நண்பர்களே,
வணக்கம். முன்னெல்லாம் ஆனை அசைந்தாடி வந்து கொண்டிருக்க, அதன் மணியோசை இங்கே ப்ளாக்கில் முன்கூட்டியே ஒலிப்பது வாடிக்கை. இப்போதோ நிலவரம் உல்ட்டா : அடிச்சு புடிச்சி ஆனையார் கூரியரில் தொற்றி வீட்டு வாசலை எட்டிய பிற்பாடே இங்கே மணி ஒலிக்கிறது !! ஆனால் சுணக்கம் தகவல் தெரிவிப்பதில் மாத்திரமே என்பதில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் - because இது டிசம்பரில் ஜனவரி !!
பொதுவாகவே "அவையடக்கம்" ; "ஆட்டுக்குட்டி அடக்கம்" என்ற பெயரில் வாயை சுருக்கமாய் செலவிட முனைவதே எனது ஸ்டைல் ! ஆனால் இந்த டிசம்பரில் ரெண்டாம் தபாவாய் கூரை மேலேறி நின்று பீத்தல் பரமானந்தம் அவதாரில் "82 ......எண்பத்தி ரெண்டூஊஊ" என்று கூவிடணும் போலுள்ளது !! இன்னா மேட்டர் என்கிறீர்களா ? நடப்பாண்டின் வெளியீட்டு எண்ணிக்கை 67 என்று சில பதிவுகளுக்கு முன்னே நண்பர் அனுப்பிய லிஸ்ட் சொல்லியிருக்க, அதற்கு நமது டீமை எண்ணி இறுமாந்து காலரை தூக்கி விட்டுக் கொண்டிருந்தேன். இதோ - இந்த நொடியில் நம்மாட்கள் இன்னுமொரு படி உசக்கே எட்டு வைத்துள்ளனர் - ஒற்றை calendar ஆண்டினில் 82 இதழ்களை உருவாக்கிய பெருமையோடு !! Oh yes - ஜனவரியின் மூன்று புக்ஸ்களையுமே இந்த மாதத்துத் தயாரிப்புக் கோட்டாவினில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில், இந்தக் கடைசி 10 நாட்களில் மட்டுமே நம்மாட்கள் உருவாக்கியுள்ளது மொத்தமாய் 15 இதழ்கள் !!!!!! So ஏற்கனவே இருந்த 67 + இந்த 15 = 82 இதழ்களாகிறது இந்த ஒற்றை ஆண்டின் பணி லிஸ்ட்டில் !! சர்வ நிச்சயமாய் இந்த நம்பரை இனியொரு தபா எட்டிப்பிடித்திட இயலுமென்று இந்த நொடியில் தோன்றவில்லை ; but you never know !!!! Phewwwwwww.........!!
ஒற்றை ஆள் கூட கூடுதல் இல்லை ; in fact மகப்பேறு காரணமாய் நமது டிசைனிங் டீமின் பெண்மணி ஒருவர் ஆண்டின் செப்டெம்பர்வாக்கிலேயே லீவில் போயாச்சு ! And நம்மள் கி வண்டியுமே நடப்பாண்டின் ஒரு பாதிப் பொழுதுக்கு பட்டி-டிங்கரிங் பார்த்த படலத்திலேயே ஓடிக் கொண்டும் இருந்துள்ளது ! In fact - ஜூன் to நவம்பர் எந்தவொரு வாரயிறுதியிலும் வூட்டில் குப்பை கொட்டியதாகவே நினைவில்லை ; அம்புட்டுப் பொழுதுகளும், பயிற்சி, சிகிச்சை என்று கோவையில் ஓடிக்கொண்டிருந்தன ! So இந்தக் கூத்துக்களையும் தாண்டி இந்தாண்டில் இத்தனையை போட்டுத் தாக்கியுள்ளோம் என்றால் - அது அந்த மனிடோ தேவனின் மெர்சலூட்டும் சாகஸமே !! மனசு நிறைந்த மகிழ்வோடு நேற்றைக்கு உங்களின் புதுச் சந்தா கூரியர்களை நம்மவர்கள் பேக் பண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது 2024 ஒரு அற்புத வாணவேடிக்கையாய் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது ! பஜ்ஜி, சொஜ்ஜியெல்லாம் வாங்கித் தந்து நமக்கு VRS குடுத்து அனுப்பிய பின்னான ஒரு கொட்டாவிப் பொழுதில், இந்த 2024 சர்வ நிச்சயமாய் நினைவுகளில் குதூகலத்தை நல்கிடத் தவறாதென்று பட்டது !! This has been an year for the ages !!!
And இதோ - இன்னமும் நீங்கள் பார்த்திருக்கா சில உட்பக்கங்கள் !!
கதை சொல்லும் காமிக்ஸ் இனி :
வணக்கங்கள்
ReplyDeleteஐ பர்ஸ்ட்
Deleteவாழ்த்துக்கள் . Just Miss
Deleteவாழ்த்துக்கள் தோழி
Deleteஆமாங்க குமார் சகோ
Deleteநன்றி தோழரே
Deleteவாழ்த்துக்கள் சகோதரி..
Deleteகலக்குறீங்க ரம்யா
Deleteநன்றிகள் ரகு சகோ
Deleteயெஸ்ஸூ பரணி சகோ 😊😁
Deleteசூப்பர் சகோ🔥🥳
Deleteமீ
ReplyDeletePresent sir
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeleteஆஜர்
ReplyDeletesuper sir
ReplyDeleteMe
ReplyDeletePresent sir
ReplyDelete82...செம
ReplyDeleteபாராட்டுகள் + வாழ்த்துகள் ஆசிரியரே
தங்கள் டீம்மின் எபெர்ட் செம
நன்றி
ReplyDeleteSir,
ReplyDeleteWill Magic Moments Special continuing parts be published in 2025 ? Seems the storyline is not concluded.
Very good story sir pls try to finish quickly before forgetting the plot
82 நம்பர் 2025 ல் 100 ஆக மாறி சதமடிக்க வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDelete"ஒரிஜினலாய் பல்லடம் - தற்சமயமாய் லடாக் சரவணகுமார் " - என்று பெயரை மாத்திக்க வேணாமா சார் - நம்ம கவிஞர் மெரி ?
Delete😂😂😂
Deleteகுட்டீஸ்களை வரவேற்க சுட்டி லக்கி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்டால் சென்டரில் டைகர் போஸ்டர் தொங்க விடலாங்க ஆசிரியரே
ReplyDeleteஇது டைகர் மாதம் 😊😊😊
சென்னையிலே மாயாவி சார் தான் என்றென்றும் ஸ்டார் 👍👍
Deleteஆமாங்க ஆசிரியரே, நம்ம மாயாவியை ஜெயிக்க முடியாது
Deleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteவந்தாச்சாம்...சாயங்காலம் கைப்பற்றியபின் வருவோம்...வோம்...ஓம்
ReplyDeleteMe in🥰💐😘
ReplyDeleteஇன்று பணி.. 👍😄
ReplyDeleteநாளை சனி.. 😄😄😘
எனவே நாளைதான் கை பிடித்தல்.. 😘😘
கட்டி பிடித்தல்.. 🥰😘😘
எல்லாமே.. 😘😘🫣🫣
புதுசா கண்ணாலம் கட்டுனவக வார இறுதிக்கு காத்திருக்கா மாதிரி தோணுவது எனக்கு மட்டுமா??😉😉😉
Delete😄😄😄
Deleteஎன்றன் காமிக்ஸ் காதலிய சொன்னேனுங்க... 😘😘😘😘
82 - புதிய உட்சம்! நமது அலுவலக சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு கோடி நன்றிகள்! உங்கள் பணி பாராட்டுதலுக்கு உரியது!
ReplyDeleteநமது ஸ்டால் செம மாஸாக உள்ளது! புத்தகங்கள் அடுக்கிவைத்துள்ள முறை பார்க்க மெர்சலூட்டுகிறது! அதுவும் முன் வரிசையில் குண்டு ஹார்ட் பௌண்ட் புத்தகங்கள் காமிக்ஸ் ரசிகர்களை குத்தாட்டம் போட்டு உள்ளே வரவைக்கும்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஸ்டாலில் ஓவ்வொரு பக்கமும் உங்களின் மெனக்கெடல் தெரிகிறது, போஸ்டர் & வால்பேப்பர்! அனைத்து தரப்பு ரசனைக்கு ஏற்றார் போல போஸ்டர்கள் என கலக்கி உள்ளீர்கள் சார்; உங்களின் அனுபவம் இதில் நன்றாக தெரிகிறது சார்! விற்பனை சிறக்கட்டும். ஆண்டின் முதல் புத்தக திருவிழா அதுவும் தலைநகரில், சிறப்பான விற்பனையுடன் புதிய சாதனை படைக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்!
Deleteபுத்தகங்கள் இன்னும் வரவில்லை எசமான் ;-)
ReplyDelete**இந்தக் கடைசி 10 நாட்களில் மட்டுமே நம்மாட்கள் உருவாக்கியுள்ளது மொத்தமாய் 15 இதழ்கள் !!!!!! So ஏற்கனவே இருந்த 67 + இந்த 15 = 82 இதழ்களாகிறது இந்த ஒற்றை ஆண்டின் பணி லிஸ்ட்டில் !!
ReplyDeleteசர்வ நிச்சயமாய் இந்த நம்பரை இனியொரு தபா எட்டிப்பிடித்திட இயலுமென்று இந்த நொடியில் தோன்றவில்லை ; but you never know !!!! Phewwwwwww.........!!**
இந்த ஆரோக்கியமான பணி என்றென்றும் தொடர,மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சார் ❤️.
இந்த ஆண்டு
படிக்காதவர்களை நீங்கி, படிக்க ஆர்வமுள்ள நண்பர்களுக்கு இந்த
வெளியீட்டு எண்ணிக்கை மகிழ்ச்சியானது.
இதில் வி காமிக்ஸ் தனித்தடம் என்கிறப்ப மாதம் 1 என 12 உறுதியாக கிடைத்தது.
லயன் முத்து - 29.
ஆக சந்தாவில் மட்டும் மொத்தம் 41 இதழ்கள்.
41÷12= 3.41.
கிட்டத்தட்ட, குறைந்தது மாதம் - 4 புக் என்பது, காமிக்ஸை விரும்பி படிப்பவர்களுக்கு நிறைவான விசியம்.
இது போக மீதி 26 புக்ஸ் ஸ்பெஷல் வெளியீடுகள் என்கிறப்ப கூடுதல் மகிழ்ச்சி.
ஆனால் இந்த முறை ஸ்பெஷல் வெளியீடுகள் அப்படியே வரும் என்பதுல டவுட் இல்லை.
இந்த சந்தா இதழ்கள் மட்டும் 10 புக்ஸ் கமியாகும்.
So, 2024 ம் ஆண்டின் இலக்கை, 2025 ம் ஆண்டு எட்டி பிடிப்பது சாத்தியமில்லை.
இனி 26 ல் பார்ப்போம்.
43rd
ReplyDeleteபுத்தகங்கள் வந்தாச்சு, இனி தான் பிரிக்கனும். Going
ReplyDeleteவணக்கமுங்கோ
ReplyDelete2025 ல் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteசென்னை புத்தக கண்காட்சி - 2025 நமது வெளியீடுகளின் விற்பனைகள் முந்தைய வருடங்களை மிஞ்ச வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇம்முறை முதல் பார்வையிலேயே தெரிகிறது தளபதியை தல கிட்ட கூட நெருங்க முடியாது என்று. அப்படி ஒரு தரம். ஒவ்வொரு பக்கமும் பளபளக்கிறது. Muthu 500 ஆபார making. Thank you sir. கண்டிப்பாக ஒரு கண்திருஷ்டி பொம்மை வேண்டும்.
ReplyDeleteஆனால் அதை எங்கேயும் தேடி அலைய வேண்டாம் என்று உள்ளேயே இன்னொரு புத்தகத்தின் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இருக்கிறது அதனுடைய making. நிறைய இடங்களில் ஓடுகிற தண்ணிரில் முகத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த கானக நாயகரின் முகம்.
நன்றி
வெவ்வேறு ஓவியர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நெடும் கதைத் தொடர் சார் - so சித்திரங்களின் தரம் ஒரே மாதிரி இருப்பது இயலாக் காரியம். And நமக்குத் தரப்பட்டுள்ள கத்தையில் அந்தக் கதை இருக்கும் போது நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை..
Deleteபுத்தாண்டின் முதல் செட் இதழ்கள் வாழ்த்துக்களுடன் கிடைக்கப் பெற்றேன் சார்...😍😍😍😍😍
ReplyDeleteமூன்று இதழ்களும் அட்டகாச தரம்....
முதல்ல கையில் எடுத்தது,முத்து காமிக்ஸின் 500வது இதழ்.
முத்துவின் 2வது ஒப்பற்ற நாயகனுக்கு பொருத்தமான ட்ரிபியூட்...மாஸான அட்டைப்படம்...
சிவப்பு பின்னணியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் எங்க ஊர் காரர் ஜெகத்தின் கை எழுத்தில்,
"""*ஒரு கொடூரனும் கடற்கண்ணியும்*"""
தங்க தலைவனுக்கு பொருத்தமான பெயர்..
"""500வது லேண்ட்மார்க் இதழுக்கு சிறப்பு செய்கிறது...""
*முத்து காமிக்ஸ் நிறுவனர் சீனியர் எடிட்டர் செளந்திரபாண்டியன் ஐயா அவர்களுக்கும், எடிட்டர் விஜயன் சாருக்கும் வாழ்த்துகள்*💐💐💐💐💐
டைகர் 500அருமையான தயாரிப்பு..
கெட்டி அட்டை சரியான திக்னஸ்ல கலக்குது...
*ஓரு லேண்ட் மார்க் இதழ்னா எப்படி இருக்கணும்னு காட்டுது*🤩🤩🤩🤩
இப்படி வந்திருக்கணுமே விஜயன் சாரின் ஆயிரமாவது இதழும் என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலங்க சார்...🤣🤣🤣🤣
டெக்ஸ் கி.நா. அசத்துது...உள்பக்க கலரிங் செம...வேதாளன் இதழும் இம்முறை கலரிங் சற்றே மேம்படுத்தப்பட்டுள்ளது....குட் ஜாப் சார்.
போட்டியில் டைகரே வெல்வார் இம்முறை...
அந்த பாயாச பார்ட்டியை காணோமே இன்னமும் 🤔?
Deleteசூப்பர் சார்...நம்மாளுகிட்ட கபீஷ் எப்ப வரும்னு அந்த முதல் கபீசின் பின்புற விளம்பரத்தை காட்டி கேட்டுக் கொண்டிருக்க...இதுக்குள்ள இருக்குது பிரின்னு வேலைல மூழ்க...கமீஸ் இல்லையேப்பான்ன குரல் உலுப்ப...பிளாக்கில் துழாவ திங்கள் என்றதும் அடுத்த வார்ப்பு சொல்ல...ப்ளாக்க பாக்கல நேர்ல பாப்போம்னு கட்டுப்படுத்திய தன் விளைவு...
ReplyDeleteசெம சார்
டைகர் என்னத்த சொல்ல இப்படியோரட்டை வாய்க்குமான்னு முத்து 500லோகோவில் லயிக்க மறுக்கா இதான் டாப்ன மனத அதட்டியபடி பாய புரட்டிய முதல் பக்க காட்சிகள் வெகு அழகாய் ஈர்க்க...அந்த மூன்று வழி சாலையும்...அந்த குடியிருப்புகளும் அதகளபடுத்த வண்ணத்தில் வந்தா கருப்பு வெள்ளை அழகுன்ன பட்டிமன்றத்த கடந்தா...சும்மா தகதகுக்குது வண்ணமும் சித்திரமும்...அச்சான அச்சுத் தரமும்..பாராட்ட வார்த்தைகளே இல்லை...டாப் க்ளாஸ் சார்
ReplyDeleteஉண்மைய சொன்னா அட்டையோட பளபளப்பு வேற லெவல் தாண்ட முடியல சார்...என்னா பளபளப்பு
Deleteஇளமை எனும் பூங்காற்று நான் மட்டும் சும்மாவான்னு மிரட்ட நானா நீயான்னு அட்டைபட வாயிலாகவும் போட்டி தலயா தளபதியான்னு தோடர...தரமான அச்சு...
ReplyDeleteவேதாளம் கைகாட்டி அட்டை வழக்கமாய் பார்ப்பது போல தென்பட...வண்ணங்களோ எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட...புத்தாண்டு அட்டையோட கபீசுக்கு காத்திருக்கேன்
வந்து விட்டது புத்தகங்கள். அருமை. மாதா மாதம் புத்தகங்கள் வந்தாலும் ஜனவரி மாத புத்தகங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான் சார். இந்த மாதம் 3 கலர் புத்தகங்களும் மிக அருமை.
ReplyDeleteவீட்டுக்கு நான் வந்துட்டேன்.. 👍😘💐
ReplyDeleteBut.. Books தான் வரல.. 🧐😨👎
ஓகே.. Wait for one more day.. 😄😘
ஒகோனானம் 😊
Deleteநான் ஒருவாரமாக வீட்டில் தான் இருக்கேன் இன்னமும் புத்தகம் வரவில்லை 😌
Delete*இளமை எனும் பூங்காற்று*
ReplyDeleteடெக்ஸ் சாகஸத்திற்கு இப்படி ஓர் அழகான மென்மையான தலைப்பா என்ற யோசிக்க வைத்த இந்த இதழ் அட்டைப்படத்திலும்...உட்பக்க சித்திரங்களிலும் அதே அழகை பறைசாற்றியது..
அழகான அதே சமயம் மிக சுறுசுறுப்பான ,விறுவிறுப்பான கிராபிக் நாவல்...திரைப்படங்களில் கெளரவ வேடத்தில் பிரபல நாயகர்கள் கெஸ்ட் ரோலில் வந்து கலக்குவது போல இந்த இதழில் நமது டெக்ஸ் அன்ட் கார்ஸன் குழு.
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாக சென்ற இதழ் பல இடங்களில் வசனங்கள் புன்னகையை சிந்த வைத்தன..இந்த இதழை பொறுத்தவரை இதன் நாயகர் கதையின் நாயகியே... கதையை வாசிக்கும் பொழுதும்..இறுதியில் நாயகி நிஜம் என அறியும்பொழுதும் நாயகியை ஓர் "வில்லியாக" நமக்கும் உணரவே முடியவில்லை டெக்ஸ்வில்லரை போலவே..
மீண்டும் வாசிக்க தூண்டும் ஓர் அழகான தென்றலே
"இளமை எனும் பூங்காற்று"
Good review! புத்தகங்கள் இன்னும் வரவில்லை thala :-)
Delete*மாயாத்மா ஸ்பெஷல்*
ReplyDeleteமுதலில் நமது வி காமிக்ஸ் இதழின் இரண்டாம் ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும்..பாராட்டுகளும்..அட்டைப்படம் முன் பின் இரண்டும் ஓகே ரகம்..அதே சமயம் வேதாளர் வண்ணத்தில் இரண்டு சாகஸங்கள் எனும் பொழுது அது அதிகமாக எல்லாம் கொண்டாட தூண்ட வில்லை தான்...காரணம் ஒன்று : வேதாளரை மொத்த கதம்பாக ஏற்கனவே சந்தித்து விட்ட காரணமாக ..
இரண்டு : இதுவரை வந்த வேதாளர் வண்ணம் ஏனோ செயற்கையாக தென்பட்ட விதம்..
எனவே அதிக ஆர்ப்பாட்டமோ ,எதிர்பார்ப்போ இல்லாமலே இந்த இதழை கைகளில் ஏந்தினேன்..ஆனால் முதல் சர்ப்ரைஸ் இது ஆரம்ப முத்துவின் மறுபதிப்பு கதையான கீழ்த்திசை சூனியம் என்பது..இந்த இதழை இதற்கு முன் கண்டதோ ,வாசித்ததோ இல்லை என்பதால் ஓர் அருமையான க்ளாசிக் இதழை கண்டதன் மகிழ்ச்சி..
சர்ப்ரைஸ்...இரண்டு..
வண்ணங்கள்..
இப்பொழுது தான் ஒரிஜினாலாய் ஒரு வண்ண வேதாளரை கண்டதான மகிழ்ச்சி...அவ்வளவு அட்டகாசம்..வண்ணம் படைத்தவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் ,வாழ்த்துகளும்..
கதையை பற்றி சொல்ல தேவையில்லை தான் ...அன்றைய காலகட்ட கதை..கதையும் 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ,குற்றங்கள் வேறு ஆனாலும் ஏழாம் வேதாளர் அழித்த அதே கூட்டத்தை இந்த முறை நிகழ்கால வேதாளர் முறியடிப்பது தான் என்றாலும் கதை போரடிக்காமலே சென்றது ..
இரண்டாம் வேதாளர் சாகஸம் மீண்டும் பழைய இதழ்களில் போல் வண்ணம் என்பதோடு சித்திரங்களும் சுமார் ரகமாக அமைந்து போனது சிறு குறைப்பாடு .
ஆனாலும் வேதாளர் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான இதழை வி காமிக்ஸ் இரண்டாம் ஆண்டு மலர் தந்து உள்ளது என்பது உண்மை
DTDC கொரியர் டிரெக்கிங் நம்பர் மூலம் விசாரித்தால் புத்தகம் அத்திபள்ளி வந்துள்ளது எனவே திங்கள் கிழமை தான் புத்தகங்கள் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.
ReplyDeleteஸ்டீல் சகோ கிட்ட கதை கேளுங்க
Deleteவேண்டாம் அந்த விளையாட்டு மட்டும் 🤣
Delete😰😰😰
ReplyDeleteஎனக்கு இன்னைக்கும் ஜனவரி புக்ஸ் வரல..🤔🤔🤔
ஒரு வேளை ..
ஜனவரி in ஜனவரி தானோ.. 🫣🫣🫣
புத்தகம் வந்த உடன் படிக்கும் வரிசை 1. டைகர் 2. டெக்ஸ் 3. வேதாளர்
ReplyDeleteவேதாளர் படிக்கும் ஆர்வம் கடந்த வருடம் வந்த இரண்டு கதைகளுக்கு பிறகு குறைந்து விட்டது; மும்மூர்த்தி கதைகள் மேல் உள்ள ஆர்வம் ஓரளவு அப்படியே உள்ளது.
Deleteசந்தா கட்டினாலும் + நமது அலுவலகத்தில் சொன்ன நாளில் புத்தகங்களை அனுப்பினாலும் கொரியர்காரர்கள் மனம் வைத்தால் தான் புத்தகங்கள் நமக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் 😉
ReplyDeleteஉண்மைதான் பரணி சார். முந்தா நாளே நமது ஆபீசில் இருந்து புத்தகங்களை அனுப்பியும், எனது பார்சல் இன்று மதியம் வரை சிவகாசி DTDC ஆபீசிலேயே உள்ளது. நமது அலுவலகத்தில் இருந்து புக்கிங் நம்பர் வாங்கி ட்ராக்கிங் செய்து பார்த்தால் , in transit SIVAKASI branch என்று வருகிறது. நம் ஆபீசில் இருந்து , கொரியர் ஆபிசுக்கு போன் செய்து கேட்டதில் திங்கட்கிழமை வரும் என்று சொல்வதாக நமது அலுவலக பெண்மணி கூறினார்கள். இதற்கு என்ன செய்வது. காத்திருக்க வேண்டியது ஒன்றே நாம் செய்யக்கூடியது.
ReplyDelete😘😘😄💐💐💐🥰
ReplyDeleteஆஹா.. புக் பார்சல் கிடைச்சிடுச்சு.... 😘😘🥰🥰