Powered By Blogger

Wednesday, January 01, 2025

புத்தாண்டும், புது அறிவிப்பும்...!!

 நண்பர்களே,

வணக்கம். உங்களுக்கும், உங்களவர்களுக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2025 அற்புத நல்ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் இல்லம்தோறும் தங்குதடையின்றி விநியோகிக்க புனித மனிடோ அருள் புரிவாராக!!

ஆண்டின் முதல் நாள்.. ! டிசம்பர் 31-க்கும், ஜனவரி 2-க்கும் எவ்விதத்திலும் வேறுபட்டதில்லை என்றாலும் இந்த நாளில் மனசுக்குள் மானாவாரியாய் சூளுரைகளும், உயர் இலட்சியங்களும் அலையடிப்பது நிச்சயமாய் எனக்கு மட்டுமல்ல என்பேன்! So "நெதத்துக்கும் வாக்கிங் போயே தீருவேன்'; "செல்போனை ராவிலே பத்து மணிக்குலாம் ஆஃப் பண்ணிப்புடுவேன்' ; "Sy Barry தவிர்த்த மற்ற ஓவியர்களின் வேதாளர் கதைகள் நமக்கு வந்து சேர்ந்தால் அவற்றிற்கு ""டாட்டா.. குடுபை'' சொல்லி ­ விடுவேன்! ;' குண்டூடூடூடூவான கதைகளையெல்லாம் பிரிச்சுப் போட மாட்டேன்!' என்ற ரேஞ்சுக்கு இந்த வருஷமும் சூளுரைகளுக்குப் பஞ்சமே நஹி தான்! பச்சே - வருஷப்பிறப்பின் அந்த மினுமினுப்பு சற்றே மட்டுப்பட்ட பிற்பாடு - "அது நேத்திக்கு; இது இன்னிக்கு' என்ற ரீதியில் புத்தி மந்தியாய் சண்டித்தனம் செய்வது இந்தாண்டிலும் தொடரவுள்ளதா? என்பதைப் பொறுத்திருந்தே பார்த்தாகணும்!

Talking of ""குண்டூடூடூ புக்ஸ்''- நமது சமீப Magic Moments ஸ்பெஷல் பற்றிப் பேசிட இது வாகான தருணம் என்றேபடுகிறது! "டிசம்பரில் வெளியான இந்த 250 பக்க டெக்ஸ் சாகஸம் முற்றுப் பெறவில்லை; இதற்கு இரண்டாம் பாகமுள்ளது; அதையும் சேர்த்து வெளியிடாத தெய்வக் குற்றம் உன் சொட்டை மண்டையில் குந்திக் கிடக்குது!' என்ற ரீதியில் ஆங்காங்கே விசனங்கள் & விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது தான்! But எப்போதுமே ஒவ்வொரு நாணயத்துக்கும் மறுபக்கமென்று ஒரு சமாச்சாரம் இருப்பது போலவே இந்த விவகாரத்திற்கும் இன்னொரு முகமுண்டு! அதைப் பற்றிச் சொல்கிறேனே!

டெக்ஸின் இந்த மெக்ஸிகோ சிறைப்படலக் கதைக்கு நாம் ஆர்டர் செய்தது 2024-ன் ஆரம்பப் பகுதியினில்! So இதழ் வெளியானதற்கு எட்டோ- ஒன்பதோ மாதங்களுக்கு முன்பாய் நாம் தேர்வு செய்திருந்த கதையிது! அந்நேரத்தில் இந்தக் கதை பற்றியோ; கதையின் பரிமாணம் பற்றியோ பெருசாய் ஐடியா கிடையாது! "தல' மெக்ஸிக சிறையில் அடைபட்டுக் கிடப்பதாகவும், நண்பர் குளாம் அவரை மீட்பதாகவும் கதைச் சுருக்கம் சொன்னது! And கதையை வரவழைக்கவும் செஞ்சாச்சு! இதோ- நீங்கள் பார்த்திடுவது தான் நமக்கு வந்து சேர்ந்த கோப்புகளின் இறுதிப் பக்கம்! ""Fine de la Episodio'' என்று இத்தாலிய மொழியில் பக்கத்தின் இறுதியில் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்திடலாம். "இந்த எபிசோட் நிறைவுறுகிறது!'' என்று இதற்குப் பொருள்! 

பொதுவாய் கதை நீண்டு, தொடர்ந்திடும் பட்சத்தில், இதே இடத்தில் ""Continua'' என்று எழுதியிருப்பார்கள். And ஒவ்வொரு டெக்ஸ் சாகஸமும் கைக்கு வரும் நொடியில் நாம் கவனிப்பது பிரதானமாய் இதைத் தான் ! இந்த 250 பக்க ஆல்பத்தின் முடிவில் ""நிறைவுறுகிறது'' என்று போடப்பட்டிருக்க, இது மேற்கொண்டு தொடரக்கூடுமா? என்ற கேள்வியே ஆர்டர் செய்திருந்த 8 மாதங்களுக்கு முன்பான பொழுதினில் மனசில் எழவில்லை! வழக்கம் போல இத்தாலியன் to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு- இத்தா­லியில் & தமிழ் மொழிபெயர்ப்பு இங்குள்ள நம் யுவதிகள் டீம்! அவர்களுமே எனக்கு "கதை தொங்க­லில் உள்ளது' என்பது போல தாக்கீது ஏதும் சொல்லி­டாததால் - we went ahead as always ! எடிட்டிங்கும் முடித்து, புக்கும் வெளிவந்தாச்சு!

அப்பா­லிக்கா தான் "அந்த மெக்ஸிக முள்ளங்கி மூக்கன்களை நெளிசல் எடுக்காமல் விட்டுப்புட்டாரே..?'' என்ற குரல்கள் கேட்கத் தொடங்கின! பொதுவாகவே மொன்டாலெஸ்; எல் மோரிஸ்கோ; கனேடிய சிகப்புச் சட்டைக் கர்னல் ஜிம் பிராண்டன் போன்ற ரெகுலர் கதாப்பாத்திரங்கள் இணைந்திடும் கதைகளுக்குப் பின்நாட்களில் எங்கேனும் ஒரு sequel இருப்பது வழக்கம். So இதற்குமே அவ்விதம் பின்னே எங்காவது ஒரு நீட்சியிருக்கும் என்றே நான் எண்ணியிருந்தேன்!

குறிப்பிட்டதொரு கதை முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதை டபுள் செக் பண்ணிட எப்போதுமே தொடரும் அடுத்த நம்பரிலான ஆல்பத்தின் ஓவியர் யாரென்பதைப் பார்ப்பதுண்டு! தொண்ணூறு சதவிகிதத் தருணங்களில் கதாசிரியர்களில் பெரும் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், ஓவியர்களில் changes இல்லாமல் போகவே போகாது! So அந்த ரீதியில் சரி பார்த்த வேளையில், Magic Moments ஸ்பெஷ­லில் வந்த கதைக்கு சித்திரங்கள்: Fusco & அடுத்த சாகசத்துக்கோ ஓவியர் "சிவிடெல்­லி" என்றிருக்க, "ரைட்டு.. இது அடுத்த சாகஸம்டோய் !' என்று எடுத்துக் கொண்டேன்! நான் பண்ணித்தொலைத்த பிழை, கொஞ்சம் மெனெக்கெட்டு அந்த அடுத்த இதழின் கதைச்சுருக்கத்தையும் வாசிக்காததே !! அதைச் செய்திருந்தால், கதை நீண்டு செல்வது புலனாகி இருக்கும் !!  

ஆக, இது தான் நடந்த குளறுபடியின் பின்னணி.ஆனால், போனெலி ­ இந்த நெடும் சாகஸத்தின் முதல் அத்தியாயத்தை ஒரு கதையாகவும், இறுதி சாகஸத்தை இன்னொரு கதையாகவும் உருவாக்கியிருப்பதை அப்புறமாய் தான் தெரிந்து கொள்ள முடிந்தது!

சரி, ரைட்டு.. WHAT NEXT ? 

அந்த இரண்டாம் அத்தியாயத்தை எங்கே? எப்போது வச்சுக்கலாம்? என்பது தானே அடுத்த கேள்வியாக இருக்க முடியும்?! இதோ- not so தொலைதூரத்தில் தென்படும் மே மாதத்தின் ஆன்லைன் புத்தக மேளாவின் முதல் இதழாக இந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டுத் தாக்கிடலாமா folks? அதே 252 பக்கங்களுடன், அதே போல கலரில், அதே விலையில், - இந்த ""மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்'' ஆல்பத்தை தெறிக்க விட்டுப்புடலாமா?

வழக்கமாய் மே மாத மேளாவில் டெக்ஸ் மறுபதிப்புகளே கலரில் வந்திடுவதுண்டு. ஆனால், இந்த முறை "No மறுபதிப்ஸ் at all for ஆன்லைன் மேளா ; எல்லாமே புதுசு மட்டுமே !!'' என்ற எனது வாக்குறுதியை மீறுவதாக இல்லை! So இந்த க்ளைமேக்ஸ் ஆல்பம் அந்த May Online ஸ்லாட்டினுள் புகுந்துவிடும்! And இந்த நொடியில் சில பல மைண்ட்வாய்ஸ்களும் உரக்கவே ஒலி­ப்பதால் என் காதிலும் விழுந்து வைக்கிறது!

Mind voice # 1 : மே மாசம் வரை போவானேன்? அடுத்த மாசமே போடறதுக்கு என்ன கொள்ளை?

நடப்பாண்டின் சந்தாத் தடத்தில் விலகி வழி தரக் கூடிய விதத்தில் ரூ.350/ விலைகளில் புக்ஸ் ஏதுமில்லை folks! So "இது உள்ளே - அது வெளியே' என்ற மங்காத்தா ஆட்டத்துக்கு சாத்தியங்களில்லை! அதே போல இந்த க்ளைமேக்ஸ் பாகத்துக்கான கோப்புகள் இப்போது தான் வந்துள்ளன; 2 செட் மொழிபெயர்ப்புகள்; எடிட்டிங்; அட்டைப்படங்கள் - என ஒரு மண்டகப்படிப் பணிகள் இனிமேல் தான் ஆரம்பம் கண்டாக வேண்டும்! அவற்றை முடித்து உங்களிடம் ஒப்படைக்க மே மாதமென்றால் மூச்சு விட்டுக் கொள்ள ஏதுவாகயிருக்கும்!

Mind Voice # 2 : என்ன இருந்தாலும்- இது 504 பக்கக் கதைங்கிறதை நீ பார்த்திருக்கணும்வே ! தப்புப் பண்ணிட்டே... சொதப்பிட்டேவே ...! ஒரு பெரிய குண்டு புக் மிஸ் ஆகிப் போச்சுவே !

எனது பதில் ரொம்பவே சிம்பிள் folks! 

இது 504 பக்க சாகஸமென்பது மட்டும் முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால்- சுண்டுவிரலைக் கூட இந்தத் திக்கில் நீட்டியிருக்க மாட்டேன் என்பதே யதார்த்தம்! "Crisp வாசிப்பு - சுருக்கமான பக்கங்களில்'' என்பதையே சமீபத்தைய கோஷமாக்கி வரும் இந்நாட்களில் ""504'' என்ற நம்பரைப் பார்த்த நொடியிலேயே, விருதுநகர் புரோட்டா ஸ்டாலுக்குள் புகுந்த புரட்டாசி விரதக்காரனைப் போல தெறிச்சடித்து ஓடியிருப்பேன்! ரூ.750/ விலையில் இதனை ஒரே குண்டு ஆல்பமாய் மறுக்கா Supremo ஸ்பெஷல் பாணியில் முயற்சிக்கும் தைரியமும் சரி, முனைப்பும் சரி- இருந்திருக்கவே இராது! ஆக, இந்த நெடும் சாகஸத்தினை முயற்சிக்கும் ஆற்றல் நமக்குக் கிட்டியுள்ளதே- "2 தனித்தனி ஆல்பங்கள்'' என்ற குஷன் இருப்பதனால் தான்! இங்கே பஞ்சாயத்துக்கு இடமே நஹி நண்பர்களே ; ""252'' என்ற முட்டை தந்த தைரியத்தில் தான் மெக்ஸிகோ மேஜிக் என்ற கோழியே உலவிடத் துணிந்துள்ளது! So 'முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?' என்ற ஆராய்ச்சியே இங்கு தேவை நஹி  !!

ஆக, மே மாத மேளாவின் முதல் அறிவிப்பு - நான் "தம்' கட்டத் தேவையே இல்லாது சாத்தியமாகியுள்ளது! மீதம் எத்தனை இதழ்கள்? எந்த ஜான்ராக்கள்? எந்த விலைகளில் என்பதையெல்லாம் ஏப்ரலி­ன் இறுதியில் அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் பார்த்துக் கொள்வோமா? ஒன்று மட்டும் உறுதி folks - ஒவ்வொன்றும் ஒரு ரகமாய் ; புத்தம் புதுக் கதைகளாய் மினுமினுக்கப் போவது நிச்சயம் !

Moving on, சென்னைப் புத்தக விழா அனல் பறக்கச் செய்து கொண்டுள்ளது !! வழக்கம் போல மாயாவியார் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், இம்முறை show stealers - நம்ம "கதை சொல்லும் காமிக்ஸ்" குட்டீஸ் இதழ்களும், கபீஷ் ஸ்பெஷல் இதழ்களும், "மூன்றாம் தினம்" கி.நா.வும் தான் !! அதற்குள்ளாகவே இவற்றில் repeat orders வந்திருக்க, ஸ்டாலுக்கு பண்டல்கள் பறந்துள்ளன ! கண்கள் விரிய, குட்டீஸ்கள் இந்த Fairy Tales in Comics புக்ஸ்களை புரட்டும் அழகுக்கு ஈடாக இந்த ராஜ்யத்தையே எழுதித் தந்து விடலாம் - அவை ஊரார் சொத்தாக இருந்திருக்கா பட்சங்களில் !!

விழாவின் ஐந்தாவது தினம் இன்று (ஜனவரி 1) ; and ஏற்கனவே கோவை ; ஈரோடு ; சேலம் ; மதுரை விழாக்களின் individual விற்பனை நம்பர்களுக்கெல்லாம் டாட்டா காட்டி விட்டு, சென்னையார் முன்னுக்குப் போயாச்சு !! எச்சூஸ் மீ...வாட் ஐஸ் தி procedure for getting ஒண்ணோ - ரெண்டோ கூடுதல் தலைநகரங்கள் for தமிழ்நாடு ? CHENNAI - The Incredible !!!









Bye all...have a wonderful week ahead & a lovely year too ! See you around !!

பி.கு. சந்தாக்களில் இன்னமும் ஒரு 20% நண்பர்கள் இடம் போடாதுள்ளனர் !! அவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல் !! இயன்ற மட்டுக்கு விரைவில் சந்தாவினில் இணைந்திட வேண்டுகிறோம் ப்ளீஸ் !!