்சி ,"ஆர்ச்சியோடு மோதாதே" யில்
  இருந்துதான்."பழி வாங்கும் பொம்மை"யில் இருந்து ஸ்பைடர் .அப்போது எல்லாம் தேடி தேடி படித்த ஹீரோக்களை அந்த அளவு ரசனையோடு இப்போது ரசிக்க முடியவில்லை.(இதையே நண்பர் ஒருவரும் பின்னூட்டமிட்டு இருந்தார்.) வயது காரணமா என்று தெரியவில்லை .(என் வயது 28 ).அடுத்த ஆண்டு வர இருக்கும் மறு பதிப்புகளை நிச்சயம் வாங்குவேன் .
  வணக்கத்துடன் .........

  ReplyDelete
  Replies
  1. மறு பதிப்புகள் கண்டிப்பாய் நன்றாக இருக்கும் !

   Delete
 94. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் "ஐயயோ" ரகம். தாங்க முடியல. இதற்கு ஸ்பைடர் "விண்வெளி பிசாசு" தொடர் கதையை கோவில் கட்டி கும்பிடலாம்.
  மாயாவி கதையில் "மயன்" ஒரே ஒரு கட்டத்தில் வந்ததுடன் சரி.கதை இழுவை. ஹ்ம்ம்ம். ஆர்ச்சி ஓகே ரகம். ஆனாலும் இன்னும் பாதாள போராட்டம், கண்ணீர் தீவில் மாயாவி, ஆர்ச்சிகோர் ஆர்ச்சி போன்ற பல fantasy கதைகளை விரும்பி படிக்கும் போது இந்த ஸ்பெஷல்லில் ஏதோ ஒன்று அல்ல பல மிஸ்ஸிங் போன்ற உணர்வு அதிகம் எழுந்தது.

  ReplyDelete
  Replies
  1. விண்வெளி பிசாசு அற்புதமான கதை நண்பரே,காரணம் ஏற்று கொள்ளும் படியாக இருக்கும்!

   Delete
 95. ஸ்பைடர் கதையில், அதிலும் அந்த அமெரிக்க ஜனாதிபதி வருகை, விண்கலத்தில் பிரபஞ்ச சுற்று எல்லாம் சேர்ந்து நம்மை தட்டா மாலை சுற்றும் உணர்வை தந்தது. அடி பின்னிடாங்கப்பா பின்னிடாங்க... ஏன் இந்த கொலைவெறி?

  ReplyDelete
 96. இதன் காரணமாத்தான் ஆசிரியர் இந்த புத்தக வெளியீட்டினை தாமதப்படுத்தி வந்தார் போலும்...

  ReplyDelete
 97. ஸ்பைடரின் வேறு எந்தக் கதையும் இந்த அளவுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியதில்லை.வேறு எந்த ஹீரோவும் தன் சகாவினால் இந்த அளவுக்கு நையப் புடைக்கப்பட்டிருக்க மாட்டான். கதை நெடுக, பக்கத்திற்குப் பக்கம் ஆர்டினியிடம் அடிவாங்கும் ஸ்பைடரை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.  அத்தனையும் தர்ம அடி! கூடவே, வயதான பெல்ஹாமும் சேர்ந்து துவைத்து எடுக்கிறார்.
  முன் அட்டையில் ஸ்பைடர் வலையில் படுத்திருப்பதை சற்றே மாற்றி ஆஸ்பத்திரில் படுத்திருப்பதைப் போலிருந்தால் கதைக்குப் பொருத்தமாயிருந்திருக்கும்!  :)

  இவ்வளவு அடிவாங்கிய ஸ்பைடருக்கு வெள்ளைமாளிகையில் ஒரு சிலை  வைக்கிறார்கள் பாருங்கள்...!!

  சிறுவயதிலிருந்து ஸ்பைடரின் தீவிர ரசிகனான நான், கதையின் கடைசி வரியைப் படித்தபோது அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா ஹா .........இவளவு அற்புத சக்தி படைத்த நீங்கள் மேலேயே சுற்றி கொண்டிருக்கலாமே என கதையின் முடிவில் ஆசிரியர் எடுத்தது சரியான முடிவாக தெரியவில்லையா?

   Delete
  2. நன்றாகப் பாருங்கள் ஸ்டீல் க்ளா! நான் சொன்னது கதையின் 'கடைசி வரி'யை!

   Delete
  3. ஹா ஹா ஹா ஆசிரியருடன் சேர்ந்து நீங்களும் அடித்து துவைக்க முடிவு செய்து விடீர்கள் போலும்!

   Delete
 98. சூ சூ அருமை அருமை

  ReplyDelete
 99. பரணி அவர்களே.......சென்னை புத்தகத்திருவிழவிற்கு கண்டிப்பாக சுப்ரமணியம் அவர்களுடன் தான் வருவேன் .....இன்ஷா அல்லாஹ் ......உங்களிடமும் நிறைய்ய பேச வேண்டி உள்ளது .....

  ReplyDelete
 100. முக்கிய செய்தி ....இன்னமும் புத்தகம் வரக்காணோம் .....எங்கள்..மீது பரிதாபப்படுவோர் எவரும் உண்டோ ...?

  ReplyDelete
 101. புத்தகம் கிடைத்தது. கடைசியில் நானே courier அலுவலகத்துக்கு நேரில் சென்று பெருகொண்டேன். மிகவும் மட்டமான சர்வீஸ். இரண்டாவது முறையாக அவர்கள் டெலிவரி செய்யவில்லை. புத்தகங்களை பதிவு தபாலில் பெறுவதே இதற்கு தீர்வாக இருக்கும் என எண்ணுகிறேன். நண்பர்களே எதற்கும் நீங்களும் courier அலுவலகத்துக்கு நேரில் சென்று முயற்சித்து பார்க்கவும். All the Best

  ReplyDelete
 102. வணக்கம் நண்பர்களே ,
  வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவு வீடு திரும்பிய நான் சிறிது அலுவல் பணியை முடித்துவிட்டு நமது ப்ளாக்யை ஓபன் செய்து நண்பர்களின் கமெண்ட்யை படித்து பார்த்த போது ஏமாற்றம் கலந்த அதிர்ச்சியடைதேன்.

  சூ.ஹி.சூ.ஸ் ஏக் தம்மில் பயணத்தின் போது படித்து முடித்தேன்.

  விமர்சனத்துக்கு முன் ஒரு முன்னுரை:
  சூ.ஹி.சூ.ஸ் புத்தகம் முதலில் அறிவித்த ஆசிரியர் பிறகு சற்று பின் வாங்கியது அனைவருக்கும் நினைவிருக்கும். வாசகர்களாகிய நாம் கொடுத்த அதீத அழுத்தம் காரணமாகவே இந்த புத்தகம் பிரிண்ட் செய்யபட்டு இன்று நம் கைகளில் தவழுகிறது.
  PLEASE NOTE:
  ஆசிரியர் நமக்கு படிப்பதற்கு முன் லாஜிக் என்ற தோப்பியை கழற்றி வைத்துவிட்டு இந்த கதையை படிக்குமாறு பலமுறை அறிவுறிதிவிட்டார். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிக்கபட்டுள்ள இந்த சூ.ஹி களின் கதை இதுவே கடைசி முறை என்றும் அறிவித்துவிட்டார்.

  SO, லார்கோ,XIII, பிரின்ஸ் போன்ற ரியாலிட்டி பிக்சன்'ஐ ரசித்து படிக்கும் லாஜிகல் மைன்ட் செட்டை தூர போட்டுவிட்டு 15 வருடங்களுக்கு முன் நமது சூ.ஹி'களின் பேன்டசி'ஐ ரசித்த மைன்ட் செட்டுடன் புத்தகத்தை விரித்தேன்.

  I THOROUGHLY ENJOYED ALL THE THREE STORIES AS I WOULD HAVE ENJOYED LARGO OR XIII!!

  இரும்பு கை மாயவியிடம் நான் எதிர்பார்த்த சிக்கலான தருணங்களில் மாயமாக மறையும் தனி தன்மை , சிறுவன் மோரிஸ் இன் பங்கு,இரும்பு கை மாயவியின் சகாக்களே அவரை வேட்டையாடும் பரிதாபம், மாயவியை விட அசாத்திய பலம் பொருந்திய எதிரிகள்,எதிரியிடம் முழுமையாக மாட்டிகொண்டு செய்வதறியாது முழிக்கும் தருணங்கள், 1970-1980 க்கு ஏற்ற மதிநுட்பம்,

  ஸ்பைடரிடம் நான் எதிர்பார்த்த ஸ்பைடரின் ஆணவம் கலந்த பேச்சு,யாருக்கும் எதற்கும் அஞ்சாத அசால்டன தைரியம்,புதிரான் வாயை பிளக்க வைக்கும் அதிரடி அறிவியல் கருவிகள்,எதிரியிடம் முழுமையாக மாட்டிகொண்டு செய்வதறியாது முழிக்கும் தருணங்கள்,பஞ்ச் டயலாகுகள்,

  ஆர்ச்சியிடம் நான் எதிர்பார்த்த அட்வேன்ட்சர், இயற்கையோடு கலந்த சாகசங்கள்,புதையல் வேட்டை, எந்த ஹைடெக் ஆயுதங்கள் இல்லாமல் சாதாரண பொருட்களை கொண்டு சன்டையிடும் திறமை.
  என பேசிக் எதிர்பார்புகளை அனைத்தையும் அனைவரும் குறைவின்றி நிறைவேற்றினர்.


  ReplyDelete
 103. 1.மாயாவியின் எட்டு கர எத்தன்
  முன்று பகுதிகளாக பிரிக்கக்கூடிய இந்த கதையில் முதல் இரண்டு பாகங்கள் அற்புதம். ஜீசஸ் ப்லாஸ்கோவின் ஓவியங்களில் 1960-1970 காலத்து பிரிட்டனையும் அதன் மனிதர்களையும் அற்புதமாக வரைந்துள்ளார். முதல் பகுதி நமது நண்பர் சதிஸ் சுட்டிகாட்டிய இயந்திர படையின் மறுபதிப்பு. 10 ஆம் பக்கத்தில் "அந்த வெடிகுண்டை பிடிக்கும் இரும்பு கை" அந்த ஓவியம் அன்றைய இயந்திர படை விளம்பரத்துக்கு உபயோகித்ததாக ஞாபகம்.எட்டு கர எத்தன் முதல் பகுதியில் மட்டுமே வருகிறார். பிறகு அவர் பிறகு என்ன ஆகிறார் என்று தெரியவில்லை.

  இரண்டாம் பகுதி சாகசங்கள் அதி அற்புதம்.க்விஸ் மாஸ்டரின் புதிர்களும் மாயாவிக்கு வைக்கும் சவால்களும் லார்கோ காலத்துக்கு சற்றும் சோடை போகாத த்ரில்லர்கள்.

  முன்றாவது வில்லன் ஸ்கேர் க்ரோ பகுதி சற்று அறுவை.ஓவியங்களின் தரம் இங்கே சற்று குறைந்துவிட்டது. யார் ஓவியர் என்று தெரியவில்லை. இப்பகுதியும் ஜீசஸ் ப்லாஸ்கோ மற்றும் கென் பால்மர் கூட்டணி படைத்திருந்தால் இன்னமும் அற்புதமாக இருந்திருக்கும். முன்று சில்வர் புல்லெட் தொடரை எப்படியாவது முடிக்கவேண்டும் என்று அவசரகதியில் செயல்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

  முடிவு சற்று எமாற்றம் அளிப்பதாக உள்ளது. இருந்தாலும் மாயாவியின் இதற்கு முன் வந்த சூப்பர் ஹிட் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஹிட் கதை இந்த எட்டு கர எத்தன்.

  2.ஸ்பைடரின் அரக்கன் அர்டினி:
  மூன்று கதைகளில் முதல் இடம் இந்த கதைக்கு.ரெக் பன்னின் அற்புதமான தனி தன்மை மிக்க ஓவியங்களை இன்னொரு முறை நாம் எப்போது பார்க்கபோகிறோம்..?? ஸ்பைடர் அர்டினியிடம் மாட்டிகொண்டு முழிக்கும் தருணங்கள் அருமை! அருமை! ஸ்பைடரின் ஆணவத்துக்கு மிக சரியான பதிலடி. அதுவும் அர்டினியின் கையால் ஸ்பைடர் கேமரா முன் முகத்தில் குத்து வாங்ககுவது அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்த தருணம்.I'm still laughing...:).எத்தனை விதமான கதிர்கள்...எத்தனை விதமான துப்பாகிகள்...விறுவிறுப்புக்கு குறைவில்லாத கதையோட்டம்! ஸ்பைடர் கதைகளில் மிக அருமையான கதை இது.

  3.ஆர்ச்சியின் இராட்சச தேள் மர்மம்
  ஆர்ச்சியின் yet an other adventure action hit. அப்பாவி மனிதர்களுக்கு மத்தியில் ஆர்ச்சியின் வழக்கமான சாகசங்கள். யார் அந்த பிஸ்மில்ல??? கதையில் "பிஸ்மில்ல" ஒரு புரியாத புதிர். இரண்டாம் உலக போர் ஜீப்பில் பயணிக்கும் நமது சகாக்கள் ஆப்பிரிக்கா பாலைவனத்தில் நிகழ்த்தும் அதிரடிகள் அற்புதம். ஈச்ச மரத்தை வளைத்து அதன் காய்களை ஏவுகணைகளாக மாற்றும் திறன் ஆர்ச்சியை விட்டால் யாருக்கு வரும்?? ஆர்ச்சி தறி கெட்டுவிட்டது என்று அது செய்யும் அட்டுழியங்கள், மரங்களை பிடுங்கி எதிரிகளை விரட்டுவது, எந்த ஹைடெக் ஆயுதங்கள் இல்லாமல் சாதாரண பொருட்களை கொண்டு சன்டையிடும் திறமை என ஆர்ச்சிகே உரித்தான கலக்கல் சாகசம் இது.

  சோ மூன்று கதைகளும் மூன்று அறிய முத்துகள் என்னை பொறுத்தவரை.

  சில நண்பர்கள் இங்கே நெகடிவ் கமெண்டுகள் கொடுத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.OFTER-ALL
  அன்று முதல் இன்று வரை ஸ்பைடர் என்றால் காதில் பூச்சுற்றும் ரகமான கதைகள் தானே. எப்போதும் ஸ்பைடரிடம் லாஜிகல் அப்ரோச் இருந்தது இல்லையே. விதவிதமான ஆயச்சர்யப்படுதும் கருவிகள் தானே இது போன்ற கதைகளில் உள்ள ஒரு ஈர்ப்பு.


  லக்கி லுக் சிக் பில் போன்றவை என்றுமே நம்மை கவரும் காமெடிகள். காமெடிகள் என்றும் காலத்துக்கு ஏற்று அதிகம் மாறுவதில்லை. சார்லி சாப்ளின், டாம் & ஜெர்ரி, நாகேஷ் காமெடிகளை நாம் இன்றும் ரசிக்கிறோம்.வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ரசிக்கிறோம். ஏனென்றால் அவர்கள் காமெடிகளை சிரியஸ் ஆக எடுத்துகொண்டு செய்துள்ளார்கள்.காமெடிகளை செய்வதற்கு ஹைடெக் டெக்னாலஜி தேவை இல்லை.தேவை மிக சிறந்த படைபற்றலே.

  அதே சமயம் அன்றைய பில்லா பாணி சண்டை காட்சிகளை இன்றாய படங்களில் பார்த்தல் எவ்வளவு சொதப்பலாக இருக்கும்.இது போன்ற சீரியஸ் காட்சிகளுக்கு இன்றைய ஹைடெக் டெக்னாலஜி தேவை. இதையும் மீறி ரஜினியின் பில்லாவை ரசிக்கா அந்த காலத்தில் ரசித்த அன்றைய தலைமுறை வாசிகாளால் மட்டுமே முடியும்.
  ஆர்ச்சி ,ஸ்பைடர் கதைகளும் அது போலவே.1960-1970 இல் சிரியசை காமெடியாக செய்துள்ளார்கள்.இது போன்ற கதைகளை ரசிக்க அன்று ரசித்த நம்மால் மட்டுமே முடியும்.

  சோ இன்றைய தலைமுறைவாசிகள் அனைவரையும் கவர வேண்டும் என்றால் இன்றைய ஹைடெக் தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் சீரியஸ் கதைகளால் மட்டுமே முடியும்.

  இந்த பெரிய பதிவிற்கு மன்னிக்கவும். மனதில் பட்டதை சொல்ல வேண்டும் என்று தொன்றியதலே சற்று நீளம் அதிகம் ஆகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. Dear Wisky Susky,
   Wonderful.... Marvellous... You thoroughly analysed the stories.... You know how to enjoy this saga... Nice angle of review....
   Thanks for the positive comment...

   Delete
 104. நண்பர்களே.....

  என்னுடைய கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில நாட்களாக கருத்து பதிவு செய்ய முடியவில்லை....[ அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் ].....


  சூ. ஹீ . சூ ஸ்பெஷலை வெளியிட ஆசிரியர் ஏன் இவ்வள‌வு தயங்கினார் என்பது இதழை படித்தவுடன் புரிந்தது.....

  மாயாவி கதை படித்து மாளவில்லை.......[ அவ்ளோ நீஈஈஈஈஈளம்] .......ஸ்பைடர் கதையை படித்து முடிக்கும் முன் காது கொள்ளாத அளவு பூ.....[ குருவி பட விஜய் தான் நினைவுக்கு வருகிறார் ] ....ஆர்ச்சி பரவாயில்லை......  ஒரு வேளை கதைத்தேர்வுதான் தவறோ? என்னிடம் உள்ள பழைய‌ மாயாவி , மற்றும் ஸ்பைடர் கதைகளை இன்றும் ரசிக்க முடிகிறதே?


  எது எப்படியோ....சூ.ஹீ. சூ. .......என்னமோ போங்க.......  கருத்துபதிவுசெய்ய முடியாமல் போனது நல்லதுதான் என்று நான் கூறியது இப்போது புரிகிறதா? முன்பே கூறியிருந்தால் பல வாசகர்கள் டிஸ்கரேஜ் செய்யப்பட்டிருப்பர்.......

  ReplyDelete
 105. All the readers comment increased the curiosity of the Special... I think i will get my copy tomorrow...
  Spider, Archie, Steel Claw Mayavi(going to miss him, so sad...) are my evergreen heroes.. I am sure i am going to the enjoy the book...
  Some Perfect people require always the perfect beautiful story.. I never mind people making negative comments.... Probably be they couldnt digest the ugly, villainous Spider... All we receiving now is online people review only.. In lion comics office they said today about the glorious response(from the "offline" readers) of the Spider, Archie Special.... Will write my point of review once i read the book... Thanks for our Editor, for releasing our Superheroes.... Dont hesitate to release any other Spider & Archie stories... Before reading this issue I guess this Special will be a super, duper smash hit...

  ReplyDelete
 106. வெற்றி ....வெற்றி .....புத்தகம் கிடைத்துவிட்டது ....சிறு பிள்ளையைப்போல் தாங்கமுடியாத சந்தோசம் ...மூன்றுமுறை ஹாட்லைன் படித்துவிட்டேன் .இரவு பெங்களூரின் குளிர்க்காற்றில் மாடிமேல் உட்கார்ந்து முழுவதையும் படிக்கப்போகிறேன் .....மீண்டும் ஒரு முறை என்னை குழந்தையாக மாற்றிய விஜயன் சர் அவர்களுக்கு நன்றிகூற வார்த்தைகளில்லை ....

  ReplyDelete
 107. @விஸ்கி-சுஸ்கி

  அருமை நண்பா, அருமையான கருத்துகள், மூன்று கதைகளிலும் ரசிக்க நிறைய விழயங்கள் இருக்கின்றது. காமிக்ஸ் என்பதே டைம் பாசுக்காக தவிர இதில் லாஜிக் பார்பதருக்கு எதுவும் இல்லை. ஒரு வரில சொல்லனும்ன, சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் டைரக்டர் பேரரசு படம் மாதிரி. இந்த படம், டைரக்டர் பாலா படம் மாதிரி இருக்கணம்னு எதிர் பார்ப்பது தப்பு.

  ReplyDelete
 108. I got the Courier today.will get the book in the weekend.but since all have already read and complained about the Spider story.I will be with mixed feeling while reading the book.Let me hope i enjoy the book.

  ReplyDelete
 109. சில நண்பர்கள் இங்கு கூறுவது போல், ரசனைக்கு வயது ஒரு பொருட்டே அல்ல, இதே ஸ்பைடர் பல வெற்றிகளை குவித்துள்ளார், ஆனால் இந்த கதை தெரிவு தான் சற்று பாதை மாறி விட்டது.

  எனிவேஸ் இது மாதிரியா கருத்துவேருபடுகளுக்கு இடமளிக்க கூடாது என்பதாலேயே நமது ஆசிரியர், விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் என காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழினை மறுபதிப்பு கதைகளுக்கு ஒதுக்கி விட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள் தேவையான பிரதிகளை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். மேலும் லயன் முத்து புது பாதைக்கு நெருடல் இல்லாமலும் இருக்கும்.

  இந்த இதழினை பொறுத்தவரை, மாயாவி மற்றும் ஆர்ச்சி is up to the mark. But that is not so, as far as spider story is concerned.

  ReplyDelete
 110. 'ராட்சசத் தேள்' மர்மம்- ஒரு அஃமார்க் ஆர்ச்சி கதை! பளிச் வெள்ளைக் காகிதத்தில் ஆர்ச்சியை பார்ப்பதே தனி அழகுதான்! படித்துவிட்டு அடுத்த பக்கத்தை புரட்டும்போது திடும் என வந்திடும் அரைப்பக்க அளவிலான ஓவியங்கள் குபீர் அழகு!
  கதை நெடுக ஆர்ச்சி சதிலீலாவதியில் வரும் கமலின் பையனைப்போல கையில் காமிராவுடன் ராட்சசத்தேளையே சுற்றிச்சுற்றி வந்து படமெடுப்பது ரசிக்கவைக்கிறது.

  ஆர்ச்சியின் வழக்கமான குறும்புகள் இதிலும் அவ்வப்போது கிச்சுக்கிச்சு மூட்டுகிறது (பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்துகொள்வது, எதையாவது அடித்து நொறுக்கியபின் கைக்குட்டையால் நெற்றியை துடைப்பது, etc.,)

  முன்பு சில கதைகளில் வந்ததைப்போல், விக்டரின் கழுத்தில் தொங்கும் ட்ரான்ஸ்மீட்டரின் உதவியின்றி தன்னிச்சையாகவே கதைமுழுக்க ரகளை செய்திடும் ஆர்ச்சி பாணியில் இந்தக் கதையும் அமைந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்!

  ReplyDelete
 111. ---------------------------
  இந்த இதழில் பலூன் sizeம் எழுத்துருக்களும் மிகவும் வித்தியாசமாக / மோசமாக இருக்கிறது.

  ஒரே பக்கத்தில் மிகப் பெரிய எழுத்துக்கள், அதே பக்கத்தில் மிகச்சிறிய எழுத்துக்கள் என்று கலந்துகட்டி கலவையாக இருக்கிறது.

  எடிட்டர் சொன்னபடி ஸ்பெல்லிங் மிஸ்டேக், பலூன் டைரக்‌ஷன் மிஸ்டேக், ரீப்பீட் என்று மிஸ்டேக் மயம் :(

  கம்பியூட்டர் வரும் முன் எப்படி பலூனுக்குள் ஒரே சைஸ் எழுத்துக்களால் அழகாக எப்படி நிரப்ப முடிந்தது ? டெக்னாலஜியும் image processingம் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் அப்படி செய்யமுடியவில்லை என ஆயாசமாக இருக்கிறது :(

  --------------------------------

  ReplyDelete
  Replies
  1. சரியான கேள்வி! நியாயமான வருத்தம்!

   Delete