நண்பர்களே,
வணக்கம். உங்களுக்கும், உங்களவர்களுக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2025 அற்புத நல்ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் இல்லம்தோறும் தங்குதடையின்றி விநியோகிக்க புனித மனிடோ அருள் புரிவாராக!!
ஆண்டின் முதல் நாள்.. ! டிசம்பர் 31-க்கும், ஜனவரி 2-க்கும் எவ்விதத்திலும் வேறுபட்டதில்லை என்றாலும் இந்த நாளில் மனசுக்குள் மானாவாரியாய் சூளுரைகளும், உயர் இலட்சியங்களும் அலையடிப்பது நிச்சயமாய் எனக்கு மட்டுமல்ல என்பேன்! So "நெதத்துக்கும் வாக்கிங் போயே தீருவேன்'; "செல்போனை ராவிலே பத்து மணிக்குலாம் ஆஃப் பண்ணிப்புடுவேன்' ; "Sy Barry தவிர்த்த மற்ற ஓவியர்களின் வேதாளர் கதைகள் நமக்கு வந்து சேர்ந்தால் அவற்றிற்கு ""டாட்டா.. குடுபை'' சொல்லி விடுவேன்! ;' குண்டூடூடூடூவான கதைகளையெல்லாம் பிரிச்சுப் போட மாட்டேன்!' என்ற ரேஞ்சுக்கு இந்த வருஷமும் சூளுரைகளுக்குப் பஞ்சமே நஹி தான்! பச்சே - வருஷப்பிறப்பின் அந்த மினுமினுப்பு சற்றே மட்டுப்பட்ட பிற்பாடு - "அது நேத்திக்கு; இது இன்னிக்கு' என்ற ரீதியில் புத்தி மந்தியாய் சண்டித்தனம் செய்வது இந்தாண்டிலும் தொடரவுள்ளதா? என்பதைப் பொறுத்திருந்தே பார்த்தாகணும்!
Talking of ""குண்டூடூடூ புக்ஸ்''- நமது சமீப Magic Moments ஸ்பெஷல் பற்றிப் பேசிட இது வாகான தருணம் என்றேபடுகிறது! "டிசம்பரில் வெளியான இந்த 250 பக்க டெக்ஸ் சாகஸம் முற்றுப் பெறவில்லை; இதற்கு இரண்டாம் பாகமுள்ளது; அதையும் சேர்த்து வெளியிடாத தெய்வக் குற்றம் உன் சொட்டை மண்டையில் குந்திக் கிடக்குது!' என்ற ரீதியில் ஆங்காங்கே விசனங்கள் & விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது தான்! But எப்போதுமே ஒவ்வொரு நாணயத்துக்கும் மறுபக்கமென்று ஒரு சமாச்சாரம் இருப்பது போலவே இந்த விவகாரத்திற்கும் இன்னொரு முகமுண்டு! அதைப் பற்றிச் சொல்கிறேனே!
டெக்ஸின் இந்த மெக்ஸிகோ சிறைப்படலக் கதைக்கு நாம் ஆர்டர் செய்தது 2024-ன் ஆரம்பப் பகுதியினில்! So இதழ் வெளியானதற்கு எட்டோ- ஒன்பதோ மாதங்களுக்கு முன்பாய் நாம் தேர்வு செய்திருந்த கதையிது! அந்நேரத்தில் இந்தக் கதை பற்றியோ; கதையின் பரிமாணம் பற்றியோ பெருசாய் ஐடியா கிடையாது! "தல' மெக்ஸிக சிறையில் அடைபட்டுக் கிடப்பதாகவும், நண்பர் குளாம் அவரை மீட்பதாகவும் கதைச் சுருக்கம் சொன்னது! And கதையை வரவழைக்கவும் செஞ்சாச்சு! இதோ- நீங்கள் பார்த்திடுவது தான் நமக்கு வந்து சேர்ந்த கோப்புகளின் இறுதிப் பக்கம்! ""Fine de la Episodio'' என்று இத்தாலிய மொழியில் பக்கத்தின் இறுதியில் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்திடலாம். "இந்த எபிசோட் நிறைவுறுகிறது!'' என்று இதற்குப் பொருள்!
பொதுவாய் கதை நீண்டு, தொடர்ந்திடும் பட்சத்தில், இதே இடத்தில் ""Continua'' என்று எழுதியிருப்பார்கள். And ஒவ்வொரு டெக்ஸ் சாகஸமும் கைக்கு வரும் நொடியில் நாம் கவனிப்பது பிரதானமாய் இதைத் தான் ! இந்த 250 பக்க ஆல்பத்தின் முடிவில் ""நிறைவுறுகிறது'' என்று போடப்பட்டிருக்க, இது மேற்கொண்டு தொடரக்கூடுமா? என்ற கேள்வியே ஆர்டர் செய்திருந்த 8 மாதங்களுக்கு முன்பான பொழுதினில் மனசில் எழவில்லை! வழக்கம் போல இத்தாலியன் to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு- இத்தாலியில் & தமிழ் மொழிபெயர்ப்பு இங்குள்ள நம் யுவதிகள் டீம்! அவர்களுமே எனக்கு "கதை தொங்கலில் உள்ளது' என்பது போல தாக்கீது ஏதும் சொல்லிடாததால் - we went ahead as always ! எடிட்டிங்கும் முடித்து, புக்கும் வெளிவந்தாச்சு!
அப்பாலிக்கா தான் "அந்த மெக்ஸிக முள்ளங்கி மூக்கன்களை நெளிசல் எடுக்காமல் விட்டுப்புட்டாரே..?'' என்ற குரல்கள் கேட்கத் தொடங்கின! பொதுவாகவே மொன்டாலெஸ்; எல் மோரிஸ்கோ; கனேடிய சிகப்புச் சட்டைக் கர்னல் ஜிம் பிராண்டன் போன்ற ரெகுலர் கதாப்பாத்திரங்கள் இணைந்திடும் கதைகளுக்குப் பின்நாட்களில் எங்கேனும் ஒரு sequel இருப்பது வழக்கம். So இதற்குமே அவ்விதம் பின்னே எங்காவது ஒரு நீட்சியிருக்கும் என்றே நான் எண்ணியிருந்தேன்!
குறிப்பிட்டதொரு கதை முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதை டபுள் செக் பண்ணிட எப்போதுமே தொடரும் அடுத்த நம்பரிலான ஆல்பத்தின் ஓவியர் யாரென்பதைப் பார்ப்பதுண்டு! தொண்ணூறு சதவிகிதத் தருணங்களில் கதாசிரியர்களில் பெரும் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், ஓவியர்களில் changes இல்லாமல் போகவே போகாது! So அந்த ரீதியில் சரி பார்த்த வேளையில், Magic Moments ஸ்பெஷலில் வந்த கதைக்கு சித்திரங்கள்: Fusco & அடுத்த சாகசத்துக்கோ ஓவியர் "சிவிடெல்லி" என்றிருக்க, "ரைட்டு.. இது அடுத்த சாகஸம்டோய் !' என்று எடுத்துக் கொண்டேன்! நான் பண்ணித்தொலைத்த பிழை, கொஞ்சம் மெனெக்கெட்டு அந்த அடுத்த இதழின் கதைச்சுருக்கத்தையும் வாசிக்காததே !! அதைச் செய்திருந்தால், கதை நீண்டு செல்வது புலனாகி இருக்கும் !!
ஆக, இது தான் நடந்த குளறுபடியின் பின்னணி.ஆனால், போனெலி இந்த நெடும் சாகஸத்தின் முதல் அத்தியாயத்தை ஒரு கதையாகவும், இறுதி சாகஸத்தை இன்னொரு கதையாகவும் உருவாக்கியிருப்பதை அப்புறமாய் தான் தெரிந்து கொள்ள முடிந்தது!
சரி, ரைட்டு.. WHAT NEXT ?
அந்த இரண்டாம் அத்தியாயத்தை எங்கே? எப்போது வச்சுக்கலாம்? என்பது தானே அடுத்த கேள்வியாக இருக்க முடியும்?! இதோ- not so தொலைதூரத்தில் தென்படும் மே மாதத்தின் ஆன்லைன் புத்தக மேளாவின் முதல் இதழாக இந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டுத் தாக்கிடலாமா folks? அதே 252 பக்கங்களுடன், அதே போல கலரில், அதே விலையில், - இந்த ""மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்'' ஆல்பத்தை தெறிக்க விட்டுப்புடலாமா?
வழக்கமாய் மே மாத மேளாவில் டெக்ஸ் மறுபதிப்புகளே கலரில் வந்திடுவதுண்டு. ஆனால், இந்த முறை "No மறுபதிப்ஸ் at all for ஆன்லைன் மேளா ; எல்லாமே புதுசு மட்டுமே !!'' என்ற எனது வாக்குறுதியை மீறுவதாக இல்லை! So இந்த க்ளைமேக்ஸ் ஆல்பம் அந்த May Online ஸ்லாட்டினுள் புகுந்துவிடும்! And இந்த நொடியில் சில பல மைண்ட்வாய்ஸ்களும் உரக்கவே ஒலிப்பதால் என் காதிலும் விழுந்து வைக்கிறது!
Mind voice # 1 : மே மாசம் வரை போவானேன்? அடுத்த மாசமே போடறதுக்கு என்ன கொள்ளை?
நடப்பாண்டின் சந்தாத் தடத்தில் விலகி வழி தரக் கூடிய விதத்தில் ரூ.350/ விலைகளில் புக்ஸ் ஏதுமில்லை folks! So "இது உள்ளே - அது வெளியே' என்ற மங்காத்தா ஆட்டத்துக்கு சாத்தியங்களில்லை! அதே போல இந்த க்ளைமேக்ஸ் பாகத்துக்கான கோப்புகள் இப்போது தான் வந்துள்ளன; 2 செட் மொழிபெயர்ப்புகள்; எடிட்டிங்; அட்டைப்படங்கள் - என ஒரு மண்டகப்படிப் பணிகள் இனிமேல் தான் ஆரம்பம் கண்டாக வேண்டும்! அவற்றை முடித்து உங்களிடம் ஒப்படைக்க மே மாதமென்றால் மூச்சு விட்டுக் கொள்ள ஏதுவாகயிருக்கும்!
Mind Voice # 2 : என்ன இருந்தாலும்- இது 504 பக்கக் கதைங்கிறதை நீ பார்த்திருக்கணும்வே ! தப்புப் பண்ணிட்டே... சொதப்பிட்டேவே ...! ஒரு பெரிய குண்டு புக் மிஸ் ஆகிப் போச்சுவே !
எனது பதில் ரொம்பவே சிம்பிள் folks!
இது 504 பக்க சாகஸமென்பது மட்டும் முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால்- சுண்டுவிரலைக் கூட இந்தத் திக்கில் நீட்டியிருக்க மாட்டேன் என்பதே யதார்த்தம்! "Crisp வாசிப்பு - சுருக்கமான பக்கங்களில்'' என்பதையே சமீபத்தைய கோஷமாக்கி வரும் இந்நாட்களில் ""504'' என்ற நம்பரைப் பார்த்த நொடியிலேயே, விருதுநகர் புரோட்டா ஸ்டாலுக்குள் புகுந்த புரட்டாசி விரதக்காரனைப் போல தெறிச்சடித்து ஓடியிருப்பேன்! ரூ.750/ விலையில் இதனை ஒரே குண்டு ஆல்பமாய் மறுக்கா Supremo ஸ்பெஷல் பாணியில் முயற்சிக்கும் தைரியமும் சரி, முனைப்பும் சரி- இருந்திருக்கவே இராது! ஆக, இந்த நெடும் சாகஸத்தினை முயற்சிக்கும் ஆற்றல் நமக்குக் கிட்டியுள்ளதே- "2 தனித்தனி ஆல்பங்கள்'' என்ற குஷன் இருப்பதனால் தான்! இங்கே பஞ்சாயத்துக்கு இடமே நஹி நண்பர்களே ; ""252'' என்ற முட்டை தந்த தைரியத்தில் தான் மெக்ஸிகோ மேஜிக் என்ற கோழியே உலவிடத் துணிந்துள்ளது! So 'முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?' என்ற ஆராய்ச்சியே இங்கு தேவை நஹி !!
ஆக, மே மாத மேளாவின் முதல் அறிவிப்பு - நான் "தம்' கட்டத் தேவையே இல்லாது சாத்தியமாகியுள்ளது! மீதம் எத்தனை இதழ்கள்? எந்த ஜான்ராக்கள்? எந்த விலைகளில் என்பதையெல்லாம் ஏப்ரலின் இறுதியில் அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் பார்த்துக் கொள்வோமா? ஒன்று மட்டும் உறுதி folks - ஒவ்வொன்றும் ஒரு ரகமாய் ; புத்தம் புதுக் கதைகளாய் மினுமினுக்கப் போவது நிச்சயம் !
Moving on, சென்னைப் புத்தக விழா அனல் பறக்கச் செய்து கொண்டுள்ளது !! வழக்கம் போல மாயாவியார் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், இம்முறை show stealers - நம்ம "கதை சொல்லும் காமிக்ஸ்" குட்டீஸ் இதழ்களும், கபீஷ் ஸ்பெஷல் இதழ்களும், "மூன்றாம் தினம்" கி.நா.வும் தான் !! அதற்குள்ளாகவே இவற்றில் repeat orders வந்திருக்க, ஸ்டாலுக்கு பண்டல்கள் பறந்துள்ளன ! கண்கள் விரிய, குட்டீஸ்கள் இந்த Fairy Tales in Comics புக்ஸ்களை புரட்டும் அழகுக்கு ஈடாக இந்த ராஜ்யத்தையே எழுதித் தந்து விடலாம் - அவை ஊரார் சொத்தாக இருந்திருக்கா பட்சங்களில் !!
விழாவின் ஐந்தாவது தினம் இன்று (ஜனவரி 1) ; and ஏற்கனவே கோவை ; ஈரோடு ; சேலம் ; மதுரை விழாக்களின் individual விற்பனை நம்பர்களுக்கெல்லாம் டாட்டா காட்டி விட்டு, சென்னையார் முன்னுக்குப் போயாச்சு !! எச்சூஸ் மீ...வாட் ஐஸ் தி procedure for getting ஒண்ணோ - ரெண்டோ கூடுதல் தலைநகரங்கள் for தமிழ்நாடு ? CHENNAI - The Incredible !!!
Bye all...have a wonderful week ahead & a lovely year too ! See you around !!
பி.கு. சந்தாக்களில் இன்னமும் ஒரு 20% நண்பர்கள் இடம் போடாதுள்ளனர் !! அவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல் !! இயன்ற மட்டுக்கு விரைவில் சந்தாவினில் இணைந்திட வேண்டுகிறோம் ப்ளீஸ் !!
Happy New year 2025 to all !!
ReplyDeleteவாழ்த்துகள்
DeleteCongrats Sir 👏👏👏
Deleteவாழ்த்துகள் சகோ
Delete🥳
ReplyDeleteAll New Year books are good sir - variety of selections - very happy - kids too are having a tood time!!
ReplyDeleteGood to hear Sir 😀
DeleteHappy New Year
ReplyDeleteவணக்கமுங்க
ReplyDeleteவணக்கம் 🙏🙏
ReplyDelete7th
ReplyDelete10 kulla
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDeleteHappy New Year to All
ReplyDeleteஹாய் , படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஅப்படியே ஆன்லைன் புத்தக விழாக்கான மீதிக் கதைகளும் என்னன்னு இப்பவே சொல்லிடுவீங்களாம்.
ReplyDeleteஆமா அது தானே நியாயம்.
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteHi..
ReplyDeleteமே மாதத்தில் டெக்ஸ் இன்னொரு சின்ன குண்டு புக்கா, அட்டகாசம் போங்க!!
ReplyDeleteநல்ல வேளை , மறுபதிப்பு ன்னு சொல்லி தலையில் இடியை இறக்கல!! புதிய சிந்தனை வாழ்க!
ReplyDelete+12345678910
Delete// இந்த ""மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்'' ஆல்பத்தை விட்டுப்புடலாமா? //
ReplyDeleteஅருமை,சிறப்பாய் செய்திடலாம் சார்...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!
ReplyDeleteஅத்தோடு புத்தம் புதிய கதைகள் களம் காண்பதற்கும் , அவை இமாலய வெற்றி பெறுவதற்கும் விற்பனை புதிய உச்சத்தை தொடுவதற்கும் வாழ்த்துக்கள்!!
LION .. Life line..
லயன் என்று டைப் செய்யும் போது லியோன் என்று வந்துவிட்டது. இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதோ என்னவோ சாமி? நீங்கள் வேறு காதல், ரொமான்ஸ் கதைகள் வரவிருக்கிறது என்றீர்கள்..😊
///மே மாதத்தின் ஆன்லைன் புத்தக மேளாவின் முதல் இதழாக இந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டுத் தாக்கிடலாமா folks? அதே 252 பக்கங்களுடன், அதே போல கலரில், அதே விலையில், - இந்த ""மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்'' ஆல்பத்தை தெறிக்க விட்டுப்புடலாமா?///
ReplyDeleteசார்.. டெபனட்டலி டெபனட்டலி!!😍😍😍😍😍 அந்த மெக்ஸிக நரிப்பயல்களின் வாலை நம்ம தல ஒட்ட நறுக்கற காட்சியை சீக்கிரமா பார்த்தே ஆகணும்! என்னா ஒரு வில்லத்தனம் - அதுவும் நம்ம வில்லரிடமே!!😾
கண்ணு கட்ட அவுத்துட்டா மட்டும் உரியடச்சிருவாப்பலே..
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஇந்த வருட ஆல்பங்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விடும் என்று பட்சி சொல்கிறது.
ReplyDeleteஅப்புறம் அந்த சாதனைக்கு ஒரு தனி இதழ் வேண்டும் என்றும் சொல்வோம்!! 100 IN A YEAR SPECIAL ..
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks for the update regarding MMS sir. We're waiting....
வந்துட்டேன்...
ReplyDeleteHappy new year all. Lets enjoy may issue of tex. எல்லா வளங்களுடனும் முன்னேற்றம் காணுங்கள்.. வாழ்த்துக்களும் இறை வேண்டலும்..
ReplyDeleteஅனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் 💐💐💐💐💐
ReplyDelete@Edi Sir😘💐😄🙏
ReplyDeleteஉள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் 😘😘💐💐💐
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஆசானே..
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....
ReplyDeleteடெக்ஸின் பதிலடி இல்லாமல் இதழ் உள்ளதே என்ற ஏமாற்றம் தீர்ந்து போனதே..:-)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேற்றே சென்னை புத்தக விழா ஸ்பெஷல் புத்தகங்கள் இரண்டும் வந்து சேர்ந்து விட்டது. கபிஷ் ஸ்பெஷல் 2 - இம்முறையும் அசத்தலாக உள்ளது. அட்டைப்படம் பளிச். இரண்டாவது புத்தகமான கிராபிக் நாவல் "மூன்றாம் தினம்" அட்டை மற்றும் உள் பக்கங்கள் மிரட்டலாக உள்ளது. இவ்வகை கிராபிக் நாவல்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துங்கள் சார். விலையும் குறைவு, தரம் மற்றும் விறபனைக்கும் உத்திரவாதம். ஆக மொத்தம் இரண்டு புத்தகங்களும் முதல் பார்வையில் அட்டகாசம் & அருமை.
ReplyDeleteகிராஃபிக் நாவல்களை கணிசமாக உயர்த்துங்கள்.
Delete+1000
///கிராஃபிக் நாவல்களை கணிசமாக உயர்த்துங்கள்///
DeleteWe want கி. நா!!
We want கி. நா!!
We want கி. நா!!
We want கி. நா!!
Happy Tex year
ReplyDeleteசின்னப்புள்ளைங்க எல்லாம் காமிச்சை ஆர்வமாக பார்க்கும் புகைப்படங்களும், அவர்களுக்காக வெளியான ஸ்பெஷல் புத்தகங்கள் பற்றிய உங்களுடைய தகவல்களும், காமிக்சுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளதை காட்டுகிறது...!
ReplyDeleteமூன்றாம் தினம் - இதழின் பெயரும், அட்டைப்படமும் தான் இந்த துரித விற்பனைக்கு காரணமாக இருக்கும். கதையும் பட்டாசாக இருந்தால், ஒரு பிளாக் பஸ்டர் அனுபவம் உறுதி 🤗🥰🥰
ReplyDeleteHappy to hear that chennai surpassed other book fairs and cutties reading comics. Happy new year to lion team and readers
ReplyDelete// மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் //
ReplyDeleteஹார்ட் பவுண்ட் தானே சார்?
350/- ரூபாய்க்கு ஹார்ட் பவுண்டு வராது பரணி. ஒரு புத்தகம் நார்மல் ஆகவும் அடுத்த புத்தகம் ஹார்ட் பவுண்டு ஆகவும் இருந்தால் நன்றாக இருக்காதே.
Deleteஓகே குமார்
Deleteஎனது கமெண்ட் தவறுதலாக 2 முறை பப்ளிஷ் ஆகி விட்டது. சாரி
Deleteசந்தாக்களில் இன்னமும் ஒரு 20% நண்பர்கள் இடம் போடாதுள்ளனர் !! அவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல் !! இயன்ற மட்டுக்கு விரைவில் சந்தாவினில் இணைந்திட வேண்டுகிறோம் ப்ளீஸ் !!
ReplyDeleteம்ம்ம்ம்...
புத்தாண்டு பதிவு முத்தான அறிவிப்புடன். செம்ம சார். MMS 2 மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete2025 ஆரம்பமே அதகளம் சார். அப்படியே இதே tempo வை மெயின்டெய்ன் பண்ணுங்க சார்.
Deleteவாய்ப்பில்லீங்க சார்...
ReplyDeleteபோன தடவை அட்டை லேசாக இருந்தது .. அதனாலே அதிகாரி பின்னட்டை வழியா தப்பிச்சிட்டாரு.. கெட்டி அட்டைன்னா எப்பிடி தப்பிப்பாரு??
சூப்பர் சார்...கபீஷ் 2 கதைகள்...விடா முயற்ச்சி...பட்டாணி இளவரசி....அலிபாபா மூனு கதைகளையும் ஒரே தம்ல முடிச்சாச்சு...அந்த அற்புத வண்ண உலகில் பன்றிகள் அழகுன்னா...நம்ம சிறு வயது அலிபாபா வேற லெவல்...அண்டாசனகாகசம்...ஆபூவா குகம் திறந்திடு சீசேம்...கண்டாகாகுகம்..சும்மா சூப்பரா போனது பொழுதுகள்...நமக்கு மோர் திருப்தி அருமை சார்
ReplyDeleteஎன்னோட முதல் மைண்ட் வாய்ஸ் நீங்க காட்டியிருக்க...அதுபோன்ற புரட்சிகதை போல முடிந்தது போலதான் எனக்கும் தோன்றியது
ReplyDelete😂😂😂
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிராபிக்ஸ் புத்தகம் புதிய கதையா அல்லது
ReplyDeleteஏற்கனவே வந்த புத்தகமா
புது கதை சார்.
Deleteநன்றி நண்பரே
Delete///ஈரோடு ; சேலம் ; மதுரை விழாக்களின் individual விற்பனை நம்பர்களுக்கெல்லாம் டாட்டா காட்டி விட்டு, சென்னையார் முன்னுக்குப் போயாச்சு !! ///
ReplyDeleteGreat to hear👏👏👏
Yes. வெற்றி வெற்றி
Deleteநமக்கு இந்த வருடம் சந்தாவில் இல்லாமல் இன்னும் நிறைய புத்தகங்கள் கிடைக்க போவுது. ஜாலி
DeleteYes kumar sir...💪
Deleteகண்டிப்பாக பரணி சார்😍
யோ ரம்மி 😂😂😂😂
ReplyDeleteஅப்ப MMS ல அவரு தப்பிச் செல்லத்தான் கெட்டி அட்டை கிடையாது என சொல்லுறீங்க 🤣 அதிகாரி அந்த அளவு வீக் ஆ? விஜயராகவன் @ ஓவர் டு யூ 😉
ReplyDelete
ReplyDelete// மே மாதத்தின் ஆன்லைன் புத்தக மேளாவின் முதல் இதழாக இந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டுத் தாக்கிடலாமா folks? அதே 252 பக்கங்களுடன், அதே போல கலரில், அதே விலையில், - இந்த ""மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்'' ஆல்பத்தை தெறிக்க விட்டுப்புடலாமா? //
மகிழ்ச்சி 😍
Hi Friends, Can any one tell what is the book title of "Wayne Shelton - Part 1 & 2"?
ReplyDeleteNever before special
Delete1ஒரு பயணத்தின் கதை.
Delete2.ஒரு துரோகத்தின் கதை.
Thank you both.
Delete///இது 504 பக்க சாகஸமென்பது மட்டும் முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால்- சுண்டுவிரலைக் கூட இந்தத் திக்கில் நீட்டியிருக்க மாட்டேன் என்பதே யதார்த்தம்! ///
ReplyDeleteMagic moments Special தன் பெயருக்கு ஏற்ப magic செய்து, இன்னொரு 252 பக்க இதழை வரவழைத்து summer special ஆக தந்து இருக்கிறது சார்🤗🥰
Thank u...
ஆமாங்க சகோ
DeleteYes sis😀
Deleteஇதற்கு MMS 2 என போடாமல், அதே MMS என்று வரும்படி, ஆனால் புதிதாக ' மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல் ' என பெயர் வைத்தது அபாரமான விஷயம் சார்👌👌👌
ReplyDeleteசிவிடெலி ஓவியங்கள் கூடுதல் பிளஸ் பாயிண்ட் 😍
ReplyDelete😂😂😂
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteநீளமாக எழுதினால் publish - ஆக மாட்டேங்குதே...? i i
ReplyDeleteஇரண்டு பகுதகளாக பிரித்து போடுங்கள், சகோ
Deleteநான் அப்படிதான் செய்வேங்க
Super sir,
ReplyDeleteFor publishing Tex mms continuing parts so soon, The storyline was too good to wait for final parts for another year. Happy New year 2025 for you and your family and all our staffs sir
//விழாவின் ஐந்தாவது தினம் இன்று (ஜனவரி 1) ; and ஏற்கனவே கோவை ; ஈரோடு ; சேலம் ; மதுரை விழாக்களின் individual விற்பனை நம்பர்களுக்கெல்லாம் டாட்டா காட்டி விட்டு, சென்னையார் முன்னுக்குப் போயாச்சு !! //
ReplyDeleteஎதிர்பார இன்ப செய்தி, சென்னை பட்டைய கிளப்பட்டும்
//சென்னைப் புத்தக விழா அனல் பறக்கச் செய்து கொண்டுள்ளது !! வழக்கம் போல மாயாவியார் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், இம்முறை show stealers - நம்ம "கதை சொல்லும் காமிக்ஸ்" குட்டீஸ் இதழ்களும், கபீஷ் ஸ்பெஷல் இதழ்களும், "மூன்றாம் தினம்" கி.நா.வும் தான் !! அதற்குள்ளாகவே இவற்றில் repeat orders வந்திருக்க, ஸ்டாலுக்கு பண்டல்கள் பறந்துள்ளன !//
ReplyDeleteஅருமை அருமை, கதை சொல்லும் காமிக்ஸ் வெற்றி அடைவதில் மகிழ்ச்சி, பட்டாணி இளவரசி வாழ்க
//அந்த மெக்ஸிக முள்ளங்கி மூக்கன்களை நெளிசல் எடுக்காமல் விட்டுப்புட்டாரே..?''//
ReplyDelete🤣🤣🤣🤣🤣
முள்ளங்கி மூக்கன்கள்,சரியான விவரிப்புங்க ஆசிரியரே
😂😂😂
Delete//விருதுநகர் புரோட்டா ஸ்டாலுக்குள் புகுந்த புரட்டாசி விரதக்காரனைப் போல தெறிச்சடித்து ஓடியிருப்பேன்! //
ReplyDeleteஆசிரயரே 😂😂😂😂😂
இப்ப விருதுநகரில் அந்த காலம் போல பரோட்டா அல்லது சால்னா இல்லை சார்; பழைய நாட்சி கடை பரோட்டா சால்னா மாதிரி எங்கும் கிடைப்பது இல்லை சார் ☺️
Delete"மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்''
ReplyDeleteமே மாத ஆன்லைன் மேளாவுக்கு ஏற்ற புத்தகங்க, ஆசிரியரே
This comment has been removed by the author.
ReplyDeleteகபீஷ்-2 இன்று மாலை பார்சல் கையில் கிடைத்தவுடன் ரசிச்சு படிச்சுட்டேன்; விடாமுயற்சி செம அட்டகாசம்; ரொம்ப பிடித்து இருந்தது;?அட்டகாசமான படங்கள் பொருத்தமான வசனம். சூப்பர் 😊
ReplyDeleteவிடா முயற்ச்சி வெகு அட்டகாசம்...தினமும் இக்கதையத்தாம் என் மகனும் ரசிக்கிறாம்ல...வண்ணங்கள்...அந்த இரவு நட்சத்திரங்கள்...குழந்தைகளை ஊக்குவிக்க...நிலைக்க கஷ்டம்னு பாக்காம தரமா செய்யுங்கள் அறிவுரை....அற்புதம்
Deleteவிடாமுயற்சி எனது மகன் ஒன்றாம் வகுப்பிலேயே படித்து விட்டானாம், நான் இப்போது தான் இந்த கதையை முதன் முறையாக படிக்கிறேன்.
Deleteஅப்ப நீ இந்த ஒன்னாவது கூட படிக்கலயா
Deleteஊஹும் ஸ்ட்ரெய்ட்டா காலேஜ்தாம்லே 😃
Deleteஇதாம்ல பேஸ்மண்ட் சரியில்லாம...ஏரல்ல பாலத்லயும் பேஸ்மண்ட்ல்லாம உன்ன மாதிரி ஒருத்தர் போட்டதால் அரிச்சு முடிச்சாச்...பையன்ட்ட ஒழுங்கா கேட்டு படிச்சுக்க
Deleteஉங்க ஊர்காரன் பேஸ்மென்ட் சரியில்லனா அத சரி பண்ண சொல்லுலே 😀 இங்க எல்லாம் சரியாகத்தான் இருக்குலே 😃
Delete❤️🙏👍...
ReplyDelete@Edi Sir😘🥰💐
ReplyDeleteஇன்று பதிவு கிழமை... 😄🙏💐
அட ஆமாம். மூன்றாவது தினம் எப்படி உள்ளது சார்?
Deleteமூனாந்தடவ படிச்சா தான் புரியும் கதை செமல...விரைவில் வாரேன்
Deleteஆட்டோவுல வரியால 😊
DeleteThis comment has been removed by the author.
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆசிரியர் இன்று சென்னை விஜயம் எனவே பதிவு இன்னைக்கு டவுட் தான் குமாரு ☺️
Deleteஆமாங்க பரணி. காத்திருப்போம்
Deleteபாதாள நகரம் படித்து முடித்து விட்டேன். நன்றாக இருந்தது.
ReplyDeleteஆமாம்...இரும்புக்கை மாயாவி கதைகள் எத்தனை முறை படித்தாலும் நன்றாகவே இருக்கும் பரணி சார்.
Deleteபாதாள நகரம், மஞ்சள் பூ மர்மம் அருமையான கதைகள்
மிகவும் எளிதான கதை சுவாரசியமாக இருந்தது.
Deleteநா உறைபனி மர்மம்ல...இந்த குண்டு புக்ல படிக்கைல செம
Deleteஅத போன மறுபதிப்பு வந்தப படிச்சுட்டேன் 😊
Deleteஇப்பயும் படிச்சம்ல
DeleteMy fav duo 😁😁😁
Deleteஇன்று நிச்சயம் 10 மணிஅல்லது மாலை சென்னை அப்டேட்
ReplyDeleteMummoorthi special Hardbound Wow !
ReplyDeleteசார், சென்னை புத்தக திருவிழா பதிவை சீக்கிரம் போடுங்க சார்.
ReplyDeleteஞாயிறு இரவும் நெருங்க போகிறது, பதிவு காண ஆவலுடன்
Deleteகடல் சகோ நீங்க சென்னைல தான இருக்கிங்க.சார்கிட்ட நேர்லயே சொல்லி பதிவு வாங்குங்க .ப்ளீஸ்
ReplyDeleteரம்யா நேற்றே ஊர் திரும்பி விட்டார் சார்
Deleteஆசிரியரும் நேற்றே சிவகாசிக்கு கிளம்பி விட்டாருங்க
Deleteசார் இன்னும் பதிவை காணலையே
ReplyDeleteபதிவு எப்போதுங்க ஆசிரயரே
Deleteதூங்க போகிறேன் 🌙
DeleteThis comment has been removed by the author.
Deleteநமக்கு புதிய புத்தகங்கள் நிறைய கிடைப்பது கன்பர்ம் ஆகிவிட்டது . எனவே ஆசிரியர் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்கு பெரிய பதிவாக புதிய கதைகளை பற்றிய தகவல்களை சொல்வார் என இனிய கனவுகளுடன் தூங்குவோம் 😊
Delete@சேலம் குமார், சாய்பாபு ஐயா, பரணி ஐயா, மகளிர் அணி தலைவி ரம்யா சகோதரி..
Deleteபதிவு குழு சங்கம், உரிய கிழமைகளில் பதிவினை பெற இன்னும் தீவிரமாக முன்னெடுப்புகளை, முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது நண்பர்களின் எதிர்பார்ப்பு...
இந்த ஆட்டைக்கு நான் வரல சாமி 🏃➡️😀
DeleteThis comment has been removed by the author.
Deleteகதை சொல்லும் காமிக்ஸ் 3 புத்தகங்களும் அருமை அற்புதம் அபாரம். சும்மா அவ்வளவு அழகு, எளிமையான மொழி பெயர்ப்பு. அழகான கதைகள். புத்தக தரம், அட்டை எல்லாமே அருமை . மூன்று கதைகளையும் படித்து விட்டேன்.
ReplyDeleteஎனது மதிப்பெண் 1000/10
ஒவ்வொரு கதைக்கும் இந்த மதிப்பெண் மொத்தம் 3000/30
Deleteஉண்மை குமார்.
Deleteநன்றிகள் பரணி ஜி .&கடல் ஸிஸ்ட்டர்
ReplyDeleteநேற்றே சிவகாசிக்கு கிளம்பிவிட்ட ஆசிரியருக்கும் நன்றி.
ReplyDeleteஎன் போன்ற கிராபிக் நாவல் பிரியர்களுக்கு மூன்றாம் தினம் கதை தலைவாழை விருந்துக்கு சமம். இது போன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடும் வேண்டுகிறேன்.
ReplyDeleteநேர்கோட்டு கதைகளை விட இது போன்ற கதைகள் தான் சுவாரசியமாக இருக்கும்.
சதாசிவம், காடையூர், காங்கேயம்