Powered By Blogger

Saturday, December 13, 2025

டாபிக் 1 ; சப்ஜெக்ட்ஸ் 3

நண்பர்களே,

வணக்கம்! சில பயங்கள் ஒரு தொடர்கதையே..! பேச்சுப் போட்டிக்கு விடிய விடியத் தயாராகியிருந்தாலும், மேடையேறும் போது மறந்து தொலைச்சிடுமோ? என்ற பயம் ஒருநாளும் போனதில்லை! ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுத்து வூட்டு விசேஷத்துக்கு உற்றார் உறவினரையெல்லாம் அழைச்ச பிறகும், "ஆள் தேறுமா? அல்லாங்காட்டி ஆளில்லாத கடையிலே டீ ஆத்துற மாதிரி ஆகிப் போயிடுமா?'' என்ற பீதி கடைசி நிமிடம் வரை உடன் பயணிக்கும்! வாசக சந்திப்புகளுக்கு நீங்கள் தவறாது ஆஜராகிவிடுவீர்கள் என்பது தெரிந்தாலுமே - ஹால் நிரம்பும் வரைக்கும் நெஞ்சம் "பக்கு.. பக்கு'' என அடித்துக் கொள்வதை நிறுத்திடாது! And மிகச் சரியாக அதுவே தான் கதை - ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் புதுச் சந்தாக்களின் சேகரிப்புகள் அரங்கேறி வரும் தருணங்களிலும் ! "வழக்கமான எண்ணிக்கையைத் தொட்டுப்புடுவோமா?'' என்று ஒவ்வொரு நாளும் உள்ளாற உடுக்கை அடித்துக் கொண்டேயிருக்கும்!

And no different this time too! இந்த முறை அக்டோபர் ஆரம்பத்திலேயே புதுச் சந்தாக்களை அறிவித்து விட்டதால், ஏதோவொரு தூரத்து மகாமகத்து நிகழ்வு அது என்பது போல் தலைக்குள் ஒரு feeling! So டிசம்பர் இதழ்களோடு 2025-ன் சந்தா நிறைவுற்ற பிற்பாடே நம்மில் பலரும் புதுச் சந்தாக்களின் சிந்தனைகளுக்குள் இறங்கிடுவர் என்பது தெரிந்தாலுமே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் நடனங்கள் நின்றபாடில்லை! 

நேற்றுத் தான் இந்த சீஸனின் முதல் ஜரூரான நாள் & கணிசமான சந்தாக்கள் கரம்கோர்க்கத் துவங்கின எனும் போது லைட்டாக மூச்சு விட்டுக் கொண்டேன்! இந்த நொடியில் பாதித் தொலைவை நெருங்கியிருக்கிறோம் என்பதையும் பார்க்க முடிந்தது! தொடரும் நாட்களில் சந்தாக் குடும்பத்தில் ஐக்கியமாவோர் அணி மேன்மேலும் வலுப்பெற்றால் செம குஷியாகிப் போகும்! And இப்போதே சந்தா ரயிலில் புதியவர்கள் சிலர் என்ட்ரி கொடுத்திருப்பது செம ஹேப்பி சமாச்சாரம் 💪💪! Let's join the journey guys 🙏

சந்தா பற்றிய topic-ல் இருக்கும் இந்த நொடியினில் சின்னச் சின்னதாய் சில உரத்த சிந்தனைகள் folks!

* 2026-க்கான சந்தா நண்பர்களின் ஃபோட்டோக்களை ஜனவரி (கலர்) டெக்ஸின் முதல் பக்கத்தில் ப்ரிண்ட் செய்து தருவதாகச் சொல்­லியிருந்தோம்! டிசம்பர் 20-க்கு முன்பாக ஃபோட்டோக்கள் அனுப்பிடலும் அவசியமென்று சுட்டிக் காட்டியிருந்தோம்!ஆனால், 'இதையெல்லாம் வசந்த மாளிகை 'சமயத்திலேயே பாத்தாச்சு பாஸு' என்றோ - என்னவோ,சந்தா செலுத்தியுள்ள நண்பர்கள் இதற்கென பெரிதாய் மெனக்கெடக் காணோம்! Or மறந்தும் விட்டிருக்கலாம்! சந்தாக்களுடன் தம் ஃபோட்டோக்களையும் சேர்த்து அனுப்பியுள்ளோரை, ஒற்றைக் கையின் விரல்களில் எண்ணி விடலாம்! மக்களே; இது டிசம்பர் மாதம் ; பைண்டிங்கில் தினசரி காலெண்டர் பணிகளும், புத்தாண்டு டைரிகளும் குவிந்து கிடக்கும் சீஸன்! இந்தத் தருணத்தில் சாவகாசமாய் இருந்தோமேயானால் தைப்பொங்கலுக்குத் தான் ஜனவரி புக்ஸ் கிடைக்க நேரிடும்!" விதி எழுதிய வெற்றி வரிகள்'' is all ready to go to print! உங்களது வதனப்படங்களை துரிதமாய் அனுப்பி வைத்தீர்களெனில் ஜமாய்த்துவிடலாம்! உயர் resolution-ல் படங்கள் தேவை & அவற்றை வாட்சப்பில் அனுப்ப வேண்டாம்!! ஈ-மெயில் மட்டுமே ப்ளீஸ்! 

மாறாக -

'அட, நெதத்துக்கும் பாக்குற மூஞ்சியை பொஸ்தவத்திலே வேற பாக்கணுமாக்கும்?' என்று எண்ணுவோராய் நீங்கள் இருப்பின் no problems....ப்ரீயா விட்டுப்புடலாம்!

So இது தான் Subject # 1...உங்கள் பதில்களை :

PHOTO YES

என்றோ 

PHOTO NO

என்றோ தெரிவிக்கக் கோருகிறேன் folks!

* அப்புறம் 2026 சந்தா நண்பர்களுக்கு ஒரு க்யூட் காலெண்டரும் உண்டென்று ப்ராமிஸ் செய்திருந்தோம்! இங்கும் குட்டீஸ் ரசனைக்கென ஒன்று ; பெரியோரின் ரசனைக்கென இன்னொன்று and உங்களுக்கு எது வேண்டுமென தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தோம் ! Again இங்குமே பெரிதாய் செல்ப் எடுக்கக் காணோம் தான்! So இக்கட  I have a question for you guys : 

இந்த காலண்டர் தரும் திட்டமிடல் ஓகே தானா - அல்லது இது தேவையற்ற ஆணியா?

ஜுனியர்களுக்கென டிசைன் செய்துள்ள காலெண்டர் மெய்யாலுமே செம cute ஆக வந்துள்ளது ! So காலண்டர்  ஓ.கே. தான் என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில், இந்த ஒற்றை டிசைனை மட்டுமாவது ரெடி செய்து காலேண்டராக்கி அனுப்பிடலாமென்று தோன்றுகிறது! மாறாக - இதனில் பெருசாய் பிரயோஜனம் இராதென்றே நீங்கள் கருதினால், அதை drop பண்ணி விட்டு சிவனே என அடுத்த வேலையைப் பார்க்கலாம்!

"இதெல்லாம் நான் கேட்டேனா? மருவாதியா சந்தாக்களுக்கு மட்டும் என ஒரு பிரத்தியேக புக்கை போட்டுத் தொலைக்க வேண்டியது தானே? அரையணா பிரயோஜனம் இல்லாத அன்பளிப்புகளால் யாருக்கு என்ன லாபம் மேன்?" என்ற உங்களின் ஒரு அணியின் மைண்ட்வாய்ஸ் loud & clear ஆகக் கேட்குது தான்! ஆனால் எனது இடத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவது சுலபமே அல்ல என்பது தான் சிக்கலே ! முன்பு போல குட்டி டெக்ஸ் கதைகளை தனி புக்காய் போட இப்போதெல்லாம் அனுமதி லேது! So செய்வதாக இருந்தால் வேறு கதைகள் எதையாச்சும் கொண்டு முழுசாய் ஒரு புக்கை ரெடி செய்து, அதனை சந்தாவில் அல்லாதோருக்குக் கொடுக்க மாட்டோம் என்று தான் சொல்லிட வேண்டிப் போகும்! அவ்விதம் மறுப்பது நிரம்பவே வெறுப்பை ஈட்டவல்ல செயல் என்பதை முந்தைய அனுபவம் உணர்த்திடுகிறது ! முன்நாட்களில் இந்த ரீதியில் நான் பாட்டுக்கு செய்து வைத்த சில தீர்மானங்களின் தாக்கங்கள், நம்மாட்களின் சில்லுமூக்குகளை சிதறடிப்பதை கண்கூடப் பார்க்க முடிந்த பிற்பாடு - அதே தப்பை மறுக்கா செய்யலாகாது என்று தீர்மானித்தேன். "ஏன் - நாங்களும் பணம் தந்து தானே புக்ஸ் வாங்குறோம் - எங்களுக்கு மட்டும் இது ஏன் கிடையாதாம்??" என எகிறுவோரை சமாளிக்க முடியாது நம்மாட்கள் பரிதாபமாய் முழிக்க நேரிடுகிறது! End of the day,  புக்சை சந்தா மார்க்கத்திலோ, முகவர் மூலமோ, ஆன்லைனிலோ வாங்கும் சகலரும் நமது வாசகர்களே எனும் போது, "EXCLUSIVE for SUBSCRIBERS" என்று உருப்படியான இதழ் ஒன்றைத் தயாரிக்க மனசு ஒப்ப மறுக்கிறது! இந்தக் காலண்டர் option கூட நெருடலே, ஆனால் அது வாசிப்புக்கான சமாச்சாரம் அல்லவே என்று சொல்லி என்னை நானே  சமாளித்துக் கொண்டேன்!

So இந்த காலண்டர் விஷயம் is Subject # 2. சொல்லுங்களேன் folks - என்ன செய்யலாமென்று?

CALENDAR OK

என்றோ 

CALENDAR NOK

என்றோ தெரிவிக்கக் கோருகிறேன் folks!

* அப்புறம் ரூ.300/-க்கு gift voucher உண்டு & அதனைக் கொண்டு 2020-க்கு முன்பான நமது இதழ்களை வாங்கிக் கொள்ளலாமென்றுமே சொல்­லியிருந்தோம்! அந்த அறிவிப்பின் பின்னணிக் காரணமே கொரோனா காலகட்டத்துக்கு முன்பான நமது கூடுதல் ப்ரிண்ட்ரன்களின் புண்ணியத்தில் கிட்டங்கியில் குவிந்து கிடக்கும் backissues, யாருக்கேனும் அன்பளிப்பாகவாவது பயன்படட்டுமே ; அப்படியாச்சும் கொஞ்சம் இடம் காலியாகிக் கொள்ளுமே என்ற எண்ணம் தான்! ஆனால், அந்த முன்மொழிவில் பெருசாய் உடன்பாடின்றிப் போய் ஆங்காங்கே நம் தலையில் நண்பர்களில் ஒருசாரார் மத்தளம் கொட்டியது தான் அரங்கேறியது!

So இங்குமே சின்னதாயொரு option! 

"Gift voucher எனக்கு ஓ.கே." எனும் நண்பர்களுக்கு, அறிவித்தது போலவே ஜனவரி இதழ்களோடு vouchers அனுப்பிடப்படும் & புத்தக விழாக்களிலோ, அல்லது நம்மிடமிருந்தோ புக்ஸ் பெற்று அந்த வவுச்சர்களை redeem செய்து கொள்ளலாம்! சேலத்து நண்பர் ரகுராம்ஜி முன்மொழிந்தது போல - பத்துப் பதினைந்து கூப்பன்களை ஒன்றிணைத்து, அவற்றிற்கான புக்ஸைப் பெற்று அந்தப் பகுதிகளின் பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாக்கிடும் திட்டத்தையும் அழகாய் நிறைவேற்றிடலாம்!

மாறாக "எனக்கு இதிலெல்லாம் பிரியமில்லை'' எனும் நண்பர்கள், சந்தா தொகைகளில் ரூ. 200-ஐ கழித்துக் கொண்டு அனுப்பி வைக்கலாம். ஒரு சலுகையினை பொருளாய் / புக்காய் தரும் போது தானே விசனங்கள் தலைதூக்குகின்றன?! மாறாய் அதனை தொகையில் கழித்துக் கொள்ளும் option ஆகத் தந்து விட்டால், யாருக்கும் வருத்தம் இருக்கக் கூடாது என்பது எனது அபிப்பிராயம். But மூ. ச. போய் வர, இங்கும் ஏதேனும் முகாந்திரம் உள்ளதா guys? இருப்பின் சொல்லுங்கோ ப்ளீஸ்!

So கூப்பனா? அல்லது விலையில் ரூ. 200 சலுகையா ? என்ற தேர்வினை உங்களிடமே விட்டு விடுகிறோம் folks! 

*Of course ஏற்கனவே சந்தா செலுத்தி முடித்திருக்கும் நண்பர்களுக்கும் இந்த option உண்டு தான்! கூப்பன் வாணாமே? எனக் கருதுவோர் - சென்னை புத்தக விழா ஸ்பெஷல்களிலோ, மே மாத ஆன்லைன் விழா ஸ்பெஷல்களிலோ இந்த ரூ. 200-ஐ சமன் செய்து கொள்ளலாம்!

ஆக இது Subject # 3...

இதற்கான பதிலை இங்கு பதிவிட அவசியமில்லை, ஆபீஸில் சொன்னாலே மதி 👍

ரைட்டு.., இனி காத்திருக்கும் அடுத்த வாரத்து சேதி பற்றிப் பார்க்கலாமா?

சேலம் புத்தகவிழா ஒரேயடியாய் ஜனவரி 29 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் இனி மேலும் "சாம்ப­லின் சங்கீதம்'' புக்ஸை கையில் தேவுடு காக்க வைப்பதாக இல்லை! புக் ஒன்று 1.75 கிலோ எடை இருப்பதால் மொத்த புக்ஸும் செமத்தியாய் இடத்தை ஆக்கிரமிக்கின்றன! So வரும் 18-ம் தேதிக்கு கூரியர்களில் புக்ஸை அனுப்பிடவுள்ளோம்! பேக்கிங்குக்கே நமது front office இடம் ததிகினத்தோம் போடப் போகிறது என்பதால்- எனது அறையை அடுத்த மூன்று தினங்களுக்கு நான் மறந்து விட வேணும் தான்! அசுரத்தனமான பேக்கிங் பணி நம்மாட்களுக்குக் காத்துள்ளது என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

And காத்திருக்கும் டிசம்பர் 21 to 28 தேதிகளில் தேனி புத்தகவிழா நடைபெறவிருக்கிறது! முதன்முறையாக நாம் அங்கு ஆஜராகிடவுள்ளோம்! Wish us luck folks!

ஜனவரியின் தோர்கலாரை சடுதியில் முடித்து அச்சுக்கு அனுப்பிட நான் நடையைக் கட்டுகிறேன் guys! டிசம்பரின் லார்கோ + இளம் டெக்ஸ் பற்றிய அலசல்களால் இந்தப் பக்கத்தினை சுறுசுறுப்பாக்கிடலாமே ப்ளீஸ்! Bye all.. see you around! Have a fun Sunday!

199 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. "போர் கண்ட சிங்கம்"
    முத்து காமிக்ஸ் வெளியீடு.

    ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஆங்கிலப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. Action sequences, Romance என்று படம் பிரமிப்பாக இருக்கும், கொஞ்சம் புரியாமலும் இருக்கும். இல்லையா? அந்த மாதிரி! 😇

    நியூயார்க் பங்குச் சந்தையின் டௌஜோன்ஸ் குறியீடு ஒரு நாள் படு வேகமாக இறங்குகிறது. பதறிடித்து அனைவரும் பங்குளை விற்கின்றனர். உடனே பங்குகள் குறியீடு ஏறுமுகமாகி விட, ஒரு லேடிதான் இதற்கு காரணம் என்றும், அவள் லார்கோவின்சின் ஜுனியர் மார்கெட்டிங் மேனேஜர் என்றும் தெரிய வந்து, லார்கோ மீது பழி போடப்படுகிறது. ஓடுகிறார், ஓடுகிறார் புத்தகம் முடியும் வரை ஓடுகிறார் லார்கோ.

    அந்தப் பெண்ணை லார்கோ விசாரித்த போது, அவள் கம்ப்யூட்டரை யாரோ ஹேக் செய்து,
    சிகாகோவிலுள்ள HFT என்ற தானியங்கி கம்ப்யூட்டர் மூலமாக இதைச் செய்திருக்கிறார்கள் என்கிறாள்.

    ஜோனாஸ் என்ற அந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் அறைக்குள் நுழைந்து, ஆராயும் போது சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும்.
    கஷ்டப்பட்டு தப்பிக்கிறார்கள். தப்பிக்கும் போது, HFTயும் சதியால் வெடித்துச் சிதற, அந்தப் பழியும் லார்கோவின் மேல்!
    இதற்கிடையில் லார்கோவின் W குழுமத்தின் பங்குப் பத்திரங்களும் திருடப்படுகிறது.

    யார் இதைச் செய்கிறார்கள்? என்ன காரணம்?என்பதை சேனியா என்ற FSB புலனாய்வு உளவாளியோடு, ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள் 'செய்து' ஒரு வழியாய் தன்னைச் சிக்க வைத்த மாஸ்டர் மைண்ட்டை லார்கோ கண்டு பிடித்தாரா? சிக்கல்களிலிருந்து விடுபட்டாரா? என்பதுதான் கதை.

    ஜோனாஸ் என்ற பிரம்மாண்ட கம்ப்யூட்டர் யூனிட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சி,
    ரஷ்யாவின் பனிக்கட்டிகள் கொட்டிய காட்டில் -30' டிகிரியில் சிக்கிக் கொள்ளும் காட்சி,
    மெட்ரோ ரயிலில் நடக்கும் action அதகளம்,
    கரீபியன் கடலில் பசுமையான மலைகளை ஒட்டி நிற்கும் அழகான படகு,
    இவையனைத்திற்கும் கொடுக்கப்பட்ட சீரான வண்ணம்
    என்று காட்சியமைப்புகள் மனதில் நிற்கிறது. 👏👏👏

    ஸ்னைப்பர் கன் லேடியும்,
    மாஸ்டர் மைண்ட் வில்லனும்,
    'அட, பார்ரா! ' என்று புருவத்தை உயர்த்த வைக்கிறார்கள்.

    சினிமாவுக்கே உரித்தான திரைக்கதை, காட்சிகளுக்கிடையேயான எடிட்டிங், கேமரா கோணம் போன்ற வித்தைகளால் படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்து விட்டது 'போர் கண்ட சிங்கம்'

    மொழிபெயர்ப்பு மெனக்கெடலுக்கும், பங்குச் சந்தை பற்றிய விளக்கத்திற்கும் தனி Hats off! 👍

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்..வாழ்த்துக்கள்.

      Delete
    2. விமர்சனம் அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..

      Delete
    3. நன்றி நண்பர்களே! 🙏

      Delete
  3. Replies
    1. ஓரமா இருந்துட்டு போ..

      Delete
  4. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  5. போட்டோ
    காலண்டர்
    கூப்பன்

    எவ்லாமே தேவை சார்

    ReplyDelete
  6. புகைப்படங்கள் டெக்ஸ் இதழில் என்பது மிகப் பெரிய கனவு.. அது அருமையான விஷயம் சார். சிறார் காலண்டர் மற்றும் பெரியோர் காலண்டர் மாடல் நம் வாட்ஸ் அப் பக்கத்தில் தரவேற்றினால் ஆப்ஷன் எடுத்துக் கொள்வோருக்கு வசதியாக இருக்கும். கூப்பன் முறை நல்ல விஷயம்.. அதிலும் இரு தேர்வுகள் இருக்கிறது.. ஆண்டின் முதல் மாதமே சாம்பலின் சங்கீதத்துடன் களை கட்டக் காத்திருக்கிறது. பொங்கலோ பொங்கல் கூறி கொண்டாடிக் கொண்டே காத்திருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. போட்டோவை ஜல்தியா அனுப்புங்க சார்

      Delete
  7. Replies
    1. குறிச்சிக்க சொல்லிடலாம் சார் 👍

      Delete
  8. Replies
    1. வாங்க.. வாங்க..

      Delete
    2. சார் மூன்று கேள்விகளுக்கும் பதில் Yes மட்டுமே.

      Delete
  9. போட்டோ நோ மற்ற இரண்டும் எஸ் சார்...

    ReplyDelete
    Replies
    1. போட்டோக்கு நஹி சொன்ன நீவிர் இன்று முதல் "கூச்சக் கோவலர் " என்று அன்போடு அறியப்படுவீராக தலீவரே!

      Delete
    2. அவர் போராளி சார்... அதான் போட்டோ தராம அடம் பிடிக்கிறார்.

      Delete
    3. "கூச்சக் கோவலர்"

      ROFL :-)

      Delete
  10. Photo -Yes, Calendar -Yes, Coupon -Yes

    ReplyDelete
  11. நான் நாளை சந்தா செலுத்த போகிறேன். எனது சாய்ஸ்
    1. Photo - OK
    2. Calender - Ok
    3. Paying சந்தா with Rs 200 discount - No need of coupon

    எங்கள் கோரிக்கையை ஏற்று சந்தாதாரக்கு ரூபாய் 200 discount கொடுத்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  12. Sir ,I have 2 subscription.same answer for 2 subscription
    Photo YES
    Calendar OK

    ReplyDelete
  13. இந்த பதில்கள் எப்பக்குள்ளே ஆபிசுக்கு அனுப்ப வேண்டும்? உடனே சொல்லிடலாமா? போட்டோ அனுப்ப ஆபிஸ் ஈமெயில் தானே?

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 31
      உடனே இல்லை, ஆகஸ்ட் 31 சொன்னா போதுங்க
      ஆமாங்க உங்க ஆபிஸ் மெயிலுக்கு தான் 😝😝😝

      Delete
    2. என்னது ஆகஸ்ட் 31?? 🤔🤔🤔🤔🤔

      Delete
  14. எனக்கு மூன்றுமே வேண்டும்

    ReplyDelete
  15. Photo - yes (நாளைக்கே மெயில் அனுப்பிடுறேன்)
    Calendar - yes
    Coupon - no (book fair special releasla discount Venum)

    ReplyDelete
  16. CBF ஸ்பெஷல் புக்ஸ் என்ன என்ன சார்

    ReplyDelete
  17. Hi Editor sir ,
    Photo - Yes
    Calendar - OK
    Coupon - OK

    ReplyDelete
  18. Replies
    1. ரட்ஜா @ உங்களின் கிப்ட் கூப்பனை சேலம் நண்பர் ரகுவிடம் கொடுக்கலாமா, இவைகளை கொண்டு பள்ளி நூலகங்களுக்கு நமது காமிக்ஸ் புத்தகங்களை கொடுக்க உள்ளோம். உங்களின் பங்களிப்பு இதற்கு அவசியம் தேவை. 🙏🏻

      Delete
  19. போட்டோ : எஸ் எஸ்
    காலண்டர்:எஸ் எஸ்
    கூப்பன்:எஸ் எஸ்

    ReplyDelete
  20. ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

    ReplyDelete
  21. Photo Yes

    Calendar OK - If possible need both versions (Kids, Adults)

    Gift Coupon is Good?


    இந்த மாத சந்தா புக்ஸ் மற்றும் சாம்பலின் சங்கீதம் - 2 க்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
  22. ஞாயிறு வணக்கங்கள் 💐💐💐

    ReplyDelete
  23. என்னை மாதிரி இளைஞர்களுக்கு ஏதாச்சும் ஷ்பெசல் காலண்டர் உண்டுங்களா..?!

    (மாடஸ்டி போட்டோவை போட்டு குடுத்துடப்போறிங்க.. இதுக்குமேல படிச்சி என்னால டாக்டராக முடியாது)

    ReplyDelete
    Replies
    1. ஜமீனய்யா-விற்கு மாடஸ்டி & கார்வின் காலண்டர் பார்சல்

      Delete
    2. ரம்யா @ சிறிய திருத்தம்.மேசேரி கண்ணனுக்கு, மாடஸ்டி + அமையா படம் போட்ட ஸ்பெஷல் காலெண்டர் பார்சல்.

      Delete
    3. ஒரு குச்சி ஒரு குல்ஃபி..
      வநது நின்னு எடு செல்ஃபி..

      Delete
    4. //மேசேரி கண்ணனுக்கு, மாடஸ்டி + அமையா படம் போட்ட ஸ்பெஷல் காலெண்டர் பார்சல்.//

      இது நல்லாருக்கே😊😊😁😁😁

      Delete
  24. Photo ok
    Calendar ok
    Coupon ok
    All three wanted sir

    ReplyDelete
  25. சார்...

    Photo - ok (அட்டைப்படத்துல டெக்ஸ் வில்லர் பக்கத்துல/அவருக்குப் பதிலா போட முடியுமாங் சார்?😝)

    Calendar - ok (இது நல்லா இருக்கும்னு தோனுது)😍

    Coupon - ok (சேலம் ரகுராமன் ட்ட கொடுத்துடலாம்னு இருக்கேன்)😇

    ReplyDelete
    Replies
    1. இந்த தபா அட்டையிலே பல்க்கான கார்சன் மட்டும் போதும் - டெக்ஸ் வாணாம்னு சொல்ல வர்றீங்க?

      Delete
  26. சந்தாகாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எனது கண்ணோட்டத்தில், இந்த சிறு வட்டத்துக்குள் இவற்றை தவிர வேறு ஏதும் நம் பெரிதாக செய்திட முடியாது என்ற தோன்றுகிறது. இவற்றில் சிலவற்றை நீங்கள் செய்தும் இருக்கிறீர்கள்.


    1.ஒரு "Hall of Fame" பக்கத்தை உருவாக்கலாம். சந்தாக்காரர்களின் பெயர்களை அவர்களுக்கு தரும் புத்தகத்தில் மட்டும் (Names Only) ஒரு அழகான வடிவத்தில் அச்சிடுவது.
    மேலும் ஆசிரியரின் கையெழுத்துடன்.
    சேகரிப்பு மதிப்பு: ஆசிரியரின் கையெழுத்து அந்தப் புத்தகத்தை ஒரு சாதாரணப் பிரதியிலிருந்து சேகரிக்கத் தகுந்த அரிய பொருளாக (Collectible Item) மாற்றுகிறது. எதிர்காலத்தில் அதன் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) அதிகமாக இருக்கும்.கடையில் கிடைக்கும் பிரதிகள் பொதுவாகக் கையெழுத்திடப்பட்டிருக்காது. சந்தாக்காரர் முன்கூட்டியே ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

    2. சந்தாக்காரர் புகைப்படம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடுவது", ஒரு மிகச் சிறப்பான மற்றும் உணர்வுப்பூர்வமான (Emotional) யோசனை என்பதில் சந்தேகமில்லை.


    3. தள்ளுபடி கூப்பனாக (Discount Coupon - Discount on future purchases) இருக்கலாம். சந்தாக்காரர்கள் நிறுவனத்தின் பழைய காமிக்ஸ்கள் அல்லது புத்தக விழாக்களில் வாங்கும்போது தள்ளுபடி அளிப்பது நிதி ரீதியான மதிப்பை (Monetary Value) அளிக்கும்.

    4. அடுத்து வெளி வருவதை முன்னதாகவே அறிந்து கொள்ளும் வாட்ஸ்அப் Private குழு
    இதுதான் மிகவும் குறைந்த செலவில், அதிக ஈடுபாட்டை (Engagement) உருவாக்கக்கூடிய சலுகை. இதில் வெளியீட்டுத் தேதிகள், அடுத்த இதழின் கதை முன்னோட்டங்கள், ஓவியர்களின் வீடியோ பகிர்வுகள் ஆகியவற்றை அளிக்கலாம்.

    5. வேரியண்ட் கவர் (Variant Cover)
    சந்தாக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரத்யேகமான அட்டைப்படம் (Exclusive Cover) வழங்குவது மிகச் சிறந்த சலுகை. இது சேகரிக்கும் ஆர்வத்தை (Collector Value) அதிகரிக்கும்.

    6. காலண்டர்
    காமிக்ஸ் புத்தகங்களின் முக்கியப் பக்கங்கள் அல்லது ஓவியங்களைக் கொண்டு வருடத்தின் மொத்த காலண்டரையும் வடிவமைக்கலாம். இது சந்தாதாரரின் வீட்டில் உங்கள் பிராண்டின் பெயர் ஆண்டு முழுவதும் இருக்க உதவும் (Brand Visibility)..

    ReplyDelete
  27. சந்தாகாரர்களுக்கு வழங்கப்படும் சலுகையில் எனது யோசனை பாகம் 2

    1.(Digital Archive Access)
    சலுகை: உங்கள் நிறுவனத்தின் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் முதல் இதழை (Issue #1 கத்தி முனையில் ) அல்லது குறிப்பிட்ட சில அத்தியாயங்களைச் சந்தாக்காரர்களுக்கு மட்டும் இலவசமாக டிஜிட்டல் வடிவில் (PDF/CBR) அணுகும் உரிமையை வழங்குவது.
    சந்தாக்காரர்களுக்கு நிறுவனம் மீது அதிக மதிப்பு உண்டாகும். பழைய காமிக்ஸை புதிதாகத் தேடி வாங்கும் செலவு அவர்களுக்குக் குறையும்.
    செலவு: ஒரு முறை டிஜிட்டல் கோப்புகளைத் தயார் செய்தால் போதும். அதன் பிறகு செலவு பூஜ்யம்.


    2.கதாபாத்திரங்களின் பெயரிடும் வாய்ப்பு (Character Naming Opportunity)
    வரவிருக்கும் காமிக்ஸ் இதழ்களில், கதைக்கு முக்கியமில்லாத சிறு கதாபாத்திரங்களுக்கு (Minor Characters) சந்தாக்காரர்களின் பெயர்களைச் சூட்டும் வாய்ப்பை ஒரு சிறு போட்டியில் (Lottery/Contest) வழங்குவது.
    ஒரு வாசகரின் பெயர் அதிகாரப்பூர்வமாக ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய உணர்ச்சிபூர்வமான அங்கீகாரமாகும்.

    3.பிரத்யேக மின் அஞ்சல் செய்திமடல் (Exclusive Creator Newsletter)
    ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களிடமிருந்து மட்டும், வேறு எங்கும் வெளியிடப்படாத, காமிக்ஸ் உருவாக்கும் செயல்முறையில் உள்ள சுவாரஸ்யமான அனுபவங்கள், நகைச்சுவையான நிகழ்வுகள் அல்லது தனிப்பட்ட குறிப்புகள் அடங்கிய ஒரு பிரத்யேக மின் அஞ்சல் செய்திமடலை (Email Newsletter) அனுப்புவது.
    மதிப்பு: இது மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட (Personalized) மற்றும் நெருக்கமான உணர்வை அளிக்கும்.

    4.புக்மார்க் மற்றும் ஸ்டிக்கர் ஒரு வித்தியாசம் செய்தல் (Book Marks and Stickers)
    ஒவ்வொரு சந்தாகளுக்கு காமிக்ஸ் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு கொண்ட ஒரு அழகான புக்மார்க் வழங்குவது போல அவர்கள் சந்தாதாரர்கள் புகைப்படத்தை book marks தயார் செய்து அனுப்புவது.

    இது எனது யோசனை மட்டுமே .

    ReplyDelete
    Replies
    1. முக்கால்வாசி யோசனைகள் நாம் ஏற்கனவே நடைமுறை செய்தும் /செய்திடவுமுள்ள சமாச்சாரங்கள் நண்பரே!

      மீதம் unfortunately நடைமுறை சாத்தியம் அல்லாதவை!

      Delete
    2. lion comics sir "சாம்ப­லின் சங்கீதம்" book panna mudiyavillai ipothu vangi kolla ethenum vali irukka pls

      Delete
  28. போட்டோ mail பண்ணியாச்சு.
    photo ok.
    Calender Nok.
    coupon Nok.

    ReplyDelete
    Replies
    1. வணக்கங்கள் சகோ
      நலமா, சகோ?
      கொஞ்ச நாளாக இந்த பக்கம் காணோம்

      Delete
    2. பத்து சார், உங்களின் கிப்ட் கூப்பனை சேலம் நண்பர் ரகுவிடம் கொடுக்கலாமா, இவைகளை கொண்டு பள்ளி நூலகங்களுக்கு நமது காமிக்ஸ் புத்தகங்களை கொடுக்க உள்ளோம். உங்களின் பங்களிப்பு அவசியம் தேவை. 🙏🏻

      Delete
    3. Ok sir with pleasure. How can I do it

      Delete
    4. நலமே சிஸ்டர். அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு தான் இருக்கிறேன்.

      Delete
    5. I will share his number. He will give you the details. Thanks a lot sir 🙏🏻

      Delete
  29. Photo : NO
    Calendar : OK
    Coupon : OK
    2026 ம் ஆண்டு சந்தா எண் : 102
    சண்முகம்
    திருச்செங்கோடு.

    ReplyDelete
  30. Photo OK,calendar OK,coupon OK இன்னும் special வெளியீடுகளுக்கான அறிவிப்புற்கு double ok

    ReplyDelete
  31. போட்டோ நோ.
    காலண்டர் நோ.
    கூப்பன் எஸ்.
    இப்படியும், அப்படியும் என பத்து திசையிலும் யோசிக்கும் ஆசிரியர் கிடைத்தது எங்களின் வரமே.

    ReplyDelete
    Replies
    1. திசைக்கு ஒன்றாய் ஒரு மூ.ச. அமையப் பெற்றது அடியேனின் வரம் சார் 💪

      Delete
  32. -. போட்டோ - (பழைய போட்டோ தேடிப்பார்த்தேன் - கிடைக்கவில்லை.. ஹி.ஹி)
    எனக்கு அந்த பக்கத்தில் "டெக்ஸ் வில்லரின் " பிரத்தியேகப்
    படம்.. வேண்டும் ..
    - காலண்டர் -0K - (சூப்பர்).
    -- கூப்பன் ok..
    (ஆனாலும் ஒரு Qu..
    ரூ 300 க்கு புக் வாங்கி அதில் 10% டிஸ்கவுண்ட் - அதில் ஒரு குட்டி புக் - வாங்கினால் ok தானா...)

    ReplyDelete
  33. சார் எனது கூப்பன அங்கேயே வைங்க...பள்ளிகளுக்கு நண்பர்கள் வாங்கும் போது எனது கூப்பிடும் அவர்களுக்கு தந்து விடுங்கள

    ReplyDelete
  34. Photo.... Yes/ Calendar.... Yes /Coupon....yes 👍😍🥰

    ReplyDelete
  35. 1. Photo --- Yes
    2. Calendar -- Yes
    3. Coupon --- No. Please allow discount.

    ReplyDelete
    Replies
    1. சார்... "டிஸ்கவுண்ட் ரூ. 200" எனக் குறித்து ஒரு ஈ-மெயில் அனுப்பிட வேணும்.... இங்குள்ள chats நம்மாட்களுக்கு தெரியாத விஷயம்! தவிர இங்குள்ள பெரும்பான்மை chat IDs யாருடையன என்பதே எனக்கே தெரியாது 🥴

      Delete
  36. Yes
    Yes
    Yes
    Can i know the email id to send the photo

    ReplyDelete
  37. 1.Photo-YES
    2.Calendar -- YES
    3.Coupon --- YES...

    ReplyDelete
  38. The Everest of Tamil Comics---""The Magic Moment Special""--- எடிட்டர் விஜயனின் ஆயிரமாவது இதழ்.....

    நண்பர்களே@

    லயன்-முத்து எடிட்டர் திரு.விஜயன் Vijayan S சார், 16வயது இளைஞராக லயன் காமிக்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சாதனைகள் & பரவலான சோதனை முயற்சிகளோடு தனது காமிக்ஸ் பயணத்தை 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறார். அவரது பயணத்தில் எத்தனையோ சாதனை மைல்கற்கள், அசாத்திய சிகரங்கள், கத்தி மீது நடக்கும் நுட்பங்கள், அந்தர்பல்டிகள்...என பல்வேறு அசகாயங்களை அசால்டாக செய்து வருவதை நாம பார்த்து வியந்துள்ளோம்...!

    இந்த 40ஆண்டு பயணத்தில் பல்வேறு ஸ்பெசல் இதழ்களை வெளியிட்டு நம்மை மகிழ்த்து வர்றார்...முந்தைய க/வெ யுகத்தில் வெளியான ஸ்பெசல்கள் பலதும் இன்றும் காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் இடையே பிரசித்தமானவை.......

    #ரூ2க்கு காமிக்ஸ் பரவலாக இருந்த 1984-85ல ரூ4விலையில் வெளியான அதிரடிகள் இரும்புமனிதன், சதிவலை & கொலைப்படை...

    #ஆர்ப்பாட்டமாக அறிமுகமே ஸ்பெசல் இதழில் கண்ட அரிசோனா அதிகாரி டெக்ஸ் வில்லரின் கோடைமலர்கள், தீபாவளி மலர்கள்....

    #அசத்தலான சலபன் அட்டைப்படங்கள், அரை டஜன் சூப்பர் ஹீரோக்களின் கதைகளோடு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த ரூ5 விலையிலான பாக்கெட் சைஸ் லயன் & திகில் கோடைமலர்கள் & லயன் தீபாவளிமலர்கள்......

    #கனவல்ல நிஜம்தான் நம்புங்கள் என சொன்னாலும் கிள்ளிப் பார்த்துத்தான் இது நிஜம் என உணர வைத்த- தி பாக்கெட் டைனமைட் ரூ10க்கு வெளியான தி கிரேட் பாக்கெட் சைஸ் இதழ், "லயன் சூப்பர் ஸ்பெசல் ".....

    #பெயரிலேயே அதிரச்செய்த தி லயன் 50, "டிராகன் நகரம்"....

    #மீண்டும் விலையில் புரட்சி, கதைகளில் ரசிகர்களை கட்டிப்போட்ட-லயன் சென்சுரி ஸ்பெசல் & Top 10 ஸ்பெசல்.....

    #ரூ100க்கு ஒரு காமிக்ஸ் இதழா என விலையில் மட்டுமல்லாமல்- தரத்தில், அளவில், கதைத்தேர்வுகளில் என சகலத்திலும் விழிகளை அகல விரியச் செய்த பிரமாண்டங்கள் மெகா ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல் & கெளபாய் ஸ்பெசல்.....

    #15வருட கனவை நனவாக்கி- விலையிலும், கதை நீளத்திலும் புதிய சரித்திரம் படைத்த ரூ200க்கு வெளியான லயன் ஜம்போ கலெக்டர்ஸ் ஸ்பெசல்-"இரத்தப்படலம்....." என பல்வேறு ஸ்பசல்கள் முதல் 27ஆண்டுகளில்..!!!!

    2012 கம்பேக்கிற்கு பிறகு.....

    #லயன் கம்பேக் ஸ்பெசல்

    #முத்து நெவர் பிஃபோர் ஸ்பெசல்-_NBS

    #லயன் மேக்னம் ஸ்பெசல்

    #தங்க தலைவனின் "மின்னும் மரணம்"

    #தல டெக்ஸின் தி லயன்250

    #தமிழ் காமிக்ஸ் சிம்மாசனத்தின் உச்சியில் தல டெக்ஸை அமர்த்திய "சர்வமும் நானே!"

    #தன்னிகர் அற்ற வெற்றிகோட்டை "இரத்தக்கோட்டை"

    #காமிக்ஸ் உலகை புரட்டிபோட்ட மறுபதிப்பு வண்ணத்தில் "இரத்தப்படலம்1.0" முழு தொகுப்பு...

    #சத்தமின்றி யுத்தம் தொடங்கி, மெளன இடியாய் முழங்கிய "டியூராங்கோ"

    #அரிசோனா புயலுக்கே பிரளயமாகிய டைனமைட் ஸ்பெசல்

    #கதை விவாதங்களில் உச்சமான சிகரங்களின் "சாம்ராட்" தோர்கல்...

    # மயக்கும் "மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரியின்
    "பிஸ்டலுக்கு பிரியா விடை

    #மிக நீண்ட கதைக்கு சொந்தக்காரர் நம்ம மறதிக்கார நண்பர் ஜேசன் ப்ளையின் இன்னொரு அத்தியாயம் "இரத்தப்படலம்2.0..

    #டெக்ஸ் 75----"சுப்ரீமோ ஸ்பெசல்"

    #தல-தளபதி தீபாவளி ஸ்பெசல்ஸ்2023

    #லக்கியின் ஆண்டுமலர் காமெடி தோரணங்கள்...

    #முத்து காமிக்ஸின் 50ஆம் ஆண்டு இரட்டை சிறப்பிதழ்கள்...

    #கார்சனின் கடந்த காலம் என்ற காவியம் பிரமாண்ட அளவில்...

    ---இந்த ஸ்பெசல் இதழ்களுக்கு மகுடம் வைத்தது போலான எடிட்டர் விஜயன் தயாரிப்பில் ஆயிரமாவது இதழ்"---வெளியானதை கொண்டாடும் செலிபரேசன் ஸ்பெசலாக இம்மாதம் வெளியாகிள்ளது டெக்ஸின்,,,,,

    """""The Magic Moment Special"""""

    வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் இந்த MMS எடிட்டருக்கு மட்டுமல்லாமல் நமக்குமே வெரி வெரி ஸ்பெசல் மொமென்ட் தான்....!!!!


    --- சேலம் TEX விஜயராகவன்

    ReplyDelete
    Replies
    1. அசத்தீட்டீங்க விஜய ராகவன் சார்! அருமை!
      Cricket highlights பார்ப்பது போல, முத்து லயன் ஹைலைட்ஸ் பார்த்தது போல் இருந்தது.
      Fantastic 👏👏👍💐

      Delete
  39. 1000 புத்தகம் வெளியிட்ட ஆபூர்வ விஜயனாருக்கு...

    மீண்டும் எங்கள் அன்பின் வாழ்த்துகள்

    😍🌹🔥♥️

    ReplyDelete
    Replies
    1. 🥴🥴.. நன்றிகள்.... ஆனால் இது போன வருஷ சமாச்சாரமாச்சே சார்?

      Delete
    2. இன்னைக்கு முதல் வருட anniversary சார்...

      Delete
  40. Gift voucher எனக்கு ஓ.கே - double ok ✅ sir

    ReplyDelete
  41. // டிசம்பர் 21 to 28 தேதிகளில் தேனி புத்தகவிழா நடைபெறவிருக்கிறது! முதன்முறையாக நாம் அங்கு ஆஜராகிடவுள்ளோம்! Wish us luck folks! //

    வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்.

    சின்னமனூர் சரவணன் @ உங்க ஏரியா. களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. சார், வேலைப் பளுவில் நடப்பாண்டின் காமிக்ஸ் படிக்கவே நேரமின்றி இருப்பவரை தொந்தரவு செய்யலாகாது!

      Delete
  42. Photo - YES
    Calendar (Both Versions) - Yes
    Coupon - Yes or Discount also Ok

    ReplyDelete
  43. ஊழியம் செய்ய விரும்பு - மெக்சிகோ எல்லைக்குள் தப்பிப்பதற்காக நுழையும் நம்ப கவுண்டமணி செந்தில் ஜோடி அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் செம. அதில் நமது செந்தில் அதாங்க ரூபி கிடைத்த இடத்தில் எல்லாம் கவுடமணியை அதான் ஜார்ஜை கலாய்ப்பது ரசிக்கும்படி இருந்தது.

    மெசிக்கோ நுழைந்து அந்த மக்களின் பிரச்சனைய கதையின் போக்கில் சொல்லி அதனை நமது காமெடி ஜோடி தீர்த்து வைத்தது போல் கதையை அமைத்தது நன்று.

    ஜார்ஜின் பாதிரியார் வேடம், அவரின் ஒருதலை காதலி தான் கடத்தபட்ட கவலையை மறந்து விழுந்து விழுந்து சிரிப்பது அக்மார்க் காமெடி.

    வழக்கமாக யுதத்தின் காட்சிகள் கதை முழுக்க பயணிக்கும் இந்த பட்டாளத்தில் இந்தமுறை அது இல்லாமல் கதையை கொண்டு சென்றது வித்தியாசம்.

    மொத்ததில் மனதில் மகிழ்ச்சி முகத்தில் புன்னகை.

    ReplyDelete
    Replies
    1. நவம்பரே இப்போ தான் முடிஞ்சிருக்கா சார்? சீக்கிரமா டிசம்பருக்கு வாங்க...

      Delete
    2. லார்கோ - பாதி முடித்து விட்டேன் சார்.

      கடந்த மாதம் வேலை அதிகம் சார். நேற்று நவம்பர் புத்தங்களை ஈரோடு ரயில் பயணத்தில் முடித்தேன். இப்போது பெங்களூர் செல்லும் பயணத்தில் லார்கோ சார்.

      Delete
    3. சகோதரர் கொஞ்சம் வேலை பிஸி
      கிடைக்கும் நேரத்தில்
      நவம்பர் புத்தகங்களை படித்தார் என சந்தோசப்படனும் சார்

      Delete
    4. விமர்சனம் அருமை சகோ

      Delete
    5. எல்லாம் சரிதான்..
      ஜார்ஜ் ன்றது யாரு பரணி..? நானும் கதை முழுக்க தேடிப்பாத்துட்டேனே..?!

      Delete
    6. சாரி கண்ணா அது ஸ்கூபியும் ரூபியும். Thanks for pointing this.

      Delete
  44. புயலில் ஒரு சூறாவளி.


    இதுவரை டெக்ஸ் கதை எதுவும் இவ்வளவு தெளிவான ஓவியங்களுடன் வந்ததில்லை என்னும் அளவு பளிச் என்று உள்ளது.. முழுக்க ,முழுக்க உணர்வுகளின் சிறப்பிதழ் .கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ,ஸ்பின்னர் முதல்( ஸ்கின்னர்டிரேடிங் போஸ்ட் பன்னாக்ஞாபகமுள்ளதுங்களா?)அனைவரும் போப் ஆண்டவர் ரேஞ்சுக்கு அடுத்தவருக்கு உதவ முன் வருகிறார்கள்.அதிலும் ஒயிட் ஸ்வான்சகோதர காப்பாளர் என்றே பட்டம்( புதுப் பெயர்) வழங்கப் படுகிறான் மொத்தத்தில் டெக்ஸ் மெல்ல மெல்ல ஒரு ஹீரோ வாக மாறுவது ஒரு காவியமாக ரசிக்கும்படி சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் மெல்ல மெல்ல ஒரு ஹீரோ வாக மாறுவது ஒரு காவியமாக ரசிக்கும்படி சொல்லப்பட்டுள்ளது//

      👌👌👌

      Delete
    2. சரிதான் நண்பரே. 👍

      Delete
  45. Photo - No
    Calendar - Yes
    Coupon - Yes

    ReplyDelete
  46. "புயலில் ஒரு சூறாவளி"
    லயன் காமிக்ஸ் வெளியீடு.

    பனி சூழ்ந்த காட்டின் நடுவில் இருந்த நதியில், ஒரு படகு வீடு. இளம் ஜோடி ஒன்று அங்கு மெய்மறந்திருக்கின்றன.
    காட்டிலிருந்து வெளிப்பட்ட, மனசாட்சி இல்லாத கொலைகாரக் கும்பல் ஒன்று அந்த ஜோடியைக் கொல்ல, மெதுவாய் நடந்து சூழ ஆரம்பிக்கின்றன. பனிக்கட்டி உடையாமல், சப்தம் வராமல் நெருங்குகிறார்கள். திக்.. திக்.. தடக்.. தடக்..
    என்ன ஆகும்?
    திடீரென முளைக்கிறார்கள் இளம் டெக்ஸூம், பிளாக் புட் செவ்விந்தியர்களும். துப்பாக்கிகள் வெடிக்கின்றன. இளம் ஜோடியும் துப்பாக்கி ஏந்துகிறது. கும்பல் திருப்பி கொல்லப்பட, தப்பிக்கும் நால்வர் உறைந்து போகும் குளிர் நதியில் ஓடுகிறார்கள். ஆகா, என்ன ஒரு சீன்! சூப்பரப்பு!

    கதையின் ஆரம்பத்திலேயே மேற்கண்ட நிகழ்ச்சியை தன் நண்பர்களிடம் சொல்லி முடிக்கிறான், தப்பித்த நால்வரில் ஒருவன், பிளாக் கன்னிகன்.
    அந்த நண்பர்களில் ஒருவனான ரிக்கார்டோ கோமஸைத் தேடி அந்த போர்ட் பென்டன் என்ற ஊரைத் தேடி ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறார் ரேஞ்சர் கிட் கார்சன்.

    ஒரு புறம் டெக்ஸ் வில்லர் அந்த ஜோடியைக் காப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ரிக்கார்டோ கோமஸைத் தேடிக் கொண்டிருக்கிறார் கிட் கார்சன்.

    இருவரும் தனித்தனியாக சாகசங்கள் நடத்துகிறார்கள்.

    பெரிய கதையாக இருந்தாலும், இயல்பான சாகச நிகழ்ச்சிகளோடு பயணிப்பதால், போரடிக்கவில்லை.

    நினைவில் நிற்பவை:
    நதியில் அந்த படகு வீடு
    லில்லி என்ற துணிச்சலான பெண்.
    வித்தியாசமான பேரோடு இருந்தாலும், பரிதாபத்துக்குரிய மனிதர் லாப்ளேஸ், செவ்விந்திய இளம் வீரன் ஒய்ட் ஸ்வான்,
    மற்றும் சில செவ்விந்திய வீரர்கள்.

    கதையை சுவாரசியமாகப் படித்தாலும், சற்று ஏமாற்றமே அடைந்தேன்.
    ஆம்! புத்தகத்தின் பின் அட்டையில்,
    'டெக்ஸும், கார்சனும் கரம் கோர்க்கும் முதல் சாகசம்' என்று போட்டிருந்ததால், கடைசிப் பக்கம் வரை ஆவலாய் இருவரும் சந்திக்கப் போவதை தேடி ஏமாந்தேன். இருவரும் கதையில் ஒருவரையொருவர் சந்திக்கவே இல்லை. அப்புறம் எதற்கு இருவரும்
    'கரம் கோர்க்கும்'
    முதல் சாகசம் என்று அட்டை விளம்பரம்?
    புரியவில்லை!

    ReplyDelete
  47. Electric 80s முடியும் தருவாயில் உள்ளது, 2026 புது வருடமும் இதே போல் கதம்ப புத்தகம் தொடருமா ji

    ReplyDelete
    Replies
    1. இதை முடிச்சிட்டு யோசிப்போம் சார்!

      Delete
  48. புயலில் ஒரு சூறாவளி...

    இதழும் ,கனமும்..தரமும் வழக்கம் போல் அசத்த

    இதழை கனமாக கைகளில் ஏந்தி முதலில் வாசிக்க ஆரம்பித்த பொழுது சித்திரங்கள் அட்டகாசமாக இருப்பினும் மொத்தமாக புரட்டி பார்க்கும் பொழுது சித்திரங்களில் ஏதோ ஒன்று விடுபடுவது போல் ஓர் எண்ணம் ஆனால் வாசிக்க வாசிக்க தான் புரிபட நேர்ந்தது ஓவியரின் திறமை..கதை முழுவதும் குளிரிலியே விரைத்து போய் இறந்து விடும் அளவிற்கு இருக்கும் பிரதேசங்களிலியே கதை முழுவதும் அமைந்து இருக்க அதனின் பின்புலமே அந்த விடுபட்ட மன எண்ணம்..அட்டகாசம்..


    ஏற்கனவே நினைத்த நேரத்திற்கு மேலாக சரியாக இரண்டரை மணி நேரம் வன்மேற்கு உலகில் உலவ வைத்து விட்டார் இளம் டெக்ஸ்...அல்ல இளம் கார்ஸன் அல்ல அல்ல ...இளம் டெக்ஸ் ஒரு பக்கமும் இளம் கார்ஸன் ஒரு பக்கமும் என அசரடித்து விட்டார்கள்...ஆனால் டெக்ஸ்ம் கார்ஸனும் எவ்வாறு சந்தித்து கொள்ள போகிறார்களோ என எதிர்பார்த்தே வாசித்து வந்து கொண்டிருந்த பொழுது இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் நேருக்கு நேராய் சந்தித்து கொள்ளாது போனது ஓர் ஏமாற்றமே...இருவரும் நேருக்கு நேராய் அறிமுகமாகும் அந்த சாகஸத்தை தேடி பிடித்து விரைவில் அறிமுகம் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் சார்...அதே சமயம் கார்ஸனின் கடந்த காலம் மூலம் அறிமுகமான ரே க்ளம்ஸ்..லீனா இருவரும் எங்கே எவ்வாறு அறிமுகமானார்கள் என்பதை இந்த சாகஸத்தின் மூலம் அறிய முடிந்தது அருமை...இதனை படித்து விட்டு கார்ஸனின் கடந்த காலத்தை வாசிக்க நேர்ந்தால் ஏற்கனவே ஆழமாக மனதை கவர்ந்த கார்ஸனின் கடந்த காலம் சாகஸம் இன்னமும் ஆழமாக ரசிகர்களின் மனதில் ஆழமாக நின்று விடும் என்பது உறுதி...அதே போல் தேடப்படும் குற்றவாளியான டெக்ஸ்ம் எவ்வாறு ஷெரீப் அல்லது ரேஞ்சர் ஆக போகிறார் என்பதற்கான முன்னோட்ட அறிமுக இதழாகவும் இந்த சாகஸம் அமைந்து உள்ளது..மொத்தத்தில் கெளபாய் ரசிகர்களுக்கு இந்த புயலில் ஒரு சூறாவளி மிகப்பெரிய அட்டகாச விருந்தாக அமைந்து இருக்க டெக்ஸ் ,கார்ஸன் ரசிகர்களுக்கு இன்னமும் கூடுதல் விருந்து இந்த சாகஸம் எனலாம்...கார்ஸனுடன் ..ரே..லீனா என அறிமுகம் ஆன கதாபாத்திரங்கள் மனதை ஆக்ரமித்தது போல ப்ரெடீ லில்லி செவ்விந்திய தலைவன்..அவரது மகன் ..டெக்ஸ்ற்கு உதவும் முன்னாள் குற்றவாளிகள் என அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் ஆழமாய் நிற்குமளவிற்கு அனைவருமே அசரடித்து விட்டார்கள் ...டெக்ஸ் எப்பொழுதும் ஒரு புயல் எனில் இளம் டெக்ஸ் & கார்ஸன் எப்பொழுதும் ஒரு சூறாவளிதான் என்பதை இந்த புயலில் ஒரு சூறாவளி இதழ் நிரூபித்து விட்டது...அனைத்து காமிக்ஸ் ரசிகர்களிடமும் இருக்க வேண்டிய அட்டகாசமான புதையல் தான் இந்த புயலில் ஒரு சூறாவளி...

    இறுதியாக

    மொழி ஆக்கத்திற்கு தனியாக ஒரு பூங்கொத்தையும் பரிசளிக்கலாம்...அருமை..அட்டகாசம்..

    ReplyDelete
    Replies
    1. அருமை சார்!
      இருவரும் கரம் கோர்க்கும் முதல் சாகசம் என்ற அட்டைப்பட வாசகம்தான் எனக்கும் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. மற்றபடி, கதை நன்றாகவே இருந்தது.

      Delete
  49. எனக்கு மூன்றுக்குமே எஸ் தான். காலண்டருக்கு ஆபீஸில் சொல்லிவிட்டேன். போட்டோ இனி அனுப்ப வேண்டும். எனக்கு கூப்பன் தான் வேண்டும் அது வந்ததும் அதை நான் பயன்படுத்தி புத்தகங்கள் வாங்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  50. புயலில் ஒரு சூறாவளி

    ரே கிளமன்ஸும் கார்சனும் சந்திக்கின்றனர்.ரே கிளமன்ஸும் ஸ்கின்னரும் சந்திக்கின்றனர்.ரே கிளமன்ஸும் லீனாவும் சந்திக்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. கிட்டும், டெக்ஸும் சந்தித்தார்களா? என்பதுதான் சார் கேள்வியே!

      Delete
  51. 2007 மார்கெட்டில் நான் முதன் முதலாக நுழைந்த துரதிர்ஷ்டம் ஆன நேரம்....சிதம்பரம் வந்து p note என வாய் திறக்க டெரிவேட்வ்ஸ்னா என்ன என கேட்டு ஃபியூச்சரை வாங்கி ஒரு லட்சத்தை இழந்து அடுத்த இரண்டு மணி நேரங்களில் நான் ஆடிய சூதாட்டம் லார்கோக்கிணையானது அன்றே லாசை சரி செய்தேன்...பின்னர் வந்த காலங்களில் கற்றதும் இழப்பை பெற்றதும் பின்னர் தெரிந்ததும் இழந்தது அதிகம்...முதல் பாகத்தை முடித்தாச்சு...என்ன ஒரு வேகம்....இங்கேயும் சென்செக்ஸ் ல வாங்கி நிஃப்டில அதே கம்பெனி விலை வித்தியாசத்தை உபயோகித்து பல்க்கா வாங்கினா லாபமீட்டலாமென ஏஜெண்டுகள் சொல்லித் தந்தது நினைவில்...இதை வைத்து ஒரு கதை எழுத முடியுமா....லார்கோ வந்தா புள்ளியில் துவங்கும் புயல் பரவுதல் போல வேகம் ...வேகம் ...வேகம்...இரண்டாம் பாகம் படித்ததும் வருகிறேன்....வழக்கம் போல லார்கோ அதகளம்

    ReplyDelete
    Replies
    1. சரில நீ திருச்செந்தூர் லார்கோ தான்லே

      Delete
  52. Photo - YES Already Given by Whatsapp
    Calendar - OK
    Coupon - OK

    ReplyDelete
  53. ' போர் கண்ட சிங்கம் '
    அட்டைப்படத்தில் என்னை வியக்க வைத்த உழைப்பு.
    நம்மில் எத்தனை பேர் இதனை கவனித்திருப்போமோ தெரியாது.
    பங்குச்சந்தை விளக்கம் பறறிய ஒரு குறிப்பு ஸ்டிக்கர் அட்டையில் வலது கீழ்ப்புற ஓரத்தில் ஒட்டியிருக்கிறது.
    அதற்கு என்ன என்கிறீர்களா?
    லார்கோ முன்பாக எரிந்து கொண்டிருக்கும் பல மெழுகுவர்த்திகள். அந்த மெழுகு வர்த்திக் கோடுகளுக்கு இணையாக சரியாக பொருந்தி வருமாறு, வித்தியாசம் தெரியாத அளவிற்கு மிக நேர்த்தியாக, கவனமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்ற நுணுக்கமான வேலைகளே கவனம் பெறுகின்றன. பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  54. ***** போர் கண்ட சிங்கம் *****

    கதையை இரண்டுமுறை வாசித்தேன். பொறுமையாக - நிதானமாக ஒருமுறையும், சடுதியாய் ஒருமுறையும்! முதல் முறை படிக்கும்போதே (குறிப்பாய் இறுதிப்பக்கங்களில் முழு சதி திட்டத்தின் பின்னணியும் விளக்கப்படும்போது ) ஏறக்குறைய எல்லாமும் விளங்கி விக்கித்துப்போய் நின்றிருந்தேன் என்றாலும், கதையின் முழுபரிணாமத்தைப் புரிந்துகொள்ளவும், முதல்வாட்டி நான் படித்துப் புரிந்துகொண்டது சரிதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவுமே இரண்டாவதுவாட்டிப் படித்தேன்!

    முதலில் படைப்பாளிகளின் படைப்புத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை! லார்கோவுக்கென்றே ஒரு தனித்துவமான கதை - அதில் ஏகப்பட்ட முடிச்சுகள் - நடு நடுவே லார்கோவின் ஆக்ஷன் அதகளங்கள் - இறுதிவரை நாம் கணித்து விடவே முடியாத வில்லத்தனம் - டெக்னாலஜியின் சதிராட்டங்கள் - குட்டியூண்டு ரொமான்ஸ்! போதாக்குறைக்கு ஒவ்வொரு பிரேமிலும் நின்று கவனிக்கச் செய்யும் டிஜிட்டல் சித்திரங்களும், வியக்கவைக்கும் வண்ணங்களும்! யப்பா படைப்பாளி சாமிகளா.. கோவில் கட்டி கும்பிடணும்பா உங்களுக்கு!!

    வெளியூர் சாமிகள்தான் அப்படியென்றால், நம்ம உள்ளூர் சாமிவேறு தன் திகைக்க வைத்திடும் மொழிபெயர்ப்பாலும், வசனப் பிரயோகங்களாலும் நம்மை விக்கித்துப் போகச் செய்கிறது! வழக்கமாகவே லார்கோ கதைகளுக்கு நம் உள்ளூர் தெய்வம் தன் ஒட்டு மொத்த சக்தியை வெளிப்படுத்தும் தான்.. ஆனாலும் இதில் - க்ளைமாக்ஸ் காட்சியில் கூரைமேல் நின்றுக்கொண்டு 'ஓவ்' போடும் காந்தாரா சாமியைப் போல மிரட்டியிருக்கிறது! ருத்ர தாண்டவம் தெய்வமே!!🙏🙏 ( இந்த நேரத்தில் ஏனோ மேகி கேரிஸனின் கதைகளுக்கான மொழிபெயர்ப்பை ஞாபகத்தில் கொண்டுவராமல் இருக்கமுடியவில்லை! அது வேறு வகையான - ஜாலியான தாண்டாவமாயிற்றே!!)

    (கதையைப் புரிந்து கொள்ள அந்த 2 பக்கத் தூண்டுச் சீட்டு நன்றாகவே கைகொடுக்கிறது! அதை பத்திரமாக புத்தகத்திலேயே எங்காவது ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!)


    லார்கோ ரசிகர்களை 200% திருப்தி படுத்திடும் அட்டகாசப் படைப்பு இது!!👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

    இப்படிக்கு,
    இ. சி. ஈ. இ 🫅

    ReplyDelete
  55. நன்றிங்க ஜி. நான் ஒட்டிவிட்டேன்

    ReplyDelete
  56. 1.Photo-YES
    2.Calendar -- YES
    3.Coupon --- YES. Sent the details via mail too sir (Along with photos and Santha no.)

    ReplyDelete
  57. ... போர் கண்ட சிங்கம் ...
    சிறுகிறுக்க வைக்கும் கதைக்களம். லார்கோவின் அட்டகாசமான அதிரடி ஆட்டங்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. 89ம் பக்கத்தில் எழில் கொஞ்சும் கரீபியன் கடல் அழகாய் அள்ளுகிறது. படைப்புக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள் சார். உங்கள் உழைப்பு வீண் போகவில்லை.
    படித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய தலைப்பு,
    நிழலோடு ஒரு நிஜ யுத்தம்..

    ReplyDelete
  58. போர் கண்ட சிங்கம்,
    "உறைந்து கிடந்த நெவா நிதியைப் போலவே அவளது வாழ்க்கையும் ஜீவனற்றுச் சுழன்றது"
    "காற்றின் தூதன் நீங்கள் லார்கோ"
    "பணம் ஒரு அற்புதமான பணியாள்!ஆனால்,கண்றாவியானதொரு முதலாளி"-(கண்றாவியான என்பதற்குப் பதில் மோசமான முதலாளி சரியா இருந்திருக்குமோன்னு எனக்குத் தோணுச்சி)
    " பல்லில் சிக்கிய நாராக உறுத்திக் கொண்டிருந்தவன்"
    -கவனிக்கும்படியான வசனங்கள்...

    "யின் மற்றும் யாங் தத்துவம்-கொள்முதல் டிராகன்,விற்பனை டிராகன்- டாவோயிசம்"
    "ஜப்பானிய மெழுகுவர்த்திகள்-வெள்ளை மற்றும் சிகப்பு மெழுகுவர்த்திகள்" எனும் நெறிமுறைகள் வாசிப்பில் சுவராஸ்யம் கூட்டுகிறது...
    கவித்துவமான பெயர்கள்-மூன்று கறுப்புக் காகங்கள், கரும் மேகப் போர்வை,மார்னிங் ஸ்டார் எல்லாம் ஓகே,அதென்ன தூக்கு துரை-எனும் சொல்லாடல் ???!!!

    சோசியல் மீடியா இருமுனைக் கத்தி என்பது இதில் மீண்டும் புலனாகிறது...

    பாய்மரப்படகு- கருஞ்சிவப்பு...
    அட்டைப்படமும் கருஞ்சிவப்பு...
    அந்த தூரதேசத்து இளவரசன்-லார்கோ...

    பத்து பங்குப் பத்திரங்கள்-ஆயுதம் தரித்த தாக்குதல்-அந்த பத்திர ட்விஸ்ட் ஆஹா,இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு வாசிக்கும்போது தோன்றியது,பழைய டெக்னிக் என்றாலும் செம டெக்னிக்தான்...

    கேப்டன் சேனியா நெய்வனாவின் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் செம...

    இறுதியான க்யூட் இன்சைடர் ட்விஸ்ட் செம,எதிர்பார்க்கவில்லைதான்...

    ஒரு அடர்த்தியான கதைக்களத்தை கமர்ஷியல் டிராக்கில் பயணிக்க ஆகச் சிறந்த முயற்சி எடுத்துள்ளீர்கள்...

    ஒரு ஹைடெக் த்ரில்லரில்,ஹைடெக் மொள்ளமாரிகள்...

    போர் கண்ட சிங்கம்-யார் கண்டு அஞ்சும்...

    ReplyDelete
  59. Photo - YES
    Calendar - OK (if two models made, I need each one for my 2 subscriptions)
    Coupon - NOK

    ReplyDelete
    Replies
    1. சங்கர் சார், உங்களுக்கு கூப்பன் வேண்டாம் என்றால் உங்களின் கிப்ட் கூப்பனை சேலம் நண்பர் ரகுவிடம் கொடுக்கலாமா, இவைகளை கொண்டு அரசு பள்ளி நூலகங்களுக்கு நமது காமிக்ஸ் புத்தகங்களை கொடுக்க உள்ளோம். உங்களின் பங்களிப்பு இதற்கு அவசியம் தேவை. 🙏🏻

      Delete
  60. ஆசிரியரின் கவனத்திற்கு மட்டுமே!
    மாதம் மாதம் வெளியீடும் புத்தகங்களின் வெளியீடு எண் மாறுபடுகிறது ஏன்?? எங்களை போல் வருசை எண் படி புத்தகங்களை எப்படி முடியும்.. லண்டனில் வசிக்கும் என் போன்றோருக்கு.
    ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் புத்தகத்தை எப்படி வருசை எண் படி புத்தகங்களை சேகரிக்க முடியும்.. இனி வரும் காலங்களில் புத்தக எண் வரிசை படி புத்தகங்கள் வந்தால் நல்லது... லண்டனில் இருந்து. முகமத் சப்னாஸ்..

    நன்றி 🙏🙏

    ReplyDelete
  61. Dear Editor Sir,
    Paid for Subscription today
    Photo-Yes
    Calendar-Ok
    Coupon-ok

    ReplyDelete
  62. A suggestion about subscription. Why don't you create customer id for subscribers? for every year
    subscription subscribers just to mention customer id and subscribe. It's easy to identify the subscribers.

    ReplyDelete
  63. என்ன குமாரு @ சாம்பலின் சங்கீதம் இன்று கிளம்பினால் நாளை நமக்கு கிடைத்து விடுமா! இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்த்த காமிக்ஸ் புதையல் நாளை வருகிறது! செம காமிக்ஸ் விருந்து நமக்கு வருட முடிவில்!

    ReplyDelete
  64. சாம்பலின் சங்கீதம் புத்தக பார்சல் கிடைத்து விட்டது சார். அட்டகாசமான பேக்கிங். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமா புத்தகம் கிடைத்து விட்டது. செம்ம செம்ம.

      Delete
    2. இது காமிக்ஸ் புத்தகம் மக்கா, அதனால படிக்கனும் பொன்ராசு

      Delete
    3. படிச்சு கதை சொல்லுதல்...வேற லெவல்லநடத்திட்டு போனாங்க நம்ம கார்த்திகையும் ...சிங்கமும்

      Delete
  65. புத்தகம் மிரட்ட... முதல் பக்கமே கருப்பு நிறத்தில் சூன்யத்தை காட்டி சூன்யத்தினுள்ளேதானே எல்லாம் இருந்தன...ஆஹா அடி தூள்....பயணம் ஒரு பரிணாமத்தை காட்டினால் இது அதனோடு போட்டி போட....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் விஜயான்னு பாடத் தோனுது

    ReplyDelete
  66. அருமையான பேக்கிங்கில் செம கெத்தாய்,மிரட்டலாய் சா.ச கிடைத்தது,மகிழ்ச்சியோ மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  67. வணக்கம் குமார் இன்று சனிக்கிழமை

    ReplyDelete
  68. Replies
    1. மிரட்டலான தயாரிப்பு. புத்தகம் நல்ல நிலையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று பபிள் கவர், கொரியர்காரன் எப்படி அடித்தாலும் தாங்கும் வகையில் கனமான அட்டைப்பெட்டி. செம. நன்றி சார் உங்களுக்கும் நமது அலுவலக நண்பர்களுக்கும்

      Delete
    2. தூய தமிழ்வாத்தைகள் தொடர....Entropy தமிழ் படுத்தேன் மக்கா...ஆயிரம் பவுன் பரிசு

      Delete
  69. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  70. இந்தக் கதையை முதன் முதலாக 83 அல்லது 84 கமில் பார்த்து படித்த அப்பவே பரவசத்துல வேற லெவலுக்கு கொண்டு போன கதை....களிமண்ணை உருட்டி விளையாடிய காலமது...களிமண் மனிதர்களும் அந்த குத்தில் சிதறும் களிமண்ணும் செத்தாலும் கண்ணை விட்டதாலும்...செப்பு கவச உடையும்...கையை உயர்த்தி மின்சாரத்தை செலுத்தியும் கம்பி உறுதியாக தரப்பட்டால் இவர் உடல் அதை நோக்கி மறப்பதும் அறிவியலை அழகாய் விவரித்த கதை வடிவம்...அந்த மறைந்த பின் செப்பு கவச உடையை வித்தியாச படுத்தும் புள்ளிகளும்...மோரிஸ் வாழைப்பழ பெயர் கொண்ட அச்சிறுவன் உம் மனதில் ஒட்டிக் கொண்டு விட செப்பு கவச உடையை வருவாரா...மோரிஸ் வருவானா என எதிர்பார்ப்புடன் மாயாவியை தேட வைத்த இதழ்...நான் படித்த முதல் மாயாவி அல்லது இரண்டோ மூன்றோ இருக்கலாம்...அன்று கதையோடு நான் நேசிக்க காரணம் அந்த சைசும்...அதன் அதிக பக்கங்களுமே...லயனுக்கு 13 லார்கோன்னா...ஸ்பைடருக்கு யாரந்த மினி ஸ்பைடர்னா...டைகருக்கு மின்னும் மரணம்னா ...டெக்சுக்கு கார்சனின் கடந்த காலம்னா... லாரன்ஸ்டேவிட்டுக்கு ஃப்ளைட்731 ன்னா...மாயாவிக்கு களிமண்மனிதர்கள்தான்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்ல மக்கா. செம

      Delete
    2. என்னல 3:47 மணி வரைக்கும் தூங்காம என்ன பண்ற?

      Delete
  71. சாம்பலின் சங்கீதம் - படங்கள் கருப்பு வெள்ளையில் வேறு லெவல், அட்டகாசமான அச்சுதரம்.

    ReplyDelete
  72. @lion comics sir "சாம்ப­லின் சங்கீதம்" book panna mudiyavillai ipothu vangi kolla ethenum vali irukka pls

    ReplyDelete
  73. சாம்பலின் சங்கீதம்

    சுருக்கமாகச் சொன்னால்: ஹிட்லர் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டதாலும், ஜப்பான் சரணடைய பிடிவாதமாக மறுத்ததாலும், போரை விரைவாக முடிக்கவும், தனது பலத்தை நிரூபிக்கவும் அமெரிக்கா ஜப்பான் மீது இந்தத் தாக்குதலை நடத்தியது.

    விரிவாக

    அமெரிக்கா முதலில் அணுகுண்டு சோதனையை ஜெர்மனிக்கு எதிராக தான் திட்டமிட்டு இருந்தது.
    ஆனால் அதன் பிறகு சில மாற்றங்கள் நிகழ்ந்தது.
    அமெரிக்கா அணுக்கரு சோதனையை வெற்றிகரமாக முடிப்பதற்கு முன்பே germany சரண் அடைந்தது. May 1945.
    ஜெர்மனி வீழ்ந்த பிறகும், ஜப்பான் சரணடைய மறுத்து தொடர்ந்து போரிட்டு வந்தது. பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க வீரர்களுக்கு பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    அமெரிக்கா ஒரு Target Committee அமைத்து, கீழ்க்கண்ட காரணங்களுக்காக இந்த நகரங்களைத் தேர்வு செய்கிறது.

    ஹிரோஷிமா ஜப்பானின் முக்கிய ராணுவத் தலைமையகமாகவும், ஆயுதக் கிடங்காகவும் இருந்தது தெரிய வருகிறது,
    நாகசாகி ஒரு முக்கியமான துறைமுகம் மற்றும் போர்க்கப்பல்கள் தயாரிக்கும் இடமாக இருந்தது தெரிய வருகிறது.

    போரினால் இதுவரை பாதிக்கப்படாத (குண்டு வீசப்படாத) நகரங்களை அமெரிக்கா தேடியது. அப்போதுதான் அணுக்கண்டின் முழுமையான அழிவுத் திறனை உலகிற்கு நிரூபிக்க முடியும் என்று அவர்கள் கருதினர்.

    ஜப்பானியர்களை மனதளவில் நிலைகுலையச் செய்து, அவர்களை உடனே சரணடைய வைக்க ஒரு பெரும் அதிர்ச்சி தேவை என்று அமெரிக்கா முடிவு செய்கிறது.

    மேலும்
    ஜப்பான் மீது நேரடியாகத் தரைவழியாகப் போர் தொடுத்தால் லட்சக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இறக்க நேரிடும் என அமெரிக்கா அஞ்சியது. குண்டு வீசுவது போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்பினர்.

    போர் முடிவுக்கு வந்தபின் உலக வல்லரசாக உருவெடுக்கவிருந்த சோவியத் யூனியனுக்கு (ரஷ்யா) தனது ராணுவ பலத்தைக் காட்ட அமெரிக்கா விரும்பியது. இந்த பாம் போடும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தத் தாக்குதலில் சுமார் 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர், அதன் பாதிப்புகள் இன்றும் அந்த மண்ணில் உணரப்படுகின்றன.

    ReplyDelete
  74. கிறிஸ்டோபர் Nolan Oppenheimer movie பார்த்தால், சாம்பலின் சங்கீதம் இன்னும் கொஞ்சம் நன்றாக புரியும்

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் தான் பார்க்கணும்...

      Delete
  75. அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

      Delete